Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பேசும் படம்:

 

 
25CHLRDJUSTIN

இந்தியாவுக்கு ஒரு வாரச் சுற்றுப் பயணமாக வந்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. காதல் சின்னமாகக் கொண்டாடப்படும் தாஜ்மகாலுக்குத் தன் குடும்பத்தினருடன் சென்று அவர் எடுத்துக்கொண்ட படம்.

டந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரம், மகிழ்ச்சி, பெருமிதம், போராட்டம் என உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது:

25CHLRDEMMA

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் துப்பாக்கிகளை விநியோகம் செய்வதைக் கட்டுப்படுத்தத் தவறிய அமெரிக்க அரசைக் கண்டித்து மாணவி எம்மா கான்சாலஸ் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

     
 
25CHLRDNICE

பிரான்ஸ் நகரில் நடைபெற்றுவரும் நைஸ் கார்னிவல் பேரணியில் பங்கேற்ற கலைஞர்களில் ஒருவர்.

 
25CHLRDNICE2
 
25CHLRDPF

மராத்திய மக்கள் கொண்டாடும் முக்கிய விழாவான சிவாஜி ஜெயந்தியை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பெண் கலைஞர்களில் ஒரு பகுதியினர்.

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஜிம்பாப்வே-ஷோனா நாடோடிக் கதை: நண்டுக்கு தலை போன கதை

 

 
gk4

கடவுள் உலகைப் படைத்தபோது எல்லா விலங்குகளிலும் பெரிய யானையை விலங்குகளின் அரசனாக்கினார். யானையும், அதன் குடிகளான மற்ற விலங்குகளும் தாகம் தீர்க்க அருமையான குளத்தையும் உருவாக்கினார். யானையும் அதன் குடிகளுடன் வனத்தை வளைய வந்தது. சந்தோஷமாக சிறு விலங்குகளிடம் சேர்ந்து விளையாடியது. ஆனால், யானை ராஜாவுக்கு தும்பிக்கை மீது வந்துவிடும் முன் கோபம் ஒரு பெரும்குறை. 

ஒருநாள் யானை சத்தமாகப் பிளிறி, தன் நண்பர்களான கழுகையும், நண்டையும் பார்த்து "நான் காட்டுக்கு வேட்டையாடப் போகிறேன். நீங்களும் என்னுடன் வர வேண்டும்' என்று சொல்லியது. உடனே கழுகு வேட்டைக்கு ஆயத்தமாகத் தன் வில், அம்பு, ஆகியவற்றை எடுத்துவர அதின் கூட்டிற்குச் சென்றது. 

ஆனால் நண்டோ தன்னால் வேகமாகச் செல்ல இயலவில்லையே என்ற வருத்தத்துடன் தன் வளைக்குத் திரும்பியது. அடுத்த நாள் யானை, கழுகு, நண்டு மூவரும் காட்டின் எல்லையில் வேட்டைக்குத் தயாராகும் வகையில் சந்தித்தன. யானையும் கழுகும் அம்பு வில் சகிதம் வேட்டைக்கு ஏற்ற இடம் தேடிச் செல்ல நண்டு தான் கொண்டு வந்த வலையை ஒரு மூலையில் விரித்து ஏதாவது ஏமாந்த விலங்கு மாட்டுமா என்று காத்திருந்தது. 

சற்று நேரத்தில், கழுகு, யானை விட்ட அம்புகளால் காயமுற்று குட்டி மான் ஒன்று வேகமாக ஓடி வந்து நண்டின் வலையில் மாட்டியது. நண்டு அந்த மானை ஒரு தடி கொண்டு அடித்து கொன்றது. மானின் மீது தைத்திருந்த அம்புகளை அகற்றிவிட்டு, மானின் உடலை ஒரு பக்கம் வைத்தது. இதுபோலவே மேலும் சில விலங்குகள் யானை, கழுகின் ஈட்டி, அம்புகளால் காயமுற்று ஓடிவந்து நண்டின் வலையில் விழுந்தன. அவற்றை தடி கொண்டு கொன்று வீழ்த்தியது. பல விலங்குகள் தப்பி ஓடியது என்றாலும் யானை நான்கு மான்களையும், கழுகு இரண்டு பன்றிகளையும் வேட்டையாடி கொன்றுவிட்டன. 

சரி, இனி வேட்டையாடியது போதும், போய் நண்டு எத்தனை விலங்குகளை வேட்டையாடியது எனப் பார்க்கலாம் என்று சொல்லி, நண்டு இருந்த இடத்திற்கு வந்தன. வந்து பார்த்தபோது நண்டு தன் கணக்கிற்கு ஆறு மான்களையும், நான்கு பன்றிகளையும் கொன்றதாகக் காட்டி பெருமையுடன் பேசியது. கழுகும் நண்டின் வேட்டை ஆடும் திறமையை வியந்து பாராட்டியது. 

அதனால் யானைக்கு பொறாமையால் கோபம் வந்துவிட்டது. ""கழுகே, அரசன் நானிருக்க என்னை விட அதிகமாக வேட்டையாடி இந்த நண்டு என்னை மட்டம் தட்டிவிட்டது. அதன் தலையை வெட்டிவிடு'' என்று சொல்ல, நண்டு நடுநடுங்கி ""வேட்டையாடிய எல்லா விலங்குகளையும் உனக்கே கொடுத்துவிடுகிறேன்'' என்று சொல்லி, உயிருக்கு மன்றாடியது. 

யானையும் கோபம் தணிந்து ""சரி என் முன் நிற்காதே'' என்று கூற, நண்டு மெதுவாகப் பக்கவாட்டில் நகர்ந்து சேற்றுக்குள் மறைந்தது. தன்னை விரட்டியடித்த யானையை பழிக்குப்பழி வாங்க நினைத்து, நண்டு நேராக யானையின் மனைவியிடம் சென்றது. யானையின் மனைவியிடம், ""நான் யானை அரசனுடன் வேட்டைக்குச் சென்றேன். வேட்டையாடி களைத்த யானை என்னை முன்னேஅனுப்பி வைத்து, உன்னிடம் நல்ல காரமாக குழம்பு வைக்கச் சொன்னது என்றது.

"மறந்துவிடாதே அதிகமான காரம் கொண்ட மிளகாய் சேர்த்த காரக்குழம்பு' என்று சொல்லிவிட்டு நண்டு கடவுள் படைத்த குளத்திற்குச் சென்று குளத்தை நிரப்பியது. எல்லா மண்ணையும் குளத்தில் கொட்டியதால் குளத்தில் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. கடைசியில் தான் மூடிய குளத்தில் சிறு வளை செய்து அதில் பதுங்கியது நண்டு.

யானையின் மனைவியோ, நண்டு சொன்னது போலவே, அதிக மிளகாய் இட்டு காரசாரமாக காரக்குழம்பு ஒன்றை செய்தாள். சமைத்து முடித்து சற்று நேரத்தில் யானையும் கழுகும் களைப்புடன் திரும்பி வந்தன. அவை பசியுடன் இருந்ததால் காரக்குழம்பை சோற்றுடன் உண்டு பசியாறின. காரமான குழம்பை உண்டதால்  அதிக தாகம் எடுக்க ""சரி வா, குளத்திற்குப் போய் தாகம் தீர்த்துக் கொள்ளலாம்'' என்று சொல்லி குளத்திற்கு வந்தன. 

குளம் வற்றிக் கிடப்பதைப் பார்த்து, "இது என்ன ஆச்சரியம், நேற்று வரை நீருடன் இருந்த குளம் வற்றிவிட்டதே, காரத்தால் தவிக்கும் வாய்க்கு தண்ணீர் இல்லாமல் போய்விட்டதே!' என்று சொல்லி யானையும், கழுகும் நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தன. ஆழமாகத் தோண்டியபோது நண்டு ஒளிந்திருந்த வளையை கண்டுபிடித்தது கழுகு. யானை தனது தும்பிக்கையை வளையில் இட்டுப் பிடிக்க, நண்டு பதறிப்போய், தான் குளத்தை மூடிய கதையைச் சொன்னது. 

கோபமுற்ற நண்டின் தலையைக் கிள்ளி எரிந்துவிட்டு, தலையில்லா நண்டை குளத்தில் வீசியது. வீசிய மாத்திரத்தில் குளத்தில் நீர் ஊறி, குளம் தளும்ப யானை, கழுகு மற்றும் எல்லா மிருகங்களும் மகிழ்ச்சியடைந்தன. மேலும் பொங்கி வந்த ஊற்று நீர் பெருக நீர் வழிந்து ஓடுமாறு யானை கால்வாய் வெட்டச் சொன்னது. வெட்டிய கால்வாய் வழியாக நீர் வழிந்து ஓடி, ஆறாக மாறி காடு மலை கடந்து சென்று கடலில் சங்கமமானது. இதுவே ஆறு தோன்றிய கதை.

தலையில்லா நண்டை குளத்தில் வீசியதால் நீர் பொங்கியது என்று நினைத்த யானை, நண்டை மேலும் துன்புறுத்தவில்லை. தலையில்லா நண்டு தன் நண்பன் இறால் மீனிடம் உதவி கேட்க, அதுவும் தன் கண்கள் இரண்டை நண்டின் தோள் மீது பொருத்தியது. நண்டும் மீண்டும் குளத்தில் வசித்தால் ஆபத்து என்று ஆற்றின் போக்கில் சென்று கரையில் வாழ ஆரம்பித்தது.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

பெயர் : ஓக் ; நாடு : ஜெர்மனி; வயது: 500; சேவை: காதல்! #OakTree

 
 
Statutory Warning: 

 

காதலை விரும்பாதவர்களுக்கு இந்தக் கதை பிடிக்காது. 

 

Hardcore Reality மற்றும் Practical Life குறித்துப் பேசுபவர்கள் இந்தக் கதையை வெறுப்பார்கள். 

இந்தக் கதையில் எந்த மரங்களும், கிளைகளும், இலைகளும், மிருகங்களும், பறவைகளும் வதைக்கப்படவில்லை. 

நன்றி:

காதல்.

உலகம் முழுக்க இருக்கும் காதலர்கள். 

சாக்லேட்டின் மணம் அந்த அறை முழுக்க பரவியிருந்தது. கொதிக்க, கொதிக்க இருந்த அந்த சாக்லேட் திரவத்தை...அந்த டிரேவில் அவன் அப்படியே ஊற்றினான். ஊற்றப்பட்ட அந்த சாக்லேட் திரவம் இன்னும் சில நிமிடங்களில் இறுகி கெட்டியாகிவிடும். அதற்குள் அவன் அதில் வரையத் தொடங்கினான். அவன் வேகமாக வரைவதைப் பார்க்கும் போது ஏதோ கிறுக்குவது போல் தான் தெரிகிறது. படு வேகமாகச் செயல்படுகிறான். சில நிமிடங்களில் முடித்துவிட்டு அங்கிருந்து நகர்கிறான். சற்று நெருங்கிப் போய் என்ன வரைந்திருக்கிறான் என்பதை எட்டிப் பார்ப்போம்.

ஆச்சர்யமாக இருக்கிறது... அவ்வளவு அழகான மரம். அடர்த்தியான இலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அது கண்டிப்பாக "ஓக் மரம்" (Oak Tree) தான். அதன் இலைகளை இதய வடிவில் வடிவமைத்திருந்தான். மொத்தமாக அந்த மரத்தின் கிளைகளையும், இலைகளையும் சேர்த்து பார்க்கும் போதும் அது அப்படியான ஓர் இதய வடிவில் தான் இருக்கிறது. இதோ வேகமாக ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தபடியே அவன் வருகிறான். விலகிக் கொள்வோம். விலகி நின்று அவன் செய்வதைப் பார்ப்போம்.

காதல் சாக்லேட்

கையில் சின்ன பெட்டியோடு வந்தான். அந்தப் பெட்டி யானையின் சாணி நிறத்தில் இருந்தது. புதிதாகப் போடப்பட்ட யானை சாணியின் நிறமல்ல அது. நாளாகி காய்ந்து போன சாணியின் நிறம் அந்தப் பெட்டி. அந்த அழகான மரத்தை அதில் எடுத்து பத்திரமாக வைத்தான். வெதுவெதுப்பாக இருந்தது அந்த அறை. ஓர் ஓரத்தில் தொங்க விடப்பட்டிருந்த கருப்பு நிற குளிர் கோட்டை எடுத்து மாட்டினான். அந்தக் கோட்டை எடுக்கும் போது பக்கத்தில் இருந்த கேலண்டர் கண்ணில் படுகிறது. அதில் வெள்ளிக்கிழமை - பிப்ரவரி 14, 1890 என்று இருந்தது. கதவைத் திறந்து நடக்கத் தொடங்கினான். அவன் வேகத்தில் அவனை நாம் பின் தொடர்வது சற்று கடினம் தான். காரணம் வேகம் மட்டுமல்ல, தாங்க முடியாத அந்தக் குளிர் தான். இருந்தும் அவனைத் தொடரலாம். 

அத்தனை மகிழ்ச்சியோடு நடந்துப் போய்க் கொண்டிருந்தான். இடையே இருந்த அந்தப் பூ மார்க்கெட்டிற்குள் நுழைந்தான். அன்று காதலர் தினம் ஆதலால், ரோஜாக்கள் அதிகமிருந்தன. அங்கு வேகமாக வியாபாரம் நடந்துக் கொண்டிருந்தது. குறிப்பாக ஒரு கடையில். அந்தப் பெண்ணின் கைகள் அத்தனை வேகமாக ரோஜாக்களை எடுத்து, முட்கள் நிறைந்த அதன் தண்டுகளை வெட்டிக் கொண்டிருந்தன. அதுவல்ல ஆச்சர்யம். அவளின் பார்வை ரோஜாவில் இல்லை. தொட்டு உணர்ந்தபடியே அவள் அதைச் செய்து கொண்டிருந்தாள். இன்னும் அவளை உற்று நோக்கினால் தெரியும் அவள் பார்வையற்றவள் என்பது. அவளிடம் தான் இவன் போய் நின்றான்.

"ஹே ஜூலியா..."

"ஹே வில்...நீயா? அந்த பட்டர்ஃப்ளை சாக்லேட் வச்சிருக்கியா?" அவள் வேலையின் வேகம் துளியளவும் குறையவில்லை. 

தன் கோட் பாக்கெட்டில் இருந்து ஒரு கவரில் இருந்த சாக்லெட்டை எடுத்து அங்கிருந்த பெட்டியின் மீது வைத்தான்.

"எனக்குக் கொஞ்சம் ரோஸ் வேணும்!"

"ஹா ஹா ஹா... நிஜமாத் தான் கேக்குறியா? உனக்குத் தானா?"

"ஆமா ஜூலியா...சீக்கிரம் கொடு. நான் வந்து கதை சொல்றேன்." அவளை அவசரப்படுத்தினான். அவள் கொடுத்த ரோஜாவை வாங்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினான். சரியாக மார்க்கெட்டை விட்டு வெளியேறும் சமயம், அவள் தன் அப்பாவோடு உள்ளே நுழைவதைப் பார்த்து அப்படியே நின்றான். 

பனியினால் வெடித்திருந்த உதட்டை விரித்து அழகாகச் சிரித்தான். அவள் சிரிக்கவில்லை. முகம் சிவந்திருந்தது. இவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இவனைக் கடந்த அந்த ஒரு நொடியில் அவள் ஏதோ சொன்னது இவனுக்குத் தெளிவாக கேட்டது.

"நம் ஓக் மரத்திற்கு அருகே போய் பாரு." 

வேகமாக ஓடினான். நம்மால் நிச்சயம் அவன் வேகத்திற்கு ஓட முடியாது. இருந்தும் அவனைப் பார்வையிலிருந்து விட்டுவிடாதபடியான தூரத்திலேயே தொடர்வோம்.

சாலையை விட்டு ஒதுங்கி அந்த அழகான ஓக் மரத்தின் அருகே சென்றான். 3 மீட்டர் உயரம் அந்த மரத்தில் ஏறினான். அங்கிருந்த பொந்தில் ஒரு கடிதம் கிடந்தது. பிரித்துப் பார்த்தான்.

காதலர்களின் கடிதங்களை சுமக்கும் ஓக் மரம்

"நம் காதலை அப்பா ஒப்புக் கொள்ளவில்லை. உன்னைப் பார்க்கக் கூடாது என்று சத்தியம் வாங்கியிருக்கிறார். ஆனால், அவர் அவ்வளவு கொடியவர் இல்லை. சில நாட்களில் எல்லாம் சரியாகிவிடும். அதுவரை இந்த மரத்தின் வழி கடிதங்களில் பேசலாம். 
                                                                                                                                                                      - இப்படிக்கு "உன் காதல்" மின்னா ஜெல். 


அவனுக்குள் என்னென்னவோ தோன்றின. என்ன செய்வதென தெரியவில்லை. அமைதியாக அந்த சாக்லெட்டையும், ரோஜாவை அந்தப் பொந்திற்குள் வைத்தான். அன்று முதல் அவர்களின் காதல் அந்த மரத்தின் வழி வளர்ந்தது. ஒரு வருடத்தில் மின்னாவின் அப்பா இவர்களின் கல்யாணத்திற்கு சம்மதிக்கிறார். தங்கள் காதல் வளர்ந்த அந்த ஓக் மரத்தின் அடியிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். அன்று இந்தக் காதல் கதை எல்லைகள் தாண்டி பிரபலமடைந்தது. காதல் கதையோடு சேர்ந்து அந்த ஓக் மரமும் பிரபலமடைந்தது. 

அன்று முதல் அந்த ஊரைச் சேர்ந்த பல ஆண்களும், பெண்களும் கடிதங்களை அந்த மரத்தில் வைக்கத் தொடங்கினார்கள். பல காதல் கதைகள் தோன்றின. பல திருமணத்தில் சென்று முடிந்தன. 1927யில் ஜெர்மன் அரசாங்கம், இந்த மரத்திற்கு என தனி முகவரி, பின்கோடு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ஒரு தபால்காரரையும் (PostMan) நியமித்தது. அன்று முதல் உலகம் முழுவதிலுமிருந்து காதல் கடிதங்கள் அங்கு வரத் தொடங்கின. யார் வேண்டுமென்றாலும் மரத்தில் ஏறி அந்தக் கடிதங்களைப் படிக்கலாம். தங்களுக்குப் பிடித்திருந்தால் அந்தக் கடிதத்திற்கு பதில் சொல்லலாம். இல்லையென்றால் அதைப் பத்திரமாக அந்தப் பொந்திலேயே வைத்துவிட வேண்டும்.

ஓக் மரத்தில் காதலைத் தேடும் பெண்கள்

மரத்தில் ஏறி கடிதங்களைப் படிப்பது சிரமமாக இருந்ததால் அங்கு மூன்று மீட்டர் உயரத்திற்கு ஒரு மர ஏணி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 72 வயதிலிருக்கும் கார்ல் ஹெயின்ஸ் மார்டென்ஸ் (Karl Heinz Martens) என்பவர் தான் இந்த மரத்திற்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தபால்காரராக இருந்தார். இதுவரை இந்தக் கடிதங்களின் மூலம் 100 ஜோடிகளுக்கும் அதிகமானோர் கல்யாணம் செய்து கொண்டதாக சொல்கிறார் மார்டென்ஸ். 

1958யில் ராணுவ வீரரான பீட்டர் பம்ப் (Peter Pump) மரத்தின் மீது ஏறினார். குவிந்து கிடந்த கடிதங்களிலிருந்து ஒன்றை எடுத்துப் படித்தார். பெயரும், முகவரியையும் தவிர அதில் எதுவுமில்லை. "வணக்கம் மிஸ். மரிட்டா" என்று அந்தப் பெண்ணிற்கு முதல் கடிதத்தை அனுப்பினார். மரிட்டாவிற்கு ஆச்சர்யம். அவர் மரத்திற்கு எந்தக் கடிதத்தையும் அனுப்பவில்லை. அவரின் தோழிகள் செய்த சேட்டை அது. இருந்தும் பீட்டருக்கு பதில் எழுதினார். இப்படியாக மொத்தம் 40 கடிதங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். இறுதியில் அந்தக் காதல் கல்யாணத்தில் முடிந்தது. 1961யில் கல்யாணம் செய்து, இன்றும் பெரும் மகிழ்ச்சியோடும், பெரும் காதலோடும் வாழ்ந்து வருகின்றனர். 
காதல் கடிதங்களின் வழி தூதுவராக இருந்த மார்டென்ஸுக்கும் அந்த மரம் ஒரு காதலை பரிசளித்தது. 1989யில் ஒரு ஜெர்மானிய டிவி நிறுவனம் மார்டென்ஸை பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அதில் அவரிடம் இப்படியொரு கேள்வி முன்வைக்கப்பட்டது...

"இந்தக் காதல் கதைகள் இருக்கட்டும். உங்களின் காதல் கதையைச் சொல்லுங்கள்?"

"ஹா...ஹா...ஹா... என் வாழ்வில் காதலும் இல்லை. காதலியும் இல்லை. நான் அதை அனுபவிக்கும் அளவிற்கு வரம் வாங்கியவன் அல்ல."

தபால்காரர் மார்டென்ஸ்

டிவியில் பேட்டி ஒளிபரப்பாகி சில நாட்கள் ஆகியிருக்கும். வழக்கம் போல் "காதல் மரத்திற்கு" வந்த கடிதங்களைக் கொடுக்க மரத்தின் மீது ஏறினார். அங்கு ஒரு கடிதம் இருப்பதைக் கண்டார்.

பெறுநர்: 
காதல் கடிதங்களை சுமக்கும் காதலும், காதலியும் அற்ற தபால்காரருக்கு. 
நான் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். நானும் உங்களைப் போல் தான். காதலும், காதலனும் வாய்க்கும் வரத்தைப் பெறாதவள்.

கடிதத்தைப் படித்து முடித்த நொடி முடிவு செய்துவிட்டார் மார்டென்ஸ். ரெனெட்டை (Renate) சந்தித்தார். காதலர்கள் ஆயினர். 1994யில் கல்யாணம் செய்து கொண்டனர். இதோ இன்று வரை காதலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

காதலர்களைச் சேர்த்து வைத்து காதலைக் கொண்டாடிய ஓக் மரத்திற்கும் கல்யாணம் செய்து வைத்தார்கள், அதனால் காதல் பாக்கியம் பெற்றவர்கள்.

ஓக் மரம் - ஜெர்மனி

 2009யில் 500 வயதான ஓக் மரத்திற்கும், அதனிடமிருந்து 503 கிமீ தூரத்தில் இருந்த 200 வயதான செஸ்ட் மரத்திற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சில நாட்களில் திருமணமும் நடந்து முடிந்தது. ஆனால், அந்தத் திருமண 6 ஆண்டுகள் தான் நீடித்தது. வயது முதிர்வின் காரணமாக செஸ்ட்நெட் இறந்துவிட, இன்று கணவனின்றி தனியே தவித்து வருகிறாள் ஓக். 

ஆரோக்கியமாகத் தான் இருந்தாள் ஓக். ஆனால், வயது மூப்பின் காரணமாக தளர்ந்து விட்டாள் இப்போது. சில மாதங்களுக்குப் பூஞ்சை தொற்று (Fungal Infection) ஏற்பட்டு பெரும் அவதிப்பட்டாள். இப்போது தளர்ந்து போயிருக்கும் அவளின் கிளைகளை எல்லாம் மருத்துவம் பார்த்து ஓரளவிற்குச் சீர் செய்து வைத்திருக்கிறார்கள். இருந்தும் அவளின் உடல் நிலை மோசமாகத் தான் உள்ளது. 

காதல் கடிதம் சுமக்கும் ஓக் மரம்

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓக் மரத்திற்கான தபால்காரராக பணியாற்றிவிட்டு, ஓய்வு பெற்றிருக்கும் மார்டென்ஸ் லுகிமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இருந்தும் ஓக் மீதான காதல் அவருக்குக் குறைந்துவிடவில்லை. உடலின் எலும்புகள் தளர்ந்து விழப்போனாலும், அவ்வப்போது அந்த மர ஏணியை உறுதியாக தன் கைகளில் பிடித்தபடி மரத்தில் ஏறத் தான் செய்கிறார். அவரைப் பார்க்கும் போதெல்லாம் பெரும் அன்போடு அவரை அரவணைத்துக் கொள்கிறாள் ஓக். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

மயிலு... மயிலு..!

 

imagesjpg
hqdefaultjpg
149941860800481Pjpg
imagesjpg
hqdefaultjpg

இந்தியாவின் கனவுக்கன்னி எனும் பெயரும் புகழும் பெற்ற நடிகைகள் இரண்டுபேர். ஹேமமாலினி, ஸ்ரீதேவி. இருவருமே தமிழகத்தின் தேவதைகள் என்பது, நமக்கெல்லாம் கூடுதல் பெருமையும் மகிழ்வும்! இதில் ஸ்ரீதேவி எனும் தேவதையின் மரணம் ஆறாத துக்கம்!

குழந்தை நட்சத்திரமாக வந்து நம் மனதில் புகுந்தவர் ஸ்ரீதேவி. இதில் ஆச்சரியம்... இன்றைக்கும் அதே முகம்... அதே சிரிப்பு... அதே வசீகரம். கமல், ரஜினிக்களின் ஹீரோயினாக வலம் வரும் போதே, இன்னொன்றும் நடந்தது. அதாவது தமிழ் சினிமாவின் மொத்த ரசிகர்களும் தங்களின் நாயகியாகவேப் பார்த்தார்கள்.

குழந்தையில் இருந்தே நடித்தாலும் குமரியாக பாலசந்தர் மூலம் அறிமுகம் கிடைத்தது. காதலனைப் பறிகொடுத்துவிட்டு, காதலனின் நண்பனே தன்னை அடைய நினைக்கும் வேளையில், அவனின் தந்தையை திருமணம் செய்து கொண்டு, அவனுக்கு சித்தியாகிற கதை பாலசந்தருக்குப் புதிதல்ல. ஆனால் நாயகியாய் வலம் வந்த முதல் படத்திலேயே அப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்று, தைரியமாய் நடித்ததுதான், ஸ்ரீதேவி எனும் நடிகையின் முதல் வெற்றி!

தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த இன்னொரு வாசல் என்று இன்றைக்கும் சொல்லப்படுகிற, கொண்டாடப்படுகிற ‘16 வயதினிலே’ மயில்..., ஸ்ரீதேவி தேவதையாக ஒளிரத் தொடங்கிய தருணம் அதுதான்.

கமல், ரஜினி, விஜயகுமார், ஜெய்கணேஷ் என பாரபட்சமே இல்லாமல், எல்லோருடனும் நடித்தார். அவ்வளவு ஏன்... நம்பர் ஒன் இடத்தில் இருந்த போது, சிவாஜிக்கு மகளாகவும் நடித்தார். ஜோடியாகவும் நடித்தார். எப்படி இருந்தால் என்ன... ஸ்ரீதேவியை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். தங்கள் வீட்டுப் பெண்ணாகவே அவரை நினைத்தார்கள். காரணம்... அந்த முகம்... வெள்ளந்தியான முகம். கண்களும் உதடுகளும் பேசிச் சிரிக்கிற பாந்தமான முகம்.

சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டு கட்டி வலம் வந்தார். காயத்ரி, வாழ்வே மாயம் , போக்கிரி ராஜா, வறுமையின் நிறம் சிவப்பு என ஒவ்வொரு படத்திலும் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்த ஸ்ரீதேவிக்கு... மிகப்பெரிய உயரமும் கெளரவமும் தந்தாள் விஜி. மூன்றாம் பிறை விஜியின் உடல்மொழியும் குரல்பாவனையும் குழந்தை போலான செய்கைகளும் எல்லா நடிகைகளுக்குமான தேவிபாடம்.

அண்ணன் தங்கை பாசமென்றால் பெரிய பாசமலர் சிவாஜி சாவித்திரி என்று சொல்லுவது போல, ஏதேனும் ஜோடியைச் சொல்ல... கமல் ஸ்ரீதேவி ஜோடி என்று எல்லோரும் கொண்டாடுகிற அளவுக்கு பாந்தமான ஜோதியாகவே பார்த்தார்கள் ரசிகர்கள்.

தமிழ்ப் படங்களைக் குறைத்துக் கொண்டு, ஹிந்தியில் கவனம் செலுத்தும் போது, எண்பதுகளின் இளைஞர்கள், பசிதூக்கம் மறந்த கதையெல்லாம் உண்டு. எத்தனையோ படங்கள், பட்டங்கள், வெற்றிகள், கிரீடங்கள் என்று புகழின் உச்சியில் வீறுநடை போட்டாலும், இம்மியளவு கூட கர்வத்தை தலைக்குள் ஏற்றிக் கொள்ளாமல், வாழ்ந்ததே ஸ்ரீதேவியின் அழகான வாழ்வியலுக்கு உதாரணம்.

குரு, மீண்டும் கோகிலா மாமி, ராணுவவீரன் என வந்தாலும் ஜானியில் அந்தப் பாடகி கேரக்டர்... ஸ்ரீதேவிக்கு அதாவது மயிலுக்கு கிடைத்த கிரிடத்தின் மற்றொரு இறகு.  மிகப்பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இங்கிலீஷ் விங்கிலீஷ் ஸ்ரீதேவியின் இன்னொரு பரிமாணம்... பரிபாலனம். புலியில் வந்த மகாராணி வேஷமும் அதீத மேக்கப்பும் ஸ்ரீதேவியை மன்னித்து, மற்றவர்களைத் திட்டும் அளவுக்கு இருந்தனர் ரசிகர்கள். அதாவது, ஸ்ரீதேவி... ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்ரீதேவிதான்.

பத்தாங்கிளாஸ் பாஸாயிட்டேன்... என்று சொல்லும்போது ஒரு எக்ஸ்பிரஷன். கோழிக்கு உடம்பு சரியில்லை எனும் போது, உடலில் டாக்டர் சில்மிஷம் பண்ண... அப்போது இன்னொரு எக்ஸ்பிரஷன். குருவம்மா இறந்ததும் பொறுப்புடனும் ஒருவித பயத்துடனும் நிதானத்துடனும் அணுகுகிற வேளையில் வேறொரு எக்ஸ்பிரஷன்... ’சந்தைக்குப் போ, தாலி வாங்கு. என்னையே நினைச்சிட்டிருக்கிற உனக்கு, என்னையே கொடுக்கப்போறேன்’ என்று சப்பாணியிடம் சொல்லும் போது, பக்குவமும் தெளிவுமான அட்டகாச எக்ஸ்பிரஷன்...

இன்னும் எத்தனையோ கனவுக்கன்னிகள் வரலாம். ஆனால், மயிலிறகென வருடிய அந்த முகம்... மயிலின் இடம்... எவராலும் நிரப்ப முடியாத இடம்.

ஸ்ரீதேவி... நின்று, நிதானித்து, மெதுமெதுவாய் வெற்றி சாம்ராஜ்ஜியம் கொண்ட பேரரசி. மரணம் மட்டும் அவசம் அவசரமாய்!

இந்த வயதிலேயே ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு. ரசிகர்களுக்குத்தான் நெஞ்சில் வலி!

மயிலின் ஆத்மா அமைதிபெறட்டும்.

http://tamil.thehindu.com

 

 

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்

 
 

ஸ்ரீதேவி

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஸ்ரீதேவி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி, அவரின் கணவர் போனி கபூர் மற்றும் மகள் குஷி ஆகியோர், துபாயில் நடந்த அவர்களின் உறவினர் மோஹித் மார்வா இல்ல திருமண விழாவிற்கு சென்றிருந்தனர். அந்த திருமண நிகழ்வில் ஸ்ரீதேவி பச்சை நிற உடையில் ஜொலிஜொலித்தார். இதுவே ஸ்ரீதேவி கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி ஆக மாறிவிட்டது.

 

ஸ்ரீதேவி

திருமண நிகழ்ச்சி முடிந்து, தான் தங்கியிருந்த அறைக்கு சென்ற ஸ்ரீதேவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. துபாய் நேரப்படி 11.30 மணியளவில் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஸ்ரீதேவி கடைசியாக கலந்து கொண்ட அந்த திருமண விழாவில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த 'கருப்பு வெள்ளை' புகைப்படங்கள்!

 

 

அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வத்துடன் பங்கு கொண்ட நேயர்கள் அனைவருக்கும் நன்றி.

கணேஷ்வரன் கணேஷ்வரன் சித்ரா, சென்னை சித்ரா, சென்னை அஜய்குமார், தர்மபுரி அஜய்குமார், தர்மபுரி மொஹமத் இர்ஷத், குன்னூர் மொஹமத் இர்ஷத், குன்னூர் நவீன், சென்னை நவீன், சென்னை சதீஷ் குமார், திருச்சி சதீஷ் குமார், திருச்சி முத்துவேல், ஒசூர் முத்துவேல், ஒசூர் மதிவானன், ஆரணி மதிவானன், ஆரணி ரதியா கார்த்திகேயன் ரதியா கார்த்திகேயன்

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

திரையில் மின்னிய ஸ்ரீதேவி: அரிய புகைப்படங்கள்

பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ.

ஸ்ரீதேவி

 

ஸ்ரீதேவி

 

ஸ்ரீதேவி

 

ஸ்ரீதேவி

 

ஸ்ரீதேவி

 

ஸ்ரீதேவி

 

ஸ்ரீதேவி

 

ஸ்ரீதேவிபட

 

ஸ்ரீதேவி

 

ஸ்ரீதேவி

 

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

 

ஸ்ரீதேவி

http://www.bbc.com

  • தொடங்கியவர்

'மயிலு முதல் கோகிலா வரை': உள்ளம் கவர்ந்த 5 முக்கிய ஸ்ரீதேவி பாத்திரங்கள்

துபாயில் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் இறந்த நடிகை ஸ்ரீதேவி, ஏறக்குறைய 300 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

'மயிலு முதல் கோகிலா வரை': மனதை கொள்ளையடித்த 5 முக்கிய ஸ்ரீதேவி திரைப்படங்கள்படத்தின் காப்புரிமைTWITTER@SRIDEVIBKAPOOR

'துணைவன்' திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி, எண்ணற்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக, குறும்பான குமரி பெண்ணாக, பாடகியாக, ஆபத்தை அறியாத துணிக்கடை விற்பனை பெண்ணாக, ஆங்கிலம் தெரியவில்லை என பிள்ளைகளும், கணவரும் பரிகாசம் செய்யப்படும்போது சவாலாக எடுத்துக் கொண்டு ஆங்கிலம் கற்கும் நடுத்தர வயது பெண்ணாக என ஸ்ரீதேவி ஏற்று நடித்திராத கதாப்பாத்திரமே இல்லை எனலாம்.

மனதை கொள்ளையடித்த 5 முக்கிய ஸ்ரீதேவி திரைப்படங்கள்படத்தின் காப்புரிமைபடத்தின் காப்புரிமைCHANDNI MOVIE/YASHRAJ FILMS

தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஸ்ரீதேவியின் 5 முக்கிய திரைப்படங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

16 வயதினிலே

5 முக்கிய ஸ்ரீதேவி திரைப்படங்கள்படத்தின் காப்புரிமைE.GNANAM

திரைப்படத்தின் ஆரம்பத்தில் ஒரு கிராமத்து வெகுளிப் பெண்ணாக தோன்றும் ஸ்ரீதேவி, தான் ஏமாற்றப்பட்ட பின்னர் மிகவும் முதிர்ச்சியான மனோபாவத்தையும், நடிப்பையும் வெளிப்படுத்தி இருப்பார்.

தான் முன்பு ஏளனம் செய்த கமல் ஹாசனை ஏற்றுக்கொள்வதும், வில்லன் ரஜினியை புறந்தள்ளும் கண்டிப்பும் அந்த சிறு வயதிலேயே ஸ்ரீதேவியின் நடிப்பாற்றல் ஒரு சிறந்த நடிகை உருவாக உள்ளார் என்று புரியவைத்தது.

மயிலு மயிலுதான்.

மூன்றாம் பிறை

தனது நினைவுகளை தொலைத்த ஒரு இளம் பெண்ணாக மூன்றாம்பிறை படத்தில் ஸ்ரீதேவி மிக சிறப்பாக நடித்திருப்பார்.

கமல் ஹாசனோடு ரயில் தண்டவாளத்தில் காது வைத்து ரயில் வரும் சத்தத்தைக் கேட்கும் காட்சியும், நாய்குட்டியை 'சுப்பிரமணி' என வாஞ்சையோடு அழைக்கும் பாங்கும், 'கண்ணே கலைமானே' பாடலில் அவர் காட்டும் ஆயிரமாயிரம் முகபாவங்களும் ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருதையும், ஏராளமான பாராட்டுகளையும் பெற்றுத்தந்தது.

ஜானி

ஸ்ரீதேவிபடத்தின் காப்புரிமைYOUTUBE/RAJSHRI TAMIL

அர்ச்சனா என்ற பாடகி கதாப்பாத்திரத்தில் தோன்றிய ஸ்ரீதேவி, அர்ச்சனாகவே வாழ்ந்து காட்டியிருப்பார்.

தனது காதலன் சரியான பாதையில் செல்லவில்லையோ என்ற பரிதவிப்பும், சந்தேகமும் இருந்தாலும் கொட்டும் மழையில் ரஜினிகாந்தை எதிர்பார்த்து அவர் பாடும் பாடலில் நவரசத்தையும் வெளிபடுத்தியிருப்பார்.

இந்த படத்தில் இடம்பெறும் இனிமை மிகுந்த பாடல்களை பாடியிருப்பது பாடகி ஜென்சியா அல்லது ஸ்ரீதேவியா என்று தோன்றும் அளவுக்கு ஸ்ரீதேவியின் பங்களிப்பு இருக்கும்.

வறுமையின் நிறம் சிவப்பு

இயக்குநர் கே. பாலசந்தரின் நடிப்பிலும், கமல் ஹாசனுக்கு இணையாகவும் ஸ்ரீதேவி நடித்த மற்றொரு படம் வரிசையில் வறுமையின் நிறம் சிகப்பு இடம்பெற்றாலும், இந்த படம் பல அம்சங்களில் தனித்துவத்தோடு திகழ்கிறது.

பொறுப்பில்லாத தந்தை, நடுத்தர குடும்பம் என பல குடும்ப சுமைகளை தாங்கும் ஸ்ரீதேவி கமலோடு ஆரம்பத்தில் நட்போடும், பின்னர் காதலோடும் அருமையாக நடித்திருப்பார்

'சிப்பி இருக்குது முத்தும் இருக்குது...' பாடலில் என்னென்ன முகபாவங்கள்! அமர்க்களப்படுத்தியிருப்பார் ஸ்ரீதேவி.

மீண்டும் கோகிலா

மடிசார் அணிந்து ஒரு குடும்பப் பெண்ணாக மீண்டும் கோகிலா திரைப்படத்தில் வலம்வந்த ஸ்ரீதேவி, பெண் பார்க்க வந்த கமலை பார்க்க தயங்குவதும், திருமணமான பின்னர் கமலை ஆதிக்கம் செய்ய முயல்வதும் நடிப்பில் பல மைல்களை கடந்திருப்பார்.

வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படத்தில் ஸ்ரீதேவிபடத்தின் காப்புரிமைYOUTUBE/RAJSHRI TAMIL

தனது குழந்தையிடம் மொட்டை மாடியில் 'இதுதான் அப்பா போற ஃபிளைட்' என்று வானத்தில் சிறுபுள்ளியாக தெரியும் விமானத்தை சுட்டிக்காட்டுவது கொள்ளை அழகு.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

டென்னிஸ் ராஜா!

 

 
23CHDKNNETHERLANDSTENNIS

‘கிரேட்னஸ் இஸ் ஆன் அடிக்‌ஷன்’ என்பார்கள் ஆங்கிலத்தில். எந்த ஒரு துறையிலும் உயரத்தை அடைவது ஒரு போதை. அதற்கு அடிமையாகிவிட்டவர்களை, அவர்களாகவே விழுந்தால் அன்றி, கீழே கொண்டுவருவது சிரமம். டென்னிஸ் விளையாட்டைப் பொறுத்தவரை, ரோஜர் ஃபெடரரை இனி யாராலும் கீழே இழுத்துவர முடியாது என்றுதான் தோன்றுகிறது!

1,144 போட்டிகள், 20 மேஜர் பட்டங்கள், 97 கரியர் பட்டங்கள். இவை அத்தனையும் 36 வயதுக்குள் அடைந்துவிட்டார். அதுவும் ஒற்றையர் பிரிவு போட்டிகளில்! இப்போது ஏ.டி.பி. தரவரிசையில் மீண்டும் நம்பர் 1 இடம். முதலிடத்தைப் பிடித்திருக்கும் மிகவும் வயதான வீரர் என்ற பெருமையுடன், வரலாற்றில் நீக்கமற இடம்பிடித்துவிட்டார் ஃபெடரர்.

36 வயதில் வேறு எந்த விளையாட்டிலும் வீரர்கள் இருக்கலாம். ஆனால், ரோஜர் ஃபெடரரைப் பொறுத்தமட்டில், இது ஒரு மறுபிறப்பு. காரணம், 2013 முதல் 2016-ம் ஆண்டுவரை அவர் ஒரு முக்கிய பட்டம்கூட வெல்லவில்லை. ‘ஃபெடரருக்கு இனி ஃபுல் ஸ்டாப்’ என்று முடிவுரை எழுதத் தொடங்கியது டென்னிஸ் உலகம்.

நேர்த்தியும் கலைத்திறனும் கலந்த விளையாட்டு ரோஜருடையது. அவர் விளையாடுவதைப் பார்த்தால், ‘அடடா, ரொம்ப ஈஸியா இருக்கும் போலையே!’ என்று எண்ணத் தோன்றும். ஆனால், அந்த நேர்த்திக்கும் கலைத்திறனுக்கும் பின்னால் இருக்கும் உழைப்பு அசாதாரணமானது. உடல் வலிமையைவிட, டென்னிஸ் விளையாட்டின் மீது அவருக்கு இருக்கும் அலாதி விருப்பம் மிக அதிகமானது, அடர்த்தியானது. அதுதான் அந்த முற்றுப்புள்ளியை ‘கமா’வாக மாற்றியது.

ஃபிட்னஸ், டென்னிஸ் ராக்கெட், பந்தை எதிராளியிடம் திருப்பும் ஃபோர்ஹேண்ட், பேக்ஹேண்ட் உத்திகள் (தனது ஃபோர்ஹேண்ட் உத்தியை மாற்றியதால் தனது பரம வைரியாகக் கருதப்படுகிற ரஃபேல் நடாலைக் கடந்த ஆண்டில் மட்டும் தொடர்ந்து நான்கு முறை தோற்கடித்தார்) என ‘மேஜர் டைட்டில்’ வெல்லாத அந்தக் காலகட்டத்தில் தனக்கு நெகட்டிவாக இருந்தவற்றை பாசிட்டிவாக மாற்றி, தோல்விகளிலிருந்து மீண்டு வந்தார் ஃபெடரர்.

‘புல் மைதானங்களின் அரசன்’ என்று ஃபெடரர் புகழப்படுவது உண்டு. என்றாலும், களிமண் மற்றும் ‘ஹார்ட் கோர்ட்’ என்று சொல்லப்படுகிற கான்கிரீட் மைதானங்களிலும் விளையாடி கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நான்கு வீரர்களில் ஃபெடரரும் ஒருவர். எனினும், காயமடைந்த தன் கால் மூட்டுகளுக்கு அவ்வளவாக வேலை வைக்காத மைதானங்களைத் தேர்வுசெய்து விளையாடும் திட்டமிடல், ஃபெடரரின் புத்துயிர்ப்புக்கு இன்னொரு காரணம் என்றும் சொல்லலாம்.

23CHDKNTENNIS-NED-ATP

ஜெயித்துக்கொண்டே இருப்பதும், சாதனைகள் செய்துகொண்டே இருப்பதும் ஒரு கட்டத்தில் பலருக்கும் அலுத்துவிடும். குறிப்பாக, விளையாட்டு வீரர்களுக்கு. கார் ரேஸ் வீரர் ஷுமேக்கர் அப்படித்தான் போட்டிகளிலிருந்து விலகினார். கிரிக்கெட்டில் அப்படி நிறைய வீரர்களைச் சொல்லிவிட முடியும்.

டென்னிஸ் விளையாட்டிலும் அப்படியான நபர்கள் உண்டு (2004-ல் ஃபெடரர் முதன்முறையாக முதலிடம் பெற்றபோது இருந்த இதர ‘டாப் 10’ வீரர்கள் அனைவரும் தற்போது ஓய்வுபெற்றுவிட்டார்கள்!). ஆனால், ரோஜர் ஃபெடரர் விதிவிலக்கு. காரணம், அவர் வெற்றிகளையோ சாதனைகளையோ துரத்தவில்லை. தனது விளையாட்டை இன்னும் மெருகேற்ற வேண்டும் என்ற பேரார்வம்தான் ஃபெடரரை இன்றும் மைதானத்தில் இயங்கச் செய்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், ‘கற்றுக்கொள்வதை நிறுத்திக்கொள்ளும்போது நாம் (விளையாட்டில்) முதுமை அடைகிறோம்’ என்பார்கள். 30 வயதுக்குப் பிறகு பலரும் ஓய்வுபெற விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் முதுமையடைந்துவிடுகிறார்கள். ஃபெடரரோ, இன்னும் விளையாட ஆசைப்படுகிறார். ஒவ்வொரு முறையும் மைதானத்துக்குள் நுழையும்போதும் புதிதாகக் கற்றுக்கொள்ள நினைக்கிறார். அதனால்தான் அவர் என்றும் இளமையாக இருக்கிறார். அப்படிப் பார்த்தால், தற்போது ஃபெடரரின் தரவரிசை எண்தான், அவருடைய வயதும்!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

"அம்மா செல்லம், லேடி சூப்பர்ஸ்டார், பத்மஶ்ரீ..." - ஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்! #Sridevi

 
 
Chennai: 

ஐம்பது ஆண்டுகளாக ஐந்து மொழிகளிலும் தனது மிகச்சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை வசீகரித்த  நடிகை ஶ்ரீதேவி இன்று மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார்.  அவரது மரண செய்தியைக் கேட்டு ரசிகர்களும் பொதுமக்களும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்த நிலையில், அவர் கடந்து வந்த பாதையும் அவரைப் பற்றிய சில தகவல்களையும் பார்ப்போம். 

நடிகை ஸ்ரீதேவியின் இயற்பெயர்  ஸ்ரீ அமா யங்கேர் அய்யப்பன். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் ஆகஸ்ட் 13, 1963-ல் பிறந்தார். ஸ்ரீதேவியின் தந்தை அய்யப்பன் தமிழகத்தைச் சேர்ந்தவர். தாய் ராஜேஸ்வரி ஆந்திராவைச் சார்ந்தவர்.

ஸ்ரீதேவி  தனது திரையுலக வாழ்வை குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிட்டார். எம்.ஏ.திருமுகம் இயக்கிய பக்திப்படமான 'துணைவன்' திரைப்படத்தில் தனது நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக, சிறு வயது முருகன் கதாபாத்திரத்தில்  அறிமுகமானார் ஸ்ரீதேவி. 'ஜூலி' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக இந்தியிலும் கால் பதித்தார் ஸ்ரீதேவி.

'நம் நாடு', மற்றும் 'என் அண்ணன்' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்தார். 'வசந்த மாளிகை' மற்றும் 'பாரத விலாஸ்' திரைப்படங்களில் சிவாஜியுடனும் நடித்தார்.

தொடர்ந்து பல்வேறு மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவியை பதிமூன்று வயதிலேயே 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் கதாநாயகியாக்கினார், ,மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர்.

 

ஶ்ரீதேவி
 

தொடர்ந்து '16 வயதினிலே', 'சிகப்பு ரோஜாக்கள்' ,'ஜானி', 'வறுமையின் நிறம் சிவப்பு', 'மீண்டும் கோகிலா', 'மூன்றாம் பிறை' எனப் பல திரைப்படங்களின் மூலம் அன்றைய தமிழ் ரசிகர்களின் ஆதர்ச இடத்தைப் பிடித்து பிரபலமானார், ஸ்ரீதேவி. 

ஸ்ரீதேவி, 1978-ல்  'சால்வா சாவான்' படத்தின் மூலம் கதாநாயகியாக இந்தியில் அறிமுகமானார். அதன்பிறகு 1983-ல் வெளியான 'ஹிம்மத்வாலா' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்தத் திரைப்படத்தில் இருந்துதான் ரசிகர்களால் ஸ்ரீதேவி, 'தண்டர் தைஸ்' என்னும் செல்லப்பெயரால் அழைக்கப்பட்டார்.  

பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983-ஆம் ஆண்டு வெளியான 'மூன்றாம் பிறை' திரைப்படம் நடிப்பாற்றலில் ஸ்ரீதேவியின் மற்றொரு பரிமாணத்தையும் வெளிப்படச் செய்தது. மனநிலை பாதித்த பெண்ணாக ஸ்ரீதேவி நடித்த அந்த வேடமும், சுப்பிரமணி என்ற நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளும் பிஞ்சு மொழியைத் திரையில் பிரதிபலித்தன. இந்தத் திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி, அடுத்த தலைமுறை ரசிகர்களையும் அழ வைக்கும். 

1986-ஆம் ஆண்டில், ஸ்ரீதேவி  'இச்சாதாரி பாம்பு' வேடத்தில் நடித்து வெளியாகிய 'நாகினா' திரைப்படம் அந்த வருடத்தின் இரண்டாவது பிளாக் பஸ்டர் படம். க்ளைமாக்ஸில் 'மெயின் தேரி துஷ்மான்'  பாடலுக்கு இவர் ஆடும் நடனம் இந்தி சினிமாவின் மிகச்சிறந்த நடனங்களுள் ஒன்றாகும்.

1987-ல் ஸ்ரீதேவி பத்திரிக்கையாளராக நடித்து வெளியான 'மிஸ்டர் இந்தியா' திரைப்படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்று. மேலும், இந்தி சினிமாவில் வெளியாகிய தேசப்பற்று திரைப்படங்களில் தவிர்க்கமுடியாத திரைப்படமாக இது விளங்கி வருகிறது.

இந்திய சினிமாவில் அதிக பொருட்செலவில் உருவான திரைப்படங்களில் ஒன்றான 'ரூப் கி ராணி ஷோரோன் கா ராஜா' திரைப்படம் வசூலில் தோல்வியைத் தழுவியது. ஆயினும்கூட ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திரத்தை, 'இதுவரை தென்னிந்திய நடிகைகள் நடித்த பாத்திரத்திலே சிறந்த பாத்திரம் இதுதான்' எனப் புகழ்ந்து கூறின அன்றைய பத்திரிகைகள்.

1996-ல் போனிகபூரைத் திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீதேவி. இவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதன்பிறகு இல்லறத்தில் ஈடுபட்ட ஸ்ரீதேவி, கலையுலக வாழ்வைவிட்டு தற்காலிகமாக விலகினார். 

ஶ்ரீதேவி

2004-ஆம் ஆண்டில் இருந்து 'மாலினி ஐயர்' சீரியலின் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார் ஸ்ரீதேவி. 'கபூம்'  எனும் ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் இருந்திருக்கார் ஸ்ரீதேவி.

1997-ல் இருந்து பதினைந்து வருடங்கள் பெரியதிரையில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவி, 2012-ஆம் ஆண்டு 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ரஜினி நடித்த 'முத்து' திரைப்படத்திற்குப் பிறகு மிகப்பெரிய வசூலை ஜப்பானில் குவித்தது இந்தத் திரைப்படம். 

நடிகர் விஜய் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகர். 'புலி' திரைப்படத்தின் மூலம் விஜய்க்கு அத்தையாக நடித்தார் ஸ்ரீதேவி. 1986-ஆம் ஆண்டு வெளியான 'நான் அடிமை இல்லை' திரைப்படத்திற்குப் பிறகு, 'புலி' திரைப்படத்தில் தமிழில் டப்பிங் பேசினார் ஸ்ரீதேவி. 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' மூலம் அஜித்துடனும் இணைந்து நடித்துள்ளார் ஸ்ரீதேவி. 

தனது சொந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்த 'மாம்' திரைப்படம் அவரது நடிப்பில் வெளிவந்த 300-வது திரைப்படமாகும். அவர் அறிமுகமான 'துணைவன்' திரைப்படம் வெளியான ஜூலை முதல் வாரத்தில் வெளியானது. முதல் படம் வெளியாகி, ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆன ஶ்ரீதேவியின் 'மாம்' திரைப்படமும் ஜூலை முதல் வாரத்தில் வெளியானது. 

ஸ்ரீதேவி ஓவியம் வரைவதற்கு ஆர்வம் காட்டுவார். 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவரது ஓவியங்கள் ஏலம் விடப்பட்டு அதில் கிடைத்த பணத்தை நிதியுதவியாக செய்தார் ஸ்ரீதேவி. மேலும், ஆசியன் அகாடமி ஆப் பிலிம் & டெலிவிஷன் போர்டில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார், ஸ்ரீதேவி.

2012-ஆம் ஆண்டு ஆமிர்கான் நடத்திய 'சத்யமேவ ஜெயதே' டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி, பாலியல் ரீதியாக தவறாக நடத்தப்பட்ட ஒரு குழந்தையின் பேட்டியைக் கண்டார். பின்பு, 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக ஒரு சட்டத்தை நிறைவேற்றவேண்டும்' என்று ஆமிர்கான் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் ஸ்ரீதேவியும் கையெழுத்திட்டார்.

2013-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வென்றார் ஸ்ரீதேவி. மேலும், பத்துமுறை பிலிம்ஃபேர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, ஐந்து முறை வென்றுள்ளார். 'மூன்றாம் பிறை' திரைப்படத்தின் மூலம் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார்.

இந்தி  சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார், ஸ்ரீதேவிதான். மேலும், அவரது தலைமுறையின் பெரும்பாலான பெண்கள் ஸ்ரீதேவியைப் பார்த்துதான் நடிகைகளாக மாறினர். ஸ்ரீதேவியை ரோல் மாடலாகக் கொண்டுதான் நடிக்க வந்ததாக நிறைய நடிகைகள் பேட்டி கொடுத்திருக்கின்றனர். 

மனோரமாவிற்குப் பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி , ரஜினி, கமல் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது தலைமுறையான விஜய், அஜீத்துடனும் இணைந்து நடித்தவர் ஸ்ரீதேவி மட்டும்தான். போனிகபூர்  ஸ்ரீதேவியைத்  'மை ஹீரோ' எனக் குறிப்பிடுவார். மேலும், அந்தக் காலத்திலேயே 'பதினாறு வயதினிலே', 'சால்பாஸ்', 'சாந்தினி', 'நாகினா', 'காயத்ரி' போன்ற பெண்களை மையமாகக் கொண்ட வலுவான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கிறார் ஸ்ரீதேவி. 

ஶ்ரீதேவி

ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர் செந்தில். ஜெயலலிதா மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த தமிழ் கதாபாத்திரங்கள் 'மூன்று முடிச்சு' செல்வியும், 'மூன்றாம் பிறை' விஜி கேரக்டர். 

சென்னையை மிஸ் பண்ணுவதாக அவர் ஒருநாளும் எண்ணியதில்லை. சென்னையில் ஸ்ரீதேவிக்கு சொந்த வீடு, தோட்டங்கள் இருக்கின்றன. அவருடைய உறவினர்கள் நிறையபேர் சென்னையில் வசிக்கின்றனர். அதனால், அடிக்கடி சென்னை வருவதால் ஒருநாளும் அவர் சென்னையை மிஸ் பண்ணவில்லை. 

ஸ்ரீதேவி ஃபேஷன் மாடலாக 2008-ல் அறிமுகமானார். பல பேஷன் பத்திரிக்கைகளில் ஸ்ரீதேவியின் புகைப்படம் அட்டைப்படமாக வெளிவந்திருக்கிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த சிரோக் ஃபிலிம்ஃபேர் கிளாமர் & ஸ்டைல் விருதுகளில் 'அல்டிமேட் டிவா' விருதைப் பெற்றார் ஸ்ரீதேவி. மேலும், அவர் ஒரு ஃபேஷன் ஐகானாகவும் திகழ்ந்தார்.

ஸ்ரீதேவி அம்மா செல்லம். அம்மா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஷூட்டிங்கின்போது ஸ்ரீதேவியை மிகவும் கவனமாகப் பார்த்துகொள்வாராம் அவரது அம்மா. ஸ்ரீதேவி தனது தந்தையை 'லம்ஹே' திரைப்படப் படப்பிடிப்பின்போதும், தாயை 'ஜூடாய்' படப்பிடிப்பின்போதும் இழந்தார்.

கடந்த ஆண்டு கமலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன ஸ்ரீதேவி கமலின் அரசியல் குறித்து சூசகமாக, "உங்களது புதிய முயற்சிகள் என்னவாக இருப்பினும் அதற்கு எனது வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறினார். 

 

தலைமுறை கடந்தும் ஐம்பது ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் இளமையாக ஜொலிக்கும் ஸ்ரீதேவியின் இறுதி மூச்சு நின்றிருக்கிறது. இருந்தாலும் காலங்கள் கடந்தும் அவரது படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் ஸ்ரீதேவி. 

https://cinema.vikatan.com

  • தொடங்கியவர்

நையாண்டி பொம்மைத் திருவிழா!

 

 
17CHLRDGERMANY-CARNIVAL3

நம்மூரில் அரசியல் நிகழ்வுகளையும் அரசியல்வாதிகளையும் கேலிச் சித்திரமாக வரைகிறார்கள் அல்லவா? அது போலவே ஜெர்மனியிலும் உலக அரசியல் தலைவர்களை நையாண்டி செய்கிறார்கள். ஆனால், இது ஒரு திருவிழாவாக நடப்பது நையாண்டிக்குப் பெருமை சேர்க்கிறது. அந்தத் திருவிழாவின் பெயர் ‘ரோஸ் திங்கள்’.

   
17CHLRDGERMANY-CARNIVAL5

A carnival float, depicting Leader of the Free Democrats Party (FDP) Christian Lindner as a rabbit running away from responsibilities of the governing body, is pictured during a carnival parade on Rose Monday on February 12, 2018 in Duesseldorf, western Germany. / AFP PHOTO / PATRIK STOLLARZ   -  AFP

 

ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தைத் தொடங்கும் நாளுக்கு முந்தைய நாள் இந்த விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்தத் திருவிழாவில் கலந்துகொள்ளும் இளைஞர்கள், பொதுமக்கள் அரசியல் தலைவர்களைப் பொம்மைகள்போல் செய்து நையாண்டி செய்தபடி வருகிறார்கள். அப்படி வருபவர்களும் தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்கள்போல ஒப்பனை செய்துகொண்டு வருவது பார்ப்பவர்களை வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும்.

23chlrdphoto

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோரின் போர் குறித்து வெளிப்படுத்தும் படம்.

 

திருவிழாவுக்காக வடிவமைக்கப்படும் உலக அரசியல் தலைவர்களின் கேலிச் சித்திரப் பொம்மைகளைப் பார்க்கவே உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஜெர்மனியில் குவிந்துவிடுகிறார்கள். அண்மையில் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தும் 74 வகையாகன கேலிச் சித்திர பொம்மைகள் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் இடம்பெற்றன.

http://tamil.thehindu.com

 

 

  • தொடங்கியவர்

வாழ்வை மாற்றியமைத்த 3 அன்புக்கட்டளைகள்! - ஓர் உண்மைக்கதை #MotivationStory

 
 

உன்னை அறிந்தால்

மெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) ஒரு மேடையில் பேசும்போது இப்படிக் குறிப்பிட்டார்... `திறமை, நேர்மை, தகுதி இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் நான் மனிதர்களை மதிப்பிடுகிறேன்.’ ட்ரம்ப் மட்டுமல்ல... `திறமை’ என்கிற வார்த்தையின் மகத்துவம் உணர்ந்தவர்கள் எல்லோருமே அதை முன்னிறுத்தித்தான் மனிதர்களை எடை போடுவார்கள். இயல்பாக மனிதர்களுக்கு இருக்கும் அறிவு வேறு... தான் சார்ந்த துறையில் திறமையை வளர்த்துக்கொள்வதென்பது வேறு. திறமையை வளர்த்துக்கொள்ளாதவர்கள் கிணற்றுத் தவளைதான். அவர்களுக்கு சமுத்திரம் தெரியாது; அப்படி ஒன்று இருப்பதையே அறிய மாட்டார்கள். `ஏதோ ஒரு வேலை... காலையில டயத்துக்குப் போறோம்... வேலை நேரம் முடிஞ்சதும் திரும்பி வர்றோம்...’ என இருப்பவர்கள் கிட்டத்தட்ட கிணற்றிலிருக்கும் தவளை போன்றவர்களே. அப்படி இருப்பது தவறில்லைதான். ஆனால், இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் ஒவ்வொருவருமே தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் தங்களின் தனித்தன்மையை, திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது. சரி... அதற்கு அங்கீகாரம் கிடைக்குமா... பலன் உண்டா..? நிச்சயம் உண்டு. அதை எடுத்துச் சொல்லும் உண்மைக் கதை இது.

 

டெட்ராய்ட் (Detroit)... அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாகாணத்திலுள்ள ஒரு நகரம். அங்கேதான் அந்தச் சிறுவன் இருந்தான். வீட்டில் அவன், அம்மா, அவனுடைய சகோதரன் மூவர் மட்டுமே இருந்தார்கள். அப்பாவும் அம்மாவும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்தார்கள். அம்மா, ஏதோ ஒரு வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அன்பானவர், அதே நேரம் கொஞ்சம் கண்டிப்பானவரும்கூட.

புத்தகம்

அந்தச் சிறுவன் ஐந்தாம் கிரேடு படித்துக்கொண்டிருந்தான். யாரிடமும் கலகலவென்று பேச மாட்டான்; இறுக்கமான சுபாவம்; ஐந்து கேள்வி கேட்டால் ஒரு கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் பதில் சொல்வான். சக மாணவர்களுக்கு அவன் ஒரு `மௌனச் சாமியார்.’ வீட்டுச்சூழல், அம்மா படும் இன்னல்கள், அப்பாவின் பிரிவு... எல்லாம் சேர்ந்து அவனை வாய் பேசாதவனாக ஆக்கியிருந்தது. அந்தச் சிறுவன் படிப்பிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை. கிரேடில் மிகப் பின்தங்கியிருந்தான்.

புராக்ரஸ் ரிப்போர்ட் கார்டு வரும்போதெல்லாம், வகுப்பிலேயே கடைசி மாணவன் அவனாகத்தான் இருந்தான் என்பது அவனுக்கும் புரிந்தது. ஆனால், அவன் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை. அம்மா இது குறித்துப் பேசும்போதெல்லாம், ``அட விடுங்கம்மா... இதெல்லாம் ஒரு விஷயமா... பார்த்துக்கலாம்’’ என்று சமாதானப்படுத்துவான். ஆனால், வீட்டு வேலை செய்து படிக்கவைத்துக்கொண்டிருக்கும் அம்மாவுக்கு அக்கறை இருக்காதா?

அவன் படிப்பில் பின்தங்கிக்கொண்டே போவது நல்லதல்ல என்பதை உணர்ந்துகொண்டார் அம்மா. அந்தச் சிறுவனுக்கு படிப்பில்தான் கவனமில்லையே தவிர, அம்மாவின் பேச்சைத் தட்டாதவன். அம்மாவின் மேல் அவனுக்கு அவ்வளவு பாசம் இருந்தது. ஒரு கட்டத்தில் மகனின் படிப்பு மிக மோசமாகப் போய்க்கொண்டிருப்பதை அம்மா நன்கு உணர்ந்துகொண்டார். ஒருநாள் அவனை அழைத்தார். மூன்று கட்டளைகள் போட்டார்... ஒன்று, வாரத்துக்கு இரண்டே இரண்டு டி.வி நிகழ்ச்சிகள்தான் பார்க்கலாம். அவை எவை என்பதை முன்பே திட்டமிட்டுச் சொல்லிவிட வேண்டும். இரண்டு, டி.வி பார்ப்பதாக இருந்தாலோ, வெளியே போய் விளையாடப் போவதாக இருந்தாலோ அதற்கு முன் பள்ளியில் சொல்லிவிட்டிருக்கும் வீட்டுப் பாடங்களை முடித்துவிட வேண்டும். மூன்று, வாரத்துக்கு இரண்டு புத்தகங்களை லைப்ரரியிலிருந்து எடுத்துவந்து படிக்க வேண்டும். அவன் என்ன படித்தான் என்பதை எழுதி, ரிப்போர்ட்டாகக் கொடுக்க வேண்டும்.

வகுப்பறை

அம்மா ரொம்ப கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். இந்த அன்புக் கட்டளைகள் எவ்வளவு கடுமையானவை என அவன் அறிவான். பேசிப் பெஞ்சமின் கார்சன்பார்த்தான். அம்மா, தன் முடிவிலிருந்து மாறவில்லை; இதை அவன் கடைப்பிடித்துத்தான் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். வேறு வழியில்லாமல் அம்மா இட்ட கட்டளைகளை அவன் பின்பற்ற ஆரம்பித்தான். அதற்கு வெகு விரைவிலேயே பலன் கிடைக்கவும் செய்தது.

ஒருநாள் ஆசிரியர் மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். யாருக்கும் பதில் தெரிந்திருக்கவில்லை. அந்தச் சிறுவன் மட்டும் எழுந்து நின்று பதில் சொன்னான். வகுப்பே அவனை ஆச்சர்யமாகப் பார்த்தது. `இத்தனை நாள் கடைசி ரேங்க் எடுத்தவனா பதில் சொல்றான்?’ ஆசிரியருக்குமே ஆச்சர்யம். இப்போது அவனுக்குத் தன் மேலேயே ஒரு நம்பிக்கை வந்தது. அந்த பதிலைச் சொல்ல உதவியது, அவன் நூலகத்திலிருந்து எடுத்து வந்து படித்த புத்தகம். கொஞ்ச நாள் படித்த புத்தகத்திலேயே இவ்வளவு தெரிந்துகொள்ள முடிந்தால், இன்னும் நிறையப் புத்தகங்களைப் படித்தால் எவ்வளவு தெரிந்துகொள்ளலாம்? அவன் ஆர்வமெல்லாம் புத்தகம் படிப்பதில் திரும்பியது.

வீட்டுச் சூழல் காரணமாக அவன் வெவ்வேறு பள்ளிகளில் படிக்க நேர்ந்தது. ஆனாலும், அவன் வாசிப்பை நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் அவனுடைய திறமையால், பள்ளியின் லீடராகவும் உயர்ந்தான். அம்மா, அவன் வளர்ச்சியைப் பார்த்து உள்ளுக்குள் ரசித்துக்கொண்டே இருந்தார்.

ஐந்தாவது கிரேடு படிக்கும்போது வாய் பேசாதவனாக, கடைசி பெஞ்ச் மாணவனாக இருந்த அந்தச் சிறுவன், பின்னாளில் உலகப்புகழ்பெற்ற மருத்துவரானார். அவர் பெயர், பெஞ்சமின் கார்சன் (Benjamin Carson). பிரபல நியூரோசர்ஜன், எழுத்தாளர், அரசியல்வாதி... என்று பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வளைகுடா போரின் போது குவைத்தில் இருந்து ஈராக் படைகள் வெளியேறிய நாள்- பிப்.26-1991

 
அ-அ+

வளைகுடாப் போர் என்பது 2 ஆகஸ்ட் 1990 முதல் 28 பிப்ரவரி 1991 வரை ஈராக்கிற்கும் அமெரிக்கா தலைமையிலான் 28 நாடுகள் அடங்கிய கூட்டுப் படையினருக்கும் இடையே நடந்த சண்டை ஆகும். இந்தப் போர் முதலாம் வளைகுடாப் போர் அல்லது பாரசீக வளைகுடாப் போர் அல்லது பாலைவனப் புயல் படை நடவடிக்கை என்றும் அழைக்கப்படுகிறது. ஈராக் 2 ஆகஸ்ட் 1990 அன்று குவைத் நாட்டை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக்கொண்டதை அடுத்து, ஈராக்கியப் படைகளை குவைத்திலிருந்து வெளியேற்றும் நோக்கில் ஈராக், குவைத் மற்றும் சவுதி

 
 
 
 
வளைகுடா போரின் போது குவைத்தில் இருந்து ஈராக் படைகள் வெளியேறிய நாள்- பிப்.26-1991
 
வளைகுடாப் போர் என்பது 2 ஆகஸ்ட் 1990 முதல் 28 பிப்ரவரி 1991 வரை ஈராக்கிற்கும் அமெரிக்கா தலைமையிலான் 28 நாடுகள் அடங்கிய கூட்டுப் படையினருக்கும் இடையே நடந்த சண்டை ஆகும். இந்தப் போர் முதலாம் வளைகுடாப் போர் அல்லது பாரசீக வளைகுடாப் போர் அல்லது பாலைவனப் புயல் படை நடவடிக்கை என்றும் அழைக்கப்படுகிறது.

ஈராக் 2 ஆகஸ்ட் 1990 அன்று குவைத் நாட்டை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக்கொண்டதை அடுத்து, ஈராக்கியப் படைகளை குவைத்திலிருந்து வெளியேற்றும் நோக்கில் ஈராக், குவைத் மற்றும் சவுதி அரேபியாவின் சில பகுதிகளிலும் போர் நடந்தது. குவைத் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து உடனடியாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஈராக் மீது பொருளாதாரத் தடை விதித்தது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் தன் நாட்டுப் படைகளை சவுதி அரேபியாவில் நிறுத்தி மற்ற நாட்டுகளும் தங்களது படைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பல நாடுகளும் அமெரிக்காத் தலைமையிலானக் கூட்டுப் படையில் இணைந்தன. அவற்றில் சவுதி அரேபியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளேப் பெரும் பங்கு வகித்தன. மொத்தச் செலவான 60 பில்லியன் அமெரிக்க டாலரில் 40 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை சவுதி அரேபியா செலுத்தியது இந்தப் போரில் வான்வழித் தாக்குதல் 17 ஜனவரி 1991 அன்றும் தொடர்ந்து தரைவழித் தாக்குதல் 23 பிப்ரவரி 1991 அன்றும் தொடங்கியது.

குவைத்திலிருந்து ஈராக்கியப் படைகளை விரட்டி அடித்த கூட்டுப் படையினர் ஈராக் நிலப்பகுதிக்குள் முன்னேறினர். தரைவழித் தாக்குதல் தொடங்கிய 100 மணி நேரத்துக்குள் கூட்டுப் படையினர் வெற்றி பெற்று போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

ஈராக்கின் குவைத், சவுதி அரேபிய எல்லை பகுதிகளில் வான்வழி மற்றும் தரை போர் நடவடிக்கைகள் தீவிரமாக நிகழ்ந்தது. இதற்கு பதிலடியாக ஈராக் சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேலுக்கு பகுதியில் இருந்த கூட்டணி ராணுவ முகாம்களை நோக்கி விரைவு ஏவுகணைகளை அனுப்பியது. ஏப்ரல் 1991-ல் இயற்றப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 687 தீர்மானத்தின் படி போர்நிறுத்த உடன்படிக்கை கொண்டுவரப்பட்டது.

 

 

நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்ற நாள்- பிப்ரவரி 26- 1993

 
அ-அ+

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள வர்த்தக மையத்தில் 1993-ம் அண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1815 - நெப்போலியன் பொனபார்ட் எல்பாவில் இருந்து தப்பினான். * 1848 - இரண்டாவது பிரெஞ்சு குடியரசு அறிவிக்கப்பட்டது.

 
 
 
 
நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்ற நாள்- பிப்ரவரி 26- 1993
 
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள வர்த்தக மையத்தில் 1993-ம் அண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1815 - நெப்போலியன் பொனபார்ட் எல்பாவில் இருந்து தப்பினான். * 1848 - இரண்டாவது பிரெஞ்சு குடியரசு அறிவிக்கப்பட்டது. * 1936 - ராணுவத்தினர் ஜப்பான் அரசைக் கவிழ்க்க இடம்பெற்ற புரட்சி தோல்வியில் முடிந்தது. * 1952 - ஐக்கிய ராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.

* 1972 - மேற்கு வெர்ஜீனியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்ததில் 125 பேர் கொல்லப்பட்டனர். * 1984 - பெய்ரூட்டில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவின் சொந்தக் குரலில் ஒலித்த முத்தான திரையிசைப் பாடல்கள்!#Jayalalithaa

 

ஜெயலலிதா

 

 

ஜெயலலிதா, அரசியலில் மட்டும் ஆளுமையாக நின்றவரல்ல; நடிப்பு, இசை, விளையாட்டு எனத் தொட்ட ஒவ்வொன்றிலும் தனது தனித்தன்மையை நிலைநாட்டியவர். சட்டசபையில் கர்ஜிக்கும் சிங்கமாக தமிழகம் அவரைப் பார்ப்பதற்கு முன்பே, தேன் குரலில் ரசிகர்களை வசியம் செய்தவர். இவர், வெள்ளித்திரையில் சொந்தக் குரலில் பாடிய பாடல்கள் அனைவரையும் வசீகரித்தது. பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. இதோ, ஜெயலலிதா தன் சொந்தக் குரலில் பாடிய முத்தான பாடல்கள் பற்றிய தொகுப்பு... 

அடிமைப்பெண் - 1969

அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு

 

 

சூரியகாந்தி - 1973

நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்

 

 

சூரியகாந்தி  - 1973 

ஓ மேரே தில்ரூபா
ஹே மேரா திவானா

 

 

வந்தாளே மகராசி - 1973

கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம் 
கன்னம் இரண்டும் ஐஸ்க்ரீம்

 

 

திருமாங்கல்யம் - 1974

உலகம் ஒருநாள் பிறந்தது
அது ஊமையாகவே இருந்தது

 

 

திருமாங்கல்யம் - 1974

திருமாங்கல்யம் கொள்ளும்
முறை இல்லையோ
உள்ளம் அறியாத மாங்கல்யம்
தவறில்லையோ

 

 

வைரம் - 1974

இருமாங்கனிபோல் இதழோரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகைபோல் ஒரு தேகம்
பாடுது ராகம் 

 

 

அன்பைத் தேடி - 1975

சித்திர மண்டபத்தில் 
சில முத்துகள் கொட்டி வைத்தேன்

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வான் மண் பெண் : முதல் காட்டுயிர் ஒளிப்படப் பெண்!

25chnvkrathika4jpg

குழந்தைகளைப் படம் எடுப்பதும் பறவைகளைப் படம் எடுப்பதும் சவால் நிறைந்த கலை. அதற்கு நாம் குழந்தையாகவும் பறவையாகவும் மாற வேண்டும். குழந்தைகளையாவது கொஞ்சிக் குலாவிப் படம் எடுத்துவிட முடியும். ஆனால், பறவைகளைப் படம் எடுக்க எல்லையில்லாப் பொறுமை வேண்டும்.

அப்படியான பொறுமை கைவரப் பெற்றதால் ராதிகா ராமசாமி, ‘இந்தியக் காட்டுயிர் ஒளிப்படத் துறையில் சுவடு பதித்த முதல் பெண்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

     

 

கணினிப் படிப்பும் கேமராவும்

ராதிகா எடுத்த பறவைகளின் ஒளிப்படங்கள் தனித்துவமானவை. பறப்பவை, இரையைப் பிடிப்பவை, சண்டையிடுபவை, காதலில் கிறங்குபவை, கூடு கட்டுபவை எனப் பறவைகளின் அரிதான தருணங்களை அவர் படம்பிடித்திருப்பார். அதுவே ராதிகாவுக்கு ‘ஆக்ஷன் போட்டோகிராஃபர்’ என்ற செல்லப் பெயரை, சக ஒளிப்படக் கலைஞர்களிடம் இருந்து பெற்றுத்தந்தது.

பல ஆண்டுகளாக டெல்லியில் வசித்தவர், சமீபத்தில் சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கிறார்.

“என் சொந்த ஊர் தேனி மாவட்டம் வெங்கடாசலபுரம். அப்பா ராமசாமி, ராணுவத்துல இருந்தார். அம்மா தாயம்மா, டீச்சர். அது 1986. பொண்ணுங்க இன்ஜினீயரிங் படிக்கறதை நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது. அப்படி ஒரு சூழ்நிலையில அந்தப் பகுதியில இருந்து இன்ஜினீயரிங் படிக்கவந்த முதல் பொண்ணு நான். அதுவும் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங்” என்று புன்னகைக்கிறார் ராதிகா.

25chnvkrathika1JPG
 

பொறியியல் முடித்ததும் எம்.பி.ஏ. படித்தார். விடுமுறை நாள் ஒன்றில் ஆக்ராவுக்குக் குடும்பத்தோடு சென்றார். அந்த இடத்தின் அழகைக் கண்டு பிரமித்தவருக்குத் தன்னிடம் ஒரு கேமரா இருந்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றியிருக்கிறது. அதை உடனே தந்தையிடம் சொல்ல, அவரும் ஃபிலிம் கேமராவை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

“அப்ப எங்க வீட்டுக்குப் பின்னாடி தோட்டம் இருந்தது. செடி, மரம், பூன்னு பார்க்கிறதை எல்லாம் போட்டோ எடுத்தேன். ஸ்கூல்ல பயாலஜி குரூப் எடுத்ததால, ‘ஹெர்பேரியம்’ பண்றதுக்காக அடிக்கடி தேக்கடிக்கு ஃபீல்ட் டிரிப் போவோம். அங்க யானைகள், குரங்குகளை எல்லாம் போட்டோ எடுத்தேன்” என்று சொல்லும் ராதிகா, 90-களின் மத்தியில் வேலை தொடர்பாகப் பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.

“அப்போ எல்லாம் ‘டிராவல் போட்டோகிராபி’யிலதான் கவனம் செலுத்தினேன். 2004-ல் டிஜிட்டல் கேமரா வர ஆரம்பிச்சது. அப்பவே யாஹூ குரூப்ஸ் எல்லாம் இருந்துச்சு. அதுல நிறைய போட்டோகிராபர்கள் உறுப்பினர்களா இருந்தாங்க. நாங்க அடிக்கடி டெல்லியில சந்திச்சிப்போம். ஒருத்தருக்கு ஒருத்தர் நிறைய ‘டிப்ஸ்’ கொடுத்துப்போம்” என்று சொல்லும் ராதிகா, ‘போட்டோகிராபர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ குழுவின் நிர்வாகியாக இருக்கிறார்.

 

காடு காலண்டர் கேமரா

ராஜஸ்தானில் இருக்கும் பரத்பூர் பறவைகள் சரணாலயத்துக்குச் சென்றது ராதிகாவின் வாழ்க்கையில் முக்கியமானது.

“அவ்ளோ பறவைகளை ஒரே இடத்தில் அப்போதான் முதன்முதலாப் பார்த்தேன். அந்த ஆர்வத்துல நிறைய படங்கள் எடுத்துத் தள்ளினேன். அப்புறம் ‘பிராசஸ்’ பண்ணிப் பார்த்தா, எல்லாப் பறவைகளும் படத்துல குட்டி குட்டியா இருந்தன. அப்போதான் பறவைகளைப் படம்பிடிக்க அதுக்காக இருக்கற லென்ஸ் வாங்கணும்னு தெரிஞ்சுது.

25chnvkrathika2JPG
 

அப்ப எல்லாம் இந்தியாவுல ‘வைல்ட்லைஃப் போட்டோகிராபி’ அவ்வளவா பிரபலமாகலை. அன்னைக்குக் காட்டுயிர்களைப் படம் எடுக்குறதுன்னா, ஆப்பிரிக்காவுக்குத்தான் இந்தியர்கள் பலரும் போவாங்க. ஆனா, பல வெளிநாட்டுக்காரங்க இந்தியக் காடுகளைத் தேடி வருவாங்க. அவங்களுக்கு நம் காடுகளின் பெருமை பற்றித் தெரிஞ்சிருந்தது” என்கிறார் ராதிகா.

பிறகு, ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா, லடாக் எனப் பல இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அங்கு அவர் எடுத்த படங்களை ‘பிபேஸ்’ (PBase) இணையதளத்தில் வெளியிட்டுவந்தார். அதைப் பார்த்த ஒரு நிறுவனம் ‘கிளீன் கங்கா’ பிரசாரத்துக்குப் படம் எடுக்க ராதிகாவை அணுகியது.

“என்னோட முதல் ‘கமிஷண்டு புராஜெக்ட்’ அதுதான். கங்கையோட அழகை மட்டு மல்லாமல் அதோட சூழல் சீர்கேட்டையும் போட்டோ மூலமா சொல்லணும். அதுவும் அந்தப் பிரசாரத்தை நடத்துறவங்க திருப்தியடைகிற மாதிரி எடுக்கணும். அதைச் சவாலா நினைத்துப் படங்கள் எடுத்தேன். அவங்களுக்குப் பிடிச்சிருந்தது” என்கிறவருக்கு டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்பு வந்தது. அந்த வளாகத்தில் இருக்கிற பறவைகளைப் படம் எடுத்து, 2007-ம் ஆண்டுக்கான காலண்டர் வெளியிடும் திட்டத்தின் ஓர் அங்கமாக இவர் அழைக்கப்பட்டிருந்தார்.

“அப்ப சுமார் 75 பறவை இனங்களுக்கு மேல அங்கே இருப்பது தெரிய வந்துச்சு. அதற்கு முன்னாடி அங்க என்னவிதமான பறவைகள் இருக்குங்கிறதைப் பத்தி யாரும் ஆய்வு செய்யலை. என்னோட படங்களைப் பார்த்துத்தான் பலரும் தெரிஞ்சிக்கிட்டாங்க. அப்பதான் ‘பெட்டர் போட்டோகிராபி’ங்கிற ஒளிப்பட இதழில் என்னைப் பற்றிய கட்டுரை முதன்முதல்ல வந்தது.

அதுலதான், என்னோட முதல் படமும் வெளியாச்சு. அதுக்கு முன்னாடிவரை நான் யாருங்கிறதை எங்கும் வெளிப்படுத்திக்கிட்டதே இல்லை” என்கிறார். ராதிகாதான் இந்தியாவின் முதல் பெண் காட்டுயிர் ஒளிப்பட கலைஞர் என்ற தகவலை, தூர்தர்ஷன்தான் அவருக்குத் தெரிவித்தது. தவிர, ‘இணையதளத்தில் முதல் பிரபல ஒளிப்படக் கலைஞர்’ என்ற பெருமையையும் பல ஆண்டுகளாகத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் ராதிகா.

25chnvkrathika6JPG
 

 

காட்டுயிர் ஒளிப்பட சவால்கள்

ஆப்பிரிக்கா, மலேசியா என மாதத்தின் பல நாட்கள் ஏதோ ஒரு நாட்டில் உள்ள காட்டில் காட்டுயிர்களை கேமராவுடன் பின்தொடர்கிறார் ராதிகா.

“ஆப்பிரிக்காவுல எல்லாம் செல்போன் மூலமாகூட நல்ல படங்களை எடுத்துலாம். ஆனா, இந்தியாவுல அப்படி முடியாது. காரணம், இங்க அவ்வளவு சீக்கிரத்துல புலியோ சிங்கமோ வெளியே வந்துடாது. பறவைகளை போட்டோ எடுக்கிறதுக்குக் குளிர்காலம்தான் சரியான நேரம். அப்போ குளிர்ல நடுங்கிக்கிட்டுப் படம் எடுக்கணும். வெயில் காலத்துலதான் புலிகள் தங்களோட இருப்பிடத்தில இருந்து வெளியே வரும். அதுக்காக சுட்டெரிக்கும் வெயில்ல பல மணி நேரம் வியர்வையில நனைஞ்சு காத்துக்கிடக்க வேண்டியிருக்கும்.

25chnvkrathika5jpg

இதை எல்லாம் தாண்டி பணம் ரொம்ப முக்கியமான விஷயம். எல்லோருமே ‘வைல்ட்லைஃப் போட்டோகிராபி’ செஞ்சிட முடியாது. ஒவ்வொரு லென்ஸோட விலையும் லட்சக்கணக்குல இருக்கு. அப்புறம் நீங்க நிறைய பயணிக்க வேணும். அதுக்கான செலவுகள் தனி. அதனால இந்தத் துறைக்கு வர்றவங்களுக்கு நான் எப்பவும் சொல்றது, ‘ஃபேஷன் போட்டோகிராபி, டிராவல் போட்டோகிராபின்னு வேற ஏதாவது ஒரு தொழிலை உங்களுக்கு ‘பேக் அப்’பா வச்சுக்கோங்க’ என்பதுதான்” என்று காட்டுயிர் ஒளிப்படம் எடுப்பதில் உள்ள சவால்களைப் பற்றிச் சொன்னவர், புதிதாக வருபவர்கள் காட்டில் பின்பற்ற வேண்டிய விதிகளையும் பகிர்ந்துகொண்டார்.

“காட்டுயிர்கள் தங்களை போட்டோ எடுக்க நம்மைக் கூப்பிடலை. நாம்தான் அவற்றைப் படம் எடுக்கிறோம். அதனால் அந்த உயிரினங்களை தொந்தரவு பண்ணக் கூடாது. அந்த உயிர்களோட பாதுகாப்புதான் எப்பவும் முதன்மையா இருக்கணும். போட்டோகிராபி இரண்டாவதுதான்” என்கிறவர், தன் ஒளிப்படங்களுக்காக தேசிய, சர்வதேச அளவில் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றிருக்கிறார். இவர் எடுத்த ஒளிப்படங்கள், இயற்கை, காட்டுயிர் தொடர்பான பல சர்வதேச பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கனடா பிரதமரின் மகன் செய்த சுட்டித்தனம்!

சென்ற இடத்தில் எல்லாம் சுட்டித்தனம் செய்த கனடா பிரதமரின் கடைகுட்டி!

  • தொடங்கியவர்

ஸ்ரீதேவிக்குப் பிடித்த படம்!

 
sridevijpg

‘ஜானி’ படத்தில் ஸ்ரீதேவி தன் காதலை ரஜினியிடம் சொல்லும் காட்சியில் ஸ்ரீதேவியின் நடிப்பைப் பார்த்து வியந்துபோய் ‘அந்தப் பொண்ணோட நடிப்போட என்னால போட்டிபோட முடியலை’ என்று ரஜினி மாய்ந்துமாய்ந்து பேசினாராமே?

ஆமாம், அன்றைக்குப் படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்கு வந்ததும் ரஜினி விடிய விடிய புலம்பித் தள்ளிவிட்டார். ‘அந்தப் பொண்ணோட நடிப்புக்கு முன்னால என்னால ஒண்ணும் பண்ண முடியல சார். ஹெல்ஃப்லெஸ்ஸா நின்னிட்டிருந்தேன்’ என்று புலம்பினார். ‘ஒண்ணும் பண்ண முடியாமல் நின்னதுதான் சார், அந்த சீனோட கிரேட்னஸ். அதுதான் இயல்பா, அட்டகாசமா வந்திருக்கு’ என்று சொன்னேன். ஸ்ரீதேவிக்கும் ரொம்பப் பிடித்த படம் அது. இந்திக்குப் போன பிறகும்கூட நிறைய பேட்டிகளில் ‘ஜானி’யைப் பற்றி அவர் குறிப்பிட்டிருக்கிறார். ‘என்னோட கேரியர்லயே சிறந்த நடிப்பு அதுதான்’ என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

திடீரென சூரியன் காணாமல் போய்விட்டால் என்னவெல்லாம் நடக்கும்? #FunToKnow

 
 

சூரியன்

தினமும் காலையில் எழுந்ததும் என்ன செய்வீர்கள்? கண்களைத் தேய்த்தபடியே வெளியே சென்று வெளிச்சத்தைப் பார்த்துவிட்டு உள்ளே வந்து நமது வேலையைத் தொடங்குவோம். இருட்டிலே இருந்து விட்டு வெளிச்சத்தைப் பார்ப்பது நமக்கு ஒருவித புத்துணர்ச்சியை அளிக்கும். தினமும் அந்த வெளிச்சத்தைத் தரக்கூடியது சூரியன். திடீரென சூரியன் காணாமல் போய் விட்டால் என்ன நடக்கும்? என்ன... வெளிச்சம் இருக்காது? அவ்வளவுதானே என்றுதான் உடனே தோன்றும். கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். வேண்டாம் நானே சொல்கிறேன் ( உங்களை ஏன் சிந்திக்க வேண்டாம் என்று சொன்னேன் என்று முடிவில் சொல்கிறேன்).

 

சூரியன் திடீரென காணாமல் போனாலும் நீங்கள் கவலைப்படத் தேவை இல்லை, முதல் எட்டரை நிமிடங்களுக்கு. ஏனெனில் ஒளி சூரியனிலிருந்து பூமியை வந்தடைய எட்டரை நிமிடங்கள் ஆகும். சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களையும் தன்னுடைய புவியீர்ப்பு விசையினால் தன்வசம் வைத்திருக்கிறது சூரியன். புவியீர்ப்பு விசையும் ஒளியின் வேகத்திலேயே (ஒளியை விட வேறு எதுவும் வேகமாகப் பயணிக்க முடியாது. எனவே, அதைவிடச் சிறிது குறைவாய் வைத்துக்கொள்வோம்) பயணிக்கக் கூடியது என்பதால் அதுவும் பூமியை வந்தடைய எட்டரை நிமிடங்கள் ஆகும். எனவே, முதல் எட்டரை நிமிடங்கள் நீங்கள் சூரியனைப் பார்க்க முடியும் வழக்கம்போல. அதன் பின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாகக் குழப்பங்கள் அதிகரிக்கத் தொடங்கும். சட்டென பூமியை இருள் சூழ்ந்து கொள்ளும். ஏற்கெனவே உங்களுக்கு இரவாக இருந்தால் நிலவின் தோற்றம் மறைந்து விடும். நிலவின் தோற்றம் மட்டுமல்ல; சூரியனின் ஒளியை பிரதிபலிக்கக் கூடிய மற்ற கோள்கள், சூரியக் குடும்பத்தில் உள்ள எந்த ஒரு பொருளும் கண்ணுக்குத் தெரியாது. 

புவியீர்ப்பு விசை இழப்பினால் கோள்கள்தான் சென்றுகொண்டிருக்கும் பாதையிலேயே இவ்வண்டத்தில் நேர்கோட்டில் நொடிக்கு பதினெட்டு மைல் வேகத்தில் பயணிக்கத் தொடங்கும். ஒரு வேளை இரு கோள்கள் அருகருகே வந்து ஒன்று மற்றொன்றின் ஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு மோதிக்கொள்ளலாம். இல்லையெனில் நேர்கோட்டில் அதன் பயணத்தை மேற்கொள்ளலாம். 

சூரியனின் முக்கிய அம்சமே உஷ்ணம்தான். பூமியின் வெப்பநிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து உறையத் தொடங்கும். பூமி முழுவதுமாக உறைய பல மில்லியன் வருடங்கள் ஆகலாம், ஆனால், பூமியின் மேற்பரப்பில் முதல் ஒரு வாரத்திலேயே ஜீரோ டிகிரி செல்சியஸுக்கும் கீழே சென்றுவிடும். ஒரு வருடத்தில் மைனஸ் நூறு டிகிரி செல்சியஸுக்குச் சென்று விடும். ஆனால், பூமியின் உட்கருவில் உள்ள உஷ்ணம் காரணமாக சில மில்லியன் வருடங்களுக்கு மைனஸ் இருநூற்று நாற்பது டிகிரி செல்சியஸிலேயே நிலை கொண்டிருக்கும். கடும் குளிர் காரணமாக வளிமண்டலத்தில் இருக்கும் வாயுக்களும் உறைந்து திடமாகி பூமியில் விழக்கூடும்.
ஒளி இருந்தால்தானே ஒளிச்சேர்க்கை (photosynhesis) நடைபெறும்? ஒளிச்சேர்க்கை நடைபெற்றால்தான் தாவரங்கள் உயிர்வாழ முடியும். பூமியில் உள்ள 90 சதவிகித தாவரங்கள் சில மணித்துளிகளில் இறந்துவிடும். அண்டத்திலுள்ள காஸ்மிக் கதிர்கள் நேரடியாக வந்து பூமியைத் தாக்கும். எனவே, மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் பல வகையான பாதிப்புகள் ஏற்படக்கூடும். பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான எந்த அடிப்படை ஆதாரங்களும் இருக்காது.

 

இவை எல்லாம் நடந்தபின் பூமியும் இவ்வண்டத்தில் இலக்கின்றி சுற்றித் திரியும் ஒரு பாறை மட்டுமே. இவ்வளவையும் சிந்தித்தால் உங்கள் மனம் என்னாவது அதனால்தான் வேண்டாமென்றேன். ஆனால், கவலைப்படத் தேவை இல்லை இவை எதுவும் இன்னும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு நடக்காது. தைரிமாய் இருங்கள் நாளை காலை சூரியன் வந்து விடும்.

 

 

https://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
‘ரோசத்துடன் வாழ்தலே ஆரோக்கியம்’
 

image_6c85875bc5.jpgஏழ்மைப் பட்டால், ஒருவரிடம் சென்று கை நீட்டவேண்டும் என்பது, கூச்சப்பட வேண்டிய விடயம்தான். எதையும் இலவசமாகக் கோருதல், தனிமனித கௌரவக் குறைச்சலுமாகும்.

சிலர் திட்மிட்டு, காசு பணம் இருப்பவர்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களிடம் இரந்து வாழ்வார்கள். பின்னர் அவர்களுடன் முரண்பட்டுக் கொண்டு, வேறொருவரை அண்டி, தண்டல் பிழைப்பு நடத்துவார்கள்.

கேட்டு வாங்கிப் பழகினால், அந்தக் குணம், தொட்டுத் தொடர்ந்து வரும். வாழ்க்கைச் சக்கரம் சுழன்று வரும்போது, ஏழ்மையும் எட்டிப்பார்க்கும்.

அந்த நிலை நிரந்தரம் என எண்ணி, அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பது, முட்டாள்த் தனம் அல்லவா?

இரந்து வாழ்ந்த ஒருவன், நல்ல நிலைக்கு வந்தால்கூட, “நீ என்ன இப்போது பெரிய மனுசனா” எனச் சிலர் சொல்லும் நிலை வரக்கூடாது.

வசதிகள் இல்லாது  விட்டாலும், அதை ஒரு சந்தர்ப்பமாக்கித் தன்னைச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டும்.

ரோசத்துடன் வாழ்தலே ஆரோக்கியமானது.  

  • தொடங்கியவர்

1951:அமெ­ரிக்­காவில் ஜனா­தி­ப­தி­யாக ஒருவர் பதவி வகிக்­கக்­கூ­டிய காலம் இரு தவ­ணை­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது

வரலாற்றில் இன்று…

பெப்ரவரி – 27

 

1560 : ஸ்கொட்­லாந்தில் இருந்து பிரெஞ்­சுக்­கா­ரரை வெளி­யேற்ற ஸ்கொட்­லாந்­துக்கும் இங்­கி­லாந்­துக்கும் இடையில் பேர்விக் உடன்­பாடு எட்­டப்­பட்­டது.

1594 : பிரான்ஸின் மன்­ன­னாக நான்காம் ஹென்றி முடி­சூ­டினார்.

1700 : பப்­புவா நியூகினி பிராந்­தி­யத்தின் புதிய பிரித்­தா­னியா தீவு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

Varalaru-US-Presidents-KEVIN-LAMARQUE-RE1801 : வொஷிங்டன், டிசி நகரம் அமெ­ரிக்க காங்­கி­ரஸின் நிர்­வா­கத்தின் கீழ் வந்­தது.

1844 : டொமி­னிக்கன் குடி­ய­ரசு ஹெயிட்­டி­யிடம் இருந்து சுதந்­திரம் பெற்­றது.

1861 : போலந்தில் ரஷ்ய ஆக்­கி­ர­மிப்பை எதிர்த்து வோர்­சாவில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்­தினர்.

1900 : தென் ஆபி­ரிக்­காவில் போவர்­களின் தள­பதி பியெட் குரோ­னியே நிபந்­த­னை­யின்றி சர­ண­டை­வ­தாக அறி­வித்தார்.

1900 : பிரித்­தா­னிய தொழிற் கட்சி அமைக்­கப்­பட்­டது.

1933 : பேர்­லினில் ஜேர்­ம­னியின் நாடா­ளு­மன்றம் தீ வைத்து எரிக்­கப்­பட்­டது.

1942 : இரண்டாம் உலகப் போரின்­போது ஜாவா கடலில் இடம்­பெற்ற சமரில் கூட்டுப் படை­களை ஜப்பான் படைகள் தோற்­க­டித்­தன.

1951 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் ஒருவர் இரு தட­வை­க­ளுக்கு மேல் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யா­த­வாறு அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் திருத்­தப்­பட்­டது.

1967 : ஹெய்ட்­டி­யிடம் இருந்து டொமி­னிக்கன் குடி­ய­ரசு சுதந்­திரம் பெற்­றது.

1976 : முன்னாள் ஸ்பானிய நாடான மேற்கு சகாரா, சாராவி அரபு ஜன­நா­யகக் குடி­ய­ரசு என்ற பெயரில் சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது.

1991 : வளை­குடாப் போரில், குவைத் விடு­த­லை­யா­ன­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் அறி­வித்தார்.

2004 : பிலிப்­பைன்ஸில் பய­ணிகள் கப்­பலில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 116 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2007 : மட்­டக்­க­ளப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படை­யி­னரின் விமான ஓடு­பா­தையை நோக்கி விடு­தலைப் புலி­களால் நடத்­தப்­பட்ட எறி­கணை வீச்சில் இலங்­கைக்­கான இத்­தா­லிய, அமெ­ரிக்கத் தூது­வர்கள் காய­ம­டைந்­தனர்.

2010 : சிலியில் ஏற்­பட்­டட 8.8 ரிச்டர் அள­வி­லான பூகம்­பத்­தினால் 500 பேர் பலி­யா­ன­துடன் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் காய­ம­டைந்­தனர்.

2013 : பிரான்ஸில் தொழிற்­சா­லை­யொன்றில் மீது துப்பாக்கிதாரியொருவர் மேற்கொண்ட தாக்குதல்களால் துப்பாக்கிதாரி உட்பட ஐவர் கொல்லப்பட்டனர். மேலும் ஐவர் காயமடைந்தனர்.

2014 : முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பாரிய மனிதப் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

வேலையில் `கில்லி’ சரி... அநியாயத்துக்குக் கடமை உணர்வோடு இருக்கலாமா? - ஒரு நீதிக்கதை #MotivationStory

 
 

கதை

ராபர்ட் பேடெண்-போவெல் (Robert Baden-Powell). இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர், ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர், மாணவர்களின் ஸ்கவுட் இயக்கம் (Scout Movement) உருவாகக் காரணமாக இருந்தவர். தன் அனுபவத்திலிருந்து அவர் ஒன்றை அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார். `நாம் நம் கடமையைச் செய்ய முயலும்போது ஒருபோதும் தோற்றுப் போவதில்லை. அதைச் செய்யத் தவறும்போதெல்லாம் தோற்றுப் போகிறோம்.’ இதையேதான் வேறு வார்த்தைகளில், `கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே!’ என்கிறது பகவத் கீதை. ஒருவர் தன் பொறுப்பை உணர்ந்து, தன் வேலையைச் செய்வதற்கே சங்கடப்படும் காலமிது; கடமையைச் செய்யாமல் தட்டிக்கழிப்பவர்கள் அநேகம் பேர். ஆனாலும், விடாப்பிடியாகத் தன் கடமையைச் செய்யும் கர்மவீரர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் தினமும் பார்க்கிற வேலையாகவே இருந்தாலும்கூட, அதையும் எந்த நேரத்தில் எப்படிச் செய்ய வேண்டும் என்கிற அளவும் உண்டு. அது பலருக்கும் தெரிவதில்லை. நீங்கள் வேலையில் கில்லியாக இருக்கலாம். ஆனால், இடம், பொருள் அறியாமல் அநியாயத்துக்குக் கடமை உணர்வோடு இருப்பதும் தவறு. இந்த உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது இந்தக் கதை.

 

இங்கிலாந்திலிருக்கும் பழைமையான சிறு தேவாலயம் அது. உள்ளூரிலிருந்தும் அக்கம் பக்கத்திலிருக்கும் சிறு கிராமங்களிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் வழிபாட்டுக்கு பெருந்திரளாக மக்கள் அங்கே கூடுவது வழக்கம். அது ஒரு பனிக்காலம். முன்பு எப்போதும் இல்லாததைவிடக் கடுமையான பனிப்பொழிவை இங்கிலாந்து எதிர்கொண்ட நேரம் அது. சனிக்கிழமை இரவில் பெய்த பனி, பனித்துகள்களால் அந்த தேவாலயத்தையே குளிப்பாட்டியிருந்தது. வீட்டைவிட்டு வெளியேறவே மக்கள் பயந்த அவ்வளவு குளிரில், ஒரே ஒருவர் மட்டும் தேவாலயத்துக்கு வந்திருந்தார். அவர் ஒரு விவசாயி. இத்தனைக்கும் நெடுந்தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்திலிருந்து வந்திருந்தார்.

பாதிரியார்

இப்போது தேவாலயத்தில் இரண்டு பேர்தான் இருந்தார்கள். ஒருவர், விவசாயி. மற்றொருவர், பாதிரியார். கொஞ்ச நேரம் காத்திருந்தார் பாதிரியார். வேறு யாரும் சர்ச்சுக்கு வருவதாகத் தெரியவில்லை. அவர் நேரே அந்த விவசாயியிடம் போனார். ``ஐயா... நீங்க ஒருத்தர்தான் இன்னிக்கி வந்திருக்கீங்க... வாரா வாரம் நூத்துக்கணக்கானவங்களுக்காக செய்யற பிரார்த்தனையை உங்க ஒருத்தருக்காகச் செய்யலாமானு எனக்குத் தெரியலை. நாம என் ரூமுக்குப் போய் கொஞ்சம் குளிர் காய்ஞ்சிட்டு, சூடா ஏதாவது குடிக்கலாமா... என்ன சொல்றீங்க?’’ என்று கேட்டார் பாதிரியார்.

``ஐயா உங்களுக்குத் தெரியாததில்லை. நான் பாமரன். விவசாயி. என் ஆடு, மாடுங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு புல், இலைதழைனு இரை போடவேண்டியிருக்கும். எல்லாமே பசியோட இருக்காது. ஏதோ ஒண்ணே ஒண்ணுதான் பசியோட திரும்பிப் பார்க்கும். அது ஒண்ணுதானே இரை வேணும்னு கேட்குதுனு அதுக்கு இரை போடாமத் திரும்பினா நல்லாவா இருக்கும்?’’

இதைக் கேட்டதும் பாதிரியார் அசந்துபோனார். தான் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தோம் என வெட்கப்பட்டார். `ஒரே ஒருவர் வந்திருக்கிறார் என்பதற்காக வாரா வாரம் நடக்கும் சிறப்புப் பிரார்த்தனையைச் செய்யாமல் நிறுத்துவதா? நல்லவேளையாக இந்த விவசாயி எனக்குப் பாடம் சொல்லிவிட்டார்’ என்று புரிந்துகொண்டார். பிரார்த்தனையை ஆரம்பித்தார். இறைவனைத் துதிக்கும் பாடல்களைப் பாடினார். பைபிளிலிருந்து வசனங்களைப் படித்தார். ஆத்மார்த்தமாக இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பிரார்த்தனை செய்து முடித்தார்.

சர்ச்

பிறகு விவசாயியிடம் வந்தார். ``நான் இன்னிக்கி என் கடமையிலிருந்து தவறியிருப்பேன். நல்லவேளையாக என்னைக் காப்பாத்தினீங்க. உங்களாலதான் இன்னிக்கி பிரார்த்தனை நல்லவிதமா முடிஞ்சுது. நீங்க என்ன சொல்றீங்க?’’

 

``ஐயா... உங்களுக்குத் தெரியாததில்லை. நான் பாமரன். விவசாயி. என் ஆடு, மாடுங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு இரை போடணும்தான். எல்லாமே பசியோட இருக்காது. ஏதோ ஒண்ணே ஒண்ணுதான் பசியோட திரும்பிப் பார்க்கும். அதுக்காக மொத்த மந்தைக்கும் வாங்கின புல், இலை தழையை அது ஒண்ணுக்கேவா திணிக்க முடியும்?’’

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

மிஸ் யூ டூ வாசகர்களே..!’ - சுஜாதா சொன்ன தலைப்பு #RememberingSujatha

 
 

சுஜாதா!  ‘இணையம் ரொம்பவும் மிஸ் செய்கிற எழுத்தாளர்; இந்த ட்விட்டர் யுகத்தில் இவர் இருந்திருக்கலாம்; ஃபேஸ்புக்கில் இவர் இருந்திருந்தால் என்னென்ன எழுதியிருப்பார்; ஷங்கர் - மணிரத்னம் மிஸ் செய்கிற எழுத்தாளர்....’ என்னென்ன எழுதியாயிற்று இவரைப் பற்றி. இதோ... இன்றோடு பத்தாண்டுகள் கடந்துவிட்டன இவர் நம்மை விட்டுச் சென்று.  


Sujatha Vikatan

 


ஓர் எழுத்தாளராகப் பெயரும் பெரும் புகழும் பெற வேண்டுமென்பதெல்லாம் சுஜாதாவின் நோக்கமாக இருந்ததில்லை. அவருக்கு எல்லாமே அவர் ‘மனப்படி’ அமைந்தன. தனக்குப் பிடித்ததைச் செய்கிறவராகத்தான் அவர் இருந்தார். படிப்பு, கிரிக்கெட், அரசு வேலை, ‘பெல்’ நிறுவன வேலை, எழுத்து, சினிமா என்று எல்லாமே அதனதன் போக்கில் போகவிட்டு, ரசித்து ஈடுபட்டு செய்துகொண்டிருந்தார். எங்கும் எதைப் பற்றிய பெரும்குறைகளை அவர் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. அப்படியே சிலவற்றிலிருந்தாலும், சுய பகடியுடனும், எளிமையான மனதுடனும் அதைக் கடந்து சென்றவராகத்தான் இருந்தார். 

இவரளவுக்கு, சமகால எழுத்தாளர்களை, கவிஞர்களை அறிமுகப்படுத்தியவர்கள் என்னளவில் சொற்பமே. இவர் ஒருவரை அறிமுகப்படுத்தி ஒருவரி, ஒரு பத்தி எழுதிவிட்டாலே அது ஒரு ஐ.எஸ்.ஐ முத்திரை. அப்படித்தான் அவரது தெரிவுகளும் இருந்தன. சில இலக்கியவாதிகள் இவருக்கு வேறுமுகம் காட்டினாலும், ‘லைட் ரீடிங்க்பா இவரு’ என்று சிலர் சொன்னாலும் இவர் படித்துப் பகிர்ந்துகொண்டவைகள் மூலம் நிறைய தெரிந்துகொண்டவர்கள் இருந்தார்கள். இவரது பரிந்துரைகளை நாம் ரசிக்கக்காரணம், இவரது அறிவல்ல.. இவரது உணர்வு. உணர்வுபூர்வமாக இவர் ரசிப்பதைத்தான் நம்மோடு பகிர்ந்து கொண்டார். அதனாலேயே நமக்கும் அவை பிடித்துப் போயின.

எதிலும் அவருக்குக் குறைகள் இருக்கவில்லை என்பதற்குக் காரணம், அவையவற்றை (இப்படி ஒரு வார்த்தை இருக்கா வாத்யாரே?) அவையவையின்  (மறுபடி அதே கேள்வி) போக்கில் அவர் புரிந்துகொண்டதுதான். தன் நாவல் சினிமாவாகும்போது அது சின்னாபின்னமாவதை அருகிலிருந்தே பார்த்துக்கொண்டிருந்தார். ‘அது வேறு உலகம். அங்கே டைரக்டர்கள்தான் மகாவிஷ்ணுவுக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்தவர்கள்’ என்கிறார். அந்தப் புரிதல் இருந்ததால்தான் அத்தனை காலமும் தாக்குப்பிடிக்க முடிந்தது இவரால். எத்தனை காலம்? 

சினிமாவாக்கப்பட்ட இவரது முதல் நாவல் காயத்ரி. 1977. அதைப் பற்றிக்குறிப்பிடும்போதே, ‘ரஜினிகாந்த் என்ற புதிய நடிகரும்’ என்கிறார். இவர் கடைசியாகப் பணியாற்றிய படம், எந்திரன். அப்போது ரஜினிகாந்த் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. எத்தனை காலம் இவர் தாக்குப்பிடித்தார் என்பதை இதைவிட  சுருக்கமாக  சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். 

எல்லாவற்றிலும் துல்லியம் தேடி, சிரமப்படுவதில் சுஜாதாவுக்கு உடன்பாடில்லை. கதை முக்கியம் என்பார். அது சொல்லும் ஆதாரக்கருத்து போய்ச்சேர வேண்டும் என்பார். ‘எழுத்தாளர் பால் கலிக்கோ (Paul Gallico) குத்துச்சண்டை பற்றிய சிறுகதை எழுத நினைத்து, நேரடி அனுபவத்துக்காக சாம்பியன் ஒருவனிடம், ‘முகத்தில் குத்தினால் எப்படி இருக்கும்?’ என்று கேட்டார். அவர், ‘வலிக்கும்’ என்று சொல்வதற்குப் பதிலாக, முகத்தில் குத்துவிட்டாராம். சரியான குத்து. எழுத்தாளர் மல்லாக்க விழுந்து, தாடை உடைந்து, பல் சிதறி.. இந்த அளவுக்கு வாழ்க்கையைப் பிரதிபலிக்க விரும்பவில்லை நான்’ என்கிறார்.

சுஜாதாசுவாரஸ்ய எழுத்துக்கு இவரே எனக்கு ஆசான். நகைச்சுவை ஆனாலும் சரி, மரணமானாலும் சரி.. இவரது நடையில் படிப்பதென்றால் இருட்டுக்கடை அல்வாதான். வழுக்கிக்கொண்டு வயிற்றுக்குள்... ஸாரி.. மனதுக்குள் சென்றுவிடும். ‘தேர்ந்த நடிப்பில் அந்த நடிகரும், அவர் மேல் தீராத காதலில் அந்த  நடிகையும் திரை முழுவதும் நடிப்பென்ற பெயரில் வியாபித்துக்கொண்டிருப்பதைப் பார்க்க, நிச்சயம் இதில் இயக்குநரின் கைவண்ணம் என்னவென்று நாம் நினைக்கும்போதுதான், எங்கிருந்தோ வரும் வில்லன்...’ என்று இவரெழுத்தில் மூச்சடக்கிப் படிக்கவே எந்த வரியும் இருக்காது. ‘படம் தேறாது’ என்றுவிடுவார். எல்லாமே ‘அண்ணனுக்கொரு ஊத்தாப்பம்’தான். தவளைப்பாய்ச்சல் நடை என்பார்கள். அப்படி!

எக்கச்சக்கமாக எழுதித்தள்ளுவார். ஒரே சமயத்தில் ஏழு வாரப்பத்திரிகைகளில் தொடர்கதைகள். ‘வாரத்துக்கு 28 பக்கம் எழுத முடியாதா?’ என்பார். (நாம் 28 பக்கங்களாவாது படிக்கிறோமா?) அப்படி நிறைய தொடர்கள் எழுதும்போது, அடுத்த அத்தியாயம் எழுத வேண்டுமென்றால், முதல் அத்தியாயத்தில் கடைசி வரியை மட்டும் படித்துவிட்டு, தொடர்ந்து எழுதுவார். திரும்பி வந்த கதைகளைக் கிழித்துப்போட்டுவிடுவார். மொழிகள் பற்றிக்கேட்டால், ‘இந்தி எழுதப்படிக்கத் தெரியும். ஆங்கிலம், கன்னடம் தெரியும். தமிழ் சுமாராகத் தெரியும்’ என்பார். இவர் பிஸியாக இருந்த காலத்தில் - ஒரு நடிகருக்கு இருந்ததைப்போல - இரண்டு வருடங்கள் முன்னதாக இவரது கதை கேட்டுக்  காத்திருந்த பத்திரிகைகள்  உண்டு. 
 
தீர்க்கதரிசி. செய்திச்சேனல்கள் வருவதற்கெல்லாம் முன்னோடியாக, என்.டி.டி.வி, வாராவாரம் செய்திப்படம் தயாரித்து வீடியோ கேசட்டாக விற்பார்கள். அப்படி ஒரு கேசட்டில் பார்த்த காட்சியை மணிரத்னத்தோடு பகிர்ந்துகொள்கிறார். அதுதான் ரோஜாவில் தீவிரவாதிகள் பற்றவைக்க.. அரவிந்த்சாமி, தேசியக்கொடியை பாய்ந்து அணைத்த அந்தக் காட்சி. கே.கே.நகரில், சிறிய ஸ்டுடியோவில் ‘சின்னச்சின்ன ஆசை’யைப் போட்டுக்காட்டி, மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகம் செய்தபோது,   சுஜாதா ஏ.ஆர்.ரஹ்மானிடம் சொன்னது: ‘புகழுக்குத் தயாராகுங்கள்!’ 

இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே என்ன தலைப்பு வைக்கலாம் என்று உள்ளுணர்வு கேட்டுக்கொண்டிருக்கிறது. நள்ளிரவு. கொஞ்சம் மெதுவாக, தூரத்தில் கேட்பது போல அவர்குரல் கேட்கிறது.

“வாத்யாரே... நீங்களா? நம்ப மாட்டாங்களே?”

“நானே நம்ப மாட்டேன். அதைவிடு. வழக்கமான ஜல்லிதானே? என்ன புதுசா எழுதியிருக்கப்போற?”

“அதை விடுங்க வாத்யாரே.. நாட்டு நடப்பெல்லாம் கேள்விப்பட்டீங்களா?”

“டேன்”

“கேரளாவில மது...”

“இங்கயே வந்துட்டானே... உங்களுக்கெல்ல்லாம் அருகதை இல்லடா.. அவனை வெச்சுக்க. அவன் வந்ததுமே, பக்கத்துல இருந்த வாலி சொன்னார்.. ‘இவன் பெயர்தான் மது. ஆனால் போதையிலிருந்து அவர்கள்தான்’ அப்டினு. சரியாத்தான் இருக்கு.”

“கமல் கட்சி ஆரம்பிச்சுட்டார்”

”அதும் கேள்விப்பட்டேன். நான் இருந்திருந்தா என்னையும் வந்து பார்த்திருப்பாரு..”

“ஆலோசனைக்கா?”

“மய்யம்னு எழுதறது சரியானு கேட்க”

“நீங்க என்ன சொல்லிருப்பீங்க?”

” ‘மையமா’ புன்னகைச்சிருப்பேன்”

“ரஜினி?” 

“காலாவுக்கு வாழ்த்துகள்”

“வாத்யாரே... ரஜினி அரசியலைப் பத்தி சொல்லுங்கண்ணேன்...”

“இரஞ்சித்கூட காலா பண்றாரே... அதுல அரசியல் இருக்காதுன்றியா?” 


“ஃபேஸ்புக்... ட்விட்டர்”

”உடனடி உணர்ச்சிகளைக் கொட்டும் கழிப்பிடங்கள்”

“தேவையில்லைன்றீங்களா?”

“மலச்சிக்கல் கெடுதி. அதனால இதெல்லாம் தேவைதான். விடு”

“அந்தச் சிலையைப் பார்த்தீங்களா?”

“இப்பதான் நாகேஷ் சொல்லிட்டிருந்தார். ‘சிற்பிட்ட குடுங்கன்னிருப்பாங்க. மியூசிக் டைரக்டர் சிற்பிட்ட கொடுத்திருப்பாங்க’ன்னு....”

“நாங்க உங்களை ரொம்ப மிஸ் பண்றோம். நீங்க யாரை மிஸ் பண்றீங்க?”

“கண்டதையும் எழுதிட்டு ‘உண்மையான தமிழன்னா ஷேர் பண்ணு’னு சொல்றானே... அவனுகளை ரொம்ப மிஸ் பண்றேன். சீக்கிரம் அவங்களை இங்க அனுப்பி வை.”

“இந்தக் கட்டுரைக்கு ஒரு நல்ல டைட்டில் சொல்லுங்களேன்”

“நீ என்ன வைக்கலாம்னு இருக்க?”

“மிஸ் யூ வாத்யாரே!”

”மிஸ் யூ டூ வாசகர்களே!” 

--

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

``உதாசீனப்படுத்தும் கண்களில் உள்ளது ஊனம்!'' – ஐ.நா-வின் பாலின சமத்துவக் குழு உறுப்பினர் மாள்விகா

 
 

2002-ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் பிக்கனேரில் இருந்த தனது வீட்டில் நடந்த அந்தச் சம்பவத்தை நினைவுகூர்கிறார் மாள்விகா. ``கும்பகோணம்தான் எனக்கு சொந்த ஊர். அப்பாவுக்கு ராஜஸ்தான்ல வேலை. அப்பா, அக்கா, அம்மான்னு எங்க எல்லோருக்குமே ராஜஸ்தான் பழகிடுச்சு. 8-ம் வகுப்புக்குப் பிறகான சம்மர் வெக்கேஷன் அது. நேற்று நடந்த மாதிரி இப்பவும் நினைவிருக்கு. எனக்குப் பிடிச்ச ஒரு ஜீன்ஸ் பேன்ட்ல ஓட்டை இருந்ததைப் பார்த்துட்டு, `கொஞ்சம் ஃபெவிகால் அப்ளை பண்ணி ஒட்டிடலாம்'னு நினைச்சேன்” சிரிக்கிறார். ``ஏதாவது கனமான ஒரு பொருளை எடுத்து ஜீன்ஸ் மேல வெச்சு அழுத்தி ஒட்டலாம்னு ஒரு ஐடியா. வீட்டுக்குப் பின்னாடி இருந்த வித்தியாசமா கட்டியான ஒரு பொருளை எடுத்துட்டுவந்து, ஜீன்ஸை ஒட்டவைக்கிறதுக்காக வேகமா பலமுறை அடிச்சேன். குண்டுவெடிச்சிடுச்சு. நினைவும் இழக்கல, வலியும் இல்ல. நரம்பு மண்டலமே வேலையை நிறுத்திக்கிட்ட மாதிரி, என் வீடே அழுது பதறின நிமிஷத்தை வேடிக்கை பார்த்தேன்.” 

மாள்விகா

 

மாள்விகாவின் வீட்டின் அருகில் இருந்த வெடிபொருள் கிடங்கில், அந்தச் சம்பவத்துக்குச் சிறிது நாள்களுக்கு முன் நிகழ்ந்த வெடிவிபத்து, சிறுமியான அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அதன் விளைவாக, சில கிலோமீட்டர் தூரத்துக்குச் சிதறிய கிரெனேடைத்தான் அவர் விளையாட்டாகக் கையாண்டிருக்கிறார்.

``ரத்தக்குளியல் அது. ரெண்டு கைகளும் காணாமப்போயிருந்தன. கீழே இருந்த சதைத்துண்டுகளைச் சேகரிச்சு, என்னையும் தூக்கிக்கிட்டு அப்பாவும் அவருடைய நண்பரும் ஜீப்ல ஏறிட்டாங்க. அப்பாவுடைய ஃப்ரெண்ட்கிட்ட சொன்னேன், `அங்கிள் என்னோட கால் கீழே விழப்போகுது. அதையும் பிடிங்க'னு' நினைக்கவே நடுக்கம் தரும் அந்த விபத்து, தனக்கான பாடம்'' என்கிறார் மாள்விகா. விபத்தின் வலியையே நான்கு நாள்களுக்குப் பிறகே உணர்ந்த மாள்விகா, 18 மாதங்கள் படுக்கையில் கழித்துவிட்டு, பல அறுவைசிகிச்சைகளுக்குப் பிறகே இரு கைகள் இல்லாமல், கால்களில் 80 சதவிகித நரம்புகள் சேதமடைந்தபடி வீடு திரும்பியிருக்கிறார். அடுத்த மூன்று மாதங்களில் வந்த 10-ம் வகுப்பு தனித்தேர்வில், ஸ்டேட் ரேங்க் வாங்கிய இவர்தான், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். மொழிப்பாடமான இந்தியில் முதல் இடம்.

விபத்துக்கு முன்னர் வரை சுமாராகத்தான் படித்ததாகச் சொன்ன மாள்விகாவிடம், ``ஏன் இந்தப் படிப்பு வெறி?'' என்று கேட்டதும், ``சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய எனக்கு, சிலரின் பரிதாபம் சிந்தும் கண்கள் பிடிக்கவில்லை. என் குடும்பம்தான் என்னுடைய தூண். அன்பு மட்டும்தான் அதன் அஸ்திவாரம். ஒரு டைவர்ஷனுக்காகப் படிச்சேன். ஸ்டேட் ரேங்க் மூலமா கிடைச்ச மீடியா கவனத்தினால், அப்துல் கலாம் ஐயாவைப் பார்க்கிற வாய்ப்பு கிடைச்சது. நான் யாருன்னு எனக்குப் புரியவைக்க, அந்த வெற்றி உதவுச்சு” என்றார்.

அப்துல் கலாமுடன் மாள்விகா

`தடைகளை எதிர்த்து யுத்தம் செய்யும்போது, நீங்கள் ஜெயிக்கிறீர்கள்’ என்று தொடர்ந்து பேசும் மாள்விகாவின் நம்பிக்கை, TEDtalk யூ டியூபில் பிரசித்தம். ``மாற்றுத்திறனாளிகளுக்காகவும் உலகம் வடிவமைக்கப்பட வேண்டும். எஸ்கலேட்டர்கள் தொடங்கி பயண வசதிகள், பொழுதுபோக்கு, வேலைவாய்ப்பு, மனநல ஆலோசனை என அரசும் சமூகமும் எங்களுக்கான வசதிகளைச் செய்ய வேண்டும். இது கருணைச் சேவையல்ல. மொத்த சமூகத்தின் பொறுப்பு” என்று சொல்லும் முனைவர் மாள்விகா, தற்போது அமெரிக்காவில் அறியப்பட்ட தன்னம்பிக்கைப் பேச்சாளர். ஐ.நா-வின் இளைஞர் மற்றும் பாலினச் சமத்துவக் குழுவின் உறுப்பினராகவும், உலகப் பொருளாதார மையத்தில் குளோபல் ஷேப்பராகவும், ஆக்சசிபிள் ஃபேஷன் அமைப்பின் பிரபல மாடலாகவும் ஜொலிக்கிறார்.

 

``எங்களை நோக்கிய மோசமான அணுகுமுறைதான் ஊனம். நான் இந்த நாட்டின் ஜனாதிபதியானாலும் என் மீது பரிதாபம் காட்டும் உதாசீனப்படுத்தும் கண்கள் இருக்கவே செய்யும்” `உங்களில் ஒருவராக’ எங்களை முன்னோக்கி நடத்தவைக்கும் கனவுக்கான அமைப்பை உருவாக்கும் வேலைகளில் இருக்கிறேன்'' என்கிறார் தன் திடக்குரலில். 

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

இத்தாலியில் நடைபெற்ற ட்ரோன் பேஷன் ஷோ !!!

 

இத்தாலியின்  நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் மொடல்களுக்கு பதிலாக ட்ரோன்கள் இடம்பெற்று பார்வையாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தன.

online_New_Slide__3_.jpg

பார்வையாளர்கள் அனைவரும் தங்கள் Wi-Fi இணைப்புகளை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டதால் 45 நிமிடங்களுக்கு காத்திருக்க வேண்டியதாயிற்று.

அறை முழுவதும் இருளில் மூழ்கியிருக்க திடீரென்று ட்ரோன்கள் கைப்பைகளை சுமந்து கொண்டு வரிசையாக வரத் தொடங்கின.

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90

அவற்றை சீருடை அணிந்த பொறியாளர்கள் ரிமோட் கண்ட்ரோல்கள் மூலம் இயக்கினர்.

இனி அழகு நடை பயிலும் மொடல்களைக் காண முடியாதோ என பார்வையாளர்கள் ஏக்கத்துடன் காத்திருக்க ட்ரோன்களின் அணிவகுப்பு முடிந்ததும் மீண்டும் Cat Walk  பயிலும் மொடல்கள் ஃபேஷன் ஷோவை ஆக்கிரமித்துக்கொண்டனர்.

இந்த பேஷன் ஷோ Dolce and Gabbana பேஷன் நிறுவனத்தினால் நிகழ்த்தப்பட்டது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

வானவில் ஆறு ... கண்ணாடி நதி...

 

 
sk8

மலைகளில் உயரமான மலை, நீளமான மலை, என்று கேள்விப்பட்டிருக்கிறோம். "வானவில் மலை' என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சீனாவில் கன்சு பகுதியில் இந்த வர்ண ஜாலங்கள் கடத்தும் மலைகள் உள்ளன. முழுக்க முழுக்க கனிமங்கள் நிறைந்த இந்த மலைகளைக் கண்டுகளிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதால் சுற்றுலாத் தலங்களில் முக்கிய இடத்தை இந்த மலைகள் பிடித்துள்ளன.
சீன வானவில் மலைகளுக்குப் போட்டியாக பெரு நாட்டிலும் வானவில் மலைகள் உள்ளன.
இன்னொரு அற்புதம் வானவில் ஆறு. 
இது கொலம்பியாவில் பாய்கிறது. ʻmacarenia clavigeraʼ வகை நீர் செடிகள்தான் இந்த ஆற்றிற்கு வானவில் நிறங்களைத் தருகின்றன. சுமார் 100 கி. மீ நீளமுள்ள இந்த ஆற்றை சுமார் 30 கி.மீ. வரை சென்று பார்க்க அனுமதி கிடைக்கும். மீதமுள்ள பகுதியில் கொரில்லா தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இல்லை. அதன் காரணமாக 30 கி. மீ. தாண்டிப் போக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை. 
இந்த வானவில் ஆற்றிற்குப் போட்டியாக உலகில் வேறு எந்த நாட்டிலும் வானவில் ஆறு இல்லை. 
இந்த உலக அற்புதங்களுக்குப் பொருத்தமான பதிலாக இந்தியாவிலும் ஒரு அதிசயம் இருக்கிறது. 
கண்ணாடி நதியில் படகுகள் பயணிக்கும் போது நிலத்தில் இருந்து பார்த்தால் படகுகள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போல ஒரு மாயாஜாலம் நிகழும். அந்த அளவுக்கு அந்த நதி நீர், கண்ணாடி மாதிரி தெள்ளத் தெளிவாக இருக்கும். மேகாலயாவில் பாயும் உம்ங்கோட் நதி சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்திருப்பது தனது கண்ணாடித் தன்மையினால்தான். 
இந்த இயற்கை அற்புதத்தைக் காண மேகாலயாவின் "டவ்கி' என்ற ஊருக்குப் போக வேண்டும். அஸ்ஸாமின் கெüஹாத்தி நகரத்திலிருந்து 175 கி.மீ தூரத்திலும், ஷில்லாங் நகரிலிருந்து 95 கி. மீ தூரத்திலும் "டவ்கி' அமைந்துள்ளது. படகுப் பயணம் செய்யும் போது ஆழத்தில் கிடைக்கும் மணல், கூழாங்கல்களை நேரில் பார்ப்பது போல பளிச்சென்று பார்க்கலாம். இங்கு படகுப் போட்டிகளும் நடக்கும். இங்கிருந்து, கூப்பிடு தொலைவில் தான் வங்கதேச எல்லை இருக்கிறது.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

 

முதன் முறையாக செயற்கை பல் பொருத்தப்பட்ட புலி

1982-ம் ஆண்டு லண்டனில் உள்ள உயிரியல் பூங்காவில் பல் வலியால் அவதிப்பட்ட புலிக்கு, முதன் முறையாக செயற்கை பல் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.