Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!

 

தமிழ் சினிமாவுக்கு 36 வயதினிலே படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஜோதிகா. கதைக்கும் தனக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரை சமீபகாலமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

 

சமீபத்தில் இயக்குநர் பிரம்மாவின் 'மகளிர் மட்டும்' படத்தில் நடித்தார். இதற்குப் பிறகு, ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் விரைவில் வெளிவரப் போகும் திரைப்படம் 'நாச்சியார்'. ஜோதிகா போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குற்றவாளியாக நடித்திருக்கிறார். பாலா இயக்கும் படத்தில் ஜோதிகாவும் ஜி.வி.பிரகாஷூம் நடித்திருப்பதாலே ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. மேலும், படம் பற்றிய போஸ்டரும் வெளியாகி வைரலான நிலையில் தற்போது 'நாச்சியார்' படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. படத்தின் டீசரை நடிகரும் ஜோதிகாவின் கணவருமான சூர்யா இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

செல்லப்பிராணிக்கு பயிற்சி அளிக்கும் டோனி - வைரலாகும் வீடியோ

 

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் செல்லப்பிராணியான நாய்க்கு பயிற்சி அளிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

செல்லப்பிராணிக்கு பயிற்சி அளிக்கும் டோனி - வைரலாகும் வீடியோ
 
 
ராஞ்சி:
 
இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மகேந்திர சிங் டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அதனால் அவர் தற்போது தனது சொந்த வேலைகளை பார்த்து வருகிறார். சமீபத்தில் துபாயில் தனது முதல் கிரிக்கெட் அகாடமியை தொடங்கினார்.
 
டோனி ராஞ்சியில் இருக்கும் தனது வீட்டில் இப்போது நேரம் செலவழித்து வருகிறார். அவர் தனது வீட்டில் மூன்று நாய்களை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அவற்றுடன் அவர் விளையாடும் வீடியோக்கள் அவ்வப்போது இணையதளத்தில் பதிவிடப்பட்டு வைரலாக பரவியுள்ளது.
 
இந்நிலையில், இப்போது அவர் தனது செல்லப்பிராணி நாயுடன் விளையாடும் வீடியோ தற்போது இணையதளத்தில் பதிவிடப்பட்டு வைரலாக பரவி வருகிறது.
 
அந்த வீடியோவில் அவர் தனது நாயை தடைகளை தாண்டி குதிக்கவும், ஒரு வளையத்திற்குள் நுழைந்து செல்லவும் செய்துள்ளார். அவர் கூறுவது போலவே அவரது செல்லப்பிராணியும் செயல்படுகிறது. அவரும் நாயுடன் அருகில் ஓடி வரும் இந்த வீடியோ இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

ஆழ்கடலில் ஹேமர்ஹெட் வகை சுறாக்களின் 360 டிகிரி காணொளி

பிபிசியின் புளூ பிளானட் தொடருக்காக எடுத்த பிரத்யேக 360 டிகிரி காணொளி.
  • தொடங்கியவர்
‘பேதம் தீரவில்லை; வளர்ந்த வண்ணம் உள்ளது’
 

image_f5885c5005.jpgஎன் இளமைக் காலத்துத் தோழியே! நான் இன்றைக்கும் நீ வசித்த வீட்டைத் தாண்டும்போது, உன் நினைவுகள் என்னை ஸ்பரிசித்த வண்ணம் இருக்கும். 

நான் சின்னஞ்சிறுவனாகத் தலைநகரில் இருந்தபோது, பக்கத்து வீட்டில் ஒரு மலையாளக் குடும்பம் வாழ்ந்தது. இவர்களின் இனம், மதம், மொழி எல்லாமே எங்களுக்கு அந்நியமானது. ரொம்பவும் ஏழ்மையான குடும்பம். அதில் பத்துப்பேர்கள். இவர்களில் இரண்டாவது பெண் எனக்குத் தோழியானாள். மிகவும் அழகான இவள், என்னைவிட நான்கு வயது கூடியவள். 

‘சின்னத்தம்பி’ என்று என்னைப் பாசத்துடன் அழைப்பாள். என்னை அணைத்தபடி, தான் செல்லும் இடம் எல்லாம் அழைத்துச் செல்வாள். அப்போது எனக்கு மூன்று, நான்கு வயதிருக்கும் என நினைக்கிறேன். அந்தக் குடும்பமே அன்பு மயமானது. பெற்றோர் மலையாளத்திலும் பிள்ளைகள் தமிழிலும் பேசுவார்கள். 

1958 ஆம் ஆண்டு பாரிய இனக்கலவரம் நாட்டை உலுக்கியது. இன, மத, மொழி, பேதம் பெரும்பான்மையினரிடம் ஐக்கியமானது. நாங்கள் கப்பலில் ஏற்றப்பட்டு, பருத்தித்துறையில் இறக்கப்பட்டோம். அதன்பிறகு அவர்களை நான் சந்திக்கவில்லை. இன்னமும் இங்கு பேதம் தீரவேயில்லை; வளர்ந்த வண்ணமே உள்ளது. 

  • தொடங்கியவர்

“கால் இல்லைனா நடக்க முடியாதா..?! நான் மலையே ஏறுவேன்!” சாதனைக் கதை #MotivationStory

 
 

ஹக் ஹெர் தன்னம்பிக்கை கதை

சிலர் அப்படித்தான். ஒன்றை அடையவேண்டுமென்று ஆசைப்பட்டுவிட்டால், எதை இழந்தாலும் தளர மாட்டார்கள். உடலில் உயிர் என்ற ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும் வரை தாங்கள் விரும்பியதை அடையப் போராடுவார்கள். ஒருவிதத்தில் `சாதனை புரிதல்’ என்பதுகூட போதைதான்… ஆரோக்கியமான போதை. அது, குடும்பம், உறவுகள், வாழ்க்கை, சமூகம் அனைத்தையும் புறங்கையால் ஒதுக்கிவிடும் அளவுக்கு ஒரு மனிதனைத் தயார்ப்படுத்திவிடும். உண்மையில், சாதனை புரிவதால்தான் அவர்களை மகத்தான மனிதர்களாக இந்த உலகம் பார்க்கிறது. வரலாறு, அவர்களுக்கென தனிப் பக்கத்தை ஒதுக்கி சீராட்டி, பாராட்டி, உச்சாணிக்கொம்பில் ஏற்றிவைத்து மகிழ்ந்து, கொண்டாடுகிறது. எதை எதையோ இழந்து… ஏன்… எல்லாவற்றையும் இழந்து சாதனைப் படிகளில் ஏறியவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர் ஹக் ஹெர் (Hugh Herr). மலையேற்ற வீரரான ஹெர் பறிகொடுத்தது சாதாரணமான ஒன்றல்ல… அதற்குப் பிறகும் அவர் நிகழ்த்திய சாகசங்கள் யாராலும் நம்ப முடியாதவை; நம்மை மலைக்கவைப்பவை. யார் இந்த ஹெர்… பார்க்கலாமா?

 

முயற்சி

அமெரிக்கா, பென்சில்வேனியாவுக்கு அருகேயிருக்கும் லேன்கேஸ்டரில் (Lancaster) 1964-ம் ஆண்டு பிறந்தவர் ஹக் ஹெர். சின்ன வயதிலிருந்தே ஹெர்-ருக்கு சாகசத்தில் ஆர்வம். குறிப்பாக, மலையேறுவதில் கட்டுக்கடங்காத ஆர்வம். அம்மாவும் அப்பாவும் ஊக்கம் கொடுக்க, மலையேற்றம் பழகினார். வீட்டுச் சுவரில் ஏணியை வைத்து ஏறுவதுபோல, படிக்கட்டுகளில் ஏறி பல மாடிகளைக் கடப்பதுபோல கரடுமுரடான மலையில் சர்வ சாதாரணமாக மலைகளில் ஏறினார் ஹெர். அமெரிக்காவில் மலையேற்றக் குழுவினர் நிறையப் பேர் இருக்கிறார்கள். அந்தக் குழுக்கள் ஒன்றில் இணைந்து முறையாக மலையேற்றம் பழகினார். ஏழு வயதிலேயே கனடாவில் இருக்கும் `மவுன்ட் டெம்பிள்’- மலையின் (Mount Temple) 11,627 அடி உயரத்தில் ஏறி, `யார் இந்தப் பையன்’ என்று அமெரிக்காவையே திரும்பிப் பார்க்கவைத்தார். 17 வயதில், `அமெரிக்காவில் இருக்கும் மிகச் சிறந்த மலையேற்ற வீரர்களில் ஒருவர்’ என்ற புகழையும் பெற்றார்.

காலம் போட்டுவைத்திருக்கும் கணக்கு விசித்திரமானது. அது, யாரை என்ன செய்யக் காத்திருக்கிறது என்பதை மனிதர்கள் அறிய மாட்டார்கள். பல உயரமான மலைகளில் ஏறி, சாதனை செய்யத் துடிக்கிற ஓர் இளைஞர் ஹெர். அமெரிக்காவில் எங்கெல்லாம் மலைகள் இருக்கின்றனவோ, அத்தனையையும் ஒருகை பார்க்க வேண்டும், அத்தனை உயரங்களையும் ஏறிக் கடந்து, யாரும் இதுவரை செய்யாத சாதனையைச் செய்து காட்ட வேண்டும் என்கிற லட்சியம் அவரிடம் ஊறியிருந்தது. அமெரிக்கா மட்டுமல்ல, ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா… என மலைகள் இருக்கும் கண்டங்களுக்கு எல்லாம் செல்ல வேண்டும்… வெயில், பனி, மழை எந்தக் காலமாக இருந்தாலும் கவலையில்லை, விதவிதமான மலைகளில் ஏறி, பல உயரங்களைத் தொட வேண்டும் என்கிற வேட்கை ஹெர்-ருக்கு சிறு வயதிலேயே விதைபோல ஆழமாக மனதில் விழுந்திருந்தது. ஆனால், அந்த ஆசை நிறைவேறுவது அத்தனை சுலபமானதாக இல்லை.

மலை

அது, 1982-ம் ஆண்டு, ஜனவரி மாதம். ஹெர், தன் நண்பர் ஜெஃப் பேட்ஸெர் (Jeff Batzer) என்பவருடன் அடுத்த இலக்கை அடையும் பயணத்தைத் தொடங்கியிருந்தார். அமெரிக்காவின், நியூ ஹாம்ப்ஷையரில் (New Hampshire) இருக்கும் வாஷிங்டன் மலையில் ஏறுவது அவர் திட்டம். காலநிலை, தட்பவெப்பம் அத்தனையையும் கணக்குப்போட்டுத்தான் பயணத்தைத் தொடங்கினார்கள். ஆனால், எதிர்பாராமல் மாட்டிக்கொண்டார்கள். மலையேற்றம் வெற்றிகரமாக முடிந்தது. ஆனால், அவர்கள் திரும்பி வந்த பாதை, கடுமையானது. பனிப் பொழிவு, வழியெங்கும் ஐஸ் கட்டிகள். போதாக்குறைக்குப் பனிப்புயல். மேற்கொண்டு ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியாதபடி, ஓரிடத்தில் (Great Gulf) வசமாக சிக்கிக்கொண்டார்கள். குளிரென்றால் ஆளைக் கொல்லும் குளிர். ஆடைகள், அதற்கு மேல் அணிந்திருந்த கோட், மேலே ஸ்வெட்டர், அதற்கும் மேலே ஜெர்கின்… இத்தனையையும் ஊடுருவி எலும்பைத் தாக்கும் குளிர். மைனஸ் 29 டிகிரி சென்டிகிரேடு தட்பவெப்பநிலை. உடலும் உள்ளமும் ஒடுங்கிப்போய் அப்படியே இருந்த இடத்தைவிட்டு நகர முடியாமல் இயற்கையின் கைதிகளானார்கள் இருவரும். ஒரு நாள் அல்ல… மூன்று நாள்கள் நகர முடியாமல் அங்கேயே, இருந்த நிலையில் அப்படியே கிடந்தார்கள்.

Hugh Herr

அவர்களைக் காப்பாற்றும் குழுவினர் வந்தபோது ஹெர்-ருக்கும் பேட்ஸெருக்கும் உயிர் போகவில்லை; ஆனால், இருவருமே குற்றுயிரும் குலையுயிரும் என்கிற நிலையில் இருந்தார்கள். விறைத்துப்போய், கிட்டத்தட்ட சடலங்கள்போல் இருந்தார்கள். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அந்தப் பனி விபத்தில் ஹெர்-ருக்கு ஏற்பட்டது பேரிழப்பு. `அவருடைய முழங்காலுக்குக் கீழ் இருக்கும் பகுதியை வெட்டியெடுக்க வேண்டும். இல்லயென்றால் பிழைக்க மாட்டார்’ என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள்.

ஒரு சாதாரண ஜலதோஷத்தைக்கூடத் தாங்க முடியாத மனிதர்களும் இருக்கிறார்கள்; மாரடைப்பே வந்தாலும் கலங்காத மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களில் ஹெர், இரண்டாவது ரகம். விதவிதமான மலைகளை ஏறிக் கடக்க வேண்டும் என்ற தன் லட்சியத்துக்கு எது அவசியமோ, அந்தக் கால்களையே இழந்திருந்தார் ஹெர். ஆனால், அவர் மனம் கலங்கவில்லை. அறுவைசிகிச்சை முடிந்து, புண்கள் ஆறியதும் ஆற, அமர யோசித்தார். `கால்கள் கிடக்கட்டும். மலையேற வேண்டும், அது முக்கியம். அதற்கு என்ன செய்வது?’ என்பதுதான் அவருடைய யோசனையாக இருந்தது. `மலை ஏறணுமா… சான்ஸே இல்லை. அதை மறந்துடு’ என்றார்கள் மருத்துவர்கள்.

மலைப்பயணம்

ஹெர் மலையேற்ற வீரர் மட்டும் கிடையாது. ஒரு இன்ஜினீயர்; உயிரி இயற்பியலாளர் (Biophysicist). நம்ப ஊர் ஐ.ஐ.டி மாதிரி அமெரிக்காவின் முக்கியமான கல்வி நிறுவனம் எம்.ஐ.டி (Massachusetts Institute of Technology). அதில் ஹெர், ஆய்வு மாணவர். அவர் முக்கியமாக ஈடுபட்டிருந்தது, மனித உறுப்புகளுக்கு நிகரான செயற்கை உறுப்பு ஆராய்ச்சியில். அது, கடைசியில் அவருக்கே தேவைப்படும், உதவும் என அவர் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. தன் முழங்கால்களுக்குக் கீழே ஆபரேஷன் செய்யப்பட்ட பகுதிகளைச் செயற்கை முறையில் தானே வடிவமைத்தார் ஹெர். பாறை விளிம்பில் நிற்பதற்கு விரல்கள் அவசியம். அதற்கேற்றபடி பாதப் பகுதிகளை வடிவமைத்தார். பனிப் பாறைகளில் ஏறுவதற்கு வசதியாக கால் பகுதியை உருவாக்கினார். அந்தச் செயற்கைக் கால்கள், தன் உருவத்தை விகாரமாகக் காட்டாதபடி மாற்றியமைத்துக்கொண்டார். மறுபடி செயற்கைக் கால்களின் உதவியுடன் மலையேற ஆரம்பித்தார் ஹெர். இப்போது விபத்துக்கு முன்னால்தான் ஏறிய உயரங்களைவிட அதிகமாக ஏறி சாதனைபுரிந்து, உலகையே வியக்கவைத்தார்.

கால்களை இழந்திருந்தாலும் அதை ஓர் இழப்பாகவே நினைக்கவில்லை ஹெர். அதனால்தான் அவருக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்தது. பேட்ரிஸியா எல்லிஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இரு மகள்கள். செயற்கை உறுப்புகளுக்கான வடிவமைப்பில் ஹெர்ரின் கண்டுபிடிப்பு மருத்துவ அறிவியலில் முக்கியமான ஒன்று. அது தொடர்பாக பல ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கிறார் ஹெர். கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை, பல விருதுகள் பெற்றார். அவருடைய கண்டுபிடிப்புகள் `டைம்’ பத்திரிகையின் `டாப் 10 கண்டுபிடிப்புகள்’ பகுதியில் இடம்பெற்றன. ஹெர்-ன் வாழ்க்கைக் கதை புத்தகமாகவும், `டிஸ்கவரி’, `நேஷனல் ஜியாக்ரபி’ சேனல்களில் டாக்குமென்டரியாகவும் வெளிவந்திருக்கிறது.

 

எதை இழந்தாலும், கலக்கம் அடையாமல் இருந்தால் விரும்பியதை அடையலாம், சாதித்துக் காட்டலாம் என்பதற்கு வாழும் உதாரணம் ஹெர்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

நவம்பர் – 16

 

384 : போலந்தின் அர­சி­யாக 10 வயது சிறுமி  “ஜாட்­வீகா”  முடி­சூ­டினாள்.

1849 : அர­சுக்கு எதி­ராகப் புரட்சி செய்­த­தாகக் குற்றம் சாட்டி ரஷ்ய எழுத்­தா­ள­ரான பியோதர் தஸ்­த­யெவ்ஸ்­கிக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஆனாலும் தண்­டனை பின்னர் கடைசி நேரத்தில் கடூ­ழிய சிறைத்­தண்­ட­னை­யாக மாற்­றப்­பட்­டது.

varalaru-Benazir-Bhutto-291x400.jpg1885 : கன­டாவின் மேட்டிஸ் பழங்­குடித் தலைவர் லூயிஸ் ரியெல் தூக்­கி­லி­டப்­பட்டார்.

1933 : ஐக்­கிய அமெ­ரிக்­காவும் சோவியத் ஒன்­றி­யமும் இரா­ஜ­தந்­திர உறவை ஆரம்­பித்­தன.

1943 : ஜேர்­ம­னியின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த நோர்­வேயின் நீர் மின்­சாரக் கட்­ட­மைப்­புகள் மீது அமெ­ரிக்க விமா­னங்கள் குண்டு வீசி தாக்­குதல் நடத்­தின.

1944 : இரண்டாம் உலகப் போர்: ஜேர்­ம­னியின் டியூரென் நகரம் கூட்டுப் படை­களின் குண்டுத் தாக்­கு­தலில் முற்­றாக அழிந்­தது.

1945 : யுனெஸ்கோ நிறு­வனம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1965 : சோவி­யத்தின் வெனேரா 3 விண்­கலம் வெள்ளிக் கோளுக்கு செலுத்­தப்­பட்­டது. வேறொரு கோளின் தரையை அடைந்த முத­லா­வது விண்­கலம் இது­வாகும்.

1973 : நாசா மூன்று விண்­வெளி வீரர்­க­ளுடன் ஸ்கைலாப் விண்­க­லத்தை 484- நாள் திட்­டத்தில் விண்­ணுக்கு அனுப்­பி­யது.

1988 : சுமார் 10 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் பாகிஸ்­தானில் நடை­பெற்ற தேர்­தல்­களில் பெனாஸிர் பூட்டோ பிர­த­ம­ராகத் தெரி­வு­செய்­யப்­பட்டார்.

2002 : சார்ஸ் நோய் முதன் முதலில் சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில் பதியப்
பட்டது.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

சானியா மிர்சா, சிந்து வரிசையில் தற்போது இந்தியர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருப்பவர் பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால். ஹரியானாவைச் சேர்ந்த இவர், ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் சீனாவை வென்று 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஆசியக் கோப்பையைப் பெற்றுத் தந்தவர். இப்போது இவரது கவனமெல்லாம் அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வென்றெடுப்பதில் மட்டுமே. `என்னதான் நாட்டிற்குப் பெருமை தேடித் தந்தாலும், ஆண்கள் ஹாக்கி அணியோடு ஒப்பிடுகையில், மத்திய அரசு வேலை ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது சோர்வடையச் செய்கிறது’ என்ற  மனக்குறை இவருக்கு. தங்கல், சக் தே இந்தியா படங்கள் பார்த்தா மட்டும் போதாது ஆபீஸர்ஸ்!

p36a.jpg

மிழில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் அப்செட்டில் இருக்கிறார் தெலுங்குதேசத்தின் தளபதி மகேஷ்பாபு. `சென்னை நான் பிறந்து வளர்ந்த ஊர். இங்க ஒரு ஹிட் கொடுத்தே ஆகணும்’ என  எல்லா இயக்குநர்களிடமும் பைலிங்குவல் ஸ்க்ரிப்ட் கேட்டுக்கொண்டிருக்கிறார் பிரின்ஸ் பாபு! போக்கிரி பார்ட் 2 பண்ணுங்கணா!

p36b.jpg

மி ஜாக்ஸனை இனி தமிழில் பார்க்க முடியாது. 2.0 படத்துக்குப் பிறகு இந்தியில் வெளியான `குயின்' படத்தின் தமிழ் ரீ மேக்கில் நடிப்பதாக இருந்தார் எமி. ஆனால், சூப்பர்கேர்ள் டிவி சீரியலில் நடிக்கவிருப்பதால் இனி தமிழ்ப்படங்களில் நடிக்கமுடியாது என விலகியிருக்கிறார். இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் காஜல் நடிக்க, எமிக்குப் பதிலாக ஸ்வீடன் நடிகை எல்லி நடிக்கவிருக்கிறார். வி மிஸ் யூ எமி!

ஹீர் ஷா, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் அடுத்த சென்சேஷன். பங்கேற்ற முதல் போட்டியிலேயே டபுள் செஞ்சுரி. 256 ரன், நாட் அவுட்.  இது அறிமுக முதல்தரப் போட்டியில் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். அந்த 18 வயது இளைஞனின் ஓட்டம் அதோடு நிற்கவில்லை. மூன்றாவது போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சதம். நான்காவது போட்டியில் முச்சதம். முறையான உள்கட்டமைப்பு இல்லாத இடத்திலிருந்து சத்தமில்லாமல் கிளம்பியுள்ளது ஓர் இளம்புயல். விரைவில், ஒரு டி-20 லீக்கில் பஹீர் ஷா கோடிகளில் ஏலம் போகலாம்! சூப்பரப்பு!

p36c.jpg

தொல் திருமாவளவன் விரைவில் டாக்டர் திருமாவளவன். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படித்துவருகிறார் திருமா. நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் மதமாற்றம்செய்யப்பட்டது குறித்த ஆய்வை மேற்கொண்டுவருகிறார். ஆய்வை முடித்து, வரும் ஜனவரி மாதம் டாக்டர் பட்டம் பெறுகிறார் திருமாவளவன். வாழ்த்துகள் முனைவரே!

 ரஞ்சி டிராபியில் 500 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளது மும்பை அணி. இதைக் கொண்டாடும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் சமீபத்தில் ஒரு விழா நடந்தது. இதில், சச்சின், கவாஸ்கர் உள்ளிட்ட ஜாம்பவான்கள் பங்கேற்று, மும்பை அணியின் புகழ் பாடினர்.  1934-ம் ஆண்டிலிருந்து நடந்துவரும் ரஞ்சி டிராபி தொடரின், சக்சஸ்ஃபுல் டீம் மும்பைதான். இதுவரை 46 முறை ஃபைனலுக்கு முன்னேறி 41 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ரோஹித் ஷர்மா என ஒவ்வொரு தலைமுறைக்கும்  மட்டுமல்லாது ஒவ்வொரு சீசனுக்கும் நட்சத்திர வீரர்களை இறக்கிக்கொண்டிருக்கிறது மும்பை. சலாம் மும்பை!

p36d.jpg

`தென்மேற்குப் பருவக்காற்று’, `பரதேசி’, `ஜோக்கர்’ எனத் தான் ஒளிப்பதிவு செய்யும் படங்களிலேயே வெரைட்டி காட்டி அசத்தும் ஒளிப்பதிவாளர் செழியன், இயக்குநர் அவதாரமெடுத்திருக்கிறார். `To-Let’ என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார்.   இப்படம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள இன்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவலில் இந்தியப் படங்கள் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. `சென்னையில் எல்லோரும் அனுபவித்த ஒரு வலிதான் கதை!’ எனச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்-ஒளிப்பதிவாளர் செழியன். விருது பார்சேல்.

சென்ற வாரம் விமானச் சேவை நிறுவனங்களுக்கு துக்க வாரம். இண்டிகோ ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் ஒரு பிரச்னை. அதில் வாடிக்கையாளரின் கை நீள, பதிலுக்கு ஊழியரும் அடித்துவிட்டார். இதை சீனியர் ஊழியர் படம்பிடிக்க, “சமாதானம் பண்ண வேண்டிய நீ வீடியோ எடுத்துட்டிருந்தியா?” என அவரை 15 நாள் சஸ்பெண்ட் செய்தது இண்டிகோ. 15 நாள்கள் கழித்தும் பணியில் சேர அனுமதிக்காததால் அந்த வீடியோவை நெட்டில் ரிலீஸ் செய்துவிட்டார் ஊழியர். இண்டிகோவுக்கு இதனால் சமூக வலைதளத்தில் பெரிய டேமேஜ். அடுத்த நாள் ஏர் இந்தியா “unBEATable service’, ``நன்றி சொல்லத்தான் நாங்கள் கைகளை உயர்த்துவோம்” என்றெல்லாம் கவுன்ட்டர் கொடுக்க, வைரல் ஆனது ஏர் இந்தியா. அடிச்சிக்காதீங்கப்பா.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கழிவறைகளை இயங்கச் செய்யும் மனிதக் கழிவின் ஆற்றல்

இந்திய கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 50 கோடிக்கும் அதிகமானவர்கள் கழிவறைகளைப் பயன்படுத்துவதில்லை.

இதனால் சுகாராதார பிரச்சனைகள், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தயங்குவது பெண்கள் இயற்கை உபாதைகளுக்காக ஒதுக்குப்புறங்களுக்கு செல்லும்போது தாக்கப்படுவது அல்லது தாக்கப்படுலாம் என்ற அச்சம் போன்ற சமூக பிரச்சனைகள் ஏற்படுகிறது. மனிதக் கழிவில் இருந்து கிடைக்கும் ஆற்றல் மூலம் பெறப்படும் நீரை வைத்து பணம் ஈட்டி அதில் கிராமப்புறங்களில் கழிவறைகளை இயக்கும் ஸ்ரீ சமூகத் தொழில் நிறுவனம் பற்றிய காணொளி. உலக நடப்புக்கள், உள்ளூர் செய்திகள்... புதிய கோணத்தில் அறிந்துகொள்ள வாருங்கள் பிபிசி தமிழ்

  • தொடங்கியவர்

ஜப்பான் முட்டை... தென் கொரிய சாஸ்... பிலிப்பைன்ஸ் ஐஸ்க்ரீம்... அரசியல் பேசும் ட்ரம்ப்பின் ஆசிய மெனு!

 

ட்ரம்ப்

ஒருவர் நின்றால், நடந்தால், பேசினால், கையெழுத்துப் போட்டால் எல்லாமே செய்தியாகி வைரலாகிறது என்றால், அவரது சாப்பாடு மெனு மட்டும் விதிவிலக்கா என்ன? ஆம்... ஆசியப் பயணத்தில் ட்ரம்ப் சாப்பிட்ட உணவு வகைகளும் வைரலாகியுள்ளது. 

 

ஆசிய நாடுகள் பயணத்தில் ட்ரம்ப் சாப்பிட்ட 360 வருட கொரிய சோயா சாஸ் அமெரிக்காவைவிடப் பழைமையானது என்பது தொடங்கி, ட்ரம்ப்புக்குப் பச்சை மாமிசங்கள் பிடிக்காது என்பதுவரை ஒட்டுமொத்த மெனுவும் 'வாவ்' ரகம்தான். அவரது ஆசியப் பயணத்தில் இடம்பிடித்த உணவுகள் இதோ...

ஸ்டார்ட்டர்:

DN1wgnmUEAA6Ssa.jpg

安倍晋三Verifizierter Account @AbeShinzo 5. Nov.

 
 

トランプ大統領の来日を、心より歓迎します!今から、さっそくハンバーガーでビジネスランチです。 @realDonaldTrump

 

ஜப்பான் பிரதமருடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சாப்பிட்ட மதிய உணவுக்கு ஸ்டார்ட்டராக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீஃப், அமெரிக்கர் ஹம்பர்கர் ஆகியவை இடம்பெற்றன. மேலும், டோக்கியோவின் டெப்பன்யாக்கி உணவகத்தில் தயாரிக்கப்பட்ட ஸ்டீக் எனும் வேகவைக்கப்பட்ட இறைச்சி வகையைச் சார்ந்த உணவு வழங்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு ஒபாமா, சுகியாபாஷி ஜிரோ சூசி உணவகத்தில் உணவருந்தினார். அவரது மெனுவில் பச்சை மாமிசங்கள் இடம்பிடித்திருந்தன. ஆனால், ட்ரம்ப் அந்த உணவை வெறுத்ததால், பச்சை மாமிசம் அவரது உணவில் மிஸ் ஆனது.

Tonight's state banquet menu. Photo by Xiaomi founder Lei Jun

DOL5AFkWkAADri7.jpg

அதுமட்டுமல்லாது சவான்முஷி எனும் நீராவியில் வேகவைக்கப்பட்ட முட்டையும் ட்ரம்ப் மெனுவில் இருந்தது. ஜப்பானின் கலாசாரத்தை எடுத்துரைக்கும் டெரயாக்கி சிக்கன் ட்ரம்பின் ஃபேவரைட்டாம். 

அரசியல் பேசிய உணவுகள்

இறாலும் எல்லை பிரச்னையும்!

டொக்டோ மற்றும் டேக்‌ஷிமா தீவுகள் பகுதிக்கு இடையே பிடிக்கப்பட்ட இறால் அவருக்கு உணவாகச் சமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பகுதி, தென் கொரியா மற்றும் ஜப்பான் இடையே பிரச்னை நிலவும் பகுதியாகும். இந்த உணவை ட்ரம்ப் சாப்பிடவில்லை என்ற செய்தியும் பரவி வருகிறது. வட கொரிய பிரச்னையில் அதிரடியாக இருக்கும் ட்ரம்ப், அதில் தலையிடுவதைத் தவிர்ப்பதற்காகவே அந்த உணவைத் தவிர்த்திருக்கலாம் என்கிற அரசியல் பார்வையும் முன்வைக்கப்படுகிறது.

ட்ரம்ப்

அமெரிக்காவைவிட வயதான சாஸ்!

தென் கொரிய உணவான சோயா சாஸ், ட்ரம்புக்குப் பரிமாறப்பட்டது. இது, 360 வருட பழைமையான சாஸ் என்றும், இதற்கு அமெரிக்காவைவிட வயது அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது, தென் கொரியாவின் பழைமையைப் போற்றும் நோக்கில் இடம்பெற்றதாக அந்த செஃப் தெரிவித்துள்ளார்.

இங்கும் மெக்ஸிகோ!

அமெரிக்க - தென் கொரிய ராணுவப் படையுடன் சாப்பிடும்போது அமெரிக்கர்களின் விருப்ப உணவான மெக்ஸிகன் டேக்கோஸ், புரிடோஸ் போன்றவற்றைச் சாப்பிட்டுள்ளார். சீன அதிகாரிகளுடனான சந்திப்பில், அமெரிக்கர்களுக்குப் பிடித்த குங் பாவ் சிக்கன் மற்றும் சில்லி ஆயில் மீன் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சீன மொழியில் பாடி அசத்திய ட்ரம்ப் பேத்தி!

ஆசிய - பசிபிக் பொருளாதாரச் சந்திப்பில் இரவு உணவுக் கொண்டாட்டங்களின்போது திரையில் தோன்றிய ட்ரம்பின் பேத்தி சீன மொழியில் பாடி அசத்தினார்.

 

அவருக்கு வழங்கப்பட்ட டெசர்ட்டில் வியாட்நாமின் ஃபேமஸ் ஹலோ.. ஹலோ ஐஸ்க்ரீம் வழங்கப்பட்டது. பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பும்போது விமானத்தில் அவருக்கு மிகவும் பிடித்த அமெரிக்க உணவே வழங்கப்பட்டது.

ட்ரம்ப்

 

ட்ரம்பின் உணவுகளில் அந்தந்த நாடுகளின் அரசியல் பார்வையும் புகுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும், அவருக்கான உணவைச் சோதித்து வழங்குவதிலோ பலகட்ட பாதுகாப்புகள் இருந்துள்ளன. இது, ட்ரம்புக்கு மட்டுமல்ல... முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி ஆகியோர் வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளும்போதும் உணவு விஷயத்தில் ஹோட்டல் நிர்வாகத்தில் கெடுபிடியாக இருப்பார்களாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கும் உணவகத்தின் கிச்சனே அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருக்குமாம். அமெரிக்க அதிபரின் உணவில் ஆயிரம் அரசியலை நாடுகள் புகுத்தினாலும் தனக்குப் பிடித்ததைத்தான் செய்வேன் என்பதை உணவாலும் உணர்த்திவிட்டுச் சென்றுள்ளார் ட்ரம்ப்.

https://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வியப்பூட்டும் இந்தியா: மிகப் பெரிய கொல்கத்தா ஆலமரம்!

 

 
15CHSUJTREE1

ஆலமரம்தான் இந்தியாவின் தேசிய மரம். நம் நாட்டில் உள்ள ஆலமரங்களில் மிகப் பெரியது கொல்கத்தா ஆச்சார்ய ஜகதீஷ் சந்திரபோஸ் இந்தியத் தாவரவியல் தோட்டத்தில் இருக்கிறது. 270 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்தத் தோட்டம், கி.பி 1786-ல் கிழக்கிந்திய கம்பெனியில் வேலை செய்த கர்னல் அலெக்சாண்டர் கிட் என்பவரால் உருவாக்கப்பட்டது. சுதந்திரம் அடையும்வரை ‘கம்பெனி தோட்டம்’ என்றே அழைத்துவந்தனர். சுதந்திரத்துக்குப் பிறகே இந்தியத் தாவரவியல் பூங்காவாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

12,000 வகை தாவரங்கள் இங்கே உள்ளன. ஐந்து கண்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய தாவரங்களும் இருக்கின்றன. விதவிதமான மூங்கில் மரங்கள், பனை மரங்கள், ஆர்கிட் பூ வகைகள், மிகப் பெரிய இலைகளைக் கொண்ட விக்டோரியா அமேசோனிகா அல்லி போன்றவற்றை இங்கே மட்டும்தான் பார்க்கமுடியும். இவ்வளவு தாவரங்கள் இங்கே இருந்தாலும் மக்களைப் பெரிதாக ஈர்ப்பது பெரிய ஆலமரம்தான்!

இந்த ஆலமரம் 18,918 ச.மீ. பரப்பளவுக்குப் பரந்து விரிந்துள்ளது! மிக உயரமான கிளை 25 மீட்டர் நீளமானது. ஆசியாவிலேயே இது மிகப் பெரிய மரம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 3800க்கும் மேற்பட்ட விழுதுகள் இந்த மரத்தைத் தாங்கி நிற்கின்றன. இந்த மரம் சூரிய வெளிச்சம் கிடைக்கும் கிழக்கு திசையிலேயே வளர்ந்துகொண்டு செல்கிறது. தூரத்திலிருந்து பார்க்கும்போது அடர்ந்த காடுபோல் தோற்றம் அளிக்கிறது. அருகே சென்று பார்க்கும் போதுதான் இது ஒரே ஒரு மரமாக இருப்பது தெரிகிறது. இந்த மரத்தை பார்ப்பதற்காகவே உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகின்றனர்.

ஆலமரத்தின் வயது சுமார் 250 வருடங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பயணிகள் தங்களுடைய பயணக் குறிப்புகளில் இந்த மரத்தை பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

banyanjpg
 

1864, 1867-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களால் இந்த மரத்தின் நடுப் பகுதி சேதமடைந்தது. 51 அடி சுற்றளவில் இருந்த இந்த மரத்தின் அடிப் பகுதியை 1925-ம் ஆண்டு எடுத்துவிட்டார்கள். நடுமரம் இல்லாமல் விழுதுகளால்தான் இந்த மரம் நிற்கிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தனது விழுதுகளை இன்னும் பெருக்கிக்கொண்டே இருக்கிறது. அதனால் இதன் சுற்றளவும் பரப்பளவும் அதிகமாகிக்கொண்டே போகிறது. மரத்தைச் சுற்றி பார்ப்பதற்காக 330 மீட்டர் சுற்றளவில் பாதை போடப்பட்டுள்ளது. மரம் வளர்ந்து கொண்டே இருப்பதால் இதை ‘நடமாடும் மரம்’ என்று அழைக்கிறார்கள். பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இதன் நிழலில் அமர்ந்து இளைப்பாறலாம் என்றால் அதன் பரப்பளவை உங்களால் ஊகிக்க முடிகிறதா!

ஆலமரத்தைப் பராமரிப்பதற்கென்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்களும் ஊழியர்களும் உள்ளனர். மரத்தில் பூஞ்சையோ, கரையானோ வராமல் உன்னிப்பாகப் பாதுகாக்கின்றனர். மரத்திலிருந்து விழுதுகள் கீழ்நோக்கி இறங்கும்போது, நீண்ட உலோகக் குழாய்களுக்குள் விடுகிறார்கள். அந்தக் குழாய்கள் பூமிவரை செல்கின்றன. பூமியில் இந்த விழுதுகள் ஊன்றியவுடன் உலோகக் குழாய்களை அகற்றி விடுகின்றனர். மிகக் குறுகிய காலத்தில் விழுதுகள் பூமியில் ஊன்றி, வலுவாக மாறிவிடுகின்றன.

உலகிலேயே மிக அகண்ட மரம் என்ற புகழ் இந்த ஆலமரத்துக்கு உண்டு. 2005-ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்திலும் இந்த மரம் இடம் பெற்றுவிட்டது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

தேசிய துக்கம் ஆகிப்போன இத்தாலியின் கால்பந்தாட்ட தோல்வி

1958 பிறகு இத்தாலி உலக கால்பந்து போட்டிக்கு தகுதி பெற தவறியிருப்பது தேசிய துக்கமாகியுள்ளது.

  • தொடங்கியவர்

டாவின்சியின் நீல நிற இயேசு கிறிஸ்து ஓவியம் சாதனை

இத்தாலியின் பிரபல ஓவியரான லியானார்டோ டாவின்சி வரைந்த இயேசு கிறிஸ்துவின்  ஓவியம் 2,939  கோடி ரூபாய்க்கு விற்று சாதனை படைத்துள்ளது. 

Local_News.jpg

உலகத்தின் ரட்சகர் என்று அழைக்கப்படும் இந்த ஓவியம் லியானார்டோ டாவின்சி வரைந்த ஓவியங்களில்  ஒன்றாகும். 

இந்த ஓவியம் கிறிஸ்டி ஏல நிறுவனத்தால் 2,939  கோடி ரூபாய்க்கு  ஏலம் எடுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை ஏலம் எடுத்தவரின் பெயரை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

பாப்லோ பிக்காசோவின் ஓவியம் 1,169 கோடி ரூபாய்க்கு  விற்பனையானதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது டாவின்சி ஓவியம் முறியடைத்துள்ளது.

ஏலம் 300 மில்லியன் டாலரைத் தாண்டியபோதே ஏலத்தில் பங்கேற்றவர்கள்  கைகளை தட்டி தங்களது பாராட்டுகளை தெரிவிக்கத் தொடங்கினர். இறுதியில் டாவின்சியின் புகைப்படம் 2,939 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.

ஏலம் எடுக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் இந்த ஓவியம் 26 அங்குலம் உயரம் கொண்டது. ஓவியத்தில் இயேசு நீல நிற வண்ணத்தில் ஆடை அணிந்து கொண்டு அவரது ஒரு கை ஆசிர்வதிப்பது போன்ற நிலையில் உள்ளது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

உலக சகிப்புத்தன்மை நாள் (நவ.16, 1995)

மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது. இதே தேதியில்

 
 
 
 
உலக சகிப்புத்தன்மை நாள் (நவ.16, 1995)
 
மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது.

இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

• 1896- ஜெனரேட்டர் மூலமாக நியூயார்க் நகரத்துக்கு முதன்முறையாக மின்சாரம் அனுப்பப்பட்டது.

• 1945 - யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

• 1973 - நாசா மூன்று விண்வெளி வீரர்களுடன் ஸ்கைலாப் 4 84-நாள் திட்டத்தில் விண்ணுக்கு அனுப்பியது.

• 2002 - சார்ஸ் நோய் முதன் முதலில் சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில் பதியப்பட்டது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

அனிதா பிரதாப், கெளரி லங்கேஷ், சோமா பாஸு... இந்தியாவின் டாப் 10 பெண் பத்திரிகையாளர்களிடம் என்ன விசேஷம்?  #NationalPressDay

 
 

ன்றைக்கு தேசியப் பத்திரிகையாளர் நாள். ஐக்கிய நாடுகள் சபையால், உலகின் மிகவும் ஆபத்தான பணிகளில் ஒன்றாக ‘அங்கீகரிக்கப்பட்ட’ பத்திரிகைத் துறை ஆண்களுக்கானது என்று ஸ்டீரியோடைப் செய்யப்பட்ட துறை. ஆனால், போர்க்களங்களுக்கும் கலவரங்களுக்கும் இடையில் துணிச்சலாக நின்று செய்திகளைச் சேகரித்து, உலகறிய செய்த எண்ணற்ற பெண் செய்தியாளர்களும் இங்கு இருக்கிறார்கள். அவர்களுள் டாப் 10 பெண் பத்திரிகையாளர்களைப் பற்றிய சிறப்புப் பகிர்வுதான் இது.

அனிதா பிரதாப்

 

கேரள மாநிலம் கோட்டயத்தில் பிறந்து தந்தையின் பணி மாறுதல்களால் இந்தியா முழுவதும் சுற்றிச் சுற்றி பள்ளிப் படிப்பை முடித்து, பத்திரிகையாளர் அனிதா ப்ரதாப்டெல்லி மிராண்டா ஹவுசில் இளங்கலை ஆங்கிலம், பெங்களூரில் இதழியல் பட்டயப்படிப்பை முடித்ததும், இந்தியன் எக்ஸ்பிரஸில் தன்னுடைய இதழியல் பயணத்தைத் தொடங்கியவர், டைம், சிஎன்என் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் வேலை பார்த்தவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேட்டி கண்ட முதல் பத்திரிகையாளர் இவரே. “இந்த உலகம் பார்த்த மிக முக்கியமான தலைவர் பிரபாகரன்” என்று இன்று வரை அந்தச் சந்திப்பை நினைவு கூர்கிறார். ஈழத்தில் இந்திய அமைதிப்படை செய்த கொடுமைகளை எழுதியதற்காக மிகவும் பேசப்பட்டவர். பல்வேறு போர்க்களங்களில் நின்று செய்திகளை வழங்கியதற்காக சிறந்த பத்திரிகையாளருக்கான பல்வேறு விருதுகளை வாங்கியவர்.

 

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்கௌரி லங்கேஷ்

கௌரியின் தந்தை பி. லங்கேஷ் கவிஞர் மற்றும் பத்திரிகையாளர். 16 வருடங்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஆங்கில ஊடகங்களில் பணியாற்றிவர். பிறகு, கெளரியின் தந்தை நடத்தி வந்த லங்கேஷ் பத்திரிகையை எடுத்து நடத்த ஆரம்பித்தார். கர்நாடகாவில் வலதுசாரிகளுடைய வளர்ச்சி அதிகரித்ததும் “கர்நாடகாவையும் குஜராத்தாக மாற்றுவோம்” என்கிற முழக்கம்தான், ஆங்கில ஊடகங்களில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த கௌரிக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியதாம். கௌரி தொடர்ந்து வலதுசாரி இந்துத்துவத்திற்கு எதிராக எழுதி வந்தார். கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி மர்ம நபர்களால் கௌரி சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடைய தொடர் பணிக்காக இந்த ஆண்டின் Anna Politkovskaya விருது வழங்கப்பட்டது.

அருந்ததி ராய்

ஷில்லாங்கில் பிறந்து தாய் தந்தை பிரிவிற்குப் பிறகு கேரளாவில் வளர்ந்தவர் அருந்ததி ராய். இடதுசாரி சிந்தனையுடைய அருந்ததி ராய் இந்தியா பத்திரிகையாளர் அருந்ததி ராய்முழுவதும் தொலைக்காட்சி, பத்திரிகைகள் என்று பல்வேறு ஊடகங்களில் வேலை பார்த்தவர். 1997 இல் இவர் வெளியிட்ட The God of Small Things புத்தகம் புக்கர் விருது வாங்கியது. மேலும், நியூயார்க் டைம்ஸிலும் அந்த ஆண்டு வெளியான மிகவும் முக்கியமான புத்தகங்களில் ஒன்றாக The God of Small Things குறிப்பிடப்பட்டது. இந்த ஆண்டு அவர் வெளியிட்டிருக்கும்  The Ministry of Utmost Happiness புத்தகமும் புக்கர் விருதுக்குத் தேர்வாகியிருக்கிறது. அருந்ததி ராயுடைய துணிச்சலான அறிக்கைகள் பல நேரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. பழங்குடி மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர். 'ஆப்ரேஷன் க்ரீன் ஹண்ட்' என்கிற பெயரில் இந்திய துணை ராணுவப்படை நடத்திய தாக்குதலை, “இந்தியாவின் ஏழ்மையிலும் ஏழ்மையானவர்களின் மீதான தாக்குதல்” என்று கூறியவர். மேலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக உலகம் முழுவதும் நடைபெறும் தாக்குதல்கள்மீதும், போர்மீதும் கடுமையான விமர்சனம் உடையவர்.

 

ரானா அயூப்

பத்திரிக்கையாளர் ரானா அயூப்ஜம்மு காஷ்மீரில் பிறந்த ரானா அயூப் டெல்லியில் தனது முதுகலைப் படிப்பை முடித்துவிட்டு, ’தெஹல்கா’ என்கிற பத்திரிகையில் வேலை பார்த்து வந்தார். பின்னர், அதிலிருந்து விலகி, தற்போது பத்திரிகை உலகில் தனித்து இயங்கி வருகிறார். குஜராத்தில் நடைபெற்ற பொய் என்கவுன்டர்கள் குறித்து இவர் எழுதிய கட்டுரை, அவுட் லுக் வெளியிட்ட உலகின் டாப் 20 கட்டுரைகளில் ஒன்றாக இடம் பெற்றது. மேலும், குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் குறித்து இவர் ஆராய்ந்து எழுதிய Gujarat Files: Anatomy of a Cover Up என்கிற புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னுடைய பெயர் மைதிலி த்யாகி என்றும், தான் ஆர்எஸ்எஸ் இல் மிகுந்த பற்று உடையவர் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, மறைத்து வைத்திருந்த ரெக்கார்டரில், குஜராத்தின் உயர் அதிகாரிகளிடம் துணிச்சலாக இவர் செய்த இந்த மறைமுக ஆய்வு பெரிய அளவில் பாராட்டப்பட்டு விருதுகளைப் பெற்றுத்தந்தது. 

சோமா பாசு

பத்திரிக்கையாளர் சோமா பாசுஅலகாபாத்தில் பிறந்து வளர்ந்த சோமா பாசு, டெக்கான் க்ரானிக்கல் மற்றும் ஸ்டேட்ஸ்மேன் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் வேலை பார்த்தவர். 'யூத் கி அவாஸ்' என்கிற இணையதளத்தில் இவர் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, மனித தோல் கடத்தல் குறித்து இவர் எழுதிய கட்டுரை பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. மும்பையில் வாழும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் நேபாளத்தில் வாழும் பெண்களுடைய தோல் எப்படிக் கடத்தப்படுகிறது என்பது குறித்து இவர் எழுதிய விரிவான கட்டுரைக்காக Kurt Schork Memorial Award பெற்றவர். தன்னுடைய நண்பர் ஒருவருக்குத் தோல் தேவைப்படுகிறது என்று பொய் ஆவணங்களுடன் களத்தில் நேரடியாக இறங்கி, இந்திய அளவில் தோல் கடத்தல் குறித்து முதன் முதலில் விரிவாக கள ஆய்வு செய்தவர் இவரே!

 

ரேவதி லால்

பத்திரிக்கையாளர் ரேவதி லால்ஹரியானாவைச் சேர்ந்த ரேவதி லால், NDTV இல் பத்து வருடங்களாக வேலைப் பார்த்தவர். பதினாறு வருடங்களாக ஆவணப்படம், பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். குஜராத் கலவரத்திற்கு பிறகான குஜராத்தின் நிலை குறித்த இவருடைய செய்தி சேகரிப்புப் பணி என்பது மிகவும் குறிப்பிட வேண்டியது. NDTV யில் தன்னுடைய உயரிய பொறுப்பை விட்டுவிட்டு ’டெஹல்கா’ வில் இணைந்தார். ஆதரவற்ற குழந்தைகளுக்காக என்ஜிஓ ஒன்றையும் நடத்தி வருகிறார் ரேவதி.

 

 

ப்ரியம்வதா

பத்திரிக்கையாளர் ப்ரியம்வதாசென்னையைச் சேர்ந்த ப்ரியம்வதா நியூஸ் எக்ஸில் இணை ஆசிரியராக வேலைப் பார்த்தவர். தற்போது இந்தியா டுடேயில் வேலை பார்த்து வருகிறார். ஈழ இனப்படுகொலையின் சுவடுகளைப் பற்றி, ஈழத்தின் வடகிழக்குப் பகுதியில் கள ஆய்வு செய்து ஹெட் லைன்ஸ் டுடேவுக்காக 2011-ல் இவர் எடுத்த 'I Witnessed Genocide' என்ற  ஆவணப்படம் பல விருதுகளை வாங்கியது. அந்த ஆவணப்படத்தை எடுக்கப் போவதாக தான் கிளம்புவதற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்னர்தான் தன் அப்பா, சகோதரனிடம் தெரிவித்தாராம். 'நான் உன்னைச் சகோதரியாக இனி ஏற்க மாட்டேன்' என்று அவர் சகோதரர் மிரட்டியும், தந்தை அழுதும் கேட்காமல் கள ஆய்வைத் தொடர்ந்தவர். இலங்கை அரசின் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் அந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் ப்ரியம்வதா 

 

ஷஹானா பட்

பத்திரிக்கையாளர் ஷஹானா பட்காஷ்மீரியிலேயே பிறந்து வளர்ந்த ஷஹானா, மக்கள் தொடர்பியல் மற்றும் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். Press TV என்கிற சர்வதேச ஊடகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அரை விதவைகள், காஷ்மீரில் நடக்கும் அத்து மீறல்கள் உள்ளிட்ட காஷ்மீரில் வாழும் மக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து அழுத்தமாகப் பதிவு செய்து வருபவர். காஷ்மீரின் முன்னணி அரசியல் தலைவரான கிலானியை நேர்காணல் செய்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் வந்த வரலாறு காணாத வெள்ளம், ஊடகங்களின் கண்களில் படாமல் போக, அந்த நேரத்தில் இவர் செய்த செய்தி சேகரிப்புப் பணி மிகவும் குறிப்பிடப்பட வேண்டியது. காஷ்மீரில் இருக்கும் நெருக்கடிகளும், மக்களுக்கு ஊடகங்கள் மேல் குறைந்து போன நம்பிக்கையும்தான், தான் சந்திக்கும் கடுமையான சவால்கள் என்கிறார் இவர்!

தெரேசா ரெஹ்மான்

பத்திரிக்கையாளர் தெரேசா ரெஹ்மான்ஷில்லாங்கில் பிறந்து, டெல்லியில் இதழியல் படித்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பி தன்னுடைய பணியைச் செய்து வருகிறார். வட கிழக்கில் இருக்கும் 8 மாநிலங்களுடைய பிரச்னைகள் குறித்துத் தொடர்ந்து எழுதி வருபவர். The Thumb Print என்கிற சர்வதேசப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வருகிறார். மணிப்பூர் பெண்கள் பாதுகாப்புப் படையால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து இவர் எழுதிய எழுத்துகள் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. தன்னுடைய பத்திரிகைப் பணிக்காக இரண்டு முறை Excellence in Journalism விருதினை வாங்கியிருக்கிறார். The Mothers of Manipur: Twelve Women Who Made History என்ற இவரது புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வடகிழக்கு மாநிலங்களில் எய்ட்ஸ் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் தொடர்ந்து எழுதி வருகிறார்.


மமாங் டாய்

 

பத்திரிக்கையாளர் மமாங் டாய்அருணாச்சலப் பிரதேசம் இட்டாநகரில் பிறந்து வளர்ந்த மமாங், ஹிந்துஸ்தான் டைம்ஸ், த டெலிகிராஃப் உள்ளிட்ட புகழ்பெற்ற பத்திரிகைகளில் வேலை பார்த்தவர். ஆல் இந்தியா ரேடியோவிலும் சில நாள் வேலை பார்த்தார். வடகிழக்கு மக்களுடைய வாழ்க்கையைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். இவருடைய கவிதைகளும், நாவல்களும் இவர் பிறந்து வளர்ந்த மண் சார்ந்தவை. ஆதிவாசிகள் குறித்து இவர் எழுதிய The Legends of Pensam என்கிற புத்தகம், ஆதிவாசிகள் குறித்து இதுவரை தெரியாத பல தகவல்களைக் கொண்டிருந்தது. இலக்கியத்தில் இவருடைய பங்களிப்பிற்காக 2011 ஆம் ஆண்டு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

1f602.png?1f602.png?1f602.png?1f602.png? செல்போன் மறு வாழ்வு மையம்!

  • தொடங்கியவர்
‘எங்கள் உறவு நீ’
 

image_6ff25a1759.jpgதாய்மண் யாசக பூமியாய்த் தோற்றமளிக்கும்; சொந்த நாட்டில் உள்ள இரத்த பந்தங்களை கேலிக்குரிய விலங்குகளாகக் கருத முற்படும். பாரம்பரிய பண்புகள்கூட வெறுப்புடன் நோக்கத்தக்கதாக சிந்தை மாறிவிடும். தன்னிலை அறியும் ஆற்றலை இழந்துபோவதானது துன்பமான விடயம் மாத்திரமல்ல; காலத்தின் கொடுமையானது என அறியமாட்டாய். 

பெருமைக்குரிய முன்னைய சந்ததிகள், தாய்மண்ணில் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் முகங்கள் மறைந்தே போகும். உனது மொழியை மனதில் இருந்து அழித்து, புதுமொழியை உன்தாய் மொழி எனக் கருதி, மயங்கினால் அதில் என்ன புதுமையுண்டு. ஏனெனில், நீ எந்த நாட்டுக்கும் சேராத வேற்றுக்கிரகவாசி போலாவாய். நாடு கடந்தோரிலும் விதிவிலக்கானோர் உண்டு.  

குடும்பம், மனைவி, பிள்ளைகள் என்ற உறவுகளை அரவணைக்க முடியாத, நெருங்கி வாழ்ந்தாலும் விலகி வாழும் துன்பம்தான் உன்னை ஆட்கொள்ளும்.

நீ, நீயாக இல்லாமல், பாசாங்குத்தனமான, விரும்பத்தகாத வடிவத்துடன், மாயஅழகை நம்பிய ஏமாற்றத்துடன் வாழும் ஏமாளி நீ; அகதிப் பரதேசியாய், செல்வம் இருந்தும் சுகானுபவம்தேட முடியாத முடிவிலிப் பரிதாப ஜீவன் நீ. எனினும் எங்கள் உறவு நீ.  

  • தொடங்கியவர்

2003 : கலிபோர்னியா மாநில ஆளுநராக நடிகர் ஆர்னோல்ட் பதவியேற்றார்

வரலாற்றில் இன்று…

நவம்பர் – 17

 

1511 : ஸ்பெயின் மற்றும் இங்­கி­லாந்து ஆகி­யன பிரான்­ஸுக்கு எதி­ராக அணி திரண்­டன.

1558 : இங்­கி­லாந்தின் முதலாம் மேரி இறக்க அவ­ரது ஒன்­று­விட்ட சகோ­தரி முதலாம் எலி­ஸபெத் அர­சி­யானார்.

1796 : பிரெஞ்சுப் படைகள் ஆஸ்­தி­ரி­யர்­களை இத்­தா­லியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்­க­டித்­தன.

1820 : கெப்டன் நத்­தா­னியல் பால்மர் அந்­தார்ட்­டிக்­காவை அடைந்த முத­லா­வது அமெ­ரிக்கர் ஆனார். பால்மர் குடா­நாட்­டுக்கு இவரின் நினை­வாகப் பெயர் சூட்­டப்­பட்­டது.

varalru-Arnold_Schwarzenegger-240x400.jp1831 : ஈக்­கு­வடோர் மற்றும் வெனி­சூலா ஆகி­யன கிரான் கொலம்­பி­யாவில் இருந்து பிரிந்­தன.

1869 : எகிப்தில் சுயஸ் கால்வாய் திறக்­கப்­பட்­டது.

1873 : பெஸ்ட், பூடா, மற்றும் ஓபுடா ஆகிய நக­ரங்கள் இணைக்­கப்­பட்ட புடாபெஸ்ட் நகரம் ஹங்­கே­ரியின் தலை­ந­க­ராக்­கப்­பட்­டது.

1878 : இத்­தா­லிய மன்னர் முதலாம் உம்­பேர்ட்டோ மீதான முத­லா­வது கொலை முயற்சி இடம்­பெற்­றது.

1903 : ரஷ்­யாவின் சமூக ஜன­நா­யக தொழிற்­கட்­சி­யா­னது போல்ஷ்விக் (பெரும்­பான்மை), மேன்ஷ்விக் (சிறு­பான்மை) என இரண்­டாகப் பிள­வுண்­டது.

1922 : முன்னாள் ஒட்­டோமான் பேர­ரசின் சுல்தான் ஆறாம் மெஹ்மெட் இத்­தா­லிக்கு நாடு கடத்­தப்­பட்டார்.

1933 : சோவியத் ஒன்­றி­யத்தை ஐக்­கிய அமெ­ரிக்கா அங்­கீ­க­ரித்­தது.

1939 : செக் நாட்டில் நாஸி எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை அடுத்து 9 மாண­வர்கள் தூக்­கி­லி­டப்­பட்­டனர். ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் வதை­மு­காம்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டனர்.

1950 : 14 ஆவது தலாய் லாமா­வாக டென்சின் கியாட்சோ தனது 15 ஆவது வயதில் திபெத்தின் அரசுத் தலை­வ­ரானார்.

1968 : அலெக்­சாண்ட்ரொஸ் பன­கோலிஸ் என்­ப­வ­ருக்கு கிரேக்க சர்­வா­தி­காரி ஜோர்ஜ் பப்­ப­டொ­ப­வு­லொஸைக் கொலை செய்ய முயற்­சித்­த­தாகக் குற்றஞ் சாட்­டப்­பட்டு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

1970 : வியட்நாம் போர்: மை லாய் படு­கொ­லைகள் தொடர்­பாக அமெ­ரிக்­காவின் லெப்­டினண்ட் வில்­லியம் கலி, விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்டார்.

1970 : சோவி­யத்தின் லூனாக்கொட் 1 விண்­கலம் சந்­தி­ரனில் தரை­யி­றங்­கி­யது. தொலைவில் இருந்து இயக்­கக்­கூ­டிய ரோபோ ஒன்று வேறோர் உல­கத்­துக்கு அனுப்­பப்­பட்­டது இதுவே முதல் தடவை ஆகும்.

1970 : டக்ளஸ் ஏங்­கெல்பேர்ட் முத­லா­வது கணனி மௌஸுக்­கான காப்­பு­ரிமம் பெற்றார்.

1982: அமெ­ரிக்­காவில் நடை­பெற்ற ரேய­மான்­சி­னி­யு­ட­னான 14 சுற்­றுகள் கொண்ட குத்­துச்­சண்டை போட்­டியில் காய­ம­டைந்த டுக் கூ கிம் உயி­ரி­ழந்தார். குத்­துச்­சண்டை போட்டி விதிகள் மறு­சீ­ர­மைக்­கப்­ப­டு­வ­தற்கு இச்­சம்­பவம் வழி­வ­குத்­தது.

1989 : பனிப்போர்: செக்­கஸ்­லோ­வாக்­கி­யாவில் நடை­பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்­து­றை­யி­னரால் நசுக்­கப்­பட்­டது. ஆனாலும் இந்­நி­கழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்­யூ­னிஸ அரசைக் கவிழ்க்க ஆரம்­ப­மாக அமைந்­தது.

1993 : நைஜீ­ரி­யாவில் இரா­ணுவப் புரட்­சி­யினால் ஜனா­தி­பதி ஏர்னஸ்ட் ஷோன்­கெனின் அர­சாங்கம் கவிழ்க்­கப்­பட்­டது.

2003 : ஹொலிவூட் நடிகர் ஆர்னோல்ட் ஷ்;வார்ஸனெகர் அமெரிக்காவின் கலிபோர்னிய மாநில ஆளுநரானார்.

2013 : ரஷ்யாவின் கஸான் விமான நிலையத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.

2013 : இலங்கையில் பொதுநலவாய தலைவர்களின் மாநாடு நிறைவடைந்தது.

http://metronews.lk

  • தொடங்கியவர்

மூன்றரை மில்லியன் டாலர் இசையின் விலை, பிளாட்பாரத்தில் 32 டாலர்! #FeelGoodStory

 
 

தன்னம்பிக்கை கதை

ரபரப்பான மாலை நேரம். சாலையில் இருசக்கர வாகனத்தில் விரைந்துகொண்டிருக்கிறோம். பிளாட்பாரத்தில் பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர் `இறைவனிடம் கையேந்துங்கள்...’ பாடிக்கொண்டிருக்கிறார். அச்சு அசல் நாகூர் ஹனிபாவின் குரல். ஒரே விநாடி அதை உணர்ந்தாலும், நின்று கேட்க நேரமில்லாமல் போய்க்கொண்டேயிருக்கிறோம். ரயில் பயணம். எதிர் இருக்கையில், தாயின் மடியிலிருக்கும் குழந்தை நம்மைப் பார்த்து கைவீசிச் சிரிக்கிறது. அதைப் பார்த்து ரசிக்க நமக்கு ஏனோ தோன்றுவதில்லை. கைப்பேசியில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களில் முழுகிப் போய், வேலை மெனெக்கெட்டு பதிலளித்துக்கொண்டிருக்கிறோம். பௌர்ணமி நிலா, மாலை நேர வானம், நகர்ச் சந்தடியில் அரிதாகக் கூட்டமாகப் பறக்கும் பறவைகள்... என நாம் கவனிக்கத் தவறவிடுவது எத்தனையோ விஷயங்கள். இவையெல்லாம் நம் வாழ்வில் திரும்பவும் ஒருமுறை வரவே வராத தருணங்கள். அந்த மாற்றுத்திறனாளிப் பாடகரின் குரலை மறுபடியும் நாம் கேட்க வாய்ப்பு இல்லாமலேயே போகலாம். அந்தப் பிஞ்சுக் குழந்தையின் அபூர்வ சிரிப்பு தரிசனம் திரும்ப நமக்கு வாய்க்காமலேயே போகலாம். சில தருணங்கள் எப்போதும் தவறவிடக் கூடாதவை. அதை அழுத்தமாக உணர்த்தும் கதை இது! 

 

வயலின் இசைத்தல்

அது 2007-ம் ஆண்டு. ஜனவரி, 12-ம் தேதி. குளிர்காலக் காலை நேரம். அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி-யில் இருக்கும் எல்’என்ஃபேன்ட் பிளாஸா (L'Enfant Plaza) மெட்ரோ சப்வே ரயில் நிலையம். ஒருவர் தோளில் ஒரு பையுடன் வந்தார். வயது 40-க்குள் இருக்கலாம். அவர் ரயில்வே ஸ்டேஷனின் ஓரமாக இருக்கும் ஓர் இடத்தில் அமர்ந்தார். தோளில் இருக்கும் பையைப் பிரித்தார். அதிலிருந்த வயலினை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். 

அது, மனிதர்கள் தங்களின் வேலையின் பொருட்டு அலுவலகம், பணியிடங்கள், பள்ளி, கல்லூரி... என விரைந்துகொண்டிருக்கும் அவசரமான காலை நேரம். அந்த மனிதர் வயலின் வாசிப்பதை எவரும் கவனிக்கக்கூட இல்லை. அவரவர் தங்கள் வேலையில் மும்முரமாகயிருந்தார்கள். அவர் வாசிக்க ஆரம்பித்து, மூன்று நிமிடங்கள் கழிந்திருக்கும். கடந்துபோன ஒரு நடுத்தர வயது மனிதர் இவர் வாசிப்பதைப் பார்த்து நின்றார். ஓரிரு விநாடிகள்தான். தன் வேலையைப் பார்க்கப் போய்விட்டார். 

மேலும் ஒரு நிமிடம் கழிந்தது. வயலின் வாசிப்பவர் விரித்திருந்த துணியில் ஒரு டாலர் பணம் விழுந்தது. ஒரு பெண்மணி பணத்தைப் போட்டுவிட்டு, திரும்பிக்கூடப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தார். 

வயலின் இசை அமைப்பாளர்

மேலும் சில நிமிடங்கள்... ஒருவர் இவரருகே வந்தார். நின்றார். குனிந்து ஒரு தடவை வயலின் இசையைக் கேட்டார். திடீரென்று நினைவு வந்தவராக, தன் மணிக்கட்டில் இருந்த வாட்சைப் பார்த்தார். `ஐய்யய்யோ... லேட்டாகிடுச்சே...’ என்று ஓடாத குறையாக, வேகமாக நடந்து போனார். அதற்கடுத்து அவர் இசையைக் கேட்கக் காத்திருந்தது ஒரு குட்டிப் பையன். அவனுக்கு மூன்று வயதிருக்கும். அவனின் அம்மா, அவனை அங்கே நிற்கவிடாமல் பிடித்து இழுத்தபடியிருந்தார். அவன் பிடிவாதமாக நின்று கேட்டுக்கொண்டிருந்தான். ஒருவழியாக அம்மா அவனை இழுத்துப் போக, அவன் திரும்பித் திரும்பி இவர் வயலின் வாசிப்பதைப் பார்த்தபடியே சென்றான். 

இந்தக் காட்சிகள் திரும்பத் திரும்ப நடந்துகொண்டே இருந்தன. பல குழந்தைகள் அவர் வயலின் ஓசையைக் கேட்டு நின்றார்களே தவிர, பெரியவர்கள் யாரும் அவரை சட்டைகூடச் செய்யவில்லை. 

அவர் மொத்தம் 45 நிமிடங்கள் வயலின் வாசித்தார். அந்த நேரத்தில் குறைந்தது ஆயிரம் பேராவது அவரைக் கடந்து போயிருப்பார்கள். அவர்களில் ஆறே ஆறு பேர் மட்டுமே நின்று அவர் இசையைக் கேட்டார்கள். அதுவும் முழுமையாக அல்ல, சில நிமிடங்கள்தான். 20 பேர் இவருக்குப் பணம் போட்டிருந்தார்கள். ஆனா, ஒருவர்கூட நின்று கேட்கவில்லை. அந்த இசைக்கலைஞரின் அன்றைய மொத்த வசூல் 32 டாலர். அவ்வளவு நேரம் அவர் வாசித்து முடித்துவிட்டுக் கண்ணைத் திறந்தார்... கைதட்டவோ, அவர் இசையை அங்கீகரித்துப் பாராட்டவோ அங்கு யாரும் இல்லை. 

ஜோஷுவா

PC - joshuabell.com

அன்றைக்கு அவரைக் கடந்துபோனவர்கள் யாருக்கும் அவர் எவ்வளவு பெரிய மேதை என்று தெரியாது. அவர் பெயர் ஜோஷுவா பெல் (Joshua Bell). புகழ்பெற்ற வயலின் கலைஞர். உலகின் மிக முக்கியமான வயலின் கலைஞர்களில் ஒருவர் என்று போற்றப்படுபவர். அன்றைய தினம் அவர் வாசித்த இசையை மூன்று நாள்களுக்கு முன்னால்தான் ஒரு பெரிய அரங்கத்தில் வாசித்திருந்தார். அன்றை தினத்தில் வசூலான தொகை, மூன்றரை மில்லியன் டாலர்.  

 

இந்த நிகழ்வு அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான `வாஷிங்டன் போஸ்ட்’-டில் ஒரு கட்டுரையாக வெளியானது. பிரபல பத்திரிகையாளர் ஜீன் வீய்ன்கார்ட்டென் (Gene Weingarten) இந்த நிகழ்வை எழுதியிருந்தார். இப்படி எத்தனையோ அரிய விஷயங்களை நாம் கவனிக்காமல், கண்டுகொள்ளாமல் தவறவிட்டுக்கொண்டே இருக்கிறோம் என்பது உண்மைதானே!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

 

twitter.com/Thaadikkaran

குஜராத் தேர்தலுக்கும் GST வரி குறைப்புக்கும் தொடர்பு இல்லை - தம்பிதுரை.

நாங்க சம்பந்தப்படுத்திக்கிட்டோம்..!

twitter.com/amuduarattai

வீட்டில் இருக்கும் உறுப்பினர்களைவிட, குறைவான எண்ணிக்கையில் மொபைல்போன்கள் உள்ளவையே, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள்.

p112a.jpg

twitter.com/npgeetha

மருமகனோட நண்பன், பொது அறிவுத் தேர்வில் முதலமைச்சர் பேர் என்னன்னு கேட்டதுக்கு ‘எடப்பாடி பன்னீர்செல்வம்’னு எழுதியிருக்கான்.

twitter.com/withkaran

நேத்து லஷ்மி குறும்படம் பாத்துட்டு இன்னைக்கு பாதிப்பேரு ஆபீஸுக்குக் காலைல சாப்பாடு ரெடி பண்ண வேணாம். ரெஸ்ட் எடு. ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன்னு போயிருப்பான்.

twitter.com/Aruns212

‘ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க!’ என்பது சென்ற தலைமுறை வதந்தி. ‘வாட்ஸ் அப்பில் வந்தது’ இன்றைய தலைமுறை வதந்தி

twitter.com/mrithulaM

தன் பிள்ளைகள் யாரை வெறுக்க வேண்டுமென்பதைத் தாயால் நிர்ணயிக்க முடியும்.

twitter.com/LeemaCathrine

வீடுகூட்ட அஞ்சு நிமிஷம்...
பாத்திரம் வெளக்க பத்து...  நிமிஷம்...
சமைக்க ஒருமணிநேரம்...

ஆனா துணிதுவைச்சு அலசிக் காயப்போட்டு அயர்ன் பண்ணி மடிச்சு பீரோல வெக்க ஒரு யுகமே தேவைப்படுது...

p112b.jpg

twitter.com/jaleelmoh

ஜெயா டிவி அலுவலகத்தில் நடந்த ரெய்டில், தேன்கிண்ணம் சிடியையும் தூக்கிட்டுப் போயிட்டானுங்களாம்...

அதுக்காக வேண்டியே அவனுங்கள பாராட்டலாம்.....

twitter.com/RagavanG

டிமானிடைசேஷனுக்குப் பிறகு கள்ளப்பணமெல்லாம் ஒழிஞ்சி போச்சே. பிறகெதுக்கு ரெய்டுன்னு கேட்டா எல்லோரும் சிரிக்கிறாங்க.

twitter.com/manipmp

இப்பவெல்லாம் நாம பேசுறது பிடிக்கலைனா முகம் சுளிப்பதில்லை.

மொபைலை எடுத்துப் பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர்.

twitter.com/SKtwtz

நம்ம கூட சுத்துகிறவன் எவனுக்கு லேட்டா கல்யாணம் ஆகும்னு நினைப்போமோ அவன்தான் முதல் ஆளா கல்யாணம் பண்ணிட்டு மாலையும் கழுத்துமா வந்து நிற்பான்..

#வெரிஃபைட்

p112c.jpg

twitter.com/ikrthik

அவளின் குரலை அவளே கேட்டுக் கொண்டிருப்பதற்கு உரையாடல் என்று பெயர் வைத்திருக்கிறாள்.

twitter.com/mymindvoice

கேள்வியைத் தவிர்ப்பதே ஒருவகை பதில்தான்.

p112d.jpg

twitter.com/Kannan_Twitz

மார்க்கெட்டிங் இல்லாத திறமை அங்கீகரிக்கப்படுவதில்லை.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

தவறவிட்ட குட்டிகளை தாய் சிறுத்தை மீண்டும் கண்ட நெகிழ்ச்சி தருணம்!

மஹாராஷ்டிர மாநிலத்திலுள்ள கரும்பு வயல்களில் இந்த சிறுத்தை குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வயல்வெளியில்தான் குட்டிகளை தாய் சிறுத்தை பெற்றெடுத்துள்ளது. பிறகு, உணவுத் தேடி அது வெளியில் சென்றுள்ளது. அதன் முழு கட்டுரையை படிக்க: தாயிடமிருந்து பிரிந்த சிறுத்தை குட்டிகள்: மீண்டும் சேர்ந்தது எப்படி?

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: ஆண்களின் எதிர்பார்ப்பு

 
memes%206
memes%201
memes%202
memes%2012
memes%203
memes%204
memes%205
memes%207
memes%208
memes%209
shutterstock265580372

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

340 அருவிகள்... 300 வெப்ப நீரூற்றுகள்... 8987 சதுர கி.மீ-ல் ஒரு தேசியப் பூங்கா! #Yellowstone

 

அமெரிக்காவின் பார்க் கவுண்டி வ்யோமிங் பகுதியில் இருக்கிறது யெல்லோஸ்டோன் உயிரியல் பூங்கா. உலகின் முதல் தேசிய பூங்காவான இது 1872  மார்ச் 1-ம் தேதி உருவாக்கப்பட்டது. இன்றைய பூங்காவின் பரப்பளவு 8987 சதுர கிலோ மீட்டர்கள். ஐந்து நுழைவாயில்களைக் கொண்டது. 466 கிலோ மீட்டர்கள் சாலை வழியாகப் பூங்காவில் பயணிக்க முடியும். இந்தச் சாலைகளில் பயணித்து பூங்காவைப் பார்க்க நேரிட்டால் பூங்காவின் இரண்டு சதவிகிதத்தை மட்டுமே பார்க்க முடியும். 5% நீராலும் 15% புல்வெளிகளாலும் சூழப்பட்டுள்ள பூங்கா 80% அடர்ந்த காடுகளை உள்ளடக்கியது. இந்தப்பூங்காவில் 15 கிலோ மீட்டர்கள் வரை மட்டுமே நடப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. உலக சுற்றுலாப் பயணிகளின் முதல் சாய்ஸ் இந்த யெல்லோஸ்டோன், இயற்கையாக எவ்வளவு அழகைக் கொண்டிருக்கிறதோ அவ்வளவு ஆபத்தையும் கொண்டிருக்கிறது யெல்லோஸ்டோன். பூங்காவில் இருக்கிற ஒவ்வொன்றும் அழகு, அந்த ஒவ்வொன்றும் ஆபத்து!

யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா

 

யெல்லோஸ்டோன் பூங்காவில் 340 அருவிகள் இருக்கின்றன. 300 வெப்ப நீரூற்றுகள் உள்ளன. இங்கிருக்கும் ஓல்ட் ஃபெய்த்புல் (OLDFAITHFUL) என்கிற வெப்ப நீரூற்று ஒவ்வொரு முறையும் சுமார் 32000 லிட்டர் வெப்ப நீரை 180 அடிக்கு மேல் கொப்பளிக்கிறது. ஆரம்பகாலங்களில் 60 நிமிடங்களுக்கு ஒரு முறை வெடித்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1959 இல் ரிக்டர் அளவில் 7.5 அளவிற்கு நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் நிலப் பிளவுகளில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த மாற்றங்களால் வெப்ப நீரூற்று இப்போது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒரு முறை கொப்பளிக்கிறது. யெல்லோஸ்டோன் குறைந்தபட்சம் 10,000 புவிவெப்ப அம்சங்களைக் கொண்டுள்ளது. நிலப்பரப்பு அம்சங்கள் மற்றும் உலகின் வெப்ப நீரூற்றுகளில் மூன்றில் இரண்டு பங்கு யெல்லோஸ்டோனில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஊற்றுகள் இயல்பாகவே தொடர்ந்து நீரை வெளியேற்றும் தன்மை கொண்டவை. ஆனால்,யெல்லோஸ்டோன் பூங்காவில் இருக்கிற ஊற்றுகள் இடைவேளை விட்டு  தண்ணீரை வெளியேற்றுகின்றன. காரணம் பூமிக்கடியில் எரிமலைகள் இருக்கும் இடங்களில், நிலத்தடி நீரானது மிகுதியான அழுத்தம் காரணமாக, அதிகம் சூடாகிவிடும். கொதிநிலையைத் தொட்ட உடன், சட்டென்று நீராவியாகி மேல் நோக்கிச் சீறும். சீறும்போது கீழே இருக்கும் கொதிநீரைப் பீய்ச்சி அடித்துக்கொண்டு வெளியேறும். ஒரு சில நிமிடங்கள் இப்படி நீராவியும் கொதிநீரும் வெளியேறும். அதே நேரத்தில் நிலத்தடி நீரூற்றுப் பாதையில் குளிர்ந்த நீர் வந்து சேரும். சிறிது நேரத்தில் அந்த நீரும் கொதிநிலையை அடைந்து, நீராவியாகி வெந்நீரை வெளியே தள்ளும்.

யெல்லோஸ்டோன்

எரிமலைகள் உள்ள பகுதிகளில் வெந்நீர் ஊற்றுகளும், கொதி நீரூற்றுகளும் அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாகத் தென் அமெரிக்கா, ஜப்பான், மலாய், ஆர்ச் பிலாகோ, இத்தாலி போன்ற நாடுகளில் வெந்நீர் ஊற்றுக்கள் உள்ளன. ஐஸ்லாந்து, நியூசிலாந்து, யெல்லோஸ்டோன் பார்க், ஆகிய இடங்களில் இவை அதிகமாக உள்ளன. ‘கெய்ஸர்’ என்று அழைக்கப்படும் கொதிநீருற்று தரையிலிருந்து நீரையும், நீராவியையும் பல மீட்டர் உயரத்துக்குப் பீய்ச்சி அடிக்கும். வெந்நீர் ஊற்றானது, கொதிநீருற்று போன்று பீய்ச்சி அடிக்காது. இதன் வெப்ப நிலை ஏறத்தாழ ஒரே அளவாக இருக்கும். இதன் நீர் எவ்வளவு சீக்கிரம் சூடு அடைகிறதோ, அவ்வளவு சீக்கிரம் குளிர்ந்துவிடும்.

வெப்ப நீரூற்று

GRAND PRISMATIC SPRING  என்கிற கொதி நீரூற்று யெல்லோஸ்டோன் பூங்காவில் இருக்கிறது. ஒரு வகையில் தூங்கும் எரிமலைக்கு ஒப்பானது இந்த நீரூற்று. சுமார் 15000 லிட்டர் கொதி நீரை ஒவ்வொரு நொடிக்கும் வெளி தள்ளுகிறது. ஜூன் 7, 2016 அன்று யெல்லோஸ்டோன் பூங்காவில் இருக்கிற நோரிஸ் கெய்சர் பேசின் (Norris Geyser basin) நீர் சூடேற்றி பகுதியில் 'உள்ளே நுழையக் கூடாது' என்கிற எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டிருக்கிறது.

போர்ட்லாந்திலிருந்து வருகிற 23 வயது பயணி காலின் ஸ்காட் என்கிற நபர் புகைப்படம் எடுக்க முயல்கிறார். அதை அவரின் சகோதரி சைப் ஸ்காட் காணொளியாகப் பதிவு செய்கிறார். நீரில் கை வைப்பது போல புகைப்படம் எடுக்கும் போது ஸ்காட் தவறி சூடேற்றியின் குழிக்குள் விழுந்து விடுகிறார். காப்பாற்றுவதற்கு முயற்சி எடுக்க நினைக்கிற அடுத்த நொடி இயற்கை தன்னுடைய இயல்பைக் காட்டுகிறது. சில வினாடிகள்தான்; எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது. விழுந்த அடுத்த நொடி நீரின் சூட்டில் கரைந்து போகிறார். ஆனால் இந்த இறப்பைப் பூங்கா நிர்வாகம் வெளியில் தெரிவிக்காமல் மறைத்து விடுகிறது. நான்கு மாதங்கள் கழித்து நவம்பர் மாதத்தில் ஓர் உள்ளூர் தொலைக்காட்சி  “சுதந்திர அறிக்கை தகவல் சட்டம்” (FOIA) மூலம் பூங்கா நிர்வாகத்திடம் தகவல் கேட்கிறது. அதற்கு விளக்கமளித்த பூங்கா அதிகாரிகள் இறப்பை அதிகாரபூர்வமாக தெரிவித்த பிறகுதான் உலகத்திற்குத் தெரிய வந்தது. 

பூங்காவில் பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் பூங்காவின் எருமைகளின் எண்ணிக்கை 23 க்கும் குறைவாக இருந்திருக்கின்றன. அவை அழிந்து போகும் தருவாயில் இருந்தன. அதற்கு பிறகான காலங்களில் பணியாளர்களின் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் எருமைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இன்றைய அளவில் யெல்லோஸ்டோன் பூங்காவில் 5500 க்கும் அதிகமான எருமைகள் இருக்கின்றன. உலகில் சுதந்திரமாக எருமைகள் வாழும் ஒரே இடமாக யெல்லோஸ்டோன் இருக்கிறது. பறந்து விரிந்து கிடக்கிற இப்பூங்காவில் பல வகையான விலங்குகள் வசிக்கின்றன. கடா மான்கள், மான்கள், கூர் கொம்புடைய மான்கள், மலை சிங்கங்கள், நீர் நாய்கள், ஓநாய்கள் எனப் பல வகையான விலங்குகள் வசிக்கின்றன. 

பூங்கா

பூங்காவின் பெரும் பகுதிகள் பாறைக்குடைவுகளையும் (Canyons), காடுகளையும் உள்ளடக்கிய பகுதி. நூற்றுக்கணக்கான விலங்கினங்களுக்கு வாழ்விடமாகத் திகழ்கிறது. இந்தப் பூங்கா பூமிக்கடியில் இருக்கும் ஒரு மாபெரும் எரிமலையின் வாய்ப்பகுதியில் அமைந்திருப்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். சூப்பர் வல்கனோ (Super Volcano) என்று இந்த எரிமலையைச் சொல்கிறார்கள். சுமார் 6 லட்சம் வருடங்களுக்கு முன்னர்வரை இந்த எரிமலை வெடித்திருக்கிறது. இப்போதுகூட இந்தப் பூங்காவின் பெரும்பகுதி நிலத்துக்கு அடியில் புதைந்திருக்கிறது. இதன் நிலப்பரப்பிலிருந்து 5-10 கி.மீ. ஆழத்தில் பாறைகள் உருகிய நிலையில் இருக்கின்றன. எரிமலையைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு முக்கியக் காரணம் யெல்லோஸ்டோன் பூங்கா வருடத்திற்கு 2000 முறை நிலநடுக்கத்தை சந்தித்து வருகிறது.

 

யெல்லோஸ்டோன் பூங்காவில் இருக்கிற ஒவ்வொன்றும் ஓர் ஆபத்தை வைத்திருக்கிறது. ஒவ்வோர் ஆபத்தும் ஓர் அழகை வைத்திருக்கிறது. உலகத்திற்கு யெல்லோஸ்டோன் என்பது வெறும் வார்த்தை. அமெரிக்காவிற்கு?

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

இந்த ஐந்து விஷயங்களுக்காகவே பாங்காக் பறக்கலாம்!

 
 

‘சின்ன சின்ன ஆசை...
சிறகடிக்கும் ஆசை... 
என்னை இந்தப் பூமி சுற்றி வர ஆசை.’

பூமி முழுக்கச் சுற்றி வராவிட்டாலும், ஒரு தடவையாவது இந்த இடத்துக்குப் போயிட்டு வரணும்னு எல்லாருக்குமே ஒரு ‘விஷ் லிஸ்ட்’ இருக்கும். அது துள்ளிக்குதிக்கும் நயாகராவா இருக்கலாம். மிதந்து செல்லும் வெனீஸ் நகரமா இருக்கலாம். குடும்பத்தோடு சென்று குதூகலமாக இருக்க வைக்கும் தாய்லாந்தாக இருக்கலாம். அப்படி, நமக்கு மிகவும் பிடித்த இடங்கள் பட்டியலில் வர வேண்டும் என்றால், அங்கே நிச்சயம் ‘சம்திங் ஸ்பெஷல்’ இருக்க வேண்டும்.

 

 

தாய்லாந்து என்றவுடன் உங்களுக்கு பல விஷயங்கள் நினைவுக்கு வரலாம். பீச்சுகள், பார்ட்டிகள், உல்லாசத்தலங்கள் என்று பல விஷயங்கள் இருந்தாலும், இவை எல்லாம் தவிர அங்கே எழில் கொஞ்சும் பாங்காக்கும் இருக்கிறது. பாரம்பர்யம் மற்றும் நவீனத்தின் கலவையாகத் தோற்றமளிக்கும் இந்தத் தாய்லாந்தின் தலைநகரத்தைக் காண உலகில் பல்வேறு மூலைகளிலிருந்தும் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். உல்லாசம், சவால்கள் மற்றும் அழகு ஆகியவை ஒரே நகரத்தில் அமைந்திருக்கும் புதிரான நகரங்களில் பாங்காக்கும் ஒன்று.

தாய்லாந்தின் பாரம்பர்யத்தின் தாயகம் பாங்காக். இங்கு வானளாவிய கட்டடங்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களும் உயர்தர சொகுசு உணவகங்களும், சுவையான பிளாட்பாரக் கடைகளும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் எளியவர்களுக்கான தங்குமிடங்களும் உல்லாச விடுதிகளும் ஏராளமாக இருக்கின்றன. புத்தரின் கோயிலும் உள்ளது. மொத்தத்தில், பாங்காக்கைச் சுற்றி வந்தால், பல்வேறு உலகங்களைப் பார்த்த உணர்வு கிடைத்துவிடும். இதைக் கேட்கும்போதே உங்களுக்கும் இந்த நகரைச் சுற்றிவர ஆசை பிறக்கிறது அல்லவா? 

 

பாங்காக் பறந்து சென்று கண்டுகளிக்க அப்படி எங்கே என்ன இருக்கிறது?

இந்த ஐந்து இடங்கள் பாங்காக்கில் நிச்சயம் நீங்கள் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள்...

Art in Paradise (ஆர்ட் இன் பாரடைஸ்):

art_in_paradise1_15106.jpg

வேடிக்கையும் வித்தியாசமான சிந்தனையும்கொண்ட பல்வேறு கலைப் படைப்புகள் உள்ள இரண்டு மாடிக் கட்டடம் இந்த ‘ஆர்ட் இன் பாரடைஸ்’. இதை ‘ட்ரிக் ஐ’ அருங்காட்சியகம் என்றும், 3டி அருங்காட்சியகம் என்றும் உள்ளூர் மக்கள் கூறுவர். இந்தக் கட்டடத்தில் வேடிக்கை நிறைந்த, கதை சொல்லும் முப்பரிமாணத் தோற்றமளிக்கும் ஓவியங்கள் நிறைந்திருக்கின்றன. நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், ஜோடியாகச் செல்லும் காதலர்களுக்கு என எல்லோருக்கும் பிடித்தமான இடமாக இருக்கிறது, இந்த 3டி ஓவியக் கட்டடம். 
இங்குள்ள ஓவியங்கள், பார்வையாளர்களையும் ஓவியத்தின் ஒரு பாகமாகச் சேர்த்துக்கொள்ளும் வண்ணம் வரையப்பட்டிருப்பதே அதன் சிறப்பு. நரகத்தின் படிக்கட்டு, பறக்கும் போர்வை ஆகியவை அவற்றில் சில. இங்கே போகும்போது உங்கள் கேமராவை எடுத்துட்டுப்போக மறக்காதீங்க!

சட்டுசக் சந்தை:

air111_15186.jpg


ஷாப்பிங் பிடிக்கும் என்று சொல்பவர்களுக்கு சட்டுசக் ஒரு சொர்க்கபுரி. அதிலும் நினைவுப்பரிசுகள் சேர்ப்பவராக இருந்தால் டபுள் குஷி. இங்கிருக்கும் 15,000 ஸ்டால்களில் கிட்டத்தட்ட எல்லாமே கிடைக்கும். கைவினைப் பொருள்களிலிருந்து ஹேண்ட்பேக் வரை சரியான விலையில் இங்கே வாங்கலாம். சுத்தி சுத்தி டயர்ட் ஆகாம இருக்க தண்ணீர் பாட்டில் எடுத்துட்டுப் போங்க!

சியாம் பார்க் சிட்டி:

AIRASIA3_16453.jpg


இது வாட்டர் பார்க் பாதி... அம்யூஸ்மென்ட் பார்க் பாதி கலந்து செய்த கலவை. பாங்காக் வரும் குட்டீஸ் யாரும் இங்கே வராமல் செல்லவே மாட்டார்கள். அதேசமயம், இது எல்லா வயதினருக்கும் ஏற்ற விளையாட்டுப் பூங்கா. அருமையான நீச்சல் குளங்களும் அலையடிக்கும் செயற்கை கடற்கரையும் சிறுவர் சறுக்கு விளையாட்டுகளும் நிறைந்த இந்தப் பூங்கா டிஸ்னி வேர்ல்டுபோல பெரியதாக இல்லையென்றாலும் நம் குடும்பத்தோடு சென்றுவர பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்பாட். குளிக்கிறோம். குதிக்கிறோம். குளிக்கிறோம். குதிக்கிறோம்.

டாம்னியான் சதுவாக் மிதக்கும் சந்தை:

AIRASIA4_16146.jpg


பாங்காக் அருகே உள்ள ரட்சாபுரியில் இந்த உலகப் புகழ்பெற்ற மிதக்கும் சந்தை உள்ளது. தாய்லாந்தின் இயற்கை அழகை மிதந்துகொண்டே ரசிக்கலாம். சிறு சிறு படகுகள் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சுமந்தபடி, மூங்கில் தொப்பி அணிந்த தாய்லாந்து பெண்களால் துடுப்பு மூலம் இயக்கப்படும். சாலைகள் இல்லாத காலத்தில் இது மட்டுமே சந்தைக்கான ஒரே வழி. இன்று இது பயணிகள் கண்டுகளிக்கும் சுற்றுலாத் தலமாகிவிட்டது. மிதக்கும் மார்க்கெட்டில் விற்கும் பழங்களின் சுவை அதிகமாமே... சொல்றாங்க!

தி கிராண்ட் பேலஸ்:

Grand_Palace_Bangkok_15164.jpg

 

இந்தக் கண்கவரும் பிரமாண்ட மாளிகையைக் காணாமல் உங்கள் பயணம் முழுமையடையாது. 1782-ல் கட்டப்பட்ட இந்த அரண்மனை தாய்லாந்தின் முக்கிய அடையாளம். முன்பு, தாய்லாந்து மன்னர்கள் இங்கே வசித்து வந்தனர். தற்போது பயணிகள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் எல்லா நேரமும் இது திறந்திருக்கும். பேலஸ் பார்க்க ராஜா மாதிரி டிரஸ் பண்ணலேன்னாலும் கொஞ்சம் டீசன்ட்டா டிரஸ் பண்ணிட்டுப் போங்க.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

காதல் மன்னன் ஜெமினி கணேசன் பிறந்த தினம் (நவ.17- 1920)

தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டையில் நவம்பர் 17-ந்தேதி 1920-ல் பிறந்தவர் ஜெமினி கணேசன். அவரது சினிமா சரித்திரம் மிஸ் மாலினி (1947) மூலமாகத் துவங்கியது. பெண், கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார். அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக்

 
காதல் மன்னன் ஜெமினி கணேசன் பிறந்த தினம் (நவ.17- 1920)
 
தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டையில் நவம்பர் 17-ந்தேதி 1920-ல் பிறந்தவர் ஜெமினி கணேசன். அவரது சினிமா சரித்திரம் மிஸ் மாலினி (1947) மூலமாகத் துவங்கியது. பெண், கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன.

தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார். அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் காதல் மன்னன் என்றே அழைத்தனர். அவருடைய உருவம் தாங்கிய தபால்தலையும் வெளியிடப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1820 - கேப்டன் நத்தானியல் பால்மர் அண்டார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். பால்மர் குடாநாடுக்கு இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது. * 1831 - ஈக்குவாடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியன பாரிய கொலம்பியாவில் இருந்து பிரிந்தன. * 1869 - எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது. * 1873 - பெஸ்ட், பூடா, மற்றும் ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட புடாபெஸ்ட் நகரம் ஹங்கேரியின் தலைநகராக்கப்பட்டது.

* 1878 - இத்தாலியின் முதலாம் உம்பேர்ட்டோ மீதான முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது. * 1903 - ரஷ்யாவின் சமூக ஜனநாயக தொழிற்கட்சி போல்ஷெவிக் (பெரும்பான்மை), மேன்ஷெவிக் (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவுண்டது. * 1918 - யாழ்ப்பாணத்தில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிவாரண நிதியம் அமைக்கப்பட்டது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

போப் ஆண்டவர்க்கு கிடைத்த லாம்போர்கினி ஹுராகுன் ஸ்போர்ட்ஸ் காரை என்ன செய்தார் தெரியுமா?

போப் ஆண்டவர் பிரான்சிஸுக்கு லாம்போர்கினி நிறுவனம் தனித்துவமான "லாம்போர்கினி ஹுராகுன் ஸ்போர்ட்ஸ்" காரை பரிசளித்துள்ளது.

Local_News.jpg

எளிமையான வாழ்க்கைக்கு பெயர் பெற்ற போப் ஆண்டவர் காரை பயன்படுத்தப் போவதில்லை என முடிவெடுத்து குறித்த காரில்  கையெழுத்திட்டு  விற்க முடிவுசெய்துள்ளார்.

குறித்த காரை விற்றுக்கிடைக்கும் நிதியை ஐ.எஸ்  தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டு வீடிழந்த ஈராக் கிறிஸ்துவர்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார். 

பொதுவாக இந்த வகை லாம்போர்கினி கார் சுமார் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விலை போகும்.  ஆனால் போப் கையெழுத்திட்டு விற்கப்படுவதால் கூடுதல் நிதி திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போப்க்கு வருகிற பரிசுகள் எல்லாம் இதுபோன்ற நிதிதிரட்டல்களுக்காகவே பயன்படுத்தப்படுவதாக வாட்டிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் காரை விற்பதன் மூலம் திரட்டப்படும் நிதி  ஐ.எஸ் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டு விபாச்சார தொழிலில் ஈடுபடுத்தப்படுவர்களுக்கான மறுவாழ்வுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் வாடிகன் சபை தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.