Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

காதல் மார்க்கெட்!

10CHGOWDINHTHANG

டின் தங்   -  AFP

10CHGOWLOVEMARKET

காதல் கடிதங்களைப் பார்க்கும் வாடிக்கையாளர்கள்   -  AFP

10CHGOWOLDFLAMESMARKET

பரிசுகளைக் காணும் வாடிக்கையாளர்கள்   -  AFP

10CHGOWVIETNAM

விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் வாழ்த்து அட்டை   -  AFP

10CHGOWVIETNAMMARKET

‘ஓல்ட் ஃப்ளேம்ஸ்’ சந்தையில் கிட்டார் வாசிக்கும் இளைஞர்   -  AFP

10CHGOWVIETNAMMARKET1

முன்னாள் காதலர்களுக்குச் செய்தி பலகையில் செய்தி தெரிவிக்கும் இளைஞர்கள்   -  AFP

VIETNAM-LIFESTYLE-ROMANCE-MARKET-ECONOMI

விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் நாற்காலிகள்   -  AFP

10CHGOWDINHTHANG

டின் தங்   -  AFP

10CHGOWLOVEMARKET

காதல் கடிதங்களைப் பார்க்கும் வாடிக்கையாளர்கள்   -  AFP

காதலில் தோல்வியடைந்தால் தாடி வளர்ப்பது, வாழ்க்கையை முடித்துக்கொள்வதெல்லாம் ஓல்டு ஃபேஷன். வியட்நாமில் காதல் முறிந்துவிட்டால் கூலாகப் பிரிந்துவிடுகிறார்கள். அது மட்டுமல்ல, காதலர்கள் பரிமாறிக்கொண்ட பொருட்களைக்கூட விற்பனைக்கு கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அப்படி விற்கப்படும் பொருட்களை வாங்கவே அங்கே ‘காதல் மார்க்கெட்’டும் உருவாகியிருக்கிறது.

வியட்நாமில் இயங்கிவரும் ‘ஓல்ட் ஃப்ளேம்ஸ்’ (Old Flames) என்னும் விந்தையான சந்தையில்தான் முன்னாள் காதலர்கள் தங்களுடைய காதல் நினைவுகளை விற்பனைக்குக் கொடுத்துச்செல்கிறார்கள். ஆர்வமிருக்கும் வாடிக்கையாளர்கள், இந்தச் சந்தையில் முன்னாள் காதலர்களால் கைவிடப்பட்ட காதல் நினைவுப் பரிசுகளை வாங்கிச் செல்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஹனோய் தெருவில் செயல்பட்டுவரும் இந்தச் சந்தையை டின் தங் (Dinh Thang) என்பவர் தொடங்கி நடத்திவருகிறார்.

காதலிக்கும்போது பகிர்ந்துகொண்ட காதல் கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், ‘ஸ்கராப்புக்ஸ்’, மெழுகுவர்த்திகள், வாசனை திரவியங்கள் போன்ற பொருட்கள் இந்தச் சந்தையில் விற்கப்படுகின்றன. காதல் முறிவுக்குப் பிறகு, காதலர்கள் பகிர்ந்துகொண்ட பரிசுகள் இருவருக்கும் வலியைத் தரும் நினைவுகளாக மாறிவிடும். இந்தச் சந்தை, காதல் பிரிவுத் துயரிலிருந்து வெளிவருவதற்கு பெரிதும் உதவுவதாகச் சொல்கிறார்கள் வியட்நாம் இளைஞர்கள்.

சமூக ஊடகங்களில் தற்போது அதிகளவில் செயல்பட்டுவரும் வியட்நாம் இளைஞர்கள், தங்களுடைய காதல் நினைவுகளைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று நினைக்கிறார்கள். “இன்றைய இளைஞர்கள் திறந்த மனதுடன் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் வலியிலிருந்து வெளியேவருவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கத் தயாராக இருக்கிறார்கள். காதல் பிரிவுத் துயரத்தைத் தனியாக அனுபவிக்க விரும்பவில்லை. இந்தச் சந்தை, அவர்களின் பிரிவுத் துயரத்துக்கு வடிகாலாகச் செயல்படுகிறது. தோற்றுப்போன காதலின் நினைவுகள் எப்போதும் வலியைத் தரக்கூடியதாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை” என்று சொல்கிறார் இந்தச் சந்தையின் நிறுவனர் டின் தங். இவர், சில கசப்பான காதல் முறிவுகளுக்குப் பிறகு தன்னிடம் சேர்ந்துவிட்ட தேவையற்ற நினைவுப் பரிசுகளை விற்பனை செய்யவே இந்தச் சந்தையை ஆரம்பித்திருக்கிறார். தற்போது, அதுவே அவரது தொழிலாக மாறிவிட்டது.

காதல் பிரிவுத் துயரைக் கடக்க முடியாமல் தவிக்கும் முன்னாள் காதலர்களுக்காக, இவர் ஒரு செய்திப் பலகையையும் இந்தச் சந்தையில் வைத்திருக்கிறார்கள். அந்தப் பலகையில் முன்னாள் காதலர்களுக்குத் தாங்கள் சொல்ல நினைக்கும் கருத்துகளைப் பதிவுசெய்யலாம். இந்தப் பலகையில், பல சுவாரசியமான செய்திகளைப் பார்க்க முடிகிறது. “நான் நலம்தான்”, “என்னுடைய முன்னாள் காதலரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நாம் இருவரும் எப்போதும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவேயில்லை என்றுதான் நினைக்கிறேன்” என்பன போன்ற செய்திகள் இந்தப் பலகையில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தச் சந்தை, காதல் பிரிவு தவிர்க்க முடியாதது என்பதை உணர்த்த ஆரம்பித்திருக்கிறது. சென்ற தலைமுறையில்தான் காதல் திருமணங்கள் அறிமுகமாகியிருக்கும் வியட்நாமில், காதல் பிரிவுத் துயரைக் கடக்க உதவும் இந்தச் சந்தையை இளைஞர்கள் பெரிதும் வரவேற்கிறார்கள். அத்துடன், காதலில் தோல்வியுற்றவர்கள் மட்டுமல்லாமல் புதிய காதலை எதிர்நோக்கியும் இந்தச் சந்தைக்கு இளைஞர்கள் வருகிறார்கள் என்பது சுவாரசியமான முரண்.

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நார்வே: சாலையை கடக்கும்போது நூலிழையில் தப்பிய குழந்தை

நார்வேயில் குழந்தை ஒன்று திடீரென சாலையை கடக்க முற்பட்டபோது பதிவு செய்யப்பட்ட காணொளி இது. டிரக் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் விபத்து தடுக்கப்பட்டது.

  • தொடங்கியவர்

15 இலட்சத்திற்கு வாங்கியும் போதை ஏறாத மது: வழக்குத் தொடர்ந்தார் சீன எழுத்தாளர்

 

 

15 இலட்சத்திற்கு வாங்கியும் போதை ஏறாத மது: வழக்குத் தொடர்ந்தார் சீன எழுத்தாளர்
 

லண்டனில் சுமார் 15 இலட்சத்திற்கு வாங்கிய மதுவைக் குடித்தும் தனக்கு போதை ஏறவில்லை என்று சீன எழுத்தாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற ஹோட்டல் ஒன்றில் மிக விலை உயர்ந்த மது வகைகள் கிடைக்கின்றன.

இங்கு கிடைக்கும் மதுவின் மிகக்குறைவான விலையே சுமார் 4 இலட்சம் ரூபா இருக்கும்.

இந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஷாங் வை என்பவர் அங்கு கிடைக்கும் மிகவும் விலை உயர்ந்த (சுமார் 15 இலட்சம்) மதுவை வாங்கிக் குடித்துள்ளார்.

இந்த மது 1878 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது, பாரம்பரியமிக்கது, அதற்காகவே இந்த மதுவை வாங்கிக் குடித்ததாக ஷாங் வை குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த மது முழுவதையும் குடித்தும் அவருக்கு சிறிய அளவில் கூட போதை ஏறவில்லை. எனவே, மீதம் இருந்த மதுவை ஆய்வகத்தில் கொடுத்து சோதனை செய்து பார்த்துள்ளார்.

இதில் அவர் குடித்தது போலியான மதுபானம் என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த ஹோட்டலின் மீது அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஆனால், ஹோட்டல் நிர்வாகம் அவரிடம் வாங்கிய பணத்தை திரும்ப வழங்கத் தீர்மானித்துள்ளது.

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

உலக வலைப்பின்னல் WWW ஆரம்பிக்கப்பட்ட நாள்: 13-11

இணைய தளத்தில் முதன்முறையாக www ஆரம்பிக்கப்பட்ட நாள்.

 
உலக வலைப்பின்னல் WWW ஆரம்பிக்கப்பட்ட நாள்: 13-11
 
இணைய தளத்தில் முதன்முறையாக www ஆரம்பிக்கப்பட்ட நாள்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1851 - வாஷிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர். * 1887 - மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. * 1887 - நவம்பர் 11-ல் சிகாகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.

* 1918 - ஒட்டோமான் பேரரசின் தலைநகர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றினர். * 1950 - வெனிசுவேலாவின் அதிபர் ஜெனரல் கார்லொஸ் டெல்காடோ சால்போட் படுகொலை செய்யப்பட்டார். * 1957 - கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது. * 1965 - அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் பகாமசில் மூழ்கியதில் 90 பேர் கொல்லப்பட்டானர். * 1970 - போலா சூறாவளி: கிழக்குப் பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப்பெரும் சூறாவளியில் 5 லட்சம் பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20-ம் நூற்றாண்டின் மிகப்பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது).

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

12 வயதில் 85 மொழிப்பாடல்கள்...கின்னஸ் சாதனைக்காகக் காத்திருக்கும் இந்திய மாணவி!

 
 

சுசிதா சதீஷ். துபாயில் வசித்துவரும் இந்திய மாணவி. கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், துபாயிலுள்ள `தி இந்தியன் ஹை ஸ்கூலில்’ ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். பாடல் பாடுவதில் ஆர்வம்கொண்ட சுசிதா வெகு விரைவில் கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்த இருக்கிறார். 12 வயதான இந்தச் சிறுமியின் சாதனை 85 மொழிப் பாடல்களை ஒரே மேடையில் பாடுவதுதானாம்.

சுசிதா சதீஷ்

 
 

“சில வருடங்களுக்கு முன்பாக என் தந்தையின் தோழி எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் ஒரு ஜப்பானியர். அவர் பாடிய பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அவரிடமிருந்து ஜப்பானிய மொழிப்பாடலைக் கற்றுக்கொண்டேன். அதுதான் எனக்குள் பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டியது. அதன்பிறகே நான் 85 மொழிகளிலுள்ள பாடல்களைத் தேர்ந்தெடுத்து பாடக் கற்றுக் கொண்டேன்” என்கிறார் சுசிதா. 85 மொழிப்பாடல்களை ஒரே நேரத்தில் பாடி கின்னஸ் சாதனை புரிய காத்திருக்கும் 12 வயது சிறுமி சுசிதாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die sitzen, Schuhe und Innenbereich

புதிய யுக்திகளை உலகிற்கு அளித்த பெருமை இந்தியனையே சாரும் 1f601.png?1f601.png?1f601.png?1f601.png?1f601.png

  • தொடங்கியவர்
‘கடின மனம் கரைய வேண்டும்’
 

image_d433627f0d.jpgகாலவரையறைக்கு உட்பட்டு வாழும் நாம், காலவரையறைக்கும் அப்பாலுக்கும் அப்பால், உள்ள இறைவனின் திருவருளை நினைவுகூருதல் வேண்டும்.

எமது சிற்றறிவு எங்களை பெரும் அறிவாளிகளாக எண்ண வைக்கின்றது. மெய் அறிவான கடவுளை இந்தப் புலன் அறிவுகொண்டு அளவீடு செய்ய முடியாது.

ஆனால், எமது ஆன்மாவை வலுப்படுத்தியே ஆக வேண்டும். நியாயம், நீதிக்கு அப்பால், வாழ்தல் ஆன்ம நிந்தனை என்பதை உணர்ந்தால் பாவத்தின் மிகக் கொடூர முகத்திரையில் இருந்து விலகி உள் ஒளியைத் தரிசிக்கும் பாக்கியதைப் பெறமுடியும்.

உள்ளம் நெகிழ்தல் என்பது பக்தியினால் மட்டுமே உணர முடியும். கடின மனம் கரைய வேண்டும். இறுகிய நெஞ்சு உருக்கப்பட்டால் இறைவன் மீதான நெருக்கம் இயல்பாக வந்தெய்தும்.

  • தொடங்கியவர்

ஆமைபோல் வேகம்கொள்... அருகில் இருக்கிறது இலக்கு! #MotivationStory

 
 

ஆமைபோல் வேகம்கொள்... அருகில் இருக்கிறது இலக்கு!

ழ்ந்த தியானத்தில் இருந்தார் குரு. அந்த வெளியில் ஆழ்ந்த அமைதி ததும்பியது. ஒளி மிளிரும் அவரது முகத்தையே கூர்த்து பார்த்தபடி எதிரில் அமர்ந்திருந்தார்கள் சீடர்கள். 

 

அதிகாலை என்பது கேள்விக்கான நேரம். புத்தி, கூர்மையாக இயங்கும் நேரம். புத்தியைக் கூர்தீட்டும் ஆற்றல் கேள்விகளுக்கு உண்டு. கேள்விகள், எழ எழத்தான் அறிவு விசாலமாகும். தேடல், விளிம்புகளை உடைத்துச் சீறிப்பாயும். சீடர்கள் நிறையக் கேள்விகளைத் தங்களுக்குள் தேக்கிவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

சில நிமிடங்களில் கண்விழித்து, ஒவ்வொருவரின் கண்களையும் நேருக்கு நேர் பார்த்தார் குரு. அவரது பார்வையில் கருணை பொங்கியது. சீடர்களின் கண்களில் தொக்கி நிற்கும் கேள்விகள் அவருக்குப் பெருமிதத்தைத் தந்தன. அவர்கள் பேச இசைவளித்தார்.  

வயதில் சிறியவனான அந்தச் சீடன் கேட்டான். 

"குருவே, நேற்று நீங்கள் எங்களுக்கு போதித்தபோது, `ஆமைபோல் வேகம்கொள்’ என்றீர்கள். ஆனால், ஆமை பற்றி யாருக்கும் நல்ல அபிப்ராயம் இல்லை. 'ஆமை புகுந்த வீடும் வழக்குமன்ற ஊழியன் புகுந்த வீடும் ஒன்று' என்று எங்கள் பகுதியில் பழமொழியே இருக்கிறது. ஆமையை அமங்கலத்தின் சின்னமாகவே நாங்கள் புரிந்துவைத்திருக்கிறோம். ஆமை, வேகமாகச் செயல்படும் விலங்கும் அல்ல. அது மிக மெதுவாகவே நகரும். பிறகெப்படி ஆமையை நாங்கள் முன்னுதாரணமாகக்கொள்ள முடியும்? ஆமையிடம் நாங்கள் கற்றுக்கொள்ள அப்படியென்ன நல்ல குணம் இருக்கிறது..?’’ 

குரு

சீடனின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார் குரு. "நல்லது சீடனே... நான் சொன்ன செய்தியை நன்கு உள்வாங்கியிருக்கிறாய். அதனால்தான் உனக்கு இவ்வளவு கேள்விகள் உதித்திருக்கின்றன. எல்லா விஷயங்களையுமே மேலோட்டமாகப் புரிந்துகொள்வதுதான் மனித குணம். எதையும் உடைத்து, பகுத்துப் பார்க்கப் பழக வேண்டும். இந்த உலகத்தில் படைக்கப்பட்ட எதுவுமே காரணம் இல்லாமல், திறன் இல்லாமல் படைக்கப்படவில்லை. ஆமையும் அப்படித்தான். மனிதன் தனக்கு ஏற்புடையவாறு, தனக்குக் கீழான எல்லாவற்றையும் காழ்ப்புஉணர்வோடே புரிந்துவைத்திருக்கிறான் அல்லது போதித்திருக்கிறான். முதலில் எந்த ஒரு விஷயத்தையும் விறுப்பு, வெறுப்பற்று பகுத்தறிந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆமையைப் பற்றிக் கேட்டாயல்லவா..? ஆமை மாதிரி புத்திக்கூர்மையுள்ள, உணர் அறிவுள்ள, தேடலுள்ள உயிரினம் ஏதுமில்லை. தன் முதல் கருவுறுதல் நிகழ்ந்த பிறகு, ஆமை, தான் முட்டையிடுவதற்கான இடத்தைத் தீவிரமாகத் தேடும். பாதுகாப்பான, இடையூறு இல்லாத, தகுந்த தட்பவெப்பம் உள்ள இடத்தைத் தேர்வுசெய்ய அது நெடுந்தூரம் பயணிக்கும். ஓர் இடத்தைத் தேர்வு செய்துவிட்டால், அப்பகுதியைச் சில நாள்கள் நோட்டமிடும். 'அதுதான் தனக்கான இடம்' என்று தேர்வு செய்தபிறகு நிதானமாக முட்டையிடும்.

முதன்முறையாக எந்த இடத்தில் முட்டையிட்டதோ, அதே இடத்தில்தான் காலம் முழுவதும் முட்டையிடும். 

கடல் வாழ் உயிரிகளில் தன் வாழ்நாளுக்குள் அதிக தூரம் பயணம் செய்யக்கூடிய உயிரினம் ஆமைதான். ஆனால், பிற உயிரினங்களுக்கு இருப்பதைப்போல வசதியான துடுப்புகள் ஆமைக்கு இல்லை. உடல் வடிவமும் நீந்த ஏதுவாக இல்லை. ஆனால், அது பிற உயிரினங்களைவிட வேகமாகப் பயணம் செய்யும். 

கடல் ஆமை

முட்டையிடும் உணர்வு ஏற்படும்போது, பரந்து விரிந்த இந்தக் கடற்பரப்பில் எவ்வளவு தொலைவுக்கு அப்பால்  இருந்தாலும், அதிவேகமாகப் பயணித்து தன் பழைய இடத்தைத் தேடி வந்துவிடும்..."

குரு சொல்வதை லயித்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் சீடர்கள். 

அந்தச் சிறுவயது சீடன்தான் இப்போதும் பேசினான். 

"வசதியான துடுப்புகள் இல்லாத ஆமை, அவ்வளவு வேகமாக எப்படிப் பயணிக்கிறது?"

அவனது ஆர்வத்தை ரசித்த குரு, மேலும் சொல்லத் தொடங்கினார். 

ஆமையின் இலக்கு

"இங்குதான் நீ ஆமையாக மாற வேண்டும். தனக்குத் துடுப்புகள் இல்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டு முடங்கிப்போகவில்லை ஆமை. அது இயற்கையைத் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறது. தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. 

அது செல்ல திட்டமிட்டுள்ள திசையில், அதிவேக நீரோட்டம் தொடங்கும் நேரத்துக்காக அது அமைதியாகக் காத்திருக்கிறது. நீரோட்டம் தொடங்கிய விநாடியில் அதில் ஒன்றிவிடுகிறது. நீரின் தன்மைக்கேற்ப ஏறி, இறங்கி, வளைந்து, நெளிந்து தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது. அந்த நீரோட்டமே ஆமையை அதன் இலக்கில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. துடுப்பை அசைக்காமல் நெடுந்தொலைவு பயணத்தை அது கடந்துவிடுகிறது..."

குரு -சீடர்

சீடர்களின் முகங்கள் பிரகாசமாகின. கனிவாக மேலும் தொடர்ந்தார் குரு. 

 

“ ‘ஆமைபோல் வேகம் கொள்’ என்பதன் உள்ளீடு இப்போது உங்களுக்குப் புரிகிறதா? உங்களுக்கான இலக்கைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். அது உங்கள் இயல்புக்கேற்ற இலக்குதானா என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். `மற்றவர்களுக்கு இருப்பது போன்ற வசதிகள் நமக்கு இல்லையே...’ என்று வருந்தி முடங்கிப் போகாமல், நம் இலக்கைத் தொட என்னவெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற தேடலோடு இருங்கள். உங்களுக்கான நீரோட்டத்தை அடையாளம் கண்டதும் களத்தில் இறங்குங்கள். நிச்சயம் அந்த நீரோட்டம், உங்களை உங்கள் இலக்கில் கொண்டு போய் நிறுத்தும். வெற்றி என்பது திறனின் அடிப்படையில் மட்டுமல்ல... அந்தத் திறனை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது. ஆமை நமக்குக் கற்றுத்தரும் பாடம் அதுதான்...” என்றார் குரு.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

2010 : போர்­மியூலா வண் காரோட்டப் போட்­டி­களில் செபஸ்ட்­டியன் வெட்டல், முதல் தட­வை­யாக சம்­பி­ய­னானார்.

வரலாற்றில் இன்று…

நவம்வர் – 14

 

1885 : பல்­கே­ரியா மீது சேர்­பியா போர் தொடுத்­தது.

1889 : நெல்லி பிளை என்ற பெண் ஊட­க­வி­ய­லாளர் 80 நாட்­க­ளுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது பய­ணத்தை ஆரம்­பித்தார். இவர் இப்­ப­ய­ணத்தை 72 நாட்­க­ளுக்குள் வெற்­றி­க­ர­மாக முடித்தார்.

1918 : செக்­கோஸ்­லோ­வாக்­கியா குடி­ய­ர­சா­கி­யது.

1922 : பிபிசி தனது வானொலி சேவையை ஆரம்­பித்­தது.

1940 : இரண்டாம் உலகப் போரில் இங்­கி­லாந்தில் கவெண்ட்ரி நகரம் ஜேர்­ம­னி­யரின் குண்­டு­வீச்சில் பலத்த சேத­ம­டைந்­தது. கவெண்ட்ரி தேவா­லயம் முற்­றாக அழிந்­தது.

1956 : ஹங்­கே­ரியில் போர் முடி­வுக்கு வந்­தது.

1963 : ஐஸ்­லாந்து தீவின் அருகில் வட அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் எழுந்த எரி­ம­லையால் சூர்ட்ஸி எனும் தீவு, புதி­தாகத் தோன்­றி­யது.

vettel-2012-300x250.jpg1965 : வியட்நாம் போர்: லா ட்ராங் என்ற இடத்தில் அமெ­ரிக்கப் படை­க­ளுக்கும் வடக்கு வியட்நாம் படை­க­ளுக்கும் இடையில் பெரும் சமர் வெடித்­தது.

1969 : அப்­பலோ திட்டம்: அப்­போலோ 12 விண்­வெளி ஓடம் மூன்று விண்­வெளி வீரர்­க­ளுடன் சந்­தி­ரனை நோக்கிச் சென்­றது.

1970 : அமெ­ரிக்­காவின் மேற்கு வேர்­ஜீ­னி­யாவில் அமெ­ரிக்க விமானம் ஒன்று வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 75 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1971 : நாசா நிறு­வ­னத்தின் மரைனர் 9 செவ்வாய் கோளை சென்­ற­டைந்­தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச் செய்­ம­தி­யாகச் செயற்­பட்ட முத­லா­வது விண்­க­ல­மாகும்.

1975 : மேற்கு சகா­ரா­வி­லி­ருந்து ஸ்பெயின் வில­கி­யது.

1990 : கிழக்கு ஜெர்­மனி மற்றும் மேற்கு ஜெர்­ம­னி­களின் இணைப்­பிற்குப் பின்னர் போலந்­துக்கும் ஜெர்­ம­னிக்கும் இடை­யி­லான எல்­லைகள் வரை­ய­றுக்­கப்­பட்­டன.

1991 : நாடு கடந்த நிலையில் வாழ்ந்த கம்­போ­டி­யாவின் இள­வ­ரசர் நொரொடோம் சிஹானூக் 13 ஆண்­டு­களின் பின்னர் தாயகம் திரும்­பினார்.

1996 : டாக்டர் அம்­பேத்கர் சட்டப் பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­பட்­டது.

2001 : ஆப்­கா­னிஸ்­தானின் தலை­நகர் காபூலை ஆப்கான் வடக்கு கூட்டுப் படைகள் தமது கட்­டுப்­பாட்டில் கொண்டு வந்­தனர்.

2008 : முத­லா­வது ஜி.20 பொரு­ளா­தார உச்­சி­மா­நாடு அமெ­ரிக்­காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் ஆரம்­ப­மா­கி­யது.

2010 : ரெட்புல் அணியைச் சேர்ந்த ஜேர்­ம­னிய வீரர் செபஸ்ட்­டியன் வெட்டல், போர்­மியூலா வண் காரோட்டப் போட்­டி­களில் சம்­பி­ய­னா­கிய மிக இளம் வீர­ரானார்.

2012 : பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தியம் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதலை ஆரம்பித்தது.

2012 : இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட உள்ளக மீளாய்வுக்குழுவின் அறிக்கை வெளியாகி யது.

http://metronews.lk

  • தொடங்கியவர்

லாமாஸ் ஒட்டக சிகிச்சை

மன இறுக்கத்தை போக்கும் லாமாஸ் ஒட்டக சிகிச்சை அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.

Local_News.jpg

லாமாஸ் மற்றும் அல்பாகாஸ் என்ற புதுவிதமான சிகிச்சை முறையை ஷ‌னான் ஜாய் என்பவர் அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளார்.

இச் சிகிச்சையில் லாமாஸ் என்ற ஒட்டகம் மூலம் அன்பைப் பரப்பும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மன இறுக்கம் குறைக்கப்படுகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இச் சிகிச்சை மூலம் முதியோர் இல்லங்களில் தனிமையில் வாடும் முதியவர்களை ஷனான் மகிழ்ச்சி அடைய செய்து வருகிறார்.

திருமணம் போன்ற குடும்ப விழாக்களிலும் லாமாஸ் ஒட்டகம் மூலம் அன்பை பரப்பும் சிகிச்சை முறையை ஷனான் ஆரம்பித்துள்ளார்.

இதனால் திருமணம் போன்ற விழாக்களுக்கு வரும் பலர் லாமாஸ் ஒட்டகத்துக்கு முத்தம் கொடுத்து அன்பை பரிமாறுவதுடன், தங்களது மன இறுக்கத்தையும் போக்கிக் கொள்கின்றனர்.

அமெரிக்க மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இம்முறை தற்போது வேகமாக பரவி வருகிறது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

ஆடம் கில்கிறிஸ்ட்... கீப்பிங்கின் ஸ்பைடர்மேன்... கிரிக்கெட்டின் ஜென்டில்மேன்! #HBDGilchrist

 
 

DRS முறையெல்லாம் அறிமுகமாகாத காலம். அந்த இந்திய சுழற்பந்துவீச்சாளரின் பந்து, பேட்டுக்கு மிக அருகில் சென்று கீப்பரிடம் தஞ்சம்கொள்கிறது. ஃபீல்டிங் டீம் மொத்தமும் அப்பீல் செய்ய, கீப்பரும் பௌலரும் துள்ளிக் குதிக்க, அசைவின்றி நிற்கிறார் அம்பயர். பேட்ஸ்மேனின் முகத்தில் துளியும் சலனமில்லை. அந்த ஓவர் முடிந்ததும் ரீப்ளே போடப்படுகிறது. பந்து பேட்டில் பட்டு எட்ஜானது தெளிவாகத் தெரிகிறது. டிவி-யில் பார்த்த நம் வெறித்தன ரசிகர்கள் பொங்குகிறார்கள். கொஞ்ச நேரம் அம்பயருக்கு ஆராதனை நடக்க, சலனமின்றி நின்றிருந்த பேட்ஸ்மேனை அடுத்ததாக வசைபாடத் தொடங்கினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி அவரைக் கரித்துக்கொட்ட, நடுவில் வந்து விழுந்தது இந்த வார்த்தை... “இதுவே அந்த இடத்துல கில்கிறிஸ்ட் இருந்திருந்தா, கீப்பர் கேட்ச் பிடிச்ச அடுத்த செகண்ட் பெவிலியன்ல நின்றிருப்பான்". அனைவரும் அதை வழிமொழிந்தனர்.  

இரண்டு ஆசிய அணிகள் விளையாடிக்கொண்டிருந்த அந்தப் போட்டியில், அதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் ஹீரோவாகிப்போனார். காரணம், அவரின்  அதிரடி ஆட்டம், அசத்தல் கீப்பிங்கையெல்லாம் தாண்டி, அந்த மைதானத்தில் மனிதனாக வென்றவர் அவர். கிரிக்கெட் ஜென்டில்மென்களின் கேம் எனில், ஆடம் கில்கிறிஸ்ட்டே அதன் ஆகச்சிறந்த ஜென்டில்மேன்!

 

கில்கிறிஸ்ட்

சிறுவயதில் கிரிக்கெட் பார்க்கும்போது பயங்கரமாக சந்தேகம் எழும், `ஃபீல்டிங் டீம்ல எல்லோரும் சும்மா நிக்கிறப்போ, அது என்னடா இந்த கீப்பர் மட்டும் க்ளவுஸ், பேட் (Pad), ஹெல்மட்டெல்லாம் போட்டுட்டு நிக்குறார்' என்று. போகப்போகத்தான் விக்கெட் கீப்பிங்கில் இருக்கும் கஷ்டம் புரியத் தொடங்கியது. 140 - 150 கிலோமீட்டர் வேகத்தில் வரும் பந்தை வெறும் கையில் பிடித்திட முடியுமா? ஸ்டம்புக்கு மிக அருகில் நின்றுகொண்டிருக்கையில் முகத்தைப் பந்து பதம்பார்த்துவிட்டால்! அது மிகவும் ஆபத்தான பொசிஷன். கவனம், பந்தின் மீதே இருக்க வேண்டும். சற்று கவனம் சிதறி ஒரு எட்ஜ் கேட்ச்சை விட்டாலோ, பை (Bye) மூலமாக ஒரு பெளண்டரியை விட்டாலோ ரசிகர்கள் அர்ச்சனை செய்வார்கள். ஆக, 50 ஓவர்களும், 300 பந்துகளும் அலெர்ட்டாகவே இருக்கவேண்டும். அதனால்தான் மொயின் கான் முதல் தைபு வரை பேட்டிங்கில் சாதிக்காவிடிலும் பேசப்பட்டார்கள்.

சாதாரண விக்கெட் கீப்பருக்கே இத்தனை சவால்கள். கில்கிறிஸ்ட் முன் இருந்தவையெல்லாம் அதுக்கும்மேல ரகம். 160 கிலோமீட்டர் வேகத்தில் வரும் பிரெட் லீயின் பந்துகளை எதிர்கொள்ளவேண்டும். லெக் சைடு கொஞ்சம் விலகிச் சென்றாலும் நொடிப்பொழுதில் அவை பௌண்டரியைத் தொட்டுவிடும். பௌன்ஸர்கள் என்றால், நிலைமை இன்னும் மோசம். மெக்ராத்தின் இரண்டாவது, மூன்றாவது ஸ்பெல்களில், ஸ்டம்புக்கு மிக அருகில் நிற்பார். பந்து இன் ஸ்விங் ஆகுமா, அவுட் ஸ்விங் ஆகுமா...? தெரியாது. அதைச் சரியாகக் கணித்திட வேண்டும். இவையெல்லாம்விட மிகப்பெரிய சவால்... ஷேன் வார்னே! பெர்த்தில் பிட்சாகி சிட்னி வரை சுழலும் அந்தப் பந்தைப் பிடிக்க, காலச்சக்கரத்தையே ஒரு நொடி நிறுத்தவேண்டியிருக்கும். ஆனால், இவருக்கு அவை சவால்களாகவே தெரிவதில்லை. அவரது கண்கள், கிளியை மட்டும் பார்த்த அர்ஜுனன்போல் பந்தை மட்டுமே குறிவைத்தன. அதனால்தான் அவர்களையெல்லாம் சமாளிக்க முடிந்தது. அந்த ஆஸ்திரேலிய பௌலிங் அட்டாக்கைச் சமாளித்ததற்கே கில்லியைக் கொண்டாடவேண்டும்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி அது. பேட்ஸ்மேன் பந்தை ஸ்வீப் செய்ய, அது ஷார்ட் லெக்கில் நின்றிருந்த ஹெய்டன் மீது பட்டு மேலே எழும்பும். அது ஹெய்டனின் காலடியில்தான் விழும். நொடிப்பொழுதில் அதற்கு ரியாக்ட் செய்து, பாய்ந்தை கேட்ச் பிடிப்பார் கில்லி. ஒரு நொடிதான். அந்த prescence of mind... சான்ஸே இல்லை. இதாவது பரவாயில்லை. தென்னாப்பிரிக்கா அணியுடனான மற்றொரு போட்டியில், முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த வார்னே கேட்சைத் தவறவிட்டுவிடுவார். வேறொருவராக இருந்தால் தலையில் கை வைத்துக்கொண்டு நின்றிருப்பார். கில்லி, ரொம்ப ஷார்ப். கவனம், பந்தைவிட்டு அகலவில்லை. வார்னே பந்தை நழுவவிட, அவர் கீழே விழும்போது அவர் காலிலேயே பட்டு பௌன்ஸ் ஆனது. அங்கும் ஆஜரானார் கில்லி. ஃபைன்லெக் திசையில் அடிக்கப்படும் பல பந்துகள், இந்த ஸ்பைடர்மேனின் `Gum' கரங்களில் சிக்கிவிடும். வேகப்பந்துவீச்சில் இந்தச் சாகசங்கள் நிகழ்த்த அவரது உயரம் பெரிதும் துணைபுரிந்தது. ஆனால், சுழற்பந்தின்போது..?

ஸ்பின்னர்களை எதிர்கொள்ள ஸ்டம்புக்கு அருகில் இருக்கும் கீப்பர்கள், குனிந்து நிற்க வேண்டும். அப்போதுதான் பௌன்ஸ் ஆகாத பந்துகளையும் அவர்களால் சரியாகப் பிடிக்க முடியும். கில்கிறிஸ்டின் உயரம் இந்த வகையில் மிகப்பெரிய தடை. அவரது உயரத்துக்குத் தொடர்ந்து அப்படி நின்றாலே முதுகுவலி அதிகரித்துவிடும். ஆனாலும் அநாயசமாகக் கலக்கினார். ஸ்டம்புக்குப் பின்னால் மட்டும் ஜொலித்திருந்தால்கூட இந்த அளவுக்குப் பிரபலமடைந்திருக்க மாட்டார். அதற்கு முன்னாலும் பட்டையைக்கிளப்பியதுதான் அவரை உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இன்றுவரை நம்மைப் பேசவைக்கிறது. 

கில்கிறிஸ்ட்

கில்கிறிஸ்ட் தந்த அசத்தல் தொடக்கங்கள், அசைக்க முடியாத அணியாக ஆஸ்திரேலியா உருவானதில் பெரும்பங்கு வகித்தது. உலகக்கோப்பை ஃபைனல்கள் இவருக்கு பெரிய பொருட்டே அல்ல. 2003-ம் ஆண்டு ஃபைனலில் அதிரடியாக அரை சதம் அடித்து, இந்தியாவை போட்டுத்தள்ளியவர், நான்கு ஆண்டுகள் கழித்து 149 ரன்கள் குவித்து, நம் பக்கத்து நாடு இலங்கையை நசுக்கினார். பான்டிங்கின் தாண்டவம் நம்மை நொறுக்கியதென்றால், பான்டிங்குக்கு நம்பிக்கை கொடுத்தது கில்கிறிஸ்டின் ஆட்டம்தான். இலங்கையுடனான ஃபைனலில், க்ளவுஸுக்குள் ஸ்குவாஷ் பால் வைத்து விளையாடியதாக அவர் சொல்ல, கிளம்பியது பூதம். ஐ.சி.சி விதிகளின்படி அது குற்றமில்லை என்பதால்தான் உலகம் ஓய்ந்தது. அவர் ஸ்குவாஷ் பந்தை க்ளவுஸுக்குள் ஏன் வைத்திருந்தார்? கிரிக்கெட் வீரர்கள், பேட்டிங் க்ளவுஸுக்குள் கிரிப் கிடைப்பதற்காக மெலிசான கையுறைகளைப் பயன்படுத்துவார்கள். அதற்குப் பதிலாக ஸ்குவாஷ் பந்தைப் பயன்படுத்தினார் கில்லி. இப்படிச் சின்னச் சின்ன விஷயத்திலும்கூட புத்திசாலித்தனமாகச் செயல்படுபவர்.

மூன்று உலகக்கோப்பைகளில் விளையாடியுள்ள கில்லி, 31 போட்டிகளில் 1,085 ரன்கள் குவித்துள்ளார். இதில் 1 சதமும், 8 அரை சதமும் அடங்கும். அதுமட்டுமின்றி 45 கேட்சுகளும், 7 ஸ்டம்பிங்குகளும் செய்து மூன்று உலகக்கோப்பை வெற்றிகளிலும் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார். அவற்றையெல்லாம் தாண்டி, ஆஸ்திரேலியா மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் மதிக்கப்பட காரணம் அவரது குணம்தான். அவுட் எனத் தெரிந்தால், அம்பயரின் முடிவுக்காக காத்திருக்க மாட்டார். சட்டென கிரீஸிலிருந்து கிளம்பிவிடுவார். அவ்வளவு நேர்மை.

2003-ம் ஆண்டு உலகக்கோப்பை, மிகவும் முக்கியமான அரை இறுதிப்போட்டி. அரவிந்த் டி சில்வா-வின் பந்தை ஸ்வீப் செய்கிறார் கில்லி. பந்து பேடில் (Pad) பட்டு எகிற, அதை கீப்பர் சங்கக்காரா பிடித்துவிடுவார். இலங்கை வீரர்கள் அனைவரும் கேட்சுக்கு அப்பீல் செய்வார்கள். கொஞ்சமும் பிடிகொடுக்காமல் நிற்பார் நடுவர். திடீரெனப் பார்த்தால், பெவிலியன் பக்கம் போய்க்கொண்டிருப்பார் கில்கிறிஸ்ட். ஆஸ்திரேலியர்கள் அவரைக் குறை கூறினார். ஆனால், அவர் என்றுமே அதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. கடைசிவரை களத்தில் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இதனால், ஆஸ்திரேலிய வீரர்களுடன்கூட இவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இவரது அந்தச் செயலை அணி வீரர்கள் யாருமே ஆதரித்ததில்லை. பலமுறை தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். `டிரெஸ்ஸிங் ரூம் கெமிஸ்ட்ரி முழுமையாகப் பாதித்திருக்கும். நான் அணிக்கு துரோகம் செய்ததுபோல் மௌனமாகக் குற்றம்சாட்டுவார்கள். `என் நேர்மையைக் கடைப்பிடிக்க, மற்றவர்களை நேர்மையற்றவர்களாகக் காட்டுகிறோமோ!' என்று எனக்குள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்திவிட்டனர்' என்று `ட்ரூ கலர்ஸ்' (True Colours) என்னும் தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். இந்த அளவுக்கு பலமுறை அவர் மனமுடைந்திருந்தாலும், ஒருமுறைகூட களத்தில் அவர் நேர்மை தவறவில்லை. நேர்மை தவறாதவனாகவே ஓய்வும் பெற்றார்.

கில்கிறிஸ்ட்

அவர் ஓய்வுபெறும்போது, அப்போதைய பயிற்சியாளர் ஜான் புக்கனன், “சில மாதங்கள் முன்பு வார்னே, மெக்ராத், மார்டின் போன்றோரெல்லாம் ஓய்வுபெற்றார்கள். அந்த ஓய்வைவிட கில்கிறிஸ்டின் ஓய்வு அணிக்குப் பெரும் இழப்பு. இது ஈடுசெய்ய முடியாத ஒன்று" என்றார். கில்கிறிஸ்டின் ஓய்வு முடிவை, மறுபரிசீலனை செய்யச் சொன்னார் அன்றைய பிரதமர் கெவின் ரூட். ஒரு பிரதமரே சொல்லும் அளவுக்கு அணிக்கு முக்கியமான வீரராகத் திகழ்ந்தார். ஏனெனில், அப்படியொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆஸ்திரேலிய அணிக்குக் கிடைப்பது சாதாரண விஷயம் அல்ல என்பது அவருக்குத் தெரியும். ஆஸ்திரேலியா என்ன... உலகுக்கே இனி அப்படி ஒருவர் கிடைக்கப்போவதில்லை!

 

ஹேப்பி பர்த்டே ஜென்டில்மேன்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பெண் குழந்தை... சம்திங் ஸ்பெஷல், ஏன்?

போர்ச்சுகல் கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ களத்தில் யூனிக். சொந்த வாழ்க்கையிலும் அப்படியே. ரொனால்டோ கருவில் இருக்கும்போதே அதைக் கலைக்க நினைத்தார் அவரது தாய். ஆனால், இன்று அவர் கால்பந்து உலகை ஆள்கிறார். அவரது பிறப்பு போலவே அவரின் குழந்தைகளின் பிறப்பிலும் விசித்திரம்!

ரொனால்டோ

 


ரொனால்டோ, ஸ்பெயினைச் சேர்ந்த மாடல் அழகி ஜார்ஜினா ராட்ரிகஸ் ஜோடிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. பெயர் அலானா மார்ட்டினா. ரொனால்டோவின் நான்காவது குழந்தை. இதில் என்ன விசேஷம்? தன் குழந்தையின் தாய் யார் என ரொனால்டோ அறிவித்த முதல் குழந்தை இவர்தான். இதற்கு முன் பெற்றெடுத்த கிறிஸ்டியானோ ஜூனியர், இரட்டையர்கள் ஈவா, மேட்டியோ என மூன்று மகன்களுக்கும் தங்கள் தாய் யார் எனத் தெரியாது.

ரொனால்டோ


கிறிஸ்டியானோ ஜூனியருக்குத் தற்போது வயது 7. அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் ஒரு வாடகைத்தாய் மூலம் பிறந்தவர். CR7 சொன்ன பிறகே, அவருக்குக் குழந்தை பிறந்த விஷயமே உலகுக்குத் தெரியவந்தது. ஆனாலும், கிறிஸ்டியானோ ஜுனியரின் தாய் யார் என்பது ரகசியமாகவே இருந்தது. ‘‘இது ஒரு விஷயமே இல்லை. எனக்குத் தந்தையாகப் பிடிக்கும். அதனால் குழந்தை பெற்றுக்கொண்டேன். சரியான நேரத்தில் தாய் யார் என்பதை என் மகனுக்குச் சொல்வேன். அவனும் என்னைப் புரிந்துகொள்வான்’’ என்றார் ரொனால்டோ கூலாக. அதோடு, தன் மகனை எப்படி வளர்க்க வேண்டுமோ அப்படி வளர்த்து வருகிறார்.  தன்னைப் போலவே கால்பந்து ஜாம்பவானாக்க வேண்டும் என்பதற்காக, வேறு எந்த அகாடமியிலும் சேர்க்காமல் இருக்கிறார். அவ்வப்போது இருவரும் சேர்ந்து போஸ் கொடுப்பார்கள். அதைப் பார்த்து ரசிகர்கள் ‘No DNA test needed’ என கமென்ட் அடிப்பார்கள் ரசிகர்கள்.

DObI3JXXUAA1QlJ_17211.jpg


இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம், அமெரிக்காவில் ரொனால்டோவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கிறிஸ்டியானோ ஜூனியர் போலவே ஈவா, மேட்டியோ இருவரின் தாய் யார் என்பதும் தெரியவில்லை. வழக்கம்போல ரொனால்டோ வெளி உலகத்துக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. இந்தமுறை ரொனால்டோ, மூத்த மகன் இருவரும் சேர்ந்து, ஆளுக்கொரு குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு சோசியல் மீடியாவில் போஸ் கொடுத்தனர். அவ்வப்போது ரொனால்டோவின் தற்போதைய கேர்ள் ஃபிரண்ட் ஜார்ஜினா ராட்ரிகஸும் இந்தக் கூட்டணியில் ஐக்கியமாகி விடுவார்.

46491F9000000578-5075427-image-a-62_1510


பொதுவாக, ரொனால்டோ கேர்ள் ஃபிரண்ட் விஷயத்தில் உஷார் பேர்வழி. அவர்களைத் திருமணம் செய்துகொள்ளவும் மாட்டார்; அவர்கள் மூலம் குழந்தைகள் பிறக்கக் கூடாது என்பதிலும் தெளிவாக இருப்பார். ஆனால், சமீபத்தில் ஜார்ஜினா தான் கர்ப்பமாக இருப்பதாகவும், கிறிஸ்டியானோவின் குழந்தையை வயிற்றில் சுமப்பதாகவும் சோசியல் மீடியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தார். அவரும் இதை மறுக்கவில்லை. மாறாக, ‘‘தந்தையாக இருப்பது விநோதமான அனுபவம். இது என்னை ஒரு முழுமையான மனிதனாக்குகிறது. மீண்டும் ஒரு குழந்தைக்குத் தந்தையாவதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது’’ என்றார்.

DK-RLf8W0AA89PI_17241.jpg

 


நவம்பர் 21-ம் தேதி குழந்தை பிறக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜார்ஜினாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் ரொனால்டோவின் வீடு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிதுநேரத்தில், தனக்கு மகள் பிறந்திருப்பதை உறுதிப்படுத்தினார் ரொனால்டோ. ‘அலானா மார்ட்டினா பிறந்துவிட்டாள்! தாய், மகள் இருவரும் நலம். நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்’’ என இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை வெளியிட்டார். அந்தப் படத்துக்கக் கீழே ரசிகர்கள்,  ‘தாய் யாரெனத் தெரிந்த ரொனால்டோவின் முதல் குழந்தை இவர்தான்’ என கமென்ட் செய்தனர்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

காகிதத்தில் துளையிடும் கருவிக்கு 131 வயது! டூடுள் அமைத்தது கூகுள்

 

கூகுள்

 

முக்கியமான தினங்கள், தலைவர்களின் பிறந்தநாள் உள்ளிட்டவைகளுக்கு, கூகுள் நிறுவனம் டூடுள் அமைத்து சிறப்புசெய்வது வழக்கம். அந்த வகையில் இன்று, காகிதம் துளையிடும் கருவி உருவாக்கப்பட்டு 131 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில் காகிதத் துகள்கள் நிறைந்த டூடுள் அனிமேஷன் அமைத்துள்ளது கூகுள். 

 
 

பள்ளிகளில் படிக்கும்போது தேர்வில் கூடுதல் விடைத்தாள்களைக் கட்டுவதற்கு பேப்பரில் துளையிடுவது வழக்கம். பள்ளிகளில் மட்டுமன்றி எல்லா அரசு அலுவலகங்களிலும் இந்தக் கருவி நிச்சயம் இருக்கும். காகிதங்களை, பத்திரத் தாள்களை பிசிறில்லாமல் துளையிடுவதற்கு இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.  Friedrich Soennecken என்பவரால் நவம்பர் மாதம் 14-ம் தேதி 1886 ல் உருவாக்கப்பட்டது இந்தக் கருவி. ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட இந்த மெஷின், பிறகு பல்வேறு நாடுகளிலும் அலுவலகப் பணிக்காக பயன்படுத்தப்பட்டுவருகிறது. நம் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கருவிக்கு கூகுள் நிறுவனம் டூடுள் அமைத்துள்ளது.  இன்று நமது நாட்டின் முதல் பிரதமர் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி 'குழந்தைகள் தினம்' கொண்டாடப்பட்டு வருவதும் அன்றைய தினத்தின் மற்றுமொறு சிறப்பம்சம்.

https://www.vikatan.com

 

  • தொடங்கியவர்

 

வீட்டு சமையலறையில் மனைவியுடன் மோதும் சமையல் கலைஞர்!

குழந்தைகளை நடுவராக வைத்துக்கொண்டு, தன் மனைவியுடன் சமையல் போட்டியில் ஈடுபடுகிறார் ஒரு பிரபல சமையல் கலைஞர். போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பதை அறிய விருப்பமா? இந்தக் காணொளியை பாருங்கள்.

  • தொடங்கியவர்

மீன்களிடம் பேசும் ரோபோ கண்டுபிடிப்பு !

 

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, மீன்களுக்கு நண்பனாக இருக்கும் வகையிலும், மனிதர்களுக்கு உதவும் வகையிலும்  மீன்களிடம் பேசும் ரோபோ ஒன்றைக் கண்டு பிடித்துள்ளது.

மீன்களிடம்       பேசும்    ரோபோ     கண்டுபிடிப்பு !

ஜெனிவாவில் இயங்கும் அந்த நிறுவனம் பல வருட ஆராய்ச்சிக்கு பின்னரே, இதை நிகழ்த்தியுள்ளது.

இந்த ரோபோ மிகவும் சிறியதாக மீன் வடிவத்திலேயே உள்ளது. மீன்களை எளிதில் ஏமாற்றும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் சூரிய ஒளி (சோலார்) மூலம் இயங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

அவை, மீன்களைப் போன்று அவற்றை நீந்தச் செய்யும் திறன் படைத்தவை.

மேலும், அதில் உள்ள டிரான்ஸ் மீட்டர், நமக்கு தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கும்.

இந்த ரோபோ கடலுக்குள் சென்று, நாம் தெரிவிக்கும் தகவல்களை மீன்களுக்கு புரியும்படி கூறும் திறன் படைத்தவை.

அதன் மூலம் மீன்களை அதன் வழியில் இருந்து மாற்றவும், தேவையான இடங்களில் நிறைய மீன்களை ஒன்றாக சேர்க்கவும் முடியும்.

இது கடல் சார்ந்த ஆராய்ச்சிகளில் பெரிய மைல்கல்லாக இருக்கும் என்றும், இது இன்னும் சில நாட்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த,  கடல் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த,  எல்.எஸ்.ஆர்.ஓ. நிறுவன விஞ்ஞானிகள், கடந்த 5 ஆண்டுகளாக முயற்சி செய்து, இந்த ரோபோவை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 11 Personen, Personen, die lachen, Kind und Text

நவம்பர்14: குழந்தைகள் தினம்..
சுட்டீஸ்களுக்கு நமது வாழ்த்துகளை பகிர்வோம்...
#ChildrensDay

நெட்டிசன் நோட்ஸ்: குழந்தைகள் தினம்- அலாதி அன்பு!

 

 
11

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்நிலையில் ட்விட்டரில் #ChildrensDay என்ற ஹேஷ்டேக் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இது தொடர்பான நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

     

Nsiva Nesan

எல்லாரும் தூங்கிய பிறகு

அப்பா சோறூட்டுகையில்

சிணுங்கும் அம்மா குழந்தைதான்..

எதற்கும் கலங்காத அப்பா

மகளை புகுந்த வீடு அனுப்புகையில்

வெடித்து அழும்போது அவரும் குழந்தைதான்..

சீக்கிரம் தின்றுவிட்டு

தங்கையிடம்

ஸ்நாக்ஸ் கெஞ்சுகையில்

அண்ணனும் குழந்தைதான்..

ஐம்பது ரூபாய் நோட்டை எடுக்காமல்

ஐம்பது பைசா சாக்லேட் எடுக்கையில்

குழந்தைக்கு நிகர் குழந்தைதான்... #ChildrensDay

Ramesh Kmdk

காணிக்கை செலுத்தியும் வேண்டுதலை நிறைவேற்றுவதில்லை தெய்வங்கள்!

சாக்லெட் கொடுத்தவுடன் முத்தம் தந்துவிடுகின்றன குழந்தைகள்!

Malar Vizhi

குழந்தை போல மனசு உள்ளவங்களும் குழந்தைதான். அதனாலே அப்படியே எனக்கும் வாழ்த்து சொல்லிட்டு போங்க... #November_14

Chelli Sreenivasan

எத்தனை வயதானாலும் உள்ளே இருக்கும் குழந்தைத் தனத்தையும் குறும்புத் தனத்தையும் விடவே கூடாது. குழந்தை மனமும் குணமும் நம்மிடம் எந்த வயதிலும் போகாமல் பார்த்துக்கொண்டாலே போதும், எந்த சூழலையும் எளிதாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து விட முடியும் !

சந்திரசேகர் தனிஒருவன்

குழந்தை வரம் கேட்டு கோவில் கோவிலாக அலையும் தம்பதியர் யாருக்கும் தெரிவதில்லை..

அம்மா வரம் கேட்டு அனாதை ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளை!

குழந்தைகள் தின வாழ்த்துகள்.

1

Clever Vky

வயதுதான் குழந்தைப் பருவத்தை தீர்மானிக்கிறது என்றால்

நான் பெரியவன்..

மனம்தான் பருவங்களை தீர்மானிக்கிறது எனில்

இன்றும் நான் இருக்கிறேன் குழந்தையாகவே..!

Sekar Karuppannan

உலகில் பசியால் அழும் குழந்தை ஏதேனும் ஒரு மூலையில் இருக்கு வரை, நாம் செய்யும் எந்த அபிஷேகமும் இறைவனடி சேராது.. #ChildrenDay2017

மகிந்தன் @MSRajRules

ஆயிரம் கவலைகள் இருந்தாலும் அதை எல்லாவற்றையும் மறக்க வைத்து நம்மை மிக சுலபமாக சிரிக்க வைப்பது குழந்தைகள் மட்டுமே..!

கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar

குழந்தைகள் தவறு செய்தால் நம்மிடம் பயப்படலாம்!

நம்மிடம் பேசுவதற்கே பயப்பட்டால் தவறு நம் மீதுதான்!

குழந்தைகள் தின வாழ்த்து.

அஜ்மல் அரசை @ajmalnks

கள்ளங்கபடமற்ற மனசுகளுக்கு சொந்தக்காரர்கள் குழந்தைகள் மட்டுமே...

அஜய் முருகேஷ் @ajay_aswa

தனக்கு பிடித்தமாதிரி பதில் சொல்பவர்களிடம் அடிக்கடி கேள்வி கேக்க தொடங்கிவிடுகின்றனர். #குழந்தைகள்

HAJA MYDEEN

குழந்தைகள் சொல்லும் ரைம்ஸ்

பெற்றோர்களுக்கு தாலாட்டு..!

111
 

அஜய்

வாழ்க்கையில் எந்த உயரத்துக்குப் போனாலும்

தன் குழந்தைப் பருவ நியாபகங்களை நினைக்காமல்

வாழ்க்கை நமக்கு நிறைவடைவதில்லை. #குழந்தைகள்_தினம்

சிலந்தி @nandhu_twitts

மீண்டுமொரு ஜென்மம் கிடைக்குமாயின் அதில் அனுதினமும் குழந்தையாகவே வாழ்ந்திட முனைகிறேன்..

வளர்ந்துவிட்டால் நிறைய நேரங்களில் இந்த உலகில் பொய்யாகவும், போலியாகவும் நடிக்க வேண்டியதாயிருக்கும் என்பதால்..

#குழந்தைகள்_தினம்_சுகம்.

12
 

இசை @BhargaviKissan

குழந்தைகள் அழகு என்றால் அவர்களின் பேச்சு அதைவிட அழகு...

தூயோன் @Deepan_Offl

அம்மா அடித்தாலும் அம்மாவையே கட்டிப் பிடித்துக் கொண்டு 'அம்மா, அம்மா 'என அழும் குழந்தைகளின் அன்புதான் எத்தனை அலாதியானது?

குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.

Mani Tamil

விதைக்கும் விதைதான் நாளை விருட்சம் ஆகும். குழந்தைகளும் விதைகள் போலத்தான்... நல்ல உணர்வுகளை விதையுங்கள். ஊக்கம் எனும் உரத்தை ஊட்டுங்கள். தரமாக வளர்வார்கள். தமிழனத்தை உயர்த்துவார்கள். தன்னம்பிக்கையோடு வாழத்துங்கள். இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

பொரி உருண்டை @raajsh01

உங்கள் கனவுகளை பிள்ளைகளின் விழிகளில் காணாதீர்

பிள்ளைகளின் கனவுகளை உங்கள் விழிகளில் காணுங்கள்

குழந்தைகளை குழந்தைகளாக காணுங்கள்

டாக்டராகவோ இன்ஜினியராகவோ அல்ல

#குழந்தைகள்தினம்

பொறியாளன் @Ramu_vfc

உலகிலேயே நம் சோகங்கள் மற்றும் மன அழுத்தங்களை நொடியில் போக்குகிற சிறந்த நிவாரணி குழந்தைகள்தான் ... #HappyChildrensDay

13
 

Ganesan @Ganesan10401070

பேசத் தெரியாது..பேசினாலும் புரியாது - ஆனாலும் புன்னகைத்தபடி இந்த உலகத்தை ஆள்கிறார்கள்...குழந்தைகள்!

Bala Murugan @Balamur97891372

தினங்களைக் கொண்டாடுவதை விடுத்து குழந்தைகளை எப்பொழுது கொண்டாடப் போகிறோம்?- கவிக்கோ.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

அஜித்தை வேகமாக நடக்க வைக்கலாம்... விஜய் ஜம்ப்பை Gif ஆக்கலாம்..! 6 யூடியூப் ட்ரிக்ஸ்

 

யூட்யூப் ட்ரிக்

“தினமும் பேசுற மொழி தமிழ். ஆனா தேவைப்படுறப்ப ஒரு வார்த்தை கிடைக்க மாட்டுது” - வசூல்ராஜாவில் கமல் இதைச் சொல்வார். அதேபோலதான் யூட்யூபும். தினமும் பார்க்கும் தளம் என்றாலும், அங்கு நாம் செய்யக்கூடிய பல விஷயங்களைப் பலர் அறிவதில்லை. இந்த 6 யூட்யூப் ட்ரிக்குகள் உங்களுக்குத் தெரியுமா எனப் பாருங்கள்.

 

1) GIF செய்யலாம்:

ஃபேஸ்புக் கமென்ட்டில் போடவும், வாட்ஸ்அப் க்ரூப்பில் தொல்லை செய்பவரைக் கலாய்க்கவும் GIF அதிகம் பயன்படும். நமக்குப் பிடித்த வீடியோவிலிருந்து GIF செய்வது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. பிடித்த வீடியோவை யூட்யூபில் தேடி எடுங்கள். Address barல், youtube என்ற வார்த்தைக்கு முன்பு gif சேருங்கள். (youtube.com/XXX - gifyoutube.com/XXX) 

இப்போது என்டர் தட்டினால் புதிய பக்கத்துக்குச் செல்லும். அங்கே அந்த வீடியோவிலிருந்து எந்த 15 நொடிகளையும் GIFஆக மாற்றிக்கொள்ளலாம். மேலும், அந்த வீடியோ மீது ஸ்டிக்கர்கள் சேர்க்கவும் முடியும்

2) வீடியோவின் வேகத்தை மாற்றலாம்:

சில வீடியோக்களை முழுவதுமாகப் பார்க்க நேரம் இருக்காது; அல்லது நமக்குப் பொறுமை இருக்காது. 15 நிமிட வீடியோவை 5 நிமிடத்தில் பார்க்க முடிந்தால் நல்லதுதானே. அதற்கு உதவும் செட்டிங் இது. Settings பட்டனை க்ளிக் செய்து Speed-ஐ செலக்ட் செய்யவும். பின், வீடியோவின் வேகத்தைக் கூட்டலாம் அல்லது ஹரி சார் படம் என்றால் குறைக்கலாம். 

3) குறிப்பிட்ட பகுதியை ஷேர் செய்தல்:

20 நிமிட வீடியோவாக அது இருக்கும். அதில 20 வினாடிகளை மட்டும் உங்கள் நண்பர்களுடன் பகிர நினைத்தால் என்ன செய்வது? அந்த வீடியோவின் URLன் கடைசியில் #t=  சேர்த்தால் போதும். முடிவில் எத்தனையாவது நிமிடம், எத்தனையாவது செகண்ட் என்பதைக் குறிப்பிடவும். உதாரணத்துக்கு, இரண்டு நிமிடம் 30வது செகண்டில் பார்க்க, “#t=02m30s”

4) ஆஃப்லைனில் வீடியோ பார்க்க:

சில இடங்களில் இணையம் நல்ல வேகத்தில் கிடைக்கும். மற்ற சில இடங்களில் சிக்னலே கிடைக்காது. உங்களுக்குப் பிடித்த வீடியோக்களை வைஃபை அல்லது வேகமான இணையம் கிடைக்கும் இடங்களில் டவுன்லோடு செய்துவைத்து, இணையம் இல்லாத இடங்களிலும் பார்த்து ரசிக்கலாம். இதில் டவுன்லோடு ஆகும் வீடியோ மொபைலில் சேவ் ஆகாது. யூட்யூப் ஆப்பிலே இருக்கும். இந்த ஆப்ஷன் மொபைலுக்கு மட்டும்.

இதற்கு வீடியோவின் கீழிருக்கும் Arrow பட்டனை க்ளிக் செய்தால் போதும்.

5) பிடித்த விளம்பரங்கள்:

யூட்யூபில் வரும் விளம்பரங்களிலிருந்து தப்பிக்க முடியாது. ஆனால், என்ன வகையான விளம்பரங்களை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யலாம். Google Ad Preferences செட்டிங்குக்குச் சென்று, அதில் நாம் பார்க்க விரும்பாத type of ads தேர்வு செய்யலாம்.

6) ரிப்பீட்டேய்:

 

சில பாடல்களோ வீடியோக்களோ நமக்கு மிகவும் பிடித்துப்போகும். மீண்டும் மீண்டும் ரிப்பீட் மோடில் போட்டுவிட்டு வேலைகளைப் பார்ப்போம். அந்த வசதி யூட்யூபிலும் உண்டு. வீடியோவின் மீது Right click செய்தால், நிறைய ஆப்ஷன்கள் வரும். அதில் Create loop செய்தால், அந்த வீடியோ ரிப்பீட் மோடில் ஓடும்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘இளைஞர்களின் தியாகம் எரியும் தீயைவிட உக்கிரமானது’
 

image_9f78a6ed32.jpgமணமாகாத தங்கள் சகோதரிகளின் திருமணங்களுக்காகவும் சகோதரர்களின் கல்வி, வயது முதிர்ந்த பெற்றோர்களின் பொருட்டு, கண்டம் விட்டுக் கண்டம் சென்று, விழிகள் உறங்காமல், கடும் வெய்யில், குளிருடன் போராடி உழைக்கும் இளைஞர்களின் தியாகம் எரியும் தீயைவிட உக்கிரமானது.

அகதி வாழ்வு ஆதாரம் அற்றது. பொருள்தேடப் புறப்படும் எல்லோருக்குமே சாதகமான பயன் உடன்படுவதில்லை. ஆயினும், விடாமுயற்சியுடன் தொடரும் முயற்சிகள் தோற்றுப்போனதில்லை.

மிக ஆழமாகச் சிந்தித்தால், வாழ மிகப் பொருத்தமான இடம், நாம் பிறந்த மண்தான். புல்லர்களின் எல்லையில்லாத தொல்லைகளினால் புரட்டிப்போடப்பட்ட மக்கள், புடம்போட்ட தங்கமாகத் திரும்பவேண்டும். விட்டுவிட்டு ஓடினால், தேசம் கைப்பற்றப்பட்டு விடும். மண் மறக்கடிக்கப்பட்டுவிடும். தாய் மண்ணில் பிறந்தவன் தாய் மண்ணில்த்தான் வாழ வேண்டும்.  

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று..

நவம்பர் – 15

 

1505 : போர்த்­துக்­கேய மாலு­மியும் நாடுகாண் பய­ணி­யு­மான லோரன்ஸ் டி அல்­மெய்டா, கொழும்பை வந்­த ­டைந்து ஐரோப்­பியக் குடி­யேற்­றத்தை ஆரம்­பித்தார்.

katunayaka1-300x250.jpg1889 : பிரேஸில் குடி­ய­ர­சா­கி­யது. மன்னர் பெட்ரோ இரா­ணுவப் புரட்­சி­ யினால் ஆட்­சி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்டார்.

1942 : இரண்டாம் உலகப் போர்: சொலமன் தீவு­களில் குவா­டல்­கனல் என்ற இடத்தில் ஜப்­பா­னியக் கடற்­ப­டை­யுடன் இடம்­பெற்ற மோதல்­களில் கூட்டுப் படைகள் வெற்றி பெற்­றன.

1943 : நாஸி ஜேர்­ம­னியில் அனைத்து ஜிப்­சி­க­ளையும் யூதர்­க­ளுக்கு இணை­யாக வதை­மு­காம்­க­ளுக்கு அனுப்ப உத்­த­ர­வி­டப்­பட்­டது.

1948 : 1948 ஓகஸ்ட் 20 ஆம் திகதி நாடா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை பிர­ஜா­வு­ரிமைச் சட்­ட­ மூலம் நவம்பர் 15 இல் அமு­லுக்கு வந்­தது. இதனால், சுமார் 7 லட்சம் மலை­யகத் தமி­ழர்கள் நாடற்­ற­வர்­க­ளா­யினர்.

1949 : இந்­தி­யாவில் நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்டே இரு­வரும் மகாத்மா காந்­தியைக் கொலை செய்த குற்­றஞ்­சாட்டில் தூக்­கி­லி­டப்­பட்­டனர்.

1966 : ஜெமினி 12 விண்­கலம் அத்­தி­லாந்திக் கடலில் பாது­காப்­பாக இறங்­கி­யது.

1969 : வோஷிங்டன் டிசி நகரில் சுமார் 500,000 பேர் வியட்நாம் போருக்­கெ­தி­ரான ஆர்ப்­பாட்ட ஊர் ­வ­லத்தில் பங்­கு­பற்­றினர்.

1970 : சோவியத் ஒன்­றி­யத்தின் லூனா தானூர்தி சந்­தி­ரனில் தரை ­யி­றங்­கி­யது.

1971 : இன்டெல் நிறு­வனம் உலகின் வர்த்­தக ரீதி­யி­லான முத­லா­ வது ஒற்றை சிப் மைக்ரோ புரொ­ஸ­ஸரை வெளி­யிட்­டது.

img_0911.jpg1978 : சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுடன் இந்­தோ­னே­ஷி­யா­வுக்கு சென்­று­கொண்­டி­ருந்த டிசி-8 ரக தனியார் பய­ணிகள் விமானம் கட்­டு­ நா­யக்க விமான நிலை­யத்தில் இறங்க முற்­பட்­ட­போது விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 183 பேர் பலி­யாயினர்.

1983 : வடக்கு சைப்­பிரஸ் துருக்­கியக் குடி­ய­ரசு நிறு­வப்­பட்­டது. துருக்கி மட்­டுமே இதனை அங்­கீ­க­ரித்­தது.

1988 : சோவியத் ஒன்­றி­யத்தின் ஆளற்ற புரான் விண்­ணோடம் தனது முத­லா­வதும் கடை­சி­யு­மான பய­ணத்தை ஆரம்­பித்­தது.

1988 : பலஸ்­தீன நாடு பாலஸ்­தீன தேசிய கவுன்­சி­லினால் பிர­க­ட­னப் ­ப­டுத்­தப்­பட்­டது.

1989 : கராச்­சியில் ஆரம்­ப­மான போட்டி மூலம் இந்­தி­யாவின் சச்சின் டெண்­டுல்­கரும் பாகிஸ்­தானின் வக்கார் யூனிஸும் டெஸ்ட் கிரிக்­கெட்­டுக்கு அறி­மு­க­மா­கினர்.

2002 : ஹு ஜிந்­தாவோ சீனக் கம்­யூனிஸ்ட் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ரானார்.

2000 : இந்­தி­யாவில் ஜார்க்கண்ட் தனி­மா­நி­ல­மாக உரு­வாக்­கப்­பட்­டது.

2007 : பங்­க­ளா­தேஷில் கிளம்­பிய பெரும் சூறா­வ­ளி­யினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

2013 : பொது­ந­ல­வாய தலை­வர்­களின் 23 ஆவது உச்­சி­மா­நாடு கொழும்பில் ஆரம்­ப­மா­கி­யது.

2014 : பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கெமரூன், யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்த முத­லா­வது வெளி­நாட்டு அரசாங்கத் தலைவரானார்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

தற்கொலை செய்துகொள்ளப் போனவர், ‘டாப் செல்லர்’ புத்தகத்தின் ஆசிரியரான கதை! #MotivationStory

 

உன்னை அறிந்தால்...

னிதர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத, நல்ல திருப்பங்கள் எப்போது வரும்? எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஒரு திருப்பமோ, வாய்ப்போ வரும்போது, அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சரியான பாதையில் நடந்தால், மேலும் மேலும் முன்னேறலாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அறியப்படாத மனிதராக இருந்தால்கூட, அரிய சாதனைகளை நிகழ்த்தி உலகையே திரும்பிப் பார்க்கவைக்கலாம். அப்படி ஒரு திருப்பம், ஒரு குடிகாரரின் வாழ்க்கையில் நிகழ்ந்தது. அது, அவர் வாழ்வையே மாற்றிப்போட்டது. தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருந்த அவர், உலகம் வியக்கும் விற்பனையில் சாதனை படைத்த புத்தகம் எழுதிய எழுத்தாளரான கதை இது. 

 

புத்தகம் - சுயமுன்னேற்ற நூல்

1923, டிசம்பர் 12. அமெரிக்காவில், மாசாசூசெட்ஸுக்கு அருகிலிருக்கும் நாட்டிக்கில் (Natick) பிறந்தார் ஓஜி மாண்டினோ (Og Mandino). பெற்றோர், `அகஸ்டின்’ என்று பெயர்வைத்தார்கள். பள்ளியில் படிக்கும் வயதிலேயே படிக்கும் ஆர்வம் மாண்டினோவுக்குக் கொஞ்சம் இருந்தது. அதிலும் பத்திரிகைகள் படிப்பது அவருக்குப் பிடித்திருந்தது. கையில் கிடைப்பதையெல்லாம் படிப்பார் மாண்டினோ. விளையாட்டு, அரசியல், கலை, இலக்கியம்... எனக் கலந்துகட்டிப் படித்ததில் பத்திரிகைத்துறை மேல் அவருக்கு ஆர்வம் அதிகமானது. பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, ஜர்னலிசம் படிப்பது என்று முடிவெடுத்திருந்தார். அதிலும், மிஸௌரி பல்கலைக்கழகம்தான் (University of Missouri) தனக்கு ஏற்றது என்று நினைத்திருந்தார். ஆனால், அது கைகூடவில்லை. அவர், கல்லூரியில் சேர்வதற்கு முன்பாக, அம்மா மாரடைப்பு வந்து இறந்துபோனார். அதோடு அவர் வாழ்க்கை திசைமாறிப்போனது. 

தனக்கு விருப்பமான பத்திரிகை, எழுத்து... இதற்கெல்லாம் கொஞ்சமும் தொடர்பில்லாத வேலையில் சேர்ந்தார் மாண்டினோ. அமெரிக்க விமானப்படையில் (United States Army Air Corps ) பணி. விமானத்திலிருந்து குண்டுவீசித் தாக்கும் (Bombardier) வேலை. மாண்டினோவுக்கு அந்த சாகசம் நிறைந்த வேலை கொஞ்சம் பிடித்துத்தான் இருந்தது. விமானத்தில் பறந்து, ஜெர்மானியப் படைகளின்மீது குண்டுமாரிப் பொழியும் வாய்ப்பெல்லாம் கிடைத்தது. போர் முடிந்த பிறகு, விமானப் படையிலிருந்து வெளியே வந்தார். பிறகு, ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனியில் வேலை. எந்தப் பிடிப்புமில்லாமல், உப்புச் சப்பில்லாமல் போய்க்கொண்டிருந்தது மாண்டினோவின் வாழ்க்கை. 

புத்தகம் - சக்சஸ் த்ரோ எ பாசிட்டிவ் மென்டல் ஆட்டிட்யூட்

எதற்காக வாழ்கிறோம் என்பது தெரியாதபோதுதான், ஒருவருக்கு தீய பழக்கங்களுக்கான வாசல் விரியத் திறக்கிறது. மாண்டினோ தன்னை யார் என்று அறிந்துகொள்ளாதது, அவரை மெள்ள மெள்ள ‘குடி’ என்கிற பள்ளத்தில் தலைகுப்புற விழச் செய்துகொண்டிருந்தது. விளையாட்டாக நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது என ஆரம்பித்த பழக்கம், நாளடைவில் தீவிரமானது. மொடாக்குடியரானார் மாண்டினோ. மாலையில் ஆரம்பித்த குடி, நள்ளிரவு தாண்டியும் நீண்டது. தள்ளாடித் தடுமாறி நடப்பது, ஏதாவது மதுபான விடுதியில் விழுந்துகிடப்பது, நடு ரோட்டில் தனியாக நின்றுகொண்டு தனக்குத் தானே சத்தம் போட்டுப் பேசுவது... இவையெல்லாம் அவர் அன்றாட நிகழ்வுகளில் சகஜமானவையாகிப் போயின. 

அது, அமெரிக்காவில் குளிர்காலம். அப்போது, க்ளீவ்லாண்டில் (Cleveland) இருந்தார் மாண்டினோ. அன்றைக்கு அதிகாலை 3 மணி வரை குடித்திருந்தார். எவ்வளவு குடித்திருந்தாலும், இன்னும் மது வேண்டும்போல வேட்கை. இலக்கில்லாமல் தெருவில் நடந்துகொண்டிருந்தார். என்னசெய்வது என்று அவருக்குப் புரியவில்லை. வீட்டுக்குப் போகவும் மனமில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதே தவிர, என்ன செய்வது என்று தெரியாத பித்துப்பிடித்த நிலை. அப்போதெல்லாம் அமெரிக்காவில், கடைகளில்  துப்பாக்கி விற்பது என்பது வெகு சாதாரணமான விஷயம். ஒரு கடைக்குள் நுழைந்து துப்பாக்கி ஒன்றை வாங்கினார்.  துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்தார். 

நூலகம் - புத்தகங்கள்

பனியோடு சேர்ந்து குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. எங்கோ ஓர் அடுக்குமாடி வீட்டிலிருந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. சாலையின் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு மரத்துக்குப் பின்னால் போனார். துப்பாக்கியை எடுத்தார். குண்டுகள் லோடு செய்யப்பட்டிருக்கின்றனவா என்று சரிபார்த்தார். துப்பாக்கியைத் தன் நெற்றிப்பொட்டில் வைத்துக்கொண்டார். இன்னும் ஒரு விநாடி.. ட்ரிக்கரை அழுத்தினால் போதும். தலை `டமார்.’ ஆனால், ட்ரிக்கரை அழுத்தவிடாமல் ஏதோ ஒன்று அவரைத் தடுத்தது. `சரி... தற்கொலையைக் கொஞ்சம் தள்ளிப்போடுவோம்’ என்று முடிவெடுத்தார். மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அவர் நடந்து நடந்து, ஒரு கட்டடத்துக்கு முன்னால் வந்து நின்றார். தெருவிளக்கு வெளிச்சத்தில் அது என்ன கட்டடம் என்று நிமிர்ந்து பார்த்தார். அது ஒரு நூலகம் என்று வாசலில் இருந்த போர்டு அறிவித்தது. அவருடைய நல்ல நேரம், அதிகாலையிலேயே நூலகம் திறந்திருந்தது. 

‘என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே...’ என்று உள்ளே நுழைந்தார். ஏதோ ஒரு புத்தக அடுக்கு... ஏதோ ஒரு புத்தகம். கையில் எடுத்தார். அங்கிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தார். படிக்கப் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அவருடைய போதை தெளிந்தது. அப்படியே புத்தகத்தில் ஆழ்ந்துபோனார். அது ஒரு சுயமுன்னேற்றப் புத்தகம். அதோடு, அவர் படிப்பதை விட்டுவிடவில்லை. அதேபோல இன்னொரு புத்தகத்தை எடுத்தார். அதுவும் விறுவிறுவென்று நகரும் புத்தகமாக இருந்தது. இரண்டையும் படித்தது அவருக்கு ஏதோ ஒரு நிறைவைத் தந்தது. அவருக்கான இலக்கு, தெரிய ஆரம்பித்தது. 

மாண்டினோவின் புத்தகம்

வீட்டுக்கு வந்தார். துப்பாக்கியை எடுத்து தூரப் போட்டார். மதியத்துக்குப் பிறகு மதுபான விடுதிக்குப் போகாமல், வேறொரு நூலகத்துக்குப் போனார். பல புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். அவருடைய குடிவெறி குறைந்துகொண்டே வந்தது. ஒரு கட்டத்தில், குடிப்பதின் மேல் ஆர்வமே இல்லாமல்போய்விட்டது. படிக்கும் பழக்கம் அதிகமாகிப்போனது. `என் வாழ்க்கையை மாற்றிய புத்தகம் `சக்சஸ் த்ரோ எ பாசிட்டிவ் மென்டல் ஆட்டிட்யூட்’ (Success Through a Positive Mental Attitude)’’ என்று பின்னாளில் ஒரு பத்திரிகைப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார் மாண்டினோ. பல நாள்கள் தொடர்ந்து படித்ததில், தானும் ஒரு புத்தகம் எழுதலாமே என்று தோன்ற, எழுத ஆரம்பித்தார். தன் அனுபவங்கள், அதுவரை சுயமுன்னேற்றப் புத்தகங்களில் யாரும் கடைபிடிக்காத புதிய வழிமுறைகள் எல்லாவற்றையும் கலந்துகட்டி எழுதினார். வெற்றி, அவரை மிக நெருக்கமாக வந்து அணைத்துக்கொண்டது. 

 

அவர் எழுதிய `கிரேட்டஸ்ட் சேல்ஸ்மேன் இன் தி வேர்ல்டு’ (The Greatest Salesman in the World) அமெரிக்காவில், அந்த வருடத்தின் அதிகமாக விற்பனையான (Best Seller) புத்தகம். மாண்டினோ எழுதிய புத்தகங்கள் இதுவரை ஐந்து கோடி பிரதிகளுக்கும் மேல் விற்று சாதனை புரிந்திருக்கின்றன. பிறகு, மேடைப் பேச்சாளர் ஆனார். ஆக, ஒரு மனிதரின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் எப்போது வேண்டுமானாலும் வரலாம், எந்த வடிவிலும் வரலாம். மாண்டினோவுக்கு புத்தக வடிவில் வந்தது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

எகிப்து - சூடான் இடையே, 800 சதுர மைல் இடத்துக்குத் தன்னை அரசனாக அறிவித்த இந்தியர்!

 
 

இந்தியாவின் இந்தூர் நகரைச் சேர்ந்த திக்‌ஷித் என்ற இளைஞர், எகிப்து மற்றும் சூடானுக்கு இடையில் இருக்கும் இடத்தைத் தனது நாடு எனவும், இதற்கு நான்தான் அரசன் எனவும் தெரிவித்துள்ளார். 

dixirt_10484.jpg

 

எகிப்து மற்றும் சூடானுக்கு இடையில் இருக்கும் வரண்ட பாலைவனப் பகுதி, பிர் டவில். 800 சதுர மைல் இருக்கும் இந்தப் பகுதிக்கு எகிப்து, சூடான் நாடுகள் சொந்தம் கொண்டாடவில்லை. இங்கு மனிதர்களும் வாழ்வதில்லை. ஆள் இல்லாத இந்தப் பகுதியை இந்திய இளைஞர் ஒருவர் தனது நாடாக அறிவித்துள்ளார்.

dixit2_10445.jpg

இதுகுறித்த ஃபேஸ்புக் பதிவில், “நான் சுயாஷ் திக்‌ஷித். எனது பெயரின் அடிப்படையில் இந்தப் பகுதிக்கு, ’கிங்டம் ஆஃப் திக்‌ஷித்’ என பெயரிட்டுள்ளேன். நான் என்னை இந்த நாட்டின் முதல் அரசனாக இந்த உலகுக்கு அறிவிக்கிறேன்” என்றார். இந்த பாலைவனப் பகுதியில் விதை ஒன்று போட்டு, அதற்கு தண்ணீர் விட்டு, இரண்டு இடங்களில் தனது கொடியையும் நட்டுள்ள அவர், இந்தப் பயணம்குறித்து விவரிக்கிறார். அதில், “எகிப்து ராணுவத்தின் அனுமதியுடன் இந்த பகுதிக்குச் சென்றேன். 6 மணி நேரம் பயணம்செய்து, பாலைவனத்தின் நடுப்பகுதியை அடைந்தேன். அங்கு, விதைகள் தூவி, அதற்குத் தண்ணீர் அளித்தேன். இதை எனது நாடாக அறிவித்து, என்னை முதல் அரசனாகவும் இந்த உலகிற்கு அறிவித்துக்கொண்டேன். 

dixit2_10118.jpg

 

இந்தப் பகுதிக்கு, ஏற்கெனவே சிலர் சொந்தம் கொண்டாடி உள்ளனர். ஆனால், இது இப்போது எனது நாடு (இங்கு விதை விதைத்ததைக் காரணமாகக் கூறியுள்ளார்). அவர்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்றால், போர் செய்து எடுத்துக்கொள்ளலாம் ” எனத் தெரிவித்துள்ளார். 
ஒரு நாட்டிற்கு அங்கீகாரம் அளிக்க ஐ.நா-வுக்கு என தனியாக சில வழிமுறைகள் உள்ளது. வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியில், மக்கள் நிரந்தரமாக வாழ வேண்டும் என இருக்கிறது. இந்தப் பகுதியை, இதற்கு முன்னர் வேறு சிலரும் சொந்தம் கொண்டாடியுள்ளனர். இவரது இந்தச் செயல், உலக அரங்கில் செம வைரல் ஆகியுள்ளது. 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

சிலந்திகளால் நீந்த முடியுமா

  • தொடங்கியவர்

அசத்தும் நெதர்லாந்து விவசாயம்!

 

 

ரோப்பாவில் இருக்கும் ஒரு சிறிய நாடு அது. அங்கிருக்கும் ஒரு சின்னக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அவர். மெட்ரோ ரயில் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் க்ரேன் கேபினில் அமர்ந்திருபவரைப் போல அந்த விவசாயியும் அமர்ந்திருக்கிறார். அவர் முன்னால் பரந்துவிரிந்த அவரது வயல். அந்த வயலில் ஆளில்லா டிராக்டர் ஒன்று உழுதுகொண்டிருக்கிறது. வயலின் மேல் இரண்டு ட்ரோன்கள் பறந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று மண்ணின் தன்மை, நீரின் அளவு, இன்னும் ஏராளமான தரவுகளை அந்த விவசாயிக்கு அனுப்புகிறது. அவர் அனைத்தையும் கவனமாகக் குறிப்பெடுத்துக்கொண்டிருக்கிறார். உருளைக்கிழங்கு சாகுபடி செய்திருக்கும் அந்த விவசாயி ஏக்கருக்கு 20 டன் மகசூல் எடுக்கிறார். உலக அளவில் உருளையின் சராசரி மகசூல் எவ்வளவு தெரியுமா? ஏக்கருக்கு 9 டன்தான். நெதர்லாந்தின் ஸ்கோர்கார்டைப் பார்த்தால் அவர்களை “விவசாயத்தில் கோலி” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

p40a.jpg

நெதர்லாந்தைப் பற்றிச் சில விஷயங்களைப் பார்த்துவிடுவோம். நெதர்லாந்து, ஐரோப்பியக் கண்டத்தில் இருக்கும் குட்டி நாடு. ஆனால், ஒரு சதுர மைலுக்கு 1300 மக்கள் வாழக்கூடிய மக்கள் நெருக்கடி அதிகமான நாடு. மொத்த நிலப்பரப்பில் 60 சதவிகிதம்  விவசாயம்தான்.

மேலோட்டமாகப் பார்த்தால் நெதர்லாந்தின் எந்த உணவுத் தயாரிப்பாளரும் பெரிய உற்பத்தியை எடுக்காததுபோலத் தெரியும். ஆனால், உலகின் பெரிய உணவு உற்பத்தி நாடு இது. ரூபாய் மதிப்பில், அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் உலகின் இரண்டாவது விவசாய ஏற்றுமதி செய்யும் நாடு. (அமெரிக்கா நெதர்லாந்தைவிட 270 மடங்கு அதிக நிலப்பரப்பைக் கொண்ட நாடு). உலகின் தக்காளி உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் நாடும் நெதர்லாந்துதான். இந்நாட்டில் மனிதர்கள் வசிக்கும் வீடுகளைவிடப் பசுமை வீடுகளின் எண்ணிக்கை அதிகம். நெதர்லாந்து விவசாயிகள் பின்பற்றப்படும் முக்கிய விவசாயக் கொள்கை ‘குறைந்த இடம், குறைவான செலவு, அதிக உணவு மற்றும் வருமானம்’ என்பதே. உலகில் 2050-ம் ஆண்டு மக்கள் தொகை 10 பில்லியினை எட்டிவிடும் என்பதை நெதர்லாந்து விவசாயிகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.அதற்குத் தங்களைத் தயார் செய்துகொண்டு வருகிறார்கள்.

p40b.jpg

இங்கு அதிகபட்சமாக 175 ஏக்கர் வரைக்கும்கூடப் பசுமைக்குடில் அமைக்கப்படுகிறது. தக்காளி, உருளையில் மட்டுமல்ல; மற்ற காய்கறிகள் மகசூலிலும் மெர்சல் காட்டுகிறார்கள். ஒரு சதுர மைல் அளவில் உலகிலேயே அதிகமாகப் பச்சை மிளகாயும், மிளகுப் பொருள்களையும் விளைவித்து அதிக மகசூலை எடுக்கிறார்கள். அதற்கு இவர்களின் தொழில்நுட்பம் முக்கியக் காரணம்.

நெதர்லாந்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர்தான் தொழில்நுட்பம் வளர ஆரம்பித்தது. அதன் பின்னர், தொழில்நுட்பங்கள் நிலையானதா எனச் சரிபார்த்தே விவசாயிகள் பயன்படுத்த ஆரம்பித்தனர். மண்ணின் காரத் தன்மை, நீரின் உப்புத் தன்மை ஆகியவற்றைச் சரிபார்த்தல், பயிருக்குக் கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்துகள், பயிரின் வளர்ச்சியைச் சரிபார்த்தல் எனப் பல வேலைகளையும் விவசாயியே பார்த்துவிடுகிறார். ஒருமுறை உபயோகிக்கப்பட்ட தொழில்நுட்பம் நிலையான விவசாயத்திற்கு உதவுமா எனச் சரிபார்த்த பின்னரே ஒரு விவசாயி அதைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்.

p40c.jpg

நெதர்லாந்துப் பண்ணைகளில் வெர்ட்டிகல் கார்டன் முறையில் விவசாயம் செய்யப்படுகிறது. இதன்மூலம் விவசாயம் செய்யும்போது தண்ணீர் செலவு 90 சதவிகிதம் குறைய வாய்ப்புண்டு. பசுமைக் குடில்களில் ரசாயன உரங்களை உபயோகிப்பதையும் பெருமளவில் குறைத்துக் கொண்டார்கள்.

எல்.இ.டி விளக்கைப் பயன்படுத்தித் தக்காளி விளைவிக்கும் தொழில்நுட்பம் ஒன்றை அவர்கள் பின்பற்றுகிறார்கள். அது ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறது என்றாலும், நல்ல மகசூல் தருகிறது. மேலும், குடில்களைச் சுற்றிலும் தேனீப்பெட்டிகள் வைக்கப்பட்டு மகரந்தச் சேர்க்கையை அதிகப்படுத்தி மகசூல் அதிகமாகப் பெறும் தொழில்நுட்பமும் பின்பற்றப்பட்டு வருகிறது.

p40d.jpg

ஒவ்வொரு பண்ணைக்கும் தேவையான உரம் மற்றும் மின்சாரம் ஆகியவை உள்ளேயே இருக்கும். அதேபோல, உற்பத்தி செய்யும் பொருள்களை அவர்களே நேரடியாக விற்பனையும் செய்து வருகிறார்கள். பசுமைக்குடில் அமைத்து விவசாயம் செய்யும்போது, குடிலுக்கு உள்ளே ஒரே சீரான வெப்பநிலையைத் தக்கவைக்க முடியும். இதன்மூலம் விவசாயத்தை லாபகரமானதாகச் செய்யலாம்.

2016-ம் ஆண்டு நிலவரப்படி, விதை உற்பத்தியிலும் நெதர்லாந்துதான் முன்னிலை வகிக்கிறது. அதேபோல இங்கு விற்கப்படும் விதைகள் அனைத்தும் இயல்பாகவே நோய் எதிர்ப்புத்தன்மையைத் தாங்கி நிற்கின்றன.

விவசாயத்தையே நம்பியிருக்கும் இந்தியா, நெதர்லாந்தைக் கண்டு பயப்படத் தேவையில்லை.  கடந்த மூன்று ஆண்டுகளில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்திருக்கிறார்கள். விவசாயத்தில் நெதர்லாந்து செய்திருக்கும் சாதனைகள் ஏராளம்தான். ஆனால், இந்தச் சாதனையை அவர்களால் எப்போதும் முறியடிக்க முடியாது. அதற்கு நெதர்லாந்து அரசு உதவியும் செய்யாது.

https://www.vikatan.com

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

அபுதாபியின் புதிய கலை அருங்காட்சியகம்!

130 கோடி டாலர் செலவில் கட்டப்பட்ட அபுதாபியிலுள்ள புதிய கலை அருங்காட்சியகம் பற்றிய காணொளி.

  • தொடங்கியவர்

இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்! கொண்டாடும் கூகுள்

 

வழக்கறிஞர்

ந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞரான கோர்னீலியா சொராப்ஜியின் 151 ஆவது பிறந்தநாள் இன்று. இவர்தான் முதன் முதலில் பாம்பே பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்த பெண். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் சட்டம் படித்த பெண். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் பட்டம் படித்த இந்தியப் பெண். இந்தியா மற்றும் பிரிட்டனில் முதன் முதலில் சட்டப் பயிற்சி பெற்ற பெண். இப்படிப் பல ‘முதல்’ சாதனைகளைப் படைத்தவர்தான் கோர்னீலியா.

 
 

மகாராஷ்டிராவில் நாசிக் என்கிற பகுதியில் ஏழ்மையான குடும்பத்தில், ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்த கோர்னீலியா, ஆங்கில தம்பதியால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர். இந்தியாவில் பட்டப்படிப்பு படித்த பின்னர், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழத்தில் சட்டம் பயின்றார். கோர்னீலியாவின் 151-வது பிறந்த நாளை டூடுள் மூலம் கொண்டாடுகிறது கூகுள்.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.