Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

நெஞ்சை உறைய வைத்த 'அவள்' படத்தின் ட்ரைலர்..!

 

Aval-Movie-21_19035.jpg

சித்தார்த் நடித்துள்ள 'அவள்' படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மிலிண்ட் இயக்கியுள்ளார். ஜிரிஸ் என்பவர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை வியாகாம் 18 என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ட்ரைலர் பார்ப்பவர்களை மிரட்டும் வகையிலுள்ளது. தமிழில் ஏராளமான பேய் படங்கள் வந்தாலும், இது சற்று வித்தியாசமான பேய் படமாக இருக்கிறது. ஏற்கெனவே இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்ற நிலையில் தற்போது ட்ரைலரும் வெளியாகியுள்ளது.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
‘இயற்கையைப் புறக்கணித்தால், இயங்காது வேளாண்மை’
 

image_9ba7a5c740.jpgநல்ல செழுமைமிகு தரையில் மழை பெய்யும்போது, ஓர் அதீத வாசனை கிளம்பும். இதை மண்வாசனை என்கின்றோம். உண்மையில் இந்த மண்வாசனை என்றால் என்ன?

மழைநீர் தரையைத் தொட்டதும், மண்ணில் இருக்கும் நுண்உயிர்கள், உயிர்ப்புடன் கிளம்பும்போது, ஒரு வாசனை எங்கள் நாசியில் தொட்டு நிற்கும்.

ஆனால், இந்த இயற்கையின் வருடலை, எம்மவர்கள் கிருமிநாசினி கொண்டு, பயிர்களை அழிக்கும் கிருமிகளைக் கொல்லப்பார்க்கிறார்கள்.

கிருமிநாசினியால், பயிர்களின் வளர்ச்சிக்குப் பாரிய உதவிபுரியும் நுண் உயிர்களே அழிந்து விடுகின்றன.

இந்தக் கிருமிநாசினிகளின் பாவனையால், மண்வளம் இன்று குறைந்து வருகின்றது.

எமது முன்னோர்கள், இயற்கை முறையிலான வேளாண்மையை மட்டுமே செய்து வந்தனர். இயற்கையைப் புறக்கணித்தால், இயங்காது வேளாண்மை.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 10

 

680 : முஹம்­மது நபிகள் நாய­கத்தின் பேரன் ஷியா இமாம் உசேன் பின் அலி, கலீபா முதலாம் யாஸி­தியின் படை­யி­னரால் கழுத்து வெட்டிக் கொலை செய்­யப்­பட்டார். முஸ்­லிம்­க­ளினால் இந்நாள் ஆஷுராஹ் என அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கி­றது.

1780 : கரீ­பியன் பிராந்­தி­யத்தில் தாக்­கிய பெரும் சூறா­வ­ளி­யினால் சுமார் 30,000 பேர் வரை இறந்­தனர்.

Sri_Lanka_Army_Logo-300x250.jpg1868 : கியூ­பாவின் முத­லா­வது சுதந்­திரப் பிர­தேசம் “லாடெ­ம­ஹா­குவா” பகு­தியில் கார்லோஸ் செஸ்­பெடஸ் என்­பவர் தலை­மையில் அறி­விக்­கப்­பட்­டது.

1911 : சீனாவில் வூச்சாங் எழுச்சி ஆரம்­ப­மா­கி­யது. இது சிங் வம்­சத்தை முடி­வுக்குக் கொண்டு வந்து சீனக் குடி­ய­ரசு உரு­வா­வ­தற்கு வழி­வ­குத்­தது.

1942 : அவுஸ்­தி­ரே­லி­யா­வுடன் சோவியத் ஒன்­றியம் ராஜ­தந்­திர உறவை ஏற்­ப­டுத்­தி­யது.

1943 : ஜப்­பா­னி­யரின் பிடியில் இருந்த சிங்­கப்­பூரில் துறை­முகம் மீதான தாக்­கு­த­லுக்கு உடந்­தை­யாக இருந்­த­தாக 57 அப்­பா­விகள் ஜப்­பா­னி­யர்­க­ளினால் கைது செய்­யப்­பட்டு சித்­தி­ர­வ­தைக்­குள்­ளாக்­கப்­பட்­டனர்.

1944 : இரண்டாம் உலகப் போரின்­போது 800 ஜிப்சி சிறு­வர்கள் அவுட்ஸ்விச் வதை­மு­காமில் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

1945 : போருக்குப் பின்­ன­ரான சீனா குறித்து சீனக் கம்­யூனிஸ்ட் கட்­சி­யி­னரும் குவோ­மின்­டாங்கும் உடன்­பாட்­டிற்கு வந்­தனர். இது இரட்டை பத்து உடன்­பாடு என அழைக்­கப்­ப­டு­கி­றது.

1949 : இலங்கை சுதந்­திரம் பெற்­றபின் இலங்கை இரா­ணுவம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1957 : ஐக்­கிய இராச்­சியம், கம்ப்­றியா என்ற இடத்தில் உலகின் முத­லா­வது அணு உலை விபத்து இடம்­பெற்­றது.
1967 : விண்­வெளி தொடர்­பாக அறு­ப­துக்கும் அதி­க­மான நாடு­களால் 1967 ஜன­வரி 27 ஆம் திகதி கையெ­ழுத்­திட்ட உடன்­பாடு அமுல் படுத்­தப்­பட்­டது.

IPKF.jpg1970 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து ஃபிஜி சுதந்­திரம் பெற்­றது.

1970 : கன­டாவின் மொண்ட்­றியால் நகரில் கியூ­பெக்கின் உதவிப் பிர­த­மரும், தொழி­ல­மைச்­சரும் கியூபெக் விடு­தலை முன்­னணி தீவி­ர­வா­தி­க­ளினால் கடத்­தப்­பட்­டனர்.

1971 : விற்­பனை செய்­யப்­பட்டு, பாகங்­க­ளாக அமெ­ரிக்­கா­வுக்குக் கொண்­டு­செல்­லப்­பட்ட லண்டன் பாலம் அரி­சோ­னாவின் லேக் ஹவாசு நகரில் மீள ஸ்தாபிக்கப்­பட்டு திறக்­கப்­பட்­டது.

1973 : அமெ­ரிக்க உப ஜனா­தி­பதி ஸ்பைரோ அக்னிவ் வரி மோசடி குற்­றச்­சாட்டின் கார­ண­மாக அப்­ப­த­வி­யி­லி­ருந்து ராஜி­னாமா செய்தார்.

1986 : 7.5 ரிச்டர் அளவு நில­ந­டுக்கம் எல் சல்­வடோர் நாட்­டில்சான் சல்­வடோர் நகரைத் தாக்­கி­யதில் 1,500 பேர் இறந்­தனர்.

1987 : இந்­திய அமைதிப் படை­யி­ன­ருக்கும் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கும் இடையில் யாழ்ப்­பா­ணத்தில் போர் ஆரம்­ப­மா­னது.

1991 : தமிழ்­நாட்டில் நாகப்­பட்­டினம் மாவட்டம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1997 : உரு­கு­வேயில் விமா­ன­மொன்று வெடித்துச் சித­றி­யதால் 74 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1998 : கொங்­கோவில் விமா­ன­மொன்று கிளர்ச்­சி­யா­ளர்­களால் சுட்­டு­வீழ்த்­தப்­பட்­டதால் 41 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2008 : பாகிஸ்­தானில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களால் 110 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2012 : இலங்கை உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.

2015 : துருக்கியின் தலைநகர் அன்காராவின் பிரதான ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புகளில் 102 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 400 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோரின் மனதையும் வென்ற வடிவேலு பிறந்ததினம்Bild könnte enthalten: 1 Person, lächelnd, steht und Text

இவர் ஒரு கருப்பு சிவாஜி - ஹேப்பி பர்த்டே வடிவேலு ! #hbdvadivelu

vadivelu.jpg

வடிவேலு என்ற பெயரைக் கேட்டாலே தமிழர்களுக்கு உற்சாகம் கொப்பளிக்கும். சினிமாவில் அவருக்கு நீண்ட இடைவெளி விழுந்துவிட்டாலும் இன்னமும் நகைச்சுவை சேனல்களின் நாயகன் வடிவேலுதான். பலரின் இரவு, வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியைப் பார்த்து ரசித்து சிரிப்பதிலேயே முடிகிறது. தொடக்கத்தில் ‘கறுப்பு நாகேஷ்’ என்ற அடையாளத்துடன் கிராமத்து அப்பாவி இளைஞன் கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த வடிவேலு, குறுகிய காலத்திலேயே சுதாரித்துக்கொண்டு தனக்கான தனித்துவமான பாணியையும் பாத்திரங்களையும் வடிவமைத்துக்கொண்டார். 

 

maruthamalai.jpg

வடிவேலுவை ஒருவகையில் சிவாஜிகணேசனோடு ஒப்பிடலாம். விதவிதமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் விதவிதமான கெட்டப்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டியவர் சிவாஜி. அதேபோல் ஒரு பாத்திரத்துக்கும் இன்னொரு பாத்திரத்துக்குமான வித்தியாசமான உடல்மொழியையும் முகபாவனைகளையும் வேறுபடுத்திக் காட்டுவதிலும் மெனக்கெட்டவர்.  ‘நவராத்திரி’ படமே அதற்குச் சாட்சி. வடிவேலுதான் நகைச்சுவை நடிகர்களில் ஏராளமான விதவிதமான கெட்டப்களில் நடித்தவர். மேலும் அவர் எந்த கெட்டப் போட்டாலும் அது அச்சு அசல் அவருக்குப் பொருந்துகிறது. போலீஸ் வேடங்களிலேயே சில படங்களில் நடித்திருந்தாலும் ’டெலக்ஸ் பாண்டியன்’ போலீஸ் நடிப்புக்கும் ‘மருதமலை’ சிரிப்பு போலீஸ் நடிப்புக்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கும். உதார் ரெளடி கேரக்டர்கள் என்றாலும் ’கைப்புள்ள’க்கும் ‘நாய்சேகரு’க்கும் வித்தியாசமிருக்கும். ’பாட்டாளி’ படத்தில் பெண்வேடமிட்டு அதகளப்படுத்தியிருப்பார்.

மேலும், சிவாஜியோடு வடிவேலுவை ஒப்பிட முக்கியமான காரணம், தமிழ் சினிமாவில் சிவாஜியின் உடல்மொழியை உள்வாங்கிக்கொண்டதில் வடிவேலுவுக்கு இணையாக ஒரு நடிகரைச் சொல்ல முடியாது. ‘டெலக்ஸ் பாண்டியன்’,  மும்தாஜுடன் போலீஸ் வேடத்தில் நடித்த படம் ஆகியவற்றில் அப்படியே சிவாஜியை இமிடேட் செய்திருப்பார். ஆனால் வேறு பல படங்களிலும் சிவாஜியின் உடல்மொழியையும் முகபாவனையும் உள்வாங்கிப் பிரதிபலித்திருப்பார். சிவாஜி சீரியஸாக வெளிப்படுத்திய உடல்மொழியை காமெடியாக்கியிருப்பார். ஒருவகையில் சிவாஜியைத் தலைகீழாக்கம் செய்தவர் வடிவேலு என்று சொல்லலாம்.

deluxe%20pandi.jpg

தமிழ் சினிமாவில் எப்போதுமே நாயகர்களுக்கு இணையான மக்கள் செல்வாக்கும் வரவேற்பும் நகைச்சுவை நடிகர்களுக்கும் உண்டு. என்.எஸ்.எஸ்.கிருஷ்ணன் காலத்திலிருந்து வடிவேலுவின் காலம் வரை அது தொடர்கிறது என்றாலும் தன் முன்னோடி நகைச்சுவை நடிகர்களில் இருந்து வடிவேலு வேறுபட்டு, நிகழ்த்திக் காட்டிய சாதனைகள் ஏராளம்.

தமிழ் சினிமா நகைச்சுவையின் இருண்டகாலம் என்றால் அது பிந்துகோஷ், ஓமக்குச்சி நரசிம்மன், உசிலை மணி, குண்டு கல்யாணம் போன்றவர்கள் தங்கள் உடலமைப்பைக் கொச்சைப்படுத்தி நடித்த காலகட்டம்தான். அதேபோல் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த காலகட்டத்தையும் தமிழ் சினிமா நகைச்சுவையின் இருண்ட காலகட்டம் என்று சொல்லலாம். ரஜினியின் உறவினர் என்ற ஒரே காரணத்துக்காகவே பல படங்களில் தோன்றி தமிழர்களைப் படாதபாடு படுத்தியவர் ஒய்.ஜி.மகேந்திரன். இத்தகைய கொடூரமான நகைச்சுவைகளில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றியவர் கவுண்டமணி. சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் கலாய்ப்பது, கூர்மையான சமூக விமர்சனம் என்று ஒருவகையில் கவுண்டமணியை எம்.ஆர்.ராதாவின் வாரிசு என்று சொல்லலாம். ஆனால் கவுண்டமணி காமெடியின் பிரச்னையே அவர் சகட்டுமேனிக்கு எல்லோரையும் இழிவுபடுத்தியதுதான். குறிப்பாக கருப்பானவர்களையும் வழுக்கை உடையவர்களையும் கொச்சைப்படுத்துவதே கவுண்டமணி காமெடியின் மையமாக இருந்தது. (இத்தனைக்கும் கவுண்டமணியும் கறுப்புதான். அவருக்கும் வழுக்கைத்தலைதான்)

ஆனால் வடிவேலுவின் காமெடியோ முற்றிலுமாக கவுண்டமணியிடம் இருந்து வேறுபட்டது. அது தன்னைத்தானே கிண்டல் செய்துகொண்டது. சுய விமர்சனம் - சுய பகடி என்ற அடிப்படையான நல்ல அம்சத்தைத் தமிழர்களிடம் அறிமுகப்படுத்தியது. ஊருக்குள் உதார்விட்டுத் திரியும் மனிதர்களைத் திரையில் பிரதிபலித்து காமெடி செய்தார் வடிவேலு. ஹீரோக்களின் பன்ச் டயலாக்குகள், அரசியல் தலைவர்களின் மிகையான வாக்குறுதிகள், போலி ஆவேசமும் வாய்ச்சவடால்களும் நிறைந்த மேடைப் பேச்சுகள் ஆகியவற்றைக் காலம் காலமாகப் பார்த்துப் பழகிய தமிழர்கள், உதார் மனிதர்களை காமெடி செய்து அம்பலப்படுத்திய வடிவேலுவை ஆரவாரமாகக் கொண்டாடினார்கள்.

giri.jpg

வடிவேலு எந்த ஹீரோவோடு சேர்ந்து நடித்தாலும் அதற்கேற்ப நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கிக்கொண்டார். ரஜினிகாந்த், சத்யராஜ், பார்த்திபன், அர்ஜூன், பிரசாந்த் தொடங்கி விஜய், சூர்யா வரை எல்லா நாயகர்களுடனும் நடித்து அவர்களை மிஞ்சும் வகையில் நகைச்சுவை நடிப்பைப் பிரதிபலித்துக் காட்டினார். அர்ஜூன், பிரசாந்த் போன்றவர்கள் நடித்த ‘வின்னர்’, ‘மருதமலை’, ‘கிரி’ போன்ற படங்கள் வடிவேலுவின் நகைச்சுவைக்காகவே நினைவுகூறப்படுகின்றன. வடிவேலுவை எடுத்துவிட்டுப் பார்த்தால், அந்தப் படங்களில் எதுவுமே இல்லை.

winner.jpg

வடிவேலு நிகழ்த்திய முக்கியமான சாதனை, மொழியமைப்பையே தன் வசப்படுத்திக்கொண்டது. சொலவடைகளும் பழமொழிகளுமே நமது தமிழர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்டது. ஆனால் 2003ல் ‘வின்னர்’ படம் வெளியானதில் இருந்தே வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள் பழமொழி, சொலவடைகளின் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டன. நாட்டில் நடக்கும் எந்த ஒரு சம்பவத்தையும் வடிவேலுவின் டயலாக்குகளுடன் பொருத்திப் பார்க்கப் பழகிவிட்டனர் தமிழர்கள். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தையும் வடிவேலுவின் வசனங்கள் வழியாக விளக்கி, கலாய்க்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். சென்ற ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வடிவேலு சினிமாவில் நடிக்காமல் தொய்வு ஏற்பட்டாலும் சமூக ஊடகங்களான ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ், ட்வீட்கள், வாட்ஸ்-அப் செய்திகள், மீம்ஸ் என எல்லாவற்றிலும் தவறாமல் வடிவேலுவும் அவரது வசனங்களும் இடம்பெற்றன. இத்தனைக்கும் சமயங்களில் ‘ஏன்?’, ‘வேணாம் வேணாம்’ என்பது போன்ற சாதாரண வார்த்தைகளையே தனது தனித்துவமான உச்சரிப்பின் மூலம் சிறப்பான வார்த்தைகளாக மாற்றிக்காட்டியவர் வடிவேலு. வடிவேலு அளவுக்கு எந்த நகைச்சுவை நடிகர்களின் வசனங்களும் இந்த அளவுக்கு அன்றாட வாழ்க்கையில் புழங்கியது கிடையாது. இன்னும் சொல்லப்போனால், ஹீரோக்களின் பன்ச் டயலாக்குகளைவிட அதிக செல்வாக்கு கொண்டவை வடிவேலுவின் வசனங்கள்.

porkaalam.jpg

இறுதியாக மீண்டும் ஒருமுறை சிவாஜிகணேசனைப் பற்றி ஒரு விஷயம். சிவாஜி அவரது மிகை நடிப்புக்காக கிண்டலடிக்கப்பட்டாலும், உண்மையில் அவர் ஒரு நல்ல இயல்பான நடிகர். குறிப்பாக ‘பலே பாண்டியா’, ’சபாஷ் மீனா’ போன்ற நகைச்சுவைப் படங்களில் இயல்பான, அட்டகாசமான நடிகர் சிவாஜியைக் காண முடியும். ஒரு நடிகனால் மக்களை நெகிழ்ந்து அழவும் வைக்க முடியும், வெடித்துச் சிரிக்கவும் வைக்க முடியும் என்றால் அவரே மகத்தான கலைஞன். அந்த வகையில் சிவாஜிகணேசனைப் போலவே வடிவேலுவும் மகத்தான கலைஞன். அவரால் நகைச்சுவைக் காட்சிகளில் மட்டுமல்லாது, குணச்சித்திர நடிப்பிலும் வெளுத்துக்கட்ட முடியும். கவுண்டமணி, சந்தானம் போன்றவர்களிடம் இருந்து வடிவேலு வித்தியாசப்படும் முக்கியமான இடம் இது. வடிவேலுவின் குணச்சித்திர நடிப்பு ஆச்சி மனோரமா, நாகேஷ் போன்றவர்களுடன் ஒப்பிடத்தக்கது. தேவர் மகனில் கையை இழந்தபிறகு பேசும் காட்சி, ‘’ஊரெல்லாம் உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை தேடினியே; நான் கறுப்பா இருக்கேன்னுதானே என்கிட்ட கேட்கலை?” என்று ‘பொற்காலம்’ படத்தில் முரளியிடம் கேட்கும் காட்சி என்று பல உதாரணங்களைச் சொல்லலாம்.

imsai.jpg

நகைச்சுவைக் காட்சிகளே இல்லாமல் முழுக்க குணச்சித்திரப் பாத்திரத்திலேயே ஒரு படத்தில் வடிவேலுவால் சிறப்பாக நடிக்கமுடியும். ‘இம்சை அரசன்’ அதற்கு ஒரு சிறந்த உதாரணம். 23-ம் புலிகேசியாகக் கோணங்கித்தனம் செய்யும் அரசனாக நடிக்கும் அதேவேளையில் புரட்சிக் குழுவைச் சேர்ந்த போராளியாகவும் நடித்திருப்பார். புலிகேசியைப் பார்த்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்த பார்வையாளர்களான நாம், போராளி வடிவேலு பாத்திரத்தை சீரியஸாகவே பார்த்தோம் என்றால் அதுதான் வடிவேலுவின் வெற்றி.

நூற்றாண்டைக் கடந்த தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன் வடிவேலு.

http://cinema.vikatan.com

  • தொடங்கியவர்

இந்தக் கணிதத்தைப் புரிந்துகொண்டால் கொஞ்சம் சீக்கிரமாக டீ தயார் செய்யலாம்..! #Parabola

 

கணிதம்


இந்த உலகத்தில் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் ஏதாவது அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த ஒன்று இருக்கும். அறிவியல் என்பது கணிதத்தைச் சார்ந்து இருக்கும். ஆனால் கணிதம், அறிவியலைச் சார்ந்தது அல்ல. ஆக, வேகமாக டீ போட வேண்டுமானால் அதற்குள்ளும் ஒரு கணிதம் இருக்குமல்லவா? வாருங்கள் பார்ப்போம்.

 

இப்போது உங்கள் வீட்டில் கேஸ், மின்சாரம், எதுவும் இல்லை. ஒரு பாத்திரத்தை சுட வைக்க இப்போது இருப்பது சூரிய ஒளி மட்டுமே. 
”அட... போங்கப்பா. நம்மூர் வெளியிலுக்கு வெளியில் வைத்தாலே போதும்” என்று நினைக்காமல், இந்த வழியில் செய்தால் வேகமாக டீ தயார் ஆகும். இதற்கு நாம் 8ம் வகுப்பில் படித்த, எளிமையான பரவளையம் (Parabola) மட்டும் போதுமானது. 

பரவளையம் (parabola). இது U வடிவில் இருக்கும்.ஒரு கிரிக்கெட் பந்தை தூக்கி மேலே நோக்கி எறிந்து கீழே வரும் அந்தப் பந்தின் பாதையை நோக்கினால் அது பரவளையத்தை உருவாக்கும். இப்போது இதைப் பயன்படுத்தி Solar heater ஒன்று தயாரித்தால் போதும். இதற்கு ஒரு கண்ணாடி, மற்றும் சூரிய ஒளியைப் பிரதிபலிக்க (Reflector) கூடிய பொருள் ஆகியவை போதுமானது.

பரவளையத்தை நாம் ஏன் எடுத்தோம் என்பதற்கு இரு காரணங்கள் உள்ளன.

1. U வடிவம் கொண்ட பரவளையத்தின் மேல் எந்த ஒரு ஒளி பட்டாலும் எல்லாவற்றையும் பிரதிபலித்து ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு எல்லா ஒளியையும் கொண்டு போய் சேர்க்கும். இதை நாம் Focus point என்கிறோம்.

2.இந்தப் புள்ளியில் எல்லா ஒளியும் சேர்வதால் ஒரு வெப்ப ஆற்றலை உருவாக்கும். அந்த இடத்தில்தான் நீங்கள் டீ போடவேண்டிய பாத்திரத்தை வைத்தால் போகும் ரொம்ப சீக்கிரமாக டீ குடித்து விடலாம்.

ஓகே. எப்படி அந்த Focus point ஐ கண்டுபிடிப்பது? இதை எளிமையான சூத்திரத்தைக் கொண்டு விளக்கலாம்.
பரவளையத்தின் சமன்பாடு;

1.y = ax^2.....

Y என்பது பரவளையத்தின் நடுப்புள்ளியிலிருந்து கடைசிப்புள்ளி வரை உள்ள தொலைவு.
நாம் உதாரணமாக, x= 1 மீட்டர் என எடுத்துக் கொள்வோம்.

a என்பது பரவளையத்தின் உயரம். இது 4 மீ ஆக இருக்கும். ஆக , பரவளையத்தை உருவாக்கி விட்டோம்.
2. எல்லா ஒளியும் வந்து சேரும் இடத்தை (Focus point ) கண்டுபிடிக்க
f= 1/4a 
a என்பது தெரியும் 4 மீட்டர். 
f= 1 /4 x 4 = 1 /16 = 6.25 செ.மீ வரும்.

ஆக நாம் டீ போட வேண்டிய பாத்திரத்தை 6.25 செ.மீ இடத்தில் வைத்தால் சீக்கிரமாக டீ தயார் ஆகிவிடும்.

டிஷ்:
நாம் டிவி பார்க்க உதவும் Dish-tv வடிவம் கூட பரவளையம் (parabola) தான். அதை உற்றுப்பார்த்தால் ஒரு கம்பி குறிப்பிட்ட உயரத்துக்கு இணைத்து இருப்பார்கள். அதுதான் எல்லாப் புள்ளியும் வந்து சேரும் focus point.

டிஷ்

செயற்கைக்கோள்கள் அனுப்பி வைக்கும் சிக்னல்கள் எல்லாம் அலைகளாக வரும். இந்த அலைகள் டிஷ் ஆண்டனாவில் எந்த இடத்தில் பட்டாலும் எல்லா சிக்னல்களும் ஃபோகஸ் பாயின்ட்க்குப் போய் சேரும். இந்த இடத்தில் Receiver வைத்து நாம் வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மிகத் துல்லியமாகப் பார்க்க முடிகிறது. இதேபோல் கார், பைக்களின் முகப்பு விளக்கு, ஏவுகணை பறக்கும் வடிவம் போன்றவையும் பரவளையம்தான்.

ஆக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பலவற்றில் இருப்பது கணிதமும் அறிவியலும் மட்டுமே. நாம் எல்லோரும் பூமியில் இருக்கிறோம். ஆனால், பூமியே கணித சூத்திரங்களால்தான் சுற்றிக்கொண்டிருக்கிறது.

 

நாம் பார்ப்பதை, படிப்பதை அன்றாட வாழ்வில் ஒப்பிட்டுப் பார்த்தால் இதை விட பயன்பாடுகள், உதாரணங்கள் உங்கள் கண்ணுக்கு நிறைய தெரியும். 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

சே குவேரா வாரிசு சோஷலிசம் கடைபிடிக்கிறாரா?

உலகின் புகழ்பெற்ற புரட்சியாளர்களில் ஒருவரான எர்நெஸ்டோ சே குவேரா இறந்து ஐம்பது ஆண்டுகளாகின்றன. அர்ஜெண்டீனாவில் பிறந்த மருத்துவரான அவர், கியூப புரட்சியில் பிடெல் காஸ்ட்ரோவோடு இணைந்து போராடி, ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பத்தி ஒன்பதாம் ஆண்டு இராணுவ ஆட்சியை அகற்றினார். அவர் சோஷியலிஸத்தை வலியுறுத்தியிருந்தாலும் அவரது மகன்களில் ஒருவர் தனியார் நிறுவனம் அமைத்து இருசக்கர வாகன சுற்றுலாக்களை வழிநடத்துகிறார்.

  • தொடங்கியவர்

சிங்கப்பூரில் களைக்கட்டும் தீபாவளி பண்டிகை!!

 

 
சிங்கப்பூரில் களைக்கட்டும் தீபாவளி பண்டிகை!!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூரில் வீதிகள், அரசு பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் என அனைத்து இடங்களும் ஓவியம் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிப்பட்டுள்ளது. 

singa1.jpg

 

திபாவளி பண்டிகை வரும் 18ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகளவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் குடிபெயர்ந்த வெளிநாடுகளில் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். 

SINGA---2.jpg

சிங்கப்பூரில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பல லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அந்த வகையில் சிங்கப்பூர் அரசால் முக்கிய வீதிகள், அரசு பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் வண்ணக் கோலங்கள், மின்விளக்கு அலங்கரங்கள், தமிழ் வாசகங்கள் அடங்கிய வாழ்த்து பதாதைகள், என கண்கவரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

http://zeenews.india.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

நகைச்சுவை அரசி #மனோரமா நினைவு தினம்...

கோபி சாந்தா டு ‘ஆச்சி’ மனோரமா... புகழும் அதன் பின்னிருக்கும் வேதனையும்! #AachiManorama

 
 

மனோரமா

ன் எதார்த்த நடிப்பால் தமிழ் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் 55 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்தவர், மனோரமா. நடிப்பையே உயிர்மூச்சாக கருதி, மரணம் அருகில் வரும் வரை தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தவர். காமெடி, குணசித்திரம் என ஐந்து தலைமுறையாக வெற்றிக்கொடி நாட்டிய இந்த ஆச்சியின் சொந்த வாழ்க்கை, சோகங்களும் வலிகளும் நிறைந்தவை. அதை கண்கூடப் பார்த்தவரும், ஆச்சியின் உடன்பிறவா அண்ணனுமாகிய வீரய்யா, தங்கையைப் பற்றிய நினைவுகளை மனம் திறந்து பகிர்கிறார். 

 

மனோரமா

*'கோபி சாந்தா' என்ற இயற்பெயரை, திருச்சி நாடகக் கம்பெனியில் ஆர்மோனியக் கலைஞராக இருந்த தியாகராஜர், 'மனோரமா' என மாற்றினார். அதுக்குப் பிறகு அவர் நிறையப் புகழ்பெற்றாங்க.

மனோரமா

* 1957-ம் வருஷம், கவிஞர் கண்ணதாசன் திருச்சிக்குப் போனபோது, மனோரமாவின் நாடகத்தைப் பார்த்தார். 'சிறப்பான வார்த்தை உச்சரிப்பும் நடிப்புத் திறமையும் உன்னிடம் இருக்கு. மெட்ராஸ் வந்தால் என்னை வந்து பாரு. சினிமாவில் வாய்ப்பு வாங்கித்தரேன்'னு சொன்னார். இந்நிலையில், தன் நாடக கம்பெனியில் மனோரமாவை நடிக்கவைக்க நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சென்னைக்கு அழைச்சுட்டு வந்தார். அப்புறம், 'மாலையிட்ட மங்கை' படத்துக்காக, தயாரிப்பாளர் கண்ணதாசன் நடிகையாக அறிமுகம் செய்தார். தொடர்ந்து சினிமா, நாடகம் என மாறி மாறி நடிச்சாங்க. 

manorama

* 'மாலையிட்ட மங்கை' படத்தின் நாயகனாக டி.ஆர்.மகாலிங்கம், நாயகிகளாக பண்டரிபாய் மற்றும் மைனாவதி ஒப்பந்தம் செய்யப்பட்டாங்க. அதனால், 'உனக்கு நகைச்சுவை வேடம். உனக்கு ஜோடி, வீரய்யா'காக்கா' ராதாகிருஷ்ணன்' என கண்ணதாசன் சொன்னார். 'நகைச்சுவை வேடம் வேண்டாம். கதாநாயாகியாகவே நடிப்பேன்' என்றார் மனோரமா. அவங்களை சமாதனம் செய்தே அதில் நடிக்கவெச்சார் கண்ணதாசன். டி.ஆர்.மகாலிங்கத்துக்கு காபி கொடுத்து பேசுவதுதான் மனோரமாவின் முதல் காட்சி. நீளமான வசனம். பலமுறை சொல்லிக்கொடுத்தும் மனோரமாவால் சரியாகப் பேச முடியலை. இதனால், 'மனோரமாவைப் படத்திலிருந்து நீக்கிடலாம்'னு டைரக்டர் சொன்னார். 'பயிற்சி கொடுத்தா நல்லாப் பேசுவாங்க'னு நான் சொன்னேன். மனோரமாவின் வீட்டுக்கே போய் பயிற்சி கொடுத்தேன். மறுநாள் ஒரே டேக்ல சிறப்பா நடிச்சு கைத்தட்டல் வாங்கினாங்க. 

நாகேஷ் உடன்

* 'நான் ஆசைப்பட்ட மாதிரி கதாநாயகியா நடிச்சிருந்தால் பத்து வருஷத்தில் ஃபீல்ட் அவுட்டாகியிருப்பேன். காமெடி நடிகையா நடிச்சதால்தான் 1,500 படங்களுக்கும் மேலாக, அஞ்சு தலைமுறையா நடிச்சுட்டிருக்கேன். என் வளர்ச்சியில் உங்க பங்கு மகத்தானது' என என்னிடம் கண்ணீர்விட்டு பேசுவார். 'உன்னை மாதிரி பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியிருக்கேன். அதில் நீதான் பெரிய நட்சத்திரமா வந்த; அதுக்கு முழுக் காரணம், உன் உழைப்பும் திறமையும்தான்'னு நானும் சொல்வேன். 

தன் படங்களில்

* கால்ஷீட்டே கொடுக்க முடியாத அளவுக்கு சினிமாவில் பிஸியா நடிச்சுட்டிருந்தாலும் நாடகத்தில் நடிக்கிறதை வழக்கமா வெச்சிருந்தார். தினமும் அவங்க அம்மா காலைத் தொட்டு வணங்கிட்டுதான் ஷூட்டிங் கிளம்புவார். காலையில் ஏழு மணிக்குக் கிளம்பினால், ஷூட்டிங் முடிச்சுட்டு வீடு திரும்ப நடுராத்திரியாகிடும். 

மனோரமா

* மன்னார்க்குடியில் பிறந்து, நான்கு வயசிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க மனோரம்மா. மன்னார்குடி நாடக கம்பெனியில் நடிச்சுட்டிருக்கும்போது, சக நடிகரான ராமநாதனை காதலிச்சாங்க. அம்மாவின் எதிர்ப்பை மீறி அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. மகன் பூபதி பிறந்த கொஞ்ச நாளில் மனோரமாவைப் பிரிஞ்சு ராமநாதன் இன்னொரு கல்யாணம் செய்துக்கிட்டார். அம்மா, மகன் மட்டும்தான் மனோரமாவின் துணை. ராமநாதன் இறந்தச் சமயத்தில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை அனுப்பி, அவங்க குடும்பச் செலவுக்கு 25,000 ரூபாய் பணத்தைக் கொடுத்தார். 'உன்னைத் தவிக்கவிட்டுப்போனவரின் இறப்புக்குப் போகக்கூடாது'னு அவங்க அம்மா சொல்லியும், கணவரின் உடலுக்கு நேரில் போய் அஞ்சலி செலுத்தினாங்க மனோரமா. 

மனோரமா

* வறுமையோடு சென்னைக்கு வந்தாலும், தன் திறமையால் ஆயிரக்கணக்கான படங்களில் நடிச்சு கோடிக்கணக்கான சொத்துக்களைச் சம்பாதிச்சாங்க. ஆனால், நல்லத் தூக்கம் இல்லாம, சரியா சாப்பிடாம, எந்த உறவுகளின் அரவணைப்பும் இல்லாம, நிறைய நம்பிக்கை துரோகங்களைச் சந்திச்சாங்க. புகழ் மற்றும் வசதிகளுக்கு இடையே ஆச்சி சந்திச்ச சவால்கள் ரொம்ப அதிகம். தன் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளால் அடிக்கடி என்னைச் சந்திச்சு மனம்விட்டுப் பேசி அழுவாங்க. மூட்டுவலியால் ரொம்பவே வேதனைப்பட்டாங்க. ஆனாலும், எதையுமே காட்டிக்காமல், சினிமாவில் நடிச்சு மக்களை மகிழ்விச்சாங்க. 

சிவாஜியுடன் மனோரமா

* நடிகர் சிவாஜி கணேசனும் மனோரமாவும் அண்ணன் தங்கையாகவே வாழ்ந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தன் வீட்டிலிருந்து சாப்பாட்டைக் கொண்டுவந்து, ஷூட்டிங்கில் சிவாஜிக்கு தன் கைப்பட பரிமாறுவாங்க மனோரமா. சிவாஜி மறைந்த பிறகும் அவர் குடும்பத்தின் உறுப்பினராகவே இருந்துவந்தாங்க. 

மனோரமா

* ஒருநாளில் எத்தனை படங்களில் நடிச்சாலும், கொடுத்த கால்ஷீட்படி சரியா முடிச்சு கொடுத்துடுவாங்க. சினிமாவில் சில டேக் வாங்குவாங்க. ஆனா, மேடை நாடகங்களில் எத்தனை பக்க டயலாக்கா இருந்தாலும் சுலபமா நடிச்சுடுவாங்க.

* தமிழ் மட்டுமே தெரிஞ்சிருந்தாலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிப் படங்களிலும் நடிச்சுப் புகழ்பெற்றாங்க. 'சின்ன கவுண்டர்', 'சின்ன தம்பி' படங்கள் ஆச்சிக்கு ரொம்பப் பிடிக்கும். 

நாகேஷ் உடன்

* ஒரு பிரச்னையின் காரணமாக நடிகர் நாகேஷ், தன் மனைவியுடன் சிறிது காலம் மனோரமாவின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, ஏற்பட்ட ஒரு பிரச்னை ஆச்சியை ரொம்பவே கஷ்டப்படுத்துச்சு. அந்த நிகழ்வுக்குப் பிறகு, 'நாகேஷ் அண்ணன் எங்கிட்ட பேசவே மாட்டேங்கிறார். எனக்கு நரக வேதனையா இருக்கு'னு சொல்லி பல வருஷங்களா புலம்பினாங்க. 

அஜித்துடன் மனோரமா

* தன்னுடன் நடித்த நடிகர்களை பற்றி எங்கேயும் எந்தக் குறையும் சொல்ல மாட்டார் மனோரமா. கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக், 'கோவை' சரளா போன்ற சக நகைச்சுவை கலைஞர்களை எப்பவுமே உயர்வாகப் பேசி, பாராட்டிட்டே இருப்பாங்க. பிற்காலத்தில் ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித்குமார் என தன் மகன்களாக நடித்த எல்லா நடிகர்களிடமும் சொந்த அம்மா மாதிரி பாசம் காட்டிப் பழகினாங்க. 

manorama

* 'சில வருஷங்களாகவே தொடர்ந்து பல மூத்த சினிமா கலைஞர்களும் இறந்துட்டிருக்காங்க. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு'னு அடிக்கடி சொல்லிட்டிருந்தாங்க. கே.பாலசந்தர் இறந்தபோது, என்னைப் பார்க்க வந்தாங்க. 'நம்ம ஆளுங்களில் சிலர் மட்டும்தான் அண்ணா உயிரோடு இருக்காங்க. எனக்கும் உடம்பு ரொம்பவே முடியலை. அடுத்து நானாகூட இருக்கலாம்'னு சொன்னாங்க. அதன்படியே சில மாசத்தில் மனோரமா இறந்துட்டாங்க. 

வீட்டில் ஆச்சி

* காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, ஒருமுறை மனோரமாவின் ஒரு திரைப்படத்தைப் பார்த்து, அவர் நடிப்பை ரொம்பவே பாராட்டினார். இது தெரிஞ்சதும், காமராஜரைச் சந்திக்க அனுமதி வாங்கச்சொன்னார். அதன்படி, தன் மகனுடன் என்னையும் அழைச்சுட்டுப்போய் காமராஜரைச் சந்திச்சார். 'உங்க நடிப்பு ரொம்பவே சிறப்பா இருக்கு. நீங்க பெரிய கலைஞரா உயர்ந்து, தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கணும்'னு காமராஜர் வாழ்த்தினதும் நெகிழ்ந்துபோயிட்டாங்க. 

படங்களில் ஆச்சி

* கற்பகம் ஸ்டூடியோவில் ஒரு படத்துக்காக நடிச்சுட்டிருந்தாங்க. டிரஸ் மாற்றும் சமயத்தில் அவங்களை பாம்பு கடிச்சுடுச்சு. மயிலாப்பூரில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு மனோரமாவை என் மனைவி சுகுணா அழைச்சுட்டுப்போனாங்க. ரெண்டு நாள் மட்டுமே சிகிச்சை எடுத்துகிட்டு, மீண்டும் ஷூட்டிங்ல கலந்துகிட்டாங்க. இதுபோல, ஊட்டியில் நடந்த ஷூட்டிங்கில் குதிரையிலிருந்து கீழே விழுந்து மயங்கிட்டாங்க. ஒரு வாரம் சிகிச்சை பெற்றவங்க, முழுசா குணமாகும் முன்பே படப்பிடிப்பில் கலந்துகிட்டாங்க. தன் உடலுக்கு எவ்வளவு பிரச்சனை இருந்தாலும், தன்னால் படப்பிடிப்பு பாதிக்கக்கூடாதுனு நினைக்கிறவங்க மனோரமா. 

manorama

* அம்மா மற்றும் மகனுடன் மட்டுமே வாழ்ந்த காலத்தில், தன் வீட்டில் சில நாய்களைப் பாசமாக வளர்த்தாங்க. 'மனுஷங்க பலரும் நம்பவெச்சு ஏமாத்திட்டாங்க. ஆனால், இந்த ஜீவன்கள் நன்றி விசுவாசத்தோடு இருக்கு'னு அடிக்கடி சொல்வாங்க. அந்த நாய்களை பிள்ளைகள்போல அன்பு காட்டி வளர்த்தாங்க. 

ஜெயலலிதாவுடன் மனோரமா

* அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, என்.டி.ராமாராவ், ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் நடித்திருந்தவர். அவங்களோடு நல்ல நட்பில் இருந்தார். அவங்க மாற்றுக் கட்சிகளாகவும், தங்களுக்குள் போட்டி உணர்வுடனும் இருந்தாலும், ஆச்சியிடம் ஒரே மாதிரியான நட்போடு இருந்தாங்க. 

ஆச்சி

* ஆயிரக்கணக்கான சினிமா படங்களில் நடிச்சிருந்தாலும், மேடை நாடகங்களில் நடிக்கிறதையே பெருமையா நினைப்பாங்க. நாடக நடிகர்கள் பலரும் ஏழ்மையில் இருந்ததால், அவங்க பசங்களின் கல்யாணத்துக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து உதவி செய்வாங்க. இந்தப் பழக்கம் ஆரம்பத்திலிருந்து, ஆச்சியின் இறுதி காலம் வரைக்கும் தொடர்ந்துச்சு. இந்த விஷயம் சிலரைத் தவிர யாருக்கும் தெரியாது. 

 

* வார்த்தைக்கு வார்த்தை என்னை அண்ணா எனவும், என் மனைவியை அண்ணி எனவும் கூப்பிடுவாங்க. எனக்குத் தெரியாமல் ஒரு வீடு வாங்கி, தக்கச் சமயத்தில் அதை எனக்குப் பரிசாகக் கொடுத்து உதவின என் உடன்பிறவா தங்கை ஆச்சி மனோரமா. 

http://cinema.vikatan.com/

  • தொடங்கியவர்

78 நாட்கள் போதும் உலகைச் சுற்ற!

 
mark

உலகை வேகமாகச் சுற்றி வருபவருக்கே ஞானப்பழம் என்ற புராண காலத்து கதையெல்லாம் கிடையாது இது. உண்மையிலேயே உலகை வேகமாகச் சுற்றி வந்திருக்கிறார் ஸ்காட்லாந்து இளைஞர் ஒருவர். அதுவும் வெறும் 78 நாட்களிலேயே சுற்றி வந்திருக்கிறார் 34 வயதான மார்க் ப்யூமான்ட்.

கடந்த ஜூலை மாதம் 2-ம் தேதி உலகம் சுற்றக் கிளம்பினார் இவர். ஐரோப்பா கண்டத்தில் பயணத்தைத் தொடங்கிய இவர், ரஷ்யா, மங்கோலியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, பிரான்ஸ் ஆகிய கண்டங்கள் வழியாக வலம் வந்து தனது பயணத்தை செப்டம்பர் மாதத்தில் நிறைவுசெய்தார். மொத்தமே 78 நாட்களில் உலகம் சுற்றும் பயணத்தை சைக்கிளில் சென்று சாதித்துக் காட்டியிருக்கிறார் இவர். இதற்காகத் தினமும் 16 மணி நேரம் சைக்கிளை ஓட்டியிருக்கிறார்.

இதற்கு முன்பு நியூசிலாந்தின் ஆண்ட்ரூ நிக்கோல்சன் 123 நாட்களில் சைக்கிளில் உலகை சுற்றி வந்ததே சாதனையாக இருந்தது. அதை முறியடித்திருக்கிறார் மார்க் ப்யூமான்ட். இந்தப் பயணம் மூலம் சேர்ந்த நிதியைக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கவும் உத்தேசிக்கிறார் ப்யூமான்ட்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
தேம்ஸ் நதியில் 72 அடி தூரத்தை மோட்டார் சைக்கிளில் பாய்ந்த வீரர்
 

image_daaff0da8b.jpg

இலண்டனில் மிகப் பிரசித்தி பெற்ற தேம்ஸ் நதியில், 72 அடி தூரத்தை மோட்டார் சைக்கிளில் பாய்ந்து,  மோட்டார் சைக்கிள் வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் தெற்கில் அமைந்துள்ள தேம்ஸ் நதி, சுற்றுலாத்துறையினரைக் கவரும் மையமாக விளங்குகிறது. இந்த நதியின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு, டிராவிஸ் பெஸ்ட்ரானா என்ற வீரா், பாய்ந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் சாகச வீரரான டிராவிஸின் இந்தச் சாதனை குறித்து இங்கிலாந்து ஊடகங்கள் புகழ்ந்துள்ளன.

நதியின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பாயும் இவரது சாகசத்தை பலரும் நேரில் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளனர்.

image_7b1a6e0d9c.jpgimage_cb0d9db3a3.jpg

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

தமிழிசை, நாடகம், திரைப்படம், ஆன்மிகம் என பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கிய கே.பி. சுந்தராம்பாள் பிறந்த தினம்

லட்சம் ரூபாய் சம்பளம், சட்ட மேலவை உறுப்பினர்... தமிழ் இசையின் உச்சஸ்தாயி... கே.பி.சுந்தராம்பாள்! #VikatanInfographics

 
 

“அவ்வையே நீ கூறும் சமாதானத்தை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அம்மையப்பனிடம் இருந்து ஒரு பழத்தைப்பெற எனக்கு அருகதை இல்லையா? எனக்கு அந்தப்பழம் தரக்கூடாதா?’ என்று முருகன் கேட்ட அடுத்த நொடியே... ‘பழம் நீயப்பா... ஞானப் பழம் நீயப்பா...” என்று அவ்வையார் பெருங்குரல் எடுத்து பாட...  அந்தப் பாடலை கேட்பவர்கள் தன்னையறியாமல் இருந்த இடத்தையே பழநி மலையாக நினைத்து உருகுவார்கள். கே.பி.சுந்தராம்பாள் பாடுவதை கேட்கும்போது, ஏதோ அந்த அவ்வையாரே வந்து பாடுவதுபோல் இருக்கும். இப்படி குரலில் கம்பீரத்தையும் தெய்வீகத்தையும் ஒருங்கேபெற்ற  கே.பி.சுந்தரம்பாள் இதேநாளில்தான் (அக்டோபர் 10) பிறந்தார். 

கே.பி.சுந்தராம்பாள்

 

அவரைப்பற்றி 5.8.1965 ஆனந்த விகடன் இதழில் வந்த கட்டுரையில் இருந்து...

குழந்தைகளே! ஆற்றுக்குப் போகலாம் வாருங்கள்'' என்று அழைத்தாள் தாயார். தாயைப் பின்தொடர்ந்து சென்ற அந்தக் குழந்தைகள் மூவரும் (இரு பெண்கள், ஒரு சிறுவன்) ''எதற்கம்மா எங்களை ஆற்றுக்குக் கூப்பிடுகிறாய், குளிப்பதற்கா?'' என்று கேட்டபோது, அந்தத் தாய் துக்கம் தாங்காமல் ''என் அருமைச் செல்வங்களே! உங்கள் பசித்த வயிற்றுக்குச் சோறு போட இந்தப் பாழும் ஜன்மத்துக்கு ஒரு வழியும் இல்லை. வறுமையின் கொடுமையை என்னால் தாங்கவும் முடியவில்லை. உங்கள் மூவரையும் ஆற்று வெள்ளத்திலே தள்ளிவிட்டு, நானும் உங்களுடன் உயிரை விட்டுவிடப் போகிறேன்'' என்று கதறிவிட்டாள்.

அதைக் கேட்ட அந்தப் பெண் குழந்தைகளில் ஒருத்தி, அம்மாவைத் தடுத்து, மனம் மாற்றி, வீட்டுக்குத் திருப்பி அழைத்து வந்துவிட்டாள்.
வறுமையின் கொடுமை தாங்காது கொடுமுடியை விட்டுக் கரூருக்குப் புறப்பட்டுச் சென்ற அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை யாரோ ஒரு புண்ணியவான் ஏற்றுக்கொண்டார்.

கே.பி.சுந்தராம்பாள்

அம்மாவைத் தடுத்து அழைத்து வந்த அந்தச் சிறுமி, ஒரு நாள் கரூர் வீதியில் நின்றுகொண்டு இருந்தபோது, அந்த வழியாகச் சென்ற டெபுடி போலீஸ் சூப்பரின்டென்டெண்ட் ஆர்.எஸ்.கிருஷ்ணசாமி அய்யருக்கு என்ன தோன்றியதோ, அந்தச் சிறுமியைப் பார்த்து, ''டிராமாவில் சேர்ந்து நடிக்கிறாயா, கண்ணு?'' என்று கேட்டார். அந்தச் சிறுமி மகிழ்ச்சியோடு தலையை அசைத்ததும், அவளை வேல் நாயர் நாடகக் கம்பெனியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார். எட்டு வயது நிரம்பாத அந்தப் பெண்ணுக்கு அங்கே கிடைத்த வேஷம் என்ன தெரியுமா? நல்லதங்காள் நாடகத்தில் கிணற்றில் தள்ளப்படும் குழந்தைகளிலே ஒருத்தி!

பிற்காலத்தில் 'லட்ச ரூபாய் நட்சத்திரம்' என்று புகழப்பெற்ற திருமதி கே.பி.சுந்தராம்பாளின் வாழ்க்கை நாடகம் இப்படித்தான் ஆரம்பமாயிற்று!

கம்பெனி நாடகங்களிலும், ஸ்பெஷல் நாடகங்களிலும் நடித்துக்கொண்டிருந்த இவர், 1927-ம் ஆண்டில் இலங்கை சென்றபோது, அங்கே எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் இரண்டு ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க அழைக்கப்பட்டார்.

கே.பி.சுந்தராம்பாள்

''என்னுடைய ஸ்வாமியை (கிட்டப்பா) நான் முதன்முதல் சந்தித்தது இலங்கையில்தான். அதற்குப் பிறகு அவருடன் சேர்ந்து வாழும் பேறு எனக்கு ஆறே ஆண்டு காலம்தான் கிட்டியது. 1933-ல் அவர் காலமாகிவிட்டார். அன்று முதல் இன்றுவரை நான் பால் சாப்பிடுவதில்லை. சோடா, கலர் குடிப்பதில்லை. புஷ்டியான ஆகாரங்கள் சாப்பிடுவதில்லை. அமாவாசைதோறும் காவேரி ஸ்நானம் செய்யத் தவறுவதில்லை. இந்த 32 ஆண்டுகளில் ஒரு சில அமாவாசைகளே காவேரி ஸ்நானம் இல்லாமல் விட்டுப் போயிருக்கின்றன'' என்கிறார்.

பல படங்கள், பல பாடல்கள், பல விருதுகளைப்பெற்ற கே.பி.சுந்தராம்பாள், 1980ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி காலமானார். 

அவரின் நினைவைப் போற்றுவோம்.

 

கே.பி.சுந்தராம்பாள்

http://cinema.vikatan.com

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையே போர் ஆரம்பமான நாள் (அக்.10- 1987)

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1780 - கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை பலியானார்கள். * 1868 - கியூபாவின் முதலாவது விடுதலைப் பிரதேசம் லாடெமஹாகுவா பகுதியில் கார்லோஸ் செஸ்பெடஸ் என்பவர் தலைமையில் அறிவிக்கப்பட்டது. * 1911 - வூச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை

 
 
விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையே போர் ஆரம்பமான நாள் (அக்.10- 1987)
 
விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1780 - கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை பலியானார்கள். * 1868 - கியூபாவின் முதலாவது விடுதலைப் பிரதேசம் லாடெமஹாகுவா பகுதியில் கார்லோஸ் செஸ்பெடஸ் என்பவர் தலைமையில் அறிவிக்கப்பட்டது. * 1911 - வூச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்தது. * 1916 - வட இலங்கை அமெரிக்க மிஷன் தனது நூற்றாண்டு நிறைவை யாழ்ப்பாணம், பட்டிக்கோட்டா செமினறியில் கொண்டாடியது.

* 1942 - சோவியத் ஒன்றியம் ஆஸ்திரேலியாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது. * 1943 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியரின் பிடியில் இருந்த சிங்கப்பூரில் சிங்கப்பூர் துறைமுகம் மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக 57 அப்பாவிகள் ஜப்பானியர்களினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். * 1944 - இரண்டாம் உலகப் போர்: 800 ஜிப்சி சிறுவர்கள் அவுஸ்விச் வதைமுகாமில் படுகொலை செய்யப்பட்டனர். * 1945 - போருக்குப் பின்னரான சீனா குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் குவோமின்டாங்கும் உடன்பாட்டிற்கு வந்தனர். இது இரட்டை பத்து உடன்பாடு என அழைக்கப்படுகிறது.

* 1949 - விடுதலை பெற்ற இலங்கையின் புதிய ராணுவம் உருவாக்கப்பட்டது. * 1957 - ஐக்கிய இராச்சியம், கம்ப்றியா என்ற இடத்தில் உலகின் முதலாவது அணுக்கரு உலை விபத்து நிகழ்ந்தது. * 1967 - விண்வெளி தொடர்பாக அறுபதுக்கும் அதிகமான நாடுகள் ஜனவரி 27-ம் நாள் கையெழுத்திட்ட உடன்பாடு அமல் படுத்தப்பட்டது. * 1970 - பீஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

* 1970 - மொண்ட்றியால் நகரில் கியூபெக்கின் உதவிப் பிரதமரும், தொழிலமைச்சரும் கியூபெக் விடுதலை முன்னணி தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டனர். * 1971 - விற்பனை செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டுபோகப்பட்ட லண்டன் பாலம் அரிசோனாவின் லேக் ஹவாசு நகரில் மீள அமைக்கப்பட்டது. * 1986 - 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் எல் சல்வடோரின் சான் சல்வடோர் நகரைத் தாக்கியதில் 1,500 பேர் இறந்தனர். * 1987 - விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘ஆசானிடத்தில் பூரண சரணாகதி’
 

image_f215adb962.jpgகுரு மீதான நம்பிக்கைக்கும் அவர் மீதான சரணாகதிக்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு. பலரும் ஒருவர் மீது தாங்கள் நிரம்ப நம்பிக்கை கொள்வதாகச் சொல்லிக் கொள்வார்கள்.  

இந்த நம்பிக்கை எந்த நேரமும் தளர்வடையலாம். கால, சீதோஷ்ண நிலை திடீர்திடீர் என மாற்றமடைவது போல, இதனால்தான் பலரும் தங்கள் ஆன்மீகத் தலைவர்களையும் மாற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.   

நல்ல சீஷ்யன் ஓர் ஆசானிடத்தில் பூரண சரணாகதி அடைந்தால் மட்டுமே, அவனால் ஆசானின் முழு கிருபைகளையும் பெற்று, உய்யமுடியும். சுவாமி விவேகாநந்தர், சுவாமி இராமகிருஷ்ண பரம ஹம்சரிடம் பூரண சரணாகதி அடைந்தமையினாலேயே, உலகம் போற்றும் ஞானியாக முடிந்தது.  

அறைகுறை பக்தி, விசுவாசம் எவரையும் மேல்நோக்கிய பயணத்துக்கு இட்டுச் செல்லாது. நிர்மல விசுவாசமே நல்லதை நடாத்திக் காட்டும்.  

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 11

 

1138 : சிரி­யாவில் ஏற்­பட்ட பாரிய பூகம்­பத்­தினால் சுமார் 200,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1634 : டென்மார்க் மற்றும் ஜேர்­ம­னியில் ஏற்­பட்ட பெரும் வெள்­ளத்­தினால் 15,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.
1727 : பிரித்­தா­னிய மன்­ன­ராக 2 ஆம் ஜோர்ஜ் பத­வி­யேற்றார்.

varalaru1-484x400.jpg1811 : ஜோன் ஸ்டீவன்ஸ் கண்­டு­பி­டித்த ஜூலி­யானா என்ற முத­லா­வது நீராவிப் படகுக் கப்­பலின் சேவை அமெ­ரிக்­காவின் நியூயோர்க்­குக்கும் நியூஜேர்­ஸிக்கும் இடையில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1852 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் மிகப் பழைமை­யான சிட்னி பல்­க­லைக்­க­ழகம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1865 : ஜமைக்­காவில் நூற்­றுக்கும் அதி­க­மான கறுப்­பின மக்கள் அர­சுக்­கெ­தி­ரான எதிர்ப்புப் போராட்­டத்தை ஆரம்­பித்­தனர். இது அன்­றைய பிரித்­தா­னிய அரசால் நசுக்­கப்­பட்­டதில் நானூற்­றுக்கும் அதி­க­மான கறுப்­பி­னத்­த­வர்கள் கொல்­லப்­பட்­டனர்.

1899 : இரண்­டா­வது போவர் போர் தென் ஆபி­ரிக்­காவில் ஐக்­கிய இராச்­சி­யத்­துக்கு எதி­ராக ஆரம்­ப­மா­னது.

1941 : மெசி­டோ­னிய தேசிய விடு­தலைப் போர் ஆரம்­ப­மா­கி­யது.

1910 : அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி தியோடர் ரூஸ்வெல்ட் விமா­னத்தில் பறந்தார். அமெ­ரிக்­காவில் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த ஒருவர் விமா­னத்தில் பறந்­தமை இதுவே முதல் தட­வை­யாகும்.

1944 : துவீ­னிய மக்கள் குடி­ய­ரசு சோவியத் ஒன்­றி­யத்­துடன் இணைந்­தது.

1954 : வட வியட்­நாமை வியட் மின் படைகள் தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­தன.

OPERATION-PAWAN.jpg1958 : நாசாவின் முத­லா­வது விண்­கலம் பய­ணியர் 1 சந்­தி­ரனை நோக்கி ஏவப்­பட்­டது. இது சந்­தி­ரனை அடை­யா­மலே இரண்டு நாட்­களில் மீண்­டும் பூமியில் வீழ்ந்து எரிந்­தது.

1968 : நாசா முதற்தட­வை­யாக மூன்று விண்­வெளி வீரர்­களை அப்­பலோ–7 விண்­க­லத்தில் விண்­ணுக்கு ஏவி­யது.

1984 : சலேஞ்சர் விண்­ணோ­டத்தில் சென்ற கத்ரின் சலிவன், விண்ணில் நடந்த முத­லா­வது அமெ­ரிக்கப் பெண் என்ற பெரு­மையைப் பெற்றார்.

1987 : யாழ்ப்­பா­ணத்தை தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­று­வ­தற்­காக இந்­திய இரா­ணு­வத்தின் ஒப­ரேஷன் பவான் தாக்­குதல் ஆரம்­ப­மா­கி­யது.

1998 : கொங்­கோவில் ஹெலி­கொப்டர் ஒன்று தீவி­ர­வா­தி­களால் சுட்டு வீழ்த்­தப்­பட்­டதில் 40 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2002 : பின்­லாந்தில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப் பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

உங்கள் வீட்டு ஆண் குழந்தையிடம் இந்த 5 விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறீர்களா? #GoodParenting

 

குழந்தை

குழந்தை வளர்ப்பு என்பது காலந்தோறும் மாறி வருகிற ஒன்று. ஏனென்றால் குழந்தைகள் தங்கள் சுற்றியுள்ள விஷயங்களை உன்னிப்பாகக் கவனித்துவருபவர்கள். வீட்டுக்குள், சமூகத்துக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் அனைத்துமே அவர்களிடம் ஏதோ ஒரு வகையில் சென்று சேர்ந்திருக்கும். குறிப்பாகத் தொழில்நுட்ப வளர்ச்சி. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியின் வருகையால் குழந்தைகள் வளரும் போக்கில் பெரிய மாறுதலைக் காணமுடிந்தது. தற்போது, ஃபேஸ் புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட விஷயங்களின் தாக்கம் குழந்தைகளிடம் பெரிய அளவில் இருக்கின்றன. 

 

காலமாற்றத்தில் பலவும் மாறினாலும் சில விஷயங்களின் அடிப்படை மட்டும் மாறுவதேயில்லை. அதில் ஒன்று பெண்கள் குறித்த ஆண்களின் மனநிலை. ஆணாதிக்க மனநிலை கொண்டு நமது சமூகச் சூழலில் வளரும் ஆண் குழந்தைகளுக்கும் அதே மனநிலைதான் வாய்க்கப்பெறுகிறது. அவர்கள் பெரியவர்களான பிறகு, பெண்கள் மீதான வன்முறை செய்திகளைக் கேள்விப் படும்போது அதிக வருத்தம் கொள்ளாதவர்களாகவே இருக்கின்றனர். அவர்களில் பலர், தன்னோடு இணைந்து வாழும் மனைவி, தன் மகள், அம்மா, சகோதரி உள்ளிட்ட பெண்களிடம்  தனிக் கவனம் காட்டும் அளவுக்குச் சமூகத்தின் மற்ற பெண்களுக்குக் காட்டுவதில்லை. இந்த நிலையில் மாற்றம் வர வேண்டுமெனில் நம் வீட்டு ஆண் குழந்தைகள் வளர்ப்பில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக இந்த 5 விஷயங்களை அக்கறையோடு கூறி வளர்க்க வேண்டியது அவசியம். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம். 

குழந்தை

1. வீட்டு வேலை செய்வது இழிவானதல்ல: வீட்டைப் பெருக்குவது, சமைப்பது, பாத்திரங்கள் சுத்தப்படுவது... என வீட்டின் வேலைகளைப் பட்டியலிட்டால் அவற்றில் 90 சதவிகிதம் பெண்கள்தான் பார்க்கின்றனர். இதைப் பார்த்தே வளரும் பெண் குழந்தைகள், தாங்கள் பெரியவர்கள் ஆனதும் இந்த வேலைகளை நாம் கட்டாயம் செய்ய வேண்டும் என நினைக்க வைக்கப் படுகின்றனர். ஆண் குழந்தைகளும் வீட்டு வேலைகள் பெண்களுக்கானது என்கிற எண்ணத்தை மனதில்  பதிய வைத்துக்கொள்கிறார்கள். அந்த எண்ணம் தவறு என்பதையும் நாம் சாப்பிடுகிற உணவைச் சமைக்கவும், அதற்குப் பயன்படுத்திய பாத்திரத்தைச் சுத்தப்படுத்தவும் செய்கிற வேலைகளை ஆண்கள் செய்வது இழிவானது இல்லை என்பதை ஆண் குழந்தைகள் புரிந்துகொள்ளும் விதத்தில் கூறி வளர்க்க வேண்டும். 

2. ஒரு பெண் ஓர் ஆணோடு சகஜமாக உரையாட முடியும்: இதுவும் முக்கியமானதொரு விஷயமே. ஒரு பெண்ணோடு காதல், காமம் இன்றி நட்போடு பேச முடியும் என்பதைப் புரிய வைப்போதோடு, ஒரு பெண் ஓர் ஆணோடு பேசுவதைத் தவறாகப் பார்க்கக்கூடாது என்கிற எண்ணத்தையும் விதைக்க வேண்டும். ஆண், பெண் இருவரிடையே சகஜமான ஓர் உரையாடல் சாத்தியம் என்பதை அவர்கள் விளங்கிகொள்ளச் செய்ய வேண்டும். காலமாற்றத்தில் இது இயல்பாகி விட்டது என்று சொல்பவர்கள் இருந்தாலும் பதின் வயதில் ஏற்படும் மிகச் சிக்கலான ஒன்றாக இதுவே உள்ளது. 

3.  அப்பாவின் பெயர் சொல்லி அம்மா அழைப்பது தவறல்ல: கணவன் - மனைவியிடையே நல்ல புரிதலும் அன்பும் இருக்க வேண்டுமே தவிர அதிகாரம் இருக்கக்கூடாது. அன்பின் மிகுதியில் பெயர் சொல்லி அழைக்கக்கூடும். அதைப் பார்த்த பிள்ளைகள் குறிப்பாக ஆண் குழந்தை அதிர்ச்சியாகலாம். ஏனெனில் அவனின் நண்பர்கள் வீட்டில் அந்தப் பழக்கம் இருந்திருக்காது. இங்கே சொல்வது பெயர் சொல்லி அழைப்பது என்பது மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் மரியாதை தருவது, உணர்வுகளைப் புரிந்துகொள்வது உட்பட அனைத்தும்தான். இவற்றை ஆண் குழந்தைகள் உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்ளும் போது வீட்டின் ஆண் தன்மை விடுபடக்கூடும். 

குழந்தை

4. நிறத்தில், விளையாட்டில் ஆண், பெண் பேதமில்லை: பண்டிகைகளுக்கு உடை எடுக்க, கடைக்குச் சென்றால் பிங்க் நிறத்தில் ஆண் குழந்தைகளுக்கு உடை தேர்வு செய்தால் வலுகட்டாயமாக அதை மறுக்கின்றனர். ஏனெனில் அது பெண்களின் நிறமாம். இங்குத் தொடங்கி, விளையாட்டில், பயன்படுத்தும் வார்த்தைகளில் ஆண், பெண் என வித்தியாசம் பார்க்கின்றனர். இந்தக் குணத்தையும் மாற்ற வேண்டியது அவசியம். 

5. பாலினப் பாகுபாடு கிண்டலாக வெளிப்படுதல் கூடாது: மிகவும் முக்கியமான விஷயம் இதுதான். பள்ளியிலோ வீட்டிலோ தெருவிலோ தன் சக நண்பனைக் கிண்டல் செய்ய அவனை பெண் என்றோ திருநங்கை என்றோ சொல்லும் பழக்கம் ஆண் குழந்தைகள் பலரிடம் இருக்கிறது. இதுவும் சமூகத்தில் உள்ளவற்றைப் பார்த்து பழகிக்கொண்டதுதான். ஆனால், இது மிகவும் தவறான பழக்கம். எனவே கிண்டல் செய்யும் போது பாலினத்தைக் குறிப்பிடுவது அந்த நண்பனை மட்டும் காயப்படுத்தாது, குறிப்பிடப்படும் பாலினத்தையே காயப்படுத்துவதுபோல. 

 

குழந்தை வளர்ப்பில், இந்த ஐந்து விஷயங்களைத் தவிர இன்னும் நிறைய உங்களுக்குத் தோன்றலாம். அவற்றை நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வருவது சிரமம் என நீங்கள் கருதக்கூடும். முயன்று பார்த்தால் நிச்சயம் சாத்தியமே.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பகலில் கண் தெரியாது... இரவில் பால்வெளியே தெரியும்... ஆச்சர்ய மனிதர்!

சுற்றி இருள் மட்டுமே தெரிகிறது. யாருக்கும் அசைந்து கொடுக்காத பேரிருள். நிகழ்வுகள், அருகில் இருக்கும் பொருள்கள் எதுவும் புலப்படவில்லை. இதற்கு என்ன அர்த்தம்? பார்வை இல்லை என்று தானே? சற்றே மாற்றி யோசியுங்கள். சுற்றி அதீத வெளிச்சம். வெள்ளை நிறத்தைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. நிகழ்வுகள், பொருள்கள்,... ம்ஹும், எதுவும் தெரியவில்லை. இதுவும் பார்வை குறைபாடுதான்.

டிம் டூஸெட்

 

Photo courtesy : fb.com/DeepSkyEye

கனடாவின் மூன்று கடல்சார் மாகாணங்களில் ஒன்று நோவா ஸ்கோடியா. அங்குதான் டிம் டூஸெட் (Tim Doucette) பிறந்தார். பிறந்தவுடன் மருத்துவர்கள் சொன்னது, “உங்களுக்கு congenital cataracts”. அப்படியென்றால் என்னவென்றே யாருக்கும் புரியவில்லை. பிறவியிலேயே கண்புரை, இதனால் அவருக்கு எப்போதும் கண் தெரியாது என்பது மட்டும் புரிந்தது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து இவரின் கருவிழியை மாற்றி அமைத்தனர். இதனால் ஒரு வித்தியாசமான மாற்றம் நிகழ்ந்தது. ஆயிரம் மின்னல்கள் கண்முன் தொடர்ந்து வெட்டினால் ஏற்படும் வெள்ளை நிறம் இவரைச் சூழ்ந்தது.

பகலில் அவரின் பார்வை வெறும் பத்து சதவிகிதம்தான். தட்டுத் தடுமாறிதான் தன் வேலைகளைச் செய்வார். ஏனென்றால் சுற்றி அவ்வளவு வெளிச்சம். இவர் கண்களுக்கு ஒளியைக் கட்டுப்படுத்தி உள்ளே எடுத்துக்கொள்ளத் தெரியாது. ஆங்கிலத்தில் overexposed என்பார்களே, அப்படித்தான். எல்லாம் வெள்ளைப் போர்வை போர்த்தி மூடப்பட்டிருக்கும். அதனால், கறுப்புக் கண்ணாடி எப்போதும் அணிந்திருப்பார். ஆனால், இரவு வந்துவிட்டால் போதும். அவர்தான் ராஜா. நம்மை விடவும் அவருக்குக் கண் நன்றாகவே தெரியும். இரவுக்கு ஆயிரம் கண்களா என்று தெரியாது. ஆனால், இவருக்கு இரவில் நிச்சயம் ஆயிரம் கண்களின் சக்தி உண்டு.

தனக்கு இப்படி ஒரு திறன் இருக்கிறது என்பதை டிம் டூஸெட் பல காலம் உணரவே இல்லை. பதின்பருவத்தில், பார்வையைச் சீர்ப்படுத்த மீண்டும் ஓர் அறுவை சிகிச்சை செய்தனர். அன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர், இரவில் முதன் முறையாக வெளியே வந்தார். மேலே தலையைத் தூக்கி வானத்தைப் பார்த்தவருக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். ஒருவித பயம். லட்சம் மின்மினிப் பூச்சிகள், ஆயிரமாயிரம் மின் விளக்குகள் எல்லாம் வானத்தில், அதுவும் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன. சிறிது நேரம் அதைப் பார்த்த பின்புதான் உண்மையை உணர்ந்தார். அது பூச்சிகளும் இல்லை, விளக்குகளும் இல்லை, அதுதான் நம் பால்வெளி மண்டலம்!

பால்வெளி மண்டலம் ஒரு பார்வை

Photo courtesy: fb.com/DeepSkyEye

ஆம். அதீத வெளிச்சத்தை அவர் கண்கள் தங்கு தடையின்றி உள்வாங்குவதால், அவரால் நம் கண்ணிற்குகூடத் தெரியாத நட்சத்திரக் கூட்டம் முதல், எண்ணற்ற வானியல் நிகழ்வுகள் இயல்பாகவே தெரியத் தொடங்கியது. இந்த வித்தியாசமான திறனைவைத்து என்ன செய்ய முடியும் என்று புரிந்து கொள்ளவே அவருக்கு பதினைந்து வருடங்கள் தேவைப்பட்டன. தன்னிடமிருந்த சொந்தச் சேமிப்பில், தன் வீட்டின் அருகே இருக்கும் மலையில் ‘டீப் ஸ்கை ஐ’ (Deep Sky Eye) என்ற பெயரில் ஆராய்ச்சிக் கூடம் ஒன்றைக் கட்டினார். அங்கிருந்து தொலைநோக்கி மூலம், விண்வெளி குறித்து தனது ஆராய்ச்சியைத் தொடங்கினார். பல வானியல் ஆச்சர்யங்களைத் தொலைநோக்கியில் பார்த்தபோது விஞ்ஞானிகளுக்குப் புலப்படாத பல விஷயங்கள் இவர் கண்ணிற்கு புலப்பட்டது. உதாரணமாக, ஓரியன் நெபுலாவில் ஊதா நிறம் கலந்து இருக்கிறது என்பதைக் கண்டறிந்தார்.

இவரைப் பொறுத்தவரை இரவு வானம் என்பது வெல்வெட்டால் உருவானது. மேலே வைரங்கள் பதிக்கப்பட்டு எப்போதும் ஜொலித்துக் கொண்டிருக்கும். சோகம் என்னவென்றால், இவர் மனைவிக்கும் கண் தெரியாது. இரவில் தன் ஆராய்ச்சியின் போது, தன் மனைவியையும் அழைத்துச் சென்று தான் காணும் ஒவ்வொன்றையும் பொறுமையாக விளக்குவார். இதுதான் இவரின் அன்றாட பணி.

“சிறு வயதில் எனக்குப் பார்வை இல்லை என்றபோது என்னை ஏளனம் செய்வார்கள். எனக்கும் வருத்தமாக இருக்கும். பிறரைப் போல் இயற்கையை ரசிக்க முடியாது, வாகனங்களை இயக்க முடியாது, வானை அளக்க முடியாது என்றெல்லாம் எண்ணங்கள் மேலோங்கும். ஆனால், எனக்கு நிகழ்ந்த மாற்றத்தால், இன்று வானை அளந்து கொண்டிருக்கிறேன். இரவு வானில், நீங்கள் பார்க்காததைக் கூட என்னால் பார்க்க முடிகிறது. நான் இப்போது ஓர் ஆரம்பநிலை வான் ஆய்வாளர். ஆனால், எனக்குக் கண் தெரியாது….” சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்.

Deep Sky Eye

Photo courtesy: fb.com/DeepSkyEye

இன்று இவரது ‘டீப் ஸ்கை ஐ’ ஆராய்ச்சிக் கூடம் பலருக்குச் சுற்றுலா தளம். விண்வெளியின் மேல் காதல் கொண்டவர்களை இன்முகத்தோடு வரவேற்கிறார். காணகிடைக்கா பிரபஞ்சத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறார். விண்வெளி தொடங்கி, நிலா முதலிய பல கோள்களைத் தனது ஆய்வுக்கூடத்திலிருந்து ஆராய ஏற்பாடுகள் செய்துள்ளார். பிரபஞ்சத்தைக் கண்டு நமக்குக் கிடைத்த மாபெரும் வாழ்வைப் போற்ற ஊக்கப்படுத்துகிறார்.   

 

“இரவு நேர வானைப் பார்க்கும் போதுதான், என்னுடைய இந்தக் கண் தெரியாத நிலை போன்ற பிரச்னைகள் அனைத்தும் ஒன்றுமே இல்லை என்று தோன்றும். குறைகள் இருக்கும் என்னைப் போன்றோருக்கும், குறைகள் இல்லாத மனிதர்க்கும் ஒரே வானம்தான். ஆம். இந்தப் பிரபஞ்சத்திற்கு நாம் அனைவருமே ஒன்றுதான். வாழ்வை எதிர்கொள்ள இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் போதாதா?” என்ற கேள்வியை முன்வைக்கிறார். இதற்கு நீங்கள் பதில் சொல்லத் தேவையில்லை. கேள்வி புரிந்தாலே போதும்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சின்ன சின்ன வரலாறு!-  கண்ணாடியின் கதை

 

 
KOZARANMULAKANNADIjpg

படம்: ரமேஷ் குரூப்

வெளியே கிளம்பும் முன் கடைசியாக நாம் செய்யும் வேலை, கண்ணாடி முன் நின்று முக ஒப்பனையை சரிபார்ப்பது. 

யோசித்துப்பாருங்கள், வீட்டுக்கு ஸ்கூட்டரில் வருபவர் யாரேனும் ஒருவராவது அழைப்புமணி அடிக்கும்முன் ஸ்கூட்டர் கண்ணாடியில் பார்த்து தலை சீவாமல் இருந்ததுண்டா?

இவ்வளவு அத்தியாவசிய பொருளான இந்தக் கண்ணாடி இல்லாமலிருந்தால்?! எனும் யோசனையே இந்தக் கண்டுபிடிப்பைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டியது.

தற்போது நம் முகங்களைப் பிரதிபலிக்கும் வகை கண்ணாடி 1835ம் வருடம் ஜஸ்டஸ் வான் லெபே எனும் ஜெர்மன் வேதியியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்ணாடியின் ஒரு பக்கம் மட்டும் மெல்லிய பூச்சாக உருக்கப்பட்ட வெள்ளியை , வெள்ளி நைட்ரேடின் ரசாயன குறைப்பின் மூலம் படரச்செய்ய, இது வரையில் பிரதிபலிப்பை காட்டமுடியாத ஒளிபுகா கண்ணாடி, நம் அசட்டுச்சிரிப்புக்களை செவ்வனே காட்டத்தொடங்கியது.

ஆனால் கண்ணாடி எனும் பொருளின் வரலாறு கி.மு., 6000-ல் தொடங்கிவிட்டது.

இதுகூட நமக்குக்கிடைத்த வரலாற்றுக் குறிப்புகளின் தகவல்தான். துருக்கிதான் இதன் முன்னோடி. இயற்கைப் பொருட்களின் மேல் பாகத்தை பாலிஷ் ஏற்றி கண்ணாடியாக உபயோகித்தனர்.

பின் எகிப்தியர்கள் செம்பை மெருகேற்றி உபயோகித்தனர்.சீனாவில் தகரம் மற்றும் தாமிரம் கொண்டு உருவாக்கிய ஸ்பெகுலம் எனும்பொருளை மெருகேற்றி உபயோகித்தனர்.

ஆனால் இவை யாவும் விலையுயர்ந்த பொருளாக சாமானியர்களின் கைகளுக்கு கிட்டாமல் தான் இருந்தது. இவர்கள் தன் முக லாவண்யங்களை தண்ணீர் வழி பிரதிபலிப்புக்களில் பார்த்துத் தான் மகிழமுடிந்தது.

லெபனானில் கி.பி. முதல் நூற்றாண்டில்  உலோக பூச்சுக்களை அறிமுகப்படுத்தினர். ரோமானியர்கள் லெட் வேதிப்பொருளை உள் செலுத்திய ஊதப்பட்ட கண்ணாடி உருண்டைகளை உபயோகித்தனர்.

மெர்குரி அமால்கம், தகரமென்று வெவ்வேறு வடிவத்தில் வந்த முகம்பார்க்கும் கண்ணாடி, தற்போது அலுமினியத்தை வெற்றிட முறையில் உட்செலுத்தி செய்யப்படுகிறது.

முக்கியமான புள்ளிக்கு வருவோம். இப்போது பேய்களுக்கு திரைப்பட காலம். காணொளிகளில்,திரை அரங்குகளில் என்று எங்கெங்கு காணினும் பேய்க்களடா. இதை நான் இப்போது சொல்வதற்கு காரணம், கண்ணாடிக்கும் பேய்களுக்கும் எப்போதும் தொடர்பு உண்டு.

முதல் முதல் தன் முகத்தைப் பார்த்து மனிதன் பயந்தது காரணமாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்!!

இந்தக் காரணத்தால்தான், பேய் முகங்கள் சினிமாவில் கதாநாயகி கண்ணாடி முன் நிற்கும் போது அதிலிருந்து வந்து பயமுறுத்தும். இறந்த ஆத்மாக்கள் கண்ணாடியில் குடிபுகுந்து ஏழு வருடம் குடித்தனம் செய்யும் என்பது பழங்கால ருமேனியர்கள் நம்பிக்கை. அதனால் தவறி கண்ணாடி உடைந்துவிட்டால் அதைப் பள்ளம் தோண்டிப் புதைப்பார்கள்.

இல்லாவிட்டால் அதில் குடி இருந்த பேய் உலா செல்லத் தொடங்கி விடுமாம்.வீட்டில் யாராவது இறந்துபோனால் அனைத்துக் கண்ணாடிகளும் துணிபோட்டு மூடப்பட்டுவிடும்.

இந்தப் பேய் பயத்தால் ஒரு கண்ணாடி உற்பத்தி தொழிற்கூடம் ஆரம்பிக்கும்முன் செய்யப்பட வேண்டியதாக சொல்லப்பட்டிருப்பவையைப் பார்த்தால்....

நாம் எங்கே இருந்தோமோ அங்கேயே இருக்கிறோம் என்பது புரியும். இந்த விதிகள் மெசோபொடேமியா ( தற்போது ஈரான், இராக், சிரியா, துருக்கி இருக்கும் இடம்) 3300 ஆண்டுகள் முன் களிமண் அட்டைகளில் எழுதிவைத்து தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் உள்ளது.

இதன் படி நல்ல மாதம் மற்றும் நேரம் பார்த்து சூளைக்கு அடித்தளம் அமைக்கவேண்டும். முடிந்தபின் அதில் கூபூ எனும் கடவுளின் உருவம் பதிக்க வேண்டும். இதன் பின் வெளி ஆட்கள் உள்ளே நுழையக்கூடாது. சுத்தம் இல்லாதவர் யாரும் கூபூவின் எதிர் வரக்கூடாது.

கண்ணாடி உற்பத்தி தொடங்கும் நாள் முதல் ஆடு ஒன்றைப் பலி கொடுக்க வேண்டும். பின் வாசனைப் பத்திகள் ஏற்றிவைத்து,வெண்ணெய்யும் தேனும் முதலில் ஊற்றிவிட்டு பின் தான் சூளையைப் பற்றவைக்க வேண்டும்.

இதன் பின் கண்ணாடி செய்வதற்கு தேவையான பொருட்கள், செய்முறை என்று விளக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவு சொல்லிவிட்டு கண்ணாடி செய்வதற்கான பொருட்களைச் சொல்லாவிட்டால் எப்படி?

சிலிகா,. அதாவது மண் தான் இதன் முதல் மூலப்பொருள். இதனுடன் சோடா ஆஷ், லைம்ஸ்டோன் சேர்த்து 1700 டிகிரி செல்சியஸில் உருகவைக்கும்போது கண்ணாடி உருவெடுக்கிறது.

முதலில் இன்காட்களாக செய்யப்பட்டு, பின் உருக்கப்பட்டு வேண்டிய வடிவில் கண்ணாடிப்பொருட்களாக செய்யப்படுகிறது. இதில் தட்டையாக வடிவமைக்கப்படுவதே நாம் முகம் பார்க்கும் கண்ணாடி.

இந்தக்கண்ணாடி ஸ்னோவைட் கதையில் உள்ளதுபோல்,உலகிலேயே மிக அழகான முகம் எது என்று சொல்லுமா...? சொல்லலாம்...இதற்கும் ஓர் ஆப் வராமலா போய்விடும்.

காத்திருப்போம்.. நம் முகம் என்றாவது இப்படி வருமென்று.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: வடிவேலு- மனதை லேசாக்கும் பிறவிக் கலைஞன்!

 

 
vedu

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். எல்லோரின் டைம்லைன்களில் வியாபித்துக் கிடக்கும் அவர் குறித்த கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

வெங்கடேஷ் ஆறுமுகம்

   

வின்னர் படத்தில் 'வேணாம் வலிக்குது, அழுதுருவேன்' காட்சியை யாரால் மறக்க முடியும்.. கிட்டத்தட்ட 16 டேக்குகள் எடுத்தார்களாம்.. காரணம் நடிகர் ரியாஸ்கான் சிரிப்பை அடக்கவே முடியாமல் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்..

ஒவ்வொரு டேக்கிலும் வடிவேலு அதை வெவ்வேறு மாடுலேஷன்களில் சொல்லி மெருகேற்ற கடைசியில் ஒரு ப்ரேக் விட்டுத்தான் அதை படமாக்கினார்களாம் இன்றும் அந்தக் காட்சியில் ரியாஸ்கான் கொஞ்சம் கட்டுப்பாடுடன் சிரிப்பது கவனித்து பார்த்தால் தெரியும்.

Mano Red

பிறரைச் சிரிக்க வைக்க தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளும் தானைத் தலைவன். #HBD_வடிவேலு

குருபிரசாத் தண்டபாணி

பேரென்ன..?

எரும

இவ்ளோ அழகா இருக்க, எருமன்னா பேர் வெச்சிருக்காங்க..?

#Hbd வைகைப் புயல்

கரிகாலன்

தமிழர்களது வாழ்வில் ஒளியைக் கொண்டு வந்த கலைஞன் வடிவேலு. நகைக்கத் தெரியாதவர்களின் பகல் இருண்டு விடும் என்கிறார் வள்ளுவர். நமது இரவுகளையும் வெளுத்தவர் வடிவேலு. நாய் சேகர், படித்துறை பாண்டி, கைப்புள்ள, வக்கீல் வண்டுமுருகன் போன்ற அவரது கேரக்டர்களுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

ஆறுமுகம்

மொத டேக்கில் நடிச்சது சரியில்லண்ணே இன்னொரு டேக் போயிருவோமான்னு டைரக்டர் கேட்டா அது எனக்கு பிரியாணி சாப்பிட்டா மாதிரி - வடிவேலு.

Bala G

ஒருவனை எளிதில் அழவோ, கோபமோ பட வைத்துவிட முடியும். ஆனால் சிரிக்க வைப்பது அத்தனை எளிதல்ல. கதாநாயகர்களை விட நகைச்சுவை நடிகர்களுக்கு உடல்மொழியும் முகபாவனையும் மிக முக்கியம். இவ்விரண்டையும் தனது நகைச்சுவையில் வெகு இயல்பாக பயன்படுத்தியவர் வடிவேலு.

Magudeswaran Govindarajan

வடிவேலு அடிவாங்கும் காட்சியொன்று ஓடிக்கொண்டிருந்தது. புதருக்குள் வைத்து வடிவேலை வெளுத்துவிட்டு, அந்தக்கும்பல் கிளம்பிச் செல்கிறது. குரற்பதிவில் அந்தக் காட்சியை மேம்படுத்தும்பொருட்டு வடிவேலு சேர்த்துப் பேசுகிறார் : "ஆகா.... என்னவோ பேக்டரில டூட்டி முடிஞ்சு போறவய்ங்க மாதிரியே போறாய்ங்களே...."

சிறுவாய்ப்பு தவறாமல் நகைமொழி ஏற்றும் அந்த முனைப்புத்தான் அவருடைய வெற்றி.

vedi
 

Seenu Ramasamy @seenuramasamy

எனதன்பு நகைச்சுவை திலகம்

எல்லா அரசியல் நையாண்டிக்கும் சித்திரக்காரணி,

வைகை புயல் வடிவேலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அமுதவாணன் @Amuthavanan47

என்னப்பா இது, யார் பேசுனாலும் வடிவேலு வாய்ஸ்லயே கேக்குது...? அந்தளவுக்கு ஐக்கியமாயிட்டாரு போல நம்ம வாழ்க்கையில..! #VadiveluForLife

 

வம்பு 2.0 @writter_vambu

மீம்ஸ் உலகத்தின் கடவுள் வடிவேலுவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

சித்திரகுப்தன் @chithiragupta

தமிழ் சினிமாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட காமெடி வறட்சியின் பிரதிபலிப்பே இன்று வடிவேலு மீம்களாய் உலவுகிறது.

அருண்காந்த் @IamHarunKanth

வாழ்க்கையில எல்லா கஷ்டத்தையும் மறந்து கொஞ்சம் சந்தோஷமா இருக்கக் காரணம் மஹான் வடிவேலு. #லெஜண்ட்.

காட்டுப்பயல் @sundartsp

ஒருவேளை வடிவேலு ராயல்டி கேட்டார்னா ஒரு பய மீம் போட முடியாது.

 

இளஞ்செழியன் @isaran86

நூற்றாண்டைக் கடந்த தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன் வடிவேலு.

 

vad
 

Vinayaga Murugan

சமகாலத்தில் காமன்மேனை விட வலிமையான கதாபாத்திரம் வடிவேலு. எந்த ஒரு அரசியல் மீம்ஸ் போட்டாலும் அங்கு ஒரு வடிவேலு கெட்டப் புகைப்படத்தை சுலபமாகப் பொருத்திவிட முடிகிறது.

 

Elamathi Sai Ram

கிராமப்புறங்களில் அன்றாடப் பேச்சுகளில், உரையாடல்களில் புழங்கிக் கொண்டேயிருக்கும் நையாண்டி, நக்கல், பகடியை, அப்பாவித்தனத்தை மிகச்சரியாகத் தன் நகைச்சுவை பாத்திரங்களில் கொண்டு வந்ததே வடிவேலுவின் மிகப்பெரிய வெற்றி.

வெங்கடேஷ்

கைப்புள்ள, வீரபாகு, பாடிஸ்டுடா, படித்துறை பாண்டி, அலார்ட் ஆறுமுகம் என கேரக்டர்களாகவும் ஆணியே புடுங்க வேணாம், வட போச்சே, ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ, நான் அப்டியே ஷாக்காயிட்டேன், ஹைய்யோ ஹைய்யோ, அவ்வ்வ்வ்வ்... என டயலாக்குகளுடனும் நம்முடனே வாழ்பவர் வடிவேலு.

vadi
 

Senthil Jagannathan

தனது திரைப்பட வசனங்களை ஒரு ஒட்டுமொத்த மாநிலத்தின் பேச்சு மொழியாக்கிய பெருமை வைகைப்புயல் வடிவேலுவை மட்டுமே சேரும். மதுரை பேச்சு வழக்கை பாகுபாடில்லாமல் பிரபலமாக்கி தமிழ்நாட்டின் பேச்சு வழக்காக மாற்றியது வடிவேலு என்னும் மகா கலைஞனின் பெரும் சாதனை.

தனது உடல் மொழியில் உலகின் வேறெந்த நடிகனின் உடல்மொழியையும் நினைவூட்டாத தனிச்சிறப்பான உடல்மொழி அவருடையது மட்டுமே. வசனங்கள் எதுவும் இல்லாமலேயே வெறும் முகபாவனை மற்றும் உடல்மொழியால் மட்டும் திரையரங்கையே அதிரச்செய்யும் சிரிப்பொலியை அவரால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.

மனம் சஞ்சலப்பட்டிருக்கும் சமயங்களில் என்னை மறந்து எத்தனையோ நாட்கள் வடிவேலுவின் காமெடியாலேயே மனம் கொண்டாட்டம் அடைந்திருக்கிறது. துயரம் நிறைந்த நாளொன்றின் கனத்தை வடிவேலுவிடம் ஒப்படைத்துவிடலாம். அவர் மனதை லேசாக்கி விடுவார். உலகின் ஒப்பற்ற நடிகன், பிறவிக் கலைஞன் வடிவேலு அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

பிபிசி தமிழ் ஸ்பெஷல்: கல்விக்காக காடு, மலை தாண்டி பயணம் (360 Degree Video)

இமயமலையில் இரு சகோதரிகள் பள்ளி செல்வதற்காக தினமும் செய்யும் ஆபத்தான பயணம் பற்றி பிபிசி தமிழின் சிறப்பு 360 டிகிரி மெய் நிகர் உண்மை (VR) காணொளி.

360 டிகிரி காணொளியை காண மொபைலை மேலும், கீழுமாக இடதும் வலதுமாக திருப்பவும். கணினியில் பார்த்தால், மவுஸ் உதவியுடன் இடது, வலது, மேலே, கீழே செல்லலாம்.

முழு விபரமான செய்தி

  • தொடங்கியவர்

 

இந்தியாவின் முதல் பெண் ரேஸ் சாம்பியன் அலிஷா அப்துல்லா

  • தொடங்கியவர்

கரு கலைந்தபோதும் எதைக் காப்பற்றத் துடிக்கிறார் இவர்? - சீனாவின் பாலைவன தேவதை

 
 

சுடு மணல் அது. சில நிமிடங்கள் கால்கள் வைத்தாலே கொப்பளம் போட்டுவிடும் அளவிற்குச் சூடு. கைகளில் சில மரக்கன்றுகளை அந்தப் பாலைவன மணலில் நட்டுக் கொண்டிருந்தார் அந்தப் பெண். அவரின் வயிறு வீங்கியிருந்தது. அவர் கர்ப்பமாக இருக்கிறார். தோராயமாக 50 மரக்கன்றுகளை நட்டு முடித்திருப்பார். திடீரென பெரும் அலறலோடு தன் வயிற்றைப் பிடித்தபடி அப்படியே கீழே உட்கார்ந்தார். அவரின் தொடைகளின் வழி பயணித்து, பாதங்களை நனைத்தது ரத்தம். சில நிமிடங்களில் ரத்தம் கொட்டத் தொடங்கியது. கரு கலைந்துவிட்டது. பெரும் வலி. கூப்பிடு தூரத்தில் யாருமில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவுமில்லை. ரத்தம் நனைத்த அந்தச் சுடு மணலில் தவழ்ந்தபடியே நகர்கிறார் அந்தப் பெண். எங்கு செல்கிறார்?. ஒருவேளை எங்காவது நிழலில் ஒதுங்க முயற்சி செய்கிறாரோ? ஆனால், எங்கும் மரமே இல்லையே! இல்லை அவர் வேறு எதையோ செய்கிறார்.

ஒழுகும் ரத்தத்தோடு தவழ்ந்து வந்து அந்த மரக்கன்றுகளில் ஒன்றை எடுக்கிறார். கொஞ்சம் தள்ளி வெட்டப்பட்டிருந்த குழியில் கொண்டு போய் அதை நடுகிறார். இருக்கும் தண்ணீரை அதற்கு ஊற்றுகிறார். அவ்வளவுதான். அவரின் கண்கள் இருள ஆரம்பிக்கின்றன. சலனமற்று தரையில் அப்படியே படுத்துக் கிடக்கிறார். ரத்தம் இன்னும் நிற்கவில்லை.

 

சீனாவின் பாலைவன தேவதை

அவர் கண் திறந்த போது அந்த அனலை அவர் உணரவில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அருகே அவரின் கணவரும், பெற்றோரும், சில சொந்தங்களும், ஊர்க்காரர்களும் இருந்தனர். எல்லோரும் அவர்மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார்கள். அவர் மீதான அக்கறை மற்றும் அன்பின் காரணமாக வெளிப்பட்ட கோபம் அது. 

"நான் ஏன் அப்படிச் செய்தேன் என்று தெரியவில்லை. ஆனால், என்னமோ எப்படியாவது சாவதற்குள் கூடுதலாக ஒரு மரத்தை நட்டுவிட வேண்டும் என்று நினைத்தேன்."

"நீ சாகவில்லை. உயிரோடு தான் இருக்கிறாய்." - கணவர் பய் வன்சியங் (Bai WanXiang).

யின் யுசென் (Yin Yuzhen) கரு கலைந்துவிட்டது. அது பெரிய இழப்புதான். ஆழமான வலிதான். இருந்தும் சில நாள்களிலேயே அதிலிருந்து விடுபட்டு மீண்டும் மரங்களை நட ஆரம்பித்துவிட்டார்.

யின் யுசெனின் போராட்ட வாழ்வின் ஒரு சிறு எடுத்துக்காட்டு மேற்கூறிய சம்பவம். அவரின் முழுக் கதையை அறிய வடக்கு சீனாவின் பகுதியில் மங்கோலிய எல்லையில் இருக்கும் மவ்வுசு (MaoWusu) பாலைவனப் பகுதிக்குப் பயணிக்க வேண்டும். இந்தக் கதையின் தொடக்கம் ஜனவரி மாதம் 1985.

சீனாவின் பாலைவன தேவதை

புதிதாகக் கல்யாணமாகி தன் கணவனின் விட்டுக்குக் கழுதை வண்டியில் புறப்பட்டார் யின். அப்பாவின் செல்லமாக வளர்ந்தவருக்கு, அவரை விட்டுப் பிரிந்து போவது கொஞ்சம் கடினமாகத் தானிருந்தது. இருந்தும், புது இடம், புது வாழ்க்கை குறித்த கனவோடு பயணிக்கத் தொடங்கினார். கரடுமுரடான பாதையைக் கடந்து அந்தக் கழுதை வண்டி போய்க்கொண்டிருந்தது. இரவு நெருங்கிய வேளையில் அந்தச் சிறு வீட்டை அடைந்தனர். அவர் கணவரை கல்யாணத்திற்கு முந்தைய நாள் வரை யின் பார்த்ததில்லை. அந்த வீடு கடுமையான புழுக்கத்தைக் கொடுத்தது. ஏனோ, அந்த இடம் அவருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இருட்டைக் கடந்து காலையில் பார்த்தால் பிடித்துவிடும் என்ற நம்பிக்கையில் அன்றைய இரவைக் கழித்தார். 

"Psammophil Willows" எனும் வகையிலான Shrubயைத் தான் மரக்கன்றுகளைச் சுற்றி பாதுகாப்பாக அரணாக அமைத்தார் யின்.

சரியான தூக்கம் இல்லாததால், சூரியன் வெளிவரும் முன்னரே வீட்டிற்கு வெளியே வந்து விட்டார் யின். வீட்டிலிருந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் மணல் மேடுகளாக மட்டுமே தெரிந்தன. அக்கம், பக்கத்தில் வீடு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அந்த வெப்பம் அவரின் உயிரை உருக்கியது. கதறி, கதறி அழுதார். உண்ண உணவில்லை. குடிக்கத் தண்ணீரில்லை. உயிர் வாழ்வதற்கான எந்தச் சூழலும் அங்கிருப்பதாகத் தெரியவில்லை. 

சீனாவின் பாலைவன தேவதை

உடனடியாக விவாகரத்து செய்துவிடலாம் என்று முதலில் நினைத்தார். பின்னர், யாருக்கும் சொல்லாமல்,கொள்ளாமல் எங்காவது ஓடிவிடலாம் என்று நினைத்தார். வேண்டாம்... அதெல்லாம் செய்தால் அப்பாவுக்குப் பெரும் தலைகுனிவாகிவிடும். சரி...தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால், அதற்கும் கூட மரமில்லையே?!

10 நாள்கள் கழிந்திருக்கும். தன் பெற்றோரைப் பார்க்க அந்த மணலில் அவர் 10கிமீ தூரம் நடந்துப் போக வேண்டும். இடையே காலில் கொப்புளங்கள் ஏற்பட்டு, நடக்க முடியாமல் கீழே விழுந்தார். அழ வேண்டும் போலிருந்தாலும், அவருக்கு அழுகை வரவில்லை. அந்தப் பாலைவனத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பல மணி நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தார். பின்னர், ஓர் உறுதியான முடிவிற்கு வந்தவராக எழுந்து நடக்கத் தொடங்கினார். தன் பெற்றோரைப் பார்த்துவிட்டு திரும்பும்போது 10 மரக்கன்றுகளை எடுத்து வந்தார். தன் வீட்டிற்குக் கொண்டு வந்து அதை நட்டார். அதில் சில உயிர் பிழைத்தன. மீண்டும் ஊருக்குச் சென்று 100 மரக்கன்றுகளை எடுத்து வந்து நட்டார். அதில் பெரும்பாலானவை செத்துவிட்டன. 20 கன்றுகள் மட்டுமே பிழைத்தன. 

அடுத்து அவரும், அவர் கணவரும் சேர்ந்து பல கடுமையான வேலைகளைச் செய்தனர். யாரிடமும் சம்பளம் பெற்றுக் கொள்ளவில்லை அவர்கள். மாறாக மரக்கன்றுகளைக் கேட்டு வாங்கினர். இப்படியாக 10 நாள்களில் 2 ஆயிரம் மரக் கன்றுகளைச் சேர்த்தனர். ஆனால், அதை வீட்டிற்கு எடுத்து வர வண்டியில்லை. காலை முதல் மாலை வரை பல ஈடுகளாக நடந்து சென்று தங்கள் முதுகில் அவற்றைச் சுமந்து வந்தனர். 

சீனாவின் பாலைவன தேவதை

சில நாள்களில் எர்லின்ச்சுவன் (Erlinchuan) எனும் அந்தக் கிராமத்திற்கு அரசாங்கம் சார்பில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஆனால், அதை வாங்கி, நட்டு, வளர்க்க கிராம மக்கள் யாரும் தயாராக இல்லை. கிராமத் தலைவரிடம் பேசி மொத்த மரக்கன்றுகளையும் யின் வாங்கினார். தினமும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து, நடந்து சென்று தன் முதுகில் வைத்து அந்த மரக்கன்றுகளைச் சுமந்து வருவார். 20 நாள்களில் 50 ஆயிரம் மரக்கன்றுகளையும் கொண்டு வந்து சேர்த்தார். 

அதை நட்ட போது, அதிலும் பெரும்பாலானவை உயிர்பிழைக்கவில்லை. அது பாலைவன மணல் என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம் அவ்வப்போது அடிக்கும் மணற் புயலைத் தாங்காமல் செடிகள் வேரோடு பிடுங்கிவிடுகின்றன. தன் ரத்தம் சிந்திய உழைப்பிலிருந்து ஒரு மாற்று வழியைக் கண்டறிந்தார். மரக்கன்றுகளை நடும்போது அதற்கு பக்கமே SHRUBSஸ் எனப்படும் புதர் வகைச் செடிகளையும் நட ஆரம்பித்தார். அந்தச் செடிகள் மரக் கன்றுகளுக்குப் பாதுகாப்பு அரணாக திகழ்ந்தன. மணற் புயலிலிருந்து கன்றுகளை அவை காப்பாற்றின. மேலும், நிலத்தடி நீரையும் உறிஞ்சி தக்கவைத்துக் கொண்டன.

யின்னை சந்தித்த ஒரு ஜெர்மானியர் யின்னின் வாழ்வை வியந்து  இப்படியாகச் சொல்கிறார்,

"மொழி புரியாததால் என்னால் அவரோடு முழுமையாகப் பேச முடியவில்லை. ஆனால், இந்த இயற்கை குறித்த புரிதலும், சாத்தியமான தற்சார்பு வாழ்விற்கான ஒரு வழிமுறையும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. அவர் முகம் கழுவும் தண்ணீர், அப்படியே ஒரு பாத்திரத்தில் சேர்க்கப்படுகிறது. அந்தத் தண்ணீரைக் கொண்டு தன் கால்களைக் கழுவிக் கொள்கிறார். கால் கழுவும் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் சேர்கிறது. அதைச் செடிகளுக்குப் பாய்ச்சுகிறார். ஒரு குடம் தண்ணீரையே மூன்று குடங்களாகப் பிரித்து உபயோகப்படுத்துகிறார்." 

இதன் மூலம் நிறைய கன்றுகளைப் பிழைக்க வைக்க முடிந்தது. இப்படியாகத் தொடர்ந்து கடந்த 32 ஆண்டுகளாக செயல்பட்டதன் விளைவாக அந்தப் பகுதியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் யின். கிராமத்தைச் சூறையாடும் மணல் புயல் மொத்தமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வறண்டு கிடக்கும் பாலைவனத்தில் ஒரு பெரும் பச்சை சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறார். உணவுப் பிரச்னையையும், குடிநீர் பிரச்னையையும் தீர்த்துள்ளார். தான் மட்டுமல்லாது, அந்தக் கிராம மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் உதவி செய்திருக்கிறார். 

உலகம் முழுக்கவிருந்து "Green Kingdom" எனப்பெயரிடப்பட்டிருக்கும் இந்த வனத்தைப் பார்க்க பலரும் வருகிறார்கள். இதை இன்னும் மேம்படுத்தி, ஓர் இயற்கைப் பூங்காவாக மாற்றுவதுதான் தன் அடுத்த திட்டம் என்கிறார் யின். 

இன்று உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது அவர் பணி. பல உயரிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இது எதையும் தனக்கான பெருமையாக எடுத்துக் கொள்ளாத யின்,

சீனாவின் பாலைவன தேவதை

"எனக்கு நான் இருந்த சூழல் பிடிக்கவில்லை. அதிலிருந்து தப்பவும் எனக்கு வாய்பில்லாமல் போனது. அதனால் அதை எனக்குப் பிடித்தவாறு மாற்ற வேண்டுமென்று நினைத்தேன். அதை உறுதியாகச் செய்தேன் அவ்வளவுதான். நான் போராளியோ, புரட்சியாளரோ இல்லை. அன்று மூன்று நாள்களுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே என்னால் சாப்பிடமுடிந்தது. இன்றும் என் பிள்ளைகளும், என் கிராமமும் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவை எடுத்துக் கொள்கிறோம். இதற்காகத்தான் பாடுபட்டேன். " என்று மிக எளிமையாக சொல்லி நகர்கிறார்  யின். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

கவலைப்படும் போது ஏன் தொண்டைக்குள் கட்டி இருப்பது போல் இருக்கும்?

  • தொடங்கியவர்
‘மக்கள் கரிசனை: இறை தரிசனத்துக்கு ஒப்பானது’
 

image_34e9444ca6.jpgஎன்றுமே தெளிந்த உள்ளத்துடன் நல்லதை மட்டும் பேசினால், அவை பிறர் மனத்தில் நிலையாக நிலைத்துவிடும்.  

மேலும், இத்தகையோர் பேச்சுகள், எல்லாமே சத்திய வசனங்களாகி விடுகின்றன. அன்பை மனதில் வைக்காமல், ஏனோதானோ என்று பேசும் சொற்கள் மதிப்பற்றவை.  

பேச்சில் நளினமும் ஆதரவும் இருத்தல் அவசியம். ஆனால், துணிச்சலை உருவாக்காத உரைகள் உடன் கரைந்து போகும். மக்களை ஆதரித்துப் பேசுபவர்களிடையே சுயநலம் கலத்தலாகாது. முழுமையானவர்களை மக்கள், தம்வசம் சுவீகரித்து விடுகின்றனர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே, அவர்களைக் காணப் பிரியப்படாமல், ஒளித்து விளையாடுகின்றார்கள். சுயநலத்துக்காக நல்ல சொற்களைத் தேடி, மக்கள் முன் தூவி, அர்ச்சனை செய்வது நரித்தந்திரம். மக்கள் மீதான கரிசனை இறை தரிசனத்துக்கு ஒப்பானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.