Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

"உழைக்கும் பெண்கள்": பிபிசி நேயர்களின் சிறந்த புகைப்படங்கள் #BBCTamilPhotoContest

"உழைக்கும் பெண்கள்" என்பதை மையக்கருவாகக் கொண்டு பிபிசி தமிழ் நடத்திய 30ஆவது வார புகைப்படப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட பிபிசி நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்.

மதன கோபால், சென்னை

மதன கோபால், சென்னை சுபான் .பீர் முஹம்மது, திருச்செந்தூர்

சுபான் .பீர் முஹம்மது, திருச்செந்தூர்

 கந்தவேலு, புதுச்சேரி

 

கந்தவேலு, புதுச்சேரி கே.ஈஸ்வரமூர்த்தி, செங்கல் பட்டு

 

ஈஸ்வரமூர்த்தி, செங்கல்பட்டு

 நவீன், சென்னை

 

நவீன், சென்னை ரோகிணி, ஈரோடு

ரோகிணி, ஈரோடு

 

 ஜீவன் குமார், ஈரோடு

 

ஜீவன் குமார், ஈரோடு பிரசாந்த், சென்னை

 

பிரசாந்த், சென்னை இரா.நரேன் கிருஷ்ணா, வில்லிவாக்கம்

 

இரா.நரேன் கிருஷ்ணா, வில்லிவாக்கம் ஸ்ரீதரன் சுப்பிரமணியன். சென்னை

 

ஸ்ரீதரன் சுப்பிரமணியன், சென்னை

 ஆதிநாத், கோவை

 

ஆதிநாத், கோவை இக்வான் அமீர்

 

இக்வான் அமீர். சென்னை பவித்ரா, சென்னை பவித்ரா, சென்னை

 

https://www.bbc.com

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஐன்ஸ்டீன் முதல் ஸ்டார்ட்அப் வரை... எலான் மஸ்க் வாழ்க்கையை மாற்றிய 8 புத்தகங்கள்!

 
ஐன்ஸ்டீன் முதல் ஸ்டார்ட்அப் வரை... எலான் மஸ்க் வாழ்க்கையை மாற்றிய 8 புத்தகங்கள்!
 


எலான் மஸ்க் ( Elon Musk) - அமெரிக்கத் தொழிலதிபர், முதலீட்டாளர், பொறியியலாளர் என்று பன்முகங்களைக் கொண்டவர். டெஸ்லா (Tesla) மற்றும் நியுராலிங்க் (Neuralink) நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவர். வருங்கால போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் எலெக்ட்ரானிக் கார்கள், ஹைப்பர்லூப் திட்டம், SpaceX திட்டம் எனப் பல திட்டங்களில் தன்னை பிஸியாக ஈடுபடுத்திக்கொண்டு பம்பரம் போலச் சுழன்றுகொண்டிருக்கும் இந்த மனிதர், சிறந்த புத்தக வாசிப்பாளரும்கூட.

தனது சாதனைகள் ஒவ்வொன்றின் தொடக்க புள்ளியும் புத்தகங்களிலிருந்தே ஆரம்பமாகிறது என்று நம்பும் எலான் மஸ்க், தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த தனது இளமைப் பருவம் முழுவதும் புத்தக வாசிப்பிலேயே கழித்திருக்கிறார். அறிவியல் புனைகதைகளின் மீது தீராத ஆர்வம் கொண்டவர். அவற்றை வாசிப்பதில் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்கும் மேலாகச் செலவிடும் இவர் தனது ஒன்பதாவது வயதிலேயே என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா முழுவதையும் படித்துவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சமீபத்தில் 47 வயதை நிறைவு செய்த இந்த இளைஞர், இதுவரை தனது வாழ்க்கையை வடிவமைத்ததிலும் தன்னை ஊக்குவித்ததிலும் எட்டு புத்தகங்கள் பெரிதும் உதவியிருக்கின்றன என்று கூறியிருக்கிறார்.

எலான் மஸ்க்

 

 

“The Hitchhiker’s Guide to the Galaxy” by Douglas Adams
எலான் மஸ்க், தனது இளமைப் பருவத்தில் நீட்சே (Nietzsche)  மற்றும் ஸ்கோபென்ஹௌர் (Schopenhauer) போன்ற தத்துவவாதிகளின் படைப்புகளில் பெரிதும் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். அதன் பின்பு ‘டக்லஸ் ஆடம்ஸின்’ கருத்துகள் இவரைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. இதுபற்றி, அலிசன் வான் டிக்கேலன் (Alison Van Diggelen) நடத்தும் ‘ப்ரெஷ் டயலாக்’ நேர்முகத்தில் ( Fresh Dialogue Interview) எலான் மஸ்க் கூறும்போது, “வாழ்க்கையின் உண்மையான அர்த்தம்தான் என்ன என்பதைக் கண்டறியும் பொருட்டு அதை நான் பல புத்தகங்களில் தேடிக்கொண்டிருந்தேன்... அப்போதுதான் இந்த (The Hitchhiker’s Guide to the Galaxy) புத்தகத்தை வாசித்தேன். அதில், “பல்வேறு சமயங்களில் பதிலைவிட கேள்வியே கடினமானதாக இருக்கும். முதலில் சரியான கேள்வியை நாம் உருவாக்கிவிட்டோம் என்றால் பின்பு அதற்கான பதிலையும் எளிதாகப் பெற்றுவிட முடியும்” என்ற முக்கியமான கருத்தை இப்புத்தகம் எனக்கு உணர்த்தியது” என்றார்.

 

 

“Einstein: His Life and Universe” by Walter Isaacson
எப்போதுமே ஒரு வெற்றியாளருக்கு, அவருக்கு முன்பிருந்த வெற்றியாளர் ஒருவர்தான் உத்வேகமாகவும் ஆதர்சமாகவும் இருந்திருப்பார் அல்லவா? அதுபோலத்தான் மஸ்கின் ஆதர்சமாக ஐன்ஸ்டீன் இருந்திருக்கிறார். இப்புத்தகம் பற்றி  ஃபவுண்டேஷன் (Foundation) நடத்திய நேர்முகத்தில் பேசிய எலான் மஸ்க், “இந்த மனிதரைப் பற்றிய கதைகள், என்னுடைய அறிவாற்றலையும் குறிக்கோளையும் மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தன” என்று கூறினார். 

“Structures: Or why Things Don’t Fall Down” by J.E.Gordon
SpaceX போன்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டுமென்றால் ராக்கெட் சயின்ஸில் ஆர்வமில்லாமல் முடியாது. அப்படி இந்தத் துறையில் இவருக்கு ஆர்வம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த புத்தகம்தான் ஜோர்டன் எழுதிய Structures: Or why Things Don’t Fall Down. “கட்டுமான அமைப்பைப் பற்றிய அறிமுகத்துக்கு இப்புத்தகம் மிகச் சிறந்த ஒன்று” என்று ‘கே.சி.ஆர்.டபிள்யூ ரேடியோ (KCRW Radio)  நடத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.

“Ignition!: An Informal History of Liquid Rocket Propellants” by John D.Clark
ராக்கெட் பற்றி பேசும்போது, எலான் மஸ்கினை பாதித்த மற்றுமொரு புத்தகம் இது. இதுபற்றி ‘மீடியாபிஸ்ட்ரோ’ (MediaBistro) நடத்திய பேட்டி ஒன்றில் கூறுகையில், “ராக்கெட் சம்பந்தப்பட்ட விஷயங்களை அறிவதற்கு எனக்கு மிகவும் உதவிய புத்தகம் இது. உண்மையில் படிப்பதற்கு வேடிக்கையான புத்தகமும்கூட” என்றார்.

“Super-intelligence: Paths, Dangers, Strategies” by Nick Bostrom
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மனித இனத்துக்கே ஆபத்து என்று சென்ற வருடம் ரோட் தீவில் நடைபெற்ற அமெரிக்காவின் ‘The Bipartisan National Governors Association’-ல் கவர்னர்களைச் சந்தித்து உரையாடியதில் எலான் மஸ்கி தெரிவித்திருந்தார். அவ்வாறு அவர் தெரிவித்ததற்கு காரணமாக இருந்தது ‘நிக் போஸ்ட்ரோம்’ எழுதிய இப்புத்தகம்.

“Zero to one: Notes on Startups, or How to Build the Future” by Peter Thiel
‘பே-பால்’ (PayPal) நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான பீட்டர் தீல் என்பவர் எழுதிய இப்புத்தகம் அவரது ஸ்டார்ட்அப் நிறுவனங்களைப் பற்றிய அனுபவங்களைக் கூறுகிறது. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க விரும்புபவர்களுக்கு இப்புத்தகம் மிகச்சிறந்த துணையாக இருக்கும் என்பது மஸ்கின் கருத்து.

 The “Foundation” trilogy by Isaac Asimov, and “The Lord of the Rings” by J.R.R. Tolkien
அறிவியல் புனைகதைகளில் தீராத ஆர்வம் கொண்ட இவர், அவற்றில் தனக்கு மிகவும் பிடித்த புத்தகத்தைப் பற்றி ‘தி நியூயார்கர்’ (The New Yorker) பத்திரிகையில் கூறும்போது, ``ஐசக் அசிமோவ் எழுதிய ‘ஃபவுண்டேஷன் சீரீஸ்’ தான் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்”, என்றார். அதேபோல, “உலகைக் காப்பாற்றும் கதாநாயகர்கள் நிறைந்த கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் ‘The Lord of the Rings’ நாவலின் தீவிர ரசிகன் நான்” என்றும் கூறினார்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

103 வயது பியானோ கலைஞர்

பிரான்ஸில் வாழும் பியானோ பெண் கலைஞர் கோலெட் மேஸ், நூற்றாண்டை கடந்து இன்றும் புதிய இசை தயாரிப்புகளுக்கு தமது பங்களிப்பை வழங்கி வருகிறார்.

  • தொடங்கியவர்

வால்டருக்குப் போகட்டும் அந்தக் கோப்பை!

 

 
ecsImgfootball1-726125723163715324jpg
 
 

இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில், 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் ஒரு கறுப்புச் சூரியன் உதயமானது. தனது கால்களின் திறமையால், இளமையில் அது ஒளிவீசியது. நாட்டுக்காக, விளையாட்டைத் துறந்து போரில் ஈடுபட்டது. இளமையிலேயே அஸ்தமித்தது. அந்தச் சூரியன்… வால்டர் டல்!

 

‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்’ என்று பெருமைகொள்வார்கள் இங்கிலாந்துக்காரர்கள். ஆனால், இங்கிலாந்து நாட்டின் இந்த முதல் கறுப்பினக் கால்பந்துச் சூரியனை இன்றுவரையில் இங்கிலாந்து அங்கீகரிக்காமல் இருக்கிறது.

 

‘கிராஃபிக்’ வடிவத்தில் காமெடி

அந்தச் சூரியன் விட்டுச் சென்ற தகிப்பை, ‘தி இல்லஸ்ட்ரேட்டட் ஹிஸ்டரி ஆஃப் ஃபுட்பால்: ஹால் ஆஃப் ஃபேம்’ எனும் புத்தகத்தில் கார்ட்டூன் போட்டுச் சொல்கிறார் டேவிட் ஸ்குவிர்ஸ். ‘தி கார்டியன்’ இதழின் கார்ட்டூனிஸ்ட்டான இவர், எழுதி வரைந்துள்ள இந்தப் புத்தகம் சமீபத்தில் வெளியானது.

டீகோ மரடோனா, பீலே, ரொனால்டோ, மெஸ்ஸியைப் போன்று இந்தத் தலைமுறைக்குத் தெரிந்த வீரர்களை மட்டுமல்லாது, சாக்ரடீஸ், ஆண்ட்ரியா பிர்லோ, மரியோ சகால்லோ போன்ற கடந்த தலைமுறை வீரர்களைப் பற்றியும், அலெக்ஸ் ஃபெர்கூஸன் போன்ற கிளப் நிர்வாகிகளைப் பற்றியும் காமெடியாக, கறுப்பு வெள்ளையில் ‘கிராஃபிக்’ புத்தக வடிவத்தில் சொல்லியிருக்கிறார் டேவிட்.

அதிகம் கோல் போடும் அல்லது அதிகம் ரசிகர்களைக் கொண்ட வீரர்களைப் பற்றிப் பேசும் வழக்கமான விளையாட்டு வரலாற்றுப் புத்தகங்கள்போல் அல்லாமல், கோல் கீப்பர்கள், மிட்ஃபீல்ட் ஆட்டக்காரர்கள், டிஃபெண்டர்கள், ஃபார்வேர்டு ஆட்டக்காரர்கள் எனப் பல நிலை வீரர்களைப் பற்றியும் இந்தப் புத்தகம் சுவாரசியமாகப் பேசுகிறது.

 

முதல் கறுப்பின வீரர்

பார்படாஸ் நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும் இங்கிலாந்தின் உள்ள கெண்ட் நகரத்தைச் சேர்ந்த தாய்க்கும் மகனாக 1888 ஏப்ரல் 28 அன்று பிறந்தார் வால்டர் டல். இப்படி, வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர்களை மேற்கத்திய நாடுகளில் ‘கலப்பினத்தவர்கள்’ என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. இங்கிலாந்து கால்பந்து அணியில் இடம்பிடித்த முதல் கறுப்பர், கலப்பினத்தவர் வால்டர் டல்!

book
 

தனது 9 வயதில் பெற்றோர்களைப் பறிகொடுத்த வால்டர், லண்டனில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குக் கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அவரது திறமையைப் பார்த்து ‘டோட்டென்ஹாம் ஹாட்ஸ்பர்’ எனும் கால்பந்து கிளப், வால்டரைத் தங்கள் அணியில் சேர்த்துக்கொண்டது. அந்த கிளப்பில் சில காலம் விளையாடிய பிறகு 1911-ல் ‘நார்த்தாம்ப்டன் டவுன்’ கிளப்பில் சேர்ந்து விளையாடத் தொடங்கினார். அங்கிருந்தபோது சுமார் 110 போட்டிகளில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

முதல் உலகப் போர் தொடங்கியபோது, கால்பந்தை விட்டுவிட்டு இங்கிலாந்து ராணுவத்தின் ‘மிடில்செக்ஸ் ரெஜிமெண்ட் 17-வது பட்டாலியன்’ படைப் பிரிவில் சேர்ந்தார் வால்டர். அங்கு அவரது தலைமைப் பண்பைப் பார்த்த வெள்ளை அதிகாரிகள், அவரை ‘சர்ஜெண்ட்’ நிலைக்கு உயர்த்தினார்கள். இவ்வாறு, இங்கிலாந்து ராணுவத்தில் அதிகாரியான முதல் கறுப்பினத்தவரும் வால்டர் டல்தான்!

 

சூரியன் அஸ்தமித்த நூற்றாண்டு

முதல் உலகப் போரில், தனது தலைமையில் 26 வீரர்கள் கொண்ட குழுவை வழிநடத்தி, ஜெர்மனி ராணுவ முகாம்களுக்குச் சென்று போரிட்டு, 1918-ம் ஆண்டு, மார்ச் 25-ம் தேதி வீர மரணமடைந்தார் வால்டர் டல். ஆனால், எவ்வளவோ தேடியும் அவரது உடலை மீட்க முடியவில்லை. முதல் உலகப் போர் முடிந்த நூறாவது ஆண்டு மட்டுமல்ல, வால்டர் டல் எனும் அந்தக் கால்பந்துச் சூரியன் மறைந்த நூறாவது ஆண்டும் இதுதான்!

போரில் காட்டிய அவரது வீரத்தை அங்கீகரிக்கும் விதமாக, ராணுவத்தின் மூலம் அவருக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், ‘இறந்தவர்களுக்கு அவ்வாறு விருது வழங்கும் வழக்கமில்லை’ என்று இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் மறுத்து வந்தது.

ஆனால் 2016-ல், வால்டர் டல்லின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஃபில் வஸிலி எனும் வரலாற்றாசிரியர், ‘வால்டர் டல் போன்ற கறுப்பர்களுக்கு விருது வழங்கக் கூடாது’ என்று அன்றைய வெள்ளை அதிகாரி ஒருவர் கொடுத்த ரகசிய ‘மெமோ’வைக் கண்டு பிடித்தார். அதைச் சாட்சியமாக வைத்து, ‘நிறவெறி காரணமாக, வால்டருக்கு அன்று விருது வழங்கப்படவில்லை’ என்று நிரூபித்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே, வால்டருக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கேற்றபடி சட்டத்தைத் திருத்த, இங்கிலாந்து அரசு முன் வருவதாக இல்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பங்கேற்றிருக்கும் இங்கிலாந்து அணி, ஒரு விஷயம் செய்யலாம். அதாவது, இந்த முறை ‘ஃபிஃபா’ கோப்பையை இங்கிலாந்து வென்றால், அணி வீரர்கள் அதை வால்டருக்குச் சமர்ப்பிக்கலாம். ஏனென்றால், விருது கொடுப்பதைவிட, வால்டருக்குச் செய்யும் மிகச் சிறந்த மரியாதை அதுவே!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
‘வெறுப்பை அறு’
 

image_26f3a7f59f.jpgஇருவரிடையே சண்டை சச்சரவு ஏற்பட்டால், காலப்போக்கில் அவர்கள் சமரசமாகி விடுவது இயல்பு. 

ஆனால், நண்பர்களிடையே சாதாரணமாகக் கருத்து முரண்பாடு ஏற்பட்டால், சில வேண்டாத பேர்வழிகள் இடையே புகுந்து, சமரசம் என்னும் பெயரில் உள்நுழைந்து, அவர்களிடையே தீராத மனஸ்தாபங்களைத் தீயாக வளர்த்தும் விடுகின்றார்கள். 

நண்பர்கள் மட்டுமல்ல, எவரிடத்திலும் தப்பான அபிப்பிராயம் வந்தால், அவர்கள் மனோநிலையைப் புரிந்து, தகுந்த நேரத்தில் பேசித் தீர்ப்பதே, சுலபமான வழியாகும். 

இடைத்தரகர்களில் சிலர், பிறர் நலனை உடைப்பதில் வல்லவர்கள்.மனம் கருகிய மாந்தர்களும் அதே சமயம், நல்லவர்களும் எங்களுடன் சேர்ந்தே இருக்கிறார்கள்.இவர்களுள் எவர், எவர் எமக்கு உகந்தவர் என்பதை, நீங்களே தெரிவு செய்யுங்கள். 

பகைவர்களுடன் எதிர்ப்பதைவிட, வஞ்சகர்களுடன் முரண்படுதல் ஆபத்தானது.

ஆனால், பகைவரும் வேண்டாம், எனக் கருதும் எல்லோரையும் சக மனிதர் என எண்ணுதல் பொருத்தமானது. வெறுப்பை அறு. 

  • தொடங்கியவர்

அமெரிக்க போர்க் கப்பல் ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்தியது- 290 பேர் பலி (1988)

 
அ-அ+

அமெரிக்க போர்க் கப்பல் பாரசீக வளைகுடா மீது பறந்த ஈரான் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. இதில் பயணம் செய்த 290 பேரும் கொல்லப்பட்டனர். மேலும் இதே நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் * 1778 - புருசியா ஆஸ்திரியாவின் மேல் படையெடுத்தது. * 1848 - அமெரிக்கக் கன்னித் தீவுகளில் பீட்டர் வொன் ஸ்கொல்ட்டன் என்பவரால் அடிமைகள் விடுவிக்கப்பட்டனர். * 1867 - தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில்

 
 
 
 
அமெரிக்க போர்க் கப்பல் ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்தியது- 290 பேர் பலி (1988)
 
அமெரிக்க போர்க் கப்பல் பாரசீக வளைகுடா மீது பறந்த ஈரான் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. இதில் பயணம் செய்த 290 பேரும் கொல்லப்பட்டனர்.

மேலும் இதே நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

* 1778 - புருசியா ஆஸ்திரியாவின் மேல் படையெடுத்தது.

* 1848 - அமெரிக்கக் கன்னித் தீவுகளில் பீட்டர் வொன் ஸ்கொல்ட்டன் என்பவரால் அடிமைகள் விடுவிக்கப்பட்டனர்.

* 1867 - தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

* 1866 - புருசியாவின் வெற்றியுடன் ஆஸ்திரிய- புரூசியப் போர் முடிவுக்கு வந்தது.

* 1872 - யாழ்ப்பாணக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

* 1944 - இரண்டாம் உலகப் போர்: பெலரஸ்சின் தலைநகர் மின்ஸ்க் சோவியத் படையினரால் நாசி ஜெர்மனியிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.

* 1969 - சோவியத்தின் என்1 என்ற ஏவுகணை ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியது.

* 1970 - பிரிட்டன் விமானம் ஸ்பெயினில் மலையொன்றுடன் மோதியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

https://www.maalaimalar.com

 

 

பிரான்சிடம் இருந்து அல்ஜீரியா விடுதலைப் பெற்றது

 
அ-அ+

ஜூலை 3 அன்று அதிபர் டிக்காலே அல்ஜீரியாவுக்கு விடுதலை அளிக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

 
 
 
 
பிரான்சிடம் இருந்து அல்ஜீரியா விடுதலைப் பெற்றது
 
ஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் துனிஷியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையில் ஸ்பெயினுக்கும் கீழே இருக்கும் நாடு அல்ஜீரியா. பிரெஞ்சு அரசின் ஆதிக்கத்தில் இது இருந்தது.

1945-ம் ஆண்டு மே 8-ந்தேதி அல்ஜீரிய மக்கள் வீதிகளில் இறங்கி பிரெஞ்சு அரசுக்கு எதிராக போரட்டத்தை துவங்கினார். இதைத்தொடர்ந்து  கலவரஙகள் ஏற்பட்டன. இதில் 6 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். இந்த சம்பவம் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்ச் அரசாங்கத்தின் மீது நிரந்தர வெறுப்பை உருவாக்கியது.

இதனால் பல மறைமுக இயக்கங்கள் தோன்றின. ஒவ்வொரு அல்ஜீரிய இளைஞனும் பிரெஞ்ச் அரசாங்கத்தை நாட்டிலிருந்து விரட்டியடிப்பது என உறுதியெடுத்துக் கொண்டனர்.

1-11-1954 அன்று தேசிய விடுதலை முன்னணி அல்ஜீரியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் போரைத் தொடங்கியது. 1956-ம் ஆண்டும் செப்டம்பர் 30-ல், 3 பெண்கள் நகரத்தின் வெவ்வேறு இடங்களில் சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், பிரெஞ்சு விமானப் படையின் டவுன் அலுவலகமும் ஒன்று.

1957 வரை ஏறக்குறைய 800 துப்பாக்கி சூடுகளையும் குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்தி விடுதலைக்காக போராடிய எப்.எல்.என். அமைப்பு பிரெஞ்ச் அரசாங்கத்தை அலற வைத்தது.

இதனிடையே எப்.எல்.என்.-ன்  வன்முறை நடவடிக்கைகளுக்கு மக்களிடையே அதிருப்தி தோன்ற ஆரம்பித்தது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலமாக மட்டுமே பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும் என அல்ஜீரிய மக்கள் நம்பத் தொடங்கினர். இதனால் எப்.எல்.என். ஒரு முடிவுக்கு வந்தது. இதையடுத்து ஜி.பி.ஆர்.ஏ. (Provisional Government of the Algerian Republic) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பிற்கு அரபு நாடுகளும் கம்யூனிஸ நாடுகளும் ஆதரவு அளித்தன. எப்.எல்.என்.- ன் தலைவரான அப்பாஸ்தான் இதற்கும் தலைவராக அறிவிக்கப்பட்டு துனிஷியாவில் இருந்து இந்த அமைப்பை இயக்கி வந்தார். இந்த அமைப்பு அதிபர் டிக்காலேயுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

இதன்படி அல்ஜீரிய மக்களிடம் பொது வாக்கெடுப்பு நிகழ்த்துவது என்றும், மக்கள் விருப்பப்பட்டால் அல்ஜீரியாவை சுதந்திர நாடாக அறிவிப்போம் என்றும் டிக்காலே உறுதி கூறினார். இதற்கு சம்மதம் கூறி 1962 ஜூனில் பிரெஞ்சு மக்களவையில் வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. 90 சதவீதம் பேர் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தனர். அதன்படி 1962 ஜூலை 1-ல் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்ச் அரசாங்கம் பொதுவாக்கெடுப்பு நிகழ்த்தியது. 6.5 மில்லியன் மக்கள்தொகையில் மொத்தம் 6 மில்லியன் மக்கள் அல்ஜீரிய விடுதலைக்காக தங்கள் வாக்குகளை அளித்திருந்தனர்.

ஜூலை 3 அன்று அதிபர் டிக்காலே அல்ஜீரியாவுக்கு விடுதலை அளிக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

நல்ல மாற்றத்தை ஏற்படுத்த யாரால் முடியும்? - உண்மை உணர்த்தும் கதை! #FeelGoodStory

 

ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குவது சாதாரண காரியமல்ல. இதில் முக்கியமானது, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது.

நல்ல மாற்றத்தை ஏற்படுத்த யாரால் முடியும்? - உண்மை உணர்த்தும் கதை! #FeelGoodStory
 

உண்மை உணர்த்தும் கதை

`நம் ஒவ்வொருவராலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’ - நம்பிக்கையோடு சொல்லியிருக்கிறார் அமெரிக்க அரசியல்வாதியும் மேரிலேண்டின் செனட்டராகவும் பணியாற்றிய பார்பரா மிகுல்ஸ்கி (Barbara Mikulski). வீடு, அலுவலகம், சமூகம்... எதுவாகவும் இருக்கட்டும்... ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குவது சாதாரண காரியமல்ல. இதில் முக்கியமானது, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது. அதற்கு முதலில், `நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை வேண்டும்; விடா முயற்சி வேண்டும்; எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் வேண்டும். இதற்கெல்லாம் மேலாக சக மனிதர்களை, உயிர்களை பேரன்போடும் பெருங்கருணையோடும் நேசிக்கிற பண்பு வேண்டும். நேசமும் இரக்கமும் இருக்கிறவர்களால் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நிச்சயம் முடியும். அந்த மாற்றம், இந்த உலகுக்கே நன்மையளிப்பதாக இருக்கும். அந்த உண்மையை எடுத்துச் சொல்லும் கதை ஒன்று... 

அது அமெரிக்காவிலிருக்கும் ஒரு சிறு நகரம். ஊருக்கு நடுவே பூங்கா ஒன்று இருந்தது... அதற்கு அருகிலேயே ஓர் ஏரியும் இருந்தது. அவர் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அடிக்கடி அந்தப் பூங்காவுக்குப் போகும் பழக்கம் அவருக்கு உண்டு. அங்கே அவருடைய சில நண்பர்கள் வருவார்கள். அவர்களுடன் உரையாடுவார். சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வார். நிறைய நேரம் கிடைத்தால், கையோடு கொண்டு வந்திருக்கும் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிடுவார். 

பூங்கா

ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் பூங்காவுக்குப் போகும்போதெல்லாம், அங்கிருக்கும் ஏரிக்கருகே பெஞ்சில் ஒரு முதிய பெண்மணி அமர்ந்திருப்பதைப் பார்த்திருந்தார். அந்தப் பெண்மணிக்குப் பக்கத்தில் சின்னதாக ஒரு பெட்டியும் இருக்கும். ஆனால், அந்தப் பெண்மணி அங்கே அமர்ந்து என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை அவர் கவனித்ததில்லை. வழக்கம்போல ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று அவர் பூங்காவுக்கு வந்தார். அந்த முதிய பெண்மணி ஏரிக்கருகே பெஞ்சில் அமர்ந்திருந்ததையும் பார்த்தார். `இந்த அம்மா இங்கே உட்கார்ந்து என்னதான் செய்றாங்க?’ - அறிந்துகொள்ளும் ஆர்வம் அவருக்குள் எழுந்தது. மெள்ள நடந்து அந்தப் பெண்மணிக்கு அருகே போனார். 

 

 

அருகே போனதும்தான் அந்தப் பெண்மணி வைத்திருந்தது சிறு பெட்டியல்ல, அது ஆமைகளைப் பிடிக்கும் கண்ணி என்பதை அறிந்தார். அந்த கண்ணிக்குள் இரண்டு சிறு ஆமைகள் மெதுவாக நடந்துகொண்டிருந்தன. அந்த மூதாட்டி, தன் மடியில் ஒரு ஆமையை வைத்திருந்தார். அதன் ஓட்டை, தன் கையிலிருக்கும் மென்மையான, பஞ்சால் ஆன பிரஷ்ஷால் தேய்த்துக்கொண்டிருந்தார். இவர், அந்தப் பெண்மணியின் முன்னால் போய் நின்றார். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். 

முகமன் கூறினார். ``மேடம்... ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் இங்கே உங்களைப் பார்த்திருக்கேன். உங்களோட பேசணும்னு நினைப்பேன். ஆனா, என்னவோ ஒரு தயக்கம்... ஆமா, இந்த ஆமைகளோட நீங்க என்ன செய்றீங்க?’’ என்று கேட்டார் அவர்.

ஆமை

அந்த மூதாட்டி தன் பொக்கை வாயைத் திறந்து மென்மையாகச் சிரித்தார். பிறகு சொன்னார்... ``நான் இந்த ஆமைகளோட ஓடுகளைச் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். தண்ணியில இருக்கும்போது, ஆமையோட ஓட்டுல நீர்ப்பாசி (Algae) மாதிரி ஏதாவது அழுக்குப் படிஞ்சுடும். அதனால, ஆமைகளால் சூட்டை உள்வாக்கிக்க முடியாமப் போயிடும். சில நேரங்கள்ல, இந்த அழுக்குகளாலயே தண்ணியில நீந்துற வேகமும் ஆமைக்குக் குறைஞ்சு போயிடும். நீர்ப்பாசி இருக்கே... ஆமையோட ஓட்டைக் கொஞ்சம் கொஞ்சமா பலவீனப்படுத்திடும்...’’ 

 

 

``அடடா... உண்மைதான்.’’ ஒரு சிரிப்போடு சொன்னார் அவர். 

அந்த முதிய பெண்மணி தொடர்ந்துசொன்னார்... ``அதனாலதான் நான் ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் இங்கே வர்றேன். சில மணி நேரங்களை ரிலாக்ஸா இங்கே செலவழிப்பேன். இந்த கண்ணியால சில ஆமைகளைப் பிடிச்சு, அதுங்களோட ஓடுகளை சுத்தம் பண்ணுவேன். என்னால முடிஞ்ச ஏதோ ஒரு உதவி... சின்ன மாற்றம்...’’ 

``அது சரி... உலகத்துல கோடிக்கணக்கான ஆமைங்க இருக்கு. நீங்க சுத்தம் செய்ற ஆமைகளைத் தவிர, மத்த ஆமைகளோட ஓடுகள் நீர்ப்பாசியோடயும் அழுக்கோடயும்தானே இருக்கும்?’’ 

``ஆமாம். உண்மைதான்.’’ ஆமை

``அப்படின்னா உங்க நேரத்தை நீங்க வேஸ்ட் பண்ணிக்கிட்டிருக்கீங்கனு அர்த்தம். இந்த ஏரியை விடுங்க... இன்னும் உலகத்துல இருக்குற எத்தனையோ ஏரிகள்ல எத்தனையோ ஆமைகள் இருக்கு... அதுங்களோட ஓடுகளையெல்லாம் யாரும் சுத்தம் செய்யறது இல்லை. இந்தச் சின்ன ஏரிக்கரையில உட்கார்ந்துக்கிட்டு, ஒண்ணு, ரெண்டு ஆமை ஓடுகளைச் சுத்தம் செஞ்சுட்டு, `ஏதோ என்னால முடிஞ்ச மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்றேன்’னு சொல்றீங்களே... வேடிக்கையா இல்லையா மேடம்?’’ 

இதைக் கேட்டு அந்தப் பெண்மணி மிக மென்மையாகச் சிரித்தார். பிறகு, தன் மடியிலிருக்கும் ஆமையின் ஓட்டை, தன் கையிலிருக்கும் பிரஷ்ஷால் சுத்தம் செய்துகொண்டே சொன்னார்... ``இந்த ஆமைக்கு மட்டும் பேசுற சக்தி இருக்குனு வைங்க! அது என்னைப் பத்தி உங்ககிட்ட `இவங்களால ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும், அதுக்காகத்தான் இவங்க போராடிக்கிட்டிருக்காங்க’னு சொல்லும்! 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

`கமான் ஹர்திக் கமான்’ - வைரலான ஸிவா தோனி வீடியோ

 

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மகள் ஸிவா தோனி, ஹர்திக் பாண்டியாவை உற்சாகப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸிவா
 

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மகள் ஸிவா தோனி, ஐ.பி.எல் சீஸன்  தொடங்கியதிலிருந்து முடிந்தது வரை சமூக வலைதளங்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருந்தார். ஐ.பி.எல் தொடரின்போது ஸிவா செய்யும் சிறிய சிறிய குறும்புகள், நடன வீடியோ போன்றவை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின்  மனதையும் கவர்ந்து வந்தது. இந்த வீடியோவுக்கு அனைத்து மக்களும் சிறப்பான வரவேற்பு அளித்திருந்தனர். தற்போது ஸிவாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

 

 

ஐ.பி.எல் முடிந்த பின் நீண்ட நாள்களாக ஸிவா பற்றிய எந்தப் புகைப்படமும் வீடியோவும் வெளிவராமல் இருந்தன. தற்போது அவர்  இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை உற்சாகப்படுத்தும் வீடியோ வெளியாகி அனைவர் மனதையும்  கவர்ந்துள்ளது. அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். 

 

 

இந்திய அணியின் வெற்றியைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா தனது இஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, “ஓ! என்னை உற்சாகப்படுத்துபவரை நான் கண்டுபிடித்துவிட்டேன் என நினைக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் ஸிவா, “கமான் ஹர்திக் கமான்” எனக் கத்திக்கொண்டிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. 

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

மரங்களால் ரகசியமாக பேசிக் கொள்ள முடியும்! எப்படி?

நிலத்துக்கு அடியில் மரங்களால் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ள முடியும். தங்களின் வளங்களை பகிர்ந்துக்கொள்ள முடியும். இது சாத்தியமா?

  • தொடங்கியவர்

14 நாள்கள்

 

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

சுபாஷ் சந்திர போஸின் மகள் வைக்கும் வேண்டுகோள்!

விடுதலைப் போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸின் மகள் அனிதா போஸ் ஃபாஃப். ஊடகவியலாளர் ஆஷிஸ் ரே எழுதிய `லெய்டு டு ரெஸ்ட்’ என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசினார் அனிதா. நேதாஜியின் மறைவு இன்னும் விடுவிக்கப்படாத புதிராகவே உள்ள நிலையில், அவரது மரணத்தை ஆராய்ந்த 11 புலன் விசாரணை கமிஷன்கள் மற்றும் அவற்றின் முடிவுகள் பற்றிப் பேசும் இந்தப் புத்தகம், 1945 ஆகஸ்ட் 18 அன்று `தாய்பே’யில் நிகழ்ந்த விமான விபத்தில் போஸ் மரணமடைந்தார் என்பதை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறது. இன்னமும் பலர் போஸின் மரணம் இந்தச் சம்பவத்துக்குப் பின் வெகு ஆண்டுகள் கழித்தே நிகழ்ந்தது எனவும் வடஇந்தியாவில் அவர் கும்னாமி பாபா என்ற பெயரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார் எனவும் நம்புகின்றனர். மற்றொரு சாரார் ரஷ்யப் படைகள் வசம் மாட்டிய போஸ் சைபீரியாவில் மரணமடைந்தார் என்றும் கூறி வருகின்றனர்.

p16a_1529908951.jpg

“மக்களுக்குப் புதிர்கள் மீதான ஆர்வம் எப்போதும் உண்டு. என் அப்பா ஒரு ரொமான்டிக் மற்றும் ட்ராஜிக் ஹீரோ என்பதால் அவரது மரணம் குறித்த குழப்பங்களில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. இந்தச் சிக்கலுக்கு முடிவுகட்டும் விதமாக, அப்பாவின் அஸ்தியை ஜப்பானிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்கிறார், ஜெர்மனியில் வசிக்கும் பொருளாதார வல்லுநரான அனிதா. “ `போஸின் மகள் என்பதால், எந்த விதத்திலும் நீ பெரிய ஆள் இல்லை’ என்று அடிக்கடி என் அம்மா சொல்வார். அதனால் அடக்கத்துடன், ஆர்ப்பாட்டமில்லாமல் இருக்கவே நான் பழகிக்கொண்டேன்’’ என்கிறார் அனிதா.

இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு வாரிசு!


ஜெனரல் மோட்டார்ஸின் `சி.எஃப்.ஓ’ சென்னைப் பெண்!

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் இயங்கும் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட திவ்யா சூர்யதேவரா. 39 வயதான திவ்யா, பெப்சியின் இந்திரா நூயிக்குப் பிறகு இது போன்ற முக்கியமான பணியை வகிக்கப்போகும் இரண்டாவது தமிழ்ப் பெண்!

p16b_1529908964.jpg

திவ்யா, சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றவர். சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட, தாயின் அரவணைப்பில் வாழ்ந்த திவ்யா, படிப்பு ஒன்றே முன்னேற மூலதனம் என்பதில் உறுதியாக இருந்தார். “மூன்று குழந்தைகளைத் தனியாக நின்று வளர்த்தெடுத்தார் என் அம்மா. அது மிகவும் சிரமமான பணி” என்கிறார். தாயின் ஊக்கமும் சொந்த உழைப்பும் உந்தித் தள்ள, கல்விக்கடன் வாங்கி, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் கற்க அமெரிக்கா பயணமானார். 22 வயதில் அமெரிக்காவுக்குள் காலடி எடுத்துவைத்த திவ்யாவுக்கு ‘கல்ச்சர் ஷாக்’ வேறு. கல்விக்கடன் கழுத்தை இறுக்க, பணிசெய்துகொண்டே படித்தவர், 25-வது வயதில் ஜி.எம் கம்பெனிக்குள் நுழைந்தார். அடுத்தடுத்து திருமணம், குழந்தை என்று குடும்பம் வளர, பணியிலும் ஏற்றம் தேடி வந்தது. நியூயார்க் நகரில் குடும்பம் இருந்ததால், வார இறுதிகளில் மட்டுமே மகளுடன் நேரம் செலவழிக்க முடிந்தது என்கிறார் திவ்யா. தினமும் உடற்பயிற்சி செய்யும் இவருக்கு, பாக்ஸிங் செய்வது மிகவும் பிடித்தமானது. கூகுளில் தேடி தன்னைப் பற்றிய குறிப்புகளைப் படித்துச் சொல்லும் மகள், `அம்மா, நானும் உன்னைப்போல வருவேன்’ என்று சொல்வதே தனக்குப் பெருமிதம் என்று கூறுகிறார் திவ்யா. 

இவுகதானுங்க பிக் பாஸ்!


இஃப்தார் விருந்தில் யசோதாபென்!

பிரதமர் பதவி ஏற்ற 2014-ம் ஆண்டு முதல் இஃப்தார் விருந்தில் கலந்துகொள்வதையும் பாரம்பர்யமாகப் பிரதமர்கள் வழங்கும் இஃப்தார் விருந்தையும் நிறுத்திவைத்திருந்தார் பிரதமர் மோடி. ஆனால், அவரின் மனைவி யசோதாபென், சமீபத்தில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற இஃப்தார் விருந்து ஒன்றில் கலந்துகொண்டிருப்பது, பெரும் அதிர்வலைகளைக் குஜராத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

p16c_1529908979.jpg

முஸ்லிம்கள் நாற்பது நாள்கள் நோன்பு இருந்து, அதன் இறுதியில் ரமலான் கொண்டாடுவது வழக்கம். இந்த நோன்பு நாள்களில், ஒன்றாகக் கூடி மாலை நேரத்தில் நோன்பு துறப்பதை இஃப்தார் விருந்து என்று குறிப்பிடுகின்றனர். கடந்த ஜூன் 13 அன்று, அகமதா பாத்தில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில் கலந்துகொண்ட யசோதாபென், அங்குள்ள முஸ்லிம்களுடன் சேர்ந்து உணவு பரிமாறி, அவர்களுடன் உணவருந்தி பேசினார்.

முஸ்லிம்களின் விருந்தில் எந்தப் பாகுபாடும் இல்லாமல் கலந்துகொண்ட யசோதாபென்னை அங்கிருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

நல்லிணக்கம்!


தென்னிந்தியாவின் முதல் பெண் ஃபைட்டர் பைலட்!

ஜூன் 16 அன்று ஃப்ளையிங் ஆபீஸர் பதவியில் அமர்ந்தார், கர்நாடக மாநிலம் சிக்மகளூரை சேர்ந்த 23 வயது இளம்பெண் மேகனா ஷண்பக். இன்ஜினீயரிங் பட்டதாரியான மேகனா, ஹாக் ரக ஃபைட்டர் விமானத்தை இயக்கும் சிறப்புப் பயிற்சிக்கு பிதார் செல்லவிருக்கிறார். சிக்மகளூரை அடுத்த மார்லே கிராமத்தைச் சேர்ந்த மேகனா, 4-ம் வகுப்பு வரை தன் சொந்தக் கிராமத்தில் படித்தார். அதன்பின் உண்டு - உறைவிடப் பள்ளியே சிறந்தது என்று எண்ணிய சிறுமியின் கனவை அறிந்த அவரின் தந்தை, மகளை உடுப்பியின் லிட்டில் ராக் பள்ளியில் சேர்த்துவிட்டார். மைசூரு ஜெய காமராஜேந்திரா கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார். இங்குதான் `ஸஹஸ்’ என்ற பெயரில் அட்வென்ச்சர் கிளப் தொடங்கினார். இதுதான் தன் இந்திய விமானப்படை கனவுக்கு வித்திட்டது என்று கூறுகிறார் மேகனா. “செமஸ்டர் விடுமுறைகளின்போது ட்ரெக்கிங், ராஃப்ட்டிங், மலையேற்றம் என பல சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவேன். அவை என்னை உறுதியாக்கின. பாராகிளைடிங்கிலும் பயிற்சி பெற்றேன். பாராகிளைடிங்கில் எனக்குப் பயிற்சி தந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரிகளின் ஒழுக்கமும் வாழ்க்கைமுறையும்தான் எனக்கு விமானப்படை மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியது. என் கனவு கைக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது என்று உணர்ந்தேன்” என்கிறார்.

p16d_1529908992.jpg

அஃப்காட் எனப்படும் விமானப்படை தகுதித்தேர்வு மற்றும் எஸ்எஸ்பி தேர்விலும் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றார். ஜனவரி 2017-ல் `ஃப்ளைட் கேடட்’டாகப் பணியில் சேர்ந்தார். பிலாடஸ் எனப்படும் விமானத்தையும், கிரன் எனும் விமானத்தையும் தனியாக ஓட்டும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றார். மிராஜ், மிக் என எந்த விமானமானாலும் ஓட்டத் தயாராக இருக்கும் மேகனாவின் கனவோ, ராஃபேல் வகை விமானத்தில் பறப்பதுதான். “பைலட்டாக ஆசைப்படும் ஓவ்வொரு சிறுவனும் சிறுமியும் நிறைய கனவு காண வேண்டும். நீங்கள் எட்ட முடியாத உயரத்தில் அந்தக் கனவுகள் இருக்கட்டும். அவற்றை கைக்கெட்டும் வரை விரட்டிப்பிடிக்கும் ஆர்வம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்” என்று கூறுகிறார் இந்த சாதனைப்பெண்!

பறக்கும் பாவைக்குப் பாராட்டுகள்!


அதிசய ஜோடி!

மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்தவர்கள் அமர் மற்றும் ராணி கலம்கர். யுவ சேத்னா என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கி, கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் அமர். ராணி, கல்லூரியில் பேராசிரியர். சமீபத்தில் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்குத் தேவையற்ற பரிசுப் பொருள்கள் வந்து வீணாவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பிறருக்கு உதவிகரமாக அமைய வேண்டும் என்றும் எண்ணிய ஜோடி, திருமணத்துக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் புத்தகங்களை வாங்கிப் பரிசளிக்குமாறு கேட்டுக் கொண்டது. வசதியற்ற மாணவ மாணவியர் போட்டித் தேர்வுகளில் பங்கெடுக்க தேவைப்படும் புத்தகங்கள் கொண்ட நூலகம் ஒன்றைத் திறப்பதுதான் அமரின் பல வருடத்துக் கனவு. இருவரின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க, கிட்டத்தட்ட 3,000 புத்தகங்கள் மணவிழா மேடையில் குவிந்துவிட்டன.

p16e_1529909004.jpg

திருமண அழைப்பிதழில், விலை உயர்ந்த பொக்கேக்கள், நகைகள், பாத்திரங்கள் போன்றவற்றைத் தவிர்த்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக உதவும் புத்தகங்களைப் பரிசளிக்குமாறு சிறப்பு வேண்டுகோள் வைத்தது ஜோடி. அழைப்பிதழும் அச்சிடப்படவில்லை. வாட்ஸ்அப் மூலமே அனுப்பினர். வழக்கம்போல பொதுமக்கள் வாட்ஸ்அப் ஷேர் கடலில் குதிக்க, முகம்தெரியாத நபர்கள்கூட திருமணத்தன்று கையில் புத்தகங்களுடன் வந்துவிட்டனர். அஹமத் நகர் பகுதியில் இம்மாத இறுதியில் நூலகம் திறக்கப்போவதாக இந்த ஜோடி அறிவித்துள்ளது.

வால் கிளாக், நைட் லாம்ப் பரிசா குடுக்குறத இனியாச்சும் நிப்பாட்டுங்க ப்ரென்ஜ்!


நந்திதா தாஸின் புடவைக்கு என்ன குறை?

சமீபத்தில் நிறைவுற்ற கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நடிகை நந்திதா தாஸுக்கு ஆடை வடிவமைக்க ஃபேஷன் டிசைனர்கள் பலர் முன்வந்தும் அவர்களை வேண்டாம் என்று ஒதுக்கியதாகக் கூறியிருக்கிறார் நந்திதா. கேன்ஸ் விழாவில் வருடாவருடம் பங்குகொள்ளும்  நடிகை நந்திதா, வெளிவரவிருக்கும் அவரது படமான ‘மான்டோ’வை பிரபலப்படுத்த கேன்ஸ் விழாவில் கலந்துகொண்டார். ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் `ஓட் கொட்டோர்’ கவுன்களிலும், ஷார்ட் டிரஸ்களிலும் கலக்கிவந்த விழாவில், சிம்பிளான புடவைகள், கான்ட்ராஸ்ட் பிளவுஸ்களில் தனி முத்திரை பதித்தார் நந்திதா.

p16f_1529909022.jpg

டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய நந்திதா, தன் புடவைகள் ‘போர்’ என்று எழுந்த விமர்சனங்களுக்குச் சரியான பதிலடி கொடுத்தார். “கேன்ஸ் விழா உடைகளைப் பற்றியது அல்ல... படங்களைப் பற்றியது. வித்தியாசமான நபர்களைச் சந்திப்பதும், உரையாடுவதும்தான் விழாவின் சிறப்பம்சம்” என்றார்.

இந்த ஆண்டு கேன்ஸ் விழாவுக்குத் தங்கள் ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும்படி பல ஃபேஷன் டிசைனர்கள் வற்புறுத்தியதாகவும், தான் அதைப் புறந்தள்ளியதாகவும் கூறிய நந்திதா, “நான் என் படத்துக்கு பிரெஞ்சு மொழியில் சப்டைட்டில்கள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருந்தேன். அப்போது எனக்கு உடை ஒரு பிரச்னையாகத் தெரியவில்லை. `ஏதோ ஒரு புடவையை எடு, கிடைக்கும் பிளவுஸை அணிந்துகொள்’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்” என்றார். “என் அம்மா எங்கு சென்றாலும் சேலைதான் அணிந்துசெல்வார். அவரிடம் இருந்துதான் நானும் எங்கு சென்றாலும் புடவை கட்டிக்கொள்வது வசதி என்று கற்றுக்கொண்டேன். ‘மறுபடி புடவையா உங்களுக்கு போர் அடிக்கவில்லையா?’ என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். ஏன்... எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கவுன் அணிவது போர் இல்லையா?'' என்று கேட்கிறார்.

நல்லா அடிச்சுக் கேளுங்கம்மணீ!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

அமெரிக்கா விடுதலை பெற்றது

 
 
அமெரிக்கா விடுதலை பெற்றது
 
அட்லாண்டிக் கடல்பகுதியில் அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று குடியேற்ற நாடுகளே முதலில் அமெரிக்காவை நிறுவின. 1770-ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பதற்றங்கள் அமெரிக்க புரட்சி போருக்கு காரணமாக அமைந்தது.

இப்போர் 1775-ம் ஆண்டு முதல் 1781-ம் ஆண்டு வரை நிகழ்ந்தது. ஜூன்14, 1775-ல் பிலடெல்பியாவில் கூடிய கண்ட மாநாடு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் ஒரு கண்ட அளவிலான ராணுவத்தை அமைத்தது. அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் குறிப்பிட்ட அந்நியப்படுத்த முடியாத உரிமைகள்" அளிக்கப்ப்பட்டுள்ளார்கள் என்கிற பிரகடனத்துடன், இந்த மாநாடு சுதந்திர பிரகடனத்தை நிறைவேற்றியது.

1776-ம் ஆண்டு ஜுலை 4-ந்தேதி இந்த பிரகடன வரைவு தாமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது. இந்த தேதியில்தான் இப்போது ஆண்டுதோறும் அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்க அரசியல் சட்டம் 1788-ம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது. புதிய குடியரசின் முதல் செனட், பிரதிநிதிகள் அவை, மற்றும் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன்-1789-ம் ஆண்டில் பதவியேற்றுக் கொண்டனர்.

தனிநபர் சுதந்திரத்தின் மீதான ஐக்கிய கட்டுப்பாடுகளை தடைசெய்வது மற்றும் பல வகையான சட்டப்பூர்வ பாதுகாப்புகளை உறுதி செய்வதற்கான உரிமைகள் மசோதா 1791-ம் ஆண்டில் நிறைவேறியது.
 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

வெற்றி கைநழுவிப் போக இதுதான் காரணம்! - யதார்த்தம் சொல்லும் கதை #MotivationStory

 

நமக்கான குறிக்கோளை வகுத்துக்கொண்டு இலக்கை அடையப் போராட வேண்டும். அதற்கு அத்தியாவசியமாக ஒன்று வேண்டும். அது இருந்தால் வெற்றி எளிது. அது என்ன?

வெற்றி கைநழுவிப் போக இதுதான் காரணம்! - யதார்த்தம் சொல்லும் கதை #MotivationStory
 

தன்னம்பிக்கைக் கதை

`ஒரு கனவை நீங்கள் மட்டும் கண்டுகொண்டிருப்பது வெறும் கனவாகத்தான் இருக்கும்; கனவோடு இணைந்து பயணம் செய்தால்தான் அது நிஜமாகும்’ என்கிறார் ஜப்பானைச் சேர்ந்த நடிகையும் அமைதிப் போராளியுமான யோகோ ஓனோ (Yoko Ono). இதற்கு எல்லோருக்கும் தெரிந்த `சாவியைத் தொலைத்த முல்லா’வின் கதையை உதாரணமாகச் சொல்லலாம். ஒருநாள் ஊருக்கு வெளியே எதையோ தேடிக்கொண்டிருந்தாராம் முல்லா நஸ்ருதீன். ஒருவர் அவரிடம், `என்ன தேடுகிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். `என் சாவியைத் தேடுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார் முல்லா. `எங்கே தொலைத்தீர்கள்?’ என்று அவர் கேட்டதற்கு, `வீட்டுக்கருகில்’ என்று பதில் சொன்னாராம். ஆச்சர்யப்பட்டுப்போன அந்த உள்ளூர்க்காரர், `வீட்டுக்கருகே சாவியைத் தொலைத்துவிட்டு இங்கே வந்து தேடுகிறீர்களே?’ என்றாராம். `இங்கேதானே வெளிச்சமாக இருக்கிறது?’ என்று ஒரு போடு போட்டாராம் முல்லா. இது போலத்தான். நம் பலருக்கும் பல லட்சியங்கள் இருக்கும்; அதை அடைவதற்கான முயற்சியில்தான் பலரும் தோற்றுப் போகிறார்கள். வாழ்வில் நம் இலக்கை அடைவது எப்படி என்று யாரும் வந்து நமக்குப் பாடம் எடுக்க மாட்டார்கள்; கற்றுக் கொடுக்கவும் மாட்டார்கள். நாம்தான் நமக்கான குறிக்கோளை வகுத்துக்கொண்டு இலக்கை அடையப் போராட வேண்டும். அதற்கு அத்தியாவசியமாக ஒன்று வேண்டும். அது இருந்தால் வெற்றி எளிது. அது என்ன? தன்னம்பிக்கை. நம் பலம் நமக்கே தெரியாதது. அதனால்தான் வெற்றி கைநழுவிப் போகிறது; பலரால் இலக்கை எட்ட முடியாமல் போகிறது. அந்த யதார்த்தத்தை விளக்குகிறது இந்தக் கதை. 

தாய் - மகன்

 

 

ஒரு மனிதருக்குப் பெரிய கனவு இருந்தது. அது என்ன கனவு என்பது இங்கே முக்கியமில்லை... வேண்டுமானால், `சினிமாவில் ஹீரோவாக வேண்டும்’, `சென்னை அண்ணாசாலையில் எல்.ஐ.சி மாதிரி ஒரு கட்டடம் கட்டி அதற்கு உரிமையாளராக வேண்டும்’, `எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிவிட வேண்டும்’... இப்படி ஏதோ ஒரு பெருங்கனவு என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், அந்த மனிதர் ஒரு கட்டத்தில் தன் கனவு நனவாகும் என்கிற நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டார். தன் கனவை அடையத் தன்னிடம் போதுமான பலம் இல்லை என்று கருதினார். யாரிடமாவது உதவி கேட்க வேண்டும் என்றும் அவருக்குத் தோன்றியது. முதலில் அந்த மனிதருக்கு நினைவுக்கு வந்தது வயதான அவருடைய அம்மா. அவரிடம் கேட்டுவிடுவது என்று முடிவெடுத்தார். 

 
 

 

ஒருநாள் தன் அம்மாவோடு அவர் கிளினிக்குக்குச் செல்லவேண்டியிருந்தது. அது வீட்டுக்கு அருகிலேயே இருந்ததால், இருவரும் நடந்தே சென்றார்கள். மருத்துவரைப் பார்த்து, வழக்கமான சில பரிசோதனைகளை அம்மா செய்துகொண்ட பிறகு இருவரும் வீடு திரும்பினார்கள். வழியில் அவர், அம்மாவிடம் மெள்ளப் பேச்சை ஆரம்பித்தார். 

``அம்மா, என் கனவு என்னனு உங்களுக்குத் தெரியும்தானே?’’ 

``ஆமாம்ப்பா. அதுக்கென்ன இப்போ...’’ 

``இல்லம்மா. அந்தக் கனவை நனவாக்குறதுக்கான பலம் என்கிட்ட இல்லைனு தோணுது. அதுக்கான சக்தியை எனக்குக் குடுங்களேன்...’’ 

அம்மா சொன்னார்... ``உனக்கு உதவி செய்யறதுல எனக்கு சந்தோஷம்தான். ஆனா, அந்த அளவுக்கு சக்தி என்கிட்ட இப்போ இல்லை.  இருந்த எல்லாத்தையும் உன்கிட்ட ஏற்கெனவே குடுத்துட்டேனேப்பா...’’ 

முனிவர்

அந்த மனிதர் இதைக் கேட்டு துவண்டு போனார். ஆனால், கனவை நிறைவேற பலம் வேண்டுமே... யாரிடமிருந்தாவது, எந்த வழியிலாவது பெற்றுத்தானே ஆக வேண்டும்? ஒவ்வொருவரிடமாகக் கேட்டுப் பார்ப்பது என்று முடிவு செய்துகொண்டார். தனக்குத் தெரிந்த ஒரு ஞானியிடம் போனார். விஷயத்தைச் சொன்னார். `ஐயா... எனக்கு சக்தி வேண்டும். அது எங்கே கிடைக்கும்?’’ என்று கேட்டார். 

ஞானி சொன்னார்... ``இமயமலையில நமக்கு வேணுங்கிற சக்தியெல்லாம் கிடைக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். நானும் இமயமலைக்குப் போயிருக்கேன். ஆனா, அங்கே பனியையும் குளிரையும் தவிர வேற எதையும் நான் பார்த்ததில்லை. எனக்கும் சக்தி எங்கே கிடைக்கும்னு சரியா சொல்லத் தெரியலையேப்பா...’’ 

அடுத்து அந்த மனிதர் ஒரு துறவியிடம் போனார். விஷயத்தைச் சொன்னார். ``குருவே, என் கனவு நிறைவேறுவதற்கான சக்தி எனக்கு எங்கே கிடைக்கும்?’’ என்று கேட்டார். 

``நீ செய்யும் பிரார்த்தனையால்தான் சக்தி கிடைக்கும். அதே நேரத்தில் நீ கண்டுகொண்டிருப்பது தவறான கனவு என்றால் அதையும் நீ தெரிந்துகொள்வாய். எனவே, அமைதியாக பிரார்த்தனையில் ஈடுபடு’’ என்றார் துறவி

அவர் சொன்னது ஒரு வழி என்றாலும், அதுவும் அந்த மனிதருக்குக் குழப்பத்தையே தந்தது. ஏதேதோ சிந்தனையில் வீடு நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது வழியில் அவருக்குத் தெரிந்த முதியவர் ஒருவர் எதிர்ப்பட்டார். 

முதியவர்

``என்னப்பா... ஏதோ யோசனையோட போற மாதிரி தெரியுது!’’ 

அவரிடமும் அந்த மனிதர் விஷயத்தைச் சொன்னார்... ``என் கனவு நிஜமாறதுக்கு சக்தி வேணும். அது எங்கே கிடைக்கும்னு ஒவ்வொருத்தரா கேட்டுக்கிட்டிருக்கேன். ஆனா, யாராலயும் எனக்கு உதவி செய்ய முடியலை.’’ 

``ஒருத்தராலகூடவா முடியலை?’’ 

``ஆமா.’’ 

அந்த முதியவர் கேட்டார்... ``சரி... உனக்கு நீயே கேட்டுப் பார்த்துக்கிட்டியா?’’ 

அந்த மனிதருக்கு இதைக் கேட்டதும் ஏதோ தெளிவு கிடைத்ததுபோல இருந்தது. 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

நான்கு வயதில் ஓவியக் கலை மேதையானவரை தெரியுமா?

வண்ணமடிக்கும் தூரிகையை கையில் எடுத்துபோது, அட்வைட்டுக்கு எட்டு மாதம்தான் ஆகியிருந்தது. நான்கு வயதிலேயே ஓவியக் கலை மேதையாக ஆனதாக இச்சிறுவன் பாராட்டப்படுகிறான். தனது படைப்புகளை ஆயிரக்கணக்கான டாலருக்கு விற்றுள்ள மூன்று கண்காட்சிகளை இந்தச் சிறுவன் நடத்தியுள்ளான். கனடாவில் வாழும் இந்த சிறுவனை பற்றிய காணொளி.

  • தொடங்கியவர்

'கழுகுப்பார்வை' - பிபிசி நேயர்களின் சிறந்த புகைப்படங்கள் #BBCTamilPhotoContest

 

 

சுபன் பீர் முஹமத்து

Image captionசுபன் பீர் முஹமத்து பாலசுப்பிரமணியன் Image captionபாலசுப்பிரமணியன் கிஷோர் குமார் Image captionகிஷோர் குமார் அருண் குமார் Image captionஅருண் குமார் விஜயநாயகம் Image captionவிஜயநாயகம் பாலாஜி Image captionபாலாஜி செந்தில் குமார் Image captionசெந்தில் குமார் சித்ரா Image captionசித்ரா ஹாரிஷ் ராகவ் Image captionஹாரிஷ் ராகவ்

 

  • தொடங்கியவர்
‘எளிமையே சந்தோசமான வாழ்க்கையைத் தரும்’
 
 

image_06b8372de0.jpgஎளிமையாக இருப்பதே சந்தோசமான வாழ்க்கையை அமைக்கும் என்று எண்ணுபவர்களுக்குச் சில சமயம் தன்னைச் சுற்றியிருக்கும் செல்வந்தர்களைக் கண்டால் மனம் சஞ்சலம் ஏற்படலாம். 

மனித சுபாவம் தனது நிலையில் நிரந்தரமாக இருக்க விரும்புவதும் இல்லை. ஆனால், எல்லோருமே இப்படிக் கருதுவதில்லை. இருப்பதே போதும் என்று இயங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். 

பரந்த உலகின் செழுமையையும் அதன் உற்பத்திகளையும் நவீன மயமாக்கலையும் கண்டு, அதன் ஈர்ப்பின் வலிமையில் சிக்கித்தவிப்பது சகஜம். இப்படியே போனால் வீடு, பாவனைப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள், எல்லாமே சடுதியாக மாற்றமடைந்து வருவதால், அவைகள் எல்லாவற்றின் மீதும் ஆசைப்பட்டால், அதன் முடிவுதான் என்ன? 

இன்று இளைய தலைமுறையினர் மட்டுமல்ல, பலருமே தங்கள் அலைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, உடைகள் எல்லாவற்றையும் அடிக்கடி மாற்றிமாற்றி வாங்கிப் பணத்தை விரயம் செய்கின்றனர். இப்படியே இருந்தால் சேமிக்க முடியுமா? 

எளிமையை விரும்புபவர்களும் மற்றும் எல்லோருமே இவ்வண்ணம் பேராசைப்படுதல் ஏற்புடையதல்ல.

  • தொடங்கியவர்

பிபிசி தன் முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது

 
பிபிசி தன் முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது
 
பிபிசி நிறுவனம் பிரிட்டிஷ் அரசின் பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் என்ற பெயர்கொண்ட இது கடந்த 1927-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலம் செய்தி சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தலைமையகம் லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனத்தில் 23 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.

உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமான இது உலகின் 150 தலைநகரங்களில் 28 மொழிகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளை ஒலி-ஒளிபரப்பு செய்து வருகிறது. உலகளவில் உள்ள செய்திகளை இந்நிறுவனம் சேகரித்து வழங்குகிறது.

உலகின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான பிபிசி 1954 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 5-ந் தேதி தனது முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது.

 

 

குளோனிங் முறையில் உருவான முதல் செம்மறியாடு டோலி பிறந்தது

 
 
 
குளோனிங் முறையில் உருவான முதல் செம்மறியாடு டோலி பிறந்தது
 
1996-ம் ஆண்டு ஜுலை மாதம் 5-ந் தேதி எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ரோஸ்லின் ஆராய்ச்சிக் கூடத்தில் முதன்முதலாக டோலி என்ற செம்மறியாடு குளோனிங் முறையில் பிறந்தது.

சோதனைக்குழாய் மூலம் வளர்க்கப்பட்ட டோலி, எம்பிரியோ வளர்ச்சிக்குப் பிறகு ஒரு பெண் ஆட்டின் கர்ப்பப்பைக்குள் வைக்கப்பட்டு முழு வடிவம் பெற்றது. இதன் உருவாக்கத்தில் தலைமை வகித்தவர் லான் வில்மட் என்ற விஞ்ஞானி ஆவார். இவர் செம்மறியாட்டின் படைப்பாளி என புகழப்படுகிறார்.

மேலும் இதே நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

• 1811 - வெனிசுவேலா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

• 1945 - பிலிப்பைன்சின் விடுதலை அறிவிக்கப்பட்டது.

• 1950 - அமெரிக்கப் படைகளுக்கும் வட கொரியாப் படைகளுக்கும் இடையே மோதல் தொடங்கியது.

• 1962 - பிரான்சிடமிருந்து அல்ஜீரியா விடுதலை அடைந்தது.

• 1977 - பாகிஸ்தானில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோ பதவி இழந்தார். ராணுவ சட்டம் கொண்டுவரப்பட்டது.

• 1987 - விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.

• 1998 - செவ்வாய்க் கோளுக்கு ஜப்பான் முதலாவது விண்கலத்தை அனுப்பியது

• 2004 - இந்தோனேசியாவில் முதலாவது அதிபர் தேர்தல் நடந்தது. 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

கனவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடிந்தால்..!? - நமக்கு நாமே இன்செப்ஷன் செய்யலாம்

 
 
கனவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடிந்தால்..!? - நமக்கு நாமே இன்செப்ஷன் செய்யலாம்
 

கனவுகள் எவ்வளவு அழகான விஷயம். அந்தக் காலை நேரத்தில் நம் வாழ்வில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத வாழ்க்கையைத் தர கனவுகளால் மட்டுமே முடியும். எத்தனையோ நாள்கள் அந்த அழகான கனவுகளைக் கலைப்பதற்கு என்றே இந்த அலாரங்கள் அடித்துத் தொலைக்கும். திடுதிப்பென எழுந்துவிட்டுக் கன நேரத்தில் மீண்டும் படுத்து அதே கனவு மீண்டும் வராதா ஏன ஏக்கப் பெருமூச்சோடு தூங்க முயன்றிருப்பீர்கள். சரி ஒருவேளை அந்தக்  கனவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடிந்தால்? நாம் நினைக்கும் வாழ்க்கையை அந்தக் கனவுலகில் வாழ முடிந்தால் எப்படி இருக்கும்? சூப்பர் மேன் போல பறக்கலாம், இந்தியாவின் பிரதமராகி நாடு நாடாகச் சுற்றலாம். சொடக்குப் போடும் நேரத்தில் ஒரு பறக்கும் தட்டை உருவாக்கி இந்த அண்டத்தைச் சுற்றிப் பார்க்க கிளம்பிவிடலாம் இன்னும் எத்தனையோ செய்யலாம்தான். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அறிவியல் இந்தக் கனவுகளைப் பற்றி கூறுவது என்ன? பார்ப்போம். 

கனவு

நாம் தினமும் கனவு காண்போமா எனத் தெரியாது. ஆனால், ஒரு சில நாள்கள் நாம் காணும் கனவு மட்டும் நம் நினைவில் இருக்கும். நாம் எழுந்ததும்தான் அது கனவு என்று தெரிய வரும். இப்படியான கனவுகளுக்குப் பெயர்தான் `லூஸிட் ட்ரீமிங்' (Lucid dreaming). இந்தக் கண்கவர் நிகழ்வை வைத்து வாழ்வில் என்ன என்ன செய்யலாம் என்ற ஆராய்ச்சிகள் ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, 2017ல் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று நாம் மனது வைத்தால் நம் விருப்பத்துக்கு ஏற்ப கனவு கானலாம் என்று கண்டுபிடித்திருக்கிறது. உலகில் உள்ள மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது லூஸிட் ட்ரீம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார்கள். கால்வாசி பேருக்கு லூஸிட் ட்ரீமிங் மாதத்துக்கு ஒருமுறை அல்லது பலமுறை நிகழ்கிறது. 1975ல் தான் லூஸிட் ட்ரீமிங் என்று ஒன்று இருப்பதை உறுதிப்படுத்துகிறார்கள். அதன் பிறகு இதை எவ்வாறு நிகழ வைப்பது எனப்  பலகட்ட ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. இது மட்டும் சாத்தியமானால் நிஜ வாழ்வில் செய்யக்கூடிய சம்பவங்களைக் கனவுலகில் செய்து பார்த்து பயிற்சி எடுத்து நிஜ உலகில் நம்மால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் எனத் தெரிவித்திருக்கிறார்கள். 

 

 

லூஸிட் ட்ரீமிங் செய்வது எப்படி:
லூஸிட் ட்ரீமிங் என்பதற்குத் தெளிவாகக் கனவு காணுதல் என்று பொருள். இதைச் செய்வதற்கு மூன்று முறைகளைப் பயன்படுத்தலாம் அல்லது மூன்று முறைகளையும் ஒவ்வொரு கட்டமாகப் பயன்படுத்தலாம்.

 

 

1. நிகழ்கால உண்மைத்தன்மை சோதனை:
தினமும் ஒரு பத்து முறையாவது ``நான் கனவு காண்கிறேன்" என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அதோடு உங்கள் வாயை மூடியவாறே காற்றை உள்ளிழுக்க முயற்சி செய்யுங்கள். (கனவில் இருந்தால் உங்களால் வாயை மூடியவாறே காற்றை உள்ளிழுக்க முடியும், நிஜத்தில் முடியாது).

2. தூங்கிய பிறகு ஒருமுறை எழுந்துவிட்டு மறுபடியும் தூங்க வேண்டும்:
நீங்கள் வழக்கம்போல் நன்றாகத் தூங்குங்கள். ஆனால், தூங்கி ஐந்து மணி நேரத்தில் எழுந்துவிடும் வகையில் ஒரு அலாரம் வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து மணி நேரம் தூங்கி எழுந்த பிறகு, தெளிவான கனவு காணுபதற்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்ற 700 வார்த்தை கையேடு ஒன்று உண்டு. அதைப் படித்துவிட்டு மீண்டும் உறங்க வேண்டும். பொதுவாகக் கனவுகள் REM sleep (Rapid eye movement sleep) நிலையில் தானா வரும். அது ஒரு முறை தூங்கி இடையில் எழுந்து மறுபடியும் தூங்கும்போதுதான் அந்த நிலையை அடைய முடியும். இந்த REM நிலை தூக்கம் 90 நிமிடங்களிலிருந்து 120 நிமிடங்கள் வரை நீடிக்கும். அதன் பின்னர் ஒவ்வொரு கட்டமாக ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்வீர்கள், அப்போது கனவுகளும் ஆழமாக இருக்கும். இந்த நிலையில்தான் நீங்கள் தெளிவாகக் கனவு காண முடியும். 

 3. நிமோனிக் இன்டக்ஷன் ஆஃப் லூஸிட் ட்ரீம்ஸ்: ( Mnemonic induction of lucid dreams)
நீங்கள் படுக்கையில் படுத்தவுடன் தூங்கச்செல்லும் முன் ``அடுத்த முறை நான் கனவு காணும் போது, அது கனவு என ஞாபகம் வைத்துக் கொள்கிறேன்" என்ற விஷயத்தை ஆழமாக நம்ப வேண்டும். அதனை ஆழமாகச் சிந்தித்துக்கொண்டே தூங்க வேண்டும். நீங்கள் தூங்கும் முன் எதை நினைக்கிறீர்களோ அதுவே கனவாக வரும் வாய்ப்பு அதிகம்.

``ட்யூட் இதெல்லாம் செஞ்சா கனவு வருமா” எனச் சந்தேகம் எழும். எனவேதான் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 169 நபர்களைத் தேர்ந்தெடுத்து இந்த மூன்று முறைகளையும் வைத்து சோதனை செய்திருக்கிறார்கள். இந்த நபர்களை மூன்று குழுக்களாகப் பிரித்து ஒரு குழுவினர் முதல் முறையை மட்டும் பின்பற்றுமாறும், இரண்டாம் குழுவினர் முதல் இரண்டு முறைகளை மட்டும் பின்பற்றுமாறும் மற்றும் மூன்றாம் குழுவினர் இம்மூன்று முறைகளையும் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். முதல் ஒரு வாரம் அவர்கள் அனைவரையும் எந்த முறையையும் பின்பற்ற வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

 

 

முதல் வார முடிவில் அனைவருக்கும் தெளிவான கனவு வரவேயில்லை. இரண்டாம் வாரம் இந்த முறைகளை மேற்கொண்ட பிறகு, முதல் குழுவினருக்கு 8 சதவிகிதமும், இரண்டாம் குழுவினருக்கு 11 சதவிகிதமும், மூன்றாம் குழுவினருக்கு 17 சதவிகிதமும் தெளிவான கனவு அதாவது லூஸிட் ட்ரீமிங் நிகழ்ந்ததாகக் கூறியிருக்கிறார்கள். இதில் மூன்றாம் முறையைப் பயன்படுத்தியவர்கள் 46 சதவிகிதம் தங்களுக்குக் கனவு தெளிவாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.

இது இந்தக் கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சியின் தொடக்கம் மட்டுமே, இன்னும் இதனை மேம்படுத்த முடிந்தால் மறுநாள் செய்ய வேண்டிய விஷயத்தை முதல் நாள் தூக்கத்திலேயே ரிகர்சல் பார்த்து உங்களால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும். இன்செப்ஷன் படம் பார்த்திருக்கிறீர்கள்தானே, இது உங்களை நீங்களே இன்செப்ஷன் செய்து கொள்ள உதவும். 

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

அமெரிக்காவில் நடந்த பர்கர் போட்டி!

அமெரிக்காவில், இன்று சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற பர்கர் உண்ணும் போட்டியில், பத்து நிமிடங்களில் இருபத்து ஏழு பர்கர்களை உண்டு வெற்றிக் கோப்பையை பெற்றிருக்கிறார் மொல்லி ஸ்கூல்யெர் என்ற இந்த பெண்மணி.

  • தொடங்கியவர்

நயன்தாராவின் கோலமாவு கோகிலா ட்ரெய்லர்!

 

`அறம்' படத்துக்குப் பிறகு தொடர்ந்து வுமன் சென்ட்ரிக் படங்களில் நயன்தாராவை தொடர்ந்து பார்க்கலாம் என்ற மனநிலை தற்போது ரசிகர்களுக்கு உருவாகியுள்ளது. இந்நிலையில், 'வேலைக்காரன்' படத்துக்குப் பிறகு, நயன்தாராவின் அடுத்த படமான 'கோலமாவு கோகிலா'வை ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதன் ட்ரெய்லர் இன்று யூடியூபில் வெளியாகியுள்ளது. 

கோலமாவு கோகிலா

இப்படத்தில் கஷ்டப்படும் குடும்பத்தைச் சார்ந்த வேலைக்காரப் பெண்ணாக நடித்துள்ளார் நயன்தாரா. இதை அறிமுக இயக்குநரானா நெல்சன் இயக்குகிறார். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். இப்படம் டார்க் காமெடி வகையைச் சார்ந்ததாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அறந்தாங்கி நிஷா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஜாக்குலின் ஆகியோர் இதில் நடிக்கின்றனர். ஜனவரி மாதத்தில் ஷூட்டிங் முடிந்த நிலையில் இப்படத்தை ரசிகர்கள் திரையில் காண ஆவலோடு எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

  • தொடங்கியவர்
‘அதீத அவசர புத்தி ஆபத்து’
 
 

image_cb6c77ba4e.jpgஎமது மூளையை நாம் மெருகேற்ற நீண்ட காலம் தேவைப்படுகிறது.

அனுபவங்களும் மக்கள் தொடர்பும் மக்கள் மீதான கரிசனைகளும் எங்களை என்றும் புதியவராகப் புடம் போட்டால், மினுங்கும் தங்கம்போல ஆக முடியும்.

எந்தத் தொழிலையும் உடன்கற்றுத் தேர்ச்சி பெற முடியாது.

எமது எண்ணங்களைப் பூரணமாகப் புனிதமாக்க, முதற்கண் நாமே விருப்பப்படவேண்டும்.

தியாகம் செய்யவும் போலிகளைத் துறக்கவும் அத்தியாவசியமான தேவையானவைகளை மட்டும் நிறைவேற்றும் ஆசைகளை வைத்திருக்க வேண்டும்.

எவற்றையும் வேண்டாம் என்று சொல்ல மனிதன் முட்டாளுமல்ல.

செய்ய வேண்டிய கருமங்களைச் செய்தால், பொருத்தமான ஆசைகளும் நிறைவேறியே தீரும்.

அதீத அவசர புத்தி ஆபத்தானது.

சீக்கிரம் செய்து முடிப்பதற்காக முறையற்ற, ஒழுங்கற்ற வேலைகளைச் செய்ய முடியாது.

நிதான புத்தி முழுமை தரும். 

  • தொடங்கியவர்

சோவியத் யூனியன் ஏகே 47 துப்பாக்கிகளை தயாரித்தது

 

 
 
 
 
சோவியத் யூனியன் ஏகே 47 துப்பாக்கிகளை தயாரித்தது
 
ஏகே-47 தானியங்கி துப்பாக்கி சோவியத் ஒன்றியத்தில் மிக்கைல் கலாசுனிக்கோவ் என்பவரால் இரு வகையாக உருவாக்கப்பட்டது. ஒன்று நிலையான பிடியுடன் கூடிய ஏகே 47 மற்றொன்று ஏகேஎஸ் 47 உலோகத் தோள்தாங்கு பிடியுடன்  தயாரிக்கப்பட்டது.

870 மிமீ நீளம் கொண்ட இந்த துப்பாக்கியில் 7.62x39 மிமீ கொண்ட தோட்டாக்களை பயன்படுத்தலாம்.

இந்தத் துப்பாக்கி 1944 முதல் 1946 வரை வீரர்கள் பழகுவதற்காக சோதனை முயற்சியாக ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது. 1949 முதல் அதிகாரப்பூர்வமாக சோவியத் இராணுத்தில் சேர்க்கப்பட்டது.

இதுதான் முதன் முதலில் குறைந்த செலவில் நீடித்து உழைக்கக்கூடிய, பயன்படுத்துவதற்கு எளிதான தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கியாகும். உலகளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கியும் இதுவே.

இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் உலகப்போர் முடிவுற்ற பின்தான் பயன்பாட்டுக்கு வந்தது.

https://www.maalaimalar.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

``மழைக்காடுகளைக் காப்பாற்றிய பழைய செல்போன்கள்!" - அமேசான் காட்டின் ஆச்சர்ய கதை

 

``டெம்பே"வின் குழந்தைகள் சொல்லும் பதில்கள் எதுவும் பள்ளியில், பாடப்புத்தகங்களில் சொல்லிக் கொடுக்கப்பட்டவை அல்ல. அது தலைமுறை, தலைமுறையாக அவர்களின் மரபணுக்களிலேயே கடத்தப்பட்ட பாடம்.

``மழைக்காடுகளைக் காப்பாற்றிய பழைய செல்போன்கள்!
 

அந்தக் கரும்பலகையில் இரண்டு மரங்கள், நான்கு துண்டுகளாக வரையப்பட்டிருந்தன. அதாவது, ஒரு மரம் இரண்டாக வெட்டப்பட்டிருந்தது. இன்னும் கொஞ்சம் தள்ளி மான்கள், ஜாகுவார்கள் வரையப்பட்டிருந்தன. குழந்தைகளுக்கு அது காடு என்பது புரியும். அந்த ஆசிரியை அவர்களின் மொழியில் கேட்கிறார்...

``இது நம்ம காடு தானே?"

"ஆமா..."

 

 

``இப்படி இந்த மரங்கள வெட்டி, திருட்டுத்தனமா எடுத்துப் போறது சரியா?"

``இல்ல...தப்பு...தப்பு..." பல குழந்தைகளும் தலைகளை ஆட்டி பதில் சொல்கின்றனர். 

``இப்படி மரங்களை வெட்டினால் என்னவாகும்?"

``நமக்குப் பழங்கள் கிடைக்காது." ஒரு சிறுமி.

``மான்களுக்கும், ஜாகுவார்களுக்கும் வீடு இருக்காது." 

``மழை வராது."

``சாமி அழும்."

``மரம் பாவம். செத்துப் போயிடும்."

அமேசான் மழைக்காடுகள்

இப்படியாகப் பல பதில்கள். ஆனால், ஒவ்வொரு பதிலும் அந்தக் குழந்தைகளுக்கு, அந்தக் காட்டின் மீதிருக்கும் காதலை வெளிப்படுத்தும் விதமாக இருந்தன. ஈரம் நிறைந்திருக்கும் பிரேசிலின் மழைக்காடுகள் அவை. பிரேசிலின் ``பாரா" (Para) மாநிலத்திலிருக்கும் ``ஆல்ட்டோ ரியோ குவாமா பூர்வகுடி நிலப்பகுதி" (Alto Rio Guama Indigenous Land). 2014 க்கு முன்னர் வரை தங்கள் வனங்களைப் பாதுகாக்க மிகப் பெரிய போராட்டங்களை நடத்தியது இந்த மண்ணின் பூர்வகுடி இனம் ``டெம்பே" (Tembe). 

 

 

``டெம்பே"வின் குழந்தைகள் சொல்லும் பதில்கள் எதுவும் பள்ளியில், பாடப்புத்தகங்களில் சொல்லிக் கொடுக்கப்பட்டவை அல்ல. அது தலைமுறை, தலைமுறையாக அவர்களின் மரபணுக்களிலேயே கடத்தப்பட்ட பாடம். காட்டின் தரையிலிருந்து தலைநிமிர்ந்துப் பார்த்தால், வானத்தைப் பார்ப்பது சற்று கடினம்தான். சமயங்களில்...வானம் பச்சை நிறம் பூண்டிருப்பதாகக் கூடத் தோன்றலாம். ஒவ்வொரு மரமும் அத்தனை உயரம். ஒவ்வொரு மரமும் அத்தனை அகலம். ``டெம்பே"வுக்கு அது கடவுள். குலசாமி. அந்தக் காட்டைத் தவிர அவர்களுக்கு வாழ்வில் எது ஒன்றும் பெரிது கிடையாது. 

``டெம்பே" அல்லாத மற்றவர் அனைவருக்கும் அது பணம், டாலர்கள். கொட்டிக் கொடுக்கும் புதையல். அரசின் பக்கம் கை நீட்டுபவர்களுக்குக் கையூட்டுகளைக் கொடுத்து, அந்த மரங்களை வெட்டி உலகின் பல நாடுகளுக்குக் கொண்டு சேர்க்க அங்கு மிகப்பெரிய கொலை, கொள்ளை கும்பல் உண்டு. அவர்களை எதிர்த்துப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள் ``டெம்பே".  

``டெம்பே"வின் நிலத்தில் ஒரு பக்கம் மிகப்பெரிய ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்தன. குறிப்பாக, ``மெஜெர் ராஞ்ச்" (Mejer Ranch) எனும் பண்ணை பெரியளவிலான நிலத்தை ஆக்கிரமித்திருந்தது. அதற்கு எதிராக 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்ட ரீதியிலும், அறப் போராட்டங்களின் வழியாகவும் இன்னும் பல வழிகளிலுமாக ``டெம்பே" மக்கள் போராடினர். இறுதியாக, 2014ம் ஆண்டின் தொடக்கத்தில் பண்ணையைக் காலி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அமேசான் பழங்குடி

அந்த மாலை நேரம், சிவப்பு நிற பழத்தைப் பிழிந்து அந்தச் சாற்றை அவர்களின் முகத்தில் பூசிவிடுகிறார் அந்தப் பெண். கிழிந்த ஜீன்ஸ் பேன்ட், அங்கங்கு ஓட்டையாகிப் போயிருக்கும் சட்டை...சிலர் சட்டை போடாமல் வெறும் உடம்பில் இருந்தனர். தலையைச் சுற்றி, சிவப்பு நிற பட்டை ஒன்று. அது ஏதோ பறவையின் இறகால் செய்யப்பட்டிருப்பது போலிருந்தது. அப்படியாக ஒரு 30 பேர் இருக்கிறார்கள். அவர்களை ``டெம்பே போராளிகள்" (Tembe Warriors) என்றழைக்கிறார்கள். 

ஒரு பழைய லாரி வந்து நிற்கிறது. ஒவ்வொருவரும் துப்பாக்கிகளோடு அதில் ஏறுகிறார்கள். ஒரு பெண்ணும் அந்த வண்டியில் ஏறுகிறார். அவர் தன் பையில் நிறைய தோட்டக்களை வைத்திருக்கிறார். அதை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்கிறார். அவர்கள் அந்தக் காட்டுப் பகுதியைச் சுற்றி வருகிறார்கள். அங்கு சில வண்டிகளின் தடங்கள் இருப்பதைப் பார்க்கிறார்கள். அது புதிய தடம். நேற்று அது அங்கில்லை. 

தங்களின் வண்டியை நிறுத்துகிறார்கள். இறங்கி மெதுவாக நடக்கிறார்கள். சில சத்தங்களைக் கூர்ந்து கேட்டு அதை நோக்கிப் போகிறார்கள். அங்கு 6 பேர் இருக்கிறார்கள். வெட்டப்பட்ட மரத்தை அறுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு டிராக்டர் நின்று கொண்டிருக்கிறது. அவ்வளவு பேரையும் சுற்றி வளைக்கிறார்கள். 

அந்தப் பெண், முன் வருகிறார். 

``நீங்களும் மனிதர்கள்தானே...உங்களுக்கும் குடும்பம் எல்லாம் உண்டுதானே. நாங்கள் என்றாவது உங்கள் வீட்டுக்கு வந்து கொள்ளையடித்திருக்கிறோமா? நீங்கள் ஏன் எங்கள் காட்டை அழிக்கிறீர்கள். எங்கள் மரங்களைத் திருடுகிறீர்கள். யாரோ ஒரு முதலாளிக்காக எங்களைப் பகைத்துக் கொள்கிறீர்கள்? " அவர்கள் அமைதியாக அந்தப் பெண்ணைப் பார்த்தபடி நிற்கிறார்கள். அதில் ஒருவன் முறைக்கிறான்.

``ஒரு பெண் இப்படிப் பேசுகிறாளே என்று நினைக்கிறீர்களா? நான் `டெம்பே' பெண். எனக்கு பயம் கிடையாது. என்னை உங்களால் ஒன்றும் செய்திட முடியாது. இதுதான் உங்களுக்கான கடைசி எச்சரிக்கை. அடுத்த முறை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்." என்று மிரட்டிவிட்டு நகர்கிறார் புயுர் டெம்பே (Puyr Tembe). அந்த இனத்தின் முதல் பட்டதாரி. வழக்கறிஞர். 

தெம்பே பழங்குடி - Amazon

இப்படியாகத்தான் தங்கள் காடுகளைக் காக்க அவர்கள் போராடிக்கொண்டிருந்தார்கள். அந்தக் காட்டின் நிலப்பரப்பு மிக அதிகம். அவர்களால் எல்லாவற்றையும் தடுக்க முடிவதில்லை. சட்டவிரோத மரக்கடத்தல் (Illegal Logging) தொடர்ந்துகொண்டேயிருந்தது. 

அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் பணம் பண்ணும் முதலைகளுக்கு நடுவே, பச்சைகளின் குரலைக் கேட்க வைக்க போராடிக் கொண்டிருந்தார் டொஃபேர் வொய்ட் (Topher White). அவர் ``ரெயின் ஃபாரஸ்ட் கனெக்‌ஷன்" (Rainforest Connection) எனும் அமைப்பைத் தொடங்கினார்.

சில பழைய செல்போன்களை சேகரித்தார். அதில் பல நாள்கள் சார்ஜ் நிலைத்திருக்கும் வகையில், சோலார் பேனல்களை இணைத்தார். இன்னும் சில தொழில்நுட்பங்களை அதோடு இணைத்தார். ஒரு சின்னப் பெட்டியாகத் தோற்றமளித்தது அந்தக் கருவி. அதை எடுத்துக் கொண்டு இந்தோனேசியாவின் போர்னியோ காடுகளுக்குச் சென்றார். அங்கு அதை சோதித்துப் பார்த்தார். 

சில மரங்களில் அந்தக் கருவியைப் பொருத்தினார். அந்தக் கருவியோடு சில செல்போன்களை இணைத்தார். அது அந்தப் பகுதியின் சத்தங்களை மிகக் கூர்மையாகப் பதிவு செய்தது. பலவித ஒலி அமைப்புகளையும் அது வேறுபடுத்திக் காட்டியது. மரம் அறுப்பது, மரம் வெட்டுவது போன்ற சத்தங்களைக் கேட்கும் போது, அந்த ஒலியின் அளவைக்கொண்டு அதை இனம் பிரித்தது. அதை, அந்தக் கருவியோடு இணைக்கப்பட்டிருக்கும் செல்போன்களுக்குத் தகவல்களாக அனுப்பியது. அதைக்கொண்டு, காடுகளில் எந்தப் பகுதிகளில் மரம் வெட்டப்படுகிறது என்ற தகவலை எளிதாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. இந்தச் சோதனை வெற்றியடைந்த சமயம், பிரேசிலின் டெம்பே மக்களின் பிரச்னைக் குறித்து கேள்விப்பட்டு அங்குப் போனார் டொஃபேர் வைட். 

அமேசான் மழைக்காடு - Amazon

டொஃபேர் வைட் (Topher White).

அந்த மக்களோடு உரையாடினார். அவர்களிடம் தொழில்நுட்பத்தின் அவசியத்தை உணர்த்தினார். தொழில்நுட்பத்தோடு இணைந்து செயல்பட்டால், இன்னும் சிறப்பான முறையில் தங்கள் காடுகளைப் பாதுகாக்க முடியும் என்று பேசினார். அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். மழைக்காட்டின் பல இடங்களில், மரங்களில் அந்தக் கருவி பொருத்தப்பட்டது. 30 டெம்பே போராளிகளின் செல்போனோடும் அது இணைக்கப்பட்டது. 

மாதங்கள் கடந்தன. ஆண்டுகள் ஆயின. இன்று அங்கு இந்தத் தொழில்நுட்பம் பெரியளவில் அவர்களுக்கு உதவியிருக்கின்றன. முழுமையாகச் சட்டவிரோத மரக்கடத்தலைத் தடுக்க முடியாவிட்டாலும் கூட இது அவர்களின் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளை எளிமைப்படுத்தியிருக்கிறது. 

இது குறித்து புயுர் டெம்பே  இப்படியாகச் சொல்கிறார்... 

``எங்களுக்குத் தெரியும்...இங்கு பல பேர் செய்யக் கூடாத பல விஷயங்களை மிகவும் பிடிவாதத்தோடு செய்து கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், நாங்கள் நம்புகிறோம். ஒரு நாள் எங்கள் காடுகளின் உயிராதாரங்களைக் கொள்ளையடிக்கும் இந்தக் கும்பலை மொத்தமாக அழிப்போம். அன்று இந்த மழைக்காடுகளின் மரங்கள் நிம்மதியாக மழையில் நனையும்." 

(Rainforest Connection குறித்து இன்னும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள : https://rfcx.org/home)

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

36p1_1530622541.jpg

குவான்டின் டாரன்டினோ அடுத்து இயக்கும் படம் ‘ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் ஹாலிவுட்.’   இந்தப் படத்தில் பிராட்பிட், லியனார்டோ டிகாப்ரியோ, அல்பசினோ, கர்ட் ரஸ்ஸல் என ஹாலிவுட்டின் முன்னணிகளில் பாதிப்பேர் நடிக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை, சென்றவாரம் வெளியிட்டார் டாரன்டினோ. பிராட்டும் லியனார்டோவும் 60களின் நாயகர்களைப்போலத் தோன்றும் இந்தப் போட்டோ, வெளியிட்ட சில நிமிடங்களில் உலக வைரல் ஆனது. இரண்டுபேரும் ஹாலிவுட் தல-தளபதிகளாச்சே! 


36p2_1530622555.jpg

1998-ல் ‘காதல் கவிதை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார், இஷா கோபிகர். தமிழ் கடந்து, இந்தியிலும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தவர் திருமணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். இந்நிலையில், 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழுக்கு வருகிறார் இஷா. சிவகார்த்திகேயன் நடிக்க, ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கவிருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் இஷாவுக்கு முக்கியமான வேடமாம். வெல்கம் பேக் இஷா! 


கிராமத்து நாயகனாகவே பார்த்துப் பழகிய சசிகுமாரை, தனது படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க வைத்திருக்கிறார், கெளதம் மேனன். ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தில், சசிகுமார் தனுஷுக்கு அண்ணன். கூல் ப்ரோ!


36p3_1530622570.jpg

1950-களில் நடந்த கொரியப் போரில் ஐந்து வயது சிறுமி கிம் யூன் ஜாவின் ( Kim Eun-ja ) குடும்பம் கொல்லப்பட்டது. அதில் பேசும் திறனை இழந்த கிம்மை, துருக்கி ராணுவ வீரர் சுலைமான் தில்பிர்லிகி (Suleyman Dilbirligi) தன் முகாமுக்கு எடுத்துச்சென்று, ‘அய்லா’ எனப் பெயரிட்டு கிம்மை வளர்த்து வந்தார். அய்லாவைத் சொந்த மகளைப்போலவே அரவணைத்து வளர்த்த சுலைமான், போருக்குப் பிறகு அய்லாவைக் கொரியாவிலேயே விட்டுவிட்டு நாடுதிரும்பினார்.  அதற்குப் பிறகு, 60 ஆண்டுகள் கழித்து இஸ்தான்புல் பகுதியில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். இந்த உண்மைச் சம்பவத்தை ‘அய்லா: தி டாட்டர் ஆஃப் வார்’ (Ayla: The Daughter of War) என்ற பெயரில் படமாக்கி, கொரியாவில் வெளியிட்டுள்ளனர். இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. சென்டிமென்ட் ஜெயிக்கும்!


36p4_1530622588.jpg

‘இமைக்கா நொடிகள்’ படத்தின் டிரைலரில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் வில்லத்தனமான ரோல் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.  `தமிழ் சினிமாவின் மீது எப்போதும் ரகசியக் காதல் உண்டு. மிகப்பெரிய திறமைசாலிகளை வைத்திருக்கும் இடம் இது. வெற்றிமாறன், கௌதம் மேனன், வசந்தபாலன், பாலா ஆகியோர் டிரைலர் பார்த்துவிட்டுப் பாராட்டினார்கள். இப்போதே மூன்று பேர் நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். இனி தமிழில் நடிக்கலாம் என்று இருக்கிறேன்!’ என்கிறார். வர்லாம் வர்லாம் வா!


கிறிஸ்டியன் பேல் அடுத்து நடிக்கும் படம் ‘ஃபோர்டு வெர்ஸஸ் ஃபெராரி’. கார் வடிவமைப்பாளர்களுடன் இணைந்து உலகின் அதிவேகக் காரான ஃபெராரியைத் தோற்கடிக்கப் போராடும் கார் ஓட்டுநராக இதில் நடிக்கிறார் பேல்.  நிச்சயம் கெட்டப் சேஞ்ச் இருக்கும்!


36p5_1530622610.jpg

மிழைவிடத் தெலுங்கு சினிமாவில் முதல்வர் வேட்பாளர்கள் அதிகம். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு சமீபத்தில் நடித்த ‘பரத் அனே நேனு’ படத்திலேயே தன்னுடைய அரசியல் என்ட்ரிக்கு அச்சாரம் போட்டிருந்தார். இப்போது தன் அடுத்த படத்தில் அதைவிடவும் பவர்ஃபுல்லான அரசியல் பேசியிருக்கிறாராம். ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி இயக்கத்தில் 25-வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் மகேஷ்பாபு. இப்படம் விவசாயிகளின் தற்கொலைப் பிரச்னையையும் ஆந்திராவின் ஊழல் அரசியல்வாதி களையும் மையப்படுத்திய படமாக இருக்குமாம். தூக்கி அடிங்க!


லேடி காகாவின் ஆடை ஆர்வத்துக்கு அணை போட்டிருக்கின்றன அவரின் ஆல்பங்களை ரிலீஸ் செய்யும் நிறுவனங்கள். அவர்களின் வேண்டுகோள், ஆடைக்குறைப்பு தொடர்பானதல்ல. அவற்றைத் தேர்ந்தெடுப்பதில்... சென்றவருட எம்டிவி விருது நிகழ்ச்சிக்கு விலங்குத்தோலுக்குப்பதில் இறைச்சியையே ஆடையாக அணிந்து வந்து அனைவரையும் மிரளவைத்து அழகு பார்த்தார் காகா. அப்போதிருந்து பயமுறுத்தும் அவுட்பிட் ஆசை அவரைப் பிடித்து ஆட்ட... ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வீடியோவிலும் கிறுக்குத்தனமான உடைகளில் வலம்வர... ஆல்பங்களைவிட சர்ச்சைகள் அதிகமாக.... `போதும் இத்தோட நிறுத்திக்கோங்க’ எனக் கொடி பிடித்திருக்கிறார்கள். பாருங்க உங்க போட்டோகூடப் போட முடியலை!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

இரவு நேரத்தில் ஒளிரும் கடல்!

பிரிட்டனின் ஆங்க்ளெஸ்ஸி தீவின் கடலோரப் பகுதியில் இரவு நேரத்தில் ஒளிரும் கடல் நீரின் காட்சிகளை உள்ளூர் ஒளிப்பதிவாளர் பதிவு செய்துள்ள காட்சிகள் இவை.

  • தொடங்கியவர்

இலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய வித்தியாசமான திருமணம்

 

 

இலங்கையில் நடந்த திருமணம் வைபவம் ஒன்று நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.

தற்போது உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக உலகமெங்கும் உலகக் கிண்ண காற்பந்தாட்ட காய்ச்சல் ரசிகர்களை தொற்றியுள்ளது.

இலங்கையில் உள்ளவர்களும் காற்பந்து போட்டிகளுக்கு தீவிர ரசிகர்களாக மாறியுள்ளனர்.

இந்நிலையில் காற்பந்து மீதான தீவிரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜோடி ஒன்று தமது திருமணத்தை செய்துள்ளது.

கலாச்சார ஆடைகளை அணியாது, காற்பந்து போட்டியாளர்களாக மைதானம் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

எனினும் திருமணம் செய்து கொண்டவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகாத நிலையில் அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

 

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.