Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

151 ஆண்டுகளுக்குப் பிறகு உரிமையாளரிடம் திரும்பி அளிக்கப்பட்ட பைபிள்!

 
151 ஆண்டுகளுக்குப் பிறகு உரிமையாளரிடம் திரும்பி அளிக்கப்பட்ட பைபிள்!
 

அமெரிக்காவிலிருந்து 3,500 மைல்கள் பயணம் செய்து, 151 ஆண்டுகள் பழமையான பைபிள் ஒன்று, அதன் உரிமையாளர்களான ஸ்காட்லாந்து குடும்பத்தின் வம்சாவழியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ நகரைச் சேர்ந்த 66 வயதான டொனால்ட் மெக்கெக்னியிடம் இந்த பழமையான பைபிளானது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த பைபிள் மெக்கெக்னியின் கொள்ளுப்பாட்டிக்கு சொந்தமானது. ஓஹியோ மாகாணத்தின் கிளவ்லேண்ட் நகரத்தைச் சேர்ந்த பழமையான பைபிள் சேகரிப்பாளர் ஒருவர், கடந்த 2001-ஆம் ஆண்டு வைட்ஹெட்டுக்கு இந்த பைபிளை அன்பளிப்பாக அளித்துள்ளார்.

இந்த பைபிளில் `1 ஜனவரி 1866` என தேதியிட்டு, அலெக்சாண்டர் என்பருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது என்ற தகவல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒயின் வியாபாரி, பலசரக்கு வியாபாரி மற்றும் மாலுமியாக பணியாற்றிய, 1825-ஆம் ஆண்டு பிறந்த மெக்டொனால்டின் தற்போதைய சந்ததியினரை தேடிக் கண்டுபிடிக்க வைட்ஹெட் முடிவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஸ்காட்லாந்தின் ஹைலேண்ட் கவுன்சிலை தொடர்பு கொண்டதன் மூலம் , ஹைலேண்ட் வரலாற்றுக் காப்பகத்தில் பணியாற்றி வரும் மெக்கன்சி குடும்பம் குறித்து நன்கு அறிந்த ஆனி பிரேசரின் தொடர்பு அவருக்கு கிடைத்துள்ளது.

இதுதவிர சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் கிளாஸ்கோவில் உள்ள மெக்கெக்னியின் மகள் மைரியையும் அவர் தேடி வந்தார்.

இந்த பைபிளுக்கு நடுவில் நான்கு இதழ்கள் கொண்ட கிளவர் வடிவ இலையும் வைக்கப்பட்டிருந்தது. இத்தனை சிறப்புகள் மிக்க இந்த பைபிளானது, ஓஹியோவில் பாதிரியாராக இருப்பவரும், கிளாஸ்கோ நகரத்தை சேர்ந்தவருமான அலிஸ்டெய்ர் பெக்கிடம் அளிக்கப்பட்டது.

இவர் மெக்கன்சி செல்லக் கூடிய தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இவர் தனது உறவினர்களை பார்க்க சமீபத்தில் கிளாஸ்கோ சென்ற போது , அந்த பழமையான பைபிளை மெக்கெக்னியிடம் ஒப்படைத்துள்ளார்.

jgg.jpg

 

http://newuthayan.com/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வெள்ளை நாட்டில் மாடலிங்கில் சாதிக்கும் கறுப்பு ராணி #QueenOfDark #NyakimGatwech

 
 

Nyakim Gatwech

கறுப்பு நிறத்தை விரும்புவோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கக்கூடும். தொலைக்காட்சிகளில் வரும் ஏராளமான முகப்பூச்சு விளம்பரங்கள் ஒளிபரப்பாவதில் இருந்தே இதை நாம் யூகிக்கலாம். தங்களின் கறுப்பு நிறத்தை மேக்கப் பொருள்களைப் பயன்படுத்தி சிவப்பாக முயற்சி செய்துவரும் இன்றைய சூழலில் கறுப்பு நிறத்தையே தனது அடையாளமாகக் கொண்டு புகழ்பெற்ற மாடலாக வலம் வருகிறார் தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்த நயகிம் கெட்வெச்  (Nyakim Gatwech). 24 வயதாகும் நயகிம் கெட்வெச்சை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துவிட்டது. 

’ஒரு நாள் உபர் டிரைவர் என்னிடம். 'பத்தாயிரம் டாலர் கொடுத்து ஏன் இப்படி உங்களது தோலில் நிறத்தை மாற்றிக்கொண்டீர்கள்?' என்று கேட்டார்; அதற்கு, நான் சிரித்துக்கொண்டே 'அப்படி ஒருபோதும் செய்ய மாட்டேன்; எனது தோலின் நிறம் ஆசிர்வதிக்கப்பட்டது' என்று கூறினேன்.’ என அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பிறகுதான் அவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கத்தொடங்கியதாம்.

நயகிம் கெட்வெச்சின் புகைப்படங்களுக்கும் நேர்மையான பதிவிற்கும் இவரின் ரசிகர்கள் ‘குயின் ஆஃப் தி டார்க்’ என்கிற பட்டப்பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். என்னுடைய புகைப்படங்களைப் பார்த்து யார் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை; நான் என்னை விரும்புகிறேன்; என் கறுப்பு நிறத் தோலை விரும்புகிறேன்; பெரும்பான்மையான மக்களிடமிருந்து விலகி நான் வித்தியாசமாக காட்சியளிக்கிறேன் என்று தன் கருத்தைப் பதிவு செய்து பலரின் புருவங்களை வியப்பில் உயர்த்தச் செய்கிறார்.

Nyakim Gatwech

நயகிம் கெட்வெச் முதலில் எத்தினோப்பியாவிலும் பின்னர் கென்யாவிலும் அகதிகள் முகாமில் அகதியாக இருந்துள்ளார். அதன் பின்னர், அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்துள்ளார். அவர் அமெரிக்கா வருவதற்குள்ளான இடைப்பட்ட காலத்தில் அவரின் இரண்டு தங்கைகளையும் இழந்துள்ளார். இவர் எத்தினோப்பியா மற்றும் கென்யாவில் இருக்கும்போது நிறம் தொடர்பாக எவ்விதப் பகுபாட்டையும் உணரவில்லையாம். ஆனால், இடைநிலை கல்விப் பயில்வதற்காக அமெரிக்காவிற்குச் சென்றபோதுதான் இவருக்கு நிறப் பாகுபாடு பார்ப்பது தெரிய வந்திருக்கிறது. அங்கு இவருடன் பயின்ற பலரும் இவரைக் கேலி செய்து, வித்தியாசமாகப் பார்த்துள்ளனர்.

நயகிம் கெட்வெச் தற்போது, இவரது கறுப்பு நிறத்தைக் கொண்டு அனைத்து மாடல்களுக்கும் சவாலான போட்டியாளராக இருக்கிறார். இவர் மற்றவர்களையும் விட வேறுபட்ட விதத்தில் புகைப்படம் எடுத்து அதைப் பதிவிடுவதால் அனைவரின் பார்வையும் இவர் பக்கம் திரும்பியுள்ளது.

இவர் தனது பட்டப்படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையைத் தேர்வு செய்த போதிலும், தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேண்டும் என்பதுதான் இவரின் ஆசையாம். தன்னைப் போன்று நிராகரிக்கப்பட்ட தன் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவரால் முடிந்த உதவியைச் செய்வதற்கு ஒருபோதும் யோசிக்க மாட்டேன் என்றும் பதிவிட்டுள்ளார். இவர் மாடலிங் துறைக்கு வந்ததே சுவாரஸ்யமான விஷயம். ஒரு நாள், இவரை மளிகைக் கடையில் பார்த்த ஒருவர், நீங்கள் ஏன் மாடலிங் துறையைத் தேர்வு செய்யக் கூடாது என்று கூறியுள்ளார். அப்போது இவர் மாடலிங்னா என்ன..? அந்த வேலைக்கு எப்படி அப்ளை பண்ணனும்..? என்று சிந்தித்ததாகக் கூறியிருக்கிறார். அப்படி, மாடலிங் பற்றி எவ்வித தெளிவும் இல்லாதவர் இன்று, தனது தன்னம்பிக்கையால் மாடலிங் துறையில் முத்திரை பதித்து வருகிறார். 

 

‘கறுப்பு தைரியமானது, கறுப்பு அழகானது, கறுப்பு தங்கம் போன்றது“  என்று நிறவேற்றுமை பார்ப்பவர்களுக்குத் தனது பதிவுகளால் பதில் அளிக்கிறார் 'கறுப்பு' ராணி நயகிம் கெட்வெச்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

நாய்களுக்கான சர்ஃபிங் போட்டி!

  • தொடங்கியவர்

இதழியலில் எழுபது ஆண்டுகள்!

 

 
10chvcmedit2-perlman

த்திரிகையாளராக 70 ஆண்டுகள் பணிபுரிவது என்பது அசாத்தியமான சவால். ‘சான்பிரான்சிஸ்கோ கிரானிகல்’ பத்திரிகையில் பணியாற்றிய டேவிட் பேர்ல்மேன் (99) அலட்டிக்கொள்ளாமல் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார். இந்த மாதம்தான் ஓய்வுபெற்றிருக்கிறார் பேர்ல்மேன். அதுவும் தன் விருப்பத்தின் பேரால்!

 

அறிவியல் ஆர்வம்

அறிவியல் செய்திகளைத் தொடர்ந்து எழுதிவந்த பேர்ல்மேன் 1918-ல் பிறந்தவர். 21-வது வயதில் பத்திரிகையாளர் ஆனார். இரண்டாவது உலகப் போர் சமயத்தில் ராணுவத்தில் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உண்டு. 20-வது நூற்றாண்டின் அறிவியல் யுகத்தில் தொடங்கி, 21-வது நூற்றாண்டில் கணினி யுகம் வரையில் பணி செய்திருக்கிறார். பல விருதுகள் பெற்றவர். அவருடைய பெயரிலேயே பல விருதுகள் வழங்கப்படும் அளவுக்குப் புகழ்பெற்றவர்.

சுமார் 5 ஆண்டுகள் ‘நியூயார்க் ஹெரால்ட் டிரிப்யூன்’ பத்திரிகையின் ஐரோப்பியப் பதிப்பில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பணியாற்றினார். பிறகு, மீண்டும் சான் பிரான்சிஸ்கோ கிரானிகலுக்கே திரும்பிவிட்டார். நிருபராக வேலைக்குச் சேர்ந்த புதிதில், எல்லா இளைஞர்களைப் போலவே கிரைம் செய்திகளில்தான் ஆர்வம் காட்டியிருக்கிறார். எங்காவது கொலை என்றால் உற்சாகத்தோடு போய்விடுவார் செய்தி சேகரிக்க. 1957-ல் கடலில் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது நிலைதடுமாறி விழுந்ததில், கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். ‘தி நேச்சர் ஆஃப் தி யூனிவெர்ஸ்’ என்ற புத்தகத்தை அங்கிருந்த மருத்துவர் படிக்கக் கொடுத்தார். ஆர்வமில்லாமல்தான் படிக்கத் தொடங்கினார் பேர்ல்மேன். படித்த பிறகு மனம் மாறியது. இதைப் போலவே நாமும் அறிவியல் செய்திகளைத் தர வேண்டும் என்று அன்றைக்கு முடிவெடுத்தார்.

 

பேர்ல்மேனின் எச்சரிக்கை

அவர் பணியில் சேர்ந்தபோது லைனோ என்ற முறையில் வரிவரியாக எழுத்துகளை இயந்திரத்தில் உருவாக்கி அச்சிடும் முறை தான் இருந்தது. செய்திகளைத் தர அலுவல கத்தில் டைப்-ரைட்டரைத்தான் பயன்படுத்தினார்.

வெளியே செல்லும்போது போர்ட்டபிள் டைப்-ரைட்டரைக் கையில் கொண்டுபோய் செய்தியை அடித்து அனுப்புவார். நேரம் குறைவாக இருந்தால் தொலைபேசி மூலம் அலுவலகத்துக்கு செய்தி தந்துவிடுவார். இணையதளம் புழக்கத்துக்கு வந்ததும் உலகமே பெரும் தகவல் புரட்சிக்கு ஆளாகிவிட்டது என்று நினைவுகூர்கிறார்.

அவருடைய இப்போதைய வருத்தம் எல்லாம் அமெரிக்கப் பத்திரிகைகளில்கூட அறிவியல் செய்திக்கு ஒதுக்கும் பக்கங்களைக் குறைத்துவிட்டார்களே என்பதுதான். அறிவியல் என்பது மாணவர்களுக்கு அவசியமானது என்பதால் அதில் ஆர்வம் ஏற்பட பத்திரிகைகள் அறிவியல் செய்திகளை அதிகம் வெளியிட வேண்டும் என்கிறார்.

பருவநிலை மாறுதல், புவி வெப்பமடைதல் எல்லாம் வெறுமனே படித்துவிட்டுக் கடக்கக்கூடிய செய்திகள் அல்ல, நம்மை இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நேரடியாகப் பாதிக்கக்கூடிய நிகழ்வுகள் என்று எச்சரிக்கிறார்.

 

நல்ல உதாரணம்

20-வது நூற்றாண்டின் அத்தனை பெரிய அறிவியல் சாதனைகளையும் தங்களுடைய பத்திரிகையில் அவர்தான் தொடர்ந்து எழுதினார். பத்திரிகை நிர்வாகிகள், சக பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல வாசகர்களும் அவருடைய நடையை மிகவும் ரசித்துப் படித்தனர். எனவே, அவருக்கு ஓய்வு தர வேண்டும் என்றே நிர்வாகம் நினைக்கவில்லை. இப்போதும் அவராகத்தான் ஓய்வெடுக்கத் தீர்மானித்திருக்கிறார்.

தன்னைப் போலவே அறிவியல் பத்திரிகையாளராக விரும்பும் இளைஞர்களுக்கு அவர் சில உத்திகளைக் கூறுகிறார். முதலில் கலைப் பாடத்தை நன்கு படியுங்கள். பிறகு மானுடவியல், வானியல், இயற்பியல், உயிரியல் புத்தகங்களை வாசியுங்கள். விஞ்ஞானிகளை அணுகி அவர்களுடைய ஆய்வுகள், சாதனைகள் குறித்துக் கேளுங்கள். உற்சாகத்தில் அவர்களே உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் கூறுவார்கள் என்கிறார்.

அறிவியல் செய்திகளைச் சேகரிப்பதற்காக மட்டுமே உலகைச் சுற்றியிருக்கிறார். அன்டார்டிகா, தென் துருவம், அலாஸ்காவின் வட சரிவு என்று இயற்கையின் அழியாச் சின்னங்களைப் பார்வையிட்டதுடன் சீனா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த தலைமுறையினர் தாங்கள் கால் பதித்த துறையில் எந்த அளவுக்கு ஊன்றிக் களித்துப் பணியாற்றினர் என்பதற்கு பேர்ல்மேன் நல்ல உதாரணம்!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

வண்ணங்களை பயன்படுத்தி மருத்துவ சிகிச்சை

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழக அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் அளிக்கப்படும் நிற சிகிச்சை குறித்து விளக்குகிறது இக்காணொளி.

  • தொடங்கியவர்

நாசாவில் பணிபுரிய கடிதம் எழுதிய சிறுவனுக்கு பதில் கடிதம் வந்தது!

 

கடிதம்

ரு வாரத்திற்கு முன்பு ஒன்பது வயது மாணவன் US SPACE - National  Aeronautics and Space Administration-னுக்கு எழுதிய கடிதம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. 

ஒன்பது வயதே ஆன ஜேக் டேவிஸ் நாசாவில் பிளானட்டரி புரடக்‌ஷன் ஆபிசராக வேலைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறான். அவன் கடிதத்துக்கு, 'பள்ளியில் நன்றாகப் படித்து இந்த வேலைக்கு நீங்கள் வர வேண்டும் என விரும்புகிறேன்' என்று நாசாவின் பிளானட்ரி சயின்ஸ் டிவிசனின் டைரக்டர் பதில் அளித்திருக்கிறார். 

ஜேக் டேவிட் எழுதியுள்ள கடிதத்தில், 

'என் பெயர் ஜேக் டேவிட். நான் பிளானட்டரி புரடக்ட் ஆபிஸராக பணிபுரிய அப்ளை செய்ய விரும்புகிறேன்.  எனக்குத் தெரியும், எனக்கு ஒன்பது வயதுதான் ஆகிறது. இருந்தபோதிலும் இந்தப் பணிக்குப் பொருத்தமான ஆளாக நான் இருப்பேன் என்று நினைக்கிறேன். அதற்கு காரணமும் இருக்கிறது. என் சகோதரி என்னை ஏலியன் என்று சொல்லியிருக்கிறாள். கிட்டத்தட்ட எல்லா ஏலியன் படங்களையும் பார்த்திருக்கிறேன். மேலும், Marvel Agents of shield என்கிற ஷோவையும் பார்த்திருக்கிறேன். அதேபோல், Men in Black  என்கிற படத்தையும் பார்த்திருக்கிறேன். வீடியோ கேமிலும் நான் கில்லாடியாக இருக்கிறேன். எனக்குத் தெரியும் நான் சின்னப் பையன்தான். இருந்தபோதும் ஏலியனைப் போல நானும் கற்றுக்கொள்கிறேன்' என முடித்திருக்கிறான். 

 

இந்தக் கடிதத்தைப் பாராட்டி, 'பிளானட்ரி புரடக்‌ஷன் ஆபீஸர் வேலை என்பது கூலான அதே நேரம் முக்கியமான வேலை. இந்தப் பணியின் மூலமாக மற்ற கோள்களையும் காப்பாற்ற முடியும். நாங்களும் எதிர்கால சயின்டிஸ்ட் மற்றும் என்ஜினீயர்களையும் எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளோம். நாங்கள் நம்புகிறோம், எதிர்காலத்தில் படித்து நாசாவில் நல்ல பணியில் அமர்வீர்கள் என்று' என பதில் கடிதம் அனுப்பியுள்ளார் சயின்ஸ் டிவிசன் டைரக்டர். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘உலகம் பொதுச் சொத்து’
 

image_871d699cb7.jpg‘நான் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவன்’ எனப் பெருமைப்படுவதைவிட, நான் அருளாளர் குடும்பத்தின் வழித்தோன்றல் என எண்ணுதலே அதியுயர் கௌரவமாகும். பரம ஏழையும் அருளாளனாக வாழ்கின்றான். 

ஒழுக்கமான குடும்பம் உயர்வடையும். இங்கிருந்து புறப்பட்ட வம்சம், தங்கள் பெருமைகளை நிலைநாட்ட வேண்டும்.

இருப்பினும் எந்தவிதமான குடும்பப் பின்னணியும் இல்லாதவர்கள்கூட, உயர் குணங்களைக் கொண்டவர்களாக, வாழ்ந்து உலகில் உயர்ந்தும் வருகின்றனர். பேதமை பேசுதல் அவமானம். 

பிறப்பு நடந்த குடும்பச் சூழ்நிலையை, மட்டும் கருதாமல் ஒருவர் நல்ல சூழல், அதனோடு இணைந்த நல்மக்களுடன் இணைந்தால் பண்பு நிலை தானாக உருவாகும். இது இயற்கை நியதி. 

கால ஓட்டத்தில் நல்லவை, கெட்டவை மாறிமாறி நடைபெறும். பழைமைக் கதை கேட்டு, உயர்ந்த நிலையில் வாழும் நல்ல மனிதரை, இகழக்கூடாது. உலகம் பொதுச் சொத்து.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 11
 
 

article_1439271129-A9.JPG1786: கப்டன் பிரான்சிஸ் லைட், மலேஷியாவில் முதலாவது பிரித்தானிய கொலனியை ஆரம்பித்தார்.

1804: ஆஸ்திரியாவில் இரண்டாம் பிரான்சிஸ் மன்னரானார்.

1952: ஜோர்டான் மன்னராக பின் தலால் பதவியேற்றார்.

1960: சாட் நாடு சுதந்திரம் பெற்றது.

1965: கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

1968: பிரித்தானியாவின் நீராவி ரயில், தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.

1972: வியட்நாம் போர் - கடைசி அமெரிக்க தாக்குதல் படையினர் தென் வியட்நாமைவிட்டுப் புறப்பட்டனர்.

1975: போர்த்துக்கீசத் தீமோரில் உள்நாட்டுக் கலவரம் ஆரம்பித்ததில் அதன் ஆளுநர் "மாரியோ லெமொஸ் பிரெஸ்" தலைநகர் டிலியைவிட்டுத் தப்பினார்.

1984: வானொலி ஒன்றுக்காக தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றேகன் கூறியது: "எனது சக அமெரிக்கர்களே, ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்".

1999: ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.

2003: ஆப்கானிஸ்தானில் நடவடிக்கையில் ஈடுபடும் படைகளின் தலைமைப் பொறுப்பை நேட்டோ ஏற்றது.

2003: ஜெமா இஸ்லாமியா இயக்கத் தலைவர் ரிதுவான் இசாமுதீன் (ஹம்பாலி) பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்டார்.

2006: யாழ். குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ-9 நெடுஞ்சாலை, காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

இரவு நேரக் காவலாளிகளின் ஓர் இரவு எப்படி இருக்கும் தெரியுமா?

எளிய மனிதர்கள் சூழ் சமூகம் இது. நாம் அனைவருமே எளிய மனிதர்கள்தான். ஆனால், எப்போது கார்ப்பரேட் கலாசாரம் காலூன்றியதோ அப்போதிலிருந்து பயோ மெட்ரிக் வாழ்க்கை முறைக்கு நாம் மாறிவிட்டோம். இதனால் எளிய மனிதர்களையோ, எளிய மனிதர்களின் பிரச்னைகள்குறித்தோ அறிய நமக்கு நேரமில்லை. எத்தனை புதிய இந்தியாக்கள் பிறந்தாலும், சிலரது வாழ்க்கை முறை மட்டும் மாறவே மாறாது.

காவலாளிகள்


அப்படிப்பட்டவர்கள்தான் காவலாளிகள். தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், மருத்துவமனைகள், ஐ.டி கம்பெனிகள், வங்கிகள், ஏ.டி.எம்-களில் இரவு, பகல் பாராமல் 24*7 பணி செய்யும் காவலாளிகளைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை. பரபரப்பான வாழ்க்கை முறையில் பகலிலேயே அவர்களது பிரச்னைகுறித்து நாம் யோசிப்பதில்லை. அப்படி இருக்கும்போது, இரவு நேரக் காவலாளிகளின் வாழ்க்கை முறை குறித்து நாம் தெரிந்துவைத்திருக்க வாய்ப்பில்லை. அன்றாட வாழ்க்கையில், நாம் அனைவருமே தினசரி அவர்களைக் கடந்ததுதான் செல்கிறோம். எனவே, அடுத்த சில நிமிடங்கள் அவர்களின் வாழ்க்கைக்குச் செல்வோம் வாங்க...


நேரம்: நள்ளிரவு 1 மணி


இடம்: அண்ணா சாலை


அந்த நள்ளிரவிலும் கண்ணில் சற்றும் தூக்கமின்றி அமர்ந்திருந்த ஏ.டி.எம் மையத்தின் காவலாளி ஒருவரிடம் பேச்சுக்கொடுத்தோம், "என் பேரு மணி. நான் 11 வருஷமா இந்த வேலைல இருக்கேன். முன் எல்லாம் டைமிங்கே இருக்காது. இப்போதான் டைமிங் முறையே வந்துருக்கு. எனக்கு 8 மணி நேரம் ஷிஃப்ட். எங்களுக்கு வேலை கொடுத்துள்ள நிறுவனத்துல இருந்து, போலீஸ்காரங்க இப்படி நைட் ரெண்டு, மூணு தடவைக்கு மேல் ரவுண்ட்ஸ் வருவாங்க. சற்று கண் அசந்தாலும் வேலைய விட்டு தூக்கிருவாங்க. 

மணி


மொத்தம் மூணு விதமான ஷிஃப்ட் இருக்கு. ஒருத்தர் வரமுடியாமப் போனாலும், அவங்க ஷிஃப்டை நாமதான் பார்க்கணும். வருஷத்துல எந்த நாளும் எங்களுக்கு லீவே கிடையாது. அப்படி லீவ் போட்டா, அன்னிக்கு சம்பளம் கட். தீபாவளி, பொங்கல் என்று எந்தப் பண்டிகைனாலும் வேலைக்கு விடுமுறை இல்லை. எவ்ளோ வருஷம் வேலை பார்த்தாலும் மாசத்துக்கு 10,000-க்கு மேல சம்பாதிக்க முடியாது.
இப்போ, வட நாட்டுக்காரங்க வேற அதிகமா வந்துட்டாங்க. ஒரு ரயிலில் 10 பேராவது வந்துடுறாங்க. அவங்களுக்கு 8,000 சம்பளமே பெரிய விஷயம். குடும்பம், குட்டி இல்லததால வேலைல நிறைய அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்க. துரத்தினாலும் போக மாட்டாங்க. இதனால, நம்ம ஆளுங்களுக்கும் சம்பளம் பெருசா கிடைப்பதில்லை" என்றார் வேதனையுடன்.


நேரம்: நள்ளிரவு 2 மணி


இடம்: அதே அண்ணா சாலை


கார் ஷோரூம் ஒன்றின் முன்பு அமர்திருந்த ஒரு வயதான காவலாளியிடம் பேசினோம், "என் பேரு ராமலிங்கம். திருப்போரூர்தான் சொந்த ஊரு. 54 வயசாகுது. 30 வருஷமா இதே வேலைதான். எத்தனையோ கம்பெனி மாறிட்டேன். முக்காவாசி நிறுவனங்கள் இதுல சரியா சம்பளம் கொடுப்பதே பெரிய விஷயம். அதனால சம்பளம் கொடுக்காட்டி உடனே கம்பெனி மாறிடுவேன். இப்போ எனக்கு 12 மணி நேரம் வேலை. பகல் ஷிஃப்ட்ல ஆளுங்க வராட்டி 24 மணி நேரமும் இங்கதான். சில நேரத்துல தொடர்ந்து ரெண்டு, மூணு நாள்கூட இருக்க வேண்டியதுவரும். 

ராமலிங்கம்


எங்க கம்பெனி ஃபீல்டு ஆபீஸர் ரவுண்ட்ஸ் வரும்போது, கண்ண லைட்டா மூடினாக்கூட 'என்னயா தூங்கற'னு கேட்பாங்க. இதுல சிலர் குடிச்சிட்டு செய்யற ரவுசுகளைத் தாங்கவே முடியாது. குடிச்சிட்டு நம்மளை கல் எடுத்து அடிக்க வருவாங்க. இந்த கார்களுக்கு ஏதாவதுனா நாமதான் பொறுப்பு. யாராவது காரை கல் எடுத்து அடிச்சிட்டா, அவங்களை ஓடிப் போயி புடிக்கணும். இல்லாட்டி நம்ம கதை அவ்வளவுதான். எந்த நிமிஷம் வேணாலும் வேலைய விட்டுத் தூக்கிருவாங்க.


ஒரு தடவை, வேலை செய்யற இடத்துல எனக்கு கால்ல அடிபட்டுடுச்சு. ஆனாலும், தொடர்ந்து 48 மணி நேரம் வேலைபார்த்தேன். உடம்புக்கு என்ன பிரச்னை வந்தாலும் வேலை செஞ்சுதான் ஆகணும். குடும்பத்தோட நேரம் செலவு பண்ண முடியாது. இப்ப 9,000 சம்பளம். எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்களை நல்லா முன்னுக்குக் கொண்டுவரணும்" அவ்ளோதான்பா என்று முடித்தார்.


நேரம்: நள்ளிரவு 3 மணி


இடம்: நந்தனம் அருகே


சேரில் அமர்ந்தபடி நெருப்பு மூட்டி கொசுக்களை விரட்டிக்கொண்டிருந்த காவலாளி ஒருவரிடம் பேசினோம், "என் பேரு ஃபெரோஸ் அலி. நான் ஆர்மில இருந்து ரிட்டயர் ஆனவன். எட்டு மாசமாதான் இந்த வேலை. வீட்ல சும்மா இருக்க முடியல தம்பி, அதான். செக்யூரிட்டிங்களுக்கு எவ்ளோ பிரச்னை இருக்கு. போதைல அடிக்க வருவாங்க. சுத்தமா பாதுகாப்பு இல்லை. ஒரு இன்சூரன்ஸ்கூட இல்லை. செத்துப்போனா அவ்ளோதான். எங்களை வெச்சு நல்லா சம்பாதிக்கறாங்க. ஆனா, எங்களுக்கு மட்டும் நல்ல சம்பளம் கொடுக்க மாட்றாங்க. 9,000 சம்பளத்துக்கு உயிரைப் பணயம் வெச்சு வேலை பார்க்கறோம்.

ஃபெரோஸ்


சாப்பாடு சாப்பிட்டா ஜீரணம் ஆகாது. நைட் ஷிஃப்ட் தொடர்ந்து பார்க்கிறப்ப, மன அழுத்தம் அதிகமாயிடுது. எனக்கு சுகர் இருக்கு தம்பி. ஆனா, இந்த வேலைல சரியான நேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாது. என்ன பண்றது... அப்படியே போகுது வாழ்க்கை" என்றார் புன்சிரிப்புடன்.


இப்படி பல பிரச்னைகளுடன் தூங்கும் நம் நகரைத் தூங்காமல் தாலாட்டும் காவலாளிகளைக் கடந்து செல்லும்போது, அவர்கள் வணக்கம் சொன்னால், பதிலுக்கு வணக்கம் சொல்லுங்கள்... ஒரு புன்முறுவலுடன் நகருங்கள்... அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது வேறு எதுவும் இல்லை. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அதிசய ஆலயங்கள்: திராவிடக் கலை மிளிரும் அங்கோர்வாட்

 

 
shutterstock550840222

ன்றைய கட்டிடவியல் வல்லுநர்களும் அறிவியல் அறிஞர்களும் வியக்கும் பிரம்மாண்டமான படைப்பு கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம். 500 ஏக்கரில் பரந்திருக்கும் இந்தக் கோயிலை ஒரு கலைப் பொக்கிஷம் என்று கூறலாம். கோயிலைச் சுற்றிலும் பிரம்மாண்ட அகழி, மதில் சுவர், உயர்ந்து நிற்கும் கோபுரங்கள், திரும்பிய பக்கம் எல்லாம் சிற்பங்கள் என அதிசயமாகக் காட்சியளிக்கிறது.

10chsrsangkorwat2

இந்தக் கோயிலின் ஒரு பக்கச் சுற்றுச் சுவரின் நீளம் மூன்றரை கிலோமீட்டர். இந்தக் கோயிலுக்குள் நம் தமிழகத்து ஸ்ரீரங்கம் கோயிலைப் போன்று 20 கோயில்களை அடைக்கலாம். இக்கோயிலை முழுமையாகப் படம்பிடிக்க வேண்டுமென்றால், பூமியிலிருந்து சுமார் 1000 அடி மேலே சென்று வானத்திலிருந்து படம் எடுத்தால் மட்டுமே முடியும். அந்தக் காலத்தில் இது வெறும் 27 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இத்தனை பிரம்மாண்டமான கனவு ஆலயத்தை எழுப்பியவர் இரண்டாம் சூரியவர்மன். இக்கோயிலை மேலிருந்து பார்க்கும்போது மூன்று அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது.

10chsrsthreeangkorwat

முதல் அடுக்கில் உள்ள சுவரில் ராமாயணம், மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாம் அடுக்கின் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. மூன்றாம் அடுக்கில் விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது. மேலும், இக்கோயிலுக்கு மிகப் பெரிய நான்கு நுழைவுவாயில்களும் உள்ளன.

 

தேசியக் கொடியில் அங்கோர்வாட்

கெமர், திராவிடக் கலைகளைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதால் கம்போடிய அரசின் தேசியக் கொடியில் தேசியச் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இரண்டாம் சூரியவர்மன் அங்கோர் வாட்டை முதலில் ஒரு விஷ்ணு கோயிலாகத் தான் கட்டினார்.

shutterstock26586574

சூரியவர்மன் இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த ஏழாம் ஜெயவர்மன் இதை பவுத்தக் கோயிலாக மாற்றினார். 1992-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை உலக மரபுச் சின்னமாக அறிவித்ததுடன், அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது. உலகிலேயே மிகப் பெரிய கலைவடிவமாகக் கருதப்படும் இக்கோயிலை பார்க்க, ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கில் மக்கள் வருகிறார்கள்.

shutterstock134232929
 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

உணவகத்தில் வேலை செய்யும் சுட்டிக் குரங்கு! – காணொலி

 
 
உணவகத்தில் வேலை செய்யும் சுட்டிக் குரங்கு! – காணொலி
 

உலகில், சில வித்தியாசமான உணவகங்கள் இருக்கின்றன. எல்லா உணவகங்களிலும் மனிதர்கள்தான் வேலைசெய்வார்கள்.

ஆனால், ஜப்பானில் உள்ள கயாபுகி எனும் உணவகத்தில் மட்டும் வித்தியாசமாக ஒரு குரங்கை வேலைக்கு வைத்திருக்கிறார்கள்.

குரங்குகளைப் பராமரித்து வந்த இதன் உரிமையாளர், ஒருநாள் குறித்த குரங்கு எதேச்சையாக ஒரு வாடிக்கையாளருக்கு எந்த ஒரு உத்தரவும் இல்லாமல் தானாகவே உணவைக் கொண்டுபோய் டேபிளில் வைப்பதைக் கவனித்தார்.

அதன்பிறகு, இந்தக் குரங்குக்கு சர்வர் உடையை அணிவித்து, உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு பந்தாவாக சர்வர் வேலை செய்யவைத்தனர்.

தினமும் உணவகத்தில் சர்வர் வேலைசெய்து, வலம் வந்துகொண்டிருக்கும் இந்தக் குரங்கு ஜப்பானில் மிகவும் பிரபலமாகியுள்ளது. இதன் பரிமாறும் அழகைப் பார்க்கவே கூட்டம் கூடுகிறது.

இதை, உள்ளூரிலிருந்து மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

இதனால், முன்பு இருந்ததைவிட வாடிக்கையாளர்கள் கூட்டம் இப்போது அதிகரித்துள்ளது என்கிறார், இந்த உணவகத்தின் உரிமையாளர்.
இந்தக் குரங்கு பந்தாவாகப் பரிமாறும் அழகைக் கீழே உள்ள காணொளியில் காணலாம்…

 

http://newuthayan.com

  • தொடங்கியவர்

இவருக்கு கை கிடையாது... அவருக்கு கண் தெரியாது... இணைந்து ஒரு காடே வளர்த்திருக்கிறார்கள்!

 

“உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்; ஓடமுடியாவிட்டால் நடந்துசெல்லுங்கள்; நடக்கவும் முடியாவிட்டால் தவழ்ந்து செல்லுங்கள். ஆனால், எதைச் செய்தாலும் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டே இருங்கள்”- மிகவும் பிரபலமான வரிகள் இவை. தன்னம்பிகையை தட்டிக்கொடுத்து வளர்க்கும் இந்த வரிகளுக்கு வாழும் சாட்சிகளாக இரண்டு பேர் சீனாவில் இருக்கிறார்கள். பார்வை இல்லாத ஒருவரும், இரு கைகளை இழந்த ஒருவரும் சேர்ந்து  பத்தாயிரம் மரங்களை வளர்த்திருக்கிறார்கள். 

மரம் நண்பர்கள்  கை

புற்கள், மரங்கள் என பச்சைப் பசுமையாய் இருந்த வடகிழக்கு சீனாவின் ஏலி என்கிற கிராமத்துக்கு குவாரி ஒன்று  செயல்பட ஆரம்பித்திருக்கிறது. குவாரியின் வருகைக்குப் பின் சுற்றி இருக்கிற இடங்கள் எல்லாம் மாசுப்படுகின்றன. ஆற்றில் கழிவுகள் கலக்கின்றன. அதனால் ஆற்றில் இருக்கிற மீன்கள் இறக்கின்றன. அதேபகுதியில் ஜியா ஹைக்சியா என்பவர் வசித்து வருகிறார். 2000-வது வருடத்தில் குவாரியில் நடைபெற்ற ஒரு வெடி விபத்தில் ஜியா ஹைக்சியா சிக்கிக்கொள்கிறார். விபத்தின் விளைவால் தனது கண் பார்வையை நிரந்தரமாக இழக்கிறார். திடீரென பார்வை இழந்ததும், விபத்துக்கு முன்னர்தான் பார்த்த இடங்களை, மனிதர்களை, நினைத்து நினைத்து உடைந்து போகிறார். பிறவியில் பார்வை இல்லாமல் இருந்திருந்தால் வாழப் பழகி இருக்கும் என நினைக்கிற வெங்க்யூ ஒரு கட்டத்தில்  தற்கொலைக்கு முயல்கிறார்.

 

மரம் நண்பர்கள்

அதே கிராமத்தில் ஜியா வேங்க்யூ  என்கிற நபர் வசித்து வருகிறார். அவர் 3 வயதாக இருக்கும்போது மின்சாரம் தாக்கிய விபத்தில் தனது இரு கைகளையும் இழக்கிறார். கைகளை இழந்தவர் துவண்டுபோகாமல் தனது கால்களைப் பயன்படுத்தி எல்லா வேலைகளையும் செய்துவருகிறார். கிராமத்தில் இருக்கிற ஊனமுற்ற பாடல் குழுவில் இணைந்து, பாடல்கள்  பாடுவதை தொழிலாகக் கொள்கிறார். ஜியா வேங்க்யூவின்  பால்ய காலங்களில் ஜியா ஹைக்சியாவுடன்  பயணித்தவர். சிறு வயதில் இருந்தே இருவரும் நண்பர்களாக இருக்கிறார்கள். இருவரது வீடுகளும் அருகருகே இருக்கிறது.

பார்வை இழந்து,  மன உளைச்சலில் இருக்கும் ஜியா ஹைக்சியாவை கைகளை இழந்த  ஜியா வேங்க்யூ சந்திக்கிறார். “எனக்கு நீ கையாக இரு. உனக்கு நான் கண்ணாக இருக்கிறேன்” என சொல்கிறார். கிடைத்த ஆறுதல் ஒரு பிடிப்பாக தெரியவே, ஜியா ஹைக்சியா அவரோடு இணைகிறார். ஒருவருக்கு ஒருவர் துணை என நடக்க ஆரம்பிக்கிறார்கள். ஆறுகளைத் தாண்டும் போதெல்லாம் ஹைக்சியாவை தூக்கிக் கொண்டு நடக்கிறார் ஜியா  வேங்க்யூ. எங்கு சென்றாலும் இருவரும் இணைந்தே செல்கிறார்கள். வறண்டு போய்  கிடக்கிற கிராமத்துக்கு நம்மால் முடிந்த ஒன்றைச் செய்ய வேண்டும் என இருவரும் பேசிக்கொள்கிறார்கள். அவர்கள்  மாற்றுத்திறனாளிகள் என்பதைக் கடந்து  யோசிக்க ஆரம்பிக்கிறார்கள்.  இருவரும் தங்களைச் சுற்றி இருக்கிற சூழல் மாசுபட்டுக் கிடப்பதை உணர்கிறார்கள்.. குவாரியில் இருந்து வருகிற கழிவுகள் ஆற்றில் கலந்தும், காற்றில் கலந்தும் இருப்பதை அறிந்து கிராமத்தில் மரம் வளர்ப்பது என முடிவெடுக்கிறார்கள்.

கிராமத்தைச் சுற்றி 800 மரக்கன்றுகளை நடவு செய்கிறார்கள்.  கைகளை இழந்த ஜியா வேங்க்யூ கழுத்துக்கு தோளுக்கும் இடையில் கம்பு போன்ற ஒன்றை பயன்படுத்தி தண்ணீர் எடுப்பது, மண் அள்ளுவது என பல வேலைகளைச் செய்கிறார். மரம் நடுவதற்கான குழிகளை தோண்டும்  அவர்களின் முயற்சியை  ஊர் மக்கள் கேலி செய்கிறார்கள். “கை  இல்லாதவனும் கண்ணு தெரியாதவனும் சேர்ந்து  என்ன பண்ணப் போறாங்களோ” என கேலியும் கிண்டலும் அதிகரிக்கிறது. ஆனால், அவர்கள் இருவரும் மரங்கள் வளரும் எனக் காத்திருக்கிறார்கள். மரக்கன்றுகள் வேர்பிடித்திருக்கும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. 800 மரங்களில் 2 மட்டுமே உயிர்ப்பிடித்திருக்கிறது. மற்ற அனைத்தும் இருக்கிற  தடம் இல்லாமல் அழிந்து போயிருக்கிறது. மரம் நடுவதும்  வளர்ப்பதும் எளிதானது என நம்பியவர்கள் அது சாதாரண காரியம் இல்லை என  உணர்கிறார்கள்.

தோல்வியில்  சோர்ந்து போயிருந்த ஜியா ஹைக்சியாவுடன் மனம் விட்டுப்  பேச ஆரம்பிக்கிறார்  ஜியா  வேங்க்யூ. “விடாம முயற்சி பண்ணுவோம். நிச்சயம் நமக்கு ஒரு நாள் விடை கிடைக்கும்” என தன்னம்பிக்கையை விதைக்கிறார் வேங்க்யூ. பிறகு மரக்கன்றுகள் இறந்து போனதற்கு காரணம் தண்ணீர் இல்லாமல்,  நிலம் காய்ந்து போய்  இருப்பதுதான் என்பதைக் கண்டறிகிறார்கள்.  தண்ணீர் போகிற பாதையில் மரக்கன்றுகளை நடுவதுதான் சிறந்த வழி  என முடிவு செய்கிறார்கள்.

பின், மரக்கன்றுகள் வாங்குவதற்கான பணம் இல்லாமல் இருக்கிறார்கள். மரங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படுகின்ற கிளைகளை நடவு செய்கிற முறையைப் பற்றி கேள்விப்படுகிறவர்கள், ஊரில் இருக்கிற மரத்தில் இருந்து கிளைகளை வெட்ட முடிவு செய்கிறார்கள். ஜியா ஹைக்சியாவின் உதவியுடன் ஜியா வேங்க்யூ மரம் ஏறி கிளைகளை வெட்டுகிறார். வெட்டிய கிளைகளை ஆறுகளின் ஓரத்தில் நடவு செய்கிறார்கள். தினமும் அம்மரக்கன்றுகளை கண்காணித்து வருகிறார்கள். ஆறு மாதங்கள் எந்த மாற்றமும் இல்லாதிருந்த அக்கன்றுகள் துளிர்க்க ஆரம்பிக்கின்றன. தனிமரம்  தோப்பாவதை காண்கிற மக்கள் அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பிக்கிறார்கள். இருவரது கனவுகளும் சேர்ந்து  ஒரு நாள் மரங்களாகின்றன. அப்படி அவர்கள் நட்ட கன்றுகள் எண்ணிக்கை இப்போது பத்தாயிரத்தைத் தாண்டி நிற்கிறது. அவை அனைத்தும் இன்று மரங்களாக வளர்ந்து நிற்கின்றன.”அடுத்தத் தலைமுறைக்கு கொடுத்து போக எங்களிடத்தில் மரங்கள் இருக்கின்றன” எனச் சொல்லும் இரு நண்பர்களும் “எங்களின்  இறுதி மூச்சு இருக்கிற வரை மரம் நடுவோம். எங்களைப்  போல ஒவ்வொரு தனி மனிதரும் ஒரு மரம் வளர்த்தால் இயற்கையை  எளிதாக காப்பாற்றி விடலாம்” என்கிறார்கள்.

மரம் நண்பர்கள்

கொடுக்கப்பட்டிருக்கிற புகைப்படங்களை ஒரு நொடி காட்சிகளாய் கற்பனை செய்து பாருங்கள். அதற்கு பின்னால்  இருக்கிற அவர்களின் லட்சியமும் கனவும் எவ்வளவு பெரிதென்று யோசித்துப்பாருங்கள். இருக்கிறவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதில் இருக்கிற ஆனந்தத்தை விட, இல்லாதவர்கள் இருப்பவர்களுக்கு கொடுத்துவிட்டு போவதில் தான் அதிகம் இருக்கிறது. ”மரம் நடுங்கள்  என்றெல்லாம் சொல்லவில்லை; எழுந்து நடங்கள்” எனச் சொல்கின்றன இவர்களின் செயல்பாடுகள்.

இவர் அவரின் கை. அவர் இவரின் கண்.  எங்கேயே ஒலிக்கிறது ஒரு பாடல்

“ஒண்ணுக்கொண்ணு தான் இணைஞ்சு இருக்கு...

 

உலகம் அதில் நிலைச்சு இருக்கு..!”

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இஸ்லாமியர், கிறித்துவர் மற்றும் யூதர்களை ஒன்றிணைத்த ஆந்தைகள்... எப்படி?

 
 

அது ஒரு அழகான பள்ளத்தாக்குதான். ஆனால், அங்கிருக்கும் பிரச்னைகள் அந்த அழகை ஒருபோதும் ரசிக்கவிடுவதில்லை. அங்கிருக்கும் விவசாயிகளில் பெரும்பாலானோர் திராட்சைத் தோட்டங்களைப் போட்டிருந்தனர். இன்னும் சிலர் வேறு சில தோட்டங்கள். இவர்கள் அனைவருக்குமே மண்ணைக் கெடுக்காமல், செயற்கை உரங்களைப் போடாமல் விவசாயம் செய்ய வேண்டுமென்றுதான் ஆசை. ஆனால், ரோடென்ட்ஸ் (Rodents) எனப்படும் இந்தக் கொறித்துண்ணிகள் அவர்களுக்கு மிகப்பெரிய தலைவலி. எலிகளும், எலி போலிருக்கும் கோபர்களும் இவர்களின் பயிர்களைக் கடிக்கத் தொடங்கிவிடும். அவைகளை அழிக்க, இவர்கள் கட்டாயம் செயற்கை மருந்துகளை நிலத்தில் போட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது இஸ்ரேலின் ஹுலா பள்ளத்தாக்கு. 

இஸ்ரேல் விவசாயத்தில் ஆந்தைகள்

தன் நாட்டு விவசாய மக்களின் இந்தப் பிரச்னையை ஏதாவது ஒரு வழியில் போக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார் மோட்டி சார்டர் ( Motti Charter ) எனும் பறவை ஆராய்ச்சியாளர். பல வருடங்களைப் பறவைகளோடு செலவிட்ட அவருக்கு, பறவைகளின் இயல்புகள் நன்றாகவே தெரியும். விவசாயிகளின் பிரச்னைகளை Barn Owls எனச் சொல்லப்படும் வெண் ஆந்தைகளைக் கொண்டு தீர்க்கலாம் என சில முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆந்தைகளுக்கான வீடுகளாக சில பெட்டிகளை உருவாக்குகிறார். அதை ஒரு குச்சியின் உச்சியில் வைத்து, சற்று உயரத்திலிருக்கும் படி அதை நடுகிறார். சில நாள்களிலேயே ஆந்தைகள் அந்தப் பெட்டிகளில் வந்து தங்கத் தொடங்குகின்றன. வெண் ஆந்தைகளின் ராஜ்ஜியம் அத்தனை விரிவானது அல்ல. அதனால், அந்தத் தோட்டங்களின் சிறு பகுதியிலே தான் அவை தங்களுக்கான உணவைத் தேடும். ஆந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு எலி போன்ற இந்தக் கொறித்துண்ணிகள்தான். ஆந்தைகள் தங்கள் வேட்டைகளைத் தொடங்கின. தோட்டங்கள் கொறித்துண்ணிகளின் பிரச்னைகளிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக விடுபட ஆரம்பித்தன. 

விவசாயத்திற்கு உதவும் ஆந்தைகள்

இந்த முயற்சி வெற்றியடைந்ததும் அது இன்னும் சில தோட்டங்களுக்குப் பரவுகிறது. ஒரு ஆந்தை 13 முட்டைகள் வரை இடும். அதில் 11 வரை குஞ்சு பொறிக்கும். 60 நாள்களில் குஞ்சுகள் முழுமையாகப் பறக்கத் தொடங்கும். இரண்டு பெரிய ஆந்தைகள், 11 குஞ்சுகள் என இருக்கும் ஒரு குடும்பம் 6 ஆயிரம் கொறித்துண்ணிகள் வரை வேட்டையாடி உண்ணும். இது அந்த விவசாயிகளின் பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த இயற்கை வழி தீர்வாக அமைந்தது. ஆனால், இது நீடிக்கவில்லை. வேறொரு வடிவில் இவர்களுக்குப் பிரச்னை ஏற்பட்டது. 

பெட்டிகளில் வாழும் ஆந்தைகள்

இந்தப் பள்ளத்தாக்கு பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டானுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. மூன்று நாடுகளுமே ஒன்றோடொன்று சண்டையில் இருப்பவை. இஸ்ரேலிலிருந்து பறக்கும் ஆந்தைகள் எல்லையைக் கடக்கும் போது, அவைத் தொடர்ந்து சுட்டு வீழ்த்தப்பட்டுக் கொண்டேயிருந்தன. மோட்டி சார்டர் எல்லை கடந்து மற்ற இரு நாடுகளுக்கும் சென்றார். அங்கிருந்த விவசாயிகளிடம், தன் திட்டத்தை விவரித்தார். பல தோட்டங்களில் தானே முன்வந்து ஆந்தைப் பெட்டிகளை அமைத்துக் கொடுத்தார். இஸ்ரேலில் ராணுவத்திடமிருந்து, குண்டுகளைத் தூக்கிச் செல்லும் பழைய இரும்புப் பெட்டிகளை வாங்கி, அதைத் துண்டுகளாக்கி ஆந்தைகளுக்கான பெட்டிகளாக மாற்றிக் கொடுத்தார். ஜோர்டானில் மக்கள் தேர்தலில் உபயோகப்படுத்தப்படும் பழைய வாக்குப் பெட்டிகளை உடைத்து, அதைக் கொண்டு ஆந்தைக்கான பெட்டிகளை உருவாக்கினார்கள். 

எலிகளை வேட்டையாடும்

 

மூன்று நாட்டு விவசாயிகளும் அவ்வப்போது சந்தித்துப் பேசிக்கொள்கிறார்கள். விவசாய முறைகளில் ஏற்படும் முன்னேற்றங்களைக் குறித்தும், மாற்றங்களைக்குறித்தும் தொடர்ந்து உரையாடி வருகிறார்கள். மூன்று நாடுகளும் அரசியல் ரீதியாக பிளவுபட்டு சண்டையிட்டுக் கொண்டாலும், இந்த எளிய விவசாயிகள் அந்த ஆந்தைகளைப் போல் எல்லைகளை மறந்து ஒருவருக்கொருவர் நட்பாகப் பழக ஆரம்பித்துள்ளார்கள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

91 வயதில் பட்டம் பெற்ற மூதாட்டி

தாய்லாந்தில் வாழும் தொண்ணூற்று ஓரு வயது மூதாட்டி, கடந்த பத்தாண்டுகளாக உழைத்து இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

தனது சிறு வயதிலிருந்தே பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை கிம்லான் ஜினாகுலுக்கு இருந்தது.

எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் எனக் கூறும் அவரது ஆசை இப்போது நிறைவேறியுள்ளது.

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

36p1.jpg

* ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் 50 சதவிகிதப் படப்பிடிப்பை முடித்துவிட்ட கௌதம் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்புக்காகத் துருக்கி செல்கிறார். ஆனால், அதற்கடுத்த ஷெட்யூல் எப்போது போவது என்ற கேள்விக்கான பதிலை ஒரே ஒருவரிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் கௌதம். அது இந்தப் பட வில்லன். ஆம் இதில் வில்லனுக்கு பவர்ஃபுல் கேரக்டர். ‘இவர் நடித்தால்தான் மிகச் சரியாக இருக்கும்’ என அந்த ஒருவரை மனதில் வைத்து அவரை இதில் நடிக்கச் சம்மதிக்கவைக்கும் முயற்சிக்காக மும்பை சென்றுள்ளார் கௌதம்மேனன். அந்த ஒருவர் அமிதாப் பச்சன். ஓகே ஜி... ஓகே ஜி!

36p2.jpg

* ஸ்வீட்டிக்கு இப்போது பியூட்டியில்தான் கவனம். உடல் எடையைக் குறைக்கத் தீவிரப்பயிற்சியில் இறங்கியிருக்கிறார் அனுஷ்கா. எடையைக் குறைக்கும்வரை வெளியே எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை என்பது சபதம். தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் தயாராக உள்ள ‘பாகமதி’ படத்தில் புது அனுஷ்காவைப் பார்க்கலாம் என்கிறார்கள். புதுப்பொலிவு பொம்மாயி!

*  சிம்பிள் கார்களிலேயே இவ்வளவு காலம் வலம்வந்த விஜய் சேதுபதிக்கு ‘விக்ரம் வேதா’ வெற்றி அதீத உற்சாகம் கொடுக்க, பிஎம்டபிள்யு 7 சீரிஸ் கார் வாங்கியிருக்கிறார். காரின் விலை ஒரு கோடி ரூபாய். சார், ஒரு கார் சொல்லிட்டாரு!

36p4.jpg

* பாலிவுட்டின் இப்போதைய ஹாட் டாபிக், அமிதாப் பச்சனின் பேத்தி, நவ்யா நவேலி நந்தா. அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சனின் மகளான இவருக்குச் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கில் ஃபாலோ யர்ஸ். `சினிமாவுக்கு வா கண்ணு’ என பாலிவுட் அழைக்க, பாப்பாவோ மாடலிங், அட்வர்டைஸிங் மட்டும்தான் என் ஏரியா என ஒதுங்கியே இருக்கிறார். பொண்ணு தெளிவு

36p3.jpg

* இந்தியாவுக்காக 100 டெஸ்ட் ஆடி சாதித்தவர்கள் சிலரே. ஆனால், இந்தியாவின் 100 டெஸ்ட் போட்டிகளையும் ரிப்போர்ட்டராக கவர் செய்து கலக்கியிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த கெளஷிக் ராமகிருஷ்ணன். ‘விஸ்டன் இந்தியா’ வில் முதன்மை ஆசிரியரான கெளஷிக்கின் இந்தச் சாதனையைப் பாராட்டி இந்திய கிரிக்கெட் அணியினர் அனைவரும் கையொப்பம் இட்ட டீஷர்ட்டைப் பரிசளித்திருக்கிறார் கோஹ்லி! வாழ்த்துகள் கெளஷிக்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘மனிதா நீ மனிதன்போல் நட’
 

image_0696762292.jpg‘தெய்வ ஆக்ஞை’ எனும் கட்டளை எதுவென்று எல்லோருக்கும் தெரியாதது அல்ல. “மனிதா நீ மனிதன்போல் நட” என்பதுவே இறைவன் எமக்கு இட்ட அன்பான வேண்டுகோளாகும். 

உனக்கு நீ ஆத்ம துரோகம் செய்யாதே! அதேபோல் எந்த உயிரும் உன்னால் துன்பமுறச் செய்ய வேண்டாம். பிறருக்கு ஊறு செய்யாமல், நீ ஆசைப்பட்ட நல்ல வாழ்வைத் தேடிக்கொள், என்ற நல்ல பண்புகள் மனிதரிடத்தில் குடிகொண்டால் ஏது துன்பம்? 

இவைகள் எப்படிச் சாத்தியப்படும் என்றும் சிலர் கேட்கலாம். பக்தி, அன்பினால் மட்டுமே நாம் சகல சம்பத்துகளையும் பெற்று உய்யலாம். 

அன்பினால் மட்டுமே தியாகம் சாத்தியமாகும்; தன்னலம் மட்டுமே நமது கொள்கையல்ல எனும் பண்பு மேலோங்கும். தான் ஆசைப்பட்டுச் சேர்த்த பொருள்கள், செல்வங்களைக் கூட, தானம் செய்யும் குணம் அன்பினால் மட்டுமே நிறைவேற்றப்படும்.அன்பை உள்ளத்தில் உற்பத்தி செய்வீர்களாக.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 12
 

article_1470980886-Lakshman_Kadirgamar_21323: சுவீடன் - ரஷ்யாவுக்கிடையில் முதல் தடவையாக எல்லைப் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

1480: ஒட்டோமான் படையினர் இஸ்லாம் மதத்திற்கு மாற ஒப்புக்கொள்ளாத 800 கிறிஸ்தவர்களை தலையை சீவிக் கொன்றனர்.

1499: வெனிசியர்களுக்கும் ஒட்டோமான் துருக்கியர்களுக்கும் இடையில் முதற் போர் இடம்பெற்றது.

1833: சிக்காகோ அமைக்கப்பட்டது.

1851: ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1853: நியூசிலாந்து சுயாட்சி பெற்றது.

1877: அசாப் ஹோல் என்பவர் செவ்வாய்க் கோளின் டெய்மோஸ் என்ற சந்திரனைக் கண்டுபிடித்தார்.

1883: கடைசி குவாகா (வரிக்குதிரை வகை) ஆம்ஸ்டர்டாமில் இறந்தது.

1914: முதலாம் உலகப் போர் - பிரித்தானியா ஆஸ்திரியா - ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. பிரித்தானிய இராச்சியதின் அனைத்து குடியேற்ற நாடுகளும் இதனுள் அடங்கின.

1952: மொஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.

1953: சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியது.

1960: எக்கோ ஈ என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.

1964: தென்னாபிரிக்காவின் இனவாத அரசியல் காரணமாக அந்நாட்டுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்ற தடை விதிக்கப்பட்டது.

1978: ஜப்பான் -சீன நட்புறவு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

1985: ஜப்பானில் ஏற்பட்ட விமான விபத்தில் 520 பேர் பலி.

1985: ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2ஆம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

1990: வீரமுனைப் படுகொலைகள், 1990 - அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990: அமெரிக்கா, தென் டகோட்டாவில் டிரன்னொசோரஸ் என்னும் டைனசோரின் முழுமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

2000: கே - 141 கூர்ஸ்க் என்ற ரஷ்யக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின் போது 118 பேருடன் பாரெண்ட்ஸ் கடலில் மூழ்கியது.

2005: இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2005: மாலை தீவுகளில் அரசுக்கெதிராக கிளர்ச்சி இடம்பெற்றது.

2005: இலங்கையின் தமிழ் வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா கொலை செய்யப்பட்டார்.

2006: இலங்கையின் புத்திஜீவிகளில் ஒருவரான கேதீஸ் லோகநாதன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

ட்ரெக்கிங், மர வீடுகள், படகு சவாரி... பரம்பிக்குளம் - மிஸ் செய்யக்கூடாத சுற்றுலா தளம்!

 

தேசியப் பூங்காவுக்கும் வனச் சரணாலயங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. தேசியப் பூங்காக்கள் மனித நடவடிக்கைகள் முற்றிலும் தடைசெய்யப்பட்ட பகுதி. உதாரணத்துக்கு சைலன்ட் வேலியைச் சொல்லலாம். தேசியப் பூங்காக்கள் ஒருபோதும் வனச் சரணாலயமாகக் கருத முடியாது. மத்திய அரசு நினைத்தால், முதுமலை போன்ற வனச் சரணாலயங்கள் தேசியப் பூங்காக்களாக உயர்த்தப்பட்டு, மனித நடவடிக்கைக்கு முற்றிலும் தடைவிதிக்கப்படலாம்.

பரம்பிக்குளம் மரவீடு

தமிழக எல்லையையொட்டி கேரளத்தில் இருக்கும் பரம்பிக்குளம் புலிகள் காப்பகமும் தேசியப்பூங்கா போன்றதுதான். காணக் கிடைக்காத வனவிலங்குகள், அரியவகை சிங்கவால் குரங்குகள், பறவையினங்கள், தாவரங்கள் நிறைந்த வனப்பகுதி. அதனால், பரம்பிக்குளம் வனம் மிகுந்த அக்கறையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் கடுமையானக் கட்டுப்பாட்டுக்கும் சோதனைக்கும் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். கேரளத்திலிருந்து பரம்பிக்குளத்துக்குத் தரை மார்க்கமாகச் செல்வதாக இருந்தாலும் தமிழகத்துக்குள் வந்து பொள்ளாச்சியிலிருந்துதான் செல்ல முடியும். 

பரம்பிகுளம் அணை

பொள்ளாச்சியிலிருந்து 30 கி.மீ தொலைவில் முதலில் டாப் ஸ்லிப் வரும். தமிழகத்தின் மிக முக்கியமான வனச் சரணாலயம் இது. கும்கி யானைகளின் புகலிடம். தமிழில் வெளிவந்துள்ள பல சினிமாக்களில் டாப் ஸ்லிப் இடம்பெற்றிருக்கிறது. பொள்ளாச்சியிலிருந்து டாப் ஸ்லிப்புக்குக் குறிப்பிட்ட நேரத்தில் பஸ் இயக்கப்படுகிறது. ஆனால், டாப் ஸ்லிப்புடன் பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிடும். அதற்குப் பிறகு பேருந்துகளுக்கு அனுமதியில்லை. டாப் ஸ்லிப்பில் தமிழக வனத்துறை சார்பில் தங்கும் விடுதிகள் இருக்கின்றன.

மூங்கில் படகு சவாரி

டாப் ஸ்லிப்பைப் பொறுத்தவரை, ஒரேயோர் உணவுவிடுதிதான் இருக்கிறது. எனவே, உணவுப் பொருள்களை எடுத்துச் சென்று, விடுதிகளில் சமைத்துக்கொள்வது நல்லது. அங்கே சமைத்துக் கொடுக்க ஆள்கள் இருக்கிறார்கள். டாப் ஸ்லிப்பில் வரகளியாறு, கோழிக்கமுத்தி ஆகிய இடங்களில் வளர்ப்பு யானைகள் முகாம்கள் உள்ளன. இரவு மற்றும் மாலை வேளைகளில் சுற்றுலாப் பயணிகளை யானைகள் மீது அமர்த்தி வனத்துக்குள் அழைத்துச் செல்வர். அடர்ந்த வனத்துக்குள் யானை சவாரி த்ரில் நிறைந்த அனுபவம். யானைகளை நாம் முன்னரே புக் செய்துகொள்ள வேண்டும். யானை மீது நான்கு பேர் அமர்ந்து செல்லலாம். டாப் ஸ்லிப், பரம்பிக்குளத்தில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ட்ரெக்கிங் செல்லவும் ஏற்பாடு செய்கிறார்கள். ட்ரெக்கிங் செல்ல விரும்புபவர்கள், தேவையானப் பொருள்களை மறந்துவிட வேண்டாம். 

பரம்பிகுளத்தின் அழகிய தீவு

டாப் ஸ்லிப்பிலிருந்து 10 கி.மீட்டர் தொலைவில் கேரள எல்லைக்குள் அமைந்துள்ளது பரம்பிக்குளம் புலிகள் காப்பகம். பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைசெய்யப்பட்ட பகுதி. கேரள எல்லையில் பயணிகளின் பைகளைச் சோதனையிட்ட பிறகே அனுமதிக்கப்படுவர். மதுவுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சிகரெட் குடிக்கவும் அனுமதியில்லை. பரம்பிக்குளத்தில் கூடார வீடுகளில் தங்குவதும் சற்று வித்தியாசமானது.

பரம்பி;க்குளம் கூடாரம்

பரம்பிக்குளம் அணையில், மூங்கில் படகு சவாரி இருக்கிறது. அணையில் முதலைகள் இருப்பதால், கவனம் தேவை. பரம்பிக்குளத்தின் முக்கிய அம்சம், மர வீடுகள். பரம்பிக்குளம் அணையையொட்டிய காட்டுப் பகுதியில் மரங்களின் மீது மர வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மர வீடுகளில் தங்கினால், இரவில் யானைகள் பிளிரும் சத்தத்தைக் கேட்கலாம். மன அமைதி வேண்டுமானால், இரு நாள்கள் பரம்பிக்குளம் மர வீட்டில் தங்கினால் போதும்... சிட்டி ஸ்ட்ரெஸ் பறந்தேபோகும்!

கன்னிமரா தேக்கு மரம்

 

பரம்பிக்குளம் அணைக்குள் தீவு ஒன்றுள்ளது. இங்கு உள்ள பங்களாவில் மின்சார வசதி கிடையாது. பௌர்ணமி இரவில் நில ஒளியில் தீவின் கரையில் தீ மூட்டி, திகட்டாத நினைவலைகளை நாம் உருவாக்கலாம். கடல்களில் அலையடிப்பதுபோல தண்ணீர் தீவின் கரையைத் தொடுகிறது. இந்தத் தீவுக்கு மோட்டார் படகில் அழைத்துச் செல்கிறார்கள். உலகத்திலேயே உயரமான அகலமான தேக்குமரமான `கன்னிமாரா' பரம்பிக்குளத்தில்தான் உள்ளது. 10 பேர் இணைந்து கட்டிப்பிடித்தாலும் கட்டியணைக்க முடியாத மரம். சுமர் 400 ஆண்டு பழைமை வாய்ந்த இந்த மரத்தை, பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறது கேரள வனத்துறை!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

ஆண்களுக்கு அதிக கட்டணம்
====================
மெல்பர்னில் உள்ள “ஹேன்ஸ்சம் ஹர்” என்ற இந்த உணவு விடுதியில் ஆண்களிடம் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆண், பெண் ஊழியர்களுக்கிடையே இருக்கும் ஊதிய வித்தியாசத்தை சீர் செய்யும் நோக்கில் இப்படி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக இந்த உணவு விடுதியின் உரிமையாளர் அலெக்ஸாண்ட்ரா ஓ பிரெயின் கூறுகிறார்.

இப்படி வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் பூர்வகுடி பெண்களுக்கு ஆதரவளிக்க உதவுகிறது.

ஆனால் இந்த உணவு விடுதி சிலரது விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது

  • தொடங்கியவர்

கட்டவண்டி கட்டவண்டி.. காணாமல் போற வண்டி!

 

 
kattaivandi1JPG

பட்டறையில் முருகேசன்

பழைய வின்டேஜ் கார்களுக்குக்கூட மெக்கானிக் கிடைத்துவிடுவார், ஆனால், கட்டை மாட்டுவண்டியைச் சரி செய்யும் தச்சர்கள் அருகிப்போய்விட்டார்கள். மதுரை, சிவகங்கை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வண்டிக்கு ஒன்று என்றால், உடனே மதுரை யா.கொடிக்குளம் நோக்கிப் படையெடுக்கிறார்கள், முருகேசனைப் பார்க்க. மாட்டுவண்டி எந்த நிலையில் இருந்தாலும் சரிசெய்து கொடுக்கும் கில்லாடியான வேலைக்காரர் முருகேசன். பந்தய வண்டிகளுக்கு ஸ்பெஷலிஸிட் இவர்.

வீட்டு வாசலில் நான்கு மாட்டு வண்டிகள் வரிசை பிடிக்கின்றன. அதில் இரண்டுக்குச் சக்கரங்களைக் காணோம். வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து புதிய சக்கரங்களைச் செய்து கொண்டிருக்கிறார் முருகேசன். அந்த வீட்டின் ஒரு மூலையில் வெவ்வேறு வண்ணம், வெவ்வேறு வடிவங்களில் மரக்கட்டைகள், வண்டியின் உதிரிப் பாகங்கள் சிதறிக் கிடக்கின்றன.

 

கட்டை வண்டிக்கு கனமான மரம்

kattaivandi4JPG

பந்தய வண்டி

முருகேசனின் கை சக்கரவேலையில் இருக்க.. வாய் மட்டும் நம்மிடம் பேசியது. “இதுக்கு மின்ன, தாத்தா வேலுவும், அப்பா மலைச்சாமியும் இந்த வேலையப் பார்த்தாங்க. நமக்கு படிப்பு ஏறல. அப்பாவுக்கு ஒத்தாசையா இருந்த என்கிட்ட, உள்ளூர்க்காரரான கே.எஸ்.ஏ.சுதாகர் அம்பலம், ‘இதை நீயே சரி பண்ணிக்குடுப்பா’ன்னு ஒரு தட்டு (பந்தய) வண்டியை ஒப்படைச்சார். அப்ப எனக்கு 17 வயசுதான். என்னைய நம்பி ஒப்படைச்ச முதல் வேலைங்கிறதால, அப்பாக்கிட்ட கேட்டுக் கேட்டுப் பக்குவமா சரி செஞ்சேன். வேலை திருப்தியா இருந்ததால, தவுடன் அம்பலம், ஜெயக்குமார்னு அடுத்தடுத்து நமக்கிட்ட ஆர்டர்கள் குவிஞ்சிருச்சு.

கட்டை மாட்டுவண்டிக்கு கனமான மரங்களைப் போடணும். ஆனா தட்டுவண்டி, பந்தயத்துக்கு போறதால அளவும் எடையும் கம்மியா இருக்கணும். கட்டை வண்டி 850 கிலோ வந்தா, தட்டு வண்டி 70 கிலோதான். சக்கரம் ரெண்டும் லேசா சுத்திவிட்டாலும் சத்தமே இல்லாம சும்மா காத்தாடி மாதிரி சுத்தணும். அதேநேரத்துல, மாடு தலைதெறிக்க ஓடுனாலும் சக்கரமோ வண்டியோ உடைஞ்சிறக் கூடாது” என்று அவர் சொல்லச் சொல்ல வியப்பாக இருக்கிறது.

 

ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு மரம்

kattaivandi5JPG

தயாராகும் இரும்புப் பட்டை

“மாட்டு வண்டி எந்த மரத்துல செய்யுறீங்க?” என்று கேட்டால், “எந்த வண்டி, எந்தப் பாகம்?” என்று திரும்பக் கேட்கிறார். உண்மைதான், ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு மரம் உகந்தது. பந்தய வண்டிக்கு, சக்கரத்தின் வெளிவட்டம் நாட்டுக்கருவை, 12 ஆரக்கால்களும் நாட்டு வாகை, நடுவில் அச்சையும் சக்கரத்தையும் இணைக்கிற குடைக்கட்டை புரசு மரம். நுகத்தடி மஞ்சநத்தி, வண்டியின் நீளமான பகுதியான ‘போல் மரம்’ கல்மூங்கில், உட்காரும் பகுதி தேக்கு, முன் சக்கை, பின் சக்கை வாகை மரம். அச்சு, அச்சாணி, சக்கரத்தைச் சுற்றி இருக்கிற பட்டை - இவை மட்டும் இரும்பு!

“சக்கரம் வட்டமா இருக்குதான்னு சரிபார்க்கக்கூட காம்பஸ் மாதிரி ஒரு கருவி இருக்கு. இருக்கிறதுலேயே ரொம்ப கஷ்டமான வேலை குடைக்கட்டை செய்யுறதுதான். பெரிய சொம்பு சைஸ்ல இருக்கிற கட்டையில், சுத்திச்சுத்தி 12 துளைகள் போடணும். அந்தத் துளைகளைப் பிரிக்கிற சுவர்களும் சரியா 12 இருக்கணும்.

எல்லா துளைகளுக்கும் சீரான இடைவெளி துல்லியமா இருக்கணும். இல்லைன்னா, ஆரக்கால்களே வேலை சரியில்லைன்னு காட்டிக் கொடுத்திடும்” என்ற முருகேசன், “கட்டை வண்டியோட போல் மரத்துக்கு 16 அடி நீள ஈன் (அயனி) மரத்தைப் பயன்படுத்துவோம். இரும்பு மாதிரி உறுதியான மரம் அது. இப்ப அந்த மரமே வர்றதில்ல. மரக்கடைக்காரவுகளே ஈன் மரம்னு சொன்னா மேலும் கீழும் பார்க்காக. இப்ப அதுக்குப் பதிலா கோங்கு மரத்தைத்தான் பயன்படுத்துறோம்” என்கிறார்.

 

50 ஆயிரத்துக்கு பார வண்டி

kattaivandi3jpg

குடைக்கட்டை

“பந்தய வண்டிக்கு என்ன வேலைங்கய்யா அடிக்கடி வரும்?” என்று கேட்டால், “தார் ரோட்ல ஓடுற வேகத்துல சக்கரத்துல இருக்கிற இரும்புப் பட்டை கடுமையா சூடாகும். சூட்டுல விரிஞ்சி கொடுக்கிறது தான இரும்போட குணம்? அதை வெட்டி நீளத்தைக் குறைச்சி மறுபடியும் போடுவோம். அது எங்களுக்குப் பஞ்சர் ஒட்டுற வேலை மாதிரி. பட்டை தேய்ஞ்சிருச்சின்னா, பைக்கிற்கு டயர் மாத்துற மாதிரி நாங்க பட்டையை மாத்திடுவோம்.

அதேமாதிரி, சக்கர வட்டம், ஆரக்கால்களும் அடிக்கடி சேதமடையும். அதுக்கான உதிரிப் பாகங்களை ஏற்கெனவே செஞ்சி தயாரா வெச்சிருப்பேன்” என்று விளக்கம் தருகிறார்.

“உங்களுக்குப் பிறகு?” என்று கேட்டால், “30 ஆயிரம் இருந்தா பந்தய வண்டி, 50 ஆயிரம் இருந்தா பார வண்டியே செஞ்சிடலாம். ஆனா, டிராக்டரும், குட்டி யானையும் வந்த பிறகு யாரு கட்டை வண்டி வாங்குறாங்க? என் பையனுக்கு இந்தத் தொழில்ல விருப்பம் இல்ல. வண்டிப் பந்தயம் இருக்கிறதால தான் என்னைய மாதிரி நாலஞ்சி பேருக்கு பொழப்பு ஓடுது. அதுவும் போச்சுன்னா மாட்டு வண்டியை சுத்தமா மறந்துட வேண்டியதுதான்” வேதனைச் சிரிப்பை உதிர்க்கிறார் முருகேசன்.

 

http://tamil.thehindu.com

இதை வாசித்தபோது இந்த பாட்டு நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை...:grin:

 

  • தொடங்கியவர்

கொடுமையான நோயால் பாதிக்கப்பட்ட 7 வயதுச் சிறுவன் பொலிசாக அசத்தும் ஆச்சர்யம்..!

598e8ec464abc-IBCTAMIL.jpg
 
598e8ec42369f-IBCTAMIL.jpg
 
 
 

இரத்தத்தில் ஏற்பட்டுள்ள உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் ஒருவன் தனது இலட்சியமான பொலிஸ் பணியை ஆர்வத்துடன் கற்று வருகின்றான்.

இங்கிலாந்தின் மஞ்சஸ்டரை சேர்ந்தவர் அலே. இவரது 7 வயது மகன் சார்லி இரத்தத்தில் ஏற்பட்டுள்ள விசித்திர உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

சார்லிக்கு பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்பது பெரும் கனவாகும். இதையறிந்த தனியார் தொண்டு நிறுவனம் சிறுவனின் ஆசை குறித்து பொலிசாரிடம் பரிந்துரை செய்ய அச் சிறுவனின் கனவு நிறைவேறியுள்ளது.

தற்போது சார்லிக்கு பொலிஸ் உடை வழங்கப்பட்டுள்ள நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனை காவலிலும் சார்லி பொலிசார் உதவியுடன் ஈடுபடுகிறான்.

பொலிசார் பயன்படுத்தும் ஹெலிகொப்டர், கார்கள் அனைத்தையும் பயன்படுத்த சார்லிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

https://news.ibctamil.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

சைபர் ஸ்பைடர்

 

twitter.com/manipmp

தனிமை என்பது நிம்மதியாக போன் நோண்டிக்கொண்டிருப்பது.

twitter.com/mythili_br

யாரிடமும் நெருக்கமாயில்லாத ஒரு வாழ்வில் வழியெங்கும் கொட்டிக்கிடக்கிறது பெரும் சுதந்திரம்.

twitter.com/chandra_kalaS

எல்லாம் கடந்துபோகும். ஆனால்,எதுவும் மறந்து போகாது.

twitter.com/roflmaxx

கணேஷ் : நீங்க முத்தம் கொடுத்தது உண்மையா?

ஆரவ் :Yes its happened.

இதெல்லாம் ஒருத்தனும் பார்க்கல. ரெண்டே ரெண்டு முட்டையை எடுத்ததைப் பார்த்துட்டானுங்க.

16p1.jpg

facebook.com/Saravana karthikeyan Chinnadurai

நாம் எல்லோரும் ஏன் பிக் பாஸுக்கு இத்தனை ஆர்வமாய் வாக்களிக்கிறோம்? ஓவியா மீதான அன்பு என்பதெல்லாம் மேலோட்டமான காரணம். உண்மைக்காரணம் வேறு. நிஜ வாழ்வில் அநீதிக்கு எதிராகச் சுட்டு விரலைக்கூட உயர்த்தும் சொகுசு நமக்கு இருப்பதில்லை. ஆனால், பிக்பாஸ் வீட்டில் நாம் கடவுளாய் இருந்து தண்டனை அளிக்கிறோம். ஆர்த்தி, நமீதா, ஜூலி என நம் தேர்வுகள் தவறவே இல்லை. அதையே அரசியலுக்கும் நாம் நீடிக்க வேண்டும். ஒரே பிரச்னை அங்கு உண்மையைக் காட்டும் 30 கேமராக்கள் இல்லை. அதைச் செய்ய வேண்டிய ஊடகங்களுக்கு நேர்மையும் தைரியமும் இல்லை. அதுவே பிரச்னை.

facebook.com/Sivakumar Venkatachalam

யூடியூப்ல பார்த்து `ஜூஸி டொமாட்டா பாத்’ அப்படிங்கற பேர்ல ஒரு டிஷ் பண்ணிக் கொடுத்திருக்காங்க வீட்ல. லஞ்ச் டயத்துல இதை எப்படியாச்சும் மேனேஜரைச் சாப்பிட வெச்சுடணும். ரேட்டிங்லாம் வேற சரியில்ல இந்த வாட்டி.

twitter.com/Itzmejaanu 

காலம் சொல்வது ஒன்று மட்டுமே. அனைவரும் இரக்கமின்றி ஒருநாள் மறக்கப்படுவீர்கள்.

twitter.com/Boopaty Murugesh

ஓவியா (Praying) : கர்த்தரே தோத்தரம்.

ஜூலி: அக்கா! காயத்ரி தோத்துரும்னு சொன்னாக்கா...

#BiggBossTamil

twitter.com/withkaran

இவன் ஒருத்தன். மிரட்டுற மாதிரிப் பேசுவான். ஆனா, கேட்கிறவங்களுக்கு சிரிப்பா வரும் - ஷக்தி.

16p2.jpg

twitter.com/manipmp

`நீயெல்லாம் எப்படி உருப்பட்ட?’ என ஆச்சர்யமாய்ப் பார்க்கும் இடம்தான் சொந்த ஊர்.

twitter.com/Kozhiyaar

ஐ போனாய் சிலிர்க்க வைத்தாய், இப்பொழுது ஏனோ சைனா செட்டாய் அலறவிடுகிறாய்!

twitter.com/ikrthik

தன்னைப்போலவே கிறுக்கர்களைச் சந்தித்ததும் மனம் உடனே நட்பு கொள்கிறது.

twitter.com/Writer_Naina

கேரளாவின் வளர்ச்சி என்பது இயற்கையைச் சீண்டாதிருப்பது.

தமிழகத்தின் வளர்ச்சி என்பது இயற்கையை அழித்து நடப்பது.

twitter.com/naatupurathan

உயிரோடு இருப்பவர்களுக்கு ரேஷன் பொருள்கள் இல்லைனு ஒரே வார்த்தையில சொல்லிட்டுப் போங்க.

twitter.com/kanavulagavaasi 

வடிவேலுவின் வெற்றிடத்தை பழைய வடிவேலுவே நிரப்பிக் கொண்டிருக்கிறார்.

16p3.jpg

twitter.com/Amar_twits

`ஐ லவ் யூ டார்லிங்’

`ரேஷன் கார்டு இருக்கா?’

`இருக்கு.’

`த்தூ... வருஷத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கத் துப்பில்ல.’

twitter.com/HAJAMY DEENNKS

வீட்டுக்குவரும் உறவினர்களை மொபைல் சார்ஜர்களுடன் வரவேற்கும் காலமிது.

twitter.com/ShivaP_Offl

எதிர்காலத்திலே அவசியச் செலவுகள் செய்யும் அளவுக்காவது, இப்பவே  சம்பாரித்து வைத்து விடுங்கள்.

twitter.com/thoatta

ஓவியா கையில் சூட்கேஸ் இல்லைன்னு சமாதானமானாலும், தலைவி போடும் டிரெஸ் சைஸுகளுக்குப் பொட்டியே தேவையில்லையேன்னும் சந்தேகம் வருது.

twitter.com/RagavanG 

தெற்குவரைக்கும் பிடிச்சு ஆளணும்னு நெனச்ச வடக்கத்திய மன்னர்கள் வடக்கையும் கோட்டைவிட்டதே இந்திய வரலாறு.

twitter.com/Blackietalks17

சீரியலைப் பார்த்து அழுத அம்மாக்களைக் கிண்டல் செய்த நாம்தான் இன்று பிக் பாஸைப் பார்த்து அழுதுகொண்டு இருக்கிறோம் :(

16p4.jpg

twitter.com/Punnagaimannan3

உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள்.பிரபலப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

twitter.com/priya00777 

குறும்புகள் செய்யும் பெண் ரசிக்கப்படுகிறாள்; ஸ்டைலாய்த் திரியும் பெண் காதலிக்கப்படுகிறாள்; கை நிறைய சம்பளம் வாங்கும் பெண் மட்டுமே மணமகளாக்கப்படுகிறாள்.

twitter.com/manithan_yes

ஜன்னலுக்கு முன்பு, குழந்தையாக இரு;

குழந்தைகளுக்கு முன்பு, ஜன்னலாக இரு.

twitter.com/RayMsterio_ 

 ஆண்டவர் முன்னாடி ஓவியாவுக்குக் கிடைக்கிற கைத்தட்டல் பல்வாள்தேவன் முன்னாடி மக்கள் பாகுபலின்னு கத்துற மொமென்ட்.

twitter.com/HAJAMYDEENNKS

கணினி மயமான இந்தக் காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியைப் பற்றியும் ஒரு நடிகையைப் பற்றியும் இவ்வளவு பேசுகிறோம் என்றால், எம்.ஜி.ஆர். முதல்வர் ஆனதெல்லாம் தப்பே இல்ல.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

அமேசான் ஆற்றின் ஆச்சரியம்

 

598d66ae90137-IBCTAMIL.jpg

 

598d66ae61992-IBCTAMIL.jpg

 

598d66ae41859-IBCTAMIL.jpg

598d66ade526f-IBCTAMIL.jpg

அமேசான் ஆறு தென் அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய அடையாளம். இதன் நீளம் 6400 கிலோமீட்டர். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறு இதுதான்.

இவ்வளவு பெருமை மிக்க அமேசான் ஆற்றில்இ பல ஆச்சரியங்களும் கலந்திருக்கின்றன. அந்த ஆச்சரியங்களில். பறக்கும் ஆறும், பாதாள ஆறும் குறிப்பிடத்தக்கவை.

இரண்டுமே நம் கண்ணுக்கு புலப்படவில்லை என்றாலும், அதன் அறிவியல் உண்மைகள், நம் மூளைக்கு புலப்படக்கூடியவையே. அதுபற்றிய ஆச்சரியத் தகவல்களை பார்ப்போம்...

தென் அமெரிக்க கண்டத்தில் பாய்ந்தோடும் அமேசான் ஆறு, பல ஆச்சரியமான வி‌ஷயங்களையும், தன் நீரோட்டத்தோடு கொண்டு செல்கிறது. அதில் அமேசான் ஆற்றுக்கு கீழ் பாயும் 'பாதாள ஆறும் ஒன்று.

பிரேசில் அமேசான் ஆற்றுக்கு அடியில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் பிரமாண்டமான ஆறு ஓடுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதைக் கண்டுபிடித்தவர், ஓர் இந்திய ஆராய்ச்சியாளர். வாலியா ஹம்சா என்ற அந்த இந்திய ஆராய்ச்சியாளரைக் கொண்டு, பிரேசில் இயற்கை ஆராய்ச்சி மற்றும் தேசிய கண்காணிப்பு குழு மேற்கொண்ட ஆய்வில் தான், இந்தப் பாதாள ஆறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1970–ம் ஆண்டு பிரேசில் பெட்ரோப்ராஸ் எண்ணெய் நிறுவனம், இங்கு 241 எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டியது. அந்தக் கிணறுகள் அப்போதே செயல்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்டன. இந்தக் கிணறுகள் மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபாடு குறித்து கடந்த 40 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தான், பாதாள ஆறு பற்றிய உண்மை வெளிவந்திருக்கிறது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், அமேசான் ஆற்றுக்கு அடியில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் பிரமாண்ட ஆறு உள்ளது .

இதன் நீளம் சுமார் 6 ஆயிரம் கிலோமீட்டர். அதாவது பூமியின் மேல் உள்ள அமேசான் ஆறும் இதன் அளவும் ஒன்றாக உள்ளது. புதிய ஆறுக்கு 'ஹம்சா' என்று இந்திய ஆராய்ச்சியாளரின் பெயரே வைக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க கண்டத்தின் மையப் பகுதியை வளப்படுத்திக் கொண்டிருக்கும் அமேசான் ஆறு, உலகிலேயே இரண்டாவது நீளமான ஆறாகவும்,உலகின் மிகப் பெரிய வடிகாலாகவும் அறியப்படுகிறது.

உலகின் அனைத்து ஆறுகளில் ஓடும் நீரின் மொத்த அளவில், ஐந்தில் ஒரு பங்கு நீர் அமேசான் ஆற்றில் ஓடுகிறது. பல்லாயிரம் உயிரினங்கள், மர வகைகள் என உலகின் உயிர்சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி அமேசான்.

இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அமேசான் ஆற்றில், அதிகம் அறியப்படாத ஒரு அம்சம் உள்ளது. அதுதான் பறக்கும் ஆறு.

கண்ணுக்குத் தெரியாத இந்த ஆறு அமேசான் காட்டுப் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருக்கிறது. முற்றிலும் நீராவியால் உருவாகியுள்ளது, இந்த ஆற்றின் சிறப்பம்சம். தரையில் ஓடும் சாதாரண ஆற்றில் உள்ள நீரோட்டத்தைப் போல, இந்தப் பறக்கும் ஆற்றில் நீராவியோட்டம் இருக்கிறது.

அமேசான் ஆற்று நீரை உறிஞ்சும் மரங்கள், அதை நீராவியாக வெளியேற்றுவதால், இப்படியொரு ஆறு உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த மரங்கள் ஒரு நாளில் மட்டும் வெளியேற்றும் நீராவியின் மொத்த எடை, பல ஆயிரம் கோடி டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, வெனிசுலா, கயானா, சூரினாம் என பல நாடுகளிலும் பரவியிருக்கிறது இந்தப் பறக்கும் மாய ஆறு. தென் அமெரிக்காவின் ஆன்டிஸ் மலைத் தொடர், இந்த பறக்கும் ஆற்றுக்கு இயற்கையே வகுத்துத் தந்த கரையாக உள்ளது.

இதனால், பிரேசில் மட்டுமல்லாமல் தென் அமெரிக்காவின் பல நாடுகளிலும் ஏற்படும் பெருமளவு மழைப் பொழிவுக்கு, அமேசானின் பறக்கும் ஆறே காரணமாக இருக்கிறது

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

இன்று உலக யானைகள் தினம்


இன்று உலக யானைகள் தினம்
 

உலக யானைகள் தினம் இன்றாகும்.

ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் கலாசார செயற்பாடுகளில் அதிகளவில் ஈடுபடுத்தப்படும் விலங்கினமாக யானைகள் விளங்குவதுடன், இலங்கையிலும் கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்த விலங்கினமாக யானைகள் காணப்படுகின்றன.

எனினும் தற்போது யானைகளின் நிலை மிக மோசமாகவுள்ளது.

யானைகளின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் செயற்படும் அரச நிறுவனங்களின் செயற்றிறன் அதிகரிக்கப்பட வேண்டும் என சுற்றாடல் அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

செயற்றிறன் இன்மையால் யானைகள் கொடூரமாக துன்புறத்தப்படுகின்றன.

நிலப்பரப்பில் வாழும் பெரிய விலங்கினமான யானைகளை மனிதன் தனது வாழ்க்கை செயற்பாடுகளுக்கு பயன்படுத்துகின்றமையை நாம் அனைவரும் அறிவோம்.

எமது நாட்டில் இவ்வாறான மனித செயற்பாடுகளுக்காக சுமார் 155 யானைகள் ஈடுபடுத்தப்படுகின்றன.

சமயம் சார் விடயங்களுக்கும் சுற்றுலாத்துறைக்கும் யானைகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.

1900 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் 10000 யானைகள் வாழ்ந்திருக்கக்கூடும் என தரவுகளுள்ள போதிலும், இன்று 4,500 தொடக்கம் 5,000 வரையான யானைகளே உள்ளன.

வருடாந்தம் 80 தொடக்கம் 110 வரையான யானைகள் பிறப்பதுடன், 250 தொடக்கம் 270 வரையான யானைகள் வருடாந்தம் உயிரிழப்பதாக சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

http://newsfirst.lk/

 

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் யானை இராமலெட்சுமிக்கு அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் கரும்பு, வாழைப் பழங்களை உணவாகக் கொடுத்து மரியாதை செலுத்தி வணங்கினர்.

  • தொடங்கியவர்

விவசாயத்தைக் காக்கும் பறவை

 
விவசாயத்தைக் காக்கும் பறவை
 

பார்ப்பதற்கு ஆந்தை போல் இருக்கும் இப் பறவை, ஆந்தை அல்ல. இதன் பெயர் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை.

14-1457949258-11-owl-300x225.jpg

நமக்கு எதிரே இருக்கும் மரத்தில் இப் பறவை அமர்ந்திருந்தாலும் இதனை நம்மால் காண முடியாது. சூழலுக்கு ஏற்ப தன்னை மறைத்துக் கொள்வதில் கில்லாடிப் பறவை இது.

உலகம் முழுவதும் மூன்று வகையான தவளை வாய்ப் பறவை இனம் இருக்கிறது.

449px-SpottedEagleOwl2539MGEyeLid-225x30

அவை, செம்பழுப்பு தவளை வாய்ப் பறவை, புள்ளித்தீற்றல் தவளை வாய்ப் பறவை, பப்புவன் தவளை வாய்ப் பறவை ஆகியவையாகும்.

இவற்றில் வெள்ளை, சாம்பல் நிறத்தில் உடலில் ஆங்காங்கே கருநிற கோடுகளுடன் அடிப் பகுதியும், செம்பழுப்பு நிறத்தில் கருமை நிற புள்ளிகளும் கொண்ட செம்பழுப்பு தவளை வாய்ப் பறவை தனது விசித்திர நிறக் கலவையால் மரங்களில் அமர்ந்திருந்தாலும் பார்வைக்கு புலப்படாது. நல்ல மதிய வெயிலில் கூட மரத்தின் தாழ்வான கிளையில் அசைவற்று அமர்ந்திருக்கும்.

download-3-10.jpgஇவை அடர்ந்த காடுகளில் வசிப்பதில்லை. தோப்புகள், புதர்கள்.

மனிதர்கள் நடமாடும் பூங்காக்கள் போன்ற இடங்களில் பயமின்றி வசிக்கின்றன. இதுவொரு இரவு நேர வேட்டையாளி.

images17.jpg

பகலில் மரக்கிளையில் அசையாமல் அமர்ந்திருக்கும் இவற்றின் வாய்க்கருகில் பறந்து வரும் பூச்சிகளை மட்டும் உண்ணும்.

இரவில் வேட்டையாடுவதில் படு கில்லாடிகள்.

குருத்து வண்டுகள், வெட்டுக் கிளிகள், தத்துக்கிளிகள், மரவண்டுகள் போன்ற பயிர்களை அழிக்கும் பூச்சிகள் அனைத்தையும் உணவாக உட்கொள்ளும். அதனால் இது விவசாயத்துக்கு தோழன்.

d88ae81c.jpg

மேலும் எலி, அந்துப்பூச்சி, வண்டு, புழுக்கள், நத்தை, சிலந்தி, குளவி, மரவட்டை, பூரான், தேள், பல்லி, தவளைகள் போன்றவையும் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையின் வாய்க்குத் தப்புவதில்லை. இதனால் இதை சுற்றுச் சூழலுக்கு உகந்த பறவை என்கிறார்கள், ஆய்வாளர்கள்.

tawny-frogmouth-1-300x225.jpgஇந்தப் பறவைகள் பெரும்பாலும் ஜோடியாகவே காணப்படும். ஆண் பறவை தனது ஜோடியின் இறகுகளை அடிக்கடி அலகால் கோதி அன்பை வெளிப்படுத்தும்.

ஒருமுறை இணை சேர்ந்த ஜோடி வாழ்நாள் முழுவதும் பிரிவதில்லை.

download-4-11.jpg

வருடா வருடம் ஒரே இடத்தில் கூடு கட்டும். இவற்றின் கூடுகள் மிகவும் பலவீனமானவை. மரக்கிளைகளில் கூடு கட்டிக் கொள்ளும்.

பெரும் மழைக்கும், கொஞ்சம் வேகமான காற்றுக்கும் கூட தாங்காது, இவற்றின் கூடுகள்.

tawny_frogmouth_nest.jpgபெண் பறவை இரண்டு அல்லது மூன்று வெள்ளை நிற முட்டைகளை இடும். ஆண், பெண் இரண்டுமே மாற்றி மாற்றி அடை காக்கும்.

அடைகாக்கும் பறவைக்கு மற்ற பறவை இரை கொண்டு வந்து ஊட்டும். ஒரு மாதத்தில் குஞ்சுகள் பொரிக்கும். தாய் தந்தை இணைந்தே குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும்.

images-15.jpg

ஒரு மாதம் கழித்து குஞ்சுகள் பறக்கத் தொடங்கும்.

இந்தக் காலகட்டத்தில் குடும்பம் மொத்தமும் மரக்கிளையில் வரிசையாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு அமர்ந்திருப்பது அழகாக இருக்கும்.

கழுத்தை உள்ளிழுத்து கண்களை மூடிக்கொண்டு விறைப்புடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் காய்ந்த மரக்கட்டை போலவே காட்சியளிக்கும்.

IMG_5279a_edited-1.jpg

இவை விதவிதமான ஒலியை எழுப்பக்கூடியவை. காதல் அழைப்பு, எல்லை அறிவிப்பு, இரைக்கான ஒலி, எதிரிகளை எச்சரிக்க என்று பலவித ஒலிகளை வைத்திருக்கின்றன.

காதல் மொழிகளை தாழ்ந்த ஒலியிலும், எச்சரிக்கை ஒலிகளை உரத்த குரலில் பல கி.மீ. தூரம் வரை கேட்கும் அளவிற்கும் எழுப்பக்கூடியவை.

இரவில் இவை எழுப்பும் ஒலியை அபசகுனமாக நினைத்து இந்த பறவைகளை கிராமத்தினர் துரத்தி விடுகிறார்கள். உண்மையில் இது விவசாயத்தைக் காக்கும் பறவை.

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும்

http://newuthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.