Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
வெறும் 11 நிமிடங்களில் லண்டன் டூ நியூயார்க் செல்லும் புதிய ஹைப்பர்சானிக் விமானம்!
30-1454153325-antipode-supersonic-busine
இந்த ஹைப்பர்சானிக் பயணிகள் விமானத்தை உருவாக்கும் முயற்சிகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன. அந்த விதத்தில், வெறும் 11 நிமிடங்களில் லண்டனிலிருந்து நியூயார்க் செல்லும் அதிவேக ஹைப்பர்சானிக் ரக விமானத்தை கனடா நாட்டு விமானவியல் துறை பொறியாளர் வெளியிட்டிருக்கிறார்.
 
கனடா நாட்டு பொறியாளர் பம்பார்டியர் விமான தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வரும் தலைமை பொறியாளர் சார்லஸ் இந்த விமானத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.
 
30-1454153337-antipode-supersonic-busine
 
வேகம்
இந்த ஹைப்பர்சானிக் ரக விமானம் மணிக்கு மேக்-24 என்ற வேகத்தில் பறக்கும். ஒலியைவிட 24 மடங்கு அதிவேகத்தில் இந்த விமானம் பறக்கும் திறன் கொண்டதாக இருக்கும். உதாரணத்திற்கு, லண்டன் நியூயார்க் நகரங்களுக்கு இடையிலான 5,560 கிமீ தூரத்தை வெறும் 11 நிமிடங்களில் கடந்துவிடும்.
 
நாசாவை விஞ்சிய நுட்பம்
அதிவேக சூப்பர்சானிக் விமானங்களை உருவாக்குவதில் திறன் பெற்ற அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பிடம் கூட இதுவரை 24 மேக் வேகத்தில் பறக்கும் மாதிரி விமானத்தை கூட இதுவரை உருவாக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
 
30-1454153360-antipode-supersonic-busine
 
ஓடுபாதை
இந்த விமானத்தை தரையிறக்குவதற்கு 6,000 அடி நீள ஓடுபாதை தேவைப்படும் என்று சார்லஸ் தெரிவித்துள்ளார்.
 
குளிரூட்டும் அமைப்பு
இந்த விமானத்தை இயக்கும்போது வெளிப்படும் அபரிமிதமான வெப்பத்தை தணிப்பதற்காக, விமானத்தின் மேல்புறத்தில் காற்றை உறிஞ்சி வெப்பத்தை தணிக்கும் துளைகள் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
 
சவால்
ஆனால், விமானத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்திலான உலோகத்தை உருவாக்குவதும், விமானத்தின் கட்டமைப்பிலும் மிகப்பெரிய சவால்கள் இருப்பதாக பம்பார்டியர் நிறுவனம் தெரிவிக்கிறது.
30-1454153319-antipode-supersonic-busine
எஞ்சின்
விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டுகளை மேலே எழுப்புவதற்கு பயன்படுத்தப்படும் பூஸ்டர்கள் இந்த விமானத்தின் இறக்கைகளில் பொருத்தப்பட்டிருக்கும். விமானத்தை மேலே உந்தி எழுப்புவதற்கு பூஸ்டர்கள் பயன்படும். 40,000 அடி உயரத்தை விமானம் எட்டியவுடன், பூஸ்டர்கள் தனியாக கழன்றுவிடும். அதன்பின்னர விமானம் அதிகபட்சமாக 24 மேக் வேகத்தில் பறக்கும். ஒரு மேக் என்பது மணிக்கு 1,195 கிமீ வேகத்திற்கு இணையானது.
 
பயணிகள் எண்ணிக்கை
இந்த விமானத்தில் 10 பயணிகள் செல்ல முடியும். எனவே, விவிஐபி பயன்பாட்டுக்கு பொருத்தமானதாக இருக்கும். ஆனால், இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்போதும், அதிக அளவில் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில், எதிர்காலத்தில் அதிக பயணிகள் செல்வதற்கான விமானத்தை தயாரிக்கும் வாய்ப்புள்ளது.
 
விலை மதிப்பு
பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தும் பிசினஸ் ஜெட் ரகத்தை சேர்ந்த தனி நபர் பயன்பாட்டு சொகுசு விமானங்களை விட சற்றே அதிக விலை கொண்டதாக இருக்கும் என சார்லஸ் மதிப்பு தெரிவித்துள்ளார்.
30-1454153349-antipode-supersonic-busine
 
கான்கார்டு விமானத்துடன் ஒப்பீடு
உலகின் அதிவேக பயணிகள் விமானமாக கருதப்படும் கான்கார்டு விமானம் அடிக்கடி விபத்தில் சிக்கியதால், சேவையிலிருந்து விலக்கப்பட்டது. இந்தநிலையில், கான்கார்டு விமானத்தை விட புதிய ஆன்டிபாட் விமானம் 12 மடங்கு கூடுதல் வேகத்தில் பறக்கும். அதாவது, டெல்லியிலிருந்து சென்னைக்கு ஒரு சில நிமிடங்களில் வந்துவிடும்.

Read more at: http://tamil.drivespark.com/off-beat/antipode-jet-concept-would-fly-new-york-london-just-11-minutes-009620.html
  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நவரச நயன்!

 

 

சங்க... பொண்ணுங்கன்னு ஆல்டைம் ஃபேவரைட்டாக இருக்கும் நயன்தாராவை நெட்டில் தேடினால் கலர்கலராய் கலர்ஃபுல் கிளிக்ஸ்கள் கிடைத்தன. அப்புறம் என்ன..? நயனுக்கு மைண்ட் வாய்ஸ் போட்டுப் பாக்கலாமா?!

 

p116a.jpg

 

p116b.jpg

vikatan.

  • தொடங்கியவர்

12615395_978602608855100_207757010883986

முன்னணி ஹிந்தி நடிகை, IPL கிரிக்கெட் அரங்கில் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி சிந்தாவின் பிறந்தநாள்.
Happy Birthday Preity Zinta

  • தொடங்கியவர்

போலந்தைச் சேர்ந்த Mariusz Kedzierski, கைகள் இல்லாமல் பிறந்தார். அதற்காக ஆவர் கவலைப்படவில்லை. ஓவியங்களால் எல்லோருடைய கவனமும் தன் பக்கம் திரும்பவைத்துள்ளார். ஆம் இவர் வரையும் ஓவியங்களுக்கு பாராட்டு மழைக் குவிகிறது.

12647350_672700182832527_166642180725017

12662472_672700186165860_561129044600135

 

12662567_672700256165853_666827310218952

12592342_672700226165856_726014318936633

12654393_672700232832522_826724317156329

vikatan

 

  • தொடங்கியவர்

12496401_978627622185932_175950698837562

தமிழ் சினிமாவின் தங்க தேவதை
பூக்களும் இவள் வந்தால் ஓய்வெடுக்கும்
ஆம் ! எமி ஜாக்சன்
இந்த தேவதை இப்பூமியை ஸ்பரிசித்த நாள் இன்று ...
Happy Birthday Amy Jackson

  • தொடங்கியவர்

மரமாக உருமாறும் மனிதர்

 

பங்களாதேஷத்தின் குல்னா பகுதியில் இளைஞர் ஒருவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மரமாக உருமாறி வருகிறார்.

25 வயதான அபுல் பஜந்தர் என்பவர் அரிய வகை தோல் வியாதியால் கடுமையாக பாதிக்கப்பட்டு,அவரது கை விரல்கள் மரத்தில் இருந்து பட்டைகள் உருவாவது போன்று தடிமனாக நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் உள்ளன.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவரை டாக்கா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

tree_rootsman_008.jpg

tree_rootsman_006.jpg

tree_rootsman_004.jpg

tree_rootsman_003.jpg

 

 

 

virakesari

  • தொடங்கியவர்

 

இடரினும் தளரினும் பாடல்   தாரை தப்பட்டை

  • தொடங்கியவர்

சொல்வனம்

p52.jpg

 

ஆரஞ்சு உலகம்

வெகு அழகாயிருக்கிறாள் அந்த யுவதி
பூக்களை பேருந்தெங்கும் தூவியபடி
எனக்கு முன்னே அமர்ந்திருக்கிறாள்.
திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்து
மனதை ரோஜா வனமாக்குகிறாள்.
அவள் அணிந்திருக்கும்
ஆரஞ்சு நிறச் சுடிதாரால்
ஆகாயத்தை ஆரஞ்சு நிறமாக்குகிறாள்.
ஆரஞ்சு நிறத் தொங்கட்டான்களால்
எல்லோரையும் தாலாட்டுகிறாள்.
கட்டுப்படாத அவள் துப்பட்டா
காற்றோடு சேர்ந்து நடனமாடுகிறது
காற்றை ஆரஞ்சு நிறமாக்குகிறது.
என்னைத் தீண்டித் தீண்டி
என்னையும் ஆரஞ்சு நிறமாக்குகிறது.
பேருந்து வந்த வழியைத்
திரும்பிப் பார்க்கிறேன்
எல்லாமே ஆரஞ்சு நிறமாய்.
எனக்கான பேருந்து நிறுத்தம்
வந்து சேர்கிறது வருத்தங்களோடு
இன்று நீல நிறமாகத்தான் பேருந்தேறினேன்
ஆரஞ்சு வண்ணமாகி இறங்குகிறேன்
ஆரஞ்சு நிறமாகிவிட்ட பேருந்து
என்னை இறக்கிவிட்டு
ஆரஞ்சு நிறச் சாலையில் தொடர்கிறது
சன்னல் வழியாகத் திரும்பிப் பார்க்கும் யுவதி
வழியும் என் ஆரஞ்சு நிறக் கண்ணீர் துடைக்க
ஆரஞ்சு நிறப் புன்னகை ஒன்றை வீசுகிறாள்
உலகம் ஆரஞ்சு நிறமாகிறது!

vikatan

  • தொடங்கியவர்

p29a.jpg

ஆரோக்கியமாக இருக்க 10 வழிகள்!

  • தொடங்கியவர்

 

மனிதனுக்கு அடுத்த புத்திசாலியான விலங்கு எது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

 

மனிதனுக்கு அடுத்த புத்திசாலியான விலங்கு எது?

http://www.yarl.com/forum3/profile/10935-nirosh85/

இவர் ஒரு யாழ்கள உறவு.....

https://www.youtube.com/channel/UCXyjvlbJA5CmHFq7iQgjslw

 

 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.... 

பெப்ரவரி - 01

 

656columbia---varalaru.jpg1662 :  ஒன்­பது மாத முற்­று­கையின் பின்னர் சீனாவின் இரா­ணுவத் தள­பதி கொக்­சிங்கா, தாய்வான் தீவைக் கைப்­பற்­றினார்.

 

1788 :  ஐசாக் பிறிக்ஸ் மற்றும் வில்­லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீரா­விப்­ப­ட­குக்­கான காப்­பு­ரிமம் பெற்­றனர்.

 

1793 : ஐக்­கிய இராச்­சியம் மற்றும் நெதர்­லாந்­துக்கு எதி­ராக பிரான்ஸ் போர்ப் பிர­க­டனம் செய்­தது.

 

1814 : பிலிப்­பைன்ஸில் மயோன் எரி­மலை வெடித்­ததில் 1,200 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1832 : ஆசி­யாவின் முத­லா­வது அஞ்சல் (தபால்) வண்டி சேவை (mail--coach) கண்டி, கொழும்­புக்­கி­டையில் ஆரம்­ப­மா­கி­யது.

 

1880 : யாழ்ப்­பா­ணத்­திற்கும் பருத்­தித்­து­றைக்கும் இடையில் முத­லா­வது தபால் வண்டி சேவையை ஆரம்­பித்­தது.

 

1884 : ஒக்ஸ்ஃபோர்ட் ஆங்­கில அக­ரா­தியின் முதற் பதிப்பு வெளி­யா­னது.

 

1893 : தோமஸ் எடிசன் தனது முத­லா­வது அசையும் படத்­துக்­கான ஸ்டூடி­யோவை நியூ ஜேர்­சியில் கட்டி முடித்தார்.

 

1908 : போர்த்­துக்கல் மன்னன் முதலாம் கார்லொஸ் மற்றும் அவ­னது மகன், இள­வ­ரசர் லூயிஸ் பிலிப் லிஸ்பன் நகரில் கொல்­லப்­பட்­டனர்.

 

656delivery_vehicles---varalaru.jpg1913 : உலகின் மிகப்­பெ­ரிய ரயில் நிலையம் நியூயோர்க் நகரில் திறக்­கப்­பட்­டது.

 

1918 : ரஷ்யா ஜூலியன் நாட்­காட்­டி யில் இருந்து கிற­கோ­ரியன் நாட்­காட்­டிக்கு மாறி­யது.

 

1924 : சோவியத் ஒன்­றி­யத்தை ஐக்­கிய இராச்­சியம் அங்­கீ­க­ரித்­தது.

 

1946 : நோர்­வேயின் ட்றிகிவா லீ, ஐக்­கிய நாடுகள் சபையின் முத­லா­வது செய­லாளர் நாய­க­மாகத் தெரிவு செய்­யப்­பட்டார்.

 

1958 : எகிப்து மற்றும் சிரியா ஆகி­யன இணைந்து 1961 வரையில் ஐக்­கிய அரபுக் குடி­ய­ரசு என ஒரு நாடாக இயங்­கின.

 

1974 : பிரே­ஸிலில் 25 மாடிக் கட்­டடம் ஒன்றில் தீப்­பற்­றி­யதில் 189 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1979 : 15 ஆண்­டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் ஆன்­மீகத் தலைவர் அயத்­துல்லா கொமெய்னி ஈரா­னுக்குத்  திரும்­பினார்.

 

2003 : நாசாவின் கொலம்­பியாவிண்­ணோடம் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­தி­லி­ருந்து பூமிக்குத் திரும்­பி­ய­போது வெடித்துச் சித­றி­யதில் இந்­திய விண்­வெளி வீராங்­கனை கல்­பனா சாவ்லா உட்­பட ஏழு பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2004 : சவூதி அரே­பி­யாவில் ஹஜ் பய­ணத்தின் போது கூட்ட நெரி­சலில் சிக்கி 251 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2005 : நேபாள மன்னர் ஞானேந்­திரா நாடா­ளு­மன்­றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்தார்.

 

2005 : கனடா, ஓரினத் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடா னது.

 

2012 : எகிப்தில் நடை­பெற்ற கால்­பந்­தாட்டப் போட்­டி­யொன்­றின்­போது ரசி­கர்­க­ளுக்­கி­டை­யி­லான மோதல்­களில் 72 பேர் உயரிழந்தனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=656#sthash.EkptxiBK.dpuf
  • தொடங்கியவர்

சென்னையில் உலக சாதனை படைத்த 'உல்லன் ப்ளாங்கெட்'! (வீடியோ)

 

சென்னை துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரியில் 'மதர் இந்தியா க்ரோச்செட் க்வின்ஸ்' என்ற அமைப்பினர் உலகின் மிக நீளமான 'உல்லன் ப்ளாங்கெட்'டை உருவாக்கி சாதனை படைத்தனர்!

blank_vc3.jpg



கடந்த ஆறு மாதங்களாக சுமார் 2,700 பேர் சேர்ந்து இந்த மெகா 'உல்லன் ப்ளாங்கெட்'டை உருவாக்கியிருக்கிறார்கள்.

blank_vc2.jpg




இந்தியாவில் மட்டுமல்ல லண்டன், அமெரிக்காவில் இருந்தும் இந்த அமைப்பைச் சேர்ந்த பெண்கள் உல்லன் போர்வைகளை உருவாக்கி இந்தியாவிற்கு அனுப்பி வைத்து அனைத்தையும் இணைத்து சுமார் 11,148 மீட்டர் அளவுள்ள இந்த மகா 'உல்லன் ப்ளாங்கெட்'டை உருவாக்கி  சாதனை படைத்தனர். இதற்கு முன்பு சவுத் ஆப்ரிக்காவில் 3,378 மீட்டர் தான் கின்னஸ் ரெட்டார்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது!

 

 

vikatan

 

  • தொடங்கியவர்
8 hours ago, குமாரசாமி said:

நன்றி உங்கள் தகவல்களுக்கு..:)

நானும் அவரது பதிவுகளை இங்கு பார்த்து உள்ளேன் முன்பு.

தற்சமயம் அவர் இங்கு இணைப்பதில்லை

  • தொடங்கியவர்

12647267_1092001144167698_63402706161538:grin:

  • தொடங்கியவர்

பிப்ரவரி 1: கல்பனா சாவ்லா - விண்ணைத்தொட்ட தேவதை நினைவு தின சிறப்பு பகிர்வு...

 

அப்பா பிரிவினைக்கு முந்திய இந்தியாவில் இருந்து வந்திருந்தார் ; பாகிஸ்தானில் இருந்து அகதியாக எல்லாவற்றையும் அங்கே விட்டுவிட்டு கொஞ்சம் காசு,ஏகத்துக்கும் நம்பிக்கை என்று சாதித்து காட்டியவர் அவர். அவரின் கரம்பிடித்து நடைபயின்ற குழந்தை என்பதால் கொஞ்சம் கல்பனாவுக்கு அடம் அதிகம்.

நான்கு பிள்ளைகள் இருந்த வீட்டில் கடைக்குட்டி என்பதால் இன்னமும் செல்லம் தூக்கல். எல்லா குழந்தைகளும் வெளியே விளையாடிக்கொண்டு இருக்கும் பொழுது வீட்டின் சுவற்றில் விமானங்களை அவரின் பிஞ்சுக்கரங்கள் கிறுக்கி கொண்டு இருக்கும். அண்ணனுடன் சந்திகர் சாலைகளில் போகிற பொழுது கண்கள் எப்பொழுதும் வானோடு காதல் செய்து கொண்டிருக்கும்.

kalpanachawala_vc_1.jpg

தாகூர் அரசுப்பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற பின் கல்லூரி சேர வேண்டும் என்று முடிவான பொழுது உறுதியாக பெண் பிள்ளைகளே இல்லாத பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் ஏரோநாடிகல் துறையை எடுத்து சாதித்து
காட்டிய அந்த பிடிவாதக்கார பெண் அடுத்து கிளம்பியது அமெரிக்காவுக்கு !

முதுகலைப்பட்டம்,முனைவர் பட்டம் பெற்ற பிறகும் விண்ணை தொடும் அவளின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. மூன்றாயிரம் பேர் உயிரை உறைய வைக்கும் தேர்வு முறைகள் இறுதியில் ஆறே ஆறு பேர். அதில் ஒருவராக நம்மின் குட்டிப்பெண்ணும். பயிற்சிகள் ஆரம்பித்தன எந்த அளவுக்கு என்றால் ஆற்றின் ஒரு புறத்தில் இருக்கும் ஒரு பொதிமூட்டையை கொண்டு போய் இன்னொரு புறம் இருட்டில் யாருமே இல்லாமல் சேர்க்க வேண்டும். சேர்த்த பிறகு பிரித்துப்பார்க்க வேண்டும். பிணம் கனம் கனக்கும் அதைக்கொண்டு போய் சேர்த்து பிரித்து பார்த்தால் பிணமே இருக்கும் ! இப்படிப்பட்ட எண்ணற்ற போராட்டங்களை,சோதனைகளைத்தாண்டி விண்ணில் முதல்முறை பறந்த பொழுது விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்திய பெண்மணி ஆனார் .

கொலம்பியா ஓடத்தில் நாற்பத்தி ஒரு வயதில் பறந்த அந்த வான்வெளி தேவதையின் இறுதி பயணமாக அதுவே மாறிப்போனது. பூமியை ஓடம் தொடுவதற்கு பதினாறு நிமிடங்களுக்கு முன்பு அது வெடித்து சிதற வானோடு உறைந்தது கல்பனா சாவ்லாவின் சிரிப்பு. சின்னஞ்சிறு ஊரில் இருந்து விண்ணைத்தொட்ட அந்த தேவதை மண்ணில் உதிர்ந்த தினம் இன்று.

vikatan

  • தொடங்கியவர்

12657868_1064953063563483_74624603875297

செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக்

  • தொடங்கியவர்

12622323_978869218828439_914297280497135

நடிகை கோபிகாவின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

இந்தியாவில் முதல் முறையாக தண்ணீருக்குள் ரெஸ்டாரண்ட்!
அகமதாபாத்தில் பாரத் பட் என்ற தொழிலதிபருக்கு சொந்தமான 'The Real Poseidon' என்ற சைவ உணவகம், இந்தியாவிலேயே முதல் முறையாக தண்ணீருக்கு அடியில் உருவாக்கப்பட்டுள்ளது. தரைமட்டத்தில் இருந்த் 20 அடி ஆழத்தில் 1.60 லட்சம் லிட்டர் தண்ணீரால் நிரப்பிய மீன் கண்காட்சியகத்திற்கு உள்ளே இந்த ரெஸ்டாரண்ட் அமைந்துள்ளது.

12592764_673592972743248_941519680112010

12654668_673592966076582_303476695102989

12650961_673592969409915_405359236143785

விகடன்

  • தொடங்கியவர்

 

 

ரஜினிமுருகன் காமெடி காட்சி

 

  • தொடங்கியவர்

12628441_978893295492698_513063244784772

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரமும், முன்னாள் அணித் தலைவருமான ஷொயெப் மாலிக்கின் பிறந்தநாள்
Happy Birthday Shoaib Malik

 
  • தொடங்கியவர்

சொல்வனம்

மகன் வீடு

`அப்பா,
இந்த வீடு எனக்கா, அக்காவுக்கா?’ என்ற
ஐந்து வயது மகனிடம் சொன்னேன்
`உனக்குத்தாம்ப்பா’.
உடனே பென்சிலை எடுத்துச் சென்றவன்
வெளிச்சுவரில் எழுதிவிட்டான்
`இது என் வீடு’ என்று.
நாங்கள் அப்போதே
அவன் வீட்டுக்குக் குடிபெயர்ந்துவிட்டோம்.

VIKATAN

-

  • தொடங்கியவர்

12640497_978868412161853_918929978545068


தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைசிறந்த அணித் தலைவரும், உறுதியான ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான கிரேம் ஸ்மித்தின் பிறந்தநாள்.
தென் ஆபிரிக்கா டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாம் இடத்தில் உயர மிக முக்கியமான காரணமாக அமைந்த தலைவர் இவர்.
Happy Birthday @Graeme sm

  • தொடங்கியவர்

பிளாஸ்டிக் பையால் பார்சிலோனா பறக்கும் சிறுவன்: லயனல் மெஸ்சியை சந்திக்கிறான்!

 

messi%20%281%29.jpgபிளாஸ்டிக் பையில் செய்யப்பட்ட மெஸ்சியின் ஜெர்சியை அணிந்து கால்பந்து விளையாடிய ஆப்கானிஸ்தான்  சிறுவனை பார்சிலோனா நட்சத்திர வீரர் லயனல்  மெஸ்சியை  சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் காபூல் அருகே ஜகோரி என்ற கிராமத்தை சேர்ந்த சிறுவன் மொர்டஷா அகமதி, தனது தந்தையிடம் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயனல் மெஸ்சியின் ஜெர்சி வாங்கித் தருமாறு கேட்டு அடம் பிடித்தான். மெஸ்சியின் ஜெர்சியை வாங்கிக் கொடுக்க இயலாத அவனது தந்தை பிளாஸ்டிக் பையில் அர்ஜென்டினாவின் புளு மற்றும் வெள்ளை நிறத்தை வரைந்து அதில் மெஸ்சி 10 என வரைந்து கொடுத்து விட்டார். சிறுவன் அகமதி அந்த ஜெர்சியை அணிந்து கால்பந்து விளையாடுவது போன்ற படங்கள் மற்றும் செய்திகள் இணையங்களில் வைரல் ஆனது.

இதனைத் தொடர்ந்து பார்சிலோனா அணி அந்த சிறுவனை பார்சிலோனாவுக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளது.  இது தொடர்பாக பார்சிலோனா அணி ஆப்கானிஸ்தான் கால்பந்து சங்கத்துக்கு இமெயில் அனுப்பியுள்ளது.  லயனல் மெஸ்சியும் தனிப்பட்ட முறையில் இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கால்பந்து சங்கத்துக்கு இமெயில் அனுப்பியுள்ளார்.

 

                

பார்சிலோனாவில் உள்ள கேம்ப்நியூ மைதானத்துக்கு சிறுவன் அழைத்து செல்லப்படவுள்ளான். அங்கு சிறுவன் அகமதி, மெஸ்சியை சந்திப்பான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIKATAN

 

 

  • தொடங்கியவர்

12657889_978890778826283_553781991189889

தெலுங்குத் திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்து தமிழிலும் கலக்கும் நகைச்சுவை அரசர் பிரம்மானந்ததின் பிறந்தநாள்.
கலகல சிரிப்புக்கும் கள்ளமில்லா ஆனந்தத்துக்கும் உத்தரவாதம் பிரம்மானந்தம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.