Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இணையத்தில் வைரலாகும் விவேகம் பட ஆல்பம் ப்ரிவியு..!

 

அஜித்குமார் நடிக்கும் விவேகம் படத்தின் ஆல்பம் ப்ரிவியு வெளியாகியுள்ளது. இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

vivegam-poster-story_050117112549_23028.


சிவா - அஜித் காம்போவில் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் உருவாகியுள்ள படம் விவேகம். அனிருத் இசையமைத்துள்ளார். காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் படத்தைத் தயாரித்துள்ளனர். ஏற்கெனவே இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அஜித் ரசிகர்கள் படத்தின் ரிலிஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் ஆகஸ்ட் 24-ம் தேதி ரிலிஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்துக்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்று வழங்கியுள்ளனர். படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், தற்போது படத்தின் ஆல்பம் ப்ரிவியு வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

 
  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 04
 
 

mutur_massacre.JPG1914: பெல்ஜியம் மீது ஜேர்மனி படையெடுத்தது. பதிலுக்கு ஜேர்மனி மீது பிரிட்டன் போர்ப் பிரகடனம் செய்தது. நடுநிலை வகிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

1916: ஜேர்மனி மீது லைபீரியா போர்ப் பிரகடனம்

1924: சோவியத் யூனியன் - மெக்ஸிகோ ராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகின.

2006: மூதூரில் பிரெஞ்சு தொண்டர் அமைப்பான ஏ.சி.எவ் ஐ சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

சுயம் தேடும் பெண்களுக்கான நாள் இந்நாள்! #SingleWorkingWomensDay

 
 

single women

மகளிர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் எனப் பல தினங்கள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, அந்த நாளிலாவது அவர்களின் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு, அவர்கள் நமக்காகச் செய்யும் தியாகங்களை உணர்ந்துகொண்டு, நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே. அதுபோல ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 4, Single Working Women’s Day கடைப்பிடிக்கப்படுகிறது. தனித்து வாழ்ந்தவாறு தங்களின் வாழ்வாதாரத்துக்காக உழைக்கும் பெண்களைப் போற்றும் நாள் இது. 

இதற்கெல்லாம் ஒரு தினம் கொண்டாட வேண்டுமா எனத் தோன்றலாம். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உலகமே கைக்குள் வந்துவிட்ட இன்றும், நம் சமூகத்தில் ஒரு பெண் தனித்து வாழ்ந்துவிடுவது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. அவர்கள் வேலைக்கும் செல்பவர்களாக இருந்தால் இரட்டைச் சவால்களைச் சந்திக்க வேண்டும். திருமணமாகியும் வேலைக் காரணமாக வேறு ஊரில் இருப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், விவாகரத்தானவர்கள் என அனைவரும் இதில் அடங்குவர். தங்கள் துறையில் சாதனைப் படைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் பெண்களும் உண்டு. 

ஓர் ஆண் சுயமாக இயங்கும்போது, அவர் தனித்து வாழ்கிறார் என யாரும் சொல்வதில்லை. ஆனால் ஒரு பெண் சுயமாக தன் சொந்த உழைப்பில் வாழும்போது, தனித்து வாழ்கிறாள் எனச் சமூதாயத்தினரால் ஒதுக்கப்படுகிறார். விவாகரத்தான ஆண், ஓர் அலுவலகத்தில் வேலைப் பார்ப்பதற்கும், விவாகரத்தான ஒரு பெண் அதே அலுவலகத்தில் வேலைப் பார்ப்பதற்கும், அவர்கள் செய்யும் வேலையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், சுற்றியுள்ளவர்கள் பார்க்கும் பார்வையில் நிச்சயமாக வித்தியாசம் இருக்கிறது. 

ஓர் ஆண், தான் சாதிக்க நினைக்கும் துறையில் தனக்கான முத்திரையைப் பதிப்பதற்காக, திருமணத்தைத் தாமதமாக செய்ய எண்ணும்போது அவர் முதுகில் தட்டிக்கொடுக்கிறது சமூகம். ஆனால், ஒரு பெண் அதையே நினைக்கும்போது அவளை ஊக்கப் படுத்துவதில்லை. குடும்பத்தினரால் தினம் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. வெளியிலோ தரக்குறைவான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன என்பது நிதர்சனமான உண்மை. 

single women

அத்தகைய பெண்களை ஊக்கப்படுத்தவும் போற்றி கௌரவிக்கவும், பார்பரா பெயின் என்பவரால் 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் single working women’s day. சிகாகோவைச் சேர்ந்த பார்பரா பெயின் (Barbara Payne), சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக யாருடைய துணையும் இல்லாமல் சுயமாக வேலைப் பார்த்துவருபவர். ஒரு ஈஸ்டர் தினத்தன்று தன் தோழிகளுடன் ஸ்ட்ராபெரி பழங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சிந்தனையின் உருவானதுதான் இந்தத் தினம். 

காதலர் தினம், நண்பர்கள் தினம் இருப்பதுபோல தங்களைப் போன்ற பெண்களை கௌரவிக்கும் ஒரு தினத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என நினைத்தார் பார்பரா. Single Working Women Affiliate Network (SWWAN) என்ற அமைப்பை உருவாக்கினார். ஆகஸ்ட் 4-ம் தேதியை single working women’s day எனவும், அந்த வாரம் முழுவதையும் single working women’s week எனவும் ஏற்படுத்தினார். 

இந்தத் தினத்தை பிறந்தநாள் விழாபோல பிரமாண்டமாக கொண்டாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமக்குத் தெரிந்த, தங்கள் சொந்த உழைப்பில் வாழும் பெண்களுக்கு மனதார வாழ்த்து தெரிவிப்போம். அவர்கள் நம் சமூகத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என உணர்வோம். அவர்களிடம் அன்பாகப் பேசினாலே போதும். ஒட்டுமொத்த பெண்களையும் போற்றும் பெண்கள் தினம் இருப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமானது, தன்னம்பிக்கையுடன் சுயமாக வாழும் பெண்களைப் போற்றும் இந்த நாள். 

 

சுயம் தேடி நடக்கும் பெண்களே... சிகரம் தொட வாழ்த்துகள்! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

38p1.jpg

* உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறார் அமேஸான் நிறுவன அதிபர் ஜெஃப் பிஸோ. மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 90.7 பில்லியன் டாலர். போட்டியில்  அவரை முந்திய ஜெஃப் பிஸோவின் சொத்து மதிப்பு 90.9 பில்லியன் டாலர். அமேசானில் பொருள்களை வாங்குவோர், விற்போரின் எண்ணிக்கை பல மடங்கு உயர, ஜெஃப்பின் பேங்க் பேலன்ஸும் உயர்ந்துகொண்டே போகிறதாம். ஷாப்பிங் மன்னன்!

39p1.jpg

* படங்களில் நடிப்பதற்கான சம்பளத்தைவிட விளம்பரங்களில் நடிக்க அதிக சம்பளம் வாங்குகிறார் நயன்தாரா. தற்போது வெளியாகி இருக்கும் டி.வி விளம்பரத்துக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளமாம். நீ நடத்து கண்ணு!

* அக்டோபரில் கல்யாணம், அதற்கு முன்னால் கையிலிருக்கும் ப்ராஜெக்டுகளை முடித்துக் கொடுக்கவேண்டும் என பரபரவென இருக்கிறார் சமந்தா. இத்தனைக்கும் நடுவில் கைத்தறி ஆடைகளை பயன்படுத்துங்கள் என குரல்கொடுத்தும் வருகிறார். கைத்தறி உடைகளை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்த ஆன்லைனில் WOVEN2017 என்கிற போட்டி ஒன்றை நடத்துகிறார். ஒவ்வொருவரும் தங்களுடைய அம்மாவுக்கு வித்தியாசமான முறையில் கைத்தறி சேலைகள் அணிவித்து அதை போட்டோ எடுத்து சமந்தாவுக்கு அனுப்பினால் அதை அவர் தன் பக்கத்தில் பகிர்ந்துகொள்வார். சிறந்த உடையலங்காரத்துக்கு பரிசும் உண்டாம்! லைக்ஸ் பேபி!

* விக்ரம் இப்போ சூப்பர் பிஸி. விஜய் சந்தருடன் ‘ஸ்கெட்ச்’, கெளதம் மேனனுடன் ‘துருவ நட்சத்திரம்’ இரண்டுமே இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அடுத்ததாக ‘சாமி 2’, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் இன்னொரு படம் என விக்ரம் கால்ஷீட் ஃபுல்! சீயான் இஸ் பேக்!

38p3.jpg

* ஏஞ்சலினா ஜூலியும் பிராட்பிட்டும் பிரிந்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. இந்தப் பிரிவுக்குப் பிறகு முதன்முறையாக ஏஞ்சலினா மனம் திறந்திருக்கிறார். ``இப்போது நாங்கள் இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் அக்கறையோடு இருக்கிறோம். எங்கள் குழந்தைகளின் நலன் குறித்து தெளிவான முடிவுகளை எடுக்கிறோம். என் அம்மா விவகாரத்து செய்துகொண்டபோது ஒரு குழந்தையாக நான் அதைப்பற்றி நிறையவே கவலைப்பட்டிருக்கிறேன். அதே கவலைகளை என் குழந்தைகளும் படக் கூடாது என்று நினைக்கிறேன். அவர்களுக்கு முன்பு எப்போதும் அழுவதில்லை. எல்லாமே சரியாகிவிடும் என்கிற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்’’ என்று ஃபீலாகியிருக்கிறார் ஏஞ்சலீனா. எல்லாம் கடந்து போகும்!

* கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு அடுத்த ஜாக்பாட். ஆல்ஃபபெட் என்பதுதான் கூகுளின் தாய் நிறுவனம். அந்த நிறுவனத்தின் கீழ் கூகுள் உள்பட பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்போது ஆல்ஃபபெட் நிறுவனத்தின் போர்டு மெம்பராக சுந்தர் பிச்சைக்கு பதவி உயர்வு தந்திருக்கிறார்கள். கூகுளின் சி.இ.ஓ ஆக சுந்தர் பிச்சை ஆன பிறகு அதன் பங்கு மதிப்பு 50% வரை உயர்ந்திருக்கிறது. அதற்கான அங்கீகாரம்தான் இது என சிலாகிக்கிறார் சுந்தர் பிச்சை ரசிகர்கள்! மூளைக்கு மரியாதை!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

வில்லியம் ரோவன் ஹாமில்டன்

 
scr

அயர்லாந்து வானியல், கணித மேதை

அயர்லாந்தைச் சேர்ந்த இயற்பியல் வல்லுநர், வானியலாளர், கணிதமேதையான சர் வில்லியம் ரோவன் ஹாமில்டன் (Sir William Rowan Hamilton) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 4).

அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் (1805) பிறந்தார். தந்தை வழக்கறி ஞர். பணி தொடர்பாக அவர் அதிக நேரம் வெளியே சென்றுவிடுவதால், குழந்தைகளோடு அதிக நேரம் செலவிட முடியவில்லை. இதனால், 3 வயது மகனை உறவினர் ஜேம்ஸ் ஹாமில்டனுடன் அனுப்பிவைத்தார்.

சிறந்த கல்வியாளரும், மொழியியல் அறிஞருமான அவருடன் வேறு ஊருக்குச் சென்றார். அவர் நடத்திய பள்ளியிலேயே பயின்றார். மொழிகளை விரைவாகக் கற்றார். ஐரோப்பிய மொழிகள், பாரசீகம், அராபிய மொழி, சமஸ்கிருதம், மராத்தி, மலாய் உள்ளிட்ட 15 மொழி களை 13 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார். பின்னாளில், ஓய்வு நேரங்களில் பாரசீக, அராபிய மொழி இலக்கியங்களை வாசித்தார்.

கணிதம், அறிவியலிலும் சிறந்து விளங்கினார். லத்தீன் மொழியில் எழுதப்பட்டிருந்த வடிவியல் அறிமுக நூலையும் பிரெஞ்ச் மொழியில் வெளிவந்திருந்த விரிவான வடிவியல் நூலையும் படித்ததால், அதில் ஆர்வம் பிறந்தது. பல்வேறு மொழிகளில் வெளிவந்த அறிவியல், கணித நூல்களை வாசித்து அறிவை மேம்படுத்திக்கொண்டார்.

நியூட்டனின் ‘அரித்மேடிகா யுனிவெர்சலிஸ்’, ‘பிரின்சிபியா’, பியரி லாப்ளேசின் ‘மெக்கானிக் செலிஸ்டே’ ஆகிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். தான் படித்த நூல்களில் இடம்பெற்றிருந்த கணித, அறிவியல், வானியல் தொடர்பான கண்டுபிடிப்புகள், தீர்வுகளில் உள்ள தவறுகளை ஆசிரியரிடம் சுட்டிக்காட்டும் அளவுக்கு 17 வயதுக்குள் திறன் பெற்றிருந்தார்.

ட்ரினிட்டி கல்லூரியில் பயின்றார். கணிதம், வானியல் பயின்றார். பட்டப்படிப்பு முடிப்பதற்கு முன்பே பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கேயே முதுகலைப் பட்டமும் பெற்றார். 22-வது வயதில் டன்சிங் அப்சர்வேட்டரியில் ஆராய்ச்சி மாணவராக இணைந்து, வானியல் கண்காணிப்பில் ஈடுபட்டார்.

வானியல் தொடர்பான வெவ்வேறு களங்களில் விரிவுரைகள் நிகழ்த்தினார். கணித ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு, சிக்கல் எண்களைக் கண்டறிந்தார். பிளாட்டோனிக் திடப்பொருள்கள் குறித்து ஆராய்ந்தார். இவை ஹாமில்டன் சுற்றுகள் எனப்படுகின்றன.

இயக்கவியல், ஒளியியல் அமைப்புகள் குறித்து விரிவாக ஆராய்ச்சி மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சிகள் மூலம் புதிய கணிதக் கோட்பாடுகள், நுட்பங்களைக் கண்டறிந்தார். அவற்றை கட்டுரைகளாக வெளியிட்டார். ஹாமில்டனின் முதன்மைச் செயல் பாடு (Hamilton’s principal function) என்று அழைக்கப்படும் ஒற்றைச் செயல்பாட்டைக் கண்டறிந்தார்.

ஒளி அலைக் கோட்பாட்டை நிறுவ இக்கோட்பாடு உதவியது. இதுகுறித்த இவரது கட்டுரைகள் பல தொகுதிகளாக வெளிவந்தன. தற்போது ஹாமில்டனியன் இயக்கவியல் (Hamiltonian Mechanics) என்று குறிப்பிடப்படும் நியூட்டனின் இயக்க முறைமைகளை மறுசீரமைத்த இவரது வழிமுறை, கணித இயற்பியல் துறையில் இவரது முக்கியப் பங்களிப்பாகப் போற்றப்படுகிறது.

நவீன மின்காந்தவியல், குவான்டம் இயக்கவியல் ஆகிய கோட் பாடுகளை ஆராய்வதற்கான முக்கிய வழிமுறையாகவும் இது கருதப் படுகிறது. இவரது பல கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளி வந்தன. ராயல் ஐரீஷ் அகாடமியின் கன்னிங்ஹாம் பதக்கம் பெற்றார். வானியல், கணிதம், அறிவியல் அமைப்புகளில் அங்கம் வகித்தார்.

ராயல் ஐரீஷ் அகாடமி தலைவராகவும் செயல்பட்டார். இயக்கவியல், ஒளியியல், இயற்கணிதம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய சர் வில்லியம் ரோவன் ஹாமில்டன் 60-வது வயதில் (1865) மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

மூளையின் திறனை அதிகரிப்பது எப்படி: விடை சொல்லும் விஞ்ஞானிகள்

 

மூளையைப் பயிற்றுவிக்கும் விளையாட்டுகள், மூளையின் நலத்திற்குப் பலனளிக்கும் என்று கருதப்படும் அளவைவிட குறைவான பலன்களையே அளிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மூளைத் திறனை அதிகரிப்பது எப்படிபடத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY Image captionஇளம் வயதிலேயே மூளையைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுவோரின் மூளை அவர்களுக்கு வயதானபின் நன்றாக செயல்படும்

அதற்குப் பதிலாக,மூளையின் செயல்பாடுகளைத் தூண்டும், இசைக் கருவிகளைக் கற்றல், பூத்தையல் வடிவமைத்தல் அல்லது தோட்டக்கலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று குளோபல் கவுன்சில் ஆஃப் பிரெய்ன் ஹெல்த் (Global Council on Brain Health) என்னும் அமைப்பின் அறிக்கை பரிந்துரைக்கிறது.

எவ்வளவு இளம் வயதில் இந்த செயல்களில் ஒரு நபர் ஈடுபடத் தொடங்குகிறாரோ, அந்த அளவுக்கு முதுமையில் அவர்களின் மூளை நன்றாக செயல்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள, தாமதம் என்று எதுவுமில்லை என்று ஏஜ் யூ.கே (Age UK) அமைப்பு கூறியுள்ளது.

சர்வேதேச அறிவியலாளர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் அரசாங்கங்களின் கொள்கை முடிவு வல்லுநர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அந்த அமைப்பு, மூளைத் திறனைத் தூண்டுவதற்கும், அறிவாற்றல் குறைவதைத் தடுக்கவும் ஆகச் சிறந்த வழிமுறைகளைப் பற்றி அந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.

மூளைத் திறனை அதிகரிக்க, புதிர்கள் மற்றும் மூளை விளையாட்டுகள் உள்ளிட்டவற்றை இணையத்தளத்தில் விளையாடுவது மிகவும் முக்கியமானது என்று பலரும் நம்பினாலும், அவற்றால் உண்டாகும் பலன்கள் மிகவும் வலுவற்றவையாக உள்ளன அல்லது பலன்களே இல்லாமலும் உள்ளன.

"அந்த மூளை விளையாட்டுகளை மனிதர்கள் விளையாடினால், அந்த விளையாட்டில் அவர்கள் முன்னேறலாம். ஆனால் அந்த விளையாட்டில் உண்டாகும் முன்னேற்றத்தால் அவர்களின் தினசரி அறிவுசார் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கான தீர்க்கமான முடிவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை, " என்று அந்த அறிக்கை கூறுகிறது.

உதாரணமாக, சுடோக்கு விளையாடுவதால் உங்களின் நிதி மேலாண்மைத் திறன் அதிகரித்துள்ளதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னவெல்லாம் செய்யலாம்?

அந்த அறிக்கை நாம் சிந்தனை செய்யும் முறைகளை கேள்விக்கு உள்ளாக்கும் புதிய செயல்களைச் செய்யப் பரிந்துரைப்பதுடன் சமூகத்தோடு இணைந்து செயல்பட்டு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளைப் பின்பற்றச் சொல்கிறது.

line break

உதாரணங்களில் சில

  • டாய்-செய் பயிற்சி செய்வது
  • உங்கள் முந்தைய தலைமுறைகள் பற்றி ஆய்வு செய்வது
  • புகைப்பட பயிற்சி
  • சமையல் செய்வது
  • தோட்டக் கலை
  • புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது
  • படைப்புத்திறனுடன் எழுதுவது
  • கலைத் திட்டங்களில் ஈடுபதுவது
  • தன்னார்வலர் ஆவது

குளோபல் கவுன்சில் ஆஃப் பிரெய்ன் ஹெல்த் அமைப்பை நிறுவ உதவிய ஏஜ் யூ.கே-வின், தலைமை விஞ்ஞானி, ஜேம்ஸ் குட்வின், மூளைத்திறன் குறைவது தடுக்கக்கூடிய ஒன்றே என்று கூறுகிறார்.

"உங்களுக்குத் புதிதாகவும், உங்களின் கவனக் குவிப்பையும் கோரும், மூளையின் நலனுக்குப் பலனளிக்கக்கூடிய, ஏராளமான செயல்களை இன்றே நாம் தொடங்கலாம்," என்று கூறும் அவர் "நீங்கள் தொடர்ந்து உங்கள் அன்றட வாழ்வில் செய்யக்கூடிய, பேரக் குழந்தைகளுடன் விளையாடுவது, தோட்டத்தைப் பராமரிப்பது, சீட்டு விளையாடுவது உள்ளிட்டவையாகவும் அந்தச் செயல்கள் இருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

"புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வ கால தாமதம் என்று எதுவும் இல்லை என்றாலும், இந்த அறிக்கை கூறும் முக்கியமான செய்தி, உங்களின் மூளையின் நலனைப் பாதுகாப்பதற்கு உங்கள் கடைசி காலம் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்பதே," என்கிறார் ஜேம்ஸ் குட்வின்.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

இருளில் ஒளிரக்கூடிய நாணயம்

 
இருளில் ஒளிரக்கூடிய நாணயம்
 

உலகிலேயே முதன்முறையாக இருளில் ஒளிரக்கூடிய நாணயத்தை கனடா வெளியிட்டுள்ளது.

கனடாவின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கனேடிய நாணய வாரியத்தினால் இந்த நாணயம் மக்கள் பாவனைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு டொலர்கள் பெறுமதியான மூன்று மில்லியன் உலோக நாணயக் குற்றிகள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.

பகல் வேளைகளில் சாதாரண நாணயக் குற்றிகளைப் போல் தோற்றமளிக்கும் இவை, இரவு வேளைகளில் ஒளிரும் சிறப்புத் தன்மையைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://newuthayan.com

  • தொடங்கியவர்

உலகத்தில் கொண்டாடப்படும் சிறந்த பயணப் புகைப்படங்கள்

A woman travelling on the locking system of a carriage. Dhaka, Bangladeshபடத்தின் காப்புரிமைGMB AKASH / TPOTY

டிக்கெட் வாங்காததால், பங்களாதேஷில் ஒரு விரைவு ரயிலின் பெட்டி இணைப்பு பகுதியில் அமர்ந்து ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் ஒரு பெண்.

2009-ம் ஆண்டு சிறந்த பயணப் புகைப்பட கலைஞர் விருது பெற்ற ஜிஎம்பி ஆகாஷ் இப்புகைப்படத்தினை எடுத்துள்ளார்

சமீபத்திய புகைப்படப் போட்டியில் வெற்றி படங்கள், கடந்த 14 ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் சிறந்த படங்களாக நடுவர்கள் தேர்ந்தெடுத்த படங்களின் வண்ணத் தொகுப்பில் சில:

Grey line 2 pixels

2003, ஹோய் அன், வியட்நாம்

புகைப்படக் கலைஞர்: மைக்கேல் மாட்லாக், அமெரிக்கா

Hoi An, Vietnamபடத்தின் காப்புரிமைMICHAEL MATLACH / TPOTY

நடுவர்களின் கருத்து: ``பரபரப்பான `ஹோய் அன்` காலைச் சந்தையின் நிறங்களையும், மக்களின் நடமாட்டத்தையும் மைக்கேல் மாட்லாக்கின் கேமரா அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறது. ஒரே புகைப்படத்தில் சந்தையின் முக்கிய அம்சங்களைக் காட்டிருக்கிறார்``

Grey line 2 pixels

2004, Kolenze, Mali 2004, கோலென்ஸ், மாலி

ரெமி பெனாலி, பிரான்ஸ்

Kolenz, Maliபடத்தின் காப்புரிமைREMI BENALI / TPOTY

கோடைக் காலத்தின் போது வீசிய குளிர்ந்த காற்றை ஒரு சிறுவன் கொண்டாட்டத்துடன் அனுபவிக்கிறான்.

Grey line 2 pixels

2005, ஹவானா, கியூபா

புகைப்பட கலைஞர்: லார்னே ரெஸ்னிக், கனடா

Havana, Cubaபடத்தின் காப்புரிமைLORNE RESNICK / TPOTY

``அடுக்குமாடி குடியிருப்பின் முற்றத்தில் நான் நுழைந்தபோது, ஒரு பெண் இரண்டு முட்டைகளை மற்றொரு பெண்ணுக்குக் கொடுக்கும் ஜன்னல் வழி வணிகத்தைப் பார்த்தேன்``என்கிறார் லார்னே ரெஸ்னிக்.

Grey line 2 pixels

2005, Netherlands 2005, நெதர்லாந்து

புகைப்பட கலைஞர்: ஜெரார்ட் கிங்மா, நெதர்லாந்து

Netherlandsபடத்தின் காப்புரிமைGERARD KINGMA / TPOTY

நடுவர்களின் கருத்து:``சிறிய ஆட்டுக் குடும்பத்தின் தற்செயலான தருணத்தை புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார். ``சுதந்திரத்தின் கணம்`` என்ற தலைப்பிற்கு ஏற்ற சிறந்த புகைப்படத்தினை எடுத்துள்ளார் ஜெரார்ட்``

Grey line 2 pixels

2005, ஜலிஸ்கோ, மெக்சிகோ

புகைப்பட கலைஞர்: டாட் விண்டர்ஸ், அமெரிக்கா

Jalisco, Mexicoபடத்தின் காப்புரிமைTODD WINTERS / TPOTY

மெக்ஸிக்கோவின் டெபாடிலன் நகரில், ஒரு தொப்பி விற்பனையாளர், சாலையோரத்தில் தொப்பிகளை வரிசையாகக் காட்சிக்கு வைத்துள்ளார். அந்த விற்பனையாளர் தூங்குகிறாரா? இந்த வரிசையின் இடது புறத்தில் ஒரு தொப்பி இல்லாத நிலையில், அத்தொப்பியைதான் அவர் அணிந்திருக்கிறாரா? அல்லது அது விற்பனையாகிவிட்டதா? என இந்த சாதாரண புகைப்படம் பல கேள்விகளை எழுப்புகிறது.

Grey line 2 pixels

2009, மதுரா, உத்தரப் பிரதேசம், இந்தியா

புகைப்பட கலைஞர்: போராஸ் சௌத்ரி

The Hindu festival of Holi. Mathura, Uttar Pradesh, Indiaபடத்தின் காப்புரிமைPORAS CHAUDHARY / TPOTY

ஹோலி திருவிழா: குளிர்காலத்தின் முடிவு மற்றும் வசந்தகால வருகை ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு கொண்டாட்டமான இந்து பண்டிகை.

Grey line 2 pixels

2011, கனடிய ஆர்க்டிக்

புகைப்பட கலைஞர்: தாமஸ் கோக்டா, ஜெர்மனி

Canadian Arcticபடத்தின் காப்புரிமைTHOMAS KOKTA / TPOTY

``இந்த அற்புதமான நிகழ்வைப் படம் பிடிக்க நான் மூன்று வாரங்களாக கனடிய ஆர்க்டிக் பகுதியில் தங்கியிருந்தேன். மைனஸ் 40 முதல் மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் அளவு உரைய வைக்கும் குளிரில் அந்த இரவுகளை நான் கழித்தேன்`` என்கிறார் தாமஸ் கோக்டா

Grey line 2 pixels

2011, வெள்ளை கடல், கரேலியா பிராந்தியம், வடக்கு ரஷ்யா

புகைப்பட கலைஞர்: பிரான்கோ பான்ஃபி, சுவிட்சர்லாந்து

Beluga whale. White Sea, Karelia Region, Northern Russiaபடத்தின் காப்புரிமைFRANCO BANFI / TPOTY

``பெலூகா திமிங்கலம் எனது அருகில் வந்து என்னைத் தொடும் தூரத்தில் இருந்து திரும்பி சென்றது. அதேபோல் பல முறை என்னிடம் விளையாட்டுக் காட்டி, பிறகு எனக்கு முன்பாக வந்து நின்று, நான் புகைப்படம் எடுக்கவும் வாய்ப்புக் கொடுத்தது`` என்கிறார் பிரான்கோ பான்ஃபி.

Grey line 2 pixels

2012, Omo River Valley, Ethiopia 2012, ஓமோ ஆற்றுப் பள்ளத்தாக்கு, எத்தியோப்பியா

புகைப்பட கலைஞர்: ஜான் ஷெலிஜெல், ஜெர்மனி

Biwa - Omo River Valley, Ethiopiaபடத்தின் காப்புரிமைJAN SCHLEGEL / TPOTY

``கரோ பழங்குடியினரின் மிகவும் மரியாதைக்குரிய வீரர்களில் ஒருவர் பிவா. இவர், மூன்று சிங்கங்களையும், நான்கு யானைகளையும், ஐந்து சிறுத்தைகளையும், பதினைந்து எருமை மாடுகளையும், பல முதலைகளையும் கொன்றுள்ளதாவும், மேலும் அண்டை பழங்குடி மக்கள் உடனான சண்டையில் பல மக்களையும் கொன்றுள்ளதாவும் என்னிடம் பெருமையுடன் கூறினார்`` என்கிறார் ஜான் ஷெலிஜெல்.

Grey line 2 pixels

2013, ஃபூகெட், தாய்லாந்து

புகைப்பட கலைஞர்: ஜஸ்டின் மோட், அமெரிக்கா

Elephant - Phuket, Thailandபடத்தின் காப்புரிமைJUSTIN MOTT / TPOTY

``இந்த புகைப்படம் மக்களைக் குழப்பும். `இந்த பெண் நீச்சலடிக்கும் அதே குளத்தில், யானையும் நீச்சலடித்தால், யானையின் கால்கள் ஏன் தெரியவில்லை` என மக்கள் குழம்புவார்கள். ஆனால் யானை இந்த நீச்சல் குளத்தில் இல்லை. நீச்சல் குளத்திற்கு அப்பால் இருக்கும் நிலத்தில் நிற்கிறது. நீர் புகாத பையில் கேமராவை வைத்து, பாதியளவு கேமராவை நீரிலும், பாதியளவு கேமராவை நீருக்கு வெளியிலும் வைத்து புகைப்படம் எடுத்தேன்`` என்கிறார் ஜஸ்டின் மோட்.

Grey line 2 pixels

2014, மாரா நதி, வடக்கு செரங்கெட்டி

புகைப்பட கலைஞர்:நிக்கோல் கேம்ப்ரே, பெல்ஜியம்

Wildebeest - Mara river, North Serengetiபடத்தின் காப்புரிமைNICOLE CAMBRE / TPOTY

மழையின் காரணமாக கூட்டமான காட்டுமான்கள் எங்கு செல்வது என குழப்பமடைந்து, நதியின் இரு திசைகளிலும் கடந்து சென்றன. தொடர்ந்து சென்று கொண்டிருந்த காட்டுமான்களின் பெரிய கூட்டத்துடன் சிறிய கூட்டம் இணைய முயற்சித்தன. சிறிய கூட்டம் வந்தடைந்த இந்த இடம் செங்குத்தான பகுதியாக இருந்தது. ஒவ்வொன்றாக இறங்கும் வரை காத்திருக்காமல், இந்த ஒரு மான் மட்டும் மற்ற மான்களின் மீது குதித்தது.

Grey line 2 pixels

2014, கின்ஷாசா, காங்கோ ஜனநாயக குடியரசு

புகைப்பட கலைஞர்: ஜானி ஹக்லண்ட், நார்வே

'Les Sapeurs' - Kinshasa, Democratic Republic of Congoபடத்தின் காப்புரிமைJOHNNY HAGLUND / TPOTY

``லீ சபர்ஸ்`` என்ற தனித்துவமான இக்குழுவினர், தங்களைச் சுற்றி வறுமை இருந்த போதிலும் பெரும் மதிப்பிலான டிசைனர் ஆடைகளை அணிந்து வீதிகளில் உலாவுகிறார்கள். இப்புகைப்படத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் செய்வதும் சாதாரண பணிகள்தான்.

 

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

108p1.jpg

twitter.com/Selvaa__ 

 பயணிப்பது மிருகங்களுடன் என்று உணர்ந்தவன் மனிதம் பேசுவதில்லை.

twitter.com/Aruns212

 மேனேஜரிடம் லீவு கேட்கும் அனைவருமே ‘வேதா’ விஜய் சேதுபதிகள்தான் #ஒரு கதை சொல்ட்டா சார்?

twitter.com/amuduarattai 

எதுக்கு வாங்கினோமோ அதைத் தவிர, மற்ற எல்லாத்துக்கும் பயன்படும் ஒரு பொருளுக்கு டைனிங் டேபிள் என்று பெயர்.

twitter.com/rmdkarthik

எல்லா டீம்லேயும் ஒருத்தன் நான் இப்பவே பேப்பர் போட்டுட்டுப் போயிட்டே இருப்பேன்னு பீலா விடுவான். ஆனா, போகவே மாட்டான். அந்த ஆள்தான் வையாபுரி.

twitter.com/Aruns212  

இப்பவெல்லாம் ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’ பாட்டைப் பார்த்தால்,கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஓனரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஓனரும் ஆடறாங்கனு தான் தோனுது.

108p2.jpg

twitter.com/saravananucfc

வீட்டில் பாத்திரங்கள் சத்தம் அதிகமானாலே `பத்திரமாய் இரு’ என்பதற்கான எச்சரிக்கை மணி கணவன்களுக்கு.

twitter.com/sundartsp 

இடி,மின்னல்... மழைக்கான விளம்பரங்கள்.

twitter.com/amuduarattai

இன்ஜினீயரிங் என்பது வாழ்ந்து கெட்ட படிப்பு.

twitter.com/inban_ofl 

எப்படா வீட்டுக்கு வருவான்னு காத்துட்டு இருந்தா, அம்மா.இவன் எப்படி வீட்டுக்கு வரான்னு பாப்போம்னு Weapons-வோட காத்துட்டு  இருந்தா, மனைவி.

twitter.com/kumarfaculty 

ஒருவரை என்ன சொல்லியும் சிரிக்க வைக்க முடியவில்லையென்றால், உங்கள் கஷ்டத்தைச் சொல்லிப் பாருங்கள்.

108p3.jpg

twitter.com/Kozhiyaar 

முப்பது வயதிலேயே ஓய்வைத் தேடும் இக்காலத்தில் அறுபதைத் தாண்டியும் இரவுக் காவலாளியாக வாழும் வாழ்க்கை பரிதாபக்குரியது.

twitter.com/thoatta

சிம்பு படத்துக்குக் கதை எழுதுறவன் எவனோதான் பிக்பாஸுக்கு டாஸ்க் ரெடி பண்றான்.

twitter.com/vijiraja4 

காசு கொடுத்து ரீசார்ஜ் பண்ணினப்போ கூட எல்லோருக்கும் கால் பண்ணிப் பேசிட்டு இருந்தோம்போல. இந்த ஃப்ரீ காலிங் வந்தப்பறம் அதுவும் நின்னு போச்சு.

twitter.com/mekalapugazh

 எந்தக் கல்லூரியில் இடம் ‘கிடைத்தது’ என்று கேட்பவரைவிட, எந்தக் கல்லூரியில் இடம் ‘வாங்கினீர்கள்’ என்று  கேட்பவர் அதிகமான காலமிது.

108p4.jpg

twitter.com/sundartsp

மதிப்பில்லையென்றாலும் சில்லறைகளே பர்ஸை கனமாக்குகின்றன.

twitter.com/twittornewton 

தொப்பை இல்லாத ஜிம் ட்ரெயினரை விட, தொப்பை இல்லாத பரோட்டா மாஸ்டர் ஆச்சர்யம் அளிக்கிறார்.

twitter.com/arunvelayutham

பெரியாரைப் படிச்சிருக்கேன், பெரியாரைப் படிச்சிருக்கேன்னு சொல்றாங்க. பெரியார் படிப்பதற்கல்ல, வாழ்வதற்கு.

twitter.com/kumarfaculty

விசேஷ வீட்டுக்காரர்களே பரிமாறி விருந்து உண்ட கடைசித் தலைமுறை நாம்.

twitter.com/mekalapugazh 

கடந்த ஐந்து வருடங்களில் நடுத்தர மக்கள் அதிகம் தங்கள் சேமிப்பை இழந்த இடமும், ஏழைகள் கடனாளியாகக் காரணமும் தனியார் பொறியியல் கல்லூரிகளே.

twitter.com/Kozhiyaar 

முப்பது வயதுக்குமேல் ஆண்களால் தவிர்க்கவே முடியாதது முடி கொட்டுவதையும்,மனைவி கொட்டுவதையும்.


108p6.jpg

ட்ரெண்டிங்!

ஒருமணி நேரத்தில் ஒரு ட்விட்டர் அக்கவுன்டுக்கு 30 லட்சம் ஃபாலோயர்கள் சேர்ந்தது இந்த வார ஹிட் ட்ரெண்ட்! விஷயம் சிம்பிள். முன்னாள் ஜனாதிபதி ப்ரணாப் முகர்ஜி, இந்திய ஜனாதிபதியாக இருந்தபோது அதிகாரப்பூர்வமாக உபயோகித்த ட்விட்டர் கணக்கில் 30 லட்சத்துச் சொச்சம் ஃபாலோயர்கள் இருந்தனர். புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவியேற்றதும், அவருக்காக ஒரு ட்விட்டர் ஹேண்டில் வேண்டுமே. களத்தில் இறங்கிய ட்விட்டர் இந்தியா, POI13 என்ற கணக்கில் பழைய ட்விட்களைச் சேமித்து, அந்தக் கணக்கைப் பின் தொடர்ந்த ஃபாலோயர்களை ராஷ்ட்ரபதி பவன் என்ற @rashtrapatibhvn  புதிய கணக்கில் சேர்த்து, ‘இந்தாபா... இதான் அஃபிஷியல். சொல்ட்டேன்’ என்று அறிவித்துவிட்டது. ஆக, ராம்நாத் கோவிந்த் லாகின் செய்யும்போதே, 30 லட்சம் டிஜிட்டல் நெட்டிசன்களுக்கு ஹலோ சொல்லிக்கொண்டு தான் ட்வீட்டினார்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஐம்பதுகளில் சாவல்களுக்கு மத்தியில் சாதித்த நாசா விமானிகள்

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் சோதனைகளை மேற்கொள்ளும் விமானஓட்டிகள் சிலிர்க்கும் வகையில் எப்படியான பணிகளை முன்னெடுத்தனர் என்பதை காட்டும் நூற்றுக்கணக்கான படங்களை நாஸா அமைப்பு வெளியிட்டுள்ளது.

விண்வெளியை ஆராய முற்பட்ட ஆரம்பகாலம் எப்படியிருந்தது என்பது குறித்து அப்படியான சோதனைகளை தற்போது செய்யும் ஒருவரை பிபிசி கேட்டது. விண் சோதனை முயற்சிகளில் விமானிகள் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டினார்கள் என்பதை அவர் விளக்குகிறார்.

  • தொடங்கியவர்

ஏஞ்சலினா ஜோலி இயக்கியிருக்கும் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!

ஏஞ்சலினா ஜோலி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘ஃபர்ஸ்ட் தே கில்டு மை ஃபாதர்’ படத்திற்கான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

ஏஞ்சலினா ஜோலி

ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி, அகதிகள் மேம்பாட்டுக்காகப் பல்வேறு பணிகளைச் செய்துவருகிறார். அகதிகளுக்கான நல்லெண்ணத் தூதுவராக ஐ.நா.ஆணையம் இவரை கடந்த 2011-ல் நியமித்தது. அகதிகள் மேம்பாடு, போர் முனைப் பிரச்னைகள் சார்ந்து தொடர்ந்து செயல்பட்டு வருவதன் அடிப்படையில் போர் முகாம்களில் நடக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி இயக்கியிருக்கும் படம்  ‘ஃபர்ஸ்ட் தே கில்டு மை ஃபாதர்’. 

கம்போடியாவின் ராணுவ முகாம்களில் நடத்தப்படும் ராணுவப் பயிற்சிகள் பற்றிய கதை. ராணுவப் பயிற்சி முகாமில் சிக்கிக் கொள்ளும் சிறுமி கதை சொல்வது போல படமாக்கியிருக்கிறார். அந்தச் சிறுமியின் பார்வையில் போர் பற்றியும், முகாமிலிருந்து அச்சிறுமியும் அவரின் குடும்பமும் எப்படி தப்பித்தது என்பதுதான் கதை. எழுத்தாளரும், சமுக செயல்பாட்டாளருமான லங்க் அங் எழுதிய ஆட்டோ பயோக்கிராஃபி புத்தகத்தைத் தழுவி எஞ்சலினா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் வரும் செப்டம்பர் 15-ல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. 

ட்ரெய்லருக்கு: 

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கடலில் சேரும் 650 கோடி கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்! - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

லகின் மிகப்பெரிய ரசாயனக் குப்பைத் தொட்டியாக மாறிவருகிறது கடல்.  பூமியில் வீசினால், 'அங்கே கொட்டாதே, இங்கே கொட்டாதே' என்று பிரச்னை வருகிறது. அதனால், அழிக்க முடியாத குப்பைகளை எல்லா நாடுகளும் சத்தமின்றி கடலில் வீசி வருகின்றன. அதிலும் ஒவ்வோர் ஆண்டும் 650 கோடி கிலோ பிளாஸ்டிக் கடலில் கொட்டப்படுகிறது என்பது அதிர்ச்சியான ஓர் உண்மை.

கடல்

இப்படி உலகெங்கும் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகள், கலிஃபோர்னியா பகுதிக்கு மேற்கேயும்  ஹவாய் தீவுகளின் வடக்கேயும் பசிபிக் பெருங்கடலில் கடலில் மிதந்து கிடக்கின்றன. இதை, பசிபிக் கழிவு மண்டலம் என்றே அழைக்கிறார்கள். இதன் மொத்தப் பரப்பளவு, சுமார் 14 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் என்கிறார்கள். அதாவது, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைப்போல இரண்டு மடங்கு அதிகம். கடல் மேற்பரப்பிலிருந்து 300 அடி ஆழத்துக்கு நிறைந்துள்ளது என்பதும் ஆபத்தான விஷயம். பிளாஸ்டிக் மட்டுமன்றி, கடலில் மிதக்கும் ரசாயன விஷங்களால் கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமல்லாமல், பூமிக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும் என்பதும் ஆய்வாளர்களின் கவலை.

 

'கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் மட்டுமே ஆண்டுக்கு 10 லட்சம் பறவைகள், ஒரு லட்சம் பாலூட்டிகள், எண்ணற்ற கடல் ஆமைகள் போன்றவை இறந்துபோகின்றன' என்று ஐ.நா. சபை கூறுகிறது. மேலும், 'கடல் உணவை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பெருகுவதையும் இனி தடுக்க முடியாது' என்று ஆய்வுகள் கூறுகின்றன. பூமியில் வீசப்படும் கழிவுகளே பெரும் ஆபத்துகள் என்றால், கடல் கழிவுகள் அதனினும் ஆபத்து என எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் ஆய்வாளர்கள். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 05
 

article_1438750765-Action300.jpg1940: லத்வியாவை சோவியத் யூனியன் தன்னுடன் இணைத்துககொண்டது.

1949: ஈக்குவடோரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 6000 இற்கும் அதிகமானோர் பலி.

1962: தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டார் 28 வருடங்களின் பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

1963: அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் ஆகியன அணுவாயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1979: ஆப்கானித்தானில் மாவோயிஸ்டுகள் இராணுவப் புரட்சி ஒன்றை முன்னெடுத்தனர்.

1989: நிக்கராகுவாவில் இடம்பெற்ற பொடுத்தேர்தல்களில் சண்டினீஸ்டா வெற்றி பெற்றது.

2003: இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12பேர் கொல்லப்பட்டு 150பேர் காயமடைந்தனர்.

2006: வறுமைக்கு எதிரான அமைப்பின் (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் (ஓகஸ்ட் 4 நள்ளிரவில்) இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

சரித்திரம் படைக்கும் சிலைகள்

 

 
02jkrshivajiPlan

சத்ரபதி சிவாஜி சிலையின் வரைகலை வடிவம்

ரு புறமும் கைகளை நன்கு விரித்தபடி காட்சி தரும் ஏசுநாதர் சிலை ‘மீட்பர் ஏசு’ (Christ – the redeemer) என்ற பெயரில் உலகப் புகழ்பெற்றது. பிரேசில் நாட்டில் இருக்கும் இந்தச் சிலைதான் உலகிலேயே உயரமானது என்ற பெருமையை ஒரு காலத்தில் பெற்றிருந்தது. 38 மீட்டர் உயரமும் 635 மெட்ரிக் டன் எடையும் கொண்ட இந்தச் சிலை 1931-ல் உருவாக்கப்பட்டது.

Last%20Page%20Image%202

த கிறிஸ்ட் த ரெடிமர், பிரேசில்

ஆனால் ‘தாயகம் அழைக்கிறது’ (Motherland calls) என்ற சிலை அதைவிட மிக அதிக உயரம் கொண்டதாக (91 மீட்டர்) உருவாக்கப்பட்டது. 1967-ல் ரஷ்யாவில் திறக்கப்பட்ட இந்தச் சிலையில் தாயகம் ஒரு பெண்மணியாக உருவகப்படுத்தப்பட்டது. அந்தச் சிலை கையில் ஒரு வாளோடு காட்சியளிக்கிறது.

இந்த வாளே 33 மீட்டர் நீளம்! இந்தச் சிலை சற்றுக் கோணலாகத் தோற்றமளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் கொஞ்சம் மாறியதுதான் காரணம் என்றார்கள். உலகிலேயே மதச் சார்பில்லாத சிலைகளில் இதுவே இன்றளவும் உயரமானது.

அமெரிக்கச் சுதந்திர தேவி சிலை இந்த வரிசையில் இல்லையா என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கலாம். நியூயார்க் நகரில் அமைந்துள்ள அந்தச் சிலைக்கு நிச்சயம் இந்தப் பட்டியலில் இடம் உண்டு. பிரெஞ்சு மக்களால் அன்புடன் அமெரிக்க மக்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தாமிரச் சிலையின் உயரம் 93 மீட்டர்.

பியூர்டோ ரிகோ அமெரிக்காவைச் சேர்ந்த பகுதி. இதில் எழுப்பப்பட்ட ‘கொலம்பஸ் சிலை’ 110

Last%20Page%20Image%204

மதர்ஸ் லேண்ட் கால்ஸ், ரஷ்யா

மீட்டர் உயரம் கொண்டது. பிரபலக் கடற்வழிக் கண்டுபிடிப்பாளர் கொலம்பஸின் 500-வது ஆண்டு விழாவுக்காக உருவான சிலை இது. ‘புதிய உலகின் பிறப்பு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிலையில் கப்பலின் திசைமாற்றியைக் (ஸ்டீரிங்கை) கையில் பிடித்தவாறு காட்சி தருகிறார் கொலம்பஸ். பின்னணியில் அவர் குழுவோடு பயணித்த மூன்று கப்பல்களின் உருவங்களும் காட்சியளிக்கின்றன. வெண்கலத்தால் உருவான சிலை இது.

02jkrvallabhbhai%20patel%20statue

வல்லபாய் படேல் சிலையின் மாதிரி

உயரமான சிலைகள் உள்ள நாடுகளின் பட்டியலில் விரைவில் இந்தியா முதலிடம் வகிக்கப்போகிறது. குஜராத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் சிலை 182 மீட்டரில் உருவாக்கப்பட இருக்கிறது.

வடோதராவில் நர்மதா அணைக்கருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்படவுள்ளது. சிலை அமைக்கும் பணி நடந்துவருகிறது. இந்தச் சிலையைச் சுற்றி 20,000 சதுரமீட்டர் பரப்பில் செயற்கை ஏரியும் அமைக்கப்படவுள்ளது.

மகாராஷ்டிர அரசு தன் பங்குக்கு சத்ரபதி சிவாஜியின் சிலையைப் பிரம்மாண்டமாக எழுப்பத் தீர்மானித்தது. தொடக்கத்தில் 98 மீட்டர் உயரம் கொண்டதாகத்தான் இது திட்டமிடப்பட்டது. அதாவது சுதந்திர தேவி சிலையைவிட உயரம்.

ஆனால், வல்லபாய் படேலின் சிலை உருவாக்கத்தை அறிந்ததும் அதைவிட உயரத்தில் 192 மீட்டர் உயரத்தில் சிவாஜியின் சிலையை அமைக்க முடிவெடுத்தது. ஆக இதுதான் உலகிலேயே உயரமான சிலையாக இருக்கும் என்று பெருமைப்பட்டுக் கொண்டது மகாராஷ்டிர அரசு.

02jkrspringBudha

ஸ்பிரிங் புத்தா, சீனா

ஆனால், திட்டமிட்ட பிறகுதான் தெரியவந்தது சீனாவில் ‘வசந்த ஆலயத்தில்’ (Spring temple) உள்ள புத்தரின் சிலை 208 மீட்டர் கொண்டது என்று. தாமரை மலரின் மீது புத்தர் நிற்பது போன்ற இந்தச் சிலை 2002-ல் நிறுவப்பட்டது. இதை அறிய வந்ததும் வீர சிவாஜியின் சிலை 210 மீட்டர் கொண்டதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. கட்டுமானத்துக்காக ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

அறிவியல் வளர்ச்சிக்காக இந்த உலகம் எவ்வளவு செலவு செய்கிறது தெரியுமா? #VikatanData

 
 

வானவியல்

நம் உலகில் அறிவியல் என்னவெல்லாம் செய்கிறது? அணு முதல் ஆகாயம் வரை அதன் அரசாட்சிதான். உடலின் ஒவ்வொரு செல் வரை சென்று நோய்களைக் குணப்படுத்துகிறது; நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்குகிறது. தொழில்நுட்பத்தை வளரச் செய்து நம் வாழ்வை இனிமையாக்குகிறது; சுலபமாக்குகிறது. விண்ணைத் தாண்டி அழைத்துப் போய், இப்பிரபஞ்சத்தின் அதிசயங்களைக் காண உதவுகிறது; சாதனைகள் பலவற்றை சாத்தியமாக்குகிறது.

ஆராய்ச்சிகளின் தேவை

அறிவியல் ஆராய்ச்சிகள், அதிலும் மிக முக்கியமாக மருத்துவ ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஓர் உதாரணம் இதோ...

யுனைடெட் கிங்டமில் ஒவ்வொரு வருடமும் 40,000 பேர் குடல் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 16,000 பேர் இறந்தும் விடுகிறார்கள் என்கிறது ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்! விஞ்ஞானிகளின் பல வருட கடின உழைப்பால், குடல் முழுவதையும் சுலபமாக ஸ்கிரீனிங் செய்யும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. வளைந்து கொடுக்கும் குழாய் ஒன்றில் ஃப்ளாஷ் லைட் கொண்ட கேமரா ஒன்றைப் பொருத்தி குடலுக்குள் செலுத்துகிறார்கள். இதனைக் கொண்டு குடலில் ஏதேனும் பாதிப்புகள் இருக்கின்றனவா, புற்று நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தெரிகின்றனவா என்பதை அலசி ஆராய்ந்து விடுகிறார்கள். இதன் மூலம் குடல் புற்று நோயைச் சற்று கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது, பல பேருக்குத் தகுந்த நேரத்தில் சிகிச்சை அளித்துக் காப்பாற்றவும் முடிந்தது.

இது அறிவியலால் உலகளவில் நடக்கும் கடலளவு நன்மைகளில் ஒரு துளிதான். அன்று அம்மை நோயால் வரும் இறப்பைத் தடுத்தது முதல் இன்று கேன்சருக்கு அளிக்கப்படும் கீமோதெரபி வரை அனைத்துமே அறிவியலின் சாதனைகள்தான்.

அறிவியல் தொழில்நுட்பம்

மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது தொழில்நுட்ப ஆராய்ச்சிகள். இன்று நம் அனைவரின் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் தொடங்கிப் பலவகை கேட்ஜெட்கள் வரை, அதிவேக இன்டர்நெட் தொடங்கி நேற்று வந்த விர்ச்சுவல் ரியாலிட்டி வரை எல்லாமே தொழில்நுட்ப ஆராய்ச்சியால் விளைந்தவை. மற்றொரு புறம், நிலவில் கால்பதித்தது, செவ்வாயில் கொடி பறக்கவிட்டது, பல ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கும் கேலக்ஸியை எட்டிப் பார்த்தது என அனைத்துமே வானவியல் ஆராய்ச்சிகளால் சாத்தியமானவை.

எந்தெந்த அறிவியல் துறைகளுக்கு இனி முக்கியத்துவம்?

உலகம் முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், எந்தெந்த அறிவியல் துறைகள் வரும் ஆண்டுகளில் முக்கியத்துவம் பெரும் என்று கண்டறிந்துள்ளார்கள். அதன்படி, 2018ஆம் ஆண்டின் போது, எந்தத் துறை எத்தனை  சதவிகிதம் முக்கியத்துவம் பெரும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு...

அறிவியல் தொழில்நுட்பங்கள்

தகவல்: Industrial Research Institute

எவ்வளவு செலவு செய்கிறார்கள் உலக நாடுகள்?

இவ்வளவு முன்னேற்றங்களும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் மட்டும் நிகழ்ந்து விடவில்லை. அரசாங்கத்தின் பங்கு இந்தச் சாதனைகளில் மிக முக்கியமான ஒன்று. சரியான நேரத்தில் நிதியுதவி, ஆராய்ச்சிக்கான முழு ஆதரவு என அவர்கள்தான் திரை மறைவிலிருக்கும் சூப்பர் ஸ்டார்கள்! கடந்த 2010ஆம் ஆண்டில் மட்டும் அனைத்து நாடுகளும் சேர்ந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக ஒரு டிரில்லியன் டாலர்கள் வரை செலவு செய்து இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளைப் பற்றிய விபரம்…

PPP

தகவல்: International Monetary Fund, World Bank, Wikipedia

கிளம்பும் எதிர்ப்புகள், போராட்டக் களத்தில் விஞ்ஞானிகள்!

இது இப்படி இருக்க, பொருளாதார சிக்கலில் இருக்கும் தருவாயில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்குவது அவசியமா என்று எதிர்ப்புக் குரல் பல நாடுகளில் எழுந்த வண்ணம் உள்ளது. அதிலும், அமெரிக்காவில், நாசாவிற்கு எதற்காக இவ்வளவு பணம் ஒதுக்குகிறார்கள் என்று ஒரு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிலும் நாம் சந்திராயன் தொடங்கி சரஸ்வதி கேலக்ஸி வரை சாதித்திருந்தாலும், ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதி நம் மொத்த GDPயில் ஒரு சிறு பங்குதான் என்று வருத்தப்படுகிறார்கள் விஞ்ஞானிகள்.. இது மட்டுமல்லாது, ஆளும் பா.ஜ.க ஆட்சியில் பல ஆதாரமற்ற, மூடநம்பிக்கைகள் செய்திகளாக தொடர்ந்து பரவிக்கொண்டே இருக்கின்றன என்ற ஒரு குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இது இங்கு மட்டுமல்ல, உலக அரங்கிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், கூடுதல் நிதி மற்றும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும், March for Science என்ற பெயரில் பேரணிகள் உலகம் முழுவதும் நடந்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி, அனைத்து மாநில தலைநகரங்களிலும் ‘India March for Science’ என்ற பெயரில் அணிவகுப்பு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சார்பாக சென்னையில் அதே நாளில் மாலை 5 மணி முதல் பெசன்ட் நகர் பீச்சில் பேரணி நடக்கவுள்ளது. இதில் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விருப்பமுள்ள குடிமக்கள் என யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ட்ரம்ப்பின் ட்வீட்களுடன் டாய்லெட் பேப்பர்கள்... அமேசானின் விற்பனை

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ட்வீட்டுகள் அடங்கிய டாய்லெட் பேப்பர்களை அமேசான் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ட்விட்டரில் அதிர்வலைகளைக் கிளப்பிய ட்ரம்ப்பின் டாப் டென் ட்விட்ஸ் டாய்லெட் பேப்பர்களை வடிவமைத்துள்ளது அமேசான் நிறுவனம்.


amazon
 

அதிபராகப் பதவியேற்ற பின்னரும் அரசின் உத்தரவுகள்குறித்த தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவிப்பதற்கு முன்பாகவே, ட்விட்டரில் பதிவிடுவது ட்ரம்ப்பின் வாடிக்கையான செயல்பாடுகளில் ஒன்றாகிவிட்டது. இவ்வாறு பதிவிடும் ட்ரம்ப்பின் ட்வீட்டுகள் அனைத்தும் ட்ரெண்ட் ரகம். இந்த நிலையில், ட்ரம்ப்பின் ட்வீட்டுகளோடு விற்பனைக்கு வந்துள்ள அமேசானின் டாய்லெட் பேப்பர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால், விற்பனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே அவை விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் விரைவில் மீண்டும் விற்பனைக்கு வைக்கப்படும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

யோகாவில் சாதனை படைத்த 10 வயது மாணவி

யோகா பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் சிவகாசி பள்ளியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு பயிலும் ஹர்ஷா நிவேதா என்ற மாணவி  4.59 நிமிடத்தில் 100 வகையான ஆசனங்களைச் செய்து, இந்தியா புக் ஆப் ரிகார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார். 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இதுவே இந்திய அளவில் முதல் சாதனையாகும் என்கிறார்கள். 

yoga

 


இதில் கண்களைத் துணியால் மூடிக்கொண்டும், திறந்து கொண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசனங்களைச் செய்தார். கண்ணாடி டம்ளர்கள் மீது அமர்ந்து ஆசனங்கள்செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மாணவி நிவேதாவிடம் கேட்டபோது, "யோகாவை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும், அதை வலியுறுத்தவே இந்த ஆசனங்களை விரைவாகச் செய்தேன். பார்வையற்றவர்களும் யோகாவை சுலபமாகச் செய்யலாம் என்பதை உணர்த்தும் வகையிலும், உடல் குறைபாடு யோகாவுக்கு ஒரு தடையில்லை என்பதை விளக்கவும் கண்களை மூடிக்கொண்டு செய்தேன். இந்த ரிகார்ட் செய்வதற்கு முக்கிய காரணம், மக்கள் நோயின்றி உற்சாகமாக வாழ யோகா எல்லோருக்கும் அவசியம் என்பதை  மக்களிடம் தெரிவிக்கவே இந்த சாதனையைச் செய்தேன்" என்று உற்சாகமாக பேசினார்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

நதியில் நீந்தி அலுவலகம் செல்லும் ஜெர்மானியர்! (காணொளி)

  • தொடங்கியவர்

300 கோடியை தொட்ட முதல் யூடியூப் வீடியோ என்ன மொழி தெரியுமா? #Top10YoutubeVideos

 

வீடியோ

300 கோடி முறை உங்கள் வீடியோவைப் பார்த்திருக்கிறார்களா... உலகின் டாப் யூடியூப் விடியோக்களில் உங்கள் வீடியோவும் ஒன்று...!
ஜியோ வந்த பிறகு, பிரெட்டுக்கு ஜாம் தடவுவது எப்படி என்பதைக் கூட ஹெச்டி வீடியோவில்தான் பார்க்கிறோம். எல்லாம் வீடியோ மயம் ஆன பிறகு, டாப் வீடியோக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவில்லை என்றால் எப்படி.... வாருங்கள் யூடியூப்-ன் டாப் 10 வீடியோக்கள் பட்டியலைப் பார்ப்போம். 

10) அழகுக் குட்டிச் செல்லம் டெய்லர் ஸ்விஃப்டின் Nice to meet you, where you been? (1989) ஆல்பத்தின்  'Blank space' பாடல் 210 கோடி வியூஸ் உடன் 10-ம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

அழகான காதலாக ஆரம்பித்து, கண்ணீர் சிந்தி, கோவப்பட்டு கலக்கலான கார்களை (கார் பேர் சொன்ன வருத்தப்படுவீங்க) கோல்ஃப் பேட்டால் தெறிக்கவிடுவது, காதலனை தானே கைப்பட வரைந்த ஓவியங்களைக் கொலைவெறிகொண்டு குத்திக் கிழிப்பது என்று கலர்ஃபுல் விஷூவல்ஸ் உடன் இருக்கிறது. 

வீடியோ வெளியான தேதி : 10 Nov 2014, வீடியோ நேரம் : 4.32

9) மிட் நைட்டிலும் இளசுகளின் பல்ஸை எகிற வைக்கும் 33 வயது Cadbury Dairy milk கேட்டி பெர்ரியின் Prism ஆல்பத்தின்  'Roar' பாடல் 215 கோடி வியூஸ் உடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

பயந்த புள்ளயா காட்டுல மாட்டிக்கிட்டு, ஒரு மாதிரி மனசு தேறி பயங்கரமான புள்ளயா உருமாறி புலியவே புறமுதுகிட்டு ஓடச் செய்யுறது தான் இந்த ரோர். கேட்டி பெர்ரி வாய்ஸில் Oh oh oh oh oh oh oh oh ஆசம் ரகம்.  

வீடியோ வெளியான தேதி :  5 Sep 2013, வீடியோ நேரம் : 4.29

8) இதுவரை சோலோவாக போலோ சாப்பிட்டால், இவர்கள் ஃபைவ் ஸ்டாராக ஜொலிக்கிறார்கள். இந்த ஐந்து நட்சத்திரக் குழு அசத்திய  'V' என்கிற ஆல்பத்தில் பாடப்பட்ட சுகர் (அதாங்க சர்க்கரை) பாடல் 217 கோடி வியூஸ் உடன் எட்டாவது இடத்தில் இருக்கிறது. 

சர்க்கரைக் குட்டி... சந்தனக் கட்டி... எனக் காதலர்கள் கொஞ்சுவது தான் கான்செப்ட். ஆனால் ஒரு காதல் கணவன் அல்லது மனைவி "என் வாழ்கையில சர்க்கரையும் தேனும் கொட்டனும்" என்று தங்கள் லைஃப் பார்ட்னரைப் பார்த்து சைலன்ட் எமோஷனாக, அதட்டலாகக் கெஞ்சுவது போல் செம டோனில் பாடி ரசிக்க வைக்கிறார் அடாம் லிவைன். கலிஃபோர்னிய நேட்டிவிட்டியோடு விஷுவல்ஸ் அட்டகாசம். 

வீடியோ வெளியான தேதி :  14 Jan 2015, வீடியோ நேரம் : 5.01

7) என்ரிக் இக்லிசியாஸ் (Enrique Iglesias) செக்ஸ் அண்ட் லவ் என்கிற ஆல்பத்தில் பாடிய 'Bailando' 225 கோடி முறை பார்க்கப்பட்டு ஏழாவது இடத்தில் இருக்கிறது.  என்ரிக் லத்தின் பாப் உலகின் பெரிய தலக்கட்டு. சுருக்கமாக கிங் ஆஃப் லத்தின் பாப் என்று அழைக்கிறார்கள். 

வீடியோ வெளியான தேதி :  11 Apr 2014, வீடியோ நேரம் : 4.46

6. நெய்க் குழந்தை டெய்லர் ஸ்விஃப்டின் குரல் வண்ணத்தில் 1989 ஆல்பத்தில் பாடப்பட்டிருக்கும் 'Shake It Off' 226 கோடி வியூஸ் உடன் ஆறாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. 

உன் வேலைய பாத்துக்கிட்டு போடா... என் இஷ்டத்துக்கு நான் வெளிய போவேன்.. யார வேணாலும் பாய் ஃப்ரெண்டா வெச்சிப்பேன்னு அதிரடியான ஒரு குல்ஃபி பாடல், நல்ல மெட்டுடன் வளைய வருகிறது. இறுதியில் எல்லாம் போகட்டும், இதெல்லாம் தலையில் வெச்சுக்காதீங்கப்பு... சும்ம குதூகலமா இருக்கணும் என்று ஷேக் செய்யச் சொல்லி முடிகிறது.

வீடியோ வெளியான தேதி :  18 Aug 2014, வீடியோ நேரம் : 4.01

5.  ப்ருனோ மார்ஸ் (Bruno Mars) மற்றும் மார்க் ரான்சன் (Mark Ronson) இணைந்து தயாரித்த இந்த பாடல் 256 கோடி முறை பார்க்கப்பட்டு நான்காவது இடத்தில் இருக்கிறது.

ஒரு ஃப்ரேமில் கூட பிரபலமான அல்லது அழகான பெண்களை முழுமையாகக் காட்டாத இந்த வீடியோ... அதிக முறை பார்க்கப்பட்டிருப்பது ஆச்சர்யம்தான்.  இந்தப் பாடலில் மார்ஸின் குரல் கேட்க கால்கள் தாளமிடுகின்றன. பாடல் வரிக்கு ஏற்றது போல மார்ஸ் போடும் ஆட்டமும், அதற்கு ஒத்து ஊதும் மார்க் ரான்சனின் நடிப்பும்... மெர்சல்.

வீடியோ வெளியான தேதி :  19 Nov 2014, வீடியோ நேரம் : 4.30

4) இளைஞிகளின் எழுச்சி நாயகன் ஜஸ்டின் பைபர் பாடிய 'Sorry (PURPOSE : The Movement)' பாடல் 266 கோடி வியூஸ் உடன் மூன்றாமிடத்தில் முனகிக் கொண்டிருக்கிறது. 

சிதறி விழுந்த பல்லி மிட்டாய் போன்ற அழகுப் பெண்கள் அணி, அவர்களுக்குச் செய்திருக்கும் அட்டகாசமான காஸ்ட்யூம் தாண்டி... ஜஸ்டினின் குரலில் பில்லி சூனியம் வைத்தது போல் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.  சாரி சொல்ல நேரமா ஆச்சு, நீ இல்லாம எனக்கு என்னமோ ஆச்சு... என்று அழகான வரிகள், பைபரின் வாய் வழியாக வரும்போது என்னமோ நடக்குது மர்மமா இருக்குது சார்.  நம் டாப் 10 வீடியோவில் குட்டி வீடியோ நம்ம சாரி தான்.

வீடியோ வெளியான தேதி :  22 Oct 2015, வீடியோ நேரம் : 3.25

3) ஓப்பன் கங்னம் ஸ்டைல் தாங்க 290 கோடி வியூஸ் உடன் இரண்டாவது இடத்தில் கெத்தாக அமர்ந்திருக்கிறது. இந்த ஒற்றைப் பாட்டால் புகழ் பெற்ற சை (Psy)-ன் கங்னம் ஸ்டைல் நடனம், பெண்களைப் பார்த்து அப்பட்டமாக வழிவது, பிரமாண்ட செட்டுகள் என எல்லாம் தான் 290 கோடி முறை பார்க்க வைத்திருக்கிறது.

இதைப் பற்றி அதிகம் பேசத் தேவை இல்லை. நம்மில் பலரும் பார்த்திருப்போம் என்பதால்... டாப் 10 லிஸ்டில் பழைய வீடியோ சையின் கங்னம் ஸ்டைல் தானுங்க. 

வீடியோ வெளியான தேதி :  15 Jul 2012, வீடியோ நேரம் : 4.12

2)  சார்லி புத் (Charlie Puth) மற்றும் விஸ் கலீஃபா (Wiz Khalifa)என்கிற இரண்டு இளசுகளும் சேர்ந்து காட்டிய ரகளையான மெலடி பாப் பாடல்  'See You Again'. 

பால் வக்கரின் கடைசிப் படம் என்கிற சென்டிமென்ட், ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரசனையான ஸ்போர்ட்ஸ் கார்கள் மற்றும் விண்டேஜ் கார்கள், பேரரசு படம் அளவுக்கு அதிகமான சென்டிமென்ட் இல்லாமல் சரியான அளவு சென்டிமென்ட் எல்லாம் வொர்க் அவுட் ஆகி 294 கோடி யூட்யூப் வியூஸ் சென்றிருக்கிறது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸின் தாக்கத்தை கச்சிதமாக பிரதிபலிப்பது வேறு கூடுதல் பலம். 

வீடியோ வெளியான தேதி :  6 Apr 2015, வீடியோ நேரம் : 3.57 

1) டாடி யான்கே (Daddy Yankee) என்கிற லத்தின் அமெரிக்க தெளலத்தும் திஸ்பசீதோ 'Despacito' ஆல்பத்தால் ஓவர் நைட்டில் ஒபாமா ஆன லூயிஸ் ஃபான்ஸி (Luis Fonsi) -ம் இணைந்து உருவாக்கிய பாடல்தான்  'Despacito'. இந்த இருவரோடு 2006-ல் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்ற Zuleyka Rivera-ம் சேர்ந்து கொள்ள வியூஸ் 300 கோடியைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. 

செம ஸ்பானிய நேட்டிவிட்டி, இரண்டு பெரிய ஸ்பானிய  ஜாம்பவான்களின் வாய்ஸ், Zuleyka Rivera-க்கு ஜிகு ஜிகு காஸ்ட்யூம், லைக்ஸ் அள்ளும் சினிமாட்டோகிராஃபி என்று தட்டித் தூக்குகிறது இந்த  வீடியோ...! 

வீடியோ வெளியான தேதி :  12 Jan 2017, வீடியோ நேரம் : 4.41

 

 

 
 
shadow-divider-full-width.png

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பிறந்த சில நொடிகளில் தாயைக் கட்டியணைத்த பிஞ்சுக்குழந்தை (Video)

பிரேசிலில் பிறந்த சில நொடிகளிலேயே தாயைக் கட்டியணைத்த பிஞ்சுக்குழந்தையின் வீடியோ ஒன்று வௌியாகி, வைரலாகியுள்ளது.

பிரேசிலில் உள்ள சாண்டா மோனிகா மருத்துவமனையில் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிசேரியன் முறைப்படி பிறந்த குழந்தையை மருத்துவர்கள் தாயிடம் முதன்முறையாக வழங்கியதும், அந்த குழந்தை தாயாரின் முகத்தை தனது பிஞ்சுக் கரத்தால் அணைத்துள்ளது.

”இந்த நிகழ்வானது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவம்,” என குழந்தையின் தாயார் பிரெண்டா தெரிவித்துள்ளார்.

குழந்தை தாயாரை அணைக்கும் அந்த காட்சியைப் படம்பிடித்த மருத்துவக் குழுவினர், இதுபோன்ற ஒரு பிணைப்பை இதுவரை தாங்கள் பார்த்ததில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

 

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

உலகை உலுக்கும் முகநூல் மோகம்

 

இன்­றைய நவீன யுகத்தில் முகநூல் பல­ரு­டைய வாழ்க்­கையை சீர்­கு­லைத்­து­விட்­டது. இன்னும் சீர்­கு­லைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. இன்று பல­ருக்கு வங்­கியில் கணக்கு இருக்­கின்­றதோ இல்­லையோ முக­நூலில் கட்­டாயம் கணக்கு இருக்கும் என்றால் மிகை­யா­காது.

முக­நூலை உரு­வாக்­கிய மார்க் சகபர்  (mark Zuckerberg) நொடிப்­பொ­ழுதில் பரந்­து­பட்ட சமூ­கத்­திற்கு தகவலை பரி­மாற்ற வேண்டும், சித­றிக்­கி­டக்கும் நண்­பர்­களை ஒன்­றி­ணைக்க வேண்டும் என்ற நல்ல நோக்­கத்­துடன் உரு­வாக்­கினார். ஆனால் இன்று கணப்­பொ­ழுதில் பல­ரு­டைய வாழ்க்­கைக்கு முடி­வு­கட்­டு­கின்­ற­தென்­பது சகித்­துக்­கொள்ள முடி­யாத உண்மை.  

நாளைய எதிர்­காலம் இன்­றைய சிறு­வர்கள் என்று கூறு­வார்கள் அத்­த­கைய சிறு­வர்­க­ளுக்கு மெல்ல கொல்லும் விஷத்தை போல் முகநூல் அமைந்­து­விட்­டது. சிறு­வர்­க­ளி­னதும், இளை­ஞர்­க­ளி­னதும் கல்வி பாதிக்­கப்­ப­டு­வ­துடன் பலரை மன­நோ­யா­ளி­க­ளாக மாற்­றி­விட்­டது. க­ணினி­வழி குற்­றச்­செ­யல்­க­ளுக்­கென்றே தனித்­துறை அமைத்து விசா­ரணை நடத்தும் அள­விற்கு இன்று சமூக வலைத்­த­ளங்­களில் குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்­து­விட்­டன.

விவா­க­ரத்­துக்­கான கார­ணங்­களின் பட்­டி­யலில் இந்த முகநூல் இடம்­பி­டித்த அவ­லத்­தையும் இந்த சமூகம் ஏற்­றுக்­கொண்டு அதன் பாவ­னையில் தீவிரம் காட்­டு­கின்­ற­மை­யா­னது வருந்­தத்­தக்­கது. உலகில் எந்த விட­யத்தை எடுத்­தாலும் நாண­யத்­திற்கு இரண்டு பக்­கங்கள் இருப்­பதை போன்று அனு­கூலம், பிர­தி­கூலம் இருக்­கத்தான் செய்யும்.

ஆனால் பகுத்­த­றி­வு­டைய மனி­தர்கள் ஏன் தீமையை நாடு­கின்­றார்கள் என்­பதே கேள்­விக்­குறி. முக­நூலை பொறுத்­த­மட்டில் நன்­மை­யான பக்கம் ஒன்று இருந்­தா­லுமே அதை யாரும் நன்­மை­யான வகையில் மாத்­திரம் பயன்­ப­டுத்­த­வில்லை என்­பது முகநூல் பாவ­னை­யா­ளர்கள் அனை­வரும் அறிந்­ததே.

முக­நூலில் காணப்­படும் பாரிய குறை­பாடு ஒரே நபர் வேறு பெயரை பயன்­ப­டுத்தி எத்­தனை முகநூல் கணக்­கு­களும் (facebook Account) வைத்­தி­ருக்­கலாம் என்­ப­தாகும்.இதனை சாதா­ரண குறை­பா­டாக கருத முடி­யாது. இதனால் எத்­தனை பெண்­களின் வாழ்க்கை பறிபோய் விட்­டது என்­பதை சற்று சிந்­தித்து பார்க்க வேண்டும்.

கலி­போ­ர்னிய மாநில பல்­க­லைக்­க­ழ­கத்தின் உள­வி­ய­ல் பேரா­சி­ரி­யர்­களால் நடத்­தப்­பட்ட ஆய்­வு­களின் மூலம் முகநூல் போன்ற வலைப்­பின்னல் தளங்­களின் அதி­க­ரிப்­பா­னது சமூக விரோத செயல்­க­ளுக்கு வழி­வ­குக்கும் என்­பது ஊர்­ஜி­த­மா­கி­யுள்­ளது.

முக­நூ­லா­னது கடந்­த­கால நண்­பர்­களை கண்­டு­பி­டித்து இணைப்­பதை எளி­தாக்­கு­கி­றது. இதனால் குடும்ப உற­வு­க­ளுக்­கி­டையில் முரண்பாடு ஏற்­பட வாய்ப்பு காணப்­ப­டு­கின்­றது.

இங்­கி­லாந்தின் விவா­க­ரத்து வலைத்­த­ளத்தால் நடத்­தப்­பட்ட கணக்­கெ­டுப்பில் முக­நூ­லா­னது பொது­வாக விவா­க­ரத்­துக்கு கார­ண­மாக மேற்­கோ­ளி­டப்­பட்­டுள்­ள­துடன் அமெ­ரிக்கன் அக­டமி ஆப் மேட்­ரி­­ம­னி­ஷியல் லாலிஸின் ஒரு ஆய்வில் முக­நூ­லா­னது விவா­க­ரத்­துக்கு வழி­வ­குக்கும் காரணங்களில் முதன்மை காரணியாக மேற்கோள் காட்­டப்­ப­டு­கி­றது.

முகநூல் பாவ­னையின் மூல­மாக ஊழி­யர்­க­ளி­னதும் மாண­வர்­க­ளி­னதும் ஆக்­கத்­திறன் குறை­வ­டை­கின்­றது. மேலும் தொடர்ச்­சி­யாக முக­நூலை உப­யோ­கிப்­ப­தா­னது பாவ­னை­யா­ளரை அடி­மை­யாக்­கு­வ­தோடு உள­நோ­யா­கவும் தோற்றம் பெறக் கூடிய சாத்­தி­யங்கள் காணப்­ப­டு­கின்­றன.

ஊழி­யர்கள் வேலை நேரத்தின் போது முக­நூலை அணு­கு­வ­தனால் அலு­வ­லக உற்­பத்தித்திறன் சரா­ச­ரி­யாக 1.5 சத­வீ­தத்தால் குறை­வ­டை­வ­தாக அச்­சு­றுத்­தப்­ப­டு­கின்­றது.

முகநூல் உங்­களை பற்­றிய தனிப்­பட்ட தக­வல்­களைப் பகிர்ந்­து­கொள்ள உத­வு­கின்­றது. இது சில சந்­தர்ப்­பங்­களில் அடை­யாள திருட்டுக்கு வழிவகுக்கின்றது.அதன் மூலம் உங்களின் நற்பெயர் மற்றும் நிதிக்கு சேதத்தை ஏற்படுத்தலாம்.

பலரின் உயிரைப்பறித்து உலகையே உலுக்கும் முகநூல் மோகமானது இன்றைய சமுதாயத்தையே சீர்குலைத்து எமது கலாசாரத்திற்கும் பண்பாட்டிற்கும் சவாலாக அமைந்துவிட்டது. இதனை கட்டுப்படுத்தாவிடில் எதிர்கால சந்ததியினர் எமது கலாசாரத்தை வரலாற்றில் படித்து அறிந்துகொள்ள வேண்டிய அவலநிலை உருவாகும் என்பது உறுதி.

எஸ்.வினோஜா

virakesari.lk

  • தொடங்கியவர்
‘கொடுத்தால்தான் கிடைக்கும்’
 

image_1f95bff7fe.jpgஒருவரது நாணயம் அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் மூலம் அளவு செய்யப்படும். 

அசைக்க முடியாத நேர்மை திரிபுபடுவதேயில்லை. கஷ்ட, நஷ்டங்கள் ஏற்படுவதுகூட, ஒருவரின் மனத்தைரியத்தை பரிசோதனைக்கு உட்படுத்துவதுதான் என உணர்ந்தால், புத்தி கோணலாகும் சந்தர்ப்பமே வராது.  

நல்லவை மட்டும் வாழ்க்கையில் ஏற்படாது. கெட்ட துன்பங்களும் குறுக்கே வந்து நிற்கும். எல்லாமே நடப்பதுதானே வாழ்க்கை. இந்த நிகழ்வுகள் எமக்கு மட்டுமல்ல சகலருக்குமான பொதுமைதான்.  

உங்களுக்கு ஏற்படும் இன்னல்களின் வலிமையை உணர்ந்தால், பிறருக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு அதை நீக்க முன்வருவார்கள். இதுவே உண்மையான மனிதாபிமானம்.  

கஷ்டப்படுபவர்களுக்கு இஷ்டத்துடன் உதவினால், உங்கள் கவலைகள் களையப்படும். கொடுத்தால்தான் கிடைக்கும்.  

  • தொடங்கியவர்

2-ம் உலகப்போரில் ஹரோஷிமா மீது அமெரிக்கா சின்னப்பையன் என்ற அணுகுண்டை வீசியது (6-8-1945)

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான், தானும் ஒரு வல்லரசாக மாறும் முனைப்பில் மிக உக்கிரமாகப் போரில் குதித்திருந்தது. வெற்றி பெற்றுக்கொண்டே வந்த ஜப்பான், பசிபிக் கடல் பிராந்தியத்தின் 'பேர்ல்' துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க போர்க் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. அதன்பின்னரே போரின் போக்கு முற்றாகத் திசைதிரும்பியது. முடிவில், அமெரிக்கா, தான் புதிதாகக் கண்டுபிடித்திருந்த அணுகுண்டுகளை வெடிக்கவைத்துப் பார்க்கும் பரிசோதனைக்கூடமாக

 
2-ம் உலகப்போரில் ஹரோஷிமா மீது அமெரிக்கா சின்னப்பையன் என்ற அணுகுண்டை வீசியது (6-8-1945)
 
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான், தானும் ஒரு வல்லரசாக மாறும் முனைப்பில் மிக உக்கிரமாகப் போரில் குதித்திருந்தது. வெற்றி பெற்றுக்கொண்டே வந்த ஜப்பான், பசிபிக் கடல் பிராந்தியத்தின் 'பேர்ல்' துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க போர்க் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

அதன்பின்னரே போரின் போக்கு முற்றாகத் திசைதிரும்பியது. முடிவில், அமெரிக்கா, தான் புதிதாகக் கண்டுபிடித்திருந்த அணுகுண்டுகளை வெடிக்கவைத்துப் பார்க்கும் பரிசோதனைக்கூடமாக ஜப்பானைப் பயன்படுத்திக் கொண்டது. ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய ஜப்பானிய நகரங்களின் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் மூலம் அணுகுண்டுகள் வீசியெறியப்பட்டன. நேச நாடுகள் முதலில் ஜப்பான்மீது தீக்குண்டுகளை வீசித் தாக்குதல் நிகழ்த்தின. இதனால் பல நகரங்கள் அழிந்தன.

பின்னர், தாக்குதல்களின் தீவீரம் அதிகரித்தது. ஐரோப்பிய போர்முனையில் நாசி ஜெர்மனி 1945, மே 8-ம் நாள் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது. அதே நாளில் சரண் ஆவணம் கையெழுத்தானது. ஆனால் பசிபிக் போர்முனையில் போர் தொடர்ந்து நடந்தது. பின்னர், 1945, ஜுலை 26-ம் நாள், ஐக்கிய அமெரிக்கா, சீனக் குடியரசு மற்றும் ஐக்கிய பிரிட்டனோடு இணைந்து, பாட்சுடம் அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் ஜப்பானின் அரசு தோல்வியை ஏற்று, நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் உடனடி, முழு அழிவுக்கு அணியமாக வேண்டும் கூறப்பட்டிருந்தது. அதற்குப் பத்து நாட்களுக்கு முன்னர் அணுகுண்டு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருந்ததால் உடனடி, முழு அழிவு என்னும் சொற்கள் ஜப்பான் மீது நேச நாடுகள் அணுகுண்டு வீச்சு நிகழ்த்த வேண்டிய சூழ்நிலை எழலாம் என்று கடைசி எச்சரிக்கை கொடுத்தது போல் ஆயிற்று. இந்த எச்சரிக்கையை ஜப்பான் அரசு கண்டுகொள்ளவில்லை.

மான்ஹாட்டன் செயல்திட்டம் என்பதின் கீழ் உருவாக்கப்பட்ட இரு அணு ஆயுதங்கள் ஜப்பானின் மீது வீசப்பட்டன. சிறு பையன் (Little Boy) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஹிரோஷிமா நகர்மீது 1945, ஆகஸ்டு 6-ம் நாளும், குண்டு மனிதன் (Fat Man) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு நாகசாக்கி நகர்மீது மூன்று நாட்களுக்குப் பிறகு ஆகஸ்டு 9-ம் நாளும் வீசப்பட்டன. நினைத்துப் பார்க்கவும் முடியாத பேரழிவுகளை ஜப்பான் சந்திக்க நேர்ந்தது. அந்த அழிவின் சாட்சியங்கள் இன்றும் அந்த நாட்டில் நிலைத்துள்ளன.

இதுவே வரலாற்றில் முதல்முறையாக அணுகுண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த இரு குண்டுவீச்சுகளின் விளைவு மிகப் பயங்கரமாக இருந்தது. குண்டுகள் வீசப்பட்ட 2- 4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 66 ஆயிரம் மக்களும், நாகசாக்கியில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் குண்டுவெடிப்பின் காரணமாக உயிர் இழந்தார்கள். இவ்வாறு உயிர் இழந்தவர்களுள் பாதிப்பேர் இரு நகரங்களிலும் குண்டு வீசப்பட்ட முதல் நாளிலேயே கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிரோஷிமா நகரின் நலத்துறை கணிப்புப்படி, குண்டுவீச்சு நிகழ்ந்த நாளில் இறந்தோரில் 60 சதவீதம் பேர் தீக்காயங்களாலும், 30 சதவீதம் பேர் கட்டிட இடர்பாட்டிற்குள் சிக்கியும் பலியானார்கள். குண்டுவீச்சைத் தொடர்ந்த மாதங்களில் ஏராளமான மக்கள் தீக்காயங்களின் விளைவாலும், கதிர்வீச்சு நோயாலும், வேறு காயங்களால் நோய் தீவிரமாகியும் இறந்தனர்.

http://www.maalaimalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.