Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

கேமராவில் பதிவான புலிக்குட்டிகளின் செல்ஃபி

ரஷியாவின் கிழக்கில், அரிய சைபீரிய புலிகள் சேட்டை செய்யும் புகைப்படங்களை சிறுத்தைகளுக்கான தேசிய பூங்கா வெளியிடப்பட்டுள்ளது.

கேமராவில் பதிவான புலிக்குட்டிகளின் செல்ஃபீகள்படத்தின் காப்புரிமைLAND OF THE LEOPARD NATIONAL PARK

விளையாட்டுத்தனமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் புலிகள் ஒரு தருணத்தில், கேமராவிற்கு முன் வந்து போஸ் கொடுக்கின்றன.

260,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அந்த பூங்காவில் 22 வளர்ந்த சைபீரியன் புலிகளும் ஏழு புலிக் குட்டிகளும் உள்ளன.

ஒரு சமயத்தில் தோலுக்காக புலிகளை வேட்டையாடுபவர்கள் இந்த புலி இனங்கள் அழியும் அளவிற்கு வேட்டையாடினார்கள். ஆனால் தற்போது இந்த இனம் அழிவிலிருந்து மீண்டு வருகிறது.

கேமராவில் பதிவான புலிக்குட்டிகளின் செல்ஃபீகள்படத்தின் காப்புரிமைLAND OF THE LEOPARD NATIONAL PARK

இந்த புகைப்படங்கள் தரையில் புதைத்து வைக்கப்பட்ட தானியங்கி கேமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது என்றும். இம்மாதிரி விலங்குகளின் வாழ்க்கை மிக தெளிவாக படம் பிடிக்கப்பட்டது இதுதான் முதல்முறை என்றும் அந்த சிறுத்தைகள் பூங்கா ரஷிய மொழியில் தெரிவித்துள்ளது.

இந்த கேமராக்கள் வனத்துறையாளர்களால் புலிகளையும் அதே அளவு சிறுத்தைகளையும் கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டது என 'சைபீரியன் டைம்ஸ்' பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களில், காட்டில் தரையில் புலிக்குட்டிகள் உருள்வது போலவும் பின் தாய் புலியால் கட்டுப்படுத்தப்படுவது போலவும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அந்த தாய் புலி, சைபீரிய புலிகளின் எண்ணிக்கையை கண்காணித்த விஞ்ஞானிகளால் 'T7F' என்று ஏற்கனவே அறியப்பட்ட புலியாகும்.

கேமராவில் பதிவான புலிக்குட்டிகளின் செல்ஃபீகள்படத்தின் காப்புரிமைLAND OF THE LEOPARD NATIONAL PARK கேமராவில் பதிவான புலிக்குட்டிகளின் செல்ஃபீகள்படத்தின் காப்புரிமைLAND OF THE LEOPARD NATIONAL PARK

2014ஆம் ஆண்டு அந்த தாய் புலி மூன்று புலிக்குட்டிகளுடன் படம் பிடிக்கப்பட்டது அதில் இரண்டு குட்டிகள் வளர்ந்துவிட்டதாக நம்பப்பட்டு சைபீரியாவிலிருந்து, அண்டை நாடான சீனாவிற்கு அனுப்பப்பட்ட்து.

மற்றொரு படத்தில் புலிக்குட்டி ஒன்று கேமராவை நெருங்கி வந்து அதை தடுக்கிறது அதனால் அதில் உள்ள மெமரி கார்ட் கீழே விழுந்து படம் பிடிப்பது நிறுத்தப்பட்டது.

ரஷியாவில் கிழக்கில் தொலைதூரத்தில் உள்ள க்ரை மாகணத்தின் தென் மேற்கு பகுதியில் இந்த சிறுத்தைகள் தேசிய பூங்கா அமைந்துள்ளது.

கேமராவில் பதிவான புலிக்குட்டிகளின் செல்ஃபீகள்

சைபீரிய புலிகள் பற்றிய சில குறிப்புகள்:

இந்த சைபீரிய புலிகள் ஆமர் புலிகள் என்றும் அழைக்கப்படும்

சைபீரிய புலிகளின் இயற்கை வாழ்விடம் ரஷியாவாக உள்ள போதும் அங்குள்ள பலவீனமான பொருளாதாரத்தின் காரணத்தால் இந்த புலிகள் அழிவை சந்தித்து வருகின்றன.

ரஷியாவில் வேட்டையாடுவது கடுமையாக தடுக்கப்பட்டாலும் பெரியளவில் ஆயுதங்கள் இல்லாமலும், குறைவான சம்பளம் பெறும் வனத்துறையாளர்களாலும் விலங்குகளை அதன் தோலுக்காக வேட்டையாடுபவர்களை தடுக்க முடியவில்லை.

1930ஆம் ஆண்டில் சைபீரிய புலிகள் இனம் அழிவில் இருந்த போது அதன் எண்ணிக்கை 20-30ஆக மட்டுமே இருந்தது.

ஆனால் தற்போது சைபீரிய காடுகளில் சுமார் 600 புலிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆதாரம்: wwf

http://www.bbc.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கரை புரண்ட அழகு -“கடற்கரையோரம்” (புகைப்படத் தொகுப்பு)

 

“கடற்கரையோரம்” என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பிவைத்த புகைப்படங்கள்.

  • டெனிஸ் மக்லிஸ்டர்: நியூசிலாந்தின் சௌத் ஐலென்ட்டில் அமைந்துள்ள டெகபோ ஏரிக்கரையில் நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. நான் என்னுடைய கணவரோடு 6 வார பயணம் மேற்கொண்டேன். அந்த கடற்கரையோரம் முழுவதும் வனத்து லுப்பின் மலர்கள் பூத்துக் கிடந்ததால், மிகவும் நன்றாக இருந்தது.DENISE MCLISTER

    டெனிஸ் மக்லிஸ்டர்: நியூசிலாந்தின் சௌத் ஐலென்ட்டில் அமைந்துள்ள டெகபோ ஏரிக்கரையில் நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. நான் என்னுடைய கணவரோடு 6 வார பயணம் மேற்கொண்டேன். அந்த கடற்கரையோரம் முழுவதும் வனத்துலுப்பின் மலர்கள் பூத்துக் கிடந்ததால், மிகவும் அற்புதமாக இருந்தது.

  • மிதுன் சி மோகன்: “ஒரு சிறிய படகு அவரை கடற்கரையோரத்தில் நின்றுவிட செய்யவில்லை. அவர் தன்னுடைய வாழ்கையை முன்னோக்கி செலுத்துகிறார்”MITHUN C MOHAN

    மிதுன் சி மோகன்: “ஒரு சிறிய படகு அவரை கடற்கரையோரத்தில் நின்றுவிட செய்யவில்லை. அவர் தன்னுடைய வாழ்க்கையை முன்னோக்கி செலுத்துகிறார்”

  • அபி கௌல்டிங்: “அட்லாண்டிக் தீபகற்பத்திலுள்ள லெமைய்ரி கால்வாயின் தெற்கில் அழகான அமைதியான நாள் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த ஜென்டூ பென்குயின்கள் எங்கள் குழுவினரை பற்றி கவைலைப்படாமல் சில சிறந்த புகைப்படங்களை கிளிக் செய்ய அனுமதித்தன”.ABI GOULDING

    அபி கௌல்டிங்: “அட்லாண்டிக் தீபகற்பத்திலுள்ள லெமைய்ரி கால்வாயின் தெற்கில் அழகான அமைதியான நாள் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த ஜென்டூ பென்குயின்கள் எங்கள் குழுவினரை பற்றி கவைலைப்படாமல் சில சிறந்த புகைப்படங்களை கிளிக் செய்ய அனுமதித்தன”.

  • கிரஹாம் பைஃபீல்டு: “சில ஆண்டுகளுக்கு முன்னால் ஹாங்காங்கில் காலை 6:30 மணிக்கு என்னுடைய செல்பேசியை பயன்படுத்தி எடுத்த புகைப்படம். அதன் பின்னர், நான் ஃபில்டரையோ அல்லது கலரை மாற்ற எதையும் சரி செய்யவோ இல்லை”.GRAHAM BYFIELD

    கிரஹாம் பைஃபீல்டு: “சில ஆண்டுகளுக்கு முன்னால் ஹாங்காங்கில் காலை 6:30 மணிக்கு என்னுடைய செல்பேசியை பயன்படுத்தி எடுத்த புகைப்படம். அதன் பின்னர், நான் ஃபில்டரையோ அல்லது கலரை மாற்ற எதையும் சரி செய்யவோ இல்லை”.

  • ஜெனெட்டே டியரெ: “கிழக்கு சுஸ்ஸெக்ஸில் காணப்படும் கழுவி சுத்தப்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகுகள். சுத்தமான புகழ்பெற்ற கடலோரத்தில் காணப்படும் நிறங்கள்”.JEANETTE TEARE

    ஜெனெட்டே டியரெ: “கிழக்கு சுஸ்ஸெக்ஸில் காணப்படும் கழுவி சுத்தப்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகுகள். சுத்தமான புகழ்பெற்ற கடலோரத்தில் காணப்படும் நிறங்கள்”.

  • பால் ஹார்ரிஸ்: “கரீபியன் கடற்கரையோரத்தில் உள்ளூர் குடிவாசிகள்”.PAUL HARRIS

    பால் ஹார்ரிஸ்: “கரீபியன் கடற்கரையோரத்தில் உள்ளூர் குடிவாசிகள்”.

  • ஜேக் ஆப்பிள்டன்: “சூரிய களியல்: கடற்கரையில் சூரிய ஒளி காய்தல்”.JACK APPLETON

    ஜேக் ஆப்பிள்டன்: “சூரிய குளியல்: கடற்கரையில் சூரிய ஒளி காய்தல்”.

  • பெரிய நண்டுSIRSENDU GAYEN

    சிர்செந்து கயன்: “இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவகளிலுள்ள ராதாநகர் கடலோரத்தில் இந்த துறவி நண்டை புகைப்படம் எடுத்தேன்”.

  • நீருக்கடியில் உடைந்த பாய்மரம்RHIAN EVANS

    ரஹியன் இவான்ஸ்: “கனடாவின் ஒன்டாரியோவிலுள்ள புரூஸ் தீபகற்பத்தில் ஃபத்தோம் ஃபைவ் தேசிய பூங்காவில் முக்குழித்தபோது எடுத்த படம். 1867 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சார்ல்ஸ் பி மின்ச் என்பவரின் இரட்டை பாய்மர கப்பலின் கூட்டின் ஒரு பகுதி. 1898 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் சிக்காகோவுக்கு பயணம் மேற்கொண்டபோது அடித்த புயலால் அவர் ஹரோன் எரியில் டெகும்செக் கோவின் பாறையோரத்திற்கு அடித்து செல்லப்பட்டுள்ளார்.

  • இறுதியில், எஸ்தர் ஜாண்சனின் புகைப்படம் ஒன்று.ESTHER JOHNSON

    இறுதியில், எஸ்தர் ஜாண்சனின் புகைப்படம் ஒன்று.

 

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

பெண்களுக்கு அனுமதி இல்லாத ஜப்பானின் வினோத தீவு: உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அங்கீகாரம்!

 

 
okinoshima

 

டோக்யோ: பெண்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லாத, நிர்வாண குளியல் உள்ளிட்ட சடங்குகள் நிரம்பிய ஜப்பானின் வினோத தீவான 'ஒகினோஷிமாவை' உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரமளித்து யுனெஸ்கோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் தென் மேற்கு பகுதியில் உள்ள பெரிய நிலப்பரப்பான க்யுஷுவுக்கும், கொரிய தீபகற்பதிற்கும் இடையே உள்ளது ஒகினோஷிமா தீவு.நான்காம் நூற்றாண்டில் இருந்து சீனா மற்றும் கொரியாவுடன் தொடர்பு கொள்வதற்கான தொடபு மையமாகவும், கடற்பயணம் செய்வோருக்கான பாதுகாப்பு குறித்து சடங்குகள் செய்யும் இடமாகவும் இது இருந்து வந்தது.

ஷிண்டோ வழியினைச் சேர்ந்த   ஜப்பானின் பாரம்பரியம் மிக்க கோயில்களில் ஒன்றான முனகட்டா தைஷாவின் குருமார்கள் இங்கு வந்து, இங்குள்ள 17-ஆம் நூற்றாண்டின் முக்கியமான வழிபாட்டு தலமான ஒகிட்ஷுவில் பிரார்த்தனை செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.       

அதேபோல் வருடத்திற்குஒரு முறை மே மாதம் 27-ஆம் தேதியன்று, 1904-05 ஆண்டில் நடந்த ரஷ்யா சீனப் போரில், இந்த தீவுக்கு அருகில் நடைபெற்ற கடல் யுத்தத்தில் மாண்டு போன கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது நடைபெறுகிறது  இதில் கலந்து கொள்ள அதிகபட்சம் 200 பேர் வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் அவர்கள் அஞ்சலி செலுத்தி விட்டு கடலில் திரும்பும் முன் நூற்றாண்டுகளாக அங்கு பின்பற்றப்படும் சில சடங்குகளை பின்பற்ற வேண்டும். தங்களது ஆடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக கடலில் குளிக்கும் 'மிசோகி' என்னும் சடங்கினை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். அவர்களது அசுத்தத்தினை போக்கவே இத்தகைய சடங்குகள் பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது.

அங்கு வருபவர்கள் அங்கிருந்து நினைவுப் பொருட்களாக அங்கிருக்கும் சிறு கல், புல் உட்பட எதனையும் எடுத்துச் செல்லக் கூடாது. இத்தகைய சிறப்பு  வாய்ந்த 700 ச.மீ பரப்பளவுள்ள இந்த ஒகினோஷிமா தீவு, அதன் அருகில் உள்ள மூன்று பாறைகள் மற்றும் நான்கு சிறு பிரதேசங்கள் ஆகியவற்றை உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரமளித்து யுனெஸ்கோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இத்துடன் சேர்த்து ஜப்பானில் உள்ள பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 21 ஆனது குறிப்பிடத்தக்கது .    

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

ஹெலிகாப்டரில் ஏறும்முன் ட்ரம்ப்பின் நெகிழ்ச்சி செயல்!

 
 

ட்ரம்ப்

'அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகவும் கோபக்காரர்; பத்திரிகையாளர்களை திட்டுபவர்; சரியாக கைகொடுக்கத் தெரியாதவர்' என்று விமர்சனங்கள் வருவது உண்மைதான். என்றாலும், ட்ரம்ப் நேற்று ஹெலிகாப்டரில் ஏறுவதற்குமுன் செய்த செயல் அனைவரையும் நெகிழவைத்தது. 'அட, ட்ரம்ப் இவ்வளவு நல்லவரா இருக்காரேப்பா' என்று அனைவரையும் 'வாவ்' சொல்லவைத்திருக்கிறது.

ஜெர்மனியின் ஹம்பர்க்கில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய ட்ரம்ப், ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்து ஹெலிகாப்டரில் ஏற முயன்றபோது இந்தச்சம்பவம் நடந்தது. பலத்தக் காற்று வீசியதால், ட்ரம்ப் கட்டியிருந்த  டை, தலைமுடி அனைத்தும் பறந்தவாறே அவர் நடந்து வந்தார். ஹெலிகாப்டர் முன்பு நின்றுகொண்டிருந்த கடற்படை வீரர் ஒருவரின் தொப்பி கீழேவிழுந்து கிடப்பதை ட்ரம்ப் கவனித்தார். உடனடியாக அவர் அந்தத் தொப்பியை எடுத்து, அந்த வீரரின் தலையில் அணிவித்தார். இதனை அங்கு கூடியிருந்த அதிகாரிகள் உள்பட யாரும் எதிர்பாக்கவில்லை. இந்த ஆச்சர்யத்திலிருந்து அனைவரும் மீள்வதற்குள் அந்தத்தொப்பி காற்றில் மீண்டும் பறந்தது. அதனைத் துரத்திப்பிடித்துவந்த ட்ரம்ப், அந்த வீரரிடம் கொடுத்துவிட்டு ஹெலிகாப்டரில் ஏறியதால், அந்த இடத்தில் ஆச்சர்யத்துடன் கூடிய பரபரப்பு நிலவியது.

 

 

ட்ரம்ப்-ன் இந்தச் செயல் அடங்கிய வீடியோ ஒரேநாளில் வைரலாகி ஐந்து மில்லியன் 'வியூஸ்'-களைத் தாண்டியுள்ளது. ட்ரம்ப் குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அவரது இந்தச்செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 2013-ம் ஆண்டு மே மாதம் முன்னாள் அதிபர் ஒபாமா இதேபோன்றதொரு செயல்மூலம் அனைவரையும் நெகிழச் செய்தார். அவசரமாக ஹெலிகாப்டரில் ஏறச்சென்ற ஒபாமா, அங்குள்ள பாதுகாப்பு வீரரின் சல்யூட்-ஐ கவனிக்காமல் முதலில் உள்ளே சென்றுவிடுவார். விமானத்திற்குள் ஏறிய பின்னர் விமானியிடம் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு மீண்டும் கீழே இறங்கிவந்து அவருக்கு சல்யூட் வைத்து கைகுலுக்கி விட்டுச்செல்வார். ட்ரம்ப்-ன் தற்போதைய செயலும் ஒபாமாவின் செயல்போன்றதொரு காட்சியாக அமைந்துள்ளது.

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

”டெஸ்லாதான் உலகின் சிறந்த மேதை!” - ஐன்ஸ்டீன் இப்படிச் சொன்ன டெஸ்லா யார் ? #HBDTesla

 

நிகோலா டெஸ்லா

ஜூலை 10, 1856 ஆம் வருடம். நள்ளிரவு! Smiljan என்ற அந்த கிராமத்தில் இடி, மின்னல், பெரும் புயலென வானம் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. பிரசவ வழியில் துடித்துக் கொண்டிருக்கிறார் Đuka என்ற அந்த பெண்மணி. குழந்தை முழுவதும் வெளியே வருவதற்கு முன்பே, பிரசவம் பார்த்துக் கொண்டிருக்கும் மருத்துவச்சி. இந்த மாதிரி அபசகுணத்திலா குழந்தை பிறக்கவேண்டும்? இது இருளின் குழந்தையாக தான் இருக்கப்போகிறது என்று வருத்தப்படுகிறாள். ஆனால் மேலே வெட்டும் மின்னலை ஓரக்கண்ணால் பார்த்தவாறு, Đuka புன்முறுவலோடு சொல்கிறார், “இல்லை, இது ஒளியின் குழந்தை!” என்று. அந்த குழந்தை தான் நிகோலா டெஸ்லா!

அந்த குழந்தைக்கு இன்று 161ஆவது பிறந்த தினம்! இயல்பாகவே, ஒருவர் இறந்தபின்பு, நாம் அவரின் 161வது பிறந்தநாளையெல்லாம் நினைவுக்கூர்ந்து கொண்டாடுகிறோமா என்றால் சந்தேகம் தான். ஆனால் டெஸ்லா ஒன்றும் இயல்பான மனிதர் இல்லையே! ‘Futurist’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால், “நிகோலா டெஸ்லா தெரியாதா?” என்று அந்த அகராதியே நம்மை ஏளனம் பேசும்! நாம் இன்று வாழும் இந்த நவீன சமுதாயாத்தை கட்டமைக்க அவரின் கண்டுபிடிப்புகளில் பல உதவி இருக்கிறது. விரல்விட்டு எண்ண முடியாத அளவிற்கு கொட்டிக்கிடக்கும் டெஸ்லாவின் கண்டுபிடிப்புகளை சுலபமாக நாம் வலைத்தளங்களில் பார்த்துவிட முடியும். ஆனால் அவர் பாதியில் விட்டுவிட்ட அல்லது இப்போதைக்கு இது சாத்தியமில்லை என்று ஒதுக்கிவைத்த இந்த விஷயங்கள் பற்றித் தெரியுமா?

எண்ணங்களை பிரதியெடுக்கும் கேமரா (Thought Camera)

“இது ஏன் சாத்தியமில்லை?” இது தான் டெஸ்லா அன்றாட கேட்கும் கேள்வி! அதன் விளைவாக உதித்த ஒரு யோசனை தான் இந்த Thought Camera. ஒரு முறை டெஸ்லா இவ்வாறு ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளிக்கிறார். “நாம் ஒரு எண்ண ஓட்டத்தில் இருக்கும்போது, அது காட்சியாக நம் கண்முன்னே கற்பனையில் விற்கிறது. நிச்சயம் அது நம் விழித்திரையில் பிரதிபலிக்காமல் இருக்காது. அப்படி பிரதிபலிப்பதை சரியான கருவிகள் கொண்டு நாம் பிரதியெடுத்து திரையில் காண்பிக்கமுடியும் என்று நான் பலமாக நம்புகிறேன்!” என்றார். இது ஒருவேளை நடந்திருந்தால், இந்நேரம் அனைவரின் மனங்களையும் நாம் படித்துக் கொண்டிருப்போம்!

வயர்லெஸ் எனர்ஜி (Wireless Energy)

இப்போது இது பரவலாக பேசப்பட்டு வந்தாலும் கிட்டத்தட்ட 116 ஆண்டுகளுக்கு முன்பே டெஸ்லா இது சாத்தியம் என முயற்சிகள் எடுத்தார். 1901ஆம் வருடம், பிரபல நிதியாளாரான ஜே.பி.மார்கன் டெஸ்லாவிற்கு $150,000 கொடுத்து 185 அடி உயரத்தில் ஒரு டவர் ஒன்றை நிறுவாமாறு கேட்டுக்கொள்கிறார். இதன் மூலம் நியூயார்க் நகரத்தில் இருந்துக்கொண்டே தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் கப்பல்களுக்கு செய்திகள் மற்றும் புகைப்படங்கள் அனுப்ப முடியும். Wardenclyffe Tower என்றழைக்கப்பட்ட அந்த டவரின் வேலை பாதி முடிந்தத் தருவாயில், டெஸ்லாவிற்கு தோன்றுகிறது அந்த யோசனை! வெறும் காற்றை மட்டும் கொண்டே மின்சாரத்தைக் கடத்தினால் என்ன? இந்த டவரை அடித்தளமாக வைத்து இந்த திட்டத்தை தொடங்கினால், மொத்த நியூயார்க் நகரத்திற்கும் சுலபமாக மின்சாரம் கொடுத்துவிட முடியுமே? ஆனால் மார்கன் அவர்களுக்கு எங்கே இது சாத்தியமானால் மின்சாரத் துறையில் தான் வைத்திருக்கும் பங்குகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பிடிவாதமாக கூடுதல் பணம் ஒதுக்க மறுத்துவிட்டார். அந்த திட்டம் கைவிடப்பட்டது.

செயற்கை கடல் அலைகள் (Artificial Tidal Waves)

அறிவியலைக் கொண்டு போர்களில் பல ஜாலங்கள் நிகழ்த்தி சுலபமாக வெற்றிப் பெற முடியும் என்று உறுதியாக நம்பினார் டெஸ்லா. 1907ஆம் வருடம் நியூயார்க் வேர்ல்ட் என்ற நாளேட்டில் இப்படி ஒரு செய்தி வந்தது. டெஸ்லாவின் இராணுவ கண்டுபிடிப்புகளில் ஒன்றாக வரவிருக்கிறது 'செயற்கை கடல் அலைகள்'. கடலுக்கடியில் வெடிக்கக்கூடிய வெடிப்பொருள்களை பதுக்கிவைத்து விட்டால், எதிரிகள் நம்மை சூழும்போது வெறும் தந்தி மூலம் அந்த வெடிகளை வெடிக்கச் செய்ய முடியும். இதன் மூலம் கடலில் பெரிய அளவில் செயற்கை அலைகளை உருவாக்கி எதிரிகளின் மொத்தக் கடற்படையையும் மூழ்கடிக்க முடியும். இப்படி சொல்லிவிட்டு அந்த செய்தித்தாளே அதற்கு எதிராக பல விமர்சனங்களை அடுக்கியது. “இதை சாத்தியப்படுத்தினால், நம் கடற்படைக்கே வேலையில்லாமல் போய்விடும். இது உலக அமைதிக்கு எதிரான விஷயமும் கூட!” என்று எச்சரித்தது. அந்த முயற்சி அதோடு கைவிடப்பட்டது.

நிகோலா டெஸ்லா

மின்சாரம் கொண்டு இயங்கும் சூப்பர்சோனிக் ஏர்ஷிப் (Electric-Powered Supersonic Airship)

சிறுவயது முதலே டெஸ்லாவிற்கு பறப்பது என்ற அறிவியல் விந்தையில் நாட்டம் அதிகம். மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்கில் சிறந்து விளங்கிய டெஸ்லா, Reconstrcution என்ற ஒரு பத்திரிக்கையில் தான் இப்போது செய்துக் கொண்டிருக்கும் ஆராய்ச்சிக் குறித்து கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் வெறும் மின்சாரம் மட்டும் கொண்டு இயங்கும் அதிவேக விமானம் சாத்தியமென்றும், அதன்மூலம் மக்கள் போக்குவரத்தையும் நிகழ்த்தமுடியும் என்று கூறினார். நிலத்தில் இருந்து வெறும் 8 மைல்கள் உயரத்தில் பறக்கக் கூடிய இதில், நியூயார்க் நகரத்திலிருந்து லண்டன் நகரத்திற்கு வெறும் 3 மணி நேரங்களில் சென்று விட முடியும் என்று ஆச்சர்யப்படுத்தினார். இதன் மூலம் எரிவாயுவின் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று நம்பினார். ஆனால் அந்த முயற்சியும் பின்னாளில் கைவிடப்பட்டது.

அவரது கண்டுபிடிப்புகளை மற்றவர்கள் திருடுவதைக் குறித்து கேட்டபோது, “அவர்கள் என் கண்டுபிடிப்புகளை திருடுவது எனக்கு கவலை அளிக்கவில்லை. சொந்தமாக யோசிக்கும் அளவிற்கு அவர்களுக்கு திறன் இல்லை என்பது தான் எனக்கு கவலை அளிக்கிறது!” என்றார். தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களை கொண்டாடும் நாம் டெஸ்லாவை ஏனோ கொண்டாட மறுக்கிறோம். பலராலும் இன்றுக் கொண்டாடப்படும் தொழிலதிபர் எலான் மஸ்க் தான் அறிமுகப்படுத்திய எலக்ட்ரிக் கார்களுக்கு டெஸ்லாவின் பெயரை வைத்துக் கவுரவப்படுத்த, ஏதோ இன்றுவரை டெஸ்லாவின் பெயரை மட்டுமாவது சொல்லிக்கொண்டு இருக்கிறோம்!

 

இவ்வுலகமே மெச்சும் மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவர்களிடம் ஒரு பத்திரிகையாளர் இப்படி கேட்டார். “இந்த உலகத்திலேயே மிக சிறந்த மேதையாக நீங்கள் இருப்பதை எவ்வாறு உணர்கிறீர்கள்?” கொஞ்சமும் யோசனையின்றி  ஐன்ஸ்டின், “எனக்கு எப்படி தெரியும்? இது நீங்கள் டெஸ்லாவிடம் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா?" என்றார். அது தான் டெஸ்லா!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

அலுவலகம் செல்லும் செல்லப்பிராணிகள்

தம் பணியாளர்களின் வேலைத்திறனை மேம்படுத்தவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உலக அளவில் பல நிறுவனங்கள் ஏராளமான நேரத்தையும் நிதியையும் செலவழிக்கின்றன.


தாய்லாந்தின் விளம்பர நிறுவனம் ஒன்று இதற்கு வித்தியாசமான தீர்வை கண்டறிந்துள்ளது.


இந்த நிறுவனம், தம் செல்ல நாய்களை அலுவலகம் கொண்டுவரும்படி பணியாளர்களை ஊக்குவிக்கிறது.
அதன் மூலம் அவர்களின் பணியிட மனஅழுத்தம் குறைவதாக கூறப்படுகிறது.

  • தொடங்கியவர்

வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தானில் நிறைவேற்றம் (10-7-1973)

வங்காளதேசம் ஒரு தெற்காசிய நாடாகும். இது பண்டைய வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா, மியான்மர் ஆகியவை இதன் அண்டை நாடுகளாகும். டாக்கா இதன் தலைநகரமாகும். இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைப் போன்று, இந்நாட்டிலும் வங்காள மொழியே பேசப்படுகிறது. இந்நாட்டின் எல்லைகள் 1947-ம் ஆண்டு வங்காளப் பிரிவினையின் போது நிறுவப்பட்டது. 1947-வது ஆண்டு இந்திய விடுதலைக்குப்பின், இப்பகுதி கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டின் பகுதியாக‌ இருந்தது.

 
 
 
 
வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தானில் நிறைவேற்றம் (10-7-1973)
 
வங்காளதேசம் ஒரு தெற்காசிய நாடாகும். இது பண்டைய வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா, மியான்மர் ஆகியவை இதன் அண்டை நாடுகளாகும். டாக்கா இதன் தலைநகரமாகும். இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைப் போன்று, இந்நாட்டிலும் வங்காள மொழியே பேசப்படுகிறது. இந்நாட்டின் எல்லைகள் 1947-ம் ஆண்டு வங்காளப் பிரிவினையின் போது நிறுவப்பட்டது.

1947-வது ஆண்டு இந்திய விடுதலைக்குப்பின், இப்பகுதி கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டின் பகுதியாக‌ இருந்தது. இருப்பினும், இப்பகுதிக்கும் மேற்கு பாகிஸ்தான் பகுதிக்கும் இடையிலான தொலைவு சுமார் 1600 கிலோமீட்டர்.

மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையான எந்த போக்குவரத்தும் இந்தியாவின் வழியாகவே நடைபெறவேண்டும் என்ற நிலையில், மொழி வேறுபாடு காரணமாகவும், பொருளாதரப் புறக்கணிப்பு காரணமாகவும், கிழக்குப் பாக்கிஸ்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. தனிநாடு கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

1971-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் பகுதி இந்தியாவின் துணைக்கொண்டு வங்காள தேசம் என்ற நாடாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 1973-ம் ஆண்டு ஜுலை 10-ந்தேதி இதற்கான தீர்மானம் பாகிஸ்தான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

http://www.maalaimalar.com/

அலாஸ்காவில் மிகப்பெரும் சுனாமி: 524 மீட்டர் உயரம் (10-7-1958)

 

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 1958-ம் ஆண்டு மிகப்பெரிய சுனாமி ஏற்பட்டது. அப்போது கடல் அலை 524 மீட்டர் உயரத்திற்கு எழும்பி அச்சுறுத்தியது. இந்த சுனாமிதான் உலகிலேயே மிக்பெரிய சுனாமி ஆகும். கடல் அருகே அதிக மக்கள் வசிக்காததால் இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்தனர். மேலும் இதே தேதியில் முக்கிய சம்பவங்கள்:- * 1909 - ஜெர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்காக விடப்பட்டது. * 1925 - சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.

 
 
 
 
அலாஸ்காவில் மிகப்பெரும் சுனாமி: 524 மீட்டர் உயரம் (10-7-1958)
 
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 1958-ம் ஆண்டு மிகப்பெரிய சுனாமி ஏற்பட்டது. அப்போது கடல் அலை 524 மீட்டர் உயரத்திற்கு எழும்பி அச்சுறுத்தியது. இந்த சுனாமிதான் உலகிலேயே மிக்பெரிய சுனாமி ஆகும்.

கடல் அருகே அதிக மக்கள் வசிக்காததால் இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்தனர்.

மேலும் இதே தேதியில் முக்கிய சம்பவங்கள்:-

* 1909 - ஜெர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்காக விடப்பட்டது.

* 1925 - சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.

* 1925 - இந்திய ஆன்மிகத் தலைவர் மெஹெர் பாபா இறக்கும் வரையான (44-ஆண்டுகள்) மௌன விரதத்தை ஆரம்பித்தார். இந்நாள் அமைதி நாளாக அவரின் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

* 1941 - இரண்டாம் உலகப் போர்: போலந்தின் ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான யூதர்கள் நாசி ஜெர்மனியரினால் படுகொலை செய்யப்பட்டனர்.

* 1951 - கொரியப் போர்: அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.

* 1956 - இலங்கை, யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயில், வண்ணார்பண்ணை சிவன் கோவில், வரதராசப்பெருமாள் கோயில் ஆகியவற்றின் உள்ளே முதற்தடவையாக குறைந்த சாதியினர் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

* 1962 - உலகின் முதல் தொலைத்தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது.

* 1973 - வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

* 1973 - பஹாமாஸ் பொதுநலவாயத்தின் கீழ் முழுமையான விடுதலை அடைந்தது.

* 1978 - மௌரித்தானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதிபர் மொக்தார் டாடா பதவியிழந்தார்.

* 1991 - யாழ்ப்பாணம் ஆனையிறவு இராணுவத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர்.

* 1992 - போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்றங்களுக்காக முன்னாள் பனாமாத் தலைவர் மனுவேல் நொரியேகா புளோரிடாவில் 40 ஆண்டு கால சிறைத்தண்டனை பெற்றார்.

* 2006 - இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக் கோளை ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Bart, Brille und Anzug

காலஞ்சென்ற இலங்கையின் சிறந்த வானொலி, மேடை நாடகக் கலைஞர்களில் ஒருவரும் எழுத்தாளருமான K.S.பாலச்சந்திரனின் பிறந்த தினம் இன்று.
நினைவு கூர்கிறோம்.

Bild könnte enthalten: 1 Person, Text

உலகின் அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்கள் குவித்த சாதனையை முன்னர் வைத்திருந்த, 10000 டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்ற முதல் துடுப்பாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவருமான சுனில் கவாஸ்கரின் பிறந்த தினம் இன்று.
Happy Birthday Sunil Gavaskar

  • தொடங்கியவர்

19961439_10156198475894578_4873361096270

  • தொடங்கியவர்
‘இது விந்தையானது’
 

image_e91577b66e.jpgஎங்கள் அறிவால் சாதிக்க முடியாததை எமது உள்ளுணர்வு சாதித்து விடுகின்றது. முடிவு எடுப்பது எப்படி எனத் தவித்துத் தயங்கி, நிலைதடுமாறும்போது, சட்டென எமது உள் உர்வு சொல்லும் தீர்மானத்தைத் துணிந்து எடுக்கும்போது, காயசித்தி ஏற்பட்டுவிடுகின்றது. 

இது விந்தையானது; ஆனால் உண்மையானது; எமது மூளை எந்நேரமும் விழித்திருக்கும். நாங்கள் நிலைதடுமாறிடினும் அது எம்மைக் காப்பாற்றிவிடும். 

நாங்கள் படிப்பதால் அறிவு ஏற்படுகின்றது. மூளையே எமக்கு ஆசான்.இதை விலக்கி நாம் இயங்க முடியாது.  

ஏனெனில், சில தருணங்களில் மூளைகூட எம்மைத் தடுமாறச் செய்வதுண்டு. அது அல்லது இதுவா எனத் திணறடித்து விடுகின்றது. உள் மனம், உணர்வு ப ல மாயங்களைச் செய்த வண்ணமாய் உள்ளது.

மனம் தௌவானால் உள்வுயர்வும் தன் பலத்தைக் காட்டி, இன்ப அதிர்வூட்டும். 

  • தொடங்கியவர்

டி.எம்.எஸ்ஸின் கணீர் குரலில் திரைக்கு வராமலே பிரபலமான முருகன் பாடல்கள்!

மிழ் சினிமாவுக்கு அப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக புது வெளிச்சம் பாயத்தொடங்கிய நேரம். நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பக்தி ரசத்தால் தமிழ்சினிமா ததும்பிக் கிடந்த நேரம்.

கிட்டப்பா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, கே.பி.சுந்தராம்பாள், எம்.கே.தியாகராஜ பாகவதர் என கர்னாடக இசையும் தமிழிசையுமாக கலந்துகட்டி தமிழகத்துப் பட்டிதொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்தார்கள். 

முருகன்


ஊர் பெரியவர், ஊர் மிராசுதாரர் என ஒரு சிலர் வீடுகளில்தான் வானொலிப் பெட்டி இருக்கும். இல்லாவிட்டால், ஊர்த்திருவிழா, கல்யாண வீடுகள், டூரிங் டாக்கீஸ்கள் என எங்கோ தொலைதூரத்தில் குழாய் ஒலிபெருக்கியில் ஒலிக்கும் பாடல்கள் இவைதான் அன்றைய மனிதர்களின் மன இறுக்கத்தைப்போக்க வந்த மகிழ்வான நிகழ்வுகள். 

இப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில்தான் வராது வந்த மாமணி போல் வந்து சேர்ந்தார் டி.எம்.எஸ் என்கிற டி.எம்.சௌந்தரராஜன். சிம்மகுரலெடுத்து அவர் பாடிய பாடல்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி எனத் திரையுலகின் இரு ஆளுமைகளுக்கும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் புகழ்க்கொடி வீசிப்பறந்தன. இவர் பாடிய சினிமாப் பாடல்கள் பலவிதங்களில் ஹிட் அடித்தவை. ஆனால், திரைக்கு வராமலே இவர் பாடி தமிழர்களின் வாழ்வில் கலந்த 'முருகன் பக்திப்பாடல்கள்' சாகா வரம்பெற்றவை. முருகனின் ஆறுபடை வீடுகளிலும் இன்றும் இரவு பகல் பாராது எந்நேரமும் ஒலிப்பவை. இத்தனைச் சிறப்புமிக்க தனிப்பாடல்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக... 

டி.எம்.எஸ், வாலி

'உள்ளம் உருகுதைய்யா' என்னும் இந்தப் பாடலைக்  கேட்கும்போது, கேட்பவரின் கவலைகள் யாவும் காற்றில் பறக்கும்பஞ்சாக பறந்துபோகும். இறைவன் மேல் இந்த அளவு கசிந்துருகி எவரும் இனிப் பாட முடியுமா என்பதே பெரும் கேள்விக்குறிதான். இந்த லிங்க்கில்

 

'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்' எனக் கேட்கும்போதே நம் மனம் திருச்செந்தூர் கடற்கரையில் கால் நனைக்கும். 

'முருகா..., முருகா, அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா' பாடலைக் கேட்கும்போதே முற்றிலும் நாம் கரைந்து போய்விடுவோம். எளிய இசைக்கருவிகளுடன் கனிவான டி.எம்.எஸ்ஸின் குரல் கல்நெஞ்சையே கரைய வைக்கும். தமிழ்க்கடவுள் முருகன் கசிந்துருக மாட்டாரா என்ன?

`சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா... சுவையான அமுதே செந்தமிழாலே...’ இந்தப் பாடலும் கேட்கும்போதே மனம் லயித்துப்போகும். அத்தனை அருமையான பாடல்.  தமிழ் வார்த்தைகளும், அவரது உச்சரிப்பும் நம் மனதை மயக்குபவை.

'அன்று கேட்பவன் அரசன் மறந்தால், நின்று கேட்பவன் இறைவன்' அதிகார சக்திகளால், அவதூறு மனிதர்களுக்கான நீதி மறுக்கப்படும்போது பெருத்த ஆறுதலாக இந்தப் பாடல் வரிகள் அமைந்திருக்கும். மனக் கவலைகளெல்லாம் ஈரத்துண்டைப் பிழிந்து காயவைத்ததுபோல் நம் மனத்தை இந்தப் பாடல் ஆக்கிவிடும். 


திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் திருவரங்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னிடமிருந்த பாடலைக் காண்பித்து, 'நன்றாக இருக்கிறதா? எனப் பார்த்து சொல்லுங்கள்' என்கிறார். பாடலைப் படித்துப் பார்த்த டி.எம்.எஸ்ஸின் மனம் மலர்கிறது. அவருக்கு மிகவும் பிடித்த முருகப்பெருமானைப் பற்றியப் பாடல். விடுவாரா? அந்த இளைஞருடைய பாடலைத் தானே பாடினார். பாடலும் புகழ்பெற்றது. எழுதிய கவிஞரும் புகழ்பெற்றார் அவர்தான் கவிஞர் வாலி.

 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்ற பாடல்தான் அது.

 

 

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகின் குட்டி நாட்டின் மக்கள் தொகை 11 பேர்!

 
உலகின் மிகச் சிறிய ராஜ்ஜியத்தின் ராஜாபடத்தின் காப்புரிமைELIOT STEIN

உலகின் மாபெரும் பேரரசுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். பல காலணி நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி, சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று அழைக்கப்பட்ட பிரிட்டன் சாம்ராஜியம், சீனாவில் இருந்து இந்துஸ்தான் வரை எல்லையை விரிவாக்கியிருந்த செங்கிஸ்தானின் மங்கோலிய பேரரசு. காபூலின் கந்தஹாரில் இருந்து கர்நாடகம் வரை பரவியிருந்த முகலாயர்களின் சாம்ராஜியம்.

ஆனால் உலகிலேயே மிகச் சிறிய ராஜியம் எது? அதன் அரசர் யார் என்று தெரியுமா? உலகின் சிறிய ராஜியத்தின் மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். இந்த ராஜா ஓர் உணவு விடுதியை நடத்துகிறார். சாதாரண கால்சட்டை அணிந்து, ரப்பர் செருப்பணிந்து வாழ்ந்துவரும் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டது தவோலாரா.

உலகின் மிகச் சிறிய ராஜ்ஜியத்தின் ராஜாபடத்தின் காப்புரிமைELIOT STEIN

இத்தாலியின் சர்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைகடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா. இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவே ஐந்து சதுர கிலோமீட்டர்தான்.

ராஜாவின் பெயர் எந்தோனியோ பர்த்லியோனி. தவோலாராக்கு சென்றால் அரசரை பார்க்க அரசவைக்குச் செல்லவேண்டாம். எந்தவித முன்னனுமதியும் இன்றி அரசரை சுலபமாகவே பார்த்துவிடலாம். ஆடம்பரமில்லாமல் இயல்பாக தோற்றமளிக்கும் அரசரே தீவில் உள்ள ஒரேயொரு உணவு விடுதிக்கும் உரிமையாளர். சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச் சவாரி ஓட்டுபவரும் அவரே.

தனது உணவுவிடுதியிக்கு வெளியே அரசர் அந்தோனியாபடத்தின் காப்புரிமைRICCARDO FINELLI Image captionதனது உணவுவிடுதியிக்கு வெளியே அரசர் அந்தோனியா

180வது நிறுவக தினத்தை கொண்டாடும் தவோலாரா ராஜ்ஜியம் மிகச் சிறிய தீவாக இருப்பதால் அதை நாடு என்று சொல்வது வேடிக்கையானதாக தோன்றலாம். ஆனால், அரசர் அந்தோனியோ பர்த்லியோனி தனது ராஜ்ஜியத்தைப் பற்றி பெருமைப்படுகிறார்.

இத்தாலியில் வசித்துவந்த அந்தோனியா பர்த்திலியோனியின் முப்பாட்டனார் குஸெப் பர்த்லியோனி சகோதரிகளான இருவரை திருமணம் செய்துகொண்டார். அப்போது இத்தாலி ஒரு தனி நாடல்ல. சர்டீனியாவில் ஒரு பாகமாக இருந்த இத்தாலியில் இரண்டு திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம். எனவே அவர் 1807 ஆம் ஆண்டில் இத்தாலியில் இருந்து இந்தத் தீவில் குடியேறினார்.

ஆடுபடத்தின் காப்புரிமைREDA &CO SRL/ALAMY

ஆடு வேட்டை

ஜெனோவா நகரில் வசித்து வந்த குஸெப் பர்த்லியோனிக்கு, இந்தத் தீவில் இருக்கும் மின்னும் பற்கள் கொண்ட ஆடுகளைப் பற்றி தெரிந்துக்கொண்டார். இந்த அரிய வகை ஆடுகள் உலகிலேயே இங்கு மட்டுமே வசிக்கக்கூடியவை. இந்த ஆடுகள் பற்றிய தகவல் இத்தாலி வரை சென்றது. சர்டீனியாவின் ராஜா கார்லோ அல்பர்ட்டோ இந்த ஆடுகளை பார்க்கவும், வேட்டையாடவும் தவோலாரா தீவுக்கு வருகைபுரிந்தார்.

1836ஆம் ஆண்டில் தீவுக்கு வந்தபோது தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட கார்லோ அல்பர்டோ, "நான் சார்டீனியோவின் ராஜா" என்று சொன்னாராம். அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட குசெப்பின் மகன் பாவோலோ, "நான் தவோலாராவின் ராஜா" என்று கூறினார் என்று மூதாதையர்களின் தைரியத்தை பெருமையுடன் நினைவுகூர்கிறார் அந்தோனியோ.

மத்திய தரைக்கடல்படத்தின் காப்புரிமைREALY EASY STAR/ALBERTO MAISTO/ALAMY

மத்திய தரைக்கடல்

பாவோலோ, கார்லோ அல்பர்டோவுக்கு தீவு முழுவதையும் சுற்றிக் காண்பித்து, இந்த சிறப்பு ஆடுகளை வேட்டையாட உதவியும் செய்தார். தீவை மூன்று நாட்கள் சுற்றிப் பார்த்த அரசர் கார்லோ அல்பர்டோ நாடு திரும்பியதும், தவோலாரவை தனிநாடாக அறிவித்து சாசனம் எழுதிக்கொடுத்தார். அதைத்தொடர்ந்து, தன்னை புதிய ராஜ்ஜியத்தின் அரசராக பாவோலா அறிவித்துக்கொண்டார். புதிதாக உதித்த ராஜ்ஜியத்தின் மொத்தப் பிரஜைகள் 33 பேர் மட்டுமே.

அரசரான பாவோலோ இறப்பதற்கு முன்னதாக அரச கல்லறையை அமைத்தார். அங்கு தான் புதைக்கப்பட்ட பிறகு, கல்லறையின் மேற்புரத்தில் கிரீடம் ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். அரசராக வாழ்ந்தபோது, ஒருமுறை கூட மணிமகுடம் சூடாத பாவோலோ, கல்லறைக்குள் அடங்கிய பிறகு அதன்மேல் மகுடம் அமைக்கப்பட்டது என்பது சுவராசியமான தகவல்.

உலகின் மிகச் சிறிய ராஜ்ஜியத்தின் ராஜாபடத்தின் காப்புரிமைREALY EASY STAR/ALBERTO MAISTO/ALAMY

அமைதி ஒப்பந்தம்

இத்தாலியின் நிறுவனர் என்று அழைக்கப்படும் குசெப் கைரிபால்டி உட்பட பல நாட்டு அரசர்களுடன் தவோலாரா சமரசங்களை செய்து கொண்டது. சர்டீனியாவின் அரசராக இரண்டாம் விக்டோரியா இமானுவெல், தவோலாராவுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார்.

19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் மகாராணி விக்டோரியா, உலக அரசர்கள் அனைவரின் புகைப்படங்களையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக உலகம் முழுவதும் பயணித்த கப்பல், தாவோலாராவிற்கும் சென்று அரசரின் புகைப்படத்தை பெற்றது. அன்றுமுதல் இன்றுவரை இங்கிலாந்தின் பக்கிம்ஹாம் அரண்மனையை அலங்கரிக்கும் புகைப்படங்களில் தவோலாரா அரசரின் புகைப்படமும் ஒன்று.

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா நாடு 748 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதுபடத்தின் காப்புரிமைTORSTEN BLACKWOOD/AFP/GETTY IMAGES Image captionபசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா நாடு 748 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது

நேட்டோ ராணுவத் தளம்

இன்றும் அதே புகைப்படம் அந்தோனியாவின் உணவு விடுதியை அலங்கரிக்கிறது. 1962-ல், நேட்டோவின் ராணுவத்தளமாக மாறிய பிறகு இந்த சிறிய ராஜ்ஜியத்தின் இறையாண்மை முடிவுக்கு வந்துவிட்டது. பல இடங்களுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தாலி எப்போதுமே தவோலாராவை தனது நாட்டின் ஒருபகுதி என முறைப்படி குறிப்பிட்டதேயில்லை.

உலகின் எந்தவொரு நாடும் தவோலாராவை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. தவோலாராவின் அரசர் அந்தோனியோவும் அவரது குடும்பத்தினரும் இத்தாலியில் இருந்து இந்த தீவுக்கு படகு சேவைகளை வழங்குகின்றனர். உலகில் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் தனிச்சிறப்புத்தன்மை கொண்ட ஆடுகளையும், அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு கழுகு இனத்தையும் பார்க்க பெருமளவிலான மக்கள் இங்கு ஆவலுடன் சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றனர்.

அரசரின் அலுவலகப்பணிபடத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image caption5 ஆயிரத்து 765 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட புரூணையின் மக்கள்தொகை 4 லட்சத்து 13 ஆயிரம்

பரம்பரைத் தொழில்

தீவு நாடான தவோலாராவை சுற்றி இருக்கும் கடல்பகுதியில் பல்வேறு வகையிலான கடல்வாழ் உயிரனங்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன. அந்தோனியோவும் அவரது மருமகனும் படகு போக்குவரத்தை நிர்வகிக்க, மற்றொரு உறவினர் மீன்பிடித் தொழிலிலும், இன்னும் ஒருவர் வேட்டைத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.

ராஜ்ஜிய பரிபாலனம் என்பது குடும்பத்தை நிர்வகிப்பது போல என்று அந்தோனியா சொல்கிறார். சுற்றுலா அதிகரித்து வருவதால் கணிசமான வருவாய் ஈட்டுவதாக கூறும் அந்நாட்டு அரசர், சாதாரண வாழ்க்கையே என்றும் சிறந்தது என்கிறார்.

உள்ளூர் மக்கள்படத்தின் காப்புரிமைGIANLUIGI GUERCIA/AFP/GETTY IMAGES Image captionஆப்பிரிக்க நாடான ஸ்வாசிலேண்ட், 17360 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது

தினமும் காலையில் குடும்பத்தினரின் கல்லறைகளுக்கு சென்று மலர் தூவி வழிபடுவது அந்தோனியாவுக்கு பிடித்தமானது. ஆனால் அசல் பூக்களை எடுத்துச் சென்றால், ஆடுகள் மென்றுவிடுவதால், பிளாஸ்டிக் மலர்களையே கல்லறைகளில் வைத்து வழிபடுகிறார்.

தொழில்நுட்பரீதியில் பார்த்தால் அந்தோனியா மற்றும் குடும்பத்தினர் இத்தாலியின் குடிமக்கள். தனது ஆட்சிக்கு அங்கீகாரம் வழங்கும்படி, டியூக் ஆஃப் சவாயிடம் கோரிக்கை வைக்கலாமா என ஒரு காலகட்டத்தில் யோசித்த அந்தோனியா, பிறகு அதனை கைவிட்டுவிட்டார்.

தவலோராவின் அரசர் கேட்கிறார் "சிறிய நாடாக இருந்தாலும், எங்கள் முன் விரிந்திருக்கும் மிகப்பெரிய கடல் சாம்ராஜ்ஜியத்தின் கோட்டையாக தவோலாரா திகழ்கிறது. இதைவிடப் பெரிய பேறு வேறென்ன இருக்கமுடியும்?"

கார் மற்றும் பேருந்துபடத்தின் காப்புரிமைCHRIS JACKSON/GETTY IMAGES Image captionதென்னாப்பிரிக்காவில் இருக்கும் லெசோதே 30 ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது

தவோலாரா போன்ற மக்கள் வசிக்கும் வேறு சில சிறிய ராஜ்ஜியங்கள்

1. ரெடோண்டா, இங்கிலாந்தின் செளத்ஹாம்ப்டனில் அமைந்திருக்கும் இது, புகையிலைத் தடையில் இருந்து விலகியிருப்பதற்காக தன்னைத்தானே தனி ராஜ்ஜியமாக அறிவித்துக்கொண்டது.

2. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா 748 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. ஒரு லட்சத்து ஆறாயிரம் மக்கள் வசிக்கும் இந்த நாடு, 1773இல் பிரிட்டனின் கேப்டன் ஜேம்ஸ் குக்கால் கண்டுபிடிக்கப்பட்டது. கேப்டன் குக் இந்த தீவை நட்புத் தீவு என்று அழைத்தார். ஆனால், இங்கு வசித்தவர்களோ கேப்டன் குக்கை கொல்ல நினைத்தார்கள்.

3. போர்னியோத் தீவில் அமைந்துள்ள புரூணை ஐந்தாயிரத்து 765 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு மக்களிடம் எந்தவித வரியும் வசூலிக்கப்படுவதில்லை. புரூணை சுல்தான், உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவர்.

4. ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்வாசிலாந்து 17 ஆயிரத்து 360 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த நாட்டின் அளப்பரிய இயற்கை அழகினால் இது மர்மங்கள் சூழ்ந்த நாடு என்று அழைக்கப்படுகிறது. ஸ்வாசிலாந்தின் மொத்த மக்கள்தொகை சுமார் 13 லட்சம்.

5. 30 ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் லெசோதே, தென்னாப்பிரிக்காவால் சூழப்பட்டது. கடற்கரை மட்டத்தைவிட கீழே அமைந்திருக்கும் இந்த நாட்டின் மக்கள்தொகை சுமார் இருபது லட்சம்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

நடிகை சமந்தாவின் ட்விட்டர் ஃபாலோயர்களுக்கு ஒரு செய்தி

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கலக்கும் நடிகை சமந்தாவை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனைக் கடந்துள்ளது. இந்நிலையில், தனது 40 லட்சம் ஃபாலோயர்களுக்கும் நன்றி தெரிவித்து அவர் ட்வீட் செய்துள்ளார். 

சமந்தா

"நீங்கள் இல்லாமல் நான் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஆரம்பத்திலிருந்து எனக்குத் தூண்டுகோலாக இருந்த ரசிகர்களுக்கு, எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் என் மிகையான அன்பும் அரவணைப்பும் முத்தங்களும்" என நடிகை சமந்தா ட்வீட் செய்திருக்கிறார். இதோடு #4MillionLoveForSamantha எனும் ஹேஷ்டேக்கையும் உருவாக்கியுள்ளார். 

சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுக்கும் வரும் அக்டோபரில் திருமணம் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தலை துண்­டிக்­கப்­பட்டு இரண்டாக பிளக்கப்­பட்ட பின்­னரும் துள்ளிப் பாய்ந்து கொண்­டி­ருந்த மீன் (வீடியோ)

தலை துண்­டிக்­கப்­பட்டு, உடல் இரண்டாக பிளக்கப்பட்ட மீன் ஒன்று, மீன் வியா­பா­ரியின் தட்டில் நீண்ட நேரம் துள்ளிப் பாய்ந்து கொண்­டி­ருந்த சம்­பவம் ஜப்­பானில் இடம்­பெற்­றுள்­ளது.

இதன்­போது பதி­வு­செய்­யப்­பட்ட வீடி­யோ­வொன்று இணை­யத்தில் வெளி­யாகி வேக­மாக பரவி வரு­கி­றது.
“யெலோஃபின்” ரகத்தைச் சேர்ந்த இந்த மீன்   பிடிக்­கப்­பட்­ட­வுடன் அதன் தலை துண்­டிக்­கப்­பட்டு, அதன் உடல் நெடுக்­காக வெட்­டப்­பட்­டி­ருந்­தது.

fish
எனினும், ஜப்­பா­னிய மீன் விற்­ப­னை­யா­ளரின் தட்டில் விற்­ப­னைக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த இந்த மீன் பாகம் துள்ளிப் பாய்ந்து கொண்­டி­ருந்­தது. இதைப் பார்த்த வாடிக்­கை­யா­ளர்கள் பலரும் அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.


சிலர் இக்­காட்­சியை வீடி­யோவில் பதிவு செய்­தனர். சுமார் ஒன்­றரை நிமிட நேரம் இம்மீன்  பாகம் துள்ளிப் பாயும் காட்சி அடங்­கிய வீடியோ இணை­யத்தில் வெளி­யா­கி­யுள்­ளது. இலட்­சக்­க­ணக்­கானோர் இவ்­வீ­டி­யோவை சமூக வலைத்­த­ளங்­களில் பகிர்ந்துள்ளனர். 

 

http://metronews.lk

Edited by நவீனன்

1 hour ago, நவீனன் said:

சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுக்கும் வரும் அக்டோபரில் திருமணம் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அப்ப நம்ம வாலியின் நிலை அம்புட்டுத்தானா :grin::grin::grin:

  • தொடங்கியவர்

அம்மா - மகளின் மனநிலையை விளக்கும் வைரல் குறும்படம்!

Hindi short film


ன்றைய கலாசாரம் என்னதான் வளர்ந்திருந்தாலும், சில விஷயங்களைப் பெற்றோரிடம் பிள்ளைகள் பேசக் கூடாது என்கிற எல்லையை வைத்திருக்கிறார்கள். அப்படித் தவிர்க்கும் ஒரு சில விஷயங்களில் முக்கியமானது உடலுறவு பற்றிய பேச்சு. தங்கள் காலத்தில் தாங்கள் எப்படியிருந்தோம் எனத் தாய் நினைக்கிறாளே தவிர இப்போது இருக்கும் பெண்கள் என்ன நினைக்கிறார்கள், உணர்கிறார்கள் என்பதை எதோ ஓர் இடத்தில் மிஸ் செய்து விடுகிறார்கள். அந்த உரையாடலை 'Khaane Mein Kya Hai' என்கிற ஹிந்தி குறும்படம் ஒன்பது நிமிடங்கள் தாய்- மகள் உரையாடல் வாயிலாக விளக்கியிருக்கிறது.

தன்னுடைய அம்மாவின் ஹனிமூன் எப்படி இருந்தது, உடலுறவின் போது என்னவிதமான அனுபவத்தைப் பெற்றீர்கள் என கேட்கிறாள் மகள். அதற்கு குக்கர் விசிலடிக்கும் அந்த நிலையை உணர்ந்தேன் என்கிறார். இப்படியே உடலுறவின் ஒவ்வொரு நிலையையும், பாத்திரம், சமையல், பரிமாறல் வழியாக மறைமுகமாகப் பேசிக் கொள்கிறார்கள். கூடவே, தாய் - மகளின் உரையாடலுக்கு நடுவில் வீட்டு வேலைக்காரியின் சின்னச் சின்ன முக அசைவுகள் ஒவ்வொர் இடத்திலும் நம் எண்ணத்தை வெளிபடுத்துகிறது. 'Khaane Mein Kya Hai' குறும்படத்தைக் கடந்த ஒன்பதாம் தேதி யுடியூபில் வெளியிட்டிருக்கிறார்கள். வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்களைக் கடந்தது. தற்போது நான்கு லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. 


'Khaane Mein Kya Hai' குறும்படத்தின் படத்தைப் பார்க்க, 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றுக்கு வண்ணம் தீட்டும் பெண்

பிரேசிலைச் சேர்ந்த மரினா அமரல், டிஜிட்டல் வண்ணம் தீட்டுபவர். பழைய கருப்பு வெள்ளைப்படங்களுக்கு வண்ணம் தீட்டி வரலாற்றோடு சமகாலத்துக்கு தொடர்பை ஏற்படுத்த முயல்கிறார்.


புகைப்படங்களை வண்ணத்தில் பார்க்கும்போது அவற்றின் வரலாற்றோடு பார்வையாளர்களுக்குத் தொடர்பு ஏற்படுவதாகவும் அதன் உண்மைத்தன்மை அதிகமாக உணரப்படும் என்றும் அவர் கூறுகிறார்.


கருப்பு வெள்ளை புகைப்படங்களில் இவர் எதையுமே மாற்றுவதில்லை. வண்ணங்களை மட்டுமே சேர்க்கிறார்.


எவ்வளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு உண்மையான நிறங்களை தேர்வு செய்கிறார்.


ஆஷ்விட்ச் யூத வதைமுகாமில் கொல்லப்பட்ட மூன்று சிறுமிகள் புகைப்படம் தன்னால் மறக்கமுடியாதது. “தன் பெயரை, தன்கதையை அந்த சிறுமியே நேரில் சொல்லும் வாய்ப்பை ஏற்படுத்த விரும்பினேன். அதையே அந்த படங்கள் செய்தன”, என்கிறார் மரினா.

  • தொடங்கியவர்

துவைத்தவுடன் அயர்ன் செய்ய உதவும் டிரையர்!

 

டிரையர்
 

பரபர வாழ்க்கை முறையில் நேரத்துக்கான மதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் துவைத்த உடன் துணியை அயர்ன் செய்ய உதவும் புதிய டிரையர் மெஷினுக்கு வரவேற்பு கூடி வருகிறது. அமெரிக்காவின் டென்னசியில் உள்ள ஓக்ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வரும் அமெரிக்க வாழ் இந்தியர் விரால் படேலின் பலே கண்டுபிடிப்புதான் இந்த டிரையர் மெஷின். 

 

அப்படி என்னதான் செய்கிறது இந்த டிரையர்: வழக்கமாகத் துணி துவைக்கும் வாஷிங் மெஷினில், டிரையர் வசதி இருக்கும். அதில் மிக வேகமான இயக்கம் மற்றும் சூட்டை ஏற்படுத்துவதன் மூலம் துணிகளுக்கு இடையே உள்ள தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதை வெளியில் எடுத்து காய வைத்து சிறிது நேரத்துக்குப் பின்பே அயர்ன் செய்ய முடியும். இவர் வடிவமைத்துள்ள ‘அல்ட்ராசோனிக் டிரையர்’ மூலம் துவைத்த துணியை இதில் நேரடியாகப் பயன்படுத்தலாம். இதில் துணிகளின் இழைகளுக்கு இடையில் உள்ள தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

புதிய டிரையரில் வெப்பம் இல்லாமலேயே தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. வழக்கமான டிரையரில், சூட்டின் மூலம் தண்ணீர் ஆவியாக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இதில் துவைத்த துணியை டிரை செய்து உடனடியாக அயர்ன் செய்யலாம். வழக்கமான டிரையரைவிட 5 மடங்கு திறன் மேம்படுத்தப்பட்டதாம். துணியைத் துவைத்து, காய வைத்து அயர்ன் செய்வதற்கு ஆகும் நேரத்தில் பாதியை மிச்சப்படுத்துகிறது. மின்சார சிக்கனத்துக்கும் வழிவகுக்கிறது. இன்னும் இரண்டு முதல் 5 ஆண்டுகளில் இந்த டிரையர் விற்பனைக்கு வருமாம். காத்திருங்கள் துவைத்த துணியை உடனடியாக அயர்ன் செய்து உடுத்திக்கொள்ள என்கிறார் விரால் படேல். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்று உலக மக்கள் தொகை தினம்: 7 ஆண்டுகளில் இந்தியா முதலிடம் பிடிக்கும் - ஐ.நா. சபை

 

உலக மக்கள் தொகை நாளான இன்று ஐ.நா. சபை வெளியிட்டுள்ள தகவலில், இன்னும் 7 ஆண்டுகளில் மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

 
 
 
 
இன்று உலக மக்கள் தொகை தினம்: 7 ஆண்டுகளில் இந்தியா முதலிடம் பிடிக்கும் - ஐ.நா. சபை
 
முப்பது கோடி முக முடையாள் என்று பாரதத்தில் மக்கள் தொகையை வைத்து பாரதி பாடியது அன்று!

சிக்கிம் நிலைமை சிக்கலாகி வருவதால் சீனாவுடன் மோதி பார்க்கவும் தயாராகி விட்டோம். அதன் முடிவை இப்போது கணிக்க முடியாது. ஆனால் மக்கள் தொகையில் இன்னும் ஏழு ஆண்டுகளில் சீனாவை முந்தி விடுவோம் என்று ஐ.நா. சபை கணித்துள்ளது.

(சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 139 கோடி என்பது குறிப்பிடத்தக்கது)

201707111541252503_ksdf._L_styvpf.gif

உலக மக்கள் தொகை 760 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 11-ந்தேதி உலக மக்கள் தொகை தினம் கடை பிடிக்கப்படுகிறது.

மக்கள் தொகை பெருக்கத்தால் உணவு தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் மாசுபடுதல், சுகாதார பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம், போக்குவரத்து நெரிசல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பலவிதமான பிரச்சினைகளை உலக நாடுகள் சந்திக்கின்றன. எனவே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாளை ஒரு முக்கிய தினமாக கடை பிடிக்கிறார்கள்.

உலகம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போதைய விவரப்படி இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி, தற்போதைய மக்கள் தொகை 129 கோடியாக உயர்ந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

பாலின வாரியாக ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற அளவில் மக்கள் தொகை விகிதம் உள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசமும், மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக சிக்கிமும் உள்ளது.

எழுத்தறிவு பெற்ற மாநிலத்தில் கேரளா முதலிடத்தை பெற்றுள்ளது. (93.91 சத வீதம்) மருத்துவ வளர்ச்சி, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறப்பு சதவீதத்தை பிறப்பு சதவீதம் மிஞ்சி விட்டது.

அந்த காலத்தை போல் இன்று ஒன்பது பத்து பிள்ளைகள் பெற்றுக் கொள்ளும் நிலை இல்லை. நாமிருவர் நமக்கிருவர் என்ற நிலை மாறி நாமிருவர் நமக்கொருவர் என்ற நிலை உருவாகி உள்ளது.

மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தும் பெருகி விட்ட மக்கள் தொகை காரணமாக பிறப்பு சதவீதம் உலக அளவு சராசரியாக இருந்தாலும் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாகி விடுகிறது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று….

ஜூலை 11

 

1405 : சீனாவின் மிங் வம்ச ஆட்­சிக்­கால ஜெனரல் ஸெங் ஸீ, உலகை ஆராய்­வ­தற்­கான கடல்­வழி பய­ணத்தை ஆரம்­பித்தார்.


1895 : திரைப்­பட தொழில்­நுட்­பத்தை விஞ்­ஞா­னி­க­ளுக்கு லுமீரே சகோ­த­ரர்கள் விளக்­கினர்.


1897 : சுவீ­டனைச் சேர்ந்த சொலமன் அகஸ்ட் பலூன் மூலம் வட­து­ரு­வத்தை அடை­வ­தற்­கான பய­ணத்தை நோர்­வேயின் ஸ்பிட்ஸ்­பேர்கன் நக­ரி­லி­ருந்து ஆரம்­பித்தார். இப்­ப­ய­ணத்­தின்­போது அவர் விபத்­துக்­குள்­ளாகி இறந்தார். 


varalaru21919 : நெதர்­லாந்தில் ஊழி­யர்­க­ளுக்கு 8 மணித்­தி­யால வேலை நேரமும், ஞாயிறு விடு­மு­றையும் சட்­ட­மாக்­கப்­பட்­டது.


1921 : அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி வில்­லியம் ஹோவர்ட் டாவ்ட், அந்­நாட்டின் 10 ஆவது பிர­தம நீதி­ய­ர­ச­ராக பத­வி­யேற்றார். இவ்­விரு பத­வி­க­ளையும் வகித்த ஒரே நபர் இவ­ராவார்.


1921 : மொங்­கோ­லி­யாவை சோவியத் யூனியனின் படை­யினர் கைப்­பற்றி மொங்­கோ­லிய மக்கள் குடி­ய­ரசை ஸ்தாபித்­தனர்.


1930 : அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் வீரர் டொனால்ட் பிரட்மன், இங்­கி­லாந்­து­ட­னான டெஸ்ட் போட்­டியில் ஒரே நாளில் ஆட்­ட­மி­ழக்­காமல்  309 ஓட்­டங்­களைப் பெற்று உலக சாதனை படைத்தார். அந்த இன்­னிங்ஸில் அவர் மொத்­த­மாக 334 ஓட்­டங்­களைக் குவித்தார்.


1950 :  சர்­வ­தேச நாணய நிதி­யத்தில் பாகிஸ்தான் இணைந்­தது. 


1960 : ஆபி­ரிக்க நாடு­க­ளான பெனின், புர்­கினோ பெஸோ, நைஜர் ஆகி­யன சுதந்­திரம் பெற்­றன.


1962 : முதல்­த­ட­வை­யாக, அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தை கடந்த செய்­மதி தொலைக்­காட்சி ஒளி­ப­ரப்பு இடம்­பெற்­றது.


1973 : பிரான்ஸில் இடம்­பெற்ற விமான விபத்தில் 123 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1977 : படு­கொலை செய்­யப்­பட்ட மாட்டின் லூதர்கிங் ஜூனி­ய­ருக்கு சுதந்­தி­ரத்­துக்­கான அமெ­ரிக்க ஜனா­தி­பதி பதக்கம் வழங்­கப்­பட்­டது.


1978 : ஸ்பெய்னில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 216 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1979 : அமெ­ரிக்­காவின் முத­லா­வது விண்­வெளி நிலை­ய­மான ஸ்கைலாப், பூமிக்கு மீண்டும் கொண்­டு­வ­ரப்­பட்ட நிலையில் இந்து சமுத்­தி­ரத்­துக்கு மேலாக வளி­மண்­டத்தில் நுழைந்­த­போது அழிந்­தது.


1983 : ஈக்­கு­வ­டோரில் இடம்­பெற்ற விமான விபத்தில் 119 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1991 : சவூதி அரே­பி­யாவின் ஜெத்தா நகரில் நைஜீ­ரிய விமா­ன­மொன்று  விபத்­துக்­குள்­ளா­னதில் 261 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1995 : கியூபாவில் இடம்­பெற்ற விமான விபத்தில்  44 பேர் உயி­ரி­ழந்­தனர். 


1995 : பொஸ்­னியா ஹேர்­ஸ­கோ­வி­னாவின் ஸ்ரபி­ரே­னிக்கா நகரில் சேர்­பிய படை­யி­னரால் முஸ்­லிம்கள் மீதான படு­கொ­லைகள் ஆரம்­பிக்கப் பட்டன. ஜூலை 22 வரை­யான தாக்­கு­தல்­களில் சுமார் 8000 பொஸ்னிய முஸ்லிம்கள் உயிரிழந்தனர்.


2006 : இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 209 பேர் உயிரிழந்தனர்.


2012 : புளுட்டோவின் 5 ஆவது சந்திரனை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

சென்னையின் நூற்றாண்டு வரலாற்றை தாங்கி நிற்கும் கட்டடங்கள்..! அன்றும் இன்றும் - சிறப்பு புகைப்படத்தொகுப்பு

சென்னையின் நூற்றாண்டு வரலாற்றை தாண்டி நிற்கும் பிரபலமான கட்டடங்களின் புகைப்படத்தொகுப்பு இது. அப்போதும் இப்போதும் அந்த கட்டடங்கள் எப்படி இருந்தன/இருக்கின்றன என்பதை கீழே உள்ள புகைப்படங்களைப் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். அத்தனையும் ஆச்சரிய ரகம்..!

chen_1_20493.jpg
சென்னை பீச் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள கட்டடம்...

chen_1a_20216.jpg

history0708-vc1_20226.jpg
chen_2_20455.jpg
சென்னை பீச் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள கட்டடம்...

chen_2a_20001.jpg

history0708-vc1_20226.jpg

chen_3_20211.jpg
சென்னை உயர் நீதிமன்ற வளாகம்...
chen_3a_20358.jpg

history0708-vc1_20226.jpg

chen_4_10198.jpg
சென்னை பாரீஸ் கார்னர்...

chen_4a_10325.jpg

history0708-vc1_20226.jpg

chen_5_10463.jpg
சென்னை தீவுத்திடல் அருகே உள்ள நேப்பியர் பாலம்...

chen_5a_10009.jpg

history0708-vc1_20226.jpg

chen_6_10182.jpg

சென்னை பல்கலைகழகத்தில் இருக்கும் சிலை...
chen_6a_10368.jpg

history0708-vc1_20226.jpg

chen_7_10087.jpg

சென்னை மெரினா பீச் ரோட்டில் இருக்கும் விவேகானந்தர் இல்லம்...

chen_7a_10235.jpg

history0708-vc1_20226.jpg

chen_8_10243.jpg
சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம்...

chen_8a_10376.jpg

history0708-vc1_20226.jpg

chen_9_10488.jpg
சென்னை அண்ணாசாலையில் உள்ள LIC...

chen_9a_10042.jpg

history0708-vc1_20226.jpg

chen_10_10169.jpg
சென்னை வாலாஜா சாலை சந்திப்பு...

chen_10a_10306.jpg

history0708-vc1_20226.jpg

chen_12_10452.jpg
சென்னை துறைமுகம் அருகே உள்ள கட்டடம்...

chen_12a_10599.jpg

history0708-vc1_20226.jpg

chen_13_10200.jpg
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அமீர் மஹால்...

chen_13a_10335.jpg

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘தேவையற்றவைகளைக் களைவது நல்லது’
 

image_de9473437c.jpgஏதாவது பொருட்கள் எனது முயற்சியால் கிடைத்தாலும் இதனால்தான் என் ஆத்மாவுக்கு என்ன பயன் கிடைத்துவிடப் போகின்றது? என உள்மனதூடாக எனது ஆன்மா கேட்பது போல் இருக்கின்றது.

அன்பர்களே!  நாம் சேமிக்கும் சடப்பொருட்களை ஆன்மா எடுத்துக்கொள்வதுமில்லை. எதையும் விட்டுவிடத் தயாராக உள்ளவனுக்கு பயமும் இல்லை; பதட்டமும் இல்லை. மாறாகத்  தெளிவுடன் அவன் இயங்குகின்றான்.

நாங்கள் உள்மனது உள்ளதைச் சொன்னாலும் எதையும் விடுவதாக இல்லை. ஆனால் படிப்படியாக தேவையற்றவைகளைக் களைவது நல்லது. அது பொருளாக இருக்கட்டும்; மூளைக்குச் செலுத்தி பாதுகாக்கின்ற தேவையற்ற எண்ணங்களையும் கழற்றி விடுவதானது, ஆன்மபலத்தை வலுவேற்றும்.

விட்டுவிடுதலால் ஆசைமிகு தேவைகள் துறக்கப்படுகின்றன.

  • தொடங்கியவர்

‘சிரிக்கும் புத்தர் சிலைவைத்தால் செல்வம் பெருகுமா?’ - சமய மெய்யியல் அறிஞர் என்ன சொல்கிறார்?

'சிரிக்கும் புத்தர் சிலையை வாங்கிவைத்தால் செல்வம் பெருகும்' என்ற நம்பிக்கை சீனா முழுவதும் இருக்கிறது. சீன பெங்சூயி முறையிலான வாஸ்து அமைப்புகளில் சிரிக்கும் புத்தரும் முக்கிய இடம் வகிக்கிறார். சீனப்பொருள்களான பூண்டு முதல் பொம்மைகள் வரை பல பொருள்கள் நம் இந்தியாவில் ஊடுருவத் தொடங்கிவிட்டநிலையில், சீன பெங்சூயி முறையும் பரவலாக ஊடுருவத் தொடங்கிவிட்டது. இதைத் தொடர்ந்து சிரிக்கும் புத்தர் சிலை விற்பனையும் பெரிய அளவில் சூடுபிடித்து விற்பனையாகி வருகிறது. ஆனால், 'சிரிக்கும் புத்தர் சிலையால் செல்வம் பெருகாது' என மறுக்கிறார், சமய மெய்யியல் அறிஞர் எஸ்.குருபாதம். “சிரிக்கும் புத்தர் சிலை (Laughing Budhhda) என இன்று பலரும் கொண்டாடி வருகிறார்கள். உண்மையில் அந்தச் சிரிக்கும் புத்தர் ஜென் துறவியான ஹொடாய் என்றால் நம்மில் பலரால் நம்ப முடியாது. ஹொடாய் தன் சிரிப்பால் மக்கள் மனதை ஒருமைப்படுத்தியவர். சிரிப்பால் விழிப்பு உணர்வைத் தூண்டியவர்.

சிரிக்கும் புத்தர்

இவர் ஜப்பானைச் சேர்ந்த ஒரு ஜென் பௌத்த ஞானி. கி.பி. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். 'விதிமுறைகள் இல்லாதிருப்பதே விதிமுறை' என்னும் வாழ்க்கைச் சித்தாந்தத்தைக் கைக்கொண்டவர். ஜென் துறவிகள், பெரும்பாலும் சொற்கள் எதையும் பயன்படுத்தாமல் முயற்சியால் விழிப்புஉணர்வை ஏற்படுத்தியவர்கள். 

ஜென் துறவிகள், விடை எளிதில் காண முடியாத வினாக்களைத் தங்களுக்குள் தொடர்ந்து விவாதித்து மூளையைச் சுறுசுறுப்பாக இயக்கிக் கொண்டேயிருப்பார்கள். அதேநேரத்தில் உடலையும் உற்சாகமாக வைத்திருப்பார்கள். இவர்கள் இரண்டு அங்கிகளை மட்டும்தான் தங்களுடைய உடைமைகளாகக் கொண்டிருப்பார்கள். பணத்தைக் கையாலும் தொட மாட்டார்கள். யாசகர்களாக இருந்து யாசித்து உண்பவர்கள். விழிப்புஉணர்வு மிக்கவர்கள். ஒரே இடத்தில் நிலையாக இல்லாமல் ஊர் ஊராகச் சஞ்சாரம் செய்துகொண்டே இருப்பார்கள். ஆனால், இன்றைக்கு அந்த நிலை சற்று மாறிவிட்டது. 

 

சிரிக்கும் புத்தர் சிலை

ஜென் நிலை என்னும் பௌத்த மதத்தின் முழுச் செயல் முறையுமே 'எப்படி மனமற்ற நிலையைப் பெறுவது?' என்பதுதான். மகிழ்ச்சியை அடைவதற்கான மிக அழகிய பாதைகளில் மனமற்ற நிலையை அடைவதும் ஒன்று. ஞானி ஹொடாய் இந்தப் பாதையிலேயே பிரயாணம் செய்தவர். அந்தப் பாதையை மக்களுக்குக் காட்டியவர்.

ஜென் ஞானிகள் சொற்கள் அல்லாத சிரித்தல், கண் கொட்டாது பார்த்தல்,  உடல் அதிர்தல், கொட்டாவிவிடுதல், செருமல், ஓவியம் வரைதல், நிலைமையைக் குழப்பிவிடுதல் போன்ற செயல்கள் மூலம் மக்களுக்குத் திடீர் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியவர்கள்.

ஜப்பானில் வாழ்ந்த ஜென் ஞானி றின்சாய்  மக்களிடையே நிலைமையைக் குழப்பி திடீர் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவார்.
ஹொடாய், மக்கள் முன்பாக சிரித்து திடீர் விழிப்பு உணர்வை ஏற்படுத்திய மகான். இவரது சிரிப்பை நேருக்கு நேர் பெற்றவர்கள் தங்களுக்குள் உள் மாற்றத்தை உணர்ந்தனர். சிரிப்பு மூலம் தன் சக்தியை மற்றவர்களுக்குக் கைமாற்றியவர். 

சிரிப்பால் மக்கள் மனதை ஒருமைப்படுத்தி அவர்களைச் சக்தி மிக்கவர்களாக்கினார். இவரின் சிரிப்பு அத்தகைய உள் மாற்றத்தை ஏற்படுத்தியது. இவர், தான் ஒரு மகான் என்பதை அறியாத மகான்.

சீனா


ஹொடாய் ஜப்பானில் வாழ்ந்த மிகப்பெரும் ஜென் ஞானி. இவர் சீனா, கொரியா போன்ற அயல் நாடுகளுக்கும் பயணித்தவர். இவரை மக்கள் 'சிரிக்கும் புத்தர்' எனவும் 'மகிழ்ச்சிப் புத்தர்' எனவும் அன்பாக அழைத்தனர். 

'புத்தர்' என்றால் ஞானம் அடைந்தவர் என்றே பொருள். சித்தார்த்தர் ஞானம் அடைந்த பின்பே 'கௌதம புத்தர்' என அழைக்கப்பட்டார். சித்தார்த்தருக்கு முன்பும் பின்பும் பல புத்தர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் ஒருவர்தான் ஹொடாய். இவர் சொற்கள் எதையும் பயன்படுத்தாமல் தொந்தி வயிறு குலுங்கக் குலுங்கச் சிரித்து, பிளவுபட்ட மக்கள் மனங்களைச் சிரிப்பால் ஒருமைப்படுத்திய மிகப்பெரும் ஆன்மிக ஞானி.  

குருபாதம்ஊர் ஊராக, கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக, தெருத் தெருவாக, மூலை முடுக்கு எல்லாம் திரிந்து தொந்தி உடல் குலுங்கக் குலுங்க அடிவயிற்றிலிருந்து சிரிப்பை வெளிப்படுத்தினார். இவரைக் கண்டதும் மக்கள் சிரித்தனர். இவர் சிரிக்கும் அழகைப் பார்த்து மக்களும் மெய்மறந்து சிரித்தார்கள். இவர் இருக்கும் அந்தச் சூழலே மாறிவிடும். அது மக்கள் எல்லோருக்கும் தொற்றிக்கொள்ள அனைவருமே சிரிப்பார்கள். நாடே சிரித்தது.

சொற்கள் எதுவுமில்லாமல், போதனை எதுவுமில்லாமல் தன் அங்க அசைவால் சிரிப்பூட்டிய சிரிப்புப் புனிதர் இவர். மக்கள் இவருடன் சேர்ந்து சிரித்தனர், நடனமாடினர், குதூகலித்தனர். மக்கள் தங்களில் மாற்றத்தை உணர்ந்தனர்.

இறந்தவர்களைப் பார்த்துச் சிரித்தார். இவரது சிரிப்பிலும் ஆட்டத்திலும் 'இறந்தவர் இறக்கவில்லை, அவர் ஜெயித்துவிட்டார், அது இறப்பல்ல அது ஒரு புதிய வாழ்க்கை. மரணத்தால் யாரையும் அழிக்க முடியாது; மரணத்தைப் பார்த்துச் சிரித்தால் நாம் மரணத்தையே அழித்துவிடலாம். எனவே, மரணத்தைப் பார்த்துச் சிரியுங்கள்' என்ற செய்தி பொதிந்திருந்தது.

 

எதிர்பார்ப்புகள், அபிப்பிராயங்கள், எண்ணங்கள், கருத்தியல்கள், கோட்பாடுகள், தத்துவம், வழிமுறைகள் என்பவற்றைச் சுமந்துகொண்டு பார்ப்பவர்களுக்கு ஹொடாய் ஒரு புரியாத புதிர். ஹொடாயின் சிலைகள் சீன தேசத்தின் முக்கிய இடங்களில் எல்லாம் இருக்கின்றன. 
இப்படிப் பணத்தைக் கையால் தொடாமலேயே வாழ்ந்த ஹொடாயின் சிலையை (சிரிக்கும் புத்தர் சிலை) வாங்கி வைத்தால் சிரிப்பு வேண்டுமானால் வரலாமே தவிர, செல்வம் நிச்சயம் வராது.”

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

"இந்தப் பயணம் என்னை அச்சுறுத்தியது!"- ஜென் Z இளைஞர், ஊர் சுற்றி ஆன கதை

எளிய குடும்பத்தில் பிறந்தவரான குமார் ஷா, அரசு பள்ளியில் பயின்ற ஒரு சுட்டிப் பையன். சிறு வயது முதலே கதை சொல்ல வேண்டுமென்று யாராவது கேட்டால் போதும், தன்னைச் சுற்றி இருக்கும் மரம், கொடி, பூச்சி, பறவை போன்றவனவற்றை வைத்தே கற்பனை குதிரைகளை அவிழ்த்துவிட்டு ஒரு புராணமே பாடி விடுவார். அபாரமான கதை சொல்லல் திறமை அவருக்கு இருந்தாலும் குடும்ப சூழ்நிலைகளால் படித்து முடித்த பின் கிடைக்கும் வேலைக்குச் செல்கிறார். யாருக்கோ அடிமைபட்டுக் கிடப்பது போன்ற உணர்வும் அவரை விடாமல் துரத்திக் கொண்டே இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், சட்டென நண்பர்களை அழைத்து, 'இனிமே நான் மத்தவங்க கிட்ட கை கட்டி வேலைப் பார்க்கப் போறதில்ல. ஐ க்விட்' என்று சொன்னவுடன் பெரிதாக யாரும் அதிர்ச்சியடையவில்லை. மாறாக, 'ஆமான்டா இது உனக்கு சரிபட்டு வராது. ஊர் சுத்த போ' என்கிறார்கள். 'என் கதை என்னைக் கைவிடாது' என்ற நம்பிக்கையில் ஒரு பையுடன் ஊர் சுற்றக் கிளம்புகிறார் குமார். அந்தப் பயணம் இதோ, இந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றுவதில் வந்து நிற்கிறது.

44_17334.jpg

இந்த முறை தன் இந்திய சைக்கிள் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் குடியம் குகைக்குச் சென்றார் குமார். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே அந்தக் குகைகளில் வாழ்ந்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு மீண்டும் ஊர் சுற்றும் பயணத்தைத் தொடர்ந்தார். 

ஒரு புத்தர், ஒரு யானை, ஒரு ஆமை!

குமார், இந்தப் பயணத்துக்கு ஒரு சைக்கிள், ஒரு செல்போன், சில ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் தேவையான பிற அடிப்படைகளை மட்டும்தான் வைத்திருப்பார். சைக்கிள் பயணம் என்பதால் ஒரு கிராம் கூடுதல் எடை கூட பெரும் சுமையாக மாறிப் போகலாம். ஆனால் மேற்குறிப்பிட்டவைகளைத் தவிர ஒரு புத்தர் பொம்மை, ஒரு யானை பொம்மை, ஒரு ஆமை பொம்மையையும் குமார் பையில் எல்லா பயணங்களின் போதும் வைத்திருப்பார். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், குமார் மேற்கொண்ட முதல் இந்தியப் பயணத்துக்கு எதேச்சையாக பேருந்தை மட்டும் பயன்படுத்தியுள்ளார்.  கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு நீண்ட அந்தப் பயணத்தில் பல்வேறு மனிதர்களிடம் பேசியும் உறவாடியும் பல இடங்களுக்குச் சென்றுள்ளார். தான் சந்தித்த மனிதர்கள் சொன்ன கதைகளை வைத்து பல புதுமையான இடங்களுக்குப் போனாலும், அவரே அறியாமல் ஏதாவது ஒரு புத்தர் கோயில் அவர் கண்ணுக்குத் தென்பட்டுவிடும். இப்படி குமார் இறங்கித் தேடிப் போகும் இடத்தில் புத்தர் ஆழ்ந்த தியானத்தில் சிலையாக அமர்ந்திருந்த சம்பவங்களே அதிகம். இதனாலேயே புத்தருக்கு அந்தப் பையில் ஒரு இடம். குமாரைப் பொறுத்தவரை அவரைத் துரத்தும் ஒரு நண்பர் புத்தர். இதனால் புத்தர் மீது குமாருக்குத் தீராக் காதல் ஒட்டிக் கொண்டுவிட்டது. 

66_17523.jpg

யானை கதை! 

அவர் மேற்கொண்டுள்ள இந்தியப் பயணத்துக்கு முன்னோட்டமாக, அண்மையில் தென் தமிழக எல்லையில் யானைகளைக் காண வேண்டுமென்ற ஒற்றைக் குறிக்கோளுடன் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார் குமார் ஷா. அப்போது சில நாள்களில் அவர், வெறும் தண்ணீரை மட்டும் அருந்தி 200 கிலோ மீட்டர் தூரத்தை ஒரே நாளில் கடந்திருக்கிறார். அந்தப் பயணத்தின் இடையில் முதுமலை யானைகள் பண்ணையைக் காணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அங்கு எண்ணிலடங்கா யானைகள் கூட்டம் கூட்டமாகத் திரிந்தன. யானை கூட்டத்தில் ஒன்றுக்கு மட்டும் ஆண்குறி விறைப்பாக இருந்துள்ளது. அதைச் சுற்றிலும் பெண் யானைகள். காலில் சங்கிலி கட்டப்பட்டிருந்த அந்த ஆண் யானையால் ஒன்றுமே செய்ய முடியாமல் மற்ற யானைகளை முறைத்துக் கொண்டிருந்தது. யானைகளைப் பார்க்க வேண்டுமென்று ஆர்வத்தோடு வந்த குமாருக்கு இந்தக் காட்சி மனச்சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. மிகுந்த வெறுப்புடன் சைக்கிளை மிதிக்கத் தொடங்கியவர், கேரளாவில் உள்ள கோடநாடு வருகிறார். அந்த அழகான காலைப் பொழுதில், ஏரித் தண்ணீர் பளிங்கு நிறத்தில் இருந்துள்ளது. அப்போது தூரத்தில் மூன்று யானைகள். தண்ணீர் குடிக்க வருகின்றன. யானையைப் பார்த்த குமார், அங்கிருந்து சென்னையை நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். "எத்தனையோ இடங்களில் யானைகளைப் பார்த்திருந்தாலும், ஏரியில் நீர் பருக வந்த யானைகளைப் பார்த்த அனுபவம் எதற்குமே ஈடாகாது" என நெகிழ்கிறார் குமார். 

ஆமை கதை! 

யானைப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னைக்கு வந்து சில நாள்களில், நண்பர் ஒருவரிடமிருந்து போன் வருகிறது. பெசன்ட் நகர் பகுதிக்கு வருமாறு அழைப்பு. அங்கு கிட்டத்தட்ட 400 ஆலிவ் ரிட்லி ஆமைகளை ஒன்றாகக் கடலில் விடும் நிகழ்வுக்காகத்தான் குமாரை அழைத்திருக்கிறார் நண்பர். ‘இந்தியப் பயணத்தை நம்மால் மேற்கொள்ள முடியுமா?’ எனக் குமார் குழம்பிக் கொண்டிருந்த நேரம் அது.

கடற்கரையில் விடப்பட்ட ஆமைகளில் ஒன்று கடலை நோக்கி வேகமாக விரைகிறது. குமாரின் கவனத்தை அந்த ஆமை ஈர்க்கிறது. அது மட்டுமே இப்போது குமாரின் சிந்தனையில் நிறைந்துள்ளது. இந்தியப் பயணத்தை சைக்கிளில் மேற்கொள்ள துணிவு குமாருக்கு இங்கிருந்துதான் பிறக்கிறது. ‘அந்த ஆமை என்னைப் பார்த்து, ‘என் அப்பா யாரென்று கூட எனக்குத் தெரியாது. என் அம்மா எங்கிருந்தோ வந்து என்னை இங்கு பெற்றடுத்துவிட்டு மறைந்துவிட்டாள். இப்போது என் சொந்த இடத்தைத் தேடி இந்தப் பயணத்தை ஆரம்பிக்க உள்ளேன். இது ஒரு பெரிய கடல். இது என்னை அச்சுறுத்துகிறது. ஆனால் இது என் கனவு’ என்று கூறிவிட்டு கடலில் முதல் அடியை எடுத்து வைத்தது. அது இன்னும் சில அடிகள் எடுத்து வைத்து கடலுக்குள் சென்ற உடன் பின்னால் ஒருவர், ‘400 ஆமைகளை விட்டுருக்கோம். ஆனா, ஒரு சிலது மட்டும்தான் பொழச்சு பெருசாகும். மத்ததெல்லாம் போற வழியிலேயே இறந்திடும்’ எனக் கவலையோடு பேசினார்.' நான்தான் அந்த ஆமை. கடல்தான் இந்தியா. இந்தப் பயணம் என்னை அச்சுறுத்துகிறது. ஆனால் இது என் கனவு’ எனக் குமார் தீர்க்கமாக முடிவெடுத்ததும் இந்த இடத்தில்தான். 

11_17314.jpg

"எதற்காக இந்த சைக்கிள் பயணம்?" எனக் குமாரிடம் கேட்டோம். "எந்தவித அடையாளமும் இல்லாமல்தான் வாழ விரும்புகிறேன். ஆனால், ஏதோ ஒரு அடையாளத்தில் இருந்தே ஆக வேண்டுமென்று இந்தச் சமூகம் வற்புறுத்துகிறது. அதற்காகவே என்னை, 'ஒரு கதைசொல்லி' என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். கதைசொல்லி என்று கூறிக் கொண்டாலும், உண்மையில் நான் கேட்கும் கதைகள்தான் அதிகம். சைக்கிளை எடுத்து மிதிக்க ஆரம்பித்தேன் என்றால் ஏதாவதொரு கிராமத்து முனையில் இருக்கும் டீ கடையில் நிறுத்துவேன். நான் ஒரு டீ வாங்கிவிட்டு அங்கு அமர்ந்திருக்கும், இன்னொரு நபருக்கு ஒரு டீ வாங்கி கொடுத்துவிட்டு பேச ஆரம்பிப்பேன். ஒரு சில நொடிகளில் அவரிடமிருந்து கதைகள் கொட்டும். பெரும்பாலும் அந்த ஊரைப் பற்றிய கதைகள்தான் அதிகம் இருக்கும். இப்படி ஒவ்வொரு ஊருக்கும் சொல்லப்படாத கதை இன்னும் எத்தனை கோடி இருக்கிறதென்றே எண்ண முடியாது. அந்த டீ கடையில் அமர்ந்திருக்கும் அந்தப் பெயர் தெரியாத நபர் சொல்லும் கதைக்காகத்தான் இந்தப் பயணம் தொடர்கிறது" என்றவர், "என் கதைகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவற்றை நம்பித்தான் என் வாழ்க்கை இருக்கிறது. எல்லா தேவைகளுக்கும் என் கதைகளைத்தான் நம்பி இருக்கிறேன். நிறைய பள்ளிகளில் கதைசொல்லும் வகுப்பெடுக்க என்னை அழைக்கிறார்கள். வெவ்வேறு மாநிலங்களிலிருந்து எல்லாம் என்னைப் பற்றி கேள்விப்பட்டு வருகிறார்கள். அவர்கள் கூப்பிடும் ஒரே காரணத்துக்காக, நானும் பயணம் செய்கிறேன். வகுப்பை முடித்தப் பிறகு அவர்கள் என்ன கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு திரும்பிவிடுவேன். என் பணத் தேவைகள் எப்படியாவது பூர்த்தியாகிக் கொண்டுதான் இருக்கிறது" என்றார் சிரித்தபடி. 

இந்த ஆண்டு ஆளியார் நண்பர்கள் உதவியுடன் 'டிராவல் ஸ்கூல்’ ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் குமார். அனைத்து வயதினரும் சேர வாய்ப்பிருக்கும் இந்தப் பள்ளியை தொடர்ச்சியாக நடத்துவதுதான் அவரின் தற்போதைய திட்டம். கூடவே, கதை சொல்வதில் ஆர்வமிருக்கும் ஆசிரியர்களை இணைத்து, வாட்ஸ்அப் குரூப் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். அவர்கள் மூலம் மாணவர்களிடம் பயணத்தைப் பற்றிய தகவல்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இதன்மூலம், பல நூறு குழந்தைகளுக்குக் கதைகள் சென்று சேர்கின்றன. இது ஒரு சங்கிலித் தொடர் போல, தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. 

55_17518.jpg

கதைசொல்லிகள் மறைந்தாலும் கதைகள் மறைவதில்லை! 

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.