Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

உங்கள் பலவீனம் கூட அதிர்ஷ்டமாகலாம் - ஒரு வெற்றிக்கதை! #MotivationStory

 
 

தன்னபிக்கை வளர்க்கும் கதை

திர்ஷ்ட தேவதையின் அருள் நிறைந்த பார்வை நம் மீது எப்போது விழும்? இந்தக் கேள்விக்கு, `அதுக்கெல்லாம் யோகம் வேணும்...’, `ஜாதகத்துல சுக்கிரன் உச்சத்துல இருக்கணும்’, `கொஞ்சம் நெளிவு, சுளிவோட நேக்காப் பொழைக்கத் தெரியணும்...’ என்றெல்லாம் பதில்கள் வரலாம். உண்மை அப்படியல்ல. நேர்மையான வழியில்கூட ஒருவர் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை அடையலாம். ஒருவரிடம் இல்லாத ஒன்று... ஏன் பலவீனம்கூட அதிர்ஷ்டம் கிடைக்கக் காரணமாகலாம். இந்த யதார்த்தத்தை எளிமையாக உணர்த்தும் கதை இது. 

 

ரமேஷுக்கு வயது முப்பத்தி இரண்டு. அந்த வயதுக்குப் பொருந்தாத பெரிய பொறுப்புகள். அப்பா பக்கவாதம் வந்து படுக்கையில் கிடந்தார். அம்மா, இரண்டு தங்கைகள்... மொத்தக் குடும்பமும் ரமேஷின் வருமானத்தில்தான் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது. ரமேஷுக்கு நகரத்தின் எல்லையிலுள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை. சாதாரணத் தொழிலாளியாகத்தான் வேலை பார்த்தான். என்றாலும், கொஞ்சம் கொஞ்சம் கடனை வாங்கியாவது குடும்பத்தை நகர்த்த முடிந்தது. அதற்கும் விதி வேட்டுவைத்தது. 

வழக்கம்போல ஒருநாள் சைக்கிளில் தொழிற்சாலைக்குப் போனபோது கேட் இறுக மூடிக்கிடந்தது. வாசலில் தொழிலாளர்கள் கூடியிருந்தார்கள். விசாரித்ததில், போதுமான வருமானம் இல்லாத்தால் ஃபேக்டரியை திடீரென சொல்லாமல் கொள்ளாமல் இழுத்து மூடிவிட்டதாகச் சொன்னார்கள். சிலர் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். சில தொழிற்சங்கத் தலைவர்கள், `நியாயம் கிடைக்கும் வரை போராடிப் பார்ப்போம்’ என்றார்கள். நிர்வாகத்துடன் பேசிப் பார்த்ததில் தீர்வு கிடைக்கவில்லை. `வேறு வேலை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லிவிட்டது நிர்வாகம். 

நேர்காணல்

ரமேஷ் கலங்கிப் போனான். ஒரு மாதச் சம்பளம் இல்லையென்றால்கூட அதோகதி. குடும்பமே நடுத்தெருவுக்கு வரவேண்டியதுதான். அவன் அதிகம் படித்திருக்கவில்லை. ஆனாலும், வேலை தேடவேண்டியதுதான். தினமும் அதிகாலையிலேயே எழுவது... பேப்பர் பார்ப்பது... வேலைவாய்ப்பு விளம்பரப் பகுதியைப் பார்த்து விண்ணப்பம் அனுப்புவது... நேர்முகத் தேர்வுக்குச் செல்வது என்று ஒவ்வொரு நாளும் கழிந்துகொண்டிருந்தன. ஆனால், ஒரு வேலை... ஒரேயொரு வேலை அவனுக்குக் கிடைக்கவில்லை. 

ஒருநாள் செய்தித்தாளில் `ஆபிஸ் பாய் தேவை’ என்ற விளம்பரத்தைப் பார்த்தான். `விருப்பமுள்ளவர்கள் நேரில் வரவும்’ என்று குறிப்பிட்டிருந்தது. முகவரியை எழுதிவைத்துக்கொண்டு, பஸ் பிடித்து அந்த அலுவலகத்துக்குப் போனான். நகரின் மத்தியில் இருந்தது அலுவலகம். அவன் நினைத்ததைவிடப் பெரிய கட்டடம். செக்யூரிட்டியிடம் பேசி, உள்ளே நுழைந்தான். ரிசப்ஷனில் விசாரித்து உட்காரச் சொன்னார்கள். ஒரு மணி நேரம் கழித்து அவனுக்கு அழைப்பு வந்தது. 

அந்த அலுவலகத்தின் மனிதவளத் துறை மேலாளர் அவனைப் பற்றி விசாரித்தார். அவன் சான்றிதழ்களைச் சரிபார்த்தார். சில கேள்விகள் கேட்டார். ஒரு தாளைக் கொடுத்து, அதிலுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கச் சொன்னார். பத்து நிமிடங்களில் நேர்முகத் தேர்வு முடிந்துவிட்டது. மேனேஜருக்கு ரமேஷைப் பிடித்துப்போய்விட்டது. 

``சரிப்பா. உனக்கு வேலை கொடுக்குறோம். உன் இமெயில் அட்ரஸைச் சொல்லு... என்னிக்கி வேலையில சேரணும், மத்த விவரங்கள் என்னென்ன குடுக்கணும்... எல்லாத்தையும் மெயில்ல அனுப்புறோம்’’ என்றார் மேனேஜர். 

``சார்... என்கிட்ட கம்ப்யூட்டர் இல்லை. அதேபோல இமெயில் அட்ரஸ்னு ஒண்ணும் இல்லை.’’

மேனேஜர் ஆச்சர்யமாகப் பார்த்தார். ஒரு கணம் யோசித்தார். ``தம்பி... தப்பா எடுத்துக்காத. காலம் எவ்வளவோ மாறிடுச்சு. எங்க கம்பெனியும் ஒவ்வொரு நாளும் மாறிக்கிட்டேதான் இருக்கு. இங்கே வேலை பார்க்கறவங்களுக்கு, மெயில் ஐடி, ஆண்ட்ராய்டு போன் எல்லாம் அவசியம். இது இல்லைன்னா இங்கே உனக்கு வேலையில்லை. சாரி...’’ என்றார். 

அதற்கு மேல் அவரிடம் என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. அந்த அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தான். இங்கே வேலை இல்லை. இனி என்ன செய்வது? ஒரு வேலை வாங்காமல் வீட்டுக்குப் போகக் கூடாது என்று அவன் முடிவெடுத்திருந்தான். யாரிடமாவது, ஏதாவது ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்துத்தான் ஆக வேண்டுமா? வேறு வழியே இல்லையா? பாக்கெட்டில் கைவிட்டுப் பார்த்தான். ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு, இரண்டு நூறு ரூபாய்களும், சில பத்து ரூபாய்களும் இருந்தன. யோசித்தான். ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது. மணி காலை 10:30. இன்னும் நேரம் நிறைய இருக்கிறது. 

கடின உழைப்பு

நகரில் இருந்த பெரிய மார்க்கெட்டுக்குப் போனான். பெரிய கூடை ஒன்றை வாங்கினான். கையிலிருந்த ஐநூறு ரூபாய்க்கு கூடை நிறையக் காய்கள் வாங்கிக்கொண்டான். தெருவில் இறங்கி நடந்தான். தெருத் தெருவாகப் போய் விற்றான். அன்று மாலைக்குள் அத்தனைக் காய்களையும் விற்றுத் தீர்த்துவிட்டான். கணக்குப் பார்த்ததில் 500 ரூபாய்க்கு 500 ரூபாய் லாபம் கிடைத்தது. 

அடுத்த நாள் அதிகாலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டான். அன்றைக்கு 1,000 ரூபாய்க்கு காய்கறிகள் வாங்கினான். அன்றைக்கும் அவனுக்கு லாபம் இரு மடங்கு. ஒரு கூடை, இரு கூடைகளானது. சில மாதங்களில் தெருவோரமாகக் கடைவிரித்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் வியாபாரம் வளர்ந்தது. வேலைக்கு ஆள்களைச் சேர்த்தான். ஒரு கட்டத்தில் கடை, பெரிய கடை ஆனது. வியாபாரம்இமெயில் சூடுபிடித்தது. ஏழே வருடங்களில் ரமேஷ் மிகப் பெரிய தொழிலதிபர் ஆகிவிட்டான். 

ஒரேயொரு சினிமாப் பாடலில் ஹீரோ பெரிய பணக்காரன் ஆவதுபோலத்தான் ரமேஷ் வாழ்க்கையிலும் நடந்தது... ஆனால், படிப்படியாக. ஒருநாள் தனக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. நகரில் பிரபலமாக இருந்த ஒரு ஏஜென்ட்டைப் போய்ப் பார்த்தான். அவருக்கு இவனை நன்கு தெரிந்திருந்தது. வரவேற்று, அமரச் செய்து, விசாரித்தார். ஒரு விண்ணப்பத்தை எடுத்து பூர்த்தி செய்ய ஆரம்பித்தார்.

ரமேஷ் தன் பெயர், விலாசம், வயது... எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே வந்தான். 

``உங்க இமெயில் ஐ.டி சொல்லுங்க...’’ என்றார் ஏஜென்ட்.

``எனக்கு மெயில் ஐ.டி-யே இல்லை.’’ 

``என்ன சார் சொல்றீங்க? இமெயில் இல்லியா..? இத்தனை வருஷமா அதையெல்லாம் பயன்படுத்தவே இல்லியா? இமெயில், ஆண்ட்ராய்டு போன் இதெல்லாம் ரொம்ப முக்கியம் சார். இதெல்லாம் இல்லாமலேயே இவ்வளவு பெரிய ஆளாகியிருக்கீங்களே... இருந்திருந்தா?’’ 

ரமேஷ் சிரித்தபடி சொன்னான்... `ஒரு கம்பெனியில ஆபிஸ் பாயா இருந்திருப்பேன்.’’

***    

https://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

1999 : மடு­மாதா தேவா­ல­யத்தின் மீதான தாக்­கு­தலில் 42 பேர் ­பலி

வரலாற்றில் இன்று…

நவம்பர் – 20

 

284 : டயோக்­கி­ளே­சியன் ரோமப் பேர­ரசின் மன்னன் ஆனார்.

1194 : இத்­தா­லியின் பலேர்மோ நகரம் ஜேர்­ம­னியின் ஆறாம் ஹென்­றியால் கைப்­பற்­றப்­பட்­டது.

Madhu_Church.jpg1658 : இலங்­கையில் போர்த்­துக்­கீசர் மீதான வெற்­றியைக் குறிக்க இந்நாள் டச்சு ஆட்­சி­யா­ளர்­க­ளினால் நன்றி தெரி­விப்பு நாளாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

1700 : சுவீ­டனின் 12 ஆம் சார்ள்ஸ் மன்னன், நார்வா என்ற இடத்தில் ரஷ்­யாவின் முதலாம் பீட்­டரைத்
தோற்­க­டித்தார்.

1910 : பிரான்­சிஸ்கோ மடேரோ மெக்­ஸிகோ ஜனா­தி­பதி போர்­பீ­ரியோ டயஸ் என்­ப­வரைப் பத­வியில் இருந்து அகற்­றி­விட்­ட­தா­கவும் தன்னை ஜனா­தி­ப­தி­யா­கவும் அறி­வித்தார். மெக்­ஸிகோ புரட்சி ஆரம்­ப­மா­கி­யது.

1917 : யுக்ரைன் குடி­ய­ர­சாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

1923 : ஜேர்­ம­னியின் நாணயம் பேப்­பி­யர்மார்க், ரெண்­டென்மார்க் ஆக மாற்­றப்­பட்­டது.

1940 : இரண்டாம் உலகப் போர்: ஹங்­கேரி, ருமே­னியா, ஸ்லோவாக்­கியா ஆகி­யன அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்­தன.
1947 : இள­வ­ரசி எலி­ஸபெத் (பிரிட்­டனின் தற்­போ­தைய அரசி) இள­வ­ரசர் பிலிப்பை திரு­மணம் செய்தார்.

1962 : சோவியத் ஒன்­றியம் தனது ஏவு­க­ணை­களை கியூ­பாவில் இருந்து அகற்­று­வ­தாக வாக்­கு­றுதி அளித்­ததை அடுத்து, கியூபாவுக்கு எதி­ரான பொரு­ளா­தாரத் தடை­களை அமெ­ரிக்கா வாபஸ் பெற்­றது.

250px-Rohana2.jpg1977 : 71 ஆம் ஆண்டு கிளர்ச்­சியின் பின் கைது செய்­யப்­பட்ட ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜே­வீர ஆறு ஆண்டு கால சிறை­வா­சத்­துக்குப் பின் விடு­தலை செய்­யப்­பட்டார்.

1985 : மைக்­ரொ­சொஃப்ட்டின் விண்டோஸ் 1.0 பதிப்பு வெளி­யி­டப்­பட்­டது.

1988 : இந்­தியப் பிர­தமர் ராஜிவ் காந்­திக்கும் சோவியத் அதிபர் மிக்கைல் கொர்­ப­சே­வுக்கும் இடையே இரு அணு உலை­களைக் கூடங்­கு­ளத்தில் அமைப்­பது என்ற ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

1992 : இங்­கி­லாந்தில் வின்சர் அரண்­ம­னையில் தீ பர­வி­யதில் பலத்த சேதம் ஏற்­பட்­டது.

1991 : அஸர்­பை­ஜ­னானில் அமெ­ரிக்கப் படை­யி­னரால் ஹெலி­கொப்டர் ஒன்று சுட்­டு­வீழ்த்­தப்­பட்­டதால் ரஷ்யா, கஸ­கஸ்தான், அஸர்­பைஜான் நாடு­களைச் சேர்ந்த சமா­தானத் தூதுக்குழுவின் 19 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1994 : அங்­கோலா அர­சுக்கும் யுனீட்டா தீவி­ர­வா­தி­க­ளுக்கும் இடையே சாம்­பி­யாவில் போர் நிறுத்த ஒப்­பந்தம் கைச்­சாத்­தா­கி­யதில் 19 ஆண்டு கால உள்­நாட்டுப் போர் முடி­வுக்கு வந்­தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்­ப­மா­யிற்று.

1998 : சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தின் முத­லா­வது பகு­தி­யான ஸார்யா விண்­ணுக்கு அனுப்­பப்­பட்­டது.

1998 : கென்யா, தான்­ஸா­னி­யாவில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்­புகள் தொடர்­பாக குற்றம் சுமத்­தப்­பட்ட ஒஸாமா பின் லாடன் பாவம் செய்­யாத மனிதர் என ஆப்­கா­னிஸ்தான் நீதிமன்­ற­மொன்று பிரகடனப்படுத்தியது.

1999 : மன்னார் மடு தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 42 பேர் பலியானதுடன் 60 பேர் காயமடைந்தனர்.

2012 : மாலியில் 170 பேரை பணயக்கைதிகளாக தடுத்து வைத்த தீவிரவாதிகள், 20 பேரை கொலை செய்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

ஒளிரும் கண்கள் : ஆறுகாட்டுத் துறையில் ஒரு தியானம்

 

 
17CHVANSelvan1JPG

கரைக்குப் புதுவண்ணம் சேர்க்கும் படகுகள்.

கடற்கரையில் நின்றுகொண்டு வானத்தையும் கடலையும் அலைகளையும் கரையில் இயங்கும் மனிதர்களையும் வேடிக்கை பார்ப்பது ஒரு வகை தியானம். ஆறுகாட்டுத் துறையில் இதை நான் உணர்ந்திருக்கிறேன்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத் துறை கடற்கரை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். மீன்கள் முட்டையிடும், குஞ்சு பொரிக்கும் கோடைக் காலத்தில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை இருக்கும். படகுகளைச் சீரமைப்பது, வண்ணம் பூசுவது, வலை பின்னுவது, வலைகளைச் சீரமைப்பது போன்ற வேலைகளுக்கு அந்தக் காலத்தை மீனவர்கள் பயன்படுத்துவதால், ஆண்டு முழுவதும் ஆறுகாட்டுத்துறை உயிரோட்டத்துடன் இருக்கும்.

           
17CHVANSelvan10JPG

தூய்மைப்படுத்தப்படும் மீனும் அங்கே கிடைக்கும் மிச்சத்துக்காகக் காத்திருக்கும் உயிர்களும்.

 

கடல்சீற்றம் அதிகமிருக்கும் நாட்களிலும் மீன்வளம் குறையும் காலத்திலும் கோடியக்கரைக்கோ நாகைக்கோ அந்த ஊர் மீனவர்கள் படகைச் செலுத்துவார்கள். அந்தக் காலகட்டத்தில் மட்டுமே ஆறுகாட்டுத்துறை வெறிச்சோடிக் கிடக்கும்.

17CHVANSelvan13JPG

நெடுங்காலம் தொட்டு கடலுக்குப் போகக் கைகொடுக்கும் கட்டுமரம் சீரமைக்கப்படுகிறது.

 

 

விடாத ஈர்ப்பு

அவர்களுடைய இயல்பை உயிரோவியமாகப் பதிவுசெய்ய கேமராவை நான் கையிலெடுக்கும்போது, சிநேகத்துடன் சிறு புன்னகையை வீசி என்னைப் பார்த்துவிட்டு, மீண்டும் தங்கள் வேலைகளில் ஆழ்ந்துவிடுவது அவர்களுடைய இயல்பு. இப்போதுவரை நான் படமெடுப்பதற்கு யாரும் மறுப்புத் தெரிவித்ததோ தடுத்ததோ இல்லை. நான் மீண்டும் மீண்டும் அவர்களை நோக்கிச் செல்வதற்கான காரணம் இதுதான்.

17CHVANSelvan2JPG

மீனவர்களின் பற்றுக்கோலாகத் திகழும் வண்ண வண்ண மீன் வலைகள்

 

ஏதேனும் ஓர் ஆண்டில் ஆறுகாட்டுத் துறை கடற்கரையில் நான் கால் நனைக்க முடியாமல் போயிருந்தால், அடுத்த சந்திப்பில் ஏன் வரவில்லை என அக்கறையுடன் விசாரிக்கும் அளவுக்கு அந்த ஊர் மக்களுடனான நட்பு தொடர்கிறது.

17CHVANSelvan5JPG

கரங்கள் சேர்ந்தால்தான் கடலுக்குப் போக முடியும்

 

அருகில் குடியிருப்புகள் இருந்தாலும்கூட மீனவர்களுக்குக் கடற்கரையே நிரந்தர வீடு. எந்நேரமும் கடலுடன் உறவாடுவது, உழைப்பது, ஓய்வெடுப்பது, பொழுதைப்போக்குவது என அவர்களது வாழ்க்கை கடலையும் கரையையும் முழுமையாகச் சார்ந்த ஒன்று.

17CHVANSelvan6JPG

இது நண்டு வலை.

 

சூரிய உதயத்துக்கு முன்னும் அந்தி சாய்ந்த பின்னும் நீள்கிறது அவர்களுடைய உழைக்கும் உலகம்.

17CHVANSelvan9JPG

விற்பனைக்காக வெட்டிப் பிரிக்கப்படும் மீன்.

 

கட்டுரையாளர், ஓவியர் மற்றும் ஒளிப்படக் கலைஞர்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

“அதிகபட்ச சம்பளத்துக்கு தகுதியான தொழில் ‘தாய்மை’! ” - உலக அழகி மனுஷி சில்லர்

தேவதைகளுக்குப் போட்டி! 108 நாடுகளிலிருந்து சிட்டாகப் பறந்து சீனாவின் சான்யா நகருக்குள் சங்கமித்தது அழகு தேவதைகளின் பட்டாளம். பல சுற்றுகளை வெற்றிகரமாகக் கடந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, கென்யா மற்றும் மெக்ஸிகோ நாட்டு அழகிகள் இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகினர். உலகின் சிறந்த அழகிக்கான தேடலின் முடிவு அறிவிக்கும் தருணம், அனைத்து தேவதைகளின் மின்மினுக்கும் கண்களிலும் ஒரே பதற்றம். `மனுஷி சில்லர், 2017-ம் ஆண்டின் உலக அழகி’ என்ற அறிவிப்பு வெளியானது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு குதூகலமானது இந்தியா. 

சில்லர்

 

20 வயதான மனுஷி, பிறந்து வளர்ந்தது ஹரியானா மாநிலத்தில். மருத்துவம் பயிலும் மனுஷியின் பெற்றோரும் மருத்துவர்கள். கல்விக்கு முக்கியத்துவம் தரும் குடும்பத்தின் முதல் ஃபேஷன் ப்ரியர் இந்த சில்லர். 2017-ம் ஆண்டின் `மிஸ் இந்தியா' போட்டியின் வெற்றியாளரான இவருக்கு, சமூகசேவையில் அதிக ஆர்வம். அவரின் வாழ்நாள் லட்சியம், மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புஉணர்வை இந்தியா முழுவதும் பரப்புவதே. இதற்காக`புராஜெக்ட் ஷக்தி' எனும் திட்டத்தை உருவாக்கியுள்ளார். அழகிப் போட்டிக்காக தன் ஒரு வருடக் கல்விக்கு ஓய்வுவிடுத்த மனுஷிக்கு, மீண்டும் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்து இதய அறுவைசிகிச்சை மருத்துவராகி, சிறு கிராமங்களில் லாபமற்ற மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது ஆசை.

ரீட்டா ஃபாரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹெய்டன் (1997), யுக்தாமுகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) ஆகியோரின் உலக அழகி வரிசைப் பட்டியலில் இன்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கும் மனுஷி சில்லருக்குப் பிடித்த அழகி, ரீட்டா ஃபாரியா. அவரது பாதையைப் பின்பற்றியதாகக் கூறும் சில்லர், “அழகிப் போட்டியில், இந்தியாவின் முதல் பிரதிநிதியாக மட்டுமல்லாமல், வெற்றியையும் தன் வசமாக்கினார் ரீட்டா. மேலும், அவர் பேரார்வம்கொண்ட மருத்துவப் படிப்பையும் கைவிடவில்லை. அழகிப் போட்டி முடிந்தவுடன், கல்வியையும் வெற்றிகரமாக முடித்து தன் வாழ்நாள் லட்சியமான சிறந்த மருத்துவராவதற்கு எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டார்" என்று பூரிக்கிறார். மனுஷியின் விருப்பமும் இதுதான்.

மனுஷி சில்லர்

பேஸ்ட்டல் பிங்க் நிற ஜொலிக்கும் ஆடையில், தங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் `கேள்வி-பதில்' களத்தில் தன்னம்பிக்கையுடன் நின்றுகொண்டிருந்தார் நம் நாட்டு அழகுப் பதுமை. மனுஷியின் வாழ்வை புரட்டிப் போட்ட கேள்வி இதோ...

“உயர்ந்த ஊதியம் கொடுக்கத் தகுதியான தொழில் எது... அதற்கான காரணம் என்ன?”

அரங்கையே அதிரவைத்த சில்லரின் அசத்தலான பதில், “நான் என் அம்மாவுக்கு மிகவும் நெருக்கமானவள் என்பதால், உயர்ந்த ஊதியம் கொடுக்கவேண்டிய தகுதியான தொழில் `தாய்மை'தான். பணம், அவளின் வருமானமல்ல. உண்மையான அன்பும் மரியாதையுமே அவளுக்கான சம்பளம். தன் குழந்தைகளுக்காக அனைத்து தாய்களும் ஈடில்லா தியாகங்களைச் செய்கிறார்கள். எனவே, உலகின் மிக உயர்ந்த வாழ்க்கைத் தொழில் `தாய்மை' ” என்று கூறி கைதட்டல்களை அள்ளினார்.

இந்தச் சிறப்பான பதிலே, 2016-ம் ஆண்டின் உலக அழகி ஸ்டெபானி டெல் வெலியிடமிருந்து கிரீடத்தைப் பறிக்கக் காரணமானது. அதுனுடன் `பியூட்டி வித் பர்ப்பஸ் (Beauty with Purpose)' விருதையும் தட்டிச் சென்றார்.

மனுஷி சில்லர்

“ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா வரிசையில் `உலக அழகிப் பட்டம்' சில்லருக்கும் பாலிவுட்டில் தடம் பதிக்க படிக்கல்லாக அமையுமா?'' எனக் கேட்டதுக்கு,

“உலக அழகிப் பட்டம் பாலிவுட்டில் மட்டும் தடம் பதிப்பதற்கான படிக்கல் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்தப் பட்டத்தை வைத்து எந்தத் துறையிலும் தடம் பதிக்கலாம்” என்று நெகிழ்கிறார்.

 

பல லட்சியங்கள், சமூக அக்கறைகளைச் சுமந்துகொண்டு கெத்தான ‘கேட் வாக்’கிட்டு, தனக்கு ஆதரவளித்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றியை ட்வீட் செய்து இனிதே முடித்துவைத்தார் 2017 -ம் ஆண்டின் உலக அழகி `மனுஷி சில்லர்!'

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

உங்களால் காகிதத்தை 13 முறை மடிக்க முடியுமா?

ஒரு காகிதத்தை பன்னிரெண்டு முறை மடித்து உலக சாதனை படைத்த பிரிட்னியின் சவாலை முறியடிக்கும் முயற்சி.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

தடைகளை உடைத்த டென்னிஸ் தாரகை!

 

பிப்ரவரி 22, 2003… டென்னிஸ் அரங்கிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவிக்கிறார் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற இந்தப் பெண். டென்னிஸ் உலகமே ஆச்சர்யமடைந்தது. காரணம், அப்போது இவருக்கு வயது 22 தான். எண்ணில் அடங்கா காயங்கள், ஏராளமான அறுவைசிகிச்சைகள்... அதனால் யாரும் எதிர்பாரா வகையில் இளம்வயதிலேயே ஓய்வு முடிவை அறிவித்தார் ஸ்விட்சர்லாந்தின் டென்னிஸ் ராணி மார்டினா ஹிங்கிஸ்.

இச்சம்பவத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஹைதராபாத் ஓப்பன் டென்னிஸ் தொடரில் தன் முதல் சர்வதேச சீனியர் போட்டியில் பங்கேற்கிறார் சானியா மிர்சா. அப்போது சானியா யார் என்பதை இந்திய மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், 12 ஆண்டுகள் கழித்து சானியாவை உலகின் `நம்பர் ஒன்’ அரியணையில் அமர்த்தினார் ஸ்விஸ் ஜாம்பவான் மார்டினா. பயிற்சியாளராக அல்ல, சக வீராங்கனையாக.

20p1.jpg

ஆம், அத்தனை காயங்களையும் கடந்து, இரண்டுமுறை ஓய்வை அறிவித்து, மீண்டும் களத்துக்குத் திரும்பி, 37 வயதிலும்கூட டென்னிஸ் அரங்கைத் தன் அசத்தல் ஆட்டத்தால் அசரடித்த மார்டினா ஹிங்கிஸ், தான் உயிராக நேசித்த விளையாட்டுக்கு இப்போது பிரியாவிடை கொடுத்துள்ளார். 

ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என மொத்தம் 25 கிராண்ட்ஸ்லாம்கள்;  மொத்தம் 107 பட்டங்கள்; 1,308 போட்டிகளில் 1,131 வெற்றிகள்; தொடர்ந்து 209 வாரம் பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் முதலிடம்; ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் என நீள்கின்றன இவரின் சாதனைகள். மார்டினா ஹிங்கிஸ் எனும் பெயர் டென்னிஸ் வரலாற்றில் முக்கிய அங்கம் வகிக்கக் காரணம் இவருடைய சாதனைகள் மட்டுமல்ல, இவர் எதிர்கொண்ட சோதனைகளும்தான். விளையாட்டின் மீதான காதல், வெற்றியின் மீதான பசி, ஒரு பெண்ணை எத்தனை முறை தடைகளைத் தாண்ட வைக்கும் என்பதுதான் டென்னிஸ் உலகின் இந்த கம்பேக் குயினிடம் நாம் கற்றுக்கொள்ள ேவண்டிய பாடம்.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் அடியெடுத்து வைத்தபோது ஹிங்கிஸுக்கு வயது 14. தன் வயதையே அனுபவமாகக்கொண்ட சீனியர் வீராங்கனைகளுக்கு டஃப் கொடுத்தார். 15 வயதிலேயே தன் முதல் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று டென்னிஸ் உலகை உறையவைத்தார். ஒற்றையர் பிரிவில் ஒரு கிராண்ட்ஸ்லாம் வெல்வதே மாபெரும் சாதனை. இவரோ, 1996-ம் ஆண்டு அனைத்து கிராண்ட்ஸ்லாம் தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கும் முன்னேறினார். அதில், மூன்று வெற்றிகள். 17 வயதுக்குள் ஒற்றையர் பிரிவில் `நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்தார். 

டென்னிஸ் பரிணாமம் அடைந்து கொண்டிருந்த அந்தக் காலத்தில் ஃபிட்னெஸ் மிக முக்கியமானதாக இருந்தது. மார்ட்டினாவுக்கு மற்ற வீராங்கனைகள்போல திடமான உடல்வாகு இல்லை. எனினும், இவருடைய வேகமான கைகள் அனைவரையும் சமாளித்தன. ஒரே ஃபார்மட்டில் தொடர்ந்து விளையாடுவதே சிரமம் என்ற நிலையிலும், ஒற்றையர், இரட்டையர் என இரண்டிலும் தொடர்ந்து பங்கெடுத்தார்.

2001-ம் ஆண்டு அக்டோபரில் கணுக்காலில் காயம் ஏற்பட, அதற்கு அறுவைசிகிச்சை செய்துகொண்டார். ஏழு மாதங்கள் கழித்து மீண்டும் கணுக்காலில் எலும்பு முறிவு... மீண்டும் அறுவைசிகிச்சை. ஓய்வுக்குப் பிறகு ஆட வந்தவருக்கு, காயத்தின் அவதி தொடர்ந்தது. ஒருகட்டத்தில் விளையாடவே முடியவில்லை. 22 வயதில் ஓய்வை அறிவித்தார். அப்போதே தன் டென்னிஸ் வாழ்க்கையில் 76 பட்டங்கள் வென்றிருந்தார்.

20p2.jpg

மார்ட்டினாவை ஊக்கமருந்து பயன் பாட்டுக்காக இரண்டாண்டுகள் தடைசெய்தது சர்வதேச டென்னிஸ் சங்கம். சோதனை நடந்தபோதே, மீடியாவை அழைத்து அதுபற்றிப் பேசிய தைரியசாலி இவர். ஆனால், இரண்டாண்டுகள் தடையை ரத்து செய்ய மறுத்துவிட்டனர். `மார்ட்டினா குற்றமற்றவர்’ என மொத்த டென்னிஸ் உலகமும் ரசிகர்களும் ஆதரவாக நின்றனர். இந்தப் பிரச்னைக்குப் பிறகுதான், விதிமுறைகளை மாற்றி அமைத்தது சர்வதேச டென்னிஸ் சங்கம். அதிலிருந்தும் மீண்டு, `நான் குற்றமற்றவள்’ என்பதை நிரூபித்தார் இந்தப் போராளி.

தடை விதிக்கப்பட்டதால் மீண்டும் ஓய்வை அறிவித்தார். அவ்வப்போது காட்சிப் போட்டிகளில் மட்டும் விளையாடியவரால், வெறுமனே நேரத்தைக் கழிக்க முடியவில்லை. `என் வயதுக்காரர்கள் எல்லோரும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். நான் மட்டும் ஏன் விளையாடக் கூடாது?' என்று 2013-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக கம்பேக் கொடுத்தார். அப்போது மார்ட்டினாவுக்கு வயது 33. ஓய்வு அறிவிக்க வேண்டிய வயதுதான். ஆனாலும், ஆடுகளத்துக்குள் தைரியமாக நுழைந்தார். `இவரால் ஒரு பதக்கம்கூட வெல்ல முடியாது' என்று ஆருடம் சொன்னார்கள். அவற்றையெல்லாம் பொய்யாக்கினார் மார்ட்டினா. இந்த கம்பேக் வேறு லெவலில் இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் இரட்டையர் போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற மார்ட்டினா, பொறுமையாகத் தனது ஆட்டத்தை மீட்டெடுத்தார். 2015-ம் ஆண்டு இவருக்கு ஸ்பெஷலாக அமைந்தது. அதில் இந்தியர்களின் பங்கு பெரும் அங்கம் வகித்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸுடன் இணைந்து நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றார். இரட்டையரில் சானியாவுடன் இவர் அமைத்த கூட்டணி, அனைத்து வீராங்கனைகளையும் ஆச்சர்யப்படுத்தியது. பல சாதனைகளை உடைத்தெறிந்து, 40 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற இந்த இரட்டையரை ‘சான்டினா’ என்று டென்னிஸ் உலகமே கொண்டாடியது.

இரண்டு வயதில் டென்னிஸ் மட்டையைக் கையில் எடுத்து, நான்கு வயதிலேயே போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய ஆச்சர்ய மனுஷி மார்டினா ஹிங்கிஸ்... இப்போது 37 வயதில், உறுதிபட  ஓய்வை அறிவித்துள்ளார். அத்தனை காயங்களையும் கடந்து, இவர் இதுவரை ஆடியதே பெரிய விஷயம்.  எனினும், அவ்வளவு எளிதில் டென்னிஸ் உலகிலிருந்து முற்றிலுமாக விலகிவிட மாட்டார். 2013-ம் ஆண்டில் இளம் வீராங்கனைகளுக்குப் பயிற்சியாளராக இருந்துள்ளார். எனவே, இனி அடுத்த அரிதாரம் பூசி, இவர் டென்னிஸ் அரங்கினுள் நிச்சயம் அடியெடுத்து வைப்பார். அதுதான் டென்னிஸுக்கும் நல்லது. ஏனெனில், ஒரு போராளி என்றுமே வெளிச்சத்தில் இருக்கும்போதுதான் அடுத்த தலைமுறையின் மனதில் அந்தப் போர்க்குணத்தை விதைக்க முடியும்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

உலகம் தட்டையா? உருண்டையா?

உலகம் தட்டையானது என்கின்றனர் இந்த குழுவினர். அதை நிரூபிக்க, ஒரு எடுத்துக்காட்டையும் இவர்கள் கூறுகிறார்கள். இது குறித்த காணொளி.

  • தொடங்கியவர்

மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் (நவ.20- 1985)

மைக்ரோசாப்டின் விண்டோஸ் 1.0 முதல்முறையாக வெளிவந்த நாள். தற்போது விண்டோஸ் 8.0 வரை வந்துள்ளது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1910 - பிரான்சிஸ்கோ மடேரோ மெக்சிகோ அதிபர் போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை அதிபராகவும் அறிவித்தார். மெக்சிக்கோ புரட்சி ஆரம்பமாயிற்று. * 1917- உக்ரைன் குடியரசாக அறிவிக்கப்பட்டது. * 1923- ஜெர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்) * 1936- ஸ்பானிய அரசியல்

 
 
மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் (நவ.20- 1985)
 
மைக்ரோசாப்டின் விண்டோஸ் 1.0 முதல்முறையாக வெளிவந்த நாள். தற்போது விண்டோஸ் 8.0 வரை வந்துள்ளது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1910 - பிரான்சிஸ்கோ மடேரோ மெக்சிகோ அதிபர் போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை அதிபராகவும் அறிவித்தார். மெக்சிக்கோ புரட்சி ஆரம்பமாயிற்று. * 1917- உக்ரைன் குடியரசாக அறிவிக்கப்பட்டது. * 1923- ஜெர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்) * 1936- ஸ்பானிய அரசியல் தலைவர் ஜோசே அண்டோனியோ பிறிமோ டெ ரிவேரா கொல்லப்பட்டார். * 1940 - இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா, சிலவாக்கியா ஆகியன அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தன.

* 1947- இளவரசி எலிசபெத் இளவரசர் பிலிப்பை திருமணம் புரிந்தார். * 1962- சோவியத் ஒன்றியம் தனது ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து, ஐக்கிய அமெரிக்கா கரிபியன் நாட்டுக்கெதிராக கொண்டுவந்த பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது. * 1977 - ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார். * 1979 - சவுதி அரேபியாவில் மெக்காவில் காபா மசூதியைத் தாக்கிய சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் 6 ஆயிரம் பேரைப் பணயக் கைதிகளாக்கினர். பிரெஞ்சுப் படைகளின் உதவியுடன் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது. * 1985 - மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.

* 1988 - ராஜிவ் காந்திக்கும் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. எனினும் சோவியத் கலைப்பை அடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது. * 1992- இங்கிலாந்தில் வின்சர் அரண்மனையில் தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. * 1993- மகெடோனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 116 பயணிகளில் 115 பேரும் 8 சிப்பந்திகளும் உயிரிழந்தனர்.

* 1994- அங்கோலா அரசுக்கும் யுனீட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று. * 1998- பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சாரியா விண்ணுக்கு அனுப்பப்பட்டது. * 1999- மன்னார் மடு தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 42 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
 

 

 

இரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் நடைபெற்ற நாள் (நவ.20- 1947)

 

எலிசபெத் அலெக்சாந்திரா மேரி என்ற இரண்டாம் எலிசபெத், 1926-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி பிறந்தார். இவர் ஐக்கிய இராச்சியம் உள்பட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின்

 
 
இரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் நடைபெற்ற நாள் (நவ.20- 1947)
 
எலிசபெத் அலெக்சாந்திரா மேரி என்ற இரண்டாம் எலிசபெத், 1926-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி பிறந்தார். இவர்  ஐக்கிய இராச்சியம் உள்பட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவரும் இவராவார். இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநர் ஆவார்.

பெப்ரவரி 6, 1952-ம் ஆண்டில் இவரது தந்தை ஆறாம் ஜார்ஜ் இறந்தவுடன் ஐக்கிய இராச்சியம், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாக்கித்தான் மேலாட்சி, இலங்கை ஆகிய ஏழு பொதுநலவாய நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். இவற்றைத் தவிர, ஜமைக்கா, பார்படோஸ், பகாமாஸ், கிரெனாடா, பப்புவா நியூ கினி, சாலமன் தீவுகள், துவாலு, சென் லூசியா, சென் வின்செண்ட் மற்றும் கிரெனாடின்ஸ், பெலீஸ், அண்டிகுவா பார்புடா, சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகளுக்கு அரசியாக உள்ளார். இவை அனைத்துக்கும் இவர் தனது சார்பில் பொது ஆளுநர் ஒருவரை நியமித்துள்ளார். இந்நாடுகள் அனைத்தும் பொதுநலவாய நாடுகள் (Commonwestyle="width:100%;height:100%;"h realm) என அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளில் இவரது அதிகாரம் மிகவும் பரந்து பட்டவை ஆயினும், பொதுவாக இவர் உள்ளூர் அரசியலில் தலையிடுவதில்லை.

61 ஆண்டுகளாக அரசாட்சி புரியும் இவர் பிரித்தானிய அரசர்களிலேயே இரண்டாவது மிக நெடுங்காலம் ஆட்சி புரிந்தவராக விளங்குகிறார்; விக்டோரியா மகாராணியார் மட்டுமே இவரைவிட நீண்டகாலமாக 63 ஆண்டுகள் ஆண்டுள்ளார். எலிசபெத் இலண்டனில் பிறந்து வீட்டிலேயே கல்வி கற்றார். இவரது தந்தை தமது தமையன் எட்டாம் எட்வர்டின் முடிதுறப்பிற்குப் பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜார்ஜ் 1936-ம் ஆண்டில் மணிமகுடம் சூடினார். அப்போது முதலே இவர் அரச வாரிசாக வரிக்கப்பட்டார்.

இரண்டாம் உலகப் போரின்போது பொதுச்சேவைகளில் ஈடுபட்டார். 1947-ல் எலிசபெத் எடின்பரோ கோமகன் பிலிப்பை மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். சார்லஸ், ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு. இவர்கள் மூலமாக எட்டு பேரப் பிள்ளைகளும் உள்ளனர். இவரது முடி சூட்டும் விழா 1953-ம் ஆண்டு நிகழ்ந்தபோது அதுவே உலகில் முதன்முதலாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட பெருமை பெற்றது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

4000 ஆண்டுகளுக்கு முன் களிமண்ணில் எழுதப்பட்ட விவாகரத்து பட்டயம்: ஆய்வின் போது கண்டுபிடிப்பு

 

4000 ஆண்டுகளுக்கு முன் களிமண்ணில் எழுதப்பட்ட விவாகரத்து பட்டயம்: ஆய்வின் போது கண்டுபிடிப்பு
 

துருக்கியில் 4000 ஆண்டுகளுக்கு முன் களிமண்ணில் எழுதப்பட்ட விவாகரத்து பட்டயத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

துருக்கி காரன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகவும் பழமையான திருமண விவாகரத்துப் பட்டயத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

4,000 ஆண்டுகளுக்கு முன் அசிரியான் பகுதியில் வாழ்ந்த லாகிப்யூம் மற்றும் அவரது மனைவி காடலாவிற்கு திருமணமான பிறகு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.

கடாலாவிற்கு குழந்தை பிறக்காததால் அவர் தனது கணவருக்கு வேறோரு திருமணம் செய்து வைக்க சம்மதம் வழங்கியுள்ளார்.

அந்த ஒப்பந்தத்தின் படி, லகுபியும் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்ததால், அவர் கடலாவிற்கு வெள்ளி வழங்க வேண்டும். கடாலா விவாகரத்து வழங்கினால் அவர் லகுபியுமிற்கு வெள்ளி வழங்க வேண்டும்.

இந்த விடயம் அந்தப் பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டயம் தற்போதைய துருக்கியின் குல்தீப் கனேஷில் உள்ள ஆராய்ச்சித் தளத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

லண்டனில் கோபி கழிவுகளில் இயங்கும் பஸ்கள்

 

 

அடுத்த வாரம் முதல் கோபி கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எரிப்பொருள் மூலம் லண்டன் பஸ்கள் இயங்கும் என லண்டன் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

online_New_Slide.jpg

லண்டன் போக்குவரத்து துறை காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக இயற்கை எரிபொருள்களை பயன்படுத்துவதை அதிகரித்து உள்ளது.

கோபி கழிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மற்றும் டீசல் எண்ணெயை கலந்து இயற்கை எரிப்பொருள் தயாரிக்கப்படும். அவ்வாறு தயாரிக்கப்படும் இயற்கை எரிப்பொருள் ஒரு வருடம் முழுவதும் ஒரு பஸ் இயங்க போதுமானது என  பயோ-பீன் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லண்டன் மக்களால் ஒரு வருடத்துக்கு 2,00,000 டன் கோபி கழிவுகள் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இதை பயோ-பீன் லிமிடெட் நிறுவனம் கோபி தொழிற்சாலைகளில் இருந்து வாங்கி இயற்கை எரிப்பொருளை தயாரிக்கிறது.

 

“ஒரு திறக்கப்படாத கழிவுப்பொருளின் மறுபரிசீலனையின் போது என்ன செய்யலாம் என்பதற்கு இது ஒரு பெரிய எடுத்துக்காட்டு” என்று  பயோ-பீன் நிறுவனர் ஆர்தர் கே கூறினார்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

அழகிய ஈழம் புகைப்படங்கள்

Eelam-Photos-1-800x450.jpgEelam-Photos-2-800x450.jpgEelam-Photos-3-800x450.jpgEelam-Photos-4-800x450.jpgEelam-Photos-5-800x450.jpgEelam-Photos-6-800x450.jpgEelam-Photos-7-800x450.jpgEelam-Photos-9-800x450.jpgEelam-Photos-10-800x450.jpgEelam-Photos-11-800x450.jpgEelam-Photos-12-800x450.jpgEelam-Photos-13-800x450.jpgEelam-Photos-14-800x450.jpg

http://globaltamilnews.net

  • தொடங்கியவர்
‘மலையையும் எலி துளைத்து, அரண் அமைக்கும்’
 

image_6ec7a05bbc.jpgவாழ்க்கையில் விரக்தியுடனும் துன்பங்களுடனும் வாழ்பவர்களை, ஏமாற்றிப் பிழைக்கப் பலர் நாடி வருவார்கள். அந்தச் சமயங்களில், நல்லோர் உறவுகளை ஏற்படுத்துவது அவசியமாகும். 

 கவலையில், பிரச்சினைகளில் மூழ்கியிருப்பவர்கள், இலகுவில் கெட்டவர்களின் வார்த்தைகளுக்கு வசியமாகி விடுவார்கள்.

சொந்தங்களை மறக்கச் சொல்வார்கள். மதுவைத் தேடுவோம் வா நண்பனே என்பார்கள். என்னை மட்டுமே நம்பு; மற்றவர்கள் எல்லோரும் பொய்யர்கள் என்பார்கள். 

இத்தகைய பேர் வழிகள், தங்களை நம்பியவர்களைப் பொறுத்தநேரத்தில் கைகழுவி விட்டுவிட்டு மறைந்து விடுவார்கள்.

துன்பங்கள் சூழ்ந்த வேளையில்தான் மனிதன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மனம் தளராது எழுந்து, தன்னை நிலைநிறுத்த வேண்டும். மலையையும் எலி துளைத்து, தனக்குரிய அரண் அமைக்கும்.

அறிவும் ஆற்றலும் உள்ள மனிதன், தனது திறனை அடையாளம் காணாது வாழ்வதே வெட்கப்பட வேண்டிய ஒன்றுதான். நல்லவற்றை மட்டும் தேடி அடைவதே வாழ்க்கை.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

நவம்பர் – 21

 

1272 : மூன்றாம் ஹென்றி நவம்பர் 16 இல் இறந்­த­தை­ய­டுத்து அவரின் மகன் எட்வேர்ட் இங்­கி­லாந்தின் மன்­ன­ரானார்.

1791 : நெப்­போ­லியன் போனபார்ட் பிரெஞ்சு இரா­ணு­வத்தின் தள­ப­தி­யானார்.

1877 : ஒலியைப் பதி­யவும் கேட்­கவும் உத­வக்­கூ­டிய போனோ­கிராஃப் என்ற கரு­வியைத் தாம் கண்­டு­பி­டித்­த­தாக தோமஸ் அல்வா எடிசன் அறி­வித்தார்.

1894 : சீனாவின் மஞ்­சூ­ரி­யாவில் ஆர்தர் துறை­மு­கத்தை ஜப்பான் கைப்­பற்­றி­யது.

1905 : ஆற்­ற­லுக்கும் திணி­வுக்கும் இடை­யே­யான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்­டு­ரையை அல்பேர்ட் ஐன்ஸ்டைன் வெளி­யிட்டார்.

1920 : அயர்­லாந்தில் கால்­பந்துப் போட்­டி­யொன்றில் பிரித்­தா­னியப் படை­யினர் சுட்­டதில் 14 ஐரிஷ் பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர்.

Varalaru-21-11.jpg1962 : சீன மக்கள் விடு­தலை இரா­ணுவம் இந்­தோ-­சீனப் போரில் போர் நிறுத்தம் செய்­வ­தாக ஒரு­தலைப் பட்­ச­மாக அறி­வித்­தது.

1969 : ஒக்­கி­னாவா தீவை 1972 இல் ஜப்­பா­னி­ய­ரிடம் ஒப்­ப­டைப்­ப­தற்­கான ஒப்­பந்தம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரிச்சர்ட் நிக்­ச­னுக்கும் ஜப்பான் பிர­தமர் ஐசாக்கு சாட்­டோ­வுக்கும் இடையில் வொஷிங்­டனில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

1974 : இங்­கி­லாந்தின் பேர்­மிங்­ஹாமில் ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணு­வத்­தி­னரின் குண்­டு­வெ­டிப்பில் 21 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1980 : அமெ­ரிக்­காவின் நெவாடா மாநி­லத்தில் விடுதி ஒன்றில் இடம்­பெற்ற தீ விபத்தில் 87 பேர் கொல்­லப்­பட்டு 650 பேர் காய­ம­டைந்­தனர்.

1990 : மாங்­குளம் இரா­ணுவ முகாம் மீதான தாக்­குதல் ஆரம்­ப­மா­னது.

1996 : புவேர்ட்டோ ரிக்­கோவில் சான் ஜுவான் நகரில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்­பெற்ற குண்­டு
­வெ­டிப்பில் 33 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2002 : பல்­கே­ரியா, எஸ்­டோ­னியா, லத்­வியா, லித்­து­வே­னியா, ருமே­னியா, ஸ்லோவாக்­கியா, ஸ்லோவே­னியா ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைந்­தன.

2004 : டொமி­னிக்கன் தீவில் இடம்­பெற்ற பூம்­பகம் கார­ண­மாக போர்ட்ஸ்­மவுத் நகரில் பலத்த சேதம் ஏற்­பட்­டது.

2004 : ஈராக் செலுத்த வேண்­டிய சுமார் 100 பில்­லியன் டொலர் கடன் தொகையை இரத்துச் செய்­வ­தாக பாரிஸ் கழகம் எனும் அமைப்பைச் சேர்ந்த 19 நாடுகள் அறி­வித்­தன.

2009 : சீனாவில் சுரங்­க­மொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் 108 பேர் உயிரிழந்தனர்.

2013 : லத்வியா நாட்டில் வர்த்தக கட்டடமொன்றின் கூரை இடிந்து வீழ்ந்ததால் 54 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

‘செரிபிரல் பால்சி ஒரு தடையில்லை!’ - சாதித்துக் காட்டிய ஒரு தடகள வீராங்கனையின் கதை! #MotivationStory

 

உன்னை அறிந்தால்

வெற்றி பெற வேண்டுமா? அது நம்மால் முடியும் என்பதை நாம் முதலில் நம்ப வேண்டும்’ என்கிறார் நவீன கிரேக்க எழுத்துக்கு பெரும் பங்களிப்பை ஆற்றிய எழுத்தாளர் நிகோஸ் கஸந்த்சாகிஸ் (Nikos Kazantzakis). நம்பிக்கையோடு கூடிய விடாமுயற்சி... உடனே இல்லாவிட்டாலும், என்றைக்காவது ஒருநாள் வெற்றி என்கிற மாலையை நம் கழுத்தில் நிச்சயம் கொண்டுவந்து போட்டுவிடும். இந்த உண்மையை எத்தனையோ பேர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், ஸ்டெபானி ஹேம்மர்மேன் (Stephanie Hammerman). அமெரிக்காவில் இருக்கிறார். பெண்... அதிலும் பிறக்கும்போதே யாருக்குமே வரக் கூடாத மோசமான உடல்நலக் கோளாறு! ‘அவ்வளவுதான்... இந்தப் பெண் வாழ்நாள் முழுக்க சக்கர நாற்காலியிலேயே கிடக்கவேண்டியதுதான்’ என்று நினைத்த அத்தனைபேரின் எண்ணத்தையும் உடைத்து நொறுக்கினார். இவர் புரிந்த சாதனையை அறிந்தபோது, அமெரிக்காவே கைதட்டி, ஆர்ப்பரிக்காத குறையாக `யார் இந்தப் பெண்?’ என்று திரும்பிப் பார்த்தது. அவர் கதையைப் பார்ப்போமா? 

 

செரிபிரல் பால்சி

பிறந்தபோதே டாக்டர்களுக்கு ஸ்டெபானி ஹேம்மர்மேனுக்கு என்ன பிரச்னை என்பது தெரிந்துவிட்டது. `இங்கே பாருங்க... உங்க குழந்தைக்கு இருக்குற பிரச்னை செரிபிரல் பால்சி (Cerebral Palsy). தசைகளை, உடல் இயக்கத்தையெல்லாம் பாதிக்கும். இது இருக்குறதால எழுத முடியாம, படிக்க முடியாம, பேச முடியாமக்கூடப் போகலாம். இந்தப் பெண்ணோட வாழ்க்கையின் பெரும்பாலான நாள்களை வீல் சேர்லதான் கழிக்கவேண்டியிருக்கும்’ என்று ஹேம்மர்மேனின் பெற்றோரை அழைத்து வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்கள். அதிர்ந்துபோனார்கள் பெற்றவர்கள். இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது என்பதற்காகக் குழந்தையைத் தள்ளிவைத்துவிட முடியுமா என்ன? 

ஸ்டெபானி ஹேம்மர்மேனின் பெற்றோர் எந்த அளவுக்கு அவருக்கு செல்லம் கொடுத்தார்களோ, அதைவிட நம்பிக்கையை ஊட்டி வளர்த்தார்கள். `உன் குரல் ஸ்வீட்டுடா’, `வெரிகுட்...’ `உன் கையெழுத்து நல்லா இருக்கே...’ எனப் பெற்றோரிடமிருந்து கிடைக்கிற சின்னச் சின்னப் பாராட்டுகள்தான் ஸ்டெபானி ஹேம்மர்மேனுக்கு டானிக். இயலாமையை, உடல் பலவீனத்தை விரட்ட உதவுகிற டானிக். மருத்துவர்கள் பயமுறுத்தின அளவுக்கு பிரச்னை இல்லை. அவரால் படிக்க, எழுத, பேச முடிந்தது. ஆனால், மிக மிக மெதுவாகத்தான் இதையெல்லாம் செய்ய முடிந்தது. 

ஹேம்மருக்கு ஒரு பாய் ஃபிரெண்ட் இருந்தார். அந்த நண்பருக்கு பிறக்கும்போதே இரு கைகளும் இல்லை. ஆனா, ஹேம்மரைப்போலவே எதையாவது செய்ய வேண்டும் என்கிற ஊக்கமும் உத்வேகமும் இருந்தன. கைகள் இல்லையே தவிர, கால்களால் பேஸ்கட்பால் விளையாடியிருக்கிறார் (!) அந்த நண்பர். நம்பிக்கை நிறைந்த மனிதர்களைத்தான் இயற்கை விரைவில் தன்னிடம் அழைத்துக்கொள்ளும்போலும். ஹேம்மருக்கு 16 வயது நடந்துகொண்டிருந்தபோது அந்த நண்பர் இறந்துபோனார். அது, அவருக்குள் பெரும் துயரத்தை ஏற்படுத்தினாலும், நண்பர் வாழ்ந்த வாழ்க்கையும், அவருடைய தன்னம்பிக்கையும் ஹேம்மருக்கு எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற ஊக்கத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தன. 

ஸ்டெபானி ஹேம்மர்மேன்

ஜிம்முக்குப் போக ஆரம்பித்தார். வாரத்துக்கு மூன்று நாள்கள்... கடுமையான உடற்பயிற்சி. ஆனால், அங்கே இருந்த இயந்திரங்களில் எது தனக்குத் தகுந்த பலன் தரும் என்பது அவருக்கே புரியவில்லை. வீட்டில் இருப்பவர்களிடம் தன் பிரச்னையைப் பேசினார். அவருக்கு ஒரு தனி ட்ரெயினரை ஏற்பாடு செய்துகொடுத்தார்கள். அந்தப் பயிற்சியாளரின் பெயர், ஃபிராங்க் மானுஸ்கி (Frank Manusky). முதன்முதலில் பார்த்தபோதே நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகளில் பேச ஆரம்பித்துவிட்டார் ஃபிராங்க். `உன்னால எது வேணும்னாலும் செய்ய முடியும்’ என்றார். பயிற்சியாளர் துணையோடு அடுத்த அடியை எடுத்துவைத்தார். 

பல வருடங்களாக கைகளால் சைக்கிள் ஓட்டிய (Hand Cylist) அனுபவம் இருந்தது; தன் உடலுக்கு இன்னும் வலு சேர்க்க வேண்டும் என்கிற கட்டுக்கடங்காத வேட்கை இருந்தது. மாரத்தான் போட்டியில் ஹேண்ட் சைக்கிளிங் துணையோடு கலந்துகொள்ள முடிவுசெய்தார் ஹேம்மர். அது, டிசம்பர் 2011. முதல் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். அன்றைக்கு ஹேண்ட் சைக்கிளிங் மாரத்தானை அவர் முடித்திருந்த நேரம்... 4 மணி நேரம், 34 நிமிடங்கள். 

ஸ்டெபானி ஹேம்மர், தனக்கான களம் எது என நன்கு யோசித்தார்... முடிவு செய்தார்... தேர்ந்தெடுத்தார். அது, கிராஸ்ஃபிட் (CrossFit) எனப்படும் பளு தூக்கும் தடகள விளையாட்டு. செரிபிரல் பால்சியால் பாதிக்கப்பட்ட உடம்பு, முழுமையான ஆரோக்கியம் இல்லை. ஆனாலும் தன்னால் முடியும் என நம்பினார் ஹேம்மர்மேன். 

மே 3, 2012. முதன்முறையாக ஃபுளோரிடாவில் இருக்கும் அந்த கிராஸ்ஃபிட் ஜிம்முக்குள் நுழைந்தார். பயிற்சி முடிந்து மல்லாக்கப் படுத்திருந்தவர்களைப் பார்த்தார். அவர்கள் ஏதோ சண்டைக்குப் போய்விட்டு வந்தவர்களைப்போல பெரிதாக மூச்சுவிட்டுக்கொண்டிருந்தார்கள். `இதே மாதிரி நானும் என்னிக்காவது ஒருநாள் தரையில கிடக்கணும்’ என உள்ளுக்குள் முடிவுசெய்துகொண்டார். அந்த உடற்பயிற்சிக் கூடத்தின் அதிபர், ஸ்காட் லெஃபெர்ட்ஸ் (Scott Lefferts). அவர், ஹேம்மரிடம் பேசினார்... அவரைப் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டார். 

வெற்றி

அடுத்த நாளிலிருந்து பயிற்சி ஆரம்பமானது. ஆறு மாதங்கள் கடுமையான பயிற்சி. ஹேம்மரின் உடலில் நம்ப முடியாத அளவுக்கு மாற்றம். உடலில் வலு... முன்பைப்போல் அல்லாமல் இப்போது கொஞ்சம் வேகமாக செயல்பட முடிந்தது. அவரால் கிராஸ்ஃபிட்டைப் பற்றிச் சிந்திக்கவும் பேசவும் முடிந்தது. வேறு பல பயிற்சியாளர்களும் கற்றுத் தந்தார்கள். அடுத்த ஒரே வருடம்... நாடு முழுக்க பல இடங்களில், செரிபிரல் பால்சி பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணால் கிராஸ்ஃபிட் விளையாட்டும் முடியும் என்பதை நிகழ்த்தியே காட்டிவிட்டார் ஹேம்மர். 

 

இன்றைக்கு ஹேம்மர், ‘செரிபிர பால்சி பிரச்னையுடன் கிராஸ்ஃபிட் விளையாட்டில் கலந்துகொண்ட முதல் தடகள வீரர்’ என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். அது மட்டுமல்ல... செரிபிரல் பால்சி பிரச்னையுடன் இருக்கும் ஒரே பெண் கிராஸ்ஃபிட் ட்ரெயினரும் இவர்தான். அமெரிக்கா, ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள டேவி (Davie) என்கிற இடத்தில் கிராஸ்ஃபிட் பயிற்சியாளராக இருக்கிறார் இந்தப் பெண்மணி! 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஹை ஹீல்ஸ் ஹையா... ஹையோவா...

 

‘யார் ஹை ஹீல்ஸை கண்டுபிடித்தார் என்று தெரியாது. ஆனால், பெண்கள் அனைவரும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்!’

மறைந்த புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான மர்லின் மன்றோவின் வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் என்பது பெண்களுக்கு மட்டுமே விளங்கும். அந்த அளவுக்கு ஃபேஷன், சினிமா, மாடலிங், ஏன் - வளர்ந்து வரும் நாகரிகப் பெண்ணுலகுக்கு ஹை ஹீல்ஸ் அவ்வளவு முக்கியம்.
6.jpg
ரைட். ஹை ஹீல் போட வேண்டும் என முடிவாகிவிட்டது. அதற்காக அதை அப்படியே அணிந்து நடக்க முடியாது. சில பாதுகாப்புகள் மற்றும் விதிமுறைகளுடன் அதை பயன்படுத்துவதே நல்லது.  ஓகே. ஹை ஹீல் எப்படி பயன்படுத்த வேண்டும்? டிப்ஸ் மற்றும் விதிமுறைகளை அடுக்குகிறார் பிரியா மணிகண்டன் (Fashion Show choreographer & Director).

“வசதிதான் முக்கியம். எவ்வளவு உயரம் வேணும்கிறது உங்க விருப்பம். ஆனா, நம்ம கால் எப்படிப்பட்டது, நம்ம உடல் எப்படிப்பட்டதுனு அடிப்படையா தெரிஞ்சுக்கறது ரொம்ப முக்கியம். நம்ம கால்களோட சரியான அளவை தெரிஞ்சிகிட்டு ஹை ஹீல் தேர்வு செய்யணும். சாதாரண செருப்புகளுக்கு இது மாதிரியான தேர்வு அவசியமில்ல.

ஆனா, ஹை ஹீல் வேற. இது சின்னதாவும் இருக்கக் கூடாது, பெரிதாவும் இருக்கக் கூடாது. இன்னொண்ணு, ஹை ஹீல் உடல் எடையைப் பொருத்தது. ஒல்லியான பெண்களுக்கு எந்தவித ரூல்ஸும் கிடையாது. அதுவே பருமனான பெண்கள்னா முடிந்தவரை பிளாட்ஃபார்ம் ஹீல்ஸ், அல்லது ஹீல் அடர்த்தியான செருப்புகளை பயன்படுத்துறதே நல்லது.
6a.jpg
ஃபேஷன் உலகத்துல பெரும்பாலும் கருப்பு அல்லது வெள்ளை நிற உடைகள்தான். முடிஞ்சவரைக்கும் செருப்பு கலரை சேஞ்ஜ் பண்ணி ஆக்ஸசரீஸை மேட்ச் செஞ்சா வித்தியாசம் காட்டலாம். செருப்பு என்ன கலர்ல அணியறோமோ அந்த கலர்ல குறைந்த பட்சம் ஹேண்ட்பேக் அல்லது பர்ஸ் இருக்கணும். சம்பந்தமே இல்லாம ஷூ கலர் மட்டும் தனியா போட்டுக்கிட்டா அது ஃபேஷன் விதிமுறை மீறல்.

ஸ்டில்டோஸ், பம்ப்ஸ், பிளாட்ஃபார்ம், கட் ஹீல்ஸ், ஓபன் டோ... இப்படி நிறைய ஹை ஹீல் வெரைட்டிஸ் உண்டு. எதை வேணும்னாலும் தேர்வு செய்துக்கலாம். ஆனா, நல்ல பிராண்ட்ல வாங்கணும். செலவு செஞ்சாதான் அழகும், பாதுகாப்பும் கொடுக்கும், கிடைக்கும்...’’ என்ற பிரியா மணிகண்டன், நடைக்கும்  ஹீல்ஸுக்கும் தொடர்பிருப்பதாக சொல்கிறார்.

“ஃபேஷன் ஷோக்களையே எடுத்துக்குங்க. சாதாரண ஃபிளாட் செருப்புபோட்டு நடக்கற அதே மாடல் ஹை ஹீல் போட்டதுமே ஒரு ஸ்டைலை காட்டுவாங்க. அந்தளவுக்கு ஹை ஹீல்ஸுக்கும் நம்ம உடல் மொழிக்கும் தொடர்பிருக்கு. ஹை ஹீல்ஸ் போட்டதுமே தானா நம்ம உடல் நிமிர்ந்து நடக்கும். பெருமிதமான பார்வை, நான் யாருக்கும் குறைஞ்சவ இல்லைங்கற தோரணை வரும். நடைல ஒரு நேர்த்தி கிடைக்கும்.
நிச்சயம் வலி இருக்கும். அதைப் பொறுத்துக்கிட்டு ஒரு ஷார்ப் லுக் கொடுப்பாங்க...’’ என கண்சிமிட்டுகிறார் பிரியா.

ஓகே. மருத்துவரீதியான டிப்ஸ் என்னென்ன? அள்ளிக்குங்க என கொட்டுகிறார் ஆர்த்தோ சர்ஜனான டாக்டர் ஆறுமுகம்.
“என்னைக் கேட்டா ஹை ஹீல்ஸே போடக் கூடாதுனுதான் சொல்வேன். ஆனாலும் ஃபேஷன் அதை ஏத்துக்காதே..! ஸோ, சில டிப்ஸ் மட்டும்.
ஹை ஹீல்ஸ் போட்டுக்கிட்டு இருக்கிற அல்லது நடக்கற நேரங்களை குறைங்க. ஹை ஹீல்ஸ் போடறதால பாதவலி, முதுகு எலும்போட வடிவத்துல மாற்றம், மூட்டுக்குப் பின்புறம் வீக்கம், வலி... எல்லாம் உண்டாகும்.

அதனால உடல் வாகு என்னவோ அதைப் புரிஞ்சிகிட்டு அதிகம் வலிக்காத அளவுக்கு பயன்படுத்தணும். ஒவ்வொருமுறை ஹீல்ஸை கழட்டின பிறகும் பாதத்தை அப்படியே விடாம கொஞ்சம் அசைச்சு, விரல்களை மடக்கி பயிற்சி கொடுங்க. பாதத்துக்குனு ரோலர் பால் இருக்கு. அதைப் பயன்படுத்தி கால்களை உருட்டுங்க.

கால் மூட்டுக்கு சைக்கிளிங் பயிற்சி செய்யலாம். முதுகை கொஞ்சம் பின்பக்கம் வளைச்சு, நிமிர்த்தி பயிற்சி எடுத்துக்கலாம். அதிக நேரம் ஹீல்ஸ் போட்டுக்கிற பெண்கள் வென்னீர்ல அடிக்கடி கால்களை வெச்சு ரிலாக்ஸ் செய்யறது நல்லது.இதெல்லாம் செய்தாலும் கூட எங்க அட்வைஸ் நோ ஹை ஹீல்ஸ்தான்!” திட்டவட்டமாகச் சொல்கிறார் டாக்டர் ஆறுமுகம்.       

ஹிஸ்டரி

ஃபேஷன்களின் முன்னோடியான எகிப்தியர்கள்தான் ஹை ஹீல்ஸை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள்தான் கொஞ்சம் உயரமான, பின்புறம் சற்றே தூக்கிப் பிடித்த வகையான காலணிகளை முதன்முதலில் பயன்படுத்தியுள்ளனர். 1700களில் பேரரசர் 14ம் லூயி இந்த ஹீல் வைக்கப்பட்ட ஷூக்களை அதிகம் விரும்பி அணிந்திருக்கிறார்.

அவரைத் தவிர அந்நாட்டிலும் சரி வீட்டிலும் சரி யாருக்கும் ஹீல் செருப்புகள் அணிய அனுமதி இல்லையாம். அவரைக் காட்டிலும் யாரும் உயரமாக இருப்பதை மன்னர் விரும்பவில்லை. அவரைப் பின்பற்றி ஆண்கள் பலரும் கூட ஹீல்ஸ் அணிந்திருக்கிறார்கள். காலம் செல்லச் செல்லத்தான் இது பெண்களுக்கான ஃபேஷனாகமுழுவதுமாக மாறிவிட்டது.

www.kungumam.co

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சியளித்த உசைன் போல்ட்!

இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடர் தொடங்க இருக்கும்நிலையில், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உசைன் போல்ட் பயிற்சி அளித்திருக்கிறார். 

Bolt_14454.jpg

 


உலகின் அதிவேகமான மனிதராக அறியப்படும் உசைன் போல்ட், 100 மீ. மற்றும் 200 மீ. தடகளப் போட்டிகளில் உலகச் சாதனை படத்தவர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த உலகச் சாம்பியன்ஷிப்  தடகளப் போட்டிக்குப் பின்னர், ஓய்வுபெற்றுவிட்ட உசைன் போல்ட், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு களத்தில் வேகமாக ஓடுவது குறித்து பயிற்சியளித்தார்.  

 

இந்தப் பயிற்சி குறித்து பேசிய ஆஸ்திரேலிய வீரர் ஹேண்ட்ஸ்கோம்ப், ‘ஆடுகளங்களில் வேகமாக ஓடுவது தொடர்பாக உசைன் போல்ட் அளித்த ஆலோசனைகள் மிகுந்த பயனளிப்பவை. ஓடத் தொடங்கும்போது முதல் இரண்டு அடியைக் கவனமாக எடுத்துவைத்தால், வேகமாக ஓட முடியும் என்ற அவரது ஆலோசனை ஆஷஸ் தொடருக்கு நிச்சயம் பலனளிக்கும்’ என்றார். உசைன் போல்ட் கூறுகையில், ‘கிரிக்கெட் போட்டிகளில் ரன் எடுக்க ஓடும் வீரர்களிடம் போதிய உத்வேகம் இருப்பதில்லை. அதைநான் கவனித்தே வந்திருக்கிறேன். மெதுவாகவே அவர்கள் ஓடவும் தொடங்குகின்றனர். இந்தப் பயிற்சியின் மூலம் அந்தக் குறை நீங்கும் என்று நான் நம்புகிறேன்’ என்றார். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

தமிழீழத் தேசியக் கொடி உருவாக்கப்பட்ட நாள் (நவ.21, 1990)

 

இலங்கையின் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகப் பிரதேசமான தமிழ் ஈழத்தின் தேசியக் கொடி, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின்போது உருவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பட்ட இந்த கொடியை, தமிழீழத் தேசியக் கொடியாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 1990-ம் ஆண்டு இதே தேதியில் (நவ.21) அறிவித்தார். இக்கொடியில் மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை

தமிழீழத் தேசியக் கொடி உருவாக்கப்பட்ட நாள் (நவ.21, 1990)
 
இலங்கையின் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகப் பிரதேசமான தமிழ் ஈழத்தின் தேசியக் கொடி, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின்போது உருவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பட்ட இந்த கொடியை, தமிழீழத் தேசியக் கொடியாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 1990-ம் ஆண்டு இதே தேதியில் (நவ.21) அறிவித்தார். இக்கொடியில் மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் உள்ளன.

புலிகளின் நிழல் ஆட்சி நடந்த பகுதிகளில் அனைத்து நிகழ்வுகளின் போதும் இந்த கொடியை ஏற்றும் வழக்கம் உருவானது. அதனைத் தொடர்ந்து உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில், தமது இன மற்றும் தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தவும், தமது எழுச்சியை வெளிப்படுத்தவும் இக்கொடியை ஏற்றும் வழக்கம் தொடர்ந்தது. 

தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும்பாலானோர் அழிக்கப்பட்டுவிட்டனர் என்று கருதும் நிலையிலும், புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களால் தேசியக்கொடியாக தமிழீழக் கொடியை தம் இனத்தின் தேசிய கொடியாக உயர்த்தி வருகின்றனர். ஈழத் தமிழருக்கு ஆதரவான நிகழ்வுகளின் போது இந்தியாவிலும் இக்கொடி உயர்த்தப்பட்டு வருகின்றது. 

உலகின் ஏனைய நாடுகளின் மத்தியிலும் தமிழீழத் தேசியக் கொடி பல்வேறு நிகழ்வுகளின்போது உயர்த்தப்பட்டு தமது தேசியத்தின் தனித்துவத்தை நிலை நிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலங்கையின் தேசியக் கொடி உயர்த்தப்படும் அதே களத்தில் தமிழீழத் தேசியக் கொடியையும் உயர்த்திய நிகழ்வுகளும் உள்ளன.

http://www.maalaimalar.com

 

நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் மறைந்த தினம் (நவ.21, 1970)

 

சர்.சந்திரசேகர வெங்கட ராமன் (சர்.சி.வி.ராமன்) 1888-ம் ஆண்டும் நவம்பர் 7-ந் தேதி தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். சென்னையில் பிரெசிடென்சி கல்லூரியில் 1902-ம் ஆண்டு சேர்ந்த அவர், 1904-ம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார். தனது 16-வது வயதில் கல்லூரியில் முதலாவதாக வந்து தங்க பதக்கம் பெற்றார். 1907-ல் முதுகலை பட்டமும் பெற்றார்.

நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் மறைந்த தினம் (நவ.21, 1970)
 
சர்.சந்திரசேகர வெங்கட ராமன் (சர்.சி.வி.ராமன்) 1888-ம் ஆண்டும் நவம்பர் 7-ந் தேதி தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். சென்னையில் பிரெசிடென்சி கல்லூரியில் 1902-ம் ஆண்டு சேர்ந்த அவர், 1904-ம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார். தனது 16-வது வயதில் கல்லூரியில் முதலாவதாக வந்து தங்க பதக்கம் பெற்றார். 1907-ல் முதுகலை பட்டமும் பெற்றார்.

சி.வி.இராமன் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி ஆய்வுகள் நடத்தி வந்தார்.  

1930-ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும். முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.

1970-ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே நாளில் (நவ.21) இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார். தன்னுடைய கடைசி காலத்தில் இவரே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் இயக்குநராக பணியாற்றி வந்தார். 

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1877 - ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராஃப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தாமஸ் எடிசன் அறிவித்தார்.
• 1920 - டப்ளினில் கால்பந்துப் போட்டி நிகழ்ச்சியில் பிரிட்டன் படையினர் சுட்டதில் 14 ஐரிஷ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
• 1942 - அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
• 1947 - இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. "ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.
• 1980 - நெவாடாவில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 87 பேர் கொல்லப்பட்டு, 650 பேர் காயமடைந்தனர்.
• 1990 - புலிகளின் குரல் வானொலி தொடங்கப்பட்டது.
• 2004 - டொமினிக்கா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம், போர்ட்ஸ்மவுத் நகரில் கடுமையான சேதத்தை விளைவித்தது.

http://www.maalaimalar.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

கரீபியன் கடலில் பிரம்மாண்ட பிளாஸ்டிக் கழிவுகளின் படலம்

மிகப்பெரிய அளவிலான பிளாஸ்டிக் கழிவு குப்பைகள் கரீபியன் கடலில் ஹோண்டுராஸ் மற்றும் குவாட்டமாலா கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டன.

  • தொடங்கியவர்

தங்கக் கோட்டை

15jkrFort%20Knox

அமெரிக்க அரசிடம் தங்கம் எக்கச்சக்கமாக இருக்கிறது. அவற்றை எங்கே அது வைத்திருக்கிறது தெரியுமா? கென்டுகி என்ற இடத்தில் ஒரு பாதுகாப்பான பகுதியில் வைத்திருக்கிறது. குறிப்பாக எந்த இடத்தில்? நாக்ஸ் கோட்டையில் (Fort Knox). வட கென்டுகியிலுள்ள அமெரிக்க ராணுவ கேந்திரம் அது. ஒரு லட்சத்துக்கும் அதிக ஏக்கர் பரப்பு கொண்டது. 14.73 கோடி அவுன்ஸ் தங்கக் கட்டிகள் இந்தக் கோட்டையின் உள்ளே உள்ள பாதுகாப்புப் பெட்டகங்களில் உள்ளன. இன்றைய தேதிக்கு 170 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது (ஒரு பில்லியன் என்பது 100 கோடி).

     

இந்தக் கோட்டையை 1936 டிசம்பரில் கட்டி முடித்தது அமெரிக்க ராணுவம். 1937 ஜனவரியில் பல கப்பல்கள் மூலமாகத் தங்கம் இங்கே எடுத்து வரப்பட்டது. 1971-லேயே தங்க அளவீட்டைக் கொண்டு மதிப்பிடும் முறையிலிருந்து அமெரிக்கா பின்வாங்கிக் கொண்டது. என்றாலும் தங்கம் என்பது பெரும் சொத்துதானே!

15jkrFort%20Knox1
 

யாருக்காவது இந்தத் தங்கத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தால் அதற்குச் சுலபமான வழிமுறை இருக்கிறது. கோட்டை நாக்ஸைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வேலிகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். அவற்றில் இரண்டு மின் இணைப்பு கொண்டவை. மறக்காமல் வீடியோ கேமராக்களைத் தவிர்க்க வேண்டும். கிரானைட் சுவர்களை உடைத்துவிட வேண்டும். ஒவ்வொரு சுவரும் நான்கு அடி அகலம் கொண்டது. இந்தச் சுவர்களுக்கிடையே 750 டன் எஃகு கம்பிகளும் உள்ளன. ராணுவக் காவலாளிகளைத் தாண்ட வேண்டும். பலவித பூட்டப்பட்ட கதவுகளை உடைக்க வேண்டும்.

உள்ளே இருக்கும் 22 டன் பாதுகாப்புப் பெட்டகத்தின் கதவு உங்களை வரவேற்கும். அதைத் திறப்பது ஒன்றும் கஷ்டமில்லை. அங்குள்ள அத்தனை முக்கிய ஊழியர்களுக்கும் அதற்கான சர்வதேச எண்கள் உண்டு. (ஆனால் ஒவ்வொருவரிடமும் ஒரு பகுதிதான் இருக்கும். மற்றவர்களிடம் புதைந்திருக்கும் சங்கேத எண் அவர்களுக்குத் தெரியாது. தவிர இந்த எண்கள் தினமும் மாற்றப்படுகின்றன).

15jkrFort%20Knox2
 

இந்தப் பெட்டகத்தைத் திறந்துவிட்டால் உள்ளே சிறு சிறு பெட்டகங்களில் 5,000 டன் தங்கக் கட்டிகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக் கொண்டு வெளியே வர வேண்டியதுதான். ஆனால் என்ன, வெளியே சுமார் 30,000 ராணுவ வீரர்கள், துப்பாக்கியுடன் உங்களுக்காகக் காத்திருப்பார்கள். காரணம் கோட்டையைச் சுற்றி நான்கு காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் மெஷின் கன்களைத் தாங்கிய வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

நாக்ஸ் கோட்டையிலுள்ள ஜன்னல்கள் உட்புறமும், வெளிப்புறமும் கண்ணாடிகளால் சீல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கண்ணாடிகள் தீப்பற்றாதவை, குண்டுகளால் பிளக்காதவை. வெளியிலிருந்து யாரும் இவற்றின் வழியாக உள்ளே இருப்பதைப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக இந்த ஜன்னல்களுக்குக் கறுப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது.

இதன் கதவைத் திறக்கும் ஊழியர்களின் ஷிப்டுகள் திடீர் திடீரென்று முன்னறிவிப்பின்றி மாற்றப்படும்.

15jkrfor
 

சமீபத்தில் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்டீவன் நுசீன் என்பவர் நாக்ஸ் கோட்டையை விசிட் செய்தார். இப்படியொரு அதிகாரபூர்வ நிகழ்வு என்பது மிகவும் அரிதான ஒன்று. “அங்கு நான் எதிர்பார்க்கும் தங்கம் இருக்குமென்று நினைக்கிறேன். நாங்கள் அங்கு செல்லும்போது அங்கு தங்கம் இல்லையென்றால் அது ஒரு திரைப்படத்தைப் போலதான் இருக்கும்’’ என்றார். அவர் முன்னர் ஹாலிவுட் படத் தயாரிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாக்ஸ் கோட்டையின் வெளிப்புறம் ஜேம்ஸ் பாண்ட் படமான Goldfinger-ல் இடம் பெற்றது.

ஒரு காலத்தில் சிறந்த ராணுவத் தளபதியாக விளங்கிய ஹென்றி நாக்ஸ் என்பவரின் பெயரில்தான் இந்தக் கோட்டை பெயரிடப்பட்டது. தங்கம் மட்டுமல்ல; அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், லிங்கனின் கெடிஸ்பார்க் உரை, மாக்னா கார்ட்டா (இங்கிலாந்தின் மன்னன் ஜான் பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து அமெரிக்காவை நீக்கிய ஒப்பந்தம்) ஆகியவற்றின் ஒரிஜினல்கள்கூடச் சேமிக்கப்பட்டு வருகின்றன.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

மாவீரன் நெப்போலியனின் கிரீடத்தில் இருந்த தங்க இலை 625,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனை

 


மாவீரன் நெப்போலியனின் கிரீடத்தில் இருந்த தங்க இலை 625,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனை
 

பாரிஸில் மாவீரன் நெப்போலியனின் கிரீடத்தில் இருந்த தங்க இலை ஏலத்தில் விடுப்பட்டுள்ளது.

மாவீரன், பேரரசர் நெப்போலியனும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்திய வேலைப்பாடு மிகுந்த 400 பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

மாவீரன் நெப்போலியன் 1804 ஆம் ஆண்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். அப்போது அவருக்கு விலை உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்பட்டது. அதில் தங்க இலைகள் பொருத்தப்பட்டிருந்தன.

கிரீடத்தின் எடை அதிகமாக இருந்ததால் அதில் பொருத்தப்பட்ட 6 தங்க இலைகள் பிரித்து எடுக்கப்பட்டன. பின்னர் அவை பொற்கொல்லர் மார்டீன் ருல்லியம் பியன்னேசிடம் கொடுக்கப்பட்டது.

அதை அவர் தனது மகள்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அதில் ஒரு தங்க இலை பாரிஸில் உள்ள ஓசினெட் மையத்தில் ஏலம் விடப்பட்டது.

இதன்போது 625,000 யூரோக்களுக்கு (550,000 பிரிட்டிஷ் பவுண்ட்ஸ்) ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மதிப்பில் 1127,58,943 ரூபா.

எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட 6 மடங்கு அதிகமான தொகைக்கு இந்த தங்க இலை ஏலத்தில் விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏலத்தில் விடப்பட்ட பொருட்களில் நெப்போலியனின் மனைவி ராணி ஜோஸப்பினுக்கு சொந்தமான தங்க பூக்கள் அலங்காரத்துடன் கூடிய நகைப்பெட்டியும் அடங்கும்.

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்
‘வாழ்க்கை கண்ணாடியாக ஆகக் கூடாது’
 

image_06c21ff903.jpg“எனக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்” எனக் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கேள்வி கேட்பது, மிகக் கொடுமையான உரையாடல்தான். 

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவருக்கு மற்றவர் ஏதெனும் குறைகளை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்காக இவ்வளவு காலம்வரை, செய்த நல்ல காரியங்களை மறந்து பேசலாமா? வெறுப்பான வார்த்தைகள் நெஞ்சத்தைக் குதறிவிடும். இதனால் ஏற்படும் மனச்சிதைவு, எவ்வளவு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா? பெற்ற பிள்ளைகள்கூட, இத்தகைய தவறான கேள்விகளைப் பெற்றோர்களிடம் கேட்பதுண்டு.  

வசதிக்குறைவு காரணமாக, சிலவிடயங்களைச் செய்யாமல் விட்டுவிடலாம். இது பெரும் குற்றமும் இல்லை. நல்ல குடும்பத்தில் நற்பண்புகள் கொண்டவர்கள் பேசும் வார்த்தையில் கண்ணியத்தைக் கைக்கொள்ள வேண்டும். வாழ்க்கை கண்ணாடியாக ஆகக் கூடாது.  

  • தொடங்கியவர்

1963 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோன் எவ். கென்­னடி சுட்டுக் கொல்­லப்­பட்டார்

வரலாற்றில் இன்று…

நவம்பர் – 22

 

1574 : சிலியின் ஜுவான் பெர்­னாண்டஸ் தீவுகள் கண்­டு­பி­டிக்­கப் பட்­டன.

1908 : அல்­பே­னிய அரிச்­சு­வடி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

varalaru1-1.jpg1922 : எகிப்­திய பாரோவின் 3,300 ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட சமாதி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

1935 : பசிபிக் பெருங்­க­டலைத் தாண்டி முதன்­மு­றை­யாக விமானத் தபால்­களை விநி­யோ­கிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலி­போர்­னி­யாவை விட்டுப் புறப்­பட்­டது. (இவ்­வி­மானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்­க­ளுடன் பிலிப்­பைன்ஸின்
மணி­லாவை அடைந்­தது.)

1940 : இரண்டாம் உலகப் போர்: இத்­தா­லி­யரின் ஆக்­கி­ர­மிப்பைத் தொடர்ந்து கிரேக்கப் படைகள் அல்­பே­னி­யா­வுக்குள் நுழைந்து கோரிட்­சாவை விடு­வித்­தன.

1942 : இரண்டாம் உலகப் போரின்­போது, ரஷ்­யாவின் ஸ்டாலின்­கி­ராட்டில் ஜேர்­ம­னிய படைகள் சர­ண­டைந்­த­தாக ஜேர்­ம­னிய தள­பதி பிரட்றிக் பவுலஸ், ஹிட்­ல­ருக்கு தந்தி மூலம் தகவல் அனுப்­பினார்.

1943 : இரண்டாம் உலகப் போரின்­போது, அமெ­ரிக்க ஜனா­தி­பதி பிராங்­கிளின் ரூஸ்வெல்ட், பிரித்­தா­னியப் பிர­தமர் வின்ஸ்டன் சேர்ச்சில், சீனத் தலைவர் சியாங் காய்-சேக் ஆகியோர் எகிப்தின் தலை­நகர் கெய்­ரோவில் சந்­தித்­தனர்.

1943 : பிரான்­ஸிடம் இருந்து லெபனான் சுதந்­திரம் பெற்­றது.

1956 : ஒலிம்பிக் விளை­யாட்டு விழா மெல்­பேர்னில் ஆரம்­ப­மா­கி­யது.

1963 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோன் எப். கென்­னடி டெக்சாஸ் மாநி­லத்தில் லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்­ப­வனால் சுட்டுக் கொல்­லப்­பட்டார். டெக்சாஸ் மாநில ஆளுநர் ஜோன் கொனலி படு­கா­ய­ம­டைந்தார். அதே நாளில் உப ஜ­னா­தி­பதி லிண்டன் ஜோன்சன் அமெ­ரிக்­காவின் 36ஆவது ஜனா­தி ப­தி­யானார்.

1965 : இந்­தோ­னே­ஷி­யாவின் கம்­யூ­னிசத் தலைவர் இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

Ren%C3%A9_Moawad.jpg1974 : ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையில் பலஸ்­தீன விடு­தலை இயக்கம் பார்­வை­யாளர் அந்­தஸ்தைப் பெற்­றது.

1975 : பிரான்­சிஸ்கோ பிராங்­கோ வின் மறைவை அடுத்து ஜுவான் கார்லொஸ் ஸ்பெயின் மன்­ன­னானார்.

1986 : ட்ரவோர் பேர்பிக் என்­ப­வரை மைக் டைசன் தோற்­க­டித்து மிக இளம் வயதில் உலக அதி­பார குத்­துச்­சண்டை சம்­பி­ய­னாகத் தெரி­வான பெரு­மைக்­கு­ரி­ய­வ­ரானார்.

1989 : லெப­னானின் மேற்கு பெய்­ரூத்தில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் லெபனான் ஜனா­தி­பதி ரெனே மோவாத் கொல்­லப்­பட்டார்.

1990 : மார்­கரட் தட்சர் பிரித்­தா­னிய கன்­சர்­வேட்டிவ் கட்சித் தலைவர் தேர்­த­லி­லி­ருந்து வாபஸ்­பெற்றார். பிரித்­தா­னிய பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து அவர் வில­கு­வதை இது உறு­திப்­ப­டுத்­தி­யது.

2002 : நைஜீ­ரி­யாவில் உலக அழகிப் போட்­டி­யா­ளர்­களை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் 100 பேருக்கு மேல் கொல்­லப்­பட்­டனர்.

2003 : ஜோர்­ஜி­யாவின் ஜனா­தி­பதி எட்வார்ட் ஷெவர்­நாட்­சேயின் எதி­ரா­ளிகள் நாடா­ளு­மன்­றத்தைத் தம் கட்­டுப்­பாட்­டினுள் கொண்டு வந்து ஜனா­தி­ப­தியை பதவி வில­கு­மாறு கோரினர்.

2004 : யுக்­ரேனில் ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் மக்­களின் புரட்சி ஆரம்­ப­மா­கி­யது.

2005 : ஜேர்­ம­னியின் முதலாவது பெண் அதிபராக (சான்சிலர்) ஏஞ்சலா மேர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.

2012 : காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையிலான 8 நாள் யுத்தத்தின்பின் போர்நிறுத்தம் ஏற்பட்டது.

2015 : மியன்மாரில் மண்சரிவினால் 115 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

78 வயதில் ஒரு சாதனை... மோசஸ் பாட்டியின் கதை! #MotivationStory

 
 

உன்னை அறிந்தால்

ற்றுக்கொள்ள வயது தடையில்லை. எதையும், யாரும், எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஈடுபாட்டோடு கற்றுக்கொண்ட அந்த வித்தையால் புகழ் பெறவும் முடியும். இந்த உண்மையை உணர்த்த வரலாறு, எத்தனையோ உதாரணங்களை விட்டுச் சென்றிருக்கிறது. அந்த உதாரண நாயகிகளில் ஒருவர், ‘மோசஸ் பாட்டி’ (Grandma Moses). அமெரிக்காவைச் சேர்ந்தவர். இளம் வயது முதல் வறுமையான சூழ்நிலையில் வளர்ந்து, தன் 70 வயதின் பிற்பகுதியில் சாதனைபுரிந்து அமெரிக்காவையே வியக்கவைத்தவர். மோசஸ் பாட்டியின் கதை, எதையாவது சாதிக்கத் துடிப்பவர்களுக்கு டானிக். அப்படி என்ன சாதனைபுரிந்தார் மோசஸ் பாட்டி... அவர் கதையைப் பார்ப்போமா?

 

மோசஸ் பாட்டி

அன்னா மேரி ராபர்ட்சன்  மோசஸ் (Anna Mary Robertson Moses) நியூயார்க்கில்  உள்ள கிரீன்விச் டவுனில் 1860-ம் ஆண்டு பிறந்தார். அப்பா விவசாயி, ஒரு மில்லையும் நடத்திக்கொண்டிருந்தார். இரண்டு, மூன்று பேர்களைக்கொண்ட குடும்பமாக இருந்தால் அவருடைய வருமானமே போதுமானதாக இருந்திருக்கும். அது பெரிய குடும்பம். அன்னா மேரிக்கு நான்கு சகோதரிகள், ஐந்து சகோதரர்கள். அந்தக் குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்திருந்தார் அன்னா மேரி. அமெரிக்காவில், `ஒன் ரூம் ஸ்கூல்’ என்று ஒன்று உண்டு. அங்கே சில காலம் படித்தார் மேரி. அங்கிருந்தபோது, அவருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது.  

நமக்கு எதில் வேண்டுமானாலும் ஈடுபாடு, ஆர்வம் இருக்கலாம். ஆனால், நினைத்ததெல்லாம் எல்லோருக்கும் எப்போதும் கிடைத்துவிடுவதில்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது. வீட்டுச்சூழல், மேரியை வேலைக்குச் செல்ல நிர்ப்பந்தப்படுத்தியது. ஒரு பணக்காரக் குடும்பத்தினரின் பண்ணையில் வேலைக்குச் சென்றபோது மேரிக்கு வயது 12. பண்ணை வேலை மட்டுமல்ல... பல பணக்கார வீடுகளில் வீட்டு வேலை, துணி தைத்துக் கொடுப்பது, வீட்டைப் பராமரிப்பது எனப் பல வேலைகளைச் செய்தார் மேரி. ஒரு நாள், இரு நாள் அல்ல... 15 ஆண்டுகளுக்கு இந்த வேலைகள் தொடர்ந்தன. 

வேலையைக் கடமைக்காகச் செய்யும் சுபாவம் மேரிக்கு இல்லை. துணி தைப்பதையேகூட கலைநயத்தோடு செய்வார். அவர் தைத்துக் கொடுக்கும் ஆடைகளைப் பார்த்தால், அப்படியே கண்ணில் ஒற்றிக்கொள்ளத் தோன்றும். வழக்கமான பாணியில் அமைந்த உடைகளாக இருந்தாலும், மேரி அதில் சின்னப் பூ வேலைப்பாட்டுடன் கூடிய எம்பிராய்டரி வேலைகளையும் செய்துவைப்பார். தைக்கக் கொடுத்தவர்களுக்கு மனம் துள்ளிக் குதிக்கும். சிலர் அவரின் திறமையை ஊக்குவிப்பதும் உண்டு. ஒரு வீட்டில், இவரிடமிருக்கும் ஆர்வத்தைப் பார்த்து வரைந்து பழகுவதற்கான தூரிகை, கிரையான்ஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

ஓவியம்

அன்னா மேரி வேலை பார்த்த பண்ணையில் இன்னொருவரும் பணியில் இருந்தார். அவர் பெயர் தாமஸ் சல்மான் மோசஸ் (Thomas Salmon Moses). இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போய்விட்டது. திருமணம் செய்துகொண்டார்கள். ஆனாலும் நிலைமை மாறிவிடவில்லை. பல பண்ணைகளில் பணிபுரிந்தார்கள். மேலும் கொஞ்சம் வருமானம் வேண்டுமென்பதற்காக உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பது, பாலில் வெண்ணையெடுத்து விற்பது... என என்னென்னவோ வேலைகளையெல்லாம் செய்தார் அன்னா மேரி. ஒரு கட்டத்தில் எப்படியோ மோசஸும் மேரியும் இணைந்து ஒரு பண்ணையை விலைக்கு வாங்கினார்கள். வாழ்க்கை சுமுகமாக நகர்ந்துகொண்டிருந்தது. 

ஆரம்பத்தில் ஷீநந்தோவா (Shenandoah Valley) என்ற இடத்தில் இருந்தார்கள். பிறகு நியூயார்க்கில் இருக்கும் ஈகிள் பிரிட்ஜ் பகுதியில் குடியேறினார்கள்... ஐந்து குழந்தைகளுடன் இனிமையாக வாழ்ந்தார்கள்.. சுபம்... இப்படி முடித்துவிடலாம்தான். ஆனால், மேரியின் வாழ்க்கை முதுமையில்தான் சுவாரஸ்யம் பெற்றது. மேரியின் கணவர், தாமஸ் மோசஸ், 67-வது வயதில் மாரடைப்பால் காலமானார். மகன் பண்ணையைப் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார். 

பண்ணை வேலை, குடும்பப் பொறுப்புகள் அனைத்திலிருந்தும் ஓய்வு பெற்று மகள் வீட்டில் வசிக்கத் தொடங்கினார் மேரி. ஆனாலும் வேலை பார்த்த கையை சும்மா வைத்துக்கொண்டிருக்க முடியவில்லை. நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் துணிகளில் எம்பிராய்டரி வரைந்து கொடுக்க ஆரம்பித்தார். அதையும் அவரால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. மேரியின் 76-வது வயதில் அவருக்கு `ஆர்த்ரிட்டிஸ்’ (Arthritis) எனப்படும் கீல்வாதம் வந்தது. வீட்டில் இருப்பவர்கள் அவரைச் `சும்மா இரு...’ என்று சொன்னாலும், அவரால் வெறுமனே எங்காவது உட்கார்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ இருக்க முடியவில்லை. அதே நேரத்தில் எம்பிராய்டரி வரைவதும் கடினமாக இருந்தது.

மோசஸ் பாட்டி வரைந்த ஓவியம்

மேரி அல்லல்படுவதைப் பார்த்தார் அவர் சகோதரி. அவர்தான் இவருக்கு ஒரு யோசனை சொன்னா... `நீ ஏன் ஓவியம் வரையக் கூடாது?’ அந்த யோசனை மேரிக்குப் பிடித்திருந்தது. 78-வது வயதில் ஓவியம் வரைய ஆரம்பித்தார். மெள்ள மெள்ள அவர் வரைந்த ஓவியங்கள் விற்பனைக்கும் வர ஆர்ம்பித்தன. தன் ஓவியங்கள் அனைத்திலும் தான் வாழ்ந்த பண்ணை, சுற்றியுள்ள இடங்கள் என தன் நினைவுகளை வரைய ஆரம்பித்தார். பல ஓவியக் கண்காட்சிகள்... புகழ் வீடு தேடி வந்தது. கிட்டத்தட்ட 100 வயது வரை வாழ்ந்தார் மேரி தாம்சன் மோசஸ். 

 

பல பிரபல பத்திரிகைளின் அட்டைப்படத்தை அலங்கரித்தார். தொலைக்காட்சியில் தோன்றினார். பத்திரிகைகள், அவரை `மோசஸ் பாட்டி’ (Grandma Moses) என்றே குறிப்பிட்டன. அவர் வாழ்க்கையை ஓர் ஆவணப்படமாகக்கூட எடுத்திருக்கிறார்கள். உங்களுக்கு வரைய, இசை கற்க, பட்ட மேற்படிப்புப் படிக்க ஆர்வமாக இருக்கிறதா? ஆனால், வயதாகிவிட்டதே எனத் தயங்குகிறீர்களா? தயக்கமே வேண்டாம். மோசஸ் பாட்டியை, அவர் கதையை நினைத்துக்கொள்ளுங்கள். இன்னும் பல உயரங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன என நினைத்துக்கொள்ளுங்கள். வெற்றி மிக அருகில்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

யாழ்ப்பாணத்தில் புதியவகை சமனிலைக் கரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.