Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ரெட் கார்பெட் நிகழ்ச்சிக்கு வித்தியாசமான உடையில் வந்து இறங்கிய ப்ரியங்கா சோப்ரா; வாயை பிளக்க வைத்த படம்…!

ப்ரியங்கா சோப்ரா தற்போது பொலிவுட் தாண்டி ஹொலிவுட் சென்றுவிட்டார். இவர் பல உலக திரைப்பட விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்று வருகின்றார்.

ஒஸ்கர் விருது விழாவிற்கு கூட சிறப்பு விருந்தினராக இவர் வந்தார். இந்நிலையில், சமீபத்தில் அப்படி ஒரு விழாவிற்கு இவர் சென்றுள்ளார். அங்கு இவர் ரெட் கார்பேட்டில் கலந்துக்கொண்டார்.

அங்கு இவர் அணிந்து வந்த உடை ஒன்று செம்ம வைரலாக சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.

625.0.560.320.100.600.053.800.720.160.90

http://metronews.lk

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக செஞ்சிலுவை தினம்

வரலாற்றில் இன்று….

மே 08

நிகழ்வுகள்

1450 – இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் ஹென்றி மன்னனுக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது.
1821 – கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகராக வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1886 – ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தைக் கண்டுபிடித்தார்.
1902 – கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
1914 – பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1933 – மகாத்மா காந்தி ஹரிஜன் மக்களின் நலனுக்காக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: கொக்கோஸ் தீவுகளில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை இராணுவப் பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இக்கிளர்ச்சி அடக்கப்பட்டு மூவர் தூக்கிலிடப்பட்டனர்.
1945 – அல்ஜீரியாவின் சேட்டிஃப் என்ற இடத்தில் நூற்றுக்காணக்கான அல்ஜீரியர்கள் பிரெஞ்சுப் படைகளினால் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.
1984 – லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிக்கப்போவதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
2007 – புதிய வட அயர்லாந்து உயர் சபை அமைக்கப்பட்டது.

பிறப்புக்கள்

1828 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் (இ. 1910)

1916 – சுவாமி சின்மயானந்தா, இந்திய ஆன்மிகவாதி (இ. 1993)

இறப்புகள்

1947 – ரொபேர்ட் ஹோர்விட்ஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
1951 – மு. நல்லதம்பி, ஈழத்துப் புலவர்

சிறப்பு தினம்

உலக செஞ்சிலுவை தினம்
ஐரோப்பா – வெற்றி தினம் (1945)
தென் கொரியா – பெற்றோர் தினம்

http://metronews.lk

  • தொடங்கியவர்

தொழிலதிபரை மணந்த சோனம் கபூர்! - விழாக்கோலம் பூண்ட பாலிவுட் திரையுலகம்

 

பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமணம் இன்று மும்பையில் நடைபெற்றது. இவரின் திருமணம்தான் இன்று சமூக வலைதளங்களில் ஹாட் ட்ரெண்ட். 

சோனம்

பாலிவுட் நடிகை சோனம் கபூர், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜா-வின் திருமணம் இன்று மும்பையில் நடந்தையொட்டி பாலிவுட் திரையுலகமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சோனம் கபூரும் ஆனந்த் அஹூஜாவும் கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன், இன்று நண்பகல் திருமணம் நடந்தது. 

collageeee_15186.jpg

கடந்த சில நாள்களாகவே, இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் அதிகமாக வலம் வந்துகொண்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை, சோனம் கபூருக்கு நடந்த மெஹந்தி விழாவின் புகைப்படங்கள் செம வைரல். அதன் பின், நடந்த சங்கீத் விழாவில் சோனம், ஆனந்த் ஆகிய இருவரும் வெள்ளை நிற ஆடையில் ஜொலித்தனர். மேலும், கபூர் குடும்பம் மற்றும் விழாவுக்கு வந்திருந்த பாலிவுட் பிரபலங்கள் என அனைவரும் வெள்ளை நிற ஆடையிலேயே வந்திருந்தனர். இது சோனம் கபூர் திருமணத்தின் பெரிய சிறப்பாக இருந்தது.

3_15271.jpg

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் கபூர் குடும்பதுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஒவ்வொருவராக வந்திருந்தனர். மும்பை பந்தரா பகுதியில் இருக்கும் ராக்டாலில் திருமணமும் மாலை லீலா ஹோட்டலில் பிரமாண்ட திருமண வரவேற்பும் நடைபெறவுள்ளது. திருமணத்துக்கு தயாராகியுள்ள சோனம் கபூர் சிவப்பு நிற ஆடையில், பாரம்பர்யமான நகைகளுடன் மிகவும் அழகாகக் காட்சியளித்தார். இவருக்கு மேட்சாக ஆனந்தும் பாரம்பர்ய உடை அணிந்திருந்தார். 

kapoor_15459.jpg

அழகிய சோனம் கபூர் மற்றும் அவரின் திருமண புகைப்படங்கள் ஒரு புறம் வைரலாகி வரும் நிலையில் மற்றொரு புறம் அவரின் திருமணத்துக்கு வரும் பாலிவுட் பிரபலங்களின் புகைப்படங்களும் மிகுந்த வைரலாகி வருகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எனப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடிவருகிறது கபூர் குடும்பம். ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு, கபூர் குடும்பத்தில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

4_15293.jpg

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

``தெனாவட்டா உட்காருவோம்... பாயப்போட்டு மல்லாக்கப் படுப்போம்!" - உலகின் அழகான பூனைகள்

 
 

மனிதன்  வளர்க்கும் செல்லப்பிராணிகளில் நாய்களும் பூனைகளும் குறிப்பிடத்தக்கவை. நாய்களின் உயரமும் கடிக்கும் தன்மையின் காரணமாகவும் அச்சப்படுபவர்களின் அடுத்த சாய்ஸ் பூனைதான். ஏனெனில் இவை அமைதியான சுபாவம் கொண்டது. பூனைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பல இயல்பான, அழகிய உடலமைப்புகளைக் கொண்டவை. அன்பு, குறும்பு, நட்பு என மனிதரிடத்தில் நெருங்கிப் பழகும் பூனைகளில் சில அரிதான மற்றும் அழகான பூனைகளும் இருக்கின்றன. உலகில் சில அழகான பூனை இனங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.      

                  
1. தேவோன் ரிக்ஸ் 

மிகுந்த அறிவுத்திறனைக் கொண்ட பூனை வகை இது. அலை அலையான முடிகளைக் கொண்டது. 1970-ம் ஆண்டில் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இப்பூனை மெலிந்த உடலமைப்பையும், நீண்ட காதுகளையும் கொண்டது. கடுமையான தந்திரங்களைக் கூட எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை கொண்டது. தனது குறும்புத் தனத்தால் மனிதர்களிடையே எளிதில் பழகக் கூடியது. உயரமான தடைகளையும் எளிதில் தாவிப் பற்றிக் கொள்ளும். இதனைப் பராமரிப்பதும் மிக எளிது.  

தேவோன் ரிக்ஸ் பூனைகள் 

       Photo - Dogalize  

2. ஸ்காட்டிஷ் உல்ஃப்

 இயற்கையான மரபணு மாறுபாட்டால் இவ்வகைப் பூனைகளின் குருத்தெலும்புகள் பாதிக்கப்பட்டு காதுகள் முன்புறமாகவோ, பின்புறமாகவோ மடங்கியே இருக்கின்றன. இதனால் ஆந்தையைப் போன்ற முக அமைப்பைக் கொண்டிருக்கும். 1961-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் கண்டறியப்பட்ட இப்பூனையினம் அரிதானதாகக் கருதப்படுகிறது. உருண்டை வடிவத் தலையைக் கொண்டது. இப்பூனை மல்லாக்கப் படுத்துத் தூங்கும். கால்களை தெனாவட்டாக வைத்து உட்காரும்.  

ஸ்காட்டிஷ் உல்ஃப்

 Photo - 2. asms2014.org

3. ஜப்பான் பாப்டைல்

 மிகக் குறுகிய முயலைப் போன்ற வால் அமைப்பைக் கொண்டது. இது தென்கிழக்கு ஆசியா மற்றும் ஜப்பானைப் பூர்வீகமாகக் கொண்டது. மனிதர்களிடையே பாசத்துடன் நெருங்கிப் பழகுவதால் பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகளாக வலம் வருகிறது. மென்மையான கொஞ்சும் குரலில் வளர்ப்பவர்களிடம் தொடர்பு கொள்ளும் வகையில் இருப்பதால் அதிபுத்திசாலி என்றே இவற்றைச் சொல்லலாம். இவற்றின் குறும்புத்தனமாக விளையாட்டுக் குணம்தான் பலராலும் வீடுகளில் விரும்பி வளர்க்கக் காரணம். 

ஜப்பான் பாப்டைல்

 Photo - Mental Floss


4. காவோ மானி

 தாய்லாந்து நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டது. இதன் கண்கள் வைரத்தைப் போன்று இருப்பதால் வைரக்கண் பூனை என்றும் அழைக்கப்படுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பூனையினம் வாழ்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. முழுவதும் வெண்மையான இப்பூனையின் தோல் குறுகிய நீளமுள்ள முடிகளைக் கொண்டுள்ளது. விரைவாக ஓடுவது, தாவிக்குதிப்பதில் வல்லமைப் படைத்தது. இந்த இனம் அழிவினை நோக்கிச் சென்ற காரணத்தால் இனப்பெருக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

காவோ மானி

 Photo - Cat Breed Selector


5. சவானா 

சாதாரண பூனை மற்றும் ஆப்பிரிக்கப் பூனையின் கலப்பினத்தில் உருவாக்கப்பட்டது. உயரமான கால்களையும், மெல்லிய தோல்களையும் கொண்டிருக்கும். நீண்ட கழுத்து மற்றும் கரும்புள்ளிகளுடன் உள்ள தோலானது சிறுத்தையைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. பழகுவதற்கு இனிமையான குணம் கொண்டவை.

சவானா 

 Photo - F1Hybrids Savannah Cats

6. டீ கப் பர்ஷியன்

குறுகிய உடலும், உருண்டை முகமும், நீண்ட முடிகளையும் கொண்டது. மத்திய கிழக்கு நாடுகளில் இரானிய பூனை எனவும், இரான் நாட்டில் சிராஜி பூனை எனவும் அழைக்கப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் இப்பூனை விரும்பி வளர்க்கப்படுகிறது. குறுகியக் கால்களைக் கொண்டது. அப்பாவியான உருவமும், குணமும் கொண்டது. இவை பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே செல்ல விரும்புவதில்லை என்பதால் அப்பார்ட்மென்ட் வாசிகளுக்கு ஏற்றது. மென்மையான குரல், சுத்தம், எல்லோரிடமும் நட்புப் பாராட்டுவது இவற்றின் பொதுவான குணங்களாகும்.

டீ கப் பர்ஷியன்

 Photo -Catster


7. மன்ச்கின்

மரபணு மாற்றம் காரணமாக குறுகிய கால்களை உடையது.  குறும்புத்தனம், இனிமையான குணம், அதிகமான அறிவுத்திறன் ஆகியவற்றைக் கொண்டது. மனிதக் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடப்பவை. குள்ளமான கால்கள் கொண்டிருப்பதால் குறுகிய உயரம் மட்டுமே தாவும். 1995-ம் ஆண்டு சர்வதேசப் பூனைகள் சங்கம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட  இப்பூனையை அங்கீகரித்தது.  

மன்ச்கின்

 Photo -7.  petcha

8. பிக்ஸி பாப்

கொழுக் மொழுக் என கொழுத்துக் காணப்படும். சுமார் 5 கிலோ எடை வரை வளரக் கூடியது. இதன் முழு அளவிலான வளர்ச்சி சுமார் 4 ஆண்டுகள் வரை நீடிக்கும். உள்ளங்கால்களில் கருமை நிறத் தோல்களுடன் கூடிய முடிகளைக் கொண்டுள்ளது. 2 முதல் 4 இன்ச் அளவிலான வாலைக் கொண்டது. பேரிக்காய் வடிவிலான தலையும் கொண்டது. 

பிக்ஸி பாப்

 Photo - PetGuide

 

இவற்றைப் போல பல அழகான பூனை வகைகள் உலகில் நிறைந்திருக்கின்றன. 

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

காதல், பெண் குழந்தை, வைரல் போட்டோஸ்... தோனி - அஜித் இடையிலான ஒற்றுமைகள்!

 
 

அஜித் - தோனி... இருவருக்குமான ஒற்றுமை `தல' என்ற ஒற்றை வார்த்தையில் இருந்து தொடங்குகிறது. இந்த இருவரின் பெயரிலும் கை வைப்பது, கரண்ட் கம்பத்தில் கை வைப்பதற்குச் சமம். இருவருக்குமே தமிழ்நாடு பூர்வீகம் கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் இந்த இருவரையும் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஐ.பி.எல் கல்லாவோடு கலைகட்டிக்கொண்டிருக்கும் நேரம் இது. இந்த இருவரில் யார் தல என்ற வாக்குவாதத்திற்கு போவதற்கு பதில், இருவருக்குமான ஒற்றுமைகளைப் பற்றிப் பார்ப்போம்! 

அஜித் தோனி

`உங்களுக்கு கார் பிடிக்குமா, பைக் பிடிக்குமா?' என்ற கேள்வியை இரண்டு 'தல'யிடமும் கேட்டால், இருவருமே `ரெண்டும்' என்ற பதிலை கோரஸாக சொல்வார்கள். தல எனும் டைட்டிலுக்குப் பிறகு இருவருக்குமிடையே உள்ள நெருக்கமான பிணைப்பு, பைக் மற்றும் கார். இருவருமே பைக் காதலர்கள். சினிமா, ஷாலினி என்ற இரு காதலுக்கு முன் அஜித்தின் முதல் காதல் பைக்தான்!. அது அவரை பல பந்தயங்களில் கலந்துகொள்ள வைத்தது. இன்னும் சொல்லப்போனால் பைக் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொள்வதற்காகவே சினிமாவுக்குள் வந்தவர்தான், அஜித்.  

நம்ம கேப்டன் தோனியும் அப்படித்தான். ஜார்கண்டில் அதிகமாக வரி கட்டக்கூடியவர். அவர் வாங்கிய முதல் பைக்கில் இருந்து லேட்டஸ்ட் பைக் வரை, மொத்தம் 30-க்கும் மேற்பட்ட பைக்குகள் அவரது கேரேஜில் குடிகொண்டிருக்கின்றன. இதில், கவாஸகி நின்ஜா H2, ஹெல்கேட் X132, நின்ஜா ZX-14R, ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய், யமஹா தண்டர்கேட், டுகாட்டி 1098 என மொத்தம் 22 'சூப்பர் பைக்'குகள் அடக்கம். அதேபோல், ஃபெராரி 590 GTO, ஆடி Q7, ஹம்மர் H2, அவுட்லாண்டர், லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர், அமெரிக்காவின் புகழ்பெற்ற GMC சியரா என்னும் முரட்டுத்தனமான எஸ்யூவி, ஆடி Q5 எனக் கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட கார்கள் அதே கேரேஜில் முறுக்கிக்கொண்டு நின்றுகொண்டிருக்கும். 

அஜித் - தோனி

அடுத்ததாக, இருவரையும் இணைக்கும் இன்னொரு விஷயம் `ஹெலிகாப்டர்'. ஒரு தல பந்தை பவுண்டரிக்கு விரட்ட, ஹெலிகாப்டரின் ரெக்கைகள் சுழறுவதைப்போல் சுழற்றி பந்துக்கு பனிஷ்மென்ட் கொடுப்பார். இன்னொரு தலயிடம் ஹெலிகாப்டரை ஓட்டும் திறன் மட்டுமல்ல, ஓட்டுநர் உரிமையே உள்ளது. தோனி ஐ.பி.எல் போட்டிகளில் ஹெலிகாப்டர் ஷாட்களால் சிக்ஸர்களைப் பறக்கவிட்டால், அஜித் எம்.ஐ.டி-யில் ஹெலிகாப்டர்களை இயக்கக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரல் ஆக, `பொம்மை ஹெலிகாப்டரை ஓட்ட எதுக்கு இந்த சீன்?' எனக் கலாய்த்து மீம்ஸ் போட்டனர். ஆனால், அஜித் கற்றுக்கொடுத்த அந்தக் குட்டி ஹெலிகாப்டர்தான் பெரிய ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கான பேஸ் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இப்படிப் பொதுவான விஷயங்கள் இருவருக்கும் பொருந்திப்போகும். கொஞ்சம் யூ-டர்ன் அடித்து பொது நிகழ்வுகளில் இவர்களின் ஆக்டிவிட்டிகளைப் புரட்டினாலும், இருவரின் வாழ்க்கையிலும் ஒரேமாதிரியான பல விஷயங்களைப் பார்க்கலாம். அஜித் பிரஸ் மீட், பேட்டிகள் என எதிலும் தலைகாட்ட மாட்டார். தோனியும் அப்படியே...  பேட்டிகளிலும் பெரிதாக ஆர்வம் காட்டியதில்லை. காரணம், 2007 உலகக்கோப்பை போட்டிகளின்போது அவர் வீட்டின் முன்பு நடந்த சில சோகச் சம்பவங்கள். 

அஜித் - தோனி

அதேபோல்தான் அஜித்தும் சில படங்கள் தோல்வியுற்ற பின், மீடியாவிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிட்டார். பேட்டிகளில், இவரிடம் கேட்டும் கேள்விகளுக்கு ஓப்பனான பதில்கள் வரும். ஒருமுறை `உங்களுக்கு அடுத்த சூப்பர் ஸ்டாரா ஆகும் ஆசை இருக்கா?' என்ற கேள்விக்கு, `ஓ யெஸ், கண்டிப்பா எனக்கு ஆசை இருக்கு. இந்தக் கனவை நான் கண்டா அது கொழுப்பு கிடையாது' என்று பதிலளித்தது பெரும் சர்ச்சை ஆனது. அந்த விமர்சனங்களுக்குப் பிறகு இவர் பேட்டி தருவதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்க்கத் தொடங்கிவிட்டார்.  

எந்தப் பிரபலங்களுக்கும் இல்லாத ஒற்றுமை, இந்த இருவருக்கும் இருக்கிறது. தோனியையும், அஜித்தையும் நிறைய பொது இடங்களில் பார்க்கலாம் அல்லது வீட்டோடு நேரத்தை கழிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். தோனி அவருடைய நாய்க்குட்டியோடு எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டாலும் சரி, அஜித் அவரது மகளின் பள்ளி விழாவில் கலந்துகொள்ளும் நிகழ்வு புகைப்படமாக வெளியானாலும் சரி... இருவரது புகைப்படங்களும் காட்டுத்தீ போலப் பரவி குறைந்தது ஒரு வாரமாவது வைரல் லிஸ்டில் இடம்பெறும்.  

தோனி

பெர்சனல் வாழ்க்கையிலும் காதல் திருமணம், முதல் குழந்தை பெண் குழந்தை என இருவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இந்த இருவருக்கும் இரண்டு முரண்பாடுகளும் உண்டு. ஒன்று, தல அஜித்தின் ரசிகனாக இருப்பவர்கள், தோனியை 'தல' என்று கூப்பிடுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேபோல கிரிக்கெட் ரசிகர்கள், `தோனி மட்டும்தான் தல' என்று அஜித் ரசிகர்களுக்கு எதிராக இருப்பார்கள். இதற்கு, சமீபத்தில் 'தல' என்ற பெயருக்காக தோனி - அஜித் ரசிகர்களுக்கு இடையே நடந்த இணைய சண்டையே சாட்சி. 

ஆனால், இருவருக்கும் ரசிகனாக இருப்பவர்கள் இருவரையுமே 'தல' என்று ஆத்மார்த்தமாக அழைப்பார்கள். ஆகவே, கிரிக்கெட்டில் தோனி தல என்றால், சினிமாவில் அஜித் 'தல'!  

https://cinema.vikatan.com/

  • தொடங்கியவர்

மெட் காலா நிகழ்வு - விலையுயர்ந்த ஆடைகளில் மின்னிய ஹாலிவுட் நடிகைகள் (புகைப்படத் தொகுப்பு)

 

மெட் காலா நிகழ்வு - விலையுயர்ந்த ஆடைகளில் மின்னிய நடிகைகள்

 

பிரியங்கா சோப்ரா

உலகம் முழுவதிலும் உள்ள பிரபல திரைப்பட நடிகர்களையும், ஆடை வடிவமைப்பாளர்களையும் ஒருசேர இணைக்கும் நிகழ்வுதான் மெட் காலா. நியூயார்க் நகரின் சிறப்பம்சமாக கருதப்படும் இந்நிகழ்வு, அங்குள்ள கலை ஆடை குறித்த பெருநகர அருங்காட்சியத்தின் நன்மைக்காக நடத்தப்படும் பிரம்மாண்ட விழாவாகும்.

ஒவ்வொரு ஆண்டும் விழாவில் பங்கேற்பவர்கள், குறிப்பிட்ட தலைப்புகளின்கீழ் வித்தியாசமான, மிகவும் விலைமதிப்புள்ள ஆடைகளை அணிந்து வருவார்கள்.

இந்த ஆண்டுக்கான தீம் ஃபேஷனையும், கத்தோலிக்க கற்பனைகளை எடுத்துரைக்கும் ஆடைகளை மையமாகக் கொண்டிருந்தது.

ஹாலிவுட்டை சேர்ந்த பல நடிகர் - நடிகைகள் மிகவும் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு.

கிம் கதார்ஷியன்

 

கிம் கர்தாஷியன்

தீபிகா படுகோனே

 

தீபிகா படுகோனே

செலினா கோமெஸ்

 

செலினா கோமெஸ்

பிரியங்கா சோப்ரா

 

பிரியங்கா சோப்ரா

கேட் பெர்ரி

 

கேட் பெர்ரி

ரிஹானா

 

ரிஹானா

ஸ்கார்லெட் ஜான்சன்

 

ஸ்கார்லெட் ஜான்சன்

ஜெனிஃபர் லோபஸ்

 

ஜெனிஃபர் லோபஸ்

https://www.bbc.com

  • தொடங்கியவர்

திருமணத்துக்கு 2 நாட்கள் முன்பு காதலனை சந்தித்த பெண்: நெகிழ்ச்சியான ஃபேஸ்புக் காதல்


 

 

this-couple-s-love-story-who-fell-in-love-without-meeting-each-other-will-reinforce-your-faith-in-love

 

காதல் எங்கே, எப்போது தோன்றும் என யாராலும் சொல்ல முடியாது. முகநூலிலேயே பேசி ஒருவருக்கொருவர் பார்க்காமல் கூட காதல் வரலாம் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கலாம். அவ்வளவு ஏன்? முகநூலில் பேசி காதலித்து திருமணம் செய்து கொள்வதை ஏற்றுக்கொள்ளாதவர்களும் உண்டு. 

அவர்கள் அனைவரும் மும்பையை சேர்ந்த சினேகா சௌத்ரி மற்றும் ஹர்ஷ் மேத்தாவின் காதல் கதையை தெரிந்துக்கொள்ள வேண்டும். சினேகா சௌத்ரி எப்படி ஹர்ஷை முகநூலில் மட்டுமே பேசி காதலித்தார்? பின் எப்படி திருமணம் செய்துகொண்டனர்? என்பதை ‘ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே’ என்ற முகநூல் பக்கத்தில் தன் அழகிய வார்த்தைகளிலேயே பகிர்ந்து கொண்டுள்ளார்.

திருமணம் செய்துகொள்ள வேண்டும் என சினேகா சௌத்ரி முடிவு செய்தபோது அவருக்கு வயது 28. அப்போது, தனக்கு தெரிந்த ஆண் நண்பர்களிடம் பேசி பார்த்துள்ளார். ஆனால், அவர்களிடம் காதல் உணர்வோ, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமோ சினேகாவுக்கு ஏற்படவில்லை. “அந்த சமயத்தில் தான் என்னுடைய ஃபேஸ்புக்கில் ஹர்ஷ் என்பவரிடம் இருந்து 'நாம் இருவரும் ஒருவருக்கொருவர் ஏற்கனவே அறிந்திருக்கிறோமா?’ என மெசேஜ் வந்திருந்தது. அதற்கு நான் பதில் அளித்தேன். அன்றிலிருந்து நானும் ஹர்ஷூம் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் உரையாடினோம்” என்கிறார் சினேகா.

அன்றிலிருந்து இருவரும் தங்களுடைய நண்பர்கள், வாழ்க்கை குறித்தெல்லாம் பேசியிருக்கின்றனர். அந்த சமயத்தில் ஹர்ஷ் ஆஸ்திரேலியாவில் வசித்துள்ளார். சினேகா மும்பையில் இருந்திருக்கிறார். “ஆனால், எங்களுக்குள் நாங்கள் இத்தனை தொலைவை உணரவே இல்லை. எங்களின் உரையாடல்கள் உயிர்ப்புடன் இருந்தது.”என கூறுகிறார் சினேகா.

“நாங்கள் ஒரு மாதம் தொடர்ந்து பேசினோம். ஆனால், அது எங்களுக்கு ஒரு வருடம் போல் இருந்தது. நேரம் மெதுவாக கடந்து கொண்டிருந்தது. பேசிக்கொண்டே இருந்தோம். ஆனால், எங்களுக்கு போதவில்லை. ஒரு நாள் 18 மணிநேரம் தொடர்ந்து பேசியது கூட நினைவு இருக்கிறது. செல்போன் சார்ஜ் இல்லாவிட்டால், லேப்டாப்பில் ஸ்கைப் மூலம் பேசுவோம். நான் அடிமையாகி விட்டது போன்று உணர்ந்தேன். அவருடன் எதனையும் பகிர்ந்துகொள்ளாமல் இருந்தால் அந்த நாளே எனக்கு முழுமையடையாது” என்கிறார் சினேகா.

ஒருநாள் ஹர்ஷ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், ‘நான் காதலில் இருக்கிறேன் என நினைக்கிறேன்’ என பதிவிட்டிருக்கிறார். அதன்பிறகு சினேகாவுடன் பேசும் போதெல்லாம் ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என உரையாடலின் முடிவில் சொல்வது ஹர்ஷின் வழக்கமாகியிருக்கிறது. அதற்கெல்லாம், ‘ஓகே, நன்றி’ என்று மட்டுமே சினேகா சொல்லி வந்திருக்கிறார்.

“ஒருமுறை எனக்கு மூன்று கூழாங்கற்களின் படத்தை ஹர்ஷ் மெயில் அனுப்பியிருந்தார். நான் ஏற்கனவே பெங்குயின்கள் எப்படி நேர்த்தியான கூழாங்கற்களை தேர்ந்தெடுத்து, தன்னுடைய துணையின்  காலுக்கடியில் வைத்து காதலை வெளிப்படுத்தும் என்பதை அவரிடம் சொல்லியிருந்தேன். அதனால் அவர் அனுப்பியிருந்த கூழாங்கற்கள் எதனைக் குறிக்கின்றன என்பது எனக்கு தெரிந்திருந்தது. அந்த கூழாங்கற்களில் ‘என்னை திருமணம் செய்துகொள்கிறாயா?’ என எழுதப்பட்டிருந்தது. நான் சிறிதும் தயக்கமின்றி சம்மதித்தேன்” என தன்னுடைய காதல் அனுபவத்தை பகிர்கிறார் சினேகா.

அதுவரை சினேகாவும் ஹர்ஷூம் ஒருமுறை கூட நேரில் பார்த்தது இல்லை. அதன்பிறகு தான் ஹர்ஷ் ஆஸ்திரேலிலியாவில் இருந்து மும்பை வந்துள்ளார். எப்போது தெரியுமா? அவர்களுடைய திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான். பெற்றோர்கள் சம்மதமின்றி சட்டப்படி பதிவு செய்து திருமணம் செய்துகொண்டனர்.

”திருமணமாகி 3 வருடங்களாகின்றன. நிறைய சாலை வழிப் பயணங்களை மேற்கொள்கிறோம். 90களின் இசையை கேட்கிறோம். நிறைய கேள்விகளை கேட்டுக் கொள்கிறோம். அதில் ஒன்று, “ஃபேஸ்புக்கில் யார் முதலில் நட்பு அழைப்பைக் கொடுத்தது என்பது”. என மகிழ்ச்சியுடன் தன் காதல் கதையை முடிக்கிறார் சினேகா.

http://www.kamadenu.in

  • தொடங்கியவர்
‘ஒழுக்கமான பிள்ளைகளையே உலகம் விரும்பும்’
 

image_2b36673f46.jpgகுழந்தைகளுக்கு மட்டுமல்ல, வளர்ந்த பிள்ளைகளுக்கும் பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் அவசியமானது. இவ்வாறு இன்றேல், இவர்களினூடாக குடும்பப் பிணைப்பு படிப்படியாக விலகுவதற்குக் காரணமாகிவிடும். 

இன்று இளைஞர்கள், யுவதிகள் பலர், கேட்பாரின்றி தங்கள் ஒழுக்க வாழ்வை, உடைத்து வருகின்றமையைச் சகலரும் அறிவார்கள். இஷ்டப்படி இவர்கள் வாழ்வதற்கு, இவர்கள் வாழ்ந்த குடும்ப அமைப்பும் சூழ்நிலையும் தான் காரணமாகின்றன. 

பண்பாடு அறியாமல் கண்மூடித்தனமாக இயங்கும் நிலை உருவாகக் கூடாது. பிள்ளைகளின் தவறுகள் பெற்றோருக்குப் புரியாமல் இருக்கின்றன. தெரிந்தும் அதை மறுக்கும் தாய், தந்தை, பின்னர் மனம் நொந்து போகின்றனர். 

இல்லங்கள் அன்பையும் பண்பையும் வளர்க்கும் அதிமுக்கிய கேந்திர நிலையங்களாகும். கட்டுப்பாடும் ஒழுக்கமும் அழுத்தமாகப் பிரயோகிக்கப்படும் ஸ்தானம் அதுதான். ஒழுக்கமான பிள்ளைகளையே உலகம் விரும்பும்.  

  • தொடங்கியவர்

ருக்மிணி, சத்யபாமாவின் கர்வத்தை பகவான் கண்ணன் எப்படிப் போக்கினார் தெரியுமா? #FeelGoodStory

 
 

கவான் கண்ணன் ருக்மிணி - சத்யபாமா சமேதராக  துவாரகையில் அருளாட்சி செய்துகொண்டிருந்த காலம் அது. கண்ணன் சாட்சாத் தெய்வத்தின் அவதாரமல்லவா? எனவே, தன்னுடைய கருணைத் திறத்தை எடுத்துக் காட்ட எத்தனையோ லீலைகளை பகவான் நிகழ்த்தியிருக்கிறார். அவற்றுள் தூய பக்தியின் இயல்பை, இலக்கணத்தை எடுத்துச் சொல்லும் சம்பவம் இது...

கண்ணன்

ருக்மிணிக்கும் சரி, சத்யபாமாவுக்கும் சரி பகவான் கண்ணனிடம் தங்களை விடவும் அன்பும் பக்தியும் கொண்டவர் வேறு யாரும் இருக்க முடியாது என்ற கர்வம் ஏற்பட்டுவிட்டது. என்னதான் பகவானின் பக்தர்களானாலும், அவர்களுக்கு கர்வம் வந்துவிடும்போது பக்தியின் தரம் தாழ்ந்துவிடுகிறது. அவர்களிருவரும் கொண்ட கர்வத்தைப் போக்கத் திருவுள்ளம் கொண்டார் கண்ணன்.

ஒருநாள், துவாரகையில் கடுமையான தலைவலி வந்துவிட்டதுபோல் துடித்துக்கொண்டிருந்தார் கண்ணன். ருக்மிணியும் சத்யபாமாவும் கலங்கிவிட்டனர். அரண்மனை வைத்தியர்கள் வந்து பார்த்து சிகிச்சை செய்தும்கூட கண்ணனின் தலைவலி தீரவேயில்லை. என்ன செய்வதென்றே புரியாமல் தவித்தனர். 

அந்த நேரம் பார்த்து நாரதர் அங்கு வந்து சேர்ந்தார். பகவானுக்கே தலைவலி என்றால் அதில் ஏதோ விஷயமும் கூடவே விஷமமும் இருக்கும் என்பது நாரதருக்குப் புரிந்துபோனது. ஆனாலும், அவரும் செய்வதறியாமல் திகைத்து நின்றார்.

தலைவலியால் துடிப்பதுபோல் நடித்துக்கொண்டிருந்த பகவான் கண்ணன், ''என்ன, எல்லோரும் என் வேதனையைப் பார்த்துக்கொண்டு சும்மா நிற்கிறீர்கள்? என் தலைவலியைத் தீர்க்கும் மருந்து உங்கள் யாரிடமும் இல்லையா? என்று கேட்டார் கண்ணன்.

''சுவாமி, பிணியும் நீங்கள்தான் - பிணிக்கு மருந்தும் நீங்கள்தான். தெரிந்துகொண்டே தெரியாதது போல் கேட்கிறீர்களே. உங்கள் தலைவலியைப் போக்கும் மருந்து எதுவென்று நீங்களே கூறிவிடுங்கள். கொண்டு வந்து குணப்படுத்திவிடுகிறோம்'' என்று கூறினர்.
''என்னுடைய கடுமையான தலைவலி தீரவேண்டுமென்றால், அதற்கு ஒரே மருந்துதான் உள்ளது. என்னிடம் உண்மையான பக்தியும் அன்பும் கொண்ட அடியார் ஒருவரின் பாததூளி (காலடி மண் துகள்கள்) பட்டால் என் தலைவலி தீரும்'' என்றார். 
அவர் அப்படிக் கூறியதுமே எல்லோருமே தயங்கினர். அவர்கள் எல்லோருக்கும் கண்ணனிடம் அன்பும் பக்தியும் இருந்தாலும்கூட, தங்கள் பாத தூளிகளை பகவானின் நெற்றியில் வைப்பது என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. 

'பகவானின் பாததூளிகளை நெற்றியில் இட்டுக்கொண்டால் அது பவித்ரமானது. அதனால் புண்ணியமும், பகவானின் திருவடிகளை அடையும் பாக்கியமும் கிடைக்கும். ஆனால், நம்முடைய பாததூளிகளை பகவானின் நெற்றியில் வைத்தால், பெரும் பாவமல்லவா நம்மைச் சேரும்' என்றெண்ணி தயங்கினார்கள். 

குழல் ஊதும் கண்ணன்

பகவானின் பார்வை இப்போது நாரதர் பக்கம் திரும்பியது. நாரதர் மெள்ளத் திரும்பி ருக்மிணியைப் பார்த்தார். ருக்மிணியோ சத்யபாமாவைப் பார்த்தாள். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்களே தவிர, யாருக்கும் தங்கள் பாததூளிகளை எடுத்து பகவான் கண்ணனின் நெற்றியில் இடுவதற்குத் துணிவில்லை.

நாரதருக்கோ இரண்டு வகையில் பயம். தன்னுடைய பாத தூளியை பகவானின் நெற்றியில் இட்டு, அதனால் தான் நரகத்துக்குப் போய்விடக்கூடாதே என்ற அச்சமும், அப்படி நெற்றியில் இட்டும் பகவானின் தலைவலி தீரவில்லையென்றால், எங்கே தன்னுடைய பக்தி பொய்யென்று ஆகிவிடுமோ என்ற அச்சமும் அவரைத் தயங்கச் செய்தது. 

இவர்கள் இப்படியெல்லாம் யோசித்துத் தயங்குவதைக் கண்ட பகவான், ''சரி, உங்களில் யாரும் உங்கள் பாததூளியைத் தராவிட்டாலும் பரவாயில்லை. அது நீங்கள் என்னிடம் காட்டும் மரியாதையைத்தான் குறிக்கிறது'' என்றவர் நாரதரைப் பார்த்து,

''நாரதரே, நீங்கள் நேராக பிருந்தாவனம் செல்லுங்கள். கோபியர்களைப் பாருங்கள். நான் இங்கே தலைவலியால் துடித்துக்கொண்டிருப்பதையும், அதற்கு உரிய மருந்தையும் அவர்களிடம் கூறுங்கள். என்னிடம் பக்தி கொண்ட யாராவது பாததூளியைத் தந்தால் வாங்கிக்கொண்டு வாருங்கள்'' என்று கூறியனுப்பினார்.

நாரதரும் பிருந்தாவனத்துக்குச் சென்றார். நாரதரைக் கண்டதுமே அவரைச் சூழ்ந்துகொண்ட கோபியர்கள், அவர் துவாரகையிலிருந்து வருகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு, ''நாரதரே, பகவான் கண்ணன் நலமாக இருக்கிறாரா?'' என்று அன்பு மேலிட விசாரித்தனர். 
துவாரகையில் பகவான் கண்ணன் தலைவலியால் துடித்துக்கொண்டிருப்பதாகவும், அதற்குரிய மருந்தான பாததூளியைப் பெற்றுச் செல்லவும் தாம் வந்திருப்பதாகக் கூறினார். 

நாரதர் இப்படிக் கூறியவுடனே கோபியர்களால் தாங்கமுடியவில்லை. பலருக்கு மயக்கமே வந்துவிட்டது. அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. பிறகு தங்களை ஒருவாறு தேற்றிக்கொண்டவர்கள், பகவானின் தலைவலி தீருவதற்குத் தங்கள் பாததூளிகளைத் திரட்டித் தர முன்வந்தார்கள். ராதையின் கட்டளைப்படி கோபியர்களில் ஒருத்தி தன் மேலாடையை எடுத்துக் கீழே விரித்தாள். மற்ற கோபியர்கள் அனைவரும் அந்தத் துணியை மிதித்துக்கொண்டு ஓடினர். பிறகு அந்த ஆடையில் குவிந்த பாததூளிகளை ஒரு மூட்டையாகக் கட்டி நாரதரிடம் கொடுத்து, ''நாரதரே, இதோ எங்கள் பாததூளிகள் அடங்கிய மூட்டை.... எங்களில் யார் உண்மையான பக்தை என்பது தெரியாது. எனவே, எல்லோருடைய பாததூளிகளையும் சேர்த்துத் தந்திருக்கிறோம். உடனே துவாரகைக்குச் சென்று பகவானின் நெற்றியிலிட்டு அவருடைய வேதனையைத் தீருங்கள்'' என்றாள் ராதை. 

கண்ணன் ராதை

அதற்கு நாரதர், ''நீங்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்கிறீர்கள் தெரியுமா? உங்கள் பாததூளிகள் பகவானின் தலையில் படுவது பெரும் பாவமல்லவா? அதனால் நீங்கள் நரகத்துக்குச் செல்ல நேரிடுமே. அப்படியிருந்தும் இந்தப் பாவத்தை இத்தனை துடிப்புடனும் ஆர்வத்துடனும் செய்கிறீர்களே?'' என்று கேட்டார்.

அதற்கு ராதை, ''நாரதரே, நாங்கள் நரகத்துக்குச் சென்றாலும் கவலையில்லை. பகவானின் தலைவலி தீர்ந்து, அவர் சுகமடைந்தால் அதுவே எங்களுக்குப் போதும்'' என்று கூறினாள்.

நாரதருக்குத் தெளிவு பிறந்தது. கோபியர்களின் பாததூளிகள் அடங்கிய மூட்டையை எடுத்துக்கொண்டு துவாரகைக்குச் சென்றார். பகவானிடம் கொடுத்தார். பிருந்தாவனத்தில் நடந்ததை விவரித்தார். கண்ணன்,  நாரதர் கொடுத்த மூட்டையைப் பிரித்து அதிலிருந்த பாததூளியை எடுத்துத் தன் நெற்றியில் இட்டுக்கொண்டார்.

'தங்களில் யாருக்கு கண்ணனிடம் அதிக அன்பும் பக்தியும் இருக்குமென்று தெரியாது' என்று கூறிய கோபியர்களின் அடக்கமும், 'தாங்கள் நரகத்துக்குச் செல்ல முடிந்தாலும் பரவாயில்லை. கண்ணனின் தலைவலி தீர்ந்தால் போதும்' என்று கண்ணனிடம் அவர்கள் கொண்ட பக்தி மற்றும் அன்பின் உயர்வைக் கண்டு, ருக்மிணியும் சத்யபாமாவும் தாங்கள் கொண்டிருந்த கர்வத்தை விட்டனர்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இந்த விலங்குகளுக்கு கரு உருவாவதே போராட்டம்தான்! - ஆண்பாவம் கதைகள்

 
 

மனித இனத்தில் பேரு காலம் பத்து மாதங்கள் என்றால் யானைக்கு இரண்டு வருடங்கள். சுறா மீனுக்கு 3.5 வருடங்கள்.  இனப்பெருக்கத்தை பொழுது தாய்மை அடைகிற பெண் உயிரினங்கள் தங்களுடைய கருவைக் காப்பாற்றிக்கொள்ளவே பெரிய போராட்டத்தை நிகழ்த்துகின்றன. ஆனால், ஆண்கள் கருவை உருவாக்கவே பெரிய போராட்டத்தை சந்திக்கின்றன.  இனப்பெருக்கத்திலும், பிள்ளை பெறுவதிலும் இயற்கை பல சுவாரஸ்யங்களைக் கொண்டிருக்கிறது. அதிலும் சில உயிரினங்களில் அப்பாக்களை கொன்ற பிறகே பெண்கள் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கின்றன.

கறுப்பு விதவை சிலந்தி - BLACK WIDOW

கருப்பு விதவை

இவ்வகை பெண்  சிலந்திகள் வலையை விரித்து தன்னுடைய உணவுக்காகக் காத்திருக்கின்றன. தெரியாமல் வந்து வலையில் சிக்குகிற பூச்சிகளை அதன் வலைகளைக் கொண்டு சிறைப்பிடித்து உணவாக அவை எடுத்துக்கொள்கின்றன. கறுப்பு ஆண் சிலந்திகள் பெண் சிலந்தியோடு இணைவதற்குப் பெண் சிலந்தியின் வலை மூலமாக அதிர்வுகளை ஏற்படுத்தி அதன் மூலம் தெரியப்படுத்தும். “நான் உன்னுடைய உணவல்ல, உன்னுடைய ஆண் நண்பர்” என தன்னுடைய எட்டுக் கால்களையும் பயன்படுத்தி நடனமாடிக்கொண்டே பெண் சிலந்தியை நெருங்கும். பெண் சிலந்தியும் ஆண் சிலந்தியை வரவழைத்து அதனோடு இணை சேரும். ஆண் சிலந்தி தன்னுடைய உயிரணுவைப் பெண் சிலந்திக்குள் செலுத்தும். இனப்பெருக்க செயல் முடிவடைந்ததும் ஆண் சிலந்தியின் நடனம் முழுவதுமாக நிற்கும். அதற்காகவே காத்திருந்தது போல உடனே பெண் சிலந்தி தன்னுடைய வலை மூலம் ஆண் சிலந்தியை சிறைப்பிடிக்கும். அதோடு ஆண் சிலந்தியின் வாழ்க்கை அவ்வளவுதான். பொறுத்திருந்து பெண் சிலந்தி ஆண் சிலந்தியை உணவாக்கிக் கொல்லும்.

பிரெயிங்  மேன்டிஸ் - PRAYING MANTIS

ப்ரெயிங் மெண்டிஸ்

பெண் மேன்டிஸ் தன்னுடைய இனப்பெருக்க காலத்தை ஒருவித திரவத்தின் மூலம் ஆண் மேன்டிஸுக்கு தெரியப்படுத்தும். காற்றில் பரவுகின்ற திரவத்தின் வாசனையைத் தெரிந்து கொள்கிற ஆண் மேன்டிஸ் பெண் மேன்டிஸ் இருக்கிற இடத்துக்குக் கிளம்பும். பெண்ணை விட ஆண் மேன்டிஸ்கள் அளவில் சிறியவை. ஆண் மேன்டிஸுக்காக காத்திருக்கிற பெண் மேன்டிஸ் தன்னுடைய முகத்துக்கு நேராக வரும் ஆண் மேன்டிஸை அப்படியே பிடித்து அதன் கை, கால், தலை என ஒன்று விடாமல் சாப்பிட்டு விடும். இப்படி ஒன்றல்ல இரண்டல்ல பல ஆண் மேன்டிஸ்கள் பெண் மேன்டிஸிடம் இரையாகி இருக்கின்றன. பெண் மேன்டிஸ் இனப்பெருக்க நேரத்தில் முட்டைகளை உற்பத்தி செய்ய அதற்குப் பல மடங்கு சக்தி தேவைப்படும். அதற்காக தன்னுடைய முகத்துக்கு முன்னால் வருகிற ஆண் மேன்டிஸ்களை கொன்று தின்றுவிடும். சில புத்திசாலி ஆண் மேன்டிஸ்கள் பெண் மேன்டிஸுக்கு பின்னால் வந்து இனப்பெருக்க செயலைத் தொடக்கி விடுகின்றன. பெண் உடலுக்குள் ஆண் தன்னுடைய உயிரணுக்களைச் செலுத்துகிற நேரத்தில்தான் அந்தச்  சம்பவம் நடக்கும். உயிரணுக்களைச் செலுத்துகிற நேரத்தில் பெண் மேன்டிஸ் ஆண் மேன்டிஸ் தலையைப் பிடித்து உண்ண ஆரம்பித்து விடும். பத்து நொடிகளில் ஆண் தலையை முழுவதுமாக தின்று முடித்து விடும். இப்போது ஆண் மேன்டிஸின் உடல் ஆட்டோ பைலட் மோடுக்கு மாறிவிடுகிறது. இப்போதும் ஆண் உடல் பெண் உடலுக்குள் உயிரணுக்களை செலுத்திக் கொண்டிருக்கும். இனப்பெருக்க செயல் முடிந்ததும் பெண் மேன்டிஸ் ஆண் மேன்டிஸின் உடலை மொத்தமாகச் சாப்பிட்டு விடும்.

ஆழ்கடல் ஆக்டொபஸ் - DEEP SEA OCFeTOPUS

argonaut

Female Argonaut / Photo : Julian Finn

 

மேற்கூறியவற்றை விட சுவாரஸ்யமான உயிரினம் ஆக்டொபஸ். Argonaut என்கிற ஒரு வகை  பெண் ஆக்டொபஸ்கள் இனப்பெருக்கத்தின் பொழுது ஆண் ஆக்டொபஸ்களை கொன்றுவிடுகின்றன. பெண் ஆக்டொபஸ்களைவிட ஆண் ஆக்டொபஸ்கள் உருவத்தில் சிறியவை. அதனால் இனப்பெருக்க செயலின்  முடிவின் பொழுது எளிதாகக் கொன்றுவிடுகின்றன. உயிருக்கு ஆசைப்படுகிற ஆண் ஆக்டொபஸ்கள் இனப்பெருக்க செயல் நடந்துகொண்டிருக்கும்பொழுதே தன்னுடைய இனப்பெருக்க உறுப்பைத் துண்டித்துவிட்டு தப்பி விடுகின்றன. தப்பிப் போகிற ஆண் ஆக்டொபஸ் 2 மாதங்களில் உயிரிழந்து விடும். பெண் ஆக்டொபஸ் முட்டைகள் இட்டதும் இறந்துவிடுகிறது. ஆக்டொபஸ் இனத்தில் முக்கியமான ஒரு வகை DEEP SEA OCTOPUS இவ்வகை ஆக்டொபஸ்  இனப்பெருக்கம் முடிந்த பிறகு தன்னுடைய முட்டைகளை சுமார் 4.5 வருடங்கள் உடலில்  சுமக்கிறது. கடலில் வாழ்கிற மற்ற ஆக்டொபஸ்களின் வாழ்நாளைவிட இது மூன்று மடங்கு அதிகம். 4.5 வருடங்கள் கழித்து முட்டையிடுகிற ஆக்டொபஸ் 14 மாதங்கள் தன்னுடைய முட்டைகளை அடைகாக்கிறது. அதன் பிறகே அதன் குட்டிகள் வெளியே வரும். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

1901 – அவுஸ்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்பேர்னில் திறந்துவைக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று….

மே 09

நிகழ்வுகள்

1502 – கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) ஸ்பெயினில் இருந்து தொடங்கினார்.
1671 – ஐரிஷ் இராணுவ அதிகாரியான தோமஸ் பிளட் லண்டன் கோபுரத்தில் ஆங்கிலேய அரச நகைகளைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான்.
1874 – குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி (omnibus) பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1901 – அவுஸ்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்பேர்னில் திறந்துவைக்கப்பட்டது.
1914 – துடுப்பாட்டத்தில் 3000 முதற்தர விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பெருமையை ஜாக் ஹேர்ண் பெற்றார்.
1919 – இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது. அரிசிப் பாவனை மாதமொன்றிற்கு சராசரியாக 30,000 தொன் இலிருந்து 20,000 ஆகக் குறைக்கப்பட்டது.
1920 – போலந்து இராணுவம் உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றிய வெற்றி நிகழ்வு கிரெசாட்டிக் நகரில் இடம்பெற்றது.
1927 – கன்பராவில் அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் திறந்துவைக்கப்பட்டது.
1933 – மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டார்.
1936 – இத்தாலி அடிஸ் அபாபா நகரை மே 5 இல் கைப்பற்றிய பின்னர் எரித்திரியா, எதியோப்பியா, இத்தாலிய சோமாலிலாந்து ஆகிய நாடுகளை இணைத்து இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்ற நாடு உருவாகியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: டென் ஹெல்டர் என்ற இடத்தில் பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பலை ஜெர்மனிய யு-9 நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்தது.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் யு-110 நீர்மூழ்கிக்கப்பலை பிரித்தானியக் கடற்படையினர் தாக்கிக் கைப்பற்றினர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: உக்ரேனில் சின்கிவ் நகரில் 588 யூதர்கள் நாசிகளினால் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் கடைசி ஜெர்மன் படைகள் சோவியத் தளபதி கியோர்கி சூக்கொவ் இடம் சரணடைந்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவில் நிலை கொண்டிருந்த ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர். சிலொவேனியாவில் போர் முடிவுக்கு வந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனிய இராணுவத் தளபதி ஹேர்மன் கோரிங் அமெரிக்க இராணுவத்தால் கைப்பற்றப்பட்டான்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட நோர்வேயின் அதிபராக இருந்த விட்குன் உயிஸ்லிங் நோர்வேயில் கைது செய்யப்பட்டார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் பிராக் நகரை அடைந்தன.
1945 – இரண்டாம் உலகப் போர்: கால்வாய் தீவுகள் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டன.
1945 – கிழக்குப் போர்முனை: இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது.
1955 – பனிப்போர்: மேற்கு ஜெர்மனி நேட்டோவில் இணைந்தது.
1956 – உலகின் 8-வது உயரமான மலையான மனஸ்லுவின் உச்சி முதன் முதலாக ஜப்பானிய மலையேறிகளால் எட்டப்பட்டது.
1980 – புளோரிடாவில் லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் பாலம் ஒன்றில் மோதியதில் பாலம் சேதமடைந்ததில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
1985 – காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
1987 – போலந்து பயணிகள் விமானம் வார்சாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 183 பேர் கொல்லப்பட்டனர்.
1988 – கன்பராவில் அவுஸ்திரேலியாவின் புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
2002 – ரஷ்யாவில் காஸ்பீஸ்க் என்ற இடத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
2004 – செச்னியா அதிபர் அகமது காதீரொவ் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
2007 மே 09ம் திகதி தினகரன் தமிழ் நாளிதழில் வெளியான சர்வே காரணமாக திராவிட முன்னேற்ற கழகத்தில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னையால் மதுரையில் இருந்த தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதில் தினகரன் ஊழியர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1408 – அன்னமாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1503)
1866 – கோபால கிருஷ்ண கோகலே இந்திய சுதந்திர போராட்ட வீரர், (இ.1915)
1954 – மல்லிகா சாராபாய் இந்திய சமூக ஆர்வலர்.
சிறப்பு நாள்

ரஷ்யா – வெற்றி நாள் (1945)
ஆர்மேனியா – வெற்றி நாள்
ஐரோப்பிய ஒன்றியம் – ஐரோப்பிய நாள்

http://metronews.lk

  • தொடங்கியவர்

`என்னைக் கவர்ந்த முதல் பெண் இவர்தான்’ - ப்ளஸ் டூ ரகசியத்தை உடைத்த தோனி

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி முதல் முறையாகத் தனது முதல் க்ரஸ் யார் என்பதை மேடையில் அறிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தோனி

 

கூல் கேப்டன் தோனி குறைந்த சுய விவரத்தை வைத்திருப்பவர். தன் தனிப்பட்ட வாழ்க்கை விஷங்களைப் பொது இடங்களில் பகிர்ந்து கொள்ள இவருக்கு அதிகம் பிடிக்காது. ரசிகர்களும் அவரின் சொந்த வாழ்க்கை குறித்து பேசுவதை சற்று விரும்பாதவர். இப்படியிருக்க, இவர் முதல் முறையாகத் தன்னை கவர்ந்த முதல் பெண் யார் என்பதை மேடையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடர் கிரிக்கெட் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை அணி மீண்டும் களமிறங்கியதால் அந்த அணி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு சற்றும் குறைவில்லாத வகையில் சி.எஸ்.கே தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த அணிக்கு ஸ்பான்சர் செய்யும் கல்ஃப் ஆயில் (Gulf Oil) நிறுவனத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சி.எஸ்.கே அணியின் மற்ற வீரர்களான வாட்சன், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா போன்றோர் கலந்துகொண்டனர்.

shakshio_16182.jpg

நிகழ்ச்சியின் தொகுப்பாளர், சி.எஸ்.கே அணி வீரர்களுக்குச் சிறிய மைண்ட் ரீடிங் கேம்ஸை செய்து காட்டினார். நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து மிகவும் சுவாரஸ்யமாகச் சென்றுகொண்டிருந்தது. இதன் இறுதியில் பேசிய தொகுப்பாளர், “விழா முடியும் தருவாயில் உள்ளது. இப்போது தோனியின் முதல் க்ரஸ் யார் என்பதை நாம் தெரிந்துகொள்ள போகிறோம்” எனக் கூறினார். இதைக் 
கேட்டவுடன் அங்கிருந்தவர்கள் மிகவும் ஆரவாரம் செய்தனர். அதன் பின் மேடையின் நடுவில் தோனியை அழைத்த தொகுப்பாளர், இப்போது உங்களின் க்ரஸ் பெயரில் எத்தனை எழுத்து இருக்கிறது எனக் கூறுங்கள் எனக் கேட்டார். அதற்கு தோனி சிறிது யோசித்துவிட்டு
5 எனப் பதிலளித்தார். அதன் பின், அந்தப் பெயர் குறித்து சில கேள்விகள் தோனியிடம் கேட்கப்பட்டது. அதன் பின் தொகுப்பாளர், தன் கையில் வைத்திருந்த ஒரு பேப்பரில் தோனி நினைத்த பெயரை எழுதினார். பின்னர் அது மற்ற வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மட்டும் காட்டப்பட்டது. இறுதியில் அந்தப் பெயரை (Swathi) தோனியிடம் காட்டி இதுதான் நீங்கள் நினைத்த பெயரா எனத் தொகுப்பாளர் கேட்டார். அதற்கு சிறிது தயங்கியபடி ‘ஆம்’ எனப் பதிலளித்த தோனி. பிறகு, இதை என் மனைவி சாக்‌ஷியிடம் சொல்லிவிடாதீர்கள் எனக் கூறினார். ஸ்வாதியைக் கடைசியாக நான் 12-ம் வகுப்பு படிக்கும்போது பார்த்தது எனவும் தெரிவித்தார். தோனியின் பேச்சைத் தொடர்ந்து சிறிது நேரம் அரங்கமே கலகலப்புடன் காணப்பட்டது. 

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

‘காலா’ பாடல்கள் வெளியீடு!

  • தொடங்கியவர்
‘ஒருத்தியைவிட உலகு பெரிது’
 

image_9db75ac1ce.jpgகல்லூரி காதல் எல்லா சமயங்களிலும் சரியாகப் பொருந்துவதில்லை. நீயின்றி நான் இல்லையெனச் சொல்லிக் கொள்ளும் காதலர்கள் சிலர் தாங்களாகவே விரும்பிப் பிரிவதுண்டு.  

ஆனால், இவன், அவளை இப்படி நேயம் பூண்டதேயில்லை. கல்லூரியை விட்டுச் சென்ற அவள், பல்கலைக்கழக வாழ்வில் தன்னை இணைத்ததும் இவனை; இவன் காதலைத் துண்டித்துவிட்டாள். 

செல்வமும் கல்வியும் இருக்க காதல் என்ன காதல்? வசதியுள்ளவனுடன் இணைந்து கொண்டாள். அவள் நினைத்ததுபோல் திருமணவாழ்வு அமையவில்லை. காசைக் கட்டிக்கொண்டு, அன்பை துண்டித்தால் இல்லறம் சுவைக்குமோ? தவித்துப் போனாள். 

காதலியால் கலங்கியவன், சிலவருடம் புலம்பினான். பின்னர் தெளிந்தான். கல்வியைத் தொடர்ந்தான். கழகத்துடன் இணைந்து பிரபல்யமானான். நீண்ட நெடுங்காலம் கழிந்து அவனை அவள், பொதுநிகழ்வில் கண்டுகொண்டாள். கண்டுகொண்டேன் இவனை; இவன் இன்னமும் காணவில்லை. காணவும் கூடாது, என் துன்ப நிலை தெரியக்கூடாது. மறைந்து சென்று ஒளிந்துகொண்டாள்.  

அட உனனை நான் காணவில்லை என நினைத்தாய்; உன்னை கண்டேன். நான் என்ன நினைத்து தேய்ந்தாய்? இந்த காதலைவிட மக்கள் சேவை பெரிதாய் இருக்கிறது. இந்த ஒருத்தியைவிட உலகு பெரிது- நிம்மதியுடன் நகர்ந்தான்.  

  • தொடங்கியவர்

நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்: மே10- 1994

 
அ-அ+

நெல்சன் மண்டேலா (18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013) தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத்

 
 
 
 
நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்: மே10- 1994
 
நெல்சன் மண்டேலா (18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013) தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார்.

இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

1994 மே 10-ந்தேதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனபின், 1998-ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன்பின் 1999-ல் பதவியை விட்டு விலகினார். இவர் 2-வது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார்.

மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008-ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5-ந்தேதி தனது 95-வது அகவையில் காலமானார்.
 
 
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1810 - ஆர்ஜெண்டீனாவின் தலைநகரான புவெனஸ் அயரெஸ் நகர மண்டபத்தை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.

* 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்கக் கூட்டுப் படைகளினால் ஜோர்ஜியாவில் கைப்பற்றப்பட்டார்.

* 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தளபதியான வில்லியம் குவாண்ட்ரில் என்பவரை கென்டக்கி என்ற இடத்தில் தாக்கி படுகாயப்படுத்தினர். இவர் ஜூன் 6-ல் இறந்தார்.

* 1871 - பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடையில் இடையிலான போர் பிரான்ஸ் சரணடைந்ததுடன் முடிவுக்கு வந்தது.

* 1877 - ருமேனியா துருக்கியிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

* 1908 - அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வெர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது.

* 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது குண்டு இங்கிலாந்தில் கெண்ட் பகுதியில் வீழ்ந்தது.

* 1940 - இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய நாடுகளுக்குள் ஜெர்மனி ஊடுருவியது.
 
 
 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஒரு வேலையை `நாளைக்கு...’ என்று தள்ளிப்போடலாமா? - யதார்த்தம் சொல்லும் கதை #MotivationStory

 

 

`ன்றைக்கு ஒரு பொறுப்பிலிருந்து நழுவதன் மூலம், நாளைக்கு அதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்; அது முடியாது’ - முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரஹாம் லிங்கன் உணர்ந்து சொன்ன வாக்கியம் இது. பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பது என்பது கடமையிலிருந்து தவறுவதற்கு ஒப்பானது. படிக்கும் நேரத்தில் படிப்பு; வேலை பார்க்கவேண்டிய நேரத்தில் வேலை... இப்படித் தங்களுக்கான கடமையை உணர்ந்து செய்கிறவர்களால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. வெளியூர் செல்வதற்கு காலை ஆறு மணி பேருந்தை எதிர்பார்த்து ஒரு சிறுநகரத்தில் காத்திருக்கிறர் ஒரு முதியவர். உரிய நேரத்தில் அந்தப் பேருந்து வந்தால்தான் அவரைப் போன்ற பயணிகளுக்கு நிம்மதி. அதன் ஓட்டுநர் ஏதோ காரணத்தால் விடுமுறை எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்காகப் பேருந்து சேவை நின்றுவிடுமா? நிற்காது. மாற்றாக இன்னோர் ஓட்டுநரைப் போட்டு பேருந்தை இயங்கச் செய்வார்கள். அதே நேரத்தில் இந்த `மாற்று’ ஏற்பாடு எப்போதும் கைகொடுப்பதும் இல்லை `ஒரு வேலையை நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்’ என்று தள்ளிப்போடுவது ஒருபுறம் `சோம்பல்’ என்று தோன்றலாம். இதுவும் பொறுப்பிலிருந்து நழுவுகிற காரியம்தான். காரணமே இல்லாமல் வேலைக்குப் போகாமல் இருப்பது, பொய் சொல்லி விடுமுறை எடுப்பது... இவையெல்லாம் நமக்கு சுகமாகத் தெரியலாம். ஆனால், அதன் பின்விளைவு நம்மை பாதிக்கவே செய்யும். இப்படி நம் பொறுப்புகளிலிருந்து பின்வாங்குவது சில நேரங்களில் நம்மை கூனிக் குறுகிப் போகச் செய்துவிடும். அதை உணர்த்தும் கதை இது...

 

கதை

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. மாலை நேரம். கல்லூரி மாணவர்கள் நான்குபேர் ஒன்று கூடினார்கள். கேட்க வேண்டுமா? உற்சாகம் கரைபுரண்டது. நால்வரும் சேர்ந்து ஒரு சினிமாவுக்குப் போனார்கள். பிறகு ஒரு ரெஸ்டாரன்ட்டில் டின்னர் சாப்பிட்டார்கள். அவர்களில் ஒருவன் தனியாக ஓர் அறை எடுத்துத் தங்கியிருந்தான். அங்கே போய் கும்மாளமடிப்பது என்று முடிவு செய்தார்கள். அந்த நண்பனின் அறையில், நள்ளிரவுக்கும் மேல் பேசி, சிரித்து, டி.வி பார்த்து, மொபைலில் கேம் விளையாடி எனக் களித்துத் தீர்த்தபோது நள்ளிரவைத் தாண்டியிருந்தது. படுக்கப் போகும்போதுதான் அவர்களில் ஒருவன் நினைவுபடுத்தினான். ``மச்சி நாளைக்கு நமக்கு கெமிஸ்ட்ரி எக்ஸாம் இருக்குடா...’’ அடுத்த நாள் பரீட்சைக்கு அவர்கள் தயாராகியிருக்கவில்லை.

அது ஒன்றும் முக்கியமான பரீட்சை இல்லை. பேராசிரியர் தன் மாணவர்களின் திறனை அறிய நடத்தும் மாதாந்திரப் பரீட்சைதான். என்றாலும், கெமிஸ்ட்ரி புரொஃபஸர் கொஞ்சம் கறாரானவர். இன்டர்னல் மார்க்கில் தாட்சண்யமில்லாமல் கைவைத்துவிடுவார். அந்த மாணவர்கள் என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

தேர்வு

அடுத்த நாள் காலை அந்த நான்கு மாணவர்களும் வந்தபோது கல்லூரியே அவர்களை வேடிக்கை பார்த்தது. நான்கு பேரும் கலைந்த தலை, சட்டையில் தூசு, மண், கிரீஸ் படிந்திருக்க அழுக்காக வந்திருந்தார்கள். வகுப்பறைக்குள் வந்த புரொஃபஸர் அவர்களை விசாரித்தார்.

மாணவர்களில் ஒருவன் சொன்னான்... ``சார் நேத்து என்னோட சித்தி பொண்ணுக்குக் கல்யாணம் சார். நான்தான் இவங்களையும் `வாங்கடா’னு கூட்டிட்டுப் போயிருந்தேன். கல்யாணம்லாம் முடிஞ்சு ஒரு கார்ல கிளம்பிட்டோம். நம்ம ஊருக்கு வர்ற வழியில காரோட ஒரு டயர் பஞ்சர் ஆகிடுச்சு. அக்கம்பக்கத்துல எந்த வொர்க்‌ஷாப்பும் இல்லை. அதனால நாலு பேரும் காரைத் தள்ளிக்கிட்டே வந்து சேர்ந்தோம்...’’

``சரி... அப்புறம்?’’

``சார்... நாங்க இன்னும் வீட்டுக்குக்கூடப் போகலை சார். இன்னிக்கி எக்ஸாம் இருக்கேனு கெளம்பி நேரா இங்கே வந்துட்டோம்...’’ என்றான் இன்னொருவன்.

``ம்...’’ பேராசிரியர் அவர்களின் துயரக் கதையைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தார்.

``எங்களுக்கு மட்டும் இன்னிக்கி டெஸ்ட் வைக்காம, இன்னொரு நாள்வெச்சீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும் சார்...’’

பேராசிரியர் அதற்கு ஒப்புக்கொண்டார். `சரி... உங்களுக்கு மட்டும் மூணு நாள் கழிச்சு பரீட்சை’’ என்றார்.

தேர்வு

அந்த நால்வரும் பேராசிரியருக்கு நன்றி சொன்னார்கள். பரீட்சை நாள் வந்தது. அன்றைக்கு அந்த மாணவர்கள் தங்கள் பாடங்களை நன்றாகப் படித்திருந்தார்கள். பேராசிரியர் அந்த நால்வரையும் அழைத்துக்கொண்டு போய் தனித்தனி அறைகளில் உட்காரவைத்தார். அவர்களுக்குக் கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது. அதில் அதிகமில்லை... இரண்டே கேள்விகள்தான் கேட்கப்பட்டிருந்தன.

1. உங்களுடைய பெயர் ______________ ( 1 மதிப்பெண்)

2. நீங்கள் பயணம் செய்த காரில் எந்த டயர் வெடித்தது? ______________ (கீழ்க்கண்ட நான்கு விடைகளில் ஒன்றை எழுதவும் - 99 மதிப்பெண்கள்)

விடை: அ) காரின் முன் இடது பக்க டயர் ஆ) காரின் முன் வலது பக்க டயர் இ) காரின் பின் இடது பக்க டயர் ஈ) காரின் பின் வலது பக்க டயர்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

19p1_1525672889.jpg

ந்த வார வரவான ‘நா பேரு சூர்யா... நா இல்லு இந்தியா’ படத்தில் அல்லு அர்ஜூனின்  ‘ஷூ ஸ்டெப்’ டான்ஸுக்கு  சில்லறையைச் சிதறவிட்டுக்கொண்டிருக்கிறார்கள் ஆந்திராவாலாக்கள். தமிழிலும் தனக்கான மார்க்கெட்டை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார் அல்லு. தமிழில் தன் முதல் படத்தை இயக்க, அல்லுவின் விஷ் லிஸ்டில் முதலாமிடத்தில் இருப்பவர் அட்லி.


35p1_1525674776.jpg

யோகா, புத்தக வாசிப்பு என்று முழுக்க பாசிட்டிவ் மோடில் இருக்கிறார் அமலா பால். அவரது ‘அதோ அந்தப் பறவை போல’ படம் முழுக்க முழுக்க காட்டிலேயே படமாக்கப்படுகிறது. “இயற்கையோடு இணைந்திருத்தல் எப்பவுமே பெஸ்ட்” என்கிறார் அமலா பால்!


25p1_1525674791.jpg

னுராக் காஷ்யப் மூலம் பாலிவுட்டில் அறிமுகப்படுத்தப்பட்டவர் ஹூமா குரேஷி. ‘பில்லா-2’-விலேயே தமிழில் அறிமுகமாகியிருக்க வேண்டியவர். படப்பிடிப்பு தாமதமானதால் அதிலிருந்து விலகிவிட்டார். “அதுவும் நல்லதுக்குத்தான். இப்ப ‘காலா’ மூலம் கிராண்ட் என்ட்ரி!” என்கிறார் ஹூமா.   

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கார்களின் கண்காட்சி

 
q-%282%29_09052018_KAA_CMY.jpg

யாழ். நகரில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி எதிர்வரும் 13இல் திகதி யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. கண்காட்சியில் Ultra light Pickup, Solar Powered baby car, Pedal Power car போன்ற கார்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.காட்சிக்கு தயாராகும் கார் ஒன்றையே காண்கிறீர்கள்.

http://www.thinakaran.lk

  • தொடங்கியவர்

'மைக்’ மோகன் வாழ்க!


 

 

actor-mike-mohan-birthday

 

கமல்ஹாசனைத் தேடிக்கொண்டே இருப்பார் ரோஜாரமணி. ஒருநாள், சாலையில் செல்வதைப் பார்த்துவிட்டு, ஓடிவந்து, முதுகைத் தொடுவார். அவர் திரும்பிப் பார்ப்பார். ஆனால் அவர் கமல் இல்லை. ஏமாற்றத்துடன் செல்வார் ரோஜாரமணி. ஆனால் விஷயம் இதுவல்ல. அங்கே முதுகு தொட்டதும் திரும்பிய நபர் வேறு யாருமல்ல. நடிகர் மோகன்!

கோகிலா எனும் கன்னடப்படத்தில், கமல்தான் ஹீரோ. பாலுமகேந்திரா இயக்கினார். சான்ஸ் கேட்டு வந்த மோகனுக்கு, ஓரளவு கமல் சாயலில் இருந்ததே வாய்ப்பை வழங்கியது. அன்று முதுகு தொட்டதும் திரும்பிய மோகன், அடுத்தடுத்த கட்டங்களில், நம் எல்லோரையும் அவர் பக்கமாகத் திருப்பினார்.

தமிழில் மூடுபனி, நெஞ்சத்தைக் கிள்ளாதே என்று ஹிட் படங்களாகக் கிடைத்தன. கோவைத்தம்பி படத்தயாரிப்பில் இறங்கலாம் என நினைத்தபோது அவருக்கு ஆர்.சுந்தர்ராஜன் கதை சொன்னார். இருவரும் இளையராஜாவிடம் செல்ல, அவருக்கும் கதை சொல்லப்பட்டது. மறுநாளே... படத்துக்கான டியூன்களை ராஜா போட்டுக்கொடுக்க, நெஞ்சத்தைக் கிள்ளாதே மோகனையே படத்துக்குப் போடலாம் என்று முடிவாகி, அவருக்கும் கதை சொல்லப்பட்டு, ஓகே சொல்ல... அப்படி உருவானதுதான் பயணங்கள் முடிவதில்லை.

அதையடுத்து, கோவைத்தம்பி கம்பெனிக்குச் செல்லப்பிள்ளையானார் மோகன். உதயகீதம், நான்பாடும் பாடல், இதயக்கோயில் என்று தயாரிப்பாளர்களின் நடிகராகவும் தூங்காத கண்ணின்று ஒன்று, குங்குமச்சிமிழ் என்று இயக்குநர்களின் நடிகராகவும் இந்தப் படங்களால், ரசிகர்களின் நடிகராகவும் ஒளிர்ந்தார் மோகன்.

’இளைய நிலா பொழிகிறதே...’ பாடலும் கிடார் இசையும் அவரே பாடுவது போல் நமக்குள் ஏற்படுத்திய பிரமை மறைவதற்குள், சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்’ என்று பாடிக் கிறங்கடித்தார். ‘யார் வீட்டிலோ ரோஜா பூப்பூத்ததோ..’ என்று பாடும் போது, மைக் இவருக்கு ஆறாம்விரலாகி மாமாங்கமாகி விட்டிருந்தது.  இத்தனைக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மோகனுக்கு, தமிழ் ஓரளவு பேசத் தொடங்கியப் பிறகும் கூட, எஸ்.என்.சுரேந்தர்தான் குரல் கொடுத்தார். சுரேந்தர் சத்தியமே செய்தாலும் மோகனையும் அந்தக் குரலையும் இணைத்தே ரசித்த ரசிகர்கள், ‘அப்படிலாம் இருக்காது’ என்று உண்மையைப் பொய்யாய் நம்பியதில்தான் மோகனின் தடமும் அவருக்கான இடமும் தனித்திருக்கிறது.

’மலையோரம் வீசும் காத்து’, ‘இதயம் ஒரு கோயில்...,’ நிலவு தூங்கும் நேரம்’, ‘தீர்த்தக்கரை ஓரத்திலே’, ‘நிலாவே வா’... என்று மோகனுக்கென்றே பாடல்கள் அமைந்தது, அவர் வாங்கி வந்த வரமோ என்னவோ?

‘இப்படித்தான் நடிக்கணும்’, ’இப்படித்தான் முடியும்’ என்றெல்லாம் நினைக்காமல், எப்படி வேண்டுமானாலும் தன்னை உள்ளிருத்திக் கொண்டு, நடிப்பிலும் மெருகேற்றிக் கொண்டவர் மோகன். எண்பதுகளின் காதலர்களுக்கு, கிளிஞ்சல்கள்தான் சொர்க்கபூமி. அந்தப் படம்தான் காதல்வேதம். அவரால் உருகி உருகி காதலித்து, காதலிக்காகவும் காதலுக்காகவும் உயிரை விடவும் முடிந்தது. காதலியை ஏமாற்றிவிட்டு, கர்ப்பமாக்கி, கோர்ட், கேஸ் என்று விதி ராஜாவாகவும் வலம் வர முடிந்தது. ஒவ்வொருவராய்க் கொன்று சுவருக்குள் புதைக்கவும் செய்த நூறாவது நாள் படத்தின் வில்லனிக் ஹீரோவாகவும் அசத்தவும் செய்தார்.

ஒருகட்டத்தில், மைக் மோகன் என்று அடைமொழியும் சேர்ந்துகொண்டது. அப்படித்தான் உரிமையுடன் மைக்கைக் கொண்டே அடையாளம் காணப்பட்டார் மோகன்.

மெல்லத் திறந்தது கதவு பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டானது. இளமைக்காலங்கள் படத்தில் பாடல்களும் கனமான கதையும் ‘ஊட்டிக்குப் போகாதீங்க’ என்ற ஜனகராஜின் குரலும் முக்கியமாக... ‘ஈரமான ரோஜாவே...’ பாடலும் அந்தப் படத்தை சில்வர் ஜூப்ளி படமாக்கின. அநேகமாக, குறைந்த முதலீட்டில், அதிக லாபம் சம்பாதித்துக் கொடுத்த நடிகர், மோகனாகத்தான் இருப்பார்.

சிறிய படம், பெரிய படமென்றாலும் பார்க்கவில்லை. சிறிய இயக்குநர், பெரிய இயக்குநர் என்கிற பேதமும் இல்லை. ஒரு படத்தில் கூட, சம்பளம் அதிகம் கேட்கிறார், சம்பளம் கறாராகக் கேட்கிறார், கால்ஷீட் சொதப்புகிறார், உரிய நேரத்துக்கு ஸ்பாட்டில் இருப்பதில்லை, அந்த நடிகைக்கு சிபாரிசு செய்கிறார் என்கிற சினிமாவுக்கே உண்டான எந்தக் குற்றச்சாட்டுகளும் இவர் குறித்து எவரும் சொன்னதில்லை. இதெல்லாம், மோகனிடம் இருந்து இன்றைய திரையுலகினர் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம். அவரின் படங்கள் ஒவ்வொன்றும் எண்பதுகளின் ரசிகர்களுக்கு, தேன் திருவிழா.

ஹைவேஸ் சாலைகளில், மோட்டல்களின் வாசல்களில் இன்றைக்கும் பட்டொளி வீசிப் பறந்து பறந்து விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன, மோகன் ஹிட்ஸ் சிடிக்கள்.

கமல் போன்ற ஹேர் ஸ்டைல், கமலைப் போலவே காஸ்ட்யூம், கமல் போலவே நடை, கமல் போலவே புன்னகை என்று ஆரம்பகட்டத்துக்கு அவை கைகொடுத்தாலும் அதையும் தாண்டி, அந்த மைக் பிடிக்கிற லாகவமும் பாடலுக்கு தலையை அசைக்கிற லயமும் எனர்ஜெட்டிக்காகவோ மிகப்பெரும் சோகத்துக்கு ஆட்பட்டுள்ளதை அப்படியே காட்டுகிற உடல்மொழியும் மிக முக்கியமான அந்த ஒன்றோடு ஒன்றென ஒட்டிக்கொண்டிருக்கு அந்தப் பாதிப் பல்... என மோகனை அந்தக் காலத்துப் பெண்கள், கனவு நாயகனாகவே பார்த்தார்கள்.

ஒருகாலத்தில் ஹீரோவாக கோலோச்சியவர்கள், ஒருகட்டத்தில் வில்லனாகவோ நாயகியின் அழகிய அப்பாவாகவோ நடித்து, ஒருரவுண்டு வருவார்கள். அதற்கு மத்தியில், நாயக பிம்பத்தில் இருந்து இம்மியளவும் இறங்கி வராத மோகனின் கெத்து ஒருவகையில், ரசிக்கத்தக்கது.

கமல் படம், ரஜினி படம் என்றிருக்கும். ஆனால் மோகன் படம் என்றால், குடும்பத்தோடு பார்க்கலாம். குடும்பத்தார் எல்லோருக்கும் பிடித்த நடிகராக வலம் வந்த மோகன்... இளையராஜாவின் வழியே இன்றைக்கும் இரவுகளில் நினைப்புக்கு வந்துவிடுகிறார்.

இயல்பு மீறாத நடிப்பின் மோகனுக்கு, இன்று (10.5.18) பிறந்தநாள். அவர் இன்னும் இன்னும் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் அதே சந்தோஷ உற்சாகத்துடனும் வாழ... வாழ்த்துவோம். வாழ்த்துகள் மோகன்!

 

 

http://www.kamadenu.in

  • தொடங்கியவர்

ஹவாயில் காரை விழுங்கும் எரிமலை தீ!

  • தொடங்கியவர்

இந்திய அணியை வழிநடத்தும் தெருவோரச் சிறுமி! - ரஷ்யாவில் தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து

 
 

தெருவோரச் சிறுவர்களுக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி இன்று ரஷ்யாவில் தொடங்கியது. இதில், சென்னையைச் சேர்ந்த ஒன்பது சிறுமிகள் பங்கேற்றுள்ளனர். `போட்டிக்குத் தயாரானபோது நமது குழந்தைகள், மிகவும் சிரமப்பட்டனர். ஒரு வருட பயற்சிக்குப் பிறகு நல்ல முன்னேற்றத்தைக் காட்டினர்' என்கின்றனர் போட்டி ஏற்பாட்டாளர்கள். 

கருணாலயா

 

உலகம் முழுவதும் தெருக்களில் வாழும் சிறுவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால் பந்துப் போட்டி நடைபெற்று வருகிறது. ஃபிஃபா (FIFA) கமிட்டியின் விதிகளைப் பின்பற்றி இந்தப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த வருடம் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் போட்டிகள் தொடங்கியுள்ளன. வரும் மே 17-ம் தேதி வரையில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 14 வயது முதல் 17 வயது வரையிலான சிறுவர்- சிறுமிகள் பங்கேற்கின்றனர். 29 நாடுகளிலிருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா சார்பில் விளையாடுவதற்கு, ஒன்பது தெருவோரச் சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளைக் கருணாலயா தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. இந்தச் சிறுமிகளில் நான்கு பேர் சென்னையில் தெருவோரங்களிலும் மற்றவர்கள் தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பிலும் வளர்கின்றனர். இந்தியா சார்பில் முதல்முறையாக இந்தச் சிறுமிகள் போட்டியில் பங்கேற்கின்றனர். 

foot_18565.jpg

பிரேஸில் அணியுடன் இந்திய அணி சிறுமிகள்

தெருவோரச் சிறுமிகளின் பின்புலம் குறித்து நம்மிடம் பேசிய கருணாலயா நிர்வாகிகள், `` சென்னை, வால் டாக்ஸ் ரோட்டில் பாத்திரங்கள் தயாரிப்பவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 17 வயதான சங்கீதா என்ற சிறுமி, இன்று 9 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணியை வழிநடத்துகிறார். அதேபோல், மூன்று தலைமுறைகளாக தெருவில் வசித்து வரும் குடும்பத்தில் பிறந்த கோமதி, முக்கிய ஃபீல்டராகக் களமிறங்குகிறார். 17 வயதான ஷாலினி, இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் கோயம்பேடு பகுதியில், தாய் வாங்கிய கடனுக்காக வயதான ஒருவருக்குத் திருமணம் செய்ய முயன்ற சம்பவத்திலிருந்து தப்பித்து வந்தவர். இவர்கள் அனைவரும் இயற்கையிலேயே மனதளவிலும் உடல் அளவிலும் வலிமை பெற்றவர்கள். இவர்களுக்குப் பயிற்சி அளிக்க தொடங்கியபோது, மிகவும் கடினமாகவே உணர்ந்தார்கள். ஆனால், ஒரு வருட பயிற்சியில் நல்ல முன்னேற்றத்தைக் காட்டினார்கள். இந்த முயற்சியில் பயிற்சியாளர் கண்ணதாசனின் பங்கு மிகவும் முக்கியமானது. இவர் கடந்த 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற தெருவோரச் சிறுவர்களுக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இந்தியா சார்பாக விளையாடியவர். 

russia_18200.jpg

ரஷ்ய வீரர்களுடன் இந்திய அணி வீரர்கள்

கருணாலயா அமைப்பின் நிறுவனர் பால் சுந்தர் சிங்கிடம் பேசியபோது, ``ரஷ்ய போட்டிக்குத் தேர்வான தெருவோரச் சிறுமிகளில் பலருக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லை. இவர்களை வெளிநாடு அழைத்துச் செல்வதிலும் பள்ளிகளில் சேர்ப்பதிலும் மிகுந்த சிரமம் இருந்தது. ஒரு வருட முயற்சிக்குப் பிறகு நமது சிறுமிகள், ரஷ்யாவில் கால்பதித்துவிட்டார்கள். நிச்சயம் வெற்றியுடன் திரும்புவோம்" என்றார் நம்பிக்கையோடு. 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘மாந்தரை மதிக்கக் கற்றுக்கொள்வதே பெருமை’
 

image_0f2600739d.jpgகடையில் பொருளொன்றை வாங்கியவர், காசைக் கொடுத்துவிட்டு சற்று யோசித்த பின்னர், வேறொரு பொருளைக் கேட்டு வாங்கிக்கொண்டு, மறதியாகச் செல்ல நிலைத்த போது, கடைக்காரர், “ஐயா! காசு தரவில்லை” என்றார். “என்ன, காசு தரவில்லையா? நான் ஐந்நூறு ரூபாய் தந்துவிட்டேனே!” என்று பரபரப்புடன் கூறினார்.

“அப்படியா?” என்றவர், சற்று நேரத்தில், “சரி... சரி...” என்றவர், சற்சேனும் கூச்சப்படாமல், “உங்கள் காசை எடுத்துக்கொண்டு ஓடவா போகிறேன்” என்று, வெறுப்பு உமிழ, வேண்டா வெறுப்புடன், எஞ்சிய காசைக் கொடுத்தார்.

இத்தகையச் செயல்களை, பஸ் நடத்துநர்களிடமும் நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கும். முதலில், பயணிகளிடம் கெஞ்சிக் கூட்டாடி, அவர்களை பஸ்களில் ஏற்றிக்கொண்ட பின்னர், காசைப் பிடிங்கிக் கொள்வார்கள். மிகுதியைக் கேட்டால், சீறிப் பாய்வார்கள். பஸ் தரிப்பிடம் வரும்வரை, நடத்துநர் ஓடி ஒளிந்துகொண்டு வித்தை  காட்டுவார். முடிவில், பயணியின் நிர்பந்தத்தில் பஸ் நிறுத்தப்பட்டதும், சில்லரைகளை அள்ளி வீசுவார்.

ஆனால், கொடுத்த காசில் பல ரூபாய்களை விழுங்கிவிட்டிருப்பார். அநேகமான தனியார் பஸ்களில், இவையெல்லாம் சகஜமான காரியங்களாகும். அவர்கள், பயணிகளுடன் கௌரவமாகப் பேசவும் மாட்டார்கள்.

மாந்தரை மதிக்கக் கற்றுக்கொள்வதே பெருமை.

  • தொடங்கியவர்

46 ஆண்டுகளாக உண்ணும் உணவில் வியக்க வைக்கும் ஒரு சாதனை…!

அமெரிக்காவை சேர்ந்த ஓய்வு பெற்ற சிறைக்காவலர் ஒருவர் 46 ஆண்டுகளாக Big Mac எனப்படும் பர்கர் சாப்பிட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார். இவர் 28,788 பர்கர் சாப்பிட்ட நிலையில் 46 ஆண்டுகளாக தொடர்ந்து சாப்பிட்டு வந்ததில், அதன் எண்ணிக்கை இரண்டு நாட்களுக்கு முன்பு 30,000 பர்கர் என்ற எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

இது குறித்து அவர் தெளிவுபடுத்துகையில், ஒரு நாளைக்கு இரண்டு தடவை பர்கர் சாப்பிடுவேன், கடந்த 46 ஆண்டுகளில் 8 நாட்கள் மட்டுமே பர்கர் சாப்பிடாமல் இருந்துள்ளேன். இதனால் எனது ஆரோக்கியம் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. 86 கிலோ எடையில் இருப்பதாகவும் பர்கரில் உள்ள சோஸ் அவர் விரும்பி உண்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் 1972 ஆம் ஆண்டிலிருந்து பர்கர் வாங்கியதற்கான ரசீதையும் பாதுகாப்பாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

நியூயார்க்கில் மிளிர்ந்த பிரியங்கா சோப்ரா... சர்ச்சைக்குள்ளான ரெட் கார்பெட்! #MetGala2018

 
 

'ஃபேஷன்' விரும்பிகளுக்கான மிகப்பெரிய நிகழ்வு, 'Met Gala 2018' நியூயார்க் நகரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. வித்தியாசமான தலைப்புக்கு ஏற்றதுபோல், ஹாலிவுட் பிரபலங்கள் தங்களின் ஆடைகளை வடிவமைத்து, நிகழ்வின்போது உடுத்துவது வழக்கம். இது முழுக்கமுழுக்க ஆடை வடிவமைப்பின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஓர் வித்தியாச ஃபேஷன் நிகழ்வு. இதில் இந்திய நடிகை ப்ரியங்கா சோப்ரா வித்தியாச உடை அணிந்து மிளிர்ந்தார்.

பிரியங்கா சோப்ரா

 

அந்த வகையில் இந்த ஆண்டின் தலைப்பு, ''Heavenly Bodies: Fashion and the Catholic Imagination'. தலைப்பே சர்ச்சையைக் கிளப்பியது. மதம் சார்ந்த தலைப்பு என்பதால் பல தரப்பினரும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். கிறிஸ்துவர்களின் ஒரு பிரிவான 'கத்தோலிக்க' சமூகத்தைச் சார்ந்திருப்பதால், சச்சரவுகள் இருக்கத்தானே செய்யும். இருப்பினும், ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் விதவிதமான அழகிய ஆடைகளை வடிவமைத்து அரங்கையே வண்ணத்தால் நிறைத்தனர்.

பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு 'போப்' மற்றும் கத்தோலிக்கர்கள் அதிகம் வாழும் வாடிகன் நகரிலிருந்து இந்த நிகழ்வுக்கான அனுமதி பெறப்பட்டது. 'மதம் சம்பந்தப்பட்ட தலைப்பு... கொஞ்சம் தவறு நேர்ந்தாலும் பெரிய பிரச்னை ஆகிவிடுமே!' என்கிற பயம் அனைத்து வடிவமைப்பாளர்கள் மனதிலும் இருந்தது. பொதுவாகவே Dolce & Gabbana, Versace போன்ற முன்னணி பிராண்டுகள், தங்களின் ஆடைகளில் மதம் சார்ந்த டிசைன்களைப் பயன்படுத்திய வரலாறுகள் உண்டு. அந்த வகையில் இந்த Met Gala நிகழ்வு அவர்களுக்குப் பெரிய சவாலாகவே அமைந்தது.

பல்வேறு தடைகளைக் கடந்து, எண்ணற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களின் கற்பனைத்திறனால் உருவாக்கிய பல ஆடைகள் நியூயார்க் நகரையே திரும்பிப் பார்க்க வைத்தன. அதில் சில முக்கிய ஆடைகளின் அணிவகுப்பு இதோ.

Rihanna


வித்தியாசமான ஆடைகள், ஒப்பனை என்று தனக்கென்று தனிப்பட்ட ஸ்டைலை பின்பற்றும் பிரபலப் பாடகி ரிஹானா, முத்துக்கள் மற்றும் கிரிஸ்டல் கற்கள் பதித்த நீண்ட ஆடை, அதற்கேற்ற கிரீடம் என மேசன் மார்ஜீலாவின் உடையில் 'போப்' தோற்றத்தைக் கண்முன் நிறுத்தினார்.

ஜேர்ட் லீடோ மற்றும் லானா டெல் ரே


பிரபல இசைக்கலைஞர்களான ஜேர்ட் லீடோ மற்றும் லானா டெல் ரே முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருந்தனர். லீடோ, இயேசு அவதாரத்தில், தங்க கிரீடம் அணிந்தும், லானா டெல், க்ரீம் நிற கவுன், பறவைபோன்ற கிரீடம், 3 -D வடிவிலான வாள்கள் தோய்த்த இதயம் என மாறுபட்டத் தோற்றத்தில் அனைவரையும் கவர்ந்தனர்.

Lily Colins


'Mirror Mirror', 'The English Teacher' போன்ற வெற்றிப்படங்களில் நடித்த லில்லி கொலின்ஸ், கறுப்பு நிற ஆடை அணிந்து, செயற்கையான சிவப்பு நிற கண்ணீர் ஒப்பனை செய்திருந்தார்.

Cardi B


பிரபல அமெரிக்க ராப்பரான கார்டி பி, வயிற்றில் தன் குழந்தையை சுமந்தபடி விழாவைச் சிறப்பித்தார். கிரீடம் மற்றும் ஆடை முழுதுவதும் முத்துக்கள் பதித்து, அன்னை மேரி தோற்றத்தில் ஜொலித்தார்.

கிரெட்டி கேர்விக்


நடிகை, எழுத்தாளர், இயக்குநர் என்று ஹாலிவுட்டின் most wanted பிரபலம் கிரெட்டி கேர்விக், அதிக வேலைப்பாடுகள் ஏதுமில்லாத கன்னியாஸ்திரி உடை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

சாட்விக் போஸ்மன்


சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்த 'Black Panther' படத்தின் நாயகன் சாட்விக் போஸ்மன், வெள்ளை நிற பேன்ட், சட்டை, ப்ளேசர் மற்றும் 'Cape'களில் தங்கத்திலான சிலுவை மற்றும் பூக்கள் மோட்டீஃப் பதித்து, பேந்தரிலிருந்து பாதிரியாரானார்.

Priyanka Chopra


பாலிவுட் பியூட்டி பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டிலும் தனக்கென்று தனி இடத்தைத் தக்கவைத்துள்ளார். ஹாலிவுட்டில் முதன்மை கதாபாத்திரத்துக்கு தேர்வாகி, Quantico தொடர், Baywatch திரைப்படம் என பிளாக் பஸ்டர்களை அடுக்கிய முதல் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராதான். இந்த Met Galaவில், தலைப்பிற்கேற்ற வெல்வெட் கவுனுடன், தங்க 'Hood' அணிந்து அழகு தேவதையாய் ஜொலித்தார் பிரியங்கா. இவரின் இந்த வித்தியாச தோற்றத்துக்கு பலர் பாராட்டுகளைத் தெரிவித்தனர். 'நூறு சதவிகிதம் தலைப்புக்கு ஏற்ற உடை' எனவும் பலர் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.

 

ஜேடன் ஸ்மித், செலீனா கோமெஸ், ஜெனிபர் லோபெஸ், அரியானா கிராண்ட், கிம் கார்தர்ஷியன், மேலும் பல பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

1960 – முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமானது.

வரலாற்றில் இன்று….

மே 11

நிகழ்வுகள்

1502 – கொலம்பஸ் தனது கடைசியும் கடைசியுமான கடற் பயணத்தை மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆரம்பித்தார்.
1812 – லண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவல் ஜோன் பெல்லிங்ஹம் என்பவனால் கொல்லப்பட்டார்.
1857 – இந்தியக் கிளர்ச்சி, 1857: இந்தியப் புரட்சியாளர்கள் டெல்லியை பிரித்தானியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
1867 – லக்சம்பேர்க் விடுதலை அடைந்தது.
1891 – ஜப்பானில் பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய மன்னர் இரண்டாம் நிக்கலாஸ் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
1905 – அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.
1924 – மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் அலூசியன் தீவுகளின் அட்டு தீவைக் கைப்பற்றினர்.
1949 – சியாம் நாடு தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1949 – ஐக்கிய நாடுகள் அவையில் இசுரேல் இணைந்தது
1953 – டெக்சாசில் இடம்பெற்ற சூறாவளியில் 114 பேர் உயிரிழந்தனர்.
1960 – முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமானது.
1985 – இங்கிலாந்தில் உதைப்பந்தாட்ட போட்டியொன்றில் அரங்கில் இடம்பெற்ற தீயினால் 56 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.
1987 – முதலாவது இதய மாற்றுச் சத்திர சிகிச்சை மேரிலாந்தில் நடத்தப்பட்டது.
1997 – ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி முதன் முதலாக காரி காஸ்பரவை சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்தது.
1998 – இந்தியா பொக்ரானில் மூன்று அணுச் சோதனைகளை நடத்தியது.

பிறப்புக்கள்

1895 – ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இந்தியத் தத்துவஞானி (இ. 1986)
1897 – சுத்தானந்த பாரதியார், கவியோகி (இ. 1990)
1897 – ஜார்ஜ் பீட்டர் மர்டாக், மானிடவியலாளர் (இ. 1985)

இறப்புகள்

1976 – அல்வார் ஆல்ட்டோ, பின்லாந்து கட்டிடக்கலைஞர் (பி. 1898)

சிறப்பு நாள்

தேசிய தொழில் நுட்ப தினம் – இந்தியா

http://metronews.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.