Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜனவரி - 28

 

654varalu2.jpg1547 : இங்­கி­லாந்து மன்னன் எட்டாம் ஹென்­றி இறந்­ததால் அவரின் 9 வயது மகன் ஆறாம் எட்வர்ட் இங்­கி­லாந்தின் மன்னன் ஆனான். 

 

1624 : கரி­பி­யனில் முத­லா­வது பிரித்­தா­னியக் குடி­யேற்ற நாடான சென் கிட்ஸ், சேர் தோமஸ் வோர்னர் என்­ப­வரால் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1679 : சென்னை கோட்டைப் பகு­தியில் சிறு நில­ந­டுக்கம் உண­ரப்­பட்­டது.

 

1820 :  ஃபாபியன் பெலிங்­ஷோசென் தலை­மையில் ரஷ்ய  நாடுகாண் பய­ணக்­குழு அந்­தார்ட்­டிக்­காவை அடைந்­தது.

 

1882 : சென்னை நகரில் தொலை­பேசி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1855 : பனாமா கால்வாய் ரயில்­பாதை ஊடாக முதல் தட­வை­யாக அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­தி­லி­ருந்து பசுபிக் சமுத்­தி­ரத்­துக்கு ரயி­லொன்று பய­ணித்­தது.

 

1909 : ஐக்­கிய அமெ­ரிக்கப் படைகள் குவாண்­டா­னாமோ விரி­கு­டாவைத் தவிர்த்து கியூ­பாவின் ஏனைய பகு­தி­களிலிருந்து வில­கின.

 

1918 : பின்­லாந்தின் தலை­நகர் ஹெல்­சிங்­கியை புரட்­சி­யா­ளர்கள் கைப்­பற்­றினர்.

 

1932 : ஜப்­பா­னியப் படைகள் சீனாவின் ஷாங்காய் நகரைத் தாக்­கின.

 

654varalu1.jpg1933 :  பாகிஸ்தான் எனும்  பெயரை சௌத்ரி ரஹ்மத் அலி உரு­வாக்­கினார். இந்­தி­யாவின் பஞ்சாப், வட­மேற்கு முன்­னிலை மாகாணம் (ஆப்கான் மாகாணம்), காஷ்மீர், சிந்து, பலு­சிஸ்தான் ஆகிய இந்­திய வட­பி­ராந்­திய அல­கு­களின் பெயர்­களை முதல் எழுத்­து­களை அடிப்­படைக் கொண்டு இப்­பெயர் அமைக்­கப்­பட்­டது.

 

1935 : ஐஸ்­லாந்து, கருக்­க­லைப்பைச் சட்­ட­பூர்­வ­மாக்­கிய முதல் நாடா­னது.

 

1986 : நாசாவின் செலஞ்சர் விண்­கலம் புறப்­பட்ட 73ஆவது வினா­டியில் வானில் வெடித்துச் சித­றி­யதில் ஏழு விண்­வெ­ளி­ வீ­ரர்கள் கொல்­லப்­பட்­டனர்.

 

1987 : மட்­டக்­க­ளப்பு கொக்­கட்­டிச்­சோ­லையில் 86 தமிழ் இளை­ஞர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

 

2006 : போலந்தில் சர்­வ­தேச கண்­காட்­சி­யொன்­றின்­போது கட்­ட­ட­மொன்றின் கூரை பனியின் சுமை­யினால் இடிந்து வீழ்ந்­ததால் 65 பேர் உயி­ரி­ழந்­தனர். 

 

2002 : கொலம்­பி­யாவில் போயிங் விமானம்  மலை­யொன்றில் மோதியதால் 92 பேர் உயிரிழந்தனர்.

 

2010 : பங்களாதேஷின் முன்னாள் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை செய்த ஐவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=654#sthash.BaluQiH4.dpuf
  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

12474107_976536195728408_129429162770056

முன்னணி இளம் கதாநாயகியும், உலக நாயகனின் புதல்வியும்,
இசையமைப்பாளர், நடன தாரகை, பாடகி என்று சகலதுறை திறமையையும் கொண்ட ஷ்ருதி ஹாசனின் பிறந்தநாள் இன்று

 

  • தொடங்கியவர்

“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்…

1936550_1062695183789271_956494933623367

* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்

* வாழை வாழ வைக்கும்

* அவசர சோறு ஆபத்து

* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

*இருமலை போக்கும் வெந்தயக் கீரை

* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.

* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

* சித்தம் தெளிய வில்வம்

* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

* சூட்டை தணிக்க கருணை கிழங்கு

* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

* வாத நோய் தடுக்க அரைக் கீரை

* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

* பருமன் குறைய முட்டைக்கோஸ்

* பித்தம் தணிக்க நெல்லிக்காய்

உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.

நலம் உடன் வாழ்வோம்

vikatan

  • தொடங்கியவர்

மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்

 

Stephen%20Hawking350.jpgலண்டன்: மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது. மரணமே இறுதியானது என இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை. அதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கம்ப்யூட்டர் போலத்தான் நமது மூளையும். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் கம்ப்யூட்டர் செயலிழந்து விடுமோ அதுபோலத்தான் மூளையும். மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும்.

அதன் பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான் இறுதியானது. மரணத்திற்கு பிறகு சொர்க்கமோ, நகரமோ கிடையாது. அதேபோல், மறுபிறவியும் கிடையாது. மரணத்திற்கு பிறகு வாழ்க்கை என்பது கற்பனையானது. அது மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள்.

நான் கடந்த 49 ஆண்டுகளாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. அதேநேரத்தில், இறப்பதற்கும் அவசரப்படவில்லை'' என்றார்.

vikatan

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

பாலிவுட் குயின் கங்கனா ரனாவத், தன் வாழ்க்கையைப் புத்தகமாக எழுதப்போகிறார். `சொந்த வாழ்வில் நான் மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கிறேன். இதற்குப் பின்னால், 10 ஆண்டு களாக நான் சந்தித்த மனம் மற்றும் உடல்ரீதியிலான தாக்குதல்கள் அதிகம். நடிகை கனவுடன் நான் சினிமாவுக்குள் வந்தபோது, என் அப்பா வயதுக்காரர் ஒருவர் என்னை உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தினார். சிலர் நமக்கு உதவி செய்பவர்களாக அறிமுகம் ஆவார்கள். ஆனால், எப்போதும் நமக்கான உணவு மட்டும் இலவசமாகக் கிடைக்காது. என் தோல்விகளை, சவால்களைச் சமாளித்தது எப்படி என அந்தப் புத்தகத்தில் சொல்லப்போகிறேன். இது இன்றைய இளம்பெண்களுக்கு மிகவும் பயன்படும்’ எனச் சொல்லியிருக்கிறார் கங்கனா.  படிங்க பெண்களே!

p56a.jpg

red-dot.jpg இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் சைபர் க்ரைம்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தொட்டுவிட்டது. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்பில் இளம்பெண்களைத் தவறாகச் சித்திரித்து படங்களை அனுப்புவது, கணவன்-மனைவி அந்தரங்கப் படங்களை அவர்களுக்கே தெரியாமல் போன், கம்ப்யூட்டரை ஹேக்செய்து வெளியிடுவது என, குற்றங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேபோகிறது. இதைத் தடுக்கவும் குறைக்கவும் இளைஞர்களிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்த, மும்பை போலீஸ் மேற்கொண்ட, ட்விட்டர் பிரசாரத்தில், ட்ரெண்டியாக மீம்ஸ், ஒன்லைனர் ட்வீட்ஸ் என இறங்கியடிக்க, பிரசாரம் மும்பையைத் தாண்டியும் வைரல் ரீச். ம்... நம்ம ஊர்ல ஸ்டிக்கர் பிரசாரம்தான்!

red-dot.jpg உலகக் கோப்பையை வென்று தன்னை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் தோனி மட்டும் அல்ல, ராகுல் டிராவிட்டும் இருக்கிறார். தோனிக்கு டி-20 உலகக் கோப்பை என்றால், டிராவிட்டுக்கு ஜூனியர் உலகக் கோப்பை. இந்த மாத இறுதியில், 19 வயதுக்கு உட்பட்டோ ருக்கான உலகக் கோப்பை போட்டிகள் வங்கதேசத்தில் நடக்கவிருக்கிறது. இந்தியாவின் ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருக்கும் ராகுல் டிராவிட்டுக்கு முதல் சவால் இது. `இது இளம் வீரர்களுக்குக் கிடைத் திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு. அவர்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு பயிற்சியாளராக, என் நோக்கம் உலகக் கோப்பையை வெல்வது கிடையாது; எனது அணியில் இருந்து சிறந்த வீரர்கள் எதிர்காலத்தில் இந்திய அணியில் விளையாட வேண்டும்’ என்கிறார் ராகுல் டிராவிட். ஆல் தி பெஸ்ட் ஜென்டில்மேன்!

p56b.jpg

vikatan

  • தொடங்கியவர்

 

மகனை தயார்ப்படுத்தும் சனத்

இலங்கை கிரிக்கெட் அணியில் அதிரடி தொடக்க வீரராக காலடி பதித்தவர் முன்னாள் அணித்தலைவரான சனத் ஜெயசூரியா. இடது கை துடுப்பாட்ட வீரரான சனத், டெஸ்டில் 6,973 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டியில் 13,430 ஓட்டங்களையும் குவித்து சாதனை படைத்தவர். மேலும், இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிறந்த பங்களிப்பு அளித்து உள்ளார்.

இந்நிலையில் தனது மகன் ரனுக்விற்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறார். சனத் ஜெயசூரியாவை போலவே இடது கை துடுப்பாட்ட வீரரான ரனுக்கும் தனது தந்தையின் அறிவுரைப் படி தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். இதனால் அடுத்த சனத் ஜெயசூரியாவை இலங்கை கிரிக்கெட் அணியில் விரைவில் எதிர்பார்க்கலாம்.

  • தொடங்கியவர்

 

பசங்க 2 நீங்கப்பட்ட காட்சி 01

  • தொடங்கியவர்
இது தான் நடிகை ஸ்ருதிஹாசன் அணிந்து வந்த ஃபல்குனி மற்றும் ஷேன் டிசைன் செய்த ஊதா நிற அழகிய எம்பிராய்டரி செய்யப்பட்ட கவுன்.

27-1453876374-1-shruthi-iifa-dress.jpg
27-1453876380-2-shruthi-iifa-low-neck-go
27-1453876386-3-shruthi-iifa-accessories
 
27-1453876404-2016-shruthi-iifa.jpg
  • தொடங்கியவர்

அந்தப் பாட்டிக்கு அந்த பச்சக் தேவையா?! hero feeling bad..!

அந்தப் பாட்டிக்கு அந்த பச்சக் தேவையா?!

  • தொடங்கியவர்

 

வானோடும் ஒளியோடும் விளையாடும் சாகசமே
====================================
நார்வேயில் தோன்றும் வடதுருவ ஒளி நடனத்தின் ஊடே ஃபாராகிளைடரில் பறக்கிறார் ஹொரேஷியோ லோரென்ஸ்.

இதைச் செய்ய வேண்டும் என்பது அவரின் நெடுநாள் கனவு. இந்த காணொளிக் காட்சிகள் ஒரே நாளில் எடுக்கப்பட்டவையல்ல. கடந்த ஜனவரியில் பத்து நாட்களுக்கு மேலாக எடுக்கப்பட்ட காணொளியின் சில காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

ஃபாராகிளைடரில் தொடர்ந்து ஐநூற்று அறுபத்து எட்டு கரணங்களை அடித்த உலக சாதனைக்கும் இவர் சொந்தக்காரர்.

காண்பவரை சொக்க வைக்கும் வடதுருவ இயற்கை ஒளிநடனத்தினூடே அவரது சாகச ஃபாராகிளைடர் பயணத்தின் காணொளிக் காட்சிகள் இவை.
  • தொடங்கியவர்

12552996_1684911991777356_44597448079093

  • தொடங்கியவர்

ஸ்டிக்கர்களை சுவரில், கதவுகளில் ஒட்டுவோம். ஆனால் கொலராடோவில் உள்ள Wibby Brewing Co.; என்ற நிறுவனம், சுமார் 1,50,000 ஸ்டிக்கர்களை ஒன்றின் மீது ஒன்றாக ஒட்டி, பெரிய பந்தை உருவாக்கி கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது. இந்த பந்தின் எடை 110 கிலோ.

12642514_671949092907636_172926647393033

12647399_671949089574303_342835171551311

11225730_671949116240967_568422034995712

VIKATAN

  • தொடங்கியவர்

 

பூமியின் சுழற்சி வேகம் குறைந்துகொண்டே போகின்றதா?

  • தொடங்கியவர்

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை: தவிர்க்கும் வழிமுறைகள்!

 

vasuki%281%29.jpgஸ்ரீஜாவிற்கு 12 வயது. அப்பா மருத்துவர், அம்மா வங்கிப் பணியாளர். தோழியின் பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்ற ஸ்ரீஜாவை,  குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து, தோழியின் அண்ணன் பலாத்காரம் செய்தான்.

மயக்கத்தில் இருந்ததால் ஸ்ரீஜாவிற்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இரவில் வீட்டுக்கே வந்து ட்ராப் செய்ததும் தோழியின் அண்ணனே. இரண்டு மாதங்கள் கழித்து, அவள் கருவுற்றிருப்பதாக டாக்டர் தெரிவித்தபோது, பெற்றோர் நிலைகுலைந்துவிட்டனர்.

சிறு பிள்ளையாக இருப்பதால் கருவை கலைக்க கூட முடியாத நிலை, மீறி செய்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்றனர் மருத்துவர்கள். ஒர் ஆண்டு காலம் வங்கி பணியிலிருந்து தற்காலிக விடுப்பு எடுத்து, ஸ்ரீஜாவை அழைத்துக் கொண்டு அவள் தாய்,  உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

9 மாதங்கள் கடந்த சமயத்தில், அவளின் உடல்நிலை பிரசவத்திற்கு ஏற்றதாக இல்லை. பலவீனமாக இருந்தாள். ஆனால்  பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் தன் குடும்ப கவுரவம் பாதித்து விடுமோ என்று எண்ணி, வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்தனர். இறுதியில் ஸ்ரீஜா இறந்தே போய்விட்டாள்.

ஸ்ரீஜாவின் மரணத்திற்கு யார் காரணம்? அவள் பார்ட்டிக்கு சென்றதா? கவுரவம் பார்த்து பெற்ற குழந்தையை சரியாக கவனிக்காத பெற்றோரா? பாலியல் கல்வி பற்றி குழந்தைகளுடன் பெற்றோர்களும் கற்றுக் கொள்ளாமல் இருப்பதா?

பள்ளி பருவங்களில், பாடத்தில் வரும் அறிவியல் விளக்கங்களை கூட மாணவர்களுக்குச் சொல்லித் தராமல், அதைத் தவிர்க்கும் ஆசிரியர்களே அதிகம். எது தேவை... எது முக்கியம்?  என ஆசிரியர்களுக்கே தெரியாதபோது,  குழந்தைகளை சொல்வதில் குற்றமில்லை. இந்த விவகாரத்தில் நமக்கு தெரிந்தது ஒரு ஸ்ரீஜா.  தெரியாத ஸ்ரீஜாக்கள் பலர் இருக்கிறார்கள்.
 
எப்படி பொருளாதாரம் முக்கியமோ, அதைவிட முக்கியம் குழந்தைகளின் பாதுகாப்பும் அவர்களின் எதிர்காலமும். வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பெற்றோர் உழைத்தால், அவற்றை அனுபவிக்கும் மனநிலை குழந்தைகளுக்கு வேண்டும் என்பதே நிதர்சனம்.

பாலியல் கொடுமை ஏன்?

ஒரு குழந்தையின் அந்தரங்க உறுப்புகளை எந்த வகையிலும் தவறாக பயன்படுத்துவதுதான் பாலியல் கொடுமை. அதை செய்பவன்/ள் குற்றவாளி. குற்றவாளிக்கும் குழந்தைக்கும் இடையில் அரசாங்கம், சமூகம், பெற்றோர் என மூன்று நபர்கள் இருக்கின்றனர். இதை கடந்து ஒரு குழந்தை பாலியல் கொடுமையில் பாதிக்கப்பட்டால்,  அது இம்மூவரின் கவனக்குறைவால் நடைபெறுகிறது என்பதே உண்மை.

முதலாவதாக அரசு. குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்புச் சட்டங்கள், திருத்தங்கள் ஆகியவற்றை girl%20child%282%29.jpgகொண்டு வர வேண்டும்.

இரண்டாவதாக சமூகம். பொது இடங்களில்  பாலியல் தொந்தரவுகளை பார்க்க நேர்ந்தால்,  நமக்கு ஏன் வம்பு என்று நழுவி விடுகிறோம். அது விபத்திலோ, விபரீத முடிவிலோ கொண்டு சென்றால், நாளிதழ்களில் வரும் செய்தியை படித்துவிட்டு, 'இச்' கொட்டி சமூகத்தை திட்டி தீர்க்கிறோம்.

இறுதியாக பெற்றோர், குழந்தையிடம் நேரம் செலவழிப்பதில்லை. நம்பகதன்மையான உறவை மேற்கொள்வதில்லை, கவனக்குறைவு, அலட்சியப் போக்கு, தம் பொறுப்புகளை வேறொருவரிடம் ஒப்படைத்து விடுவது இப்படி பல காரணிகளே குழந்தைகள் பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட காரணமாகிறது.

பாலியல் கொடுமை செய்யக் கூடியவர்கள் யார்?

பாலியல் குற்றவாளிகள் என்பவர்கள் குடிகாரர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், உளவியல் சிக்கலுக்குள்ளானவர்கள் என்றெல்லாம் சில தவறான கருத்து இருக்கிறது. உண்மையில் அவர்கள் உங்களில் ஒருவராகவும் இருக்கலாம். வெளிநபராகவும் இருக்கலாம், யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்கள்தான் என்று வகைப்படுத்த முடியாது. படிச்சவங்க, பெரிய பதவியில இருப்பவங்க, கவுரவமான குடும்பத்தில் இருப்பவங்க, சின்ன பசங்க, பெரிய பசங்க, வயதானவங்க போன்ற அடையாளங்களால் நாம் நம்பிக்கை கொள்வது தவறாக முடிந்துவிடக்கூடும். பாலியல் கொடுமைக்குள்ளான குழந்தைகள் பற்றிய ஒரு ஆய்வில்,  60% சதவிகித  குற்றவாளிகள் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவரே என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

girl%20rap%20600%201.jpg

குழந்தைகளை நெருங்கும் ஆபத்துகள்

தன்னுடைய அந்தரங்க உறுப்புகளை குழந்தையிடம் காட்டுவது அல்லது குழந்தைகளின் உறுப்புகளை காட்ட சொல்வது, அந்தரங்க உறுப்புகளை தொடுவது மற்றும் தொடச் செய்வது, குழந்தைகள் ஆடையில்லாமல் இருக்கும்போது மறைந்திருந்து பார்ப்பது, வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது, ஆபாச படங்களை காண்பிப்பது மற்றும் அது பற்றின விளக்கங்களை தருவது, சீக்ரெட் கேம் (ரகசிய கேம்) விளையாடலாம் என அழைப்பது, பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்து அதீத அன்புடன் இருப்பது போல நடிப்பது, குழந்தையின் பெற்றோரிடம்,  'நீங்கள் செல்லுங்கள்.. நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன்' என அதீத உரிமையை எடுத்துக் கொள்வது, மற்ற குழந்தைகள் போல விளையாட விடாமல் தனிமைபடுத்துவது, இருவருக்குமான விஷயங்களை நெருக்கமானவரிடம் சொல்ல அனுமதிக்காமல் சூழ்ச்சி செய்வது, குழந்தைகளை குற்றவாளிகள் என பட்டம் கட்டி பெற்றோரிடம்,  'நான் உங்கள் குழந்தையை திருத்துகிறேன்...' என்று நடிப்பது, அறைக்குள் அத்துமீறி நுழைவது போன்ற செயல்கள் ஒரு மனிதரிடம் தென்பட்டால்,  அவர் குற்றவாளி என அடையாளம் காணுங்கள்.
 
குழந்தையின் நடத்தையில் மாற்றம்


குழந்தைகள் தன் இயல்பு நிலையிலிருந்து மாறி, விரல் சூப்புதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல், தனிமையில் இருத்தல், பாலியலில் விருப்பம் காண்பித்தல், படிக்க மற்றும் விளையாட முடியாமல் தவித்தல், புதிய நபர்களுடன் சேர்தல், கவனமின்மை, வன்ம குணத்துடன் காணப்படுதல் என குழந்தைகளின் போக்கில் மாற்றமிருந்தால் அவர்களை கண்காணித்து, அக்கறையுடன் அவர்களுக்கு என்ன பிரச்னை என்று கேளுங்கள்.

சொல்ல தயங்கினாலும் அவர்களிடம் நம்பகத் தன்மையுடன் பேசி,  உண்மையை கேட்டறியுங்கள். சமயங்களில் குழந்தைகள் எதையும் வெளிப்படையாக சொல்ல தயங்கலாம்.
 
mask%20250%20%281%29.jpgகுழந்தைகள் தயங்குவதற்கான காரணங்கள்

நமக்கு நடந்த அனுபவத்தை பற்றி சொன்னால் பெற்றோர் தன்னை நம்ப மாட்டார்கள், அடிப்பார்கள், திட்டுவார்கள் என்ற பய உணர்வு.

பெற்றோரின் அன்பை இழந்துவிடுவோம் என்ற அச்ச உணர்வு, தங்களை வெறுத்து ஒதுக்கி விடுவார்களோ என்ற பயம்.

கொடுமை இழைத்தவர் மிகவும் தெரிந்தவராக இருப்பின்,  அவரின் அன்பை இழந்து விடுவோமோ என்ற குழப்பம்.

அவமானம், குற்ற உணர்ச்சி, தான் தவறு செய்து விட்டோம் என்ற மனோபாவம், நம் மீதுதான் தவறு என்று குற்றம் சாட்டப்படுவோம் என்ற எண்ணம்.

குற்றம் புரிபவர் மிரட்டுவதால் தனக்கோ, தன் பெற்றோருக்கோ ஆபத்து நேரிடும் என்ற பயத்தால், அவர்கள் தங்களுக்கு நடந்ததை சொல்ல தயங்குகின்றனர்.

கொடுமைக்கு தாங்களே பொறுப்பு என கொடுமைகளோடு போராட பழகிக் கொள்கின்றனர்.

பாலியல் கொடுமைகளை தவிர்க்கும் வழிகள்

குழந்தைகளிடம் நேரத்தை செலவழியுங்கள். உங்களின் பாதுகாப்பு வட்டத்துக்குள்ளேயே குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள். எவரையும் நம்பி குழந்தைகளை ஒப்படைக்காதீர்கள். குழந்தையிடம் பாலியல் கல்வி பற்றி கற்றுக் கொடுங்கள். டிவி, பேப்பரில் நடந்ததை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். தெரிந்தவரோ, அறிமுகமில்லாத நபரோ, யாராகினும் உள்ளாடைகளின் மூலம் மறைக்கப்படும் உடல் உறுப்புகளை தொட்டாலோ,  தொட முயற்சித்தாலோ அவரை விட்டு ஓடி வந்துவிடவேண்டும் என கற்றுக்கொடுங்கள்.

சேஃப்  டச்

தொடுதல் விதியை கற்றுக்கொடுங்கள். safe touch அதாவது, உன்னை சுத்தமாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெற்றோர் மற்றும் மருத்துவர் தொடலாம். unsafe touch, இதை தவிர வேறு காரணங்களுக்கு தொடுவது சரியல்ல என்று புரிய வையுங்கள். அசௌகரியமாக உணர்ந்தால் அங்கிருந்து உடனே வெளியேறுவது நல்லது என்றும், உடனே பெரியவர்களிடம் இதை பற்றி அவசியம் சொல்ல வேண்டும் என்றும் சொல்லுங்கள். வேண்டாம், முடியாது என்று கத்திக் கொண்டு அங்கிருந்தோ,  அந்த நபரிடம் இருந்தோ வெளியேற வேண்டும் என சொல்லித் தாருங்கள். பொதுவாக பாலியல் கொடுமைகள் மறைவான இடத்தில் நடப்பதால்,  அங்கிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள ஓடி வந்துவிட வேண்டும் என சொல்லி தரலாம்.

child%20middle%203.jpg

குழந்தை- பெற்றோர் உறவு

குழந்தைகளை நம்புங்கள்:

உங்கள் குழந்தையை நீங்கள்தான் நம்ப வேண்டும். அவர்கள் எவ்வளவு பெரிதாக சித்தரித்து சொன்னாலும் அவர்களின் பேச்சை கவனமாக கேளுங்கள். குழந்தை பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளது என்று தெரிந்தால், ''இது உன் தவறல்ல" என்று சொல்லி நீ சொல்வதை நம்புகிறேன் என தீர விசாரியுங்கள்.
 
பொறுமையை கடைபிடியுங்கள்:

அவர்களின் அனுபவத்தை சொல்லும் போது அழுது, கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள். அமைதியாய் கேளுங்கள். இது உனக்கு மட்டும் நடந்தது அல்ல, மற்ற குழந்தைகளுக்கும் இப்படி நடந்து இருக்க கூடும் என புரிய வையுங்கள். பின்னர், குற்றவாளியை கண்டறிந்து குழந்தையை பாதுகாப்பதில் முழு மூச்சாய் இறங்குங்கள். குழந்தையின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆறுதலாய் இருங்கள்.
 
பாதுகாப்பு கொடுங்கள்:

குழந்தையிடம் அதிக கவனத்தை செலுத்துங்கள். குழந்தைக்கு எப்போதும் ஆதரவாய் இருங்கள். பெற்றோரின் ஆதரவே குழந்தைகளின் எதிர்காலம். பாதுகாப்பாக உணர்வதற்கான செயல்களை செய்யுங்கள். நான் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு கவசமாய் மாறுங்கள்.

பாதிக்கபட்டோரை பழிக்காதீர்கள்:

ஏற்கனவே உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட குழந்தையை மேலும் மேலும் காயப்படுத்த வேண்டாம். நீ ஏன் அங்கு போனாய், உன்னை யார் அவரிடம் விளையாட சொன்னது போன்ற வார்த்தைகள் குழந்தையை பலவீனமாக்கும். தன் நிலையை புரிந்து கொள்ள எவருமில்லை என தனிமையை தேடும். தற்கொலை எண்ணம் தலைதூக்கும். வேறு விபரீதங்கள் கூட நடக்கலாம்.

child%20play%20600.jpg

குழந்தை வளர்ப்பில் கவனம்:

பெண் குழந்தைகளுக்கு மட்டுமே அறிவுரைகள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என அமல்படுத்த வேண்டாம். ஆண் குழந்தையின் மேலும் கவனத்தை திருப்புங்கள். ஆண் பெண் சம உரிமை, இருவருமே உலகில் வாழ தகுதியானவர், இருவருக்குமே சம உரிமையுண்டு, இருவரின் ஆற்றலும் திறமையும் சமம்தான்; உருவங்கள் மட்டுமே வேறுபாடு, மனம்-உணர்வு-வலி-விருப்பம் ஆகியவை இருவருக்குமான பண்புகள் என சமத்துவம் காண்பியுங்கள்.

ஆண்-பெண் குழந்தைகள் உறவு:

இருவரையும் ஒன்றாகவே விளையாட விடலாம், தவறில்லை. குறிப்பிட்ட வயதில் வரும் மாற்றங்கள் இயற்கையானவை,  இயல்பானவை என்று சொல்லுங்கள். சிறுநீர், வியர்வை மற்றும் மலம் எப்படி கழிவோ அதுபோல பாலுணர்வும் (sex) ஒரு மனிதக் கழிவுதான். இதை வெளியேற்றுவதற்கான வயது 18, பாலுணர்வு இருவரின் விருப்பத்தோடு நடைபெற வேண்டும். அது சூழ்நிலையாலோ, தனிநபரின் விருப்பத்தாலோ, கட்டாயப்படுத்தியோ, வன்முறை உணர்வோடோ இருக்க கூடாது என தெளிவாக புரிய வையுங்கள்.

girl%20child%20250%281%29.jpgசினிமா-நாடகம்-கதைகள் போன்றவற்றில் வரும் தவறான கருத்துகள் (myth):

ஒருவரை பலாத்காரம் செய்தால் அவர் தற்கொலை செய்து கொள்வது, ஒருவருடன் உடலுறவு மேற்கொண்டால் அவரைதான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை, இனி நமக்கு திருமணம் நடக்காது, பெற்றோர் சமூகம் ஒதுக்கி வைத்துவிடும் என்ற தவறான புரிதல் இவற்றையெல்லாம் களையுங்கள். உண்மையை எடுத்துச் சொல்லுங்கள். யதார்த்தத்தை விளக்குங்கள்.

பாகுபாடு
 
குழந்தைகளுக்கு நோ சொல்ல கற்றுக் கொடுங்கள்:

பெரியவராக இருந்தாலும் சரி, அப்பா, அம்மா, தாத்தா யார் வேண்டுமானாலும் தவறு செய்தால் தவறை எதிர்த்து கண்டிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள்.

உணவில், விளையாட்டிலும் வேண்டாம் பாகுபாடு:

ஆண் குழந்தைக்கு அதிக உணவு, பெண் குழந்தைக்கு குறைந்த உணவு. ஆண் குழந்தை சாப்பிட்ட பின் பெண் குழந்தை சாப்பிட வேண்டும். ஆண் பிள்ளைக்கு கார், பேட், பால்.  ஆனால் பெண் குழந்தைக்கு பொம்மை, சொப்பு சாமான். பெண் பிள்ளையெனில் பாட்டு க்ளாஸ், ஆண் பிள்ளையெனில் டென்னிஸ் க்ளாஸ் என்ற பாகுபாடுகளை தூக்கி எறியுங்கள். சம உரிமை கொடுத்து குழந்தையின் விருப்பத்திற்கேற்ப படிக்க விடுங்கள், விளையாட விடுங்கள்.

உடலுக்கு நீங்களே பாஸ்:

குழந்தைகளிடம், உங்களின் உடலுக்கு நீங்கள்தான் பாஸ். நீங்களே முதலாளி. உங்கள் உடல் உங்களுக்கு மட்டும்தான் பணிய வேண்டும். மற்றவரின் விருப்பத்திற்கு உங்களின் உடல் பணியக் கூடாது. தேவையில்லாமல் உங்கள் உடலை தொட யாருக்கும் உரிமையில்லை என்ற புரிதலை குழந்தைகள் மனதில் அழுத்தமாக ஏற்படுத்துங்கள்.

உங்கள் குழந்தை இனி பத்திரமாக இருப்பாள், நீங்கள் ஒரு பொறுப்பான பெற்றோராக இருந்தால்....!

vikatan.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜனவரி 29
 
 

article_1422506998-Railway.jpg1814: ரஷ்;யாவையும் பிரஷ்யாவையும் பிரீயென்னே யுத்தத்தில் பிரான்ஸ் தோற்கடித்தது.

1834: அமெரிக்காவில் தொழிலாளர் கிளர்ச்சியை அடக்குவதற்கு ஜனாதிபதி அன்ட்ரூ ஜக்ஸன் முதல் தடவையாக இராணுவத்தை பயன்படுத்தினார்.

1916: முதலாம் உலக யுத்தத்தில் பாரிஸ் நகரம் மீது ஜேர்மனிய ஸெப்பளின்களின் மூலம் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

1918: சோவியத் யூனியனுக்கு எதிராக உக்ரேனில் கிளர்ச்சி ஏற்பட்டது.

1940: ஜப்பானின் ஒசாகா நகரில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதால் 181 பேர் பலி.

1996: அணுவாயுத பரிசோதனைகளை பிரான்ஸ் நிறுத்திக்கொள்வதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜக் சிராக் அறிவித்தார்.

2001: இந்தோனேஷியாவில ஜனாதிபதி அப்துர் ரஹ்மான் வாஹிட்டை இராஜினாமா செய்யக்கோரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

2005: 1949 ஆம் ஆண்டின்பின் முதல் தடவையாக சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

- See more at: http://www.tamilmirror.lk/164921/2016-01-29-05-10-51#sthash.Tqmxk6FQ.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜனவரி 29: செகாவ் எனும் மாபெரும் இலக்கிய மேதை பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு..

 

செகாவ் எனும் மாபெரும் இலக்கிய மேதை பிறந்த தினம் இன்று . சிறுகதை என்றால் நீங்கள் செகாவை கண்டிப்பாக வாசிக்க வேண்டும் ;32 மொழிகளில் அவரின் சிறுகதைகள் வாசிக்கபட்டவண்ணம் உள்ளன .எளிமையான குடும்பத்தில் பிறந்தார் ;அப்பா பலசரக்கு கடை வைத்திருந்தார் ; இவரை அடித்து துவைத்துக்கொண்டே இருப்பார்;கண்ணீர் விடுவார் இவர் . சர்ச்சுகளில் sokove.jpgபோய் பாடல் பாடுங்கள் என்று காலையில் மூன்று மணிக்கு எழுப்பி பயிற்சி தருவார் தந்தை. அடியும்,அழுத்தி திணிக்கப்பட்ட சங்கீதமும் செகாவ் மற்றும் அவரின் சகோதரர்களை திசைமாற்றிப்போட்டது. அண்ணன்கள் குடிகாரர்களாக, பெண் பித்தர்களாக போனார்கள். செகாவுக்கு வேறொரு வாழ்க்கை காத்திருந்தது.

கூடுதலாக வகுப்பில் ஆசிரியர்கள் தொல்லை வேறு . ஆசிரியர்களை வருங்காலத்தில் கண்டால் வெறுப்போடு முகத்தை திருப்பிக்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். ஆனால்,செகாவ் உலகை நேசித்தார் ; அவரை ஊர்முழுக்க வாங்கியிருந்த கடனுக்காக கடன்காரர்களிடம் அடமானம் வைத்துவிட்டு அவரின் குடும்பம் எங்கேயோ கிளம்பி விட்டது. கடனடைத்து மீண்டார் அவர் ;அதற்கு பின் அரசாங்க செயல்களால் மருத்துவ கல்வி கிட்டியது அவருக்கு ; வெறும்
மூன்று ரூபிள் வாங்கிக்கொண்டு மருத்துவம் பார்த்தார் . கிராமம் கிராமமாக போய் எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கினார் .

சிறுகதைகள் எழுதிய அவர் முதலில் வறுமையை போக்கிக்கொள்ள தான் எழுத ஆரம்பித்தார் . காலப்போக்கில் அது மாறிப்போய் சமூகத்தின் வலிகளை மக்களின் தனிமையை பதிவு செய்தார்  :வாழ்க்கை தான் எல்லாவற்றை விடப்பெரியது ; தனிமையில் இருப்பதை விட வாழ்ந்து மடிவது மேலானது .இணைந்து வாழ்தலே பெரிது "என்றார்

அவரின் வாழ்க்கை குற்றவாளிகளின் மெல்லிய பக்கங்களை பற்றிகவலைபட்டதாகவும் அமைந்தது ;கொடிய காச நோயோடும் குற்றவாளிகள் இருக்கும் சைபீரியா போய் அவர்களை சந்தித்து அவர்களின் உள்ளே உள்ள மனிதத்தை வியந்தவர் அவர். ஆனால்,சைபீரியாவில் அவர் கண்டவற்றை கதையாக எழுதப்போவதாக சொன்னாலும் அவர் அதைக்கொண்டு எழுதியது ஒரே ஒரு சிறுகதை மட்டுமே !

பின்னர் எதற்கு அங்கே அவர் போனார் ? லிடியா என்கிற பெண்ணின் மீதான காதலை மறக்க மேற்கொண்ட பயணம் அது. ஓல்கா என்கிற பெண்ணை முதலில் திருமணம் செய்து கொண்டிருந்தார் அவர். கருச்சிதைவு ஏற்பட்டதும் இவரைவிட்டு நீங்கினாள் அவள். அதற்குப்பின்னர் லிடியா என்கிற பெண்ணிடம் காதல் பூண்டார். அந்த பெண்ணுக்கு இவர் மீது ஈர்ப்பு இருந்த பொழுதும் இவரின் நண்பரோடு காதல் பூண்டு விலகிவிட்டாள். திருமணமும் நடந்து முடிந்திருந்தது அவளுக்கு ! லிடியாவை நான்கைந்து முறை மட்டுமே சந்தித்திருந்தார் செகாவ். இறுதிமுறை சந்தித்த பொழுது காசநோய் முற்றியிருந்தது அவருக்கு. பேச முடியாத சூழலில் ,"உனக்கு என் நன்றி ! நாளைக்கும் வா !" என்று எழுதி அனுப்பினார் அவர். அப்பொழுது போனவள் மீண்டும் வரவே இல்லை. காரணம் அவளின் கணவன் தந்தி அனுப்பிக்கொண்டே இருந்தான்.  கார்க்கியிடம் மலர்கள் பூத்திருந்ததை காண்பித்து ,"இது ஓன்றுமில்லாத களர்நிலமாக இருந்தது ;இப்போழுது மலர்கள் பூத்து குலுங்குகின்றன .இந்த மாதிரி ஒவ்வொரு மனிதரும் மாறினால் உலகமே பூக்களால் நிரம்பி விடாதா ?'என ஆதங்கத்தோடு கேட்டார் . அவர் சாகிற வரை ரத்த வாந்தி எடுத்த பொழுதும் எளியவர்களுக்கு மருத்துவம் பார்த்தார் .கொஞ்சமாக ஷாம்பெயின் சாப்பிட்டு இறந்து போனார் அவர் .

அவரின் மரணமும் அவரின் கதைகளை போலவே சுவாரசியமாக அமைந்தது. இவர் வெளியூரில் மரணமடைய அவரை மாஸ்கோவுக்கு தொடர்வண்டியில் அழைத்து வருவதாக செய்தி வந்தது. மக்கள் திரளாக கூடியிருந்தார்கள். ஜப்பானுடன் நடந்த போரில் ஈடுபட்டிருந்த ராணுவ ஜெனரல் கெல்லரின் உடலும் அதே தொடர்வண்டியில் வந்தது. கெல்லரின் சவப்பெட்டிக்கு  பின்னர் செகாவுக்கு அரசு செய்கிற மரியாதை என்று எண்ணிக்கொண்டு மக்கள் பயணித்தார்கள். செகாவின் உடல் மீன் பெட்டியில் வந்து சேர்ந்தது. வெறும் எண்பது பேர் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தார்கள். ராணுவ ஜெனரலுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய வீரர் ஒருவர் தாமதமாக வந்து இவரின் இறுதி அஞ்சலியில் பங்குபெற்றார். மக்களின் நாடகத்தன்மையை சாடிய அவரின் வாழ்க்கையும் நாடகமயமாக முடிந்து போனது

அவர்  கதைகள் ஒன்றுமே சொல்லாதவை என அவர் காலத்தில் சிலரால் தூக்கி எறியப்பட்டாலும் காலம் அவரை கண்டுகொண்டது . அவர் எப்படி இருந்தார் என்பதை அவரின் கதையின் மூலமே சொல்லலாம் .ஒரு குதிரைக்காரன் காலை தன் வண்டியில் ஏறும் எல்லாரிடமும்  தான் ஒன்றை சொல்வேன் கேளுங்கள் என சொல்லிக்கொண்டே இருக்கிறான் யாருமே கேட்கவில்லை ;இறுதியில் மாலை  வேலை முடிந்து குதிரையிடம் கண்ணீர் விட்டு அழுது என் மகன் இறந்துவிட்டான் நேற்று ,யாருமே கேட்கவில்லையே என் கவலையை என அவன் சொல்கிறான் -குதிரை தலையாட்டி கேட்கிறது .எத்தனையோ பேரின் கேட்காத அழுகுரலை வடித்த இணையற்ற நாயகன் செகாவ்.

vikatan

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

red-dot.jpg `டென்னிஸிலும் மேட்ச் ஃபிக்ஸிங்கா?!' என அதிர்ந்துபோயிருக்கிறார்கள் டென்னிஸ் ரசிகர்கள். `கடந்த 10 ஆண்டுகளில், முதல் 50 இடங்களுக்குள் உள்ள 16 டென்னிஸ் வீரர்கள் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உண்டு. அவர்களில் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்கள் சிலரும் உண்டு. இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன’ என பிபிசி-யும் பஸ்ஃபீட் நிறுவனமும் அறிவித் துள்ளன. இந்தச் செய்தி வெளியான கொஞ்ச நேரத்தில் உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச், `என்னுடன் பணிபுரிபவர்கள் வழியாக என்னிடம் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய சிலர் அணுகினார்கள். ஆனால், அதை நான் ஏற்கவில்லை. மேட்ச் ஃபிக்ஸிங் விவகாரம் தொடர்பாக ஆதாரங்கள் எதுவும் இல்லை. அப்படி இருக்கும் வரை இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் யூகமே’ என பதில் அளித்திருக்கிறார். காசு, பணம், துட்டு மணி... மணி!

red-dot.jpg 1988-ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக, ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி துடைப்பத்தால் தரையைப் பெருக்குவதுபோல் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவியது. இது உண்மைதானா? என ஒருவர் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பதில் கோர, `அந்தப் புகைப்படம் உண்மையானது அல்ல; போட்டோஷாப்பில் `வேலை' செய்யப்பட்டது' என உறுதி அளித்திருக் கிறது தகவல் ஆணையம். இதேபோல் `கடந்த ஆண்டு மோடி டீ விற்றார் என்பதற்கான எந்த ஆதாரமும் தங்களிடம் இல்லை' என ரெயில்வே துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஓவர்... ஓவர்... பப்ளிசிட்டி டிராமா ஓவர்!

p56.jpg

red-dot.jpg நாம் ஒவ்வொருவரும் ஃபேஸ்புக்கில் அல்லும்பகலும் உழைத்ததில், கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் அந்த நிறுவனம் சம்பாதித்தது 123.5 கோடி ரூபாய். இது, 2014-ம் ஆண்டு வருவாயைவிட 27 சதவிகிதம் அதிகம். ஃபேஸ்புக்கில் இணைந்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 13 கோடியே 80 லட்சம். இவர்கள் ஒவ்வொருவரும் சம்பாதித்துக் கொடுத்தது தலைக்கு 9 ரூபாய். இந்தியாவைவிட அமெரிக்காதான் ஃபேஸ்புக்குக்கு வருமானம் கொழிக்கும் மார்க்கெட். அங்கு ஒவ்வொரு யூஸரிடம் இருந்து, 630 ரூபாய் சம்பாதித்திருக்கிறது ஃபேஸ்புக்.  இதை மட்டும் மார்க் ஷேர் பண்ணவே மாட்டாரு!

p56c.jpg

red-dot.jpg மினிமம் பட்ஜெட்டில் படம் எடுத்து, மேக்ஸிமம் வசூல்செய்வது மல்லுவுட்டின் ஸ்டைல். ஆனால், இங்கேயும் மெகா பட்ஜெட் படங்கள் எடுப்போம் என இறங்கியிருக்கிறார் ப்ருத்விராஜ். இதற்காக மலையாளத்தில் கிளாசிக் ஹிட்டடித்த, `என்னு நின்டே மொய்தீன்’ இயக்குநர் விமலுடன் மீண்டும் இணைந்திருக்கிறார் ப்ருத்வி. மகாபாரதத்தின் எவர்கிரீன் ஹீரோ கர்ணனின் கதைதான் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படமாகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் டீஸர் வைரல் ஹிட்டடிக்க ப்ருத்வி செம குஷி. சேட்டன் காட்டுல மழை!

red-dot.jpg பாலகிருஷ்ணாவின் 99-வது படம் ‘டிக்டேட்டர்’ பாக்ஸ் ஆபீஸில் பாஸ் ஆகி ஓடிக் கொண்டிருக்க, அடுத்து ‘பாலைய்யா 100’ மோடுக்குத் தயாராகின்றனர் மனவாடுகள். 1991-ம் ஆண்டில் வெளியான சயின்ஸ்ஃபிக்‌ஷன் ‘ஆதித்யா 369’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘ஆதித்யா 999’ என எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதில் பாலைய்யாவுக்கு ஜோடி டாப்ஸி. ஜெய் பாலைய்யா!

p56d.jpg

red-dot.jpg ஒவ்வோர் ஆண்டும் `கிரெடிட் ஸ்விஸ்' எனும் ஸ்விட்ஸர்லாந்து வங்கி, உலகில் எந்தெந்த நாடுகளில் பெரும் பணக்காரர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டுவருகிறது. இந்த ஆண்டின் பட்டியல்படி முதல் இடம் அமெரிக்காவுக்கு. 2 கோடியே 6 லட்சம் பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன. இந்தியாவில் 4,352 பெரும் பணக்காரர்கள் இருப்பதாக அந்த வங்கி அறிவித்துள்ளது. மெக்ஸிக்கோ நீங்கலாக வடஅமெரிக்காவில் ஒருவரின் சராசரி சொத்து மதிப்பு 2 கோடியே 30 லட்சம் ரூபாய். இது ஒரு சராசரி இந்தியரின் சொத்து மதிப்பைவிட 75 சதவிகிதம் அதிகம்! கறுப்புப் பணம் லிஸ்ட் கொடுக்காதிங்கப்பா!

red-dot.jpg நவீனக் கருவிகள் விவசாயத் தொழிலுக்குள் வந்தபோது, விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். ஐ.டி வேலைவாய்ப்புகளுக்கும் இந்த நிலை வரவிருக்கிறது என எச்சரித்திருக்கிறது, இன்ஃபோசிஸ் நிறுவனமும் உலக பொருளாதார மன்றமும் (WEF) இணைந்து நடத்திய ‘தி ஃபியூச்சர் ஆஃப் ஜாப்ஸ்’ என்னும் ஆய்வு. `எதிர்காலத்தில் நாம் சந்திக்கவிருக்கும் நான்காவது தொழிற்புரட்சியால், தற்போதைய 50 லட்சம் வேலைவாய்ப்புகள் அழிந்துவிடும். வளர்ந்துவரும் ரோபோட்டிக்ஸ், ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ், பயோடெக்னாலஜி, ஆட்டோமேஷன் ஆகியவற்றால் 2020-ம் ஆண்டுக்குள், ஐ.டி நிறுவனங்களில் தற்போதைய பணிச்சூழல் மாறிவிடும். புதிய வேலைகள் இந்த இடங்களை ஆக்கிரமிக்கும். தன்னை டெக்னிக்கலாக அப்டேட் செய்துகொண்டவர்கள் மட்டுமே இந்தப் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம்’ என எச்சரித்திருக்கிறது இந்த ஆய்வு. வாழ்க்கை ஒரு வட்டம்!

vikatan

  • தொடங்கியவர்

ஒரே ஒரு பயணிக்காக இயக்கப்பட்ட ஆச்சர்ய விமானம்! (வீடியோ)

 

ரே ஒரு பயணிக்காக, பிலிப்பைன்ஸ் விமான சேவை நிறுவனம் பயணத்தை தொடர்ந்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Philippine%20Airlines%20flight.jpg

ஆஸ்திரியா நாட்டின் பயண கட்டுரை எழுத்தாளரான 28 வயது அலெக்ஸ் சைமன் என்பவர், பிலிப்பைன்ஸ் நாட்டில் சுற்றுலா சென்றுள்ளார். தலைநகர் மணிலாவில் தங்கியிருந்த அவர், அங்கிருந்து 315 கிலோ மீட்டர் தென் பகுதியில் அமைந்துள்ள பொராகே தீவுக்கு செல்ல விமானத்தில் முன்பதிவு செய்துள்ளார்.

சம்பவத்தன்று விமான நிலையம் வந்த அவருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருந்தது, அவர் மட்டுமே பயணத்திற்காக பதிவு செய்துள்ளதால் காத்திருக்க தேவை இல்லை எனவும், உடனடியாக பயணத்தை துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



இந்த செய்தி கேட்டு குதூகலமான அலெக்ஸ், 2 விமானிகள் மற்றும் சில ஊழியர்களுடன் தனியொருவராக பயணம் செய்துள்ளார். விமானி மற்றும் விமான ஊழியர்களுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட அவர்,  தனது அனுபவத்தை 3 நிமிடங்கள் கொண்ட ஒரு வீடியோ பதிவாக சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

vikatan

  • தொடங்கியவர்

அட...! ஜெயலலிதா, ஒபாமா, மார்க், கருணாநிதியிடம் இந்த ஒற்றுமையை கவனித்தீர்களா..?!

 

ம்மில் சிலர் ஒரே நிற, அல்லது மிகவும் பிடித்த ஆடையை தொடர்ந்து அணிபவராக இருப்பர். அவரை அந்த சட்டையை வைத்தே கூட அடையாளம் கூறும் அளவுக்கு அவரை அனைவருக்கும் தெரிந்திருக்கும்.உலகின் பிரபலங்கள் துவங்கி,  உங்கள் அலுவலகத்தில் உள்ள உங்களது சக பணியாளர் வரை அனைவரையுமே நீங்கள் இதேபோன்ற ஆட்டிட்யூடில் ( attitude) பார்க்கலாம். 

நாம் இங்கு பார்க்கும் சில பிரபலங்கள் கூட இதே போன்றுதான் தனக்கென தனி உடை அடையாளங்களை கொண்டு காணப்படுகின்றனர்.

மார்க் சக்கர்பெர்க்:

11215785_10102440744026201_8717585554295


ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் பெயரை கூகுளில் புகைப்படமாக தேடினால்,  அதில் 85 சதவிகிதத்துக்கும் அதிகமான புகைப்படங்களில் சாம்பல் கலர் டி-ஷர்ட்டுடன் மட்டுமே காணப்படுவார். எந்த ஊரில் பேசினாலும் சரி, எந்த நாடாக இருந்தாலும் சரி இவரது உடை இது மட்டும்தான். அதில் ஃபேஸ்புக்கின் நோட்டிஃபிகேஷன், மெஸேஜ், ரிக்வெஸ்ட் லோகோக்கள் இடம் பெற்றிருக்கும். இதனை மேலாண்மை தத்துவங்கள் இவரிடம் கொள்கையில் இருந்து மாறாத தலைவர் என்பதையே காட்டுவதாகவும் கூறுகின்றன.

ஜெயலலிதா:

 

12650640_934010253321590_619539341_n.jpg


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரங்கள் துவங்கி, பொதுக்கூட்டம், சட்டசபை என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஜெயலலிதா பச்சை நிற புடவை அணிந்துதான் வந்திருப்பார். அவரை அடையாளப்படுத்தும் புகைப்படங்களுமே,  அவரை அதே நிற உடையில்தான் காட்டும். சரியோ தவறோ,   தன் முடிவுகளில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை தொடர்பவர். தனது நிர்வாகத்திற்கு ஒத்துவராத அமைச்சரை சட்டென்று நீக்கும் குணம் கொண்டவராக இருப்பார்.

ஒபாமா:

obama-best.jpg


தன் பேச்சால் அமெரிக்க அதிபராக உருவாகிய பாரக் ஒபாமாவை,  உங்களால் சாதாரண தோற்றத்தில் பார்த்திருக்க முடியாது.  அனைவரது மனதிலும் கோட் சூட்டுடன் உள்ள ஒபாமாதான் நமக்கு நினைவில் வருவார். இன்றைக்கு பலர்,  அதிபர் தேர்தலுக்கான போட்டியில் வரிசையில் நின்றாலும் ஒபாமாவுக்கு என ஒரு தனி இடம் அமெரிக்க அதிபர்கள் பட்டியலில் உண்டு.

கிறிஸ்டோபர் நோலன்:

 

christopher_nolan_horizontal_a_l.jpg

வித்தியாசமான அறிவியல் தொடர்பான படங்களை எடுக்கும் இவர்,  உலக சினிமாவிற்கென ஒரு இலக்கணம் வகுத்தவர். இவரது படங்களை போலவே அடர்நிறம் கொண்ட உடையுடன் காணப்படுவார். இது தான் இவரது படங்களின் வெற்றி ரகசியமும் கூட.

கருணாநிதி:

 

12625594_934009106655038_1911467915_n.jp

திமுக தலைவர் கருணாநிதியை பொறுத்தவரை சமீப வருடங்களாகவே அவரை எப்போதும் மஞ்சள் துண்டு, கருப்பு கண்ணாடியுடன் மட்டுமே பார்த்திருப்போம். அண்மைகாலமாக இதுதான் அவரது மாறாத அடையாளமாக இருந்து வருகிறது. அவர் நீண்ட காலமாக ஒரு கட்சிக்கு தலைவராகவும், 90 வயதுக்கு மேலும்  சீரிய தலைமை பண்புடன் செயல்படுவதையும் அனைவரும் பார்த்திருப்போம்.

ஸ்டீவ் ஜாப்ஸ்:

a-former-apple-employee-describes-what-i

இவர் புதுமைகளுக்கு பெயர் பெற்ற தலைவர். நிறங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்.  ஆப்பிள் நிறுவன லோகோவில் இவரது திறமை நன்கு வெளிப்பட்டிருக்கும். ஆப்பிள் நிறுவன நிகழ்வுகளிலும் சரி, பொது சந்திப்புகளிலும் சரி, ஜாப்ஸை ப்ளாக் டி-ஷர்ட்டில் பார்க்க முடியும். அதுதான் ஜாப்ஸின் தனித்துவம். ஜாப்ஸ் ஒரு சிறந்த தலைவர் மட்டுமல்,  சிறந்த ஆசிரியர். இவரைதான் தனது குருவாக கொண்டு செயல்படுகிறார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்.


இவர்கள் எப்படி பட்டவர்கள்?

இவர்கள் ஒரே சீரான, வெற்றியை நோக்கிய பயணத்தை தொடர வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இது போன்ற குணம் கொண்டவர்கள் நிச்சயம் தலைமை பதவி வகிப்பவர்களாக இருப்பார்கள் அல்லது தலைமை பண்போடு காணப்படுவார்கள்.

இவர்கள் தங்கள் முடிவுகளில் தெளிவாகவும், முடிவுக்கு முன் நீண்ட திட்டமிடலையும், முடிவுக்கு பின் ஏதேனும் சறுக்கல் ஏற்பட்டால் அதற்கான ப்ளான் B-யும் கையில் வைத்திருப்பார்கள்.

இவர்கள் வெற்றி, தோல்வி இரண்டையும் ஒரே மாதிரியாக அணுகுவார்கள்.


கலர் ரகசியம் இது தான்!

ஏன் இவர்கள் இப்படி ஒரே கலரை தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால்,  அதுதான் அவர்களை பிரதிபலிக்கும் சுய பிராண்டிங் கருவியாகிறது. இவர்களின் பிராண்டிங்க்கிற்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது.

ஒரே மாதிரியாக செயல்படுபவர், மிஸ்டர் கன்ஸிஸ்டன்ஸி என்ற விஷயத்தை எல்லாம் இது எளிமையாக விளக்கி விடும்.

 

12647560_10102616790362931_3270313262875

எப்படி ஒரு பிராண்டை ஒரே கலரில் மனதில் பதிய வைப்பார்களோ,  அதே உத்திதான் இந்த தனிமனித பிராண்டிங்கிற்கும். மக்கள் இதே நிற உடையில் இவர்களை பார்த்து பழகிவிட்டால் யாரை இந்த உடையில் பார்த்தாலும் இவர்களை நினைவில் கொள்வார்கள்.

கொஞ்சம் யோசிச்சு இப்ப சொல்லுங்க பாஸ்... நீங்க இதே மாதிரி ஒரே நிற உடையை விரும்பி அணிகிறீர்கள் என்றால்,  அந்த உடை அணிந்து செல்லும் நாட்களில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் செயல்திறன் அதிகரித்து காணப்படும்.

அப்படி இருந்தால் நீங்களும் ஒரு தலைவனுக்கு உரிய தகுதியுடையவரே...!

vikatan

  • தொடங்கியவர்

அரிய திமிங்கலத்தின் சடலம் மும்பை கடற்கரையில் கரையொதுங்கியது
----------------------------------------------------------------------------------------
சுமார் 40 அடி நீளமுள்ள திமிங்கலம் ஒன்று மும்பையின் ஜுஹு கடற்கரையில் இறந்த நிலையில் வியாழக்கிழமை இரவு கரை ஒதுங்கியுள்ளது.

ப்ரைட்ஸ் திமிங்கலம் என்ற வகையைச் சேர்ந்த இந்தத் திமிங்கலம் அழிந்துவரும் இனங்களில் பட்டியலில் உள்ள மீன் இனமாகும்.

சுமார் 20 டன் எடை கொண்ட இந்த திமிங்கலம் ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பாக இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த திமிங்கலத்தின் சடலத்தை அகற்றும் பணியில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுவரும் நிலையில், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இதனைப் பார்த்துச் செல்கின்றனர்.

12640441_10153227321585163_4884048885566

BBC

  • தொடங்கியவர்

12654602_10154278993129578_3830797684141

  • தொடங்கியவர்

இசையுலகில் சாதிக்க நினைக்கும் யாருக்குமே ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் தன் திறமையைக் காட்டி எப்படியாவது அவரை இம்ப்ரெஸ் செய்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அப்படி எந்த முயற்சியும் செய்யாமலே இசைப்புயலை இம்ப்ரெஸ் செய்துள்ளார் ஒரு இளம் டிரம்ஸ் புயல்.

11 வயதாகும் ராகவ் மெக்ரோத்ராதான் அந்த டிரம்ஸ் புயல். Snarky Puppy என்ற நியூயார்க் மியூசிக் பேண்டின் அடையாளமான ராகவ், 3 வயதிலிருந்தே டிரம்ஸ் வாசித்து வருகிறார். தற்போது நியூ ஜெர்சியில் வசித்து வரும் இவரது யூ-டியூப் வீடியோக்களை பார்த்து இம்ப்ரெஸ் ஆன ஏ.ஆர்.ரஹ்மான் அதில் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் இசைக்குழுவிற்கு வருக…குட்டிப்பையா…. என்ற பாராட்டுடன் ஷேர் செய்துள்ளார்.

 

 

  • தொடங்கியவர்

'பிளாஸ்டிக் பை' மெஸ்சி ஜெர்சி: சிறுவனின் ஏக்கத்தை தீர்த்த தந்தை!

 

ர்ஜென்டினா கால்பந்து அணியின்  கேப்டன் மெஸ்சிக்கு, உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதில் ஒருவன்தான் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 5 வயது  மொர்டசா அகமதி.

messi%20.jpg

ஒருநாள் தனது தந்தையிடம் மெஸ்சி அணிவது போன்ற ஜெர்சி வேண்டுமென்று கேட்டு, சிறுவன் அகமதி அடம்பிடித்துள்ளான். இரவிலும் திடீர் திடீரென்று முழித்தவாறே, மெஸ்சியின் ஜெர்சி வேண்டுமென்று அகமதி அடம்பிடிப்பது வழக்கமாகிப் போனது.

messi%201.jpg

ஆப்கானிஸ்தானின் காபூல் அருகேயுள்ள ஜஹோரி என்ற குக்கிரமத்தில் வசிக்கும் அந்த ஏழைத் தந்தையால், நகருக்கு சென்று  தனது மகனுக்கு மெஸ்சியின் 10-ம் எண் ஜெர்சியை வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

தொடர்ந்து அகமதியின் தந்தை ஒரு பிளாஸ்டிக் பையில் அர்ஜென்டினா ஜெர்சியான  நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் வரைந்து, அதில் 10-ம் எண் மற்றும் மெஸ்சியின் பெயர் பொறித்து,  'இதுதான் அது' என்று கொடுத்து விட்டார்.

தந்தையை முழுமையாக நம்பிய அந்த சிறுவன், இப்போது எங்கு போனாலும் அதனை அணிந்தவாறேத்தான்  போகிறான்.

vikatan

  • தொடங்கியவர்
கிரிக்கெட் என்பது உண்மையில் கனவான்கள் ஆட்டம்தான்..!
அன்று-சண்டை
இன்று -சகோதரத்துவம்
 
  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎/‎01‎/‎2016 at 7:38 AM, நவீனன் said:

“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்…

1936550_1062695183789271_956494933623367

* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்

* வாழை வாழ வைக்கும்

* அவசர சோறு ஆபத்து

* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

*இருமலை போக்கும் வெந்தயக் கீரை

* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.

* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை?????????????????????பன்னீர் திராச்சை என்டால் என்ன

 

 

 

* சித்தம் தெளிய வில்வம்

* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

* சூட்டை தணிக்க கருணை கிழங்கு

* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

* வாத நோய் தடுக்க அரைக் கீரை

* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

* பருமன் குறைய முட்டைக்கோஸ்

* பித்தம் தணிக்க நெல்லிக்காய்

உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.

நலம் உடன் வாழ்வோம்

vikatan

கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை?????????????????????பன்னீர் திராச்சை என்டால் என்ன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.