Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 35p1.jpg

ஸ்கர் என்றால், விருதுகள் மட்டுமல்ல; சாப்பாடும் ஸ்பெஷல்தான். இந்த ஆண்டு உலகப் புகழ்பெற்ற சமையற்கலை வல்லுநர் வொல்ஃப்கேங்க் பக்கின் தலைமையில், 300 பேர் அடங்கிய சிறப்பு சமையல் வல்லுநர்கள் குழு, சுமார் 1,500 விருந்தினர்களுக்கு உணவு தயாரித்தது. ஒவ்வோர் உணவும் ஒவ்வொரு வடிவத்தில் இருந்ததுதான் இவர்களது மெனுவின் சிறப்பு அம்சம். பார்க்கவே ஜூஸியாக இருந்த சாலமன் மீன்கள், ஆஸ்கர் விருது வடிவத்திலேயே சமைக்கப்பட்டுப் பரிமாறப்பட்டன. வீகன், க்ளூட்டன் ஃப்ரீ உணவுகளுக்கான ஏரியாவும் தனியே ஒதுக்கப்பட்டிருந்தது. `நான் இங்கே வருவதே சாப்பிடுவதற்காகத்தான்' என ஜெனிஃபர் லாரன்ஸ் ஓப்பனாகவே ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார். அடியாத்தி!

35p2.jpg

  `நான் இறந்த பிறகு, எனது சொத்துகளை மகன் அபிஷேக்குக்கும் மகள் ஸ்வேதாவுக்கும் சரிசமமாகப் பிரித்து அளிக்கப்போகிறேன்' என்ற அறிவிப்புப்பலகையை ஏந்தியபடி போட்டோ ஒன்றை ட்வீட் செய்திருக்கிறார் அமிதாப் பச்சன். பெண் குழந்தை களுக்கான ஐ.நா-வின் தூதுவராக இருக்கும் அமிதாப் பச்சன், பெண்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டும் என்பதற்கான விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் விதமாக இதைச் செய்திருக்கிறார். சூப்பர் ஜி சூப்பர் ஜி!

35p3.jpg

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் தமிழ்ப் படம், `இமைக்கா நொடிகள்'. `இந்தப் படத்தில் நான் நடிக்க முக்கியக் காரணம், எனக்குக் கிடைத்த ‘ருத்ரா’ கதாபாத்திரம். வழக்கமான வில்லன்கள்போல் குடி, சிகரெட், அடியாட்களை ஏவிவிடுவது என்றில்லாமல், புத்திசாலித்தனமாகவும் தந்திரமாகவும் செயல்படும் வில்லனாக நடித்திருக்கிறேன்' எனச் சொல்லியிருக்கிறார் அனுராக்.
வாராய்... நீ வாராய்!

35p4.jpg

  மீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாதான் டாப். குறிப்பாக, ஜிது ராய். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்ற கையோடு, 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் பிரிவில் தங்கம் தட்டியிருக்கிறார் ஜிது. சகவீரர் அமன்பிரீத் முன்னணியில் இருக்க, வழக்கம்போல இறுதிச்சுற்றுகளில் நெருக்கடியைச் சமாளித்து, தங்கம் வென்றதோடு உலக சாதனையும் படைத்துவிட்டார். கலப்பு ஏர் பிஸ்டல் பிரிவில், ஜிது - ஹீனா சித்து ஜோடி வென்றது தங்கம் என்றாலும், சோதனை அடிப்படையில் நடந்த போட்டி என்பதால், அந்தப் பதக்கம் கணக்கில் சேராது. ரியோ ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ராவுக்கு நிகராகப் பதக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தவர் ஜிது ராய். அவர் வெறுங்கையுடன் திரும்பியபோது நாடே பரிதாபப்பட்டது. இப்போது ஜிது ‘பேக் டு ஃபார்ம்’ வந்ததில் மகிழ்ச்சி. சு(ட்ட)த்தத் தங்கம்!

35p5.jpg

மீபத்தில் முன்னாள் ராணுவ வீரரின் மகள் குர்மீர் கவுர், `என் அப்பா பாகிஸ்தானால் உயிரிழக்கவில்லை. போரில் உயிரிழந்தார்' என்று எழுதிய அட்டை வாசகத்துடன் ட்விட்டரில் போஸ்ட் போட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி, சிலர் குர்மீர் கவுருக்கு கொலைமிரட்டல் விடுக்கும் அளவுக்குப்போனார்கள். இதற்கிடையே வீரேந்திர சேவாக்கும் குர்மீர் கவுரைப்போலவே `பாகிஸ்தானுக்கு எதிராக நான் சதங்கள் அடிக்கவில்லை. என் பேட்தான் அடித்தது' என போஸ்ட் போட `போருக்கு எதிரான ஒரு பெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல், வீரேந்திர சேவாக்கிடமிருந்து இப்படி ஒரு ட்வீட்டா? என, சமூக வலைதளங்களில் சேவாக்கைத் துவைத்தெடுக்கிறார்கள். உங்களுக்கு லைக்ஸ் கிடைப்பது கஷ்டம்தான் ப்ரோ!

35p6.jpg

சென்சார் போர்டுக்கும் பாலிவுட்டுக்கும் எப்போதும் வாய்க்கால் வரப்புத் தகராறுதான். `உட்தா பஞ்சாப்' படத்தைத் தொடர்ந்து, ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ படத்துக்குச் சான்றிதழ் அளிக்க முடியாது எனக் கைவிரித்துவிட்டது சென்சார் போர்டு. படத்தின் வசனத்தில் நிறைய கெட்டவார்த்தைகள் இருந்ததே காரணமாம். `புர்காவும் லிப்ஸ்டிக்கும் ஒரே டைட்டிலில் எப்படி வரலாம்?’ எனப் பிரச்னையைக் கையில் எடுத்திருக்கின்றன சில மதவாத அமைப்புகள். டோக்கியோ, மும்பை திரைப்பட விழாக்களிலெல்லாம் விருதை அள்ளிய இந்தப் படத்தின் இயக்குநர், அலங்ரிதா என்னும் பெண். படத்தின் நாயகி கொன்கனா சென். வாய் மை வெல்லட்டும்!

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வாட்ஸ் அப்பில் வைரலாகும் வீடியோ..!

women's day

பெண்கள் என்றுமே அகத்திலும், புறத்திலும் அழகானவர்கள். பிடித்தவர்களுக்காக தன்னையே அர்ப்பணிக்கும் குணம் அவர்களிடம் மட்டுமே உண்டு.  அவர்களின் காதலை நிச்சயம் எழுத்துகளாலோ, வார்த்தைகளாலோ அடக்கிவிடமுடியாது. பெண்களுக்காக, மகளிர் தின ஸ்பெஷலாக ஒரு வீடியோ இணையத்தையும், வாட்ஸ் அப்பையும் சில நாட்களாக கலக்கிவருகிறது. 

50 லட்சத்தையும் தாண்டி பேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலும் பரவிவருகிறது இந்த வீடியோ.  கணவனின் பாசத்துக்காக ஏங்கும் மனைவியின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை அழகியலோடு, கண்ணீரோடும் பதிவு செய்கிறது இந்த குறும்படம். 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: மார்ச் 11
 

article_1426048488-tsunamijapan.jpg1702: இங்கிலாந்தின் முதலாவது தேசிய நாளிதழான த டெய்லி கரண்டின் முதல் பதிப்பு வெளியாகியது.

1801: ரஷ்யாவின் முதலாம் பவுல் கொல்லப்பட்டான். அவனது மகன் முதலாம் அலெக்சாண்டர் மன்னனானான்.

1861: அமெரிக்க உள்நாட்டுப் போர் - அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.

1864: இங்கிலாந்து ஷெஃபீல்ட் நகரில் இடம்பெற்ற செயற்கை வெள்ளப் பெருக்கினால் 250பேர் கொல்லப்பட்டனர்.

1897: மேற்கு வேர்ஜீனியாவுக்கு மேலாகப் பறந்த எரிவெள்ளி ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.

1902: காங்கேசன்துறையில் இருந்து சாவகச்சேரி வரையான 21 மைல் நீள புகையிரதப் பாதை அமைக்கப்பட்டது.

1905: காங்கேசன்துறை முதல் மதவாச்சி வரை புகையிரதப் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது.

1917: முதலாம் உலகப் போரில் பாக்தாத் பிராந்தியம் ஆங்கிலோ இந்திய படைகளிடம் வீழ்ந்தது.

1918: ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது.

1931: சோவியத் ஒன்றியத்தில் "வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1958: ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் அணுகுண்டு ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் தெற்குக் கரோலினாவில் பலர் காயமடைந்தனர்.

1978: ஒன்பது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் இஸ்ரேலில் பேருந்து ஒன்றைக் கடத்தி 34 பொதுமக்களைக் கொன்றனர்.

1985: மிகைல் கொர்பசேவ், சோவியத் யூனியன் தலைவரானார்.

1990: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதாக லிதுவேனியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1990: சிலியில், பட்றிசியொ அய்ல்வின் 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியானார்.

2004: ஸ்பெய்னின் மட்ரிட் நகர ரயில்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 191 பேர் பலியாகினர்.

2006: சிலியின் முதல் பெண் ஜனாதிபதியாக மிச்சேல் பாச்செலட் பதவியேற்றார்.

2007: தென் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள கயானா விண்வெளி ஏவுதளத்தில் ஏரியன் - 5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட் - 4B என்ற இந்திய செய்மதியையும் ஸ்கைநெட் - 5A என்ற பிரித்தானியாவின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.

2009: ஜேர்மனியில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் பலி.

2011: ஜப்பானின் புகுஷிமா பிராந்தியத்திற்கு அருகில் ஏற்பட்ட  9.0 ரிச்டர் அளவிலான பூகம்பத்தை தொடர்ந்து தாக்கிய சுனாமியினால் சுமார் 20,000 பேர் பலியாகினர். இதன்போது  அணுக்கதிர்வீச்சு கசிவும் ஏற்பட்டது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: எல்லாத்துக்கும் ஆதார் கார்டா?

 
 
title_3141960f.jpg
 
 
 

1_3141971a.jpg

10_3141970a.jpg

2_3141969a.jpg

3_3141968a.jpg

4_3141967a.jpg

5_3141966a.jpg

6_3141965a.jpg

640_3141964a.jpg

7_3141963a.jpg

8_3141962a.jpg

9_3141961a.jpg

 

  • தொடங்கியவர்

பிபிசி நேரலை நிகழ்ச்சியில் நிகழ்ந்த குழப்பம்! (காணொளி இணைப்பு)

 

பிபிசி தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியொன்றில் பேசிக்கொண்டிருந்த புத்திஜீவி ஒருவர், தனது பிள்ளைகளின் திடீர் குறுக்கீட்டால் தர்மசங்கடத்துக்கு உள்ளான சம்பவம் தென்கொரியாவில் இடம்பெற்றது.

 

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களின் பேரில், தென்கொரிய ஜனாதிபதி பார்க் - ஜியுன் - ஹை நேற்று (10) பதவி விலக்கப்பட்டார். இதையடுத்து தென்கொரியாவில் கடும் வன்முறைகள் வெடித்தன. 

இந்தச் சிக்கலான நிலை தொடர்பில் தென்கொரிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் புத்திஜீவியுமான ரொபர்ட் கெல்லியிடம் பிபிசி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றை நேரலையாக நடத்திக்கொண்டிருந்தது. தனது வீட்டில் இருந்தபடி கெல்லி இந்த நேர்காணலில் கலந்துகொண்டார்.

திடீரென அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த கெல்லியின் மகள் ஆடிக்கொண்டே அவருக்கு அருகே வந்து நின்றார். இதுபற்றி அரங்கில் இருந்த செய்தியாளர் கெல்லியிடம் கூறவே, அவர் தனது மகளைப் பின்புறமாகத் தள்ள முயற்சி செய்தார்.

இது போதாதென்று, நடைவண்டியில் அமர்ந்தபடி கெல்லியின் இரண்டாவது பிள்ளையும் அறைக்குள் நுழைந்ததுடன். கெல்லியோ செய்வதறியாது திகைத்து நின்றார். 

ஓரிரு நொடிகளில், அறைக்குள் சறுக்கிக்கொண்டு நுழைந்த ஒரு பெண், உடனே இரண்டு குழந்தைகளையும் அங்கிருந்து இழுத்துச் சென்றார். நேரலையில் நிகழ்ந்த இந்தத் தடங்கலுக்கு கெல்லி வருத்தம் தெரிவித்தார்.

இது ஒருபுறமிருக்க, இந்தக் காட்சியைக் குறிப்பிட்டு இணையதளங்களில் சர்ச்சைகள் ஏற்படத் தவறவில்லை. உள்ளே நுழைந்தது ஒரு பணிப்பெண் என்றும், அவர் தனது கடமையை ஒழுங்காகச் செய்யவில்லை என்றும் ஒரு சாரார் கூறிவருகின்றனர்.

அதை மறுக்கும் இன்னுமொரு சாரார், உள்ளே நுழைந்தது ஆசியாவைச் சேர்ந்த பெண் என்பதால் அவரைப் பணிப்பெண் என்றும் அவர் கடமை தவறிவிட்டார் என்றும் கூறுகிறார்கள்; இதுவே மேலை நாட்டுப் பெண்ணாக இருந்திருந்தால், அவரைத் தாயார் என்று கூறுவதோடு அவரது தவறையும் மன்னித்திருப்பீர்கள் என்று விமர்சித்திருக்கிறார்கள்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

21ஆம் நூற்றாண்டின் கட்டிடங்கள்

Desktop_3142051f.jpg
இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் கட்டிடக் கலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதுமைகளைக் கண்டுள்ளது.
 
china_3142053f.jpg
கட்டிட மரபுகளையெல்லாம் உடைத்துப் புதிய புதிய முறைகள் அறிமுகமாகியுள்ளன. அதைப் போலக் கட்டுமானத்துக்கான சாதனங்களும் மிக நுட்பமானதாக வளர்ச்சி அடைந்துள்ளன. | ஓபரா ஹவுஸ், சீனா

 

denmark_3142052f.jpg
கியர் பட்ரோல் என்னும் இணைய இதழ் இந்த நூற்றாண்டின் கட்டிடங்களில் நவீனமானவற்றைத் தேர்ந்தெடுத்துள்ளது. | த ப்ளூ பிளானட், டென்மார்க்

 

england_3142050f.jpg
சீனா, ஸ்பெயின், டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்து, நார்வே உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த கட்டிடங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. | த ஸார்டு, இங்கிலாந்து

 

germany_3142049f.jpg
நவீன வடிவமைப்பு, பசுமைக் கட்டிட பாணி போன்ற அம்சங்களைக் கணக்கில் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. | பி.எம்.டபிள்யூ. வேட், ஜெர்மனி

 

spain_3142044f.jpg
மெட்ரோபால் பரசால், ஸ்பெயின்

 

singapore_3142045f.jpg
கார்டன்ஸ் பை த பே, சிங்கப்பூர்
 
norway_3142046f.jpg
நார்வேஜியன் ஒயிட் ரெயிண்டேர், நார்வே

 

kattar_3142047f.jpg
மியூசிக் ஆஃப் இஸ்லாமிக் ஆர்ட், கத்தார்
 
iceland_3142048f.jpg
ஹார்பா கான்சர்ட் ஹால், ஐஸ்லாந்து
 

 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

11.03.1955: பெனிசிலினை கண்டுபிடித்த அலெக்ஸ்சாண்டர் பிளம்மிங் மரணமடைந்த தினம் இன்று! 

 

 
alexander_fleming

 

உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன.

ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக் ஸாண்டர் ஃப்பௌமிங்.

ஃப்ளெமிங் 1881 ஆகஸ்ட் 6 அன்று ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். அவரது இளமைக்கல்வி இயற்கையெழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்தது. பாலிடெக்னிக் படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச் சேர்ந்தார். எழுத்தர் பணி அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவர் மிகத் தாமதமாக 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர வழி செய்தது.

படிப்பை முடித்த பிறகு, நோய்க்கிருமிகளுக்கெதிரான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் ஃப்ளெமிங். நான்கு ஆண்டுகள் நடந்த முதல் உலகப்போரில் ரைட் குழுவினரின் தடுப்பூசி மட்டும் பயன்படுத்தப்பட்டிரா விட்டால், ஆயிரக்கணக்கானோர் டைஃபாய்டு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பார்கள். போரில் காயமடைந்த வீரர்களுக்கு கார்பாலிக் அமிலம், போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற நச்சுமுறி மருந்துகளையே அக்காலத்தில் பயன்படுத்தி வந்தனர். இந்த மருந்துகள் சிகிச்சைக்கு உதவாததோடு, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து மேலும் பலர் இறப்பதற்கே வழிவகுத்தன என்று ஃப்ளெமிங்க் நிரூபித்தார். குறைபாடற்ற நச்சுமுறி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அவர் கவனம் திரும்பியது.

பல்வேறு வகை நுண்ணுயிர்களை தட்டுகளில் வளர்த்து அவற்றின் இயக்கங்களை அவர் ஆராயத் தொடங்கினார். தனது மூக்கிலிருந்து ஒழுகிய நீரிலிருந்தே ஓரிரு சொட்டுகள் எடுத்து பாக்டீரியாக்கள் அடங்கிய தட்டில் வைத்து வளர்த்தபோது, சளித்திரவத்தைச் சுற்றியிருந்த பாக்டீரியாக்கள் மட்டும் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். இதேபோல் கண்ணீர், உமிழ் நீர், சீழ் போன்ற உடலில் சுரக்கும் பல திரவங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். இந்த திரவங்கள் அனைத்திற்கும் நோய்க்கிருமிகளை வளராது தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டார். இயற்கையிலேயே அமைந்த இந்த நச்சு முறிபொருளுக்கு ‘லைசோசைம்’ எனப் பெயரிட்டார்.

1928ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலை காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளை காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும் வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங்

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சதையை உண்ணும் பாக்டீரியா: கம்போடியப் பெண் விநோத நோயால் பாதிப்பு

 

 

சதையை உண்ணும் பாக்டீரியா: கம்போடியப் பெண் விநோத நோயால் பாதிப்பு
 

கம்போடியாவைச் சேர்ந்த 18 வயதான சுத் ரெட் எனும் பெண் தனது உடைந்த பல்லை நீக்குவதற்காக பல் மருத்துவரை அணுகி சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதமளவில் சுத் ரெட்டின் முகத்தில் சில அறிகுறிகள் தென்பட்டதுடன், அவரது தொண்டையில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த பாக்டீரியா இரத்தத்தில் கலந்து, முகம் முழுவதிலும் தாக்குதலை ஆரம்பித்தது. இதனால், அவரது முகம் கொஞ்சம் கொஞ்சமாக சிதையத் தொடங்கியது.

முகத்தில் இருந்த சதைகளை பாக்டீரியா கொஞ்சம் கொஞ்சமாக உண்ணத் தொடங்கியது.

இந்த வகை பாக்டீரியா ஒரு சிறுவெட்டுக்காயம் இருந்தாலும் கூட உடனடியாக பரவுக்கூடியது என கூறப்படுகிறது.

இந்த நோயின் தாக்கத்தால் அவரால் சரிவர சாப்பிட முடியவில்லை என்றும் தற்போது முற்றிலும் எடை குறைந்து மிகவும் பரிதாப நிலையில் உள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுத் ரெட்டிற்கு சிகிச்சை அளிப்பதற்கு 40 வருடம் அனுபவம் உள்ள ஜெர்மன் மருத்துவர்கள் உள்ளார்கள் என்றும் ஆனால், சிகிச்சை அளிப்பதற்கு போதிய அளவு பணம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

சுத் ரெட்டிற்கு ஏற்பட்ட இந்த பாக்டீரியாத் தொற்றை சைனஸ் இன்பெக்‌ஷன் என்கின்றனர்.

இந்த அரிய வகை நோய் வந்தால் ஐந்தில் இருவர் உயிரிழந்துவிடுவர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சுத்ரெட் தற்போது உயிருக்குப் போராடி வருகின்றார்.

 

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

'இது மகளிர் மட்டும் மொபைல் காபி ஷாப்!' - மது சரண்

காபி ஷாப்

சென்னை, தி.நகரில் உள்ள ஜீவா பூங்காவில், மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் மட்டுமே நடத்தும், நடமாடும் காபி ஷாப் வண்டி அனைவரையும் கவர்ந்தது. 'மாமி ஹவுஸ்ஃ ஆப் காபி' என்ற பெயரில் விற்பனை சூடு பறக்க, அந்தச் சூட்டோடு கடையின் உரிமையாளரான மது சரணிடம் பேசினோம்.

 ''நான் 16 வருடங்களாக தொழில் முனைவோராக இருக்கிறேன். நான் முதலில் படித்தது காமர்ஸ். பிறகு, பொறியியல் படித்தேன். 2000-ம் வருடம் STC (SOFT TESTING COMPANY) என்ற சாப்ட்வேர் கம்பெனியைத் தொடங்கினேன். அதில், 800 பெண்கள் வேலை செய்கிறார்கள், கிராமப்புறப் பகுதிகளில் இருந்து வரும் பெண்களுக்கு மற்றவர்களுடன் மது சரண்தொடர்புகொள்வதில் தயக்கம் இருக்கிறது. அந்தத் தயக்கத்தை போக்கவே, பெண்கள் தனியாக தொழில் தொடங்கும் வகையில், பயிற்சி அளித்து பணியில் சேர்க்கிறோம். வறுமையால் யாரும் முடங்கிவிடக் கூடாது. 2009-ம் ஆண்டு சாஃப்ட்வேர் கம்பெனி தொடங்க வங்கியில் 30 லட்சம் கடன் கேட்டபோது, 93 ஆவணங்களை கேட்டார்கள். அவர்கள் கேட்ட ஆவணங்ககளைக் கொடுத்தும், இரண்டு லட்சம்தான் கடன் கிடைத்தது. இப்போது போல, அப்போது வங்கியில் கடன் வாங்குவது எளிதாக இல்லை. இந்தச் சம்பவமும் சுயதொழிலில் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் உருவாக்கியது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் பல்வேறு சிறப்புத் தொழில்கள் உள்ளன. அந்தத் தொழில்களைக் கண்டறிந்து, அதில் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்பது எனது லட்சியம்'' என்ற மது சரண், நடமாடும் காபி கடை ஐடியா பற்றி தொடர்ந்தார்.

''ஒவ்வொரு மகளிர் தினத்துக்கும் ஒரு புதிய திட்டத்தை மகளிருக்காக தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நடமாடும் ஹவுஸ் ஆஃப் காபி கடையை இந்த முறை ஆரம்பித்து இருக்கிறோம். இதற்காக, மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து 25 வாகனங்களை வாங்கி இருக்கிறோம். முதல் கட்டமாக, சென்னையின் தி,நகர், அண்ணா நகர், நங்கநல்லூர், வேளச்சேரி, பழைய மகாபலிபுரம் என ஐந்து இடங்களில் இந்தத் திட்டத்தை தொடங்குகிறோம். ஒரு காபி 11 ரூபாய். மக்கள் அதிகம் வரும் இடங்களில் இந்த வாகனம் வலம் வரும். ஒரு நாளைக்கு ஆயிரம் கப் காபி விற்பனை செய்யும் இலக்கு வைத்திருக்கிறோம். முழுக்க முழுக்க பெண்கள் மட்டும்தான் இந்த வாகனங்களில் இருப்பார்கள்.

ஒரு வாகனத்தில் மூன்று நபர்கள் இருப்பார்கள். ஒரு பெண் பில் போடவும், இன்னொருவர் காபியும் போட்டுத் தருவார். ஓட்டுநர் பணியில் மட்டும் ஆண் அமர்த்தப்பட்டுள்ளார். லாபத்தைவிட வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் காபி தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். ஊறுகாய், ஊதுவத்தி போன்ற சின்னச் சின்ன தொழில்களை வீட்டுடன் நடத்திவரும் பெண்களை, அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும். தொழில் தொடங்குபவர்களுக்கு நாங்கள் மீடியேட்டரா மட்டுமே இருப்போம். அவர்களுக்குத் தேவையான சந்தேகங்களை அளிக்கிறோம். இந்த காபியை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் சுகாதாரமாக தயாரிக்கிறோம். காபியைத் தயாரிக்கும் பணியில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் 15,000 ரூபாய் வருவாய் கிடைக்கும். காலை 5.30 மணிக்கு விற்பனையைத் தொடங்குகிறோம். விற்பனைக்கு செல்லும்போது சுத்தமான இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என உறுதியுடன் சொல்லி இருக்கிறோம். இந்த மொபைல் காபி கடையை இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும். பொறியியல் படித்த மாணவிகள் நிறைய பேர் போதிய வேலைக்கான திறன் இல்லாமல் முடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். 'ரீவர்' என்ற எங்களின் தொண்டு நிறுவனம் மூலம் இதுபோன்ற மேலும் பல விஷயங்களை செய்ய இருக்கிறோம். வருங்காலத்தில் எந்த ஒரு பெண்ணும் பொருளாதாரத்துக்காக யாரையும் எதிர்பார்த்து நிற்க மாட்டார்கள். தங்கள் உழைப்பால் தேவையை நிறைவேற்றிக்கொள்வார்கள்'' என்கிற மது சரண் குரலில் ஒலிக்கிறது நம்பிக்கை.

காலந்தோறும் பெண்கள் உழைப்பில் ஆண்களுக்கு இளைத்தவர்கள் இல்லை என நிருப்பித்தே வருகின்றனர். இப்போது அவர்கள் வெவ்வேறு களங்களிலும் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களின் பயணம் சிறக்கட்டும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

*அருமையான கதை*1f4d6.png?

1f33a.png?ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

1f33a.png? "அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு
அவனுடையது தான். .

1f33a.png?"அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை
கொடுத்து வாங்க பலரும் தயாராக
இருந்தனர். ஆனால் இவன்
விற்கவில்லை.

1f33a.png? "இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே
எரிந்துகொண்டிருந்தது.

1f33a.png?"ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தார்கள். தீ
முழுவதுமாக பரவிவிட்டதால் அதை
அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று
எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .

1f33a.png?வணிகனோ செய்வதறியாமல் கண்ணில்
நீரோடு புலம்பிகொண்டிருந்தான்.

1f33a.png?"ஐயோ என் வீடு ! என் வீடு ! என்று
அலறினான்.

1f33a.png?"அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து
ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே
ஏன் அழுகிறீர்கள் ?

1f33a.png? "இந்த வீட்டை நான் நேற்றே மூன்று
மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். .

1f33a.png?"இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று
கூறினான்.

1f33a.png? "இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி.
1f33a.png? "அவனது சோகம் அனைத்தும் மறைந்து
மகிழ்ச்சி உண்டானது.

1f33a.png?" இப்போது வணிகனும் கூடி இருந்த
கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை
பார்க்க தொடங்கினான்.

1f33a.png?" அதே வீடு தான் " ,
1f33a.png? " அதே நெருப்பு தான் " ,

1f33a.png?"ஆனால் சில வினாடிகளுக்கு முன்
இருந்த தவிப்பும் சோகமும் இப்போது
அவனிடம் இல்லை.

1f33a.png? "" சிறிது நேரத்தில் வணிகனின்
இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே
ஏன் இப்படி கவலையில்லாமல்
சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த
வீட்டிற்கு முன்பணம் மட்டுமே
வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும்
வரவில்லை.

1f33a.png?"வீட்டை வாங்கியவன் இப்போது மீதி
பணத்தை தருவானா என்பது சந்தேகமே”
என்றான். .
1f33a.png? "இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி
அடைந்தான். மீண்டும் சோகத்தில்
ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப
ஆரம்பித்தான்.

1f33a.png? "தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம்
மீண்டும் அவனை வாட்டியது.

1f33a.png?"சில மணித்துளிகள் பின்பு வணிகனின்
மூன்றாவது மகன் ஓடி வருகிறான்.
“தந்தையே கவலை வேண்டாம். இந்த
வீட்டை வாங்கிய மனிதன் மிகவும்
நல்லவன் போலும்.

1f33a.png? "இந்த வீட்டை வாங்க அவன் முடிவு
செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று
உங்களுக்கும் தெரியாது எனக்கும்
தெரியாது.

1f33a.png? "ஆகையால் நான் பேசியபடி முழு
தொகையை கொடுப்பது தான் நியாயம்
என்று என்னிடம் இப்போது தான் சொல்லி
அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு
தெரிவித்தான்.

1f33a.png?"இதை கேட்ட வணிகனுக்கோ ஏக
சந்தோஷம்.

1f33a.png? "கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி
மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும்
மீண்டும் காணாமல் போய்விட்டது.

1f33a.png?"மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று
வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
1f33a.png? " இங்கு எதுவுமே மாறவில்லை
1f33a.png? " அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு ",

" இது என்னுடையது என்று நினைக்கும்
போது அந்த இழப்பு உங்களை சோகத்தில்
ஆழ்த்துகிறது.
" இது என்னுடையது அல்ல என்று
நினைக்கும் போது உங்களை சோகம்
தாக்குவது இல்லை. .
1f33a.png?"உலகில் எதுவுமே நிரந்தரமானது
இல்லை.

1f33a.png?" ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது
இல்லை. அனைத்துமே அழிய கூடியது.

1f33a.png? "நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது
வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது

இதைத்தான் நம் நாட்டின் ஆன்மீகமும் சொல்கிறது
1f33a.png?1f33a.png?1f33a.png?1f33a.png?1f33a.png?1f33a.png?1f33a.png?1f33a.png?1f33a.png?
எதை நீ இழந்தாய்... எதற்காக அழுகிறாய்...
இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது...
மாற்றம் என்பது மட்டுமே மாறாதது....
கடமையை செய்... பலனை எதிர்பாராதே... ஏனெனில் கடமைக்கான பலனை இறைவன் தர மறப்பதில்லை
1f33a.png?1f33a.png?1f33a.png?1f33a.png?1f33a.png?1f33a.png?1f33a.png?1f33a.png?1f33a.png?1f33a.png?
அன்பாய் இருப்போம்..
பண்பாய் இருப்போம்..
அழிவிற்குப் பின்னும்
அனைவரின் நெஞ்சில் நீங்காமலிருப்போம்...!

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: மார்ச் 12
 
 

01_BOMBAY_STOCK_EXCH_30258f.jpg1881: ஸ்கொட்லாந்து கால்பந்தாட்ட வீரர் அன்ட்ரூ வட்ஸன் சர்வதேச கால்பந்தாட்ட அணியொன்றுக்கு தலைமை தாங்கிய முதலாவது கறுப்பின வீரரானார்.

1913: கான்பரா நகரம் அவுஸ்திரேலியாவின் எதிர்கால தலைநகராக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. (1927 ஆம் ஆண்டுவரை மெல்போர்ன் தற்காலிக தலைநகராக இருந்தது.)

1918: 215 ஆண்டுகளாக சென் பீற்றர்ஸ்பர்க் ரஷ்யாவின் தலைநகராக இருந்தபின் மொஸ்கோ புதிய தலைநகராக்கப்பட்டது.

1928: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அணைக்கட்டொன்று உடைந்ததால் 600 பேர் பலி.

1930: இந்தியாவில் மகாத்மா காந்தி 200 மைல் தூரம் கொண்ட உப்பு பாதயாத்திரையை ஆரம்பித்தார்.

1938: ஜேர்மனிய படைகள் ஆஸ்திரியாவைக் கைப்பற்றின.

1966: இந்தோனேஷியாவில் சுஹார்டோ ஜனாதிபதியானார்.

1968: மொரிஷியஸ் சுதந்திரம் பெற்றது.

1993: இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற தொடர்குண்டுவெடிப்புகளால் சுமார் 300 பேர் பலி.

2003: செர்பியாவின் பிரதமர் சொரான் டின்டிச் கொல்லப்பட்டார்.

2004: தென்கொரிய ஜனாதிபதி ரூ மூ ஹையுனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

2007: கலிபோர்னியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயினால் 2000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு எரிந்து நாசமடைந்தன.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கால் போனால் என்னங்க? நம்பிக்கை இருக்குல்ல... நாய்க்குட்டி பற்றி நெகிழும் சென்னை தம்பதி!

தினமும் அதிகாலையில் மெரினா கடற்கரையில் வாக்கிங் செல்கிற ரிஷியைப் பின்தொடரவும் ரசிக்கவுமே ஒரு கூட்டம் சேர்கிறது. ரிஷியினால் கிடைக்கிற பிஸ்கட்டை சாப்பிட்டு வந்த வழியே திரும்பிப் போகாமல், அவன் நடப்பதை ரசித்தபடி நகராமல் இருக்கின்றன மெரினா நாய்ஸ். 

''ரிஷி கம்பீரமா வாக்கிங் பண்றதைப் பார்த்தவங்களுக்கு அவன் இப்ப சக்கரவண்டி உதவியோட வாக்கிங் பண்றது வித்தியாசமா இருக்கு. ரிஷிக்கு அதைப் பத்தியெல்லாம் கவலையே இல்லை. தன்னால மறுபடி நடக்க முடியுதுங்கிறதுல அவனுக்கு அப்படியோர் சந்தோஷம்..'' 

வாஞ்சையுடன் ரிஷியின் தலைகோதியபடி சொல்கிறார்கள் சரஸ்வதியும், மாரிமுத்துவும்.

ரிஷி, ஆஸ்திரேலியன் டெரியர் இன நாய்க்குட்டி. தன்னம்பிக்கையின் அடையாளம்! 

நாய்க்குட்டி ரிஷி

நாய்க்குட்டி ரிஷியின் ஆல்பங்களைக் காண இங்கே கிளிக் செய்க

''எங்களுக்கு ரெண்டு பசங்க. ஒருத்தன் கனடாவுல இருக்கான். இன்னொருத்தன் பெங்களூருல. ரிஷி எங்களுக்கு மூணாவது பையன். அவனுக்கு இப்ப 12 வயசு. மதுரையில எங்கம்மா வீட்லேருந்து தூக்கிட்டு வந்தோம். ரிஷிதான் எங்களுக்கு ஒரே துணை. காலையில தினமும் நாங்க ரெண்டு பேரும் பீச்சுல வாக்கிங் போவோம். ரிஷிக்கு ரெண்டு வயசிருக்கும்போதிலிருந்தே அவனையும் எங்ககூடவே வாக்கிங் கூட்டிட்டுப் போய் பழக்கிட்டோம். அண்ணா சமாதியிலேருந்து லைட் ஹவுஸ் வரைக்கும் கம்பீரமா நடப்பான். கடற்கரை ஓரம் திரிஞ்சிட்டிருக்கிற தெரு நாய்களுக்கு நாங்க பிஸ்கெட் போடுவாம். பொறாமைப்படாம அதை சந்தோஷமா ரசிச்சபடியே நடப்பான்.''

ரிஷியின் பெருமையை விவரிக்கும்போது, பெற்ற பிள்ளையின் பெருமை பேசுவதைப்போன்று சரஸ்வதியின் முகத்தில் பொங்கி வழிகிறது பெருமிதம். 

''திடீர்னு ஒரு வருஷத்துக்கு முன்னாடி ரிஷியோட நடை ஸ்லோவாச்சு. அவன்கிட்ட முன்ன இருந்த உற்சாகம் இல்லை. டாக்டர்கிட்ட காட்டினோம். நிறைய மருந்துகள், ஊசிகள் கொடுத்தும் சரியாகலை. ஒரு கட்டத்துல, பின் கால்கள் இரண்டும் பலமிழந்துபோய், ரிஷியால நிற்கவும், நடக்கவும் முடியாமப் போயிருச்சு. பல டாக்டர்களைப் பார்த்துட்டுக் கடைசியா கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனோம். அங்கதான் ரிஷியோட முதுகுப்பகுதியில எல் 6, எல் 7 எலும்புகள் தேய்ஞ்சு போனதைக் கண்டுபிடிச்சவங்க ஒண்ணும் பண்ண முடியாதுன்னும் சொல்லிட்டாங்க. நாட்டு நாயா இருந்திருந்தாகூட ஆபரேஷன் பண்ணிடலாம். இது வெளிநாட்டு நாய் என்பதால அதுவும் சாத்தியமில்லைனு சொல்லிட்டாங்க...'' 

ரிஷியுடன் சரஸ்வதி மற்றும் மாரிமுத்து

நாய்க்குட்டி ரிஷியின் ஆல்பங்களைக் காண இங்கே கிளிக் செய்க

துணி மாதிரி துவண்டு கிடக்கும் ரிஷியின் கால்களைத் தடவிக் கொடுத்தபடியே விவரிக்கிறார் மாரிமுத்து.  வணிகவரித்துறையில் டெபுடி கமிஷனராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் இவர். 

''தினமும் பீச்சுல ஜம்முனு நடந்திட்டிருந்தவன், திடீர்னு நடக்க முடியாம முடங்கிப் போனதும் அதை அவனால அத்தனை சீக்கிரத்துல ஜீரணிக்க முடியலைனு எங்களுக்குத் தெரிஞ்சது.  அவன் மனசு கஷ்டப்படக்கூடாதுனு அந்த நிலைமையிலேயும் பீச்சுக்குக் கூட்டிட்டு வருவோம். பின்னங்கால் ரெண்டும் துணி மாதிரி ஆயிடுச்சு. அதனால ஒரு டவல் வச்சு அவனைத் தூக்கிட்டு வந்து பீச்சுல உட்கார வைப்போம். ரெண்டுபேர்ல யாராவது ஒருத்தர் அவன்கூடவே இருப்போம். இன்னொருத்தர் நடந்துட்டு வருவோம். அப்பல்லாம் ரிஷி எங்களை ஒரு பார்வை பார்ப்பான். 'என்னால நடக்க முடியாமப் போயிடுச்சே... இனி நான் நடக்கவே மாட்டேனா'ங்கிற மாதிரி இருக்கும். டவல் வச்சுத் தூக்கும்போது அவனுக்கு வயிறு வலிக்கும். அந்த வலி அவன் கண்கள்ல தெரியும். அவனுக்கு ஏதாவது செய்து நடக்க வச்சிட முடியாதானு தவிச்சோம். எத்தனையோ டாக்டர்ஸை கேட்டோம். இன்டர்நெட்டுல தேடினோம். ஒருவழியும் கிடைக்கலை. 

வேப்பேரி ஆஸ்பத்திரிக்கு ரிஷியைக் கூட்டிட்டுப் போயிருந்தபோது, அங்கே சுவர்ல ஒரு சைக்கிள் ஃபோட்டோவைப் பார்த்தோம். அது நடக்க முடியாத செல்லப் பிராணிகளுக்கானதுனு தெரிஞ்சது. அதைப் பத்தி விசாரிச்சபோது அவங்களுக்கே தகவல் தெரியலை. அப்புறம் ரிஷியை வழக்கமா காட்டற வெட்டினரி டாக்டர் ஸ்ரீகுமார்கிட்ட கூட்டிட்டுப் போய் அந்த சைக்கிளைப் பத்திக் கேட்டோம். உடனே அவர் டெல்லி ஐஐடியில படிச்ச மெக்கானிக்கல் இன்ஜினியர் ககரின் சிங் என்பவரைத் தொடர்பு கொண்டு  அந்த சைக்கிளை வரவழைச்சுக் கொடுத்தார்.  சிங், எலிகள்லேருந்து யானை வரைக்கும் எல்லா உயிரினங்களுக்கும் இப்படி செயற்கைக் கருவிகள் தயாரிக்கிறதுல எக்ஸ்பர்ட். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டு நாய்க்குக் கூட ஒருமுறை இப்படியொரு சைக்கிளை ரெடி பண்ணிக் கொடுத்திருக்காராம். 

நாய்க்குட்டி ரிஷி

நாய்க்குட்டி ரிஷியின் ஆல்பங்களைக் காண இங்கே கிளிக் செய்க

ரிஷியோட உயரம், எடை எல்லாத்தையும் சொல்லி, ஸ்பெஷலா இந்த சைக்கிளை ஆர்டர் பண்ணிக் கொடுத்தார்.  வெயிட் இல்லாத பிளேன் மெட்டீரியல்ல செய்தது. விலை பதினேழாயிரம் ரூபாய். நாங்க பணத்தைப் பத்தியெல்லாம் யோசிக்கலை. இந்த சைக்கிள் செட் ஆகுமா, ரிஷியால அதுக்குப் பழக முடியுமான்னெல்லாம் நாங்க நினைக்கலை. ட்ரை பண்ணிப் பார்ப்போம்னு நினைச்சோம். சைக்கிளைக் கொண்டு வந்து வச்சு, அதுல அவனைத் தூக்கி உட்கார வச்சதும், அத்தனை நாள் அவன் அடக்கி வச்சிருந்த துக்கமெல்லாம் தீரும்படி துள்ளிக் குதிச்சு ஓடினான்...'' 

காரின் பின் சீட்டில் படுத்திருக்கும் ரிஷியை கைத்தாங்கலாகத் தூக்கி வந்து, சற்றே சிரமப்பட்டு சக்கரவண்டியில் (சைக்கிள்னு சொல்லலாமா?) உட்கார வைக்கிறார்கள். நடைவண்டியில் தத்தி ஓடும் குழந்தையின் குதூகலத்துடன் ஓடத் தயாராகிறான் ரிஷி.

''இப்படியொரு நாய் தேவையானு கேட்கறவங்களும், எங்க வீட்டுக்கு வரவே யோசிக்கிறவங்களுக்கும் இருக்காங்க. எங்கே கல்யாணம், விசேஷத்துக்குப் போனாலும் ரிஷி இல்லாமப் போனதில்லை. முடியாத சந்தர்ப்பத்துல ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் ரிஷிக்குக் காவலா வீட்டுல இருப்போம். ரிஷிதான் எங்க உலகம். ஒரு பையன் கனடாவுல இருக்கான். இன்னொரு பையன் இருக்கிற பெங்களூரு வீட்டுல நாயை அனுமதிக்க மாட்டாங்க. அதனால ரெண்டு பேர் வீடுகளுக்கும் நாங்க போறதே இல்லை. அவங்க வந்து எங்க மூணு பேரையும் பார்த்துட்டுப் போவாங்க.

சரஸ்வதி மற்றும் மாரிமுத்து

நாய்க்குட்டி ரிஷியின் ஆல்பங்களைக் காண இங்கே கிளிக் செய்க

ரிஷியால பேச முடியாம இருக்கலாம். ஆனா அவனால உணர்வுகளை அழகா வெளிப்படுத்த முடியும். நாமப் பேசறது எல்லாம் அவனுக்குப் புரியும்.  வீட்டுக்கு வர்றவங்க எல்லாரும் ஒரேமாதிரி மனநிலையில இருப்பாங்கனு சொல்ல முடியாது. சிலர் எங்க மேல பரிதாபப்பட்டுக்கிட்டு, 'எதுக்கு இப்படி வச்சிருக்கீங்க... ஊசி போட்டுக் கொன்னுட வேண்டியதுதானே'னு கேட்பாங்க. வெளியூருக்குக் கூட்டிட்டுப் போகும்போது, 'எதுக்கு இவ்வளவு தூரம் தூக்கிட்டு வந்தீங்க... வர்ற வழியிலயே தூக்கி வீசிட்டு வந்துட வேண்டியதுதானே'னு கேட்பாங்க. அப்பல்லாம் ரிஷி, 'என்னைக் கொன்னுடுவீங்களா'னு கண்ணாலயே கேட்பான். நாம பெத்த குழந்தையா இருந்தா அப்படித் தூக்கி வீசிடுவோமா? 

நாங்க எங்க இருந்தாலும் எங்ககூட ரிஷியும் இருப்பான். அவனை நாய்னு சொல்லாதீங்க.. ஒரு உயிரா பாருங்க. முடிஞ்சா அவனுக்குக் கேட்கற மாதிரி நாலு வார்த்தை பாசிட்டிவா பேசிட்டுப் போங்கனு சொல்லிடுவோம். அவன் வாழணும்னு ஆசைப்படறான். அவனோட தன்னம்பிக்கைக்கு ஏதோ எங்களால முடிஞ்ச சின்ன விஷயம்...'' 

நடை பழகும் குழந்தையை ரசிக்கிற பெற்றோரின் மனோபாவத்துடன் ரிஷியையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்.

தன்னைக் கவனிக்கிறவர்களைப் பெருமையுடன் பார்த்தபடி இன்னும் வேகமாக நடக்கிறான் ரிஷி.

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதப் பாசம் அல்ல!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

புறக்­கோட்டை மெயின் வீதியில் பிரா விற்­பனை செய்யும் இளை­ஞரின் அனு­ப­வங்கள்

 

 

“ஊக்­கத்தைக் காட்­டிலும் உதவி புரி­யக்­கூ­டிய உய­ரிய சக்தி உலகில் வேறு எது­வு­மே­யில்லை. ஊக்கம் சும்மா மன­த­ளவில் இருந்து விட்டால் மட்டும் போதாது. அது செய­லாக வெளிப்­பட வேண்டும். அந்தச் செய­லுக்­குத்தான் உழைப்பு” என்று பெயர் என்­கிறார் கொழும்பு 11 மெயின் ஸ்ரீட் (பிர­தான வீதி) நடை­பா­தையில் வியா­பாரம் செய்யும் இளைஞர் ஜி.ராஜ்­குமார்.

DSCF3969

“எனது விடா­மு­யற்­சிதான் எனக்கு இன்­றைக்கு வெற்­றியைக் கொடுத்­தி­ருக்கு. நடை­பா­தையில் வியா­பாரம் செய்­வது என்­பது மிக இல­கு­வான காரியம் அல்ல. கிரீஸ் தட­விய மரத்தை கட்­டிப்­பி­டித்து மல்­லுக்­கட்டி ஏறு­வது போன்­றது.

 

காலையில் வீட்டை விட்டு வீதிக்கு வரு­கை­யி­லேயே எனது மனது பட் பட்­டென அடித்­துக்­கொள்ளும்.. ஏன் தெரி­யுமா? இன்று மெயின் வீதிக்கு போனதும் அதி­கா­ரிகள் நடை­பா­தையில் வியா­பாரம் செய்ய அனு­ம­திப்­பார்­களா? அல்­லது எங்­களை தங்­களின் வார்த்­தை­களால் திட்டித் தீர்த்து விடு­வார்­களா? என்ற மன­ப் பயம் தான் எப்­போதும் என் மனதில் குடி­யி­ருக்கும். இவ்­வா­றான சங்­க­டங்­களை என்னைப் போன்ற நடை­பாதை வியா­பா­ரிகள் அனை­வரும் தினம் தினம் அனு­ப­விக்­கின்­றனர்.

 

இத்­த­கைய சூழ்­நி­லை­யில்தான் நான் பெரும் கஷ்­டத்­துடன் வியா­பாரம் செய்­கிறேன். எனது அப்­பாவும் இதே இடத்தில் வியா­பாரம் செய்தார். அவ­ரிடம் நான் வேலை செய்தேன். அவரின் பின்னர் இரு­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக இதே இடத்தில் வெ­யிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வியா­பாரம் செய்­கிறேன். இது உங்­க­ளுக்கு புது­மை­யான செய்­தி­யாக இருக்கும். என்னைப் போன்ற நடை­பாதை வியா­பா­ரிகள் அனை­வரும் இயற்­கைக்குள் வாழ்ந்து பதப்­பட்டு பக்­கு­வ­மா­கி­விட்டோம்.

 

நான் பெரி­தாகப் படிக்­க­வில்லை. எட்டாம் வகுப்பு வரையே கல்­வி­கற்றேன். எனது வியா­பாரம் விந்­தை­யா­னது. நாக­ரிகப் பெண்கள் முதல் கிரா­மத்து அழ­கிகள் வரையில் சுண்டி இழுக்கும் வியா­பா­ரத்­தைத்தான் இரு­பது வரு­டங்­க­ளுக்கு மேலாகச் செய்து வரு­கின்றேன். என்­னிடம் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்­டுள்ள தைத்த ஆடைகள் அனைத்தும் பெண்­களின் உள்­ளா­டைகள்” என்றார் ராஜ்­குமார்.

 

“நான் உள்­ளா­டை­களை விற்­பனை செய்­தாலும் எனது வாடிக்­கை­யா­ளர்­க­ளான பெண்­க­ளிடம் எவ்­வித சேஷ்­டையும் செய்ய மாட்டேன். கேலி பண்­ணு­வது, நையாண்டி வார்த்­தை­களைக் கொட்­டு­வது எல்லாம் எனக்குப் பிடிக்­காது. என்­னிடம் பெண்­களின் உள்­ளா­டை­க­ளான உள்­பா­வாடை, பெனியன், பிர­ஸியர், பேண்டிஸ் உள்­ளிட்ட பல்­வேறு ஆடைகள் உள்­ளன. பிர­ஸியர் (பிரா) வகை­களின் பல ரகங்கள் என்­னிடம் உள்­ளன. இந்­நாட்டில் தயா­ரிக்­கப்­படும் பிர­ஸியர் வகை­க­ளி­லி­ருந்து சீனா, தாய்லாந்து,

 

இந்­தியா ஆகிய நாடு­களின் பிர­ஸியர் வகை­களும் விதம் வித­மாக கொள்முதல் செய்து வைத்­துள்ளேன். பெண்­களின் மார்­ப­கங்­க­ளுக்கு ஏற்­ற­வ­கையில் இரு­பத்­தெட்டு அங்­குலம் முதல் நாற்­பத்தி நான்கு அங்­குலம் வரை­யி­லான அளவில் பல்­வேறு ரகங்­களில் பிர­ஸியர் உள்­ளன. அதே­போன்று பேண்­டிஸ்சும் உள்­ளன” என தனது வியா­பாரம் குறித்த தக­வல்­களை ராஜ்­குமார் தெரி­வித்தார்.

DSCF3938

ராஜ்­கு­மாரின் பேச்சு பெரும் சுவை­யாக இருந்­தது எமக்கு. காக்கா தன் அலகில் கொத்தி எடுத்­ததை விழுங்­க­லாமா, கீழே போட­லாமா என யோசிப்­பது போன்று எங்­களை யோசிக்­கவும் வைத்து விட்டார் ராஜ்­குமார். இந்த வியா­பார நட­வ­டிக்­கையில் தான் எதிர்­நோக்கும் சிர­மங்கள் குறித்தும் அவர் கூறினார். “இந்த எனது வியா­பா­ரத்தில் பிர­ஸியர் வியா­பாரம் பெரும் சிக்­க­லா­னது. நவ­நா­க­ரிக இளம் பெண்கள் முதல் உயர்­தர குடும்ப பெண்கள் வரை எனக்கு பெண் வாடிக்­கை­யா­ளர்கள் உள்­ளனர்.

 

இவ்­வா­றான எனது வாடிக்­கை­யா­ளர்கள் தான் எனக்கும் என் குடும்­பமும் வாழ தீனி போடு­ப­வர்கள். இவர்­களை எனது வாடிக்­கை­யா­ளர்­க­ளாக பெற்றுக் கொள்ள நான் பட்ட கஷ்டம் எனக்­குத்தான் தெரியும். என்­னிடம் ஏ.சி.இல்லை கண்ணைப் பறிக்கும் மின்­வி­ளக்­குகள் இல்லை. மொத்­தத்தில் எனக்கோ வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கோ ஆடை­களை வாங்­கு­ப­வர்கள் அமர்­வ­தற்கு கதிரை கூட இல்லை.

 

இவ்­வா­றான இக்­கட்­டான நிலையில் தான் எனது வியா­பா­ரத்தைச் செய்­கின்றேன். வீதியின் ஓரத்தில் நின்று பிர­ஸி­யர்­களை வாங்க விரும்பும் நவ­நா­க­ரிகப் பெண்­களும் சரி சாதா­ரண மற்றும் உயர்­மட்ட பெண்­களும் அவற்றை தாங்கள் அணிந்­தி­ருக்கும் ஆடை­க­ளுக்கு மேலாக உடுத்திப் பார்ப்­பார்கள்.  அப்­போது வீதியில் செல்லும் கில்­லா­டிகள் கூட்­ட­மாகக் கூடி பத்துப் பேருக்கும் மேலாக வேடிக்கை பார்ப்­பார்கள். அப்­போது எனக்கு அடுப்பின் சூடு தாங்­காது பொங்கி வடியும் பசும்­பாலைப் போன்று கோபம் பொத்­துக்­கொண்டு வரும். அவர்­களை நானும் நண்­பர்­களும் இணைந்து திட்டி, துரத்தி விடுவோம். 

 

DSCF3940
காரணம், எனது வாடிக்­கை­யா­ளர்­க­ளான பெண்­க­ளுக்கு எவ்­வித தீங்கும் எனது இடத்தில் வைத்தும் ஏற்­ப­டக்­கூ­டாது. அவர்­களே என்னை வாழ­வைக்­கி­றார்கள். எனது கண்­ணியம் அவர்­களை என்­னிடம் வர­வ­ழைக்­கி­றது. அதை நான் பாது­காத்துக் கொள்ள வேண்டும். 
பெண்­க­ளுக்­கான உள்­ளா­டை­களை ஆண்­களும் எவ்­வித தயக்­கமும் இல்­லாமல் என்­னிடம் வாங்­கு­வார்கள். உயர்­மட்ட அதி­கா­ரி­களும் எனது வாடிக்­கை­யா­ளர்­க­ளாக உள்­ளனர். 


வெள்­ளைக்­கார உல்­லாசப் பெண் பய­ணிகள் குறிப்­பாக, பிர­ஸி­யர்­களை தொட்டு பார்த்து ரசிப்­பார்கள். மாலை­தீவுப் பெண்கள் பெரி­ய­ளவில் பிர­ஸி­யர்­களை வாங்­கு­வார்கள்.


சில பெண்கள் மற்றும் யுவ­திகள் பிர­ஸியர், பேண்டிஸ், உள்­பா­வடை போன்ற உடை­களை கொள்­முதல் செய்­கையில் மிகவும் வெட்­கப்­ப­டு­வார்கள். கூச்சப்படுவார்கள், மெல்லிய குரலில் பேசு­வார்கள். அப்­போது நான் மிகவும் கவ­ன­மாக அன்­போடு அவர்­க­ளுடன் உரை­யா­டுவேன். எனது நடை­பாதை வியா­பாரம் வெற்­றி­ந­டை­போட எனது அன்பு வார்த்­தைகள் பல­மாக உள்­ளன. 


இவ்­வா­றான ஆடை­க­ளுக்கும் மேல­தி­க­மாக சிறு குழந்­தை­களின் ஆடை­க­ளையும் விற்­ப­னைக்­காக வைத்­துள்ளேன். எனது வாடிக்­கை­யா­ளர்கள் மீது பெரும் நம்­பிக்கை வைத்­துள்ளேன். எனக்­கென ஒரு வாடிக்­கை­யாளர் கூட்­டத்­தையே சேமித்து வைத்­துள்ளேன். 


தீபா­வளி, பொங்கல், நோன்­புப்பெ­ருநாள், சித்­திரை புது­வ­ருடப் பிறப்பு, நத்தார் பண்­டி­கைக்­காலம் உள்­ளிட்ட பண்­டிகைக் காலங்­களில் வியா­பாரம் சூடு பிடிக்கும். அக்­கா­லத்தில் மேல­தி­க­மாக இரு­வரை விற்­பனைப் பணியில் அமர்த்திக் கொள்வேன் எனக் கூறினார் ராஜ்­குமார். 
“இன்று மழை பெய்­யுமா, பெய்­யாதா என காலை­யி­லேயே வெறித்து வானத்தை அண்­ணாந்து பார்ப்பேன். வானம் வெறித்து மப்பும், மந்­தா­ரத்­துடன் இடி முழக்கம் இடியாய் இடித்தால் எனது அடி வயிற்றில் சொப்பிங் பேக் கசங்கும் சத்தம் கேட்கும். அன்று கடையை வீதியில் விரிக்க இயலாது போய்விடும். 


புறக்கோட்டை மெயின் வீதியில் பொலிஸா ரையோ அல்லது படையினரையோ கூட்டமாகக் கண்டாலும் எனக்குள் பயம் கௌவிக் கொள்ளும். எங்களை நடை பாதையிலிருந்து அகற்றுவதற்காக வந்து விட்டார்களோ என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். இவ்வாறு தான் நாள் தோறும் பயந்த மனநிலையுடன்  செத்து, செத்து தொழில் செய்கிறேன் என்றார் ராஜ்குமார் நிதானமான குரலில். 
உண்மையிலேயே, இளைஞர் ராஜ்குமாரின் அனுபவம் பலருக்கு பாடப் புத்தகமாக இருக்கும் என எண்ணிக்கொண்டு அவரின் முயற்சியை பாராட்டி, நாம் விடைபெற்றோம் மனநிறைவுடன். 


(படம்: கே.பி.பி. புஷ்பராஜா)

http://metronews.lk/

  • தொடங்கியவர்

கொக்க கோலா பாட்டிலில் விற்பனைக்கு வந்த நாள்: மார்ச் 12- 1894

 

கொக்க கோலா குளிர்பானம் முதல்முறையாக 1894-ம் ஆண்டு இதே தேதியில் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்பட்டது இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1879 - ஆங்கிலோ- சூலு போர்: நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

 
 
 
கொக்க கோலா பாட்டிலில் விற்பனைக்கு வந்த நாள்: மார்ச் 12- 1894
 
கொக்க கோலா குளிர்பானம் முதல்முறையாக 1894-ம் ஆண்டு இதே தேதியில் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்பட்டது

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1879 - ஆங்கிலோ- சூலு போர்: நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
* 1913 - ஆஸ்திரேலியாவின் வருங்கால தலைநகர் அதிகாரபூர்வமாக கான்பரா எனப் பெயரிடப்பட்டது. கான்பரா அமைக்கப்படும் வரையில் 1927 வரையில் மெல்போர்ன் தற்காலிகத் தலைநகராக இருந்தது.
* 1918- 215 ஆண்டுகளாக ரஷ்யாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது.
* 1928 - கலிபோர்னியாவில் சென் பிரான்சிஸ் அணைக்கட்டு உடைந்ததில் 400 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
* 1930 - மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சியாளரின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் தண்டி யாத்திரையை ஆரம்பித்தார்.
* 1938 - ஜெர்மனியப் படைகள் ஆஸ்திரியாவை ஆக்கிரமித்தன. அடுத்த நாள் இணைப்பு அறிவிக்கப்பட்டது.
* 1940 - குளிர்காலப் போர்: பின்லாந்து மாஸ்கோவுடன் அமைதி உடன்பாட்டிற்கு வந்தது. கரேலியாப் பகுதி முழுவதும் சோவியத் ஒன்றியம் பெற்றுக்கொண்டது. பின்லாந்துப் படைகளும் மீதமிருந்த மக்களும் உடனடியாக வெளியேறினர்.
* 1954 - சாகித்ய அகாடமி இந்திய அரசினால் தொடங்கப்பட்டது.
* 1967 - சுகார்த்தோ இந்தோனேசியாவின் அதிபரானார்.
* 1968 - மொரீசியஸ் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது
* 1992 - மொரீசியஸ் பொதுநலவாய அமைப்பினுள் குடியரசானது.
* 1993 - மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
* 2003 - செர்பியாவின் பிரதமர் சொரான் டின்டிச் கொல்லப்பட்டார்.
* 2006 - தென்னாபிரிக்கா ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் 438/9 ரன்கள் பெற்று ஆஸ்திரேலியாவை (434) வென்று சாதனை படைத்தது.
* 2007 - கலிபோர்னியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயினால் 2000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு எரிந்து நாசமடைந்தன.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

உடலை ஆராதி!

 

 
 
 
 
calender_3141942f.jpg
 
 
 

‘நீங்கள் ஸ்லிம் ஆக வேண்டுமா?’

இப்படியொரு விளம்பரத்தைக் கடந்து வராத மனிதர்களே இருக்க முடியாது. பருமனான‌ உடலை மெலிய வைத்தும், ஒல்லியான உடலில் சதையேற்ற வைத்தும் ஆரோக்கியம் என்ற போர்வையில், உடலை அழகாக்குகிறோம் என்று சொல்லிப் பல நிறுவனங்கள் நம் கனவுகளைக் காசாக்குகின்றன. இவை தவிர, ‘நீங்கள் சிவப்பாக வேண்டுமா?’ என்று கேள்வி கேட்டுத் தங்கள் நிறுவனப் பொருட்களை நம் கையில் திணித்துவிட்டுப் போகும் கூட்டம் இன்னொரு பக்கம்.

4_3141946a.jpg

நாம் ஏன் நம் உடலைப் போற்றுவதில்லை? நாம் ஏன் எப்போதும் பிறரின் அழகோடு நம் அழகை ஒப்பிட்டுக்கொள்கிறோம்? சிவப்பாக இருக்கும் அனைவரும் வாழ்க்கையில் ஜெயித்துவிடுகிறார்களா? இப்படியான கேள்விகளை நம்மிடமே நாம் எப்போதாவது கேட்டிருக்கிறோமா?

இதுவரை இல்லையென்றால், மல்லிகா ஏஞ்சலாவின் காலண்டரைப் பார்த்தவுடன், இனி உங்கள் உடலை நீங்கள் ஆராதிக்கத் தொடங்குவீர்கள்.

3_3141947a.jpg

பெங்களூரைச் சேர்ந்தவர் மல்லிகா. இந்தோ கனேடிய நடிகை இவர். தவிர, அழகு மற்றும் அது சார்ந்த‌ பெண்கள் தொடர்பான விஷயங்களில் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் செயற்பாட்டாளராகவும் இருக்கிறார்.

5_3141945a.jpg

“நான் கொஞ்சம் பருமனான உடல் அமைப்பைக் கொண்டிருப்பவள். அதனால் நான் பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானேன். திரைப்பட வாய்ப்புகள் தேடி அலைந்தபோது, பலரும் என்னிடம், ‘நீங்க கொஞ்சம் வெயிட் குறைச்சா, இன்னும் நல்லாயிருக்கும்!' என்று அறிவுரைகள் வழங்கினார்கள்.

அது குறித்தெல்லாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தபோதுதான், நம் சமூகத்தில் அழகு குறித்து தவறான புரிதலைக் கொண்டிருக்கிறோம் என்பது தெரிய வந்தது. மற்றவர்களின் அங்கீகாரத்துக்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை. நம் உடலை நாம்தான் போற்ற வேண்டும். நிறம், எடை, உயரம், பாலினம் என எல்லா வித்தியாசங்களையும் தாண்டி ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு விதத்தில் அழகுதான். அந்தச் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான் ‘லவ் எவ்ரி பாடி’ எனும் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறேன்” என்கிறார்.

 

6_3141944a.jpg இந்தப் பிரச்சாரத்துக்காக இவர் தேர்வு செய்த முறைதான் ‘காலண்டர்’ வெளியிடுவது. சென்னையில் இந்த காலண்டரை நடிகர் ஜீவா கடந்த வாரம் வெளியிட்டார். வெவ்வேறு நிறம், எடை, உயரம் கொண்ட ஆண்களும் பெண்களும் போஸ் கொடுக்க, அவர்களை அழகாகப் படம்பிடித்திருக்கிறார் பிரபல ஒளிப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்.

இந்தப் பிரச்சாரத்துக்காக இவர் தேர்வு செய்த முறைதான் ‘காலண்டர்’ வெளியிடுவது. சென்னையில் இந்த காலண்டரை நடிகர் ஜீவா கடந்த வாரம் வெளியிட்டார். வெவ்வேறு நிறம், எடை, உயரம் கொண்ட ஆண்களும் பெண்களும் போஸ் கொடுக்க, அவர்களை அழகாகப் படம்பிடித்திருக்கிறார் பிரபல ஒளிப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்.

7_3141943a.jpg

அந்த ‘அழகர்’களின் கைகளில் துணிக்கடை பொம்மைகள் இருக்கின்றன. அதுவும் கை வேறு, கால் வேறாக. காரணம் கேட்டால், “இந்த பொம்மைகள் போன்று உடல்வாகைக் கொண்டிருப்பதுதான் அழகு என்று இங்கு பலர் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நினைப்பை மாற்றவே இப்படி” என்கிறார்கள்.

அழகுமா!

2_3141948a.jpg

 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text

அழகும், குரலும் அத்தனையும் கொண்டு
இந்திய திரையுலகின் இசை ரசிகர்களை கட்டியாளும்
கானக்குயில் ஷ்ரேயா கோஷலின் பிறந்தநாள் இன்று
இந்திய மொழிகள் அத்தனையிலும் பாடி தமிழ் மொழியில்
தனியிடம் பதித்த பாடகிக்கு
 வாழ்த்துக்கள்

Happy Birthday Shreya Ghoshal

இசைப் பிரியர்களின் ‘செல்லம்மா’ ஸ்ரேயா கோஷல்! #HBDShreyaGhoshal

சை என்ற கலையானது காதுகளின் வழி நுழைந்து நேரடியாக இதயத்துக்குச் செல்கிறது என்பார்கள். ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்களைப் பொறுத்தவரை, அது இதயத்துக்குச் செல்வதோடு அங்கேயே தங்கி உங்களோடு பயணிக்கும் தன்மையுடையது. இதை மெய்ப்பிப்பதைப் போல நான்கு தேசிய விருதுகள், தென்னிந்திய மொழிகளையும் சேர்த்து மொத்தம் பதினைந்து ஃபிலிம் ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, மூன்று முறை கேரள மாநில திரைப்பட விருது என ஸ்ரேயா கோஷல் வீட்டு வரவேற்பரை விருதுகளால் குவிந்து கிடக்கிறது. இந்தக் குரல் தேவதையின் பிறந்தநாள் இன்று!

ஸ்ரேயா கோஷல்

சூழல் 1 :

உங்கள் காதலர் அல்லது காதலியுடன் ஒரு தனிமையான தருணம் கிடைக்கிறது. ஒருவர் கைகளின் பத்து விரல்களின் இடைவெளியை மற்றொருவரின் கரங்கள் நிரப்புகின்றன. கைகோத்து காதலில் மூழ்கிக் கிடக்கும் போது இருவருக்கும் மிகப்பிடித்த பாடலொன்று காற்றில் மிதக்கிறது. சில நிமிடங்கள், உலகம் உங்களை மையமாகக் கொண்டு சுழலத் தொடங்குகிறது.

சூழல் 2 :

கடும் வாகன நெருக்கடியில் வாகனங்கள் இஞ்ச் இஞ்ச்சாக நகர்கின்றன. பொதுவாக இருபது நிமிடத்தில் சென்றுவிடக் கூடிய இடத்துக்குச் செல்ல மணிக்கணக்காகிறது. சிக்கித்தவிக்கும் அந்த வாகன நெருக்கடிக்கு மத்தியில் ஒரு பாடல் உங்கள் அத்தனை மன அழுத்தத்தையும் கரைத்துவிடுகிறது.

சூழல் 3 :

ஒருவாரம் உலகத்தை மறக்க நினைத்து விடுப்பு எடுத்துக்கொண்டு, மலைப்பிரதேசத்துக்குச் செல்கிறீர்கள். மலைச்சரிவில் நடந்து செல்லும்போது மெல்லிய பனிச்சாரல் இதமாகத் தூவுகிறது. 'இதல்லவா சொர்க்கம்! இந்த நொடி இன்னும் நீளாதா!' என்றபடி பனிச்சாரலில் லயித்து நிற்கிறீர்கள். மனதுக்குப் பிடித்த பாடலை உங்கள் உதடுகள் தானாகவே பாட ஆரம்பிக்கிறது.

சூழல் 4 :

மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு விஷயத்தில் கிடைத்த தோல்வி. ஆறுதல் வார்த்தைகள் கேட்டு மனம் ஆற மறுக்கிறது. வார்த்தைகள் கொடுக்காத ஆறுதலை ஆழ்மனதுக்கு இசை கொடுக்கிறது. 'மீண்டும் மோதிப் பார்த்துவிடலாம்!' என முடிவெடுத்து மனதை இலகுவாக்கி அறையைவிட்டு வெளியேறுகிறீர்கள்.

மேலே சொன்ன நான்கு சூழல் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ சூழலில், மனிதனின் வாழ்க்கையில் இசை துணை நிற்கிறது. ஸ்ரேயா கோஷல் ரசிகர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு மேலே சொன்ன அத்தனைத் தருணங்களிலும் ஏதாவது ஒரு ஸ்ரேயா கோஷல் பாடல் தான் ஒலித்திருக்கும்.

Shreya Ghoshal

இனிப்புக்குப் பெயர் போன மேற்குவங்கத்தில் தான் இனிய குரலுக்குச் சொந்தக்காரியான ஸ்ரேயா கோஷல் 1984-ம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தையின் அணு உலை பொறியாளர் பணியின் காரணமாக ராஜஸ்தானில் தான் வளர்ந்தார். அவரது பெற்றோர்கள் இருவருக்கும் இசையில் ஆர்வம் அதிகமென்பதால், நான்கு வயதிலிருந்தே மகேஷ் சந்திர சர்மா என்ற இந்துஸ்தானி இசைக்கலைஞரிடம் ஸ்ரேயாவை இசை கற்க வைத்தனர்.

தன் 16 வயதில் 'சரிகமப' என்ற இசை ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு வென்றார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரேயாவின் குரல் கேட்டுப் பிடித்துப்போன பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, தான் இயக்கிய 'தேவ்தாஸ்' படத்தில் வாய்ப்பு கொடுத்தார். ஸ்ரேயா பாடிய முதல் சினிமா ஆல்பமே நாடு முழுவதும் ஹிட் அடித்தது. முதல் படத்துக்காக தேசிய விருதும், ஃபிலிம் ஃபேர் விருதும் கிடைத்தன. அதிலிருந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படங்களில் ஸ்ரேயா கோஷல் பாடல் நிச்சயமாக இடம்பெற்றுவிடும். இது ஸ்ரேயா கோஷல் தீவிர விசிறிகளுக்கு முன்பே தெரிந்த கதை தான். ஆனால், அதன் பின் ஸ்ரேயாவின் பயணத்தில் பல சுவாரஸ்ய இசைத் தருணங்கள் நிறைந்திருந்தன. 

"இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. பாடலைப் பதிவு செய்வதற்கு முன்பு ஒருமுறை ஒத்திகை பார்ப்பதற்காகப் பாடச் சொன்னார்கள். நான் மெல்லக் கண்களை மூடி இடைவெளியின்றிப் பாடி முடித்துக் கண்களைத் திறந்தபோது  ரெக்கார்டிங் அறைக்கு வெளியே பரபரப்பான சூழலை உணர்ந்தேன். அதன்பிறகு சஞ்சய்ஜி சொன்னபிறகுதான் தெரிந்தது நான் சிறப்பாகப் பாடிய ஒத்திகையையே பாடலாகப் பதிவுசெய்துவிட்டது"  என தனது முதல் ரெக்கார்டிங் குறித்து நெகிழ்கிறார் ஸ்ரேயா கோஷல்.

 

'ஆல்பம்' படத்தில் இடம்பெற்ற 'செல்லமே செல்லம் என்பாயடா' பாடல் தான் ஸ்ரேயா கோஷல் பாடிய முதல் தமிழ் பாடல். நாடு முழுவதும் பிரபலமாகியிருந்த குரலை, தமிழில் பாட வாய்ப்பளித்தவர் கார்த்திக் ராஜா. அதற்காகவே அவருக்கு கோடான கோடி நன்றி. 'இது சித்ரா அம்மா குரல்', 'இல்லல்ல... இது ஸ்வர்ணலதா பாடியது' என ரசிகர்களுக்குள் அடிதடியே நிகழ்ந்தது. அந்த இருவரின் குரலைப் போன்று சாயல் இருந்தாலும், இந்தக் குரல் மட்டும் கொஞ்சம் வேறு மாதிரியாக வசீகரிப்பதை உணர்ந்தனர். அன்றிலிருந்து இன்று வரை ஸ்ரேயா தமிழ் ரசிகர்களின் செல்லம் தான். ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்களின் செல்லப்பிள்ளையாகவும் ஸ்ரேயா பெயர் எடுத்தார்.

'முன்பே வா என் அன்பே வா' பாடலை முணுமுணுக்காத காதலர்கள் இல்லை. வெயில் படத்தில் இடம்பெற்ற 'உருகுதே மருகுதே' கேட்டு உருகிமருகாதவர்கள் இல்லை. 'நினைத்து நினைத்துப் பார்த்தால்' கேட்கும்போது ஒரு மென்சோகம் நிழலாக அருகில் வந்தமர்கிறது. 'மன்னிப்பாயா' கேட்கும்போது ஊடல் கொண்ட காதல் இணையிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடத் தோன்றுகிறது. 'எளங்காத்து வீசுதே', 'உன்னவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல', 'சஹாயனே', 'சொல்லிட்டாளே அவ காதல' என ஸ்ரேயா கோஷல் தமிழ் ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்ட பாடல்கள் ஏராளம். திருமணத்துக்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளி இருந்தாலும், ஒரு பாடலை வருடம் முழுக்க பாடவைத்து விடுகிறார் ஸ்ரேயா. அவரை அடிக்கடி தமிழுக்கு அழைத்து வரும் டி.இமானுக்கு ஸ்பெஷல் நன்றிகள்!

Shreya

"தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாடும்போது உச்சகட்ட மகிழ்ச்சியடைகிறேன். இசை அங்குதான் வாழ்கிறது"  என ஸ்ரேயா கோஷல் காரணமில்லாமல் சொல்லவில்லை. "When in Rome, do as the Romans do" - "ரோமில் இருக்கும்போது ரோம் குடிமகனாக இரு" என்ற பழமொழிக்கு மிகச்சரியான பொருத்தம் ஸ்ரேயா கோஷல். எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியைத் தாய்மொழிபோல் உச்சரிப்புப் பிழையின்றி பாடும் திறமை ஸ்ரேயாவுக்கு உண்டு. தமிழ் மொழியின் சிறப்பு  'ழ'-கரம். பிற மொழிகளில் இல்லாத அந்த எழுத்தின் உச்சரிப்பை கற்றுக்கொண்டு மிக நுட்பமான இந்த மொழியில் பாடுவதென்பது அத்தனை எளிய காரியமில்லை. ஆனால், ஸ்ரேயா கோஷல் அதைச் சாதித்துக் காட்டினார்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற உச்சங்கள் என்றாலும் சரி, யூத்களின் ஃபேவரிட்டான அனிருத் என்றாலும் சரி, அனைவர் இசையிலும் தனித்துவமான பாடல்களைத் தந்திருக்கிறார் ஸ்ரேயா கோஷல். கேரள இசையுலகில் மலையாளிகள் அல்லாதவர்கள் அவ்வளவு எளிதில் நிலைத்து நிற்கமுடியாது. உச்சரிப்பில் கொஞ்சம் பிசகினாலும் விமர்சனங்கள் பறக்கும். அங்கே மலையாளிகள் அல்லாதவர் கொண்டாடப்படுவது அதிசயம். ஸ்ரேயா அப்படியான அதிசயம். அங்கும் தனக்கென ஒரு தனித்த இடத்தை உருவாக்கிக் கொண்டார். "ஸ்ரேயா கோஷல் பாடாத இந்திய மொழியொன்று இனி தான் பிறக்க வேண்டும்" என அவர் ரசிகர்கள் சொல்வதொன்றும் மிகையல்ல!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் ஜூன்-26-ம் தேதி "ஸ்ரேயா கோஷல் டே" எனக் கொண்டாடப்படுகிறது. அவரது இனிமையான குரலுக்கு மெலடி பாடல்கள் மட்டும்தான் பொருந்தும் என்ற விமர்சனத்தை, 'அக்னீபத்' படத்தில் இடம்பெற்ற 'சிக்னி சமேலி', ராம் லீலா படத்தில் இடம்பெற்ற 'நகாடே சங்' பாடல்கள் மூலம் தகர்த்தெறிந்தார். இசையுலகில் ஸ்ரேயா தொடாத உச்சமில்லை, பாடாமல் விட்ட ஸ்டைல் இல்லை. முன்னணி இசையமைப்பாளர் ராஜா, ரஹ்மான் துவங்கி முதல் பட இசையமைப்பாளர் அஜீஷ் வரை பாரபட்சம் பார்க்காமல் தன் குரலால் பாடலை அழகுபடுத்திக் கொடுத்தார். இந்துஸ்தானி, கஸல், பஜன், பாப் ஃபோல்க் என அத்தனை இசை வடிவங்களிலும் தனக்கென முத்திரையைப் பதித்திருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

Ilayaraja

பாடலின் எந்த இடத்தில் உணர்ச்சியைக் கூட்டி குறைக்க வேண்டும் என ஸ்ரேயா ஒருமுறை, இசைஞானி இளையராஜாவிடம் கேட்டாராம். அதற்கு இசைஞானி, 'பாடலின் போக்கில் நீ பாடு. எங்கு எப்படி உணர்ச்சியைக் கூட்டவேண்டும் என்பதை நினைத்துக்கொண்டே இருந்தால் உன் இன்னொசன்ஸ் போய்விடும். உன் இன்னொசன்ஸ் தான் உன்னுடைய சிறப்பே!' எனச் சொன்னாராம். 34 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் ஸ்ரேயாவிடம் இன்னும் அந்த இன்னொசன்ஸ் அப்படியேதான் இருக்கிறது (ராஜா சாருக்கு நன்றி!).

மொழிகளைத் தாண்டி ஸ்ரேயா பாடும் எல்லாமும் எல்லோருக்கும் பிடிக்கும் போது, தமிழில் நிறைய பாடுங்கள் என அவரைத் தொந்தரவு செய்து முடிக்க விருப்பம் இல்லை. நீங்கள் பாடுங்கள் ஸ்ரேயா... அதுவே போதும் எங்களுக்கு. இந்த பாடும் தேவதைக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளையும், அவர் பாடியதில் உங்களுக்குப் பிடித்த பாடல்களையும் கமெண்டில் பதியலாமே ஃப்ரெண்ட்ஸ்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தமிழ் சினிமாவில் தோனி, கோலி, அஸ்வின் நடித்தால், அந்தப் படங்களின் பெயர் என்னவாக இருக்கும்? - ஆவ்ஸம் போஸ்டர்கள்..!

  • தொடங்கியவர்

“அந்த 10 லைக்ஸ்தான் நேஷனல் ஜியோகிராபி விருது கொடுத்துச்சு!" - ‘கானுயிர்’ வருண் ஆதித்யா #VikatanExclusive

வருண் ஆதித்யா... 25 வயதிலேயே 'நேஷனல் ஜியாகிராபி' விருது பெற்ற இளம் புகைப்படக் கலைஞர். கோவையை சேர்ந்தவர். கடந்த ஆண்டு இவர் எடுத்த 'பச்சை பாம்பு' புகைப்படத்திற்கு நேஷனல் ஜியாகிராபியின் சிறந்த கானுயிர் புகைப்படத்திற்கான விருது கிடைத்தது. வருண் ஆதித்யாவிடம் புகைப்பட அனுபங்கள் பற்றி பேசினோம்... தனது அனுபவங்களை உற்சாகமாக நம்மிடையே பகிர்ந்து கொண்டார். 

நேஷனல் ஜியாகிராபி விருது பெற்ற வருண் ஆதித்யா

''சின்ன வயசுல இருந்தே இயற்கை மீது காதல். நான் படிச்ச பள்ளியில் படிக்கறதைத் தவிர வேறு எதையும் சொல்லித் தரவில்லை. மாணவர்களிடம் இருந்து மற்ற எந்தத் திறைமையையும் அந்த பள்ளி எதிர்பார்த்ததே இல்லை. எப்போ பாரு படிப்பு படிப்புதான். என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் படிப்புல கெட்டி. எங்க குரூப்லேயே நான்தான்  சராசரி.  எப்போதும் டீச்சர்ஸ் ஏதாவது குறைச் சொல்லி திட்டிக்கிட்டே இருப்பாங்க. அது எனக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிச்சு. படிப்புல நாட்டம் குறைஞ்சு போச்சு. ஆனாலும் எப்படியோ படிச்சு பாஸாகிட்டேன். 

அப்பா, அம்மாவுக்கு வங்கி ஒன்றில் பணி. அதனால, வருடத்துக்கு ஒரு முறை குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வசதி இருந்தது. சிறு வயது முதலே பெற்றோருடன் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். தேக்கடி போன்ற அழகான இடங்களைப் பார்த்த போது இயற்கையின் வசீகரம் என்னை இழுத்தது. வனங்களை நேசிக்க வைத்தது. கோவையில் டிகிரி முடிச்ச பிறகு, லண்டனில் எம்.பி.ஏ பண்ணினேன். லண்டன் ஒரு அழகான நகரம். எங்கு பார்த்தாலும் பூங்காக்கள் தான். பூங்காக்கள், பறவைகளை சும்மா விளையாட்டுக்கு செல்போனில் 'கிளிக்' செய்ய ஆரம்பித்தேன். அதனை நண்பர்களுடன் ஷேர் செய்து கொண்டிருப்பேன். இப்படித்தான் தொடங்கியது  எனது போட்டோகிராபி வாழ்க்கை'' எனக் கூறும், வருணுக்கு ஃபேஸ்புக்தான் க்ரியா ஊக்கி. 

வருண் ஃபோட்டோகிராஃபி

ஃபேஸ்புக்கில் நாம் போடும் ஸ்டேட்டசுக்கு 'லைக்' வந்தால் மனசு கொஞ்சம் துள்ளும்... அதுமாதிரிதான் வருணும் விளையாட்டுக்காக ஃபேஸ்புக்கில் ஒரு படத்தை ஷேர் செய்துள்ளார்.முதலில் 10 லைக்ஸ் கிடைத்துள்ளது. தினமும் 10 பேராவது, வருண் படத்துக்கு லைக்ஸ் போட்டு, அவர்களை அறியாமலேயே பிற்காலத்தில் விருது பெறும் அளவுக்கு அவரைத் தயார் செய்துள்ளனர். ஃபேஸ்புக் தந்த ஊக்கம் வருண் ஆதித்யாவை லண்டன் முழுக்க சுற்றி சுற்றி கிளிக் செய்ய வைத்துள்ளது. 

'உண்மைதான் சார். 'பேஸ்புக்கில் கிடைத்த அந்த 10 லைக்சுக்கு ஆசைப்பட்டுத்தான் போட்டோக்களை எடுத்துத் தள்ளினேன்.டிஎஸ்எல்ஆர் கேமரா ஒன்றும் வாங்கிக் கொண்டேன். லண்டனில் கண்ணில் பட்டதெல்லாம் எனக்கு போட்டோதான். யூடியுப், கூகுளும்தான் எனக்கு புகைப்பட ஆசான்கள். காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை பார்க்கும் பணியில் எப்போதுமே எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. அப்போதே இனி போட்டோகிராபிதான் வாழ்க்கை என முடிவு செய்திருந்தேன். ஒரு கட்டத்தில் ‘நேஷனல் ஜியாகிராபி' போட்டோகிராபர்களை ஃபேஸ்புக்கில் பின் தொடர ஆரம்பித்தேன்.

லண்டனில் ஆங்காங்கே 'கேங்ஸ்டர்ஸ்' மோதிக் கொள்வார்கள். என் கண் முன்னே  அப்படி ஒரு மோதல் நடந்தது. அதனைப் பார்த்து ஆக்ஷன் படங்கள் எடுக்கும் ஆர்வம் உருவானது. பறக்கும் பறவைகள் புகைப்படங்களை அப்படித்தான் எடுக்க ஆரம்பித்தேன். பறவைகளை புகைப்படம் எடுப்பதில்தான் ஒரு போட்டோகிராபருக்கு சவாலே இருக்கிறது. 2013ம் ஆண்டு மறக்கவே முடியாத அந்த நிகழ்வு நடந்தது. 'நேஷனல் ஜியோகிராபி' இதழ் நடத்திய போட்டி ஒன்றில் முதல் பரிசு கிடைத்தது. அந்த வெற்றி என்னை கோஸ்டாரிகா வரை செல்ல வைத்தது. நேஷனல் ஜியாகிராபியில் புகழ்பெற்ற போட்டோகிராபர் மிக்கேல் மெல்ஃபோர்டுடன்  இணைந்து பணி புரியவும் வைத்தது. அவரிடம் இருந்து  நான் நிறைய கற்றுக் கொண்டேன். 

வருண் ஃபோட்டோகிராஃபி

போட்டோகிராபி ஒரு விலை உயர்ந்த 'ஹாபி'. எனது பெற்றோர் மிகுந்த ஊக்கமளித்தனர். கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்து கேமரா, லென்சுகளை வாங்கித் தந்தனர். 'நேஷனல் ஜியாகிராபி' விருது பெற்றதில் இருந்தே நான் தொடர்ந்து டிராவல் செய்ய ஆரம்பித்து விட்டேன். மாதத்திற்கு இரு முறை என்று பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்வேன். ஒவ்வொரு பயணமுமே சவால்களும்  செலவு மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால், நாம் எதிர்பார்ப்பது போல புகைப்படங்கள் அமைந்து விட்டால் நாம் சந்தித்த கஷ்டங்களை எல்லாம் மறந்து விடுவோம்'' என வருண் ஆதித்யா சொல்லும் போதே நாம் மிரண்டு போனோம். மேலும் அவர் ஒரு போட்டோகிராபருக்கான குணாதிசயங்களை பட்டியலிட்ட போது மேலும் மிரண்டோம். 

''புகைப்படக் கலைஞன் என்பவன் நல்ல படம் அமையும் வரை திருப்தி அடைந்து விடக் கூடாது. திரும்ப திரும்ப முயற்சிக்க வேண்டும். எந்த ஒரு புகைப்படத்திலும் வித்தியாசத்தைக் காட்ட முயற்சி செய்யணும் . வித்தியாசமானக் கோணத்தில் சிந்திக்கணும். திருப்திபா என மனசு சொன்னால்தான் மூட்டையை கட்ட வேண்டும்' 'என்கிறார்.  

  • தொடங்கியவர்

நம்ப முடிகிறதா: மழை வைட்டமின்!

 
 
zebra_3141101f.jpg
 
 
 

> மண்புழுவுக்கு 5 ஜோடி இதயங்கள் இருக்கும்.

> ஒரு தவளை சராசரியாக 40 ஆண்டுகள் உயிர் வாழும்.

> மழையில் வைட்டமின் பி12 உள்ளது.

> நீர் யானை, மனிதனைவிட வேகமாக ஓடக்கூடியது.

> புதிதாகப் பிறந்த திமிங்கலம் 7 டன் எடை கொண்டது.

> இருளிலும் ஒளிரக்கூடிய சுறா மீன்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.

> ரோமானியர்களுக்கும் பெர்ஷியர்களுக்கும் நடந்த போர் 721 ஆண்டுகள் வரை நீடித்தது.

> வரிக்குதிரைகளின் உடலில் உள்ள வரிகளைப் பார் கோடு போல ஸ்கேன் செய்து, தனித்தனியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள் விஞ்ஞானிகள்.

> மொராக்கோவில் கி.பி. 859-ல் தொடங்கப்பட்ட கருயீன் (Karueein) பல்கலைக்கழகமே, இன்னமும் தொடர்ந்து இயங்கி வரும் உலகின் பழமையான உயர்கல்வி நிறுவனம்.

> பனிப்பாறைகளில் காணப்படும் கறுப்புக் கழிவுகளைக் கொண்டு, பெங்குயின் வசிப்பிடங்களை விண்வெளியி லிருந்தே அடையாளம் காண முடியும்.

 

 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

விளாடிமிர் வெர்னட்ஸ்கி

 
viladminir_3142632f.jpg
 
 
 

ரஷ்யாவைச் சேர்ந்த புவி உயிர் வேதியியல் அறிஞரான விளாடிமிர் இவனோவிச் வெர்னட்ஸ்கி (Vladimir Ivanovich Vernadsky) பிறந்த தினம் இன்று (மார்ச் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் (1863) பிறந்தார். தந்தை பொருளியலாளர். சிறு வயது முதலே ஏராளமான நூல்களைப் படித்தார். வீட்டில் நூலகம் வைக்கும் அளவுக்கு நிறைய நூல்களை சேகரித்தார். பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

* மாணவர் அமைப்பில் ஒரு அறிவியல் கட்டுரையை சமர்ப்பித்தார். அதில், ‘உயிர் என்றால் என்ன? முடிவற்று இயங்கும் ஆக்கமும் அழிவும் எவ்வாறு நடக்கின்றன?’ என்பது குறித்த தனது சிந்தனைகளை எழுதியிருந்ததோடு பல கேள்விகளையும் எழுப்பினார். இக்கட்டுரை மிகவும் பிரபலமடைந்தது.

* இக்கேள்விகளுக்கு அறிவியலில்தான் விடை கிடைக்கும் என்பதை உணர்ந்தார். மானுட வரலாறு, கணிதவியல், புவி வேதியியலில் நாட்டம் பிறந்தது. புவி வேதியியலில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பல நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களோடு தொடர்பு கொண்டிருந்தார்.

* புவி வேதியியல், புவி உயிர்வேதியியல், அணுக்கருப் புவியியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். உக்ரேன் அறிவியல் கல்விக்கழகம் (தற்போதைய உக்ரேன் தேசிய அறிவியல் கல்விக்கழகம்) என்ற அமைப்பை உருவாக்கினார்.

* உயிர்க்கோளம் (The Biosphere) என்ற நூலை 1926-ல் வெளியிட்டதன் மூலம் உலகப்புகழ் பெற்றார். பல மொழிகளில் இந்நூல் வெளியிடப்பட்டது. பல்வேறு துறையினருக்கும் தேவையான அடிப்படை விஷயங்களை உள்ளடக்கிய படைப்பாக இது போற்றப்படுகிறது.

* புவியின் மேற்பரப்பு குறித்து ஆராய்ந்து, இது கடந்தகால உயிரிக்கோளம் (Bygone Biosphere) என வரையறுத்தார். ‘உணர்திறக்கோளம் (Noosphere) குறித்த சில வார்த்தைகள்’ என்ற இவரது கட்டுரை பல மொழிகளில் வெளிவந்தது. முதன்முதலாக, உயிரினங்களுக்கும் புவியின் வேதி அமைப்புக்குமான தொடர்பு குறித்து ஆராய்ந்த ஒருசிலரில் இவரும் ஒருவர்.

* புவி - வேதி தாக்கம் குறித்தும் ஆராய்ந்தார். இதன் விளைவாக உயிர் புவி - வேதியியல் (Biogeochemistry) என்ற புதிய களமே உருவானது. உயிரியலில் முன்னணி கருதுகோளாகக் கருதப்படும் ‘கயா’ (Gaia) குறித்தும் ஆராய்ந்தார். யுரேனியக் கனிமத் தாதுவை 1916-ல் முதன்முதலாக கண்டறிந்தார். 1918-ல் ரஷ்யாவில் ரேடியம் தயாரிக்கப்பட்டது.

* பீட்டர்ஸ்பர்கில் 1922-ல் ரேடியம் மையத்தை உருவாக்கினார். 1938 வரை இந்த மையத்தின் இயக்குநராக செயல்பட்டார். இங்கு அணுப்பிளவு ஆய்வு மேற்கொண்டார். விண்கற்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். விண்கல் ஆய்வுக் கழகத்தை உருவாக்கி, வாழ்நாள் முழுவதும் அதன் வழிகாட்டியாக செயல்பட்டார்.

* பல்வேறு மதங்கள் குறித்து ஆராய்ந்தார். இந்திய ஆன்மிகம், தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார். ரிக் வேதத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இந்து மதத்தின் மகத்துவத்தை உலகம் உணரவேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்துக்களின் சமய, தத்துவ சிந்தனைகள் மூலம் நிறைய அறியமுடியும் எனக் கூறினார்.

* இந்தியாவின் மதம், சிந்தனை, தத்துவங்கள், ரிக்வேதம் குறித்து தன் நண்பர்களுக்கு விரிவான கடிதங்கள் எழுதினார். தன் இறுதிக்காலத்தில் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளால் மிகவும் கவரப்பட்டார். அறிவியல் மேம்பாட்டுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட விளாடிமிர் வெர்னட்ஸ்கி 82-வது வயதில் (1945) மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

அழகு ததும்பும் செல்லப்பிராணிகளின் பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)

 
 

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் கிரஃப்ட்ஸ் நாய் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 1891 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற இந்த கண்காட்சி உலகிலே மிகப்பெரிய இந்த வகை கண்காட்சியாக பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கண்காட்சியின் நான்காவது நாளில், உலகெங்கிலும் பல நாடுகளிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான நாய்கள் கலந்து கொண்டு சிறந்த போட்டியாளருக்கான பட்டத்தை கைப்பற்ற பல்வேறு அசாதாரணமான காரியங்களை செய்யும்.

அதில் பங்கேற்ற அழகிய நாய்களின் புகைப்படத்தொகுப்பு.

பேரழுகு செல்லப்பிராணிகள் : இங்கிலாந்தில் நடைபெறும் பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES பேரழுகு செல்லப்பிராணிகள் : இங்கிலாந்தில் நடைபெறும் பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES பேரழுகு செல்லப்பிராணிகள் : இங்கிலாந்தில் நடைபெறும் பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES பேரழுகு செல்லப்பிராணிகள் : இங்கிலாந்தில் நடைபெறும் பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES பேரழுகு செல்லப்பிராணிகள் : இங்கிலாந்தில் நடைபெறும் பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES பேரழுகு செல்லப்பிராணிகள் : இங்கிலாந்தில் நடைபெறும் பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES பேரழுகு செல்லப்பிராணிகள் : இங்கிலாந்தில் நடைபெறும் பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES பேரழுகு செல்லப்பிராணிகள் : இங்கிலாந்தில் நடைபெறும் பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES பேரழுகு செல்லப்பிராணிகள் : இங்கிலாந்தில் நடைபெறும் பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES பேரழுகு செல்லப்பிராணிகள் : இங்கிலாந்தில் நடைபெறும் பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES பேரழுகு செல்லப்பிராணிகள் : இங்கிலாந்தில் நடைபெறும் பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES பேரழுகு செல்லப்பிராணிகள் : இங்கிலாந்தில் நடைபெறும் பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES பேரழுகு செல்லப்பிராணிகள் : இங்கிலாந்தில் நடைபெறும் பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES பேரழுகு செல்லப்பிராணிகள் : இங்கிலாந்தில் நடைபெறும் பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES பேரழுகு செல்லப்பிராணிகள் : இங்கிலாந்தில் நடைபெறும் பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES பேரழுகு செல்லப்பிராணிகள் : இங்கிலாந்தில் நடைபெறும் பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)படத்தின் காப்புரிமைGETTY IMAGES

 பிபிசி தமிழ் :

  • தொடங்கியவர்

வாடகை சைக்கிள், சட்டி சோறு, ஆடலும் பாடலும்! - #WeekEndRewind

பால்ய கால நினைவுகள்ங்கிறது எப்போதும் திகட்டாத பால்கோவா. அவற்றை நினைவுகளால் அள்ளி அள்ளித் தின்னலாம். எப்போ வேணும்னாலும் எல்லோர் வாழ்விலும் நிகழும் அப்படிச் சில எத்திக்கும் தித்திக்கும் பலகார நினைவுகள் இதோ...

பால்ய

* இன்னைக்குத் திரும்புன பக்கமெல்லாம் ஸ்கூட்டரும் பைக்கும் இருக்கு. ஆனா சின்ன வயசுல சைக்கிளை கூட நாம அப்படிப் பார்க்க முடியாது. அப்போவெல்லாம் 1 ரூபாய்க்கும் 2 ரூபாய்க்குமா வாடகை சைக்கிள் பிடிச்சு தெருத்தெருவா சுத்தியதை எப்போ நினைச்சாலும் எத்திக்கும் தித்திக்கும்தானே..! #அந்த ரெண்டு ரூவாய்க்கு நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்!

* ஊர் ஊருக்கு கோழிப்பண்ணை மாதிரி பள்ளிக்கூடங்களைத் திறந்து நாள்பூராம் நண்டுசிண்டுகளை போட்டு அடைச்சி வெச்சிக்கிறாங்க. ஆனால் பத்து வருஷத்துக்கு முன்னாடிவரைக்கும் ஸ்கூல் வாசல்ல தள்ளுவண்டில விற்பாங்களே கொய்யா, மாங்கா, எலந்தைப்பழ இத்யாதிகள்... அதை அடிச்சிபிடிச்சி வாங்கி, வெறுப்பேத்துற ஃப்ரெண்ட் கடுப்பாகுற மாதிரி வக்கணை காட்டிச் சாப்பிட்ட நாட்கள் எல்லாம் கண்ணுமுன்னாடி வந்து வந்து போகுதே!

* குளுகுளு அறைக்குள்ளே ஆப்ஸ் கேமும், வீடியோ கேமும் விளையாடி சோர்வடையறாங்க பசங்க இப்போ. ஆனா பம்பரம், கோலி, கிட்டிப்புள், பாண்டினு சீஸனுக்கு ஒரு விளையாட்டு வருமே... அதையெல்லாம் சளைக்காம கண்விழிச்சதுலேர்ந்து இருட்டுற வரை போறபோக்குல வெயிலும் புழுதியும் பார்க்காம போட்டி போட்டு விளையாடிட்டு தாய்க்குலத்துக்கிட்ட தாறுமாறா வசவு வாங்கிக் கொண்டாடுனதெல்லாம் எத்திக்கும் தித்திக்குமா இல்லையா? #யய்யாடி... என்னா அடி?

பால்ய

* யாரோ ஒரு வீட்டுக்காரங்க புது வீடு கட்ட மணலும் செங்கல்லும் வாங்கித் தெருவுல கொட்டி வெச்சிருப்பாங்க. ஆனா அப்போதைய கனவில் இன்ஜினீயர்களா வாழ்ற நம்ம குட்டி வானரப்படை சின்னச்சின்னதா பல வீடுகள் கட்டி செங்கல்லை வெச்சு பஸ் விட்டு விளையாடினா விரட்டியடிப்பாங்க. இப்போ நிஜமாவே இன்ஜினீயரிங் படிச்சிட்டு வேலை கிடைக்காம திரியும்போது ‘நல்லவேலை அப்பவே நாம வீடுகட்டிட்டோம்’னு மனசைத் தேத்திக்கிடவா, இல்லை அப்பவே வருங்காலத்தில் உனக்கு வேலை கிடைக்காதுன்னு நம்ம இன்ஜினீயரிங் மூளைய ஓடஓட விரட்டுனவங்களை தீர்க்கதரிசின்னு நினைச்சி மனசுக்குள்ளேயே புழுங்கவானு அப்பப்போ நெஞ்சம் கொஞ்சம் எகிறி மிதிக்கும்.

* பல வீடுகளில் டாய்லெட் இல்லாம இருந்த காலத்தில், செப்டிக் டேங்க்னா என்னன்னே தெரியாத வயசுல, திண்ணை மாதிரி ஆங்காங்கே சில வீடுகளில் இருக்கிற செப்டிக் டேங்க்தான் ஆடல்பாடல் அரங்கேறும் கலையரங்கம். அங்கே நடந்த டான்ஸ் பெர்பார்மன்ஸையெல்லாம் இன்னிக்கு ஜோடியிலேயும் பார்க்க முடியாது... மானாட மயிலாடலையும் பார்க்கமுடியாது. ஒரே கூத்தா இருக்கும். 

* எந்த ஃப்ரெண்ட் வீட்டுல அப்பா அம்மா ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்களோ அந்த வீடுதான் சகலத்துக்குமான சோதனைக்கூடம். ஒரு டிஷ்ஷும் பண்ணத் தெரியாதுன்னாலும் கடுகையும் சோம்பையும் அள்ளிக் கொட்டி தினுசு தினுசா சமையல் செய்து சட்டிச்சோறு கட்டியதும் சுவை அனுபவமே..!

* வீட்டுப்பாடம் கொடுக்கிறது டீச்சர் கடமைன்னா அதை விட்டுக்கொடுக்காம தட்டிக்கழிச்சது நம்ம பெருமை. சிலேட்ல எழுதிட்டு வரச்சொன்னா பேக் உள்ளே வெச்சு, பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு வரும்போது அழிஞ்சதாவும், நோட்ல எழுதச்சொன்னா தம்பிப்பாப்பா கிழிச்சிட்டதாவும் கப்சா விட்டது கதகத சமாளிப்பு.

* சாக்குபோக்குச் சொல்லி, கோக்குமாக்கு பண்ணி டீச்சரைக் குழப்பி, திட்டமிடாம செய்த திகுதிகு சேட்டைகள் தித்திக்கும் ஞாபகமே...டியூசன் என்றால் படிக்க மட்டுமில்லை. காதலுக்கு தூதுபோதல், வீட்டுவேலைகளுக்கு ஒத்தாசை செய்தல், குழந்தைகளைப் பராமரித்தல், கடைகளுக்குப் போய்வருதல்னு எக்கச்சக்கமா சில்லறை வேலை பார்த்து டிமிக்கி கொடுத்தது தாறுமாறுன்னா, இதெல்லாம் வீட்டுக்கு தெரியவரும்போது அப்பாவும், அம்மாவும் ரவுண்ட் கட்டி வெளுப்பாங்களே... அப்போ வெளிப்படுறது தக்காளிச்சோறுதான். என்ன ஒண்ணு, எத்திக்கும் கொஞ்சம் ரத்தம் வெளிப்படும். சண்டையில கிழியாத சட்டையா..?

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

கவர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

மார்ச் – 13

 

624 : மக்­காவின் குரை­ஷி­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் சவூ­தியின் ஹெஜாஸ் பிராந்­தி­யத்தில் பத்ர் யுத்தம் நடை­பெற்­றது. இதில் முஸ்­லிம்கள் வென்­றமை இஸ்­லாத்தில் திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்­தி­யது.


1639 : அமெ­ரிக்­காவின் ஹாவர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு ஜோன் ஹவார்ட் என்­ப­வரின் பெயர் சூட்­டப்­பட்­டது.


Varalaru-Pope-Francis-Dove1781 : வில்­லியம் ஹேர்ச்செல் யுரேனஸ் கோளைக் கண்­டு­பி­டித்தார்.


1811 : பிரித்­தா­னியர் பிரெஞ்சுப் படை­களை லீசா என்ற இடத்தில் இடம்­பெற்ற சமரில் தோற்­க­டித்­தனர்.


1881 : ரஷ்­யாவின் சார் மன்னன் இரண்டாம் அலெக்­சாண்டர் தனது மாளி­கைக்கு அருகில் நடந்த குண்டு வீச்சில் கொலை செய்­யப்­பட்டார். 


1900 : பிரான்ஸில் பெண்கள் மற்றும் சிறு­வர்­களின் வேலை நேரம் சட்­டப்­படி 11 மணி நேர­மாகாக் குறைக்­கப்­பட்­டது.


1921 : சீனா­விடம் இருந்து பிரி­வ­தாக மொங்­கோ­லியா  சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது. 


1940 : இந்­திய விடு­தலைப் போராட்ட வீரர் உத்தம் சிங், லண்­டனில் காக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் நடை­பெற்ற பொதுக்­கூட்­டத்தில் வைத்து இந்­தி­யாவின் முன்னாள் ஆளுநர் மைக்கல் டயரை சுட்டுக் கொன்றார்.


1943 : ஜேர்­ம­னியப் படைகள் போலந்தின் யூதக் குடி­யேற்­றங்­களை அழித்­தன.


1954 : வியட்நாம் போர்: 'வியட் மின்' படைகள் பிரெஞ்சுப் படை­களைத் தாக்­கினர்.


1957 : கியூ­பாவின் ஜனா­தி­பதி புல்­ஜென்­சியோ பட்­டீஸ்­டாவைக் கொல்ல மாணவ தீவி­ர­வா­திகள் எடுத்த முயற்சி தோல்­வியில் முடிந்­தது.


1969 : அப்­பலோ 9 விண்­கலம் பாது­காப்­பாக பூமி திரும்­பி­யது.


1979 : கிரெ­ன­டாவில் இடம்­பெற்ற புரட்சி ஒன்றில் அதன் பிர­தமர் எரிக் கெய்ரி பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டார்.


1988 : உலகின் மிக நீள­மான கட­லடி சுரங்­கப்­பாதை ஜப்­பானில் திறக்­கப்­பட்­டது. 


1992 : கிழக்கு துருக்­கியில் இடம்­பெற்ற (6.8 ரிச்டர் அளவு) பூகம்­பத்தில் 500 பேருக்கு மேல் கொல்­லப்­பட்­டனர்.


1997 : அமெ­ரிக்­காவின் பீனிக்ஸ் நகரின் மீது பீனிக்ஸ் வெளிச்­சங்கள் தெரிந்­தன.


2003 : இத்­தா­லியில் 350,000 ஆண்டுகள் பழ­மை­யான மனித அடிச்­சு­வ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக நேச்சர் இதழ் அறி­வித்­தது.


2007 : 2007 உலகக் கிண்ண (கிரிக்கெட்) சுற்­றுப்­போட்டி மேற்­கிந்­தியத் தீவு­களில் ஆரம்­ப­மா­கி­யது.


2013 : பாப்­ப­ரசர் 16 ஆம் ஆசிர்­வா­தப்பர் ஓய்­வு­பெற்­ற­தை­டுத்து புதிய பாப்­ப­ர­ச­ராக ஆர்­ஜென்­டீ­னாவைச் சேர்ந்த கர்­தினால் ஜோர்ஜ் மரியோ பேர்­கோக்­லியோ தெரிவானார். அவர் முதலாம் பிரான்சிஸ் என்ற பெயருடன் பாப்பரசரானார்.


2016 : துருக்கியன் அன்காரா நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 37 பேர் உயிரிழந்ததுடன் 127 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

‘கொரங்குப் பயலாய்’ இருக்காதீர்கள்! #MondayMotivation #MisterK

முதலாளியின் அறையின் ஏ.சி மிகுந்த குளிரூட்டியது. முழுக்கை சட்டையை மடக்கி விட்டிருந்த அஷோக், அதை எடுத்து விட்டுக் கொண்டிருந்தான். எதிரில் அஷோக்கின் முதலாளி விஸ்வம், கோடு போட்ட டி- ஷர்ட்டில் படு ஸ்டைலிஷாக அமர்ந்திருந்தார். ஆஃபீஸ் டேபிளே வித்தியாசமாக செட் அப்பில் இருக்க, 27 இன்ச் ஐ-மேக்கில் எதையோ டைப்பிக் கொண்டிருந்தார்,  ஃப்ரெம்லெஸ் கண்ணாடிவழியாக, கண்களை அஷோக் பக்கம் திருப்பி, சுருக்கி ‘கொஞ்ச நேரம் ப்ளீஸ்’ என்று சைகையாலேயே கேட்டுக் கொண்டார்.

மிஸ்டர் K

ஐந்து நிமிடம் கழிந்ததும், ஏ.சி ரிமோட்டைக் கையில் எடுத்துக்கொண்டே பேச ஆரம்பித்தார் விஸ்வம்: “அஷோக்... யு ஆர் ஷிவரிங். ரொம்ப குளிருதுன்னா ரிமோட் எடுத்து அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதானே..  என்கிட்ட ஃபார்மாலிட்டிலாம் எதுக்கு?” என்று சிரித்துக் கொண்டே, “சொல்லு” என்றார்.

“சார்.. அந்த ரிதம் கார்மெண்ட்ஸ் அசைன்மெண்டை, கணேஷுக்கு குடுக்கணும்னு ஃபைல் மூவ் பண்ணிருந்தேன். நீங்க அவன் பேரை அடிச்சுட்டு, சேகர் பேரைப் போட்டிருக்கீங்க” என்று ஃபைலைக் கொடுத்தான்.

வாங்கிப் பார்த்தார் விஸ்வம். “யெஸ்.. அதை கணேஷ் பண்றதுல எனக்கு உடன்பாடில்லை அஷோக். நான் பாஸ், நீ மேனேஜர்ங்கறதத் தாண்டி உனக்கு ஒரு விஷயம் சரியா படலைன்னா வந்து பேசுவ-னு எனக்கு நல்லா தெரியும். இதுக்கு வரமாட்டான்னு நெனைச்சேனே”

“கணேஷுக்கு இந்த அசைன்மெண்ட் போறதுல என்ன பிரச்னை?”

“முதல் ரெண்டு அசைன்மெண்ட்ல அவன் பண்ணின மிஸ்டேக்ஸ் பத்தி நாம பேசிருக்கோம் அஷோக்”

“மிஸ்டேக்கே இல்லாம யார் அசைன்மெண்ட் பண்றாங்கனு பார்த்து குடுக்கறதா இருந்தா, யாருக்குமே குடுக்க முடியாது சார்”

“ஆனா கணேஷ் மொதல்ல வேற டீம்ல இருந்தப்பவும்....”

“யெஸ்.. அதான் சொல்ல வர்றேன். இப்ப கணேஷ் பண்ற அசைன்மெண்ட்ல பிரச்னைனு நீங்க பார்க்கல. கணேஷே பிரச்னைனு பார்க்கறீங்க. அதான் எனக்கு தப்பா தெரியுது”

“நீ என்ன சொல்ல வர்ற?”

“கணேஷ் மேல உங்களுக்கு ஒரு இமேஜ் வெச்சிருக்கீங்க சார். இதோட கை மாறி கை மாறி இப்ப நாலாவதா என் டீமுக்கு அவன் வந்திருக்கான். விசாரிச்சதுல, அவன் பண்ற எந்த வேலைன்னாலும் உங்களுக்கு அது ஓகேவா படறதில்லை. ‘அவன் தப்பு பண்ணுவான்’னு ஒரு மைண்ட் செட் பண்ணிட்டீங்க. அதுல இருந்து வெளில வர மாட்டீங்கறீங்க”

“இப்ப நான் என்ன பண்ணணும்?”

”இந்த அசைன்மெண்ட்டை கணேஷ்கிட்டதான் குடுக்கணும். அதுக்கு உங்க கையெழுத்து வேணும்”

“கொண்டா. போட்டுத் தர்றேன்” விஸ்வம் கையொப்பமிட்டார்.

அஷோக் அந்த அசைன்மெண்டை கணேஷிடம் கொடுத்தான்; கணேஷிடம் பாஸிடிவாகப் பேசினான்;  கணேஷ், அதன் முக்கியத்துவம் உணர்ந்து வேலையை குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே முடித்து வெரிகுட் வாங்கினான் என்பதெல்லாம் உப சம்பவங்கள்.

குரங்கு

நம் அன்றாட விஷயங்களில், எத்தனை முறை இது மாதிரி ‘ஒரு விஷயத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்து’ அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம் தெரியுமா? யாராவது ஒரு விவாதத்தின்போது ஏதாவது சொல்லிவிட்டால், அந்த வார்த்தையையே பிடித்துக் கொள்வது, ஒரு ஆளைப் பற்றி ஒரு இமேஜ் வைத்துக் கொண்டு அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விடாமல் இருப்பது இப்படி எத்தனை எத்தனை.

மிஸ்டர் K இந்த மாதிரி யாராவது செய்தால் உடனே “ஏண்டா கொரங்குப் பயலே” என்று திட்டுவான். நான்கூட எதோ வசவுக்குத்தான் அந்த வார்த்தையைச் சொல்கிறான் என்று நினைத்திருந்தேன். ஒருநாள் அந்த வார்த்தைக்கான காரணத்தைச் சொன்னான். 

“குரங்கை வேட்டையாட பல வகைகள் உண்டு. அதில் ஆப்பிரிக்காவில் செய்கிற முறை ஒன்று உண்டு.

குரங்கு கொஞ்சம் தூரத்தில் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பெரிய புற்றில் ஒரு குறிப்பிட்ட சைஸில் ஒட்டை போடுவார்கள். அதற்குள் மணம் வீசுகிற விதைகள், பழக்கொட்டைகளைப் போடுவார்கள். பிறகு தூரத்தில் மறைந்து நின்று கொள்வார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் குரங்கு, மனிதனை நம்பி உடனே போகாது. இருந்தாலும் அதற்கு ஆர்வம் தாங்காது. கொஞ்சநேரம் கழித்துப் போய் அந்த ஓட்டைக்குள் கைவிடும். உள்ளே இருக்கிற பழக்கொட்டைகளை கைநிறைய அள்ளிக் கொள்ளும்.

இங்கேதான் ட்ரிக் ஆரம்பம். வெறும் கை உள்ளே போனது அல்லவா.. இப்போது பழக்கொட்டைகள் நிறைந்த கை, வெளியே வராது. சிக்கிக் கொள்ளும். அவற்றை விட்டால், டக்கென்று கையை எடுக்க முடியும். ஆனால் அதை குரங்குகள் யோசிக்காது. விடவும் விடாது. தூரத்தில் மறைந்திருந்த வேடன், ஓடிவந்து அதைப் பிடித்துக் கொண்டு போய்விடுவான்”

“நெஜமாவா சொல்ற?” என்று நான் கேட்டதற்கு, மிஸ்டர் K கீழிருக்கற வீடியோவைக் காண்பித்தான்.

நாமும் இப்படித்தான். டக்கென்று விட்டுவிட்டால் தப்பித்துவிட முடிகிற விஷயங்களை விடாமல் பிடிவாதமாய்ப் பிடித்துக் கொண்டு ‘குத்துதே.. கொடையுதே’ என்றுகொண்டிருக்கிறோம்.

அதைவிட்டு, சிந்தித்தால், ஒரு படி முன்னேறலாம். புதிய அனுபவம் கிட்டலாம். நமக்கே ஆசுவாசமாய் இருக்கலாம். ஆனால் செய்வோமா என்பதுதான் கேள்வி.

சரி.. நீங்கள் அப்படி ‘கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விடமுடியாமல் தவிக்கிற விஷயம் என்ன’ என்பதை யோசித்து கமெண்டில் சொல்லுங்களேன்.. அது போலவே... பிடிவாதம் தளர்த்தி வென்றவற்றையும் சொல்லலாம்!

ரெடி ஜூட்!

 

 

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.