Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
‘நட்பு, வாழ்க்கை கோட்டையை அழகூட்டும்’
 

image_4b7ba1850b.jpgஇன்றைய இளைய தலைமுறையினரில் பலர், நட்பு என்ற பெயரில் வெறும் களியாட்டங்களிலேயே பொழுதைப் போக்குவதாகப் பலரும் சொல்லிக் கவலைப்படுவதுண்டு. 

 ஆனால், இளைஞர்கள் செய்யும் சாதனைகளையும் சற்றுத் திரும்பிப் பார்த்துக் கொள்ளுங்கள். சில இளைஞர்கள் குதூகலம், கேளிக்கைகளில் ஈடுபட்டாலும் தங்களது கல்வி முயற்சிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு சிலர் தங்களது எதிர்காலத்தைத் தீய நட்பின் காரணமாக வீணாக்கிவிடுவதும் உண்டு. 

நல்ல நட்பு என்பது, தமக்கிடையே உள்ள தீய பழக்க வழக்கங்களில் இருந்து, முற்றாக நீங்க, ஒருவரை ஒருவர் கண்காணிக்க வேண்டியவர்களாகின்றனர்.  

உண்மையான நட்பு ஒருவரை ஒருவர் வலுப்படுத்துவதாக அமையவேண்டும். பொழுதுபோக்குக்காக, வாழ்க்கையின் முன்னேற்றங்களைக் களையலாகாது. நல்ல நட்பு வாழ்க்கை எனும் கோட்டையை அழகூட்டும்.  

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று….

செப்டெம்பர் – 14

 

1812 : நெப்­போ­லியன் போனபார்ட் தலை­மையில் பிரெஞ்சுப் படைகள் மொஸ்­கோவில் கிரெம்ளின் மாளி­கையை அடைந்­தன.


1821 : ஸ்பெயி­னி­ட­மி­ருந்து சுதந்­திரம் பெறு­வ­தாக கொஸ்டா ரிக்கா, எல் சல்­வடோர், குவாத்­த­மாலா, ஹொண்­டுராஸ், நிக்­க­ரா­குவா ஆகி­யன கூட்­டாக பிர­க­டனம் செய்­தன.


1835 : சார்ள்ஸ் டார்வின் எச்.எம்.எஸ். பீகிள் எனும் கப்­பலில் கால­பா­கசுத் தீவு­க­ளுக்குச் சென்று உயி­ரி­னங்­களின் படி­வ­ளர்ச்சிக் கொள்கை பற்­றிய ஆய்­வு­களை மேற்­கொண்டார்.


muhammad-ali1862 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: கூட்­ட­மைப்புப் படை­யினர் வேர்­ஜீ­னி­யாவின் ஹார்ப்பர்ஸ் துறையைக் கைப்­பற்­றினர்.


1916 : முதலாம் உலகப் போர்: சோம் என்ற இடத்தில் முதற்­த­ட­வை­யாக இரா­ணுவத் தாங்­கிகள் போரில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டன.


1935 : ஜேர்­ம­னியில் யூதர்­க­ளுக்கு குடி­யு­ரிமை சட்­ட­பூர்­வ­மாக மறுக்­கப்­பட்­டது.


1935 : நாஸி ஜேர்­மனி, சுவாஸ்­திக்­கா­வுடன் கூடிய புதிய தேசியக் கொடியை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.


1940 : இரண்டாம் உலகப் போர்: பிரித்­தா­னி­யாவில் பெரும் எண்­ணிக்­கை­யான ஜேர்­ம­னிய விமா­னங்கள் சுட்டு வீழ்த்­தப்­பட்­டன.


1944 : இரண்டாம் உலகப் போர்: போர் தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்­காக அமெ­ரிக்க ஜனா­தி­பதி பிராங்­கிளின் ரூஸ்வெல்ட், பிரித்­தா­னிய பிர­தமர் வின்ஸ்டன் சேர்ச்சில் ஆகியோர் இரண்டாம் தட­வை­யாக கியூபெக் நகரில் சந்­தித்­தனர்.


1945 : அமெ­ரிக்­காவின் தெற்கு புளோ­ரிடா மாநி­லத்­திலும் பஹாமஸ் நாட்­டிலும்  சூறா­வளி கார­ண­மாக 366 விமா­னங்கள் சேத­ம­டைந்­தன.


1947: ஜப்­பானில் சூறா­வ­ளி­யினால் 1077 பேர் இறந்­தனர்.


1950 : கொரியப் போரின்­போது அமெ­ரிக்கப் படைகள் தென்­கொ­ரி­யாவின் இன்­சியோன் தரை­யி­றங்­கின.


1952 : ஐ.நாவின் ஒப்­பு­த­லுடன் எரித்­தி­ரியா, எதி­யோப்­பி­யா­வுடன் இணைக்­கப்­பட்­டது.


1958 : நியூ ஜேர்­சியில் பய­ணிகள் பேருந்து ஒன்று விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 58 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1959 : நிக்­கிட்டா குருசேவ் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கு பயணம் மேற்­கொண்ட முதல் சோவியத் தலை­வ­ரானார்.


1968 : சோவி­யத்தின் சொண்ட் 5 விண்­கலம் ஏவப்­பட்­டது. சந்­தி­ரனைச் சுற்றி வந்து பூமியின் காற்று மண்­ட­லத்­தினுள் நுழைந்த முத­லா­வது விண்­கலம் இது­வாகும்.


1974 : கடத்­தப்­பட்ட வியட்நாம் விமா­ன­மொன்று விபத்­துக்­குள்­ளா­னதால் அதி­லி­ருந்த 75 பேரும் உயி­ரி­ழந்­தனர்.


1978 : அமெ­ரிக்க குத்­துச்­சண்டை வீரர் மொஹமத் அலி, 3 தடவை உலக அதி­பார குத்­துச்­சண்டை சம்­பியன் பட்டம் வென்ற முதல் வீர­ரனார்.


1983 : இஸ்­ரே­லிய பிர­தமர் மெனாசெம் பெகின் ராஜினாமா செய்தார்.


2000 : 27 ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் சிட்னியில் ஆரம்பமாகின.


2008 : அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான லீமன் பிரதர்ஸ் வங்குரோத்தானதாக அறிவிக்கப்பட்டது.

http://metronews.lk

  • தொடங்கியவர்

கனேடிய நகரின் மேயர் பதவிக்கு நாய் போட்டி?

கன­டா­வி­லுள்ள நக­ர­மொன்றின் மேயர் பத­விக்கு நாய் ஒன்று போட்­டி­யி­டு­கிறதாம். நியூ­பௌன்ட்லேண்ட் மாநி­லத்தின் சென். ஜோன்ஸ் நகரின் மேயர் பத­விக்­கான தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு நாய் போட்­டி­யி­டு­வ­தாக அதன் உரி­மை­யாளர் கூறு­கிறார்.

Newfoundland-state

உத்­தி­யோ­க­பூர்வ வேட்­பாளர் பட்­டி­யலில் இந்த நாயின் பெயர் இடம்­பெற மாட்­டாது. எனினும், இந்த நாயின் தேர்தல் பிர­சா­ரங்கள் ஏற்­கெ­னவே ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. 


ஃபின் என பெய­ரி­டப்­பட்ட இந்த நாய் 5 வய­தா­ன­தாகும். மிகச் சிறந்த வேட்­பாளர் இந்த நாய் தான் என பலர் கூறு­வ­தாக அதன் உரிமையாளர் கிளென் ரெட்மன்ட் தெரிவித்துள்ளார்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

மரணச் சடங்குகளில் ‘ட்ரைவ் த்ரூ’ அஞ்சலி; ஜப்பானில் அறிமுகம்

வாக­னத்­தி­லி­ருந்து இறங்­கா­ம­லேயே ஏ.ரி.எம். இயந்­தி­ரங்­களில் பணப்­ப­ரி­மாற்றம் செய்­வது, திரைப்­படம் பார்ப்­பது போன்ற, ட்ரைவ் த்ரூ வச­திகள் குறித்து அறிந்­தி­ருப்போம்.

japan-driv-thru

தற்­போது, ஜப்­பா­னி­லுள்ள இறு­திச்­ச­டங்கு நடத்தும் நிறு­வ­ன­மொன்று இறந்­த­வர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­து­வ­தற்கும் இத்­த­கைய வச­தியை அறி­ மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. மக்கள் வாக­னத்­தி­லி­ருந்து இறங்­கா­ம­லேயே, இறந்­த­வர்­க­ளுக்க அஞ்­ச­லியை செலுத்­தி ­விட்டுச் செல்­லலாம் என்­கி­றது இந்­நி­று­வனம். 


இத்­திட்­டத்­தின்­படி, அஞ்­சலி செலுத்த வரு­ப­வர்கள், காரில் அமர்ந்­த­வாறே காரின் கண்­ணா­டியை மாத்­திரம் கீழி­றக்­கி­விட்டு, டெப்லெட் கணி­னி­யொன்றில் தமது பெயரை பதிவு செய்­வ­துடன், அங்கு வைக்­கப்­பட்­டி­ருக்கும் திரை­களில் சடங்கு நிகழ்­வு­களை பார்த்து தமது அஞ்­ச­லியை செலுத்­தி­விட்டுச் செல்லாம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 


மர­ணச்­ச­டங்­கு­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கும், வய­தான உற­வி­னர்­க­ளுக்கு உத­வு­வ­தற்­கா­கவும் இத்­திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக மேற்­படி நிறு­வ­னத்தின் தலைவர்  மசாவோ  ஒகி­வேரா தெரி­வித்­துள்ளார்.


காரி­லி­ருந்து இறங்­கு­வ­தற்கு மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக, வயதான சிலர் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு தயங்குகின்றனர் என மசாவோ ஒகிவேரா கூறுகிறார்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

“ஈசல் வாங்கலையோ ஈசல்.... கிலோ 200 ரூபாய்!” சூடுபிடிக்கும் வணிகம்

 

ரு கிலோ ஈசலின் விலை 200 ரூபாய்! ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. ஆம், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது ஈசல் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. கிலோ 200 ரூபாய்க்கு வாங்குற அளவுக்கு ஈசலில் அப்படி என்னதான் இருக்கிறது என்கிற கேள்வி அனைவருக்கும் எழும். தட்டான், வண்ணத்துப்பூச்சி மாதிரி ஈசலும் ஒரு பூச்சிதானே. சின்னப் பசங்க ஈசல கையில புடிச்சு விளையாடிட்டு இருப்பாங்க. அதுவும் கொஞ்ச நேரத்துல செத்துபோயிரும். இன்னும் சொல்லப் போனா ஒரு நாள் உயிரி ஈசல்-னு பேப்பர்ல, புத்தகத்துல படிச்சுருப்போம் அவ்ளோதான். ஆனா இதெல்லாம் விட ஈசலைப் பற்றி நாம தெரிஞ்சுக்க வேண்டியது விஷயங்கள் பல இருக்கு. ஈசல் பல நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கு. ஈசலைப் பற்றியும் அதில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றியும் விரிவாகக் காண்போம்.

ஈசல்

 
 

நம் வீட்டில், தோட்டத்தில் இப்படி பல இடங்களில் கறையான் புற்று கட்டியிருப்பதைப் பார்த்திருப்போம். அந்தக் கரையானில் இருந்து உருவாவதே 'ஈசல்கள்'. அதுவும் குறிப்பாக ராணி கறையான்கள் இடும் முட்டையிலிருந்தே 'ஈசல்கள்' வெளிவருகின்றன. கறையான் புற்றிலிருந்து வெளியேறும் ஈசல்கள் புதிதாக புற்றுக்களை உருவாக்குகின்றன. அவற்றிலிருந்துதான் ஈசல் புற்றுகளில் இருந்து ஈசல்கள் புடிக்கப்படுகின்றன.

ஈசல்களின் உற்பத்தி பெரும்பாலும் பங்குனி, சித்திரை மாதங்களில்தான் அதிகமாக இருக்கும். முட்டைகளில் இருந்து வெளிவரும் ஈசல் மிகச்சிறியதாக வெண்மை நிறத்தில் காணப்படும். இவை, புற்றில் உள்ள தாவர வகைகளையே உணவாக உட்கொள்கின்றன. கிட்டதட்ட ஆடி, ஆவணி மாதங்களில் நல்ல வளர்ச்சியடைந்து பழுப்பு நிறத்தில் மாறிவிடுகின்றன. பின்னர் மழைக்காலங்களில் புற்றை விட்டு வெளியேறுகின்றன. குறிப்பாக ஆவணி, புரட்டாசி ஐப்பசி மாதங்களில் புற்றை விட்டு வெளியேறுகின்றன. ஈசல்கள் இரவு நேரங்களில்தான், சூரியன் உதயமாகும் நேரங்களில் வெளியே பறக்கின்றன. அதேபோல் காற்றடிக்காத நேரங்களில்தான் ஈசல்கள் வெளியே வருகின்றன. அவை தானாக வெளிவராத நேரத்தில் ஈசல் பிடிப்பவர்கள் சில டெக்னிக்குகளை பயன்படுத்தி அவைகளைப் பிடிக்கிறார்கள்.

ஈசல் எவ்வாறு பிடிக்கப்படுகிறது?

ஒவ்வோர் ஈசல் புற்றின் மீதும் இரண்டு அங்குல நீளத்தில் சற்று மேடாக வாயில் போன்ற அமைப்பு இருக்கும் இதற்கு வருவு என்று பெயர். பகல் நேரத்தில் வருவு கட்டியிருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்வர். ஈசல் கொட்டை என்ற ஒரு வகை கொட்டையையும், பெருமருந்து கொடியின் வேரையும் நன்றாக அரைத்து பொடியாக்கிக் கொள்வர். இந்தப் பொடியை இரவு நேரத்தில் புற்றின் மீது செலுத்தி, ஏதாவது ஒரு விளக்கொளியை புற்றின் மீது அடிப்பார்கள். விளக்கொளியாலும், பொடியாலும் கவரப்பட்டு ஈசல்கள் வெளியே வரும். புற்றுக்குழிக்கு அருகே வலை, பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு வெளியே வரும் ஈசலைப் பிடிக்கிறார்கள்.

ஈசலில் பல வகைகள் இருக்கின்றன. நெல் ஈசல். மாலைக்கண் ஈசல், கொழுந்தீசல், நாய் ஈசல் இவற்றில் நாய் ஈசலைத் தவிர மற்ற அனைத்தும் உண்ணத்தகுந்தவை.

ஈசல்

 

எவ்வாறு சமைக்க வேண்டும் :

ஈசலை சாக்குப் பையில் போட்டு இரண்டு புறமும் பிடித்துக் கொண்டு குழுக்கும் போது ஈசலின் சிறகுகள் உதிர்ந்துவிடும். பின்னர் சிறகுகளை நீக்கி விட்டு காய வைக்க வேண்டும். உண்ணுவதற்கேற்ற பகுதியை அரிசியோடு சேர்த்து வறுத்து சாப்பிடலாம்.நேரடியாக எண்ணெயில் பொரித்து மசாலா பூரி போன்றும் சாப்பிடலாம். தேனி, கம்பம், கோயம்புத்தூர் பகுதிகளில் கம்பு, கேழ்வரகு, திணை போன்ற சிறுதானிய மாவுடன், ஈசல் பூச்சி, வெல்லம் சேர்த்து உருண்டை செய்து சாப்பிடும் பழக்கும் உண்டு. ஈசலில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன.

ஈசலில் உள்ள மருத்துவக் குணங்கள் :

அவற்றைப் பற்றி சித்த மருத்துவர் செந்தில் கருணகாரனிடம் கேட்டோம் "சித்த மருத்துவத்தில் ஈசல் ‘இந்திர கோபப் பூச்சி’ என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் ஸ்டார்ச் அதிகமாகக் கிடைக்கும் பகுதிகளில்தான் உயிர்வாழும். இதை நேரடியாகவோ அல்லது உணவுப் பொருள்களுடனோ சேர்த்து சாப்பிடலாம். இதில் செம்பு சத்து அதிகமாக உள்ளது. இதை உணவாக உட்கொள்ளும்போது உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. உதாரணமாக, உடலுக்கு சூடு கொடுக்கும். ஆண்மைத்தன்மையை அதிகப்படுத்தும். விந்தணுக்களை கெட்டிப்படுத்தும். பிராஸ்டேட் சுரப்பிகளின் வீக்கத்தை குறைக்கும். நரம்புகளை வலுப்படுத்தும் நெர்வைன் டானிக்காக (nervine tonic ) செயல்படுகிறது, ஈசலை எண்ணெயில் போட்டு காய்ச்சி அந்த எண்ணெயை தசைப்பிடிப்பு உள்ள பகுதிகளில் தடவினால் தசைப்பிடிப்புகள் நீங்கும். மேலும் இதை எரித்து சாம்பலாக்கி தண்ணீருடன் கலந்து குடிக்கும்போது கக்குவான் இருமல் சரியாகும். இதை ஜாதிக்காயுடன் சேர்த்து பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் தேவையற்ற வலிகள் (சூழை நோய்) நீங்கும்.

ஈசலை நன்றாக அரைத்து மாவாக்கி அதனுடன் தேன்மெழுகை உருக்கி எடுத்த எண்ணெயை கலந்து உறைய வைக்கவேண்டும். இந்த க்ரீமை மூட்டுவலி உள்ள இடத்தில் தடவினால் மூட்டுவலி குணமாகும். இளம்பிள்ளை வாதம், பக்கவாதம் (hemiplegia), முகவாதம் (facial paralysis) போன்ற நோய்களுக்கும் மருந்தாக இருக்கின்றது." என்கிறார்

இயற்கையின் படைப்பில் ஏராளமான அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சிறிய செடிகள், பூக்கள், உயிரினங்களில் கூட ஏராளமான மருத்துவக்குணங்கள் நிறைந்திருக்கின்றன. பல லட்சம் செலவு செய்தாலும் தீர்க்க முடியாத வியாதிகளைக் கூடிய சிறிய மூலிகைகள், உயிரினங்கள் தீர்த்து விடுகின்றன.  எனவே இயற்கையையும், நம் பாரம்பர்யத்தையும் காப்போம்! நலமோடு வாழ்வோம்!

Vikatan

  • தொடங்கியவர்

சர்வதேச மக்களாட்சி தினம் இன்று!

டவுளைப்போலவே, இருக்கிறதா இல்லையா என்று தெரியாமலே சொல்லப்படும் ஒரு வார்த்தை, 'மக்களாட்சி'. குடவோலை முறைமூலம் உலகுக்கே மக்களாட்சி முறையைச் சொல்லிக்கொடுத்தது, தமிழகம். ஆனால், இன்றைய நிலைமை தலைகீழ். ஏற்றத்தாழ்வுகள் இந்த மக்களாட்சி முறையில் இருந்தாலும், இதைவிட நமக்கு வேறு நல்ல வாய்ப்புகள் என்பது இல்லை என்பதே உண்மை. மக்களாட்சியின் மாண்பை எடுத்துக்கூறவென்றே ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் அனைத்துலக மக்களாட்சி தினமாக ஐ.நா-வால் கொண்டாடப்படுகிறது. சர்வதேச மக்களாட்சி தினம் இன்று.

மக்களாட்சி

2007-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் நாள் ஐ.நா-வில் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தின்மூலம், இந்த நாள் 192 நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. மன்னராட்சி, குடியாட்சி, சர்வாதிகார ஆட்சி என எல்லாவற்றையும்விட மக்களாட்சி சிறப்பானது என்பதாலேயே, அநேக உலக நாடுகளில் மக்களாட்சி அமலில் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் நலனுக்காக சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் செயலாற்றுவதே மக்களாட்சியின் அடிப்படைத் தத்துவம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து, வறுமை நீங்கி, அறியாமை விலகி, சமத்துவத்தோடு வாழ்வதே மக்களாட்சியின் நோக்கம். மக்களாட்சியில் ஆயிரம் குறைபாடுகள், குழப்பங்கள் இருந்தாலும், மாண்புமிக்க மக்களாட்சி முறை தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். மக்களாட்சி தினமான இந்த நாளில், எந்தப் பரிசும் பணமும் பெறாமல், நேர்மையான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்போம் என உறுதிகொள்வோம். அதுவே, மக்களாட்சி தினத்துக்கு நாம் கொடுக்கும் மரியாதை.  

Vikatan

  • தொடங்கியவர்

அருங்காட்சியகமாக மாறிய அமெரிக்க ஜனாதிபதியின் விமானம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் பயன்படுத்திய எயார் ஃபோர்ஸ் வன் விமானமே அருங்காட்சியகமாக உருமாறியுள்ளது.

6_Air_Force_One.JPG

அமெரிக்காவின் ரோட்ஸ் தீவின் க்வோன்செட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த பறக்கும் அருங்காட்சியகம், சிறுவர்களைக் கருத்திற்கொண்டே உருவாக்கப்பட்டதாக அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் பன்னிரண்டு வருட முயற்சியின் பின் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.

“வருங்காலத் தலைவர்களாக உருவாகவிருக்கும் சிறுவர்கள், ஒரு தலைவரின் கடமைகள் என்ன, அவருக்கு வழங்கப்படும் வசதிகள் என்ன என்பன குறித்து அறிந்துகொள்ள வேண்டும். இதன்மூலம், அவர்கள் தமக்குள் தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ள முயற்சிப்பார்கள். அதற்கு இந்த அருங்காட்சியகம் உதவும்” என்று இந்த அருங்காட்சியத்தின் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதிகளின் பயணத்துக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுவது எயார் ஃபோர்ஸ் வன் என்ற போயிங் 747-8 ரக விமானம். இதில், வேறெந்த விமானத்திலும் இல்லாத பல வசதிகள் உண்டு.

மூன்று மாடிகளில் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவுகொண் இவ்விமானத்தில், ஜனாதிபதி, அவரது செயலாளர், உயரதிகாரிகள், ஊடகவியலாளர்கள் என 76 பேரும், விமானச் சிப்பந்திகளாக 26 பேருமாக 100க்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கலாம். அனைவருக்கும் பிரத்தியேக தங்கும் அறைகள் உண்டு.

இயற்கை அனர்த்தம் மற்றும் ஏனைய அனைத்து ஆபத்துக்களையும் கருத்திற்கொண்டு, அவற்றுக்கு முகங்கொடுக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏவுகணைகளை அடையாளம் காணும் ராடார்கள், மற்றைய ராடார்களில் இருந்து தப்பும் வசதி, இணையதளத் தாக்குதல்களைக் கண்டறியும் வசதி, நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி, மின்காந்த அலைகள் ஊடுருவ முடியாத அமைப்பு, பாதுகாப்பான தொடர்பாடல் மற்றும் தகவல் பரிமாற்று வசதி, சத்திர சிகிச்சைகள் செய்யக்கூடிய வகையிலான மருத்துவ வசதிகள் உட்படப் பல வசதிகள் கொண்டது இந்த விமானம்.

தற்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ள இந்த விமானம், எதிர்வரும் அக்டோபர் மாத இறுதியில் நியூயோர்க்குக்குப் பறந்து செல்லவிருக்கிறது. அங்கு சில காலம் தங்கியிருந்தபின், வொஷிங்டனில் தரையிறங்கும். அதன்பின் நிரந்தரமாக வொஷிங்டனிலேயே பார்வையாளர்களுக்காக வைக்கப்படவுள்ளது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

ஜிமிக்கி கம்மல் பாடலின் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா?

 

ஜிமிக்கி கம்மல் பாடலின் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா? நீங்களே காறி உமிழ்வீர்கள்!

அண்மையில் வெளிவந்த ஜிமிக்கி கம்மல் எனும் மலையாளப் பாடலைக் கேட்காத தமிழர்களே இல்லை எனும் அளவுக்கு அந்தப் பாடல் பிரபலம்பெற்றுவிட்டது.

தமிழ்ச்சினிமாவில் முக்கியமான கதா நாயகர்களின் டீசர், ட்ரைலர் போன்றவற்றுக்கு நிகரான வரவேற்பை அந்த ஒரு பாடலுக்கு தமிழர்கள் முக்கியம் கொடுத்ததுதான் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

தாம் கேட்கும் அந்த மொழி தெரியாத பாடலை அதன் அர்த்தம் புரியாமல் இவ்வளவு தமிழர்கள் முக்கியத்துவம்கொடுத்துப் பார்த்தும் கேட்டுமிருக்கிறார்களெனில் அதில் ஒரு ஈர்ப்பு இல்லாமல் இல்லை.

ஆனால், உண்மையில் அதன் அர்த்தம் என்பது தமிழரின் பண்பாட்டோடு ஒத்துப்போகாத ஒன்று என்பதை யாரும் அறிந்திருக்கமாட்டிலர். கேரளாவில் உருவாக்கப்பட்ட அந்தப் பாடலுக்கும் ஆடலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இவ்வளவுதூரம்வரை தூக்கிவிட்ட எண்பதுவீதமான பங்கும் தமிழர்களைத்தான் சாரும்.

சரி அந்த பாடலின் முன் இரண்டு வரிகளதும் அர்த்தம் என்னவென்று பார்ப்போம்,

”என்டம்மெட ஜிமிக்கி கம்மல்!
என்டப்பன் கட்டொண்டு போயே!
என்டப்பன்டெ பிராந்தி குப்பி!
என்டம்மா குடிச்சு தீர்த்தே!”

அதாவது ”என்னுடைய அம்மாவின் ஜிமிக்கி கம்மலை அப்பா திருடிக்கொண்டு போய் அதை விற்று சாராயம் வாங்கிக்கொண்டு வந்தார், இதனால் கோபமடைந்த அம்மா அந்த சாராயப்போத்தலை எடுத்து தானே முழுவதையும் குடித்துத் தீர்த்துட்டாள்” என்பதே அதன் அர்த்தம்.

https://news.ibctamil.com

 

  • தொடங்கியவர்

ஹவாய்: மலையில் இருந்து வழியும் எரிமலை குழம்பு.

ஹவாயின் பெரிய தீவில் உள்ள கீலவுயே எரிமலையில் இருந்து வழிந்துகொண்டிருக்கும் ‘லாவா’ எனப்படும் எரிமலை குழம்பு.

உலகிலேயே அதிகக் கொதிப்புடன் இருக்கும் எரிமலை இதுவே.

1983 ஆம் ஆண்டிலிருந்து இந்த எரிமலை அவ்வப்போது வெடித்துவருகிறது.

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

 

twitter.com/Calmrade

எண்டம்மே மெடிக்கல் சீட்டு எம்புள்ளைக்குக் குடுத்துப் போயி...

அந்தம்மே கம்யூனிஸ்ட் சேச்சி எம்மானம் கெடுத்துப் போயி...

கிருட்டிணசாமி பாடுகிறார்.

p110a.jpg

twitter.com/KarthikaRam21

நாமெல்லாம் சூப்பர்ல.

ஒரே வாரம்தான், அனிதாவிலேர்ந்து ஜிமிக்கிக் கம்மலுக்கு மாறிட்டோம்.

மூணு வருஷத்துல கூவத்தூரும் டிமானிட்டிசேஷனும் மறந்துடும்.

twitter.com/sashi16481

தி.மு.க. கூட்டத்திற்கு மழை வந்தது. ஆனால், எங்கள் கூட்டத்திற்கு மழை வரவில்லை. - தமிழிசை.

அதுவும் வரலையா...

twitter.com/Itz_SweetHeart_

மிஸ்டுகால் கொடுத்தா, நதி இணையும்.

சினிமா தியேட்டரில் தேசியகீதம் பாடினால், தேசபக்தி வளரும்.

தெர்மாகோல் மூலம் கடல் நீர் ஆவியாகாமல் தடுக்கலாம்.

twitter.com/Kozhiyaar

இன்றைய அதிகார வர்க்கத்திற்கு சரியான எதிர்க்கட்சி இந்தச் சமூக வலைதளங்கள் என்றால் அது மிகையல்ல.

p110b.jpg

twitter.com/amuduarattai

“எதையும் உருவாக்குவது கடினம், அழிப்பது எளிது” என்ற தத்துவம், தொப்பைக்குப் பொருந்தாது.

twitter.com/Kozhiyaar 

 ‘நல்லா இருக்கீங்களா?’ என்ற கேள்விக்கு மனைவியுடன் இருக்கும்போது ஒரு பதிலும், தனியாக இருக்கும்போது ஒரு பதிலும் வருகிறது ஆண்களிடம் இருந்து.

twitter.com/withkaran 

மணிரத்னம்-சிம்பு காம்போங்குறது மணிரத்னத்தோட ப்ளூவேல் டாஸ்க்.

twitter.com/Maga_raja
 
தன் வினை தன்னைச் சுடும்ங்கிறது, நாம இன்ஸ்டால் பண்ண சி.சி.டி.வி கேமராவில நம்மளைக் கண்காணிக்கிறது தான்.

twitter.com/kumarfaculty

உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை, ஆட்சியாளர்களுக்குப் பயத்தை உருவாக்கும் உலகின் முதல் கடற்கரை. #மெரினா.

twitter.com/Thaadikkaran 

கடைசிக் காலத்தில் மகனிடம் அம்மா கேட்கும் கேள்வி, “நான் உனக்கு அதிகக் கஷ்டம் கொடுக்கிறேனா” என்பதாகவே இருக்கும்.

twitter.com/iamVariable

சின்னக் குழந்தைகள் மருத்துவமனையில் கொல்லப்பட்டாலும் வேடிக்கை பார்க்கும் நாட்டில், பள்ளிக் குழந்தைகளும் சமூக நீதிக்காகப் போராடும் ஒரே மாநிலம் தமிழகம்.

p110c.jpg

twitter.com/mekalapugazh

ஐந்து பொருள் வாங்கக் கடைக்குச் சென்று மூன்று பொருள் மட்டுமே வாங்கி வந்தால் அது ஆண்.

சும்மா வெளியே கிளம்பி ஐந்து பொருள் வாங்கி வந்தால் பெண்.

twitter.com/Kozhiyaar

அரசியல்வாதிகளுக்கு நுழைவுத் தேர்வு வேண்டும் என்கிறார்கள். அவர்களைத் தேர்ந்தெடுப்பதே நாம்தான் என்பதை மறந்து.

twitter.com/drkvm

தீபா மாதிரி டி.டி.வி. தினகரனும் மாறிட்டு வர்ற மாதிரியே தெரியுதே.

twitter.com/mujib989898 

``அடிக்கடி போன் பேசுறீங்களே...அவங்களை ஒரு நாளைக்கு டின்னருக்கு வரச்சொல்லுங்க’’ என்கிறார் மனைவி.

பேசுவது பெண்ணாக இருக்குமோ என்ற சந்தேகத்தில்... என்னாம்மா யோசிக்கிறாய்ங்க!

twitter.com/Blackietalks17

காதலிக்கும்போது மட்டும்தான்  ரதியும் மன்மதனும்...

கல்யாணம் ஆகிவிட்டால் மூஞ்சியும் மொகறையும்தான்.

twitter.com/chithradevi_91 

வருங்காலத்தில் நிறைய மதிப்பெண் எடுக்கும்  பிள்ளைகளைப் பாராட்ட வேண்டும் என்பதைவிட பாதுகாக்க வேண்டும் என்ற பயம்தான் வருகிறது.

twitter.com/chithradevi_91

எந்தப் பிரச்னைக்கும் போராட இளைஞர் கூட்டம் தயாராகத்தான் இருக்கிறது. ஆனால், இவர்களை ஒருங்கிணைக்க நேர்மையான ஒரு தலைவன் இல்லாததே இம்மண்ணின் சாபக்கேடு.

p110d.jpg

twitter.com/raajaacs

மயிலிறகால் வருடுகிறவர்களிடம் கவனமாக இருங்கள். மயிலைக் கொன்றவர்களாகக்கூட இருக்கலாம்.

twitter.com/thoatta 

கருப்புப் பணத்தை மீட்டு ஆளுக்கு 15 லட்சம் தந்த மாதிரி, நதிகளை மீட்டு ஆளுக்கு 15 குடம் தண்ணித் தருவாய்ங்க போல.

  • தொடங்கியவர்

பிரித்தானியவின் அழகை வர்ணிக்கும் புகைப்படங்கள்

 

பிரித்தானியவின் அழகை வர்ணிக்கும் புகைப்படங்கள்

...
...
...
...
...
...
...
...
...
...
...

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

காசினி விண்கலம் மேற்கொண்ட ஆய்வு சாதனைகள் (காணொளி)

  • தொடங்கியவர்

குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன்.. தமிழ்நாட்டின் அண்ணன்! பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு...

அப்பாவியாகத் தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன்!
* சி.என்.ஏ. என்ற மூன்றெழுத்தால் அறிமுகமான அண்ணாதான், தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் 'தளபதி'. பெரியாரின் சீடராக வலம் வந்தபோது அப்படித்தான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு எல்லோருக்கும் அவர் 'அண்ணா'தான்!
* பள்ளியில் படிக்கும்போது பொடி போட்டுப் படித்தார். கல்லூரிக் காலத்தில் வெற்றிலை, பாக்கு பயின்றார். வெளியில் எச்சில் துப்ப, வகுப்பில் ஜன்னல் ஓரத்து இருக்கையில் இருப்பார். இந்தத் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை இருந்தது!
* ''என் வாழ்க்கையில் நான் கண்டதும்கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்'' என்று அறிவித்திருந்தார். அவரைவிட்டுப் பிரிந்து, தனிக் கட்சி கண்டபோதும் தலைமை நாற்காலியை பெரியாருக்காகக் காலியாகவே வைத்திருந்தார். அண்ணா காலமானது வரை தி.மு.க-வுக்குத் தலைவர் அறிவிக்கப்படவே இல்லை!
* இரண்டு மயில்கள், இரண்டு மான்கள், புறாக்கள், நாய் ஆகியவற்றைக் கடைசி வரை விரும்பி வளர்த்தார். அவர் இறந்த ஒரு வாரம் கழித்து அவரது படுக்கையைச் சுற்றி வந்து அந்த நாய் இறந்தது. பிற விலங்குகளைப் பராமரிக்கக் கொடுத்துவிட்டார்கள்!
* அண்ணா - ராணி தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, தனது அக்கா மகள் சௌந்தரியின் மகன்களான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகிய நால்வரையும் தத்து எடுத்து வளர்த்தார்!
* தினமும் துவைத்துச் சுத்தப்படுத்திய வேட்டி - சட்டை அணிய வேண்டும் என்று நினைக்க மாட்டார். ஒரே சட்டையை இரண்டு மூன்று நாட்கள் போடுவார். முதலமைச்சரான பிறகுதான் 'வெள்ளையான சட்டை' அணிந்தார்!
* தலை சீவ மாட்டார். கண்ணாடி பார்க்க மாட்டார். மோதிரம் அணிந்தது இல்லை. கைக்கடிகாரம் அணிய மாட்டார். ''என்னை காலண்டர் பார்க்கவைத்து, கடிகாரம் பார்க்கவைத்து சூழ்நிலைக் கைதியாக்கிவிட்டதே இந்த முதலமைச்சர் பதவி'' என்று சொல்லிக்கொண்டார்!
* காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம், காஞ்சிபுரத்தில் ஒரு வீடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு - மூன்றும்தான் அண்ணா வைத்துவிட்டுப் போன சொத்துக்கள்!
* முதலமைச்சராக இருந்து அவர் இறந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய், மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் அவரது கணக்கில் இருந்தன!
* நெசவு மற்றும் தையல் தொழில் நன்றாகத் தெரியும். ''என்னுடைய அளவுக்கு மீறிய பொறுமைக்கு இதுதான் காரணம். நூல் அறுந்துவிடக் கூடாது என்பதற்காக நெசவாளியானவன் எப்போதும் இப்படித்தான் கவனமாகவும் பொறுமையாகவும் இருப்பான்'' என்பார்!
* புற்றுநோய் பாதிப்பில் இருந்தபோது, சென்னை மருத்துவமனையில் இருந்து வேலூர் சி.எம்.சி-க்கு அவரைக் கொண்டுசெல்லும்போது தடுத்தார். ''நாமே அரசாங்க மருத்துவமனையை மதிக்காததுபோல ஆகிவிடும்'' என்றார்!
* அண்ணா பல மணி நேரங்கள் பேசிய கூட்டத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. ஒரு கூட்டத்தில் ஐந்து நொடிகள்தான் பேசினார். ''காலமோ சித்திரை... நேரமோ பத்தரை... உங்களுக்கோ நித்திரை... போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை'' என்பதே அந்தப் பேச்சு!
* நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது, சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழித் திட்டத்தை சட்டமாக்கியது... இவை மூன்றும் அண்ணாவின் சாதனைகள்!
* தி.மு.க ஆட்சியைப் பிடித்தால் தான் தான் முதலைமைச்சர் என்ற யோசனைகூட இல்லாமல், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குப் போடியிட்டவர் அண்ணா!
* உலகம் பழையதும் புதியதும், நிலையும் நினைப்பும், நாடும் ஏடும், நல்ல தீர்ப்பு, ஆற்றங்கரையோரம் என்று தலைப்பு கொடுத்து அதிகம் பேசியது இவர்தான். மைக் முன்னால் நின்றதும் தலைப்பு கொடுப்பார்கள். அப்படியும் பேசியிருக்கிறார். இரண்டு அணா டிக்கெட் வசூலும் இவரது பேச்சைக் கேட்க வசூலித்திருக்கிறார்கள்!
* 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்', 'கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு', 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்', 'கடமை-கண்ணியம் -கட்டுப்பாடு', 'எங்கிருந்தாலும் வாழ்க', 'மறப்போம் மன்னிப்போம்', 'வாழ்க வசவாளர்கள்', 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு', 'சட்டம் ஒரு இருட்டறை', 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' ஆகிய பிரபலமான வாசகங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை!
* தனக்குக் கீழ் இருந்தவர்களை நாவலர், கலைஞர், பேராசிரியர், சொல்லின் செல்வர், சிந்தனைச் சிற்பி, தத்துவ மேதை என்ற பட்டம் சொல்லி அழைத்து வளர்த்துவிடுவார்!
* மூர்மார்க்கெட் யுனிவர்ஸல் புக்ஷாப், சென்னை ஹிக்கின்பாதம்ஸ் ஆகிய இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கிலப் புத்தகங்களையும் வாங்கிவிடுவார். ஹிக்கின்பாதம்ஸ் எடுத்த கணக்கெடுப்பின்படி மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ் உடையாரும், அண்ணாவும்தான் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்களாம் அந்தக் காலத்தில்!
* பூட்டிய அறைக்குள் தனியாகப் படுக்கப் பயப்படுவார். யாராவது துணைக்கு இருக்க வேண்டும். தூங்கும்போதும் விளக்கு எரிய வேண்டும். காஞ்சிபுரத்தில் குரங்குகள் அதிகமாக இருந்ததால், தன்னைக் குரங்கு கடித்துவிடுமோ என்ற பயம் எப்போதும் இருந்திருக்கிறது!
* முதலமைச்சர் ஆனதும், அதுவரை தன்னை எதிர்த்து வந்த பெரியார், காமராஜ், பக்தவத்சலம் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனைகள் பெற்றார்!
* தான் வகித்த தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியைச் சுற்று முறையில் பலருக்கும் போக வேண்டும் என்று நினைத்தார். ''தலைமையிடம் அதிகாரம் குவியக் கூடாது. எந்தத் தனி நபரின் செல்வாக்கிலும் இயக்கம் இருக்கக் கூடாது'' என்றார்!
'* ஓர் இரவு' திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் (அதாவது 360 பக்கங்கள்) ஒரே நாள் இரவிலேயே எழுதி முடித்தார்!
* எப்போதும் தான் பேச இருக்கும் கூட்டத்துக்குத் தாமதமாகத்தான் வருவார். ''முன்னால் வந்தால் அடுத்தவரைப் பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள். அதனால், ஊருக்கு வெளியில் நின்று, அனைவர் பேச்சையும் கேட்டுவிட்டுக் கடைசியில் வருகிறேன்'' என்பார்!
* அண்ணா மறைவின்போது திரண்ட கூட்டம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம். 1806 பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன், 1907 எகிப்து குடியரசுத் தலைவர் கமால் அப்துல் நாசர் ஆகியோருக்குக் கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது கின்னஸ்!
* போப்பாண்டவரைச் சந்தித்த அண்ணா, கோவா விடுதலைக்குப் போராடி போர்ச்சுக்கல் சிறையில் இருக்கும் மோகன் ரானடேவை விடுதலை செய்யக் கேட்டார். விடுதலையான ரானடே, அண்ணாவுக்கு நன்றி சொல்ல சென்னை வந்தார். ஆனால், அண்ணா இறந்துபோயிருந்தார். இப்படி அண்ணாவின் வாழ்க்கை, தூரத்தில் இருப்பவர்களுக்காகப் பிரதிபலன் பார்க்காததாகவே இருந்தது!

- ப.திருமாவேலன்

 
Bild könnte enthalten: 1 Person, Text und Nahaufnahme

 

 

 

அண்ணாவைப் பற்றிய இந்த 10 சுவாரஸ்யங்கள் தெரியுமா..?

 
 

அண்ணா

றிஞர் அண்ணா 1963-ம் ஆண்டில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர். நாடாளுமன்றத்தில் 'சென்னை மாகாணம்' என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்திடக்கோரும் தீர்மானம் ஒன்றை அவர் கொண்டுவந்தார். காங்கிரஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. எம்.என். லிங்கம் என்ற உறுப்பினர், "தமிழ்நாடு என பெயர் மாறினால் நீங்கள் என்ன லாபம் அடைந்து விடப்போகிறீர்கள்?" என்று கேட்டார். “நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும், ஜனாதிபதிக்கு ராஷ்ட்ரபதி என்றும் பெயர் மாற்றம் செய்திருக்கிறீர்களே, இதனால் நீங்கள் கண்ட லாபம் என்ன?” என்று அண்ணா கேட்டதும், காங்கிரஸ் உறுப்பினரிடம் இருந்து பதிலேதுமில்லை.

முதல்வராக அண்ணா இருந்தபோது, அவரின் பேச்சு எதிர்க்கட்சியினரும் ரசிக்கும்படியாக இருக்கும். ஒரு சமயம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுந்து, “மிருகக்காட்சி சாலைக்கு நான் தந்த ஆண் புலிக்குட்டி சரியாக கவனிக்கப்படவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் தந்த பெண் புலிக்குட்டி மட்டும் நன்கு கவனிக்கப்படுகிறது” என்று குற்றம்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட அண்ணா, "சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து, உங்கள் பிரச்னையைப் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்” என்றதும் சபை சிரிப்பால் நிறைந்தது. 
பெரியார் தன் முதுமைப் பருவத்தில் செய்துகொண்ட திருமணத்தினால், அண்ணா அவருடன் முரண்பட்டார். பெரியாரின் செயலால் கருத்துவேறுபாடு கொண்ட திராவிடர் கழகத்தினர், அண்ணா தலைமையில் திரண்டனர். பெரியாரின் செயலால் தொண்டர்கள் கண்ணீர் விடுவதாகவும் அந்தக் கண்ணீர் கடலாகி, அதில் பெரியார் மூழ்குவதாகவும் அட்டைப்படம் வெளியிட்டது திராவிட நாடு. எரிச்சலான பெரியார், அண்ணாவின் ஆதரவாளர்களை 'கண்ணீர்த் துளிகள்' என கிண்டலடித்தார். தி.மு.கழகம் உருவானது. ஆனாலும், பெரியாரை தரம் தாழாமல் விமர்சனம் செய்து கண்ணியம் காத்தார் அண்ணா. 

அண்ணாபெரியாருடன் முரண்பட்டு அரசியல் செய்தாலும், 1967 தேர்தலில் தி.மு.க வென்று தமிழக முதல்வராகப் பதவியேற்ற அண்ணா முதலில் சென்று சந்தித்தது பெரியாரைத்தான். தி.மு.கழகத்தின் வெற்றியை பெரியாருக்குக் காணிக்கையாக்குவதாகச் சொல்லி காலில் விழுந்து ஆசி பெற்றார் அண்ணா. இதன்மூலம் அவர் தன்னை சங்கடத்துக்கு உள்ளாக்கி விட்டதாக பெரியார் நெகிழ்ந்து எழுதினார்.

அண்ணா ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல; தேர்ந்த நடிகரும்கூட. தான் எழுதிய 'சந்திரோதயம்', 'சந்திரமோகன்' போன்ற நாடகங்களில் நடித்தும் இருக்கிறார். புகழ்பெற்ற 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' நாடகத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் எம்.ஜி.ஆர். ஆனால், என்ன காரணத்தினாலோ தொடர்ந்து அதில் நடிக்கமுடியாத சூழல் உருவானது. அப்போது அந்த கதாபாத்திரத்துக்கு, தனது இல்லத்தில் தங்கியிருந்த 'கணேசன்' என்ற நாடக நடிகரை நடிக்க வைத்தார் அண்ணா. அந்த நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒருநாள் அந்த நாடகத்தைக் காணவந்த பெரியார், கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து, “நாடகம் நடந்த இரண்டரை மணிநேரமும் நான் கணேசனை காணவில்லை. சிவாஜியையே கண்டேன்” என நெகிழ்ந்தார். அந்த நடிகர்தான், நடிகர் திலகம் 'சிவாஜி' கணேசன்.

பரபரப்பு அரசியல் தலைவர் என பெயர் எடுத்தாலும் அண்ணாவுக்குள் ஒரு படைப்பாளி எப்போதும் உண்டு. பொதுக்கூட்டங்களுக்குச் சென்றுவிட்டு நேரம்கடந்து வீடு திரும்பினாலும், தன் டைரியில் ஓவியம் வரைவது, ஜோக் எழுதுவது என தனக்கு பிடித்தமானவற்றைச் செய்து அந்தநாளின் டென்ஷனைக் குறைத்துக்கொள்வார். போராட்டங்களில் கலந்து சிறை செல்லும்போது அண்ணா தன்னைக் காண வருபவர்களிடம் கேட்கிற விஷயம் ஒன்று புத்தகம். மற்றொன்று வெள்ளைத்தாள். அதில் விருப்பம்போல் படங்களை வரைந்து தள்ளுவார். போர் வீரன், வனம் என அவர் வரைந்த ஓவியங்கள் இன்றும் காணக்கிடைப்பவை. அவர் தன் டைரியில் எழுதிவைத்த ஜோக்குகளில் ஒன்று இது....

ஹோட்டலில் சாப்பிட வந்தவர்: "ஏம்பா.. வடை இவ்வளவு மோசமா இருக்கு...சின்னதாவும் இருக்கே?" 
சர்வர்: "பின்னே, என்னங்க...மோசமாகவும் இருந்து, பெரியதாவும் இருந்தா தின்ன முடியாதுங்களே? அதான்!" 


ண்ணாவுக்கு மூக்குப்பொடி போடும் வழக்கம் உண்டு. அண்ணாவிடம் ரசித்த விஷயம் என்ன என்று எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை கேட்டபோது, "பொதுக்கூட்டத்தில் மற்றவருக்குத் தெரியாமல் லாவகமாக, அவர் மூக்குப்பொடி போடும் அந்த சில விநாடிகள் பார்க்க ரசனையாக இருக்கும்" என்று பதிலளித்தார். ஆம், அத்தனை ரசனையாக மூக்குப்பொடி போடுவார் அண்ணா. 
இரவு நெடுநேரம்வரை எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கும் வழக்கம் கொண்டவர் அண்ணா. அதனால், பகல் 10 மணிக்கு மேல்தான் எழுதுவார். காஞ்சிபுரத்தில் அவரைக் காண வருபவர்கள், அவருக்காக வீட்டில் வாசற்படியில்  காத்திருப்பதைப் பார்க்கும் அவரது சித்தி, “கட்சிக்கு உதயசூரியன்னு பேரை வெச்சிட்டு, ஒருநாளும் அது உதிக்கறதைப் பார்க்க மாட்டேங்குறானே" என குறைபட்டுக் கொள்வார் காத்திருப்பவர்களிடம். இதைக்கேட்டு, அந்த இடமே சிரிப்பொலியால் அலறும்..

அண்ணா

1968-ம் ஆண்டில் மருத்துவக்கல்லுாரி மாணவர் ஒருவருக்கும், பஸ் நடத்துநர் ஒருவருக்குமான மோதல் பெரிய பிரச்னையாகி பேருந்து தொழிற்சங்கங்கள் ஸ்ட்ரைக் செய்தன. அண்ணா தலையிட்டும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. மாணவர் சார்பாக, அண்ணா மன்னிப்பு கேட்டும், அவர்கள் மனமிரங்கி வரவில்லை. அந்தப் பேச்சுவார்த்தையின்போது, அண்ணா மயக்கமுற்றார். வாயிலிருந்து ரத்தம் வந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அண்ணாவுக்குப் புற்றுநோய் எனத் தெரியவந்தது. 

லைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கும், அண்ணாவுக்குமான நட்பு ஆச்சர்யமானது. கலைவாணருக்காக அண்ணா எழுதிய கதை “நல்லதம்பி”. கதைப்படி, படத்தில் கலைவாணருக்கு ஒரே ஒரு கதாநாயகிதான். அது பானுமதி. அந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோது, அண்ணா ஒருமுறை கலைவாணர் இல்லத்துக்குச் சென்றார். அப்போது தன் கணவருடன் தான் நடிக்கமுடியவில்லையே என கலைவாணரின் மனைவி 'மதுரம்' கவலைப்பட்டதை அவரின் செயல்மூலம் தெரிந்துகொண்டார் அண்ணா. அன்றிரவே "நல்லதம்பி" படத்தின் கதையில் மதுரத்துக்கென ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, கலைவாணருக்கு ஜோடியாக்கினார் அண்ணா. 

அண்ணா

தனக்கு புகழ்கொடுத்த அந்தப் படத்துக்கு சன்மானமாக, அண்ணாவுக்கு ஒரு காரை பரிசளித்தார் கலைவாணர். காஞ்சிக்கு நேரில்வந்து அதை தந்ததோடு, பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிய காலம் என்பதால் குறிப்பிட்ட காலம்வரை அந்தக் காருக்குத் தேவையான பெட்ரோல் டோக்கன்களையும் கொடுத்தார் கலைவாணர்.

ந்தி எதிர்ப்பு நிலை, திராவிட நாடு கோரிக்கை இவற்றால் அண்ணாவின் மீது கோபத்தில் இருந்தவர் அன்றையப் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவர், சென்னை வந்தபோது தி.மு.க.-வினர் அவருக்கு கறுப்புக்கொடி காட்டியதற்காக 'நான்சென்ஸ்' என தி.மு.க. தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். அதே நேரு, மாநிலங்களவைக்கு அண்ணா தேர்வாகிச் சென்றபோது, அவரது கன்னிப்பேச்சை ஆங்கிலத்தில் கேட்டு அயர்ந்துபோனார். நேரம் கடந்ததை மாநிலங்களவைத் தலைவர் சுட்டிக்காட்டியபோது, உணர்ச்சிவயப்பட்டு குறுக்கிட்ட நேரு ‘அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்; பேசவிடுங்கள்” எனக் கேட்டுக்கொண்ட அதிசயம் நடந்தது. அண்ணாவின் உரை அந்த அளவுக்கு நேருவைக் கட்டிப்போட்டது.

ண்ணாவின் பேச்சுக்கு யாரும் அவ்வளவு எளிதில் மறுத்துப் பேசிவிட முடியாது. வலுவான வாதங்களை வைப்பதில் சமர்த்தர் அவர். ஒருமுறை பெரியாரைக் காண சுதேச கிருபாளினி வந்தார். அந்த வார “ரிவோல்ட்” இதழில் கதர் கட்டுவது மூடநம்பிக்கை என பொருள்படும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் பெரியார். இதைக் குறிப்பிட்ட கிருபாளினி, "நீங்கள் ஒரு காங்கிரஸ்காரராக இருந்து தெருத் தெருவாக கதரை சுமந்து விற்றுக் கட்சியை வளர்த்திருக்கிறீர்கள். ஆனால், இப்போது இப்படி எழுதுவது தவறு!" என்றார். அதற்குப் பதில்கூற முயன்ற பெரியாரின் பேச்சை மறுதலித்து, தொடர்ந்து கிருபாளினி ஆவேசத்துடன் பேசவே, குறுக்கே புகுந்த அண்ணா, " 'விபூதி அணிந்தவன் சிவ பக்தன். நாமம் போட்டவன்தான் வைணவன்!' என்று சொல்லும் நம்பிக்கை போன்றதுதான் கதர் கட்டுபவன்தான் தேசபக்தன் என்பது" என்று ஒரே போடாகப் போட, அமைதியானார் கிருபாளினி.

அண்ணா

திராவிட நாடு கொள்கையை அண்ணா முன்வைத்தபோது பெரும் சர்ச்சையானது. தி.மு.க-வை தடைசெய்ய வசதியாக, மத்திய அரசு பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டு வரும் அளவுக்குப் போனது. 1962-ம் ஆண்டு சீனப் படையெடுப்பின்போது, உருவான கொந்தளிப்பான அரசியல் சூழலில், திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிடுவதாக அறிவித்தார். திராவிட நாடு ஆதவாளர்கள் மத்தியில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசுக்குப் பயந்து அண்ணா பின்வாங்கிவிட்டதாக அவர்கள் விமர்சித்தனர். 'வீடு இருந்தால்தான் ஓடு மாற்றலாம். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில், நாம் பிரிவினை பேசுவது அயலானுக்கு இடம் கொடுத்து விடுவதாகும். நாம் அப்படி நடந்துகொண்டால், வருங்காலத் தலைமுறை நம்மைச் சபிக்கும்' என்று 1962 அக்டோபர் மாதம் வேலூர் சிறையில் இருந்து விடுதலையடைந்ததும், திராவிட நாடு கொள்கையை தான் கைவிட்டதற்கான காரணத்தை தெரிவித்தார் அண்ணா. இதன்மூலம் தான் ஒரு பக்குவப்பட்ட அரசியல் தலைவர் என்பதை நிரூபித்தார் அவர். 

அதேசமயத்தில் ''கழகத்தை அழிக்க சட்டம் கொணர்ந்தனர். சட்டத்தைத் திருத்தி கழகத்தைக் காத்தோம். 'சூட்சுமம்' புரிகிறதா தம்பி?" என்று தி.மு.க. தொண்டர்களுக்கும் தன் நிலைப்பாட்டை புரியவைத்தார் அண்ணா. 

1967-ம் ஆண்டு தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தது தி.மு.க. பதவியேற்புக்கு தலைவர்கள் கோட் சூட்டுடன் தயாராகிக் கொண்டிருந்தபோது, தனது  நுங்கம்பாக்கம் வீட்டில் கவலையோடு இருந்தார் அண்ணா. “தவறு நடந்துவிட்டது. இவ்வளவு சீக்கிரம் நாம் பொறுப்புக்கு வந்திருக்கக்கூடாது. இன்னும் சில காலம், நாம் பொறுத்திருந்திருக்க வேண்டும். நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரசையே தூர எறிந்துவிட்டு, நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளனர் மக்கள். நம் மீது பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. மிகக் கவனமாக இருக்க வேண்டும்” என தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் சொன்னார். 

அண்ணாரசியல் கட்சிகள் அநாகரிகமாக ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் நிலைதான் இன்றைய அரசியல். ஆனால், 1967 தேர்தலில் காமராஜர் தோற்ற தகவல் வந்தபோது, எதிர்முகாமில் இருந்த அண்ணா கலக்கமுற்றார். "காமராஜர் போன்ற அனுபவசாலிகள் தோற்றது நமக்கும் தோல்வி போன்றதே. சட்டமன்றத்தில் அவர் இருந்திருந்தால், நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட அது உதவியிருக்கும்” என மனம் திறந்து சொன்னார் அண்ணா. "வெற்றியைக் கொண்டாடுகிறேன் பேர்வழி" என தோற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியை சங்கடப்படுத்தக் கூடாது. கொஞ்சநாள் கொண்டாட்டங்களை தள்ளிப்போடுங்கள்" என கண்ணியத்தோடு தன் தம்பிகளுக்கு கட்டளையிட்டார். 1957 தேர்தலில் அண்ணாவின் வீட்டுமுன் அவரை அருவருப்புடன் விமர்சித்து எழுதி வைக்கப்பட்டது. "இரவில் படிக்கச் சிரமமாக இருக்கும். ஒரு லாந்தர் விளக்கை வையுங்கள். இதை எழுதியவரின் தகுதியை ஊர் தெரிந்து கொள்ளட்டும்" என்றார் தம்பிகளிடம். 

வாரிசு அரசியல் போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான விஷயம் இன்று தமிழகம் மட்டுமன்றி இந்திய அளவிலும் சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனால், அண்ணா தன் வாரிசுகள் எவரையும் அரசியலில் ஈடுபடுத்தியதில்லை. கட்சி விவகாரங்களில் தலையிட வைத்ததுமில்லை. அண்ணாவின் மறைவுக்குப்பின், கருணாநிதி ஒருமுறையும், அ.தி.மு.க உருவாகி அக்கட்சி சந்தித்த முதல் தேர்தலான திண்டுக்கல் இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்த அண்ணாவின் வளர்ப்புப் புதல்வர் பரிமளத்தை அணுகினார் எம்.ஜி.ஆர். அண்ணாவைப்போன்றே அவரது துணைவியாரும் தன் மகனை அரசியலில் ஈடுபடுத்துவதில்லை என்பதில் உறுதியாக நின்றார். 

ண்ணா வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை 1980-ம் ஆண்டு நினைவு இல்லமாக்கியது தமிழக அரசு. திறப்பு விழாவில் கலந்துகொண்ட அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி, "இந்த எளிய இல்லத்தில் பிறந்த ஒருவர், பின்னாளில் ஒரு மாநிலத்துக்கு முதல்வரானது என்பது ஜனநாயகம் இங்கு தழைப்பதையேக் காட்டுகிறது. நான் அண்ணா அளவுக்கு படித்தவனல்ல என்றாலும், சாமான்யனாகிய நானும் குடியரசுத் தலைவராக ஆனதற்கு நமது ஜனநாயக அமைப்பே காரணம்" என்றார். அநேகமாக மாநில முதல்வராக இருந்த ஒருவரின் நினைவு இல்லத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தது என்பது அதுவே முதல்முறை.

அண்ணா

 

ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி பேசுகையில், "திராவிட இயக்க அரசியல்வாதியாக அண்ணாவைப் பார்த்தாலும், அவர் ஒரு காந்தியவாதியாகத்தான் இருந்தார். எதையும் யாருக்கும் புரியும் வகையில் சொல்வதில் அவர் கெட்டிக்காரர். குடும்பக் கட்டுப்பாட்டை பற்றி பேசும்போது பாமரர்களுக்கு புரியும்படி “பெருமாளுக்கு இரண்டு பிள்ளைகள்” எனக் கூறினார். தீவிர நாத்திகவாதியான அவர், மக்களுக்குப் புரிய வேண்டுமென்பதற்காக தன் கொள்கைளை தள்ளிவைத்து, கடவுளை துணைக்கு அழைக்கவும் தயங்கவில்லை. அவர் ஒரு ஜென்டில்மேன்" என்றார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தாங்க முடியாத துர்நாற்றம் என்றால் கீழே வீழ்ந்துவிடும் ரோபோ நாய் (Video)


தாங்க முடியாத துர்நாற்றம் என்றால் கீழே வீழ்ந்துவிடும் ரோபோ நாய் (Video)
 

ஜப்பானிய நிறுவனம் ஒன்று துர்நாற்றத்தைக் கண்டுபிடிக்கும் ரோபோ நாயை உருவாக்கி இருக்கிறது.

ஜப்பானியர்களுக்கு ஷூக்களில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது.

இந்த துர்நாற்றத்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நலக்குறைபாடு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே ரோபோ நாய் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் ரோபோ நாய் அருகில் வரும். துர்நாற்றம் வரவில்லை என்றால் மகிழ்ச்சியாக வாலை ஆட்டிக்கொண்டு சென்றுவிடும். துர்நாற்றம் வந்தால் கோபமாகக் குரைக்க ஆரம்பித்துவிடும். காலணிகள் மட்டுமின்றி வீட்டிலிருந்து வரும் எத்தகைய துர்நாற்றத்தையும் கண்டுபிடித்துவிடும் அளவுக்கு உயர் தொழில்நுட்பத்தில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டிருக்கிறது.

15 செ.மீ. நீளம் இருக்கும் இந்த ரோபோ நாய், சில நொடிகளில் நுகர்ந்து பார்த்துவிட்டுச் சொல்லி விடுகிறது.

3 விதங்களில் தன்னுடைய கருத்தை இது வெளிப்படுத்துகிறது. நறுமணம் என்றால் வால் ஆட்டும், துர்நாற்றம் என்றால் குரைக்கும், தாங்க முடியாத துர்நாற்றம் என்றால் கீழே வீழ்ந்துவிடும்.

 

http://newsfirst.lk/tamil

  • தொடங்கியவர்
அரசாங்கத்துக்கு யார் தண்டனை கொடுப்பது?
 

image_5bfd0307bd.jpgஇயற்கை, இயல்பாகவே இந்தப் பூமிக்கும் அங்குள்ள மக்களுக்கும் உணவூட்டிக் கொண்டுதான் இருக்கிறது. 

ஆனால், இயற்கை தரும் அன்பளிப்புகளை நாங்கள் வாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை. மழை நீரைச் சேமிப்பதில்லை; குளம், குட்டைகளை ஆழப்படுத்துவதுமில்லை. இவற்றைப் பராமரிப்பது யார்? 

டெங்கு வாழும் நீரையும் அகற்றுவதில்லை. தெருவில் வடிகானில், நீரை ஓடவிடாமல் தேங்கச் செய்வது யார்? தூர்வாரும் பணிகளை அரசாங்கம் கவனித்து வருகின்றதா? 

ஒரு சிரட்டையில் நீர் தேங்கி, அதில் நுளம்பைக் கண்டால், அந்த வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகின்றது. குப்பை மேட்டைக் கவனிக்காமல், வடிகானைத் திருத்தாமல் இருக்கும் அரசாங்கத்துக்கு யார் தண்டனை கொடுப்பது? சுகாதாரம் இன்மையால் இன்னல்களே அதிகம்.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 16
 

image_d67b206aed.jpg1947: ஜப்பானில் வீசிய சூறாவளியினால் 1930 பேர் பலி.

1959: முதலாவது போட்டோ பிரதி இயந்திரம் நியூயோர்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1963: மலேஷிய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1970: ஜோர்தானில் இராணுவ ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

1975: பப்புவா நியூகினியா அவுஸ்திரேலியாவிலிருந்து சுதந்திரம் பெற்றது.

1978: ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 26,000 பேர் பலி.

1982: லெபனானில் பாலஸ்தீன அகதி முகாங்களான சப்ரா, ஷட்டீலா ஆகியவற்றில், லெபனானிய இராணுவத் துணைப்படையினரால் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

1987: ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் பிரகடனம் மொண்ட்றியால் நகரில் கைச்சாத்திடப்பட்டது.

1991: பதவியிலிருந்து விலக்கப்பட்ட பனாமா சர்வாதிகார மனுவல் நொரீகாவுக்கு எதிராக அமெரிக்காவில் விசாரணை ஆரமப்மாகியது.

2000: இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப், உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தார்.

2002: விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, தாய்லாந்தில் ஆரம்பமாகியது.

2007: தாய்லாந்தில் 128 பேரை ஏற்றிச்சென்ற விமானம் ஒன்று வீழ்ந்ததில் 89பேர் கொல்லப்பட்டனர்.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

ஜென் கதை: ஜன்னல் காட்சி

 

 
shutterstock560185867

ரண்டு நோயாளிகள் ஒரு மருத்துவமனையின் அறையில் தங்கவைக்கப்பட்டனர். அதில் ஒருவருக்கு நுரையீரலில் இருந்து கோழையை வெளியேற்றுவதற்காகத் தினமும் மதியம் ஒரு மணிநேரம் படுக்கையில் எழுந்து உட்கார அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்த நோயாளியின் கட்டிலுக்குச் சற்று மேலே ஒரு ஜன்னல் இருந்தது.

இன்னொரு நோயாளி எழுந்து உட்காரக்கூட முடியாமல் படுத்த படுக்கையாய்க் கிடந்தார்.

நோயாளிகள் இருவரும் தங்கள் மனைவி, குடும்பம், வீடு, வேலை, ராணுவ சேவை, உல்லாசங்கள், சுற்றுலா சென்ற ஊர்கள் பற்றியெல்லாம் மணிக்கணக்காகப் பேசிப் பொழுதைக் கழித்தனர். ஜன்னலை ஒட்டிப் படுத்திருந்த நோயாளி தினமும் எழுந்து அமரும்போது ஜன்னல் வழியாகக் காணும் காட்சிகளை சகநோயாளியிடம் வர்ணிப்பார். அதைக் கேட்டவருக்கு வண்ணம் ததும்பும் காட்சிகளாக விரிந்தது. தினமும் அந்த ஒரு மணி நேரத்துக்காகவே வாழத் தொடங்கினார் இன்னொருவர்.

ஜன்னலிலிருந்து பார்க்கும்போது அழகிய ஏரியோடு கூடிய பூங்கா ஒன்று தென்பட்டது. அதில் வாத்துகளும் அன்னப் பறவைகளும் நீந்திச் சென்றன. சிறுவர்கள் தங்கள் காகிதக் கப்பல்களை அங்கே மிதக்கவிட்டனர். காதலர்கள் பூக்களினூடாகக் கைகோத்து நடந்தனர். ஓங்கி உயர்ந்த மரங்கள் அந்நிலக்காட்சியை எழிலாக்கின. துாரத் தொடுவான விளிம்பில் நகரம் தெரிந்தது. இந்த அழகு கொழிக்கும் காட்சிகளை ஜன்னலோர நோயாளி விவரிக்கும்போது, மற்றவர் அதையெல்லாம் தன் மனதில் ஓட்டிப் பார்ப்பார்.

 

உறக்கம் தொலைத்த நோயாளி

ஒரு கதகதப்பான மதிய வேளையில் ஓரு ராணுவ அணிவகுப்பை ஜன்னல் அருகில் இருந்தவர் வர்ணி்த்துக் கொண்டிருந்தார். அணிவகுப்பின் ஆரவாரம் இன்னோரு நோயாளியின் காதுகளை எட்டாவிட்டாலும், மனக்கண்ணால் அதைக் கண்டார். ஆனால், அக்காட்சிகள் தன் பார்வைக்கு எட்டாததால் ஜன்னலுக்கு அருகே இருந்த நோயாளியைப் பார்த்து பொறாமைப்பட்டார் இன்னொருவர். இந்த எண்ணம் நாளடைவில் பெருகி அவரை ஆட்கொள்ளத் தொடங்கியது. அதனால் தூக்கம் தொலைந்து போனது.

ஒரு பின்னிரவில் இன்னொருவர் உத்திரத்தைப் பார்த்தபடி துாக்கமின்றி கிடந்தபோது, ஜன்னல் படுக்கை நோயாளி இருமத் தொடங்கினார். இருமல் அதிகமாகி மூச்சுவிட சிரமப்பட்டார். மங்கிய ஒளியில் உதவிக்காக தன் கைகளை நீட்டித் துழாவினார். இன்னொருவரோ அந்தக் காட்சியைத் தன் படுக்கையிலிருந்து சத்தம் காட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். உதவிக்கு யாரையும் அழைக்கவில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் ஜன்னல் படுக்கை நோயாளி மூச்சுத் திணறி இறந்துபோனார். இரவு மௌனமாய் கடந்தது.

மறுநாள் காலை செவிலி வந்தபோது, அவர் இறந்து கிடப்பதைப் பார்த்து வருத்தப்பட்டாள். அவரது சடலம் அகற்றப்பட்டது. இன்னோருவர் செவிலியிடம் தன்னை அடுத்தக் கட்டிலுக்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டார். செவிலி சந்தோஷமாக அவரை இடம் மாற்றி விட்டு அந்த அறையைவிட்டுப் போனாள். நோயாளி மிகவும் சிரமப்பட்டு தன் முழங்கைகளை ஊன்றி முதல்முதலாக அந்த ஜன்னல் வழி பார்க்கத் தலைதூக்கினார்.

அங்கே ஒரு நெடிய வெள்ளைச் சுவர் மட்டுமே இருந்தது.

இன்னொருவர் அதிர்ச்சியடைந்தார். உடலைச் சுத்தம் செய்ய மாலை வந்த செவிலியிடம் இறந்தவரைப் பற்றிக் கேட்டார். அவர் பார்வையற்றவர் என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் செவிலி கூறினாள்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஜிமிக்கி கம்மல்

- ஷாலினி நியூட்டன்

‘என்டெ அம்மேடெ ஜிமிக்கி கம்மல்...
என்டப்பன் கட்டொண்டு போயே
என்டப்பன்டெ ப்ராண்டி குப்பி...
என்டம்மா குடிச்சு தீர்த்தே...’

அதாவது ‘என் அம்மாவின் ஜிமிக்கி கம்மலை என் அப்பன் கழட்டிக்கொண்டு போனான்; என் அப்பாவின் பிராந்தி குப்பியை என் அம்மா குடித்துத் தீர்த்தாள்..!’ இப்படி ஒரு பாட்டு... என்ன ஒரு கருத்தாழம் மிக்க வரிகள்! இந்தப் பாட்டுக்குத்தான் மொத்த கேரளமும் பைத்தியம் பிடித்ததுபோல் ஆடிக்கொண்டிருக்கிறது.
26.jpg
நண்டு சிண்டில் தொடங்கி தொண்டு கிழம் வரை, பாட்டிகள், அம்மாக்கள், பேத்திகள், தாத்தாக்கள், அப்பாக்கள், மகன்கள் என மொத்த குடும்பமும் கூத்தடிக்கிறது. கல்லூரிகளில் கூட்டமாய் விதவிதமான கெட்டப்பில் ஆடி யூடியூப்பிலும், வாட்ஸப்பிலும், ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இதற்கு #jimikkikammal_challenge என்ற ஹேஷ்டேக் வேறு... என்னதான் நடக்குது சேட்டன்கள் நாட்டில்?  

ஓணம், கேரளத்தின் கொண்டாட்டமான பண்டிகை. மாவலியின் தலையில் கால் வைத்து அவன் கர்வமடக்கிய வாமன அவதாரத்தின் மகிமையையும், மன்னன் மாவலியின் பெருமையையும் பேசும் விதைப்பு காலத்தின் உற்சாக உற்சவம். பூக்கோலமும் மாக்கோலமும் இட்டு; புத்தாடை தரித்து ஆட்டமும் பாட்டமுமாய் ஓணத்தை வரவேற்பார்கள் மலையாளிகள். அப்படி இந்த வருட ஓணத்தின் கொண்டாட்டத்தில்தான் இந்த ஜிமிக்கி கம்மல் சேர்ந்துகொண்டது.

வெளிப்பாடிண்டே புஸ்தகம்
இந்த வருடம் ஓணத்துக்கு வெளிவந்த சினிமாக்களில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ என்ற படமும் ஒன்று. லாலேட்டன் எனக் கொண்டாடப்படும் மோகன்லால் படம் ரிலீஸ் ஆவதே மலையாளிகளைப் பொறுத்தவரை ஒரு ஓணம்தான்.

இதில் ‘ஓணமும்’ சேர்ந்துகொண்டால் கூத்துக்கும் பாட்டுக்கும் கேட்க வேண்டுமா என்ன? லால் ஜோஸ் இயக்கி மோகன்லால், அனூப் மேனன், பிரியங்கா நாயர் நடித்துள்ள படம் இது. இந்தப் படத்தில்தான் ஜிமிக்கி கம்மல் பாடல் இடம்பெற்றுள்ளது. ‘ஓம் ஷாந்தி ஒஷானா’, ‘ஒரு வடக்கன் செல்ஃபி’, ‘ஜியோகோபிண்டே ஸ்வர்கராஜ்யம்’ போன்ற ஹிட் படங்களின் பாடல்களை உருவாக்கிய ஷான் ரஹ்மான்தான் இந்தப் படத்துக்கும் இசை.
26a.jpg
அனில் பணச்சூரன் எழுதிய இப்பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் ரஞ்சித் உன்னி பாடியுள்ளனர். படம் எதிர்ப்பார்த்த அளவுக்குப் போகவில்லை என்கிறார்கள். கல்லூரிக் கால ஜாலி பாடலாக வரும் இந்தப் பாடல் காட்சிப் படுத்தப்பட்ட விதம்கூட சுமாராகத்தான் இருக்கிறது.

பிறகு எப்படித்தான் டிரெண்ட் ஆச்சு? ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்’ மாணவிகளும், ஆசிரியைகளும் சுமார் 40 பேர் இணைந்து ஓணத்தைக் கொண்டாடும் விதமாக இந்த ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டு அதை யூ டியூப்பில் பதிவேற்றினார்கள். அவ்வளவுதான். இணையமே பற்றிக்கொண்டது.

இந்த வீடியோவை இதுவரை 40 லட்சம் பேருக்கும் மேல் பார்த்துள்ளார்கள். இதைத் தவிர லட்சக்கணக்கான ஷேர்கள் வேறு. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என சோஷியல் மீடியா முழுதும் பரவிக்கொண்டிருக்கிறது இந்த மாணவிகளின் நடனம். விளைவு... இப்போது, கேரளத்தைக் கடந்து மொத்த தேசமும் ‘ஜிமிக்கி கம்மல்... ஜிமிக்கி கம்மல்...’ என்று ஆடிக்கொண்டிருக்கிறது.

ஷெரில் எனும் தேவதை
இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் மாணவிகள் ஆடிய இந்த நடனத்தின் ஹைலைட் ஷெரில்தான். லீட் டான்ஸராக அந்த வீடியோவில் ஷெரில் ஆடிய ஆட்டத்துக்கு இன்று மொத்த நாடும் மெர்சலாகிக் கிடக்கிறது. ஆலப்புழாவைச் சேர்ந்தவர் ஷெரில். எர்ணாகுளம் புனித தெரசா கல்லூரியில் எம்.காம் படித்தவர்.

இப்போது இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸில் நடன ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இந்த ஒரே ஒரு வீடியோ இவருக்கு உலகப் புகழைத் தேடிக்கொடுத்துள்ளது. இவரை ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் ஓவர்நைட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் ஃபாலோ செய்யத் தொடங்கிவிட்டார்கள். ஷெரில் ஆர்மி, ஷெரில் ஃபேன்ஸ் கிளப் என்று ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் வெறித்தனம் காட்டும் நெட்டிசன்களைக் கண்டு ஷெரிலே சற்று மிரண்டுதான் போயிருக்கிறார்.
26b.jpg
ஷெரிலுடன் அனா ஜார்ஜ் என்பவரும் இணைந்து இந்த நடனத்தை வடிவமைத்துள்ளனர். ‘‘ஓணம் பண்டிகைக்குச் சிறப்பாக எங்கள் கலாசாரத்தை வெளிப்படுத்த ஒரு வீடியோ உருவாக்க நினைத்தோம். இந்த ஜிமிக்கி கம்மல் பாடல் நடனம் அப்படி உருவானதுதான். ஆனால், இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை... உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. குறிப்பாக, தமிழர்களுக்கு. அவர்கள்தான் இதை தேசம் கடந்து சர்வதேச அளவுக்கு எடுத்துச் சென்றார்கள்...’’ என்று நெகிழ்ந்துள்ளார் ஷெரில்.
இப்போது ஷெரிலுக்கு பல சினிமா வாய்ப்புகளும் கதவைத் தட்ட ஆரம்பித்துள்ளன!

ஜிமிக்கி கம்மல் சிண்ட்ரோம்
இந்த வீடியோ ஹிட்டானதைத் தொடர்ந்து கேரளத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இந்தப் படத்தின் பாடலுக்குக் குழு நடனமாடி பதிவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறம் என்றால், இந்தப் பாடலை அடிப்படையாகக் கொண்டு மீம்ஸ்கள், ட்ரோல்கள், பகடிகள் என கலகலத்துக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இதில் சிலர் அளவுக்கு மீறிச் சென்று தமிழ்நாட்டுப் பெண்களையும் கேரளத்துப் பெண்களையும் ஒப்பிட்டு கிண்டலாக சில மீம்ஸ்களை உலவ விட்டிருக்கிறார்கள். இது நம்மூர் பெண்களை எரிச்சலடைய வைத்துள்ளது. இதற்கிடையில் உற்சாக மிகுதியில் யாரோ ஒருவர் ஜிமிக்கி கம்மல் பாடலை அமெரிக்காவின் புகழ்பெற்ற காமெடி நடிகரும் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான ஜிம்மி கிம்மலிடம் கூற... தன் பெயரின் உச்சரிப்புக்கும் இந்தப் பாடலின் தொடக்க வரிகளுக்கும் உள்ள எதேச்சையான தொடர்பை எண்ணி மகிழ்ந்த அவர், ‘நான் இந்தப் பாடலை நேசிக்கிறேன்’ என்று ட்வீட்ட... ஹாலிவுட்டிலும் டிரெண்ட் அடிக்கத் தொடங்கியுள்ளது இந்தப் பாடல். எப்படியோ, இந்தப் பாடலால் கம்மல் முதல் கிம்மல் வரை ஆல் ஹேப்பி!

www.kungumam.co.

 

  • தொடங்கியவர்
 

கால்பந்தில் முதல் பெண் ரெஃப்ரீ!

 

 

இன்று ஆண்கள் கோலோச்சும் அனைத்து துறையிலும் பெண்களின் பங்களிப்பு, புல்லட் வேகத்தில் அதிகரித்து வருவது பெருமைக்குரிய ஒன்று. ஐரோப்பாவின் முக்கிய கால்பந்து போட்டியில் உலகில் முதன்முறையாக பெண் ஒருவர் ரெஃப்ரீயாகிறார் என்பது பலரும் கவனிக்காத புது நியூஸ். ஜெர்மனியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரியும் நீச்சல் வீராங்கனையுமான பிபியானா ஸ்டெய்ஹாஸ்தான்  (Bibiana Steinhaus) அந்த முதல் பெண் ரெஃப்ரீ.
28.jpg
அண்மையில் ஜெர்மனி கால்பந்து சங்கமான DFB, பெர்லின் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டிக்கு பிபியானாவை ரெஃப்ரீயாக அஃபீசியலாக அறிவித்து உலகெங்கும் அப்ளாஸ்களை அள்ளியுள்ளது. ‘‘நான் அறிமுகமாகும் பண்டெஸ்லிகா லீக் போட்டியை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்...’’ என்று மகிழ்ச்சி கரைபுரள பேசும் பிபியானா இதற்கு முன்பே சில விளையாட்டுப் போட்டிகளுக்கு ரெஃப்ரீயாக இருந்திருக்கிறார். ஐரோப்பாவின் டாப் 5 கால்பந்து போட்டிகளில் ஒன்றான பண்டெஸ்லிகாவில் பிபியானா அறிமுகமானது போட்டியின் ஆக்ரோஷ டெம்போவை எகிற வைத்துள்ளது.

www.kungumam.co

Bibiana Steinhaus is to become the first female referee in the Bundesliga

Bibiana Steinhaus is to become the first female referee in the Bundesliga

  • தொடங்கியவர்

பூமி என்னும் சொர்க்கம் : மிதக்கும் பனி மலைகள்!

 

 
shutterstock66831256

ஒரு தம்ளர் பழச்சாற்றில் சில பனிக்கட்டித் துண்டுகளைப் போட்டால் அவை மிதக்கும். பல பனை மர உயரம் கொண்ட பிரம்மாண்டமான பனிப் பாளங்களும் அதேபோல கடலில் மிதக்கும். இப்படிப்பட்ட பிரம்மாண்டமான பனிப் பாளங்களைத்தான் மிதக்கும் பனி மலை என்று கூறுகிறார்கள்

மிதக்கும் பனி மலை ஒன்றின் மீது டைட்டானிக் கப்பல் மோதி மூழ்கிப் போனது பற்றிய திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டில் அட்லாண்டிக் கடலில் பனி மலை மீது மோதி மூழ்கியது. இதில் 1500 பேர் உயிரிழந்தனர்.

இப்போதெல்லாம் கப்பல்களில் ராடார் கருவி உள்ளது. தொலைவில் பனி மலை இருந்தால் ராடார் கருவியானது அதைக் காட்டிக் கொடுத்துவிடும். பனி மலை மீது டைட்டானிக் கப்பல் மோதி மூழ்கிய காலத்தில் ராடார் கண்டுபிடிக்கப்படவில்லை.

மிதக்கும் பனி மலைகள் எங்கிருந்து வருகின்றன? வட துருவப் பகுதிக்கு அருகே உள்ள கிரீன்லாந்தில், உறைபனி மேலும் மேலும் சேர்ந்துகொண்டே போகும். அளவுக்கு மீறி உறை பனி சேர்ந்து விட்டால் அது இறுகி, கெட்டியான பாறை போல ஆகிவிடும். நிலப் பகுதியின் விளிம்பு நோக்கி நகர்ந்து வரும்போது இந்த ராட்சத பனிக்கட்டிப் பாளங்களில் விரிசல் விட்டு அவை பெரும் சத்தத்துடன் கடலில் விழும்.

கடலில் விழும் பாளங்கள், நீரில் மிதக்க ஆரம்பித்து அங்கிருந்து மெல்ல நகர ஆரம்பிக்கும். வட துருவப் பகுதியைப் பொருத்தவரை இவை தெற்கு நோக்கி அட்லாண்டிக் கடலின் வட பகுதிக்கு வந்து சேரும். பெரிய குன்று அளவுக்கு மிதக்கும் பனி மலைகளும் உண்டு. இதுவரை காணப்பட்டதில் 295 கிலோ மீட்டர் நீளமும் 37 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட மிதக்கும் பனி மலைதான் மிகப் பெரியது. கிட்டத்தட்ட ஒரு தீவு அளவுக்கு இது இருந்தது.

பனி மலையின் பெரும் பகுதி நீருக்குள் மூழ்கியிருக்க, சிறிய மேல் பகுதி மட்டும்தான் வெளியே தெரியும். இவை பயங்கர எடை கொண்டவை என்பதால் எந்தக் கப்பல் மீது மோதினாலும் கப்பலுக்குத்தான் ஆபத்து.

கோடைக் காலத்தில்தான் இவை வெளியே தலை காட்டும். இப்போதெல்லாம் மிதக்கும் பனிமலைகளின் நடமாட்டத்தை வானிலிருந்து கண்காணித்துக் கப்பல்களுக்குத் தகவல் தெரிவிக்கிறார்கள். பனிமலை நடமாட்டத்தைக் கண்காணிக்கவே தனிப் பிரிவு உள்ளது. அமெரிக்கா - ஐரோப்பா இடையே அட்லாண்டிக் கடலில் கப்பல் போக்குவரத்து அதிகம் என்பதே இதற்குக் காரணம்.

மிதக்கும் பனிமலைகள் தெற்கே வர வர குளிர் குறைந்து போகும். அப்போது சூரிய வெப்பத்தால் அவை முழுவதுமாக உருகிப் போய்விடும். வெப்ப மண்டலப் பிராந்தியம் என்பதால் இந்தியாவை அடுத்துள்ள கடல் பகுதிகளில் மிதக்கும் பனிமலைகளைக் காண இயலாது.

தென் துருவத்தில் அண்டார்டிக் கண்டத்தில் உறை பனி நிறைய சேரும்போது இப்படி மிதக்கும் பனிமலைகள் தோன்றும். இவை வடக்கு நோக்கி நகர ஆரம்பிக்கும். ஆனால் அண்டார்டிகாவை ஒட்டிய கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து அதிகம் இல்லை என்பதால் ஆபத்து குறைவு.

வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள ராட்சதப் பனிமலைகள் நல்ல தண்ணீரால் ஆனவை.

அண்டார்டிகா பனிமலைகளை இழுத்து வரமுடியும் என்றால் தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்துவிடும். ஆனால் அவை வந்து சேருவதற்குள் உருகிவிடும்.

பொதுவாக மிதக்கும் பனி மலைகள் வெண்மை நிறத்தில்தான் காணப்படும். சூரிய ஒளி இதன் மீது படும்போது பனி மலைகள் அந்த ஒளியை நன்கு பிரதிபலிக்கும். சில நேரம் பனி மலைகள் லேசான நீல நிறத்தில் காட்சி அளிப்பதும் உண்டு.

சமீபத்தில் அண்டார்டிகாவிலிருந்து கிளம்பிய ஒரு பனி மலையானது சற்றே பச்சை நிறம் கொண்டதாகக் காட்சி அளித்தது. அந்தப் பனிக் கட்டியில் கலந்திருந்த கனிமங்களே இதற்குக் காரணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஹார்வி புயலில் கெட்டிமேளம்!

- ரோனி

கல்யாணம் நடப்பதே பெரிய விஷயம். அதிலும் ஹார்வி, இர்மா என டஜன் கணக்கில் புயல்களாய் கிளம்பினால் என்ன செய்வது என அமெரிக்காவில் பலரும் திருமணம் செய்துகொள்வதை தள்ளிவைக்க - ஷெல்லி, கிறிஸ் என்ன செய்தார்கள் தெரியுமா? டெக்சாஸை புரட்டிப்போட்ட புயல் அட்டாக்கின்போதே ரிங் மாற்றி பரஸ்பரம் பாச கிஸ்களை பரிமாறி படக்கென கல்யாணத்தை முடித்துவிட்டார்கள் ஷெல்லி & கிறிஸ் தம்பதிகள்.
27.jpg
‘‘இந்த மேரேஜ் எங்களின் ஆறுமாத பிளான். திடீரென வில்லனாக உள்ளே நுழைந்த ஹார்வி புயலால் மேரேஜ் நடக்கவிருந்த சர்ச், என் கணவரின் வீடு அனைத்திலும் வெள்ளம். இக்கட்டுகளைத் தாண்டியும் இதயம் தொட்ட காதல் எங்களுடையது...’’ என புயல் நேரத்தில் புல்லாங்குழல் மென்மையில் பதிவிட்டு மக்களுக்கு புயல்நேரத்தில் உதவுங்கள் என்று கூறிய தம்பதிகளின் பதிவும், போட்டோவும் உலகெங்கும் அப்ளாஸை அள்ளியிருக்கிறது.  

www.kungumam.co.

  • தொடங்கியவர்

இலங்கையில் பலரின் பழைய ஞாபகங்களை மீட்டிய அற்புதமான புகைப்படங்கள் இதோ! (படங்கள்)

 
 
 
 
 
59bcd5b18080e-IBCTAMIL.jpg
59bcd5b1b0595-IBCTAMIL.jpg
59bcd5b1e7bc0-IBCTAMIL.jpg
59bcd5b216a12-IBCTAMIL.jpg

உலகளாவிய நாடுகளில் மிகச்சிறந்த சுற்றுலா நாடுகளில் ஒன்றாக தமிழர் தாயகம் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளை உள்ளடக்கிய இலங்கை விளங்குகின்றது.

அழகான கடற்கரைகள், புல்வெளிகள், காடுகள், பனைமரக் காடுகள், தென்னத் தோப்புக்கள், மற்றும் முகில்கள் கிழித்துச் செல்லும் மலை முகடுகள் என ஒவ்வொரு இயற்கைக் காட்சிகளும் காண்போரைக் கொள்ளை செய்யும் அற்புதமான படைப்புக்களாகும்.

நாட்டில் மூவின மக்கள் செறிந்து பரந்து வாழ்ந்தாலும் காலத்துக்குக் காலம் மக்களது வாழ்க்கைக் கோலத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே தான் வந்திருக்கின்றன.

அந்த வகையில், இலங்கையில் இற்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த வெளிநாட்டவர் ஒருவர் தான் கண்டு மகிழந்த காட்சிகளைப் படங்களாக்கியிருக்கிறார். ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த டன்கன் என்பவரே 1973ஆம் ஆண்டு இலங்கை வந்தபோது எடுத்த படங்களை தற்பொழுது வெளியிட்டு தனது அன்றைய அழகான தருணங்களை அவர் மீட்டிப் பார்த்திருக்கிறார்.

அவர் பகிர்ந்த அந்தப் புகைப்படங்கள் தற்பொழுது பலராலும் பகிரப்பட்டுவருகின்றது. சிலர் அவற்றைப் பகிர்கின்றபோது தமது அந்த நாள் ஞாபகங்களை அழகாக மீட்டியிருந்தமையினை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அன்றைய இலங்கை மக்கள் எவ்வாறான வாழ்வியலில் வாழ்ந்தார்கள் என்பதை விளக்கும் தனது புகைப்படங்களை அவர் ஸ்ரீலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சிடம் ஒப்படைத்துள்ளார்.  

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

உலகத்தை சுற்றிவளைக்கும் சூயிங்கம்

 

மெக்சிகோவில் ஒவ்வொரு இரவும் டஜன்  கணக்கிலான லாரிகளில், லாரிக்கு தலா 15 நபர்கள் தொற்றிக்கொள்ள பிரான்சிஸ்கோ மடேரோ அவென்யூக்கு செல்கின்றனர். 9 ஆயிரம் ச.அடியில் உள்ள வீதியில் 8 மணி நேரம்  மூன்று நாட்களாக வேலை  செய்து 11 ஆயிரம் சூயிங்கங்களை நீக்கியிருக்கின்றனர் என்பது  அதிர வைக்கும்  செய்தி.
3.jpg
நகரமெங்கும் தின்று  துப்பப்படும் சூயிங்கம்மால் ஈகோலி, சால்மோனெல்லா உள்ளிட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகரிப்பதால், இதை தடுப் பதற்கான விழிப்புணர்வுத் திட்டம் பல்வேறு நாடுகளில் உருவாகி வருகிறது. மெக்சிகோவுக்கு தினசரி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 மில்லியன்.

இது அமெரிக்காவின் டைம் சதுக்கத்தில் கூடும் மக்களின் எண்ணிக்கைக்கு சமம். மெக்சிகோவில் சூயிங்கம் விற்கும்  ஆல்பெர்ட்டோவின் ஒரு கடையில் மட்டும் சூயிங்கம் ஒருநாளுக்கு 60 பாக்கெட்டுகள் விற்கின்றன. 2002 ஆம் ஆண்டு டோனி பிளேர், ஜார்ஜ் புஷ், ஜெஃப்ரி ஆர்ச்சர் ஆகியோர் இது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தும், 2014 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் சூயிங்கம் துப்பியவர்களுக்கு ஃபைன் விதித்தும் நிலைமை சீராகவில்லை.

2015  ஆம் ஆண்டு சியாட்டிலின் 20 வயதாகும் சூயிங்கம் சுவரில் 130 மணிநேரம் போராடிய துப்புரவுப் பணியாளர்கள் 1,066 கிலோ சூயிங்கம்களை அகற்றினர். ஆனால் இரண்டே நாட்களில் சுவர், மூல பவுத்திர நோட்டீஸ் போல சூயிங்கம்களால் நீக்கமற நிறைந்துவிட்டது. சிங்கப்பூரில் 1992 ஆம் ஆண்டிலிருந்தே சூயிங்கம் மீதான தடை உண்டு. அதையும் மீறினால் ஃபைன் 500 டாலர்கள்.2004 இல் மருத்துவ சிகிச்சைக்கான சூயிங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சூயிங்கம் வரலாறு  ஃபின்லாந்தில் உலகின் மிகத்தொன்மையான சூயிங்கம் என 6 ஆயிரம் ஆண்டு பழமையான பிர்ச் பட்டையை கண்டு
பிடித்திருக்கிறார்கள். இதில் மனிதர்களின் பற்கள் தடம் பதிந்துள்ளது. கிரீஸில் மஸ்டிக் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட ரெசினை சூயிங்கம்மாக மெல்வது அன்று தாடைகளுக்கான பயிற்சி.

இவர்களை வழிமொழிந்த மயன், அஸ்டெக் இனக்குழுவினர், சபோடில்லா மரத்திலிருந்து எடுத்த பசையை மென்று வந்தனர். Tzicli எனப்படும் பசையை திருமணமான பெண் அல்லது விதவை  ஒருவர் பொது இடத்தில் மென்றால் அவர் விபச்சாரி என்றும், ஆணாக இருந்தால் ஓரினச்சேர்க்கையாளர் எனவும்  முடிவு கட்டுவது  அன்றைய  வழக்கம் என்கிறார் Unwrapping the History of Chewing Gum என்ற நூலின் எழுத்தாளரான லூயிஸ் வெர்னர். 

மெக்சிகோவில் சிக்கில்  என்னும் பசையை வேகவைத்து பக்குவப்படுத்தி மென்று வந்தனர். பின்னாளில்  இதனை 19 ஆம் நூற்றாண்டில்  அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தியவர்  மெக்சிகன் ஜெனரலான சான்டா அன்னா. டயர்களுக்கு பயன்படும் ரப்பரும் சூயிங்கம்மில் முதலில் சேர்க்கப்பட்டு, பின் அதற்கு பதிலாக அதில் வெந்நீர் சேர்க்கப்பட்டு உருண்டை வடிவில் விற்பனை செய்யப்பட்டது.

சூயிங்கத்தை அக்காலத்தில் பெண்கள் மெல்லுவது புரட்சி செயல். 1936 இல் ஒரு கடைக்காரர் அவரிருந்த 25  குடியிருப்புகளைக் கொண்ட தெருவில் மட்டும் தினசரி 84 ஆயிரம் சூயிங்கம் துண்டுகளை கணக்கிட்டிருக் கிறார். இரண்டாம் உலகப்போரில் ஆர்மியிடமிருந்து சூயிங்கம் உலகம்  முழுக்க  பரவத்தொடங்கியது. பாலிவினைல் அசிட்டேட், பிளாஸ்டிக் ஆகியவை சூயிங்கம்மில் சேர்க்கப்பட்டதால், உலர்ந்தபின் அதனை ஓரிடத்திலிருந்து அகற்றுவது கடினமானதும், சூழலுக்கு எதிரானதாகவும் மாறியது.

டாப் 5 சூயிங்கம்கள்

1.Trident,
2.Orbit,
3.Stride,
4.Extra,
5.Juicy Fruit

சந்தை மதிப்பு - 25.1 பில்லியன்
வளர்ச்சி கணிப்பு  -34.50 பில்லியன்
(2022) முன்னணி நிறுவனங்கள் Wrigley’s, Mondelez, Perfetti, Lotte, Cloetta
(www.mordorintelligence.com தகவல்படி)

kungumam.co

  • தொடங்கியவர்

பெங்குயினில் எத்தனை வகைகள்: உங்களுக்குத் தெரியுமா?

பென்குயின்களில் 17 வகைகள் மட்டுமே இன்று உயிர் வாழ்வதாக கருதப்படுகிறது. அவற்றின் பெயர்களை உங்களால் கூறமுடியுமா?

சதர்ன் ராக்ஹுப்பர், ஸ்னேர்ஸ் க்ரெஸ்டட் பென்குயின்களை அடையாளம் காணமுடியுமா? தற்போது உலகில் வாழும் பென்குயின்களின் புகைப்படங்களை பார்த்து, கீழே குறிப்பிடப்பட்டுள்ள பெயரை படிக்காமல் அவற்றை உங்களால் கண்டறிய முடிகிறதா என்று பாருங்கள்.

சின்ஸ்ட்ராப் பென்குயின்

சின்ஸ்ட்ராப் பென்குயின்

நன்னீர் குளத்தில் குளிக்கும் ஸ்னார்ஸ் க்ரெஸ்டட் பென்குயின்

நன்னீர் குளத்தில் குளிக்கும் ஸ்னார்ஸ் க்ரெஸ்டட் பென்குயின்

 

 

மஞ்சள் கண்கள் கொண்ட பென்குயின்

மஞ்சள் கண்கள் கொண்ட பென்குயின்

சதர்ன் ராக்ஹூப்பர் பென்குயின்

சதர்ன் ராக்ஹூப்பர் பென்குயின்

லிட்டில் ப்ளூ பென்குயின்

லிட்டில் ப்ளூ பென்குயின்

பரஸ்பர கோதி சுத்தப்படுத்தும் மக்கரோனி பென்குயின்கள்

பரஸ்பர கோதி சுத்தப்படுத்தும் மக்கரோனி பென்குயின்

கிங் பென்குயின்

ங் பென்குயின்

ஹம்போல்ட் பென்குயின்

ஹம்போல்ட் பென்குயின்

ஜெண்ட்டூ பென்குயின்

ஜெண்ட்டூ பென்குயின்

கலாபாகோஸ் பென்குயின்

கலாபாகோஸ் பென்குயின்

ஃபியோர்லாண்ட் பென்குயின் ஆண்

ஃபியோர்லாண்ட் பென்குயின் ஆண்

எரெக்ட்-க்ரெஸ்டட் பென்குயின்கள்

எரெக்ட்-க்ரெஸ்டட் பென்குயின்கள்

குஞ்சுகளுடன் இருக்கும் எம்பெரர் பென்குயின்கள்

குஞ்சுகளுடன் இருக்கும் எம்பெரர் பென்குயின்கள்

மகெலனிக் பென்குயின்

மகெலனிக் பென்குயின்

அண்டார்டிகாவில் வசிக்கும் அடிலி பென்குயின்கள்

அண்டார்டிகாவில் வசிக்கும் அடிலி பென்குயின்கள்

ஆஃப்ரிக்கன் பென்குயின்கள்

ஆஃப்ரிக்கன் பென்குயின்கள்

சண்டையிடும் ராயல் பெங்கின்ஸ் சண்டை

சண்டையிடும் ராயல் பெங்கின்ஸ் சண்டை

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text
 

செப்டம்பர் 16: கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்ததினம் இன்று.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.