Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

காலத்தை வென்ற கடிகாரங்கள்!

சென்னையில் கடிகாரப் பிரியரான ராபர்ட் கென்னடி தனது வீட்டில் சுமார் 2500க்கும் மேற்பட்ட கடிகாரங்களை சேகரித்து வைத்துள்ளார். நிகழ்காலத்தை நேரமாகக் காட்டுவதோடு, கடந்த காலத்தையும் நனைவூட்டும் கடிகாரங்கள் இவை. இது குறித்து சென்னை செய்தியாளர் ஜெயக்குமார் வழங்கும் காணொளி.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நீல் ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய தூசி பை 18 லட்சம் டாலருக்கு ஏலம்

 
அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ராங் பயன்படுத்திய சந்திர தூசி பைபடத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionஅமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ராங் பயன்படுத்திய சந்திர தூசி பை 18 லட்சம் டாலருக்கு விற்பனை

சந்திரனில் இருந்து முதலாவது மாதிரிகளை சேகரிக்க அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய சந்திர தூசி பை, நியூ யார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 18 லட்சம் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

சந்திர மாதிரிகள் வெளிப்புற மாசுக்களால் அசுத்தம் அடையாமல் இருப்பதையும், அதேபோல இந்த சந்திர மாதிரிகளால் வெளிப்புற பொருட்கள் அசுத்தம் அடையாமல் இருப்பதையும் தடுக்கின்ற இந்த பை, அப்பல்லோ 11 சந்திரப் பயணத்தில் பயன்படுத்தப்பட்டது.

இது பெயர் தெரிவிக்காத விற்பனையாளர் ஒருவரால் 'சாத்பீஸ்' ஏல நிறுவனம் மூலம் விற்பனைக்கு வந்தது.

வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த பையில், சந்திரனிலுள்ள துசியும், சிறிய கற்களும் காணப்படுகின்றன.

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ராங்படத்தின் காப்புரிமைCENTRAL PRESS/GETTY IMAGES

தனியார் கைகளில் இருக்கின்ற அப்பல்லோ 11 சந்திரப் பயணத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரேயொரு கலைப்பொருளான இந்த தூசி பை, யாருக்கு செந்தம் என்பது பற்றிய நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னர், இது ஏலத்திற்கு வந்திருக்கிறது.

சந்திரனுக்கு பயணம் மேற்கொண்ட விண்கலம் பூமிக்கு திரும்பிய பிறகு, ஏறக்குறைய அனைத்து கருவிகளும் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகங்களுக்கு அனுப்பப்பட்டன.

இருப்பினும், பொருட்களின் விபரப் பட்டியலில் காணப்பட்ட பிழையால், இந்த பையானது, ஜான்சன் விண்வெளி மையத்தின் பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு ஏலத்தின்போது, இது தவறாக இனம் காணப்பட்டதால், இல்லினாய் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கு வெறும் 995 டாலருக்கு விற்கப்பட்டது.

இந்த பையை திரும்ப பெற்றுக்கொள்ள நாசா முயற்சிகளை மேற்கொண்டது.

ஆனால். இந்த சந்திர தூசி பையானது வாங்கியவருக்கே சட்டபூர்வமாகச் சொந்தமானது என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க மத்திய அரசு நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்தார்.

அதன் பின்னர், இதனை வாங்கியவர் 'சாத்பீஸ்' ஏல நிறுவனம் மூலம் ஏலத்தில் விற்க இதனை கொண்டு வந்தார்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

வாவ்... திரும்ப வந்துவிட்டது கூகுள் கிளாஸ்! ஆனால்..? #GoogleGlass

 

டெக்னாலஜி உலகில் தோல்விகள் என்பது வழக்கமான ஒன்று. ஆனால் 'விழுவதெல்லாம் எழுவதற்கே' என்பதுதானே டெக்னாலஜி உலகின் சக்சஸ் சீக்ரட்? அதனை மீண்டும் நிரூபித்திருக்கிறது கூகுள். ஆம். ஐந்து வருடங்களுக்கு முன்னர் வெளியாகி, இரு வருடங்களுக்கு முன்னர் 'குட்பை' சொல்லிவிட்டு போன கூகுள் கிளாஸ் மீண்டும் சந்தைக்கு வந்திருக்கிறது. ஆனால் இந்த முறை 'இவன் வேற மாதிரி' என சொல்லத்தக்க வகையில்  பல மாற்றங்களைச் செய்துள்ளது கூகுள். இதற்கு முன்பு தனிநபர்களுக்காக வெளிவந்த கூகுள் கிளாஸ், இந்த முறை குறிவைத்திருப்பது தொழில்துறையை. 

கூகுள் கிளாஸ் என்டர்பிரைஸ் வெர்ஷன்

வேளாண்மை முதல் விண்வெளி ஆராய்ச்சிகள் வரை அனைத்துமே தொழில்நுட்பத்தின் உதவியோடுதான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதாவது மனிதர்கள் பாதி; இயந்திரங்கள் மீதி. ஆனால் வருங்காலங்களில் இவை அனைத்திலும் ஆட்டோமேஷன் புகுந்து மனிதர்களுக்கு ஆட்டம் காட்டும் என சொல்லப்படும் வேளையில்தான், கூகுள் மீண்டும் ஒரு ரிஸ்க் எடுத்திருக்கிறது. இதற்கு முன்பு வெளியிட்ட கூகுள் கிளாஸின் சாதாரண வெர்ஷனுக்குப் பதிலாக, இந்தமுறை கூகுள் கிளாஸ் என்டர்பிரைஸ் வெர்ஷனை வெளியிட்டுள்ளது. அதாவது முழுக்க முழுக்க தொழில்துறைக்கு மட்டுமே பயன்படும் வகையில் இருக்கிறது இந்த கூகுள் கிளாஸ் என்டர்பிரைஸ் வெர்ஷன். 

google Glass Enterprise Version

தொழில்துறைக்கு எவ்வாறு உதவும்?

தொழில்துறை என்றதும், மிகப்பெரிய தொழிற்சாலைகள் மட்டும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் கூகுள் கிளாஸோ ஆட்டோமொபைல் இன்ஜினியர் முதல் மருத்துவர்கள் வரை அனைவருக்கும் கைகொடுக்கப்போகும் தொழில்நுட்பம். இதற்கு உதாரணமாக போயிங் நிறுவனத்தில் நடக்கும் வொயரிங் பணியைக் குறிப்பிடலாம். விமானத்திற்கான எலக்ட்ரிக் சர்க்யூட் டிசைன் செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. கண் பார்க்கும் இடங்களில் எல்லாம் சர்க்யூட்கள், வொயரிங்குகள் என விமானத்தின் உள்ளே பல்வேறு எலக்ட்ரிக் சர்க்யூட்கள் இருக்கும். இதுமாதிரியான இடங்களில் வொயரிங் செய்ய கைகொடுப்பதற்காகத்தான் ப்ளூபிரின்ட் கையேடுகள் இருக்கின்றன. அதாவது எந்த சர்க்யூட்டில், எந்த வொயர், எங்கே வரவேண்டும் என்ற விவரங்களை எல்லாம் இந்த ப்ளூபிரின்ட் மூலம்தான் பார்த்துப் பார்த்துதான் பொறியாளர்கள் இணைப்பார்கள். இதற்காக வொயரிங் செய்யும் இன்ஜினீயர் ஒவ்வொரு வொயரை இணைத்த பின்னும், வந்துவந்து ப்ளூப்ரின்ட்டைப் பார்க்க வேண்டும். இடையில் ஏதேனும் குழப்பம் வந்தால் எந்த வொயரை எங்கே இணைப்பது என்றே தெரியாத 'இடியாப்ப சிக்கல்'தான். இந்த இடத்தில்தான் கைகொடுக்கிறது கூகுள் கிளாஸ். இதனை வொயரிங் செய்யும் இன்ஜினீயர் கண்ணில் மாட்டிவிட்டால் போதும். அவர் வொயரிங் சர்க்யூட்டிற்கு அருகே சென்றதுமே மொத்த ப்ளூப்ரின்டும் கண்ணிற்கு அருகேயே தெரியும். எனவே தனியாகப் புத்தகங்களைப் புரட்ட வேண்டிய அவசியமே இருக்காது. மேலும் வொயரிங் வீடியோக்களைக் கூட நம் கண்ணிற்குள்ளேயே பார்க்க முடியும். எந்த இடத்தில் வொயர்களை கனெக்ட் செய்ய வேண்டும், சர்க்யூட் டிசைன் வடிவங்கள், அது தொடர்பான வீடியோக்கள் என அத்தனையும் நம்மால் எளிதாகப் பார்க்க முடியும். இதனால் பணி எளிதாக முடிவதுடன், புதிதாகப் பணிகளைக் கற்றுக்கொள்ளவும், கடினமானப் பணிகளைக்கூட துல்லியமாக செய்யவும் முடியும். இதனை போயிங் நிறுவனம் மட்டுமின்றி வோக்ஸ்வேகன், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் விமான உற்பத்தி பிரிவு, டி.ஹெச்.எல் நிறுவனம் உள்பட பல நிறுவனங்கள் கடந்த இரு வருடங்களாக சோதனை முறையில் பரிசோதித்து வந்துள்ளன. 

கூகுள் கிளாஸ் Vs மேனுவல்

இதே உதாரணம் மருத்துவத்துறைக்கும் பொருந்தும். ஒரு மருத்துவர் நோயாளியிடம் சஜகமாகப் பேசிக்கொண்டிருந்தாலே போதும். நோயாளியின் விவரங்கள அனைத்தும் கூகுள் கிளாஸ் மூலமாக பின்னணியில் பதிவாகிவிடும். எனவே மருத்துவர் நோயாளியின் விவரங்களைக் கைகளால் எழுத வேண்டிய அவசியமே இருக்காது. கொரியர் நிறுவனங்களில் ஒவ்வொரு பார்சலையும், பார்த்துப் பார்த்து விவரங்களைக் கணினியில் உள்ளீடு செய்ய வேண்டியதிருக்கும். ஆனால் இந்த கிளாஸ் மூலமாக ஸ்கேன் செய்தால், ஆட்டோமேட்டிக்காகவே விவரங்கள் கணினிக்கு வந்துவிடும். இப்படித் தன்னுடைய கிளாஸின் அருமை பெருமைகளை எல்லாம் ஆஹோ ஓஹோ எனக் கொண்டாடுகிறது கூகுள். 

Google glass version 2

இதற்கு முந்தைய கூகுள் கிளாஸ் போலவே இதுவும் தோல்வி அடையக்கூடாது என்பதற்காக கூகுள் மிகச்சரியாக திட்டமிட்டு பணியாற்றியுள்ளது. இதற்காக கடந்த இரண்டு வருடங்களில், 30 நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறது. மேற்கண்ட நிறுவனங்களில் கூகுள் கிளாஸை பரிசோதித்தது மட்டுமன்றி, அந்தந்த நிறுவனங்களில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றையும் அறிந்து உடனடியாகக் களைந்திருக்கிறது. எல்லா நிறுவனங்களுக்கும் ஒரே கிளாஸ்தான் என்ற பாலிசிக்கு பதிலாக, ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஏற்பவும் நிறைய மாறுதல்களைச் செய்திருக்கிறது கூகுள். இதனால் ஒவ்வொரு துறைக்கும், அவர்களுக்கு ஏற்ற ஸ்மார்ட் டிவைசாகக் கிடைத்திருக்கிறது இந்த கிளாஸ் என்டர்பிரைஸ். இந்தக் கண்ணாடியை அணிவதால் பணியாளர்களின் உற்பத்தித் திறனும் பெருகுகிறது என சர்ட்டிஃபிகேட் தருகின்றன இதனை சோதனை செய்த நிறுவனங்கள். 

போயிங் நிறுவனத்தில் கூகுள் கிளாஸ் (வீடியோ)

கூகுள் கிளாஸின் முந்தைய வெர்ஷனில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் அதில் பெரிய சிக்கலாகக் கருதப்பட்டது தனிநபர்களின் ப்ரைவசிதான். அதனை அணிவதன் மூலமாக, யாருடைய பிரைவசிக்குள்ளும் நுழையலாம் என்பதுதான் அதன் மிகப்பெரிய நெகட்டிவ்வாக இருந்தது. அடுத்தது அதன் விலை. ஆனால் அந்த சிக்கல்கள் இந்தமுறை இருக்காது என நம்பலாம். முந்தைய கிளாஸைப் போலவேதான் கிளாஸ் என்டர்பிரைஸ் வெர்ஷனின் ஹார்ட்வேர் டிசைனும். ஆனால் பிராஸசர், கேமரா திறன், வைஃபை கனெக்டிவிட்டி மற்றும் பேட்டரியின் திறனை மட்டும் இன்னும் கொஞ்சம் மேம்படுத்தியிருக்கிறது கூகுள். 

எப்படி வாங்குவது?

மீண்டும் வந்த கூகுள் கிளாஸ்

 

ஆன்லைனில் வாங்குவது பற்றியெல்லாம் இன்னும் கூகுள் எதுவும் அறிவிக்கவில்லை. தற்போதைக்கு கூகுள் கிளாஸின் என்டர்பிரைஸ் எடிஷன், அந்நிறுவனத்தின் பார்ட்னர்கள் மூலமே விற்பனைக்குக் கிடைக்கிறது. விலையும் இதுதான் என கூகுள் எதையும் அறிவிக்கவில்லை. எதுமாதிரியான தொழில்களுக்கு இதனைப் பயன்படுத்துகிறோமோ அதற்கேற்றபடி வடிவமைப்பு செய்யப்படும் என்று மட்டும்தான் கூறியிருக்கிறது. எனவே விலையும் அதைப் பொறுத்துதான் நிர்ணயம் செய்யப்படுமாம். இதுபற்றிய விவரங்களை கூகுள் கிளாஸின் இணையதளத்தில் காணலாம்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

உலகத்தை முதன்முதலில் சுற்றி வந்த முதல் மனிதர் வைலி போஸ்ட் (22-7-1933)

வைலி போஸ்ட் என்ற மனிதர் 1933-ம் ஆண்டு ஜுலை 22-ந்தேதி உலகத்தை 7 நாட்களில் 18 மணி 45 நிமிடங்களில் 15596 கிலோ மீட்டர் சுற்றி சாதனைப் படைத்தார். உலகத்தை முதன்முதலில் தனியே சுற்றியவரும் இவர்தான். இதே தேதியில் நடந்த முக்கிய சம்பவங்கள்:- * 1812 - வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஸ்பெயினில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.

 
 
உலகத்தை முதன்முதலில் சுற்றி வந்த முதல் மனிதர் வைலி போஸ்ட் (22-7-1933)
 
வைலி போஸ்ட் என்ற மனிதர் 1933-ம் ஆண்டு ஜுலை 22-ந்தேதி உலகத்தை 7 நாட்களில் 18 மணி 45 நிமிடங்களில் 15596 கிலோ மீட்டர் சுற்றி சாதனைப் படைத்தார். உலகத்தை முதன்முதலில் தனியே சுற்றியவரும் இவர்தான்.

இதே தேதியில் நடந்த முக்கிய சம்பவங்கள்:-

* 1812 - வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஸ்பெயினில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.

* 1823 - யாழ்ப்பாணத்தில் டாக்டர் டானியல் வோரன் புவர் தலைமையில் அமெரிக்க மிஷனின் பட்டிக்கோட்டா செமினறி திறக்கப்பட்டது.

* 1916 - கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பனிவிழும் ‘புடவை’ வனம்!

 

 

ப்பாவின் தலைதுவட்டும் துண்டை உடலில் சுற்றிக்கொண்டு, கண்ணாடி முன் நின்று கண்சிமிட்டி வெட்கப்படுவதில் ஆரம்பிக்கிறது பெண் குழந்தையின் புடவை காதல். மணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது, சீர்செனத்திகளோடு எடுத்துவந்த தன் அம்மாவின் புடவைதான் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறது.    

p22a1.jpg

ஆடைகளில் பல வகைகள் இருந்தாலும் பெண்களைத் தேவதைகளாகக் காட்டும் சக்தி புடவைகளுக்குண்டு. என்னதான் நவீன உடைகளுக்கு மெதுமெதுவாக மாறிக்கொண்டு வந்தாலும் வீட்டு விசேஷங்கள், திருவிழாக்கள், பண்டிகைகள் என விழாக்காலங்களில் பெண்களின் முதன்மைத் தேர்வாக இருப்பவை புடவைகள்தான். அதிலும் பட்டுப்புடவைகளைப் பெண்கள் பார்த்துப் பார்த்து பத்திரப்படுத்துவதிலிருந்தே   பாரம்பர்யம் மாறாத அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும். உடலின் வடிவமைப்போடு நேர்த்தியாகக் கட்டப்பட்ட புடவை, அதற்குரிய ஆபரணங்கள் எனப் புடவை விளம்பரத்தில் மிடுக்காகத் தோன்றும் மாடலைப் பார்க்கும்போது பெண்கள் தங்களை அந்தப் புடவையில் பொருத்திப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். புடவைகளின் நிறம், டிசைன், விலை என பல தகவல்களையும் தெரிந்துகொள்ள விரும்புவதிலேயே புடவை விளம்பரங்கள் பெண்களை எளிதில் கவர்வதைப் புரிந்துகொள்ள முடியும்.   

p22b.jpg

இப்படி பெண்களைக் கவர்கிற விளம்பரங்களை உருவாக்குவது  எளிதல்ல. அதற்கான மெனக்கெடல் அதிகம். அந்த வகையில் பட்டுப் புடவைக்கான விளம்பரத்துக்காக பத்து நாள்கள் இமயமலைக்குச் சென்று திரும்பிய அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார் சென்னையில் உள்ள ‘மக்கா ஸ்டூடியோ’வின் நிறுவனர் மற்றும் ஃபேஷன் புகைப்படக் கலைஞர் பகத்குமார்...    

p22c.jpg

“பொதுவா புடவை விளம்பரங்களை, குறிப்பாகப் பட்டுப்புடவை விளம்பரங்களைக் கோயில், வயல்வெளி அல்லது திருமண வீடு மாதிரியான செட் போட்டு எடுப்பதுதான் வழக்கம். இதைத் தாண்டி வித்தியாசமாக முயற்சி செய்யலாம் என்று சென்னையில் உள்ள, பாலம் சில்க் சாரீஸ் அளித்த ஆஃபர்தான் இமயமலை ஷூட் கான்செப்ட்.  என் நண்பரும் கேமராமேனுமான நரசிம்மன் மற்றும் அனுஷா, அர்ச்சனா, சாஹித்யா  ஆகிய மூன்று மாடல்களோடு, இருபது பட்டுப்புடவைகள், கேமராக்கள் சகிதம் தயாரானோம். மும்பை, அங்கிருந்து சண்டிகர் வரை ஃபிளைட்... சண்டிகர்ல இருந்து காரில் சிம்லா.    

p22d.jpg

சிம்லா வரைக்கும் ஊட்டி மாதிரியான ஒரு மிதமான குளிரை ரசிச்சிட்டு இருந்தோம். ஆனா, காஸாவுல காலை வெச்சதும், ‘அய்யய்யோ, ஷூட்டிங் சொதப்பிடுமோ’ன்னு தோணுற அளவுக்கு மைனஸ் டிகிரி குளிர்ல, மொத்த யூனிட்டும் கிட்டத்தட்ட உறையுற நிலைக்குப் போயிட்டோம். நாங்க தங்கின எடத்துல இருந்த கிச்சன்ல, அடுப்பைச் சுத்தி அரை மணி நேரம் உட்கார்ந்து எழுந்ததும்தான் கொஞ்சம் நார்மலா ஆனோம்” எனும் பகத்குமார், 12 ஆயிரம் அடி உயரத்தில், மைனஸ் 15 டிகிரி குளிரில் சந்தித்த சவால்களைச் சுவாரஸ்யத்துடன் விவரிக்கிறார்...

“நாங்க தங்கியிருந்த இடம் ஹோட்டல் இல்லை... ஒரு கிராமத்து வீடு. அங்க ஒருநாளைக்கு மூணு மணி நேரம்தான் கரன்ட் இருக்கும். ஷூட்டுக்கான இருபது புடவைகளையும் மடிச்சு வெச்சு எடுத்துட்டு வந்தா, அயர்ன் செய்ய முடியா துன்னு, பி.வி.சி பைப்ல புடவையைச் சுத்தி எடுத்துட்டு வந்தோம். அப்புறம், தெர்மல் வேர், பனிப்பிரதேசத்துல போடறதுக்கான பிரத்யேகமான சாக்ஸ், ஷூ, கிளவுஸ், ஃபர் ஜாக்கெட்னு குளிர் தாங்குறதுக்கான விஷயங் களுக்கு மட்டுமே எண்பதாயிரம் ரூபாய் பட்ஜெட் ஆச்சு. இப்படி ஷூட்டுக் கான ப்ரீ பிளான்லயே நிறைய சவால்கள்.   

p22e.jpg

முதல் நாள் ஷூட்டில் நடுங்கவைக்கும் குளிர்ல மூணு மாடல்களோட மூக்கு, காதுமடல் எல்லாம் சிவந்தது... குளிர், மேக்கப்னு ஸ்கின் வறண்டு போகறது எனச் சில பிரச்னைகளை ஒருவழியா சமாளித்து முடித்தோம். முதல் நாள் அனுபவத்துல அடுத்தடுத்த நாளில் மாய்ஸ்ச்சரைஸர், லிப்ஸ்டிக், காஜல் மட்டுமே மேக்கப்பா உபயோகித்து ஷூட்டை முடித்தோம். அதுவும் புடவையில் இருந்த  மாடலுக்குக் குளிர் தாங்க முடியாம போய், ஒரு படம் எடுத்ததுமே, கார்ல ஹீட்டர் ஆன் செஞ்சு, கொஞ்ச நேரம் வெதுவெதுப்பாகிட்டு வந்ததுக்கு அப்புறம்தான் அடுத்த படத்தை எடுத்தோம்.

p22f.jpg

அடுத்ததா லைட்டிங்... சுத்தி ஒரே பனிமலைங்கறதால சூரிய வெளிச்சம் எல்லா இடத்துலயும் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால லைட்டிங்ல ஒரு பிரச்னையும் இல்ல. ஆனால், சாயங்காலம் 4 மணிக்கெல்லாம் சூரியன் அஸ்தமிக்க ஆரம்பிச்சுடும். அதனால ஷூட்டை வேகமா முடிக்க வேண்டிய கட்டாயம். ஒரு நாளுக்கான ஷூட் முடியறதுக்குள்ள நான் துவண்டு போயிடுவேன்; உடம்பெல்லாம் விறைச்சுடுற நிலைமைக்கு வந்துடுவேன். என்னை அப்படியே கைத்தாங்கலா அடுப்படிக்கு கூட்டிட்டுப் போய் படுக்க வெச்சுடுவாங்க. அந்தக் கதகதப்பில்தான் பழைய நிலைமைக்கு திரும்ப முடியும்’’ என்று தன் அனுபவங்களை ரசித்துச் சொல்வதிலேயே, நம்மையும் இருந்த இடத்தில் இருந்தே இமயமலைக்கு அழைத்துச் செல்கிறார் பகத்குமார்.    

p22g.jpg

“உயரமான இடத்துல இருந்ததனால ஆக்ஸிஜன் குறைவு ஏற்படும். உமிழ்நீர் குறைவாத்தான் சுரக்கும்... அதனால ஒழுங்கா சாப்பிட முடியாது; நீர்ச்சத்து குறையும். இப்படி எத்தனையோ பிரச்னைகளுக்கும் நடுவில் ஒரே ஆறுதல்... அந்தக் கிராமத்து மக்களோட அன்புதான். ஷூட்டிங்  நேரத்துல யார் வீட்டுக் கதவைத் தட்டித் தாகத்துக்குத் தண்ணி, பசிச்சா ரொட்டின்னு எதைக் கேட்டாலும் உடனே தருவாங்க.     

p22h.jpg

அங்கே எங்களைக் கவர்ந்த இன்னொரு விஷயம் ‘யாக்’ மாடு. பார்க்கப் பயங்கரமான தோற்றத்தில் இருக்கும். ஆனா, நாம ரெண்டு அடி வெச்சா அது நாலடி பின்னாடிப் போகும். அந்த அளவுக்கு அப்பாவி. அதனுடனும் படம் எடுத்துட்டு, ஒரு வழியா பத்து நாள் ஷூட்டிங்கை முடித்துத் திரும்பினோம்.

பொதுவாவே புடவைக்கான ஷூட்டிங்கில் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும்.  இமாலயா ஷூட், அதிலும் ரொம்பவே வித்தியாசமான அனுபவமா இருந்தது. அதோட, இந்தியாவிலேயே பட்டுப்புடவைக்கான முதல் பனிப்பிரதேச ஷூட் இதுதான்னு பெருமையாவும் இருக்கு’’ எனும் பகத்திடம், புடவை ஷூட்டிங்கின் அடிப்படை பற்றிக் கேட்டோம்.    

p22i.jpg

``புடவைக்கான விளம்பரப் படங்களை இரண்டு விதமா பிரிக்கலாம். ஒண்ணு கேட் லாக் ஷூட், இன்னொண்ணு கேம்பைன் ஷூட். கேட்லாக் ஷூட்டில் மாடல்களைக் கிட்டத்தட்ட அலங்காரம் செய்த பொம்மை மாதிரி படம் எடுத்து முடிச்சுடலாம். கேம்பைன் ஷூட்டில், அதிக வேலைப்பாடு நிறைந்த ஒரு புடவையை அணியும் மாடலை, கிட்டத்தட்ட ஒரு மகாராணியாகவே மாத்திடுவோம். இதற்காக அரண்மனை மாதிரியான இடங்களில் ஷூட்டிங் எடுப்போம். எப்போதும் சிரித்துக்கொண்டு போஸ் கொடுக்கும் மாடலின் முகத்தில் ஒரு கம்பீரமான முகபாவனையைக் கொண்டுவருவது போன்ற  மெனக்கெடலும் அதிகமாக இருக்கும். கேட்லாக் ஷூட்டில் புடவையின் நிறம், டிசைன் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். இதைப் பார்ப்பவர்களுக்கு இந்தக் கடையில், இப்படிப்பட்ட புடவைகள் இருக்கின்றன என்கிற தகவல் கிடைக்கும். அதுவே கேம்பைன் ஷூட்டில் வெறுமனே புடவையின் டிசைன்களை மட்டும் காட்டாமல், மாடல், பேக்ரவுண்ட் முதலியவற்றைச் சேர்த்து உணர்வுபூர்வமான படமாக எடுப்பதால் அந்த உணர்வு படத்தைப் பார்ப்பவரை ‘இந்தப் புடவையை நாம் கட்டினால் எப்படி இருக்கும்?’ என நினைக்கவைத்து, புடவையை வாங்கத் தூண்டும்.    

p22j.jpg

எத்தனை விதமான உடைகளை அணிந்தாலும், ஒரு பெண்ணைக் கம்பீரமாக உணரச்செய்து, நளினமாகவும் காட்டுவது புடவை மட்டுமே. வெஸ்டர்ன் டிரெஸ் ஷூட் நடக்கும் நேரத்தில் படங்களை மாடலிடம் காட்டும்போது ‘நைஸ்’னு ஒரு வார்த்தையில கடந்துடுவாங்க. அதே மாடலுடன் புடவை ஷூட் செய்யும்போது படங்களைப் பார்த்து ‘ஹவ் ஹோம்லி ஐயாம்!’னு ஒரே செல்ஃபியா எடுத்து இன்ஸ்டகிராம்ல அப்டேட் பண்ணிப்பாங்க!’’

- தன் கேமரா காதலுடன் பெண்களின் புடவைக்காதலையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது பகத்குமாரின் பேச்சு.  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகை இணைக்கப்போகும் அக்யூலா!

Aquila-Facebook

அக்யூலா

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மார்க் ஸக்கர்பர்க் என்ற இளைஞரால் 2004-ம் ஆண்டு பொழுதுபோக்காகத் தொடங்கப்பட்ட ஒரு விஷயம், இன்று உலகின் பெருமளவு மக்களால் இணையதளத்தின் உதவியுடன் பயன்படுத்தப்படுகிறது. அதுதான் ஃபேஸ்புக்!

உலக மக்களை ஒன்றாக இணைத்திருக்கும் இந்த ஃபேஸ்புக் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை பல மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. பயனாளர்களின் வசதிக்காகப் புதிய புதிய நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், தற்போது ஃபேஸ்புக் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது பற்றித் தனித்துவமான யோசனையை முன்னெடுத்திருக்கிறது. அதுதான் ஃபேஸ்புக் விமானம்.

நகரங்களில் வசிப்பவர்களுக்கு இணையதள வசதி கிடைப்பது எளிது. அதனால், அவர்கள் ஃபேஸ்புக் பயன்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனால், கிராமங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இணைய சேவை கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். எனவே, எல்லா இடங்களிலும் ஃபேஸ்புக் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய, சூரிய ஆற்றல் உதவியுடன் உலகை வலம் வரும் ஆளில்லா விமானத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வெள்ளோட்டம் விட்டுள்ளது.

aqula%20lab

ஃபேஸ்புக் அக்யூலா லேப்

விண்ணில் பறந்தபடியே தடையில்லா இணையதள சேவையை (Wi-fi hot spot) வழங்கும் சக்தி படைத்த இந்த ஆளில்லா விமானத்துக்கு ‘அக்யூலா’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரிலேயே இதன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டாலும், அந்த விமானம் தரையிறங்குவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது.

அந்தச் சிக்கலுக்கு தீர்வு கண்ட பின்னர், ஜூலை முதல் வாரத்தில் ‘அக்யூலா’ சூரிய ஆற்றல் விமானத்தை அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் ஃபேஸ்புக் நிறுவனம் சோதனை செய்து பார்த்திருக்கிறது. போயிங் விமானத்தைவிட மிகப் பெரிய இறக்கைகளைக் கொண்ட இந்த ஆளில்லா விமானம், 3 ஆயிரம் அடி உயரத்துக்குச் சென்றதுடன், ஒன்றே முக்கால் மணி நேரம் வானிலேயே உலா வந்தது.

கடந்த டிசம்பரில் நடந்த சோதனை ஓட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்கள் இந்த 2-வது சோதனை ஓட்டத்தில் இல்லை என்பது அதை வடிவமைத்த குழுவினருக்கு மட்டுமின்றி ஃபேஸ்புக் நிறுவனத்தினருக்கும் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

மார்க் ஜக்கர்பர்க் கனவின் படி, இந்த அக்யூலா விமானம் வெற்றிகரமாக விண்ணில் பறந்தால், உலகெங்கும் உள்ள மக்களுக்குத் தடையில்லா இணையதள சேவை கிடைப்பது உறுதி!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

'நெருப்புடா' படத்தின் ட்ரெய்லர்..!

 
 

neruppuda

'சத்ரியன்' படத்துக்கு பிறகு விக்ரம் பிரபு நடித்திருக்கும் திரைப்படம் 'நெருப்புடா'. ஆக்‌ஷன்-த்ரில்லர் ஆனா இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஃபயர் மேனாக விக்ரம் பிரபு நடித்திருக்கும் இந்தப் படத்தின் டீசர் சிறிது நாள்களுக்கு முன்பு ரிலீஸான நிலையில், இன்று படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். விக்ரம் பிரபு இந்தப் படத்தை தயாரிக்க அசோக் குமார் இயக்கி இருக்கிறார்.

 

  • தொடங்கியவர்

அறுவைச் சிகிச்சையின்போது கிட்டார் வாசித்த இசைக் கலைஞர்

 
அறுவைச் சிகிச்சையின்போது கிட்டார் வாசித்த இசைக் கலைஞர்
 

இந்திய இசைக் கலைஞர் ஒருவர் தனது மூளையில் அறுவைச் சிகிச்சை நடந்துகொண்டிருக்கும்போதே கிட்டார் வாசித்துள்ளார்.

அபிஷேக் பிரசாத் என்ற இந்தியக் கலைஞருக்கு கிட்டார் வாசிக்கும் போது கையில் ஏற்படும் தசைப்பிடிப்பை சரி செய்வதற்காகவே இந்த அறுவை சிகிச்சை நடந்தது.

‘மியூசிஷியன்ஸ் டிஸ்டோனியா’ என்று அறியப்படும் நோயை சரி செய்வதற்காக மூளையின் சில மின் சுற்றுகள் அறுவைச் சிகிச்சையின் போது அகற்றப்பட்டன.

இந்தச் சிகிச்சையின் போது வலி மிகுந்த பிடிப்புகள், விரல்கள் முறுக்கிக்கொள்வது, மீண்டும் மீண்டும் அசைவு போன்றவை ஏற்படும். இதனால் ஒவ்வொரு சுற்றினை அகற்றும் போதும் வைத்தியர்கள் அபிஷேக் பிரசாத்தை கிட்டார் வாசிக்குமாறு கூறினார்கள்

ஆகவே கிட்டார் வாசித்த அபிஷேக் பிரசாத், தன்னால் கிட்டார் வாசிக்க முடிவதாகக் கூறியுள்ளார்.

மூளையின் மின் சுற்றுக்கள் ஆறாவது முறை அகற்றும் போதே விரல்கள் திறந்துவிட்டன.

அறுவைச்சிகிச்சை மேசையிலேயே தான் இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அபிஷேக், தற்பொழுது தையல் பிரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

கிட்டார் வாசிக்கும்போது அபிஷேக்கின் இடது கை நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவற்றை டிஸ்டோனியா என்ற தசைப்பிடிப்பு செயற்படவிடாமல் தடுத்தது.

இதுகுறித்து அபிஷேக் பிரசாத் மேலும் தெரிவிக்கையில்,

“அதிகளவு பயிற்சி செய்ததால் தான் விரல்கள் இறுக்கமாக இருந்ததாக நினைத்தேன். ஓய்வு எடுத்த பின்னர் வாசித்த போதும் வலி போகவில்லை. தசைச் சோர்வு என்று கூறிய சில மருத்துவர்கள் வலி நிவாரணிகள், ஊட்டச்சத்து மருந்துகள், ஆன்டிபயாட்டிக், பிசியோதெரபி சிகிச்சை ஆகியவற்றை கொடுத்தார்கள்“ என்றும் கூறினார்.

uthayandaily

  • தொடங்கியவர்

எறும்பைக் கடிக்க விடுவது முதல் வெனிஸ் கார்னிவல் வரை... 8 விசித்திர திருவிழாக்கள்!

 

லகெங்கிலும் விசித்திரமானதாகத் தோன்றும் பாரம்பர்ய மரபுகள் பல இருக்கின்றன. பல்வேறுபட்ட இனக் குழுக்களால் பின்பற்றப்படும் இப்படியான மரபுகள், சில சமயங்களில் மற்றவர்களுக்கு விநோதமாகத் தோன்றும். இருப்பினும், உலகில் வாழும் லட்சக்கணக்கான இனக் குழுக்களுக்கு அவரவர்களுக்குத் தனித்துவமிக்கக் கலாசார மரபுகளே அவர்களின் அடையாளங்களாக இருக்கின்றன. ஒவ்வோர் இன மக்களும் அவர்கள் வாழ்வில் கடைப்பிடிக்கும் விழாக்கள் மற்றும் பழக்கவழக்கங்களே அவரவர்களின் வாழ்வாதாரமாகவும் பாரம்பர்யத்தைக் கட்டிக்காக்கும் ஒழுங்குமுறையாகவும் கருதப்படுகின்றன. இதோ, உலகின் விசித்திரமான எட்டு திருவிழாக்களைப் பற்றிப் பார்ப்போம்.

சாட்ரே-மவ் புல்லட் எறும்பு கையுறை:

எறும்பு கையுறை

அமேசான் காடுகளில் வாழும் பழங்குடி இனங்களில் மிகவும் பழைமையான இனத்தவர் `மவ் பழங்குடியினர்'. இந்த இனத்தில் பிறந்த ஒவ்வோர் ஆணும் பருவ வயதை எட்டியதும், எறும்பு கையுறை சடங்கில் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்கள் மவ் இனத்து ஆண்களாகக் கருதப்பட மாட்டார்கள். ஓர் ஆண்மகன் தான் பருவ வயதை எட்டிவிட்டதாக நினைத்தால், அவன் தன் வயது நண்பர்களுடன் மருத்துவரையும் அழைத்துக்கொண்டு காட்டுக்குச் சென்று, மிகக்கொடிய காட்டு எறும்புகளைப் பிடித்துவர வேண்டும். உலகிலேயே அதிக விஷமுள்ள அந்த எறும்புகளை ஒவ்வொன்றாகப் பிடித்து, மூங்கில் கம்பில் அடைத்து எடுத்து வருவார்கள். பிறகு அந்த எறும்புகளை இரண்டு கையுறைகளில் இட்டு நிரப்புவார்கள். அந்த இளைஞன், சுமார் 10 நிமிடம் தன் இரண்டு கைகளையும் அந்தக் கையுறையில் நுழைத்து வைத்திருக்க வேண்டும். கோபத்தின் உச்சியில் இருக்கும் காட்டு எறும்புகள், அவன் கைகளை ஒருவழியாக்கிவிடும். அந்த நிமிடம் முதல் அவன் மவ் இனத்தின் இளைஞனாவான்.

பற்களைக் கூர்மைப்படுத்தும் சடங்கு:

திருவிழாஇந்தோனேஷியத் தீவுகளில் வாழும் பாலி இன மக்களின் `பல் சடங்கு' மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாலி இனத்தில் பிறக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்தச் சடங்கு பொருந்தும். குறிப்பாக, திருமணத்துக்கு முன் அனைத்து பாலி இனத்தவருக்கும் இந்தச் சடங்கு முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை தவறினால், திருமண விழாவில் பல் சடங்கு இணைக்கப்படும். இந்தச் சடங்கு என்பது பற்களைக் கூர்மைபடுத்துவதாகும். பற்களைப் பட்டைதீட்டும் கலைஞர் முன் ஆணோ, பெண்ணோ படுத்து வாயைத் திறக்க வேண்டும். பிறகு அந்த நபர், வாயைக் கெட்டியாகப் பிடித்து கூர்மைப்படுத்தவேண்டிய பற்களைத் தேர்வுசெய்வார். அப்படித் தேர்ந்தெடுத்த பல்லின் மீது சொரசொரப்பான இரும்பு ரம்பத்தை வைத்து முன்னும் பின்னுமாகத் தேய்த்துக் கூர்மைப்படுத்துவார். கேட்கும் நமக்கு பற்கள் கூசினாலும், பாலி மக்கள் இதைப் புனிதமாகப் பார்க்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை கூர்மைப்படுத்தாத பற்களை காமம், பேராசை, கோபம், குழப்பம் மற்றும் பொறாமையின் அடையாளமாகப் பார்கின்றனர். இந்தச் சடங்கின் மூலம், இப்படியான உணர்வுகளை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கட்டுப்படுத்தியதாக நினைகின்றனர் பாலி மக்கள்.

குழந்தையைத் தூக்கி எறியும் சடங்கு:

திருவிழாநெஞ்சைப் பதறவைக்கும் இந்தச் சடங்கு, இந்தியாவில் கடந்த 500 ஆண்டுகளாகப் பின்பற்றி வருவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர், முதல் வாரத்தில் இந்தச் சடங்கு நடைபெற்றது. கடந்த 2011-ம் ஆண்டில் நெஞ்சை உலுக்கும் இந்தச் சடங்குக்குத் தடை விதிக்கப்பட்டது. இருந்தபோதும், 2012-ம் ஆண்டில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஸ்ரீசாண்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று, மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியது. 50 அடி உயரத்திலிருந்து கீழே விடப்படும் குழந்தையை, அனைவரும் சேர்ந்து ஒரு துணியால் பிடிக்க வேண்டும் என்பதுதான் இந்தச் சடங்கு. இந்த விநோதமான சடங்கில் பங்கேற்கும் குழந்தைகள், இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டதாகக் கருதுகின்றனர். துணியில் வந்து விழும்போது, ஆரோக்கியம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றைக் கொண்டு இந்தக் குழந்தை பூமிக்குப் புதியதாக வருவதாக நம்பிக்கையாம். கடுமையான தடைச் சட்டம் இருப்பதால் இந்தச் சடங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

கொலோன் திருவிழா (Cologne Festival) : திருவிழா

ஜெர்மனியில் கொலோன் நகரில் நடைபெறும் கார்னிவல் திருவிழா, ஒவ்வொரு வருடமும் 11-வது மாதத்தின் 11-வது நாளில், காலை 11 மணிக்கு தொடங்கப்படுகிறது. ஜெர்மனியின் மிகப்பெரிய நகரங்களான, ரைன்லாண்ட், பான், தியூசல்டோர்ஃபு, ஆஃகன், மெயின்ஸ் போன்ற நகரங்களில் அனைத்திலும் இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற்றாலும், கொலோன் (Cologne) கார்னிவல்தான் மிகப்பெரிய மிகவும் பழைமையான திருவிழாவாகக் கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் அளவிலான மக்கள் கலந்துகொள்ளும் இந்த கார்னிவல் கலாசாரம் தோன்றியது, மத்திய காலகட்டத்தில்தான். கிறிஸ்துவர்களின் வழிபாட்டு மாதம் தொடங்குவதற்கு முன் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவானது, இறைச்சிக்குப் பிரியாவிடை கொடுக்கும் விழாவாக ஜெர்மனியில் கொண்டாடப்படுகிறது. உண்மையில், கொலோன் திருவிழா 1823-ம் ஆண்டுக்கு முன்னர் பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இந்தத் திருவிழாவால் பல தெருக்களில் பேரழிவு, மோதல்கள், கொலைகள் போன்ற பல புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. பிறகு, ஜெர்மன் அரசால் முறையான கமிட்டி அமைக்கப்பட்டு, 200 ஆண்டுகளை நோக்கி சிறப்பாக நடந்துவருகிறது. அரசியல்ரீதியாகவும் பண்பாடு கலாசார ரீதியாகவும் ஜெர்மானிய மக்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்துகிறது கோல்ன் கார்னிவல்.

எசல மற்றும் தலதா (Esala Perahera): திருவிழா

இலங்கையில் கண்டி நகரில் ஒவ்வொரு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் எசல மற்றும் தலதா பெரகரா திருவிழா கொண்டாடப்படுகிறது. எசல மற்றும் தலதா இரு வேறுபட்ட, ஆனால் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய விழாக்களாகக் கூறப்படுகிறது. கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே நடத்தப்படும் எசலா ஊர்வலமானது, நாட்டில் மழைவேண்டி பின்பற்றப்படும் சடங்கு என்றும், தலதா ஊர்வலமானது `கித்சிறிமெவன்' மன்னர் காலத்தில், ஹேமமாலா இளவரசி மற்றும் தந்த இளவரசர் ஆகியோரால் புத்தரின் வலதுபல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டப் பிறகு நடத்தப்பட்ட விழாவாகவும் கூறப்படுகிறது.

திரினிடாட் மற்றும் டொபாகோ திருவிழா (Trinidad and Tobago Carnival):

திருவிழாமேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான திரினிடாட் மற்றும் டொபாகோ பகுதியில் நடக்கும் தெரு ஊர்வலம் வெகு விமர்சையானது. ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படும் திருநீற்றுப் புதனுக்கு முன்வரும் வாரங்களில் இந்தத் திருவிழா நடைபெறுகிறது. மிகுந்த இயற்கை வளம்கொண்ட இந்தத் தீவில் 1845-ம் ஆண்டு முதல் 1917-ம் ஆண்டு காலகட்டத்தில் பல இந்தியர்களும், போர்ச்சுக்கீசியர்களும், சீனர்களும் ஆப்பிரிக்கர்களும் குடிபெயர்ந்துள்ளனர். இவர்களின் வருகை, திரினிடாட் மற்றும் டொபாகோ  தீவு திருவிழாவில் பல தாக்கங்களை ஏற்படுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் பகுதிகளில் இசைக்கப்படும் பாரம்பர்ய இசையே திரினிடாட் மற்றும் டொபாகோ தீவின் பாரம்பர்ய இசையாக உள்ளது.

 

வெனிஸ் கார்னிவல் திருவிழா (Venice Carnival):

திருவிழாஇத்தாலியின் வெனிஸ் நகரில் ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி முதல் மார்ச் வரை வெனிஸில் கார்னிவல் திருவிழா நடத்தப்படுகிறது. 1168-ம் ஆண்டில் வெனிஸ் குடியரசின் வெற்றியைக் கொண்டாடியபோது இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது. பல வண்ண முகமூடிகளை அணிவது இந்த விழாவின் தனிச்சிறப்பு.

வெனிஸில், முதன்முறையாக முகமூடிகளைப் பயன்படுத்தப்பட்டது 13-வது நூற்றாண்டில்தான். இந்தத் திருவிழாவில் முகமூடிகளை அணிந்துகொள்வதற்குப் பின்னால் பல சுவாரஸ்யங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஐரோப்பா வரலாற்றில் கடுமையான வர்க்கக் கட்டமைப்புகளுக்கு எதிராகவே இந்த முகமூடிகள் அணியப்படுகின்றனவாம். இதுமட்டுமல்லாது, ஊர்வலத்தின்போது முகமூடி அணிந்தவர்கள் வீதி ஓரங்களில் நிற்கும் இளம்பெண்கள் மீது இளைஞர்கள் ரோஸ் நீராலான முட்டைகளைத் தூக்கி எறிவார்களாம். தன் மீது ரோஸ் நீரை அடித்தது யார் எனத் தெரியாமல் பெண்கள் குழம்பி நிற்பார்களாம். இவை அனைத்தும் ஒருசில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இதுபோன்ற சுவையான பல நிகழ்வுகள் அங்கு நடக்கும். முகமூடி அணிவது என்பது தன்னை மறைக்க அல்ல, ஏற்றத்தாழ்வுகளை மறைக்கவே.

கியூபெக் குளிர்காலத் திருவிழா (Carnaval de Quebec):திருவிழா

 
 

உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழாக்களில் ஒன்றே கியூபெக் குளிர்காலத் திருவிழா. வரலாற்றில் கியூபெக் குளிர்காலத் திருவிழாவுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. கிரேட் டிப்ரஷன் மற்றும் கடும்பனி போன்வற்றால் இருக்கமாக வாழ்ந்து வந்த மக்களுக்கு, கியூபெக் குளிர்காலத் திருவிழா மிகபெரிய அளவில் மனநிம்மதியை வழங்கியது. 1894-ம் ஆண்டுகளில் முறையாக நடத்தப்படாதது, பின்னாளில் இடைவிடாமல் நடத்தப்பட்டுவருகிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜ் பிறந்த நாள் கொண்டாட்டம்

 

கேம்பிரிட்ஜ் கோமகன் வில்லியம் மற்றும் சீமாட்டி கேத் தம்பதியரின் மகன், இளவரசர் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் இன்று ஜூலை 22 ஆம் நாள் தன்னுடைய 4வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

29 செப்டம்பர் 2016: கனடாவில் ராணுவ குடும்பதினரோடு நடைபெற்ற விருந்தின்போது, நீர் குமிழ்களோடு விளையாடும் இளவரசர் ஜார்ஜ்

29 செப்டம்பர் 2016: கனடாவில் ராணுவ குடும்பதினரோடு நடைபெற்ற விருந்தின்போது, நீர் குமிழ்களோடு விளையாடும் இளவரசர் ஜார்ஜ்

 

 

2013 ஜூலை 23 ஆம் தேதி அதாவது பிறந்த ஒரு நாளுக்கு பின்னர், லண்டனிலுள்ள புனித மேரி மருத்துவமனைக்கு வெளியே பொதுமக்களுக்கு தோன்றிய இளவரசர் ஜார்ஜ்

2013 ஜூலை 23 ஆம் தேதி அதாவது பிறந்த ஒரு நாளுக்கு பின்னர், லண்டனிலுள்ள புனித மேரி மருத்துவமனைக்கு வெளியே பொதுமக்களுக்கு தோன்றிய இளவரசர் ஜார்ஜ்

 

23 அக்டோபர் 2013: லண்டனிலுள்ள புனித ஜேம்ஸ் அரண்மனை சிற்றாலயத்தில் திருமுழுக்கு அளிக்க வந்துபோது, தந்தை வில்லியமால் தூக்கி கொண்டுவரப்படும் இளவரசர் ஜார்ஜ்

23 அக்டோபர் 2013: லண்டனிலுள்ள புனித ஜேம்ஸ் அரண்மனை சிற்றாலயத்தில் திருமுழுக்கு அளிக்க வந்துபோது, தந்தை வில்லியமால் தூக்கி கொண்டுவரப்படும் இளவரசர் ஜார்ஜ்

இளவரசர் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் 2013 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி பிறந்தார்

இளவரசர் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் 2013 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி பிறந்தார்

 

இங்கிலாந்து மகாராணி எலிசபெத்துடனும் பெற்றோருடனும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம்

இங்கிலாந்து மகாராணி எலிசபெத்துடனும் பெற்றோருடனும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம்

 

 

இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் 6 ஜூன் 2015: நோர்ஃபோல்கிலுள்ள அன்மார் அரங்கு குடும்ப வீட்டில் தங்கை சார்லெட்டை மடியில் வைத்திருந்த இளவரசர் ஜார்ஜை புகைப்படம் பிடித்தார் கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேத்.படத்தின்

6 ஜூன் 2015: நோர்ஃபோல்கிலுள்ள அன்மார் அரங்கு குடும்ப வீட்டில் தங்கை சார்லெட்டை மடியில் வைத்திருந்த இளவரசர் ஜார்ஜை புகைப்படம் பிடித்தார் கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேத்.

செப்டம்பர் மாதம் இளவரசர் ஜார்ஜ் தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடங்கவிருக்கிறார்.

செப்டம்பர் மாதம் இளவரசர் ஜார்ஜ் தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடங்கவிருக்கிறார்.

 

 

இளவரசர் ஜார்ஜ் நர்சரி வகுப்புக்கு சென்ற முதல் நாள் எடுக்கப்பட்ட புகைப்படம்

 

இளவரசர் ஜார்ஜ் நர்சரி வகுப்புக்கு சென்ற முதல் நாள் தாயால் எடுக்கப்பட்ட புகைப்படம்

 

வண்ணத்துப்பச்சியோடு விளையாட்டுபடத்தின் காப்புரிமைWPA POOL/GETTY IMAGES

http://www.bbc.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகிலேயே சிறந்த பாடல் எது... விடை சொல்லும் அறிவியல்!

 
 

சிறந்த பாடல்

காலையில் பொதுவாக சோம்பலை போக்கவும், உத்வேகம் அளிக்கவும், மோட்டிவேட் பண்ற மாதிரி பாடல்கள். மதிய விருந்துக்கு பிறகு, அலுவலகத்தில் தூக்கம் வராமல் இருக்க, ரஹ்மான் சாங்ஸ், நைட்டானா ராஜா சாங்ஸ் - இது தான் இன்றும் பலரின் அன்றாட பிளேலிஸ்ட்! சிலர் மொழி பேதம் இல்லாமல், அந்த சிறந்த பாடல் அரைகுறையாக புரிந்தாலும் கூட, இசையின் ஆற்றலால் இழுக்கப்பட்டு அதையே கேட்டுக் கொண்டு இருப்பார்கள். இந்த ‘Channa Mereya’ வை தேய்ந்த ரெக்கார்டாக கேட்டுத் தீர்த்தவர்கள் இங்கேயே ஏராளம்!

சரி, இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். உலகிலேயே சிறந்த பாடல் எது? பல கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் இசையில் இது தான் சிறந்தது என்று எப்படி திட்டவட்டமாக கூற முடியும்? ஏன், இங்கேயே ரஹ்மான் பாட்டு நல்லா இருக்கு என்று சொன்னால் சண்டைக்கு வரும் ராஜா விசிறிகள், ஹாரிஸ் பாட்டு நல்ல இருக்கே என்று சொன்னால், வரிந்துக் கட்டிக்கொண்டு வரும் யுவனின் யுவ யுவதி ஃபேன்கள் என ஏராளமான முரண்பாடுகள் உண்டு! அதையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த கேள்வியை அணுகினால் ஒரு பாடல் ஒருவருக்கு பிடித்துப்போகிறது என்றால், அந்த பாடலின் வசீகரத்தையும் தாண்டி, அதற்கு அவரின் அப்போதைய அகநிலையே காரணம் என்கிறது விஞ்ஞானம்.

இந்த விருப்பப் பாடல்கள் குறித்து நரம்பியல் மருத்துவர்களும், உளவியல் அறிஞர்களும் பல கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவற்றுள் சில…

எது சிறந்த பாடல்?

எது சிறந்த பாடல் என்று கண்டுபிடிப்பது வேண்டுமானால் கடினமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஒரு பாடல் சிறந்ததா என்பதை கண்டறிய நூறு வழிகள் உண்டு. பாட்டை ஒருவர் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே மூளையை ஸ்கேன் செய்து பார்த்து, அதில் டோபமைன் (Dopamine) சுரக்கிறதா என்று பார்க்கலாம். இந்த டோபமைன் எப்போது வரும் என்றால், உங்களின் ஒரு முடிவு உங்களுக்கே பிடித்துப் போக, உங்களை நீங்களே பாராட்ட நினைக்கும் போது வரும். அப்படியென்றால், உங்களின் பாடல் தேர்வும் இதில் அடங்கும் தானே? இதைத் தவிர கால்களை தரையில் தட்டுதல், தலையை இசைக்கு ஏற்ப ஆட்டுவது என ஒரு பாடலுக்கு நீங்கள் ஏகப்பட்ட கவனம் கொடுத்தாலே அது உங்களுக்கு பிடித்தமான பாடல் தான், சிறந்த பாடல் தான்!

சிறந்த பாடல்

எந்த ஜானர் பாடல்கள்?

பொதுவாக, ஒரு ஜானர் பாடல்கள் மட்டும் இயல்பாகவே உங்களுக்கு பிடித்துப் போவதற்கான காரணம், உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகள் தான் என்கின்றனர் அறிவியலாளர்கள். உதாரணமாக திருமணம் நிச்சயமானவர்களுக்கு, திருமணம் நிகழ்வது போல அல்லது திருமணம் பற்றிய பாடல்கள் டக்கென்று பிடித்து விடும். காதல் தோல்வியில் இருப்பவர்களுக்கு சோக கீதம் ஏதாவது ஒன்று தேசிய கீதம் ஆகிவிடுகிறது. இதுவும் 6 மாதங்களுக்கு ஒரு முறை மாறும் ஒன்று தான்!

அப்படி என்றால் ஒரு இசையைமைப்பாளரின் திறமையால் மட்டும் ஒரு பாடல் வெற்றி பெற்று விட முடியாதா?

நிச்சயம் முடியும். அப்படி எந்த தருணத்திலும், வாழ்வின் எந்த நிமிடத்திலும் நம்மை ஈர்க்கும் பாடல்களை தான் நாம் ‘கிளாசிக்’ என்று கவுரவப்படுத்துகிறோம். உதாரணமாக, ரஹ்மானின் ‘பூங்காற்றிலே உன் சுவாசத்தை...’, இளையராஜாவின் ‘தென்றல் வந்து தீண்டும் போது...’. இப்பாடல்களை எப்போது கேட்டாலும் ஒருவித அமைதி கிடைத்துவிடும்.

இதுவா சிறந்த பாடல்?

ஆங்கில எழுத்தாளரான டாம் காக்ஸ் (Tom Cox) ஒரு ட்வீட் ஒன்றை பதிவு செய்தார். “இது தான் சிறந்த பாடல் என்று ஒன்று இல்லை. அது மாறிக் கொண்டே இருப்பது. அன்றைய வானிலை தொடங்கி, உங்களின் மனோநிலை வரை பல உங்கள் விருப்பத்தை மாற்றி அமைக்கிறது” என்று தெரிவித்தார். அவ்வளவு தான், ட்விட்டர் பறவைகளுக்கு வந்ததே கோபம்! Toto - Africa என்ற பாடலை இது தான் சிறந்தது என்று ஒருவர் ட்வீட்ட, அதை ஆமோதித்து பல ட்வீட்களும், லைக்களும் பறந்தன.

ஆச்சர்யம் என்னவென்றால், பல அறிவியலாளர்கள் தொடங்கி ஏன் சிறந்த இசையமைப்பாளர்கள் வரை, அனைவருக்கும் இந்த ‘Africa’ பாடல் மிகவும் பிடித்தமான ஒன்றாம். Toto என்ற இசைக்குழு தயாரித்த இப்பாடல் மிகவும் பிரபலமான ஒன்று. இசைக்காகவே வாழ்ந்த, வாழ்த்து கொண்டிருக்கின்ற ஸ்டூடியோ இசைக்கலைஞர்களைக் கொண்டு பெரும் கவனத்துடன் ஒவ்வொரு நொடியையும் இழைத்திருப்பார்கள். அப்படி ஒரு சிரத்தையை, அசாத்திய உழைப்பை இப்பாடலை கேட்கும் போது நிச்சயம் உணர்வீர்கள்.

 

208,980,938 வியூஸ்களை YouTube-ல் அள்ளியிருக்கும் இப்பாடல், தலைமுறை கடந்து இன்றும் இளசுகளின் ஃபேவரெட்! “இது தான் சிறந்த பாடல் என்று அறிவியலாளர்கள் கூறுவதாக வந்த செய்தியை முகப்பில் படித்துவிட்டு, அது எந்த பாடலாக இருந்தாலும் திட்டலாம் என்ற எண்ணத்துடன் அந்த ஆராய்ச்சி குறித்து படிக்க இங்கே வந்தேன். ஆனால் அது Totoவின் ‘Africa’ பாடல் என்றவுடன் திட்ட மனது வரவில்லை” என்று மக்களே ஃபீல் பண்ணும் அளவிற்கு இதற்கு ஒரு மரியாதை உண்டு! நீங்களும் கேட்டுப் பாருங்கள், பிடித்துப் போகலாம். இது மாதிரி பாடல்கள் லவ் அட் ஃபர்ஸ்ட் ஹியரிங் தான்!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்
நம்பிக்கையானவர், இறைவனை விட யார்?
 

image_f29f927e73.jpgஉங்களிடம் உள்ள பிரச்சினைகளுடன் நிம்மதியாக உங்களால் உறங்க முடியாது. இந்த நெருடும் மன உழைச்சலுடன் விழி மலரப் பேசவும் முடியாது. எவருடனும் கோபமாகச் சிடுமூஞ்சித்தனமாக இருப்பது அழகுமல்ல. 

எதற்கும் உங்களின் தீர்க்க முடியாத கலவர எண்ணங்களில் இருந்து மீண்டு கொள்ள, கடவுளிடம் உங்களை ஒப்புக் கொடுத்து விடுக. 

 அதாவது, உங்கள் மனப்பாரத்தை அவரிடமே கொடுத்துவிட்டு, கண் உறங்கச் செல்லுங்கள். இந்த நம்பிக்கை பௌத்திரமானதும் பரிபூரண நம்பிக்கை கொண்டதாக அமைய வேண்டும்.  

உங்கள் பிரச்சினைகளை உள்ளிருத்தி, உங்களை நீங்களே ‘யுத்தபூமி’யாக்குவதை விட, நம்பிக்கையான ஒருவரிடம் கையளிப்பது மேலானது அல்லவா? 

அதே நம்பிக்கையானவர், இறைவனை விட யார் உள்ளார்? 

  • தொடங்கியவர்

உலகம் உங்கள் கண்களில் - கடந்த வாரம்

 

கடந்த வாரம் உலக அளவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கட்டுமான இடத்தின் பக்கத்தில் தன்னுடைய குழந்தையோடு நிற்கும் தினக்கூலி பெண்ணொருவர்

இந்தியத் தலைநகர் டெல்லியில் கட்டுமான இடத்தின் பக்கத்தில் தன்னுடைய குழந்தையோடு நிற்கும் தினக்கூலி பெண்ணொருவர்

 

செவ்வாய்க்கிழமை இரவு இங்கிலாந்து முழவதும் இடியடன் கூடிய கனமழையும், ஆலங்கட்டி மழையும் பெய்த பின்னர் ஸ்பினாக்கர் கோபுரத்திற்கு அருகில் மின்னல் கீற்றுக்கள்

இந்தியத் தலைநகர் டெல்லியில் கட்டுமான இடத்தின் பக்கத்தில் தன்னுடைய குழந்தையோடு நிற்கும் தினக்கூலி பெண்ணொருவர்

சீனாவின் ஹூனான் மாகாணத்தின் உள்ளூர் தொழிலாளர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச குழந்தைகள் பயிற்சியில் பலர் பங்கேற்றனர்

சீனாவின் ஹூனான் மாகாணத்தின் உள்ளூர் தொழிலாளர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச குழந்தைகள் பராமரிப்பு பயிற்சியில் பலர் பங்கேற்றனர்

 

 

பிரிட்டனின் ஹான்னா கோக்குரோஃப்ட் உலக மாற்றுத் திறனாளர் தடகள சாம்பியன் போட்டியில் 3வது தங்கப்பதக்கம் வென்றார்

பிரிட்டனின் ஹான்னா கோக்குரோஃப்ட் உலக மாற்றுத் திறனாளர் தடகள சாம்பியன் போட்டியில் 3வது தங்கப்பதக்கம் வென்றார். 24 வயதான ஹான்னா கோக்குரோஃப்ட் ஏற்கெனவே 100 மீட்டர், 800 மீட்டர் தங்கப்பதக்கங்களை வென்றிருந்த நிலையில் 400 மீட்டரிலும் வென்றுள்ளார்.

 

தான்சானியாவிலுள்ள உலக மரபு செல்வ பட்டியலில் இடம்பெற்றுள்ள இடமான நகொரோன்கோரோ விலங்குகள் பாதுகாப்பு பகுதியில் பெண் சிங்கம் சிறுத்தை குட்டிக்கு பாலூட்டும் இந்த புகைப்படம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

தான்சானியாவிலுள்ள உலக மரபு செல்வ பட்டியலில் இடம்பெற்றுள்ள இடமான நகொரோன்கோரோ விலங்குகள் பாதுகாப்பு பகுதியில் பெண் சிங்கம் சிறுத்தை குட்டிக்கு பாலூட்டும் இந்த புகைப்படம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. எதிரிகளாக கருதப்படும் சிங்கத்திற்கு சிறுத்தைக்கும், இனங்களுக்கிடையே பிணைப்பு இருப்பதை காட்டு முதல் சான்று இந்த புகைப்படம் என்று விலங்கு பாதுகாப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த அரச குடும்பத்தினர் போலந்திலும், ஜெர்மனியிலும் 5 நாட்கள் பயணம் மேற்கொண்டனர்

 

ஜெர்மனியின் `யெடெல்பர்க்கில் பயணம் மேற்கொண்டபோது, முடிச்சிவடி உப்புப் பிஸ்கட்டை இளவரசர் வில்லியமும், இளவரசி கேட்டும் தங்களுடைய கைகளால் செய்ய முயன்றர். வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த அரச குடும்பத்தினர் போலந்திலும், ஜெர்மனியிலும் 5 நாட்கள் பயணம் மேற்கொண்டனர்

கிழக்கு திமோரின் திலியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஃபிரிட்டிலின் கட்சியின் ஆதரவாளர்கள்

 

கிழக்கு திமோரின் திலியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஃபிரிட்டிலின் கட்சியின் ஆதரவாளர்கள்

வியாழக்கிழமை இரவு கிரேக்க தீவின் 12 கிலோமீட்டர் வட கிழக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்கடர் அளவில் 6.7 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

கோஸ் தீவிலுள்ள முக்கிய துறைமுகத்தில் காணப்படும் நில விரிசல்கள். துருக்கியின் கடலோரத்திற்கு அருகில் வியாழக்கிழமை இரவு கிரேக்க தீவின் 12 கிலோமீட்டர் வட கிழக்கில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. குறைந்தது 2 பேர் பலியாகினர். 115 பேர் காயமுற்றனர்.

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கிராஃபிக் நாவல்: மரணத்துடன் விளையாடும் இளைஞன்

21CHVANIGN06MoonMountainSampleImage5jpg

தனித்துவிடப்பட்ட ஓர் இளைஞன். கால் காயம் காரணமாக அவனால் நடக்க முடியவில்லை. இந்தச் சூழலில், கழுதைப்புலி கள் அவனைச் சூழ்ந்துகொள்கின்றன. ஆப்பிரிக்காவின் இரவுகளும் பகல்களும் வாழ்க்கையின் இருவேறு நிலைகளைப் போன்றவை. பகலிலோ வெப்பம் வாட்டியெடுக்கும்; இரவிலோ கடும் குளிர் முதுகெலும்பைச் சில்லிட வைக்கும். இந்தச் சூழலில்தான் அந்த இளைஞன் கழுதைப்புலி களிடம் சிக்கிக்கொள்கிறான்.

அவற்றை நெருங்கவிடாமலிருக்க, மரக்கட்டைகளைக் கொண்டு, நெருப்பைப் பற்றவைக்கிறான். அவனுக்கும் கழுதைப் புலிகளுக்கும் இடையே ‘நீயா, நானா?’ போட்டி உருவாகிறது. இதில், முதலில் விட்டுக்கொடுப்பவர்களுக்குக் கிடைக்கும் பரிசு, மனித உயிர். ஒரு நொடி அவன் கண்ணயர்ந்தாலும், தாக்குவதற்கு அவை காத்திருக்கின்றன.

உடலில் வலியுடனும் காய்ச்சலுடனும் இருக்கும் அந்த இளைஞன் தூங்காமல் இரவைக் கழிக்கிறான். பகலில் அவனது வீழ்ச்சியை எதிர்பார்த்து வல்லூறுகள் காத்திருக்கின்றன. அப்போது அந்த இளைஞன் ஒரு விமானத்தின் ஓசையைக் கேட்கிறான். ஆனால், அவனது உதவிக்குரல் அவர்களுக்குக் கேட்குமா?

மறுநாள் இரவு, இன்னொரு அழையா விருந்தாளியாக ஒரு ஓநாய் வருகிறது. கழுதைப்புலிகளைப் போலில்லாமல், மிகவும் தீர்க்கமாக அவனை நெருங்குகிறது. வேறு வழியில்லாமல், அந்த இளைஞன் அந்த ஓநாயைச் சுட்டு வீழ்த்துகிறான். இப்போது அவனது துப்பாக்கியில் இருப்பதோ, ஒரே ஒரு தோட்டாதான். காலையில் வழக்கம்போல, வல்லூறுகள் சூழ்ந்திருக்க, தூரத்தில் ஏதோ ஒரு ஓசை கேட்கிறது.

இப்போது அந்த இளைஞனுக்கு இருப்பது ஒரே ஒரு வாய்ப்புதான். தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை இயக்கி, இருக்கும் ஒரே ஒரு தோட்டாவைப் பயன்படுத்தி ஓசையெழுப்பி, உதவி கோருவது. ஆனால், இம்முறை(யும்) அவனுக்கு உதவி கிடைக்காவிட்டால், கழுதைப் புலிகளிடமிருந்தோ வல்லூறுகளிடமிருந்தோ தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எந்த ஆயுதமும் அவனிடம் இல்லாமல் போகும். அந்த இளைஞன் என்ன செய்தான்?

 

ஆப்பிரிக்கப் பயணம்

இந்தக் கதை 1909-ம் ஆண்டு தொடங்குகிறது. படிப்பு, விளையாட்டு ஆகியவற்றில் முதன்மையானவனாக விளங்கும் 20 வயது இளைஞனான ஷங்கருக்கு, பயணம் செய்வது, சாகசங்களை மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம். ஆனால், குடும்பச் சூழல் காரணமாக, அவன் ஒரு ஆலையில் கணக்கெழுதும் வேலையில் சேர்கிறான். ஆனால், ஒவ்வொரு நாளும் அவனுக்கு ஒரு குறிப்பிட்ட கனவு வருகிறது. அதில், ஒரு அந்நியனுடன் பெரும் மலையொன்றின் மீது பயணம் செய்வதாகவும் வனவிலங்குகள், யானைகளை எதிர்கொள்வதாகவும் காட்சிகள் தோன்றுகின்றன.

ஒருநாள், அவனது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு கடிதத்தைக் கொடுத்து, அதைப் படித்துக் காட்டச் சொல்கிறார். அது அவனுடைய மருமகனிடமிருந்து வந்த கடிதம். அவர் ஆப்பிரிக்காவிலிருந்து எழுதியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த ஷங்கர், அவருக்குத் தனியே ஒரு கடிதம் எழுதுகிறான். இரண்டு மாதம் கழித்து, அவனுக்குப் பதிலும் கிடைக்கிறது. ஆப்பிரிக்காவில் அவர் வேலை செய்யும் ரயில்பாதை அமைக்கும் நிறுவனத்திலேயே வேலைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்ல, உடனடியாக ஆப்பிரிக்காவுக்குப் புறப்படுகிறான் ஷங்கர்.

 

உயிருக்குப் போராட்டம்

கிழக்கு ஆப்பிரிக்காவின் காட்டுப்பகுதியில் ரயில்பாதை அமைக்கும் பணியில் ஷங்கர் வேலைக்குச் சேர்கிறான். அங்கே, திருமால் என்ற தமிழருடன் நட்பு ஏற்படுகிறது. ஆப்பிரிக்காவின் இயற்கை அழகையும் வன விலங்குகளையும் ரசித்தவாறே பணியில் ஈடுபடுகிறான். ஒரு நாள், காணாமல் போன திருமாலை சிங்கம் அடித்திருப்பது தெரியவருகிறது. சிங்கத்தைத் தேடிச் செல்லும் ஷங்கரும் தாக்கப்பட்டு, குதிரையைப் பலிகொடுத்து, மயிரிழையில் உயிர் பிழைக்கிறான்.

21CHVANIGN06MoonMountainSampleImage2jpg

பின்னர், அங்கிருந்து இடமாற்றம் கேட்க, 30 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஒரு ரயில் நிலையத்துக்கு ஸ்டேஷன் மாஸ்டராக அவனை அனுப்பி வைக்கிறார்கள். ஓர் இரவில், அவனது அறைக்கு வெளியே சிங்கம் உறுமிக்கொண்டிருக்க, உள்ளே ஆப்பிரிக்க விஷப் பாம்பு அவனது படுக்கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இப்படித் தனி ஆளாக அந்த ஸ்டேஷனில் ஷங்கரின் நாட்கள் கழிகின்றன.

 

சாகசத்தின் தொடக்கம்

ஒரு நாள், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு போர்த்துக்கீசியரைக் காப்பாற்றுகிறான் ஷங்கர். அவர் வேட்டைக்காரர் ஆல்வேரஸ். அவருக்கு உணவளித்து, உடல்நலம் தேற உதவுகிறான். ஆல்வேரஸ் 1888-ல் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறார்.

ஆல்வேரஸின் இளம் வயதில் ஆப்பிரிக்கக் காட்டில் வேட்டையாடும்போது, ஜிம் கார்ட்டர் என்ற ஆங்கிலேயரைச் சந்திக்கிறார். இருவரும் இணைந்து ஆல்வேரஸ் தற்செயலாகக் கண்டறிந்த வெள்ளிப் படுக்கையைத் தேடும்போது, ஆப்பிரிக்க பழங்குடியினரை எதிர்கொள்கின்றனர். அவர்களுடைய தலைவரின் மகள் உடல்நலம் இல்லாமல் இருக்க, இவர்கள் கொடுத்த மருந்து அவள் உயிரைக் காப்பாற்றுகிறது. நன்றிக்கடனாக, தலைவன் இவர்களுக்கு ஒரு வைரத்தை அளிக்கிறான். இதுபோன்ற வைரங்கள், அடர்ந்த காட்டின் மத்தியிலிருக்கும் மலையில் இருப்பதாகவும், அந்த வைரங்களை புன்யப் பாதுகாப்பதாகவும் எச்சரிக்கிறார்.

 

புன்யப்

புன்யப் என்பது என்ன என்றே தெரியாமல், ஆல்வேரஸும் கார்ட்டரும் அந்த மலையை நோக்கிச் செல்கிறார்கள். கடுமையான பயணம், திகிலூட்டும் இருள் சூழ்ந்த காட்டுப் பகுதி, விசித்திரமான விலங்குகள் என்று அவர்களது பயணம் கார்ட்டரின் மரணத்துடன் ஒரு நாள் முடிவுக்கு வருகிறது. பெரிய அளவில், மூன்று அகலமான பாதப் பிளவுகளைக் கொண்டதொரு விலங்கின் சுவடுகள் மட்டும் தெரிய, பயங்கரமாகத் தாக்குண்டு இறந்துகிடக்கிறார், கார்ட்டர்.

இதனால் தனித்து விடப்பட்ட ஆல்வேரஸ், பழங்குடியினரின் ஆலோசனைப்படி தனது தேடலைக் கைவிடுகிறார். பின்னர், இலக்கில்லாமல் அலைந்து திரிந்தவரைத்தான் ஷங்கர் காப்பாற்றி இருக்கிறான்.

ஒரு சாகசத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த ஷங்கருக்கு, இந்த வாய்ப்பு கிளர்ச்சியூட்டுகிறது. லீவு எடுத்துக்கொண்டு, ஆல்வேரஸுடன் அந்த மலையை நோக்கிப் புறப்படுகிறான். வானத்தைத் தொட்டுவிடும் அளவுக்கு உயரம் கொண்ட அந்த மலையைத் தேடி இருவரும் பயணம் செய்கிறார்கள்.

ஒவ்வொரு நாள் பயணமும் முந்தைய நாளைவிட மோசமாக அமைகிறது. ஒருவழியாக அந்த மலையைக் கண்டுபிடித்த உடன், இன்னொரு பிரச்சினை தலைதூக்குகிறது. அது புன்யப்.

 

கதாசிரியரின் வெற்றி

இப்படி விறுவிறுப்பாக செல்கிறது ‘மூன் மவுன்டன்’ என்ற இந்த கிராஃபிக் நாவல். 154 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் வெளிச்சம் நிறைந்த பக்கங்களை எண்ணிவிடலாம். ஆரம்பத்தில், சயான் முகர்ஜியின் ஓவியங்கள் ஈர்க்க மறுத்தாலும், கதையின் வேகமும் சாகசங்களும் நம்மைக் கவர்ந்து விடுகின்றன.

கதையில் வரும் புன்யப் என்ற அந்த விலங்கை, மனிதனின் ஆசையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கதை வேறொரு தளத்துக்குச் செல்கிறது. அந்த விலங்கை நமது தேடலோடு-ஆசைகளோடு உருவகப்படுத்தினால், கதையின் போக்கே முற்றிலும் மாறிவிடுகிறது. புன்யப் என்பதுதான் என்ன? இந்த கிராஃபிக் நாவலில் புன்யப்பைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்து, முழுமையாகச் சொல்லாமல் விட்டதில்தான் கதாசிரியர் விபூதிபூஷண் பாந்தோபாத்யாய ஜெயிக்கிறார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

நாளை வெளியாகிறது இளவரசி டயானா குறித்த ஆவணப்படம்!

மறைந்த பிரிட்டன் இளவரசி டயானா குறித்த ஆவணப்படம் நாளை இங்கிலாந்தில் வெளியாக உள்ளது.

டயானா

உலகின் முக்கியப் பிரபலமாக உருவான கொஞ்ச காலத்திலேயே இவ்வுலகைவிட்டு மறைந்தவர் இளவரசி டயானா. வேல்ஸ் இளவரசர் சார்லஸின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி.  இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து, டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய நாடுகள் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் முதல் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார். அதுவரை இங்கிலாந்து மக்கள் பார்த்து வந்த அரச குடும்பத்து மனிதர்கள் வேறு. இறுக்கமான முகம். 'நீ சாமான்யன், நாங்கள் ராஜவம்சத்தினர்..!' என்கிற தோரணை. நிலப்பிரபுத்துவ மனோபாவம். தங்க வட்டத்துக்குள் ராஜ வாழ்க்கை. அந்தக் குடும்பத்துக்கு உள்ளே நுழையும்போதே, நான் வேறு ஜாதி என்று நிரூபித்துவிட்டவர் டயானா. பத்தொன்பது வயதில் சார்லஸைக் கைப்பிடித்து பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைந்தார். வெகு சீக்கிரம், அடித்தட்டு மக்களின் இதயத்தில் இடம்பிடித்துவிட்டார்.

இத்தகையப் பெருமைகளைக் கொண்ட இளவரசி டயானா குறித்த ஆவணப்படம், அவரது நினைவு தினம் அடுத்த மாதம் வருவதையொட்டி நாளை வெளியிடப்பட உள்ளது. இப்படத்தல் நிக் கென்ட் என்பவர் தயாரித்து வழங்கியுள்ளார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகிலேயே முதன்முதலாக தனக்குத் தானே ஆபரேஷன் செய்து கொண்ட ரஷிய டாக்டர்

உலக மருத்துவ வரலாற்றில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனக்குத் தானே ஆபரேஷன் செய்து கொண்ட ரஷிய டாக்டரை பற்றி தெரிந்து கொள்வோமா?

 
 
 
 
உலகிலேயே முதன்முதலாக தனக்குத் தானே ஆபரேஷன் செய்து கொண்ட ரஷிய டாக்டர்
 
மாஸ்கோ:

பனிப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷிய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர், லியோனிட் ரோகோசோவ்.

201707221330206700_1_Doctor-2._L_styvpf.

29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல் என ஒன்றுபட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு பிறகு கடுமையான வயிற்று வலியும் சேர்ந்துக்கொள்ள மனிதர் துடிதுடித்துப் போனார்.

தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை.

ரஷியாவின் தலைமை ஆய்வு நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால் அங்கிருந்து ஆயிரத்து 600 கிலோ மீட்டர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். ஆனால், கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய பருவநிலையோ.. விமான பயணத்துக்கு இடம் தரவில்லை.

அன்று மாலை வயிற்று வலி மேலும் கடுமையானது. 'அப்பென்டிஸைட்டிசிஸ்' எனப்படும் குடல் வால் நோய்தான், தனது தீராத வயிற்று வலிக்கு காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.

மறுநாள் இரவு வரை வயிற்று வலி குறையாமல் போகவே, 30-4-1961 அன்றிரவு 10 மணியளவில் ஒரு ஓட்டுனர் மற்றும் ஒரு வானிலை ஆய்வாளர் ஆகியோர் கத்தி, மருந்து ஆகியவற்றை எடுத்து தர, தனது வயிற்றுப் பகுதியை 10 சென்டி மீட்டர் அளவிற்கு திறந்து 4 சதுர சென்டி மீட்டர் அளவுள்ள குடல் வாலை வெற்றிகரமாக வெட்டி வெளியே எடுத்தார்.

201707221330206700_2_doctor._L_styvpf.jp

சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த ஆபரேஷனுக்கு பின்னர் திறந்த பகுதியை தையலிட்டு மூடிய ரோகோசோவ், 2 வாரத்திற்குள் உடல்நலம் தேறி எப்போதும் போல் வேலைகளை கவனிக்க தொடங்கினார்.

1962ம் ஆண்டு லெனின்கிராட் நகருக்கு திரும்பிய அவர், 1966ம் ஆண்டு புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி செய்து பி.எச்.டி. பட்டம் பெற்றார். பின்னர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி 1986 முதல் 2000ம் ஆண்டு வரை செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில் உள்ள ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார்.

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 21-9-2000 அன்று தனது 66வது வயதில் லியோனிட் ரோகோசோவ் மரணமடைந்தார்.

உலக மருத்துவ வரலாற்றில் தனக்குத் தானே ஒருவர் ஆபரேஷன் செய்து கொண்டது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூலை 23
 


1983: திருநெல்வேலியில் புலிகளின் தாக்குதலில் இலங்கை இராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர்.

 
july23.jpg1881: சர்வதேச ஜிம்னாஸ்டிக் சம்மேளனம் ஸ்தாபிக்கப்பட்டது.
 
1914: ஆஸ்திரிய இளவரசர் பேர்டினாட்டை படுகொலை செய்தவர் யார் என்பதை விசாரிக்க அனுமதிப்பதற்கு சேர்பியாவுக்கு ஆஸ்திரிய -ஹங்கேரிய ராஜ்ஜியம் காலக்கெடு விதித்தது.
 
1983: யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இலங்கை இராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பாரிய இன வன்செயல்கள் ஆரம்பித்தன. 
 
1984: மிஸ் அமெரிக்கா அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்ட வனேஸா வில்லியம்ஸ் நிர்வாணமாக புகைப்படத்திற்கு போஸ்கொடுத்ததால் அழகுராணி பட்டத்தை துறந்தார்.
 
1986: லண்டனில் இளவரசர் அன்ட்ரூ - சாரா பேர்குஸன் திருமணம் நடைபெற்றது.
 
2005: எகிப்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 88 பேர் பலியாகினர்.
2006 – ஹரியானாவில் குருஷேத்திரத்தில் 60 அடி ஆழ் துளைக்குழியில் வீழ்ந்த சிறுவன் 50 மணி நேரத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூலை 24
 
 

article_1469335420-Air300.jpg1505: போர்த்துக்கீச நடுகாண் பயணிகள் இந்தியாவுக்கு செல்லும் வழியில் கிழக்கு ஆபிரிக்காவில் கில்வா என்ற இடத்தைத் தாக்கி அதன் மன்னனை திறை செலுத்தாத காரணத்துக்காகக் கொன்றனர்.

1567: இசுக்காட்லாந்தின் முதலாம் மேரி பதவியில் இருந்து அகற்றப்பட்டாள். அவளது 1 வயது மகன் ஜேம்ஸ் மன்னனாக்கப்பட்டான்.

1911: பெருவில் மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க நாடுகாண் பயணி ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார். இது பழைய இன்கா பேரரசின் தொலைந்த நகரம் எனக் கருதப்பட்டது.

1915: சிகாகோ நதியில் கப்பலொன்று கவிழ்ந்ததால் 844 பேர் பலியாகினர்.

1923 - கிரேக்கம், பல்கேரியா மற்றும் முதலாம் உலகப் போரில் பங்குபற்றிய நாடுகள் சுவிட்சர்லாந்தில் கூடி, புதிய துருக்கியின் எல்லைகளை நிர்ணயிக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டனர்.

1924 - பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FஈDஏ) பாரிசில் அமைக்கப்பட்டது.

1931: பென்சில்வேனியாவில் முதியோர் இல்லம் ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 48பேர் கொல்லப்பட்டனர்.

1943: இரண்டாம் உலகப் போர் - பிரித்தானிய, கனேடிய விமானங்கள் ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகரில் குண்டுவீச்சுத் தாக்குதலை ஆரம்பித்தன. நவம்பர் மாத இறுதி வரை இடம்பெற்ற இத்தாக்குதல்களில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.

1969: சந்திரனில் தரையிறங்கிய நீல் ஆம்ஸ்ட்ரோங் தலைமையிலான விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பினர்.

1969: அப்பல்லோ 11 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.

1974: சைப்பிரசில் துருக்கியரின் படையெடுப்பின் பின்னர் சைப்பிரசின் இராணுவ அரசு கவிழ்க்கப்பட்டு, நாட்டில் மக்களாட்சி மீளமைக்கப்பட்டது.

1977: லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற 4 நாள் போர் முடிவுக்கு வந்தது.

1982: ஜப்பானில் மண்சரிவினால் பாலமொன்று உடைந்ததால் 299 பேர் பலி.

1991: இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.

2001: பண்டாரநாயக்க விமான நிலையத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி பல வான்கலங்களை அழித்தனர்.

2005: டுவர் டி பிரான்ஸ் சைக்கிளோட்டப் போட்டியில் லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங் தொடர்ச்சியாக 7 ஆவது தடவையாக வென்றார்.

2007: லிபியாவில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி கிருமிகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பல்கேரியத் தாதிகளையும் பாலஸ்தீன மருத்துவர் ஒருவரையும் லிபிய அரசு விடுதலை செய்தது.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

விவசாயம் முதல் வெண்டிங் மிஷின் வரை... தானே உருவாக்கி விற்கும் ஜப்பான் விவசாயி!

 

வெண்டிங் மெஷின்களுக்குப் (Vending Machine) புகழ்பெற்ற நாடு ஜப்பான். இங்கு வெண்டிங் மெஷின்களில் கிடைக்காத பொருள்களே கிடையாது. பத்திரிகைகள் தொடங்கி, முட்டை, காய்கறி, சோயா, நூடுல்ஸ் என எல்லாவற்றுக்குமே வெண்டிங் மெஷின்கள் இருக்கின்றன. இப்படி ஒரு வெண்டிங் மெஷினை வைத்து, தனக்கான பொருளாதார சந்தையை உருவாக்கி , அழகான தற்சார்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ஜப்பானின் 74 வயது விவசாயி ஒருவர். 

ஜப்பானின் ஷிகோகு தீவிலிருக்கிறது அவா ஷி எனும் ஊர். இங்கு தடாஷி யோஷிமோடோ எனும் விவசாயி பல ஆண்டுகளாக நெல் சாகுபடி செய்து வருகிறார். ஒவ்வொரு முறையும் நூடுல்ஸிற்காகவும், முட்டைகளுக்காகவும் மக்கள் வரிசையில் நின்று வெண்டிங் மெஷினை உபயோகிப்பதைப் பார்த்து வந்தார். ஜப்பான் முழுக்க எங்குப் பயணித்தாலும், இந்தக் காட்சிகள் அவர் கண்களில் பட்டுக் கொண்டேயிருந்தது. ஆனால், எங்குமே அரிசி சாப்பாட்டுக்கு என ஒரு வெண்டிங் மெஷின் இருந்ததை அவர் பார்த்ததில்லை. நாம்தான் நெல் சாகுபடி செய்கிறோமே, நாம் ஏன் அரிசி சாப்பாட்டுக்கு என தனி வெண்டிங்மெஷினை வைக்கக் கூடாது என்ற யோசனை அவருக்கு வந்தது. இதெல்லாம் நடந்தது  40 ஆண்டுகளுக்கு முன்பு. அன்று ஒரு வெண்டிங் மெஷினை வாங்கி வைத்தார். 

ஜப்பான் - வெண்டிங் மெஷின் - Japan Vending Machine

காலை எழுந்ததும் வயலுக்குச் சென்றுவிடுவார். அன்றைய அறுவடை வேலைகளை மேற்பார்வையிட்டு விட்டு, வீட்டுக்குத் திரும்பி சமைக்கத் தொடங்கிவிடுவார். முதலில் அரை மணி நேரம் அரிசியைக் கழுவி ஊற வைத்துவிடுவார். பின்னர், 45 நிமிடம் வரை அரிசியை வேக வைப்பார். " ஹினுஹிகாரி " ( HinuHikari ) எனும் அரிசி வகையை இவர் தயாரிக்கிறார். அரிசி சோற்றை தயார் செய்தவுடன், காய்கறிகளைக் கொண்ட குழம்பையும் சமைக்கிறார். இரண்டையும் தனித்தனியாக ஒரு பெட்டியில் அடைத்து, ஸ்பூனோடு சேர்த்து அதைப் பேக் செய்து, தன்னுடைய வெள்ளை நிற மினி ட்ரக்கில் ஏற்றுகிறார். 

சில நிமிட பயணத்துக்குப் பின்னர், வெண்டிங் மெஷின் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்கிறார். அந்த சிகப்பு நிற மெஷினைத் திறந்து சாப்பாட்டுப் பொட்டலங்களை அடுக்குகிறார். மீண்டும் வீட்டுக்குத் திரும்புகிறார். பின்பு, மீண்டும் மாலையில் இதே வேலை. ஒரு சாப்பாட்டுக்கு 300 ஜப்பான் யென் (Yen) . இந்திய ரூபாய் மதிப்புக்கு 173 ரூபாய். அந்தச் சாலையில் வண்டியில் போகும் பலருக்கும் இந்த உணவு பெரிய ஆசுவாசமாக இருக்கிறது. ஜப்பானில் அதிக மக்கள் விரும்பும் உணவாக இருப்பது  அரிசிச் சோறும், குழம்பும்தான் என்று சொல்லப்படுகிறது. சாலையில் போகும் டிரைவர்கள் மட்டுமின்றி, ஊருக்குள் இருக்கும் வீடுகளிலிருந்தும் கூட பெண்கள் வந்து இந்த சாப்பாட்டை வாங்கிப் போகிறார்கள். 

வெண்டிங் மெஷின்,   கிட்டத்தட்ட 70 டிகிரி செல்ஷியசில் சாப்பாட்டை சூடாக வைத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ புது புது மெஷின்கள் வந்திருந்தாலும் கூட, தன்னுடைய பழைய மெஷினை இன்று வரை உபயோகப்படுத்துகிறார் தடாஷி. அதில் ஏதாவது பிரச்னை என்றால் அவரே சரி செய்கிறார். 

ஜப்பான் - வெண்டிங் மெஷின் - Japan Vending Machine

"என் உடலும், என்னோட வெண்டிங் மெஷினும் நலமாக இருக்கும் வரை நான் என்னுடைய இந்த வேலையைத் தொடர்ந்து கொண்டேதானிருப்பேன் " என்று சொல்லி சிரிக்கிறார் தடாஷி. 

 

ஒரு ஏக்கர் நிலம், விவசாயம், அழகான வீடு, ஒரு சின்ன ட்ரக், தானே உணவைத் தயாரித்து, தானே விற்பனை செய்யும் முழுமை என இந்த பூமியின் பெரும்பாலான மனிதர்கள் வாழ முயற்சிக்கும் ஒரு வாழ்வை மிகச் சாதாரணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் தடாஷி.  உற்பத்தி செய்பவர்களுக்கு ஒருபோதும் அதற்கான லாபமும், அங்கீகாரமும் கிடைப்பதில்லை. கொள்ளை லாபத்தை இடைத்தரகர்கள்தான் அனுபவிக்கிறார்கள். தற்சார்பு வாழ்க்கையும், தன் பொருளுக்கான சந்தையை தானே முன்நின்று செய்வதுமாக தடாஷி மேற்கொள்ளும் வாழ்க்கை முறை ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சென்னையில் பாம்புகளின் ஒரு மணி நேரக் காதல்

மனிதனுக்கும் பாம்புக்குமான இடைவெளி எப்போதுமே மிகவும் அதிகம். ஊர்வனவற்றுள் பாம்புக்கு மட்டுமே மனிதன் அதிகம் பயந்தான். ஊர் ஊராக பாம்புகளுக்குக் கோயில் எழுப்பியதற்கும் அதுதான் காரணம் எனச் சொல்வோரும் உண்டு. ஆனால், பாம்பை ஒப்பிட்டு மனிதனுக்குச் சொல்லும் ஒரே விஷயம் 'அது' மட்டும்தான். அதைப் பார்த்து மனிதன் பொறாமைப்படும் விஷயமும் 'அது' மட்டும்தான். கவிஞர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் தோதாய் சிக்கும் உவமையும்  அதுதான். 

 

 

எப்போதும், 'அந்த விஷயத்துக்கு' முதலில் அழைப்பது பெண் நாகம்தானாம். பெண் நாகம் அதற்கு ரெடியானதும் பெரோமோன்ஸ் என்னும் நறுமணத்தை அதன் தோளில் வெளியிட ஆரம்பிக்கும். எல்லாவற்றுக்கும் தயார் நிலையில் இருக்கும் ஆண் நாகம், இந்த வாடையை நோக்கி, தன் உடலை முன்னிழுத்துச் செல்லும். பிறகு நடப்பதென்னவோ,  பல மணி நேர கலவியல்தான். 

ஒரு மணி நேரம் முதல், ஒரு நாள் வரை சமயங்களில் இது நடக்குமாம். பெண் நாகம், ஓர் ஆண்டுக்கு இருமுறை கருக்கொள்ளும். சில பாம்புகள் குட்டிகளையும், சில பாம்புகள் முட்டையும் இடும். இரண்டுமே, நூற்றுக்கணக்கில் என்பதுதான் இங்கிருக்கும் செய்தி. சென்னை அடையாற்றில் இருக்கும் தியோசோபிக்கல் சொசைட்டியில், நேற்று இரு பாம்புகள் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் கலவி கொண்டதாம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சச்சினிடம் ஆட்டோகிராப் கேட்க தயங்கிய பிரெட் லீ!

நத்தம் என்.பி.ஆர் கல்லூரியில் இன்று நடக்க உள்ள  TNPL கிரிக்கெட் தொடரில், மதுரை சூப்பர் ஜெயன்ட், டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் வர்ணனையாளராக செயல்படவுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

பிரெட் லீ

பிரெட் லீ பேசியது:

‘‘வணக்கம். நான் சச்சின் டெண்டுல்கரைப் பார்த்து வளர்ந்தவன். சர்வதேசப் போட்டியில் நான் அவருக்குப் பந்துவீசுவேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் நான் அவருக்கு முதல் பந்து வீசி முடித்ததும், அவரிடம் ஆட்டோகிராப் கேட்கலாமா என தயக்கத்தில் இருந்தேன்’’ என பிரெட் லீ மலரும் நினைவுகளில் மூழ்கினார்.

எம்.எஸ்.தோனிக்கு எதிராக விளையாடியது குறித்து மாணவர் எழுப்பிய கேள்விக்கு ‛‛தோனி பணிவானவர். அவர் அருமையான மனிதர்’’ என பிரெட்லீ சொன்னதும் அரங்கம் அதிர்ந்தது. அதேபோல, கிரிக்கெட் வீரராகவில்லை எனில் என்னவாகி இருப்பீர்கள் எனக் கேட்டதற்கு, ‘பாலிவுட் நடிகராகி இருப்பேன்’ என ப்ரெட் லீயிடம் இருந்து பளிச்சென பதில் வந்தது. அப்ளாஸ் அள்ளியது.

திண்டுக்கல் மைதானம் குறித்த கேள்விக்கு அவர் ‘‘கடந்த டி.என்.பி.எல் தொடரில் இந்தக் கல்லூரியில் நடந்த போட்டிகளில் வர்ணனையாளராகப் பணியாற்றினேன். விளையாடுவதற்கும் சரி, வர்ணனை செய்வதற்கும் சரி இது ஏற்ற இடம். இது அருமையான கிரவுண்ட். இந்தக் கல்லூரியின் விருந்தோம்பல் பிடித்திருக்கிறது. இங்கு நடக்கும் இரண்டாவது டி.என்.பி.எல் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’’ என்றார். 

 

கடைசியாக, தமிழ்நாடு உடனான அவரது தொடர்பு குறித்து கேட்டபோது, ‘‘தமிழ்நாடு ரொம்பப் பிடிக்கும். அழகான, அருமையான கலாசாரம் நிறைந்த இடம் இது. எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் இந்தி  தெரியும். எனக்குத் தமிழ் கற்க ஆசை. ஆனால், தமிழ் கற்பது அவ்வளவு எளிதல்ல’’ என்றார் வேகப்புயல்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ஜெனிஃபர் லோபஸ் - இசை உலகின் பிக் பாஸ்..! #HappyBirthdayJLO

 

'எவ்வளவுக்கு எவ்வளவு பேரும் புகழும் இருக்கின்றதோ அவ்வளவு சர்ச்சைகளும் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் உடைத்தெறிந்து சமூகத்தில் நம் திறமையை வெளிப்படுத்துபவரால்தான் வெற்றியைத் தொட முடியும்' என்பதற்கு ஜெனிஃபர் லோபஸ் ஒரு மிகப் பெரிய உதாரணம். போர்ப்ஸ் பத்திரிகை வெளியீட்டின் படி ஹாலிவுட்டின் லத்தீன்-அமெரிக்க தலைமுறையினரில் லோபஸ் அதிக செல்வாக்கு பெற்றவர். மேலும், 'People en Espanol' என்ற பிரெஞ்சுப் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த மனிதர்களுள் ஒருவராக லோபஸ் இடம்பிடித்துள்ளார். 'ஜெ.லோ' என செல்லப் பெயரால் பெரும்பாலும் அழைக்கப்படும் இவர் ஒரு அமெரிக்க நடிகை, பாடகி, இசைப்பதிவு தயாரிப்பாளர், நடன கலைஞர், ஆடை வடிவமைப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். 

ஜெனிஃபர் லோபஸ்

டேவிட் லோபஸ் - கவுட்லுக் ரோடிரிகியூஸ் தம்பதியினருக்கு 1969-ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தார். தனது 19 வயதிலிருந்தே பாடுவதிலும் ஆடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராகவும் அவர், அவற்றை முழுமையாகக் கற்றுக்கொள்வதிலும் அதிக நேரத்தை செலவிட்டார். கல்லூரி வாழக்கையில் அடியெடுத்து வைத்தவுடன் நடன வகுப்புகளுக்குச் செல்வதோடு, பார்ட் டைமாக சில வேலைகளும் பார்த்தார். அப்படியான பார்ட் டைம் வேலைகளில் ஒன்றுதான் இரவு கிளப்களில் நடனம் ஆடுவது. மேன்ஹட்டன் நகரத்தில் உள்ள ஒரு சிறு கிளப்பில் லோபஸ் தனது முதல் நடன நிகழ்ச்சியை அரங்கேற்றினார். 1987-ஆம் ஆண்டு வெளிவந்த 'மை லிட்டில் கேர்ள்' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு பல்வேறு இசை ஆல்பங்களில் இவரது பங்கேற்புகள் அதிகமாகி வர இவருக்கான தனி ரசிகர்கள் கூட்டமும் பெருகியது. 1990-ஆம் ஆண்டு 'In Living Colour" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடனக் கலைஞராக பங்கேற்றார். இதன் மூலம் இவருக்கு 'That's the way love goes' என்ற இசை ஆல்பத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மற்றும் 1995-ஆம் ஆண்டில் 'மை பேமிலி' என்ற திரைப்படத்தில் மரியா கதாபாத்திரத்தில் தோன்றினார். 1997-ஆம் ஆண்டு இவர் நடித்த 'செலினா' திரைப்படத்தின் மூலம் மக்களிடையே அதிக செல்வாக்கையும் புகழையும் பெற்றார். மேலும் இவர் 1998-ஆம் ஆண்டு எல்மோர் லியோனார்டின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'ரவுண்ட் ஆஃப் சைட்' திரைப்படத்தில் நடித்தது பரவலாகப் பேசப்பட்டது. இதன் பின்னர்தான் அவர் ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தார். 2002 முதல் 2004 வரை ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக  இருந்து வந்தார். 

ஜெனிஃபர் லோபஸ்

இப்படி புகழின் உச்சம் ஒருபுறம் இருக்க லோபஸுக்கு 1997-ஆம் ஆண்டு நடிகரும், தயாரிப்பாளருமான 'ஒஜானி நோவா'வுடன் முதல் திருமணம் நடந்தது. மியாமி உணவு விடுதியில் பார்ட் டைம் பணியாளராக இருந்தபோது லோபஸ், நோவாவை சந்தித்தார். இவர்களின் 'கண்டவுடன் காதல்' திருமணத்தில் முடிந்தது. அடுத்த வருடம் 1998-லேயே இருவருக்கும் விவாகரத்தும் ஆனது. பின் 2001-ஆம் ஆண்டு அமெரிக்க நடிகர் க்ரிஸ் ஜூட் என்பவருடன் திருமணம் நடந்து. பின் 2003 ஆம் ஆண்டு லோபஸின் இரண்டாவது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இறுதியில் லோபஸின் இசைத் தொகுப்பை வெளியிடுவதற்கு உதவியாக இருந்த பிரபல பாடகர் மற்றும் நடிகருமான மார்க் ஆண்டனியை 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆண்டனிக்கு இது இரண்டாவது திருமணம், லோபஸுக்கு இது முன்றாவது திருமணம். திருமணத்தின் போது  ஆண்டனிக்கு நான்கு குழந்தைகள் இருந்தன. மேலும், லோபஸுக்கு இரட்டை குழந்தைகளும் பிறந்தன. எனவே ஆறு குழந்தைகளும் லோபஸிடம்தான் வளர்ந்தன. அந்த நேரத்தில், 'தான் ஏஞ்சலினா ஜோலியைப் போல் உணருகிறேன்' என்று ஒரு நிகழ்ச்சியில் கூறினார் லோபஸ். காரணம் ஏஞ்சலினாவுக்கும்-பிராட் பிட்டுக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன. தவிர அவர்கள் இன்னும் மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். ஆகமொத்தம் இவர்கள் இருவரும் ஆறு குழந்தைகளை வளர்த்து வருவதனால், லோபஸ், ஏஞ்சலினாவைப் போல் உணர்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.  

ஜெனிஃபர் லோபஸ்

அண்மையில் ஸ்பெயினில் நடைபெற்ற 'லடினோ டிஸ்கோ' இசை நிகழ்ச்சியில் தோல் நிற ஆடை அணிந்து அனைவரையும் கவர்ந்தார் லோபஸ்.  

ஜெனிஃபர் லோபஸ்

கவர்ச்சி, நடனம், நடிப்பு என்பதோடு நிறுத்தி விடாமல், சமூகப் பங்களிப்பிலும் தனது ஆர்வத்தை செலுத்தி வரும் லோபஸ், கக்குவான் இருமலுக்கான தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறார். அமெரிக்காவில் நடைபெற்ற ‘செப்டம்பர் 11 இரட்டை கோபுர’ தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக  தனது பெரும் செல்வத்தை உதவித்தொகையாக வழங்கினார். 2009ஆம் ஆண்டு தனது தங்கை லிண்டாவுடன் சேர்ந்து 'லோபஸ் பேமிலி பவுண்டஷன்' என்ற ஒன்றை நிறுவி அதன் மூலம் இருவரும் சமூக சேவை செய்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழைந்தைகள் நலத்திட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். 2015-ல் நடந்த முகாம் ஒன்றில் குழந்தைகளின் மருத்துவ அக்கறை குறித்து, 'Put Your Money Where the Miracles are' என்று கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது. காரணம் "எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோமோ, அதில் ஒரு பாதியைக் கூட சமூகத்திற்காக செலவழிக்காமல் வாழ்வது பயனற்றது" என்று கூறினார். மேலும் LGBT- மாற்றுப் பாலினத்தவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்த நிலையில், 2013-ஆம் ஆண்டு இவருக்கு 'அல் ஃபார் ஈகுவாலிட்டி விருது' அமெரிக்க மனித உரிமைக்கு கழகத்திடம் இருந்து வழங்கப்பட்டது. 

 

இவரது 'J to tha lo' ஆல்பம் அமெரிக்காவின் சிறந்த ஆல்பமாக கின்னஸ் வேர்ல்ட் ரெகார்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டில் லோபஸின் 'ஆன் தி ஃபிளோர்' என்ற சிங்கிள் பாடல் இதுவரை அதிகம் விற்கப்பட்ட ஆல்பங்கள் பட்டியலில் இடம்பெற்று கின்னஸ் சாதனை படைத்தது. தவிர, இவர் வேர்ல்ட் மியூசிக் அவார்ட், பில் போர்ட் ஐகான் அவார்ட், டெலிமுண்டோ ஸ்டார் அவார்ட் போன்ற விருதுகளுக்கு சொந்தக்காரர். இன்று வரைக்கும் 24 படங்களிலும், 11 ஆல்பங்களிலும், 63 சிங்கிள் ட்ராக் பாடல்களிலும் தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார். மேலும் 2017 ஆம் ஆண்டு 'வேர்ல்ட் ஆஃப் டான்ஸ்' டிவி நிகழ்ச்சியை தயாரித்து வழங்கி, அதன் மூலம் இளம் நடனக் கலைஞர்களை திரைக்கு அறிமுகப்படுத்தினார். அதேபோல் 2018 ஆம் ஆண்டிலும் 'பை பை பேர்டி' என்ற டிவி இசை நிகழ்ச்சியையும் நடத்த உள்ளார். இப்படி இயல், இசை, நாடகம் மூன்றிற்கும் 1986 முதல் தற்போது வரை தனது பங்களிப்பை ஆற்றி வரும் ஜெனிஃபர் லோபஸின் 48 வது பிறந்த தினம் இன்று. 

#HappyBirthdayJLO

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

‘பெரிய’ மனிதர்களின் கதை!

height%201

கூடைப்பந்து விளையாட்டில் தரையிலிருந்து எவ்வளவு உயரத்தில் கூடை பொருத்தப்பட்டிருக்கும் தெரியுமா? 10 அடி. அத்தனை உயரத்தில் இருக்கும் கூடைக்குள் பந்தைப் போட வேண்டுமென்றால் எம்பிக் குதிக்காமல் வேலைக்கு ஆகாது. ஆனால், சன் மிங் மிங்குக்கு அந்தக் கவலை இல்லை. எம்பவே வேண்டாம். கையை உயர்த்திப் பந்தைக் கூடைக்குள் தள்ளினால் போதும். அவரது உயரம் அப்படி. 7 அடி 9 அங்குலம்.

1983-ல் சீனாவில் பிறந்தவர். பதினைந்து வயது வரை கூடைப் பந்தைத் தொட்டதில்லை. அப்போதே அவரது உயரம் 6 அடி 7 அங்குலம். அந்த உயரம்தான் சன் மிங் மிங்கை, கூடைப்பந்து விளையாட்டை நோக்கி ஈர்த்தது. 2005-ல் அமெரிக்காவுக்கு வந்தார். முதன்மையான கூடைப்பந்து சங்கமான ‘நேஷனல் பாஸ்கட்பால் அசோஸியேஷன்’ (NBA), வருடந்தோறும் புதிய, திறமையான கூடைப் பந்து வீரர்களைத் தேர்ந்தெடுக்க தேர்வு நடத்தும். அதில் கலந்துகொண்ட சன் மிங் மிங்கை, சங்கத்தில் உள்ள முப்பது அணிகளில் ஒன்றுகூடத் தேர்ந்தெடுக்கவில்லை.

கூடவே இன்னோர் அதிர்ச்சியும் காத்திருந்தது. சன் மிங் மிங்கின் மூளையில் பிட்யூட்டரி சுரப்பிக்கு அருகில் ஒரு கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அதை அகற்ற ஒரு லட்சம் டாலர் தேவை என்றார்கள். சன் மிங் மிங் திகைத்து நின்றபோது, அவரது ஏஜெண்ட் சார்லஸ், மருத்துவச் செலவுக்காக நிதி திரட்டி உதவினார். கட்டி அகற்றப்பட்டது.

சன் மிங் மிங்குக்குச் சிறிய அணிகளில் கூடைப் பந்து விளையாடும் வாய்ப்புகள் கிட்டின. அந்த உயரமான மனிதரின் உற்சாக ஆட்டத்தைப் பார்க்கவே ரசிகர்கள் கூடினார்கள். ஜாக்கி சான் தனது ‘ரஷ் ஹவர் 3’ படத்தில் ‘ஜெயண்ட்’ என்ற கதாபாத்திரத்தில் சன் மிங் மிங்கை ஒரு முக்கியமான சண்டைக் காட்சியில் நடிக்கவைத்தார். உலகமெங்கும் அவர் புகழ் பரவியது. மேலும் சில படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. இன்னொரு புறம் கூடைப் பந்தாட்டக் களத்தின் அதிசய ஹீரோவாகவும் சன் மிங் மிங்கின் அறியப்பட்டார்.

உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரர் என்ற கின்னஸ் சாதனை தற்போது சன் மிங் மிங் வசமே உள்ளது. இவருடைய மனைவி ஷு யானும் உயரமானவரே. இருவரது உயரமும் சேர்த்து 13 அடி 10.72 அங்குலம். இன்றைக்கு உலகில் வாழும் உயரமான தம்பதி இவர்களே என்ற கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார்கள்.

சரி, இதுவரை வாழ்ந்ததிலேயே மிக உயரமான மனிதன் என்ற சாதனையை வைத்திருப்பவர் யார்?

ராபர்ட் வால்டோ. 1918-ல் அமெரிக்காவின் அல்டான் நகரத்தில் பிறந்தவர். 10 அடி 9 அங்குலம் வரை வளர்ந்தவர். 22 வயதில் ஒரு விபத்தில் இறந்து போனார். உலகத்திலேயே உயரமான மனிதருக்கு உலகத்திலேயே நீளமான சவப்பெட்டி செய்யப்பட்டது.

height_2_3187670a.jpg

ராபர்ட்டுக்கு முன்பே அவரைவிட உயரமானவர்கள் இருந்திருக்கலாம், வாழ்ந்து மறைந்திருக்கலாம். ஆனால், ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டவர்களில் ராபர்ட்டே உயரமானவர். அதேபோல பெண்களில் உயரமானவர் என்ற பெருமையை அதிகாரபூர்வமாகத் தக்க வைத்திருப்பவர், சீனாவில் வாழ்ந்த ஸெங் ஜின்லியான். 8 அடி 1.75 அங்குலம் வரை வளர்ந்த ஸெங், பதினேழு வயதிலேயே இறந்துபோனார்.

சரி, இப்போது வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் உயரமான ஆணும் பெண்ணும் எங்கே இருக்கிறார்கள்?

உலகில் வாழும் உயரமான ஆண் துருக்கியில் இருக்கிறார். அவரது பெயர் சுல்தான் கோஸன். உயரம் 8 அடி 3 அங்குலம். கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரரான சுல்தான், தற்போது சர்க்கஸ் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். ‘பல்பு மாட்ட, உயரத்தில் இருந்து எதையாவது எடுத்துக் கொடுக்க எங்கள் வீட்டில் ஏணியையே பயன்படுத்தியதில்லை. என்னைத்தான் பயன்படுத்துவார்கள். உயரத்தால் எப்போதும் எனக்குள்ள பிரச்சினை உடைகள் வாங்குவதும், காருக்குள் உட்கார முடியாமல் தவிப்பதும்தான்’ என்கிறார் சுல்தான்.

சன் ஃபாங். சீனாவில் வாழும் 7 அடி 3 அங்குலம் வளர்ந்த இந்த 30 வயதுப் பெண்ணே தற்போது உலகின் வாழும் உயரமான பெண். இப்படி உயரமாக இருப்பவர்கள் ஒவ்வொருவருமே மற்றவர்களால் அதிசயமாகப் பார்க்கப்படுவதும் கவனிக்கப்படுவதும் இயல்பானது. ஆனால், வாழ்க்கைக்கான தேவைகளுக்காக உயரமான மனிதர்கள் தங்களையே காட்சிப் பொருளாக வைத்துப் பணம் சம்பாதித்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதும் தொடர்கிறது.

உயரம்தான் அவர்களுக்கு தனித்துவ அடையாளத்தை வழங்கியிருக்கிறது என்றாலும், அந்த உயரத்தால் அவர்கள் தனிப்பட்ட சங்கடங்களையும் வலிகளையும் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும் மறக்கக் கூடாது.

வாழும் இந்தியர்களில் உயரமான மனிதர் உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறார். தர்மேந்திர பிரதாப் சிங் என்ற 8 அடி 1 அங்குல உயரம் கொண்ட இந்த மனிதரும் பல்வேறு உடல் உபாதைகளால், மருத்துவச் செலவுக்கு வழியின்றி அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார். சிலருக்கு உயரம்கூடத் துயரம்தான்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

பிக் பாஸ் ஓவியாவின் உணர்வுகளைப் புரிஞ்சுக்கிறீங்க... ஆனா, வீட்ல இருக்கிற ஓவியாவை!

 
 

ஓவியா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பற்றிய செய்திகளைக் கேட்காமல், பேசாமல் ஒருநாள் நிறைவடையாது என்றாகிவிட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களின் மகிழ்ச்சி, அழுகை, ஆனந்தம், கோபம், சண்டை ஆகியவற்றிற்கு, பார்வையாளர்கள் தங்களின் எதிர்வினையைச் சமூக ஊடகங்களில் பதிவுசெய்துவருகின்றனர். நடிகை ஓவியாவுக்கான ஆதரவை எல்லா மட்டங்களிலும் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு வாரம் அந்நிகழச்சியிலிருந்து வெளியேறுவதற்கான நபராக ஓவியா சகப் போட்டியாளர்களால் பரிந்துரை செய்யப்பட்டாலும், பொதுமக்களின் வாக்குகளால் நிகழ்ச்சியில் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது. 

பொதுமக்கள் ஓவியாவை விரும்புவதற்கான காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். பிக்பாஸில் சக போட்டியாளர்களால் தொடர்ந்து சீண்டப்படும் நபராக ஓவியா இருந்து வருகிறார். அவரைக் கோபமூட்டவும் அவர் சொல்லாததைச் சொன்னதாகவும் கூறப்பட்டுப் பிரச்னையாக்குவதும் நடக்கிறது. ஒரு கட்டத்தில் அவரைத் தவிர மற்றவர்களெல்லாம் ஓர் அணியாக இவரைத் தனிமைப்படுத்துகின்றனர். அந்தச் சூழலுல் ஓவியா, தன் மீது சுய இரக்கம் கோராது துணிவோடு அதை எதிர்கொள்கிறார். தன் கருத்துகளைத் தயக்கமின்றி கூறுகிறார். கூடுமானவரை அழுவதைத் தவிர்க்கிறார். விரக்தியான முகப்பாவத்தை ஒரு போதும் வெளிப்படுத்துவதில்லை என்பதாகச் சொல்லிக்கொண்டே போகலாம். ஓவியாவின் இந்தப் பண்புகளை ரசித்து அவருக்காக வாக்களித்தவர்கள் எத்தனை பேர் தங்கள் வீட்டில் இருக்கும் ஓவியாக்களைப் (அதாவது ஓவியாவின் பண்புகளைக் கொண்டவர்களை) புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

பிக்பாஸ் ஓவியா தன் மனதில் பட்டதைத் தயங்காமல் வெளிப்படுத்துவதைச் சிலாகிப்பவர்கள், தங்கள் வீட்டில் உள்ள ஓவியாவை அதுபோலப் பேச அனுமதித்திருக்கிறார்களா? அப்படி அனுமதித்திருந்தால் பெண்கள் தாங்கள் விரும்பும் படிப்புத் தொடங்கிக் காதல் வரை முதலில் பெற்றோரிடம்தானே கூறியிருப்பார்கள். அதுபோன்ற ஜனநாயவெளி நம் வீடுகளில் இருக்கிறதா என்ன? அப்படி இருந்திருக்கும் பட்சத்தில் படித்த படிப்பைப் பயன்படுத்தாமல் சான்றிதழ்களில் முடக்குவதும், ஆணவக் கொலைகள் நடந்திருக்கவும் வாய்ப்பே இல்லை அல்லவா! 

ஓவியா

மழையை மற்றவர்கள் வேடிக்கைப் பார்க்க, ஓவியா மட்டுமே மழையில் நனைந்து, ஆடி மகிழ்கிறார். தான் நினைப்பதைச் செய்கிறார். அதைப் பாராட்டும் எத்தனை பேர் தங்கள் வீட்டில் குழந்தைகள், பெண்களின் மழையில் நனையும் ஆசைக்குக் குறுக்கே நிற்காமல் இருந்திருக்கிறார்கள். மழையில் நனைவது மட்டுமல்ல பெண்களின் சின்னச் சின்ன ஆசைகள் அவர்கள் இறக்கும் வரை நிறைவேறாமலே போய்விடுகிறது.

ஓவியா சகப் போட்டியாளர்களிடம் தன் நிலையை எடுத்துக்கூறும்போதெல்லாம் அவர்கள் அதைப் புரிந்துகொள்ளாமல் மடைமாற்றிவிடுகிறார்கள். ஓவியாவைக் கோபமேற்றவும் செய்கிறார்கள். அதைப் பார்க்கும் நீங்கள் ஓவியாவைத் தவிர்த்தவர்கள் மேல் கோபமுறுகிறீர்கள். இந்தக் கோபம் ஓவியாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதிலிருந்தே வருகிறது. இதேபோல உங்கள் வீட்டில் இருக்கும் ஓவியாவை முழுமையாக தம் கருத்துகளைக் கூற அனுமதித்திருக்கிறீர்களா? இடைமறிக்காமல் பேச்சைக் கேட்டு, அதன்பின் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறீர்களா? அவர் கூறுவதிலிருக்கும் நியாயங்களை அவரின் பார்வையிலிருந்து புரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா? அநேகமாக ஒரு பகுதியினர் ஆம் என்றும் ஒரு பகுதியினர் இல்லையென்றும் கூறுவர். ஆனால் பெரும்பகுதியினர் மழுப்பலான பதிலைத்தான் சொல்வார்கள். 

பிக் பாஸ் ஓவியா, நிகழ்ச்சியின் நெறியாளர் நடிகர் கமல்ஹாசனிடம் பேசும்போது, அந்த வீட்டில் தனக்கு எதிராக நடப்பவற்றைத் தெளிவாகச் சொல்லவில்லை என்ற ஆதங்கம் பார்வையாளர்கள் பலருக்கும் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் அவர் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாடை விடுவிக்கும் வீடியோ ஒளிப்பரப்பானதும் பார்வையாளர்களின் கைத்தட்டல் அரங்கை அதிரச் செய்தது. இதே போன்று தன்னை வெளிப்படுத்தும் முறையில் சொற்களை லாவகமாகக் கையாளத் தெரியாத 'வீட்டு' ஓவியாக்களை இனம் கண்டுள்ளீர்களா? தன் மனதிலிருக்கும் விஷயங்களைக் கேட்பவருக்குச் சரியாகச் சென்றடையும் சொற்களால் விளக்க முடியாமல், அதனால் கோபம் அல்லது இயலாமையால் சூழப்படுவர். அதனால் அழுகையோடு தன் பிரச்னையை இன்னும் பெரிதாக்கிக் கொள்வர். பிக் பாஸ் ஓவியாவிடம் காட்டும் பரிவை இவரிடமும் காட்டும்போது வீட்டு ஓவியாவின் பிரச்னை எளிதாகத் தீர்ந்துவிடும் அல்லவா!

ஓவியா

பிக் பாஸ் ஓவியா தனக்கு எதிராக நடந்துகொள்ளும் எவரையும் அவர் கேட்கும் 'ஸாரி' எனும் ஒரு சொல்லால் மன்னித்து, நட்பு பாராட்டுகிறார். அதேபோல, தான் செய்யும் தவறை உணர்ந்த கணத்தில் மன்னிப்பும் கேட்டு விடுகிறார். உங்கள் வீட்டு ஓவியா கேட்கும் மன்னிப்புகளை ஏற்றுகொள்கிறீர்களா? அந்த வருத்தத்தை முழுமையாகப் புரிந்துகொள்கிறீர்களா? அந்த மன்னிப்பு கேட்கும் சரியான தருணங்களை அவர்களுக்கு வழங்குகிறீர்களா... ஏனெனில் பல வீடுகளில் சிறிய பிரச்னைகள் நடந்தாலும் வீட்டை விட்டு வெகுநேரம் வெளியே சென்றுவிடுவதைப் பலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள். அவர்கள் திரும்பி வரும் நேரம் வரை அந்த மன்னிப்பைச் சுமந்துகொண்டு வீட்டு ஓவியா காத்திருக்க வேண்டும். அந்தக் காத்திருப்பு மிகக் கொடுமையானதல்லவா? 

 

ஓவியாவிடம் பலர் ரசிப்பதன் அடிப்படை என்பது அவர் அவராக இருக்கிறார். அதாவது, சமூகத்தில் ஆண்களால், ஆண் மனநிலையைப் பெண்ணின் மனநிலையாக மாற்றிக் கட்டமைப்பட்டிருப்பதைப் போல இல்லாமல், பெண் மனநிலையில் அதை வெளிப்படுத்துவதில் நேர்மையாக இருக்கிறார் என்று பார்வையாளர்களால் உணரப்படுகிறது. திரையில் அழும் குழந்தையை விட, நிஜத்தில் நம் வீட்டில் அழும் குழந்தையின் மீது அதிகப் பரிவு ஏற்படும். உடனே அந்தக் குழந்தை அழும் காரணத்தைச் சரி செய்வோம். அதேபோல நம் வீட்டு ஓவியாக்களையும் புரிந்துகொள்ள முயல்வோம்.

  • தொடங்கியவர்

 

ஓடும் போது அடி வயிற்றில் ஏன் வலி ஏற்படும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.