Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

மிஸ் பண்ணக்கூடாத 10 புகைப்படங்களும்... அதன் பின்னணியும்! #WorldPhotographyDay

World%20Photography%20Day.jpg

ற்ற உயிரினங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மனித இனத்தின் ஒப்பற்ற தனித்தன்மைகளுள் ஒன்று தன் வரலாற்றைப் பதிவு செய்யும் குணம். ஆதி மனிதன் குகை ஓவியங்கள் வழி தன் வரலாற்றைப் பதிவு செய்த காலம் முதல் தற்கால மனிதன் செல்ஃபி எடுத்துத் தன் நினைவுகளைப் பாதுகாத்து வைக்கும்வரை அதன் வரலாற்றின் வழி நீளமானது. அதில், மிக முக்கியமானது புகைப்படங்கள். இன்றைய நவீன உலகில் புகைப்படங்களோடு தொடர்பில்லாத மனிதன் என்று யாரையும் சொல்லிவிட முடியாது. உலகில் ஒவ்வொரு நொடியும் யார் மூலமாகவோ, எங்கோ, எப்படியோ, ஏதோ ஒரு வகையில், யாரோ ஒருவரது புகைப்படக் கருவிக்குள் பத்திரமாகச் சேமிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பக்கம் பக்கமாக எழுதி வைக்கக்கூடிய வரலாற்றைக்கூட ஒரு புகைப்படத்தில் பதிவு செய்துவிட முடியும்.

நம் வாழ்வில் மிக முக்கிய இடம்பிடித்துவிட்ட இந்தப் புகைப்படக் கருவிகளின் தோற்றமும், வளர்ச்சியும் அபரிவிதமானது. 13-ம் நூற்றாண்டில் இருந்து புகைப்படக் கருவிகளின் வரலாறு தொடங்கினாலும் அது உச்சம் பெற்றது 1800-களில்தான். அப்போதுதான், ‘போட்டோகிராபி’ என்ற பெயரே சூட்டப்பட்டது. கிரேக்க மொழியில் அதன் அர்த்தம் என்ன தெரியுமா? ‘ஒளியின் எழுத்து!’

'நல்ல புகைப்படம் என்பது ஒரு நகைச்சுவைத் துணுக்கைப் போன்றது. அதை விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சிறப்பானது எனக் கொள்ள முடியாது' - எது சிறந்த புகைப்படம் என்கிற கேள்விக்கு சொல்லப்படுகிற ஓர் ஆங்கிலப் பழமொழி. புகைப்படங்களின் வழியே கடந்தகால அரசியல் நிகழ்வுகள், வரலாறு, போர் மற்றும் புரட்சி, அவை ஏற்படுத்திய அழிவுகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எனப் பலவற்றை வரலாற்றுப் புகைப்படங்களாகப் பதிவுசெய்து வைத்திருக்கிறது. இன்றுவரை மனித இனத்தினுடைய கடந்தகால வரலாறாக, அவலமாக, மகிழ்ச்சியாக அவை ஏதோ ஒரு வகையில்  நிழல் சாட்சிகளாக இருந்துவருகிறது.

அந்த வகையில் உலகின் முக்கியமான 10 படங்கள் இதோ...

ஹிரோஷிமா நாகசாகி குண்டுவெடிப்பு :

Hiroshima%201.jpg

இன்றுவரை உலகையே நடுங்கவைக்கும் ஒரு பேரழிவாகச் சொல்லப்படுவது ஹிரோஷிமா - நாகசாகி குண்டுவெடிப்பு.  அமெரிக்க விமானப் படையால் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இன்றுவரை ஓர் அழிவின் சாட்சியாக இருக்கிறது. 1945 ஆகஸ்ட்6-ம் மற்றும் 9-ம் தேதிகளில் போடப்பட்ட இந்தக் குண்டுகளினால் உடல் கருகி  சுமார் இரண்டரை லட்சம் மக்கள் இறந்திருப்பார்கள். அதுபோக தீக்காயங்கள், கதிர்வீச்சு, உணவுப் பற்றாக்குறை என வருடக்கணக்கில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். அதன் பாதிப்புகளைப் புகைப்படங்களாகப் பதிவுசெய்தவர்கள் யோஷிட்டோ மட்சுஷிக்,யோசுக்கே யமஹாட்டா ஆகிய இரண்டு கலைஞர்கள். நேரடியாக இந்தக் குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்டபோதிலும் அதை ஏன் பதிவுசெய்தார்கள் என்பதற்கு யமஹாட்டா சொன்ன காரணம் என்ன தெரியுமா?

"மனிதனின் ஞாபகங்கள் காலப்போக்கில் மறந்துவிடக் கூடியது. அதேபோல அவர்களது செயல்களும் வாழ்க்கை முறைகளும் காலத்துக்குத் தகுந்ததுபோல மாறிக்கொண்டே வரும். ஆனால், கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் மறந்துவிட்ட அனைத்தையும் நம் கண்முன்னே நிறுத்தும். இப்போது நாம் ஹிரோஷிமா, நாகசாகியைப் பார்க்கும்போது அந்த அழிவுகளின் சுவடுகள் இருக்காது. ஆனால் அந்தப் புகைப்படங்கள் மூலமாக அந்தக் கொடூரங்களையும் கோரங்களையும் பார்க்கமுடியும்."  எத்தனை உண்மை வார்த்தைகள் இவை. இன்றுவரை உலகில் இருக்கும் மனிதர்களுக்கு அணு விபத்தின் கோரத்தை முன்வைக்கும் சாட்சிகளாக இவை இருக்கின்றன.

ஆப்பிரிகாவின் விரக்தி :

African.jpg

வறண்ட தேசம் என்று உங்களைக் கற்பனை செய்யச்சொன்னால் எல்லோர் மனதிலும் வரும் சித்திரம் கண்டிப்பாக ஆப்பிரிக்காவாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு அதன் பாதிப்பு நமக்குள் இருக்கும். 1993-ம் ஆண்டு, 'நியூயார்க் டைம்ஸ்' இதழில் வெளியான இந்தப் புகைப்படத்தின் தாக்கம்தான் அது. அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் பேராசையால் வளங்கள் சுரண்டப்பட்டு, போரால் நிர்க்கதியாக ஆக்கப்பட்ட ஆப்பிரிக்கா, சோமாலியா, கென்யா, சூடான் போன்ற நாடுகளில் மக்கள் பஞ்சத்தால் வாடும் நிலையைக் காட்டியது இந்தப் புகைப்படம். தன்னை இரையாக்க வரும் கழுகினைக்கூட விரட்ட முடியாமல் சுருண்டு விழுந்துக் கிடக்கும் குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்து இந்த உலகமே கொதித்து எழுந்தது. அதை எடுத்த புகைப்படக் கலைஞர் கெவின் கார்ட்டருக்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. அவரும் இந்தப் புகைப்படம் வெளியாகி மூன்று மாதங்களுக்குள் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லப்படுகிறது.

நிலவின் முதல் காலடி :

Moon.jpg

இன்று விஞ்ஞான உலகின் எல்லா நாடுகளும் பல எல்லைகளை எட்டி இருந்தாலும், மனித இனத்தின் மைல்கல்லாகப் பார்க்கப்படுவது நிலவின் மனிதன் வைத்த முதல் காலடி. 1969-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் புகைப்படம் அமெரிக்காவின் மதிப்பைக் கூட்டியது. நிலவில் மனிதனின் சிறிய காலடியாக இருந்தாலும், பூமியில் அது மனித இனத்தின் மாபெரும் கண்டுபிடிப்பாகக் கொண்டாடப்பட்டது.

கறுப்பின வெறியை தகர்த்த நெகிழ்ச்சி :

racism.jpg

 

நிறவெறி கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டமான 1970-களில் வெளியான இந்தப் புகைப்படம் அன்று மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் பிரேசிலின் பீலேவும், இங்கிலாந்து கேப்டன் பாபி மூரும் பரஸ்பரம் கட்டிப்பிடித்து தங்களது மேலாடையை மாற்றிக் கொண்டனர். அந்தப் புகைப்படம் உலக அரங்கில் கறுப்பின வெறிக்கெதிரான ஒரு முக்கியப் புள்ளியாக அமைந்தது.

போரை நிறுத்துங்கள் :

flower.jpg

 

1967-ல் அமெரிக்க - வியட்நாமுக்கு எதிராகப் போர் நடந்துகொண்டிருந்த காலம் அது. மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த அந்தச் சமயத்தில் அமெரிக்காவில், மக்கள் போரை நிறுத்தச் சொல்லி போராடிக் கொண்டிருந்தனர். அப்படி ஒரு போராட்டத்தில் பெண்டகன் சதுக்கத்துக்கு முன்  நின்றிருந்த வீரர்களைப் பார்த்து ஒரு பெண்மணி, பூ ஒன்றை நீட்டினார். அது, சமாதானத்துக்கான தூதாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிஞ்சு முகத்தில் பயம் :

Syria.jpg

 

பிஞ்சு முகத்தில் பயம்... அழுகை வெடிக்கும் நிலை... கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை. இந்தக் காட்சியைப் படம்பிடித்த புகைப்படக் கலைஞர் நாடியா அபு ஷபான். சிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டுப் பழகிய இந்தக் குழந்தை, படம்பிடிக்க கேமராவைச் சரிசெய்தபோது, துப்பாக்கியால் சுடப் போகிறார் என்று மிரண்டு கைகளை உயர்த்தி நின்ற காட்சி இது. சிரியாவின் துயரத்தை விளக்க இந்த ஒரு படம் போதும்.

மாவீரனின் மரணம் :

che7.jpg

 

சேகுவாரா என்ற மனிதர் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் ''எல்லா நாடும் என் தாய்நாடே. அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே '' என்ற சேகுவாராவின்  மனிதகுணம்தான். அக்டோபர் 9-ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர், உலக நாளேடுகள் யாவும் தவறாமல் சேகுவாராவின் மரணப் படத்தையே தம் முகப்பில்வைத்து அஞ்சலி செலுத்தியது. இன்றுவரை லட்சக்கணக்கான மக்களின் ஆதர்சமாக விளங்கும் சேகுவாராவின் கடைசிப் படம் இது.

அமெரிக்காவின் அதிர்ச்சி :

twin%20tower.jpg

உலகையே தன்னுடைய அசுரபலத்தால் மிரட்டிக்கொண்டிருந்த அமெரிக்காவை மிரட்சியடைய வைத்த சம்பவம். 2001 செப்டம்பரில் நடந்த இரட்டைக் கோபுர தகர்ப்பு. அமெரிக்காவின் உட்சபட்ச பாதுகாப்பு, ராணுவம், உளவுத்துறை என எல்லாவற்றுக்கும் தண்ணி காட்டிவிட்டு நடத்தப்பட்ட சம்பவம்தான் தீவிரவாதத்தின் உச்சகட்டமாகப் பார்க்கப்படுகிறது. அல்கொய்தாவின் இந்தத் தாக்குதலுக்குப் பிறகுதான் பின்லேடனைத் தேடிக் கொன்றதோடு இல்லாமல், ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் மீது தன் கோரமான கரங்களைவைத்தது அமெரிக்கா.

உசேன் போல்டின் பெருமித சிரிப்பு :

Bolt.jpg

 

சமீபத்தில் உலகை மிகவும் ரசிக்கவைத்த புகைப்படம் இது. 2016 ரியோ ஒலிம்பிக்கில் நடந்த 100 மீ., ஓட்டப்போட்டியை உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்தது. துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் வெடித்து ஓடிய வீரர்களை மின்னல் வேகத்தில் முந்திய உசேன் போல்ட், தன் பின்னால் ஓடி வருகிற வீரர்களைப் பார்த்து சிரித்த சிரிப்பு இது. அதுதான் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு. மின்னலைவிட வேகத்தில் நடந்து முடிந்த இந்த நிகழ்வை புகைப்படமாக்கியவர் கேமரூன் ஸ்பென்ஸர்.

சிரியாவுக்காக உலகம் அழுதது :

Aylan.jpg

 

அதிகாரத்தைக் கைப்பற்ற சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப் போரில் சொந்த நாட்டு மக்களே அகதிகளாகி வருகின்றனர். எப்படியாவது எஞ்சிய வாழ்நாட்களைக் கழித்துவிட வேண்டும் என்பதற்காக அண்டை நாடான துருக்கி வழியே பல நாடுகளுக்கும் அகதிகளாக சென்று வருகிறார்கள். அப்படி ஒரு நாளில் எப்படியாவது தப்பித்துப்போய் வாழ்ந்துவிட வேண்டும் என்று எண்ணித் தப்பித்த ஒரு தந்தையின் கையில் இருந்து தவறி, படகில் இருந்து கடலில் விழுந்த குழந்தைதான் அய்லான் குர்டி. கடற்கரையில் பிணமாக அந்த மூன்று வயது சிறுவன் கண்டெடுக்கப்பட்ட புகைப்படம், ஒட்டுமொத்த அகதிகளின் நிர்கதியான வாழ்க்கையின் சாட்சியாக இருந்தது. உலக மக்கள் பலரின் மனச்சாட்சியை உலுக்கிய புகைப்படமாக அது அமைந்தது.

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

twitter.com/yugarajesh2

இதுவரை முகம் தெரியாத நபரிடம் ‘வண்டியில் லைட் எரியுதுன்னு’ நாம் செய்துவந்த ஒரே ஒரு சமூக சேவையையும் நிறுத்த வெச்சுட்டானுங்க.

twitter.com/ravi_rathnam

ஓவியா வீட்டுலயாச்சும் ஒரு கேமரா வைங்கடா. அந்தப் புள்ளய பார்க்காம இருக்க முடியல :(

twitter.com/mokkaigal

அன்பானவர்களுக்கு ஒரே ஒரு அடையாளம்தான். மற்றவர்களைவிட கொஞ்சம் கூடுதலாய் காயப்படுத்துவார்கள். அவ்வளவே.

twitter.com/Pon_Madhu 

 இந்நேரத்துக்கு 66 மாடு செத்திருந்தா, நாடே களேபரம் ஆகிருக்கும்.

twitter.com/Aruns212

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, பேய்கள்தான் வசதியானவை; குறைந்த பட்சம் ஒரு பங்களாவாவது வெச்சிருக்குதுக.

112p1.jpg

twitter.com/thoatta

தரமணி - ஈபிஎஸ் அணி

விஐபி 2 - ஓபிஎஸ் அணி

பொ.எ.ம.த - டிடிவி அணி

இந்த வார பிக்பாஸ் - தீபா பேரவை

twitter.com/skpkaruna

 புரிஞ்சுபோச்சு! இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியே காயத்ரியைத் திருத்த அவங்க அம்மா ஸ்பான்சர் பண்றாங்கபோல... காயூ மாஸ்டர் மனம் திருந்தும்வரை நடக்கும்.

twitter.com/palanikannan04 

ஞாயிற்றுக்கிழமைகளை மிகச் சரியாக அனுபவிக்கத் தெரிந்தவர்கள்...  குழந்தைகள் மட்டுமே. என்னா சந்தோசம்..!

twitter.com/thoatta

 விஜய் ரசிகர் செஞ்ச தப்புக்கு விஜய்தான் பொறுப்பேற்கணும்னா, கோவையில பிரியாணி குண்டா காணாமப் போனதுக்கு பிரதமர்தான் பொறுப்பேற்கணும்!

twitter.com/mekalapugazh

 நீட் தேர்வில் இவ்வளவு அரசியல் செய்ய முடியும்போது காவிரியில் எவ்வளவு செய்வாங்க?

112p2.jpg

twitter.com/avavinoth 

மனைவி பண்றதுலேயே ரொம்பக் கொடுமையானது புருசனுக்குப் பயப்படுற மாதிரி அவங்க தோழிகிட்ட காமிச்சிக்கிறது தான்... ‘அவர் ஏதாவது சொல்லுவாருடி....!’

twitter.com/manipmp 

வாழ்வில் அதிகம் தொலைத்தது பேனாவும், பென் ட்ரைவும்..

twitter.com/mokkaigal

“எப்படியெல்லாம் சித்ரவதை அனுபவித்திருக்கிறேன் தெரியுமா” என்று ஆரம்பிக்கும் கதையொன்று எல்லோரிடத்திலும் இருக்கிறது.

twitter.com/ItzRavi___

போகும்போது கடைசியா என்னத்தக் கொண்டுபோகப்போறோம் என்ற நீண்ட காலக் கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது! #ஆதார் கார்டு நம்பர்

twitter.com/BoopatyMurugesh  

எங்க ராகுல் காந்திய ஆளையே காணோம்?

வீட்ல சம்மர் ஹாலிடேன்னு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் ஏதும் சேர்த்துவிட்டாங்களா?

twitter.com/ MohammedMastha

எடப்பாடியைச் சிரிக்கவைத்தால், நான் பத்தாயிரம் தருகிறேன்-ஓ.பி.எஸ்.

ஓ.பி.எஸ். உத்தமர்னு சொன்னா போதும். எடப்பாடி விழுந்து விழுந்து சிரிப்பாரு!

112p3.jpg

twitter.com/umakrishh 

கதை எப்படியோ, கஜோல் ஹை பிட்ச்ல கத்தாம கோபத்தைக் காட்டுற அழகே தனி. நல்லவேளை நீலாம்பரி ஆக்கலை! #விஐபி2

twitter.com/manithan_yes 

இப்பொழுதெல்லாம் பட்டாம்பூச்சிகள் பறப்பது அரிதாகிவிட்டது மனதிலும்.

twitter.com/writernaayon 

குழந்தைங்க எல்லாம் சேர்ந்து தலைமையைக் காப்பாத்துனா அது டோலக்பூர்.

குழந்தைகளைக் காப்பாற்றக்கூட தலைமைக்கு வக்கில்லாம இருந்தா அது கோரக்பூர்.

twitter.com/arattaigirl 

உன்னுடன் கடந்த காலத்தை, இறந்தகாலம் என்பதில் உடன்பாடில்லை எனக்கு. அது வாழ்ந்த காலம்.

twitter.com/Poetbalaa 

அனிருத்தும் சிவகார்த்திகேயனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு சிரித்துக் கொண்டும் இருந்தனர்.

twitter.com/thoatta 

மாசாமாசம் அமாவாசை யன்னைக்குக் குலதெய்வம் கோயிலுக்குப் போறதுபோல, ஓ.பி.எஸ்-ஸும் ஈ.பி.எஸ்-ஸும் மாசாமாசம் டெல்லி போய் மோடியைக் கும்பிட்டுட்டு வராங்க!

twitter.com/laksh_kgm 

ஒரு மழை கொடுத்த நம்பிக்கையை, எந்த அரசின் எந்த நடவடிக்கையும் கொடுக்கவில்லை!

twitter.com/ SettuOfficial

டேய் திட்றவன் எல்லாம் ஏன்டா சாராவுல வந்து திட்றீங்க... ஏன்டா இங்கையும் திட்றீங்க அங்கையும் திட்டுறீங்க.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள்

 

பகவத்கீதை உலகப் பிரசித்தி பெற்ற ஒரு அறிவுக்களஞ்சியமாகும். பகவத்கீதையின் மிகச்சிறந்த வாழ்க்கைக்குரிய வசனங்களை தெரிந்து கொள்ளலாம்.

 
பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள்
 
 1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.
 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

”இது தானா சேரும் கூட்டம்!” - அணி சேர்த்து ஆச்சர்யப்படுத்தும் ஸ்வார்ம் ட்ரோன்ஸ் #Drones

 
 

திர்காலத்தில் உலகை கலக்கும் தொழில்நுட்பங்கள் என யார் பட்டியலிட்டாலும், அதில் மறக்காமல் இடம்பிடிக்கும் ஒரு பெயர் ட்ரோன். முதலில், வானிலிருந்து எதிரி நாடுகளைக் கண்காணிக்கவும் தாக்கவும் மட்டுமே இருந்த ட்ரோன்களின் பயன்பாடு இன்று ராணுவம், சினிமா, பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, கனிமவள ஆராய்ச்சி, வானிலை ஆராய்ச்சி எனப் பல துறைகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது. கற்பனைக்கும் எட்டாத உயரம் என்பதற்கு இந்த நூற்றாண்டின் சிறந்த உதாரணம் இந்த ட்ரோன்களே! இப்படி வருங்காலத்தில் பலவிதத்தில் கைகொடுக்கப்போகும் ட்ரோன்களைப் பற்றி கொஞ்சம் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

ட்ரோன்

எவையெல்லாம் ட்ரோன்கள்?

Unmanned Aerial Vehicles (UAV) என அழைக்கப்படும் ஆளில்லா வானூர்திகள் அனைத்துமே ட்ரோன்கள்தான். அது சின்ன ரிமோட் கன்ட்ரோலர் மூலம் இயங்கும் குவாட்காப்டராக இருக்கலாம்; அல்லது தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்தும் பெரிய விமானங்களாக இருக்கலாம். அனைத்துமே ட்ரோன்கள்தான். எப்படி உருவானவை இந்த ட்ரோன்கள்?

முதல் உலகப்போர் சமயத்தில்தான் இந்த ட்ரோன்கள் முதன்முதலாகப் பயன்பாட்டிற்கு வந்தன. போரிலும் ஈடுபடுத்தப்பட்டன. ராணுவ ரீதியான பயன்பாடுகளில் ட்ரோன்கள் கலக்க, தொடர்ந்து பல நாடுகளும் ட்ரோன்களைப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தத் தொடங்கின. எதிரி நாடுகளை உளவு பார்க்க, எதிரி நாடுகளின் இருப்பிடத்தின் வரைபடத்தை உருவாக்க, ரகசியமாகத் தாக்குதல் நடத்த எனப் பல்வேறு ரீதியாகப் பயன்படுத்தப்பட்டது. இப்படித் தொடங்கிய இதன் ட்ரோனின் பயணம் இன்று பலதுறைகளைக் கடந்தும் சென்று கொண்டிருக்கிறது. ட்ரோன்களின் செயல்பாடு மற்றும் அதன் தன்மைகளைப் பற்றி விளக்குகிறார்கள் சென்னை ஐ.ஐ.டி.,யின் ஏரோ கிளப் உறுப்பினர்களான ஆதித்யன் வினோத், ஆஷூதோஷ் குமார் மற்றும் அரவிந்த் ராவ் ஆகிய மூவரும்.


ட்ரோன்களைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நான்கு அல்லது அதற்குமேல் ரோட்டர்கள் (Rotors) கொண்ட காப்டர்கள் (Copters); அல்லது Fixed wing எனப்படும் நிலையான இறக்கைகளைக் கொண்ட விமானங்கள். இந்த இரண்டு வடிவமைப்பிலும் நிறைய மாற்றங்கள், சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுதான் பிரத்யேக பயன்பாடுகளுக்கான ட்ரோன்கள் தயாராகின்றன. 

Drones

காப்டர் என்ற ட்ரோன்கள் பல ரோட்டர்கள் மூலம், உந்துசக்தி உருவாக்கப்பட்டு பின்னர் பறக்கும். இதில் அதிக மின்சக்தி தேவைப்படும். எடை அதிகமாக இருக்கும். மேலும் சத்தமும் ஏற்படும். இந்த வகை ட்ரோன்கள் பெரும்பாலும் உள்ளரங்க அல்லது குறைவான உயரம் கொண்ட பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும். உதாரணமாக அறைகளைக் கண்காணிக்க உதவும் ட்ரோன்கள், வீட்டை ஸ்கேன் செய்யும் ட்ரோன்கள், பொதுவான கண்காணிப்பு ட்ரோன்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். நிலையான இறக்கைகள் கொண்ட Fixed Wing விமானங்கள் மற்ற துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தவகை ட்ரோன்களில் இன்ஜின் மூலமாக உந்துசக்தி தரப்பட்டு, ஒரே ஒரு புரப்பெல்லர் (Propeller) மூலமாகவே நம்மால் இயக்க முடியும். இதனால் இதைக் குறைவான சத்தத்தில், அதிக உயரத்திலும், வேகத்திலும் செலுத்த முடியும். வேளாண்மை, கண்காணிப்பு, வானிலை ஆராய்ச்சிகள், ராணுவம் போன்றவற்றில் இதுபோன்ற ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். அமேசானின் ட்ரோன் டெலிவரி முதல் ஷூட்டிங் செய்யும் ட்ரோன்கள் வரை அனைத்திலுமே ஒரே ஒரு ட்ரோனைத்தான் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் தற்போது swarm drones எனப்படும் ட்ரோன்களைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. அதாவது ஒரே ஒரு ட்ரோனை மட்டுமே தனித்து இயக்காமல், குழுவாகப் பல ட்ரோன்களை இயக்கி, குறிப்பிட்ட பணிகளைச் செய்வதுதான் இந்த ட்ரோன்களின் பணி. எப்படிப் பறவைகள் மற்றும் தேனீக்கள் கூட்டாகப் பறக்கின்றனவோ, அதைப் போலவே இணைந்து பறப்பதுதான் இவற்றின் பணி.

Swarm ட்ரோன்ஸ் வீடியோ:

இதற்கு உதாரணமாக பென்சில்வேனியா பல்கலைக்கழக ட்ரோன்கள் ஒன்றிணைந்து, ஜேம்ஸ்பாண்ட் தீம் மியூசிக் வாசித்ததையும், இன்டெல் நிறுவனத்தின் ட்ரோன் வானவேடிக்கையையும் குறிப்பிடலாம். ஒருபக்கம் வாசிப்பதற்கு தயாராக கீ-போர்டு, ட்ரம்ஸ் ஆகியவை ட்ரோன்களுக்கு ஏற்ற சிறப்பு வசதிகளோடு ரெடியாக இருக்கும். மற்றொருபக்கம் ட்ரோன்கள் வாசிப்பதற்கு தயாராக பறந்துவரும். ஒரு ட்ரோனுக்கு கீ-போர்டு, இன்னொரு ட்ரோனுக்கு ட்ரம்ஸ் என ஒவ்வோரு ட்ரோனுக்கும் ஒரு பணி ஒதுக்கப்பட்டு, அதற்கேற்ற வசதிகளோடு வடிவமைக்கப்பட்டு, புரோகிராமிங்கும் செய்யப்பட்டிருக்கும். இவை இணைந்து செயல்படும்போது ஜேம்ஸ்பாண்ட் தீம் மியூசிக் உருவாகும். இதைத்தான் சில வருடங்களுக்கு முன்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் செய்தது. 

ஜேம்ஸ்பாண்ட் தீம் மியூசிக் வாசித்த வீடியோ

இதேபோல இன்டெல் நிறுவனமும் கடந்த ஆண்டு ட்ரோன்களை வைத்து வானவேடிக்கை நிகழ்ச்சிகளை நடத்தியது. 

இன்டெல் நிறுவனத்தின் swarm drone வீடியோ:

இவையெல்லாம் swarm drone-களுக்கான உதாரணம் மட்டும்தான். இன்னும் பலவகையில் இந்த ட்ரோன்களைப் பயன்படுத்த முடியும். உதாரணமாக, ஒரு ட்ரோனால் 10 கிலோகிராம் எடையைத்தான் தூக்கமுடியும் என்றால், அதனால் 20 கிலோ எடையுள்ள பொருளை சுமந்துசெல்ல முடியாது. ஆனால் அந்த ட்ரோனுடன் இன்னொரு ட்ரோனை இணைத்து செயல்படுத்தினால் இரண்டு ட்ரோன்களும் சேர்ந்து அந்தப் பொருளை சுமந்து செல்ல முடியும். ராணுவ தாக்குதலில் ஒரே ஒரு ட்ரோனைப் பயன்படுத்தும்போது, அதை ஏவுகணைகள் மூலமாக எளிதில் தாக்கி அழித்துவிடலாம். ஆனால் பல ட்ரோன்களை கூட்டாக இயக்கும்போது அதற்கான வாய்ப்பு பலமடங்கு குறையும். இதனால் ட்ரோன்கள் காப்பற்றப்படுவதோடு மட்டுமில்லாமல், தாக்குதலையும் துல்லியமாக நடத்தமுடியும். இப்படிப் பல விதங்களில் இந்த swarm drone-களைப் பயன்படுத்த முடியும். ஆனால் சாதாரண ட்ரோன்கள் போல, இவற்றை எளிதில் இயக்கிவிட முடியாது. காரணம் அனைத்து ட்ரோன்களையும் கட்டுப்படுத்துவது, வானில் பறக்கும்போது ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு அதற்கேற்ப நிலையாகப் பறப்பது, தடைகளை எதிர்கொள்வது என இதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டிதான் இந்த swarm drones இயங்க வேண்டும். இதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

எப்படி வேறுபடுகின்றன?

பறப்பதற்கான உந்துசக்தியை அளிக்கும் ரோட்டார் அல்லது இன்ஜின், சென்சார்கள், கன்ட்ரோல் யூனிட், ட்ரோனுக்கு சக்தியளிக்கும் பேட்டரி அல்லது எரிபொருள் ஆகியவைதான் ட்ரோன்களின் அடிப்படை அம்சம். இவை இருந்தாலே போதும். சாதாரணமாக ஒரு ட்ரோனை இயக்கமுடியும். ட்ரோன்கள் என்பவை பொதுவாக வானில் பறப்பவை மட்டும்தான். அதில் கேமரா வைக்கிறோமா, துப்பாக்கி வைக்கிறோமா என்பதைப் பொறுத்துதான் அதன் பயன்பாடுகள் மாறும். அப்படிச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1. லேசர் சென்சார்:

அறைகளை ட்ரோன்கள் உதவியுடன் மேப்பிங் செய்வதற்கு இந்த லேசர் சென்சார் உதவும். ஒரு கட்டடத்தில் தீ விபத்து நடந்திருக்கிறது என்றால், அதனுள் அவ்வளவு எளிதில் மனிதர்கள் சென்று அறைகளை நோட்டமிட முடியாது. ஆனால் லேசர் சென்சார்கள் கொண்ட ட்ரோன்களை உள்ளே அனுப்புவதன் மூலம், அந்த அறையின் வடிவத்தை கணினியிலேயே பார்த்துவிட முடியும். எனவே எந்தப் பாதையின் வழியாக செல்லலாம் என்பதுமுதல் அனைத்தையும் நம்மால் முன்கூட்டியே கணிக்க முடியும்.

2. கேமரா:

ஷூட்டிங், மேப்பிங் போன்றவற்றில் கேமராக்களின் பங்கு அளப்பரியது. இதன் மூலமாக நிலப்பரப்பை ஸ்கேன் செய்து, மேப் தயாரிக்கலாம். போட்டோ எடுக்கலாம். காடுகள், பாலைவனங்கள், கடல்பரப்புகள் போன்ற இடங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தலாம்.

3. ராணுவ பயன்பாடுகள்:

பெரும்பாலும் ராணுவ பயன்பாடுகளுக்கான ட்ரோன்கள் ஆயுதங்கள் தாங்கியவையாக இருக்கும். அத்துடன் கேமரா, சென்சார் போன்றவையும் இடம்பெற்றிருக்கும்.

Drones

4. ரோபோட்கள்:

ஒரு கட்டடத்தின் 56-வது மாடியில் ஒரு கண்ணாடி உடைந்திருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதில் ஒரு மனிதர் ஏறி, அதைச் சரிசெய்வது என்பது கடினமான பணி. ஆபத்தானதும் கூட. ஆனால் ஒரு ட்ரோனில், கன்ட்ரோலர்கள் மூலம் இயங்கும் ரோபோட்டிங் கரங்களை அதில் இணைத்துவிட்டால் கீழிருந்தே சில நிமிடங்களில் அதனை மாற்றிவிட முடியும். இப்படிப் பல இடங்களில் ரோபோக்களை ட்ரோன்களுடன் இணைத்துப் பயன்படுத்தவும் ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

5. சென்சார்கள்:

மேலே பார்த்த தீ விபத்து உதாரணத்தையே மீண்டும் எடுத்துக்கொள்வோம். மனிதர்கள் நுழைய முடியாத அந்தக் கட்டடத்தில் ட்ரோன்களை அனுப்பி, உள்ளே ஆட்கள் இருக்கிறார்களா என நாம் ஆய்வு செய்யலாம். அப்போது அகச்சிவப்பு கதிர்களுக்கான (IR) சென்சாரைப் பயன்படுத்தினால் மனிதர்கள் இருக்கிறார்களா என்பதை கடுமையான புகைமூட்டத்திற்கு நடுவேகூட நம்மால் கண்டுபிடித்துவிட முடியும்.

பயன்பாடுகள்:

பல தொழில்நுட்பங்கள் ட்ரோன்களில் வந்துவிட்டாலும் இன்னும் நிறைய நாடுகளில் ட்ரோன்கள் கண்காணிப்புப் பணிகளுக்காகத்தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்தது தாக்குதல்களுக்கு. அமெரிக்கா ட்ரோன்கள் மூலமாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் நிறைய பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் ஒருசேர குவித்தது. நிறைய தீவிரவாதிகள் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டாலும், கூடவே நிறைய பொதுமக்களும் மாண்டனர். வானில் இருந்து இயங்கும் ட்ரோன்கள் போலவே, ஆழ்கடலில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ஆழ்கடல் ட்ரோன்களும் இருக்கின்றன. இதுபோக போட்டோகிராபி போன்ற பொழுதுபோக்குப் பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

Drone photography

வேளாண்துறையிலும் ட்ரோன்களின் பங்கு வளர்ந்துகொண்டே வருகிறது. வயலைக் கண்காணிக்க, வானில் இருந்து வயலில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்க என வேளாண்துறையிலும் பயன்பட்டுவருகிறது. எண்ணெய் நிறுவனங்களின் எண்ணெய்க் குழாய்களில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கிறதா, கசிவுகள் இருக்கிறதா எனவும் பயன்படுவதால் தொழில்துறையிலும் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்திருக்கின்றன ட்ரோன்கள். அமேசான் நிறுவனம் ட்ரோன் டெலிவரி செய்ய திட்டமிட்டிருப்பது அனைவரும் ஏற்கெனவே அறிந்ததுதான். இவை போக ஒரு இடத்தின் வரைபடத்தை உருவாக்கவும், தகவல் தொழில்நுட்ப வசதிகளை நீட்டிக்கவும் ட்ரோன்கள் பயன்படுகின்றன. தற்போது ட்ரோன்கள் என்பவை மனிதனின் கட்டுப்பாட்டைக் கொண்டு இயங்குகின்றன. செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் போலவே, சுயமாக இயங்கும் ட்ரோன்களும் எதிர்காலத்தில் உருவாகும். இடத்திற்கு ஏற்ப சிந்தித்து செயல்பட வேண்டிய மீட்புப் பணிகள், ராணுவப் பணிகள் போன்றவற்றில் இவை பங்களிக்கும். இப்படி இவற்றின் பயன்பாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

அரவிந்த் ராவ், ஆஷூதோஷ் குமார் மற்றும் ஆதித்யன் வினோத்

இதில் மட்டும் உஷார்!

எல்லா தொழில்நுட்பங்களுக்குமே சில குறைபாடுகள் இருக்கும். அதேபோல ட்ரோன்களுக்கும் சில குறைபாடுகள் இருக்கின்றன. இதைத்  தவறாகப் பயன்படுத்தினால் மற்றவர்களின் பிரைவசி பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இவற்றை யார் பயன்படுத்துவது, எப்படிப் பயன்படுத்துவது போன்றவை குறித்த முறையான விதிமுறைகள் இந்தியாவில் இன்னும் வகுக்கப்படவில்லை. இங்கே இன்னும் பயன்பாடுகள் அதிகமாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்புவோம்.

காணும்போதெல்லாம், கண்ணில் பட்ட காக்கா குருவி போல எதிர்காலத்தில் ட்ரோன்கள் கூட வானில் அங்குமிங்கும் பறந்துகொண்டிருந்தால் கூட ஆச்சர்யப்படத் தேவையில்லை. எல்லாம் டெக்னாலஜி!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘வறுமை ஒரு தகைமை’
 

image_e7401d917a.jpgவறுமை ஒரு தகைமை. செல்வந்தர்களுக்குப் பொருள் இருந்தும் வெறுமையானவர்களாக வாழ்வதுண்டு. ஆனால், வறுமை ஒருவரைச் செப்பமிட்டு, மேன்மைப் படுத்தி விடுகின்றது; இது உண்மை.  

மிகவும் பிரயாசைப்பட்டு முன்னுக்கு வந்தவர்களில், பலர் முன்பு வாழ்ந்த வாழ்க்கையை நினைவு கூராமல், தாங்கள் பிறவிப் பணக்காரர்கள் எனப் பொய் உரைப்பதுண்டு. 

தாங்கள் பட்ட துன்பங்கள், எதிர் நீச்சல் பற்றி, என்றும் மறவாது, அதனைப் பிறருக்கும் சொல்லி, எல்லோரையும் துணிச்சல் மிக்கோராக உருவாக்கும் பரோபகாரிகளும் இருக்கிறார்கள். 

ஒருவர் உயர்ச்சியடைவது, அவர் ஏனையோரையும் எழுச்சி மிக்கோராக மாற்ற வேண்டும் என்பதே கடவுளின் விருப்பமாகும். கொடுக்கும் கரங்களுக்கு அவன் அருள் நித்தம் சுரக்கும். 

ஏழைகள் செய்யும் தானம்போல், வசதியுள்ளவர்கள் செய்கின்றார்களா என்பது, சந்தேகத்துக்குரியதுதான். ஏழைகளின் வலி ஏழைகளுக்கே புரியும். எல்லோரும் நல்லதை நினைத்தால், ஏழ்மை ஏது ஐயா?  

  • தொடங்கியவர்

இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் ஹோமை வியாரவல்லா... சில நினைவுகள்..!

 
 

இந்தியாவின் முதல் பெண் புகைப்படக் கலைஞர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர், ஹோமை வியாரவல்லா (Homai Vyarawalla). குஜராத் மாநிலம் வதோதராவில், 1913-ம் ஆண்டு பிறந்தவர். பாம்பே பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பை முடித்தார். தனது வாழ்க்கை முழுவதும் காந்திய கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்த இவர், 29 வயதில் குடும்பத்துடன் டெல்லியில் குடியேறினார். 

Homai Vyarawalla

டெல்லிக்கு வந்த சில வருடங்களிலேயே அன்றைய மிகப்பெரிய தலைவர்களின் தனிப்பட்ட புகைப்படக்காரராகவும், பத்திரிகைப் புகைப்படக்காரராகவும் வளர்ந்தார்.

Homai Vyarawalla Photoes

இவர் படம் பிடித்த கறுப்பு வெள்ளை புகைப்படங்கள், பல்வேறு பத்திரிகைகளின் அட்டைகளை அலங்கரித்தன. கணவரின் இறப்புக்குப் பிறகு 1973-ம் ஆண்டு மீண்டும் வதோதராவுக்கே சென்றுவிட்டார்

Homai Vyarawalla Photoes

ஜவஹர்லால் நேருவைப் புகைப்படம் எடுப்பதென்றாலே மிகவும் உற்சாகமாகிவிடுவார். இவர் கேமராவில் அதிக முறை எடுக்கப்பட்ட தலைவர்களில் முதல் இடம், நேருவுக்குதான்.

Homai Vyarawalla Photoes

இன்று பல்வேறு இடங்களில் கம்பீரமாக நிற்கும் நேருவின் புகைப்படங்களில் பலவற்றுக்குச் சொந்தக்காரர், ஹோமை வியாரவல்லா.

Homai Vyarawalla Photoes

இவரால் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் பெரும்பாலும் 'Dalda 13' என்னும் பெயரிலேயே வெளிவந்திருக்கும். ஏனெனில், இவர் பிறந்த வருடம் 1913. கணவரை முதன்முதலில் சந்தித்தபோது இவரின் வயது 13. இவரது முதல் காரின் நம்பர் பிளேட் 'DLD 13'.

Homai Vyarawalla Photoes

கணவரின் இறப்புக்குப் பின்னர் இவரது வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாகின. அல்லது உண்டாக்கிக்கொண்டார். புதிதாக புகைப்படம் எடுக்க வந்தவர்களின் நடவடிக்கையும் புகைப்படம் எடுக்கும் விதமும் ஏனோ இவருக்குப் பிடிக்கவில்லை. அதனால், புகைப்படம் எடுப்பதையே நிறுத்திவிட்டார்.

Homai Vyarawalla

இவருக்கு எல்லாமுமாக இருந்த ஒரே மகனான ஃபாரூக் (Farooq), 1989-ம் ஆண்டு புற்றுநோயால் இறந்துவிட்டார். அந்தச் சோகம் அவரை அதிகம் பாதித்தது. மேலும் தனிமையானார். 2011-ம் ஆண்டு, தனது 98-வது வயதில் வாழ்நாள் சாதனைக்காக 'பத்ம விபூஷன்' விருதைப் பெற்றார். 

 

2012 ஜனவரி 15-ம் தேதி இந்தியாவின் முதல் பெண் கேமரா, தனது ஒளியை நிறுத்தி, இயற்கையில் கலந்தது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

லட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கிய இலங்கை குடியுரிமைச் சட்டம்: 20-8-1948

 

'இலங்கைக் குடியுரிமைச் சட்டம் 1948' என்பது 1948-ம் ஆண்டில் இலங்கை பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றதும், அதன் குடிமக்கள் யாரென வரையறுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். இது 1948-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. பின் நவம்பர் 15-ம்தேதி அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 
 
 
 
லட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கிய இலங்கை குடியுரிமைச் சட்டம்: 20-8-1948
 
'இலங்கைக் குடியுரிமைச் சட்டம் 1948' என்பது 1948-ம் ஆண்டில் இலங்கை பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றதும், அதன் குடிமக்கள் யாரென வரையறுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். இது 1948-ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. பின் நவம்பர் 15-ம்தேதி அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இது புதிதாக விடுதலை பெற்ற நாடொன்றிற்கு தேவையான ஒரு நடவடிக்கையாகவே தோன்றினாலும், சிங்களத் தேசியவாதிகள் இந்தச் சட்டத்தின் மூலம் இன்னொரு நோக்கத்தையும் நிறைவேற்றினார்கள். அதாவது இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்குவதில் அவர்கள் வெற்றிபெற்றார்கள்.

நாடு விடுதலை பெற்றதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றுவந்த இன முரண்பாடுகளின் தொடக்க வெளிப்பாடுகளில் ஒன்றாக இந்தச் சட்டம் அமைந்தது எனலாம். இச்சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து இடதுசாரிக் கட்சியினரும் எதிர்த்தனர்.

 

 

 

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினம்: 20-8-1944

 

ராஜீவ் காந்தி 1944-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ந்தேதி ஜவர்கலால் நேரு மகளான இந்திரா காந்திக்கும், பெரோஸ் காந்திக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் அரசியல் வாரிசாக கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தில் காலமான பின்னர் ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்தார்.

 
 
 
 
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினம்: 20-8-1944
 
ராஜீவ் காந்தி 1944-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ந்தேதி ஜவர்கலால் நேரு மகளான இந்திரா காந்திக்கும், பெரோஸ் காந்திக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார்.

இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் அரசியல் வாரிசாக கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தில் காலமான பின்னர் ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்தார்.

1981 பிப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1866 - அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜான்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

* 1914 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சை ஜெர்மனியப் படைகள் கைப்பற்றின.

* 1917 - இலங்கையில் ஒரு ரூபாய் தாள் வழங்கப்பட்டது.

* 1940 - மெக்சிகோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் ரஷ்யப் புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி படுகாயமடைந்து அடுத்த நாள் மரணமடைந்தார்

* 1944 - இரண்டாம் உலகப் போர்: ருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது.

* 1948 - இலங்கை குடியுரிமை சட்டம்: இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 10 லட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.

* 1953 - ஐதரசன் குண்டைத் தாம் சோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.

* 1960 - செனெகல், மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.

* 1968 - பனிப்போர்: 2 லட்சம் வார்சா ஒப்பந்த நாடுகளின் படைகள் செக்கோஸ்லவாக்கியாவினுள் புகுந்தன.

* 1975 - நாசா வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.

* 1977 - நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.

* 1988 - ஈரான்– ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.

* 1991 - எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.

* 1997 - அல்ஜீரியாவில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

* 2006 – அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006: கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள்.

* 2006 - நமது ஈழநாடு பணிப்பாளர், முன்னாள் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமகராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

உலக ஒளிப்பட நாள்: இந்தியக் கட்டிட ஒளிப்படக் கலைஞர்கள்

 

 
15jkrChondiMithulDesaiChondi

கூப்பர் ஹவுஸ், சாண்டி, மகராஷ்டிரா

ளிப்படக் கருவி கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலேயே கட்டிட ஒளிப்படக் கலை உருவாகிவிட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை கட்டிட ஒளிப்படக் கலை பிரபலமடையவில்லை. ஆனால், மேற்குலக நாடுகளில் இது மிகப் பெரிய கலையாக உருவாகியுள்ளது. கட்டிட வடிவமைப்புகளுக்கு முன்மாதிரியாக இந்த ஒளிப்படங்கள் உதவுகின்றன. மேலும் முழுமையாக்கப்பட்ட கட்டிடங்களைப் பதிவுசெய்யவும் இந்தக் கலை உதவுகிறது.

கட்டிட ஒளிப்படங்கள் அதன் அழகையும் வடிவமைப்பையும் பிரநிதித்துவப்படுத்தும் வகையில் எடுக்கப்படுகின்றன. பிரெஞ்சு ஒளிப்படக் கலைஞரான யுஜீன் அஜே 19-ம் நூற்றாண்டில் உலக அளவில் பிரபலமான கட்டிட ஒளிப்படக் கலைஞராகத் திகழ்ந்தார். தற்போது ஸ்பெயின் ஒளிப்படக் கலைஞரான விட்டோரியோ என்ரிச், இங்கிலாந்து ஒளிப்படக் கலைஞரான டென்னிஸ் கில்பெட்ர் உள்ளிட்ட பலர் இந்தத் துறையில் பிரகாசித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த ஒளிப்படக் கலைஞர்கள் சிலரும் இந்தக் கட்டிட ஒளிப்படக் கலையில் இயங்கிவருகிறார்கள். பரத் ராமாமிர்தம், ராஜேஷ் வோரா, ஹர்ஷன் தாம்ஸன், மிதுல் தேசாய், டினா நந்தி, ரந்தீர் சிங், சுலைமான் மெர்சண்ட் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இந்த எழுவர்கள் எடுத்த ஒளிப்படத் தொகுப்பு இது:

             
15jkrBellad%20HouseHubliBhrarath

பெலட் ஹவுஸ், ஹூப்ளி, கர்நாடகா

 

பரத் ராமாமிர்தம்

சென்னையைச் சேர்ந்த பரத் ராமாமிர்தம் 25 வருட கால அனுபவம் உள்ளவர். இவரது ஒளிப்படங்கள் பல முன்னணிப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. கட்டிடங்கள் மட்டுமல்லாது கோயில்களையும் இவர் படம் எடுத்துள்ளார். இவரது ஒளிப்படங்கள் இந்தியச் சுற்றுலாத் துறை விளம்பரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மட்டுமல்லாது மொரீசியஸ், செஷல்ஸ் ஆகிய நாடுகளின் சுற்றுலாத் துறை பிரச்சாரத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

15jkrRajesh%20VoraThe%20Dasavatara%20Hot

தசவதாரா ஹோட்டல், திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்

 

ராஜேஷ் வோரா

புனேயைச் சேர்ந்த ராஜேஷ் வோரா 25 வருட காலம் அனுபவம் உள்ளவர். நகரக் கட்டிட வடிவமைப்பைப் பதிவுசெய்வதில் இவரது பங்கு முக்கியமானது. இவரது ஒளிப்படங்கள் தனிக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

15jkrHarshan%20ThomsonappolloRD

அப்பொல்லோ ரிசார்ச் அண்ட் டெவலப்மெண்ட் செண்டர், சென்னை, தமிழ்நாடு

 

ஹர்ஷன் தாம்ஸன்

இந்தியா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளிலிருந்து இயங்கக்கூடிய ஒளிப்படக் கலைஞர் இவர். 15 ஆண்டு கால அனுபவம் உள்ளவர். கட்டிடக் கலைஞராகவும் பயிற்சிபெற்றவர். உலகின் மிக முக்கியமான கட்டிடங்களை ஒளிப்படம் எடுத்திருக்கிறார்.

15jkrChondiMithulDesaiChondi

கூப்பர் ஹவுஸ், சாண்டி, மகராஷ்டிரா

 

மிதுல் தேசாய்

மும்பையைச் சேர்ந்த கட்டிட ஒளிப்படக் கலைஞரான முதுல் தேசாய், கட்டிடக் கலைஞராகப் பயிற்சிபெற்றவர். இவர் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். நவீனக் கட்டிடக் கலையை ஒளிப்படங்கள் எடுப்பதில் பிரசித்திபெற்றவர் இவர்.

15jkrpavillionInGardenTinaNandiBangaluru

பெவிலியன் இன் கார்டன், பெங்களூரூ, கர்நாடகா

 

டினா நந்தி

டினா நந்தி கொல்கத்தா, ஊட்டி, மும்பை ஆகிய நகரங்களில் மாறி மாறி வாழும் சுயாதீன ஒளிப்படக் கலைஞர். இவையல்லாமல் இடையிடையே ஜாம்பியாவிலும் வசித்துவருகிறார். இவர் கட்டிடங்கள் மட்டுமல்லாது திருமணங்கள், குழந்தைகள் பிறப்பையும் படம் எடுத்துவருகிறார்.

15jkrrandirsingh%20Max%20Estates%20Visit

மேக்ஸ் எஸ்டேட்ஸ், டேராடூன், உத்தராகண்ட்

 

ரந்தீர் சிங்

ரந்தீர் சிங் நியூயார்க்கில் கட்டுமானக் கலையைப் பயின்றவர். கட்டிடக் கலைஞராக 15 வருட அனுபவம் கொண்டவர். ஒளிப்படக் கலை மீதான ஆர்வத்தால் இந்தத் துறைக்கு வந்தவர், கடந்த 8 வருடங்களாகக் கட்டிட ஒளிப்படக் கலைஞராக இருந்துவருகிறார்.

15jkrkochi1sulaiman

டி.ஒய்.ஃப்.அய். அலுவலகம், கொச்சி, கேரளா

 

சுலைமான் மெர்சண்ட்

மும்பையைச் சேர்ந்த இவர் இந்தத் துறையில் 8 வருட அனுபவம் கொண்டவர். கட்டிடங்களை மட்டுமல்லாமல் நகரத்தை அதன் வாழ்க்கையுடன் பதிவுசெய்து வருபவர். மும்பை தெரு வாழ்வை ஒளிப்படங்களின் வாயிலாகப் பதிவுசெய்துள்ளார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஒக்ஸ்போர்ட் பல்கலையில் யூசொப் மலாலா

 
 
ஒக்ஸ்போர்ட்  பல்கலையில் யூசொப் மலாலா
 

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு, பிரிட்டனில் உள்ள உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் ஒன்றான ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து கல்வி பயில இடம்கிடைத்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா பெண்கள் கல்விக்காக போராடி வருகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு தலிபான் ஆயுததாரிகள் அவரைச் சுட்டுக்கொல்ல முயன்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.

கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்ட மலாலாவுக்கு, பிரிட்டனில் உள்ள உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் ஒன்றான ஒக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து கல்வி பயில வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இதற்காக அவர் கடுமையாக உழைத்து வந்தார். அவருடைய விடா முயற்சியின் பயனாக ஒக்ஸ்போர்ட் பல்கலை மலாலாவுக்கு இடம்கொடுத்துள்ளது.

http://newuthayan.com

  • தொடங்கியவர்

புதினின் சட்டையில்லாப் புகைப்படங்கள் தூண்டிய ஆர்வம்!

புதினின் சட்டையில்லா புகைப்படம் தூண்டிய சவால்படத்தின் காப்புரிமைPAVEL DUROV / INSTAGRAM

ரஷ்ய அதிபர் புதின் சட்டையில்லாமல் தமது விடுமுறையைக் கழிக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், அதனால் ஈர்க்கப்பட்ட "டெலிகிராம்" செயலியின் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவெல் டுர்ரேஃப், சட்டை அணியாமல் எடுத்த தனது புகைப்படங்களை வெளியிட்டு பிறருக்கும் அந்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளார்.

புதின்படத்தின் காப்புரிமைREUTERS

பாவெல் டுர்ரேஃப் இன்ஸ்டாகிராமில் (போட்டோஷாப் மென்பொருளால் மாற்றியமைக்கப்பட்ட அல்லது மெருகேற்றப்பட்ட புகைப்படங்களை தடை செய்கிறது) பதிவிட்ட #புதின் சட்டையில்லா சவால் (#PutinShirtlessChallenge) என்கிற பதிவை ஒரு நாளில் 47 ஆயிரம் பேர் விரும்பியிருந்தனர்.

விடுமுறையின்போது அதிபர் புதின் சட்டையில்லாமல் தோன்றுவது முதல்முறை இல்லை என்றாலும், இது மாதிரியான சவால் என்பது இதுவே முதல்முறையானதாக இருக்கலாம்.

புதின்படத்தின் காப்புரிமைAFP/GETTY

டுர்ரேஃபை பின்தொடருபவர்களில் பலர் அவருடைய கட்டுடல் பார்த்து, "சாதாரண முறையில் கட்டுடல் கொண்டவர்" என்றும், "சிறந்த ஆண்" எனறு கூறி அதிசயித்து போயிருக்கின்றனர்.

ரஷ்ய அரசியல்வாதி டிமிட்ரி குட்கோஃபின் புகைப்படம் உள்பட, பல டிவிட்டர் பதிவுகள் காணப்படுகின்றன.

புதினின் சட்டையில்லா புகைப்படம் தூண்டிய சவால்படத்தின் காப்புரிமை. புதினின் சட்டையில்லா புகைப்படம் தூண்டிய சவால்படத்தின் காப்புரிமை.

இந்த சவாலுக்கு பதிலளிக்கும் விதமாக, நிக்கோலே சோகோலோஃப் மற்றும் கோன்ஸ்டான்டின் புரோட்ஸ்கை உள்பட விடுமுறையில் எடுத்த பகைப்படங்களை ரஷ்ய ஆண்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

நிக்கோலே சோகோலோஃப் சட்டையில்லாத உடலின் மேல் பகுதியை படம் பிடித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.படத்தின் காப்புரிமைNIKOLAY SOKOLOV Image captionநிக்கோலே சோகோலோஃப் சட்டையில்லாத உடலின் மேல் பகுதியை படம் பிடித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அல்டாய் தெலைத்தொடர்களில் இருந்து கோன்ஸ்டான்டின் புரோட்ஸ்கை இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.படத்தின் காப்புரிமைKOSTYA PRO Image captionஅல்டாய் தெலைத்தொடர்களில் இருந்து கோன்ஸ்டான்டின் புரோட்ஸ்கை இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அனாஸ்டாசியா சுட்டுக்காட்டுவதைபோல, பெண்களும் இந்த சவாலுக்கு விதிவிலக்கல்ல.

அனாஸ்டாசியா #புதின்சட்டையில்லாசவாலை (#PutinShirtlessChallenge) ஏற்றுக்கொண்டார்படத்தின் காப்புரிமைANASTASIA Image captionஅனாஸ்டாசியா #புதின்சட்டையில்லாசவாலை (#PutinShirtlessChallenge) ஏற்றுக்கொண்டார்

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தெற்கு சைபீரியாவில் கழிந்த அதிபரின் விடுமுறை பற்றி ரஷ்ய தொலைக்காட்சி வெளியிட்டது. அவருடைய சட்டையில்லாத புகைப்படங்கள் பெருமளவில் பகிரப்பட்டன. நான்காவது முறையாக அவர் அதிபர் பதவிக்கு போட்டியிட போகிறாரா? என்று சிலர் டிவிட்டர் பதிவிடவும் செய்தனர்.

பிறர், தன்னுடைய விருப்பங்களை நிறைவு செய்த கூர்முனை வேல் வைத்திருக்கும் சோம்பலான மனிதன் பற்றிய ஒரு ரஷ்ய விசித்திரக் கதையை மேற்கோள் காட்டினர்.

அல்லது கிரம்ளினின் வலுவான தோற்றத்தை அமெரிக்காவுக்கு காட்டுவதாக இந்த புகைப்படங்கள் உள்ளனவா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

புதின்படத்தின் காப்புரிமைREUTERS Image captionமீன் பிடித்தல்: இதிபர் புதின் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் சர்கெய் ஷொய்கு

இருப்பினும், பூனைகள் மற்றும் உடல் பகதி என இந்த சவால் சமூக ஊடகங்களில் கேலிக்கும் உள்ளாகியது.

புதினின் சட்டையில்லா புகைப்படம் தூண்டிய சவால்MARCUS LOKI

மார்குஸ் லோகி தன்னுடைய ஆடையில்லாதப் பூனையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

புதினின் சட்டையில்லா புகைப்படம் தூண்டிய சவால்

 

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

கொசுவுக்கு எதற்கு மனித ரத்தம் தேவைப்படுகிறது? #WorldMosquitoDay

 
 

கொசுவுக்கு

பற்களே இல்லாத ஓர் உயிரினம் மனிதனை கடித்து படுக்கையில் தள்ள முடியுமா? கொசுவினால் முடியும். 'கொசு' நுளம்பு க்யூலிசிடே (Culicidae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சியினமாகும். உருவில் சிறியவையாக இருந்தாலும் நோய்களை பரப்புவதில் அசுர வேகம் கொண்டவை. ஆண் கொசுக்கள் தாவரசாற்றை மட்டுமே பருகும். பெண்கொசுக்கள்  தான் மனிதர்களிடமிருந்தும், உயிரினங்களிடமிருந்தும் இரத்தத்தை உறிஞ்சும்.

உலக கொசு தினம்:

உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் மலேரியா 5-வது இடத்தில் உள்ளது. மலேரியாவால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறப்பதாகவும், இந்நோய் தாக்கப்பட்ட ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு குழந்தை பலியாவதாகவும் ஐ.நா.தெரிவித்துள்ளது.

" அனாஃபிலஸ்" என்ற பெண் கொசுக்கள் மூலம்தான் மலேரியா பரவுகிறது என்று 1897ம் ஆண்டில் மருத்துவர் ரெனால்டு ரோஸ் கண்டறிந்தார். இந்த நாளின் நினைவாகவும், கொசுக்களின் ஆபத்துக்கள் குறித்தும் அதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20-ம் தேதி உலக கொசு தினம்  கொண்டாடப்படுகிறது. 

 கொசுக்களில் 3,000க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இவை அனைத்திற்கும்  'ரூட்டு தலை' ஆக செயல்படுவது மலேரியாவை உருவாக்கும் அனாஃபிலஸ், டெங்குவை உருவாக்கும் ஏடிஸ் ,யானைக்கால்நோய் மூளைக்காய்ச்சலை உருவாக்கும் க்யூலக்ஸ் இவையே...

கொசுக்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை :
1. ஆண் கொசுக்கள் 10 நாள்களுக்கும் குறைவாகவே உயிர்வாழும், பெண் கொசுக்கள் 6-8 வாரம் வரை உயிர்வாழும்.

2.கொசுக்கள் வெகுதூரம் பயனிப்பதில்லை; 3 மைல்களுக்குள்ளாக பரப்பதை நிறுத்திக்கொள்கின்றன.

3.பெண்கொசுக்கள் தன் வாழ்நாளில் மூன்று முறை முட்டையிடும் ; ஒவ்வொரு முறையும் 300 முட்டைகள் இடும். இந்த வேகத்தில் இனப்பெருக்கம் செய்தால் ஆறே தலைமுறையில் அதன்  சந்ததிகளின் எண்ணிக்கை 3,100கோடியை எட்டிவிடும்.

4.ஆண்கொசுக்கள் தாவரச்சாற்றைக் குடித்துக்கொண்டு காலம் கழிக்கும்.பெண் கொசுக்கள் முட்டைகளை உருவாக்க தேவைப்படும் புரதத்தை  பெறுவதற்காகவே இரத்தம் குடிக்கின்றன.

5.கொசுக்களால் அதன் எடையை விட 3மடங்கு இரத்தம் உறிய முடியும்.

6.மனித உடலில் இருந்து வெளியிடப்படும் Co2 கார்பன் டை ஆக்சைடு, வியர்வை போன்றவற்றை கொசுக்களால் அறிய இயலும்.

7.கொசுக்கள் மனிதனின் வெப்பத்தை உணர்ந்து எவரை கடிக்கலாம் என தீர்மானிக்கிறது.

8.கொசுக்கள் 210 மில்லியன் வருடங்களாக , டைனோசர் காலத்தில் இருந்து உயிர் வாழ்கின்றன.  

9.கொசுக்களால் எய்ட்ஸ் நோயை பரப்ப இயலாது.

10.(Dark) இருண்ட துணிகள் கொசுவை ஈர்க்கும். ஏனெனில் இவ்வகை துணிகள் வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ளும்.

கொசு ஒழிப்பு:
கொசுப்புழுக்களால் நீரில் மூச்சு  விட முடியாது. எனவே அவை மூச்சு விட நீரின் மேல்மட்டத்திற்கு வரும்.  கொசுக்களை அழிக்க இதுவே சரியான நேரம், நீரின் மீது மண்ணெண்ணெயை தெளித்தால் அவை அழிந்துவிடும். டயர்கள்,தகரங்கள், பிளாஸ்டிக் பொருட்களில் நீர் தேங்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுப்புழு தடுப்பு மருந்து தெளிக்கலாம்.  வீட்டைசுற்றி துளசி, திருநீற்று செடியை வளர்க்க, கொசு  வருவது குறையும். கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள் சல்பர். கற்பூரம் சல்பரினால் ஆனது. மண்ணெண்ணெய் மற்றும் கற்பூரம் இந்த இரண்டுமே மிகசிறந்த கொசுக்கொல்லிகள். பூண்டு வாசனையும்  கொசுவுக்கு ஆகாது.
       
கூகுளின் தலைமை நிறுவனமான ஆல்ஃபாபெட் (Alphabet), தனது உயிர் அறிவியல் துறையான வெரிலி (Verily Life Science) உதவியுடன் 20 மில்லியன் கொசுக்களை கலிஃபோர்னியாவிலிருந்து பறக்கவிடப்போகிறது. சிட்டி ரோபோ போல் ரங்கூஸ்கி கொசுவைக் கண்டுபிடிக்கும் முயற்சியோ என்று ஆச்சர்யப்பட வேண்டாம். இது வளர்ந்து கொண்டே இருக்கும் ஒட்டுமொத்த கொசு இனத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

2000 வருடங்களாகச் சந்திர, சூரிய கிரகணங்களை கணக்கிடும் முறை இதுதான்!

 

சூரிய கிரகணம்

ஆரம்பக்காலம் குறித்த ஒரு கற்பனை

உலகம் உருவாகிவிட்டது. மனிதனும் அவதரித்து விட்டான். முதல் மனிதர்கள் அந்த அற்புதமான சூரிய வெளிச்சத்தில், இயற்கையின் அதிசயங்களைக் கண்டு வியந்தவாறு கழிக்கின்றனர். முதல் முறையாக இரவு வருகிறது. அத்தனை நேரம் ஒளி கொடுத்துக் கொண்டிருந்த சூரியனை இப்போது காணவில்லை. பயத்தில் அலறுகின்றனர். ஒரு வழியாக விடிந்தபின் சூரியன் வரவே நிம்மதி அடைகிறார்கள். நாளாக நாளாக இது ஒரு அன்றாட நிகழ்வு, இந்தச் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இது தான் வேலை என்பதையும் புரிந்து கொள்கிறார்கள். கிரகணங்கள் போன்ற விந்தைகளையும் பார்த்து விடுகிறார்கள். மறந்து விடாமல் இருக்க, இது போன்ற நிகழ்வுகளைப் படங்களாக வரைந்து வைத்துக் கொள்கிறார்கள். மொழி என்ற ஒன்றை உருவாக்கிய பின்பு இந்த குறிப்புகள் மிகவும் துல்லியமான ஒன்றாக மாறிவிடுகின்றன. பல நூற்றாண்டுகள் கடந்த பின், ஒவ்வொரு அசாதாரண நிகழ்வும் இப்போது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு விட்டது என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். பல அதிசய நிகழ்வுகள் குறித்த தகவல்கள் அவர்களிடம் ஏராளமாய் சேர்ந்து விடுகிறது. ஒரு கட்டத்தில், நடக்கும் விஷயங்கள் அனைத்தும் தங்கள் குறிப்பில் இருப்பதைப் போல தான் நிகழ்கிறது; இனிமேல் புதிதாக நடப்பதற்கு ஒன்றுமே இல்லை என்பதும் விளங்குகிறது.

சூரியன், சந்திரன் மற்றும் பிற கோள்கள் அனைத்தும் வட்டமாக இருக்கிறது. பூமியும் அதைப் போல தான் என்பது போன்ற வானவியல் புரிதல்கள் ஏற்பட்ட பின், அவர்கள் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல விரும்புகிறார்கள்.

ஒரு சில அதிசய நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதாய் நாம் குறித்து வைத்திருக்கிறோம். உதாரணமாக, சந்திர, சூரிய கிரகணங்கள். அது மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது நமக்குத் தெரியும். அது எதனால் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். ஒரு வேளை அது புரியாவிட்டாலும், இனி அது எப்போது எல்லாம் நடக்கும் என்று கணித்து வைத்துக் கொண்டால் என்ன? நம்மிடம் பல நூற்றாண்டுகளின் குறிப்பு இருக்கிறது, இதை ஆராய்ச்சி செய்தாலே, கிரகணங்கள் இனி எப்போதெல்லாம் வரும் என்று தோராயமாக கணித்து விடலாம் என்று முடிவு செய்து களத்தில் இறங்குகிறார்கள். அமாவாசை, பௌர்ணமி உட்படச் சந்திர, சூரிய கிரகணங்கள் எப்போது எல்லாம் வருங்காலத்தில் வரும் என்று துல்லியமாக கணித்தும் விடுகிறார்கள்.

சூரிய கிரகணங்கள்

எழுதி வைக்கும் பழக்கம்

டிரெக்ஸல் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக இருக்கும் ஜோனதன் செய்ட்ஸ் இது குறித்து பேசுகையில், “உலக அளவில் மெசபடோமியர்கள் நிறையக் கண்டுபிடித்தார்கள். ஏனென்றால், எழுதும் பழக்கத்தை முதலில் அவர்கள் தான் நடைமுறைப் படுத்தினார்கள். இத்தகைய நிகழ்வுகள் சாதாரணமானவை அல்ல, இதற்கெல்லாம் ஏதோ அர்த்தம் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து வைத்திருந்தார்கள்” என்று தெரிவித்தார்.

சரோஸ் சுழற்சி முறை (The Saros Cycle)

கி.மு.700 ஆம் ஆண்டிற்கு முன்னரே மெசபடோமியர்கள் எழுத ஆரம்பித்திருந்தனர். அவர்கள் சரோஸ் சுழற்சி முறையை நன்கு அறிந்து வைத்திருந்தனர். அது என்ன சரோஸ் சுழற்சி? ஒரே மாதிரியான இரண்டு சூரிய கிரகணங்கள் அடுத்தடுத்து ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நடக்கிறது. இந்த ஒரே மாதிரியான இரண்டு சூரிய கிரகணங்களுக்கும் இடைப்பட்ட நாட்களைத் தான் சரோஸ் சுழற்சி என்று அழைக்கிறார்கள். அதாவது ஒரு கிரகணம் முடிந்த பின்பு சந்திரன், பூமி மற்றும் சூரியன் ஆகியும் அனைத்தும் மீண்டும் அதே போல் ஒரு கிரகணம் ஏற்பட  நேர்கோட்டில் சந்தித்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் கால அவகாசமே சரோஸ் சுழற்சி. முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் என அனைத்திற்கும் இந்த விதி பொருந்தும். கிரகணத்தின் தன்மைக்கு ஏற்ப அதை வகைப்படுத்தியும் வைத்திருக்கிறார்கள்.

கிரகணங்கள்

ஒரு சரோஸ் சுழற்சியின் நீளம் 6585.3211 நாட்கள், அல்லது 18 ஆண்டுகள், 11 நாட்கள், 8 மணி நேரங்கள். சரியாக ஒரு கிரகணம் முடிந்த பின்பு, மீண்டும் அதே போல் ஒரு சூரிய கிரகணம் ஏற்பட இத்தனை கால அவகாசம் தேவை. எப்போதோ நிகழ்ந்த ஒரு சூரிய கிரகணம், அதன் பின் நடந்த சூரிய கிரகணங்கள், இவை அனைத்தும் இவ்வாறான இடைவெளிகளையே கொண்டுள்ளது என்பதைக் கண்டறிந்த பின்பு, எதிர்கால கிரகணங்களை கணிப்பது சுலபம் தானே? உதாரணமாக வரும் ஆகஸ்ட் 21 அன்று அமெரிக்காவில் சூரிய கிரகணம். “தி கிரேட் அமெரிக்கன் எக்ளிப்ஸ்” என்று அழைக்கப்படும் இது, சரோஸ் சுழற்சியில் சரோஸ் 145 என்ற வரிசையைச் சேர்ந்தது.   இதற்கு முன்னர் ஆகஸ்ட் 11, 1999ல் இதே போல் சூரிய கிரகணம் அங்கே நிகழ்ந்துள்ளது. அடுத்த கிரகணம் செப்டம்பர் 2, 2035ல் நடக்கும். இந்த வரிசையின் முதல் கிரகணம் நிகழ்ந்தது ஜனவரி 4, 1639, கடைசி கிரகணம் நிகழப்போவது ஏப்ரல் 17, 3009.

கிரேக்கர்கள் கில்லாடிகள்

ஜோனதன் செய்ட்ஸ் தொடர்ந்து பேசுகையில், “கிரேக்கர்கள் இது போன்ற விஷயங்களில் கில்லாடிகளாக இருந்தனர். எது எப்போது நிகழும் என்ற ஆருடம் மட்டும் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. அது ஏன் நிகழ்கிறது என்பதையும் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர். அரிஸ்டாடில் போன்றவர்கள் எப்போது என்பதைப் போலவே ஏன் என்ற கேள்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கவே விரும்பினார்கள். அவர்களால் தான் பூமி கோள வடிவம் என்று உலகமே உணர்ந்தது. தரவு சேகரித்தல், நுட்பங்களைத் துல்லியமாக வரையனை செய்தல் போன்றவற்றை நூற்றாண்டுகளுக்கு முன்னரே சிறப்பாக செய்து காட்டியுள்ளனர். ஊசிதுளை கேமராக்கள் பயன்படுத்தி சூரிய கிரகணத்தின் அளவு எவ்வளவு, அதன் தன்மை எப்படி என்றெல்லாம் குறிப்பு எடுத்துள்ளனர்.

தற்கால முறை

1700களில் வானியல் வல்லுநர் எட்மண்ட் ஹாலி ஒருமுறை ஒரு நாளேட்டில், அடுத்து வரப்போகும் கிரகணம் எந்தெந்த ஊர்களில் எந்தெந்த நேரத்தில் எப்படியெல்லாம் தெரியும் என்பது குறித்து படங்கள் வரைந்து விளக்கினார். சூரியன் திடீரென மறைந்து போகும் போது, சாமானியர்கள் பீதி அடைவதைத் தடுக்க இதைச் செய்தார். இதைத் தாண்டி கிரகணங்களைக் கணிக்கும் தற்கால முறை 19ஆம் நூற்றாண்டில் அமலுக்கு வந்தது. இது குறித்து நாசாவில் காட்சிப்படுத்தல் நிபுணராக இருக்கும் எர்னி ரைட் விளக்கினார்.

“பள்ளிகளில் சந்திரன், சூரியன் என்றால் வட்டமாக இருக்கும் என்று படங்கள் பார்த்திருப்போம். ஆனால், பூமியில் இருப்பது போலவே சந்திரனிலும் மலை முகடுகள் இருக்கிறது, பெரும் பள்ளங்கள் இருக்கிறது. எனவே அதன் வடிவம் ஒரு முழு வட்டம் என்று கூறி விட முடியாது. இதனால் கிரகணத்தின் போது சூரியனில் விழும் நிழலும் நீள் வட்டமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முன்னர் காலத்தை கணித்தவர்கள் எல்லோரும் சூரியனையும், சந்திரனையும் ஒரு வட்டமான பொருளாகவும், பூமியில் இருந்து கிரகணத்தை பார்க்கப் போகும் மக்கள் அனைவரும் கடல் மட்டத்தில் இருந்தே பார்ப்பதாகவும் கணக்கில் எடுத்துக் கொண்டனர். சாதாரணமாகப் பேப்பர் மட்டும் வைத்துக் கொண்டு கணக்குப் போடும் போது இப்படி தான் செய்ய முடியும். ஆனால் இப்போது இருக்கும் தொழில்நுட்பம் இவ்வாறான கணிப்புகளை மேலும் துல்லியம் ஆக்கியுள்ளது.”

சென்ற முறை அமெரிக்காவில் நிகழ்ந்த சந்திர கிரகணத்தின் போது சந்திரனின் வடிவம், பூமியின் நிலவியல் மற்றும் சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகியவற்றின் நிலைப்பாடுகள் குறித்து எண்ணற்ற தகவல்களை ரைட் திரட்டினார். இதன் மூலம், அமெரிக்காவில் எங்கிருந்து எங்கு வரை கிரகணம் தெரியும், எப்படித் தெரியும், எந்த வழியில் அது அமெரிக்காவைக் கடக்கும் என்றெல்லாம் செய்முறையோடு தன் காணொளியில் விளக்கினார். சந்திரனின் நிழல் பூமியில் எந்த வேகத்தில் பயணிக்கும் என்பது வரை அறிவியலால் கணிக்க முடிந்தது. அவர் கூறியது போலவே தான் அன்று அனைத்தும் நடந்தது. அது தான் அமெரிக்காவில் அதிகம் பேர் பார்த்த சந்திர கிரகணமாகவும் அமைந்தது. இந்த முறை நிகழ விருக்கும் சூரிய கிரகணத்தை விளக்கியும் இதே போல் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். 21-ம் தேதி நிச்சயம் இப்படி தான் கிரகணம் நிகழப் போகிறது.

 

 

இன்று நவீன அறிவியல் நாம் இவ்வளவு வளர்ச்சி அடைந்ததற்கு மிக முக்கிய காரணம் அன்று நம் முன்னோர்கள் எடுத்து வைத்த குறிப்பு தான். விதையை அவர்களே போட்டார்கள். பின்னால் வந்தவர்கள் பல மதம், இனம், மூட நம்பிக்கைகள் என்று பல போராட்டங்களுக்குப் பிறகு, தண்ணீர் ஊற்றி அந்தச் செடியை பேணிக் காத்தார்கள். அதனால் உருவான மரத்தின் நிழலில் நாம் இன்று இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம். அனைத்துத் தலைமுறையின் உழைப்பு, அவர்களின் உதவி இல்லாமல் இன்று இங்கே நாம் இல்லை!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இலங்கையில் அனுஷ்கா சர்மா... வைரலாகிறது கோஹ்லியுடன் ஜோடியாக மரக் கன்று நடும் படம்!

கண்டி: இலங்கை சென்ற நடிகை அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லியுடன் சேர்ந்து கண்டியில் மரம் நடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் போட்டிகளுக்காக கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இலங்கை சென்றுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோஹ்லியின் காதலி நடிகை அனுஷ்கா சர்மாவும் இலங்கை சென்றிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

Virat Kohli and Anushka Sharma planting a sapling in Sri Lanka

இதை உறுதிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கோஹ்லியும் அனுஷ்கா சர்மாவும் இணைந்து இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. கோஹ்லியும் அனுஷ்காவும் கண்டியில் மரக் கன்று படம்தான் சமூக வலைதளங்களில் ஹிட்டடித்து வருகிறது.
 

 

 

tamil.oneindia.

  • தொடங்கியவர்

இந்த வார உலக நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு

இந்த வாரம் உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு.

  • கடமான்TOMMY PEDERSEN / GETTY IMAGES

    சுவீடன் நாட்டில் கன்னர்ஸ்கோக் என்னும் இடத்தில் அரிதான வெள்ளை நிற கடமான் காணப்பட்டது. அந்நாட்டில் அவ்வகை மான்கள் சுமார் 100 மட்டுமே உள்ளன.

  • சார்லட்ஸ்வில்JOSHUA ROBERTS / REUTERS

    அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தின் சார்லட்ஸ்வில் நகரில் நடந்த போராட்டத்தில் இனவெறி எதிர்ப்பாளர்கள் மற்றும் வெள்ளை இன தேசியவாதிகள் இடையே மோதல் வெடித்தது. இனவெறி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட 32 வயதான ஹெதர் ஹையர் எனும் பெண் மீது வேனை ஏற்றி ஒரு நபர் கொலை செய்தார்.

  • ரிங்கி சிங்.CATHAL MCNAUGHTON/ REUTERS

    இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில் உயிரிழந்த தனது ஆறு வயது மகளின் புகைப்படத்துடன் ரிங்கி சிங். ஆக்சிஜன் விநியோகம் செய்த நிறுவனத்திற்கு பணம் செலுத்தாததால், ஆக்சிஜன் இல்லாமல் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. அதிகாரிகள் இப்புகாரை மறுக்கின்றனர்.

  • வெண்புறாISSEI KATO/ REUTERS

    ஜப்பான் இரண்டாம் உலகப்போரில் சரண் அடைந்த 72-ஆம் ஆண்டு நிறைவடைவதை ஒட்டி, அமைதியை வலியுறுத்தும் வகையில் அங்குள்ள யாகூசூனி கோயுலில் ஒரு வெண்புறா பறக்கவிடப்பட்டது.

  • கோகுலாஷ்டமிDANISH SIDDIQUI/ REUTERS

    மும்பையில் கோகுலாஷ்டமி கொண்டாட்டத்தின்போது, தயிர்ப் பானை உடைக்கும் வழக்கத்தை நிறைவேற்ற மனித பிரமிடு அமைக்கும் ஆர்வலர்கள்

  • வீராங்கனைகள்.NEIL HALL/ REUTERS

    லண்டனில் நடைபெற்ற பெண்களுக்கான மல்யுத்தத்தின்போது ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டுள்ள வீராங்கனைகள்.

  • வழுக்கு மரம் ஏறும் போட்டிBEAWIHARTA/ REUTERS

    இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஒரு வழுக்கு மரம் ஏறும் போட்டியில் தங்கள் நண்பர் மிதிவண்டி வென்றதைக் கொண்டாடும் தம்பதிகள். ஆகஸ்ட் 17 அன்று இந்தோனேசியாவின் விடுதலை நாளைக் கொண்டாடும் வகையில் அன்கோல் டிரீம்லேண்ட் பூங்காவில் அந்தப் போட்டிகள் நடைபெற்றன.

  • பிக் பென்VICTORIA JONES/ PA

    லண்டனில் உள்ள எலிசபெத் டவரில், பிக் பென் கடிகாரத்தை ஆய்வு செய்யும் பணியாளர். அந்த கடிகாரம் அமைந்துள்ள கோபுரம் புணரமைத்து முடிக்கப்படும் 2021-ஆம் ஆண்டு வரை அதன் மணிகள் ஒலிக்காது.

  • பார்சிலோனாPAU BARRENA / GETTY IMAGES

    பார்சிலோனாவில் உள்ள லாஸ் ராம்ப்ளாஸ் சுற்றுலா பகுதியில், பாதசாரிகள் மீது வேன் மோதித் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, காவலர்கள் அமைத்துள்ள தடுப்புகளைவிட்டு வெளியேறும் பொது மக்கள். குறைந்தபட்சம் 13 பேர் கொல்லப்பட்ட மற்றும் ஏராளமானோர் காயமடைந்த அத்தாக்குதலை 'ஜிகாதி தாக்குதல்' என்று ஸ்பெயின் பிரதமர் மேரியானோ ராஜோய் கூறியுள்ளார்.

 

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

’ஏழ்மையா நேர்மையா?’ - வைரத்தைத் திருப்பி கொடுத்த சிறுவன்!

 
 

நாம் போகும் வழியில் வைரங்கள் நிரம்பியப் பை கிடக்கிறது. நாம் என்ன செய்வோம்? ஒரு நிமிடம் யோசித்துவிட்டு உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்!

surat
 

 

குஜராத்தில் 15 வயது சிறுவன் விஷால் வழியில் கிடந்த வைரங்கள் நிறைந்த பையை, அதன் சொந்தக்காரரிடம் ஒப்படைத்துள்ளார். உலகின் 90% வைரத்தை பாலிஷ் செய்யும் சூரத் நகரில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரத்தில் வைர வியாபாரி ஒருவர் பாதுகாப்பு பெட்டகத்தில் எடுத்து கொண்டு போன வைர பைகளில் ஒன்று சாலையில் விழுந்துவிட்டது. அந்தப் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் விஷாலின் கைகளில் தவறி விழுந்த வைரப் பை கிடைத்துள்ளது. அதனை திறந்து பார்த்த விஷால் தன் தந்தையிடம் அதனை ஒப்படைத்துள்ளார். வைரத்தின் சொந்தக்காரரிடம் அதனை ஒப்படைக்க வேண்டும் என்று விஷால் தன் தந்தையிடம் தெரிவித்துள்ளார். 

விஷாலின் தந்தை வாட்ச் மேனாக பணிப்புரிகிறார். ஏழ்மையான குடும்ப சூழ்நிலையை எண்ணி அந்த வைரத்தை அவர் சொந்தமாக்கி கொள்ளவில்லை. வைரங்கள் அடங்கிய அந்தப் பையை வைர வியாபாரிகள் சம்மேளனத்தில் ஒப்படைத்துவிட்டார். 

தந்தை மற்றும் மகனின் நேர்மையை பாராட்டும் வகையில் சூரத் வைர வியாபாரிகள் சம்மேளனம் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியுள்ளது. மேலும் வைரத்துக்கு சொந்தக்காரர் விஷாலுக்கு 30,000 ரூபாய் பரிசாக கொடுத்துள்ளார்.  வைர வியாபாரிகள் சம்மேளனத்தின் தலைவர் விஷாலுக்கு 11 ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்துள்ளார். விஷாலுக்கு மொத்தம் 41,000 ரூபாய் பரிசாகக் கிடைத்துள்ளது. விஷால் ஒப்படைத்த அந்த வைரத்தின் மதிப்பு 40 லட்சம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து மோனா லிசா ஓவியம் திருடப்பட்டது (21-8-1821)

 

16-ம் நூற்றாண்டில் இத்தாலியின் பிரபல ஓவியர் லியனார்டோ டா வின்சி என்பவர் பொப்லார் பலகையில் மோனா லிசா ஓவியத்தை வரைந்தார். இது எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இந்த ஓவியம், பிரான்சிஸ்கோ டெல் ஜியோகோண்டோவின் மனைவி லிசா கெரார்டினியின் உருவப்படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. உலகின் மிகப் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றான இந்த ஓவியத்தை பல்வேறு அறிஞர்கள்

 
பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து மோனா லிசா ஓவியம் திருடப்பட்டது (21-8-1821)
 
16-ம் நூற்றாண்டில் இத்தாலியின் பிரபல ஓவியர் லியனார்டோ டா வின்சி என்பவர் பொப்லார் பலகையில் மோனா லிசா ஓவியத்தை வரைந்தார். இது எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இந்த ஓவியம், பிரான்சிஸ்கோ டெல் ஜியோகோண்டோவின் மனைவி லிசா கெரார்டினியின் உருவப்படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

உலகின் மிகப் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றான இந்த ஓவியத்தை பல்வேறு அறிஞர்கள் திறனாய்வு மற்றும் ஆராய்ச்சி செய்துள்ளனர். பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமான இந்த ஓவியம், லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் வைத்திருந்த இந்த ஓவியம் 1911ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி திருடப்பட்டது. மறுநாள் அங்கு சென்ற பிரெஞ்சு ஓவியர் லூயிஸ் பீராட், தனது ஓவியங்களை பார்வையிட்டபோது, 5 ஆண்டுகளாக மோனோ லிசா ஓவியம் இருந்த இடம் காலியாக இருந்தது. அந்த ஓவியம் பொருத்தப்பட்ட 4 முறுக்காணிகளை அவர் கண்டுபிடித்தார். இதனால் வணிக நோக்கத்திற்காக அதை புகைப்படம் எடுப்பதற்காக திருடியிருக்கலாம் என்று சந்தேகிப்பட்டது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

பின்னர் நீண்ட விசாரணைக்குப் பிறகு அருங்காட்சியகத்தின் ஊழியர் பெருகியா என்பவர், ஓவியத்தை திருடியது தெரியவந்தது. அதனை விற்பனை செய்ய முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். அவர் செய்த குற்றத்திற்காக அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. 

 

 

 

பவளப் பாறையால் ஆன ஆளில்லா ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது (21-8-1821)

ஜார்விஸ் தீவு என்பது ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமையில் உள்ள தீவு ஆகும். இத்தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. 4.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இந்த தீவு பவளப்பாறைகளால் ஆனது. இத்தீவு, தென் பசிபிக் பெருங்கடலில் ஹவாய் மற்றும் குக் தீவுகளுக்கிடையே அமைந்துள்ளது. 1821-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி பிரிட்டிஷ் நாட்டின் எலிசா பிரான்சிஸ் கப்பலில் சென்ற

 
 
பவளப் பாறையால் ஆன ஆளில்லா ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது (21-8-1821)
 
ஜார்விஸ் தீவு என்பது ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமையில் உள்ள தீவு ஆகும். இத்தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. 4.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இந்த தீவு பவளப்பாறைகளால் ஆனது.  இத்தீவு, தென் பசிபிக் பெருங்கடலில் ஹவாய் மற்றும் குக் தீவுகளுக்கிடையே அமைந்துள்ளது.

1821-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி பிரிட்டிஷ் நாட்டின் எலிசா பிரான்சிஸ் கப்பலில் சென்ற ஐரோப்பியர்கள் இந்த தீவினைக் கண்டுபிடித்தனர். ஆளில்லா இந்த தீவு, குவானோ தீவுகள் சட்டப்படி தங்களுக்கே சொந்தம் என்று 1857-ம் ஆண்டு அமெரிக்கா அறிவித்தது. அதன்பின்னர் 1858ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி முறைப்படி அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

இதேபோல் ஆகஸ்ட் 21-ம் தேதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் வருமாறு:-

1770 - ஜேம்ஸ் குக் கிழக்கு ஆஸ்திரேலியாவில் தரையிறங்கி அதனை பிரிட்டனுக்கு சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.

1831 - கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார்.

1863 - அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கன்சாஸ் மாநிலத்தில் லாரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.

1920 - இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப் பிரதிநிதியாக சேர் ஏ. கனகசபை தேர்வு செய்யப்பட்டார்.

1945 - இரண்டாம் உலகப் போர்: சாலமன் தீவுகள் தொடர் சமர் முடிவடைந்தது.

1963 - தெற்கு வியட்நாமின் குடியரசு ராணுவத்தினர் நாட்டின் புத்த தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.

1968 - சோவியத் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகளின் படையினர் செக்கோஸ்லவாக்கியாவைக் கைப்பற்றின.

1983 - பிலிப்பீன்ஸ் எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.

1986 - கமரூனில் நியோஸ் ஆற்றில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 1,800 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1991 - லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1991 - சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.

2007 - சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.

1906 - பொதுவுடமைவாதி ப.ஜீவானந்தம் பிறந்தநாள்.

1986 - ஜமேக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய சாம்பியன் உசேன் போல்ட் பிறந்தநாள்.

1995 - நோபல் பரிசு பெற்ற இந்திய வானியல்-இயற்பியலாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் இறந்த நாள்.
 

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

350 ஆண்டுகளாக சென்னைதான் இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்! சுவாரஸ்யத் தரவுகள் #Chennai378

 

சென்னையை 'இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்' என்று பெருமையாகக் குறிப்பிடுகிறோம். இந்தப் பெருமை இன்றோ, நேற்றோ கிடைத்ததில்லை. 350 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே 'இந்தியாவின் மருத்துவ தலைநகரம்' சென்னைதான். சென்னையில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டி, அதைச்சுற்றி தங்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்கிக் கொண்டனர். ஆங்கிலேயர்களின் கூட்டம் பெருகத்தொடங்கியதும் தேவைகளும் பெருகத்தொடங்கின. குறிப்பாக, சென்னையின் வெயில் அவர்களை பெரிதும் வதைத்தது. வியர்வை, கொப்புளங்கள், கட்டிகள் என பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட ஆங்கிலேயர்கள், தங்களுக்காக ஒரு மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.

மருத்துவத் தலைநகரம்

1664-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி கோட்டைக்குள்ளேயே ஒரு மருத்துவமனையை கட்டினர். இது தான் இந்தியாவில் தோன்றிய முதல் அலோபதி மருத்துவமனை. இதை நிர்வகித்து மேம்படுத்தியவர் சர் எட்வர்ட் விண்டர். 1690-ம் ஆண்டு இந்த மருத்துவமனை படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. 1772-ம் ஆண்டு கோட்டையில் இருந்து மாறி, தற்போது இருக்கும் சென்ட்ரல் பகுதிக்கு வந்தது. அப்போது வரை அந்த மருத்துவமனை ராணுவ மருத்துவமனை என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. 1835-ம் ஆண்டுக்குப் பிறகு  மருத்துவக்கல்லூரியாகவும் மாறியது. 1850-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி இது மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்  மருத்துவமனை என்ற பெயரைப் பெற்றது. அதுமட்டுமல்ல. இந்தியாவின் முதல் மருத்துவக்கல்லூரி என்ற பெயரையும் பெற்றது.

1875-ல் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இன்னொரு பெருமையும் கிடைத்தது. ‘மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப்’ என்ற இங்கிலாந்து பெண்மணி இந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். மருத்துவத் துறையில் பெரும் வளர்ச்சியை எட்டியிருந்த இங்கிலாந்திலேயே பெண்கள் மருத்துவம் பயில முடியாத சூழலில் சென்னைதான் அவருக்கு டாக்டர் பட்டத்தை தந்தது. 'மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப்', தன்னை மருத்துவராக்கிய சென்னைக்கு பதில் உதவி செய்வதற்காக திருவல்லிக்கேணியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையை தொடங்கினார். இது பெண் மருத்துவரால் பெண்களுக்காக தொடங்கப்பட்ட சிறப்பான  மருத்துவமனை என்பது ஒரு பெருமையான விஷயம்.

1912-ம் ஆண்டு இங்கு படித்த டாக்டர் முத்துலட்சுமி தான், அடையார் புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கினார். உலக அளவில் அதிகமான பெண் மருத்துவர்களை உருவாக்கிய ஒரே மருத்துவ கல்லூரி என்ற பெயரையும் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி பெற்றது. 1938-ம் ஆண்டு இந்த மருத்துவ கல்லூரியின் தலைமை பொறுப்பை டாக்டர் ஆற்காடு லட்சுமணசாமி ஏற்றார். இந்த மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற வெள்ளையர் அல்லாத முதல் இந்தியர் இவர் தான். இவர் எழுதிய மருத்துவப் புத்தகங்கள் இன்றும் லண்டன் பல்கலை கழகங்களில் நூலாக உள்ளன. இவரின் சிலை இன்றும் கல்லூரி வளாகத்தில் இருக்கிறது. 1897-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக ‘கம்பவுன்டர்’ என்ற மருத்துவ உதவியாளர் படிப்பை உருவாக்கியதும் இந்த மருத்துவக்கல்லூரிதான். 

முத்துலட்சுமி ரெட்டி

 

இவ்வளவு சிறப்பு மிக்க மருத்துவமனை, இன்று சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை என்ற பெயரில் சென்னையின் பெருமைமிகு அடையாளமாக இருக்கிறது. 350 ஆண்டுகளை கடந்து ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனையாக வளர்ந்திருக்கும் இந்த மருத்துவமனை பல லட்சம் உயிர்களை காப்பாற்றி கரைசேர்க்கும் உயிர் மையமாக விளங்கி வருகிறது என்றால் மிகையல்ல.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை யார் தெரியுமா??

 
 
 
 
 
599a6e8c469e9-IBCTAMIL.jpg
599a6e8c76667-IBCTAMIL.jpg
599a6e8ca5015-IBCTAMIL.jpg
599a6e8d1aeb4-IBCTAMIL.jpg

சமீபத்தில், ஹாலிவுட்டில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருந்தது. அந்தப் பட்டியலில் 28 வயதான நடிகை எம்‌மா ஸ்டோன் கடந்த ஆண்டில் 180 கோடி ருபாய் சம்பாதித்து முதலிடத்தில் உள்ளார்.

இவர்   "லா லா ‌லேண்ட், தி அமேஸிங் ஸ்பைடர் மேன், பேட்மேன்" படங்களில் நடித்தவர். 'லா லா லேண்ட்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.

தற்போது, 'ப்ரண்ட்ஸ்' தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை எம்‌மா ஸ்டோன், ஸ்மார்ட் வாட்டர், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் தூதுவராகவும் இருந்து வருகிறார்.

இவரை அடுத்து, நடிகை ஜெனிஃபர் ஆனிஸ்டன் இரண்‌டாமிடத்தில் இருக்கிறார்.

2016-ம் ஆண்டு இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜெனிஃபர் லாரன்ஸ் 24 மில்லியன் டாலர் சம்பாதித்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

சர்வதேச பட்டம் திருவிழா...

 

 

சர்வதேச பட்டம் திருவிழா...

 

 
தெரண ஊடக நிறுவனத்தின் "லோகய சக லோகயோ" நிகழ்ச்சிப் பிரிவினால் எற்பாடு செய்யப்பட்டுள்ள தெரண சர்வதேச பட்டம் விடும் திருவிழா இன்று காலி முகத்திடலில் இடம்பெறுகின்றது. நிகழ்வு உத்தியோகபூர்வமாக இன்று பகல் 01.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த திருவிழா 06 பிரிவுகளின் கீழ் இடம்பெறுகின்றது.

இதற்காக சுமார் 3000 வரையான போட்டியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

இம்முறை தெரண சர்வதேச பட்டம் விடும் திருவிழாவிற்கு சீனா, ஹொங்கொங், தென்கொரியா, பிலிபைன்ஸ், மலேசியா, செக் குடியரசு, அவுஸ்திரேலியா, மொரோக்கோ, பிரான்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் பல போட்டியாளர்கள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

http://tamil.adaderana.lk

  • தொடங்கியவர்

மெரினாவின் ஒருநாளை கேமராவுக்கு இரையாக்க வேண்டும் என தோன்றியிருக்கிறதா? #

 

'மெரினா  கடற்கரை'- தினம்தினம் கேமராவுக்குக் கவிதை சொல்லும் இடம். அங்கு காலை ஐந்தரை மணிக்கே சூரியன் வானைக் கிழித்துக்கொண்டு கதிர்களை அம்பிட ஆரம்பித்தது. காணும் திசையெல்லாம் கடற்கரை சாரல் உடலெங்கும் பிரவேசிக்க ஆரம்பித்தது. சோடிகளைக் கூவி அழைக்கும் குயில்களின் கானம் காற்றின் அலைவரிசையெங்கிலும் மிதக்க ஆரம்பித்தது. காலையில் நடைப்பயணம் செல்பவர்கள் குழந்தைகளைப்போல் தன் நிழலைத் தானே துரத்திக்கொண்டு ஓடி ஆடிய பின்பு இளைப்பாறி கடலின் ஆழத்தை ரசித்துக்கொண்டிருந்தனர்.

இப்படியான காட்சிகள் மெரினாவில் ஒருபுறம் என்றால் மறுபுறம் மெரினாவை தன் அன்றாட பிழைப்பாய் பார்ப்பவர்களுக்கு அன்று பொழுது விடிந்தாயிற்று... மீன்கள் கரையேறியாயிற்று... இனி வித்துத் தீர்க்க வேண்டியதுதான் மிச்சம் என மீன்களை கூறு போட ஆயத்தமானார்கள். கடல் என்ற சொல்லுடன் ஒன்றிப்பிறந்த சொல் காதலும்... காதலர்களும்... அதை விட்டுவிட்டு ஒருபோதும் மெரினாவை  வர்ணிக்க இயலாது. என்றும் போல அன்றும் காதலர்கள் சூழ் மெரினா தனது இயல்பை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. படகை அலைக்கு எதிர் திசையில் திருப்பும் மீனவர்கள், மீன் வியாபாரிகள், சாப்பாட்டுக் கடைக்காரர்கள், சுண்டல், கடலை, பொறி, சமோசா, வடை என பொட்டலம் போடும் சிறுவர்கள்,  டீ, காஃபி வியாபாரிகள் மற்றும்  கடலோடு உரையாடும் மனிதர்கள் என மெரினாவுக்கு நிறைய முகங்கள் உண்டு. இத்தனை முகங்களையும் தங்களின் கேமராவுக்கு இரையாக்க பிரயத்தனமானார்கள்  அந்தக் கேமராக்காரர்கள்.

அதிகாலைப் பொழுதிலிருந்தே அவர்களின் கேமரா வேட்டை ஆரம்பித்துவிட்டது. 'போட்டோ கான்செர்ஜ்' எனும் எட்டு பேர் கொண்ட குழு கடலையும் கடல் சார்ந்து இருக்கும் மக்களையும் புகைப்படம் எடுத்தனர். அங்கு வந்திருந்த புகைப்படக் கலையில் ஆர்வம் உள்ள இளைஞர்களுடன் புகைப்பட நுணுக்கங்களைப் பகிர்ந்துகொண்டனர். நேரம் செல்லச் செல்ல மெரினாவில் கூட்டம் கலய ஆரம்பித்தது. காலையில் மீன் விற்க வந்த மீன் வியாபாரிகள் அனைவரும் தங்களது வியாபாரத்தை முடித்துவிட்டு வீடு திரும்ப ஆரம்பித்தனர். அன்றைய நாள் மெரினாவில் பலர் விட்டுச்சென்ற தடயங்கள் யாவும் புகைப்படமாய் பதிவிடப்பட்டது. உலக புகைப்பட தினத்தை கொண்டாடும் விதமாக மெரினாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் யாவும் நொச்சிக்குப்பம் மீன் மார்க்கெட்டில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. மெரினாவின் ஒருநாள் நீக்கமற நினைவுகளையும், புகைப்பட அனுபவங்களையும் சுமந்தபடி புகைப்பட தின வாழ்த்துகளுடன் நிறைவுபெற்றோம். அன்றைய நாளில் கிளிக் செய்யப்பட்ட மெரினாவில் நினைவுகளில் சில கேமராவின் கண் வழியே இதோ...

WorldPhotographyDay

Caption: Aerial view of Nochi Kuppam

மெரினா

Caption: Fishermen setting out to into the sea 

Marina

Caption: Fishermen carrying their catch of the day to be sold at the Nochi Kuppan fish market

Marina Beach

Caption: Vendor displaying fresh squids for sale

Vendor

Caption: Fisherman transporting ice on his pedal cart

Beach View

Caption: Fishermen pulling their boat to the shore 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text

உலகின் அதிவேக மனிதன் உசைன் போல்டின் பிறந்தநாள் இன்று

ஜமைக்காவை சேர்ந்த இந்த மின்னல் வேக ஓட்ட வீரர்
ஒலிம்பிக் வரலாற்றில் மூன்று முறை 100m, 200m, 400m. போட்டிகளில் தங்கத்தை வென்று
வரலாற்று சாதனையை படைத்த வெற்றி வீரன் ஆகினார்.
அண்மையில் தனது ஓய்வினை அறிவித்த போல்ட்டின் துரதிர்ஷ்டம் தோல்விகளுடன் தான் அவரது இறுதி இரண்டு ஓட்டங்களும் நிறைவுபெற்றன.

மின்னல் மனிதர் உசைன் போல்ட்க்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Happy Birthday Usain Bolt

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

நடிகை சனா கான் இன்று பிறந்தநளைக் கொண்டாடுகிறார்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Happy Birthday Sana Khaan

  • தொடங்கியவர்

ஓய்வு கொண்டாட்டத்திற்காக பாரில் 5 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் செலவழித்த உசைன் போல்ட்

லண்டனில் ஓய்வு பெற்றதை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் பாருக்குச் சென்ற உசைன் போல்ட், 5 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார்.

 
ஓய்வு கொண்டாட்டத்திற்காக பாரில் 5 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் செலவழித்த உசைன் போல்ட்
 
உலகின் அதிகவேக ஓட்டப் பந்தய வீரர் என்று அழைக்கப்படுபவர் உசைன் போல்ட். 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4X100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முடிசூடா மன்னனாக விளங்கினார்.

சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர்தான் தன்னுடைய கடைசி ஓட்டம் என்று அறிவித்திருந்தார். இந்த ஓட்டத்தில் சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-வது இடமே பிடித்தார். 200 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொள்வில்லை. 4X100 மீட்டர் ஓட்டத்தில் காயம் காரணமாக டிரக்கிலேயே விழுந்தார்.

201708211947358588_1_usain-bolt-s._L_sty

மிகப்பெரிய சாதனைகளோடு விடைபெற நினைத்த அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. என்றாலும் தனது ஓய்வை நண்பர்களுடன் பாருக்கு சென்று ஜாலியாக கொண்டாடினார்.

இந்த கொண்டாட்டத்திற்காக அவர் 7030.23 பவுண்டு (சுமார் 5 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்) பில் கட்டியுள்ளார். ஏற்கனவே, தனது காதில் சாம்பைன்-ஐ ஊற்றியபடி ஒரு வீடியோவை வெளியிட்டு, ‘‘நான் இப்படித்தான் செய்வேன். என்னை யாரும் தவறாக நினைக்காதீர்கள்’’ என்று பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.