Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

உலக காடுகள் தினத்தன்று இந்த உறுதிமொழியை ஏற்போமா? #InternationalForestDay

காடுகள்

மார்ச் 21-ம் தேதியான இன்று உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. காடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது. காலநிலையை சீராக வைத்துக்கொள்வதில் காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இது தவிர, மனிதனுக்கும் விலங்குகளுக்கும் முன்னொரு காலத்தில் காடுகள்தாம் புகலிடம். நாளடைவில் நாகரிகம் வளரத்தொடங்கியவுடன் மனிதன் காட்டை அழித்து நிலங்களைப் பிரித்துக்கொண்டான். ஆனால் இன்னும் காடுகள்  வன விலங்குகளுக்குப் புகலிடமாகவே விளங்குகிறது. அதேபோல மனிதன் வாழ்வதற்குத் தேவையான காற்றினைக் கொடுப்பதில் காடுகளின் பங்கு மிக அதிகம். இந்தக் காடுகள்தாம் மனித இனத்தின் வரம். மனிதன் வாழ இன்றியமையாத தண்ணீரை மழை மூலமாகவும், மண் அரிப்பினைத் தடுப்பது மூலமாகவும், பழங்களை உணவாகக் கொடுத்தும் மனிதனுக்குப் பல வழிகளில் காடுகள் உதவியாக இருந்துவருகின்றன. 

 காடுகளில் ஊசி இலைக்காடுகள், சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என ஒவ்வொரு தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றாற்போல அமைந்துள்ளன. இந்தியாவின் மொத்தக் காடுகளின் பரப்பு 6 லட்சத்து 30 ஆயிரம் ச.கி.மீ. இந்தியாவில் ஆண்டுக்கு 0.6 சதவிகிதம் காடுகள் அழிக்கப்பட்டுக்கொண்டுள்ளன. காடு என்பது வெறும் மரங்கள் மட்டுமல்ல அது ஓர் உயிரியல் சார்ந்த கட்டமைப்பு. வனவிலங்குகள் ஊருக்குள் வரத்தொடங்கிவிட்டன எனச் சொல்லும் முன்னர் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதனுடைய வனப்பகுதியை அழித்து, வாழ்வாதாரத்தை நிர்கதியாக்கிவிட்டால் விலங்குகள் ஊருக்குள் வராமல் என்ன செய்யும். அதேபோல காடுகளை அழித்துவிட்டு கட்டடங்களாக மாற்றிக்கொண்டால் விலங்குகள் எங்கே போகும். காடுகளிலிருந்த பறவைகளும்  எங்கே போகும். உயிர்ச்சூழலைக் காக்கும் முக்கியப் பொறுப்பு வகிப்பவை மரங்கள்தாம்.

உலகில் இன்றைய புவி வெப்ப உயர்வுக்குக் காரணம் வனங்கள் பெரும்பான்மையாக அழிக்கப்பட்டதுதான். அதிலும் இந்தியாவில் அழிக்கப்பட்ட வனப்பரப்புகள் ஏராளம். சாலையை அமைக்க மரங்களை வெட்டும் நிறுவனங்களிடம், புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் ஓரங்களில் மரங்களை வளர்க்கச் சொல்லி அரசு வற்புறுத்தவும் இல்லை, அவர்கள் அதைக் கண்டுகொள்ளவும் இல்லை. ஆனால் ஒரு மரம் வெட்டப்பட்டால் 10 மரங்கள் நடப்படவேண்டும் என்பது அரசு விதி. அப்போது சாலை அமைக்க வெட்டப்பட்ட மரங்களுக்கு யார் பதில் சொல்வது. இப்படி நிலப்பரப்பில் உள்ள மரங்களும், மலைப்பகுதிகளில் உள்ள மரங்களும் வெட்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. சில நிமிடங்களில் வெட்டப்படும் காடுகளை வளர்க்க குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும். காடுகள்தாம் இந்த உலகத்தின் உயிர் மூச்சு. 

இனி வரும் காலங்களில் மனித இனத்துக்கும் விலங்குகளுக்கும் ஆணிவேராகப் பயன்படும் காடுகளை அழிவின் பிடியில் இருந்து காப்பது நம் அனைவரின் கடமை. புதிதாகக் காடுகள் வளர்ப்பதற்கு அரசும் போதிய முயற்சி எடுக்க வேண்டும். இந்திய வனக்கொள்கையின்படி நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது வெறும் 20% காடுகள்தாம் இந்தியாவில் காணப்படுகின்றன. ஆரோக்கியமான காற்று, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடுகளை நீக்குவதற்கு மரங்கள் மிக முக்கியம். உலக வெப்பமையமாதலைத் தடுக்கவும் மரங்கள் மிக முக்கியம். விலைமதிக்க முடியாத காடுகள் அழிக்கப்பட்டால் விலங்கினம், பறவையினம் எனப் பல்லுயிர்த்தன்மை அழியும். பல்லுயிர்த்தன்மை அழிந்தால் மனித இனம் எங்கே போகும்?

காடுகள் அழிவதில்லை. அழிக்கப்படுகின்றன. எங்கெல்லாம் காடுகளுக்கு எதிராக மனிதர்கள் செயல்படுகிறார்களோ, அங்கெல்லாம் நமது குறைந்தபட்ச எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும். இது நாம் காடுகளுக்காக மட்டும் செய்வதில்லை. நமக்காகவே செய்துகொள்வதும்தான்.

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நீயா நானா தனியார் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சி பெண்கள் தன் தாய் தந்தையிடம் கேட்கும் வரதட்சனையை பாருங்கள்

இவர்களை போன்ற பெண்கள் பெண் சமூகத்தின் பிரதிநிதிகளா?

சமூகத்தின் சாபக்கேடு இவர்கள் இவர்களை போன்றவர்களால்தான் பல அப்பாவி பெண்களின் வாழ்க்கை வரதட்சணை என்ற பெயரில் காவு வாங்க படுகிறது !!!!

 

  • தொடங்கியவர்

அன்னி பெசன்ட் அம்மையாருக்கும் சகோதரி நிவேதிதாவுக்குமான 7 ஆச்சர்ய ஒற்றுமைகள்!

அன்னி பெசன்ட் அம்மையார்

ந்தியாவில் பிறக்காவிட்டாலும் அன்னை தெரசா போலவே, இந்தியாவின் அன்னையர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள், அன்னி பெசன்ட் அம்மையாரும் சகோதரி நிவேதிதாவும். இந்த இருவருக்கும் ஆச்சர்யமான சில ஒற்றுமைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்வோமா? 

* இருவரின் தாய்நாடும் அயர்லாந்து. ஐரிஷ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அக்டோபர் மாதம் பிறந்தவர்கள். மார்கரெட் எலிசபெத் நோபல் (Margaret Elizabeth Noble) என்கிற இயற்பெயர் கொண்ட சகோதரி நிவேதிதா, அக்டோபர் 28, 1867-ல் அயர்லாந்து நாட்டின் வடபகுதி மாகாணமான, டைரோனில் உள்ள டங்கனன் எனும் ஊரில் பிறந்தார்.

 
அன்னி வூட் பெசன்ட் (Annie Wood Besant), அக்டோபர் 1, 1847-ல் லண்டனில் பிறந்தவர். எனினும், இவரின் தந்தை வில்லியம் பைஜ்வூட் அயர்லாந்தில் பிறந்து லண்டனில் குடியேறியவர்.

* இருவரும் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர்கள். மார்கரெட் எலிசபெத் நோபலின் தந்தை சாமுவேல் ரிச்மண்ட், மத போதகராகப் புகழ்பெற்றவர். ஏழைகளுக்குச் சேவை புரிந்து வந்தவர். கடின உழைப்பு காரணமாக, முப்பத்து நான்காம் வயதிலேயே மறைந்தார். அன்னி பெசன்ட், தனது ஐந்தாவது வயதிலேயே தந்தையை இழந்தவர். 

* சிறு வயதிலேயே ஏசு கிறிஸ்து மீது ஈடுபாடு மிக்கவராக இருந்தாலும், மதம் என்பது கோட்பாடுகளை நம்புவதல்ல; உண்மைப் பொருளுக்கான தேடல் என்ற தமது கருத்தால், சர்ச்சுக்கு செல்வதை நிறுத்தியவர் மார்கரெட் எலிசபெத். பிறகு, மாற்று மதத்தில் உள்ள கோட்பாடுகளை அறியும் பொருட்டு, புத்த மதம் பற்றி பயின்று, அந்தப் போதனைகளில் ஈடுபாடுகொண்டார்.


பிராங்க் பெசன்ட் என்ற மத குருவை மணந்த அன்னி பெசன்ட், இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட நோயினால் மனமுடைந்து நாத்திகரானவர், சீர்திருத்தக் கருத்துகளைப் பிரசாரம் செய்ததால், மத குருமார்களின் எதிர்ப்புக்கு ஆளானார்.

* ஆசிரியையாக தமது பணியைத் தொடங்கிய மார்கரெட் எலிசபெத், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெஸ்டலாஜி எனும் ஆசிரியர் கண்டுபிடித்திருந்த புதிய கல்விமுறையின் மீது ஈடுபாடு ஏற்பட்டு, அதனை அனைவருக்குமான கல்வியாக நடைமுறைக்குக் கொண்டுவர, 1890-ம் ஆண்டு லண்டனுக்குச் சென்றார். சமூகப் பிரச்னைகளுக்கான கருத்துகளைத் தனது எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தினார்.

 
பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்த அன்னி பெசன்ட், கணவன் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து லண்டனுக்குத் திரும்பினார். 'நியூமால் தூசியன் அமைப்பு' என்ற சீர்திருத்தச் சங்கத்துக்குத் தலைவியானார். 'லிங்க்' என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி... பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார். 

* 1895-ம் ஆண்டில் லண்டனில் விவேகானந்தரைச் சந்தித்து அவருடைய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார் மார்கரெட் எலிசபெத். எனினும், விவேகானந்தருடன் பல்வேறு விஷயங்களில் கடுமையான விவாதங்களை நடத்தினார். '’என் நாட்டுப் பெண்களின் கல்வி குறித்த திட்டங்களில் நீ பெரிதும் உதவ முடியும்'' என்ற விவேகானந்தரின் அழைப்பை ஏற்று, 1898-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார்.

 
1889-ம் ஆண்டில் பாசிரில் 'The Secret Doctrine' என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி அம்மையாரைச் சந்தித்தது, அன்னி பெசன்ட் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. நாத்திகத்தைக் கைவிட்டு ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் பிரும்மஞான சங்கத்தில் உறுப்பினரானார். 1891-ம் ஆண்டு பிளேவட்ஸ்கி இறந்ததை அடுத்து, 1893-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார். 

சகோதரி நிவேதிதா

* சுவாமி விவேகானந்தரிடம் பிரம்மச்சரிய தீட்சை பெற்று நிவேதிதா ('தெய்வத்துக்கு அர்ப்பணிப்பு' என்று பொருள்) என்ற பெயரைப் பெற்றார் மார்கரெட் எலிசபெத். அன்னை சாரதா தேவி நடத்திய பள்ளியில் கல்விப் பணி, பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி எனப் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டார். 1902 டிசம்பர் 19-ம் தேதி சென்னைக்கு வந்தவர், சொற்பொழிவுகளில் பங்கேற்றார்.

 
சென்னைக்கு வந்து அடையாற்றில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார் அன்னி பெசன்ட். இந்து சாத்திரங்களை ஆழ்ந்து படித்து, பல நூல்களை எழுதினார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'காமன் வீல்' என்ற வார இதழையும், 'நியூ இந்தியா' என்ற நாளேட்டையும் ஆரம்பித்து, சுதந்திரப் போராட்டம் மற்றும் சமூகப் பிரச்னைகளை எழுதினார்.

* சகோதரி நிவேதிதாவை, மகாகவி பாரதியார் தமது குருவாகக் குறிப்பிடுவார். ஒருமுறை, ''உங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா?'' என பாரதியாரிடம் கேட்டார் சகோதரி நிவேதிதா. அதற்கு பாரதியார், ''சமுதாய வழக்கப்படி அவரை வெளியில் எங்கும் அழைத்துச் செல்வதில்லை'' என்றார். ''உங்கள் மனைவிக்கே நீங்கள் சம உரிமையும் விடுதலையும் கொடுப்பதில்லை. நாட்டுக்கு எவ்வாறு விடுதலை பெற்றுத்தரப் போகிறீர்கள்?'' எனக் கேட்டு, பாரதியாருக்குப் பெண்களின் முன்னேற்றத்துக்கான சிந்தனையைத் தூண்டியவர். இந்தியர்களின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து உழைத்த நிவேதிதா, அக்டோபர் 13, 1911 அன்று டார்ஜிலிங்கில் மறைந்தார்.

 
சுதந்திரப் போராட்டத்துக்காக இந்திய அரசியலிலும் ஈடுபட்டு, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் ஓராண்டுக்கு இருந்த அன்னி பெசன்ட் அம்மையார், பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகினார். இந்திய மெய்யியலாளரான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி உதவியுடன், பிரும்மஞான சபையின் முன்னேற்றத்தில் முனைப்பாக ஈடுபட்டார். 1933-ம் ஆண்டு செப்டம்பர் 20-ல் சென்னையில் காலமானார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஈழத்துத் தமிழறிஞர் க.சச்சிதானந்தன் இறந்த நாள் (மார்ச்.21, 2008)

யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை, மாவிட்டபுரத்தில் கணபதிப்பிள்ளை (தும்பளை), தெய்வானைப்பிள்ளை (மாவிட்டபுரம்) ஆகியோருக்குப் பிறந்தவர் சச்சிதானந்தன். மகாவித்வான் நவநீதகிருஷ்ண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர். காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி,

 
ஈழத்துத் தமிழறிஞர் க.சச்சிதானந்தன் இறந்த நாள் (மார்ச்.21, 2008)
 
யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை, மாவிட்டபுரத்தில் கணபதிப்பிள்ளை (தும்பளை), தெய்வானைப்பிள்ளை (மாவிட்டபுரம்) ஆகியோருக்குப் பிறந்தவர் சச்சிதானந்தன். மகாவித்வான் நவநீதகிருஷ்ண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர். காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேசுவரா கல்லூரி (1938-1940) ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.

தந்தையாரிடம் வானியலும் சோதிடமும் சிவப்பிரகாச தேசிகரிடமும் சுப்பிரமணிய சாஸ்திரிகளிடமும் பாலசுந்தரக்குரக்களிடமும் சமக்கிருதக்கல்வியும் பயின்றார். மதுரைத் தமிழ்ப் பண்டிதர் பட்டமும் பெற்றார். 1971 ஆம் ஆண்டில் லண்டனில் முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். 2001 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை உடையவர்.

ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் இறந்த மார்ச் 21, 2008 இறந்தார். இவர் சச்சிதானந்த என்ற பெயரிலும், ஆனந்தன், யாழ்ப்பாணன், பண்டிதர், சச்சி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்.

மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1935 - பேர்சியா நாட்டை ஈரான் (ஆரியரின் நாடு) என அழைக்கும்படி ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
* 1945 - இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் மண்டலாய் நகரை பிரித்தானியப் படைகள் விடுவித்தனர்.
* 1948 - முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாகிஸ்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.
* 1960 - நிறவெறி: தென்னாபிரிக்காவில் ஷார்ப்வில் என்ற இடத்தில் கறுப்பின தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி காவற்படையினர் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர்.

* 1970 - முதலாவது பூமி நாளுக்கான அழைப்பை சான் பிரான்சிஸ்கோ மேயர் ஜோசப் அலியோட்டோ விடுத்தார்.
* 1980 - ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து மொஸ்கோவில் 1980 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிப்பதாக ஐக்கிய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
* 1984 - மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி இலங்கை அரசு அங்கிருந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.

* 1994 - ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கிய ஏழு ஆஸ்கார் விருதுகளை வென்றது.
* 1998 - புனித வெள்ளி உடன்பாடு வடக்கு அயர்லாந்தில் எட்டப்பட்டது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: ஜில்லென்று ஓர் உண்மை!

 
kaaranam_3143578f.jpg
 
 
 

குளிர் மறைந்துவிட்டது. வெயில் தகிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் ஜில்லென்று ஒரு தகவல் பரிமாறிக் கொண்டால் நன்றாக இருக்கும் இல்லையா ? இந்த ஜில்லென்ற விஷயத்தைச் சூடாகத் தொடங்குவோமா?

தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டும் என்றால் என்ன செய்வோம்? அடுப்பில் தீயைப் பற்ற வைத்துவிட்டுத் தீ ஜுவாலை மீது நீர் நிரம்பிய பாத்திரத்தை வைப்போம்.

நீர் நிரம்பிய பாத்திரத்தைத் தீ ஜுவாலைக்குப் பக்கவாட்டில் வைக்க வேண்டியதுதானே! ஏன் தீ ஜுவாலையின் மேல் வைக்க வேண்டும்? பக்கவாட்டில் வைத்தாலும் பாத்திரத்தின் மீது தீ ஜுவாலை படும். ஆனாலும், பாத்திரமும் பாத்திரத்தில் உள்ள நீரும் சூடாகாது.

தீ ஜுவாலைக்கு மேல் பாத்திரத்தை வைக்கும்போது வெப்பமடைந்த காற்று, எடை குறைந்து ஜுவாலையை மேல்நோக்கிக் கரியச் செய்கிறது. எனவே வெப்பமானது பாத்திரத்தின் கீழ்ப் பகுதியிலிருந்து மேல் நோக்கிப் பரவுகிறது. எனவே நாம் சூடுபடுத்த வேண்டிய நீரை அல்லது பொருளைத் தீ ஜுவாலைக்கு மேலே வைக்கும்போது அது சீக்கிரம் சூடாகிறது.

தீ மேல் நோக்கி எரியும் என்பதுதான், தீயின் மேல் உள்ள பாத்திரம் விரைவாகச் சூடாகக் காரணம். தீ பக்கவாட்டில் பரவுவதைவிட மேல் நோக்கியே அதிக விசையுடன் எரிகிறது. எனவே பொருள் விரைவாகச் சூடுபடுத்தப்படுகிறது.

தீ ஏன் பக்கவாட்டில் எரிவதில்லை, ஏன் மேல் நோக்கி மட்டுமே எரிகிறது? அதற்குக் காரணம் சூடாக்கப்படும்போது காற்று எடை குறைவதுதான். எடை குறைந்த காற்று மேலெழும்போது தீ ஜுவாலையையும் மேல்நோக்கி இழுத்துச் செல்கிறது. சரி, இதில் ஜில்லென்ற விஷயம் என்ன?

kaaanam_2_3143579a.jpg

பாத்திரத்தில் உள்ள நீரைச் சூடுபடுத்த வேண்டுமானால் ஜுவாலையின் மீது வைக்கிறோம். அதே சமயம் பாத்திரத்தில் உள்ள நீரைக் குளிர வைக்க, பாத்திரத்தை ஐஸ்கட்டியின் மேலேதானே வைக்க வேண்டும்! நாம் ஏன் அப்படிச் செய்வதில்லை?

முன்பெல்லாம் பொருளைக் குளிரவைக்க அந்தப் பொருளை ஐஸ்கட்டியின் மேலேதான் வைத்திருக்கிறார்கள். ஆனால், ஐஸ்கட்டியின் மேலே வைத்து எந்தவொரு பொருளையும் முழுமையாகக் குளிர வைக்க முடியாது.

பனிக்கட்டியைச் சுற்றியிருக்கும் காற்று, குளிர்ந்து எடை அதிகமாகிக் கீழ் நோக்கி இறங்கும். எனவே பனிக்கட்டியின் மேல் பாத்திரத்தை வைத்தால் அது குளிர் அடைய ரொம்ப தாமதமாகும்.

அதே சமயம் பனிக்கட்டிக்குக் கீழே பாத்திரத்தை வைக்கும்போது பனிக்கட்டியைச் சுற்றி உருவாகும் எடை குறைந்த காற்று கீழ் நோக்கி இறங்கிப் பொருளை உடனடியாகக் குளிரச் செய்து விடுகிறது.

பனிக்கட்டியின் மேலே பாத்திரத்தை வைத்தால் பாத்திரத்தின் அடிப்பகுதி மட்டுமே குளிர்ச்சி அடையும். இந்தக் குளிர்ச்சியானது பாத்திரம் முழுவதும் பரவுவதற்கு ரொம்ப தாமதமாகிவிடும். மேலும் பனிக்கட்டியின் மேல் உள்ள பாத்திரத்தின் அடிப்பகுதி திரவத்திலும், அதன் ஏனைய பகுதிகளிலும் சூடான காற்று சூழ்ந்து நிற்பதால் அது குளிர்ச்சி அடைவதில்லை.

அதே சமயம் நீருள்ள பாத்திரத்தை ஏதேனும் ஒரு மூடியைக் கொண்டு மூடிவிட்டு அதன் மேலே பனிக்கட்டியை வைக்கும்போது, பனிக்கட்டியைச் சூழ்ந்து உருவாகும் எடை குறைந்த காற்று உடனடியாகக் கீழிறங்கி, பாத்திரத்தில் உள்ள நீரை உடனே குளிர்ச்சி அடையச் செய்து விடுகிறது.

இந்த அடிப்படையில்தான் கடைகளில் காய்கறிகள் மீதும், மீன்கள் மீதும் ஐஸ் கட்டியைக் கொட்டி வைத்துப் பாதுகாக்கிறார்கள். எளிமையான தத்துவம்தான். ஆனால், இந்தத் தத்துவம் தெரியாமலேயே இன்னமும்கூட பலரும் இருக்கிறார்கள். இனி யாராவது தண்ணீரை ஜில்லென்று ஆக்க, பனிக்கட்டி மீது பாத்திரத்தை வைத்தால், இந்த எளிய உண்மையைச் சொல்வீர்கள் அல்லவா?

(காரணங்களை அலசுவோம்)

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

இன்னும் பலரை இலட்சாதிபதிகள், கோடீஸ்வரராக்குவேன் – சுவீப் டிக்கெட் விற்பனையாளர் சரவணமூர்த்தி

(சிலாபம் திண்­ண­னூரான்)


‘அதிர்ஷ்டம் என்­பது ஒரு­வனை ஆண்­டியாய் ஆக்­கியும் அழகு பார்க்கும் அர­சனாய் ஆக்­கியும் அலங்­காரம் செய்யும். நான் பலரை இலட்­சா­தி­ப­தி­யா­கவும் ஒரு­வரை கோடீஸ்­வ­ர­ரா­க வும் மாற்றம் பெற­வைத்­துள்ளேன். ஆனால் நானோ இன்னும் இலட்­சத்தை என் விரல்­களால் எண்ணிப் பார்க்­க­வும் ­இல்லை. எண்ணிப் பார்க்க ஆசை  கொள்­ளவும் இல்லை” என்­கிறார் சத்­தி­ய­மூர்த்தி சர­வ­ண­மூர்த்தி.

இவர், சுவீப் டிக்­கெட்­டுகள் எனும் அதிர்ஷ்­ட­லாபச் சீட்­டு­களை விற்­பனை செய்­கிறார். நான் எனது 12 வயதில் சுய­மாகத் தொழில் செய்ய இறங்­கி­யவன். நெற்­றியில் துளிர்­விட்டுப் பரவும் வியர்­வையை இடது கையால் துடைத்து நிலத்தில் சிந்­து­கையில் கிடைக்கும் சந்­தோஷம் எத்­தனை கோடி கிடைத்­தாலும் கிடைக்­காது என்­கிறார்.

“ஆணுக்கு அழகு உழைத்து சாப்­பி­டு­வது தான். அடுத்­தவன் உழைப்பில் வாழ்­பவன் சோம்­பேறி. இவ்­வா­றான சோம்­பே­றி­க­ளுக்கு ஏற்­படும் துன்­பங்­க­ளுக்­கெல்லாம் மூல­கா­ரணம் அவர்­களின் சோம்­பேறித் தனமும் சுய­நல உணர்ச்­சி­யுமேயாகும். சோம்­பல்தான் முட்­டாள்­க­ளுக்கு வழங்கும் விடு­மு­றை­யாகும். கண்கள் சிலிர்க்க பேசு­கிறார்” சர­வணன்.

DSC08194

 

“என் வாழ்க்­கையில் நான் சோர்­வுற்­ற­தில்லை. எனது 12 வயதில் தம்­புள்­ளையில் ஒரு மரக்­கறி சந்தை கடையில் வேலைக்கு சேர்ந்தேன். என்­னோடு பிறந்­த­வர்கள் ஆறு பேர். எல்­லோரும் ஆண்­க­ளாவர். வறுமை வாட்­டி­யது. வறுமை என்­பது துன்­பத்தின் நிழல் மட்­டு­மல்ல.

ஆசையை தூண்­டி­விடும் தூண்­டுகோல். காச நோயின் அறி­குறி இருமல். நாசத்தின் அறி­கு­றிதான் ஆசை. அதை அடை­யாளம் கண்டு கொண்டால் நிம்­ம­தி­யாக வாழலாம் தானே?” சிரிப்பும் சிலிர்ப்­பு­மாக கேட்­கிறார். சர­வணன்.

தம்­புள்ளை மரக்­கறிக் கடையில் எனது பன்னி­ரெண்டு வயதில் அன்று ஒரு நாளுக்கு நான் பெற்ற சம்­பளம் வெறும் ஐம்­பது ரூபா. அந்த ஐம்­பது ரூபா­வில்தான் எனது மூன்று வேளை பசி­யையும் தீர்த்துக் கொள்ள வேண்டும். எனது வயதில் வாழ்­ப­வர்­க­ளுக்கு ஏற்­படும் ஆசைதான் அன்று எனது மன­திலும் ஏற்­படும். 

அவ்­வ­ளவு ஆசையும் தம்­புள்ள மரக்­கறி கடையில் மரக்­க­றி­யோடு காலை முதல் இர­வு­வரை மல்லுக் கட்­டு­வதால் அந்­த ஆ­சை­களும் மரக்­க­றி­யோடு சென்­று­விடும் என்றார் ஆதங்­கத்­துடன்.

DSC08192

பாட­சாலை சென்று கல்வி கற்கும் வயது. எனது வயதை எனது முகமும் பேச்சின் குரலும் அடை­யா­ளப்­ப­டுத்­தி­விடும். கடைக்கு வருகைத் தரும் வாடிக்­கை­யா­ளர்­களில் நல்ல மனதை கொண்ட சிலர் என்னைப் பார்த்து பெரும் கவ­லைப்­ப­டு­வார்கள்.

தன்னைப் பற்றி கவ­லைப்­ப­டாமல் என்னைப் பார்த்து துன்­பப்­ப­டு­ப­வர்­களை பார்த்து எனது உடலில் வலி எடுக்கும். என் மீதும் துன்­பப்­படும் மனி­தர்­களும் எம்­மோ­டு­தானே வாழ்­கி­றார்கள் என சில நேரங்­களில் நான் எனக்குள் பெரு­மைப்­ப­டு­வதும் உண்டு.

அப்­போது இவ்­வா­றான நல்ல மனி­தர்கள் "நோயற்ற வாழ்வும் குறை­வற்ற செல்­வமும்" பெற்­று­வாழ வேண்­டு­மென இறை­வ­னிடம் பிரார்த்­தனை செய்துக் கொள்வேன்.  சில இளம் பெண்­களும் வய­தான அம்­மா­மார்­களும் நான் எனது வயது, கல்­வியைத் தொலைத்து மரக்­கறி மூடை­க­ளுடன் சமர் செய்­வதை கொண்டு என் மீது பரி­தாபம் கொண்டு பணம் தரு­வார்கள். அப்­போது நான் பணம் பெற மறுத்­து­வி­டுவேன்.

அதற்குக் காரணம் அக்­ கடை முத­லாளி நான் வாடிக்­கை­யா­ள­ரிடம் பணம் பெறு­வதைக் கண்டால், என் மீது சந்­தே­கத்தை வளர்த்து கொள்வார். பின்னர் என் தொழி­லுக்கும் சங்கு ஊதப்­பட்டு விடும். இதி­லி­ருந்து சிலர் பணம் பெற மறுப்­பதால் சிற்­றுண்டி வகை­களை கடை­களில் வாங்கி வந்து தரு­வார்கள்.

அவை­களை அன்­போடு பெற்று ஏனைய எனது நண்­பர்­க­ளோடு இணைந்து பகிர்ந்து சாப்­பி­டுவேன். அப்­போது கிடைக்கும் சந்­தோ­ஷத்­திற்கு எல்­லையே இல்லை. இவ்­வாறு தம்­புள்ளை சந்­தையில் 12 வரு­டங்­களை தொலைத்தேன். ஒரு நாள் சந்­தையில் மழை நேரத்தில் வழுக்கி இலை­ கோவா மூட்­டை­யோடு சரிந்து விழுந்தேன்.

அப்­போது சக­தியில் நான் குப்­புற விழுந்­து­கி­டக்க என் மீது கோவா மூடை மல்­லாந்து படுத்துக் கிடந்­தது. கஷ்­டப்­பட்டு கோவா மூடையை சக­தியில் தள்­ளி­விட்டு எழும்­பு­வ­தற்கு முயன்றேன். என்னால் எழ முடி­ய­வில்லை. உடல் முழு­வதும் சேற்று நீரில் கசங்கி இருந்த நேரம் அது.

என்னைச் சுற்றி கூட்­டமாய் கூடி­விட்­டனர். எனது நண்­பர்கள் என்னைத் தூக்கி நிறுத்தினர். என்னால் நிற்க இய­ல­வில்லை. அப்­போது எனது உடலின் பின்­ப­கு­தியில் முள்­ளந்­தண்டு முறிந்து நரக வேத­னையை ஏற்­ப­டுத்­தி­யது. எத்­த­னையோ வலி­களை என் வாழ்க்­கையில் ஏற்றுக்கொண்ட என் உடல் இவ்­ வ­லியை ஏற்க மறுத்­தது” என்றபோது அவரின் முகத்தில் சோகம் அப்பிக் கொண்­டது.

பழைய சோகத்­தி­லி­ருந்து மீண்ட சர­வ­ண­மூர்த்தி மீளவும் தொடர்ந்தார். “ஒரு­வாறு முள்­ளந்­தண்டு முறி­வுக்கு வைத்­தியம் செய்து சுகம் பெற்றேன். முள்­ளந்­தண்டு முறிந்­ததால் முன்­னரைப் போன்று மரக்­கறி சுமை­களை என்னால் சுமக்க முடி­ய­வில்லை. அதன்பின்னர் இயல்பு நிலைக்குள் என்னால் திரும்ப முடி­ய­வில்லை.

பின்னர் எனது நண்பர் மூல­மாக கொழும்பு வந்­த­டைந்தேன். இங்கு சுவீப் டிக்கெட் விற்­பனை முக­வ­ரிடம் தொழி­லுக்குச் சேர்ந்தேன். கட ந்த ஐந்­தரை வரு­டங்­க­ளாக அதிர்ஷ்­ட­லாபச் சீட்டு விற்­ப­னையில் ஈடு­பட்­டுள்ளேன்” என்­றவர் எங்­களைப் பார்த்துச் சிரித்தார்.

ஒரு நாளைக்கு சுமார் பத்து கிலோ­மீற்றர் வரை சைக்­கிளில் சுவீப் தட்டைப் பொருத்தி, சைக்­கிளை உருட்டிக் கொண்டே நடைப் பய­ணத்தில் விற்­ப­னையில் ஈடு­ப­டுவேன். முள்­ளந்­தண்டு உடைந்­த­மையால் பல கிலோ­மீற்றர் தூரத்­துக்கு சைக்­கிளை மிதிக்க இய­லாது. வெயி­லிலும் மழை­யிலும் காய்ந்தும் நனைந்தும் எனது நடை பயணம் ஐந்­தரை வரு­டங்­க­ளாக தொடர்­கி­றது.

சுவீப் டிக்கெட் விற்­பனை மூல­மாக பலரின் வாழ்க்கையை பிரகாசிக்க செய்துள்ளேன். ஒரு இலட்சம், 10 இலட்சம், 20 இலட்சம் என எனது சுவீப் டிக்கெட் விற்பனை மூலமாக பலரை அதிர்ஷ்டசாலிகளாக பரிமாணம் பெற வைத்துள்ளேன்.

3 கோடியே 84 இலட்சம் ரூபா வென்ற ஒரு அதிர்ஷ்டசாலியையும் உருவாக்கியுள்ளேன். இது எனது சுய தொழில். இத் தொழில் மூலமாக இன்னும் பலரை கோடீஸ்வரராக, இலட்சாதிபதிகளாக மாற்றம் பெற வைப்பேன். இதுவே எனது கனவாகும் என்கிறார்  சத்தியமூர்த்தி சரவணமூர்த்தி

http://metronews.lk

  • தொடங்கியவர்

ஏழை குடும்பத்துக்கு அழகிய வீட்டை அமைத்து கொடுத்த அதிரடி கிரிக்கெட் வீரர்..! (காணொளி இணைப்பு)

 

 

மாத்தளையில் ஏழை குடும்பமொன்றுக்கு இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரட்ண டில்சான் அழகிய வீடு ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளார்.D00484d840--Dilshan.jpg

மாத்தளை அகலகவத்த பிரதேசத்தைச் சேர்ந்த நிர்மலா பத்மகுமார மெனிக்கே என்ற பெண்ணுக்கு இவ்வாறு வீடு ஒன்றை அமைத்துக்கொடுத்துள்ளார்.

 

குறித்தப் பெண்ணின் கணவர் கடந்த  வருடம் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தனது இரு பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக தனது வீட்டை ஐந்து இலட்சத்துக்கு அடகு வைத்துள்ளார்.

பின்னர் அடகு வைத்த வீட்டை திருப்ப முடியாமல் போனதையிட்டு தனக்கு உதவி செய்யுமாறு பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளார்.

இதனைப் பார்த்த டில்சான் 25 இலட்சம் ரூபாவை வீடு அமைக்க கொடுத்துள்ளார்.

வீட்டின் கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று வீட்டை திறந்து வைத்து உரிய நபர்களிடம் ஒப்படைத்தார்.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

ட்ரெண்டி... வெஸ்டர்ன் பாணியில் நம்ம ஊர் நைட்டிகள்!

இது புதுசு யாழ் ஸ்ரீதேவி

 

பெண்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமான உடை நைட்டி. ரிலாக்ஸ்டாக உணரச்செய்கிற வசதியான உடையும் இதுதான். பல ஆண்டுகளாக ஒரே பாணியிலேயே தயாரிக்கப்பட்டு வந்த நைட்டிகள், இப்போது புதிய வடிவங்களுக்கு மாறி, ஃபேஷன் உலகிலும் இடம்பிடித்துவிட்டன. ஆம்... தோள் தொட்டு, கால் பட்டு தொடரும் நைட்டியின் ஸ்டைல் அவ்வப்போது மாறினால்தானே பெண்களின் விருப்பமும் தொடரும்..? திருப்பூர் நிஃப்ட்-டி காலேஜ் ஆஃப் நிட்வேர் ஃபேஷன் மாணவிகளின் சிந்தனையில் உதித்த இந்த மாற்றம் மார்க்கெட்டுக்கும் வரப்போகிறது!

p44a.jpg

`எம்.பி.ஏ அப்பாரல் பிசினஸ்’ முதலாம் ஆண்டு மாணவிகளின் கைவண்ணத்தால் உருவான நைட்டி ஃபியூஷனில் வெஸ்டர்ன் ஸ்டைல் வசீகரிக்கிறது. அனுப்பிரியா, சந்தியா, வாசுகி, தனுஸ்ரீ, கீர்த்தனா, வைஷ்ணவி... இந்த ஆறு பெண்களும் சேர்ந்து உருவாக்கிய நைட்டிகளுக்கு `ட்ரெண்டி’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். இந்த ட்ரெண்டி நைட்டிகளுக்கு உயிர்கொடுத்த மாடங்களையும் ஸ்டைலாக க்ளிக் செய்து நமக்கு அளித்திருக்கிறார், `காஸ்ட்யூம் டிசைனிங்’ முதலாம் ஆண்டு மாணவி சௌமியா.

``காட்டன் ஃபேப்ரிக் அல்லது பனியன் கிளாத், சிங்கிள் பீஸ் உடை... அப்படியே உள்ளே புகுந்து உடலை மூடிக்கொள்கிற மாதிரி ஒரு ஸ்டைல்... இப்படி ஒரே மாதிரி நைட்டியை வெறுக்கும் பெண்கள் பலரும் கனவில் வந்து எங்களைத் திட்டித் தீர்க்கிற மாதிரி ஒரு ஃபீல். வீட்டுக்கு விருந்தாளி வந்துட்டா ஷால் தேடி ஓட வேண்டிய சங்கடம். வீட்டுவேலைகளுக்கு இடையில் பக்கத்துக் கடைக்குக்கூட டக்குன்னு கிளம்ப முடியாது. அதனால, எல்லாப் பிரச்னைகளையும் ஒரே மாத்திரையில் குணமாக்கிற மாதிரி ஸ்டைல மாத்திட்டோம்’’ என்று அறிமுகம் தருகின்றனர் இந்த ஸ்டைலிஷ் மாணவிகள்.

`ட்ரெண்டி நைட்டியில் அப்படி என்ன ஸ்பெஷலோ?' சொல்கிறார் தனுஸ்ரீ...

‘‘நைட்டியோட கான்செப்டை மாற்றுவதற்காக ஃபேப்ரிக்கையே மாற்றினோம். காட்டனுக்குப் பதிலா டெனிம். இது ஜீன் லுக் தரும். ஷாஃப்ட் டெனிம் ஃபேப்ரிக்ல நிறைய கலர்ஸ் தேடினோம். டெனிம்ல டிசைன் பண்றதே ரொம்ப ஸ்பெஷல். வெஸ்டர்ன் ஸ்டைல் காலர், கட்டிங்... இப்படி  அடுத்தடுத்த விஷயங்கள் அழகாவே அமைஞ்சது.

p44b.jpg

இதில் சுருக்கம் விழாது. எத்தனை முறை துவைத்தாலும் கலர் போகாது. விரைவில் உலர்ந்துவிடும். டெனிம் கிளாத் நைட்டியைப் பராமரிக்கிறதும் ஈஸி. மெல்லிய டெனிம் கிளாத் நைட்டி போட்டுக்கிட்டா, உடலோடு மேகத்தைக் கட்டிக்கிட்டாற்போல உணரலாம்!’’

வெஸ்டர்ன் ஸ்டைலையும் டெனிமையும் மிக்ஸ் செய்த கலாட்டாவைப் பகிர்ந்து கொள்கிறார் அனுப்பிரியா... ‘‘வெஸ்டர்ன் ஸ்டைல் உடைகள் ஹெவியா இருப்பதில்லை. வழக்கமான உடைகளுக்கு நேரெதிர் அனுபவங்களைத் தரும். உடலில் சிக்கெனப் பொருந்தும். பருமனான பெண்களையும் ஸ்லிம் தோற்றத்தில் காட்டும். அடிப்படையில், இதுபோன்ற நைட்டிக்கு ஒன்றரை மீட்டர் டெனிம் துணிதான் தேவை. காலர், கழுத்து, கை, பாட்டம்னு அங்கங்க எக்ஸ்ட்ரா பிட் வொர்க் சேர்த்து வெஸ்டர்ன் ஸ்டைலை மிளிர வெச்சிருக்கோம். தாய்மைக் காலத்தில் பால் புகட்ட வசதியா ஓப்பனிங் வெச்சிருக்கோம்.

p44c.jpg

காட்டன் நைட்டில இருக்கும் பிரச்னைகள் எதுவும் டெனிம்ல இல்ல. டிரான்ஸ்பரன்டா தெரியாது. முன் கழுத்து பகுதிக்கான டிசைனில், குனிந்து, நிமிர்ந்து வேலை பார்த்தாலும் சங்கடப்பட வேண்டிய அவசியமில்லாம பார்த்துக்கிட்டோம். உட்கார்ந்து, எழுந்து செய்ய வேண்டிய வேலைகளின்போதும் டெனிம் கிளாத் வளைந்து கொடுக்கும். வீட்டில் தடபுடல் சமையலுக்கு இடையில் வெளியில் ஷாப்பிங் செல்ல நேரிடலாம். அதற்காக புதிதாக உடுத்திக் கொண்டிருக்கத் தேவையில்லை. ட்ராவல், டிரைவிங் பண்ணும்போதும் இது ஸ்டைலாகவே இருக்கும். டெனிம் ஃபேப்ரிக் நைட்டியைக் கொஞ்சம் ஷார்ட்டாகத் தைத்து லெகின்ஸுடன் மேட்ச் செய்தும் போடலாம். பெண்கள் ஆசைப்படும் அத்தனை ஸ்டைலும் இதில் சாத்தியம்!’’

அட... இனி ஆசை ஆசையாக நைட்டியும் அணியலாம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
விட்ட காலத்தைப் பிடிக்க முடியாது
 
 

article_1490156120-op%5Bkipo%5B.jpgவிட்ட காலத்தைப் பிடிக்க முடியாது. இருக்கும் காலத்தைத் தொலைக்கலாகாது. காலப் பெருவெளியில் எமது பணிகள், அமைந்தாலே எங்கள் சுவடுகள் பிறருக்குப் புலனாகும்.

ஒன்றுமே செய்யாத மாந்தர்களின் அடையாளம் என்று எதுவுமே இல்லை. ஆனால் எவருக்கும் தீமை செய்திடாமல் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் மக்களினால் மெச்சப்படுகின்றார்கள். 

கடிக்காத பாம்பைக்கூட அடித்து வேடிக்கை பார்ப்பதுண்டு. நல்லவர்களுக்கும் பொல்லாங்கு செய்யும் பேர்வழிகள், குரூரமாகத் திருப்திப்பட்டுக் கொள்வார்கள். இறைவன் சாபத்தையே கோர்த்துக் கொள்வார்கள். 

காலம் நல்லது செய்பவர்களையும் பொல்லாததை இஷ்டத்துடன் செய்பவர்களின் ஜாதகங்களையும் குறித்துக்கொள்ளும். வாழும் காலத்தைக் கேவலமாக்கும் நபர்களை இது தண்டனை வழங்கிவிடும். காலத்துக்கு உருவம் கிடையாது. இது செய்யும் சாதனைகளோ பெரிது, பெரிது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Text und im Freien

#WorldWaterDay மார்ச் 22: உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது

நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.

world water day 2017

  • தொடங்கியவர்

சிறகுகள் தந்த இனிய கணவர்களுக்கு மனைவிகளின் பிரிய நன்றிகள்!

கணவர்

ல்லறத்தில் பரஸ்பர அன்பு, நட்பு, மரியாதை எல்லாம் கணவனுக்கும் மனைவிக்கும் சாத்தியப்பட்டுவிட்டால் மகிழ்ச்சிக்கு அளவேது? இப்படியான நம்பிக்கையோடு கணவர்  கரம் கோர்த்து துவங்கும் வாழ்க்கை தான். சில ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கும்போது புயல் அடித்துப் போன கூடாராம் போல மாறிவிடுகிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள வேண்டும் எனவே அனைவரும் விரும்புகிறோம். சில ஆண்கள் இந்த மாற்றத்தின் ரோல் மாடல்களாக மாறியுள்ளனர். இதனால் பல குடும்பங்களில் இந்தப் புரிதல் பரவலாக சாத்தியப்பட்டு வருவது கண்ணுக்கு அழகு. 

ஆணும், பெண்ணும் சமமாக வேலை பார்க்கும், பொறுப்புகளை ஏற்கும் நிலை உருவாகியுள்ளது. நான் ‘ஆண்’ என்ற எண்ணத்தில் இருந்து ஆண்கள் இறங்கி வந்துள்ளனர். பெண் பணிக்குச் செல்வதே தடை மிகுந்ததாய் இருந்த காலம் மாறியிருக்கிறது. வேலைக்காகப் பெண்கள் வெளியூர் செல்ல நேர்ந்தாலும், குழந்தை குட்டிகள் உட்படக் குடும்பச் சுமையையும் அவள் தோளில் ஏற்றி அனுப்பும் வழக்கம் ஆங்காங்கே அறுந்து வருவது நல்மாற்றம்.

மாநகர வேலையோ, வெளிநாட்டு புராஜெக்டோ... தன் மனைவி இடம்பெயர நேரும்போது, குழந்தை வளர்ப்பு, குடும்பப் பராமரிப்பு உள்ளிட்டவற்றைப்  பொறுப்பேற்றுக்கொண்டு, 'போய் வா' என்று புன்னகை பிரியாமல் அனுப்பி வைக்கும் கணவர்கள் அன்பில் உயர்கிறார்கள். சொந்த ஊரில் கணவரும், குழந்தையும் இருக்க, கிடைத்த கார்ப்பரேட் வேலைவாய்ப்பை தக்கவைக்க சென்னை வந்துவிட்டார் சித்ரா. அடுத்த கல்வியாண்டில் கணவரும், மகளும் குடிபெயரத் திட்டம். பகலில் பணியில் ஆற்றல் எல்லாம் கரைந்து விடுதி அறைக்குத் திரும்பியதும் வீட்டின் நினைவு வாட்ட, ஒருவித அவஸ்தையுடன் தன் கணவருக்கு அழைக்கும் சித்ராவுக்கு, 'பிள்ளைங்க ஹோம்வொர்க் எல்லாம் முடிச்சிட்டாங்கப்பா. டின்னர் சாப்பிட்டு இருக்கோம். நீ பாப்பாகிட்ட பேசு...' என்று அந்தச் சூழலை இயல்பாக்கும் அவர் கணவர், வரம். பெண் வேறு ஆணுடன் பேசினால் கெட்டுப் போய்விடுவாள், தனியாக இருந்தால் எல்லை மீறிவிடுவாள் என்ற மூடநம்பிக்கைக்குள் முடங்காத ஆண்கள் இதுபோன்ற நம்பிக்கை முயற்சிகளைச் சாத்தியப்படுத்தியுள்ளனர். 

குடும்பம் என்ற அமைப்புக்குள் பெண் மீதான ஒடுக்கு முறைகள் இருக்கவே செய்கின்றன. எனினும் தன்னை மேம்படுத்திக்கொள்வது, தன்னோடு வாழும் ஆணைப் புரிந்துகொண்டு, தன்னை அவருக்குப் புரியவைப்பது இன்றைய பெண்ணின் தேவை. இந்த இரண்டு விஷயங்களே அந்தக் குடும்பம் என்ற அமைப்புக்குள்ளும் பெண் தனது சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான சூழலை உருவாக்குகிறது. குடும்ப அமைப்புக்குள் பரஸ்பரம் புரிதலுடன் பயணிக்கத் துவங்குகிற இருவரும் தங்களது தனித்தன்மையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கான கொள்கைகளை வகுத்துக்கொள்ள வேண்டும். ஆம்... இன்று பெண்ணை தனித்தியங்க அனுமதித்து குடும்ப பொறுப்புகளை ஏற்றிருக்கும் குடும்பங்களின் மகிழ்ச்சிக்கு இதுபோன்ற கொள்கைகளே காரணம். 'என் மனைவியோட டிரெஸிங்கில் இருந்து அவ ஏடிஎம் கார்டு வரை, எதிலுமே நான் தலையிட மாட்டேன். அதேபோல, மாசத்துக்கு ஒரு அவுட்டிங் என் ஃப்ரெண்ட்ஸ்கூட போக விரும்புற என்னோட சுதந்திரத்துலயும் அவ தலையிட மாட்டா. இப்படி 'உன்னோட சந்தோஷம் எது?'னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கான ஸ்பேஸை நாங்க பரஸ்பரம் கொடுக்கிறதுதான் எங்க இல்லற பலம்' என்று மிகுந்த புரிதலுடன் ரமேஷ் பேசியபோது, அவர் தோளில் அவருடைய மனைவி செல்லமாகத் தட்டியது, அழுத்தமான, அன்பான ஆமோதிப்பு. 

கணவர்

இன்றைய வாழ்க்கைச் சூழலின் பொருள் தேவை பெண்ணும் வேலை பார்க்கலாம் என்ற சுதந்திரத்தை வழங்கியுள்ளது. பெண் படித்து வேலைக்குச் சென்ற பின்னும் அவளுக்கு வீட்டுச் சுமைகள் குறையவில்லை. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் மருமகளாக வந்தவளே வீட்டின் அத்தனை பணிகளையும் செய்ய வேண்டும் என்ற மறைமுக விதியை மாமியார்கள் கடைப்பிடித்து வந்தனர். இதை இன்றைய கணவர்கள் மாற்றியுள்ளனர். கூட்டுக் குடும்பமோ, தனிக்குடும்பமோ...இருவரும் அலுவலகம் செல்லும் முன்பான சமையல் வேலையிலும் ஆண்களின் பங்கு அதிகரித்துள்ளது. மனைவியின் மாதவிலக்கு நாட்கள் மற்றும் உடல்நிலை குறைபாடுள்ள நேரங்களில் சமையல் பணியில் இருந்து பெண்களுக்கு விடுமுறை தரும் ஆண்களும் உள்ளனர். 'ரெண்டாவது டெலிவரிக்கு நான் அம்மா வீட்டுக்கு ஊருக்குப் போயிட, கிட்டத்தட்ட நாலு மாசம் என் முதல் குழந்தையை, சமையல் செஞ்சு, ஸ்கூலுக்கு அனுப்பி, ஹோம்வொர்க் சொல்லிக்கொடுத்துனு என் கணவர்தான் பார்த்துக்கிட்டார். அதுமட்டுமில்ல... எப்பவுமே பாத்திரம் துலக்குறது, வாஷிங் மெஷின்ல துணி போடுறது, சமையல்னு வேலைகளைப் பகிர்ந்துக்குவார். வீட்டுக்கு சொந்தக்காரங்க யாராச்சும் வந்தா, 'ஏங்க... வேண்டாம் விடுங்க நான் பார்த்துக்குறேன்'னு சொன்னாலும் கேட்காம, 'ஏன்... என் வீட்டு வேலைகளை நான் பார்க்கிறதுல அவங்க நினைக்க என்ன இருக்கு? என்னைப் பார்த்து அவங்களும் கத்துக்கட்டும்'ன் அவங்களுக்கு முன்னாடியே சிரிச்சிட்டே சொல்வார்' என்றபோது, காயத்ரியின் பெருமைப் புன்னகை காதுவரை ஓடியிருந்தது. 

திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் என்பது ஆணின் எதிர்பார்ப்பாகவும் மாறியுள்ளது. பிரைவஸியை விரும்பும் ஆண்களும் தனிக்குடித்தனம் செல்ல பச்சைக் கொடி காட்டி விடுகின்றனர். பிறந்த இடத்தில் இருந்து வேருடன் பிடுங்கப்பட்டு புதிய குடும்பத்துக்கு வரும் பெண் அவளுக்கான முழு அன்பையும் கணவனிடம் பெற இது போன்ற தனிக்குடித்தன வாழ்க்கை வாய்ப்பளிக்கிறது. திருமணத்துக்குப் பின் கணவனுக்குத் தோழிகள் இருப்பது போல, மனைவிக்கும் தோழன்கள் உள்ளனர். ஆண், பெண் நட்பு என்பதை இருவரும் பரஸ்பரம் புரிந்துகொண்டு அனுமதிப்பதன் வழியாக இருவரது பிரைவஸியும் மதிக்கப்படுகிறது. குடும்பம் சார்ந்த பொறுப்புகளில் விலகாமல் இருப்பதும், பெண்ணுக்கு நம்பிக்கை அளிப்பதும் இந்த இடத்தில் ஆணின் முக்கியக் கடமையாக உள்ளது. இதில் இன்றைய ஆண்கள் மிகத் தெளிவாக உள்ளனர். ஒருவரது செல்போனை மற்றவர் ஆராய்ச்சி செய்யாமல் இருப்பதே குடும்ப அமைதிக்கு வலிமை சேர்க்கிறது. சந்தேகப் பிரச்னைகள் தலை எடுக்காமல் தடுக்கிறது. 'ஃபேஸ்புக்ல ஏன் உன் போட்டோவை போட்ட? இவனெல்லாம் ஏன் உன் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கான்? வாட்ஸ்ஆப்-ல பசங்களும் இருக்கிற காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் குரூப்ல ஏன் இருக்க? - இது மாதிரி நான்சென்ஸ் கேள்வியெல்லாம் சண்முகம் என்னைக் கேட்டதேயில்ல. ஏன்னா, எந்தச் சூழலா இருந்தாலும் என்னை நான் பத்திரமா பாத்துக்குவேன்னு அவனுக்குத் தெரியும். லவ் யூ புருஷா' என்று கண்ணடிக்கும் வர்ஷினி சுவாசிக்கும் சுதந்திரம், சூப்பர். 

வீடு, பராமரிப்பு உள்ளிட்ட அத்தனை பணிகளையும் பெண்ணிடம் சுமத்தாமல் பணிகளையும் பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்கின்றனர் ஆண்கள். ஒரு சில வீடுகளில் செலவுகளை ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொண்டு நிறைவேற்றுகின்றனர். அவரவர் சம்பாத்தியத்தில் செலவுகள் போக எதில் முதலீடு செய்யலாம், எப்படிச் சேமிக்கலாம் என்பதிலும் இந்தச் சுதந்திரம் இருவருக்குமே உண்டு. இத்தனையும் தாண்டி திருமணத்துக்குப் பின் ஆர்வம் உள்ள பெண்கள் மேல்படிப்பைத் தொடரவும், அதில் வெற்றி பெறவும் ஒத்துழைக்கும் கணவர்களின் பங்கு அளப்பறியது. குறிப்பாக, தொழில்துறையில் சாதிக்கும் பெண்கள் பலரும் திருமதிகளே என்ற செய்திக்குப் பின் நாம் கவனிக்க வேண்டியது, அவர்கள் கணவர்களின் ஒத்துழைப்பு.  

இப்படி பெண் உயரவும், வளரவும், பொருளாதார ரீதியாகத் தன்னை வளப்படுத்திக் கொள்ளவும் தோள் கொடுக்கும் கணவர்கள் இன்று பெருகியுள்ளனர். தன்னோடு வாழ வந்தவளை சக மனுஷியாய் மதிப்பவன் அவள் மனதில் நண்பனாய் வேரூன்றுகிறான். அவள் வலிகளைப் புரிந்துகொண்டு அன்பு செய்பவன் காதலுக்கு உரியவன் ஆகிறான். எல்லாத் துன்பங்களையும், பிரிவுகளையும் தாங்கிக்கொள்ள அவளுக்குத் தேவை அவனது நம்பிக்கையும், சிறு துளி அன்பும்தான். அப்படிப் புரிந்துகொண்டு அவளோடு கரம் கோத்து தோழனாய், காதலனாய் கடைசி வரை வரத் தயாராக இருப்பவனே... கணவன் என்ற பொறுப்பில் கை தட்டல்களை அள்ளுகிறான், மனைவியின் நன்றியை நெஞ்சம் நிறைய வாங்கிக்கொள்கிறான். 

கணவர்

ஆம்... வாழ்வின் கடைசி நிமிடம் வரை அன்பு செய்து, அன்பால் வென்று, அவளைத் தனதாக்கிக்கொள்ளும் அன்புள்ள ஆண்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகுக. இந்தப் புரிதல் பரவலாகும்போது குடும்பங்கள் பிரிவது குறையும். உறவுச் சிக்கல்கள் இன்றி மகிழ்ச்சியான வாழ்வும், பெண்ணுக்கான உயர்வும் நிகழும். இதில் உங்கள் பங்குதான் பிரதானம் ஆண்களே! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

குறும்புக் குழந்தையால் பிரபலமான பி.பி.சி. அப்பா! ‘க்யூட்’ வைரல் வீடியோ #BBCdad

வீடியோ
 

பிபிசி செய்தி தொலைக்காட்சிக்காக, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு பேராசிரியர்,  ஸ்கைப் (Skype) மூலம் பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். அது பற்றித் தெரியாத அவருடைய நான்கு வயது மகள், அப்பாவைப் பார்க்க மூடியிருந்த அந்த அறையின் கதவைத் திறந்துகொண்டு உள்ள நுழைகிறாள். தன் அருகில் குழந்தை வந்ததை தர்மசங்கடத்தோடு எதிர்கொண்ட பேராசிரியர், அவள் கையில் பொம்மையைக் கொடுத்து பார்க்காமலேயே தள்ளிப் போகச் சொல்கிறார்.


அதற்குள் பேராசிரியரின் 8 மாத குட்டி தன் ரோலிங் சேரில் அப்பாவின் அறைக்குள் வர, என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார். அதற்குள் வேகமாக வந்து சறுக்கியபடி தன் இரண்டு குழந்தைகளையும் இழுத்துக் கொண்டு செல்கிறார் பேராசிரியரின் மனைவி. நெட்டிசன்களிடையே வைரலாகிறது இந்த வீடியோ.  


இந்த சம்பவம், அந்த பேராசிரியருக்கு தர்மசங்கடமா அல்லது  அவரின் பொறுப்பற்ற நடத்தையா என்ற விவாதத்துக்குள் செல்வதற்கு முன்னரே, அந்த நான்கு வயது சிறுமியின், “க்யூட்” குறும்பால் ஈர்க்கப்பட்ட ‘நெட்டிசன்கள்’, இந்த வீடியோவை வைரலாக்க ஆரம்பித்துவிட்டனர். இப்போது, அந்த சுட்டிப்பெண் இணையத்தில் செம்ம  ஹிட்! அவள்  அந்த  வீடியோவில் உடுத்தியிருந்த ஆடை, கண்ணாடி ஆகியவையும் ‘டிரண்டாகி’, ஒரே வாரத்தில் அந்தச் சிறுமி “ஃபேஷன் ஐகான்’னாவே மாறியிருக்கிறார். 
ராபர்ட்  இ  கெல்லி என்பவர், கடந்த வாரம்  பிபிசி செய்தித் தொலைக்காட்சிக்கு,  ’செளத் கொரியா’ அரசியல் நிலவரம் பற்றி பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். இதனையடுத்து நடந்த இந்த ‘க்யூட்டான’ சம்பவம், அவரின் மொத்த குடும்பத்தையும்  “யூடியூப்” நட்சத்திரங்களாக்கி இருக்கிறது. மேலும், ராபர்ட் இ.கெல்லியை அனைவரும் ‘பிபிசி அப்பா’ என்று செல்லமாக அழைக்க ஆரம்பித்தனர். 


இதனையடுத்து அவரை அந்த ஊர் பத்திரிகையாளர்கள் துரத்த,  ஒரு பத்திரிகையாளர் கூட்டமே நடத்தி, அன்று என்ன நடந்தது என விவரித்திருக்கிறார். இதுகுறித்து, ராபர்ட் பேசுகையில், “அன்று , என் மகள் (மரியோன் கெல்லி/Marion Kelly) பள்ளியில் அவளது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிவிட்டு  திரும்பியிருந்தாள்.  அவள் அன்று மிக உற்சாகமாக இருந்தாள். என் மனைவி மற்றொரு அறையில் இருந்து நான் பிபிசிக்கு அளித்துக்கொண்டிருந்த பேட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது தொலைக்காட்சியில் குழந்தைகள் தெரிவதைப் பார்த்து, என் அறைக்கு ஒடி வந்தார்”,  என்று விளக்கம் அளித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், அதற்காக மன்னிப்புக் கேட்டு, பிபிசி தொலைக்காட்சிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். ஆனால் பிபிசி நிறுவனத்தினரோ இந்த வீடியோவை ஆன்லைனில் போடலாமா என்று கேட்டிருக்கிறார்கள். தன்னுடைய குழந்தைகளைப் பார்த்து அனைவரும் சிரிப்பார்கள் என்று முதலில் மறுத்த பேராசிரியர், பிறகு இது எல்லா குடும்பங்களிலும் நடக்கும் நிகழ்வுதானே என்று அனுமதி அளித்திருக்கிறார். இந்த வீடியோவை , பிபிசி  முகநூல் பக்கத்தில் மட்டும், இதுவரை 85 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். 

மேலும், அந்த வீடியோ குறித்து, ராபர்ட் இ கெல்லி, கூறுகையில்,  “நான் தான் முட்டாள்தனமாக அந்த அறைக் கதவை பூட்டாமல் விட்டுவிட்டேன்”, என்றும் வருத்தம் தெரிவித்தார்.
ஆனால், தர்மசடங்கமாக ஆரம்பித்த விஷயம், இப்போது  சுவாரஸ்சியமான நிகழ்வாக மாறியிருப்பதில், குஷியாக இருக்கின்றனர், ராபர்ட் கெல்லியின் குடும்பத்தினர்!

அந்த ‘க்யூட்’ வைரல் வீடியோவை நீங்களும் பார்க்க:

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வாழ்க்கை தத்துவம் சொல்லும் முத்தான மூன்று கதைகள்... #MoralStory

"ஒவ்வொரு மனிதனும் எந்தவித சூழ்நிலையையும் எப்படி கையாள வேண்டும்" என்பதை அறிவுறுத்தும் அற்புதக் கதைகள் இவை.அப்படிப்பட்ட கதைகளில் சிலவற்றைப் பார்ப்போமா

 

 "நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழி" 

கதைகள்


அது ஓர் அழகிய நகரம். அந்த நகரத்தின்  நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர்  அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான். 

அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் "ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி?"என்று கேட்டான்.

அதற்குக் காவலாளி "ஏன் கேக்குற தம்பி ? இந்த ஊருக்கு குடிவரப் போறியா?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

"ஆமாம் பெரியவரே. நான் முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம். எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும் திட்டிக்கிட்டும் , எப்படா அந்த ஊரை விட்டு வருவோம்னு இருந்தது. அதான் கேட்டேன் இந்த ஊர் எப்படி?" என்று கேட்டான்.

''நீ வேற தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட ரொம்ப  மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்னை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊரு சரிப்படாது தம்பி " என்று கூறி அந்த வாலிபனை  வெளியே வழியனுப்பி வைத்தார். 
சிறிது நேரம் கழித்து,

அவ்வழியாக  வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான்.

"ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி?"
பெரியவர் சிரித்துக்கொண்டே , "ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா ?"என்று கேட்டார்.

"ரெண்டு குழந்தையே இருக்குதுங்க ஐயா" என்றான்.

"அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வர்ற? உங்க ஊர்லயே வியாபாரம் பண்ணலாம்ல? " என்றார் காவலர்.

"எங்க ஊர் மாதிரி வராதுங்க.. அந்த ஊர் மக்கள் ரொம்பப் பாசக்காரங்க. என் குடும்பம் இப்போ வறுமையில இருக்கு. சம்பாதிக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன். நல்லா  சம்பாதிச்சிட்டு மறுபடியும் அங்கேயே போயிடுவேன்" என்று கண் கலங்கியபடியே கூறினான்.

"அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் ரொம்ப நல்லவங்க. தைரியமா நீ வியாபாரம் பண்ணலாம்" என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.

காவலாளியின் அருகில் இருந்த ஒருவர் இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்.

உடனே அவரிடம் "முதலில் வந்தவர்கிட்ட இந்த ஊர் பொல்லாததுன்னு சொன்னீங்க, இவர்கிட்ட மட்டும் நல்ல ஊர்ன்னு சொல்லுறீங்களே ஏன்?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அதற்குப் பெரியவர்  "இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம எப்பிடி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும்'' என்றார்.

 

"நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்"

கதைகள்


ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்  "என்ன ஒரு துரதிர்ஷட நிலை?" என்று பரிதாபமாக விசாரித்தனர்.

"இருக்கலாம்" என்று ஒரே வார்த்தையில் அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி பதிலளித்தார்.

அடுத்த நாள் தொலைந்து போன குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை  உடன் அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம்பக்கத்தினர், "நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி , இப்போ  நாலு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு" என்றனர்.

தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்  மறுபடியும் "இருக்கலாம்" என்று கூறி முடித்தார்.

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். "என்னப்பா, உனக்கு ஒரு நல்லது நடந்தா  அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க  ஆறு மாசத்துக்கும் மேல் ஆகும் போல, ரொம்ப கஷ்டமான நிலைமை" என்று கூறி ஆதங்கப்பட்டனர்.

விவசாயி பெரிதாக வருந்தாமல் "இருக்கலாம்" என்று அதே பதிலைக் கூறினார்.

ஒரே வாரத்தில் நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை.

இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர்.

இப்போதும் அந்த விவசாயி " இருக்கலாம்" என்று கூறினார்.

அவர் ஏன் எல்லாச் சூழ்நிலையிலும் ஒரே மாதிரியான சமமான மனநிலையில் இருந்தார் ?
காரணம் உண்டு. 

அந்த விவசாயி வாழ்வின் இயல்புகளைப் புரிந்துகொண்டவர். நாள்களில் நல்ல நாள் , கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் நமக்கு மறைமுகமாகப் பல பாடங்களை உணர்த்திக்கொண்டிருக்கின்றது. நல்லது கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். கஷ்டமான சூழ்நிலைகளில், இது நிரந்தரம் அல்ல நாளை என்று ஒன்று இருப்பதை மறக்கவேண்டாம்.

சந்தோஷமான சூழ்நிலையில் தலை கால் புரியாமல் ஆடக்கூடாது. யாருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதையும் தலைக்கு எடுத்துச் செல்லாமல், எதைப்பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நலம். சுகம் - துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது.

 

அனைத்தையும் சுமக்காதே !

கதைகள்


ஜென் துறவிகள் இருவர் தொடர்ந்து பெய்த மழையினால்  ஒரு குடிசையின் கீழ் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தனர். மழை நின்றதும் தங்களது இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்லும்போது, வழியில் ஓர் அழகான இளம் பெண் சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.

இதைக்கண்ட துறவிகளில் ஒருவர், "என்னாயிற்று பெண்ணே? ஏதேனும் உதவி தேவையா?"என்று கேட்டார்.

பதிலுக்கு அந்தப் பெண், "நான் என் தோழியின் திருமணத்துக்குச் செல்ல உள்ளேன். ஆனால், இந்தச் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. நடந்து சென்றால் நிச்சயம் என் அழகிய பட்டுப் பாவாடை பாழாகிவிடும்" என்று கூறி வருந்தினாள்.

"கவலைப்படாதே, என் தோள்களின் மீது ஏறிக்கொள். நீ சேர வேண்டிய இடத்தில் உன்னைச் சேர்த்துவிடுகின்றேன்" என்று கூறிவிட்டு அவளுக்கு உதவி புரிந்தார்.

திரும்பி வரும் வழியில் தன்னுடன் இருக்கும் மற்றொரு துறவி கோபமாக இருப்பது போல அவருக்குத் தோன்றியது. ''ஏன் என் மீது கோபமாக உள்ளீர்கள்?'' என்று கேட்க, அதற்கு அவர் ''நாம் ஒரு துறவி  என்பதை மறந்துவிட்டு அந்தப் பெண்ணை எப்படித் தொட்டுத் தூக்கலாம்? இது தவறானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?" என்று கேட்டார்.

உதவி செய்த துறவி, "தூக்கிய அந்தப் பெண்ணை அப்போதே நான் இறக்கிவிட்டேன், நீங்கள்தான் அந்தச் சம்பவத்தை இறக்காமல் மனதில் சுமந்துகொண்டு இருக்கிறீர்கள்"என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

நாமும் நமது வாழ்வில் பிறர் ஏற்படுத்திய காயங்களை மனதில் தூக்கிக்கொண்டு செல்கின்றோம். எது முக்கியம் எது தேவையற்றது என்பதைப் பகுத்துப் பார்க்கத் தெரிந்துவிட்டால் , வாழ்வு என்றென்றும் ஆனந்தமே.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

தொட்டால் பேசும் கூகுள் ஜாக்கெட்

தொடுதிரையைப்போல செயற்படும் ஜாக்கெட்டை லெவிஸும் கூகுளும் இணைந்து உருவாக்கியுள்ளன.

  • தொடங்கியவர்

"உலகின் மிகப்‌ பெரிய சவப்பெட்டி" - செர்னோபில் அறிவியல் ஆச்சர்யம்!

நீங்கள் உங்களைப் பொருத்திக்கொள்ள முடியாத கற்பனையல்ல இது. 1986ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 26ஆம் நாள். அது ஒரு சனிக்கிழமை. அன்று அது ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் செர்னோபில் அணு உலை. வழக்கமாக நடத்தப்படும் சோதனைகள் அன்றும் நடத்தப்படுகின்றன. 4வது உலையை பரிசோதித்துக்கொண்டிருக்கும் போது, திடீரென விபத்து ஏற்பட்டுவிடுகிறது. தீப்பற்றத் தொடங்குகிறது. கிட்டத்தட்ட 9 நாட்கள் தொடர்ந்து எரிந்துகொண்டேயிருக்கிறது. ஹெலிகாப்டரில் பறந்து மண்ணையும், கரியத்தையும் அதன் மீது தூவுகிறார்கள். சுரங்கத் தொழிலாளர்கள், அணு உலை அருகே சுரங்கம் தோண்டி வெளியேறும் அணுக் கழிவுகளைத் தடுக்கிறார்கள். கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வரை ஒன்றிணைந்து, 9 நாட்களில் தீயை அணைத்து, தொடர்ந்து அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுகிறார்கள். 

செர்னோபில் அணு உலை விபத்து

 200 டன் அளவிற்கான கதிர்வீச்சு நிறைந்த அணுக்கழிவு, 30 டன் அளவிற்கான கதிர்வீச்சு நிரம்பிய துகள்கள், 16 டன் அளவிற்கான யுரேனியம் மற்றும் புளுட்டேனியம் நிறைந்து கிடந்த அந்தப் பகுதியைப் பாதுகாக்க அதன்மீது ஒரு கான்கிரீட் வேலியை அமைக்கிறார்கள். இதை அமைக்க நான்கு லட்சம் கியூபிக் மீட்டர் அளவிற்கான கான்கிரீட் மற்றும் 7,300 டன் உலோகம் உபயோகப்படுத்தப்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் சார்கோஃபேகஸ் (Sarcophagus) என்று பெயரிடுகிறார்கள். அதாவது " கல் சவப்பெட்டி". இந்தப் பெரும் விபத்து நடந்து 24 நாட்கள் கழித்து, மே மாதம் 20ம் தேதி தொடங்கி 206 நாட்களில் அந்த கல் சவப்பெட்டியைக் கட்டி முடிக்கிறார்கள். இதன் தாக்கம் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாததால், சோவியத் யூனியன் செர்னோபில் அணு விபத்தைச் சற்று மெத்தனமாகவே கையாள்கிறது. பின்பு, 1991ல் சோவியத் உடைந்ததும், உக்ரைன் செர்னோபில்லைப் பாதுகாக்க பல உக்கிரமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. 

செர்னோபில் அணு உலை விபத்துஉலகம் முழுவதும் இருந்து செர்னோபில் அணு உலையைப் பாதுகாக்க பல யோசனைகளைக் கேட்கிறது உக்ரைன். பலகட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு, ஒரு பிரெஞ்ச் நிறுவனம் முன்வைத்த " தி ரெசெல்யூஷன்" (The Resolution) என்ற திட்டம் தேர்வு செய்யப்படுகிறது. அதாவது விபத்துக்குள்ளான இந்த 4ம் எண் கொண்ட உலை, அதன் மீது எழுப்பப்பட்ட அந்தக் கான்கிரீட் வேலி இது இரண்டையும் ஒரு சேர மூடி, காற்று புகாத அளவிற்கு சீல் செய்வது என்பதுதான் அந்தத் திட்டம். ஆனால், இது கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது. இதற்கான வாய்ப்புகளே இல்லை என்று சொல்லப்பட்டது. 

1997ம் ஆண்டு, ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இந்தத் திட்டத்திற்காக 300மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்தனர். அது முதல் இந்தப் புதிய "கல் சவப்பெட்டி" செய்வதற்கான ஆராய்ச்சிகள் தொடங்குகின்றன. இருந்தும் பல நாடுகளின் தலையீடுகள், பல ஆராய்ச்சியாளர்கள், பல தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசியல்வாதிகள் எனப் பலரின் தலையீடுகள் திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. 1999-ல் நிலைமை அபாயகரமாக மாறுகிறது. ஏற்கெனவே, கட்டப்பட்டிருந்த அந்த கான்கிரீட் வேலி உடையத் தொடங்கியது. கதிர்வீச்சுகள் வெளியேறும் அபாயம் அதிகமாக இருந்தன. பின்பு, 12 அணு ஆயுத ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு வேலைகள் வேகமெடுத்தன. 

செர்னோபில் அணு உலை விபத்து

கதிர்வீச்சின் அளவு மிக அதிகமாக இருந்ததால், புதிய கட்டுமானத்தை நேரடியாக விபத்துக்குள்ளான உலையின் மீது செய்ய முடியவில்லை. எனவே, சற்று தூரத்தில் கட்டுமானம் செய்யப்பட்ட பின், இந்தப் புதிய "கல் சவப்பெட்டியை" நகர்த்திக் கொண்டு போய் மூடலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்தப் புதிய "கல் சவப்பெட்டி" அமெரிக்காவிலிருக்கும் சுதந்திர தேவி சிலையைவிட உயரமானது, இங்கிலாந்தின் வெம்ப்லி ஸ்டேடியத்தைவிடப் பெரிது. இருந்தும் எதையும் சாதிக்கும், எதையும் சாதிக்க முயலும் அறிவியல் இதையும் சாத்தியப்படுத்தியது. 

செர்னோபில் அணு உலை விபத்து

2016, நவம்பர், 29ம் தேதி, இந்தப் புதிய "கல் சவப்பெட்டி" 327மீட்டர் தூரம் நகர்த்தப்பட்டு, அணு உலையையும், அதன் மீது கட்டப்பட்டிருந்த கான்கிரீட் வேலியையும் காற்று புகாத அளவிற்கு மூடி சீல் செய்துவிட்டது. இன்று வரை தொடர்ந்து, ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்காணித்து வருகின்றனர். இது அடுத்த 100 ஆண்டுகளுக்குத் தாங்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்குள் இதற்கான மற்றுமொரு மாற்று வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும். இல்லையெனில், அணுக்கதிர்கள் வெளியேறுவதைத் தடுக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார்கள். 

ஏனோ, இதுபோன்ற செய்திகளைப் படிக்கும் போதெல்லாம் கூடங்குளத்தை நினைத்து பதைபதைப்பு அடைவதைத் தவிர்க்க முடியவில்லை. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: கப்பலைக் காத்த கறுப்பு!

 
 
ship_3145931f.jpg
 
 
 

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு நிறம் ரொம்ப பிடிக்கும். சிலருக்குச் சிவப்பு பிடிக்கும். சிலர் மஞ்சள் நிறத்தில் மயங்குவார்கள். அதெல்லாம் சரி, பிடித்தமான நிறங்களை நீங்கள் வரிசைப்படுத்தி எழுதுங்கள் என்று சொன்னால், கறுப்புக்கு எத்தனையாவது இடம் கொடுப்பீர்கள். “கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலர்” என்று சொல்கிறீர்களா?

இப்போது ஏன் இந்தக் கறுப்புப் புராணம் என்று நினைக்க வேண்டாம். விஷயம் இருக்கிறது. கறுப்பு நிறம் ஒரு கப்பலையே காப்பாற்றியிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்தக் கதையைத்தான் நாம் பார்க்கப் போகிறோம்.

இது கோடைக்காலம். வெயில் கொடுமையாய்த் தகிக்க ஆரம்பித்துவிட்டது. கோடையின் வெப்பத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வெளிர் நிறங்களைப் பயன்படுத்துகிறோம். அடர்த்தியான நிறங்கள் அதிக வெப்பத்தை உறிஞ்சக்கூடியவை.

அதிலும் கறுப்பு நிறம் என்றால் வெப்பம் மிகவும் கடுமையாக இருக்கும். கறுப்பு நிற ஆடைகள் வெப்பத்தை அதிகமாக உறிஞ்சி உடம்புக்கு அனுப்பும். உடல் மிக அதிகமாகச் சூட்டை உணரும். தலைமுடி கறுப்பாக இருப்பதால்தான் வெயில் காலங்களில் நம் தலை அதிகச் சூட்டை உணர்கிறது. வெள்ளை நிறத்தைவிடக் கறுப்பு நிறம் எவ்வளவு சீக்கிரமாக வெப்பத்தை உறிஞ்சுகிறது என்பதை ஒரு சின்ன சோதனை மூலம் அளவிடலாம். பிறகு, கறுப்பு நிறம் கப்பலைக் காப்பாற்றிய கதையைப் பார்க்கலாம்.

ஒரே அளவில் இரண்டு பனிக்கட்டித் துண்டுகளை உங்கள் வீட்டு பிரிட்ஜிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பனிக்கட்டித் துண்டைக் கறுப்புத் துணியாலும், இன்னொரு பனிக்கட்டித் துண்டை வெள்ளை நிறத் துணியாலும் மூடி வெயிலில் வைத்துவிடுங்கள்.

soodu_3145930a.jpg

சிறிது நேரத்திற்கெல்லாம் கறுப்புத் துணியால் மூடப்பட்ட பனிக்கட்டி உருகி, நீர் ஓடுவதைப் பார்க்கலாம். வெள்ளை நிறத் துணியால் மூடப்பட்ட பனிக்கட்டி பாதியளவுக்கு மேல் உருகாமல் இருக்கும். கறுப்பு நிறம் தன்மீது விழும் சூரியக் கதிர்களைப் பெருமளவுக்குக் கிரகித்து வெப்பமடைந்துவிடுகிறது. வெள்ளை நிறம் சூரியக் கதிர்களின் பெரும் பகுதியைச் சிதறடித்து விடுவதால் அதிகம் வெப்பமடைவதில்லை. கறுப்பு நிறத்துக்கும் வெள்ளை நிறத்துக்கும் மட்டும் உள்ள வேறுபாடு அல்ல இது. சிவப்பு, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களும் தங்களின் அடர்த்திக்கு ஏற்ப வெப்பத்தைக் கிரகிப்பதில் மாறுபடுகின்றன.

கலர் கலரான துணிகளை மொட்டை மாடியில் காயப் போட்டுவிட்டு வெப்பத்தை அவை எவ்வாறு உறிஞ்சுகின்றன என்பதை உற்றுக் கவனியுங்கள். வெளிர் வண்ணச் சட்டைகள் சீக்கிரம் காய்ந்து விடும். அடர்த்தியான வண்ணத் துணிகள் காய்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இவ்வாறு வெப்பத்தை நிறங்கள் உள்வாங்கிக் கொள்வது என்பது சாதாரண விஷயமில்லை. அது நம் தினசரி வாழ்க்கையில் பல பாதிப்புகளை உண்டாக்குகின்றன.

கோடைக்காலத்தில் “வெயிலில் சுருண்டு முதியவர் சாவு” என்று செய்திகளை நீங்கள் படித்திருப்பீர்கள். வண்ணங்களைப் பற்றிய தெளிவான சிந்தனை இல்லாததால் இது நடக்கிறது. அடர்த்தியான நிறத் துணிகளால் முண்டாசு கட்டிக்கொண்டு சிலர் வேலை செய்வார்கள். அடர்த்தியான முண்டாசுத் துணி அதிக வெப்பத்தை உள்வாங்கி, தலை வலியையும், மயக்கத்தையும் ஏற்படுத்திவிடும். சில நேரங்களில் இது இறப்புவரை கொண்டு சென்றுவிடுகிறது.

இந்த நிறங்களைப் பற்றிய அறிவு ஒரு கப்பலையே காப்பாற்றியிருக்கிறது.

1903-ம் ஆண்டு ஜெர்மானியர்கள் ‘ஹாஸ்’என்ற கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். இந்தக் கப்பல் போன பாதையில் கடல் நீர் திடீரென்று உறையத் தொடங்கிவிட்டது. கப்பலைச் சுற்றி இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்குக் கடல் நீர் உறைந்துவிட்டது, என்ன செய்வதென்று யோசித்தவர்களுக்கு வண்ணங்களைப் பற்றிய அறிவு கை கொடுத்தது.

பனிக்கட்டிகளைப் பெரியபெரிய ரம்பங்களை வைத்து அறுத்துப் பார்த்தார்கள், முடியவில்லை. வெடிகளை வைத்துத் தகர்த்துப் பார்த்தார்கள் அப்போதும் முடியவில்லை. உடனே கப்பலில் இருந்த கறுப்பு நிறமுடைய நிலக்கரித் துகள்களைக் கப்பலின் முன்னால் பனிக்கட்டிகளின் மீது சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு நெருக்கமாகத் தூவினார்கள். நிலக்கரித் துகள்கள் சூரியக் கதிர்களை அதிக அளவில் கிரகித்துக்கொண்டு பனிக்கட்டியை உருகச் செய்தன. கப்பல் தன் பயணத்தைத் தொடங்கியது.

கறுப்பு நிறத்துக்கு எவ்வளவு மகத்துவம் பார்த்தீர்களா?

(காரணங்களை அலசுவோம்)

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

தூங்கும் வேலைக்கு சுமார் 21,69,000 ரூபாவை சம்பளமாக வழங்குகிறது சீன நிறுவனம்

 

 

தூங்கும் வேலைக்கு சுமார் 21,69,000 ரூபாவை சம்பளமாக வழங்குகிறது சீன நிறுவனம்
 

தூங்கும் வேலையை சிறப்பாகச் செய்தால் வருடத்திற்கு 20,000 சிங்கப்பூர் டொலர்களை (சுமார் 21,69,000 ரூபா) சம்பளமாக வழங்குகிறது சீன நிறுவனமொன்று.

பிரபல சீன உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமான ‘நாவ் பாய்ஜின்’ (Nao Baijin) இந்த அரிய வாய்ப்பை வழங்குகின்றது.

சீன இணையவாசிகளால் ‘உலகின் மிக சொகுசான வேலை’ என்ற பாராட்டை இது பெற்றுள்ளது.

இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள், நிறுவனத்தின் பொருட்களை சோதிக்கத் துணைபுரிவார்கள்.

நிறுவனத்தால் வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருளை உட்கொண்டு, அது தூக்கத்தின் தரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான வேலை.

இந்த வேலை சீனாவில் இப்போது பிரபலமடைந்து வருகிறது.

தற்போதைய பரபரப்பான உலகில் பலரும் முறையாகத் தூங்குவதில்லை. தூக்கமின்மையால் அவதியுறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்தே தூக்கத்தைச் சோதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மருத்துவ உலகம்.

http://newsfirst.lk

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: 1 Person, Malen
 

ஒரு சொல்லை மறக்காமல் இருப்பது எப்படி?

நுண்நொதுமி என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் நுண்நொதுமி என்கின்ற இந்தச் சொல்லை நான் நாளை உங்களிடம் கேட்டால் உங்களுக்கு நினைவு இருக்குமா? உங்களில் பெரும்பாலானவர்கள் இந்தச் சொல்லை நாளை என்ன, இன்றே சில நிமிடங்களில் மறந்துவிடுவீர்கள். ஆனால், இப்படியான கஷ்டமான சொற்களை எப்படி மனப் பாடம் பண்ண முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆராய்ச்சிகள் ஊடாக நிரூபிக்கப் பட்ட இந்த முறையை நீங்களும் அறிய விரும்பினால், கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்!

விஷயத்துக்குப் போக முதல், நான் ஆரம்பத்தில் கூறிய வார்த்தை என்னவென்று உங்களுக்கு இன்னும் நினைவிருக்கிறதா? இல்லையா…? சரி பரவாயில்லை, அந்தச் சொல்லை மட்டும் இல்லை எதிர்காலத்திலும் கூட அனைத்துச் சொற்களையும் எப்படி 100% நினைவில் வைத்திருப்பது என்பதை இப்பொழுது பார்ப்போம். இதைப் பற்றி பல்வேறு பல்கலைக் கழகங்களிலும், ஆய்வுக் கூடங்களிலும் ஆராய்ச்சிகள் நடாத்தப்பட்டது, ஆனால் ஒரு புதிய சொல் ஒன்றை மறந்து விடாமல் இருப்பதற்கு ஒரு இலகுவான முறையை கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தான் கண்டுபிடித்து இருக்கின்றார்கள். அது எப்படி என்றால், ஒரு புதிய சொல்லை நாம் 14 நிமிடங்களில் 160 தடவை கேட்டாலே போதுமாம். அந்தச் சொல் உடனடியாக மூளையில் பதிவாகி அதை மறந்துவிட மாட்டோம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். நீங்கள் நினைப்பது போல் அந்தச் சொல்லை உங்கள் வாயால் சொல்லக்கூடத் தேவையில்லை. அதை உங்கள் காதுகளால் கேட்டால் மட்டுமே போதும். அப்படிக் கேட்கும் போது உங்கள் மூளை கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சொல்லை நீங்கள் மறக்காத மாதிரி பதித்து விடும்.

இது ஒரு இலகுவான முறை அல்லவா? எனவே, என்னைப் போல் மறதி அதிகமாக இருப்பவர்களுக்கு இது ஒரு அருமையான வழியாக அமைந்திருக்கிறது. அது சரி, நான் ஆரம்பத்தில் கூறிய அந்த நுண்நொதுமி என்றால் என்ன தெரியுமா? அது வேறு ஒன்றுமே இல்லை, Neutrino என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றாகும். ஆனால், இதைப் பற்றி நான் இன்னுமொரு கட்டுரையில் எழுதுகிறேன்.

சரி நண்பர்களே, நீங்கள் அனைவருமே இன்று நான் கூறிய இந்தச் சொற்களை மறக்காமல் இருப்பதற்கான முறையை முயற்சித்துப் பார்த்துவிட்டு, உங்கள் அனுபவங்களையும், எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக அறியத் தாருங்கள்!

அது வரை தொடர்ந்தும் உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும்,�உங்கள் SciNirosh (Dr. Niroshan Thillainathan)

 

  • தொடங்கியவர்

சீனாவின் ஹூகோ அருவியின் அற்புதமான காட்சிகள் இவை...

  • தொடங்கியவர்
பிறர் கருமங்களை உதாசீனம் செய்வது அநியாயம்
 
 

article_1489983978-pp090-9.jpgஅரச திணைக்களத்துக்கு மக்கள் சேவைகளைப் பெறச் செல்லும்போது சில சகிக்க முடியாத அனுபவங்களைப் பெறுவதுண்டு. ஆர்வத்துடன் செல்லும் ஒருவர், தனக்குத் தேவையான விவரங்களை அறிய முடியாமல் மனவருத்தத்துடன் திரும்புவதுண்டு. 

ஒருவாறு பிரயாசைப்பட்டு, அவரது அலுவல் தொடர்பான அலுவலரிடம் சென்று உதவிகளைக் கோரும்போது, சம்பந்தப்பட்ட கோவை மிக அருகிலேயே இருக்கும்போது, அதனை எடுத்து விரித்துப் படிக்கச் சோம்பல்பட்டு, “அது இங்கே இல்லை” எனச் சர்வசாதாரணமாகச் சொல்வதுண்டு. இதனைக் கேட்டால், வந்திருக்கும் பொது மகனுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும் என்பதை அந்த அலுவலர் உணருவதேயில்லை. 

பராமுகமும் சோம்பேறித்தனமும் கொண்டவர்கள் புனிதமான சேவைக்கு உகந்தவர்களேயல்லர். தங்களது சொந்த விடயங்களை உற்சாகமாகச் செய்பவர்கள் பிறர் கருமங்களை உதாசீனம் செய்வது ரொம்பவும் அநியாயமாகும். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டியது யாரிடம்? #MorningMotivation

பக்தி

பசுமை போர்த்திய ஒரு கிராமத்தில், ராமசாமி என்கிற ஒரு விவசாயி இருந்தார். ஊரில் மற்றவர்களைக் காட்டிலும், அவருக்கு கடவுள் பக்தி அதிகம். அடிக்கடி கோயிலுக்குச் செல்வதையும், அங்கே அதிக நேரம் தங்கி கடவுளைப் பிரார்த்தனை செய்வதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். மற்ற நேரங்களில் தோட்டத்துக்குச் சென்று அங்கு விவசாயம் செய்தும், காட்டில் மரங்களை வெட்டியும் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். கடவுள் மீது அதீத பக்தி. ஒரு கட்டத்தில் நாம் எப்படி இருந்தாலும் நம்மைக் கடவுள் காப்பாற்றுவார் என்று  நினைத்துக்கொண்டார். தினமும் காட்டுக்குச் சென்றவர், இப்போது வாரத்தில் ஒருநாள் மட்டுமே செல்ல ஆரம்பித்தார். இதனால், விவசாயம் செய்வதும், விறகு வெட்டுவதும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.

ஒருநாள், அவர் காட்டுக்குச் செல்லும்போது, அங்கே ஒரு நரியைப் பார்த்தார். அந்த நரிக்கு முன்னங்கால் இரண்டுமே இல்லை.  அந்த நரி, தன்பாட்டுக்கு ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தது.

இதை, கவனித்த விவசாயிக்கு ஒரு சந்தேகம், "இந்த நரிக்கு இரண்டு காலும் இல்லை.. அப்படி இருக்கிறப்போ, இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியைப் போக்கி கொள்ள முடியும்?" என்று யோசிக்க ஆரம்பித்தார். இப்படி யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, அந்தப் பக்கமா ஒரு புலி வந்தது. அதைப் பார்த்த உடனே, ஓடிப் போய் ஒரு மரத்துக்குப் பின்னாடி ஒளிந்துகொண்டார். என்ன நடக்கிறது என்பதை மட்டும் கவனிக்க ஆரம்பித்தார் ராமசாமி.

அந்தப் புலி, ஒரு பெரிய மானை வேட்டையாடி இழுத்துக்கொண்டு வந்து, அதைச் சாப்பிட ஆரம்பித்தது. சாப்பிட்டது போக, மீதியை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டது. புலி போன பிறகு, இரண்டு காலும் இல்லாத அந்த நரி, மெதுவாக நகர்ந்து வந்து, மிச்சம் இருந்த மாமிசத்தைச் சாப்பிட்டு, திருப்தியாகப் போய்விட்டது.

இவ்வளவு நிகழ்வையும் மரத்துக்குப் பின்னால் நின்று பார்த்துக்கொண்டு இருந்த அந்த விவசாயி, யோசிக்க ஆரம்பித்தார்.

"இரண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடுறான். அப்படி இருக்கிறப்போ, தினமும் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நமக்குச் சாப்பாடு போடாமல் விட்ருவானா? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம், நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழையிலயும் கஷ்டப்படனும்? எதுக்காக வியர்வை சிந்தி விறகு வெட்டணும்?" என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தார்.

அதன்பிறகு தோட்டத்துக்குச் செல்வதையும், காட்டுக்கு செல்வதையும் முற்றிலுமாக தவிர்த்தார். விவசாயம் மற்றும் மரம் வெட்டப் பயன்படுத்தும் பொருட்களை மூட்டை கட்டி ஓரமாக வைத்துவிட்டு, வீட்டில் ஒரு மூலையிலே அமர்ந்துகொண்டார். இடையில், அவ்வப்போது கோயிலுக்கு மட்டும் சென்று வந்தார். "கடவுள் நம்மை காப்பாற்றுவார், அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார்" என்று மட்டும் நம்பினார்.  

இப்படியாக ஒவ்வொரு நாளும் சென்றுகொண்டே இருந்தது. சாப்பாடு வந்த பாடில்லை. ராமசாமி, பசியால் வாடிப் போனார். உடம்பு இளைக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் எலும்பும் தோலுமாக ஆகிபோனார்.

ஒரு நாள் ராத்திரி நேரம், கோயில் நடை சாத்தப்பட்டிருந்தது. அங்கும் சுற்றம் முற்றம் யாருமே இல்லை. பசியால் வாடிப்போன ராமசாமி, மெதுவாகக் கோயில் வாசலில் வந்து நின்றுகொண்டு பசி மயக்கத்தில் கோயிலின் கோபுரத்தைப் பார்க்கிறார்.

"ஆண்டவா... என்னுடைய பக்தியில் உனக்கு நம்பிக்கை இல்லையா? நான் இப்படியே பட்டினி கிடந்து சாக வேண்டியது தானா? காட்டில் அந்த நரிக்குப் புலி மூலமா சாப்பாடு போட்டியே, அதை பார்த்துவிட்டுத்தானே இங்கே வந்தேன். என்னை இப்படித் தவிக்க விட்டுட்டியே... இது நியாயமா?" என்றார்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற மகான் ஒருவர், ராமசாமியைத் தொட்டு.. "முட்டாள், நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. புலி கிட்ட இருந்து. புலியோட உழைப்புகிட்ட இருந்து. அது நல்லா இருந்ததால, தான் உண்டது போக மீதி இரையை விட்டுட்டுப் போனதுனால, கால் இல்லாத நரி சாப்பிட முடிஞ்சது. நீ நல்லா இருக்க, உன்னால முடியற வரைக்கும் உழைக்கணும். உனக்கு இருக்கறது போக மீதத்தை,  மத்தவங்களுக்கு கொடுத்து உதவணும்னு, புலிகிட்ட இருந்து கத்துக்கணும். இது  உனக்கு ஏன் புரியல?" என்றார்.

பக்தி என்ற பெயரில், அதீத மயக்கத்தில் இருந்து ராமசாமி விடுபட்டார். மறுபடியும் பழைய மாதிரி உழைக்கத் தொடங்கினார். கூடவே பிறருக்கு உதவவேண்டும் என்ற  எண்ணமும் வந்தது.

அதீத பக்தியில் எந்தவித முயற்சியும் இல்லாமல், கடவுள் பெயரை சொல்லிக்கொண்டே இருந்து பயனில்லை.  தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள்கூட, தேர்வுக்குப் படிக்காமல்.. அப்போதுதான் திடீரென பக்தி மயமாக மாறுவார்கள். எல்லா முயற்சிகளுக்குப் பின்னாலும் பக்தியும், தன்னம்பிக்கையும் இருப்பது அவசியம்தான். ஆனால், எந்த முயற்சியும் இல்லாமல் வெறும் பக்தியையும், நம்பிக்கையையும் மட்டும் வைத்துக்கொண்டு, போட்டி நிறைந்த இவ்வுலகில் சாதிப்பது என்பது அவ்வளவு சாத்தியமில்லை என்ற புரிதல் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

முட்டாளாகச் சாக விருப்பமில்லாத புரட்சியாளன்! பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு

பகத்சிங்

“நான் இறந்தால், என் பிணத்தை வாங்காதே... அப்படி வாங்கினால், நீ அழுவாய்; அதனால், புரட்சிக் கனலும் தாக்கமும் குறைந்துவிடும். எனவே, என் உடலை வாங்காதே” என்று தன் தாயிடம் சொன்னவர், இந்திய விடுதலைக்காகப் போராடிய பகத்சிங். அவருடைய நினைவு தினம் இன்று.

இந்தியாவில் சுதந்திர வேட்கை 1857-ல் இருந்து கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கும் அவர்கள் நம்மிடம் நடந்துகொண்ட விதத்தையும் எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்த காலம். பல உயிர்களை இந்தியா தியாகம் செய்துவந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராகப் பல போராட்ட வீரர்கள் களத்தில் இறங்கி, தங்கள் நாட்டுக்காகத் தங்கள் பங்களிப்பை அளித்து வந்தனர். ஆனால், போராட்டம் நமக்குச் சாதகமாக அமையும் என்றும், சுதந்திரம் கிடைத்துவிடும் என்றும் இந்திய மக்கள் நம்பினர். மகாத்மா காந்தி வருகைக்குமுன்... வருகைக்குப்பின் என்ற நிலை இந்திய வரலாற்றில் அமைந்தது என்றால், அது மிகையாகாது. காந்திஜியின் அஹிம்சை வழிப் போராட்டங்களில் ஒன்றான ஒத்துழையாமை இயக்கத்தில் இந்தியா முழுதும் பலர் பங்குபெற்றனர். அதில் ஈர்க்கப்பட்ட ஒரு 13 வயது சிறுவன்தான் பகத்சிங். ஆனால், சௌரிசௌரா நிகழ்வுக்குப் பிறகு, அஹிம்சை வழியில் போராடினால் சுதந்திரம் கிடைக்காது, வேறு வகையானப் போராட்டத்தினால் மட்டுமே சாதிக்க முடியும் என்று எண்ணிய பகத்சிங், மார்க்சீசியக் கொள்கைகளோடும் கம்யூனிசக் கொள்கைகளோடும் மீசையை முறுக்கி களத்தில் நின்றார். 1926-ம் ஆண்டு தன் நண்பர்களாகிய ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரோடு எழுச்சிப் பெற்று புரட்சி நாயகர்களாக உருவெடுத்து உயர்ந்து நின்றார். 1928, சைமன் கமிஷனில் சட்டவரையரைகள் கொண்டு வரப்பட்டபோது, அதனை எதிர்த்து நாடு முழுதும் காங்கிரஸ் தலைவர்கள் போராடினர். அதில், பிரிட்டிஷ் போலீஸார் கடுமையாகத் தடியடி நடத்த ஆணையிட... அந்தச் சம்பவத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் லாலா லஜபதிராய் உயிரிழந்தார்.

இதனால் கடும்கோபத்துக்கு ஆளான இந்தப் புரட்சியாளர்கள், சாண்டர்ஸ் என்னும் ஆங்கிலேயரைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தலைமறைவாயினர். அதே வருடம், ஏப்ரல் 8-ம் தேதி தொழிலாளர்களுக்கு எதிராகப் பல சட்டத்திட்டங்களை அமல்படுத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம். அதில், இந்த மூன்று நாயகர்களும் குண்டுகளை வீசினர். இதில், யாருக்கும் உயிர்ச்சேதம் இல்லை. காரணம், புரட்சி என்பது மக்களைக் கொல்வதிலோ, துன்புறுத்துவதிலோ இல்லை என்ற நிலையான நாட்டுப்பற்றைக் கொண்டிருந்தனர். இந்தக் குண்டுவீச்சு நடந்து முடிந்தபிறகு, மூவரும் சரணடைந்தனர். சாண்டர்ஸை கொலை செய்ததற்கும் குண்டுவீச்சில் ஈடுபட்டதற்கும் பிரிட்டிஷ் அரசு இவர்களுக்கு மார்ச் 24-ம் தேதி தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால், சில காரணங்களுக்காக முதல் நாளே தூக்கிலிடப்போவதாக தகவல் வந்தது. அந்தச் சமயத்தில் பிரிட்டிஷ் அரசு ஓர் ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தது. அதன் பெயர்தான் காந்தி - இர்வின் ஒப்பந்தம். இதன் தலையாய காரணமே பகத்சிங் மற்றும் அவரது நண்பர்களை தூக்கில் போடலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்குத்தான். ஆனால், இந்த ஆலோசனையில் காந்திஜிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அதற்காகத்தான், 'இர்வின் – காந்தி ஒப்பந்தம் என்றுவைக்காமல் காந்தி – இர்வின் ஒப்பந்தம் என்று வைத்தனர்' என வரலாறு கூறுகிறது. ஆனால், காந்தியோ “உங்கள் சட்டம் என்ன சொல்கிறதோ, அதைச் செய்யுங்கள்..” என்றார். தூக்குத் தண்டனை முடிவான பிறகு, பகத்சிங்கின் தந்தை கிஷான் சிங், ஆங்கிலேய அரசுக்கு ஒரு மன்னிப்புக் கடிதத்தை அனுப்பினார். இதனை அறிந்த பகத்சிங், “நீங்கள் செய்த செயல் இந்த நாட்டையும் என் தாத்தா அர்ஜுன் சிங்கையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. இனி, நான் உங்களைத் தந்தை என்று எண்ணமாட்டேன். நீங்கள் செய்த காரியத்துக்கு இந்திய மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்” என்று கடிதம் அனுப்பினார். அவர் சிறையில் இருந்தபோது, சுரண்டலற்ற சமநீதி கிடைக்கும் சமுதாயம் அமைய வேண்டும், மத வன்முறைகளை எதிர்ப்பதற்கும், மதவாதங்களை ஒழிப்பதற்கும் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என எப்போதும் சிந்தித்துக்கொண்டிருந்தார். அத்துடன் அங்கு, தினமும் டைரி எழுதும் பழக்கமுடைய பகத்சிங், 404 பக்கங்களை எழுதியிருந்தாராம். பகத்சிங் ஒரு புத்தகப் பிரியர். எப்போதும் கையில் ஏதேனும் ஒரு புத்தகத்தை வைத்திருப்பார். சிறையில் இருந்த காலத்தில், வசதிகள் இல்லை; தினமும் செய்தித் தாள் வேண்டும்; உணவு சரியில்லை என அனைத்துக்கும் உண்ணாநோன்பு இருந்து அதில் வெற்றியும் கண்டார்

“சாகப்போகிறோம் என்றாகிவிட்டது.. இந்த நேரத்தில் புத்தகம் எதற்கு” என்று ராஜ்குரு கேட்ட கேள்விக்கு,  “சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையோ கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்.” என்று புன்னகைத்துக்கொண்டே பதிலளித்தார் புரட்சி நாயகன் பகத்சிங். தூக்குத் தண்டனைக்காக... தூக்கு மேடையை நோக்கிவந்த மூவரில், பகத்சிங்... “எனக்கு ஒரு 10 நிமிடம் கால அவகாசம் கொடுங்கள்” என்றார். எதற்கு என்றதற்கு, “ஒரு புரட்சியாளன், இன்னொரு புரட்சியாளனிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்” என்றார். எதுவும் புரியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பிறகுதான் அவர் கையை உற்றுநோக்கினர். ஆம், அவரது கையில்.. லெனினின் 'அரசும் புரட்சியும்' என்ற புத்தகம் இருந்தது. இறுதியாக, அங்கிருந்த ஆங்கிலேயரைப் பார்த்து, “இந்த உலகில் நீதான் அதிர்ஷ்டக்காரன்.. ஏன் தெரியுமா? ஒரு 23 வயது இளைஞன், தன் நாட்டுக்காக மரணத்தை முத்தமிட்டு வரவேற்கும் காட்சியைப் பார்க்க, உனக்கு பாக்யம் இருந்திருக்கிறது” என்றார் புன்சிரிப்புடன். பின், தூக்கிலடப்பட்டார் அந்தப் புரட்சிவீரன. 23 வயது இளைஞனான பகத்சிங்கின் செயல்களும் தியாகங்களும் அவர் பெயரை என்றும் வரலாறு பேசும்படி செய்துவிட்டது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

யாழ்ப்பாணத்து சித்தர்களில் மிக முக்கியமானவரான யோகர் சுவாமிகள் நினைவு தினம்.

"ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தெய்வம்" - யோகர் சுவாமி

  • தொடங்கியவர்

இளமை .நெட்: ஒரு இளம் ஹேக்கரின் கதை!

 

 
 
hacker_3144329f.jpg
 
 
 

‘குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்’ எனும் திருவிளையாடல் திரைப்பட வசனம் போல, இணைய உலகில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்கள் மட்டும் அல்ல, பணம் சம்பாதிக்கும் கில்லாடிகளும் இருக்கின்றனர் தெரியுமா? நல்லெண்ண ஹேக்கர்கள்தான் இந்தக் கில்லாடிகள். இணைய நிறுவனங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களில் மறைந்துள்ள குற்றம் குறைகளைக் கண்டுபிடித்துச் சொல்வதுதான் இவர்களுடைய வேலை. அதாவது நிறுவன அமைப்புகளில் உள்ள புரோகிராமிங் ஓட்டைகளை (பக்ஸ்) கண்டுபிடித்துச் சொல்வது. இதற்காக நிறுவனங்கள் இவர்களுக்கு ரொக்கமாகப் பரிசளித்து ஊக்குவிக்கின்றன. ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இப்படி புரோகிராமிங் ஓட்டைகளைக் கண்டறியப்படுவதை ஊக்குவிப்பதற்காக என்றே பரிசுத் திட்டங்கள் எல்லாம் வைத்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

கருப்பு வெள்ளை ஹேக்கிங்

‘பக் ஹண்டிங்’ எனக் குறிப்பிடப்படும் இதனை, மென்பொருள் அமைப்பில் உள்ள ஓட்டைகளைத் தேடிக் கண்டுபிடித்தல் என‌ப் புரிந்துகொள்ளலாம். இதனால் நிறுவனங்களுக்கு என்ன பயன்? பொதுநலம் கலந்த சுயநலன் என வைத்துக்கொள்ளுங்களேன்.

தாக்காளர்கள் எனச் சொல்லப்படும் ஹேக்கர்களின் கைவரிசைத்திறன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இணையதளம் உட்படப் பலவிதமான இணைய அமைப்புகளுக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து விடும் ஆற்றல் கொண்டவர்களே இப்படி ஹேக்கர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களில் இரு பிரிவினர் உண்டு. தங்கள் திறனைத் தீய நோக்கத்துடன் பயன்படுத்துபவர்கள் ‘பிளாக்ஹேட்’ ஹேக்கர்கள் என அழைக்க‌ப்படுகின்றனர்.

இன்னொரு பிரிவினர் தங்கள் திறனை நல்ல நோக்கத்துடன் பயன்படுத்துபவர்கள். இவர்களுக்கு ‘ஒயிட் ஹேட் ஹேக்கர்கள்’ என்று பெயர். நல்லெண்ண ஹேக்கர்கள் என வைத்துக்கொள்வோம்.

நிறுவன அமைப்புகளில் உள்ள ஓட்டைகளைக் கண்டறிந்து, அவற்றில் ஊடுருவ முடியும் என உணர்த்துவதுதான் இவர்களின் நோக்கம். இப்படிச் செய்வதன் மூலம், தீய நோக்கிலான நபர்கள் இந்த ஓட்டையைப் பயன்படுத்துவதற்கு முன்னரே இதுபற்றி சம்பந்தப்பட்ட நிறுவனங்களை எச்சரிக்கின்றனர். எனவேதான், நிறுவனங்கள் இவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிக்கின்றன.

பல நிறுவனங்களில் உள்ளுக்குள்ளேயே, மென்பொருள் ஓட்டைகளைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை அளிக்கும் பாதுகாப்புக் குழுவினர் உண்டு. ஆனால், அவர்கள் கண்ணில் படாமலும்கூடப் பிரச்சினைகள் இருக்கலாம். எனவேதான், யார் வேண்டுமானாலும் இவற்றைக் கண்டறிந்து சொல்லலாம் என பரிசுத் திட்டங்களை அறிவிக்கின்றனர். தொழில்நுட்பக் கில்லாடிகள் பலர் இதை ஆர்வத்துடன் செய்துவருகின்றனர். கைநிறைய சம்பாதிக்கவும் செய்கின்றனர்.

ஹேக்கிங் சாதனையாளர்

பெங்களூருவைச் சேர்ந்த 23 வயது இளைஞரான ஆனந்த் பிரகாஷ் இத்தகைய நல்லெண்ண ஹேக்கர்தான். இந்த வகையில் பிரகாஷை சாதனையாளர் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இதுவரை அவர் நிறுவன மென்பொருள் அமைப்புகளின் பின்னணியில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடித்துக் கூறியதற்கான பரிசுத் தொகையாகவே ரூ. 2 கோடிக்கும் மேல் பெற்றிருக்கிறார்!

‘ஃபிளிப்கார்ட்’ நிறுவனத்தில் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய ஆனந்த் பிரகாஷ் இப்போது, முழு நேர வேட்டைக்காரராக மாறியிருக்கிறார். அதாவது ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட முன்னணிச் சேவைகளின் பின்னணியில் இருக்கக்கூடிய ஓட்டைகளைக் கண்டறிந்து சொல்வதில் ஈடுபட்டுவருகிறார். இது அவருக்குக் கைவந்த கலையாகவும் இருக்கிறது.

அண்மையில்கூட, இணைய கால்டாக்சி நிறுவனமான உபெர் சேவையில் உள்ள ஓட்டையைக் கண்டறிந்து கூறியதற்காக 5 ஆயிரம் டாலர் பரிசு பெற்றார். உபெர் சேவையைப் பயன்படுத்தும்போது, அதில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியில் லேசான விஷமத்தனத்தைச் செய்து பணம் கொடுக்காமாலேயே பயணம் செய்யும் வாய்ப்பு இருப்பதை அவர் நிறுவனத்துக்குச் சுட்டிக்காட்டி சபாஷ் வாங்கியிருக்கிறார். மற்றவர்கள் இந்தக் குறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் எச்சரிக்கை செய்ததால் உபெர் நிறுவனம் அவருக்கு ரொக்கப் பரிசு அளித்துள்ளது.

இதே போலவே ஃபேஸ்புக் நிறுவனச் சேவையில் உள்ள குறைகளை உணர்த்திப் பலமுறை பரிசு பெற்றிருக்கிறார். ஃபேஸ்புக் நிறுவனம் ஊக்குவிக்கும் நல்லெண்ண ஹேக்கர்கள் பட்டியலில் அவர் முன்னணியில் இருக்கிறார்.

நிறுவனச் சேவைகளில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளைத் தேடிக் கண்டுபிடித்து அது குறித்து எச்சரிக்கும் பிரகாஷ் பின்னர் தனது சாகசங்கள் பற்றி நிறுவன அனுமதியுடன் தனது வலைப்பூவிலும் பகிர்ந்துவருகிறார்.

தரவுகள் பாதுகாப்பே முக்கியம்

நிறுவனச் சேவைகளில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடிக்கும் திட்டங்களில் பங்கேற்பதால் பணம் கிடைக்கிறது என்றாலும், உண்மையில் தரவுகளைப் பாதுகாப்பதில் உள்ள ஆர்வமே தன்னை இயக்குவதாக அவர் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் நல்லெண்ண ஹேக்கர்களாகச் செயல்படும்போது இந்திய நிறுவனங்களிடமிருந்து மிரட்டலைச் சந்திக்கும் நிலை இருந்ததாகவும், ஆனால் இப்போது நிலைமை மாறியிருப்பதோடு பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார். எனினும் ‘ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் இதில் இன்னும் போதிய கவனம் செலுத்தவில்லை என்கிறார்.

hackered_3144328a.jpg

எல்லாம் சரி, பிரகாஷுக்கு நல்லெண்ண ஹேக்கராகும் எண்ணம் எப்படி வந்தது, இந்தத் திறனை எப்படி வளர்த்துக்கொண்டார் போன்ற கேள்விகளுக்கு அவரிடம் சுவாரசியமான பதில்கள் இருக்கின்றன‌. வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற பிரகாஷ் ஒருமுறை தனது சகாவிடம் அவரது ஆர்குட் வலைப்பின்னல் கணக்கை உடைத்துக் காட்டுகிறேன் என சவால் விட்டிருக்கிறார். அப்போது அவருக்கு ஹேக்கிங் செய்வது எப்படி என்றெல்லாம் தெரியாது.

இந்தச் சவாலுக்குப் பிறகு கூகுளில் தேடிப் பார்த்து ஹேக்கிங் வழிகாட்டியைக் கண்டுபிடித்து அதன் மூலம் வெற்றியும் பெற்றிருக்கிறார். இதன் பிறகே ஹேக்கிங் நுட்பத்தில் ஆர்வம் உண்டானது. தொடர்ந்து இணையத்தில் உள்ள தரவுகளைப் படித்துப் பார்த்துத் தனது திறனைப் பட்டைத் தீட்டிக்கொண்டுள்ளார்.

இணையப் பாதுகாப்பு தொடர்பான நிறுவனம் ஒன்றை சொந்தமாகத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறும் பிரகாஷ், நிறுவனங்கள் பாதுகாப்பில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பயனாளிகள் வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவது, ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்தாமலிருப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்.

அவரைப் பற்றி மேலும் விவரங்கள் அறிய: ட்விட்டர் பக்கம்: @sehacure - வலைப்பதிவு: anandpraka.sh

http://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.