Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
’ஜடவாழ்வுக்கு இடமளிக்க வேண்டாம்’
 

image_0089530126.jpgவர்ணங்கள் பலவிதம்; அவ்வாறே ஸ்பரிசங்களும் பலவிதமானது. தாய், பிள்ளைகளை ஸ்பரிசிப்பது, நண்பர்கள் ஒருவரை ஒருவர் தழுவுவது, காதலர் தொடுகை எனப் பலவுண்டு. 

அவ்வண்ணமே, மணம், சுவை, இசை வடிவங்களிலும் பலவகையுண்டு. நல்ல நறுமணம், துர்நாற்றம் என்பதுபோல், சுவைகளில் அறுசுவை என்ற வகைகள் உண்டு. மனதை மயக்கும் இசைகளோ பற்பலவிதம். எண்ணிலடங்காத இசைகளை நாம் கேட்டு மகிழ்கின்றோம்.  

இவை எல்லாமே நாங்கள், எங்கள் இரசனைக்கு ஏற்றபடி பார்க்கின்றோம்; உணர்கின்றோம்.  

இயற்கை எமக்குத்தந்த படைப்புகளில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். எங்கள் இதயத்துக்கு அமைதிதேட, வர்ணஜாலங்களை, நல்ல மனித உறவுகளை, மரம், செடிகொடி படைப்புகளை, இசையின் அற்புத சக்தியென இரம்மியமான விடயங்களை மட்டும் நுகர்ந்து மகிழ்வோம். ஜடவாழ்வுக்கு இடமளிக்க வேண்டாம்.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 13
 

article_1439442106-michael-phelps_0.jpg1792: பிரெஞ்சு மன்னன் 16 ஆம் லூயி தேசிய விசாரணை மன்றத்தினால் கைது செய்யப்பட்டு மக்களின் எதிரியாக பிரகடனப்படுத்தப்பட்டான்.1960: சாட் நாடு பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

 


1961: கிழக்கு ஜேர்மனியிலிருந்து மேற்கு ஜேர்மனிக்கு மக்கள் தப்பிச்செல்வதை தடுப்பதற்காக பேர்லின் நகரத்தின் கிழக்கு மேற்கு பகுதிகளை பிரிக்கும்விதமாக கிழக்கு ஜேர்மன் அரசாங்கம் வேலி அமைத்தது.

1969: சந்திரனிலிருந்து திரும்பிய அப்பலோ 11 விண்வெளி வீரர்கள் 3 வாரகாலம் பரிசோதிக்கப்பட்ட பின் விடுவிக்கப்பட்டனர்.

1978: லெபனானின் பெய்ரூத் நகரில் சுமார் 150 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

 

2004: கறுப்பு வெள்ளி: மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.

2004: புருண்டியில் கடும்பா அகதிகள் முகாமில் இருந்த 156 டூட்சி இன அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

2004: கிறீஸின் ஏதென்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகியது.

2006: யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2008: அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப், ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

இடதுகைப் பழக்கம், குறையும் அல்ல... குற்றமும் அல்ல! இயல்பானது தான்! #WorldLeftHandersDay

நம்மில் பெரும்பாலானோர் வலது கையைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். சிலர் மட்டும் அனைத்து செயல்களுக்கும் இடது கையைப் பயன்படுத்துவார்கள். அப்படி இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் நமது குடும்பத்தில் இருக்கலாம். நட்பு வட்டத்தில் இருக்கலாம். 

இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள்

பொதுவாக இடதுகைப் பழக்கம் உள்ளவர்களை சற்று வித்தியாசமாகப் பார்க்கும் நிலை இருக்கிறது. அதேபோல அவர்களின் நலம் சார்ந்து, அவர்களின் வசதிக்கு ஏற்ப எந்த பொருளும் பயன்பாட்டுக்கு வருவதில்லை. வலது கை பயனாளிகளின் மனநிலைக்கு ஏற்பவே  தயாரிக்கப்படுகின்றன. இதனால் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் பல சவால்களைச் சந்திக்கிறார்கள். எழுதுதல், வாகனம் ஓட்டுதல் முதல் அன்றாடம் வீட்டுத் தாழ்ப்பாள் திறப்பது வரை அவர்களின் இயல்புக்கு மாறான செயலாகத்தான் இருக்கின்றன. 

இடது கை பழக்கம் உள்ளவர்களை 'சினிஸ்ட்ராலிட்டி' என்று குறிப்பிடுவார்கள். இது ’சினிஸ்டரா’ என்ற லத்தின் சொல்லில் இருந்து உருவானது. ‘சினிஸ்டரா’ என்றால் ‘இடது பக்கம் இருப்பது’ என்று பொருள். இடது கை பழக்கம் உள்ளவர்களை வலிமையற்றவர்களாகவும் தூய்மையற்றவர்களாகவும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாக கருதும் மனோபாவம் இன்னும் இங்கே இருக்கிறது. 
இந்த சமூகத்தில் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சந்திக்கும் சிரமங்களை மற்றவர்கள் உணரும் வகையில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த ‘சர்வதேச இடது கை பழக்கம் உள்ளவர்கள் தினம்' ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 

எதனால் இந்த இடக்கை பழக்கம்!

நமது மூளை பெருமூளை, சிறுமூளை மற்றும் ’மெடுல்லா ஆப்லங்கட்டா’ என மூன்று பகுதிகள் உள்ளன. இதில் பெருமூளையில், வலது மற்றும் இடது என இரண்டு பாகங்கள் உண்டு. இந்த இரண்டு பாகங்கள்தான் நம் உடலின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்துகின்றன. வலது பக்க மூளை இடது புற உடலையும், இடது பக்க மூளை வலது புற உடலையும் கட்டுப்படுத்தும். நம்மில் பலருக்கு இடது பக்க மூளை அதிக செயல்பாட்டில் இருப்பதால்தான் வலது கையை அதிகம் பயன்படுத்துகிறோம். சிலருக்கு, வலது பக்க மூளை செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படும். இது மிகவும் இயல்பானது. 

இடது கையால் எழுதும் குழந்தை

இடக்கை பழக்கத்தை மாற்றினால்! 

சிலர் இடது கையால் கொடுத்தால் எந்தப் பொருளையும் பெற்றுக் கொள்ளமாட்டார்கள். இடது கையால் கொடுக்கப்படும் பொருள் மதிப்பற்றது, அவமதிப்பானது என்று ஒரு கற்பிதம் இருக்கிறது. சிலர் தங்கள் குழந்தைக்கு இடதுகைப் பழக்கம் இருந்தால், வலுக்கட்டாயமாக வலது கை பழக்கமாக மாற்ற முயற்சி செய்வார்கள். தங்களை அறியாமல் இடது கையை அவர்கள் பயன்படுத்தும் போது அடிப்பது, திட்டுவது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். 

இது போன்ற செயல்கள். குழந்தைகளின் வளர்ச்சியில் குறைபாட்டை ஏற்படுத்தும். பார்வைக் குறைபாடு, பேசுவதில் குழப்பம் போன்றவற்றை ஏற்படுத்தும் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், கையெழுத்து சிதைவதுடன் பல நடத்தை மாற்றங்களையும் ஏற்படுத்தும். இடதுகைப் பழக்கம் என்பது மிகவும் இயல்பானது என்ற எண்ணம் எல்லோருக்கும் வரவேண்டும். 

இடக்கை பழக்கம் உள்ள பிரபலங்களின் பட்டியல்...

தேசத்தந்தை மகாத்மா காந்தி, நெப்போலியன் போனாபர்ட் மற்றும் அவரது மனைவி ஜோசப்பின், ஜூலியஸ் சீசர், மாவீரன் அலெக்ஸாண்டர், தத்துவமேதை அரிஸ்டாட்டில், பிரிட்டன் பிரதமராக  இருந்த வின்சென்ட் சர்ச்சில், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த பேடன்பாவெல், கியூபா  அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ, விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன், ஃபோர்டு கார் நிறுவனத்தின் தந்தை ஹென்றி ஃபோர்டு, இங்கிலாந்து மன்னராக இருந்த 3-வது மற்றும் 8-வது எட்வர்ட், 2-வது, 4-வது மற்றும் 6வது ஜார்ஜ் போன்ற  ஆளுமைகள்

இட கை பழக்கம் உள்ள பிரபலங்கள்

இடதுகைப் பழக்கம் உள்ளவர்களே!

மேலும், அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், ஜெரால்ட் ஃபோர்ட், ஜேம்ஸ் கார்ஃபில்ட், தாமஸ் ஜெபர்சன், ரொனால்ட் ரீகன், ஹாரி ட்ரூமென் மற்றும் ஒபாமா,  இந்திய பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன்,மம்முட்டி, அப்பாஸ், நிவின் பாலி, நடிகை  சன்னி லியோன்,  என இந்தப் பட்டியல் நீள்கிறது.

இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்...

இடது கையால் பொருள்களையோ பிரசாதத்தையோ வாங்கிக்கொள்வது பெரியவர்களின் முகச்சுழிப்பை ஏற்படுத்தும். இடது கையால் உணவு உண்பவர்களை, ஒரு விநோத உயிரினத்தைப் பார்ப்பதுபோல் பார்ப்பர். உடன் அமர்ந்து உண்பதை அசெளகர்யமாக உணர்வர். இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் எழுதுதல், வரைதல் போன்ற செயல்கள் கைகளை கறைபடியச்செய்யும். அனைத்து இடங்களிலும் வலது கை பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றார்போல் பொருள்கள் பொறுத்தப்பட்டிருக்கும். அது சில சமயங்களில் எரிச்சலை உண்டாக்கும். இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் தனது நண்பருடன் கை குலுக்குதல், கை  தட்டிக்கொள்ளுதல் போன்ற மகிழ்ச்சியான செயல்களை செய்வதில் குழப்பமும் தாமதமும் ஏற்படும். இடக்கை பயனாளர்களுக்கான பொருள்கள் கிடைப்பது மிகவும் அரிதானது; மேலும், அவற்றின் விலையும் சற்று அதிகம்தான்.

இடக்கையால் எழுதுவது

இடதுகைப் பழக்கம் உள்ளவர்களின் தனித்தன்மை!

இடதுகைப் பழக்கம் உள்ளவர்களின் தனித்தன்மையை வலது பக்க மூளைச் செயல்பாட்டின் பலன்கள் என்றே சொல்லலாம்.
நீண்ட நாள்களுக்கு முன் பார்த்த இடத்தையும் நபரையும் நினைவில் வைத்திருப்பர். வலது கை பழக்கம் உள்ளவர்களை விட இந்த நினைவாற்றல் சக்தி இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகம். இசை, ஓவியம் போன்ற கலைகளில் அதிக ஆர்வம் கொண்டிருப்பர். கற்பனைத்திறன் மிக்கவர்களாக இருப்பர். பார்வைத்திறன் அதிகம் பெற்றவர்களாக இருப்பார்கள். 

இடக்கை பழக்கம் உள்ளவர்களுக்கு அல்ல... அவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு!

குழந்தைகள் பயன்படுத்தும் கை எதுவாக இருப்பினும் அவற்றை மாற்ற முயற்சி செய்யாது, அவர்களின் மீது நம்பிக்கை வைத்து ஊக்குவிக்கவேண்டும். அது அவர்களின் திறமையை ஊக்குவிக்கும். வலுக்கட்டாயமாக குழந்தைகளின் இயல்பான பழக்கத்தை மாற்ற முயற்சி செய்யாதீர்கள். வலுக்கட்டாயமாக மாற்ற முயற்சித்தால் அந்த பழக்கம் மாறாது. மாறாக, அதிகரிக்கும். 
பள்ளிகளில், கல்லூரிகளில், நண்பர்களிடையே இடதுகைப் பழக்கத்தை வைத்து பட்டப் பெயர் வைத்துக் கூப்பிடாதீர்கள். அது அவர்களுக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களிடம் சகஜமாக இருக்க முயலுங்கள். 

இடதுகைப் பழக்கம் என்பது குறையும் அல்ல... குற்றமும் அல்ல... அதுவும் ஒரு இயல்பான இயற்கையான பழக்கம் தான்!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

சென்ற வார உலக நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு

கடந்த வாரம் உலக நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளின் சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு.

A baby snow leopard is held next to a needle

பெர்லினில் உள்ள டியர்பார்க் வனவிலங்கு பூங்காவில், முதல் தடுப்பூசியை பெற தயாராகும் ஒரு குட்டி பனிச்சிறுத்தை. இதற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

A man hits a flaming tyre with a stick

நைரோபியில், எதிர்க்கட்சித் தலைவர் ரயிலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் எரிந்து கொண்டிருக்கும் டயர் ஒன்றை தள்ளுகின்றனர். மாகாண தேர்தல் முடிவுகளில் அதிபர் உஹூரு கென்யாட்டா வலுவான நிலையில் முன்னிலையில் இருப்பதை போன்று காட்ட தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்பு முறை ஊடுருவப்பட்டது என்று ஒடிங்கா கூறியிருந்தார்.

 

 

The crowd watches a successful wedding proposal taking place between a couple dressed as "Pachucos" during the Quinceanera (15th birthday) of a teenager in downtown Ciudad Juarez, Mexico, 5 August 2017.

மெக்ஸிக்கோவில் பதின்ம வயதினர் ஒருவரின் 15வது பிறந்தநாள் விழாவின் போது, பச்சுகோஸ் என்ற ஆடை வகையை அணிந்த ஜோடியின் திருமண முன்மொழிவை கூட்டத்தினர் ரசிக்கும் காட்சி.

 

Anicka Newell of Canada reacts during the Women's Pole Vault Final at the World Athletics Championships in London on 6 August 2017.

லண்டனில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான கம்பை வைத்து தாண்டும் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கனடாவின் அனிகா நேவெல்.

 

A row of dancers perform with colourful hair over their faces on The Royal Mile in Edinburgh as part of an Edinburgh Fringe Festival.

எடின்பர்க் ஃபிரின்ஞ் திருவிழா எனப்படும் மிகப்பெரிய ஓவியத்திருவிழாவில், தி ராயல் மைல் வீதியில் நடைபெற்ற பெண்களின் கலை நிகழ்ச்சி.

 

Lots of hot air balloons gather together at the Bristol International Balloon Fiesta

பிரிஸ்டலில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில், வானில் பறக்கத் தயாராகும் பலூன்கள்.

 

A girl in army wear concentrates on assembling a gun at the 2017 International Army Games.

ரஷ்யாவின் டைமன் பகுதிக்கு வெளியே இருக்கும் ஆண்ட்ரிவெஸ்கி மின்னணு போர் நடவடிக்கை தந்திரோபாய மையத்தில் பெண் ஒருவர் தன்னுடைய துப்பாக்கியை பொருத்தும் காட்சி.

Performers dressed as Pikachu, a character from Pokemon series game titles, march during the Pikachu Outbreak event, 9 August 2017.

பிக்காச்சு போன்று வேடமணிந்த கலைஞர்கள் ஜப்பானின் கேனகாவா பிராந்தியத்தின் யோகோஹாமா நகரில் பேரணியாக நடந்த காட்சி.

The Great Buddha of Nara at Todaiji Temple is cleaned by monks on pulleys.

ஜப்பானில் உள்ள டோடாய்ஜி கோயிலில் உள்ள மிகப் பிரம்மாண்ட புத்தர் சிலையை கோடைகால சடங்காக சுத்தம் செய்யும் பெளத்த பிக்குகள்.

A goat has a crown placed on its head, 10 August 2017.

அயர்லாந்தில் உள்ள கில்லோர்கிலினில் தி பக் ஃபேர் என்ற கண்காட்சியில், உள்ளூர்வாசிகள் சிறந்த காட்டு ஆடு ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்கு கிங் பக் என்ற பட்டத்தை வழங்குகின்றனர். மூன்று நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

 

A girl looks at a fence covered with pastel ribbons

தென் கொரியாவில் உள்ள பாஜுவில், வட கொரியாவை பிரிக்கும் ராணுவமற்ற பிராந்தியத்தில் உள்ள ஒரு முள்வேலி இது. அமைதிக்காக ரிப்பன்கள் மற்றும் கல்வெட்டுகளால் மறைக்கப்பட்டிருக்கும் காட்சி.

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

என்ன அழகு

  • தொடங்கியவர்

குடியரசுத் தலைவர் இல்லம்

 

 
shutterstock428653072

தினான்காவது இந்தியக் குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வசிப்பதற்காக உருவாக்கப்பட்ட மாளிகை, ராஷ்டிரபதி பவன். அடுத்த ஐந்து ஆண்டுகள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் வீடு இதுதான். நாட்டின் முதல் குடிமகன் வசிக்கும் இந்த பிரம்மாண்ட மாளிகைக்கு 100 ஆண்டுகளுக்கும் முற்பட்ட வரலாறு உண்டு.

09JKRDURBARHALLRBHWAN

தர்பார் ஹால்   -  The Hindu

அன்றைய கல்கத்தாவிலிருந்து, டெல்லிக்குத் தலைநகரை மாற்ற ஆங்கில அரசு தீர்மானித்தது. இங்கு கவர்னர் ஜெனரல் இல்லத்தை மிகப் பெரியதாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுமார் 4,000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 1912-ம் ஆண்டு இந்தப் பிரம்மாண்டமான மாளிகையின் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆங்கிலேய ஆட்சியின்போது, கவர்னர் ஜெனரலுக்கான இல்லமாகத்தான் இது கட்டப்பட்டது. இந்த இல்லம் கட்டி முடிக்க 17 ஆண்டுக் காலம் பிடித்தது. 1929-ம் ஆண்டு பணிகள் நிறைவுற்றன. இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தில் சுமார் பத்தொன்பதாயிரம் சதுர அடிகளில் இந்த அழகிய கட்டிடத்தை வடிவமைத்தவர் எட்வின் லுட்யென்ஸ் என்பவர்.

09JKRGUSETROOM

விருந்தினர் அறை   -  PTI

இந்தக் கட்டிடம் கட்டுவதற்காக 700 மில்லியன் செங்கல்களும் 30 லட்சம் கன அடி கற்களும் பயன்படுத்தப்பட்டன. சிறிய அளவில் இரும்பும் பயன்படுத்தப்பட்டன. இந்தக் கட்டிடம் கட்ட இந்து, புத்த, சமண மதக் கோயில்களின் வடிவங்கள் மாதிரியாகக் கொள்ளப்பட்டன. மட்டுமல்லாது ராஜஸ்தான் அரண்மனைகளின் கட்டிடப் பாணியும் ஒரு மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

09JKRMUGHALGARDENS

முஹல் தோட்டத்தில் தூலிப் மலர்கள்   -  The Hindu

குடியரசுத் தலைவரின் இல்லமான இதில் மொத்தம் 340 அறைகள் உண்டு. கூடம், விருந்தினர் அறைகள், அலுவலக அறைகள் குடியரசுத் தலைவரின் குடும்பத்தினர் தங்கும் அறைகள் ஆகியவையும் இதில் அடக்கம். இந்த வளாகத்துள் குடியரசுத் தலைவரின் பாதுகாவலர்கள் உட்பட அலுவலக அதிகாரிகளும் குடியிருப்பர். உலகத் தலைவர்களின் பெரிய குடியிருப்புகளில் ராஷ்டிரபதி பவனும் ஒன்று. இதன் பின் பகுதியில் மிகப் பெரிய மொகல் கார்டன் உள்ளது. துலிப் மலர்கள் இந்தத் தோட்டத்தில் பூத்துக் குலுங்குகின்றன.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

கலக்கலான ஆடை இது...
கலங்க வைக்கும் ஆடை..

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text und Nahaufnahme

தமிழ்த் திரையுலகின் உச்சத்தில் இருந்த
நட்சத்திர நடிகை ஸ்ரீதேவின் பிறந்தநாள் இன்று
தமிழில் தடம் பதித்து தன் பெயரை நிலை நாட்டி
பின் ஹிந்தி திரையுலகம் புகுந்து அங்கும் வெற்றிக்கொடி நாட்டிய நட்சத்திர நடிகை இன்றும் பலரின் கனவுக்கன்னி
என்றென்றும் இவரே "16 வயதினிலே" மயிலு நாயகி

Happy Birhday Sridevi

Bild könnte enthalten: 1 Person, Bart und Text

அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஓயாமல் ஒலித்த பெருமை மிகு குரல்
நீண்ட காலம் ஒரு நாட்டின் அரசுத் தலைவராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்..
சே குவேராவுடன் இணைந்து போராடிய ஒரு வீரர்..
வரலாற்று புரட்சியாளன் ஃபிடெல் கஸ்ட்ரோவின்
ஜனன தினம் இன்று.

Bild könnte enthalten: 1 Person, Text

பிரபல பிரேசில் நாட்டின் கால்பந்து நட்சத்திரம் லூக்காஸ் மௌராவின் பிறந்தநாள்
Happy Birthday Lucas Moura

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

உலகின் அதிவேக பந்து வீச்சாளர்களில் ஒருவரும் பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான ஷொயிப் அக்தர் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்

Happy Birthday Shoaib Akhtar

  • தொடங்கியவர்

சென்னைக்கு வயசு எத்தனை?

 

ஆகஸ்ட் மாதம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சென்னையில் பழைய மெட்ராஸ் நகரத்தின் பிறந்த தினத்தை கொண்டாடுகின்றன.

சென்னைக்கு வயசு எத்தனை?

சுமார் 1950 ஆம் ஆண்டில் மெட்ராஸிலுள்ள சட்டமன்றப்பேரவை கட்டடம்

 

வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு நடைபயணம், சென்னை நகரத்தின் தொன்மை குறித்த கருத்தரங்கங்கள், திரைப்பட நிகழ்வுகள், புகைப்பட கண்காட்சிகள், மாணவர்களுக்குப் போட்டிகள் என பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

சென்னைக்கு வயசு எத்தனை?

1927 ஆம் ஆண்டு - மெட்ராஸ் உயர் நீதிமன்றம்

`மெட்ராஸ் டே முடிவு செய்யப்பட்டது எப்படி?

வரலாற்று ஆய்வாளர் முத்தையா, பதிப்பாளர் வின்சென்ட் டி சோஸா உள்பட சென்னை வரலாறு குறித்து ஆர்வமிக்கவர்கள் இணைந்து 2004ல் முதன்முதலாக சென்னை நகரத்தின் பழமையைக் கொண்டாடவேண்டும், அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற விதத்தில் 'மெட்ராஸ் டே' நிகழ்ச்சியைத் தொடங்கினர்.

சென்னை நகரத்தின் பிறந்தநாள் என்று ஒரு நாளை குறிப்பிட வேண்டும் என்று எண்ணிய 'மெட்ராஸ் டே' குழுவினர், தற்போது புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தின் ஒரு சிறுபகுதியை, அன்றைய விஜயநகர நாயக்கர்களிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனி முறைப்படி 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம்தேதி வாங்கியது என்ற கருத்து ஏற்றிக்கொள்ளப்படுவதால், அந்த தினத்தை சென்னை தினமாக அனுசரிக்கலாம் என்று முடிவு செய்ததாக தெரிவிக்கின்றனர்.

சென்னைக்கு வயசு எத்தனை?

 

பழைய மெட்ராஸ் நகரத்திற்கு 378 வயசு

''தற்போது தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னை நகரம், அதன் உள்கட்டமைப்பு, நகரப் போக்குவரத்து, வியாபாரம் என்ற விதத்தில் வளர்ச்சி பெற தொடங்கிய தினம் என்று கருத்தில் மெட்ராஸ் டேவை கொண்டாடுகிறோம்,'' என்றார் வின்சென்ட்.

''ஒரு நகரத்தின் சிறப்பைக் கொண்டாடுவது பல நாடுகளில் உள்ளது. கிழக்கிந்திய கம்பெனியின் நுழைவுக்குப் பிறகு இந்த நகரம் வணிகத்திற்காக சீரமைக்கப்பட்டது. ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமமும் இணைக்கப்பட்டு, தொழில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றப்படுகிறது,'' என பிபிசி தமிழிடம் விவரித்தார் வின்சென்ட்.

சென்னைக்கு வயசு எத்தனை?படத்தின் காப்புரிமைTHEMADRASDAY.IN

மெட்ராஸ் டே குழுவினரின் கருத்துப்படி 2017ம் ஆண்டில் சென்னை நகரத்தின் வயசு 378 என குறிக்கப்படுகிறது.

இதே சென்னை நகரத்தில் மற்றொரு பிரிவினர் சென்னை நகரம் கிழக்கிந்திய கம்பெனியின் வருகையில் இருந்து தொடங்கியது என்று முடிவு செய்யக் கூடாது என்று வாதாடுகிறார்கள்.

சென்னைக்கு வயசு எத்தனை?

1961-ல் எலிசபெத் ராணி, சென்னை ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலைக்கு வந்தபோது...

 

சென்னைக்கு வயசு 2000த்துக்கும் மேல்

சென்னை 2000பிளஸ் அமைப்பின் நிறுவனர் ரங்கராஜன், சென்னை நகரத்தின் பழைமையை கொண்டாடும் நேரத்தில், அதன் உண்மையான வரலாற்றை அறிய மேலும் முயற்சிகள் செய்யப்படவேண்டும், ஆங்கிலேயருக்கு முந்தைய காலத்தில் தமிழர்கள் இந்த நகரத்தில் வழமையுடன் வாழ்ந்த வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்கிறார்.

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் மற்றும் வரலாற்று துறை பேராசிரியர் ராஜவேலு சென்னை நகரத்தில் பழமையான கோயில்களான திருவொற்றியூர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருமுல்லைவாயில் உள்ளிட்ட கோயில்கள் பாடல் பெற்ற தலங்கள், அதாவது, 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கோயில்களைக் கொண்டுள்ளது என்பதால், இந்த நகரம் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னதாகவே பரபரப்பான நகரமாக இருந்துள்ளது என்பதை கட்டுகிறது என்கிறார்.

சென்னைக்கு வயசு எத்தனை?

ஜனவரி 1786: புனித ஜார்ஜ் கோட்டைக்கு அருகிலுள்ள ஆங்கிலேய குடியிருப்புகள்

 

மற்றொரு சான்றாக,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டிலுள்ள விவரத்தை குறிப்பிடுகிறார். 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மதராசபட்டினம், நீலாங்கரையன் பட்டினம், ராயபுர பட்டினம் போன்ற துறைமுக பகுதிகளுக்கு பொருட்களைக் கொண்டு சேர்ப்பதற்கு விதிக்கப்படும் வரிகள் விவரமாக அடங்கிய கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தோம். இவையெல்லாம் ஆங்கிலேயேர் காலத்திற்கு முன்பாகவே இந்த நகரம் செழிப்புடன், கட்டமைப்புடன் இருந்தது என்பதற்கு சான்றாக உள்ளது,'' என்றார்.

சென்னைக்கு வயசு எத்தனை?படத்தின் காப்புரிமைTHEMADRASDAY.IN

புலியூர் கோட்டத்தில் இருந்த சென்னை

தற்போது எக்மோர் என்று அறியப்படும் பகுதி, சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கனின் கல்வெட்டுகளில் எழுமூர் நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறுகிறார் 'சென்னபட்டணம் மண்ணும் மக்களும்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராமச்சந்திர வைத்தியநாத்.

''சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, மாதவரம், கோயம்பேடு, தாம்பரம் போன்ற பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி கால் பதிப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னரே 12 -13ம் நுற்றாண்டுகளில் பிரசித்தி பெற்ற கிராமங்களாக இருந்துள்ளன,'' என்றும் ராமச்சந்திர வைத்தியநாத் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வந்தபின்னர், குறும்பர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, மதராஸ் தொண்டை மண்டலத்தில் புலியூர் கோட்டத்தில் இருந்தது என்பதற்குச் சான்று உள்ளது என்கிறார் ராமச்சந்திர வைத்தியநாத்.

சென்னைக்கு வயசு எத்தனை?

கபாலீஸ்வரர் கோயில்

விவாதம் கிளம்பியதே ஆரோக்கியம்

மெட்ராஸ் நகரத்தின் பிறந்த நாள் என்று என்பதை அறிய கிளம்பியுள்ள போட்டியே பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்கிறார் ஆவணப்பட இயக்குனர் மற்றும் பாரம்பரிய நடைப்பயண நிகழ்வுகளை (heritage walks) நடத்திவரும் கோம்பை அன்வர்.

'' சென்னை நகரம் எல்லோருக்குமான நகரமாக இருந்து வந்துள்ளது. என்னை பொருத்தவரையில் இந்த நகரத்தின் வரலாற்றை பேசப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதேமுக்கியமாக தெரிகிறது. பழமையைப் பற்றி தெரிந்துகொள்ளும் சமயத்தில் தற்போதைய நகரம் இருக்கும் நிலை, அதை சீரமைக்கவேண்டிய கட்டாயத்தையும் விவாதிப்பது நல்லது,'' என்றார்.

2015ல் வெள்ள பாதிப்பிற்கு பிறகு, பண்டைய காலத்தில் நீர்நிலைகள் மேலாண்மை செய்யப்பட்ட விதம் பற்றி பரவலாகப் பேசப்பட்டது, சில நீர் நிலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. அதனால், வரலாற்றைப் பற்றிய விவாதம் மேலும் ஆரோக்கியமனதாக மாற வேண்டும் என்று குறிப்பிட்டார் அன்வர்.

சென்னைக்கு வயசு எத்தனை?படத்தின் காப்புரிமைTHEMADRASDAY.IN

என்ன சொல்கிறார்முன்னாள் சென்னை மேயர் ?

சென்னை நகரத்தின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியிடம் பேசியபோது ''ஆங்கிலேயர்கள் வருகை நம் நகரத்தின் வளர்ச்சியை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றியது உண்மைதான். ஆனால் அவர்கள் கொண்டுவந்த போக்குவரத்து வசதிக்கு முன்பாகவே வணிகத்திற்காக கப்பல் போக்குவரத்து பெருமளவு இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

மெட்ராஸ் டே என ஒரு தினம் கடைபிடிப்பதும், இந்த நகரத்தின் வயது பற்றியும் எழுந்துள்ள சர்ச்சை பற்றி கேட்டபோது விமர்சனங்களை விடுத்து வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்வது முக்கியம் என்ற கருத்துடன் அவர் முடித்துக்கொண்டார்.

 

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

நீச்சல் குளத்தில் ரக்பி பயிற்சி;

  • தொடங்கியவர்

மறக்க முடியுமா?: ஆகஸ்ட் 13 - கைவிளக்கு ஏந்திய தேவதையின் நினைவுநாள்

 

செவிலியர் தொண்டில் சிறந்து விளங்கியதுடன் கிரிமியா போரில் உயிருக்கு போராடிய பலரின் கண்களுக்கு ‘கைவிளக்கு ஏந்திய தேவதை’யாக தோன்றிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் நினைவைப் போற்றுவோம்.

 
மறக்க முடியுமா?: ஆகஸ்ட் 13 - கைவிளக்கு ஏந்திய தேவதையின் நினைவுநாள்
 
லண்டன்:

இங்கிலாந்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், பிரான்சஸ் நைட்டிங்கேல் தம்பதியரின் மூன்றாவது மகளாக இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் 12.5.1820 அன்று பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார்.

சிறுவயதில் மிகவும் துடிப்பாக இருந்த நைட்டிங்கேல் கணிதத்தை சிறப்புப் பாடமாக தேர்வு செய்து பயின்றார். மேலும், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாட்டு மொழிகளையும் கற்றார். செவியலராகி மக்களுக்கு தொண்டு செய்ய விரும்பிய தனது எதிர்கால திட்டத்தை பெற்றோரிடம் அவர் கூறியபோது அவர்கள் எளிதில் சம்மதிக்கவில்லை.

செவியலராகும் குறிக்கோளுக்காக தன்னை காதலித்தவரின் திருமண ஆசையை 1849-ம் ஆண்டில் நிராகரித்தார். 1850-51 ஆண்டுகளுக்கிடையில் ஜெர்மனியின் கைசெர்ஸ்வெர்த் பகுதியில் உள்ள பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து செவிலியராக மாறினார்.

பின்னர் லண்டன் நகரில் உள்ள ஹார்லே ஸ்டிரீட் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார். அப்போது அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கவர்னருக்கு அவர் ஆற்றிய சிறப்பான சேவையால் செவிலியர்களுக்கான மேற்பார்வையாளராக (சூப்பிரண்ட்) உயர்த்தப்பட்டார்.

201708112140315365_1_nurse._L_styvpf.jpg

அந்த காலகட்டத்தில் காலரா எனப்படும் வாந்திபேதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மிடில்செக்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் குழுவுக்கும் இவரே தலைமை தாங்கினார்.

கடந்த 1854-56 ஆண்டுகளுக்கு இடையில் ரஷ்யப் பேரரசுக்கும், பிரான்ஸ் கூட்டணி நாடுகளுக்கும் இங்கிலாந்து அரசின் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையே கிரீமியனில் நடைபெற்ற போரில் சுமார் 18 ஆயிரம் வீரர்கள் காயம்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தலைமையில் 38 பேர் கொண்ட குழு ஒன்று போர்முனைக்கு அனுப்பப்பட்டது.

கான்ஸ்டட்டின்நோப்புல் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதியின்றி மூட்டைப்பூச்சிகள் மற்றும் எலிகளுக்கு இடையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வீரர்களுக்கு நைட்டிங்கேல் குழுவினர் இடையறாது மருத்துவ சிகிச்சை அளித்தும், ஆறுதல் மொழி பேசியும் குணப்படுத்தி வந்தனர்.

தண்ணீர்கூட அங்கு ரேஷன் முறையில் வழங்கப்பட்டதால் பல வீரர்கள் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த சோகம் அவரது நெஞ்சைப் பிழிந்தது. முதலில் அந்த மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டினார்.

201708112140315365_2_nurse1._L_styvpf.jp

இரவு நேரங்களில் நைட்டிங்கேல் கையில் மெழுகு விளக்கை ஏந்தியபடி வலியால் துடித்துக் கொண்டிருக்கும் வீரர்களை நலம் விசாரித்து, ஆறுதல் மொழியுடன் அவர்களின் வலிக்கு மருந்துகளைக் கொடுத்து, மனச்சுமையை போக்கி, விரைவில் குணப்படுத்தினார்.

இதைகண்ட ராணுவ வீரர்கள், ‘தங்களைக் காக்க விண்ணுலகில் இருந்து தேவதையொன்று மண்ணுலகுக்கு கையில் விளக்குடன் வந்துள்ளது’ என்று புகழ்ந்து பாராட்டினர். போருக்குப்பின் தனது ஊருக்கு  திரும்பிய பிளாரன்ஸ் நைட்டிங்கேலை அங்குள்ள மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். இதனால், விக்டோரியா மகாராணிக்கு அடுத்தபடியாக நன்கறியப்பட்ட பிரபலமாக பி.பி.சி. வானொலி இவரை அறிவித்தது.

இங்கிலாந்து ராணி விக்டோரியா ‘நைட்டிங்கேல் ஜுவல்’ எனப்படும் ஆபரணத்தை இவருக்கு விருதாக வழங்கி கவுரவித்தார். இந்த விருதுடன் அளிக்கப்பட்ட பணமான இரண்டரை லட்சம் டாலர்களை கொண்டு 1860-ம் ஆண்டு செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியை நைட்டிங்கேல் தொடங்கினார். இங்கு செவியர் பயிற்சி பள்ளி ஒன்றும் உருவானது.

அவரது அரிய சேவையை பாராட்டி அந்நாட்களில் கவிதைகள், கதைகள், பாடல்கள், நாடகங்கள் பல உருவாக்கப்பட்டு மக்களிடையே மிகவும் புகழுக்குரிய பெண்மணியாக உயர்ந்தார். பிளாரன்ஸ் நைட்டிங்கேலைப் போல் வாழ வேண்டும் என பல இளம்பெண்கள் சபதமேற்கும் அளவுக்கு அவர் விளங்கினார். மிக உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த பல பெண்கள் அவரது பள்ளியில் சேர்ந்து செவிலியர் பயிற்சி பெற்று நோயாளிகளுக்கு சேவையாற்ற முன்வந்தனர்.

இடைவிடாத பணியின்போது ‘கிரிமியன் காய்ச்சல்’ கடுமையான தொற்றுநோய்க்குள்ளாகி மேஃபேர் நகரில் உள்ள தனது வீட்டில் பல ஆண்டுகள் அவர் படுக்கையில் கிடக்க நேரிட்டது. இருப்பினும் தனது 38-வது வயதில் படுக்கையில் இருந்தபடியே மருத்துவ துறையில் செய்யப்பட வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக பல ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டார்.

நடமாட இயலாத நிலையிலும் நலிவுற்ற நோயாளிகளின் துயர்துடைக்கும் பல நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். இந்தியாவிலும் சுகாதாரத்துறையில் செய்யப்பட வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் அவர் பரிந்துரைத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, பிளாரன்ஸ் நைட்டிங்கேலுக்கு விக்டோரியா மகாராணி செஞ்சிலுவை சங்க விருதை வழங்கினார்.
1907-ம் ஆண்டு பிரிட்டானிய மன்னரின் ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ என்னும் உயரிய விருதையும் பெற்ற முதல் பெண்மணியாக பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விளங்கினார்.

1910-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமானது. ஆகஸ்ட் 12-ம் தேதி பல்வேறு நோய்கள் ஒருசேர தாக்கியதில் 13-8-1910 அன்று பிற்பகல் 2 மணியளவில் அந்த ‘கைவிளக்கு ஏந்திய தேவதையின்’ இன்னுயிர் பிரிந்தது.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தாரின் நன்மதிப்பை பெற்றிருந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வந்த வாய்ப்பை அவரது குடும்பத்தார் நிராகரித்து விட்டனர். எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் தனது இறுதி யாத்திரை நடைபெற வேண்டும் என்ற பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் நீண்ட நாள் விருப்பம் நிறைவேற்றப்பட்டது.

இங்கிலாந்தின் ஹேம்ப்ஷைர் அருகேயுள்ள செயிண்ட் மார்கரெட் சர்ச் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பிளாரன்ஸ் நைட்டிங்கேலால் தொடங்கப்பட்ட செவிலியர் பயிற்சிப் பள்ளி தற்போது அவரது நினைவிடமாகவும் அருங்காட்சியகமாகவும் விளங்கி வருகிறது.

‘கிரிமியாவின் தேவதை’ என்றும் அழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெற்ற விருதுகள், பரிசுகள் அவர் பயன்படுத்திய உபகரணங்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் கலைப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

1987-ம் ஆண்டில் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச செவிலியர் மாநாட்டில் உலகளவில் செவிலியர் தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதன் விளைவாகவே, 1991-ம் ஆண்டு, மே மாதம் 12-ம் தேதியை சர்வதேச செவிலியர் தினமாக அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை போற்றியும், பாராட்டியும் வருகின்றன.

அவரது நினைவாக, ஆண்டுதோறும் நைட்டிங்கேல் பிறந்த மே 12-ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாளிகையில் உள்ள விளக்குகள் அங்குள்ள செவிலியர்களால் ஏற்றப்பட்டு, அங்குள்ள உயர்ந்த பீடத்தில் அவர்கள் அமரவைக்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர்.

பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளான மே மாதம் 12-ம் தேதி உலகின் பல நாடுகள் செவிலியர் துறையில் சிறந்த சேவையாற்றுபவர்களை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற சிறப்பு விருதால் கவுரவித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ண குமாரி என்ற செவிலியர் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்து இவ்விருதினை பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.

http://www.maalaimalar.com/

 

 

 

உலக இடது கை பழக்கமுடையோர் நாள்: 13-8-1976

 

உலக இடதுகை பழக்கமுடையோர் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இந்நாளைக் கொண்டாடி வருகின்றது. இது முதன் முதலில் 1976-ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. உலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 7 முதல் 10 சதவிதத்தினர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணக்கீடப்பட்டுள்ளது. இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட சிரமங்களை அவர்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்றது. இந்த இடதுகைப் பழக்கம் பிறப்பிலே சிலருக்கு ஏற்படுகின்றது.

 
 
 
 
உலக இடது கை பழக்கமுடையோர் நாள்:  13-8-1976
 
உலக இடதுகை பழக்கமுடையோர் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இந்நாளைக் கொண்டாடி வருகின்றது. இது முதன் முதலில் 1976-ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.

உலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 7 முதல் 10 சதவிதத்தினர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணக்கீடப்பட்டுள்ளது. இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட சிரமங்களை அவர்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்றது. இந்த இடதுகைப் பழக்கம் பிறப்பிலே சிலருக்கு ஏற்படுகின்றது.

மூளையானது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை: பெருமூளை, சிறுமூளை மற்றும் நீள்வளைய மையவிழையம். இவற்றில் பெருமூளை இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும், வலதுப்பக்க அரைக்கோளம் உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது.

இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகளை சில பெற்றோர்கள் குழந்தைப் பருவத்திலேயே வலக்கைக்கு மாற்றுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வர். இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல். தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கௌரவிக்கவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இந்நாள் சிறப்பாக அனுட்டிக்கப்படுகிறது. குறிப்பாக இவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதும், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துவது என்பன இந்நாளில் முக்கியமாக மேற்கொள்ளப்படுகின்றன.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1849 - யாழ்ப்பாணம் பதில் மறை மாவட்டம் நிறுவப்பட்டது.

* 1913 - ஹரி பிறியர்லி துருப்பிடிக்காத எகுவைக் கண்டுபிடித்தார்

* 1920 - போலந்து- சோவியத் ஒன்றியம் போர் ஆரம்பமாயிற்று. ஆகஸ்ட் 25-ல் முடிவடைந்த இப்போரில் செம்படையினர் தோற்றனர்.

* 1937 - ஷங்காய் சமர் ஆரம்பமானது.

* 1954 - பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது.

* 1960 - மத்திய ஆப்பிரிக்க குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

* 1961 - ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு பெர்லினின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளை மூடி கிழக்கு ஜெர்மனியினர் தப்பிச் செல்லாவண்ணம் பெர்லின் சுவரைக் கட்ட ஆரம்பித்தது.

* 2004 - கறுப்பு வெள்ளி: மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் ராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.

* 2004 - புருண்டியில் கடும்பா அகதிகள் முகாமில் இருந்த 156 டூட்சி இன அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

* 2004 - 28-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.

* 2006 - யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை ராணுவத்தினரின் ஏவுகணை வீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

106 ஆண்டுகள் பழமையான 'பழ கேக்' அண்டார்டிகாவில் கண்டெடுப்பு

106 ஆண்டுகள் பழமையான பழ கேக்படத்தின் காப்புரிமைANTARCTIC HERITAGE TRUST

பனியால் மூடப்பட்ட அண்டார்டிகா, பூமியில் மிக மோசமான இயற்கை சூழல்களை கொண்ட ஒரு பகுதிகளில் ஒன்றாகும்.

அண்டார்க்டிக் ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு, அண்டார்டிகா பகுதியில் 106 ஆண்டுகள் பழமையான பழ கேக் ஒன்றினை கண்டெடுத்துள்ளனர்.

அண்டார்டிகாவின் கேப் அடேர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த கேக், பரிட்டனை சேர்ந்த ஆய்வுப்பயணியான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு சொந்தமானது என நம்பப்படுகிறது.

அண்டார்டிகாவின் உள்ள மிகப்பழமையான கட்டிடத்தில் இருந்து இந்த கேக் கண்டெக்கப்பட்டது.

இந்தப் பழமையான குடிலை நார்வேவை சேர்ந்த ஆய்வுப்பயணியான கார்ஸ்டன் போர்ச்க்ரேவிங் மற்றும் அவரது குழுவினர் 1899-ம் ஆண்டு கட்டியுள்ளனர்.

பிறகு 1911-ஆ ம் ஆண்டு தனது டெர்ரா நோவா அய்வுப்பயணத்தின் போது ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட் இந்த குடிலில் தங்கியுள்ளார்.

இந்த கேக் வைக்கப்பட்டிருந்த தகரப்பெட்டி துருப்பிடித்திருந்த போதிலும், கேக் சிறந்த நிலையிலும், உண்பதற்குரிய வாசத்துடனும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

106 ஆண்டுகள் பழமையான பழ கேக்

அய்வுப்பயணத்தின் போது தனது குழுவினருடன் உணவு உண்ணும் ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்

 

பிரிட்டனை சேர்ந்த பிஸ்கட் நிறுவனமான ஹன்ட்லே & பால்மர்ஸ் இந்த கேக்கை தயாரித்துள்ளனர்.

``அண்டார்டிகாவில் வாழும் போதும், வேலை செய்யும் போதும் அதிக கொழுப்புடைய அதிக சக்கரை கொண்ட உணவுகளை உண்ணத் தோன்றும். இதற்குப் பழ கேக் சரியான பொருத்தமாக இருக்கிறது. ஒரு கோப்பை நேநீருடன் பழக் கேப் சாப்பிடுவது அவ்வளவு சிறந்ததாக இருக்கும்`` என இந்த அமைப்பின் தொல்பொருள் ஆய்வாளர் லிசி மீக் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழில் கூறியுள்ளார்.

ஆராய்ச்சியாளர்கள், கடந்த மே 2016 முதல் இந்தக் குடிலில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருவிகள், உடைகள், மோசமாக அழுகிப்போன மீன், இறைச்சி என இதுவரை 1,500 பொருட்களை பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.

பழ கேக் உள்பட கண்டுபிடிக்கப்பட்டுள்ள எல்லாப் பொருட்களும், இருந்த இடத்திலே திரும்ப வைக்கப்பட்டுள்ளது.

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இவர்களிடம் செல்வது நல்லதல்ல!
 

article_1479728133-swami-blinkananda-2.jபலவேடதாரிகள் கடவுளின் தூதராக ஆசைப்படுகின்றார்கள். இதற்காக ஏதேதோ அமைப்புகளை உருவாக்கித் தம்மை முன்னிலைப்படுத்துகின்றார்கள். 

ஊடகங்களிலும் பொது நிகழ்வுகளிலும் தங்களைத் திரைப்பட நாயகர்கள்போல பல விதமான வேடங்களில் காட்சிகொடுத்து, கைகளை விரித்து, ஆசிர்வாதம் வேறு செய்கிறார்கள். 

எல்லாமே தங்கள் அடியாட்கள் போன்ற சீடர்கள் மூலமே நடத்தப்படுவதை இந்த மக்கள் உணர்வதேயில்லை. இந்த மாபெரும் நாடகத்தை நடத்த எங்கிருந்து பணத்தை கௌவுகின்றார்கள்? எல்லாமே ஏமாற்று; மக்களிடமிருந்துதான் என்று சொல்லப்படுகின்றது.  

இறைவனை வழிபட வணக்க ஸ்தலங்கள் இருக்கும்போது, இவர்களிடம் செல்வது நல்லது அல்ல!

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

ஓகஸ்ட் – 14

 

1880 : ஜேர்மனியின் கொலோன் நகரின் புகழ்பெற்ற கட்டடங்களில் ஒன்றான கொலோன் தேவாலய கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்தன.


1900 : ஐரோப்பிய, ஜப்பானிய அமெரிக்கக் கூட்டுப் படைகள் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன.


1908 : முதலாவது அழகு ராணி போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் நடைபெற்றது.


1912 : நிக்கரகுவாவில் அமெரிக்க சார்பு அரசை அமைப்பதற்காக அமெரிக்கக் கடற்படையினர் நிக்கரகுவாவை முற்றுகையிட்டனர்.


Varalaru-14-08-20171937 : ஆறு ஜப்பானிய விமானங்கள் சீனாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.


1947 : பிரித்தானிய நிர்வாகத்திலிருந்த இந்தியாவில்,  பாகிஸ்தான் சுதந்திரம் பெற்று பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இணைந்தது.


1969 : வட அயர்லாந்துக்கு ஐக்கிய இராச்சிய இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.


1971 : பஹ்ரெய்ன் சுதந்திரப் பிரகடனம் செய்தது.


1972 : கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த விமானம் கிழக்கு பேர்லின் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளாகியதில் 156 பேர் கொல்லப்பட்டனர்.


2006 : இஸ்ரேல், லெபனான் நாடுகளுக்கிடையில் போர் முடிவுக்கு வந்தது.


2005 : கிறீஸின் ஏதென்ஸ் நகரில் இடம்பெற்ற விமான விபத்தில் 121 பேர் உயிரிழந்தனர்.


2006 : முல்லைத்தீவு செஞ்சோலை சிறார்கள் இல்லம் மீது நடத்தப்பட்ட  தாக்குதலில் 61 பேர் உயிரிழந்தனர்.


2007 : ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் இடம்பெற்ற நான்கு தொடர் குண்டுவெடிப்புகளில் 796 பேர் கொல்லப்பட்டனர்.


2010 : முதலாவது இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் சிங்கப்பூரில் ஆரம்பமாகின.


2013 : எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஷிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்த நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதையடுத்து அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 

http://metronews.lk

  • தொடங்கியவர்

காலத்தை வென்று நிற்கும் கண்ண(தாசன்)ன் பாடல் வரிகள்!

 
 
246921.jpg 246842.jpg 246843.jpg 246844.jpg 246845.jpg 246846.jpg 246847.jpg 246848.jpg 246849.jpg 246850.jpg 246851.jpg 246853.jpg 246854.jpg 246855.jpg 246856.jpg 246857.jpg 246858.jpg 246859.jpg
  • தொடங்கியவர்

தொலைந்து போன பழங்குடியினர்... கண்டறிய உதவிய வான்கோழிகள்... இது அமெரிக்க ஆச்சர்யம்!

 

பழங்குடியினர்

கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில், இடம்பெயர்ந்த சோழர்களை, அவர்கள் விட்டுச் சென்ற தடயங்களை வைத்தே ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று கண்டுபிடிக்கும். அப்படிக் காணாமல் போன ஒரு பழங்குடியினர் இனமான பியூப்லான்ஸ் (Puebloans) என்பவர்களைக் குறித்த தேடல் தான் இந்தக் கதை! இவர்கள் தென்மேற்கு அமெரிக்காவில் உள்ள சாக்கோ மற்றும் மேசா வேர்டே பள்ளத்தாக்குகளில் வாழ்ந்த பூர்விக அமெரிக்கர்கள். 1200 களில் வாழ்ந்த இவர்கள், அப்போதே மண், செங்கற்கள், கற்கள் மற்றும் இதர பொருட்கள் கொண்டு நகரக் கட்டமைப்புகளை உருவாக்கி வாழ்ந்தவர்கள். பல அறைகள் கொண்ட சிக்கலான குடியிருப்புகள், தாக்குதல் என்று ஒன்று வந்தால், எதிரிகள் சுலபமாக நுழைய முடியாத தற்காப்பு நிலைகளுடன் இருக்கும் வடிவமைப்புகள் என்று அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியை நாலாபுறமும் ஆண்ட அவர்கள், திடீரென்று காணாமல் போயினர். வரலாற்றில் எங்கே போனார்கள் இவர்கள் என்பதற்கான ஆதாரபூர்வமான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

விடையில்லாத கேள்விகள்

பல நூற்றாண்டுகளாக அவர்கள் எங்கே இடம்பெயர்ந்திருக்கக் கூடும் என்ற கேள்வி ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிய சவாலாகவே இருந்து வந்தது. சோளம் வளர்ப்பது, அசத்தலாகக் கிராமங்கள், சிறுநகரங்கள் கட்டமைப்பது என்று மிகவும் திறமைசாலிகளான இந்தப் பழங்குடியினர் இனத்தின் பெருமை ஏட்டளவில் மட்டுமே இருந்து வருகிறது. எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்? ஒரு சில நாட்களில் ஓர் இனமே, ஒரு மாகாணமே இடம்பெயருமா? அதற்குக் காரணம் என்ன? போன்ற கேள்விகள் பல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களைத் தூங்க விடாமல் செய்தது.

பழங்குடியினர்

இது தான் காரணம்

பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, அவர்கள் இடம்பெயர்ந்ததற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. அது அப்போது திடீரென்று பரவிய பெரும் பஞ்சம்! காடழிப்பு மற்றும் மண் அரிப்பு போன்றவையும் இதனுடன் சேர்ந்துக் கொள்ள, 1000 பேருக்கு அன்றாட உணவளிப்பது என்பது கனவாகிப்போனது. இனியும் இங்கே இருப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லையென உணர்ந்தவர்களாய் பரதேசியாகப் பயணம் மேற்கொண்டனர். முதன்முறையாக தங்களது சொந்த ஊரான சாக்கோ மற்றும் மேசா வேர்டே பள்ளத்தாக்குகளில் இருந்து தள்ளாடும் தாத்தாக்கள் முதல் குழந்தைகள் வரை, உடைமைகள் முதல் வளர்த்த மிருகங்கள் வரை அனைத்தையும் கூட்டிக்கொண்டு வெளியேறி இருக்கிறார்கள்.

ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு

எங்கே போனார்கள் என்பதற்கான முழுமையான ஆதாரம் இல்லாதபோதும், அவர்கள் அமெரிக்காவின் வடக்கு பகுதியில் இருக்கும் ரியோ கிராண்டே மாகாணத்திற்குச் சென்றிருக்க கூடும் என்பது மூத்த ஆராய்ச்சியாளர்களின் வாதமாக இருந்தது. ஆனால், அதை உறுதி செய்ய ஆதாரம் என்று ஒன்று வேண்டுமே? ரியோ கிராண்டே மக்களை அணுகி பரிசோதனை மற்றும் ஆராய்ச்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டபோது மறுத்திருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க, ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகளின் உதவியை நாட, என்றுமே கை விடாத அறிவியல் ஓர் அற்புதமான யோசனையை முன்வைத்தது.

வான்கோழிகள்

வான்கோழிகள் வைத்து ஆராய்ச்சி

அப்போது வாழ்ந்த அந்தப் பழங்குடியினர் இனத்தின் அன்றாட வாழ்க்கை முறையில் வான்கோழிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இங்கே நாம் ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்பது போல், அவர்களுக்கு வான்கோழி வளர்ப்பு. சாக்கோ மற்றும் மேசா வேர்டே பள்ளத்தாக்குகளில் இருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த பல எஞ்சியுள்ள பொருட்கள் கைவசம் இருந்திருக்கிறது. அதில் இந்தப் பழங்கால வான்கோழிகளின் எலும்புகளும் அடங்கும். அதில் இருந்து அந்த வான்கோழியின் DNA மூலக்கூறுகளை எடுத்திருக்கிறார்கள். பின்பு அதை, வடக்கில் இருக்கும் ரியோ கிராண்டே மாகாண வான்கோழிகளின் DNA வுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார்கள். இரண்டும் 100 சதவீதம் பொருந்தி போயிருக்கிறது. 1200 களுக்கு முன், ரியோ கிராண்டேவில் வாழ்ந்த வான்கோழிகள் இது போல் இல்லை. சரியாக 1280 களில் தான் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, பியூப்லான்ஸ் பழங்குடியினர் இங்கே இடம்பெயர்ந்த பின்னரே, வான்கோழிகள் இப்படி மாறியிருக்கின்றன என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.

 

இதுகுறித்து ப்ரூஸ் பெர்ன்ஸ்டைன் என்ற பழங்குடியினர் வரலாற்று பாதுகாப்பு அதிகாரி பேசுகையில், “மக்கள் பெரும்பாலும் தங்கள் வரலாறு குறித்து அறிந்து கொள்ள தொல்பொருள் ஆய்வுகளை விரும்புவதில்லை. ஆனால், அறிவியல் ஆராய்ச்சி எனும் போது, அவர்கள் பதில் வேறாய் இருக்கிறது” என்று தெரிவித்தார். இவ்வாறான இடைவெளிகளை அறிவியல் கொண்டு நிரப்பும் போது, அந்தத் தொல்பொருள் ஆராய்ச்சியின் நம்பகத்தன்மையும் நிச்சயம் உயர்கிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சிறை வடிவிலான சொகுசு ஹோட்டல்

 
 
சிறை வடிவிலான சொகுசு ஹோட்டல்
 

ஆடம்பரமான சொகுசு உணவகங்களைத்தான் நம்மில் பெரும்பாலானோர் அதிகம் விரும்புவோம். ஆனால், தாய்லாந்தில் சிறை செட்- அப்பில் சொகுசு உணவகத்தை அமைத்துள்ளனர். அதன் உள்ளே சென்று பார்த்தால் எமக்கு நிச்சயம் வியப்பை ஏற்படுத்தும்.

தாய்லாந்தில் அமைக்கப்பட்ட இந்த சிறை வடிவ உணவகத்தில் ஒருநாள் இரவு தங்க 2,500 ரூபாய் செலுத்த வேண்டும். என்ன கொடுமை இது! சிறைக்கு செல்ல பணம் கட்ட வேண்டுமாம்.

இந்த உணவகத்தில் உள்ள சிறப்பம்சமே எல்லாமே சிறைக்குள் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

இந்த உணவகத்தின் அறைகள் சிறை அறை போன்றே இரும்பு கம்பிகளால் ஆனது. உள்ளே சென்று கம்பி எண்ண வேண்டாம். நன்றாக சாப்பிடலாம். சிறையில் உள்ளது போன்ற அமைப்பில் உள்ளது. அங்கு செல்பவர்களுக்கு சிறைவாசிகளுக்குக் கொடுக்கப்படும் உடைகளும் கொடுக்கப்படுகிறது.

உணவகத்தின் வாயிலும் சிறையின் வாயிலைப் போல் காட்சியளிக்கிறது.
ஆனால், சிறையில் அனுபவிப்பதுபோல் கொடுமைகளை அனுபவிக்க வேண்டாம். இலவச தொழில்நுட்ப வசதி, சுவையான உணவுகளை இந்த உணவகத்தில் அனுபவிக்கலாம்.

http://newuthayan.com

  • தொடங்கியவர்

ஆடும் புலியும் நண்பர்கள் இந்தக் கதை ரஷ்யாவில்

 
 
ஆடும் புலியும் நண்பர்கள் இந்தக் கதை ரஷ்யாவில்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ரஷ்­யா­வின் பிரை­மோர்ஸ்கி சபாரி பூங்­கா­வில் உள்ள சைபீ­ரி­யப் புலி ஒன்­றும், ஆட்­டுக்­குட்டி ஒன்­றும் நண்­பர்­க­ளா­கப் பழகி வரு­கின்­றமை பன்­னாட்டு ஊட­கங்­க­ளின் கவ­னத்­தைப் பெற்­றுள்­ளது.

அமுர் என்ற 3 வயது சைபீ­ரி­யப் புலி, பூங்­கா­வின் அதி­யு­யர் கவ­னிப்­பின் கீழ் வைக்­கப்­பட்­டுள்­ளது. பூங்­கா­வின் ஊழி­யர்­கள் புலிக்கு வாரம் இரு­முறை முயல்­க­ளை­யும், ஆடு­க­ளை­யும் வெட்டி இறைச்­சியை புலி­யின் கூண்­டில் வைத்­து­வி­டு­வார்­கள்.

ஆனால் கடந்த மாதம் புலி­யின் உண­வுக்­காக டிமுர் என்ற ஆட்டை உயி­ரு­டன் கூண்­டுக்­குள் அனுப்பி வைத்­த­னர். மறு­நாள் ஆடு உயி­ரு­டன் இருக்­கப் போவ­தில்லை என்று நினைத்­தி­ருந்த அவர்­களை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தும் வித­மாக இரண்­டும் நண்­பர்­க­ளா­கி­விட்­டன.

‘’புலி­யும், ஆடும் ஒன்­றாக நடை பயில்­கின்­றன. ஒன்­றாக விளை­யா­டு­கின்­றன. ஒன்­றாக ஓய்­வெ­டுக்­கின்­றன. புலி­யை­யும், ஆட்­டை­யும் வேறு­வேறு கூண்­டுக்­குள் அனுப்­பி­வைக்க முயன்­றோம். புலி இடத்­தை­விட்டு நகர மறுத்­தது. ஆடு தூங்­கா­மல், சாப்­பி­டா­மல் அடம்­பி­டித்­தது. மறு­நாள் ஒரே கூண்­டில்­விட்ட பிற­கு­தான் ஆடும், புலி­யும் இயல்பு நிலைக்கு வந்­தன. மீண்­டும் நட்­பைத் தொடர்ந்­தன. ஒன்­றரை மாதங்­க­ளுக்­குப் பிற­கும் நட்பு நீடிக்­கி­றது.

எனினும் ஆடு, புலி­யி இடையிலான இந்த நட்பு நீண்ட நாட்­கள் நிலைக்­காது. எப்­போது புலிக்­குப் பசி எடுக்­கி­றதோ, அன்று ஆடு சாக­டிக்­கப்­ப­டும். விரை­வில் இது நடக்­கும்’’ என்­கி­றார் பூங்கா ஒருங்­கி­ணைப்­பா­ளர் விளா­டி­மிர் க்ரெவெர்.

  • தொடங்கியவர்

இந்த ஜப்பான் முதியவருக்கும் ஆழ்கடல் மீனுக்கும் 30 ஆண்டுகால நட்பு என்றால் நம்புவீர்களா?

 

“ப்லக்...ப்லக்...ப்லக்...” என நீர்க்குமிழிகளின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அங்கு நீந்தி வருவது மீன் அல்ல... மனிதன் தான். அவரைச் சுற்றி நீந்திக் கொண்டிருப்பதில் எந்த மனிதனும் இல்லை... எல்லாம் மீன்கள்தான். நாம் தரையில் நடப்பது போல், அவர் அந்த ஆழ்கடலில் நீந்திக் கொண்டிருந்தார். அவர் கொஞ்சம் பெரியவர். அவருக்கு வயது 79. அவர் முதன்முதலில் கடலில் குதித்த போது அவருடைய வயது 18. எப்படிக் கணக்கிட்டாலும் கடலுக்கும், அவருக்குமான நெருக்கம் 60 வருடங்களைத் தொடும். அவர் நீந்திக்கொண்டே, அந்த இடத்தை நெருங்க... அவருக்கேத் தெரியாமல் அவர் பின்னால், அது அவரை நெருங்கிக் கொண்டிருந்தது. 

மீன் - மனிதன் நட்பு - ஜப்பான் ஆச்சர்யம்

வெளுத்துப் போயிருக்கும் ரோஜா இதழை ஒட்டியிருந்தது அதன் நிறம். அதன் முகம் வெறுப்போடு பார்த்தால் விகாரமாக இருக்கும். கொஞ்சம் அன்போடு பார்த்தால் அத்தனை அழகாக இருக்கும். அந்த முகம் மிகவும் வித்தியாசமானதாய் இருந்தது. அவர் நீந்தி, கிட்டத்தட்ட தரையை நெருங்கிவிட்டார். அது நீந்தி கிட்டத்தட்ட அவர் கால்களை நெருங்கிவிட்டது. 

மீன் - மனிதன் நட்பு - ஜப்பான் ஆச்சர்யம்

அவரின் பெயர் ஹிரோயுகி அரகவா ( Hiroyuki Arakawa ). ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானின் தட்டேயமா பகுதியில் "ஸ்கூபா" ( Scuba ) எனப்படும் ஆழ்கடல் நீச்சல் வீரராக இருந்து வருபவர். அழகான அந்தக் கடற்கரை கிராமத்தில், நீச்சல் உபகரணங்கள் விற்கும் கடையை நடத்திக்கொண்டிருக்கிறார். அதே சமயம், சுற்றுலாப் பயணிகளை ஸ்கூபா பயிற்சிக்கும் அழைத்துச் செல்கிறார். அப்படி அவர் 30 வருடங்களுக்கு முன்னர், ஆழ்கடலில் சில கட்டைகளை அடுக்கி அதை ஜாப்பானின் ஷிண்டோ இனத்தின் சிறு கோவிலாக (Shrine) மாற்றும் வேலைகளில் இருந்தார். அந்தப் பணிகள் முடியும் கட்டத்தில், இதை... இவளை முதன்முதலில் சந்தித்தார். ஜப்பானிய மொழியில் "கொபுடாய் " என்றழைக்கப்படும் ஒரு வகை மீன் இனத்தைச் சேர்ந்தவள். மிகவும் சோர்வாக, நகர முடியாத நிலையில் கிடப்பதைப் பார்த்து, அவளுக்கு உதவ முன்வந்தார் ஹிரோயுகி. மேலே சென்று, தன் படகில் பிடித்து வைத்திருந்த நண்டுகளில், 5 நண்டுகளை எடுத்துக் கொண்டுபோய் அதற்கு உணவளித்தார். தொடர்ந்து பத்து நாள்கள் இதே போன்று அதற்கு உணவளித்தார். அந்த உணவளிப்பில் தொடங்கிய அவர்களின் நட்பு 30 ஆண்டுகளைக் கடந்து, இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவளுக்கு "யொரிகோ" என்ற பெயரையும் சூட்டியுள்ளார். யொரிகோ எந்த மனிதரையும் நெருங்கவிட மாட்டாள்.... ஹிரோயுகியைத் தவிர. 

மீன் - மனிதன் நட்பு - ஜப்பான் ஆச்சர்யம்

இந்தக் கதை மிகச் சாதரணமானதாகத் தோன்றலாம். ஆனால், இந்த நிகழ்வு மிகவும் அபூர்வமானது. பல ஆராய்ச்சியாளர்களும் இந்த அபூர்வமான மனிதன்-மீன் உறவு குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக, ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் கெய்ட் நியூபோர்ட், மீன்கள் மனிதர்களை அடையாளம் கண்டு நினைவில் வைத்துக்கொள்கிறதா... ஆம் எனில், அது எப்படி சாத்தியமாகிறது என்ற கோணத்தில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

மீன் - மனிதன் நட்பு - ஜப்பான் ஆச்சர்யம்

புகைப்படங்களைக் காட்டி அதற்கு மீன்கள் கொடுக்கும் எதிர்வினைகளை அடிப்படையாக வைத்து அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில், "மீன்கள் மனிதர்களின் முகங்களைக் கொண்டு அடையாளம் காண்கின்றன. அதுவும், எல்லா மீன்களும் அல்ல. மிகச் சில மீன்கள் மட்டுமே அதைச் செய்கின்றன. மீன்களின் மூளை மிகச் சாதாரணமானவையாக இருந்தாலும், அது பல சிக்கலான விஷயங்களை எளிமையாக கையாள்கின்றது." என்று சொல்லியிருக்கிறார். 

மீன் - மனிதன் நட்பு - ஜப்பான் ஆச்சர்யம்

 

ஆனால், இந்த அறிவியல் ஆராய்ச்சிகளை எல்லாம் ஹிரோயுகியும், யொரிகோவும் கண்டு கொள்வதில்லை. இவர் மனிதத்தையும், அது மீன்தத்தையும் பகிர்ந்துகொண்டு, இருவரும் அத்தனை மகிழ்ச்சியாய் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நட்புக்கு ஆதாரமாய் நின்று கொண்டிருக்கிறது அலைகளற்ற அந்த ஆழ்கடல்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சிவகார்த்திகேயன், ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியானது ‘வேலைக்காரன்’ டீசர்!

 
 

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'வேலைக்காரன்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

வேலைக்காரன்

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் ஃபாசில், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மோகன் ராஜா இயக்கிய இந்தப் படத்தை '24 AM STUDIOS' தயாரித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 29-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பெயர், நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவா மட்டும் சோலோ பெர்ஃபார்மன்ஸ் கொடுத்த நிலையில் வெளியிடப்பட்டது. அடுத்ததாக வெளியான செகண்ட் லுக் போஸ்டரில் ஃபகத் ஃபாசிலும் தலைகாட்டியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தப் படத்தின் வெளியீட்டு வேலைகள் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 
  • தொடங்கியவர்

முதுமையை வென்ற விளையாட்டு வீரர்கள் (புகைப்படத் தொகுப்பு)

Angela Copson, 70, runs to a new world record in the women's 10,000m race. Her time of 44.25mins was a whole 3 minutes faster than the existing European record for this distance in her age group (70-74 year old) and 18 seconds faster than the existing world record.

பிரிட்டனின் ஏங்கெல்லா காப்சன் (70வயது) பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய உலக சாதனையை படைக்க ஓடுகிறார். 44'25'' நேரத்தில் பந்தய தூரத்தை கடந்துள்ளார்.

 

உலகின் மிக சிறந்த தடகள வீரர்கள் லண்டனில் கொண்டாடப்படும் வேளையில், அவர்களுடைய பழைய சகாக்கள் டென்மார்க்கில் நடைபெற்ற போட்டியை முடித்துவிட்டு ஊர் திரும்புகின்றனர் என்பது வெகு சிலருக்கே தெரியும். ஆனால், இந்த இருதரப்பினரும் தங்களது வயது என்ற விஷயத்தில் மட்டும் முற்றிலும் எதிரெதிராக இருந்தாலும், விளையாட்டின் மீதான ஈடுபாடு, மகிழ்ச்சி மற்றும் மன உறுதி ஆகியவற்றில் ஒருதரப்பினருக்கு மற்றொருவர் சளைத்தவர்களல்ல.

68 வயதுடைய புகைப்பட கலைஞர் அலெக்ஸ் ரோடாஸ் அதனை நிரூபிக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறார்.

'' அதிசயமான இந்த தடகள வீரர்களை பார்த்தவுடன் பாதி கண்ணீரிலும், பாதி ஆச்சரியத்திலும் இருக்கிறேன். 60களில், 70களில் மற்றும் 90களில் இவர்கள் செய்த சாதனையை நினைத்து பார்க்கையில் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது,'' என்கிறார் பிரிஸ்டலை சேர்ந்த புகைப்பட கலைஞர்.

டென்மார்கில் உள்ள ஹாரஸில் நடைபெற்ற ஐரோப்பிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கெடுத்துவிட்டு நாடு திரும்பியிருக்கிறார் அலெக்ஸ்.

அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

Photo

நீளம் தாண்டும் போட்டியில் ஃபின்லாந்தை சேர்ந்த 87 வயதுடைய அகி லுண்ட் 2.77 மீட்டர் தாண்டி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

Photo

டென்மார்க்கை சேர்ந்த 87 வயதாகும் ரோஸா பெடர்சன் பெண்களுக்கான நீளம் தாண்டும் போட்டியில் 2.72 மீட்டர் கடந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

 

Photo

எஸ்டோனியாவை சேர்ந்த இந்த 91 வயதுடைய ஹில்ஜா பக்ஹோஃப் பெண்களுக்கான எடை தூக்கி எறியும் போட்டியில் சுமார் 8.08 மீட்டர் தூரத்திற்கு எறிந்து புதிய உலக சாதனையை படைந்துள்ளார்.

Photo

ஆண்களுக்கான 300 மீட்டர் தடையோட்ட போட்டியில் 71 வயதாகும் பிரிட்டனின் பேரி ஃபெர்குசன் மற்றும் 72 வயதாகும் ஜெர்மனியின் ஹார்ட்மன் நார் இலக்கை நோக்கி முன்னேறுகின்றனர்.

 

Photo

79 வயதாகும் லத்வியாவின் லியோன்டைன் 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

 

Photo

  91 வயதாகும் பிரிட்டனின் தல்பீர் சிங் தியோல், 90 வயதாகும் நார்வேவின் ஹரால்ட் ஆல்ஃபிரெட் ஆனருடை முந்தி முன்னிலையில் இருக்க 86 வயதாகும் ஜெர்மனியை சேர்ந்த எர்னஸ்ட் ஸுபெர் கால் தடுமாறி கீழே விழுந்த காட்சி.

Photo

74 வயதாகும் ஆஸ்திரியாவின் மரியன் மெய்யர் பெண்களுக்கான ஷாட் புட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிப்பெறும் முயற்சியில் 9.80 மீட்டர் தூரத்திற்கு வீசினார்.

 

Alex Rotas

மூத்த விளையாட்டு வீரர்களை புகைப்படம் எடுப்பதை முதன்மையாக கொண்டுள்ள புகைப்பட பணியை எனது 60களில் நான் செய்து வருகிறேன்'' என்கிறார் அலெக்ஸ் ரோடாஸ்.

 

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இப்படி இப்படி செய்தால் நம்மால் கருந்துளையை கடந்து போக முடியுமாம்..! #BlackHole

 
 

கருந்துளை

இயற்கை அவிழ்க்க முடியாத பல மர்மங்களை தன் பக்கம் வைத்திருக்கிறது. அதில் காலப் பயணம், கருந்துளை, வேறொரு பிரபஞ்சம் போன்றவையும் அடங்கும். இது நம் கற்பனைக்கு எல்லாம் அப்பாற்பட்டது. அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங், கருந்துளைக்கு மிக அருகில் சென்றால் உங்களை அது மிக அதிக ஈர்ப்பு விசையுடன் உள்ளே இழுத்து, வேறொரு பிரபஞ்சத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் என்கிறார். சூரியன், நட்சத்திரங்கள் எல்லாவற்றையும் கடந்து நாம் ஒரு வினாடிக்கு 3,00,000 கி.மீ வேகத்தில் சென்றால் கூட கருதுளையை அடைய 26,000 ஆண்டுகள் ஆகும்.      

ப்ளாக் ஹோல் கருப்பு தானா?
கருப்பு என்று சொல்வதை விட கண்ணுக்குத் தெரியாது என்று சொல்வதே மிகச்சரியானது. நீங்கள் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது மின் தடை ஏற்பட்டால் எல்லாம் இருட்டாக தெரியும் அல்லவா?

ஒளியானது ஒரு பொருளின் மீது விழுந்து, பிரதிபலித்து நமது கண்களின் மூலம் பிம்பங்களை காட்டும். இப்போது சூரியன் மற்றும் ஒளித் தரக்கூடிய பொருள்கள் எதுவும் இல்லையென்றால் நமது கண்களுக்கு எந்தப் பொருளும் தெரியாதுதானே? அதுதான் ப்ளாக் ஹோல் ரகசியம்.

நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்ததை  வைத்து ஈர்ப்பு விசையை கண்டு பிடித்தார். அந்த ஆப்பிளை மேலே தூக்கிப்போட்டால் பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக கீழே வரும். ஒரு வேளை அந்த ஆப்பிளை ஒரு வினாடிக்கு 11.2 கி.மீ வேகத்தில் தூக்கி எறிந்தால் அது ஈர்ப்பு விசையை எதிர்த்து விண்வெளியில் நேர்க்கோட்டில் ஒரேபாதையில் சென்று கொண்டிருக்கும் இதற்குப் பெயர்தான் வெளியேற்று

திசைவேகம் ( Escape velocity).
இதே ஆப்பிளை வியாழன் கிரகத்திற்கு சென்று ஒரு வினாடிக்கு 11.2 கி.மீ தூக்கி போட்டால் அது மறுபடியும் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு கீழே வரும். ஏனென்றால், வியாழன் நிறையானது, பூமியின் நிறையை விட 317 மடங்கு அதிகம். ஆக வெளிஎயேற்று திசைவேகமும் அதிகமாக இருப்பதால் ஒரு வினாடிக்கு 59.5 கி.மீ வேகத்தில் மேலே எறிய வேண்டும்.

அப்ப கருந்துளைக்கு செல்ல வேண்டுமென்றால்?
ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கைபடி (the Theory of Relativity) எந்த ஒரு பொருளும் ஒளியை விடவேகமாக செல்லாது. ஒளியானது வெற்றிடத்தில் ஒரு வினாடிக்கு 3,00,000 கி.மீ வேகத்தில் செல்லும். 

கருந்துளை சூரியனை விட பல மடங்கு நிறை கொண்டது. மேலும் ஒளியின் திசைவேகத்தைவிட கருந்துளையின் வெளியேற்று திசைவேகம் ( Escape velocity) அதிகமாக இருப்பதால் எந்த ஒரு பொருளையும் திருப்பி அனுப்பவதில்லை .

வெளியேற்று திசைவேகம் >  ஒளியின் திசைவேகம்.

ஆகவே கருந்துளையை விட்டு எந்த வெளிச்சமும் வெளிவருவது இல்லை. ஆக கருந்துளை கருப்பாக இருக்க இதுவும் ஒரு காரணம்.
கருந்துளைக்கு போக முடியுமா?

கருந்துளை

ஐன்ஸ்டீன் கூற்றின் படி நேரம் என்பது நதி போன்றது. ஒரு இடத்தில் வேகமாக ஓடும். ஒரு சில இடத்தில் மிக மெதுவாக ஓடும். நமது பூமியானது வேகமாக ஓடும் இடத்தில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

பூமியில் இருக்கிறவரின் கடிகாரம் 10 நிமிடம் என்று காண்பித்தால், கருந்துளைக்கு அருகில் இருப்பவரின் கடிகாரம் 5 நிமிடம் தான் காட்டும். ஆக நேரமானது பாதியாக குறையும்.

பூமியில் 20 வயது நபரையும், கருந்துளைக்கு அருகில் 20 வயது கொண்ட அவனை நண்பனையும் நிறுத்துவோம். பத்து வருடங்கள் கழித்து பூமியில் இருவரும் சந்தித்தால் பூமியின் இருப்பவருக்கு 30 வயதும், அவனது நண்பனுக்கு 25 வயதுமாக இருக்கும். 

 

ஆக நாம் எதிர்காலத்துக்கு செல்ல முடியாது. ஆனால் எதிர்காலத்தில் நமது வயதை தக்க வைத்துக்கொள்ள முடியும். அதாவது, காலப் பயணம் சாத்தியமே ஆனால் முன்னோக்கி செல்ல முடியாது. இதை Interstellar படத்தின் கிளைமாக்ஸ் தத்ரூபமாக காட்டும்.
அடுத்த 300 ஆண்டுகளுக்குள் கருந்துளைக்கு சென்று அடுத்த பிரபஞ்சத்தை பார்க்க நாம் இருக்க மாட்டோம். ஆனால், நமது எதிர்கால சந்ததி அதைப் பார்க்கும் என நம்பலாம்.
 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘உயிர் இருந்தால் மட்டுமே மனம் செயற்படுகின்றது’
 

image_8fd01138e6.jpgசில சமயங்களில், ஏற்படும் பெரும் துன்பங்களால், பாதிக்கப்பட்டவர் மனம் துடிக்கின்றது என்பார். அதேபோல், மிகப்பெரும் தாக்கத்தினால் ஏற்படும் அதிர்ச்சியில் உயிர் துடிக்கிறது என்று சிலர் சொல்துண்டு.  

எனவே, உயிர் என்பதற்கு மனம் என்னும் ஓர் அர்த்தம் உண்டு. ஆனால், ஒருவர் இறந்து போனால், ஒரு மனது இறந்துவிட்டதாகச் சொல்லப்படுவது இல்லை.  

இந்தத் தேகத்தை இயக்குவது உயிர். இது போன பின், உடல் வெறும் சடம்தான். உடலில் உயிர் இருந்தால் மட்டுமே எங்கள் மனமும் செயற்படுகின்றது.  

நல்ல எண்ணங்களை, நற்கருமங்களை மட்டும் மனத்துக்குள் நிறுத்தினால் மட்டுமே, இந்த உயிர் சலனமற்று, நல்ல ஆத்மாவாக இருக்கும். ஆனால், பாவ எண்ணங்களின் சுமைகளை ஏற்றினால், உயிர் என்னும் ஆத்மா, தான் அவஸ்தைப்படுவதுடன், தேகத்தினால் செய்த பாவங்களையும் சுவீகரித்துவிடும். இதுதேவைதானா? 

ஆன்மாவைச் சுத்தமாக வைத்திருத்தல் மானிடரின் பெரும் கடமையாகும். கடவுள் குடிபுகும் இதயத்தில் சுத்த சிந்தனையுடன் இயங்குக. 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

ஓகஸ்ட் – 15

 

1549 : புனித பிரான்ஸிஸ் சேவியர் அடிகளார் ஜப்பானின் ககோஷிமா கரையோரத்தை சென்றடைந்தார். 


1914 : பனாமா கால்வாய் கப்பல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.


1920 : வோர்ஸோவில் இடம்பெற்ற போரில் சோவியத் படைகளை போலந்து இராணுவத்தினர் வென்றனர்.


india1945 : இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்தது.


1945 : இரண்டாம் உலகப் போரில் கொரியா விடுதலை பெற்றது.


1947: பாகிஸ்தானின் முதலாவது ஆளுநராக முஹமது அலி ஜின்னா  பதவியேற்றார்.


1947 : பிரித்தானியாவிடம் இருந்து இந்தியா  விடுதலை பெற்று பொதுநலவாய அமைப்பில் இணைந்தது.ஜவஹர்லால் நேரு முதலாவது பிரதமரானார்.


1948 : தென் கொரியா ஸ்தாபிக்கப்பட்டது.


1950 : இந்தியாவின் அஸ்ஸாமில் பூகம்பம் மற்றும் வெள்ளம் காரணமாக 574 பேர் பலி, 50 இலட்சம்  பேர் வீடிழந்தனர்.


1960 : பிரான்ஸின் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதாக கொங்கோ குடியரசு  பிரகடனப்படுத்தியது.


1973 : வியட்நாம் போரில் கம்போடியா மீதான குண்டுவீச்சை ஐக்கிய அமெரிக்கா  நிறுத்தியது.


1974 : தென் கொரியாவின் ஜனாதிபதி பார்க் சுங் ஹீயை கொல்வதற்காக மேற்கொள்ளப்பட் துப்பாக்கிப் பிரயோகத்தில் அவரின் பாரியார் யுக் யங் சூ பலியானார்.


1975 : பங்களாதேஷில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரின் குடும்பத்தினர் (ஷேக் ஹசீனா தவிர) அனைவரும் கொல்லப்பட்டனர்.


1984 : துருக்கியில் குர்து மக்கள், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி, இராணுவத்துக்கு எதிராக கெரில்லா போரை ஆரம்பித்தனர்.


2005 : இந்தோனேஷிய அரசாங்கத்துக்கும் ஆச்சே விடுதலை இயக்கத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் கையெழுத்திடப்பட்டது.


2007 : பெருவில் இடம்பெற்ற 8.0 அளவிலான பூகம்பத்தால் 514 பேர் கொல்லப்பட்டனர். 1090 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.