Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

2014 : எம்.எச்.370 விமானம் 239 பேருடன் காணாமல் போனது

வரலாற்றில் இன்று

மார்ச் – 08

 

1618 : ஜேர்­ம­னியைச் சேர்ந்த வானி­ய­லா­ளரும் கணி­த­வி­ய­லா­ள­ரு­மான ஜொஹான்னெஸ் கெப்லர், கோள்­களின் இயக்­கங்­க­ளுக்­கான மூன்­றா­வது விதியைக் கண்­டு­பி­டித்தார்.

1782 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஒஹையோ மாநி­லத்தில் கிறிஸ்­த­வத்­துக்கு மதம் மாறிய 90 அமெ­ரிக்க இந்­தியப் பழங்­கு­டிகள் பென்­சில்­வே­னி­யாவின் துணை இரா­ணு­வத்­தி­னரால் படு­கொலை செய்­யப்­பட்­டனர். கொல்­லப்­பட்­ட­வர்­களில் 68 பேர் குழந்­தை­களும் பெண்­க­ளு­மாவர்.

malaysia-airline-mh370-copy.jpg1817 : நியூ யோர்க் பங்குச் சந்தை ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1917 : ரஷ்­யாவின் சென் பீட்­டர்ஸ்பேர்க் நகரில் மகளிர் தின ஆர்ப்­பாட்­டங்கள் ஆரம்­ப­மா­கின. (இது பழைய ஜூலியன் நாட்­காட்­டியில் பெப்­ர­வரி 23 ஆம் திக­தி­யாகும்)

1921 : ஸ்பெயின் பிர­தமர் எடு­வார்டோ டாட்டோ, மட்றிட் நகரில் நாடா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யே­றும்­போது கெட்­ட­லோ­னியா கிளர்ச்சி அமைப்­பி­னரால் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

1924 : அமெ­ரிக்­காவின் உட்டா மாநி­லத்தில் நிலக்­கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்­பெற்ற விபத்தில் 172 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1942 : இரண்டாம் உலகப் போர்: இந்­தோ­னே­ஷி­யாவின் ஜாவாவில் ஜப்­பா­னியப் படை­க­ளிடம் டச்சுப் படைகள் சர­ண­டைந்­தனர்.

1942 : இரண்டாம் உலகப் போர்: பர்­மாவின் ரங்கூன் நகரை ஜப்பான் கைப்­பற்­றி­யது.

1950 : சோவியத் ஒன்­றியம் தன்­னிடம் அணுகுண்டு இருப்­ப­தாக அறி­வித்­தது.

1957 : எகிப்து சூயஸ் கால்­வாயை மீண்டும் திறந்­தது.

1965 : வியட்நாம் போர்: 3,500 அமெ­ரிக்கப் படைகள் தென் வியட்­நாமில் தரை­யி­றங்­கினர்.

1979 : பிலிப்ஸ் நிறு­வனம் இறு­வட்டை (கொம்பாக்ட் டிஸ்க் – சி.டி) முதல் தட­வை­யாக பகி­ரங்­க­மாக செயற்­ப­டுத்தி காண்­பித்­தது.

2004 : ஈராக்கில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

2014 : மலே­ஷியா எயார்­லைன்ஸின் பிளைட் எம்.எச்.370 விமானம் 239 பேருடன் கோலா­லம்பூரிலி­ருந்து சீனாவின் பெய்ஜிங் நகரை நோக்கி சென்­று­கொண்­டி­ருந்­த­போது மர்­ம­மாக காணாமல் போனது. இவ்­வி­மானம் இந்து சமுத்­தி­ரத்தில் வீழ்ந்­த­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

2014 : கொழும்பு வெளிச்­சுற்று அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டமாக கொட்டாவை- கடுவலை வரையான பகுதி திறந்து வைக்கப்பட்டது.

2017 : தலாவாக்கலை மெராயா பகுதியில் சூறாவளியினால் 35 வீடுகள் சேதமடைந்தன.

http://metronews.lk/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மங்கையர் போற்றும் மகளிர் தினம்

 

உலக பெண்கள் தினமான மார்ச்-8 என்பது நம்மால் கொண்டாடக் கூடியதாகவும், பெண்களை போற்றக் கூடிய நாளாகவும் இருக்கிறது.

 
 
 
 
மங்கையர் போற்றும் மகளிர் தினம்
 
உலக பெண்கள் தினமான மார்ச்-8 என்பது நம்மால் கொண்டாடக் கூடியதாகவும், பெண்களை போற்றக் கூடிய நாளாகவும் இருக்கிறது. இந்த நாளின் பின்னணியில் உலக நாடுகளை சேர்ந்த பெண்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட போராட்டங்களும், முயற்சிகளும் அஸ்திவாரமாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கல் உடைக்கும் வேலையில் இருந்து கணினி துறை வரை அனைத்து துறைகளிலும் இன்றைக்கு மைல்கல்லாக மகளிர் விளங்கும் அளவுக்கு சாதனை படைத்து உயர்ந்துள்ளனர் என்றால் மிகையில்லை. இவ்வாறு சாதனை உயரத்தை எட்டி உள்ள மகளிர் சமுதாயத்திற்கு என்று ஒரு நாள் உலகெங்கும் ஒருங்கே கொண்டாடப்படுகிறது என்றால் அது தான் உலக மகளிர் தினம். மங்கையர் போற்றும் இந்த மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை விடப்படுகிறது. மகளிர் தின விழா கொண்டாடும் நமது தேசத்தில் ஒரு காலத்தில் பெண்ணடிமை இருந்தாலும், பெண்ணை பாரத தேவியாகவும், நதிகளாகவும் வணங்கி வழிபடும் பாரம்பரியமும் நமக்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்ற ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் என்றே மகளிர் தினத்தை குறிப்பிடலாம். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். அங்கு அப்போது பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.பின்னர் 1857-ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பெண்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட்டது.

பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் பெண்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர். 1857-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

201803081038193712_1_womne8th._L_styvpf.jpg

இந்த போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தோல்வி அடைய செய்தனர். அதன்பிறகு 1907-ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராட தொடங்கினர். 1910-ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்டு தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் மாதம் 8-ந் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானமும் நிறைவேறவில்லை.

1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 1921-ம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975-ம் ஆண்டு முதல் தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்திற்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த சாதனை நன்னாளில் மகளிர் முன்னேற்ற பாதையில் தொடர்ந்து அடி எடுத்து வைக்க நாமும் வாழ்த்துவோம்.

இந்தியாவில், மகளிர் தின கொண்டாட்டங்கள் சமீப காலமாகத்தான் பிரபலமாகி வருகின்றன. பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பெண் சபாநாயகர், பல்வேறு பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்வெளி வீராங்கனைகள் என்று உலகமே பார்த்து வியக்கும் நமது நாட்டில் பெண்கள் போற்றப்படத்தக்க நிலையில் உயர்ந்து வருவது பெருமைப்படத்தக்க விஷயமாகும்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

சொர்க்கத்தில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் தெரியுமா? - அன்பின் அருமை சொல்லும் கதை! #MotivationStory

 
 

கதை

ல்லோரும் சொர்க்கத்துக்குப் போகப் பிரியப்படுகிறார்கள். ஆனால், ஒருவர்கூட இறப்பதற்குத் தயாராக இல்லை’ இது ஒரு இங்கிலாந்து பழமொழி. வேடிக்கையாகச் சொல்லப்பட்டாலும், ஆழ்ந்த உண்மை பொதிந்திருக்கும் பழமொழி இது. யாருக்குத்தான் இறப்பதற்கு ஆசை வரும்? பிறக்கும்போதே ஒரு மனிதனின் இறப்பும் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இது இயற்கை. இறந்த பிறகு சொர்க்கம், நரகம் இரண்டில் ஏதாவது ஒன்றுக்குப் போய்ச் சேருவோம் என்பது உலக அளவில் பெரும்பான்மையான மதங்கள் வலியுறுத்தும் நம்பிக்கை. நம் கருடபுராணத்திலிருந்து, பைபிள் வரை சொர்க்கத்துக்கான குறிப்புகள் இருக்கின்றன. நல்லவனாக இரு; சக மனிதனிடம் அன்பாக இரு; யாருக்கும் கெடுதல் செய்யாதே, நினைக்காதே; பிறருக்கு உதவி செய்... போன்ற நல்லதனங்களைக் கடைப்பிடிக்கத்தான் சொர்க்கம், நரகம் இரண்டுமே வழிகாட்டுகின்றன. சரி... அப்படி ஒன்று இருக்கும் பட்சத்தில், யாருக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பதை அறிவுறுத்துகிறது இந்தக் கதை...

 

அதிகாலை நேரம்... ஒரு முதியவர், பாஸ்டனின் புறநகர்ச் சாலையில் வாக்கிங் போய்க்கொண்டிருந்தார். கூட அவருடைய நாயும் துணைக்கு வந்துகொண்டிருந்தது. அழகான இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி அவர் நடந்துகொண்டிருந்தார். திடீரென்று அது நடந்தது. ஏன், எப்படி என்று அவருக்குப் புரியவேயில்லை. அவர் இறந்து போனார். தனக்கு மரணம் நிகழ்ந்துவிட்டது என்பதை அவரால் உணர முடிந்தது. ஆச்சர்யம் என்னவென்றால், அவருடன் அவருடைய நாயும் இறந்து போய், அவர் கூடவே வந்துகொண்டிருந்தது. அது வழக்கமான அவர் ஊர் அல்ல. அது வேறோர் இடம். சற்று தூரத்தில் ஒரு சிறிய மலை தெரிந்தது.

அவருக்கு அது ஆச்சர்யங்கள் நிறைந்த தினம். அவரால் துள்ளிக் குதித்து நடக்க முடிந்தது. பதினைந்து வருடங்களாக அவருடனேயே இருக்கும் அவருடைய செல்ல நாய்கூட, போட்டி போட்டுக்கொண்டு வேகமாக அவருடன் நடந்து வந்தது. முதியவர் அந்த மலைக்கு மேல் ஓர் கட்டடம் இருப்பதைப் பார்த்தார். நாயை அழைத்துக்கொண்டு மலைப் பாதையில் நடந்து மேலே போனார். அந்தக் கட்டடம் அழகான மார்பிள் கற்களால் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் வாயிற் கதவே மிரட்டலாக இருந்தது. வைர, வைடூரியங்கள் பதித்த அழகான, பிரமாண்டமான கதவு. முதியவர், கதவின் சிறு ஓட்டை வழியாகப் பார்த்தார். உள்ளே தங்கத்தால் ஆன சாலை நீண்டுகொண்டே போனது. `ஆஹா... இதுதான் சொர்க்கம்போல’ என்ற முடிவுக்கே வந்துவிட்டார் அவர்.

சொர்க்க வாசல்

உள்ளே ஒரு மேசைக்கு முன்பாக ஒரு காவலாளி அமர்ந்திருப்பதையும் முதியவர் பார்த்தார். குரல் கொடுத்தார்... ``எக்ஸ்க்யூஸ் மீ சார்... இதுதான் சொர்க்கமா?’’

``ஆமா’’ என்றபடி காவலாளி எழுந்து கதவுக்கருகே வந்தார்.

``எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?’’

``நிச்சயமா. இப்போத்தான் கொஞ்சம் ஐஸ் வாட்டர் பிடிச்சுக்கிட்டு வந்தேன். உள்ளே வாங்க...’’ என்றவர் விசையை அழுத்த கதவு திறக்க ஆரம்பித்தது.

முதியவர், தன் நாயைப் பார்த்தார். பிறகு கொஞ்சம் தயக்கமான குரலில், ``என் நண்பனையும் உள்ளே அழைச்சுக்கிட்டு வர்றதுக்கு அனுமதி இருக்கா?’’

உள்ளேயிருந்து குரல் கேட்டது... ``சாரி சார்... செல்லப்பிராணிகளுக்கெல்லாம் அனுமதியில்லை. நீங்க மட்டும் வர்றதுனா வரலாம்...’’

``இல்லை வேண்டாம். பரவாயில்லை’’ என்றபடி முதியவர் திரும்பி நடக்க ஆரம்பித்தார். அந்த பிரமாண்டக் கதவுகள் இறுக மூடிக்கொண்டன.

கொஞ்சம் தூரம் நடந்த பிறகு மற்றொரு சிறு மலையைப் பார்த்தார் முதியவர். அதன் மேலேயும் ஒரு கட்டடம் இருப்பது தெரிந்தது. அதற்கான பாதை அழுக்காகவும் தூசு நிரம்பியதாகவும் இருந்தது. முதியவர் அந்தப் பாதையில் நடந்தார். மேலே இருந்தது ஒரு விவசாயப் பண்ணை. முழுமையான வேலிகள்கூட போடப்படாத பண்ணை. கேட் என்று பெயருக்கு ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதைத் தள்ளிக்கொண்டு யார் வேண்டுமானாலும் உள்ளே சென்றுவிட முடியும். சுற்றிலும் புற்கள் முளைத்திருந்தன... நெடிய மரங்கள், பூஞ்செடிகள் என இயற்கை அழகுக் கோலம் விரித்திருந்தது. முதியவர் உள்ளே பார்த்தார்.

உள்ளே ஒரு மரநிழலில் காவலாளி ஒருவர் தீவிரமாக ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.

``எக்ஸ்க்யூஸ் மி சார்...’’

காவலாளி நிமிர்ந்து பார்த்தார்.

``எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?’’

``நிச்சயமா. உள்ளே வாஙக். அங்கே ஒரு அடி பம்ப் இருக்கு. வேணும்கிற அளவுக்கு அடிச்சு தண்ணி குடிச்சிக்கங்க...’’ ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டினார் அந்தக் காவலாளி.

``என் ஃப்ரெண்டை அழைச்சுக்கிட்டு வரலாமா?’’ தன் நாயைக் காட்டிக் கேட்டார் முதியவர்.

``தாராளமா... அங்கே ஒரு கிண்ணம் இருக்கு. அதுல தண்ணி பிடிச்சு அவருக்கும் குடுங்க...’’

முதியவரும் அவருடைய செல்ல நாயும் உள்ளே போனார்கள். உள்ளே ஒரு பழையகால மாடல் அடி பம்ப் இருந்தது. அருகிலேயே கிண்ணமும் ஒரு சொம்பும் இருந்தன. முதியவர் அடி பம்ப்பை அடித்து நீர் பிடித்தார். கிண்ணத்தில் ஊற்றி நாய்க்குக் கொடுத்தார். தானும் தாகம் தீர நீரருந்தினார். பிறகு மெள்ள நடந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த காவலாளியினருகில் போனார்.

``இது என்ன இடம்?’’

``இதுதான் சொர்க்கம்...’’

``அப்படியா... எனக்குக் கொஞ்சம் குழப்பமா இருக்கே... இது பார்க்கறதுக்கு அப்படித் தெரியலையே... இன்னொரு இடத்துல ஒரு ஆள், `இதுதான் சொர்க்கம்’னு வேற ஒண்ணைச் சொன்னாரே...’’

நரக வாயில்

``ஓ... நீங்க சொல்ற இடத்துல வைர, வைடூரியம் பதிச்ச கதவு, தங்கத்தால ஆன ரோடெல்லாம் இருந்துச்சா?’’

``ஆமா. ரொம்ப அழகா இருந்துதே...’’

``இல்லை... அதுதான் நரகம்.’’

``அப்படின்னா, அவங்க சொர்க்கம்னு அந்த இடத்தைச் சொல்றது தப்பில்லையா? அதை நீங்க கண்டிக்கவோ, கேட்கவோ மாட்டீங்களா?’’

``அப்படியில்லை. பல நேரங்கள்ல அவங்க சொல்ற அந்தப் பொய் எங்களுக்குப் பல முறை உதவி செஞ்சிருக்கு. எங்க நேரத்தையும் மிச்சப்படுத்தியிருக்கு. உண்மையான, விசுவாசமான தங்களோட நண்பர்களை விட்டுட்டு வர்றதுக்கு யாராவது தயாராக இருக்காங்கனு வைங்க... நரகம் அவங்களை உள்ளே இழுத்துக்கும்...’’

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

குளிக்கப் போகிறீர்களா? ஒரு நிமிடம்! வெறும் குளியல் சமாசாரம்தானே என்று அலட்சியம் காட்டாமல் முழுவதும் படித்துவிடுங்கள்! 

 

 
bath


 
கூழானாலும் குளித்துக் குடி என்பது ஆன்றோர் வாக்கு. உண்மை. குளிப்பதினால் உடல் மட்டும் சுத்தமாகிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மேனியில் தண்ணீர் பட்டவுடன் உடலுடன் சேர்ந்து, உள்ளமும் சுத்தமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்து இருக்கிறார்கள். 

சிலருக்கு, குளியலறைக்குச் சென்றதும்தான் பாட்டு வரும். பக்கெட்டிலிருந்து தண்ணீரை மொண்டு மொண்டு விட்டுக் கொண்டோ, பாத் டப்பிலோ அல்லது ஷவரின் கீழேயோ நின்று கொண்டு, பாடிக் கொண்டே மணிக்கணக்கில் நேரம் போவது கூடத் தெரியாமல் குளித்தபடி பாத்ரூமையே ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் வெளியே வருவார்கள். நிறைய நேரம் குளிப்பதால், உடலுக்கும், நீர்வளத்திற்கும்  ஏற்படும் சில பிரச்சினைகளும், அது மட்டுமல்லாது குளியலறை சுகாதாரக்கேடுகள் என்னென்ன என்பதையும் சற்றே பார்ப்போம். 

woman-bath-820x500.jpg

ஒரு நாளைக்கு எட்டு நிமிடங்கள் குளிப்பதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுது, வருடத்திற்கு சுமார் 48 மணி நேரம் குளிப்பதற்காக நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள். அந்த நேரத்தைச் சுருக்கி, ஒரு நாளைக்கு நான்கு நிமிடங்கள் குளியலுக்காகச் செலவழித்தால், வருடத்திற்கு சுமார் 24 மணி நேரம்தான் குளியலுக்காக அவகாசம் ஒதுக்குகிறீர்கள். 

தண்ணீர் செலவழிவதும் கணிசமாகக் குறைகிறது. மோட்டார் போட்டு  அதனால் கரண்ட் பில் ஏறுவதும் குறைகிறது. தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாகவே இருக்கும் நம் நாட்டில், தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

சிலருக்கு, ஒருமுறை சோப்பு போட்டுக் குளித்தால் திருப்தி உண்டாகாது. இரண்டு முறை, மூன்று முறை சோப்பைப் போட்டு, தேய் தேயென்று தேய்த்துக் குளித்தால் தான் நிறைவு உண்டாகும். A. A. D. என்று கூறப்படும் அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் டெர்மட்டாலஜி மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? அதிகமாக சோப்பை உபயோகித்தால், நம் சருமத்தினை பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து விடுகின்றன என்றும் அதனால் சருமம் வறண்டு, சிவந்து, சொறி ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள். 

hair.jpg

தலைக்குக் குளிக்கும் போது, முதலில் தலைக்கு ஷாம்பூவை போட்டுக்கொண்டு, உடம்பெல்லாம் சோப்பு தேய்த்த பின்தான் தலையை அலசும் பழக்கம் பொதுவாக உள்ளது. அது தவறான பழக்கம். தலையின் சருமப் பகுதியில் ஷாம்பூவில் இருக்கும் ரசாயனம் வேர்க்கால்களில் இறங்கி சருமத்தில் பாதிப்பினை உண்டாக்கிவிடும். ஷாம்பூ தடவிய முடியை அலசி விட்டே உடலுக்கு சோப்பு போட வேண்டும். இல்லாவிட்டால் கடைசியாக தலைக்கு ஷாம்பூ குளியல் எடுத்துக் கொள்ளலாம். 

ater_bath.jpg

சில இளம் பெண்கள், தலைக்குக் குளித்தபின், விளம்பரங்களில் வரும் ஆரணங்குகளைப் போல், தேங்காய்ப்பூ துவாலையை தலையில் சுற்றிக்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். தேங்காய்ப்பூ டவலை (டர்க்கி டவல்) தலையிலிருந்து அவிழ்க்கும் பொழுது, முடி அதிக அளவில் உதிர்ந்து விடுவதோடு, வேர்க்கால்களுடன் கழன்று விடுவதற்கும் வாய்ப்பு உண்டாகிறது. 

தலை, உடல் துடைத்துக் கொள்ளும் துண்டுகளை பாத்ரூமிலேயே வைத்துக் கொள்ளும் வசதி இருக்கும். அவைகளை அங்கேயே வைப்பதால், பாக்டீரியாக்கள் பெருகி, தொற்று உண்டாக அதிகளவில் வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், துண்டுகள், உடம்பு தேய்த்துக் கொள்ளும் ஸ்பான்ஞ் போன்றவைகளை பாத்ரூமில் வைப்பதைத் தவிர்த்தல் வேண்டும். 

தலைக்குக் குளித்தபின் கண்டிஷனர்கள் உபயோகிப்பவர்கள், முடியின் வேர்க்கால்களில் அப்ளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். முடியிலும், முடியின் நுனியிலும் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். 

Untitled-8-655x353.jpg

எல்லாவற்றையும் விட முக்கியமானது என்னவென்றால், எண்ணை தேய்த்துக் குளிப்பவர்கள், குளித்துவிட்டு வெளியில் வந்தவுடன், அடுத்தவர்களின் சௌகர்யத்திற்காக, தரையை நன்கு தேய்த்துக் கழுவி விட வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தவரின் மண்டையை உடைத்த பாவத்திற்கு ஆளாக நேரிடலாம். 

என்ன வாசகர்களே, ஒரு குளியல் சமாசாரத்திற்குள் எத்தனை விஷயங்கள் அடங்கியிருக்கின்றன, புரிந்து கொண்டீர்களா? 

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சர்வதேச மகளிர் தினம்: டூடுல் வெளியிட்டு சிறப்பு செய்த கூகுள்

 

 
photopng
golpng
 
 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.

1910-ல் பெண்கள் உரிமைக்காகவும், பெண்களுக்கு வாக்குரிமையை வலியுறுத்தியும் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் கலந்துகொண்டனர்.

இதில் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இதன் விளைவாக உலக மகளிர் தினம் 1911, மார்ச் 19 அன்று முதன்முதலாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. பேரணியாக நடத்தப்பட்ட விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டனர். அதில் வாக்குரிமையோடு, பணிபுரிவதற்கான உரிமையும், வேலையில் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.

போருக்கு எதிராகவும்,  ரஷ்யப் பெண்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும், அதே வருடத்தில் மார்ச் 8 வாக்கில் ஐரோப்பியப் பெண்கள் பேரணிகளை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ரஷ்யப் புரட்சிக்கு  விதையிட்டதாக கூறப்படும் மார்ச் 8-ஆம் தேதியை  சர்வதேச பெண்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

இதனையடுத்து ஒவ்வொரு நாளும் மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் பெண்களுக்காக சிறப்புப் டூடுல் வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.

photopng
 

கூகுள் வெளியிட்ட டூடுலை கிளிக் செய்தால்  பல பெண்களின் வாழ்க்கை அனுபவங்கள் அடங்கிய புகைப்படத் தொகுப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அவற்றில் ஒன்றை நீங்கள் கிளிக் செய்தால் அப்பெண்களின் காதல், கனவு, போராட்டம், பயணம் என குட்டி கதைகள் அடங்கிய தொகுப்பு  நம் மூன் காட்சிகளாக நகர்கின்றன.

http://tamil.thehindu.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14 நாள்கள்

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

 

ஜிலு ஜோசப்பின் தைரியமான முன்னெடுப்பு முதல் டாக்டர் சாந்தாவின் நியாயமான கோபம் வரை கடந்த இரண்டு வார காலத்தில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவை என்ன? அறிவோம்... ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்!  

p94a_1520239530.jpg

அனல் பறக்கும் அட்டைப்பட சர்ச்சை!

மீபத்தில் வெளிவந்திருக்கும் கேரளாவின் மாத்ருபூமி குழுமத்தின் பெண்கள் பத்திரிகையான க்ருஹலக்ஷ்மியின் அட்டைப்படம், அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. `குழந்தைக்குப் பால் ஊட்டுகிறோம்; தயவுசெய்து எங்களை உற்றுப் பார்க்காதீர்கள்' என்கிற தலைப்புடன், பெண் ஒருவர் திறந்த ஒருபுற மார்புடன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவது போன்ற படத்துடன் வெளிவந்திருக்கிறது பத்திரிகை. ஒரு சாரரால் தாய்ப்பாலுக்கு ஆதரவான மிகவும் தைரியமான முன்னெடுப்பாகப் பார்க்கப்படும் இந்தப் படம், இன்னொருபுறம் சர்ச்சையையும் கிளப்பி இருக்கிறது. படத்தில் உள்ளவர் திருமணமே ஆகாத மாடலான ஜிலு ஜோசப் என்பதை உறுதிசெய்யும் சிலர், தாயே அல்லாத ஒருவரது படம் தாய்ப்பால் குறித்த முன்னெடுப்புக்கு எப்படி சரியானதாக இருக்கும் என்றும் வாதிட்டுவருகிறார்கள்.

இடுக்கி மாவட்டம் குமுளியைச் சேர்ந்த 27 வயதான ஜிலு, ஃப்ளை துபாயில் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றுகிறார். கவிதைகள் எழுதுவது, திரைப்படங்களில் நடிப்பது எனப் பன்முகத் திறமையாளர். இவ்வாறு புகைப்படம் எடுத்ததைத் தன் தாயும் இரு சகோதரிகளும் கடுமையாக எதிர்த்ததாகச் சொல்லும் இவர், `இப்படி ஒரு புதுமையான, புரட்சிகரமான புகைப்படம் தேவை என்று பத்திரிகை என்னை அணுகியதுமே, நொடிப்பொழுது தாமதம்கூட இல்லாமல் ஒப்புக்கொண்டேன். என் உடலின் மீதான முழு உரிமை எனக்கு மட்டுமே இருக்கிறது. அதை நான் வெறுக்கவும் இல்லை; வெட்கப்படவும் இல்லை. பின் ஏன், எல்லாப் பெண்களும் சாதாரணமாகச் செய்யும் ஒன்றைச் செய்ய நான் யோசிக்க வேண்டும்?' என்று கேள்வி எழுப்புகிறார்.

தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் குழந்தைக்குப் பொது இடங்களில் பாலூட்டுவது அசௌகரியமான விஷயமாகவே தாய்மார்களால் இன்னமும் பார்க்கப்படுகிறது. ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள் எனப் பொது இடங்களில் இப்போதுதான் தனியாக ‘பிரெஸ்ட் ஃபீடிங்’ அறைகள் வரத் தொடங்கியிருக்கின்றன.

எது எப்படியோ, இனிமே வெறிச்சுப் பார்க்காம இருந்தா சரிதான்!


p94b_1520239558.jpg

சூடு பிடிக்கும் ‘ரேப் ரோக்கோ’ போராட்டம்!

டெ
ல்லி மகளிர் கமிஷன் தலைவர் ஸ்வாதி மலிவால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக, தலைநகர் டெல்லியில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்துக் குரல் எழுப்பி வருகிறார். பிப்ரவரி 14 அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து இவர் டெல்லியில் ‘ரேப் ரோக்கோ’ (பாலியல் வன்கொடுமையை நிறுத்துங்கள்) என்ற பேரணியை வெற்றிகரமாக நடத்தினார். ரேப் ரோக்கோ இயக்கம் தனக்கென ஓர் இணைய தளம் உருவாக்கி, பிரதமருக்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதியும் மக்களிடம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்பு உணர்வை உருவாக்கியும் வருகிறது. ரேப் ரோக்கோ இயக்கத்தின் கோரிக்கைகளில் மிக முக்கியமானவை... பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிக்கு ஆறு மாதங்களுக்குள் ஃபாஸ்ட் ட்ராக் கோர்ட் மூலம் மரண தண்டனைக்கு வழிவகை செய்வது, தடயவியல் துறையை மேம்படுத்துவது, காவல் துறையை நவீனப்படுத்துவது, மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிர்பயா நிதியைச் சரியான முறையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்குவது.

இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ள 9313181181 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க அழைக்கிறது இந்த வலைதளம். தன்னார்வலர்களாக இயக்கத்தில் இணைந்து தங்களால் இயன்ற உதவி களைச் செய்யுமாறும் வலியுறுத்துகிறார் ஸ்வாதி.  இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து தன் கோரிக்கைகளை வலியுறுத்திவரும் ஸ்வாதி, இயக்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் மார்ச் 8-ம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

சமீபத்தில் விழுப்புரத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையில் 14 வயதுச் சிறுமியின் பிறப்புறுப்பில் 12 தையல்கள் போடப்பட்டது தமிழகத்தையே உலுக்கி இருக்கும் நிலையில், தலைநகரில் தொடங்கியிருக்கும் இந்த நாடளாவிய முயற்சி வரவேற்கத்தக்கதே (www.raperoko.org).

நாமும் கொடுக்கலாமே ஒரு மிஸ்டு கால்..?


p94c_1520239579.jpg

‘மகளிர் ஸ்பெஷல்’ ரயில் நிலையம்!

ந்த ஆண்டுத் தொடக்கத்தில் மும்பை மாதுங்கா ரயில் நிலையம் இந்தியாவின் முதல் புறநகர் அனைத்து மகளிர் ரயில் நிலையமாக மாற்றப்பட்டு, லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக, வடமேற்கு ரயில்வேயைச் சேர்ந்த காந்திநகர் ரயில் நிலையமும் சமீபத்தில் ‘மகளிர் ஸ்பெஷல்’ ரயில் நிலையமாக்கப்பட்டது. புறநகர் அல்லாத மெயின் லைன் ரயில் நிலையங்களில் முழுக்க முழுக்கப் பெண்களே பணிபுரியும் முதல் அனைத்து மகளிர் ரயில் நிலையம் இது. தினமும் 50 ரயில்கள் காந்திநகரைக் கடக்கின்றன, 25 ரயில்கள் நின்று செல்கின்றன, ஏழாயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையத்தில் நிலைய மேலாளர், நிலைய அதிகாரி, டிக்கெட் பரிசோதகர், டிக்கெட் வழங்கும் ஊழியர்கள், பாயின்ட்ஸ் வுமன், ஆர்பிஎஃப் காவலர் என இங்கு பணிபுரியும் 28 பேரும் பெண்களே.

இங்கு பணியில் அமர்ந்த முதல் நாளே பரிசோதகர் களான அபூர்வாவும் வந்தனாவும் டிக்கெட் இன்றி பயணம் செய்த நபர்களிடமிருந்து அபராதம் வசூலித்தனர். இங்கு நிலைய அதிகாரியாகப் பணிபுரியும் ஏஞ்சலா ஸ்டெல்லா மிகுந்த கவனத்துடன் பணியாற்றுவதாகக் கூறுகிறார். தானியங்கி சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம், சிசிடிவி கேமராக்கள் எனப் பெண்களுக்கான அனைத்து வசதிகளும், பாதுகாப்பும் நிறைந்த ரயில் நிலையமாகப் பளிச்சிடுகிறது காந்திநகர் ரயில் நிலையம்.

எக்ஸ்பிரஸ் பெண்கள்!


p94d_1520239606.jpg

ஊழலை கேன்சருடன் ஒப்பிடாதீர்!

ஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்த செய்திகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் மேத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், `கடந்த 2011 முதல் நடைபெற்றுவந்த எங்கள் வங்கியின் ஊழல் கேன்சர் போன்றது' என்று கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிறுவனரும், பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணருமான டாக்டர் வி.சாந்தா.

கடிதத்தின் சாரம் இதுதான்... `ஊழல் என்பது ஒரு குற்றம். அதைச் செய்பவர்கள் வெட்கப்பட வேண்டும். கேன்சர் அப்படி அல்ல; ஆயிரக்கணக்கான கேன்சர் நோயாளிகள் ஆண்டுதோறும் எங்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேறுகிறார்கள். ஆரோக்கியமான, மகிழ்வான வாழ்க்கையை அதன்பின் வாழ்கிறார்கள். கேன்சர் என்பதைக் குற்றத்துடனோ, நம்பிக்கையின்மையுடனோ, அச்சம்கொள்ள வேண்டிய ஒன்றோடோ ஒப்பிட வேண்டாம். ஒருபோதும் புற்றுநோயை ஊழலுடன் ஒப்பிட வேண்டாம். உங்கள் வங்கியின் சட்டச் சிக்கல்களுடன் கேன்சர் எனும் வார்த்தையை முடிச்சுப்போட்டுப் பேச வேண்டாம். இந்த வேண்டுகோளை அனைவரிடமும் வைக்கிறேன். கேன்சர் எனும் வார்த்தையைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம். பிற புற்றுநோய் மருத்துவர்களும் என் கருத்துடன் உடன்படுவார்கள் என்று நம்புகிறேன்.’

- கடும் காட்டத்துடன் பகிரங்கமாகவே இந்தக் கடிதத்தை வெளியிட்டிருக்கிறார் டாக்டர் சாந்தா.

13 ஆயிரம் கோடி ரூபாய் முழுங்கினதை, ஆபீசர்ஸ் `கேன்சர் மாதிரி’னு எப்படி நோகாம சொல்ல முடியுது?!


p94e_1520239636.jpg

ஐந்தில் வளைந்த சாதனைப் பெண்!

ஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பெண்கள் வால்ட் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த அருணா ரெட்டி. இருபத்து இரண்டு வயதாகும் அருணா, தன் வெற்றிக்குக் காரணம், தனக்கு ஜிம்னாஸ்டிக்ஸை அறிமுகப்படுத்திய தன் தந்தை நாராயண ரெட்டிதான் என்கிறார். ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யக்கூடிய உடல்வாகும் பலமும் தன் மகளிடம் உள்ளதை சிறு வயதிலேயே அடையாளம் கண்டுகொண்ட நாராயண ரெட்டி, ஹைதராபாத்தின் லால்பகதூர் சாஸ்திரி அரங்கில் பயிற்சிக்குக்கொண்டு சேர்க்கும்போது மகளின் வயது ஐந்துதான். `என் வெற்றியை அவருக்கே சமர்ப்பிக்கிறேன். இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால், மகிழ்ச்சியில் கொண்டாடி இருப்பார்' என்று கூறியிருக்கிறார் அருணா.

ஏற்கெனவே கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்ற அருணா, தேர்ந்த கராத்தே கோச்சும்கூட.

2005-ம் ஆண்டு முதல், மூன்று தேசியப் போட்டிகளிலும் நிறைய பதக்கங்களை அள்ளிக் குவித்திருக்கிறார் அருணா. இனிவரும் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக விளையாடப் போவதாக அறிவித்துள்ள அருணாவின் அடுத்த இலக்கு 2018-ம் ஆண்டின் காமன்வெல்த் போட்டிகள்.

`ஜிம்னாஸ்டிக்ஸைப் பொறுத்தவரை எவ்வளவு பயிற்சி இருந்தாலும், 23-24 வயதைக் கடந்துவிட்டால், உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழந்துவிடுகிறது. அதனால்தான் விரைவாகவே பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்' என்கிறார் அருணா.

ஆல் தி பெஸ்ட் அருணா!  

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பன்றி அளவில் இருந்த யானைகளை பிரமாண்டமாக்கிய பரிணாம வளர்ச்சி... எப்படி நடந்தது?

 
 

யானைப்படை இருந்தால் யாரையும் வெல்லலாம். ஆனால், இன்றைய சூழலில் அத்தகைய யானைகளின் இறப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்திய நிலப்பரப்பில் அதன் எண்ணிக்கை குறைவு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வேதனைகளை ஒதுக்கிவிட்டு அவற்றின் பாதுகாப்பிற்கான தேவையைக் கவனிக்க வேண்டிய அவசியத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு பிரச்னையும் அதன் வரலாறு அறியப்படாதவரை அதைப் பற்றியதான புரிதல் முழுமை அடைவதில்லை. அவ்வகையில் யானைகள் தோன்றிய காலம், அதன் பரிணாம வளர்ச்சி பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

யானைகள்

 

இந்தியாவில் தற்போது வாழக்கூடிய ஆசிய யானைகளின் மூதாதையர்களாக மோரித்தீரியம் (Moeritherium) என்ற விலங்கு கூறப்படுகிறது. இது பன்றி உருவிலும், அதே உயரத்திலும் வாழ்ந்தவை. ஈயோசீன் (Eocene) காலத்திற்கு முன்னதாகத் தோன்றிய இவ்வுயிரினம் அக்காலத்தில்தான் பரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கி ஆலிகோசீன் (Oligocene)காலத்தில் அளவில் பெரிய யானை இனமாக உருவெடுத்தன. இந்த மோரித்தீரியம் என்ற இனத்திலிருந்து பல இனங்கள் பரிணாம வளர்ச்சியடைந்து, பின் வந்த ஐந்து பெரிய உயிரழிவுகளில் (Major Extinctions) அழிந்தும் போயிருக்கிறது.

கடைசியாக அழிந்த பேரானை இனமான மம்மூத் (Mammoth) உட்பட, இன்று இருக்கும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானை இனங்களுக்கும் இதுதான் மூதாதையர் என்று சொல்லப்படுகிறது. இந்த மூன்று இனங்களும் பரிணாம வளர்ச்சியடைந்தது ஆப்பிரிக்காவில். அங்கே தோன்றிய யானைகள் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசிய கண்டத்திற்கு பரவியதற்கு நிலவழித் தொடர்புக்கான அடையாளங்கள் இன்றளவும் இருக்கின்றன. நிலவழித் தொடர்பு அறுந்துபோன பகுதிகள் எதிலேனும் யானைகளின் பரவல் இருக்கிறதா என்றால், இருக்கிறது. போர்னியோ (Borneo) தீவுகளில் யானைகள் இருக்கின்றன. யானைகள் நன்றாக நீந்தக்கூடிய உயிரினம். பிறந்தவுடன் நீரில், கடலில் நன்றாக நீந்தக்கூடியது யானை. தும்பிக்கை உட்பட உடற்பகுதி அனைத்தையும் பயன்படுத்தி மிக அருமையாக நீந்தும். இதற்குக் காரணமாக மோரித்தீரியம் ஆதியில் நீர்வாழ் உயிரினமாக வாழ்ந்திருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. யானைகளின் உடலில் விதைப்பை கிடையாது. அது அதன் வயிற்றுக்குள் இருக்கும். கடல்வாழ் உயிரினங்களுக்கும் அப்படித்தான். கடலில் தட்பவெப்பநிலை மாற்றம் அதிகம். நீரோட்டம் வெதுவெதுப்பாக இருக்கும், அருகிலேயே குளிர்நீரோட்டம் இருக்கும். இவ்வாறு வெப்பநிலையில் உடனடி மாறுதல் ஏற்படும்போது விதைப்பை வெளியே இருந்தால் உயிரணு உற்பத்தி பாதிக்கப்படும். விதைப்பையின் முக்கியமான வேலையே உயிரணு உற்பத்தி சீராக இருப்பதற்கு ஏற்ப முப்பது டிகிரியிலேயே வெப்பநிலையை வைப்பது. அதனால்தான் கடல்வாழ் உயிரிகளுக்கு விதைப்பை வயிற்றினுள் உள்ளது. இதனால் யானைகள் நீர்வாழ் உயிரினமாக இருந்திருக்குமென்று கருதப்படுகிறது.

மம்மூத்

மம்மூத் என்ற பேரானை சமீபத்தில் அழிந்துபோன பேருயிர். யானைகளைப் போல் மோரித்தீரியத்திலிருந்து பிரிந்து வந்தது. அவை அழிந்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உண்டு. ஒன்று அதிகளவு வேட்டை, அது வாழ்ந்த பகுதிகளில் மனிதர்களின் நாகரிக வளர்ச்சி அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அதை உணவாகப் பார்த்தார்கள். இன்னொரு காரணம், அவற்றை அழிப்பதை வீரத்திற்கான அடையாளமாகக் கருதி வேகமாக அழித்தார்கள்.

காலப்போக்கில் யானைகளைப் பிடித்து போர் மற்றும் மற்ற பயன்பாடுகளுக்கு மாற்றுவது என நிகழ்ந்துள்ளது. அவற்றில் தந்தம் உள்ள யானைகளுக்கு முக்கியத்துவம் அதிகம். வெள்ளைத் தங்கம் என்று குறிப்பிடக்கூடிய அளவிற்குத் தந்தத்திற்கு முக்கியத்துவம் இருந்திருக்கிறது. வெட்பாலை எனப்படும் ஐவரி (Ivory) என்ற பொருள் தந்தத்தில் அதிகமாக இருக்கிறது. அதனால் யானை அதிகமாக வேட்டையாடப்படுகிறது. அனைத்து யானைகளுக்கும் தந்தம் இருக்கிறதா என்றால், இல்லை. ஆசியாவில் பெண் யானைகளுக்குத் தந்தம் இல்லை. ஆப்பிரிக்காவில் ஆண், பெண் இரண்டு பாலினங்களுக்கும் தந்தம் உண்டு. தந்தம் இல்லாத ஆண் யானைகளும் உண்டு. அவை, மோழைகள் என்றழைக்கப்படுகின்றன. சிலர் இம்மோழைகளைப் பற்றி தவறான எண்ணம் கொண்டுள்ளார்கள். இவை ஆண்மையற்றவையாகக் கருதப்படுகின்றன. ஆனால், மோழைகளும் ஆண்மைத்தன்மை மிகுந்தவைதான். அழகுப் பொருட்கள், கலைப் பொருட்கள் என்று பல தேவைகளுக்குத் தந்தம் தேடி யானைகள் வேட்டையாடப் படுகின்றன. ஆகையால் சூழ்நிலைக்கும் தனது பாதுகாப்பிற்கும் ஏற்ப தந்தமின்றி பிறப்பதாகக் கருதப்படுகிறது. அத்தோடு மோழைகளோடு இனப்பெருக்கம் செய்ய பெண் யானைகளுக்கு வாய்ப்புகள் அதிகம் அமைகிறது. இதை அவற்றின் பாதுகாப்பிற்கு ஆரோக்கியமானதாகவே கருதுகின்றன.

பரிணாம வளர்ச்சி

Courtesy: Naturenomics

தலைமை உயிரினங்கள், குடையுயிரிகள், மறைதிறவுச் சிற்றினங்கள் என்று கானுயிர்களை மூன்று வகைகளில் குறிப்பிடலாம். காட்டின் வளமைக்கு இவை அனைத்துமே முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால், ஓர் உயிரைத் தேர்வு செய்து பாதுகாத்தால் அதைத் தொடர்ந்து பல உயிர்கள் நமது முயற்சி இல்லாமலே காக்கப்படும். அப்படிப்பட்ட உயிரினங்களை குடையுயிரிகள் எனலாம். யானையும் ஒரு குடையுயிரிதான். யானைகள் செல்லும் வழிகளில் நீர்வழிகள் தோன்றும், கானகம் செழிக்கும். பல்லுயிர்ச்சூழல் பெருகும். 

ஆப்பிரிக்கக் காடுகளில் ஆண்டொன்றுக்கு கிட்டதட்ட 30,000 யானைகள் கொல்லப்படுகின்றன. இந்தியாவில் தற்போது மொத்தம் இருப்பதே 50,000 யானைகள்தான். வேட்டை மட்டுமின்றி காடுகள் துண்டாடப்படுவதும் இவற்றின் அழிவுக்கு முக்கியக் காரணம். காடுகள் துண்டாடப்படுவது நம் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடப்பதால் அங்குள்ள உயிர்கள் வெளியே செல்ல இயலாது நெருங்கிய சொந்தங்களோடு இனப்பெருக்கம் செய்வதால் மரபணு வேறுபாடு (Genetic Diversity) குறைந்து நோய் எதிர்ப்புத் திறனை இழக்கின்றன. இதனால் கொள்ளை நோய், தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டும் யானைகள் இறக்கின்றன. இத்தகைய பரிதாபகரமான நிலை கிர் காட்டில் வாழும் சிங்கங்களுக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

யானை

 

பல்லுயிர்ச் சூழல் பெருகி காடுகள் வளமை பெற்று இயற்கை செழிப்பதற்கு பேருயிர் பாதுகாப்பு அவசியம். அந்த வகையில் ஆதியிலிருந்து வாழ்ந்து வரும் யானைகள் நம் காலத்தில் அழிந்துவிட்டது, அதுவும் நம்மால் அழிந்துவிட்டது என்ற அவப்பெயர் மனித இனத்தைச் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை. இயற்கை அன்னையின் படைப்பில் இலைகள் தொடங்கி இன்று அவளையே அழித்துக்கொண்டிருக்கும் மனிதன் வரை அனைத்துமே அதிசயம்தாம். அனுதினமும் அதிசயம் புரியும் அவளை மண்டியிட்டு வணங்குவதை விட்டுவிட்டு மடியினைச் சுரண்டும் நாம் நிச்சயம் மூடர்கள்தாம். கார்பனற்ற காற்று வேண்டுமெனில் காடுகள் காக்கப்பட வேண்டும். காடுகளைக் காக்க கானுயிர்கள் கவனிக்கப்பட வேண்டும்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: மகளிர் தினம் - 'என்றும் போற்றுவோம்'

 

 
2png

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

veera

   

பெண்களுக்குள் மறைந்து கிடக்கும் திறமையை வெளிக் கொண்டுவர உதவி செய்து உற்சாகப் படுத்த வேண்டும். அதே போல் ஒரு பெண் தன்னிடம் உள்ள திறமையை தயக்கம் காட்டாமல் தைரியமாக நிரூபிக்க வேண்டும்.

தோழன் & அராத்து

‏அனிதா;ஆராயி;லாவன்யா

இன்னும் பல...

தமிழகத்தில் சாதிக்கொடுமை, பாலியல்கொடுமை என தலைவிரித்தாடும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களையாமல் பெண்கள் தினம் கொண்டாடுவதற்கு தமிழகத்துக்கு தகுதி இல்லை..

Veereswaran

‏காவலர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணிப் பெண் சாவு! இனிய இந்திய பெண்கள் தின வாழ்த்துக்கள்!

செந்திலரசன்

‏பெண்களுக்கு நகையோ ! அழகான உடையோ !! முக்கியம் இல்லை !!! அறிவும் , சுயமரியாதையும், தான் முக்கியம் #பெரியார்

DXwAFRHUMAIZGAjpgejpg
 

அமீர் 

‏தங்கம்போல் என்றும் மங்காமல்

தங்கள் வாழ்வில் மின்னும் மங்கையர்களுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள்

Sangeetha Madhukumar

‏#WomensDay நன்றி... மகளிர் தின வாழ்த்துகள்... கடவுளின் மிகச் சிறந்த படைப்பு பெண்... அவள் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்கள் ஏராளம்... அவளை கெண்டாட இவ்வொரு நாள் போதாது.... இன்றல்ல, என்றும் மகளிர் தினம் தான்... வாழ்த்துகள்...

2887182220893069277762227847032554405771

sadam th€®i king 05

‏ #WomensDay அன்பு அன்னையாக, அருமை மனைவியாக ஆனந்தம் தரும் மகளாக, உறுதுணையான சகோதரியாக,உற்றதோழியாக என்றும் நம்  வாழ்க்கை சிறப்பாக இருக்க உழைப்பை, உணர்வுகளை, பொன்பொருளை, இன்பத்தை தியாகத்தை செய்துவரும் பெண்மையை வணங்கி வாழ்த்துவோம். அவர்களதுஉயர்வுக்கு, உரிமைக்கு துணைசெய்வோம். உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.

குழந்தை அருண்

‏எங்கம்மாக்குலாம் மகளிர் தின வாழ்த்துக்கள் சொன்னா, டக்குனு கடைக்கு போயிட்டு வானு கட்டைப் பைய குடுத்து அனுப்பிருவாங்க.

உண்மையான இறைவி.

yuijpg

குழந்தை அருண்

தையல் மிஷினில் குடும்பத்தின் சந்தோஷத்தையே தைக்கும் வசந்தி அக்கா, டீக்கடையில் முகம் கொள்ளாத புன்னகையுடன் வரவேற்கும் சுமதி அக்கா, குடிகார கணவனிடம் இரவு சண்டையிட்டு, காலையில் புன்னகை மாறாமல் வேலைக்கு கிளம்பும் ரேவதி போன்றோர் இருக்கும் வரையில் இறைவிகள் மதிப்பு குறையாது

Suresh Ponraj

‏விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண்....

சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்!

oplpng
 

prvivek

இன்று மட்டும் அல்ல என்றும் "பெண்மையை போற்றுவோம்"

சுரேந்தர் மணிவண்ணன்

எங்கெங்கு காணீணும் சக்தியடா ... மகளிர் தின  வாழ்த்துகள்

சிந்து

சுதந்திரமாக வாழு, சுதந்திரமாக வாழவிடு..

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

வலை­பந்­தாட்டம், கால்­பந்­தாட்­டத்தில் நட்­சத்­திர வீராங்­க­னை­யாக திகழ்­வ­துடன் மருத்­து­வ­ரா­கவும் பணி­யாற்றும் பெண்

பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் வலைப்­பந்­தாட்டம், கால்­பந்­தாட்டம் ஆகிய விளை­யாட்­டு­களில் சிறந்த வீராங்­க­னை­யாகத் திகழ்­வ­துடன் மருத்­துவப் பட்டம் பெற்­ற­வ­ரா­கவும் விளங்­கு­கிறார்.

football-2.jpg
ஒரு பெண்ணால், ஏக காலத்தில் பல்­வேறு துறை­க­ளிலும் ஈடு­பட முடியும் என்­ப­தற்கு கரோலின் ஓ ஹன்லோன் எனும் இப்பெண் ஒரு சிறந்த உதா­ர­ண­மாகத் திகழ்­கிறார்.

அயர்­லாந்தில் விளை­யா­டப்­படும் கேலிக் புட்போல் எனும் கால்­பந்­தாட்­டத்தில் கரோலின் ஓஹன்லோன் ஈடு­ப­டு­கிறார். 15 பேர் கொண்ட அணி­க­ளுக்­கி­டை­யி­லான விளை­யாட்டு இது.

football.jpg
வட அயர்­லாந்தின் கேலிக் கால்­பந்­தாட்ட அணிக்­காக 15 வரு­டங்­களாக கரோலின் ஓ ஹன்லோன் விளை­யாடி வரு­கிறார். அத்­துடன் வட அயர்­லாந்தின் ஆர்மாக் கேலிக் கால்­பந்­தாட்ட கழ­கத்­திற்­கா­கவும் இவர் விளை­யா­டு­கிறார்.

இவ்­வாறு கால்­பந்­தாட்­டத்தில் பங்­கு­பற்றும் நிலை­யி­லேயே வலைப்­பந்­தாட்­டத்­திலும் பிர­பல வீராங்­க­னை­களில் ஒரு­வ­ராக அவர் திகழ்­கிறார்.

Caroline-O-Hanlon.jpg
இங்­கி­லாந்தின் மன்­செஸ்டர் நக­ரி­லுள்ள மன்­செஸ்டர் தண்டர் எனும் வலைப்­பந்­தாட்ட அணியின் சிரேஷ்ட வீராங்­க­னை­களில் ஒருவர் கரோலின். மன்­செஸ்டர் தண்டர் கழ­க­மா­னது பிரிட்­டனின் முதல்­நிலை வலைப்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டி­யான நெட்போல் சுப்பர் லீக் போட்­டி­களில் முன்­னி­லை­யி­லுள்ள 10 கழ­கங்­களில் ஒன்­றாக விளங்­கு­கி­றது.

அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­லாந்து, தென் ஆபி­ரிக்கா, ஜெமெய்கா, கனடா உட்­பட வலைப்­பந்­தாட்­டத்தில் பிர­சித்தி பெற்ற நாடு­களைச் சேர்ந்த வீராங்­க­னை­களும் நெட்போல் சுப்பர் லீக் கழ­கங்­களில் இடம்­பெ­று­கின்­றனர். இவர்­க­ளுக்கு ஈடு­கொ­டுத்து போட்­டி­யிடும் கரோலின், வலைப்­பந்­தாட்­டத்தில் பல்­வேறு விரு­து­களை வென்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

football6.jpg
வலைப்­பந்­தாட்டப் போட்­டி­க­ளுக்­காக பிரிட்­ட­னுக்கும் கேலிக் கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளுக்­காக அயர்­லாந்­துக்கும் அடிக்­கடி பயணம் செய்து வரு­கிறார் கரோலின் ஓ ஹன்லோன்.

இப்­போட்­டி­க­ளுக்கு மத்­தியில் அவர் மருத்­து­வ­ரா­கவும் பணி யாற்றுகிறார். அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவின் வலைபந்தாட்டப் போட்டிகளில் வட அயர்லாந்து அணி சார்பாக கரோலின் ஓ ஹன்லோன் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Football7.jpg

http://metronews.lk

  • தொடங்கியவர்
‘நல்லதை நிராகரிக்க வேண்டாம்’
 

image_fb979a787e.jpgமனம் ஒரு ஜடமான உற்பத்தி வஸ்து அல்ல; இது உணர்வு சார்ந்த அற்புதக் கருவி. இது தரமான தகவல்களையும் சொல்லும். மதியை மயக்கும் விடயங்களையும் ஒளிந்திருந்து வெளிப்படுத்தும்.

எனினும், இதன் ஆதிக்கத்துக்குள் அசராத மாந்தர்களே இல்லை. இது தெளிவு ஊட்டுகின்றதா, அல்லது நெஞ்சத்தைத் தடவித் தாலாட்டுகின்றதா? அல்லது இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளிவிடுகின்றதா எனப் பலர் தவிப்பதும் உண்டு.

நெஞ்சத்தில் தூய்மையை ஏற்றினால், மனதுக்குள் மகா வல்லமையை நீங்கள் உணர்வீர்கள்.

உனது எண்ணங்கள் சரியில்லை. மனதை விஷம் போல் வைத்திருக்கின்றாய் எனச் சிலர் தனக்குப் பிடிக்காதவர்களைச் சொல்வதுண்டு.

சாதாரண தவறு புரிபவர்கள் கூட, மேற்சொன்ன வார்த்தைகளைக் கொட்டுவது நகைப்புக்குரியதே.

கண்ணுக்கும் அறிவுக்கும் புலனாகாத நெஞ்சத்து வெளிப்பாடுகள், நல்லதைச் சொன்னால் நிராகரிக்க வேண்டாம்.   

 

  • தொடங்கியவர்

பார்பி பொம்மை விற்பனைக்கு வந்த நாள்: மார்ச் 9- 1959

 

பார்பி பொம்மைகள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 1959-வது வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஒரு நவ நாகரிக பொம்மை. பில்ட் லில்லி என்னும் ஒரு ஜெர்மன் பொம்மையை இதற்கான அடிப்படை ஊக்கமாகக் கொண்டு இதை உருவாக்கியதாக

 
 
 
 
பார்பி பொம்மை விற்பனைக்கு வந்த நாள்: மார்ச் 9- 1959
 
பார்பி பொம்மைகள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 1959-வது வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஒரு நவ நாகரிக பொம்மை. பில்ட் லில்லி என்னும் ஒரு ஜெர்மன் பொம்மையை இதற்கான அடிப்படை ஊக்கமாகக் கொண்டு இதை உருவாக்கியதாக அமெரிக்க தொழிலதிபரான ருத் ஹேண்ட்லர் (1916- 2002) என்னும் பெண்மணி பெருமைப்படுத்தப்படுகிறார்.

பொம்மைகளுக்கான சந்தையில் ஐம்பது வருடங்களாக பார்பி முக்கியமான ஒரு பாகமாக இருந்து வருகிறது. மேலும் அந்தப் பொம்மை மற்றும் அதன் வாழ்க்கையமைப்பு முறை ஆகியவவை பல பரிகாசம் மற்றும் வழக்குகளுக்கும் ஆளாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக பார்பி ப்ராட்ஜ் வகைப் பொம்மைகளிடமிருந்து அதிகரித்து வரும் போட்டியையும் சந்தித்து வருகிறது

 

 

சனியின் துணைக்கோளில் நீர் கண்டுபிடிப்பு: மார்ச் 9- 2006

 

பூமியைத் தவிர மற்ற கோள்களில் மனிதன் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்றான நீர் இருக்கிறதா என எல்லா நாடுகளும் ஆய்வு நடத்தி வருகின்றன. 2006-ம் ஆண்டு மார்ச் 9-ந்தேதி சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டது.

 
சனியின் துணைக்கோளில் நீர் கண்டுபிடிப்பு: மார்ச் 9- 2006
 
பூமியைத் தவிர மற்ற கோள்களில் மனிதன் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்றான நீர் இருக்கிறதா என எல்லா நாடுகளும் ஆய்வு நடத்தி வருகின்றன. 2006-ம் ஆண்டு மார்ச் 9-ந்தேதி சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1847 - ஐக்கிய அமெரிக்காவின் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்காட் தலைமையில் மெக்சிகோவைத் தாக்கினர். * 1919- எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது. * 1923 - விளாடிமிர் லெனினுக்கு மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது. * 1945 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

நாயா உழைச்சாலும் ஓடா தேய்ஞ்சாலும் என்ன கிடைக்கும்? - யதார்த்தம் சொல்லும் கதை!

 
 

கதை

ம் எல்லோருக்குமே தடைகள் இருக்கும்தான். அந்தத் தடைகளில் ஏதாவதொன்றைத் தாண்டிப் போகும்போது நமக்குக் கிடைப்பதுதான் திருப்தி’ - பிரேசில் கால்பந்தாட்ட வீராங்கனை மார்த்தா (Marta) தன் அனுபவத்திலிருந்து சொன்ன பொன்மொழி இது. தடைகள் கிடக்கட்டும்... தங்கள் ஊழியர்கள் பார்க்கும் வேலையில் திருப்திப்படாத எஜமானர்கள்தான் இன்றைக்கு ஏராளம். பல வருடங்களாக உண்மையாக, நேர்மையாக உழைக்கும் தொழிலாளிகளை அடையாளம் கண்டுகொண்டு அவர்களுக்கான ஊதியத்தையோ, ஊக்கத்தையோ கொடுக்காதவர்களும் அவர்களில் அடக்கம். `என்னப்பா... கடுமையா உழைக்கிறோம்... ஓரமா கிடக்கிறோம்...’ என முணுமுணுக்கிற தொழிலாளியின் குரல், ஒருபோதும் எஜமானரின் காதுக்குப் போய்ச் சேர்வதே இல்லை. அப்படியே போய்ச் சேர்ந்தாலும், அந்தக் குரலில் ஒரு குற்றம் கண்டுபிடிப்பார் அவர். அல்லது கண்டுபிடிக்கக் கற்றுக் கொடுப்பார் ஒருவர். தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையே இருக்கவேண்டிய புரிதலைச் சுட்டிக்காட்டும் கதை இது!

 

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் இருக்கும் அட்லாண்டாவில் நடந்த ஒரு கதை இது. அவர் ஒரு கசாப்புக் கடைக்காரர். கடையை அடைக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. கடைக்குள் ஒரு நாய் நுழைவதைப் பார்த்தார். உடனே,``ச்சூ... சூ... ஓடு...’’ என அதை விரட்டியடித்தார். பின்வாங்கி ஓடிய நாய், சற்று நேரத்தில் மறுபடியும் கடைக்குள் நுழைந்தது. `என்னடா இது... விரட்டியடிச்சும் திரும்ப உள்ளே வருதே...’ என்ற யோசனையில் கசாப்புக் கடைக்காரர் நாயின் அருகே போனார். அப்போதுதான் அதை கவனித்தார். நாயின் வாயில் ஒரு பேப்பர் சொருகியிருந்தது. அதை எடுத்துப் பார்த்தார் கசாப்புக் கடைக்காரர். அதில், `எனக்குக் கொஞ்சம் ஆட்டிறைச்சி வேண்டும். அதற்கான பணமும் இதிலிருக்கிறது’ என்று எழுதியிருந்தது.

நாய்

அதில் குறிப்பிடிருந்தபடியே பணமும் இருந்தது. கடைக்காரர், அந்தப் பணத்துக்குள்ள ஆட்டு இறைச்சியை எடுத்தார். பேக் செய்தார். நாயிடம் கொடுத்தார். நாய் அதைக் கவ்விக்கொண்டு தன் வழியே போனது. கடைக்காரருக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். ஒரு நாய், தன் கடையில் வந்து இப்படி இறைச்சியை வாங்கிப் போவது அதுவே முதல்முறை. அவர், அது எங்கே செல்கிறது என்று பார்க்க விரும்பினார். அவசர அவசரமாகக் கடையை அடைத்தார். நாய் சென்ற திசையில் நடந்தார்.

அந்த நாய், ஒரு ரயில்வே லெவல் கிராஸிங்கில் நின்றுகொண்டிருந்தது. சரியாக ரயில் கடந்து, கேட் திறக்கப்பட்டதும் அப்பால் நகர்ந்தது. `சே... என்ன ஒரு புத்திசாலித்தனம்..!’ வியந்துபோனார் கசாப்புக் கடைக்காரர்.

நாய் மேலே நடந்து போனது. அவர் அதன் பின்னாலேயே போனார். ஒரு பஸ் ஸ்டாப்பில் நாய் நின்றது. அங்கே எழுதியிருக்கும் டைம் டேபிளைப் பார்த்தது. ஓர் இருக்கையில் அமர்ந்து காத்திருந்தது. அவரும் அதன் கூடவே காத்திருந்தார்.

ஒரு பேருந்து வந்து நின்றது. நாய், ஓடிப் போய் அந்தப் பேருந்தின் எண்ணைப் பார்த்தது. திரும்பி வந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டது. சிறிது நேரம் கழித்து, இன்னொரு பேருந்து வந்தது. நாய், வேகமாக ஓடிப் போய் அந்தப் பேருந்தின் எண்ணைப் பார்த்தது. உடனே, தாவி ஏறி பஸ்ஸில் நுழைந்து, ஓர் இருக்கையில் அமர்ந்தது. கசாப்புக் கடைக்காரரும் அந்த பஸ்ஸில் ஏறிக்கொண்டார். கடைசி நிறுத்தம் வரை டிக்கெட் எடுத்துக்கொண்டார்.

வழியில், ஓரிடத்தில் அந்த நாய் இறங்கியது. அவர் பின்தொடர்ந்தார். அது ஒரு சாலையில் நடந்தது. ஒரு வீட்டுக்கு முன்னே போய் நின்றது. அந்த வீட்டுக் கதவைப் போய்ப் பிராண்டியது. குரைத்தது. பிறகு, வெகு வேகமாக பின்னோக்கிப் போய் கதவின் மேல் பாய்ந்து திறக்க முயன்றது. திரும்பத் திரும்ப பின்னோக்கிப் போய், கதவிலும் ஜன்னலிலும் போய் மோதி மோதி, கதவைத் திறக்கப் பார்த்தது.

இதையெல்லாம் அந்தக் கசாப்புக் கடைக்காரர் பார்த்துக்கொண்டேயிருந்தார். சிறிது நேரத்தில் கதவு திறந்தது. ஆஜானுபாகுவான ஓர் ஆள் வெளியே வந்தார். தன் கையில் வைத்திருந்த பிரம்பால் நாயை அடித்தார். அடி அடியென வெளுத்து வாங்கினார்.

நாய்

அவ்வளவுதான். கசாப்புக் கடைக்காரர் பதறிப் போனார். ``என்னங்க... இந்த நாய் எவ்வளவு புத்திசாலி தெரியுமா... இதைப் போய் அடிக்கிறீங்களே...’’ என்று தடுத்தார்.

``இந்த நாயைப் போய் புத்திசாலிங்கிறீங்களே... இந்த நாய் வீட்டுச் சாவியை மறந்து போயிடுது. இது ரெண்டாவது தடவை... நான் வந்து கதவைத் திறக்கணுமா?’’ என்றார் அவர்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

ண்டோனியோ கிரீஸ்மேன்... கால்பந்து உலகின் புதிய சென்சேஷன். பிரெஞ்சு கால்பந்து வீரரான கிரீஸ்மேன் அட்லெட்டிகோ கிளப் அணிக்காக விளையாடிவருகிறார். சமீபத்தில் லா-லிகா தொடரில் ஒரே போட்டியில் 4 கோல்களை அடுத்தடுத்து அடித்ததில் ரசிகர்கள் எண்ணிக்கை ஏராளமாக ஏறியிருக்கிறது! சீக்கிரமே ஆண்டோனியோ ஸ்பெயினின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட கிளப்பான பார்சிலோனாவுக்காகவும் ஆடப்போகிறார் என்பதில் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறது ஆண்டோ ஆர்மி. வர்லாம் வர்லாம்வா!

p58a_1520329433.jpg


மீண்டும் நடிக்கவிருக்கிறார் ஐஸ்! குழந்தைபெற்றுக்கொண்டதில் அதிகரித்த உடல் எடையை ஸ்பெஷல் ட்ரெய்னர் உதவியுடன் குறைத்துக்கொண்டிருக்கிறார். அடுத்து இந்தியில் தயாராகவிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் ரமணா ரீமேக்கில் ஐஸ்வர்யாராய்தான் ஹீரோயினாம்! வானவில்லே வானவில்லே...

p58b_1520329453.jpg


குவான்டின் டாரன்டினோவின் அடுத்த படத்தில் பிராட் பிட்டும் லியோனார்டோ டி காப்ரியோவும் இரட்டை ஹீரோக்களாக நடிக்கிறார்கள். `சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா’ என சமூகவலைதளங்களில் இருவருடைய ரசிகர்களும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். கூடவே தல-தளபதி ரசிகர்களைப்போலவே இருவரில் யாருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்கிற சர்ச்சைகளையும் துவக்கியிருக்கிறார்கள்! வெயிட்டிங்ங்ங்

p58c_1520329473.jpg


ல வீட்டில் ஏற்கெனவே ஒரு பாட்மின்டன் சாம்பியன் இருக்கிறார். இப்போது தளபதி வீட்டிலும் ஒருவர் உருவாகியிருக்கிறார். விஜய்யின் மகள் திவ்யா சாஷா தீவிரமாக பாட்மின்டன் விளையாடிவருகிறார். சென்னையில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் படித்துவரும் சாஷா பள்ளி அளவிலான போட்டிகளில் விளையாடி வெற்றிபெற்றுவருகிறார். அதேபள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் விஜய்யின் மகன் சஞ்சய் ஆய்வுப்பணிகளில் ஆர்வமாக இருக்கிறார், அதற்கெனப் பள்ளியிலிருந்து விருதும் வாங்கியிருக்கிறார்!  மாஸு-கிளாஸு

p58d_1520329492.jpg


பாலாவின் `வர்மா’ பட ஷூட்டிங் தொடங்கிவிட்டது. விக்ரமின் மகன் `துருவ்’ ஹீரோவாக நடிக்கும் இந்தப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீ-மேக். துருவ்வுக்கு ஜோடியாக நடிப்பதும் இன்னொரு கலைவாரிசுதான். கெளதமியின் மகள் சுப்புலட்சுமி இந்தப்படத்தின் மூலம் ஹீரோயினாகத் தமிழில் அறிமுகமாகிறார். அடி தூளே!

p58e_1520329514.jpg


வெப்சீரிஸ்தான் இப்போதைய ட்ரெண்ட். மாதவன், ராம்கோபால் வர்மா மாதிரியான பெரிய நட்சத்திரங்கள்கூட அந்தப்பக்கம் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழிலும் பரவும் இந்த வெப்சீரிஸ் மாரத்தானில் இணையவிருக்கிறார் பாபி சிம்ஹா. `அருவி’ தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தயாரிக்கவிருக்கும் வெப்சீரிஸில் அவர்தான் நாயகன். புதுரூட்டுலதான்...

p58f_1520329527.jpg


தீபிகா படுகோனுக்குப் பறவைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அதனாலேயே தீபிகாவைக் கவர அவரின் நண்பர்களெல்லாம் விதவிதமான பறவைகளைப் பரிசளிப்பார்கள். அந்தப் பறவைகளையெல்லாம்  தனது பெங்களூரு வசந்த் நகரிலுள்ள வீட்டில் பத்திரமாக வளர்த்துவருகிறார். வீட்டுக்குள் வேடந்தாங்கல்!


கேரளாவில் வெளியாகும் கிரஹலட்சுமி மகளிர் பத்திரிகைதான் சென்ற வாரத்தில் தேசிய வைரல். அட்டைப்படத்தில் கிலு ஜோசப் என்கிற மலையாள எழுத்தாளர் குழந்தைக்குப் பால் கொடுப்பது போன்ற போஸில் இருக்க, பரபரவெனப் பற்றிக்கொண்டது இணையம்.

தாய்ப்பால் கொடுப்பதும் சகஜமான விஷயம்தான் என்கிற கருத்தை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த அட்டைப்படத்தை வெளியிட்டிருந்தது அந்தப் பத்திரிகை. கவர் போட்டோவுக்கு ஒருபக்கம் பாராட்டுகள் கிடைத்தாலும், இன்னொருபக்கம் எதிர்ப்பும் சில வழக்குகளும்கூட குவியத் தொடங்கியிருக்கிறது. வைரலோ வைரல்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 
 

சைபர் ஸ்பைடர்

 

twitter.com/Akku_Twitz

கியாரே.....? கியாரே.....?

ஆமா தலீவா செம்ம கியாரு... இந்த மாசமே வெயில் இப்டி அடிக்குது
இன்னும் ஏப்ரல், மே-ல என்ன ஆகப்போதோ!

p112f_1520417428.jpg

twitter.com/raajaacs

குடிப்பதற்கு முன் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

குடித்தபின் போதை பேசிக்கொண்டிருந்தது.

p112a_1520417410.jpg

twitter.com/mohanramko

‘சுத்துறது  தப்பு’ன்னு  அப்பா, அம்மா சொல்லும் போது  புரியல. இப்போ டவுன்லோடு பண்ணும் போதுதான் புரியுது!

twitter.com/deebanece

ஒழுங்கா ஒருநாள் சார்ஜ் நிக்க வக்கில்ல... ஓயாம ஆன்ட்ராய்டு அப்டேஷன் கேட்குதோ!

p112g_1520417455.jpg

twitter.com/Aruns212

வேங்கை மகன் ஒத்தையில் நிக்கேன் வாங்கலே!

p112h_1520417394.jpg

twitter.com/_pcshubha

வீட்டில் விருந்தினரை `வாங்க’ என்றழைக்க முடியாத உலகம் இணையத்தில் புதிய அக்கவுன்ட்டுக்கு `வெல்கம்’ சொல்லிக் கொண்டிருக்கிறது.

twitter.com/sabaJoyRider

ஒவ்வொரு கேப்/கார் டிரைவருக்குள்ளேயும் சில லட்சங்களை இழந்த தொழிலதிபர் இருக்கிறார்.

twitter.com/Kozhiyaar

மூளை என்றவுடன் ‘அறிவு’ என்பவரைவிட, ‘வறுவல்’ என்பவரே இங்கு அதிகம்!

p112b_1520417492.jpg

twitter.com/Aruns212

இனி திமுகவுக்கும், இலட்சிய திமுகவுக்குமே போட்டி - டி.ராஜேந்தர்.

சினிமால மகர் எப்படியோ, அரசியல்ல அவங்க அப்பார்!

p112j_1520417477.jpg

twitter.com/Aruns212

மாடர்ன் ஆர்ட் மட்டுமல்ல, மகனின் ஆர்ட்டும் பல சமயம் புரிவதில்லை.

twitter.com Kozhiyaar

பக்கத்து  டேபிள்ல ஒருத்தர் ஆர்டர் பண்ணுகிற எல்லாத்துக்கும் எப்படி செய்வாங்கன்னு செய்முறை விளக்கம் கேட்டுட்டிருக்கார். பாவம் வீட்டில நம்மளவிட ரொம்ப பாதிக்கப்பட்டவர் போல!

twitter.com/thoatta

ரெண்டு MLAக்களை வச்சு பிஜேபி ஆட்சியைக் கைப்பற்றப் போகுதாம்.போங்கய்யா, MLAக்களே இல்லாம  எங்க  டாக்டரய்யா தைலாபுரத்துல குந்திக்குனே பட்ஜெட் போடுவாரு, சட்டசபை நடத்துவாரு, சட்டம்கூடத் தீட்டுவாரு!

yugarajesh2

டி.ஆரால் அவுங்க குடும்பத் துக்கு ஒரு நன்மை  என்னென்னா எந்தச் சொந்தக்காரனும் வீட்டுப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க மாட்டாங்க!

twitter.com/BoopatyMurugesh

“எவரிடமும் ATM PIN கொடுத்து ஏமாறாதீர்கள்” ன்னு பேங்க்ல இருந்து SMS அனுப்பியி ருக்கான்.. அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்.. நீ எவனுக்கும் கடன் குடுத்து ஏமாறாத!

twitter.com/nature_raja

விளையாடுவதை நாம் நிறுத்தும்போது, நம்மை வைத்து இந்த உலகம் விளையாட ஆரம்பிக்கிறது!

twitter.com/kumarfaculty

மொபைல் போன் கிடைத்ததும் ஏரோபிளேன் மோடுக்குச் சென்று விடுகிறார்கள் குழந்தைகள்!

p112c_1520417511.jpg

twitter.com/twitter.com/saravananucfc

என்ன வேல பாக்குற, எவ்வளவு சம்பளம், கல்யாணம் ஆயிருச்சான்ற கேள்வியெல்லாம் வாழ்க்கையில் நிறைய பேருக்கு அவுட் ஆஃப் சிலபஸாக மாறிவருகிறது!

twitter.com/udaya_Jisnu

ஹார்ட் அட்டாக் மட்டுமில்ல, `புலம்பல்’ங்கிற வியாதி கூட இப்பெல்லாம் 25 வயசுக்குள்ளயே வந்திடுது!

twitter.com/Thaadikkaran

எக்ஸாம்ல எவ்வளவு மார்க் வாங்குறோம் என்பதைவிட, எக்ஸாம் ஹால்ல எவ்வளவு அடிஷனல் ஷீட் வாங்குகிறோம் என்பதே கெத்தாய் பார்க்கப் படுகிறது.!

p112d_1520417533.jpg

twitter.com/udaya_Jisnu

காதலிக்கும்போது, அவளுக்காக வெயிலில் காய வைப்பாள்;
கல்யாணத்துக்கு அப்புறம், அவ துவைச்ச துணிய வெயிலில் காய வைப்பாள்! #மனைவியதிகாரம்

twitter.com/HAJAMYDEENNKS

நாட்டுல வேலை இல்லாதவர்களைவிட வேலை நேரத்தில் வேலை பார்க்காமல் இருப்பவர்களே அதிகம்!

twitter.com/CreativeTwitz

SBI-ல இருந்து மினிமம் பேலன்ஸ் மெயின்டெய்ன் பண்ணச் சொல்லி மெசேஜ் அனுப்பியி ருக்கான். எவனோ பல்க்கா லோன் அப்ளை பண்ணி ருக்கான் போல!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

யது கூடக்கூட அஜித்தின் விருப்பங்களும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. டீன்-ஏஜில் பைக் ரேஸ் பிரியரான அஜித், அதன்பிறகு கார் ரேஸ், போட்டோகிராபி, சமையல், ரேடியோ கன்ட்ரோல்டு ஹெலிகாப்டர்கள் என விருப்பங்களை மாற்றிக்கொண்டே வந்தார். தற்போது `தல’யின் ஆர்வம் துப்பாக்கி சுடுதல் மீது. சென்னை எழும்பூரில் உள்ள ரைஃபிள் கிளப்புக்கு அடிக்கடி வரும் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் இறங்கியிருக்கிறார்.

p19aa_1520232119.jpg

p19b_1520232128.jpg

p19c_1520232138.jpg

p19d_1520232147.jpg

’விஸ்வாசம்’ படத்திலும் ‘தல’யின் தோட்டாக்கள் வெடிக்குமாம்! 


ன்னும் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. ஆனால் துருவ் விக்ரமுக்கு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் குவிந்தபடியிருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவான துருவ்வை 77 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். பனிமலை, காடு, நகரம், நாய் என இன்ஸ்டாகிராமில் தன்னுடைய போட்டோகிராபியால் லைக்ஸ் குவித்துவருகிறார் இந்தக் குட்டிப்பையன். இன்ஸ்டாகிராமில் ஜூனியர் சீயான் பின்தொடரும் ஒரே ஆள் சீனியர் சீயான் மட்டுமே!

p26a_1520236209.jpg

p26b_1520236218.jpg

p26c_1520236228.jpg

p26d_1520236237.jpg


p48b_1520328645.jpg

p48a_1520328654.jpg

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

க்ரோர்பதி ஹீரோயின்கள் லிஸ்ட்டில் சாய் பல்லவியும் இணைந்திருக்கிறார். மலர் டீச்சராக ‘பிரேமம்’ படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவியின் முதல் படம் `தாம் தூம்’. 10 ஆண்டுகளுக்கு முன்பு கங்கனா ரனாவத்துக்குத் தோழியாக நடித்தவர் இப்போது ஹீரோயினாகத் தமிழில் செம பிஸி. கரு, மாரி-2, சூர்யா படம் என வரிசைக்கட்டி நடிக்கும் சாய் பல்லவியின் சம்பளம் 1.5 கோடி ரூபாய்!


p85a_1520341224.jpg

யக்குநர் தனுஷ் அடுத்த படத்துக்கு ரெடி. நாஸ்டால்ஜியா பிரியரான தனுஷ் இந்த முறை 1947-க்கு முன்பு பயணிக்கிறார். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம்தான் கதைக்களம். கன்னட நடிகர் சுதீப்பை ஹீரோவாக நடிக்கவைக்க அணுகியிருக்கிறார் தனுஷ்!


p93a_1520341517.jpg

p93b_1520341528.jpg

`செக்கச்சிவந்த வானம்’ படத்தில் போலீஸாக நடிக்கிறார் விஜய்சேதுபதி. இன்ஜினீயராக சிம்பு நடிக்க, அரசியல்வாதியாக அரவிந்த்சுவாமி நடிக்கிறார். அருண் விஜய்தான் படத்தின் வில்லன். ஷூட்டிங் முடியும்வரை தன் படத்தைப் பற்றி எந்தத் தகவலும் வெளியாகக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார் மணிரத்னம். ஆனால், சோஷியல் மீடியா யுகத்தில் ரகசியங்கள் எதையும் காப்பாற்ற முடிவதில்லை என்பது மணியின் ஆதங்கம்.!

  • தொடங்கியவர்
 பெஷன் ஷோ...
 

image_fae0422c1b.jpgimage_1bc62019f0.jpgimage_ef90442c47.jpgimage_974b1c5f88.jpgimage_ed59449f91.jpgimage_e26e8679ef.jpgimage_3563de71e0.jpgimage_37af2406bc.jpgimage_815d4c2f05.jpgimage_3d6368c097.jpgவருடாந்தம் நடைபெறும் நிவ்யோர்க் பெஷன் ஷோ, அண்மையில் அமெரிக்கா, நிவ்யோர்க் நகரில் இடம்பெற்றது. புகழ்பெற்ற ஆடைவடிமைப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட பல ஆடைகளை அணிந்தவாறு, மொடல் அழகிகள், பெஷன் ஷோவில் பங்கேற்றனர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களை இங்குக் காணலாம்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: சிம்பு அரசியலுக்கு வராராம்!

 
memes%206
meme%20new
memes%2010
memes%2011
memes%202
memes%203
memes%204
memes%205
memes%207
memes%208
memes%209
  • தொடங்கியவர்

வெள்ளை சுறாக்கள்...ஜெல்லி மீன்கள்...காட்டு நாய்கள் - உலகின் அபாயகரமான கடற்கரைகள்!

 

விடுமுறைக் காலங்களில் யாருக்குத்தான் கடற்கரைக்குச் சென்று பொழுதுபோக்க ஆர்வம் இருக்காது? அதிலும் வெள்ளையான மணல், தெளிவான நீர், கடற்கரை ஓரங்களில் தென்னை மரங்கள் என இருந்துவிட்டால்... சொல்லவா வேண்டும்? அனைவரும் பார்த்து ரசிக்கும் அழகிய இடமாகத்தான் கடற்கரையை நம் எல்லோருக்கும் தெரியும். கண்ணைக் கவரும் கடற்கரைகள் பற்றித்தான் நாம் பெரும்பாலும் கேள்விப்பட்டிருப்போம் அல்லது நேரில் பார்த்திருப்போம். ஆனால், உலகில் உள்ள கடற்கரைகளில் சில நாம் நினைப்பதுபோல அல்லாமல் ஆபத்தானதாகவும் இருக்கின்றன. அதே சமயம், அதில் இருக்கும் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் ரசிப்போரும் இருக்கத்தான் செய்கின்றனர். அதில் முக்கியமான சில கடற்கரைகளைப் பற்றிக் காணலாம். 

கான்ஸ்பாய் சுறா

 

கான்ஸ்பாய் கடற்கரை, தென் அமெரிக்கா
இந்தக் கடற்கரை உலகின் மிகப்பெரிய வெள்ளை சுறாக்களின் தலைநகரமாக விளங்குகிறது. தென் அமெரிக்காவில் உள்ள கான்ஸ்பாய் மற்றும் டையஸ் தீவின் தண்ணீர் இணையும் இடத்தில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுறாக்கள் காணப்படுகின்றன. இந்த தீவிற்குச் செல்லும் மக்கள் கேஜ் டைவிங் மூலம் கடலுக்குள் சென்று சுறாவைப் பக்கத்தில் பார்த்து ரசிக்கின்றனர். வெளியிலிருந்து கடற்கரையை ரசிக்கும் வரை மக்களுக்கு ஆபத்து இல்லை. ஆனால், கேஜ் டைவிங்கில்தான் ஆபத்து ஆரம்பிக்கிறது. அங்கு வாழும் சுறாமீன்கள் கேஜ் கம்பிகளை உடைத்து மனிதர்களைத் தாக்கும் தன்மை கொண்டது. 2013-ம் ஆண்டு ஒரு ஹனிமூன் ஜோடி கேஜ் டைவிங் மூலம் சுறாக்களை கண்டு ரசிக்கச் சென்றனர். அப்போது ராட்சத சுறாமீன் ஒன்று கேஜ் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த ஜோடி உயிர் பிழைத்தது. ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல் இன்னும் அங்கு கேஜ் டைவிங் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. 

சொளபட்டி

சௌபட்டி கடற்கரை, இந்தியா: 
உலகின் மிகப்பிரபலமான கடற்கரைகளில் முக்கியமானது, சௌபட்டி கடற்கரை. உலகின் மிக மோசமான மாசடைந்த பீச்சும் இதுதான். இந்தக் கடற்கரை நீந்துவதற்கானது அல்ல, வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை கரைப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகளை கரைத்த சில நாட்களில் பூஜைப் பொருட்களும், கரைந்த சிலைகளில் மீதமுள்ள பாகங்கள் அதிக அளவில் கரை ஒதுங்கும். இதனால் அக்கடற்கரையே அதிகமான குப்பைக் கூளங்களால் நிரம்பி வழியும். இந்த மாசுகள் வருடந்தோறும் இருப்பதால், விநாயகர் சிலைகளைக் கரைக்கும்போது விழாவில் கலந்து கொள்ளும் மக்களுக்கு மாசடைந்த நீரால் பல தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன. 2016-ம் ஆண்டு இந்தக் கடற்கரையில் தண்ணீரின் நிறமும், மண்ணும் முழுவதுமாக கறுப்பாக மாறியது. இதற்கு இந்திய அரசு எண்ணெய் கொட்டியதால்தான் மண் கறுப்பாக மாறிவிட்டதாகப் பதில் சொன்னது. ஆனால் எண்ணெய் கொட்டியதற்கான எந்தத் தடயமும் அந்த இடத்தில் இல்லை. இப்போது மிக மோசமாக மாசடைந்து தொற்றுநோய்களைப் பரப்பும் அபாயகரமான கடற்கரையாக மாறி இருக்கிறது. 

பிரேசர் தீவு

பிரேசர் தீவு கடற்கரை, ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் பிரேசர் தீவு உலகின் அதிக மணற்பரப்பைக் கொண்ட தீவு. இந்த மணற்பரப்பு சொர்க்கம் போல தோற்றமளிக்கும் இத்தீவுதான் உலகின் எகோடூரிசம் (Eco-tourism) மற்றும் கேம்ப்களுக்கு பெயர் பெற்றது. ஆனால் இங்குச் செல்லும் முன்னர் கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். சுறா மீன்களும், ஜெல்லி மீன்களும் இந்த தீவு முழுவதும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த தீவின் கடற்கரையில் அதிக விஷத்தன்மை கொண்ட ஸ்பைடர்களும், முதலைகளும், காட்டு நாய்களும் வாழ்கின்றன. இந்த தீவிற்கு செல்பவர்களை அதிகமாகத் தாக்குவது ஜெல்லி மீன்கள்தான். இக்கடற்கரையில் ஜெல்லி மீன்களும், சுறா மீன்களும் வருடத்திற்கு 60 முதல் 75 பேரைத் தாக்குகின்றன. 

லா - ரீ யூனியன் தீவுகள் கடற்கரை

லா - ரீ யூனியன் தீவுகள் கடற்கரை, இந்தியா
இந்தியப் பெருங்கடலில் முத்துக்கள் முளைத்ததுபோல லா - ரீ யூனியன் தீவுகள் காணப்படுகின்றன. பூமியில் உள்ள புதிரான இடங்களில் இதுவும் ஒன்று. இந்த தீவு, எரிமலை, காடுகள் எனப் பார்க்கவே பயங்கரமாகக் காட்சியளிக்கும். இந்த தீவிற்கு செல்லும்போது கடற்கரைப் பக்கம் மட்டும் செல்லக் கூடாது. உலக அளவில் இந்தக் கடற்கரைப் பகுதியில்தான் சுறா மீன்களின் தாக்குதல் அதிகமாக நடைபெறுகிறது. அதாவது எந்த அளவிற்கு என்றால், உலகில் சுறா மீன்களின் தாக்குதல் நடைபெறும் இடங்களில் 15 சதவிகித தாக்குதல் இக்கடற்கரையில்தான் நடைபெறுகிறது. 2013-ம் ஆண்டு இந்த தீவின் கடலோரப் பகுதியின் ஓரத்தில் மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதுதவிர கடலுக்குள் செல்ல எவருக்கும் அனுமதி கிடையாது. போனால் சுறாக்களுக்கு இரைதான்!

 வடக்கு செண்டினால் தீவு

வடக்கு செண்டினல் தீவு, இந்தியா: 
இது அந்தமான் பகுதியில் உள்ள ஒரு சிறிய தீவாகும். உலகின் யாரும் செல்ல முடியாத இடமாகவும், மனிதர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்ட இடமாகவும் இந்த தீவு உள்ளது. தொலைவில் இருந்து பார்க்கும்போது காடும், மலையும் சொர்க்கம் போலக் காட்சியளிக்கும். ஆனால், இந்த தீவு முழுக்க முழுக்க அங்கு வாழும் பழங்குடி மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மனிதர்கள் எனச் சொல்லும் யாரையும் அவர்கள் தீவுக்குள் விடுவதில்லை. பல ஆண்டுகளாக யாரும் நுழையாத இந்த தீவின் கடற்கரைப் பகுதியில் யாராவது கால்வைத்தால் அவர்களுக்குச் சாவு நிச்சயம். மொத்தம் 50 முதல் 400 பேர் வரை வாழும் பழங்குடியின மக்களை விசாரிக்கச் சென்ற ஹெலிகாப்டர் மீது அம்பு மழை பொழிந்து அதிகாரிகளை விரட்டியடித்தனர், அம்மக்கள். அந்த அளவுக்கு இந்தக் கடற்கரை பாதுகாக்கப்பட்ட ஒன்று. 

 

இதுபோல பல கடற்கரைகள் இன்னும் அபாயகரமானதாக இருக்கத்தான் செய்கிறது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘நல்லவை எல்லை கடந்தவை’
 

image_4dc3195473.jpgகற்கின்ற வயதில், வயது வந்த மாணவர்கள், எதையெதையோ கற்கிறார்கள். படிக்க வேண்டியவை மலையளவு இருக்க, படிக்கக்கூடாதவற்றைத் தேடி அலைகிறார்கள்.  

உள்ளத்தில் நல்ல விடயங்களைப் பதிவுசெய்ய வேண்டும். ஆனால், வாலிபர்கள் தங்கள் செல்லிடத் தொலைபேசியில் என்றுமே மறக்கக்கூடாத, விடயங்களைப் பதிவுசெய்து, பார்த்து, கேட்டு இரசிக்கிறார்கள். இதுபோதாதென்று, தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்கின்றார்கள். 

தகாதவைகளைத் திணிப்பதுபோல், பிறிதொரு பாவம் இல்லை. வசதிகளைக் கொடுத்துப் பிள்ளைகளைச் சீரழிக்கும் பெற்றோர், நவீனமயமாக்கலுக்குள் புகுந்து, தங்கள் வடிவத்தை முழுமையாக மாற்றியமைப்பதில் பெருமை கொள்கின்றார்கள். 

இந்தச் சடப்பொருள்களின் மீதான மோகம் நீங்கட்டும். மனிதனுக்குத் தேவையானதை மட்டும் பெறுவதில் தவறு கிடையாது. தங்கள் ஆன்மாவுக்குக் கறுப்புச் சாயம் பூசுவது, துன்பமான கேட்டைத்தரும். நல்லவை எல்லை கடந்தவை.  

  • தொடங்கியவர்

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு மாறிய நாள்: மார்ச் 11- 1918

 
அ-அ+

ரஷ்யாவின் தலைநகரம் 1918-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி மாஸ்கோவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.

 
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு மாறிய நாள்: மார்ச் 11- 1918
 
ரஷ்யாவின் தலைநகரம் 1918-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி மாஸ்கோவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.
* 1864 - இங்கிலாந்து ஷெஃபீல்ட் நகரில் இடம்பெற்ற செயற்கை வெள்ளப் பெருக்கினால் 250 பேர் கொல்லப்பட்டனர்.
* 1897 - மேற்கு வெர்ஜினியாவுக்கு மேலாகப் பறந்த எரிவெள்ளி ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.
* 1902 - காங்கேசன்துறையில் இருந்து சாவகச்சேரி வரையான 21 மைல் நீள ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
* 1905 - காங்கேசன்துறை முதல் மதவாச்சி வரை ரெயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது.
* 1917 - முதலாம் உலகப் போர்: பக்தாத் ஜெனரல் ஸ்டான்லி மோட் தலைமையிலான ஆங்கிலோ- இந்தியப் படைகளிடம் வீழ்ந்தது.
* 1918 - ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது.
* 1931 - சோவியத் ஒன்றியத்தில் 'வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு' என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
* 1958 - ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் அணுகுண்டு ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் தெற்குக் கரோலினாவில் பலர் காயமடைந்தனர்.
* 1978 - ஒன்பது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் இஸ்ரேலில் பேருந்து ஒன்றைக் கடத்தி 34 பொதுமக்களைக் கொன்றனர்.
* 1985 - மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் தலைவரானார்.
* 1990 - லித்துவேனியா சோவியத்திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது.
* 1998 - திருகோணமலைத் துறைமுகத்தில் கரும்புலிகள் இலங்கையின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர்.
* 2004 - ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இடம்பெற்ற தொடர் தொடருந்துக் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.
* 2007 - தென் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள கயானா விண்வெளி ஏவுதளத்தில் ஏரியன்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4B என்ற இந்திய செய்மதியையும் ஸ்கைநெட்-5A என்ற பிரித்தானியாவின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.
* 2011 - 2011 செண்டை நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்: சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்தனர்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

ஏலகிரி போயிட்டு ரிட்டர்ன் வரும்போது ஜலகம்பாறை..! ஊர் சுற்றலாம் வாங்க

 

ஊர் சுத்தலாம் வாங்க

பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, பட்ஜெட் படங்கள் காற்றாடும். ஆனால், அந்த பட்ஜெட் படம், பெரிய நடிகரின் படத்தைவிட நூறு மடங்கு திருப்தி தருமாறு அமைந்து விட்டால்... அதைவிட சந்தோஷம் வேறென்ன வேண்டும்? ஏலகிரி அப்படிப்பட்ட ஒரு சாய்ஸ்தான். இங்கே பெரிய நடிகரின் படம் என்று நான் சொன்னது... ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஸ்பாட்கள். 

original image

நீலகிரியில் எப்போதுமே சீஸன் டைம்தான். நீலகிரி வரை போய்த் திரும்ப முடியாதவர்களுக்கு, அதுவும் சென்னை, வேலூர்வாசிகளுக்கு அற்புதமான ஆப்ஷன் ஒன்றுண்டு. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி. என் போன்ற ‘ஏழைகளின் நீலகிரி’ என்றும் இதைச் சொல்லலாம் என்று பிறகுதான் தெரிந்தது. 30 ரூபாய்க்கு மீன் வறுவல் கிடைக்கிறது; 50 ரூபாய்க்கு போட்டிங் போக முடிகிறது; 20 ரூபாய் என்ட்ரி ஃபீஸில் கொத்துக் கொத்தாக மலர்க் கண்காட்சியில் செல்ஃபி எடுத்தேன்; வரும் வழியில் திருப்பத்தூர் பக்கத்தில் 10 ரூபாய்க்கு கும்பகோணமே வெட்கிப் போகும் அளவுக்குச் சுவைகொண்ட டிகிரி காபி உறிஞ்சினேன்; 60 ரூபாய்க்கு தட்டு நிறைய சிக்கன் நூடுல்ஸ் கிடைத்தது; 700 ரூபாய்க்கு ஏ.ஸி ரூமில் இரவு ‘ஸ்டார் மூவிஸ்’ சேனலில் ஆஸ்கார் விருது நிகழ்ச்சி பார்த்துக் கொண்டே தூங்கினேன். 25,000 ரூபாய் பேக்கேஜில் ஹிமாச்சல் போய் பாராகிளைடிங் போன என் நண்பனை, 750 ரூபாய்க்கு பாராகிளைடிங் போய்விட்டு வந்து வெறுப்பேற்றினேன்.

image 26

உடனே கொஞ்சம் வெயிட் பார்ட்டிகள்... ‘நம்ம ஸ்டேட்ஸுக்கு ஏலகிரி ஒத்துவருமா’ என்று கணக்குப்பிள்ளையாக மாறி விடாதீர்கள். எல்லாவற்றுக்கும் சேர்த்து காரில் செல்லும்போது, சில பாடாவதி ரோடுகளுக்கு டோல்களில் வசூலித்து விடுகிறார்கள். அந்த வாலாஜா டோல்... ஏற்கெனவே ஒரு முறை டயர் வெடித்து, டயர் இழையில் உயிர் பிழைத்த அனுபவம். திரும்பவும் அதே டோலில் இறங்கி விசாரித்தேன். ‘‘வேலை நடந்துக்கிட்டிருக்கு சார்’’ என்றார்கள். (அதாவது, நடக்காமலே இருக்கு!)

image 63

திருப்பத்தூர் சாலைதான் ஏலகிரிக்கு வழி. வாணியம்பாடி தாண்டியதும் ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும். ‘மும்பை - 1,273 கி.மீ’ என்று போகும் வழியில் போர்டு பார்த்தேன். ஆனால், ஏலகிரி திரும்புவதற்குப் பக்கத்தில் ஏலகிரிக்கான எந்த போர்டும் இல்லை. பாதி கிருஷ்ணகிரி வரை போய் ‘யு-டர்ன்’ அடித்துத் திரும்பி வந்தேன். கீழே இறங்கியதும்தான் போர்டு வைத்திருந்தார்கள். ‘இனிமே வயசுக்கு வந்தா என்ன... வரலேன்னா’ மொமென்ட். நேராகப் போய் இடதுபுறம் திரும்பினால் ஏலகிரி. காரில் ஏலகிரி செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் - ஏலகிரியில் பெட்ரோல் பங்க்குகள் கிடையாது என்பதால், மலையேறும் முன்னரே எரிபொருள் நிரப்பிக் கொள்வது உத்தமம்.

boat house

ஏலகிரிக்கான பாதையைப் பார்த்ததுமே உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. மலைச்சாலை ஆரம்பித்ததும்தான் ரியல் பயணமே ஆரம்பித்தது. அதைவிட ஒவ்வொரு கொண்டை ஊசிகளுக்கும் தமிழ்ப் புலவர்களின்/மன்னர்களின் பெயர்களைச் சூட்டியிருந்ததற்காகவே எண்ணற்ற விருப்பப் பொத்தான்கள் (இன்ஃபினிட்டி லைக்ஸ் பட்டன்). திருவள்ளுவர், பாரி, கம்பன், ஓரி, காரி, ஆய், போகன், அதியமான் என்று மொத்தம் 14 கொண்டை ஊசிகள். ஊட்டி, கொடைக்கானல், கொல்லிமலை போல கன்னாபின்னாவென இல்லை. டீசன்ட்டான வளைவுகள். 14-தான் ஏலகிரிக்கு ராசியான நம்பர் போல. பொன்னேரி கிராமத்திலிருந்து 14 கி.மீ; 14 கொண்டை ஊசி வளைவுகள்; சுற்றிலும் 14 கிராமங்கள்... இதுதான் ஏலகிரி. 14-வது கொண்டை ஊசி வளைவில் ஒரு தொலைநோக்கி இல்லம் உண்டு. டெலஸ்கோப் வழியாக மொத்த ஏலகிரியையும் பார்க்கலாம். திருப்பத்தூர், வாணியம்பாடி வரை ஜூம் ஆகிறது. இரவு நேரங்களில் என்றால், ஜிகுஜிகுவென நட்சத்திரக் கூட்டங்களை இந்த டெலஸ்கோப்பில் பார்க்கலாம்.

VW Passat

ஏலகிரியில் தங்குவதற்கு மொத்தமே 50 முதல் 60 விடுதிகள்தான் இருக்கின்றன. நீலகிரி அளவுக்கு ஏலகிரி அவ்வளவாகப் பிரபலமடையாததால் இருக்கலாம். ‘‘டூரிஸ்ட்டை நம்பித்தான் லாட்ஜ் கட்டினேன். சனி ஞாயிறுகள்லதான் ஓரளவு கூட்டம் வருது. மத்த நேரம் எப்ப வேணாலும் தைரியமா வரலாம்! தாராளமா ரூம் கிடைக்கும்!’’ என்றார் ஒரு லாட்ஜ் உரிமையாளர். ரூம்களும் மலிவாகவே இருக்கின்றன. காஸ்ட்லி பார்ட்டிகளுக்கு கொஞ்சம் இன்டீரியராகப் போனால்... 3,500 ரூபாய்க்கு ரூம் கிடைக்கிறது. சிலவற்றில் உணவு, விளையாட்டு, ட்ரெக்கிங் என்று எல்லாவற்றுக்கும் சேர்த்தே வசூலித்து விடுகிறார்கள்.

Ride

கடல் மட்டத்திலிருந்து 1,410 மீட்டர் உயரத்தில் இருப்பதால், மிதமான குளிருக்கும் பதமான வெயிலுக்கும் ஏலகிரி கேரன்ட்டி தருகிறது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் தொட்டு ஏலகிரிக்கு வரலாறு இருக்கிறது. ஒரு காலத்தில் ஜமீன்தாரர்களின் தனிப்பட்ட சொத்தாக ஏலகிரி இருந்ததாம். சில ஜமீன்களின் வீடுகளை இன்றும் ‘ரெட்டியூர்’ எனும் இடத்தில் பார்க்கலாம் என்றார்கள். 1950&களின் துவக்கத்தில்தான் இந்திய அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது ஏலகிரி. இப்போது, 14 மலைக்கிராமங்கள் சேர்ந்த அழகிய மலைவாச ஸ்தலமாக உருவெடுத்திருக்கிறது ஏலகிரி. முழுக்க முழுக்க விவசாயம்தான் ஏலகிரிக்கு மூச்சு. மிளகு, மலைப் பழங்கள், ஸ்டார் ஃப்ரூட், சாமை போன்றவை அருமையாக விளைகின்றன.

park

ஏலகிரி & ஆறேழு நாட்கள் தங்கி என்ஜாய் பண்ணும் அளவுக்குப் பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் கிடையாது. ‘ஏன்டா இங்கே வந்தோம்’ என்று சலிப்படைய வைக்கும் இடமும் கிடையாது. நேச்சர்ஸ் பார்க், ட்ரெக்கிங், போட்டிங், கோவில்கள் என்று எல்லாமே இங்கே உண்டு. போட்டிங் போகும் வழியில் வரிசையாக மீன் வறுவல்கள் அடுக்கி வைத்திருக்கிறார்கள். எல்லாமே ஜிலேபி, கட்லா, உளுவை என்று ஏரி மீன்கள்தான். புங்கனூர் ஏரிதான் ஏலகிரியின் ஸ்பெஷல். புங்கனூரின் ஸ்பெஷல் இந்த மீன்கள். இது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி என்பது அதைவிட ஸ்பெஷல். எனவே, அத்தனை மாதங்களிலும் தண்ணீருக்குப் பஞ்சம் இருக்காது இந்த ஏரியில். எல்லா நேரங்களிலும் போட்டிங் உண்டு. ஒரு தடவை நவம்பர் மாதம் நல்ல மழையில் ஏலகிரி வந்து, பார்க்கிங் ஏரியா வரை தண்ணீர் நிரம்பி வழிந்து, கண்ணே தெரியாத பனிமூட்டத்தில் இருந்தது ஏரி. ‘போட்டிங் கிடையாது சார்’ என்று திருப்பி அனுப்பப்பட்ட அனுபவமெல்லாம் எனக்கு நேர்ந்திருக்கிறது. எனவே மழைக்காலங்களில் ஏலகிரிக்குச் செல்லும்போது முன்விசாரணை தேவை.

ஜலகம்பாறை

பக்கத்தில் குழந்தைகளுக்கான பார்க் இருக்கிறது. பீச்சில் இருக்கும் பலூன் சுடுதல், பந்து எறிதல் போன்ற விளையாட்டுகளெல்லாம் வைத்துச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள் வட இந்தியர்கள். அரைமணி நேரம் போட்டிங் முடித்துவிட்டு எதிரே நேச்சர்ஸ் பார்க். அதாவது, இயற்கைப் பூங்கா. மூங்கில் வீடுகள், பிரம்மாண்டமான ரோஜாத் தோட்டங்கள், பறித்தாலும் சிரித்துக் கொண்டிருக்கும் கொத்துக் கொத்தான மலர்கள், கீழிருந்து மேலெழும் நீரூற்று... இயக்குநர் ஷங்கர் பார்த்தால் விடமாட்டார். குழந்தைகளுக்கு செமத்தியான என்ஜாய்மென்ட் உண்டு.

jalagamparai

ஏரிக்கு அருகே மங்கலம் கிராமத்தில் மூலிகைப் பண்ணை ஒன்று இருக்கிறது. மூலிகைகள் இங்கே அன்லிமிட்டெட். வெரைட்டியான பெயர்கள் சொன்னார்கள். வாயில் நுழையவே இல்லை. ஆனால், எல்லா நோய்களுக்கும் மூலிகைகள் கிடைக்கின்றன. தி.நகர் ரங்கநாதன் தெருபோல், செல்லும் வழியெங்கும் ஸ்டார் ஃப்ரூட், ப்ளம்ஸ், மலை ஆப்பிள், கொய்யா, தேன் என்று எக்கச்சக்க விஷயங்கள் பாட்டிகளும் ஆன்ட்டிகளும் கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே ஏலகிரி தயாரிப்பு. நடுவில் புரோக்கர்கள் இல்லை. ‘‘வீட்ல புடுங்கி அப்படியே கொண்டாந்தேன்... தேன் மாதிரி இனிக்கும்யா.. வாங்கிட்டுப் போங்க!’’ என்று பெயர் தெரியாத ஒரு டஜன் பழத்தை, பாட்டி பாசமாக என் தலையில் கட்டினார்.

nature park

மங்கலம் கிராமத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில், சுவாமி மலை என்ற கோயில் இருக்கிறது. விசாரித்தால் கடல் மட்டத்தில் இருந்து 4,338 அடி உயரத்தில், ஏலகிரி உச்சிக்கு வந்துவிட்டோம் என்றார்கள். செடிகள், பூக்கள், மரங்களுக்கு நடுவே படிகள்போல் நடைபாதை அமைத்திருந்தார்கள். பச்சைப் பசேலென நடந்து போனேன். கோயில் அமைந்திருந்த இடமே அழகு! மலை உச்சியில் மட்டும் மறக்காமல் தெய்வங்கள் எப்படியாவது செட்டில் ஆகிவிடுகிறார்கள். புங்கனூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள நிலாவூர் அம்மன் கோயிலும் அப்படித்தான். இங்கேயும் பூங்கா அமைத்திருந்தார்கள்.

nature park board

‘ஏதோ பாராகிளைடிங்னு ஓப்பனிங்ல வந்துச்சே’ என்று நீங்கள் மைண்ட் வாய்ஸில் ஆச்சரியமாவது ஃபீல் ஆகிறது. ஆம்! விளையாட்டுப் பிரியர்களுக்கு ஏலகிரி செமையான சாய்ஸ். ஸ்போர்ட்ஸ் கேம்ப் எனும் விளையாட்டு மைதனாத்தை விசாரித்துப் போனேன். இங்கு ‘ஏடிவி’ எனும் ‘ஆல் டெரெய்ன் வெஹிக்கிள்’ ரைடிங் இருந்தது. எல்லாச் சாலைகளிலும் ஓட்டக் கூடிய வாகனம் என்று அர்த்தம். ‘மான் கராத்தே’ படத்தில் ஹன்ஸிகா ஓட்டுவாரே... அதே வாகனம். ஹன்ஸிகா போல் பல பெண்கள் ஏடிவி ஓட்டிக் கொண்டிருந்தார்கள். பின்னால் அதைப் பிடித்தபடி ‘வாரணம் ஆயிரம்’ சூர்யா மாதிரி சிலர் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அதாவது, இதை ஓட்டுவதற்கு நல்ல பயிற்சி வேண்டும். ஏடிவி&யில் டார்க் அதிகம். ஓவராக முறுக்கினால், ஏலகிரியைத் தாண்டிவிடும் என்பதால் இந்தப் பாதுகாப்பு.

nature park 3

பாரா கிளைடிங்கும் இருந்தது. இதற்கும் ரொம்ப தில் வேண்டும். சிறுவர்கள்கூட அந்தரத்தில் பலூனில் தொங்கியபடி பாரா கிளைடிங் செய்ததைப் பார்த்தேன். இது தவிர ரோப் ரைடிங், ட்ரீ கிளைம்பிங் என்று ‘போகோ’ சேனலில் வரும் நிறைய கேம்கள் இருந்தன. பெயின்ட் பால் எனும் மிலிட்டரி கேம் & ஒரு கூட்டாக விளையாடலாம். அதாவது, எதிரிகளைச் சுட்டு வீழ்த்த வேண்டும். நிஜமாகவே பெயின்ட் குண்டுகள் உங்கள் மேல் படப் பட... உயிர் பாயின்ட் குறைந்து கொண்டே இருக்கும். ஜாலியாக இருந்தது. 100 ரூபாயிலிருந்து விளையாட்டுகள் ஆரம்பிக்கின்றன.

swami malai hills

இது தவிர, ‘கரடிப்பாறை’ எனும் இடத்தில் ட்ரெக்கிங் போய் விட்டு வரலாம். ட்ரெக்கிங்கில் இருந்து விளையாட்டுகள், தங்கல், உண்ணல் என்று எல்லாமே பேக்கேஜாகவும் வைத்திருக்கிறார்கள். ஒய்எம்சிஏ கேம்ப் எனும் தனியார் நிறுவனத்தில் விசாரித்தேன். இதற்காகவே ஒரு வெப்சைட்டே வைத்திருக்கிறார்கள். ‘‘1,000 ரூபாயில் தங்குவதில் ஆரம்பித்து, ஒரு நாள் உணவு 200 ரூபாய் வரை எல்லாமே சீப்பா பண்ணுவோம்’’ என்று புரொமோஷன் செய்தார் இதன் செகரெட்டரி ஜார்ஜ் பிரின்ஸ்.

swami malai temple

கார்/பைக் இருப்பவர்கள், சும்மா ஏலகிரியின் 14 கிராமங்களையும் ஒரு ரவுண்ட் அடிக்கலாம். நிலவூர் என்ற கிராமத்துக்கு விசிட் அடித்துப் பார்த்தேன். மலையடிவாரத்தில் டெட் எண்டாக முடிந்தது பாதை. நிமிர்ந்து பார்த்தால், மலை தொடங்குகிறது. கீழே திண்ணை அமைத்த வீடுகள். நம் வீட்டில் கொல்லைப் புறத்தில் என்ன இருக்கும்? ஆடு, மாடு, மேய்ச்சல் நிலம், கிரிக்கெட் கிரவுண்டு, பாத்ரூம்...? ஆனால், இங்கே ஒவ்வொருவர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் மலை இருக்கிறது.

trekking in swami malai

பக்கத்தில் பலா மரங்கள், கொஞ்சம் உயரமானவர்கள் உட்கார்ந்திருந்தாலே தலையில் இடிக்கும்போல. அத்தனை உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. ‘‘வேணும்னா ஒரு பலாப் பழம் பறிச்சுட்டுப் போங்க தம்பி!’’ என்று நீண்ட நாள் பழகியதுபோல் உரிமையாகச் சொன்னார் ஓர் அப்பத்தா. இது தவிர சிலரின் வீட்டுத் தோட்டங்களில் தேன் கூட்டிலிருந்து தேனெல்லாம் எடுக்கிறார்கள். ‘வறுமையின் வீட்டில் வசதியான சொத்து அன்புதான்’ என்பதுபோல், இந்தக் கிராமங்கள்தான் ஏலகிரியின் சொத்து.

சுவாமி மலை

கிராமம், கோவில், ஏரி, படகுச் சவாரி, ட்ரெக்கிங் எல்லாம் ஓகே! அருவி? அண்ணன்களுக்கு கௌரவமே தங்கைகள்தான். அதுபோல், மலைகளுக்கு ஆதாரமே அருவிகள்தான். ஆனால், ஏலகிரியில் அருவி இல்லை என்பது பெண்கள் இல்லாத வீடுபோல் கொஞ்சம் டல் அடிக்கும் விஷயம்தான். மலை இறங்கி கீழே இடதுபுறம் திரும்பி திருப்பத்தூர் வழியாகச் சென்றால், ஜலகம்பாறை என்றொரு அருவி இருப்பதாகச் சொன்னார்கள். நான் சென்ற நிலவூர் கிராமத்திலிருந்து 5 கி.மீ மலை வழியாகப் போனாலும், ஜலகம்பாறை வரும் என்றார்கள்.

ஏலகிரி

மலை இறங்கி காரில் கிளம்பினேன். ஜலகாம்பாறை, ஜலகம்பாறை, ஜலாகாம்பாறை என்று விதவிதமாக போர்டுகள் பார்த்தேன். எல்லாமே ஒரே ஏரியாவாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். ஏலகிரியில் இருந்து 40 கி.மீ.தான். தெருத் தெருவாகப் போனால், ஈஸியாகப் போகலாம். திருப்பத்தூரில் இருந்து சாலை படுமொக்கையாக இருந்தது. ஆனால், பசுமை விகடன் அட்டைப் படத்துக்கு ஏற்றாற்போல் கிராமங்கள்... வயல்கள்... மாடுகள்... உழவுத் தொழில் என்று பாதை க்ளீஷேவாக இருந்தது.

ஏலகிரி பாராக்ளைடிங்

ஜலகம்பாறை என்ட்ரன்ஸில்... பணியார விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருந்தது. 5 பணியாரம் 10 ரூபாய்க்குத் தந்தார்கள். பணியார அத்தையை வாழ்வாங்கு வாழ்த்திவிட்டு, குரங்குகளுக்குத் தெரியாமல் சில பணியாரங்களை டிக்கியில் போட்டுக் கொண்டேன்.

yelagiri

அருவி நுழைவுவாயிலில் வழக்கம்போல், வண்டியை மறித்து கக்கத்தில் பையைச் சொருகிக் கொண்டு, எச்சில் டிக்கெட் கிழித்துக் கொடுத்து பார்க்கிங் காசு வாங்கினார்கள். ஜலகம்பாறைக்கு எப்போது வேண்டுமானாலும் விசிட் அடிக்கலாம். 7 மணிக்கு மேல் பார்க்கிங் கட்டணம் கிடையாதுபோல. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் நாவல்களில் வருவதுபோல் லொக்கேஷன் செமத்தியாக இருந்தது. இடது பக்கம் மலையடிவாரத்தில் சிவலிங்க வடிவில் கோயில் இருந்தது. முருகப் பெருமான்தான் இங்கே ராஜா. தைப்பூசம் அன்று ஜலகம்பாறை கிடுகிடுக்கும் அளவு கூட்டம் வருமாம். கீழேயே தண்ணீர் சலசலப்புச் சத்தம், அருமையான சிம்பொனி. அருவி நீராகத்தான் இருக்க வேண்டும்.

falls

இங்கேயும் குரங்குகளின் தொந்தரவுதான் தாங்க முடியவில்லை. அதையெல்லாம் சட்டை செய்யாமல், தின்பண்டங்கள் விற்பனை ஜரூராக நடந்து கொண்டிருந்தது. கையில் குச்சியுடன் குரங்குகளுக்குப் பயம் காட்டியபடி, ஒன்றரை டஜன் ரஸ்தாலிப் பழங்களை 50 ரூபாய்க்குக் கொடுத்தார் ஆயா ஒருவர். குரங்குகளுக்குத் தெரியாமல் பழம் தின்றபடி 50 படிகள் மேலேறினால், செமித்தே விட்டது. ஏலகிரி மலையில் இருந்துதான் இந்த அருவி நீர் வருவதாகச் சொன்னார்கள். பெரிதாகப் பிரபலமாகாததாலோ என்னவோ, சுற்றுலாவாசிகள் அவ்வளவாக இல்லை.

 

ஜலகம்பாறைக்கு சீஸன் ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரை. டயட் இருப்பதுபோல், ஸ்லிம் அண்ட் ஸ்லீக்காக விழுந்து கொண்டிருந்தது அருவி. மூலிகைகளை அடித்து விழுவதால், இதில் குளித்தால் நோய்கள் தீரும் என்று வழக்கம்போல் சொன்னார்கள். நிஜமாகவே மூலிகை வாசம் அடித்தது. ‘ஹைட் சார்; வெயிட் சார்; வொயிட் சார்’ என்பதுபோல் உயரத்திலிருந்து தடிமனாக வெள்ளையாக பொத பொதவென விழுகிறது நீர். செப்டம்பர் & அக்டோபர் மாதங்களில் இன்னும் அதகளம் பண்ணுமாம் ஜலகம்பாறை. கிட்டத்தட்ட 35 அடி உயரத்திலிருந்து விழுவதால், அருவி நீரைத் தலையில் வாங்குவதற்கு கொஞ்சம் பலம் வேண்டும். குழந்தைகள் கீழே கிடந்த நீரில் குதூகலம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

குளித்து முடித்துவிட்டு, ஒளித்து வைத்த பணியாரங்களை லவட்டிவிட்டுக் கிளம்பினேன். வீட்டுக்கு வந்த பிறகும் உடம்பில் இன்னும் மூலிகை வாசம் ஒட்டிக் கொண்டிருந்தது. மனதில் ஏலகிரி வாசமும்தான்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

தெரு கிரிக்கெட்: பிபிசி-தமிழ் நேயர்கள் அனுப்பிய சிறந்த புகைப்படங்கள் #BBCTamilPhotoContest

100357669st-vallichouthryjpg

பிபிசி தமிழின் 14 வது வார புகைப்படப் போட்டிக்கு 'தெரு கிரிக்கெட்' என்ற தலைப்பில் புகைப்படங்களை அனுப்புமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

வரப்பெற்ற புகைப்படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்குகிறோம். ஆர்வத்துடன் பங்கு கொண்ட நேயர்கள் அனைவருக்கும் நன்றி.

100357646st-satheeshkumarjpg

சதீஷ் குமார் - திருச்சி   -  BBC

100357648st-stillssamsuljpg

சம்சுல் - துபாய்   -  BBC

100357650st-suryajpg

கபிலன் - இராமநாதபுரம்   -  BBC

100357654st-vasanthanvjpg

வசந்தன் வாசுதேவன் - பெரம்பலூர்   -  BBC

100357656stt-satheeshkumarjpg

சதீஷ் குமார் - திருச்சி   -  BBC

  • தொடங்கியவர்

கால் இல்லா, கை இல்லா தவளை சரி... தலையில்லா தவளை பார்த்ததுண்டா? #HeadlessToad

 

ஜில் ஃப்லெம்மிங் (Jill Flemming) என்ற அமெரிக்க ஊர்வன அறிஞர் சென்ற வாரம் கன்னெடிகட் காடுகளில் பல்லி இனங்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது ஒரு தவளை அவரது காலடியில் தாவிச் சென்றது. அதைக் கவனித்தபோது அதை நம்புவதா என்ற குழப்பம் அவருக்கு வரக் காரணம் இருக்கத்தான் செய்தது. கண், மூக்கு, தாடை, நாக்கு என்று எதுவுமே இல்லாமல், அட தலையே இல்லாமல் ஒரு தவளையைப் பார்த்தால் யாரால்தான் நம்பமுடியும்? உடலில் வேறு ஏதேனும் பாகங்கள் வெட்டப்பட்டு அந்தக் காயம் குணமடைந்தால் எப்படி அங்கே தழும்பு இருக்குமோ அந்த மாதிரியான அடையாளம் மட்டும் கழுத்துப் பகுதியில் இருந்தது. தலையை இழந்தும் கூட இந்தத் தவளை தாவிக் குதிப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் நாம் அறிவியலைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தலையில்லா தவளை

 

Picture Courtesy: twitter.com/salamander_jill

குளிர்காலம் தொடங்கினால் குளிர்காய நெருப்பு மூட்டி, அடுப்பில் சுடச்சுட பலவகைப் பண்டங்கள் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டே நாம் வீட்டினுள் அமர்ந்துவிடுவோம். நம்மைப் போல் இப்புவியில் வாழும் வேறு சில உயிரினங்கள் குளிர்காலத்தை அவ்வளவு எளிமையாகக் கடப்பதில்லை. எல்லா உயிர்களாலும் குளிர்காலத் தட்பவெப்ப நிலையைத் தாங்கிக்கொள்ள முடியாது. அப்படிப்பட்ட உயிரினங்கள் மற்ற காலங்களில் கிடைக்கும் உணவுகள் எதையும் வீணாக்காமல் நன்றாகச் சாப்பிடும். இப்படிச் சாப்பிடுவதால் குளிர்காலம் நெருங்கும்போது இயல்பான எடையைவிட அவை இரண்டு மடங்கு அதிகமாகிவிடும். பிறகு தனக்கு ஏற்ற ஓர் இடத்தில், அது குகையாகவோ இல்லை குழி, மரப்பொந்து என்று வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அங்கே சென்று கூடுதல் உணவுகளைச் சேர்த்து வைத்துவிட்டு உறங்கிவிடும். குளிர்காலம் முடியும் வரை உறங்கும் அவை சீஸன் முடிந்து எழுந்து வழக்கம்போல் மீண்டும் வாழத் தொடங்கிவிடும். கிட்டத்தட்ட இரண்டு முதல் ஆறு மாதங்கள் தூங்கக்கூடிய இவ்வகைப் பாலூட்டிகள், இக்காலகட்டங்களில் உணவு உண்ணவும், தண்ணீர் குடிக்கவும் கூட எழாமல் தூங்கிக் கொண்டே இருக்கும். இவ்வாறு தூங்கும் இந்த உயிர்கள் எப்படி இத்தனை நாட்கள் உயிர் பிழைத்து இருக்கின்றன?

குளிர்காலங்களில் அணில், மரத்தவளை, நத்தை, பாம்பு, வௌவால், சில வண்டு இனங்கள் போன்ற உயிர்களுக்கு உணவு கிடைப்பதில்லை. ஆகையால் இவை மற்ற காலங்களில் நன்றாக உண்டு தேவையான ஊட்டச்சத்துகளை உடலில் சேகரித்துக்கொள்ளும். குளிர்காலம் நெருங்கும்போது அணில், வண்டுகள் எல்லாம் கூடுதல் உணவுகளைச் சேர்த்து வைத்துவிட்டு மரப்பொந்திலோ, ஆழமான மண்குழியிலோ இருக்கும் அதன் வீட்டிற்குள் படுத்துத் தூங்கிவிடும். சாதாரண தூக்கம் இல்லை, இது ஹைபர்னேஷன் (Hibernation) எனப்படும் ஆழ்ந்த தூக்கம். இக்காலகட்டத்தில் அதன் உடல் வெப்பம் -2 டிகிரி செல்ஷியஸ் அளவிற்குக் குறைந்துவிடும். அதைப் பார்த்தால் இறந்து விட்டதாகவே நாம் நினைப்போம், ஆனால் இல்லை. அந்த அளவிற்கு அசைவற்றுக் கிடக்கும் அவை சுவாசிப்பது கூட மிகவும் குறைவு. 15 நொடிகளுக்கு ஒருமுறை முதல் சில நிமிடங்களுக்கு ஒருமுறை என்று அதன் சுவாசம் நீளும்.

 

குளிர்காலத்தைக் கடத்தல் என்ற பொருள் கொண்டதாக ஹைபர்னேஷன் என்ற சொல் இருந்தாலும், விலங்குகள் அதைச் செய்வதற்கான காரணம் குளிர்காலத்தைக் கடப்பது மட்டுமல்ல. உணவே கிடைக்காத அல்லது உணவே இல்லாத சமயங்களில் உயிர் வாழ்வதற்கான யுக்தியாகவே இது கருதப்படுகிறது. உணவுப் பற்றாக்குறை ஏற்படப்போகும் சூழ்நிலைக்கு முன்னால் இவை உண்ணும் அதீத உணவு ஹைபர்னேஷன் உறக்கத்தில் இருக்கின்றபோது தேவைப்படக் கூடிய ஊட்டச்சத்துகளைக் கொடுக்கிறது. உடலின் பாகங்கள் செயல்பட்டால் சேர்த்து வைத்த சத்துக்கள் குறைந்துவிடும் என்பதால் ரத்த ஓட்டத்தின் வேகம் மிகவும் குறைந்து அனைத்துச் செயல்பாடுகளும் குறைந்துவிடுகின்றன. தூக்கம் வரும்போது காபி குடிப்பதால், வருகின்ற தூக்கம் கூடக் கலைந்துவிடும். அதற்குக் காரணம் காபியில் இருக்கும் அடினோசீன் என்ற வேதிப்பொருள். இந்த அடினோசீன் உற்பத்தி உறங்கும் விலங்குகளின் உடலில் தற்காலிகமாக தடைசெய்யப்படும். அத்தோடு இருதயத்தைச் சுற்றி உருவாகும் குளிர்ச்சியான வேதிமங்கள் துடிப்பினை தேவைக்கு ஏற்ப மட்டுப்படுத்திவிடும்.

இத்தகைய சூழலில் அணில்கள் மட்டும் நடுவில் உறக்கம் கலைந்து எழுந்திருக்கும். தன்னைச் சுதாரித்துக் கொண்டு சேர்த்துவைத்ததில் இருந்து கொஞ்சம் உணவை உண்டுவிட்டு மீண்டும் உறங்கிவிடும். 14 முதல் 21 நாட்களுக்கு ஒருமுறை இவை இப்படி எழுவதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. அதைக் கண்டுபிடித்து விட்டால் இந்த ஹைபர்னேஷன் உறக்கத்தை மனிதர்களும் செய்யும் வகையில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

Interstellar, Passenger போன்ற ஆங்கிலப் படங்களில் மனிதர்கள் பல வருடங்களுக்கு ஒரு பெட்டியில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பது போல் காட்டப்படும். இந்த ஹைபர்னேஷன் (Hypersleep) உறக்கத்தின் உள்ளார்ந்த அறிவியலைப் புரிந்துகொண்டால் அதை நிஜத்திலும் சாத்தியப்படுத்த முடியும். விண்வெளி ஆராய்ச்சியில் அத்தொழில்நுட்பம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும், மருத்துவ உலகில் அது ஒரு மைல்கல்லாக அமையும். இந்த வகை உறக்கத்தைப் பயன்படுத்தி உடலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி மருத்துவம் செய்யலாம். அது பல நோய்களுக்குச் சிகிச்சைகளை எளிமைப்படுத்தும். இவ்வளவு நுட்பமான ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது ஏற்படும் காயங்கள் அவ்வுயிரினங்களுக்கு உறைப்பதில்லை. அது அப்படியே குணமடைந்து விடும். 

 

சரி, நம் தலையில்லா தவளை கதைக்கு வருவோம். கடந்த குளிர்காலத்தில், மேலே கூறிய குளிர்கால உறக்கத்தில் இருந்தபோதுதான் அந்தத் தவளை தன் தலையை இழந்திருக்க வேண்டும். வேட்டையாடும் விலங்கு ஒன்று ஏதோ ஒரு காரணத்தால் தன் வேட்டையைப் பாதியில் நிறுத்தி விட்டுச் சென்றிருக்க வேண்டும். ஆழ்ந்த குளிர்கால உறக்கத்தில் இருந்த தவளையின் ரத்த ஓட்டம் மிகக் குறைந்திருக்கும் என்பதால் ரத்தப்போக்கும் பெரிதளவில் இருந்திருக்காது. பிறகு உறக்கத்தில் இருக்கும்போதே அக்காயம் குணமும் அடைந்திருக்க வேண்டும். வாயின்றி உண்ண முடியாமல் அது சிறிது நாட்களில் நிச்சயம் இறந்துவிடும் என்றாலும், மூக்கின்றி எவ்வாறு சுவாசிக்கிறது? மூளையின் செயல்பாடின்றி உடலால் தனித்து இயங்கமுடியாது என்று கூறுகிறது அறிவியல். இந்தக் கூற்றில் இருந்து இந்தத் தலையில்லா தவளை தனித்து நின்று மனிதனை ஏளனம் செய்கிறது. ஆம், அவன் அறிவியல் அறிவு இன்னும் முழுமையடையவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக இந்தத் தவளை புரிய வைத்துள்ளது.

https://www.vikatan.com

https://twitter.com/salamander_jill/status/968539197203271680/video/1

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பேசும் படம்: மக்களாட்சியை மலரச்செய்த பெண்கள்

 

 
04CHLRDWOMENS%20DAY

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் உலக உழைக்கும் மகளிர் நாள் கொண்டாடப்படுவது, வரலாற்றின் தொடர்ச்சி.

11CHLRDMARCH%20POS%205
           
 

முதல் உலகப் போரால் கடுமையான பஞ்சத்தில் சிக்குண்ட ரஷ்யாவில் உணவுப் பற்றாக்குறை தலைவிரித்தாடியது. ஒரு துண்டு ரொட்டிகூடக் கிடைக்காமல் மக்கள் அல்லாடினர்.

04CHLRDWOMENS%20DAY%201
 

அந்த ஒரு துண்டு ரொட்டிக்காக 1917 மார்ச் 8-ல் சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இரண்டாம் ஜார் நிக்கோலஸ் மன்னனை எதிர்த்து மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினார்கள்.

11CHLRDMARCH%20POS%204
 

இந்த எழுச்சிமிக்கப் போராட்டம், ரஷ்ய புரட்சிக்கு வித்திட்டது. அந்தப் புரட்சிக்கு பின்னர் மக்களாட்சி மலர்ந்து, விளாதிமிர் லெனின் அதிபராகப் பொறுப்பேற்றார்.

04CHLRDWOMENS%20DAY%2004
 

மக்களாட்சிக்கு விதையாக இருந்த பெண்களின் போராட்டத்தைக் கௌரவப்படுத்தும் விதமாகவும் உழைக்கும் மகளிரை ஊக்குவிக்கும் விதமாகவும் மார்ச் 8-ம் தேதியை உழைக்கும் மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என லெனின் தலைமையிலான அரசு ரஷ்யாவில் உத்தரவிட்டது.

04CHLRDWOMENS%20DAY%2005
 

ஐ.நா. சபை சுமார் 58 ஆண்டுகள் கழித்து 1975-ல் அந்த நாளை உலக மகளிர் தினமாக அறிவித்தது. உழைக்கும் மகளிர் தினத்தையொட்டி ரஷ்யா அரசு அந்தக் காலத்தில் வெளியிட்ட சிறப்பு வாழ்த்து அட்டைகளின் தொகுப்பு இது:

11CHLRDMARCH%20POS%203
11CHLRDMARCH%20POS%206

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

2011: ஜப்­பானில் பூகம்­பத்­தினால் 15,894 பேர் இறந்­த­துடன் அணு உலை கசிவு ஏற்­பட்­டது

வரலாற்றில் இன்று…

மார்ச் – 12

 

1610 : ஜேக்கப் டி லா கார்டி தலை­மையில் சுவீடன் படைகள் மொஸ்­கோவைக் கைப்­பற்­றின.

1879 : நூற்­றுக்கும் அதி­க­மான ஆங்­கிலப் படைகள் தென் ஆபி­ரிக்­காவின் சூளு படை­க­ளினால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

1881: ஸ்கொட்­லாந்து கால்­பந்­தாட்ட அணியில் அன்ட்ரூ வட்ஸன் அறி­மு­க­மா­னதன் மூலம் உலகின் முத­லா­வது சர்­வ­தேச கறுப்­பின கால்­பந்­தாட்ட வீரரும் அணித்­த­லை­வ­ரு­மானார்.

1894 : அமெ­ரிக்­காவின் மிசி­சிப்பி மாநி­லத்தில் ஜோசப் பைடென்ஹார்ன் என்­ப­வரால் முதற் தட­வை­யாக கொக்­கா-­கோலா மென்­பானம் கண்­ணாடி போத்­தலில் அடைத்து விற்­கப்­பட்­டது.

Facts-about-Japan-Earthquake-and-Tsunami1913 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் வருங்­கால தலை­நகர் அதி­கா­ர­பூர்­வ­மாக கென்­பரா எனப் பெய­ரி­டப்­பட்­டது. கான்­பரா அமைக்­கப்­படும் வரையில் 1927 வரையில் மெல்பேர்ன் தற்­கா­லிகத் தலை­ந­க­ராக இருந்­தது.

1918 : 215 ஆண்­டு­க­ளாக ரஷ்­யாவின் தலை­ந­க­ராக இருந்த சென் பீட்­டர்ஸ்பேர்க் நகரின் தலை­நகர் அந்­தஸ்து மாற்­றப்­பட்டு மொஸ்கோ தலை­ந­க­ராக்­கப்­பட்­டது.

1928 : கலி­போர்­னி­யாவில் சென் பிரான்சிஸ் அணைக்­கட்டு உடைந்­ததில் 600 பேருக்கு மேல் பலி­யா­கினர்.

1930 : மகாத்மா காந்தி பிரித்­தா­னிய ஆட்­சி­யா­ளரின் உப்பு ஆதிக்­கத்­துக்கு எதி­ராக 200 மைல் நீள தண்டி யாத்­தி­ரையை ஆரம்­பித்தார்.

1938 : ஜெர்­ம­னியப் படைகள் ஆஸ்­தி­ரி­யாவை ஆக்­கி­ர­மித்­தன.

1940 : குளிர் காலப் போர்: சோவியத் யூனிய­னுடன் பின்­லாந்து சமா­தான உடன்­பாட்­டிற்கு வந்­தது. கரே­லியாப் பகுதி முழு­வதும் சோவியத் ஒன்­றியம் பெற்றுக் கொண்­டது. பின்­லாந்துப் படை­களும் மீத­மி­ருந்த மக்­களும் உட­ன­டி­யாக வெளி­யே­றினர்.

1950 : பிரிட்­டனின் வேல்ஸ் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற விமான விபத்தில் 80 பேர் உயி­ரி­ழந்­தனர். அவ்­வே­ளையில் வர­லாற்றின் மிக மோச­மான விமான விபத்­தாக அது இருந்­தது.

1967 : சுகார்ட்டோ, இந்­தோ­னே­ஷி­யாவின் ஜனா­தி­ப­தி­யானார்.

1968 : பிரித்­தா­னி­யா­வி­ட­மி­ருந்து மொரீ­சியஸ் சுதந்­திரம் பெற்­றது.

1992 : மொரீ­சியஸ் பொது­ந­ல­வாய அமைப்­பினுள் குடி­ய­ர­சா­னது.

1993 : மும்­பாயில் இடம்­பெற்ற தொடர் குண்­டு­வெ­டிப்­பு­களில் 300 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2003 : சேர்­பி­யாவின் பிர­தமர் சொரான் டின்டிச் தலை­நகர் பெல்­கி­ரேட்டில் படு­கொ­லை­செய்­யப்­பட்டார்.

2007 : கலி­போர்­னி­யாவில் ஏற்­பட்ட பெரும் காட்­டுத்­தீ­யினால் 2000 ஏக்­கர்­க­ளுக்கு மேற்­பட்ட நிலப்­ப­ரப்பு எரிந்து நாச­ம­டைந்­தது.

2011 : ஜப்பானின் டொஹோகு பிராந்தியத்தில் ஏற்பட்ட 9 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினால் 15,894 பேர் இறந்ததுடன் சுனாமியினால் புகுஷிமா அணு மின் நிலையம் சேதமடைந்து உருகியதால் அணுக்கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டது.

http://metronews.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.