Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: அரசியல் செய்ய விரும்பு

 

 
main_3137210f.jpg
 
 

8_3137211a.jpg

7_3137212a.jpg

6_3137213a.jpg

5_3137214a.jpg

4_3137215a.jpg

3_3137216a.jpg

2_3137217a.jpg

1_3137218a.jpg

 

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
கண்டதையும் கேட்பதே பாவம்
 
 

article_1488342303-canstockphoto3715459.மிகநெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் ஏதோ காரணங்களுக்காகப் பிரிந்துபோன பின்னர், தங்களுக்கிடையே பரிமாறப்பட்ட அந்தரங்கமான, பிறரைப் பாதிக்கக் கூடிய விடயங்களைப் பகிரங்கப்படுத்துவது தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளும் காரியங்களாகும்.

என்னதான் மனிதர்கள் நட்புப் பாராட்டினாலும் சிலரின் மிருககுணம் ஏதோ சந்தர்ப்பத்தில் வெளிக்கிளம்புகின்றது. எங்களால் நம்பமுடியாத நபர்களே துரோகிகளாகி விடலாம்.

எனவே, எக்காரணம் கொண்டும் சொல்லக்கூடாத சங்கதிகளை எவரிடத்தும் பகர்தல் ஆபத்ததானது என அறிந்து கொள்ள வேண்டும்.

அடிக்கடி மாறும் மனித மனம் சலனப்பட்டால் எல்லாமே நடக்கலாம். அதற்காக எவரிடத்தும் சந்தேகப்படுதலோ அல்லது என்றும் எச்சரிக்கையுடன் வாழ்தல் என்று பொருள்படக்கூடாது.

எவரேயாயினும் அவர்களிடம் சொல்லக்கூடாத இரகசியங்களைச் சொல்வது தர்மம் அல்ல. கண்டதையும் கேட்பதே பாவச் செயல்தான்.

நற்காரியங்கள் செய்வதைவிடத் துர்க்காரியங்களைக் கண்டு கொள்ளற்க.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இதோ... இந்த நிமிஷம் உங்களுக்காகத் தான்! #MorningMotivation

Morning Motivation, Coffee

து ஒரு அற்புதமான காலைப்பொழுது. சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த ரிசார்ட் வீடு ஒன்றில் இருக்கும் மேசையின் முன் அமர்ந்து இருக்கிறீர்கள். அந்த மேசையில் ஆவி பறக்க ஒரு கப் காபி வைக்கப்பட்டு இருக்கிறது. எதிரே பரந்து விரிந்து கிடைக்கும் மலைக்காடு. மைனாக்கள், சிட்டுக்குருவிகள் என பலவிதப் பறவைகள் போட்டிப்போட்டு பாடிக்கொண்டிருக்கின்றன. ஆசை ஆசையாய் காஃபியை எடுத்து பருகத் தொடங்கிய நேரத்தில் பாக்கெட்டிலிருந்து உங்கள் செல்போன் ஒலிக்கிறது. அடுத்து என்ன நடக்கும், காபியை அப்படியே வைத்துவிட்டு போன் பேச தொடங்கிவிடுவோமல்லவா? அதைத் தொடர்ந்து அப்படியே உங்களது ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் கணக்குகள்  வேகமெடுக்கத் தொடங்கி இருக்கும். அப்புறம் எங்கே காபியை ரசித்து குடிப்பது? ஓட்டம் மட்டும்தான்.

நிதானமாக கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். இயற்கை எழில் கொஞ்சும் அந்த ரிசார்ட் வீட்டைப் போலவேதான் ஒரு காபியோடு அமைதியாக உங்கள் ஒவ்வொரு நாளையும் தொடங்குவீர்கள். ஆனால் எத்தனை நாள் அந்த சுவையை அனுபவித்துப் சுவைத்துக் குடித்திருப்போம்? நீங்கள் காபி குடிக்கும்பொழுதோ, அல்லது காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதோ யாரும் வலுக்கட்டாயமாக உங்களை இழுத்துச் செல்லப் போவதில்லை. ஆனால் ஏன் அவ்வளவு அவசரம் என்று யோசித்துக் கூட பார்க்க முடியாத அளவுக்குத்தான் ஒவ்வொரு நாளையும் கடந்து கொண்டிருப்போம்.

"இப்படி அள்ளிக்கொட்டிகிட்டு போனா எப்படி உடம்புல ஓட்டும்?" என்ற அம்மாக்களின் கரிசன கேள்வியை எதிர்கொள்ளாதவர்கள் குறைவுதான். துரித உணவுகளைப் போல அவசர வாழ்க்கைக்கு நம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் நம் குழந்தைகளையும் அப்படித்தானே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு எப்போதாவது எழுந்து இருக்கிறதா? மருத்துவர் சொன்னார் என்பதற்காக வியர்க்க விறுவிறுக்க நடைப்பயிற்சி. மனைவி கிண்டலடிக்கிறார் என்பதற்காக குட்டித் தொப்பையை மறைக்க ஜிம்மில் ஒர்க் அவுட் என ஒவ்வொருநாள் நாள் காலையையும் அர்பணித்திருக்கும் அதே நேரத்தில் உங்களுக்காகவும் கொஞ்ச நேரத்தை ஒதுக்கிப் பாருங்களேன். நடைப்பயிற்சியை விடவும், ஜிம் ஒர்க் அவுட்டுகளை விடவும் அதிக ஆற்றலை அது தரும்.

இதைத்தான் செய்ய வேண்டும் என்ற முன்முடிவையும் அவசரப்பட்டு எடுத்துக் கொள்ள வேண்டாம். ராஜா சார் பாட்டு கேட்டா உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்னா அதில் என்ன தவறு இருந்துவிடப் போகிறது. பாட்டு கேட்டுக்கொண்டே வேறு ஏதாவது வேலையையும் செய்யலாம் என்பதால்... இது டபுள் சாய்ஸ் சான்ஸ்!   

ங்கள் வேலையைப் பற்றியும் வேலை நேரத்தையும் பிறரைவிட உங்களுக்குத்தானே முழுதாகத் தெரியும் அப்புறமென்ன? நல்ல பாடல்களுடன் ஆரம்பிப்பதில் என்ன தவறு இருந்துவிடப் போகிறது. ஒவ்வொரு நாள் காலையும் உங்கள் மனதுக்கு பிடித்தவாறு ஆரம்பிக்க பழகுங்கள் அதுவே அந்த நாளில் உங்கள் உற்சாகத்தை பன்மடங்காக பெருக்க வழிவகுக்கும். இப்படி ஒவ்வொரு நிமிஷத்தையும் ரசிச்சு கடந்து போகும் பொழுது, கடந்த வருடங்களின் ஃபேஸ்புக் மெமரி ஸ்டேட்டஸ ஷேர் பண்ணி சந்தோஷப்படுற அவசியம் இருக்காதே.

ம்ம எல்லோருக்குமே சின்ன வயசுலேருந்து இப்போவாரைக்கும் வேகமான வேலைக்கும், விவேகத்துக்கும் உதாரணமா எல்லோரும் சொல்லுற கதை ஒன்னு இருக்கு. அதுதான் முயல் ஆமை கதை ஏன் நாம கூட நிறைய பேருக்கு சொல்லியிருப்போம். எப்பவும் "வேகமா வேலை செய்யணும், ஓடிக்கிட்டே இருக்கணும், யோசிக்கறதுக்கெல்லாம் நேரம் இல்லை எழுந்து ஓடு பாதை திறக்கும்"னு அட்வைஸ் பண்ணிட்டு இந்த முயல் ஆமை கதை சொல்லுறப்போ மட்டும் "அவசரப்படக் கூடாது, நிதானமா ஒவ்வொரு அடியை வைச்சாலும் கவனமா வைச்சா வெற்றி சுலபமா கிடைச்சுடும்னு" சொல்லுவாங்க. இது என்ன பாஸ் போங்கா இருக்கு. முயலா இருக்குறத காட்டிலும் ஆமையா இருக்கிறதுதான் புத்திசாலித்தனம்னா அப்புறம் ஏன் இவ்வளவு வேகமா சக்கரத்தை கட்டிக்கிட்டு ஓடிக்கிட்டு இருக்கோம்?

விஷயம் ரொம்பவே சிம்பிள் தான்  Live The Moment..!!  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று

மார்ச் – 01

 

1562 : பிரான்ஸில் ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட புரட்­டஸ்­தாந்­தர்கள் கத்­தோ­லிக்­கர்­களால் கொல்­லப்­பட்­டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்­ப­மா­னது.


1565 : பிரே­ஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நகரம் அமைக்­கப்­பட்­டது.


1700 : சுவீடன் தனது புதிய நாட்­காட்­டியை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.


1815 : இத்­தா­லியின் தீவான எல்பா தீவில் நாடு கடத்­தப்­பட்ட நிலையில் வாழ்ந்த நெப்­போ­லியன் பொனபார்ட் பிரான்ஸ் திரும்­பினார்.


varalaru-01-03-china1873 : பாவ­னைக்­கு­கந்த முத­லா­வது தட்­டச்சுப் பொறியை ஈ. ரெமிங்டன் சகோ­த­ரர்கள் நியூ­யோர்க்கில் 
தயா­ரித்­தனர்.


1896 : ஹென்றி பெக்­கெரல் கதி­ரி­யக்­கத்தைக் கண்­டு­பி­டித்தார்.


1901 : இலங்­கையில் நான்­கா­வது மக்கள் தொகைக் கணக்­கெ­டுப்பு இடம்­பெற்­றது. மொத்த மக்கள் தொகை 3,565,954 ஆக பதி­வா­கி­யது.


1912 : முதன் முதலில் பறக்கும் விமானம் ஒன்­றி­லி­ருந்து அல்பேர்ட் பெரி என்­பவர் பர­சூட்டில் இருந்து குதித்தார்.


1953 : சோவியத் ஒன்­றி­யத்தின் அதிபர் ஜோசப் ஸ்டாலி­னுக்கு மார­டைப்பு ஏற்­பட்­டது. நான்கு நாட்­களின் பின்னர் அவர் இறந்தார்.


1954 : ஐக்­கிய அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற கட்­டடம் மீது புவேர்ட்டோ ரிக்கோ தேசி­ய­வா­திகள் நடத்­திய தாக்­கு­தலில் ஐந்து காங்­கிரஸ் உறுப்­பி­னர்கள் காய­ம­டைந்­தனர்.


1954 : பசுபிக் சமுத்­தி­ரத்­தி­லுள்ள பிகினி அட்டோ தீவில் அமெ­ரிக்கா ஐத­ரசன் குண்டு பரி­சோ­தனை நடத்­தி­யது. இதனால் அதி­க­ளவு கதிர்­வீச்சு மாசு ஏற்­பட்­டது.


1966 : சோவி­யத்தின் வெனேரா 3 விண்­கலம் வெள்ளி கோளில் மோதி­யது. வேறொரு கோளில் இறங்­கிய முத­லா­வது விண்­கலம் இது­வாகும்.


1973 : சூடானில் சவூதி அரே­பி­யாவின் தூத­ர­கத்தை கறுப்பு செப்­டம்பர் இயக்­கத்­தினர் தாக்கி மூன்று வெளி­நாட்டு தூது­வர்­களைப் பண­யக்­கை­தி­க­ளாக்­கினர்.


1975 : அவுஸ்­தி­ரே­லி­யாவில் வர்ணத் தொலைக்­காட்சி சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது.


1981 : ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணுவ உறுப்­பினர் பொபி சான்ட்ஸ் வட அயர்­லாந்து சிறையில் சாகும்­வரை உண்­ணா­நிலைப் போராட்­டத்தை ஆரம்­பித்தார்.


1992 : யூகோஸ்­லா­வி­யா­விடம் இருந்து பிரி­வ­தாக பொஸ்­னியா ஹேர்­ஸ­கோ­வினா பிர­க­டனம் செய்­தது. 


2002 : ஸ்பெயினில் யூரோ நாணயம் பாவனைக்கு வந்தது.


2014 : சீனாவின் குன்மிங் நகர ரயில் நிலையத்தில் 29 பேர் தீவிரவாதிகளால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதுடன் சுமார் 130 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

மொபைல் உலகின் எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் இவைதான்..!

ங்களுக்குப் பிடிச்ச மொபைல்ஃபோன் எது எனக் கேட்டால் பலரும் பலவிதமான மாடல்களை சொல்வோம். அதில் 80 சதவிகிதம் பேர் குறிப்பிட்ட மாடலைத்தான் சொல்வார்கள். அப்படி, அதிரி புதிரி ஹிட் அடித்த மாடல்கள் கொஞ்சமே. அவை தான் நம்முடைய ஐகானிக் மொபைல் ஃபோன்கள்.


1. நோக்கியா 3310 :

நோக்கியா 3310 மொபைல்

இந்தியாவைப் பொறுத்தவரை மொபைல் ஃபோன்கள் அறிமுகமான போது, பரவலாக அதிகப்பேரிடம் இருந்த மொபைல் இதுவாகதான் இருக்கும். மொபைல் என்றாலே ஒரு காலத்தில் அனைவரும் நோக்கியா 3310 மாடலைத் தான் தேர்ந்தெடுப்பார்கள். நோக்கியா 3310 மற்றும் நோக்கியா 3210 என்ற இரண்டு மொபைல் மாடல்கள்  தான் நோக்கியா நிறுவனத்தையே மொபைல்களில் ராஜாவாக உருவாக்கியது. இதன் தோற்றம் செங்கலைப் போன்று கொஞ்சம் பெரிதாக இருந்தாலும், பேட்டரி லைஃப் ரொம்ப நாட்களுக்குத் தாங்கும். நோக்கியா 3310 தான் மொபைல் இன்டஸ்ட்ரியையே முற்றிலும் புரட்டிப்போட்டது எனில், அஃது மிகையாகாது. இந்த மொபைல் ரசிகர்களை மகிழ்ச்சியூட்டும் விதமாக, நோக்கியா நிறுவனம் நோக்கியா 3310 மாடலை ஸ்மார்ட்ஃபோனாக மாற்றி சமீபத்தில் அறிவித்தது.

2. மோட்டோ RAZR V3 :

மோட்டோ

நோக்கியா எப்படி 3310 மாடலால் வளர்ச்சியடைந்ததோ அது போலத்தான், மோட்டோரோலா நிறுவனத்துக்கு மோட்டோ RAZR V3 மாடல். செங்கல் போன்ற தோற்றம் கொண்ட நோக்கியா 3310 மற்றும் நோக்கியா 3210 மாடல்களுடன் ஒப்பிடுகையில் மோட்டோ ’அல்ட்ரா ஸ்லிம்’ என்றுதான் சொல்ல வேண்டும். இதன் ஸ்லிம் வடிவமைப்பு மொபைல் பயனர்களை கவர்ச்சியான மொபைலாகக் கருத வைத்தது. இதன் காரணமாகவே, இந்த மாடல் அதிவேகமாக பிரபலமடைந்தது.

3. நோக்கியா N95 :

நோக்கியா

நல்ல வடிவமைப்பை தன்னிடத்தே கொண்டதுதான் இந்த நோக்கியா N95 மாடல். ஸ்மார்ட்ஃபோன் துறை என்பது முற்றிலும் வேறுபட்டது. ஆனால் இந்த N95 மாடல் தான், ஸ்மார்ட் ஃபோனிற்கான ஓர் அடையாளமாக முதன்முதலில் அங்கம் வகித்தது.

இந்த மாடலை ஐகானிக் லிஸ்ட்டில் சேர்த்ததுக்கு ஒரேயொரு காரணம்தான் உள்ளது. கேமரா மாடல்களுக்கு அடிக்கோடிட்டதே இந்த மாடல்தான் என்பது தான் அந்தக் காரணம்.

4. ஆப்பிள் ஐஃபோன் 3G :

ஆப்பிள்

ஐஃபோன் எப்படி ஐகானிக் மொபைல் பட்டியலில் வரும் என நீங்கள் நினைக்கலாம். இருப்பினும் மற்ற ஐஃபோன்களின் அம்சங்கள் இதில் குறைவுதான் என்பதால் இந்த மாடலை தாரளமாக லிஸ்ட்டில் சேர்க்கலாம். மிக நேர்த்தியான அப்ளிகேசன்களை உள்ளடக்கியுள்ளது இந்த மாடல். 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் இதன் ஆப் ஸ்டோர் வெளியிடப்பட்டு 552 ஆப்களை வழங்கியது. 2009 ஜனவரி வரையில் ஒரு பில்லியன் அளவில் தரவிறக்கம் செய்யப்பட்டது. பின்னர் அதே ஆண்டு செப்டம்பரில் 2 பில்லியன் அளவில் ஆப் ஸ்டோரில் அப்ளிகேசன்கள் தரவிறக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. டச்-ஃப்ரெண்ட்லி ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்த முதல் ஐஃபோன் இதுவே!

5. T-மொபைல் G1 :

HTC

ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போடும் விதமாக, ஹெச்.டி.சி (HTC) T-மொபைல் G1 என்ற முதல் அசலான ஆன்ட்ராய்டு ஹேன்செட்டை உருவாக்கியது. இப்பொழுது ஸ்மார்ட் ஃபோன் உலகையே ஹெச்.டி.சி நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பயனாளர்கள் விரும்புவதை எளிமையாக உருவாக்கித் தருவதில் நாட்டம் செலுத்துவதாலேயே இந்த மாடல் பிரபலமானது என சொல்லலாம்.

6. சாம்சங் கேலக்ஸி நோட்:

சாம்ஸங்

ஆசியர்களின் பங்கீடுதான் நோக்கியா மற்றும் மோட்டோரோலோவின் உருவமைப்பையே மாற்றியமைத்தது. அதே போல, இந்த சாம்சங் கேலக்ஸி நோட் இன்றளவிலும் பிரபலமாக இருப்பததற்கு இதன் டிஸ்ப்ளே அளவே காரணம். ஏனெனில் இதற்கு முன்னர் வந்த 5.5 இன்ச் அளவானது ‘இதை எப்படி பயன்படுத்துறது’ என அனைவராலும் ஏளனம் செய்யப்பட்டது. பயனாளர்கள் விரும்புவதை எளிமையாக வழங்குவதை முக்கியமாகக் கொண்டுள்ளதால், சாம்சங் மாடல்களுக்கு எப்போதுமே சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

7. சாம்சங் கேலக்ஸி SII :

சாம்ஸங்

பெரிய அளவிலான ஸ்க்ரீன் கொண்டதென்றாலும் சாம்சங் கேலக்ஸி SII மாடலுக்கு இப்போதும் வரவேற்பு உள்ளது. மிகவும் ஸ்லிம்மாகவும் செயல்வேகம் மிக்கதாகவும் இருப்பதால் இதை ஐஃபோனுக்கு இணையாக பார்க்கிறார்கள்.
சாம்சங் நிறுவனத்தின் மாடல்களைப் பொறுத்தவரை மிகப் பிரபலமடைந்துள்ள இந்த SII, அடுத்து வரப்போகும் S6 மாடலை விடவும் ட்ரெண்ட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8. மோட்டோ G :

moto

மார்கெட்டையே சாம்சங் புரட்டிப் போட்டுக்கொண்டிருந்த போது,  மோட்டோரோலோ பல புதுமைகளை வெளியிட்டது. அந்த நிறுவனத்தின் V3 மாடலின் வீழ்ச்சிக்குப் பிறகு, மோட்டோ G மூலம் மொபைல் சந்தையில் மோட்டோரோலோ புத்துயிர் பெற்றது. இதன் அற்புதமான தோற்றம், விருப்பத்திற்கு ஏற்ப கழட்டி மாற்றக்கூடிய கவர் போன்றவை மார்க்கெட்டில் அதிவேக வளர்ச்சியைக் கொடுத்தது.

9. சாம்சங் கேலக்ஸி நோட் 4 :

samsung note 4

’என்ன கேமராடா இது!’ என சாம்சங் கேலக்ஸி நோட் 4 மாடல் பயனாளர்களை ‘வாவ்’ போட வைத்தது. இதற்கு முந்தைய மாடலான கேலக்சி நோட் 3 அவ்வளவாக கவராவிட்டாலும், நோட் 4 அந்தக் குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்தது. அடுத்த வருடம் நோட் 5 மாடலை சாம்சங் அறிமுகம் செய்தாலும் கூட, நோட் 4 விற்பனை கொஞ்சமும் பாதிக்காது.

http://www.vikatan.com

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

‘மதங்களும் சில விவாதங்களும்’ - மதங்களின் ஆதி அந்தங்களை அலசும் ஆவணம்

மனிதனின் முதல் கண்டுபிடிப்பு கடவுள்தான். ஆதிமனிதன், இடிக்கும்,  நெருப்புக்கும் அஞ்சி அவற்றை வணங்க ஆரம்பித்து அது வளர்ச்சிபெற்று இன்று இத்தனை மதங்களாகப் பரிணமித்து நிற்கிறது. ஆதிமனிதனின் உள்ளத்தில் பதிந்த ‘தொல் உணர்வு’ தனக்கு மேலே இருக்கும் ஒன்றைக் குறித்த பயம். அது நம்முடைய ஒவ்வொரு செல்லிலும் பதிந்திருக்கிறது. எனவேதான் அதைக் கடப்பதற்கு மதங்களின் ஆதி அந்தங்களை அலசும் ஆவணம் இது.

மதங்களும் சில விவாதங்களும்

இளமையில் நாத்திகமும் முதுமையில் ஆத்திகமும் பொது இயல்பு. அது மரணபயம் சார்ந்தது என்பதை அறிவோம். அந்தவகையில் தருமி தனது நாற்பதுகளுக்கு மேல் தீவிர நாத்திகரானது என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு விஷயம். அறிவியல் கற்றதனால், அறிவியல் முறையில் சிந்திப்பது ஒரு காரணம் என்று எப்படிச் சொல்வது? எத்தனையோ அறிவியல் அறிஞர்களே ஆத்திகர்களாக இருந்திருக்கிறார்களே! ஆக, அவரே கூறுவதுபோல் இதுவொரு மிகக் கடினமான பரிணாம வளர்ச்சிதான்.

என் சிறுவயதில் நடந்த நிகழ்வொன்று. 80-களின் பிற்பகுதி, எனக்குப் பன்னிரண்டு பதிமூன்று வயதிருக்கலாம். வீதிகளில் திராவிடக் கொள்கைப் பிரசாரம் செய்வார்கள். அப்போது ஒரு நோட்டீஸ் கொடுக்கப்படும். அதி்ல், திராவிடக் கட்சியின் கொள்கைகளை விளக்கி மேடையில் பேசுவார்கள் மற்றும் நாள் குறித்த விவரம் இருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட விஷயம் என் கவனத்தை எப்போதும் ஈர்த்தது, ‘கடவுள் இல்லையென்பதை நிரூபிக்கும் விதமாக கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் ஒருவர் கைவிடுவார்’ என்றிருக்கும். நானும் சில நண்பர்களோடு ஓரிருமுறை அந்நிகழ்வுக்குச் சென்றிருக்கிறேன்.

ஒருபக்கம் பேச்சாளர்கள் பேசிக்கொண்டிருக்க மறுபக்கம் பெரியதொரு கொப்பரையில் எண்ணெய் சூடாகிக் கொண்டிருக்கும். பெரும்பாலும் இந்நிகழ்ச்சி மாலைக்கு மேல் ஆரம்பித்து இரவு நேரத்தில் நடக்கும் என்பதால் எங்களால் முழுமையாகப் பார்க்க முடியாது, நான் பார்த்த வரையில் யாரும் அந்தக் கொப்பரைக்குள் கைவிட்டதே இல்லை. நாங்கள் அதற்காகக் காத்திருக்கையில் எங்களை அழைக்க வீட்டிலிருந்து யாரேனும் வந்துவிடுவார்கள். ஒருமுறை என் நண்பன் அப்துல் ரசாக் என்பவனுடன் அங்கே வேடிக்கை பார்க்கச் சென்றிருந்தேன். சிறிதுநேரத்தில் நண்பனின் தந்தை எங்களை அழைக்க வந்தார். எங்கள் இருவரின் வீடுகளுக்கும் மிக அருகில், தெருமுக்கில் மேடை போட்டு அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. எனவே யாரேனும் அந்தச்சட்டிக்குள் கைவிடும்வரை பொறுத்திருக்கச் சொல்லி அவரைக் கெஞ்சினோம். அவரோ ஆத்திகர். நாங்கள் அங்கே இருந்ததே அவருக்குக் கடுப்பு, “ஏண்டா கடவுள் எண்ணச்சட்டிக்குள்ள இருக்காருன்னு எங்கடா சொல்லியிருக்கு? உள்ள கையை விட்டுட்டு இல்லேன்னு சொல்றதுக்கு. கிளம்புங்கடா.” என்று அதட்டினார். அப்போது எரிச்சலோடும் துக்கத்தோடும் அங்கிருந்து அகன்றாலும் பின்நாட்களில் அந்த வார்த்தை என்னை யோசிக்க வைத்திருக்கிறது. ‘ஆமாம்! கொதிக்கிற எண்ணெய்க்குள் கைவிட்டுவிட்டு கடவுள் இல்லை என்று எப்படி நிரூபிக்க முடியும்?’ என்று நினைத்துச் சிரித்துக் கொள்வேன். திராவிடக் கொள்கைகளை விளக்கும் கூட்டங்கள் அதன்பிறகு என்னை ஈர்க்கவில்லை.

ஆனால், பதின்ம வயதைக் கடந்தபின் வாசிப்பின் காரணமாக ஆத்திகன் என்ற நிலையிலிருந்து ‘இரண்டுங்கெட்டான்’ (Agnostic) நிலைக்கு வந்திருந்தேன். அப்போதும் திராவிடக்கட்சிகள் இந்து மதத்தை மட்டுமே கேள்விக்குள்ளாக்குவதும் இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதம் குறித்து எதுவும் பேசாமல் இருப்பதுவும் (இப்போதும் அப்படித்தானே) அவர்களுடைய சிந்தனை மற்றும் நேர்மை குறித்த கேள்விகளை எழுப்பியது. ‘நான் சார்ந்த மதம் குறித்து முதலில் கேள்வி எழுப்புகிறேன். இதுதான் பெரும்பான்மை மதம். இதில்தான் சாதி இருக்கிறது,’ (எல்லா மதங்களிலும் சாதி/இனம் இருக்கிறது) என்று பல்வேறு விளக்கங்களை அவர்களின் நிலைப்பாட்டுக்குக் காரணமாகக் கூறினாலும் அவ்விளக்கங்கள் உண்மையில் எனக்குப் போதுமானதாக இல்லை. உண்மைக்காரணம் அதில்லை என்று தோன்றியது. பொதுவாக இந்து மதத்தில் நாத்திகம் பேசினால் பலத்த எதிர்ப்புகள் ஏதும் எழுவதில்லை. அதனால்தான் திராவிடக் கட்சிகள் இந்து மதத்தோடு தங்கள் `சேவையை’ நிறுத்திக் கொள்கின்றன.

தருமி இந்த இடத்தில்தான் ‘உண்மையான’ நாத்திகராகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். அவரது கேள்விகள் இந்துமதம் முதல் ஆபிரகாமிய மதங்கள் வரை நீள்கிறது. கேள்விகளும் தர்க்கபூர்வமானவை, அறிவியற் பூர்வமானவை. வடைச்சட்டிக்குள் கைவிட்டுவிட்டு, ‘எங்கே காணோம்!’ என்று கேட்பது போல அபத்தமானவை அல்ல. முதலில் அவர் இம்மதங்கள் சார்ந்த அனைத்து நூல்களையும் தெளிவாக, முழுமையாக வாசித்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. எழுத்தாளர் தருமி

ஏன் எந்தக் கடவுளும் உலக மக்கள் அனைவருக்குமான கடவுளாக இல்லை? ஏன் எல்லோருமே அந்தந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த கடவுளாக இருக்கிறார்கள்? நிலைமை இப்படியிருக்க மதத்தைப் பரப்ப வேண்டும் என்பதற்காகத்தானே கடவுள் வாக்கென்று சொல்லப்படும் ‘புனிதப் புத்தகங்கள்’ எழுதி / திருத்தி எழுதப்படுகின்றன? – நியாயமான கேள்விகள்தான். பதில்தான் யாரிடமும் இல்லை.

இந்து மதத்தில் எப்போதுமே இரண்டு பிரிவுகளுண்டு. பிராமணர்களுக்கான இந்து மதம், அல்லாதவர்களுக்கான இந்து மதம். பெருந்தெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாட்டை தனக்குள் இழுத்து எவ்வாறு அதன் அடையாளத்தைச் சிதைக்கிறது என்பதை முருகன் என்ற சிறுதெய்வம் வழி அறிந்துகொள்ள முடிகிறது. ஆரம்பத்தில் சிறு குழுக்களின் தெய்வமாக இருந்த முருகன் பிறகு சிவனுக்கு மகனாக்கப்பட்டு, விநாயகருக்கு அண்ணனாக்கப்படுகிறார். அவர் சிறு தெய்வத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு பெருந்தெய்வமாக்கப் பட்டதற்குச் சான்றுகள் உள்ளன (வள்ளியை மணப்பது அவர்களைத் திருப்திப்படுத்த என்றே நினைக்கிறேன். போலவே, சைவ-வைணவச் சண்டையை நிறுத்த திருமலை நாயக்கரால் உண்டாக்கப்பட்டதுதான் மீனாட்சி கல்யாணம்). இது இந்து மதத்தில் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் ஒரு தேர்ந்த யுக்தி. இந்து மதம் என்றழைக்கப்படும் சனாதன மதம் தனக்கு ஒவ்வாததைக்கூடத் தனக்குள் விழுங்கிச் சீரணித்துவிடக் கூடியது. பௌத்தமும் சமணமும் அதற்கான கடந்தகாலச் சான்றுகள். இப்போது மெதுவாக அது புத்தரை விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒன்று என்கிறது. நாத்திகவாதமும் அதுபோலத்தான். இந்துத் தத்துவப் பிரிவுகளில் ‘சார்வாகம்’ எனும் உலகாயதமும் ஒரு பிரிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சீரணிக்கப்பட்டுவிட்டது. பௌத்தம் மற்றும் சமணத்தின் கொல்லாமை உட்பட பல்வேறு கூறுகளை இந்துமதம் தனக்குள் உள்வாங்கிக் கொண்டுள்ளது. இப்படி மாற்றங்களுக்கு உள்ளாவதன் அரசியல் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியதே. இது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும்.

நிலமை இப்படியிருக்க அனாதி காலமாக தங்களது மதம் ‘கற்போடு’ உள்ளது என்று நம்பி வாதிடுவதை என்ன மனநிலை என்று கொள்வது? பௌத்தம் இல்லையென்றால் கொல்லாமை, கருணை, அன்பு இவற்றையெல்லாம் இந்நிலப்பரப்பில் இருந்த மதங்கள் பேசியிருக்குமா என்பதே கேள்விதான். பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் இந்துமதம், தோன்றிய இனத்தை மட்டுமே உயர்த்தி மற்ற இனங்களைத் தாழ்த்தும் கிறித்துவ, இஸ்லாம் மதங்கள் என சக மனிதர்களிடையே கூட சகிப்புத்தன்மையே இல்லாத மதங்கள் அன்பை எப்படிப் போதிக்க முடியும் என்ற கேள்விக்கு ‘அப்படியெல்லாம் இல்லை’ என்று சொல்லி தங்களின் புனிதப் புத்தகத்தைத் தோண்டித் துருவி ஏதேனும் ஒற்றை வரியைப் பெருமிதமாக எடுத்துக் காண்பிப்பார்கள். 

புத்தகத்தில் திருத்த வேண்டிய விஷயங்கள் என நான் நினைப்பது: மேற்கோள் காட்டப்பட்டுள்ள புத்தகங்களின் பட்டியலைத் தனி இணைப்பாகக் கொடுத்திருக்கலாம். அது பலருக்கு உதவியிருக்கும். புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ள மூன்று கட்டுரைகள் உண்மையில் தேவையில்லை என்றே தோன்றுகிறது. அவை புத்தகம் பேசிக்கொண்டிருக்கும் விஷயத்திலிருந்தும் சற்றே விலகிச்செல்கிறது. நிச்சயமாக இதுவொரு தடைதான். அதிலும் ஜமாலன் எழுதியுள்ள கட்டுரை என்ன சொல்ல வருகிறது என்று யாருக்கும் உடனே புரிந்துவிடாத வகையில் எழுதப்பட்டுள்ள சிறப்பான கட்டுரை.

புத்தகத்தில் இன்னுமொரு திருத்தப்படவேண்டிய அம்சம், அதிலுள்ள ஆங்கிலம். பெரும்பாலான விஷயங்கள் தமிழில்தான் பேசப்படுகிறது என்றாலும் முக்கியமான சில இடங்களில் திடீரென்று ஆங்கிலம் நுழைவது வாசிப்புக்கு ஒரு தடைதான். உதாரணமாக பக்கம் 54-இல் 13-ம் எண்ணுள்ள பத்தி ஆங்கிலத்தில் ஆரம்பிக்கிறது, தொடர்ந்து தமிழில், ‘இதற்கு நான் பதில் சொல்லவேண்டுமா?’ என்று கேட்கிறார். ஆங்கிலம் தெரியாத ஒருவர் இதை எப்படிப் புரிந்து கொள்வார்? போலவே பக்கம் - 64-இல் உள்ள 8-ம் எண் கொண்ட பத்தியும் அவ்வாறே உள்ளது. மற்றுமொரு இடத்தில் முகம்மது நடத்திய போர்களை ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறார். அவரது மனைவிகளின் பெயர்கள் பட்டியலில் சில ஆங்கிலம். இதெல்லாம் வாசிப்புக்கான தடைகள். வலைப்பூவில் அவர் எழுதும்போதே இதைக் குறிப்பிட்டிருக்கிறேன். மேலும், வலைப்பூவில் எழுதும்போது சுட்டிகள் கொடுப்பது சரி புத்தகத்தில் எதற்கு? பதிலாக தேடவேண்டிய சொற்களை அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் கொடுக்கலாம். அடுத்த பதிப்பில், இக்குறைகளை நிவர்த்தி செய்து,  புத்தகத்திலுள்ள ஆங்கிலப் பத்திகளைத் தமிழாக்கம் செய்து வெளியிடுவதன் மூலம் இப்புத்தகத்தை பரந்த வாசிப்புக்கு எடுத்துச் செல்லவும், அதன்மூலம் நிறைய எதிரிகளை உருவாக்கிக் கொள்ளவும் அவருக்குச் சாத்தியப்படும்.

சாதிகளை உருவாக்கி அவற்றை இன்றளவும் பாதுகாத்து, அதையொரு மேட்டிமையாக மாற்றிக்கொண்டுள்ள இந்துமதம் குறித்து விமர்சிக்கும்போதும், அறிவியல் என்ற விஷயத்தையே அடியோடு ஒதுக்கிவிட்டு புனிதப்புத்தகங்களில் சொல்லியிருப்பதே உண்மை என்று நம்பி வாதிடும் பிற மதங்கள் குறித்துப் பேசும்போதும், தர்க்க ரீதியிலான கேள்விகளைக் கேட்பது அவசியமாகிறது. மதம் என்ற போர்வையில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், அடக்குமுறைகள் ஒருபுறம், ஏழைகளாக இருப்பதே சிறப்பானது என்றும் இறப்புக்குப் பின்னான சொர்க்கம் அவர்களுக்கே வாய்க்கும் என்று கூறியபடி அவர்களிடம் இருக்கும் ஒன்றிரண்டு காசுகளைக்கூட கடவுளின் பெயரால் களவாடிச் சுரண்டுவது மறுபுறம். இப்படியான சூழ்நிலையில் அபத்தமான வாதங்களை விடுத்து தருமி போல சரியான கேள்விகளைக் கேட்க வேண்டியதுதான் இன்றைய தேவை என்று நம்புகிறேன். 

உலகில் ஏன் இத்தனை மதங்கள்...?

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பார்வையற்றோரின் கண்களாக மாறும் செல்போன் செயலி

கண்பார்வையற்றவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் எப்படியெல்லாம் உதவ முடியும்?


அவர்களின் கண்களாக மாறி அன்றாட வாழ்வில் சுயாதீனமாக வாழ்வதற்கு உதவ முடியும் என்கிறார் அவர்களுக்கான திறன்பேசி செயலியை வடிவமைத்திருக்கும் தொழில்நுட்ப வல்லுனர்.


பல்லாயிரக்கணக்கான பார்வையற்றவர்களுக்கு ஏற்கனவே உதவத்துவங்கியுள்ள இந்த புதிய திறன்பேசிச் செயலி எப்படி செயற்படுகிறது? அது எந்தெந்த வகைகளிலெல்லாம் பார்வையற்றவர்களுக்கு உதவுகிறது

  • தொடங்கியவர்

பால்ய கால டீக்கடை நண்பருக்கு தோனி வைத்த விருந்து!

தோனிக்கும் ரயில் நிலையத்துக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே. கிரிக்கெட் பேட்டைக் கையில் எடுக்கும் முன் டிக்கெட் கலெக்டராக பணியாற்றியவர் தோனி. ஒரு கட்டத்தில் பணியைத் துறந்து, கிரிக்கெட்டே கதி என மாறினார். கிரிக்கெட் உலகில் ஒரு கலக்கு கலக்கி, வெற்றிக் கேப்டன் என முத்திரை பதித்து விட்டார். தற்போது, மூன்று விதமான ஃபார்மட்டில் இருந்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி விட்டார். சாதாரண வீரராக மட்டுமே அணியில் நீடிக்கிறார். இந்திய அணி போட்டிகளில் பங்கேற்காத நேரங்களில் ஜார்க்கண்ட் அணிக்காக, உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். 

டீக்கடைக்கார நண்பருடன் தோனி

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராக தற்போது தோனி அறியப்பட்டாலும், அவர் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். தோனியின் தந்தை ஒரு நிறுவனத்தில் சாதாரண ஊழியராக பணியாற்றினார். ஒரு சகோதரியும் சகோதரரும் உண்டு. காரக்பூரில் தோனி டிக்கெட் கலெக்டராக பணியாற்றியபோது, அங்குள்ள குடியிருப்பில் தோனியும் அவருடன் பணிபுரிபவர்களும் தங்கியிருந்துள்ளனர். அப்போது, இரவு நேரங்களில் வெள்ளைப் போர்வையை போர்த்திக் கொண்டு, அங்கு வசிப்பவர்களை தோனி பயமுறுத்துவாராம். காரக்பூரில் தோனி ஒரு ஜாலியான மனிதராகவே வலம் வந்திருக்கிறார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில், அண்மையில் ஜார்க்கண்ட் அணிக்காக விஜய் ஹசாரே போட்டியில் தோனி பங்கேற்றார். கொல்கத்தாவில் நடந்த இந்த போட்டியில் பங்கேற்க ஜார்க்கண்ட் அணி, ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏ.சி பெட்டியில் பயணித்தது. ரயிலில் பயணித்த ஜார்க்கண்ட் வீரர்களுடன் தோனியும் அதே வகுப்பில் பயணித்தார். அந்த ரயில், அவர் பணி செய்த, காரக்பூர் ரயில் நிலையத்தைக் கடந்துதான் கொல்கத்தா சென்றது. காரக்பூர் ரயில் நிலையத்தை கடந்த சென்றபோது நிச்சயம் தோனி மலரும் நினைவுகளில் மூழ்கி இருப்பார். 

கிரிக்கெட்டில் கொடி கட்டிப் பறந்த காலத்திலும் தோனியை சாதாரண மனிதராக ராஞ்சியில் பார்க்க முடியும். ராஞ்சியில் இருக்கும் போது, தனது பழைய நண்பர்களைச் சந்திக்கும் பழக்கம் கொண்டவர். ராஞ்சி நகரில் நண்பர்களுடன் தோனி பைக்கில் பறப்பதையும் அடிக்கடி பார்க்கலாம். விஜய் ஹசாரே போட்டியில் விளையாடுவதற்காக தோனி கொல்கத்தா சென்றபோது அதுபோலவே இன்னொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கடந்த 2001 முதல் 2003ம் ஆண்டு வரை காரக்பூர் ரயில் நிலையத்தில் தோனி டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார். அந்த சமயத்தில் காரக்பூர் ரயில் நிலையம் அருகே தாமஸ் என்பவரின் டீ கடையில் டீ அருந்துவது தோனியின் வழக்கம். தோனியும் தாமசும் நெருங்கிய நண்பர்கள். விஜய் ஹசாரே போட்டியில் விளையாட தோனி கொல்கத்தா வந்ததை கேள்விபட்டு, தோனியைக் காண வந்தார் தாமஸ். 

ஈடன் கார்டன் மைதானத்துக்கு வந்த அவரை தோனி அடையாளம் கண்டு கட்டியணைத்து வரவேற்றார். தாமசிடம் அவரது குடும்பத்தினர் பற்றி நலம் விசாரித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தும்,தோனி மறக்காமல் தன்னை அடையாளம் கண்டதில் தாமசுக்கு குஷி. பின்னர் அன்று இரவு தோனி, தாமசுக்கு டின்னர் விருந்தளித்து மகிழ்ந்தார். அதோடு, தாமஸ் உடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் தோனி வெளியிட்டுள்ளார். ‘பாத்தியா... எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும், எங்க ஆளு பழசை மறக்கலை’ என்கின்றனர் தோனி ரசிகர்கள். உண்மைதான். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஆளில்லா விமானத்தோடு எலியும் பூனையும் விளையாட்டு - காணொளி

சீனாவிலுள்ள இந்த சைபீரிய புலிகள் உடல் பருமன் அடைவதை பார்த்த மிருகக்காட்சி சாலை பணியாளர்கள், அவற்றுக்கு அதிக உடல் பயிற்சி வழங்க முடிவு செய்தனர்.

காட்டில் அவை பறவைகளை விரட்டி வேட்டையாடும் என்பதால், ஆளில்லா விமானத்தோடு இந்த புலிகள் எலியும், புனையும் விளையாட்டு விளையாட செய்தனர்.

அந்த ஆளில்லா விமானத்திற்கு என்ன நடந்தது என்பதை இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்
பயமுறுத்தும் பொம்மை தீவு

பயமுறுத்தும் பொம்மை தீவு

 

மெக்ஸிகோவில் அமைந்துள்ள பொம்மைகளின் தீவில் எங்கு பார்த்தாலும் பயத்தை ஏற்படுத்தும் வகையில் பலவித பொம்மைகள் காட்சியளிக்கின்றன.

download

Julian Santana Barrera என்ற நபர் Xochimilco-வில் உள்ள அந்த தீவு பகுதிக்கு சென்ற போது சிறுமி ஒருவர் கால்வாயில் பிணமாக கிடந்ததைப் பார்த்துள்ளார்.

அருகில் அந்த சிறுமியின் பொம்மை ஒன்று கிடந்துள்ளது.

Barrera அந்த பகுதியில் தங்கிய போது, இரவு வேளைகளில், யாரோ நடப்பது போன்ற கால் தடம் பதிக்கும் சத்தமும் பெண் ஒருவரின் அழுகுரலும் கேட்டுள்ளது.

இதையடுத்து Barrera அந்த பொம்மையை ஒரு மரத்தில் கட்டி தொங்க விட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் அந்த பேயை சமாதானப்படுத்தும் விதமாக அடுத்த 50 ஆண்டுகளில் தொடர்ந்து ‘chinampas’ என்ற பகுதியில் உள்ள பல மரங்களில் பலவிதமான பொம்மைகளை கட்டி தொங்கவிட்டு வந்துள்ளார்.

images

அவ்வாறு கட்டி விடப்படும் பொம்மைகளின் குரல்கள் கேட்பதாக அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நம்பி வந்துள்ளனர்.

தற்போது அந்த பகுதி சுற்றுலா தளம் போல் பிரபலமடைந்து விட்டதால், சாகச விரும்பிகள் பலரும் அந்த இடத்துக்கு சென்று பொம்மைகளை மரங்களில் கட்டுகின்றனர்.

சுற்றுலா வாசிகள் தாங்கள் மரத்தில் கட்டும் பொம்மைகளிடம் இருந்தும் வினோத சத்தங்களை உணர்வதாகவும், அந்தக் காட்டில் உள்ள பொம்மைகள் தங்களை பார்ப்பதை உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

Barrera அந்த சிறுமி இறந்த பகுதியில் இருந்து வெகு தூரம் தங்கியிருந்தாலும், அமானுஷ்ய குரல் மற்றும் நடக்கும் சப்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அந்த பேய்களை சமாதானப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக பல பொம்மைகளை அந்த காட்டின் மரங்களில் அலங்கரித்து வந்துள்ளார்.

images (1)

பின்னர் ஒருநாள், அந்த சிறுமி இறந்து கிடந்த அதே கால்வாயில் அவரும் இறந்து மிதந்துள்ளார். இதனை அவரது உறவினர்களில் ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவரது இறப்பு இந்த விடயத்தை பல ஊர்களுக்கும் தெரியப்படுத்தியதை அடுத்து, அந்த தீவு பகுதியினை காண ஏராளமானோர் வரத் தொடங்கியுள்ளனர்.

அந்த தீவு பகுதி இருக்கும் இடத்தில் பெரும் அமைதி நிலவுவதாகவும், அங்குள்ள செடி கொடிகள் முதல் நெடிதுயர்ந்து நிற்கும் அனைத்து விதமான மரங்களிலும் பார்ப்பதற்கு பயத்தை ஏற்படுத்தும் விதவிதமான பொம்மைகள் முழுமையாகவோ உடைந்த நிலையிலோ இருக்கின்றன.

சுற்றுலா வாசிகளே அங்கு பேய்களின் குரல்கள் கேட்பதாக நம்பி வருவதால் ஆண்டுதோறும் “பொம்மைகளின் தீவு” பிரபலமடைந்து கொண்டே வருகிறது.

http://onlineuthayan.com

  • தொடங்கியவர்

‘பிகினி எயார்­லைன்­ஸுக்கு’ வியட்நாம் பங்­குச்­சந்­தையில் பெரும் வர­வேற்பு

விமா­னத்தில் யுவ­தி­க­ளுக்கு நீச்­ச­லுடை அணி­வித்து நட­ன­மாடச் செய்­வதில் பெயர்­பெற்ற வியட்­நா­மிய விமான சேவை நிறு­வ­னத்­துக்கு பங்­குச்­சந்­தையில் பெரும் வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

வியட்ஜெட் எனும் இந்­நி­று­வனம் 2011 ஆம் ஆண்டில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. வியட்­நாமின் முத­லா­வது தனியார் விமான சேவை நிறு­வனம் இது­வாகும். பய­ணி­களை கவர்­வ­தற்­காக விமா­னத்தில் நீச்­சலுடை அணிந்த யுவ­தி­களின் நட­னங்­களை  நடத்தி பர­ப­ரப்பு ஏற்­ப­டுத்­திய நிறு­வனம் இது. இதனால், பிகினி எயார்லைன்ஸ் எனவும் இந்­நி­று­வனம் வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது.

muavja-4-copy

 

இந்­ நி­று­வனம் பங்­குச்­சந்­தை­யிலும் தற்­போது கால்­ப­தித்­துள்­ளது. நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இந் ­நி­று­வ­னத்தின் பங்­கு­களின் விற்­பனை ஆரம்­ப­மா­கி­யது. முதல் நாளி­லேயே இப் ­பங்­கு­களின் பெறு­மதி 20 சத­வீ­தத்தால் அதி­க­ரித்­தது.

வியட்ஜெட் நிறு­வன விமா­னங்­களின் பயணம் செய்­த­வர்­களின் எண்­ணிக்கை 2015 ஆம் ஆண்டில் 93 இலட்­ச­மாக இருந்­தது. இந்த எண்­ணிக்கை கடந்த வருடம் 1.4 கோடி­யாக  அதி­க­ரித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

1,130 கோடி அமெ­ரிக்க டொலர் செலவில், போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த 100 விமா­னங்­க­ளையும் எயார்பஸ் ஏ 321 ரகத்தைச் சேர்ந்த 20 விமானங்களையும் வாங்குவதற்கு கடந்த வருடம் இந் நிறுவனம் கட்டளைகளை கொடுத்தது.

http://metronews.lk

  • தொடங்கியவர்

ஆஸ்கர் அரங்கை அழகாக்கிய இந்திய சிறுவன்!

seven seconds that demonstrate why everyone loves @chrissyteigen pic.twitter.com/DFfwZHw2FV

— shauna (@goldengateblond) February 27, 2017

ஆஸ்கர் விழாவில் கலந்து கொண்ட இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ’சன்னி பவார்’ தான் தற்போது சமூக வலைதளத்தின் ஹீரோ. நெட்டிசன்ஸ் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் சன்னி பவார்.

Sunny Pawar

சன்னி பவார் மும்பை குடிசைப் பகுதியில் சுற்றித் திரிந்த 7 வயது சிறுவன். Lion என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் நாயகன். இத்திரைப்படத்தில் நடிக்க  2000 சிறுவர்களை ஆடிஷன் செய்து பின்னர் சன்னியை தான் தேர்வு செய்தனர். ஆஸ்கர் விழாவில் ஹாலிவுட் ஜாம்பவான்கள்  குட்டி நாயகன் சன்னியுடன் உற்சாகமாக செல்ஃபி எடுத்து கொண்டார்கள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகின் மிக வேகமான கேமிங் கிராபிக்ஸ் கார்டு வெளியானது

Nvidia GPU

Nvidia நிறுவனம் கேமிங் கிராஃபிக்ஸ் கார்டான GeForce GTX 1080 Ti வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் முன்னர் வெளியிட்ட GTX 1080 Ti-யை விட தற்போது வெளியிட்டிருக்கும் GeForce GTX 1080 Ti 35 சதவிகிதம் வேகமானது என்று கூறப்படுகிறது. மேலும், உலகின் மிக வேகமான கிராஃபிக்ஸ் கார்டும் இதுவே என்று Nvidia நிறுவனம் கூறுகிறது. இந்திய மதிப்பின்படி இதன் விலை 47,000 ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
 

இணையத்தில் கசிந்த சாம்சங் S8 புகைப்படம்

Samsung S8

சாம்சங்கின் கம்-பேக் போனாக, ஸ்மார்ட் போன் சந்தையில் கூறப்படுவது 'சாம்சங் கேலக்ஸி S8'. சாம்சங் நிறுவனம், தனது 'நோட் 7' போன்கள், பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதே வெடித்தது என்ற காரணத்தால் ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கு இருந்த இடத்தை மற்ற நிறுவனங்களிடம் இழந்தது. இந்நிலையில், வரும் மார்ச் மாதம் 29-ம் தேதி 'சாம்சங் கேலக்ஸி S8' போனை நியூயார்க்கில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் வெளியிடுகிறது சாம்சங். ஏற்கெனவே S8 போனை பற்றிய பல தகவல்களும் யூகங்களும் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது S8-ன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. சாம்சங், தான் விட்ட மார்க்கெட்டை பிடிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வைல்டு லைஃப் போட்டோகிராபியில் ஆர்வமா? அப்போ... இதெல்லாம் ரொம்ப முக்கியம்

‘வைல்டு லைஃப் போட்டோகிராபி’ சவால் நிறைந்தது. பல நாள் காத்துக் கிடந்தாலும் சில சமயங்களில் நாம் எதிர்பார்க்கும் புகைப்படம் கிடைப்பதில்லை. சில சமயங்களில், எதிர்பாராமல் வியக்கும் வகையில், ஒரு விநாடியில் புகைப்படம் கிடைத்து விடும். வைல்டு லைஃப் போட்டோகிராபியை பொறுத்தவரை, எப்போதும் ஏமாற்றத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் முயற்சிக்கத் தவறவே கூடாது. சோர்வும் அடையக் கூடாது. காட்டில் நாம் பார்ப்பது எல்லாமே படம்தான். கொஞ்சம் தைரியம், மிகுந்த ஆர்வம், சளைக்காமல் நடப்பதற்குத் தயாராக இருந்தால் ‘வைல்டு லைஃப் போட்டோகிராபி’-யில் நீங்களும் கலக்கலாம். 

வைல்டு லைஃப் போட்டோகிராபியில் கலக்குவது எப்படி?

இன்னொரு விஷயமும் இந்தக் கலைக்கு அவசியத் தேவை. அது நல்ல கேமரா கிட். 24 to 70 mm 2.8 Lens, Macro lens 100 mm 2.8, 300mm lens போன்றவைகள் இருந்தால் நல்லது. Extra Battery. Extra Camera Card கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். படங்கள் Hi resolution -ல் எடுக்கப்படுவது முக்கியம். அப்போதுதான் படங்களை நாம் வேண்டிய அளவுக்கு பெரியதாக பிரின்ட் செய்யமுடியும். 

போட்டோகிராபி

காடுகள் ஆபத்தானது. பாம்புகள், பூச்சிகள் எந்த இடத்திலும் இருக்கலாம். அதனால், கால்களில் நல்ல தடிமனான பூட் அணிந்திருக்க வேண்டும். அட்டைப்பூச்சி ஏறாத Leech socks அணிவது முக்கியம். புகையிலைப்பொடியை சாக்ஸ் மீது தடவிக் கொள்ளவது நல்லது. அதை எப்போதும் ஸ்டாக் வைத்திருக்க வேண்டும். இது தவிர கத்தி, தீப்பட்டி, உறங்குவதற்கான பெட், திசை காட்டும் கருவி, டார்ச்லைட், ஹெட் லைட், டென்ட் போன்றவையும் அவசியம். வழிகாட்ட வன ஊழியர் உடன் இருக்க வேண்டும். இதுவெல்லாம் இருந்தால் நாம் குறைந்த பட்சம் வைல்டு லைஃப் போட்டோகிராபிக்கு முயற்சிக்கலாம். 

போட்டோகிராபி

தமிழகத்தைப் பொறுத்தவரை முதுமலை, தெங்குமரஹாடா, கர்நாடகாவில் பண்டிப்பூர், கேரளத்தில் சைலன்ட் வேலி, பரம்பிகுளம் போன்ற காடுகளில் வைல்டு லைஃப் போட்டோகிராபிக்காக சென்ற அனுபவம் உண்டு. பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளுக்குள் செல்ல அனுமதி கிடையாது. தனியார் வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. அதனால், வனத்துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும். வனத்துறையினர் காடு வழி தெரிந்தவர்களை பாதுகாப்புக்காக நம்முடன் அனுப்புவார்கள். பத்திரிகை பணிகளுக்கிடையே இதையும் செய்ததால், எனக்கு பெரிய அளவில் புகைப்படங்கள் கிடைக்கவில்லை என்றாலும் நல்ல அனுபவங்கள் கிடைத்தன.  

வைல்ட் லைஃப் போட்டோகிராபி

முக்கியமாக காடுகள் அளிக்கும் உற்சாகத்துக்கு ஈடு இணை எதுவுமே இல்லை. ஆனால், ஆபத்து நிறைந்தது என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதுமலையில் நிகழ்ந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. மசினகுடி அருகே யானைகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம். கூட்டமாக யானைகள் நின்று கொண்டிருந்தன. படம் எடுத்துக் கொண்டிருக்கும் சுவாரஸ்யத்தில் கூட்டத்தில் இருந்து ஒரு யானை மட்டும் தனியாக பிரிந்து சென்றதை கவனிக்கவில்லை. அந்த யானை எங்களுக்கு வலப்புறத்தில் இருந்து எங்களை விரட்ட ஆரம்பித்தது. 

வைல்ட் லைஃப் போட்டோகிராபி

திடீரென்று பிளிறல் சத்தம். மிரண்டு போன நாங்கள் ஓட ஆரம்பித்தோம். எங்களுடன் வந்த நண்பர் மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை செய்தவர். ஆஜானுபாகுவான தோற்றம் உடையவர். அவரால் ஓட முடியவில்லை. நாங்கள் வந்த வாகனம் அருகில் தார் சாலையில் நின்று கொண்டிருந்தது. நான் ஓடி விட்டேன்... 'அண்ணா வந்துடுங்க வந்துடுங்க’ என கத்தினோம். அவரால் ஓட முடியவில்லை. தார் சாலையில் ஏறியவரால் அதற்கு மேல் நகர இயலவில்லை. அப்படியே நின்று விட்டார். யானையும் சாலையை நெருங்குகிறது. 'அவ்ளோதான் இன்றைக்கு முடிந்தது' என கதறுகிறேன். அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் சாலையில் சுற்றுலா வேன் ஒன்று மிக வேகமாக கிராஸ் செய்ய அதில் யானை டைவெர்ட் ஆகி அப்படியே நின்று விட்டது. மயிரிழையில்தான் நண்பர் தப்பித்தார். அந்த வேன் மட்டும் வரவில்லையென்றால், யானையிடம் நண்பர் பிடிபட்டிருப்பார். 

போட்டோகிராபி வைல்ட் லைஃப்

அதனால், வைல்டு லைஃப் போட்டோகிராபியை பொறுத்தவரை எவ்வளவு சுவராஸ்யமான நிகழ்வாக இருந்தாலும் நாலா திசைகளிலும் கவனம் இருக்க வேண்டும். பாறை இடுக்குகள், புல்வெளிகளில் கால் வைக்கும் போதும் கவனம் தேவை. பாம்புகள் இருக்கலாம். ஆர்வக் கோளாறில் ஒரு முறை அப்பர்பவானி காடுகளுக்குள் சிறு கத்தி கூட இல்லாமல் சென்று மாட்டிக் கொண்டோம். யானைகள் இருப்பதை மோப்ப சக்தியால் அறியும் திறன் இருந்தாலும் நல்லது. 

போட்டோகிராபி

அதிகாலை 5 மணிக்கே காட்டுக்குள் புகுந்து விட வேண்டும். பொறுமை மிக அவசியம். காட்டில் நீங்கள் மிருகங்களையோ, பறவைகளையோ பார்த்தால் அமைதியாக புகைப்படங்கள் எடுக்க வேண்டும். மூச்ச்ச்... மீறி சத்தம் எழுப்பினால், அவைகள் ஓடி விடக் கூடும். வன விலங்குகளுக்கு மன அழுத்தத்தை தரக் கூடிய எந்த விஷயத்திலும் ஈடுபடக் கூடாது. அவற்றின் வாழ்விடங்களுக்குள் நாம் சென்றிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வது மிக அவசியம். வைல்டு லைஃப் போட்டோகிராபி தொடர்பான புத்தகங்களில் இடம் பெற்றுள்ள புகைப்படங்களை புரட்டிப் பார்ப்பதும் நமது அறிவை வளர்க்க உதவும். காடுகளைப் பற்றிய அறிவும் முக்கியம். 

போட்டோகிராபி

சரி வைல்டு லைஃப் போட்டோ எடுப்பதால் என்ன லாபம்... கேள்வி எழுகிறதா? முதலில் ஹாபியாக பார்க்கப்பட்ட வைல்டு லைஃப் போட்டோகிராபி இப்போது வருவாய் தரக் கூடியதாகவும் மாறியிருக்கிறது. பல ஆண்டுகளாக நாம் காட்டுக்குள்ளே கிடந்து அரிய வகைப் புகைப்படங்களை எடுத்திருப்போம். அவற்றைக் கொண்டு கண்காட்சி நடத்தினால், அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி வேறு எதுவும் தராது. இப்படியெல்லாம் நாம் புகைப்படம் எடுத்துள்ளோமோ? என நம்மை நாமே பாராட்டிக் கொள்வோம். 

போட்டோகிராபி

இயற்கை, வன உயிரின ஆர்வலர்கள் நாம் எடுத்த புகைப்படங்களை வாங்கவும் முன்வருவார்கள். நண்பர் ஒருவர் பெங்களூருவில் பத்திரிகை ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தார். வைல்டு லைஃப் போட்டோகிராபியில் கில்லாடி. விடுப்பு நாள்களில் காட்டில்தான் கிடப்பார். ஒரு கட்டத்தில் பணிக்கு ‘குட்பை’ சொல்லிவிட்டு, முழு நேரமாக வைல்டு லைஃப் போட்டோகிராபியில் இறங்கினார். தான் எடுத்த புகைப்படங்களை கொண்டு 'தத்துவமாசி' என்ற பெயரில் இந்தியா முழுவதும்  இப்போது கண்காட்சி நடத்துகிறார்.

வைல்ட் லைஃப் போட்டோகிராபி

பெங்களூருவிலும் கோழிக்கோட்டிலும் வைல்டு லைஃப் போட்டோகிராபி, போட்டோ ஜர்னலிசத்துக்கு கல்லூரி ஆரம்பித்துள்ளார். வைல்டு லைஃப் போட்டோகிராபிக்கு ஏராளமான விருதுகளும் அறிவிக்கப்படுகின்றன. தமிழகத்தின் தலைசிறந்தவைல்டு லைஃப் போட்டோகிராபராக அறியப்பட்டவர் மறைந்த  நடேசாச்சர்யா அய்யம் பெருமாள். இவர் கிட்டத்தட்ட 1,500 கண்காட்சிகளை நடத்தியிருக்கிறார். 200 விருதுகளை வென்றிருக்கிறார். 

என்ன வைல்டு லைஃப் போட்டோகிராபிக்கு நீங்களும் தயாராகி விட்டீர்களா? 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மில்லியன் கணக்கானோரின் எதிர்ப்பை சம்பாதித்த தாய் : அதிர்ச்சி காணொளி வெளியானது

 

 

குழந்தை ஒன்று தொடர்ந்து அழுது கொண்டிருந்தமையால் தாய் ஒருவர் குழந்தையை தரையில் போட்டு எட்டி உதைக்கும் காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.

 

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த சென் என்ற 27 வயதுடைய பெண் ஒருவரே தொடர்ந்து அழுதுகொண்டிந்த தனது குழந்தையை தரையில் போட்டு காலால் எட்டி உதைத்துள்ளார்.  அதன் பின்னர் தனது கைகளால் குழந்தையை தூக்கியெறிந்துள்ளார்.

இச்சம்பவத்தை அருகில் இருந்த நபர் ஒருவர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த காணொளி மில்லியன் கணக்கானவர்களால் பார்வையிடப்பட்டுள்ளதோடு தாயிற்கு எதிரான கருத்துக்களையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.

 சம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸார் குறித்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

http://www.virakesari.lk

tw_cry:

  • தொடங்கியவர்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 'சாரட்டு வண்டியில' பாடல் வீடியோ! #SaarattuVandiyila

'காற்று வெளியிடை' திரைப்படத்தின் மூன்றாவது பாடலை ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலின் வரிகள் யூ- டியூபில் வெளியிடப்பட்டுள்ளன.  சாரட்டு வண்டியில எனத் தொடங்கும் இந்தப் பாடல், முதன்முதலில் ஐ டியூன்ஸில் வெளியிடப்பட்டது. அதன்  பின்னர் யூ-டியூபில் பதிவேற்றப்பட்டிருக்கிறது.

பாடலைக் கேட்க : -

 

 

பாடலின் தொடக்கம் :- 

"சாரட்டு வண்டில சீரட்டொழியக ஓரந்தெரிஞ்சது ஓம்முகம்,

உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச் சிரிப்புல மெல்லச் சிவந்தது எம்முகம்...

அட வெத்தல போட்ட உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்கொடு 

நான் கொடுத்த கடன, திருப்பிக் கொடுக்க சத்தியம் பண்ணிக்குடு

என் ரத்தம் சூடுகொள்ள பத்து நிமிஷம் தான்  ராசாத்தி  "

  • தொடங்கியவர்

நாம சொன்னதும் மழையை வரவைக்கும் மேக விதை தொழில்நுட்பம்..! #CloudSeeding

மேக விதைத் தொழில்நுட்பம்

“இன்றிரவு கொஞ்சம் மழை, காலையில் இளம் வெயில், மதியம் இதமான காற்று” என தினமும் ஹோட்டலில் ஆர்டர் சொல்வது போல் நம் வானிலையை நாமே தீர்மானித்தால் எப்படி இருக்கும்?.. துபாய், சீனா போன்ற நாடுகள் இதை சாத்தியம் என்கின்றன. “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்” பாடல் வரிகள் அர்த்தமற்று விடும் அளவுக்கு, நம் நாட்டின் வளங்கள் சுரண்டி புதிய தொழில்நுட்பம் மூலம் அழிக்கப்படுவது ஒருபுறம். பொய்த்துப் போகும் பருவ மழை, வேரோடு மரங்களை அழிக்கும் புயல்கள், மனிதனின் வாழ்வாதாரத்தை நிலை குலையச் செய்யும் வெள்ளம் என இயற்கையும் வரிந்துகட்டிக்கொண்டு நம்மை பதம் பார்க்கிறது என்பது உண்மை. சுற்றுச் சூழலை பாதுகாப்பது, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது போன்றவற்றில் தனி மனிதனின் பங்களிப்பை விட அரசின் பங்களிப்பு மிக மிக அவசியம். நதி நீரை இணைப்போம், கச்சத்தீவை மீட்போம் போன்ற போலி வாக்குறுதிகள் அரசியல் கட்சிகளை வளர்த்ததேயன்றி, அதனால் மக்களுக்கு பலன் ஏதும் இல்லை. மீத்தேன் எரிவாயுவை எடுத்து உலையை மட்டும் வைத்துவிட்டு, உலையில் போட அரிசியின்றி தவிக்கும் அவல நிலைக்கு குழி தோண்டுகிறது இந்த அரசு என்பது மேலும் கவலைக்கிடமான விஷயம்தான். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, இருப்பதை அழித்து அதன் அழகைக் கூட்டுவது இல்லை. இயற்கை வளங்களைக் காத்து அதன் அழகை காட்டுவதே ஆகும். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை இந்தியாவை பிற நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.

”நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்” என காந்தி சொன்னதை இதுபோன்ற கட்டுரைகளில் மட்டுமே நினைவு கூற வேண்டிய நிர்பந்தத்தில் நாம் உள்ளோம். விவசாயத்தை காக்க ஒரு நெடுவாசல் கதவு திறந்தால் மட்டும் போதாது. நிறைய கதவுகள் அடைக்கப்பட்டு, விவசாயம் கிட்டத்தட்ட இருளாக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. இயற்கை வளங்களை நாம் பாதுகாக்கத் தவறியதன் விளைவே இந்த நிலைக்குக் காரணம். நான் துபாயில் வசிக்கிறேன். இங்கு நதிகளோ, தூய்மையான நீர் நிலைகளோ கிடையாது. முழுக்க முழுக்க பாலைவனம்தான். இங்கு நீர் மேலாண்மைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் பார்த்தால், நம் நாட்டில் இத்தனை இயற்கை வளங்கள் இருந்தும் அதைப் பாதுகாக்கும் எண்ணம் துளியும் இல்லை என்று தலைகுனிவாக இருக்கிறது.

செயற்கை மழை

துபாயில் கடல் நீரிலிருந்துதான் குடிநீர் எடுக்கிறார்கள். கழிவு நீரை(சுத்தமாக்கி) செடிகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். சமீபத்தில் ஒரு மாத காலமாக அமீரகத்தில் பெய்த பரவலான மழை எல்லா நாடுகளுக்கும் ஓர் எடுத்துக்காட்டு. பாலைவனத்தில் ஒரு மாதம் மழை என்பது சற்று யோசிக்க வேண்டிய ஒன்று. எப்படி இது சாத்தியம் என்று பார்க்கும்போது, வானிலை அறிஞர்கள் சொன்ன பதில் வியப்படைய வைத்தது. அதாவது “மேக விதை” என்ற தொழில் நுட்பத்தின் மூலம் மழையை பொழிய வைத்தது. இந்த முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக வெற்றியும் கண்டிருக்கிறார்கள். இதனைப் பார்க்கும்போது, மேக விதை (cloud seeding) என்ற முறையில், மேகங்களில் செயற்கையாக சில இரசாயன பொருட்களை கலந்து மழை பெய்யும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறார்கள். இதில் உபயோகப்படுவது சொல்லக்கூடிய கார்பன்-டை-ஆக்ஸைடு, சில்வர் அயோடைடு அல்லது கால்சியம் குளோரைடு போன்ற வேதிப் பொருட்கள். இதில் ஏதோ ஒருவகை உப்புக்களை மேகங்களில் தூவினால் மேகத்தின் எடை அதிகரித்து மழையை வரவழைக்கலாம்.

இந்த தொழில்நுட்பமானது, கோடைக் காலங்களில் பயன்படுத்த முடியாது. ஆனால், மழை பெய்யும் வாய்ப்பு இருக்கும்போது இந்த மேகங்களை மேலும் செறிவூட்டி மழைக்கு வழிவகுக்கும். இந்த முறையைத்தான் சீனாவும் பயன்படுத்துகிறது. ஆக விளைநிலங்கள் இல்லாத ஒரு நாடு மழையை வரவழைக்க முடியுமென்றால் ஏன் நம்மால் முடியாது. அதெல்லாம் அதிக செலவாகும் நம்முடைய பட்ஜெட்டில் இடம் இல்லை என்று நீங்கள் சொல்வீர்களேயானால், சுவிஸ் வங்கியில் இருக்கும் நமது பணத்தை மீட்டெடுங்கள். அதை விவசாயத்தை மேம்படுத்த செலவிடுங்கள். பாசனத்துக்கு வழி வகுத்த பிறகு யோகாசனம் செய்யலாம். அரசாங்கமே நீங்கள் மழை பொய்த்தால் நஷ்டஈடு தர வேண்டாம் மாறுதலுக்கு இதுபோன்ற தொழில் நுட்பத்தை இங்கேயும் அறிமுகப்படுத்துங்கள். ஒரு மேம்பாலம் கட்ட மாமாங்கம் ஆகும் இந்த ஆமை வேக அரசு எந்திரத்தை பழுது பார்த்து துரிதப்படுத்துங்கள்.

ஈரமான வானிலை

ஒரு நாட்டுக்கு மிக முக்கியமானது, குடிநீர் மற்றும் பாசன நீர் நிலைகளை தூர்வாரி சுத்தப்படுத்துதல், கடல் நீரை தூய்மையாக்கி மக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்தல், மழை நீரை சேகரித்தல், மழை பொய்த்த நேரங்களில் செயற்கை மழை உருவாகுதல், மழை நீரை சாலைகளில் இருந்து அப்புறப்படுத்துதல் மற்றும் நதி நீரை பொது உடைமை ஆக்குதல் போன்றவைதான். அண்டை நாடுகளில் நீர்வள மேலாண்மை என்ற பாடப்பிரிவு பல பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளது. அதுபோல இயற்கை வள, நீர்வள மேம்பாடு போன்ற பாடப் பிரிவுகளை நம் நாட்டு பாடத்திட்டத்தில் கொண்டு வரவேண்டும். ஆராய்ச்சி செய்யும் மாணவர்களை ஊக்குவித்துப் பரிசு கொடுங்கள். எதிர்கால இந்தியாவுக்கான தேவையும் இதுதான். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

குத்துச்சண்டை போட்டியில் செரினா வில்லியம்ஸ்?

செரினா வில்லியம்ஸ்

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தற்போது சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் வென்று டென்னிஸ் உலகில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிக் கொண்டவர்.

இவர் விரைவில் WWE குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏப்ரல் மாதம் ஃப்ளோரிடாவில் நடக்கவிருக்கும் போட்டியில் சார்லட் ஃப்ளேருக்கு எதிராக செரினா வில்லியம்ஸ் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. செரினா வில்லியம்ஸ் 23-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றதும் அவரை கெளரவிக்கும் பொருட்டு, WWE சார்பாக 'பெல்ட்' ஒன்று அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
பிரயோசனமற்ற விடயத்தில் கரிசனை எதற்கு?
 

article_1488255040-ut.jpgநெஞ்சில் உறுதியான எண்ணங்களைக் கொண்டவர்கள் இரகசியங்களைக் கசியவிடமாட்டார்கள். வலிந்து மற்றையவர்களின் அந்தரங்கங்களை அறிய முற்படுவதும் அதனைச் சொல்வதும் ஏற்புடையதல்ல. பிரயோசனமற்ற விடயத்தில் கரிசனை எதற்கு?

இன்று சமூகத்தில் பல புல்லுருவிகள் நல்லவர்கள்போல் நடித்துவந்தால் அவர்களின் மறுபக்க இரகசியங்களை உலகுக்கு அம்பலப்படுத்தியேயாக வேண்டும்.

இதனால் மக்கள் எச்சரிக்கப்படுவதுடன் தப்புச் செய்பவர்களும் தங்களது செயல்களை மாற்றி, நல்வழியில் செல்லவும் ஏதுவாக இருக்கும்.

பழைமை மிக்க எமது வைத்திய முறைகள் இரகசியமாகவே பேணப்பட்டு, அவை இன்று எமக்குக் கிடைக்காமலே போய்விட்டன.

அறியாமையின் விளைவுகளைப் புரிந்துகொண்ட சமூகம், இனியாவது மக்களுக்குச் சேர வேண்டியதை மறைக்காமல் சேரச் செய்திடல் வேண்டும். 

விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளை மறைத்தால் இந்த உலகத்தின் நிலை என்னவாக இருந்திருக்கும்?

சொல்லக்கூடாதவற்றைச் சொல்லும் நபர்கள், சொல்லக்கூடிய நல்ல விடயங்களை நாடவேண்டும். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இலக்குகள் ரொம்ப ரொம்ப முக்கியம் பாஸ்! #MorningMotivation

ரண்டு பேர் ஒரு பெரிய மலைமுகட்டின் முன் நின்று கொண்டு இருக்கிறார்கள். இருவரில் முதலில் மலையின் உச்சியைத் தொடுபவருக்கு மிகப் பெரிய தொகை பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. இரண்டு பேருக்குமே மலையேற்றம் குறித்து அனுபவம் துளியும் கிடையாது. ஆனால் கண்முன்னே பணமுடிப்பு மின்ன, உற்சாகம் பொங்கி வழிகிறது. 

இருவரில் ஒருவர் வேகவேகமாக ஓடி மலையில் ஏறத் தொடங்குகிறார். இன்னொருவரோ அமைதியாக அவர் மலை ஏறுவதை கவனித்துக் கொண்டிருக்கிறார். சுற்றியிருக்கும் கூட்டம் ஆர்ப்பரித்துக் கத்துகிறது. அதுவோ பாறைகள் நிறைந்த செங்குத்தான மலை முகடு. சில அடிகள் வேகமாக முன்னேறுகிறார். தடுமாறி கீழே விழ, சுற்றியிருப்பவர்கள் அவரை ஆசுவாசப்படுத்துகிறார்கள். போட்டியில் கலந்து கொண்ட இன்னொருவரைக் காணவில்லை. அவரோ, நிதானமாக ஒரு கயிறும், சில ஆணிகளும் எடுத்துக் கொண்டு வந்து பாதுகாப்பாக மலையை ஏற ஆரம்பிக்கிறார். அப்புறமென்ன வெற்றி அவருக்குத்தான்.

இலக்குகள் ரொம்ப முக்கியம்

இருவருக்கும் சமமான ஒரே களம்தான். கயிறுகளையோ பாதுகாப்பு உபகரணங்களையோ பயன்படுத்தக் கூடாது என யாரும் சொல்லவில்லை. ஆனால் அவ்வளவு பெரிய மலையை ஏறுவதற்கு அவை மட்டும் போதுமா என்ன? முதலில் அந்த மலையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?. அதோடு பாதுகாப்பாக உச்சியை அடையத் தேவையான முன்னேற்பாடுகளைக் கவனிக்கவும் வேண்டும். இதைத்தான் செய்தார் அந்த இரண்டாம் நபர்.

மலை ஏறும் பந்தையத்தைப் போலத்தான் நம் வாழ்வும் அதில் இணைந்திருக்கும் நம் இலக்குகளும். உயரங்களை அடைய விரும்பும் அதே நேரத்தில் இலக்கு குறித்த தெளிவும் வேண்டுமல்லவா? இலக்குகள் இல்லாத யாரும் சாதனையாளர்களாக மாறிய வரலாறு இல்லை என்பதை அழுத்திச் சொல்லலாம்.  இலக்குகளை தெளிவாக வரையறுத்துக் கொள்ளும் அதேநேரம், அதை அடைவதற்கான முயற்சிகளை சோர்வில்லாமல் முன்னெடுக்க வேண்டும்தானே!? 

எல்லாவற்றிலும் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் பார்க்க ஆரம்பியுங்கள். உங்கள் இலக்குகளின் மீது முழுதாக நம்பிக்கை வையுங்கள். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து கிடைக்கும் உற்சாக வார்த்தைகளுக்கு மேல் உங்களுக்குள் இருக்கும் ஆழமான நம்பிக்கைதான் அடுத்தடுத்த தளங்களுக்கு நகர்த்திச் செல்லும். "செய்வதைத் துணிந்து செய்" என்கிறார் மகாகவி பாரதி. ஆம் அதேதான், செய்வதைத் துணிந்து செய்யுங்கள். நீங்கள் செய்யும் விஷயங்களில் முழுமையான நம்பிக்கை உங்களுக்கே இல்லாத பொழுது அது எந்த தருணத்திலும் வெற்றியைத் தந்துவிடாது.

Morning Motivation

'ஒரு பெரிய இலக்கை செட் பண்ணிட்டோம்பா.. இனி எந்த பிரச்சனையும் இல்லை'னு ரெஸ்ட் எடுக்காம அதை அடைவதற்கான சின்ன சின்ன இலக்குகளை நிர்ணயித்து, அதை நோக்கி பயணிக்க ஆரம்பியுங்கள். உங்களின் ஒவ்வொரு அடியையும் கவனமாக அழுத்தமாக பதிக்க விரும்புங்கள். ஒரு பெரிய வெற்றிக்கு முன் கிடைக்கும் சின்னசின்ன வெற்றிகளையும் கொண்டாடப் பழகுங்கள். அதுவே அடுத்தடுத்த கட்டங்களுக்கான உற்சாகத்தைக் கொடுப்பதாக இருக்கும்.

சின்னசின்ன விஷயங்கள்தான் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். ஒவ்வொரு வேலையையும் ரசித்துச் செய்யப் பழகுங்கள். அந்த அனுபவம்தான் முழுமையான வெற்றியை ஈட்டித் தரும். ஒவ்வொரு விஷயத்தையும் விரும்பிக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கையானாலும், விளையாட்டானாலும் வெற்றிதான் இலக்கு. அதைநோக்கித்தான் இந்த ஒட்டுமொத்த பயணமும்...

எந்த வேலையைத் தொடங்கும்போதும் வெற்றி பெறுவதற்காகத் தான் செய்கிறோம் என்பதை ஆழமாக நம்புங்கள். சின்ன தோல்விகளில் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள முடியுமா எனப் பாருங்கள். தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடத்தை மீறி யாருடைய வெற்றி கதையும் அந்த அனுபவத்தைத் தந்துவிடாது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சரோஜினி தேவி சிறைவாசம் அனுபவித்தது இதற்குத்தான்! - நினைவு தின சிறப்புப் பகிர்வு

சரோஜினி

''என் வாழ்க்கையில் நான் இந்தப் பரந்த, தேசிய சகோதரத்துவத்தைக் கடைப்பிடிக்க முயல்கிறேன். நான் வங்காளத்தில் பிறந்தவள்; ஆனால், சென்னைக்குச் சொந்தமானவள். ஒரு முஸ்லிம் நகரத்தில் வளர்ந்தேன்; அங்கேயே மணம் புரிந்து மணவாழ்க்கையை நடத்தினேன். எனவே, நான் வங்காளியும் அல்ல; சென்னைக்காரியும் அல்ல; ஹைதராபாத்காரியும் அல்ல. நான் ஓர் இந்தியப் பெண்.'' - இந்த எழுச்சிமிகு வரிகளைத் தன் எண்ணத்தில்கொண்டு, தேசிய உணர்வுடன் வாழ்ந்து மறைந்தவர் கவிக்குயில் சரோஜினி தேவி. அவருடைய நினைவு தினம் இன்று. 

சுதந்திரக் களத்தில் குதித்த கவிக்குயில்!

'அன்பே...
விண்வெளியில் நிலா
உலா வருகிறது!
உடுக்கணங்கள் ஒளி சிந்துகின்றன...
இரவு ஆகிவிட்டது,
விழித்திருந்து மற்றவருக்கு
அல்லல் தராதே! 
நீலமணி நிகர்த்த 
கண்மணிகளை மூடித் தூங்கு!
என் பாட்டுகள் - உன் செவிகளில் 
இசைப்பதுபோல் - உனக்குக் 
கனவுகள் வந்து இன்புறுத்தும்!' 

- என்று ஆரம்பத்தில் இப்படிக் கவிதைகள் எழுதிய அந்தக் கவிக்குயில், ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவைப் பார்த்த பிறகு,

'போரும் பூசலும்
நிறைந்துள்ள இடங்களில் 
மறத்தையும் அறியாமையையும் 
அன்பு வெல்க!
வாளேந்திப் போர் வீரர்கள் 
போர்முனை நண்ணினால் - நான்
என் இனிய பாடல்களை 
ஏந்திச் செல்வேன்!'
 

- என்று சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஏற்ற கவிகளைக் கனலாய்க் கொட்டிக் களத்தில் குதித்தது.

பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் எழுச்சி உரை!

1918-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ் மாகாண அரசியல் மாநாட்டில் கலந்துகொண்ட சரோஜினி தேவி, ''குழந்தைகளைப் பராமரிப்பதும் கணவரைக் கவனிப்பதும் மங்கையரின் கடமைதான். கடமையாற்றி ஒழிந்த நேரத்தில், உலகத்துக்கு ஆற்றவேண்டிய பணிகளையும் கவனித்தால் என்ன... அது தவறு, என்று சாத்திரம் கூறுகிறதா... 'என் வீடு, என் வாசல், என் குழந்தைகள்' என்றே எல்லோரும் இருந்துவிட்டால், மக்களுக்குச் சேவை செய்வது யார்? சகோதரிகளே... சொந்தக் கடமைகளை வழுவாது கவனியுங்கள். அத்துடன், பொதுப் பணி ஒன்றை ஏற்கவேண்டியதும் உங்கள் கடமையாகும்'' என்று பெண்களுக்குப் பொதுப் பணியாற்ற அன்புக் கட்டளையிட்ட அவர், மறுபுறம் இளைஞர்களுக்கு இப்படி ஊக்கமளித்தார். 

சரோஜினி தேவி''இளைஞர்களே... உங்கள் விருப்பும் பற்றும், உங்கள் மாகாணத்துடன்; நகரத்துடன்; சாதியுடன்; சாதியின் உட்பிரிவுடன்; கல்லூரியுடன்; வீட்டுடன்; வீட்டின் உறவினர்களுடன்... இப்படி இறுதியில் உங்களுடனேயே நின்றுவிடுகின்றன. இந்தச் சுயநலத்தை... தன்னை மட்டும் காத்துக்கொண்டு மற்றவரைப் பாராமல் ஒதுங்கும் தன்மையை... நீங்கள் கைவிட வேண்டும். நாடு முழுவதையும், மக்கள் அனைவரையும், எல்லாப் பகுதியினரையும், எல்லா மதத்தினரையும், எல்லோரையும் சகோதரர்களாய்க் கருதி, சர்வஜன சகோதரத்துவத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்'' என்று, அவர் உரைத்த உரை... இன்றும் இளைஞர்களுக்கு உந்துசக்தியாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறது. 

''அதிக்கிரமச் செயல்களுக்கு தண்டனை கிடைக்கும்!''
 
மகாத்மாவைத் தன் ஆசானாக வணங்கிய சரோஜினி... ஒருமுறை அவரிடம், ''இந்த ஏழைப் பக்கிரியைப் பராமரிப்பதற்காக, நாடு ஏராளமாகச் செலவு செய்ய வேண்டியுள்ளது'' என்று பரிகாசம் செய்தார். அதையெல்லாம் கண்டுகொள்ளாத மகாத்மா, அவரை ஒரு குழந்தையாகவே பாவித்தார். அவர் மீது மிகுந்த அன்பும், நம்பிக்கையும் வைத்திருந்தார். அவரை, 'இந்தியாவின் கவிக்குயில்' எனப் புகழ்ந்தார். அதனால்தான் மகாத்மா,  'தம் கருத்துகளை விளக்கமாக உலகத்துக்கு உரைக்கவல்லவர் அவர் மட்டுமே' என்று நம்பினார். அதன்படியே தம் பிரதிநிதியாக அவரை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தார். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் தென்னாப்பிரிக்கா சென்ற சரோஜினி, ''இந்தியாவில் ஓர் இந்தியன் இருக்கும்வரை வெள்ளையரின் அதிக்கிரமச் செயல்களுக்கு எதிர்ப்பும் தண்டனையும் கிடைத்தே தீரும்'' என்று சொல்லி, அங்கிருந்த இந்தியர்களை உற்சாகப்படுத்தினார். 

காந்தியுடன் சரோஜினி தேவி...

மகாத்மாவுக்கு நிகரான சரோஜினி தேவி!

சரோஜினி தேவியின் வெளிநாட்டுப் பயணத்துக்கு வெற்றி கிடைக்கும் வகையில், அங்கிருந்த இந்தியர்களிடம் விழிப்பு உணர்வு ஏற்பட்டது. இதனையடுத்து, இந்தியாவுக்குத் திரும்பிய சரோஜினி தேவிக்கு பம்பாயில் (மும்பை) பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் கூடிய காங்கிரஸ் மகாசபையில், தென்னாப்பிரிக்க இந்தியர்கள் சார்பாகக் கலந்துகொண்ட டாக்டர் அப்துல் ரஹ்மான், ''தென்னாப்பிரிக்க இந்தியராகிய நாங்கள், உங்களுக்கு மகாத்மாவைக் கொடுத்துள்ளோம். அவருக்கு நிகராக விளங்கும் சரோஜினி தேவியாரை, நீங்கள் எங்களுக்குக் கொடுக்க வேண்டும். 'மறுப்பீர்கள்' என்று எனக்குத் தெரியும். இந்தியாவின் மாதர் குலவிளக்காகவும், மாதர்கள் விழிப்புக்குக் காரணபூதராகவும் விளங்கும் தேவியார், இந்திய மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி வருகிறார்.

அவர், உங்களுக்கு இன்றியமையாதவர் என்பதை நான் அறிவேன். தென்னாப்பிரிக்காவில் அவர் ஆற்றிய பணிகள் எங்களைக் கவர்ந்துவிட்டன. தேவியாரை அழைத்துச் செல்வதே எங்கள் வருகையின் நோக்கம். தேவியாரின் திருவுருவப் படம் ஒன்றை, நேற்று நான் காங்கிரஸுக்குப் பரிசாக வழங்கினேன். அழகான அந்தப் படத்தை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்; தேவியாரை, எங்களோடு தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்கிறோம்'' என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த உரை, தென்னாப்பிரிக்க இந்தியர்கள், அவர் மீது எத்தகைய அன்பையும் மரியாதையையும் கொண்டிருந்தனர் என்பதை, நமக்குத் தெளிவாக்குகிறது.

சிறைவாசத்தை நீட்டித்துக்கொண்டார்!

தன்னுடைய காதலிலும் வெற்றிபெற்ற சரோஜினி,  இல்லற வாழ்விலும் தன்னை முழுதாய் இணைத்துக்கொண்டார். நாட்டுப் பணியில் சேவையாற்றிச் சிறைவாசமும் அனுபவித்தார். சிறைத் தண்டனை காலம் முடிந்தும் கூடுதலாக அந்தச் சிறையிலேயே இருந்தவர் சரோஜினி. காரணம், அவர் சிறையில் நல்ல மணமிக்க மலர்ச்செடிகளை வளர்த்தார். அவைகள், நன்றாக வளர்ந்து பூக்கும் நேரத்தில், அவற்றைப் பார்க்காமல் எப்படி இருக்க முடியும்? பிரசவித்த குழந்தையைத் தன் தாய் பார்க்காமல் இருக்க முடியுமா? அதே ஏக்கம்தான், அவருக்குள்ளும் இருந்தது.  அதற்காகவே, தனது சிறைவாசத்தை ஒருவார காலம் நீட்டித்துக்கொண்டார்.

இந்திய விடுதலைக்காகத் தன் வாழ்நாளைக் கழித்த சரோஜினி தேவி, முன்பே தன்னைப்பற்றி இப்படியான கவிதைகளை எழுதியிருந்தார். 

'மலர்களை வலம்வரும் பறவைகாள்...
என்னை அழைத்துச் செல்லுங்கள்!
ரோஜா மலர்களால் 
என்னை மூடி மறைத்துவிடுங்கள்!'

'அழகும் பொலிவும் அமைந்த தரையும்
வண்ணப்பூச்சால் ஒளிரும் சுவர்களுமுள்ள
வீடுகளில் அடைபட்டு வாழ்ந்தது போதும்...
பூசலும் பாடலும் விழாவும் கேளிக்கையும்
எனக்கு அலுத்துவிட்டன!'

- என்று அவர் எழுதிய கவிதை வரிகளைப் பார்த்துத்தான் ஆண்டவனும் 
அவரை, மேலே அழைத்துக்கொண்டானோ?

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

காஃபிக்குள் செல்ஃபி வரையும் மேஜிக் மெஷின்..!

காஃபி

டி- ஷர்ட், காஃபி கோப்பை இதில் எல்லாம் புகைப்படங்களை வரைந்து நமக்கு பிரியமானவர்களை சர்ப்ரைஸ் செய்வது வழக்கம் தான். ஆனால் தற்போது வித்தியாசமாக காஃபிக்குள் புகைப்படங்களை பதிய ஒரு இயந்திரம் அறிமுகமாகியுள்ளது. அதன் பெயர் ரிப்பிள் மேக்கர். இந்த இயந்திரத்தின் மூலம் நாம் விரும்பும் புகைப்படத்தை காஃபிக்குள் வரைய முடியும்.

இந்த மிஷினில் ரிப்பிள்ஸ் மூலமாக  காஃபியில் நாம் அளிக்கும் புகைப்படத்தை  வடிவமைத்து மேலே பதிய வைக்கும். இதன் மூலம் ஒருவர் தான் தெரிவிக்க இருக்கும் வாழ்த்து செய்தியையோ அல்லது புகைப்படத்தையோ இதில் வரவைக்கலாம். 

இந்த இயந்திரம் 4.25 இன்ச் உள்ள காபி கோப்பையின் அளவை அதுவாகவே கணித்து அதன் மேல் பிரிண்ட் செய்யும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அகலம் 210 மிமீ, ஆழம் 270 மிமீ, உயரம் 495 மிமீ, எடை 16 கிலோகிராம். இதில் உள்ள வை-பை வசதி மூலம் புகைப்படங்களையும் டிசைனையும் அனுப்ப முடியும். இந்த மிஷினிலும் சில டெம்ப்ளேட்டுகள் உள்ளன. விரும்புபவர்கள் அதனையும் பயன்படுத்தி கொள்ள முடியும் என்கிறது ரிப்பிள் மேக்கர் நிறுவனம். இந்த சேவை தற்போது மொபைல் ஆப் மூலமாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

காஃபி

இந்த ஆப் மூலம் நமது செல்போனில் உள்ள புகைப்படங்களை தேர்ந்தெடுத்து பதிவேற்றி, அருகில் உள்ள ரிப்பிள் மேக்கர் காபி  ஷாப்பிற்கு அனுப்பி ஆர்டர் செய்யும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து இந்த காஃபி ஷாப்கள் எவ்வளவு தூரத்தில் உள்ளன என்ற விவரங்களையும் இந்த ஆப் அளிக்கிறது. ப்ளே ஸ்டோரில் 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது இந்த ஆப். இது ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களிலும் இலவச ஆப்பாக கிடைக்கிறது.

இந்த சேவை தற்போது அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், கெரியா மற்றும் சீனாவின் சில பகுதிகளில் உள்ளது. இந்த வருடம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சேவையை கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பிராண்டிங்கிற்காகவும், காதலர்கள் தங்கள் காதலை பரிமாறவும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். வினோதமாக சில கட்சிகள் தங்கள் பிரசாரத்துக்கும் இதனை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. 

இந்தியாவில் அறிமுகமானால் அனைத்து காஃபி காதலர்கள் மத்தியில் பிரபலமடையும். இந்தியா போன்ற பெரிய மார்க்கெட்டுகளை நோக்கி  விற்பனையை அதிகப்படுத்தவுள்ளதாகவும், ஏற்கெனவே காஃபி ஷாப் வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அணுகி இந்த தயாரிப்பை பிரபலப்படுத்தும் எண்ணமும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்னமும் கொஞ்சம் யோசித்து பாருங்கள். நம் ஊரில் உள்ள கட்சிகளும், சினிமா ரசிகர்களும் செம்மொழி செல்ஃபியே, தங்கத்தாரகையே, அண்ணன் அகில உலக சூப்பர் ஸ்டாரேனு அட்ராசிட்டி காஃபி ரிப்பிள் தயாரித்தால் எப்படி இருக்கும் என்று. அப்பறம் என்ன செல்ஃபி வித் காஃபி தான்.

காஃபி ரிப்பிள் இயந்திரம் எப்படி செய்ல்பட்டு புகைப்படத்தை பிரிண்ட் செய்கிறது என்பதை விளக்கும் வீடியோ:

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ரஜினிகாந்துக்கு கூட டூப்ளிகேட் தயாரிக்கும் சைனாவின் ஜெராக்ஸ் கடை யீவு..! #Yiwu

யீவு

யீவு. இந்தப் பெயரை சர்வ நிச்சயமாக நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் அந்த நகரில் இருந்து வரும் பொருட்களில் ஒரு டஜனாவது தற்போது உங்களிடம் இருக்கும். கொசு பேட்டில் ஆரம்பித்து மொபைல், ரிமோட் என நம் அன்றாடம் பயன்படுத்தும் எல்லா பொருட்களையும் சீனாவில் இருக்கும் யீவு நகரம்தான் தயாரிக்கிறது. வாழ்நாளில் ஒரு லட்சம் ரூபாயாவது இந்த ஊருக்கு உங்கள் பங்களிப்பு இருக்கும். 

யீவுவின் சந்தை மிகப்பெரியது. 17 முக்கிய தொழிற்துறைகளில் 4,20,000க்கும் அதிகமான பொருட்கள் இங்கே கிடைக்கின்றன. 1,00,000 வாடிக்கையாளர்கள் தினமும் பொருட்களை வாங்க வருகிறார்கள்.1500 கண்டெய்னர்கள் தினமும் யீவுவில் இருந்து உலகின் பல மூலைகளுக்கும் புறப்படுகின்றன. வாரம் ஏழு நாட்களும், வருடம் முழுவதும் கடைகள் திறந்திருக்கும். சீன புத்தாண்டு மட்டுமே யீவுவுக்கு விடுமுறை நாள்.

சிறிய கிராமமாக இருந்த யீவு இப்போது சிறுபொருட்களின் உலகளாவிய தலைநகரமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு யீவு மிகச்சிறந்த சான்று. இன்று யீவு சீனாவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது உலகிற்கே சொந்தமானது. மற்ற நாடுகளின் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்ற பொருட்களை தயாரிப்பதில் யீவு மக்கள் கில்லாடிகள். அதற்குப் பல நூற்றாண்டுகள் விரியும் அவர்களின் வரலாறும் ஒரு முக்கிய காரணம். 

யீவு நகரம் முழுவதும் மலைப்பிரதேசம்தான். அந்த நிலங்கள் விவசாயத்துக்கும் ஏற்றதாக இல்லை. எனவே அந்தப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்துக்காக வணிகத்தை நம்ப வேண்டி இருந்தது. அவர்கள் வசம் இருந்த ஒரே விஷயம் பழுப்பு சர்க்கரை. எனவே பழுப்பு சர்க்கரையை கொடுத்து, அதற்குப் பதிலாக கோழி இறகுகளை பண்டை மாற்றம் செய்தார்கள். கோழி இறகில் இருந்து உருவாகும் உரம் அவர்களின் நிலங்களை பண்படுத்த உதவியது. மேலும் இறகுகளில் பல கைவினைப்பொருட்களை செய்து அதையும் விற்று வந்தார்கள். யீவு நகர மக்கள் 1600 காலத்தில் கூடைகளை தோள்களில் சுமந்து சென்று அருகில் இருக்கும் நகரங்களில் வியாபாரம் செய்து வந்தார்கள். கிடைக்கும் பொருட்களை அப்படியே விற்காமல் அதை கைவினைப்பொருட்களாக மாற்றி விற்றனர். மற்ற நகர மக்களின் தேவைகளை அறிந்து வந்து, அதற்குத் தீர்வு தரக்கூடிய பொருட்களை தயாரித்து வியாபாரம் செய்து வந்தனர். அந்தக் கலாசாரம் தான் இன்று உலகின் தேவைக்காக பொருட்களைத் தயாரிக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

சைனா

சீனா ஒரு கம்யூனிச நாடு. அப்போது அந்த நாட்டில் வணிக சுதந்திரம் (free trade) கிடையாது. அதனால் யீவு மக்களை மற்றவர்கள் முதலாளித்துவ பிரதிநிதிகளாக பார்த்தனர். ஆனால், யீவுவுக்கு வணிகத்தை விட்டால் வேறு வாழ்வாதாரம் கிடையாது. எனவே ரகசியமாக தங்கள் வணிகத்தை தொடர்ந்தார்கள். காவல்துறையிடம் சிக்கினால் பொருள் நட்டத்தோடு சிறைவாசமும்.1982-ம் ஆண்டு வரை தொடர்ந்த இந்த கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு முடிவு ஒரு துணிச்சல்மிக்க பெண்ணால் வந்தது. 

ஐந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணின் பெயர் ஃபெங் ஐ கியான். தன் குடும்பத்தைக் காப்பாற்ற வியாபாரம் மட்டுமே வழி என்பதை உணர்ந்த கியான், யீவு நகர மேயரை சென்று பார்த்தார். தன் நகர மக்களின் ஏழ்மையை விரட்ட வணிகத்தால் மட்டுமே முடியும் என்பதை எடுத்து உரைத்தார். அரசாங்க கொள்கைகளைக் காட்டி அதை மறுத்த மேயரிடம் ”உங்கள் நகர மக்களைப் பற்றிய அக்கறை உங்களுக்கு இல்லையா? பிறகு என்ன மேயர் நீங்கள்” என கோவமாக பேசிவிட்டு, அறைக்கதவை படாரென சாத்திவிட்டு வெளியேறினார். கதவு மூடிய சத்தம் மேயரின் மூளைக்குள் பல நாட்கள் எதிரொலித்தது. பதவிப் பறிபோகும் அபாயம் இருந்தாலும், மக்கள் தான் முக்கியம் என முடிவெடுத்த மேயர், யீவு நகர மக்களை வணிகம் செய்ய அனுமதித்தார். முதல் முறையாக யீவு நகரின் ஹ்யூகிங்மென் தருவில் 700 கடைகள் அமைக்கப்பட்டன. சீனாவின் முதல் சந்தை அதுதான். அதிர்ஷ்டவசமாக அன்றைய அதிபர் டெங் ஷவ் பிங்கும் வணிக சுதந்திரத்தை அனுமதிக்கும் முடிவை எடுக்க நினைத்திருந்தார். 

அதன் பின் யீவு நகர வளர்ச்சி அசுரத்தனமானது. தமிழ்ச் சினிமாவில் ஒரே பாடலில் வளரும் நாயகர்களை விடவும் வேகமாக வளர்ந்தார்கள். இன்று யீவு நகரில் 70000க்கு மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. ஓர் ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர்கள் யீவு நகரில் கைமாறுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ஏறத்தாழ 40000 கோடி ரூபாய். காலம் யீவுவை தேர்ந்தெடுக்கவில்லை. யீவு நகரம் தனக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், வியாபாரம் என்பது யீவு மக்களின் நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாவற்றிலும் ஊறிப்போன விஷயம்.

சைனா

யீவு என்றால் ‘விசுவாசமான காகம்” என்று பொருள். சீன நாட்டின் புராதன கதை ஒன்று உண்டு. அதில் ஒரு காகம் மக்களுக்கு உதவி செய்யும். அதைக் குறிக்கும் விதமாகத்தான் யீவு என்ற பெயர் வந்தது. ஆனால் இன்று நிலமை முற்றிலும் வேறு. உலகில் மிகச்சிறந்த பிராண்ட் பொருட்கள் அனைத்துக்கும் டூப்ளிகேட் யீவுவில் கிடைக்கும். 10 ஆண்டுகள் முன்புவரை இப்படி இல்லை என கவலை கொள்கிறார்கள் உலக வியாபாரிகள். அடிடாஸ் காலணி முதல் Gucci கண்ணாடிகள் வரை எல்லா பிராண்டட் பொருட்களின் கடைகள் யீவுவில் இருந்தன. இன்று எல்லாமே போலிகள். எந்த ஒரு புதுப்பொருள் வந்தாலும் யீவுவுக்கு 10 நாட்கள் போதும். அச்சு அசலான போலியை உருவாக்கிவிடுகிறார்கள். இதனால் சீன பொருட்கள் பற்றிய நம்பிக்கை உலக அளவில் உடைந்தாலும் இவர்களுக்கு கவலை இல்லை. உங்கள் நாட்டில் கஸ்ட்மஸை ஏமாற்றிப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியும் என்றாலும் போதும். சீனாவில் ஏற்றுமதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். சீன போலீஸும் இதைக் கண்டுக்கொள்ளாமல் இருக்க மொத்தமாக ‘கவனிக்கப்படுகிறார்கள்’ என்கிறார்கள்.

 உலக மக்கள் அனைவருமே “லைக்ஸ்” போடும் பெருமைமிகு வரலாறு யீவுவுக்கு உண்டு. அது சிதைந்து போக அவர்கள் அனுமதிக்கக்கூடாது.. ஏனெனில், மனிதர்களுக்கு உருவாக்கியதைவிட, அழித்தததை அதிக காலம் நினைவில் வைக்கும் பழக்கம் உண்டு. 

  • தொடங்கியவர்

 

உலகிலேயே மோசமான வாகனநெரிசல் மிக்க நகரம் எது?

உங்கள் நகரத்தின் வாகன நெரிசல் நிலவரம் எப்படி இருக்கிறது?

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, steht, Bart und Text

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும்,அதிரடி சகலதுறை வீரருமான ஷஹிட் அஃப்ரிடியின் பிறந்தநாள்.
Happy Birthday Shahid Afridi Official

ரசிகர்களால் பூம் பூம் என்று செல்லமாக அழைக்கப்படும் அஃப்ரிடி, அண்மையில் சர்வதேசப் போட்டிகளில் தனது ஓய்வினை அறிவித்தாலும் உலகம் முழுவதும் ரசிகர்களுக்கு பரவசம் தரும் ஒரு வீரராக இன்றும் கழக மட்ட, லீக் கலக்கி வருகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.