Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

உலகின் முதல் ஜெட்விமானம் 'ஹென்கல் ஹி 178' சேவை தொடங்கியது (27-8-1939)

 

ஜெர்மனியில் ஹென்கல் கம்பெனி முதல்முறையாக வேகமாக பறக்கும் ஜெட்விமானத்தை தயாரித்து பறக்க விட்டது. இதற்கு ஹென்கல் ஹி 178 எனப் பெயரிட்டது. இதை எரிக் வார்சிட்ஸ் என்ற விமானி ஓட்டிச் சென்றார். இதே தேதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1979 - அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவும் மற்றும் மூவரும் ஐ.ஆர்.ஏயின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டுவெடிப்பில்

 
 
உலகின் முதல் ஜெட்விமானம் 'ஹென்கல் ஹி 178' சேவை தொடங்கியது (27-8-1939)
 
ஜெர்மனியில் ஹென்கல் கம்பெனி முதல்முறையாக வேகமாக பறக்கும் ஜெட்விமானத்தை தயாரித்து பறக்க விட்டது. இதற்கு ஹென்கல் ஹி 178 எனப் பெயரிட்டது. இதை எரிக் வார்சிட்ஸ் என்ற விமானி ஓட்டிச் சென்றார்.

இதே தேதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1979 - அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவும் மற்றும் மூவரும் ஐ.ஆர்.ஏயின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டுவெடிப்பில் 18 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.

* 1982 - துருக்கி ராணுவ உயர் அதிகாரி அடில்லா அட்லிகாட் என்பவர் கனடாவின் ஒட்டாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1915-ம் ஆண்டில் 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கவே இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்மீனிய தீவிரவாதக் குழு இதற்கு உரிமை கோரியது.

* 1985 - நைஜீரியாவில் நிகழ்ந்த ராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட்டது.

* 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து மால்டோவா பிரிந்தது.

* 2000 - மொஸ்கோவின் ஒஸ்டான்கினோ கோபுரம் தீப்பற்றியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

* 2003 - செவ்வாய்க் கோள் பூமிக்கு மிகக் கிட்டவாக 55,758,006 கிலோமீட்டர் தூரத்துக்கு 60 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது.

* 2006 - அமெரிக்காவின் கென்டக்கியில் புளூகிராஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் தரையில் வீழ்ந்து நொருங்கியதில் 50 பேரில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

* 2006 - பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் நவாப் அக்பர் பக்டி ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

பிறப்புகள்

* 1770 - ஹெகல், ஜெர்மன் மெய்யியல் அறிஞர் (இ. 1831)

* 1876 - கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை,  (இ. 1954)

* 1908 - தண்டபாணி தேசிகர், கர்நாடக இசைப் பாடகர்

* 1942 - வலேரி பொல்யாக்கொவ், உருசிய விண்வெளி வீரர்

இறப்புகள்

* 1879 - ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் (பி. 1795)

* 1963 - டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ், ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமையாளர் (பி. 1868)

*  1965 - லெ கொபூசியே, சுவிட்சர்லாந்து கட்டிடக் கலைஞர் (பி. 1887)

* 1976 - முக்கேஷ், இந்தியப் பின்னணிப் பாடகர் (பி. 1923)

 

 

மவுண்ட்பேட்டன் பிரபு குண்டு வைத்து கொல்லப்பட்டார் (27-8-1979)

லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் 1900-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதி பிறந்தார். பர்மாவின் முதலாவது கோமகன் மவுண்ட்பேட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர். பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதியாகவும் விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுநராகவும்

 
 
மவுண்ட்பேட்டன் பிரபு குண்டு வைத்து கொல்லப்பட்டார் (27-8-1979)
 
லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் 1900-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதி பிறந்தார். பர்மாவின் முதலாவது கோமகன் மவுண்ட்பேட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர். பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதியாகவும் விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுநராகவும் இருந்தவர்.

மவுண்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் தனது விடுமுறையைக் கழிக்கும்போது ஐரிஷ் குடியரசு ராணுவத்தினர் அவர் பயணம் செய்த படகில் குண்டை வெடிக்க வைத்துக் கொன்றனர். இவருடன் மேலும் 3 பேர் இந்த குண்டு வெடிப்பில் பலியானார்கள்.

இதே தேதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1881 - புளோரிடாவில் ஏற்பட்ட சூறாவளி காற்றினால் 700 பேருக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

* 1883 – இந்தோனேசியாவில் கிரகட்டோவா எரிமலை வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36 ஆயிரம் பேர் பலியானார்கள்

* 1893 - ஐக்கிய அமெரிக்காவில் கடல் தீவுகளில் இடம்பெற்ற சூறாவளியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்.

* 1896 - ஆங்கிலோ- சன்சிபார் போர்: ஐக்கிய இராச்சியத்துக்கும் சன்சிபாருக்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் 19 நிமிடத்தில் (09:02- 09:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.

* 1916 - முதலாம் உலகப் போர்: ருமேனியா, ஆஸ்திரியா- ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. இது பின்னர் ஜெர்மனி, பல்கேரியப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டது.

* 1939 - உலகின் முதலாவது ஜெட் விமானம் Heinkel He 178 சேவைக்கு விடப்பட்டது.

* 1943 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் நியூ ஜோர்ஜியா தீவை விட்டு விலகினர்.

* 1952 - லக்சம்பேர்க்கில் மேற்கு ஜெர்மனிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நஷ்டஈடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ஜெர்மனி 3 பில்லியன் டொச்சு மார்க்கை நஷ்டஈடாகச் செலுத்த ஒப்புக் கொண்டது.

* 1957 – மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமலானது.

* 1962 - நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனஸ் நோக்கி செலுத்தியது.

* 1975 - போர்ச்சுக்கீசிய திமோரின் ஆளுநர் அதனாட்சியை கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு தலைநகர் திலியை விட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார்.

http://www.maalaimalar.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 வெளி உலக தொடர்பில்லாமல் வாழும் ஒரு "திகில்" தீவு! அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள்..

இந்தியாவின் அந்தமான், நிக்கோபர் அருகில் உள்ள சென்டினல் தீவில் மிகவும் பழமையான பழங்குடியினத்தவர் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்து அங்கு தொடர்ந்து வாழ்கின்றனர்.

மிகவும் அழகு நிறைந்த தீவு என்பதுடன் வெளியுலகத்தினருக்கு மிகவும் பாதுகாப்பு அற்ற தீவாகவும் உள்ளது.

இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின் மூச்சுக் காற்று கூட புக முடியாத அளவுக்கு இரும்புக் கோட்டையாக வடக்கு சென்டினல் தீவு இருக்கின்றது.

உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை என்று தான் கூற வேண்டும்.

 

பூமியில் நவீன நாகரீகத்தின் காலடி படாத ஒரே இடம் இதுதான் என்று கூறுகிறார்கள்.

வெளியுலக வாசிகளை இங்குள்ள மக்கள் தீவில் காலடி எடுத்து வைக்க அனுமதித்ததில்லை. யாரேனும் வந்தால் இவர்களின் ஈட்டி, வில் அம்புக்கு இரையாக வேண்டியதுதான்.

இந்த தீவில் இருக்கும் பழங்குடியினர் ஆபிரிக்காவில் இருந்து வெளியேறிய முதல் மனிதர்களின் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

இவர்களின் மொத்த சனத்தொகை பற்றிய அளவு இன்னும் தெரியவரவில்லை.

இந்த தீவில் இருக்கும் மக்கள் வெளிநாட்டவர்கள் யாரையும் உள்ளே விடுவதில்லை. கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் இந்த தீவு கடுமையாக தாக்கப்பட்டது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

அந்த சமயத்தில் இந்தியா அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அந்த விமானத்தை அம்புகளாலும், வேல்களாலும் தாக்க முயற்சி செய்துள்ளனர் . இதனால் உதவி செய்ய முடியாமல் மீண்டும் திரும்பி விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1896ஆம் ஆண்டு அந்தமான் சிறையில் இருந்து தப்பித்த கைதி ஒருவர் தவறுதலாக இந்த தீவுக்கு போயுள்ளார். அங்கு போன அந்த கைதியை இரண்டு நாட்களுக்கு பிறகு இறந்த நிலையில் பிணமாகத்தான் மீட்க முடிந்துள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இந்திய அரசாங்கம் பல வருடங்களாக இந்த மக்களை பற்றியும் இவர்களுடைய வாழ்க்கை முறை பற்றியும் தெரிந்து கொள்ள பலமுறை இந்த தீவுக்கு பரிசு பொருட்கள், தேங்காய் போன்ற உணவுப் பொருட்களுடன் சென்றுள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்து தான் திரும்பியுள்ளனர்.

கடந் 1974ஆம் ஆண்டு இந்த தீவைப் பற்றியும், இங்குள்ள மக்களைப் பற்றியும் தெரியப்படுத்த பல எச்சரிக்கைகளையும் மீறி அந்த தீவுக்கு ஒரு குழுவினர் சென்றுள்ளனர். ஆனால் அவர்களும் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் திரும்பி வந்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

1991ஆம் ஆண்டு ஆய்வு நடத்துவதற்காக சில ஆராய்ச்சியாளர்கள் அந்த தீவுக்கு சென்ற போது யாருமே எதிர்பார்க்காத முகமாக அந்த மக்களில் ஒரு பகுதியினர் முன் வந்து. ஆராய்ச்சி செய்யப் போனவர்களிடம் தொடர்பு கொண்டுள்ளனர்.

இது ஒரு பெரிய வெற்றியாக நினைத்த ஆய்வாளர்கள் இவர்களை பற்றி தெரிந்து கொள்ள மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக நம்பினர்.

ஆனால் 2006ஆம் ஆண்டு பழையது போலவே பிரச்சினைகள் தொடர அத்தீவை பற்றியும், அங்குள்ள மக்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்ய முற்றிலும் நிறுத்தி விட்டனர். அது அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகளாக மாறிவிட்டது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

யாரேனும் வந்தால் அவர்களை எதிரியாக மட்டுமே இங்குள்ள மக்கள் பார்க்கிறார்கள். எனவே தான் யார் வந்தாலும் எதிர்க்கிறார்கள், கொல்கிறார்கள்.

மேலும் வெளியுலக மக்களால் தங்களது கலாச்சாரம், இனம் பாதிப்புக்குள்ளாகும் என்பதாலும், அதைக் காக்கும் வகையிலுமே இவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கிறார்கள்.

அதன் பிறகு இத்தீவுக்கு வெளிநாட்டவர் யாரும் போக முடியாத தீவாக தடை செய்யப்பட்டது. இந்த தீவை பற்றிய மர்மங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

வெளியுலக நாகரீகம் இந்தத் தீவை தீண்டாமல் இருப்பதால் தான் இந்த மக்கள் இவ்வளவு காலமாக இங்கு தாக்குப் பிடித்துள்ளனர் என்று நம்பப்படுகிறது. இதுவே தொடரட்டும் என்று இந்திய அரசும் விட்டு விட்டது.

இருப்பினும் இந்த பூர்வகுடி மக்கள் இனம் காப்பாற்றப்பட வேண்டும், கற்கால மனிதர்களின் கடைசி சந்ததியான இந்த மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற அக்கறைக் குரலும் கேட்டபடியே உள்ளது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.png

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

 

http://www.tamilwin.com/

  • தொடங்கியவர்

நார்மன் ஃபோஸ்டர் ராம்சே

 
27CHRGNRAMSAY

அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் அறிஞரும், இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான நார்மன் ஃபோஸ்டர் ராம்சே (Norman Foster Ramsey Jr) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* வாஷிங்டனில் பிறந்தார் (1915). தந்தை ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர். பணி காரணமாக, குடும்பம் அடிக்கடி இடம் மாறியதால், ஆங்காங்கே பயின்றார். கான்சாசில் லீவன்வொர்த் பள்ளியில் முதலாவதாகத் தேறினார். கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் முதலாவதாகத் தேறி கணிதத்தில் பட்டம் பெற்றார்.

* இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். அங்கே எர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட் உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற பல விஞ்ஞானிகளின் விரிவுரைகளைக் கேட்கும் வாய்ப்பு பெற்றார். இவை இவருக்கு சோதனை இயற்பியலில் ஆர்வம் ஏற்பட வழிகோலின.

* 1940-ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். வாஷிங்டனில் உள்ள கார்னகி இன்ஸ்டிடியூட்டில் ஃபெலோவாக நியமிக்கப்பட்டார். அங்கே நியூட்ரான் - ப்ரோட்டான் மற்றும் ப்ரோட்டான்-ஹீலியம் சிதறல் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

* இரண்டாம் உலகப்போர் சமயத்தில், லாஸ் அலமோசில் அணுகுண்டு ஆய்வுக்கூடத்தில் நியமிக்கப்பட்டார். மின்காந்த கதிர்வீச்சு மற்றும் ரேடார் தொடர்பான இவரது ஆராய்ச்சிகளும் முனைப்புகளும் எதிரி விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிய உதவின. 1945-ல் கொலம்பியா திரும்பி, இயற்பியல் பேராசிரியராகத் தன் கல்விப் பணியைத் தொடர்ந்தார்.

* கல்விப்பணியுடன் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்தார். மூலக்கூறு மற்றும் நியூட்ரான் கற்றை ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். துல்லியமாக அணு ஹைட்ரஜன் ஹைபர்ஃபைன் தனித்துப் பிரித்தலுக்கான அடிப்படை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

* 1947-ல் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இணைந்தார். பின்னாளில் ‘ராம்சே முறை’ என்று குறிப்பிடப்பட்ட பிரிக்கப்பட்ட ஆஸில்லேட்டரி துறைகள் முறையைக் (separated oscillatory fields method) கண்டறிந்தார்.

* இந்தக் கண்டுபிடிப்பு, அணுக்கரு காந்த அதிர்வு ஆராய்ச்சிகள், தற்போது மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் எம்ஆர்ஐ நுட்பம் உள்ளிட்டவற்றுக்கு அடிப்படையாக இருந்தன. அனைத்துக்கும் மேலாக, இவரது இந்த முறை மிகத் துல்லியமான அணு கடிகாரங்கள் (accurate atomic clocks) மேம்படுத்தப்பட உதவியது.

* பல்வேறு மூலக்கூறுகள், மூலக்கூறுகளின் எண்ணிக்கை மற்றும் அணு சுற்றுகள், அணுகாந்த இருமுனை மற்றும் மின்சார குவாடர்போல் மொமன்ட்டுகள், மூலக்கூறுகள் சுழற்சி காந்த தருணம் உள்ளிட்ட அணுக்கருக்களின் பண்புகளை அளவிட இந்த முறைப் பயன்படுத்தப்பட்டது. 1960-ல் டேனியல் க்ளெப்னருடன் இணைந்து, மாறுபட்ட வகையிலான, ஹைட்ரஜன் மேஸர் என அறியப்படும் அணுக்கரு கடிகாரத்தைக் கண்டறிந்தார்.

* இந்தக் கண்டுபிடிப்புகளுக்காக 1989-ம் ஆண்டு, இயற்பியலாளர் ஹான்ஸ் ஜி. டெஹ்மால்ட்டுடன் இணைந்து, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். ‘எக்ஸ்பெரிமென்டல் நியூக்கிளியல் ஃபிசிக்ஸ்’, ‘நியூக்ளியர் மொமன்ட்ஸ்’, ‘மாலிக்யுலர் பீம்ஸ்’, ‘க்விக் கால்குலஸ்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

* இ.ஓ. லாரன்ஸ் விருது, டாவிசன் - ஜெர்மர் பரிசு, அமெரிக்க இயற்பியல் கழகத் தலைவர், மெடல் ஆஃப் ஹானர், ராபி பரிசு, ராம்ஃபோர்ட் பிரீமியம், காம்ப்டன் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு கவுரவங்கள், பரிசுகள், விருதுகளையும் பெற்றுள்ளார். இயற்பியல் துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய நார்மன் ஃபோஸ்டர் ராம்சே 2011-ம் ஆண்டு மறைந்தார்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஆம், அவர் பெயர் டான்! #HBDDonBradman

 
 

ண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம். பரம எதிரிகளான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி. ஆகஸ்ட் 14, 1948. அன்றைய நாளின் கடைசி ஆட்டம். ஆஸ்திரேலிய அணி 117 ரன்கள் எடுத்தபோது பர்ன்ஸ் 61 ரன்களுடன் அவுட் ஆகி வெளியேறுகிறார். மைதானம் ஆர்பரிக்க மூன்றாம் இடத்தில் விளையாட அந்த நபர் களத்தினுள் வேகமாக வருகிறார். ஆடுகளத்தை இரண்டு முறை தனது பேட்டால் தட்டிப் பார்த்துவிட்டு கிரீஸுக்குள் நின்று பந்தை எதிர்கொள்ளத் தயாராகிறார். லெக் ஸ்பின்னர் ஹோல்லிக்ஸ் Around the wicket-ல் இருந்து பந்தை வீசுகிறார். அதைத் தடுத்து விளையாடுகிறார். அதற்கே மைதானத்தில் ஆரவாரம். அடுத்த பந்தையும் அதே போல வீச, அது பேட்டின் உள்பகுதியை முத்தமிட்டு ஸ்டம்பைத் தொட்டது. ஒட்டுமொத்த மைதானமும் அதிர்ச்சியில் உறைந்தது. சின்னச் சத்தம்கூட இல்லை. எந்த அதிர்ச்சியையும் ஆவேசத்தையும் காட்டாமல் வந்ததுபோலவே திரும்புகிறார் அந்த வீரர். அனைவரும் எழுந்து நின்று கைதட்டி, அவருக்கு மரியாதை தருகின்றனர். இங்கிலாந்தில் ஆஸ்திரேலிய வீரருக்குக் கிடைத்த மாபெரும் விருது இது.

டான் பிராட்மேன் பிறந்த நாள்

அந்த மனிதன் இன்னும் நான்கு ரன்களை எடுத்திருந்தால், 7,000 ரன்களையும் நூறு என்ற சராசரியும் வைத்திருப்பார். அந்த நான்கு ரன்களுக்கு ஒரு Pull ஷாட்டோ, ஒரு ஃபிளிக்கோ, ஒரு கவர் டிரைவோ அல்லது கட் ஷாட்டோ அடித்திருந்தால் போதும். அவரிடம் அதற்கான திறமை உள்ளது என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. ஆனாலும் ஏனோ அந்த மனிதன் தனது கடைசி இன்னிங்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அப்போதும் சதம் அடித்ததற்கு இணையான பாராட்டுகளையும் பெற்றார். டக் அவுட்டான அதே நபர்தான், ஒரே நாளில் முன்னூறு ரன்கள் அடித்த ஜாம்பவான்.

1930-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு விளையாடச் சென்றிருந்தது ஆஸ்திரேலிய அணி. அந்தத் தொடரில் முதல் டெஸ்டில் 131, இரண்டாவது டெஸ்டில் 254 ரன்கள் என மெர்சல் காட்டி வந்த அவர், மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தைப் பிரித்து தொங்கவிட்டார். ஹேடிங்க்லியில் நடந்த அந்தப் போட்டியில் காலை உணவு இடைவேளைக்கு முன்னர் சதம், தேநீர் இடைவேளைக்கு முன்னர் இரட்டைசதம், அன்றைய நாள் முடியும்போது 309 ரன்களுடன் நாட் அவுட் என உச்சத்தைக் காண்பித்தார். ஒரே நாளில் 300 ரன்கள் இன்னும் யாராலும் தாண்ட முடியாத சாதனையாகவே உள்ளது. 

அவர் விளையாடுவதைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும். மற்ற பேட்ஸ்மேன்களிடமிருந்து வித்தியாசமானது. வேறு வகையில் நிற்பது, நடனமாடும் கால்கள், மின்னலின் வேகத்தில் தீர்மானித்தல், திடீரென ஷாட்டை மாற்றுவது, கூறிய பார்வை, ஓட்டப்பந்தைய வீரரைப் போன்று தயாரான செயல்பாடு என இவை எத்தனை பேட்ஸ்மேன்களுக்குச் சரியாக அமையும்? அவரின் செயல்படும் தன்மை பலரால் ஆராயப்பட்டது. அவர் வேகபந்தை எதிர்கொள்ளும்போது, பேட்டை இரண்டாம் ஸ்லீப்பிடமிருந்து கீழே கொண்டுவருவார். அப்படிக் கொண்டுவரும் சமயத்தில் பந்தின் நகர்தலுக்கு ஏற்ப விளையாடுவார். பலர் பந்தை வீசுவதற்கு முன்னரே என்ன வகையில் விளையாடப்போகிறோம் என, தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப  தீர்மானித்துவிடுவர். ஆனால், பந்திற்கேற்ப செயல்படுவதே அவருக்கு வெற்றியைத் தந்தது. அவர் விளையாடும் முறையை தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் சண்டி பெல் ``இயந்திரத்தன்மையுடையது, பந்து வீச்சாளரின் இதயத்தைப் பிளக்கக்கூடியது” என்கிறார்.

சச்சினுடன் பிராட்மேன்

அவர் விளையாடும் முறையை எங்கிருந்து கற்றுகொண்டார் எனத் தேடாதவர்கள் இல்லை. ஆனால், அவர் யாரிடமிருந்தும் இதைக் கற்றுக்கொள்ளவில்லை. தனிநபராக கோல்ஃப் பந்தையும் கிரிக்கெட் ஸ்டம்ப்பையும் வைத்துக்கொண்டு பயிற்சி செய்வார். சிறுவயதில் அவரின் வீட்டுக்குப் பின் பக்கம் வளைவான சுவர்கொண்ட தண்ணீர்த்தொட்டி இருந்தது. அந்தச் சுவரில் பட்டுவரும் பந்து வேகமாகவும், கணிக்க முடியாத திசையிலும் வரும். அந்த இடத்தில் பயிற்சிசெய்வார். இந்தப் பயிற்சி, வேகமாக ஸ்விங் ஆகும் பந்துகளுக்கு எதிராக சிறந்த ஷாட்களை விளையாட உதவியது. விளையாடச் சென்ற பிறகும்கூட வருமானத்துக்கு தரகராக வேலை பார்த்துக்கொண்டே விளையாடிவந்தார். அவரின் வித்தியாசமான விளையாட்டு முறைகளில் குறைகள் இருப்பதைக் கண்டறிந்து, அதற்கு எதிராக வெற்றியும் பெற்றார்கள்.

1932-ம் ஆண்டில் டக்லஸ் ஜார்டின் என்பவர் தலைமையில், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்குப் பயணப்பட்டது. அப்போது தனது அணியில் உள்ள வேகபந்து வீச்சாளர்களை `பாடிலைன்' என்ற யூகத்தைப் பயன்படுத்தச் சொன்னார். உயர எழும்பி, உடலை நோக்கிவரும் பந்துகளை எதிர்கொள்வது கடினம். கொஞ்சம் அசந்தாலும் பெரியதாக அடிவாங்க நேரிடும். ஆஸ்திரேலிய கேப்டன் பில் வோட்புல் இதயத்தில் அடிவாங்கினார். வேறு ஒருவரின் மண்டை ஓடு உடைந்தது. இந்த மாதிரியான பந்துகளை விளையாடுவதை நமது நாயகன் தவிர்த்துவந்தார். ஆனாலும் இடதுகையில் ஓர் அடியை வாங்கிவிட்டார். இந்தத் தொடரில்கூட அவரின் சராசரி 56.57.

அவரின் காலத்தில் இந்த ஒரே ஒரு தொடரை மட்டுமே ஆஸ்திரேலிய அணி இழந்தது. இன்ப்ளுன்சா நோயால் தாக்கப்பட்டபோதும் மெல்பர்னில் நடந்த டெஸ்டில் 375 பந்துகளில் 270 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்குக் காரணமானார். 1941-ம் ஆண்டில் அவர் தசைகளில் ஏற்படும் ஒருவகை வியாதியால் பாதிக்கப்பட்டு, தனது வலதுகையின் ஆள்காட்டி மற்றும் கட்டைவிரல்களில் உணர்வை இழந்தார். இவைபோல் ஆயிரம் வந்தாலும் அந்த மனிதனின் ஆட்டம் குறைந்ததாகத் தெரியவில்லை. அவர் விளையாடிய 20 ஆண்டுகளில் வெறும் 50 டெஸ்ட் போட்டிகளே விளையாடப்பட்டன. அவற்றுள் இங்கிலாந்து அணியுடன் மட்டும் 37 போட்டிகளில் விளையாடி  5,028 ரன்களைக் குவித்துள்ளார். இந்தியாவுடன் ஐந்து போட்டிகளில் 715 ரன்களும், தென் ஆப்பிரிகாவுடன் ஐந்து போட்டிகளில் 806 ரன்களும், மேற்கிந்திய தீவுகளுடன் ஐந்து போட்டிகளில் 447 ரன்களும் அடித்துள்ளார். ஒரேயொரு போட்டியில் மட்டுமே 12-வது நபராக உட்காரவைக்கப்பட்டார். ஒருமுறை மட்டுமே ரன் அவுட் ஆகியுள்ளார்.

களமிறங்கும் டான் பிராட்மேன்

 

இவர் கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமல்ல, இசைத் துறையிலும் தலைசிறந்தவர். பியானோ வாசிப்பதில் வல்லவரான  இவர், சொந்தமாக பாடல்கள் இயற்றியுள்ளார். கிரிக்கெட்டில் அதிகபட்ச சராசரியான 99.94 இவரின் வசம் இருந்தது; இவரின் வசமே இன்றும் இருக்கிறது என்பதே அவருடைய ஆட்டத்தின் பிரமாண்டத்தைச் சொல்லும். அவரின் 90-வது பிறந்த நாள் நிகழ்வில் அவரிடம், சச்சின் ``இப்போது விளையாடினால் உங்கள் சராசரி என்னவாக இருக்கும் டான்?” என்று கேட்டதற்கு ``70” என அந்த ஜாம்பவானிடம் இருந்து பதில் வந்தது. ``ஏன் இவ்வளவு குறைவாகச் சொல்கிறீர்கள்?” என்றதற்கு, ``கம்மான், 90 வயதில், 70 சராசரி என்பது ஒன்றும் குறைவானது இல்லையே?” என்றார் கிரிக்கெட்டின் டான்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

முடங்கிய பேஸ்புக்... ட்விட்டரில் செய்தி தட்டிய மார்க்!

 

மூக வலைதளங்களில் மிக முக்கிய இடம், பேஸ்புக் -க்கு உண்டு. பேஸ்புக் இன்று சாதாரண மனிதனின் சட்டை பைகளில் மிக சுலபமாக உலவுகிறது. உலக அளவில் பேஸ்புக் ஏற்படுத்திய தாக்கம் மிக பெரியது. பலரது நாள்கள் தொடங்குவதும் தூங்குவதும் பேஸ்புக்கில்தான். 

ட்வீட்

இப்படிபட்ட பேஸ்புக்  இல்லை என்றால் எப்படி இருக்கும். இன்று சில மணி நேரம் அப்படி ஒரு நிகழ்வு நடந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இன்று பேஸ்புக்கில்  நுழைய முடியாமல் தவித்தனர்.  சிலருக்கு பேஸ்புக் நிறுவனத்தின் இருந்து இன்னும் சிறிது நேரத்தில் சரி செய்யப்படும் என்ற தகவல் அனுப்பட்டது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க், தனது ட்விட்டர் பக்கத்தில், "பேஸ்புக்  இணையதளம் சிறு தடங்களில் உள்ளது. எங்கள் பொறியாளர்கள் சரி செய்யும் முயற்சியில் உள்ளனர். விரைவில் சேவை தொடரும்" என்று ட்வீட் தட்டினார். 

சிறிது நேரம் கழித்து பேஸ்புக் சிக்கல்கள் களையப்பட்டு, பேஸ்புக் வழக்கம்போல் செயல்பட்டது. 

 

மேவெதர் புதிய உலகச் சாதனை!

தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டிகளில் தொடர்ச்சியாக 50 போட்டிகளில் வென்று அமெரிக்க வீரர் ஃபிளாயிட் மேவெதர் புதிய சாதனை படைத்தார். 

DINk-EMUIAA-3Ri_12444.jpg


அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த போட்டியில் அயர்லாந்து வீரர் கனோர் மெக்கிரிகோரை அவர் எதிர்கொண்டார். குத்துச்சண்டை வரலாற்றில் மிகப்பெரும் போட்டிகளில் ஒன்றாக இந்த போட்டி கருதப்பட்டது. 40 வயதான மேவெதர், இதுவரை பங்கேற்ற 49 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்தவர்.

கடந்த 2015-ம் ஆண்டில் ஓய்வுபெறுவதாக அறிவித்த அவர், ஓய்வு முடிவைக் கைவிட்டு மீண்டும் குத்துச்சண்டை களத்தில் இறங்கினார். அதனால், மேவெதர் - மெக்கிரிகோர் இடையிலான போட்டி உலக அளவில் குத்துச்சண்டை ரசிகர்களால் உற்றுநோக்கப்பட்டது. லாஸ்வேகாஸ் நகரின் டி-மொபைல் அரீனா மைதானத்தில் நடந்த இந்த போட்டியைக் காண முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன் உள்ளிட அமெரிக்காவில் பிரபலங்கள் பலரும் நேரில் வந்திருந்தனர்.

போட்டியின் தொடக்கத்தில் சிறிது தடுமாறினாலும், பின்னர் சுதாரித்த மேவெதர், டெக்னிக்கல் நாக் அவுட் முறையில் 10ஆவது சுற்றில் மெக்கிரிகோரை வீழ்த்தினார். தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் மேவெதரின் தொடர்ச்சியான 50ஆவது வெற்றி இதுவாகும். இதன்மூலம், தொடர்ச்சியாக 49 வெற்றிகளைப் பதிவு செய்திருந்த முன்னாள் உலகச் சாம்பியன் ராக்கி மார்சியானோவின் சாதனையை அவர் முறியடித்தார். 

 

 

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்றார் சாய்னா!

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், சாய்னா நேவால் வெண்கலப்பதக்கம் வென்றார்.

சாய்னா நேவால்

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்றில், இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் பி.வி. சிந்து வெற்றி பெற்றிருந்தனர். இதையடுத்து, இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னாவும், ஜப்பான் நாட்டின் நசோமி ஒக்குஹாராவும் மோதினர்.


விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் செட்டை சாய்னா கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் சாய்னா கடுமையாக போராடினார். ஆனால், அந்த செட்டை நசோமி கைப்பற்றினார். அதேபோல, மூன்றாவது செட்டையும் நசோமி தன் வசப்படுத்தினார். இதனால், 21-19 18-21 21-15 என்ற செட் கணக்குகளில் சாய்னா தோல்வியடைந்தார்.


இதன் மூலம் சாய்னா நேவால், வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனார். உலக சாம்பியன்ஷிப்பில், சாய்னா பதக்கம் வெல்வது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே, அவர் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மற்றொரு அரையிறுதியில் சிந்து, சீனாவின் சென் யூஃபியுடன் மோத உள்ளார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அனல் கக்கும் பாலைவனத்தில் “மண் மூட்டை” வீடு கட்டும் பெண்... ஏன்?

கண்கள் கொஞ்சம் கஷ்டப்படத்தான் செய்யும். அந்த அனலில் கண்களைத் திறக்கவே முடியாதுதான். மீறிப் பார்த்தாலும் கூட, அது வெறும் கானல் நீராகத்தான் தெரியுமே தவிர பார்வையில் தெளிவிருக்காது. அத்தனை வெப்பம். அத்தனை அனல். அவ்வளவு வெயில். இது அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் மொஜாவ் (Mojave) பாலைவனம். கொஞ்ச நேரம்... அனல் கண்களுக்குப் பழகிவிடும். இப்போது கண்களை விரித்து, திறந்துப் பாருங்கள். ஒத்தையில் ஒரு பெண்மணி... என்ன செய்துகொண்டிருக்கிறார் அவர்?

பாலைவனத்தில் மண் வீடு கட்டும் பெண்

ஒரு நீளமான வெள்ளை நிற சாக்குப்பையை எடுக்கிறார். அதில் மண்ணை இட்டு நிரப்புகிறார். அந்தப் பையை தைக்கிறார். அதைக் கொண்டு போய் ஏற்கெனவே அடுக்கப்பட்டிருக்கும் பைகளுக்கு மேல் வைக்கிறார். அதன் மேல், ஒரு நீளமான வயரை ஒட்டுகிறார். பின்னர் மீண்டும் வேறு பையை எடுத்து அதே வேலைகளைச் செய்கிறார். இவர் கட்டிக் கொண்டிருக்கும் முறையின் பெயர் "சூப்பர் அடோப் " (Super Adobe). உலகில் உள்ள அனைவரும் தங்களுக்கான சொந்த வீட்டை தாங்களாகவே கட்டிக்கொண்டு வாழவேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் கட்டட முறையை அறிமுகம் செய்தார் நதேர் கலீலி எனும் இரானிய - அமெரிக்க கட்டட கலைஞர். இது முழுக்க முழுக்க இயற்கைக்கு உகந்த கட்டடம். பூகம்பம், வெள்ளம் என இயற்கைப் பேரிடர்களை தாங்கி நிற்கக் கூடியது. அப்படி இயற்கையான முறையில், கலீலியிடம் படித்த முறையை வைத்துதான் இந்த வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறார் இந்தப் பெண்மணி. இந்தப் பெண்ணின் பெயர் லிண்ட்சே ஆண்டர்சன் (Lindsey Andersen). அவர், தான் கட்டும் கட்டடத்துக்கு வைத்திருக்கும் பெயர்  "வொண்டர் டூம் " (Wonder Dome).

பாலைவனத்தில் மண் வீடு கட்டும் பெண்

லிண்ட்சே அடிப்படையில் ஒரு கலைஞர். கலை மீது பேரன்பு, பெருங்காதலும் கொண்டவர். ஒரு நடிகையாக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக நியூயார்க்கிலும், லாஸ் ஏஞ்சலீஸிலும் பரபரப்பாகச் சுழன்று வேலை செய்துகொண்டிருந்தவர். அந்த நகரங்களில் வாழ... அல்ல பிழைக்க அதிகப்படியான பணம் அவருக்கு தேவைப்பட்டது. கலையை பேரன்போடு நேசித்தவருக்கு, அந்தக் கலையை மட்டுமே கொண்டு பணம் செய்யும் மனம் இல்லை. அதனால், அவர் அதைச் செய்யவில்லை. இருந்தும் அந்த நகரம் அவரிடம் கேட்டது பணத்தை மட்டுமே. தன் கலைத் தாகம் தீர்க்கும் வேலையை முடித்துவிட்டு கிடைக்கும் ஒவ்வொரு நொடியிலும் பார் டெண்டராக, ஹோட்டல் சப்ளையராக, வரவேற்பாளராக கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து அந்த நகர வாழ்வு கேட்ட பணத்தை சம்பாதித்துக் கொண்டேயிருந்தார். இந்தத் தேடல், கலை மீதான அவர் காதலை குறைக்கச் செய்தது. இதெல்லாம் நடக்க 15 வருடங்கள் ஆகிவிட்டன. அந்த பதினைந்து வருடங்களை அவர் திரும்பிப் பார்த்தபோது, பெரும் வெறுமை சூழ்ந்திருந்தது. கொஞ்சம் நிதானித்தார். கொஞ்சம் மெதுவாக நடந்தார். கொஞ்சம் உட்கார்ந்தார். நிறைய யோசித்தார்...

பாலைவனத்தில் மண் வீடு கட்டும் பெண்

“நாம் இங்கு எதை தேடி வந்தோம்? ஆனால் எதை தேடிப் போகிறோம்? நம் தேடல், நம் திருப்தி, நம் மகிழ்ச்சி, நம் கலை இங்கு இல்லை. அது இல்லாத இடத்தில் தொடர்ந்து இருந்து நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? இனியும் இந்த நகரம் எனக்கு வேண்டாம். இனியும் இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்.” இந்த முடிவை எடுத்த லிண்ட்சே அந்த நகரை விட்டுப் புறப்பட்டார். 

பாலைவனத்தில் மண் வீடு கட்டும் பெண்

தன்னிடமிருந்த அனைத்துப் பொருள்களையும் விற்று காசாக்கினார். அந்தக் காசைக் கொண்டு 1975-ம் வருட மாடல் வின்னிபேகோ எனும் மினி வேனை வாங்கினார். அதையே தன் வீடாக மாற்றி பயணிக்கத் தொடங்கினார். அந்தப் பயணத்தில் “சூப்பர் அடோப்” வீடுகளைப் பற்றி படித்தார். பயணம் தொடர்கிறது. கடுமையான பாலைவனத்தில் தனக்கு 5 ஏக்கர் நிலமாக இருப்பதாகவும், அங்கு யாரும், எதையும் செய்ய முடியாது என்பதாலும் அந்த நிலத்தை சொற்ப பணத்துக்கு லிண்ட்சேவுக்கு விற்கிறார் அவரின் நண்பர். லிண்ட்சே தனக்கான வாழ்வின் பாதை கிடைத்துவிட்டதாக உணர்கிறார். தன் கனவை, நனவாக்க வேலைகளைத் தொடங்குகிறார்.

பாலைவனத்தில் மண் வீடு கட்டும் பெண்

வொண்டர் டூம்களை கட்டத் தொடங்கியுள்ளார். இந்த டூம்கள் உலக கலைஞர்களுக்கானது. இங்கு வரும் கலைஞர்கள் இந்த டூம்களில் தங்கி கதை எழுதலாம், நடிப்புப் பழகலாம், அனிமேஷன் செய்யலாம், வரையலாம், சிலைகளை செதுக்கலாம்... இப்படியாக எந்த வேலையையும் செய்யலாம். பணம் இருப்பவர் பணம் கொடுக்கலாம். பணம் இல்லாதவர் அதற்கு ஈடாக ஏதேனும் பொருளையோ, சேவையையோ தரலாம். கலையை கலையாக மட்டுமே ரசிக்கலாம். 

பாலைவனத்தில் மண் வீடு கட்டும் பெண்

 

தன்னந்தனியாக லிண்ட்சே அந்த வெயிலில் ஆரம்பித்த இந்த வேலைக்கு இன்று உலகளவில் ஆதரவு கிடைத்துள்ளது. பலரும் லிண்ட்சேவை சந்திக்க  அந்தப் பாலைவனத்துக்குச் செல்கிறார்கள். லிண்ட்சேவோடு இணைந்து வேலைசெய்கிறார்கள். தான் வாழ ஆசைப்பட்ட வாழ்வை தன் செல்லப் பூனை "ஃப்ளாட் புஷ்"ஷோடு இணைந்து அத்தனை மகிழ்ச்சியாய், உண்மையாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார் லிண்ட்சே. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள புகைப்படத் திருவிழா

 

நியூ யார்க் நகரில் நடைபெற்ற புரூக்ளின் போட்டோவில் புகைப்படத் திருவிழாவில் 75-க்கும் அதிகமான புகைப்படக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளைப் பார்வைக்கு வைத்திருந்தனர். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

உடல் பருமனுடைய இளம் பெண்

அப்பி டிரைலர் - ஸ்மித்தின் இளம் வயது உடல் பருமன் குறித்த புகைப்படத்தின் ஒரு படம் இது. ஒல்லியாக இருப்பதே அழகு என்று நினைக்கும் சமூகத்தில் பருமன் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களை அவரது புகைப்படங்கள் விளக்குகின்றன.

ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும் பனிக் கரடிகள்JOSH HANER

புரூக்ளின் பாலத்தின் கீழே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கப்பல் சரக்கு பெட்டகங்களில் இந்தப் புகைப்படக் கண்காட்சி நடைபெறும். பருவநிலை மாற்றத்தால் அலாஸ்காவில் பணி உருகி வருவதால், தங்கள் வாழ்விடங்களை இழந்து ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும் பனிக் கரடிகள் இருப்பதைக் காட்டும் ஜோஷ் ஹேனர் எடுத்த படம்.

 

புகைப்படத்துடன் குழந்தை

நேஷனல் ஜாகரஃபி இதழின் 'பாலின புரட்சி' பதிப்பிற்கு லின் ஜான்சன் எடுத்த படங்களில் ஒன்று. பெண் புகைப்படக் கலைஞரான அவர் அமெரிக்கா, ஜமைக்கா, டோமினிக் குடியரசு மற்றும் சமோவா ஆகிய நாடுகளில் தங்கள் பாலின அடையாளங்களை பகிர்ந்து கொண்டவர்களை படமாக்கினார்

 

ஒரு வெனிசுவேல குடும்பம்.

காலியாக உள்ள தங்கள் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியின் அருகில் இருக்கும் ஒரு வெனிசுவேல குடும்பம். அந்நாட்டை பாதித்துள்ள மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியை மெரிடித் கொஹுட் தன் படங்கள் மூலம் பதிவு செய்கிறார்.

 

பணியில் சேரும் கருப்பினப் பெண்களை

கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறி பணியில் சேரும் கருப்பினப் பெண்களையும், அவர்கள் பெருநிறுவங்களின் பணிச் சூழலில் தங்களை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் எண்டியா பீலின் புகைப்படங்கள் விளக்குகின்றன

 

லைபீரியாவில் உள்ள பெண்கள்

யாகாஸீ எமெஸீ லைபீரியாவில் உள்ள பெண்கள் தங்கள் உடலைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்தார். அவரிடம் 19 வயது எமிலி, "இந்த உடலைக் கொடுத்ததற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். முதலில் உங்களை நீங்களே நேசிக்க வேண்டும். பிறரைக் குறை கூறுவதற்கு முன் உங்களைப்பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும்," என்று கூறினார்.

படங்கள் அங்குள்ள பெண் தொழில் முனைவோரைக் கொண்டாடுகின்றன.

சில்வியன் செர்க்காவோய் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெண்களைப் படம் பிடித்தார். கலாசார கட்டுப்பாடுகள், பாகுபாடு காட்டும் சட்டங்கள் மற்றும் ஊதிய பாகுபாடுகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண்கள், அக்கண்டத்தின் வளர்ச்சியை அதிகரிக்க முக்கியமானவர்கள் என்கிறார் அவர். இந்தப் பெண் புகைப்படக் கலைஞரின் படங்கள் அங்குள்ள பெண் தொழில் முனைவோரைக் கொண்டாடுகின்றன.

'லாஸ்ட் ரோல்ஸ் அமெரிக்கா' திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்டது

எடுத்தவரின் பெயர் குறிப்பிடப்படாத இந்தப் படம் பழைய புகைப்படச் சுருள்களை சேகரிக்கும் 'லாஸ்ட் ரோல்ஸ் அமெரிக்கா' திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்டது. போட்டோவில் புகைப்படத் திருவிழா புரூக்ளின் பிரிட்ஜ் பூங்காவில் வரும் செப்டம்பர் 13 முதல் 24 வரை நடக்கவுள்ளது

http://www.bbc.com

  • தொடங்கியவர்

கிளிக் தொழில்நுட்ப காணொளி

தானியங்கி கொலைகார ரோபோக்கள் உருவாக்குவதை தடுக்க எழுந்துள்ள கோரிக்கை, புதிய நோட் 8 கைபேசியை வெளியிட்டுள்ள சாம்சங், கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் ஏழாவது பருவத்தின் இறுதி நிகழ்ச்சியை இணையத்தில் கசிய விடுவோம் என்று, மிரட்டியுள்ள இணைய ஊடுருவிகள், இறுதிச்சடங்கு சேவைகளை செய்யும் ஜப்பான் ரோபோ உள்ளிட்டவை அடங்கிய காணொளி.

 

  • தொடங்கியவர்

பிரெய்லி புத்தகம் தெரியும்... காடு தெரியுமா!? - அமெரிக்கச் சிறுவனின் நச் ஐடியா

 
 
 

சில நிமிடங்கள் கண்களை மூடி உட்காருங்கள். சுற்றியிருக்கும் சத்தங்களை மட்டுமே கேளுங்கள். மெதுவாக எழுந்து நடக்க முயலுங்கள். சிரமமாகத் தானிருக்கும். இருந்தும் தொடர்ந்து முயன்று முன்னேறுங்கள். எதிர்வரும் பொருட்களை தொடுதலின் மூலம் உணருங்கள். சில நிமிடங்களை, சில மணி நேரங்களாக தொடர முயற்சியுங்கள். பெரும்பாலானவர்களால் முடியாது. ஆனால், பார்வையற்றவர்களின் உலகம் இப்படித் தானிருக்கும். 

பார்வையற்றவர்கள் உணரும் காடு

இது சில நாட்களுக்கு முன்னர் நடந்தது. சென்னை தான். பார்வையற்ற ஓர் இளம்பெண் சாலையைக் கடக்கிறார். பெரும்பாலான வண்டிகள் வேகத்தைக் குறைத்துவிட்டன. சாலையோரம் நிற்பவர்களின் அத்தனைக் கண்களும் அந்தப் பெண்ணின் கண்களையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அது ஒரு அரசு வாகனம். சாம்பல் நிற பொலீரோ. அவருக்கு என்ன அவசரம் என்று தெரியவில்லை. கண்மூடித்தனமான வேகத்தில் வந்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளைக் கண்ணை மூடிக் கொண்டுதான் வந்துக் கொண்டிருந்தாரோ என்று தெரியவில்லை. கண் பார்வையில்லாமல் வந்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை அத்தனை வேகத்தில் நெருங்கியது பொலீரோ. ஒரு நொடி தான்... அந்தப் பெண்ணைத் தவிர அத்தனைப் பேரின் கண்களும் அந்த விபரீதத்தைப் பார்க்க கூடாது என்ற எண்ணத்தில் இறுக மூடிக் கொண்டன. அந்த நொடியில் அந்த மனிதனின் மனிதாபிமானமா அல்லது அந்த பொலீரோவின் "பொலீரோபிமானமா" என்று தெரியவில்லை. அந்த வண்டி சற்று வளைந்துச் சென்றது. அந்தப் பெண்ணின் அந்த அலுமினியக் குச்சியை உரசிக் கொண்டு சென்றது. அந்தப் பெண்ணின் உருண்டை முகம் ஒரு நொடி அத்தனை அச்சத்தை வெளிப்படுத்தியது. பலரும் அவர் அருகே ஓடிப்போனார்கள். அவரை ஆசுவாசப்படுத்த முயற்சித்தார்கள். ஆனால், அவர் அத்தனை அதிர்ச்சியடையவில்லை. மெல்லிய புன்சிரிப்போடு மெதுவாக நடக்கத் தொடங்கினார். தன் வாழ்க்கை அது தான் என்பது அவருக்குத் தெரியும். இதைப் பார்த்த நானும், நாங்களும் அதைக் கடந்தோம்.

பார்வையற்றவர்கள் உணரும் காடு

இப்படியான ஒரு சம்பவத்தை அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், சில ஆண்டுகளுக்கு முன்னர்  பார்க்கிறான் 11 வயது சிறுவன் இவான் பர்னார்ட்.  அவனை பாதித்த அந்தச் சம்பவத்தின் பொருட்டு அவன் செய்த விஷயங்கள் இன்று உலக கவனத்தை ஈர்த்துள்ளது. 
ஜார்ஜியா மாகாணத்தில் ரோம் ( இத்தாலி ரோம் அல்ல )  என்று ஒரு பகுதி உள்ளது. அங்கு பார்வையற்றவர்கள் மரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், மரங்களை, செடிகளை, கொடிகளை, இலைகளை உணரவும் ஓர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு "ப்ரெய்ல் நேச்சுரல் ட்ரையல்" ( Braille Natural Trail ) என்று பெயர். 1967ல் அறிவியல் ஆசிரியர் பாப் லூயிஸ் என்பவரால் இது ஆரம்பிக்கப்பட்டது. ஒரு காட்டை ஒட்டியப் பகுதியில் கயிறு கட்டப்பட்டிருக்கும். அதைப் பிடித்தபடியே பார்வையற்றவர்கள் நடக்க வேண்டும். ஒரு மரத்தை அடைந்தபின் அங்கு ப்ரெய்லி மொழியில் எழுதப்பட்டிருக்கும் பலகையை அவர்கள் படிக்கலாம். அந்த மரம் குறித்த தகவல்கள் அதில் பொறிக்கப்பட்டிருக்கும். மேலும், மரங்களைக் கட்டிப்பிடித்து அதை உணரலாம். எந்தத் தடைகளுமன்றி, தொந்தரவுகளுமன்றி அந்தக் காட்டில் இயற்கையோடு இயைந்தபடி அவர்கள் உலவலாம். இது தான் இதன் நோக்கம். ஆனால், இந்த முன்னெடுப்பு சரியான வெற்றியைத் தரவில்லை. 

பார்வையற்றவர்கள் உணரும் காடு

தன்னுடைய 11 ஆவது வயதில் இதைப் பார்த்த இவானுக்கு இது பெரும் கவலையைக் கொடுத்தது. பார்வையற்றவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று விரும்பினான் அவன். தன் பெற்றோரையும், நண்பர்களையும் கலந்தாலோசித்தான். அந்தப் பகுதியை சீரமைத்தான். புதிய கயிறுகளை வாங்கி அந்தப் பகுதியில் கட்டினான். ஆனால், இரண்டே நாள்கள்தான். ஒரு மர்மக் கும்பல் அந்தப் பகுதியை சூறையாடியது. அந்தக் கயிறுகளை திருடிக் கொண்டு போனார்கள். அங்கிருந்த பலகைகளை உடைத்துப் போட்டனர். கவலையில் கண்ணீர் விட்டு அழுதான் இவான். சிறுவன் தானே அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்க முடியவில்லை. பின்பு, சில நாள்களில் மீண்டும் அந்தப் பகுதியின் புனரமைப்பு வேலைகளைத் தொடங்கினான். 

பார்வையற்றவர்கள் உணரும் காடு

இவான் பர்னார்ட்

அந்தப் பகுதியில் இவானின் முயற்சி பெரிதாக பாராட்டப்பட்டது. பார்வையற்றவர்கள் வரத் தொடங்கினார்கள். அவர்களுக்கு அந்த இடம் ஒரு சொர்க்கமாக இருந்தது. இது தொடர்பாக www.braillenaturetrail.com எனும் வலைதளத்தை தொடங்கினான். உலகம் முழுக்க பார்வையற்றவர்களுக்காக இது போன்ற பூங்காக்களை அமைக்க வேண்டுமென்பது அவனின் எண்ணம். இன்று இவானுக்கு 19 வயது. இன்று உலகம் முழுக்க 6 கண்டங்களில், 35 நாடுகளில், 200 பிரெய்ல் பூங்காக்கள் இருக்கின்றன. 

பார்வையற்றவர்கள் உணரும் காடு

கருப்பைத் தவிர வேறு நிறத்தை அறிந்திராத ஒரு பெருங் கூட்டம், இந்தப் பூங்காக்களில் பச்சையை முகர ஆரம்பித்திருக்கிறார்கள்...

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

உலகின் மிகக் கொடூரமான மாரத்தான் ஓட்டப்பந்தயம் இது..!

 
 

" அந்த ஆள் ஒரு கொடூரன்..."

" அவன் ஒரு சைக்கோ..."

" அவர் மிகச் சிறந்த மனிதர்.."

" அவர் தான் செய்வதைத் தெரிந்தே செய்கிறார்..."

" இவனைப் போல் ஒரு மோசமானவைப் பார்த்ததேயில்லை"

" இவர் ஒரு குழந்தை. தூய மனம் படைத்தவர் "

" திமிர் பிடித்தவன்"

" நியாயமான மனிதர்..."

உலகின் கொடூர ஓட்டப்பந்தயம்

இப்படியான அனைத்து வசைகளுக்கும், பாராட்டுகளுக்கும் கேரி லாஸ் கென்ட்ரெல் ( Gary  Laz Centrell ) கொடுக்கும் பதில் ஒன்று தான். அது அவரின் அடர் மீசை, தாடிக்குள் பொதிந்து இருக்கும் புன்சிரிப்பு. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இப்படியான வசைகளையும், பாராட்டுக்களையும் இவர் பெறுவதற்கான காரணமாக இருப்பது, இவர் ஆரம்பித்த  " பார்க்லே மாரத்தான் " ( Barkley Marathon ) எனும் மாரத்தான் போட்டி தான். 

பார்க்லே அத்தனை சாதாரண மாரத்தான் போட்டி கிடையாது. கடுமையான உடல்  உறுதியும், மிகக் கடுமையான மன வலிமையும் தேவைப்படும் ஒரு போட்டி. இதை லாஸ் ஆரம்பித்த வருடம் 1986. ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கெடுக்க முடியும். இந்த 31 ஆண்டுகளில் போட்டியை முழுதாக நிறைவு செய்தவர்கள் மொத்தம் 18 பேர் மட்டுமே. 

உலகின் கொடூர ஓட்டப்பந்தயம்

அப்படி என்ன கஷ்டத்தைக் கொடுக்கும் இந்தப் போட்டி ?

இந்தப் போட்டி அமெரிக்காவின் டென்னெஸ்ஸி மாகாணத்தில், ஒவ்வொரு வருடம் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெறும். இந்தப் போட்டியில் 160கிமீ, 96கிமீ, 32கிமீ ஆகிய தூரங்களைக் கடக்கும் மூன்று பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்குமே 5 நிலைகள் இருக்கின்றன. அந்த 5 நிலைகளுமே மரணத்தைத் தொடும் நிலையில் இருக்கும். 

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஒரு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தோடு இணைத்து " இந்தப் போட்டியில் நான் ஏன் பங்கேற்க விரும்புகிறேன் ? " என்ற தலைப்பின் கீழ் ஒரு கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். இப்படியாக வரும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களிலிருந்து வருடத்திற்கு 40 போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களுக்கு " இறப்புச் செய்தியை அறிவிக்கும் கடிதம் " அனுப்பப்படும். ( Letter of Condolences ). 

உலகின் கொடூர ஓட்டப்பந்தயம்

போட்டி நாளன்று மதியத்திலிருந்து, நள்ளிரவு நேரத்திற்குள் எப்போது வேண்டுமானால் போட்டித் தொடங்கப்படும். லாஸ் தன்னுடைய சிகரெட்டைப் பற்றவைப்பது தான் போட்டிக்கான தொடக்கம். தொடங்கியதும் முதல் நிலையாக காட்டிற்குள் ஓடத் தொடங்க வேண்டும். கிட்டத்தட்ட 54,200 அடி உயரம் வரை இந்தப் போட்டியில் ஓட வேண்டியிருக்கும். 160கிமீ தூரத்தை 60 மணி நேரத்திற்குள்ளும்,96கிமீ தூரத்திற்கு 40 மணி நேரமும், 32கிமீ தூரத்தை 13 மணி நேரத்திற்குள்ளும் ஓடிக் கடக்க வேண்டும். 

உலகின் கொடூர ஓட்டப்பந்தயம்

ஓடுவதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு பிரிவிற்கும் ஏற்ற வகையில் 9லிருந்து 11 புத்தகங்கள் வரை காட்டினுள் ஆங்காங்கே ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். அதற்கான குறியீடுகளும் கொடுக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு அந்தப் புத்தகங்களை சேகரிக்க வேண்டும். மொத்த போட்டி தூரத்தில் உதவிக்கு என யாரும் இருக்க மாட்டார்கள். இரண்டு இடங்களில் மட்டும் தண்ணீர் நிலையம் அமைக்கப்பட்டிருக்கும். 

போட்டித் தொடங்கப்பட்ட 31 ஆண்டுகளில் , இதுவரை இந்தப் போட்டியில் 1240 பேர் பங்கெடுத்திருக்கிறார்கள். இதில் 18 பேர் மட்டுமே போட்டியை முழுமையாக முடித்திருக்கின்றனர். போட்டி முடிக்கத் தவறியவர்களில் தோல்வியோடு வெளி வரும் போது, அமெரிக்காவில் இறுதி ஊர்வலங்களில் வாசிக்கப்படும் " டேப்ஸ் " ( Taps ) எனும் வாத்தியம் வாசிக்கப்படும். இப்படியாக, இந்தப் போட்டியில் பங்கெடுப்பவர்களுக்ககூடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு துன்பங்கள் ஏற்படும். 

உலகின் கொடூர ஓட்டப்பந்தயம்

இப்படி ஒரு போட்டியை நடத்த காரணம் என்ன ?

அமெரிக்கப் போராளி மார்ட்டின் லூதர் கிங். ஜூனியரைக் கொன்ற ஜேம்ஸ் எர்ல் ரே 1977ல், தான் அடைக்கப்பட்டிருந்த டென்னெஸ்ஸி மாகாண  சிறையிலிருந்து தப்பி ஓடினார். 13 கிமீ தூரத்தை, கடுமையான காட்டுப்பாதையில்  55 மணி நேரம்  ஓடிக் கடந்து தப்பித்தார். அந்த நிகழ்வு லாஸ்ஸை ரொம்பவே பாதித்தது. உயிர் பிழைக்க ஒருவன் இத்தனைக் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறான் என்கிற விஷயம் அவரை ஆச்சர்யப்படுத்தியது. 

உலகின் கொடூர ஓட்டப்பந்தயம்

 

" இன்று பலரும் சொகுசான வாழ்க்கைக்குப் பழகிப் போயிருக்கிறார்கள். தங்களின் சொகுசான வாழ்வை நகர்ந்து இயற்கையோடு இணைவது கூட இன்று மிகப் பெரும் சவாலாக இருக்கிறது. நான் நடத்தும் இந்தப் போட்டி மனிதர்களை இயற்கையோடு உறவாட வைப்பதே அன்றி... அவர்களைக் கொடுமைப்படுத்துவதல்ல என் நோக்கம்..." என்று தான் நடத்தும் போட்டிக்கான விளக்கத்தை அளிக்கிறார் லாஸ். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

  • தொடங்கியவர்

சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் விடுதலையான நாள்: 28-8-1991

 

உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வடகிழக்கில்ரஷ்யாவும், வடக்கில் பெலாரசும் மேற்கில் போலந்து, ஸ்லோவேக்கியா, ஹங்கேரி ஆகியனவும் தென்மேற்கில் ரொமானியா, மோல்டோவா ஆகியவையும் தெற்கில் கருங்கடலும் அசோவ் கடலும் உள்ளன. இந்நாட்டின் தலைநகரம் கியிவ் ஆகும். சோவியத் யூனியல் இருந்த உக்ரைன் 1991-ம் ஆண்டு அதனில் இருந்து பிரிந்து

 
 
சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் விடுதலையான நாள்: 28-8-1991
 
உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வடகிழக்கில்ரஷ்யாவும், வடக்கில் பெலாரசும் மேற்கில் போலந்து, ஸ்லோவேக்கியா, ஹங்கேரி ஆகியனவும் தென்மேற்கில் ரொமானியா, மோல்டோவா ஆகியவையும் தெற்கில் கருங்கடலும் அசோவ் கடலும் உள்ளன. இந்நாட்டின் தலைநகரம் கியிவ் ஆகும். சோவியத் யூனியல் இருந்த உக்ரைன் 1991-ம் ஆண்டு அதனில் இருந்து பிரிந்து விடுதலை பெற்றது.

இதே தேதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1845 - சயன்டிபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.

* 1849 - ஒரு மாதகால முற்றுகையின் பின்னர் வெனிஸ் நகரம் ஆஸ்திரியாவிடம் வீழ்ந்தது.

* 1867 - ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவைப் பிடித்தது.

* 1898 - காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்.

* 1913 - நெதர்லாந்தின் அரசி வில்ஹெல்மினா த ஹேக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார்.

* 1916 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி, ருமேனியா மீதும், இத்தாலி ஜெர்மனி மீதும் போரை அறிவித்தன.

* 1922 - ஜப்பான் சைபீரியாவில் இருந்து தனது படைகளை விலக்க சம்மதித்தது.

* 1924 - சோவியத் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஜோர்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.

* 1931 - பிரான்சும், சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

* 1943 - நாசி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக டென்மார்க்கில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.

* 1963 - மார்ட்டின் லூதர் கிங், 2 லட்சம் பேருடன் ‘என் கனவு யாதெனில்...’ என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார்.

* 1964 - பிலடெல்பியாவில் இனக்கலவரம் ஆரம்பித்தது.

* 1988 - ஜெர்மனியில் விமான சாகசம் ஒன்றின் போது மூன்று விமானங்கள் மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.

* 1991 - சோவியத்திடம் இருந்து உக்ரைன் விடுதலை பெற்றது.

* 1991 - மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து விலகினார்.

* 1996 - வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா மணமுறிவு ஏற்பட்டது.

* 2006 - திருகோணமலை, சம்பூரில் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

* 2006 - இலங்கையில் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன. இறப்புகள்

* 430 - புனித அகஸ்டீன், மெய்யியலாளர் (பி. 354)

* 1891 - ராபர்ட் கால்டுவெல், பிரித்தானியத் தமிழறிஞர் (பி. 1814)

* 1973 - முகவை கண்ண முருகனார், கவிஞர், தமிழறிஞர் (பி. 1890)

 

 

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

ஸ்டிக்கி நோட்ஸ், சுவரில் சித்திரம்... பாசிட்டிவ் எனர்ஜிக்கான டிப்ஸ்! #MorningMotivation

இது அட்வைஸ் தரும் பதிவு அல்ல.

ஸ்கூல்ல ஹோம்வொர்க், காலெஜ்ல அஸைன்மெண்ட், ஆஃபிஸ்ல டார்கெட், காதல், ப்ரேக் அப், கடன், ட்ராஃபிக், பணம், பதவி, ப்ராஜக்ட், ப்ரோக்ராம், பொறாமை, வஞ்சம், எரிச்சல், புலம்பல், டார்ச்சர் அது இதுனு ஒரு மனுஷன ஒரு நாளைக்கு எட்டுத்திக்கும் நெகட்டிவ் எனர்ஜி சூழ்ந்து வெறியேற துரத்துகிறது.  இந்தநாளை முழுக்க முழுக்க பாசிட்டிவ் எனர்ஜியுடன் துவங்க நினைத்தால் உங்களுக்காக சில கள வேலைகள் காத்திருக்கின்றன. இதோ;

Morning Motivation

உங்கள் தெருமுனையில் இருக்கும் ஒரு ஸ்டேஷனரி கடைக்கு செல்லவும். அங்கு ”ஸ்டிக்கி நோட்ஸ்” என்று கேட்டால் கடைக்காரர் சில கலர் கலர் சீட்டுக்களை, பலதரப்பட்ட சைசுகளில் எடுத்து உங்கள் முன்  வைப்பார். அதில் எதை எடுக்கலாம் என்று யோசிக்காமல் ஒவ்வொரு கலரிலும், சைசிலும் ஒன்றை வாங்கி வரவும். உங்கள் வீட்டில் குட்டீஸ் இருந்தால் அவர்களிடத்தில் ஸ்கெட்ச் பென்சிலை கடன் வாங்கிக்கொள்ளலாம். ஆகையால் காசை வீணடிக்காமல் நேரே வீட்டுக்கு வரவும்.

உங்கள் வீட்டில் உங்கள் கண் பார்வைக்கு அதிகம் படும் இடம் எதுவென்று கண்டுபிடியுங்கள்? அது கிட்சனா? பெட்ரூமா? பாத்ரூமா? இல்லை, சுவர்கள்!

வீடு முழுக்க நிறைந்து கிடப்பது சுவர்கள் மட்டுமே. சிலர் வீட்டுச் சுவர்கள், குடும்ப புகைப்படங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். சிலரது வீட்டுச் சுவர்களில் ”ஓம்” “சுபம்” “லாபம்” என்று மஞ்சள் பூசப்பட்டிருக்கும். சிலர் வீட்டு சுவர்களில் வாண்டுகள் மார்டன் ஓவியங்களால் அலங்கரித்திருப்பர். அந்த சுவர்தான் இப்பொழுது நம் மைண்ட். மொட்டையான ஒரு சுவரைத் தேர்ந்தெடுங்கள். அது உங்களுக்கு பிடித்த அறையில் இருக்கவேண்டும் அல்லது அதிகம் பார்க்கும் சுவராக இருக்கவேண்டும்.

பெரிய துண்டு சீட்டைக் கிழித்து உங்கள் பெயரை உங்கள் கையெழுத்தில் அழகாக எழுதி, அந்த சுவரின் மையத்தில் ஒட்டி வைக்கவும்.

அதற்குப் பிறகு :

#உங்கள் வாழ்க்கையில் முக்கியமான மிகவும் பிடித்த நபர்களில் பெயர்கள்

#வாழ்வின் அங்கமாக மாறிய பொருட்களின் பெயர்கள்

#டைரிக் குறிப்பில் எழுதப்பட்ட மறக்கவே முடியாத நாள்கள்

#பிடித்த சின்ன சின்ன விஷயங்கள்

#பக்கத்து வீட்டு நாய்குட்டி

#மிகவும் பிடித்த திரைப்படங்களின் பெயர்கள்

#மறக்கமுடியாத உறவுகள்

#பிறரிடம் இருந்து கற்றுக்கொண்ட நல்ல பழக்கங்கள்

#உங்களுக்குள் மாற்றங்களைக் கொண்டுவந்த சில விஷயங்கள்

#நீங்கள் இன்ஸ்பிரேஷனாக நினைக்கும் நபர்

#விரும்பிப் படித்த புத்தகங்கள்

#முக்கியமான நண்பர்களின் பெயர்கள்

#முதன்முதலில் சமைத்த உணவு

#அம்மாவின் ஸ்பெஷல் உணவுகள்

#உங்கள் ஃபோன், டேப்லெட், லேப்டாப், வாட்ச், கேமரா போன்ற கேட்ஜெட்ஸ் பெயர்கள்.

#கரியரின் முக்கிய நிகழ்வுகள்

#ஆசைகள்

#பேஷன்

#பத்து வருடங்கள் கழித்து என்னவாக இருக்க நினைக்கிறீர்கள்..

என்று முழுக்க முழுக்க பாசிடிவ் நோட்களால் அந்த மொட்டையான சுவரை நிரப்புங்கள். அவசரமே இல்லை. பொறுமையாக நேரம் எடுத்து, யோசித்து எழுதி ஒட்டிவைக்கவும். சில நாள்களில் அந்த சுவர் மஞ்சல் நிற நோட்ஸ்களால் நிரம்பி வழியவேண்டும்! ஆனால், பிடிக்காத ஒரு சின்ன விஷயத்தைக்கூட அதில் எழுதவே கூடாது. ஸ்ட்ரிக்ட்லி நோ!

பிறகு, பல வண்ணங்களில் வாங்கிவந்த சீட்டுகளை எடுத்து - பிடித்த கோட்ஸ்களை அழகாக எழுதுங்கள். அதை காலை கண் முழித்ததும் பார்க்கும் வகையில் எங்கேயாவது ஒட்ட வேண்டும். அது “குட் மார்னிங்... ஹேவ் எ வொண்டர்ஃபுல் டே அஹெட்” போன்ற ஒருவரி மோடிவேஷனாகக் கூட இருக்கலாம். நீங்கள் செடி வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக காலையின் அவசரத்தில் தண்ணீர் ஊற்ற மறக்க நேரிடும்.

ஆகையால், நீங்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போது கடைசியாக பார்க்கும் இடம் எதுவென்று கண்டறியுங்கள். ’நான் கண்ணாடியைத்தான் கடைசியாகப் பார்ப்பேன்’ என்றால் கண்ணாடியில் “ஆசையாய் வாங்கிய செல்ல செடிக்கு தண்ணீர் ஊற்றவும்” போன்ற கஜினி நோட்சை ஒட்டவும்.

குளித்துவிட்டு ஆடை அணியும் ட்ரெஸ்ஸிங் டேபிள் போன்ற இடத்தில் “வாவ், யூ லுக் ஸோ பியூட்டிஃபுல்”, “வாவ்.. என்ன அழகு எத்தனை அழகு..” மாதிரியான பொய்களை வெட்கமின்றி எழுதி ஒட்டுங்கள். அதே போல்… மாலை வீட்டுக்குச் சேர்வாக வரும்போது கதவில் “நெவர் கிவ் அப்”, “இந்த நாளின் ஸெகண்ட் ஹாஃப் உங்களை சந்தோஷமாக வரவேற்கிறது” போன்ற துண்டுச் சீட்டுகளை ஒட்டிவைய்யுங்கள்.

இன்னும் பாசிட்டிவ் எனர்ஜி வேண்டுமா? “மேக் சம்வொன் ஸ்மைல் டுடே” “யாரேனும் ஒருவரது சிரிப்புக்கு இன்று காரணமாக இரு” என்று எழுதி ஒட்டிவைத்துக்கொள்ளவும். அந்த நாள் இறுதியில் உங்களையே நீங்கள் ”அட்லீஸ்ட் ஒருவரையாவது சிரிக்க வைத்தோமா” என்று கேட்டுப்பாருங்கள்!

இது உங்கள் தினசரி வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். அந்த மாற்றத்தையும் இதில் நீங்கள் எழுதலாம்!

 

மகிழ்ச்சி!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வெளிச்சத்திற்கு வந்தது டோடோ ராட்சத பறவையின் ரகசிய வாழ்க்கை!

பறக்க முடியாத ராட்சத பறவையான டோடோ அழிந்துபோகும் நிலைக்கு தள்ளப்பட்ட நூற்றுக்காணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர், அதுபற்றி கிடைத்த துப்புகளை எல்லாம் விஞ்ஞானிகள் ஒன்றாக இணைத்து ஆய்வு நடத்தி பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர்.

டோடோபடத்தின் காப்புரிமைJULIAN HUME

1662 ஆம் ஆண்டு அழிந்துபோன, அதிர்ஷ்டம் இல்லாத இந்தப் பறவை பற்றிய சில அறிவியல்பூர்வ உண்மைகள் இந்த ஆயவில் தெரிய வந்துள்ளன.

இந்த ராட்சத பறவையின் எலும்பு மாதிரிகளை வைத்து நடத்திய ஆய்வில், ஆகஸ்ட் மாதம் பொரித்த இந்த பறவையின் குஞ்சு மிக விரைவாக வளர்ந்து பெரிதாகி விடுவது தெரியவந்துள்ளது.

மார்ச் மாதம் இறகுகள் விழுந்துவிடும் அந்தப் பறவை, கடற்பறவைகளால் வரலாற்று கணக்குகளில் பதிவுசெய்யப்பட்ட பஞ்சு போன்ற சாம்பல் நிற தோலை கொண்டிருந்தது வெளிப்பட்டுள்ளது.

பிரான்சிஸிலுள்ள அருங்காட்சியகத்திற்கு சமீபத்தில் நன்கொடையாக வழங்கப்பட்ட மாதிரிகள் உள்பட அருங்காட்சியகங்களிலும். சேகரிப்புகளிலும் இன்னும் காணப்படும் டோடோ பறவையின் எலும்புகள் சிலவற்றை ஆய்வில் பயன்படுத்த தென் ஆப்ரிக்காவிலுள்ள கேப் டவுன் பல்கலைகழகத்தை சேர்ந்த டெல்பின் ஆங்ஸ்ட்க்கு வாயப்பு கிடைத்தது.

அவருடைய அணியினர் 22 டோடோ பறவைகளின் எலும்பு துண்டுகளை நுண்ணோக்கியில் பார்த்து, இந்த ராட்சத பறவையின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க முறைகள் பற்றி ஆய்வு செய்தனர்.

டோடோபடத்தின் காப்புரிமைAGNÈS ANGST

"எம்முடைய ஆய்வுக்கு முன்னர் இந்தப் பறவைகளைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்திருந்தோம்" என்கிறார் ஆங்ஸ்ட்.

இந்தப் பறவை ஆண்டில் ஒரு முறை மட்டுமே இனப்பெருக்கம் செய்கிறது என்றும், அதற்கு பிறகு இறகு உதிர்ந்து விடுகிறது என்றும் எலும்பு திசுவியலை பயன்படுத்தி முதல்முறையாக விளக்க முடிந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாத அளவில் பொரித்த இந்தப் பறவையின் குஞ்சுகள் மிக விரைவாக பெரிதாக வளர்கிறது என்று அவற்றின் எலும்புகளின் வளர்ச்சி முறைகளில் இருந்து விஞ்ஞானிகளால் கூறிவிட முடியும்.

நவம்பர் முதல் மார்ச் வரை அந்த தீவை சூறாவாளிகள் தாக்கி, உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தியபோது, இந்த பறவைகளின் விரைவான வளர்ச்சி முறை உயிர் வாழ்வதற்கு சாதகமான நிலையை வழங்கியிருக்கலாம்.

இருப்பினும், பெரிதான இந்த பறவைகள் இயற்கையான எந்தவொரு இரையையும் பெற்றுகொள்ள முடியாத சாத்தியக்கூறு நிலவியதால். பாலியல் முதிர்ச்சியை இந்தப் பறவைகள் அடைவதற்கு பல ஆண்டுகள் பிடித்திருக்கலாம்.

பெரிய பறவைகளின் எலும்புகள் தாது உப்புக்களை இழந்திருந்த அறிகுறியையும் காட்டுகின்றன. இனப்பெருக்கத்திற்கு பிறகு இந்த பறவைகள் அவற்றின் பழைய சேதமடைந்த இறகுகளை ஏன் இழந்தன என்பதை இது எடுத்துக்கூறுகிறது.

கீழே கருப்பு நிறம் அல்லது சாம்பல் நிற சுருண்ட இறகை கெண்டவை என்று டோடோ பற்றிய முரண்பட்ட தகவல்களை முற்கால கடலோடிகள் வழங்கியுள்ளனர்.

'சைன்டிஃபிக் ரிப்போட்ஸ்" என்கிற சஞ்சிகையில் வெளியாகி இருக்கும் இந்த ஆய்வு, வரலாற்று சான்றுகளோடு வெளியாகியுள்ளது.

"பழுப்பு-சாம்பல் நிறமுடைய டோடோ, தோலுரியும் காலத்தில், உரோமத்துடன், கருப்பு நிற சுருண்ட இறகையை இந்தப் பறவை கொண்டிருந்தது" என்று ஆங்ஸ்ட் விளக்கியிருக்கிறார்.

கடலோடிகள் முற்காலத்தில் எழுதியிருக்கிறவற்றோடு, நாங்கள் எங்களுடைய அறிவியல் முறைகளை பயன்படுத்தி கண்டுபிடித்தவை அனைத்தும் மிகவும் சரியாகப் பொருந்துகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

முட்டை திருட்டு

ஏறக்குறைய 350 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த தீவுக்கு மனிதர்கள் வந்து சேர்ந்த 100க்கும் குறைவான ஆண்டுகளில் டோடோ அழிந்துவிட்டதை பற்றியும் இந்த ஆய்வு துப்புகள் வழங்க முடியும்.

வெளிச்சத்திற்கு வந்தது டோடோ ராட்சத பறவையின் ரகசிய வாழ்க்கைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

டோடோ அழிந்துபோவதற்கு வேட்டையாடுதல் ஒரு காரணம். ஆனால், கப்பல்களில் இருந்து இந்த தீவில் விடப்பட்ட குரங்குகள், மான்கள், பன்றிகள் மற்றும் எலிகள் இந்தப் பறவையின் தலைவிதியை நிர்ணயித்துள்ளன.

டோடோக்கள் தங்களின் முட்டைகளை தரையிலுள்ள கூட்டில் இட்டு வந்ததால், பாலூட்டி விலங்குகளால் அவை பாதிப்புக்குளாகும் நிலையே இருந்திருக்கும்.

முழுமையாக விவரங்கள் தெரியாவிட்டாலும், விலங்குகளாலும், மனிதராலும் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டதற்கான மிகப் பெரிய அடையாளமாக டோடோ உள்ளது என்று டாக்டர் ஆங்ஸ்ட் கூறியுள்ளார்.

"இந்தப் பறவையின் சூழலியல், அந்த நேரத்தில் மொரீஷியஸ் தீவின் சூழலியல் ஆகியவை பற்றி நமக்கு தெரியாவிட்டால் டோடோ அழிவிற்கு மனிதர்களால் ஏற்பட்ட பாதிப்பு என்ன என்பது பற்றி அறிவது மிகவும் கடினமாகும்" என்று அவர் விளக்கினார்.

"இந்தப் பறவைகளின் சூழலியல் மற்றும் மொரீஷியஸ் தீவின் உலகளாவிய இயற்கைச்சூழல் அமைப்பின் புரிந்துகொண்ட பின்னர், மனிதர் அங்கு வந்தடைந்தபோது செய்த தவறுகள் என்ன? இந்தப் பறவைகள் மிக விரைவாக எவ்வாறு அழிந்து போயின என்று கூற முடியும்" என்று அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

விலகாத மர்மங்கள்

லண்டனிலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை சேர்ந்தவரும், இந்த ஆய்வின் இணை ஆய்வாளருமான ஜூலியன் ஹூமே, "டோடோவை சுற்றி இன்னும் பல மர்மங்கள் சூழ்ந்துள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

"எங்களுடைய ஆய்வு, பருவகாலங்களை சுட்டிக்காட்டுகிறது. மொரீஷியஸிலுள்ள காலநிலையின் காரணமாக உண்மையிலேயே இத்தகைய பறவைகளின் வளர்ச்சியினை அவை பாதித்தன என்பதை காட்டுகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இந்த தீவு அடிக்கடி புயல்களால் பேரழிவுக்குள்ளாகும் சூறாவளி காலத்தில், எல்லா பழங்களும், இலைகளும் மரங்களிலிருந்து விழுந்துவிடுகின்றன. அச்சமயம் மொரிஷியஸிலுள்ள பாம்புகள் மற்றும் பறவைகளான விலங்கினங்களுக்கு மிகவும் மோசமான காலமாகும்.

புறா குடும்பத்தோடு தொடர்புடைய டோடோ, மொரீஷியஸில் பரிணமித்தது.

இருப்பினும், எலும்பு மாதிரிகள் மிகவும் அரிதாகவே காணப்படுவதால், அவற்றின் பரிணாம வளர்ச்சியை தடங்காண்பது மிகவும் கடினமாக உள்ளது.

டோடோ பறவையின் பல எலும்பு மாதிரிகள் ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் சென்றடைந்தாலும், அவற்றில், பெரும்பாலானவை தெலைந்துவிட்டன அல்லது விக்டோரியா காலத்தில் அழிக்கப்பட்டுவிட்டன.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

சென்னை 378: சென்னையின் வண்ணங்கள்!

 

 
photossssjpg

இந்தியாவைப் போலவே சென்னை மாநகரமும் பல வண்ணங்களாலான பண்பாட்டு வெளி தொன்மை, நவீனம், ஏழ்மை, செழுமை என்று நேரெதில் நிலைகளோடு இவற்றுக்கு இடைப்பட்ட நிலைகளையும் கொண்டது தான் சென்னை. சென்னையின் அனைத்து வண்ணங்களையும் புகைப்படங்களுக்குள் அடக்கிவிட முடியாது. எனினும் கேமராவுக்குள் சிக்கிய காட்சிகள் குறிப்பிட்ட அளவுக்குச் சென்னையை நம்முள் கடத்திவிடுகின்றன. இங்குள்ள படங்கள் யாவும் 'சென்னை புகைப்பட நடைக் குழு(Chennai Photowalk Group' என்ற குழுவைச் சேர்ந்தவர்களால் எடுக்கப்பட்டவை. 2007-ல் தொடங்கப்பட்ட இந்தப் புகைப்படக் குழுவில் இதுவரை 16 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் இணைந்திருக்கிறார்கள். இந்தக் குழுவின் 10-ம் ஆண்டை முன்னிடு 'Eyes of Madras'என்ற தலைப்பில் இந்த அமைப்பினரின் புகைப்படக் கண்காட்சி, எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி.ஆர்ட்ஸ் மையத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் குழுவின் புகைப்படங்களை flickr.com-ல் (https://goo.gl/BpaqLY) காணலாம்.

8jpg

வலம் வந்து... படம்: ராமராவ் ஸ்ரீதர்

7jpg

வலைகடல் படம்: அருண் ராமன்

6jpg

பாலத்தளவு வானம் படம்: முத்துராமன்

5jpg

மீன் நகரம்: படம்: ராமராவ் ஸ்ரீதர்

4jpg

ரிக் ஷா நான் ஓட்டுறேனே ரோட்டுல படம்: ராஜ்மோகன் சீனிவாசன்

3jpg

சட்டப்படி வாழ்க்கை படம்: என்.ஸ்ரீரிஷிகேஷ்

2jpg

நின்றசீர் நெடு'மால்' படம்: ஜீவானந்தம்

1jpg

நாராய் நாராய் பூநாராய்! படம்: பாலசுப்ரமணியம் ஜீ.வி

13jpg

குச்சி ஐஸ் பிராயத்தினூடே... படம்: சக்திவேல் வேணுகோபால்

12jpg

உருள்வாழ்க்கை நிலையம் படம்: ஹரிஹரன்

11jpg

வரிசையில்தான் வாழ்க்கை படம்: கோபால்கிருஷ்ணன் ராமமூர்த்தி

10jpg

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் விருமாண்டியும் வீர்பாண்டிய கட்டபொம்மனும் படம்: பாலசுப்ரமணியன் ஜீ.வி

9jpg

பின் திரைக் காட்சி படம்: பாலசுப்ரமணியன் ஜீ.வி

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

மொழியியல் தந்தை கால்டுவெல்லின் 126-ம் நினைவு நாள் இன்று!

 

திராவிட மொழிகளுக்குப் பெருங்கொடை அளித்தவரும், திராவிட மொழியியல் தந்தையுமான ராபர்ட் கால்டுவெல்லின் 126-ம் நினைவு நாள் இன்று.

ராபர்ட் கால்டுவெல்

 


1814-ம் ஆண்டு மே 7-ம் நாள், அயர்லாந்து நாட்டின் கிளாடி ஆற்றங்கரையிலுள்ள பெல்பாஸ்ட் என்ற சிற்றூரில் பிறந்தவர் ராபர்ட் கால்டுவெல். சிறுவயதிலேயே புத்தகங்கள் மீதுள்ள காதலால் ஆங்கில மொழியை சுய முயற்சிலேயே கற்றுத்தேர்ந்தார். பழைமையான மொழிகளின் மீதுள்ள ஆர்வம் காரணமாக கிரேக்க மொழியிலிருந்து தமிழ்மொழி வரை பல மொழிகளையும் முழுமையாக, ஆழமாகக் கற்றுத்தேர்ந்தார். தமிழ் மொழியின் முழுமையை உணரும் நோக்கில் தமிழின் வட்டார மொழிகளை, அந்தந்தப் பகுதிகளுக்கே சென்று வாழ்ந்து கற்றுத்தேரும் தேடலும் ஆர்வமும் கொண்டவராகத் திகழ்ந்தவர் இந்த அயல்நாட்டு தமிழ் அறிஞர்.

இவரது முயற்சிகளின் பெரும் படைப்பாக 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' என்றப் புத்தகம் வெளியானது. பின்னர் திராவிட மொழியான தமிழ் மொழியின் புலமையை இந்த உலகம் அறிய வேண்டி, 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற ஆய்வு நூலை தன் சீரிய முயற்சியால் ஆங்கிலத்தில் வெளியிட்டார். இன்று தமிழ்மொழி ‘செம்மொழி’ அந்தஸ்துடன் தலை நிமிர்ந்து நிற்பதற்கு தானும் ஒரு காரணமாக அமைந்த ராபர்ட் கால்டுவெல், உடல்நிலை காரணமாக 1891-ல் ஆகஸ்ட் 28-ம் தேதி இயற்கை எய்தினார்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

இலங்கை ரசிகர்கள் ரகளைக்கு நடுவே மைதானத்தில் உறங்கிய தோனி: வைரலாகும் புகைப்படம்

 
dhonijpg

தோனி உறங்கிய காட்சி

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டிக்கு இடையே இலங்கை ரசிகர்கள் ரகளை செய்தபோது மைதானத்தில் தோனி தூங்கினார். அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

வீட்டிற்குள் புகுந்த வௌ்ளத்தில் மீன் பிடித்து விளையாடியவர் (Video)

 


வீட்டிற்குள் புகுந்த வௌ்ளத்தில் மீன் பிடித்து விளையாடியவர் (Video)
 

அமெரிக்காவில் ஹார்வே புயலால் வீட்டிற்குள் புகுந்த வெள்ளத்தில் ஒருவர் மீன் பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவை தாக்கிய ‘ஹார்வே’ புயல் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

புயல் காரணமாக டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன், விக்டோரியா, மற்றும் கார்பஸ் கிறிஸ்டி ஆகிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

அதில் ஹூஸ்டன் நகரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நிரம்பி வழிந்த தண்ணீர் நகருக்குள் புகுந்தது. அதனால் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்நிலையில், டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் பகுதியில் விவியானா சால்டனா என்பவரின் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்தது.

வெள்ள நீரோடு மீன்களும் வீட்டிற்குள் புகுந்துள்ளன. அம்மீன்களை விவியானாவின் தந்தை பிடித்து விளையாடியுள்ளார்.

அவர் நீருக்குள் குதித்து மீன் பிடிக்கும் வீடியோ இணையத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

 

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

10 லட்சம் கடல்பறவைகள்... 1 லட்சம் விலங்குகள்... இவற்றின் உயிரைப்பறிக்கும் அந்த ஒரு விஷயம்..!

 

தான் இருக்கும் நிலம் மட்டுமே உலகம் என நம்பிக்கொண்டிருந்த மனிதனின் சிந்தனையை விசாலப்படுத்தியது கடல். கண்ணுக்கெட்டாத தூரத்துக்கு பரந்து விரிந்திருந்த கடல்தான், இன்னொருபுறம் கரை இருக்கும் என்ற நம்பிக்கையைத் தந்தது. கலம் ஏறிச்சென்று கண்டங்களைக் கண்டுபிடிக்கும், நாடுகளைத் தேடிச்செல்லும் தைரியத்தை தந்தது. இத்தனை கண்டங்கள், இத்தனை நாடுகள் என இன்று பூமியை நம்மால் முழுமையாக உணர முடிகிறது என்றால் அதற்கு, பெருங்கடல்களின் மீது பேரார்வம் கொண்டு பயணித்த மாலுமிகளும், கேப்டன்களும்தான் காரணம். இப்படி மனிதனுக்கான நிலப்பரப்பை விசாலப்படுத்திய கடல்பரப்பு தற்போது எப்படி இருக்கிறது தெரியுமா? மனிதன் கையால் சிக்கிச்சீரழியும் இந்த நிலப்பரப்பை விடவும் மோசமாக இருக்கிறது கடலின் நிலை. நிலத்தில் இருந்து தப்பிப்பிழைத்து வரும் குப்பைகள், திட்டமிட்டே கொட்டப்படும் கழிவுகள், எந்த ஆறுகளையும் சங்கமிக்க விடாத அளவுக்கான வறட்சி என இயற்கையும், செயற்கையும் மாறிமாறி கடல்வளத்தை சூறையாடிக்கொண்டிருக்கின்றன. 

பிளாஸ்டிக் குப்பைகள்

நிலப்பரப்பில் வாழும் மனிதர்களைப் போலவே, கடலை நம்பி வாழும் மக்களும் உலகில் மிக அதிகம். பூமியின் நிலப்பரப்பில் வாழும் மிருகங்களைப் போலவே கடலைச் சார்ந்து வாழும் உயிரினங்களும் மிக அதிகம். இவை அனைத்துக்கும் தீங்கு செய்வதுபோல் அமைந்திருக்கின்றன மனிதர்களின் செயல்பாடுகள். வருடந்தோறும் கடலுக்கு வரும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு 8 மில்லியன் டன்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதனால் கடலின்சூழல் மாசடைவதுடன் ஒரு மில்லியன் கடல்பறவைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இந்த பிளாஸ்டிக் குப்பைகளால் ஒரு லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் செத்து மடிகின்றன. இத்தனை பெரிய இழப்புகள் நடந்தாலும் கூட இவைகுறித்து பலருக்கும் தெரிவதே இல்லை என்பதுதான் சோகம். இதனால் அரசாங்கங்களும் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. இதுதொடர்பாக விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக உலகின் பல்வேறு கடலியல் ஆர்வலர்களும், கடலியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளும் இதற்காக நடத்தப்படுகின்றன. இந்தியாவிலும் இவை நடைபெறுகின்றன. 

கடல்வாழ் பறவைகள்

ஓஷன் கன்செர்வன்ஸி அமைப்பு உலகெங்கும் பல்வேறு நாடுகளில் கடற்கரைகளில் இருக்கும் குப்பைகளை அகற்றும் நிகழ்ச்சியையும், கடல் தூய்மை சார்ந்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறது. இந்தியாவில் Indian Maritime Foundation இந்த அமைப்புடன் கைகோத்து இந்தத் தூய்மைப்பணிகளை முன்னெடுக்கிறது. ஏரி, ஆறு, கடல் என நீர்நிலைகள் அருகே ஒவ்வோர் ஆண்டும் தன்னார்வலர்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் அவை வெளியேற்றப்படும். கடந்த 2016-ம் ஆண்டு தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி உள்ளடக்கிய தென்மண்டல கடற்கரைப் பிரதேசத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உலக அளவில் 8,346 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் தென்மண்டலக் கடற்கரைகளில் மட்டும் சுமார் 45 டன் அளவிலான குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டு வரும் செப்டம்பர் மாதம் 16-ம் தேதி காலையில் பழவேற்காடு, எண்ணூர், மெரினா கடற்கரை, லைட் ஹவுஸ், எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, கோவளம், பாலாறு, பூம்புகார், காரைக்கால், கீழக்கரை, தூத்துக்குடி, உவரி, கடலூர், தனுஷ்கோடி, திருவள்ளூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, கன்னியாகுமரி உள்பட தென்மண்டலக் கடற்கரைகள் மற்றும் நீர்நிலைகள் என மொத்தம் 69 இடங்களில் குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெறவுள்ளன. Indian Maritime Foundation-ஐச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இருந்து தன்னார்வலர்கள் இணைந்து இந்த பிரமாண்ட தூய்மைப் பணியை மேற்கொள்கின்றனர். இந்தப் பணியில் மீடியா பார்ட்னராக விகடனும் கைகோத்துள்ளது.

கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணி

பங்கேற்கும் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் குப்பைகளைக் கையாள்வதற்கான உபகரணங்கள், குப்பைகளின் தன்மைகேற்ப பிரித்து கையாள்வதற்கான பயிற்சிகள், சேகரிக்கப்படும் குப்பைகளை அளவிடுதல், கடற்கரைகளில் கையாள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என அனைத்துவிதமான பயிற்சிகளும், விழிப்புஉணர்வும் அளிக்கப்பட்டு பின்னரே தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகள் இன்றி இந்தப் பணிகளைச் செய்யமுடியாது. எனவே இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலர்களாக கலந்துகொண்டு பங்களிக்க இயலாது. மாறாக கடற்கரைகளில் தூய்மைப்பணியில் ஈடுபடும் நண்பர்களுக்கு ஊக்கமளிக்கலாம். 

 

இதுதவிர இன்னொரு விதமாகவும் நீங்கள் பங்களிக்க முடியும். அந்தப் பங்களிப்பு கடலுக்கு மட்டுமல்ல, மொத்த சமூகத்துக்கும் மிக முக்கியமான தேவையும் கூட. கடைகளுக்குச் செல்லும்போது பிளாஸ்டிக் பை வாங்காமல் இருப்பதில் இருந்து, குப்பைகளை தரம்பிரித்து குப்பைத்தொட்டிகளில் போடுவதில் இருந்து, பிளாஸ்டிக் குப்பைகளை தெரு, கடற்கரை என பொதுவெளிகளில் வீசாமல் இருப்பதில் இருந்தே அந்தப் பங்களிப்பு தொடங்குகிறது. ஆம், கூடிவாழும் இந்தச் சமூக அமைப்பில் தனிமனிதர்களின் பங்களிப்புதான் மிகவும் முக்கியம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, machen Sport, Text und im Freien

உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான இலங்கையின் லசித் மாலிங்கவின் பிறந்தநாள்.

Happy Birthday Lasith Malinga

சர்வதேசப் போட்டிகளில் 4 பந்துகளில் தொடர்ந்து நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்திய ஒரேயொரு பந்துவீச்சாளர் இவர் மட்டுமே.

 

21122373_1115873325210078_82898501968468

கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத சாதனைகள் பலவற்றைப் படைத்த முத்தையா முரளிதரன் சர்வதேச சாதனைப் பயணத்தில் இணைந்த நாள் இது

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்த வார உலக நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு

இந்த வாரம் (ஆகஸ்ட் 19 - 26) உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு.

ஒரு இளம் காளை பழு தூக்கி மூலம் கீழே இறக்கப்படுகிறது

பாகிஸ்தானில் உள்ள கராச்சியில், கன்றாக இருந்தபோது முதல் ஒரு நான்கு அடுக்கு மாடிக்கு கட்டடத்தின் மேல்தளத்தில் வளர்க்கப்பட்ட ஒரு இளம் காளை பழு தூக்கி மூலம் கீழே இறக்கப்படுகிறது. தியாகத் திருநாளன்று வெட்டப்படுவதற்கு அது தயார் செய்யப்படுகிறது.

 

இனவெறி எதிர்ப்பாளர்கள்

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 'பேச்சுரிமை' பொதுக்கூட்டம் நடத்த முயன்ற வலதுசாரிப் பேச்சாளர்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான இனவெறி எதிர்ப்பாளர்கள் திரண்டனர். கடந்த வாரம், சார்லட்ஸ்வில் நகரில் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, அமெரிக்காவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

. நினைவேந்தல் கூட்டம்

வேன் மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் இறந்த மற்றும் பலர் காயமடைந்த பார்லோசினாவின் லாஸ் ராம்பிளாசில் முன்கூட்டியே திட்டமிடப்படாத ஒரு உடனடி நினைவேந்தல் கூட்டம் நடந்தது.

டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா

 

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா வெள்ளை மாளிகை மாடியில் இருந்து சூரிய கிரகணத்தைப் பார்த்தனர்.

 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஓபெரா ஹவுஸ் முன்பு நடனமாடும் டிமிட்ரி சாஸ்டாகோவிச் இயற்றிய 'தி நோஸ்' என்னும் இசை நாடகத்தின் நடிகர்கள்.

 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஓபெரா ஹவுஸ் முன்பு நடனமாடும் டிமிட்ரி சாஸ்டாகோவிச் இயற்றிய 'தி நோஸ்' என்னும் இசை நாடகத்தின் நடிகர்கள்.

 

அயர்லாந்து வீரர் பெட்ராம் ஆலன் தன் குதிரை மீது இருந்து கீழே தவறி விழுந்தார்.

சுவீடனில் நடைபெற்ற குதிரைகள் மீது அமர்ந்து தடைகளைத் தாண்டும் போட்டிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் அயர்லாந்து வீரர் பெட்ராம் ஆலன் தன் குதிரை மீது இருந்து கீழே தவறி விழுந்தார்.

கிரிக்கெட் போட்டி

இங்கிலாந்து அருகே உள்ள சால்வெண்ட் நீரிணை மீது அமைந்துள்ள ப்ராம்பில்ஸ் மணல் திட்டு. ராயல் சதர்ன் யாட்ச் கிளப் மற்றும் ஐலேண்ட் செய்லிங் கிளப் ஆகியே அணிகளுக்கு இடையே ஆண்டுதோறும் அங்கு நிகழும் கிரிக்கெட் போட்டி.

கடற்பாசிப் படகுப்போட்டி

அயர்லாந்தில் உள்ள கின்ராவா எனும் இடத்தில் நடைபெற்ற கடற்பாசிப் படகுப்போட்டியில் இலக்கை நெருங்கும் போட்டியாளர்கள். க்ளிமின் எனப்படும் கடற்பாசியின் கற்றைகள் டன் கணக்கில் கடலில் இருந்து கரைக்கு எடுத்து வரப்பட்டு படகுகள் செய்யப்படும்.

தனது துப்பாக்கியால் குறி பார்க்கும் சிரிய ஜனநாயகப் படையின் ராணுவ வீரர்.

சிரியாவில் உள்ள ரக்கா பழைய நகரில் இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் அமைப்பினருடன் சண்டையிடும்போது, தனது துப்பாக்கியால் குறி பார்க்கும் சிரியாஜனநாயகப் படையினர்.

 

தன் நாவில் கற்பூரத்தை ஏந்தியுள்ள 'நிஹாங்' என்று அழைக்கப்படும் சீக்கிய மத வீரர்.

சீக்கிய மத நூலான குரு கிராந்த் சாஹிப் இயற்றப்பட்டு 413 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் நடந்த ஊர்வலத்தின்போது தன் நாவில் கற்பூரத்தை ஏந்தியுள்ள 'நிஹாங்' என்று அழைக்கப்படும் சீக்கிய மத வீரர்.

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

நார்வேயில் பயணிகள் விமானம் மலையில் மோதி 141 பேர் பலி (29-8-1996)

நார்வே நாட்டில் மிகமோசமான விமான விபத்து 1996-ம் ஆண்டு இதே நாளில் (29-8-1996) நடந்தது. ரஷ்யாவின் நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம், மாஸ்கோவில் இருந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு 29-8-1996 அன்று நார்வேயின் ஸ்வால்பார்ட் விமான நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்தது. இந்த விமானத்தில் 3 குழந்தைகள் உள்பட 130 பயணிகள், 11 விமான ஊழியர்கள்

 
நார்வேயில் பயணிகள் விமானம் மலையில் மோதி 141 பேர் பலி (29-8-1996)
 
நார்வே நாட்டில் மிகமோசமான விமான விபத்து 1996-ம் ஆண்டு இதே நாளில் (29-8-1996) நடந்தது. ரஷ்யாவின் நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம், மாஸ்கோவில் இருந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு 29-8-1996 அன்று நார்வேயின் ஸ்வால்பார்ட் விமான நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்தது.

இந்த விமானத்தில் 3 குழந்தைகள் உள்பட 130 பயணிகள், 11 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். தரையிறக்கும்போது, விமானத்தை இயக்குவதில் ஏற்பட்ட சிறிய குளறுபடி காரணமாக, அருகில் உள்ள மலையில் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 141 பேரும் கொல்லப்பட்டனர்.

இதே ஆகஸ்ட் 29-ம் நாளில் நடைபெற்ற வேறு சில முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-

1498 - வாஸ்கொடகாமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு செய்தார்.

1825 - பிரேசிலைத் தனிநாடாக போர்ச்சுக்கல் அறிவித்தது.

1907 - கனடாவில் கியூபெக் பாலம் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 75 தொழிலாளர்கள் பலியாகினர்.

1944 - பொன்னம்பலம் தலைமையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1949 - சோவியத் ஒன்றியம் ஜோ 1 என்ற தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை கஜகஸ்தானில் நடத்தியது.

1995 - முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் ஐரிஸ் மோனா என்ற கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.

1997 - அல்ஜீரியாவில் ரைஸ் என்ற இடத்தில் 98 ஊர் மக்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழ் திரைப்பட நடிகர் விஷால் (1977), அமெரிக்க பாடகர் மைக்கேல் ஜாக்சன் (1958) பிறந்த நாள்.

 

 

அமெரிக்காவில் 1833 பேரை பலிவாங்கிய காத்ரீனா புயல் லூசியானாவில் நிலைகொண்டது (29-8-2005)

அமெரிக்க வரலாற்றில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய புயல் காத்ரீனா. 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி பஹாமாசில் உருவான இந்தப் புயல், வளைகுடா கரையோரப் பகுதியின் வடமத்திய பகுதிகள் அனைத்தையும் மோசமாகப் பாதித்தது. லூசியானாவில் நியூ ஓர்லியன்ஸ் பகுதிதான் அதிகம் பாதிப்புக்குள்ளானது. மிசிசிப்பியின் கரையோரப் பகுதிகளிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்த புயல்

 
அமெரிக்காவில் 1833 பேரை பலிவாங்கிய காத்ரீனா புயல் லூசியானாவில் நிலைகொண்டது (29-8-2005)
 
அமெரிக்க வரலாற்றில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய புயல் காத்ரீனா. 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி பஹாமாசில் உருவான இந்தப் புயல், வளைகுடா கரையோரப் பகுதியின் வடமத்திய பகுதிகள் அனைத்தையும் மோசமாகப் பாதித்தது. லூசியானாவில் நியூ ஓர்லியன்ஸ் பகுதிதான் அதிகம் பாதிப்புக்குள்ளானது. மிசிசிப்பியின் கரையோரப் பகுதிகளிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த புயல் தெற்கு புளோரிடாவை கடந்தபோது இதன் தாக்கம் அதிகமாக இல்லை. இருப்பினும் சில உயிரிழப்புகளும் கனமழையால் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டன. ஆனால், மெக்சிகோ வளைகுடாவைத் தாண்டியபோது அதன் தாக்கம் மிக தீவிரமாக இருந்தது. ஆகஸ்ட் 29-ம் தேதி லூசியானாவில் நிலைகொண்டபோது அங்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

இந்த புயலின் கோரத் தாண்டவத்தில் 1,833 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் 1928ம் ஆண்டில் இடம்பெற்ற சூறாவளிக்கு அடுத்தபடியாக இதுவே மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய சூறாவளியாகும். 108 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ரிச்சர்ட் அட்டன்பரோ

 
29CHRGNRICHARD

Richard Attenborough வரலாற்றின் கலைஞர் ரிச்சர்ட் அட்டன்பரோ - கலை மூலம் சமூக மாற்றங்களை நிகழ்த்த முடியும்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரும் 2 முறை ஆஸ்கர் விருது பெற்றவருமான ரிச்சர்ட் அட்டன்பரோ (Richard Attenborough) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.

* இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் பிறந்தார் (1923). தந்தை அறிஞர் கல்வியாளர். வைக்ஸ்டன் பாய்ஸ் கிராமர் பள்ளியில் பயின்றார்.

* நடிப்பதில் ஆர்வம் இருந்ததால், ‘ராயல் அகாடமி ஆஃப் டிராமடிக் ஆர்ட்டில்’ நாடகவியல் பயின்றார். இரண்டாம் உலகப் போரில் ராயல் விமானப் படையில் பணியாற்றினார். யுத்தம் நடைபெறும் இடங்களில் படம்பிடிக்கும் குழுவினருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

* முதன்முதலில் நாடக நடிகராகத் தன் தொழில் வாழ்வைத் தொடங்கினார். அகதா கிறிஸ்டியின் நாவலைத் தழுவி தயாரிக்கப்பட்ட ‘தி மவுஸ்ட்ராப்’ நாடகம் இவரைப் பிரபலமாக்கியது. 1942-ல் ‘இன் விச் வி செர்வ்’ என்ற படத்தில் முதன்முறையாக நடித்தார்.

* அடுத்து, ‘நியு அட்வென்சர்ஸ்’, ‘ஏ மேட்டர் ஆஃப் லைஃப் அண்ட் டெத்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இருப்பினும் 1947-ல் இவர் நடித்த ‘பிரைட்டன் ராக்’ படம்தான் இவருக்கு நடிகராக அங்கீகாரம் பெற்றுத் தந்தது. 1950-களின் இறுதியில் ‘பீவேர் ஃபிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

* ‘பிரயான் ஃபோர்ஸ்’, ‘தி லீக் ஆஃப் ஜென்டில்மேன்’, ‘தி ஆங்க்ரி சைலன்ஸ்’ மற்றும் ‘விசில் டவுன் தி வின்ட்’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தார். இவரது ‘பிரைவேட் புரோகிரஸ்’, ‘தி சான்ட் பெபிள்ஸ்’, ‘செயான்ஸ் ஆன் ஏ வெட் ஆஃப்டர்நூன்’ உள்ளிட்ட பல படங்கள் குறிப்பிடத்தக்கவை.

* ‘தி கிரேட் எஸ்கேப்’ என்ற படத்தில் 1963-ல் நடித்தார். இது பெரும் வெற்றி பெற்று, வசூலில் ஆறாவது மிகப் பிரபலமான நடிகர் என்ற அந்தஸ்துக்கு இவரை உயர்த்தியது. 1969-ல் ‘ஓ வாட் ஏ லவ்லி வார்’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 1977-ல் சத்தியஜித் ரேயின் ‘சதரன்ஞ் கே கிலாடி’ படத்தில் நடித்தார்.

* மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை 1982-ல் ‘காந்தி’ என்னும் பெயரில் திரைப்படமாக எடுத்தார். இது உலகம் முழுவதிலும் மகத்தான வெற்றிபெற்றது. இந்தப் படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்றார். மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த எடிட்டிங் உள்ளிட்ட மொத்தம் 8 ஆஸ்கர் விருதுகளையும், 4 பாஃப்ட்டா விருதுகள், 4 கோல்டன் குளோப் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் இப்படம் பெற்றது.

* நீண்ட இடைவெளிக்குப்பின் ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் நடித்தார். தொடர்ந்து ‘மிராக்கிள் ஆன் தர்ட்டிஃபோர்த் ஸ்டீட்’, ‘ஹாம்லட்’, ‘எலிஸபெத்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். 1992-ல் ‘சாப்ளின்’ திரைப்படத்தை இயக்கினார்.

* நாடு, மதம், இனம், ஜாதி, நிறம் எந்த பாகுபாடும் இல்லாமல் மனிதர்கள் அனைவருக்கும் கல்வியும் சுகாதாரமும் பெறும் உரிமை உள்ளது என்பதை மனதார நம்பிய இவர், உலகளாவிய பல்வேறு சேவை மையங்களோடு இணைந்து சேவைகள் புரிந்துவந்ததோடு, அவற்றுக்குத் தாராளமாக நிதி உதவியும் வழங்கினார்.

* நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், தொழிலதிபரும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஹாலிவுட்டில் வெற்றிகரமாக இயங்கி வந்தவரும், உலகப் புகழ்பெற்ற பன்முகப் பரிமாணம் கொண்ட ஆளுமையுமான இவர், 2014-ம் ஆண்டு தனது 91-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

ஹூஸ்ட்டன் புயலில் தப்பிப் பிழைத்த நாய், சமூக வலைதளங்களில் வைரலானது..!

மெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் புயற்காற்று வீசியது. ஓர் ஆண்டு முழுவதும் பெய்யவேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது. தெற்கு ஹூஸ்டன் பகுதியில் உள்ள Corpus Christi பகுதியில் உள்ள  குடியிருப்புகள் வெள்ள நீரில் மூழ்கின. புயலுக்கு இடையே, உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவு இன்றி பலர் தவித்து வருகின்றனர். மனிதர்கள் நிலையே இப்படி எனில், வீட்டு விலங்குகள் என்ன செய்யும்? அவைகளும் உணவு இல்லாமல் தவித்து வருகின்றன.

வைரலான நாய் புகைப்படம்

புயல், மழை வெள்ளத்திற்கிடையே, கடந்த 25-ம் தேதி otis என்ற நாய் வீட்டை விட்டுக் கிளம்பியது. நாயைக் காணாமல் அதன் உரிமையாளர் Segovia தவித்துப்போனார்.  மூன்று நாள்களாகக் காணாமல்போன அந்த நாய், திடீரெனத் தென்பட்டது. உணவுகளைக் கொண்ட ஒரு பையைத் தூக்கிக்கொண்டு நாய் சென்றதை டைலீ டக்கின்ஸ் என்ற பெண் பார்த்தார். அந்த நாயைத் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். ஜெர்மன் ஷிப்பெர்டு வகையைச் சேர்ந்த நாய் என்பது தெரியவந்தது. 

 

இதை அடுத்து, இந்த நாயின் புகைப்படம் வைரல் ஆனது. ஆன்லைனில் கொண்டாடப்படும் நபராக மாறியது இந்த நாய். இதன் பின்னர், நாயின் உரிமையாளர் Segovia, டைலீயைத் தொடர்பு கொண்டு விசாரித்தார். இதன்மூலம், அந்த நாய் தெரு நாய் அல்ல என்றும், உயர் ஜாதி வகையைச் சேர்ந்தது என்றும் டேலீக்கு தெரிய வந்தது. கார்டர் என்ற தமது பேரனுக்காக இந்த நாயை வளர்த்து வருவதாகவும், 5 வயதான பேரன், புயல் காரணமாக அவனது தந்தை வீட்டுக்குச் சென்றிருந்தான். ஆறு வயதான அந்த நாய், மீண்டும் திரும்பக் கிடைத்ததில் அதன் உரிமையாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.