Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

மாரடைப்பை கண்டுபிடிக்கும் கருவி... குறைந்த விலைக்குக் கிடைக்கணும்! - வடிவமைத்த மாணவரின் விருப்பம்! #VikatanExclusive

ப்போது, டெல்லியில் குடியரசுத்தலைவரின் ராஷ்ட்ரபதி பவனில் இருக்கிறார் ஆகாஷ். அவரின் செல்போன் எண்ணைப் பிடிப்பதுதான் கடினமாக இருந்தது. தொடர்புகொண்டால், தயங்காமல் பேசுகிறார். பேசப் பேச, `10-ம் வகுப்புப் படிக்கும் மாணவரா இவ்வளவு தெளிவான உச்சரிப்புடன், தீர்க்கமாகப் பேசுகிறார்?’ என ஆச்சர்யமாக இருந்தது. ஆண்டுக்கு எட்டு கண்டுபிடிப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் குடியரசுத் தலைவரின் `இன்னொவேஷன் ஸ்காலர்ஸ் இன்-ரெசிடென்ட்ஸ் புரோகிராம்’ திட்டத்துக்கு முழுக்க முழுக்கத் தகுதியானவர் என்பது பேச்சிலேயே தெரிகிறது. தேசிய அளவில் நன்மை தருகிற, புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறவர்களால் மட்டுமே இந்தத் திட்டத்தில் இடம்பெற முடியும். அந்த வகையில் மாரடைப்பு ஏற்படுவதைக் கண்டுபிடிக்க ஆகாஷ் வடிவமைத்திருக்கும் கருவி, தமிழர்கள் அத்தனை பேரையும் பெருமைகொள்ள வைத்திருக்கிறது. ஆகாஷ், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்! 

ஆகாஷ் , மாரடைப்பைக் கண்டுபிடிக்க கருவி

மாரடைப்பு உண்டாவதைக் கண்டுபிடிக்க ஆகாஷ் கண்டுபிடித்திருக்கும் கருவி!

டெல்லியில் இருக்கும் இரண்டு வாரங்களில், அங்கே நடக்கும் கண்காட்சியில் பொருத்தமான கண்டுபிடிப்புகளை மேம்படுத்த, சந்தைப்படுத்த குடியரசுத் தலைவரும், அவர் அலுவலகமும் கண்டுபிடிப்பாளர்களுக்கு உதவி செய்கிறார்கள். பெரிய நிறுவனங்கள், அரசுத் துறைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், ஒப்பந்தம் போடவும் இங்கே வழி பிறக்கும். இப்போது அங்கேதான் இருக்கிறார் ஆகாஷ்.

சென்னைதான் பூர்வீகம் என்றாலும், ஆகாஷ் வசிப்பது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில். அப்பா மனோஜ் பிசினஸ்மேன்; அம்மா சோம்லதா வீட்டு நிர்வாகி. ஆகாஷுக்கு ஒரே தம்பி... நான்காம் வகுப்புப் படிக்கிறார். ஆகாஷ், ஓசூரில் உள்ள `தி அசோக் லைலேண்ட் ஸ்கூலி’ல் 10-ம் வகுப்புப் படிக்கிறார். 

``என் தாத்தா, மாரடைப்பு வந்து இறந்துபோயிட்டார். அதுக்கு எந்தவிதமான முன் அறிகுறியும் தெரியலை. ஆனா, அவர் ஒரு சர்க்கரை நோயாளி. அது என்னை ரொம்ப பாதிச்சுது. திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்து ஆளையே கொல்லும் சைலன்ட் ஹார்ட் அட்டாக்கைக் கண்டுபிடிக்க இந்தக் கருவியை உருவாக்க அவர் மரணம்தான் காரணமா இருந்துச்சு. உண்மையில், ரெண்டுவிதமான மாரடைப்பு இருக்கு. ஒண்ணு, முன்கூட்டியே மார்பில் வலி, தோள்பட்டையில் வலினு அறிகுறிகளைக் காட்டும். சர்க்கரைநோயாளிகள், கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்குற சில நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் எதுவும் இருக்காது. ஆனா, ஹார்ட்ல பிளாக் இருக்கும். வெளியே தெரியாது. இந்த நிலையில் இருக்கறவங்க மாரடைப்பு வந்தா அதை எதிர்கொண்டே ஆகணும். அவங்களுக்கு வேற வழியே இல்லை. அறிகுறிகள் தெரிஞ்சாத்தானே மருத்துவமனையில சேர்க்கலாம், சிகிச்சை எடுத்துக்கலாம்? அவங்களுக்காகத்தான் இந்தக் கருவி!’’ என்கிறார் ஆகாஷ். 

சரி... மருத்துவத்துறையில் ஆகாஷுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

``சின்ன வயசுல இருந்தே எனக்கு மருத்துவ அறிவியல்ல ரொம்ப ஈடுபாடு. எட்டாம் கிளாஸ் படிக்கும்போது, பெங்களூர்ல இருக்குற `இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்’ல இருக்குற லைப்ரரிக்கு அடிக்கடி போவேன். ஓசூர்ல இருந்து அங்கே போக ஒரு மணி நேரம் ஆகும். ஆனா, அது எனக்குப் பெருசா தெரியலை. ஏன்னா, மருத்துவப் பத்திரிகைகளை விலை கொடுத்து வாங்கிப் படிக்க அதிகச் செலவாகும். அப்பிடி நான் படிச்ச கட்டுரைகளைக் கணக்குப் போட்டா லட்சக்கணக்கான ரூபாய் செலவாகியிருக்கும் (சிரிக்கிறார்). அதே மாதிரி பல அறிவியல் கூட்டங்கள்ல போய் கலந்துக்குவேன்... கத்துக்குவேன்.’’ - இப்படிச் சொல்கிற ஆகாஷின் படிப்பு எப்படி? 

ஆகாஷ் மனோஜ்

``பல பேர் பரீட்சையை நினைச்சு கவலைப்படுறாங்க. எனக்கு படிப்பு எப்பவும் கஷ்டம் கொடுத்ததே இல்லை. பல அறிவியல் கண்காட்சிகள்ல என் புராஜக்ட்களுக்காக பல பரிசுகள் வாங்கியிருக்கேன். போன வருஷம், ஜப்பான்ல இருக்கும் `டோக்கியோ யுனிவர்சிட்டிய் ஆஃப் சயின்ஸ்’ல இருந்து என்னை கூப்பிட்டிருந்தாங்க. என்னோட ஒரு புராஜக்ட்டுக்கு அவங்க அங்கீகாரம் குடுத்திருக்காங்க. என் ஸ்கூல்லயும் நல்ல ஆதரவு தர்றாங்க. நான் வடிவமைச்சிருக்கும் இந்தக் கருவி தோலில் ஒட்டக்கூடியது (Patch). இதை கை மணிக்கட்டுலயோ, காதின் பின்புறத்துலயோ பொருத்திக்கலாம். இதுல இருந்து சின்னதா ஒரு பாசிட்டிவ் மின்சாரத் தூண்டுதல் (Electrical impulse) வெளியாகும். அது இதயத்துல இருந்து ஹார்ட் அட்டாக் வரப்போறதுக்கான எச்சரிக்கையாக வெளியாகும் எதிர்மறை (நெகட்டிவ்) புரோட்டீனை ஈர்க்கும். இதன் மூலமா,எஃப்.ஏ.பி.பி.3 புரோட்டீனின் அளவு அதிகமாக இருந்தா, உடனே அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுதுனு புரிஞ்சிக்கலாம்’’ என்கிறார் ஆகாஷ். 

ஆகாஷின் கருவி விரைவில் சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது. ``ஏற்கெனவே என் கருவிக்கான காப்புரிமைக்கு விண்ணப்பம் செஞ்சுட்டேன். இனி இதை விற்பனை செய்யணும். அதுக்காக பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்புகொண்டிருக்கேன். உயிரியல் தொழில்நுட்பத் துறையோட (Department of Biotechnology) கூட்டு சேர்ந்து இந்தக் கருவியைத் தயாரிக்கலாம்னு இருக்கேன். அதுக்கு உதவி செஞ்சது நம் குடியரசுத் தலைவர்தான். என் திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்குப் பதிலா அரசே ஏத்துக்கிட்டு, செயல்படுத்தணும்கிறது என் ஆசை. அப்போதான் வெறும் 900 ரூபாய்க்குக்கூட இது சந்தையில கிடைக்கும். அதுதான் பொதுமக்களுக்கு நன்மை தரும்’’ அழுத்தமாகச் சொல்கிறார் ஆகாஷ். 

ஆகாஷின் ஆசை நிறைவேறட்டும்! 

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நெருப்புடா - நெருங்குடா!

  • தொடங்கியவர்

விராட் கோலி வாழ்க்கையை மாற்றிய அந்த இரண்டு பெண்கள்! #CelebrateWomen #WomensDay

விராட் கோலி

மைதானத்தில் ஆக்ரோஷமாக ஆடும் வீரர், எதிரணி வீரர்களை வசைபாடுவதில் வல்லவர், களத்தில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாமல் தோல்விகளில் அழுதும், வெற்றிக் களிப்பில் ஆர்ப்பரித்துக் கொண்டாடும் விராட் கோலியின் பெண்கள் தின வாழ்த்து என்ன தெரியுமா? அவர் தன் வாழ்வில் சிறப்பாக செயல்பட உந்துதலாக இருந்த இரண்டுப் பெண்களைப் பற்றியே குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் பற்றி எப்போதுமே அதிக அக்கறைகொண்டவர் விராட் கோலி. பெங்களூரில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நிகழ்த்தப்பட்டபோது, தனது ட்விட்டர் பக்கத்தில் குரல் கொடுத்தவர். பெண்களால்தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன் எனக் கூறுவது இன்று நிறைய ஆண்களிடம் காண முடிகிறது. அதற்கு விராட் கோலியும் விதிவிலக்கல்ல.

இன்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது தாயுடனும், தனது காதலி அனுஷ்கா ஷர்மாவுடனும் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு, 'இவர்கள் இருவரும் எனது வாழ்க்கையில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர்' என்று கூறியிருக்கிறார். இவர்களைப் பெண்கள் தினத்தில் வாழ்த்தக் கடமைப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

விராட் கோலி செய்வது இப்படிச் செய்வது முதல்முறை அல்ல. காதலர் தினத்தன்று அனுஷ்கா ஷர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ''அனுஷ்கா விருப்பப்பட்டால் 365 நாளுமே காதலர் தினம்தான்’ என்று கூறியுள்ளார். என்னதான் பிரேக் அப், கிண்டல் மீம்ஸ் என கோலி - அனுஷ்கா சுற்றி வளைக்கப்பட்டாலும், கிரிக்கெட்டில் கெத்தான பேட்ஸ்மேனாக கோலியும், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக அனுஷ்காவும் தொடர்கிறார்கள். காதல் எந்த விதத்திலும் கேரியரைப் பாதிக்கவில்லை என்பதையும் தெளிவாகக் காட்டினார்கள்.

டி20 உலகக் கோப்பையின்போது, விராட் அவுட் ஆனதற்கு அனுஷ்காவை விமர்சித்த ரசிகர்களுக்கு 'ஷேம்' என ட்வீட் செய்து, உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். 'கேலி செய்பவர்களை நினைத்தால் கேவலமாக இருக்கிறது. எனக்கு எல்லாமே அனுஷ்காதான்’ எனப் பதில் தந்தார். அதுதான் இந்தியாவின் 'ட்வீட் ஆஃப் தி இயர்’ என ட்விட்டரே அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஜனவரி 1, 2017-ல் அனுஷ்காவுக்கும் கோலிக்கும் நிச்சயதார்த்தம் என வதந்தி பரவியது. 'வதந்திகளை நம்பாதீர்கள். எனக்குத் திருமணம் என்றால் நானே அறிவிப்பேன்’ என்றார் விராட். அனுஷ்காவுக்கும் இதே பிரச்னைதான். அவர் தயாரிக்கும் பாலிவுட் படமான 'பில்ஹூரி’ படத்தை மறைமுகமாகத் தயாரிப்பது விராட்தான் என்பதற்கு, கோபப்பட்டு விளக்கம் அளித்தார் அனுஷ்கா.

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் 'சரோஜ்' என்ற தனது தாயின் பெயரை டிஷர்ட்டில் எழுதி, தனது தாய் மீதான அன்பை வெளிப்படுத்தினார் விராட்.

கிரிக்கெட் ஆடுகளத்தில் சதம் அடிப்பதில் தெறி பாய் என்றால், பெண்களிடம் மரியாதைக்குரிய குட் பாயாக செஞ்சுரி அடிக்கிறார் விராட். கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பெண்களை மதிக்கும் ஆண்களுக்கும் விராட் ஒரு ரோல்மாடல்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
பொறுமை, கோபத்தை மறக்கடிக்கும்
 

article_1489031668-yuiu.jpgஎங்களுக்குக் கடுமையான ஆத்திரம். யாராவது வந்துற்றால், அதனை அவர்கள் மீது செலுத்துவதனால், எங்களுடைய மனக்குமுறல் தீர்ந்து விட்டதாக எண்ணுகின்றோம். 

ஆனால், எங்களின் மேலான தீவிர உணர்வை, இன்னும் ஒருவரிடம் பொறுப்பித்து விடுவதில் என்ன நியாயம் இருக்கின்றது? பிரச்சினைகளைப் பரஸ்பரம் எடுத்துரைத்தால், கோபத்தின் தீவிரம் எழாது. 

இன்னும் ஒரு முக்கியமான விடயம் யாதெனில், சில சமயங்களில், நாங்கள் தப்புக் கணக்குப் போடுவதால், எங்களிலும் தவறுகள் இருக்கலாம் எனச் சீர்தூக்கிப் பார்ப்பதுமில்லை. 

தவறான எமது செய்கையினால், எங்களை யார் மன்னிக்க வேண்டும் சொல்லுங்கள்? கோபத்தை விடுத்து, மன்னிப்புக் கோரினால் நட்பு வலுக்கும். சம்பந்தப்பட்டவர்களும் தாங்களும் ஏதாவது தவறு செய்தால், அதனை ஒப்புக் கொள்ளலாம். 

வெறுப்பை ஒருவர் மீது திணிப்பதும் பதிலுக்கு அவரும் வெறுப்பை உணர்வதும், உறவுகள் தான் கூறாவதற்கு வழிவகுக்கும். பொறுமை, கோபத்தை மறக்கடிக்கும்.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

“சின்னப்பையன் அவனுக்கென்ன தெரியும்?”- இதற்கு நோ சொல்லுங்கள்! #MisterK #ThursdayThoughts

ThursdayThoughts

மிஸ்டர் K-வுக்கு எப்படி இத்தனை குட்டிக்கதைகள் தெரிகிறது என்பது எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கும். ஒருநாள் அவனிடமே கேட்டேன்:

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. சில விஷயங்கள் நிஜமா ‘அறிஞர்கள்’ வாழ்வில் நடந்ததா இருக்கும். சில குட்டிக்கதைகள் எங்கயோ உருவாகி எப்படியெப்படியோ பயணிச்சு நம்ம காதுக்கு வந்திருக்கும். அந்தக் கதைகள் சொல்ற நீதி நல்லாருக்கா.. அதை ரசிச்சு நிறைய பேர் கிட்ட பகிர்ந்துப்பேன். பகிர்ந்துக்கறதால அந்த விஷயம் மனசுல ‘பச்சக்’னு ஒட்டிக்கும். அப்டித்தான் பல கதைகள் மைண்ட்ல ஸ்டோராகிருக்கு” என்றான்

“அப்படி ஏதும் கதை இன்னைக்கு உண்டா?”

”ஆனா கேட்டுட்டு, 'இது நடந்தது இங்கிலாந்துல இல்ல.. ஜப்பான் இல்லை'ன்னெல்லாம் சண்டைக்கு வரக்கூடாது. கருத்தை மட்டும் எடுத்துக்கலாம். சரியா?”  என்றபடி கதை சொல்லத் தயாரானான்.

“இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய ஜப்பானில் இருந்து ஒரு குழு வந்திருந்தது. அதில் ஒரு 20  வயது மதிக்கத்தக்க ஒருவன். துறுதுறுவென்று எல்லாரிடமும், பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டுமிருக்கிறான்.  

இங்கிலாந்து கம்பெனியின் நிர்வாகிக்கு அந்தச் சிறுவனைக் கண்டதுமே ஏனோ பிடிக்கவில்லை. இரண்டொரு நாளில் இன்ஸ்டலேஷன் பணிகள் துவங்க இருக்க, ஜப்பான் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்.

“ஏப்பா.. அவ்ளோ துட்டுப் போட்டு வாங்கிருக்கோம். சர்வீஸ் டீம்ல சின்னப்பையனைலாம் சேர்த்தி அனுப்பிருக்கீங்க? என்ன டூர் வந்திருக்காங்களா? ஏர்போர்ட்ல இருந்து ரூமுக்கு அனுப்ச்சாச்சு. நாளைன்னைக்கு இன்ஸ்டால் பண்றப்ப அந்தப் பையன் மிஷின்ல கைய வைக்கக்கூடாது ஆமா. அதென்ன சின்னப்புள்ளைக சமாச்சாரமா?” - இதுதான் அவர் அனுப்பிய மின்னஞ்சலின் சாராம்சம்.

உடனடியாக பதில் அஞ்சல் வந்தது. “மன்னிக்க வேண்டும். தவறுதான். நாங்கள், அந்தச் சிறுவனுக்கு பதில் கொஞ்சம் சீனியரை டீமுக்கு அனுப்புகிறோம். அந்தச் சிறுவன் அங்கே இருப்பான். ஆனால் கருவியைக் கையாள மாட்டான்” என்று பதில் வருகிறது. சொன்னபடியே கொஞ்சம் வயதில் மூத்தவர்  வருகிறார். குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார். அந்தச் சிறுவனும் அவர்களுடன்தான் இருக்கிறான். ஆனால் அந்த மிஷின் வேலை செய்யும் இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருக்கிறான். இந்தக் குழுவினார் டீ ப்ரேக், லஞ்ச் ப்ரேக்கெல்லாம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்து, இரண்டு நாட்களில் இயந்திரத்தை நிறுவிவிடுகிறார்கள். வேலை வெற்றிகரமாக முடிந்துவிடுகிறது.

வழியனுப்பும்போது, இந்த இங்கிலாந்து கம்பெனி நிர்வாகிக்கு சின்னதாக ஒரு குற்ற உணர்வு. என்ன இருந்தாலும் அவ்வளவு கடுமையாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கக்கூடாது என்று தோன்றுகிறது. அந்தச் சிறுவன் அவன் பாட்டுக்கு சிரித்த முகத்துடனேயே வளைய வருகிறான். அவனிடம் இதைச் சொல்லிவிட்டால் மனது லேசாகிவிடும் என்று உணர்கிறார். குழுவினர் எல்லாரும் இருக்க, சொல்கிறார்:

“ஸாரி.. ஆக்சுவலி பலகோடி ரூபாய் ப்ராஜக்ட். இன்ஸ்டால் பண்றப்ப எதும் சிக்கல் வந்தா அப்பறம், பணம் நேரம்னு பெரிய நஷ்டமாகிடும். அதான் கொஞ்சம் சீனியர் வேணும்னு கேட்டேன். மத்தபடி ஐ லைக் த பாய். துறுதுறுன்னு இருக்கான். ஆனா இந்த டீம்ல இப்படி ஒரு சின்னப்பையன் வந்தது எனக்கு சரின்னு படலை. அதான்..” என்று பாலிஷாகச் சொல்கிறார்.  

அந்தச் சிறுவன் அதே புன்னகையுடனே இருக்க, புதிதாக வந்தவர் சொல்கிறார். “இட்ஸ் ஓகே சார். நாங்க வாடிக்கையாளர் கருத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்போம். நீங்க சொன்னதுமே என்னை அனுப்பி வெச்சாங்க. இப்ப மிஷின் நல்லபடியா இன்ஸ்டால் செஞ்சு, ஓடிட்டிருக்கு. ஆனா ஒரு விஷயம்..” தயங்குகிறார்.

”பரவால்ல.. எதாருந்தாலும் சொல்லுங்க”

“நான் அந்தக் கம்பெனில அக்கவுண்ட்ஸ்ல வொர்க் பண்ற ஆளுதான். எனக்கு இந்த மிஷின் பத்தி ஏபிசிடிகூட தெரியாது”

நிர்வாகி அதிர்ச்சியாகிறார். “அப்பறம் இன்ஸ்டலேஷனப்ப வேலை செஞ்சுட்டிருந்தீங்க?”

“இந்தப் பையன்கிட்ட போய்ப் போய்க் கேட்டு அவன் சொல்றத மட்டும் பண்ணினேன் அவ்ளதான்”

“அந்தப் பையன் எப்படி மிஷின் பக்கமே வராம, உங்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் குடுத்திருக்கமுடியும்?”

“முடியும். ஏன்னா, இந்த மிஷினைக் கண்டுபிடிச்சதே அவன்தான்”

** ** ** 

மிஸ்டர் K இந்தக் கதையைச் சொன்ன நாள் முழுவதும் இந்தச் சிந்தனையேதான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. 

‘சின்னப்பையன் அவனுக்கென்ன தெரியும்?’ என்று எத்தனை பேரை உதாசீனப்படுத்துகிறோம்!  ஹோட்டல், துணிக்கடை என்று பொதுவெளியிலும் கொஞ்சம் நடுத்தர வயதுடையவர் நம்மை அட்டெண்ட் செய்யும்போது காண்பிக்கும் பரிவையும், புன்னகையையும் வயதில் சிறியவர்களிடம் காட்டுகிறோமா? வயது குறைந்த ஒருவனை, விளையாட, கிரிக்கெட் டீமில் சேர்த்திக் கொண்டால் அவனை பந்து பொறுக்க, அங்கும் இங்கும் ஓட என்றுதான் பயன்படுத்துகிறோம். 

மிஸ்டர் K

அலுவலகங்களில் இந்தப் போக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதுவும் அந்த, ‘வயதில் குறைந்தவர்களி’ன் உடல்வாகும் ஒல்லியாக இருந்தால் கேட்கவே வேண்டாம். மீட்டிங், டிஸ்கஷன் எதிலும் அவர்கள் குரல் எடுபடவே படாது. ‘அவனுக்கென்ன தெரியும்?’ என்பதை உருவுகண்டே முடிவுசெய்யும் அதிமேதாவிகள்தானே நாம். ஆனால் கொஞ்சம் அலசி ஆராய்ந்தால், அலுவலகத்தின் பெரும்பாலான வேலைகளில் இவர்கள்தான் அச்சாணிகளாக இருந்து கொண்டிருப்பார்கள். அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால், அவர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும்.. அல்லது தட்டிக் கொடுத்து வேலை செய்யச் சொல்லும் சக ஊழியர்களாகத்தான் இருப்பார்கள். 

“சின்னப்பையன் அவனுக்கென்ன தெரியும்?” மனப்போக்கு நிச்சயம் கொடிய நோய்! கைவிட்டால் நமக்கும் அவருக்கும் நன்மையே பயக்கும். அதே சமயம்,  இன்னொரு கட்சியினர் உண்டு. இளைஞர்கள் தோளில் கைபோட்டு, தனக்குத் தெரியாததை அவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டு பயணிப்பவர்கள். இவர்கள் எல்லா திசைகளிலும் வெற்றிக் கொடியை நாட்டுபவர்களாக இருப்பார்கள்.  

இந்த இரண்டில், நீங்கள் எந்தக் கட்சி?

  • தொடங்கியவர்

பென்னிகுக்கின் 106 - வது நினைவுநாள்!

நீர்நிலைகள் வற்றிப்போன 18-ம் நூற்றாண்டில் மதுரை, ராமநாதபுர மாவட்டங்களில் சீர்குலைந்துபோன வேளாண் தொழிலை மீண்டும் உருவாக்க முயன்று, அப்போதைய ஆட்சியாளர்கள் தோல்வி அடைந்திருந்தனர். 

Pennycuick

அந்தநேரத்தில், அரபிக்கடலில் கலந்த தண்ணீரை, தென்தமிழகம் நோக்கித் திருப்பிக் கொண்டுவந்து, முல்லைப்பெரியாறு அணையைக் கட்டித் தண்ணீரைத் தேக்கிவைத்து, அதனால் தென்தமிழகத்தில் விவசாயம் செழிக்கவைத்து, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர், கர்னல் ஜான் பென்னிகுக். அவர் கட்டிய முல்லைப்பெரியாறு அணைதான், தென் தமிழகத்தை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. அவர், கடந்த 1911-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி உயிரிழந்தார். தென்தமிழக மக்களால் போற்றப்படும் கர்னல் ஜான் பென்னிகுக்கின் 106-வது நினைவுநாள் இன்று.

  • தொடங்கியவர்

பார்பி கேர்ள் உருவான கதை தெரியுமா? #BarbieDolls

பார்பி பொம்மை

குழந்தைகளிடமிருந்து பிரிக்க முடியாத ஒன்று பொம்மை. அவர்கள் கேட்ட பொம்மையை நாம் வாங்கிக் கொடுத்துவிட்டோம் என்றால், அதையே அவர்கள் உலகம் எனக் கருதி வாழத் தொடங்கிவிடுவர். பொம்மைகளை, குழந்தைகள் மட்டுமல்ல... இன்றைய இளம்பெண்களும் அதிகமாகவே விரும்புகின்றனர். ஆக, பலரும் விரும்பும்வகையில்  பலவிதங்களில் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதில் ஒன்றுதான் பார்பி பொம்மை. அது, பிறந்த தினம் இன்று. 

ரூத் ஹேன்ட்லர். இவர், தன்னுடைய  மகள் காகிதப் பொம்மைகளுக்குப் பெரியவர்களின் பெயர்வைத்து விளையாடுவதைக் கண்டு ரசிப்பார். குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் அந்தக் காலத்தில் மிகவும் சிறியதாக இருப்பதைக் கவனத்தில்கொண்ட ஹேன்ட்லர், ''வளர்ந்து பருவமடைந்த ஓர் உடலைப் பொம்மையாகச் செய்ய வேண்டும்'' என்று தன் கணவர் எலியட்டிடம் சொன்னார்.

இவர்,  மேட்டல் பொம்மை நிறுவனத்தின் இணை நிறுவனர். தன் மனைவி சொன்னதை எலியட்டும்  கேட்கவில்லை... அவருடன் இருந்த மற்ற இயக்குநர்களும் அதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில், ஹேண்ட்லர் தன்னுடைய குழந்தைகளான பார்பரா மற்றும் கென்னத் ஆகியோருடன் 1956-ம் ஆண்டு ஐரோப்பிய நாட்டுக்குச் சுற்றுலா சென்றார். அங்கே, பில்ட் லில்லி என்று அழைக்கப்பட்ட வளர்ந்த மனித உருவம்கொண்ட ஜெர்மன் நாட்டுப் பொம்மைகளைப் பார்த்து வியந்துபோனார்.  

ரூத் ஹேன்ட்லர்இந்தப் பொம்மைகள் 1955-ம் ஆண்டு ஜெர்மனியில் முதன்முதலாக விற்பனை செய்யப்பட்டன. முதலில் பெரியவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட இந்தப் பொம்மைகள், பிறகு குழந்தைகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவர்கள், அந்தப் பொம்மைக்கு என்று பிரத்யேகமாக விற்கப்பட்ட ஆடைகளை வாங்கி அதற்கு அணிவித்து மகிழ்ந்தனர். இந்த லில்லி பொம்மையானது,  சித்திரப் புத்தகம் ஒன்றில் இடம்பெற்ற பிரபலமான கதாபாத்திரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பொம்மைகளின் தோற்றமே ஹேன்ட்லரின் மனதை நிறைத்திருந்தது.

இதனால் மூன்று பொம்மைகளை விலைக்கு வாங்கி, அதில் ஒரு பொம்மையைத் தன் குழந்தைகளுக்கு விளையாடக் கொடுத்தார். மீதமிருந்த இரண்டு பொம்மைகளைத் தனது கணவரிடம் காட்டுவதற்காக எடுத்துவைத்துக்கொண்டார். பின்னர் தன் நாட்டுக்குத் திரும்பிய ரூத் ஹேன்ட்லர், இதேபோன்ற ஒரு பொம்மையை வடிவமைக்கும் பணியில் இறங்கினார். அதற்காக, ஜேக் ரையான் என்ற பொறியாளரின் உதவியை நாடினார். அவர் வடிவமைத்த அந்தப் பொம்மைக்கு 'பார்பி' என்று பெயர் சூட்டினார். தன் மகள் பார்பராவின் பெயரிலிருந்து  அந்தப் பெயரைச் சூட்டியிருந்தார் ஹேன்ட்லர். 

இந்தப் பொம்மை, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 1959-ம் ஆண்டு மார்ச் 9-ம் நாள் அனைத்துலக விளையாட்டுப் பொருள்கள் கண்காட்சியில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. இதை, அமெரிக்க நிறுவனமான மேட்டல் இங்க் என்னும் பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. 1959, மார்ச் 9-ம் நாளாக பார்பி பொம்மையின் பிறந்த நாளாகத் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

கறுப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் இருந்த அந்தப் பொம்மை, நீச்சல் உடை மற்றும் அதன் பிரத்யேகமான அடையாளத்துடன் காட்சியளித்தது. 'பதின்வயது நவநாகரிக மாடல்' என்ற பெயரில் பார்பி பொம்மை விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதை வடிவமைத்த ஹேன்ட்லர், ''ஜெர்மன் நாட்டுப் பொம்மையான பில்ட் லில்லியை அடிப்படையாகக் கொண்டு, பார்பி பொம்மையை வடிவமைத்தேன்'' என்றார். அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே 3,50,000 பொம்மைகள் விற்பனையாகின என்பது குறிப்பிடத்தக்கது. 

பொம்மைகளே குழந்தைகளின் முதல் நண்பன். பார்பி பொம்மை குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களின் விருப்பமான ஒன்றாகவும் மாறிவிட்டது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

’புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ என்ற சந்திரபாபுவை மறக்க முடியுமா?

சந்திரபாபு தமிழகத்து சார்லி சாப்லின். தூத்துக்குடியில்  பிறந்தவர். தூத்துக்குடி மண்தான் சுநத்திரப் போராட்டத்துக்குத்தான் பெயர் பெற்றதாயிற்றே... தந்தை ரோட்ரிகஸ் தாய் ரோஸ்லீன் இருவருமே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். சந்திரபாபுவின் தந்தை வ.உ.சிக்கு நெருங்கிய நண்பர். வ.உசி. நடத்திய  'சுதந்திர வீரன்' என்ற பத்திரிகையில் பிரிட்டிஷாருக்கு எதிராக எழுதி வந்ததால், சந்திரபாபுவின் பெற்றோர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்கள். அங்குதான், சந்திரபாபு வளர்ந்தார். சென்னை திரும்பியபின் குடும்பம் திருவல்லிக்கேணியில் வாழ்ந்தது. 

 மக்களை சிரிக்க வைத்து உள்ளுக்குள் அழுத சந்திரபாபு

சென்னை வாழ்க்கைதான் சந்திரபாபுவை சினிமாவுக்குள் நுழைய வைத்தது. 'பிரிட்டிஷ் ஸ்டைல்' உடைகள் மீது சந்திரபாபுவுக்கு சிறு வயது முதலே ஆர்வம். அதனால், வெள்ளைக்காரர்களைப் போலவே உடைகளை அணிவார். ஹாலிவுட் படங்களை விரும்பிப் பார்ப்பார். நுனிநாக்கு ஆங்கிலமும் அவருக்கு இருந்தது. கடந்த 1947-ம் ஆண்டு முதல்படமான 'தன அமராவதி' யில் நடித்தார். நாகேசுக்கு சல்லி உடம்பு என்றால், சந்திரபாபுவுக்கு ரப்பர் உடம்பு. சினிமாவில் டூப் போடாமலே உயரத்தில் இருந்து குதிப்பார். குதிப்பதற்கு மட்டும் அவர் தயங்கியதே இல்லை. எத்தனை முறை குதிக்கச் சொன்னாலும் குதிப்பார். தட்டி விட்டுக் கொண்டு எழுவார். 

காமெடி நடிகர் ஒருவரின் பாடல்கள் தமிழ் சினிமாவில் ஹிட் அடித்தது என்றால் அது அனேகமாக சந்திரபாபுவின் பாடல்களாகத்தான் இருக்கும்..  'உனக்காக எல்லாம் உனக்காக' 'குங்குமப் பூவே கொஞ்சுப் புறாவே', பிறக்கும் போது அழுகின்றான்'  'பம்பரக் கண்ணாலே', 'நானொரு முட்டாளுங்க','ஒண்ணுமே புரியல உலகத்துல',  சிரிப்பு வருது சிரிப்பு வருது', 'பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை', போன்ற பாடல்களை யாரால் மறந்து விட முடியும். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சினிமாவில் அவரும் அவரது பாடல்களும் கொடிக்கட்டிப் பறந்தன. 

சென்னைப் பாஷையை அப்படியே பேசி அசத்துவார் சந்திரபாபு. 'சகோதரி' என்ற படத்தில் சென்னை பாஷையில் கலக்கியிருப்பார் 'தட்டுங்கள் திறக்கப்படும் ' என்ற படத்தை முதன் முதலாக இயக்கினார். நடிப்பு, பாட்டு, நடனம், இசை என அத்தனைத்துறைகளிலும் இந்த கலைஞன் ஒரு வித்தகன். சந்திரபாபுவின் நடிப்பைப் பார்த்து தமிழ் திரையுலகமே வியந்தது. அவரைத் திரையில் கண்டாலே கைதட்டி சிரித்தது. தமிழக மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த சந்திரபாபு சொந்த வாழ்கையில் தோல்வியடைந்தார். முடிவு தமிழ் திரையுலகம் ஒரு நல்லக் கலைஞனை இழக்கத் தொடங்கியது. 

சந்திரபாபுவுக்கும் ஷீலா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் 6 மாதங்கள்தான் சேர்ந்து வாழ்ந்திருப்பார்கள். அவரது மனைவியோ...' தனக்கு ஒரு காதலன் இருப்பதால் என்னால் உங்களுடன் முழுமையான இல்லற வாழ்வில் ஈடுபட முடியவில்லை ' எனக் கூற நொந்து போனார் சந்நிரபாபு. பலரும் ஷீலாவை சமாதானப்படுத்திப் பார்த்தார்கள். எம்.ஜி.ஆர் கூட இருவரையும் அழைத்துப் பேசிப் பார்த்தார். ஆனால் இருவரையும் ஒட்ட வைக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் சந்திரபாபுவே மனைவியை அனுப்பி வைத்து விட்டார். ஷீலா லண்டனில் செட்டில் ஆகி விட்டார்.

மனைவி பிரிந்த ஏக்கம், சந்திரபாபுவை மதுவுக்கே அடிமையாக வைத்தது. பின்னர் மதுப் பழக்கத்தில் இருந்து மீண்டு, சினிமாவுக்குத் திரும்பினார். இரண்டாவதாகவும் ஒரு ரவுண்டு வந்தார். தமிழில் கிட்டத்தட்ட 76 படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் மனைவி பிரிந்த சோகம் அவரைத் தொடர்ந்து வாட்டியது. அவர் நினைவாகவே வாழ்ந்து மார்ச் 8-ம் தேதி இறந்து போனார். 'நீ ஒரு கலைஞன், கற்பனைவளம் மிக்கவன், சிந்தனைவாதி’ என்கிற ஒரு பாராட்டு மட்டுமே எனக்கு பிடிக்கும் என்பார் இந்த 'காமெடி' பாபு  இந்த பாராட்டை வழங்கியவர் அவரது மனைவி ஷீலா!

  • தொடங்கியவர்

எறிபந்து, நிக்கல் குந்தல், லாக் அண்ட் கீ - பால்ய கால பராக்கிரமங்கள் பார்ட் 2

து அடுத்த டைம் மெஷினில் வேறு சில விளையாட்டுகளுடன் செல்லும் தருணம். கவலையேபடாதீங்க. இந்த முறையும் ஃப்ரீ டிக்கெட்தான். ஏறி குந்துங்க, சீக்கிரமா போவோம்!

எறிபந்து :

விளையாட்டு

வீரதீர விளையாட்டுகளுள் எறிபந்தும் ஒன்று. இவற்றில் பழி வாங்குவது, வஞ்சம் தீர்பது போன்ற சம்பவமெல்லாம் நடக்கும். பிடிக்காத ஆளை கார்னர் செய்து விட்டால் அவன் அவ்வளவுதான். ரவுண்டு கட்டி வெளுக்கத் தொடங்கிவிடுவார்கள். ஸ்கூல் இடைவேளைகளில், ஸ்கூல் முடிந்த பின்னர்... இருட்டும்வரை விளையாடுவது என்று பல ரணகளங்கள் நடக்கும். இதில் ப்ளாஸ்டிக் பந்தில் ஆரம்பித்து பேப்பர் பந்துவரை பயன்படாத பந்துகளே இல்லை. இதில் உச்சக்கட்ட கொடுமையாக பிடிக்காத ஆளிடம் நாசூக்காக பாஸ் வாங்கி அவனையே அடிக்கும் அட்ராசிட்டிகளெல்லாம் நடக்கும்.

நிக்கல் குந்தல் :

விளையாட்டு

நிக்கல் குந்தல் கேம் இருவருக்கு இடையே நடக்கும் மல்லுகட்டு என்று கூட சொல்லலாம். ஆள்காட்டி விரலில் அக்ரிமெண்ட் போடுவதில் தொடங்கும் கேம் சுண்டு விரலில் கேன்ஸல் செய்வதோடு முடியும். கேம் என்னவென்றால், அக்ரிமெண்ட் போட்ட பின்னர் அந்த நபர் நின்று கொண்டிருந்தால் 'நிக்கல்' என்று சொல்ல வேண்டும். பின்னர் உட்காரும்பொழுது குந்தல் என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லவில்லையென்றால் கும்மாங்குத்து தான். அவன் சொல்லும்வரை நிறுத்தாமல் அடிக்கப்படும். 

கோலி குண்டு :

விளையாட்டு

கோலி குண்டு ஏரியாவிட்டு ஏரியா கேங் வாரை கிளப்பிவிடும் கேம். கோலி குண்டுக்கான சீசன் வந்துவிட்டால் போதும். தெருவெங்கும் குழி தான். அதுவும் கடைக்கு சென்று கோலி குண்டு வாங்கும்பொழுது அதில் ரஜினி தெரிகிறாரா? என்று செக் பண்ணிட்டுதான் வாங்கணும் என்றெல்லாம் சீனியர் பிளேயர்கள் ஆலோசனை சொல்வார்கள். ஆனால் அதில் ரஜினியும் தெரிய மாட்டார், அவர் மருமகன் தனுஷும் தெரிய மாட்டார் என்பது தனிக்கதை. குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கோலியை எறிய வேண்டும். எறிந்த கோலி நேராக குழியில் விழுந்தால் 90 பாயிண்ட் இல்லையென்றால் 10, 20-ல் இருந்த ஆரம்பிக்க வேண்டும் தப்பித்தவறி யாரிடமாவது சிக்கினால் சின்னாபின்னம்தான். அவன் அடிக்கிற ஒவ்வொரு அடிக்கும் மனசுக்குள் இடி இடிக்கும். தோற்றவன் ஜெயித்தவனுக்கு பூரி சுட்டு தர வேண்டும். கடைசி வரைக்கும் எனக்குப் பூரி தான்.

ராஜா ராணி :

விளையாட்டு

இந்த விளையாட்டை காலேஜ் படிக்கும்வரை விளையாடியிருப்போம். மிஞ்சிப் போனால் ஒரு பக்க பேப்பர் தான் செலவாகும். இந்த கேமில் ஐந்து பேர் இடம்பெற்றிருப்பார்கள். ஒரு பேப்பரில் பாதியை எடுத்து, அதை ஐந்தாய் கிழித்து ராஜா, ராணி, மந்திரி, போலீஸ், திருடன் என்று எழுதிக் குலுக்கி போடப்படும். விளையாடும் ஐந்து பேரும் ஆளுக்கு ஒரு சீட் எடுக்க வேண்டும். அதில் ராஜாவாக இருப்பவன் அவனிடம்தான் அது உள்ளது என்று சொல்லிவிடுவான். அதன் பின்னர் வரிசையாக ராணி, மந்திரி, போலீஸ், திருடன் என்று கண்டுபிடிக்க வேண்டும். 

பம்பரம் :

விளையாட்டு

விடிந்தும் விடியாமலும் குடுகுடுவென ஓடிப் போய் பம்பரம் வாங்க கடையில் நின்றதெல்லாம் ஒரு காலம். வாங்கிய பின்னர் திருப்தியடைந்து வீடும் திரும்ப மாட்டோம். வாங்கிய பம்பரத்தை பல முறை ஆராய்ச்சி செய்து அதில் 'ஈ' ஆணி அடித்து நேராக இருந்தால் மட்டுமே விளையாடத் திரும்புவோம். களத்தில் சிவப்பு கயிற்றில் பம்பரத்தை ஜோடிப்பது போல் சுற்றி... சுழற்றிவிடும் போது வரும் பாருங்க பாஸ் ஒரு ஃபீலிங்! அது கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷம்.

லாக் அண்ட் கீ :

விளையாட்டு

எவர்க்ரீன் விளையாட்டுகளுள் 'லாக் அண்ட் கீ'-யும் ஒன்று. 'சா பூ த்ரீ' போட்டு யார் அவுட் என்று தீர்மானித்து அவுட்டான ஆள் எல்லாரையும் துரத்துவான். மிக அருகில் வந்துவிட்டான் என்றால் துரத்தப்படும் ஆள் உட்கார்ந்து கொள்ளவேண்டும். அவன் லாக் என்று மண்டையில் தட்டிவிட்டுச் செல்வான். லாக்கிற்கு உள்ளாகாத ஆள் உட்கார்ந்திருக்கும் ஆளுக்கு வந்து கீ கொடுத்துக் காப்பாற்ற வேண்டும். இதில் ஒரு கொடுமை என்னவென்றால் அந்த ஏரியாவில் பொண்ணுங்க விளையாடினால் மட்டுமே ஒரு ஜீவன் இந்த விளையாட்டில் கலந்துகொள்ளும். 'தட் கய் இன் எவ்ரி கேங்'

வேற எதுவும் கேமிற்கு நீங்கள் அடிமையாக இருந்தால் கமெண்ட் செய்யலாமே ஃப்ரெண்ட்ஸ்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஆச்சரியம் தந்த 14 வயதுச் சிறுவனின் கண்டுபிடிப்பு

சரித்திர பாட வகுப்புக்காக தனது வயலை ஆராய்ச்சி செய்த சிறுவன் ஒருவன், இரண்டாம் உலகப் போரின்போது வீழ்த்தப்பட்ட விமானத்தின் பெரும்பாகத்தையும், விமானியின் உடல் எச்சங்களையும் கண்டுபிடித்துள்ளான்.

6_WWII_Debris.jpg

டேனியல் க்றிஸ்டியான்சென் (14) என்ற சிறுவன் டென்மார்க்கைச் சேர்ந்தவன். சரித்திர பாடத்தில் ஆர்வம் உள்ள டேனியல், பழைய இரும்புத் துண்டுகள் ஏதேனும் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில், இரும்பைக் கண்டறியும் ‘மெட்டல் டிடெக்ட்டரு’டன் தனது தந்தைக்குச் சொந்தமான வயல் வெளியில் ஆராய்ந்துகொண்டிருந்தான்.

அப்போது நிலத்தின் ஒரு பகுதியில் உலோகம் இருப்பதற்கான சமிக்ஞைகள் கிடைத்தன. ஓரிரு மீற்றர்கள் தோண்டியபோதும் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சமிக்ஞைகள் தொடர்ந்து வந்தபடியால் தன் தந்தையின் உதவியுடன் நிலத்தைத் தோண்டும் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி குறித்த நிலப்பகுதியைத் தோண்டினான்.

அப்போது, சுமார் எட்டு மீற்றர் ஆழத்தில் இரும்புச் சிதைவுகளும் மனித எலும்புகளும் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் இரண்டாம் உலக யுத்தத்தின்போது விமானம் ஒன்று விழுந்ததாகவும், அதன் பின்னர் ஜேர்மனியர்கள் அதை அப்புறப்படுத்தியதாகவும் கூறியது டேனியலுக்கு ஞாபகம் வந்தது. இது குறித்து டேனியலின் தந்தை அரச அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.

இதன் பேரில் அப்பகுதியை ஆராய்ந்த அரச ஆய்வாளர்கள், அது இரண்டாம் உலக யுத்தத்தின்போது வீழ்த்தப்பட்ட ஜேர்மனிய விமானம்தான் என்பதையும், அதில் இருந்த எலும்புக்கூடு விமானியினுடையது என்றும் உறுதி செய்தார்கள்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

'உங்கள் உடல் சுத்திகரிப்பு நிலையம் சுகமா?’ -  #WorldKidneyDay

சிறுநீரகம்... இயற்கை நமக்கு அளித்த உடல் சுத்திகரிப்பு நிலையம். அதுவும் ஒன்றல்ல, இரண்டு! உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவுக்கு அளவில் சிறியதான சிறுநீரகத்தின் செயல்பாடு உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. சிறுநீரகத்தின் சிறப்புகளையும், அவற்றின் பாதிப்புகள் குறித்த விழிப்பு உணர்ச்சியையும் மக்களிடம் ஏற்படுத்துவதற்காக 2006-ம் ஆண்டில் 'உங்கள் சிறுநீரகங்கள் நலம்தானா?’ என்ற கருப் பொருளுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் `உலக சிறுநீரக தினம்'.

உடல் சிறுநீரகம் 

 

 

 

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமையில் அனுசரிக்கப்படும் இந்த தினத்தின் 2017-ம் ஆண்டுக்கான நோக்கம்... `உடல் எடை அதிகரிப்பும் - சிறுநீரக பாதிப்புகளும்'. 2006-ம் ஆண்டில் 66 நாடுகள் அனுசரிக்க ஆரம்பித்த இந்த நாளை இரண்டே வருடங்களில், 2008-ம் ஆண்டில் 88 நாடுகள் அனுசரித்ததிலிருந்தே இந்த தினத்தின் அவசியம் தெளிவாகியிருக்கிறது.

உலக சிறுநீரக தினம்-2017: உடல் எடை அதிகரிப்பும் - சிறுநீரக பாதிப்புகளும்...

`உடல் எடைக்கும் சிறுநீரகத்துக்கும் என்ன தொடர்பு?’ என யோசிக்கலாம். உடல் எடை அதிகரிக்கும்போது, சாதாரணமாக இருப்பதைவிட சிறுநீரகம் அதிக ரத்தத்தை வடிக்கட்டி, அதிலிருந்து உடல் எடைக்குத் தேவையான அளவு வளர்சிதைப் பொருள்களைப் பிரித்தெடுக்க வேண்டியிருக்கும். அதிகமாக உழைக்கும் மெஷின் சீக்கிரமே தேய்ந்துவிடுவதைப்போல சிறுநீரகத்தின் செயல்பாடு அதிகரிக்கும்போது, நாள்பட்ட சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். அதோடு, சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரசிஸ் (மூட்டுகள் தேய்ந்து போதல்) தொடங்கி இதய அடைப்பு வரை அனைத்து உடல் உபாதைகளின் முதல் மற்றும் முக்கியக் காரணியாக‌ உடல் எடை அதிகரிப்பு பிரச்னை இருக்கிறது. எனவே, உடல் எடை அதிகரிப்பின் விளைவுகளை விளக்கி, அதற்கான தீர்வுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் இந்தக் கருப்பொருளின் நோக்கம்.

சிறுநீரகம்

சிறுநீரகத் துறை நிபுணர், டாக்டர்.வி.சந்திரசேகரன் சிறுநீரகம் தொடர்பான சில முக்கியக் கேள்விகளுக்கு இங்கே பதிலளிக்கிறார்... டாக்டர்.வி.சந்திரசேகரன்

``சிறுநீரக பாதிப்புகள் பெருகிவருவதற்குக் காரணம் என்ன?’’

`` `உலகளவில் ஆண்டுதோறும் 50 கோடிப்பேர் ஏதாவது ஒரு வகையான சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் கிட்டத்தட்ட 15 லட்சம் பேருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்கு சிறுநீரகத்தின் செயல்பாடு முற்றிலுமே நின்றுவிடுகிறது’ என்கின்றன புள்ளிவிவரங்கள். ஒரு சிறுநீரகம் முழுவதுமே பழுதடைந்து, மற்றொன்றும் 75 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருந்தாலும்கூட, 25 சதவிகிதம் சரியான நிலையில் இருக்கும் சிறுநீரகமே அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியதுதான். ஆனாலும், ஏன் இவ்வளவு பாதிப்புகள் என யோசித்தால் அதற்கு முதல் காரணம், `நாகரிகம்’ என்ற பெயரில் மாறிவரும் வாழ்க்கை முறைகளும், நஞ்சாகிவரும் உணவுப் பொருள்களும்தான்.’’

``பொதுவாக சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?’’

``சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னர் அதன் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம். உடலில் உள்ள ரத்தத்தைச் சுத்திகரித்து, தேவையான அளவுக்கு தாதுக்களையும், புரோட்டீன்களையும் மட்டும் உடலில் தக்கவைத்து, தேவையில்லாதக் கழிவுகளை சிறுநீரில் கலந்து வெளியேற்றுவதோடு மட்டும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் நின்றுவிடுவதில்லை. அத்தியாவசியமான சில ஹார்மோன்கள் உற்பத்தியிலும் இவை பங்கு பெறுகின்றன...

* உடலின் அமிலத்தன்மை மற்றும் நீர்மைத் தன்மையை சமநிலையில் வைத்திருத்தல்.
* 'ரெனின்' (Renin) புரோட்டீனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல். 
* ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கான 'எரித்ரோபாய்டின்' (Erythropoietin) என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்தல்.
* உணவிலுள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களை உறிஞ்சுவதற்குத் தேவையான செயல்நிலை வைட்டமின் டி-யைத் தயாரித்தல்.

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, அவற்றின் செயல் அலகுகளான நெஃப்ரான்கள் பாதிப்படையும்போது, இந்த அனைத்துச் செயல்பாடுகளுமே குறையத் தொடங்கும்போதுதான் `தீவிர சிறுநீரக நோய்’, `நாள்பட்ட சிறுநீரக நோய்’ ஆகியவை ஏற்படுகின்றன. இவற்றின் கடைசிக்கட்டம்தான் `ESRD’ எனப்படும் இறுதிநிலை சிறுநீரக நோய். இந்த நோய்களுக்கு சிகிச்சை அளித்தாலும்கூட பழையநிலைக்கு சிறுநீரகத்தைக் கொண்டுவர முடியாது. சிறுநீரகக் கற்கள், சிறுநீரகத் தொற்று போன்ற சிகிச்சையால் குணமாகக்கூடிய சில பிரச்னைகளும் இன்று அதிகளவில் ஏற்படுகின்றன.

சிறுநீரகம்

தீவிர சிறுநீரக நோய்

ஒரு சில நாள்களில், ஒரு சில மாதங்களில்... ஏன் ஒரு சில மணி நேரங்களிலேயே எந்த முன் அறிகுறிகளும் இன்றி ஏற்படுவதுதான் தீவிர சிறுநீரக நோய். ஒரு சில நோய்களின் பக்க விளைவுகள், டாக்ஸின்களின் செயல்பாடு, திடீரென ஏற்படும் அதிக நீரிழப்பு போன்றவை இதற்கான காரணங்கள். இவை தவிர, பிறப்பிலேயே குழந்தைகளின் சிறுநீரகத்தில் ஏற்படும் சில நோய்களும் தீவிர சிறுநீரக நோயை ஏற்படுத்தும். சில சமயங்களில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையிலிருப்பவர்களுக்கேகூட
இந்தப் பாதிப்புகள் திடீரென ஏற்படும்.

நாள்பட்ட சிறுநீரக நோய் 

கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரைநோய், அதிக உடல் எடை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களாலும், வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கக்கூடிய சில ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வதாலும் சிறிது சிறிதாக சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்துகொண்டே வந்து 90% அளவுக்கு பாதிக்கப்பட்ட பின்னர்தான் அறிகுறிகளே வெளிப்படத் தொடங்கும்.

இறுதிநிலை சிறுநீரக நோய்

`ஈ.எஸ்.ஆர்.டி’ (ESRD - End Stage Renal Disease) எனச் சொல்லப்படும் இந்த நிலையில், சிறுநீரகம் தனது செயல்பாட்டை முழுவதுமே நிறுத்திவிடும். டையாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே நோயாளியைக் காப்பாற்ற முடியும்.

சிறுநீரகக் கற்கள்

நாம் குடிக்கும் தண்ணீரிலும், சாப்பிடும் உணவிலும் உள்ள கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட் போன்ற பல தாது உப்புகள் உணவு செரித்த  பிறகு சிறுநீர் வழியே வெளியேறிவிடும். ஆனால், இவற்றின் அளவு ரத்தத்தில் அதிகமாகும்போது, சிறுநீரில் வெளியேறுவதற்குச் சிரமப்படும். அப்போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து, கல் போலத் திரளும். சிறு கடுகு அளவில் ஆரம்பித்துப் பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும். இதுதான் சிறுநீரகக் கல். இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வழக்கமாக பெண்களைவிட ஆண்களுக்கே இது அதிக அளவில் தோன்றுகிறது. சிறுநீரகக் கற்களை அதன் தன்மையைப் பொறுத்து பல வகைகளாகப் பிரிக்கலாம். தக்காளியில் உள்ள ஆக்சாலிக் அமிலத்தால், ஆக்சலேட் கற்கள் உண்டாகின்றன. பால், தயிர் போன்ற‌ கால்சியம் அதிகமான உணவுகள் மற்றும் கால்சியம் சத்து மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போதும் அளவுக்கதிகமான கால்சியம் சிறுநீரகத்தில் கற்களாக படிந்துவிடுகிறது. மேலும், அதிக மசாலா சேர்த்த உணவு, புளிப்பு சுவை, இறைச்சி, முட்டை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, உணவிலும் குடிநீரிலும் கால்சியம், குளோரைடு மிகுதியாக இருப்பது, சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுவது ஆகியவை சிறுநீரகக் கல் தோன்றுவதற்கு முக்கியக் காரணங்கள்.’’

``சிறுநீரக பாதிப்புகளை எப்படிக் கண்டறியலாம்?’’

``சிறுநீரகத்தின் செயல்பாடு 90% குறைந்து போகும் வரையிலும்கூட பெரும்பாலானவர்களுக்கு பாதிப்புக்கான எந்த அறிகுறியும் தெரிவதில்லை. சில நோயாளிகளின் சிறுநீரின் அளவு எப்போதும்போல சரியாகவே இருக்கும். ஆனால், பரிசோதனையில் பார்த்தால் கிரியாட்டினைன், யூரிக் ஆசிட் அளவுகள் உயர்ந்திருக்கும். எனவே, மூன்று மாதத்துக்கு ஒரு முறை மருத்துவரின் பரிந்துரையின்
பேரில் சிறுநீரக செயல்பாட்டைக் கண்டறிய உதவும் பரிசோதனைகளையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்டிப்பாகச் செய்துகொள்ள வேண்டும். கீழ்க்கண்ட அறிகுறிகள் தெரிந்தால், மருத்துவரிடம் உடனே சென்றுவிடவும்.

* அடிவயிற்றில் வலி, முதுகுவலி, வலி மற்றும் எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறுதல். சில நேரங்களில் ரத்தமும் வெளியேறுதல்.

* குறிப்பிட்ட அளவுக்கு நீரை வெளியேற்ற முடியாததால், மூட்டுகளில் நீர் தேங்கி வீக்கம் ஏற்படுதல்.

* யூரியா, யூரிக் ஆசிட் போன்ற நைட்ரஜன் கழிவுகள் உடலில் தங்குவதால் அடிக்கடி வாந்தி எடுத்தல்.

* பசியின்மை மற்றும் அசதி.

* கட்டுப்படுத்த முடியத அளவுக்கு ரத்த அழுத்தம் உயருதல்.

* மூச்சு வாங்குதல்.

* வைட்டமின் டி உற்பத்திக் குறைவதால், மூட்டுகளில் வலி ஏற்படுதல்.

* எரித்ரோபாய்டின் ஹார்மோனின் உற்பத்தி குறைந்து, அதனால் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறையும்போது கண்கள் வெளுத்துப் போய் ரத்தசோகை ஏற்படும்.’’

 

சிறுநீரக சிகிச்சை 

``என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?’’

``சிறுநீரகம் பாதித்ததற்கான அறிகுறிகள் வெளிப்பட்டு, மருத்துவரை நாடும்போது அந்த அறிகுறிகளுக்கு ஏற்ப முதலில் மருந்துகள் அளிக்கப்படுகின்றன. மருந்துகளால் குணப்படுத்த முடியாத நிலை வரும்போதுதான் டையாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. நோயின் தீவிரத்துக்கு ஏற்ப டையாலிசிஸ் செய்யக்கூடிய முறை, செய்துகொள்ளவேண்டிய கால அளவு அனைத்துமே மாறும். பொதுவாக ஒன்று விட்டு ஒரு நாள், அதாவது வாரத்துக்கு மூன்று முறை (மொத்தமாக 12 மணி நேரம்) பெரும்பாலானவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.’’

``சிறுநீரகத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன?’’

``வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற அளவில் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ரத்த சர்க்கரையின் அளவு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள். சுய மருத்துவம் மற்றும் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் உட்கொள்ளுதல் கட்டாயம் கூடாது. புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால் அருந்துதல் நோயின் வீரியத்தை இன்னும் அதிகமாக்கும். எனவே, கண்டிப்பாக இந்தப் பழக்கங்களைக் கைவிட வேண்டும். சிறுநீர் நோய்த்தொற்று அடிக்கடி ஏற்படும்போது, அதுவே சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். எனவே, சுய சுத்தம் மிக அவசியம்.’’

பழங்கள்

 

``சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் உணவுகள் என்னென்ன?’’

``அவரை விதை வடிவில் உள்ள சிறுநீரகத்துக்கு அவரைக்காய் ஆகாது. இதில் அதிக பொட்டாசியம் மற்றும் யூரிக் அமிலம் இருப்பதுதான் காரணம். சிறுநீரக பாதிப்புள்ளவர்கள் மற்றும் இதய பாதிப்புள்ளவர்கள் அவரைக்காயை நீரில் வேகவைத்து, அந்தத் தண்ணீரை நீக்கிவிட்டு, அவரைக்காயை எடுத்துக்கொள்ளலாம். `சிறுநீரக கற்களில் பாதிப்புள்ளவர்களுக்கு உணவில் தக்காளி விதைகளை மட்டும் நீக்கினால் போதும்’ என்பது உண்மையல்ல. ஏனெனில், தக்காளியின் தோலிலுள்ள ஆக்சாலிக் அமிலம்தான் அதிகளவில் ஆக்சலேட் கற்களை உண்டாக்கும். எனவே, தக்காளி பயன்படுத்துவதையே குறைத்துக்கொள்ள வேண்டும். அதிக உப்பு, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, உப்பின் உபயோகத்தைக் குறைத்துவிடுங்கள். அதிகமாக புரோட்டீன் உணவுகள் உண்பதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழ‌ங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறுநீரகத் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க, தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். சிட்ரஸ் பழ வகைகளான எலுமிச்சை, ஆரஞ்சுப்பழச் சாறு போன்றவை தொற்றைக் குறைக்கும்.’’

``தண்ணீர் குடிப்பதில் கவனம் தேவையா?’’

``நிச்சயமாக. அதிகமான வெப்பத்தின் தாக்குதலில் வசிக்கும் நாம் தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதுதான் சரியான அளவு. ஆனாலும், சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது சிறுநீரை உற்பத்தி செய்யும் திறன் குறைந்துவிடும். எனவே, அதற்கேற்ப தண்ணீர் குடிப்பதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த அளவுக்கு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த நேரங்களில் அதிகமான தண்ணீர் குடிக்கும்போது அது, மூட்டுகளில் மட்டும் தங்காமல் நுரையீரலுக்குள் சென்று நீர்கோத்து பாதிப்புகள் ஏற்படுத்தும் அபாயம் உணடு.’’ 

குறிப்பிட்ட உணவு வகைகள், முறையான உடற்பயிற்சி, தகுந்த மருத்துவப் பரிசோதனை... இவற்றைக் கடைப்பிடித்தாலே போதும்... நீங்கள்தான் ஆரோக்கியத்தின் அதிபதி!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

‘‘மரியாதையா காரை நிறுத்துங்க!’’ - தோனியின் ஹம்மர் காரை மறித்து ரசிகை மிரட்டல்

‘இவர்களில் யாருக்கு ரசிகர்கள் அதிகம்?’ என்று ஒரு சின்ன சர்வே நடத்தினால், நிச்சயம் தோனிக்குத்தான் டிக்குகள் அதிகம் விழும். அந்தளவு இந்தியா முழுக்க தோனிக்கு ரசிகர்கள் அதிகம். அதேபோல், ரசிகர்களுக்கு மரியாதை செய்வதிலும் தோனியை மிஞ்ச ஆளில்லை. ஆனால், ‘‘கொஞ்ச நாட்களாக கேப்டன் முன்ன மாதிரி செல்ஃபி எடுக்கிறதில்லை; ஆட்டோகிராஃப் போடுறதில்லை!’’ என்று தோனி மீது ரசிகர்கள் செல்லமாகப் புகார்ப் பத்திரம் வாசிக்கிறார்கள். அண்மைக்காலமாக இந்தியாவின் தோல்விகள், கேப்டன் பதவி இழப்பு, ஜார்கண்ட் டீம் மாற்றம் போன்ற காரணங்கள், ஒருவேளை ரசிகர்கள் மீது அவருக்கு இருந்த பிரியம் குறையக் காரணமாக இருக்கலாம். இருந்தும் தோனியை விடுவதில்லை ரசிகர்கள். அவர் காரை விரட்டிச் சென்று, வீட்டில் கால் கடுக்கக் காத்திருந்து ரசிகர்கள் செல்ஃபி எடுத்த சம்பவங்களெல்லாம் உண்டு. ஒவ்வொருமுறையும் மேட்ச்சை முடித்துவிட்டு, தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு வந்து வீட்டுக்குச் செல்வதற்குள் தோனியின் காரைத் துரத்தும் வாகனங்களால் டிராஃபிக் நெரிசலே ஏற்படுமாம். 

 

தோனி

அப்படி ஒரு சம்பவத்தை தனி மனுஷியாக ஏற்படுத்தி, தோனிக்கும் - ராஞ்சி காவல்துறையினருக்கும் கிலியை ஏற்படுத்தியிருக்கிறார் ரசிகை ஒருவர். ஒவ்வொரு போட்டி முடிந்தபிறகும், ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா விமான நிலையத்துக்குத்தான் தோனி வந்து இறங்குவார். தோனியிடம் கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட கார்கள் இருந்தாலும், அவரின் ஆல்-டைம் ஃபேவரைட் ஹம்மர்தான். ‘‘ராஞ்சி இல்லை; இந்தியாவில் எந்த இடத்துக்கும் ஹம்மர்தான் சூட் ஆகும்’’ என்று தோனியே சொல்வார். பிர்ஸா முண்டா விமான நிலையத்தில் தோனி இறங்கும்போது, பார்க்கிங்கில் ரெடியாக ஹம்மர் நிற்கும். அதேமாதிரி, ஹம்மரில் செல்ஃப் டிரைவிங்தான் தோனிக்கு இஷ்டம். 

அன்றும் அதேபோல் பார்க்கிங்கில் வந்து ஹம்மரில் ஏறி காரைக் கிளப்பியவர், கொஞ்ச தூரம்கூட நகரவில்லை. தடாலென சடன் பிரேக். முன்னால், கடுங்கோபத்துடன் ஒரு ரசிகை, ‘‘மேரே ஸாத் செல்ஃபி லே.. நஹி தோ, மேய்ன் நஹி ஜாவூங்கா! (என்கூட செல்ஃபி எடுத்துட்டுப் போங்க; இல்லேனா நான் இந்த இடத்தை விட்டுப் போகமாட்டேன்!)’’ என்று 2,800 கிலோ எடை கொண்ட புயல்போன்ற ஹம்மரை, தன் பூப்போன்ற கரங்களால் தடுத்தே விட்டாராம். ‘‘தயவுசெஞ்சு வழி விடுங்க..’’ என்று தோனி கெஞ்சியும், ரசிகை கேட்கும் மூடில் இல்லை. உடனடியாக செக்யூரிட்டிகள் வந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், அந்த ரசிகையின் கைப்பை கீழே விழ, அதன் மீது தனது ஹம்மர் டயர்களை ஏற்றி இறக்கிச் சென்றது பரபரப்பாகி விட்டது. பத்திரிகையாளர்கள் சூழ, ‘‘ஒண்ணும் பிரச்னை இல்லை; இதை இத்தோட விட்ருங்க! எல்லாம் ஓகே!’’ என்று ‘சிக்ஸர்’ அடிப்பதுபோல் கூலாகப் பதில் சொல்லிக் கிளம்பிவிட்டாராம் தோனி.

 

dhoni

 

இப்போது போலீஸின் கிடுக்கிப் பிடி வளையத்தில் இருக்கிறார் அந்த ரசிகை. வேறு ஏதாவது காரணமாக இருக்குமோ என்ற தொனியில், அவர் பெயர் மற்றும் மற்ற விவரங்களைச் சொல்ல மறுத்து விட்டது காவல்துறை. எப்படியாவது கேப்டன் தோனியுடன் ஒரு செல்ஃபி அல்லது ஆட்டோகிராஃப் ஏதாவது ஒன்றுதான் தனது குறிக்கோளாம் அந்தப் பெண்ணுக்கு. இதற்காக டெல்லியில் இருந்து கொல்கத்தா வரை தோனியை ஃபாலோ செய்து வந்திருக்கிறாராம். அவர் வந்த விமானத்திலேயே பயணித்து, விமானத்திலும் அவரைச் சந்திக்கப் பலமுறை முயற்சி செய்தாராம். ப்ச்!

விமான நிலையத்துக்கு வெளியே பத்திரிகையாளர்களிடம், ‘‘அவர் வீட்டுக்கும் போவேன். எப்படியும் அவருடன் செல்ஃபி எடுக்காமல் ஓயமாட்டேன்!’’ என்று வீரச்சபதம் இட்டாராம் ரசிகை.

ஒரு செல்ஃபிக்கு இத்தனை போரா? பெரிய அக்கப்போராகவல்லவா இருக்கிறது!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

“உங்கள் செல்பேசியிலும் தொலைக்காட்சியிலும் சிஐஏ”: விக்கிலீக்ஸ்

சிஐஏ நிறுவனத்தின் அதிகபட்ச முக்கியத்துவம் வாய்ந்த சிஐஏ இணைய புலனாய்வு மையத்தின் ஏழாயிரம் ஆவணங்கள் என்று விகிலீக்ஸ் கூறும் தரவுகளை விக்கிலீக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


தான் தொடர்ந்து வெளியிடவுள்ள தகவல்களின் ஒரு பகுதியே இதுவென்றும் அது கூறுகிறது.


சுயாதீனமாக உறுதிசெய்யப்படாத இந்த ஆவணங்கள், பொதுமக்களின் மின்னணு உபகரணங்களான செல்பேசிகள், கணினிகள், இணையத்தொடர்புடைய தொலைக்காட்சிகளுக்குள் சிஐஏ எப்படியெல்லாம் ஊடுறுவி வேவு பார்க்கிறது என்கிற உத்திகளை விரிவாக விவரிக்கிறது.


"அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை சட்டப்படி மேற்கொள்ளும் வெளிநாட்டு ரகசிய புலனாய்வின் உத்திகள், தொழில்நுட்பம், முறைமைகள் மற்றும் உபகரணங்கள் என எல்லாவற்றிலும் அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தகவல் வெளியீடு இது. வேறு வார்த்தையில் சொல்வதானால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்பு இதான் பாதிக்கப்பட்டுள்ளது”என்கிறார் சிஐஏ அமைப்பின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் மைக்கல் ஹைடன்.


டெலிகிராம், சிக்னல், வாட்ஸப் போன்ற செல்பேசி செய்தியனுப்பும் செயலிகளின் பாதுகாப்புத் தடுப்பை ஊடுறுவி சிஐஏ தகவல்களை சேகரிப்பதாக விக்கிலீக்ஸின் இந்த ஆவணங்கள் குறிப்புணர்த்துகின்றன.


இந்த செயலிகள் யாராலும் ஊடுறுவ முடியாத அளவுக்கு அதிகபட்ச பாதுகாப்பானவை என்று நம்பும் பலர் இவற்றின் மூலம் அதிமுக்கிய தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.


சிஐஏவின் எதிர்கால திட்டங்களுக்கு எல்லையே இல்லை என்பதை இந்த ஆவணங்கள் காட்டுவதாக கருதப்படுகிறது.


தானியங்கி கார்களை கொலைக்கருவிகளாக பயன்படுத்துவது முதல் தொலைக்காட்சிகள் மூலம் வீட்டை ஒட்டுக்கேட்பதுவரை பல திட்டங்கள் அதனிடம் இருப்பதாக இவை சொல்கின்றன.


தொலைக்காட்சி மூலம் ஒட்டுக்கேட்கும் தொழில்நுட்பம் பிரிட்டன் ரகசிய புலனாய்வுத்துறை துணையுடன் உருவாக்கப்பட்டதாக விகிலீக்ஸ் சொல்கிறது.

  • தொடங்கியவர்

சிவசேனாவைக் கண்டித்து கேரளாவில் 'Kiss of Love" போராட்டம்

சிவசேனா அமைப்பைக் கண்டித்து கேரளாவின் மரைன் டிரைவ் பகுதியில் மாணவர்கள் அமைப்பினர் 'Kiss of Love" போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் தினத்தன்று மரைன் டிரைவ் பகுதியில் உள்ள பூங்காவில் இருந்த சிவசேனா கொடியுடன் வந்த சிவசேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் காதல் ஜோடிகளை அடித்து அங்கிருந்து விரட்டினர்.

kiss_20282.jpg

அவர்கள் அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டபோது, காவல்துறை அதிகாரியும் அருகில் இருந்தார். இருப்பினும் ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் கேரளா முழுவதும்  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவருடைய பேஸ்புக்கில், 'இதுபோன்ற சம்பவங்களைக் காவல்துறை வேடிக்கை பார்க்கக் கூடாது. சில அமைப்புகள் ஆணாதிக்க மனநிலையில் இருப்பதாகவும், அவர்கள் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது' என்று கருதுகின்றனர் என்று பதிவிட்டுள்ளார். இன்று சிவசேனாவின் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கேரள மாணவ, மாணவிகள் 'Kiss of Love" என்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தின்போது, பொது இடத்தில் ஆண்களும் பெண்களும் ஒருவொருக்கொருவர் முத்தங்களை பறிமாறிக் கொண்டனர்.

 

ஒரு ஐபோன் பேனருக்காக 17 மரங்களுக்கு விஷம் வைக்கப்பட்ட கொடுமை!

Bengaluru hoarding

பெங்களூருவின் அவுட்டர் ரிங் சாலையில், ஒரு விளம்பரப் பதாகை வைப்பதற்காக 17 மரங்கள் கொல்லப்பட்டுள்ளன. 

மார்ச் 2-ம் தேதியன்று, பெங்களூருவில் ஒரு விளம்பரப் பதாகை நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக மரங்கள் பல அழிக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு அரசு தரப்பு அதிகாரிகள் விரைந்துள்ளனர் . கிட்டத்தட்ட 17 மரங்களின் வேரில் அமிலம் ஊற்றப்பட்டு, அவைகள் கொல்லப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்தனர் அதிகாரிகள். 

'அமிலம் ஊற்றி கொல்லப்பட்ட மரங்களில் மூன்று மரங்களை மட்டுமே எங்களால் காப்பாற்ற முடிந்தது. மேலும், 13-க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரேயொரு விளம்பரப் பதாகைக்காக செய்யப்பட்டுள்ளது.' என்று அரசு தரப்பு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்தப் பதாகை தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சீக்கிரம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

(நன்றி: The Newsminute)

 

மெசஞ்சரிலும் 'வாட்ஸ்அப்' ஸ்டேட்டஸ் வசதி

ஃபேஸ்புக்கின் சாட் அப்ளிகேஷனான மெசஞ்சரில் 'மெசஞ்சர் டே' வசதி வெளியாகியுள்ளது.

Facebook Messenger Day

வாட்ஸ்அப்பில் சமீபத்தில் அறிமுகமான 'ஸ்டேட்டஸ்' வசதிதான் இது. முதலில்  இன்ஸ்டாகிராமில் சேர்க்கப்பட்ட இந்த வசதி, பின்னர் வாட்ஸ்அப்புக்கு வந்தது. இப்போது மெசஞ்சர். அடுத்து ஃபேஸ்புக் ஆப்பிலேயே வருமாம். ஸ்நாப்சாட்டில் இருந்து இந்த வசதியை ஃபேஸ்புக் 'உருவியதாக' பெரும் விமர்சனம் இருந்து வருகிறது. இந்நிலையில், மெசஞ்சரிலும் இந்த வசதி வந்திருப்பது டெக் ஆர்வலர்களிடைய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 

 

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று

மார்ச் – 09

Tokyo_kushu_1945-3

1796 : நெப்­போ­லியன் போனபார்ட் தனது முதல் மனைவி ஜோசப்­பினை திரு­மணம் செய்தார். 


1842 : அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்தில் தங்கம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அங்கு நடை­பெற்ற  ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்ட முத­லா­வது தங்­கக்­கண்­டு­பி­டிப்பு இது­வாகும். 


1847 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்கொட் தலை­மையில் மெக்­சிக்­கோவைத் தாக்­கினர்.


1919: எகிப்தில் 1919 புரட்சி வெடித்­தது.


1945 : இரண்டாம் உலகப் போரில் அமெ­ரிக்க பி-29 போர் விமா­னங்கள் டோக்­கி­யோவில் தீவி ர குண்­டுத்­தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தன. 


1956 : ஜோர்­ஜி­யாவில் இடம்­பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இரா­ணு­வத்­தி­னரால்  அடக்­கப்­பட்­டது.


1957 : அமெ­ரிக்­காவின் அலாஸ்­காவில் அண்ட்­றி­யானொவ் தீவு­களில் ஏற்­பட்ட 8.3 ரிச்டர் அள­வி­லான பூகம்­பத்தால் பலத்த சேதமும் சுனாமியும் ஏற்­பட்­டத


1959 : நியூ­யோர்க்கில் நடை­பெற்ற அமெ­ரிக்க சர்­வ­தேச பொம்மை சந்­தையில் பார்பி பொம்மை முதன் முத­லாக விற்­ப­னைக்கு வந்­தது. 


1976 : இத்­தா­லியின் டிறெண்டோ என்ற இடத்தில் ஆகா­யத்தில் நகர்ந்து கொண்­டி­ருந்த கேபிள் வாகனம் கீழே விழுந்து 15 சிறார்கள் உட்­பட 42 பேர் கொல்­லப்­பட்­டார்கள்.


1986 : விபத்­துக்­குள்­ளான சலெஞ்சர் விண்­ணோ­டத்தின் அழிந்த சிதை­வு­களை ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஆழ்­க­ட­லோ­டிகள் கண்­டு­பி­டித்­தனர். இறந்த ஏழு விண்­வெளி வீரர்­க­ளி­னதும் உடல்கள் உள்ளே இருந்­தன.


2006 : சனியின் துணைக்­கோ­ளான என்­செ­லா­டசில் திரவ நிலையில் நீர் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.


2011 : நாசாவின் டிஸ்­க­வரி விண்­வெளி ஓடம் தனது 39 ஆவதும் கடை­சி­யு­மான பயணத்தின் பின் தரையிறங்கியது.


2015 : ஆர்ஜென்டீனாவில் இரு ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்டதால் 10 பேர் உயிரிழந்தனர். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

57.71 லட்சத்துக்கு 2017 மெர்சிடீஸ் பென்ஸ் E-க்ளாஸ்: என்ன ஸ்பெஷல்? #NewEClass

 

மெர்சிடீஸ் பென்ஸ்

V213 என்ற புனைப்பெயரைக் கொண்ட புதிய E-க்ளாஸ் காரைக் களமிறங்கியுள்ளது மெர்சிடீஸ் பென்ஸ். இந்தக் காரின் முக்கிய போட்டியாளர்களான XF - S90 ஆகிய கார்களின் அடுத்த தலைமுறை மாடல் ஏற்கெனவே அறிமுகமாகிவிட்டதுடன், 5 சீரிஸ் காரின் முற்றிலும் புதிய மாடலும் விரைவில் வர உள்ளது அறிந்ததே. E200 பெட்ரோல் - 57.71 லட்சம் மற்றும் E350d டீசல் - 71.40 லட்சம் (விலைகள் அனைத்தும் சென்னை எக்ஸ் ஷோரும்) என இரு வேரியன்ட்டில் வெளியாகியிருக்கிறது E-க்ளாஸ். சீனாவுக்கு அடுத்தபடியாக, E-க்ளாஸ் காரின் Long WheelBase மாடல் விற்பனை செய்யப்படுவது இந்தியாவில் மட்டும்தான்! சீனாவில் LHD என்றால், இந்தியாவில் RHD செட்-அப் இருக்கிறது.

 

மெர்சிடீஸ் பென்ஸ்

காரைப் பார்க்கும்போது அதிக இடவசதியை எதிர்பார்க்கலாம் என்பதுடன், டிரைவர் வைத்து ஓட்டுபவர்களுக்கு ஏற்ற சாய்ஸாக இது மாறியுள்ளதும் தெரிகிறது. 2017 E-க்ளாஸ் கார் பார்ப்பதற்கு, S-க்ளாஸ் காரை நினைவுபடுத்துவது பெரிய ப்ளஸ். இதன் கேபினும் அப்படியே அமைந்திருக்கிறது; சீனாவில் இருக்கும் E-க்ளாஸ் காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருந்த நிலையில், இந்திய E-க்ளாஸ் காரில் அனலாக் டயல்கள் - TFT டிஸ்பிளே உடனான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்தான் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கக் கதவு மற்றும் விண்ட்ஷீல்ட்டில் Blind, பனரொமிக் சன்ரூஃப் இருந்தாலும், பின்பக்க இருக்கைக்கான கப் ஹோல்டர் - மசாஜ் வசதி - இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டத்துக்கான கன்ட்ரோல் ஆகியவை இல்லாதது நெருடல்! 

 

மெர்சிடீஸ் பென்ஸ்

E200-ல் இருப்பது, 184bhp பவர் - 30kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின். இதுவே E350 என்றால், 258bhp பவர் - 62kgm டார்க்கை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் இன்ஜின். இந்த இரு இன்ஜின்களும், ரியர் வீல் டிரைவ் செட்-அப் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பைக் கொண்டுள்ளன. இந்த காரின் பாதுகாப்புக்காக ABS, EBD, TVS, ESP, PRE-SAFE, AIRMATIC சஸ்பென்ஷன், 360 டிகிரி கேமரா - Parking Pilot சிஸ்டம், டிராக்‌ஷன் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா - சென்ஸார், 7 காற்றுப்பைகள், Attention Assist ஆகியவை இடம்பெற்றுள்ளன. E-க்ளாஸ் காரின் அடுத்த தலைமுறை மாடல், லக்ஸூரி செடான் செக்மென்ட்டின் தலைவராக மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம்! 


மெர்சிடீஸ் பென்ஸ் E-க்ளாஸ் - சில குறிப்புகள்!

பிரதான போட்டியாளர்கள்: ஆடி A6, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஜாகுவார் XF, வால்வோ S90 

இரண்டு வேரியன்ட்கள்:  E200 (பெட்ரோல்) மற்றும் E350d (டீசல்)

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம், இந்தியாவில் விற்பனை செய்துள்ள கார்களில், 34% E-க்ளாஸ் கார்தான்!

தமிழ்நாட்டில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான E-க்ளாஸ் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.

E-க்ளாஸ் அறிமுகமாகி, ஒரு வாரமே ஆகியிருந்தாலும், இந்தியா முழுவதிலும் இருந்து 500-க்கும் அதிகமான புக்கிங்குகளைப் பெற்றிருக்கிறது.

வெறும் 48 மாதங்கள்: E-க்ளாஸ் காரைத் தயாரிப்பு நிலைக்குக் கொண்டு வருவதற்குத் தேவைப்பட்ட நேரம்.

உலக கார் சந்தையில், 20 ஆண்டுகளாக இருந்துவரும் E-க்ளாஸ், தற்போது 10வது தலைமுறை மாடல் வெளிவந்திருக்கிறது.

இந்தியாவில் 5 தலைமுறை E-க்ளாஸ் கார்களை விற்பனை செய்துள்ளது பென்ஸ்.

உலகளவில் 1.30 கோடி E-க்ளாஸ்  கார்கள் விற்பனையாகியுள்ளன; இதில் இந்தியாவில் பங்கு 34 ஆயிரம் கார்கள்!

இந்த காரின் 65% பாகங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை; மேலும் Made In India, For India என்ற கோட்பாடுக்கு ஏற்ப புனேவில் இது உற்பத்தியாகிறது.

RHD செட்-அப்பில், LWB உடன் இந்தியாவுக்கு எனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட முதல் பென்ஸ் கார் E-க்ளாஸ் தான்!

பழைய காருடன் ஒப்பிடும்போது, 204மிமீ கூடுதல் வீல்பேஸ் மற்றும் 184மிமீ கூடுதல் நீளத்தைப் பெற்றிருக்கிறது புதிய E-க்ளாஸ்.

உலகத்திலே முதன்முறையாக, ஸ்டீயரிங் வீலில் Touch Sensitive Touch Control பயன்படுத்தப்பட்டிருப்பது E-க்ளாஸ் காரில்தான்!

மேலும் E-க்ளாஸ் காரின் வரலாற்றிலே, 37 டிகிரி சாய்மானம் மற்றும் மெமரியுடன் கூடிய பின்பக்க இருக்கை, Air Body Control, 12.3 இன்ச் டச் ஸ்கிரீன், Park Pilot வசதி, 64 கலர்களுடன் கூடிய Ambient Lighting, 13 ஸ்பீக்கர் உடனான Burmester சவுண்ட் சிஸ்டம், 9G-Tronic ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை முதன்முறையாக, இந்த 10வது தலைமுறை E-க்ளாஸ் காரில் இடம்பெற்றுள்ளன!

லக்ஸூரி கார்களிலே இதுவரை இல்லாத அம்சமாக, அசத்தலான சர்வீஸ் பேக்கேஜ்களைக் கொண்டிருக்கிறது புதிய E-க்ளாஸ். அதாவது, இரண்டு வருடங்களுக்கு 64,700 ரூபாய் - பெட்ரோல் E-க்ளாஸ்; இரண்டு வருடங்களுக்கு 94,400 ரூபாய் - டீசல் E-க்ளாஸ்.

www.vikatan.com

  • தொடங்கியவர்

புறாவிடு தூது: காற்றின் மாசைக் குறைக்க உதவுமா?

நகரங்களின் பொதுப் பூங்காக்களில் புறாக்களின் அட்டகாசம் பலருக்கு கோபத்தை தந்திருக்கலாம்.


ஆனால் அந்த புறாக்கள் நகரின் காற்று மாசைக்குறைக்க உதவப்போகின்றன என்பதை அறிந்தால் அந்த கோபம் குறையலாம்.


ஒரு காலத்தில் காதலுக்கு தூதுபோன புறாக்களை காற்று மாசடைதலைத் தடுக்க இப்போது விஞ்ஞானிகள் பயன்படுத்த திட்டமிடுகின்றனர்.


நெரிசல் மிகுந்த நகர கட்டிடங்களுக்கு மேலே காற்றின் தரத்தை அறிய புறாக்களை விஞ்ஞானிகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மார்ச் 10
 
 

article_1425966404-ship120.jpg1629: இங்கிலாந்து மன்னன் 2 ஆம் சார்ள்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு ஆட்சியை தனது சுய கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆரம்பித்தான். இந்நிலை 11 வருடகாலம் நீடித்தது.

1876: அலெக்ஸாண்டர் கிறஹம் பெல் முதலாவது வெற்றிகரமான தொலை அழைப்பை மேற்கொண்டார்.

1906: பிரான்ஸில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் 1099 பேர் பலியாகினர்.

1911: இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில், மொத்தத் தொகையான 4,092,973இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.

1922: பிரித்தானிய ஆட்சியாளர்களால் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். 2 வருங்களின் பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார்.

1933: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 115 பேர் பலி.

1945: 2 ஆம் உலகப் போரின் போது அமெரிக்க விமானங்கள் ஜப்பானிய பாரிய குண்டுத்தாக்குதல்களை நடத்தின. இதனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்களாவர்.

1959: திபெத்தில் தலாய் லாமா சீனப்படைகளால் கைது செய்யப்படலாம் எனக் கருதப்பட்டதால் அவரை சூழ 3 லட்சம் திபெத்தியர்கள் அரணாக திரண்டனர்.

1969: அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கை கொன்றவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

1970: வியட்நாம் போர் - அமெரிக்கத் தளபதி ஏர்னெஸ்ட் மெடினா வியட்நாமில் 1968 இல் நிகழ்த்திய மை லாய் படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டான்.

1977: யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

1982: கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன.

1990: ஹெயிட்டியில் இடம்பெறற இராணுவப் புரட்சியில் புரொஸ்பர் அவ்ரில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

2003: விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல், இலங்கை கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 11 போராளிகள் பலி.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நொடிக்கு நொடி வெற்றியைப் பற்றி மட்டுமே சிந்தியுங்கள்! #MorningMotivation

Morning Motivation

ஒரு சின்ன உரையாடலுடன் இந்தக் கட்டுரையை துவங்கலாம் என நினைக்கிறேன். நீங்கள் தயாரா!? 

"வெற்றி ஒருபக்கம் பக்கம் இருக்கட்டும், முதலில் உங்களுக்கான இலக்கை தீர்மானித்துவிட்டீர்களா?"

"இலக்கை அடைவதற்காக தினமும் எவ்வளவு நேரத்தை செலவிடுகிறீர்கள்?"

"இலக்கை தீர்மானித்து செயல்பட ஆரம்பித்ததும் பின்வாங்க நினைத்து இருக்கிறீர்களா?"

பதில்களை மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். நம்மில் பல பேர் இந்த கேள்விகளை நிறைய இடங்களில் எதிர்கொண்டிருக்கலாம். முதல்முறை இந்தக் கேள்விகளை எதிர்கொள்ளும் பொழுது நிச்சயம் பதில் சொல்ல நேரம் எடுத்துக் கொண்டிருப்போம் தானே!? இந்தக் கேள்விகளுக்கான தெளிவான பதில்களை நாம் வைத்திருக்கும் பட்சத்தில் வெற்றிகளைக் குறித்த எந்த சந்தேகமும் தேவையில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.    

"இலக்குகளும் - தெளிவான திட்டமிடல்களும்"

உலகமே வெற்றி என்ற ஒற்றை மந்திரச் சொல்லை மனதில் வைத்துதான் இயங்கி கொண்டிருக்கிறது. நன்றாக யோசித்துப் பாருங்களேன்; உங்களது ஒவ்வொரு செயலும் உங்களின் வெற்றியை நோக்கியதாக மட்டும்தான் இருக்கும். அது சொந்த வீடு கட்டுவதாக இருக்கலாம், ஒரு கார் வாங்குவதாக இருக்கலாம், அல்லது லட்சங்களில் கிடைக்கும் சம்பளத்தை உதறிவிட்டு ஊருக்கு போய் விவசாயம் பார்க்க வேண்டும் என்பதாகக் கூட இருக்கலாம். ஆனால் உங்களது மனதில் இலக்கை தீர்மானித்துவிட்ட அந்த நொடியிலிருந்தே வெற்றியை கொண்டாட தயாராகிவிட்டீர்கள் என்றுதானே அர்த்தம். இலக்கு என ஒன்று இருந்தால் தானே வெற்றி சாத்தியப்படும் என்ற நிதர்சனம் புரிந்தவர்கள் மட்டுமே சாதனையாளர்களாக வரலாற்றில் இடம்பெற்று இருக்கிறார்கள். வெற்றிக்காக முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகளைப் பற்றி தெளிவான திட்டமிடல் இருந்தால் மட்டுமே அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர முடியும். அதனால் இலக்குகளை தீர்மானிக்கும் போதே அதை அடைவதற்கான தெளிவான திட்டமிடலை வகுத்துக் கொண்டு அதை செயல்படுத்த ஆரம்பித்து விடுங்கள்.

நிலா என்ற இலக்கை நிர்ணயித்ததால் தானே மனிதனால் நிலவில் காலடி வைக்க முடிந்தது!       

"பெறுவதை விட அதிகமாக கொடுங்கள்"

நம் நடைமுறை வாழ்க்கையில் எல்லாச் செயல்களும் தேவைகள் சார்ந்து மட்டுமே இருக்கும் வகையில் பழக்கப்படுத்திக் கொண்டோம். ஆனால், தேவைகளையும் அதன் பலன்களைப் பற்றியும் தீவிரமாக யோசிக்கும் மனம் அதற்காக கொடுக்க வேண்டிய விலை குறித்து கேள்வி எழும்பும் பொழுது அதைக் கொஞ்சம் எட்டி நின்றுதான் வேடிக்கை பார்க்கும். முதன் முதலில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்ட பொழுது கீழே விழுந்து அடிவாங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அரை பெடல் அடித்து, சீட்டில் உட்கார்ந்து ஊரைச் சுற்றி வந்த தருணத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன். முதல் முயற்சியிலேயே சீட்டில் அமர்ந்து கொண்டு வளைய வந்தவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லைதானே? அதே போலத்தான் நம் இலக்குகளும். இலக்குகளை அடையப் போராடும் அதே நேரத்தில் அதற்கான பயிற்சிகளையும், அதற்குத் தேவையான விஷயங்களையும் கற்றுக் கொள்வதற்காக நேரத்தை செலவிட பழகிக் கொள்ளுங்கள். வெற்றியை பங்குபோட நினைக்கும் மனத்தை கொஞ்சம் அதற்கான விலையை கொடுப்பதற்கும் பழகுவோம். 

வெற்றி - Morning motivation

"வெற்றி பெறுவதற்காக மட்டும் ஓடுங்கள்"

‘தோல்வி பெறுவதற்காக யாராச்சும் ஓடுவாங்களா பாஸ்?'ங்கிற மைண்ட் வாய்ஸ் கேக்குது. நாம் யாருமே தோக்கணும்னு நினைச்சுகிட்டு ஓட மாட்டோம்தான். ஆனால் தோல்வியைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் ரேஸில் ஓடுகிறவர்கள் சொற்பம் தான். அந்த சொற்பமானவர்களில் சிலரே எல்லைக்கோட்டை வெற்றிகரமாக தாண்டுகிறார்கள். ஓடிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களின் மனதில் தோல்வி குறித்த எந்த சிந்தனையும் இருக்காது. முழுக்க முழுக்க இலக்கை பற்றிய சிந்தனை மட்டும்தான் ஓடிக் கொண்டிருக்கும். பயமும், குழப்பமும் எல்லா நம்பிக்கையும் துடைத்தெறியக் கூடிய சக்தி படைத்தவை அவற்றிலிருந்து எட்டி நிற்க பழகிக் கொள்வோம். சிலரைப் பார்த்திருக்கிறேன், எவ்வளவு பெரிய கடினமான விஷயத்தை மேற்கொள்ளும் பொழுதும் எந்தத் தயக்கமும் இல்லாமல் முன்னேறிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் கேட்டால் "எல்லோரும் சொல்லுவாங்க செயலைச் செய் பலனை எதிர்பார்க்காதன்னு. ஆனா நான் ஒரு படி மேலே போய் எந்த வேலையை செய்ய ஆரம்பிக்கும் போதும் அந்த வெற்றியை எப்படி கொண்டாடப் போறோம்னு அப்பப்போ நினைச்சு பார்த்துப்பேன். மத்த எல்லா விஷயங்களும் மறந்துடும். அதுல கிடைக்குற உற்சாகமே வேலையை துரிதமாக்கி வெற்றியை கொடுக்கும்." எனச் சொல்வார்கள்.

நிறைய குழப்பங்களோடு இலக்கை நோக்கி பயணிப்பதை விட, வெற்றியை நொடிக்கு நொடி கொண்டாடிக் கொண்டு முன்னேறுவதில் தவறு எதுவும் இல்லைதானே!?

  • தொடங்கியவர்

"மீண்டும் பெண் குழந்தை!"- நெகிழ்ச்சியில் மார்க் சக்கர்பெர்க்  

மார்க் சக்கர்பெர்க்  

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பெர்க், பிரிசில்லா சான் தம்பதியினருக்கு மேக்ஸ் என்ற 15 மாத பெண்குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் இன்னொரு குழந்தை தங்களது வீட்டுக்கு வரவிருப்பதாக மார்க் ஷக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். "பிரிசில்லா மீண்டும் கர்ப்பம் தரித்திருப்பது தெரிந்ததும் நாங்கள் இருவரும் முதலில் அந்தக் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைத்தோம். அடுத்து அது பெண்குழந்தையாக தான் இருக்கும் என நம்புகிறேன். அக்கா இருப்பதைவிட பெரிய பரிசு வேறெதுவும் இல்லை. மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் மேக்ஸும் அவளும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பார்கள்."

மார்க் சக்கர்பெர்க் தனது சகோதரிகளுடன்  

"நான் மூன்று சகோதரிகளுடன் வளர்ந்தேன். புத்திக்கூர்மையும், வலிமையையும் மிக்க அவர்கள்தான் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார்கள். எனக்கு அவர்கள் சகோதரிகளாக மட்டுமல்லாமல் சிறந்த நண்பர்களாகவும் இருந்தார்கள். பிரிசில்லாவும் இரண்டு சகோதரிகளுடன் தான் வளர்ந்தார். அவர்கள்தான் தனது சகோதரிகளுடன் குடும்பம், பிறர் மீது அன்பு செலுத்துதல், கடின உழைப்பு போன்றவற்றின் முக்கியத்துவத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். சகோதரிகள், அம்மாக்கள், தோழிகள் என வலிமையான பெண்கள் நம்மைச் சுற்றி இருப்பதால்தான் நாம் சிறந்தவர்களாக இருக்கிறோம். எங்கள் செல்லக் குழந்தையை மற்றுமொரு வலிமையான பெண்ணாக வளர்த்தெடுப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறோம்." என பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

100p1.jpg

twitter.com/kumarfaculty: சாமத்தில்தான் தெரிகிறது நகரத்துச் சாலைகளின் உண்மையான அகலம்!

twitter.com/manipmp: இங்கிலீஷ் நியூஸ்பேப்பர் படிக்கும்போது, `படம் பார்த்தது போதும். எந்திரிங்க... கூட்டணும்’ எனச் சொல்கிறாள் மனைவி # வாழ்க்கை சில நேரங்களில் அவமானகரமானது!

twitter.com/RealMan_Naan: தான் கெட்டவன் என ஒப்புக்கொள்பவர்கள் மீது விமர்சனங்கள் திணிக்கப்படுவது இல்லை!

twitter.com/indiavaasan: வட இந்தியர்கள் போல் உடையணிந்த மணமக்களைப் பார்க்கும்போது குடுகுடுப்பைக்காரர்கள் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை!

twitter.com/amuduarattai: மருத்துவமனைகளின் பிரமாண்டம், நம்பிக்கைக்குப் பதிலாகப் பயத்தையே தருகிறது!

100p2.jpg

twitter.com/jeytwits: `Sorry’ என்பது மட்டுமல்ல... `சாப்பிட்டியா?' என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!

twitter.com/gani2071990: பல்சரும் ஸ்கூட்டியும் பக்கத்துப் பக்கத்துல நிற்கும்போது லவ்வர்ஸ் மாதிரியே தெரியுது!

twitter.com/skpkaruna: கோஹ்லி என்னும் கிளியை வளர்த்து, ஆஸி என்னும் பூனையிடம் தந்துவிட்டனர். படுபாவிங்க... இனி ஒவ்வொரு றெக்கையா பிச்சுப்போடுவானுங்க!

twitter.com/tparavai: வீட்டுல நடந்த ஒரே சம்பவத்தை அம்மாவும் மனைவியும் தனித்தனியா என்கிட்ட சொல்லும் போதெல்லாம் `விருமாண்டி’ படம் பார்க்கிறமாதிரி இருக்கு # EPIC

100p3.jpg

www.facebook.com/Karthi PS: குடை பிடித்துப் போகாதவர்கள்... மழை பிடித்துப் போகிறார்கள்!

twitter.com/Mohammed Mastha: தண்ணீர் எடுக்க விதித்த தடையை நீக்கியது நீதிமன்றம் # இப்ப எல்லாரும் மீத்தேனை விட்டு, தாமிரபரணி பக்கம் போயிருவாங்க. நமக்கு வேலை ஈஸியா முடிஞ்சுடும்!

facebook.com/jagadeesh.indrakumar: பார்க்க வந்தாலே சோறு போடுவோம். காக்க வந்தவர்களைக் கவனிக்காமல் விடுவோமா? # உணவு பரிமாறி நெகிழவைக்கும் `நெடுவாசல்’!

facebook.com/charanya.win: ஓ.பி.எஸ்ஸுக்கும் நாஞ்சில் சம்பத்துக்கும் என்னதான் பழக்கம் இருந்தாலும், ஒரு மேடையில் பேசும்போது `அவன்’, `இவன்’ என்றா ஒருவரைப் பேசுவது? ஓ.பி.எஸ் நல்லவரோ, நடிப்பவரோ... அது அடுத்தபட்சம். ஆனால், மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவரை, இப்படி மரியாதையில்லாமல் பேசுவது என்ன அரசியல் நாகரிகம்? இந்த லட்சணத்தில் நாஞ்சில் சம்பத்துக்கு சிறந்த பேச்சாளர் என்ற பெருமை வேறு!

twitter.com/iamVariable: நாங்க எதுக்குத் தியாகம் பண்ணணும்? நீங்க வேணும்னா தினமும் எல்லா கிராமங்களுக்கும் போய் சாணி அள்ளி, மொத்தமா சேர்த்து, அதுலேர்ந்து மீத்தேன் எடுங்களேன்!

facebook.com/prabhunicas : பாலியல் வன்புணர்ச்சியில் மட்டுமே தீண்டாமை ஒதுங்கி நிற்கிறது!

100p4.jpg

facebook.com/Sowmya Ragavan: முதன்முதலில் சொல்ற `பாட்டி வடை சுட்ட கதை’யிலேயே `திருட்டு’, `ஏமாற்று’, `துரோகம்’னு குழந்தைகளுக்கு உலகத்தைப் புரியவைக்கிற முயற்சி இருந்தது!

twiiter.com/mekalapugazh : பல் டாக்டர்களுக்குக் கொஞ்சம் மனோதத்துவமும் தெரியும்போல. உடனே சொல்ல மாட்டார்கள், எவ்வளவு செலவாகும் என்பதை!

twiiter.com/naaraju: அடுத்து என்ன... நான்கு தடவைக்கு அதிகமாக ஏ.டி.எம்-ல பணம் எடுக்கிறவனெல்லாம், `கறுப்புப் பணம் வெச்சிருக்கிறவன்’, `தேசவிரோதி’, `பாகிஸ்தானுக்குப் போகணும்’... அதானே?!

twiiter.com/arattaigirl: `உன் இஷ்டம்' என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை' என்று பொருள்!

twiiter.com/Enfielderstweet:  `ஆதார் கார்டு இருந்தாதான் ஆதார் கார்டு தருவோம்'னு மட்டும்தான்டா நீங்க இன்னும் சொல்லல!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

விடுமுறைக்கு இப்படியும் ஒரு காரணமா? - வைரலாகும் பள்ளி மாணவனின் கடிதம்

விடுமுறை

அநேகமாக நாம் ஆங்கிலத்தில் எழுதிய முதல் கடிதம் லீவ் லெட்டராகத்தான் இருக்கும். பள்ளியில் படிக்கும்போது என்ன காரணத்தால் நமக்கு விடுமுறை தேவைப்பட்டாலும் எழுதும் காரணம் ஒன்றுதான். i am suffering from fever.  அது மாறவே மாறாது.

ஒரே நாளில் காய்ச்சல் வந்து அதேநாளில் அது குணமாகியும் விடும் ஆச்சர்யத்தைச் சந்திக்காத மாணவர்களே இருக்க முடியாது. தேர்வு நேரத்தில் வரும் காய்ச்சலை 'எக்ஸாம் ஃபீவர்' என்று சொல்வதைப் போல விடுமுறைக்காக வரும் காய்ச்சலை 'லீவ் ஃபீவர்' என்றும் சிலர் சொல்வர். உடல்நிலை சரியில்லை என்று சொன்னால்தான் ஆசிரியர் விடுமுறை அளிப்பார் என்று நினைத்து இந்தக் காரணத்தை பல மாணவர்கள் எழுதுவார்கள். இன்னும் சில மாணவர்களுக்கு வயிற்று வலி என்பதையோ, உறவினர் திருமணத்திற்குச் செல்லவிருக்கிறோம் என்பதையோ ஆங்கிலத்தில் எழுதத் தெரியாமல் i am suffering from fever என்றே எழுதுவர். ஆனால் ஏழாம் வகுப்பு படிக்கும் ஈஸ்வரன் மட்டும் இதில் விலக்கு.

தேனி மாவட்டம், வருஷ நாடு அருகில் இருக்கும் பூசணியூத்து எனும் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறார் ஈஸ்வரன். ஈஸ்வரனின் வீடு, பள்ளியிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தள்ளியிருக்கும் சிங்கராஜபுரம். அங்கிருந்து பள்ளிக்கு வருவதற்கு பேருந்து வசதி கிடையாது. ஆட்டோ மூலமே செல்லமுடியும். ஆனால் ஈஸ்வரன் ஆட்டோவை எல்லாம் எதிர்ப்பார்ப்பது இல்லை. நடந்தே பள்ளிக்கு வந்துவிடுகிறான். ஈஸ்வரனின் அண்ணன்களும் அதே பள்ளியில்தான் படிக்கிறார்கள். மிக எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் நன்றாக படிக்கும் மாணவராக மட்டுமல்லாமல் சக மாணவர்களோடு தோழமையோடும் உதவும் தன்மையோடும் பழகுவார்.

அந்தப் பள்ளியின் ஆசிரியர் வி.வெங்கட் இரண்டு நாட்களுக்கு முன், வகுப்பில் வருகைப் பதிவு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒரு மாணவர் விடுப்பு விண்ணப்பம் ஒன்றைக் கொடுக்கிறார். அந்த வகுப்பில் படிக்கும் மாணவர் ஈஸ்வரன் தனக்கு ஒருநாள் விடுப்பு கேட்டு எழுதிய கடிதத்தை தன் நண்பனிடம் கொடுத்து அனுப்பியிருந்தார்.

மாணவர்கள் எழுதும் வழக்கமான விடுப்பு விண்ணப்பம்தானே என்று நினைத்து அதைப் படித்த ஆசிரியருக்குப் பெரும் ஆச்சர்யத்தை அளித்தது அந்தக் கடிதம். தனது அம்மாவுக்கு உடல்நிலைச் சரியில்லாத காரணத்தால் தன் வீட்டில் இருக்கும் கால்நடைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக விடுமுறை கேட்டு விடுப்பு விண்ணப்பம் அனுப்பியிருக்கிறார் ஈஸ்வரன்.  தனது விடுமுறைக்கான உண்மையான காரணத்தையே ஈஸ்வரன் எழுதியிருந்ததைக் கண்டு திகைத்தார் ஆசிரியர் வெங்கட்.  

leave letter


"இந்தக் கடிதத்தைப் படித்ததும் ஒரு சில நிமிடங்கள் ஆச்சர்யத்தில் உறைந்துவிட்டேன். இப்படி ஒரு காரணம் எழுதிய லீவ் லட்டரை நான் முதன்முதலாக இப்போதுதான் பார்க்கிறேன். அடுத்த நாள் பள்ளிக்கு வந்த ஈஸ்வரனிடம் வழக்காக இந்தக் காரணத்தை எழுதமாட்டார்களே... நீ எப்படி எழுதினாய், என்றேன். அதற்கு மிக இயல்பாக, 'சார், நீங்கதானே உண்மை எதுவாக இருந்தாலும் அதை பேசுங்க என்பீர்கள்' என்றான். எனக்கு பதில் பேசுவதற்கு வார்த்தை கிடைக்கவில்லை. கண்களில் என்னையறியமால் நீர் வழிந்தது. அதை மாணவர்கள் முன் காட்டிக்கொள்ளாமல், ஈஸ்வரனின் கடிதத்தைப் பற்றி சிலாகித்துக் கூறினேன். எப்போதோ நாம் சொல்லும் வார்த்தை மாணவர்களின் மனதில் எவ்வளவு ஆழமாக பதிகிறது என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்டேன். இன்னும் பல மடங்கு பொறுப்புஉணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை புரிந்துகொள்ளவும் முடிந்தது" என்கிறார் ஆசிரியர் வெங்கட்.

ஆசிரியர் சொல்வது உண்மைதான். ஈஸ்வரனின் செயல்பாட்டுக்கு ஆசிரியர் - மாணவர் உறவு ஆரோக்கியமாக இருப்பதே முதன்மையான காரணம். கால்நடைகளைப் பார்த்துகொள்வதற்காக விடுப்பு எடுக்கிறேன் என்று சொல்வதற்கு பின்னால், அந்தக் காரணத்தின் சூழலை தன் ஆசிரியர் புரிந்துகொள்வார் எனும் நம்பிக்கையே இருக்கிறது. இந்த நம்பிக்கை ஒரிரு நாள்களில் வந்துவிடக் கூடியது அல்ல. ஜனநாயகத் தன்மையோடு வகுப்பறையை ஆசிரியர் கொண்டுச் செல்லும்போதே இது நிகழும். அதற்கான வாய்ப்புகளை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏற்படுத்திக்கொடுத்திருப்பதும் பாராட்டுக்கு உரியது. இதுபோன்ற சூழல்களே மாணவர்களின் படைப்புத் திறனை வளர்த்தெடுத்து புதிய விஷயங்களை கண்டுபிடிக்க உதவும்.

உண்மையின் ஒளியில் பயணம் செய்வதை விடவும் மகிழ்வானது எதுவுமில்லை. உற்சாகத்துடன் அந்தப் பயணத்தில் இருக்கும் ஈஸ்வரனுக்கு அன்பு வாழ்த்துகளைச் சொல்வோம்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

விஷ மீன்களின் விருந்து!

 

 
 
 
fish_3141119f.jpg
 
 
 

வீட்டில் உங்கள் அம்மா மீனை வெட்டி, சுத்தப்படுத்திச் சமைக்கும்போது பார்த்திருக்கிறீர்களா? கொஞ்சம் பெரிய வேலைதான் அது. மீனைக் கடையிலிருந்து வெட்டாமல் வாங்கிவந்தால் அம்மா அலுத்துக்கொள்வதுகூட அதற்காகத்தான். இதற்கே இப்படியென்றால், ஜப்பானில் ஒரு மீனை வெட்டி, சமைக்க மூன்று ஆண்டுகள் பயிற்சி கொடுக்கிறார்கள் என்றால் என்ன சொல்வது?

அந்த மீன் பற்றி மூன்று ஆண்டுகளுக்குக் கடுமையான பாடம், பிறகு எழுத்துத்தேர்வு, அதற்குப் பிறகு செய்முறைத் தேர்வு. இவற்றில் தேர்ச்சி பெற்றால்தான் அந்த மீனைச் சமைக்க அனுமதியே கிடைக்கும். பயிற்சி எடுத்துச் சமைக்கும் அளவுக்கு அது என்ன ஸ்பெஷல் மீன்? மூன்று வருடம் சொல்லிக்கொடுக்க வேண்டிய காரணம் என்ன?

உண்மையில் ஸ்பெஷல் மீன் எல்லாம் ஒன்றும் இல்லை. அது பெரிய விஷ மீன். கடலில் சில சமயம் புழக்கம் இல்லாத பகுதிகளுக்குள் செல்பவர்கள், விஷ மீன்கள் தீண்டி இறந்து போன செய்தியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடலில் தொடர்ந்து மீன் பிடிக்கும் மீனவக் குடும்பங்களுக்கு இது போன்ற விஷ மீன்கள் எங்கே இருக்கின்றன என்று தெரியும். அதனால் அதுபோன்ற இடங்களில் மீன் பிடிப்பதை முன்னெச்சரிக்கையாகத் தவிர்த்து விடுவார்கள்.

புதிய சுற்றுலாப் பயணிகள் விஷயம் தெரியாமல் விஷ மீன்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றால், மீனவர்கள் எச்சரித்துத் திருப்பி அனுப்பிவிடுவார்கள். சிலர் உரிய பாதுகாப்போடு ஆராய்ச்சிக்காக இந்த விஷ மீன்களைத் தேடிச் செல்வதும் உண்டு. அப்படியொரு விஷ மீன் பஃபர் ஃபிஷ் (Puffer Fish). இலங்கையில் இம்மீனை ‘பேத்தையன்’ என்று அழைக்கிறார்கள். ‘பலூன் மீன்’ என்றும் சிலர் அழைக்கிறார்கள். இம்மீனின் உடல் குட்டையாகவும், தடித்த உருளை வடிவமாகவும் இருக்கும். இதன் மேல் உதடும், கீழ் உதடும் மற்ற மீன்கள் போல் இல்லாமல் மிகவும் கடினமாகக் கோள வடிவில் இருக்கும். அதனால் இதற்குக் கோள மீன் என்று ஒரு பெயரும் உண்டு.

எதிரிகள் தாக்க வரும்போது தம் உணவுக் குழலைக் காற்றால் நிரப்பிக்கொள்ளும். அதாவது தனக்குத்தானே ஊதித் தன்னைப் பெரிதாக்கிக் கொள்ளும். வந்த எதிரி குழம்பிப் போய் மீனைத் தேடும். அப்படியே சூழலுக்கு ஏற்ப மாறி எஸ்கேப் ஆகிவிடும். பலூன் மீனின் பெயரும், சேட்டையும்தான் காமெடியாக இருக்கிறதே தவிர, இவை கடுமையான விஷத்தன்மை கொண்டவை. எப்படியாவது மீனைப் பிடித்து டேஸ்ட் பண்ணிவிடுவது என்று வைராக்கியத்துடன் வரும் மீன்களிடமிருந்து தப்பிக்க அது கைவசம் வைத்திருக்கும் கலைதான் விஷம்.

இந்த விஷம் தாக்கினால் 24 மணி நேரத்துக்குள் மரணம் நிச்சயம். இந்த விஷம் தாக்கி 24 மணி நேரத்துக்குப் பிறகும் ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்றால் அவர் நிச்சயம் உடல் அசைவின்றி ‘கோமா’நிலையில்தான் இருப்பார். பஃபர் மீன்களின் உடலிலிருக்கும் பாக்டீரியாக்களில் இருந்துதான் இந்த விஷம் உருவாகிறது. செதில்களற்ற உடலின் மேல் சிறியதும், பெரியதுமாகக் காணப்படும் முட்களில்தான் விஷம் தேங்கி நிற்கும்.

24 மணி நேரத்தில் உயிரை எடுக்கக்கூடிய இந்த மீனை மனிதர்கள் சமைத்தும் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் ஆச்சரியமான விஷயம். உடல் முழுவதும் விஷத்தை வைத்திருக்கும் இந்த மீனின் முட்களையெல்லாம் வெட்டி எறிந்து விட்டு உப்பு, மிளகாய், காரம் போட்டுப் பொரித்துச் சாப்பிடுகிறார்கள். சூப் வைத்தும் குடிக்கிறார்கள். ஜப்பானில் பஃபர் மீனைக் கொண்டு தயாராகும் ‘பூகு சூப்’ ரொம்ப பிரபலம். அது மட்டுமல்ல ஜப்பானில் பெரும்பாலான மக்களின் விருப்ப உணவும் பஃபர் மீன்தான்.

விஷ மீன்களிலிருந்து அப்படி முழுமையாக விஷத்தை நீக்கி, சமைத்துவிட முடியுமா? அது சிரமம் அல்லவா?. அதனால்தான் இந்த மீனை வெட்டி, சமைத்துச் சாப்பிட மூன்று ஆண்டுகள் பயிற்சி தருகிறார்கள். ஜப்பானில் பஃபர் மீனைச் சமைக்கக் கட்டாயம் லைசென்ஸ் வாங்கியிருக்க வேண்டும். லைசென்ஸ் அவ்வளவு சீக்கிரம் கிடைத்து விடாது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பஃபர் மீனைச் சமைக்கத் தேர்வு எழுதினாலும், சிலர்தான் தேர்ச்சி பெறுகிறார்கள். உயிரோடு விளையாடும் சமையல் அல்லவா?

அப்படி உயிரைப் பணயம் வைத்து இந்த மீனைச் சாப்பிடக் காரணம் அதன் ருசிதான் விஷத்தைத்தான் விருந்தாக ஜப்பானியர்கள் சாப்பிடுகிறார்களா? ஆமாம், அவர்களுக்குத்தான் ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுவது மாதிரி அல்லவா?

(காரணங்களை அலசுவோம்)

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

'காற்று வெளியிடை' படத்தின் ட்ரெய்லர்...!

kaatru Veliyidai

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் படம் ‘காற்று வெளியிடை’. ஏப்ரல் மாதம் இந்தத் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இந்தப் படத்தின் 'அழகியே', 'வான்... வருவான்' மற்றும் 'சாரட்டு வண்டியில' ஆகிய பாடல்கள் ஒலி வடிவில் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று ரிலீஸாகியுள்ளது. 

ரொமான்டிக் சப்ஜக்டாக மட்டும் இந்தப் படம் இருக்குமென்று எதிர்பார்த்தவர்களுக்கு, ட்ரெய்லரில் வரும் ஆக்‌ஷன் சீன்களைப் பார்த்தால் நிச்சயம் ஆச்சர்யமாக இருக்கும். மணி ரத்னம், என்ன சொல்லப் போறாருன்னு பொறுத்திருந்து பார்ப்போம். 

 

 

 
 
 
  • தொடங்கியவர்

இந்த இயற்கைக்காட்சிகளை காண்கையில் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?


இயற்கைக் காட்சிகளை காண்பது உங்களை மகிழ்வூட்டும் என்று பிபிசி எர்த் செய்த ஆய்வு கூறுகிறது.


ஆண்களைவிட பெண்களின் மனநிலையில் அதிக மாற்றம் ஏற்படுவதாக ஆய்வு கூறுகிறது.


16 முதல் 24 வயதிலிருப்பவர்களிடம் இந்த காட்சிகள் பதட்டத்தையும் பயத்தையும் குறைக்க உதவுகின்றன.


அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூரில் இணையம் மூலம் இந்தஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.