Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

மலையாள சேனல்களில் கலக்கும் டாப் சீரியல் நடிகைகள் இவர்கள்...

அம்பிகா, ராதா முதல் நயன், நித்யா மேனன் வரை பல திறமையான நடிகைகளை திரையுலகிற்கு தந்திருக்கிறது கேரளா. அங்கே சின்னத்திரையிலும் திறமை மற்றும் அழகால் கலக்கிக்கொண்டிருக்கும் டாப் சீரியல் ஹீரோயின்களை பற்றி பார்க்கலாமா...

நடிகை மேக்னா வின்சென்ட்

மேக்னா வின்சென்ட் : 

நம் ஊர் 'தெய்வம் தந்த வீடு' சீரியலின் சீதாவே தான். தமிழ் சீரியலில் அறிமுகமாவதற்கு முன்பாக , கேரள நாட்டில் பல மலையாள சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார். சூர்யா டிவியில் மோகக்கடல், சக்ரவாகம், ஏசியாநெட்டில் ஆட்டோகிராஃப், மழவில் மனோரமா சேனலில் பரினாயம், இந்திரா என எல்லா சேனல்களிலும் கலந்துகட்டி நடித்து டாப் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் மேக்னா.

நடிகை காயத்ரி அருண்


காயத்ரி அருண் : 

'என் கணவன் என் தோழன்' தொடரின் மலையாள வெர்ஷனான  'பரஸ்பரம்' தொடரின் ஹீரோயின் காயத்ரி அருண் தான். 2016 ஆம் ஆண்டில் பிரபல தொலைக்காட்சி நடிகை விருதையும், 2015 ஆம் ஆண்டின் சிறந்த நடிகை எனும் விருதையும் வென்றிருக்கிறார். காயத்ரி சிறப்பான பாடகியும் கூட.

 

நடிகை ஶ்ரீலயா

ஶ்ரீ லயா :

பிரபல மலையாள தொலைக்காட்சி நடிகை லிஸ்ஸி ஜோஸின் மகள்தான் ஶ்ரீ லயா. கண்மனி, பாக்யதேவதா,மூணுமனி ஆகிய நாடகங்களில் நடித்து மலையாள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள ஶ்ரீலயா 'குட்டீம் கொலும், மாணிக்யம், கம்பார்ட்மெண்ட்' ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். திறமையான நடனகலைஞரான ஶ்ரீ லயாவிற்கு 'குட்டிமணி' எனும் செல்லப்பெயரும் உண்டு. 

 

சீரியல் நடிகை வரதா

வரதா :

சுல்தான், மகன்டே அச்சன், உத்தரா ஸ்வயம்வரம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கும் வரதா இப்போது சின்னத்திரையில் பிஸியான நடிகையாகிவிட்டார். மழவில் மனோரமா சேனலின் 'அமலா' தொலைக்காட்சி தொடரில் நாயகியாய நடித்த வரதா, தற்போது 'பிரணயம்' என்ற தொடரில் ஹீரோயினாக நடித்துவருகிறார். 'காதலிக்கலாமா' என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் வரதா. தெரியாமப்போச்சே...

 

சீரியல் நடிகை மாளவிகா வேல்ஸ்
 

மாளவிகா வேல்ஸ் :

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'நந்தினி' தொடரின் ஜானகிதான் மாளவிகா வேல்ஸ். மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான மாளவிகா தமிழ், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். மழவில் மனோரமா சேனலில் ஒளிபரப்பான பொன்னம்பிலி எனும் நாடகம் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார்.

சீரியல் நடிகை சராயு
 

சராயு :

கிட்டதட்ட நாற்பது திரைப்படங்களுக்குமேல் நடித்திருக்கும் சராயு, மலையாள சின்னத்திரை உலகிலும் பிரபலமான நடிகையும் கூட. ‘வேளாங்கன்னி மாதாவு’, ‘மனப்பொருத்தம் ஈரன் நிலவு’ ஆகிய தொடர்களிலும் நடித்திருக்கும் இவர், தமிழில் 'தீக்குளிக்கும் பச்சைமரம்' என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இதுவும் தெரியாமப்போச்சே...

சீரியல் நடிகை கௌரி கிருஷ்ணன்


கௌரி கிருஷ்ணன் :

'டிராபிக்' திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் கௌரி கிரஷ்ணன். அதன் பிறகு, சின்னத்திரை பக்கம் வந்துவிட்டார். மழவில் மனோரமா சேனலில் ஒளிபரப்பான 'அநியாதி' என்ற சீரியலில் நடித்தார். 

சீரியல் நடிகை ஸ்டெபி லியோன்


ஸ்டெபி லியோன் :

மழவில் மனோரமா சேனலில் ஒளிபரப்பான 'மானசவீணா' சீரியல் மூலம் அறிமுகமான ஸ்டெபி, அதன்பின் ஏசியாநெட் சேனலின் 'அக்னிபுத்ரி' எனும் திகில் தொடரில் ஹீரோயினாக நடித்தார்.

சீரியல் நடிகை நிகிதா ராஜேஷ்


நிகிதா ராஜேஷ் :

பிரபல சீரியல் இயக்குநர் ராஜேஷின் மகள். குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமான நிகிதா நிறைய நிகழ்ச்சிகளில் பணியாற்றியிருக்கிறார். மஞ்சுருக்கும் காலம் என்ற சீரியலிலும் நிகிதாவை நீங்கள் பார்க்கலாம்.

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
அழகிய காட்சி…
 
 

article_1489322007-Bull%20p7%20%281%29.j

முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ‘தேவால ஹந்திய’ எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள குளம், இந்நாட்களில் பல்வேறுவிதமான பறவைகளினால் நிறைந்து காணப்படுகின்றது.

காலை 5.30 மணி முதல் 7.30 வரையிலான நேரப் பகுதியில் இந்தக் குளத்தை நாடி, ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் வருவதைக் காண முடிகின்றது. 

(படப்பிடிப்பு: முஹம்மது முஸப்பிர்)

article_1489322018-Bull%20p7%20%282%29.jarticle_1489322027-Bull%20p7%20%283%29.j

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

டைட்டானிக்கை தின்னும் பாக்டீரியா... 14 ஆண்டுகளில் காணாமல் போகுமா கப்பல்?

இதை ஒரு கதையாக நீங்கள் கேட்டிருக்கலாம். ஒரு படமாக நிச்சயம் பார்த்திருக்கலாம். 1912ம் ஆண்டு, ஏப்ரல் 15 ஆம் தேதி அதிகாலை நேரம். வட அட்லாண்டிக் கடல் பகுதியில் நீளமாக... மிக நீளமாக இருந்த அந்தக் கப்பல் மெதுவாக போய்க் கொண்டிருந்தது. அதை வானில் பறந்துக் கொண்டிருந்த கடற்பறைவைக் கூட்டம் அத்தனை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தன. திடீரென... ஒரு பறவை அதைப் பார்க்கிறது. அதிர்ச்சியோடு மற்ற பறவைகளிடம் சொல்கிறது. அந்த பெரும் கப்பல் ஒரு பனிப் பாறையை இடிப்பது போல் போகிறது. பெரும் விபரீதம் நடக்க இருப்பதை அறிந்து சில பறவைகள் பயத்தில் பறந்து போகின்றன. சில வானில் வட்டமிட்டபடியே அந்த வரலாற்று துயரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. டைட்டானிக் கப்பல் உடைகிறது. உடைந்த கப்பல் மூழ்குகிறது. அந்த சில்லிட்ட விறைக்கும் கடல் நீர் 1500க்கும் அதிகமான உயிர்களை பலி வாங்குகிறது.

டைட்டானிக் மிச்சங்கள் அட்லாண்டிக் கடல் பாக்டீரியா

உலகையே உறைய வைத்த இந்த நிகழ்வின் மிச்சங்களாக இருந்த, உடைந்த டைட்டானிக் கப்பல் கடலில் எங்கு போனது என்பது பல ஆண்டுகளாக  யாருக்கும் தெரியவில்லை. பின்பு, 1985ல் ராபர்ட் பல்லார்ட் என்ற கடல் ஆராய்ச்சியாளர் , அமெரிக்காவின் மூழ்கிய இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களைத் தேடி அலைந்த போது டைட்டானிக்கின் மிச்சங்களைக் கண்டுபிடித்தார். அது தொடர்ந்து, டைட்டானிக் சம்பந்தப்பட்ட எத்தனையோ ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வரப்பட்டன. 3.8 கி.மீ ஆழத்தில், கும்மிருட்டில் புதைந்துக் கிடக்கும் டைட்டானிக்கின் மிச்சங்கள் இன்னும் 14 ஆண்டுகளில் முற்றிலுமாக அழிந்து போய்விடும் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதற்கு காரணம்... ஒரு பேக்டீரியா. 


டைட்டானிக் மிச்சங்கள் அட்லாண்டிக் கடல் பாக்டீரியா1991ல் கனடாவைச் சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் டைட்டானிக் மிச்சங்களைப் பார்க்க கடலுக்கடியில் சென்றார்கள். அப்போது, இரும்பிலிருந்த துருக்கள் பல ஒன்று சேர்ந்து சிறு, சிறு “துரு கூம்புகளாக"  இருப்பதைக் கண்டனர். அதைப் பெயர்த்து எடுத்து வந்து சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.

அந்த "துரு கூம்புகளில்" நுண்ணுயிரிகள் இருப்பதையும், அந்த நுண்ணியிரிகள் தொடர்ந்து பெருக்கமடைவதையும் கண்டறிந்தனர். பின்பு, 2010ல் ஹென்ரிட்டா மேன் என்கிற விஞ்ஞானி அறிவியல் உலகிற்கே தெரியாத ஒரு பேக்டீரியா அதில் இருப்பதைக் கண்டறிந்தார். அதற்கு "ஹலோமோனஸ் டைட்டானிகே" ( Halomonas Titanicae) என்ற பெயரையும் சூட்டினார். 

கடலின் 3.8‘ கிமீ ஆழம் என்பது மிக அடர்த்தியாக இருக்கும். கும்மிருட்டாகவும், அதிகப்படியான அழுத்ததோடும் இருக்கும். இந்தச் சூழலில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் மிக அரிது. ஆனால், இந்தச் சூழலில் ஹலோமோனஸ் வாழ்கிறது. எக்டாய்ன் (Ectoine) என்ற ஓர் மூலக்கூறினை (Molecule) பயன்படுத்தியே இந்த பாக்டீரியா அவ்வளவு மோசமான சூழலிலும் உயிர் வாழ்கிறது.  இந்த பாக்டீரியா கொஞ்சம், கொஞ்சமாக டைட்டானிக் மிச்சங்களை தின்று வருகிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில் இன்னும் 14 ஆண்டு காலத்திற்குள் , மொத்த டைட்டானிக் மிச்சங்களும் மறைந்துவிடும். 

 

டைட்டானிக் மிச்சங்கள் அட்லாண்டிக் கடல் பாக்டீரியா

டைட்டானிக் சில ஆச்சரியங்கள்...

1. டைட்டானிக் கப்பல் இரண்டாக உடைந்தது. ஆழ் கடலில் இரண்டு துண்டுகளுக்கும் இடையே 2000 அடி இடைவெளி இருக்கிறது. 

2. ஒரு நாளைக்கு 600 டன் நிலக்கரி எரிக்கப்பட்டது. 100 டன் அளவிற்கான சாம்பல் தினமும் கடலில் கொட்டப்பட்டது. 

3. முதல் வகுப்பு பயணிகளுக்காக 20,000 பாட்டில் பீர், 1500 பாட்டில் வைன் மற்றும் 8000 சுருட்டுகள் டைட்டானிக்கில் வைக்கப்பட்டிருந்தன. 

4. கப்பலில் இருந்த 9 நாய்களில் 2 நாய்கள் காப்பற்றப்பட்டன. ஒன்று பொமரேனியன் மற்றொன்று பெகினிஸ் வகையைச் சேர்ந்தது. 


பொதுவாக, இது போன்ற கப்பல்களின் மிச்சங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள், மிச்சங்களை அரிப்பிலிருந்து தடுப்பதே வழக்கம். எளிதாக... இரும்புக் கப்பலோ, மரக் கப்பலோ கடலின் ஆழத்திலிருக்கும்போது கடலின் உப்புத் தன்மை அதை அரிக்க ஆரம்பிக்கும். ஆனால், அதன் மீது படரும் பாக்டீரியாக்கள் அந்த அரிப்புகளை நேரடியாக நடக்காமல் தடுக்கும். அப்படித்தான் 14ம் நூற்றாண்டில் கப்பல் மிச்சங்கள் உட்பட 2000க்கும் அதிகமான இது போன்ற கப்பல் மிச்சங்கள் கடலின் ஆழத்தில் புதைந்து கிடக்கின்றன.

டைட்டானிக் மிச்சங்கள் அட்லாண்டிக் கடல் பாக்டீரியா

ஆனால், இந்த அறிவியலுக்கு மாறாக,  டைட்டானிக் மிச்சங்களின் மேல் படர்ந்திருக்கும் ஹலோமோனஸ் பாக்டீரியா, தானே அந்த மிச்சங்களை அரித்து உணவாக்கிக் கொள்கிறது. 47 ஆயிரம் டன் எடை கொண்ட டைட்டானிக் இன்னும் சில ஆண்டுகளில் இருந்த இடமே தெரியாமல் கரைந்து போக போகிறது என்பது மற்றுமொரு வரலாற்று துயரமாகவே இருக்கும். 

டைட்டானிக் மிச்சங்கள் அட்லாண்டிக் கடல் பாக்டீரியா

அடர்ந்த இருட்டில் புதைந்துக் கிடக்கும் டைட்டானிக்கின் வரலாறும் இன்னும் சில ஆண்டுகளில் இருண்டு போகும். அடுத்தடுத்த தலைமுறைகள் அதை மறந்தும் போகும். உண்ண வேறு உணவில்லமால் அந்த 4  கிமீக்கும் மேற்பட்ட ஆழத்தில், அந்த பாக்டீரியாக்கள் என்ன செய்யும்? மற்றுமொரு பெரிய கப்பலின் மிச்சங்களுக்காக காத்துக் கொண்டிருக்குமோ?!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

13.03.1733: ஆக்சிஜனை கண்டுபிடித்த  விஞ்ஞானி ஜோசப் பிரீஸ்ட்லி பிறந்த தினம் இன்று! 

 

 
joseph_freestly

 

ஜோசப் பிரீஸ்ட்லி. 1733ல் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் நகரத்தில் ஓர் ஏழை நெசவாளியின் மகனாகப் பிறந்து, ஏழு வயதிலேயே தந்தையை இழந்து அத்தையின் அரவணைப்பில் படித்து, பட்டம் பெற்றுப் பாதிரியாராக ஆனார். பல மொழிகளிலும் சிறந்த புலமை பெற்றாலும் தட்டுத் தடுமாறித்தான் பேசுவார்.

ஒரு சிறு தேவாலயம் அவரைப் பாதிரியாராக ஏற்றுக் கொண்டது. அது வருமானமில்லாத தேவாலயம். வாரத்திற்கு ஒரு பவுண்டு தான் வருமானம். அதனால் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியையும் ஏற்றுச் செய்து வந்தார் பிரீஸ்ட்லி.

அந்த தேவாலயத்துக்குப் பக்கத்தில் மதுபானம் தயாரிக்கும் ஆலை ஒன்று இருந்தது. அங்கிருந்து எப்போதும் வீசும் துர்நாற்றம் பிரீஸ்ட்லியின் மூக்கைத் துளைத்தது. அந்த துர்நாற்றம் சாராயம் காய்ச்சும் தொட்டியி லிருந்து கிளம்பும் ஆவியி லிருந்து தான் வருகிறது என்று அனுமானித்த அவர், ஆலைக்குள் சென்று அந்த ஆவியை ஒரு பெரிய கண்ணாடிப் புட்டியில் பிடித்துக் கொள்ள அனுமதி கோரினார். ஆலை நிர்வாகியும் அதற்கு அனுமதியளித்தார்.

அதன்படி, அந்த ஆவியைக் கண்ணாடி புட்டியொன்றில் பிடித்துக்கொண்டு திரும்பிய பிரீஸ்ட்லி அதை ஆராய்ந்தார். புட்டியின் மூடியை லேசாகத் திறந்து அந்த ஆவி வெளி யேறும் போது அதற்கு மேல், எரியும் விறகை நீட்டினார். உடனே அது அணைந்து விட்டது. அதன் மூலம் தீயை அணைக்கும் சக்தி அந்த ஆவிக்கு இருப்பதைத் தெரிந்து கொண்டார்.

அந்த ஆவியைப் பற்றி பிரபல விஞ்ஞானி களின் நூல்களில் ஏதாவது சொல்லப் பட்டுள்ளதா என்று தேடினார். ஒன்றும் தெரிய வில்லை. அந்த ஆவியைத் தனியாகத் தயாரிக்க முடியுமா என்றும் ஆராய்ந்தார். அதில் வெற்றியும் பெற்றார்.

அவர் கண்டுபிடித்த அந்த வாயு தான் "கரியமில வாயு.' அத்துடன் வேறு சில வாயுக்களையும் சேர்த்து ஆராய்ந்த பிரீஸ்ட்லி பிராண வாயுவையும் கண்டுபிடித்தார்.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

ஐஸ்வர்யா தனுஷ் பரதம்: ஓவர்டைம் பார்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்கள்

 
சென்னை: ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா.வில் பரதநாட்டியம் ஆடியதை கிண்டல் செய்ய நெட்டிசன்கள் ஓவர் டைம் போட்டு வேலை பார்க்கிறார்கள். இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் மகளிர் தினத்தன்று ஐ.நா. சபையில் பரதநாட்டியம் ஆடினார்.
 
அவர் பரதம் ஆடியபோது எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்த பரதநாட்டியக் கலைஞர்கள் இது பரதமா என கேட்டு கோபம் அடைந்தனர். நெட்டிசன்களோ நேரம் காலம் பார்க்காமல் ஓவர் டைமாக வேலை பார்த்து வருகிறார்கள்.

C6x1MCwWwAEODIt.jpg
 
C6xlDOvXAAAgtzr.jpg
 
C6xXVK0WgAEFtar.jpg
 
C6sxCnJWYAAJf7Y.jpg
 
C6snCWjU8AAzqab.jpg
 
  • தொடங்கியவர்

வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலி கொண்டாட்டம் (புகைப்பட தொகுப்பு)

 
 

வசந்த காலத்தை வரவேற்கும் விதத்தில் ஹோலி பண்டிகை இன்று வட இந்தியாவில் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வண்ணப்பொடிகளை ஒருவர் மீ்து ஒருவர் தூவி மக்கள் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

ஹோலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹோலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹோலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹோலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹோலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹோலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹோலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹோலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹோலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹோலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹோலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹோலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹோலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹோலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES ஹோலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

ஹாஸ்ப்ரோக் வான் லெக்

 
 
 
SCI_3143006f.jpg
 
 
 

நோபல் பெற்ற அமெரிக்க அறிஞர்

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியல் அறிஞரும், நவீன காந்தவியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ஜான் ஹாஸ்ப்ரோக் வான் லெக் (John Hasbrouck Van Vleck) பிறந்த தினம் இன்று (மார்ச் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலம் மிடில்டவுன் நகரில் (1899) பிறந்தார். தந்தை பிரபல கணிதவியலாளர். அவருக்கு விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி கிடைத்ததால், குடும்பமும் அங்கே குடியேறியது. இவரது தாத்தா பிரபல வானியலாளர்.

* வான் லெக் அசாதாரண நினைவாற்றல் பெற்றிருந்தார். பள்ளிப் பருவத்தில் அறிவியல், கணிதத்தில் சிறந்து விளங்கினார். விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். இவரது பேராசிரியர் மேற்கொண்டிருந்த குவான்டம் தியரி குறித்த ஆய்வு, இவரை வசீகரித்தது. அவரது வழிகாட்டுதலில் ஹீலியம் அணு குறித்த ஆய்வில் ஈடுபட்டு, 1922-ல் முனைவர் பட்டம் பெற்றார்.

* இவரது ஆய்வுக் கட்டுரை ‘ஃபிலாசபிகல் மேகசின்’ என்ற இதழில் வெளிவந்தது. மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. காந்தவியல் கோட்பாட்டை தனது முதன்மையான ஆராய்ச்சிப் பொருளாக எடுத்துக்கொண்டார்.

* காந்தவியல் கோட்பாடு மட்டுமல்லாது, மூலக்கூறுகளின் நிறமாலை, மின்காப்புப் பொருளியல், தனிமத் தளர்வு குறித்தும் ஆராய்ந்தார். 2-ம் உலகப்போரின்போது அணுகுண்டு தயாரிப்பதற்கான மன்ஹாட்டன் திட்டத்தில் பங்கேற்றார். மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் ரேடார் குறித்து ஆராய்ந்தார்.

* மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (எம்ஐடி) ரேடியேஷன் சோதனைக் கூடத்திலும் ஆய்வு மேற்கொண்டார். இது ரேடியோ அஸ்ட்ரானமி என்ற புதிய அறிவியல் களம் உருவாகவும் அடித்தளமாக அமைந்தது. பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு, மீண்டும் ஹார்வர்டு வந்து, அதன் இயற்பியல் துறை தலைவராகப் பொறுப்பேற்றார்.

* காந்தவியல் குவான்டம் மெக்கானிகல் கோட்பாடு, படிகப் புலக்கொள்கை குறித்த ஆராய்ச்சிகளால், உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் எழுதிய ‘குவான்டம் பிரின்சிபல்ஸ் அண்ட் லைன் ஸ்பெக்ட்ரா’ நூல் பரபரப்பாக விற்பனையானது.

* விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பதவியேற்றார். படிகப் புலக்கொள்கை குறித்த தனது முதல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். மீத்தேன் மூலக்கூறு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து பல கட்டுரைகள், நூல்கள் எழுதினார்.

* மீண்டும் 1935-ல் ஹார்வர்டு பல்கலைக்கழகம் திரும்பிய இவர் 1969-ல் பணி ஓய்வு பெறும்வரை அங்கு பணியாற்றினார். அங்கு, ரேடியோ ஆராய்ச்சி ஆய்வகத்தின் தலைவராகவும் செயல்பட்டார். கணிதம், இயற்கை தத்துவ பேராசிரியராகவும் பணியாற்றினார்.

* காந்தத்தின் மின் கட்டமைப்புகள், ஒழுங்கற்ற அமைப்புகள், அவற்றில் எலெக்ட்ரான்களின் செயல்பாடுகள் ஆகியவை குறித்த ஆய்வுக்காக பிலிப் வாரன் ஆண்டர்சன், சர் நெவில்லி ஃபிரான்சிஸ் மாட் ஆகிய இருவருடன் சேர்ந்து இவருக்கு 1977-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

* காந்தவியல் கோட்பாடுகளை விளக்கி தொடர் விரிவுரைகள் நிகழ்த்தினார். இவை பின்னாளில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தது. இர்விங் லாங்மயர் விருது, தேசிய அறிவியல் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள், விருதுகளைப் பெற்றார். நவீன காந்தவியலின் தந்தை எனப் போற்றப்படும் ஜான் ஹாஸ்ப்ரோக் வான் லெக் 81-வது வயதில் (1980) மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஆயிரம் நாணயங்களை விழுங்கிய "பாங்க்" ஆமைக்கு நீச்சல் பயிற்சி

 
 

சுமார் ஆயிரம் நாணயங்களை விழுங்கியதால் "பாங்க்" (வங்கி) என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டிருக்கும் தாய்லாந்தின் கடல் ஆமை, சிகிச்சைக்குப் பின் மெல்ல மெல்ல உடல்நிலை தேறி வருகிறது. கூடவே, நீச்சல் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

பச்சை ஆமைபடத்தின் காப்புரிமைTARIK TINAZAY/AFP/GETTY IMAGES)

தாய்லாந்தில் இந்த ஆமையின் தடாகத்தில், அதிர்ஷ்டம் என்று நம்பி மக்கள் தூக்கி எறிந்த நாணயங்களை விழுங்கிய அந்த ஆமையை, கால்நடை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து நாணயங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டியதாயிற்று.

"பாங்க்" என்கிற இந்த ஆமை அந்த நாணயங்களை விரும்பி விழுங்கிவிட்டதால், அதன் மேலிருக்கும் கடின ஓட்டில் கீறல் விழுந்து விட்டது. அதனால் அது நீச்சல் அடிப்பது கடினமானதாக மாறியது.

பச்சை ஆமைபடத்தின் காப்புரிமைBEN STANSALL/AFP/GETTY IMAGES

7 மணிநேரம் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு, இந்த பச்சை கடல் ஆமையின் நீந்துவதற்கு பயன்படும் உறுப்புகள் திறன் முழுவதையும் ஏற்கெனவே பெற்றுவிட்டதாக இந்த ஆய்வக மையத்திலுள்ள கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

இந்த ஆண்டின் சிறந்த நாய் இதுதானாம்!

Miami

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில், கிரஃப்ட்ஸ் நாய் கண்காட்சி (Britain's Crufts dog show) நடைபெற்றது. 1891-ம் ஆண்டு முதல், இந்தக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது.

Crufts 2017

பல நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான நாய்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. அமெரிக்காவைச் சேர்ந்த ’காக்கர் ஸ்பானியல்’ ரக நாய், இந்த ஆண்டுக்கான பட்டத்தைத் தட்டிச்சென்றது. இதன் பெயர், ’மியாமி’ !

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகை அழிக்கவல்ல டாப் 5 விஷயங்கள் என்ன தெரியுமா?

வால் நட்சத்திரத்தில் தொடங்கி வாட்ஸ்அப் வரை உலகை அழிக்கப் போகும் விஷயங்கள் என பல நூறு மிரட்டல்களை நாம் கடந்து வந்திருப்போம். உண்மையிலே இந்த பூமியை அழிக்க முடியுமா? அப்படி முடியும் என்றால் எவையெல்லாம் பூமிக்கு ஆபத்து உண்டாக்கக் கூடியவை என்ற கேள்வி நம் எல்லோருக்குமே உண்டு. 4,550,000,000 ஆண்டுகள் பழைய, 5,973,600,000,000,000,000,000 டன் எடை கொண்ட பூமிக்கு பேராபத்து விளைவிக்கக் கூடிய முக்கிய பிரச்னைகளை ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். 

1) மாறி வரும் பருவநிலை

அழிக்க climate change


 பூமியின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி உயர்ந்திருக்கிறது. அதற்கே துருவப் பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகத் தொடங்கிவிட்டன. மனிதர்கள் இதே வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தால் இன்னும் சில நூற்றாண்டுகளில் அந்த 2 டிகிரி, 4-6 டிகிரி ஆகிவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அப்படி ஆனால், அதைப் பூமியால் தாங்க முடியாது. கடல் மட்டம் உயரும். பெங்களூருக்கே கடற்கரை வந்தாலும் ஆச்சர்யப்பட தேவையிருக்காது என பகீர் கூட்டுகிறார்கள் விஞ்ஞானிகள். உலகம் முழுவதுமே காடுகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2) அணு ஆயுதப் போர்:

nuclear war

 ஹிரோஷிமா, நாகசாகியை மறக்க முடியுமா? ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், ஒட்டு மொத்த உலக மக்கள் தொகையையும் அழிக்க அதிக அளவிலான அணு ஆயுதங்கள் தேவை. அவ்வளவு ஆயுதம் இப்போது உலகில் இல்லை. ஆனாலும், அணு ஆயுதங்கள் உலகை அழிக்க கூடியவை பட்டியலில் இடம் பிடித்திருப்பது ஏன் தெரியுமா? அணு ஆயுதங்களால் பூமியின் வெப்பநிலை சடார் என குறைந்துவிடும். மனிதர்களின் உணவுப்பொருட்களை எதுவும் அந்தக் குளிரில் உற்பத்தி ஆகாது. அதன் விளைவாக மனித இனம் அழியலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

3) சூழியல் பேரழிவு
சூழியல் பேரழிவு என்பது உயிரினங்கள் வாழத்தேவையான சூழ்நிலையை கொஞ்சம் கொஞ்சமாக பூமி இழந்து வருவதுதான். குளோபல் வார்மிங்கில் தொடங்கி இதற்கு பல காரணங்கள் இருக்க கூடும். 

4) உலக பொருளாதார சரிவு:
இதனால் எல்லாம் உலகம் அழியுமா? நியாயமான சந்தேகம்தான். ஆனால், உலகம் போகும் திசையை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், எதிர்காலத்தில் இப்போது இருக்கும் பொருளாதாரக் கொள்கைகளால் பல நாடுகள் திவால் ஆகலாம் என்கிறார்கள். அதனால், மக்கள் தொகை குறையும். மக்கள் தொகை பெருகவே பெருகாது எனவும் அஞ்சுகிறார்கள். தப்பிப்பிழைக்கும் நாடுகளும் தங்களுக்கும் போரிட்டு மடியலாம் என்கிறார்கள் கணக்கு வாத்தியார்கள்.

5) சிறுகோள்களின் தாக்குதல்:


  asteroid impact என்பார்கள். கோள்கள் மோதிகொள்வதால் ஏற்படும் பாதிப்புகள். டைனோசர் என்ற இனமே அழிந்து போனதுக்கு அப்போது நடந்த மோதல் தான் காரணம் என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். (அதை மறுக்கும் ஒரு பிரிவும் உண்டு). எதிர்காலத்தில் அதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதனாலும் உலகம் அழியலாம்.

இந்தப்பட்டியலில் எரிமலைகள் தொடங்கி நேனோ டெக்னாலஜி வரை பல விஷயங்களைப் பட்டியிலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவை எல்லாமே உலகையோ, மனித இனத்தையோ எதிர்காலத்தில் அழிக்கும் தன்மையுடையவை என்கிறார்கள். 

இவையெல்லாம் மனிதனுக்கு தெரிந்து நடக்கக்கூடியவை. ஆனால், இயற்கை அவ்வளவு சிறியதா? நம்மால் யோசிக்கவே முடியாத, ஆராயவே முடியாத எவ்வளவோ விஷயங்கள் உண்டு. அதில் ஏதேனும் ஒன்று கூட பூமியை அழிக்கலாம் இல்லையா?

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மரணத்துடன் விளையாடும் ரயில் பயணம் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் புகைப்படங்கள்

 

 

பங்களாதேஷ் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உலக மக்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

3E315F2E00000578-0-image-a-5_14893979511

சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண், பெண் மற்றும் குழுந்தைகள் என பல்வேறு தரப்பினர் எந்தவித பிடிமானமும் இல்லாமல் 12 அடி உயரமுள்ள ரயிலின் மேற்பகுதியில் அமர்ந்து செல்கின்றனர்.

தினமும் தங்களது வேலைகளை முடித்துக்கொண்டு செல்பவர்களே இவ்வாறு ரயிலின் மேற்பகுதியில் அமர்ந்து செல்கின்றனர்.

3E315FAA00000578-0-image-a-34_1489398598

இவர்கள் ரயில் நிலையத்தின் கூரையின் மேல் ஏறி, அதன்பிறகு கூரையிலிருந்து ரயிலின் மேல் ஏறி பயணிக்கின்றனர்.

இவர்கள் ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து தங்களது பயணத்தை மேற்கொள்வது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

3E315F9900000578-0-image-a-28_1489398553

3E315F0700000578-0-image-a-43_1489398662

3E315F4F00000578-0-image-a-25_1489398540

3E315EBB00000578-0-image-a-8_14893984008

3E315EF900000578-0-image-a-46_1489398681

3E315EAE00000578-0-image-a-31_1489398577

3E315EAA00000578-0-image-a-16_1489398449

3E315E8400000578-0-image-a-22_1489398495

3E315E9000000578-0-image-m-15_1489398445

3E315DF200000578-0-image-a-49_1489398714

3E315E9B00000578-0-image-a-19_1489398471

3E315CAA00000578-0-image-a-40_1489398639

3E315D8000000578-0-image-a-37_1489398619

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

இது சாதாரண ரோல்ஸ் ராய்ஸ் இல்லை!

உலகப் புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம், தன்னுடைய கோஸ்ட் காரில் 'Elegance' எனும் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

Rolls Royce Diamonds

ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்தக் காரில், மின்னுவது பெயின்ட் துகள் அல்ல, வைரம்.  ஆயிரம் வைரக்கற்களைத் தூளாக்கி, பெயின்ட்டில் கலந்து அடித்துள்ளார்கள். வைரத்தூளை பெயின்ட்டில் கலந்து வண்ணம் தீட்டப்பட்ட முதல் கார் இதுதானாம். இந்த வைரத்தூளை 'Diamond Stardust' என்று அழைக்கிறார்கள். இதற்காக, ஆயிரம் வைரக்கற்களையும் இரண்டு மாதங்கள் மைக்ரோஸ்கோப்பில் ஆராய்ந்துள்ளார்கள்.

rolls-royce-ghost-elegance_11576.jpg

 

 

  • தொடங்கியவர்

தலையில் கத்தி ஊடுருவிய நிலையில் சுழியோடியின் உதவியை நாடிய சுறா

சுறா ஒன்றின் தலையில் 12 அங்குல நீளமான கத்தியொன்று ஊடுருவிய நிலையில், அக் கத்தியை அகற்றுவதற்காக சுழியோடி ஒருவரின் உதவியை சுறா நாடிய சம்பவம் கரீபியன் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.

கரீபியன் பிராந்தியத்திலுள்ள கேமன் தீவுகளின் பவளப் பாறையொன்றுக்கு பிரெட் ஜோன்சன் எனும் சுழியோட்டப் பயிற்றுநர், உல்லாசப் பயணிகளுக்கு சுழியோட்டப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார். அப்போது, சுமார் 3 அடி நீளமான சுறாவொன்று, பென் ஜோன்சனுக்கு அருகில் வந்ததாம்.

shark

அந்த சுறாவுக்கு ஏதோ பிரச்சினை உள்ளது என்பதை உணர்ந்த பிரெட் ஜோன்சன், மேலும் நெருங்கிச் சென்று பார்த்தார். அப்போது, அதன் தலையில் கத்தியொன்று ஊடுருவியுள்ளதை அவர் கண்டார். அக் கத்தியை அகற்றுவதற்காக உதவி கோரியே தன்னை அச் சுறா நாடி வந்துள்ளது என்பதை தான் உணர்ந்ததாக பிரெட் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பின்னர் அச் சுறாவின் தலையிலிருந்த கத்தியை இழுத்தெடுத்து அகற்றினாராம் பிரெட் ஜோன்சன். “அச்சுறாவைப் பார்த்து உல்லாசப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். தலையில் கத்தி ஊடுருவிய நிலையில் சுறாவொன்றைப் பார்ப்பதற்காக இங்கு வருவதில்லை” என அவர் கூறியுள்ளார்.

மேற்படி சுறா தற்போது நலமாக உள்ளதாகவும், அச்சுறா மீண்டும் அப்பவளப் பாறைக்கு அருகில் நீந்துவது அவதானிக்கப்பட்டு ள்ளதாகவும் பென் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

கேமன் தீவுகளில் சுறா வேட்டையாடுவது 2015 ஆம் ஆண்டிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. சுறா வேட்டையாடுபவர்களுக்கு 5 இலட்சம் டொலர் அபராதம் அல்லது 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://metronews.lk

 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

மார்ச் – 14

 

313 : சீனாவின் ஸியாங்னு மாநில மன்னன் ஜின் ஹய்டி கொல்­லப்­பட்டான்.


1489 : சைப்­பிரஸ் மகா­ராணி கத்­தரீன் கோர்­னாரோ, தனது இராச்­சி­யத்தை வெனிஸ் நக­ருக்குக் விற்றார்.


1794 : பஞ்சைத் தூய்­மைப்­ப­டுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெ­டுக்கும் “கொட்டன் ஜின்” என்ற இயந்­தி­ரத்­துக்­கான காப்­பு­ரி­மையை எலீ விட்னி பெற்றார்.


1898 : டாக்டர் வில்­லியம் கப்­ரியேல் றொக்வூட், இலங்­கையின் அர­சியல் நிர்­ணய சபைக்கு தமிழர் பிர­தி
­நி­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டார்.


1926 : கொஸ்ட்­டா­ரிக்­காவில் ரயில் ஒன்று விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 248 பேர் கொல்­லப்­பட்­டனர்.


varalaru21939 : செக்­கஸ்­லோ­வாக்­கி­யாவின் பொஹே­மியா மற்றும் மொரா­வியா மாகா­ணங்­களை ஜேர்­ம­னியப் படைகள் ஆக்­கி­ர­மித்­தன.


1939: ஜேர்­ம­னியின் வற்­பு­றுத்தல் கார­ண­மாக ஸ்லோவாக்­கியா சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது.


1951 : கொரியப் போரில் இரண்­டா­வது முறை­யாக ஐ.நா. படைகள் சியோல் நகரைக் கைப்­பற்­றி­யன.


1978 : இஸ்­ரே­லியப் படைகள் தெற்கு லெப­னானை ஆக்­கி­ர­மித்துக் கைப்­பற்­றின.


1979 : சீனாவில் பெய்ஜிங் நகரில் விமானம் ஒன்று தொழிற்­சாலை ஒன்றின் மீது வீழ்ந்­ததில் 200 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1980 : போலந்தில் விமா­ன­மொன்று விபத்­துக்­குள்­ளா­னதால் 87 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1984 : வட அயர்­லாந்தின் சின் ஃபெயின் தலைவர் ஜெரி ஆடம்ஸ் பெல்ஃபாஸ்ட் நகரில் கொலை முயற்சி ஒன்றில் படு­கா­ய­ம­டைந்தார்.


1995 : ரஷ்ய விண்­வெளி ஓடம் ஒன்றில் அமெ­ரிக்கர் (நோர்மன் தகார்ட்) ஒருவர் முதன் முத­லாகப் பய­ணித்தார்.


1998 : தெற்கு ஈரானில் 6.9 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் தாக்­கி­யது.


2006 : ஆபி­ரிக்க நாடான “சாட்”டில் இரா­ணுவப் புரட்சி தோல்­வி­யுற்­றது.


2007 : மேற்கு வங்­காளம், நந்தி கிரா­மத்தில் போராட்டம் நடத்­திய விவ­சா­யிகள் மீது காவல்­து­றை­யினர் துப்­பாக்கிச் சூடு நடத்­தி­யதில் 14 பேர் கொல்­லப்­பட்­டனர்.


2008 : திபெத்தில் பாரிய ஆர்ப்­பாட்­டங்­களும் வன்­மு­றை­களும் ஆரம்­ப­மா­கின. 


2012 : “ஸ்ரீலங்காஸ் கில்லிங் பீல்ட் : வோர் கிறைம் அன்பனிஸ்ட்” எனும் ஆவணப்படம் பிரித்தானிய சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பாகியது.

http://metronews.lk

  • தொடங்கியவர்

மகிழ்ச்சியை எங்கே தேடுவது? #MorningMotivation

     மகிழ்ச்சி

கூகுளில் நாம் எதையாவது தேட ஒரு வார்த்தை தட்டினால் கீழே ஒரு சஜஷன் லிஸ்ட் நீளும். அதன்படி 'மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?' (How to be happy) என்று நாம் கேள்வியை முடிக்கும் முன்பாகவே, மகிழ்ச்சி தொடர்பான பல தேடல்களைக் காணலாம்.  எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கத் தேடுகின்றனர் இவர்கள்?  

எப்போதுமே..

எப்போதுமே!  உறியடி படத்தில் வரும் மாணவர்கள் போல, எப்பவும் ஜாலியா இருக்கணும் சார். என்ற உயர்ந்த கொள்கை கொண்டவர்கள் இவர்கள்.  யு கய்ஸ் டோண்ட் ஒரி... நாங்க எல்லாருமே உங்க கட்சிதான்!

தனியா..

தனியா.., சமையலுக்கு பயன்படுத்தும் தனியா இல்லங்க ஜி. ‘தனிமையிலே இனிமை காண முடியுமா?’ என்ற பாடலின் டெக்ஸ்ட் வெர்ஷன்தான் இந்த கேள்வி. பெரும்பாலும் பிரேக்கப் ஆன காதலர்கள்தான் இத்தகைய கேள்வியைக் கேட்பார்கள் என்பதால், அவர்கள் மனநிலையை நம்மால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். என்னதான் இப்படியெல்லாம் அறிவாளித்தனமாக கேள்வியெல்லாம் கேட்டாலும், கடைசியில் இன்னொரு காதலன்-காதலி பின்னால் மறுபடியும் போய், மறுபடியும் வந்து இதே கேள்வியையே கூகுளைக் கேட்டு டார்ச்சர் பண்ணும் ஆபத்தான ஆட்கள் இவர்கள். இவர்களிடம் எப்போதுமே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது ஜி!

வாழ்க்கையில்..

வாழ்க்கையில்.., என்னமோ இவர்களுக்கு மட்டும்தான் கஷ்டம் இருப்பது போலவும், மற்றவர்கள் எல்லாம் மெகா சைஸ் சந்தோசத்தை அனுபவிப்பது போலவும் எண்ணிக் கொண்டு சோகத்தோடு கூகுளிடம் கேள்வி கேட்கும் கூட்டம் இது. இவர்கள் தான், தட் வாழ்வே மாயம் கேங். எப்போ பார்த்தாலும் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு சோகமே உருவாக அலைவார்கள். ஒரே செமஸ்டர்ல அஞ்சு அரியர் வச்சவங்கள கூட தேத்திடலாம். ஆனால், இவங்கள தேத்தறது, இம்பாஸிபில் ஜி!

கணவருடன்..

கேள்வியைப் பார்த்த உடனே உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். இந்த காலத்து மாடர்ன் கேர்ள்ஸ் மற்றும் வெளிநாட்டு பெண்களின் மனம் தான், இந்த கேள்வி தோன்றிய இடம். கல்யாணத்துக்கு முன்பு வரைக்கும் மட்டுமே, இந்த கேள்வி அவர்களுக்கு வரும் என்று சொல்லப்படுவதால், இந்த கேள்வி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை. ஆனாலும், இந்த இடத்தில் 'மனைவியுடன் சந்தோசமாக இருப்பது எப்படி?' என்ற கேள்வி வராததை வைத்தே, ஆண்களின் மூத்தோர் சொல் மதிக்கும் குணத்தை அறிந்துகொள்ளலாம் மக்களே!

தினந்தோறும்..

இந்தக் கேள்வியைக் கூகுளிடம் கேட்பவர்கள், வாழ்க்கையில் தினம் தினம் தீபாவளி கொண்டாட விரும்புகிறார்கள் என்றதொரு அர்த்தம் பொருந்தும். இந்த கேள்விக்கு கிடைக்கும் பதிலைக் கொண்டு சந்தோசமாக இருப்பதைக் காட்டிலும், அந்த அட்வைஸ்களை அடுத்தவர்களுக்கு அள்ளி இறைப்பதிலேயே கண்ணாக இருப்பார்கள். அதன் மூலம், இவர்கள் தினந்தோறும் சந்தோசமாக இருப்பார்கள் மக்களே!

மகிழ்ச்சி

இருப்பதைக் கொண்டு..

'இருக்கறத வச்சி சிறப்பா வாழணும்' என்ற மொழியை உலகுக்கு சொன்ன முன்னோர்களின் பின்னோர்கள் தான், இந்த கேள்விக்குச் சொந்தக்காரர்கள். 'இல்லாத பலாக்காய்க்கு இருக்குற கலாக்காய் மேல்' என்று இவங்க மூளை சுவத்துல முட்டிக்காத குறையா சொல்லும். ஆனால், இவர்கள் மனசு பக்கத்து வீட்டுக்காரன் பைக் வாங்கினாலே, பல்ஸ் ஏத்தி விட்டுடும். ஏறுன பல்ஸ், இந்தக் கேள்விக்கு கிடைக்கும் பதில்கள் மூலம் இறங்குமான்றது உங்களுக்கே தெரியும் மக்களே!

கேள்விகளின் மறுபக்கம்..

என்னதான் இந்தக் கேள்விகள் ஒரு பக்கம் நமக்கு வேடிக்கையாக தெரிந்தாலும், மறுபுறம் இந்தக் கேள்விகளை இயந்திரத்திடம் கேட்கும் மனிதமனங்கள் அதிகரித்து வரும் ஆபத்தையும் நாம் உணர வேண்டும். இந்த கேள்விகளை கூகுளிடம் கேட்பவர்கள் யாரோ அல்ல நம் நட்பு வட்டத்தில் இருப்பவர்களும் தான். அவ்வளவு ஏன்.., அது நானாகக்கூட இருக்கலாம். தன் மன எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள தோழமை இல்லாததும், மனநல மருத்துவர்களை நாட நம்மை தடுக்கும் தயக்கமுமே இந்தக் கேள்வி எழக் காரணங்களாக பார்க்கப்படுகிறது. 

இந்தத் தயக்கத்தை உடைத்து கூகுளிடம் தகவல்கள் தான் தேட முடியும், மகிழ்ச்சி அல்ல என்பதை நாம் உணர வேண்டும். நிறைய நண்பர்களுடன் சேர்ந்து பழக வேண்டும். அந்த இயல்புதான், மனநலம் சார்ந்த எந்தக் கேள்விகளையும் தகர்த்தெரிந்துவிடும். அதனால், மகிழ்ச்சியையும், துக்கத்தையும் கூகுளிடம் தேட வேண்டாம். நம்மைச் சுற்றியிலும், நமக்குள்ளும் தேடுங்கள். அதுதான் நிஜம். அன்றாடம் நிஜமுடன் வாழ்வோம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

''காதல் என்றால் ஜென்னி...''  கார்ல் மார்க்ஸ் நினைவுதின சிறப்புப் பகிர்வு

கார்ல் மார்க்ஸ்

ண்பருடன் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த அவர், வழியில்... சாலையோரத்தில் ஒரு பெண்ணை அடித்துக்கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தபிறகு,பேருந்திலிருந்து கீழே இறங்கி... பெண்ணை அடித்தவனை அடிக்கப்போனார். அதற்குள், அந்தப் பெண்ணோ... ''இது எங்கள் குடும்ப விவகாரம். இதில், தலையிட நீ யார்'' என்றார். வேடிக்கை பார்த்த கூட்டமும் அவருக்கு எதிராகத் திரும்பியது. பின், ஒருவழியாகக் கூட்டத்தைச் சமாளித்து அங்கிருந்து அழைத்துவரப்பட்டார், அவர். இப்படி அன்றே, மாற்றத்துக்கான விதையை மண்ணில் விதைக்க முற்பட்ட அந்த மாமேதை பொதுவுடைமையின் தந்தை கார்ல் மார்க்ஸ். அவருடைய நினைவு தினம் இன்று.

உலக விடியலுக்கான மாற்றம்!

''மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர, மாறாதது உலகில் இல்லை'' என்று சொன்ன  மார்க்ஸ்தான், உலக விடியலுக்கான மாற்றத்தையே படைத்தார். பள்ளிப் பருவத்தின்போதே தன் மனப்போராட்டத்துக்குத் தீர்வுகாணும் வகையில் விடை தேடிக்கொண்டிருந்தார் மார்க்ஸ். அப்போது, ஜெர்மனி அரசருக்கு எதிராகப் புரட்சிகரமான துண்டறிக்கைகளைக் கொடுத்து ரகசியமாகப் படிக்கச் சொன்னார் அவருடைய  கணித ஆசிரியர். இதனைக் காட்டிக்கொடுத்து... அந்த ஆசிரியரைக் கைதுசெய்வதற்குக் காரணமாக இருந்த மற்றோர் ஆசிரியரை, கடைசிவரை மார்க்ஸுக்குப் பிடிக்கவில்லை. இறுதியாண்டில் விடைபெறும் நேரம் வந்தபோதுகூட மார்க்ஸ் அந்த ஆசிரியரைப் பார்க்கப் பிடிக்காமல், ''காட்டிக்கொடுத்த ஆசிரியரை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்'' என்று சொல்லி அங்கிருந்து வெளியேறினார். ஆனாலும் அவருடைய நன்னடத்தைச் சான்றிதழில், ''கார்ல் மார்க்ஸ் எத்தனை கடினமான இலக்கிய வரிகளாக இருந்தாலும், அவற்றைத் துரிதமாகப் படித்து, முற்றிலும் புதிய கோண்ங்களில் விளக்கம் கூறும் ஆற்றலைப் பெற்றிருக்கிறான். இந்த விசேஷ ஆற்றலில் அவன் கவனம் செலுத்தினால், எதிர்காலத்தில் அவன் பயனுள்ள மனிதனாக உருவாக வாய்ப்பிருக்கிறது'' என்று எழுதப்பட்டிருந்தது. தன்னுடைய அறிவுப் பசிக்காக எண்ணற்ற புத்தகங்களை மென்று விழுங்கிக்கொண்டிருந்த கார்ல் மார்க்ஸின் கதை மிகவும் கொடுமையானது. 

கார்ல் மார்க்ஸ்

மார்க்ஸ் - ஜென்னி காதல்!

மார்க்ஸின் அடுத்த வீட்டில் இருந்த அழகி, ஜென்னி. காணச் சகிக்க முடியாத தோற்றத்துடனும், கறுப்பு நிறத்துடனும் காட்சியளித்த மார்க்ஸின் மனதுக்குள் புகுந்தார் இந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜென்னி, மார்க்ஸின் அறிவாலும் கருத்தாலும் ஈர்க்கப்பட்டார். இனம், மதம், மொழி, வயது பார்த்து வருவதா காதல்? இல்லையே... மார்க்ஸைவிட ஜென்னி நான்கு வயது மூத்தவர். இருந்தபோதும், இருவருடைய இதயங்களையும் காதல் களவாடியிருந்தது. ஜென்னி என்னும் கன்னி தன் இதயத்துக்குள் நுழைந்த பிறகு... தன் வாழ்க்கையை மின்னும்படிச் செய்வதற்கான பணியில் இறங்கினார். தத்துவம் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்காகக் காதலியைப் பிரிந்தார். ஓர் ஆண்டோ... ஈராண்டோ அல்ல... ஏழு ஆண்டுகள். தங்களுடைய காதலுக்காக இருவருமே காத்துக்கிடந்தனர். காதலின் தவிப்பு காதலர்களுக்குத்தானே தெரியும். மற்றவர்கள் ஏதேதோ சொன்ன செய்திகளால் நிலைகுலைந்துபோனது ஜென்னியின் இதயம். மார்க்ஸின் தந்தைகூட, தன் மகனை மறந்துவிடும்படி வேண்டுகோள்வைத்தார். 

''காதல் என்றால் ஜென்னி...'' 

எவர் சொல்லியும் மனந்தளராமல் இருந்த ஜென்னிக்கு... அவருடைய மன நாயகனிடமிருந்து வந்திருந்தன காதல் கடிதங்கள். அதில் ஒன்றை எடுத்து அவர் படித்தபோது... அவருடைய காதல் வலிக்கு அந்தக் கடிதம் மருந்திட்டிருந்தது. ''இனிவரும் நூற்றாண்டுகள் அனைத்துக்கும் காதல் என்றால் ஜென்னி... ஜென்னி என்றால் காதல்'' என்று தன் மன நாயன் வடித்திருந்த வரிகளால் ஜென்னியின் மனம் நிறைவடைந்தது. அன்று, காதலர்களுக்குக் கடிதங்களே மிகவும் துணையாகவும், தூணாகவும் இருந்தன. ஒருபுறம், காதல்; மறுபுறம் அறிவுத் தேடல் என இரண்டிலும் தன் பயணத்தைச் செலுத்திக்கொண்டிருந்தார் மார்க்ஸ். கறுப்புக் காபியையும், சிகரெட் புகையையும் தன் சிந்தனைக்குத் துணையாக வைத்துக்கொண்டு தன்னுடைய ஆய்வுப்படிப்பை முடிப்பதற்குள் மார்க்ஸின் தந்தை, மரணவாசலை நெருங்கியிருந்தார். தந்தை உயிருடன் இருந்தவரை அவர்கள் இருவருக்கும் கருத்து மோதல்கள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. ஆனாலும், தன் தந்தையின் புகைப்படத்தைத் தன்னுடைய இறுதிக்காலம்வரை சட்டைப்பையில் வைத்திருந்தார் மார்க்ஸ். தந்தையின் மரணத்துக்குப் பிறகு தாயால் வெறுத்து ஒதுக்கப்பட்டார். பொருளாதாரத்தைச் சரிசெய்தால்தான் ஜென்னியை மணக்க முடியும் என்று எண்ணிய மார்க்ஸ், முதலில் பத்திரிகையாளரானார்... பிறகு, ஜென்னியை மணந்தார். 

கார்ல் மார்க்ஸ்

துக்கத்தில் நனைந்த இரவு!

மார்க்ஸை மணந்து, அவர் மனம்கோணாதபடி ஜென்னியும் இணைந்திருந்ததால்தான் கார்ல் மார்க்ஸால் வரலாற்றில் இடம்பிடிக்க முடிந்தது. தன்னுடைய புரட்சி விதைகளால் பல நாடுகளுக்குப் பயணமாகிக்கொண்டிருந்த மார்க்ஸை, அந்த நாட்டு அரசுகள் ஒருபுறம் மிரட்ட... மற்றொரு புறம், அவர் வீட்டில் எழுந்த பசியும் பட்டினியும் அவரை அதற்குமேல் மிரட்டின.  'கல்லானாலும் கணவன்... புல்லானாலும் புருஷன்' என மதிக்கத் தெரிந்த மார்க்கதரசி ஜென்னி. அதனால்தான் சுகம்போகமில்லாத வாழ்க்கையைக்கூடச் சொர்க்கமாக நினைத்தார். மார்க்ஸும், ஜென்னியும் நான்கு குழந்தைகளுக்குத் தம்பதியாய் இருந்தசமயம். இருக்கும் உணவை குழந்தைகளுக்கும் மார்க்ஸுக்கும் பரிமாறினார் ஜென்னி. பட்டினி கிடக்கும் மார்பில் பால் எப்படி ஊறிடும்? குழந்தைகளுக்குப் பால் கொடுக்க வேண்டிய மார்பில் குருதி வழிந்தது. கூடவே, குழந்தைகளின் அழும் சத்தத்துடன் ஜென்னியின் அழுகுரலும் இணைந்தபோது... அந்த இரவே தூக்கத்தைக் கலைத்து துக்கத்தில் நனைந்துபோனது. 

குழந்தைகளைக் கொன்ற வறுமை!

அவ்வப்போது தம் பொருளாதாரச் சிக்கலைத் தீர்த்துக்கொண்டிருந்த ஏங்கெல்ஸிடமிருந்து எந்தப் பதிலும் வராதபோது... வாடகை கேட்டு வீட்டுக்காரப் பெண்மணி இவர்களைத் துரத்தினாள். விடிவதற்குள் வேறிடம் செல்வதற்குள்... கடன்கொடுத்த கூட்டம், அவர்களிடம் இருந்த பொருட்களைத் தூக்கிச் சென்றது. ஆனால், இதைவிடக் கொடுமை வறுமை என்ற பேய் அவர்களுடைய மூன்று குழந்தைகளையும் கொன்று புதைத்திருந்தது. வறுமையினால், தன்னுடைய முதல் குழந்தை இறந்த சமயத்தில்கூட, ஜென்னி தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில், ''இதுபோன்ற அற்ப சங்கடங்களில் எல்லாம் நான் ஒருபோதும் தளர்வடைவதில்லை. எனக்கு என் கணவர் அருகில் இருக்கிறார். இப்படி ஒரு மனிதரைக் கணவராகப் பெற்றமைக்காக நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை'' என்று தன் காதல் நாயகனை எங்கேயும் எப்போதும் விட்டுக்கொடுக்காத அளவுக்கு நேசித்துக்கொண்டிருந்தார்.

பிரிவைத் தாங்காமல் கடிதம்!

''பிறக்கும்போது அந்தக் குழந்தைக்குத் தொட்டில் இல்லை; இறக்கும்போது, அதற்குச் சவப்பெட்டி வாங்கக்கூடக் கஷ்டமாகிப்போனது'' என, தன்னுடைய இரண்டாவது குழந்தை இறந்தபோது இப்படியெழுதியிருக்கிறார் ஜென்னி. ஒருமுறை, தன் தாயாரின் மரணம் காரணமாக ஜெர்மனிக்குச் சென்றிருந்த ஜென்னியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத மார்க்ஸ், ''உன் பிரிவு எனக்குள் மிகுந்த மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்துபோவதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். ஒருமுறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக்கொண்டால் போதும். என் இதயம் அமைதியாகிவிடும். அதன்பிறகு, எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது'' என வேதனையுடன் கடிதம் எழுதினார். 

கார்ல் மார்க்ஸ்

துணையாக நின்ற ஜென்னி!

ஜென்னியும் தன் கணவருக்குத் துணையாக... அவருடைய நம்பிக்கையைப் பலப்படுத்தும் விதமாகக் கடிதம் எழுதுவார். இதேபோன்று, ஒருமுறை அவர்கள் இருவரும் பிரிந்திருந்த நேரத்தில், ''...மிகவும் அதிகமான வெறுப்புடனும் எரிச்சலுடனும் எழுதாதீர்கள். உங்களுடைய மற்ற கட்டுரைகள் எவ்வளவு அதிகமான விளைவை ஏற்படுத்தின என்பது உங்களுக்குத் தெரியும். எதார்த்தமான முறையில் நயத்துடனும் நகைச்சுவையுடனும் லேசாக எழுதுங்கள். அன்பே...  உங்கள் பேனாவைக் காகிதத்தின் மீது மென்மையாக ஓடவிடுங்கள். சில சமயங்களில் உங்கள் பேனா, தடுக்கிவிழுந்துவிடுமானால், அதோடு சேர்ந்து உங்கள் வாக்கியம் மட்டுமின்றி நீங்களும் விழ நேரலாம். கவலை வேண்டாம். உங்கள் சிந்தனைகள் பழைய காலத்துப் படைவீரர்களைப்போல அதிகமான உறுதியுடனும் துணிவுடனும் விறைப்பாக நிற்கின்றன. அவர்களைப்போல அவை சாகும். ஆனால், சரணடைய மாட்டா (elle meure, mais elle ne se rende pas)'' என அவருடைய எதிர்கால சிந்தனை எப்போதும் தடைப்பட்டுவிடாத அளவுக்கு மார்க்ஸுக்குத் துணையாக இருந்தார் ஜென்னி.

'மூலதனத்தின் முதுகெலும்புகள்!

தன்னுடைய அறிவுத் தேடலுக்கு இறுதியில் விடை கண்டார் மார்க்ஸ். அவருடைய 'மூலதன'த்துக்கு முதுகெலும்பானவர்கள் ஜென்னியும், ஏங்கெல்ஸும். எழுத்துகளையே மூலதனமாக்கி, 'மூலதன'த்தை உருவாக்கியிருந்தார் மார்க்ஸ். இந்த 'மூலதனம்' குறித்து அவருடைய தாயார், ''இந்த நூலை எழுதியதைவிடவும், சிறிதளவு மூலதனத்தையாவது சேகரிப்பதற்கு முயன்றால் பயனுள்ளதாகவும் சிறப்பாகவும் இருந்திருக்கும்'' என்றார். அவர் சொன்னதுகூட ஒருவிதத்தில் உண்மைதான். அந்த நூலை எழுதுவதற்காக அவருக்குக் கிடைத்த சன்மானம், அதை எழுதியபோது புகைபிடிப்பதற்காக அவர் உபயோகித்த புகையிலைச் செலவுக்குக்கூடப் பற்றவில்லை என்பதுதான். இதை, மார்க்ஸே ஒப்புக்கொண்டுள்ளார்.

''நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது'' என்று சொன்னதோடு... அதை நிறைவேற்றியும் காட்டிய மார்க்ஸை, மரணம் என்ற வரலாறு விழுங்கிவிட்டது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகின் தலைசிறந்த நகரம் இதுதான்!

மெர்சர் நிறுவனம், உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னா (Vienna) நகரம் முதலிடம் பிடித்துள்ளது. மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் நகராக வியன்னா திகழ்வதால், தொடர்ந்து 8-வது முறையாக மெர்சர் பட்டியலில் வியன்னா முதலிடம் பிடித்துள்ளது.

Vienna
 

பாக்தாத் கடைசி இடத்தில் உள்ளது. ஆசிய நகரான சிங்கப்பூர், 25-வது இடத்தில் உள்ளது.

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு

ஐன்ஸ்டீன்

''நீ மிகவும் மோசமாகத் தேர்வு எழுதியிருக்கிறாய்; கணிதம், பெளதிகம் இரண்டைத் தவிர, வேறு எந்தப் பாடத்திலும் தேர்வு பெறவில்லை; மொழிகளில் உனக்குப் போதிய அறிவு இல்லை; இந்தநிலையில், நீ இங்குச் சேர விரும்புகிறாய். அது, உன் அறிவுக்கு மீறிய ஆசையாகும். நீ மறுபடியும் பயிற்சிப் பள்ளிக்குச் சென்று படித்துத் தேர்ச்சிபெற வேண்டும். அப்படித் தேர்ச்சிபெற்று வந்தால், நான் உன்னைச் சேர்த்துக்கொள்கிறேன்'' - இது, தொழில்நுணுக்கக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் தோற்ற ஒருவரைப் பார்த்து... ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத் தலைவர் சொன்னது. பின்னாளில், அந்தத் தேர்வில் தோற்ற மனிதர்தான், அகிலம் வியந்த அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அவருடைய பிறந்த தினம் இன்று.

குழந்தைகளின் மனநிலை! 

''வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள், புதிதாக எதையும் முயற்சிக்காதவர்களாகத்தான் இருக்க முடியும்'' என்ற வாழ்க்கையின் இலக்கணத்தை வளரும் தலைமுறையின் இதயங்களில் நிலைநிறுத்திய  ஐன்ஸ்டீன், தாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஒருகாலத்தில் ஆசிரியர்களால் அவமானப்படுத்தப்பட்டு, விரட்டப்பட்டார். அதனால்தான் அவர், குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு இப்படிச் சொன்னார், ''குழந்தைகளின் மனவியல் தெரியாது கற்பிக்கும் ஆசிரியர்கள், ஏறத்தாழ அவர்களுடைய மனவியல்பைக் கொல்லும் கொலைகாரர்களே.'' 

''அவன் ஒரு சிந்தனையாளன்!''

சிறுவயதில் பேச்சு வராமல் சிரமப்பட்ட அவர், எப்போதும் எதையாவது சிந்திப்பதிலேயே கவனத்தைக் கொண்டிருந்தார். இப்படித்தான் ஒருமுறை ஐன்ஸ்டீன், எதையோ தனிமையில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். இதைக் கண்ட அவரது மாமா (ரூடி), ''உன் மகன் ஆல்பர்ட்டைப் பார்... எதையோ ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறான். அவன், ஓர் ஆராய்ச்சியாளன்; சிந்தனையாளன்'' என்று நக்கலாகச் சொல்லிவிட்டார். அவ்வளவுதான்,  ஐன்ஸ்டீன் அன்னைக்குக் கோபம் தலைக்கு மீதேறிவிட்டது. எந்தத் தாய், தன் பிள்ளையை விட்டுக்கொடுப்பாள்? காக்கைக்குத் தன் குஞ்சும் பொன் குஞ்சு என்பதுபோல... தன் தம்பியையும் அவர் விட்டுவைக்கவில்லை. ''அவன், ஒரு சிறந்த சிந்தனையாளன்; அறிவாளி... அதனால்தான் அடக்கமாக இருக்கிறான். எதிர்காலத்தில் அவன் ஒரு புகழ்பெற்ற பேராசிரியனாகத் திகழப்போகிறான்'' என்றார், முகத்தில் அடித்ததுபோன்று.

ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீன் அன்னை சொன்னது... நூற்றுக்கு நூறு உண்மை.  ஆம், பிற்காலத்தில் அவர் எல்லா நாட்டவரும் போற்றும்படியாக வாழ்ந்த மிகச் சிறந்த சிந்தனையாளர்; சாகும்வரை அடக்கத்துடனும், எளிமையுடனும் வாழ்ந்தவர். ஆடைகள் அணிவதிலும், அலங்காரம் செய்வதிலும் அவர் அலட்சியமாகவே இருப்பார்; அழுக்கு ஆடையைப் பல நாள்கள்கூட அணிந்திருப்பார்; வெட்டப்படாத தலைமுடியுடன் வீதிகளிலும், விழாக்களிலும் வலம்வருவார்; சில நேரங்களில் செருப்பில்லாமலும், மேலங்கி அணியாமலும் வெளியே செல்வார். மறுமண மனைவி எல்ஸாவின் பேரிலேயே, அவர் நல்ல ஆடைகளை அணிவார். 

எளிமைக்கு உதாரணம்!

அப்படிப்பட்ட அந்த எளிமையான மாமேதை, ஓரிடத்துக்கு ஒருமுறை சொற்பொழிவாற்றச் சென்றபோது... அவருடன், அவர் மனைவி எல்ஸா செல்ல முடியவில்லை. ஆதலால், தம் கணவருக்கு வேண்டிய நல்ல ஆடைகளை எடுத்து... ஒரு பெட்டியில் வைத்து அதை அவரிடம் கொடுத்தவர், ''இந்தப் பெட்டியில் நல்ல உடைகள் வைத்திருக்கிறேன். சொற்பொழிவுக்குச் செல்லும்போது நீங்கள் மறந்துவிடாமல், அவைகளை எடுத்து அணிந்துகொள்ளுங்கள்'' என்றார். தன் மனைவி சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்ட ஐன்ஸ்டீன், நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிவந்தார். கணவரைக் கண்டு மகிழ்ச்சியடைந்த எல்ஸா, தாம் கொடுத்து அனுப்பிய பெட்டியை வாங்கித் திறந்துபார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். ஆம், அவர் வைத்த ஆடைகள் அப்படியே இருந்தன. கோபமடைந்த எல்ஜா, தம் கணவரிடம்... ''ஏன் இந்த ஆடைகள் அடுக்கிவைத்தபடியே இருக்கின்றன... அவைகளை நீங்கள் அணிந்துகொள்ளவில்லையா'' என்றார்.

எல்ஸா கேட்டதைக் கண்டு கொஞ்சமும் கவலையடையாத ஐன்ஸ்டீன், சிரித்துக்கொண்டே அவரிடம்... ''அடடா, எனக்கே மறந்தே போய்விட்டது. நீ கோபித்துக்கொள்ள வேண்டாம்'' என்றவர், ''அது இருக்கட்டும். ஆனாலும், எனக்கு ஒரு சந்தேகம்'' என்று அவரிடம் ஒரு கேள்வியை வைத்தார். ''எல்லோரும் என் பேச்சைக் கேட்க வருகிறார்களா அல்லது என் ஆடையைப் பார்க்க வருகிறார்களா'' என்பதே அது. பாவம் எல்ஸாவால் அதற்குப் பதில் சொல்லவே முடியவில்லை. 

ஐன்ஸ்டீன்

''என்னைத் தேடி வருகிறது!'' 

வாழ்க்கை என்பது இரண்டு நிலைகள்தான். ஏற்றமும் தாழ்வுமே அது. அதில், சரியாகப் பயணிப்பவர்களே... வெற்றிபெறுகிறார்கள். இந்த வெற்றியின் பயணத்தில் ஐன்ஸ்டீனின் வாழ்வும் அடங்கும். இன்பமும், துன்பமும் அவரை எதிர்கொண்டபோது... எந்தச் சூழலிலும் தன் வழியை மாற்றிக்கொள்ளாதவர். அதனால்தான் அவருக்கு மிக உயர்ந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்கான தொகை அவருக்குக் கிடைத்தபோது, அதை வெறுக்கவே செய்தார். ''எதை நான் விரும்பவில்லையோ, அது என்னைத் தேடி வருகிறது'' என்று முணுமுணுத்தார். அத்துடன், தன் மனைவி எல்ஸாவிடம்... ''இந்தப் பணம் நமக்குத் தேவையில்லை. பாதித் தொகையைத் தர்ம காரியங்களுக்கும் மீதித் தொகையை மிலீமாவுக்கும் (ஐன்ஸ்டீனின் முதல் மனைவி) கொடுத்துவிடலாம்'' என்றார். அவர், கருத்துக்கு என்றுமே மறுப்புச் சொன்னதில்லை எல்ஸா. அதனால்தான், அவர்களுடைய இல்லற வாழ்க்கையும் தேனாய் இனித்தது. 

''மகாத்மாவோடு ஒப்பிட வேண்டாம்!''

கடைசிவரை எளிமையின் உறைவிடமாய் வாழ்ந்து மறைந்த ஐன்ஸ்டீனிடம்,  அமெரிக்காவில் இந்தியத் தூதராக இருந்த மேத்தா, ''நீங்கள் மகாத்மா காந்தி போன்றவர்'' என்றார். அதற்கு ஐன்ஸ்டீன், ''தயவுசெய்து, என்னை அவரோடு ஒப்பிட்டுப் பேச வேண்டாம். அவர், மனிதகுலத்துக்காக நிறைய தொண்டு செய்திருக்கிறார். நான் என்ன செய்திருக்கிறேன்? ஏதோ, சில விஞ்ஞானக் கோட்பாடுகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவ்வளவுதான்'' என்றார், அடக்கத்துடன்.

''அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது, அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது'' என்று சொன்ன அந்த மாமேதை, கடைசிவரை அதேவழியில் பயணித்ததுடன்... ''மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது'' என்று வாழ்ந்து, வரலாற்றிலும் இடம்பிடித்துக்கொண்டது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மொடலாக மாறிய ஸ்பெயினின் ‘மச்சக்’கன்னி!

 

 

ஐந்நூறுக்கும் மேற்பட்ட மருக்கள், மச்சங்களுடன் பிறந்து, பலரது கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளான இளம் பெண் ஒருவர் ‘மொடலாக’ மாறிய சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.

12_Mole_Girl.jpg

அல்பா பெரிஜோ என்ற இந்தப் பதினாறு வயதுப் பெண், பிறக்கும்போதே ‘மெலனோசைட்டிக் நெவ்யூஸ்’ என்ற கோளாறுடன் பிறந்தவர். இந்தக் கோளாறு உடையவர்களது சருமத்தில் பல்வேறு அளவில் நூற்றுக்கணக்கான மருக்களும், மச்சங்களும் காணப்படும். அவற்றில் சிலவற்றில் முடி வளர்ந்தும் காணப்படும்.

இந்தக் கோளாறினால் சிறு வயது முதலே அல்பா பலரது கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகினார். ‘டெல்மேஷன்’ நாய் என்றும் வேற்றுக்கிரகவாசி என்றும் இவரது சக மாணவர்கள் இவரைக் கடுமையாகக் கிண்டல் செய்வது வழக்கம். இதனால், கடும் மன உளைச்சலுக்கும் ஆளானார் அல்பா.

இந்த நிலையில், கடந்த வருடம் இவர் தனது புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.  அவர் சற்றும் எதிர்பார்த்திராத விதத்தில் ஆயிரக்கணக்கான பேர்களின் வரவேற்பைப் பெற்றது அல்பாவின் அந்தப் புகைப்படம்.

இது அவருக்கு மன தைரியத்தைத் தரவே, மொடல்களுக்கான போட்டியொன்றில் கலந்துகொண்டார் அல்பா. தனித்தன்மை வாய்ந்த அல்பாவின் தோற்றத்தைப் பயன்படுத்திக்கொள்ள பல்வேறு நிறுவனங்கள் முன்வந்தன.

இப்போது அல்பா பரபரப்பான ஒரு மொடல். பார்சிலோனா நகரின் பல விளம்பரப் பதாகைகளிலும், பேருந்துகளிலும், பத்திரிகைகளிலும் இப்போது சிரித்துக்கொண்டு காட்சி தருகிறார். அதுமாத்திரமன்றி, இதுபோன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்புகளும் நடத்துகிறார் அல்பா!

http://www.virakesari.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

#Alert- உங்கள் குழந்தைகள் மொபைல் கேம்க்கு அடிமையா?

நீரிழிவு நோய் என்பது இன்று அனைத்து வயதினரையும் பயமுறுத்தி வருகிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு ஏற்கெனவே தவறான உணவுப் பழக்கம் மற்றும் பிற மருத்துவக் காரணங்களால், இரண்டு வகையான நீரிழிவு நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

image-20150827-326-4qefnh_17294.jpg

இந்நிலையில், டி.வி, மொபைல், கம்ப்யூட்டர் போன்ற ஸ்க்ரீன்களை, தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேல் பார்க்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் பாதிக்கும் அபாயம் உள்ளதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு 4,500 குழந்தைகளுக்கு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 37% குழந்தைகள் மட்டுமே ஒரு மணி நேரத்துக்கு குறைவாக இதுபோன்ற டிவி மற்றும் மொபைல் ஸ்க்ரீன்கள் முன் செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 % குழந்தைகள் தினசரி மூன்று மணி நேரத்துக்கு மேலாக ஸ்க்ரீன்கள் முன் செலவிடுவதாக தெரியவந்துள்ளது. அதாவது 5-ல் 1 குழந்தை தினசரி மூன்று மணி நேரத்துக்கு மேல் டிவி அல்லது மொபைல் ஸ்க்ரீன்கள் முன் நேரத்தை செலவிடுகின்றனர் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 அறிவியல் அறிஞர்கள்! #VikatanPhotoCards

 
  • குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 அறிவியல் அறிஞர்கள்! #VikatanPhotoCards

 

 

 

குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 அறிவியல் அறிஞர்கள்! #VikatanPhotoCards

 

குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 அறிவியல் அறிஞர்கள்! #VikatanPhotoCards

 

குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 அறிவியல் அறிஞர்கள்! #VikatanPhotoCards

 

குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 அறிவியல் அறிஞர்கள்! #VikatanPhotoCards

 

குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 அறிவியல் அறிஞர்கள்! #VikatanPhotoCards

 

குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 அறிவியல் அறிஞர்கள்! #VikatanPhotoCards

குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 அறிவியல் அறிஞர்கள்! #VikatanPhotoCards

 

குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 அறிவியல் அறிஞர்கள்! #VikatanPhotoCards

 

குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 அறிவியல் அறிஞர்கள்! #VikatanPhotoCards

 

குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 அறிவியல் அறிஞர்கள்! #VikatanPhotoCards

குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 அறிவியல் அறிஞர்கள்! #VikatanPhotoCards

  • தொடங்கியவர்

இறந்துபோன தாயைக் கட்டியணைத்து அழுத குட்டிக் குரங்கு..! நெகிழ்ச்சி வீடியோ #ViralVideo

குரங்கு குட்டி

பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமேயானது அல்ல. பல விலங்குகள் இந்த விஷயத்தில் நம்மை மிஞ்சியிருக்கின்றன. அப்படி ஒரு நெகிழ்ச்சியான, சோகமான சம்பவம் ஒன்று தமிழக எல்லையில் சமீபத்தில் நடந்திருக்கிறது. அந்த வீடியோ வைரல் ஆக பரவி, அனைவரையும் கண்கலங்க செய்திருக்கிறது.

தமிழ்நாடு -கர்நாடாகா நெடுஞ்சாலை ஒன்றில் நடந்திருக்கிறது இச்சம்பவம். சாலையைக் கடக்க முயன்ற குரங்கு ஒன்றை, வேகமாக சென்று கொண்டிருந்த கார் அடித்துவிட்டு சென்றுவிட்டது. சம்பவ இடத்திலே குரங்கு இறந்துவிட்டது. இதைப் பார்த்த குட்டிக் குரங்கு உடனே அம்மா குரங்கை நோக்கி ஓடி வந்தது. இறந்து கிடந்த அம்மாவின் காதில் எதோ கிசுகிசுத்தது. எந்த அசைவும் இல்லாததால் பயப்படத் தொடங்கியது. தாய்க்குரங்கின் மார்பின் மீது காது வைத்து கேட்டது. பின், அம்மாவை கட்டிப்பிடித்துக் கொண்டது குட்டி.

அங்கு கூடியிருந்தவர்கள் இந்தச் சம்பவத்தை கண்டு நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். பின், குட்டியை அம்மாவிடம் இருந்து விலக்கி, இறந்த அந்தக் குரங்கை புதைத்திருக்கிறார்கள். அப்போதும் மரம் விட்டு மரம் தாவி அம்மாவை நோக்கியே ஓடி வந்துக் கொண்டிருந்தது குட்டி.

 

 

குரங்குகளுக்கு மனிதர்களைப் போலவே எமோஷன்ஸ் உண்டு. இதற்காக பல ஆராய்ச்சிகளை பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவையெல்லாம் தேவையே இல்லை என்பது போல சில உண்மைச் சம்பவங்கள் நடக்கின்றன. 

குரங்குகள் தனது குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் பல விஷயங்கள் மனிதர்களை போலவே நடந்து கொள்ளும். கைப்பிடித்து அழைத்துச் செல்வது, கட்டியணைத்து தூங்குவது என பெரும்பாலும் அவை மனிதர்களை போலவே வாழும்.

கம்யுனிகேஷுக்கு உடல்மொழியை பயன்படுத்துவதில் குரங்குகள் எக்ஸ்பெர்ட். முகபாவனைகள், கை அசைவுகள், உடல் அசைவுகள் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு

செடிகள், பூச்சிகள் என எல்லா வித உணவுகளையும் குரங்குகள் உட்கொள்ளும்.

குரங்குகள் வாழைப்பழத்தை சாப்பிடுவதை பார்த்திருக்கிறீர்களா? உரித்து தோலை தூக்கிப் போட்டுவிட்டு பழத்தை மட்டுமே சாப்பிடும்.
குரங்குக்கும், மனித குரங்குக்கும்(Apes) என்ன வித்தியாசம் தெரியுமா? குரங்குக்கு மட்டுமே வால் இருக்கும். 

குரங்குகள் தங்களை தொடுவதை ரசிக்காது. தொடாமல் விளையாடினால் எந்த பிரச்னையயும் செய்யாது.

மனிதர்களுக்கு செய்யப்படும் ஐ.க்யூ தேர்வுகள் விலங்குகளுக்கும் செய்யப்படுவதுண்டு. அதில் குரங்குதான் டாப் ஸ்கோரர். 174

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கடலுக்கு நடுவே ஒரு கல்யாணம் - இது மெக்ஸிகோ மெர்சல்!

பொண்ணுங்களுக்கும் சரி... பசங்களுக்கும் சரி... கல்யாணம் அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்னு தாறுமாறா கனவுகள் இருக்கும். ஆனால் 'அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்'னு சொல்ற மாதிரி ஊருக்குள்ளே ஒரு மண்டபம் பார்த்து கல்யாணத்தை நடத்தி முடிச்சிடுவாய்ங்க. நம்மளும் பொங்கலுக்கு வெள்ளையடிச்ச மாதிரி மேக்-அப் போட்டுக்கிட்டு போய் உட்கார்ந்து ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சி போயிடும். ஆனால் இந்தத் தம்பதியினரோ வேற லெவலில் கல்யாணம் பண்ணிக்கொண்டனர். எப்படினு பார்ப்போம் வாங்க?

கடலில் கல்யாணம்

திருமணம் நடுக்கடலில் நடந்தால் எப்படி இருக்கும்னு நம்மளால் யோசிக்க மட்டும்தான் முடியும். ஆனால் இந்த ஜோடி, தான் ஆசைப்பட்டது போலவே கடலுக்கு நடுவில் கல்யாணம் பண்ணியிருக்காங்க. மெக்ஸிகோவில் கோஸுமெல் என்ற இடத்தில் 100 விருந்தினர்களுடன் நடுக்கடலில் கல்யாணம் முடிந்துள்ளது. கல்யாணம்னு சொன்னாலே ஜாலிதான். அதே கல்யாணம் ஜாலியாவே நடந்தால் எப்படி இருக்கும்? இதற்கு எடுத்துக்காட்டுதான் இந்தக் கல்யாணம். நடுக்கடலிலே மோதிரம் மாற்றிக்கொள்வது, தண்ணீருக்கு அடியில் இருவரும் முத்தமிட்டுக் கொள்வது என இவர்களின் திருமண அனுபவமே ஒரு சாகசப் பயணமாக நடந்துள்ளது. 

சரி திருமணம்தான் வேற லெவலில் நடக்குதுனு பார்த்தால் புகைப்படக்காரர்கள் தெய்வ லெவலில் போட்டோ எடுத்துள்ளனர். சுற்றிலும் கடல், அழகான தம்பதியினர்... கேட்கவா வேண்டும்? க்ளிக்கித் தள்ளி அழகான கல்யாண ஆல்பத்தை உருவாக்கி விட்டனர். எனக்கு மட்டும் சில சந்தேகங்கள் தோன்றுகின்றன. கல்யாணம் ஆகும்போது மோதிரம் மாற்றிக்கொள்வது வழக்கம். அப்படி மாற்றும்போது மோதிரம் தண்ணிக்குள்ள விழுந்தால் என்ன பாஸ் பண்ணுவாங்க? ஒரு வேளை தண்ணீர் க்ரிஸ்டல் க்ளீயரா இருக்கிறதால டபக்குனு எடுத்துருவாங்களோ என்னவோ?

கல்யாணம் பண்ணும் 'ப்ரைட்', 'க்ரூம்' தான் தண்ணியில் ஜாலியா உலா வர்றாங்கன்னு பார்த்தால் சேர்த்துவைக்கும் சர்ச் ஃபாதரையும் தண்ணிக்குள்ள இறக்கிவிட்டாய்ங்க. இதெல்லாம் பாவம் மை சன். அவரும் வேறு வழியில்லாமல் வடிவேலு மாதிரி ஃபேஸ் ரியாக்‌ஷன்ஸ் கொடுத்து மோதிரத்தை மாற்றும்போது மந்திரத்தை வாசிச்சிக்கிட்டு இருக்கார் பாருங்க. 

கடலில் திருமணம் - செல்ஃபி

திருமணம் கோயிலில் நடந்தாலே போகும் இடமெல்லாம் செல்ஃபிதான். இதுல திருமணம் நடுக்கடலில் நடந்தால் சுற்றி இருப்பவர்களுக்கும் கொண்டாட்டம்தான். ஒரு செல்ஃபியைப் போட்டு உடனே ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர்னு அப்லோட் பண்ணி லைக்ஸ் வாங்குவதுதான் முதல் வேலையாக இருக்கும். ஒரு சர்ச்சில் நடப்பது போலவே  மணப் பெண்ணின் தந்தை தனது மகளைக் கூட்டிக்கொண்டு வருகிறார். இரு பக்கமும் கைத்தட்டி வரவேற்பு, கையில் பூச்செண்டு, மோதிரம் மாற்றிக்கொள்ளுதல் என களைகட்டியது கல்யாணம். 

கடைசியில் மோதிரம் மாற்றி முடித்தவுடன் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் மணமக்கள் மீது தண்ணீரை வாரியிறைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இனி 'கரீபியன் சீ'னு சொன்னவுடனே பைரேட்ஸிற்குப் பதிலாக இந்தக் கல்யாணம்தான் எல்லோர் கண் முன்னாடியும் வந்து போகும். 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கண்களை நம்பாதீர்!!!

 

இங்கு நீங்கள் காணும் அனைத்தும் - அனைத்துமே - ஓவியங்கள்தாமே அன்றி புகைப்படங்கள் அல்ல!

மொடர்ன் ஆர்ட், கன்டெம்பரரி ஆர்ட் மற்றும் பல வகை ஓவிய வகைகளுள், ‘ரியாலிட்டி ஆர்ட்’ எனப்படும் தத்ரூப ஓவிய வகையும் ஒன்று. பார்த்த மாத்திரத்தில் ஒரு புகைப்படம் போலத் தோன்றும் இவ்வகை ஓவியங்கள், காண்போரைக் குழப்பிவிடும், தாம் பார்ப்பது புகைப்படமோ என்று!

அவ்வாறு, உலகெங்கும் உள்ள தத்ரூப ஓவியர்களின் ஒரு சில படைப்புகளே இங்கு உங்கள் ரசனைக்காகத் தரப்பட்டுள்ளன.

...
...
...
...
...
...
...
...
...
...

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

பள்ளி ஆசிரியர்கள் ஐன்ஸ்டீனை வெறுக்க இதுதான் காரணமா? #HBDEinstein

ஐன்ஸ்டீனை


அந்தக் குழந்தை பிறந்தபோது அதன் தலை மட்டும் அளவில் பெரியதாக இருந்தது. பெற்றோருக்கு அதிர்ச்சி. மருத்துவர்களும் 'எதனால் இப்படி தலை பெரியதா இருக்கிறது?' எனக் கண்டறிய முடியாமல் தவித்தார்கள். அந்தக் குழந்தையின் பாட்டி முதல்முறையாகப் பார்த்துவிட்டு, "அய்யோ! ரொம்ப பெரிசு! ரொம்ப பெரிசு!” என்று பினாத்தினார். மருத்துவர்கள், பெற்றோர்களின் கவலை எல்லாம் சில தினங்கள்தான். பிறகு, தானாகவே தலை சரியானது.

ஒரு குழந்தை மழலைக் குரலால் 'அம்மா' என அழைக்கும் முதல் வார்த்தைதான் தாய்க்கு கிடைக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சிகளில் ஒன்றாக இருக்க முடியும். ஆனால், அந்தக் குழந்தை இரண்டு வயது வரை சரியாக பேச முடியாத குறைபாடு இருந்தது. துறுதுறுவென குறும்பு செய்து திரியும் ஒரு குழந்தை, தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் குதூகலத்தோடு வைத்திருக்கும், ஆனால், இந்தச் சுட்டியோ ஆழ்ந்த தியானத்தில் இருந்தது. ஒரு துறவியைப் போல அமைதி. சரியான கவனிப்புத் திறனும் இல்லை.

அந்தக் குழந்தைக்கு இரண்டரை வயதானபோது, புதிதாகப் பிறந்த தங்கையைப் பார்த்து, “இந்தப் பொம்மைக்கு சக்கரமே இல்லியே எப்படி இது போகும்?" எனக் கேட்டது. ஆறு வயதில் பள்ளியில் சேர்த்தபோது, ஆசிரியர்களும் 'இவன் ஒரு மக்கு குழந்தை' எனச் சொன்னார்கள்.

இப்படி, பெற்றோரையும், ஆசிரியர்களையும் கவலைப்பட வைத்த ஒரு குழந்தை, இயற்பியல் துறையில் மிகப் புரட்சிகரமான கோட்பாடுகளை வெளியிட்டு, இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞராகப் பெயரெடுத்தது. அந்தக் குழந்தைதான் ஐன்ஸ்டீன்.

அவருக்கு கவனிப்புத் திறன் குறைவாக இருந்ததும் படிப்படியாக சரியாகி வந்ததும் உண்மை. ஆனால், ஆசிரியர்கள் 'மக்கு' என்றது உண்மை இல்லை. காரணம், அன்றைய கல்விமுறையின் மீது ஐன்ஸ்டீனுக்கு வெறுப்பு இருந்தது, அதுவும் ஆறு அல்லது ஏழு வயதிலேயே.

அந்தக் காலத்தில் பள்ளிகள் அனைத்துமே மதம் சார்ந்தவையாக இருந்தன. ஐன்ஸ்டீனின் குடும்பம், யூத மதத்தைச் சேர்ந்தது. தந்தை ஹெர்மான், ஒரு கத்தோலிக்க பள்ளியில் மகனைச் சேர்த்தார். சில காலம் கழித்து இன்னொரு யூத மத பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளிகள் மட்டும் மத நிறுவனங்களோடு அல்லாமல்  பாடத்திட்டங்களும் மதம் சார்ந்தவையாக இருந்தன. எளிமையான அறிவியல் விஷயங்களும் மதம் சார்ந்த பார்வையுடனே போதிக்கப்பட்டன. ஐன்ஸ்டீனுக்கு சிறு வயதில் கடவுள் மீதான பக்தி இருந்தாலும், அறிவியலை மதம் சார்ந்து போதிக்கப்படுவதில் விருப்பம் இல்லை.

புத்தகத்தில் என்ன இருக்கிறதோ, அதை மனப்பாடம் செய்து அப்படியே ஒப்புவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்த்தார்கள். ஐன்ஸ்டீனோ தான் எவ்வாறு விளங்கிக்கொண்டாரே அப்படியே பதில் சொல்லவும், எழுதவும் செய்தார். எக்கச்சக்க சந்தேகங்களை ஆசிரியர்களை நோக்கி வீசினார். சில ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்ததைச் சொன்னார்கள். சிலரோ, ஒரு பொடியன் இப்படி கேள்வி கேட்பதா எனப் பொருமினார்கள். இந்தச் சுதந்திரச் சிந்தனையும், கேள்வி கேட்கும் தேடலுமே, அன்றைய ஆசிரியர்களிடம் 'மக்கு' முத்திரையைப் பெற்றுத் தந்தது. பள்ளிப் படிப்பை முடிக்க ஓராண்டு இருந்த நிலையில், பள்ளியைவிட்டு வெளியேற்றினார்கள். பிறகு, எதிர்பார்த்த மாதிரியான கல்வியை வழங்கிய ஸ்விட்சர்லாந்து நாட்டுக் கல்வி நிலையம் ஒன்றில் படிப்பைத் தொடர்ந்தார் ஐன்ஸ்டீன்.

Einstein

ஐன்ஸ்டீனின் இந்தச் சுதந்திர சிந்தனை, ஆராய்ந்து கேள்வி கேட்கும் குணம் அவருடைய ஐந்து வயதிலேயே தொடங்கிவிட்டது. ஐந்து வயதில் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்த ஐன்ஸ்டீனுக்கு அவரது தந்தை, ஒரு காந்தத் திசைக்காட்டியை (Magenetic Compass) வழங்கினார். ஐன்ஸ்டீன் முதன்முதலில் தொட்டுப் பார்த்த அறிவியல் சார்ந்த பொருள் அது. அந்தத் திசைக்காட்டியை எந்தப் பக்கம் திருப்பினாலும், அந்த முள் அதற்கேற்றவாறு திரும்பி எப்படி ஒரே திசையைக் காட்டுகிறது என்று யோசிக்கத் தொடங்கினார். கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி தன் மாயக்கரங்களைக் கொண்டு இந்த முள்ளை இயக்குவதாக நினைத்தார். அந்தக் கண்ணுக்குத் தெரியாத சக்தியின் பெயர் காந்தவிசை என்று புரியாத வயது. அதைப் பற்றி யோசிக்கத் தொடங்கியதில் இருந்தே அவருடைய ஆராய்ச்சி மனப்பான்மை விழித்துக்கொண்டது.

மிகப்பெரிய ஆளுமைகளின் இளம்பிராயத்து அறிவை விசாலமாக்கியவை புத்தகங்களாக இருக்கும். அதுவும் அறிவியல் சார்ந்த புத்தகங்களைவிடவும் கதைப் புத்தகங்களே அதிக பங்கு வகித்திருக்கும். ஐன்ஸ்டீன் வாழ்விலும் அப்படியே நடந்தது. அவரது வீட்டில் ஒரு நூலகம் இருந்தது. அவருடைய பன்னிரண்டாம் வயதில் வரைகணிதம் (Geometry) தொடர்பான ஒரு புத்தகம் கிடைத்தது. அந்தப் புத்தகம் கணிதம் மீதான ஒரு காதலை ஏற்படுத்தியது. ஆற்றலும் பொருளும் (Energy and Matter) என்ற புத்தகத்தை வீட்டு நூலகத்தில் படித்தார். மதக் கருத்துகள் இல்லாத வகையில் எளிமையாக அறிவியலை இந்தப் புத்தகம் போதித்தது. பள்ளியில் கணிதத்திலும் இயற்பியலிலும் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றார்.

பள்ளியில் போதிக்கப்பட்ட கணிதம் அவருக்கு வெறுப்பானதாக இருந்தாலும், வீட்டில் அவருடைய சித்தப்பா ஜேக்கப், கணிதத்தை அருமையாகப் போதித்தார். அல்ஜிப்ராவைப் பற்றி அவர் கதையாகவே நடத்தினார். அதாவது “அல்ஜிப்ரா என்பது ஒரு விளையாட்டு. பெயர் தெரியாத ஒரு சிறு விலங்கைத் தேடிக் காட்டுக்குப் போகிறோம். முதலில் அந்த விலங்குக்கு X எனப் பெயர் வைக்கிறோம். தேடிக் கண்டுபிடித்த பிறகு அதற்குப் பெயர் சூட்டுகிறோம்” என்றார். ஐன்ஸ்டீனை மிகவும் அவருக்குப் பிடிக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்னொரு அருமையான துணையும் ஐன்ஸ்டீனுக்குக் கிடைத்தது. யூத மத வழக்கப்படி ஐன்ஸ்டீன் குடும்பம், வாரம்தோறும் ஓர் ஏழை மாணவருடன் உணவைப் பகிர்ந்துகொண்டார்கள். அந்த ஏழை மருத்துவ மாணவரின் பெயர் Max Talmud. ஐன்ஸ்டீனின் அறிவை விரிவாக்கியதில் இவருடைய பங்கும் முக்கியமானது. வாரந்தோறும் அவர் வரும்போதெல்லாம் ஐன்ஸ்டீனுக்கு ஒரு புத்தகத்தைக் கொண்டுவருவார். கணிதம், இயற்பியல், தத்துவம் போன்ற துறைகளில் ஐன்ஸ்டீனுக்கு பெரும் ஆர்வத்தை வரவழைத்தவர். இவர் அறிமுகப்படுத்திய புத்தகங்களில், அறிவியல் புனைகதைகள் பல தீவிரமாக யோசிக்கவைத்தன.

இப்படி விசாலமான அறிவினால், பள்ளியில் ஆசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்க, ஆசிரியர்களோ ஐன்ஸ்டீனை வெறுத்தார்கள். இவன் தொடர்ந்து பள்ளியில் படித்தால், பிற மானவர்களையும் கெடுத்துவிடுவான் என்று அஞ்சினார்கள். இவனைப் பள்ளியில் இருந்து எப்படி விலக்குவது என யோசித்தார்கள். மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் கல்விமுறையை வெறுத்த ஐன்ஸ்டீனும் பள்ளியைவிட்டு வெளியேறிவிட யோசித்துக்கொண்டிருந்தார். பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு ஓராண்டு இருந்த நிலையில் உடல்நிலை சரியில்லாததைக் காரணம் காட்டி வெளியேறினார்.

இவருடைய சிந்தனை முறைக்கு ஒத்துவரும் சுவிட்சர்லாந்து நாட்டின் ஸ்விஸ் பெடரல் பாலிடெக்னிக்கில் சேர்ந்து படிக்கச் சென்றார். அங்கு நடந்த நுழைவுத் தேர்வில் கணிதத்தையும் இயற்பியலையும் தவிர வேறு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், கணிதத்தில் இவருக்கு இருந்த திறமையைக் கண்டு, அவர் முடிக்காமல் விட்ட பள்ளிப் படிப்பை ஸ்விட்சர்லாந்தின் ஒரு பள்ளியில் முடித்துவிட்டு வந்தால், இங்கே படிக்க அனுமதி தருவதாக, அந்தக் கல்லூரியின் முதல்வர் உறுதியளித்தார். அதேபோல பள்ளிப் படிப்பை முடித்து அந்தக் கல்லூரியிலும் சேர்ந்து படித்தார் ஐன்ஸ்டீன். அதன்பிறகு நடந்தவை எல்லாம் வரலாறு.

பதினாறு வயதிலேயே, தான் விரும்பிய வகையில் கல்வி கற்பதற்காக தன் நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்குச் சென்று படிக்கும் அளவுக்கு மனவுறுதி உடையவராகவும், அறிவியல் மீதான தீராக்காதலுடனும் இருந்தார். கல்வியில் மட்டுமல்ல, சிறு வயதிலேயே வயலின் வாசிப்பதிலும் ஐன்ஸ்டீன் திறமையானவராக விளங்கினார். வயலின் வாசிக்கும் பழக்கம், அவருடைய தாயிடமிருந்து வந்திருந்தது. பெரும் விஞ்ஞானியாக ஆன பிறகும், வயலினைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தார் அந்த அறிவியல் மேதை.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.