Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

தரணியெங்கும் தாவணி!

பாரம்பர்யமான தாவணி களை லேக்மே ஃபேஷன் வீக் வின்டர் ஃபெஸ்டிவலில் ட்ரெண்டியாகக் காட்சிக்குவைத்து கவனம் ஈர்த்தவர் சன்ஜீக்தா தத்தா. கற்பனைத்திறன், திறமை மற்றும் புதியனவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வம்... இவற்றினால் ஃபேஷன் உலகில் அடியெடுத்து வைத்து இன்று பல கோடி ரூபாயில் வியாபாரம் செய்யும் வெற்றிப் பெண். அசாமில் வசிக்கும் அவரை அவள் விகடனுக்காகச் சந்தித்தோம். ‘`வாவ்... தாவணி ஸ்பெஷல் தமிழ்நாடு!” என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றார். 

p97a.jpg

‘`சிறுவயதில் தாவணியின் அழகும் வனப்பும் என்னைக் கிறங்கடித்தன. எட்டாம் வகுப்பு படிக்கும்போது முதன்முதலில் தாவணி அணிந்தேன். நான் பொறியியல் பட்டம் பெற்றபின் பல ஆண்டுகள் அசாம் மாநிலப் பொதுப் பணித்துறையில் பொறியாளராகப் பணிபுரிந்தேன். திருமணம், குழந்தை என அடுத்த கட்டத்துக்குப் பயணித்த வேளையில், திடீரென ஒரு ஸ்பார்க் மனதில் உதித்தது. `மறைந்துகொண்டே வந்த தாவணியை, இன்றைய பெண்களின் விருப்பத்துக்கு ஏற்ப அப்டேட் செய்து கொடுத்தால் ஹிட் ஆகும்’ என்று எண்ணினேன். அதனால், தாவணியில் புதுமைகளைச் சேர்த்து டிசைன் செய்வதுடன் தயாரித்து விற்பனைச் செய்வதை முழுநேரத் தொழிலாகச் செய்ய உத்தேசித்தேன். கைநிறைய சம்பளம் கிடைக்கும் அரசு வேலையை நான் ராஜினாமா செய்வதை என் உறவினர்கள் பலரும் ஏற்கவில்லை. ஆனால் என் கணவரும் மகளும் என் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து, என்னுடன் இணைந்து பணிபுரிந்து தொழில் வளர்ச்சியில் இன்றுவரை உதவுகின்றனர்’’ எனும்போது அவர் முகத்தில் அளவில்லாத மகிழ்ச்சி. 

p97b.jpg

‘`2012-ல் பதினைந்து லட்சம் ரூபாய் முதலீட்டில் மூன்று தறிகளுடன் தொழிலைத் தொடங்கினேன். நானும் என் கணவரும் நெசவாளர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான உணவு, உறைவிடம், ஊதியம், மருத்துவச் செலவு மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவு ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள உத்தரவாதம் அளித்தோம். நெசவாளர்கள் மகிழ்ச்சியுடன் பணிபுரிய சம்மதித்தனர். நல்ல அனுபவம் பெற்ற பெண்கள் பலரும் கலைநயத்துடன் நல்ல டிசைன்களை உருவாக்கு
வதில் கவனம் செலுத்து கின்றனர்’’ - தன் வெற்றியை  தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கிறார் சன்ஜீக்தா.  

p97c.jpg

‘`தரத்தில் சிறந்த தாவணி களைத் தயாரிக்க வேண்டும் என்பதால் மூலப்பொருள்களை அசாமில்  உள்ள குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் இருந்து கொள்முதல் செய்வதை ஒரு கொள்கையாகவே பின்பற்றுகிறோம்’’ என்பவர், தொடர்ந்து சினிமா பிரபலங்களை அழைத்துவந்து பல நகரங்களில் ஃபேஷன் ஷோக்களை நடத்தி, புத்தம் புதிய டிசைன்களை அறிமுகம் செய்து வருகிறார்.  

p97d.jpg

‘`லேக்மே ஃபேஷன் வீக்கில் பட்டுத் தாவணிகளைக் காட்சிக்கு வைத்தது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தாவணிகள் நம் கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்தவை. அவற்றில் கூடுதல் வசீகரம் சேர்த்து, அணிவதற்கும் வசதியான வகையில் டிசைன் செய்தபோது, வீட்டு விசேஷங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள் போன்ற பல நிகழ்வுகளுக்கும் பெண்கள் அதை `டிக்’ செய்ய ஆரம்பித்தனர். பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் வசிப்
பவர்கள்கூட தாவணிகளை விரும்பி வாங்கி உடுத்துகின்றனர். பல்வேறு மாநிலக் கலாசாரங்களுக்கும் பொருந்தும் வகையில் எங்கள் தாவணி டிசைன்கள் இருப்பதே இதற்குக் காரணம்’’ என்று சொல்பவர், அசாம் மாநிலச் சுற்றுலாத் துறையின் உதவியோடு உலகெங்கும் தாவணியைக் கொண்டு சேர்க்கிறார். அதோடு, www.sanjuktasstudios.com என்கிற வலைதளத்தில் தாவணிகளைக் காட்சிப்படுத்துகிறார்.  

p97e.jpg

p97f.jpg

``ஆரம்பித்த ஐந்து வருடங் களுக்குள் விற்பனை பல மடங்கு பெருகியிருப்பதால், இப்போது நூற்றுக்கும் அதிக தறிகளை  ஏராள மான பணியாளர்களுடன் நடத்தி வருகிறேன்” என்கிறார் சன்ஜீக்தா, தாவணியின் பார்டரில் எக்ஸ்ட்ரா வேலைப்பாடுகள் சேர்க்கும் தன் புதிய டிசைனைக் கணினியில் மெருகேற்றியபடி!

http://www.vikatan.com/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒரு வாழைப்பழத்தை ஒரு ஆள் சாப்பிட முடியாது: கேரளத்தைக் கலக்கும் புதிய ரக வாழை

 

 
vaazhai_3171155f.jpg
 
 
 

ஒரு நேந்திரன் வாழைப் பழத்தை ஒருவர் சாப்பிட்டாலே மூச்சு முட்டும். அந்தச் சராசரி அளவு நேந்திரன் வாழைகளைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு மெகா சைஸ் நேந்திரன் வாழைகளைத் தற்போது கேரளத்து விவசாயிகள் பயிரிட்டுக் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

புதிய வகை

பொதுவாக ரஸ்தாளி, பூவன், நாடன், விருப்பாச்சி, கற்பூரவல்லி, கதளி, மலை, நேந்திரன் எனப் பலவகை வாழைகள் பயிரிடப்படுகின்றன. இதில் கிடைப்பதிலேயே பெரிய அளவில் இருப்பது நேந்திரன் வாழை. அது கேரளாவில் சிப்ஸ் போடுவதற்கு பரவலாகப் பயன்படுகிறது. அங்கு நேந்திரன் வாழைக்கான தேவை அதிகம் இருப்பதால், தமிழக விவசாயிகள் நேந்திரன் வாழையைப் பயிரிட்டுக் கேரளத்துக்கு அனுப்பிவருகிறார்கள்.

இப்போது அந்த நேந்திரன் வாழைகளைப்போல் மூன்று மடங்கு பெரிய அளவில் புதிய வாழை ரகம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது திருவனந்தபுரம் வாழை ஆராய்ச்சி மையம். இதைப் பாலக்காடு மாவட்டம் உள்படக் கேரளத்தின் பல்வேறு மாவட்ட விவசாயிகளும் வாங்கிப் பயன்படுத்திவருகிறார்கள்.

பெரிய அளவு காய்கள்

இது குறித்து அட்டப்பாடியில் இந்த வாழையைப் பயிரிட்டுள்ள விவசாயி ராதாகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டது:

“நேந்திரன் வாழைமரம் 15 அடி முதல் 20 அடிவரை உயரம் வளரக்கூடியது. 10 முதல் 12 சீப்புகள் வரும். அதில் ஒரு சீப்பில் 12 முதல் 18 காய்கள்வரை காய்க்கும். இப்போது திருவனந்தபுரம் வாழை ஆராய்ச்சி மையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வாழை ரகம், நேந்திரன் வகையைச் சேர்ந்தது என்றாலும் காய் குண்டு குண்டாக உள்ளது. ஒரு குலை 30 கிலோ முதல் 40 கிலோவரை வருகிறது. ஒரு வாழைப்பழம் எனத் தனியாக எடுத்தால் அரை கிலோ முதல் முக்கால் கிலோ எடை வருகிறது. ஐந்து அல்லது ஆறு சீப்பு மட்டுமே காய்க்கிறது. ஒரு சீப்பில் 11 முதல் 13 வாழைக்காய்கள் காய்க்கின்றன. முற்றிய இந்த வாழைக்காயைப் பயன்படுத்திச் சிப்ஸ் போட்டால் அது பப்படம் போல் பெரிய சைஸில் இருக்கிறது. காயும் பழுத்த பின்பு சுவையாக உள்ளது. இந்த ரகத்தின் ஒரு முழு வாழைப்பழத்தை ஓர் ஆளால் சாப்பிட முடியாது.

சொந்தமாக வளர்க்க வேண்டும்

எனக்கு இரண்டு வாழைக் கன்றுகள் மட்டுமே கிடைத்தன. ஒரு கன்று ரூ. 30-க்கு வாங்கி வந்தேன். எனக்கு முன்னதாக அட்டப்பாடி அகழி பகுதியில் உள்ள சம்பார்கோடு கிராமத்தில் மாத்யூ என்பவர் பயிரிட்டிருந்தார். அவர் ஒரு விளைச்சலும் எடுத்துவிட்டு, தற்போது அதில் வந்த பக்கக் கன்றுகளைப் பயன்படுத்திப் புதிதாக இரண்டாவது விதைப்பும் செய்திருக்கிறார். நேந்திரன் வாழையைவிட இதில் சத்து அதிகம் என்று ஆராய்ச்சி நிலையத்தினர் அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஆனால், போதுமான எண்ணிக்கையில் இவை கிடைப்பதில்லை. நாமே இரண்டு வாழைக் கன்றுகள் வாங்கிவந்து நட்டுவைத்து, பக்கக்கன்றுகள் மூலம் விதைக்கு எடுக்க வேண்டும்!”.

http://tamil.thehindu.com

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் இது அனியாயம். எப்படி கலைச்சு பிடிச்சாலும் இந்தத் திரியை தொடர முடியாமல் இருக்குது.:unsure:கொஞசம் இடைவெளி விடுங்கோ.போற வழிக்கு புண்ணியமாய் போகும்.:)நன்றி.

  • தொடங்கியவர்

பதவியேற்று 64 ஆண்டுகள்... அதிர்ஷ்டவசமாக பிரிட்டன் ராணி ஆன இரண்டாம் எலிசபெத்!

 
 

லகையே ஆண்ட நாடு பிரிட்டன். அந்த நாட்டின் ராணி என்றால் சும்மாவா? கடந்த 1953-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி பிரிட்டன் அரியணையில் ஏறியவர் ராணி இரண்டாம் எலிசபெத். இவர் பதவியேற்று இன்றுடன் 64 ஆண்டுகள் ஆகின்றன. பிரிட்டன் ராணியைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களைப் பார்ப்போம். 

ராணி எலிசபெத்

உலகில் ஒரு நாட்டை நீண்டகாலம் ஆளும் பெருமை, ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உண்டு. மன்னர் ஆறாம் ஜார்ஜின் மறைவையடுத்து, 1953-ம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் பதவிக்கு வந்தார். அதே ஆண்டில், ராணியின் பாட்டியான ராணி மேரி மரணம் அடைந்தார். `தன் மரணம், ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழாவைப் பாதிக்கக் கூடாது; அது திட்டமிட்டப்படி நிகழவேண்டும்' என ராணி மேரி உயில் எழுதிவைத்திருந்தார்.

1952-ம் ஆண்டு பிரிட்டன் ராணியாக அறிவிக்கப்பட்டார் எலிசபெத். 1953-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி பிரிட்டன் ராணியாக முடிசூட்டிக்கொண்டார். பிரிட்டன் வரலாற்றிலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் முடிசூட்டு விழா ராணி எலிசபெத்துடையதுதான். முதலாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு `இரண்டாம் எலிசபெத்' என இவர் அழைக்கப்பட்டார்.

ஐந்தாம் ஜார்ஜின் மகன் இளவரசர் ஆல்பர்ட் - எலிசபெத் பௌவ்ஸ் நியோன் தம்பதிக்கு, 1921-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி பிறந்தார் எலிசபெத். இவரின் இயற்பெயர், எலிசபெத் அலெக்ஸாண்ட்ரியா மேரி. குழந்தைப் பருவத்தில் இவரின் செல்லப் பெயர்  `லில்லிபெட்'. இவரும் அவரது தங்கை இளவரசி மார்க்கரெட்டும் அரண்மனையிலேயே கல்வி கற்றனர். தங்கைமீது ராணிக்கு அதிக பாசம். மார்க்கரெட் வசிக்கும் கென்னிங்டன் அரண்மனையிலிருந்து பக்கிங்ஹாம் அரண்மனையில் வசிக்கும் எலிசபெத்திடம் தொலைபேசியில் பேசுவதற்கு அப்போதே வசதி உண்டு. தங்கையிடம் தினமும் ஒரு வார்த்தையாவது பேசிவிடுவார்.

வளர்ப்புப் பிராணிகள் மீதும் அதிக ப்ரியம் உண்டு. தந்தை ஆறாம் ஜார்ஜ், 1933-ம் ஆண்டு செல்ல நாய் ஒன்றை வாங்கிக்கொடுத்தார். அதற்கு `டூக்கி' எனப் பெயரிட்டு வளர்த்தார். சிறுவயதில் தன் செல்ல நாய்களுடன் லண்டன் வீதிகளில் நடப்பது, இரண்டாம் எலிசபெத் வழக்கம். இவர் தன் 10-வது வயதிலேயே குதிரையேற்றம் கற்றுக்கொண்டவர். 

எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் மகுடம் சூட்டிக்கொண்டதே ஒரு விபத்து போன்றதுதான். 1936-ம் ஆண்டு எலிசபெத்தின் தாத்தா மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மரணம் அடைந்தார். எட்டாம் எட்வர்டுக்குத்தான் பிரிட்டனை ஆளும் உரிமை இருந்தது. அவரோ... அமெரிக்காவைச் சேர்ந்த விவகாரத்துப்பெற்ற பெண் வால்லிஸ் சிம்ப்சன் மீது மையல்கொண்டிருந்தார். `காதலா... பதவியா?' என்ற கேள்வி எட்டாம் எட்வர்டு முன்னால் நின்றது. மனம் சொன்னபடி, காதலுக்காக அரச வாழ்வைத் துறந்தார். இதையடுத்தே ஆறாம் ஜார்ஜான ஆல்பர்ட், பிரிட்டன் அரசர் ஆனார். அந்த வழியில் எலிசபெத்தும் ராணி ஆனார். 

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்அறுபதாவது திருமண நாளை ஜோடியாகக் கொண்டாடிய ஒரே பிரிட்டன் ராணி இவர்தான். இளவரசர் பிலிப் மவுன்ட்பேட்டனை, 1947-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். ராணிக்கு, இளவரசர் பிலிப்பை 13 வயதிலிருந்தே தெரியும். இருவருக்குமிடையேயான இனம் புரியாத நட்பு, திருமணத்தில் முடிந்தது. எனினும் கணவரின் பெயரை, தன் பெயருடன் ராணி எலிசபெத் இணைத்துக்கொள்ளவில்லை. 

1948-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி, தற்போதைய பட்டத்து இளவரசரான சார்லஸ் பிறந்தார். அடுத்து, ஆனி பிறந்தார். 1952-ம் ஆண்டிலிருந்து இதுவரை 4,04,500 விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட பெருமைகள்:

இந்திய கடற்படைக் கப்பல்கள் `ஐ.என்.எஸ்' (INDIAN NAVAL SHIP) என அழைக்கப்படுவதுபோல், பிரிட்டன் கடற்படைக் கப்பல்கள் ராணியைக் கௌரவப்படுத்தும் வகையில் `ஹெச்.எம்.எஸ்' (HER MAJESTY'S SHIP) என்ற பெயருடன் அழைக்கப்படுகின்றன.

பிரிட்டனில் நம்பர் பிளேட் இல்லாமலும் டிரைவிங் லைசென்ஸ் இல்லாலும் கார் ஓட்ட அதிகாரம் படைத்த ஒரே ஒருவர் ராணிதான்.

உலகில் 600-க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகளுக்கு நிதியுதவி வழங்கிவருகிறார். 

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, அரண்மனையில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்குவதை, ராணி பாரம்பர்யமாகக் கடைப்பிடித்துவருகிறார். 

ராணி எலிசபெத்துக்கு, உலகம் முழுக்க 23 மெழுகுச்சிலைகள் உள்ளன.  இவருக்கென தனி ஃபேஸ்புக் பக்கம் உள்ளது. ஆனால், உள்ளே எவரும் நுழைந்துவிட முடியாது. ராணியை எவரும் விமர்சித்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

இவர் எந்த நாட்டுக்குச் செல்லவும் பாஸ்போர்ட் தேவையில்லை. உலகிலேயே அதிக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த உலகத் தலைவர் இவர்தான்.

ராணி எலிசபெத்தும் அவரது குடும்பமும்தான் தொலைக்காட்சி டாகுமென்ட்ரியில் நடித்த முதல் பிரிட்டன் அரசக் குடும்பம். 

நகைச்சுவை உணர்வுமிக்க ராணி, இளவரசர் சார்லஸ், இளவரசி மார்க்கரெட் போன்றோரிடம் ஜோக்குகள் சொல்லி  வாய்விட்டுச் சிரிப்பார். 

 

தற்போது 91 வயதான ராணி இரண்டாம் எலிசபெத், பிரிட்டன் மக்களின் நம்பிக்கையாகத் திகழ்கிறார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text und Nahaufnahme

தென்னிந்திய ஜேம்ஸ்பான்ட் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000

 
 
 

ஜெய்சங்கர் (இ. ஜூன் 3, 2000) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார். பட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்

 
 
 
 
தென்னிந்திய ஜேம்ஸ்பான்ட் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000
 
ஜெய்சங்கர் (இ. ஜூன் 3, 2000) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்.

பட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்தார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு, ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளையில் வில்லனாகப் புதிய பரிமாணத்தில் தோன்றி பாராட்டுக்களைப் பெற்றார். அதன்பிறகு, பல படங்களிலும் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பரிமளித்தார்.

ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார். பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும் காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை தென்னிந்திய ஜேம்ஸ்பாண்ட் எனவும் ரசிகர்கள் அழைத்தனர்.

இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் 'Friday hero' (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார். 2000-ஆம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி அன்று, சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில், தனது 62-ம் வயதில் ஜெய்சங்கர் மாரடைப்பால் காலமானார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஹாஹா சுவைப்பிரியன்.. எவ்வளவு இடைவெளி வேண்டும்..:rolleyes:

இந்த திரி 90 வீதம்  அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளோடு தொடர்புடையது.. அதனால் சில தகவல்களை நாளையோ அடுத்த சில நாட்களின் பின் இணைத்தால் திரியின் சுவாரசியம் இல்லாமல் போய்விடும்.

 

2 hours ago, சுவைப்பிரியன் said:

நவீனன் இது அனியாயம். எப்படி கலைச்சு பிடிச்சாலும் இந்தத் திரியை தொடர முடியாமல் இருக்குது.:unsure:கொஞசம் இடைவெளி விடுங்கோ.போற வழிக்கு புண்ணியமாய் போகும்.:)நன்றி.

 

  • தொடங்கியவர்

 

முகமது அலிக்கு வித்தியாசமான அஞ்சலி

  • தொடங்கியவர்

பனிமலையில் ராக் பாடகன் உதயமாகிறான்! #RockDog

 
 

ராக்

கிராமத்தைச் சேர்ந்த நாய்க்கு ராக் இசைக்கலைஞனாகும் ஆர்வம். அந்த நோக்கத்துடன் நகரத்தைச் நோக்கி செல்லும் அது, தன் கனவை அடைந்ததா என்பதை சுவாரஸ்யமாக விவரிக்கிறது Rock Dog அனிமேஷன் திரைப்படம்.

பனிமலை சூழ்ந்திருக்கும் அழகிய பிரதேசம் அது. அமைதியானதும் கூட.  பெரும்பான்மையாக ஆடுகள் வசிக்கும் அந்தக் கிராமத்தின் இயக்கம் இரண்டே விஷயங்களில் அடங்கி விடுகிறது. ஒன்று, கம்பளி நெய்தல், இன்னொன்று இசை. அங்கு, ஆடுகளுக்கு பாதுகாப்பாக கம்ப்பா என்னும் திபெத்திய வகை நாயொன்று இருக்கிறது. அதனுடைய மகன் போடி (Bodi). இவர்தான் நமது ஹீரோ. இவர்களுக்கு உறுதுணையாக ஒரு வயதான காட்டெருமையும் உண்டு.

சுற்றியுள்ள ஓநாய்களால் அந்தக் கிராமத்திற்கு எந்நேரமும் ஆபத்து இருக்கிறது. சமயங்களில் ஓநாய்கள் கிராமத்தின் உள்ளே புகுந்து ஆடுகளைத் தாக்குவதுண்டு. கிராமத்தின் பாதுகாவலரான கம்ப்பா இதற்காக ஓர் உத்தியைப் பின்பற்றுகிறது. அதன்படி மிரட்டும் பாணியில் அமைந்த உருவங்களின் உள்ளே ஆடுகளை ஒளித்து வைத்து அவற்றை எல்லையில் நிறுத்தி நடமாட வைப்பது. இதன் மூலம் பயங்கரமான காவல்படை ஒன்று அங்கே இருக்கிறது என்பதான ஒரு தோற்றத்தை எதிரிகளுக்கு தர முடியும். இந்த உத்தி நடைமுறையில் சாத்தியமும் ஆகிறது. தூரத்திலிருந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் ஓநாய்கள், இந்தக் காவல்படையை உண்மை என நம்பி தயங்கி அங்கேயே நிற்கின்றன.

இந்தக் காவல்படையை தனக்குப் பிறகு தன் மகன் போடி சிறப்பாக கையாள வேண்டும் என்று கம்ப்பாவிற்கு விருப்பம். அதற்காக பயிற்சி தருகிறது.  'உனக்குள் இருக்கும் நெருப்பு எதிரிகளை அழிக்க வேண்டும் மகனே' ஆனால் நம் ஹீரோவுக்கோ இசையின் மீது காதல். தந்தை கம்ப்பா ஒளித்து வைத்திருந்த இசை வாத்தியம் ஒன்றை எப்படியோ தேடி எடுத்து அதை மீட்டிக் கொண்டே இருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்பே அந்தக் கிராமத்திலுள்ள இசை வாத்தியங்களையெல்லாம் ஓர் அறையில் போட்டு மூடி வைத்ததே கம்ப்பாதான். நாய்கள் இசைக் கொண்டாட்டத்தில் இருக்கும் சமயத்தில் ஓநாய்கள் ஊரினுள் புகுந்து விடுவதால் எப்போதும் பாதுகாப்பு உணர்வோடு இருக்க வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு.

ஆனால், தன் மகன் இசை மீது பித்தாக இருப்பதை எப்படி தடுப்பது என்பது அதற்குப் புரியவில்லை. மிரட்டிப் பார்க்கிறது; கெஞ்சிப் பார்க்கிறது. எதுவும் நடப்பதில்லை.

ராக்

அந்தக் கிராமத்தின் மீது பறந்து செல்லும் விமானத்திலிருந்து சில பொருட்கள் கீழே விழுவதை போடி பார்க்கிறது. அவற்றில் ஒன்று வானொலிப் பெட்டி. இயக்கிப் பார்த்தால் துள்ளலான ராக் அண்ட் ரோல் இசை. போடி மிக மிக உற்சாகமாகிறது.

ராக் இசையின் சூப்பர் ஸ்டாரான 'ஆக்னஸ் ஸ்கேட்டர்குட்' டின் பேட்டி அப்போது வானொலியில் ஒலிபரப்பாகிறது. இதைக் கேட்டவுடன் இன்னமும் உற்சாகமாகிறது போடி. எந்நேரமும் கிடாரை வைத்துக் கொண்டு மீட்டிக் கொண்டேயிருக்கிறது.

ஒரு கட்டத்தில் போடி தனது, தந்தையிடம் போய் துணிச்சலாக சொல்கிறது. 'நான் நகரத்திற்கு செல்கிறேன். ராக் இசைப் பாடனாகப் போகிறேன். பிரபல பாடகர் ஆக்னஸை சந்திக்கப் போகிறேன்."  கம்ப்பாவிற்கு கோபம் வருகிறது. ஆனாலும் கூடவிருக்கும் காட்டெருமை 'அவனுடைய ஆர்வத்திற்குத் தடை சொல்லாதே. சென்று பார்க்கட்டும். ஒருவேளை அவனுடைய நெருப்பு இசையின் மூலமாகத்தான் வருமோ என்னமோ' என்று ஆலோசனை சொல்கிறது.

'சரி.. உன் முயற்சியில் தோற்றுவிட்டால் உடனே கிராமத்திற்கு திரும்ப வேண்டும். சரியா?' என்கிற உத்திரவாதத்துடன் போடியை நகரத்திற்குச் செல்ல அனுமதிக்கிறது கம்ப்பா.

ராக்

போடியின் கனவு நிறைவேறியதா, ராக் சூப்பர் ஸ்டாரைச் சந்தித்ததா, சுற்றியிருக்கும் ஓநாய்கள் அப்பாவி ஆடுகளை என்ன செய்தன, இசைப் பைத்தியமான போடி தனது கிராமத்திற்கு உதவியதா என்பதையெல்லாம் விறுவிறுப்பும் சுவாரசியமுமாக சொல்லியிருக்கிறார்கள்.

ஓநாய், புலி போன்ற விலங்குகளிடமிருந்து ஆட்டு மந்தையைக் காப்பாற்ற, கண்காணிக்க வளர்க்கப்படும் திபெத்திய வகை நாய்கள் தோற்றத்தில் வித்தியாசமானவை. வித்தியாசமான காதுகளும், குறும்பு கொப்பளிக்கும் கண்களும் என பார்க்க வேடிக்கையானவை. எனவே இதற்குப் பொருத்தமாக துள்ளலான நடையும் அப்பாவித்தனமுமாக போடியின் பாத்திரம் சுவாரசியமான தோற்றத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இன்னொரு சுவாரஸ்யமான பாத்திரம், ராக் இசை சூப்பர் ஸ்டார் 'ஆக்னஸ் ஸ்கேட்டர்குட்'. அதுவொரு பூனை. அதனுடைய பிரமாண்டமான மாளிகையும் பாதுகாப்பு மாய்மாலங்களும், ரோபோக்களின் சேவையும், உளளேயிருக்கும் நவீன ரிகார்டிங் ஸ்டுடியோவும் அதன் அலட்டல்களும் சர்வதேச அளவில் பிரபலமான ஓர் இசைக்கலைஞனை நினைவுப்படுத்துகின்றன.

பாடல் ஒன்றை உருவாக்க முடியாமல் தவிக்கிறது ஆக்னஸ். தயாரிப்பாளர் வேறு அதனை அவ்வப்போது மிரட்டிக் கொண்டேயிருக்கிறார். அந்த நெருக்கடி சமயத்தில்தான் நமது ஹீரோ 'போடி', இசை கற்பதற்காக சூப்பர் ஸ்டாரின் வீட்டை முற்றுகையிடுகிறது. முதலில் அதைத் துரத்தும் ஆக்னஸ், பின்பு அது பாடுவதை நைசாக தன்னுடைய பாடலாக வெளியிட்டு அப்போதைய நெருக்கடியில் இருந்து தப்புகிறது. ஆனால், தன் கூட இருக்கும் ரோபோ பார்க்கும் பார்வையின் குற்றவுணர்வு தாங்காமல் மன்னிப்பு கேட்க போடியைத் தேடிச் செல்கிறது.

கலைஞர்களுக்கே உரிய வீழ்ச்சியும் உயர்வும் வெளிப்படும் இடம் இது. ரோபோவிற்கு அறவுணர்வு இருப்பது போன்ற கற்பனை சுவாரஸ்யமானது.

தன்னுடைய கிராமத்திற்கு எதிரிகளால் ஏற்படும் ஆபத்தை வீரத்தின் மூலமாக அல்லாது இசையின் மூலமாக போடி போக்கும் உச்சக்காட்சி அற்புதமானது.

ராக் இசையை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை என்பதால் இசையமைப்பாளர் Rolfe Kent உருவாக்கிய பாடல்கள் அதிரடி சுவாரஸ்யத்துடன் உள்ளன. சீன கிராபிக் நாவல் ஒன்றின் அடிப்படையில் இந்த அனிமேஷன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கையின் எழில் கொஞ்சும் போடியின் அழகிய கிராமம், அதைச் சுற்றிய பனிமலைகளின் அழகு, ஆங்கஸின் பிரமாண்டமான  மாளிகை, அதனுள் இருக்கும் வியக்க வைக்கும் நுட்பங்கள் போன்றவைகளுடன் அமைந்திருக்கும் திரைக்கதை. இந்தத் திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருப்பவர் Ash Brannon. டாய் ஸ்டோரி, எ பக்ஸ் லைஃப் போன்ற பிரபலமான அனிமேஷன் திரைப்படங்களில் பங்கு பெற்றவர்.

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மர சுத்தியலை கொண்டு நெற்றியில் முத்திரை

  • தொடங்கியவர்

'மாம்' திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர்..!

நடிகை ஸ்ரீதேவி சினிமா துறையில் காலூன்றி 50 ஆண்டுகள் ஆகின்றது. 1967-ம் ஆண்டு ஜூலை 7-ம் நாள் 'துணைவன்' என்ற படத்தின் மூலமாகக் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவியின் 300-வது படமாக "மாம்" வெளியாகவுள்ளது. 

C_xOK1MVYAE1YMW_14037_%281%29_18401.jpg


தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் வெளியாகவிருக்கிறது இந்தத் திரைப்படம். ரவி உடையார் இயக்கிய இந்தப் படம் ஶ்ரீதேவியின் 300-வது படமாகும். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.

ஸ்ரீதேவியின் 50 ஆண்டுச் சாதனையைக் கொண்டாடும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கப்பூர் "மாம்" படத்தை ஜுலை 7, 2017 அன்று வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

 

 
  • தொடங்கியவர்

இதை உங்களால் நம்ப முடிகிறதா?

 

tamilpen_3171290f.jpg
 
 
 

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமாகத் தரப்படுத்தப்பட்டிருப்பது ஹார்வர்டு பல்கலைக்கழகம். ஆராய்ச்சிக் கல்வியை முதன்மை நோக்கமாகக் கொண்டு 380 ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும் மிக்க இப்பல்கலைக்கழகத்தின் வழியான ஆய்வு முடிவுகளை உலக சமுதாயம் ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது.

இங்கே உலக மொழிகள் பலவற்றுக்கு ‘இருக்கை’ எனப்படும் ஆராய்ச்சித் துறை அமைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் நம் தமிழுக்கும் இங்கே ‘இருக்கை’ அமைவதற்கான முன்னெடுப்புகளை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழு (Harvard Tamil chair Inc) செய்துவருகிறது. இச்செயற்கரிய செயலில் ‘தி இந்து’ தமிழும் இணைந்து பணியாற்றிவருகிறது.

செம்மொழி ஒன்றுக்கு ஹார்வர்டில் இருக்கை அமைப்பது அத்தனை எளிதான செயல் அல்ல. ஹார்வர்டில் ‘இருக்கை’ அமைக்க வேண்டுமானால் அதற்காக அப்பல்கலைக்கழகம் வகுத்து வைத்திருக்கும் 11 அடிப்படைத் தகுதிகளை ஒரு செம்மொழி பெற்றிருக்க வேண்டும். அப்படிப்பட்ட தகுதி தமிழுக்கு இருக்கிறதா? புலம்பெயர்ந்து வாழும் குடும்பத்தைச் சேர்ந்த இந்தத் தமிழ் சிறுமியின் காணொளியைக் காணுங்கள்; நம் தமிழ் மொழியின் உலகத் தகுதியை அறிந்து ஒரு கணம் உறைந்துபோவீர்கள்..!

'ஹார்வர்டில்‘ இருக்கை’ அமைக்க அனுமதி கோரும் தகுதி செம்மொழிகளுக்கு மட்டுமே உண்டு. தற்போது உலகம் முழுவதும் 7,102 மொழிகள் பேசப்பட்டுவருகின்றன. இத்தனை மொழிகள் இருந்தாலும் ஒரு மொழி செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றால் அம்மொழி 11 அடிப்படைத் தகுதிகளைக் கடந்துவர வேண்டும்.

அவை:

1. பல்லாயிரமாண்டு தொன்மை (antiquity)

2. வேறு எந்த மொழியிலும் காணப்படாத தனித் தன்மை (individuality)

3. பொதுவான எழுத்துகள் (common characters)

4. நடுநிலைத் தன்மை(Neutrality)

5. பிறமொழிகளுக்கு மூல மொழியாக இருக்கும் தாய்மைப் பண்பு (Parental kinship)

6.பண்பாட்டு வெளிப்பாடு (finding expression in the culture art and life experiences of civilized society)

7. பிற மொழிகள், இலக்கியங்கள் சாராமல் தனித்து இயங்கும் பண்பு ( The ability to function independently without any impact or influence of any other language and literature)

8. இலக்கிய வளமை (Literary prowess)

9. மேன்மையான கருத்துகள், குறிக்கோள்கள் (Nobel ideas and ideals)

10. கலை, இலக்கிய வெளிப்பாடுகளில் தனித்துவம் (Originally in artistic and literary expressions)

11. மொழியியல் கோட்பாடுகள்(Linguistics principles) ஆகியன.

சரி, இந்தத் தகுதிகள் அனைத்தையும் கொண்ட உலகச் செம்மொழிகளின் எண்ணிக்கை எத்தனை இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஒன்று… இரண்டு… மூன்று… நான்கு… அல்லது ஐந்து மொழிகள்…?

அதுதான் இல்லை… இந்த 11 தகுதிகளையும் கொண்ட மொழி… ஒன்றே ஒன்றுதான்!

அது நம் தமிழ் மொழி!

தமிழின் இந்தத் தகுதி ஹார்வர்டு பல்கலைக் கழகத்துக்குப் பெரும் வியப்பைத் தந்துவிட்டது. தமிழின் பெருமையைப் பரப்பவும் அதைக் காக்கவும் அதற்கு ஹார்வர்டு பல்கலையில் இருக்கை அமைய வேண்டியது அவசியம். தமிழர்களாகிய நாம் அனைவரும் இணைவோம். ஹார்வர்டு தமிழ் இருக்கை குழுவுக்குக் கைகொடுப்போம் வாருங்கள்!

தொடர்புக்கு

http://harvardtamilchair.org/

https://www.facebook.com/HarvardTamilChair/

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

வர்ணனையாளரான ரசிகர்!

 

 
muthu_3170472f.jpg
 
 
 

கபடி, கிரிக்கெட், கால்பந்து, என உள்ளூர் ஆட்டம் முதல் உலக விளையாட்டுகள்வரை எல்லாவற்றையும் தமிழ் மணத்தோடு தர வந்துவிட்டது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல். “சொல்லி அடி…மச்சி ஆர் யூ ரெடி” என்கிற டீசரைப் பார்க்கும்போதே குதூகலம் தொற்றிக்கொள்கிறது. முதன்முறையாக முழுநேர விளையாட்டு சேனல் ஒன்று தமிழில் வந்திருப்பது விளையாட்டு ரசிகர்களுக்கு ஆட்டம்போடவைக்கும் செய்திதான். அதைச் செய்யத் தொடங்கிவிட்டார் தொகுப்பாளர் பிரதீப் முத்து. மும்பையில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் அலுவலகத்தில் தற்போது பரபரப்பான ஷூட்டிங்கில் ஈடுபட்டுவரும் இவர், யூடியூப் சேனலான ‘மெட்ராஸ் சென்ட்ரல்’-ன் இயக்குநர்.

தமிழில் பேசிய கபில் தேவ்

“இதுவரைக்கும் ஆங்கிலம், இந்தியில் மட்டும்தான் விளையாட்டு வர்ணனை கேட்டிருக்கிறோம். அதனால் பெருநகரவாசிகள் மட்டுமே ஒவ்வொரு விளையாட்டின் நுணுக்கங்களையும் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. அதை மாற்றும் விதமாக, இனி தமிழிலேயே நேரடியாக வர்ணனைக் கேட்டு ரசிக்கலாம். அதுவும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், லக்ஷ்மணன் சிவராமகிருஷ்ணன், பத்ரிநாத், ஹேமங்க் பதானி, சடகோபன் ரமேஷ் போன்ற அற்புதமான முன்னாள் கிரிக்கெட் வீரர்களோடு சேர்ந்து தமிழில் கிரிக்கெட் கமெண்ட்ரி சொல்வதை நினைத்தாலே உற்சாகமாக இருக்கிறது” என்கிறார் முத்து.

சில தினங்களுக்கு முன்னால் ஸ்ரீகாந்துடன் படப்பிடிப்பில் இருந்தபோது தளத்துக்கு வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் தன்னிடம் ஒரு சில வார்த்தைகள் தமிழில் பேசியதை நினைத்துப் பூரிக்கிறார் இவர்.

யூடியூப் சேனல் இயக்குநர் - நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், ‘ஆர்.ஜெ.’ என ஏற்கெனவே பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார் முத்து. இருந்தாலும் முதல்முறையாக விளையாட்டு ஜாம்பவான்களோடு இணைந்து வர்ணனைசெய்வது என்பது சவால்தானே எனக் கேட்டால், “நான் கிரிக்கெட் எக்ஸ்பெர்ட் இல்லை. ஆனால் பக்கா கிரிக்கெட் ரசிகன். அதனால் சாதாரண கிரிக்கெட் ரசிகரின் மனநிலையை நான் அச்சு அசலாகப் பிரதிபலிப்பேன். அதுவே என்னுடைய பலமும்கூட” என்கிறார்.

commentart_3170473a.JPG

கேலி கிண்டலோடு தீவிரம்

இவருடைய தலைமையில் இயங்கிவரும் ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ நான்கு லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை எட்டியதன் மூலமாக ‘தமிழில் நம்பர் ஒன் யூடியூப் சேனல்’ என்கிற இடத்தைச் சமீபத்தில் பிடித்தது. கலகலப்பான உரையாடல் மூலம் வெகுஜன நம்பிக்கைகள் குறித்து இளைஞர்களிடம் கேள்வி எழுப்புவது ‘லவுட் ஸ்பீக்கர்’ நிகழ்ச்சி. ‘முத்தம்’, ‘பிரேக் அப்’, ‘ஒன் நைட் ஸ்டாண்ட்’ இப்படி இதில் பேசப்படாத விஷயமே இல்லை. அதே நேரத்தில் சிகப்புதான் அழகு என்பதற்குப் பின்னால் இழையோடும் நிற வெறி, சாதியப் பாகுபாட்டைக் கேள்விக்குள்ளாக்குதல் போன்ற தீவிரமான முயற்சிகளையும் லேசான கண்ணோட்டத்தில் இவர்கள் கொண்டுசெல்கிறார்கள்.

‘கவுன்சிலிங் பரிதாபங்கள் / ரஜினி டிரோல்’, ‘தியேட்டர் பரிதாபங்கள் / செல்லூர் ராஜூ தெர்மகோல் டிரோல்’ ஆகிய இவர்களுடைய சமீபத்திய வீடியோக்கள் அரசியல் நையாண்டியில் வைரல் ஆகின. “சினிமா, அரசியலுக்கெனப் பல டிவி சேனல்கள் இருந்தாலும் மாற்றுக் கருத்துக்கு அங்கு இடமில்லை. அதனால், நாங்கள் வழக்கத்தை உடைக்கும் விதமாகச் செயல்படுகிறோம். அதேநேரத்தில் இணையம் என்றாலே யாரையாவது திட்டுவது என்றாகிவிட்டது. அப்படி இல்லாமல் கேலி, கிண்டல்செய்யும் பாணியிலேயே நாங்கள் நடுநிலையாகவும் எல்லாவற்றையும் அணுக முயற்சிக்கிறோம்” என்கிறார் முத்து.

ஹிப் ஹாப் தமிழா நாயகனாக நடித்து இயக்கி இருக்கும், ‘மீசைய முறுக்கு’ படத்தின் வில்லனாக வெள்ளித்திரையிலும் விரைவில் கால்பதிக்கக் காத்திருக்கிறார் முத்து. எல்லாவற்றுக்கும் மேலாக ஐசிசி சாம்பியன்ஷிப் டிராஃபி 2017-ன் மூலம் தமிழில் கமெண்ட்ரிக் களத்தைப் பிடித்த களிப்பில் இப்போது துள்ளிக் குதிக்கிறார் இந்த யூடியூப் யூத்!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
‘விதி எதுவும் செய்யும்’
1

image_cddcdd3f58.jpgதிருமணமாகாத ஒருவன் விபசாரி ஒருத்தியிடம் செல்ல நேரிட்டுவிட்டது. இளமைத் துடுக்கினால் அது தவறு என்று அவனுக்குப் புரியவில்லை. அதனால், அவளைச் சந்தித்ததில் இருந்து அவளிடம் பிரேமை கொண்டுவிட்டான்.  

அவளது வாழ்க்கை, குடும்பநிலை, அவள்பால் ஈர்த்துவிடவே, அவளிடம் “நான் உன்னைத் திருமணம் செய்கின்றேன்” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.  

தனது முடிவைத் தனது ஆசானிடம் சொன்னான். அவரோ, “உனது தியாக மனப்பான்மை எனக்குப் பிடித்திருக்கின்றது. ஆனால், உனது மனோநிலை தடுமாறுமா என எனக்குத் தெரியாது. எதற்கும் மூன்றுமாத கால அவகாசம் எடு; அப்புறம் அவளைத் திருமணம் செய்யப் பிரியப்பட்டால் திருமணம் செய்” என்றார். 

மூன்று மாதம் முடிந்ததும், அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ளத் தேடினான். அவள் அந்த விபசார விடுதியில் இல்லை.

எப்படியோ அவளைத் தேடிக் கண்டு கொண்டான். ஆனால், அவளோ சந்நியாசியாகி விட்டாள். “உன்னைக் கண்டதுமே, நான் தொழிலை விட்டுவிட்டேன்; உன்னை எதிர்பார்த்திருந்தேன். நீ வரவில்லை. இன்று நான் துறவியாகி விட்டேன். இந்த வாழ்வு எனக்குப் பிடித்திருக்கின்றது. போய்விடு” என்றாள். விதி எதுவும் செய்யும்; எதிர்பார்ப்புகளை மாற்றிவிடும்.  

  • தொடங்கியவர்

மலை முகடுகளில் எதிரொலிக்கும் திருமணப் பாடல்!

 

 
 
Desktop_3170434f.jpg
 
 
 

பேருந்து நிறுத்தத்திலிருந்து கோடுதேன் மந்துக்குச் செல்லும் மலைச்சரிவிற்குள் இறங்கினோம். ஆழத்திற்குச் செல்லச் செல்ல பச்சை இருளின் குளிர்ச்சி உடலைச் சிலிர்க்கச் செய்தது. நகரத்தின் வாகனப் புகையும் இரைச்சலுமற்ற சூழல் அலாதியான அமைதியைத் தந்துகொண்டிருந்தது. சிறுசிறு பறவைகளின் குரல் என்னை இன்னும் பேரமைதிக்குள் இழுத்துச் சென்றது. பாறைகளும் நீர்ச்சரிவுகளும் என்னை உள்வாங்கி ஈர்த்துக் கொண்டிருப்பதான பிரமையைத் தந்தது.

சுற்றிலும் மலைச் சரிவுகள். அவற்றின் மடியில் தொட்டில் கட்டிவிட்டது போல மொத்தமாக ஏழெட்டு கான்கிரீட் வீடுகளே கொண்டதாக கோடுதேன் மந்த் அமைந்திருந்தது. எருமைகள் வீட்டுக்கு அருகிலேயே புல்லை மேய்ந்துகொண்டிருந்தன. தொதவர்களின் (Toda - தோடர்)குழந்தைகள் எருமைக் கன்றுகளைக் கொஞ்சிக்கொண்டிருந்தனர். அங்கே, கூன் விழுந்த மனிதர்கள் யாருமில்லை. மந்தின் நடுவே பிரம்மாண்டமாய் நின்ற நாவல் மரத்தை நோக்கித் தன் கைத்தடியை நீட்டி அதற்கு 800 வயது என்று மந்தின் 80 வயது மூத்த தொதவரான கொற்றவன் குட்டன் நிமிர்ந்த பார்வையில் கர்வத்தோடு சொன்னார். அதன் தண்டுப் பகுதியில் கோடாரியால் சிறிய சதுரம் வெட்டி அகல் விளக்கேற்றி மணமக்கள் வழிபடும் வழக்கமிருப்பதாகவும் கூறினார்.

மந்திலேயே ஒரு கோயில் இருக்கிறது. பஞ்சபூதங்களை அவர்கள் பஞ்சபாண்டவர்களாக வணங்குகிறார்கள். கோயில் மட்டுமே தொதவர்களின் பழம்பெருமை வாய்ந்த அரை வட்டமான பிரம்பால் அமைந்த குடிலாகக் காட்சியளிக்கிறது. மந்தைச் சுற்றிலும் கறுத்த நிறத்தில் முன்னை ஊசியாக வளைந்த, கொண்டை வளத்தான் (Bullbull) குருவிகள் ஓயாமல் புல்லாங்குழலைப் போன்ற இசையை எழுப்பிக்கொண்டிருந்தன.

பெண்கள் தங்கள் தலை முடியைச் சுருள் சுருளாக விழுதுகள் போல முகத்தில் படர அலங்கரித்திருந்தனர். சந்தன நிறச் சால்வையில் சிகப்பு, கருப்பு, நீல வண்ணங்களில் பலவித தையல் வேலைப்பாடுகளைக் கையாலேயே நூற்றுக்கொண்டிருந்தனர். நாள் முழுக்க அவ்வேலையைச் சிரத்தையாக மேற்கொண்டிருந்தனர். அவர்கள் இந்த வேலையை வாரக்கணக்கில் மாதக் கணக்கில் செய்வார்கள். அந்தச் சால்வை களைத்தான் ஆண்களும் பெண்களும் மேலே போர்த்தியபடி திருமண நிகழ்வின் கொண்டாட்டங்களில் கலந்துகொள்கின்றனர்.

Desktop1_3170433a.jpg

தொதவர்களின் திருமணம்

தொதவர்களின் திருமண முறை முற்றிலும் வேறுபட்ட பழக்க வழக்கங்களைக் கொண்டது. முதலில் மணமகனுக்கு ஏற்ற மணமகளைப் பிறக்கும்போதே சாஸ்திரங்கள் செய்து பேசி முடிக்கின்றனர். இருவரும் பருவமடைந்து குடும்பம் நடத்துவதற்கான பருவம் வரும்போது அவர்களைக் கூட அனுமதியளிக்கிறார்கள். பிறகு மணமகள் கர்ப்பிணியாகி ஐந்திலிருந்து ஏழாவது மாதத்தில் அமாவாசைக்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர், திருமண வைபவம் வளைகாப்பு நிகழ்வோடு சேர்ந்து நடக்கிறது.

ஒருவேளை மணமகள் கர்ப்பம் தரிக்காவிட்டாலும் அதே மணமகனோடு வாழலாம். அல்லது வேறொரு மணமகனைத் தேடலாம். அதற்கு இருவரின் சம்மதமுமே முதன்மையாகிறது. பெண் வீட்டிலிருந்து சீதனமாக ஐந்தாறு எருதுகள் கொடுப்பது முன்பு வழக்கத்தில் இருந்திருக்கிறது. இப்போது தங்க நகைகளுக்கு மாறிவிட்டார்கள். என்றாலும் இவ்வளவு வேண்டுமென்ற வற்புறுத்தல்கள் இல்லை.

திருமண விழா நடனம்

முதல் நாள் இரவு முழுக்க ஒருவருக்கொருவர் கரம் கோத்துச் சுற்றி நின்றுகொண்டு பாரம்பரிய பாடல்களை பாடியாடிக் களிக்கின்றனர். கால்கள் மாற்றி கைகள் மாற்றி ஆடிக்கொண்டே அவர்கள் பாடும் அவர்களின் பாடல் மலை முகடுகளில் எதிரொலித்துத் திரும்புவதாக இருந்தது. தொதவர்களின் சடங்குகளில் விஷேசமாக வெவ்வேறு தாவர இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டடிக் கம்பை ஊன்றி கம்பளியாலான தலைப்பாகை கட்டி ஒரு இலையிலிருந்து பாலை ஊற்றியும், பொங்கல் வைத்தும் வழிபடுகின்றனர்.

மணமகன் பச்சை விளாறுகளை ஒடித்து வில் அம்பு செய்து மணப்பெண்ணுக்குத் தருகிறார். நிறைவாக மணமக்கள் வயதில் மூத்த ஆண்கள், பெண்களென அனைவரின் முன்னேயும் மண்டியிட்டுக் குனிகிறார்கள். அவர்கள் இரண்டு கால்களையும் மாறிமாறி மெதுவாகத் தூக்கி உச்சந்தலையில் வைத்து மந்திரங்கள் சொல்வதுபோல அவர்களின் மொழியால் ஆசிர்வதிக்கிறார்கள்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஸ்ட்ராபெர்ரி சாதனை!
13a.jpg
105 அடி நீளத்தில் தயாரித்த கின்னஸ் சாதனை ஸ்ட்ராபெர்ரி கேக் பற்றித்தான் பிரான்ஸ் எங்கும் பேச்சு. 25ம் ஆண்டு ஸ்ட்ராபெர்ரி திருவிழாவுக்கென ஸ்பெஷலாக 720 முட்டைகள், 440 பவுண்டுகள் ஸ்ட்ராபெர்ரி கொட்டித் தயாரிக்கப்பட்ட கேக்கை விற்று, அறக்கட்டளை நிதிக்கு காசு சேர்க்கப் போகிறார்களாம்.

கிழி கிழி சுட்டி!

சீனாவின் ஷாங்டன் பகுதியிலுள்ள காவோ என்ற தொழிலதிபர் வங்கியில் கடன் வாங்கிய ரூ.5 லட்சத்தை சிம்பிளாக ட்ராயரில் வைத்ததுதான் அவர் செய்த தவறு. அடுத்த நாள் ட்ராயரை திறந்தால், அத்தனை நோட்டுகளும் துண்டுகளாகக் கிடந்தன. அவரின் செல்ல வாண்டுவின் பகீர் வேலைதான் இது. குழந்தைக்கு என்ன தெரியும்... பாவம்? என்கிறார் இந்த செல்ல அப்பா!

அன்லிமிட்டெட் பானிபூரி!

குஜராத்தின் போர்பந்தரில் நூறு ரூபாய்க்கு அன்லிமிட்டெட் பானிபூரியை அள்ளித் தருகிறார் ராஜ் தக்தம்பா. தினசரி நூறு, மாதம் என்றால் ஆயிரம் ரூபாய் பிளான் வைத்திருக்கும் இவரது அன்லிமிடெட் பானிபூரி கடையின் பெயர் என்ன தெரியுமா? ஜியோ!

மாரத்தான் காதல்!

அமெரிக்காவின் ஓஹியோவில் நடந்த க்ளீவ்லேண்ட் மாரத்தானில் ஸ்டெபானியாவுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் பரிசு அது. மாரத்தான் ஓடி முடித்தவரிடம் டக்கென முழங்கால் மடித்து காதல் சொல்லிவிட்டார் பல்லாண்டுத் தோழர் டேன் ஹார்வத். மூச்சுவாங்க, மகிழ்ச்சியில் கண்கலங்க ஸ்டெபானியா ஓகே சொல்ல, பார்வையாளர்கள் வாழ்த்துக்கள் சொல்ல, லைஃப் மாரத்தான் ஸ்டார்ட்.

www.kungumam.co

  • தொடங்கியவர்

சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநருக்குக் கிடைத்த டாக்டர் மகள்... நெகிழ்ச்சிக் கதை!

 
 

செய்த வினை, நம்மைத் தொடரும் என்பார்கள். எட்டு வருடங்களுக்கு முன் ரிக்‌ஷா ஓட்டுநர் செய்த நன்மைக்கு, இப்போது பலன் கிடைத்துள்ளது. மகள் இல்லாத அந்தத் தந்தைக்கு, ஒரு மகள் கிடைத்துள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆகாஷ் என்பவர், பப்லு ஷேக் என்கிற ரிக்‌ஷா ஓட்டுநரின் கதையை ஃபேஸ்புக்கில் பதிவிட, அது வைரலானது. அந்தப் பதிவில் சொல்லப்பட்ட விஷயம் இதுதான்!

ரிக் ஷா ஓட்டுநருக்கு கிடைத்த டாக்டர் மகள்

`நான் ஒரு ரிக்‌ஷா ஓட்டுநர். 34 ஆண்டுகளாக ரிக்‌ஷா ஓட்டிவருகிறேன். மூன்று ஆண் குழந்தைகளுக்குத் தந்தை.  மனைவியிடம் `நமக்கு ஒரு மகள் இல்லையே ’ என அடிக்கடி ஆதங்கப்படுவேன். ரிக்‌ஷாவில் ஏறுபவர்களில் பாதிப்பேர் கோபத்தில் இருப்பார்கள். மீதிப்பேர் 'அப்படிப் போ... இப்படிப் போ' என கட்டளையிட்டுக்கொண்டே வருவார்கள்.

ஒருநாள் காலை, இளம் பெண் ஒருவரின் தந்தை என்னிடம் வந்தார். தன் மகளை பத்திரமாகக் கல்லூரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். புறப்படும்போது மகளிடம், 'ரிக்‌ஷாவை நன்றாகப் பிடித்துக்கொள்' எனக் குழந்தைக்குச் சொல்வதுபோலச் சொன்னார். என்னிடம் 'பள்ளம் மேடு பார்த்து ஓட்ட வேண்டும். குலுங்கவே கூடாது ' என்றார். அந்தப் பரிதவிப்பில், மகள்மீது அவர் வைத்திருந்த பாசம் மட்டுமே எனக்குத் தெரிந்தது. 

நானும் கவனத்துடன் ஓட்ட ஆரம்பித்தேன். சிறிது தொலைவுதான் போயிருப்பேன். ரிக்‌ஷாவில் இருந்த பெண் கேவிக் கேவி அழத்தொடங்கினார். அழுவதை நிறுத்தவே இல்லை. நான் திரும்பிப் பார்த்தால், என்னைக் கடுமையான வார்த்தைகளால் திட்டினார். மொபைல்போனில் யாரையோ அழைத்தார். போனில், `காச் மூச்' எனக் கத்தினார். ஏதோ... காதல் விவகாரம் என்று மட்டும் புரிந்தது. எதிர்முனையிலிருந்து என்ன பதில் வந்தது எனத் தெரியவில்லை. திடீரென ரிக்‌ஷாவிலிருந்து குதித்துவிட்டார். இருக்கையில் பணம் இறைந்து கிடந்தது. நானும் பின்னாலேயே ஓடினேன். 

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ரயில் தண்டாவளத்தை நோக்கிப் பாய்ந்தார். எனக்கு அந்தப் பெண்ணின் தந்தை முகம் நினைவில் வந்துபோனது. மகள்மீது அக்கறைகொண்டு அவர் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதுக்குள் ஒலித்தன. அந்தப் பெண்ணோ, ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்திருந்தார். `தயவுசெய்து தண்டவாளத்தைவிட்டு வெளியேறுங்கள்' எனக் கெஞ்சினேன். அந்தப் பெண்ணோ, 'படிக்காத முட்டாளே... இங்கிருந்து போய்விடு' எனக் கத்தினார். கதறி அழுதுகொண்டே இருந்தார். நான் அமைதியாக அவர் முன்னால் நின்றேன். ரயில் வருகிறதா... என அவ்வப்போது பார்த்துக்கொண்டேன். 

`கதறி அழட்டும், அழுகை ஓய்ந்தபிறகுப் பேசிக்கொள்ளலாம்' எனக் காத்திருந்தேன். அழுகை நிற்க, மூன்று மணி நேரம் ஆனது. பொறுமையாக நானும் அதே இடத்தில் அமர்ந்திருந்தேன். ரயில் வரவில்லை; மழை வந்தது. மழைத்துளிகள் விழுந்தன. சிறிது நேரம் கழித்து என்னைப் பார்த்தார். நான் அமைதியாக முன்னால் அமர்ந்திருந்தேன். சைக்கிள் ரிக்‌ஷாவைக் கொண்டுவரச் சொன்னார். மனம் மாறியதால் எனக்குள் மகிழ்ச்சி. நான் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ரிக்‌ஷாவைக் கொண்டு வர ஓடினேன். 

ரிக்‌ஷாவில் ஏறியதும் என்னைப் பார்த்து, 'அங்கிள், இங்கே நடந்ததை யாரிடமும் சொல்லக் கூடாது. இனிமேல் என் வீட்டுப் பக்கம் உங்களைப் பார்க்கக் கூடாது' என்றார். அதற்குமேல் நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அமைதியாக அவரை வீட்டில் இறக்கிவிட்டேன். இந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. இரவு உணவைச் சாப்பிட மனம் இல்லை. மகளுக்காக ஏங்கிக்கொண்டிருந்த என் மனம், `இப்போது மகள் இல்லாமல் இருப்பதே நல்லது' என்றது. 

சமீபத்தில் நடந்த விபத்தால் நான் சாலையில் மயங்கிக் கிடந்தேன். நினைவில்லாத நிலையில் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர். நினைவு திரும்பியதும்... வார்டில் பரபரப்புடன் பெண் ஒருவர் என்னைக் கவனித்துக்கொண்டிருந்தார். எங்கேயோ பார்த்ததாக நினைவு. உற்று கவனித்தேன். ஆஹா.... இது அந்தப் பெண் அல்லவா? எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த ரயில் பாதை சம்பவம் நினைவுக்கு வந்தது. அதே பெண்தான். இப்போது கழுத்தில் ஸ்டெதஸ்கோப்புடன் வெள்ளை உடை அணிந்து டாக்டராகியிருந்தார். 

என்னை பெரிய டாக்டர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் 'தன் தந்தை' என அறிமுகப்படுத்தினார். பெரிய டாக்டர், அவரைப் பார்த்து ஏதோ ஆங்கிலத்தில் கேட்டார். 'அன்று இந்த அப்பா இல்லைன்னா நான் டாக்டராகியிருக்க மாட்டேன்' என பதில் வந்தது. ஒரு மகளுக்குத் தந்தையான தருணத்தை அப்போது உணர்ந்தேன். அப்படியே கண்களை மூடிக்கொண்டு அந்தத் தந்தை ஸ்தானம் கொடுத்த பரவசத்தை உணர்ந்தேன். இப்போது எனக்கும் ஒரு மகள் கிடைத்திருக்கிறாள்... அதுவும் டாக்டர் மகள்!

பெற்றால்தான் பிள்ளையா?

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ஐரோப்பாவுக்கு ஓர் இணைய உலா!

 

 
Desktop_3170458f.jpg
 
 
 

ஐரோப்பாவில் உள்ள எல்லா நாடுகளையும் சுற்றிப் பார்ப்பது சாத்தியமா? அது, உங்கள் கைவசம் உள்ள நேரத்தையும் வசதியையும் பொறுத்தது. சில நாட்கள் முதல் ஓரிரு வாரங்கள் செலவிட முடிந்தால், ஐரோப்பாவின் முக்கிய நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம். ஆனால், அப்போதும்கூடப் பல நாடுகளைத் தவறவிட வேண்டியிருக்கும். கால் வைத்த நாடுகளில் கூட, அடையாளத்துக்குச் சில இடங்களைப் பார்க்கலாம். அவ்வளவுதான். ஆனால், இந்த அனுபவமே மறக்க முடியாததாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

ஐரோப்பாவுக்குச் சுற்றுலா செல்வது சாத்தியமோ இல்லையோ, நீங்கள் விரும்பினால் ஐரோப்பியக் கலாச்சாரம் மற்றும் அதன் செழுமையான பாரம்பரியத்தில் மூழ்கி மகிழலாம் தெரியுமா? ‘யூரோபியானா’ என்ற இணையதளம் (http://www.europeana.eu/portal/en# ) இதைச் சாத்தியமாக்குகிறது. அரை மணி நேரத்தை இந்தத் தளத்தில் செலவிட முடிந்தால், ஐரோப்பாவின் கலாச்சாரச் செழுமை, ஃபேஷன் பெருமைகள் போன்ற பலவற்றை ஒளிப்படங்களாகப் பார்த்து மகிழலாம். இசைக்கோவைகளைக் கேட்டு ரசிக்கலாம். கலைப் பொருட்களைப் பார்த்து வியக்கலாம்.

இணையம் ஓர் அற்புதம் என்பதைப் பலமுறை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சில அரிய தருணங்களில் இந்த அற்புதத்தை நீங்களே உணர்ந்திருக்கலாம். யூரோபியானா இணைய தளத்தில் நுழைந்ததுமே அத்தகைய தருணத்தை உங்களால் உணர முடியும். இந்த உணர்தலை ஒளிப்படங்களில் இருந்தே தொடங்கலாம். ஏனெனில், சமீபத்தில்தான் இந்தப் பகுதி அறிமுகமாகியிருக்கிறது. ‘யூரோபியானா போட்டோகிராபி’ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தப் பகுதி, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வரலாற்று ஒளிப்படங்களைக் கொண்டிருக்கிறது. 34 ஐரோப்பிய நாடுகளின்

50க்கும் மேற்பட்ட அருங்காட்சியக அமைப்புகளின் பங்களிப்புடன் இந்த ஒளிப்படத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.முகப்புப் பக்கத்தில், ஐரோப்பியக் கலை, ஐரோப்பிய ஃபேஷன், ஐரோப்பிய இசை என வரிசையாக உள்ள பட்டியலில் ஐரோப்பிய ஒளிப்படங்கள் எனும் தலைப்பில் இந்தப் படங்களைப் பார்த்து ரசிக்கலாம். ஒளிப்படக் கலையில் விஷயம் தெரிந்தவர்கள் எனில், ஐரோப்பாவின் புகழ் பெற்ற ஒளிப்பட மேதைகளின் பெயரைத் தட்டச்சு செய்து அவர்களின் ஒளிப் படைப்புகளைத் தேடலாம். குறிப்பிட்ட தலைப்புகள் சார்ந்தும் ஒளிப்படங்களை அணுகலாம்.

சும்மா சொல்லக் கூடாது, ஐரோப்பிய ஒளிப்படக் கலையின் முதல் நூறு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களையும் இந்தப் பகுதியில் பார்த்து ரசிக்க முடிகிறது. எதைப் பார்ப்பது, எப்படிப் பார்ப்பது எனத் திகைத்து நிற்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்தத் தளமே இணையக் கண்காட்சிகளாக விளக்குகிறது. உதாரணத்துக்கு, ‘இயந்திரங்களின் யுகத்தில் எடுக்கப்பட்ட தொழிற்கூடப் படங்கள்’ கண்காட்சி மூலம் அந்தக் காலத் தொழிற்சாலைகள், இயந்திரங்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டவற்றை ஒளிப்படங்களாகப் பார்த்த படி பின்னோக்கிச் செல்லலாம். இதே போல குறிப்பிட்ட தலைப்புகள், கலைஞர்கள் சார்ந்த ஒளிப்படங்களையும் காணலாம்.

அந்தக் கால ஐரோப்பா எப்படி இருந்தது என்று பார்க்க விரும்பினாலும் சரி, கால வெள்ளத்தில் ஐரோப்பா எப்படி மாறிவந்திருக்கிறது என்று அறிய விரும்பினாலும் சரி, ஒளிப்படங்கள் வாயிலாக அந்த அனுபவத்தைப் பெறலாம். அவரவர் விருப்பம் அல்லது தேடலுக்கு ஏற்ப மிலன், லண்டன் என நகரங்களின் பெயரைத் தட்டச்சு செய்து ஒளிப்படங்களைத் தேடலாம். ஐரோப்பிய ஃபேஷனில் ஏற்பட்ட மாற்றங்கள், கலாச்சாரச் சுவடுகள், மனிதர்கள் எனப் பல விதங்களில் வரலாற்றின் பக்கங்களைத் திரும்பிப் பார்க்கலாம். உதாரணத்துக்கு, ஐரோப்பிய நடன அறைகளில் அணியப்பட்ட ஆடைகளைச் சித்தரிக்கும் ஒளிப்படங்களைப் பார்த்து ரசிக்கலாம். அதே போல பிரபலங்களின் ஃபேஷனையும் பார்க்கலாம்.

ஒளிப்படங்களைப் பயன்படுத்துவது தொடர்பான காப்புரிமை சார்ந்த விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வண்ணங்கள், கால வரிசை எனப் பல விதங்களில் தேடலை மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. குறிப்பிட்ட ஒளிப்படம் கவனத்தை ஈர்த்தால், அந்தப் படம் தொடர்பான மேலதிகத் தகவல்கள், அதைப் பகிர்ந்துகொண்டுள்ள அருங்காட்சியக அமைப்பு குறித்த விவரங்கள் ஆகியவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.

ஒளிப்படங்களின் தேடல் இந்தத் தளத்தின் ஓர் அம்சம்தான். ஐரோப்பா தொடர்பான இன்னும் பல விஷயங்களைத் தேடலாம். குறிப்பிட்ட நாடு தொடர்பாக அறிய விரும்பினால், அந்த நாடு தொடர்பாக உள்ள ஒளிப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் பட்டியலாகத் தோன்றுகின்றன. காணொலிகள், ஒலிக்கோப்புகள், புத்தகங்கள், கலை வடிவங்கள் எனப் பல வகையான தகவல்கள் அணிவகுக்கின்றன. தேவை எனில், தேடலில் ஈடுபடும்போது எந்த வகையான தகவல் வேண்டும் எனத் தேர்வு செய்துகொள்ளலாம். ஒளிப்படங்களைத் தேர்வு செய்தால் படங்கள் மட்டும் வரும். இசை, கலையைத் தேர்வு செய்தால் தொடர்புடைய தகவல்களைக் காணலாம்.

சோவியத் யூனியன் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்ட லெனினின் அரிய ஒளிப்படங்களைக் காணலாம். அதேபோல, உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின் ஒளிப்படங்களைக் காணலாம். லண்டன் தெருக்களில் உலாவலாம். மிலன் ஃபேஷன் போக்குகளைக் கண்டு வியக்கலாம்.

இந்தத் தளத்தைப் பயன்படுத்த வரலாற்றில் ஆர்வம் கொண்ட வராகவோ ஆய்வாளராகவோ இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாமானியர்களைக் கவரக்கூடிய அம்சங்களும் இங்கே உள்ளன.

ஐரோப்பியப் பாரம்பரியம் தொடர்பான தரவுகளை இணையம் மூலம் அனைவருக்கும் அளிக்கும் நோக்கில் ‘யூரோபியானா’ அமைப்பு இந்தத் தளத்தை நடத்திவருகிறது. பல ஐரோப்பிய அமைப்புகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஐரோப்பிய அறக்கட்டளை சார்பில் இந்தத் தளம் செயல்பட்டுவருகிறது. கலைப் படைப்புகளும், ஒளிப்படங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, பகிரப்படும்போது என்னவெல்லாம் சாத்தியம் என்பதையும், கூட்டு முயற்சியின் அருமையையும் உணர்த்தும் வகையிலும் இந்தத் தளம் அமைந்துள்ளது.

யூரோபியானா திட்டம் பற்றிய அறிமுகம் : http://pro.europeana.eu/about-us/our-vision

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

 

Skylodge Adventure Suites, Cusco, Peru

  • தொடங்கியவர்
 
 
 
Bild könnte enthalten: 1 Person
 ·

ஜூன் 4: பாடும் வானம்பாடி பாலுவுக்கு பிறந்தநாள்!

ருதுகள் என பட்டியலிட முடியாத பெருமைகள் இவருக்கு சொந்தம். மிகச்சிறந்த பாடகர், சிறந்த இசையமைப்பாளர், நல்ல நடிகர், குரல் கலைஞர் இதையெல்லாம் தாண்டி ஒரு நல்ல மனிதர். தலைமுறை கடந்த 'இசைப்பேரரசு' எஸ்.பி.பியின் பிறந்த நாள் இன்று!

  • தொடங்கியவர்

'கிரிக்கெட்டின் ஒரே கடவுளுடன் எடுத்த போட்டோ’ ... ட்விட்டரில் தனுஷ் நெகிழ்ச்சி!

இங்கிலாந்தில் நடைபெறும் 'சாம்பியன்ஸ் ட்ராஃபி' போட்டியின் போது நடிகர் தனுஷ், சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது அந்த போட்டோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. 

DBeSrb_WAAA-DcN_17215.jpg


இங்கிலாந்து நாட்டின் எட்க்பாஸ்டன் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. சச்சின் டெண்டுல்கரும் அந்தப் போட்டிகளை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார். நடிகர் தனுஷூம் இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்க்கச் சென்றுள்ளார். 

sachin

 

அப்போது அவர், சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளளார். அந்தப் போட்டோவை தனுஷ் அவரது ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உன் சொர்க்கம் உன் காலடியில்! - உண்மை உணர்த்தும் தத்துவக் கதை!

சொந்த ஊரே சொர்க்கம் என்று சிலர் இருப்பார்கள். போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என சிலர் இருப்பார்கள். ஆனால் எல்லோரும் அப்படி இருப்பதில்லை. சொந்த ஊரிலேயே ஆயிரம் தொழில்கள் இருந்தாலும், நுகர்வு கலாசாரத்துக்கு ஆட்பட்டு, புலம்பெயர்ந்து நகரம், மாநகரம், வெளிநாடு... என வாழும் வாழ்க்கை.வந்த இடத்தில் உறவுகளை எண்ணிக் கலக்கம். திருமணம், திருவிழா, நல்ல நிகழ்ச்சிகள், நண்பர்கள் உறவுகளைப் பிரிந்திருக்கும் வருத்தம்... தொடர்கதையாகச் செல்லும் விடுகதை வாழ்க்கை.... ஒரு சின்னக் கதை.

சொர்க்கம்

தென் ஆப்பிரிக்காவில் உள்ள கிராமம் ஒன்றில், ஒரு விவசாயி மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். அவர் மனநிறைவுடன் இருந்ததால், மகிழ்ச்சியாக இருந்தார். மகிழ்ச்சியாக இருந்ததால், மனநிறைவுடன்  இருந்தார். ஒருநாள், அந்த ஊருக்கு ஒரு வெளிநாட்டு வியாபாரி வந்தார். `100, 200... என ஏக்கர் கணக்கில் நிலங்களை வைத்துக்கொண்டு அவதிப்படுவதைவிட,  வைரமாக சொத்துகளை மாற்றி வைத்துக்கொள்வதுதான் மதிப்பு மிக்கது’ என்ற துர்போதனையை வீசிவிட்டுப் போனார். வைரங்களின் மகத்துவத்தைப் பற்றியும், அந்த வைரங்களுக்குள்ள சக்தியைப் பற்றியும் வாய்க்கு வந்தபடி அள்ளி வீசினார்.

வைரம்

அன்றிரவு அந்த விவசாயியால் தூங்க முடியவில்லை. படுக்கையில் இருந்து எழுந்து போய் வானத்தைப் பார்த்தார். திரும்பவும் வந்து படுத்தார். தூக்கம் வரவில்லை... தூக்கம் வரவே இல்லை. அவர் மகிழ்ச்சியாக இல்லை. மனநிறைவோடும் இல்லை. 
அடுத்த நாள் காலை, அவரது நிலங்களை விற்க ஏற்பாடுகள் செய்து, அவரது குடும்பத்துக்கு வேண்டியவற்றைச் செய்து கொடுத்துவிட்டு வைரங்களைத் தேடிப் புறப்பட்டார். ஆப்பிரிக்கா முழுவதும் சுற்றிவந்தார். வைரம் கிடைத்தபாடில்லை. பின்னர் ஐரோப்பா முழுவதும் தேடினார்; வைரம் கிடைக்கவே இல்லை. அரேபியாவுக்குப் போனார். அங்கும் கிடைக்கவில்லை. மிகவும் துயருற்றுப்போனார்.

தேடல்

தன் மனைவியும் பிள்ளைகளும் எப்படி இருப்பார்களோ என்ற ஏக்கம் தொற்றிக்கொண்டது. அவர்களை நினைத்து வருந்தினார். 
ஆனாலும், வைரம் கிடைக்காமல் போனால் சொந்த ஊரில் உள்ளவர்கள், வீட்டில் உள்ளவர்கள், நண்பர்கள் என்ன நினைப்பார்கள்? அதனால் வைரம் இல்லாமல் ஊருக்குச் செல்லக் கூடாது என்பதில் மட்டும் வைராக்கியமாக இருந்தார்.

பல நாடுகள் அலைந்து திரிந்து, அவர் ஸ்பெயின் நாட்டை அடைந்தபோது, மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், பணரீதியாகவும் நிலைகுலைந்து போயிருந்தார். கடைசியில் அவர் மிகவும் மனச்சோர்வடைந்து ஒரு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இனி, அவரது கிராமத்தில் என்ன நடந்தது என்கிற வியப்பான நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

அவரது நிலத்தை வாங்கியவர், அந்த நிலத்தில் ஓடிக்கொண்டிருந்த ஒரு நீரோடையில் ஒட்டகங்களுக்கு தண்ணீர் காண்பித்துக்கொண்டிருந்தார். அப்போது சூரியனின் கதிர்கள் அந்த ஓடை நீரில்பட்டு அருகாமையிலிருந்த கல்லில்பட்டு, அந்தக் கல் ஒளிப்பிழம்பாக மின்னியது. வித்தியாசமான அந்தக் கல்லை எடுத்துப்போய் தன் வீட்டு மேசையின் மீது டேபிள் வெயிட்டாக வைத்துக்கொண்டார்.

ஒளிபிழம்பு

நீண்ட நாளைக்குப் பிறகு, முன்னர் வந்த வியாபாரி அந்த கிராமத்துக்கு வந்து முகாமிட்டார். தற்செயலாக தன் விவசாய நண்பனின் நினைவு அவருக்கு வந்தது. விவசாயியின் வீட்டுக்குப்போனார்.  

பழைய விவசாயி அங்கே இல்லை. விவசாயியிடம் நிலங்களை விலைக்கு வாங்கியவர்தான் இருந்தார். அவரும் வியாபாரியை இன்முகத்துடன் வரவேற்றார். அப்போது, மேசையின் மீது இருந்த வைரக்கல்லைப் பார்த்த வியாபாரி, ``அட... இதைப் பற்றித்தானே நான் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நண்பரிடம் சொல்லிவிட்டுப் போனேன்’’ என்றார். புதிய நண்பரோ அவருக்கு தேநீர் வழங்கிக்கொண்டே, திரும்பி வராமல் போன  அவரது நண்பரின் கதையைச் சொல்லி முடித்தார். 

``இது போன்ற கற்கள் என் தோட்டத்து ஓடையில் நிறையக் கிடக்கின்றன. இது தெரியாமல்தான் எனது நண்பன் வெளியூருக்குப்போயிருக்கிறானா? பாவம், அவன்...’’ என்று கண்கலங்கினார்.

 

'தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது' என்று நபிகள் நாயகம் சொன்னார். இது தாய்க்கு மட்டுமல்ல, தாய் பூமிக்கும் பொருத்தமாகும். `உள்ளே இருப்பதை வெளியே தேடாதே’ என்கிறது இந்து மதம். இப்படி மதங்களும் ஆன்மிகப் பெரியோர்களும் எவ்வவளவுதான் சொன்னாலும், நம் மனித மனம் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாததைத் தேடியே அலைகிறது!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

 

facebook.com/ராஜா முகமது சீன தேசத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒவ்வொரு வீட்டிலிருந்து வெளிவரும் சமையல் மணத்தில் ஏன் கூடுதல் அன்பு கலந்திருக்கிறது?

twitter.com/jeytwits
கம்ப்யூட்டருக்கு அடுத்தபடியா அதிகமா காபி,பேஸ்ட்டும் - கட்,எடிட்டும் செய்றது மத்தவங்களைப் பற்றிப் பேசுற நம்ம வாய் தான்.

twitter.com/imcomrade
தோல்வியைத் தாங்கும் வலிமைகூட கூடிவிட்டது, ஆறுதல் சொல்லும் பக்குவம்தான் இன்னும் வளரவே இல்லை.

p112b.jpg

p112.jpg

facebook.com/karkyjohnson
காலைல எழுந்திருக்கும்போது, மொபைல்ல 100 சதவிகிதம் சார்ஜ் இருக்கிறதை விட வேற மார்னிங் மோட்டிவேஷன் இருக்குமா என்ன?

facebook.com/elangkumaran.subramaniyan
நம்மை முந்திச் செல்பவர்கள் எல்லோருமே ஏதாவது ஒரு சிவப்புவிளக்கு சிக்னல்ல நிற்பவர்கள் என்று நினைத்துக் கொண்டேயிருப்பது எவ்வளவு ஆறுதலைத் தருகிறது!

twitter.com/mekalapugazh
முன்பெல்லாம் நன்று, சுமார், மோசம் என்றுவரிசைப்படுத்தியவை இப்போது தியேட்டரில் பார்க்கலாம், டி.வி.டி-யில் பார்க்கலாம், டி.வி-யில் போட்டா பார்க்கலாம் என்று மாறிவிட்டது.

facebook.com/Aruna Raj
மேலே விழுந்து பிராண்டும் உறவுகள் பெரும்பாலும் ‘கோதாவரீஈஈஈ கோட்ட கிழிடி’யில் வந்து முடிந்துவிடுகிறது. #பட்டதில் புரிந்தது.

p112a.jpg
 

twitter.com/kalasal 
சமீபகாலமாக யார் எந்த நேரத்தில் நேரம் கேட்டாலும் ஏழரை என்றே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

twitter.com/jeytwits 
முகம் நல்லாத் தெரியும் என்பதை விட தொப்பை தெரியாது என்பதே பலரும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை விரும்பக் காரணம்.

twitter.com/Kozhiyaar
புதுப் புத்தகங்களுக்கு அட்டை போட்டுத் தருவதில் ஆரம்பிக்கிறது பெற்றோரின் அந்த வருடத்திற்கான ‘கல்விக் கடமை!’

twitter.com/Janu__B 
50 விவசாயிகளைப் பார்க்க டைம் இல்லை. 89 MLA இருக்கிற எதிர்க்கட்சித் தலைவரைப் பாக்க டைம் இல்லை. 12 MLA இருக்கிற OPS-ஐ மட்டும் பார்த்துப் பேசுவாராம் மோடி.

twitter.com/BoopatyMurugesh 
மோடி : ஹலோ.. மாடு வெட்டத் தடை போட்ருக்கேன்யா..
எடப்பாடி : ஐயா இப்பலாம் நான் உங்கள்ட்ட கேக்காம முடிகூட வெட்றதில்லைய்யா...

twitter.com/thoatta
இந்தியாவுல நான்கு வகையான மாநில அரசாங்கங்கள் இருக்கு. பா.ஜ.க. அரசு, பா.ஜ.க-வுக்குப் பயந்த அரசு, மேற்கு வங்க அரசு, கேரள அரசு.

twitter.com/Kannan_Twitz 
ஸ்மியூலில்(smule) பாடுகிறவர்களின் குரலை ரசிக்கிறவன் மனுஷன்.
அவர்களின் முக பாவனைகளை ரசிக்கிறவன் பெரிய மனுஷன்.

p112bb.jpg

twitter.com/IamVavar
ரஜினி அரசியலுக்கு வரார்னா கட்சிங்கதான் பயப்படுது.  ஆனா,  வைகோ வெளிய வரார்னா நாடே நடுங்குது பாத்தியா... அதாம்லே வர்கீசு.

twitter.com/gv_rajen 
பதினைந்து ஆண்டு கால தமிழர் வாழ்வு சுவாரஸ்யமாகக் கழிந்ததில் வடிவேலுவின் பங்கு அதிகம்.

twitter.com/urs_priya 
விழித்திருக்கவெனக் காரணங்கள் இல்லாத அன்று தூக்கம் கண்ணைக் கட்டுவதில்லை.

facebook.com/Umamaheshvaran Panneerselvam
மாட்டுக்கறிக்கு தடையா ??
அப்ப இனிமே மட்டன் பிரியாணி எப்டியா சாப்டுவீங்க....??
99 % ஹோட்டல்ல மட்டன்னு சொல்லி நீங்க சாப்பிட்டது எல்லாம் மாடுதானே!

facebook.com/Aruna Raj
கல்யாணம் கவர்மென்ட் வேலை மாதிரி. ஒருமுறை உள்ளே வந்துட்டா, அவ்ளோ சீக்கிரம் வெளில போகவே முடியாது. லவ் பண்றது ப்ரைவேட் ஜாப் மாதிரி. வேலைக்கும் உத்தரவாதம் இல்லை. எப்ப வேணா புது ரெக்ரூட்மென்ட்டும் நடக்கும்.

  • தொடங்கியவர்

ப்ரியங்கா சோப்ராவுக்கு இப்படி ஒரு ஹாலிவுட் என்ட்ரியா! `பேவாட்ச்'

 

ஃப்ளோரிடாவில் அமைந்திருக்கும் எமரால்டு பேவை தனது டீமுடன் பாதுகாத்துவருகிறார் மிட்ச் பச்சனன். ஒருநாள் ஜாலியாக ஜாகிங் சென்றுகொண்டிருக்கும்போது அவரது கண்களில் போதைமருந்துப் பொட்டலம் ஒன்று தென்பட, அதை லீடாக வைத்து கதை நகர்கிறது. அனைவராலும் கணிக்கக்கூடிய கதைதான் `பேவாட்ச்'. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சியில் ஹிட் அடித்த `பேவாட்ச்' தொடைரைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள். 

Bya watch

எமரால்டு பேவில் ஏற்கெனவே வேலைபார்க்கும் ஸ்டெஃப்னி ஹோல்டன், அனுபவமிக்க சி.ஜே.பார்கர் ஆகியோரின் உதவியுடன் தனது பாதுகாப்புத் துறைக்கு புதிதாக ஆள்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் மிட்ச் (டுவையின் ஜான்சன்). நஷ்டத்தில் சுழலும் பேவாட்சை, எப்படியும் மீட்டுவிட முயற்சிக்கிறார் அதன் உரிமையாளர் த்ரோப். வலைந்துகொடுக்கும் த்ரோப்புக்கும், 24*7 ஷோல்டர் தூக்கி நிற்கும் மிட்ச்சுக்கும் ஆரம்பம் முதலே மோதல்தான். அந்த டீமில் சி.ஜே மீது க்ரஷ்கொண்டிருக்கும் ரூனியும், சர்ஃபிங் செய்வதில் கில்லாடியான சம்மர் க்வின்னும் (அலெக்ஸாண்டிரோ டட்டாரியோ) மிட்ச் வைக்கும் சோதனையில் தேறிவிடுகிறார்கள். மறுபக்கம் ஒலிம்பிக் நீச்சல் போட்டி வீரர் மேட் ப்ரோடி. அவர் விளையாடும்போது நீச்சல்குளத்தின் உள்ளேயே வாந்தி எடுத்ததன் காரணத்தால், இந்த டீமுடன் இணைந்து சமூகசேவை செய்யுமாறு ஒப்பந்தம் போட்டுவிடுகிறார்கள். மிட்சைச் சந்தித்த முதல் நாளிலிருந்தே இருவருக்கும் முட்டிகொண்டுதான் இருக்கிறது. இதற்கிடையே விக்டோரியா லீட்ஸ் (ப்ரியங்கா சோப்ரா) செய்யும் தில்லுமுல்லு வேலைகளை எல்லாம் காட்டி, அவர்தான் வில்லி என்று பதிவுசெய்கிறார் இயக்குநர். 

Bay watch

ஆங்காங்கே சிரிக்கவைக்கும் ரூனி, மிட்ச்சின் காமெடிக் காட்சிகள் எல்லோருக்கும் பிடித்த இடமான கடலையும் கடற்கரையையும் படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை அழகாகக் காட்டியது என இவைதாம் படத்தில் எடுத்துச் சொல்லும்படியான விஷயங்களாக உள்ளன.

மற்றபடி ப்ரியங்கா சோப்ராவின் வில்லத்தனங்கள் படத்தில் எடுபடவில்லை. அவரின் ஆழ்மனதில் அவர் பெரிய வில்லி என இயக்குநர் பதியவைத்திருக்கிறார்போல. குவான்டிக்கோ தொலைக்காட்சியில் ஆக்‌ஷனில் கலக்கும் சோப்ரா, ஏன் இப்படித் தெரிகிறார் என யோசிக்கவைக்கிறார். கமர்ஷியல் படம் என்பதால் காமெடியில் சற்று அதிகம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆங்காங்கே போர் அடிக்கும் காமெடிகளுக்கு பதில் டுவையின் ஜான்சன் மற்றும் ஸாக் எஃப்ரானின் சிக்ஸ்பேக்குகளை அதிரிபுதிரி ஆக்‌ஷன் சீக்குவென்ஸ்களுக்கு இன்னும் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கலாம். தொடரில் மிட்சாக நடித்த டேவிட் ஹேஸல்ஹோஃப், படத்தில் வரும் மிட்ச் கதாபாத்திரத்துக்கு அட்வைஸ் செய்வதுபோல் ஒரு காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், `ப்ளேபாய்' புகழ் பமீலா ஆண்டர்சனின் சிறப்புத் தோற்றம் எல்லாம் `அடபோங்கப்பா!' ரகம்தான். படத்தின் கதை என்ன என்பதை படத்தில் வரும் நீச்சல் உடையிலேயே எழுதிவிடலாம் என்றால், படத்திலிருக்கும் லாஜிக் மிஸ்டேக்குகளை எல்லாம் எழுத டுவையின் ஜான்சனின் எக்ஸ்ட்ரா லார்ஜ் முதுகுகூட போதாது என்பதுதான் பெரும் சோகம். 

Bay watch

படத்தில் குறிப்பிடவேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. வெண்ணிறஆடை மூர்த்தி சொல்வதுபோல், இந்திய சென்சார் போர்டு படத்தை எசகுபிசகாக வெட்டியதில் பாதிக் காட்சிகளை கமல் படம்போல் நாமே புரிந்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. `A' என சர்ட்டிஃபிகேட் கொடுத்த பிறகு, இப்படியெல்லாம் வெட்டுவது நியாயமாரே.... இதெல்லாம் பாவம் மை சன்!
 
படத்தில் இடம்பெற்ற காமெடிகளைவிட, முடிந்தவுடன் இடம்பெறும் ப்ளூப்பர்ஸ் காமெடிகள்தான் அல்ட்டிமேட் ரகம். அதை மிஸ்பண்ணாம பார்த்துட்டு வாங்க. படம் பார்த்த திருப்தியோடு வீட்டுக்குப் போகலாம். காமெடி, அதிரடி என்ற கலவையில் படம் சரியாக வராததால், வெறும் ஸ்விம்சூட்டை நம்பி களமிறங்கி இருக்கிறார்கள் (ப்ளூப்பர்ஸில் அதை நக்கலாக அலெக்ஸாண்டிரோ கேட்கவும் செய்கிறார்).

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்
‘படைத்த கடவுள் என்னை வாழ்த்தியபடி’
 

image_882f088394.jpgஉறக்கத்திலும் நீ என்னுடன் இணைந்திருக்க வேண்டும். விழித்ததும் உன்பார்வையுடன் காலம் கழிந்தபடி நிலைக்க வேண்டும்.  

தாயின் தந்தையின் அரவணைப்புடன் வாழ்ந்த என்னை, உன்னிடம் ஒப்படைத்தாள் என் அன்னை.  

வரவும் தெரியாமல் செலவும் எனக்கெட்டாமல், வாழ்வதே சுகமானது. என்னுடன் இவள் இணைந்த பின்னரும், தடையில்லாத நெடும் பயணத்தைத் தொடர்ந்திடக் குடை பிடிக்கும் தோழி இவள்.  

எனக்கு எனச் சேமிப்பும் சம்பாத்தியமும் தெரியாமலே, தெருக்களில் உலா வந்தவன். இரகசியம் இல்லாத எல்லை தொடாத பயணங்கள். இடையிடையே இன்ப துன்ப நுகர்ச்சிகள். எதிலும் கவனம் செலுத்தி, ஐக்கியப்படாத சுதந்திர அபிமானி.  

எனினும் நான் செய்த குறும்புகளும் குளறுபடிகளும் இன்னமும் அப்படியேதான். இதனை இரசிப்புடன் ஏற்பவள் அம்மாவுக்கு அடுத்ததாக எனது துணைவி. 

எழுதுகோல் என்னை இளமையாக்கியபடியே இசைந்து கொடுக்கின்றது. படைத்த கடவுள் என்னை வாழ்த்தியபடி என்றும்...    

  • தொடங்கியவர்

ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் போராட்ட வீரர்: ஜூன் 1974

பொன்னுத்துரை சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 - ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. உரும்பிராயில் 1950-ம் ஆண்டு ஓகஸ்ட் 26-ம் நாள் பொன்னுத்துரை, அன்னலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது மகவாக

 
 
ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் போராட்ட வீரர்: ஜூன் 1974
 
பொன்னுத்துரை சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 - ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.

உரும்பிராயில் 1950-ம் ஆண்டு ஓகஸ்ட் 26-ம் நாள் பொன்னுத்துரை, அன்னலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது மகவாக சிவகுமாரன் பிறந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையில் கல்வித் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிவகுமாரன் செயற்பட்டார். 1970களின் தொடக்கத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர் சிவகுமாரன் என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

1971-ம் ஆண்டு தொடக்கத்தில் யாழ்ப்பாண நகரத் தந்தையாகவும் அப்போது சிறிமா கட்சியின் அமைப்பாளராகவும் இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு குறிவைத்து அவரது வாகனத்தில் குண்டு பொருத்தினார். குண்டுவெடித்து சிதறி வாகனத்தின் மேல்பக்கம் எல்லாம் பெருந்தொலைவுக்கு சென்று விழுந்தது. ஆனால் துரையப்பா வருவதற்கு முன்னரே குண்டு வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தாக்குதல்கள் என்று சொல்லலாம்.

அதன் பின்னர் துரையப்பாவின் வாகனத்துக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் சிறையிலே கழித்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் அவர் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தனியே தாக்குதல் முயற்சி என்பதுமட்டும் அல்ல. குறிக்கோளை வைத்துக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடுத்திக்கொண்டார். இளைஞர் பேரவை அப்போது நடத்திய உண்ணாவிரதம் போன்றவற்றில் பங்கேற்று மதியுரைகளை வழங்கிச் செல்வார்.

1973-ல் மாணவர் பேரவையின் பொறுப்பாளராக இருந்த சத்தியசீலன் போன்றவர்கள் கைதான காலகட்டம். அதற்கு முதலே சிவகுமாரன் கைதாகி, அனுராதபுரம் சிறையிலே அடைக்கப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் வழக்குகளும் நடைபெற்றன.

யாழ். தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்குப் பின்னர், அப்படுகொலைக்கு உத்தரவிட்ட சந்திரசேகரவைக் கொல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தவர் சிவகுமாரன். மாநாடு நடைபெற்ற 9 நாளும் தன்னை தொண்டராகப் பதிவு செய்து கொண்டு மாநாடு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தவர். அந்த நிலையில் மாநாட்டுக்கு குழப்பம் விளைவித்த சந்திரசேகரவை அங்கேயே கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியவர். அதனாலேயே சிவகுமாரன் தேடப்பட்டார். சந்திரசேகரவைக் கொல்வதற்காக சிவகுமாரன் மேற்கொண்ட முயற்சி சூழ்நிலைகளால் தோல்வியடைந்தது.

உரும்பிராய் நடராஜா என்பவர் விடுதலைக்குப் போராடிய இளைஞர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். அவர்மீது தாக்குதல் நடத்துவதற்கு சிவகுமாரன் தலைமை ஏற்றார். கோப்பாயில் காவல் துறையினர் சுற்றிவளைத்த போது அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தி இறந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர் இவரே.

சிவகுமாரனின் இறப்பு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அது அமைந்தது.

ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் நாள் ஜூன் 5 ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டது.

http://www.maalaimalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.