Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு... அண்டார்டிகாவில் ஒரு நாள் எப்படி இருக்கும்?

பூமிப் பந்தின் தென் துருவத்தில் ஒரு காலிஃபிளவர் வடிவத்தில் இருக்கிறது அண்டார்டிகா. உலகின் ஐந்தாவது பெரிய கண்டமான அது, உலகிலேயே குளிரான இடமும் கூட. முழுக்க முழுக்க பனி ஆக்கிரமித்த பகுதியான அது, சூழலியல் ஆராய்ச்சியாளர்க கனவுத் தாயகம். நாசாவின் பல்வேறு விஞ்ஞானிகள் இங்கேயே தங்கள் வீடுகள் இருப்பது போல் பாவித்து வருடத்தில் பாதி நாட்களைக் கழிக்கிறார்கள்.

அண்டார்டிகா மெக்முர்டோ நிலையம்

Photo Courtesy: Gaelen Marsden

செவ்வாய் கிரகத்தை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் அண்டார்டிகாவை தான் படிக்க வேண்டும் என்று பல நாசா விஞ்ஞானிகள் வற்புறுத்துகிறார்கள். இதற்குக் காரணம், உயிர்காற்றான ஆக்சிஜன் தவிர்த்து செவ்வாயின் சூழலும், அண்டார்டிகாவின் சூழலும் ஒன்றுதான். இப்படி பூமியின் மற்ற இடங்களோடு ஒத்துப்போகாமல் இருக்கும் அண்டார்டிகாவில் ஒரு நாள் என்பது எப்படி இருக்கிறது?

ஆறு மாதம் வெளிச்சம், ஆறு மாதம் இருள்

பூமியின் மற்ற பகுதிகளில் ஒரு நாள் என்பது இரவு, பகல் சேர்ந்ததுதான். ஆனால், அண்டார்டிகாவில் இரவு பகல் மாறுவதே சுமார் ஆறு மாதங்களுக்கு ஒரு முறைதான். வெயில் காலம், குளிர் காலம் என அங்கே இரண்டே இரண்டு பருவ நிலைகள்தான். இதற்குக் காரணம், பூமி தன் அச்சிலிருந்து 23.5 டிகிரி சாய்ந்து இருப்பதாகும். இதனால் அண்டார்டிகாவின் பெரும் பகுதி வருடத்தில் பாதி நாட்கள் சூரிய வெளிச்சத்தைப் பெற்று விடும். வெயில் காலங்களில், நடு இரவில் கூட சூரியன் அசராது தன் கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும். ஆனால், குளிர்காலத்தில் சூரியனை நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை பார்க்கவே முடியாது. அப்போது அண்டார்டிகாவின் வெப்ப நிலை அகலப் பாதாளத்திற்கு சென்று விடும். சராசரியாக மைனஸ் 34.4 டிகிரி செல்சியஸ் இருக்கும் அது, குறைந்தபட்சமாக ஒரு முறை மைனஸ் 89.4 டிகிரி செல்சியஸ் வரை சென்றிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை வெறும் 15 டிகிரி செல்சியஸ் மட்டுமே.

அண்டார்டிகா ஒரு பாலைவனம்

ஆச்சர்யமாக இருந்தாலும், இதுதான் உண்மை. அண்டார்டிகா ஒரு பாலைவனம் போலத்தான். பனியால் மூடப்பட்டிருந்தாலும் அங்கே மழைப்பொழிவு என்பதே அரிதான ஒன்று. பனிப்பொழிவு கூட எப்போதாவதுதான். நிலப்பரப்பு பனிப்பாறைகள், பனித் தாழிகள் ஆகியவற்றால் ஆனது. எவ்வித மரங்களோ, செடிகளோ கிடையாது. கடுமையான குளிரைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய தாவரங்களான மரப்பாசிகள் மற்றும் பாசிகள் மட்டுமே வாழ்கின்றன. அங்குப் பெரிய அளவில் நடக்கக்கூடிய ஆராய்ச்சிகளில் ஒன்று எரிகற்கள் குறித்த ஆராய்ச்சி. பூமியின் மற்ற பகுதிகளில் விழும் எரிநட்சத்திரங்களைவிட இங்கு நிறைய அளவில் அவை காணப்படும். இதற்குக் காரணம், மக்கள் நடமாட்டம் குறைவு, மற்றும் பனி நிலம், அந்தக் கற்களை அழியாமல் பார்த்துக் கொள்கிறது.

அண்டார்டிகாவில் ஒரு நாள்

அண்டார்டிகாவில் நியூசிலாந்து நாட்டிற்குச் சொந்தமான இடத்தில் இருக்கிறது புகழ்பெற்ற அமெரிக்காவின் மெக்முர்டோ நிலையம் (McMurdo Station). அங்கு இருக்கும் ஆராய்ச்சி நிலையங்களிலே இதுதான் பெரியது. தற்போது அங்கே 1258 பேர் வசிக்கிறார்கள். எந்தப் பொருட்கள், மனிதர்கள் அண்டார்டிகா வந்தாலும், அந்த நிலையத்தைக் கடக்காமல் செல்ல முடியாது. அங்கு ஒரு நாள் எப்படி இருக்கும் என விளக்குகிறார் அங்குப் பாதுகாப்பு பொறியாளராக இருக்கும் டேவிட் நோல்ட்.

ஆராய்ச்சி பயணம்

Photo Courtesy: Liam Quinn from Canada

“அண்டார்டிகா நிச்சயம் ஆபத்தான இடம்தான். பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் நிதிப் பற்றாக்குறையால் தங்கள் ஆராய்ச்சிகளை போதிய பாதுகாப்பில்லாமல் செய்ய துணிவார்கள். அது விபத்தை ஏற்படுத்தும். அனுபவமில்லாத பலர் இங்கே தவறு செய்து பேராபத்தில் மாட்டி இருக்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு, இரண்டு ஆராய்ச்சியாளர்கள், கூடத்தை விட்டு வெளியே சென்றிருந்தனர். புயல் எச்சரிக்கை வரவே, சீக்கிரம் கூடத்திற்கு திரும்ப வேண்டுமெனப் பாதுகாப்பான வழியை விடுத்துக் குறுக்கு பாதையில் நடந்தனர். பிளவுபட்ட பனித்தகடுகளில் காலை வைத்து மாட்டிக் கொண்டனர். நீங்கள் தண்ணீரில் இறங்க வேண்டும் என்றில்லை, பனித்தகடுகளின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தாலே போதும் ஓர்கா இன திமிங்கலங்கள் உங்களைக் கொண்டு சென்று விடும். ஒரு சீசனிற்கு சராசரியாக நூறு விபத்துகள் வரை ஏற்படும். பத்து வருடங்களுக்கு முன்னால் இறப்பு கூட நிகழ்ந்துள்ளது.

அண்டார்டிகாவின் குளிர்காலம், அதாவது பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை முழுவதும் இருட்டு என்பதால் விமான போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்படும். நீங்கள் குளிர்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னால் இங்கே வந்தால், குறைந்தது ஆறு மாதங்கள் இங்கேயே தங்கி விட வேண்டிய நிலை ஏற்படும். வெளியுலகத்தில் இருந்து எந்த உதவியும் வராது. ஆனால், தினமும் இன்டர்நெட் சேவை இருக்கும், செய்திகளை அறிந்து கொள்ளலாம். சராசரியாக இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் பத்து மணி நேரங்கள் வேலை செய்வார்கள். அதன் பின்னர் கொண்டாட்டம்தான். பார் வசதி உள்ளது, பௌலிங் ஆடுவார்கள். கொஞ்சம் பழைய இடம்தான் என்றாலும், உற்சாகத்திற்கு குறைவியிருக்காது.

வாக்கிங், ட்ரெக்கிங் செல்ல வரையறுக்கப்பட்ட எல்லைகள் இருக்கும். எப்போது சென்றாலும், ஒரு துணையில்லாமல் செல்லக் கூடாது. கையில் ரேடியோ இல்லாமல் செல்ல கூடாது. முறையாக அனுமதி பெறாமல் செல்லக் கூடாது எனப் பல விதிமுறைகள் உண்டு. அனைத்தையும் பின்பற்றினால், எந்த பிரச்னையும் இல்லை. சுத்தமான காற்று, மாசில்லா பூமி, இதை விடச் சொர்க்கம் எங்கு இருக்க முடியும்?”

யோசிக்க வைப்பதாகத்தான் இருந்தது டேவிட் அவர்களின் பேச்சு. மிகுந்த சிரமத்திற்கு இடையில் இங்கே ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்வது நம் பூமிக்காகவும், அதில் நம் வாழ்க்கைக்காகவும் என்பதை மறுக்க முடியாது. அது சரி, நீங்கள் அண்டார்டிகா போக வேண்டுமென்றால் என்னவெல்லாம் நிச்சயம் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிய வேண்டுமா?

அண்டார்டிகா விமானப் போக்குவரத்து

Photo Courtesy: anta0187

அத்தியாவசிய பொருட்கள்

21 முறை அண்டார்டிகா சென்று வந்த ராஸ் விர்ஜினியா என்ற சூழலியாளரின் அறிவுரைப்படி, சுற்றுலாப் பயணிகள் அண்டார்டிகாவிற்கு வெப்ப காலத்தில் மட்டுமே செல்ல வேண்டும். அவர் போகும் போது நிச்சயம் எடுத்துச் செல்லும் பொருட்கள் குறித்து விளக்குகிறார்.

“கூலிங் கிளாஸ் மிகவும் அவசியம். நடு இரவில் கூட சூரியன் இருப்பதால், அதை நேரடியாகப் பார்க்கும்போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க UVயில் இருந்து பாதுகாக்கும் கண்ணாடிகள் எடுத்துச் செல்வேன். இசை எனக்கு ஒரு உற்றத்துணையாக இருக்கும். பிடித்த பாடல்களை iPod அல்லது MP3 பிளேயர்களில் சேமித்துக் கொண்டு எடுத்துச் செல்வேன். சில ஆபத்தான நேரங்களில் வெளியே வரக்கூடாது என்று கூறிவிடுவார்கள். சில சமயம், அந்த உத்தரவு இரண்டு முதல் மூன்று நாள்கள் வரை கூட நீடிக்கும். அப்போது என் இசை நிச்சயம் கை கொடுக்கும். உறங்கும் போது பயன்படுத்த “eye mask” வேண்டும். சூரிய வெளிச்சம் என்னைத் தூங்க விடாமல் செய்யலாம். அதற்காக இது. குளிரைச் சமாளிக்க “Single Malt Scotch” பாட்டில் எடுத்துக் கொள்வேன். இதெல்லாம் இல்லாமல், ஒரு நாள் கூட என்னால் அங்குத் தாக்கு பிடிக்க முடியாது.”

 

வாய்ப்பு கிடைத்தால், அண்டார்டிகாவை ஒரு ரவுண்டு போய் பார்த்து விடலாமா?

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கொக்கு நெட்ட கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட...’ - கடை திறப்பு விழாவில் நடனமாடிய ஓவியா..! -

 
  • ’கொக்கு நெட்ட கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட...’ - கடை திறப்பு விழாவில் நடனமாடிய ஓவியா..! - படங்கள்: பா.காளிமுத்து
  • ’கொக்கு நெட்ட கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட...’ - கடை திறப்பு விழாவில் நடனமாடிய ஓவியா..! - படங்கள்: பா.காளிமுத்து
 
  • ’கொக்கு நெட்ட கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட...’ - கடை திறப்பு விழாவில் நடனமாடிய ஓவியா..! - படங்கள்: பா.காளிமுத்து
  • தொடங்கியவர்

“மக்களாட்சி, அமைதி, சுற்றுச் சூழல்... இவை மூன்றுக்கும் தொடர்பில்லையா?” - மரங்களின் தாய் வங்காரி மாத்தாய் #WangariMaathaiMemories

 
 

வங்காரி மாத்தாய்

இயற்கைக்கும் பெண்களுக்கான தொடர்பு ரொம்பவும் உறுதியானது. இயற்கையைப் போலவே பெண்ணின் உடலும் மீள் சுழற்சியில் ஈடுபவதால் சுற்றுச் சூழல் மீதான ஈர்ப்பும் அவற்றைக் காக்க வேண்டும் எனும் ஆர்வமும் பெண்களுக்கு இயல்பாகவே உள்ளது. விவசாயத்தைக் கண்டறிந்ததே பெண்கள்தான் என்றும் சொல்வார்கள்.

கென்யா நாட்டின் 1940 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி இகதி எனும் சிறிய ஊரில் பிறந்தவர் வங்காரி மாத்தாய். மிக எளிய குடும்பம் அவருடையது. அந்தக் காலத்தில் பெண்களுக்குத் தொட முடியாத உயரத்தில் இருந்தது கல்வி. ஆனால், இவரின் சகோதரர் தந்த ஊக்கத்தினால் படிக்கத் தொடங்கினார். மிகுந்த ஆர்வத்துடன் படித்த இவர் அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடித்தார். கென்யா நாட்டில் முதன்முதலாக டாக்டர் பெற்ற பெண் எனும் பெருமையைச் சூடிக்கொண்டார். நைரோபி பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணியில் சேர்ந்தார். அப்பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியர் இவர்தான். 

இவர் அமெரிக்காவில் இருந்தபோது மாட்டின் லூதர் கிங் நடத்திய போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார். தனது தாய்நாட்டிலும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருந்தது. அந்த எண்ணம்தான் அவரைப் பேராசிரியர் பணியைத் துறக்கச் செய்தது. பசுமை பட்டை எனும் சுற்றுச்சூழலைக் காக்கும் இயக்கத்தைத் தொடங்கினார். தனது வீட்டில் அருகே ஒன்பது மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தார். உலகைச் சமநிலைப் படுத்தும் இயற்கையைப் பாதுகாக்க, ஆப்பிரிக்க வன வளத்தைக் காக்கவும் தனது பணிகளை வரையறுத்துக்கொண்டார். ஊர், ஊராகச் சென்று ஏழை, எளிய மனிதர்களிடம் குறிப்பாகப் பெண்களிடம் பேசினார்.   

முப்பது ஆண்டுகளில் 3 கோடி மரங்கள் எனும் வியக்க வைக்கும் இலக்கைத் தன் இயக்கத்தின் குறிக்கோளாக்கிக் கொண்டார். சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல் கல்வி சாந்த விழிப்புஉணர்வு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பெண்களுக்கான தேசிய கவுன்சிலிங் தலைவியானார். இதனால் தனது கோரிக்கைகளை நாடு முழுவதும் கொண்டு செல்லத் தொடங்கினார். அது சிலருக்குச் சிக்கலை உருவாக்கியது. 

வங்காரி மாத்தாய்

நைரோபில் நகரில் இருந்த ஒரேயொரு பூங்கா உகூரு. பலரும் பிடித்தமான அந்தப் பூங்காவை அழித்துப் பல மாடிக் கொண்ட கட்டடம் கட்டு அந்நாட்டு அரசு திட்டமிட்டது. இந்தச் செய்தி கேட்டதும் அதைத் தடுக்க வாங்கரி மாத்தாய் கடுமையான போராட்டத்தை மேற்கொண்டார். பல விதங்களில் அந்தப் போராட்டத்தை அரசு முடக்கப்பார்த்தது. ஆனாலும் வெற்றி வங்காரி மாத்தாய்க்கே. அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தாமல் பின் வாங்கியது அரசு. 

2002 ஆம் நடந்த கென்யா தேர்தலில் போட்டியிட்ட வாங்கரி மாத்தாய் அதிக வாக்குகளைப் பெற்றி வெற்றியடைந்தார். சுற்றுச் சூழல் இணை அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார். இயற்கைப் பாதுகாக்க எண்ணற்ற முயற்சிகளை எடுத்தார். அதேபோலப் பெண்கள் முன்னேற்றத்திற்கான அடிப்படை வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவும் அவர் மறக்க வில்லை. இதன் காரணமாக அவருக்கு 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. நோபல் பரிசுப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணியும் இவரே. அதில் அவர் ஆற்றிய உரை மிக முக்கியமானது. ஏனெனில் சுற்றுச் சூழலைப் பாதுக்காக்க வேறு எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வெளிப்படையாகப் பேசியது. 

“பலபேர் கேட்கிறார்கள் மக்களாட்சிக்கும், சுற்றுச் சூழலுக்கும், அமைதிக்கும் என்ன தொடர்பு? என்று. அவர்கள், இந்த மூன்று கருதுகோள்களையும் தனித்தனியே சிந்திக்கப் பழகிவிட்டார்கள்.”

“மக்களுக்குக் கற்பிக்க முடிவெடுத்தோம். சமூக, சுற்றுச்சூழல் கல்வித்திட்டம் ஒன்றை அமைத்தோம். ஏன் மரங்கள் நமக்கு அவசியம் ஏன் அவை சூழலைக் காப்பாற்றவும் நமது தேவைகளைப் பூர்த்திச் செய்து கொள்வதற்கும் அவசியமாக இருக்கின்றன என்பதை மக்கள் உளப்பூர்வமாக உணரச் செய்ய நினைத்தோம். அப்போதுதான், நான் மனித உரிமை மீறலை சந்தித்தேன். அரசு சொன்னது, நீங்கள் கூடிப்பேசலாம், ஆனால் 9 பேருக்கு மேல் கூடினால் உங்களிடம் அனுமதிச்சீட்டு இருக்க வேண்டும். அப்போது நான் இன்னொரு மனிதரிடம் பேசி ஒரு குழிதோண்டி மரம் ஒன்றை நட அவரை வற்புறுத்துவதற்கு நான் ஏன் அனுமதி பெறவேண்டும்? அதற்கு அரசாங்கம் சொன்னது ஏனென்றால், அதுதான் சட்டம். ஒன்பது பேருக்கு மேல் கூடுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.

அதுதான் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் அல்லது அழிப்பதற்கும் மக்களாட்சி எத்தகைய பங்கை ஆற்றுகிறது என்பதை நான் புரிந்து கொள்வதற்கான ஆரம்பம். நாங்கள் சட்டத்தை எதிர்க்க முடிவு செய்தோம்.”  

“நோபல் பரிசுக்குழு, சுற்றுச்சூழல், மக்களாட்சி மற்றும் அமைதி குறித்து எங்களது எண்ணங்களை மாற்றும் ஒரு மிகப்பெரிய சவாலை எங்கள் முன்வைத்துள்ளது. இவை அனைத்தும் பின்னிப் பிணைந்துள்ளவை, ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றை அணுக முடியாது என்பதை உணர ஆரம்பித்துள்ளோம்.”

மேற்கண்ட பகுதிகள் நோபல் உரையில் உள்ளவை. (புது விசை இதழில் வெளியானது. மொழிபெயர்ப்பு மலைவாசி) இயற்கையைப் பாதுகாக்க அடிப்படையான விஷயங்களைத் தன் வாழ்க்கையின் ஒவ்வோர் அனுபவத்திலிருந்து கற்றுகொண்டார் வங்காரி மாத்தாய். அதனால்தான் உணர்வுபூர்வமாக அந்தப் பணியில் ஈடுபட அவரால் முடிந்தது. 

 

தன் வாழ்க்கையைச் சுற்றுச் சூழலை நேசிக்க என அர்ப்பணித்த வங்காரி மாத்தாய் 2011 ஆம் ஆண்டு, செப்டம்பர் 25 நாளன்று இறந்தார். அவரின் நினைவுத் தினம் இன்று. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இங்கிலாந்து காய்கறிப் போட்டி!

6 கிலோ வெங்காயம்... 66 கிலோ முட்டைக்கோஸ்...நாட்டு நடப்புஎஸ்.சந்திரமௌலி

 

ங்கிலாந்து நாட்டில் நூறு ஆண்டுகளுக்குமேல் இயங்கிவரும் ‘வடக்கு இங்கிலாந்து தோட்டக்கலைச் சங்கம்’, வடக்கு யாக்ஷயரில் ஒவ்வொர் ஆண்டும் இரண்டு மலர்க் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. ஏப்ரல் மாத இறுதியில் ‘வசந்தகால மலர்க் கண்காட்சி’யும், செப்டம்பர் மாத மத்தியில் ‘குளிர்கால மலர்க் கண்காட்சி’யும் நடத்திவருகிறது. 

p78a.jpg

இந்த மலர்க் கண்காட்சிகளில் நாடு முழுவதிலுமிருந்து தோட்டக்கலை ஆர்வலர்கள், நர்சரி நிறுவனத்தினர், தோட்ட வடிவமைப்பு நிறுவனத்தினர், விவசாயிகள் என ஏராளமானோர் பங்கேற்பார்கள். இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக இந்தக் கண்காட்சிக்கு வருகை தருவார்கள்.

1983-ம் ஆண்டிலிருந்து மலர்க் கண்காட்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் பார்வையாளர்களை அதிகம் கவர்வது, காய்கறிப் போட்டிதான். மிக அதிக எடை, அதிக நீளம் என்ற இரண்டு பிரிவுகளில் பரங்கிக்காய், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கேரட், வெள்ளரி, பீன்ஸ் போன்ற 13 வகையான காய்கறிகளுக்குப் போட்டிகள் நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான போட்டியில் ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

அதில் 6.65 கிலோ எடையில் மிகப்பெரிய வெங்காயத்தை உற்பத்தி செய்த பீட்டர் கிளாஸ்புரூக்; 66.8 கிலோ எடையில்  முட்டைக்கோஸ் உற்பத்தி செய்த ஐயன் நீல்; 2.5 கிலோ எடையில் தக்காளியை உற்பத்தி செய்த கிரிஃபின்; 310.7 கிலோ அளவில் பரங்கிக்காயை உற்பத்திசெய்த ரிச்சர்டு மான் மற்றும் 32.5 அங்குல நீளத்தில் மிக நீளமான பீன்ஸ் உற்பத்தி செய்த கே டெர்ஹாம் ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜோ ஆதெர்டன் என்ற விவசாயி 2.610 கிலோ அளவிலான உருளைக்கிழங்கு, 3.960 கிலோ அளவிலான கேரட், 16.810 கிலோ அளவிலான பீட்ரூட் ஆகியவற்றை உற்பத்திசெய்து மூன்று பரிசுகளை வென்றிருக்கிறார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கழுகின் பார்வையில் உலகத்தைக் காணுங்கள்!

1,200 மீட்டர் உயரத்திலும், மணிக்கு 160 கி.மீ வேகத்திலும் பறக்கக்கூடிய வெள்ளை வால் கழுகின் மீது அல்ட்ரா-ஒளி கேமராக்களை பொருத்தி, கழுகின் பார்வையில் இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதைப் பதிவு செய்துள்ளனர்.

  • தொடங்கியவர்

திமிங்கிலங்கள் பற்றி நீங்கள் அறியாதவை

 
 
திமிங்கிலங்கள் பற்றி நீங்கள் அறியாதவை
 2
  •  
  •  
  •  
  •  
  •  

இதுநாள் வரை மீன்கள் என்றால் நீரில் மட்டும்தான் வாழும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம் . அதிலும் இந்த திமிங்கிலங்கள் போன்ற மிகப்பெரிய மீன்கள் என்றாலே கடலைத் தவிர வேறு எங்கும் வாழாது என்பது மட்டுமே நாம் அனைவரின் ஒட்டுமொத்த கருத்தாகும்.

ஆனால் இந்த மீன்கள் ஒரு காலத்தில் தரைகளிலும் வாழ்ந்திருக்கின்றன .

உலகத்தில் எந்த ஒரு உயிருக்கும் இல்லாத வினோத சுவhசஅமைப்பைக் கொண்டிருக்கும் திமிங்கலங்கள் தண்ணீருக்கடியில் தங்கள் செதில்கள் மூலம் ஒக்சிசனை கிரகிக்கும் அமைப்பைப் பெற்றுள்ளன.

b02cb76c7c5cd940f471e55026b8a98b.jpg

ஆனால் திமிங்கிலங்கள் வெப்ப இரத்த பிராணி ஆகும். இவைகளின் உடல் வெப்ப நிலை மனிதனைப்போன்றே 37 டிகிரி செல்சியஸ் ஆகும். இவைகள் மற்ற பாலூட்டிகளைப் போன்றே நுரையீரல் அமைப்பை பெற்றிருப்பதால் தங்களுக்குத் தேவையான ஒக்சிசனை தண்ணீரின் மேற்பரப்பில் வந்துதான் பெற்றுக் கொள்ள இயலும்.

திமிங்கிலம் மிக வித்தியாசமான சில தகவமைப்புகளைப் பெற்று விளங்குகின்றது. தன் வாழ் நாள் முழுதும் தண்ணீரிலேயே கழிக்கக் கூடிய ஒரே பாலூட்டி திமிங்கிலம் ஒன்றுதான்.

நான்காயிரத்துக்கு மேற்பட்ட பாலூட்டி இனங்களில் மீன்களை ஒத்த உடல் அமையப் பெற்று நடக்கக் கூடிய வகையில் கால்கள் அமைப்பைப் பெறாத ஒரே உயிரினமும் திமிங்கிலம் ஒன்றுதான்.

HI_257682.jpg

இவைகளின் தலையின் மேற்பரப்பில் அமைந்துள்ள டீடழற hழடந என்ற சுவாசக் குழாய் அமைப்பு நுரையீரலுடன் நேரடியாக இணைக்கப் பட்டுள்ளதாலும் மற்ற பாலுட்டிகளைப் போன்று தொண்டையின் மூலம் சுவாசம் செல்ல வேண்டிய அமைப்பு இல்லாததனாலும் ஒரே நேரத்தில் இவைகளினால் உண்ணவும் சுவாசிக்கவும் இயலுகின்றது.

இதுவரை நாம் அறிந்த உயிரினங்கள் எல்லாம் அதிகபட்சமாக ஒரு முறை சுவாசித்தால் பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை சுவாசிக்காமல் இருக்க முடியும்.

ஆனால் ஒரு முறை சுவாசித்து 80 நிமிடங்கள்வரை சுவாசிக்காமல் இருக்கும் ஒரு உயிரினத்தை பார்த்து இருக்கிறீர்களா ? திமிங்கிலங்களின் அரியத் திறமைகளில் அதுவும் ஒன்றாம் !

images-1-4.jpg

ஒரு முறை சுவாசித்ததன் பின்னர் 80நிமிடங்கள் வரை தண்ணீரின் அடியில் இவைகளினால் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. இவற்றின் உடல் அளவிடற்கரிய கடல் நீரின் அழுத்தத்தை தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

இவை தங்கள் இரையைத் தேடிக் கடலின் ஆழத்துக்குச் செல்லும் தூரம் எந்த பாலூட்டிகளினாலும் அடைய முடியாத ஒரு இலக்காகும்.

1000 மீட்டர் (1 கிலோ மீட்டர்) முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது.

ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்கப் பயன் படுத்தும் உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் முறையாகும்.

images-8.jpg

இவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 கிலோ வரை உணவை உட்கொள்ளுகின்றன. இதன் முக்கிய உணவான 10 மீட்டர் நீளமுள்ள Gaint squid  பிடித்து உண்ணும் போது சில சமயம் இவைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு Sperm Whale உடலில் மிக ஆழமான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

இருப்பினும் முடிவில் அவற்றை கபளீபரம் செய்ய இவை தவறுவதில்லை. இவை தங்களின் உணவைப்பிடித்து உண்டதன் பின்னர் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காற்றை நன்கு சுவாசித்து ஒக்சிசனை சேமித்து மீண்டும் ஆழ் கடல் நோக்கி தங்கள் பயணத்தை தொடர்கின்றன.

பாலூட்டிகளின் சாம்ராஜியத்தில் மிகவும் அதிக தூரப் பயணத்தை மேற்கொள்ளக் கூடிய உயிரினம் என்ற சிறப்பம்சமும் திமிங்கிலங்களுக்கு உண்டு. Killer Whale  மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை.

Mother_and_baby_sperm_whale_17333.jpg

திமிங்கிலங்கள் தங்கள் இனப்பெருக்கத்துக்காக குளிர்ப் பிரதேசங்களையும் குட்டிகளை ஈன்றெடுக்க வெப்பப் பிரதேசங்களையும் தேர்ந்தெடுத்து மிக நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளுகின்றன.

புசயல றூயடந என்ற திமிங்கில வகை தங்கள் குட்டிகளைப் பெற்றெடுக்க அலாஸ்காவுக்கு அப்பாலிருந்து மெக்ஸிகோ கடற்கரைப் பகுதி வரை கடந்து வரக் கூடிய தொலைவு 10000 கிலோ மீட்டரை விட அதிகமாகும்.

இவைகளின் பயணம் சிறிய அல்லது பெரிய கூட்டமாகவோ அல்லது தனித்தோ அல்லது ஆண்கள் மட்டுமோ அல்லது ஆண், பெண் இரண்டும் கலந்தோ மேற்கொள்ளுகின்றது.

Jumping_Humpback_whale.jpg

மொத்தம் கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய ஆயிரத்துக்கும் அதிகமான இறுதி ஆய்வுகளின் முடிவில் சயின்ஸ்’ இதழுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுத்தாள் மிகத்தெளிவாக தனது முடிவினைக் கூறியது.

மனிதர்களின் மூளையைக் காட்டிலும் பெரிய மூளை, திமிங்கிலங்களுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் நம்பப்படுகின்றது.

1970ஆண்டு திமிங்கிலங்களத்தின் புத்திக் கூர்மையான செயல்பாடுகள் முதல் முதலாக அறியப்பட்டது. விஞ்ஞானிகள் திமிங்கிலங்களை புத்திசாலி உயிரினமாகவே கருதுகின்றார்கள்.

right-whale-665.jpg

மூளையின் முன் புறமாக அமைந்த cerebral cortex  என்ற அடுக்கு யானைஇ நாய் மற்றும் மனிதர்கள் போன்ற புத்திசாலி உயிரினங்களுக்கு இருப்பது போல ஏன் மனிதர்களுக்கு இருப்பதை விட அதிகமாகவே இவற்றிற்கு இருக்கின்றது.

உலகில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் திமிங்கிலமும் ஒன்றாகும். இவை இவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அவற்றின் பலீன் தகடுகளுக்காகவும் பெருமளவு வேட்டையாடப்படுகின்றது.

இவற்றின் எலும்புகளிலிருந்து 1600க்கு மேற்பட்ட கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன. 1849ம் ஆண்டு பெட்ரோலியத்திலிருந்து கெரசின் என்ற மண்ணெண்ணெய் கண்டுப்பிடிப்பதற்கு முன்பு விளக்கெரிக்க பெருவாரியாக உலக மக்களால் திமிங்கில எண்ணெய் பயன் படுத்தப்பட்டு வந்தது.

இதற்காகவே பெருமளவு சென்ற காலங்களில் வேட்டையாடப் பட்டும் வந்தது. தற்போது திமிங்கிலங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். இந்த இனங்களை அழிவிலிருந்து காப்பாற்ற சர்வதேச அளவில் அமைக்கப்பட்ட I W C  (INTERNATIONAL WHALING COMMISSION) என்ற அமைப்பு திமிங்கிலங்களைப் பிடிக்க பல நிபந்தனைகளை விதித்துள்ளது.

http://newuthayan.com

  • தொடங்கியவர்

போன் அழைப்புகளை அலட்சியம் செய்த மகன்; ஆப் மூலம் தீர்வு கண்ட தந்தை

போன் அழைப்புகளை அலட்சியம் செய்த மகன்; ஆப் மூலம் தீர்வு கண்ட தந்தை

தனது அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் மகன் அலட்சியம் செய்தபோது மிகவும் வேதனைப்பட்ட பிரிட்டனை சேர்ந்த நிக் ஹெர்பெர்ட் இதற்கொரு தீர்வை காண எண்ணினார். ஆக்கப்பூர்வமாக செயல்பட முடிவு செய்த அவர், மகனை பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் ஒன்றை கண்டுபிடித்தார்.

''13 வயதிலே பென் ஏற்கனவே தனக்கென ஒரு செல்போனை வைத்திருந்தார். பெரும்பாலும் விளையாடுவதற்காகதான் அதை பயன்படுத்துகிறார். ஆனால், அதை சைலென்ட் மோடில் விட்டுவிடுவார். அதனால் ஒவ்வொரு முறையும் பென்னை தொடர்பு கொள்வது எனக்கு சிரமமாக இருந்தது,'' என்று பிபிசியிடம் கூறினார் ஹெர்பெர்ட்.

''செல்போன் சைலென்ட் மோடில் இருந்தாலும் அலாரம் மட்டும் வேலை செய்வதை உணர்ந்து, அந்த செயல்பாட்டை எனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன்,'' என்கிறார் அவர்.

போன் அழைப்புகளை அலட்சியம் செய்த மகன்; ஆப் மூலம் தீர்வு கண்ட தந்தைபடத்தின் காப்புரிமைMANAGED (PROJECT-LICENSE)

இப்படித்தான் ரிப்ளை ஏஎஸ்ஏபி (ReplyASAP) என்ற அப்ளிகேஷன் உருவானது. செல்போனின் திரையை லாக் செய்யும் திறன் கொண்ட இந்த ஆப், கூடுதலாக பயன்பாட்டாளரின் கவனத்தை ஈர்க்க எரிச்சலூட்டக்கூடிய ஒலியை எழுப்பும்.

போனில் வந்திருந்த அழைப்பை ஏற்ற பின்னரோ அல்லது மெசேஜிற்கு பதில் மெசெஜ் அனுப்பிய பின்னரோ தான் லாக்கான போன் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

இதற்காக, பிள்ளையின் செல்போனில் தந்தை ஒரு அப்ளிக்கேஷனை நிறுவ வேண்டியிருக்கும்.

அவசர செய்திகளை அனுப்ப பயன்பாட்டாளரை தொடர்புக்கொள்ளவும், பயன்பாட்டாளர் செய்தியை படித்து முடித்தவுடன் அதற்கான அறிவிப்பையும் பெற இந்த அப்ளிகேஷன் உங்களை அனுமதிக்கிறது.

முக்கிய விஷயங்களுக்காக மட்டுமே

இந்த அப்ளிகேஷனின் இலவச பதிப்பில் வெறும் ஒரு செல்போனை மட்டுமே இணைக்க முடியும். ஆனால், இதன் கட்டண பதிப்பில் சுமார் 20 மொபைல் போன்களை இணைக்கலாம்.

''ஆரம்பத்தில் என்னுடைய மகன் இதை விரும்பவில்லை,'' என்று கூறும் 45 வயதுடைய ஹெர்பெர்ட் லண்டனில் வசித்து வருகிறார்.

''ஆனால், சூழ்நிலையை புரிந்துகொண்டு இதன் அவசியத்தை பென் உணர்ந்து கொண்டார்,'' என்கிறார் அவர்.

இந்த வசதியை தான் எல்லா நேரங்களிலும் பயன்படுத்தவில்லை என்றும், சில முக்கிய தருணங்கள் போது மட்டுமே பயன்படுத்துவதாகவும் ஹெர்பெர்ட் கூறுகிறார்.

போன் அழைப்புகளை அலட்சியம் செய்த மகன்; ஆப் மூலம் தீர்வு கண்ட தந்தைபடத்தின் காப்புரிமைMANAGED (PROJECT-LICENSE)

செல்போன் மீதான பெற்றொரின் கட்டுப்பாடு

ரிப்ளை ஏஎஸ்ஏபி அப்ளிக்கேஷனுக்கு முன்பு ஹெர்பெர்ட் வேறெந்த அப்ளிகேஷனையும் உருவாக்கியதில்லை.

இந்த அப்ளிக்கேஷனை உருவாக்க வேண்டும் என்று தோன்றி அதனை வெளியிடுவதற்கு பல மாதங்கள் ஆனதாக கூறுகிறார் ஹெர்பெர்ட்.

தற்போது இந்த அப்ளிக்கேஷன் சுமார் 36,000 பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது. மேலும், ஆங்கில மொழியிலும் கிடைக்கின்றது. பிற மொழிகளும் இனிவரும் காலங்களில் சேர்க்கப்பட உள்ளது என்பது சிறப்பம்சமாகும்.

கூடுதலாக, ரிப்ளை ஏஎஸ்ஏபி அப்ளிக்கேஷனின் பிற பயன்களையும் ஹெர்பெர்ட் பரிசீலித்து வருகிறார். அதேசமயம், குழந்தைகளின் செல்போன் மீதான பெற்றோரின் கட்டுப்பாடும் இதில் அடங்கும்.

 

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

21949800_1860413590641710_77194137505657

கிளாசிக்ஸ் 1f642.png

  • தொடங்கியவர்
‘மூளை வலு இல்லாமல், பணத்துக்குப் பலம் சேராது’
 

image_6117d054ed.jpgஊக்கத்துடன் செயலாற்றும் செயல் வீரர்கள், பிறர் சொல்லும் தளர்வூட்டும் பேச்சுகளைச் செவி மடுக்கவே மாட்டார்கள். 

இந்தச் சொற்ப பணத்தை வைத்துக்கொண்டு, உன்னால் என்ன சாதிக்க முடியும்? எனச் சொல்லி, ஒருவரைப் பலமிழக்க முயல்பவர்கள் பலருண்டு.  

காசைவிடக் செய் காரியங்கள் பெரிதாக அமைய வேண்டும். மூளை வலு இல்லாமல், பணத்துக்குப் பலம் சேராது. படிப்படியாக இருப்பதை வைத்துப் பொருள் தேடுதல் புத்திசாலித்தனம்.  

இன்று பெரும்பாலான செல்வங்களில் பலர் பரம்பரைப் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். அதேபோல், முன்னர் டாம்பீகமாக வாழ்ந்தவர்கள் எல்லோருமே இன்றுவரை அதே நிலையில் இருப்பதுமில்லை.  

உழைப்பவர்களை உயர்த்த அரசுகள் உதவவேண்டும். அரசுகள் சயனித்துக்கொண்டிருந்தால், அரசாங்கத்தின் பயணம் அநாகரிகமாகி விடுகிறது. உழைப்பவனை அழவைக்கக் கூடாது. 

  • தொடங்கியவர்

1959 : பிர­தமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க உயி­ரி­ழந்தார்.

வரலாற்றில் இன்று….

செப்டெம்பர் – 26

 

1580 : இங்­கி­லாந்தைச் சேர்ந்த சேர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி வந்தார்.


1777 : பிரித்­தா­னியப் படை­யினர் அமெ­ரிக்­காவின் பில­டெல்­பியா நகரை முற்­று­கை­யிட்டுக் கைப்­பற்­றினர்.


1918 : அமெ­ரிக்க வர­லாற்­றி­லேயே அதிக இரத்தம் சிந்­திய சமர். மியூஸ்-­ஆர்கன் தாக்­குதல் பிரான்ஸில் ஆரம்­ப­மா­கி­யது. இச்சமரில் 28,000 ஜேர்மனியர்களும் 26,277 அமெரிக்கர்களும் இறந்தனர்.


1934 : பிரிட்­டனின் ஆர்.எம்.எஸ். குயீன் மேரி நீரா­விக்­கப்பல் வெள்­ளோட்டம் விடப்­பட்­டது.


PrimeMinisterBandaranaike1950 : சியோல் நகரை வட கொரி­யா­வி­ட­மி­ருந்து ஐக்­கிய நாடுகள் படைகள் மீண்டும் கைப்­பற்­றின.


1950 : ஐநாவில் இந்­தோ­னே­ஷியா  இணைந்­தது.


1954 : ஜப்­பானில் இடம்­பெற்ற புயலில் சிக்கி கப்பல் ஒன்று மூழ்­கி­யதில் 1,172 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1959 : தல்­துவே சோம­ராம தேரர் எனும் பௌத்த பிக்­கு­வினால் செப்­டெம்பர் 25 ஆம் திகதி சுடப்­பட்ட இலங்கைப் பிர­தமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்­டா­ர­நா­யக்க செப்­டெம்பர் 26 ஆம் திகதி உயி­ரி­ழந்தார்.


1959 : ஜப்­பானில் சூறா­வளி, மண் ­ச­ரிவு கார­ண­மாக 4580 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1960 : அமெ­ரிக்­காவில் ஜனா­தி­பதி பத­விக்­காக போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களின் முத­லா­வது தொலைக்­காட்சி நேரடி விவாதம் ரிச்சார்ட் நிக்­ச­னுக்கும் ஜோன் எஃப். கென்­ன­டிக்கும் இடையில் இடம்­பெற்­றது.


1960 : கியூப அதிபர் பிடெல் காஸ்ட்ரோ, சோவியத் ஒன்­றி­யத்­துக்­கான தமது ஒத்­து­ழைப்பை அறி­வித்தார்.


1962 : யேமன் அரபுக் குடி­ய­ரசு அமைக்­கப்­பட்­டது.


1973 : அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­துக்கு மேலான தனது முத­லா­வது இடை­நி­றுத்தல் இல்­லாத பய­ணத்தை கொன்கோர்ட் விமானம் பறந்து காட்­டி­யது.


1983 : அமெ­ரிக்க அணு­வா­யுதம் ஒன்று ஏவப்­பட்­டது என்ற தகவல் ஒரு கணினித் தவறு என்­பதை சோவியத் இரா­ணுவ அதி­காரி ஸ்டானி­சுலாவ் பெத்ரோவ் கண்­டு­பி­டித்தன் மூலம், அமெ­ரிக்க, சோவியத்  நாடு­க­ளுக்­கி­டையில் அணு­வா­யுதப் போரொன்று இடம்­பெ­று­வதைத் தவிர்த்தார்.


1984 : ஹொங்­கொங்கை சீனா­விடம் கைய­ளிக்க ஐக்­கிய இராச்­சியம்  ஒப்புக் கொண்­டது.


1987 : தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான திலீபன் இந்­திய அமைதிப் படை­யிடம் ஐந்து கோரிக்­கை­களை முன்­வைத்து உண்ணா விர­த­மி­ருந்து உயிர்­து­றந்தார்.


1997 : இந்­தோ­னே­ஷிய விமா­ன­மொன்று இந்­தோ­னே­ஷி­யாவின் மெடான் அருகே விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 234 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1997 : இத்­தா­லியில் இடம்­பெற்ற நில­ந­டுக்கம் கார­ண­மாக, 13 ஆம் நூற்­றாண்டில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட அசி­சியின் பிரான்சிஸ் தேவா­ல­யத்தின் ஒரு பகுதி சேத­ம­டைந்­தது.


2002 : செனெகல் நாட்டு கப்பல் ஒன்று காம்­பி­யாவில் மூழ்­கி­யதில் ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டனர்.


2008 : சுவிட்­ஸர்­லாந்தைச் சேர்ந்த இவெஸ் ரோஸி என்­பவர், ஆங்­கிலக் கால்­வாயை ஜெட் இயந்­திரம் பூட்­டப்­பட்ட இறக்கை மூலம் கடந்த முத­லா­வது மனிதர் என்ற பெயரைப் பெற்றார்.


2009 : கெட்­சானா சூறா­வளி கார­ண­மாக பிலிப்பைன்ஸ், சீனா, வியட்நாம், கம்­போ­டியா, லாவோஸ், தாய்­லாந்து முத­லான நாடு­களில் சுமார் 700 பேர் உயிரிழந்தனர்.


2013 : காணி அதிகாரமானது மாகாண சபைகளுக்கு அல்லாமல் மத்திய அரசாங்கத்துக்கே உரியது என இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


2014 : மெக்­ஸிகோ கல்­லூ­ரி­யொன்றைச் சேர்ந்த 43 மாண­வர்கள் கூட்­டாக கடத்­தப்­பட்டு காணாமல் போயினர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்
தொலைக்காட்சித் தொடர்போல நடந்தேறிய திருமணம்
 

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற திருமண நிகழ்வு குறித்து இணையத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.

image_8ad4129e9b.jpg

அதாவது, மிகப் பிரபலமான தொலைக்காட்சித் தொடரைப்போன்று, ஆடைகள் மற்றும் சூழல் அலங்கரிக்கப்பட்டு திருமண வைபவம் இடம்பெற்றுள்ளது.

கேம் ஒஃப் த்ரோன் என்ற தொடர் நாடகத்தின் பாத்திரங்களாக மாறி, ரேகாஸா பஞ்சி ரியாவன் (28) என்ற மணமகனும் சிஸ்டா மௌலி உலான்டெரி (27) என்ற மணமகளும் இவ்வாறு தமது திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

image_6b3596c3ea.jpgimage_af9c04fb64.jpgimage_9e9c6ea383.jpgimage_4eb99911c4.jpgimage_cdb481e7ba.jpgimage_9664233f15.jpgimage_27f09c542f.jpgimage_32d7a3247b.jpg

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

"என் வழி தனி வழி..!" - மெர்சல் காட்டும் மெடிக்கல் ட்ரோன்ஸ்

 

மெடிக்கல் ட்ரோன்ஸ்

பெருநகர நெரிசலில் ஒய்யாரமாக உட்கார்ந்து போக டாக்ஸியை தேர்ந்தெடுங்கள், அவசரமாகப் போக ஆட்டோவை தேர்ந்தெடுங்கள், அதை விட வேகமாகப் போக வேண்டும் என்றால் நடந்தே போய்விடுங்கள் என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். சாதாரண பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்குக் கூட நேரம் தவறாமல் போக விரும்புபவர்கள், ஐந்து கி.மீ. தூரத்தைக் கடக்க ஒரு மணி நேரம் முன்பே கிளம்பி விடுவார்கள். மக்கள் தொகை அதிகமான இடங்களில் அவசரக்கால தேவைகள் என்று ஏதாவது வந்தால், அதைச் செய்து முடிப்பதற்குள் ஒரு உலக யுத்தம் செய்த களைப்பு வந்து விடும். மக்கள் பயணப்படுவதே இவ்வளவு கடினம் என்னும் போது அத்தியாவசிய பொருட்களை அனுப்புவது எப்படி? நகரத்திற்குள் இடம்பெயர்ந்து கொள்ள அந்தப் பொருள்களும், மக்கள் செல்லும் சாலைகளையே பயன்படுத்த வேண்டும். இந்த பிரச்னைக்கு முன்னேறியதாய் புகழப்படும் டெக்னாலஜி எதாவது தீர்வு கொண்டு வந்தால் தான் என்ன என்று புலம்புவர்கள் உண்டு. அவர்களுக்குத் தெரியாது, இதற்கு எல்லாம் தீர்வு எப்போதோ ட்ரோன்கள் வடிவில் வந்துவிட்டது என்று!

எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

மருத்துவத்துறை இந்த ட்ரோன்களை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாம்? பாதுகாப்பு மற்றும் சேவை மேம்படுத்துதல் போன்ற விஷயங்களைத் தாண்டி அவசரக் காலத்தின் போது முதலுதவி மருந்துகள், இரத்தம், பரிசோதனைகளுக்கான இரத்த மாதிரிகள் மற்றும் இதர பரிசோதனை மாதிரிகள் போன்றவற்றை விரைவாகக் கொண்டு செல்ல முடியும். ஒரு மருத்துவமனையில் இருந்து இன்னொரு மருத்துவமனைக்கு, பரிசோதனை கூடங்களுக்கு என ட்ரோன்களை பிரத்தியேகமாக இயக்க முடியும். அவசரக் காலங்கள் தவிர்த்து ட்ரோன்களை கொண்டு வீட்டு நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இருந்து மருந்துகள், மருத்துவ சோதனையின் முடிவுகள் போன்றவற்றை அனுப்ப முடியும். இதன் மூலம், நேரத்தையும், தேவையில்லாத அலைச்சலையும் நோயாளிகள் தவிர்க்கலாம்.

கூடுதல் சிறப்பாக, அரிய வகை இரத்தங்கள் கிடைக்கவில்லை என்றால் ட்ரோன்களின் உதவியைத் தயங்காமல் நாடலாம். அந்த அரிய இரத்த வகை கொண்ட மனிதர் தொலைவில் இருக்கிறார் என்றால், ட்ரோன்களை அனுப்பி இரத்தத்தை அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். ஒரு கார் எடுத்துக் கொண்டு அவரைச் சந்தித்து இரத்தம் பெறுவதை விட இதற்குக் குறைவான நேரமே ஆகும். இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி, உணவு பொட்டலங்கள் போன்றவற்றைக் கொண்டு செல்ல ட்ரோன்களின் மேஜிக் நிச்சயம் தேவைப்படும்.

ஸ்விட்சர்லாந்தின் முன்மாதிரி முயற்சி

கலிஃபோர்னியாயவை சேர்ந்த பிரபல லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான மேட்டர்னெட் ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஒரு முன்மாதிரி முயற்சியை விரைவில் செயல்படுத்தவுள்ளது. அந்த நாட்டில் உள்ள மருத்துவமனைகள், பரிசோதனை கூடங்கள், சிறிய கிளினிக்குகள் போன்றவற்றை ட்ரோன்கள் கொண்டு இணைக்க இருக்கிறார்கள். அதாவது, ஒவ்வொரு இடத்திலும், ட்ரோன் நிலையங்கள் நிறுவப்படும். ஒரு இடத்தில் ஏற்றப்படும் பொருட்கள், வேண்டிய இடத்தை விரைவில் சென்றடையும். அதை விளக்கும் காணொளியை கீழே பாருங்கள்.

 

 

 

QR கோட் கொண்டு செயல்படும் இது பொருட்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அனுப்புநரும், பெறுநரும், சரியான QR கோட்கள் கொண்டு ஸ்கேன் செய்தால் மட்டுமே, பொருட்கள் பரிமாற்றம் நடைபெறும். இந்த முன்மாதிரி முயற்சிக்கு உலகிலேயே ஸ்விட்சர்லாந்து நாடு தான் முதன் முதலில் அனுமதி வழங்கியுள்ளது. மேட்டர்னெட் செயல்படுத்தப்போகும் இந்த ட்ரோன் போக்குவரத்து அங்கு அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கு ஸ்விஸ் போஸ்ட் என்ற அதன் தேசிய தபால் சேவை நிறுவனம் உதவி செய்யவுள்ளது. 70 கி.மீ. வேகத்தில் பறக்க கூடிய இந்த ட்ரோன்களை  20 கி.மீ. தூரம் வரை பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறை ட்ரோன்கள் அதற்கான நிலையங்களில் தரையிறங்கும் போதும், அதுவே அடுத்த பயணத்திற்காக தன்னை தானே சார்ஜ் செய்து கொள்ளும். இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றால், ட்ரோன்களின் பயன்பாடு மேலும் விரிவடையும். மருத்துவம் போன்ற முக்கிய துறைகளில் உள்ள பல பிரச்னைகளை இதைக் கொண்டு சீர்ப்படுத்தலாம்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

பல மில்லியன் பெறுமதியான ஜாடி - சுவிஸில் ஏலம் !!

 

சுவிட்சர்லாந்தின்  ஜெனிவா நகரில் ஏலம் விடப்பட்ட  சீனத்து ஜாடி ஒன்று அதன் அடிப்படை விலையை விடவும் பத்தாயிரம் மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டு புதிய சாதனைபடைத்துள்ளது.

பல  மில்லியன்   பெறுமதியான   ஜாடி - சுவிஸில் ஏலம் !!

ஜெனிவாவில் கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட ஏலத்தில்  குறித்த ஜாடியை 6 மில்லியன் பிராங்(frank)  தொகைக்குக்கு விற்கப்பட்டுள்ளது.

இதுவரை ஜெனிவாவில் ஏலம் விடப்பட்டுள்ள கடிகாரங்கள், வைரஆபரணங்கள் போன்ற  பொருட்களைவிட மிக அதிக  விலைக்கு இந்த மஞ்சள் ஜாடி விற்கபட்டு சாதனை  படைத்துள்ளதாக   கூறப்படுகிறது.

60செ.மீ உயரம் கொண்ட குறித்த ஜாடியானது,  சீனாவில் தயாரிக்கப்பட்டதாகும்.

மஞ்சள் பின்னணியில் நீலவண்ணத்தில் பூவேலைப்பாடுகள்  வரையப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி  இந்த  ஜாடி  18 ஆம் நூற்றாண்டில் சீனாவை ஆண்ட கிங் வம்சத்தினரின் பயன்பாட்டில் இருந்த ஜாடி எனவும்  கூறப்படுகிறது.

குறித்த ஜாடியை விற்பனைக்கு வைத்த நபர் அதன் அடிப்படை விலையாக வெறும் 500 முதல் 800 பிராங்க் வரை மட்டுமே  குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஏலத்தில் தொலைபேசி வாயிலாக பங்கேற்ற  ஆசியா நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், நீண்ட போராட்டத்திற்கு பின்னர் 6.08 மில்லியன்
சுவிஸ் பிராங்க் தொகைக்கு வாங்கியுள்ளார்.

இதே நிறுவனத்தில் இதற்கு முன்னர் வெண்கலத்தில் செய்யப்பட்ட புத்தரின் சிலை ஒன்று 550,000 சுவிஸ் பிராங்க் தொகைக்கு விற்கப்பட்டதே
சாதனையாக இருந்து வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

இந்தக் கப்பல் திரும்பவே 3 கி.மீ தேவை! வியக்கவைக்கும் உலகின் ராட்சதக் கப்பல்கள்

 
 

தன் நிலப்பரப்பைத் தவிர்த்து எந்தவொரு நாடு பற்றியும் அறிந்திராத மனிதன், புதுப்புது நாடுகளைக் கண்டறியவும் மனித இனம் உலகம் முழுவதும் பரவவும் காரணமாக இருந்த வாகனம் கப்பல்தான். பழங்காலத்தில் மட்டுமல்ல; தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட தற்போதுகூட நாடுகளுக்கிடையே மிக முக்கியமான சரக்கு போக்குவரத்துகள் கப்பல்கள் மூலம்தான் நடக்கின்றன. இதனால்தான் உலகின் ஏதோ ஓர் இடத்தில் இருக்கும் கச்சா எண்ணெய் நம் வாகனங்களுக்குள் பெட்ரோலாக இருக்கிறது; நம் ஊரில் விளையும் மாம்பழங்கள் மற்றொரு நாட்டில் 'ஜாம்'மாக இருக்கிறது. வர்த்தகம் தவிர்த்து, ஒரு நாட்டின் ராணுவப் பாதுகாப்பு, கண்காணிப்பு, போக்குவரத்து போன்றவற்றுக்கும் இந்தக் கப்பல்கள்தான் கைகொடுக்கின்றன. அப்படிப் பல்வேறு துறைகளில் பயன்பட்ட, பயன்பட்டுக்கொண்டிருக்கிற சில ராட்சதக் கப்பல்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

Seawise Giant

 

Seawise Giant


இதுவரை உலகில் கட்டமைக்கப்பட்டதில் இதுதான் மிக நீளமான கப்பல். கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்குப் பயன்படும் இந்தக் கப்பலின் நீளம் 458 மீட்டர். செங்குத்தாக நிறுத்தி வைத்தால் ஈபிள் டவரைவிடவும் உயரமாக இருக்கும். ஜப்பானில் கட்டமைக்கப்பட்டு 1979- ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த இந்தக் கப்பலின் பெயர் நான்கு முறை மாற்றப்பட்டுள்ளது, பல்வேறு உரிமையாளர்களின் கீழ் இருந்திருக்கிறது. இந்தக் கப்பலில் 42 லட்சம் பேரல்கள் அளவுக்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லலாம். நீராவி இன்ஜின் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இதன் வேகம் மணிக்கு 30 கி.மீ. இது முழுவதுமாகத் திரும்புவதற்கு குறைந்தபட்சம் 3 கி.மீ தூரமாவது தேவைப்படும். இதிலிருந்தே இதன் நீளத்தைப் புரிந்துகொள்ள முடியும். 1988-ம் ஆண்டு ஈராக் போரின்போது இந்தக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது. உலகம் முழுவதும் சுற்றி 30 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த Seawise Giant, கடந்த 2010-ம் ஆண்டில் உடைப்பதற்காக இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.

OOCL Hong Kong

OOCL Hong Kong

தற்போது பயன்பாட்டில் இருக்கும் நீளமான கப்பல்களில் இதுவும் ஒன்று. OOCL என்ற சீன நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தக் கப்பல், 2015-ம் ஆண்டில் கட்டத் தொடங்கப்பட்டு கடந்த மே மாதம் செயல்பாட்டுக்கு வந்தது. சாம்சங் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட இந்தக் கப்பல் கன்டெய்னர்கள் ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்டது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் கன்டெய்னர்கள் ரக கப்பல்களிலேயே அதிக கொள்ளளவைக் கொண்டது OOCL Hong Kong. இதில் 21,413 TEU அளவுக்கு கன்டெய்னர்களை ஏற்றிச் செல்ல முடியும்.

Madrid Maersk

Madrid Maersk


கன்டெய்னர் வர்த்தகத்தில் உலகின் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றான Maersk நிறுவனத்துக்குச் சொந்தமானது இது. OOCL Hong Kong-ஐவிட சற்று நீளம் குறைவானது. இரண்டு கப்பல்களிலும் ஒரே நிறுவனத்தின், ஒரே வகையிலான இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதில் இருக்கும் இரட்டை இன்ஜின்கள் இந்தக் கப்பலுக்கு அதிக சக்தியை அளிக்கின்றன.கடலில் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 47 கி.மீ. இந்தக் கப்பலில் 20,568 TEU அளவுக்கு கன்டெய்னர்களை ஏற்றிச் செல்ல முடியும்.


Mozah 

 Mozah 


கத்தார் அரசுக்குச் சொந்தமான இந்தக் கப்பல், LPG எனப்படும் திரவ பெட்ரோலிய வாயுவைக் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டது. சாம்சங் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட இது, 2008-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கிறது. இந்தக் கப்பலில் 26 கோடி லிட்டர் பெட்ரோலிய வாயு திரவத்தைக் கொண்டு செல்ல முடியும். கடலில் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 36 கி.மீ. 


USS Enterprise

USS Enterprise கப்பல்

 


அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான இந்தக் கப்பல் அணு சக்தியால் இயங்கும் உலகின் முதல் விமானம்தாங்கி போர்க்கப்பல் என்ற சிறப்பைக் கொண்டது. 1958-ல் கட்ட தொடங்கப்பட்டு, 1961-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்தது. இதன் நீளம் 342 மீட்டர்கள். அமெரிக்க கப்பற்படைக்கு மிகப்பெரிய பலமாக இருந்த இந்தக் கப்பலில் அதிநவீன ரேடார்கள் மற்றும் தாக்குதலுக்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. கப்பல் இயங்குவதற்கு தேவையான சக்தி, இதிலிருந்த 8 அணு உலைகள் மூலம் பெறப்பட்டது. அணு சக்தியால் இயங்குவதால் அடிக்கடி எரிபொருள் நிரப்ப தேவையிருக்காது என்பது இதன் சிறப்பு. இந்த கப்பலில் அதிக பட்சம் 5,828 நபர்கள் வரை பயணிக்க முடியும்;  60-க்கும் மேற்பட்ட போர்விமானங்களை நிறுத்தி வைக்க முடியும். 50 வருடங்களாக பயன்பாட்டில் இருந்த இது 2012-ம் ஆண்டு இராணுவத்தில் இருந்து விடைபெற்றது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

போதை தராத கஞ்சா பால்

கஞ்சா தாவரத்தின் ஒரு வகையான, ஹெம்ப் செடியின் விதையில் இருந்து பாலை தயாரிக்கிறார் ஒரு விவசாயி. அனால், இந்த பால் போதை ஏற்றாது என்றும், இதில் பல நல்ல விஷயங்கள் இருப்பதாவும் கூறுகிறார்.

  • தொடங்கியவர்

நியூயார்க்கில் பிரியங்கா சோப்ராவைச் சந்தித்தார் நயன்தாரா!

 

 
nayan1

 

பிரபல நடிகைகள் நயன்தாராவும் பிரியங்கா சோப்ராவும் நியூயார்க்கில் சந்தித்து உரையாடியுள்ளார்கள்.

ஐ.நா. அமைப்பின் குளோபல் கோல்ஸ் விருது நிகழ்ச்சிக்காக நியூயார்க் சென்றுள்ளார் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா. அதேபோல இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக அவருடன் நியூயார்க் சென்றுள்ளார் நயன்தாரா .

இந்நிலையில் பிரியங்கா சோப்ராவும் நயன்தாராவும் நியூயார்க்கில் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்கள். இந்தச் சந்திப்பின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நயன்தாராவைப் பாராட்டி இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ட்வீட்டில், மை டியர் சன்ஷைன் என்று நயன்தாராவை வர்ணித்திருந்தார். பிரியங்கா சோப்ராவுடனான சந்திப்பில், சன்ஷைன் கேர்ள் என்கிற வாசகம் கொண்ட உடையை அணிந்திருந்தார் நயன்தாரா.

http://www.dinamani.com

உறுதியானது ஹெரியின் காதல்!

பிரித்தானிய இளவரசர் ஹெரி முதன்முறையாக தனது காதலியும் தொலைக்காட்சி நடிகையுமான மேகன் மார்கல்லுடன் பொது இடத்தில் தோன்றியிருக்கிறார்.

2_Harry.jpg

கனடாவில் நடைபெற்றுவரும், காயமடைந்த இராணுவ வீரர்கள் பங்கேற்கும் ‘இன்விக்டஸ் கேம்ஸ்’ நிகழ்வில் இளவரசர் ஹெரி பங்கேற்றுள்ளார். இந்தப் பொது நிகழ்விலேயே, இளவரசர் ஹெரி தனது காதலியான மேகன் மார்கல்லுடன் கைகளைக் கோர்த்தவாறு முதன்முறையாக  கலந்துகொண்டார்.

இதன்மூலம், தாமிருவரும் காதல் வயப்பட்டிருப்பதை இருவரும் ஒத்துக்கொண்டுள்ளனர்.

சுமார் கடந்த ஒரு வருடமாக மேகனுடன் ‘டேட்டிங்’கில் இருந்து வருவதாகச் சொல்லப்பட்டாலும் இளவரசர் ஹெரி, இதுவரை அதை உறுதிப்படுத்தும் விதமாகப் பொது இடங்களில் கலந்துகொண்டதில்லை என்பதால், இந்த நிகழ்வு பிரித்தானிய அரச குடும்பத்திலும், அதன் விசுவாசிகளிடமும் ஒரு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

மேகன் மார்கல் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பதும், அவரது தந்தை வெள்ளையரானாலும் தாய் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

விலங்கு உடலை பதப்படுத்தும் தொழிலில் கண்ணியம் காக்கும் எம்மா

  • தொடங்கியவர்

மறக்கடிக்கப்பட்ட பிரபல ஓவியர்களின் படைப்புகள்

ஓவியர்கள்படத்தின் காப்புரிமைARTISTS' ESTATE Image captionகூப்பர் என்ற உற்சாகமான ஆசிரியரால் கிழக்கு லண்டனில் துவங்கப்பட்ட நான்கு உறுப்பினர்கள் கொண்ட ஓவியக்கலைஞர்கள் குழு

செப்டம்பர் மாத தொடக்கத்தில் நடந்த இரண்டு கண்காட்சிகள் 1920களின் பிற்பகுதி மற்றும் 1930களில் கலை உலக பிரபலங்களான, லண்டனின் கிழக்குப் பகுதியை சேர்ந்த தொழிலாளர் வர்க்க கலைஞர்களின் குழுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.

இந்த கண்காட்சிகளில் இடம்பெற்ற பல படைப்புகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் மறக்கடிக்கப்பட்டன எனபது குறிப்பிடத்தக்கது.

இந்த குழுவினர் கிழக்கு லண்டன் குரூப் என அழைக்கப்பட்டனர், அவர்களது அணிகளின் மத்தியில், எளிமையான அலுவலக எழுத்தாளர்கள், ஒரு கடற்படை ஊழியர் , ஒரு சாளர துப்புரவாளர், ஒரு கடை உதவியாளர், ஒரு அச்சுப்பொறி, ஒரு கூடை நெய்தவர் மற்றும் ஒரு சிறிய பையன் ஆகியோர் இருந்தனர்.

தற்போது இவர்களின் படைப்புகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சவுத்தாம்ப்டனில் தங்கள் பணிக்கு அர்ப்பணித்துள்ள ஒரு கண்காட்சி, மற்றும், மற்றொன்று, கிழக்கு லண்டனில், குழந்தைகளின் எழுத்தாளர் மைக்கேல் ரோசனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகும்

அவர்களுக்கு முறையான கலைக் கல்விப் பயிற்சி இல்லாத போதிலும், அவர்கள் தயாரித்த ஓவியங்கள் மிக நுட்பமானவையாக இருந்தன.

மைல் எண்ட் அண்ட் போவ் பகுதியில், மாலை வகுப்புகளில், ஜான் கூப்பர் என்ற ஒரு உற்சாகமான ஆசிரியரின் தூண்டுதலால் , அவர்கள் லண்டனின் தொழில்துறை சார்ந்த, வறுமையால் பாதிக்கப்பட்ட கிழக்கு லண்ட்டில், தங்களை சுற்றி அவர்கள் பார்த்தவற்றையெல்லாம் ஓவியமாக வரைந்தனர்.

பெரும்பாலும் அவர்களின் ஓவியங்கள்,கால்வாய்கள், ரயில்வே பாலங்கள், மாடி வீடுகள் மற்றும் ஸ்க்ர்பீ தோட்டங்கள் ஆகியவற்றின் புகை மூடிய காட்சிகளை கொண்டதாக இருந்தன.மற்றும் அவர்களின் ஓவியங்கள்,உலகை பற்றிய மிக முக்கியமான பதிவாகும்

ஓவியர்கள்படத்தின் காப்புரிமைARTISTS' ESTATE Image captionஎல்வின் ஹொத்தோர்ன் மற்றும் ஸ்டேகெல் சகோதரர்கள் நாட்டைச் சுற்றிப் பயணம் செய்யத் தொடங்கியபோது, எல்வின் ஹொத்தோர்ன், வடக்கு ஃபோர்லாண்ட் கலங்கரை விளக்கத்தை சித்தரிக்க முடிந்தது

1930 களில் எட்டு ஆண்டுகளாக அவர்கள் லண்டனின் மிகவும் மதிப்புமிக்க வர்த்தக கலைக் கலைக்கூடங்களில் ஒன்றான மேஃபேரில் உள்ள அலெக்ஸ் ரீட் & லெஃபெவெரில் ஒரு வருடாந்திர கண்காட்சியை நடத்தினர். செல்வம்மிக்க கலை சேகரிப்பாளர்கள் குழுவின் ஓவியங்களை வாங்கினர். மேலும் விமர்சகர்கள் அவர்களை பற்றி விமர்சித்தனர்.

இந்த குழு பற்றிய ஒரு புத்தகத்தை எழுதிய டேவிட் பக்மேன், தி டைம்ஸ் மற்றும் டெய்லி மெயில் போன்ற முன்னணி பத்திரிகைகளில் இதைப் பற்றி அதிகப்படியான செய்திகள் வெளியிடப்பட்டதாக கூறுகிறார்.

ஹரோல்ட் ஸ்டேக்ல்ஸ் ஒரு வழக்கறிஞரின் எழுத்தராக பணிபுரிந்தார்; அவரது சகோதரர் வால்டர் ஒரு கப்பல் நிறுவனத்திற்கு வேலை செய்தார். ஒவ்வொரு நாளும் அவர்கள் ரோம்ஃபோர்ட்டிலிருந்து நகரத்திற்குச் சென்றார்கள்,

பின்னர் சாட்வெல் ஹீத், தேனீர் அருந்த சென்றார்.ஒரு வாரத்திற்கு மூன்று மாலைப் பொழுதுதுகளுக்கு பின்னர் கூப்பர் வகுப்புகளுக்காக கிழக்குப் பகுதிக்குச் சென்றார்கள்.

இப்போது 100 வயது நிரம்பிய வால்தாமின் மாமியாரும் அவர்களது சகோதரியுமான டிலி,தங்களுக்கு ஒரு "ஸ்டூடியோ"- தங்கள் வீட்டில் ஒரு அறை இருந்ததாக நினைவுக்கூறுகிறார். சில நேரங்களில் தங்கள் சிறிய சகோதரி அவர்கள் வேலை செய்வதை பார்க்க அனுமதிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

இந்த சகோதரர்களின் வெற்றியானது, அவர்களை ஒரு கார் வாங்க முடிந்ததே ஆகும்.அவர்களது நண்பரான எல்வின் ஹவ்தொர்ன் மற்றும் அவரது மனைவி லிலின் ஆகியோரும் இந்த குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர்.அவர்கள் ஓவியம் வரைவதற்காக நாடு முழுவதும் சுற்றி, தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டனர்.

இந்த குழுவின் மற்றொரு முன்னணி உறுப்பினர் ஆல்பர்ட் துர்பின் ஆவார். இவர் சாளரத்தின் துப்புரவாளர், போர்க்குணமிக்க போர்வீரன் மற்றும் போர் கலைஞர், சோசலிஸ்ட் கொள்கையை பின்பற்றுபவர் , தொழிலாளர் கவுன்சிலர் மற்றும் பேத்னால் க்ரீன் பகுதியின் போருக்குப் பிந்தைய மேயராக இருந்தவர்

அவரது பணி bow பகுதியில் உள்ள நன்னெரி கேலரியில், இரண்டாவது கண்காட்சியின் மையத்தில் உள்ளது. ஹரோல்ட் ஸ்டேகெல்ஸ் (இடதுபுறம்) ஒரு வழக்கறிஞரின் எழுத்தராக பணியாற்றினார், அவருடைய சகோதரர் வால்டர் ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலை செய்தார்

ஓவியர்கள்படத்தின் காப்புரிமைARTISTS' ESTATE Image captionஹரோல்ட் ஸ்டேகெல்ஸ் (இடதுபுறம்) ஒரு வழக்கறிஞரின் எழுத்தராக பணியாற்றினார்,

கவர்ச்சியற்ற இடங்களில் பார்த்தவற்றை வலியுறுத்தும் விதமாக அந்த ஓவியங்கள் அமைந்ததால், அந்த குழுவின் வேலை ஆச்சரியமளிப்பதாக மைக்கேல் ரோஸன் கூறுகிறார்.

டர்பின் மற்றும் அவரது மனைவி சாலி ஆகியோரால் போரின் முடிவில் இரண்டு வயதானபோது தத்தெடுக்கப்பட்ட டர்பினின் மகள் ஜோன் பர்கர், எப்போதும் தனது குடும்பத்தினர், தனது சக கவுன்சிலர்கள் மற்றும் தன்னை சுற்றியுள்ள தெருக்களை ஓவியம் வரைந்துகொண்டிருக்கும் ஒரு மனிதரை நினைவுகூர்கிறார்.

போர் முடிந்தபிறகு, அவர், இடிபாடுகளுக்கு உள்ளான கட்டடங்களையும் ,அவை சரிசெய்யப்பட்டு பின் இருக்கும் கட்சியையும் வண்ணம் தீட்டினார்.

பார்க்கர், தனது தந்தையின் போருக்கு முந்தைய ஸ்க்ராப்புக் புத்தகத்தில், கவுன்சிலர் "டிக்" மற்றும் டர்பின் பற்றிய செய்தித்தாள் துணுக்குகள் மற்றும் ஓஸ்வால்ட் மோஸ்லியின் பாசிச கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடிய செய்திகளும் நிறைந்திருந்தன.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவருடைய ஓவியங்களுள் பெரும்பான்மையானவை மறைந்துவிட்டன.

ஓவியர்கள்படத்தின் காப்புரிமைARTISTS' ESTATE

1920 ,1930 மற்றும் 1940களில் இருந்த அவரது தந்தையின் ஓவியங்கள் அதிக அளவில் எரிந்துபோயின.

ஆனால் காணாமல் போனது, டர்பினின் ஓவியங்கள் மட்டும் அல்ல

ட்விட்டர் பீட் ஒன்றை நடத்திவரும் வால்தம், 700க்கும் மேற்பட்ட கிழக்கு லண்டன் குழு ஓவியங்கள் 1930 களில் கண்காட்சியில் வைக்கப்பட்டது என்று கூறுகிறார். அவர்களில் 113 பேரை தான் கண்டறிந்ததுவிட்டதாக அவர் கூறினார்.

அவற்றுள் சில ஓவியங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் பல ஓவியங்கள், சுவர்கள் மீது அடையாளம் காணப்படாமால் தொங்கிக்கொண்டிருக்கின்றன, அவை மீண்டும் கண்டெடுக்கப்படும் என்ற காத்திருப்போடு.

http://www.bbc.com

  • தொடங்கியவர்
‘துஷ்டரை விரட்டுக’
 

image_90fd7ff823.jpgநாணயமும் ஒழுக்கமும் அற்றவர்கள் சூழுரைத்தல் அர்த்மற்ற அருவருப்பான செயல்.  இன்று சட்ட விரோதமான காரியங்களையும் மக்கள் விரோத செயல்களையும் செய்யும் பாதகர்களே தாங்கள் மிகவும் நல்லவர்கள் போல் சூளுரைக்கின்றார்கள். 

தாங்கள் மக்கள் விரோதிகளே அல்லர் எனப் பாசாங்கு செய்யும்போது, மக்கள் மௌனித்து விடுகின்றனர். வெளிப்படையாகப் பேசுவதற்கு அச்சப்படுகின்றனர்.  

யாரேனும் வாய் திறந்தால், அவர்கள் கதி அதோ கதிதான். சட்டம் எல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டேயல்ல. 

எதையும் தங்களால் செய்து முடிக்க முடியும் எனச் சூழுரை செய்யும் இவர்களை பொதுமக்களும் அரசாங்கமும் கண்டுகொள்ளாது விடில், ஜனநாயகம் அரசோச்சுவது எங்ஙனம்? துஷ்டரை விரட்டுக; தண்டனை கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். 

  • தொடங்கியவர்

2006 : செப்டெம்பர் 27 ஆம் திகதியை தனது பிறந்த தினமாக கூகுள் நிறுவனம் கொண்டாட ஆரம்பித்தது.

வரலாற்றில் இன்று….

செப்டெம்பர் – 27

 

1529 : ஒட்­டோமன் ராஜ்­ஜி­யத்தின் சுல்­தா­னான முதலாம் சுலை­மானின் படைகள் வியன்னா நகரை முற்­று­கை­யிட்­டன. 


1590 : பரி­சுத்த பாப்­ப­ரசர் ஏழாம் ஏர்பன் திருத்­தந்தை பத­வி­யேற்ற 13ஆம் நாள் இறந்தார். இவரே மிகக்­கு­று­கிய காலம் பாப்­ப­ர­ச­ராக இருந்­தவர். 


1821 : ஸ்பெயி­னி­ட­மி­ருந்து மெக்­ஸிகோ சுதந்­திரம் பெற்­றது. 


Google1825 : உலகின் முத­லா­வது பய­ணிகள் ரயில் இங்­கி­லாந்தில் சேவைக்கு விடப்­பட்­டது. 


1854 : “எஸ்.எஸ். ஆர்க்டிக்" நீராவிக் கப்பல் அத்­தி­லாண்டிக் சமுத்­தி­ரத்தில் மூழ்­கி­யதில் 300 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 
1893 : அமெ­ரிக்­காவின் சிகா­கோவில் நடை­பெற்ற உலகச் சம­யங்­களின் பாரா­ளு­மன்ற மாநாடு முடி­வ­டைந்­தது. 


1905 : அல்பேர்ட் ஐன்ஸ்டைன் முதற் தட­வை­யாக E=mc² என்ற சமன்­பாட்டை அறி­மு­கப்­ப­டுத்­தினார். 


1916 : எதி­யோப்­பி­யாவில் இடம்­பெற்ற அரண்­மனைப் புரட்­சியை அடுத்து  மன்னர் 5 ஆம் இயாசு பத­வியை இழந்தார். 


1928 :  சீனக் குடி­ய­ரசை ஐக்­கிய அமெ­ரிக்கா  அங்­கீ­க­ரித்­தது. 


1937 : “பாலிப் புலி” இனம் உல­கி­லி­ருந்து அழிந்­து­விட்­ட­தாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.  


1938 : ஆர்.எம்.எஸ். குயின் எலி­ஸபெத் உல்­லாசக் கப்பல் கிளாஸ்­கோவில் வெள்­ளோட்டம் விடப் ­ப­ட்டது. 


1939 : இரண்டாம் உலகப் போரில் ஜேர்­ம­னி­யிடம் போலந்து சர­ண­டைந்­தது. 


1940 : ஜேர்­மனி, ஜப்பான், இத்­தாலி ஆகி­யன முத்­த­ரப்பு உடன்­பாட்டில் பேர்லின் நகரில் கையெ­ழுத்­திட்­டன. 


1959 : ஜப்­பானின், ஹொன்ஷு நகரை தாக்­கிய சூறா­வ­ளி­யினால் சுமார் 5,000 பேர் உயி­ரி­ழந்­தனர். 


1961 : ஐ.நாவில் சியேரா லியோன் இணைந்­தது. 


1962 : யேமன் அரபுக் குடி­ய­ரசு ஸ்தாபிக்­கப்­பட்­டது.


1964 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோன் எஃப். கென்­ன­டியை லீ ஹாவி ஒஸ்வால்ட் என்­பவன் வேறு எவ­ரி­னதும் தூண்­டுதல் இன்றிக் கொலை செய்­த­தாக வாரன் ஆணைக்­குழு அறிக்கை வெளி­யிட்­டது. 


kabul-map1977 : கன­டாவின் ஒண்­டா­ரி­யோவில் 300 மீற்றர் உயர தொலைக்­காட்சிக் கோபுரம் ஒன்றில் சிறு விமானம் ஒன்று மோதி­யதில் அதில் பயணம் செய்த அனை­வரும் கொல்­லப்­பட்­டனர். கோபுரம் இடிந்து வீழ்ந்­தது. 


1994 : மியான்­மாரில் இரா­ணுவ ஆட்­சியை எதிர்க்க மக்­க­ளாட்­சிக்­கான தேசிய அமைப்பை ஆங் சான் சூ கீ உரு­வாக்­கினார். 


1993 : கருங்கடல் பகுதியிலுள்ள அப்­கா­சி­யாவில் சுகு­மியில் ஜோர்­ஜியப் பொது­மக்கள் ஆயி­ரக்­க­ணக்கில் தீவி­ர­வா­தி­களால் கொல்­லப்­பட்­டனர். 


1996 : ஆப்­கா­னிஸ்­தானில் முக­மது ஓமார் தலை­மை­யி­லான தலிபான் தீவி­ர­வா­திகள் காபூல் நகரைக் கைப்­பற்றி ஜனா­தி­பதி புர்­ஹா­னுதீன் ரபா­னியை ஆட்­சி­யி­லி­ருந்து விரட்­டினர். முன்னாள் ஜனா­தி­பதி முக­மது நஜி­புல்லா காபூல் நகர மின்­சாரக் கம்­பத்தில் மக்கள் முன்­னி­லையில் தூக்­கி­லி­டப்­பட்டுக் கொல்­லப்­பட்டார்.  


2002 : கிழக்குத் திமோர் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது. 


2008 : விண்வெளியில் நடந்த முதல் சீனப் பிரஜை எனும் பெருமையை ஸாய் ஸிகாங் பெற்றார்.


2006 : கூகுள் நிறு­வனம் செப்­டெம்பர் 27 ஆம் திக­தியை தனது பிறந்த தின­மாக கொண்­டாட ஆரம்­பித்­தது.

http://metronews.lk

  • தொடங்கியவர்

விலங்குகள் சரணலாயம், விவேகம், பிக் பாஸ் ஓவியா, டெங்கு விழிப்பு உணர்வு ஆசிரியையின் வித்தியாச கொலு

 
 

கொலு

நவராத்திரி என்றதுமே கொலு பொம்மைகள்தான் எல்லோரின் நினைவுக்கு வரும். கொலு வைத்திருக்கும் வீடுகளில் பெரும்பாலும் வழக்கமான கொலு பொம்மைகளே வீற்றிருக்கும்.  சில வீட்டினர் ஏதேனும் வித்தியாசம் காட்ட முயல்வார்கள். அவர்களுக்கும் புதிய பொம்மைகளை வாங்கிதான் வைப்பார்கள். ஆனால் ஆசிரியை பவித்ரா நந்தகுமார் ஒவ்வோர் ஆண்டும் ஏதேனும் தீம் எடுத்துக்கொண்டு அதை வெளிப்படுத்தும் விதத்தில் கொலு வைத்து வியக்க வைக்கிறார். அது இந்த ஆண்டும் தொடர்கிறது. ஆரணி, மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் பவித்ரா நந்தகுமார் தனது வீட்டு கொலு அனுபவங்களைப் பகிர்கிறார். 

 

"எங்கள் ஊரில் கொலு வைக்கிற வீடு எங்கே எனக் கேட்டால், கரெக்டாக எங்கள் வீட்டை அடையாளம் காட்டிடுவாங்க. அந்தளவுக்கு எங்க வீட்டு கொலுவை நினைவில் வைத்திருக்கிறார்கள். இப்படிக் கொலு வைக்கும் பழக்கம் பல தலைமுறைகளாக, கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாகத் தொடர்கிறது இந்தக் கொலுக் கொண்டாட்டம்.  ஒவ்வொரு வருஷமும் ஏதேனும் ஒரு விஷயத்தை மையப்படுத்திக் கொலு வைப்பேன். போன வருஷம், அதிகரித்து வரும் முதியோர் இல்லங்கள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதத்திலும் அதற்கு முந்தைய வருஷம் புத்தகங்கள் படிப்பது எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்தியும் கொலு வைத்திருந்தேன். அவற்றைப் பார்த்தவர்கள் ஆச்சர்யப்பட்டுப் பாராட்டினார்கள்.  

கொலு

இந்த ஆண்டு என்ன செய்யலாம் என யோசித்து, 'மரம் நடுவோம்; மழை பெறுவோம்' என்பதை வலியுறுத்தலாம் எனத் திட்டமிட்டோம். அதற்காகப் பொம்மைகளைச் சேகரித்து, அவற்றைத் தயார் செய்வதற்குக் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆயிற்று. இடையில் டெங்கு காய்ச்சலால் பலரும் பாதிப்படைந்து வரும் செய்திகளைப் பார்த்ததும் அது குறித்த விழிப்பு உணர்வையும் சேர்த்து வைத்தோம். கொலு வரிசையை அடுக்க மதியம் ஆரம்பித்த வேலை, அடுத்த நாள் அதிகாலை மூன்று மணிக்குத்தான் முடிந்தது. ஆனாலும் பார்க்க வருபவர்கள் பாராட்டும்போது அதெல்லாம் மறந்துவிட்டது.

கொலு பார்க்கும்போது ரொம்ப சந்தோஷப் படுவது குழந்தைகள்தான். அதனால் அவர்களை ஈர்ப்பதற்காக ஃபன்னாகச் சில விஷயங்களைச் சேர்ப்போம். அந்த நேரத்தில் வரும் திரைப்படத்தின் போட்டோகளை ஒட்டி, திரைப்படம் பார்ப்பதுபோலச் செய்வோம். இந்த ஆண்டு விவேகம் படத்தின் காட்சிகளை வைத்திருந்தோம். பசங்களும் அதைப் பார்க்க ஆர்வத்துடன் வருகிறார்கள். பெரியவர்களை ஈர்ப்பதற்காக பிக்பாஸ் நட்சத்திரங்கள் அணிவகுத்திருப்பதைப் போல தயார் செய்தோம். இவற்றைப் பார்க்க வருபவர்கள் நாங்கள் அமைத்துள்ள டெங்கு பற்றிய விஷயங்களையும் தெரிந்துகொள்வார்கள். 

கொலு

அதேபோல முதுமலை விலங்குகள் சரணலாயம் மாதிரியை அமைத்திருக்கிறோம். அதைக் கொலு பார்க்க வரும் குழந்தைகள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அதில் உள்ள விலங்குகளைப் போலச் சத்தம் எழுப்புவார்கள். 

இப்படியெல்லாம் வித்தியாசமாக ஏன் செய்கிறீர்கள் எனச் சிலர் கேட்பார்கள். நமது பண்பாட்டில் உள்ள நல்ல விஷயங்களை அடுத்தத் தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதற்காக, அவர்களை ஈர்க்க சில விஷயங்களைச் சேர்த்து வைக்கிறோம். அதற்கான முயற்சியாகத்தான் இவற்றைச் செய்கிறோம். கொலு பார்க்க வருபவர்களும் இதைச் சரியாகப் புரிந்துகொள்கிறார்கள். அவர்களும் சில விஷயங்களை ஷேர் பண்ணிப்பாங்க. இது ஒரு வகையில் வாழைப்பழத்தில் மாத்திரை வைத்து தருவதைப் போலத்தான். 

கொலு

ஏதேனும் காரணங்களால், ஒரு சில வருடங்கள் குறைவான எண்ணிக்கையில் கொலு வைத்துவிட்டால், வருபவர்கள் அது குறித்துக் கேட்குபோதுதான் எவ்வளவு தூரம் எங்கள் வீட்டுக் கொலுவை ரசிக்கக் காத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அதுவே ஒவ்வோர் ஆண்டும். அதற்கு முந்தைய ஆண்டை விட அதிகளவில் கொலு வைப்பதற்கான உற்சாகத்தைத் தருகிறது." என்கிறார் பவித்ரா நந்தகுமார். 

மரபில் புதுமையைக் கலக்கும் ஆசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது. 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ஸ்பின் பண்ணி என்கூட விளையாடுங்க..! கூகுளின் பர்த்டே ஸ்பெஷல்..!

 

இன்று பிறந்தநாள் காணும் கூகுள், நம்மை உற்சாகப்படுத்தும் வகையில், கூகுள் டூடுளில் விதவிதமான விளையாட்டுகளை உருவாக்கியுள்ளது

இன்று கூகுளுக்கு 19-வது பிறந்தநாள். கூகுள் டூடுளில் முக்கியமான தலைவர்களின் பிறந்தநாளுக்காக வித்தியாசமாக வடிவமைக்கப்படுவது வழக்கம். அதேபோன்றுதான் இன்றும் தன்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தன்னைப் புதுமாதிரியாக வடிவமைத்துள்ளது கூகுள்.

 

பிறந்தநாள்

கூகுள் 19-வது பிறந்தநாளைக் கொண்டாட, கூகுளை கிளிக் செய்தால், நாமும் அதோடு சேர்ந்து விளையாட்டு, பாட்டு போன்று விதவிதமாக விளையாடி மகிழலாம். இவை அனைத்தும் ஸ்பின்மூலம் தேர்வுசெய்யப்படுகிறது. இந்த விளையாட்டு சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரையுமே நிச்சயம் கவரும். இப்படி கிரியேட்டிவ் ஐடியாக்களை உருவாக்குவதில் கூகிளை  மிஞ்சுவதற்கு முடியாது. இதனால்தான் மக்கள் கூகுளை அதிகம் விரும்புகிறார்கள். சர்ப்ரைஸ் ஸ்பின்னை கிளிக் பண்ணுங்க.. விளையாடுங்க..

ஹேப்பி பர்த்டே கூகுள்..!

 

  • தொடங்கியவர்

பயமறியான், பதற்றமடையான்... எவர்கிரீன் என்டெர்டெய்னர் மெக்கல்லம்! #HBDMcCullum

 

``பேர கேட்டாலே... சும்மா அதிருதுல!" - ரஜினியின் இந்த பன்ச், யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நியூஸிலாந்தின் முன்னாள் கேப்டனுக்கு நச்செனப் பொருந்தும். ஏன்? பிப்ரவரி 28, 2010, இடம் கிறிஸ்ட்சர்ச். ஷான் டெய்ட் 155 கி.மீ வேகத்தில் ஸ்டம்ப்பைப் பதம் பார்த்து வீசியதை, படுத்துக்கொண்டு விக்கெட்டின் பின்புறம் பறக்கவிட்டார். அது ராக்கெட் மாதிரி 90 டிகிரியில் பயணித்து சிக்ஸராக மாறியது. எவ்வளவு வேகத்தில் பந்து தன்னிடம் வந்ததோ, அதே வேகத்தில் பெளண்டரியைவிட்டு வெளியே அனுப்பினார். ஒருமுறை அல்ல, இருமுறை. இதெல்லாம் அவர் ஏற்கெனவே செய்ததுதான். ஆனால், இவ்வளவு வேகமாகப் போட்ட பந்தை அதற்கு முன்னரும் பின்னரும் வேறு எவரும் அடிக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களின் பந்தை, சிறுத்தைப்போல இரண்டு எட்டு எடுத்துவைத்து சுழற்றி `எக்ஸ்ட்ரா கவர்' திசையில் இவர் அடித்த அடி ஒவ்வொன்றும் சரவெடி. 

Brendon McCullum

 

கிரிக்கெட்டை தீவிரமாக நேசிக்கும் அனைத்து நாட்டு ரசிகர்களுக்கும், தங்களது அணியைவிடுத்து வேறோர் அணி வெற்றிபெற்றால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய அணியாக இருப்பது நியூஸிலாந்து மட்டுமே. அது, ஏன்?

மற்ற அணிகளைப்போல வருடம் முழுவதும் விளையாடிக்கொண்டிருக்க, அந்த நாட்டின் சீதோஷ்ணநிலை ஒத்துழைப்பதில்லை. டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மட்டுமே சம்மர். அதுவும் பேருக்குத்தான் வெயில் காலம். ஏறிப்போனால், 20 டிகிரி வெப்பம் இருக்கும். ரக்பி, பேஸ்பால், ஹாக்கி விளையாட்டுகள் விளையாடப்படும் மைதானத்தில்தான் கிரிக்கெட்டும் ஆடுவார்கள். அதனால்தான் மற்ற தேசங்களில் இருக்கும் கிரிக்கெட் மைதானங்கள்போல் அல்லாமல், முக்கோணம், செவ்வகம் என கிரவுண்ட் டிசைனாகவும், சிறிய பௌண்டரிகள் எனப் பார்க்கவே வித்தியாசமாகவும் இருக்கும். ஆனாலும், அங்குள்ள ஒவ்வொரு மைதானமும் கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் அழகாகவும் தோற்றமளிக்கும். பெரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதபோதும், உலகத் தரமான வீரர்களை விதைத்தபடியே, கிரிக்கெட்டைக் கொண்டாடிவரும் தேசம், நியூஸிலாந்து. 

McCullum

ஜான் ரைட், ஜெஃப் க்ரோ, மார்ட்டின் க்ரோ, லீ ஜெர்மான், ஸ்டீபன் பிளெமிங், டேனியல் வெட்டோரி வரிசையில், நியூஸிலாந்தின் எழுதப்படாத அகராதியின்படி, கண்ணியம், மரியாதை, ஒழுக்கம், நேர்மை என 'கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன்களின் ஆட்டம்' என்றால் அதில் நாங்கள்தான் தலைசிறந்த அணி’ என காலம்காலமாக நிரூபித்து வரும் வீரர்களை வழிநடத்திய மாபெரும் வீரன், மெக்கல்லம்.

50 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகைகொண்ட நாட்டிலிருந்து (அதாவது, உலக மக்கள்தொகையில் வெறும் 0.06 சதவிகிதம் மட்டுமே) உலகத்தரமான கிரிக்கெட் வீரர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். எப்படி இது சாத்தியம் எனில், நீண்ட தூரம் பயணிக்கத் தேவையில்லை. இந்தியாவின் முதல் அயல்நாட்டுப் பயிற்சியாளராக ஜான் ரைட் செயல்பட்டத் தருணம், இந்திய அணியின் பொற்காலம். சச்சின், டிராவிட், கும்ப்ளே, லட்சுமணன், கங்குலி, ஸ்ரீநாத் எனத் தனித்தனி கில்லிகளாக வலம்வந்தாலும், அவர்களின் ஆற்றலை ஒன்றிணைத்து இளைஞர்களான ஜாகீர் கான், முகமது கைஃப், யுவராஜ், நெஹ்ரா என வியூகம் அமைத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணங்களில் சவால்விடும் அணியாக இந்தியாவை உயர்த்தி, 2003-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இறுதிவரை வழிநடத்திச் சென்ற வித்தைக்காரர்.

Brendon McCullum

அவர்களது  வழியில் கற்ற பாடங்களைக்கொண்டு, மிகவும் அமைதியாக அதே சமயத்தில் காரியத்தில் மிகவும் அழுத்தமாகச் செயல்படக்கூடிய உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான ஸ்டீபன் ஃபிளெமிங், ஐ.பி.எல் போட்டிகளில் பத்து வருடங்களாக தோனியுடன் பயணித்துவருகிறார். ஃபிளெமிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விக்கெட் கீப்பராக களம்கண்ட மெக்கல்லம், படிப்படியாகத் தன்னை மெருகேற்றிக்கொண்டே வந்தார். 

வேகப்பந்து, ஸ்விங் ஆகியவற்றுக்கு மட்டுமே துணைபோகும் வகையில் இருக்கும் ஆடுகளத்தில் பயிற்சிப் பெற்றாலும், மற்ற அணிகளைவிட மிகச் சொற்பமான ஆட்டங்களை ஆடினாலும், சுற்றுப் பயணங்களில் நியூஸிலாந்து சோடைபோவதில்லை. வெயில் கொளுத்தக்கூடிய இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மைதானங்களில் பன்முகத்தன்மைகொண்ட அணியைக்கொண்டு வெற்றிகளைக் குவித்தேவருகிறார்கள். 

டெஸ்ட் போட்டிகளில் ஏழாவது வீரராகக் களம் காண்பது மிகவும் கடினமான விஷயம். 80 ஓவர்கள் கழித்து புதிய பந்துகளைக்கொண்டு வீசும் வேளையில், ஏழாவது வீரராக வருவது என்பது கிட்டத்தட்ட முதல்நிலை வீரராக ஆடுவதைப்போலத்தான். தடுப்பாட்ட முறைகளில் பெரிதும் நம்பிக்கையில்லாமல் அதிரடியாக கிரீஸிலிருந்து வெளியே வந்து பந்து ஸ்விங் ஆகும் முன்னரே நொறுக்க ஆரம்பித்தார். பௌன்ஸர் பந்துகளை அவர் சுழற்றி அடிக்க முற்பட்டபோதெல்லாம் பாதி நேரங்களில் கேமராவுக்கே தலை சுற்றிவிடும். 

ஒரு நாள் போட்டிகள் மற்றும் இருபது ஓவர் ஆட்டங்களில் தொடக்க ஆட்டக்காரராக தன்னை மெருகேற்றிக்கொள்ள இந்த `பயமறியா டிசைன்’ பெரிதும் உதவியதாகத் தெரிவித்தார். 

Brendon McCullum

டெஸ்ட் ஆட்டங்களில் இந்தியாவுக்கு எதிராக நான்கு சதங்களைக் குவித்திருக்கிறார். அதில் இரண்டு இரட்டைச்சதம் ஒரு முச்சதம் என்று, எல்லாமே சரித்திரப் புகழ்பெற்றவை. பொதுவாக அடுத்தடுத்த ஆட்டங்களில் பெரிய இன்னிங்ஸ் ஆடுவது என்பது டெஸ்ட் ஆட்டங்களில் கைகூடாத கலை. 2014-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஆக்லாந்தில் 224 ரன்கள் அடித்த கையோடு, அடுத்த போட்டியில் 246 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடரை இழந்துவிடக் கூடாது என்ற முனைப்போடு, தன்னுடைய இயல்பான ஆட்டத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, 775 நிமிடம் ஆடி (360 நிமிடம் ஒரு நாள் டெஸ்ட் போட்டியின் நேரம்) 559 பந்துகளை எதிர்கொண்டு 302 ரன்களைக் குவித்து அணியைத் தோல்வியிலிருந்து மீட்டெடுத்தார். 

``சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிவிட்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகிறேன்`' என்று அறிவித்துவிட்டு, உலகக்கோப்பை தோல்விக்குத் திருப்பி அடித்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் காத்துக்கொண்டிருந்தார். கடைசிப் போட்டியில் அணியின் முன்கள வீரர்கள் சீக்கிரம் நடையைக்கட்ட, வெள்ளை உடை அணிந்து `டெஸ்ட்தான் ஆடுகிறோம்' என்பதை மறந்து, தன்னுடைய இருபது ஓவர் போட்டிகளின் வெறித்தனத்தை உடுத்திக்கொண்டு, 79 பந்துகளில் 145 ரன்கள் விளாசினார். ஆறு சிக்ஸர், 21 பெளண்டரிகள் என ஒரு பௌலரைகூட விட்டுவைக்காமல் அடித்து துவம்சம் செய்தார். 

Brendon McCullum

விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் மிஸ்பா உல் ஹக்கின் வாழ்நாள் சாதனையை தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில், அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன் அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்துக்கொண்டிருந்தபோது, 54 பந்துகளில் சதம் அடித்து, குணத்தில் சாதுவாக இருந்தாலும் அடித்து நொறுக்குவதில் சிங்கம் என கர்ஜித்துவிட்டே, சர்வதேசப் போட்டிகளிலிருந்து விடைபெற்றார்

2015-ம் ஆண்டின் உலகக்கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட நியூஸிலாந்து அணியை, தன் அதிரடியின் மூலம் ஃபைனல் வரை அழைத்துச்சென்றார். லீக் ஆட்டங்களில் மெக்கல்லம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக ஆடிய ருத்ரதாண்டவம் எல்லாம் காலத்துக்கும் நிலைத்திருக்கும். அரை இறுதியில் பலம்வாய்ந்த தென்னாப்பிரிக்காவை வென்று, இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் முன்னர், ``உங்களைவிட வேறு யாருக்கும் ஓர் உலகக்கோப்பையை வெல்வது எவ்வளவு சந்தோஷம் கொடுக்கும் எனத் தெரியாது. முதல்முறையாக இறுதிக்குள் செல்லும் எங்கள் அணிக்கு உங்களின் ஆதரவைத் தாருங்கள்'' என்று இந்திய ரசிகர்களின் ஆதரவைக் கோரினார். தன்னுடைய ஹீரோவான மார்ட்டின் க்ரோ, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த முன்னாள் வீரனுக்காக, மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவர் முதல் பந்தையே ஏறி வந்து அடிக்க முற்பட்டான். தீயோடு விளையாடி கடைசித் தருணத்தில் அணிக்கு ஏதும் செய்ய முடியாமல் பெவிலியன் திரும்பியபோது உலகமே சோகமுற்றது. 

லீக் ஆட்டத்தில், ஒரு விக்கட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றதால் கோப்பையைக் கைப்பற்றுவதில் அதீத முனைப்போடு இருந்தனர் நியூஸிலாந்து அணியினர். மேலும், அதுவரையில் இந்தியா  மட்டுமே சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்ற ஒரே அணி என்பதாலும், ரசிகர்களும் நிபுணர்களும் `நியூஸிலாந்து எப்படியும் வென்றுவிடும்' என்றே கணித்திருந்தனர். இறுதி ஆட்டத்துக்கு முன்பாக 44 பெளண்டரிகள், 17 சிக்ஸர்கள் எனத் தெறிக்கவிட்ட ஆட்டத்தை மாற்றுவதற்கு மெக்கல்லமுக்கு  ஐடியா இல்லை. 

Brendon McCullum

அதே சமயத்தில், எதிராளியின் பலம் வாய்ந்த வீரனை ஆரம்பத்திலேயே மழுங்கடித்துவிட்டால், வெற்றி வசமாவது உறுதி எனத் தைரியமாக ஸ்டார்க்கை ஒரு கைபார்க்க நினைத்ததில் சற்றே பிசகிவிட்டார். மெக்கல்லம் அவுட் ஆனதும், நியூஸிலாந்து நிலைகுலையத் தொடங்கியது. ஒட்டுமொத்த அணிக்குமே முதல் உலகக்கோப்பை இறுதி ஆட்டம். அதுவும் ஒரு லட்சம் ரசிகர்களின் முன்பு, பதற்றமான ஒரு நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, சுவாரஸ்யமில்லாமல் 1999-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தைப்போல, அசால்ட்டாக வியர்வை சிந்தாமல் ஆஸ்திரேலியா ஐந்தாவது முறையாக கோப்பையைக் கைபற்றியது. மெக்கல்லம் கொஞ்சம் பொறுமையாக விளையாடியிருக்கலாம் என்றெல்லாம் விமர்சனங்கள் எழத்தான் செய்தன. ஆனால், அவருக்குத் தெரிந்த அதே அதிரடியைக்கொண்டுதான் அணியை இறுதிவரை அழைத்துவந்தார் என்பதை, விமர்சனம் செய்பவர்கள் ஏனோ மறந்துபோனார்கள்.   

உலகத்தின் அனைத்து வீரர்களும் ஊர்கூடி தேர் இழுக்கத் தயாரான முதல் ஐ.பி.எல்-லின் முதல் போட்டியிலேயே சதம் அடித்தார். அஜித், விஜய் படங்களுக்கு நிகரான ஓப்பனிங்கை ஐ.பி.எல் பெற, அந்த இன்னிங்ஸ் மிகவும் உதவியது . அங்கு சூடுபிடித்த அவரின் ஆட்டம், கொச்சி, கொல்கத்தா என மாறி மாறிச் சென்றாலும், 2014-ம் வருடம் முதல் சென்னைக்காக மேற்கிந்திய தீவுகளின் ஆட்டக்காரர் ஸ்மித்தோடு அவர் போட்ட ஆட்டம் அதகளத்தின் உச்சம். 

Brendon McCullum

முதுகு, கை வலிகளால் விக்கெட் கீப்பிங்கைத் துறந்தாலும், ஃபீல்டிங் செய்வதில் அவருக்கு நிகர் அவரே. ஜடேஜா, ரெய்னா, டு பிளேஸிஸுடன் சேர்ந்து மெக்கல்லம் அமைத்த கோட்டைச்சுவரைத் தாண்டி அடிப்பதெல்லாம் ஆகாத காரியமாகிப்போனது. 

 

சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றாலும், இன்றும் இருபது ஓவர் லீக் ஆட்டங்களில் உலகை வலம் வந்துகொண்டிருக்கும், சூப்பர் மேன் மெக்கல்லமுக்கு 36-வது பிறந்த நாள் வாழ்த்துகள்.

http://www.vikatan.com

 

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எந்நேரமும் வெளிச்சமாக இருந்தால் எப்படி இருக்கும்?

 

உலகின் பல நாடுகளில் 24 மணி நேரமும் சூரியன் மறையாமல் காட்சியளிக்கும் அதிசயங்கள் நிகழத்தான் செய்கின்றன.

குறிப்பிட்ட நேரம் வெளிச்சம் குறிப்பிட்ட நேரம் இருள் என்று பழகிய நமக்கு தொடர்ந்து வெளிச்சமாக இருந்தால் எப்படி இருக்கும். ஆனால் இதே நிலைமை சில நாடுகளில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

நோர்வே, அலாஸ்கா, ஸ்வீடன், ஐஸ்லாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

எந்நேரமும் வெளிச்சமாக இருந்தால் எப்படி இருக்கும்?

நோர்வே நாட்டில் இரவு நேரத்திலும் சூரியன் காட்சி தருகிறது. இரவில் சூரியனை காண பலர் இங்கே வருகை தருகின்றனர்.அத்துடன் கடந்த 1௦௦ ஆண்டுகளுக்கு முன் இந்த நாடு சூரிய ஒளியே படாமல் இருளில் மூழ்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எந்நேரமும் வெளிச்சமாக இருந்தால் எப்படி இருக்கும்?

பனிக்கட்டிகள் நிறைந்த அலாஸ்கா நாட்டில் மே தொடக்கம் ஜூன் வரை கிட்டத்தட்ட 1440 மணித்தியாலங்கள் வரை சூரியன் மறையாமல் பகலாகத் தான் இருக்குமாம்.

எந்நேரமும் வெளிச்சமாக இருந்தால் எப்படி இருக்கும்?

ஸ்வீடனில் இரவில் சூரியன் மறைந்து அதிகாலை 4.30 மணிக்கே சூரியன் உதித்து விடுகின்றது. இங்கே கொஞ்சம் குளிர் குறைவாக காணப்படுகிறது.. மே முதல் ஆகஸ்ட் வரையில் இப்படித் தான் இருக்குமாம்.

எந்நேரமும் வெளிச்சமாக இருந்தால் எப்படி இருக்கும்?

மற்றும் கனடாவில் கோடை காலங்களில் 5௦ நாட்கள் தொடர்ச்சியாக சூரியன் மறையாமல் பகலாகவே இருக்கிறதாம். அதிக நாட்கள் ஐஸ்கட்டி உறைந்திருக்கும் நாடுகளின் பட்டியலில் கனடா இரண்டாவது இடம் வகிக்கிறது.

ஐஸ்லாந்து ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய தீவாகும். மே முதல் திகதியிலிருந்து ஜூலை கடைசி திகதி வரையில் இங்கே சூரியன் தெரிந்து கொண்டேயிருக்கும். கோடைகாலங்களில் நடு இரவில் தான் சூரியன் மறையும் மீண்டும் அதிகாலை மூன்று மணிக்கு சூரியன் உதிக்கும் என கூறப்படுகிறது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

நம்பிக்கைமீது கட்டுப்பாடு அவசியம்... வெற்றிக்கான 5 மந்திரங்கள்! #MorningMotivation

 

வெற்றியைப் பற்றிக்கொள்ளும் ஆசை இல்லாத ஆன்மாக்களே இருக்க முடியாது. அந்த ஆசைதான் ஒவ்வொருவரையும் உருவாக்குகிறது. வெற்றி பெற துடிக்கும் ஒவ்வொருவரும் தன் ஆதர்ச வெற்றியாளர்களைக் கண்டால் அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி, `உங்களால் எப்படி இது முடிந்தது?' என்பதாகத்தான் இருக்கும். ஆனால், அவர்கள் எதனால் வெற்றி பெற்றார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. இப்படி பலருடைய கேள்விகளை எதிர்கொண்ட பிறகு தங்களுடைய வாழ்க்கையை மீண்டும் அசைபோட்டு பார்த்து, காரணங்களைக் கண்டுபிடித்து அடுக்குவார்கள். அப்படி இதுவரை வெற்றி பெற்றவர்கள் சொன்ன பொதுவான விஷயங்கள், வெற்றி பெற நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். அவற்றைப் பார்க்கலாம். 

வெற்றி

 

1. தெளிவான இலக்குகள்!

நாம் என்ன செய்ய விரும்புகிறோம், நம் மனம் எதைச் செய்ய துடிக்கிறது, எதுவாக நாம் ஆக நினைக்கிறோம் என்பதில் நாம் தெளிவாக இருந்தால் போதும், வெற்றியை நோக்கிய நமது பயணம் மிகச்சிறப்பாக அமைந்துவிடும். எனவே, இலக்குகளைத் தெளிவாக நிர்ணயிக்க வேண்டும். 
அடுத்தவரின் வளர்ச்சியில் பொறாமைகொண்டோ அல்லது சவால்விட்டதற்காகவோ எந்த ஒரு விஷயத்திலும் இறங்கி வெற்றியை ஈட்டிவிட முடியாது. எனவே, என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம், எதை அடைய விரும்புகிறோம் என்பதில் நிலையான ஈடுபாடு இருக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய பயணத்தில் வரும் தடைகளை அடையாளம் காணவும் அந்தத் தடைகளை உடைக்கவும் முடியும்.

2. திட்டமிடுதலும் முன்னுரிமையும்!

இலக்குகளை முடிவுசெய்த பிறகு, அதை அடையும் வழியைத் திட்டமிட வேண்டும். எப்படி நம்முடைய இலக்கை அடையப்போகிறோம், அதற்கு நம்மையும் நம் சூழலையும் நம்முடைய குழுவையும் எப்படித் தயார் செய்யப்போகிறோம் என்பதைத் திட்டமிட வேண்டும். நாம் சொல்லும் வேலையைச் செய்பவர்களிடம் நம்முடைய எதிர்பார்ப்பு என்ன என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அதற்கு முன் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில் குழுவினரைத் தயார்செய்ய வேண்டும்.

வேலை, குடும்பம் மற்றும் உடல் ஆரோக்கியம் என அனைத்தையும் திட்டமிட்டு சமநிலையுடன் கையாள வேண்டும். எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும், எதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதையெல்லாம் திறமையுடன் முடிவுசெய்ய வேண்டும். தனக்குத்தானே சுதந்திரத்தையும் கட்டுப்பாடுகளையும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.  

3. பயணத்தை ஆய்வு செய்வது!

நம்முடைய இலக்கை நோக்கிய பயணமானது நாம் திட்டமிட்டபடி செல்கிறதா என்பதை அவ்வப்போது கவனிக்க வேண்டும். இது, என்ன செய்திருக்கிறோம், அது சரியாக நடந்திருக்கிறதா, இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும், கால அவகாசம் எவ்வளவு இருக்கிறது, இதுவரை நடந்ததில் ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா, பிரச்னைகளைச் சரிசெய்வது எப்படி எனப் பல விசயங்களையும் ஆராய்ந்து பார்க்க  உதவியாக இருக்கும். 

4. நம்பிக்கையின் மீதான கட்டுப்பாடு!

அதீத நம்பிக்கை, சில நேரங்களில் நம் கால்களை வாரிவிடும். எனவே, நம்முடைய நம்பிக்கைகளின் மீது அவ்வப்போது சந்தேகமும் எழ வேண்டும். அது நம்மிடமிருந்து தலைகணத்தை நீக்கவல்லது. மேலும் நம்முடைய திறமையின் மீதும், நம்மைச் சுற்றியிருப்பவர்கள் மீதும் அதீத நம்பிக்கை வைக்காமல் இருந்தால்தான் தவறுகள் நேராமல் பார்த்துக்கொள்ள முடியும். அதீத நம்பிக்கையின் விளைவுகளான சறுக்கல்களையும் துரோகங்களையும் தவிர்க்க முடியும். என்னால் எல்லாம் முடியும் என்ற எண்ணத்தைக்கொண்டிருப்பது தவறல்ல. ஆனால், அவ்வப்போது அதற்கு நாம் நியாயம் செய்யும் வகையில் இருக்கிறோமா என்பதையும் பார்க்க வேண்டும்.

5. எந்த நிலையிலும் இழக்காத உறுதியும் துணிவும்

 

இலக்குகளை அடைந்தாலும் சரி, அடையாவிட்டாலும் சரி, நாம் நம்முடைய அடிப்படை நிலையில் சமநிலையாக இருக்க வேண்டும். அதற்கு உறுதியும் துணிவும் அவசியம். தோல்வி என்பது எந்த வகையிலும் வருத்தப்படுவதற்கான விஷயம் அல்ல. மாறாக, மேலும் சிறப்பாகச் செயல்படுவதற்கான உந்துசக்தியாகவே அதைப் பார்க்க வேண்டும். நாமாக நம்மை வருத்திக்கொள்ளும் வரையிலும் யாராலும் எதுவாலும் நம்மை வருத்திக்கொள்ள முடியாது.

விவேகம் படத்தில் அஜித் சொல்லும் டயலாக்கை இங்கே நினைவுகூரலாம். `இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்... எல்லா சூழ்நிலையும் `நீ தோத்துட்டே தோத்துட்டே...'ன்னு உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்கிறவரைக்கும் எங்கேயும் எப்பவும் யாராலையும் உன்னை ஜெயிக்க முடியாது. So Never Ever Give Up'.

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.