Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 4 Personen, Personen, die lachen, Text

காலம் சென்ற நடன தாரகை
நாட்டிய பேரொளி பத்மினியின் பிறந்தநாள் இன்று.

நாட்டிய நட்சத்திரமாக சினிமா உலகிற்கு 1948 ஆம் ஆண்டு அறிமுகமாகி
தொடர்ந்து 03 ஆண்டுகள் இவரது நாட்டியம் இடம்பெறாத திரைப்படங்களே இல்லை. 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் வென்று நின்று தடம்பதித்தவர். 17 வயதில் திரையுலகம் புகுந்து, தமிழில் மணமகள் திரைப்படத்தில் முதன் முதலில் முகம் காட்டியவர்.

உலகப் புகழ் பெற்ற நாட்டியத் தாரகையாகவும், நடிகையாகவும் கோலோச்சிய நாட்டிய பேரொளி

Bild könnte enthalten: 1 Person, machen Sport, Text und im Freien

பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் Javed Miandad இன் பிறந்தநாள் இன்று.

பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக எப்போதும் கருதப்படும் மியண்டாட், தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
6 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடிய பெருமையும் கொண்டவர் இவர்.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஜான் கென்னடி ஜூனியருக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் வசிக்கவிருக்கும் முதல் சிறுவன்!

வெள்ளை மாளிகைக்கு நேற்று முதன்முறையாகக் குடியேறினார் அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா ட்ரம்ப். இவருடன் இவர்களது மகன் பேர்ரன் ட்ரம்ப்பும் இனி வெள்ளை மாளிகையிலேயேதான் வசிப்பார் என்பதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாராம் ட்ரம்ப்.

ட்ரம்ப்- மெலானியா

 

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்று ஆறு மாத காலத்துக்குப் பின்னர் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப், மகன் பேர்ரன் ட்ரம்ப் ஆகியோர் வெள்ளை மாளிகையில் குடியேறியுள்ளனர். முன்னதாக மெலானியா வெள்ளை மாளிகையில் குடியேறாததால் பல வதந்திகள் உலக அளவில் பரவி வந்தன. தற்போது மெலானியாவின் வருகையால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபராவதற்கு முன்னர் ட்ரம்ப் தம்பதியினர் நியூயார்க் நகரத்தில் வசித்து வந்தனர். அவர்களது மகன் பேர்ரன் ட்ரம்ப் பள்ளிக்கல்வி வாஷிங்டன்னுக்கு குடிபெயர்ந்ததால் தடைபடும் என இத்தனை காலம் நியூயார்க்கில் மகனுக்காக வசித்து வந்ததாகக் கூறுகிறார் மெலானியா. தற்போது ஆறு மாதங்களுக்குப் பின்னர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குடியேறியதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மெலானியா. அதில், ’புது வீட்டில் நாங்கள் சேகரிக்கவிருக்கும் நினைவுகளுக்காகக் காத்திருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை வரலாற்றிலேயே ஒரு அதிபரின் மனைவி மாளிகையில் குடியேற அதிகக் காலம் எடுத்தது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. மேலும், 1963-ல் மூன்று வயது சிறுவன் ஜான் கென்னடி ஜூனியருக்குப் பின்னர் வெள்ளை மாளிகையில் வசிக்கவிருக்கும் முதல் சிறுவன் பேர்ரன் ட்ரம்ப் (வயது 11) தான். எதுவாயினும், மனைவியும், மகனும் வந்ததால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம் ட்ரம்ப்.

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தனிமையில் தவிக்கும் ஆப்பிரிக்க சிம்பன்ஸி

மேற்கு ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் சில நாள்களுக்கு முன்னர், ஒரு குட்டி சிம்பன்ஸியைக் கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது. ஐவரி கோஸ்ட் வரலாற்றிலேயே, வன உயிரின கடத்தல் சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கே இதுதான். 1965 ஆம் ஆண்டிலிருந்தே வனப் பாதுகாப்பு சட்டம் அங்கு அமலில் இருந்தாலும், அது அத்தனை கடுமையாக கடைபிடிக்கப்படவில்லை. 

தனிமையில் தவிக்கும் சிம்பன்ஸி

இந்தக் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிம்பன்ஸிக்கு "நெம்லே ஜூனியர்" என்று பெயரிடப்பட்டுள்ளது. சரியாக உணவு எடுத்துக் கொள்ளாததால் உடல் மெலிந்து மிகவும் சோர்வாகக் காணப்படுகிறது. ஐவரி கோஸ்டின் முக்கிய நகரமான அபிட்ஜனிலிருக்கும் உயிரியல் பூங்காவில் நெம்லே வைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, காடுகளில் வளரும் சிம்பன்ஸிகள் முதல் ஐந்து வருடங்கள் தங்கள் தாயிடம் தான் வளரும். அந்தப் பூங்காவில் உள்ள மற்ற சிம்பன்ஸிகள் எல்லாமே வயதில் பெரியவையாக இருப்பதால், நெம்லேவை அவைகள் சேர்த்துக் கொள்வதில்லை.  இதனால், தனிக் கூண்டில் தனிமையில் தவித்து வருகிறது நெம்லே.

 

அரபு நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், சீனா போன்ற நாடுகளில் இவைகளுக்கு அதிக கிராக்கி இருக்கிறது. உலகம் முழுக்க வருடத்துக்கு கிட்டத்தட்ட 3000 மனிதக் குரங்கு வகைகள் கடத்தப்படுகின்றன. இதனால், உராங்குட்டான், கொரில்லா, சிம்பன்ஸி போன்ற மனித குரங்கினங்கள் அழியும் தருவாயில் உள்ளன. 

 

 

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இங்கிலாந்து தேர்தல் முடிவு : தவறான கணிப்புக்கு தண்டனையாக தன் புத்தகத்தின் பக்கங்களைத் தின்ற பேராசிரியர்! (வீடியோ இணைப்பு)

 
matthew-goodwin

 

லண்டன்: சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து பொதுத் தேர்தல் முடிவுகளில், தன்னுடைய தவறான கணிப்புக்கு தணடனையாக, தான் எழுதிய புத்தகத்தின் பக்கங்களையே பேராசிரியர் ஒருவர் தின்ற வினோதம் நிகழ்ந்துள்ளது.    

இங்கிலாந்தின் கென்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் மேத்யூ குட்வின் (35). ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து விலகியது குறித்து 'Brexit: Why Britain voted to leave the European Union'. என்ற புத்தகத்தை இவர தனது நண்பர் ஒருவரோடு சேர்த்து எழுதியிருந்தார்.

இவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து பொதுத் தேர்தலின் பிரச்சாரத்தின் பொழுது, ஜெர்மி கார்பின் தலைமையிலான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியானது 38 சதவீதத்திற்கு மேல் வாக்குகள்  பெறாது என்று, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கணிப்பு தெரிவித்திருந்தார்.

அத்துடன் அப்படி தொழிலாளர் கட்சியிலானது கூடுதல் வாக்குகள் பெற்றால், தான் எழுதிய புத்தகங்களின் பக்கங்களை தானே தின்பதாகவும் டிவிட்டரில் சவால் விட்டிருந்தார்.

பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பொழுது, தொழிலாளர் கட்சியானது 40.3% வாக்குகளை பெற்றிருந்தது. இதன் காரணமாக தொழிலாளர் கட்சி ஆதரவாளர்கள் மேத்யூ குட்வினை, 'சொன்ன வார்த்தை என்ன ஆயிற்று?' என்று டிவிட்டரில் கேலி செய்து வந்தனர்.

அவர்களுக்கு பதில் அளித்த மேத்யூ குட்வின், 'நான் சொன்ன சொல்லை காப்பற்றுவேன், புகழ்பெற்ற ஸ்கை தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு  நிகழ்ச்சியில் புத்தகத்தின் பக்கங்களை சாப்பிடுகிறேன்' என்று பதில் அளித்திருந்தார்.

அதன்படி நேற்று முன்தினம் ஸ்கை தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு  நிகழ்ச்சியில் மேத்யூ குட்வின் பங்கேற்றார். அப்பொழுது அவர், 'இரண்டு சதவீதமென்பது கணிசமான அளவுதான். என்னுடைய வாக்கை நான் காப்பாற்றுகிறேன்' என்று கூறியவாறு தன்னுடைய புத்தகத்தின் பக்கக்களை கிழித்து மெல்ல ஆரம்பித்தார். பின்னர் சோகமான முகத்துடன் 'தம்பஸ் அப்' முத்திரை காட்டியபடி தொடர்ந்தார்.

ஆனால் கொஞ்ச நேரம் கழித்து ஸ்கை தொலைக்காட்சியின் செய்தித் தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ' குட்வின் புத்தகத்தின் பக்கங்களை முழுவதுமாக விழுங்கவில்லை' என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது   

 

 

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

கதிர்காமத்துக்கு பாதயாத்திரை செல்லும் நாய்

கதிர்காமத்துக்கு பாதயாத்திரை செல்லும் நாய்
 

கதிர்காமம் முருகன்  ஆலயத்துக்கு தொன்டைமானாறு  சந்நிதி ஆலயத்திலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டுள்ள குழுவினருடன் நாய் ஒன்றும் பயணிக்கின்றது. கடந்த பத்து தினங்களாக குறித்த நாய் யாத்திரிகளுடன் பயணிக்கின்றது. குறித்த நாய்க்கு யாத்திரிகர்கள்  திலகமிட்டு, பட்டுச்  சாத்தியுள்ளனர்.

http://uthayandaily.com

  • தொடங்கியவர்

ஹேர்டிரையர் பாட்டி

இங்கிலாந்தில் உள்ள நோட்டிங்ஹம்ஷையரில் வசிக்கும் ஜீன் புரூக்ஸ் தனது ஹேர் டிரையரை முடி உலர்த்த பயன்படுத்தவில்லை. மாறாக வேகத்தை கணிக்கும் இயந்திரமாக பயன்படுத்தி வேகமாக வரும் ஓட்டுனர்களை ஏமாற்றுகிறார்.

  • தொடங்கியவர்

பெர்ட் சாக்மேன்

 
ferd_3174105h.jpg
 

நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் உடற்கூறு விஞ்ஞானி பெர்ட் சாக்மேன் (Bert Sakmann) பிறந்தநாள் இன்று (ஜூன் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜெர்மனியின் ஸ்டுக்கர்ட் பகுதியில் (1942) பிறந்தவர். தந்தை நாடக இயக்குநர். குழந்தைப் பருவத்தில் லிண்டாவ் என்ற கிராமப் பகுதியில் வாழ்ந்தார். அங்கேயே ஆரம்பக்கல்வி பயின்றார். ஸ்டுக்கர்ட்டில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

* இயற்பியல் பாடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மோட்டார் வாகனம், கப்பல், ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் விமானம் ஆகியவற்றின் மாதிரிகளை வடிவமைப்பதுதான் இவரது பொழுதுபோக்கு. அதனால், வருங்காலத்தில் இவர் ஒரு பொறியாளராக வருவார் என்று குடும்பத்தினர் கருதினர்.

* ஆனால், பள்ளி இறுதி வகுப்பின்போது, தகவல்தொடர்பு மற்றும் தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்புகளைக் குறிக்கும் சைபர்நெடிக்ஸ் (cybernetics) குறித்தும் உயிரியலில் இதைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்தும் அறிந்த பிறகு, அதில் நாட்டம் ஏற்பட்டது. இயற்பியலா, உயிரியலா? என்று தீர்மானிக்க முடியாமல் சற்று குழப்பத்துடன்தான் டுபிங்கன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.

முதல் 2 ஆண்டுகளில் உயிரிவேதியியல், உடலியல் குறித்து விரிவாக கற்ற பிறகு, பொறியியலுக்கு சற்றே நெருக்கமான மின் உடல்இயங்கலியல் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார். பல்வேறு இடங்களில் படிப்பைத் தொடர்ந்தார். கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் 1974-ல் மருத்துவப் பட்டம் பெற்றார்.

* மூனிச் பல்கலைக்கழகத்தில் மின் உடல்இயங்கலியல் துறையில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். மத்திய நரம்பு மண்டலம், செல் உடலியல் குறித்து அறிவதற்காக டைட்டர் டக்ஸ் ஆய்வகத்தில் இணைந்து பணியாற்றினார். பின்னர் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆய்வகத்தில் சேர்ந்தார். அங்கு உயிரி இயற்பியல், அசிடைல்கோலின் ஏற்பிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டார்.

* பிரபல மாக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் உயிரி இயற்பியல், வேதியியல் துறை ஆய்வகத்தை தனியாக நடத்தும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இயற்பியலாளர் எர்வின் நேயரும் அங்கு பணியாற்ற வந்தார். இருவரும் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். மின் உடல்இயங்கலியல் துறையில் ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் நுட்பமான இணைப்பு இறுக்கு (patch clamp) நுட்பத்தைக் கண்டறிந்தார்.

* இந்த நுட்பம் சிஸ்டிக் ஃபைப்ரோஸ், ஹார்மோன் கட்டுப்பாடு, நீரிழிவு இன்சுலின் உற்பத்தி குறித்த ஆய்வுகளில் பயன்படுகிறது. நரம்பு, தசை அமைப்புகளைப் பாதிக்கும் குறைபாடுகள், இதய நோய், பக்கவாதத்துக்கான மருந்துகளை மேம்படுத்துவதையும் சாத்தியமாக்கியுள்ளது.

* இந்தக் கண்டுபிடிப்புக்காக எர்வின் நேயருடன் இணைந்து 1991-ம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடல்இயங்கலியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஜெர்மனின் அறிவியலுக்கான மிக உயரிய காட்ஃபிரைட் வில்ஹெம் லெபினிஸ் பரிசு மற்றும் ஹார்வே பரிசு ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

* மாக்ஸ் பிளாங்க் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் செல் ஃபிஸியாலஜி துறை இயக்குநராக செயல்பட்டுள்ளார். ஹைடல்பர்கில் உள்ள மாக்ஸ் பிளாங்க் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ஓய்வுபெற்ற அறிவியல் உறுப்பினராகவும், அதே நிறுவனத்தின் நரம்பியல் ஆராய்ச்சி அமைப்பின் ஓய்வுபெற்ற ஆராய்ச்சியாளர்கள் குழுவின் தலைமை பொறுப்பிலும் செயல்பட்டு வருகிறார்.

* ஜெர்மனியின் ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தில் தற்போது பேராசிரியராகப் பணியாற்றி வரும் பெர்ட் சாக்மேன் இன்று 76-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். உயிரி இயற்பியல், மூலக்கூறு உயிரியியல் களங்களில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

19059286_1681278398579594_78904007890124

  • தொடங்கியவர்

Photo Gallery

  • தொடங்கியவர்

 

தனிமனித ஒழுக்கம் : சுவாமி நதியானந்தா பொன்மொழிகள்! |

ஒவ்வொரு மனிதனும் தூய்மையாக வாழ சில விஷயங்களில் அதிக அக்கறை கொண்டவனாக இருக்க வேண்டும். இதில் அடிப்படையான ஒன்றுதான் தனிமனித ஒழுக்கம்!. நன்மை தரக்கூடிய விஷயங்களில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். சுவாமி நதியானந்தா சொல்லும் சில யோசனைகளை கேட்போம்!

  • தொடங்கியவர்
மாற்றுவழிகளில் சிந்தனைகளை ஏற்றுக
 

article_1483431758-hliupu.jpgமுரண்பாட்டுக் கொள்கைகளை வேடிக்கையாக எடுத்துக் கொள்ளமுடியாது. பலர் கூறுவது எல்லாமே நியாயமும் ஆகாது. சிலர் பேசும் முறையில் எமக்கு ஒத்துவராது விடினும், அதனை ஏன் நாங்கள் மீள் பரிசோதனை செய்யகூடாது என எண்ணுதல் நல்லது. 

முரண்பாட்டுக் கொள்கைகள் பல உண்மைகளைத் திறந்து கொள்கின்றது. நீங்கள் எல்லோரும் எது எதனை உண்மை என நம்புகின்றீர்களோ அவை மெத்தப்பிழையாக ஏன் இருக்கமுடியாது? உண்மைக்குள் பொய் புகுந்திடாது. பொய்க்குள்ளும் உண்மையில்லை. 

முரண்பாடுகளை உடன்பாடாக ஏற்கும் மனப்பக்குவத்தை ஏற்பது கடினம்தான். ஆனால் எது சரி, எது பிழை? என்று உணர நாம் ஒரு வழியால் மட்டுமே சிந்திகலாகாது.  

மாற்றுவழிகளில் சிந்தனைகளை ஏற்றுக. புதியன பிறக்க இது வழிகோலும். இதற்கு நிதானம் அவசியம்.  

  • தொடங்கியவர்

1982 : சவூதி அரே­பிய மன்­ன­ராக பஹ்த் பத­வி­யேற்றார்

வரலாற்றில் இன்று…

ஜுன் – 13

 

1373 :  இங்­கி­லாந்து, போர்த்­துக்கல் நாடு­க­ளுக்கு இடையில் கூட்­டணி ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. உலகில் தற்­போது அமுலில் உள்ள மிகப் பழை­மை­யான கூட்­டணி இது.


1525 : ரோமன் கத்­தோ­லிக்க மத­கு­ரு மார்­க­ளுக்­கான விதி­களை மீறி, கத்­ரினா வொன் போரா எனும் பெண்ணை மார்ட்டின் லூதர் திரு­மணம் செய்தார்.

king-of-Saudi-Arabia

 

1625 : இங்­கி­லாந்து மன்னர் முதலாம் சார்ள்ஸ், பிரெஞ்சு இள­வரி ஹென்­ரிட்டா மரி­யாவை திரு­மணம் செய்தார்.


1893 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி குறோவர் கிளீவ்­லேண்ட்டின் தாடை­யி­லி­ருந்து புற்­றுநோய் கட்­டி­யொன்று இர­க­சிய சத்­தி­ர­சி­கிச்சை மூலம் அகற்­றப்­பட்­டது. அவர் இறந்து 9 வரு­டங்­களின் பின்னர்  1917 ஆண்டே இவ்­வி­டயம் பொது­மக்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டது.


1917 : முதலாம் உலக யுத்­தத்­தின்­போது லண்­டனில் ஜேர்மன் விமா­னங்கள் நடத்­திய குண்­டு­வீச்­சினால் 162 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1934 : ஜேர்மன் சர்­வா­தி­காரி அடோல்வ் ஹிட்­லரும் இத்­தா­லிய சர்­வா­தி­காரி பெனிட்டோ முஸோ­லி­னியும்  இத்­தா­லியின் வெனிஸ் நகரில் சந்­தித்­தனர்.


1952 : பால்டிக் கடலின் மேல் பறந்­து­கொண்­டி­ருந்த, சுவீ­டனின் இரா­ணுவ விமா­ன­மொன்றை சோவியத் யூனியன் சுட்டு வீழ்த்­தி­யது.


1955 : சோவியத் யூனியனின் முத­லா­வது இரத்­தி­னக்கல் சுரங்­க­மான மீர் சுரங்கம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

 

1977 : அமெ­ரிக்க கறுப்­பி­னத்­த­வர்­களின் சம­வு­ரி­மைக்­காக பாடு­பட்ட மார்ட்டின் லூதர் கிங் ஜூனி­யரை கொலை செய்த ஜேம்ஸ் ஏர்ல் ரோய் சிறை­யி­லி­ருந்து தப்பிச் சென்று 3 நாட்­க­ளின்பின் மீண்டும் கைதானார்.


1978 : லெபனா­னி­லி­ருந்து இஸ்­ரே­லிய படைகள் வாபஸ் பெற்­றன.


1982 : சவூதி அரே­பி­யாவில் மன்னர் காலித் கால­மா­ன­தை­ய­டுத்து அவரின் சகோ­த­ரர் பஹ்த் புதிய மன்­ன­ரானார்.


1997 : இந்­தி­யாவின் புது டில்லி நகரில் திரை­ய­ரங்கு ஒன்றில் ஏற்­பட்ட தீவி­பத்­தினால் 59 பேர் உயி­ரி­ழந்­தனர். நூற்­றுக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­தனர்.


2000 : வட­கொ­ரிய ஜனா­தி­பதி கிம் ஜோங் இல், தென்­கொ­ரிய ஜனா­தி­பதி கிம் டாயே ஜுங் ஆகியோர் வட­கொ­ரி­யாவில் சந்­தித்துப் பேசினார். இரு நாடு­களின் தலை­வர்­க­ளுக்­கி­டை­யி­லான முத­லா­வது உச்­சி­மா­நாடு இது­வாகும்.


2000 : பாப்­ப­ரசர் 2ஆம் அரு­ளப்பர் சின்­னப்­பரை 1981 ஆம் ஆண்டு துப்­பாக்­கியால் சுட்ட மெஹ்மெட் அலியை இத்­தா­லிய அர­சாங்கம் மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­தது.


2002 : தென் கொரி­யாவில் அமெ­ரிக்க இரா­ணுவ வாக­ன­மொன்றில் சிக்கி 14 வய­தான ஒரு சிறுமி பலி­யா­னதால் அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக தென்­கொ­ரி­யாவில் பல மாத­கா­ல­மாக ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­றன.


2005 : 13 வய­தான கெவின் அர்­விஸோ எனும் சிறு­வனை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த குற்­றச்­சாட்டு தொடர்­பான வழக்­கி­லி­ருந்து பொப்­பிசைப் பாடகர் மைக்கல் ஜோன்ஸன் விடு­தலை செய்­யப்­பட்டார்.


2007 : ஈராக்கின் அல் அஸ்­காரி பள்­ளி­வாசல் மீது இரண்­டா­வது தட­வை­யாக குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.


2010 : இட்டோகவா எனும் எரிகல் பாகங்களைக் கொண்ட ஜப்பானிய விண்கலமான ஹயபுஸா பூமிக்குத் திரும்பியது.


2012 : ஈராக்கின் பல நக­ரங்­களில் இடம்­பெற்ற தொடர் குண்­டு­வெ­டிப்­பு­களில் 93 பேர் உயி­ரி­ழந்­த­துடன் சுமார் 300 பேர் காய­ம­டைந்­தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

ஈழத்து எழுத்தாளர் யாழ்வாணன் பிறந்த நாள்: ஜூன் 13, 1933

யாழ்வாணன் ஈழத்தின் புகழ் பெற்ற சிறுகதையாசிரியர். சண்முகநாதன் நாகலிங்கம் என்பது இவரது இயற்பெயர். யாழ்ப்பாண மாநகர சபை அலுவலகத்தில், நகர மண்டபக் காப்பாளராக கடமையாற்றினார். இவர் 1933-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதேநாளில் முருகேசு நாகலிங்கம் - செல்லையா லட்சுமி ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக

 
ஈழத்து எழுத்தாளர் யாழ்வாணன் பிறந்த நாள்: ஜூன் 13, 1933
 
யாழ்வாணன் ஈழத்தின் புகழ் பெற்ற சிறுகதையாசிரியர். சண்முகநாதன் நாகலிங்கம் என்பது இவரது இயற்பெயர். யாழ்ப்பாண மாநகர சபை அலுவலகத்தில், நகர மண்டபக் காப்பாளராக கடமையாற்றினார்.

இவர் 1933-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதேநாளில் முருகேசு நாகலிங்கம் - செல்லையா லட்சுமி ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக அனுராதபுரத்தில் பிறந்தார். இவர் மனைவி பெயர் தபோநிதி; மகன்கள்,யாழ் சுதாகர், சுரதா யாழ்வாணன், சுரேஷ் யாழ்வாணன் மற்றும் கண்ணதாசன் யாழ்வாணன்; மகள், யாழினி

ஈழத்து இலக்கிய உலகில் யாழ்வாணன் என்ற பெயர் நன்கு புகழ் பெற்றது. யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கியவர்களுள் யாழ்வாணனும் ஒருவர். தொடக்க காலத்திலிருந்தே அதன் செயலாளராகப் பணிபுரிந்து வருகிறார். யாழ் இலக்கிய வட்டத்தின் வளர்ச்சிக்கான காரணங்களுள் அவரது அயராத அடக்கமான உழைப்பு மிகவும் முக்கியமான ஒன்று.

யாழ்வாணன் சுகாதாரப் பகுதியினரால் வெளியிடப்பட்ட சுகாதார ஒலி என்ற பத்திரிகையின் ஆசிரியர். 1968-ஆம் ஆண்டு நடைபெற்ற சுகாதார - குடி நல வார விழாக் குழுவின் செயலாளராகக் கடமையாற்றியதுடன் எழில்மிகு யாழ்ப்பாணம் என்ற வாடா மலரையும் வெளியிட்டு அறிஞர் பெருமக்களின் பாராட்டுதல்களையும் அவர் பெற்றுள்ளார்.

அண்ணா அஞ்சலி அவரது மற்றுமோர் தொகுப்பு நூலாகும். கடனுதவிச் சிக்கனச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். இலக்கிய விழாக்கள், நாடக - நடன விழாக்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை செம்மையாக ஒழுங்கு செய்து சிறப்பாக நடத்தி முடிக்கும் யாழ்வாணனின் மந்திர சக்தியையும் பலர் அறிவர். சிறந்த சிறுகதையாசிரியராக யாழ்வாணன் பல பரிசுகளைப் பெற்ற எழுத்தாளர். பரந்த சமூக சேவையாளரான யாழ்வாணன் நிறைந்த நல்லியல்புகளைக் கொண்ட பண்பாளர்.

1987ஆம் ஆண்டு அவர் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்று சென்னைக்கு இடம் பெயர்ந்தார். அக்டோபர் 5, 1996 ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

  • தொடங்கியவர்

வண்ணமயமான செயற்கை மேகத்தை உருவாக்குகிறது நாசா!

 

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இன்று வண்ணமயமான மேகத்தை செயற்கையாக உருவாக்க இருக்கிறது. அயனி மண்டலம் மற்றும் அரோரா ஒளி தொடர்பான ஆய்வுக்காக, இந்தச் செயற்கை மேகம் உருவாக்கப்படவிருக்கிறது.

வண்ணமயமான மேகத்தை உருவாக்கவிருக்கும் நாசா

வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள நாசாவுக்குச் சொந்தமான வால்லப் ஏவுதளத்திலிருந்து அனுப்பப்படும் ராக்கெட், நீலப்பச்சை மற்றும் சிவப்பு வண்ண ரசாயனக் கலவையை வெளியிடும். பேரியம், ஸ்ட்ரோன்டியம் மற்றும் கியூப்ரிக்-ஆக்ஸைடு போன்றவற்றால் ஆனது இந்த ரசாயனக் கலவை. இந்தக் கலவை, அயனி மண்டலத்தில் வண்ணமயமான செயற்கை மேகமாக உருவாகும். இந்த ரசாயனக் கலவையால், சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் ஏற்படாது என நாசா தெரிவித்துள்ளது. இந்தச் செயற்கை மேகத்தில் சூரிய ஒளியினால் ஏற்படும் மாற்றங்களையும், இதன் நகர்வையும் விஞ்ஞானிகள் பூமியில் இருந்தபடியே ஆய்வுசெய்வார்கள்.

வானிலை காரணமாக இந்த ஆய்வு ஐந்து முறை திட்டமிடப்பட்டு, பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. நியூயார்க் மற்றும் நார்த் கரோலினா நகரங்களுக்கு இடைப்பட்ட அட்லாண்டிக் கடலோரப் பகுதிகளில், இந்த செயற்கை மேகம் தோன்றும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வாழ்வை மாற்றிய புத்தகம் - “கண்களை மூடிக்கொண்டு பாருங்கள்!”

``பாடப்   புத்தகங்களை விட,   மற்ற    புத்தகங்களைத்தான் அதிகம் படித்திருக்கிறேன். குழந்தைத்தனமாகக் குதூகலிக்கச் செய்த ஹாரி பாட்டரும் உண்டு; வாழ்க்கையைப் புரியவைத்த தத்துவப் புத்தகங்களும் உண்டு.

p24a.jpg

மிச் ஆல்போம் எழுதிய நாவல் ‘ட்யூஸ்டேஸ் வித் மோரி’யை என் கல்லூரி நாள்களில் படித்திருக்கிறேன். கதையின் நாயகன் ஒரு புத்தகம் எழுதும் முயற்சிக்காக தனது முன்னாள் ஆசிரியரைச் சந்திக்க விரும்புகிறார். அந்த ஆசிரியர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தறுவாயில் இருக்கிறார். ஒவ்வொரு செவ்வாயும் நடக்கும் அந்தச் சந்திப்புகளை நாவலின் அத்தியாயங்களாக எழுதியிருக்கிற ஆசிரியர், ‘சாகத் தெரிந்துவிட்டால், வாழக் கற்றுக்கொள்வாய்’ என்கிறார்.

‘நீங்கள் கண்களைத் திறந்து ஒரு விஷயத்தைப் பார்க்கிறீர்கள்... உங்களால் அதை நம்ப முடியவில்லையா? கண்களை மூடிக்கொள்ளுங்கள். உங்களால் உணர முடிந்தால் அது நிஜம்’ என்கிறார். ‘மக்களும் அப்படித்தான். கண்களைத் திறந்தபடி ஒருவரைப் பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்று சொல்வதற்குப் பதில், கண்களை மூடிக்கொண்டு பார்த்துச் சொல்லுங்கள். அப்போது ஒருவேளை உங்களுக்குப் பிடிக்கலாம். நீங்கள் வெளிச்சத்தில் இருக்கிறீர்களோ, இருட்டில் இருக்கிறீர்களோ... மனிதர்களை நம்பக் கற்றுக்கொள்ளுங்கள்... நம்பினால்தான் அவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும்’ என்கிறார்.

சாகக் கிடக்கும் ஒருவரால் அந்த இறப்பை எப்படி இவ்வளவு எளிமையாகப் பார்க்க முடியும் என்கிற பிரமிப்பு இந்தப் புத்தகத்தைப் படிக்கிற யாருக்கும் ஏற்படும். `பயத்துடன் வாழ்பவர்கள், பயத்துடன்தான் இறந்தும் போகிறார்கள். மரணத்தை ஏற்றுக்கொள்ளத் தெரிந்தவர்கள், வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்கிறார்கள்' என்கிற வரிகள், என்னை மிகவும் பாதித்தவை.

‘நான் என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சந்தோஷமாக முடித்துவிட்டேன். எனக்கான முடிவு நெருங்கிவிட்டது... வாழ்ந்த வாழ்க்கைக்கு நன்றி செலுத்துகிறேன் என்று சொல்லும் பக்குவம் உங்களுக்கு இருந்தால், வாழும்போதும் வாழ்க்கை உங்களுக்குத் திருப்தியாகவும், மகிழ்ச்சியானதுமாகவே இருக்கும்’ என்பார் நாவல் ஆசிரியர்... எத்தனை யதார்த்தம்!

p24b.jpg

`டோன்ட் ஹோல்ட் ஆன்  டூ லாங்... டோன்ட் லெட் கோ டூ ஸூன்' என்பார். இந்த வரிகளை இன்று என் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்துக்கொள்கிறேன். `கோபத்தையோ, சண்டையையோ ரொம்ப நாள்கள்  மனதுக்குள் வைத்திருக்காதீர்கள்; அதே போல உங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் சீக்கிரம் கைவிட்டுவிடாதீர்கள்... நீங்கள் விரும்புகிறவர்களையும்' என்பதாகத்தான் எடுத்துக்கொள்கிறேன். இதையேதான் நான் சந்திக்கிறவர்களுக்கும் அடிக்கடி சொல்கிறேன்.

இந்தப் புத்தகத்தை ஒவ்வொருமுறை படிக்கும்போதும் அழுதிருக்கிறேன். கதையில் வரும் பேராசிரியர், என் தாத்தாவை நினைவுபடுத்துவார். அந்தப் புத்தகத்தைப் பற்றி தாத்தாவிடம் நிறைய விவாதித்திருக்கிறேன். என் தாத்தா இறந்தபோது கடைசியாகப் படித்தேன். அதன்பிறகு மறுபடி படிக்க எனக்குத் தைரியம் இல்லை. 

நாம் எப்படி அடுத்த வர்களைக் கவர முடியும்? இந்தக் கேள்வியும் இந்த நாவலில் வரும்.  `உன்னைவிட மேலே இருப்பவர்களிடம் நீ பந்தா காட்டாதே... அவர்கள் உன்னை எப்போதும் தாழ்வாகவே பார்ப்பார்கள். உனக்குக் கீழே இருப்பவர்களிடம் நீ பந்தா காட்டினாலும் அவர்கள் உன்னைப் பொறாமை யுடன்தான் பார்ப்பார்கள். எல்லோரும் சமம் என நீ நினைத்துக்கொண்டு உன் வாழ்க்கையை வாழ்' என்பார். இது எனக்கே பெர்சனலாக உதவியிருக்கிறது.

‘வீ பிகம் தி புக்ஸ் வீ ரீட்’ என ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு. இந்தப் புத்தகமும் என்னை அப்படித்தான் மாற்றியது.''

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உள்ளாடை அணிந்து நிகழ்ச்சி நடத்தச் சொன்னவருக்கு பெண் தொகுப்பாளர் கொடுத்த பதிலடி!

 

பெண் தொகுப்பாளர்

பெண்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் பொதுவெளியில் விமர்சிப்பது ஆணாதிக்க சமுதாயத்தின் வழக்கம். 'பொது இடங்களில் பெண்கள் ‘நாகரிகமான’ உடைகள் அணிய வேண்டும்; லெக்கிங்ஸ் அணியக் கூடாது' என்பது போன்ற பல அறிவுரைகளை அள்ளி வழங்குவார்கள். ஆடைகளோடு சம்பந்தப்படுத்தி நடத்தையைக் கேலி செய்யும் ‘ட்ரோல்’ கலாசாரம், இன்று பரவலாகி வருகிறது. நடிகைகள் அணியும் ஆடைகள் அடிப்படையில் இணையத்தில் ’ட்ரோல்’ செய்யப்படுவது குறித்து சமீபத்தில் 'மிரர் நெள' என்ற ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாதம் நடத்தப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஆடை, ஒரு பத்திரிகைக்காக தீபிகா படுகோன் கொடுத்த போஸ், டென்னிஸ் விளையாடும்போது சானியா மிர்சாவின் உள்ளாடை தெரியும் ஒரு புகைப்படத்தை பிரபல இயக்குநர் ஒருவர் ’ஷேர்’ செய்தது, ரம்ஜான் பண்டிகையன்று இந்தி நடிகை சனா பாத்திமா நீச்சல் உடையில் அளித்த போஸ் ஆகியவை ‘ட்ரோல்’ செய்யப்பட்டது குறித்து அந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஃபயே டிசெளசா (Faye D'souza) என்ற பெண் இருந்தார். விவாதத்தில் பங்கேற்ற இஸ்லாமிய மதகுருவான மெளலானா யாசூப் அபாஸ் (Maulana Yasoob Abbas) என்பவர், “பெண்கள் நாகரிகமான உடைகளை அணிய வேண்டும்” என்ற பாணியில் பேசினார். இந்தக் கருத்தை வலியுறுத்தும்போது, ”நீ உள்ளாடை அணிந்துகொண்டு வந்து விவாதம் செய். ஆண்களுக்கு நிகராகிவிடுவாய். சமத்துவம் ஏற்பட்டுவிடும்" என்று குத்தலாகச் சொன்னார்.  இந்த வார்த்தைகளை  அவர் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்க, அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க தயாரானார் ஃபயே டிசெளசா.

விவாதத்தில் பங்கேற்ற மற்றவர்களை அமைதியாக இருக்குமாறு சொன்ன ஃபயே டிசெளசா, கேமராவைப் பார்த்துப் பேச தொடங்கினார். ”அவர் கூறிய கருத்தால் நான் ஆவேசம் அடைவேன் என்று அவர் நம்புகிறார். நான் என் நிலை தடுமாறி, என் வேலையைச் செய்ய மறந்துவிடுவேன் என நம்புகிறார்'' என்றவர், ''நான் உங்களை மாதிரி பலரையும் பார்த்திருக்கிறேன் மெளலானா ஜி. உங்களைப் பார்த்து நான் பயப்படவில்லை. உங்கள் கருத்தால் நான் அதிர்ந்துபோகவில்லை. சனா ஃபாத்திமா, சானியா மிர்சா மற்றும் பல பெண்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். அவர்களின் உடைகளையும் அவர்களையும் விமர்சித்தால், நடுங்கிப்போய் சமையலறைக்குள் ஓடிவிடுவார்கள் என நினைக்கும் ஆண்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்த உலகில் நீங்கள் மட்டுமே ஆட்சி செய்ய அனுமதிக்கமாட்டோம். நாங்கள் எங்கும் ஓடிவிடமாட்டோம்” என்று தீர்க்கமான குரலில் சொன்னார். 

 

 

அதன்பிறகும் தன் நிலைப்பாட்டுக்கு நியாயம் சேர்க்க முயற்சி செய்தார் மெளலானா. ஆனால், அது எடுபடவில்லை. தான் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமை உண்டு. பெண்கள் அணியும் ஆடைகளை  மையப்படுத்தி அவர்களை ‘ட்ரோல்’ செய்து, அவமதிக்க நினைக்கும் ஆண்களுக்கு  இந்த சம்பவம் ஒரு பாடமாக  அமையட்டும். ஃபயே டிசெளசா போல ஒவ்வொரு பெண்ணிடமும் இந்தத் தைரியமும் நிதானமும் இருந்தால், ’சமூகக் காவலர்கள்’ போடும் கூச்சல் கரைந்துபோய்விடும். 

இந்த சம்பவம் குறித்த வீடியோ லிங்கை காண: 

 

 

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கிருஷ்ணகிரி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பிரம்ம கமலம்!

 
 

கிருஷ்ணகிரியில், இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்திருந்ததைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. 

Bramma kamalam


விதை, கிழங்கு, தண்டு ஆகியவற்றிலிருந்து புதியதாக முளைக்கும் தாவர வகைகளைப் பார்த்திருப்போம். பிரம்ம கமலம் என்றழைக்கப்படும் அபூர்வ மலர் வகைத் தாவரத்தின் இலையை வெட்டிவைத்தாலே, புதிதாக முளைத்துவிடும். இலையே மண்ணில் வேர்விட்டு வளர்ந்து, பிறகு தண்டுபோல செயல்படும். 

இலையின் பக்கவாட்டில் சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புது இலைகள் உருவாகும். அதன் கணுக்களில் புதிய மொட்டுகள் உருவாகி மலர்களாய் மலரும். இந்த மலர்கள் ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து, ஓரிரு நாள்களில் உதிர்ந்து போகும் தன்மை கொண்டவையாகும். இந்த மலர், வெள்ளை நட்சத்திரம் போல ஒரு தட்டு அளவில் மலர்கள் அமைந்திருக்கும்.

இந்த வித்தியாசமான மலர் இமயமலையில் காணக்கூடியது. இலையிலிருந்து பூக்கும் இந்த மலர், பிரம்மனின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றுவதுபோல அமைந்திருப்பதால், இதைப் பிரம்ம கமலம் என்று அழைக்கின்றனர். மருத்துவ குணமும் தெய்வீகத் தன்மையும் வாய்ந்த இந்த அதிசய மலரை, அது மலரும் நேரத்தில் கண்டு தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்த மலரை  தற்போது தமிழகத்திலும் பரவலாக வளர்த்துவருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் 8-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின்சார வாரிய ஊழியரான மணி (60) என்பவரது வீட்டில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு, செடியைக் கொண்டுவந்து வைத்துள்ளனர். நேற்று முன்தினம் அந்தச் செடியில் நள்ளிரவு நான்கு பூக்கள் மலர்ந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர், அந்த அதிசயப் பூக்களை ஆர்வத்துடன் வந்து பார்த்துச் சென்றனர். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

1949 : விண்வெளிக்கு முதல் தடவையாக குரங்கு அனுப்பப்பட்டது

வரலாற்றில் இன்று…

ஜுன் – 14

 

1276 :  மொங்­கோ­லிய ஆக்­கி­ர­மிப்புப் படை­யி­ன­ரி­ட­மி­ருந்து, சீனாவின்  சோங் வம்ச அரச குடும்­பத்­தினர் 8 வய­தான ஸாயோ ஷீயை மன்­ன­ராக்கி முடி­சூ­ட் டினர். 


1645 : பிரித்­தா­னிய மன்­ன­ருக்கு ஆத­ர­வான 12,000 பேர் கொண்ட படையை நாடா­ளு­மன்­றத்­துக்கு ஆத­ர­வான 15,000 பேர் கொண்ட படை தோற்­க­டித்­தது.


1777 : நட்­சத்­தி­ரங்­களும் கோடு­களும் கொண்ட கொடி அமெ­ரிக்க தேசிய கொடி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது.

space-monkey

1800 : நெப்­போ­லி­யனின் படைகள் இத்­தா­லியை மீண்டும் கைப்­பற்­றின.


1807 : நெப்­போ­லி­ய­னின் படைகள் போலந்தில் ரஷ்ய படை­களை தோற்­க­டித்­தன.


1830 : அல்­ஜீ­ரியா மீது படை­யெ­டுத்த 34,000 பிரெஞ்சு துருப்­பினர் அல்­ஜீ­ரி­யாவில் தரை­யி­றங்க ஆரம்­பித்­தனர்.


1846 : மெக்­ஸிகோ வச­மி­ருந்த கலி­போர்­னி­யாவின் சோனோமா நகரில் மெக்­ஸிகோ ஆட்­சிக்கு எதி­ராக கிளர்ச்சி ஏற்­பட்டு கலி­போர்­னியா குடி­ய­ரசு பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. பின்னர் அப்­ப­கு­தியை அமெ­ரிக்கா கைப்­பற்­றி­யது.


1872 : கன­டாவில் தொழிற்­சங்­கங்கள் சட்­டபூர்வமா­ன­தாக்­கப்­பட்­டன.


1900 : ஹவாய் தீவு அமெ­ரிக்­காவின் ஒரு பிராந்­தி­ய­மாக்­கப்­பட்­டது.


1907 :  நோர்­வேயில் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை அளிக்­கப்­பட்­டது.


1940 : பிரான்ஸின் தலை­நகர் பாரிஸை ஜேர்மன் படைகள் கைப்­பற்­றின.


1940 : சோவியத் யூனியன் விதித்த நிபந்­த­னைகள், காலக்­கெ­டு­வினால் லித்­து­வே­னியா சுதந்­தி­ரத்தை இழந்­தது.


1949 : 2 ஆம் அல்பேர்ட் எனும் பெய­ரு­டைய குரங்­கொன்று அமெ­ரிக்­கா­வினால் விண்­வெ­ளிக்கு அனுப்­பப்­பட்­டது. விண்­வெ­ளிக்கு சென்ற  முதல் குரங்கு இது.


1959 : டொமி­னிக்கன் குடி­ய­ரசில் ரபாயெல் ட்ருஜி­லோவில் ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்­காக கியூபாவி­லி­ருந்து டொமி­னிக்கன் குழு­வொன்று புறப்­பட்­டது. இக்­கு­ழுவில் நால்­வரைத் தவிர ஏனையோர் கொல்­லப்­பட்­டனர்.


1962 : ஐரோப்­பிய விண்­வெளி முக­ரகம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.


1967 : சீனா தனது முத­லா­வது ஐத­ரசன் குண்டை பரி­சோ­தித்­தது.


1985 : கிறீஸின் ஏதென்ஸ் நக­ரி­லி­ருந்து புறப்­பட்ட விமா­ன­மொன்று ஹிஸ்­புல்லா  கிளர்ச்­சி­யா­ளர்­களால் கடத்­தப்­பட்­டது.


1994 : கன­டாவின் வன்­கூவர் நகரில் நடை­பெற்ற ஹொக்கி போட்­டி­யொன்றின் பின் ஏற்­பட்ட வன்­மு­றை­க­ளை­ய­டுத்து 200 பேர் கைது செய்­யப்­பட்­டனர்.


2002 : பூமியி­லி­ருந்து 121,000 கிலோ­மீற்றர் தூரத்தில் விண்கல்லொன்று கடந்து சென்றது. இது சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்காகும்.


2014 : யுக்ரைனில் அந்நாட்டு விமானப்படை விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டதால் 49 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

அப்ரைசலில் தூள் கிளப்ப 5 டிப்ஸ்! #MorningMotivation

 
 

பொதுவாகவே திறமைக்கான அங்கீகாரம் எங்கேயுமே கிடைக்கிறதில்ல. இந்த மனக்குமுறல் சிறு தொழில் நடக்கும் இடம் தொடங்கி ஐ.டி கம்பெனிவரை இருக்கத்தான் செய்கிறது. அப்படி சோர்ந்து விடாமல் உங்களின் திறமையை நிரூபித்து அதற்கான அப்ரைசல், அங்கீகாரத்தைப் பெற இந்த ஐந்து டிப்ஸ்களைக் கடைபிடியுங்கள். 

அப்ரைசல்

1.பொறுப்புகளை ஏற்று கொள்ளுங்கள்

அலுவலகத்தில் புதிதாகத் தொடங்கும் ஏதேனும் ஒரு புதிய ப்ராஜெக்டின் பொறுப்பை யாரேனும் ஏற்றுக்கொள்ளுமாறு கூறும் சமயத்தில்,அதற்கான முழுத் தகுதி இருந்தும், அதைப்பற்றிய முழு அறிவு இருந்தும் பொறுப்பை ஏற்கத் தயங்கி நிற்காதீர்கள். முன்வந்து பொறுப்பை ஏற்று சிறப்பாக முடித்துக் கொடுங்கள்.

2.சுய மதிப்பீடு

ஒரு வருடம் முழுவதும் நீங்கள் செய்த வேலைகள் என்ன? அலுவலகத்தில்,உங்களுடைய  டீமில் உங்களுக்கான பங்கை சரியாக செய்துள்ளீர்களா? சென்ற வருடத்தைவிட இந்த வருடம் வேலையில் ஏதேனும் நல்ல விதமான மாற்றம், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்விகளுக்கு நீங்களே பதில் அளித்து சுயமதிப்பீட்டை அளித்துக்கொள்ளுங்கள். இந்தச் சுயமதிப்பீட்டில் நேர்மையாக பதில் அளிப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் உங்களின் திறமை என்ன? எந்த வேலையைச் சீக்கிரத்தில், சிறப்பாக முடிக்க இயலும் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

3.மேல் அதிகாரிகளிடம் சமமாகப் பழகுங்கள்

அப்ரைசலில் நம்மைப் பற்றியும் நம் வேலைகளைப் பற்றியும் முயற்சிகளைப் பற்றியும் மேலிடத்தில் நம் சார்பாக எடுத்துக் கூறப்போகும் மேல் அதிகாரியோ, டீம் லீடரோ, ப்ராஜக்ட் மேனேஜரோ யாராக இருப்பினும் அவர்களிடம் ஓர் அழகான ஜென்டில் ரிலேஷன்ஷிப்பை வளர்த்துக்கொள்ளுங்கள். அதற்காக அடிமை போன்றும் அப்ரன்டிஸ் போன்றும் இல்லாமல் உங்களின் வேலையைச் சரியான நேரத்தில் சிறப்பாக முடிப்பதோடு, மேல் அதிகாரிகள், சக ஊழியர்கள் என அனைவரிடமும் சமமாக அன்புடன் பழகுங்கள்.

4. சோசியல் மீடியாக்களைத் தவிர்க்கவும்

அலுவலக நேரங்களில் சோசியல் மீடியாக்களை ப்ரௌஸ் செய்வதைத் தவிர்த்திடுகள். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சோசியல் மீடியாக்களில் நேரம் செலவிடுவதை வேலைக்கு நடுவில் ஒரு ப்ரேக்காக வைத்துக்கொள்ளலாம். ஆனால், அதுவே வேலை செய்யும் நேரங்களில் டார்கெட்டை அடைய முடிக்காமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கக் கூடாது. உங்களிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்துச் சென்ற அதிகாரி திரும்பி வந்து பார்க்கும்போது ஸ்க்ரீனில் ஃபேஸ்புக் அல்லது ட்விட்டர் பக்கத்தைப் பார்க்க நேரிட்டால் அது உங்களின் அப்ரைசலை வெகுவாகப் பாதிக்கும் என்பதை மனதில் வைத்துச் செயல்படுங்கள்.

5. வேலையில் புதுமையைப் புகுத்துங்கள்

நீங்கள் செய்யும் வேலையை ரசித்துச் செய்யுங்கள், புதிதான ஐடியாக்கள், புதிதான முயற்சிகளைத் தைரியமாக எடுத்து அதை வெற்றி அடையச் செய்யுங்கள். இதனால் உங்களின் திறமைமீதும் தன்னம்பிக்கை ஏற்படவும் அவநம்பிக்கை மாறவும் வாய்ப்புகள் உள்ளன.

மாதம் ஒரு முறை, வாரம் ஒரு முறை என உங்களுக்கு நீங்களே டார்கெட் ஃபிக்ஸ் செய்து கொண்டு அதை அடைய முழு முயற்சி செய்யுங்கள். எல்லோரிடமிருந்து தனித்துத் தெரிவதற்கு புதுமையான முயற்சிகளும் கடின உழைப்பும் அவசியம் தேவை.

 

ஒரு வருடம் அப்ரைசல் சரியாக இல்லை என்று சோர்ந்து விடாமல், விடா முயற்சியுடன் உழைத்தால் அடுத்த வருடம் கண்டிப்பாக அப்ரைசல் நம் கைவசம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

‘‘தோள் வலி தரும், கிருமி பரப்பும்’’ - உங்கள் ஹேண்ட் பேக்கை கவனியுங்கள் பெண்களே!

 

ஹேண்ட் பேக்

பெண்களின் ஹேண்ட்பேக், கர்ணனின் கவச குண்டலம் போன்று உடலோடு ஒட்டிப் பிறந்தது. பெண்களின் பலவித தேவைகளைத் தன்னிடம் கொண்டிருக்கும் இவை, டிசைன் மற்றும் அளவுகளில் மாறுபடும். குட்டீஸ் முதல் குடும்பத்தின் அத்தனை பேருக்குமான பொருள்களும் அதில் அடைக்கலமாகி இருக்கும். போதாக்குறைக்கு... போகும் வழியில் நினைக்கும் பொருள்களை வாங்கி நிறைத்து கொள்வோம். சில சமயம் பையில் ஜிப் போட முடியாத அளவுக்கு மூச்சுத் திணற வைப்போம். ''இப்படி ஏற்றும் பொருள்களின் எடை அதிகரிக்க அதிகரிக்க, பிரச்னைகளையும் அள்ளித் தருகிறது என்பது பலருக்கும் தெரிவதிலை. ஹேண்ட்பேக்கை முறையாகப் பராமரிக்காமல் இருப்பதால், அது நோய் பரப்பும் பொருளாகவும் மாறிவருகிறது'' என்கிறார், சேலத்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ரம்யா. 

‘‘பெண்கள் அதிகம் பயன்படுத்துவது ஷோல்டர் பேக் வகைகளையே. வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்களுக்குத் தேவையான குடை, வாட்டர் பாட்டில், லன்ச் பாக்ஸ், முக்கியமான பேப்பர்கள், மேக்கப் வகையறாக்களை ஹேண்ட் பேக்கில் வைத்துக்கொள்கிறார்கள். குறைந்தபட்சம் நான்கு கிலோ பொருள்களுடன் ஒரு பக்கமாக மட்டுமே மாட்டிக்கொண்டு செல்வார்கள். இப்படித் தொடர்ந்து பயன்படுத்துவதால், என்னென்ன பிரச்னைகள் வருகிறது தெரியுமா... தோள்பட்டையில் உள்ள நரம்புகள் நசுங்கி, கையில் வலியை ஏற்படுத்தும். அந்தப் பகுதியின் தசைகளும் பாதிப்படையும். கழுத்தில் ஆரம்பித்து தோளில் முடியும் எலும்பை, ‘ஆக்சிலரி போர்ன்’ என்றும் 'பியூட்டி போர்ன்' என்றும் சொல்வார்கள். அந்த எலும்பையும் ஹேண்ட்பேக் அழுத்தி பிரச்னையை உண்டாக்குகிறது. 

இது மட்டுமா... பலரும் ஹேண்ட்பேக்கை வாங்குவதோடு சரி, கடைசியில் தூக்கி வீசும் வரை அவற்றை துவைத்து சுத்தம் செய்வதேயில்லை.ரெஸ்ட் ரூம் முதல் ரெஸ்ட்டாரென்ட் வரை தன்னுடனே எடுத்துச் செல்கிறார்கள். இப்படிப் போகும் இடமெல்லாம் கிருமிகளைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குள் படுக்கை அறை வரை கொண்டு வரப்படுகிறது ஹேண்ட் பேக். குழந்தையை மடியில் வைத்திருக்கும்போது, ஹேண்ட்பேக்கை வாயில்வைத்து சப்புவதையும் பார்க்கலாம். இதனால், குழந்தைகளும் நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர். இது பற்றிய விழிப்புஉணர்வே நூற்றில் தொண்ணூறு பெண்களிடம் இல்லை. 

சரி, இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? 

பெண்கள் தங்களுக்கான பெர்சனல் பொருள்கள் இல்லாமல் வெளியில் செல்ல முடியாது. அதனால், ஹேண்ட்பேக் அவசியம். ஆனால், ஒரு ஹேண்ட்பேக்கை வாங்கும்போதே அதன் எடையைக் கவனிக்கவும். அன்றாடம் பயன்படுத்தும் பேக் எனில், லைட் வெயிட்டாக இருக்கட்டும். அடிக்கடி துவைத்துச் சுத்தம்செய்ய எளிதாக இருக்கட்டும். 

தோள் பகுதியில் வரும் ஸ்ட்ராப், பட்டையாக இருக்கட்டும். ஒரே பக்கமாகத் தூக்கிச்சென்று தோளில் ஏற்படும் வலியைத் தடுக்க... இரண்டுத் தோள்களிலும் மாட்டிக்கொள்ளும்படியான பின்பக்க பேக்கைப் பயன்படுத்தலாம். இல்லையா... ஷோல்டர் பேக்கை பயன்படுத்தும்போது வலது கை, இடது கை என அடிக்கடி பையை மாற்றி அணியுங்கள். அனைத்துப் பொருள்களையும் ஹேண்ட்பேக்கில் அடைக்காமல், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றுக்கு லஞ்ச் பேக்கைப் பயன்படுத்துங்கள். 

ஹேண்ட்பேக்கில் பல அறைகள் இருந்தால், அதில் வைக்க வேண்டிய முக்கிய பொருள்களை லிஸ்ட் போடவும். வீட்டில் பயன்படுத்தும் பொருளை, அலுவலகம் கிளம்பும் முன்பு, வீட்டிலேயே எடுத்துவைத்து விடவும். இதுபோல அலுவலகம் சார்ந்த விஷயத்தையும் பயன்படுத்தலாம். இதனால் பையினால் ஏற்படும் தேவையில்லாத வலியைத் தவிர்க்கலாம்.

ஷாப்பிங் மற்றும் சுற்றுலா செல்லும்போது பெண்கள் மட்டுமே மொத்த பொறுப்புகளையும் தனது ஹேண்ட்பேக்கில் நிறைத்துக்கொள்ள வேண்டியதில்லை. கணவர் மற்றும் குழந்தைகளுக்கு என்று தனித்தனி பையைக் கொடுத்துவிடவும். அதில், அவர்களுக்குத் தேவையான பொருள்களை வைத்துக்கொள்ளப் பழக்கப்படுத்தவும். வாங்கும் புதிய பொருள்களையும் தேவையானவர்களின் பைகளில் வைத்துவிடவும்.

 

அடிக்கடி ஹேண்ட்பேக்கை சுத்தம்செய்து தேவையற்ற காகிதங்கள், பயன்பாடில்லாத பொருள்களை அப்புறப்படுத்தவும். சோப்புத் தூள் அல்லது கிளீனிங் லிக்விட் பயன்படுத்தி ஹேண்ட்பேக்கின் வெளிப்புறப் பகுதியைச் சுத்தம் செய்யவும். மொத்தத்தில் ஹேண்ட்பேக்கை லக்கேஜ் ஏற்றும் லாரியாக இல்லாமல், மயிலிறகாக மாற்றிக்கொள்ளவும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

" உலகைக் காத்திட, உடைகளை வாடகைக்கு எடுங்கள்" - டென்மார்க்கில் அசத்தும் பெண்

"குழந்தைகள் வளரும். ஆனால், குழந்தைகளின் உடைகள் வளராது..." இதுதான் டென்மார்க்கைச் சேர்ந்த விகா ஸ்வென்சான் முன்வைக்கும் கருத்து. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... ஒவ்வொருவரும் வீட்டு அலமாரியிலும் அத்தனை பழைய துணிகள் நிறைந்து கிடக்கும். அதிகபட்சம், அதை ஏதோ ஓர் தொண்டு நிறுவனத்துக்கு இலவசமாகக் கொடுப்போம். அவர்கள், அவற்றை சில காலம் உபயோகிப்பார்கள். அதன்பின், அவ்வளவு உடைகளும் என்னவாகும் என்று யோசித்ததுண்டா. உலகளவில் 20 சதவிகிதம் அளவுக்கான உடைகள் மட்டுமே மறு உபயோகம் அல்லது மறுசுழற்சிசெய்யப்படுகின்றன. மற்றவை அனைத்தும் பூமிக்குப் பாரமாய், குப்பைக்கிடங்குகளில் தேங்கிக்கிடக்கின்றன. 

VIGGA_ViggaSvensson2-630x390_10239.jpg

குழந்தைகளுக்கான உடைகள் வடிவமைப்பில் 10 ஆண்டுகளாக ஈடுபட்டுவந்த டென்மார்க்கைச் சேர்ந்த விகாவுக்கு, இந்த பூமியைக் காயப்படுத்தாமல் ஏதாவது ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மிகுந்திருந்தது. அதன்பொருட்டு அவர் உருவாக்கியதுதான், இந்த "வாடகைக்கு குழந்தைகள் உடைகள் " தொழில். டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில், ஒரு மிகப்பெரிய சலவைத் தொழிற்சாலையை உருவாக்கியுள்ளார். இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட குழந்தைகள் உடைகளை, மாத வாடகைக்கு விடுகிறார். 16 உடைகள் அடங்கிய ஒரு பையை வாடகைக்கு எடுக்க, மாத வாடகையாக 55 டாலர்களை வசூலிக்கிறார். திரும்பும் உடைகளைத் தனித் தனியாகப் பிரித்து, கறைகளை நீக்கி, சுத்தமான முறையில் சலவைசெய்கிறார். ஒரு உடையை 100லிருந்து 150 தடவைகள் வரை வாடகைக்கு விடுகிறார். 

"உலகைக் காக்க எந்த சூப்பர் ஹீரோக்களும் வர மாட்டார்கள். அது ஒரு அதிசயமாக நடக்காது. சின்னச்சின்னதாய் நாம்தான் முயற்சிகளை முன்னெடுத்து, பூமியைக் காத்திட வேண்டும். அதற்கான சிறு முயற்சிதான் இது" என்கிறார் விகா. டென்மார்க்கின் நடுத்தர வர்க்கத்திடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, "குழந்தைகள் உடைகளை வாடகைக்கு விடும் திட்டம்". 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

கொடுத்தால் குறையாத ஒரே தானம்... ரத்த தானம்! #Blood_Donor_Day

ரத்ததானம்

ஜூன் 14 ஆம் தேதி இன்று... 'உலக ரத்த தான விழிப்பு உணர்வு நாள்'. 

"மனிதர்கள் அனைவராலும் எளிதாகச் செய்யக்கூடிய தானம், ரத்த தானம். ஒருவர் ரத்த தானம் செய்தால், புதிய ரத்த அணுக்களால் மீண்டும் உடலில் ரத்தம் உற்பத்தியாகிவிடும். குறிப்பாக, இந்தியாவில் ஆண்டுக்கு 5 கோடி யூனிட் ரத்தம், பல்வேறு பிரச்னைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படுகிறது. ஆனால், சராசரியாக 80 - 90 லட்சம் யூனிட் ரத்தம் மட்டுமே உரிய நேரத்தில் கிடைக்கிறது. இதனால், உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. எனவே, நாம் கொடுத்து உதவும் ரத்தம் பல உயிர்களை காக்கும் என்பதால், அனைவரும் நம் வாழ்நாளில் முடிந்த அளவுக்கு ரத்த தானம்செய்து உதவலாம்" என்று வேண்டுகோள் விடுக்கிறார், தொடர்ந்து 45 ஆண்டுகளாக ரத்ததானம்செய்து உதவிவரும் சென்னையைச் சேர்ந்த ராஜ்சேகரன். மேலும், இவர் ரத்த தானம் செய்ய சில ஆலோசனைகளையும் கூறுகிறார்.

ரத்ததானம்

* 18 வயது முதல் 65 வயதுடைய, குறைந்தபட்சம் 45 கிலோ எடையுள்ளவர்கள் அனைவருமே 3 மாதத்துக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.
* உடல் நலப் பிரச்னைகள், மாதவிடாய் காலத்திலுள்ள பெண்கள், மதுபோதையில் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் தாய்மார்கள் ரத்த தானம் செய்ய முடியாது.
* மருத்துவரிடம் உடல் பரிசோதனையும் ஆலோசனையும் பெற்ற பிறகே ரத்த தானம் செய்ய வேண்டும்.

http://www.vikatan.com

19225702_1555197037872414_67503218865432

  • தொடங்கியவர்

“பிரைலி திருமண அழைப்பிதழ்...காதல் திருமணம்” - அசத்திய தம்பதி

 
 

முருகன்-பிரேமா தம்பதி

ங்களது வித்தியாசமான திருமண அழைப்பிதழ் வழியே அனைவரையும் நெகிழவைத்திருக்கிறார்கள் முத்துச்செல்வி - பாண்டியராஜ். பார்வையற்ற இந்தத் தம்பதிகள் மனம் முழுவதும் நிறைந்திருக்கும் நம்பிக்கை ஒளியால் இந்த உலகத்தை தங்களுக்குரியதாக மாற்றிக்கொண்டுள்ளனர். வங்கிப் பணியோடு சமூகப் பணிகள் மூலமும் இரு உள்ளங்களும் கருத்தொருமித்து காதலில் விழுந்து, இன்று திருமணம் செய்து மணவாழ்வில் இணைந்திருக்கிறார்கள்.

முருகன்-பிரேமா தம்பதியருக்கு இரண்டு பெண் மற்றும் ஓர் ஆண் குழந்தை. மூவருமே பார்வையற்றவர்கள். எனினும், மனம் தளராமல் மூவரையும் படிக்கவைத்து நல்ல நிலைக்கு உயர்த்தினார்கள். அவர்களில் மூத்தவர்தான் முத்துச்செல்வி. சட்டம் படித்தவர். தற்போது சென்னை தியாகராய நகரில் இயங்கிவரும் அலகாபாத் வங்கியின் மண்டல அலுவலகத்தில் மேலாளராக உள்ளார். அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பிலும் செயலாளர். பார்வையற்றோர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். பார்வையற்ற வளர் இளம் பெண்களுக்குப் பாலியல் பாதுகாப்புக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார். 

இலக்கியப் புத்தகங்கள், நாவல்கள், கதைப் புத்தகங்கள், சுட்டி விகடன் உள்ளிட்ட தமிழின் பல பிரபல பத்திரிகைகளை பிரெய்லி மொழியில் அச்சிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பார்வையற்றோர் பள்ளிகளுக்கு அனுப்புவதிலும் பெரும் பங்காற்றிவருகிறார். பார்வையற்றோர் கணினியில் தங்களது திறனை சிறப்பாக வெளிப்படுத்துவதற்கான பயிற்சிகளையும் தனது அமைப்பின் வழியாகச் செய்துவருகிறார். இப்படி இவரது சமூகப் பணிகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். 

பிரைலி

இன்று (14.06.2017) மணவாழ்க்கையில் இணையும் முத்துச்செல்வி, தனது திருமண அழைப்பிதழைப் பார்வையுள்ளோர் மற்றும் பார்வையற்றோர் இருவருமே படிக்கும்வகையில் டூ இன் ஒன் பத்திரிகையாக அச்சிட்டுள்ளார். இது பார்ப்போரை நெழிவ வைத்துள்ளது. இவரின் மனம் கவர்ந்தவர் பாண்டியராஜ், சென்னை அம்பத்தூர் இந்தியன் வங்கியில் பணிபுரிகிறார். 'அந்தகக்கவிப் பேரவை' என்ற இலக்கிய அமைப்பின் உறுப்பினர். பார்வையற்றோர் திறன் மேம்பாட்டுக்காகப் பல வகையிலும் சமூகப் பணிகளைச் செய்பவர். 

உறவுகளும் நண்பர்களும் புடைசூழ திருமணம் முடிந்த உற்சாகத்தில் முத்துச்செல்வி. ‘‘பார்வையற்றவர்களின் உணர்வுகளையும் வாழ்க்கை முறைகளையும் எல்லோரும் புரிஞ்சுக்கணும்.பார்வைக் குறைபாடு உள்ள ஒரு பொண்ணுக்கு அவ மனசுக்குப் பிடிச்ச மாதிரி திருமணம் நடக்கிறது பெரிய விஷயம். அவங்க மனசுல தன்னம்பிக்கை துளிர்விடணும், பார்வை உள்ளவர்கள் மத்தியிலும் ஒரு விழிப்புஉணர்வு ஏற்படணும் என்கிற நோக்கத்தில் எங்களின் திருமண அழைப்பிதழை இப்படி அச்சிட்டோம். என் தங்கை மற்றும் தம்பிக்கு ஏற்கெனவே திருமனம் ஆகிடுச்சு. அவங்க பார்வையுள்ள இணையைத் திருமணம் செய்துக்கிட்டாங்க. ஆனா, நான் என்னை மாதிரியே பார்வையற்ற, என மனசைப் புரிஞ்சுக்கிட்ட ஒருத்தரைத்தான் திருமணம் செய்துக்கணும்னு உறுதியா இருந்தேன். 

அந்தச் சமயத்தில் ஒரு நண்பராக பாண்டியராஜன் அறிமுகமானார். அவரும் பார்வையற்றவர்களின் மேம்பாட்டுக்காக நிறைய விஷயங்கள் பண்ணிட்டிருந்தார். நான் பயிற்சிப் பட்டறைகள் நடத்தினப்போ உதவியா இருந்தார். நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். நாம வாழ்க்கையிலும் இணைந்தால் இன்னும் சிறப்பா செயல்படலாமேனு சொன்னார். அவர் வார்தைகள் எனக்குப் பெரிய நம்பிக்கை கொடுத்துச்சு. எங்கள் காதலை பெற்றோரிடம் சொன்னோம். இதோ, இன்னிக்கு மண மேடை ஏறியிருக்கோம். இனி சமூகப் பணிகளில் இணைந்து பயணிப்போம்'' என்றார் முத்துச்செல்வி.

 

இந்தத் தம்பதிகளை மனதார வாழ்த்துவோம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd

ஜேர்மனியைச் சேர்ந்த முன்னாள் மகளிர் டென்னிஸ் சம்பியன் ஸ்டெஃபி க்ராஃப் (Steffi Graf) பிறந்த தினம்.

இவர் அமெரிக்க ஆண்கள் டென்னிஸ் சம்பியன் அன்றே அகாஸியின் மனைவியாவார்.
Happy Birthday Stefi Graf

டென்னிஸ் மங்கை ஸ்டெபி கிராப் பிறந்த தினம்: ஜூன் 14- 1969

ஸ்டெபி கிராப் (பிறப்பு: ஜூன் 14, 1969) முன்னாள் டென்னிஸ் வீராங்கனை. ஜெர்மனியைச் சேர்ந்தவரான இவர் டென்னிஸ் வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர். 22 தனிநபர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 1988-ல் எல்லா (நான்கு) கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றதோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றவர். டென்னிஸ் தர வரிசையில் 377 வாரங்கள் முதலிடத்திலிருது சாதனை படைத்தவர். 1999 ஆகஸ்டில் ஓய்வு பெற்றார்.

டென்னிஸ் மங்கை ஸ்டெபி கிராப் பிறந்த தினம்: ஜூன் 14- 1969
 
ஸ்டெபி கிராப் (பிறப்பு: ஜூன் 14, 1969) முன்னாள் டென்னிஸ் வீராங்கனை. ஜெர்மனியைச் சேர்ந்தவரான இவர் டென்னிஸ் வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர். 22 தனிநபர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 1988-ல் எல்லா (நான்கு) கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றதோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றவர். டென்னிஸ் தர வரிசையில் 377 வாரங்கள் முதலிடத்திலிருது சாதனை படைத்தவர். 1999 ஆகஸ்டில் ஓய்வு பெற்றார். அக்டோபர் 22, 2001-ல் அந்த்ரே அகாசியைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

http://www.maalaimalar.com

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.