Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

உறைபனியினால் முற்றாக மூடப்பட்ட வீடு

அமெ­ரிக்­கா­வி­லுள்ள வீடொன்று உறை­ப­னி­யினால் முற்­றாக மூடப்­பட்­டி­ருப்­பதை புகைப்­படக் கலைஞர் ஒருவர் படம்­பி­டித்­துள்ளார். நியூ யோர்க் மாநி­லத்தில்  ஒன்­ட­ரியோ ஏரிக்கு அருகில் இவ்­வீடு உள்­ளது.

house-1
கடும் குளி­ரான கால­நி­லைக்கு மத்­தியில் இந்த வீட்டை முற்­றிலும் உறை­பனி மூடி­யி­ருந்­தது. 


கடந்த வாரம் இவ்­வீட்டை படம்­பி­டித்த ஜோன் குக்கோ இது தொடர்­பாக கூறு­கையில், இப்­படம் உண்­மை­யா­னது என நம்­பு­வ­தற்கு சமூக வலைத்­த­ளங்­க­ளி­லுள்ள பலர் மறுக்­கின்­றனர்.

house

நான் முழு வீட்டின் மீதும் ஏதோ நுரையை தெளித்­து­விட்டேன் என அவர்கள் கரு­து­கின்­றனர்.' எனத் தெரி­வித்­துள்ளார். 


நியூயோர்க் மாநி­லத்தின் மேற்குப் பகு­தியில் கடந்த வாரம் பனிப்­புயல் கார­ண­மாக 200,000 பேர் மின்­சா­ரத்தை இழந்­தி­ருந்­தனர். இவ்­வார முற்பகுதியிலும் பல்லாயிரக் கணக்கானோருக்கு மின் சாரம் கிடைக்கவில்லை.

http://metronews.lk/?p=3764

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒரு நாள் ஃபேஸ்புக்ல பொண்ணா இருந்து பாருங்க... அப்போ புரியும் எங்க கஷ்டம்! #Girls@Facebook

இயந்திரமயமாகிவிட்ட உலகத்தில் சுறுசுறுப்பான தேனீக்களைப் போன்று வலம் வந்து கொண்டிருக்கிறோம். அதில் ஃபேஸ்புக், ஒரு தனி உலகையே நமது வாழ்க்கையில் ஆக்கிரமித்துள்ளது. அப்படி பரவலாக உபயோகிக்கிற ஃபேஸ்புக்கில் குறிப்பா பொண்ணுங்க நிறையவே கஷ்டப்படுறாங்க. இதைக் கொஞ்சம் படிச்சுப் பாருங்க உங்களுக்கே தெரியும்.

பொண்ணுங்க

* சூரியன் உதிக்குதோ இல்லையோ, ஃபேஸ்புக்ல மெசேஜ் தினமும் தெறிச்சிடும். அதைத் திறந்தாலே ஆயிரம் கணக்கா ரெக்வெஸ்ட் குவியும். அதுலேயும் நம்ம அக்செப்ட் பண்ணலைனா போக் பட்டனைத் தட்டி கொஞ்சம் என்ன அக்செப்ட் பண்ணும்மானு ஜாடை மாடையா சொல்வாங்க.

* நாமளே ஆடிக்கு ஒருநாள் அமாவாசைக்கு ஒருநாள்னு போஸ்ட் போடுவோம். அதையும் பார்த்துட்டு நம்ம இன்பாக்ஸ்ல வந்து நம்ம போஸ்ட்டைப் பற்றி பெருமையா பேசுவாங்க. ஏன்னா அப்போதானே நம்ம பதிலுக்குப் பேசுவோம். அட! என்ன ஒரு தொலைநோக்கு பார்வைன்னு பாருங்க.

* அதிலேயும் ஒரு சிலர் இருக்காங்க .எஃப்.பி-ல இருக்கிறவங்க ஆணா பெண்ணான்னே தெரியாம கடலை போடுறதுக்குன்னே ஒரு குரூப் இயங்கிக்கிட்டுதாங்க இருக்கு. ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஓரினம்தாங்கிறது இதுக்கு மட்டுமே பொருந்தும்.

* அதுபோக நாம அக்செப்ட் பண்ணலைனாலும் மெசேஜ் நான் ஸ்டாப்பா வந்துட்டே இருக்கும். டேய் யாருடா நீங்க இத்தனை நாளா எங்கடா இருந்தீங்க?

* ஒரு போஸ்ட்டுக்கு என்ன கமென்ட் கொடுக்கிறதுனே தெரியாத அறிவிலிகள் எல்லாம் நம்ம பதிவைப் பற்றி கமென்ட்ல தாறுமாறா பேசுறதெல்லாம் என்ன கொடுமை சரவணா?

* ஃபீல் பண்ணி தாடி வளர்க்கலைனாலும் ரொம்பக் கஷ்டத்துல இருக்கிறதா பதிவு போட்டா அதையும் மனசாட்சியே இல்லாம லைக் பண்ணுவாங்க.

* என் ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான்னு அவங்களுடைய ஃப்ரெண்ட்ஷிப்பை நம்மகிட்ட காட்டுறதுக்காக சம்பந்தமே இல்லாம டேக் பண்ணுவாங்க. மொதல்ல மார்க்கிடம் சொல்லி டேக் பண்ற ஆப்ஷனை மூடச் சொல்லணும். எவ்வளவு டேக்கைத்தான் நம்ம புரொஃபைல் தாங்கும்.

பொண்ணுங்க

* புதுசா ரியாக்‌ஷன்ல நிறைய கலெக்‌ஷன் வந்துச்சு. அய்யோ வந்ததும்தான் வந்துச்சு இந்தக் கொசுத்தொல்ல தாங்க முடியலைடா சாமி. எதுக்கு லவ் சிம்பல் கொடுக்கணும், எதுக்கு கோவப்படணும்னே தெரியாம எல்லாத்துக்கும் புதுசு புதுசா லைக்கைப் போட்டு காண்டாக்குவாங்க.

* அவங்க பண்ற மெசேஜுக்குப் பதில் சொல்ல விரும்பாம அவாய்ட் பண்ணாலும் தொடர்ந்து மெசேஜ் வந்துட்டேதான் இருக்கும். அதுக்கு ஒரே தீர்வா பிளாக் பண்றதைத் தவிர வேறு வழியில்லை.

* சரி போனாப்போகுதுன்னு மெசேஜுக்குப் பதில் அனுப்பினா அவங்களோட வாழ்க்கை வரலாற்றையும், தற்பெருமையையும் ஒரு வரலாற்றுப் புத்தகத்துல நம்ம இன்பாக்ஸ்ல பதிச்சு வைப்பாங்க.

* ஒரு பெண்ணுக்குத்தானே இன்னொரு பெண்ணோட மனசு தெரியும்னு பொண்ணுங்களோட மனச தெரிஞ்சிக்க பொண்ணுங்க பேருல நிறைய ஃபேக் ஐ.டி-கள் திறக்கிறதையும் சகிச்சிக்க முடியலைடா ராமா. ஆனா அந்த ஃபேக் ஐ.டி-க்கும் இதே கஷ்டங்கள்தான்னு உங்கள்ல எத்தனைப் பேர்களுக்குத் தெரியும்?

* பயந்து பயந்து நம்ம போட்டோவைப் பதிவு பண்ணா, அதுக்குத் தருவாங்க பாருங்க கமென்ட்ஸ். அய்யோ அய்யோ... எவன் எவனோ நம்ம போட்டோவைப் பார்க்கணும்னு அவங்க காலேஜ் அட்டென்டெண்ஸ் ஆர்டர் மாறாம டைப் பண்ணிருப்பாங்க. போட்டோவுக்கும் பப்ளிசிட்டி தேவையா மக்களே.

* இனிமேலாச்சும் உங்களை மாத்திக்கோங்க மக்கா. பாவம் பிள்ளைங்க சுதந்திரமா பதிவுகளைப் பதிவு செஞ்சிட்டுப் போகட்டுமே...

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

‘என் தாயின் கல்லறையில் என்னையும் அடக்கம் செய்யுங்கள்’ - இங்கிலாந்தை உலுக்கிய சிறுவனின் கோரிக்கை

போலந்து நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஃபிலிப்புக்கு  திடீரென்று உடல்நிலை மோசமானது. என்ன நோய் என்றே தெரியவில்லை. தாயைப் பறிகொடுத்தவன். தந்தைதான் சிறுவனுக்கு எல்லாமே. சிறுவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என பதை பதைத்துப் போகிறார் தந்தை. இங்கிலாந்து நாட்டுக்கு சிறுவனை அழைத்து செல்ல முடிவு செய்கிறார்.

இங்கிலாந்து புறப்படும் முன் , தாயின் கல்லறைக்கு செல்கிறான் சிறுவன். தாயின் கல்லறையில் விழுந்து வணங்கி ஆசி வாங்கிக் கொண்டான். தாயுடன் நின்று புகைப்படம் எடுப்பது போலவே... அந்த கல்லறைக்கு அருகில் நின்றும் புகைப்படமும் எடுத்துக் கொண்டான். அங்கேயே வர இருக்கிறோம் என்று தெரியவில்லை அந்தச் சிறுவனுக்கு. வாழ்க்கைதான் சில சமயங்களில் மிகவும் கொடூரமானதாயிற்றே!

தாயின் கல்லறையில் அடக்கம் செய்யப்படவுள்ள சிறுவன்

போலந்து நாட்டைச் சேர்ந்தவர் Piotr Kwasny. இவரது மனைவி அக்னீஸ்கா. கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்தனர். இரு ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை. ஃபிலிப் என பெயரிட்டு செல்லமாக வளர்த்தனர். சிறிய குடும்பம். வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டிருந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை அக்னீஸ்காவைப் புற்றுநோய் தாக்கியது. க்வான்சியால் மனைவியை காப்பாற்ற முடியவில்லை. உயிருக்குயிரான மனைவியை புற்று நோய் அவரிடம் இருந்து பறித்தது. போலந்து நாட்டில் உள்ள Wadowice அக்னீஸ்காவின் சொந்த ஊர். அந்த சிறிய கிராமத்தில் மனைவியின் உடலை புதைத்தார் க்வான்ஸி. 

தந்தையும் மகனும் தனியாக வாழத் தொடங்கினர். க்வான்ஸியால் மகனைத் தனித்து பார்த்துக் கொள்ள முடியவில்லை. மகனுக்காக இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தார். ஒரு குழந்தை பிறந்தது. இரு குழந்தைகளை  தத்தும் எடுத்தனர். வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதுதான், மகன் ஃபிலிப்புக்கும் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மகனைக் காப்பாற்ற லண்டன் கொண்டு செல்ல முடிவெடுத்தார்.

பல்வேறு கட்ட பரிசோதனைக்கு பிறகு சிறுவனுக்கு ரத்தப் புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பது தெரியவந்தது. துடித்துப் போனார் க்வான்ஸி. ஏற்கனவே மனைவியை புற்று நோய்க்கு பலி கொடுத்து விட்ட நிலையில், மகனுக்கும் புற்று நோய் என்றால்... எந்த தந்தையால்தான்  தாங்கிக் கொள்ள முடியும் ?

கடந்த 2013ம் ஆண்டு லண்டனில் உள்ள குழந்தைகள் புற்று நோய் மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார். சற்று உடல் நிலைத் தேறி வந்த நிலையில் கடந்த செப்டம்பரில் ஃபிலிப்பின் உடல்நிலைமோசமானது. மூக்கில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. கால்களில் ரண வலி ஏற்பட்டது. தாங்க முடியாத வேதனையில் சிறுவன் துடித்தான். கடைசி கட்டமாக ஃபிலிப்புக்கு அளிக்கப்பட்ட கீமோதெரபியும், ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையும் அளிக்கப்பட்டது. எவையும்  பலன் அளிக்கவில்லை. தற்போது வலிநிவாரண சிகிச்சை மட்டுமே ஃபிலிப்புக்கு அளிக்கப்பட்டு வருகிறது.  

Filip

சிறுவனுக்கு தனது தனது வாழ்நாள் எண்ணப்படுவது தெரிந்தே இருந்தது. என்ன நினைத்தானோ தெரியவில்லை. 'நான் இறந்த பின், எனது உடலை தாயின் கல்லறையிலேயே அடக்கம் செய்து விடுங்கள்' என வேண்டுகோள் விடுத்தான்.

ஐந்து வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்ட மனைவியின் சவப்பட்டியைத் தோண்டி எடுத்து மகனின் ஆசையை நிறைவேற்ற போக்குவரத்து உள்ளிட்டவற்றிற்கு போதிய பணம் இல்லாத  நிலையில் இருந்தார் க்வான்ஸி. 6500 பவுண்டுகள் வரை ஆகும் என்ற தகவல் ஆன்லைனில் தகவல் பரவியது. இங்கிலாந்து நாடே உருகிப் போனது.   6,500 பவுண்டு நிதிஉதவி திரட்ட திட்டமிடப்பட்டது. இப்போதுவரை 37000 பவுண்டு நிதி திரட்டப்பட்டுள்ளது.

  Filip 

(சிகிச்சைக்கு முன்பும் இப்போதும்.. ஃபிலிப்)

லண்டனில் சிறுவன் ஃபிலிப் அனுமதிக்கப்பட்டுள்ள புற்று நோய் மையம் பிரசித்தி பெற்றது. புற்று நோயை தொடக்க நிலையில் கண்டுபிடித்தால், குணப்படுத்தி விடலாம். இந்த மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் குழந்தைகள், வார்டில் உள்ள மணியை மூன்று முறை அடித்து ஓசையை எழுப்புவார்கள். அந்த மணிச்சத்தம் மற்ற குழந்தைகளுக்கும் தைரியத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்பதால் இது ஒரு பாரம்பர்ய நிகழ்வாக இந்த மருத்துவமனையில் நிகழும். 

"என் மகன் ஃபிலிப்பின் கரங்கள் மட்டும் அந்த மணியை நோக்கி நீளப் போவதில்லை.. நான் என் மகனை அடக்கம் செய்யவேண்டும் என்று நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. இந்த நிலை எவருக்கும் வரக்கூடாது.  எனது மனைவியின் கல்லறையில் மகன் புதைக்கப்பட்டால் சொர்க்கத்தில் அவனை அவள் பார்த்துக் கொள்வார் என்று நான் திடமாக நம்புகிறேன்” என்கிறார் க்வான்ஸி.

மார்ச் மாத ஆரம்பத்திலேயே மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். வலிக்கான சின்ன சிகிச்சைகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஃபிலிப் 

வாழ்க்கை சில சமயம் காட்டும் கோரமுகம், பார்க்கவே இயலாத அளவு கொடுமையானது. இவ்வளவுதான் வாழ்க்கை என்றானபின்னும், கோபம், வெறுப்பு, பொறாமை, சூழ்ச்சி, வஞ்சகம் என்று வாழ்ந்து கொண்டிருப்பது அர்த்தமேயற்றது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஸ்லெட்ஜிங் கோலி, ஸ்லோமோஷன் புஜாரா, ஸ்வார்ட் டான்ஸ் ஜடேஜா  #TodayTrends

trends

#TodayTrends

சந்திரஹாசன்:

நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியுமான சந்திரஹாசன் உடல்நலக்குறைவால்,  உயிரிழந்தார். லண்டனில், தனது மகள் அனுஹாசன் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென்று கார்டியக் அரெஸ்ட் ஏற்பட்டதால் உயிரிழந்தார். அவருக்கு வயது 82. கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ''நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய்  அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு.  எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான்  நிறைவேற்றவில்லை'' என ட்விட் செய்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிரைவேற்றவில்லை

கோலி, புஜாரா, ஜடேஜா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் ஸ்டைலிஷான பேட்டிங் மூலம் இந்தியா 603 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா இரட்டை சதமும், விக்கெட் கீப்பர் சஹா சதமும் அடித்து இந்திய அணியை முன்னிலை பெற வைத்தனர். இறுதி கட்டத்தில் ஜடேஜாவின் அரைசம் 152 ரன் முன்னிலை பெற காரணமானது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா 23 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது. 

இன்றைய நாளில் வைரல் ட்ரெண்டிங் என்ன வென்றால் ஜடேஜா அரைசதம் அடித்ததும் ஸ்வார்ட் டான்ஸ் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியதும், வார்னர் அவுட் ஆனதும் ஸ்லிப்பில் நின்ற கோலி கையை பிடித்து காயமடைந்ததை சுட்டிக்காட்டி ஸ்லெட்ஜிங் செய்ததும்தான். அதோடு ஜடேஜா ஒரு புதிய சாதனையையும் செய்தார். இந்திய வீரர் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் அதிக பந்துகளை சந்தித்தவர் என்ற பெருமையை பெற்றார். 525 பந்துகளை சந்தித்த புஜாரா 495 பந்துகளை சந்தித்து சாதனையை தன் பக்கம் வைத்திருந்த டிராவிட் சாதனையை பின்னுக்கு தள்ளினார். 

19,999 ரூபாயில் iPhone SE

ஆப்பிள் நிறுவனத்தின் iPhone SE 16GB ஸ்மார்ட் போன்கள் 19,999 ரூபாய்க்கு ஆஃபர் விலையில் குறுகிய காலத்துக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ரீடெய்ல் ஸ்டோர்களில் இந்த ஆஃபர் விலையில் iPhone SE போன்களை பெறலாம். வரும் மார்ச் 31-ம் தேதி வரை இந்த சலுகை இருக்குமாம். ஐபோன் இந்தியாவில் உற்பத்தி துவங்குவதற்கு இதெல்லாம் முன்னோட்டம் இந்தியாவில் ஆன்ட்ராய்டு மார்க்கெட்டுக்குள் ஆப்பிளால் பெரிதாக நுழைய முடியவில்லை என்றாலும். தனது விற்பனை அதிகரிக்க ஆப்பிள் திட்டம் தீட்டி வருகிறது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நடிகர் ரகுவரன் இறந்த தினம் (மார்ச்.19, 2008)

தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த புகழ் பெற்ற நடிகர் ரகுவரன். இவர் 1958ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் பிறந்தார். பி.ஏ. பட்டதாரியான இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ்

 
 
 
 
நடிகர் ரகுவரன் இறந்த தினம் (மார்ச்.19, 2008)
 
தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த புகழ் பெற்ற நடிகர் ரகுவரன்.

இவர் 1958ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் பிறந்தார். பி.ஏ. பட்டதாரியான இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் வில்லன் வேடங்களில் அவரின் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.

சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். கடைசியாக அவர் நடித்து வெளியான தமிழ்ப் படம் சில நேரங்களில். இது தவிர இந்தி, மலையாளம், ‌தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008ல் காலமானார். நடிகை ரோகினியை ‌திருமணம் செய்து கொ‌ண்ட ரகுவரனு‌க்கு ரிஷி என்ற மக‌ன் உ‌ள்ளா‌ர்.

மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1279 - யாமென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் மங்கோலியாவின் வெற்றியுடன் சீனாவில் சோங் அரச பரம்பரை முடிவுக்கு வந்தது.
* 1861 - நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது.
* 1915 - புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.
* 1918 - நேர வலயங்களை ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கீகரித்தது.

* 1944 - இரண்டாம் உலகப் போர்: நாசி படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றினர்.
* 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானில் யூஎஸ்எஸ் பிராங்கிளின் என்ற அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 800 பேர் கொல்லப்பட்டனர்.
* 1972 - இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
* 1982 - போக்லாந்து போர்: ஆர்ஜெண்டீனியர்கள் தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.

* 1988 - இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.
* 2002 - ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
* 2004 - தாய்வான் பிரதமர் சென் ஷூயி-பியான் சூட்டுக் காயப்படுத்தப்பட்டார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பச்சை நிற மின் விளக்கு அலங்காரத்தால் பார்வையாளர்களைக் கவர்ந்த உலகப்புகழ்பெற்ற இடங்கள் (Photos)

 

 

பச்சை நிற மின் விளக்கு அலங்காரத்தால் பார்வையாளர்களைக் கவர்ந்த உலகப்புகழ்பெற்ற இடங்கள் (Photos)
 

புனித பெட்ரிக் தினத்தை முன்னிட்ட உலகப்புகழ்பெற்ற இடங்கள் பல பச்சை நிற மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பார்ப்போரைக் கவர்ந்தன.

அயர்லாந்தைச் சேர்ந்த புனித பெட்ரிக்கின் நினைவு தினம் (Saint Patrick’s Day) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 17 ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது.

இதன் நினைவாக, 40 நாடுகளில் உலகப்புகழ்பெற்ற இடங்கள் பச்சை நிற மின்விளக்குகளால் ஜொலித்தன.

சீனப்பெருஞ்சுவர், புஜ் துபாயின் வானுயர்ந்த கட்டிடம், ரியோ டி ஜெனிரோவில் உள்ள இயேசு சிலை போன்ற 275 உலகப் புகழ்பெற்ற இடங்கள் பச்சை நிற விலக்குகளில் ஒளி வீசின.

நயாகரா நீர்வீழ்ச்சியில் மெளிரிய பச்சை வர்ணம் பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

 

 

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

ஆப்பிளும் நான்தான்... ஆண்ட்ராய்டும் நான்தான்... மொபைல் உலகில் ஒரு ‘சிவாஜி’!

ஆண்ட்ராய்டு

பத்திரிகைகாரரான எனக்கு ஆண்ட்ராய்டு மொபைல் அவசியம். ஆப்பிளில் கால் ரெக்கார்டு செய்ய முடியாது. ப்ளூடூத்தில் பாடல்களை அனுப்ப முடியாது, பிடித்த ரிங்டோனை நினைத்த மாத்திரத்தில் டவுன்லோடு செய்து வைக்க முடியாது என ஐஃபோனை நிராகரிக்க சில காரணங்களை சொல்லலாம். ஆனால், இவற்றையெல்லாம் மீறி ஐஃபோன் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் ஆப்பிள் யூஸர்களால் மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும். அதனாலே, பெரும்பாலான ஆப்பிள் யூஸர்ஸ் இரண்டு மொபைல்களுடன் அலைவர். ஓர் ஐஃபோன். ஓர் ஆண்ட்ராய்டு. இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வை கொண்டு வந்திருக்கிறது ”ஐ”.

உண்மையிலே ”ஐ” முழுமையான தீர்வுதானா என்கிற ரிவ்யூவை பிறகு அலசுவோம். முதலில், இது என்ன விஷயம் என்பதை பார்த்து விடுவோம். இது ஐஃபோனுக்கு ஒரு பேக் கேஸ்(Back case) போலதான். ஆனால், பின்னால் இருப்பது ஒரு ஆண்ட்ராய்டு மொபைல். சர்ப்ரைஸ் தானே?

‘ஐ’ கிட்டத்தட்ட ஒரு மொபைல் போல செயல்படுகிறது. ஆப்பிளின் ஸ்பீக்கர், மைக்ரோபோன், கேமரா போன்ற காஸ்ட்லி விஷயங்களை ஆப்பிள் ஃபோனில் இருப்பதையே இதுவும் பயன்படுத்துகிறது. மற்ற விஷயங்களுக்கு எல்லாம் தன்னகத்தே தனி ஹார்டுவேர்  வைத்திருக்கிறது ஐ. இந்தப் பக்கம் பார்த்தால் ஆப்பிள் ஐஃபோன். திருப்பி பார்த்தால் ஆண்ட்ராய்டு. வாவ்!

 

 

இதில் இரண்டு சிம் கார்டுகள் போட்டுக்கொள்ள வசதி உண்டு. ஹெச்.டி படங்களாக சேமித்து வைக்க மெமரி கார்டு ஸ்லாட் உண்டு. இதற்கு தனியே பேட்டரி உண்டு. எனவே ஆப்பிளிடம் இருந்து கரண்ட்டை கடன் வாங்காது “ஐ”. 5இன்ச் ஸ்க்ரீனும் தனி. சுவாரஸ்யம்தான்.

புராசஸர் இன்னபிற விஷயங்கள், ஒரு நல்ல ஆண்ட்ராய்டு மொபைலுக்கு இணையாக இருக்கும் வாய்ப்புகள் குறைவுதான். ஆனால், இது செகண்ட்ரி மொபைல் என்னும்போது அது ஒரு பெரிய விஷயமாக இருக்காது. 

ஆப்பிள் பேக் கேஸ் தானே ஐ? பிறகு இரண்டு பக்கமும் ஸ்க்ரீன் என்றால் மொபைல் பாதுகாப்பாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. அது பற்றி இதன் நிறுவனர்கள் எதுவும் சொல்லவில்லை. 

மொபைல் உலகில் முன்னணியில் இருக்கும் இரண்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆப்பிளும், ஆண்ட்ராய்டும்தான். இரண்டையும் ஒரே கருவியில் கொண்டு வர முடியும் என்ற ஐடியாவே சுவாரஸ்யமானது. அதை சாத்தியப்படுத்த ஐ சொல்லும் வாய்ப்புகள் எல்லாமே எளிமையானவை. மேலும், இரண்டு கேமரா, இரண்டு மைக் என தேவையற்ற செலவுகளையும் இது குறைக்கிறது. அதே சமயம் பேட்டரி போன்ற முக்கியமான விஷயங்களை தனித்தனியே கொண்டிருப்பது நல்லது. ஸ்க்ரீனும் வேறு வேறு என்பதால், இரண்டு மொபைல்களும் தரும் அனுபவம் முற்றிலும் வேறு வேறாக இருக்கும். 

இப்போது புரொட்டோ டைப் மாடலை தயார் செய்திருக்கிறார்கள். மார்க்கெட்டுக்கு வரும்வரை காத்திருப்போம். அதற்குள் இந்த டிசைன் இன்னும் அழகாகலாம். கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்கப்படலாம்.சார்ஜ் குறைந்து போனால் இரண்டு மொபைலும் ஒன்றுக்கொன்று கரண்ட்டை கடன் தரும் வசதி கூட வரலாம்.

எப்படி இருந்தாலும் இது போன்ற புது முயற்சிகள் வெற்றியடைய வேண்டும். டெக்னாலஜியின் அடிப்படை எளிமையும், சிக்கனமுமாகத்தான் இருக்க வேண்டும். “ஐ” அப்படியொரு டெக்னாலஜியாக வர வாழ்த்துவோம்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

மெக்டொனல்ட்ஸ் செயலியில் இருந்து வாடிக்கையாளர்கள் தரவுகள் லீக்... 22 லட்சம் பேருக்கு பாதிப்பு!

McDelivery

மெக்டொனல்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின், மெக்டெலிவரி ஆப்பில் (McDelivery app) இருந்து வாடிக்கையாளர்களின் தரவுகள் லீக்கானதாக, சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஃபேலிபல் (Fallible) திடுக்கிடும் தகவலை கூறியுள்ளது. 

 பெயர், மின்னஞ்சல் முகவரி, போன் நம்பர், வீட்டு முகவரி போன்றவை அவற்றுள் அடங்கும். தகவல் லீக்கானதால், கிட்டத்தட்ட 22 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஷயம் குறித்து மெக்டொனல்ட்ஸ் நிறுவனம், 'எங்கள் இணைய தளத்திலோ அல்லது செயலியிலோ கிரெடிட் கார்டுகள் மற்றும் பிற நிதி சம்பந்தமான எந்தவித தரவுகளும் சேமித்து வைக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் இணையதளமும் செயலியும் பாதுகாப்பானவை. அவற்றின் பாதுகாப்பை அதிகரிக்கும் வேலைகளை தொடர்ச்சியாக செய்து வருகிறோம். இருப்பினும், பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்ள, வாடிக்கையாளர்கள் அவர்கள் போனில் இருக்கும் மெக்டெலிவரி செயலியை அப்டேட் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.

சீனா-அமெரிக்கா இணைந்து செயல்பட முடிவு...!

rex_2_17185.jpg

அமெரிக்காவின் செயலாளர் ( Secretary of State), ரெக்ஸ் டில்லர்சன் சீன அதிபர் சீ ஜின்பிஙை (Xi Jinping) இன்று சந்தித்தார். இருவரும், அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வெளியுறவு கொள்கைகள் பல்வேறு விஷயங்களைக் குறித்து கலந்துரையாடி உள்ளனர்.

சந்திப்பு பின்னர் சீன அதிபர் ஜின்பிங், 'அமெரிக்க மற்றும் சீனா மிகவும் ஒழங்காகவும் உணர்வுப்பூர்வமாகவும் அனைத்து விஷயங்களையும் கையாள வேண்டும். இது இருநாட்டு உறவுக்கும் ஒரு புதுவித துவக்கமாக இருக்கும்.' என்று கூறினார்.

இது குறித்து அமெரிக்காவின் செயலாளர் டில்லர்சன், 'தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம், சீன-அமெரிக்க உறவுக்குள் நல்ல புரிதல் வரும் என்று நம்புகிறோம். இது, இரு நாட்டு உறவுகள் வலுவடைய வித்திடும்.' என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் சீ ஜின்பிங் அடுத்த மாதம் அமெரிக்காவில் சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

white_house_q_16167.jpg

வெள்ளை மாளிகையில் கார் டிரைவராக பணியாற்றும் ஊழியருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சிரியா, லிபியா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வரமுடியாதபடி சட்டங்களைப் பிறப்பித்தார்.

இதுபோன்ற பல சம்பவங்களால் ட்ரம்பிற்கு மிரட்டல் இருப்பதாக தகவல் வெளியாயின. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் கார் டிரைவராக பணியாற்றும் ஊழியருக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதனையடுத்து அவருடைய கார் முழுவதுமாக சோதனை செய்யப்பட்டது. காரில் வெடிகுண்டுக்கான தடயங்கள் ஏதும் இல்லை. இருப்பினும் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையை சுற்றிய தெருக்கள் வாகனங்கள் செல்லாதவாறு தடைசெய்யப்பட்டுள்ளது. 

விற்பனையில் சாதனை படைத்த 'மோட்டோ ஜி5 ப்ளஸ்'

Moto-G5-Plus_15165.jpg

லெனோவா நிறுவனத்தின் புதிய அறிமுகமான 'மோட்டோ ஜி5 ப்ளஸ்' மாடல் போன் நிமிடத்திற்கு 50 போன்கள் வரை விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 

லெனோவா நிறுவனம் மார்ச் 15 ம் தேதி இந்தியாவில் மோட்டோ ஜி5 ப்ளஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த ஜி5 மாடல் ப்ளிப்கார்ட் இணையத்தளத்தில் மட்டுமே கிடைக்கும்.

மோட்டோ ஜி5 ப்ளஸ் இரண்டு வகைகளில் அறிமுகமானது. 3 GB Ram மற்றும் 16 GB internal memory கொண்ட மாடல் 14,999 ரூபாய்க்கும், 4 GB Ram மற்றும் 32 GB internal memory கொண்ட மாடல் 16,999 ரூபாய்க்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 3 GB Ram வசதி கொண்ட மாடல் போன் அறிமுகப்படுத்தப்பட்டு சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.  தற்போது 4 GB Ram வசதி கொண்ட ஜி 5 மாடல் போன் மட்டுமே ப்ளிப்கார்ட்டில் கிடைக்கிறது.

இருப்பினும் ப்ளிப்கார்ட் நிறுவனம் இதுவரையில் எத்தனை போன்கள் விற்றுள்ள என்ற தகவலை வெளியிடவில்லை. முதல் நாள் விற்பனையின் போது எக்ஸ்சேஞ்ச் ஆஃபருக்கு 1,500 ரூபாயும் ஸ்டேட் பாங்க் கார்டு பயன்படுத்துவர்களுக்கு 10 % தள்ளுபடியும் செய்தது. இந்த காரணங்களால் மோட்டோ ஜி5 ப்ளஸின் விற்பனை எதிர்பார்த்ததை விட அமோகமாக இருந்தது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கண்டய்னர்கள் எப்படி தயாராகின்றன (வீடியோ)

 

கண்டய்னர்கள் எப்படி தயாராகின்றன (வீடியோ)

 

 
 
நாம் அன்றாடம் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தும் உறுதியான கண்டய்னர்களை எப்படி தயாரிக்கிறார்கள்.

பார்த்தால் அசந்து போவீர்கள்.. 2 டன் வரை எடையுள்ள இரும்பு பெட்டகத்தை எவ்வளவு லாவகமாக செய்கிறார்கள்.

கடல்கடந்து செல்லும் கப்பல்களில் நாம் பயன்படுத்தும் பொருட்களை மிக பாதுகாப்பாக கொண்டு செல்ல இந்த கொள்கலன்கள் (கண்டய்னர்கள்) மிக அத்தியாவசியமாகின்றன.
 

http://tamil.adaderana.lk

  • தொடங்கியவர்

‘உலகப் படங்கள்’

 

 
 
Desktop_3144326f.jpg
 
 
 

உலக ஒளிப்பட அமைப்பு (World Photography Organisation) நடத்தும் 2017-ம் ஆண்டுக்கான உலகின் மிகப் பெரிய ஒளிப்படப் போட்டிக்கு இந்திய ஒளிப்படக் கலைஞர்கள் நால்வரின் ஒளிப்படங்கள் 10 பேர் கொண்ட இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பத்து ஆண்டுகளாக வழங்கப்படும் இந்த மதிப்புமிக்க விருதுப் போட்டிக்கு, இந்த ஆண்டு 183 நாடுகளிலிருந்து 2.27 லட்சம் படங்கள் வந்தன. இந்தப் படங்களிலிருந்துதான் நான்கு இந்தியர்களின் படங்கள் பரிசு பரிந்துரைப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஒளிப்படக் கலையை நேர்த்தியான வகையில் பிரதிநிதித்துவப்படுத்தும் படங்களையே பரிந்துரைப் பட்டியலுக்கு நடுவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்தப் போட்டிக்கான முடிவுகள் மார்ச் 28, ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட உள்ளன. விருதுகளை சோனி நிறுவனம் வழங்க உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் ஏப்ரல் 21 முதல் மே 7 வரை லண்டனில் கண்காட்சிக்கும் வைக்கப்பட உள்ளன.

இமாலயத் தேடல்

himalayas_3144324a.jpg

நிலக்காட்சி - தொழில்முறைப் பிரிவு, கொல்கத்தாவைச் சேர்ந்த ஜெயந்தா ராய்

இமய மலைத்தொடர் எப்போதுமே நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடிய ஒன்று. வண்ணங்களின் இடையூறு இன்றி அதன் அழகையும் கம்பீரத்தையும் கறுப்பு வெள்ளையில் பதிவு செய்துள்ளார் ஜெயந்தா ராய். பூமிப் பந்தின் மிகப் பெரிய மலைத்தொடரான இமய மலை தொடர், பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவருடைய படங்கள் எதிர்காலத்தில் முக்கிய ஆவணமாகவும் மாறக்கூடும்.

அழிக்க முடியா பக்கங்கள்

azhikka_3144325a.jpg

மாணவர் பிரிவு, விஜயவாடாவைச் சேர்ந்த ஷ்ரவ்யா காக்

வாசிப்பு, தேடலை வெளிப்படுத்தும் புத்திசாலித்தனமான சுய உருவப்படம் இது. நியூயார்க்கில் உள்ள ஸ்டிராண்ட் புத்தகக் கடையின் மாடத்தில் எடுக்கப்பட்ட படத்துடன் மற்ற அம்சங்கள் தனியாக எடுக்கப்பட்டு சர்ரியலிச காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் தற்போது காட்சிக் கலைகள் படித்து வரும் ஷ்ரவ்யா வீடு, அடையாளம், தனி வெளி ஆகியவற்றை ஆவணப்படுத்த விரும்புகிறார்.

இந்தியாவில் இனவெறி

inaveri_3144323a.jpg

உருவப்படம் - தொழில்முறைப் பிரிவு, பெங்களூருவைச் சேர்ந்த மகேஷ் சாந்தாராம்

மேற்கத்திய நாடுகள் நம் மீது இனவெறி தாக்குதலைத் தொடுப்பது மீண்டும் மீண்டும் கவனம் பெற்றுவரும் அதே நேரம், இந்தியாவில் நிலவும் இனவெறி அதிகம் கவனம் பெறுவதில்லை. மகேஷ் சாந்தாராமின் இந்த ஒளிப்படங்கள் இந்தியாவில் ஆப்ரிக்கர்கள் சந்திக்கும் நெருக்கடிகளைக் கலாபூர்வமாகப் பதிவு செய்துள்ளன.

இலையுதிர்காலப் பதிவுகள்

payanam_3144322a.jpg

பயணம் - திறந்தநிலைப் பிரிவு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்வப்னில் தேஷ்பாண்டே

சட்டென்று பார்க்கும்போது, இந்தப் படத்தில் இருப்பது என்னவென்று புரியாதது போலத் தோன்றும். ஐஸ்லாந்தில் உள்ள மேற்கு ஃபியார்ட்ஸ் பகுதியில் உள்ள கல்டாலன் பனிப்பாறைச் சமவெளியில் உள்ள அழகான சிற்றருவிகளின் அற்புதக் காட்சி. இலையுதிர் கால வண்ணங்களும் சூரிய அஸ்தமனம் கசியவிடும் ஒளிச் சிதறலும் இணைந்து இந்த நிலக்காட்சியின் தனித்தன்மைக்குக் கூடுதல் அழகைச் சேர்ந்துள்ளன.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மார்ச் 20
 
 

article_1426825307-japanmap.jpg1602: டச்சு கிழக்கிந்திய கம்பனி உருவாக்கப்பட்டது.

1760: அமெரிக்காவின் மசாசூட்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட தீயினால் 349 கட்டிடங்கள் அழிந்தன.

1815: எல்பா தீவிலிருந்து தப்பி பிரான்ஸுக்கு மீண்டும் வந்த நெப்போலியன் மீண்டும் தனது '100 நாள் ஆட்சியை' ஆரம்பித்தான்.

1861: பாரிய பூகம்பமொன்றினால் ஆர்ஜென்டீனாவின் மென்டோஸா நகரம் முற்றாக அழிந்தது.

1914: உலகின் முதலாவது சர்வதேச பிகர் ஸ்கேட்டிங் சம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் ஆரம்பமானது.

1916: அல்பர்ட் ஐன்ஸ்டைன், புகழ்பெற்ற சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார்.

1952: ஜப்பானுடனான சமாதான ஒப்பந்தத்தைஅமெரிக்க செனட் சபை அங்கீகரித்தது.

1956:பிரான்ஸிடமிருந்து டியூனிசியா சுதந்திரம்  பெற்றது.1990: பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி பேர்டினன்ட் மார்கோஸுக்கு எதிராக ஊழல் வழக்கு விசாரணை ஆரம்பமாகியது.

1974: இலண்டன், பக்கிங்ஹாம் அரண்மனையின் வெளியே ஆன் இளவரசி, அவரது கணவர் கப்டன் மார்க் பிலிப்ஸ் ஆகியோரைக் கடத்த எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

1988: எரித்திரியாவில், எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் அஃபபெட் நகரைக் கைப்பற்றினர்.

1995: டோக்கியோவில் சுரங்கப்பாதை ஒன்றில் நச்சு வாயுத் தாக்குதல்: 12 பேர் கொல்லப்பட்டு 1,300 பேர் காயமடைந்தனர்.

2003: அமெரிக்கா மற்றும் ஏனைய 3 நாடுகளின் படைகள் ஈராக் மீது தாக்குதலை ஆரம்பித்தன.

2005: ஜப்பானில் புகுவோகா நகரில் ஏற்பட்ட 6.6 ரிச்சடர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. 100 வருடகாலத்தில் ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பமாக அப்போது அது விளங்கியது.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்.. அசால்ட் காட்டலாம் ஃப்ரெண்ட்ஸ்! #MondayMotivation

தினசரி பிரச்னைகளையும் சரி, நிரந்தரப் பிரச்னைகளையும் சரி, ஐந்து விஷயங்களைக் கையாண்டால் அசால்டாகக் கடந்துவிடலாம் என்கின்றனர் அறிஞர்கள். எழுதவோ, படிக்கவோ ஈஸியாகத் தோன்றுகிற விஷயங்கள்தாம். ஆனால், பின்பற்றத்தான் கடினமாக இருக்கும். ஆனால் பின்பற்றிவிட்டால், ‘நான் ராஜா.. நான் ராஜா!’ (இல்லன்னா.. ராணி) என்று பாட்டுப் பாடிக்கொள்ளலாம்.  படித்து முடித்ததுமே இந்த ஐந்து பாய்ண்ட்ஸையும் நீங்கள் உங்கள் மேஜையில் எடுத்து ஒட்டிவைத்துக் கொள்ளப்போகிறீர்கள் என்பது உறுதி!

1. பழையன கழி

பழைய விஷயங்களை மனதில் இருத்திக் கொண்டு இருப்பதே பெரும்பாலான பிரச்னைகளில் இருந்து நம்மை வெளிக்கொண்டு வராமல் சுழலவைக்கிறது. ’அன்னைக்கு அவன் அப்டிச் சொன்னானே’வில் ஆரம்பித்து ‘மேனேஜர் திட்டுவாரே.. போன வாட்டியும் அப்படித்தான்’,   ‘அவளை மறக்க முடியலடா’ என்று நட்பு, அலுவல், பெர்சனல் என்று எல்லா இடங்களிலும் பழையதை  மனதில் வைத்துக்கொண்டு கையாண்டால்... சிக்கலை அவிழ்க்கவே முடியாது ஃப்ரெண்ட்ஸ். தூக்கித்  தூரப்போடுங்க!
 
2. உங்களை நீங்களே குறைச்சுக்காதீங்க

மனம் கலக்கமாக  இருக்கும்போது நம்மைப் பத்தி நாமே கழிவிரக்கமாக சிந்திப்பது பலரின் இயல்பு. ‘எனக்கு ஏன் இப்டி ஆச்சு. நான் இதை எப்படிக் கடந்து போவேன்’  என்று ஆரம்பித்து நம்மைத் தாழ்த்திக்கொள்வது மிகவும் தவறு. அப்படி ஒரு மனநிலைக்கு நாம் தள்ளப்பட்டால், பிறகு அந்தப் பிரச்னையைக் கையாள்வதிலும் சிக்கல் வரும். ‘இதெல்லாம் பார்த்துக்கலாம்பா’ என்ற ஒரு திடமான மனநிலையில் இருங்கள்.

3. எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது

ஒரு பெரிய அண்டர்லைன் செய்துகொள்ளுங்கள் இந்த வாக்கியத்திற்கு. ஒரு விஷயத்தில் முடிவெடுக்க, கடந்து போக  நாம் காலம் தள்ளுவதும் தயங்குவதும் இந்த ஒரு காரணத்தால்தான். பலவாறாக சிந்தித்து ‘அவன் என்ன சொல்லுவான்.. இவன் என்ன சொல்லுவான்’ என்று நினைப்போம். ஒரு கல்யாணத்துக்கு கார்ட் தேர்வு செய்வதில் இருந்து, பெரிய ஒரு ப்ராஜெக்டை ஒப்புக்கொண்டு கையெழுத்து போடுவதுவரை இந்தச் சிக்கல் இருக்கும்.  எப்போதும் இந்த 3வது பாய்ண்டை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

monday motivation

4. மாற்றத்திற்கு பயப்படுதல்  

சில பிரச்னைகள், சூழ்நிலைகளின்போது, அதற்குப் பிறகான மாற்றத்திற்கு நம் மனம் தயாராகாது. உதாரணமாக, சிலருக்கு அவர்கள் வேலை செய்யும் அலுவலகம் குறித்த குறைகள் இருக்கும். பிடிக்காது. ஆனாலும் திட்டிக்கொண்டே அங்கேயேதான் வேலை செய்வார்கள். ஏனென்றால், புதிய இடம், புதிய சூழலுக்கு பயம்.  “ஒரு 5000 ரூபாய் ஜாஸ்தி கிடைக்கும்தான். ஆனாலும் இந்த ஆஃபீஸை விட்டுப் போக மனசில்லை” என்பார்கள். ஆனால் புதிய மாற்றத்திற்கு பயப்படாமல் துணிந்து அடி எடுத்து வைத்த பலரும் வெற்றியை மட்டுமே எட்டியிருக்கிறார்கள்.  

 5. அளவுக்கதிகமாக சிந்தித்தல்

இது மிகவும் ஆபத்தானது.  ஆனால் இதைச் செய்கிறோம் என்று நமக்கே தெரிவதில்லை என்பதுதான் உண்மை. ஒரு விஷயத்தைப் பற்றி நினைத்துக்கொண்டே இருப்பது. இதனால் சாதக பாதகங்களைக் குறித்த அச்சமே அதிகமாகும். ஒருமுறைக்கு இருமுறை.. ஏன் நான்கைந்து முறைகூட அலசுங்கள். ஆனால் நாள் முழுவதும் அதையே நினைத்துக்கொண்டிருப்பது இடியாப்பச் சிக்கலைத்தான் தரும். 

இவற்றையெல்லாம் பின்பற்றிப் பாருங்கள்.  ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றுவது பிறகு சுலபமாகும். சுலபமானால், அது பழக்கமாக மாறும்.  எந்தச் சிக்கலையும் எளிதில் கையாளப்பழகுவீர்கள். பிறகு வெற்றிகள் வசமாகும்! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கொசுக்களை ஒழிக்கும் சிட்டுக்குருவி... அவற்றை அழித்தது யார்? #WorldSparrowDay

சிட்டுக்குருவி

‘‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா.. அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதம்மா...’’ என்ற பாடல் கேட்கும் போதெல்லாம் நினைவின் இடுக்கில் இருந்து பட்டெனப் பறக்கும் ஒரு சிட்டுக்குருவி. மனிதர்களோடு மனிதர்களாக கலந்து வாழ்ந்த இந்தச் சின்னஞ்சிறிய உயிர் அழிவின் விளிம்பில் இருக்கிறது. உயிர்பன்மயத்தை உயிர்ப்போடு வைத்திருக்க உயிர்ச்சங்கிலி எத்தனை முக்கியமானது என்பது நமக்குத் தெரியும். ஆனால், மனிதனின் ஒவ்வொரு செயலும் அந்தச் சங்கிலியின் கண்ணிகளைக் காவு வாங்கிக்கொண்டே இருக்கிறது. விளைவு, புவிவெப்பம், நோய்களின் பெருக்கம், சூழல்கேடு, ஆரோக்கியக்கேடு என நமது செயலுக்கான பலன் பலவழிகளில் திரும்ப வந்து துவைத்தெடுக்கிறது. 

கூரைகள், வீடுகளின் முற்றங்கள், இடுக்குகளில் தனக்கான கூடுகளைத் தானே வடிவமைத்துக்கொண்டு காலையில், ‘க்வீச்...க்வீச்..’எனக் குட்டிக் குயிலாகத் துயிலெழுப்பும் சிட்டுக்குருவிகள் சத்தம் இன்றைக்குக் கேட்பது அரிதாகிவிட்டது. கிராமங்களிலேயே இந்த சத்தம் அரிதானபோது நகரங்களில் கேட்கவே வேண்டாம். உயிர்பன்மயத்தில் உடைந்துபோன கண்ணிகளை ஒட்ட வைக்கும் முயற்சியில் உலகம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒருகட்டமாக சிட்டுக்குருவி பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2010-ம் ஆண்டு முதல் இது கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக டெல்லி அரசு இதை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளது.

தென்னைஓலையின் நார் கிழித்து, சின்னஞ்சிறிய அலகால், கூடுகளைப் பின்னும் அழகே அலாதியானது. சிட்டுக்குருவியில் ஒருவகையான தேன்சிட்டு, சோளம், கம்பு ஆகிய தானியப் பயிர்களின் ஒற்றைத் தட்டையில் கூடுகட்டி வசிக்கும். தானியங்கள், சிறிய பூச்சி இனங்கள், சில தாவரங்களின் பூக்கள்தான் சிட்டுக்குருவிகளின் உணவு. சிட்டுகளின் அழிவால், பயிர்களின் மகரந்தச்சேர்க்கை பாதிக்கப்பட்டு, மகசூலும் குறைந்து வருகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள். அடைக்கலக்குருவி, ஊர்க்குருவி எனப் பலபெயர்களில் அழைக்கப்படும் சிட்டுக்குருவிகள், காகத்திற்கு அடுத்து மனிதர்களுடன் நெருக்கமாக வாழும் பறவை. இவை அழிய, செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு, குருவிகளின் கருவை சிதைக்கிறது எனச் சொல்லப்பட்டாலும் அவை, இன்னமும் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால், செல்போன் டவர்கள் வருவதற்கு முன்பாகவே குருவிகளை விரட்டிவிட்டன நமது செயல்கள்.

சிட்டுக்குருவி

வெளிக்காற்று உள்ளே வராமல் குளிரூட்டப்பட்ட வீடுகள், நெருக்கமான வீடுகள், முற்றம் இல்லாமல் முழுவதுமாக மூடிய வீடுகள், மரங்கள் இல்லாதது போன்ற காரணங்களால்தான் சிட்டுகள் நகரங்களில் இருந்து நகர்ந்துவிட்டன. எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் ‘மெத்தைல் நைட்ரேட்’ காற்றில் கலந்து வளிமண்டலங்களை மாசுபடுத்துகின்றன. இதனால், சிட்டுக்குருவிகளுக்கு உணவாகும் சில பூச்சி இனங்கள் அழிந்துபோகின்றன. இதனால் ஏற்படும் உணவுப்பற்றாக்குறை சிட்டுக்குருவையை நகரங்களை விட்டு விரட்டிவிட்டது. பலசரக்குக் கடைகளில் சிந்திச்சிதறும் தானியங்களை உண்டுவந்தன. பல்பொருள் அங்காடிகள் வந்த பிறகு அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. நகரங்களில் இருப்பதைப் போலவே கிராமப்பகுதிகளிலும் வாழவழியில்லை. கிராமப்பகுதிகளிலும், பயிர்களில் தெளிக்கும் ரசாயனங்கள், குறைந்துப்போன சிறுதானிய சாகுபடி ஆகியவை இந்த இனம் அழிய காரணமாகிவிட்டது. வேறு என்னதான் செய்யும் அந்தச் சின்னஞ்சிறிய உயிரினம்? வாழ்தலுக்காக உணவு கிடைக்கும் பகுதியை நோக்கி நகர்ந்துவிட்டன. கொசுக்களின் முட்டை சிட்டுக்குருவிகளின் விருப்ப உணவு. குருவிகள் இல்லாததால், கொசுக்கள் கொட்டமடிக்கின்றன..நோய்கள் நம்மை வட்டமடிக்கின்றன. 

‘எத்தனை அடிச்சாலும் தாங்குறான்டா’ என வடிவேல் காமெடிபோல, இத்தனை இன்னல்களுக்கும் இடையில் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன சிட்டுக்குருவிகள். அவற்றைக் காக்க வேண்டிய நமது சமூகக் கடமை. முதலில் நமது குழந்தைகளுக்குக் குருவிகளை அறிமுகம் செய்து வையுங்கள். கடிகாரத்திலேயே குருவியின் ஓசையை மணிக்கொரு முறை கேட்டுக்கொண்டிருந்தது நம்மோடு போகட்டும். நம் குழந்தைகளாவது, சிட்டுகளின் சிம்பொனியைக் கேட்கட்டும். இதற்காக நாம் அதிகம் மெனக்கெடவேண்டாம். வாய்ப்பிருப்பவர்கள், வீடுகளில் சிட்டுக்குருவி தங்குவதற்கான வசதியை ஏற்படுத்திக்கொடுங்கள், வீட்டு மொட்டைமாடி, பால்கனி போன்ற இடங்களில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், கொஞ்சம் சிறுதானியங்களையும் வைத்தால் போதும் ஓடோடி வந்து உக்கார்ந்துவிடும் சிட்டுக்குருவி. பழைய பானைகள், அட்டைப்பெட்டிகள் என ஏதாவது ஒன்றில் சிறிது வைக்கோல் நிரப்பி ஒருமூலையில் வைத்து விட்டால், குருவிகள் அதில் குடியேறிவிடும். தற்போது கடைகளில் சிட்டுக்குருவிகளுக்கான கூடுகள் கிடைக்கின்றன. நாம் மனது வைத்தால் நகரங்களிலும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகமாக்கலாம். அதற்குத் தேவை சிறிது தானியம், சிறிது தண்ணீர், பெரிய மனது.. இவை அனைத்தும் நம்மிடம் இருக்கின்றனதானே..!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வால்டர் மாரீஸ் எல்சஸர்

 
 
tuy_3145405f.jpg
 
 
 

ஜெர்மனி ஆராய்ச்சியாளர்

அறிவியலின் பல்வேறு களங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய ஜெர்மனி ஆராய்ச்சியாளர் வால்டர் மாரீஸ் எல்சஸர் (Walter Maurice Elsasser) பிறந்த தினம் இன்று (மார்ச் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜெர்மனியின் மேன்ஹைம் நகரில் யூதக் குடும்பத்தில் (1904) பிறந்தார். தந்தை வழக்கறிஞர். அவர் வாங்கித் தந்த அறிவியல் இதழ்கள், ஆராய்ச்சி நூல்களை ஆர்வத்தோடு படித்தார். 13 வயதிலேயே அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

* தந்தையின் நூலகத்தில் இருந்த தத்துவம், வரலாறு, பிரபஞ்சம், கோள்கள், உயிரியல் என அனைத்து நூல்களையும் படித்தார். கணிதத்திலும் சிறந்த மாணவராக விளங்கினார். கணித ஆசிரியர் மற்றும் தாத்தாவின் வழிகாட்டுதலால் அறிவியலில் கவனம் செலுத்தினார். அணுக்களும் மூலக்கூறுகளும் இவரை அதிகம் வசீகரித்தன.

* கல்லூரியில் பயின்றபோது, பாறைகளில் காணப்படும் தாதுக்களின் காந்த திசை குறித்து ஆராய்ந்து, பூமியின் காந்தப்புலம் குறித்த வரலாற்றை வெளியிட்டார். 1927-ல் வானியல், கணிதம் பயின்று கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். எலெக்ட்ரான்களின் அலை அம்சம் குறித்து ஆராய்ந்து, ஆய்வுக் கட்டுரை வெளியிட்டார்.

* இதையடுத்து, அக்கல்லூரியின் பழைய மாணவரும் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளருமான மாக்ஸ் போர்ன் இவரை இங்கிலாந்துக்கு அழைத்தார். சிலகாலம் அவருடன் இணைந்து பணிபுரிந்தார். பாரீஸில் ஆசிரியராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததால், 1935-ல் அங்கு சென்றார். பின்னர், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார்.

* கல்லூரியில் படித்த காலத்தில், பல இடங்களில் யூத எதிர்ப்பை எதிர்கொண்டார். யூத எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டிருந்த பேராசிரியர்கள், விஞ்ஞானிகளிடம் இணைந்து பணியாற்ற முடியாமல் தனது களங்களை மாற்றிக்கொண்டார்.

* கனரக கதிரியக்க உட்கரு பிளவுகளில் புரோட்டான், நியூட்ரான்களின் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கணக்கிட்டுக் கூறினார். 1940-ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். அசாதாரண அறிவாற்றல் கொண்டிருந்த இவர், இயற்பியல், கடலியல், புவியியல், திரவ இயக்கவியல், நடைமுறை கணிதம் எனஅனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.

* அமெரிக்க ராணுவத்துக்கு அறிவியல் தொடர்பான சேவைகளை வழங்கி வந்தார். புவியின் காந்தப்புலத்தை விளக்கி கட்டுரை வெளியிட்டார். இவரது ஆராய்ச்சிகளின் அடிப்படையில், புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பலரும் நோபல் பரிசு பெற்றனர்.

* பூமியின் காந்த சக்தியை விளக்கிய இயக்கவியல் கொள்கையின் தந்தை என இவர் போற்றப்படுகிறார். இயற்பியலில் உள்ளடங்காத இயற்கையின் விதி குறித்த விஷயங்களுக்காக ‘பயோடோனிக் லா’ என்ற புதிய சொல்லைப் பயன்படுத்தினார்.

* பல்வேறு துறைகளில் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். ‘சிஸ்டம் பயாலஜி’ தொடர்பாக பல கட்டுரைகளை எழுதினார். அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வில்லியம் போவி பதக்கம், ஜான் ஆடம் ஃபிளெமிங் பதக்கம், தேசிய அறிவியல் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்கள், பரிசுகளைப் பெற்றுள்ளார்.

* குவான்டம் மெக்கானிக்ஸ், வளிமண்டல கதிரியக்கப் பரிமாற்றம், கிரகங்களின் காந்த சக்தி, புவித் தட்டுகள் உள்ளிட்ட துறைகளில் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளார். புவியின் காந்த சக்தி, இயற்பியல், வானியல், புவியீர்ப்பு விசை உள்ளிட்ட களங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல அடிப்படைக் கோட்பாடுகளை வகுத்துத் தந்த வால்டர் மாரீஸ் எல்சஸர் 87-வது வயதில் (1991) மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, steht, Text und Innenbereich

ஹிந்தி நடிகை, தமிழிலும் 'தாம் தூம்' திரைப்படத்தில் நடித்த கங்கனா ரணவாத்தின் பிறந்ததினம்.
Happy Birthday Kangana Ranaut

 

Bild könnte enthalten: 3 Personen, Text

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பாலின் பிறந்தநாள்
Happy Birthday Tamim Iqbal
பங்களாதேஷின் நேற்றைய சரித்திரபூர்வ வெற்றியின் கதாநாயகன் இவரே.

 

Bild könnte enthalten: 5 Personen, Personen, die lachen, Text

நடிகை ரிச்சா கங்கோபத்யாயின் பிறந்தநாள்.
ஒஸ்தி, மயக்கம் என்ன புகழ் நடிகை..
Happy Birthday Richa Gangopadhyay

 

  • தொடங்கியவர்

ஐபோனின் செல்லக்குரலுக்கு சொந்தக்காரர் இவர் தான்..! #VoiceofSIRI

VoiceofSIRI

"இன்றைய நாள் எப்படி இருக்கிறது", "நான் இருக்கும் இடத்துக்கு அருகில் காஃபி ஷாப் எங்கு உள்ளது", "இன்னிக்கு மழை பெய்யுமா?" அப்படினு ஒருத்தர்கிட்ட நொய்நொய்னு கேள்வி கேட்டுட்டே இருந்தா கடுப்பா இருக்கும்ல. ஆனா என்னதான் கோக்குமாக்கா கேள்வி கேட்டாலும் சளைக்காம பதில் சொல்றதுக்கு ஒரு ஆள் இருக்குனா அது ஐபோன் பர்சனல் வாய்ஸ் அசிஸ்டெண்ட் சிரி தான். அமெரிக்க அதிபர் யாருங்கறதுல ஆரம்பிச்சு பக்கத்து தெரு கவுன்சிலர் வரைக்கும் எல்லாமே சிரிக்கு தெரியும். இது வழக்கமா இருக்கறது தானே இதுல என்ன புதுசுன்னு கேக்குறீங்களா? இந்த வாய்ஸ் யாரோடது(VoiceofSIRI). இத எப்படி பதிவு பண்ணாங்கங்கறது தான் சுவாரஸ்யமான விஷயம்.

 2011ம் ஆண்டு தான் ஐபோன்களில் சிரி அறிமுகமானது. அதற்கான வாய்ஸ்  சுசான் பென்னட் எனும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்டுடையது தான். இதில் ஹைலைட் என்னவென்றால் சுசான் ஐபோன் சிரிக்காக தான் தனது குரலை பதிவு செய்தார் என்பது அவருக்கே தெரியாதாம். 

2005ம் ஆண்டு பாடகியாக விளம்பரங்களுக்கு ஜிங்கில்கள் பாடும் வேலையை செய்து வந்து சுசான். அவர் பணியாற்றிய ஸ்டுடியோவில் ஒருநாள் சுசான் உங்கள் குரல் தொனி பாடல்களுக்கு ஏற்றதாக இல்லை. சில வாசகங்களை படித்து பதிவு செய்யும் வேலை இருக்கிறது பார்க்கிறீர்களா என கேட்க சுசானும் சம்மதித்திருக்கிறார். 

VoiceofSIRI

ஒரு மாதம் முழுவதும், தினமும் 4 மணி நேரத்துக்கும் மேலாக ரெக்கார்டிங் நடந்துள்ளது. அதில் வாக்கியங்களும், அதனை தனித்தனி உச்சரிப்புகளாகவும் பிரித்து பதிவு செய்துள்ளனர். ஆரம்பத்தில் சுசான் ”என்ன இது... இப்படி ஒரு ரெக்கார்டிங்... இதனை வைத்து என்ன செய்யப்போகிறார்கள்” என்று நினைத்திருக்கிறார். பின்னர் சூசானுக்கு இந்த விஷயம் பிடித்து போக பணம் எடுக்கும் ஏடிஎம் மிஷின்களுக்கான குரல், வங்கி பரிவர்த்தனைகளுக்கான குரல் என கணினி தானியங்கிகளுக்கான குரலை பதிவு செய்து வந்துள்ளார்.

2011ம் ஆண்டில் ஐபோனில் சிரி அமைப்பு உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. ஆனால் சுசானுக்கு அதில் இருப்பது அவரது குரல் தான் என்பது தெரியாது. காரணம் அவர் ஐபோன் யூஸர் இல்லை. ஒருநாள் சுசான் பென்னட்டின் சக வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் போன் செய்து ஐபோனில் வருவது உன் குரலா என கேட்க, பின்பு விசாரித்ததில் ஆம் அது சிரிக்காக பதிவு செய்யப்பட்ட குரல் தான். அதனை ஒரு ஸ்டுடியோவிடம் கொடுத்து செய்ய சொல்லியிருக்கிறார்கள். அந்த தேர்வில் சுசானின் குரல் ஆப்பிளுக்கு பிடித்து போனதால் சிரி அமைப்பை இவரது குரலிலேயே உருவாக்கியுள்ளனர். 

”இது ஒரு தற்செயலாக நடந்த சம்பவம். ஆனால் மிகப்பெரிய அங்கீகாரம். என்னிடம் ஐபோன் இல்லை. ஆனால் என் கணவரிடம் உள்ள ஐபோனில் கேட்டிருக்கிறேன். என் குரல் எனக்கே பதில் சொல்லும் போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன்”  என்கிறார் சூசான். தற்போது ஐஓஎஸ் 7வது வெர்ஷனில் சிரி குரல்கள் மேம்படுத்தப்பட்டு விட்டன. ஆனாலும் எனக்கு சிரி தந்த இந்த வாய்ப்பு பெருமையாக இருக்கிறது.அதனை தொடர்ந்து செய்து வருவேன் என்று கூறி சிலாகிக்கிறார் சுசான் பென்னட்.

 

 

ஸ்டீவ் ஜாப்ஸ் புதுமைகளுக்கான ஒரு நபர் என்பதை இந்த சம்பவம் ஆணித்தரமாக காட்டுகிறது. 2005லேயே 2011க்கான வேலையை துவங்கி இன்று எல்லாரையும் அப்டேட்டாக வைத்திருப்பதற்கான விதையை விதைத்திருக்கிறார். ஐபோனின் செல்லக்குரலுக்கான தேடலில் ஹிட் அடித்த சுசான் பென்னட் தான் முதல் சிரி வாய்ஸுக்கு சொந்தக்காரர். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

புகையில்லை, மாசு கிடையாது: பேட்டரியால் இயங்கக்கூடிய பறக்கும் கார் அறிமுகம் (Video)

 

 

புகையில்லை, மாசு கிடையாது: பேட்டரியால் இயங்கக்கூடிய பறக்கும் கார் அறிமுகம் (Video)
 

சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் இடம்பெற்ற ‘பொப் அப் சிஸ்டம்’ (Pop. Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் காரின் வடிவமைப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

சிறிய ரக காராக தோற்றமளிக்கும் இந்த ‘பொப் அப் சிஸ்டம்’ சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத முறையில் பேட்டரியால் இயங்கக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கார் ஓசையோ, புகையோ இல்லாமல் சாலையில் எழிலாக வழுக்கிச் செல்கிறது.

சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையிலும், செல்ல வேண்டிய தூரத்தை மிக வேகமாகக் கடந்து செல்ல வேண்டும் என்று கருதும் நேரத்திலும், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் இந்த காரை குட்டி விமானமாக மாற்றி, பறந்து செல்லலாம்.

வானத்தின் வழியாக பறந்து செல்ல சுலபமான பாதை எது என்பதை இந்த காரில் உள்ள கம்ப்யூட்டரே தீர்மானித்துக்கொள்ளும்.

இதற்காக, வானத்தில் வட்டமடித்தபடி வரும் ஆளில்லா விமானம் சாலையில் நிற்கும் ‘பொப் அப் சிஸ்டம்’ காரின் மேல் அமர்ந்துகொள்ளும்.

இந்த காரின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் சாலையில் சுமார் 60 கிலோமீட்டர் தூரம் வரை தொடர்ந்து செல்ல முடியும் என்பது மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.

காரின் உடல் பகுதியை சக்கரங்களில் இருந்து தனியாக பிரித்தெடுத்து பறந்து செல்ல முடியும் என இந்த பறக்கும் கார்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில் கூட்டாக ஈடுபட்டுவரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எயார்பஸ் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த இட்டால்டிசைன் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த பொறியியலாளர்கள் கருதுகின்றனர்.

2030 ஆம் ஆண்டளவில் உலகம் முழுவதும் ஏற்படவுள்ள வாகனப்பெருக்கம் காற்று மாசுபாடு ஆகியவற்றை கருத்திற்கொண்டு இத்தகையை கார்களை விரைவில் உருவாக்கும் முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் படுவேகமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

மறைந்து வரும் பறவை இனங்களில் ஒன்றான சிட்டுக்குருவி பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தது. உருவத்தில் சிறிய அளவில் இருப்பதால் இதற்கு சிட்டுக் குருவி என்றும், வீட்டுக்குருவி, அடைக்கலக் குருவி, ஊர்க் குருவி என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் 1314 வகை பறவை இனங்களில் சிட்டுக்குருவியும் அடங்கும். அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20-ஆம் தேதி உலகச் சிட்டுக் குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

sparrow-bird-1

sparrow-bird-3

 

sparrow-bird-5

sparrow-bird-8

 

sparrow-bird-10

sparrow-bird-12

 

sparrow-bird-13

sparrow-bird-15

 

  • தொடங்கியவர்

ஹெலிகாப்டர் மாப்பிள்ளை வந்துட்டாருடோய்! - இது ஹெலிகாப்டர் ட்ரெண்ட்

ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்த 'இகோர் சிகோர்ஸ்கி', 'பவுல் கோர்னு' ஆகியோருக்குக் கூடத் தெரியாது 'ஹெலிகாப்டர்' என்கிற வார்த்தை இந்தளவு ட்ரெண்ட் ஆகும் என... இது ஹெலிகாப்டர் ட்ரெண்ட்!

ஹெலிகாப்டர் தோனி :

ஹெலிகாப்டர்

'ஹெலிகாப்டர்'னு சொன்னதும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் 'எம்.எஸ்.தோனி'யும் அவர் அடிக்கிற அந்த 'ஹெலிகாப்டர்' ஷாட்டும்தான் ஞாபகத்துக்கு வரும். ஏன்னா அவர் அடிக்கிற அந்த ஷாட்தான் அவரோட 'ட்ரேட்மார்க் ஷாட்'னு கூடச் சொல்லலாம். அந்த வார்த்தைக்கு அவ்வளவு மாஸ். பவுலர்கள் பவுலிங் பண்ணும்போது யார்க்கர் பந்து போட்டால் போதும்... ரசிகர்கள் தாங்கள் உட்கார்ந்திருக்கும் சீட்டிலிருந்து ஒரு இன்ச் நகர்ந்து வந்து ஆவலாக எதிர்பார்க்கும் ஒரே ஷாட் ஹெலிகாப்டர் ஷாட் தான். இவரும் ரசிகர்களை ஏமாற்றாமல் பேட்டை இறுக்கிப் பிடிச்சு முறுக்கி அடிப்பார் அவரது ஸ்டைலில். அதுக்கு ஃபாரின்லகூட ஏராளமான ஃபேன் பேஸ் இருக்குன்னா பார்த்துக்கோங்க. அவர் நீளமாக முடி வைத்த காலத்திலிருந்து இப்போ அட்டாக் கட் போட்ட காலம் வரைக்கும் ஒவ்வொரு மேட்ச்லேயும் ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாக அந்த ஹெலிகாப்டர் ஷாட் கண்டிப்பாக இருக்கும். 

ஹெலிகாப்டர் விஜய் :

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டருக்குப் பேர் போன ஆளாக 'எம்.எஸ். தோனி' இருந்தார். அதெப்படி? அவர் மட்டும் இருக்கலாம்னு பதினாறாவது நாள் வந்தாரு 'இளையதளபதி விஜய்'. அவரு நடிச்ச 'பைரவா' படத்தில் ஃபைட் சீன் ஒண்ணு வரும். வாங்கிய கடனைக் கட்டாமல் விஜய் வேலை பாக்குற பேங்க் மேனேஜருக்கு மிகப்பெரிய ரவுடி டிமிக்கி கொடுத்துக்கிட்டு இருப்பார். வழக்கம் போல் பன்ச் பேசி தீம் மியூசிக்கைப் போட்டு அந்த ரவுடி இடத்திற்கே போயிடுவார் விஜய். அந்த ரவுடியோ வாங்கிய பணத்தை திருப்பித் தரவேண்டுமானால் கிரிக்கெட் விளையாடிதான் அதை வசூலிக்க வேண்டும் என்று சொல்லிவிட விளையாடத் தயார் ஆவார் விஜய். ஒவ்வொரு பந்துக்கும் 'கோலி', 'சேவாக்', 'சச்சின்' மாதிரி பந்தை மட்டும் அடிக்காமல் சுற்றி இருக்கும் ஆட்களின் மண்டையையும் அடித்து உடைத்து விளையாடுவார். கடைசியில் வருகிறார்... 'எம்.எஸ்.தோனி' அவரைப் போலவே ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மெயின் வில்லனைப் பறக்கவிடுவார். அவர் அடித்த அந்த 'ஹெலிகாப்டர்' ஷாட் ட்ரெய்லரில் வந்ததையடுத்து சமூக வலைதளங்களில் அப்போதைய வைரல் கன்டென்ட்டே அதுதான் பாஸ். 

ஹெலிகாப்டர் கேர்ள்ஸ் :

30_17149.jpg

ஹெலிகாப்டர்னு பெயரைச் சொன்னவுடன் இளையதளபதி ஃபேன்ஸ் முதல் எம்.எஸ்.தோனி ஃபேன்ஸ் வரை குஷியான ஆட்கள் இப்போ இந்தப் பெயரைக் கேட்டவுடன் தெறிச்சு ஓடுறாங்களாம். மாப்பிள்ளை பொண்ணு வீட்ல வரதட்சணை கேட்குற காலம் போயி இப்போ பொண்ணுங்களே அவங்க வீட்ல வரதட்சணை கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. இதெல்லாம் இருந்தால் தான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்குவேன் இல்லைன்னா எனக்குக் கல்யாணமே வேணாம்னு குண்டைத் தூக்கி போடுறாங்க. அது சரி பொண்ணு ஆசைப்படுதுனு கஷ்டப்பட்டு கடன் வாங்கி நகை, வீடு, இடம்னு கேட்குறதெல்லாம் வாங்கித் தர்றோம்னு சொன்னாலும்... அவங்க மாபெரும் ட்விஸ்ட் வெக்கிறாங்க. அதைக் கேட்கும்போது பொண்ணு வீட்டோட சேர்த்துப் பசங்களுக்கும் ஹார்ட் அட்டாக்தான் பாஸ் வருது. பையன் மணமேடைக்கு வரும்போது ஆடி, பென்ஸ், பி.எம்.டபிள்.யூ போன்ற கார்களில் வருவதைத் தாண்டி மாப்பிள்ளை சொம்பு கொடுத்தால்தான் தாலி கட்டுவார்ங்கிற மாதிரி மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வந்தால்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு புல்டோஸரை விட்டு ஏத்துறாங்க. ஒரு சொம்பு கேட்டதுக்கு ஹெலிகாப்டரா? இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்றது? காலக் கொடுமை கதிரவா! பின்னே... ஹெலிகாப்டர்னா பதறுமா இல்லையா..?

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

112p1.jpg

www.facebook.com/nchokkan: கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால் இயல்பாகப் பார்க்கிறார்கள். ஒரு கொய்யாக்காய் வைத்திருந்தால் விநோதமாகப் பார்க்கிறார்கள். #ஐடி பூங்காக்கள்.

twitter.com/iindra: இந்த உலகம் இருக்கே அது ரொம்பச் சின்னது. எவ்ளோ சின்னதுன்னா, போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டாலே காணாமப்போற அளவுக்கு.

twitter.com/paramporul: ஒரு மணி நேரமா கேத்திக்குச் சாப்பாடு ஊட்டினேன். அப்பெல்லாம் வர்ல. டேஸ்ட் பாப்போம்னு ஒரு ஸ்பூன் சாப்பிடப்போனேன், `உங்களை, புள்ளைக்குத்தானே ஊட்டச் சொன்னேன்.'

112p2.jpg

twitter.com/sheeba_v: நீங்க சம்பாதிக்கிறதுல முதல் 5,000 ரூபாய்  sbi-க்குச் சொந்தமானது ~ மோடி

twitter.com/umakrishh: ஒருவழியாக கௌரவக்கொலை என்பது மாறி, ஆணவக்கொலை என மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இதை முன்னெடுத்துச் சென்ற சமூக தளங்களின் சிறு வெற்றி.

twitter.com/ZhaGoD: ஒப்பீட்டளவுல தமிழ்நாட்டோட வளர்ச்சிங்கிறது எல்லாம், நிலத்த வித்து சிலுக்கு ஜிப்பா வாங்கிப் போட்டுட்டுச் சுத்துற கதைதான்.

twitter.com/manipm: வசதியான வீட்டுத் திருமணங்களுக்கு மாருதி காரில் செல்லக்கூட, ஒரு மனோதைரியம் தேவையாக இருக்கிறது.

112p3.jpg

twitter.com/Mydeenn: பாதி ஆண்களுக்கு, தட்டுல எவ்ளோ சாப்பாடு போட்டுக்கிட்டா மிச்சம் இல்லாமச் சாப்பிடுவோம்னே தெரியாது :-)))

twitter.com/saravananucfc: சிறப்பா பண்ற எல்லா கல்யாண ரிசப்ஷன்லயும் ஏதாவது ஒரு பொண்ணு அது தலைமையில்தான் ஃபங்ஷனே கட்டுக்கோப்பா கொண்டுபோற மாதிரி தன்னை பிஸியாவே காட்டிக்கும்.

twitter.com/jeytwits: டிவி-யில் சேனல் மாத்தாம ஒரே சேனலை ரொம்ப நேரம் பார்த்துட்டிருந்தா, ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும்... இல்லை மனசு சரியில்லாம இருக்கணும்.

112p4.jpg

twitter.com/withkaran: முன்னெல்லாம் படம் ரிலீஸ் ஆகுதுன்னா, புரொமோஷனா பிரஸ் மீட், டிவி பேட்டி இருக்கும். இப்ப எங்கேவது போராட்டம் நடக்குற இடத்துல போய் உட்கார்ந்துர்றானுவ.

twitter.com/skpkaruna: திருவள்ளுவரே இப்போ இருந்து திருக்குறள் எழுதினாலும், இறுதி வரியில் `தமிழனாய் இருந்தால் ஷேர் செய்!' என்றே எழுதியாகணும். ட்ரண்ட் அப்படி.

112p5.jpg

twitter.com/VignaSuresh : இந்தக் கடுமையான கோடையில், தாண்டிச் செல்பவர் நமக்காக மின்விசிறியைச் சுழலவிட்டாலே காதல் வந்துவிடும் போலிருக்கிறது.

twitter.com/vandavaalam: `கமல் பேட்டி புரியலை. ஸ்டாலின் பேசுறது காமெடியா இருக்கு'ன்னு சொல்லி, டி.டி.வி.தினகரனையே முதல்வரா உக்காரவெச்சுருவாங்கபோல நம்ம ஆட்கள்.

twitter.com/IrumathiP: தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க-வில் இணைய உள்ளனர். - டி.டி.வி.தினகரன் தளபதியே வந்தாலும் வரலாம் நீங்கதான் எல்லாரையும் சி.எம் ஆக்குறீங்களே!

112p6.jpg

twitter.com/mekalapugazh: காது குத்தியதற்கான அடையாளம் இருக்கிறது. ஆனால், வலி மறந்துவிட்டது. முதுகில் குத்தியதற்கான அடையாளம் இல்லை. ஆனால், வலி மறப்பதேயில்லை.

twitter.com/mymindvoice: திருமணத்துக்குப் பிறகான தற்காலிக ஒருமையில், ஆண்களுக்குச் சமையலில் ஆர்வம் வருகிறது... பெண்களுக்குத் தொலைகிறது!

twitter.com/saranyaajira: இப்போதெல்லாம் ஹோட்டலில் இட்லிக்கு மறுமுறை சட்னி கேட்பதைக்கூட நாகரிகக் குறைவு என்கிறார்கள்.

twitter.com/KalaiLalitha: ஆசைப்பட்டது கிடைக்கலைன்னா, நாம சரியா ஆசைப்படலைனு அர்த்தம்.

  • தொடங்கியவர்

தன் விளம்பரப் பலகையைக் கட்டிப்பிடித்த மகள்..நெகிழ்ந்த டேவிட் வார்னர்! #DavidWarner

டேவிட் வார்னர்

ஸ்திரேலியா கிரிக்கெட்  அணியின்  துணை  கேப்டனான டேவிட் வார்னர், சமூகவலைத்தளத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருப்பவர். தனது குடும்பத்தை பற்றியும், இரண்டு மகள்களின் குறும்புத்தனங்களையும் அவ்வப்போது தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில்  பதிவு செய்துகொண்டே இருப்பார். 


சமீபத்தில்  இவர் பதிவிட்டிருந்த ஒரு வீடியோ, டேவிட் வார்னரை மட்டுமல்ல..அவரின் உலக ரசிகர்கள் அனைவரையும் நெகிழ வைத்திருக்கின்றது.  அந்த வீடியோ பதிவில், டேவிட் வார்னரின் இரண்டு வயது மகள்  இவி மே வார்னர் (Ivy Mae Warner),  ஒரு தொலைக்காட்சிப்பெட்டிக்கு அருகே இருக்கும் டேவிட் வார்னரின் விளம்பரப்பலகையை நோக்கி ஒடிவருகிறாள். பிறகு அந்த விளம்பரப்பலகை,  அன்போடு கட்டியணைத்துக்கொள்கிறார். அந்த தனது தந்தையின் உருவப்படம் என அறியாமல், தனது தந்தைதான் நிற்கிறார் என நினைத்துக்கொண்டு, அதனை  கட்டிக்கொண்டது பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது. இந்த வீடியோவை, தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் பகிர்ந்துகொண்ட வார்னர், “ காலையில் இதனை பார்த்தபோது என் கண்கள் கலங்கியது ”,  என மிக நெகிழ்ச்சியாக பதிவிட்டிருக்கிறார்.  


தற்போது இந்தியாவில், இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு இடையே டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா-இந்தியா அணிக்கு  இடையே நடக்கும் போட்டி ஒருபுறம் இருக்க, டேவிட் வார்னர் தனது போட்டிக்கு தனது குடும்பத்துடன் இந்தியா வந்திருக்கிறார்.  இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன், அவரது குடும்பம் ஆஸ்திரேலியா திரும்பிவிட்டது.

இதுபோன்ற மேலும் ஒரு அழகான சம்பவம், சில தினங்களுக்குமுன், டேவிட் வார்னர்  டெஸ்ட் போட்டிக்காக பெங்களூரு சென்றிருந்தபோது நடந்தது. டேவிட் வார்னரின் அசுர ஆட்டத்திற்கு,  இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். ஏற்கெனவே, கடந்த 2009ஆம் ஆண்டு முதலே, இந்திய பிரிமியர் லீக்  போட்டிகளில் டேவிட் வார்னரின் பேட்டிங் செம்ம ஹிட்!  இந்த பெங்களூரு டெஸ்ட் போட்டிக்காக வந்திருந்த வார்னர், தன் அறையைவிட்டு, தனது மகளுடன் நடைப்பயிற்சிக்காக வந்திருக்கிறார். அப்போது, அவரை அடையாளம் கண்டுகொண்ட பெங்களூரு ரசிகர்கள், அவருடன் ‘செல்பி’ எடுத்துக்கொள்ள, அவரை சூழ்ந்துகொண்டனர். இதனை எதிர்பார்க்காத இவி, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு வேகமாக நடந்தது, அவ்வளவு ‘க்யூட்’ . இதனையும் வீடியோ பதிவு செய்து, டேவிட் வார்னரின் மனைவி காண்டிஸ் வார்னர் (Candice Warner) அவரது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில், பதிவேற்றியிருக்கிறார். மேலும், டேவிட் வார்னர், தனது மகளுக்கு, இந்தியா ஆடையான  ‘லெஹங்கா’ அணிவித்தும் அழகு பார்த்திருக்கிறார்.


கடந்த 2015ஆம் ஆண்டு, டேவிட் வார்னரும், காண்டிஸ்  ஆன் ஃபல்ஸோனும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு  இவி மே வார்னர், இண்டி ரே வார்னர் (Indi Rae Warner) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். 


 தற்போது நடைபெற்றுவரும்  டெஸ்ட் போட்டியில்,  டேவிட் வார்னரின் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற நிலையில், இந்த வீடியோ பதிவு அவரின் உற்சாக மனநிலையை மீட்டெடுக்கும் என்று அவரின் ரசிகர்கள் நம்புகிறார்கள். தற்போது, ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில்,  டேவிட் வார்னர் 5வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 
 
 
 
 
 
 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சிட்டுக்குருவி தினம் உருவாக காரணமான முகமது திலாவர் யார்? #Mohammed Dilawar

சிட்டுக்குருவிகள்...  சின்னக்குருவிகள்; செல்லக் குருவிகள்.  அவை மனிதகுலத்துக்கு ஆற்றும் பணி அளப்பரியது. சீனாவில் நடந்த உண்மைச் சம்பவம் இது. 1950-களில் சீனாவில் ஆட்சிக்கு வந்த மாவோ Four pests campaign என்ற பெயரில் பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய நான்கு உயிர்களை அழிக்க உத்தரவிடுகிறார். அந்தப் பட்டியலில் சின்னஞ்சிறு சிட்டுக்குருவியும் இடம் பெற்றிருந்தது.  சின்னஞ்சிறிய பறவைகள் கொலை செய்யப்படுமளவுக்கு என்ன தப்பு செய்தன?. விளை நிலங்களில் தானியங்களைக் கொத்தித் தின்றதுதான் அந்தக் குருவிகள் செய்த தவறு. தானியங்கள்தான் அவற்றின் முக்கிய உணவு. புலி மானை அடித்துச் சாப்பிட்டால் தப்பா? பூனை, கருவாடு தின்னத்தானே செய்யும்?

சீனாவில் கொல்லப்பட்ட சிட்டுக்குருவிகள்

மாவோவின் உத்தரவை அடுத்து சிட்டுக்குருவிகளை அழிக்க பெரும் படை கிளம்பியது. எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் கொன்று குவிக்கப்பட்டன குட்டிக் குட்டிக் குருவிகள். அதன் கூட்டை அழிப்பது, முட்டையை உடைப்பது என்று மனிதன் அத்தனைவிதமான இழி புத்தியையும் சிட்டுக்குருவி இனத்தின் மீது காட்டினான். சிட்டுக்குருவியை அழித்து விட்டால் போதும்; நாடு சுபிட்சம் அடைந்து விடும்; உணவு உற்பத்தி பெருகிவிடும் என்ற செய்தியை சீனர்கள் பரப்பிக் கொண்டிருந்தனர். கோடிக்கணக்கான சிட்டுக்குருவிகள் அழிந்து போயின. இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்தன. நாட்டில் விளைச்சல் பாதியாகக் குறைந்தது. சீன அரசுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவு புழுப் பூச்சிகள் மட்டுமல்ல; வெட்டுக்கிளிகள் போன்ற விளைச்சலைப் பாதிக்கும் பூச்சிகளும்தான். சிட்டுக்குருவிகள் அழிந்து போயின; அதனால் வெட்டுக்கிளிகள் பெருத்தன. 

பயிர்களை சகட்டுமேனிக்கு வெட்டுக்கிளிகள் அழித்தன. விளைச்சல் பாதித்தது. மக்கள் பசியால் வாடத் தொடங்கினர். போதாக்குறைக்கு மழையும் பொய்த்தது. நிலங்கள் வெடித்தன, பயிர்கள் வாடின. மக்கள் பட்டினியால் மடிந்தனர்.  சிட்டுக்குருவி இனத்தை அழித்ததற்கு சீனா கொடுத்த விலை... ஒன்றரை கோடி மனித உயிர்கள் (சீன அரசின் கணக்குப்படி). ஆனால் 3 கோடியே 60 லட்சம் பேர் வரை இறந்து போனதாக  "Tombstone' என்ற புத்தகத்தில் சீனப் பத்திரிகையாளர் யாங் ஜிஜெங் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தகத்துக்கு தற்போது சீனா தடை விதித்துள்ளது. அந்தப் புத்தகத்தில் , சீன மக்கள் பட்டினி காரணமாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று சாப்பிட்டதாகக்கூடச் சொல்லப்பட்டுள்ளது. மக்களை நரமாமிசம் புசிப்பவர்களாக மாற்றிய பின்தான், விழித்தது சீனா. 

வெட்டுக்கிளிகள் , பூச்சிகள் பெருக சிட்டுக்குருவிகள் மடிந்ததுதான் காரணம் என்பதை சீனா தாமதமாக உணர்ந்தது. உடனடியாக அந்தப் பட்டியலில் இருந்து  சிட்டுக்குருவியின் பெயர் நீக்கப்பட்டது. இப்போது  சிட்டுக்குருவியைக் காக்க பெரும் படை புறப்பட்டது. சீனா சுபிட்சமடைந்தது. சின்னக்குருவிதான். ஆனால், அது அழிந்தால் மனித இனத்துக்கும் அழிவு வரும். என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம். 

சிட்டுக்குருவி தினத்தை உருவாக்கிய முகமது திலாவர்

இந்தியாவில் சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவம் குறித்து இப்போது பெரும் விழிப்புஉணர்வு ஏற்பட்டிருக்கிறது. இளைஞர்கள் அவற்றைப் பாதுகாக்க பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். சிட்டுக்குருவி குறித்து இந்தியாவில்  விழிப்புஉணர்வை ஏற்படுத்தியவர் நாசிக்கைச் சேர்ந்த முகமது திலாவர். கல்லூரிப் பேராசிரியரான இவர், சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதற்காக ''Nature forever society ''என்ற அமைப்பைத் தொடங்கினார்.

பழைய காலத்தில் நமது முன்னோர்கள் ஓட்டு வீடுகளில் வாழ்ந்தனர். ஓட்டு வீடுகளின் அமைப்பு கூடு கட்டி வாழத் தெரியாத சிட்டுக்குருவிகள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் இருந்தது. பொந்துகளில் கொஞ்சம் வைக்கோல் இருந்தால் போதும்; அதில் வசிக்க ஆரம்பிக்கும் பறவை இனம் சிட்டுக்குருவி. நகரத்தின்  நவீனக் கட்டடங்கள் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இல்லை. ஆனால்,  மண்ணுக்கு எப்படி புழு தேவையோ... காட்டுக்கு எப்படி புலி தேவையோ... அப்படி மனிதனுக்கும் சிட்டுக்குருவி தேவை. 

இதை உணர்ந்து கொண்ட முகமது திலாவர்தான் முதலில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினார். உலகம் முழுக்க 52 ஆயிரம் இடங்களில் சிட்டுக்குருவிகள் வசிப்பதற்கான வாழ்விடங்கள், உணவிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. சிட்டுக்குருவிகளுக்கு என்று ஒரு தினம் வேண்டுமென்றும் ஐ.நா. அமைப்பிடம் கோரிக்கை விடுத்தார். முகமதுவின் கோரிக்கையில் இருக்கும் உண்மையை உணர்ந்த ஐ.நா. சிட்டுக்குருவிகளைக் காப்பதன் அவசியம் கருதி, கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதியை சிட்டுக்குருவி தினமாக அறிவித்தது. டெல்லி மாநில அரசு, கடந்த 2012-ம் ஆண்டு சிட்டுக்குருவியை டெல்லி மாநிலப் பறவையாக அறிவித்தது.  கடந்த 2008-ம் ஆண்டு டைம் இதழ் "Heroes of the Environment'' விருதை முகமதுவுக்கு வழங்கியது. உலகின் தலைசிறந்த 30 சுற்றுச் சூழலியலாளர்களில் இவரும் ஒருவர். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மார்ச் 21
 
 

1413: இங்கிலாந்தில்  5ஆம் ஹென்றி மன்னரானார்.

1556: கண்டர்பரி பேராயர் தொமஸ் கிரான்மர் ஒக்ஸ்போர்ட் நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.

1788: லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் 25 விழுக்காடு நகர மக்கள் கொல்லப்பட்டனர்.

1800: ரோம் நகரில் இடம்பெற்ற கலகங்களை அடுத்து கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர்கள் நகரை விட்டு அகற்றப்பட்டதை அடுத்து, வெனிஸ் நகரில் ஏழாம் பயஸ் பாப்பரசராகப் பதவியேற்றார்.

1801: பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படைகளுக்கிடையில் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரில் போர் இடம்பெற்றது.

1844: பஹாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாள் ஆகும்.

1857: ஜப்பானின் டோக்கியோ நகரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் ஒரு லட்சம் பேர் பலி.

1905: ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது புகழ்பெற்ற சிறப்புச் சார்புக் கோட்பாடு கொள்கையை வெளியிட்டார்.

1913: அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 360 பேர்  பலி. 20 ஆயிரம் வீடுகள் சேதம்.

1917: டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1919: ஹங்கேரி சோவியத் குடியரசில் கம்யூனிஸ அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. ரஷ்யாவின் ஒக்டோபர் புரட்சிக்குப் பின் ஐரோப்பின் அமைக்கப்பட்ட முதல் கம்யூனிஸ அரசாங்கம் இதுவாகும்.

1933: டேச்சு வதை முகாம், நாசிகளின் முதலாவது வதை முகாம், ஜெர்மனியில் அமைக்கப்பட்டது.

1935: பேர்சியா நாட்டை ஈரான் (ஆரியரின் நாடு) என அழைக்கும்படி ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

1945: இரண்டாம் உலகப் போர் - பர்மாவின் மண்டலாய் நகரை பிரித்தானியப் படைகள் விடுவித்தனர்.

1948: முகமது அலி ஜின்னா, உருது மட்டுமே பாகிஸ்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.

1960: நிறவெறி - தென்னாபிரிக்காவில் ஷார்ப்வில் என்ற இடத்தில் கறுப்பின தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி காவற்படையினர் சுட்டதில் 6 9பேர் கொல்லப்பட்டனர்.

1965: அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் 3200 மக்களுடன் கறுப்பின மக்களின் சிவில் உரிமைக்கான பேரணியை நடத்தினார்.

1970: முதலாவது பூமி நாளுக்கான அழைப்பை சான் பிரான்சிஸ்கோ மேயர் ஜோசப் அலியோட்டோ விடுத்தார்.

1980: மொஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா பகிஷ்கரிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.

1990: 75 வருடகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா சுதந்திரம் பெற்றது.

1994: ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கிய ஸ்சின்ட்லெர்'ச் ளிச்ட் ஏழு ஆஸ்கார் விருதுகளை வென்றது.

1998: புனித வெள்ளி உடன்பாடு வடக்கு அயர்லாந்தில் எட்டப்பட்டது.

2000: பாப்பரசர் ஜோன் போல் 11, தனது முதலாவது பாப்பரசர் விஜயத்தை, இஸ்ரேலுக்கு மேற்கொண்டார்.

2006: சமூக வலைத்தளமான டுவிட்டர், நிறுவப்பட்டது.

2009: கலிபோர்னியாவின், ஒக்லண்ட் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், நான்கு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

tamilmirror

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வேலையில் இருப்பவர்கள் பிசினஸ்மேன் ஆக விரும்புகிறீர்களா... இதப் படிங்க முதல்ல! #TuesdayThoughts

பிசினஸ்

எல்லோருக்குமே பெரிய பெரிய கனவுகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள சூழல் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அல்லது வாய்ப்பை உருவாக்கிக் கொள்வதில்லை. மனதுக்குள் பிசினஸ்மேன் ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலர், மனது ஒட்டாமல் எதோ ஒரு வேலையில்  காலத்தைக் கழித்துக்கொண்டிருப்பார்கள். கேட்டால், `முதலீடு செய்ய பணமில்லை' என்பார்கள். அவர்கள் எல்லாம் சந்தையில் இறங்கியே இருக்கமாட்டார்கள். ஏனெனில், உண்மையில் பிசினஸ் செய்ய முதலீடு ஒரு பிரச்னையே இல்லை. ஏராளமான பொது மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் அமைப்புகள், முதலீட்டு நிறுவனங்கள் பிசினஸ் செய்ய விரும்புபவர்களுக்கு பணம் தர தயாராக உள்ளன. எனவே துணிந்து இறங்கினால் வெற்றி பெறலாம்.

அப்படி வேலையை விட்டுவிட்டு பிசினஸ் செய்ய நினப்பவர்கள் சில விஷயங்களை மனதில் வைத்துக்கொள்வது அவசியம். ஒருபோதும் நாம் எடுத்த முடிவு,  தவறான முடிவாகிவிட்டதே என்று நம்மை கவலைப்பட வைத்துவிடக் கூடாது. எனவே பின்வரும் விஷயங்களை பிசினஸ் செய்பவர்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

30 வயது!

30 வயது என்பதுதான் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம். அந்த வயதில் எடுக்கும் முடிவுகள் தான் இறுதிவரை நம்முடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கும். மேலும் 30 வயதுக்கெல்லாம் நமக்கு வாழ்க்கையைப் பற்றியும் நம்முடைய திறமைகள் பற்றியும் எதிர்காலம் பற்றியும் ஒரு தெளிவு ஏற்பட்டுவிடும். இந்த வயது வரைக்கும் நாம் பல வேலைகளுக்கு மாறி இருக்கலாம். பல தவறுகளைச் செய்திருக்கலாம். வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றி கவலைப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் 30 வயதுக்குப் பிறகு நாம் பொறுப்பானவர்களாக மாற வேண்டியிருப்பது, நம்முடைய சமூக கட்டமைப்பில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அப்படியும் பொறுப்பில்லாமல் இருந்தால் காலம் நமக்கு அதற்கான பாடத்தைக் கற்றுத்தந்தே தீரும்.

எனவே நம் வாழ்க்கைக்கான முடிவை 30 வயதில் தீர்மானித்துவிட வேண்டும். நாம் என்ன செய்யப் போகிறோம், வேலையா, பிசினஸா, பிசினஸ் என்றால் என்ன பிசினஸ், எப்படி செய்யப் போகிறோம்? போன்ற கேள்விகளைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் 30 வயதைக் கடந்த பிறகு குடும்பம், குழந்தைகள், செலவுகள் என்று நம் கையை மீறிதான் வாழ்க்கை இருக்கும். மேலும் வயதான பிறகு ரிஸ்க் எடுக்கவும் முடியாது.

ஆர்வம், திறமை, தேவை!

பிசினஸ் செய்வதற்கு முன் நம்முடைய ஆர்வம் எதில் இருக்கிறது, நம்மிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, நாம் செய்யப்போகும் பிசினஸின் தேவை என்ன? என்ற இந்த மூன்று கேள்விகளையும் ஒருவர் தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவை மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்தால்தான் வெற்றி வசமாகும். ஆர்வம் இருந்து திறமை இல்லையென்றாலும் சரி, நம்முடைய பிசினஸுக்கான தேவையே இல்லாமல் இருந்தாலும் சரி தோல்விதான். எனவே என்ன பிசினஸ் செய்ய ஆசைப்படுகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டு, அதற்கு தேவையான திறமைகளையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ளுங்கள். அந்த பிசினஸ் குறித்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். முக்கியமாக அந்த பிசினஸின் தேவை எந்தளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு தான் வளர்ச்சி இருக்கும்.

துவண்டுபோகக் கூடாது!

தொழில் தொடங்கிய ஆரம்பத்தில் பெரிதாக வளர்ச்சி இருக்காது. 'சூரியவம்சம்' படத்தில் வருவது போல ஒரே பாட்டில் ஓஹோ என்றெல்லாம் வளர்ந்துவிட முடியாது என்பதை முதலில் உணருங்கள். ஆரம்பத்தில் வருமானம் குறைவாக இருந்தால், வேலையில் இருந்திருந்தாலே மாத வருமானம் ஒழுங்காகக் கிடைத்திருக்குமே என்று நீங்களும் நினைக்கக்கூடாது; அப்படி கூறுபவர்களின் பேச்சையும் காதில் போட்டுக்கொள்ள கூடாது. ஆரம்பத்தில் ஏற்படும் இந்த நெருக்கடி நிலையைச் சமாளிக்கும் மனதைரியம் வேண்டும்.

இருக்கு, ஆனா இல்லை!

வேலையில் இருக்கும்போது நம்முடைய சுதந்திரம் என்பது ஒரு வட்டத்துக்குள்தான் இருக்கும். ஆனால் பிசினஸ் செய்வது என்று கிளம்பிவிட்டால் நம் இஷ்டம்தான், நம் சுதந்திரம்தான் என்று நினைக்கலாம். தவறில்லை உண்மைதான். சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அதே சமயம் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் வேலையில் இருந்ததைவிட பிசினஸில் அதிக ஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டியிருக்கும்.

வேலையில் இருக்கும்போது, எட்டு மணி நேரம் வேலை செய்கிறீர்கள் என்றால் பிசினஸில் 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருக்கும். 'உழைப்புதான் உன்னை உயர்த்தும்' என்பதை நீங்களே உங்களுக்குச் சொல்லிக்கொள்ளுங்கள். பின்னர் அதுவே பழகிவிடும்.

போட்டியாளர்களைப் படியுங்கள்!

எல்லா பிசினஸிலும் போட்டி இருக்கிறது. போட்டி என்பது மிக ஆரோக்கியமான ஒரு விஷயம். ஒருவரின் வளர்ச்சியைக் குறைக்கவும், கூட்டவும் போட்டிக்கு வலிமை உண்டு. வளர்ச்சியை அதிகரித்துக்கொள்ள போட்டியாளர்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அவர்களை விட எந்தவிதத்தில் நாம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மாற முடியும் என்பதை அதை வைத்துதான் முடிவு செய்ய முடியும்.

உங்கள் பிசினஸ் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். நடைமுறைகள், அரசு கட்டுப்பாடுகள், தொழில்நுட்பங்கள் ஆகியவைக் குறித்து அப்டேட்டாக இருங்கள்.

வேலையில் சம்பள உயர்வுக்கும், பிசினஸில் லாப வளர்ச்சிக்கும் இடையே உள்ள வித்தியாசம்தான் பிசினஸ் செய்வதிலுள்ள ப்ளஸ். ஆனால் உண்மையில் பிசினஸ் செய்வது, ஒரு இடத்தில் வேலை செய்வதைக் காட்டிலும் கடினமானது. அந்த ரிஸ்க்கை எடுப்பவர்களும், ஒருபோதும் முன்வைத்த காலை பின்வைக்காதவர்களும் தான் பிசினஸில் ஜெயிக்க முடியும்.

ஆல் தி பெஸ்ட்...!

  • தொடங்கியவர்

18 மாடி அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்து வெளியேறும் ரயில்..! #WowEngineering

தடக்...தடக்...தடக்... என்ற அந்த சத்தம். பின்னோக்கி ஓடும் மரங்கள். முகத்தில் அறையும் காற்று. நொடிகளில் கடக்கும் முகங்கள். முகமறியா நண்பர்களின் புது அறிமுகங்கள். மழை பெய்யும் போது அதன் அழகை சொல்லிட முடியாது. இப்படியான தருணங்கள் நிறைந்த ரயில் பயணங்களை அவ்வளவு எளிதில் யாரும் வெறுத்திட முடியாது. ரயில்... அறிவியலின் அழகுக் குழந்தை. சில இடங்களின் ரயில் பாதைகள் நம்மை ஆச்சர்யப்படுத்தும், சில பயமுறுத்தும், ரசிக்க வைக்கும். அப்படி உலகின் சில வித்தியாச ரயில் தடங்கள் இவை...

ரயில்


கட்டிடத்தில் புகுந்து ஓடும் சீன ரயில்:

தென்மேற்கு சீனாவில் இருக்கும் நகரம் சாங்க்யிங். 31 சதுர மைல்கள் பரப்பளவில் இந்த நகரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 4.9 கோடி. அதிகப்படியான மக்கள் தொகை, இட நெருக்கடி போன்ற காரணங்களால் நகரின்  உள்கட்டமைப்பு சம்பந்தமான எந்த திட்டங்களுமே, அதீத கவனத்துடன் தீட்டப்பட வேண்டிய கட்டாயமிருக்கிறது. 

லிஜிபா என்ற இடத்தில் மோனோ ரயில் பாதையை அமைக்க 19 மாடி அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க வேண்டிய சூழல். சீன ரயில்வே துறை பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு ஒரு முடிவை எடுத்தது. அது அந்தக் குடியிருப்பை ஊடுருவி, ரயில் பாதையை அமைப்பது என்பது. 6வது முதல் 8வது வரையிலான தளங்களில்  பாதையையும், ரயில் நிலையத்தையும் தற்போது அமைத்துள்ளது. இதன் காரணமாக இந்த அபார்ட்மெண்டின் விலை அபாரமாக அதிகரித்துள்ளது. மேலும், மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக, அதிக சத்தம் வராத வகையில் ரயில் இயக்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 60 டெசிபல் அளவிற்கான ஒலி மட்டுமே எழுப்புகிறது. 

train   ரயில்வே பாதை


ரயிலுக்காக மடங்கும் கடைகள்:

தாய்லாந்தில் இருக்கும் மேய்க்லாங் மார்க்கெட் வழியாக தினமும் 17 தடவைகளுக்கும் மேலாக ரயில் சென்று வரும். தண்டவாளத்திற்கு மிக அருகிலேயே கடைகள் போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு முறையும், ரயில் வரும் போது கடைகளை மடக்கி, மீண்டும் திறப்பார்கள். ரயில் 30கிமீ வேகத்தில் இந்த மார்க்கெட் பகுதியைக் கடக்கும். 

தாய்லந்து மார்க்கெட்


விமானத் தளத்தின் நடுவே ஓடும் ரயில்:

நியூசிலாந்தின் கிஸ்பார்ன் விமான நிலையத்தின், ஓடுதளத்தின் நடுவே இருக்கிறது ஒரு ரயில் பாதை. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 60 விமானங்கள் இந்த ஓடு தளத்தை உபயோகிக்கும். அதன் நேரங்களையும், கடக்கும் ரயில்களின் நேரங்களையும் நுணுக்கமாக கணக்கிட்டு சிக்னல் கொடுக்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள். 

விமான நிலைய ஓடு தளம்


காதல் சுரங்கத்தின் வழி ஒரு பயணம்:

உக்ரைனின், க்ளிவன் பகுதியில் இருக்கும் இந்த ரயில் பாதைக்கு "டனல் ஆஃ லவ்" என்றொரு பெயர் உண்டு. இரு பக்கமும் பச்சை செடிகள் சூழ்ந்திருக்க, அதற்கு நடுவில் செல்லும் இந்த ரயில் பயணம் அத்தனை அழகு.

 


பல உயிர்களை பலி வாங்கிய "மரண ரயில் பாதை" :

தாய்லாந்தின் பேங்காக் நகரிலிருந்து, பர்மாவின் ரங்கூன் நகர் வரை மலையையொட்டி செல்லும் ரயில் பாதை. இந்தப் பாதையை அமைக்கும் போது கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வரை இறந்ததாக சொல்லப்படுகிறது. மிகத் துயரமான வரலாற்றை சுமந்து கொண்டு பெரும் மலைகளின் நடுவே நீள்கிறது இந்த ரயில் பாதை.

மலை

 

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.