Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

அது ஒரு கனகாம்பரக் காலம்!

 
29CHVCM-EDIT2-KANAGAMBARAM

சமீபத்தில் நண்பர் ரோஹினுடன் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ திரைப்படம் பார்த்தபோது, திரையில் அரையிருட்டில் யாரார் எங்கிருக்கிறார்கள் என்று ரோஹின் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கு ‘அரையிருட்டிலும் இளம் பெண்கள் மட்டும் பளிச்சென்று தெரியும்’ அபூர்வத் திறன் பிறவியிலிருந்தே இருப்பதால், ஒரு காட்சியில் அனுவின் தலையில், பல ஆண்டுகள் கழித்துக் கனகாம்பரத்தைப் பார்த்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு, “ரோஹின்…. கனகாம்பரம்” என்று கிட்டத்தட்ட கத்திவிட்டேன். ரோஹின் திரும்பி, “டேய்…. ஆளையே நான் தேடிகிட்டிருக்கேன். நீ எங்கருந்துடா பூவப் பாத்த?” என்பதுபோல் என்னை முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்ள, மனம் படத்திலிருந்து விலகி, கனகாம்பரத்துக்குத் தாவிவிட்டது.

ஊரில் அக்கம்பக்கத்து வீட்டு இளம் பெண்களின் மடியில் உதிரிக் கனகாம்பரத்தைப் பார்த்த நினைவுதான் முதலில் வந்தது. அவர்கள் தங்கள் கால்களை மடக்கி அமர்ந்து, குழிபோல் தாழ்ந்திருக்கும் தங்கள் பாவாடையில் உதிரிக் கனகாம்பரப் பூக்களைப் போட்டுக்கொண்டு, “புன்னகை மன்னன் படம் பாத்துட்டியா சுரேந்த்ரு?” என்று கேட்டபடியே கனகாம்பரத்தை நாரில் வைத்து, இன்று வரையிலும் எனக்குப் புரிபடாத ஏதோ மாயாஜாலத்தை விரல்களால் செய்து, பூவை முடிச்சிட்டுவிட்டு, அடுத்த பூவை எடுக்கும்போது அடுத்த கேள்விக்குச் சென்றிருப்பார்கள். கனகாம்பரம் பெண்களின் மடியிலிருந்து, கைக்குச் சென்று, பின்னர் தலைக்குச் செல்லும்போது ஊருக்கு நூறு புதுக் கவிஞர்கள் முளைப்பார்கள்.

கனகாம்பரம் ஏகப்பட்ட விதங்களில் பெண்களின் தலையில் வைக்கப்படுவதை என்னைப் போன்ற கனகாம்பர ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளோம். சிலர் ஒற்றைக் கொண்டை ஊசியைச் செருகி ‘V’-ஐ தலைகீழாக போட்டதுபோல் தொங்கவிட்டிருப்பார்கள். சிலர் இரண்டு கொண்டை ஊசிகளைப் பயன்படுத்தி ‘ப’வை தலைகீழாக போட்டதுபோல் தொங்க விட்டிருப்பார்கள். ஆச்சா? சில பெண்கள் கனகாம்பரம், மல்லிகை ஆகிய இரண்டு பூக்களையும் சேர்ந்தாற்போல் தலையில் வைத்திருப்பார்கள்… இது கமலும், ரஜினியும் சேர்ந்து நடிப்பதற்கு இணையானது என்பதால் இளைஞர்கள் இதை மிகவும் விரும்புவார்கள். இதிலும் இரண்டு வகை உள்ளது. ஒன்று… ஒரே நாரில் கனகாம்பரமும் மல்லிகைப்பூவும் கலந்து தொடுக்கப்பட்ட பூச்சரம். இது அப்போது ‘திரும்பிப்பார்’ என்ற பெயரில் பிரபலமாக இருந்தது.

பிறிதொரு முறையில் சில பெண்கள் மேலே மல்லிகைப்பூச் சரத்தைத் தொங்க விட்டு, கீழே கனகாம்பரத்தை தொங்கவிட்டிருப்பார்கள். வேறு சிலர் கனகாம்பரத்தை மேலே ஏற்றி, மல்லிகையை கீழே இறக்கியிருப்பார்கள். இதையெல்லாம் விட அட்டகாசமாக ஒன்று உள்ளது. மல்லிகைப் பூவை மேலே ‘ப’வைக் கவிழ்த்தாற்போல் போட்டு, அதன் நடுவே ஒரு சிறு கனகாம்பரத் துண்டை ‘V’-ஐக் கவிழ்த்தாற்போல் போட்டிருப்பார்கள் பாருங்கள்… அட அட அடா… இதுபோல் மல்லிகையையும் கனகாம்பரத்தையும் இணைத்துப் பெண்கள் தங்கள் கூந்தலில் ஜுகல்பந்தி நிகழ்த்துவதைப் பார்த்து, நான் எழுதிய கவிதைகளில் மெலிதாகப் பூ வாசம் அடித்தது எனக்கு மட்டுமே தெரியும்.

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஸ்ரீலங்காவில் பீதியைக் கிளப்பிய இராட்சத காளான்; படையெடுக்கும் மக்கள்!

 

ஸ்ரீலங்காவில் நிகழ்ந்த திடீர் அதிசயம் ஒன்றினால் மக்கள் பலர் வியப்படைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

காலி மாவட்டம் யக்கலமுல்ல என்ற இடத்தில் மிகப்பெரிய காளான் ஒன்று வளர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஸ்ரீலங்காவில் பீதியைக் கிளப்பிய இராட்சத காளான்; படையெடுக்கும் மக்கள்!

யக்கலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த தொலமுல்ல சுனில் என்றவரின் வீட்டிற்கு அருகிலேயே இந்த அதிசயமிக்க காளான் வளர்ந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை முதலில் கண்ணுற்றவர் இதன் அசாதாரண தோற்றத்தினால் பீதியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காளான் ஒரு மனிதரின் உயரத்திற்கு வளர்ந்துள்ளதோடு எண்ணுக்கணக்கான இதழ்களையும் கொண்டு வளர்ந்துள்ளது.

இது சில வருடங்களுக்கு முன்னர் வெட்டப்பட்டு உளுத்துப்போன மரத்தின் அடிக்குற்றியிலிருந்து தோன்றியுள்ளதாகவும் இதன் வளர்ச்சிக்கு சுமார் இரண்டு மாதங்கள் கழிந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் குறித்த காளானைக் காண்பதற்காக படையெடுத்துவருகின்றனர்.

ஸ்ரீலங்காவில் பீதியைக் கிளப்பிய இராட்சத காளான்; படையெடுக்கும் மக்கள்!

காளான்கள் பொதுவாக உயர்ந்த நிலையிலும் நீண்ட காலத்தை எடுத்தும் வளர்வதில்லை. அவற்றின் வளர்ச்சி எவ்வளவு குறுகியதாக உள்ளதோ அதுபோலவே அவற்றின் ஆயுட்காலமும்.

காளான்கள் சேதன உயிர்ச்சேர்க்கையால் உருவாகும் ஒரு இயற்கை வளரியாகும். இவற்றில் உணவுக்கு உகந்த காளான் தவிர பெரும்பாலானவை நச்சுத்தன்மை நிறைந்தனவாகவே காணப்படுகின்றன.

யக்கலமுல்ல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத காளானும் ஒருவகை நச்சுக்காளானாக இருக்கலாம் என அந்த பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்காவில் பீதியைக் கிளப்பிய இராட்சத காளான்; படையெடுக்கும் மக்கள்!

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: 1 Person
 

உங்கள் கணினியில் இருக்கும் வன்தட்டு நிலை நினைவகத்தில், அதாவது Hard Discஇல் எத்தனை TeraByte பதிவு செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 500 gigabyte? 1 TB? 2 TB அல்லது 4 TB? தற்போது தனிப்பட்ட பாவனைக்கு என்று அமைக்கப்பட்ட கணினிகளில் பொதுவாக 1-4 TB தான் இருக்கும். சரி, உங்கள் கணினி பற்றி இப்படி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றீர்களே, ஆனால் உண்மை சொல்லப் போனால் உங்கள் மூளையும் ஒரு விதமான Hard Disc தானே? அதில், நமது சிறு வயதில் இருந்து இன்று வரை எவ்வளவோ விஷயங்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறோம். எனவே, மூளை எனும் இந்த hard discil எவ்வளவு பதிவு செய்ய முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரியவில்லை என்றால் கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்.

மனித மூளையில் எவ்வளவு தகவல்களைப் பதிவு செய்ய முடியும்? இதைப் பற்றி பல ஆராய்ச்சியாளர்கள் சிந்தித்து இருக்கின்றார்கள், ஆனால் ஒருவராலும் இதற்கு நிச்சயமாகப் பதில் கூற முடியவில்லை. எனவே நானும் கூட இன்று உங்களுக்கு இதைக் கற்பனைப் பண்ணி பார்ப்பதற்காக ஒரு விளக்கத்தைத் தருகிறேன்.
சரி, முதலில் கணினியில் தகவல்கள் எப்படிப்பதிவு செய்யப் படுகின்றது என்பதைப் பார்ப்போம். இது மிகவும் இலகுவான ஒரு விஷயம் தான். கணினிக்கு இரண்டே இரண்டு விஷயங்கள் மட்டும் தான் தெரியும். ஒன்று அல்லது பூச்சியம், அதாவது one or zero, yes or no, on or off. இதைத் தவிர்த்து வேறு ஒன்றுமே கணினிக்குத் தெரியாது. இப்படிப் பதிவு செய்யப் படும் ஒரு ஒன்று, அல்லது பூச்சியத்தை 1 இருமம் தகவல் (1 bit information) என்று அழைப்பார்கள். நாம் கணினியில் பதிவு செய்யும் ஒவ்வொரு விஷயமும் தொடர்ச்சியான பூச்சியம் மற்றும் ஒன்றால் பதிவு செய்யப் படுகின்றது.

சரி இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இனி நமது மூளையை சற்று உத்துப் பார்ப்போம். மனித மூளை சுமார் 100 பில்லியன் நியூரான்களைக் கொண்டிருக்கிறது. இந்த நியூரான்கள் ஒவ்வொன்றும் சுமார் 1,000 நரம்பிணைப்புகளுடன், அதாவது Synapses உடன் இணையமுடியும் என்று எடுத்துக்கொள்வோம். அது மட்டும் இல்லை, இந்த ஒவ்வொரு நரம்பிணைப்பிலும் 1 Bit information அதாவது ஒரு ஒன்று அல்லது ஒரு பூச்சியத்தைப் பதிவு செய்ய முடியும் என்றும் எடுத்துக்கொண்டால், நமது மூளையில் எவ்வளவு பதிவு செய்ய முடியும் தெரியுமா? 1 கோடி கோடி பிட்ஸ், அதாவது 100 TeraByte பதிவு பண்ண முடியும். ஆனால், இது ஒரு குறைந்தபட்சமான எண்ணிக்கை தான் என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இவர்களின் கணிப்புப் படி சுமார் 2.5 PetaByte அதாவது 2500 TeraByte வரை பதிவு செய்ய முடியும் என்று கூட சொல்கிறார்கள். ஆச்சரியமாக இல்லையா?

பிறப்பில் இருந்து பார்த்தது கேட்டது எல்லாமே நம் மூளைக்குள்ளே இன்னும் பதிந்து இருக்கிறது. ஆனால், மூளையில் எந்த இடத்தில் பதிவு செய்து இருக்கிறது என்பது தான் தெரிவதில்லை. இப்படித் தெரியாமல் போவதைத் தான் நாம் மறதி என்று அழைக்கின்றோம்.

சரி, 2500 TB என்றால் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? 2500 TBஇல் 30 லட்சம் மணி நேரம், அதாவது 342 வருடங்கள் தொடர்ந்து பார்க்கக்கூடிய சின்னத்திரை நாடகங்களைப் பதிவு செய்ய முடியும். இதே 2500 TBஇல் 4.2 கோடி மணி நேரம் அதாவது 4,800 வருடங்கள் தொடர்ந்து கேட்கக்கூடியதாகப் பாடல்களைப் பதிவு செய்ய முடியும். நம்பவே முடியவில்லை அல்லவா?

https://www.facebook.com/SciNirosh

  • தொடங்கியவர்

பிசினஸ் ஸ்டார்ஸ்!

மு.பிரதீப் கிருஷ்ணா

 

`இவங்க வாழ்க்கை முழுக்க விளையாடிட்டேதான் இருப்பாங்களா?’ - விளையாட்டு வீரர்களைப் பார்க்கும்போது எல்லோருக்குமே இப்படி ஒரு கேள்வி நிச்சயம் எழும். விளையாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள், அதைத் தாண்டி என்ன செய்கிறார்கள்? அவர்களது எதிர்கால வருமானம் என்ன? இன்றைய `நம்பர் 1’ ஸ்போர்ட்ஸ் ஸ்டார்களைப் பற்றிய பிசினஸ் அப்டேட்ஸ் இங்கே...

98p2.jpg

சானியா மிர்சா (டென்னிஸ்)

ஐதராபாத்தில் சொந்தமாக டென்னிஸ் அகாடமி நடத்திவரும் சானியா மிர்சா, இரண்டாவதாக இன்னொரு அகாடமியைத் தொடங்கியுள்ளார்.  `கிராஸ் ரூட்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த அகாடமியில்  மூன்று முதல் எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே பயிற்சி. `சின்ன வயதில் டென்னிஸ் பயிற்சிக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டேன். என்னைப் போல மற்ற குழந்தைகள் சிரமப்படக்கூடாது. அதற்காகத்தான் இந்த அகாடமி’ என்று சானியா சொன்னாலும் இங்கே பயிற்சி எடுக்கப் பல ஆயிரங்கள் கட்டணம்.   ஐதராபாத்தில் `ரிஸ்ரெட்டோ’ என்னும் காபி ஷாப்பையும் நடத்திவருகிறார் சானியா.


98p1.jpg

விராட் கோஹ்லி (கிரிக்கெட்)

சந்தேகமே இல்லை. விராட் கோஹ்லிதான் இந்தியாவின் டாப் ஸ்போர்ட்ஸ் ஸ்டார். செல்போன், கடிகாரம், பைக், பேட்டரி என இவர் மார்க்கெட் செய்யாததே இல்லை. பிராண்ட் அம்பாசிடராக மட்டுமன்றி, பல பிசினஸிலும் முதலீடு செய்துள்ளார் கோஹ்லி.  நாடு முழுவதும் தொடங்கியிருக்கும் சிஸெல்(Chisel) ஃபிட்னெஸ் சென்டரில் கோஹ்லிதான் முக்கிய முதலீட்டாளர். சாதாரண ஜிம் போன்று இல்லாமல், தொழில்நுட்ப உதவியோடு பயிற்சிபெறும் வகையில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது `சிஸெல்’.

இளைஞர்களின் ஃபேஷன் ஐகானாக இருக்கும் இவர், WROGN என்ற ஃபேஷன் பிராண்டிலும் முதலீடு செய்துள்ளார். ``கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்வது என்று யோசித்தேன். எனக்கு அதைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. அதனால்தான் இந்த முதலீடுகள்’’ என்கிறார் கோஹ்லி.  கிரிக்கெட் வீரராக  இருந்தாலும், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து அணியான FC கோவா அணியிலும் இணை உரிமையாளராக இருக்கிறார் கோஹ்லி.


98p3.jpg

மித்தாலி ராஜ் (கிரிக்கெட்)

  விழாக்கள், நிகழ்ச்சிகள், போட்டோஷூட்ஸ் என மித்தாலி இப்போது ரொம்பவே பிஸி. விரைவில் நிறைய விளம்பரங்களிலும் பார்க்கலாம். மித்தாலியை விளம்பரங்களில் நடிக்கவைக்க ஏகப்பட்ட நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.  ஒரு விளம்பரத்தில் நடிக்க 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார் மித்தாலி. விளம்பரம் மட்டுமன்றி, மித்தாலியின் பயோபிக் திரைப்படம் எடுக்கவும் பல தரப்பிலிருந்து அப்ளிகேஷன் வருகிறதாம். விரைவில் `மித்தாலி, மித்தாலியாய் ஆனது எப்படி?’ என ஒரு படம் இந்தியா முழுக்க ரிலீஸாகும் என எதிர்பார்க்கலாம்.


98p4.jpg

விஜேந்தர் சிங் (குத்துச்சண்டை)

பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங், இன்று புரொஃபஷனல் பாக்ஸர். முகமது அலி, மைக் டைசன் போல் இந்தியாவில் ஒருவர் இல்லை என்ற குறையைத் தீர்க்க, தொழில்முறை குத்துச்சண்டைக்குள் நுழைந்தார். ஒன்பது போட்டிகள் - ஒன்பதிலும் வெற்றி. அதில் ஏழு நாக்-அவுட்கள்.   `விஜு அண்ட் யு’ என்கிற பெயரில் ஃபேஷன் பிராண்டைத்  தொடங்கியிருக்கும் விஜேந்தருக்கு பாக்ஸிங் அகாடமி தொடங்க வேண்டும் என்பதுதான் வாழ்நாள் கனவு. டெல்லி அருகே குர்கவுனில் பாக்ஸிங் அகாடமி தொடங்கவிருக்கிறார்.  ஓய்வுக்குப் பிறகு பயிற்சியாளர், பிசினஸ்மேன் என இரண்டு தொழில்கள் கைவசம் இருக்கு.


98p5.jpg

பி.வி.சிந்து (பேட்மின்டன்)

கோலிக்கு அடுத்ததாக விளம்பர நிறுவனங்களின் `மோஸ்ட் வான்டட்’ ஸ்போர்ட்ஸ்பெர்சன் சிந்துதான். விளம்பரச் சந்தையில் தோனியை முந்தி நிற்கிறது சிந்துவின் மார்க்கெட். விளம்பரங்களில் பங்குபெற நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை இருந்த சிந்துவின் மதிப்பு, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பிறகு 1 - 1.25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது! மிந்த்ரா, மூவ், ஏபிஸ், பேங்க் ஆஃப் பரோடா போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ள சிந்து, மத்திய அரசின் ஜி.எஸ்.டி -க்கும் விளம்பரத் தூதர். கொரிய ஓப்பன் சாம்பியனான சிந்துவுக்கு, ஜப்பானிலும் தங்கம் வெல்வதுதான் அடுத்த டார்கெட்.

பேட்மின்டனில் தன் கனவுகளை நிறைவேற்றிவரும் சிந்து, சமீபத்தில் இன்னொரு நீண்டநாள் கனவையும் நிறைவேற்றியுள்ளார். பி.காம் படித்திருந்த சிந்துவுக்கு, MBA முடிக்க வேண்டும் என்பது  ஆசை. ஹைதராபாத் நகரில் உள்ள St. Ann’s மகளிர் கல்லூரியில் சேர்ந்து, கடந்த ஏப்ரலில் MBA எழுதி முடித்துள்ளார், இந்தத் தங்க மங்கை!


98p6.jpg

சாய்னா நேவால் (பேட்மின்டன்)

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று 7 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியிருக்கும் இவரைப் பற்றிய பயோபிக்கே, சாய்னாவின் மவுசு இன்னும் குறையவில்லை என்பதற்கு சாட்சி. ஷ்ரத்தா கபூர் நடித்துக்கொண்டிருக்கும் `சாய்னா’ திரைப்படத்துக்காக ஷ்ரத்தாவுக்கு சில தினங்களுக்கு முன்பு பேட்மின்டன் பயிற்சியும் கொடுத்துள்ளார் சாய்னா. பல நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தவர், `Paree’ எனப்பெயரிடப்பட்டிருக்கும் சானிடரி நாப்கின் தயாரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்.  இதுதவிர நொய்டாவில் சாய்னாவுக்குச் சொந்தமாக பேட்மின்டன் அகாடமியும் உள்ளது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நிர்வாண மோனாலிசா ஓவியம்? பிரான்சில் கிடைத்தது

 

கரியால் வரையப்பட்ட இந்த நிர்வாணப் பெண் ஓவியம், மோனலிசா ஓவியமாக இருக்கக்கூடும் என்கிறார்கள் பிரஞ்சு கலை வல்லுநர்கள்.

மோனாலிசாவும், நிர்வாண மோனாலிசா என்று சந்தேகிக்கப்படும் ஓவியமும்.படத்தின் காப்புரிமைAFP/ALAMY Image captionமோனாலிசாவும், நிர்வாண மோனாலிசா என்று சந்தேகிக்கப்படும் ஓவியமும்.

கடந்த 150 ஆண்டுகளாக ஒரு கலைத் தொகுப்பில் காணப்படும், 'மொன்னா வண்ணா' என அறியப்படும் இந்த ஓவியம் ஏற்கெனவே லியனார்டோ டா வின்சியின் ஸ்டுடியோவில் இருந்ததாகவே கூறப்படுகிறது.

தற்போது, டாவின்சியே இந்த இரண்டையும் வரைந்திருப்பார் என்று கூறுவதற்குப் போதிய தகவல்கள் கிடைத்திருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பாரிசில் உள்ள புகழ்பெற்ற லோவ்ரீ அருங்காட்சியகத்தில் இந்த ஓவியத்தை ஆய்வு செய்த அருங்காட்சிய காப்பாட்சியர்கள் குறைந்தபட்சம் இந்த ஓவியத்தின் ஒரு பகுதியையாவது டாவின்சி வரைந்திருப்பார் என்று நம்புகிறார்கள்.

வடக்கு பாரீசில் உள்ள சான்டில்லி அரண்மனையில் இயங்கும் கோண்டே அருங்காட்சியகத்தில் உள்ள மறுமலர்ச்சிக் கால ஓவியங்களின் தொகுப்பில் 1862 முதல் இந்த ஓவியம் இருந்தது.

இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தில் தோன்றிய முக்கிய ஓவியர் லியனார்டோ டாவின்சி (1452-1519). இவரது உலகப் புகழ் பெற்ற ஓவியமே மோனாலிசா.

துணி வியாபாரியான ஃப்ரான்செஸ்கோ டெல் ஜியோகோண்டோ மனைவி லிசா கெரார்டினியின் ஓவியமே இது என்று நம்பப்படுகிறது.

நிர்வாண மோனாலிசா என்று சந்தேகிக்கப்படும் ஓவியத்தை ஆராயும் வல்லுநர்கள். Image captionநிர்வாண மோனாலிசா என்று சந்தேகிக்கப்படும் ஓவியத்தை ஆராயும் வல்லுநர்கள்.

"இந்த ஓவியம் வெளுத்துப் போனதல்ல. தமது கடைசி காலத்தில் மோனாலிசாவோடு கூடவே டாவின்சி வரைந்த ஓவியங்கள் எவை என்பதை ஆராய்ந்து வருகிறோம்," என்கிறார் காப்பாட்சியர் மத்தியூ டெல்டிக்யூ.

உயர்ந்த தரமுள்ள இந்த ஓவியம், 16ம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தை, அதாவது டாவின்சயின் காலத்தை, சேர்ந்தது என லோவ்ரீ அருங்காட்சியகத்தின் பழம்பொருள் காப்பு வல்லுநர் மோட்டின் உறுதி செய்துள்ளார்.

ஒரே மாதிரி கைகள்

இதுவும் மோனாலிசா என்று கூற டெல்டிக்யூ அடுக்கும் காரணங்கள்: கைகளும், உடம்பும் ஒன்றுபோலவே உள்ளன. படங்களின் அளவும் ஏறத்தாழ ஒன்று. இந்தப் படத்தில் உருவத்தைச் சுற்றிலும் இடப்பட்டுள்ள சிறு துளைகள், இந்த ஓவியத்தை கேன்வாசில் படியெடுத்திருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

அதே நேரம் இந்த ஓவியத்தின் தலைக்கு மேல் காணப்படும் தீற்றல்கள் வலதுகை பழக்கம் உடையவர் வரைந்ததைப் போல உள்ளன. ஆனால், டாவின்சி இடது கைப் பழக்கமுடையவர் என்கிறார் மோட்டின்.

இது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க சிறிது காலம் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

குஷ்பு என்னும் துணிச்சல் நாயகி! #HBDKhushbu

குஷ்பு

தமிழ் சினிமாவில் நாயகர்கள் கொண்டாடப்பட்ட அளவுக்கு நாயகிகள் கொண்டாடப்படுவது அரிதினும் அரிது. ஆண்களால் ரசிக்கப்படுவதற்காக ஆண்களால் உருவாக்கப்படும் ஆண்கள் சினிமாவாகவே தமிழ் சினிமா இருக்கிறது. துவக்கக் காட்சி அறிமுகம் முதல் பட டைட்டில் வரை நாயகர்களை மையப்படுத்தியே தமிழ் சினிமா அமைந்திருக்கும். தமிழ் ரசிகர்களால் நடிகர்கள் அளவுக்குக் கொண்டாடப்பட்ட நடிகைகளை விரல்விட்டு எண்ணக்கூடத் தேவையில்லை, அவ்வளவு சொற்பம். தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மிகச்சில நடிகைகளில் குஷ்புவும் ஒருவர். பொதுவாக தமிழ் சினிமாக்களில் ஹீரோக்களைப் புகழ்வதுபோலவே பாடல்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் 'அண்ணாமலை' படத்தில் 'கொண்டையில் தாழம்பூ..நெஞ்சிலே வாழைப்பூ...கூடையில் என்ன பூ? குஷ்பு!" என்று ஒரு பாடல் அமைக்கப்பட்டது குஷ்புவுக்குக் கிடைத்த வெற்றியின் அடையாளம். குஷ்புவின் புகழ் பாடுவதற்காக ஒரு பாடல் உருவாக்கப்பட்டது ஓர் அதிசயம் என்றால், அது ரசிக வழிபாட்டில் உச்சநிலையை அடைந்த ரஜினியின் படத்திலேயே அமைந்ததும் அவரே அதற்கு வாயசைத்ததும் இன்னொரு அதிசயம். அதேபோல் 'கேப்டன் மகள்' படத்தில் 'எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று...' என்ற பாடலில் வருணிக்கப்பட்டது நாயகி பாத்திரம் என்று கருதப்பட்டாலும் உண்மையில் அது குஷ்புவைக் கொண்டாடுவதாகவே கருதி ரசிக்கப்பட்டது. பொதுவாக நடிகைகளின் நடையுடை அலங்காரங்கள் ரசிக்கப்படுவதும் அதையொட்டி புதிய ஃபேஷன்கள் உருவாவதும் இயல்புதான். வாணிஶ்ரீ கொண்டை முதல் நதியா தோடு வரை தமிழகத்தில் ஃபேஷன் ஆனது. இவையெல்லாம் சினிமாக்களில் நடிகைகள் பயன்படுத்தியது. ஆனால் சினிமாவுக்குச் சம்பந்தமில்லாத 'இட்லி'க்குக் குஷ்பு என்று பெயர் சூட்டப்பட்டது குஷ்பு ஒருவருக்குத்தான்.

 

யோசித்துப் பார்த்தால் குஷ்பு ஒன்றும் அவ்வளவு சிறந்த நடிகையில்லை. அவரது நடிப்புக்காகவே கொண்டாடப்பட்ட படமென்று எதுவுமில்லை. விஜயசாந்தி, நயன் தாரா, ஜோதிகாவைப் போல நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அவர் நடித்ததுமில்லை; அதற்காக அவர் மெனக்கெட்டதுமில்லை. குஷ்பு ஓர் அழகுப்பதுமையாகத்தான் பார்க்கப்பட்டார். அழகின் உதாரணமாக அவர் கருதப்பட்டார். அவரைத் தமிழர்கள் கொண்டாடியதன் உச்சம், குஷ்புவுக்குக் கோயில் கட்டப்பட்டதாகக் கிளம்பிய செய்தி. தமிழ் சினிமா வரலாற்றில் குஷ்பு அளவுக்குக் கொண்டாடப்பட்ட நடிகையை அதற்கு முன்பும் பார்த்ததில்லை; இதுவரையிலும் கண்டதுமில்லை. தமிழர்களால் குஷ்பு கொண்டாடப்பட்டது வரலாறு என்றால் அவர் சர்ச்சைகளில் சிக்கி வசைபாடப்பட்டதும் வரலாறுதான்.

குஷ்பு

ஒரு மாத இதழ் எய்ட்ஸ் விழிப்பு உணர்வு குறித்த கட்டுரையை வெளியிட்டபோது, பல பிரபலங்களிடம் கருத்து கேட்டதைப்போல் குஷ்புவிடமும் கருத்து கேட்டது. 'திருமணத்துக்கு முன்பு பாலுறவு கொள்ள நேரிட்டால், பாதுகாப்பாக இருப்பது முக்கியம்' என்ற கருத்தைக் குஷ்பு தெரிவித்தார். குஷ்பு ஏதோ சொல்லக்கூடாததைச் சொன்னதைப்போல சர்ச்சை பரவியது. அதுதொடர்பாக ஒரு நாளிதழ் நிருபர் குஷ்புவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, " தமிழகத்தில் திருமணத்துக்கு முன்பு பாலுறவு கொள்பவர்களே இல்லையா?" என்று குஷ்பு சொன்னதாக, செய்தி வெளியானது. 'தமிழ்ப்பெண்களையே கற்பில்லாதவர்கள்' என்று குஷ்பு சொல்லிவிட்டார் என்று பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. இப்போது அரசியலில் எதிரும் புதிருமாக நிற்கும் விடுதலைச் சிறுத்தைகளும் பாட்டாளி மக்கள் கட்சியும் அப்போது ஒன்றிணைந்து குஷ்புவுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். தமிழ்த்தேசியம் பேசுபவர்களும் குஷ்புவுக்கு எதிராக அணிதிரண்டனர். இத்தனைக்கும் 'கற்பு' என்ற கருத்தாக்கம் குறித்து தீவிரமான விமர்சனங்களைச் சந்தித்த மண் தமிழகம்.

'கற்பு என்பதும் கற்பிதம்; விபச்சாரம் என்பதும் கற்பிதம்' என்றவர் பெரியார். ''ஆண்கள் இரண்டு ஆசைநாயகிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள வேண்டும்" என்றும் சொன்னவர் அவரே. 'கற்பு' என்னும் வார்த்தையே பெண்களை ஏமாற்றுவதற்கும் அடிமைப்படுத்துவதற்கும் ஆண்கள் உருவாக்கிய அயோக்கியத்தனம் என்ற தீவிர சிந்தனையாளர் பெரியார். நியாயமாகப் பார்த்தால், திராவிடர் கழகம் குஷ்புவுக்கு ஆதரவாக நின்றிருக்கவேண்டும். ஆனால் திராவிடர் கழகம் குஷ்புவுக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள் குறித்துக் கள்ளமவுனம் சாதித்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதியோ "பெரியார் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே கற்பு அவசியம் என்று சொன்னார்" என்று மழுப்பினார். அதற்கு முன்பு இயக்குநர் தங்கர்பச்சான் நடிகைகள் குறித்து ஆணாதிக்க ஆணவத்துடன் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அப்போது அவருக்குக் கடும் எதிர்ப்பைக் காட்டி, அவரை மன்னிப்பு கேட்க வைத்தவர்களில் குஷ்புவும் ஒருவர். தமிழ்த்தேசியம் என்ற பெயரில் ஆணாதிக்க மதிப்பீடுகளை நியாயப்படுத்தும் பல தமிழ் சினிமாக்காரர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் குஷ்புவை வசைபாடித் தீர்த்தனர். பெரியார் திராவிடர் கழகம் போன்ற சில அமைப்புகளும் அ.மார்க்ஸ் போன்ற மிகச்சில சிந்தனையாளர்களுமே அப்போது குஷ்புவுக்கு ஆதரவாக நின்றனர். இவர்கள் ஆதரவு தெரிவித்தது குஷ்பு கூட அறியாத அளவுக்கு, மிகச் சிறுபான்மை செல்வாக்குகொண்ட கருத்தியல் வட்டத்தினர் அவர்கள். ஏதோஒருவகையில் பெரியாரை அடையாளமாகப் பயன்படுத்திக்கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், தி.மு.க. என அனைவருமே பெரியாரின் சிந்தனைகளுக்கு எதிராக, குஷ்புவுக்கு எதிராக நின்றனர், அல்லது ஆதரவாக நிற்கத் தவறினர். 

குஷ்பு

துடைப்பமும் செருப்புமாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழகமெங்கும் பல நீதிமன்றங்களில் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தனையையும் தனி மனுஷியாகச் சந்தித்து வழக்குகளில் இருந்து மீண்டார் குஷ்பு. அதற்குப் பின்பும் பல சர்ச்சைகளைச் சந்தித்தவர்தான் குஷ்பு.  ஒரு படவிழாவின்போது கடவுள் சிலை முன்பு கால்மீது கால் போட்டு உட்கார்ந்திருந்தார், கடவுளர்களை இழிவுபடுத்தும்வகையில் ஆடை அணிந்திருந்தார் என்றெல்லாம் அவர்மீது சர்ச்சைகள் கிளப்பப்பட்டன. எல்லா சர்ச்சைகளையும் அவர் தனிமனுஷியாகச் சந்தித்தார். துணிச்சல் என்ற ஒரே ஓர் ஆயுதம்தான் குஷ்புவிடம் இருந்தது. குஷ்பு ஒரு சாகச நாயகியாக சினிமாவில் நடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் குஷ்பு ஒரு சாகச நாயகிதான்.

'அரசியலுக்கு வருவேன்; வரமாட்டேன், வந்தாலும் வருவேன், வராமலும் வருவேன்' என்று மற்ற திரைப்பிரபலங்களைப் போல் தயங்கித் தயங்கிக் கருத்து சொன்னவரும் அல்ல குஷ்பு. நேரடியாக அரசியலுக்கு வந்து தி,மு.க.வில் இணைந்தார். தி.மு,க,வுக்காகப் பொதுக்கூட்டம், தேர்தல் பிரசாரம் என்று தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இப்போது ஜெயலலிதா இறந்தபிறகுதான் பல திரைப்பிரபலங்கள் துணிச்சலாகக் கருத்து சொல்கிறார்கள், தங்கள் அரசியல் ஆசையையும் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் ஜெயலலிதா இருந்தபோதே அவரைக் கடுமையாக விமர்சித்தவர், எதிர்த்துப் பிரசாரம் செய்தவர் குஷ்பு. பல எதிர்ப்புகளைச் சந்தித்த குஷ்புவுக்குத் தி.மு.க.விலும் எதிர்ப்புகள் கிளம்பின. மு.க.ஸ்டாலினுக்கு எதிராகக் குஷ்பு கருத்து தெரிவித்ததாக எழுந்த எதிர்ப்புகளையும் தன் வீட்டின்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும்கூட தன் துணிச்சலின் அடிப்படையிலேயே அவர் எதிர்கொண்டார். பிறகு தி.மு.க.வை விட்டு விலகி காங்கிரஸில் இணைந்தார்.

குஷ்பு

குஷ்புவையும் ஜெயலலிதாவையும் இரண்டு விஷயங்களில் ஒப்பிடலாம். ஜெயலலிதாவும் துணிச்சலின் அடையாளமாகக் கருதப்படுபவர். ஆனால் உண்மையில் ஜெயலலிதாவுக்கு இருந்தது துணிச்சல் அல்ல, அரசியல் ஆணவம். அதனால்தான் பல மக்கள்விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டார், தன் கட்சிக்காரர்களிடமும் கூட்டணிக் கட்சிக்காரர்களிடம் ஜனநாயக விரோதமாக நடந்துகொண்டார். ஒரு பாசிஸ்டாகவே தன் ஆட்சியை நடத்தினார். ஆனால் குஷ்புவோ துணிச்சலாக இருந்தபோதும் பிறருக்கான சுயத்தை அங்கீகரிக்கத் தவறியவர் அல்ல. ஜெயலலிதாவுக்கும் குஷ்புவுக்கும் இருக்கும் இன்னொரு ஒற்றுமை, பெண் என்பதாலேயே பொதுவெளியில் இழிவுபடுத்தப்படுவது. குஷ்பு தி.மு.க.வில் இருந்தபோது தி.மு.க.வின் எதிரிகள் மிகக் கேவலமான முறையில் குஷ்புவை இழிவுபடுத்தினர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபிறகு ஒருமுறை விடுதலைப்புலிகளை விமர்சித்தார் என்பதற்காக, சமூகவலைத்தளங்களில் அவர்மீது ஆண் திமிருடன் வைக்கப்பட்ட விமர்சனங்கள் மிக மிக மோசமானவை. இசைப்பிரியாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காகக் கொதித்து, கண்ணீர் சிந்தியவர்கள்தான் குஷ்பு குறித்துப் பாலியல்ரீதியான இழிவான சித்தரிப்புகளை முன்வைத்தார்கள். எத்தனை மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் அவற்றைப் புகார்களாகச் சொன்னவரில்லை குஷ்பு.  ஆணவக்கொலைகள் தொடங்கி மோடி ஆட்சி வரை துணிச்சலாகத் தன் விமர்சனங்களை சமூகவலைத்தளங்களில் முன்வைக்கிறார்.

இன்னொரு சிறப்பும் குஷ்புவுக்கு உண்டு. 'தான் ஒரு பெரியாரிஸ்ட்' என்று பிரகடனப்படுத்திக்கொண்ட குஷ்பு ஒரு கடவுள் மறுப்பாளர். பொதுவாகத் தமிழ் சினிமாவில் ஆண்களே தங்களை நாத்திகர்களாகவும் பெரியாரிஸ்டாகவும் அறிவித்துக்கொண்டவர்கள். குஷ்புதான் பிரபலமான தமிழ் சினிமா பிரபலங்களில் தன்னைப் பெரியாரிஸ்ட் என்று அறிவித்துக்கொண்டவர். இத்தனைக்கும் அவர் தமிழ் மண்ணின் வேர்கள் அற்றவர். வடநாட்டில் பிறந்து, தமிழ்நாட்டுக்கு வந்து தமிழச்சியாகவே வாழ்ந்து தன்னைப் பெரியாரிஸ்டாகவும் அறிவித்துக்கொண்ட பெருமை குஷ்புவுக்குத்தான் உண்டு. துணிச்சலும் சமத்துவ உணர்வும் கொண்ட குஷ்பு மாதிரியான ஒரு பெண்ணைத்தான் பெரியாரும் கனவுகண்டார்.

குஷ்பு

குஷ்புவிடமிருந்து இப்போதைய தமிழ் சினிமாக்காரர்களும் தமிழக அரசியல்வாதிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான நற்பண்புகள் இரண்டு. பொதுவாகத் தனிப்பட்ட வாழ்க்கையில் நெருக்கடி வரும்போதுதான் அரசியலுக்கு வருவதும், அரசியலை விட்டு விலகி ஓடுவதும் சினிமாக்காரர்களின் இயல்பாக இருக்கிறது. ஆனால் குஷ்பு, கற்பு குறித்த சர்ச்சை எழுந்தபோது தனியொரு மனுஷியாகவே அதைச் சந்தித்தார். அவருக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள் சாதாரணமானவையல்ல. அவர் நினைத்திருந்தால் ஏதாவது ஓர் அரசியல் கட்சியில் அடைக்கலமாகி, அதை எதிர்கொண்டிருக்கக்கூடும். ஆனால் அவர் அத்தனை பிரச்னைகளையும் சந்தித்து முடித்தபிறகுதான், தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பொதுவாக அரசியல்வாதிகள் ஒரு கட்சியைவிட்டு விலகிவிட்டால், முன்பு இருந்த கட்சியைப் பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது வழக்கம். ஆனால் குஷ்புவோ தி.மு.க.வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தபிறகும்கூட, இப்போதுவரை தி.மு.க குறித்து எந்தக் குற்றச்சாட்டுகளையும் கூறாதவர். "கலைஞர் என் தந்தையைப் போன்றவர்" என்று சொல்லும் குஷ்பு ஸ்டாலின் மீதும் புகார்கள் கூறியதில்லை. லாவணிக்கச்சேரி நடக்கும் தமிழக அரசியல் சூழலில் குஷ்புவிடம் இருக்கும் இந்த நற்பண்பு, எந்த அரசியல்வாதியிடமும் காணக் கிடைக்காத ஒன்று.

 

பிறந்தநாள் வாழ்த்துகள் குஷ்பு!

http://cinema.vikatan.com

 

  • தொடங்கியவர்

 

நவராத்திரியில் களை கட்டிய `அம்மா' கொலு பொம்மைகள்!

  • தொடங்கியவர்

மாட்டின் கொம்புகளில் மசாஜா?

 

ஆசிய நாடுகளில் மசாஜ் செய்வதற்கு பல்வேறுப்பட்ட வழிகள் இருப்பினும் எருமை மாட்டு கொம்புகளைக் கொண்டு மசாஜ் செய்துக் கொள்ளும் விசித்திர சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மாட்டின் கொம்புகளில் மசாஜா?

இத்தகைய ஆச்சர்யமான சம்பவம் இந்தோனேசியாவின் வீதி ஓரங்களில் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மாட்டின் கொம்புகளில் மசாஜா?

எருமை மாட்டின் கொம்புகளை உடம்பின் சதையை இழுத்து பிடிக்கும் வகையில் அழுத்தி தமது உடம்பை மசாஜ் செய்துக்கொள்கின்றனர்.

மாட்டின் கொம்புகளில் மசாஜா?

இவ்வாறு செய்வது வலியைத் தந்தாலும் இதனை பலரும் விருப்பத்துடன் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் இறந்த கலங்களை நீக்குவதோடு அசுத்தமான ரத்தத்தை நீக்கி குருதி நாளங்கல் சீராக செயற்பட உதவுவதாகவும் கூறப்படுகிறது.

மாட்டின் கொம்புகளில் மசாஜா?

மேலும் எருமை மாட்டின் மூலம் மசாஜ் செய்துக்கொள்ளும் இந்த பழக்கம் பெருகி வருவதாக கூறப்படுகிறது.

 

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

அனைவருக்கும் ஆயுத பூசை வாழ்த்துக்கள்tw_blush:tw_blush:

  • தொடங்கியவர்

'கேரட்' என நினைத்து காரை கடித்த கழுதை: உரிமையாளருக்கு அபராதம்?

உணவுப் பொருள் என்று நினைத்து புல்வெளிக்கு அருகே நிறுத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் காரை கடித்த கழுதை ஒன்றால் , காருக்கு ஏற்பட்ட சேதத்துக்கு கழுதையின் உரிமையாளர் இழப்பீடு வழங்க வேண்டுமா என்பது குறித்து ஜெர்மனி நீதிமன்றம் வியாழக்கிழமையன்று முடிவுசெய்யவுள்ளது.

'கேரட்' என நினைத்து காரை கடித்த கழுதை: உரிமையாளருக்கு அபராதம்?படத்தின் காப்புரிமைMCCLAREN/ISTOCK

2016-ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதியன்று, மார்கஸ் ஜான் என்பவர் ஹெஸி மாநிலத்தில் உள்ள வோகல்ஸ்பர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு புல்வெளியை ஒட்டிய கார் நிறுத்துமிடத்தில் தனது ஆரஞ்சு நிற மெக்லாரென் ஸ்பைடர் காரை நிறுத்தியிருந்தார்.

தனது காரின் பின்பகுதியை, விட்டஸ் என்ற கழுதை கடித்து விட்டதாக மார்கஸ் புகார் கூறினார்.

கேரட் என நினைத்து விட்டஸ் காரை கடித்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், தனது கழுதையால் ஏற்பட்ட காருக்கு ஏற்பட்ட சேதத்துக்கு 6000 பவுண்டுகள் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டதற்கு அதன் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புல்வெளிக்கு அருகே 3 லட்சம் பவுண்டுகள் மதிப்பிருக்கலாம் என்று கூறப்பட்ட காரை அதன் உரிமையாளர் நிறுத்தியிருக்க கூடாது என்றும், அதனால் தனது கழுதை குற்றவாளி அல்ல என்றும் கழுதையின் உரிமையலர் வாதிடுகிறார்.

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கில் வியாழக்கிழமையன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்
‘மனிதாபிமானம் கசிந்து நொந்தது’
 

image_37b096e64c.jpgஅந்தப் பிரதான நெடுஞ்சாலையின் நடைபாதையின் ஓரத்தில், எனது நண்பன் சந்திராவைக் கண்டபோது, அதிர்ந்து போனேன். தேகத்தில் பெருங்காயம். குருதியின் கோரப் பிரவாகம். நான் அந்த இடம் நோக்கி நடந்தபோது, தற்செயலாக இதைப் பார்க்க நேர்ந்தது. 

‘யாரோ தங்களது மோட்டார் வாகனத்தில் இருந்து, இவரை வீசி எறிந்ததைக் கண்டேன்’ என ஓர் இளைஞன் என்னிடம் சொன்னான். “நான் இவரின் நண்பன்” என்று சொன்னதும், உடன் எனக்கு அனைவரும் உதவி நல்கினர். ஒரு காரில் சந்திராவை ஏற்றி, வைத்தியசாலையில் அனுமதிக்கவும் உதவினர். என்னிடம் பேசிய இளைஞன், சந்திராவைத் தாக்கி, விட்டெறிந்து சென்றவர்களின் வாகன இலக்கத்தைத் தந்தான்.  

உடன் பொலிஸாருக்கும் அறிவித்து விட்டேன். அன்று இரவு முழுவதும் சித்தப்பிரமை பிடித்ததுபோல் வைத்தியசாலையில் இருந்தேன். 

அடுத்த நாள், காலையில் தினசரியைப் பார்த்தபோது அதிர்ந்துவிட்டேன். மேற்படி செய்தியில், அந்த இளைஞர் தந்த இலக்க வாகனம், அதே நாளில், அதே நெடுஞ்சாலையில் கோரவிபத்தில், அனைவருமே ஸ்தலத்தில் பலியாகிவிட்டனர். என்மனம் கனத்தது. “ஹே இறைவா என்ன இது”? என் மனிதாபிமானம் கசிந்து நொந்தது

  • தொடங்கியவர்

தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது (செப்.30, 2003)

 

விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் ஜனவரி 21, 2001ம் ஆண்டு இணையத்தில் தொடங்கப்பட்டது. அனைத்து மனித அறிவும் இலவசமாக, மொழிகளைக் கடந்து எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கம். இத்திட்டம் இலாப நோக்கமற்றது, நடுநிலைமையை வலியுறுத்துவது. இத்திட்டத்தின் வழி இதுவரை, பல மொழிகளிலுமாக சேர்த்து 1 கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட

 
தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது (செப்.30, 2003)
 
விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் ஜனவரி 21, 2001ம் ஆண்டு இணையத்தில் தொடங்கப்பட்டது.

அனைத்து மனித அறிவும் இலவசமாக, மொழிகளைக் கடந்து எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கம். இத்திட்டம் இலாப நோக்கமற்றது, நடுநிலைமையை வலியுறுத்துவது. இத்திட்டத்தின் வழி இதுவரை, பல மொழிகளிலுமாக சேர்த்து 1 கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஆங்கில மொழியில் மாத்திரம் 2.7 மில்லியனிற்கும் அதிகமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

தற்போது 200-க்கும் மேற்பட்ட மொழி பதிப்புக்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ 100 மொழிகளில் தொடர்ச்சியான அப்டேட்டுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. 14-க்கும் மேற்பட்ட மொழிகள் 50,000 கட்டுரை வரையிலான எண்ணிக்கையை தாண்டியுள்ளன. பரந்த பயன்பாட்டுக்கு உட்பட்டுவரும் விக்கிப்பீடியா பல சகோதரத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி மேலும் வளர்ந்து வருகின்றது.

இந்த பக்கத்தில் எவரும் எழுதலாம் என்பதே விக்கிப்பீடியாவின் சுலோகமாகும். தகவல் சரிபார்க்கும் வண்ணம் ஆதாரங்கள் தந்து, நடுநிலைமையுடன் எழுத வேண்டும் என்பது விக்கிப்பீடியாவின் கொள்கை. விக்கிப்பீடியாக் கட்டுரைகள் யாவும் பதிப்புரிமை கைவிடப்பட பதிப்புரிமை மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இங்கு அனைத்து உள்ளடக்கங்களையும் யாரும் இலவசமாக பயன்படுத்தலாம்.

இந்த வகையில் தமிழ் விக்கிப்பீடியா முயற்சியானது 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியில் ஆரம்பமானது. தற்போது இதில் 55,870 கட்டுரைகள் உள்ளன. 56,211 பயனர் கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

தனித்தீவு... தனி வீடு... இயற்கையோடு இணைந்து வாழ அழைப்பு விடுக்கும் அரசாங்கம்..!

இந்த வாழ்க்கை இங்கிருக்கும் ஒவ்வொருவரும் வாழ ஆசைப்படும் வாழ்க்கை. ஆனால், யாரும் வாழத் துணியாத ஒரு வாழ்க்கை. இதைக் கொஞ்சம் கற்பனைக் கண்கள் கொண்டு பாருங்கள். உங்களைச் சுற்றியிருக்கும் சூழலிலிருந்து கொஞ்சம் விடுபடுங்கள். அந்தs சத்தங்களை விட்டு வெளியேறுங்கள். ஏசி அறையின் குளிலிருந்து கொஞ்சம் நகருங்கள். சமையலறையில் அடிக்கும் குக்கர் விசில் சத்தம் உங்கள் காதுகளுக்கு எட்டாத கற்பனை உலகிற்குள் நுழையுங்கள். 

யாரும் வாழ ஆசைப்படும் தீவு - கியுமென்ஸ் - பிரான்ஸ்

 

இப்போது உங்கள் முகத்தில் கடற்காற்று படத் தொடங்குகிறது. அது கொஞ்சம் பிசுபிசுப்பாகத் தெரியலாம். ஆனால் ஒன்றும் பிரச்னையில்லை. அது சின்னத் தீவு தான். அத்தனை அழகானது. அதிகாலை உங்களை அந்த ஈரக்காற்றும், ஆடுகளின் சத்தமும், பன்றிகளின் சத்தமும், கோழிகள், வாத்து, இன்னும் சில பறவைகளின் சத்தமும் தட்டி எழுப்பும். சிமெண்ட் கலக்காத அந்த இயற்கை வீட்டிலிருந்து வெளியே வருகிறீர்கள். நாய்கள் ஓடிவந்து உங்களை அன்போடு அரவணைக்கின்றன. உருளைக் கிழங்கு போடப்பட்டிருக்கும் நிலத்தில் முயல்கள் ஓடுகின்றன. அதைத் துரத்துகிறீர்கள். அன்றைய சமையலுக்குத் தேவையான காய்கறிகளைப் பறித்துக் கொண்டு சமைக்கத் தொடங்குகிறீர்கள். கூடவே, கரையில் உட்கார்ந்து மீன் பிடித்து முடித்து மீன்களோடு திரும்புகிறது உங்கள் துணை. அந்த மீனை அவர் வெளியே வைத்து அடுப்பில் சுட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியாக அன்றைய பொழுது கழியும். இரவு நிம்மதியான தூக்கம். அமைதி. அவ்வப்போது வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை. எல்லாவற்றிற்கும் மேலாக அந்தத் தீவில் உங்கள் வீடு மட்டும்தான். இப்படி ஒரு வாழ்க்கை.

இந்தக் கனவு வாழ்க்கையைத்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டேவிட் மற்றும் சொய்சிக் கியூசைனர் (Soizic Cuisiner). பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குட்டித் தீவு கியுமென்ஸ்(Quemenes). கடந்த 2007ம் ஆண்டு யாருமற்ற இந்தத் தீவில் குடியேறுகிறார்கள் இந்தத் தம்பதியினர். புல்லும், புதரும் மண்டிக் கிடக்கும் தீவினை விவசாய நிலமாக மாற்றுகின்றனர். கால்நடை வளர்ப்பிலும் ஈடுபடத் தொடங்குகின்றனர். இவர்களின் நோக்கம் ஒன்றுதான். "விவசாயம் செய்து எங்களுக்கான தற்சார்பு வாழ்வை வாழ்ந்திட வேண்டும். கூடவே, விவசாயம் கொண்டு பணம் சம்பாதிக்கவும் வேண்டும். இயற்கையை அழிக்காமல், இயற்கையோடு இயைந்து இந்த நவீன உலகில் வாழ்ந்திட முடியும் என்பதை எங்கள் வாழ்வு உணர்த்த வேண்டும் என்று விரும்புகிறோம்." என்று சொல்கிறார்கள். 

யாரும் வாழ ஆசைப்படும் தீவு - கியுமென்ஸ் - பிரான்ஸ்

இவர்களின் இந்த வேலையை வெகுவாகப் பாராட்டிய "பிரான்ஸ் கடலோர பாதுகாப்பு இயக்கம்" இவர்கள் வேலையை தேசம் முழுக்க பிரபலபடுத்தியது. இதை ஒரு முன் மாதிரி திட்டமாக முன்னெடுத்தது. பல சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்து கொண்டு இந்தத் தீவிற்கு வருகைத் தர ஆரம்பித்தனர். அவர்களை அன்போடு வரவேற்று அவர்களைப் பார்த்துக் கொண்டனர் டேவிட் தம்பதியினர். 
தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை சின்ன, சின்ன காற்றாலைகளிலிருந்தும், சூரிய சக்தியிலிருந்தும் பெற்றுக் கொள்கின்றனர். ஆடு, கோழி, வாத்து, பன்றி போன்ற கால்நடைகளை வளர்த்து அதன் மூலம் ஒரு வருமானத்தை ஈட்டுகின்றனர்.   

யாரும் வாழ ஆசைப்படும் தீவு - கியுமென்ஸ் - பிரான்ஸ்

கடந்த 10 வருடங்களாக இங்கு வசித்து வந்த நிலையில் இப்போது இந்த தீவை காலிசெய்ய இருக்கிறது இந்தத் தம்பதி. "நாங்கள் ஒரு வாழ்வை வாழ்ந்திட நினைத்தோம். அதை இந்தப் பத்து வருடங்களில் செய்து முடித்தோம். இப்போது நாங்கள் எங்களின் அடுத்த திட்டத்திற்கு நகர்கிறோம். நிச்சயம் இந்த தீவைவிட்டு கிளம்பும்போது என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். ஆனால், அதற்காக நான் சோகமடைந்துவிட மாட்டேன். எங்களின் அடுத்தத் தேடல், ஓர் அற்புதமான வாழ்வை எங்களுக்காக நிச்சயம் வைத்திருக்கும்" என்று சொல்கிறார் சொய்சிக்.

இந்தத் தம்பதி தீவை காலி செய்யும் நிலையில், இந்தத் தீவை பராமரிக்கவும், இங்கு குடியேறவும் வேறு ஒரு தம்பதி வர வேண்டும் என்று தன் மக்களைக் கேட்டுள்ளது பிரான்ஸ் அரசாங்கம். நிச்சயம் இதற்கு பலர் விண்ணபிப்பார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது. ஆனால், வாய்ப்பு ஒரு தம்பதிக்கு மட்டுமே கிடைக்கும். 

யாரும் வாழ ஆசைப்படும் தீவு - கியுமென்ஸ் - பிரான்ஸ்

அந்தப் பகுதியில் இது போன்ற வெவ்வேறு சிறு சிறு தீவுகள் இருந்தாலும் கூட, அதில் யாரும் குடியேறக் கூடாது என்று இந்தத் தம்பதி கேட்டுள்ளார்கள். காரணம் அந்தத் தீவுகளின் உயிர்ச்சூழல் பாதிகப்படக் கூடாது என்பதுதான். தாங்கள் இந்தத் தீவை தேர்ந்தெடுத்ததற்கான காரணம், நூறு ஆண்டுகளுக்கு முன்னர்வரை இந்த தீவில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதுதான். இது விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும் ஏற்ற தீவு. இந்தச் சூழல் அல்லாத தீவுகளில் குடியேற வேண்டாம் என்று கேட்டுள்ளார்கள்.

சரி... இந்த தீவைவிட்டு போகும் இவர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள்?

யாரும் வாழ ஆசைப்படும் தீவு - கியுமென்ஸ் - பிரான்ஸ்

 

"கடற்பாசிகளை எடுத்து அதை மிகச் சரியான தொழிலாக மாற்ற உள்ளோம். கடலின் வளங்களைக் கொள்ளையடிக்காமல், கடல் நமக்கு கொடுக்கும் பொருட்களைக் கொண்டே நம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். அதற்கு எடுத்துக்காட்டாக எங்கள் எதிர்கால வாழ்க்கை அமையும்..." என்று புது வாழ்க்கையை  நோக்கி நகர்கிறது இந்த ஜோடி.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

மனிதர்களின் உடலுக்குள் முட்டையிடும் பூச்சி... உடலைத் துளைத்து வெளியேறும் புழு!

 

இனப்பெருக்கத்திற்காக ஒவ்வோர் உயிரினமும் முட்டையிட்டு, அடைக்காத்து தங்களின் அடுத்தத் தலைமுறையை உருவாக்குகின்றன.  முட்டையிட்டு அதைப் பாதுகாக்க ஓர்  இடம் தேடி, அதற்கு ஒரு  கூட்டை வடிவமைத்து, அடைகாத்து உயிரைக் காப்பாற்றுவது வரை பல போராட்டங்களை முன்னெடுக்கின்றன.  பூச்சிகளில் ஆரம்பித்து பறவைகள் வரை முட்டைகளைப்  பாதுகாக்க பல தந்திரங்களைக் கையாளுகின்றன.

ஊசிவால் குளவி

 

ஊசிவால் குளவிகள் தங்கள் முட்டைகளைத் தரையில் இடுகின்றன. ஆனால், சில ஊசிவால் குளவிகள் மட்கிப்போன மரங்களின் மேற்பரப்பில் பறந்து மரத்தின் உள்ளே இருக்கும் பூச்சிகளின் உடலில் தமது நீண்ட ஊசிபோன்ற நீட்சியின் உதவியால் முட்டையிடும். குளவி ஒரு புழுவைப் பிடித்தவுடன் தனது கொடுக்கால் கொட்டி விடும். புழு சாவதற்கு பதிலாக மயக்க நிலைக்குச் சென்று விடும். மயக்க நிலையில் உயிரோடு  இருக்கும் புழுவுக்குள் தன்  முட்டைகளை இடும். புழுவுக்குள் இருக்கிற குளவியின் முட்டை வளர ஆரம்பிக்கும். குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்ததும் முட்டையிலிருந்து வெளிவருகிற குளவி புழுவின் உடலைக் கொஞ்சம் கொஞ்சமாக உண்டு பிறகு வெளியேறும். இப்படித்தான் ஊசிவால் குளவிகள் தங்கள் இனத்தை உற்பத்தி செய்துகொள்கின்றன.

egg  பூச்சி

பாட் ப்ளை (botfly)

இவ்வகை ஈக்கள் முட்டை இடுவதற்கு விலங்குகள் மற்றும் மனிதர்களின் உடல்களைத் தேர்ந்தெடுக்கின்றன. உடலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன் ஊசி போன்ற நீட்சி வழியாக தன்னுடைய முட்டைகளைச் செலுத்தும். செலுத்தப்பட்ட முட்டை உடலின் சூட்டில் பொறிக்க ஆரம்பிக்கும். நாற்பது நாள்களில் முட்டையிலிருந்து வெளி வருகிற புழு தான் தாங்கியிருக்கிற உடலைத் துளையிட்டு வெளியேறும். இப்படியான பல சம்பவங்கள் இப்போதும் மத்திய தெற்கு அமெரிக்காவில் இருக்கிற மனிதர்களுக்கு நிகழ்ந்திருக்கிறது. தலை வலிக்கிறது என மருத்துவமனைக்கு வந்த பலரும் பாட்ப்ளை ஈக்களின் வாரிசுகளைச் சுமந்துகொண்டிருந்திருக்கிறார்கள்.

பூச்சி

சில்வண்டு

இந்தியக்காடுகளில் காணப்படுகிற ஒரு வகை பூச்சி இனம் சிகாடா; தமிழில் சில்வண்டு. இரவு நேரங்களில் காடுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் இவ்வகை பூச்சி மரப்பொந்துகளில் முட்டையிடுகின்றன. 45 நாள்களில் முட்டையிலிருந்து வெளிவருகிற சில்வண்டு குட்டிகள் மண்ணுக்குள் போய்விடுகின்றன. மண்ணுக்குள் போகிற சில்வண்டுகள் உடனே பூமிக்கு மேல் வருவதில்லை. கிட்டத்தட்ட 13 இருந்து 17 ஆண்டுகள் வரை மண்ணுக்குள் இருந்து விட்டு பிறகே பூமியின் தரைப்பரப்பிற்கு வருகின்றன. வருகின்ற சில்வண்டுகள் முழு வளர்சிதை மாற்றத்தை அடைகின்றன. தன்னுடைய மேலுறையைக் கழட்டி விடுகிற சில்வண்டுகள் புது உருவத்தைப் பெறுகின்றன. பூமிக்கு மேல் இருக்கிற காலத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இணை சேர, ஆண் பூச்சிகள் பெண் பூச்சிகளைக் கவர்வதற்காக இந்த ஓசையை  எழுப்புகின்றன. இணைசேரும் காலம் முடிந்ததும், பெண்சில்வண்டு மரப்பொந்தில் சென்று முட்டையிடும். இணை சேர்ந்த மூன்று வாரங்கள் கழித்து ஆண் சில்வண்டு இறந்து விடுகிறது.

பூச்சி

கடல் குதிரை

உலகிலேயே ஆண் கடற்குதிரைகள்தான் முட்டைகளைச் சுமந்து தன் இனத்தைப் பிரசுவிக்கிறது. பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (சுமார் 200) ஆண்களின் வால்பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் வைத்து விடுகின்றன. அதை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி, ஆறு வாரங்கள் பாதுகாத்துக் குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும்.

முட்டை

விலங்குகளின் க்யூட் கேண்டிட் பார்க்க

பட்டுப் பூச்சி

பட்டுப் பூச்சிகள் இலைகளின் பின் புறத்தில் முட்டைகளை  இடுகின்றன. முட்டைகளிலிருந்து வெளியே வருகிற கம்பளிப் பூச்சிகள் பிறந்த இலைகளை  உண்டே தங்களின் வாழ்க்கையை  ஆரம்பிக்கின்றன. ஒரு கட்டத்தில் இருக்கிற மரக்கிளைகளிலோ இலைகளிலோ தங்களின் அடுத்தப் பிறவியை அடைய எச்சிலிலிருந்து வரக்கூடிய ஒரு வகை திரவத்தைப் பயன்படுத்திக் கூடு கட்டுகின்றன. கூட்டுக்குள் போகிற புழு பட்டாம்பூச்சியாக பரிணமிக்கிறது. அதற்கான இயற்கை வேலைப்பாடுகள் நிகழ ஆரம்பிக்கின்றன. பதினைந்து நாள்கள் கழித்து பட்டாம் பூச்சிக் கூட்டை விட்டு வெளியே வருகிறது. மீண்டும் அதே முட்டையிடும் படலம் எனச் சுழற்சி முறையில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு முட்டையை ஒழித்து வைப்பதற்கு ஒட்டு மொத்தக் குழுவும் வட்டமேசை மாநாடு நடத்தி ஒளித்து வைப்பார்கள். ஓர் உயிருக்குத் தெரியாமல் அதற்குள் ஒரு முட்டையை ஒளித்து வைக்கும் இயற்கை விந்தைதான். ஒவ்வோர் உயிரும் தன் அடுத்த தலைமுறையைக் காப்பாற்றிக் கொள்ள விநோதங்கள் புரிவதெல்லாம் விந்தையிலும் விந்தை. 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

facebook.com/Sarav Urs

20 வயசில பார்க்கிற பொண்ணுங்க எல்லாம் பிடிக்குது... 30 வயசில எல்லோரையும் விட்டுட்டு ஒருத்திய மட்டும் பிடிக்குது... 40 வயசில அந்த ஒருத்திய விட்டுட்டு மற்ற எல்லோரையும் பிடிக்குது..!

#Male_Life

twitter.com/Boopaty Murugesh

கல்யாணத்துல பொண்ணைவிட பொண்ணோட தங்கச்சி அதிகமா மேக்கப் போட்டு சுத்துற மாதிரி இந்த ஆட்சில அதிமுகவை விட பிஜேபிகாரனுங்கதான் ஆக்டிவா இருக்கானுங்க..!

twitter.com/Jeytwits 

அப்படி அந்த டிவில என்னதான் இருக்கோவென பெண்களிடம் சலித்து கொண்ட ஆண்களுக்கு, பதிலடி கொடுக்கும்விதமாய் கண்டுபிடிக்க பட்டதே ஸ்மார்ட்போன்கள்.

112p1.jpg

twitter.com/Kozhiyaar 

பேச்சுத்திறமை இருப்பவர்கள் ஒன்று அரசியலில் சேர்கிறார்கள் இல்லை... ‘ஆம்வே’யில் சேர்ந்துவிடுகிறார்கள்!

twitter.com/freakoffl

ரோட்ல தனியா பொலம்புறவன் பைத்தியக்காரன்...

டிவிட்டர்ல பொலம்புறவன் பிரபல கீச்சாளர்..!

twitter.com/drkvm 

அடுத்த கட்டம்... அடுத்த கட்டம்ன்றாரே தவிர, செயல்பட மாட்டேன்றாரே... செயல் தலைவர்...

twitter.com/G_for_Guru

ஒரு காலத்துல நாம பார்த்து ரொம்ப மிரண்ட ஆஸிய இப்புடி புறங்கைல டீல் பண்றதெல்லாம் பாவம் மை சன் கோலி.

twitter.com/chithradevi_91 

உலகத்துல கஷ்டமான விஷயம் எதுனா... நமக்கு யாராவது அட்வைஸ் பண்றப்ப வர்ற சிரிப்பை அடக்கிக்கிட்டு சீரியஸா மூஞ்சை வெச்சிருக்கற மாதிரி நடிக்கிறதுதான்.

twitter.com/Jeytwits

உண்மையில் ‘ஒரு நாள் கூத்து’ என்பது ஞாயிற்றுக்கிழமைக்கே சரியாய் பொருந்தும்.

112p2.jpg

twitter.com/Thaadikkaran

ஃபாரின்ல இருந்து வர்றவங்களை எல்லாம் சென்ட் வியாபாரியாதான் பாக்குறாங்க..!

twitter.com/kalpbagya32

உணவே கடவுள் என்றவன் ஒருவன்! அந்த உணவைத்தான் சைவம், அசைவம் எனப் பிரித்தான் இன்னொருவன்!!

twitter.com/HAJAMYDEENNKS 

 உண்மையில் ஞாயிற்றுக்கிழமை நம்மை சுயபரிசோதனை செய்துகொள்ள உதவுகிறது..!

twitter.com/erasaravanan 

 அப்போ சாவுல சந்தேகம்னு சொன்னோம்; பெரும்பான்மை நிரூபிக்க போயிட்டாங்க. இப்ப பெரும்பான்மை நிரூபிக்கச் சொல்றோம்; சாவுல சந்தேகம்னு சொல்றாங்க!

twitter.com/HAJAMYDEENNKS

இட்லியும் இடியாப்பமும் நோயாளிகளுக்குச் சிறந்த உணவு...

பீட்சாவும் பர்கரும் நோயாளிகளையே உருவாக்கும் உணவு...!

112p3.jpg

twitter.com/itz_me_Raja

மாமியா மருமக சண்டைல, மனைவி பக்கமும் இல்லாம, அம்மா பக்கமும் இல்லாம, பீரோ பக்கத்துல நிப்பவனே சிறந்த குடும்பஸ்தன்..!

twitter.com/HAJAMYDEENNKS 

படிக்கிற காலத்துல படிக்கிறது மட்டும்தான் கஷ்டமா இருந்துச்சு... படிச்சு முடிச்சதுக்குப் பிறகு எல்லாமே கஷ்டமா இருக்கு..!

twitter.com/Jeytwits

குப்பை போடாதே, சிறுநீர் கழிக்காதே என எழுதுவதைவிட இங்கு CCTV கேமரா பொருத்தப்பட்டுள்ளது என எழுதுவதே அதிக பயனைத் தரும்..

twitter.com/SKtwtz 

உதவி என்றால் அது பணம் என்றே பலரால் நம்பப்படுகிறது.

twitter.com/thoatta

கடைசில, அப்போலோ ஆஸ்பத்திரியிலே நாங்க அம்மாவ பார்க்கலன்னு சொல்ல போறாங்க..!

twitter.com/MJ_twets

டாக்டர் எழுதுற எழுத்தைப் பார்த்தே பாதி நோய் சூசைடு பண்ணிக்குது.

112p4.jpg

twitter.com/Aruns212

பள்ளிகளில் எல்லாம் ஆங்கிலம் மற்றும் இந்தி வழியை ஊக்குவித்துவிட்டு, படங்களின் பெயரைத் தமிழில் வைத்தால் தமிழ் வளர்ந்துவிடும் என நம்புகிறோம்.

twitter.com/CreativeTwitz

அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்த அம்மாவுக்கே கடைசில ஒரு இட்லில climax வெச்சிடுச்சு வாழ்க்கை.

twitter.com/dhayai

முகநூல் என்பதே...

ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பு ;)


facebook.com/Araathu R

வேலை இல்லை!

கேம்பஸ் இன்டர்வியூ படுத்து விட்டது. ஆஃப் கேம்பஸ் இன்டர் வியூ ஆப்பு. பல நிறுவனங்களும் ஆட்களைக் குறைத்துக்கொண்டு இருக்கின்றன. பலர் வேலை இழந்து விட்டார்கள்.

இவையெல்லாம் எம்.என்.சி எனப் படும் மல்டி நேஷனல் நிறுவனங்களை வைத்துச் சொல்லப்படுபவைகள்.

ஸ்மால் மீடியம் என்டர்பிரைசஸ் எனப்படும் சிறு நிறுவனங்களைப் பற்றி யாரும் மூச்சுவிடுவதில்லை.

நியாய தர்மம் பேசும் எல்லோரும் பெரு நிறுவனங்களுக்கே வேலைக்குப் போவார்கள். வேலையைவிட்டுத் துரத்தி விட்டால், சுரண்டல் அது இது என்று புலம்புவார்கள்.

சிறு நிறுவனங்களை நடத்தி வந்த பலர் மூடியே விட்டார்கள். மீதி இருக்கும் சிறு நிறுவனங்களும் இழுத்துக்கோ, பிடிச்சிக்கோ என்று இழுத்துக்கொண்டு கிடக்கின்றன.

சிறு முதலாளிகள் இதுவரை ஈட்டிய லாபம் மொத்தத்தையும் கொட்டி னாலும் நிறுவனத்தைத் தூக்கி நிறுத்த முடிவதில்லை.

இதற்கு முழுமுதற் காரணம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்துகொண்டிருப்பவர்கள்தான்.

இது இப்படி இருக்க...

படித்து முடித்துவிட்டுக் காத்திருக் கும் யாரும் வேலையில்லை என்று விரக்தியில் எல்லாம் சுத்தவில்லை.

பைக், ஸ்மார்ட்போன் , மால், கேர்ள் ஃப்ரெண்ட் என ஜாலியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

வேலை கிடைக்க வேண்டும் என்ற பிரஷர் இல்லை; வேலை தேடியாக வேண்டும் என்ற டிசையர் இல்லை.

வேலை இல்லை என்ற கூக்குரல் கேட்கும் அதே நேரத்தில் வேலைக்கு ஆள் வேண்டும் என்று விளம்பரத்துக்கும் குறைந்த அளவே ஆட்கள் வருகிறார்கள், அதாவது இளைஞர்கள்.

இதற்குக் காரணம், 45- 50 வயதுக்குள் இருக்கும் இளமையான தந்தைமார்கள்தான். தான் வேலைக்காகப் பட்ட கஷ்டம் தன் மகன் பட வேண்டாம் என அவர்கள் நினைப்பதுதான் காரணம்.

பைக்கை வாங்கிக்கொடுத்து, ஜாலியா சுத்துடா, வேலை கிடைக்கிறப்ப பார்த்துக்கலாம் என அனுப்பி விட்டு அவர்களும் ஹாயாகச் சுற்றி கொண்டிருக்கிறார்கள்.

facebook.com/வாசுகி பாஸ்கர்

நாம் உண்ணும் ஒவ்வொரு பரோட்டாவிலும், பரோட்டா மாஸ்டரின் வியர்வை கலந்து இருக்கிறது என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.

facebook.com/tvignesh49/

கடவுள் குறும்புக்காரர். நமது கைகளில் மத்தளத்தைக் கொடுத்து விட்டு ‘நலந்தானா’ வாசிக்கச் சொல்வார். என்னடா டொட டொடடோ...

facebook.com/Saravana karthikeyan Chinnadurai

எனக்கென்னவோ முருகதாஸையும் விஜய்யையும் லாடம் கட்டினால் அப்போலோ விஷயத்தில் ஏதேனும் உண்மை கிடைக்கலாம் எனத் தோன்றுகிறது. அவர்கள்தான் இட்லியை வைத்து பூடகமாய் அரசியல் வசனம் பேசினர்.

Karl Max Ganapathy

இதாங்க தொர்மாகோல், இத வெச்சி ஆத்த மூடிறலாம்னு சொன்னா, செல்லூர் ராஜுன்னு இல்ல, அதிமுகவுல இருக்க எந்த மந்திரியும் ஓகேன்னுதான் சொல்லிருப்பாய்ங்க. அதுதான் அதிமுகவோட பலமே.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகின் மிகவும் காரமான மிளகாய்

இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகவும் காரமான மிளகாயை உருவாக்கியுள்ளார்கள். இந்த மிளகாய்க்கு papper X என பெயரிடப்பட்டுள்ளது.

நாட்டிங்க்ஹாம் பல்கலைகழகத்தில் தனது குழுவினருடன் ஆராச்சியில் ஈடுபட்ட போது இந்த மிளகாயை உருவாக்கியுள்ளதாக ஸ்மித் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் காரமான மிளகாய்

மேலும், அவர் கூறியதாவது இந்த மிளகாயை உருவாக்க வேண்டும் என்பது குறித்த எவ்வித திட்டமிடலும் இல்லை என்றும் ஒரு விபத்தை போலவே இந்த மிளகாயை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாகவே கரோலினா ரீப்பர் என்ற மிளகாய், மிகவும் காரமானது என கூறப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் காரமான மிளகாய்

இந்நிலையில் பெப்பர் X என பெயரிடப்பட்டுள்ள இந்த மிளகாய் காரத்திற்கான அளவுகோளில் கரோலினா பெப்பரை விட 1.6 கோடி மடங்கு காரணமானது என இதன்  உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

100 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் அதிக பட்சம் சுமார் 4.72 கிராம் அளவுள்ள காரத்தை தாங்கும் திறன் பெற்றிருப்பார்.

உலகின் மிகவும் காரமான மிளகாய்

ஆனால், இந்த மிளகாய் சுமார் 3.18 மில்லியன் அளவிற்கு காரசுவையை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது.

இந்த மிளகாயை நேரடியாக சுவைத்தால் அதிர்ச்சியில் உடனே இறந்து விடும் அபாயம் உள்ளது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இத்தகைய மிளக்காயிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த sauce நீர்த்துப்போன வினாகிரி, இஞ்சிவேர், சந்தனவகைகள்,சீரக, கொத்தமல்லி, கடுகு போன்றவற்றைச் சேர்த்து தயாரான Sauce மிக வேகமாக அமெரிக்காவில் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

உலகத்தில் மிக அழகான மற்றும் விலை மதிப்பில்லா 5 வீடுகள். தெரிந்துகொள்ளுங்கள்.

 

பொதுவா நம்மளோட வாழ்க்கையில வீடு ஒரு முக்கிய பங்கா இருக்கும். நாம என்னதான் வெளி உலகத்துல அலைஞ்சி திரிஞ்சி வந்தாலும் கடைசியா நாம கால் பதிக்கிற இடம்தான் நம்ம வீடு. இந்த வகையில உலகத்துலயே அழகானது மட்டுமில்லாம விலை உயர்ந்த வீடுகள் பட்டியல்ல இருக்க 5 வீடுகளை பற்றித்தான் நாம பாக்கபோறோம்.

உலகத்தில் மிக அழகான மற்றும் விலை மதிப்பில்லா 5 வீடுகள். தெரிந்துகொள்ளுங்கள்.

5. Fairfield pond
5 -வதா இருக்க வீடுதான் US-ல ஹாம்ப்டன் பகுதில இருக்க Fairfield pond. இந்த வீடுதான் அரண்மனை பட்டியல்ல முதல் இடத்த புடிச்சிருக்கு அதுமட்டும் இல்லாம அமெரிக்காவிலேயே விலை உயர்ந்த வீடுகள் பட்டியல்ல இந்த வீடுதா இடம் புடிச்சிருக்கு. US-ல முக்கிய இடத்துல அமைந்துள்ள இந்த வீடு மொத்தம் 63 ஏக்கர்ல சூழப்பட்டிருக்கு.

உலகத்தில் மிக அழகான மற்றும் விலை மதிப்பில்லா 5 வீடுகள். தெரிந்துகொள்ளுங்கள்.

4 . Hearst Mansion
4 -வது பட்டியல்ல இருக்குற வீடுதான் Hearst Mansion. இந்த வீடு லாஸ் ஏஞ்சல்ஸ் -ல Beverly Hills பகுதில இருக்கு. இந்த வீட்டுக்குள்ளவே 6 தனி வீடுகள் இருக்கு. அதுமட்டுமில்லாம அந்த இடத்துல ரொம்ப பிரபலமான 3 swimming pool மற்றும் 3 டென்னிஸ் கோர்ட்ஸ் இருக்கு.

 

3 .Villa Leopolda
3-வதா இருக்கறது பிரான்ஸ் நாட்ல இருக்க Villa Leopolda. உலகத்துலயே the largest holiday home -னு சொல்லக்கூடிய இந்த வீடுதான் பிரான்ஸ்லயே விலை உயர்ந்த வீடா இருக்கு and இந்த வீட்டுக்கு 27 வரலாறு கதைகளும் இருக்கறதா சொல்லப்படுது. இந்த வீட்டை French King Leopold கட்டியிருக்காரு அதனால இந்த வீடு அவரோட பெயரிலேயே அழைக்கப்படுது.

உலகத்தில் மிக அழகான மற்றும் விலை மதிப்பில்லா 5 வீடுகள். தெரிந்துகொள்ளுங்கள்.

2 . The penthouse
2 வது இடம் பிடிச்சிருப்பது லண்டன் மையப்பகுதில இருக்க The penthouse. இந்த வீட்டோட மொத்த மதிப்பு 200 மில்லியன் டாலர்ஸ். இந்திய மதிப்பு படி (13057000000.00 Indian ரூபாய்) பல லட்சம் கோடி. இந்த வீட்ல அப்படி என்ன famous -னு பார்க்கும் பொழுது wine tasting rooms, panic rooms, bulletproof windows -னு அதிக விலை உயர்ந்த பொருட்களை வைத்து இந்த வீடு கட்டப்பட்டிருக்கு.

உலகத்தில் மிக அழகான மற்றும் விலை மதிப்பில்லா 5 வீடுகள். தெரிந்துகொள்ளுங்கள்.


1 . Antilia
இந்த மொத்த பட்டியல்ல முதல் இடத்துல இருப்பது நம்ம இந்தியால சவுத் மும்பைல இருக்க Antilia. இது பணக்காரர்கள் பட்டியல்ல இருக்க ரிலையன்ஸ் கம்பெனியோட chairman முகேஷ் அம்பானி ஓட வீடுதான் இது. உலகத்துலயே விலை உயர்ந்த பட்டியல்ல இடம் பிடிச்சிருக்க இந்த வீட்டை அம்பானி தன்னோட மனைவிக்கு பிறந்தநாள் பரிசா வழங்கியிருக்காரு. இந்த வீட்டை பராமரிக்க மொத்தம் 600 வேலையாட்கள் இங்க இருக்காங்க.

https://news.ibctamil.com

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

‘ஸ்டாக் பார்ட்டி’ புத்தகம் ‛பிளேபாய்’ ஆன கதை! #RIPHughHefner

 
 

அன்று வேலை முடிந்து திரும்பிய ஹெப்னர் சரியான மனநிலையில் இல்லை. அப்போது ‘எஸ்கொயர்’ என்ற புகழ்பெற்ற ஆண்கள் இதழின் விளம்பர ஆலோசகராகவும், காப்பி எடிட்டராகவும் பணிபுரிந்து வந்தார் ஹு ஹெப்னர். பின்னாளில் 'பிளேபாய்' இதழின் நிறுவனர். தொடர்ந்து தன் உழைப்பும் கற்பனைத் திறனும் தேவையின்றி மாதச்சம்பளத்துக்கு வீணாகப் போவதாக உணர்ந்ததால் வந்த மனக்குழப்பம் அது.

பிளேபாய்

 

ஏன், நீங்களே ஒரு பத்திரிகை தொடங்கக்கூடாது?” - என்று அப்போது ஹு ஹெப்னரின் மனைவி மில்ரெட் வில்லியம்ஸ் கேட்டார். தன் கல்லூரித் தோழியைத்தான் காதலித்து மணம் முடித்திருந்தார் ஹெப்னர். ‘சரியான யோசனைதான், பணம்?' என்று புருவம் உயர்த்திய ஹெப்னரிடம், தன் சேமிப்பு ஐந்நூறு டாலரை எடுத்து நீட்டினார். அதன் பின்னர் ஹெபனரின் சகோதரர், தாய் எனக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து 8,000 டாலர்கள் சேர்ந்தன.  இளங்கலை - சைக்காலஜி படித்திருந்த ஹெபனருக்கு ஆண்களின் மனநிலையைப் படம் பிடிப்பது இலகுவாக இருந்தது. அவர்களின் விருப்பமும் ஆர்வமும் எப்படி இருக்கும் என்று அவரால் புரிந்துகொள்ளமுடிந்தது. மேலும், மிகக்கொடுமையான இரண்டாம் உலகப்போர் முடிந்து, அமெரிக்க ஆண்கள் 'ரிலாக்ஸ்' நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த காலகட்டம் அது. 

முதல் அடி, அது எதிராளியை ஒரே குத்தில் வீழ்த்திவிடும்  'டைனமைட் பஞ்ச்' ஆக இருக்க வேண்டும். என்கிற எண்ணத்துடன் திரிந்து கொண்டிருந்தவரிடம், ஒரு கலிபோர்னியா போட்டோகிராபரிடம் அன்று உலகையே கலக்கிய மர்லின் மன்றோவின் முழு நிர்வாணப்படம் இருப்பது தெரியவந்தது. காலண்டருக்காக எடுக்கப்பட்ட அந்தப் படம் என்ன காரணத்தினாலோ பயன்படுத்தப்படவில்லை. பார்த்தவுடன் பிடித்துவிட்டது. உடனே அதை அனைத்து உரிமைகளுடன் விலைக்கு வாங்கினார்.  நடுப்பக்கத்தில் சிவப்பு நிற வெல்வெட் துணியில் அமர்ந்திருக்கும் மர்லின் மன்றோவின் படம் அச்சாகியது. தன் புதிய புத்தகத்துக்கு 'ஸ்டாக் பார்ட்டி' என்று பெயர் வைத்தார். அப்போது 'ஸ்டாக்' என்கிற பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. கிட்டதட்ட அந்தப் பெயரிலேயே புதிய பத்திரிகை வரவிருப்பதை அறிந்த அந்தப் பத்திரிகை, ஹெப்னருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. அதன்பின்னர் பத்துக்கும் மேற்பட்ட பெயர்களை தன் விற்பனையாளர்களுடன் பரிசீலித்தபோது அவரின் மனைவி மில்ரெட் சொல்லிய பெயர்தான் 'பிளேபாய்'. 

ஒருவழியாக 1953-ம் ஆண்டு பிளேபாய் இதழ் வெளியானது. ஆனால், அது தனிச்சுற்றுக்கான பத்திரிகையாகத்தான் வெளிவந்தது. காரணம் அன்றைய அமெரிக்க அரசு சென்சார் விவகாரங்களில் கடுமையாக இருந்ததுதான். ஆனாலும், செம ஹிட். அன்றைய தேதியில் வெளியான சில வாரங்களில் 50 ஆயிரம் பிரதி விற்ற தனிச்சுற்று பத்திரிகை பிளேபாய் மட்டுமே.

அதன்பின்னர் ஆட்டம் பிடித்து, அமெரிக்க இதழியல் துறை பெரிய பெரிய உச்சங்களை எல்லாம் தொட்டது பிளேபாய். பிளேபாயின் மூலம் வந்த வருமானத்தைக் கொண்டு ஹெப்னர் படங்கள் எடுத்தார்; டாக்குமென்ட்ரிகளை தயாரித்தார்; தொடர்ந்து  கல்வி நிறுவனங்களுக்கும், திரைப்பட பள்ளிகளுக்கும் நிதி உதவிகளை வழங்கி வந்தார். 

70-களில் கொட்டிய பணத்தை என்ன செய்வதென்றே தெரியவில்லை. 5 ஏக்கரில் விக்டோரிய கால மாடலில் கட்டப்பட்ட பங்களாவை வாங்கிய ஹு ஹெப்னர், புகழ் மிக்க 'பிளேபாய்' மேன்சனை நிறுவினார். லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் விவிஐபி பார்ட்டிகள் அனைத்துமே அங்குதான் நடந்தன.  80-களுக்குப் பிறகு சினிமாவும் விடியோவும் களத்தில் இறங்கவும் பிளேபாய் இதழ் கொஞ்சம் லாபம் குறைந்தது.  ஆனால், அதை மிகச்சாதாரணமாக தன் வருமானத்தால் ஈடுகட்டியது பிளேபாய் மேன்சன். எண்பதுகளின் இறுதியில் நிர்வாகப்பொறுப்பை தன் மூத்த மகள் கிறிஸ்டியிடம் வழங்கி வாழ்க்கையை இன்னும் கொண்டாட்டமாக அனுபவிக்கத் தொடங்கினார் ஹெப்னர். கடந்த 2015 முதல் தன் புகழ் பெற்ற நடுப்பக்க ஸ்பெஷல் படத்தையும் நிறுத்திவிட்டது. காரணம் விரல் சொடுக்கினால் மொபைலில் வரும் கவர்ச்சிப்படங்கள். 

‛என் வெற்றியை என் பெற்றோர்கள் கொண்டாடவேயில்லை. என் ஆரம்பகட்ட வேலைகளில் என் தந்தை உதவியிருக்கிறார். என் அம்மா கொடுத்த 1,000 டாலர் மிகப்பெரிய முதலீடு. அவர்கள் என்னை ஒரு வெற்றிகரமான மனிதனாகக் கண்டனர். ஆனால், பிளேபாயின் மீதும் அதன் செயல்பாடுகள் மீதும் பெரிய மகிழ்ச்சியை அவர்கள் வெளிக்காட்டவில்லை. இத்தனைக்கும் அதுதான் அவர்களை கோடீஸ்வரர்களாக்கியது’ என்று பெற்றோரால் தாம் அங்கீகரிக்கப்படாத சோகத்தை ஒருமுறை பகிர்ந்துகொண்டார் ஹூ ஹெப்னர். 

பார்ட்னராகவும், பார்ட்டியின் முடிவில் பிளேபாய் மேன்சனின் விருந்தினராகவும் ஹெப்னரின் வாழ்க்கையில் வந்து போனவர்கள் கணக்கே இல்லை. ஆனால், அதிகாரபூர்வமாகத் திருமணம் செய்தது மூன்று பெண்களை. முதல் திருமணம் கல்லூரித்தோழி வில்பிரெட், இரண்டாவது திருமணம் மாடல் பெண்ணான கிம்பர்லி கான்ராட்.  இருவரையும் விவாகரத்து செய்த ஹெப்னர், மூன்றாவதாக கிறிஸ்டல் ஹாரிசை மனம் முடித்தார். மாடலும், தொலைக்காட்சி நடிகையுமான கிறிஸ்டல் ஹாரிஸுக்கு ஹெப்னருக்கும் 60 வயது வித்தியாசம். இருவருக்கும் முதலில் ஜூன் 14-ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், திருமணத்துக்கு 5 நாள்களுக்கு முன் தமக்கு அதில் சம்மதமில்லை என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அந்த மாத பிளேபாய் இதழில், இருவரின் படம் போட்டு விற்பனைக்கு வந்துவிட்டது. பிறகு அதை ஸ்டிக்கர் வைத்து மறைத்து விற்பனை செய்தனர். மீண்டும் மனம் மாறி டிசம்பர் 31 2012-ல் திருமணம் செய்து கொண்டார் கிறிஸ்டல். இந்தத் திருமணம் ஹெப்னரின் இறுதி மூச்சு வரை நீடித்தது. சொந்தங்களும் சுற்றங்களும் சூழ அமைதியான முறையில் ஹூ ஹெப்னரின் மரணம் நிகழ்ந்ததாக அவரின் குடும்பத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹெப்னரின் வாழ்க்கையில் சில நகை முரண்கள். அவரின் பிளேபாய் புத்தகத்தைவிட அந்தப் புத்தகத்தின் சின்னமான முயல்தான் அதிக லாபத்தை 'பேடன்ட்' முறையில் ஈட்டிக்கொடுக்கிறது என்பது அதில் ஒன்று. மற்றொன்று வாழ்க்கை முழுவதும் கொண்டாட்டமும், சல்லாபமுமாக ஹெப்னர் இருக்கக் காரணமான 'பிளேபாய்' என்கிற பெயர் அவரின் முதல் மனைவி வில்பிரட் பரிந்துரைத்தது.  ஹெப்னருக்குத் தெரியாமல் அவர் இல்லாத நேரத்தில் பழைய காதலருடன் தொடர்பு வைத்துக்கொண்டதாக வில்பிரட் தாமே முன் வந்து ஒப்புக்கொண்டார்.  வில்பிரட்டின் அந்தத் துரோகம் மன்னிக்கவே முடியாததாகவும், தனது இந்த வரம்பற்ற பாலியல் வாழ்க்கைக்குக் காரணம் அதுவாகக்கூட இருக்கலாம் என்றும் ஒருமுறை ஹெப்னர் குறிப்பிட்டார். 

 

ஹெப்னரின் முதல் மனைவி வில்பிரட் தன் முன்னாள் காதலனுக்கு வைத்திருந்த செல்லப்பெயர் 'பிளேபாய்'.

http://www.vikatan.com

 

வாலிப வயதினரைக் கவர்ந்த பிளேபாய் இதழின் நிறுவனர், ஹியூ ஹெஃப்னர், 91 வயதில் காலமானார்.

  • தொடங்கியவர்

பிக்பாஸ் டைட்டில் ஜெயித்தது இவர்தான்? (புகைப்படம் கசிந்தது)

பிக் பாஸ் வீட்டில் உள்ள நான்கு பேரில் யார் டைட்டில் ஜெயிப்பார்கள் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஆரவ் தான் டைட்டில் ஜெயித்துள்ளார் என கூறப்படுகிறது. அவர் கோப்பையுடன் எடுத்த ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

 

625.0.560.320.100.600.053.800.720.160.90.png

 

625.0.560.320.100.600.053.800.720.160.90.jpg

 

http://www.cineulagam.com

  • தொடங்கியவர்

68671d8e-c4a3-4cee-b710-6eef67c7880c_002

 

அப்போது பேசிய கமல், 'இது முடிவல்ல ஆரம்பம். தொடர்ந்து இந்த உரையாடல் நடக்கும். அங்கே வருவேன். வந்தே தீருவேன். ஆசையில் வரவில்லை; அன்பில் வருகிறேன். ஆர்வத்தில் வரவில்லை; கடமையில் வருகிறேன். இங்கு கிடைக்கும் அன்பு அங்கேயும் கிடைக்கும் என நம்பிகிறேன்.' என்றார். அதன் பிறகு, பலத்த ஆரவாரத்துடனும் ஆர்ப்பரிப்பரிப்புக்கும் மத்தியில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக ஆரவை கமல் அறிவித்தார். அந்த விருதை கமல்ஹாசன் ஆரவ்வுக்கு வழங்கினார். 

  • தொடங்கியவர்
‘உரிமைப் போர் தொடுப்பதில் தவறு இல்லை’
 

image_1ae7b81c0d.jpgஉரிமைச் சண்டைகள் சுவாரஷ்யமானதுதான். குழந்தைகள் தமக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்ள அடம்பிடித்துச் சண்டையிட்டுப் பெற்றோர்களிடமிருந்து பெற்றுவிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.  

அதுபோலவே, உங்களுக்கு எது தேவையோ, அதை அடைய இறைவனிடம் உரிமைப் போர் தொடுப்பதில் தவறே கிடையாது.  

மெய் அடியார்கள் கடவுளிடம் பக்தி மேலீட்டினால், அவரிடம் கண்டிப்புடன் கேட்டு, அனைத்தையும் பெற்றமையை நீங்கள் படித்திருப்பீர்கள்.  

தாயை விட மேலான கருணையும் அன்பும் கொண்டவர் இறைவன். நாங்கள் அவர்களின் செல்லப் பிள்ளைகள். எனவே தயக்கமோ கூச்சமோ இன்றி, பிடிவாதமாக வரம் கேட்பதை அவர் இரசிப்பார். இதில் கோபிக்க எதுவும் இல்லை. கடவுளைவிட, உரிமையுடனான கரிசனை வேறு எவரிடத்தில் உண்டு? 

  • தொடங்கியவர்

ஒன்றாய் பிறந்து, ஒன்றாய் பறந்து, ஒன்றாய் ஓய்வு பெற்ற இரட்டையர் விமானிகள்

30 நிமிட இடைவெளியில் பிறந்து, விமானிகளாக தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த இரட்டையர்கள், 30 நொடி இடைவெளியில் தாங்கள் இயக்கிய விமானங்களைத் தரை இறக்கி, தங்கள் 60-வது பிறந்த நாளன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.

Nicholas (left) and Jeremy Hartபடத்தின் காப்புரிமைSTUART BAILEY/PA WIRE Image captionநிகோலஸ் ஹார்ட் (இடது) மற்றும் ஜெரேமி

கடந்த வியாழனன்று, ஹீத்ரோ விமான நிலையத்தில் தங்கள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற கேப்டன் ஜெரேமி மற்றும் கேப்டன் நிகோலஸ் ஹார்ட் ஆகியோர்தான் அந்த இரட்டையர்கள்.

ஃபிலிட்டனில் வசிக்கும் அந்த சகோதரர்களில் ஒருவரான ஜெரேமி, "தங்கள் பயணத்தை முடிப்பதற்கு இது ஒரு சிறந்த வழி," என்று கூறியுள்ளார்.

பேன்பரியில் வசிக்கும் நிக், "எல்லா விமானங்களும் கடைசி வான் பயணம் இருப்பதைப்போல, எல்லா விமானிகளுக்கும் ஒரு கடைசி வான் பயணம் இருக்கும்," என்று கூறினார்.

தங்கள் பணிக்காலத்தில் தலா 45,000 மணி நேரங்கள் வானில் பறந்துள்ள அவர்களில் ஒருவரை மற்றோருவர் என்று தவறுதலாக பலரும் பலமுறை நினைத்துள்ளனர். ஆனால், இருவருமே தலைமை விமானிகளாக இருந்ததால் ஒரு முறை கூட அந்த இரட்டையர்கள் ஒன்று சேர்ந்து ஒரே விமானத்தை இயக்கியதில்லை.

ஜெரேமி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் 1987-ஆம் சேர்ந்தார். பிரிட்டிஷ் மிட்லேண்ட் விமான நிறுவனத்தை 2012-இல் பிரிட்டிஷ் ஏர்வேஸ் கையகப்படுத்திய பின்னர், அவரும் அதே நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

ஒன்றாய் பிறந்து, ஒன்றாய் பறந்து, ஒன்றாய் ஓய்வு பெற்ற இரட்டையர் விமானிகள்படத்தின் காப்புரிமைSTUART BAILEY/PA WIRE Image captionஜெரேமி ஹார்ட் (இடது) மற்றும் நிகோலஸ்

"தனக்கு ஒரு இரட்டை சகோதரர் உண்டு என்றும், அவர் பிரிட்டிஷ் மிட்லேண்ட் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் என்றும் ஜெர்ரி அவரது சகாக்களிடம் கூறியதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி ஒருவர் என்னை பிரிட்டிஷ் மிட்லேண்ட் நிறுவனத்தின் சீருடையில் பார்த்து, நான் ஏன் வேறு சீருடையில் உள்ளேன் என்று ஆவலாக விசாரித்தார். அவரிடம் நான் கேப்டன் ஜெரேமி அல்ல என்பதை புரிய வைக்க மிகவும் சிரமப்பட்டேன்," என்கிறார் நிக்.

வியாழன்று, சுவீடனில் உள்ள கோதென்பெர்க் நகரில் இருந்து வந்த ஏர்பஸ் ஏ-320 விமானத்தை பிரிட்டிஷ் நேரப்படி, பகல்12.34-க்கு தரை இறக்கினார் ஜெரேமி.

அவரது இரட்டையரான நிக், ஜெனீவாவில் இருந்து வந்த அதே ரக விமானத்தை 30 நொடிகள் கழித்து 12.35-க்கு தரை இறக்கினார்.

"ஒரே நிறுவனத்தில் பணியாற்றி, ஒரே ரக விமானத்தை இயக்கிய இந்த இரட்டையர்கள், அவர்கள் எப்படி இந்த உலகுக்கு வந்தனரோ அதே போல ஓய்வும் பெற்றுள்ளனர். அவர்களை நாங்கள் 'மிஸ் செய்வோம்', " என்று கூறினார் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜேம்ஸ் பேஸ்னெட்.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

பூமி என்னும் சொர்க்கம் -  அண்டார்டிகாவில் எரிமலைகள்!

 

Earth%20-2
Earth%20-2
Earth%20-1

அந்தமான் தீவுகளில் எரிமலை உள்ளது. மற்றபடி இந்தியாவில் எரிமலை கிடையாது. ஆனால் ஏதோ ஒரு காலத்தில் இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டிருந்த அண்டார்டிகாவில் சுமார் 138 எரிமலைகள் உள்ளன. இவற்றில் 47 எரிமலைகள் ஏற்கெனவே அறியப்பட்டவை. அண்மையில் புதிதாக 91 எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அண்டார்டிகா பனிக்கட்டியால் மூடப்பட்ட கண்டம். இந்த எரிமலைகளில் ஒன்று மட்டும்தான் வெளியே தெரியும் வகையில் உள்ளது. அது அண்டார்டிகாவின் விளிம்பு அருகே அமைந்த டிசப்ஷன் தீவில் உள்ளது. மற்ற எரிமலைகள் பனிக்கட்டிக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன. சில எரிமலைகள் நான்கு கிலோ மீட்டர் ஆழம் கொண்ட பனிக்கட்டிக்கு அடியில் உள்ளன.

டிசப்ஷன் தீவில் அமைந்துள்ள எரிமலையின் பெயர் எரிபஸ். இது மிக உயரமானது என்பதால் பனிக்கட்டியைத் துளைத்துக்கொண்டு வெளியே தெரிகிறது. இந்த எரிமலையின் வாயில் எப்போதும் நெருப்புக் குழம்பு உள்ளது. இது கடைசியாகக் கடந்த 2011-ம் ஆண்டில் நெருப்பைக் கக்கியது.

இன்னொரு எரிமலை செயலில் இருந்தாலும் அதன் நெருப்புக் குழம்பு வெளியே வர முடியாத வகையில் அதன் வாயைப் பனிப்பாளங்கள் மூடியுள்ளன.

விஞ்ஞானிகள் ராடார் கருவிகளைப் பயன்படுத்தியும் நில அதிர்வுப் பதிவுக் கருவிகளைப் பயன்படுத்தியும் 91 புதிய எரிமலைகளையும் கண்டுபிடித்தனர். அண்டார்டிகாவை அடுத்துள்ள கடலின் அடித்தரையில் ஒரு வேளை மேலும் பல எரிமலைகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அண்டார்டிகாவைப் போர்த்தியுள்ள பனிக்கட்டிப் பாளங்களுக்கு அடியில்தான் நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு அடியில் நிலக்கரிப் படிவுகளும் உள்ளன. அண்டார்டிகா தென் துருவத்துக்கு நகர்ந்து சென்றதற்கு முன்னர் ஒரு காலத்தில் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் இருந்துள்ளதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் அண்டார்டிகாவில் நிலத்துக்கு அடியில் நிலக்கரிப் படிவுகள் உள்ளன.

பொதுவாகக் கண்டங்கள் இடம் பெயரும்போது கண்டங்களைத் தாங்கியுள்ள சில்லுகள் ஒன்றுக்கு அடியில் இன்னொன்று செருகிக் கொள்ளும். அப்படிப்பட்ட இடங்களில் எரிமலைகள் அதிகமாக இருக்கும். ஆனால் அண்டார்டிகா வட்டாரத்தில் சில்லுகள் ஒன்றிலிருந்து ஒன்று விலகுவதால் இப்படி எரிமலைகள் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அட்லாண்டிக் கடலின் வட கோடியில் உள்ள ஐஸ்லாந்தில் இதுபோன்ற நிலை உள்ளதால் அங்கு பல எரிமலைகள் உள்ளன. அதேபோல கிழக்கு ஆப்பிரிக்காவிலும் இதுபோன்று சில்லுகள் விரிவடைந்துவருகின்றன. அதன் விளைவாக அங்கும் பல எரிமலைகள் உள்ளன.

எரிபஸ் எரிமலை அமைந்த டிசப்ஷன் தீவுக்கு அருகே ஒரு முறை ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய இரு நாடுகளும் கடலுக்கு அடியில் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டன. சில்லுகள் விலகும் பகுதியில் கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய் ஊற்றுகள் இருப்பது உண்டு. அட்லாண்டிக் கடலின் வட பகுதியில் அமைந்துள்ள வட கடல் பகுதியில் நிறைய எண்ணெய் ஊற்றுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டார்டிகா சுமார் 150 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துணைக் கண்டத்துடன் ஒட்டிக்கொண்டிருந்ததாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பின்னர் அது விலகி தனியே சென்றது. பிறகு அது மீண்டும் இந்தியத் துணைக் கண்டத்துடன் வந்து மோதியது. அப்போதுதான் இந்தியாவின் தென் பகுதியில் அமைந்த கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தோன்றியதாகக் கருதுகின்றனர். கண்டங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் போது விளிம்பு நெடுக மலைகள் தோன்றுவது உண்டு. இந்தியத் துணைக் கண்டமும் அண்டார்டிகாவும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை இப்படி மோதிக்கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அண்டார்டிகா கண்டம் இந்தியாவிலிருந்து 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனாலும் ஒருவர் கன்னியாகுமரியிலிருந்து நேர் தெற்காகக் கிளம்பினால் அண்டார்டிகாவுக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம்!

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வயோதிகம் வரம்...! முதியோர் நலம் பேணுவோம்! #InternationalDayofOlderPersons

 
‘நீ இருக்க...ஒரு கருவறை இருந்தது

என் வயிற்றில்..!
நான் இருக்க...
ஓர் இருட்டறை 
கூடவா இல்லை 
உன் வீட்டில்..?'
- இந்தக் கவிதையைப்போலவேதான் இருக்கிறது இன்றைய முதியோரின் வாழ்க்கை. `மூத்த குடிமக்கள்’ என்று அழைக்கப்படும் முதியோரை கண்ணியமாகவும் கௌரவமாகவும் நடத்த வேண்டும் என்ற நோக்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, ஆண்டுதோறும் அக்டோபர் முதல் தேதியை சர்வதேச முதியோர் தினமாக வரையறை செய்துள்ளது.  அதன்படி உலகம் முழுவதும் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

முதியோர்

 

`60 வயதுக்கு மேற்பட்டோரை முதியவர்’ எனலாம் என்று வரையறுத்து வைத்திருந்தாலும், முதுமை என்பது ஒருவரின் பிறப்பிலிருந்தே தொடங்கிவிடுகிறது. குழந்தை வளர்ச்சியடையயும் ஒவ்வொரு காலகட்டத்திலும் முதுமை நிகழ்வு தொடங்கிவிடுகிறது. முதுமையில் ஏற்படக்கூடிய நிகழ்வுகளை அறிவியல்ரீதியாகப் பார்த்தால், மூளை மற்றும் நரம்பு மண்டல அமைப்பு முதுமையடையும்போது மூளையின் நரம்பு மண்டல அணுக்களின் எண்ணிக்கை குறைவடையத் தொடங்கிவிடுகின்றன. மேலும், முதுமையும் இறப்பும் மனிதன் சந்திக்கும் தவிர்க்க முடியாத நிலைகளாகும்.

முதியோருக்கு சுதந்திரம் கொடுப்பது, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் பங்களிப்பை எல்லா விஷயங்களிலும் பெறுவது, மதிப்பது போன்றவை சர்வதேச முதியோர் தினத்தின் முக்கிய அம்சங்கள். மனிதர்களுக்கு வயது கூடக்கூட அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்தல், முழுமையடைதல், அவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தல், சமூகம், கலாசாரம், அரசியல் போன்றவற்றிலும் அவர்களது பங்களிப்பை உறுதிசெய்தல் ஆகியவை அவசியம்.

முதியோர்

மனிதகுலம் நாகரிகம் அடையாத காலகட்டத்தில் முதியோர் நலம் பேணுதல் என்பது நமது கடமைகளுக்கான செயல் திட்டத்தில் இல்லவே இல்லை. பழங்காலத்தில் சீனா போன்ற நாடுகளில் முதுமை எய்தியதும், அவர்களைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவதும், சங்க காலத்தில் தமிழகம் உள்ளிட்ட நமது பகுதிகளிலேயே முதுமக்களுக்காக தாழிகள் உருவாக்கி வைத்திருந்ததை வரலாறு சொல்கிறது. விலங்குக்கும் மனிதனுக்கும் வேறுபாடு உள்ளது என்பதை மனிதன் பிரித்துணர ஆரம்பித்த பின்னர், பெற்றோரைப் பராமரிப்பது என்பது நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதன் படிநிலைகளே அன்பு, பாசம், காதல் போன்றவை. 

இத்தகைய மாற்றங்கள் மனிதனைப் போராட்டங்களில் வெற்றியடையச் செய்ததுடன், வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் ஆக்கின. ஆனால், இன்றைக்கு எல்லாமே வியாபாரமயமாக்கப்பட்டு, அது வாழ்க்கையில் ஊடுருவியதன் விளைவு... எதையும் நியாயப்படுத்தும் சுயநலக்காரர்கள் முதலில் பலி கொடுத்தது இத்தகைய பொறுப்புகளையே. இதன் இறுதி என்பது மனிதாபிமானம் மரித்துப்போவதாகத்தான் இருக்கும். நாம் அவற்றை உணர்ந்திருந்தாலும், அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதில் நமக்கு எவ்விதத் தயக்கமும் தேவையில்லை. எதிர்காலம் நமக்காகவும் காத்திருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

முதுமை

யதார்த்தம் இப்படியிருக்க, இன்றைக்கு, ‘முதியோர் நலம்’ என்பதும் கேள்விக்குறியாகியிருக்கிறது. மருத்துவர்களின் ஆய்வின்படி பெரும்பாலான முதியோரின் உடல்நலக்குறைவுக்குக் காரணம் மனஅழுத்தம், கவலைகள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய பதற்றம் என்று சொல்லப்படுகிறது. இவை ஜீரண மண்டலத்தைப் பாதிப்புக்குள்ளாக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, கல்லீரல் பாதிக்கப்படலாம். இதன் விளைவாக நெஞ்சில் எரிச்சல், கைகால் வலி, சத்துக் குறைவு, மூச்சுக்கோளாறு மற்றும் தொடர்ச்சியான இருமல் போன்றவை ஏற்படும். இவை 40 வயதிலேயே தொடங்கிவிடும் என்பது அதிர்ச்சித் தகவல்.

முதுமை தவிர்க்க முடியாதது என்றாலும், முதுமையில் வரக்கூடிய நோய்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தடுப்பதில் முன்னெச்சரிக்கை அவசியம். அதுபற்றி முதியோர் நல மருத்துவர் டாக்டர் வி.ஶ்ரீனிவாஸ் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்...டாக்டர் ஶ்ரீனிவாஸ்

“முதியோர் என்றில்லை. எல்லா வயதினருக்குமே நோய்கள் வரும், போகும். ஆனால், முதியோர் நோய் வருவதற்கு முன்னரே தங்களைக் காத்துக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். தினமும் 20 நிமிடம் நடைப்பயிற்சி செய்வது நல்லது.  எலும்புகள் பலவீனமடையாமலிருக்க `ஜாகிங்' போவது நல்லது. நல்ல உடல்நிலை இருப்பவர்கள் இவற்றைச் செய்துவந்தால், பிற்காலத்தில் எலும்புகளில் பிரச்னை வராமல் காத்துக்கொள்ளலாம். 

நடைப்பயிற்சி மற்றும் ஜாகிங் மேற்கொள்பவர்கள் எப்போதும் தனியாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இந்தப் பயிற்சிகளின்போது கால் வழுக்கி கீழே விழுதல் அல்லது திடீர் நலக்குறைவு ஏற்படுதல்  ஆகியவை உண்டாகி, மிகுந்த தொல்லைகளைத் தரும். ஆகவே, கூடியவரை குழுவாகச் சென்றால், ஒருவர் மற்றவருக்கு உதவ முடியும். 

வயதாக ஆக தங்கள் உணவுமுறைகளை நிறையவே மாற்றியிருப்பார்கள். மலச்சிக்கல் பிரச்னை பலரையும் பாடாகப்படுத்திவிடும் என்பதால், அதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கேற்ப உணவுமுறையைக் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

மழைக்காலங்களில் நிமோனியா உள்ளிட்ட காய்ச்சல்கள் பாதிக்கும் என்பதால், அதற்கு தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது நல்லது. முதியவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு என்பதால், முன்னெச்சரிக்கை தேவை. மேலும், சதை மற்றும் எலும்புகளில் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்க ரத்தப் பரிசோதனைகள் செய்து, தேவைக்கேற்ப உணவுமுறைகளை அமைத்துக்கொண்டு, வைட்டமின் டி மாத்திரைகளை உட்கொள்வது நல்லது. மழைக்காலங்களில் நீர்நிலைகள் மற்றும் தண்ணீர் தேங்கிய சாலைகளில் நடக்கும்போதும், கழிவறைகளிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அதுபோன்ற இடங்களில், தடுமாறி கீழே விழாமல் பார்த்துக்கொள்வது அவசியம். 
முதியவர்களை மற்றவர்களைப்போலப் பார்க்காமல் அவர்களது உடல் மற்றும் மன நலனில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கவேண்டியது அவசியம். மேலும் அவர்களை ஊக்கப்படுத்தும்விதமாக தன்னம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். வயதானவர்கள் தனிமையைத் தவிர்த்து, குழுவாகச் செயல்பட அறிவுறுத்துவோம். குழுவாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணம், நகர்ப்புறங்களில் உள்ளவர்களிடம் நல்லதொரு விழிப்புஉணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இது இப்போது கிராமப்புறங்களில் உள்ளவர்களிடமும் பரவிவருகிறது. இது நல்லதொரு தொடக்கம் என்றே நான் கருதுகிறேன்'' என்றார்.

 

‘வயதாகிவிட்டது’ என்று ஓய்ந்து, சோர்ந்துபோய் மூலையில் முடங்கிக் கிடக்காமல் இந்த உலகில் இருக்கும் காலம் வரை நல்ல உடல்நலத்துடன் வாழ இந்த முதியோர் தினத்தில் அவர்களை வணங்கி வாழ்த்துவதும், பாதுகாப்பதும் நம் கடமையே!

#InternationalDayofOlderPersons

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சிவாஜி- ஒரு சரித்திரம்! #HBD_SivajiGanesan

தமிழ்சினிமாவின் பல்கலைக்கழகம் என புகழ்கொண்ட நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் 90-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

சிவாஜி

 

தமிழ்சினிமா பாடல்களால் ஓடிக்கொண்டிருந்த காலத்தில் அதை தன் வசனநடிப்பால் மறக்கடித்து முற்றிலும் காட்சியமைப்பு மற்றும் வசனங்களின்பால் சினிமா மீது மக்கள் ஈர்க்கப்பட காரணமானவர்களில் தவிர்க்கவியலாதவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன். ஒப்பிட முடியா நடிப்பாலும், அயரா உழைப்பாலும் பல முத்தான படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த வள்ளல். கணேச மூர்த்தி என்ற இயற் பெயரோடு சின்னையா மன்றாயர் மற்றும் ராஜாமணி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக திரு சிவாஜி கணேசன் 1928 ஆம் வருடம் அக்டோபர் 1-ம் தேதி பிறந்தார். 

 

இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகமாக உயிர்ப்பெற்றார். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்களாய் இருப்பார்கள். 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்தனை எதிர்ப்புகளையும் கடந்து நடிகர் திலகமாக உருப்பெற்று, மறைந்தாலும் இன்றும் குன்றா புகழுடனே திகழ்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

http://www.vikatan.com/

Bild könnte enthalten: 1 Person, Text

 

 

அன்பு இல்லமாகத் திகழ்ந்த சிவாஜியின் அன்னை இல்லம்! #HBDSivajiGanesan

 

சிவாஜி கணேசன்

ணர்வுபூர்வமான நடிப்பால், தமிழகத்தைக் கட்டிப்போட்ட மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், தொடக்கத்தில் சென்னை ராயப்பேட்டை பெசன்ட் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வீட்டின் பின்னால் இருந்த மற்றொரு வீட்டில் குடியிருந்தார். முதலில் குடியிருந்த வீட்டை அலுவலகமாகப் பயன்படுத்தினார். பின்னர் தியாகராய நகரில் தெற்கு போக் சாலையில் வேறு ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாங்கி, மாற்றங்கள் செய்து குடிபோனார்.

 

ஆங்கிலேயருக்குச் சொந்தமான வீடு  

இந்த வீட்டுக்கு 'அன்னை இல்லம்' என்று நடிகர் திலகம் பெயர் வைத்தார். ஒன்றரை ஏக்கர் அளவில் கட்டப்பட்டுள்ள அன்னை இல்லம் என்ற இந்த மாளிகை, பார்ப்பதற்கு ஒரு சிறிய வெள்ளை மாளிகை போலவே இருக்கிறது. அன்னை இல்லம் வீட்டை சிவாஜி வாங்குவதற்கு முன்பு யாரிடம் இருந்தது என்பது குறித்தத் தகவல்களை 'சென்னை வரலாற்று ஆய்வாளர்' ஶ்ரீராம் எழுதியுள்ளார்.

“இந்திய அரசின் ஐசிஎஸ் அதிகாரியாக இருந்த ஜார்ஜ் டி.போக் என்பவருக்குச் சொந்தமான வீடாக இது இருந்தது. இவர் 1921-ம் ஆண்டு ஆங்கிலேய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையராக இருந்தார். வருவாய் வாரியத்தின் உறுப்பினர். தலைமைச் செயலாளர் ஆகவும் இருந்திருக்கிறார். 1930-கள் மற்றும் 1940-களில் சென்னை மாகாணத்தின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். ஒடிசா (அப்போதைய ஒரிசா) மாநிலத்தின் கவர்னராகவும் இருந்தார். ஜார்ஜ் டி போக் வசித்து வந்ததால்தான் இந்த வீடு இருந்த தெரு முன்பு, தெற்கு போக் ரோடு என்று  அழைக்கப்பட்டது.

பின்னர், சர் குர்மா வெங்கட ரெட்டி நாயுடு என்பவரால் இந்த வீடு வாங்கப்பட்டது. இவர் இம்பீரியல் சட்டப்பேரவைக் கவுன்சிலில் உறுப்பினராக இருந்தார். சென்னை மாகாணத்தின் செயல் கவர்னராகவும் இருந்தார். சென்னை மாகாணத்தின் பிரதமராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இருந்தார். 1950-களின் தொடக்கத்தில் இஸ்லாமியர் ஒருவர் இந்த வீட்டை வாங்கினார். இந்த இஸ்லாமியர் மூக்குப் பொடி தயாரிப்பில் ஈடுப்படார்.

தந்தை பெயரில் வீடு

இந்த இஸ்லாமியரிடம் இருந்து1959-ம் ஆண்டு தமது தந்தை பெயரில் சிவாஜி இந்த வீட்டை வாங்கினார். அதன் பின்னர் வீட்டில் மாற்றங்கள் செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. வீட்டுக்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தார். செவாலியே விருது வாங்கியதைப் பாராட்டும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் தெற்கு போக் சாலைக்கு 'செவாலியே சிவாஜி கணேசன் சாலை' என்று பெயர் வைக்கப்பட்டது".

அன்னை இல்லம்

சிவாஜியின் வீடு குறித்து சிவாஜி ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஶ்ரீனிவாசனிடம் கேட்டோம். "சிவாஜி நடித்த சில படங்களின் படபிடிப்புகள் அன்னை இல்லத்தில்தான் நடந்திருக்கின்றன. சிவாஜி வீட்டுக்குப் பல பிரபலங்கள் வந்திருக்கிறார்கள். அவர் ஜனதா தளம் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தபோது, அவரைப் பார்க்க அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் வந்தார்.  

அன்னை இல்லம், ஒரு வெள்ளை மாளிகை போல பளபளப்பாக இருக்கும். லேசாக அழுக்குத் தென்பட்டாலும், சிவாஜி அதனை சுத்தம் செய்யச் சொல்வார். தரைத்தளத்தில் உள்ள டைனிங் ஹாலில் வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாஜியின் மகள் சாந்தியின் குடும்பத்தினரும் அன்னை இல்லம் வந்து விடுவார்கள். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவார்கள். பிரியாணி, மட்டன், சிக்கன், மீன் என அசைவ உணவுகள் பரிமாறப்படும். ஓட்டுநர்கள், வீட்டைச் சுத்தம் செய்பவர்கள், சமையல்காரர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் இந்த வீட்டில் பணியாற்றினர்.

சிவாஜியின் ஆசை

சிவாஜியின் பிறந்த நாளின்போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வீட்டுக்கு வருவார்கள். அன்றைக்கு மட்டும் வீட்டுக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சிவாஜியின் சகோதரர் சண்முகம் இறந்தபோது, எம்.ஜி.ஆர் வந்திருந்தார். ஷுட்டிங் இல்லாத சமயத்தில் சிவாஜி, அன்னை இல்லம் வீட்டில்தான் இருப்பார். இயக்குநர்களிடம் கதை கேட்பது எல்லாம் ராயப்பேட்டை அலுவலகத்தில்தான் நடக்கும். சில நேரங்களில் மட்டும் இயக்குநர்களை வீட்டுக்கு வரச்சொல்லிக் கதை கேட்பார். சிவாஜி வீட்டுக்கு வராத பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம். தமது பிறந்த நாளான அக்டோபர் ஒன்று அன்று. காமராஜரை நேரில் பார்த்துதான் சிவாஜி ஆசி வாங்குவார். 1975-ம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி காமராஜரே சிவாஜியின் வீடு தேடி வந்து வாழ்த்தி விட்டுப் போனார். அதற்கு அடுத்த நாள் காமராஜர் மரணம் அடைந்தார். இந்தப் பிறந்தநாள் வாழ்த்தை சிவாஜி அடிக்கடி நினைவு கூறுவார்.  

2010-ம் ஆண்டு, சிவாஜி வீட்டின் முன்பு இருக்கும் சிறிய பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். இன்றளவும் பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு குடும்பத்தினர் இங்குதான் கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர். சிவாஜியின் சகோதரர் சண்முகத்தின் குடும்பத்தினரும் இங்குதான் வசிக்கின்றனர். கூட்டுக் குடும்பமாக வாழ்வதை சிவாஜி பெருமையுடன் கருதினார். அவரது ஆசை அவர்களின் குடும்பத்தினரால் இன்றளவும் நிறைவேற்றப்படுகிறது" என்றார்.

மனித நேயர்

அந்த நாள்களில் சிவாஜி வீட்டுக்கு அடிக்கடி பல சினிமா உலக விஐபி-க்கள் வருவதுண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இசைக்குயில் லதா மங்கேஷ்கர். சிவாஜி கணேசனின் 88-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற லதா மங்கேஷ்கர், சிவாஜி குறித்து பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். “சிவாஜி சார் என்னுடைய சகோதரர் மட்டும் அல்ல. என்னுடைய குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அவரைக் கருதினோம். குறிப்பாக என் தாய் உட்பட அனைவர் மீதும் அவர் அன்பு செலுத்தினார். 1960-களில் நான் பாடிய பெரும்பாலான பாடல்கள் சென்னையில்தான் பதிவு செய்யப்பட்டன. எனவே, அடிக்கடி நான் சென்னைக்கு வருவேன். நான் சென்னை வந்ததும், என்னைத் தேடி சிவாஜி வந்துவிடுவார். தம்முடைய டிரைவரிடம், என்னுடைய லக்கேஜ் எல்லாவற்றையும் எடுத்து காரில் வைத்து, என்னை வீட்டுக்கு அழைத்து வரும்படி சொல்வார். அவர் வீட்டில்தான் நான் தங்குவேன். அவர் மிகப்பெரிய மனித நேயராக இருந்தார். ஒரு நாள் நானும், என் குடும்பத்தினரும் வழக்கம் போல் சென்னை வந்தோம். அப்போது மதுரை சென்று மீனாட்சி அம்மன் கோயிலுக்கும்  மற்றும் ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்றும் விரும்பினோம். அப்போது, சிவாஜி சார், அவருடைய மேனேஜர் மற்றும் மூன்று பேரை எங்களுடன் அனுப்பினார். எங்களுக்காக இரண்டு கார்களும் கொடுத்தார். அவருடைய பர்சனல் டிரைவர் சிவாவையும் எங்களுடன் அனுப்பி வைத்தார்.

சிவாஜியுடன் லதா மங்கேஷ்கர்

தங்க சங்கிலி பரிசு!

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர்தான், எங்கள் குடும்பத்துக்கும், அவரது குடும்பத்துக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. பின்னர் ஒரு நாள் அவருடைய வீட்டில் இரவு உணவு சாப்பிட்டோம். அப்போது அவர் நடித்த புதிய தமிழ் திரைப்படத்தையும் அங்கு திரையிட்டார். அதன் பின்னர் 12 நாள்கள் வரை சிவாஜி குடும்பத்தினரின் விருந்தினர்களாக நாங்கள் தங்கி இருந்தோம். மும்பையில் நாடகம் நடிப்பதற்காக சிவாஜி வந்தபோது, என் தாய் அவருக்கு சூப் தயாரித்து அனுப்பி வைப்பார். ஒரு முறை அமெரிக்கா செல்லும் வழியில் மும்பையில் எங்கள் வீட்டுக்கு சிவாஜி வந்திருந்தார். என்னுடைய தாய் அவருடைய பூஜை ரூமுக்கு சிவாஜியை அழைத்துச் சென்றார். அப்போது சிவாஜிக்கு ஒரு தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்தார். அவர் அமெரிக்கா சென்றுவிட்டு, மீண்டும் மும்பை வழியே வந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்தார்.

சிவாஜி தந்த பரிசு

சிவாஜியின் அன்னை இல்லத்தில் ஒரு முறை பராமரிப்புப் பணிகள் நடந்தபோது, நான் ஹோட்டலில் தங்க நேர்ந்தது. ஆனால், வீட்டுக்கு ஒரு முறையாவது வந்து மதிய உணவு சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்தினார். அதன் பேரில் நாங்கள் வீட்டுக்குச் சென்றோம். சில நேரங்களில் அவர் உடல்நிலை சரியில்லாதபோதிலும், ஹோட்டலுக்கு வந்து என்னை அழைத்துச் செல்வார். அவரது மகளை அனுப்பி என்னை அழைத்து வரச் சொல்வார். எனக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைத்து எனக்குப் பரிமாறுவார்கள். இதை என் வாழ்நாளில் என்றைக்குமே மறக்க முடியாது. நாங்கள் அவருடைய தமிழ்ப் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக மும்பைக்கு தனியாக ஒரு பிரதியை அனுப்பி வைப்பார். 'தேவன் மகன்' திரைப்படத்தை நாங்கள் அப்படித்தான் பார்த்தோம். ஒவ்வொரு தீபாவளியின்போதும் சிவாஜி சார் எங்களுக்கு புதிய உடைகள் அனுப்பி வைப்பார். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சிவாஜி சாருக்கு ராக்கி கயிறு அனுப்பி வைப்போம்.

அன்னை இல்லத்தின் கடவுள்

ஒவ்வொரு முறை அவர் வீட்டில் தங்கும்போதும், வீட்டில் உள்ளவர்களிடம், ஷூட்டிங் கிளம்பும் முன்பு, எனக்கு என்னென்ன பிடிக்கும் என்பதைச் சொல்லி அதை மட்டும் பரிமாறும்படி சொல்லி விட்டுச் செல்வார். ஷூட்டிங் முடிந்து வீட்டு வந்த உடன், என்னைப் பற்றி அவர் விசாரிப்பார். சிவாஜிசாரின் தாய் இறந்தபோது, நானும், ஆஷாவும் வந்திருந்தோம். சிவாஜியின் அன்னை இல்லத்தின் கடவுளாக அவரது தாயார் இருந்து வந்தார்.

சிவாஜியின் சகோதரர்களும் அவருடைய வீட்டிலேயே வசித்து வந்தனர். அவரது சகோதரர் இறந்தபோது, சிவாஜி மிகவும் துடித்துப் போய்விட்டார். அவரது மரணத்தை பெரிய இழப்பாகக் கருதினார். சண்முகத்தின் இழப்பை சிவாஜியின் மகன் ராம்குமார்தான் சரி செய்தார்.
நடிகர் பிரபுவும் அவரது தந்தையைப் போலவே எங்களிடம் பாசமாக இருக்கிறார். சிவாஜி என் தந்தையைப் போலவே, அவர்களின் குடும்பத்தினர் மீது பாசமாக இருந்தார். கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார். சிவாஜி சாருக்கு இந்தி மொழி தெரியும். எனவே, எங்களிடம் பேசும்போது இந்தியில் பேசுவார். ஒரு முறை அவருடைய மனைவி அணிந்திருந்த நெக்கலஸைப் பாராட்டினேன். உடனே அவர், கமலா என்று அவரை அழைத்து, அதை எனக்குக் கொடுக்கச் சொன்னார். இது போன்று எனக்குப் பல பரிசுகளை அவர் கொடுத்திருக்கிறார்.

சிவாஜி சார் இறக்கும் முன்பு அவரை நேரில் சென்று என்னால் பார்க்க முடியவில்லை. அப்போது ஒரு பாடல் பதிவுக்காக, இளையராஜா சார் மும்பை வந்திருந்தார். அவரிடம் சிவாஜி சார் பற்றிக் கேட்டேன். அவர், ‘சிவாஜி சார் உடல் நிலை கவலைக்கு உரியதாக இருக்கிறது. நீங்கள் அவரை சென்று பார்த்து வாருங்கள்’ என்று சொன்னார். ஆனால், அன்று இரவு ஒரு நிகழ்ச்சிக்காக லண்டன் சென்று விட்டேன்.  நான் மீண்டும் மும்பை வந்த பின்னர், முதலில் சிவாஜி சாரை சென்று பார்க்க வேண்டும் என்று என் சகோதரி மீனாவிடம் சொன்னேன்.

 

நான் பாரத ரத்னா விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டபோது, லண்டனில் இருந்த என்னை அழைத்து சிவாஜி சார் வாழ்த்துத் தெரிவித்தார். அவர் இறப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு சிவாஜி சாரிடம் பேசலாம் என்று முயற்சி செய்தோம். முடியவில்லை. ஆனால், அன்று மாலைதான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பதை அறிந்தோம். அவர் மரணம் எங்களிடம் ஒரு பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டது. அவரைப் போன்ற ஒருவரை இனி எங்களால் பார்க்க முடியாது. தமிழ் சினிமாவின் சிங்கமாக அவர் வாழ்ந்தார். அவரையும், அவரது அன்னை இல்லத்தையும் எங்களால் மறக்கவே முடியாது” என்று லதா மங்கேஷ்கர் நினைவு கூர்ந்தார்.

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.