Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

புதிய சாதனை படைத்த `மெர்சல்' டீசர்

 

 

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறது.

DLXcDnpUMAEy5Mr.jpg

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படமான 'மெர்சல்' வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. 

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உலகளவில் புதிய சாதனையை படைத்திருந்தது என்பது நாம் அறிந்ததே. 

முதல் வாரத்திலேயே 20 லட்சம் பேரால் பார்க்கப்பட்டு இந்திய அளவில் புதிய சாதனையை படைந்திருந்த 'மெர்சல்' படத்தின் டீசர் தற்போது புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. அதாவது கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி வெளியாகிய 'மெர்சல்' டீசரை இதுவரை (312 மணிநேரங்களில்) 2 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். தென்னிந்திய சினிமாவில் இது ஒரு புதிய மைல்கல்லாக அமைகிறது. அதேபோல், 9 லட்சத்து 37 ஆயிரம் பேர் இந்த டீசரை லைக் செய்துள்ளனர். 

DLXdcYQUIAAlBng.jpg

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாளை 'மெர்சல்' படக்குழுவில் இருந்து விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

DLXdi-OVAAAB1mL.jpg

http://www.virakesari.lk

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வாகனங்களுக்கு வைப்பர் எப்படி வந்ததென்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா?

 

1903 ஆம் ஆண்டு, குளிர்காலத்தில் நியூயார்க் சென்ற மேரி ஆண்டர்சன், தனது வாகனத்தின் ஓட்டுநர், வாகனத்தின் முன்புறத்தில் படிந்த பனியை துடைப்பதற்காக ஜன்னலை திறக்க வேண்டியிருப்பதை கண்டார்.

ஒவ்வொரு முறை வாகனத்தின் கதவு திறக்கப்படும்போது, உள்ளே இருப்பவர்கள் குளிரால் அவதிப்பட்டார்கள்.

மேரியின் கவனம் இதனால் ஈர்க்கப்பட்டது, இதுபற்றி சிந்தித்த அவர் உடனே வேலையில் இறங்கினார். வாகனத்தின் உட்புறமிருந்தே ரப்பர் பிளேடை பயன்படுத்தி பனியை விலக்கமுடியுமா என்று சிந்தித்து செயலாற்றினார், வெற்றியும் பெற்றார். 1903 ஆம் ஆண்டில் அவருடைய சாதனத்திற்கு காப்புரிமை கிடைத்தது.

ஆனால் இந்த கண்டுபிடிப்பு, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்புவதாக கருதியதால் கார் நிறுவனங்கள் இந்தக் கருவியைப் பயன்படுத்தவில்லை.

ஆனால் பின்னர் வாகனங்களில் வைப்பர் பொருத்துவது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. மேரி தனது கண்டுபிடிப்பினால் எந்தவிதமான லாபத்தையும் பெறவில்லை.

வாகனங்களுக்கு வைப்பர் எப்படி வந்ததென்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா?

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

கடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற இந்தோனீசிய கிராமம்

மலைப்பாம்பை வறுத்து திண்ற இந்தோனீசிய மக்கள்படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES

ஒரு இந்தோனீசிய கிராமத்தில் ஒரு பிரும்மாண்ட மலைப் பாம்புக்கும் பாதுகாவலர் ஒருவருக்கும் இடையே நடந்த சண்டையில் அந்தப் பாம்பு தோற்று இறந்தது. பிறகு, அந்த மலைப் பாம்பை கிராம மக்கள் வெட்டிச் சாப்பிட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று சுமத்ராவின் பட்டங் கன்சால் மாவட்டத்தில் உள்ள பாமாயில் தோட்ட சாலையில், இந்த மிகப்பெரிய மலைப்பாம்பை பாதுகாவலர் ராபர்ட் நபாபன் பார்த்துள்ளார்.

26 அடி நீளமுள்ள அந்த பாம்பைப் பிடிக்க நபாபன் முயற்சித்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. பாம்பு அவரைத் தாக்கியுள்ளது. சில கிராம மக்கள் உதவியுடன் நபாபனும் அதைத் திருப்பித் தாக்கினார். கடைசியில் பாம்பு இறந்துவிட்டது.

நபாபேன் கடும் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். நபாபன் போல இந்தப் பாம்பு அதிர்ஷ்டசாலியல்ல. கிராம மக்கள், பாம்பைத் துண்டு துண்டாக வெட்டி, வறுத்துச் சாப்பிடுவதற்கு முன்பு பாம்பின் உடல் கிராமத்தில் தொங்கவிடப்பட்டது.

மலைப்பாம்பை வறுத்து திண்ற இந்தோனீசிய மக்கள்படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES

"நான் அதை பிடிக்க முயற்சித்தபோது எனது கையை கடித்தது. அதனிடம் சண்டையிட்டு தப்பித்தேன்"என இந்தோனீசிய செய்தி நிறுவனமான டெடிக்கிடம் நபாபன் கூறியுள்ளார்.

37 வயதான நபாபன், பாம்பை எதற்காகப் பிடிக்க முயற்சித்தார் என்பதற்கான சரியான காரணத்தைக் கூறவில்லை. ஆனால், இந்த பாம்பினால், கிராம மக்களால் சாலையை கடக்க முடியவில்லை என அவர் கூறுகிறார்.

அவர், பயத்தில் இருந்த மக்களைப் பாதுகாக்கவா அல்லது சாலையை சரி செய்யவா, எதற்காக பாம்புடன் சண்டையிட்டார் என்பது குறித்து மாறுபட்டத் தகவல்கள் வருகின்றன.

பாதுகாவலரின் இடது கையை மலைப்பாம்பு தனது பற்களால் கடித்ததாக உள்ளூர் போலீஸார் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.

பிறகு அவர் பெக்கன்பரு நகர மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் இன்னும் குணமடைந்து வருவதாக பட்டங் கன்சல் மாவட்ட அரசின் தலைவர் எளினார்யோன் கூறுகிறார்.

மலைப்பாம்பை வறுத்து திண்ற இந்தோனீசிய மக்கள்படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionஇந்தோனீசியாவின் சில பகுதிகள் மலைப்பாம்பு காணப்படுவது சாதாரணமான ஒன்று

நபாபன் கைகள் மோசமாகக் காயமடைந்திருப்பதாகவும், அவரது கையினை மருத்துவர்கள் வெட்ட வேண்டியதிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நல்ல சுவை

சுமத்ராவின் தொலைதூர மாவட்டமான இப்பகுதியில் மிகப்பெரிய மலைப்பாம்புகள் இருப்பது சாதாரணமான ஒன்று என அவர் கூறுகிறார். "வறண்டக் காலத்தில் குடிநீரைத் தேடி அவை வெளியே வருகின்றன. அதே போல மழையில் குளிக்கவும் வெளியே வருகின்றன. ஒரு வருடத்திற்குக் குறைந்தது 10 பாம்புகளையாவது இங்குக் காணமுடிவும்" என எளினார்யோன் கூறியுள்ளார்.

"பாமாயில் தோட்டத்தில் வழக்கமாக நிறைய எலிகள் இருக்கும். இந்த எலிகளைத்தான் பாம்புகள் வேட்டையாடுகின்றன" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்த மிகப்பெரிய மலைப்பாம்பு மக்களால் உண்ணப்பட்டது அவருக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை,"அது மிகவும் சுவையாக இருக்கும் என எனது நண்பர்களிடம் இருந்து கேள்விப்பட்டிருக்கிறேன். 7 மீட்டர் நீளமான இப்பாம்பில், நிறையக் கறி இருந்திருக்கும்!"

"பாம்பும் ரத்தத்திற்கு குணப்படுத்தும் தன்மை இருப்பதாக சிலர் நம்பும் நிலையில், அவற்றை மருத்துவத்திற்குப் பயன்படுத்தலாம்" எனவும் அவர் கூறுகிறார்.

கடந்த மார்ச் மாதம் ஒரு இந்தோனீசிய கிராமவாசி, மலைப்பாம்பின் வயிற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட ஒரு வினோத சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

ஹெலன் கெல்லர், அப்துல் கலாம், சச்சின்...­ சாதனையாளர்களின் வாழ்வை மாற்றிய ஆசிரியர்கள் இவர்கள்தாம்! #WorldTeachersDay

 
 

ஆசிரியர்

இன்று உலக ஆசிரியர்கள் தினம். உலகின் அறிவுபூர்வமான வளர்ச்சிக்கு ஆரம்ப வித்திடும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில், யுனெஸ்கோ அமைப்பு கடந்த 1994ம் ஆண்டு முதல் இந்த தினத்தைக் கொண்டாடிவருகிறது. சாதனையாளர்களில் பலர், தங்களின் வெற்றிக்குப் பின்னாலிருப்பது தங்களின் ஆசிரியர்கள்தாம் என்று நன்றியுடன் நினைவுகூர்ந்திருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பற்றிப் பார்ப்போம்... 

 

ஹெலன் கெல்லர்

ஹெலன் கெல்லருக்குக் கற்பித்த ஆனி சலிவன்!

காதுகேளாத, வாய்பேச முடியாத, பார்வையற்ற சிறுமியாக இருந்த ஹெலன் கெல்லர் தன் ஏழாவது வயதில் தன்னுடைய ஆசிரியரைச் சந்தித்தபோது, அவர் தனது 21வது வயதில் இருந்தார். அந்த நொடியிலிருந்து, ஹெலன் கெல்லரின் ஆசிரியராக மட்டுமல்ல, உற்ற தோழியாக தனது இறுதிக்காலம்வரை இருந்தார் ஆனி. 'வாட்டர்' என்ற ஒரு சொல்லை ஹெலனுக்குப் புரியவைக்க, ஹெலனின் ஒரு கையில் தண்ணீரை ஊற்றி, மற்றொரு கையில் ‘வாட்டர்’ என்று எழுதிப் புரியவைத்தார். இப்படி ஒவ்வொரு பொருளின் பெயரையும் கற்றுக்கொடுக்க, ஹெலனின் ஒரு கையில் அந்தப் பொருளையும் மற்றொரு கையில் அதன் பெயரையும் எழுதிக்காட்டிக் கற்பித்தார் ஆனி. அவரின் முயற்சியால், ஆறே மாதங்களில் 500-க்கும் மேற்பட்ட வார்த்தைகளையும், பிரைய்லி முறையையும் கற்றுக்கொண்டார் ஹெலன் கெல்லர். அவருக்கு மற்றவர்களைப்போல் பேச வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதை  அறிந்துகொண்டு, அதற்குப் பிரத்யேகப் பயிற்சியளித்தார் ஆனி. பின்னாள்களில் ஹெலன் ஒரு சாதனையாளராக உருவானதற்கு, ஆனி தன் 50 வருடகால வாழ்க்கையைத் தன் மாணவிக்காக அர்ப்பணித்ததுதான் முக்கியக் காரணம்!

அப்துல் கலாம்

அப்துல் கலாமை செதுக்கிய ஆசிரியர்கள்!

நம் அனைவருக்கும் அப்துல் கலாம், ஒரு சிறந்த ஆசிரியர் என்பது தெரியும். ஆனால் அவருக்கு, தான் அறிவியலில் சாதிக்க வேண்டும் என்ற கனவு ஏற்படுவதற்கும், அந்தக் கனவை நனவாக்குவதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களும்... அவரின் ஆசிரியர்களே! அப்துல் கலாமிற்கு ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது, அவரின் கையெழுத்து அவ்வளவு நன்றாக இருக்காது. அதற்குத் தனிப்பயிற்சியளித்தவர் அவருடைய ஆசிரியர் முத்து ஐயர். ஒரு பறவை எப்படிப் பறக்கிறது என்பதை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க, அவர்களைக் கடற்கரைக்கு அழைத்துச்சென்று கற்பித்த ஸ்ரீ சிவ சுப்ரமணிய ஐயர்தான், அப்துல் கலாமின் அறிவியல் கனவுக்கு வித்திட்டவர். கணிதத்தின் ஆழத்தை கற்பித்த பேராசிரியர் தோத்தரி ஐயங்கார், கடினமான ஒரு செயல்திட்டத்தை மூன்றே நாள்களில் முடித்துத்தரும்படி கலாமைக் கேட்ட பேராசிரியர் சீனிவாசன் என அப்துல்கலாம் வாழ்க்கை நல் ஆசிரியர்களால் செதுக்கப்பட்டது!

சச்சின்

சச்சின் டெண்டுல்கரின் அற்புதப் பயிற்சியாளர்!

நல்ல ஆசிரியர்கள் படிப்புக்கு மட்டுமல்ல, வாழ்வின் எல்லா திசைகளுக்கும் தேவை. விளையாட்டுக்கும். இந்தியக் கிரிக்கெட்டின் தெய்வமாகப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் வெற்றிக்கு முதல் அடிக்கல் நாட்டியது அவரின் முதல் பயிற்சியாளர் ராமகாந்த் அச்ரேகர்(Ramakant Achrekar). சச்சின் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம், ஜூனியர் டீமில் விளையாடிக்கொண்டிருந்தார். அவருக்கு ராமகாந்த் பயிற்சி ஆட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், சச்சின் அதற்குச் செல்லாமல், சீனியர் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளைக் கைதட்டி கண்டுகழித்தார். ராம்காந்த் சச்சினிடம், 'பயிற்சி ஆட்டத்துக்குச் சென்றாயா?' எனக் கேட்க, 'இல்லை, நம் சீனியர் அணிகளின் ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தேன்' என்றார் சச்சின். ராம்காந்த் மிகவும் கோபமாக, 'மற்றவர்களின் ஆட்டத்துக்குக் கைத்தட்டுவதை நிறுத்திவிட்டு, நீ கைத்தட்டல் வாங்கும்படி ஏதாவது செய்' என்றார். இன்றும் சச்சினுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும் கைதட்டல்களுக்கு எல்லாம் முதல் விதை, ராம்காந்த் போட்டதுதான்! 

 

சாதனையாளர்கள் மட்டுமல்ல, சாமான்யர்களும் தங்கள் வாழ்வின் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிக்கு உரியவர்களே! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

ஆளில்லா தீவில் குடியேற ஆள் தேடும் பிரான்ஸ்

ஆளில்லாத்தீவில் வசிக்க உங்களுக்கு விருப்பமா? பிரிட்டனி கடற்கரையை ஒட்டிய கிமினெஸ் தீவில் குடியேற தம்பதி தேவை என பிரான்ஸ் அரசு விளம்பரம் செய்துள்ளது.

அங்குள்ள சிறிய பண்ணை உற்பத்தியை பயன்படுத்தி இந்த தம்பதி அங்கே வாழவேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன் இத்தகைய விளம்பரத்தைப் பார்த்து அங்கே குடியேறிய தம்பதி தற்போது வெளியேற முடிவெடுத்துள்ளதால் தற்போதைய விளம்பரம் வெளியிடப்படுகிறது.

  • தொடங்கியவர்

பெரியார் போற்றிய வள்ளலாரின் பிறந்த நாள் இன்று!

 

கடவுள் மறுப்பு என்ற ஆயுதம் கொண்டே எல்லாவிதமான மூட நம்பிக்கைகளையும் எதிர்த்தவர் பெரியார். சாதி வேறுபாடுகள் ஒழிய மதம் ஒழிந்தே ஆக வேண்டும் என்று களமாடியவர் பெரியார். இதெல்லாம் எங்களுக்கே தெரியும் என்கிறீர்களா? அப்படிப்பட்ட பெரியாரே வள்ளலார் சமயக்கருத்துகளைப் போற்றிப் புகழ்ந்து அந்த நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டு இருக்கிறார் தெரியுமா? 

வள்ளலார்

 

1935-ம் ஆண்டு திருவருட்பா நூலின் ஆறாம் திருமுறையின்  நூறு பாடல்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியானது. இந்த நூலைத் தொகுத்தவர் சாமி. சிதம்பரனார். குடியரசு பதிப்பகம்தான் இதை வெளியிட்டது. இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு என்ற பெயரில் குடியரசுப் பதிப்பகத்தின் மூன்றாவது வெளியீடாகப் பெரியார் வெளியிட்டார். மேலும், திருவருட்பாவின் இந்த வெளியீடு எல்லா மக்களையும் சென்று சேர வேண்டும் என்று எண்ணி மலிவு விலை பதிப்பாகவும், கட்டணச் சலுகை அளித்தும் விற்பனையை அதிகரித்தார். இந்த நூலை வியந்து அடிக்கடி விளம்பரமும் செய்தார் பெரியார். கடவுளை மறுத்த பெரியார் அப்படி எதைக்கண்டு வியந்து திருவருட்பாவில் ஆறாம் திருமுறையை வெளியிட்டார் என்று நீங்கள் எண்ணலாம். 

பெரியார்

ஆரம்ப திருவருட்பா பாடல்களில் கடவுளை எண்ணி பாடிய வள்ளலார், பின்னர் மாறுதலடைந்து ஒளியை மட்டுமே வணங்கும் நிலைக்கு வந்தபிறகு எழுதியவைதாம் இந்த ஆறாம் திருமுறைப் பாடல்கள். இதில் பெரும்பாலும் சாதி, வர்ணாசிரம முறைகளைக் கண்டித்தே எழுதினார். மேலோர், கீழோர் என்ற பாகுபாடே இல்லாமல் சமரச சுத்த சன்மார்க்க நெறியை போதிக்க முற்பட்டார் வள்ளலார். உருவ வழிபாட்டை முற்றிலும் விலக்கி, ஆன்ம ஜோதியே கடவுள் என்று விளக்கினார் வள்ளலார். ஆண், பெண் வேறுபாடின்றி கல்வியைக் கொடுக்க வலியுறுத்தினார். சமயத்தின் பேரால் பலி கொடுப்பதைக் கண்டித்தார். கணவன் இறந்தால் மனைவி தாலி அறுக்க வேண்டாம்.  சமய நூல்களை விட திருக்குறளைப் படிப்பது சாலச் சிறந்தது என்றார் வள்ளலார்.

 

எல்லோருக்கும் படிப்பு அவசியம் என்று ஊர்தோறும் சென்று பரப்பினார். போலி சமயவாதிகளைக் கண்டித்தார். இப்படி எல்லா வகையிலும் பெரியாருக்கு முன்னோடியாக வள்ளலார் இருந்தார். ஆன்மிகத் தலைவராக, குருவாக வள்ளலார் இருந்தாலும், அவரது மூட நம்பிக்கைகளுக்கு எதிரான புரட்சிகர கருத்துகள் பெரியாரை அதிகம் கவர்ந்தன. அதனாலேயே வள்ளலாரின் திருவருட்பாவை வெளியிடவும் வைத்தது எனலாம். மூடநம்பிக்கைகளை மிரண்டோடச் செய்த ஆன்மிக வழிகாட்டி வள்ளலாரின் பிறந்த நாள் இன்று. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

திடமாக இருந்தால் தான் “டோனட்“

 

அமெரிக்காவின் டலாஸ் நகரில் இயங்கிவரும் ஹர்ட்ஸ் டோனட் உணவகத்தில் டோனட்டினை வீட்டிற்கு கொண்டுவந்து தரும்படி கோரும் வாடிக்கையாளர்களுக்கு “திடமாக இருந்தால்தான் டோனட்“ என விநோதமான முறையில் அதனை வழங்குகிறார்கள்.

பொதுவாக இந்த உணவகத்தில் ஹால்லோவீன் பண்டிகையின் போது விநோதமாக ஒப்பனை செய்துகொண்டு வலம்வருவதாகவும் இதன் போது விற்பனை சிறப்பாக நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

திடமாக  இருந்தால் தான் “டோனட்“

மேலும் அதை ஆண்டு முழுவதும் செய்தால் என்ன என்று தோன்றியதால். பயங்கரமான கோமாளி வேடமிட்ட மனிதர்களை டோனட் விற்பனைக்கு அனுப்பும் திட்டத்தை ஆரம்பித்தோம் என உணவகத்தின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

திடீரென்று கோமாளியைப் பார்த்தால் பயம் ஏற்படும். ஆனால் சில நிமிடங்களில் அந்த உருவத்தை ரசிக்க ஆரம்பித்துவிடுவார்கள் எனவே தாம் இந்த திட்டத்தை முன்னெடுத்ததாக கூறுகின்றனர்.

சாதாரண விற்பனை கட்டணத்தை விடக் கூடுதலாக 328 ரூபாய் கொடுத்தால் கோமாளி மூலம் விற்பனை செய்வோம் என அறிவித்துள்ளனர்.

பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் விருந்தினர்கள் வருகை, விழாக்கள், பண்டிகைகள் போன்ற நிகழ்ச்சிகளின்போது கோமாளி மூலம் டோனட் விற்பனையினை கேட்பதாக கூறப்படுகிறது.

கோமாளி அவர்கள் வீட்டுக்கு டோனட்களுடன் செல்லும்போது மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் பல மடங்கு அதிகரித்துவிடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரம்பத்தில் இந்தத் திட்டம் வெற்றி பெறுமா என்று அச்சம் இருந்த போதிலும். சாதாரண விற்பனையைவிட கோமாளி விற்பனையை அதிக அளவில் மக்கள் விரும்ப ஆரம்பித்துவிட்டது எங்களுக்கே ஆனந்த அதிர்ச்சியாக இருக்கிறது என உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இதுவரை கோமாளி விற்பனையை செய்து வந்ததாகவும் இனி எந்த நேரமும் இந்தச் சேவையைக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டதாகவும். இந்த வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள நாங்கள் இன்னும் பல புதுமையான விற்பனை திட்டங்களைக் கொண்டு வர எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்
‘காதலின் கண்ணியம் எமக்கேயானது’
 

image_4cb15c41d9.jpgநிலவை மேகம் இலேசாக மறைத்தாலும் அதனூடாக அது எம்மைத் தனது தண் ஒளியூடாகக் காட்டி நிற்பது அழகுதான்.

அதுபோலவே உன்விழியூடாக நாணம் திரையிடினும் என்னை கள்ளத்தனமாக நோக்குதலும் பேரழகு.

எவருக்கும் தெரியாமலே என்னை நீ ஊடுருவுதல் உனது பிரேமையின் உயிர்ப்பு அன்றோ. மௌனம் மிகு ஆழத்தை, அதன் அழுத்தத்தைப் புரிவேன் நான். ஜென்மாந்திரப் பிணைப்பு இது. காதலின் கண்ணியம் எமக்கேயானது.

வெட்கம் களைந்து, புற உலக பார்வை துறந்து, கட்டிப் பிடித்து முத்தம் பகர்வதுதான் முதன்மைக் காதல் என எண்ணும் நவ மாந்தர் காதல் யுகம் இன்று.

இதயப் பகர்வு இதமானது. தங்களுக்குள் பதியப்பட்டவை. தெருவோரத்தில் காட்டப்படும் திரைப்படக் காட்சி உண்மைக்காதல் அல்ல.

மேன்மை மிகு காதல் சாம்ராஜ்யத்தில் பேசப்படுவது காதலி, காதலனின் விழிகள் காட்டும் மௌன மொழி. நின் வழியினையே நான் தொடர்கின்றேன். ஆனால் இன்று நடப்பது என்ன?

காதல் களியாட்டமாக அரதங்கேற்றப்படுகின்றன. விகாரமாய் தேகத்தை தீயாக்கி, நெஞ்சத்தை நொருக்கிக் கொள்கின்றார்கள். காதலர்கள் காதலைக் கௌரவப்படுத்துவார்களாக.

  • தொடங்கியவர்

ரோம் இத்தாலியின் தலைநகரமாக ஆன நாள் (அக்.5- 1870)

 

உலகில் அழகு என்ற சொல்லுக்கு ரோம் நகரையும் கூறலாம். ஏனென்றால் ரோமர்கள் அப்படி அந்நகரை வடித்திருப்பர். 'எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே', 'இறப்பதற்கு முன் ரோமை பார்க்க வேண்டும்' என்னும் வாக்கியங்கள் அதன் சிறப்புக்கு உதாரணம் ஆகும். ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ரோம் கலாச்சாரமே வழிகாட்டி ஆகும். இதுவே இத்தாலியின் மக்கள்தொகை மிக்க நகரமும் ஆகும். இந்நகரில் சுமார் 2.8 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இந்நகரில் பேசப்பட்டு வந்த இலத்தின் மொழியே திரிந்து ஐரோப்பியக் கண்டம்

 
 
 
 
ரோம் இத்தாலியின் தலைநகரமாக ஆன நாள் (அக்.5- 1870)
 
உலகில் அழகு என்ற சொல்லுக்கு ரோம் நகரையும் கூறலாம். ஏனென்றால் ரோமர்கள் அப்படி அந்நகரை வடித்திருப்பர். 'எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே', 'இறப்பதற்கு முன் ரோமை பார்க்க வேண்டும்' என்னும் வாக்கியங்கள் அதன் சிறப்புக்கு உதாரணம் ஆகும்.

ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ரோம் கலாச்சாரமே வழிகாட்டி ஆகும். இதுவே இத்தாலியின் மக்கள்தொகை மிக்க நகரமும் ஆகும். இந்நகரில் சுமார் 2.8 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இந்நகரில் பேசப்பட்டு வந்த இலத்தின் மொழியே திரிந்து ஐரோப்பியக் கண்டம் முழுவதும் வெவ்வேறு மொழியாக மாறியுள்ளது. ஆனால் தற்போது ரோமர்கள் பேசுவது இத்தாலிய மொழியாகும்.

இந்நகரம் இத்தாலிய மூவலஞ்சூழ் தீவகத்தில் நடு மேற்குப் பகுதியில் அனியென் ஆறானது டைபர் ஆற்றில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. 1870-ம் ஆண்டு அக். 5-ந்தேதி ரோம் இத்தாலியின் தலைநகர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதே தேதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1795 - கேணல் பாபற் என்பவரின் தலைமையில் பிரிட்டன் படையினர் மன்னாரை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
 
* 1847 - சாமுவேல் பிஸ்க் கிறீன் பருத்தித்துறையை வந்தடைந்தார்.
 
* 1849 - ஹங்கேரிய விடுதாலைப் போரின் முடிவில் போராளிகள் 13 பேர் அராட் (தற்போது ருமேனியாவில்) என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர்.
 
* 1854 - இங்கிலாந்தில் நியூகாசில் மற்றும் கேற்ஸ்ஹெட் நகரங்களில் பரவிய பெருந் தீயில் 54 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணகானோர் காயமடைந்தனர்.
 
* 1870 - ரோம் இத்தாலியின் தலைநகரானது. * 1889 - தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையின் உச்சி முதன் முதலில் எட்டப்பட்டது.
 
* 1889 - தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்தைக் காண்பித்தார். * 1890 - யாழ்ப்பாண நகரில் சின்னக்கடை எனப்படும் முக்கிய சந்தையில் கடைத்தொகுதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர்.
 
* 1903 - ஆஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.
 
* 1908 - ஆஸ்திரியா தன்னுடன் பொஸ்னியா ஹெர்செகோவினாவை இணைத்துக் கொண்டது.
 
* 1922 - முதலாம் உலகப் போர்: இஸ்தான்புல்லில் இருந்து பெரும் வல்லரசுகள் வெளியேறின.
 
* 1927 - முதலாவது பேசும் படம் த ஜாஸ் சிங்கர் வெளியானது.
 
* 1939 - இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கடைசி ராணுவத்தினர் தோற்கடிக்கப்பட்டனர்.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

பூமி என்னும் சொர்க்கம்  கடலில் எவ்வளவு ஆழம் செல்லலாம்?

 

 
Earth%20-2

தொலைக்காட்சியில் ஒருவர் முதுகில் காற்று சிலிண்டரை மாட்டிக்கொண்டு கடலுக்குள் மேலும் கீழுமாக நீந்தி மீன்களைப் படம் எடுப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதைப் பார்க்கும்போது நாமும் அப்படிக் கடலில் நீந்த மாட்டோமா என்று ஆசை ஏற்படும்.

கடலில் சில அடி ஆழம் வரை செல்வதானால் பயிற்சி எதுவும் தேவையில்லை. ஆனால் மேலும் மேலும் ஆழத்துக்கு இறங்குவதானால் கட்டாயம் பயிற்சி தேவை. அத்துடன் பல விதிமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும். காற்றின் எடையும் நீரின் எடையும் இதற்குக் காரணம்.

நம் தலைக்கு மேலே உள்ள காற்றானது நம்மை நாலாபுறங்களிலுமிருந்து சதுர சென்ட்டி மீட்டருக்கு ஒரு கிலோ வீதம் அழுத்திக்கொண்டிருக்கிறது. பிறந்தது முதல் நாம் இதற்குப் பழகி விட்டோம் என்பதால் இந்த அழுத்தத்தை நாம் உணருவதில்லை. இதைக் காற்றழுத்தம் என்பார்கள்.

தண்ணீருக்கு எடை உண்டு என்பதை நாம் அறிவோம். நீருக்குள் இறங்கும்போது காற்றின் எடையுடன் நீரின் எடையும் சேர்ந்து நம்மை அழுத்த ஆரம்பிக்கும். கடலில் 10 மீட்டர் ஆழத்துக்கு இறங்கினால் அழுத்தம் தரையில் உள்ளதைப்போல் இரண்டு மடங்காகிவிடும். 20 மீட்டர் ஆழத்துக்கு இறங்கினால் அழுத்தம் மூன்று மடங்காகிவிடும். 30 மீட்டர் ஆழத்துக்கு இறங்கினால் அழுத்தம் நான்கு மடங்காகிவிடும். அழுத்தம் இப்படி அதிகரித்துக் கொண்டே போகும்.

மிக ஆழத்துக்கு இறங்கினால் மனிதனால் அழுத்தத்தைத் தாங்க முடியாத நிலை ஏற்படும். அழுத்தம் தாங்காமல் நசுங்கி இறந்து விடுவான்.

கடலின் ஆழத்தில் இறங்குவதில் வேறு பிரச்சினைகளும் உண்டு. குறைந்த ஆழத்தில் இருப்பதானால் முதுகில் கட்டிக்கொண்டுள்ள சிலிண்டரிலிருந்து கிடைக்கும் காற்றின் அழுத்தம் சாதாரணமாக இருந்தால் போதும். மேலும் ஆழத்தில் இறங்கும்போது அந்த ஆழத்தில் இருக்கின்ற அழுத்தத்தில் காற்றை சுவாசிக்க வேண்டும். அதற்கான வகையில் சிலிண்டரிலிருந்து அதிக அழுத்தத்தில் காற்றைப் பெறவேண்டும். இப்படி மாற்றிக்கொள்ள சிலிண்டரில் ஏற்பாடு உண்டு.

Earth%20-1
 

கடலுக்கு வெளியே ஒருவர் சுவாசிக்கும்போது நுரையீரலானது காற்றில் அடங்கிய ஆக்சிஜன் வாயுவை மட்டும் எடுத்துக் கொள்ளும். காற்றில் அடங்கிய நைட்ரஜன் வாயு உட்பட பிற வாயுக்கள் வெளி மூச்சுடன் வெளியே வந்துவிடும். ஆனால் கடலுக்குள் ஆழத்தில் இறங்கும்போது சிலிண்டரில் உள்ள காற்றில் அடங்கிய நைட்ரஜன் வாயுவும் ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்கும். அப்படிக் கலப்பதால் உடனடியாக ஆபத்து எதுவும் ஏற்பட்டு விடாது.

கடலில் நல்ல ஆழத்தில் செயல்படுகிற ஒருவர் திடீரென மேலே வர முற்பட்டால் ஆபத்து. ரத்தத்தில் கலந்துள்ள நைட்ரஜன் வாயுவானது கொப்புளங்களாக வெளிப்பட்டு பெரும் பிரச்சினையை உண்டாக்கும். ரத்தத்தில் வாயுக் கொப்புளங்கள் இருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். எனவே அவர் கொஞ்சம் உயரே வந்து அங்கே சிறிது நேரம் தங்கி இருக்க வேண்டும். பிறகு இன்னும் கொஞ்சம் மேலே வந்து அங்கு கொஞ்ச நேரம் இருக்க வேண்டும்.

இப்படிப் படிப்படியாக மேலே வந்தால் ரத்தத்தில் அடங்கிய நைட்ரஜன் வாயு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிவிடும். பிரச்சினை இருக்காது. அப்படியின்றி அவர் உடனே மேலே வருவதாக இருந்தால், அழுத்தக் குறைப்புக் கூண்டுக்குள் பல மணி நேரம் தங்கி விட்டுப் பிறகு வெளியே வரவேண்டும். அழுத்தக் குறைப்பு கூண்டுக்குள் படிப்படியாக அழுத்தத்தைக் குறைக்கிற ஏற்பாடு இருக்கும்.

கடலின் ஆழத்தில் இறங்குவதில் நிபுணரான நுனா கோம்ஸ் 2005-ம் ஆண்டில் 318 மீட்டர் ஆழம் வரை இறங்கி உலக சாதனை படைத்துள்ளார். இதைச் சாதிக்க அவருக்குப் பல நிபுணர்களின் உதவி தேவைப்பட்டது. எனவே கடலில் ஒரு கிலோ மீட்டர், இரண்டு கிலோ மீட்டர் ஆழத்துக்கு இறங்குவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். கடல்களின் சராசரி ஆழம் சுமார் மூன்றரை கிலோ மீட்டர். கடல்களில் மிக ஆழமான இடம் பசிபிக் கடலில் சேலஞ்சர் மடு என்ற இடத்தில் உள்ளது.. அங்கு ஆழம் சுமார் 11 கிலோ மீட்டர்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

* டிவிக்கு வருகிறார் எமி ஜாக்ஸன். ‘சூப்பர்கேர்ள்’ என்னும் ஹாலிவுட் டிவி ஷோவில் நடிக்கிறார். வேற்று கிரகப் பெண்ணான எமி, பூமியில் ஆபத்துக்குள்ளாகும் பெண்களைக் காப்பாற்றுவதற்காக சூப்பர் கேர்ள் அவதாரம் எடுக்கிறார் என்பதே கதை. முழுக்க முழுக்க கனடாவில் இந்த டிவி தொடர் படம்பிடிக்கப்பட்டுள்ளது! நம்ம கேர்ள்!

p336a.jpg

* சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நாயகியாக நடிக்க விருக்கிறார் திஷா பட்டானி.  சாக்லேட்11.jpg விளம்பரம் மூலம் மாடலிங்கில் என்ட்ரி போட்டவர், அடுத்து தோனி பயோபிக்கில் பாலிவுட்டிலும் தடம்பதித்தார். இப்போது சங்கமித்ராவாக கோலிவுட்டுக்கும் வருகிறார் திஷா. புதுப்புயல்!

* என்.டி.ராமாராவின் வாழ்க்கையைப் படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார் ராம்கோபால்வர்மா. படத்தின் பெயர் ‘லட்ச்மீஸ் என்டிஆர்’.  படத்தை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் ஆர்ஜிவி. படத்துக்கு என்டிஆரின் மகன் பாலகிருஷ்ணா பக்கத்திலிருந்து பயங்கர எதிர்ப்பாம். இருந்தாலும் படத்தை முடிக்காமல் விடமாட்டேன் எனச் சூளுரைத்து இயக்கிக்கொண்டிருக்கிறார் ராம்கோபால்வர்மா. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தெலுங்குதேசத்தைத் தெறிக்கவிட்டிருக்கிறார். சர்ச்சை மன்னன்!

p336b.jpg

* ‘காயங்குளம் கொச்சுண்ணி’ என்கிற மலையாளப்படத்தில் நிவின் பாலி நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படங்களிலேயே இது மிகப்பெரிய படமாக இருக்கும் என்கிறார்கள். இந்தப்படத்தில் ஒரு ஸ்பெஷலான விஷயம், முக்கியமான கேரக்டரில் `மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடிக்கவிருக்கிறார். மாஸ் பாஸ்!

* இந்தியாவுக்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுத்தந்த கபில்தேவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. கபில்தேவாக நடிப்பவர் ரன்வீர்சிங். ‘83’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை கபீர்கான் இயக்குகிறார். ``கிரிக்கெட்டைத் தாண்டி கபில்தேவ் என்னும் தனி மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை இந்தப் படம் சொல்லும்’’ என்கிறார் ரன்வீர்! இன்ஸ்பைரிங் ஹீரோ

* தல அஜித் தன் பழைய வீட்டை முற்றிலும் இடித்துவிட்டு முழுக்க முழுக்க டெக்னாலஜியின் துணையோடு புதிதாகக் கட்டியிருக்கிறார். வீட்டுக் கதவுகளில் இருந்து கிச்சன் வரை கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே ரிமோட் மூலம் இயக்கும் வகையில் மாற்றியிருக்கிறார்கள். 4 கிரவுண்ட் இடத்தில் அனோஷ்கா பரதநாட்டியம் பயில தனி இடம், மகன் ஆத்விக் மினியேச்சர் கார்களோடு விளையாட தனி இடம், மனைவி ஷாலினிக்கு வீட்டுக்குள்ளேயே பேட்மிட்டன் கோர்ட் என வீட்டை டெக்பேலஸாகவே மாற்றியிருக்கிறார்! அப்டேட் அஜித்!

p336c.jpg

* உலகின் மிக அழகான ஜனாதிபதிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் குரோஷியா அதிபர் கோலிண்டா கிராபர். 49 வயதான கோலிண்டா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குரோஷியாவின் அதிபராக வெற்றிபெற்றுப் பொறுப்பேற்றுக்கொண்டார். உலகின் தற்போதைய பெண் அதிபர்களில் கேட்வாக், பீச்வாக் எனக் கலந்துகட்டி அடிப்பதால் தொடர்ந்து உலகின் லைம்லைட்டில் இருக்கிறார் கிராபர். ஓரினச்சேர்க்கைத் திருமணங்கள், கருக்கலைப்பு என, மதத்தின் பெயரால் கட்டுப்பட்டுத்தப்பட்டு வந்த அத்தனை சட்டங்களையும் உடைத்து குரோஷியாவில் பல புரட்சிகளைச் செய்துவருகிறார் கிராபர்! புரட்சித்தலைவி!

‘பத்மினி’ படத்தில் ராணி பத்மினியாக நடித்திருக்கிறார் தீபிகா. படத்துக்குப் பாலிவுட்டில் பயங்கர எதிர்பார்ப்பு. ``நீண்டநாள் கழித்து ஹீரோயினை மையமாகக்கொண்ட படத்துக்கு இவ்வளவு எதிர்பார்ப்பு இருப்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது’’ என்கிறார் தீபிகா! தீபிகா இஸ் பேக்!

p336d.jpg

* சமீபத்தில் மம்மூட்டியின் ரசிகர்கள், `அங்கமாலி டயரீஸ்’ நடிகை அன்னாராஜனை அழவிட்டிருக்கிறார்கள். டிவி நிகழ்ச்சி ஒன்றில் `மம்மூட்டியும் துல்கரும் ஒரே படத்தில் நடித்தால் யாருக்கு ஜோடியாக நடிப்பீர்கள்?’ என்று கேட்கப்பட, அதற்கு `துல்கர்தான் என் சாய்ஸ், மம்முக்கா எனக்கு அப்பாவாக நடித்தால் ஓகே’ என்று ஓப்பனாகச் சொன்னார் அன்னா. மம்முக்கா ரசிகர்கள் கொதித்துப்போய் இணையத்தில் அன்னாராஜனைத் திட்டித்தீர்க்க, ‘`என்னை மன்னிச்சிடுங்க. நான் விளையாட்டுக்குச் சொன்னேன்’’ என்று சோகமாக வீடியோபோட்டு மன்னிப்பு கேட்டார். வீடியோவைப் பார்த்த மம்மூட்டி மனங்கலங்கி உடனே அன்னாவை அழைத்து ஆறுதல் சொல்லியிருக்கிறார்! ரசிகர்கள்னாலே ரகளைதான்!

நியூட்டன் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பியதில் பிரியங்கா சோப்ரா ரொம்பவே அப்செட். அவர் மராத்தியில் தயாரித்த ‘வென்டிலேட்டர்’ படம் பல தேசியவிருதுகளை சமீபத்தில் வென்றது. அந்தப்படம்தான் இந்தமுறை ஆஸ்கருக்குப் போகும் என அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால், நியூட்டன் செலக்ட் ஆனதால் இப்போது சோகமாகத் திரிகிறாராம். ‘` `வென்டிலேட்டர்’ செலக்ட் ஆகியிருந்தா ஹாலிவுட் நண்பர்கள் படத்தை எப்படியாவது டாப் ஃபைவுக்கு அனுப்பியிருப்பாங்க...’’ என்று புலம்புகிறது பிரியங்கா தரப்பு. பெட்டர்லைக் நெக்ஸ்ட்டைம்!

* இது கால்பந்து வீரர்களுக்கான அப்ரைஸல் நேரம். மெஸ்ஸி, நெய்மார், எம்பாப்பே ஆகியோர் செம ஊதிய உயர்வுடன் செட்டிலாகிவிட, கடுப்பில் இருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மெஸ்ஸி, நெய்மார் போல எனக்கும் வருடத்துக்கு 200 கோடி ரூபாய்க்குக் குறையாத சம்பளம் வேண்டும் எனக் கொடிபிடித்திருக்கிறார் ரொனால்டோ. ``ரியல் மேட்ரிட் அணியின் மிகச்சிறந்த ப்ளேயர் நான்தான், ஃபிபாவிலும் பெஸ்ட் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். என்னை சரியாக மதிக்கவில்லையென்றால் என்னுடைய ரியாக்‌ஷன்ஸ் வேறு வகையில் இருக்கும்’’ என மெல்லிய எச்சரிக்கை கொடுத்திருக்கிறார். சிங்கத்தை சீண்டிட்டாய்ங்க பாஸ்!

p336e.jpg

* கார்டி பி தான் ராப் உலகின் புதிய சென்சேஷன். எல்லா லிஸ்ட்களிலும் டாப் அடிக்கும் பெண் ராப்பர்! சமீபத்தில் யுஎஸ் சார்ட்டிலும் முதலிடம் பிடித்திருக்கிறார். இவருடைய ராப் பாடல்களில்தான் இப்போது உலகமே சொக்கிப்போய்க் கிடக்கிறது. இவருக்கும் இவருடைய சக பாடகியான நிக்கிமினாஜூக்கும் லடாய் என்று ஊரே கிசுகிசுக்க, சமீபத்தில் கார்டி பி-யின் சாதனைகளை மனமாரப் பாராட்டி கெத்து காட்டியிருக்கிறார் நிக்கி! மகளிர் மட்டும்!

p336f.jpg

* டிவி தொகுப்பாளினி ஜாக்குலினும் சினிமாவுக்குப் போகிறார். `கோலமாவு கோகிலா அல்லது கோகோ’ என்கிற படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜாக்குலின். நயன்தாரா நாயகியாக நடிக்கவிருக்கும் இந்தப்படத்தில் நயனுக்குத் தங்கை ஜாக்குலின். நீ கலக்கு கண்ணம்மா!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சயோலா... மலயான் புலி... சாலமண்டர்... உயிரைக் கையில் பிடித்திருக்கும் விலங்குகள்! #EndangeredSpecies

 
 

இந்தப் பூமி, மனிதன் தனக்கு மட்டுமே சொந்தம் என நினைக்க ஆரம்பித்ததன் விளைவுகள் பல. அதில் முக்கியமானது அழிந்து வரும் விலங்குகள். இந்த அழிவின் பயணத்தில் ஒருநாள் மனிதர்களும் சேர்ந்தே ஆக வேண்டும் என்பதை நாம் உணர்வதே இல்லை. 

அழிந்துவரும் சில விலங்குகளைப் பற்றிய தொகுப்பு இது.

 

வக்யூட்டா 

விலங்கு

வக்யூட்டா என்னும் இந்த விலங்கு கலிபோர்னிய வளைகுடாவில் வாழும் ஒரு வகை கடற்பன்றி. கடலில் வாழும் பாலூட்டிகளில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள உயிரினம் இதுதான். முதன்முதலில் 1950ல்தான் இவை அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 1997ல் 600 ஆக இருந்த இவற்றின் எண்ணிக்கை 2014ல் 100 ஆக குறைந்தது. இது மேலும் குறைந்து 2016ல் வெறும் 30 ஆனது.  தக்கநடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் விரைவில் இந்த இனமே மறைந்துவிடக்கூடும். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது இப்பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக மேற்கொள்ளப்படும் செவுள்வலை மீன்பிடிப்புதான். இந்த வலைகளில் அடிபடும் இவை பெரும்பாலும் உயிர்வாழ்வதில்லை. இதை தடுக்க இந்த ஜூன் மாதம் மெக்ஸிக்கோ ஜனாதிபதி இந்த மீன்பிடிப்புக்கு நிரந்தரத்தடை விதித்துள்ளார். மேலும், மீறுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அறிவித்துள்ளார். இவற்றைக் காப்பாற்ற இவற்றுள் சிலவற்றைப் பிடித்து உரியமுறைகளில் இனப்பெருக்கத்தைக் கூட்ட முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால் சிறைபிடிக்கப்பட்டநிலையில் இவை தாக்குபிடிப்பது கடினம்தான்.

ஆமூர் சிறுத்தை 

விலங்கு

இந்தச் சிறுத்தைகள் ரஷ்யா மற்றும் சீனாவின் மேற்குப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 60 மட்டுமே எஞ்சியுள்ளன. ரஷ்யா, சீனா இடையே ஓடும் ஆமூர் நதி அருகே வாழ்வதாலேயே இவற்றுக்கு இப்பெயர். சாதாரண சிறுத்தைகளைவிட அளவில் சிறிதான இவை அடர்ந்த பனியிலும் வாழப்பழகியவை. புதிய சாலைகள், கட்டடங்கள் என அழிக்கப்பட்டுவரும் இவற்றின் வாழ்விடமும் இதற்கு முக்கியக் காரணம். மேலும், வேட்டையாடுதலால் இவற்றின் இரைகளும் குறைந்துவருவதாக தெரிகிறது. வருடத்துக்கு வருடம் நீண்டுக்கொண்டே போகும் குளிர்காலத்தில் சாதாரணமாகவே உணவிருக்காது என்பதால் இதன் நிலை மோசமாகி வருகிறது. இது தொடர்ந்தால் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் உயிரியல் பூங்காக்களில் மட்டும்தான் இவற்றைக் காணமுடியும்.

ஜாவன் காண்டாமிருகம்

ஜாவா சுமத்ரா தீவுகளில் வாழும் இவை அதிகபட்சமாக பார்த்தால் கூட 100க்கு மேல் கூட இன்று இருக்காது. அழிந்துவரும் ஐந்து வகை காண்டாமிருகங்களுள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது இதுதான். இவற்றுள் பல வியட்நாமில் இருந்துள்ளன. ஆனால், அவை அழிந்துவிட்டதாக 2011ல் அறிவிக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் அவற்றின் வாழ்விடத்தை அழித்த வியட்நாம் போர்தான். இப்போது இவை இந்தோனேசியாவின் உஜுங் குலோன் தேசியப் பூங்காவில் மட்டும்தான் உள்ளன. மருத்துவகுணமுடைய கொம்புகளுக்காக அதிக அளவில் வேட்டையாடப்பட்டு கிட்டத்தட்ட அழிந்தேவிட்டன இந்த காண்டாமிருகங்கள். ஏறத்தாழ இதே நிலையில்தான் இருக்கிறது இதன் நெருங்கிய உறவினமான இந்திய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்.

தி நார்த்தேன் ஸ்போர்ட்டிவ் லெமூர்

லெமூர்

மடகாஸ்கர் தீவில் மட்டும் வாழும் இவை மனிதர்களால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாற்றங்களால் மிகவும் பாதிக்கப்பட்ட விலங்குகளுள் ஒன்று. இதுதான் நமது பிரைமேட் இனத்தில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் உயிரினம். மரக்கரிக்காக இவை வாழும் மரங்கள் வெட்டப்படுவதால் இவற்றின் வாழ்விடங்கள் நாளுக்கு நாள் சுருங்கிக்கொண்டே வருகின்றன. மேலும், சுருங்கிவரும் இந்தக் காடுகளில் வாழும் மற்ற மாமிச உண்ணிகளான பாம்புகளுக்கும், பறவைகளுக்கும் எளிய இறையாகின்றன இந்தச் சின்ன லெமூர்கள். இவை எடையில் அதிகபட்சம் 1 கிலோவுக்கு மேல் இருக்காது. இன்று இவற்றின் எண்ணிக்கை 20க்கும் கீழே குறைந்திருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

சீனாவின் பெரிய சாலமண்டர்

சாலமண்டர்

சீனா எங்கும் பரவிருந்த இந்த சாலமண்டர்தான் உலகிலேயே பெரிய நீர்நில விலங்காகும். 6 அடி நீளம் வரை வளரும் இவை பலவருடங்களாக மேல்தட்டு சீன மக்களின் உணவாக இருந்துவருகிறது. பல மருத்துவகுணங்கள் இவற்றுக்கு உண்டு எனவும் நம்பப்படுகிறது. இதனால் அதிக அளவில் வேட்டையாடப்படும் இவை 1950ல் இருந்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் இன்று குறைந்துள்ளது. சீன அரசின் ‘மிகவும் ஆபத்தான நிலையில் பாதுகாக்கப்படவேண்டிய விலங்குகள்’ பட்டியலில் இவை சேர்க்கப்பட்டாலும் இன்றும் வருடத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சாலமண்டர்கள் வேட்டையாடப்பட்டுவருகின்றன. இவற்றின் விலைமதிப்பு அப்படி. இந்த சாலமண்டர்கள் வாழும் படிமங்களாக (living fossils) கருதப்படுகின்றன. அதாவது பல கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன் வாழ்ந்த இவற்றின் படிமங்கள் கிடைக்கபெற்றுள்ளநிலையில் இன்றும் இவை வாழ்ந்துகொண்டிருக்கின்றன. பலநூறு கோடி வருடங்கள் வாழ்ந்த இவற்றுக்கே இந்த நிலை.

மலாயன் புலி 

மலயான்

இந்த லிஸ்டில் இருக்கும் மற்ற விலங்குகளைப் போல் புலிகளில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. எல்லா புலிகளுமே மோசமான நிலையில்தான் உள்ளன. ஏற்கெனவே பாலி, காஸ்பியன், ஜாவன் இனப்புலிகள் அழிந்தேவிட்டநிலையில் இன்று மிஞ்சியிருக்கும் புலி இனங்களும் அழிவை நோக்கியே பயணித்து வருகின்றன. அதில் மிகவும் மோசமான நிலையில் இருப்பது மலேசிய தீபகற்பத்தில் வாழும் இந்த மலாயன் புலிகள்தான். 2013ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 340க்குள்தான் இவற்றின் எண்ணிக்கை இருக்கும் என்று தெரியவந்தது. இன்று அதுவும் குறைந்திருக்கும் என்று அஞ்சப்படுகிறது. நகரமாக்குதலுக்கு அழிக்கப்பட்ட இவற்றின் வாழ்விடங்கள், சட்டத்துக்கு புறம்பான வேட்டையாடுதல் என இந்த புலிகள் அழிந்துவருவதற்கான காரணங்களாக மனிதச்செயல்களையே இங்கும் பட்டியலிடலாம். புலிக்கறி மற்றும் புலி எலும்பு மருந்துகளுக்கென மலேசியாவில் தனி நிழலுலக மார்க்கெட் ஒன்று இயங்கிவருகிறது. இது தொடர்ந்தால் மேலே குறிப்பிட்ட அழிந்த புலி இனங்களுடன் இவையும் விரைவில் சேரும். ஏற்கெனவே இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூரில் இவை அழிந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சயோலா 

சயோலா

வியட்நாம் பகுதிகளில் மட்டும் காணப்படும் இவற்றுக்கு இன்னொரு பெயரும் உண்டு "ஏசியன் யுனிகார்ன்”. மாடு, ஆடு, மான் போன்றவற்றின் உறவினமான இந்த சயோலாக்கள் 1999ல்தான் முதல்முதலாக கேமராக்களில் பிடிபட்டது. பாதுகாப்பு அமைப்புகளால் பலமுறை சிறைபிடிக்கப்பட்டு வளர்க்க முயற்சித்தபோதும் இவை எதுவும் நீண்டநாள்கள் தாக்குபிடிக்கவில்லை. ஏற்கெனவே குறைந்தளவில் காணப்படும் இவற்றைப் பிடிப்பவர்களுக்கு உள்ளூரில் தனிமரியாதை வேறு உண்டு. அதுமட்டுமல்லாமல் மற்ற விலங்குகளுக்கு வைக்கப்படும் பொறிகளில் பலநேரங்களில் சிக்கி உயிரிழக்கின்றன இவை. அதனால் இதுவரை கிட்டத்தட்ட 26,000 பொறிகளை அப்பகுதிகளிலிருந்து அகற்றியுள்ளனர் அந்நாட்டின் விலங்கியல் பாதுகாப்பு இயக்கங்கள். 

ஹாக்ஸ்பில் கடல் ஆமை 

ஹாக்ஸ்பில்

அட்லாண்டிக் மற்றும் இண்டோ-பசிபிக் கடலில் வாழும் இவை அலங்கார ஓடுகளுக்காக வேட்டையாடப்பட்டு கிட்டத்தட்ட 90 சதவிகிதம் அழிந்துவிட்டன .எகிப்து, சீனா நாடுகளில் இருந்த பல நாகரிகங்கள் இவற்றின் ஓடுகளை அலங்காரத்துக்கு பயன்படுத்தியுள்ளன. இதுதான் "டார்ட்டாய்ஸ் ஷெல்"என பிரபலமாக அழைக்கப்படுகிறது. இன்றும் சட்டத்துக்குப் புறம்பாக நடைபெறுகின்றன. இவற்றின் விற்பனை. இதேபோன்று மிகப்பெரிய ஆமையான லெதர்பாக் கடல் ஆமைகளும் 80 சதவிகிதம் குறைந்துள்ளன.

மேற்கு தாழ்நில கொரில்லா

கொரில்லா

கடைசியாக இந்த லிஸ்டில் இருப்பது நமக்கு மிகவும் நெருங்கிய கொரில்லாக்கள்தான். காடுகள் அழிக்கப்படுவது, வேட்டையாடப்படுவதைப் போன்ற வழக்கமான காரணங்கள் தாண்டி இவற்றின் அழிவுக்கு இன்னொரு காரணம்"எபோலா". ஆம் எபோலா பாதிப்பால் 400 எண்ணிக்கை கொண்ட குழுக்களில் இன்று 40 தான் மிஞ்சியுள்ளன. 2003ல் ஆரம்பமான இந்தப் பாதிப்பில் இருந்து இவை இன்னும் மீண்டுகொண்டேதான் இருக்கின்றன. மனிதர்களைப் போன்ற பல குணங்களை உடையே இவை உலகளாவிய உயிரியல் பூங்காக்களில் மட்டும் 500க்கும் மேல் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றுள் சில குட்டிகள் கடத்தப்பட்டு அப்பகுதிகளில் செல்லப்பிராணிகளாகவும் வளர்க்கப்படுகின்றன. 

 

இது சின்ன லிஸ்ட் தான். IUCN என அழைக்கப்படும் சர்வேதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் மேலே குறிப்பிடப்பட்ட விலங்குகள் உட்பட 2464 விலங்கினங்களை critically endangered என்ற மோசமாக அழிந்துவரும் விலங்குகள் பட்டியலில் சேர்த்துள்ளது. நாளுக்கு நாள் இந்த பட்டியல் நீண்டுகொண்டேதான் வருகிறது. பாண்டா, புலி போன்ற சில மிருகங்களுக்கு கிடைத்த அக்கறையும், பாதுகாப்பும் இந்தப் பட்டியலில் இருக்கும் பெரும்பாலான மிருகங்களுக்கு கிடைக்கவில்லை என்பது சோகம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

நோபல் பரிசு எப்போது தோன்றியது? முதல் நோபல் பரிசை பெற்றவர் யார்?

  • தொடங்கியவர்
 

பொக்கிஷம் - ஆல்பம்

 

Pokshm.jpg

197p1.jpg

197p2.jpg

197p3.jpg

197p4.jpg

197p5.jpg

197p6.jpg

197p7.jpg

197p8.jpg

197p9.jpg

197p10.jpg

197p11.jpg

197p12.jpg

197p13.jpg

197p14.jpg

197p15.jpg

197p16.jpg

197p17.jpg

  • தொடங்கியவர்

600 ஆண்களுடன் செல்பி எடுத்த பெண் , காரணம் கசிந்தது.

பல ஆண்களுடன் செல்பி எடுத்த பெண் சாதனை படைத்துள்ளார். இதை ஒரு சோதனையாக அவர் செய்து பார்த்துள்ளார்.

 நெதர்லாந்தின்  ஆம்ஸ்டிராமை சேர்ந்த 20 வயதுப்பெண் நோயா ஜான்ஸ்மா . இவர் ஒரு வித்யாசமாக சோதனை செய்துள்ளார்.

600 ஆண்களுடன் செல்பி எடுத்த பெண் , காரணம் கசிந்தது.

வீதிகளில் பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்யும் ஆண்களுடன் இவர் செல்பி எடுப்பார். அதை சமூக வளைதளங்களில் பதிவிட்டு அவர்களை பற்றிய விவரங்களையும் வெளியிடுவார். இதன் மூலம் பல பெண்களுக்கு அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இவர் வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 45, 000 பேர் பின் தொடர்கிறார்கள். இந்த பக்கத்திற்கு அவர் ‘ டியர் கேட் காலர்ஸ் (dear catcallers) என்று பெயர் வைத்துள்ளார்.

 
 
 


இதுவரை ஒரு ஆண் கூட அவர் ஏன் செல்ஃபி எடுக்கிறார் என்று கேட்கவில்லை . அனைவரும் அவரிடம் ஒட்டி உரசிக்கொண்டு செல்ஃபி எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

யானைகளோடு ஒரு செல்ல மொழி!

யானைகள் இதயத்தில் இடம் பிடிப்பது எப்படி?
  • தொடங்கியவர்

முகத்தில் எச்சில் துப்பி வரவேற்கும் ’மாசாய்’ பழங்குடி மக்கள்..!

 

முகத்தில் எச்சில் துப்பி வரவேற்கும் ’மாசாய்’ பழங்குடி மக்கள்..!

வித்தியாசமான வாழ்க்கை முறை, மாறுபட்ட கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு பெயர்பெற்றவர்கள் பழங்குடியின மக்கள். இந்திய பழங்குடி மக்களை விட தான்சானியா, கென்யா ஆகிய நாடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் எல்லாவகையிலும் விநோதமாக இருப்பார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் அவர்களின் தனித்துவமான கலாச்சாரம்.

அந்த வகையில், தான்சானியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் வசிக்கும் ’மாசாய்’ என்ற பழங்குடியின மக்கள் முதன்முறையாக யாரையாவது சந்தித்தாலோ அல்லது வீட்டிற்கு வரும் விருந்தாளிகளையோ அவர்கள் முகத்தில் எச்சில் துப்பி வரவேற்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்குள்ள குழந்தைகள், முதியவர்களை சந்திக்கும் போது தங்கள் கைகளில் எச்சில் துப்பி கை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இவர்கள் பிறந்த குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை. பிறந்த குழந்தையின் முகத்திலும் எச்சில் துப்பி இந்த உலகத்திற்கு வரவேற்கின்றனர் மாசாய் பழங்குடியின மக்கள்.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

படம் வரைங்க போனைத் திறங்க!

 
draw-a-secret-password

இமெயில்கள், சமூக ஊடகங்கள், நெட் பேங்கிங் என பாஸ்வேர்டுகள் பெருகிக்கொண்டே போகின்றன. எல்லா பாஸ்வேர்டுகளையும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள முடியுமா? இன்னொருபுறம், என்னதான் பாதுகாப்பு வசதிகள் மொபைல் போனில் இருந்தாலும், தகவல் திருட்டுகளும் சாதாரணமாகவே நடக்கின்றன. இவற்றுக்கு என்னதான் தீர்வு என பிரிட்டனில் உள்ள நியூகேசில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ரூம்போட்டு ஆராய்ந்தனர். இறுதியில் பாஸ்வேர்டுக்குப் பதிலாக வரைபடமே தீர்வு என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

Background Draw-a-Secret (BDAS) என்ற தொழில்நுட்பத்தின் மூலம் நாம் வரையும் படத்தைப் பதிவுசெய்து தகவல்களைப் பாதுகாக்க முடியுமாம். தொடர்ந்து மொபைலைப் பாதுகாக்க நாம் வரைந்த உருவத்தின் மீது ட்ரேஸ் செய்தாலே போதும். எனவே, இனி பாஸ்வேர்டுகளை மூளையில் ஏற்றிக்கொள்ளவும் தேவையில்லை. ஒரு வேளை பாஸ்வேர்டான டூடூளை மாற்றிக்கொள்ள விரும்பினால், இமெயில் வெரிஃபிகேஷனும் உண்டு. எளிமையான புதுமையான பாஸ்வேர்டு என்கிற முறையில் இதை முன்னேற்றமாகப் பார்க்கிறது தகவல் தொழில்நுட்ப உலகம்!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

இந்தியாவில் ஒரு ஸ்காட்லாந்து!

- ச.அன்பரசு

ஃபாரீன் டூர்தான் எப்போதும் பரவசமா என்ன? என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்று கேட்பது போல் நம் நாட்டிலேயே டிஸ்னிலேண்டை விட பரவசம் தரும் பல்வேறு ஃபேன்டஸி உலகங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் மேகாலயா. இதைச் செல்லமாக கிழக்கு ஸ்காட்லாந்து என்று வர்ணிக்கிறார்கள் சுற்றுலாப் பிரியர்கள். இங்குள்ள ஜெய்ன்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள டாகி நகரின் உமன்காட் நதி பளிங்கு போன்ற தூய்மையானது. இந்த நதியில் படகுச் சவாரி செய்வதுதான் பரவசமான அனுபவம். இந்தியா, வங்காளதேசம் என இரு நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கும் இடமும் இந்த நதிதான்.

மேகாலயாவின் சிரபுஞ்சியிலிருந்து சில்லிடும் காற்று வெளியிடை 85 கி.மீ. பயணித்தால் கிழக்கு ஜெய்ன்டியா மலைத் தொடரில் உள்ள டாகி நகரை அடையலாம். வங்காளதேசத்தின் சில்ஹெட் மாவட்டத்துக்கு நெருக்கமான ஏரியா இது. இந்தியா, வங்காள தேசம் என இரு நாட்டுக்குமான முக்கிய வணிக நகரம் டாகி. மேகாலயா - வங்காளதேசம் என இரு நாடுகளையும் இயற்கையாக உமன்காட் நதி பிரிக்கும் இடம். பாரம்பரிய பழங்குடிகளின் பிர தேசமான மேகாலயாவில் அருவிகள், ஏரிகள், பச்சைப் பசேல் நிலக்காட்சிகள் எல்லாம் சேர்ந்து மனதைக் குளிர்ச்சி குளிர்ச்சி கூல் கூல் ஆக்கிவிடும்.
23.jpg
வங்காளதேசம் - இந்தியா பார்டர் என்றால் குற்றங்கள் இல்லாமலா? மணல், கற்கள், பசுக்கள் இங்கு சட்டவிரோதமாக கடத்தப்படுவதோடு, வங்காள தேச மக்களின் இடப்பெயர்வும் இந்திய அரசுக்குப் பெரும் தலைவலி. இந்திய அரசின் எல்லைப் பாதுகாப்புப் படையின் கிடுக்கிப்பிடி சோதனைகளால் சட்ட விரோத கடத்தல்கள் தற்போது தடைபட்டுவிட்டன. இங்கு பாதுகாப்புப் படையினரின் செக்போஸ்ட் தமபில் என்ற நகரில் அமைந்துள்ளது என்றாலும் புகைப்படத்துடன் ஆதார் அல்லது ஓட்டுநர் உரிமம் இருந்தால் அதிகக் கேள்விகள் இருக்காது.

நீலமும் பச்சையுமாக எமரால்டு நிற உமன்காட் நதியில் படகுகள் செல்வது பார்க்க நீருக்கு மேலாக காற்றில் பயணிப்பது போன்ற அற்புதக் காட்சி. பலர் படகுகளில் ஆங்காங்கே ஜென் நிலையில் நின்று ஆற அமர தூண்டில் போட்டு காத்திருந்து மீன் பிடிக்கின்றனர். காசி பகுதி படகுக்காரர்களிடம் வாடகை பேசி படகில் ஏறி அமர்ந்தால் துடுப்பசைவிலும் நம்முள் எழும் ஆச்சர்ய திகைப்பு கலைவது இல்லை. படகுகளில் குழுவாக நின்று மீன் பிடிப்பவர்கள் சடக்கென தூண்டிலை இழுக்க, நிஜமாகவே பிடிபட்ட மீன் 4 கிலோ தேறும் சைஸில் மிரட்டுகிறது.

வங்காளதேசத்தையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் ஆங்கிலேயரால் 1932ம் ஆண்டு கட்டப்பட்டது. இருபது நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை படகு சவாரி செய்யலாம். ஒரு படகில் நான்கு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி. நதி வாட்டர் டயமண்டாய் மின்னுவதால் 20 அடி வரை நீரைத் துல்லியமாகப் பார்க்கலாம். மார்ச் - ஏப்ரல் சீசனில் இங்கு படகுப் போட்டிகள் நடைபெறும் என்பதால் சம்மரில் கூட்டம் அள்ளும். பொதுவாகவே டாகி நகர் ஆல் சீசன் டிலைட் ஏரியாதான்.
23a.jpg
நவம்பர் - ஏப்ரல் மாதங்கள் டாகி நகரில் டூர் போக சரியான காலம். பருவ காலங்களில் உமன்காட் நதியில் வெள்ளம் எகிறும் என்பதால் போட்டிங் இருக்காது. மேலும், கடந்தாண்டே பிரதமர் மோடி - வங்காளதேச பிரதமர் ஹஸீனா ஆகியோர் குவகாத்தி - ஷில்லாங் - டாகி இடையிலான மலிவு விலை பஸ் போக்குவரத்தைத் தொடங்கி வைத்துள் ளதால் செலவுகள் மேக்சிமம் உங்கள் பர்ஸைக் கரைக்காது.

எப்படிச் செல்லலாம்?
ரயில் என்றால் குவகாத்தியில் இறங்கி பஸ், கார் பிடித்து டாகி, ஷில்லாங் செல்லலாம். பஸ் என்றால் குவகாத்தியின் ரயில்வே ஸ்டேஷனில் ஏறிக்கொள்ளலாம். அரசு மற்றும் தனியார் பஸ்களில் குவகாத்தியிலிருந்து ஷில்லாங் வரை செல்ல வசதி உண்டு. ஷில்லாங்கில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான பட்ஜெட் ஹோட்டல்கள் உள்ளன. குவகாத்தியிலிருந்து ஷில்லாங் செல்ல ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது. ஜமாய் டிஷ்கள்! ஜாடோ, டொனெய்ஹாங், மாஹம் பிசி, ஜூர் சிதே ஆகிய சூப்பர் டிஷ்களோடு, டாகி நகரின் ஸ்பெஷல் ஆரஞ்சு பழங்கள் நீங்கள் மிஸ் செய்யக்கூடாதவை
23b.jpg
ஜமாய் டிஷ்கள்!
ஜாடோ, டொனெய்ஹாங், மாஹம் பிசி, ஜூர் சிதே ஆகிய சூப்பர் டிஷ்களோடு, டாகி நகரின் ஸ்பெஷல் ஆரஞ்சு பழங்கள் நீங்கள் மிஸ் செய்யக்கூடாதவை

சுற்றுலா ஸ்பாட்கள்
ரூட் பிரிட்ஜ் (ட்ரைனா கிராமம்), கிரைம் பைல்யுட் குகை, மாலிநாங் (காசி மாவட்டம்), கிரெம் மாஸ்மாய் குகை, நோகலிகாய் அருவி, இகோ பார்க், மாஸ்மாய் அருவி, வகாபா அருவி, நோக்ரெக் பார்க், தாங்க்காரங் பார்க், டெய்ன்த்லென் அருவி

www.kungumam.co.

  • தொடங்கியவர்

நள்ளிரவில் நடைபெற்ற நடிகை சமந்தா திருமணம்! (புகைப்படங்கள்)

 

 
samantha_wedding

 

பிரபல நடிகை சமந்தாவுக்கு கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை அவர் மணந்துள்ளார். கோவாவில் உள்ள டபிள்யூ என்கிற நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இரு குடும்பத்தாருக்கும் நெருக்கமான 100 விருந்தினர்கள் மட்டும் இத்திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.

நேற்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு 8 மணி விருந்தினர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. இதில் வட மற்றும் தென்னிந்திய உணவு வகைகள் பறிமாற்றப்பட்டன. நள்ளிரவு 11. 52 மணிக்கு இந்துமுறைப்படி திருமணம் நடைபெற்றது. சமந்தாவின் கழுத்தில் நாக சைதன்யா தாலி கட்டினார். 

இன்று மாலை 5.30 மணிக்கு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது.

samantha_wedding41.jpg

samantha_wedding6.jpg

samantha_wedding5.jpg

samantha_wedding2.jpg

samantha_wedding3.jpg

http://www.dinamani.com

இதோ சமந்தா-நாகசைதன்யா திருமண புகைப்படங்கள்..! 10 கோடி செலவாம்..!

 

இதோ சமந்தா-நாகசைதன்யா திருமண புகைப்படங்கள்..! 10 கோடி செலவாம்..!

 

இதோ சமந்தா-நாகசைதன்யா திருமண புகைப்படங்கள்..! 10 கோடி செலவாம்..!

 

samatha_wed0.jpg

samanath_wed452.jpg

 

 
 
samantha_wed81891xx

 

 

samantha_wed833.jpg

samantha561.jpg

samantha5141.jpg

 

samantha67123.jpg

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
அயர்லாந்துப் பாடசாலையில் உலாவும் பேய்?
 

image_2e4f21c311.jpgஅயர்லாந்தின், கோர்க் நகரிலுள்ள பாடசாலையொன்றில், இரவில் அமானுஷ்யமான சம்பவங்கள் இடம்பெறுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை ஆராய்வதற்காக, பாடசாலையில் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காணொளி அவதானிக்கப்பட்டபோது, அதிர்ச்சிகள் பல காத்திருந்தன. அந்தக் காணொளியில், கதவுகள் திறந்து மூடப்படுவதும், புத்தக இறாக்கைகள் திறந்து மூடுவதுமாக இருந்துள்ளன. அதுமாத்திரமல்லாது, தளபாடங்களும் அசைந்துள்ளன.

இது தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

இவ்விடயம் பற்றி, பாடசாலையின் அதிபர் கெவின் பெரி குறிப்பிடுகையில், “ஏன் இவ்வாறு நடைபெறுகிறது என்பது மர்மமாகவே இருக்கிறது. பேய்,பிசாசுகள் இருப்பதாக நான் நம்பவில்லை. சில நாட்களில், ஆசிரியர்களால் அழைத்துவரப்படும் செல்லப்பிராணிகளை பாடசாலைகளிலேயே விட்டுச் செல்கின்றனர். சில வேளைகளில் அவற்றின் நடவடிக்கையும் காரணமாக இருக்கலாம்” என்றார்.

எனினும் இது பாரதூரமான விடயம் என்றும் விரிவாக ஆராயப்பட வேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

நேற்று முன்தினம் வீசிய  கடும் புயலுக்கு மத்தியில் டுபாயில் இருந்து வந்த A 380 விமானம் DUSSELDORF விமானநிலையத்தில் தள்ளாடியபடி தரையிறங்கிய  காட்சி

 

 

  • தொடங்கியவர்

செல்லாத பணத்தை அரைத்துச் செய்த கலைப்படைப்புகள் (புகைப்படத் தொகுப்பு)

அகமதாபாத் நேஷனல் இண்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன் (என்.ஐ.டி) மாணவர்களின் கைவண்ணத்தில் செல்லாத ரூபாய் தாள்களும் செல்லும் பொருட்களாக மாறியுள்ளன. ரூபாய் தாள்கள் வைக்கப்படும் பர்ஸை பழைய ரூபாய் தாள்களிலேயே உருவாக்கியிருக்கின்றனர்.

பர்ஸ்

கடந்த வாரம் அகமதாபாத் என்.ஐ.டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில், கடந்த ஆண்டு இந்திய அரசால் புழக்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களைக் கொண்டு உருவாக்கப்பட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ரூபாய் தாள்கள் வைக்கப்படும் பர்ஸை பழைய ரூபாய் தாள்களிலேயே உருவாக்கியிருக்கின்றனர்.

செங்கல்

நெதர்லாந்தைச் சேர்ந்த ‘ராயல் டச்சு கஸ்டர்ஸ் எஞ்சினியரிங்’ என்ற அமைப்புடன் இணைந்து ‘பணத்தின் மதிப்பு’ என்ற கருப்பொருளில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்ட கட்டுமானக் கற்கள்.

 

டைரி

49 கல்வி நிறுவனங்களைக் சேர்ந்த 184 மாணவர்கள் கண்காட்சியில் பங்கேற்றார்கள். இந்திய ரிசர்வ் வங்கி செல்லாது என்று அறிவித்து திரும்பப்பெற்றுக்கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.

தட்டு

நெதர்லாந்து மாணவர்கள் நால்வர் ‘கஸ்டர்ஸ் எஞ்சினியரிங் பரிசு 2017-ஐ' வென்றார்கள்

செங்கல்

செல்லாத ரூபாய்த் தாள்களைக்கொண்டு 22 புதுவிதமான கலைப் பொருட்கள் என்.ஐ.டியில் உருவாக்கப்பட்டன.

 

 

டைல்ஸ்

ஒலி புகா பொருட்கள் (sound proof), பர்ஸ், செங்கற்கள், டைரி போன்ற பல பொருட்கள் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாகின.

டைல்ஸ்

பொதுவாக அரசால் விலக்கப்பட்டு, செல்லாததாக அறிவிக்கப்படும் ரூபாய் தாள்கள் நிலத்தில் புதைக்கப்படும். இந்த பொருட்களை உருவாக்குவதற்காக செல்லாத தாள்களை பலவிதமான முறைகளில் மறுசுழற்சி செய்திருக்கிறார்கள்.

கடிகாரம்

இந்த புகைப்படத்தில் இருக்கும் கடிகாரம் விலக்கப்பட்ட ரூபாய்த் தாள்களால் உருவாக்கப்பட்டது என்கிறார் என்.ஐ.டி அகமதாபாதின் இயக்குனர் ப்ரத்யுமன் வியாஸ்.

கடிகாரம்

பயன்படாத ரூபாய் தாள்களைப் பயன்படுத்தி புதுவிதமான பொருட்களை வடிவமைக்க மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள் என்று பிபிசியிடம் சொல்கிறார் ஐ.ஐ.டியின் பொருட்கள் வடிவமைப்புத் துறை ஒருங்கிணைப்பாளர் பிரவீண் சிங் சோலங்கி கூறினார்.

உண்டியல்

இறந்தகாலத்தில் செல்லாக்காசான ரூபாய் தாள்களில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த உண்டியல், எதிர்காலத் தேவைகளுக்கான செல்லும் காசுகளை சேர்த்து வைக்கப்பயன்படும்!

 

 

 

நாட்காட்டி

வெற்றி பெற்ற நால்வருக்கும் ஒரு லட்ச ரூபாய், 75 ஆயிரம் ரூபாய், ஐம்பதாயிரம் ரூபாய், 25 ஆயிரம் ரூபாய் ‘செல்லும்’ ரூபாய்த் தாள்களில் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

விக்கெட்டை விடுங்கள்... அந்த ஒரு ஜம்ப் போதும்! #HBDZaheerKhan

 

2011-ம் ஆண்டு பிராட்மேன் நினைவுதினக் கூட்டத்தில் பேச, ஆஸ்திரேலியர்கள் அல்லாத முதல் சிறப்பு விருந்தினராக ராகுல் டிராவிட் அழைக்கப்பட்டிருந்தார். கிரிக்கெட்டில் இந்தியா எப்படி கோலோச்ச ஆரம்பித்தது என்பது குறித்தும், தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் ஒளிபரப்பான பிறகு, சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி மட்டுமல்லாது சிறு நகரங்களிலிருந்தும் பன்முகத்தன்மைகொண்ட வீரர்கள் இந்தியாவுக்காக விளையாட ஆரம்பித்தது குறித்தும் ஆழமாகப் பதிவுசெய்தார் இந்தியாவின் சுவர்.

zaheer khan

 

பல்வேறு வீரர்களைப் பற்றிக் குறிப்பிடும் முன், டிராவிட் மேற்கோள்காட்டிய வீரர் ஜாகிர் கான். மகாராஷ்ட்ராவில் பின்தங்கிய கிராமத்தில் பிறந்த ஜாகிர் கான், தன்னுடைய 17 வயது வரை பிரத்யேகமான ஆடுகளத்தில் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பைப் பெறவில்லை. தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்தும், கண்ணாடி முன் நின்று தன்னுடைய பௌலிங் திறமையை அசாத்தியமான கற்பனையில் வளர்த்துக்கொண்டும் இருந்தார். பள்ளிப்படிப்பை முடித்து, `இன்ஸ்ட்ரூமென்டேஷன் பொறியாளர்’ என்கிற மினிமம் கியாரன்டி கனவைக் கைவிட்டு, `எப்படியாவது இந்தியாவுக்காக விளையாட வேண்டும்' என முடிவெடுத்தபோது, அவருக்கு 18 வயது பூர்த்தியாகியிருந்தது.
 
அவருடைய உயரமும், இடதுகை பந்துவீச்சும், பந்தைப் போடுவதற்கு முன் ஒரு ஜம்ப் செய்து அதனுடைய அழுத்தத்தில் பந்தின் வேகத்தை அதிகப்படுத்தும் லாகவமும், ஜாகிர் கானை இரண்டு வருடங்களுக்குள் ரஞ்சி போட்டிகளில் விளையாட உதவின. பரோடா அணிக்காக விக்கெட் வேட்டை நடத்தினார். மறுபுறம், கங்குலி தலைமையிலான இந்திய அணி, வெற்றிகளை மட்டுமல்லாமல் மீண்டும் இந்திய மக்களிடமிருந்து அன்பையும் சம்பாதிக்கவேண்டிய நேரத்தில் இருந்தது. அந்தநேரத்தில்தான், ஜாகிர் கானை முதல்நிலை வேகப்பந்து வீச்சாளராக டிக் அடித்தார் தாதா.

கிரிக்கெட்டுக்காக வடிவமைக்கப்பட்ட ஆடுகளத்தில் மூன்று ஆண்டுகள் மட்டுமே விளையாடிய நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பை தன் அதிவேக கால்களில் சுமந்து, ஸ்டீவ் வாஹ்வின் விக்கெட்டை `யார்க்கர்’ கொண்டு சிதறடித்த அந்த நொடியில்தான் ஜாகிர் கான் என்கிற புதிய ஹீரோ பிறந்தார்.

ஏக்நாத் சோல்கர், கார்சன் காவ்ரி வரிசையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து, இந்திய அணிக்கு இடதுகை வேகபந்து வீச்சாளராக ஜாகிர் கிடைத்தார். பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் போன்ற வீரர்களைப் பார்த்து ஏங்கிய இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்தும், பிற்காலத்தில் ஆஷிஷ் நெஹ்ரா, இர்ஃபான் பதான், ஆர்பி சிங் போன்ற இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை இனம் காண உதவியதும் ஜாகிர் கானின் வெற்றியை மனதில் வைத்துதான்.

zaheer khan
 
 

கிரிக்கெட்டில் ஏன் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்பெஷல்?

முக்கால் வாசி பேட்ஸ்மேன்கள் வலதுகை ஆட்டக்காரர்கள். பந்துவீச்சாளர்களும் வலதுகையில் பந்து வீசுகையில், பேட்ஸ்மேன்கள் பந்தை சுலபமாகக் கணித்து ஆடிவிட முடியும். எப்படி என்றால், கள நடுவரின் இடதுகை பக்கத்திலிருந்து பந்து வீசுவது என்பதே இயல்பாக எல்லோரும் செய்யக்கூடிய விஷயம். பேட்ஸ்மேனுக்கு அவ்வாறு பந்து வருகையில், விழித்திரை சற்றும் பாதிக்கப்படாமல் பந்தின் தன்மை அறிந்து அடித்து ஆடவோ அல்லது விட்டுவிடவோ முடிவெடுப்பது சுலபம். அதே வேளையில், வலதுகை ஆட்டக்காரர்களுக்கு இடதுகை கொண்டு நடுவரின் வலது பக்கத்திலிருந்து பந்தை எதிர்கொள்ளும்போது, பந்து ரிலீஸ் ஆனவுடன் அதன் தன்மையை உணர்ந்து முழு விழித்திறனுடன் எதிர்கொள்வது கடினம். கண்களை இடது தோள்மீது நிலைநிறுத்தி, இடதுகை பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்வது, நேராக நிலைநிறுத்தி வலது கையில் வீசும் பௌலர்களைச் சமாளிப்பதைவிட கடினம்.

ஜாகிரின் வருகைக்கு முன்னர், மித வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் போன்றோரை மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு, பாகிஸ்தான் பௌலர்களைப்போல மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய ஜாகிரை உடனே பிடித்துவிட்டது. தொடக்கக் காலங்களில் சீரான பயிற்சி இல்லாத காரணத்தால், மூன்று  வருடங்களுக்குள்ளாகவே ஜாகிரின் தொடை பகுதியில் காயங்கள் ஏற்பட்டன. பல்வேறு அறுவைசிகிச்சைகளுக்குப் பிறகு, தன்னுடைய குதித்து பௌலிங் செய்யும் ஸ்டைலில்தான் பிரச்னை என்பதை அறிந்துகொண்டார். இரண்டு வருடங்களுக்கு மேலாக ஓய்விலும், தன்னுடைய இயல்பான ஆட்டத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்த ஜாகிருக்கு, இங்கிலாந்திலிருந்து கவுண்டி கிரிக்கெட் ஆட வாய்ப்புக் கிடைத்தது.
 
`உர்செஸ்டர்ஷைர்’ அணிக்காக விளையாடிய சீஸனில் 78 விக்கெட்டுகள் வீழ்த்தி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார். முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தன்னுடைய உடம்பை நன்கு புரிந்துகொண்டு, ரன்அப்பைக் குறைத்துக்கொண்டு அதிகம் ஜம்ப் செய்யாமல் கொஞ்சம் வேகத்தை மட்டும் குறைத்து அதிகமாக விவேகத்தைக் கூட்டிக்கொண்டார். 2007-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் டிராவிட் முதலில் தேர்வுசெய்தது ஜாகிரை.

zaheer khan

இந்தியாவின் `எஸ்ஜி’, இங்கிலாந்தின் `ட்யூக்’, ஆஸ்திரேலியாவின் `கூக்குபுர்ரா’ பந்துகள் ஒன்றோடு ஒன்று வேறுபட்டவை. இங்கிலாந்திலே 18 மாதங்களுக்குமேல் விளையாடிய ஜாகிரின் அனுபவம் கைகொடுக்கவே இந்தியா தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. ஜாகிரின் வித்தையைக் கண்டு வாயடைத்துப்போன, ஆங்கிலேயே விமர்சகர்கள், என்ன சொல்வதெனத் தெரியாமல் `ஜாகிர் `ஜெல்லி பீன்’ மென்று அதனின் உமிழ்நீர் கொண்டு பந்தை `ஷைன்’ செய்வதால்தான் பந்து அவருக்கு மட்டும் ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது' எனப் புலம்பித் தீர்த்தார்கள்.
 
கவுன்டிக்காக விளையாடிய அனுபவமும், இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியும் ஜாகிரை இந்திய அணியின் அறிவிக்கப்படாத பௌலிங் கேப்டனாகச் செயல்படவைத்தன. இதைப் பல முறை தோனி வெளிப்படையாகவே சொன்னது, ஜாகிரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவே செய்தது. ஸ்ரீசாந்த், இஷாந்த ஷர்மா, முனாஃப் படேல், ஆஷிஷ் நெஹ்ரா போன்றோரோடு கூட்டணி அமைத்து, தோல்விகளின் பிடியிலிருந்தும் வெற்றிகளைத் தேடித் தந்தார்.
 
2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணங்களில், ஜாகிரின் 21 விக்கெட்களும் முக்கிய இடம்பிடிக்கிறது. பௌலர்களுக்குப் பெரிதும் உதவாத இந்திய ஆடுகளங்களில் தன்னுடைய இறுதி காலகட்டங்களில், துல்லியமாக வேகத்தை மாற்றினார். விரல்களின் மூலம் பந்தை விடுவிக்காமல், உள்ளங்கையிலிருந்து கொஞ்சம்கூட பிசிறில்லாமல் பந்தை விடுவித்து விக்கெட்டுகளைக் குவித்ததை உலகமே ஆச்சர்யமாகப் பார்த்தது.
 
உலகக்கோப்பையை வென்றது தன்னுடைய சாதனைகளின் உச்சம் என ஜாகிரே தெரிவித்தாலும், அதையும் தாண்டி அவர் ஏன் என்றென்றும் போற்றப்படவேண்டுமென்றால்... டெஸ்ட் போட்டிகளில், குறிப்பாக இந்தியாவில் நடக்கும் ஆட்டங்களில் வேகப்பந்து வீச்சாளர்களின் வேலை என்னவென்றால், பேருக்கு நான்கு ஓவர் வீசிவிட்டு, பந்தை ஹர்பஜன், கும்ப்ளேவிடம் ஒப்படைத்துவிட்டு பெளண்டரிக்கு அருகில் போய் நின்றுக்கொள்வது. இந்தியாவின் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இல்லாததும், நாம் இங்கு பயன்படுத்தும் பந்து அதன் பொலிவை சீக்கிரம் இழந்து வேகமாகவோ, ஸ்விங்கோ ஆகாமல் கடுப்பேற்றும். இவ்வளவு பாதகங்கள் இருந்தாலும், அதனிலும் ஒரு ரூட் பிடித்து வெற்றிபெற்றவர் ஜாகிர்.
 
பந்தை நேராகப் பிடிக்காமல், `கிராஸ் சீம்’ பிடித்து, பந்தை சொரசொரப்பாக்கி, `ரிவர்ஸ் ஸ்விங்’ செய்வதற்குத் தயார்ப்படுத்தி, ஆடுகளங்கள் ஒத்துழைக்காதபோதும் எவ்வாறு விக்கெட் எடுக்க வேண்டும் எனச் சொல்லிக்கொடுத்தார். கவுண்டி கிரிக்கெட் கொடுத்த அனுபவத்திலிருந்து அடுத்தடுத்த சுற்றுப்பயணங்களில், ஏழு வருடங்களில் 45 டெஸ்ட் போட்டிகளில்186 விக்கெட்டுகளை 30 ரன்களுக்கும் குறைவான சராசரியில் அள்ளினார். இந்தக் காலகட்டத்தில்தான் இந்தியா தைரியமாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தது. தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடரை சமன் செய்தும், இங்கிலாந்து, நியூஸிலாந்து தொடர்களைக் கைப்பற்றியும் உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியாக உருவானது.

zaheer khan
 

 

2014-ம் ஆண்டு நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அதே போட்டியில், மெக்கல்லம்  - வாட்லிங் இணை இந்தியாவின் வெற்றியைத் தடுத்ததே ஜாகிரின் கடைசிப் போட்டியாக அமைந்தது. அவரது நீண்டகால பிரச்னைகளான தசைப்பிடிப்புகளும் காயங்களும் மீண்டும் துரத்தின. 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற கையோடு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கு, முதல் நாளே அதிர்ச்சி காத்திருந்தது. வெறும் 13 ஓவர்கள் வீசியதோடு, காயம் காரணமாக ஜாகிர் விலக, தோனியின் அணி சரிவை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அந்தத் தொடரிலிருந்து ஜாகிர் தொடர்ந்து விளையாட முடியாமல் போனாலும், அணியின் நலனுக்காக பயணம்செய்து, வியூகங்களை வகுத்துக்கொடுத்துக்கொண்டே வந்தார்.
 
தன்னுடைய 89-வது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவின் காலிஸை வீழ்த்தி, கபில் தேவுக்குப் பிறகு `300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்' என்ற பெருமையைப் பெற்றார். உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக கம்மியான ரன்கள் கொடுத்து அதிகமுறை அவர்களை வெளியேற்றியுள்ளார். அதில் குறிப்பிடும்படியான வீரர்களின் பட்டியலில், மைக்கல் க்ளார்க், ரிக்கி பாண்டிங், சங்கக்காரா, க்ரீம் ஸ்மித், ஹேடன் போன்றோரை அவர்களின் பேட்டிங் சராசரிக்குப் பாதிக்குப் பாதி விகிதத்தில் வீழ்த்தி தன்னுடைய ஆளுமையை நிரூபித்துள்ளார்.
 
மொத்தம் 23 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்று 44 விக்கெட்டுகள் குவித்து, இருமுறை இறுதிப் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்களில் ஒருவர் ஜாகிர். இன்றளவும் ஐ பி எல் போட்டிகளில் டெல்லி அணிக்காகப் பயிற்சியாளராகவும் கேப்டனாகவும் விளையாடிவருகிறார். பி.சி.சி.ஐ இரண்டு மாதங்களுக்கு முன், இந்திய அணி சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளும்போது ஜாகிரை பௌலிங் ஆலோசகராக நியமித்த செயல் ஒன்று போதும், ஜாகிர் கான் யார் என அறிவதற்கு.
 
வசதி வாய்ப்புகள் ஏதுமில்லாதபோதும், கனவுகள் காண்பதை மட்டும் என்றுமே நிறுத்தாமல் `எனக்குத் தெரியும், நான் என் கனவை வென்றெடுத்தே தீருவேன்' என்று கனவு காணும் அனைத்து விளிம்புநிலை மனிதர்களுக்கும், ஜாகிர்தான் சிறந்த உதாரணம். இன்று 39-வது வயதில் அடியெடுத்து வைக்கும் ஜாகிர் கானுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

http://www.vikatan.com/

 

  • தொடங்கியவர்

இதை பிடித்தால் தான் ஆண்களா? விசித்திர மரபு

 

பல இனத்தவர்களும் வாழ்கின்ற இவ் உலகில் அவரவர்களுக்கென்று தனித்துவமிக்க கலாசார மரபுகளே அவர்களின் அடையாளங்களாக  திகழ்கின்றன.

அமேசன் காடுகளில் வாழும் பழங்குடி இனங்களில் மிகவும் பழைமையான இனத்தவர் "மவ் பழங்குடியினர்" இந்த இனத்தில் பிறந்தவர்கள் பின்பற்றும் மரபு விசித்திரமானது. 

இந்த பகுதியில் ஒவ்வொரு ஆணும் பருவ வயதை எட்டியதும் எறும்பு கையுறை சடங்கில் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டுமாம், அப்படி இல்லையென்றால் அவர்கள்  "மவ்" இனத்து ஆண்களாகக் கருதப்பட மாட்டார்கள்.

அதாவது ஓர் ஆண்மகன் தான் பருவ வயதை எட்டிவிட்டதாக நினைத்தால், அவன் தன் வயது நண்பர்களுடன் மருத்துவரையும் அழைத்துக்கொண்டு காட்டுக்குச் சென்று, உலகிலேயே அதிக விஷமுள்ள மிகக்கொடிய காட்டு எறும்புகளை ஒவ்வொன்றாக பிடித்து மூங்கில் கம்பில் அடைத்து எடுத்து வர வேண்டும்.

59d8956118737-IBCTAMIL.jpg

பிறகு அந்த எறும்புகளை இரண்டு கையுறைகளில் இட்டு நிரப்ப வேண்டும் , குறித்த இளைஞன் சுமார் 10 நிமிடம் தன் இரண்டு கைகளையும் அந்தக் கையுறையில் நுழைத்து வைத்திருக்க வேண்டும்.

கோபத்தின் உச்சியில் இருக்கும் காட்டு எறும்புகள் குறித்த நபரின் கைகளை ஒருவழியாக்கிவிடும், அதை தாங்கி கொண்டு அவன் இருந்தால்அந்த நிமிடம் முதல் அவன் "மவ்" இனத்தின் இளைஞனாக கருதப்படுகிறான்.

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.