Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

12697356_986073091441385_884701593857035


மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர், தலைவர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸின் பிறந்த நாள் இன்று.

அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளங்கிய ஹெய்ன்ஸ், அண்மைக்காலம் வரை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் சாதனைகள் பலவற்றின் சொந்தக்காரராக விளங்கியவர்.
Happy Birthday Desmond Haynes.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

12743990_679095618859650_745973835545681


ஒவ்வொரு நாட்டில் உள்ள கட்டடங்களின் முன் கதவுகள் எப்படியெல்லாம் வடிவமைத்துள்ளனர் என்று ‘Doors of the World’ என்ற தலைப்பில் தொகுத்து வழங்கியுள்ளார் போர்ச்சுச்கல் புகைப்படக் கலைஞனர் Andre Vicente Goncalves. ஒன்றாகப் பார்க்கும்போது எவ்வளவு வித்தியாசங்கள்.

  • தொடங்கியவர்

12717420_679093808859831_401629014702881

பிப்ரவரி 15: நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானி சார்ல்ஸ் கில்லோம் பிறந்த நாள் இன்று.

இயற்பியல் துறையில் அந்தப் பரிசைப் பெற்றார்.

  • தொடங்கியவர்

வலை பாயுதே !

 

 

p16.jpg

p17.jpg

vikatan

  • தொடங்கியவர்

ஹாங்காங் நகரில் காதலர் தினத்துக்காக ஒளிர்ந்த பிரம்மாண்ட வெள்ளை ரோஜா பூந்தோட்டம்

12744494_1073256776066445_89162044554998

placeholder

http://img.vikatan.com/album/2016/02/ngfjny/large/139805.jpg

placeholder

placeholder

vikatan

  • தொடங்கியவர்

சிங்கிள்களின் காதலர் தினம் இவ்வளவு கெத்தாக இருக்குமா?

 

காதலர் தினம் தொடர்பான பாடல்கள், மீம்ஸ்கள், கவிதைகள் எல்லாமே இணையத்தில் செம வைரல், அந்த வரிசையில் சிங்கிள்களின் காதலர் தினம் எப்படி இருக்கும் தெரியுமா? என்ற ஃபேஸ்புக் பதிவு வைரல். இதில் காதலர்களுக்கும், சிங்க்கிள்களுக்கும் உள்ள வித்தியாசம் 5 போஸ்டர்களாக கூறப்பட்டுள்ளது. அந்த போஸ்டர்கள் இதோ....


1.மதிய சாப்பாடு முடிஞ்சாலும் காஃபி வித் லவ்டு ஒன் அப்படின்னு ஸ்டேட்டஸ் போட வேணாம், கெத்தா ஏரியால உள்ள நாயர் கடை டீ வித் ஃப்ரெண்ட்ஸ்னு ஸ்டேட்டஸ் போடலாம்.

1455436680%20%281%29.jpg

2.நாள் முழுக்க கஷ்டப்பட்டு லவ்வர்ஸ் டே கொண்டாடுறதவிட நாள் முழுக்க U19  &  இந்தியா - இலங்கை T20 மேடச் பாக்கலாம் .

1455436680%20%282%29.jpg

3. பொண்ணு கூட மட்டுமே ஊர் சுத்தி திரியாம, எப்பவும் கூட திரியுற பசங்களோட ஒரு ஜாலி ட்ரிப் போகலாம்.

1455436680%20%283%29.jpg

4. கிடைக்குற ஒரு நாள் லீவு அதுவும் சண்டே பேசாம டொரண்ட்ல டவுன்லோட் பண்ண எல்லா ஹாலிவுட் படத்தையும் ஜாலியா பாத்து முடிச்சுடலாம்.

1455436680%20%284%29.jpg


5. வாட்ஸ்அப்ல லவ் ஸ்டேட்டஸ் போட்டு தொந்தரவு செய்யுறவங்களுக்கு எல்லாம் ஒரு பன்ச் எமொஜி போட்டு ஸ்டாப் பண்ணிடலாம்.

1455436680%20%285%29.jpg

குறிப்பு: லவ்வர்ஸ் டே அன்று லவ் பண்றவங்க இத ஃபாளோ பண்ணாதீங்க.

vikatan

  • தொடங்கியவர்

காதலின் அறிவியல் என்ன?

  • தொடங்கியவர்
1988 : விஜய குமாரதுங்க கொல்லப்பட்டார்
2016-02-16

வரலாற்றில் இன்று....

பெப்ரவரி - 16

 

666vijaya-kumaratunga-05.jpg1646 : இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.

 

1796 : ஆங்கிலேயர் கொழும்பை டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.

 

1838 : தென் ஆபிரிக்காவில் நாட்டல் என்னுமிடத்தில் சுலு இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் பிரித்தானிய குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர்.

 

1918 : ரஷ்யாவிடமிருந்து பிரிவதாக லித்துவேனியா  பிரகடனம் செய்தது.

 

1934 : ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

 

1937 : வொலஸ் கரோத்தேர்ஸ், நைலோனுக்கான காப்புரிமம் பெற்றார்.

 

1945 : இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் படைகள் பிலிப்பைன்ஸின் கொரெகிடோர் தீவில் தரையிறங்கின.

 

1945 : இரண்டாம் உலகப் போர்: முதல் தடவையாக அமெரிக்கப் போர் விமானம் ஜப்பானின் டோக்கியோவைத் தாக்கியது.

 

1945 : அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்ஸின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர்.

 

1947 : எண்பது ஆண்டுகளாக பிரித்தானியர்களாக இருந்த கனேடியர்கள் முதற்றடவையாக கனேடிய குடியுரிமையைப் பெற்றனர். பிரதமர் வில்லியம் லியோன் மக்கென்சி முதலாவது குடியுரிமையைப் பெற்றார்.

 

666Colombo-Port.jpg1959 : ஜனவரி 1 இல் புல்ஜென்சியோ படிஸ்டாவை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றிய பிடல் கெஸ்ட்ரோ கியூபாவின் புதிய பிரதமரானார்.

 

1961 : எக்ஸ்புளோரர் – 9 செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது.

 

1962 : மேற்கு ஜேர்மனியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 315 பேர் உயிரிழந்தனர்.

 

1983 : அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தெற்கு அவுஸ்திரேலியா மாநிலங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 75 பேர் உயிரிழந்தனர்.

 

1985 : மத்திய கிழக்கில் ஹிஸ்புல்லா இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

 

1986 : சோவியத் கப்பலான மிகைல் லெர்மொண்டொவ் நியூஸிலாந்தில் மூழ்கியது.

 

1988 : சிங்களத் திரைப்பட நடிகரும் இலங்கை மக்கள் கட்சியின் தலைவரும், 1994 இல் ஜனாதிபதியாக தெரிவான சந்திரிகாவின் கணவருமான விஜய குமாரதுங்க கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

1998 : தாய்வானில் இடம்பெற்ற விமான விபத்தில் 196 பேர் உயிரிழந்தனர.

 

2005 : காலநிலை மாற்றம் தொடர்பான கியோட்டோ சர்வதேச உடன்படிக்கை அமுலுக்கு வந்தது.

 

2007 : தமிழகத்தில் 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பஸ் தீவைப்பு சம்பவத்தில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்குத் தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

 

2013 : பாகிஸ்தானின் குவேட்டா நகரில் சந்தையொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் சுமார் 80 பேர் உயிரிழந்ததுடன் 190 பேர் காயமடைந்தனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=666#sthash.9HeVsQh8.dpuf
  • தொடங்கியவர்

பிப்ரவரி 16: தாதா சாகேப் பால்கே நினைவு தின சிறப்பு பகிர்வு....

 

இந்திய சினிமாவின் தந்தை தாதா சாகேப் பால்கே மறைந்த தினம் இன்று .தாதா சாகேப் பால்கே 1870இல் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி என பல விஷயம் கற்றவர், ராஜா ரவிவர்மாவிடம் லித்தோகிராப் வரையும் பணியில் ஈடுபட்டார் . பம்பாய் சர்.ஜே.ஜே. கலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் படிப்படியாகக் கற்றார்.

மேஜிக் செய்து வயிற்று பிழைப்பை ஓட்டினார் . அப்பொழுது தான் லூமியர் சகோதரர்கள் கிறிஸ்துவின் வாழ்வு என்கிற படத்தை மக்களுக்கு போட்டு காட்டினார்கள், இங்கே இதைப்பார்த்து தான் பால்கே அசந்து போனார். படம் எடுக்க வேண்டும் என்று மனிதருக்கு ஆர்வம் பற்றிக்கொண்டது.

dadasakip.jpg

அந்த படத்தை போல படமெடுக்க வேண்டும் என சினிமா கொட்டகையில் வேலைபார்த்து பல படங்களை பார்த்தார் . படங்கள் பெரும்பாலும் மவுனம் தான் ;இடையிடையே அலுக்காமல் இருக்க நாடக கலைஞர்கள், இசை வல்லுனர்கள் ஆகியோர் உதவுவார்கள். கதையை விளக்கி சொல்வார்கள். அப்படிதான் போய்க்கொண்டு இருந்தது .

சின்ன சின்ன படங்கள் எடுத்து பழகிய பின் ,இவர் இங்கிலாந்துக்கு கப்பலேறி வால்டன் ஸ்டுடியோவில் சினிமா கற்றுக்கொண்டு திரும்பினார் ; அதோடு நில்லாமல் வில்லியம்சன் கேமரா ஒன்றை வாங்கிக்கொண்டு வந்தார் . இன்றைக்கு போல அன்றைக்கு திரைப்படம் எடுப்பது சுலபமான காரியமில்லை . படத்தில் நடிப்பதை பலர் பாவம் என எண்ணினார்கள் . மக்கள் பெரும்பாலும் நாடகங்களில் மூழ்கி இருந்த காலம் அது .பெண்கள் நாடகங்களில் பெரும்பாலும் நடிக்க அனுமதிக்கப்படாமல் இருந்தார்கள் . இவர் படம் பார்த்து பார்த்து பார்வை மங்கி இந்தியா வந்திருந்தார் .

இவர் சாமான்களை விற்று ராஜா ஹரிச்சந்திரா படம் எடுக்க ஆரம்பித்தார். நடிகர்கள் பஞ்சம் உண்டானது ; பெண் வேடத்திற்கு ஆண்களை பிடித்தார். நடிக்க பலர் வீட்டில் பிள்ளைகளை அனுப்ப மறுத்தார்கள் .ஆகவே தான் நடிப்பு பேக்டரி நடத்துவதாக சொல்லி அவர்களை கூட்டி வந்தார் . ஒரே ஆளாக எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம், காஸ்ட்யூம், விநியோகம் எல்லாமே இவர் தான்
. நடிகர்களை அந்த கதாபாத்திரமாகவே ஆக்க ரொம்ப பிரயத்தனப்பட்டார் .

பெண் வேடம் பூண்டவனை சேலை கட்டியே நடமாட விட்டார் ;பெண் போன்ற நளினத்தை அவனிடமிருந்து வெளிக்கொணர்ந்தார். ஸ்திரிபார்ட் நடிகர்களின் நடிப்பு இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காக அவர்கள் நாள் முழுவதும் சமையல்வேலை மற்றும் வீ‘ட்டுவேலைகள் செய்துவர வேண்டும். எப்போதுமே புடவை கட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டும், கூந்தல் வளர்த்துக் கொள்ள வேணடும் பெயரைக் கூட மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டார் . தனது ஹிந்துஸதான் பிலிம் கம்பெனி மூலம் பால்கே 75 படங்களை தயாரித்தார் அவர் ;பேசும் படங்கள் வந்ததும் இவரால் தாக்குபிடிக்க முடியவில்லை; நொடிந்து போனார் .

இவரின் மனைவி ஏகத்துக்கும் உதவிகரமாக இருந்தார் .அவரே பல தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக்கொண்டு வேலை பார்த்தார் .கணவர் கேட்ட பொழுதெல்லாம் நகைகளை கொடுத்தார் . பசி வறுமை எல்லாம் வாட்டி எடுத்தன ;வீட்டு சாமான்களை அடமானம் வைத்து ஜீவனம் நடத்தினார் .வறுமையில் நாசிக்கில் கவனிப்பு இன்றி மறைந்து போனார் .அவரை இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்கிறோம் .அவரின் முதல் படம் வந்து நூற்றாண்டு ஆகி விட்டது .அவரின் பெயரால் இந்தியாவின் மிக உயரிய திரை விருது வழங்கப்படுகிறது .

சிவாஜி கணேசன் மற்றும் பாலசந்தர் இவ்விருதை தமிழகத்தில் இருந்து பெற்றிருக்கிறார்கள் .சினிமா வெளிச்சத்தை மக்கள் பார்க்க தன் வாழ்வை இருட்டில் தோய்த்து கொண்ட அவரின் நினைவு நாள் இன்று

vikatan

  • தொடங்கியவர்

12697351_986536821395012_350299228885041

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிவேகப் பந்துவீச்சாளர், அச்சுறுத்தும் துல்லியமான விக்கெட் எடுப்பு இயந்திரம் மைக்கேல் ஹோல்டிங்கின் பிறந்தநாள்.
Happy Birthday Michael Holding

  • தொடங்கியவர்

ஊட்டி மலை ரயில் இப்படி தான் இயங்குகிறது! ஜாலி ட்ரிப் வித் சுட்டீஸ்

 

ட்டி செல்லும் அனைவருக்குமே ஞாபகம் வருவது இரண்டே விஷயங்கள்தான், அழகான மலைகளும், ஊட்டி மலை ரயிலும்தான். ஊட்டி செல்லும் அனைவருமே ஒரு முறையாவது இந்த ரயிலில் பயணிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அந்த மலை ரயிலில் சுட்டீஸ்களுடன் ஒரு ஜாலி ட்ரிப் போனோம்.

ஊட்டி மலை ரயிலின் சீனியர் மெக்கானிக்கல் இன்ஜினியருடன் சுட்டீஸ்கள் கலந்துரையாடினர். ரயில் எப்படி இயங்குகிறது..? மீட்டர் கேஜ், நேரோ கேஜ், பிராட் கேஜ் இவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம், ஊட்டி செல்லும் வழியில் உள்ள குகைகள் என சுட்டீஸ்களிடமிருந்து வந்த ராக்கெட் வேக கேள்விகளுக்கு பதில் சொன்னார் அந்த சீனியர் மெக்கானிக்கல் இன்ஜினியர்.

சுட்டீஸின் ஜாலி பேட்டி மற்றும் ட்ரிப் வீடியோ:
  

VIKATAN

  • தொடங்கியவர்

12688228_986522194729808_834301554443435

பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த சாதனை நீச்சல் வீரர் கு.நவரத்தினசாமி அவர்களின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்
கே லவ்வரை உயிருடன் கடித்து, ருசித்துச் சாப்பிட்ட ஜெர்மனிக்காரர் !
 
 
: ஜெர்மனியில் நர மாமிசம் சாப்பிடும் 42 வயது நபர், தனது ஓரினச் சேர்க்கைக் காதலருடன் செக்ஸ் வைத்துக் கொண்ட பின்னர் அவரை அப்படியே உயிருடன் கடித்துக் சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த பயங்கர நபரின் பெயர் அர்மின் மெய்வஸ். 42 வயதாகும் இவர் தனது ஓரினச்சேர்க்கை காதலரை உயிருடன் கடித்துச் சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். மேலும் அவரது உடலின் ஒரு பகுதியை ரோஸ்ட் செய்தும் இவர் சாப்பிட்டுள்ளார்.
German cannibal had sex with gay lover, ate him alive

 

 இவரால் கொல்லப்பட்ட நபரின் பெயர் பெர்ன்ட் பிரான்டஸ். 2001ல் இவரை உயிருடன் சாப்பிட்டுள்ளார் அர்மின். இவர் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமர் ஆவார். முன்பு, தன்னை உயிருடன் சாப்பிடக் கூடிய திறமை படைத்த நர மாமிசம் சாப்பிடுவோர் தாராளமாக முயற்சித்துப் பார்க்கலாம் என்றும் பீதியைக் கிளப்பும் விளம்பரத்தைதப் போட்டிருந்தவர் ஆவார்.

 

இந்த நிலையில் தற்போது அவர் புதிய பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில்தான் தான் பிராண்டஸை உயிருடன் சாப்பிட்ட சம்பவத்தை அர்மின் நினைவு கூர்ந்துள்ளார்.

 

சிறந்த டின்னர்...

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் எனது டேபிளை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்திருந்தேன். அதுதான் எனது மிகச் சிறந்த டின்னர். அவருடைய முதுகிலிருந்து எடுத்த சில பகுதிகளை வைத்து ரோஸ்ட் செய்திருந்தேன். அருமையான டேஸ்ட் கொண்டவை அவை.

 

வினோதமான சுவை..

எனது முதல் கடியை என்னால் மறக்க முடியாது. மிக வினோதமாக இருந்தது. அதேசமயம், சுவையாக இருந்தது. அதை என்னால் விவரிக்க முடியாது. அத்தனை ஆண்டுகளாக நான் வாழ்ந்ததே இதுபோன்ற தருணத்திற்காகத்தான்.

 

மாட்டுக்கறி போல்...

அவரது மாமிசம் மாட்டுக் கறி போன்ற சுவையுடன் இருந்தது. ஆனால் புதுமையான டேஸ்ட்டாகவும் தெரிந்தது என்று கூறியுள்ளார் இவர். இந்த பேட்டி விரைவில் Docs: Interview with a Cannibal என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

 

வீடியோ பதிவு...

பிரான்டஸ்டுன் சம்பவத்தன்று இரவு முதலில் செக்ஸ் கொண்டுள்ளார் அர்மின். பின்னர் அவருக்கு மதுவில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து மயங்க வைத்துள்ளார். அதன் பின்னர் முதலில் கழுத்தைக் கடித்துக் கொன்றுள்ளார். பிறகு உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். அதை வீடியோவிலும் பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

கைது...

பிறகு தலையைத் துண்டித்து தோட்டத்தில் புதைத்துள்ளார். உடல் பாகங்களை பிரிட்ஜில் வைத்து அவ்வப்போது எடுத்து சாப்பிட்டுள்ளார். 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது செக்ஸ் திருப்திக்காக கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எட்டு வருட சிறைத் தண்டனையும் தரப்பட்டது.

சைவம்...

என்ன வேடிக்கை என்றால் சிறைத் தண்டனை சமயத்தில் சிறையில் இருந்தபோது இவர் சுத்த சைவமாக மாறி விட்டார் என்பதே.

  • தொடங்கியவர்

12742287_986522578063103_867187937886790

சிங்களத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராகவும், மனித நேயமிக்க அரசியல்வாதியாகவும் விளங்கிய காலஞ்சென்ற விஜய குமாரதுங்கவின் நினைவு தினம் இன்று.

முன்னாள் இலங்கை ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இவரது மனைவியாவார்.

  • தொடங்கியவர்

 

p29a.jpg

உங்க வீட்டுச் செல்லப் பிராணி எது? நாய்... பூனை... கிளி..? சீனாவைச் சேர்ந்த அ ழே (A Zhe) எனும் சிறுவனின் செல்லக்குட்டி, மலைப்பாம்பு. ஆமாம். அ ழே ஒன்பது மாதக் குழந்தையாக இருந்தபோது, அவன் அப்பா வீட்டுக்கு ஒரு மலைப்பாம்பை வாங்கி வந்தார். அப்போது முதல் மலைப்பாம்புடன்தான் தூங்குகிறான் அ ழே. தனது செல்லப் பிராணியுடன் வாக்கிங் செல்கிறான். அந்தப் பாம்பு, யாரையும் துன்புறுத்தியது இல்லை. அ ழே இப்போது உயர்நிலைப் பள்ளியில் படிப்பதால், வார இறுதியில் மட்டுமே வீட்டுக்கு வந்து பாம்புடன் விளையாட முடிகிறதாம். பெரியவன் ஆனதும் உயிரியலாளர் ஆக வேண்டும் என்பது கனவு. அதுக்குக் காரணம், ‘இந்த நண்பன்தான்’ என்கிறான் 13 வயது அ ழே.

 

  • தொடங்கியவர்

12711123_986537431394951_918590730806503

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் வசீம் ஜாஃபரின் பிறந்தநாள்.
Happy Birthday Wasim Jaffer

  • தொடங்கியவர்

க்யூட் டிடி

placeholder

 

placeholder

placeholder

placeholder

placeholder

 

47 minutes ago, நவீனன் said:

க்யூட் டிடி

ஜயோ!
இது க்யூட்டா, "காப்பி வித் அனு" புரோகிராமை ரசித்த நான் இதுவின்ரை அலப்பறை தாங்கமுடியாமத்தான் காப்பி வித் இடி வேணாம் என்கிறேன்.

அம்மா தாயே திரும்பி வந்திடாதேம்மா. வந்தாலும் மற்றவர்களையும் கொஞ்சமாவது பேச விடம்மா. நாங்க ரீவி முன்னால குந்திக்குனு இருப்பது அவங்க பேச்சை கேட்கத்தான்.

  • தொடங்கியவர்

12717173_986521878063173_920025207028553

இலங்கையின் மூத்த மலையக எழுத்தாளர், பல விருதுகளுக்கு சொந்தக்காரர், இன்றும் இளைஞராக துடிப்புடன் நாவல், புதினம், சிறுகதை என்று இலக்கியத்துக்காக உழைக்கும் தெளிவத்தை ஜோசப் அவர்களின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்
 
 
 
Vikatan EMagazines Foto.
 

இயற்கை தரும் பேரழகு !

பாரம்பரிய அழகு ரகசியங்களை முறையாகக் கடைப்பிடித்தால், உடலுக்கு நிரந்தர ஆரோக்கியமும் அழகும் சேரும் என்கிறார் இயற்கை மற்றும் சித்த மருத்துவர் மகேஷ்வரி. அவர் தரும் சில நேச்சுரல் டிப்ஸ் இங்கே...

1 கிருமிநாசினியாகும் வேப்பிலை

அழகுப் பொருட்களின் ராணி. பிசுபிசுப்பு, எண்ணெய் வழிதல், பரு, கரும்புள்ளிகள் போன்ற பிரச்னைகள் தீர, தினமும் வேப்பிலைத் தண்ணீரால் முகத்தைக் கழுவிவருவது நல்ல பலன் தரும். இதைத் தொடர்ந்து செய்துவந்தால், முகச் சுருக்கங்கள் நீங்்கி, இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கும். இது சரும நோய்களுக்கான சிறந்த கிருமிநாசினி. வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுகளிடமிருந்தும், சூரியக் கதிர்களிடமிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்.

2 கரும்புள்ளிகளை நீக்கும் துளசி

டீன் ஏஜில் தோன்றும் பருக்களை மறையச்செய்யும். துளசியில் பால் சேர்த்து அரைத்து, விழுதாக்கி முகத்தில் தடவினால், பருக்கள், கரும்புள்ளிகள் மறையும். வாரம் மூன்று முறை இரண்டு துளசி இலைகளைச் சாப்பிட்டுவர, ரத்தம் தூய்மை அடைந்து, சருமம் மிளிரும். கீழாநெல்லி, துளசி இலைகளை அரைத்து, முகத்தில் பேக் போட்டுக் கழுவினால், கரும்புள்ளிகள், திட்டுக்கள் நீங்கி முகம் புத்துணர்வு பெறும்.

3 இயற்கை சோப் - கடலை மாவு / கொண்டைக்கடலை / பச்சைப் பயறு மாவு

எண்ணெய்ப் பசை நீங்க கடலை மாவும், முகத்தை ஸ்கரப் செய்ய கொண்டைக் கடலை மாவும், முகம் ஊட்டச்சத்துகளைப் பெற பச்சைப்பயறு மாவும் உதவும். மேலும், இவை சருமத்துக்குப் புரதத்தைத் தரக்கூடியவை. சருமம் மென்மையாகும். உடலுக்கு இயற்கையான நறுமணத்தைத் தரும். சருமத்தில் உள்ள கருமையைப் பச்சைப்பயறு மாவு நீக்கும்.

4 தங்கமாக ஜொலிக்க கஸ்தூரி மஞ்சள்

முகத்தைத் தங்கமாக ஜொலிக்கவைப்பதால்தான், அழகுக்கலையில் மஞ்சள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள், தயிர் கலந்து, முகத்தில் மசாஜ் செய்ய, ரத்த ஓட்டம் சீராகப் பாயும். முகம் புத்துணர்ச்சி அடைந்து, பொலிவுகூடும். எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தினர், கஸ்தூரி மஞ்சளுடன் சந்தனம், ஆரஞ்சு சாறு கலந்து, முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், எண்ணெய்ப் பசை நீங்கி, சருமம் ஜொலிக்கும். தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் கலந்து, பாத வெடிப்பில் பூசி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், பாத வெடிப்புகள் குணமாகும்.

5 தொற்றுகளைக் குணமாக்கும் குங்குமப்பூ

குங்குமப்பூவுடன் தேன் கலந்து, முகத்தில் தடவிவர, இழந்த பொலிவை மீண்டும் பெறலாம். பிறப்புஉறுப்பு, அக்குள் போன்ற இடங்களில் பூஞ்சைத் தொற்று இருந்தால், குங்குமப்பூவில் தேன் சேர்த்துத் தடவலாம். பாலில் அரை மணி நேரம் குங்குமப்பூவை ஊறவைத்து முகம், கழுத்தில் தடவி, 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம். பொலிவு இழந்த சருமத்துக்கும், பருக்கள் நிறைந்த சருமத்துக்கும் துளசி, குங்குமப்பூ கலந்த விழுதைப் பூசிவர, நல்ல பலன் கிடைக்கும்.

6 இயற்கை மாய்ஸ்சரைசர் - தயிர்

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்றும். இதனை ‘இயற்கை மாய்ஸ்சரைசர்’ என்று சொல்லாம். வயதான தோற்றத்தை மறைத்து, இளமையைத் தக்கவைக்கும் ஆன்டிஏஜிங் பொருள். மோரினால் முகத்தைக் கழுவ, வெயிலால் ஏற்படும் கருமை மறையும்.

7 சருமக் குளிர்ச்சிக்கு சந்தனம்

சருமம் பளபளப்பாக இருக்க, சந்தனத்துடன் பால் கலந்து பேஸ்ட்டாக்கி, முகத்தில் பேக் போட்டு, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். ஃபேஷியல் செய்ய நேரம் இல்லை எனில், பாதாம், பால், சந்தனம் ஆகியவற்றைக் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகத்தில் ஈரப்பதமும், பளபளப்பும் கூடும். அரிசி மாவுடன் சந்தனத்தைக் கலந்து, முகத்தை ஸ்கரப் செய்தால் மூக்கு, தாடைப் பகுதியில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, முகம் மென்மையாக மாறும். சருமத்தில் சந்தனத்தைப் பூசிவர, வியர்வை சுரப்பிகளைத் தூண்டி, உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும்.

8 பளபளப்பான சருமத்திற்குத் தேன்

தேனுடன் கொண்டைக் கடலை மாவு சேர்த்துக் கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பளபளக்கும். தேவையற்ற முடியை அகற்ற தேன், சர்க்கரை, எலுமிச்சைச் சாறு கலந்து, சூடு செய்த பின், சருமத்தில் தடவி, பஞ்சைவைத்து முடிகளை நீக்கலாம். வெயிலினால் கருத்த சருமம், பளபளப்பு பெற ஆலிவ் எண்ணெயுடன் தேன் கலந்து, முகத்தில் தடவலாம்.

9 வயதாவதைத் தடுக்கும் கற்றாழை

கற்றாழையின் சதைப்பகுதியை (சோற்றை) குழாய் நீரில் ஏழெட்டு முறை அலசி, முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ, சருமம் வயதாவது தடுக்கப்படும். கற்றாழையின் சத்துக்கள், சருமத் துளைகளில் ஊடுருவி, இளமையான தோற்றத்தைத் தரும். சருமத்தை மிருதுவாக்கும். மாய்ஸ்சரைசர் மற்றும் டோனராக செயல்படும். பருக்கள் முற்றிலுமாக நீங்கும். ஆண்கள் ஷேவிங் செய்த பிறகு, கற்றாழை ஜெல்லைத் தடவ, சருமப் பாதிப்புகள் ஏற்படாது. ஈரப்பதத்தை சமன்படுத்தவும், சரும எரிச்சலைப் போக்கவும் பயன்படும்.

10 க்ளென்சராக செயல்படும் நெல்லி

நெல்லிப் பொடியைத் தண்ணீரில் கலந்து, தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவினால், பொடுகு முற்றிலும் நீங்கிவிடும். மருதாணிப் பொடி, நெல்லிக்காய்ப் பொடி, அவுரிப் பொடி மூன்றையும் கூந்தலில் பூச, இளநரை மறைந்து, இயற்கையான கருமை நிறம் கிடைக்கும். இதில் வைட்டமின் சி சத்து இருப்பதால், கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும்.

சருமத்துக்கு க்ளென்சராக செயல்படும். தினமும் காலை, ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டுவர, முடி உதிர்தல் பிரச்னை நிற்கும். நெல்லிச் சாற்றை முகத்தில் தடவினால், அதில் உள்ள கொலஜன் (வெண்புரதம்) சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்கும்.

vikatan

  • தொடங்கியவர்
2008 : கொசோவோ சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது
2016-02-17

வரலாற்றில் இன்று....

பெப்ரவரி - 18

 

667varalu2.jpg1864 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர்: எச்.எல். ஹன்லி என்ற நீர்­மூழ்கிக் கப்பல் யூ.எஸ்.எஸ் ஹவு­சட்­டோனிக் என்ற போர்க்­கப்­பலைத் தாக்கி மூழ்­க­டித்­தது.

 

1865 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போரில் தென் கரோ­லி­னாவின் கொலம்­பியா நகரம் அமெ­ரிக்க மாநி­லங்­களின் கூட்­ட­மைப்பின் படைகள் வெளி­யேற்­றத்­தின்­போது தீயி­டப்­பட்­டது.

 

1867 : சுயஸ் கால்வாய் ஊடாக முத­லா­வது கப்பல் சென்­றது.

 

1881 : இலங்­கையில் இரண்­டா­வது மக்கள் தொகைக் கணக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. இலங்­கையின் மொத்த சனத்­தொகை 2,759,738 என மதிப்­பி­டப்­பட்­டது.

 

1890 : பிரித்­தா­னிய நீரா­விக்­கப்பல் ஒன்று சீனக் கடலில் மூழ்­கி­யதில் 400 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1947 : வொயிஸ் ஒஃப் அமெ­ரிக்கா தனது ஒலி­ப­ரப்புச் சேவையை சோவியத் ஒன்­றி­யத்­துக்கு விஸ்­த­ரித்­தது.

 

1957 : மிசூ­ரியில் வயோ­திபர் இல்லம் தீக்­கி­ரை­யா­கி­யதில் 72 பேர் கொல்­லப்­பட்­டனர்.
1959: முத­லா­வது வானிலை செய்­ம­தி­யான வன்கார்ட் 2 அமெ­ரிக்­கா­வினால் ஏவப்­பட்­டது.

 

1962 : மேற்கு ஜெர்­ம­னியின் ஹம்பூர்க் நகரில் இடம்­பெற்ற புயலில் 300 பேருக்கு மேல் கொல்­லப்­பட்­டனர்.

 

1974 : அமெ­ரிக்க இரா­ணு­வ ­சிப்­பா­யான ரொபரட் பிரஸ்டன், திரு­டப்­பட்ட ஹெலி­கொப்டர் ஒன்றில் வெள்ளை மாளி­கைக்கு மேல் 6 நிமி­டங்கள் பறந்து பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தினான்.

 

1979 : மக்கள் சீனக் குடி­ய­ர­சுக்கும் வியட்­நா­முக்கும் இடையில் போர் ஆரம்­ப­மா­கி­யது.

 

1990 : இலங்­கையின் ஊட­க­வி­ய­லா­ளரும் மனித உரிமை செயற்­பாட்­டாளர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்­தப்­பட்டுக் கொலை செய்­யப்­பட்டார்.

 

1995 : ஈக்­கு­வ­டோ­ருக்கும் பெரு­வுக்கும் இடை­யி­லான யுத்தம் ஐ.நா. தலை­யீட்டின் மூலம் முடி­வுக்கு வந்­தது.

 

2006 : பிலிப்­பைன்ஸில் சென் பேர்னார்ட் நகரில் இடம்­பெற்ற மண்­ச­ரிவில் சிக்கி 1,000 பேருக்கும் அதி­க­மானோர் உயி­ருடன் புதை­யுண்­டனர்.

 

2008 : சேர்­பி­யா­வி­லி­ருந்து பிரி­வ­தாக கொசோவோ சுதந்திரப் பிரகடனம் செய்தது.

 

2011 : லிபியாவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பஹ்ரெய்னில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அரச படையினர் அதிகாலைவேளையில் தாக்குதல் நடத்தினர். 

 

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=667#sthash.DhpWqLdV.dpuf
  • தொடங்கியவர்

சாமிக்கே சம்மன்... ஆஞ்சநேயருக்கு அதிர்ச்சி தந்த நீதிமன்றம்!

 

பாட்னா: இந்து கடவுள் ஆஞ்சநேயரை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லி பீகார் நீதிமன்றம் சம்மன் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3.jpg

நீதிமன்றங்களில் பல வினோத வழக்குகள் அவ்வப்போது தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் கண்டனத்திற்கும், தள்ளுபடிக்கும் உள்ளான சம்பவங்களும் நடந்துள்ளன. சமீபத்தில் சீதையை கைவிட்டதாக இந்து கடவுள் ராமர் மீது கூட வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், அந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதேபோல், சத்தீஸ்கரில் நீதிபதி ஒருவரின் தோட்டத்தில் மேயந்த வெள்ளாடு, அதன் உரிமையாளருடன் கைது செய்யப்பட்டு பின்னர் ஆடும், அதன் உரிமையாளரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

2%281%29.jpg

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக கோரி இந்து கடவுள் ஆஞ்சநேயருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் தெக்ரியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலுக்கு எதிராக, நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் மாநில அரசின் பொதுப்பணித்துறை புகார் தெரிவித்து உள்ளது. இதை தொடர்ந்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம், இந்து கடவுள் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி சம்மன் அனுப்பி உள்ளது.

நீதிமன்றம் அனுப்பிய சம்மனின் நகலானது, ஆஞ்சநேயர் சிலையில் தொங்கவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது தற்போது விவாதத்திற்குள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

vikatan

  • தொடங்கியவர்

12698148_987041144677913_876447327159939

தற்போதைய தலைசிறந்த துடுப்பாட்ட வீரரும் தென் ஆபிரிக்காவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் தலைவருமான A.B.டீ வில்லியர்சின் பிறந்த நாள் இன்று.

ஓட்டங்கள் குவிக்கும் இயந்திரமாக விளங்கும் AB, உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் விரும்பப்படும் ஒருவர்.
Happy Birthday AB de Villiers

10391756_1074259899299466_84715933144812

  • தொடங்கியவர்

ஸ்டெத்தஸ்கோப்பைக் கண்டுபிடித்த ரெனே லென்னக்கின் 235 வது பிறந்த நாள் இன்று.

ஒரு மருத்துவரின் கூச்ச சுபாவமும், சுட்டிகளின் விளையாட்டும் ஒரு மகத்தான மருத்துவ கருவியின் கண்டுபிடிப்புக்குக் காரணம் என்றால் நம்பமுடிகிறதா? அதுதான் நிஜம்.

இப்போது மருத்துவர்கள் ஸ்டெத்தஸ்கோப்பை வைத்து முதல்நிலையில் நோயைக் கண்டறிவது போல ஸ்டெத்தஸ்கோப் கண்டுபிடிப்பதற்கு முன்பு நோயாளிகளின் மார்புப் பகுதியிலும் முதுகில் வெறும் காதை வைத்தே கண்டுபிடிக்கும் வகையில் தான் இருந்தது. கூச்ச சுபாவம் கொண்ட மருத்துவரான ரெனே லென்னக் இதற்கு ஒரு கருவியைக் கண்டுபிடித்தால் என்ன என யோசித்தார்.

ரெனே ஒரு நாள் காலாற நடந்து கொண்டிருந்த போது இரண்டு சுட்டிகள் ஒரு மரத்தாலான உருளையைக் காதில் வைத்துக் கொண்டு மறுமுனையில் ஒரு ஊசியால் கீறிவிட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இது என்ன வகையான விளையாட்டு? எப்படி மரத்தின் ஒரு முனையில் ஏற்படும் உராய்வுகள் அடுத்த முனையில் கேட்கும் என யோசித்தவர், ஒலியைக் கடத்தும் பண்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் துவங்கினார்.

காகிதங்களை ஒரு குழாய் போலச் சுற்றி ஒரு பெண் நோயாளியின் மார்புப் பகுதியிலும் இன்னொரு முனையைத் தன் காதிலும் வைத்துக் கேட்டவருக்கு பெரிய அதிர்ச்சி. இவ்வளவு நாட்களாக வெறும் காதுகளால் கேட்ட போது இதயத்துடிப்பைக் கேட்டதை விட இப்போது துல்லியமாக கேட்பதில் அவருக்குப் பெரிய அதிர்ச்சி. அதிலிருந்து வெவ்வேறு வகைகளில் மரம், பித்தளை போன்றவற்றைப் பயன்படுத்தி ஒரு முழுமையான ஸ்டெத்தஸ்கோப்பை உருவாக்கினார். முதலில் பல மருத்துவர்கள் இந்த ஸ்டெத்தஸ்கோப்பை ஏற்கவில்லை. ஆனால், இப்போது மருத்துவர்கள் என்றாலே ஸ்டெத்தஸ்கோப் நிச்சயமாகக் கழுத்தில் இருக்க வேண்டும் என்றாகிவிட்டது.

12733543_679917718777440_759676673629458

vikatan

  • தொடங்கியவர்

12688316_535842303248956_455037583082029

இலங்கை கிரிக்கெட் அணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இதே நாளில் 1982ஆம் ஆண்டு கொழும்பு P.சரவணமுத்து மைதானத்தில் இங்கிலாந்துக்கெதிராக விளையாட ஆரம்பித்தது.

இலங்கை அணியின் தலைவராக முதலில் பொறுப்பெடுத்தவர் பந்துல வர்ணபுர.

இலங்கை அணிக்கு பின்னைய நாளில் உலகக் கிண்ணம் வென்று கொடுத்த தலைவர் அர்ஜுன ரணதுங்க, இந்த முதலாவது போட்டியில் அரைச் சதம் பெற்றுக்கொண்டார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.