Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

காதலிக்கிறவர்கள் இந்தப்படங்களைப் பார்த்தே ஆகவேண்டும்

 

ஒவ்வொரு காலகட்டத்தில் வரும் படங்கள் அந்தந்த காலகட்ட இளைஞர்களை பிரதிபலிப்பவை. அவ்வகையில் இப்படங்கள் காதல் என்றதும் ஞாபகம் வருபவை.

அலைகள் ஓய்வதில்லை

alaigal-oivathillai.jpg

சாதி விட்டு சாதி என்பது இன்றைக்கே அடிதடியாய் இருக்கிறபோது, மதம் விட்டு மதம் காதலைச் சொன்ன ட்ரெண்ட் செட்டர் படம். காதலுக்கு மதமெல்லாம் முக்கியமில்லை என்று முகத்திலறைந்து சொன்ன, இந்தப் படத்தின் காதல் காட்சிகள் க்ளாஸிக் ரகம்.

புன்னகை மன்னன்

punnagai-mannan.jpg

ஏக் துஜே கேலியே-வில் காதலர்கள் தற்கொலை செய்வதாய் காட்டியதால் தனக்குத் தானே வருந்திய கே.பாலசந்தர், தற்கொலையில் ஆரம்பித்து அதையும் மீறி உனக்கென ஒருத்தி / ஒருத்தன் இருப்பார்கள் என்று சொன்ன படம். ‘என்ன சத்தம் இந்த நேரம்’ இன்றைக்கும் கேட்கமுடிகிற மேஜிக் மெலடி. காதல் தோல்வியால் உர்ரென்று இருக்கும் கமலை, ரேவதி டீல் செய்யும் விதம் அலாதி.

காதல் கோட்டை

kadhal-kottai.jpg

பார்க்காமலே காதல் என்கிற ட்ரெண்ட்டை செட் பண்ணிய ப்ளாக் பஸ்டர். இவர்தான் அவர் என்று தெரியாமல் தேவயானி, அஜீத்தின் ஆட்டோவிலேயே பயணிக்கிற காட்சிகளில் தியேட்டரில் ரசிகனுக்கு ஏறியது பிபி.

மௌனராகம்

mouna-ragam.jpg

இன்றைய ராஜா ராணியின் தாத்தா. கல்யாணத்தில் ஆரம்பிக்கற படம், ஃப்ளாஷ்பேக்கில் சொல்லும் காதல் க்ளாஸ் & மாஸ். சந்திரமௌலி.. மிஸ்டர் சந்திரமௌலி என்று துறுதுறு கார்த்திக், ரேவதியிடம் காதலை சொல்லும் விதத்தை இன்றைக்கும் படமெடுக்கும் இயக்குனர்கள் பாடமாக வைத்துக் கொள்ளலாம். 

காதல்

hqdefault.jpg

ஏழை - பணக்காரக் காதல். மெக்கானிக்கைக் காதலிக்கும் பணக்காரப் பெண். வழிய வழியக் காதலிக்கும் இருவரும் வீட்டை விட்டு ஓடிவந்துவிட, அப்புறம் நடப்பதை வலியோடு சொன்ன படம். ‘உனக்கென இருப்பேன்’ எப்போது கேட்டாலும் நரம்பில் வலியேற்றும்.

இதயம்

idhayam-movie.jpg

இன்றைக்கும் காதலைச் சொல்லத்தயங்குபவர்களுக்கு இதயம் முரளியாடா நீ என்ற பெயரைக் கொடுத்த படம். ஹீராவுக்கு காதலை சொல்லத் தவிக்கும் இந்தப் படமும், பாடல்களும் ஆல் டைம் ஹிட்.

அலைபாயுதே

alaipayuthea.jpg

இயக்குனர் மணிரத்னம் அவர்களின் landmark என இப்படத்தைக் கூறலாம். மாதவன், ஷாலினியின் அற்புதமான நடிப்பில் இப்படம் மெகாஹிட். இப்படத்தில் வரும் " உன்னை நான் விரும்பல, நீ அழகா இருக்கன்னு நினைக்கல,........" எனும் வசனம் இன்று வரை பிரபலம்.வீட்டிற்கு தெரியாமல் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ளும் டிரெண்டை உருவாக்கியது இப்படம்தான். இப்படம் மட்டுமல்லாமல் ஏ.ஆர்.ஆர் இசையில் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்!

காதலர் தினம்

kathalar-thinam.jpg

இண்டெர்நெட்டில் காதல் என்கிற கான்செப்டை அறிமுகம் செய்தது இப்படத்தின் இயக்குனர் கதிர்தான். குணால், சோனாலி நடிப்பில் வந்த இப்படத்தின் தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது. இப்போது அனைத்து காதல்களுமே இண்டெர்நெட்டில்தான் என்றால் அதற்கு ஆரம்பப் புள்ளி கதிர்தான்! இப்படத்திலும் ஏ.ஆர்.ஆர் தன் மாயாஜால இசையால் அனைவரையும் மயக்கி இருக்கிறார்.

ராஜா ராணி

raja-rani.jpg

அட்லீ இயக்கத்தில் வெளிவந்து பல ரசிகர்களை ஈர்த்த படம் ராஜா ராணி. நயன் தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் என அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு பின்னி எடுத்திருப்பார்கள். இப்படத்தில் சத்யாராஜ் போல அப்பா ஒவ்வொருவருக்கும் வேண்டும்! நயன் தாரா அழுத காட்சி, நஸ்ரியா விபத்து என நம்மை கதற வைக்கும் காட்சிகள் சில. "Brother" என்ற ஒற்றைச் சொல் இவ்வளவு பிரபலமாகுமா??? ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் பிரமாதம்.

பிரேமம்

premam.jpg

அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ஆட்டோகிராஃப் சாயலோடு எடுக்கப்பட்ட இப்படம் கேரளாவில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது.பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், கல்லூரிக்குப் பிறகான பருவம் என மூன்று பருவங்களின் காதலைச் சொல்லும் படம். நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா என அனைவரும் படத்தை அலங்கரித்துள்ளனர். ராஜேஷ் முருகேசன் இசையில் 'மலரே' பாடல் மிகப் பிரபலம். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் கடந்து சென்ற காதல்களை நினைவுபடுத்தும் படம்! நம்ம சேரனின் ஆட்டோகிராஃபின் மாடர்ன் வெர்ஷன்!

சில்லுனு ஒரு காதல்

chillunu-oru-kadha;.jpg

சூர்யா, ஜோதிகா திருமணத்திற்கு முன்பு நடித்த கடைசிப் படம். திருமணத்திற்கு பிறகு உருவாகும் காதலும், பந்தமும் நீடித்து நிலைக்கும் என்பதே இப்படத்தின் தீம். என். கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகிய இப்படம் சூர்யா, ஜோதிகாவின் நிஜ வாழ்க்கையைப் பிர்திபலிப்பதைப் போன்று என்ற கருத்து நிலவுகிறது. ஏ.ஆர்.ஆர் இசையமைப்பில் பாடல்கள் அலுக்காதது.

காதலுக்கு மரியாதை

kadhaluku-mariyathai.jpg

ஃபாசில் இயக்கத்தில் தமிழில் "காதலுக்கு மரியாதை"யும், மலையாளத்தில் " அனியத்திப்பிராவு"ம் இரு மொழிகளிலும் ஹிட். விஜய்-ஷாலினி தமிழிலும், குஞ்சாக்கோ போபன்-ஷாலினி மலையாளத்திலும் அசத்தி இருப்பார்கள். காதலைவிட உறவுகள் முக்கியம் என்பது கதைக்கரு.

"காதலுக்கு அழிவில்லை" அனைத்துப் படங்களும் இறுதியில் கூறும் கருத்து இதுதான். இதுபோல எண்ணற்ற படங்கள் இன்னும் உள்ளன. காதல் என்பது கடைசி உயிர் பூமியில் வாழும்வரை நிலைத்திருக்கும்!

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Ellen DeGeneres Macey meets the President. Barack Obama The White House

  • தொடங்கியவர்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
 

காதலுக்கு  உலகத்தையே இயங்க  வை க்கக்கூடிய சக்தி உள்ளது. அழகான ஓர் உணர்வு என்றால் அது  காதல்தான்  இந்த காதலை கடந்து செல்லாதவர்கள் அரிது.

 

14847valentine-day-5.jpgநிச்சயம், வாழ்வில் ஒருவர் மீதாவது  அழகிய உணர்வு ஏற்பட்டிருக்கும். இந்த ஆத்மார்த்தமான இந்த உணர்வுக்கான நாளாக பெப்ரவரி  14ஆம் திகதி காதலர் தினமாக கொண்டாடப்படுகின்றது.

 


உலக காதலர் தினம்  உருவானது குறித்து பல்வேறு சுவையான தகவல்கள் உள்ளன. அதற்கு பல வரலாற்று கதைகளும் உள்ளன.

 

வெலண்டைன்ஸ் தினம் என்று உலகமெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினம் வெலண்டைன் பாதிரியாரின் நினைவாக கொண்டாடப்படுகிறது என்பது நம்பிக்கை. கி.பி 270 ஆம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண்களை  பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர்.


திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும்  என நினைத்தவர்களுக்கு  உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையை மீறி திருமணம் நடத்திவைத்தார்  பாதிரியார் வெலண்டைன்.

 

இதனால் வெலண்டைன் பாதிரியாருக்கு மன்னர் மரணதண்டனை வழங்கினார். இரு  மனங்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வெலண்டைன் கொல்லப்பட்ட நாள் பெப்ரவரி 14. இந்த நாள் காதலர்களின் தினமாக கொண்டாடப்படுகிறது.


14847valentin-2.jpgகாதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தவும் புதியவர்கள் தங்கள் காதலை தெரிவிக்கவும் இந்த காதலர் தினம் தற்போது உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது. இது பெரும்பாலும் ஆரம்பத்தில் மேலைத்தேய நாடுகளிலே கொண்டாடப்பட்டு வந்தாலும் தற்போது  உலகெங்கிலும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.


இந்த காதலர் தினம் கொண்டாடப்படுவதற்கு ஒரு சாரார் ஆதரவு தெரிவித்தாலும் பலர்  இந்த கொண்டாட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது வணிக ரீதியான கொண்டாட்டம் என சொல்லப்பட்டாலும் இன்று எல்லாத் தடைகளையும் மீறி இந்த காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது.


காதல் என்றால் நினைவுக்கு வருவது இதயம்தான். இந்த காதலில் இதயம் எப்படி வந்தது என்ற சிறு கதையும் உண்டு.  இதயத்தில் ஆன்மா குடிகொண்டிருப்பதாக பண்டைக்கால மக்கள் நம்பினார்கள்.

 

பலர் இதயத்தில்தான் அறிவும், உணர்ச்சியும் இருப்பதாக நம்பினார்கள். இதயத்தில்தான் உண்மை குடிகொண்டிருப்பதாக நம்பியவர்களும் உண்டு. சிவப்பு நிற இதயம், காதலின் இருப்பிடம் என கிரேக்கர்கள் நம்பினார்கள். அதனால்தான் மன்மத அம்பு இதயத்தில் பாய்ந்தால் தன்னிலை இழந்து காதல் வசப்பட்டுவிடுவதாக நினைத்தார்களாம். இதனால்தான் காதலுக்கு  இதயத்தை அடையாளப்படுத்துகிறார்கள் என சொல்லப்படுகின்றது

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

போராட்டக்களத்தின் நடுவே தலைவர்களின் காதல் பக்கங்கள்!

 

காதல் என்ற வாழ்வியலின் ஓர் அழகிய உணர்வு. எல்லோரையும் வந்து தாக்கும் ‘அது’ உலகின் தலை சிறந்த தலைவர்களையும், புரட்சியாளர்களையும் கூட விட்டுவைக்கவில்லை. இவர்கள் அதனை தன்னுடைய விடுதலைப் போராட்டத்துடன் இணைத்தே கொண்டு போயினர். போராட்டக்களத்தின் நடுவே தொடர்ந்தது இவர்களது காதல்!

ஜென்னி – மார்க்ஸ்

ஜென்னி ஒரு செல்வந்தர் வீட்டு குழந்தை. அவளது இரண்டு வயதில் அவளது தந்தைக்கு பணி மாறுதல் பெற்று ஸ்ட்ரீவ்ஸ் பகுதிக்கு வந்தனர். ஜென்னியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஹேய்ன்ரிச் மார்க்ஸ். வக்கீல் தொழில் செய்பவர். ஜென்னிக்கு நான்கு வயது இருக்கும் போது 1818 ம் ஆண்டு மே 5ம் தேதி ஹேய்ன்ரிச் மார்க்ஸுக்கு ஒரு மகன் பிறந்தான். அவர் தான் உலகின் மிக முக்கிய தத்துவக் கோட்பாட்டு தந்தை கார்ல் மாக்ஸ். மார்க்சும் ஜென்னியும் சிறு வயது முதலே ஒன்றாகவே இருந்தனர். பதினேழு வயதில் கார்ல்லுக்கும் ஜென்னிக்கும் இடையில் காதல் மலர்ந்தது. ஆனால், இதனை அறிந்த கார்ல் மார்க்சின் தந்தை எங்கே தனக்கும் ஜென்னிக்கும் இடையிலான நட்பு பறிபோய்விடும் என்று பயந்தார்.

Karl%20marx%20-%20Jenny%281%29.jpgமார்க்ஸ் பெர்லினுக்கு தனது மேற்படிப்புக்காக சென்ற போதும் பல அறிவுரைக் கடிதங்கள் தந்தையிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தது. ஆனால், ஜென்னி – மார்க்சின் காதல் யாரும் எட்ட முடியாத இடத்தில் பறந்து கொண்டு இருந்தது. ஜென்னி மார்க்சை கரம் பிடிக்க ஏழு வருடம் காத்திருக்க வேண்டி இருந்தது. வீட்டில் இருந்து திருமணம் குறித்தான எல்லா கேள்விகளையும் தட்டிக் களித்தவாறு நாட்களை நகர்த்தினார் ஜென்னி. வேலை தேடினார் மார்க்ஸ். ஆனால், அவர் கையில் இருந்த உலக தத்துவங்களுக்கு இடையே அவருக்கு வேலை கிடைப்பது அவ்வளவு எளிதா? 1843ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு பாரிஸ் சென்றனர். அங்கு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிரான்சில் பல்வேறு கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டார் மார்க்ஸ்.

தொழிலாளர்களிடையே தொடர்ந்து பேசினார். அவரது கோட்பாடுகளை ஜென்னியிடம் விளக்குவார். அவ்வளவு வறுமையிலும் வறுமை பழகா ஜென்னி தனது காதலனுடன் சந்தோஷமாக இருந்தாள். ஆனால், வருமானம் இல்லா காலகட்டத்தில் ஒரு குழந்தையுடன் எப்படி காலம் தள்ளினாரோ ஜென்னி! மார்க்ஸ் பிரான்சை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டார். அங்கிருந்து பெல்ஜியம் சென்றார். ஒரு நாள் அவர் சிலருடன் முக்கிய விவாதத்தில் இருக்கும் போது காவல்துறையால் சிறைபிடிக்கப்பட்டார். ஜென்னி பதறினாள். சிலரைச் சந்தித்து தன் காதலனை எப்படியாவது வெளியே கொண்டு வர விரும்பினாள்.

உண்மையில் அவளால் அவரை பிரிந்து இருக்க முடியவில்லை. கடைசியில் அவளையும் சிறைபிடித்தனர். பல்வேறு மக்களின் போராட்டங்களுக்குப் பின்னர் அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் வெளியேற்றப்பட்டனர். பாரிஸ் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஜெர்மனிக்கு சென்றனர். மீண்டும் பிரான்சுக்கு போனார்கள். மீண்டும் நாட்டினை விட்டு வெளியேற உத்தரவு. அப்பொழுது ஜென்னி கர்ப்பமாக இருந்ததால் அவளுக்கு மட்டும் போராடி விளக்கு வாங்கினார் மார்க்ஸ். மார்க்சினை பல்வேறு இன்னல்களுக்கு இடையே லண்டன் அனுப்பினால் ஜென்னி. ஜென்னி லண்டனுக்கு சென்ற பொது அவளை இன்னும் வறுமை வாட்டியது. குளிரும் வாட்டியது. வீட்டிற்கு அவர்களால் வாடகை கூட கொடுக்க முடியவில்லை.

பல நேரங்களில் யாராவது வீட்டு வாடகை தருவார்கள். ஒரு வேலை சாப்பாடு கிடையாது. ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு சுகாதாரமற்ற பகுதிக்கு குடியேறினர். தொடர்ந்து அவர்களது சிறிய குழந்தை அடுத்தடுத்து இறந்து போனது. அதனை அவள் இவ்வாறு குறிப்பிடுகிறாள் “குழந்தை பிறந்த போது தொட்டில் வாங்க பணமில்லை; அவன் இறந்த போது சவப்பெட்டி வாங்க பணமில்லை”. வேறு ஒருவர் பணம் தர அந்தக் குழந்தையை புதைத்தனர். 1881ம் ஆண்டு டிசம்பர் 2 இல் ஜென்னி கார்ல் மார்க்சிடம் இருந்து பிரிந்தாள். இத்தனை கஷ்டங்களுக்கு இடையேயும் அவள் மார்க்சை நேசித்தாள். அவரும் அவளை நேசித்தார். அவர்கள் காதலர்கள்!


சே – ஹில்டா

Che%20-%20Hilda.jpg

இந்த உலகை ரசிக்கும் ஆசையுடன் சே சுற்றி திரிந்த காலத்தில் பல்வேறு லத்தின் அமெரிக்க நாடுகளுக்குச் சென்றார். அப்போது தான் பெருவிற்கு செல்லும் போது குவாதிமாலாவில் ஹில்டாவைச் சந்தித்தார். ஹில்டாவும் பல்வேறு புரட்சிகர வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். பல்வேறு நாடுகளை சுற்றித் திறந்திருந்தார். இருவரும் ஒத்த கொள்கையாலும், ஒத்த போராட்டத்தாலும் இணைந்தனர். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது! பிறகு திருமணமும் செய்து கொண்டனர்.

பெரியார் - நாகம்மை

Periyar%20-%20Nagammai.jpg

பெரியார் – நாகம்மை இருவருக்குமான திருமணம் காதல் திருமணம் இல்லை என்றாலும் பெரியார் நாகம்மை மீது கொண்ட காதலுக்கு ஒன்றை எடுத்துக்காட்டாக சொல்லலாம். பெரியார் பலருக்கும் எழுதிய இரங்கல் கடிதங்களை தொகுக்கும் பணியில் வே. ஆனைமுத்து போன்றோர் ஈடுபடும் வேளையில் அதில் நாகம்மைக்கு பெரியார் எழுதிய இரங்கல் விடுபட்டிருந்தது. அதனை பெரியார் சுட்டிக்காட்டி அதையும் சேர்க்கலாமே என்று கூற அடுத்த நாளே அந்த இரங்கல் கடிதத்தை தேடி எடுத்துச் சென்றிருக்கிறார் ஆனைமுத்து. முதல் வரியை அவர் படிக்க அடுத்த வரியில் இருந்து “நாகம்மை இறந்துபோனதை ஒரு துணை போயிற்று என்று சொல்வேனா? ஓர் அமைச்சு போயிற்று என்று சொல்வேனா? ஓர் அடிமை போயிற்று என்று சொல்வேனா?  எல்லாம் போயிற்று என்று சொல்வேனா?.. என்று அந்த கடிதத்தில் இருந்ததை அப்படியே கூறி ஒரு குழந்தை போல தேம்பி அழ ஆரம்பித்திருக்கிறார். நாகம்மை இறந்த வருடம் 1933ல். இந்த நிகழ்வு நடந்தது 1973ல். ஏறத்தாழ நாகம்மை இறந்து நாற்பது ஆண்டு காலம் கழித்தும் அவர் நாகம்மைக்கு எழுதிய இரங்கல் கடிதத்தை நியாபகம் வைத்து அழுதது என்பது அவரது நாகம்மையின் மீதான காதலை நமக்கு கூறுகிறது.

பிரபாகரன் – மதிவதனி

1983 ல் நடைபெற்ற ஜூலை படுகொலையைத் தொடர்ந்து பல்வேறு தமிழ் மக்கள் தென்னிலங்கையில் இருந்து வடகிழக்கு நோக்கி இடம் பெயர்ந்தனர். அதில் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களும் இருந்தனர். யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் வகையில் மாற்றுச் சான்றிதழை தருமாறு இடம்பெயர்ந்த மாணவர்கள் கேட்க அதனை அரசு நிராகரித்து மாணவர்களை மீண்டும் தான் பயின்ற பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.

அந்த சமயத்தில் தான் விடுதலைப்புலிகள் சார்பில் ‘கொலைக்களத்துக்கு போக வேண்டாம்’ என்று ஒரு துண்டு பிரசூரத்தை வெளியிட்டனர். மாணவர்களிடையே மிகப்பெரிய போராட்டம் வெடிக்க நேரிடும் என்று கருதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மூடப்பட, நான்கு மாணவிகள் உட்பட ஒன்பது  மாணவர்கள் ஜனவரி 9 1984ல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினர். ஆனால், ஜெயவர்தனே அரசு மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஜனவரி 16ம் தேதி மாணவர்களை சோதித்த மருத்துவர், ஒரு மாணவியின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்தார். அன்று இரவே மாணவர்கள் காணாமல் போக, மாணவர்களின் உண்ணாநிலை புலிகள் பாசறையில் முடிக்கப்பெற்று, ஒன்பது மாணவர்களும் படகு மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது தெரியவந்தது.

Prabhakaran%20-%20Mathivathani.jpg

 

“அரசுக்கு அமைதிவழி போராட்டம் காதில் கேட்காது. மாணவர்களின் உயிர் போகக்கூடாது. மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்” என்பதாக புலிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படி படகின் மூலம் தமிழகம் கொண்டு செல்லப்பட்ட மாணவர்களில் ஒருவர் தான் மதிவதனி. சென்னையில் தங்கவைப்பட்டிருந்த மதிவதனி, ஹோலிப்பண்டிகையின் போது பிரபாகரன் மீது கலர் நீரை ஊற்ற, அதற்கு பிரபாகரன் கடிந்து கொள்ள, மதிவதனி ஒரே அழுகை. அன்டன் பாலசிங்கத்துடன் பேசிவிட்டு செல்லும் போது சமாதானப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார். இருவருக்குமான காதல் மறந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து மதிவதனியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர்.

அக்டோபர் 1ம் தேதி 1984ல் அவர்களது திருமணம் நடைபெற்றது. மதிவதனி மற்றும் பிரபாகரனின் உடல் வேறாயினும் உயிர் ஒன்றாகவே இருந்திருந்தது. இருவரின் காதலும் போராட்டத்துடன் இணைந்து நின்றது. எல்லாவிதமான நெருக்கடியான காலகட்டத்திலும் கூட தலைவரின் மனைவி என்ற எந்த சலுகையும் இல்லாமல் தான் வாழ்ந்தார் மதிவதனி. போர்க்களத்திற்கு இடையிலும் அந்தக் காதல் மக்களுக்கான போராட்டத்துடன் இணைந்தே இருந்தது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மட்டும் அல்ல பல புரட்சியாளர்களின் காதல் இந்த சமூகத்தின் மேம்பாட்டிற்கான போராட்டங்களுக்கு இடையே நிகழ்ந்து இருக்கிறது. நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இவர்களைப் போலவே நாமும் போராட்டத்தைக் காதலிப்போம். சமூகத்தை காதலிப்போம். காதலை காதலிப்போம். ஆதலால் காதல் செய்வீர்!

vikatan

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: பெப்ரவரி 14
 
 

article_1455426163-love.jpg269: காதலர்களை சேர்த்துவைத்து திருமணம் செய்துவைத்த வேலண்டைன் என்ற கத்தோலிக்க ஆயர், படுகொலை செய்யப்பட்டார். இந்நாள், காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1779: பிரித்தானியாவைச் சேர்ந்த நாடுகாண் கடலோடி ஜேம்ஸ் குக் ஹவாய் தீவில் பழங்குடி இன மக்களால் கொலை செய்யப்பட்டார்.

1849: அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் நொக் போல் புகைப்படம் பிடிக்கப்பட்டார். பதவியிலிருக்கும் போது படம்பிடிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியொருவர் புகைப்படம் எடுக்கப்பட்டது இதுவே முதல் தடவை.

1876: தொலைபேசிக்கு காப்புரிமை பெறுவதற்கு அலெக்ஸாண்டர் கிறஹம் பெல் விண்ணப்பித்தார்.

1879: பொலிவிய துறைமுகத்தை சிலி படைகள் கைப்பற்றியதையடுத்து  'பசுபிக் யுத்தம்' ஆரம்பமாகியது.

1918: கிறகரியன் கலண்டரை சோவியத் யூனியன் பின்பற்றத் தொடங்கியது.

1919: போலந்து – சோவியத் யூனியன் யுத்தம் ஆரம்பம்.

1920: அமெரிக்க பெண் வாக்காளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1924: ஐ.பி.எம். நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

1981: அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 48 பேர் பலி.

1989: இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும்  விதமாக சாத்தானின் வசனங்கள் எனும் நூலை எழுதிய சல்மான் ருஷ்டிக்கு  ஈரானிய ஆன்மீக தலைவர் ஆயதுல்லா கொமேய்னி மரணதண்டனை விதிக்குமாறு கோரும் 'பத்வாவை' வெளியிட்டார்

1989: ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.

1989: யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் அழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.

1990: பெங்களூருவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 92 பேர் கொல்லப்பட்டு 54 பேர் காயங்களுடன் தப்பினர்.

1998: கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58பேர் கொல்லப்பட்டனர். 250பேர் காயமுற்றனர்.

2000: நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.

2005: லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

2005: பிலிப்பீன்சில் மணிலா நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 7பேர் கொல்லப்பட்டு 151பேர் காயமடைந்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/166001/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0-#sthash.eg8m128W.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இங்கிலாந்தின் 16 மாத குழந்தை எத்தனை நாடுகளை சுற்றியுள்ளது தெரியுமா?

 

ஞானப் பழத்தைப் பெற முருகன் உலகத்தைச் சுற்றினார்.பிள்ளையாரோ அவரோட அம்மா அப்பாவைச் சுற்றினார்.ஆனால் எஸ்மி என்கிற இந்தக் குட்டிப் பெண் அவள் அப்பா அம்மாவோடு பதினாறு மாதங்களில் பன்னிரண்டு நாடுகள் சுற்றிவிட்டாள்!

collage.jpg

 

எஸ்மியின் அம்மா கேரென் எட்வர்ட்ஸ் இங்கிலாந்தைச் சேர்ந்தவர், அப்பா  ஷான் பெயின்ஸ் நியுசிலாந்தைச் சேர்ந்தவர் .இந்தத் தம்பதி  நவம்பர் 2014 முதல்  பேக்பாக்குடன் சேர்த்துத் தங்கள் 3 மாதக் குழந்தை எஸ்மியையும் தோளில் தூக்கிக் கொண்டு உலகம் சுற்றக் கிளம்பிவிட்டார்கள். நர்சாகப் பணிபுரியும் கேரெனின் மகப்பேறு விடுப்பையும் அப்போது கிடைத்த சலுகை ஊதியத்தையும் கொண்டு  இதுவரை ஆஸ்திரேலியா  முதல் தெற்காசியா வரை பன்னிரண்டு நாடுகளுக்கு இவர்கள் பயணம் செய்துள்ளனர்.நாம் 'கே'  ஃபார் 'கங்காரு' என்று கூடப் படித்திராத வயதில் எஸ்மி கங்காருவுடன் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறாள்! நீச்சல் குளத்தில் அண்டர்வாட்டர் செல்ஃபிக்கு போஸ் கொடுக்கிறாள்!

 

6rq3cj.png

படகு சவாரி, பீச் , புத்தக் கோயில்கள் என எஸ்மியுடன் செல்ஃபி எடுத்துத் தள்ளி தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தை நிறைத்துள்ளார் கேரென்.TRAVEL MAD MUM என்ற வலைதளத்தில் குழந்தையுடன் சுற்றுலா செல்ல விரும்பும் இளம் பெற்றோருக்கு அட்வைஸ்களும்  அள்ளி வீசுகிறார்.

i6dr0i.png

பல்வேறு நாடுகளுக்கும் செல்வதால் எஸ்மிக்கு  நோய்த் தொற்றுத்தடுப்பூசிகள் வழங்கப் பட்டிருக்கின்றன.ஆனாலும் இவ்வளவு ஊர் சுற்றுவது குழந்தையின் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பா  என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம்தான்.பல விதமான இடங்களையும் பல விதமான மனிதர்களையும் சந்தித்துப் பழகிவிட்ட எஸ்மிக்கு  வீட்டுக்குத் திரும்பியவுடன் போராடிக்க ஆரம்பித்து விட்டதாம்.எனவே மறுபடியும் நியுசிலாந்து சென்று அங்கிருந்து , கம்போடியா, தாய்லாந்து என்று இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்க இருக்கிறார்கள்.எஸ்மி..,இந்தியாவிற்கும் ஒரு விசிட் அடிங்க !

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்திய மக்களைச் சென்றடையாத இனிய காதல் படம்- காதலர் தின சிறப்புப் பகிர்வு!

 

மீபத்தில் 65வருட காமிக் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் தி பீனட்ஸ் மூவி வெளியானது பலருக்கும் தெரியாது. துரதிர்ஷ்ட வசமாக சரியான புரமோஷன்கள் இல்லாமல் இந்திய மக்களை இந்தப் படம் சென்றடையவில்லை. ஆனால் கண்டிப்பாக நாம் பார்க்கத் தவறிய நல்ல குழந்தைகள் அனிமேஷன் படங்களில் இதை சேர்த்துக்கொள்ளலாம்.

1950களில் காமிக் தொடர்களாக அமெரிக்காவில் ஆட்சி செய்த பீனட்ஸை அடிப்படையாகக் கொண்ட படம் தான் தி பீனட்ஸ் மூவி. உண்மையில் பப்பி லவ் என்றால் நமக்கு தெரிந்த விஷயமே குழந்தைப் பருவத்தில் வரும் ஒரு வித ஈர்ப்பு, விருப்பம், இந்தக் காதலில் ஒரு குழந்தைத் தனம், வெகுளித்தனம், இருக்கும். எல்லாவற்றிற்கும் மேல் சில முட்டாள் தனமான காரணங்களும் இருக்கும். இதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே தி பீனட்ஸ் மூவி. சார்லி ப்ரௌன் என்ற சிறுவனும், அவனின் குட்டி நாய் ஸ்னூப்பியும் தான் கதையின் மிக முக்கிய பாத்திரங்கள்.

peanuts_nws3.png

பெரியவர்கள் பாத்திரமே இல்லாமல் வெறும் குழந்தைகள் பட்டாளம், ஸ்கூல் அதில் ஏற்படும் சின்னச் சின்ன கலாட்டாக்கள் தான் படத்தின் கரு.

கதை இதுதான், ஒரு வகுப்பைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்கள் ,அதில் சார்லி பரௌன் எப்போதும் குழந்தைகள் குழுவில் இணையாமல், பனிக்காலத்தில் பட்டம் விடுதல், பேஸ் பால் விளையாட்டு இப்படி ஏதேனும் எக்குத் தப்பாக செய்து மற்ற சிறுவர்களிடம் திட்டு வாங்கிக்கொண்டே இருக்கிறான். அவனது செல்ல நாய் அவனது நண்பனாக பல உதவிகளைச் செய்கிறது. இதற்கிடையில் இவர்களின் வகுப்பிற்கு ஒரு புது மாணவி வருகிறாள். சிவப்பு நிற முடி, அழகிய தோற்றம் என வகுப்பில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு அவள் மீது க்ரஷ், பெண் குழந்தைகளுக்கு சற்றே கோபம். நம் ஹீரோவுக்கு கொஞ்சம் அதிகமான விருப்பம். அதே தான் பப்பி லவ்.

snoopy-and-charlie-brown-the-peanuts-mov

அவளை இம்ப்ரஸ் செய்யும் வேலைகள் ஆரம்பம். வழக்கம் போல் சொதப்பல். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என வேதனைப் படும் சார்லி திடீரென பள்ளியின் பெர்ஃபெக்ட் மாணவனாக அறிவிக்கப்பட அவ்வளவு தான் சார்லிக்கு ரசிகர்கள் குவிகிறார்கள். அவன் நினைத்தது போல் அந்தப் பெண்ணின் பார்வையும் விழுகிறது. தினம் தினம் கொண்டாட்டம். சார்லி ஹீரோவாக மாற ஒரு கட்டத்தில் மேடையில் நீ பெர்ஃபெக்ட் மாணவனாக அறிவிக்கப்பட்டதற்கான பரீட்சை பேப்பர் என கொடுத்தால். அது அவனுடையதே அல்ல எனத் தெரிய வருகிறது சற்றும் தயங்காமல் மேடையிலேயே இந்த வெற்றி என்னுடையதல்ல என் நண்பனுடையது, பெயரை மாற்றி எழுதிவிட்டோம் எனக் கூறி உண்மையைச் சொல்லிவிட்டு விழா இடத்தை விட்டு வெளியேறுகிறான் சார்லி. மீண்டும் அதே சோகக் கதை.

Peanuts-Movie-Little-Red-Haired-Girl.jpg

வகுப்புகள் முடிந்து விடுமுறை ஆரம்பிக்க, சம்மர் டான்ஸ் க்ளப்பில் ஜோடிகளை தேர்வு செய்யும் மும்முரம் ஆரம்பிக்கிறது. அப்போது யாருமே சார்லியைத் தேர்ந்தெடுக்காமல் போக அவன் மனம் கவர்ந்த பெண் அவனைத் தேர்வு செய்கிறாள். ஏன் என சார்லி அவளிடம் கேட்க, உன்னிடம் உள்ள நேர்மை தான் உனது வெற்றி. உன் தங்கைக்காக நீ உன் வாய்ப்பை இழந்தாய், எனக்காக என் புராஜெக்டுகளை முடித்தாய். நீ ரொம்ப நல்லவன் சார்லி என அந்தப் பெண் பதில் சொல்ல சார்லியை மற்ற நண்பர்கள் தூக்கிக் கொண்டு பரவசமடைகிறார்கள்.

the-peanuts-2015-wallpaper-new-images-fu

படம் பப்பி லவ் தான் என்றாலும் நேர்மையாகவும் , உண்மையாகவும் இருந்தால் யாருக்கும் நம்மை பிடிக்கும் என எக்காலக் காதலுக்கும் அடிப்படைத் தத்துவம் வைப்பது இன்னொரு ப்ளஸ். ஸ்டீவ் மார்டினோ இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபீஸில் மேலை நாடுகளில் மெகா ஹிட்டாகியுள்ளது.

நம்மூரில் சில மால் திரையங்குகளில் மட்டுமே வெளியான படம், ஓடிய தடமே தெரியாது போனது தான் சோகம்.

vikatan

  • தொடங்கியவர்

பாம்பு, பல்லிகளுடன் விளையாடும் குழந்தைகள்! (ஆச்சர்ய வீடியோ)

 

அமெரிக்காவில் ஊர்வன விலங்குகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் கொண்ட தந்தை ஒருவர், அந்த விலங்குகளுடன் தனது குழந்தைகளையும் விளையாடவிட்டு ரசித்துப்பார்த்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் எரிக் லெப்லங்க் என்பவர், நூற்றுக்கணக்கான பல்லிகள் மற்றும் பாம்புகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், அங்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், சில விலங்குகள் இறந்து போனது. மேலும் சில விலங்குகள் காயம் அடைந்தன, இதனால் எஞ்சியிருந்த விலங்கினங்களை தனது வீட்டிற்கு மாறியுள்ளார்.

Snake%20child%20US.jpg

மேலும், இவரது மூன்று குழந்தைகளும், பள்ளிகள் மற்றும் பாம்புகளுடன் விளையாடுவதற்கு அனுமதித்துள்ளார். இதில் அச்சமூட்டும் விடயமாக 19 அடிகொண்ட பைதான் (python) என்ற விஷமில்லாத மலைப்பாம்புடன் குழந்தைகள் விளையாடுகின்றனர்.

இதுகுறித்து எரிக் லெப்லங்க் கூறுகையில், ஊர்வன விலங்கினங்களை வளர்ப்பது எனது பணி மட்டுமல்லாமல், அது எனது கட்டுக்கடங்கா உணர்ச்சி கொண்ட ஒன்றாகும். நான் எவ்வாறு, இவற்றினை வளர்க்கும்போது அச்சமில்லாமல் தைரியமாக செயல்படுகிறேனோ, அந்த தைரியம் எனது குழந்தைகளுக்கும் வரவேண்டும். தங்களுடன் வாழும் ஒரு நபராக அவர்களை இவற்றினை கருத வேண்டும். எனது குழந்தைகளை பாம்புகள் மற்றும் பல்லிகள் கடித்துள்ளன. ஆனால் அவர்கள் நலமுடன் தான் இருக்கிறார்கள்.

எனது மகள் செல்பி, 19 அடியுடைய மலைப்பாம்புடன் தைரியமாக விளையாடுவாள். அது எனது மகளை சுற்றி செல்லும் போது, அதனை எனது மகள் இறுகப்பிடித்துக்கொள்வாள். அந்த பாம்பின் தடித்த தசைகள் அவளுக்கு பிடிக்கும் என்பதால் அதனுடன் தைரியமாக விளையாடுவாள். இதனைப்பார்க்கும் சிலர், இது மிகவும் ஆபத்தான விடயம் என்று கூறுவார்கள். ஆனால், எனது குழந்தைகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.


பாம்பு, பல்லி, நாய்களிடம் கடி வாங்கிய எனக்கு அது ஒரு பெரிய ஆபத்தாக தெரியவில்லை. ஆனால், என் வாழ்வில் நான் சந்தித்த மிகப்பெரிய ஆபத்து எதுவென்றால், மரத்தில் இருந்தது நான் கீழே விழுந்ததுதான். ஆனால் அந்த விபத்தில் கூட எனக்கு பெரிதாக ஒன்றும் நேரவில்லை. விலங்குகளுக்கு மரியாதை செலுத்தினால், அந்த விலங்குகளும் நமக்கு எவ்வித இடையூறும் அளிக்காமல், நம்மோடு நலமாக வாழும்" என்று கூறியுள்ளார்.

vikatan

  • தொடங்கியவர்

தோசை மாஸ்டருக்கு சம்பளம் அதிகரித்துக் கொண்டே செல்வது ஏன்?

 

கொச்சியில் நேற்று  பெடரல் வங்கி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரகுராம் ராஜன் பங்கேற்றார். இதில் மாணவி ஒருவரின் தோசை பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ரகுராம் ராஜன் ,

 “தோசை தயாரிப்பில் இன்னும் போதிய  தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படவில்லை.  தோசை வார்ப்பவர் அதனை தவாவில் மாவை ஊற்றி வார்த்து எடுக்க வேண்டிய நிலைதான் இன்று வரை உள்ளது.  தோசை வார்ப்பதில் இன்னும் நவீன தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்படவில்லை. நவீன தொழில் நுட்பம் இல்லாத காரணத்தினால்தான்  தோசை மாஸ்டருக்கு சம்பளம் அதிகரிக்கிறது.

dosa.jpg

வளர்ந்து வரும் ஒரு பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது என்றால்,  தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணையாத துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை வேகமாக அதிகரிக்கும். இதைத்தான்  தோசை விலையிலும் காணப்படுகிறது'' என்றார்.

கொச்சி நிகழ்ச்சியில்  தோசைகள் விலை பற்றிய சந்தேகம் எனக்கு இருக்கிறது. பணவீக்கம்  அதிகரிக்கும் போது தோசை விலை அதிகரிக்கிறது,''ஆனால் பணவீக்க விகிதம் குறையும் போது தோசை விலை ஏன் குறைவதில்லையே ஏன்?'' என்ற கேள்விக்கு அந்த மாணவி பதில் அளித்தார்.

vikatan

  • தொடங்கியவர்

ஒபாமாவுக்காக காதல் கவிதை வாசித்த மிச்செல்! (பரவச வீடியோ)

 

காதலர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் ஒபாமா காதல் கவிதை ஒன்றை வாசித்து பரவசப்படுத்தியுள்ளார்.

உலகெங்கும் காதலர் தின கொண்டாடங்களில் திளைத்திக் கொண்டிருக்கையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தன் பங்கிற்கு தமது காதலை பகிர்ந்துள்ளார். The Ellen Show நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒபாமா, தமது மனைவி மிச்செல் ஒபாமாவுக்காக காதல் கவிதை ஒன்றை வாசித்து பரவசப்படுத்தியுள்ளார்.


அந்த கவிதை அடங்கிய வீடியோ தொகுப்பை கண்டு களித்த பின்னர், வெள்ளை மாளிகையில் இதுவே தங்களின் கடைசி காதலர் தின கொண்டாட்டம் என மிச்செல் தெரிவித்துள்ளார். 54 வயதான ஒபாமாவின் காதல் கவிதையில் பல இடங்களில் அவர் நெஞ்சைத் தொட்டு சென்றுள்ளார்.

vikatan

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

`போன பிறவியில் நான் ஏதோ நல்லது செய்திருக்க வேண்டும், இப்படி ஒரு மனைவி கிடைக்க. இந்தப் பிறவியில், நிச்சயமாக அதைவிட நல்ல காரியம் நிறையச் செய்வேன்... அடுத்த பிறவியிலும் நீயே எனக்கு மனைவியாக அமைய' - நான்காம் ஆண்டு திருமண நாளில் மனைவி ஜெனிலியாவைப் பற்றி இப்படி கவிதையாக ட்வீட்டியிருக்கிறார் ரித்தேஷ். பதிலுக்கு ஜெனிலியாவும் `நாம நமக்காக உருவாக்கிய உலகம், மகிழ்ச்சியால் நிறைந்தது; என்றென்றைக்குமான அன்புடன் கூடியது' என ரீட்வீட்டியிருக்கிறார்.

p84a.jpg

ராகுல் காந்தியை `மக்கள் நாயக'னாக மாற்ற, சோனியா காந்தி முதல் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வரை பலரும் பல வழிகளில் முயற்சி செய்தும்... ஒன்றும் பலிக்கவில்லை.

இனி ஏழைகள் வீட்டில் சாப்பிட்டால் எடுபடாது என, வேறு ரூட் பிடித்து இளைஞர்களை மெள்ளக் கவர்கிறார் ராகுல். கல்லூரி மாணவர்களைச் சந்திக்கச் சென்றால், நார்மல் டி-ஷர்ட்டுடன் அவர்களிடம் ஜாலியாகப் பேசி, கலாய்த்து ட்ரெண்டிங் வண்டியில் ஏறி, ஏறி இறங்குகிறார். `மோடிக்கு கலர் குர்தா என்றால், ராகுலுக்கு டி-ஷர்ட்தான் சரி' என, யாரோ கொடுத்த ஆலோசனை பிக்கப் ஆக, இப்போது டி-ஷர்ட் + மாணவர்கள் என்ற காம்பினேஷனில் கவனம் செலுத்துகிறார் ராகுல்.

p84b.jpg

பாலிவுட்டில் இருந்துகொண்டு அலியா பட் பற்றி காதல் கிசுகிசு வராமல் இருந்தால் எப்படி? `அலியா பட்டுடன், `Student Of The Year' படத்தில் நடித்த சித்தார்த் மல்ஹோத்ரா டேட்டிங் போகிறார்; காதல் வளர்க்கிறார்' எனக் கிசுகிசு பரவ... படாரென ரிலேஷன்ஷிப்பை சைலன்ட் மோடில் போட்டுவிட்டார் அலியா. சித்தார்த் மட்டும் `ஐய்யய்யோ... நாங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். எங்களைச் சந்தேகப்படாதீங்க. இது யாரோ கிளப்பிவிட்ட ரூமர்' என ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார். அடுத்த மாதம் அலியா பட்டுக்கு 23-வது பிறந்த நாள் வருகிறது. அதில், சித்தார்த் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் இந்தக் கிசுகிசுவின் அடுத்தகட்டம்.

p84c.jpg

p84d.jpg

`என்னுடைய வாழ்க்கை படமாக்கப்பட்டால், நிச்சயமாக என் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்க வேண்டும். அப்போதுதான் அது சிறப்பாக இருக்கும்' என்கிறார் சாய்னா நெய்வால். சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் சாய்னா இதைக் கூற, அதே விழாவில் கலந்துகொண்ட தீபிகா, `அந்த ரோலில் நடிக்க எனக்கு மிகவும் ஆசை. நானும் சாய்னாவும் நிறைய முறை விளையாடி இருக்கிறோம். அவர்தான் நன்றாக விளையாடுவார். ஆனால், நான் நன்றாக விளையாடியதாகச் சொல்வார்' என, பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். சாய்னாவின் வாழ்க்கையைப் படமாக்கும் ஐடியாவில் இருந்த மகேஷ் பட்டுக்கு, தீபிகாவை அந்த ரோலில் நடிக்கவைக்கலாம் எனும் பொறி தட்டியிருக்கிறதாம்.

vikatan

  • தொடங்கியவர்

Samantha launches Kalanikethan Fashion Mall Photos

Samantha at Attarintiki Daaredi Music Launch

Samantha

Samantha

சமந்தா

  • கருத்துக்கள உறவுகள்

சமந்தாவின் இயற்கை அழகு மட்டுல்ல, அவங்க புருவத்தை ட்ரிம் செய்ய்திருக்கும் அழகும் வேலன்ன இதயத்தைத்தாக்கும். அதுமட்டுமா சமந்தா போடும் மஸ்காராவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்! tw_blush: 

சமந்தாவுக்கு லவ்வர்ஸ் டே வாழ்த்துக்கள்! <_<

  • தொடங்கியவர்
1 hour ago, வாலி said:

சமந்தாவின் இயற்கை அழகு மட்டுல்ல, அவங்க புருவத்தை ட்ரிம் செய்ய்திருக்கும் அழகும் வேலன்ன இதயத்தைத்தாக்கும். அதுமட்டுமா சமந்தா போடும் மஸ்காராவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்! tw_blush: 

சமந்தாவுக்கு லவ்வர்ஸ் டே வாழ்த்துக்கள்! <_<

வாலி இதை பார்கவில்லையா..<_<

:grin:

  • கருத்துக்கள உறவுகள்
On February 9, 2016 at 3:17 PM, நவீனன் said:

சமந்தா 100 கிலோ வெயிட் தூக்குனா என்ன ஆகும் தெரியுமா?

 

ஹீரோயின்களில் டாப் டார்லிங் சமந்தா. அழகிக்கு நடிப்பு மீது எவ்வளவு ஆர்வமோ, ஃபிட்னஸ் மீதும் அவ்வளவு இஷ்டம் கொண்டவர்.

சமீபத்தில் சமந்தாவின் உடற்பயிற்சியாளர் குணல், சமந்தாவின் ஒர்க் அவுட் வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சமந்தா, 100 கிலோ (225lbs) எடையை தூக்கி பயிற்சி எடுத்திருக்கிறார். அதுவும் மூன்று முறை ரிப்பீட் செய்வது ஆஸம். அந்த வீடியோ இணையத்தில் வெளியான உடனேயே வைரல் லிஸ்டில் எகிறிவருகிறது.

விகடன்

வாவ்! சிம்பிள் மேக்கப்ல கூட சமந்தா எவ்வளவு அழகா இருக்காங்க! 

நான் நெனக்கிறன் தமிழ் சினிமாவில் சமந்தா மாதிரி "சாக்லட் டார்லிங்" இனி வருவதற்கு சான்சே இல்ல!

  • தொடங்கியவர்

சினிமா ஃபார்முலாவில் காதல் சொல்லி ஜெயிப்பது எப்படி?

 

உங்க லவ் இருக்குல்ல பாஸ் லவ்வு... அது ஆரம்பிக்கிறப்ப நீங்க என்ன நினைப்பீங்கன்னா...

vtv%283%29.jpg

லவ்வ இப்டியெல்லாம் சொல்லணும்னு நினைப்பீங்க...

alai-payuthey.jpg

mauna-ragam.jpg

ஆனா உங்க ஆளு மிரட்டுற மிரட்டுல....  இப்படித்தான் சொல்லுவீங்க...

raja-rani%281%29.jpg

உங்க ஆளு “ அதுக்கு வேற ஆளப்பாரு”ன்னு சொல்லுவாங்க. நீங்களும் சளைக்காம இப்படிச் சொல்லுவீங்க..

thanga-magan.jpg

ஆனா உங்க காதல்ல உறுதியா இருந்தீங்கன்னா உங்க ஆளு இப்படியெல்லாம் சொல்லுவாங்க..

paruthi-veeran.jpg

madras.jpg

அப்படி அவங்க உங்கள விட்டு போறேன்னு சொன்னாலும், நீங்க சொல்லுவீங்க...

okk.jpg

அப்போ உங்க காதலும் இந்த மாதிரியாகும்...

kuna.jpg

 

ஆனா, இதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு..... ’இதயம்’ முரளி கணக்கா காதலைச் சொல்லத் தெரியாம தவிச்சு தண்ணி குடிச்சு நின்னீங்கன்னா.... அதுக்கும் ஒரு வழி இருக்கு. நம்ம மகான் வழி... 

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

gowndar.jpg

அப்டின்னு லவ் லெட்டர் எழுத ஆரம்பிக்கவாவது செய்ங்க!

 

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று

பெப்ரவரி - 15....

 

665varalaru-15-02-2016.jpgகி.மு 399 – கிரேக்க தத்­து­வ­ஞானி சோக்­கி­ரட்­டீ­ஸூக்கு மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

 

590 : பார­சீ­கத்தின் மன்­ன­னாக இரண்டாம் கொஸ்­ராவு முடி சூடினார்

 

1637 : புனித ரோம் பேர­ரசின் மன்­ன­னாக மூன்றாம் பேர்­டினண்ட் முடி சூடினார்.

 

1898 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் கடற்­படைக் கப்பல் யூ.எஸ்.எஸ். மெய்ன் கியூ­பாவில் ஹவானா துறை­மு­கத்தில் வெடித்து மூழ்­கி­யதில் 260 பேருக்கு மேல் கொல்­லப்­பட்­டனர்.

 

இந்­நி­கழ்­வை­ய­டுத்து அமெ­ரிக்கா ஸ்பெயி­னுக்கு எதி­ராக போர்ப் பிர­க­டனம் செய்­தது.

 

1942 : இரண்டாம் உலகப் போர்: சிங்­கப்பூர் ஜப்­பா­னிடம் வீழ்ந்­தது. இந்­திய, ஐக்­கிய இராச்­சியம், மற்றும் அவுஸ்­தி­ரே­லியா நாடு­களைச் சேர்ந்த சுமார்  80,000  படை­யினர் போர்க் கைதி­க­ளாக்­கப்­பட்­டனர். 

 

1946 :  ENIAC எனும் முதல் தலை­முறைக் கணினி பெல்­சில்­வே­னியா பல்­லைக்­க­ழ­கத்­தினால் அறி­மு­க­மா­னது.

 

1950 : சோவியத் ஒன்­றியம், மக்கள் சீனக் குடி­ய­ரசு ஆகி­யன பாது­காப்பு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டன.

 

1961 :பெல்­ஜி­யத்தில் விமானம் ஒன்று வீழ்ந்­ததில் அதில் பயணம் செய்த  73 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1970 : டொமி­னிக்கன் குடி­ய­ரசு விமானம் ஒன்று சாண்டோ டொமிங்­கோவில் கடலில் மூழ்­கி­யதில் 102 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1989 : ஒன்­பது ஆண்டு கால ஆக்­கி­­மிப்­புக்குப் பின் ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து அனைத்து சோவியத் படை­களும் வெளி­யே­றி­ய­தாக அறி­விக்­கப்­பட்­டது.

 

1996 : சீனாவின் இண்­டெல்சாட் செய்­மதி ஒன்று ஏவி­ய­வு­ட­னேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்­ததில் பலர் கொல்­லப்­பட்­டனர்.

 

1999 : குர்­திஸ்தான் உழைப்­பாளர் கட்சி எனும் அமைப்பின் அப்­துல்லா ஓக்­கலன் துருக்­கிய இர­க­சியப் படை­க­ளினால் கென்­யாவில் வைத்து கைது செய்­யப்­பட்டார்.

 

2013 : ரஷ்ய வான் பரப்பில் விண்கல் ஒன்று வெடித்துச் சிதறியதால் கட்டடங்கள் அதிர்ந்து ஜன்னல்கள் உடைந்தன. இதனால் சுமார் 1,500 பேர் காயமடைந்தனரென அறிவிக்கப்பட்டது. 

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=665#sthash.A0GjizRo.dpuf
  • தொடங்கியவர்

'எனக்கு புதுசா ஒரு லவ்வர் வேணும்' கனடா ''சூப் பாய்''யின் வித்தியாச விளம்பரம்

 

தன்னுடைய முன்னாள் காதலி பிரிந்து சென்றுவிட்டதால் புதிதாக காதலி ஒருவர் தேவை என வீட்டிற்கு வெளியே விளம்பரம் செய்துள்ளார் கனடா நாட்டுக்காரர்.

ஓண்டாரியோவில் உள்ள லண்டன் நகரை சேர்ந்த பீட்டர் கெளவ் (47) என்பவர் தான் இந்த விளம்பரத்தை ஏற்பாடு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "என்னுடைய முன்னாள் காதலி என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த நவீன காலத்தில் ஒரு காதலியை பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. இணையத்தளங்கள் அல்லது பார்ட்டி நடைபெறும் இடங்களுக்கு சென்று காதலியை தெரிவு செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதனால் தான் என்னுடைய வீட்டிற்கு வெளியே 200 டாலர் செலவில் விளம்பர பலகையை வைத்துள்ளேன்.
 

Gril%20Friend%20AVD%20Canada.jpg

என்னுடைய வீடு சிறியதாக இருந்தாலும், அதனை சுத்தமாக வைத்துள்ளேன். என்னுடைய துணிகளை நானே துவைத்து, நானே சமைத்து சாப்பிட்டு வருகிறேன். என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள், வீட்டில் எல்சிடி தொலைக்காட்சி என அனைத்து வசதிகளும் இருக்கிறது. காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடவும், இந்த நாளின் கடைசியில் என்னுடன் அமர்ந்து பீயர் குடிக்கவும் அழகான ஒரு காதலி தேவை.

இந்த விளம்பரத்தை பார்த்தும் யாரும் வரவில்லை என்றால், தன்னுடைய புகைப்படத்தையும் விளம்பர பலகையில் ஒட்டி மீண்டும் முயற்சி செய்வேன். முக்கியமாக, இந்த விளம்பரத்தை பார்த்தும் வரும் பெண் 35 முதல் 47 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

vikatan

  • தொடங்கியவர்

அட்வா.....................ன்ஸ் பிறந்த நாள் வாழ்த்து; ஆப்கானிஸ்தான் அதிபரிடம் பல்பு வாங்கிய மோடி!

 

ள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார் பிரதமர் மோடி. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி-க்கு தவறான நாளில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

modi%20with%20asraf%20khani.jpg

மோடியின் ட்விட்டர் பக்கத்தில் "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஷ்ராஃப் கானி. உங்களுக்கு நீடிய வாழக்கை மற்றும் உங்கள் வாழ்க்கை நல்ல உடல்நலம் மற்றும் மகிழ்ச்சியாக அமைய பிராத்திக்கிறேன் என வாழ்த்து கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த ஆப்கானிஸ்தான் அதிபர் தனக்கு இன்று பிறந்த நாள் இல்லை, தன்னுடைய பிறந்த நாள் மே 19-ம் தேதி தான். எனினும் உங்களுடைய அன்பான வார்த்தைக்கு நன்றி என அவர் தெரிவித்துக்கொண்டார்.

modi%20twitter%20asraf%20khani.jpg

3 மாதங்களுக்கு முன்பே ஆப்கானிஸ்தான் அதிபருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி பிரதமர் மோடி பல்பு வாங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

vikatan

  • தொடங்கியவர்

12694753_986073738107987_671553957838505

நியூ சீலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் இரட்டை வீரர்கள் மார்ஷல் சகோதரர்களின் பிறந்தநாள்.
ஹமிஷ் & ஜேம்ஸ் மார்ஷல் சொற்ப காலம் கலக்கி இருந்தார்கள்
Happy Birthday Hamish Marshall & James Marshall

  • தொடங்கியவர்

12710995_678288572273688_376829602985207


பிப்ரவரி 15: இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர்
கலீலியோ பிறந்த தினம் இன்று..

  • தொடங்கியவர்

அதிசயம்... ஆனால் உண்மை... வார்த்தைகளை படிக்கும் நாய்! (வியக்க வைக்கும் வீடியோ)

 

காகிதத்தில் எழுதப்பட்ட வார்த்தைகளை படித்து புரிந்துக்கொண்டு அதன்படி செயல்படும் அதிசய நாய் ஒன்று இங்கிலாந்தில் உள்ள பள்ளியில் வளர்க்கப்பட்டு வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாய்கள் பொதுவாக வாயால் உத்தரவிடப்படும் வார்த்தை ஒலிகளை புரிந்துக்கொண்டு அல்லது கைகளால் காட்டப்படும் செய்கைகளை பார்த்து அதன்படி செயல்படும் நாய்களை தான் இதுவரை பார்த்துள்ளோம். ஆனால், தற்போது முதன் முதலாக, காகிதத்தில் எழுதப்பட்டுள்ள ஆங்கில வார்த்தைகளை படித்து புரிந்துக்கொண்டு அதன்படி செயல்படும் ஒரு அதிசய நாய் இங்கிலாந்தில் பள்ளி ஒன்றில் வலம் வந்துக்கொண்டு இருக்கிறது.

england%20dog.jpg

இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டோல் நகரில் குழந்தைகளுக்கான தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதற்கு நிக் கார்டனர்(38) என்பவர் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். இந்த பள்ளியில் தான் பெர்னி என்ற பெயருடைய 2 வயது நாய் ஒன்று குழந்தைகளுடன் எப்போதும் வலம் வந்துக்கொண்டு இருக்கிறது.

பள்ளி குழந்தைகளுக்கு பாடம் கற்கும் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் நிக் கார்டனர் ஒரு அதிசயத்தக்க பயிற்சியில் ஈடுபட்டார். அதாவது, பெர்னி என்ற அந்த நாய்க்கு வார்த்தைகளை படித்து புரிந்துக்கொண்டு அதன் செயல்பட பயிற்சி அளித்து வந்துள்ளார். இதன் பலனாக, தற்போது 4 வார்த்தைகளை படித்து புரிந்துக்கொண்டு, அதன்படி பெர்னி செயல்பட்டு பள்ளி குழந்தைகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

உதாரணமாக, எந்த ஒலியும் எழுப்பாமலும், கைகளால் சைகைகளை காட்டாமலும் காகிதத்தில் ‘Sit’(தரையில் அமர்) என்ற ஆங்கில வார்த்தையை காட்டினால், அதனை பார்த்துவிட்டு அந்த நாய் தரையில் அமரும். ’Down’ என்ற வார்த்தையை காட்டினால், உடனே தரையில் படுக்கும். ‘Roll Over’ என்ற வார்த்தையை காட்டினால், தரையில் படுத்து உருளும். இறுதியாக, ‘Spin Around’ என்ற வார்த்தையை காட்டினால், அந்த நாய் அதே இடத்தில் சுற்றி சுற்றி வரும்.

 

இந்த அதிசயம் குறித்து நிக் கார்டனர் கூறுகையில், "பள்ளி குழந்தைகளுக்கு கற்கும் ஆவலையும் தன்னம்பிக்கையையும் உண்டாக்கும் எண்ணத்தில் தான் நாய்க்கு வார்த்தைகளை புரிந்துக்கொள்ளும் பயிற்சியை அளித்தேன். இந்த ஆங்கில வார்த்தைகளை வரிசை மாற்றி காட்டினாலும் கூட, அந்த வார்த்தையை பார்த்து புரிந்துக்கொண்டு செயல்படும். இதற்கு முதலில் Sit என்ற வார்த்தையை காகிதத்தில் எழுதி அதனை நாயிடம் காட்டிக்கொண்டு ‘Sit’ என வாயால் ஒலி எழுப்புவேன். பின்னர், நாளடைவில், ஒலியை எழுப்பாமல் வார்த்தையை மட்டுமே காட்டியபோது அதனை புரிந்துக்கொண்டு நாய் செயல்பட்டு வருகிறது. இதுபோன்று 20 வார்த்தைகளை இந்த நாய் புரிந்துக்கொள்ளும். இதற்கு கூடுதலான பயிற்சிகள் அளிக்க உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

viaan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12718353_986069464775081_459266356105407


தனது அசத்தும் குறுகுறு நடிப்பினால் மனம் கவர்ந்த திறமையான நடிகை மீரா ஜஸ்மினுக்கு இன்று பிறந்த தினம்...
  • தொடங்கியவர்

மரணத்தை தழுவிய அன்பு மகள்... ஒரு தாயாரின் உருக்கமான நடைபயணம்!

 

குணப்படுத்த முடியாத நோயால் உயிரிழந்த தன்னுடைய மகளை போல் இனி யாரும் உயிரிழக்க கூடாது என்ற எண்ணத்தில்  பெண் ஒருவர், நிதி திரட்டுவதற்காக சுமார் 8,000 கி.மீட்டர் தூரம் நடைபயணத்தை தொடங்கியுள்ளது பார்ப்பவர்களின் மனதை உருக வைத்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள செல்டேன்கம் என்ற நகரில் நடாலியா(41) என்ற பெண், தனது 5 வயது மகளான எலிசபெத் ஸ்பென்சருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட திட்டமிட்டிருந்தபோது, துரதிர்ஷ்டவசமாக அவரது மகளை வினோதமான நோய் ஒன்று தாக்கியுள்ளது. மகளின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த தாயார்,  பிரிஸ்டோல் குழந்தைகள் மருத்துவமனையில் தனது மகளை அனுமதித்தார். ஆனால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துகொண்டு சென்றதால், அவரது உடல்நலனும் மிகவும் பாதிக்கப்பட்டது.
 

England%20mother.jpg

17 நாட்கள் கடுமையாக போராடியும், கிறிஸ்துமஸ் தினத்தை காணாமலேயே குழந்தை மரணத்தை தழுவியது. அன்பு மகளின் இழப்பை தாங்க முடியாத தாயார், பல நாட்கள் துயரத்திலிருந்து விடுபட முயன்றுள்ளார்.

அப்போது, ‘தனது மகளை இழந்தது போல் மற்றொரு தாயாரும் அவருடைய பிள்ளைகளை இழக்கக் கூடாது’ என முடிவெடுத்து,  தனது குழந்தைக்கு சிகிச்சை அளித்த பிரிஸ்டோல் குழந்தைகள் மருத்துவமனைக்கு நிதி திரட்ட நடைபயணம் மேற்கொள்ள தீர்மானித்தார். இதனை செயல்படுத்தும் விதமாக தனது மகளை இறுதியாக அழைத்துச்சென்ற டோர்செட் நகருக்கு நேற்று சென்று,  அங்கிருந்து தனது நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

இது குறித்து நடாலியா கூறுகையில், "எனது மகளை பிரிந்த துன்பத்தை விட இந்த 8,000 கி.மீட்டர் தூரம் கடினமானது இல்லை. இந்த தூரத்தை கடந்து,  என்னால் இயன்ற வரை நிதி திரட்டி மருத்துவமனைக்கு அளித்து,  மற்ற குழந்தைகளையும் பாதுகாக்க முயற்சி செய்வேன்" என தெரிவித்தார்.

இந்த நடைபயணத்தின் மூலம், சுமார் 98.93 லட்சம் ரூபாய் நிதி திரட்ட  நடாலியா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

vikatan

  • தொடங்கியவர்

ஆண்ட்ரியா எழுதி பாடியிருக்கும் Drifter வீடியோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.