Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

கண்ணைக்கவரும் விண்வெளிச் சுற்றுலா

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உயர்வான நன்மக்களே உலகின் பிரமாக்கள்
 
 

article_1488859713-gjgghk.jpgசுட்டித்தனமாகச் செயல்களைப் படு உற்சாகமாகச் செய்யும் குழந்தைச் செல்வங்களை அடக்கி ஒடுக்க முற்பட வேண்டாம்.

அவர்களின் புத்திசாலித்தனமான வேலைகளை, அதன் அழகைக் கண்டு இரசியுங்கள். 

ஆனால், அதே சமயம் அவர்களின் உடலுக்கு ஊறு விளையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தங்களுடன் உறவாடி மகிழ்ந்திருக்கவே அவர்கள் மிகவும் பிரியப்படுகின்றார்கள்.

தாங்கள் தொந்தரவு இன்றிப் பொழுதுபோக்காகக் குழந்தைகளின் குறும்பை இரசிக்காமல் அவர்களை வைது கொள்ளுதல் மிகவும் தவறாகும்.

இன்று பெரும்பாலான பிள்ளைகள் பெற்றோரின் பாராமுகத்தினாலேயே பிஞ்சு வயதில் நெஞ்சம் வருந்தித் தங்கள் வாழ்வின் திசையை மாற்ற எத்தனிக்கின்றார்கள்.

பாசத்தை, நேசத்தை பரிவுடன் காட்டிட சற்று நேரத்தை அவர்களுக்கு ஒதுக்குக.

உயர்வான நன்மக்களே உலகின் பிரமாக்கள்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: மார்ச் 07
 
 

article_1457326579-alexander.jpg1799: நெப்போலியன் போனபார்ட் பலஸ்தீனத்தின் ஜஃப்பா பிராந்தியத்தை கைப்பற்றினான். அவனது படைகள் 2000 அல்பேனியர்களை கைது செய்தன.

1876: அலெக்ஸாண்டர் கிரஹம்பெல்லுக்கு தொலைபேசிக்கான காப்புரிமை வழங்கப்பட்டது.

1971: கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மக்கள் சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராகுவதற்கான நேரம் வந்துவிட்டதென்ற வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த உரையை ஷேக் முஜிபுர் ரஹ்மான் நிகழ்த்தினார்.

1989: சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி விவகாரம் காரணமாக ஈரானுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்டன.

2006: இந்தியாவின் வாரணாசியில் லக்ஷர் ஈ தொய்பா தீவிரவாதிகள் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

2007: இந்தோனேசியாவின் யாஹ்யகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த கருடா விமானம், வயல் ஒன்றில் வீழ்ந்து வெடித்ததில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

2009: பூமி போன்ற பிற கோள்களை ஆராயும் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி விண்வெளிக்கு ஏவப்பட்டது.

/www.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சந்திரபாபு இறந்த தினம்: மார்ச் 7- 1974

 
 
 

சந்திரபாபு தூத்துக்குடியில் கிருஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னாளில், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று தமது பெயரைச் சந்திரபாபு என இவர் மாற்றிக் கொண்டார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டமையால் இவரது பெற்றோர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட, அவர்களுடன் சென்ற சந்திரபாபு, கொழும்பு நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார். சிறு வயதிலேயே

 
 
 
 
சந்திரபாபு இறந்த தினம்: மார்ச் 7- 1974
 
சந்திரபாபு தூத்துக்குடியில் கிருஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னாளில், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று தமது பெயரைச் சந்திரபாபு என இவர் மாற்றிக் கொண்டார்.

விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டமையால் இவரது பெற்றோர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட, அவர்களுடன் சென்ற சந்திரபாபு, கொழும்பு நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார். சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமது 16-ம் வயதில் சென்னையை அடைந்து திரையுலகில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார்.

ஒரு படத்தளத்தின் உள்ளே சென்று வாய்ப்புத் தேட அனுமதிக்கப்படாததால், தற்கொலைக்கும் முயன்றவர். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்திரபாபு, நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சி கொண்டு தமது கையைச் சுட்டுக் கொண்டு கூறினார், "உங்களுக்கு நான் சுட்டுக் கொண்டதுதான் தெரியும். என் காயத்தை உங்களால் உணர முடியாது. அதுபோலத்தான் என் துயரும்."

1947-ம் ஆண்டு தன அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950-களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.

சபாஷ் மீனா என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடம் தாங்கி நடித்த இவருக்கு அவற்றில் ஒரு வேடத்தில் சரோஜாதேவி இணையாக நடித்திருந்தார். அதன் கதாநாயகனான சிவாஜி கணேசனின் ஜோடியாக மாலினி நடித்திருந்தார். இதைப் போலவே புதையல் திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றமுறும் பாத்திரம் ஒன்றில் திறம்பட நடித்திருந்தார்.

தற்போது சென்னைத் தமிழ் எனவும், அன்றைய நாளில் மெட்றாஸ் பாஷை எனவும் வழங்கிய வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார்.

தமது நடிப்பிற்காகவும், பாடல் திறமைக்காகவும் பிரத்தியேகமான ரசிகர் குழாமைக் கொண்டிருந்தார். இன்றளவும் அவரது பாடல்கள் வானொலிகளிலும், மேடைகளிலும் ஒலித்து வருகின்றன. இசைப் பேழைகளில் இவரது பாடல் தொகுப்புக்கள் விற்பனையாகின்றன. தலைமுறைதாண்டிய ரசிகர்கள் இவருக்கு உண்டு.

நகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் மணந்த பெண் முதலிரவன்றே தான் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூற, மறு நாள் அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. (இந்தச் சம்பவத்தை ஒற்றியே தாம் அந்த 7 நாட்கள் படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிக - இயக்குனர் பாக்கியராஜ் கூறினார்.)

சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் சந்திரபாபுவைச் சூழ்ந்தே இருந்தன. *கவலை இல்லாத மனிதன் மற்றும் குமாரராஜா என்னும் இரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததும் இனி நகைச்சுவை நடிகராகப் போவதில்லை என்று அறிவித்தார். ஆயினும், அவை இரண்டுமே வர்த்தக ரீதியாக வெற்றி பெறாததால், மீண்டும் போலீஸ்காரன் மகள் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை வேடமேற்கத் துவங்கினார்.

அவர் தாமே கதாநாயகனாக நடித்து, தயாரித்து இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் திரைப்படத்தின் படுதோல்வியுடன் அவரது திரை வாழ்க்கை அநேகமாக இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது என்றே கூறலாம். 1960களில் நாகேஷ் பின்னர் சோ ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக முன்னேறத் துவங்கியதும், சந்திரபாபுவின் திரையுலக வாழ்வில் தேக்கம் உண்டானது. மேலும், அச்சமயம் அவர் மீளாக் குடிக்கும், பெத்தடின் போதைக்கும் அடிமையாகி இருந்தார். இருப்பினும், அடிமைப்பெண், ராஜா, கண்ணன் என் காதலன் (இதில் சோவும் உடன் நடித்தார்) போன்ற ஒரு சில படங்களிலும் நடித்தார்.

1975 ஆம் ஆண்டு வெளிவந்த பிள்ளைக் கனியமுது என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே 1974-ம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.

சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று, கண்ணீரும் புன்னகையும் என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. பலங்களும், பலவீனங்களும் கலந்த மனிதரான சந்திரபாபு திரையுலகம் மறக்க இயாலாத திறமையாளர்களில் ஒருவர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

தஞ்சாவூரில் பாட்ஷா படம் ஓடுவதை மார்க் சக்கர்பெர்க்கிடம் சொன்னது யார்?

வழக்கம் போல காலை எழுந்ததும் ஃபேஸ்புக்கில் கண் விழிக்கும் நீங்கள் உங்கள் ஃபேஸ்புக் ஆப்பில் சில மாற்றங்களை கவனித்தீர்களா? உங்களை ஆப்பில் புதிதாக வந்துள்ள அப்டேட் உங்களை ஆச்சர்யமளிப்பதோடு, சற்று அதிர்ச்சியும் அடைய வைக்கும் . காரணம் இந்த அப்டேட் உருவாக ஏதோ ஒருவகையில் நீங்களும் காரணமாக இருந்திருக்கிறீர்கள். இவையெல்லாம் மார்க் சக்கர்பெர்க்கின் உத்திகளில் ஒன்று தான்.

ஆம், ஃபேஸ்புக்கில் புதிதாக நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் கடைகள் எங்குள்ளன, உங்களுக்கு அருகில் உங்கள் நண்பர் யார் இருக்கிறார்கள், பொருட்களை வாங்கி விற்கும் குழுக்கள் எங்குள்ளன, நீங்கள் இருக்கும் பகுதிக்கான கைடு ஆகியவற்றை தந்துள்ளது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் உணவகத்தை தேடும் போது நானும் எனது நண்பர்களும் வழக்கமாக அண்ணா சாலையில் செல்லும் உணவகத்தை பரிந்துரைக்கிறது. 

மார்க் - ஃபேஸ்புக் அப்டேட்

ஃபேஸ்புக்கிடம் இந்த விவரங்கள் எப்படி சென்றிருக்கும் என்று பார்த்தால், கொஞ்ச நாட்களுக்கு முன்பாக நண்பர் ஒருவரது கணக்கில் ஃபேஸ்புக் எடிட்டர் மூலம் உங்கள் பகுதியில் இருக்கும் இந்த பெயர் கொண்ட இடம் என்ன என்ற கேள்வியை கேட்டு அது உணவகம் அதற்கு 5க்கு 4 ரேட்டிங் என்ற விவரங்களையெல்லாம் வாங்கி இருக்கிறது. 

இதைவிட அடுத்த விஷயம் தான் இன்னமும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. டிஜிட்டலாக 22 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் ஆன பாட்ஷா படத்திற்கு சென்றதும், இந்த படத்தை பார்க்க சென்றுள்ளோம் என ஸ்டேட்டஸ் தட்டியவருக்கு காத்திருந்தது அந்த ஆச்சர்யம். இந்த ஸ்டேட்டஸை போஸ்ட் செய்வதற்கு முன்பு கிட்டத்தட்ட ஒரு 10 கேள்விகளை முன் வைக்கிறது ஃபேஸ்புக். அதில் இது திரையரங்கமா? இதற்கு எவ்வளவு ரேட்டிங், நீங்கள் பார்க்கும் படத்துக்கான ரேட்டிங், இடம், உணவகம் என பல கேள்விகளை முன் வைத்து ஸ்டேட்டஸை பதிவிடுகிறது. மறுநாள் ஃபேஸ்புக்கில் பார்த்தால் அந்த நண்பர் கொடுத்துள்ள ரேட்டிங்கோடு இந்த படத்தையும், திரையரங்களையும் பரிந்துரை செய்கிறது ஃபேஸ்புக். தஞ்சாவூரில் பாட்ஷா படம் பார்க்கிறோம் என்ற தகவலை நாமே தான் ஃபேஸ்புக்கிற்கு வழங்கியுள்ளோம். இந்த விஷயத்தை வைத்து தான் நம் நண்பர்களுக்கு பரிந்துரை செய்வது துவங்கி வர்த்தகம் வரை எல்லா உத்திகளையும் மேற்கொள்கிறது ஃபேஸ்புக்.  

மார்க் - ஃபேஸ்புக் அப்டேட்

சென்னை அண்ணா சாலையில் உள்ள இடமும், தஞ்சாவூரில் உள்ள திரையரங்கின் பெயரும் எப்படி ஃபேஸ்புக்கிற்கு தெரிந்துள்ளது என்று பார்த்தால் அது தான் ஃபேஸ்புக்கின் மிகப்பெரிய உத்தியாக இருந்துள்ளது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் இருந்து உங்களுக்கு ஒரு நோட்டிஃபிகேஷன் வந்திருக்கும் அதில் நீங்கள் ஃபேஸ்புக் எடிட்டர் பக்கத்துக்கு வரவேற்கப்படுகிறீர்கள். இதில் நீங்கள் தன்னார்வத்துடன் இணைந்துள்ளீர்கள். இதிலிருந்து நீங்கள் எந்த நேரத்திலும் வெளியேறலாம். நீங்கள் ஃபேஸ்புக் எடிட்டராக தேர்ந்தெடுக்கப்படுவதால் நீங்கள் ஃபேஸ்புக்கின் ஊழியராகவோ, ஏஜென்ட்டாகவோ, கான்ட்ரிப்யூட்டரோ கிடையாது. இதற்காக உங்களுக்கு எந்த வெகுமதியும் அளிப்படமாட்டாது. 

உங்களது ஃப்ரோஃபைலில் தெரியும் லீடர் போர்டில் உள்ள புள்ளிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுவீர்கள். இது நீங்கள் இருக்கும் இடத்தை வைத்தும் தரவரிசைப்படுத்தப்படும். தரவரிசைக்கான புள்ளிகள் நீங்கள் அளிக்கும் விவரத்தின் உண்மைத்தன்மையின் அடிப்படையில் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். 

இப்படி தான் ஃபேஸ்புக் இந்த தகவல்களை பெற்றுள்ளது. நாமே முழுமனதுடன் இலவசமாக அளித்த இந்த டேட்டாக்கள் தான் இன்று ஃபேஸ்புக்கின் புதிய அப்டேட்டாக மாறியுள்ளது. நாம் அனைவரும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் ஃபேஸ்புக்கிற்கு வேலை செய்து கொண்டிருக்கிறோம். நாளை நீங்கள் பதிவிடும் ஸ்டேட்டஸுக்கு லைக் குறைவாக வருகிறது. இது போன்று ஸ்டேட்டஸ் போடுங்கள் என பரிந்துரை செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஃபேஸ்புக் தன்னை மோனோபோலி எனப்படும் ஒற்றை ஆளுமையாக மாற்றி வருகிறது.

இந்த தகவல்களை கட்டாயம் ஃபேஸ்புக் வர்த்தகமாக்கும், 2 பில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஃபேஸ்புக் இந்த டேட்டாக்களை பெறுவது மிகவும் எளிதான விஷயம். உங்களது விருப்பங்களுக்கு ஏற்ப விஷயங்களை உங்களிடம் இருந்தே வாங்கி தருவது தான் மார்க் ஸ்டைல்... 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

'ட்யூட் தமிழா... ப்ரோ தமிழா!' -தமிழன் அட்ராசிட்டிகள் #VikatanExclusive

`தமிழன் என்றோர் இனமுண்டு... தனியே அவர்க்கோர் குணமுண்டு’னு  சும்மாவா சொன்னாய்ங்கே... இதோ சொல்றேன் கேட்டுக்கோங்க!  

* தமிழனுக்கு ஆங்கிலத்துல பிடிக்காத ஒரே எழுத்து ‘Q’. பேங்கோ, போஸ்ட் ஆபீஸோ கியூவை மதிக்கவே மாட்டான். நேரே கவுன்ட்டருக்கே போயி நின்னு திட்டு வாங்குவான். தமிழன்டா!

 * ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு முந்தின நாளே போயிடுவான். கல்யாணத்தை அட்டெண்ட் பண்றானோ இல்லையோ சரக்கு பார்ட்டியை மிஸ் பண்ணவே மாட்டான். 

 * பரீட்சைக்கு பிட்டோட போவான். தியேட்டருக்கு மொபைலோட போவான். கல்யாணத்துக்கு மொய்யோட போவான். ஆனா, பேங்குக்கு போறப்போ மட்டும் பேனா இல்லாமத்தான் போவான். 

தமிழன்

 * ‘ஹல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோ மாமாவா!’ என சென்னைல இருந்து மதுரை மாமாவுக்கே கேட்கும் டோனில் பேசுவான். காதல்ல விழுந்தா அமீபாவுக்கும் கேட்கா வண்ணம் காதுக்கு வலிக்காம கிசுகிசுப்பான். 

 * ‘மாமோய் நீ எங்கே இருக்கே?’, ‘என்னைக் காணா பொணமாக்கிருடா வீரா!’, 'மன்மத ராசா மன்மத ராசா'  என ரணகளமாய் ரிங்டோன் வைப்பவன் மார்கழி மாசம் மட்டும், ‘நமச்சிவாய நமச்சிவாயா ஓம் நமச்சிவாய’ என பக்தி மணம் பரப்புவான்.

* ஆப்ஸ்லயே வடை சுடுறவன் பர்ச்சேஸுக்குப் போனா மட்டும் ஒரு கட்டைப்பைக்காக கொலைகூட பண்ணுவான். 

தமிழன்

 * விக்ரமனை ரசித்த தமிழன் இப்போ கௌதம் மேனனைக் கொண்டாடுறான். சென்டிமென்ட் சீன்லேயும் `அவுட் ஆஃப் ஃபோகஸ் கேமரா'னு டீட்டெய்ல் சொல்லிப் பதற வைக்கிறான்.

 'மச்சான்' போய் 'ட்யூட்' வந்தாச்சு. 'பங்காளி' போயி 'ப்ரோ' வந்தாச்சு. ஏன்னா, ஃபேஸ்புக், வாட்ஸ்அப்புக்கே வாழ்க்கைப்பட்டு இப்போ கண்ணைக் கசக்கி அவன் நின்னாச்சு. 

 * கபடி விளையாண்ட பயலுக பூராம் இப்போ கேண்டி கிரஸ் விளையாடி கண்ணுக்குள்ள விரலை விட்டு ஆட்டுறான். 'போகே மான் கோ' 'கம்னாட்டி கோ' என திட்டித் தீர்க்கிறான்.

தமிழன்

 * குட்டி கும்கியாய் இருந்தாலும்கூட கையில ரிங், காதுல ரிங் இடுப்புல நிக்காத ஜாக்கி ஜட்டினு  யூத்தா மாறி பெப்பே காட்டுறான். 

* டீஸர், ட்ரெய்லர், மோஷன் போஸ்டர்னு சினிமாவே தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் படத்தை கூலா `கூல் தமிழ்'ல பார்த்துட்டு கொதிக்கக் கொதிக்க ஸ்டேட்டஸ் போடுறான். 

* புதுசு புதுசா மீம்ஸ் உருவாக்கிக் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் சோஷியல் மீடியாவில இறக்கி வைரல் ஆக்குறான்

ஆக, மொத்தம் தமிழன் இப்போ வேற லெவல் ப்ரோ!

  

  • தொடங்கியவர்

மக்களின் பிழையால், ஆமையின் வயிற்றில் 5 கிலோ நாணயங்கள்! #ThailandTurtle

தாய்லாந்து கடல் ஆமை

னிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான மோதல்கள் உலகம் முழுவதுமே அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நமது இருப்பிடங்களை விரிவுபடுத்த, தொழிற்சாலைகளை அமைக்க என மிருகங்களின் வாழ்வாதாரங்களான காடுகளைக் கைப்பற்றுகிறோம். ஆனால் நாம் அவர்களின் இடத்தை ஆக்கிரமிக்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல், இந்த மோதல்களுக்கு அவர்களையே குற்றம் சாட்டுகிறோம். சக உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான உறவில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பாதிப்புகள் நமது நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுவதுமே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்ததால், அவை ஊர்ப் பகுதிகளுக்குள் வருவது, ரயிலில் மோதி உயிரிழப்பது, மீன்கள், ஆமைகள் எனப் பல உயிரினங்கள் வாழும் வங்கக் கடலில் சமீபத்தில் நடந்த கப்பல் விபத்தால் கொட்டப்பட்ட கச்சா எண்ணெய் போன்றவை நம் சமீபகால உதாரணங்கள். இவை நம் மாநிலத்தில், நம்முடைய கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நடப்பதால் நமக்குத் தெரிகிறது. ஆனால் உலகம் முழுவதுமே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. காண்டாமிருகங்கள் கொம்புக்காக வேட்டையாடப்படுவது, மீன்பிடி வலைகளில் சிக்கி ஆமைகள் உயிரிழப்பது, பாமாயிலுக்காக மழைக்காடுகளை அழித்து, உராங்குட்டான் குரங்குகளை அழிப்பது போன்ற எண்ணற்ற அட்டூழியங்கள் உலகெங்கும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இவற்றில் பெரும்பங்கு வகிப்பது மனிதர்களின் லாப நோக்கமும், மூட நம்பிக்கைகளும்தான். இதற்கு மற்றொரு சமீபத்திய உதாரணம் தாய்லாந்தில் வாழும் பேங்க் என்னும் கடல் ஆமை.

ஆமையின் வயிற்றில் இருக்கும் நாணயங்கள்

தாய்லாந்தில் ஸ்ரீரச்சா பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் வசிக்கும் பெண் ஆமைதான் இந்த பேங்க். நேற்று நடந்த அறுவைசிகிச்சை ஒன்றில் இந்த ஆமையின் வயிற்றில் இருந்து மட்டும் சுமார் 5 கிலோ அளவுக்கு நாணயங்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இதன் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட மொத்த நாணயங்களின் எண்ணிக்கை மட்டும் 915. இந்த அளவு கணத்தை தன் வயிற்றில் சுமந்துகொண்டுதான் வாழ்ந்து வந்திருக்கிறது இந்த ஆமை. சில நாட்களுக்கு முன்னர் இந்த ஆமை, மற்றவற்றைப் போல எளிதில் நீந்த முடியாமல் கஷ்டப்பட்டிருக்கிறது. அப்போது இதனை சோதனை செய்து பார்த்ததில்தான் இதன் வயிற்றில் இந்த அளவுக்கு நாணயங்கள் இருந்தது தெரியவந்தது. 

ஆமைக்கு நடந்த அறுவைசிகிச்சை

 நாணயங்களை ஆமைகள் வசிக்கும் குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் வீசினால் வாழ்நாள் அதிகரிக்கும் மற்றும் அதிர்ஷ்டம் வரும் என்பது தாய்லாந்து வாசிகளின் நம்பிக்கைகளில் ஒன்று. இந்த நம்பிக்கையால் தாய்லாந்து நாட்டுக்கு வந்த சுற்றுலாப்பயணிகள், அந்நாட்டு மக்கள் எனப் பலரும் இந்தக் கடல் ஆமை வாழ்ந்த குளத்தில் நாணயங்களை வீசியுள்ளனர். இந்தச் செயல் அவர்களின் வாழ்நாளை நீடித்ததோ இல்லையோ, இந்த ஆமையின் வாழ்நாளைக் குறைத்துவிட்டது. பச்சைக் கடல் ஆமை வகையைச் சேர்ந்த இது சுமார், 80 ஆண்டுகள் வரையிலும் வாழும் தன்மை கொண்டது. ஆனால் இந்தச் செயலால் இதன் உடல்நலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விரைவில் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெண் ஆமையான இதற்கு தற்போது 25 வயது ஆகிறது. எனவே இதற்கு உடனே அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

நாணயங்கள்

இந்த அறுவைசிகிச்சையை தாய்லாந்தைச் சேர்ந்த சுலாலாங்கார்ன் விலங்கியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். சுமார் 7 மணி நேரம் இதற்கான அறுவைசிகிச்சை நடந்துள்ளது. தாய்லாந்து நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள், மீன்பிடி கொக்கிகள் உள்ளிட்ட பொருட்கள் மட்டும் சுமார் 5 கிலோ அளவுக்கு ஆமையின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தி கடந்த மாதம் தாய்லாந்து நாட்டு மீடியாக்களில் வெளிவரவும் பொதுமக்களும் இதற்காக பண உதவி செய்துள்ளனர். தற்போது சிகிச்சைக்குப் பின் நலமாக உள்ளதாகக் கூறியுள்ளனர் மருத்துவர்கள். 

கடலில் அல்லது காட்டில் சுதந்திரமாக வாழ்ந்த உயிரினங்கள் தற்போது பூங்காக்கள் அல்லது சரணாலயங்கள் போன்ற வரையறைக்கு உட்பட்ட பகுதிகளில் வைத்துப் பாதுகாக்கப்படுவது என்பதே இயற்கைக்கு மாறான ஒரு விஷயம். இதற்கு காரணமே முழுக்க முழுக்க மனிதர்கள்தான். ஆனால் அப்படிப்பட்ட இடங்களில் கூட நடக்கும் இதுபோன்ற விஷயங்கள் நிச்சயம் வேதனையான ஒன்று.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Baseball und im Freien

மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் உலகம் கண்ட மிகச் சிறந்த அதிரடித் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான சேர்.விவியன் ரிச்சர்ட்ஸ் அவர்களின் பிறந்த தினம்.

அலட்டிக்கொள்ளாத அசுர துடுப்பாட்ட வீரர்.
அபாரமான களத் தடுப்பாளர்.
ஹெல்மெட் அணியாமலேயே அதி வேகப் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்தவர் ரிச்சர்ட்ஸ்.

அணியை வெற்றியாக வழி நடத்திய தலைவர்.
இவர் ஒய்வு பெறும் வரை மேற்கிந்தியத் தீவுகள் அணி அசைக்க முடியாத முடி சூடா மன்னர்களாக வலம் வந்தார்கள்.
Happy Birthday Sir. Viv Richards

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகில் சிறந்தநாடு: 25-வது இடத்தில் இந்தியா!

உலகில் சிறந்த விளங்கும் நாடுகள் குறித்து கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 36 நாடுகளில் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சிறந்த நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. கனடா, இங்கிலாந்து நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்க, இந்தியாவுக்கு இதில் 25-வது இடமாம். இந்தப் பட்டியலில் மொத்தம் 80 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

lists-top-9-things-to-do-in-india_22175.

பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும்  பிஏவி கன்சல்டிங் நிறுவனங்கள் இந்த கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, கடந்தாண்டு, 4-வது இடத்தில் இருந்த அமெரிக்கா இந்தாண்டு 7-இடத்துக்கு பின் தங்கியுள்ளது.

மேலும், தொழில் தொடங்க சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.  அதேபோல், பாரம்பர்யத்தை காப்பதில், 5-வது இடத்திலும், பொருளாதார வளர்ச்சியில் 3-வது இடத்திலும் இந்தியா உள்ளது. 

 

 

அஸ்வினின் புதிய சாதனை!

அஸ்வின் இன்று நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெஸ்ட் கிரிக்கெட்டில்,  அவர் 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுப்பது இது 25-வது முறையாகும். இதன் மூலம் சர்வதேச அரங்கில் மிகக்குறைந்த போட்டிகளில் 25 முறைக்கு மேல் 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர், என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதன் மூலம் அவர் முத்தையா முரளிதரன் சாதனையை முறியடித்துள்ளார். அஸ்வின் இந்த சாதனையை 88 டெஸ்ட் போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார். முன்னதாக, முத்தையா முரளிதரன் தனது 100-வது போட்டியில்தான் இந்த இலக்கை எட்டியிருந்தார். உலக அளவில் 25 முறை 5 விக்கெட்களை வீழ்த்திய 10-வது வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார்.

Ashwin

அதேபோல், இந்தியாவில் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். அவர் 30 டெஸ்டில் இந்த சாதனையை படைத்துள்ளார். 2016-17 சீசனில் மட்டும் அஸ்வின் 89 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

 

லஞ்சத்தில் இந்தியா முதல் இடம்!

ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள 16 நாடுகளின்  ஊழல், லஞ்சம் அளவினை சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு ஆய்வு செய்தது.

Bribery
 

ஆய்வு முடிவில் லஞ்சம் வாங்குவதில் இந்தியா முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. வியட்நாம் இரண்டாவது இடத்தில் உள்ளது ஜப்பான் கடைசி இடத்தில் உள்ளது. ஜப்பானில் 0.2% பேர் மட்டுமே லஞ்சம் பெறுகின்றனர்.  இந்தியாவில் 10 பேரில் 7 பேர் அரசின் சேவையைப் பெற லஞ்சம் கொடுக்கிறார்களாம். 

 

இதுதான் டாடாவின் புதிய ஸ்போர்ட்ஸ் கார்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த டாடாவின் பிராண்டான Tamo-வின் 'Racemo' எனும் ஸ்போர்ட்ஸ் காரை, ஜெனிவாவில் நடந்த மோட்டார் ஷோவில் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.  Bi-LED ஹெட்லைட்ஸ் உடன் பயங்கர ஸ்டைலிஷாக இந்தக் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. 

Tamo Racemo

இரண்டு பேர் அமரக்கூடிய இந்தக் காரின் உள்ளே, மூன்று பெரிய திரைகள், உயர் தொழில்நுட்பம் என உள்ளேயும் பிரமாண்டம் காட்டி உள்ளனர். ஸ்டார்ட் செய்த ஆறே நொடிகளில் 100 கி.மீ-க்கு பறக்குமாம் Tamo Racemo.

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கிரகாம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்ற நாள்: மார்ச் 7- 1876

கிரகாம் பெல் தொலைபேசியை கண்டுபிடித்தார். அதற்கான காப்புரிமத்தை 1876-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி பெற்றார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1814 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் குரோன் நகரில் உருசியர்களுக்கும் புருசியர்களுக்கும் எதிரான போரில் வெற்றி பெற்றான்.

 
 
 
 
கிரகாம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்ற நாள்: மார்ச் 7- 1876
 
கிரகாம் பெல் தொலைபேசியை கண்டுபிடித்தார். அதற்கான காப்புரிமத்தை 1876-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி பெற்றார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1814 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் குரோன் நகரில் உருசியர்களுக்கும் புருசியர்களுக்கும் எதிரான போரில் வெற்றி பெற்றான். * 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வடமேற்கு ஆர்கன்சாவில் அமெரிக்கப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படையினரை வென்றனர். * 1876 - அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார். * 1902 - இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவின் போவர்கள் பிரித்தானியர்களுக்கு எதிரான கடைசிச் சமரில் வெற்றியீட்டினர்.

* 1911 - மெக்சிக்கோவில் புரட்சி வெடித்தது. * 1912 - தென் முனையைத் தாம் டிசம்பர் 14, 1911 இல் அடைந்ததாக ருவால் அமுன்சென் அறிவித்தார். * 1918 - முதலாம் உலகப் போர்: பின்லாந்து ஜெர்மனியுடன் கூட்டுச் சேர்ந்தது. * 1936 - லொக்கார்னோ உடன்படிக்கைகள், வெர்சாய் ஒப்பந்தம் ஆகியவற்றிற்கு எதிராக ரைன்லாந்தை ஜெர்மனி கைப்பற்றியது. * 1951 - கொரியப் போர்: கொரியாவில் ஐநாப் படைகள் சீனப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர். * 1969 - கோல்டா மெயிர் இசுரேலின் முதற் பெண் பிரதமரானார்.

* 1989 - மக்கள் சீனக் குடியரசு திபெத்தின் லாசா பகுதியில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தனர். * 1996 - பாலஸ்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. * 2006 - காசியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர். * 2007 - இந்தோனீசியாவின் யாஹ்யகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த கருடா விமானம் வயல் ஒன்றில் வீழ்ந்து வெடித்ததில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

Kein automatischer Alternativtext verfügbar.

நினைக்கின்ற நேரமெல்லாம், அருவியாய்க் கவிதையைக் கொட்டும் ஆற்றலை இளமைக்காலத்திலிருந்தே பெற்றிருந்த 'ஆசுகவி' என ஈழத்தமிழர்களால் அன்புடன் போற்றப் பெற்ற ஈழத்துக் கவிஞர் கல்லடி வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு தினம்.

  • தொடங்கியவர்

பறையாட்டம் முதல் கரகாட்டம் வரை... தமிழ்நாட்டின் 'கலைநகரம்' தஞ்சாவூர்! #GoodRead #VikatanExclusive

தஞ்சாவூரை தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்பார்கள். அது உண்மையோ, பொய்யோ... தமிழகத்தின் கலைநகரம் என்றால் அது தஞ்சாவூர் தான். தமிழர்கள் வாழ்வியலோடும், வழிபாடுகளோடும், சடங்குகளோடும் இணைந்த பல கலைகளை இன்றளவும் உயிர்ப்போடு நிகழ்த்தும் கலைஞர்கள் தஞ்சாவூரில் நிறைந்து இருக்கிறார்கள். 

தஞ்சாவூர் பறையாட்டம்

கரகாட்டத்துக்கு கீழவாசல். காளியாட்டம், காவடியாட்டத்துக்கு யாகூப்பியா தெரு. நையாண்டி மேளம், நாட்டுப்புற இசை, தப்பாட்டக் குழு தேவையென்றால் ரெட்டிப்பாளையம். பேண்டு வாத்தியக் குழு வேண்டுமா? அதற்கு வடக்குச் வாசல். ஒயிலாட்டம், கும்மி, கோலாட்டத்துக்கு மானோஜிப்பட்டி. பொய்க்கால் குதிரைக்கு குந்தளக்காரத் தெரு. 

ஒவ்வொரு கலைக்கும் ஒரு பகுதி. எல்லோரும் கூடுமையமாக விளங்குவது, கீழவாசல். இப்பகுதியில் சாலையோரங்களில் கலைஞர்களின் அலுவலகங்கள் வரிசையாக உள்ளன. மாலை நேரத்தில் இங்கு சென்றால், தஞ்சையின் ஒட்டுமொத்த கிராமிய கலைஞர்களையும் ஒரு சேர சந்திக்கலாம். 

தஞ்சாவூரின் அடையாளமாக இருப்பது கரகாட்டம் தான். தஞ்சையில் மட்டும் 1000 கரகாட்டக் கலைஞர்கள் இருக்கிறார்கள். காயத்ரி, நீலா, மதுபாலா, தேவி, சித்ரா, சத்யா, நிஷாந்தி, மகா என ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற நடன மங்கைகளுயும் இதில் அடக்கம். 
கரகாட்டம், ஒரு தெய்வீகக் கலை. குடக்கூத்து என்ற பெயரில் சங்க இலக்கியங்கள் இந்தக் கலையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் கோவில் திருவிழாக்களில், அம்மனின் வடிவமாகக் கருதப்படும் நதிகளில் இருந்து நீரெடுத்து வந்து அபிஷேகம் செய்வது ஒரு சடங்கு. அவ்விதம் குடங்களில் நீரெடுத்து ஊர்வலமாக வரும்போது, பக்தர்கள் அருள் வந்து ஆடுவதுண்டு. அதுதான் கரகாட்டக் கலையின் ஆதி வடிவம். பிறகு, அதுவே ஒரு தனி ஆட்டக் கலையாக உருவெடுத்தது.  தலையில் கரகம் வைத்து, இசைக்குத் தகுந்தவாறு அடவுகள் செய்வார்கள். காலப்போக்கில் ரசிகர்களை ஈர்க்க, தலையில் கரகம் வைத்தபடி ஏணிகளில் ஏறுவது, கரகம் விழாமல், கண் இமைகளால் கீழிருக்கும் ஊசியை எடுப்பது என சில சாகசங்கள் இணைக்கப்பட்டன. 

திரைப்படத்தின் தாக்கம் தொடங்கிய பிறகு, கரகாட்டத்திற்கான வரவேற்பு குறைந்து போனது. கலையை மட்டுமே நம்பியிருந்த பலநூறு கலைஞர்களின் வாழ்க்கை வதங்கத் தொடங்கியது. ஒரு சில முற்போக்குக் கலைஞர்கள், கலர்புல்லான "குறவன் குறத்தி ஆட்ட"த்தை கரகாட்டத்தின் துணை ஆட்டமாகக் கொண்டு வந்தார்கள். 

குறவன் குறத்தி ஆட்டம்

(மேலும் படங்களுக்கு... க்ளிக்கவும்)

குறவன் குறத்தி ஆட்டம் என்பது, கிராமங்களில், இளைஞர்களுக்கு பாலியல் கல்வியைப் போதிப்பதற்காக உருவாக்கப்பட்ட கலை. இன்றைக்கு ஸ்மார்ட் போனே, சர்வதேச பாலியல் கல்வியை இளைஞர்களுக்கு வழங்கி விடுகிறது. அந்தக்காலத்தில், சங்கடமில்லாமல் கணவன் மனைவி முகம் பார்த்துப் பேசவே வருடங்கள் ஆகிவிடும். நம் முன்னோர்கள் இதற்கென உருவாக்கிய கலைதான் குறவன் குறத்தி ஆட்டம். ஊருக்கு எல்லையில் இருக்கும் காவல் தெய்வங்களின் திருவிழாக்களில் இந்தக்கலை நிகழ்த்தப்படும். ஆண் பெண் பாலியல் உறவுகள் குறித்து பாடல்களும், வசனங்களும் இதில் இடம்பெறும். 

இதை கரகாட்டத்தில் இணைத்தவுடன், களம் களைகட்டி விட்டது. முதலில் கரகாட்டம் நடக்கும். இடையில், ரசிகர்களை ரிலாக்ஸ் செய்ய குறவன் குறத்தி ஆட்டம். ஒரு கட்டத்தில், "கரகாட்டத்தை நிறுத்திட்டு குறவன் குறத்தி ஆட்டத்தை போடுங்கடா" என்று ரசிகர்கள் கலவரத்தில் இறங்கி விட்டார்கள். கரகம் சுமந்து ஆடும் கலைஞர்களையும் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு இறங்கி ஆட வலியுறுத்த, இந்த அவலத்தை சகிக்காமல் மூத்த கரகாட்டக் கலைஞர்கள் கலையை விட்டே விலகிவிட்டார்கள். காலப்போக்கில் குறவன் குறத்தி ஆட்டமே கரகாட்டமாக உருமாறிப் போனது. 

செல்வராசுஇப்போது மரபுக்காக, கரகாட்டத்தின் தொடக்கத்தில் நடனமாடும் பெண்கள் ஒரு கரகத்தை தலையில் வைத்து இரண்டு அடவுகள் செய்வார்கள். மற்றபடி கரகத்துக்கும் இந்த ஆட்டத்துக்கும் சம்பந்தமேயில்லை. 

“இங்கிருக்கிற கரகாட்டக் கலைஞர்கள் எல்லாருமே ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்தவங்க. 1940கள்ல, அந்த மாவட்டங்கள்ல ஏற்பட்ட பஞ்சத்தை தாக்குப்பிடிக்க முடியாம, தஞ்சாவூருக்கு வந்தவங்க. தஞ்சாவூர் எங்களை அரவணைச்சு வாழ்க்கை கொடுத்துச்சு. இப்போ ரெண்டாவது தலைமுறையும் இந்தக் கலைக்குள்ள வந்திடுச்சு. மூத்த கலைஞர்கள் காண்ட்ராக்டர்களா மாறிட்டாங்க. ஒரு கரகாட்டக் குழுவுல நையாண்டி மேளக்காரங்க 6 பேரு, கரகம் 1 செட்டு, குறவன் குறத்தி 1 செட்டுன்னு 10 பேரு இருப்பாங்க. நைட்டு 10 மணிக்குத் தொடங்கினா காலை 4 மணி வரைக்கும் ஆடுவோம். எல்லாத்துக்கும் சேத்து 30 ஆயிரம் வாங்குவோம்..." என்கிறார் செல்வராசு. தமிழ்நாடு கிராமியக் கலைஞர்கள் சங்கத்தின் துணைத்தலைவர். நாதஸ்வரமும் வாசிப்பார். பொய்க்கால் குதிரையும் ஆடுவார். குடும்பமே கலைக்குடும்பம்.

 

மதுபாலாசெல்வராசுவின் மகள் மதுபாலாவுக்கு தென் மாவட்டங்களில் ஏகமாக ரசிகர்கள் உண்டு. உறங்க நேரமில்லாமல் மதுரை, திருநெல்வேலி என்று பயணித்துக் கொண்டே இருக்கிறார். “தை ஆரம்பிச்சு ஆடி மாதம் முடிய தினமும் கரகாட்டம் இருக்கும். பயணத்திலேயே பாதி நாள் போயிடும். ஒரு நிகழ்ச்சிக்கு ரெண்டாயிரம் தருவாங்க. ஊருக்குத் தகுந்தமாதிரி ஆடணும். சில ஊர்கள்ல கொஞ்சம் நிதானமா ஆடுங்கன்னு சொல்வாங்க. சில பகுதிகள்ல இளைஞர்களை ஈர்க்கிற மாதிரி ஆடச் சொல்வாங்க. ரசிகர்களோட விருப்பம் எதுவோ அந்தமாதிரி ஆடுவோம்..." என்கிறார் மதுபாலா.

 

தஞ்சாவூர்- தேன்மொழி

பாரம்பரியமாக பழைய கரகாட்டத்தை நிகழ்த்தும் கலைஞர்கள் சிலரும் தஞ்சாவூரில் இருக்கவே செய்கிறார்கள். தேன்மொழி, எஸ்தர்ராணி, செல்வராணி, அஞ்சலை தேவி,  குணவதி, தமிழ்செல்வி, போன்றோர் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர்கள். தேன்மொழி, தமிழ்ச்செல்வி, குணவதி மூவரும் கலைமாமணி விருது பெற்றவர்கள். இவர்கள் எல்லாம் இப்போது நிகழ்ச்சிகளுக்குச் செல்வதில்லை. 
“நான் பத்து வயசுல கரகாட்டம் ஆட வந்தேன். அப்பல்லாம் யாரும் ஆடுறவங்களைப் பாக்க மாட்டாங்க. ஆட்டத்தைத் தான் பாப்பாங்க. தெய்வீக அம்சமா நினைச்சு மரியாதை தருவாங்க. ஆட்டத்துக்கு நடுவில நிறைய சாகசங்கள் செய்வோம். இடையில உடை மாத்துற இடைவெளியில குறவன் குறத்தி ஆட்டத்தை விடுவோம். தொடக்கத்துல, அதுலயும் கிளாமர் இருக்காது. வண்டிக்காரன் பாட்டு, சட்டிமுட்டிக் கதை, மணிக்குறவன் பாட்டு, ரயில் விபத்துப் பாட்டு, பள்ளிக்கூட விபத்து, தனுஷ்கோடி அழிவு, ஆளவந்தான் கொலை வழக்குன்னு அப்பப்போ நடக்கிற சம்பவங்களை வச்சு பாட்டுக்கட்டி பாடிக்கிட்டே ஆடுவாங்க. மக்களெல்லாம் அதைக் கேட்டு அழுவாங்க. காலப்போக்குல எல்லாம் மாறிப்போச்சு. மக்கள் கிளாமரை ரசிக்கத் தொடங்கிட்டாங்க. எங்ககிட்டயும் அதையே எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. படிப்படியா நாங்க ஆடுறதைக் குறைச்சுக்கிட்டோம்..." என்கிறார் தேன்மொழி.

முன்பெல்லாம் கரகாட்டத்திற்கு டம்மானம், தம்முறு போன்ற இசைக்கருவிகளைத் தான் இசைப்பார்கள். அம்மனுக்கான ஆட்டம் என்பதால் இக்கருவிகள் உக்கிரத்தை அதிகமாக்கும். இன்று கலை மருவியதைப் போல கருவிகளும் மாறிவிட்டன. இப்போது, கரகாட்டம் என்றால் நையாண்டி மேளம் தான். அதுவும் தஞ்சாவூர் நையாண்டி மேளத்திற்கு ஈடு இணையே இல்லை என்கிறார்கள். ரெட்டிபாளையத்தில் ஏராளமான நையாண்டி மேளக் கலைஞர்கள் இருக்கிறார்கள். நையாண்டி மேளம் என்ற வகையை உருவாக்கியதே ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தஞ்சைக்கு இடம்பெயர்ந்த கலைஞர்கள் தான் என்கிறார்கள். 

தஞ்சாவூர் நையாண்டி மேளம்

ராஜேந்திரன், தங்கராசு, பாண்டி என தஞ்சையில் நையாண்டி மேளத்திற்கு பெயர் போன கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள். ராஜேந்திரன் தேன்மொழியின் கணவர். நையாண்டி மேளத்தோடு கரகாட்ட காண்ட்ராக்டராகவும் இருக்கிறார். “நையாண்டி மேளம் எளிய கலைஞர்களோட கலை. யாரும் முறைப்படி கத்துக்கிட்டவங்க இல்லை. எல்லாம் செவிவழியா பழகிக்கிட்டது தான். தலைமுறையா வருது. கச்சேரி மேளத்துல கையில ஓடு மாட்டிக்கிட்டு வாசிப்பாங்க. நையாண்டி மேளத்துல சிம்பு வச்சு அடிப்பாங்க. இன்னைக்கு நையாண்டி மேளம் இல்லேன்னா எந்தக் கலையும் களைகட்டாது. கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, காளியாட்டம் எல்லாத்துக்கும் நையாண்டி மேளம் தான். ஆட்டத்துக்கும் மேளத்துக்கும் பெரிய போட்டியே நடக்கும். நையாண்டி மேளத்துக்கு ஒரு நாட்டுப்புற இலக்கணம் இருக்கு. 2 தவில், 2  நாதஸ்வரம், 1  பம்பை, 1 கிடுகிட்டி அடங்கினது தான் ஒரு நையாண்டி மேளக்குழு. நையாண்டி மேளத்துல தெற்கத்தி நையாண்டி, துரித நையாண்டி, விளம்ப நையாண்டின்னு மூணு வகை இருக்கு. தெம்மாங்கு, ராஜபார்ட், கட்டபொம்மன், ஆரவல்லி, சோழமலை, கிளிக்கிண்ணின்னு பல அடவு அடிகளும் இருக்கு..." என்கிறார் ராஜேந்திரன்.
நையாண்டி மேளத்துக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வாங்குகிறார்கள். 

தஞ்சாவூர்-பறையாட்டம்

தஞ்சாவூரில் தப்பாட்டத்திற்கு பெயர் போன இடம் ரெட்டிப்பாளையம். ஒரு இனத்தின் அடிமைக் கருவியாக இருந்த பறையை விடுதலைக் கருவியாக மாற்றியது ரெட்டிப்பாளையம் இளைஞர்கள் தான். ரெட்டிப்பாளையத்தில் 15க்கும் மேற்பட்ட தப்பாட்டக் குழுக்கள் இருக்கின்றன. 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இங்கே இருக்கிறார்கள். 50 பெண்களும் தப்பாட்டத்தில் இருக்கிறார்கள். ஜாதி காரணமாக ஒதுக்கப்பட்ட பகுதியாக இருந்த ரெட்டிப்பாளையத்தை இளம் தலைமுறை, கலைஞர்களின் கிராமமாக மாற்றியிருக்கிறது.  

“ரெட்டிப்பாளையம் தான் எங்களுக்குப் பூர்வீகம். ஒரு காலத்தில இது ஒடுக்கப்பட்ட பகுதி. எங்க பகுதி ஆண்களுக்குத் தொழில் பறை தஞ்சாவூர்- ஜான் பீட்டர்இசைக்கிறது தான். கோவில் திருவிழா, சாவு வீடுகளுக்கு பறை அடிப்பாங்க. சின்ன வயசுல இந்த இசைக்கருவி மேல எங்களுக்கெல்லாம் பயங்கர ஈர்ப்பா இருக்கும். ஆனா, தொடக்கூட விடமாட்டாங்க. "இதெல்லாம் எங்களோட போகட்டுமுடா"ன்னு திட்டுவாங்க, தப்பை நெருப்புல வாட்டுற இடைவெளியில எடுத்து அடிப்போம். தப்பிசைக்கு நெடுங்கால வரலாறு உண்டு. ஆதி மனிதன் விலங்குகளை வேட்டையாடி இறைச்சியை சாப்பிட்டுட்டு, விலங்குத் தோலை மண்பாண்டத்துல கட்டி அடிச்சு கொண்டாடினப்போ உருவானது இந்தக்கலை. இது ஒரு கொண்டாட்டக்கலை. இதுக்குன்னு அடவுகள்லாம் இருக்கு. அதையெல்லாம் கத்துக்கிட்டோம். தப்பாட்டத்துல பெண்களுக்கு இடமேயில்லை. நாங்க பெண்களுக்கும் பயிற்சி கொடுத்தோம். தமிழ் பல்கலைக்கழகத்துல பேராசிரியரா இருந்த முருகேசன் சார் நிறைய உதவிகள் செஞ்சார்.  தப்பாட்டத்துல 23 அடவுகள் இருக்கு. இரவு 10 மணிக்கு ஆரம்பிச்சு, காலையில 6 மணி வரைக்கும் ஆடுவோம். இடையில, ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், கும்மியெல்லாம் துணை ஆட்டங்களா செய்வோம்..." என்கிறார் ஜான் பீட்டர். "சலங்கை ஒளி" என்ற பெயரில் ஒரு தப்பாட்டக் குழுவை நடத்துகிறார். 

நிறைய கிராமியப் பாடகர்கள் ரெட்டிப்பாளையத்தில் இருக்கின்றார்கள். சின்னப்பொண்ணு, ஆண்டனி தாஸ் என சினிமாவுக்கும் பல கலைஞர்களைத் தந்திருக்கிறது இந்தப்பகுதி. சின்னப்பொண்ணுவின் கணவர் குமார், தப்பாட்டக் கலைஞர். சின்னப்பொண்ணு 13 வயதில் நாட்டுப்புற பாடல் பாட வந்தவர். கே.ஏ.குணசேகரன், கோட்டைச்சாமி போன்ற கலைஞர்களோடு இணைந்து கலை இலக்கிய மேடைகளில் பாடியிருக்கிறார். திருவாடானையில் நடந்த சிபிஐ மாநாட்டில் சின்னப்பொண்ணுவின் பாட்டைக் கேட்ட கவிஞர் அறிவுமதி, சந்திரமுகியில் திரைப்பட வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறார். 

தஞ்சாவூர்- குடும்பத்துடன் சின்னப்பொண்ணு

“கலை, இந்த ஊர்ல பலபேரோட வாழ்க்கையை மாத்தியிருக்கு. இப்போ ஆரம்பிச்ச மாதிரி இருக்கு. சினிமாவுல 300 பாட்டுக்கு மேல பாடிட்டேன். இப்போ தம்பி அந்தோணி பாடிக்கிட்டிருக்கு. இன்னும் பலபேரு சினிமாவுல நடிச்சிருக்காங்க. பாடுற வாய்ப்பும் கிடைச்சிருக்கு...'' என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார் சின்னப்பொண்ணு. ரெட்டிபாளையத்தை ஒட்டியிருக்கும் மானோஜிப்பட்டியில் கலைஞர்களுக்கு அரசே வீடு கட்டித் தந்திருக்கிறது. இந்தப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருக்கிறார்கள். இங்கு கலைஞர்களுக்கென்று ஒரு சங்கம் இயங்குகிறது. “கலையைத் தவிர வேறெதுவும் எங்க மக்களுக்குத் தெரியாது. ஆனா, வயசாயிட்டாலோ, நிகழ்ச்சிகள் அமையாவிட்டாலோ பட்டினி தான். கலைக்காக வாழ்க்கையையே அர்ப்பணிச்சுக்கிட்ட கலைஞர்கள் பட்டினி கிடக்காம அரசு உதவித்தொகை கொடுக்கணும். அதுக்காகத் தான் இந்த சங்கத்தையே தொடங்கியிருக்கோம்..." என்கிறார் மானோஜிப்பட்டியைச் சேர்ந்த கரகாட்ட கலைஞர் செல்லப்பாண்டியன். தஞ்சாவூர் குந்தளத்தார் தெரு, பொய்க்கால் குதிரைக்குப் பெயர் போன தெரு. 

தஞ்சாவூர் ராஜிராவ்

பொய்க்கால் குதிரை மராட்டியக் கலை. தஞ்சாவூரை மராட்டியர்கள் ஆட்சி செய்த காலத்தில் அங்கிருந்து அழைத்து வரப்பட்ட கலைஞர்கள் இந்தத் தெருவில் தான் குடியிருந்தார்கள். இப்போது பெரும்பாலானோர் இடம்பெயர்ந்து விட்டார். 20 கலைஞர்களே மிஞ்சியிருக்கிறார்கள். 
“எங்க அப்பா எங்கோஜிராவ் தான் இந்தக் கலையை எனக்குக் கத்துக்கொடுத்தார். பொய்க்கால் குதிரைக்கு ஏத்த இசை குந்தள இசை தான். இன்னைக்கு பேண்ட் வாத்தியம், டிரம் செட்டெல்லாம் வச்சு வாசிக்கிறாங்க. இப்போ குந்தளம் வாசிக்கத் தெரிஞ்ச கலைஞர்கள் மூணு பேர் இங்கே இருக்காங்க..." என்கிறார் ராஜிராவ்.

தஞ்சாவூர் யாகூப்பியா தெரு, காவடியாட்டத்துக்கு ஆனது. காளியாட்டக் கலைஞர்களும் இப்பகுதியில் நிறைந்திருக்கிறார்கள். காவடியாட்டத்துக்குக்காக கலைமாமணி விருது வாங்கியவர் வினாயகம். “தலைமுறையா நமக்கு கலை தான். தாத்தா சக்தி கரகம் ஆடினவர். அப்பா காவடி ஆட்டக் கலைஞர். நான் காவடியாட்டம் மட்டுமில்லாம பச்சைக்காளி, பவளக்காளி, கருப்புச்சாமி ஆட்டமும் ஆடுவேன். என்கிட்ட கத்துக்கிட்ட பிள்ளைங்க இப்போ ஆடத் தொடங்கிட்டாங்க..." என்கிறார் வினாயகம். 

வினாயகம்

தஞ்சாவூரில் பாரம்பரிய கலைஞர்கள் மட்டுமின்றி, இடைக்காலத்தில் வந்து புகுந்த கலைகளும் தஞ்சாவூரில் தழைத்திருக்கின்றன. வடக்குவாசல் பகுதியில் 20க்கும் மேற்பட்ட பேண்ட் வாத்தியக் குழுக்கள் உள்ளன. 

தஞ்சாவூர் பேண்ட் வாத்தியம்

“பிரிட்டிஷ் காலத்துல வந்தது இந்த பேண்டு வாத்தியம். கிளாரிநெட், சாக்ஸபோன், டிரம்பெட், எம்போனியம், சைடு டிரம், பேஸ் டிரம், பெரிய பேஸ் அடங்கினது தான் பேண்டு வாத்தியம். இதையெல்லாம் இங்குள்ள புள்ளைங்கள்லாம் கத்துக்கிடுச்சுங்க. ஒரு காலத்துல கிறிஸ்தவர்களோட நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தான் கூப்பிடுவாங்க. இப்போ, எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பு வருது. இந்தக் கலையை நம்பி 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருக்காங்க..." என்கிறார் மூத்த பேண்டு வாத்தியக் கலைஞர் வியாகுலசாமி. 
தஞ்சையின் எல்லாத் திசைகளும் கலைகளால் நிறைந்திருக்கிறது. தஞ்சை வட்டார மக்களின் பண்டிகைகள், சுபகாரியங்கள், திருவிழாக்கள், சடங்குகளில் எல்லாம் கலை நிறைந்திருக்கிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

7 தினங்கள் பாறைக்குள் வசித்த கலைஞர்

பிரான்ஸை சேர்ந்த கலைஞர் ஒருவர், கண்காட்சியொன்றுக்காக கற்பாறை ஒன்றுக்குள் 7 நாட்கள் தங்கியிருந்துள்ளார்.

 

098607-01-02

 

098615-01-02

44 வயதான ஆப்ரஹாம் பொய்ன்செவால் எனும் இக் கலைஞரே இவ்வாறு கற்பாறையில் வசித்தார். பாரிஸ் நகரிலுள்ள நூதனசாலையில் இக் கண்காட்சி நடைபெற்றது.

மேற்படி பாறையில் மனிதர் ஒருவர் அமர்ந்திருப்பதற்கு ஏற்ப செதுக்கப்பட்ட இடத்தில் ஆப்ரஹாம் அமர்ந்திருந்தார். பழங்கள் முதலான உணவுகளை அவர் உட்கொண்டார். அவசர கால தொலைபேசி வசதி, மற்றும் குறிப்புப் புத்தகம் ஆகியவற்றை அவர் தன்னுடன் வைத்திருந்தார்.

 

098645-01-02

 

098717-01-02

 

098760-01-02

7 தினங்களின் பின் கடந்த புதன்கிழமை அவர் மேற்படி பாறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். மருத்துவக் குழுவினர் அவர் பாறையிலிருந்து வெளிவர உதவினர். பெரும் எண்ணிக்கையானோர் கரகோசம் செய்து அவரை வரவேற்றனர்.

098690-01-02

http://metronews.lk

  • தொடங்கியவர்
இணைந்து வாழ வேண்டும்; பிணங்கி வாழுதல் ஆகாது
 
 

article_1488946781-mkkjk.jpgதாங்கள் செய்கின்ற பணி மட்டுமே நேர்த்தியானது; மற்றவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என எண்ணும் சில நபர்கள், தங்கள் வீடுகளில் செய்யும் அதிகாரங்களையே வெளிஇடங்களிலும் செய்வார்கள்.

திருமண வைபவங்கள் மற்றும் பொது இடங்களில் இவர்கள் பிறரை ஏவிக் கொண்டேயிருப்பார்கள். “அந்த வாழையை அங்கே கட்டு”, “கொஞ்சம் உயர்த்தியபடியே கட்டு”, “ஏய் இங்கே வா”, “அங்கே உள்ள கதிரைகளை வரிசையாக வை”, “இங்கே ஒருவருக்குமே சாஸ்திர கடமைகள் தெரிவதில்லை”, “இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்” எனக் குறை சொல்லிக் கொள்வார்கள்.

தாங்களாகவே வலிய வந்து, மற்றவர்களுடன் நாகரிகமின்றி நடப்பதும் விழாக்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு தாமே நாயகர்கள் எனக் கருதிச் செயல்படுவதும் எவராலும் சகிக்க முடியாது.

எவரும் முகம் சுழிக்கும்படி நடந்துகொள்வது, இத்தகையவர்களின் குடும்பத்துக்கே பெரும் சங்கோஜத்தை ஏற்படுத்தி விடுகிறது.

பொது இடங்களில் கௌரவமாகப் பழகாமல் விட்டால், சமூகம் இவர்களிடமிருந்து விலகிவிடும். இணைந்து வாழ வேண்டும்; பிணங்கி வாழுதல் ஆகாது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் என்ற பல வேறுபாடுகளை மறந்து பெண்கள் அனைவராலும் கொண்டாடப்படுவது மகளிர்தினம்.

 
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்
 
பெண்களுக்கான சமத்துவம் மற்றும் உரிமைகளை வலியுறுத்தும் விதமாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் அறிவிக்கப்பட்ட மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று பல நாடுகள் பொதுவிடுமுறை நாளாக அறிவித்துள்ளன. பொது விடுமுறை நாள் என்பதைவிடவும் ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் என்பதே சிறப்பு.

இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் என்ற பல வேறுபாடுகளை மறந்து பெண்கள் அனைவராலும் கொண்டாடப்படுவது மகளிர்தினம். இந்த தினத்தின் மூலம் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் சாதனைகள் அவர்களது அனைத்து வித உரிமைகளையும் உள்ளடக்கியது என்பதை பெண்கள் உணரவேண்டும்.

சர்வதேச பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக மாற்றியதில் ஓரளவு பங்கு வகித்துள்ளது என்றே கூற வேண்டும். பெண்களின் சுதந்திரம், விடுதலை என்பதில் இன்னும் பல பெண்களுக்கே அது குறித்த விழிப்புணர்வு ஏற்படவில்லை.

அலுவலகம் சென்று வருவது மட்டுமல்ல சுதந்திரம், தமது சம உரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை என்பது தொடங்கி நடைமுறைப்படுத்தும் விதமாக ஆண்களுக்கு புரிய வைத்திட வேண்டும். அந்த நிலையில் தான் சமூக ரீதியிலான புரிந்துணர்வு ஏற்பட்டு பெண் விடுதலையின் தாத்பரியம் அனைவருக்கும் தெரிய வரும்.

165071FF-F267-40B7-A2EA-ADD7C5E0B358_L_s

கடந்த ஆண்டின் சர்வதேச மகளிர்தின கருப்பொருள்:

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு கொண்டாடப்படும். கடந்த ஆண்டு “பாலின சமச்சீர்மை’ என்பதை கருப்பொருளாக சர்வதேச மகளிர் தினத்தில் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. பெண் மற்றும் ஆண் என்ற அனைவரும் இந்த கருப்பொருளை பாலின சமச்சீர்மையை அடைய உதவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது இவ்வாண்டின் உறுதிமொழியாக உள்ளது.

பெண்கள் மற்றும் மகளிர் தங்கள் லட்சியத்தை அடைய தடையாக உள்ள, அதாவது பாலின சமத்துவம் ரீதியிலான தலைமை, மரியாதை மற்றும் மதிப்பு வேறுபாடு, வளர்ச்சி சார்ந்த பல விஷயங்கள் போன்றவை கலாச்சாரம் சார்ந்த அல்லது பணியிடம் சார்ந்த ஒரு பக்கமான நீதிகளை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். இந்த பாலின சமச்சீர்மையை அடைய ஒவ்வொரு பெண்ணும் தன்னை ஓர் தலைவராக கொண்டு உறுதியுடன் செயல்பட வேண்டும்.

சர்வதேச அளவில் இந்த பாலின சமச்சீர்மை என்ற கருப்பொருளை நடைமுறை படுத்தும் விதமான முயற்சிகளை ஆண் மற்றும் பெண் இருபாலரும் இணைந்து செயல்புரிதல் வேண்டும். நாம் கூட்டாக பெண்களுக்கு உதவியாக செய்யும் இப்பணியின் மூலம் உலகம் முழுமையும் பொருளாதார ரீதியிலும் எண்ணற்ற அளவில்லா சிறப்பு சக்தியுடனும் செயல்பட முடியும். இது மிக வேகமாய் நடைபெற வேண்டிய பணி. இந்த உறுதி முழக்கத்தை வெற்றியடைய செய்யும் நோக்கோடு இவ்வாண்டின் மகளிர் தினத்தில் சூளுரைப்போம்.

“அறிவு, மனம் மற்றும் ஆன்மீக ரீதியில் பெண் ஒரு ஆணுக்கு சமமாக இருக்கிறாள். அவர் அனைத்து செயல்பாட்டிலும் பங்கேற்க முடியும்” என காந்திஜி கூறுகிறார்.

அதுபோல் பெண்கள் பாலின ரீதியிலும் சமநிலை என்பதை உலகம் உணர்தல் வேண்டும் என்பதே. கடந்த ஆண்டின் மகளிர்தின கருப்பொருளாக திகழ்கிறது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஒரே அலுவலகத்தில் தொடர்ந்து வேலை பார்க்கவைக்கும் சிறந்த மோட்டிவேஷனல் ஃபேக்டர் எது தெரியுமா? #MisterK

 

மிஸ்டர் K

ஒருவர், ஒரு அலுவகத்திலேயே தொடர்ந்து இருக்கக் காரணமாகச் சொல்லப்படுகிற பல விஷயங்களில் மிக முக்கிய இடம் வகிப்பது, ‘அலுவலகச் சூழல்.’ அலுவலகச் சூழல் என்றால், பெரும்பாலான ‘மொதலாளி’கள் அவர்கள் செட் செய்திருக்கற 2 Ton  ஏ.ஸியையும், இம்போர்டட் காபி மேக்கரையும்,  அவர்கள் தேவைக்கு வாங்கி, உங்களுக்குக் கொடுத்திருக்கற பெரிய சைஸ் மானிட்டரையும்தான் நினைத்துக் கொள்கிறார்கள். அதுவெல்லாமும்தான் என்றாலும் அவற்றைவிட முக்கிய இடம் வகிப்பது... ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்! 

‘நமக்கு வாய்க்கிற, நம் அலைவரிசையை ஒத்த நண்பர்களாலேயே நம் அலுவலக வாழ்வு நீடிக்கிறது’ என்பதை ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர் சொல்லியிருக்கிறார் என்று புருடா விடாமலே ஒப்புக் கொள்வீர்கள். மேனேஜர் உர்ரென்று உறுமும்போதும், எடுத்துக் கொண்ட டாஸ்க் படுத்தி எடுக்கும்போதும், ஒருமணி நேரம் வேலை செய்த ஃபைல், Save ஆகாமலேயே காணாமல் போகும்போதும்,   “ஃப்ரீயா இருந்தா வாங்களேன் கடைக்கு... டீ காபி வடைலாம் சூடா இருக்கும்”  என்று அழைக்கும் சந்தானம்கள் சூழ் ஆஃபீஸில், எப்போதுமே நோ டென்ஷன்.  

அலுவலகம்

”நான் ரொம்ப ஷை டைப்.. ஆனா எனக்கும் ஃப்ரெண்ட்ஷிப் பிடிக்க ஆசைதான். அது எப்படி ஆஃபீஸுக்கு போய் உடனேயே பிடிக்க முடியும்” என்று தயங்குபவரா நீங்கள்? அப்படியெல்லாம் தயங்கினால் வேலைக்காகாது. நீங்களாக சகஜமாகச் சென்று, உரிமையாக உரையாட வேண்டும். உரிமையாக உரையாடுவது என்றால்,

“ஏண்டா சேகர்.. உனக்கு கல்யாணமாகலையா இன்னும்? பார்க்க ஏழு கழுதை வயசான மாதிரி இருக்க? என்னதான் பிரச்னை?” என்று ஆரம்பித்தால் சேகரின் செருப்பு சைஸ் என்ன என்பது அடுத்த நொடி கண்ணுக்கு நேராகத் தெரியும். 

அதே சேகரின் டெஸ்கில் ஒரு பென் ஸ்டேண்ட் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். போகிற போக்கில், அதை நின்று ஒரு பார்வையிட வேண்டும். அதைப் பார்ப்பதை, சேகரும் பார்க்க வேண்டும். கடந்து போய்விட வேண்டும். அடுத்தமுறை சேகர் இருக்கும்போதே, அதைக் கையிலெடுத்து - அது அரதப்பழசான டிசைனா இருந்தாலும் - “ச்சோ.. க்யூட்! நீங்களே பண்ணினதா?” என்று ஒரு கமெனட்டை மனசாட்சியே இல்லாமல் சொல்ல வேண்டும். சேகர் உங்கள் ஃப்ரெண்ட்ஷிப்புக்கு டிக் அடிப்பது உறுதி!  

இந்த ஆக்‌ஷனில் ஒரு விஷயத்தை உறுதியாக நினைவில் கொள்ளுங்கள். சேகரின் ஃப்ரெண்ட்ஷிப் கிடைக்க வேண்டும் என்று நேர்மையாக இதுபோலப் பழக முயலவேண்டும். மேலே காமெடியாக சொன்னேனே தவிர, சேகரிடம் பிடித்த ஏதாவதொன்றை கவனித்துப் பாராட்ட, குறிப்பிட தயங்கக்கூடாது. 

Morning motivation

புதிதாக ஒரு அலுவலகத்தில் சேர்பவர்கள், செய்கிற பெரிய தவறு; ‘நாம எப்படிப் போய்ப் பேசறது’ என்று நினைப்பது. 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த... சரி.. வேண்டாம். நிஜத்தைச் சொல்கிறேன். தன்னம்பிக்கை நூல்களின் தந்தை எனப்படும், புகழ்பெற்ற டேல் கார்னிகி என்ன சொல்கிறார் என்றால், “உங்கள் மீது பிறருக்கு ஆர்வம் வரவழைத்து, இரண்டு வருடங்களில் நீங்கள் பெறும் நட்பை விட அதிகமான நட்பை, இரண்டே மாதங்களில் பெற முடியும் - நீங்கள் பிறரிடம் ஆர்வம் கொண்டு பழகினால்!”  

“அந்த பேனா குடுங்களேன்.. எழுதிட்டு தர்றேன்”

“நம்ம கேண்டீன்ல காஃபிய விட டீ நல்லா இருக்குல்ல?”

“வாவ்.. ப்ளூ ஷால்! இந்த டோன் கிடைக்குதா நம்ம ஊர்ல?” 

”ச்சே.. பஸ்ல சில்ற இல்லைன்னு ஒரே டென்ஷனாய்டுச்சு”

“உங்க டெஸ்க்ல ஒட்டிருக்கற டயலாக் செம. எங்க வாங்கினீங்க?”

இப்படி புதிய அலுவகத்தில் இருப்பவர்களுக்கும், உங்களுக்கும் உள்ள பனித்திரையை உடைக்க நிறைய டயலாக்ஸ் உண்டு. எடுத்த எடுப்பிலேயே “வாட்ஸ் யுவர் வாட்ஸ் அப் நம்பர்”, “வாட்ஸ் யுவர் ஃபேஸ்புக் ஐடி” என்பதையெல்லாம் எவரும் விரும்புவதில்லை. அதுவும் தங்கள் சோஷியல் நெட்வொர்க் அடையாளங்களையெல்லாம்  இந்திய ராணுவ அதிகாரியின் ரகசிய ஃபைலை விட ரகசியமாய் வைத்திருக்கும் ஜீவராசிகளெல்லாம் உண்டு. தெரிந்து சில சமயம் “அடப்பக்கிப்பயலே.. அன்னைக்கு இன்பாக்ஸ்ல வந்து அப்படிப் பேசினது நீதானா?” என்று நினைத்துவிட்டால்? (அப்பறம் ப்ரதர்..  அந்த ஷால் டயலாக் பொண்ணுக பொண்ணுககிட்ட கேட்கறதுக்கு... நீங்க கேட்டுட்டு கமெண்ட்ல வந்து என்னைத் திட்டக்கூடாது.. ஆமா!)

morning motivation

அலுவலகத்தில் நட்பு அமைய, கையும், புன்னகையும் மிக முக்கியம். “புன்னகை எதிர்வருவோரைப் பார்த்துப் புன்னகைக்க.. அதென்ன கை?” என்றால்,

நீங்கள் செல்லும் வாசல் வழியாக யாராவது வருகிறார்களா, உங்களுக்காகத் திறந்த கதவை, ஒரு நிமிடம் பிடித்திருங்கள். பலரும் பின்னால் வருபவர்களின் முகத்திலேயே அறையும் விதத்தில் சாத்திவிட்டுச் செல்வார்கள். அதே ஆள் வெளியில் ஸ்டார் ரெஸ்டாரெண்டிலோ, மல்ட்டி ப்ளக்ஸ் தியேட்டரிலோ “யெஸ் ப்ளீஸ்...”  என்று கதவு பிடித்து நிற்பார் என்பது வேறு விஷயம். அதே போல, அவர்கள் குட்மார்னிங் என்றால், நீங்கள் கை உயர்த்தி குட் மார்னிங் சொல்லுங்கள். மேலதிகாரி என்றால் கொஞ்சம் பணிவாக! அதற்காக கையை இஷ்டத்துக்கு உயர்த்தி, “குட்மார்னிங்டா பஞ்சாபகேசா” என்று மைண்ட் வாய்ஸை பாடி லேங்க்வேஜிலேயே சொல்லித் தொலைத்து விடாதீர்கள்.   

அலுவலக நண்பர்களின் ஹாபி, பிடித்தவை இவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள். அதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால்.. அருமை. பேசலாம். இல்லையென்றால் பேசித் தெரிந்து கொள்ளுங்கள். தெரியாததைப் பேசி முழிக்காதீர்கள். 

அவர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘கடின விசிறி’யாக  இருக்கும் பட்சத்தில் நீங்கள் போய் “ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.. உம்பேர சொல்லும் ரோசாப்பூ... ப்பா! என்ன ட்யூன்.... இசைப்புயல் இசைப்புயல்தான்” என்றால் அவர் டிஃபன் பாக்ஸை ரெண்டு டேபிள் தள்ளிக் கொண்டு போய் வைத்துக் கொள்வார். அதற்குப் பிறகு ‘ரஹ்மான் ‘ரோசாப்பூ’ல ஃபேமஸாகல... ‘ரோஜா’ல ஃபேமஸானவர்’  என்று உங்களுக்குத் தெரியவந்தும் பிரயோஜனமில்லாமல் போய்விடும்.

morning motivation

மிஸ்டர் K-க்கு  நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி. அவனுக்கு அலுவலகத்தில் நண்பர்கள் அமைந்தது.. அதனால்தான். ஒரு மின்னஞ்சலை, சக டீம் மெம்பருக்கு அனுப்பியிருக்கிறான். அவர் “மிஸ்டர் K, உங்ககிட்ட இருந்து மெய்ல் இன்னும் வர்லியே?” என்று எழுந்து கேட்க, இவன் அவர் டெஸ்குக்குப் போய் சிஸ்டத்தை சுற்றி இருந்த புக்ஸ், நோட்டையெல்லாம் ஒழுங்கு படுத்தி வைத்துவிட்டு, “வழில இத்தனை கெடந்தா.. டிராஃபிக்ல மாட்டிக்கும்ல.. இனி வந்துடும்” என்றிருக்கிறான். இந்தக் கொடுமையான மொக்கை பிடித்துப்போய் 3 புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள் அவனுக்கு. இதைக் கேட்டு, ஏற்கனவே கொஞ்சம் க்ளோஸாக இருந்த 4 பேர் ஒதுங்கிக் கொண்டது வேறு கதை.

அதைவிடவும், அதிகமாக ஒரு ஆஃபீஸ் அவுட்டிங்-கில் சம்பாதித்து விட்டான். எல்லாரும் செம ஜாலியாக பேசிக் கொண்டிருக்க, முதலாளி கெத்தாக நின்று கொண்டு, “ஓகே கய்ஸ்.. உங்களை என் ஆஃபீஸ்ல இருக்க வைக்கற மோட்டிவேஷனல் ஃபேக்டர் எது? வேலை நேரம், வொர்க் லைஃப் பேலன்ஸ், சிறந்த கருவிகள்.... ” என்று பட்டியலிட ஆரம்பிக்க.. 

இவன் உடனே  கையைத் தூக்கி, “100% இன்க்ரிமெண்ட்” என்றிருக்கிறான்!  மொத்த ஆஃபீஸும் இவனுக்கு ஃப்ரெண்டாகி விட்டது!  

இதுல எதாவது ஒரு வழிய ஃபாலோ பண்ணி, அலுவலக சூழலை இனிதாக்கிக் கொள்ளுங்கள் நண்பர்களே! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நாள் முழுவதும் வீடியோ லைவ்... பெண்களை கொண்டாடும் ஃபேஸ்புக்..! #SheMeansBusiness #womensday

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் எல்லா நிகழ்வுகளையும் தனது பயன்பாட்டாளர்களுடன் இணைந்து வித்தியாசமான முறையில் கொண்டாடுவது வழக்கம், அதேபோல் இந்த முறை மகளிர் தினத்துக்கு பெரிய திட்டத்துடன் களமிறங்கியுள்ளது. இன்றைய சூழலில் பெண்கள் முன்னேற்றம் என்பது உலகின் அனைத்துப் பகுதிகளிலும் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாகிவிட்டது. அதிலும் டெக் துறையில் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கா ஃபேஸ்புக் மகளிர் தினத்தன்று புதுமையான ஐடியாவை கையில் எடுத்துள்ளது. உலகம் முழுவதும் பெண்களின் சாதனை பயணங்களை நாள் முழுக்க ஃபேஸ்புக் மூலம் லைவ் செய்யுமாறு கூறியுள்ளது. அதற்காக #SheMeansBusiness என்ற ஒரு ஹேஷ் டேக்கையும் அறிவித்துள்ளது. 

Sheryl Sandberg
am Montag

As International Women’s Day approaches, we celebrate women’s progress and achievements. We also remind ourselves that there’s a lot more to do to reach true equality.

This year, Facebook is helping shine a light on the women who lead in our communities, our families, and our friendships. From the moment the sun rises on March 8th, Facebook will host a 24-hour, #SheMeansBusiness Facebook Live event featuring conversations with some of the incredible women who start and run businesses. Anyone on Facebook can participate by going Live, checking out a local women-led Group or Event, writing a supportive post, or by sharing a related video or photo

We want to hear about the women who inspire you – chances are, they’ll inspire us too. #IWD #SheMeansBusiness.

 

 

 

 

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக்கின் சி.ஒ.ஓ ஸ்ரெயல் சாண்ட்பெர்க் '' நாங்கள் பெண்களின் சாதனைகளையும், செயல்பாடுகளையும் கொண்டாடுவதில் பெருமை கொள்கிறோம். நாங்கள் அதிகமான ஆண்-பெண் சமநிலைக்கு இடமளித்துள்ளோம் என்பதில் பெருமைப்படுகிறோம். இந்த வருடம் பெண் ஆளுமைகளை சமூகத்துக்கு அடையாளப்படுத்த உதவிகரமான வேலைகளை துவங்கலாம் என ஃபேஸ்புக் முடிவெடுத்துள்ளது. இதற்காக மார்ச் 8ம் தேதி 24 மணி நேர முழுமையான ஃபேஸ்புக் லைவ் செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளது. உங்கள் குடும்பம், நட்புவட்டாரம் அல்லது தெரிந்த யாராக இருந்தாலும் சரி, வியாபாரத்தில் சாதித்த பெண்களை ஃபேஸ்புக் லைவ் மூலம் உலகுக்கு அடையாளப்படுத்துங்கள். இந்த பதிவுகளை #SheMeansBusiness என்ற ஹேஷ்டேக்கோடு பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

இதற்காக shemeansbusiness.fb.com என்ற இணையதளம் ஒன்றை ஆரம்பித்து மகளிர் தினத்தை கொண்டாடி வருகிறது.  பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இதனை செய்து வருகிறது ஃபேஸ்புக் . பெண்களின் சிறப்பான செயல்பாடுகள் குறித்த தகவல்களையும் அதில் கூறியுள்ளது ஃபேஸ்புக். 

SheMeansBusiness

பெண்களால் நடத்தப்படும் தொழில்களில் 60 சதவிகிதம் சிறப்பான மற்றும் லாபகரமான செயல்பாட்டில் உள்ளது.

பெண்கள் நடத்தும் தொழில்களில் 59 சதவிகிதம் 3 வருடத்துக்கும் அதிகமாக நடத்தப்படுபவையாக உள்ளன.

68 சதவிகித பெண்களால் நடத்தப்படும் தொழில்கள் தனி உரிமம் சொண்ட பெண் தொழில் முனைவோர்களாக உள்ளனர். 

பெண்களால் நடத்தப்படும் 21 சதவிகித தொழில்கள் ரீட்டெயில்/மொத்த வியாபார தொழில்களாக உள்ளன. மேலும் 17 சதவிகித சிறு தொழில்கள் டிஜிட்டலாக இணைந்துள்ளதுடன் ஏதோ ஒருவகையில் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஆன்லைன் டூல்களை பெண் தொழில்முனைவோர்கள் சிறப்பாக கையாளுவதாகவும் கூறியுள்ளது.

மேலும் அந்த தளத்தில் சாதித்த பெண் தொழில்முனைவோர் பலரது சாதனை கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளது ஃபேஸ்புக். ஃபேஸ்புக் ஏற்கெனவே உலகம் முழுவதும் உள்ள பெண் தொழில் முனைவோர்களை அடையாளப்படுத்தி அவர்களை கெளரவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதையும் இணையத்தால் இணைக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ள ஃபேஸ்புக். இந்த முயற்சிகள் மூலம் பெண்கள் மற்றும் அவர்களின் தொழில் திறனை அதிகரிக்கும் நோக்கில் இதுபோன்ற புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

உங்களை ஃபேஸ்புக் கணக்கில் #SheMeansBusiness என்ற ஹேஷ்டேக்கை தேடி அதில் இன்று முழுவதும் வெளியாகும் சாதனை பெண்களின் பயணத்தையும், அனுபவத்தையும் காணலாம். இன்று இந்த 24 மணி நேர ஃபேஸ்புக் லைவ் முயற்சியில் அவள் விகடனும் இணைந்து மதியம் 3 மணிக்கு ஃபேஸ்புக் லைவ் மூலம் திருச்சியை சேர்ந்த பெண் தொழில்முனைவோரை அடையாளப்படுத்துகிறது. 

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்தப் பூமியைப் பத்திரமாக அடுத்த சந்ததியினரிடம் நாம் கொடுப்போமா?

பூமி

”ஏ.சி என்பது, ஒரு சின்ன அறையைக் குளிராகவும் அகண்ட பூமியைச் சூடாகவும் மாற்றுகிறது.” பல ஆயிரம் பேரால் பகிரப்பட்ட இந்த ட்வீட் நிதர்சனமான உண்மை. நாம் நம்மைக் குளிர்வூட்டச் செய்யப்படும் எல்லாக் காரியத்திலும், இந்த பூமி ஏதோவொரு வகையில் தன்னைச் சூடாக்கிக்கொண்டே இருக்கிறது. பூமி என்பது மனிதனை விட பல மடங்கு பிரம்மாண்டமானது. அதை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என இனியும் அலட்சியமாக இருக்க முடியாது. 

1880-களில் இருந்து பூமியின் வெப்பநிலையைக் கணக்கிட்டுவருகிறார்கள்.  இந்த 137 ஆண்டுகளில், 2016 -ம் ஆண்டில்தான் அதிக வெப்பநிலை பதிவாகி இருக்கிறது இதை முறியடிக்க, நிச்சயமாய் இன்னும் 137 ஆண்டுகளை நாம் எடுக்கப்போவதில்லை. 2017 அந்த சாதனையை முறியடித்துவிடும். இதே நிலை இன்னும் 80 ஆண்டுகள் தொடர்ந்தால் லண்டன், நியூ யார்க், ஷாங்காய் போன்ற பெரு நகரங்கள் நீரில் மூழ்கிவிடும் என்கிறது, புதிய ஆய்வு.  கடல் மட்டம் 10 அடி வரை உயரக்கூடும்.

“விஷயம் கை மீறிப் போய்விட்டது. இந்த பாழான பூமியைத்தான் நாம் நமது அடுத்த தலைமுறையினர் கைகளில் திணிக்கப்போகிறோம் “ என்று சில ஆண்டுகளாகவே கவலை தெரிவித்துவருகிறார் நாசா விஞ்ஞானி ஜேம்ஸ்.ஈ.ஹேன்சென். இது ஹேன்செனின் அதீத கற்பனை என்று பிற விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து இருந்தாலும், இதில் உண்மை இருப்பதை மாறிவரும் பருவநிலைகள் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. 

global warming

2012-ம் ஆண்டு, 'சேசிங் ஐஸ்' என்ற டாக்குமென்ட்ரி படத்தை புகைப்படக்காரர் ஜேம்ஸ் பேலாக் உதவியோடு இயக்கினார், ஜெஃப் ஒர்லோவ்ஸ்கி. புவி வெப்பமயமாதலுக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகளை பதிவுசெய்ய, ஜேம்ஸ் பலோக் க்ரீன்லாந்து, ஐஸ்லாந்து, அலாஸ்கா போன்ற இடங்களுக்கு சென்றார். 1979-களில் இருந்த ஆர்டிக் பனிப்பாறைகள், 2012-ம் ஆண்டுக்குள் பாதிக்கும் மேலாக குறைந்துவிட்டது என்கிறார்கள். 2012-ம் ஆண்டு மட்டும், 4.5 மில்லியன் சதுர மைல் (அமெரிக்கா, மெக்ஸிகோ இணைந்த அளவு) அளவுக்கான பனிப்பாறைகள் மறைந்துபோய்விட்டன என்கிறது அந்தப் படம். 

மனிதர்களாகிய நாம், இதுவரையில் 580 பில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடை காற்று வெளிமண்டலத்தில் கலக்கச்செய்து, வெட்கித் தலை குனியும் சாதனையைப் படைத்து இருக்கிறோம். உலகம் அழிந்துவிடும் என்று எப்போதும் பீதியூட்டும் வாட்ஸ்அப் பதிவுகள்தான் இதுவும், என  இதை நிச்சயமாய் கடந்துபோகலாம். உலகம் அழிவதுபோல எடுக்கப்படும் ஹாலிவுட் படங்கள், இன்னும் 50 இதே ரீதியில் வரும் என நம்பலாம். ஆனால், நாளுக்கு நாள் புவி வெப்பமாகிக்கொன்டு வருவதை, இயற்கை உணர்த்தாமல் இல்லை. 

“இவ்வளவும் நடந்தபோது நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? “ என்று என் மகள் கேட்டால் என்ன செய்வது? என்கிறார் ஜேம்ஸ். இப்போது, வெறும் விஞ்ஞானியாக இருந்து ஒரு பயனும் இல்லை என கல்லூரி மாணவர்களோடு புவி வெப்பமையாவதைத்  தடுக்க நடவடிக்கைகள் எடுக்காத அரசைக் கண்டித்துப் போராட்டங்களில் ஈடுபடுகிறார். அவ்வப்போது கைதாகிறார். 

ஹேன்சென் சொல்வது இருக்கட்டும், நாம் என்ன செய்யப்போகிறோம்? 450 கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தப் பூமியில், தோராயமாக 2 லட்சம் ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்கள் வாழ்ந்துவருகிறோம். நமக்குப் பின்வரும் சந்ததியினருக்கு, எதையும் நாம் சேமிக்கத் தேவையில்லை. குறைந்தது வாழத் தகுதியானதொரு நிலப்பரப்பையாவது  விட்டுவைக்கலாம்.  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஐ.நா வில் ஐஸ்வர்யா தனுஷ் ஆடப் போகும் வைரமுத்துவின் பாடல் இதுதான்!

ஐஸ்வர்யா தனுஷ்

இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வரும் நேரத்தில், இந்தியராக நாம் எக்ஸ்ட்ராவாக மகிழ்ச்சி அடைய ஒரு விஷயம் இருக்கிறது. ஐ.நா சபையின் இன்றைய மகளிர் தினம் நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆடவிருக்கிறார். ஐஸ்வர்யா தனுஷ், பல திறமைகள் கொண்டவர். திரைப்பட இயக்குநர், சிறப்பாக நடனம் ஆடக் கூடியவர். ஐ.நா சபையின் நல்லெண்ணத் தூதராக இருக்கும் ஐஸ்வர்யா தனுஷ், ஐ.நா வில் நடனமாகப் போகும் முதல் தமிழ்ப் பெண் எனும் பெருமையைப் பெறுகிறார்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும் சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில் தனது பரதநாட்டிய குழுவுடன் புஷ்பாஞ்சலி, நடராஜர் ஆராதனை ஆகியவற்றோடு கவிஞர் வைரமுத்து எழுதிய 'அவசர தாலாட்டு' பாடலுக்கும் நடனமாடுகிறார் ஐஸ்வர்யா தனுஷ். இந்த 'அவரச தாலாட்டு' பாடல், 'ரத்த தானம்' என்ற கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. வேலைக்குப் புறப்படும் ஒரு தாய், தன் பிள்ளைக்குப் பாடும் தாலாட்டு. பிள்ளையின் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் அந்தத் தாய்க்கு வேலையின் பொருட்டு, காலை முதல் மாலை வரை பிள்ளையைப் பிரிந்திருக்க வேண்டியிருக்கிறது. அந்த வேளையில், உனக்கு என்னவெல்லாம் துணையாக இருக்கும் என குழந்தைக்குச் சொல்வதாக உருக்கத்துடன் இதன் வரிகள் எழுதப்பட்டிருக்கும். அவை...

வைரமுத்து

    சோலைக்கு பிறந்தவளே!
    சுத்தமுள்ள தாமரையே!
    வேலைக்கு போகின்றேன் - வெண்ணிலவே கண்ணுறங்கு!

    அலுவலகம் விட்டு -
    அம்மா வரும் வரைக்கும் -
    கேசட்டில் தாலாட்டு - கேட்டபடி கண்ணுறங்கு!

    ஒரு மணிக்கு ஒரு பாடல்
    ஒளிபரப்பும் வானொலியில்
    விளம்பரங்கள் மத்தியில் - விழி சாத்தி நீயுறங்கு!

    9 மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை -
    9:30 மணி ஆனால் உன் அம்மா சொந்தமில்லை -
    ஆயவும் தொலைக்காட்சியும் அசதியில் தூங்கிவிட்டால் -
    தூக்கத்தை தவிர துணைக்கு வர யாருமில்லை!

    20-ம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே!
    இது தான் கதியென்று - இன்னமுதே கண்ணுறங்கு!

    தூரத்தில் இருந்தாலும் தூயவளே -
    உன் தொட்டில் ஓரத்தில் -
    என் நினைவு - ஓடிவரும் கண்ணுறங்கு!

    பேருந்தில் நசுங்கி, பிதுங்கி போகிற வேளையிலும்
    எடை கொஞ்சம் இழந்து இறங்குகின்ற வேளையிலும்
    பூப்பூவாய் உனது புகம் புறப்பட்டு வரும் கண்ணே!

    தந்தை வந்து கொஞ்சுவதாய் -
    தங்க மடியில் தூங்குவதாய் -
    கண்ணனே கண்மணியே - கனவு கண்டு - நீயுறங்கு!

    புட்டிபால் குறையவில்லை -
    பொம்மைக்கும் பஞ்சமில்லை -
    தாய்ப்பாலும் தாயும் இன்றி -
    தங்க மகனுக்கு என்ன குறை?

    மாலையிலே ஓடி வந்து
    மல்லிகையே உன்னை அணைத்தால்
    சுரக்காத மார்பும் சுரக்குமடி- கண்ணுறங்கு!

    தாலாட்டு பாட்டில் தளிரே - நீ
    தூங்கிவிட்டால கோலாட்டம் ஆட
    கொண்டவனுக்கும் ஆசை வரும்!

    உறவுக்கு தடையாக
    'ஒ' என்று அலறாமல் -
    இரவ்க்கும் மிச்சம் வைத்து
    இப்போது - நீ உறங்கு!

    தாயென்று காட்டுவதற்கும்
    தாவி எடுப்பதற்கும்
    ஞாயிற்றுகிழமை வரும் - நல்லவளே கண்ணுறங்கு!

படிக்கும்போதே நெகிழ்வைத் தரும் இந்தத் தாலாட்டுக்கு, ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடுகிறார். நிகழ்ச்சியின் இறுதியாக, உலக அமைதிக்காக ஐ.நா. சபையில் எம்.எஸ்.சுப்புலெட்சுமி பாடிய பாடலுக்கும் நடனமாடுகிறார்.

ஹாட்ஸ் ஆப் ஐஸ்வர்யா தனுஷ்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கப் ஐஸ், காவியம், ஹேண்ட் கிரிக்கெட் - பால்ய கால பராக்கிரமங்கள்!

கிரிக்கெட், கபடி, கூடைப்பந்து எனப் பல விளையாட்டுகள் வந்திருந்தாலும் நம்ம பசங்க கண்டுபிடித்த விளையாட்டையெல்லாம் ஒலிம்பிக்ஸ்லகூட சேர்க்கலாம் அந்த அளவிற்குப் பின்னி பெடல் பண்ணுவாங்க நம்ம பசங்க. அதுவும் ஒவ்வொரு
விளையாட்டிலும் ரூல்ஸ் எல்லாமே வேற லெவல்ல இருக்கும். அப்படியே உங்களையெல்லாம் ஒரு டைம் மெஷினில் கொண்டுபோய் நிறுத்துறேன். ஞாபகப்படுத்துறேன். கவலைப்படாதீங்க பாஸ். ஃப்ரீதான்!

டிக் டிக் யாரது? என்ன வேண்டும்? நகை வேண்டும் :

விளையாட்டு

டைட்டிலில் இதைப் பார்த்தவுடன் சிரித்தால் நீங்க கண்டிப்பாக இந்த கேமை விளையாடி இருப்பீர்கள். கண்ணுக்கு முன்னே பல கலர்கள் தோன்றும். ஆனால் அதை எப்படி ஒரு விளையாட்டுடன் கோர்ப்பது? மல்லாந்து படுத்து விட்டத்தைப்
பார்க்கும்போது வந்திருக்கும் இந்த யோசனையானது. யார் அவுட் என்று  'சா பூ த்ரீ' போட்டு பார்ப்போம். அதுதான் அப்போ உள்ள மாடர்ன் டாஸ் முறை. கேம் என்னவென்றால் பட்டையான ஆள் இந்த ஸ்லோகனைச் சொல்ல வேண்டும் 'டிக் டிக்
யாரது? பேயது, என்ன வேண்டும்? நகை வேண்டும், என்ன நகை? கலர் நகை? என்ன கலர்? என்று கேட்டவுடன் அந்தப் அவுட்டான ஆள் ஏதாவது ஒரு கலரைச் சொல்லுவான். அவன் சொன்னவுடன் ஊருக்குப் போகும் கடைசி பஸ்சைப்
பிடிப்பதுபோல் ஓடிப்போய் அந்த கலரைத் தொடவேண்டும். கடைசியில் சொன்ன கலரை யார் தொடவில்லையோ அவன்தான் அவுட்.

கப் ஐஸ் :

விளையாட்டு

கப் ஐஸ் என்று சொன்னவுடன் கப்புன்னு பிடித்திருப்பீர்கள். இந்த விளையாட்டானது இரவு நேரங்களில் விளையாடினால்தான் மிகவும் த்ரில்லிங்காக இருக்கும். ஏரியாவில் இருக்கும் பசங்களை ஒன்றாகச் சேர்த்து பெரிய 'சா பூ த்ரீ' போட்டு யார்
அவுட் என்று தீர்மானிப்போம். அவுட் ஆகும் ஆள் அவ்வளவுதான் முடிந்தான். இவன் ஒன்றிலிருந்து நூறு எண்ணுவதற்குள் பசங்க எல்லாரும் ஒளிந்துகொள்வார்கள். இவன் எண்ணும்போது திரும்பிப் பார்க்காமல் இருக்க அம்மா சத்தியம்
வாங்குவது வழக்கம். இவன் வரிசையாக ஆளைக் கண்டுபிடிக்க வேண்டும். யாரு முதல் நம்பரோ அவன்தான் அவுட். யாராவது அவுட்டான ஆளை 'கப் ஐஸ்' அடித்துவிட்டால் மீண்டும் அவனேதான் அவுட். பல பாலிடிக்ஸ் நடக்கும் கேம் இது.
சம்பந்தபட்டவாளுக்குப் புரியும்னு நினைக்கிறேன்.

அண்டர் ஓவர் நவம்பர் டிசம்பர் :

விளையாட்டு

ஒலிம்பிக்கில் சேர்க்கும் அளவிற்கு இந்த விளையாட்டிற்கு மவுஸ் இருக்கும். அவுட்டான ஆள் ஒரு வட்டமிட்டு அதற்குள் நின்று திரும்பிப் பார்க்காமல் ஒரு குச்சியைக் கையில் பிடித்துக்கொண்டு இதைச் சொல்ல வேண்டும். அதற்குப் பின்னே
நிற்கும் ஆட்கள் அடுத்த வரியைச் சொல்ல வேண்டும். 'அண்டர், ஓவர், நவம்பர், டிசம்பர்' என்று சொல்லி முடித்தபின்னர் கையில் இருக்கும் குச்சியைத் தூக்கி எறிய வேண்டும். தூக்கி எறிந்த குச்சி ஏதாவது ஓர் ஆள் மேலே பட்டால் அவன்
அவுட். எங்கேயும் படவில்லையென்றால் நடந்து அந்தக் குச்சி இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். எவ்வளவு அடி எடுத்து வைத்து நடக்கிறோமோ அதே எண்ணிக்கையில் நொண்டியடித்து அந்த வட்டத்திற்குள் வந்து மறுபடியும் அந்தக்
குச்சியை எறிய வேண்டும். 

டைப்ஸ் ஆஃப் கிரிக்கெட் :

விளையாட்டு

சின்ன வயதில் எல்லோரும் கிரிக்கெட் வெறியர்களாகத்தான் இருந்திருப்போம். ஆனால் எல்லா நேரங்களிலும் கிரிக்கெட் விளையாடுவது மிகவும் கஷ்டமான காரியம். அதற்குத் தான் இந்த வழி. கிடைக்கும் இடமெல்லாம் இந்த கிரிக்கெட்டை
விளையாடலாம். இதில் இரண்டு வகையுண்டு. ஒன்று 'ஹேண்ட் கிரிக்கெட்' மற்றொன்று 'புக் கிரிக்கெட்' இது இரண்டையுமே சலிக்கும்வரை விளையாடலாம். புத்தகத்தைப் படிப்பதற்கு பயன்படுத்துகிறோமோ இல்லையோ புக் கிரிக்கெட்
விளையாடுவதற்காகப் பல முறை பயன்படுத்தியிருப்போம். டீச்சர் பாடம் எடுக்கும்போதுகூட விளையாடலாம் பாஸ். சந்தேகமே வராது. வெறித்தனமாக விளையாடிய விளையாட்டுகளுள் இதுதான் டாப்பில் இருக்கும். இதை எந்தவிளையாட்டினாலும் அடித்துக்கொள்ள முடியாது. 'ஆடா, ஈவனா?'

காவியம் :

விளையாட்டு

பெயரைக் கேட்டவுடனே கணித்திருப்பீர்கள். இது ஓர் அழகான விளையாட்டென்று. அதுதான் இல்லை! இந்த விளையாட்டில் அடியெல்லாம்கூட விழும். அவுட்டான ஆள் குனிந்து தரையைத் தொடவேண்டும். மீதி இருக்கும் ஆள் அவனைத்
தாண்டி இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் போக வேண்டும். அப்படித் தாண்டும்போது கால் முதுகில் பட்டுவிடாமலும், இதைச் சொல்லித்தான் தாண்ட வேண்டும் 'காவியம்' 'மணிக்காவியம்' 'லாகு' 'லாகத்தின் கொக்கு' (இதைச் சொல்லும்போது
தலையில் கைகளால் கொம்பு போல் வைத்துக் கொள்ளவேண்டும்) 'லட்சத்தின் மண்வாரி' (தாண்டிவிட்டு கால்களால் மண் வாரி இறைக்கணும்! இல்லைன்னா அவுட்) 'சூடா, ஸ்ட்ராங்கா?' (இதைச் சொல்வதற்கு முன் குனிந்து நிற்பவனிடம் இதைக்
கேட்க வேண்டும், அவன் சூடு என்றால் தாவிக்கொண்டே அவன் பின்னால் எத்த வேண்டும், ஸ்ட்ராங்கென்றால் அவன் மீது உட்கார்ந்து தாவ வேண்டும்) விஜய் பைரவாவில் சொல்வது போல் 'விளையாடலாமா?'

மேலும் சில விளையாட்டுக்களுடன் அடுத்த பதிவில் உங்களைச் சந்திக்கிறேன்... உங்களிடமிருந்து விடைபெறுவது 'நையாண்டீஸ் கிட்'

  • தொடங்கியவர்

யாதுமாகி நின்றாள் பெண்! - வீடியோ! #CelebrateWomen #WomensDay

 

பெண்


பெண் ..
இவ்வுலகின் ஆதியும்  அந்தமும் ஆனவள்!
ஒளியும் ஒலியும் ஆனவள் !
அவளின்றி உலகில்லை...பெண்மைக்கு ஓய்வில்லை!
அதிகாலையில் எழுந்தது முதல் இரவு உறங்கிய பிறகும் ஓயாமல் தொடர்கின்றன..பெண்ணுக்கான பணிகள். காலையில் எழுந்து தன்னைத் தயார் செய்துகொண்டு பிள்ளையை , கணவரை, வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களை கவனிப்பதோடு அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்துவிட்டு தானும் வேலைக்குச் செல்வதோடு மீண்டும் வீட்டுக்கு வந்தும்கூட  தனக்கான ஓய்வை எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து குடும்பத்துக்காகவே தன்னை மெழுகாக்கிக்கொள்கிறாள்.  ஒரு நாளின் 24 மணிநேரமும் தன் செயல்களாலும் சிந்தனையாலும் ஓய்வின்றி உழைப்பவள். பெண்ணுக்கு முழுமையான உறக்கம் என்பதுகூட கிடையாது. தூங்கிய பிறகும்கூட தன் குழந்தை நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறதா என்பதை ஓயாமல் கவனித்துக் கொண்டிருப்பாள்.
இருளிலும் ஒளிரும் வண்ணக்காவியம் பெண்!
பெண்மையைப் போற்றுவோம். அவளைக் கொண்டாடுவோம்.!
மகளிர் தின வாழ்த்துகள்!

 

 

  • தொடங்கியவர்

ஸ்கோடாவை கயிறு கட்டி இழுத்த கழுதைகள்

Octavia_14375.jpg

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஸ்கோடா ஆக்டேவியா காரை அதன் உரிமையாளர் கழுதைகளைக் கட்டி இழுத்துச் சென்றார். அவருடைய ஸ்கோடா கார் தொடர்ச்சியாக ப்ரேக் டவுன் ஆகியுள்ளது. இதுதொடர்பாக கார் வாங்கிய டீலரை தொடர்பு கொண்ட அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த அவர், கார் நிறுவனத்தை அவமானப்படுத்துவத்காக இதனை செய்தார். ஸ்கோடா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியா அவப்பெயர்களை சந்தித்து வருகிறது. கார் நிறுவனத்தை அவமானப்படுத்த கழுதைகளை கட்டி காரை இழுக்கும் சம்பவம் இந்தியாவில் இதற்கு முன்னரே நடந்துள்ளது.

அஹமதாபாத்தில் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய ஜாகுவார் கார் அடிக்கடி ப்ரேக் டவுன் ஆகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தன்னுடைய ஜாக்குவார் காரை கழுதைகளை கட்டி இழுத்துச் சென்றுள்ளார்

 

'நான் பார்த்ததில் மிக தைரியமான பெண் நயன்தாரா' - விக்னேஷ் சிவன்

nayan-vignesh-1_17558.jpg

பெண்கள் தினத்துக்கு வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன், 'நான் பார்த்ததில் மிக தைரியமான அழகான பெண் நயன்தாரா என்று பதிவிட்டுள்ளார். மேலும் நிறைய வலிகள் மற்றும் தோல்வியைக் கடந்து நயன்தாரா உயரத்தில் உள்ளார் என்று குறிப்பிட்ட அவர், அதற்கு வாழ்த்துகளையும் பதிவிட்டுள்ளார். மேலும் நயன்தாராவாக இருப்பது எளிதல்ல என்றும்  பதிவிட்டுள்ளார்.

#HappyWomensDay #Nayanthara

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

தமிழ் சினிமாவில் பெண்மையைப் போற்றும் சிறந்த பாடல்கள்

 
Desktop_3141326f.jpg
 
 
 

உலக மகளிர் தினமான இன்று, சமூக வலைதளங்களில், பெண்களைப் போற்றி தமிழ் சினிமாவில் வந்துள்ள பாடல்களைப் பலர் பகிர்ந்து வருகின்றனர். பெண்களுக்கான சிறந்த பாடல்களை வாசகர்கள் பல இடங்கள் சென்று தேட வேண்டாம் என்பதால், எங்கள் பார்வையில் சிறந்தவற்றைத் தொகுத்து இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். கேட்டு மகிழ்ந்து, உங்கள் பார்வையில் பெண்மையைப் போற்றும் சிறந்த பாடல் எது என்பதை கீழே பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

மனதில் உறுதி வேண்டும்

பாடல்: மனதில் உறுதி வேண்டும்,

இசை: இளையராஜா

இயக்கம்: கே.பாலச்சந்தர்

பவித்ரா

பாடல்: உயிரும் நீயே

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

இயக்கம்: கே.சுபாஷ்

36 வயதினிலே

பாடல்: வாடி ராசாத்தி

இசை: சந்தோஷ் நாராயணன்

இயக்கம்: ரோஷன் ஆண்ட்ரூஸ்

மகளிர் மட்டும்

பாடல்: மகளிர் மட்டும்

இசை: இளையராஜா

இயக்கம்: சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்

கல்கி

பாடல்: பூவே நீ ஆட வா

இசை: தேவா

இயக்கம்: கே.பாலச்சந்தர்

12பி

பாடல்: சரியா தவறா

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

இயக்கம்: ஜீவா

ரிதம்

பாடல்: நதியே நதியே

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

இயக்கம்: வசந்த்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd

நியூ சீலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான ரொஸ் டெய்லரின் பிறந்தநாள்
Happy Birthday Ross Taylor

Bild könnte enthalten: 1 Person, lächelnd

சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட வீரர் சார்ள்ஸ் கோவென்றியின் பிறந்தநாள்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய தனி நபர் ஓட்ட சாதனையை (194) முன்பு தன்வசம் வைத்திருந்த பெருமைக்குரியவர்.
Happy Birthday Charles Coventry

  • தொடங்கியவர்

Kein automatischer Alternativtext verfügbar.

உலக மகளிர் தினம்: போராடிப் பெற்ற பரிசு

 

 

மார்ச் மாதத்தையும் மகளிர் தினத்தையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வோர் ஆண்டும் மகளிர் தினக் கொண்டாட்டத்தின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது தந்தையர் தினம், அன்னையர் தினம் போன்ற ஒரு தினம் அல்ல. இந்த மார்ச் 8-க்குப் பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது. இந்தத் தினத்தின் அசல் பெயர் ‘சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்.’

பின்னணி என்ன?

ஐரோப்பா கண்டத்தில் தொழிற்புரட்சி ஏற்பட்ட பிறகு, உற்பத்தியைப் பெருக்குவதற்கான முயற்சிகள் முழு வீச்சில் நடந்தன. ஆண்களுடன் பெண்களுக்கும் அதிக அளவில் வேலைகள் வழங்கப்பட்டன.

வேலை என்பது மிகவும் கடினமாக இருந்தது. இன்றைக்கு இருந்தது போல அன்றைக்குத் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. அதிக நேரம் வேலை செய்ய வேண்டும். குறைவான ஊதியம் மட்டுமே கிடைக்கும். இப்படிப்பட்ட நிலையில் பெண்கள் பணிபுரிய வேண்டியிருந்தது. ஆனால், வாக்குரிமை, சொத்துரிமை போன்ற பல உரிமைகள் இல்லாமல், வீட்டில் அடைந்து கிடந்த பெண்களுக்கு வேலை என்பது ஒரு சிறிய ஆறுதலாக இருந்தது. 17-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி சிந்தனைகள் தோன்றின. பெரிய அளவில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. இதன் விளைவாகப் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பினார்கள். பெண்களும் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

முதல் போராட்டம்…

1789-ம் ஆண்டில், ‘சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம்’ என்று முழக்கத்துடன் எழுப்பி, பிரான்ஸ் நாட்டின் பாரீஸ், வெர்செயில்ஸ் நகரங்களில் பெண்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் கோரிக்கைகள் என்ன? 8 மணி நேர வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம், வாக்குரிமை, அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை போன்ற கோரிக்கைகளுடன் பெண்கள் புயலாகப் புறப்பட்டனர். இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு லூயி மன்னர் பல்வேறு முயற்சிகள் செய்தார். ஆனால் பெண்களின் எழுச்சிக்கு முன்னால் அதிகாரத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லூயி மன்னரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தச் செய்தி பல்வேறு நாடுகளுக்குப் பரவியது. பல நாட்டுப் பெண்களுக்கும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் விதைத்தது.

போராட்டம் பரவியது

அமெரிக்கா, இத்தாலி, பிரஷ்யா, கிரீஸ், டென்மார்க், ஆஸ்திரியா போன்ற நாடுகளில் பெண்கள் போராட்டங்கள் வெடித்தன. 1840-ம் ஆண்டு சர்வதேச அடிமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பெண்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. வெகுண்டெழுந்த பெண்ணுரிமைப் போராட்டக்காரர்கள், நியுயார்க்கில் பெண்களின் உரிமைப் பிரகடனத்தை வெளியிட்டனர்.

நூற்பாலைகளில் மோசமான பணிச் சூழல், குறைவான ஊதியம், 16 மணி நேர வேலை என்று இருந்த நிலையை மாற்றக் கோரி, 1857-ம் ஆண்டு நியுயார்க்கில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் அரசாங்கத்தால் மிக மோசமாக ஒடுக்கப்பட்டது. ஆனால், பெண்கள் முடங்கிவிடவில்லை. அதே அமெரிக்காவில் 1908-ம் ஆண்டு பெண்கள் போராட்டம் மீண்டும் வெடித்தது. இதில் 15 ஆயிரம் பெண்கள் கலந்துகொண்டு, ஊதிய உயர்வு, வாக்குரிமை கேட்டு ஊர்வலம் சென்றனர். இது உலகம் முழுவதிலும் இருந்த பெண் போராட்டக்காரர்களை விழிப்படையச் செய்தது.

முதல் மகளிர் அமைப்பு

1910-ம் ஆண்டு ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த புகழ்பெற்ற தலைவர் க்ளாரா ஜெட்கின் பெண்கள் மாநாட்டில், சர்வதேச மகளிர் அமைப்பைத் தோற்றுவித்தார். சர்வதேச மகளிர் தினம் என்பதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை முன்வைத்தார்.

1911, மார்ச் 19 அன்று ஜெர்மனி, டென்மார்க், ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து நாடுகளில் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக அணி திரண்டனர்.

ரஷ்யாவில்…

ரஷ்யாவில் ஜார் மன்னருக்கும் முதல் உலகப் போருக்கும் எதிராகப் போராட்டம் வெடித்தது. அந்த எழுச்சி பெண்களிடமும் பரவியது. போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமைதியை வேண்டி பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமையைப் பெண்கள் தினமாகக் கடைபிடித்தனர்.

ஜூலியன் காலண்டரில் வரும் இந்த நாள் பிற நாடுகளில் புழக்கத்தில் இருந்த கிரிகேரியன் காலண்டர்படி மார்ச் 8. 1913ம் ஆண்டு ரஷ்யாவில் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் சர்வதேச மகளிர் பிரதிநிதிகள் இந்தத் தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடத் தீர்மானித்தனர். ஐக்கிய நாடுகள் சபையும் இதை அங்கீகரித்தது.

1917 மார்ச் 8 அன்று ரஷ்ய ஜார் மன்னருக்கு எதிராக உழைக்கும் மக்கள் வாக்குரிமைக்காகவும் உணவுக்காகவும் போராட்டத்தில் இறங்கினர். 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பங்கேற்றனர். வெற்றியும் பெற்றனர்! இப்படிப் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பிறந்ததுதான் மகளிர் தினம். மகளிர் தினம் உருவாகி நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்னும் பெண்களின் நிலை போதிய அளவு முன்னேறவில்லை. இன்னும் பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்கப்படும் அவல நிலை நிலவிவருகிறது. பெண் கல்வி மறுக்கப்படுகிறது. பணி இடங்களில் சம வேலை செய்யும் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கு ஊதியம் கிடையாது.

சுய மரியாதை, சமூக மதிப்பு, சமூக, பொருளாதர, பண்பாட்டுச் சுதந்திரம் பெற்று ஆண்களுக்கு நிகரான உரிமைகளைப் பெண்கள் பெறும் நாளை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்வதே சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கம்.

http://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.