Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஜார்ஜ் டி ஹெவெசி

 
op

நோபல் பெற்ற ஹங்கேரி வேதியியலாளர் 

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த முன்னோடி அறிவியலாளர்களுள் ஒருவரும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான ஜார்ஜ் டி ஹெவெசி (George de Hevesy) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* புடாபெஸ்ட் நகரில் யூதக் குடும்பத்தில் பிறந்தார் (1885). மெட்ரிகுலேஷன் கல்வி முடித்து, புடாபெஸ்ட் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் மற்றும் வேதியியல் பயின்றார். பின்னர் பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்ந்தார்.

* 1908-ல் ஃப்ரீபர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். 2 ஆண்டுகள் தனது பேராசிரியரிடம் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினார். உருகிய உப்புகள் மற்றும் அமோனியா தொகுப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார்.

* 1910-ல் இங்கிலாந்து சென்றார். மான்செஸ்டரில் விஞ்ஞானி ரூதர்ஃபோர்ட் தலைமையிலான ஆய்வுக் குழுவில் பணியாற்றினார். பின்னர், புடாபெஸ்ட் பல்கலைக்கழகத்தில் கதிரியக்க - ட்ரேசர் மற்றும் கதிரியக்க அளவீடுகள் குறித்த ஆய்வுகளை சக விஞ்ஞானிகளுடன் இணைந்து மேற்கொண்டார். அப்போது டென்மார்க்கிலிருந்து ஆய்வு மாணவராக நீல்ஸ்போர் அங்கு வந்து சேர்ந்தார்.

* இருவரும் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டனர். 1911-ல் ஆய்வு மாணவராக இருந்த இவருக்கு இயற்கைக் கதிரியக்கத் தனிமங்களைப் பிரித்து எடுக்கும் பணி கொடுக்கப்பட்டது. அப்போது போதிய வருமானம் இல்லாததால், குடியிருந்த வீட்டு உரிமையாளரான பெண்மணியிடம் பணம் கொடுத்து அவரது வீட்டில் உணவு உண்டார்.

* அவரோ, பல நேரங்களில் பழைய உணவையே மறுநாளும் பரிமாறுவதாக இவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் பரிமாறப்பட்டதில் மீதமிருந்த உணவில் சிறிது கதிர் ஐசோடோப்களைக் கலந்துவிட்டார். அடுத்தடுத்த நாளில் பரிமாறப்பட்ட உணவை சிறிது எடுத்துவைத்து தன்னிடமிருந்து எளிய கருவிகளைக் கொண்டு ஆராய்ந்ததில், முன்பு பரிமாறப்பட்ட அதே பழைய உணவு என்பது தெரிய வந்தது.

* இதுவே கதிரியக்க ஐசோடோப்பை பயன்படுத்தி இவர் மேற்கொண்ட முதல் சோதனை. 1915-ல் ஆஸ்திரியன் - ஹங்கேரி ராணுவத்தில் பணியாற்றினார். பின்னர் புடாபெஸ்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக 6 மாதங்கள் பணியாற்றினார். அதையடுத்து, கோபன்ஹேகனில் நீல்ஸ்போர் நிறுவனத்தில் இணைந்தார்.

* பின்னர், ஃப்ரீபர்க் திரும்பிய இவர், பேராசிரியராகவும் ஆராய்ச்சி யாளராகவும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றினார். இவரது ஆய்வுகள், பெரும்பாலும் ரேடியம் மற்றும் முக்கிய ஐசோடோப்களின் பயன்பாடு குறித்தவையாக அமைந்திருந்தன.

* கதிரியக்க ட்ரேசர்களின் பயன்பாட்டு வளர்ச்சிக்கு முக்கியப் பங்களித்தவரும் இவரே. கனிம மற்றும் வாழ்க்கை அறிவியலுக்காக ஐசோடோப்பிக் இன்டிகேட்டர்களைப் பயன்படுத்துவதையும் இவர்தான் தொடங்கிவைத்தார்.

* முதன்முதலாக ஐசோடோப்களை மருத்துவத்துக்காகப் பயன்படுத்தி யதும் இவர்தான். கதிரியக்க ஐசோடோப்புகளை உயிரியலில் குறியி அணுக்களாகப் பயன்படுத்தியதற்காக இவருக்கு 1943-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதே ஆண்டில் ஸ்டாக்ஹோம், கரிம வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அசோசியேட்டாக நியமிக்கப்பட்டார்.

* 1959-ல் அமைதிக்கான பதக்கம், கானிசாரோ பரிசு, லண்டன் ராயல் சொசைட்டியின் காப்ளே பதக்கம் உள்ளிட்ட பல பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்றார். உபாஸலா கோபன்ஹேகன், லண்டன் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. கதிரியக்க வேதியியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஜார்ஜ் டி ஹெவெசி 1966-ம் ஆண்டு தமது 81-வது வயதில் மறைந்தார்.

 

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

“கட்டித்தழுவுதல்” (புகைப்படத் தொகுப்பு)

 

“கட்டித்தழுவுதல்” என்ற தலைப்பில் இந்த வாரம் வாசகர்கள் அனுப்பிய தலைசிறந்த புகைப்படங்களை தொகுப்பாக உங்களுங்கு வழங்குகின்றோம்.

  • குன்றின் உச்சியில் இருவர்MARCIN

    மர்சின்: “புயல் வீசுகிறபோது மகிழ்ச்சியடைவது கடினம் என்று சிலர் கூறுகிறார்கள். அதனை “ஆரத்தழுவி கொள்ளுங்கள்” என்று நான் கூறுகிறேன். மழை பெய்துகொண்டிருக்கும்போது கூட நீங்கள் மகிழ்சியடையலாம். அதனை வித்தியாசமான கோணத்தில் நீங்கள் அதனை பார்க்க வேண்டும். அவ்வளவுதான்”

  • மூன்று ஆமைகள்MARK TILLEY

    மார்க் தில்லே: இவை மூன்று பச்சை நிற ஆமைகள். வலதுபுறத்தில் இருப்பது பெண். நடுவில் இருப்பது ஆண். சிவ பூஜையில் கரடி நுழைவதைபோல, இந்த இரண்டையும் தொந்தரவு செய்யவே, மூன்றாவது ஆண் ஆமையொன்று இவற்றோடு சேருகிறது”.

  • ஜென்னி டவ்னிங்: “பாதாம் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து செய்யப்பட்ட திருமண கேக் உருவங்களின் தொடுதல் தருணம்”JENNY DOWNING

    ஜென்னி டவ்னிங்: “பாதாம் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து செய்யப்பட்ட திருமண கேக் உருவங்களின் தொடுதல் தருணம்”

  • கூண்டில் இரண்டு பறவைகள்INDRAJEET

    இந்திரஜீத்: இந்த கூண்டுக்குள் இந்த பறவைகளை இவ்வாறு பார்ப்பதில் பொறாமையாக உள்ளது. அவை ஒன்றுக்கொன்று காதலோடு வாழ போகின்றன”.

  • கைக்கட்டி கொண்டிருக்கும் பெரியவர்ELISENDA RUSSELL

    எலிசென்டா ருசெல்: “கடந்த 7 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய குடும்பத்தினர் ஐக்கிய ராஜ்ஜியத்தில் அல்லது ஸ்பெயினில் உள்ளனர். இவ்வாறு தெலைதூரங்களில் இருப்பது சில வேளைகளில் வெறுமையை உணர செய்கிறது. என்னுடைய தாத்தாவை விட்டு பிரியும்போது, அவரை கட்டித்தழுவுவது என்னால் சகிக்க முடியாதது. அந்த உணர்வுகள் அப்படியே உள்ளன”

  • மணல் தரையில் இருக்கும் பெண்JESSICA BOULTON

    ஜெசிகா பௌல்டன்: “இந்த புகைப்படத் தொடர் எனக்கும், என்றுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவருக்கும் இடையிலானதொரு தனிப்பட்ட பணித்திட்டம். நாங்கள் இருவரும் எல்லாவித தன்நம்பிக்கையையிலும் மிகவும் பலவீனமானவர்கள். எனவே, என்னுடைய புகைப்படத் திறனை பயன்படுத்தி அவளுடைய இயற்கையான அழகை அவள் உணாந்துகொள்ள செய்வதே என்னுடைய நோக்கம். எங்களுக்கு தேவையான சிறிதளவு தன்நம்பிக்கைக்கு நெருக்கி வர செய்யும் ஒரு படியாக இது இருக்குமென நம்புகிறேன்.

  • கைப்பிடித்து கொண்டிருக்கும் இரண்டு பூனைகள்SARAH BURRARD-LUCAS

    சாரா புர்ரார்டு-லூகாஸ்: என்னுடைய செர்பிய பூனைகளான சீசர் மற்றும் நீரோவின் புகைப்படம் இது. அவற்றுக்கு சண்டையிட உடன்பிறப்புகள் இல்லாதபோது, அடிக்கடி இவ்வாறு கட்டிப்பிடித்து கொண்டு தூங்குவதை பார்க்கலாம்”

  • திருமணமானோர் கட்டிப்பிடித்தல்SIRSENDU GAYEN

    சிர்சென்து கயென் என்பவரால் மியான்மரின் யங்கூனில் எடுக்கப்பட்ட திருமண ஜோடிகளின் புகைப்படம்

  • வயலில் இரண்டு குதிரைகள்LINDA TAYLOR

    இறுதியாக, லின்டா டெய்லரிடம் இருந்து வந்துள்ள கிங்டனுக்கு அருகிலுள்ள பௌயிஸில், ஹெர்கெஸ்ட் ரிட்ஜ் குன்றில் இருக்கும் இரண்டு குதிரைகளின் புகைப்படம்.

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 01
-
 

11%28831%29.jpg1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

1461: நான்காம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1492: ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கலைக்கப்பட்டனர்.

1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.

1619 - முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர்.

1774: ஒட்சிசன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

1800: பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.

1820: லண்டனில் றீஜண்ட் கால்வாய் திறக்கப்பட்டது.

1831: புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

1876: ஐக்கிய அமெரிக்காவின் 38ஆவது மாநிலமாக கொலராடோ ஏற்கப்பட்டது.

1894: கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.

1902 - பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.

1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறெளன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.

1914 - இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1927: சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் 'நான்சாங்' என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.

1936: பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.

1941: முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.

1944: போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.

1952 - தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.

1960 - பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.

1964: பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.

1967: கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.

1980: அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

2002: தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

2004: பரகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் கொல்லப்பட்டு 500 பேர் காயமடைந்தனர்.

2007- யாழ்பல்கலைக்கழக ஊடக மாணவன் ச.நிலக்சன், அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

எல்லையில் மதம் தாண்டிய சகோதரத்துவம்: ட்விட்டரில் வைரலாக பரவும் புகைப்படம்

kashmir

ஜம்மு காஷ்மீரில் பணிக்கு நடுவே தொழுகை நடத்திய ஒரு சிஆர்பிஎப் வீரருக்கு பாதுகாப்பு வழங்கும் மற்றொரு வீரர்.

காஷ்மீரில் பணிபுரியும் 2 வீரர் களுக்கிடையே உள்ள சகோதரத் துவத்தை வெளிப்படுத்தும் வகையிலான ஒரு புகைப்படம் சிஆர்பிஎப் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது வேகமாக பகிரப்பட்டு வருகிறது

நகர் பிரிவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஜூலை 29-ம் தேதி அந்தப் படம் வெளியாகி உள்ளது. அதில் பணிக்கு நடுவே சிஆர்பிஎப் வீரர் (முஸ்லிம்) ஒருவர் தொழுகை நடத்துவதையும் மற்றொரு வீரர் (இந்து) அவருக்கு பாதுகாப்பு வழங்குவதையும் காண முடிகிறது.

அதேநேரம் தொழுகை நடத்தும் வீரர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லர் காவல் நிலைய அதிகாரி லத்தீப் அலி என முதலில் தகவல் வெளியானது. ஆனால் அது உண்மை இல்லை. இந்த இருவரும் 118-வது படைப் பிரிவைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்கள்தான் என உறுதிப்படுத்தப்பட்டுள் ளது.

தொழுகை நடத்துபவரின் பெயர் நசிர் அகமது என்றும் பாதுகாப்பு வழங்குபவர் சுஷில் குமார் என்றும் தெரியவந்துள்ளது. கந்தர்பால் மாவட்டம், லர் கிராமத்தைச் சேர்ந்த அலி என்பவர்தான் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட் டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டார். இதையடுத்து மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இந்தப் புகைப்படம் வெளியாகி அனைவரது இதயத்தையும் கவர்ந்துள்ளது.

இந்தப் படம் ட்விட்டரில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இது மதச்சார்பற்ற இந்தியாவை பிரதிபலிப்பதாக உள்ளதாக சிலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய வீரர்கள் மதங்களைக் கடந்து உண்மையான சகோதரத்துவத்தை வெளிப்படுத்தி வருவதாக பலரும் புகழாரம் சூட்டி உள்ளனர்.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

ஆகஸ்ட் 1: உலக தாய்ப்பால் தினம் இன்று.
தாய்ப்பாலைவிட நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட சிறந்த உணவோ மருந்தோ குழந்தைகளுக்கு வேறு எதுவுமே இல்லை என்பதை வலியுறுத்தும் தினமாக கொண்டாடப்படுகிறது மார்பில் சுரக்கும் மாமருந்து! தாய்மை வரம் என்றால் தாய்ப்பால் வரப்பிரசாதம். கருத்தரித்த நாள் முதல் அந்த சிசுவிற்காகவே தாயின் உடலும் மனமும் பழக்கப்படுகிறது. இயற்கையான பிரசவம் என்றால் அரை மணி நேரத்திற்குள்ளும், அறுவை சிகிச்சை என்றால் ஒன்றரை மணி நேரத்திற்குள்ளும் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அதன் ஸ்பரிசத்தைத் தேடும் தாயும், அவளின் பால் வீச்சத்திற்கு, கதகதப்பிற்கு ஏங்கும் குழந்தையின் துடிப்பையும் எந்த மெசின்களாலும் கண்டறிய முடியாது. அன்பையும் நேசத்தையும், ஆரோக்கியத்தையும் குழைத்து மார்பில் அணைத்தபடி தன் குழந்தைக்கு கலப்படமற்ற பால் புகட்டும் ஒரு தாயின் மன அமைதி வேறெதில் கிடைக்கப் போகிறது.
#BreastfeedingWeek

 

  • தொடங்கியவர்
‘குற்றம் சுமத்துதல் அநீதி’
 

image_301c170cca.jpgமிகவும் நேர்மையான மனிதர்கள் கூடச் சந்தர்ப்ப வசமாக அல்லது தெரியாத்தனமாகச் சொன்ன ஒரு சிறுபொய், அவர்கள் மீதான நல்ல அபிப்பிராயத்தில் களங்கம் ஏற்படுத்தி விடலாம். 

இதை மிகைப்படுத்தவே, சில கூட்டம் காத்திருக்கும். தவறு செய்தவர் மன்னிப்புக் கேட்டாலும் அதைச் செவிமடுக்க மக்களை அனுமதிக்கவும் மாட்டார்கள். 

எனவே, நல்லவராக வாழ வேண்டும் எனத் திடசிந்தை கொண்டவர்களையும் நிலைதடுமாற வைக்கும் சந்தர்ப்பத்தை வேண்டும் என்று திணிக்கப்படுவது அனுதாபத்துக்குரியதே.  

தவறுகள் தெரியாத்தனமாகவும் வாழ்க்கையில் புகுந்து கொள்கின்றன. நாங்கள் மனிதர்கள்; சர்வ ஜாக்கிரதையாக இருந்தாலும் ஆடையில் கறைபடிவதுண்டு.

எனவே செய்த தவறை உணர்ந்து, தொடர்ந்து எம் சித்தப்படி நேர்மையுடன் வாழ்வதே அழகு. புல்லர்கள் புகழ்வதையும் இகழ்வதையும் செவிகளில் ஏற்கக் கூடாது. சிந்திக்காது குற்றம் சுமத்துதல் அநீதி. 

  • தொடங்கியவர்

குழந்தைகளிடம் பேசும்போது பயன்படுத்தக்கூடாத 5 வார்த்தைகள்! #GoodParenting

 
 

குழந்தை

குழந்தைகளுக்குக் கிடைக்கும் முதல் அனுபவமே தாயோடும் தந்தையோடும் உறவினர்களோடும் பேசுவதுதான். அவர்கள் வளர வளர நாம் உரையாடுவதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், நமது உரையாடல்களின் வழியேதான் இந்த உலகத்தை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். நாம் பேசுகிறபோது பயன்படுத்தும் 'ஒரு வார்த்தையில்' அவர்களுக்குப் புதிய பார்வை கிடைத்துவிடுவதைப் போல ஒரு சில வார்த்தைகள் அவர்களைக் காயப்படுத்தவும் செய்துவிடும். 

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் சின்னச் சின்ன வாக்கியங்களால் பேச வேண்டும். கடினமான சொற்களைக் கொண்ட வாக்கியங்களைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்குப் புரியாத சொற்களைப் பயன்படுத்த வேண்டாம். ஐந்து வயதுக்கு மேலுள்ள குழந்தைகளிடம் அவர்கள் புதிய சொற்களைத் தெரிந்துகொள்ளும் விதமாகப் பேசப் பழக வேண்டும். இவை பொதுவானதே. அவர்களிடம் பேசும் போது கெட்ட வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்பது நமக்குத் தெரியும். அதே நேரம் இயல்பாகப் புழங்கும் சொற்கள் கூட அவர்களைக் காயப்படுத்திவிடக் கூடும். அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம். 

அவனைப் போல இல்ல: பெரியவர்களுக்கே தன்னை மற்றவர்களோடு ஒப்பிடுதல் எரிச்சலைத் தரும். குழந்தைகளுக்கும் அப்படித்தானே இருக்கும். அவனைப் போல / அவளைப் போல மதிப்பெண் எடுக்க வில்லை என்பது போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டாம். அப்படிப் பயன்படுத்தும்போது, யாருடன் ஒப்பிடுகிறீர்களோ அவர் மீது இயல்பாகவே உங்கள் குழந்தைக்கு வெறுப்பு உருவாகி விடும். இது அவர்களின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. 

லூசு மாதிரி: இந்த வார்த்தையைப் பல பெற்றோர்கள் அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். 'என்னடா லூசுமாதிரி பண்ணிட்டு இருக்க?' என்று அதுவும் உறவினர்கள், நண்பர்களின் முன்னிலையில் சொல்கிறார்கள். இது கடுமையான மன உளைச்சலைக் குழந்தைகளுக்குத் தரக்கூடும். பல குழந்தைகளிடம் 'லூசு மாதிரி' என்பதைப் பற்றிக் கேட்கும்போது இதை ஒரு கெட்ட வார்த்தையாகத்தான் அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் இப்படிக் கூறுபவர்களாக நீங்கள் இருந்தால் தயவுசெய்து மாற்றிக்கொள்ளுங்கள். 

குழந்தை

உன்னால முடியாது: எதிர்மறையான சிந்தனையைத் தரும் சொற்களைக் குழந்தைகளிடம் கூறாமல் இருப்பதே நல்லது. சொல்லும்போது அதற்கான விளைவு தெரியாது. தேர்வு எழுதுகையில் அல்லது ஏதேனும் ஒரு செயலைச் செய்யச் சிரமப்படும்போது நீங்கள் சொன்ன 'உன்னால முடியாது' அவர்களின் காதில் ஒலிக்கும். தாழ்வு மனப்பான்மையை விதைத்துவிடும். எனவே இப்படிக் கூறுவதைக் கைவிடுங்கள். 

அறிவு இல்ல: இதுவும் கிட்டத்தட்ட 'லூசு' எனச் சொல்வதற்கு இணையானதுதான். பெரும்பாலும் இதைப் பெற்றோர்கள் எப்போது பயன்படுத்துவார்கள் தெரியுமா? குழந்தைகள் ஏதேனும் ஒரு செயலைச் செய்யமுடியாமல் தவிக்கும்போது அல்லது அந்தச் செயலைச் செய்யத் தெரியாமல் தவறாகச் செய்துவிடும்போதுதான். அந்த நேரத்தில் அவர்களுக்குத் தேவையானது சரியான வழிகாட்டல்தான். அதை விடுத்து, 'அறிவு இல்ல' எனச் சொல்வது பிழையானது. 

உருப்படாம போய்டுவ: பெற்றோர் கடும்கோபத்தில் சொல்ற வார்த்தைகள். அவர்களின் நலனை முன்னிட்டே சொல்லவும் செய்யலாம். ஆனால் ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் எவ்வளவு ஆபத்தான, எதிர்மறையான சிந்தனையை விதைக்கும் வார்த்தைகள் என்பதை உணர முடியும். பெற்றோரின் ஆசைகளை நிறைவேற, குழந்தைகள் என்ன நீங்கள் வளர்க்கும் மரமா? அவர்களுக்கு என்று உணர்வுகள், லட்சியங்கள் இருக்கும். அவற்றைப் புரிந்துகொள்ளாமல் போன்சாய்த் தாவரங்களைப்போல குழந்தைகளைக் கருபவர்களால்தான் இப்படி அவர்களைத் திட்டத்தோன்றும்.

 

குழந்தைகள் வளர்ப்பில் உரையாடல் முக்கியமான ஒன்று. எனவே கவனமாக இருப்போம்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரான நாள்: 2-8-1934

 

ஹி்ட்லரின் முழுப்பெயர் அடால்ப் ஹிட்லர். இவர் காஸ்தாப் ஜூம் பொம்மர் என்னுமிடத்தில் 1889-ம் ஆண்டும் ஏப்ரல் 20-ந்தேதி அலாய்ஸ் இட்லர்- கிளாரா போல்சுக்கு. நான்காவது குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்த நான்கு பேர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் ஹிட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா ஹிட்லர் மட்டும்தான். அவர் 1933-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக

 
ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரான நாள்: 2-8-1934
 
ஹி்ட்லரின் முழுப்பெயர் அடால்ப் ஹிட்லர். இவர் காஸ்தாப் ஜூம் பொம்மர் என்னுமிடத்தில் 1889-ம் ஆண்டும் ஏப்ரல் 20-ந்தேதி அலாய்ஸ் இட்லர்- கிளாரா போல்சுக்கு. நான்காவது குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்த நான்கு பேர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் ஹிட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா ஹிட்லர் மட்டும்தான்.

அவர் 1933-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார். 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் பியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1903 - ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக மசிடோனியர்களின் கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது.

* 1914 - ஜெர்மனியப் படையினர் லக்சம்பேர்கை முற்றுகையிட்டன.

* 1916 - முதலாம் உலகப் போர்: லியனார்டோ டாவ்வின்சி என்ற இத்தாலியப் போர்க்கப்பல் ஆஸ்திரியாவினால் மூழ்கடிக்கப்பட்டது.

* 1918 - முதலாம் உலகப் போரை அடுத்து சைபீரியாவுக்கு தனது படைகளை அனுப்பப்போவதாக ஜப்பான் அறிவித்தது.

* 1931 - ராணுவ வேலைகளை நிராகரிக்குமாறு அறிவியலாளர்களுக்கு ஐன்ஸ்டைன் அழைப்பு விடுத்தார்.

* 1932 - பொசித்திரன் (இலத்திரனின் எதிர்த்துணிக்கை) கார்ல் ஆண்டர்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

* 1939 - அணு ஆயுதத்தை தயாரிக்க அறிவுறுத்துமாறு ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டிற்குக் கடிதம் எழுதினார்கள்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

சாலைப் பறவையாய் பறந்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்! #JagrutiHogale

 
 

JagrutiHogale

மும்பை பாந்த்ரா பகுதியைச் சேர்ந்தவர், ஜாக்ருதி ஹோகலே (Jagruti Hogale). பைக் காதலர்.  'பைக்கர்னி மோட்டார் சைக்கிள் கிளப்” உறுப்பினர். இதுதான் இந்தியாவின் அனைத்துப் பெண்களுக்கான முதல் பைக் கிளப். சாலைகளில் பறவையாய் பறந்தவர். 35 வயதான இவருக்கு ஒன்பது வயதில் ஒரு மகன் இருக்கிறான். 

ஜூலை 23-ம் தேதி காலை 9:00 மணி அளவில், தஹானு – ஜாவார் நெடுஞ்சாலையில் இருக்கும் ஜாவார் அருவிக்குத் தனது நண்பர்களுடன் கிளம்பினார் ஜாக்ருதி ஹோகலே. தனது ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் பைக்கில் சென்றவர், ஒரு லாரியை ஓவர் டேக் செய்ய முற்பட்டார். அப்போது, சாலையிலிருந்த குழியினால் நிலைதடுமாறி, லாரியின் பின்சக்கரத்தில் விழுந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தும் தலை நசுங்கி இறந்துபோனார் ஜாக்ருதி. 

JagrutiHogale

“அவர் ஒரு பாதுகாப்பான ஓட்டுநர். இதுபோன்ற ட்ரிப் அடித்த அனுபவங்கள் நிறைய உண்டு. விபத்துக்குக் காரணம், ஆழமான பள்ளம் இருப்பதே தெரியாத அளவுக்கு மழை நீர் தேங்கி இருந்ததுதான். விபத்துக்கு மூன்று நாள்களுக்கு முன்பு அதே சாலை வழியே நான் குஜராத்துக்குச் சென்றேன். ஒட்டுமொத்த சாலையும் குழிகளால் நிரம்பி இருந்தது” என்று கோபமும் வேதனையுமான குரலில் சொல்கிறார் ஜாக்ருதி கணவர் விராஜ். 

ஆனால், வழக்கைப் பதிவுசெய்த காசா காவல் நிலைய துணை ஆய்வாளர் ஜெயபிரகாஷ் குடே, “ஜாக்ருதி ஹோகலே லாரியை முந்திச்செல்ல முயன்றபோது, அதிக மழை பெய்துகொண்டிருந்தது. கடைசி நொடியில் பள்ளத்தை கவனித்து இடது பக்கம் சட்டெனத் திரும்பியதால் பலியானார். ஜாக்ருதி மீது 304(a) பிரிவில் (நிதானமில்லாமல் வாகனம் ஓட்டுதல்) வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் பைக் ஓட்டியபோது இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும். ஹெல்மெட் அணிந்து இருந்த காரணத்தினால், வலது புறம் திரும்பி இருந்தால், காப்பாற்றப்பட்டிருக்கலாம்'' என்று சொல்லியிருக்கிறார். 

JagrutiHogale

விபத்தினால் இறந்தவர் மீது வழக்குப் பதிவுசெய்யும் வினோதம் இந்தியாவில்தான் அரங்கேறும். இந்த விபத்து குறித்து மகாராஷ்டிரா மாநிலப் பொதுப் பணித்துறை அமைச்சர் சொன்ன கருத்து அதிர்ச்சி ரகம். “எல்லாச் சாலைகளும் பொதுப் பணி துறையின் கீழ் வராது. அரசு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைகளைச் சரிசெய்யும் பணி, மழை ஓய்ந்த பிறகு தொடங்கும்” என்று சொல்லியிருக்கிறார். 

மற்றொரு அமைச்சரான சந்திரகாந்த் பாட்டில், “மழையின் காரணமாக ஜாக்ருதி சென்ற சாலைச் சேரும் சகதியுமாக இருந்துள்ளது. இதனால், அவர் சென்ற இருசக்கர வாகனம் வழுக்கி விழுந்தது. பின்னால் வந்துகொண்டிருந்த லாரி அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். எனவே, இந்த விபத்து சாலையில் இருந்த குழியினால் நடைபெறவில்லை” என்று பொறுப்பான (?) விளக்கம் அளித்துள்ளார். 

 

இப்படியெல்லாம் பழி போடுபவர்கள், ரோடு போட்டு இருந்தால், இன்று ஒன்பது வயது சிறுவன் தாயில்லாமல் நின்றிருக்க மாட்டான். இயற்கை எழில் கொஞ்சும் நாடு இந்தியா. அந்த அழகிய காட்சிகளை நம் மனதில் பதிவுசெய்யும் வழிகளில் ஒன்று, மோட்டார் சைக்கிள் பயணம். ஆனால், ஒவ்வொரு முறை சாலையில் இறங்கும் முன்பு மறந்துவிடாதீர்கள். இந்த நாடு ஊழல் அரசியல்வாதிகளால் நிரம்பியது. சாலைகளில் குழி இருக்காது; குழிகளில்தான் சாலை இருக்கும். நீங்கள் உங்கள் பயணத்தை முடித்துவிட்டு உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களிடம் திரும்பி வேண்டும். எனவே, விழிப்புடன் இருங்கள். பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அப்ரிடியின் தொண்டு நிறுவனத்திற்கு தனது பேட்டை நன்கொடையாக வழங்கிய விராட் கோலி

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தான் கையெழுத்திட்ட பேட்டை நன்கொடையாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடியின் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.

 
 
அப்ரிடியின் தொண்டு நிறுவனத்திற்கு தனது பேட்டை நன்கொடையாக வழங்கிய விராட் கோலி
 
கிரிக்கெட்

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தான் கையெழுத்திட்ட பேட்டை நன்கொடையாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடியின் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி பரம எதிரிகளுக்கு இடையிலான மோதல் என்று வர்ணிக்கப்படும். மைதானத்திற்குள்ளேயும், வெளியேயும் வீரர்களும் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். இந்திய ரசிகர்களும், பாகிஸ்தான் ரசிகர்களும் அந்த கண்ணோட்டத்தில்தான் போட்டியை ரசிப்பார்கள்.

201708020136196874_1_4-Capture1._L_styvp

இரு அணிகளும் மோதும்போது ஒரு வீரர் சதம் அடித்தாலோ அல்லது சாதனை படைத்தாலோ எதிரணி வீரர்கள் உற்சாகமூட்டமாட்டார்கள். முறைத்துக் கொண்டேதான் இருப்பார்கள்.

ஆனால், இந்திய அணி கேப்டன் விராட் கோலி அதில் இருந்து சற்று மாறுபட்டு காணப்படுகிறார். மொகமது ஆமிர் தடைக்காலம் முடிந்து மீண்டும் விளையாட வந்த காலத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்தார். டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது.

அப்போது ஆமிருக்கு கோலி பேட்டை பரிசாக அளித்தார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பின்னரும், பாகிஸ்தான் வீரர்களுடன் விராட் கோலி சகஜமாக பேசிக் கொண்டிருந்தார். அதற்கு மேலாக டோனி, விராட் கோலி பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது மகனுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

201708020136196874_2_4-Capture2._L_styvp

பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரரும், முன்னாள் கேப்டனும் ஆன ஷாகித் அப்ரிடி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும், இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இந்திய வீரர்கள் அனைவருடைய கையெழுத்திட்ட தனது ஜெர்சியை பரிசாக வழங்கினார்.

தற்போது அப்ரிடி நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு தனது கையெழுத்திட்ட பேட்டை விராட் கோலி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
 
  • தொடங்கியவர்

 

'ILLUMINATI'-கள் இந்தியாவை ஆட்சி செய்தால்...| Jai Ki Baat | India 2.0

  • தொடங்கியவர்

சாலையில் மொபைல் போன் பயன்பாட்டுக்குத் தடைவிதித்த அமெரிக்க நகரம்!

 
 

மொபைல் போன்

 

மெரிக்காவிலுள்ள ஹவாய் மாகாணத்தின் ஹொனொலுலு நகரில், சாலையில்  நடக்கும்போது அலைபேசி பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடையை  மீறி  அலைபேசி பயன்படுத்துவோருக்கு,  15 முதல் 35 அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை, வரும் அக்டோபர் மாதம்  நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

இதுகுறித்து  ஹொனொலுலு நகர மேயர் கிர்க் கல்ட்வெல் கூறுகையில், “சாலையில் நடந்து செல்பவர்கள்  அலைபேசி பயன்படுத்துவதால், விபத்துகள் ஏற்படுகின்றன.  குறிப்பாக, இந்த விபத்துகளில் பெரும்பாலும் காயமடைவது முதியவர்களே! இது அமெரிக்காவில் வேறு  எந்த நகரத்திலும் இல்லாத அளவுக்கு, இந்த நகரத்தில் நடக்கிறது” என்று தெரிவித்தார். 

அவசர சேவைக்காக  அலைபேசி பயன்படுத்துவோர் மட்டும் இந்த தடையிலிருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம். 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், சாலையில் அலைபேசி  பயன்படுத்திக்கொண்டே நடந்துசென்ற காரணத்தால், 11,000 மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், நடைபாதையில் செல்லும்போது மொபைல் போன்  பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது தனி மனித உரிமையைப் பறிப்பதாக உள்ளது என அங்குள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ஆனால், லண்டன், ஜெர்மனி போன்ற  நாடுகளிலும் நடைபாதையில் நடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு எதிராக  பல நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

பொழுதுபோக்காக ஆயிரக்கணக்கான புறாக்களை வளர்க்கும் ரஷ்ய லட்சாதிபதி

ரஷ்யாவில் ஒரு காலத்தில் பரந்துபட்ட அளவில் பொழுதுபோக்காக இருந்த புறா வளர்ப்பு இப்போது பெரிதும் குறைந்துவிட்டது. எனினும் புறாக்களின் மீது பற்றுள்ள இரண்டு விதமான நபர்களை சந்தித்தது பிபிசி.

  • தொடங்கியவர்

'அறுபத்து நான்கே விநாடிகள்தான்!'- வேதியியலில் அசத்திய ஏழு வயது சிறுமி

 

வேதியியல் மூலக்கூறுகளை ஒப்புவிப்பதில் சாதனை படைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி நான்சி. 'அடுத்ததாக, கின்னஸ் சாதனைக்குத் தயாராக வேண்டும். மிகப் பெரிய ஆராய்ச்சியாளராக வேண்டும்' என உற்சாகத்தோடு பேசுகிறார் நான்சி. 

சாதனைச் சிறுமி

சென்னை, மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ்- லிசி பிரான்சிஸ் தம்பதியின் மகள் நான்சி. சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். விளையாட்டு, படிப்பு என ஆர்வம் இருந்தாலும், வேதியியல் மூலக்கூறுகளை ஒப்புவிப்பதை பொழுதுபோக்காகவே மாற்றிக்கொண்டார். அண்மையில், வேதியியலில் உள்ள 118 மூலக்கூறுகளையும் வரிசை மாறாமல் 64 விநாடிகளில் ஒப்புவித்து ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சாதனைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். இதையடுத்து, பைபிளில் உள்ள பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகியவற்றை ஒப்புவித்து சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ‘கண்டுபிடிப்புகளும் விஞ்ஞானிகளும்’ என்ற தலைப்பின்கீழ் ஒப்புவித்து கின்னஸ் சாதனை செய்ய இருக்கிறார். இதற்கான அனுமதிக்காக நான்சி காத்திருக்கிறார்.

நான்சியின் தாயார் லிசியிடம் பேசினோம். " சிறு வயதிலிருந்தே மிகுந்த சுட்டியாக இருப்பாள். ஒருநாள் தற்செயலாக இயற்பியலில் உள்ள நியூட்டன் விதி உள்ளிட்ட முக்கிய விதிகளைப் பற்றிக் கூறும்போது, அதை உடனடியாகப் புரிந்துகொண்டு திருப்பிக் கூறினாள். இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஆனால், இயற்பியல் விதிகளைவிட வேதியியல் மூலக்கூறுகளை ஒப்புவிப்பது அவளுக்கு எளிதாகிவிட்டது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் வேதியியல் மூலக்கூறுகளைக் கூறுவதில் ஆர்வத்தைக் காட்டினாள். பள்ளி ஆசிரியைகளும் நான்சியை ஊக்கப்படுத்தினர். ‘இந்தியன் ரெக்கார்ட்ஸ்’-க்கான சாதனையை எளிதாகக் கடக்க முடிந்தது. கின்னஸிலும் நான்சி சாதனை படைப்பாள்" என்றார், உற்சாகத்தோடு. 

 

நான்சியோ, "என் அம்மா கொடுத்த பயிற்சிதான் காரணம். எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆராய்ச்சியாளராக வர வேண்டும்" என்றார் நம்பிக்கையோடு. 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

ஓகஸ்ட் – 02

 

1610 : ஹென்றி ஹட்சன் தனது கடற் பய­ணத்தின் போது கன­டாவின் தற்­போ­தைய ஹட்சன் குடாவை அடைந்தார்.


1790 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் முதற் தட­வை­யாக மக்கள் தொகைக் கணக்­கெ­டுப்பு இடம்­பெற்­றது.


1798 : பிரெஞ்சு நைல் நதிப் போரில் பிரான்ஸை பிரித்­தா­னியா வெற்றி கொண்­டது.


1870 : உலகின் முத­லா­வது சுரங்க ரயில் சேவை லண்­டனில் தொடங்­கப்­பட்­டது.


varalaru---Iraq1903 : ஒட்­டோமான் பேர­ர­சுக்கு எதி­ராக மசி­டோ­னி­யர்­களின் கிளர்ச்சி தோல்­வியில் முடிந்­தது.


1914 : ஜேர்­ம­னியப் படை­யினர் லக்­ஸம்­பேர்க்கை முற்­று­கை­யிட்­டனர்.


1916 : முதலாம் உலகப் போர்: லிய­னார்டோ டாவ்­வின்சி என்ற இத்­தா­லியப் போர்க்­கப்பல் ஒஸ்­தி­ரி­யா­வினால் மூழ்­க­டிக்­கப்­பட்­டது.


1918 : முதலாம் உலகப் போரை அடுத்து சைபீ­ரி­யா­வுக்கு தனது படை­களை அனுப்­பப்­போ­வ­தாக ஜப்பான் அறி­வித்­தது.


1931: இரா­ணுவ வேலை­களை நிரா­க­ரிக்­கு­மாறு விஞ்­ஞா­னி­க­ளுக்கு ஐன்ஸ்டைன் அழைப்பு விடுத்தார்.


1932 : பொசித்­திரன் (இலத்­தி­ரனின் எதிர்த்­து­ணிக்கை) கார்ல் அண்­டர்சன் என்­ப­வரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.


1934 : அடோல்ஃப் ஹிட்லர், ஜேர்­ம­னியின் அதி­ப­ரானார்.


1939 : அணு ஆயு­தத்தை தயா­ரிக்க அறி­வு­றுத்­து­மாறு ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பிராங்­கிளின் ரூஸ்­வெல்ட்­டுக்கு கடிதம் எழு­தினர்.


1943 : போலந்தில் திரெ­பி­லிங்கா வதை முகாமில் நாஸி­க­ளுக்கு எதி­ராகக் கிளர்ச்சி இடம்­பெற்­றது.


1945 : இரண்டாம் உலகப் போர்: தோல்­வி­ய­டைந்த ஜேர்­ம­னியின் எதிர்­காலம் குறித்து விவா­தித்த நட்பு அணி நாடு­களின் பொட்ஸ்டாம் மாநாடு நிறை­வ­டைந்­தது.


1947 : ஆர்­ஜென்­டீ­னா­வி­லி­ருந்து சிலியை நோக்கிச் சென்ற விமா­ன­மொன்று மலைப்­ப­கு­தியில் விபத்­துக்­குள்­ளா­னது. இதன் சிதை­வுகள் 50 வரு­டங்­களின் பின்­னரே கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.


1968 : பிலிப்­பைன்ஸில் கசி­குரான் என்ற இடத்தில் இடம்­பெற்ற பூகம்­பத்தில் சிக்கி 270 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1973 : பிரிட்­டனின் “மான்” தீவில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இடம்­பெற்ற தீ விபத்தில் 51 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1980 : இத்­தா­லியில் ரயில் நிலை­யத்தில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 85 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1985 : அமெ­ரிக்­காவில் இடம்­பெற்ற விமான விபத்தில்  137 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1989 : யாழ்ப்­பாணம் வல்­வெட்­டித்­து­றையில் இந்­திய இரா­ணு­வத்­தினர் துப்­பாக்கிச் சூடு நடத்­தி­யதில் 63 பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர்.


1989 : 1972 ஆம் ஆண்டின் பின் பொது­ந­ல­வாய அமைப்பில் பாகிஸ்தான் மீண்டும் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டது.


1990 : குவைத்தின் மீது ஈராக் படை­யெ­டுத்­தது.


1998 : இரண்டாவது கொங்கோ யுத்தம் ஆரம்பமாகியது.


2014 : சீனாவின் ஷாங்காய் நருக்கு அருகில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் 146 பேர் உயிரிழந்தனர். மேலும் 114 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

 

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது எப்படி?

இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் பெற்ற நிலையில், பிரிட்டிஷிடம் இருந்த சுதந்திரம் பெற்ற இந்தியா இரு நாடுகளாக பிரிந்தது எவ்வாறு என்பதை விளக்கும் காணொளி.

  • தொடங்கியவர்

VODKA வை இதுக்கு எல்லாம் பாவிக்கலாம்

  • தொடங்கியவர்
‘அன்பான இதயத்தை வதைத்தலாகாது’
 

image_b00d5a1ed0.jpg“மிகவும் வலிந்து, உறவினர்களிடம் பாசத்தைக் காட்டினாலும் அவர்கள் எமது செய்கையைப் புறந்தள்ளுகிறார்களே” எனக் குமைபவர்களை நீங்கள் கண்டிருப்பீர்கள். தூய அன்பைச் சேய்மையில் வைத்தலாகாது. 

தங்களிடமிருந்து எதையாவது பெற்றுக் கொள்ளவே, கபட நாடகம் ஆடுவதாக, விசமத்தனமான எண்ணங்களை வைத்து, உறவுகளை உதறுபவர்கள் கறை படிந்த பிரகிருதிகளே. 

இன்னும் சிலர் அழகற்றவர்களை, பார்வைக்கு எளிமையானவர்களை தரங்குறைந்தவர்களாகவே கருதுவதுமுண்டு. 

மானசீகமான அன்பை, புரியாது விட்டால் நெஞ்சம் நைந்து சோர்ந்துவிடும். பெற்றதாய், தந்தைக்கு முதுமை வந்தால் அவர்களைச் சீண்டாத பிள்ளையாக உள்ளனர். ஆனால், பெற்றோர்களால் பிள்ளைகளை வெறுக்க முடிவதில்லை. தனிமையில்வாடும் பெற்றோர் ஏராளம். 

ஒருவரின் தன்மையறியாமல் உறவு பாராட்டக் கூடாது. இத்தகையோரின் உறவை, உரிமையுடன் கருதுவதால் பலத்த அவமானம் நேரலாம். அன்பான இதயத்தை வதைத்தலாகாது! வதைத்தலாகாது. 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 03
 
 

article_1438576559-Volcano300.jpg1783: ஜப்பானில் அஸாமா எரிமலை வெடித்ததால் 35,000 பேர் பலி.

1914: பிரான்ஸுக்கு எதிராக ஜேர்மனி போர்ப் பிரகடனம் செய்தது.

1936: ரஷ்யாவில் ஏற்பட்ட தீவிபத்தினால் 1200 பேர் பலி.

1960: பிரான்ஸிடமிருந்து நைகர் சுதந்திரம் பெற்றது.

1975: மொரோக்கோவில் இடம்பெற்ற விமான விபத்தில் 188பேர் பலி.

2005: ஈரானில் மஹ்மூத் அஹ்மடிநெஜாத் ஜனாதிபதியானார்.

2010: பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஏற்பட்ட வன்முறைகளில் 85பேர் பலி. 20 கோடி டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம்.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

பேஸ்புக்கில் நடமாடிய பாம்பு – உண்மையில் நடந்தது இதுதான்!

 
பேஸ்புக்கில் நடமாடிய பாம்பு – உண்மையில் நடந்தது இதுதான்!
 

சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் கடந்த சில நாள்களாக காட்டுத்தீ போல் பரவிய விடயமென்றால் பேஸ்புக் பாம்பு என்பது பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அனைவரும் அறிந்த விடயம்.

பேஸ்புக் பக்கங்களில் பேசப்பட்ட குறித்த பாம்பு பற்றிய தகவல் பொய்யானது. “ரேன்” (#Ran) என்று பதிலளித்தால் (கமென்ட்) செய்தால் பாம்பு தோன்றும் என்று பல பேஸ்புக் பக்கங்கள் பதிவிட்டிருந்தன. எனினும் அது பொய்யான தகவலாகும்.

இது “ஸ்நெக் ஒன் ஸ்க்ரீன் ஜோக்” (Snake on Screen Joke) எனும் அப் ஆகும். இந்த அப் ஐ உங்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்த பிறகு “ஸ்ராட்”(start) செய்து “சோவ் ஸ்நெக்” (show snake) என்ற பகுதிக்கு சென்று அழுத்தினால் இந்த பாம்பு உங்களது தொலைபேசி முகப்பில் தோன்றும்.

பாம்பு மட்டுமல்ல கரப்பான் எலி மீன் போன்ற பல உயிரினங்களை பயன்படுத்தி இந்த அப் உருவாக்கப்பட்டிருக்கிறது.

http://uthayandaily.com

  • தொடங்கியவர்

இடம் பொருள் மனிதர் விலங்கு: ஒரு ஹிபாகுஷாவின் கதை

 

2chsujidamporuljpg

ஓவியங்கள்: லலிதா

2chsujidamporul1jpg
2chsujidamporuljpg

ஓவியங்கள்: லலிதா

சு

டோமு யமாகுச்சி என்று சொன்னால், ஓ அவரா தெரியுமே என்று நாம் சொல்ல மாட்டோம். ஆனால், நாம் மறந்தாலும் வரலாறு ஒரு நாளும் அவரை மறக்காது. ஏனென்றால், அவர் ஒரு ஹிபாகுஷா. அதுவும் சிறப்பு வாய்ந்த ஹிபாகுஷா. அப்படியென்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன்னால் அவருடைய கதை.

6, ஆகஸ்ட் 1945. உற்சாகமாக டிராம் வண்டியில் சென்றுகொண்டிருந்தார் சுடோமு யமாகுச்சி. அலுவலக வேலையாக அன்று அவரை ஹிரோஷிமாவுக்கு அனுப்பியிருந்தார்கள். அப்போது அவருக்கு இருபது சொச்ச வயது. மிட்சுபிஷி என்னும் புகழ்பெற்ற ஜப்பானிய நிறுவனத்தில் இன்ஜினீயர் வேலை. படித்து முடித்தவுடன் வேலை, நல்ல சம்பளம்.

வண்டி நின்றது. தனது பையை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார். அவருக்குத் தெரிந்த நகரம்தான் அது. சுற்றிலும் ஒருமுறை பார்த்தார். இன்று எவ்வளவு நேரம் வேலை இருக்கும்? எவ்வளவு ஓய்வு கிடைக்கும்? ஓய்வு கிடைத்தால் எங்கே போகலாம்? என்ன சாப்பிடலாம்? - யோசனையுடன் நடக்க ஆரம்பித்தார். முதல் அடி எடுத்து வைத்திருப்பார், அவ்வளவுதான்.

எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இதுவரை கேட்காத அளவுக்கு ஒரு பெரிய சத்தம். நிலம் அதிர்ந்தது. ஒருவேளை நிலநடுக்கமாக இருக்குமோ? ஜப்பானுக்கு நிலநடுக்கம் இயல்புதான் என்றாலும் காதைப் பிளக்கும் அளவுக்கு இவ்வளவு பெரிய சத்தம் கேட்காதே. யமாகுச்சி பயத்துடன் மேலே பார்த்தார்.

திடுக்கிட்டார். வானம் நகர்ந்து சென்றுகொண்டிருந்தது. நிலநடுக்கம் என்றால் நிலம் சட்டென்று நகர்ந்து விரிசல்கள் தோன்றும். சில கட்டிடங்கள் இடிந்து கீழே விழும். ஆனால், வானம் ஏன் நகர்கிறது? வானத்தில் ஏன் விரிசல் விழுகிறது. உண்மையில் வானம் அல்ல மேகங்கள்தான் நகர்ந்துகொண்டிருந்தன. யமாகுச்சி உற்றுப் பார்த்தார். சில மேகங்கள் அடர்த்தியான கறுப்பு நிறத்தில் இருந்தன. சில மேகங்கள் மெல்லிய சிவப்பு நிறத்தில் இருந்தன. இந்த இரண்டு மேகங்களும் ஒன்றுசேர்ந்தபோது கோன் ஐஸ்க்ரீம் உருவம் உருவானது. கிட்டத்தட்ட குடைபோல் அது விரிந்தது.

அதற்குப் பிறகு யமாகுச்சியால் எதையும் பார்க்க முடியவில்லை. விழித்து விழித்துப் பார்த்தார். கண் தெரியவில்லை. கசக்கினார். எரிந்தது. கை, கால், உடல் எல்லாம் எரிச்சல். காதைப் பொத்திக்கொண்டாலும் ஓயாமல் சத்தம். யார் யாரோ கத்தியபடி ஓடினார்கள். ‘டம டம’ என்று கட்டிடங்கள் இடிந்துகொண்டிருந்தன. யமாகுச்சி ஓட ஆரம்பித்தார். கீழே மனிதர்கள் இறந்து கிடந்தார்கள். அவருக்கு அது தெரியாது. அவர் பயத்துடன் ஓடிக்கொண்டிருந்தார். அவரது இடது காதிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

லிட்டில் பாய் என்னும் அணுகுண்டை ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசியிருந்தது பிறகுதான் அவருக்குத் தெரியவந்தது. அன்றைய தினம் மட்டும் 1,60,000 ஜப்பானியர்கள் கொல்லப்பட்டிருந்தனர் அல்லது காயமடைந்திருந்தனர். யமாகுச்சி இருந்த இடத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் குண்டு விழுந்திருந்தது. மறுநாள் காலை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பேருந்து நிலையத்துக்கு ஓடினார் யமாகுச்சி.

ஆனால், அவருக்கு ஒரு விஷயம் தெரியாது. மற்ற வெடிகுண்டுகளைப் போன்றதல்ல அணுகுண்டு. அதன் கதிர்வீச்சு நாலாபுறமும் பரவிக்கொண்டிருக்கும். நீங்கள் ஓடினாலும் அது உங்களைத் துரத்திக்கொண்டிருக்கும். யமாகுச்சியைக் கதிர்வீச்சு தாக்கியது. ஆனால், அதை அவர் உணரவில்லை. எப்படியாவது வீட்டுக்குப் போய்விட வேண்டும். அது ஒன்று போதும்.

அவருடைய வீடு இருந்தது எங்கே தெரியுமா? நாகசாகியில். சரியாக இரண்டே தினங்களில், ஆகஸ்ட் 9 அன்று அங்கும் ஓர் அணுகுண்டு வீசப்பட்டது. ஹிரோஷிமாவில் என்னவெல்லாம் நடந்ததோ, அதெல்லாம் மீண்டும் நாகசாகியிலும் நடந்தது. அதேபோன்ற மேகங்கள். பயமுறுத்தும் அதே குடை. அதே சத்தம். அதே கதறல். அதே ஓட்டம். கட்டிடங்களும் மனிதர்களும் போட்டி போட்டுக்கொண்டு சரிந்து விழுந்துகொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட 70,000 பேர் இறந்துபோயிருந்தார்கள்.

ஒரே ஒரு வித்தியாசம்தான். ஹிரோஷிமாவில் விழுந்த குண்டின் பெயர் லிட்டில் பாய் என்றால் நாகசாகியில் விழுந்தது ஃபேட் மேன். இரண்டுமே வேடிக்கையான பெயர்கள். ஆனால், பல லட்சம் பேரின் அழிவுக்கு இந்த இரண்டும் காரணமாகிவிட்டன. அத்தோடு முடிந்ததா? கதிர்வீச்சு காரணமாகப் பல ஆண்டுகள் கழித்தும் ஜப்பானியர்கள் கடும் துயரத்தை அனுபவித்தார்கள்.

யமாகுச்சியும்தான். நிஜமாகவே பாவம் அவர். லிட்டில் பாயிடம் இருந்து தப்பி ஓடி வந்து, ஃபேட் மேனிடம் மாட்டிக்கொண்டார். இந்த முறையும் அவர் பிழைத்துக்கொண்டார். இன்னொன்று தெரியுமா? ஹிரோஷிமாவில் நடந்ததைப் போலவே நாகசாகியிலும் மிகச் சரியாக அவர் இருந்த இடத்திலிருந்து மூன்று கி.மீ. தள்ளி குண்டு விழுந்தது. பிறகு, 2010-ம் ஆண்டு தனது 94-வது வயதில் புற்றுநோய் காரணமாக யமாகுச்சி இறந்துபோனார். அந்த நோய்க்கான காரணம், ஹிரோஷிமாவும் நாகசாகியும்தான்.

சரி, அதென்ன ஹிபாகுஷா? அமெரிக்க அணுகுண்டுகளிடம் இருந்து தப்பி உயிர் பிழைத்தவர்கள் ஜப்பானிய மொழியில் இப்படித்தான் அழைக்கப்படுகிறார்கள். அப்படியானால் சுடோமு யமாகுச்சி ஓர் இரட்டை ஹிபாகுஷா, இல்லையா?

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

2100-ல் இங்கெல்லாம் வாழவே முடியாதாம்!

 
 

அதிக மக்கள்தொகைகொண்ட தெற்கு ஆசியாவில், வெப்பநிலை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தினால், இந்த நூற்றாண்டின் (2100) இறுதியில் இங்கு வசிக்கவே முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகும் என்று, புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. 

2100, தெற்கு ஆசியா,


ஆஃப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கியது தெற்கு ஆசியா. தெற்கு ஆசியாவின் மக்கள் தொகையில் 4 சதவிதத்தினர், மோசமான ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை காரணமாக 2100-ல் ஏசி இல்லாமல் மனிதர்கள் உயிர் வாழவே முடியாது என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

தற்போது, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய தெற்கு ஆசியாவில், மிக அதிக அளவிலான ஆரோக்கியமற்ற வெப்பநிலையால், இந்தப் பகுதியின் மக்கள் தொகையில் 15 சதவிகிதத்தினரை  மிகவும் கடுமையாகப் பாதித்துள்ளது.

 

2015-ல், மோசமான வெப்ப அலையால் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். இதுபோன்ற பல ஆபத்தான  வானிலை நிகழ்வுகள் நிலவுவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் தெற்கு ஆசியாவில் வாழவே முடியாத சூழ்நிலை உருவாகும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கண்ணால் நம்பமுடியாத புகைப்படங்கள் ; புலி சுறாக்கள் ஒரு பெரிய மீன்களின் சூழலில் நீந்துகின்றன

 

கண்ணால் நம்பமுடியாத புகைப்படங்கள் ; புலி சுறாக்கள் ஒரு பெரிய மீன்களின் சூழலில் நீந்துகின்றன

...
...
...
...
...
...
...
...
...

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

'24 மில்லியன் கறுப்பினப் பெண்களுக்காக இதை எழுதுகிறேன்'- செரினா ஆவேசம்

 
 

கருப்பினப்

'கறுப்பினப் பெண்களுக்கு சம ஊதியம் வேண்டும்' என்று டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கட்டுரை எழுதியுள்ளார். அதில், ‘‘ஊதிய இடைவெளி, கறுப்பினப் பெண்களை மிகவும் மோசமாகப் பாதிக்கிறது. 'நான் வளரும்போது, நான் ஒரு பெண் என்பதாலும் என் தோலின் நிறத்தாலும் என் கனவுகளை என்னால் அடைய முடியாது என்று என்னிடம் கூறப்பட்டது. அமைப்பு ரீதியிலான சமநிலையின்மை, எல்லா வகையான வேலைகளையும் செய்யும் கறுப்பினப் பெண்களைப் பாதிக்கிறது. இதற்குக் காரணம், கறுப்பினப் பெண்கள் குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்படும் வேலைகளைச் செய்கிறார்கள் என்பதல்ல. தொழில்நுட்பம், நிதி, பொழுதுபோக்கு, சட்டம், மருத்துவம் ஆகிய துறைகளிலும் அவர்கள் குறைந்த ஊதியமே பெறுகின்றனர். பட்டப்படிப்பு முடித்துள்ள கறுப்பினப் பெண்களும், எல்லா நிலையிலும் குறைந்த ஊதியமே பெறுகின்றனர். 

சிலிக்கான் பள்ளத்தாக்கில் இருப்பது போன்ற நிலையே, பிற நகரங்களிலும் நிலவுகிறது. என் கற்பனைக்கு அப்பாற்பட்ட, அரிதானதொரு பொருளாதார வெற்றியை நான் அடைந்துள்ளேன். ஆனால், அமெரிக்காவில் உள்ள 24 மில்லியன் கறுப்பினப் பெண்களுக்காக நான் இதை எழுதுகிறேன். டென்னிஸ் ராக்கெட்டை கைகளில் எடுத்திருக்காவிட்டால், நானும் அந்தப் பெண்களில் ஒருத்தியாகவே இருந்திருப்பேன். வறுமை, பாகுபாடு, பாலின பேதம் ஆகிய சுழல்களை நொறுக்குவது, கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வெல்வதைவிடக் கடினமானது. 

 

இந்நிலையைப் போக்க, அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடு, சட்டங்கள், பணியமர்த்துபவரின் அங்கீகாரம் மற்றும் அதிக ஊதியம் கேட்பதற்கான பணியாளரின் துணிச்சல் ஆகியவை வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், இதை நாம் அனைவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நிறம், இனம், மதம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து, ஆண்களும் பெண்களும் இதை ஒரு அநீதி என்பதை உணர வேண்டும். கறுப்பினப் பெண்களே, துணிச்சல் மிக்கவர்களாக இருங்கள். சம ஊதியத்துக்காக வெளிப்படையாகக் குரல் கொடுங்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் அதைச் செய்யும் போது, உங்களுக்குப் பின்னால் வரும் பெண்களின் போராட்டம் சுலபமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் அந்த ஊதியத்தைப் பெறத் தகுதியானவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்’’ என்று கூறியுள்ளார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

'ஹாரர் படம், ரொமான்ஸ் நாவல்லாம்... ஐ லவ் இட்!’ - ஓவியா பெர்சனல்

 
 

`நாளை எதுவும் நடக்கும். இந்த நொடி சந்தோஷமாக இரு!' இந்தப் பொதுமொழி, நடிகை ஓவியாவுக்குப் பொருந்தும். நடிகையாக ஒரு படியைக் கடந்தவர், `பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் பல படிகளைக் கடந்துவிட்டார். `ஐ சப்போர்ட் ஓவியா', `ஓவியா ஃபார் சி.எம்', `ஓவியா புரட்சிப்படை' என நெட்டிசன்களின் இப்போதைய விளையாட்டுப்பொருள் இவர்தான். 

கேரளாவில் பிறந்த ஓமணப்பெண்; பி.ஏ பட்டதாரி. ஐந்தரை அடி அழகி. ஒரிஜினல் பெயர் ஹெலன். சினிமாவுக்காக `ஓவியா' எனப் பெயர் மாற, இப்போது `ஓவியா ஹெலன்' ஆகிவிட்டார். மாடலிங் மீதான ஆர்வம், சில `ராம்ப் ஷோ'க்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பைக் கொடுத்தது. விளம்பரங்களுக்கு போஸ் கொடுக்கும் வேலையை ஆர்வமாகச் செய்தார். சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது கனவு கிடையாது. குடும்பப் பின்னணியில் சினிமாவும் கிடையாது. `எதுவும் நடக்கட்டும், முயற்சி பண்ணுவோம்' என்றுதான் ஆடிஷனில் கலந்துகொண்ட ஓவியா, `கங்காரு' என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிகை ஆனார். 

ஓவியா

`நடிக்கணும்னு முடிவெடுத்தாச்சு, இறங்கிப் பார்ப்போம்' என முடிவெடுத்துதான் `களவாணி' ஆடிஷனில் கலந்துகொண்டார். மகேஸ்வரி கேரக்டர், மாற்றத்தைக் கொடுத்தது. சிறந்த புதுமுக நடிகைக்கான விருது பெற்றார். கூடவே அரை டஜனுக்கும் அதிகமான பட வாய்ப்புகளையும். 

நடிப்பில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், நடிகையாக அறிமுகமான பத்து வருடங்களில் 25-க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டார். அப்போதெல்லாம் கிடைக்காத ஆதரவும், வரவேற்பும், ரசிக்கும் மனோபாவமும் `பிக் பாஸ்' என்ற ஒரு நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவுக்குக் கிடைத்திருக்கின்றன. `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஓவியாவின் அணுகுமுறை கட்டிப்போடுகிறது, யாரையும் அதிகம் விமர்சனம் செய்வதில்லை, தனக்குப் பிடிக்காததை வெளிப்படையாகப் பேசுகிறார், நண்பரோ... எதிரியோ எந்தக் கருத்தையும் நேரடியாகப் பேசுகிறார், மழையில் நனைகிறார், டான்ஸ் ஆடுகிறார்... இன்னும் பல நிகழ்வுகள் மூலம் மனதில் கரைகிறார். `இதெல்லாம் நடிப்பு' என ஓவியாவின் அணுகுமுறையை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. ஏனெனில், அவரது பேட்டிகளையும் கடந்தகால நிகழ்வுகளையும் புரட்டினால், ஓவியாவின் மறுமுகம் பளீரெனப் பிரகாசிக்கிறது. அந்தப் பிரகாசத்தில் சந்தோஷம் இருக்கிறது; சோகமும் கலந்திருக்கிறது.

Oviya

பேசிக்கொண்டே இருப்பது ஓவியாவுக்குப் பிடிக்கும். `கலகலப்பு' படத்தின் ஷூட்டிங் சமயத்தில் விமலுக்கும் ஓவியாவுக்கும் கெமிஸ்ட்ரி வொர்க்-அவுட் ஆனதாகக் கிசுகிசுத்துக்கொண்டிருக்க, ஓவியாவோ சகநடிகை அஞ்சலியுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார். `சினிமாவுல உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட் யாருனு கேட்டா, அஞ்சலினு சொல்வேன்!' என சியர்ஸ் காட்டியிருக்கிறார். ஓவியாவுக்குத் தனிமை பிடிக்கும். தனிமையில் பேசுவது ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஜாலி மூடில் இருக்கும்போது நிலைக்கண்ணாடியைப் பார்த்து, அவருக்கு அவரே பேசிக்கொள்வாராம். `கேரவனில் யாரும் இருக்க மாட்டாங்க. ஆறுதலோ, பாராட்டோ... கண்ணாடியைப் பார்த்து எனக்கு நானே பேசிக்குவேன்!' - சொன்னது ஓவியாவேதான்! 

நடிகைகளுக்கு ஃபிட்னெஸ், அழகு ரொம்ப முக்கியம். ஆனால், உடற்பயிற்சியோ, டயட்டோ ஓவியாவுக்கு `ஓவர்டோஸ்' ஃபீலிங்தான். சாப்பிடப் பிடிக்கும் என்பதால், விதவிதமாகச் சாப்பிடுவார். அம்மா சமைக்கும் பிரியாணியும் மீன்குழம்பும் ஓவியாவின் ஃபேவரைட். சென்னைக்கு வந்த பிறகு பொங்கல், வடை விரும்பிச் சாப்பிடுவாராம். `எது சாப்பிட்டாலும் குண்டாக மாட்டேன். இயற்கையாகவே என் உடல்வாகு இப்படியே இருக்கு!' எனக் காரணம் சொல்கிறார்.

வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும்; விருதுகளைக் குவிக்க வேண்டும்... என்பதெல்லாம் ஓவியாவின் இலக்கு அல்ல. `ரசிகர்களுக்குப் பொழுதுபோகணும். அந்தப் பொழுதுபோக்குல நானும் இருக்கணும்' என்பார். கூடவே, `விருதுகளுக்காக நான் படம் நடிக்க மாட்டேன். என் நடிப்புக்கு விருதுகள் கிடைச்சா ஏத்துக்குவேன்' எனச் சொன்ன `கெத்து' பொண்ணு. 

நடிகர்களோடு ஒப்பிட்டுப் பேசுவதையும், தன்னைப் பற்றிய நெகட்டிவ் கருத்துகளையும் கேஷுவலாகக் கடந்துபோகும் பக்குவம் முதல் படத்தில் நடிக்கும்போதே இவருக்கு இருந்தது. `என்னைப் பற்றிய பாசிட்டிவ் கருத்துகளைவிட, நெகட்டிவ் கருத்துகளைத்தான் அதிகம் கவனிப்பேன். ஏனெனில், என்னைப் பிடிக்காதவங்கதான் நான் மாற்றிக்கொள்ளவேண்டிய விஷயங்களைச் சுட்டிகாட்டுவாங்க!' என்றார். 

Oviya

`யாருடைய படத்தில் நடிக்க வேண்டும்?' என நடிகைகளிடம் கேட்டால், கேள்வியின் முற்றுப்புள்ளிக்குக் காத்திருக்காமல் பல இயக்குநர்களின் பெயர்களைப் பட்டியலிடுவார்கள். `பிடித்த இயக்குநர் யார்?' என்றால், `அவங்க படத்துல நான் நடிக்கணும்கிறதுக்காக சொல்லலை...' என அழுத்திச் சொல்லிவிட்டு ஷங்கர், மணிரத்னம், கெளதம் மேனன் பெயர்களைச் சொன்னார். `ஒரு பாலிவுட் படத்தில் நடித்தீர்களே..?' எனக் கேள்வியை முடிப்பதற்குள், `கால் பண்ணாங்க. சும்மா ட்ரை பண்ணலாமேனு போய் நடிச்சேன். அங்கேயே செட்டில் ஆகணும்னு எல்லாம் ஆசை கிடையாது. எனக்கு தமிழ் சினிமாதான் பிடிச்சிருக்கு!' பட்டெனப் பதில் சொன்னார். 

`பிடித்தது எது?' என்றால் பட்டியல் நீளும். ஹாரர் படங்களின் அதிதீவிர ரசிகை. அரசியல் தெரியாது. ஆனால், காங்கிரஸ் கட்சி பிடிக்கும். ரொமான்ஸ், காமெடி நாவல்களை விரும்பிப் படிப்பார். நாய்கள் மீது ஓவியாவுக்கு ப்ரியம் அதிகம். அவருடைய செல்ல நாய்க்குட்டியின் பெயர், `அப்பு'. தனிமையில் இசை கேட்பது ஓவியாவின் அலாதியான ஹாபிகளில் ஒன்று. வாழ்வின் அந்த நிமிடத்தை மகிழ்ச்சியாகக் கடக்க விரும்பும் இவருக்கு, அம்மா ஜான்சிதான் முழு பலம்! 

ஓவியா, வீட்டில் ஒரே பெண். அம்மா ஜான்சி ஓவியாவை `லட்டு' என்றுதான் அழைப்பாராம். படிப்பு ஏறாமல் அம்மாவிடம் அடிவாங்கிய அனுபவம் ஓவியாவுக்கு உண்டு. வளர்ந்த பிறகு ஓவியாவுக்கு என்ன பிடிக்குமோ, அதைச் செய்ய அனுமதித்தார் தாயார் ஜான்சி. பத்து வருடங்களில் 25-க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டார். இதில் பல படங்களில் காமாசோமா வகையான படங்கள் என்றாலும், தொடர்ந்து நடிகையாகத் தக்கவைத்துகொள்ள அவர் எடுத்த முயற்சிகளுக்குப் பின்னால், அம்மா கேன்சர் நோயால் மரணம் அடைந்த சோகக் கதை இருக்கிறது. 

நடிகை ஓவியா

`அம்மா எனக்குப் பிடிக்கும். மோசமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தப்போகூட ரொம்ப கேஷுவலா இருந்தாங்க. அந்தத் தைரியம்தான், என்னை இப்பவும் வழிநடத்திக்கிட்டிருக்கு!' என நெகிழும் ஓவியாவுக்கு, `கோபம் கொஞ்சமா வரும். எதுக்கும் சட்டுனு உணர்ச்சிவசப்பட மாட்டேன். மூஞ்சியை சோகமா வெச்சுக்கவும் தெரியாது. ஜாலி டைப்பாவே வளர்ந்துட்டேன். எப்பவும் சிரிச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கணும். அதுதான் என் ஆசை, கனவு, லட்சியம் எல்லாமே!' என சிம்பதி உருவாக்காமல், வலியைக் கடக்கும் பக்குவம் இருக்கிறது.

`பிக் பாஸ்' நிகழ்ச்சியில் தனக்குப் பிடிக்காத விஷயங்களை வலிக்காத அளவுக்குச் சொல்கிறார். எல்லோரும் தனக்கு எதிராகப் பேசிக்கொண்டிருக்க, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடந்துபோகிறார். யாரைப் பற்றியும் அவதூறு பேசிக்கொண்டிருக்காமல், சூழலை தனக்கான இடமாக்கிக்கொள்கிறார். `பிக் பாஸ்' தொடங்கும்போது கமல் கேட்ட `ஏன் இங்கே வந்தீங்க?' என்ற கேள்விக்கு `சந்தோஷமா இருக்கலாம்னு வந்தேன்!' எனப் பளிச் பதில் சொன்னார் ஓவியா. 

 

தன் அணுகுமுறையை ஓவியா ரசிக்கிறார்... ஓவியாவின் அணுகுமுறையை நாம் ரசிக்கிறோம்!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.