Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

காதலை சொல்ல புது டெக்னிக்... க்யூபிட் கடவுளாகும் ஃபேஸ்புக்!

 

ஃபேஸ்புக்

பிப்ரவரி 14, காதலர் தினம் உலகமே தனக்கு பிடித்தமானவர்களிடம் காதலை சொல்லப்போகும் நாள். இதயம் முரளி மாதிரி தயங்கி தயங்கி சொன்னவங்க ஆரம்பிச்சு ரெமோ சிவகார்த்திகேயன் மாதிரி பலூன் பறக்க விட்டு ''ஓய் செல்ஃபி எனக்கு எப்போ ஓகே சொல்லுவனு'' விதவிதமா காதல சொல்லப்போறவங்களுக்காக ஒரு புதுமையை அறிமுகப்படுத்திருக்கு ஃபேஸ்புக். 

கடந்த வருடம் முதல் ஸ்டேட்டஸ், ஃபோட்டோ, வீடியோக்களுக்கு ''லைக்'' மட்டுமில்லாம ஹார்ட் எமோஜி போடவும் வழிவகுத்தது ஃபேஸ்புக். அதுல இருந்து தங்களோட காதலன் , காதலி டிபி மாத்துனா, குட் நைட் ஸ்டேட்டஸ் போட்டானு எல்லாத்துக்கும் ஹார்ட் எமோஜிக்கள பறக்க விட்ட ரோமியோ/ஜூலியட்களுக்கு பிப்ரவரி 13ம் தேதி இரவு ''வேலன்டைன் டே'' கார்டுகளை வெளியிட உள்ளது ஃபேஸ்புக். இதனை உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் அவர்களுக்கென பிரத்யேகமாக ஷேர் செய்யும் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. 

இதேபோல் 2016ம் ஆண்டு முடியும் போது இந்த வருடம் எப்படி இருந்தது என்ற ''இயர் இன் ரிவியூ''  சேவையை அறிமுகம் செய்து இந்த வருடம் நாம் என்ன செய்தோம் என்பதை வீடியோவாக காட்டியது. அது மட்டுமின்றி ஃபேஸ்புக்கின் பிறந்த நாளின் போது ''ஃப்ரெண்ட்ஸ் டே'' வீடியோவாக வெளியிட்டது. அதே மாதிரியான வேலை தான் இந்த முறையும் கையாண்டுள்ளது. வேலன்டைன் டே கார்டை லண்டனில் உள்ள ஃபேஸ்புக் பணியாளர்கள் உருவாக்கியுள்ளனராம்.

ஃபேஸ்புக். 

ஃபேஸ்புக்கில் தனிமனிதனின் கொண்டாட்டங்களின் போது ஃபேஸ்புக்கின் பயன்பாட்டாளர் பங்கேற்பு 25 சதவிகிதம் அதிகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மெஸெஞெசர்களிலும் வேலன்டைன் டே ஃபில்டர்களை அறிமுகம் செய்து மாஸ் காட்டுகிற‌து ஃபேஸ்புக்.

எல்லா விஷயங்களுக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கி அதனை உலகின் தொடர்பில் வைத்திருக்க வேண்டும் என்பது தான் ஃபேஸ்புக்கின் நோக்கம். காதல் உலகின் பெரும்பாலான மக்களை இணைக்கும் ஒரு விஷயம் என்பதால் இந்த விஷயத்தை கொஞ்சம் ஸ்பெஷலாக அணுகியுள்ளது ஃபேஸ்புக்.


ஃப்ரெண்ட்ஸ் டேயையே மாற்றிய ஃபேஸ்புக்:

ஃபேஸ்புக் தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 4-ம் தேதியை 'Friends Day' என சொல்லி கொண்டாடி வருகிறது. 2015-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், இது தொடர்பாக தனது பக்கத்தில், ஒரு ஸ்டேட்டஸ் பதிவிட்டிருந்தார். அதில் "இந்த நாள் நண்பர்களை கொண்டாட வேண்டிய நாள். அதுமட்டுமின்றி இன்று ஃபேஸ்புக்கின் பிறந்தநாளும் கூட. ஆனால் நீங்கள் ஃபேஸ்புக்கை கொண்டாட வேண்டாம். நட்பை கொண்டாடுவோம். நண்பனைக் கொண்டாடுவோம்" என அதில் கூறியிருந்தார். அப்போது அந்த ஸ்டேட்டஸில் மார்க் அறிமுகம் செய்ததுதான் இந்த friends day. அதன்பின்பு 2016-ம் ஆண்டும் இதேபோல பிப்ரவரி மாதம் 4-ம் தேதியும் நண்பர்கள் தினம் பற்றி ஸ்டேட்டஸ் போட்டவர், அத்துடன் நண்பர்கள் பற்றிய ஒரு குட்டி வீடியோ ஒன்றையும் சேர்ந்து பகிரும் ஆப்ஷனையும் அறிவித்தார்.


இதுமட்டுமில்லாமல் இயர் ஆஃப் ட்ராவல் என உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களது பயணம் குறித்த அப்டேட்டுகளை அளிக்கும் வசதியை தந்துள்ளது. அதிலும் காதல் படங்கள் வைரல்காட்டும் என்பதில் ஆச்சர்யமில்லை.மார்க் சக்கர்பெர்க் அவரது மனைவி பிரிசில்லாவை காதல் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது. தங்கள் காதல் தருணங்களையும் அவ்வப்போது மார்க் பகிர்வது அனைவரும் அறிந்ததே. 

எப்படியோ பாஸ், காதலை கார்டு கொடுக்காம, புது டெக்னிக் மூலம் சொல்ல வைச்சது இதயம் முரளிக்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும். ரீயாக்ஷன் மாறினா ''தெரியாம கைபட்டு ஷேர் ஆகிடுச்சுனு சமாளிக்கலாம்னு இப்பவே ஸ்டேட்டஸ் தட்ட ஆரம்பிச்சுட்டாங்க ரோமியோ-ஜூலியட்கள். எப்படியோ பாஸ்..லவ் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்னு எப்படியும் ஸ்டேட்டஸ் தட்டுவார் மார்க் சக்கர்பெர்க்....

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அன்று ஆதவற்ற சிறுவன்... இன்று பள்ளி மாணவன்..! - நைஜீரிய நெகிழ்ச்சி!

நைஜீரிய  சிறுவன்

சி, பட்டினியால் வாடி துடிக்கும் அந்த சிறுவனுக்கு தண்ணீர் கொடுத்துக்கொண்டிருக்கும் இந்த புகைப்படம் மனிதாபிமானத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு. சென்ற வருடம் மெலிந்து, உடலில் ஒட்டுத் துணிக்கூட இல்லாமல், ஆதரிக்க யாரும் இல்லாத நிலையில்... தெருக்களில் அனாதையாக சுற்றித் திரிந்துகொண்டிருந்த அந்த நைஜீரிய சிறுவனுக்கு மனிதாபிமானம் உள்ள ஒரு பெண் ஆதரவு கொடுத்தார். தற்போது அந்த சிறுவன், நல்ல ஆரோக்கியத்துடன் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறான்.

மூன்று வயது கூட ஆகாத அந்த நைஜீரிய சிறுவன் மீது 'மந்திரவாதி' என்று பழியை அவ்வூர் மக்கள் சுமத்தியதன் பலன், அவனுக்கு தண்ணீர் கூட தரக்கூடாது, பேசக்கூடாது என்று ஊர்க்கூட்டத்தில் கூட்டி செய்தி அறிவிக்கப்பட்டது. தனக்கு என்ன நேர்ந்தது என்று அறியாத வயதுடைய அந்த பிஞ்சு குழந்தை சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் வெயிலிலும், மழையிலும் அவதிப்பட்டு கையில் கிடைத்ததை சாப்பிட்டுக்கொண்டிருந்தான். பசிக்கும் தனக்கு யாரும் சாப்பிட எதுவும் தரமாட்டார்களா என்று ஏங்கிய அவனுக்கு, எதிர்பாராத தேவதை போல வந்திறங்கினார் டென்மார்க்கைச் சேர்ந்த சமூக சேவகி அன்ஜா ரிங்ரேன் லோவேன் (Anja Ringgren Lovén).

கடந்தாண்டு ஜனவரி 30-ம் தேதி அன்ஜா, உதவிக் குழுவுடன் அங்கு சென்றுள்ளார். அப்போது அதரவற்ற நிலையில் உடலில் ஒட்டுத் துணிக்கூட இல்லாத அந்த குழந்தையை நிலைமையைக் கண்டதும் மனம் உடைந்தார். முதலில் குடிக்கத் தண்ணீர் தந்து, உடனே தன்னோடு அழைத்துச் சென்று அச்சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தார். சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல நிலைமைக்கு திரும்பியதும், அவனுக்கு 'ஹோப்' என்று பெயரை சூட்டினார். அவனுக்கு தேவையான எல்லா விஷயங்களை தானே பார்த்துக்கொண்டார்.

ஹோப்பை தத்தெடுத்த அன்ஜா

இந்த சம்பவம் நடந்து ஓர் ஆண்டு முடிவடைந்த நிலையில், தற்போது 'ஹோப்' நல்ல நிலையில் இருக்கிறான். பள்ளிக்கு செல்கிறான். 2016-ஆம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி ஹோப்பை, தான் மீட்ட போது எடுத்தப் புகைப்படத்தையும் (அப்போது அந்த புகைப்படம் வைரல் ஆனானது), முதல் முறையாக ஹோப் பள்ளிக்கு செல்கிற புகைப்படத்தையும் சேர்த்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார் அன்ஜா. தற்போது 'ஹோப்' புகைப்படம் வைரலாக பரவி, அன்ஜாவின் செயலை மெச்சி, முகம் தெரியாதவர்களிடம் இருந்தெல்லாம் அன்ஜனாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறதாம்.

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

99p1.jpg

சிம்லாவில் இருந்து ஆந்திர சினிமாவுக்கு இறக்குமதியான தேவதை. ரியாலிட்டி ஷோ வழியே கேமரா வெளிச்சத்தில் விழுந்தவர் மிஸ்.இந்தியா போட்டியில் காவ்யா ஷெட்டியின் பேட்ச்மேட். அங்கிருந்து தெலுங்கு சினிமா பக்கம் ஜாகை மாறியவர் அறிமுகமானது `பிரம்மிகடி கதா' என்ற படத்தில். அதன்பின் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் அறிமுகமானவர், பிறகு வரிசையாக மூன்று தெலுங்குப் படங்களில் நடித்து ஹாட்ரிக் அடித்தார். தேர்ந்த கதக் டான்ஸரும்கூட. #க்யூட்!


99p3.jpg

மங்களூரு மயில். கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் படித்தவர். கல்லூரியில் இருந்தபோதே மாடலிங்கில் கவனம் செலுத்தியவர். சின்னச் சின்னதாய் விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அப்படியே மிஸ் இந்தியாவில் கலந்துகொண்டு மிஸ்.போட்டோஜெனிக் பட்டம் வென்றார். இதன் மூலம் லைம்லைட்டுக்கு வந்தவரைக் கொத்திக்கொண்டு சென்றார்கள் இயக்குநர்கள். `நம் துனியா நம் ஸ்டைல்' என்ற கன்னடப் படத்தில் நடித்தவரைப் பாராட்டித் தள்ளின ஊடகங்கள். அன்று அவர் காட்டில் பெய்யத் தொடங்கிய மழை இன்றுவரை வெளுத்து வாங்குகிறது. #பார்பி!


99p2.jpg

கண்ணூரில் பிறந்த கன்னுக்குட்டி. இவரின் அம்மா லிஸ்ஸி ஜோஸும் ஒரு நடிகைதான். அதனாலேயே குழந்தை நட்சத்திரமாக சீரியலில் அறிமுகமானார். வளர்ந்தபின் ஹீரோயினாக அறிமுகம். முதல் படமே திலீப்போடு! `ரோமியோ' என்ற அந்தப் படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக அறிமுகமாயிருந்தாலும் ரசிகர்களின் ஸ்பெஷல் கவனத்தைப் பெற்றார். அப்புறமென்ன? வரிசையாகப் படங்கள். அதுவும் 2011-ல் மட்டும் 10 படங்கள். கடைசியாக `இதுதான்டா போலீஸ்' என்ற மலையாளப் படத்தில் நடித்தார். இவர் சிறந்த க்ளாஸிகல் டான்ஸரும்கூட. #இவிட வரு!

  • தொடங்கியவர்

நிஜமும் நிழலும்!

 

வர்களால் படத்துக்குப் பெருமை; படத்தால் இவர்களுக்குப் பெருமை... அப்படி மனதில் பதிந்துபோன சில ஹாலிவுட் சினிமா கதாபாத்திரங்கள்...

120p1.jpg

பைரேட்ஸ் ஜானி டெப் : ஜானி டெப் சிவில் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு 1984-ல் தனது சினிமா பாதையைத் தொடங்கினார். ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்தின் கதாநாயகன் ‘கேப்டன் ஜாக் ஸ்பாரோ’ கேரக்டரை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இந்த கேரக்டர் மிகவும் பிடித்தமான ஒன்று. படத்தில் இவர் செய்யும் லூட்டிகள் விழுந்து விழுந்து சிரிக்கத் தூண்டும். ‘ஜானி டெப்’ என்ற பெயரைவிட ‘கேப்டன் ஜாக் ஸ்பாரோ’ என்று சொன்னால்தான் இவரை அடையாளம் தெரியும்.

120p3.jpg

ஹாரி பாட்டர் டேனியல் : ‘டேனியல் ராட்க்ளிஃப்’ 2001-ல் தனது சினிமா பாதையைத் தொடங்கினார். இவரின் உண்மையான பெயரைவிட ‘ஹாரி பாட்டர்’ என்ற பெயர்தான் மக்கள் மனதில் பதிந்த ஒன்று. படத்தில் மாயாஜால மந்திரங்களும் கையில் இவர் பிடித்திருக்கும் மந்திரக்கோலும் ஃபேமஸ். பல பெண்களின் கனவுக் கண்ணனாகவும் திகழ்ந்து வந்தார்.

120p2.jpg

வோல்வரின் ஹூக் ஜேக் மேன் : ‘ஹூக் ஜேக்மேன்’ 1999-ல் தனது சினிமா பாதையைத் தொடங்கினார். ‘எக்ஸ்-மேன்’ படத்தின் கதாநாயகன் இவர்தான். படம் வந்தபோது இவரின் ஹேர் ஸ்டைலும் தாடியும் மிகவும் ஃபேமஸ். பலபேர் இவரைப் போலவே தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டனர். இவரது கை விரல்களுக்கு நடுவில் மூன்று கூர்மையான கத்திகளும் ஃபேமஸ் தான். இந்தப் படத்தை வைத்துப் பல பேருக்குத் தன்னை அடையாளம் காட்டினார். ‘வோல்வரின்’ என்றால் இவர் மட்டும்தான்.

120p4.jpg

அயர்ன் மேன் ராபர்ட் டவுனி : ‘ராபர்ட் டவுனி’ 1970-ல் தனது ஐந்து வயதிலேயே சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தவர். சூப்பர் ஹீரோ ‘அயர்ன் மேன்’ படத்தின் கதாநாயகன். படத்தில் இவர் செய்யும்
சாகசங்களும் தனக்குத்தானே இவர் செய்துகொள்ளும் உடையலங்காரமும் படத்தில் ஃபேமஸ். இந்தப் படத்துக்குப் பின்னர் சூப்பர் ஹீரோக்கள் ஒட்டுமொத்தமாக நடித்து வெளிவந்த ‘அவெஞ்சர்ஸ்’ படத்திலும் இவர் முக்கிய இடம் பெற்றார்.

120p5.jpg

ப்ரைன் பால் வாக்கர் : ‘பால் வாக்கர்’ 1986-ல் சினிமாவில் இறங்கினார். ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ படத்தில் இவரும் ஒரு கதாநாயகன். இதுவரை மொத்தம் ஏழு பாகங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் ஆறு பாகங்களில் இவர் நடித்துள்ளார். ஒரு கேங்காக சேர்ந்து கொள்ளையடிப்பதுதான் கதை. அந்தக் கூட்டத்தின் தலைவன் ‘வின் டீசல்’ அவரின் மிகவும் நெருங்கிய நண்பன்தான் ‘பால் வாக்கர்’. இருவரும் காரில் செய்யும் சாகசங்கள் படத்தில் தெறி ரகம். 2013-ல் நடந்த கார் விபத்தில் இவர் மறைந்தார்.

120p6.jpg

உமா தர்மன் தி ப்ரைட் : ‘உமா தர்மன்’ 1987-ல் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். ‘கில் பில்’ படத்தின் கதாநாயகி இவர்தான். படம் முழுவதுமாக சண்டைக்காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்தப் படத்தில் வரும் ஃபேமஸ் கேரக்டர்தான் ‘தி ப்ரைட்’. தனது கல்யாணத்துக்கு முன் இவர் காதலனையும் இவரையும் கொல்ல நடந்த முயற்சியில் இவர் மட்டும் உயிர் தப்பிவிடுகிறார். பல வருட கோமாவுக்குப் பின்னர் தன்னைக் கொல்ல முயற்சித்தவர்களைப் பழி வாங்குவதுதான் கதை.

- தார்மிக் லீ

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, steht und Text

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை பரிசோதித்த நாள் (பிப்.13- 1960)

 

பிரான்ஸ் தனது முதல் அணுகுண்டை பரிசோதித்து பார்த்த நாள். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1914 - பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது. * 1934 - சோவியத் நீராவிக்கப்பல் செலியூஷ்கின் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது. * 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரை ஹிட்லரின் நாசிப் படைகளிடம் இருந்து மீட்டன. * 1960 - பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது. * 1971 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்கியது. *

 
 
பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை பரிசோதித்த நாள் (பிப்.13- 1960)
 
பிரான்ஸ் தனது முதல் அணுகுண்டை பரிசோதித்து பார்த்த நாள்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1914 - பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது.
 
* 1934 - சோவியத் நீராவிக்கப்பல் செலியூஷ்கின் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.
 
* 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரை ஹிட்லரின் நாசிப் படைகளிடம் இருந்து மீட்டன.
 
* 1960 - பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது.
 
* 1971 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்கியது.
 
* 1974 - நோபல் பரிசு பெற்ற அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
 
* 1975 - நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் தீ பரவியது.

* 1978 - சிட்னியில் ஹில்டன் உணவகத்தின் முன் குண்டு வெடித்ததில் ஒரு காவல்படை உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1984 - கான்ஸ்டன்டீன் செர்னென்கோ சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார்.
 
* 1985 - கொக்கிளாய் ராணுவ முகாம் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.
 
* 1990 - இரண்டு ஜெர்மனிகளும் இணைவது குறித்த இரண்டு-கட்டத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
 
* 1996 - நேபாள மக்கள் புரட்சி மாவோயிசவாத போராளிகளால் ஆரம்பிக்கப்பட்டது.
 
* 2001 - எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 400 பேர் வரை கொல்லப்பட்டனர்.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

தென்கச்சியார், சரோஜ் நாராயண்சுவாமி, இசைஞானி... வானொலியின் வானவில் தருணங்கள்! #WorldRadioDay

'இந்திய மக்கள் அனைவரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாற வேண்டும்' என கோரிக்கை விடுத்த பிரதமர் மோடி, மீடியா அபரிமிதமாக வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்திலும் கூட, இன்னும் 'மன் கி பாத்' உரையை வானொலியில் ஆற்றிக்கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு இந்தியா முழுக்கவும் பரவியிருக்கும் ஒரே ஊடகம்தான் வானொலி.

ஆனால் ரேடியோவைப் பயன்படுத்தாத ஒரு தலைமுறையே தற்போது உருவாகிவிட்டது. சின்ன வயதில் விடுமுறைக்கு ஊருக்குப் போகும்போது மரப்பெட்டிக்குள் பிரமாண்ட வடிவில் சிலர் வானொலியை ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கலாம். அதன்பின்பு டீக்கடையிலும், பார்பர் ஷாப்பிலும் அலறும் ரேடியோவின் ஒலியைக் கேட்டிருக்கலாம். ஆபிஸ் போகும் அவசரத்தில் பக்கத்தில் நின்ற கால் டாக்ஸியில் ஒலித்த எஃப்.எம்-ல் எக்கச்சக்க விளம்பரங்களுக்கு நடுவே கொஞ்சமே கொஞ்சம் நிகழ்ச்சியையும், பாடல்களையும் கேட்டிருக்கலாம். இப்படி ஏதாவதொரு வகையில் ரேடியோ உங்களுக்கு பரிட்சயமாகி இருக்கும். இப்போது உங்கள் மொபைலில் அதிகம் பயன்படாமல் இருக்கும் FM ரேடியோ ஆப்ஷனின் முந்தைய காலம் எப்படி இருந்தது தெரியுமா?

உலக வானொலி தினம்

ரேடியோ அறிமுகமான காலகட்டத்தில், 'மர்பி', 'பிலிப்ஸ்' போன்ற ப்ராண்ட்களின் பிரமாண்ட வடிவ ரேடியோக்கள் ஊருக்கு ஒருவர் வீட்டில் தான் இருக்கும். அதுவும் உடனடியாகவெல்லாம் ஆன் ஆகாது. ஸ்விட்சை தட்டிவிட்டு அதிலிருக்கும் வாக்யூம் ட்யூப்கள் சூடாகி, ரேடியோவின் இரைச்சல் கேட்கவே குறைந்தது இரண்டு நிமிடங்களாவது ஆகும். அதன்பின் ட்யூனரை இம்மி பிசகாமல் திருகி, வானொலியின் தொண்டை கரகரக்காமல் சேனலை மாற்றுவதே பெரும் கலையாக பார்க்கப்பட்டது. 'ரேடியோவைக் கண்டுபிடிச்சது மார்க்கோனி...ஆனா அதைக் கேட்க வச்சது நம்ம இசைஞானி'-ன்னு குக்கூ படத்தில் ஒரு வசனம் வருமே? அதுபோல வானொலி என்பது வெறும் தொழில்நுட்பக் கருவியாக மட்டுமே இல்லாமல், மக்களின் உணர்வோடும் ஒன்றிப்போக காரணமாக இருந்தனர் சிலர். அதிலும் 'இன்று ஒரு தகவல்' என உங்கள் காதைக் கட்டிப்போட்ட தென்கச்சி சுவாமிநாதனின் குரல், இன்னும் அவரின் ரசிகர்களது காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

தென்கச்சி கோ.சுவாமிநாதன் காலையில் சொல்லும் நீதிக்கதைகளும்,  'ஆகாசவானி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி' என்ற கரகரப்பான குரலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன தமிழ்ச் சேவையும் 90-களுக்கு முன்பு பிறந்து வானொலி கேட்டவர்களுக்கு மட்டுமே பரிச்சயமாக இருக்கும். எப்.எம். வருகைக்குப் பின்பு 24 மணி நேரமும் வானொலி கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இரவு நேரத்தில் வேலை செய்பவர்களுக்கு இளையராஜாவின் இசை ஆறுதலோடு துணைக்கு வந்தது.

மோடி

கம்பியில்லாத் தந்தி முறை தான் வானொலிக்கு அடிப்படை. அதை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியவர் இத்தாலியைச் சேர்ந்த 'வானொலியின் தந்தை' என்றழைக்கப்படுகிற மார்க்கோனி. அதுவரை கம்பிகள் மூலமாக மின்காந்த அலைகளின் வழியாகதான் தந்தி அனுப்பப்பட்டு வந்தது. தான் உருவாக்கிய கம்பியில்லா தந்தி முறையைப் பற்றி இத்தாலியின் தபால்-தந்தி அமைச்சருக்கு மார்க்கோனி ஒரு கடிதம் எழுதினார். அதைப் படித்துப்பார்த்த அமைச்சர் என்ன செய்தார் தெரியுமா? மார்க்கோனி அனுப்பிய கடிதத்திற்கு 'பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பவேண்டியவன்' எனப் பதில் அனுப்பினார் இத்தாலி அமைச்சர். மார்க்கோனி ஓயவில்லை. இங்கிலாந்துக்குச் சென்று தனது ஆய்வுகளைத் தொடர்ந்து, தான் கண்டறிந்த கம்பியில்லா தந்தி முறையை அடிப்படையாகக் கொண்டு குரலையும் அனுப்ப முடியும் என்பதை நிரூபித்தார். வானொலி உருவானது. தனது படைப்புகளுக்காக நோபல் பரிசும் பெற்றார். உலகப் போரின்போது டெலிகிராம் மிக முக்கியமான தொடர்பு சாதனமாகப் பயன்பட்டது. இன்றும் பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் தொடர்பு சாதனமாக 'ஹாம்' ரேடியோ பயன்படுத்தப்படுகிறது.

ஸ்மார்ட் ஃபோன்களைப் பயன்படுத்தும் இன்றைய நம் தலைமுறை மார்க்கோனிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். காற்றின் மூலமாகப் பாயும் கம்பியில்லாத் தந்தி முறை தான் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தொடங்கி இன்று நாம் கையடக்க மொபைல் மூலமாகவே இணையத்தைப் பயன்படுத்துவது வரைக்கும் அத்தனைக்கும் அடிப்படை.

இன்று மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உலக வானொலி தினம் குறித்து வாழ்த்துகள் தெரிவித்ததோடு, 'ரேடியோ என்பது நேரடியாக தொடர்பில் இருக்கவும், கற்றுக்கொள்ளவும் ஓர் அற்புதமான வழி. எனது 'மன் கி பாத்' அனுபவம் இந்தியா முழுவதும் உள்ள மக்களுடன் என்னை இணைத்துக்கொள்ள உதவியது' எனத் தெரிவித்துள்ளார்.

Radio is a wonderful way to interact, learn & communicate. My own #MannKiBaat experience has connected me with people across India.

— Narendra Modi (@narendramodi) February 13, 2017

ஐ.நா. சபையின் யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்), 2012-ம் ஆண்டிலிருந்து பிப்ரவரி மாதம் 13-ம் தேதியை உலக ரேடியோ தினமாகக் கடைப்பிடிக்கிறது. மரியாதை நிமித்தமாகவாவது இன்று ஒரு நாள் மட்டும் கொஞ்சம் ரேடியாவை ட்யூன் செய்யலாமே தோழர்களே!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகின் சிறந்த பிரஸ் போட்டோ இதுதான்!

Burhan Ozbilici

டிசம்பர் 19-ம் தேதி துருக்கியில், ரஷ்ய தூதர் மேடையில் படுகொலை செய்யப்பட்டதைத் தில்லாக படம்பிடித்தார் அசோசியேடட் பிரஸ் புகைப்படக்காரர்  புர்ஹான் ஒபிலிஸி. அந்தப் புகைப்படத்தை  2016-ம் ஆண்டின் சிறந்த பத்திரிகை புகைப்படமாக  தேர்வு செய்யப்பட்டுள்ளது.

துருக்கியில் கடந்த டிசம்பர் மாதம், மேடையில் பேசிக் கொண்டிருந்த ரஷ்ய தூதர் ஆண்ட்ரெய் கார்லோவை, மெவ்லுத் மெர்ட் அல்டின்ட்டாஸ் சுட்டுக் கொன்றுவிட்டு, கையில் துப்பாக்கியுடன்,  ’Don't forget Aleppo!’ என உரக்க கோஷமிட்டார். 

இந்த காட்சியை கண்டு அங்கிருந்தவர்கள் பயத்தில் உறைந்து போய் நின்ற சமயத்தில், சற்றும் கலக்கமடையாமல் அந்த காட்சியை தன் கேமராவில் பதிவு செய்தார் அசோசியேடட் பிரஸ் புகைப்படக்காரர் Burhan Ozbilici. 

Burhan Ozbilici


இந்த புகைப்படத்தையும், பதிவு செய்தவரின் தைரியத்தையும் வரலாறு பேசும் என்று முன்னர் விகடன் செய்தி வெளியிட்டிருந்தது. செய்தி உண்மையாகும் வண்ணம் அப்புகைப்படம் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டது. 2017 World Press புகைப்பட போட்டியில், சிறந்த பத்திரிகை புகைப்படமாக ஒஸ்பிலிசியின் புகைப்படம் தேர்வாகியுள்ளது!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அ.தி.மு.க அதிகாரப் போட்டி : வாட்ஸ் ஆப் நையாண்டிகள்

 

தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.கவில் சசிகலா அணி - ஓ.பி.எஸ் அணி என பிரிந்துள்ளது. ஏற்கனவே சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கேலி மீம்கள் வைரலாக பரவி வர, அதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு மெசேஜ் செயலியான வாட்ஸ் ஆப்பில் பரவிவரும் நையாண்டி செய்திகளின் தொகுப்பு இது.

வாட்ஸ் அப் நையாண்டிகள்படத்தின் காப்புரிமைWHATSAPP வாட்ஸ் அப் நையாண்டிகள்படத்தின் காப்புரிமைWHATSAPP வாட்ஸ் அப் நையாண்டிகள்படத்தின் காப்புரிமைWHATSAPP

 

வாட்ஸ் அப் நையாண்டிகள்படத்தின் காப்புரிமைWHATSAPP வாட்ஸ் அப் நையாண்டிகள்படத்தின் காப்புரிமைWHATSAPP வாட்ஸ் அப் நையாண்டிகள்படத்தின் காப்புரிமைWHATSAPP வாட்ஸ் அப் நையாண்டிகள்படத்தின் காப்புரிமைWHATSAPP

 

வாட்ஸ் அப் நையாண்டிகள்படத்தின் காப்புரிமைWHATSAPP வாட்ஸ் அப் நையாண்டிகள்படத்தின் காப்புரிமைWHATSAPP வாட்ஸ் அப் நையாண்டிகள்படத்தின் காப்புரிமைWHATSAPP

 

வாட்ஸ் அப் நையாண்டிகள்படத்தின் காப்புரிமைWHATSAPP வாட்ஸ் அப் நையாண்டிகள்படத்தின் காப்புரிமைWHATSAPP

 

வாட்ஸ் அப் நையாண்டிகள்படத்தின் காப்புரிமைWHATSAPP வாட்ஸ் அப் நையாண்டிகள்படத்தின் காப்புரிமைWHATSAPP

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

குழந்தைகள் முதல் முதலமைச்சர் வரை...அனைவரையும் தாக்கும் டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்! #DigitalStress

பன்னீர் செல்வம்

மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்துவிட்டு, ஓ.பன்னீர்செல்வம் தனது மௌனத்தைக் கலைத்ததுமே தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகிய இருவரும் இரு அணியாகப் பிரிய, இருவரில் யாருக்கு நம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு தெரிவிக்க இருக்கிறார் என்ற ஆர்வமும் மக்களிடையே உருவானது. சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.பி.எஸ்.,க்கு ஆதரவு தெரிவிக்க, பலர் சசிகலா பக்கம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஓ.பி.எஸ்.,க்கு ஆதரவாக ஒருவித அழுத்தம் உருவானது. ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பலரும் தங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். இன்னும் சிலரோ, எம்.எல்.ஏ.,க்களின் தொலைபேசி எண்களையும் பகிர்ந்து, "உடனே உங்களது கருத்துகளை அவர்களிடம் தெரிவியுங்கள்!" என்றும் செய்திகளை பரப்பிவந்தனர். ஒருபக்கம் சமூக வலைதளங்களில் இப்படியான கருத்துகள் பரவிக்கொண்டிருக்க, அப்போது தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டரில் ஒரு கருத்தினைப் பதிவு செய்திருந்தார். எம்.எல்.ஏ.,க்களுக்கு தொடர்ந்து தொலைபேசி மூலமாக தொந்தரவு அளிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு தங்கள் கருத்தினை சுதந்திரமாக வெளிப்படுத்த உரிமை இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தார். தற்போது ஓ.பி.எஸ்.,க்கு ஆதரவு அளித்துவிட்ட அவர், அந்த ட்வீட்டை டெலிட் செய்து விட்டார். அப்போது எம்.எல்.ஏ.,க்களுக்கு வரும் அழைப்புகளை எண்ணி நொந்துகொண்ட அவர், தற்போது அவரைப் பாராட்டி வரும் ட்வீட்களை, ஆர்.டி செய்துவருகிறார். டிஜிட்டல் ஸ்ட்ரெஸ் என்றால் என்ன என்பதற்கான உதாரணம்தான் நீங்கள் இதுவரை படித்தது. சரி...இவர்களின் கதையை இத்துடன் நிறுத்திக்கொள்வோம். 

மாஃபா பாண்டியராஜன்

எப்படி எம்.எல்.ஏ.,க்களுக்கு தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் அழுத்தம் தரப்படுகிறதோ, அதைப்போலவே இணையம் அல்லது வேறு தொலைத்தொடர்பு சாதனங்களின் மூலம் உங்களுக்கு கொடுக்கப்படும் அல்லது உங்களுக்குள் உருவாகும் அழுத்தம்தான் இந்த டிஜிட்டல் ஸ்ட்ரெஸ். 

இந்தக் கட்டுரையை படிக்கும் நீங்கள் கூட, இதுபோன்ற டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்ஸினை உணர்ந்திருக்கலாம். அல்லது இதனால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் ஒருவரையாவது அறிந்திருக்கலாம். எந்நேரமும் கணினி, ஸ்மார்ட்போன், கேட்ஜெட்ஸ், சோஷியல் மீடியா என இணையத்தின் விர்ச்சுவல் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் மனிதர்கள் அனைவருமே இதற்கு இலக்கானவர்கள்தான். இணையத்தில் அதிக நேரம் பணிபுரிபவர்கள், இளைஞர்கள் என வெகு சிலரை மட்டுமே பாதித்துக் கொண்டிருந்த இந்தப் பாதிப்பு தற்போது குழந்தைகளையும் கூட சென்றடைந்திருக்கிறது. இதற்கு காரணம் நாம் அனைவரும் அறிந்ததுதான். மிகக் குறைந்த வயது முதலே, இணைய சேவைகள், மொபைல், கணினி போன்றவற்றை குழந்தைகள் பயன்படுத்துகின்றனர். இதற்கு முன்னர் இருந்ததை விடவும், மிக எளிதாக குழந்தைகள் கைகளில் இவை கிடைக்கின்றன. நாம் பல வருடங்களுக்குப் பின்னர் பெற்ற வசதிகளை, இன்றைய குழந்தைகள் விரைவிலேயே பெற்றுவிடுகின்றனர். 

டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்

நிச்சயம் நாம் இதனைத் தடுக்க முடியாது. மாறிவரும் தொழில்நுட்ப உலகில், இதுபோன்ற மாற்றங்களை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதேசமயம் இவற்றால் வரும் பிரச்னைகளையும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதில் இணையப் பாதுகாப்பு, உடல் நலக் கோளாறுகள், மனரீதியான பிரச்னைகள் போன்றவை முக்கியமானவை. அப்படி தகவல் தொழில்நுட்ப சாதனங்களால் ஏற்படும் மன அழுத்தமான, டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்சையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

யாரெல்லாம் இதற்கு இலக்காகிறார்கள்?

1. டீன் ஏஜ் பிரிவினர் மற்றும் இளைஞர்கள்.

2. அதிகளவில் இணையம் மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள்.

3. இணையத்திலேயே முழு நேரமும் பணி புரிபவர்கள்.

எந்த மாதிரியான விஷயங்களால் இவை ஏற்படுகின்றன?

1. சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றி வரும் எதிர்மறையான கருத்துகள், விமர்சனங்கள்.

2. அதிக நேரம் சமூக வலைதளங்களைப் பயன்படுத்திப் பழகியதால், சிறிது நேரம் கூட அவற்றைப் பிரிந்து இருக்கக்கூட முடியாத மன நிலை. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தாதபோது, உங்கள் மனதுக்குள் அதுபற்றி ஏற்படும் ஆர்வம், அவசரம் ஆகியவை.

3. ஆன்லைனில் சிலரால் எதிர்கொள்ளும் தனிநபர் தாக்குதல்கள், மிரட்டல்கள், ஃபேஸ்புக்கில் இருக்கும் போலிக் கணக்குகள் (Fake Accounts) போன்ற ஆள்மாறாட்டங்கள்.

4. அலுவலகம் மற்றும் சொந்தப் பணி தொடர்பான மின்னஞ்சல், செய்திகள் போன்றவற்றை நீண்ட நேரம் தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கும் நிலை.

ஹேக்

5. உங்களுடைய ஆன்லைன் அக்கவுன்ட்கள் சிலரால் முடக்கப்படும்போது அல்லது ஹேக் செய்யப்படும்போது ஏற்படும் மன உளைச்சல்.
மேற்கண்டவை மட்டுமில்லாமல், இணையம் மற்றும் அதுதொடர்பான வழிகளில் உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அனைத்துமே டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்தான். மன அழுத்தத்தால் உங்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்படுமோ, அவைதான் இதனாலும் ஏற்படும். நீங்கள் உங்கள் நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்களால் ஏற்படும் மனரீதியான பிரச்னைகளை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மெய்நிகர் உலகான இணையத்தில் யாரோ ஒருவரால், ஏதேனும் சில செயல்களால் ஏற்படும் மன அழுத்தத்தை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

தீர்வு உங்கள் கையில்!

நமது அன்றாட பணிகள், அலுவலகப் பணிகள் ஆகியவை டிஜிட்டலில்தான் நடைபெறுகின்றன. எனவே ஒரேடியாக இணையத்தை விட்டுவிட்டு ஒதுங்கிவிடுங்கள் என சொல்வது அபத்தம். மாறாக சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்வதன் மூலம், இதன் தாக்கத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். 

உங்கள் சமூக வலைதளங்களில் வரும் தேவையற்ற கருத்துகள், விமர்சனங்கள் ஆகியவற்றை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, ஆன்லைனில் மன உளைச்சல் ஏற்படுத்தும், ஏமாற்றும் விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது, ஆன்லைன் வாழ்க்கைக்கு அடிமையாகாமல் இருத்தல், ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகளில் உங்கள் தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுதல், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் வரும் செய்திகள் மற்றும் சுகதுக்கங்கள் அனைத்தையுமே, நிஜ வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தாத அளவுக்கு எடுத்துக் கொள்ளுதல் போன்ற சின்னச் சின்ன நடவடிக்கைகள் மூலமாக, இவற்றின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

`லவ் ஆப்பிள்’ முதல் டார்க் சாக்லேட் வரை... காதலைத் தூண்டும் உணவுகள்! #PhotoStory #ValentineDay

காதல் தவிர்க்க முடியாதது. இயற்கையும்கூட. பசி, தாகம்போல காதலும் நமக்கான உணர்வுதான். நமக்கான உரிமை அது. அனைத்து உயிர்களின் இலக்கும் ஏதோ ஒரு வழியில் காதலைச் சுற்றியே நகர்ந்துகொண்டிருக்கும். அன்பின் பிணைப்பில் ஆசைதீரக் காதலிக்கத் தூய மனதும், சக்தி தரக்கூடிய ஆரோக்கியமான உணவும் முக்கியம். காதலைத் தூண்டும் காதல் உணவுகள் பற்றிப் பார்ப்போமா...

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள பைட்டோஈஸ்ட்ரொஜென் (Phytoestrogens), பாலிபீனால்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ஆகியவை பாலியல் உறவின்போது, உடலுக்கு அதிக சக்தியைத் தரக்கூடியவை. இது, பெண்களுக்கு மிகவும் நல்லது. 

ஆப்பிள் - காதல் உணவுகள்

தக்காளி

இதில், பாலுணர்வைத் தூண்டக்கூடிய சத்துக்கள் உள்ளதால், `லவ் ஆப்பிள்’ என்று பெயர் பெற்றது. தோற்றத்திலும் கவர்ச்சிகரமான உணவு இது.

தக்காளி

கிவி

ஃபோலேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. குழந்தைக்குத் திட்டமிடும் பெண்கள் அவசியம் சாப்பிடவேண்டிய பழம் இது. உடலுக்குச் சக்தி கொடுக்கும். குழந்தையும் ஆரோக்கியமாகப் பிறக்கும்.

கிவி

லெட்யூஸ்

மல்டி வைட்டமின்கள் நிறைந்திருக்கும் கீரை. இதன் சாறு, நரம்புகளை அமைதிப்படுத்தக்கூடியவை. பதற்றம், பயம், கவலை ஆகியவை நீங்கி நல்ல உணர்வுகளை உருவாக்கும்.

லெட்யூஸ்

பட்டாணி

'மூட் ஸ்விங்ஸ்' என்று சொல்லக்கூடிய மன ஊசலாட்டத்தைக் கட்டுப்படுத்தும். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளுக்கு மனச்சோர்வுக்கான அறிகுறிகளைப் (Symptoms) போக்கும் தன்மை உண்டு.

பட்டாணி

டார்க் சாக்லேட்

செரோட்டொனின் என்ற ஹார்மோனைத் தூண்டக்கூடியவற்றில் டார்க் சாக்லேட்டுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இதயத்துக்கு சீரான ரத்த ஓட்டத்தைத் தந்து, ரத்த நாளங்களுக்கு ஓய்வைக் கொடுக்கும். இதனால், பாலியல் உணர்வைச் சீராக அனுபவிக்க உதவும்.

டார்க் சாக்லேட்

காபி

காபியில் உள்ள கஃபைன், தற்காலிக எனர்ஜியைத் தரக்கூடியது என்பதால் ஆண், பெண் இருவருமே பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத காபியை அருந்தலாம். காதல் உறவுக்கு எனர்ஜி தரும் அற்புத பானம் இது.

காபி

மாதுளை

மாதுளையைப் பழமாகவோ பழச் சாறாகவோ தொடர்ந்து அருந்திவர, ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு தொடர்பான பிரச்னை வராமல் தடுக்கலாம்.

மாதுளை

தர்பூசணி

இந்தப் பழத்தை, `நேச்சுரல் வயாகரா’ எனச் சொல்லலாம். இதில், அமினோ ஆசிட் சிட்ருலீன் (Amino acid citrulline) எனும் சத்து,  வயாகராவுக்கு இணையான பலன்களைத் தரவல்லது.

தர்பூசணி

- ப்ரீத்தி

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

16730266_1843682962557575_83896627091795

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒருவரையொருவர் காப்பாற்றிய குடும்பமும் குண்டுக் கரிச்சானும்

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Himmel und im Freien

இந்த கதை குருவிக்கூட்டை விட்டு கீழே விழுந்ததால், ஒரு குருவிக்கும் ஒரு குடும்பத்திற்கும் இடையே மலர்ந்த உறவைப் பற்றி விவரிக்கிறது.

 

Bild könnte enthalten: 1 Person, Vogel und im Freien

ஒரு நாள் வீசிய பலமான காற்று குண்டுக் கரிச்சான் குருவிக்குஞ்சு ஒன்று கூட்டை விட்டு கீழே விழச் செய்தது. நோவா என்கிற சிறுவன் அதை கண்டெடுக்கும் வரை அது அங்கேயே கிடந்தது.

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Himmel, im Freien und Natur

அதனை எடுத்த நோவா, துணியில் சுற்றி தன்னுடைய தாய் சேமிடம் கொடுத்தார். அவர் அதனை தன்னுடைய மடியில் வைத்து கொண்டு காரை நோக்கி சக்கர நாற்காலியை உருட்டி சென்றார்.

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Katze und Vogel

வீட்டில், குருவியை வெப்பமாக இருக்கும் வகையில் துணியில் சுற்றி பாதுகாத்தனர். உறுதியற்ற தலையை கொண்டிருந்த அந்த குண்டுக் கரிச்சானின் குருவியின் ஒரு பக்க இறகு தொங்கி கொண்டிருந்தது, அது குஞ்சிப் பொரித்து இரண்டு வாரங்களே ஆகியிருந்தது

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Vogel und im Freien

இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை அதற்கு உணவு ஊட்ட வேண்டும். இல்லாவிட்டால் அது உயிர் பிழைக்காது என்று கால்நடை மருத்துவர் ஆலோசனை அளித்தார். புளூமின் குடும்பம் அந்த சிறிய குருவியின் உயிரை காப்பாற்ற தீர்மானித்தது.

 

Bild könnte enthalten: Vogel, Pflanze, Himmel, Baum, im Freien und Natur

அதனுடைய கறுப்பு மற்றும் வெள்ளை நிற இறகுகளும், பெரிய பாதங்களும் பென்குயினை நினைவூட்டியதால், அதனை பென்குயின் என்றே பெயரிட்டு அழைத்தனர்.

Bild könnte enthalten: 1 Person, Vogel und im Freien

 

 
 
பென்குயினை தத்தெடுத்து கொண்ட இந்த குடும்பம் உயிர் பிழைத்து கொள்வதை பற்றிய அனுபவத்தை பெற்றிருந்தனர். சில மாதங்களுக்கு முன்னதாக, சேம் கூரையிலிருந்து விழுந்து முதுகு உடைந்துவிட்டது. அவரால் நடக்க முடியாமல் போராடினார். ஓடவும், நீர் சறுக்கவும் முடியாததால், அவர் கோபமாகவும், மன அழுத்தத்துடனும் காணப்பட்டார்.

 

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen

சேமின் மடியிலும், தோள் பட்டையிலும் உட்கார்ந்து இருப்பதை பென்குயின் விரும்பியது. அந்த துணையை விரும்பிய சேமும் தன்னுடைய மன அழுத்தங்களை அதன் மூலம் தீர்த்து கொண்டார்.

”நான் அதனிடம் பேசுவேன். புகார் தெரிவிப்பேன். நான் எப்படி இருந்தேன் என்று கூறுவேன். பென்குயினுக்கு அனைத்தும் தெரியும்” என்கிறார் சேம்.

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien

பென்குயின் வீட்டை சுற்றி சுதந்திரமாக பறந்து பையன்களின் படுக்கைகளில் தூங்கியது. அது பிடித்து விளையாட சிறிய குச்சிகளை அவர்கள் எறிவர். சிலவேளையில் அது குருவி என்பதை விட நாய் போல விளையாடியது.

இந்த குண்டுக் கரிச்சான் குருவியின் செயல்பாடுகளை தந்தை கேமரன் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்.

Bild könnte enthalten: 1 Person, Himmel, Wolken, Vogel und im Freien

பென்குயின் கழிவறை செல்வதற்கு மட்டும் பழக்கப்படவில்லை. அது வலிமையாக வளர தொடங்கியதும், அதை வெளியே பறந்து சுற்றிவர ஊக்கமூட்டினர். படிப்படியாக அது பறந்து சென்றது. திரும்பி வரவேயில்லை.

 

 

Bild könnte enthalten: 5 Personen, Personen, die sitzen und Hund

புளூமின் குடும்பம் பென்குயின் போய்விட்டதை மிகவும் உணர்கிறார்கள். அவர்கள் ஒருவொருக்கொருவர் இனி யாரும் தேவையும் இல்லை. அது பென்குயினுக்கு சிறகடித்து பறக்க வேண்டிய தருணம்.

சேமுக்கும் புதிய சுதந்திரம் கிடைத்துவிட்டது. அவர் படகோட்டுவதற்கு தொடங்கிவிட்டார்.

அந்த குண்டுக் கரி்ச்சான் குருவியை அவர்கள் காப்பாற்றியதை போல அது அவர்களையும் காப்பாற்றி விட்டது என கேமரன் எண்ணுகிறார்.

 

BBC

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

காதலிக்கிறவங்க எப்படி எல்லாம் நெகடிவ்வா திங்க் பண்ணுவாங்க, எதுக்கெல்லாம் யோசிப்பாங்க ? எப்படி பல்ப் வாங்குவாங்க, இந்த மாதிரியான விஷயங்கள வித்யாசமான சொல்ற குறும்படம் தான் இந்த ’ஆப்ர கடாப் ரா’.

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

100p1.jpg

twitter.com/CreativeTwitz : நமக்கே இவ்வளவு காண்டு ஆகுதே... இந்நேரம் ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ் என்னவா இருக்கும்?

twitter.com/i_Eethu: இனி மெரினா எல்லாம் போகத் தேவை இல்லை. மனசாட்சியோடு வாக்குச்சாவடிக்குப் போனாலே போதும்!

twitter.com/MrMic15: `பாபநாசம்’ படம் பார்த்துட்டு பிரஸ்மீட்டுக்கு வந்திருப்பானுங்களோ?

twitter.com/RJAadhi: ஒருவாட்டி ஓட்டு போட்டு ஒரே வருஷத்துல மூணு சி.எம் பார்க்கப்போற முதல் மற்றும் கடைசித் தலைமுறை நாம்தான்!

100p2.jpg

twitter.com/thoatta : முன்பெல்லாம் அ.தி.மு.க ஆட்சியில முதலமைச்சர் மாற மாட்டார்; அமைச்சருங்க மாறிக்கிட்டே இருப்பாங்க. இப்ப அமைச்சருங்க மாறலை... முதலமைச்சர் மாறிக்கிட்டே இருக்காங்க!

twitter.com/samyesudoss :  மாட்டைக் காப்பாற்றிய நம்மால் மாநிலத்தைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது!

twitter.com/naiyandi : இந்த நூற்றாண்டின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பா நான் நினைக்கிறது, வாட்ஸ்அப்பில் இருக்கிற `க்ளியர் ஆல் சாட்ஸ்’தான்!

twitter.com/Kozhiyaar: தூங்குபவரை எழுப்புவது என்பது, குழந்தைகளின் பிரதான விளையாட்டு!

100p3.jpg

twitter.com/nithil_an:  `வேறு மொபைல் மாத்தினதுல உன் நம்பர் மிஸ் ஆகிடுச்சு...’ - சமீபத்தில் அதிகம் சொல்லப்படும் பொய்களில் ஒன்று!

twitter.com/skpkaruna: பட்ஜெட்ல சொல்றதை எல்லாம் நிஜத்துல செய்துடுவாங்கனு சின்ன வயசுலே நம்பிட்டிருந்தேன்!

facebook.com/dreamerarunkumar: பசி நேரத்தில்... இசைக்கத் தெரிந்தவர்களைவிட, சமைக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் மரியாதை என்பதைச் சொல்லிக்கொண்டு...

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

'இப்படியும் காதலிக்கலாம்!' அசத்தும் பசுமைக் காதல் தம்பதி #Valentinesday

காதல் தம்பதி

துரை குலுங்க ஒரு இயற்கைத் திருவிழாவை, தனது திருமண விழாவாக நடத்தி முடித்திருக்கின்றனர் பூபாலன் -சரண்யா இணையர். திருமணத்தில் பசுமை கலந்ததற்கு காரணம் வேறென்ன காதல் தானாம்.  இருவரும் தங்களது தனித்துவ அடையாளங்களை இழக்காமல் வாழ்வில் இணைய வேண்டும் என்பதே இந்த காதல் பறவைகளின் பயணத் தத்துவம்.

அப்படியென்ன ஸ்பெஷல் இந்த திருமணத்தில்....

* எளிதில் மக்கிப் போகும் அட்டையில் திருமண அழைப்பிதழை அச்சடித்ததில் கவர்ந்திழுக்க ஆரம்பித்தது இவர்களின் பசுமை நேசம். புத்தகம் வடிவில் இருந்த அழைப்பிதழில் பசுமையை உணர்த்தும் கவிதை, கட்டுரை, நேர்காணல் என்று அழைப்பிதழிலேயே இயற்கையின் மீதான அன்பை அவ்வளவு அழகாய் வெளிப்படுத்தியிருந்தனர். பச்சை நிற எழுத்துகளில் மகிழ்வுக்கான துளிர்ப்புகளை உணர முடிந்தது.

* தங்களது மகிழ்ச்சித் திருவிழாவில் தமிழுக்கு மட்டுமே அனுமதி. தேவார திருவாசக பாடல்கள் சாட்சியாக கரம் கோர்த்தனர்.

* தாலி இல்லாத் திருமணம். மணப்பெண் சரண்யாவே முதலில் பூ மாலையும், பின்பு திருமண அடையாளமாக தங்கத்தால் ஆன செயினும் பூபாலனுக்கு அணிவித்தார். பின்பே பூபாலன் சரண்யாவுக்கு மாலையிட்டு செயின் அணிவித்தார்.

* தந்தையை இழந்த மணமக்கள் இருவரும்.. மங்கள நிகழ்வில் கலந்து கொள்ள தயங்கி நின்ற தாய்மார்கள் இருவரையும் அழைத்து முன்னிலைப்படுத்தினர். இரண்டு பெற்றவர்களுக்கும் பாத பூஜை செய்து மரியாதை செய்து பெற்ற மனதை நெகிழ வைத்துள்ளனர்.

* தங்கள் திருமணம் ஒரு விழாவாக இல்லாமல்... திருவிழாவாக இருக்க வேண்டும் என்பது இருவரின் விருப்பம். சிலம்பம், விளையாட்டு என குழந்தைகளின் திறன்களை மேடை ஏற்றி மெய்சிலிர்க்க வைத்தனர். திருமண அரங்கில் ஜவ்வு மிட்டாய், பொரி உருண்டை, எலந்தைப் பழம் என விழாவுக்கு வந்தவர்கள் நாவிலும் இனித்தது கிராமியம்.

காதல் தம்பதி

* திருமணத்துக்கு வந்த அன்பளிப்பை மண் பானையில் சேமித்தது அழகு. அதைவிட அழகு அந்த அன்பளிப்பை குக்கூ காட்டுப்பள்ளிக்கான நன்கொடையாக தந்தது.

* வறட்சியையும் தாங்கிக் கொண்டு பலன் தரும் பனை மரத்தின் பயன்களைப் பற்றி இயற்கையியலாளர் அழகேஸ்வரி தொகுத்த தகவல்களை புத்தகமாக்கி திருமண விழாவில் வெளியிட்டனர்.

* திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு மரக்கன்றுடன், பாரம்பர்ய காய்கறி மற்றும் கீரை விதைகளுடன் பனையின் பயன் சொல்லும் புத்தகத்தையும் பரிசளித்து வழியனுப்பினர் இந்த தம்பதியர்.

* திருமண விழாவையே இயற்கைத் திருவிழாவாக நிகழ்த்திக் காட்டிய அந்த தம்பதியின் வாழ்க்கைப் பயணமும் மண்ணோடும், மரங்களோடும், வயல் சார்ந்த உயிர்களோடும்தானாம். தாங்கள் படித்த பொறியியல் பணிகளை விட்டு விட்டு, இயற்கை விவசாயத்தையே வாழ்வியலாக மாற்றிக் கொண்ட இணையர்களை வாழ்த்திய உள்ளங்களிலும் பசுமையை விதைத்து அனுப்பினர்.

காதல் தம்பதி திருமணத்தில்

யார் இந்த பூபாலன், சரண்யா இணையர்:
மதுரை மேலூர் பகுதியில் ஒரு கம்யூனிச குடும்பத்தில் பிறந்தவர் பூபாலன். பொறியியல் படிப்பை முடித்து விட்டு சென்னையில் ஒரு ஆண்டு வேலை பார்த்த பூபாலனுக்கு நகரத்தின் நெருக்கடிகளில் மூச்சுத் திணறி வெளியேறியுள்ளார். நம்மாழ்வாரின் வானகத்தில் இயற்கை வேளாண்மை பற்றி ஒரு ஆண்டு பயிற்சி எடுத்துக் கொண்டவர் பூபாலன், சொந்த ஊர் திரும்பி வறண்ட நிலத்தில் தனது விவசாயப் பணியை துவங்கியுள்ளார். இயற்கையின் மீது கொண்ட காதலால் சரண்யாவும் பொறியியல் படிப்பு, எம்.என்.சி. வேலை தாண்டி பரமக்குடி 'ட்ரீ பிளாண்டிங் அமைப்பை நடத்தி வந்துள்ளார். இயற்கையின் மீதான இருவரின் தேடலும் 'குக்கூ' அமைப்பில் இவர்களை இணைத்துள்ளது. பரஸ்பரம் நண்பர்களாக அறிமுகம் ஆகி விருப்பங்களை பகிர்ந்து கொண்ட இருவரின் பாதியாக மற்றொருவர் தோன்றியதால் வாழ்விலும் இணைந்துள்ளனர். இணை ஏற்பு விழாவையும் இயற்கை விழாவாக மாற்றுவதற்கான விதையை நம்மாழ்வார் இருவரது இதயத்திலும் தூவிச் சென்றுள்ளார். அதுவே காதலாகி மலர்ந்து அடுத்தடுத்த தலைமுறையிலும் அடர்த்தியாக வளரும் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.

திருமண விழாவின் தித்திப்பை பூபாலன் பகிர்ந்து கொண்ட போது, ‘‘மனம் விவசாய முறைக்கு மாறிவிட்டதால், நான் ஒரு எளிய வாழ்வுக்கு தயாராகி இருந்தேன். தேவையற்ற ஒரு பொருளை நான் வாங்குவதில்லை. பொருளாதாரம் சார்ந்த தேடலும் இல்லை. இப்படியான ஒரு வாழ்க்கையை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் பெண்ணோடுதான் திருமண வாழ்வை தொடர முடியும். அப்படி ஒரு பெண் கிடைக்காவிட்டால் திருமணமே வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். அப்போது இயற்கையின் காதலியாக சரண்யா எனக்கு அறிமுகம் ஆனார். இருவரது விருப்பங்களும் சம அலைவரிசையில் அமைந்ததால் நாங்கள் காதலால் இணைந்தது எளிதாக நடந்தது. ஆனாலும் இருவரும் எங்களுடைய அடையாளத்தை இழந்து விடாததாக அந்த பயணம் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். திருமணம் என்பது பெண்ணை எந்த வகையிலும் அடிமைப்படுத்துவதாக இருந்து விடக் கூடாது என்பதில் நானும் தெளிவாக இருக்கிறேன்,’’ என்கிறார் பூபாலன்.  

இயற்கையை காதலிக்கும் இவர்களின் காதலும் அழகல்லவா!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பிப்ரவரி 14: காதலர் தினம்

 

 
lovers_day

 

புனித வேலன்டைன் நாள் அல்லது பொதுவாக வேலன்டைன் நாள் என்று அழைக்கப்படும் இந்த தினமானது உலகம் முழுவதிலுமுள்ள காதலர்களால் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும்.

இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள்.

வேலன்டைன் என்ற பெயருடைய இரு கிறித்துவத் தியாகிகளின் பெயர்களை அடுத்து இந்நாள் வேலன்டைன் நாள் என்றும் காதலர்களே பெரும்பாலும் இந்நாளைக் கொண்டாடுவதால் காதலர் நாள் என்றும் காதலர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.

தோற்றத்தில் இது மேற்கத்திய உலகக் கொண்டாட்டமாக இருந்தாலும், அண்மைக் காலங்களில் உலகெங்கும் இந்நாளை கொண்டாடும் போக்கு இளைஞர்களிடையே கூடி வருகிறது. எனினும், இது மேலை நாட்டுப் பண்பாடுகளை திணிக்கும் முயற்சி என்றும் காதலின் பெயரால் நினைவுப் பரிசுப் பொருட்களை விற்கும் வணிகமயமாக்கம் என்றும் ஒரு சாராரால் குற்றம் சாட்டப்படுகிறது.

valentine-day_00456.jpg

பிப்ரவரி 14-ம் தேதியான இன்று உலக காதலர் தினம்.  வாழ்வின் தொடக்கப் புள்ளியாக ஆரம்பித்த காதல், ஆயுள் முழுவதும் முழு நிலாவாக ஒளிரட்டும். வெளிப்படுத்தாத காதலை வெளிப்படுத்தும் நல்லநாள், வெளிப்படுத்திய காதலை மகிழ்வோடு கொண்டாடும் திருநாள், திருமணமானவர்கள் காதலுக்கு பரிசு வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடும் இனிய நாளாக கொண்டாடுங்கள். புதியவர்கள் காதலைச் சொல்ல, காதலிப்பவர்கள் கரம் பற்றிக் கொண்டாட மற்றும் அன்பை பரிமாறிக் கொள்ளும் அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...

  • தொடங்கியவர்

சிங்கிள் செல்லங்கள் காதலர் தினத்தை இப்படியெல்லாம் கொண்டாடலாம்! #ValentinesDay

காதலர்

இந்தக் காதலர் தினம் வந்தாலே பசங்களுக்கு மனசுல உக்கார இடம் இல்லாம பட்டாம்பூச்சி பறக்கும். ஆள் இருக்கவன் பாத்த ஊரையே பாக்காத மாறி ஊர் சுத்தப் போவான். இல்லாதவன் எதாவது கிடைக்குமா.. நாமும் யார் கண்ணுக்காவது அஜித், விஜய், சிவா மாதிரித் தெரிஞ்சு நமக்கு ‘ஓகே’ சொல்ல மாட்டார்களானு சுத்திப் பார்ப்பான்.

ஆனா பெத்தவங்களுக்கு மனசு அன்றைக்குத்தான் பக் பக்னு - இருக்கும். காலேஜ் இருந்தாலும் பயம்.. இல்லாட்டியும் பயம். காலேஜ் இருந்தா ‘காலேஜுஜ்குத்தான் போனாளா.. இல்ல கட் அடிச்சுட்டு வெளில போய்ட்டாளோ’ அப்டின்னு சந்தேகப்பட்டு மணிக்கு ஒரு முறை போன் பண்ணி கேட்கும் அளவுக்கு பயம். கல்லூரி இல்லாவிட்டால் வெளியில் கடைக்கு தனியே அனுப்பக் கூட பயப்படுவார்கள். ஆஃபீஸில் உயர் அதிகாரிகளைக் கூட எளிதில் தாண்டி வந்து விடுவார்கள். வருடத்தின் இந்த நாளைத் தாண்டுவது பெரிய வேலையாக இருக்கும் பெற்றோருக்கு.

காதலி இருப்பவனுக்கு அவர் மேல் அன்பைப் பொழியும் தினமாய் அது அமையும். அன்றைக்கு ஒரு நாளாவது சண்டை ஏதும் இன்றி இருப்போம் என்று சபதம் ஏற்று நடக்கும் கூட்டம் உண்டு. இது ஒரு ரகம். இது ஒரு 35% இருப்பாங்கனு வெச்சுப்போம்.

காதலர் தினத்தன்று புதிதாய் மலரும் காதல்கள் மற்றொரு ரகம். ‘வாழ்வில் இந்த நாளுக்காகக் காத்திருந்தோம்’ என்று வசனம் பேசி காதலை வெளிப்படுத்தும் ரகம் இது. இது ஒரு 20%.

மிஞ்சி இருக்கும் 45% ‘ஐயம் சிங்கிள்’ என்று காலரை தூக்கி விட்டுக்கொண்டு கெத்தாக சுற்றும் நம் 'வருத்தப்படாத வாலிபர் சங்க' உறுப்பினர்கள்.

 ‘இருக்கவனுக்கு ஒரு காதல். இல்லாதவனுக்கு எங்கெங்கும் காதல்’  என்று மிடுக்காய் வசனம் பேசிச் சுற்றும் யுவன்- யுவதிகளை கொஞ்சம் கவனிப்போம்.

காதலர் தினம்

அன்பு மொத்தத்தையும் ஒருவரிடம் கொட்டாமல் எல்லாருக்கும் பகிர்ந்து அளிக்கும் சோசியலிஸ்ட் நாங்கள்.

கணியன் பூங்குன்றனார் சொன்ன `யாதும் ஊரே ; யாவரும் கேளிர்` எங்களிடம் இருப்பதைப் பார்க்கலாம். 

நாங்கள் ஆள் இல்லை என்பதை சமாளிக்கச் சொல்லவில்லை... அந்தத் தொல்லை எங்களுக்கு இல்லை. எங்கள் அன்பிற்கும் மகிழ்ச்சிக்கும் அணை கிடையாது என்பதை காட்டத்தான் சொல்கிறோம்.  

இவர்கள் எப்படி காதலர் தினத்தைக் கொண்டாடுவார்கள்? 

வாலன்டைன் சாகும்போது அன்பை பரிமாறிக் கொள்ளச் சொன்னார். சரி... ஒருவரிடம் மட்டும் எந்த அன்பை குவியுங்கள் என்று குறிப்பிட வில்லையே!

1. எப்பொழுதும் விற்கும் 5 ரூபாய் பூ வாலன்டைன்ஸ் டே அன்று 50 ரூபாயாம். அப்படி வீண் செலவு செய்து ஒருவரை மகிழ்விப்பதை விட 50 ரூபாய்க்கு மிட்டாய் வாங்கி பக்கத்து வீட்டு குழந்தைக்கு கொடுக்கலாம். அழகாக செல்பிக்கு போஸ் கொடுக்கும்.

2. கல்லூரில எப்படியும் பாதிப் பேர் மதியம் ஓடிருவாங்க. பிறகு நம் இனம்தான். ஜாலியா உக்காந்துருப்போம். எல்லாம் சேர்ந்து சந்தோசமா இருக்கலாம். கடைசி வருடம் படிக்கும் மாணவர்கள்னா... வாலன்டைன்ஸ் டே அன்று நம்ம நண்பர்களுக்கு.." மச்சி.. ஐ லவ் யூடா.. ஐ மிஸ் யூடீ" கூடச் சொல்லலாம். தப்பில்லைங்கறேன்.

3. அப்பா அம்மாக்கு லவ் யூ சொல்லலாம். அன்பா நாலு வார்த்தை பேசி அவங்களுக்கு ஆறுதலை இருக்கலாம். நாம சிங்கிளா இருக்கறதப் பார்த்து ‘அப்பாடா’னு நெனைக்கற ஜீவன் அவங்கதானே.. பாவம்!  

4. சமூகத்து மேல காதல் இருக்கவங்க இன்னிக்கு சமூக சேவை கூட செய்யலாம். மாற்றுத் திறன் மாணவர்கள் பள்ளில போய் அவங்களுடன் இருக்க நேரம் ஒத்துக்கலாம். உண்மைய சொல்ல போனா அவங்களுக்குத்தான் இப்ப அன்பும், காதலும் தேவைப்படுது. ஒருபடி மேல சொல்லணும்னா ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லத்துக்கு போலாம். இந்த உலகத்திலேயே அன்புக்காக அதிகம் ஏங்குபவர்கள் இவர்கள் தான்.

5. புத்தகக் காதலர்கள், சேமித்த பணத்தில் ஒரு புத்தகம் வாங்கிக் கொள்ளலாம். அதை காதலர் தினத்தன்று வாங்கிய புத்தகம் என்று குறிப்பிட்டு, பொக்கிஷமாய் வைத்துக்கொள்ளலாம். காதலர் தினத்துக்கு லோன் அப்ளை பண்ணிக் கொண்டாடறதுக்கு இது எவ்வளவோ பெட்டர் பாஸ்!   

இப்படி இன்னும் இன்னும் நிறைய செய்யலாம். வேற என்னென்ன செய்யலாம் என்று நீங்களும் சொல்லுங்க பார்ப்போம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தீராக்காதலில் திளைக்கச் செய்யும் தேவதைகள்! #MustRead

கூதற்காலத்து கணப்பிற்கு:

காதல் ரோஜா

லித்தேனிய புராணங்களில் அவளுக்கு 'மில்டா' என பெயர் வைத்திருந்தார்கள். அவனுக்கு அவள் 'கூதற்காலத்தின் கணப்பு.' முதலும் முற்றிலுமான வரம். அவளின்றி அணுவும் அசைந்ததில்லை அவனுக்கு. இருளும் குளிரும் மாறி மாறி வேட்டையாடிய தருணங்களில் அவளின் மார்புச்சூட்டில் புதைந்திருந்து மீண்டிருக்கிறான். அகதியாய் அலைந்த காலங்களில் அவளின் மடிதான் கடைசி புகலிடம். எழுதித் தீரா பக்கங்களுக்குச் சொந்தக்காரி. வாஞ்சையும் விருப்பமுமாய் அவர்கள் இளைப்பாறிய பச்சை மரம் பின் வந்த கோடையில் பட்டுப்போனது. அதன் கடைசி இலை உதிர்கையில் அவளும் இல்லை. இருவரின் ஊடல்களுக்கும் கள்ள மவுனம் காத்த போர்வை இப்போது கேட்பாரற்று நைந்துபோய் மூலையில் கிடக்கிறது.

ஆனாலும் மாறிலிகளின் வழியே கடந்தகாலம் காண்கிறான் அவன். அவளை வர்ணிக்கும் வரிகளை எதேச்சையாக கடக்கையில் எழுதியவரின் விரல்களை வருடிக்கொடுக்க முனைகிறான். பதில் வாராக் கடிதங்கள் தரும் வாதை உணர்ந்தவனாக இருந்தும் ஆண்டிற்கொரு முறை அஞ்சல் அனுப்புகிறான். காதோர மடிப்புகளை நிரடுகையில் அவளின் நகைப்பொலி கேட்கிறது. அவள் வெட்டி எறிந்த நகத்துணுக்குகள் சிலவற்றுக்கு அவன் விளக்கு காத்த பூதம். அவனின் இந்த மொத்தக் கதைக்குமான ஒற்றை சாட்சியம் ஓரங்களில் பழுப்படைந்த ஒரு புகைப்படம் மட்டும்தான். இந்தக் குறையைப் போக்கவே சில இசைக்குறிப்புகளுக்கு அவள் உருவம் கொடுத்து தனிமை விரட்டுகிறான். இன்றும் முகவரி இல்லா எண்கள் அலைபேசியில் ஒளிரும்போது அவனின் ஐம்புலன்களும் அனிச்சையாய் விழிப்படைவதை வழக்கமாக வைத்திருக்கின்றன. இப்போதைக்கு இல்லை அவற்றுக்கான ஓய்வு. 

மழை மேகங்களின் தூரிகைக்கு:

காதலர் தினம்

பால்ய காலம் தொட்டு அவனோடு நடை பழகியவள். துண்டுக் கடிதங்களின் மூலம் பிரியமும் மழலைக் காதலும் கொண்டார்கள். புற உலகின் சந்தடிகள் எதையுமே அவர்களின் குமிழ் உலகு பொருட்படுத்தியதில்லை. நான்காம் பரிமாணத்தின் வளர்ச்சியில் குமிழ் உடைய, அவள் காணாமல் போனாள். மெய்நிகர் உலகம் தோன்றிராத அந்தத் தருணங்களில் அவனின் தேடலும் மட்டுப்பட்டுப் போனது. பதினான்கு கோடைகள் கழித்து ஒருநாள், கூட்டத்தில் தனித்துத் தெரிந்தவளை கண்டுகொண்டான். பின்தொடர்ந்த கதைத்தலில் அவர்களின் குமிழ் உலகை மீண்டும் மீட்டார்கள்.

இம்முறை அந்தப் பிரியத்தில் கொஞ்சம் முதிர்ச்சியும் இருந்தது. அழுத்தம் அதிகமானால் குமிழ் உடையும் என்பதுதானே விதி. தந்தை சொல்லை மந்திரமாய் உச்சரிக்கும் தங்கமீன் அவள். ஒரு மழைநாளின் பின்னிரவில் மண்வாசனை சூழ்ந்த பேருந்து நிலையத்தில் 'அவ்வளவுதான்' என்ற இறுதி வார்த்தைகளை உதிர்த்துவிட்டு கார்கால இருளில் குதிங்கால்கள் அதிர விலகிப் போனாள். பிரேமம் நிறைந்த சம்பாஷணைகளால் விழித்திருந்த புலனம் தற்சமயம் இவர்களின் சம்பிரதாய குறுந்தகவல்களைக் கண்டு சோக சிரிப்பான்களை அனுப்புகிறது. காற்று வெளியிடை கடற்கரையோர கிளிஞ்சல்கள் அவளின் கடிதத் துணுக்குகளை நினைவூட்டுகின்றன. ஒன்றை பொறுக்கி எடுத்தபடி நடக்கிறான் அவன்.

பீத்தோவனின் பத்தாவது சிம்பொனிக்கு:

காதலர் தினம்

அபிநய உடல்மொழியும் அழகுக்குரலுமாய் பொழுதுகளை குளிர்வித்த தென்றல் அவள். ஒரு நண்பகல் நேரத்தில் இருவருக்குமான தொடக்கப் புள்ளியாய் இருந்தது இசை. அறிமுகப் படலத்திற்கு பின்னான கோடிட்ட இடங்களை தன் ஆர்மோனியம் கொண்டு நிரப்பினார் ராஜா. ஸ்வரங்களின் வழி சூல் கொண்ட அந்த உறவிற்கு உருவும் உயிரும் கொடுத்தன வடுகப்பட்டிக்காரரின் வரிகள். மொழி, அந்தஸ்து என இருவருக்குமிடையே அறுபது வித்தியாசங்களை வெறும் கண்களாலேயே கண்டறிய முடியும். ஆனால் தீரா உரையாடல்கள் தந்த போதை இந்தக் குறைகளைத் தாண்டும் கயிறாய் இருந்தது. எழுதியே பழக்கப்பட்ட அவனை எழுத்துகளில் வாழ வைத்து அழகு பார்த்தாள். 'உரை' - எல்லாவற்றுக்குமான விளக்கம். 'கவிதை' - தர்க்கம் தேவையில்லாத கற்பனை சூழ் உலகு. 'அவன்' - 'வா கவிதைகளில் தொலைந்து போகலாம்' என அவளின் காதோரம் அழைக்கும் குரல். 'அவள்' - உரைக்கும் கவிதைக்கும் நடுவே தொலைந்து பின் மீண்டவள். 'ஆழ்மனதின் அழுக்கு ஓரத்தையும் அழகியலோடு ஏற்றுக்கொள்பவர்கள் கிடைப்பது வரம். அந்த வகையில் உன்னால் நான் தன்யனானேன்' - அவனுக்கு அவள் எழுதிய இறுதிக்கடிதம் இப்படியாகத்தான் முடிந்திருந்தது. இப்போதும் உள்டப்பியில் வந்து விழும் அவளின் குரல் குறிப்புகளில் தொடங்குகிறது அவனின் வார இறுதிகள்.   

பிளாட்டோவின் தொலைந்து போன புத்தகத்திற்கு:

தேவதை

அவனின் மின்னற்பொழுது காதலி இவள். புதிதாய் அச்சான புத்தகத்தின் பக்கங்களைப் போல பிரத்யேக வாசனையைக் கொண்டவள். ஆர்தர் கானன் டாயலின் கதாநாயகனைக் கண்டு சிலிர்ப்பவள் 'ஏழாம் உலக'த்து பிரஜைகளுக்காக கண்ணோரம் கரைவாள். அவளின் உணர்ச்சிகளைக் கடன் பெற்ற புத்தகங்கள்தான் பதிலுக்கு வாசனையை பரிசாய் அளித்தன போலும். நடுநிசிகளில் காற்றில் கிசுகிசுக்கும் இவர்களின் உரையாடல்களுக்கான எரிபொருள் - ரஹ்மான். 'யாரோ... யார் அறிவாரோ' என உச்சம் தொடும் அவரின் குரல் இவர்களுக்கான கொலம்பிய கோக்கைன். வயலின் இசை கேட்டால் சர்வமும் மறக்கும் அவளுக்கு. அவனுக்கான காதல், காமம், மோகம் மொத்தமும் அவளின் மூக்கு நுனியில் இருந்தது. இன்றும் கடந்து செல்லுகையில் ஒலிக்கும் ஒரு சின்ன இசைக்குறிப்பின் மூலம் அவன் மூளை சுருக்கங்களில் இருந்து அவள் கிளர்ந்தெழுகிறாள். இப்படியாக, மூக்கு நுனி வழி அவனுக்கு மோட்சம் உணர்த்தியவள் பிளாட்டோவின் மூன்றாவது தொகுதி போல ஒருநாள் காணாமல் போனாள். அவளுக்காக எப்போதும் பிரத்யேக பிரயத்தனங்கள் எடுக்கும் அவன் இம்முறை எதையும் கைக்கொள்ளவில்லை. காரணம், அவள் சென்றது அட்லாண்டிஸ் தீவிற்கு...

இப்படி... தீராக்காதலில் திளைக்கச் செய்யும் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டவன் இவன். பதிலுக்கு அத்தேவதைகளுக்கு அவனால் தரமுடிந்ததெல்லாம் பேரன்பும், பெருங்காதல் கலந்த பிரிய முத்தங்களுமே...! 

காதல் சூழ் உலகத்து குடிமக்களுக்கு வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்

சல்மான் ருஷ்டிக்கு ஈரான் மரண தண்டனை விதித்த நாள் (பிப். 14- 1989)

சர் அகமத் சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர். இவரின் 1981-ல் வெளிவந்த இரண்டாம் நாவல் மிட்னைட்ஸ் சில்ட்ரென் காரணமாக முதலாக புகழுக்கு வந்தார். இந்நாவல் புக்கர் பரிசு வென்றுள்ளது. இவரது நாவல்கள் இந்திய தீபகற்பம் இந்தியச் சூழலில் அமைந்துள்ளன. இவரது இலக்கிய வகை மாய யதார்த்தவாதம் என்ற தன்மையிலானது. கிழக்கு மற்றும் மேற்கு உலகங்களிடையே உள்ள தொடர்புகள். தாக்கங்கள் மற்றும் குடிப்பெயர்வுகளை தமது கதைக்களனாகக் கொண்டுள்ளார்.

 
 
 
 
சல்மான் ருஷ்டிக்கு ஈரான் மரண தண்டனை விதித்த நாள் (பிப். 14- 1989)
 
சர் அகமத் சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர். இவரின் 1981-ல் வெளிவந்த இரண்டாம் நாவல் மிட்னைட்ஸ் சில்ட்ரென் காரணமாக முதலாக புகழுக்கு வந்தார். இந்நாவல் புக்கர் பரிசு வென்றுள்ளது. இவரது நாவல்கள் இந்திய தீபகற்பம் இந்தியச் சூழலில் அமைந்துள்ளன. இவரது இலக்கிய வகை மாய யதார்த்தவாதம் என்ற தன்மையிலானது. கிழக்கு மற்றும் மேற்கு உலகங்களிடையே உள்ள தொடர்புகள். தாக்கங்கள் மற்றும் குடிப்பெயர்வுகளை தமது கதைக்களனாகக் கொண்டுள்ளார்.

1988-ல் இவரின் நான்காம் நாவல், த சாத்தானிக் வெர்சஸ், வெளிவந்தது. இந்நாவல் இஸ்லாமைப் பழி தூற்றுகிறது என்று கூறி உலகில் பல முஸ்லிம்கள் ருஷ்டிக்கு எதிராக போராட்டம் செய்தனர். ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெய்னி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு ஃபத்வா வெளியிட்டார். இதனால் ருஷ்டிக்கு பிரித்தானிய காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1966 - ஆஸ்திரேலியாவில் முன்னர் பாவனையில் இருந்த ஆஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
* 1979 - ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அடொல்ஃப் டப்ஸ் காபூலில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் காவற்துறையினருக்கும் கடத்தல்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இறந்தார்
 
* 1981 - டப்ளினில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ர தீயில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1987 - யாழ்ப்பாணம், கைதடியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பொன்னம்மான் உட்பட ஏழு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
 
* 1987 - தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி நிதர்சனம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
 
* 1989 - ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.
 
* 1989 - யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் அழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்ட ஈடாக வழங்க சம்மதித்தது.

* 1990 - பெங்களூருவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 92 பேர் கொல்லப்பட்டு 54 பேர் காயங்களுடன் தப்பினர்.
 
* 2000 - நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.
 
* 2005 - லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி சுட்டுக் கொல்லப்பட்டார். * 2005 - பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 7 பேர் கொல்லப்பட்டு 151 பேர் காயமடைந்தனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

மிச்செல் எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்!' - ஒபாமாவின் காதல் டைரி #ValentinesDay

ஒபாமா மிச்செல் ஒபாமா காதல்

காதல் ஒரு மனிதனை என்னவாக வேண்டுமானாலும் மாற்றும். காதல் கோழைகளை வீரனாக்கும், காமெடியன்களை ஹீரோவாக்கும். அப்படிப்பட்ட காதல் ஒருவரை உலகின் சர்வ வல்லமை படைத்த  பதவியான அமெரிக்க அதிபர் பதவிக்கு வரவைத்தது. எப்போதுமே ஒரு ஆண் சிறந்தவர் என மற்றவர்கள் கூறுவதை விட ஒரு பெண் கூறினால் அந்த ஆணின் மதிப்பு வேறு உயரத்தில் இருக்கும். அப்படித்தான் மிச்செல் ஒபாமாவின் ஒரே மேடைப்பேச்சு ஒபாமாவை அமெரிக்க அதிபராக்கியது.

இவர்களை, 'அமெரிக்க அதிபர் - ஃபர்ஸ்ட் லேடி'யாக அமெரிக்கா பார்த்ததைவிட, 'நல்ல கணவன் - மனைவி'யாகத்தான் பார்த்து வியந்தது. காதல், அன்பு, பாசம் என தங்களை மக்களோடு இணைத்துகொண்டதில் இந்த ஜோடி... நிஜமாகவே ஜோடி நம்பர் 1-தான். சட்டம் படிக்க ஹார்வர்ட் சென்ற மிச்செல் வழக்கறிஞராகி பின்னர் சிட்லி ஆஸ்டின் நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தார். அங்குதான் ஒபாமாவைச் சந்தித்தார். அதன் பின் காதல், திருமணம் என ஒபாமா-மிச்செல் வாழ்க்கை காதலால் பின்னிப் பிணைந்தது.

நல்ல வேலையில் இருந்த மிச்செல் 2007-ம் ஆண்டு கணவருக்காக வேலையை உதறித் தள்ளினார். ஆம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஒபாமாவுக்காக பிரசாரக் களத்தில் குதித்தார் மிச்செல். 'உலகின் மிக அதிகாரம் வாய்ந்த வெள்ளை மாளிகையில் கருப்பினத்தவரும் நுழைய முடியும்.' என்பதை நிரூபிக்க மிச்செலின் பிரசாரங்களும், ஒபாமாவின் தன்னம்பிக்கை பேச்சுகளும்தான் காரணம். ஜனநாயகக் கட்சி மாநாட்டில் பேசிய மிச்செல், 'என் கணவரை ஏன் அதிபராக்க வேண்டும்?'' என்று பேசியது ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹோப் பிரசாரம் ஒபாமாவை பறைசாற்றியது என்றால், மிச்செலின் பேச்சுதான் அவரை அதிபராக்கியது என்று கூறலாம்.

ஒபாமா மிச்செல்  காதல்

பிரசாரம் முடிந்தது, அதிபரானார் ஒபாமா. இதற்கு மிச்செல் கேட்ட பரிசு, இவர்களது காதலின் ஆழத்தை உலகுக்கு காட்டியது. அது, 'ஒபாமா புகைப்பழக்கத்தை விட வேண்டும்.' என்பதுதான். ஒருமுறை மிச்செலிடம், 'உங்களை எப்படி அறிமுகம் செய்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள்?' என்றதற்கு, 'எனது மகள்களின் தாயாக எனக் கூறி தான் அறிமுகம் செய்துகொள்ள ஆசை.' என்றார். அதாவது, 'அமெரிக்க அதிபரின் மனைவி!' என கர்வம் கொள்ளாமல் தாய்மை உணர்வோடு அவர் பேசியது மக்களை நெகிழ வைத்தது. 'ஆங்ரி ப்ளாக் உமன்' என ஒபாமா, மக்கள் மத்தியில் காதலோடு பேசியது எல்லாமே பார்ப்பவர்களை வியக்க வைத்தது.

2012-ம் ஆண்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரங்களில் மிச்செலின் பேச்சு ஒபாமாவை உலக அரங்கில் அதிபர் என்பதையும் தாண்டி 'சிறந்த கணவர்' என்று அடையாளப்படுத்தியது. வெள்ளை மாளிகை பூங்காக்களில் ஒபாமாவும், மிச்செலும் சிறுவர்களுடன் விளையாடுவது; 'நாங்கள் உங்களைப்போல் ஆகவேண்டும்.' என அந்தச் சிறுவர்கள் கூறும்போது அவர்களை வாழ்த்துவது... என இயல்பாக தங்களின் அன்பை உலகுக்கு காட்டிய ஜோடி இவர்கள்.

இனி ஒபாமா அதிபர் இல்லை, மிச்செலும் ஃபர்ஸ்ட் லேடி இல்லை என்பது தெரிந்தாலும் 2016 ஜனநாயகக் கட்சி மாநாட்டில் 8 வருட அனுபவத்தையும், குழந்தைகளுக்கு தாயாகவும், அமெரிக்க மக்களுக்கு நல்ல முதல் குடிமகளாகவும் விளங்கினார் என்பதை அவரது பேச்சு உணர்த்தியது. 'எனது குழந்தைகள் வெள்ளை மாளிகைக்கு வரும்போது சிறுமிகள்; தற்போது யங் வுமன்.' எனக்கூறி தனது தாயுள்ளத்தை காட்டினார் மிச்செல்.

பராக் மிச்செல் காதல் கதை

ஒபாமா தனது ஃபேர்வெல் பேச்சில், '25 வருடங்களாக மிச்செல் என்னோடு இருக்கிறார். ஒரு மனைவியாக, தாயாக... இந்த நாட்டின் ஃபர்ஸ்ட் லேடி என்பதையும் தாண்டி எனக்கு நல்ல தோழியாகவும் இருந்துவருகிறார்' என்றபோது மிச்செலின் கண்களில் வழிந்த நீர் தான் இவர்களது காதலின் அடர்த்தியைச் சொல்லியது. இன்று சூழல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கடைசி வரை காதல் சற்றும் குறையாமல் இருக்கும் இந்த ஜோடியை அமெரிக்கா எப்போதும் மிஸ் செய்யும்.!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மார்கரெட் நைட்

 
girl_3132587f.jpg
 
 
 

இயந்திரங்களை உலகுக்குத் தந்த சாதனைப் பெண்

19-ம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான அமெரிக்கப் பெண் கண்டுபிடிப்பாளர் மார்கரெட் ஈ. நைட் (Margaret E. Knight) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 14). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:

* அமெரிக்காவில் யார்க் என்ற சிறுநகரில் பிறந்தவர் (1838). 12-வது வயதில் படிப்பை நிறுத்திவிட்டு பருத்தி ஆலையில் பணியாற்றத் தொடங்கினார். அவ்வப்போது நெசவுத்தறியில் குறுக்கு இழைகளை எடுத்துச்செல்லும் கருவி நழுவி அங்கு வேலை பார்க்கும் சிறுவர்களைப் பதம் பார்ப்பது வாடிக்கையான நிகழ்வு.

* இந்தச் சிறுமி இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று எண்ணி அந்த ஷட்டிலுக்கு மாற்றாக ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தார். இதை அந்த நிர்வாகம் பயன்படுத்தத் தொடங்கியது. மெல்ல மெல்ல நாடு முழுவதும் இது பயன்பாட்டுக்கு வந்தது.

* இந்தச் சிறுமி, இதனால் எந்த வகையிலும் பலனடையவில்லை. ஆனால், இந்த அனுபவம் அவளுக்கு பின்னாளில் பல்வேறு சாதனங்களைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையையும், கற்பனைத் திறனையும், விடாமுயற்சியையும் வழங்கியது. சில ஆண்டுகளில் நியு ஹாம்ஷயரில் கொலம்பியா பேப்பர் பேக் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் அங்கு குடியேறினார்.

* அந்த நாட்களில் பொருள்களை வாங்க காகிதத்தை மடித்து ‘v’ வடிவில் அடியில் ஒட்டி பயன்படுத்தினார்கள். அடித்தட்டையான (flat bottomed) பைகளைக் கைகளால் செய்வது மிகவும் கஷ்டமாகவும் நேரம் பிடிக்கும் வேலையாகவும் இருந்தது. காகிதப் பை செய்யும் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த இவருக்கு இதற்கான ஒரு இயந்திரம் கண்டறியும் யோசனை பிறந்தது.

* ஒரே மாதத்துக்குள் இந்த இயந்திரத்தை வடிவமைத்தார். ஆறே மாதங்களில் மரத்தாலான மாதிரி ஒன்றை உருவாக்கினார். இந்த இயந்திரம் காகிதத்தை வெட்டி, மடித்து, ஒட்டிவிடும். இந்த மாதிரி இயந்திரம் 1000-க்கும் மேற்பட்டப் பைகளைத் தயாரித்தது. இதற்கான உரிமம் கோர, இதைவிட சிறப்பாக செயல்படக்கூடிய இரும்பாலான இயந்திரத்தை தயாரிக்க விரும்பினார்.

* இந்த மாடலை உள்ளூர் கடைக்கு எடுத்துச்சென்று, அங்குள்ள இயந்திரங்கள் உருவாக்கும் வல்லுநரோடு ஒன்றிணைந்து இதை இரும்பில் தயாரித்தார். திருப்தியான வடிவில் வந்த பிறகு உரிமத்துக்காக விண்ணப்பித்தார். ஆனால், இவரது இயந்திர வடிவமைப்பு முறைகளை வேறு ஒருவர் திருடி, வடிவமைத்து ஏற்கெனவே காப்புரிமை பெற்றுவிட்டார்.

* பின்னர் அவர் மேல் வழக்குத் தொடுத்து வெற்றிப்பெற்றார் மார்கரெட். 1879-ம் ஆண்டில் இவருக்கு இதற்கான காப்புரிமை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இவரது புகழ் பரவியது. உலகம் முழுவதும் காகிதப் பைகள் பயன்படுத்தப்பட்டன. ஈஸ்டர் பேப்பர் பேக் கம்பெனியைத் தொடங்கினார்.

* ஷூக்களின் அடிப்பாகத்தை வெட்டும் இயந்திரம், தையல் இயந்திரத்தின் உருளை, பேப்பர் ஃபீடிங் மிஷின், எண்ணிடும் கருவி, உருளைப் பரப்புகளைத் துளைக்கும் அல்லது இழைக்கும் தானியங்கி கருவி உள்ளிட்ட ஏராளமான இயந்திர சாதனங்களைத் தொடர்ந்து கண்டுபிடித்துக்கொண்டே இருந்தார்.

* இவரது 70-வது வயதில்கூட தினமும் இருபது மணிநேரம் வேலை செய்தார். ஏறக்குறைய 100 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்.

* பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாத சூழல், வறுமைத் துயர், அங்கீகாரம் மறுக்கப்பட்ட அவலம் உள்ளிட்ட தடைகளைத் தகர்த்து, படைப்பாற்றல் துணையுடன் எளிய ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த பல இயந்திர சாதனங்களை உலகுக்குத் தந்த சாதனைப் பெண்மணி மார்கரெட் நைட் 1914 அக்டோபர் மாதம் 76-ம் வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

C4mv0VQUcAANcA0.jpg

  • தொடங்கியவர்

அர்ஷத் கான் முதல் அம்ப்ரோஸ் வரை... கிரிக்கெட் ஓய்வுக்குப் பின் என்ன வேலை செய்கிறார்கள் தெரியுமா?

கிரிக்கெட்டை மதமாகவும், கிரிக்கெட் வீரர்களை கடவுளாகவும் பார்க்கும் நம் நாட்டில், வீரர்கள் ஓய்விற்குப் பின்னும் பிரபலங்களாகவும், அரசியல்வாதிகளாகவும் வலம் வருகின்றனர்.  இங்கு, ரஞ்சி டிராபியில் விளையாடினாலே லைஃப் செட்டில்டு என்ற நிலை இருக்கிறது. இவ்வளவு ஏன்... தன் வாழ்நாளில் ஒரு சர்வதேசப் போட்டியில் கூட விளையாடாதவர்களும், முதல்தர போட்டிகளில் மட்டுமே பங்கேற்றவர்களும் கூட கோச்சிங் அகாடமிகளை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர்.  பிற நாடுகளில் நிலைமை அப்படியில்லை. ஓய்விற்குப் பிறகு கிரிக்கெட்டுடன் தொடர்பே இல்லாத பணிகளைச் செய்யும் பல கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அவர்களில் மிக விநோதமான வேலைகள் பார்க்கும் ஐந்து கிரிக்கெட் வீரர்கள் இதோ...

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

அர்ஷத் கான் (பாகிஸ்தான்)

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அர்ஷத் கான்

இவர் 1997-1998 மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான  சுற்றுப்பயணத்தின்போது அறிமுகமானார் அர்ஷத் கான். அதற்கு அடுத்த வருடம் ஆசியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியிலும் இடம்பெற்றிருந்தார். 2001 வரை அணியில் தவறாமல் இடம்பிடித்துவந்த இவர், நடுவில் கொஞ்சம் சொதப்பியதால், அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின் உள்ளூர் போட்டிகளில் ஜொலித்து மீண்டும் 2005-ல் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார். பாகிஸ்தான் அணி 2005-ல் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. பெங்களூரு டெஸ்டில் பாகிஸ்தான் கடைசி இரண்டு செஷன்களில் சுதாரித்து, போட்டியை டிரா செய்ய முக்கிய காரணம் அர்ஷத் கான் தான்.  அதன் பின் சொல்லும்படி பெரிதாக ஜொலிக்கவில்லை. ஓய்வு பெற்றார். மொத்தம் ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஓய்வுக்குப் பின் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் குடியேறி உள்ளார். தன் காலத்தில் தேர்ந்த சுழற்பந்து வீச்சாளராக அறியப்பட்ட அன்னாரின் இப்போதைய பணி வாகன ஓட்டுநர்.

டேவிட் ஷெப்பர்ட் (இங்கிலாந்து)

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் ஷெப்பர்ட்

1950-ல் அறிமுகமான இவர், இங்கிலாந்து அணிக்காக 22 டெஸ்ட்களில் விளையாடி 3 சதங்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். உலகப்போர் முடிந்த காலத்தில் விளையாடிய சிறந்த பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவரென புகழப்பட்டவர். ஓய்வுபெற்றபின் சர்ச் ஒன்றில் பிஷப்பாக மாறினார் ஷெப்பர்ட். 1997 வரை பிஷப்பாக இருந்த இவர் 2005-ல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

கிறிஸ் ஓல்ட் (இங்கிலாந்து)

 

1970-களில் இங்கிலாந்து அணியில் தவறாமல் இடம்பிடித்த பந்துவீச்சாளர் இவர். 1972-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவரது முதல் விக்கெட் சுனில் கவாஸ்கர். அந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் விழ்த்தினார். 1981 ஆஷஸ் தொடரில் முக்கியப்பங்கு வகித்தார். 1977-ம் மற்றும் 1980-ம் ஆண்டு நடைபெற்ற நூற்றாண்டு போட்டிகள் இரண்டிலும் விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது (1877 மற்றும் 1880ல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தங்கள் சொந்தமண்ணில் மோதிய முதல் போட்டியை குறிப்பிடுவதே நூற்றாண்டு போட்டி என அழைக்கப்பட்டது).
ஓய்வுக்கு பிறகு மனைவியுடன் ’ஃபிஷ் அண்ட் சிப்ஸ்’ எனப்படும் சிற்றுண்டிக் கடையை நடத்தினார்.

கிறிஸ் லெவிஸ் (இங்கிலாந்து)

கிறிஸ் லெவிஸ்

ஆல்ரவுண்டராக 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 93 விக்கெட்டுகள் வீழ்த்திய இவர் அடித்தது ஒரே ஒரு சதம்தான். அதுவும் நம் சென்னையில்... 1996-ல் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடிய இவர் ,அதிர்ச்சி தரும் விதமாக 2009-ல் சிறைபிடிக்கப்பட்டார். 1,40,000 யூரோ மதிப்பிலான போதைப் பொருளை ஜூஸ் டப்பாக்களில் அடைத்து, அதை தன் கிரிக்கெட் பைகளில் கடத்திய குற்றத்திற்காக இவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

கர்ட்லி அம்ப்ரோஸ் (மேற்கிந்தியத் தீவுகள்)

கர்ட்லி அம்ப்ரோஸ்

கிரிக்கெட் ரசிகர்கள் எவராலும் இவர் பெயரை மறக்கமுடியாது. இவரும் கோர்ட்னி வால்ஷும் இணைந்து 1990-களில் பல அணிகளை கதிகலங்கச் செய்துள்ளனர். 98 டெஸ்ட்களில் 405 விக்கெட்களும்,176 ஒருநாள் போட்டிகளில் 225 விக்கெட்களும் எடுத்திருந்தார் இவர். பந்துவீச்சில் பல சாதனைகள் படைத்த இவர் ஓய்விற்கு பின் 'Dread and the baldhead' என்ற இசைக்குழுவில் கிட்டாரிஸ்ட்டாக சேர்ந்தார். இவர் சமீபத்தில் வார்னே அணிக்கும் சச்சின் அணிக்கும் இடையே அமெரிக்காவில் நடந்த ஆல் ஸ்டார்ஸ் போட்டியிலும் விளையாடினார்.

http://www.vikatan.com

 

  • தொடங்கியவர்

பேசும் படம்: தீர்ப்புக்கு முன்னும் பின்னும் சசிகலா ஆதரவாளர்!

 
fine_3132884f.jpg
 
 
 

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகவிருந்த நிலையில், போயஸ் கார்டனில் சசிகலா ஆதரவாளர்கள் திரண்டனர். அதில் ஒருவர் கவனம் ஈர்க்கும் வகையிலான கெட்டப்பில் இருந்தார். தீர்ப்பு வருவதற்கு முன் உற்சாகத்தில் இருந்த அவர், தீர்ப்பு வந்த பின்னர் உத்வேகத்தை முற்றிலும் இழந்தவராக காட்சியளித்தார்.

01_3132870a.jpg

02_3132872a.jpg

03_3132876a.jpg

04_3132877a.jpg

05_3132878a.jpg

08_3132879a.jpg

 

http://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.