Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

லீப் வருடத்தில் பிறந்த பெண்: 100 வயதை கடந்தார்

 

லீப் வருடத்தில் பிறந்த பெண் ஒருவர் தனது 100 ஆவது வயதை கடந்து அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

எனினும் லீப் வருட அடிப்படையில் தனது 25 ஆவது வயதினையே கடந்துள்ளார்.

டெஸ்யி பெல்லி வோட் என்ற மூதாட்டி 1916 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி பிறந்துள்ளார்.

31B3AAA400000578-0-image-m-43_1456762010

டெஸ்யி பெல்லி வோடின் மகன் கிளின்ட் வோட் இது குறித்து தெரிவிகையில், தனது குடும்பத்தில் சக்திமிக்க பெண்மணி 100 ஆவது வயதினை தாண்டியது எங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எனக்கு தற்போது 81 வயதாகிறது. நானும் 100 வயதுவரை வாழ ஆசைப்படுகின்றேன். அவ்வயதினில் என் தாயின் மனநிலையில் இருக்க ஆசிக்கின்றேன்.

31B3AACE00000578-0-image-a-33_1456761898

31B3AAB900000578-0-image-m-40_1456761962

virakesari.lk

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
களைகட்டிய ஒஸ்கார் 2016
 
 

article_1456739591-la-et-mn-oscars-2016-

article_1456740018-oscar%202016%20%281%2

article_1456740039-oscar%202016%20%283%2

article_1456740063-oscar%202016%20%284%2

article_1456740080-oscar%202016%20%285%2

article_1456740092-oscar%202016%20%286%2

article_1456740115-oscar%202016%20%288%2

article_1456740163-oscar%202016%20%289%2

article_1456740203-oscar%202016%20%2811%

article_1456740217-oscar%202016%20%2812%

article_1456740236-oscar%202016%20%2814%

article_1456740252-oscar%202016%20%2815%

article_1456740288-oscar%202016%20%2823%

article_1456740301-oscar%202016%20%2830%

article_1456740315-oscar%202016%20%2834%

article_1456740329-oscar%202016%20%2836%

article_1456740359-oscar%202016%20%2844%

article_1456740374-oscar%202016%20%2843%

 http://www.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12717911_1081870378538418_18270983713141

சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் பிறந்த தினம் இன்று

தமிழ் திரைப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். எளிமையான குடு்ம்பத்தில் பிறந்து தனது கந்தர்வ கானக் குரலால் தமிழகத்தை 40 களில் கட்டிப்போட்டவர். இசையுலகின் பொக்கிஷமாக திகழ்ந்தவர்

தங்க நிற உடல் கந்தர்வ குரல் ஆழமான பார்வை இதுதான் எம்.கே.தியாகராஜபாகவதர். நாடக உலகில் இருந்து திரையுலகம் வந்த பாகவதர் தன் குரலால் ஒட்டுமொத்த மக்களைக் கட்டிப்போட்டவர். அவரது ஹரிதாஸ் திரைப்படம் 3 தீபாவளியை கடந்து ஓடியதே அவரது புகழுக்கு சாட்சி.

திரையுலகில் புகழின் உச்சியை தொட்ட பாகவதர், வழக்கு ஒன்றில் சிக்கி அதிலிருந்த மீள முடியாமல் உடல் கெட்டு மனம் கெட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தம் இறுதிநாளில் சர்க்கரை நோயின் தாக்கத்தால் கண்பார்வை பறிபோனது. அதற்கு மேல் சென்னையில் இருக்க முடியாமல் தன் சொந்த ஊருக்கு திரும்பி அங்குள்ள தனது குலதெய்வம் கோவிலில் தங்கி வாழ்ந்தார்.

இந்த நிலையில் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் இறுதிவாரத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நவம்பர் 1 ஆம் தேதி தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார் ஏழிசை மன்னர் பாகவதர். காலம் அவரது நினைவை சிதைத்தாலும் அவரது புகழை சிதைக்க முடியவில்லை. அவரைப்போல் திரையுலகில் புகழின் உச்சத்தை தொட்டவர்கள் எவரும் இல்லை.
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

என்ன இருந்தாலும் நம்ம ஊர் பஸ் மாதிரி வராது... சூரி தாயாரிடமிருந்து தெறிச்சு ஓடிய பைலட்!

 

டிகர் சூரி,  கிராமத்தில் பிறந்து வாழ்ந்தவர். ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டவர். ஏழ்மையான சாதாரண குடும்பத்தில் பிறந்த நடிகர் சூரி,  இன்று தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் காமெடி நடிகர்.

suri.jpg

அவரது வங்கி பேலன்சும் தினமும் எகிறிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சூரியின் தாயார் இதுவரை விமானப் பயணம் மேற்கொண்டது இல்லை.நடிகர் சூரிக்கு தனது தாயாரை ஒரு நாளாவது விமானத்தில் அழைத்து சென்று விட வேண்டுமென்ற ஆசை. தனது தாயாரிடம் பேசி அவரை விமானத்தில் அழைத்து செல்ல முடிவு செய்தார்.

அதன்படி ஏற்பாடு செய்யப்பட்ட பயணத்தில் சூரியும் அவரது தாயாரும் விமானத்தில் அருகருகே அமர்ந்து   பயணம் மேற்கொண்டனர். அதனை புகைப்படமாக எடுத்து சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பயணத்தின் போது, ''அம்மா விமானப்பயணம் எப்படியிருக்கு?' னு சூரி கேட்க..., " என்ன இருந்தாலும் நம்ம ஊர் பஸ் போல வராதுப்பா..." னு பதில் வந்திருக்கு. அப்போது சூரியின் அருகில் நின்றிருந்த பைலட் தெறிச்சு ஓடிட்டாராம்!.

இதெல்லாம் சூரி ஸ்டேட்மெண்ட்தான்!
vikatan

  • தொடங்கியவர்

செல்பியின் மோகம் : ஆப்பிள் மக்புக்கிலும் ஆரம்பம்

 

நியூயோர்க் நகரிலுள்ள மூன்று நபர்கள் இணைந்து மடிக்கணனியை தாங்கும் அளவுக்கு புதிய செல்பி ஸ்டீக் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

31B3E9E200000578-3470003-image-m-62_1456

 

செல்பியின் மோகம் உலகளவில் பரந்திருந்திருக்கிற இந்த காலத்தில் இப்போது இவர்களின் கண்டுபிடிப்பு சகலரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

 

கையடக்கத் தொலைபேசியில் அதிகபேர் சேர்த்து செல்பியெடுக்க முடியாதமையால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மடிக்கணனி செல்பி ஸ்டிக் மூலம் அதிகமானோர் ஒரே தடவையில் செல்பியேடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

31B65D6400000578-3470003-image-m-61_1456

31B3E98000000578-3470003-Seriously_dude_

virakesari

  • தொடங்கியவர்

12768305_994007580647936_652572501235153

பாகிஸ்தான் T20 கிரிக்கெட் அணியின் தலைவரும்,அதிரடி சகலதுறை வீரருமான ஷஹிட் அஃப்ரிடியின் பிறந்தநாள்.
Happy Birthday Shahid Afridi Official
ரசிகர்களால் பூம் பூம் என்று செல்லமாக அழைக்கப்படும் அஃப்ரிடி உலகம் முழுவதும் ரசிகர்களுக்கு பரவசம் தரும் ஒரு வீரராக இன்றும் கலக்கி வருகிறார்.

  • தொடங்கியவர்

இது உண்மையில் யானைக் குட்டியல்ல...!

 

இயற்கையில் நிகழும் சில சம்பவங்கள் மனிதர்களை பிரமிக்க வைக்கின்றன. அவ்வாறான ஒரு சம்பவம் கம்போடியாவில் பதிவாகியுள்ளது.

அதாவது யானை முகத்தை கொண்ட பன்றி குட்டியொன்று கம்போடியாவில் பிறந்துள்ளது.

31AE905A00000578-3469160-image-a-2_14567

இவ்வாறு அதிசய உருவத்துடன் பிறந்திருக்கும் யானைக் குட்டியை பார்ப்பதற்கு பலரும் வருகைத்தருகின்றனர்.

அபூர்வ பிறப்பான இந்த பன்றி குட்டிக்கு உணவுண்ண வாயில்லாதலால் பிறந்து 2 மணித்தியாலத்தில் மரணித்துவிட்டது.

31AE905A00000578-3469160-image-a-2_14567 

31AFBA1000000578-3469160-image-a-5_14567

31AFBA2600000578-3469160-image-a-4_14567

31AFBA4800000578-3469160-image-a-7_14567

virakesari

  • தொடங்கியவர்

மில்லினியல்கள் vs ஜெனரேஷன் Z!... அடுத்த தலைமுறை தலைவர்களுக்கான யுத்தம்!

 

'90களில் பிறந்தவர்கள்தான் உலகை ஆள‌ப்பிற‌ந்தவர்கள்,  அடுத்த தலைமுறைகளுக்கான தலைவர்கள் இவர்கள்தான்' என்று கூறி வந்தவர்களின் நிலைப்பாட்டை மாற்றும் புதிய சக்தியாக உருவாகி வருகிறது ஜெனரேஷன் இஸட் எனும் 1995க்கு பின் பிறந்த தலைமுறை.

விராட் கோலியை பேசியவர்கள் சர்ஃபராஸ்கானை பேச துவங்கி விட்டனர். அனிருத் பற்றி பேசியவர்கள் சூப்பர் சிங்கர்களை பேசத் துவங்கிவிட்டனர். இவர்கள்தான் ஜெனரேஷன் இஸட்.

mi.jpg

1980- களுக்கு முன் பிறந்தவர்கள் குறிப்பிட்ட துறையில் கில்லியாக இருப்பார்கள். சிலர் இன்ஜினியர்கள், சிலர் டாக்டர்கள், சிலர் வங்கி உயரதிகாரிகள் என துறை சார்ந்த நிபுணராக இருந்திருப்பார்கள். 80களுக்கு பின் பிறந்தவர்கள் மல்டி டாஸ்கிங் மனிதர்களாக இருக்கிறார்கள் என்றார்கள். தற்போது  மல்ட்டி டாஸ்கிங் தலைமுறையை இந்த ஜெனரேஷன் இஸட் தெறிக்க விட்டு முன்னேறுவார்கள் என்று கூறத் துவங்கி விட்டனர். அதற்கு ஏற்றார் போல் அவர்களும் தங்களை தயார்படுத்திவருகிறார்கள்.

collage.jpg

இந்த தலைமுறையை பற்றிய அடிப்படை குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர்களால் ஒரு வேலையில் நீண்ட நாட்கள் நிலையாக இருக்க முடியாது. இவர்கள் அனைவரும் ஒரு வேலை பிடிக்க வில்லை என்றால் அடுத்த வேலைக்கு தாவி விடுவார்கள். போதை பழக்கங்களுக்கு அதிகம் அடிமையான தலைமுறையும் இவர்கள் தான்.  செல்போன், இணையம் இல்லாமல் இவர்களால் உயிர்வாழ முடியாது என குற்றச்சாட்டு பட்டியல் நீள்கிறது. ஆனால் இவர்களது பலம் வித்தியாசமானது.

4D தலைமுறை!

மற்றவர்கள் 3 பரிமாணத்தில் சிந்தித்தால் இவர்கள் அதனை தாண்டிய 4வது கோணத்தில் சிந்திக்கக்கூடியவர்கள். கிரிஸ்டோபர் நோலன் படத்தில் வரும் ஹீரோக்கள் போன்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் கூறுவதை, 'இல்லை... இது சாத்தியமற்றது!'  என இவர்களுக்கு முந்தைய தலைமுறை கூறுவதை விரும்ப மாட்டார்கள். அதனை உடைத்து சரி என நிரூபிக்க நினைப்பவர்கள்.

சோசியலான நபர்கள்:

80களுக்கு முன் பிறந்தவர்கள் யாரோடும் சரியாக பேசமாட்டார்கள், மில்லினியல்கள் பேசுவதற்கு முன் தயங்கி தயங்கி பேசுவார்கள். ஆனால் இந்த தலைமுறை யாரை பார்த்தாலும் சற்றும் தயங்காமல் பளிச்சென பேசிவிடும் தலைமுறை. காதலைக்கூட ஒளித்து மறைத்து கூறாமல் நேரடியாக பதிவு செய்யும் குணம் கொண்டவர்கள் இவர்கள்.

மல்டி-டாஸ்கிங் கிங்குகள்:

இவர்கள் மல்டி டாஸ்கிங் செய்வதில் கில்லாடிகள். மில்லினியல்களிடம் இருந்து இந்த பதவியை சர்வ சாதரணமாக தட்டி பறித்தவர்கள். மில்லினியல்கள் ஒரே நேரத்தில் 2 வேலைகளை செய்தால் இவர்கள் 5 வேலைகளை செய்வார்கள் என்கிற‌து ஆய்வு. கணினி திரையை கையாளுவதில் கில்லாடிகள். ஒரே நேரத்தில் 10 ஸ்கிரீன்கள் திறந்திருந்தால் அதில் இவர்களால் 7 ஸ்க்ரீன்களில்  ஒரே நேரத்தில் சிறப்பாக வேலை செய்ய முடியும். அப்படியென்றால் இவர்கள் கிங் தானே...

young-U10141057195SF--621x414@LiveMint.j

முதலாளி வர்க்கம்!

இவர்களுக்கு ஒருவரின் கீழ் வேலை செய்வது பிடிக்காது. அப்படியே செய்தாலும் அவர்கள் அங்கு சுதந்திரமான மனிதர்களாக இருப்பார்கள். அவர்களை கட்டுப்படுத்தி சொல்கின்ற வேலையை செய்யும் ரோபோக்களாக நடத்துவது கடினம். சுருக்கமாக சொன்னால் அவர்கள் முதலாளி வர்க்கம் என கூறப்படும் தலைமை பண்பு பொருந்தியவர்கள்.

கணிப்பது கடினம்!

இவர்கள் இப்படிதான் என கணிக்க முடியாது. அஜித்-விஜய்க்காக அடித்துக் கொள்ளும் இவர்கள்,  அடுத்த நிமிடமே அமெரிக்க அதிபரையும், மோடியையும் விமர்சிப்பார்கள்.விராட் கோலிக்கும் அனுஷ்கா ஷர்மாவுக்கு பிரேக் அப் என்றால் உருகுவார்கள். இவர்களுக்கு பன்முக தன்மை இருக்கும். அதுதான் இவர்களது பலம்.

பலவீனம் என்ன?

டெக்னாலஜியின் உச்சத்தில் இருப்பதால்,  அனைத்து விஷயங்களையும் உலகத்தோடு பகிர நினைத்து, பர்சனலையும் சோஷியலாக்கி விடும் தலைமுறை இது. காதல் தோல்வி துவங்கி,  பாஸ் திட்டுவது வரை அனைத்தையுமே சோஷியல் மீடியாவில் பகிர்வதால் இவர்கள் குடும்பத்துடன் தொடர்பு குறைந்தவர்களாக இருக்கிறார்கள்.

milly.jpg


வேலையில் பிடிப்பு இல்லாமல் இருப்பதால் இவர்களை நிறுவனங்கள் பெரிதாக நம்புவதில்லை. மேலும் மில்லினியல்கள் இவர்களுக்கு சமமாக இருப்பதால், அவர்களது அனுபவத்துடன் போட்டியிடுவது இவர்களுக்கு சற்று பலவீனமான விஷயம்.

யார் அடுத்த தலைமுறை தலைவர்கள்?

அடுத்த தலைமுறை தலைவர்கள் ஜெனரேஷன் இஸட்டா அல்லது மில்லினியலா என்றால் அதற்கு பதில் சொல்வது கடினம். காரணம் பழமை தெரிந்த புதுமையோடு வளர்ந்த மில்லினியல்கள்,  அனுபவரீதியாக சிறந்தவர்கள் என்றால், ஜெனரேஷன் இஸட் இன்றைக்கு என்ன தேவை என்பதில் மில்லினியல்களை தூக்கி சாப்பிடும் கில்லிகள்.

mi2.jpg


பலம் பொருந்திய தலைமுறையை,  அடுத்த தலைமுறை முந்துவது வழக்கமான விஷயம்தான். ஆனாலும் மில்லினியல்களுக்கும், ஜெனரேஷன் இஸட்டுக்கும் சிறிய இடைவெளியே இருப்பதால் கடுமையான போட்டி இருக்கும். இருவருமே கில்லிகள்தான். கடைசி ஓவர்... கடைசி பந்தில், ஒரு விக்கெட்,  ஒரு சிக்ஸர்  இதுதான் இவர்களுக்கு இடையேயான  போட்டியின் ரிசல்ட்.

மில்லினியல்கள் அனுபவத்தை ஜெனரேஷன் இஸட் எடுத்துக் கொள்ள வேண்டும், ஜெனரேஷன் இஸட்டின் அக்ரஸிவ் குணத்தை மில்லினியல்கள் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறையை வழிநடத்த முடியும்.

கமான் மில்லினியல்ஸ்...வெல்கம் ஜெனரேஷன் இஸட்..

http://www.vikatan.com/news/miscellaneous/59874-who-will-be-the-next-generation-leader.art

 

  • தொடங்கியவர்

12764322_994011050647589_914450113019945

புகழ்பெற்ற இளைய ஆங்கிலப் பாடகர் ஜஸ்டின் பீபரின் பிறந்தநாள்
Happy Birthday Justin Bieber

  • தொடங்கியவர்

நாஞ்சில் சம்பத் சினிமா வாய்ப்பு தேடி நொந்த கதை தெரியுமா? - வீடியோவில் மனம் திறக்கிறார்!

 

நாஞ்சில் சம்பத்துக்கு அறிமுகம் தேவையில்லை. அண்மையில் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி, அதனால் அதிமுகவில் அவருக்கு ஏற்பட்ட சில சங்கடங்கள் போன்றவை அவரை  எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.

எப்போதும் சீரியஸாகவே அரசியல் பேசிக்கொண்டிருப்பவரை, மோட்டார் விகடனின்  'ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்' பகுதிக்காக கேட்டபோது உடனே ஓகே சொல்லி, உற்சாகமாக ஒப்புக்கொண்டார். 

பிடித்த நடிகர், பிடித்த தலைவர், பிடித்த நடிகை, பிடித்த உணவு, சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்து நொந்த நாட்கள் என்று பல விஷயங்களை நாஞ்சில் சம்பத் பகிர்ந்துகொள்ளும் அந்த ஜாலி இனோவா ட்ரிப்பின் வீடியோ இங்கே...

 

vikatan

  • தொடங்கியவர்

ஸீகாவால் மோசமான மூளைக் கோளாறு வரலாம்..
=========================================
கொசுக்களால் பரவும் ஸீகா வைரஸ் 'கியாம் பரே' என்னும் அபூர்வமான, ஆனால் கடுமையான மூளைக்கோளாறை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த வைரஸ் மூளை வளர்ச்சியற்ற குழந்தைகள் பிறப்பதற்கு காரணமாவது ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆய்வு குறித்த தகவல் லான்செட் சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது.

ஒரு உலக சுகாதார தொண்டு நிறுவனம் இதனை மிகவும் மோசமான நிலையாக வர்ணித்துள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

 

  • தொடங்கியவர்

விஜயகாந்த் கூட்டணி பேச்சு எப்படி இருக்கும்? - கலாய்க்கும் சிங்கமுத்து ( வீடியோ)

 

கருணாநிதி - விஜயகாந்த் இருவருக்கும் இடையே,  கூட்டணி பேச்சு வார்த்தை இப்படிதான் நடக்கும் என மிமிக்ரி செய்து காட்டி கலாய்த்திருக்கிறார் சிங்கமுத்து. மேலும் சமீபகாலமாக விஜயகாந்த் புரியாதபடி பேசி வருகிறார் என்பதையும், அவர் போலவே நடித்து காட்டி மிமிக்ரி செய்து காட்டியுள்ளார்.

சிங்கமுத்துவின் மிமிக்ரி விடியோவை காண...

 

vikatan

  • தொடங்கியவர்

இனிமையான நினைவு

  • தொடங்கியவர்

ஒரு பந்து... சில இறகுகள்... இப்போது நம்புகிறாயா உலகமே?

 

ன்றைக்கு வியந்துபார்க்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது அறிவியல் உலகம். நாள்தோறும் புதுப்புது கண்டுபிடிப்புகள் பூமியில் பிரசவிக்கின்றன. ஆனால் இன்றோடு ஒப்பிடுகையில், ஆரம்பகாலங்களில் அறிவியல் அறிஞர்களும், விஞ்ஞானிகளும் அளித்த அறிவியல் பங்களிப்புகள் மகத்தானது.

தங்களது கருத்தை வெளியிட்டால், கழுத்தை நெறிக்கும் மதநம்பிக்கைகள், மதவாதிகள் நிறைந்த சமூகம், புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத சமூகத்தில் விதிக்கப்படும் மரணதண்டனைகள், கசையடிகள்  என எத்தனையோ பேர், தடைகளைத் தகர்த்து அறிவியல் உலகிற்கு தங்கள் வாழ்வை தியாகம் செய்திருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர் இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானி கலிலியோ கலிலி. மதநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை கூறுவதற்கு தண்டனை விதிக்கப்பட்டு, காலம் முழுக்க துயருற்ற மாபெரும் சகாப்தம் கலிலியோ. அவருக்கு முன்பு கூறப்பட்டிருந்த எத்தனையோ பொய்யான கோட்பாடுகளை, தகுந்த ஆதாரங்கள் மூலம் தவிடுபொடியாக்கியவர். அப்படி அவர் 15-ம் நூற்றாண்டில் பொய் எனக்கூறிய முக்கியமான கோட்பாடு, பொருட்களின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசை பற்றியது. இதனைப் பற்றிய தெளிவான விளக்கம் அளித்தாலும்,  அதனை துல்லியமாக நிரூபிக்க, போதுமான வசதிகள் அன்று இல்லை. மிக எளிமையான கோட்பாடு இது. அதைத்தான் தற்போது நவீன சோதனைகள் மூலம் உண்மை என நிரூபித்திருக்கின்றனர். அது என்ன?

Kalilaya.jpg

அரிஸ்டாட்டில் VS கலிலியோ

அறிஞர் அரிஸ்டாட்டில் அளித்திருந்த விளக்கங்கள் எல்லாம் 15-ம் நூற்றாண்டில் புனிதநூல் போன்றவை. எந்தவித கேள்விகளும் இன்றி அரிஸ்டாட்டிலின் கோட்பாடுகளை அப்படியே நம்பிக்கொண்டிருந்தனர் மக்கள். அதில் பலவற்றை தகுந்த ஆதாரங்களுடன் பொய் என நிரூபித்தார் கலிலியோ. பொருட்களின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசை பற்றிய அரிஸ்டாட்டிலின் விளக்கம், “இரண்டு பொருட்களை சம தூரத்தில் இருந்து கீழே போட்டால், எடை அதிகமான பொருளானது முதலில் தரையை வந்தடையும்” என இருந்தது. இதை மறுத்தார் கலிலியோ. “இருவேறு எடை கொண்ட பொருட்களை சமதூரத்தில் இருந்து கீழே போட்டால், இரண்டு பொருட்களுமே ஒரே நேரத்தில்தான் தரையை வந்தடையும். அதன் மீது செயல்படும் முடுக்கம் (acceleration) ஒரே மாதிரிதான் இருக்கும்” என விளக்கம் அளித்தார் கலிலியோ. இதனை விளக்கத்தோடு நிறுத்தாமல் பைசா நகரின் சாய்ந்த கோபுரம் மீது ஏறி நின்று சோதித்து 1589-ம் ஆண்டு நிரூபித்தார். பைசா கோபுரம் மீது நின்றுகொண்டு, இரண்டு சமமற்ற எடைகளைக்கொண்ட இரும்பு குண்டுகளை கீழே போட்டார். இரண்டுமே ஒரே நேரத்தில் தரையை வந்தடைந்தது.  அரிஸ்டாட்டில் கூற்று தவறு என இத்தாலி மாணவர்களுக்கு புரியவைத்தார் கலிலியோ.

அதே சமயம் ஒரு இறகையும், இரும்பு குண்டையும் சம உயரத்தில் இருந்து கீழே போட்டால், இதே முடிவு கிடைக்குமா? கிடைக்காது. ஏனெனில், இரண்டின் அடர்த்தியும் வேறுபட்டது. அவை மேலே இருந்து கீழே விழுகையில் அவற்றை தடுக்கும் காற்று மற்றும் காற்றில் ஏற்படும் உராய்வு ஆகியவை பொருளின் வேகத்தை தடுத்து விடுகிறது. இதனால் இரும்பு எளிதாக காற்றை தள்ளி, வேகமாக தரைக்கு வந்துவிடும். இறகு மெதுவாக காற்றில் தவழ்ந்து வந்துவிழும். புவியீர்ப்பு விசையானது இரும்பு குண்டு மற்றும் இறகு ஆகிய இரண்டிலும் செயல்படுத்தும் விசையானது ஒன்றுதான். ஆனால் காற்று அதன் மேல் ஏற்படுத்தும் தடை இரண்டையும் வேறுவேறு விசையில் இயக்குகிறது. அந்த காற்று இல்லாத, வெற்றிடத்தில் இதே சோதனையை செய்தால் முடிவு நிச்சயம் கலிலியோ சொன்னது போல்தான் இருக்கும். இதனை கலிலியோ விளக்கினாலும், அப்போது இருந்த  தொழில்நுட்பம் கொண்டு கலிலியோவால் இதனை நிரூபிக்க முடியவில்லை. அதனை  தற்போது பிரம்மாண்டமாக செய்து காட்டியிருக்கிறார் பிரையன் கோக்ஸ்.


 

 

எப்படி சாத்தியமானது இது?

பிபிசி- 2 தொலைக்காட்சியின் புகழ்பெற்ற அறிவியல் தொடர் ‘Human Univers’.   இதனை வழங்குபவர் இயற்பியல் பேராசிரியரான பிரையன் கோக்ஸ். ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு இயற்பியல் தலைப்பை பிடித்து அதனை சோதனைகள் மூலம் விளக்குவது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. அப்படி கையில் எடுத்ததுதான் கலிலியோவின் புவியீர்ப்பு விசைக்கோட்பாடு. இதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடம் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் நாசாவின் ஆராய்ச்சிக்கூடம். 1969 ல் கட்டப்பட்ட இந்த ஆய்வுக்கூடம், அணு ஆயுத தொழில்நுட்பங்களை சோதனை செய்ய உருவாக்கப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெற்றவுடன், தற்போது விண்கலன்களை சோதனை செய்யும் கூடமாகவும், விண்வெளி வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் இடமாகவும் இருந்து வருகிறது.

முதலில் இந்த சோதனையை நடத்த, ஒரு பந்தும், சில இறகுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டும் ஒரே நேரத்தில் கீழே விழுமாறு உயரமான கம்பியில் கட்டப்பட்டது. ஆய்வுக்கூடத்தில் முதலில் காற்று இருக்கும்போதே சோதனை நடத்தப்பட்டு, இரண்டும் உயரத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்றன. வழக்கம்போல பந்து முதலிலும், இறகுகள் மெதுவாகவும் தரையை வந்தடைகிறது. பின்னர், ஆய்வுக்கூடம் மூடப்பட்டு, உள்ளே இருக்கும் 8 லட்சம் கனஅடி காற்று 3 மணி நேரத்தில் வெளியேற்றப்படுகிறது. தற்போது ஆய்வுக்கூடம் முழுக்க, காற்று வெளியேற்றப்பட்டு முழு வெற்றிடமாக இருக்கிறது. பந்தும், இறகும் சோதனைக்கு தயாராக இருக்கிறது. இவற்றை படம் பிடிக்க, கேமராக்கள் ஆன் செய்யப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட, நொடியில் துல்லியமாக இரண்டு பொருட்களும் விடுவிக்கப்பட, இரண்டும் தரையை வந்தடைகிறது. எந்தவித தூர வேறுபாடும் இல்லாமல், ஒரே நேரத்தில் இரண்டும் தரையைத்தொடுகின்றன. கலிலியோ சொன்ன புவியீர்ப்பு விசை தொடர்பான கூற்றை அடிப்படையாக வைத்து உருவானதுதான் ஐசக் நியூட்டனின் புவியியல் கோட்பாடுகள். நியூட்டனும் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டவர்தான். இறுதியில் 4 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் கலிலியோவின் விளக்கம் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

எல்லாப்பொருளின் மீதும், புவியீர்ப்பு விசை ஒரே அளவில்தான் இருக்கும். காற்று இல்லாத வெற்றிடத்தில், பொருளின் மீது, புவியீர்ப்பு விசை தவிர வேறு எதுவும் செயல்படாது என்பது இதன் முடிவு. ஐன்ஸ்டீன் வரையறுத்த, ஈர்ப்பு அலைகள் என்னும் ‘Gravitational Waves’ சமீபத்தில்தான் விஞ்ஞான உலகில் வியப்பை ஏற்படுத்தியது. பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றிய ஹாக்கிங் கோட்பாடு என நிறைய தீர்க்கப்படாத கோட்பாடுகள் நிறைய இருக்கின்றன. அவற்றின் முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு, இன்னும் அறிவியல் நமக்கு ஆச்சர்யங்களை பரிசளிக்கலாம்.

vikatan

  • தொடங்கியவர்
1815 : கண்டி ராச்சியம் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் வந்தது.
2016-03-02

வரலாற்றில்இன்று

பெப்ரவரி - 02.......

 

676kandy.jpg986 : பிரான்ஸின் மன்­ன­னாக ஐந்தாம் லூயி முடி­சூ­டினார்.

 

1807 : அடி­மை­களை நாட்­டுக்குள் கொண்டு வரு­வதை தடை செய்யும் சட்­ட­ மூலம் அமெ­ரிக்க காங்­கி­ரஸில் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

 

1815 : கண்டி இராச்­சியம் பிரித்­தா­னி­யரின் கீழ் வந்­தது. சிறை பிடிக்­கப்­பட்ட ஸ்ரீ விக்­கி­ரம ராஜ­சிங்கன் மன்னர் தென்­னிந்­தி­யாவில் உள்ள வேலூர்க் கோட்­டைக்கு அனுப்­பப்­பட்டார்.

 

1836 : டெக்ஸாஸ் குடி­ய­ரசு (தற்­போதைய அமெ­ரிக்க மாநிலம்) மெக்­ஸி­கோ­விடம் இருந்து சுதந்­திரம் பெறு­வ­தாக பிர­க­டனம் செய்­தது.

 

1855 : இரண்டாம் அலெக்­ஸாண்டர் ரஷ்­யாவின் சார் மன்­ன­னாக முடி­ சூடினார்.

 

1896 : எத்­தி­யோப்­பிய படைகள் ஆட்வா என்ற இடத்தில் வைத்து இத்­தா­லிய படை­களை தோற்­க­டித்­தன. ஓர் ஆபி­ரிக்க நாடொன்­றினால் கால­னித்­துவ நாடொன்றின் படைகள் தோற்­க­டிக்­கப்­பட்­டமை இதுவே முதல் முறை­யாகும்.

 

1917 : புவேர்ட்டோ ரிக்கோ மக்­க­ளுக்கு ஐக்­கிய அமெ­ரிக்கக் குடி­யு­ரிமை வழங்­கப்­பட்­டது.

 

1919 : சர்­வ­தேச கம்­யூ­னிஸ்ட்­டுகள் முதற்­த­ட­வை­யாக மொஸ்­கோவில் கூடினர்.

 

1930 : மகாத்மா காந்தி உப்புச் சத்­தி­யாக்­கி­ரகம் ஆரம்­பிப்­ப­தற்­காக அக­ம­தா­பாத்­தி­லி­ருந்து குஜராத் கட­லோ­ரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பய­ணத்தை துவக்­கினார்.

 

1941 : இரண்டாம் உலகப் போர்: முத­லா­வது ஜேர்­ம­னியப் படைகள் பல்­கே­ரி­யா­வினுள் ஆரம்பித்தார்.

 

1943 : இரண்டாம் உலகப் போர்: பிஸ்மார்க் கடல் சமரின் போது அமெ­ரிக்க மற்றும் ஆஸ்­தி­ரே­லியப் படைகள் ஜப்­பா­னியக் கப்­பல்­களை தாக்கி மூழ்­க­டித்­தன.

 

1946 : ஹோ சி மின் வட வியட்­நாமின் அதி­ப­ரானார்.

 

1956 : பிரான்­ஸிடம் இருந்து  மொரோக்கோ சுதந்­திரம் பெற்­றது.

 

1958 : தி.மு.க. மாநிலக் கட்­சி­யாக அங்கீ­க­ரிக்­கப்­பட்­டது.

 

1962 : பர்­மாவில் இரா­ணுவ ஜெனரல் நேவின் இரா­ணுவப் புரட்சி மூலம் ஆட்­சியைக் கைப்­பற்­றினார்.

 

1970 : ரொடீ­சியா பிரித்­தா­னி­யா­விடம் இருந்த பிணைப்பைத் துண்­டித்து தன்னைக் குடி­ய­ர­சாக அறி­வித்­தது.

 

1972 : நாசாவின் பய­னியர் 10 விண்­கலம் வெளிக் கோள்­களை ஆராய்­வ­தற்­காக புளோ­ரி­டாவில் இருந்து ஏவப்­பட்­டது.

 

1991 : இலங்­கையின் பாது­காப்பு அமைச்சர் ரஞ்சன் பிரதிப் விஜே­ரத்ன கொழும்பில் கொல்­லப்­பட்டார். 

 

1990 : ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் கட்­சியின் பிரதித் தலை­வ­ராக நெல்சன் மண்­டேலா தெரிவு செய்­யப்­பட்டார்.

 

1992 : ஆர்­மே­னியா, அஸர்­பைஜான், கஸக்ஸ்தான்,  உஸ்­பெ­கிஸ்தான், மோல்­டோவா, தஜி­கிஸ்தான், துர்க்­மே­னிஸ்தான் ஆகி­யன ஐ.நா.வில் இணைந்­தன.

 

1998 :  வியா­ழனின் சந்­தி­ர­னான "யூரோப்பா"வில் அடர்ந்த பனிக்­கட்­டியின் கீழ் திர­வ­நி­லையில் கடல் இருப்­ப­தாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.

 

2002 : ஆப்கானிஸ்தான் மீதான ஐக்கிய அமெரிக்காவின் அனகோண்டா தாக்குதல் ஆரம்பமாகியது.

 

2004 : ஈராக்கின் பாக்தாத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 178 பேர் உயிரிழந்தனர். 

 

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=676#sthash.eM1QngSs.dpuf
  • தொடங்கியவர்

அன்று ஏ.ஆர்.ரஹ்மான்...இன்று கொட்டலாங்கோ லியோன்..ஆஸ்கர் மேடையில் மீண்டும் தமிழ்

 

கொட்டலாங்கோ லியோன் நம்ம ஊர் கோயம்த்தூர் வாசி. தொழில்நுட்ப பிரிவில் வழங்கபடும் 'அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள்' பிரிவில் தரும் விருதுகள் பட்டியலில் இவர் பெயரும் இடம் பெற்றது. 'ஸ்படர் மேன்' , 'மேன் இன் பிளாக்', 'ஹொட்டல் டிராஸ்லிவானியா', 'தி ஸ்மர்ஃப்ஸ்', 'கிளோடி வித் த சான்ஸ் 'ஆஃப் மீட் பால்ஸ்', 'ஒபன் சீசன் மற்றும்' 'ஸ்டுவர்ட் லிட்டில் 'போன்ற ஹாலிவுட் பிளாக்பஸ்டர் ஹிட்களில் பணியாற்றியவர்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு ஆஸ்கர் மேடையில் தமிழ் பேசிய இரண்டாவது தமிழன் என உலகமே அவரை கொண்டாடி வருகிறது.


 

விகடன்

  • தொடங்கியவர்

340 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினார் ஸ்காட் கெல்லி

 

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.45 மணி அளவில் பூமியில் தரையிறங்கினர்.

one-year-crew-landing.png

விண்வெளி வீரர்களான ஸ்காட் கெல்லியும், மிக்கெய்ல் கோர்னியென்கோவும், செர்கே வோல்கோவும் பாதுகாப்பாக கஜகஸ்தானில் தரையிறங்கினர். இதில் ஸ்காட் கெல்லிதான் விண்வெளியில் அதிக நாள் தங்கிய அமெரிக்கர் ஆவார். இவர் 340 நாட்கள் நாட்கள் தங்கியுள்ளார்.

இவர் பூமிக்கு  திரும்ப போகும் முன் ட்விட்டரில் தன் வருகை தொடர்பான பதிவுகளை பதிவு செய்து கொண்டே வந்தார்.

CZme-YOWIAERLLw.jpg

Just joined

@Tumblr

from space!

#Blizzard2016

inspired 1st post: Chasing Storms

http://tmblr.co/ZmuJBi20aFgEL  #YearInSpace
CceY5r3UEAEek08.jpg

My last

#sunrise

from space. 4 of 5.

#YearInSpace

 

CcfXD5uUUAALbKZ.jpg
#Thanks

for following our

#YearInSpace

The journey isn't over. Follow me as I rediscover

#Earth

! See you down below!

vikatan

  • தொடங்கியவர்

12783775_685582571544288_899493305644175

மார்ச் 2: வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த நாள் இன்று.

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மஶ்ரீ விருது பெற்றவராவார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

 

 

குன்னக்குடி வைத்தியநாதன்

kunnakudi_2759175f.jpg
 

வயலின் கலைஞர், இசையமைப்பாளர்

பிரபல வயலின் இசைக் கலைஞர், திரைப்பட இசை யமைப்பாளரான குன்னக்குடி வைத்தியநாதன் (Kunnakudi Vaidyanathan) பிறந்த தினம் இன்று (மார்ச் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி யில் (1935) பிறந்தார். தந்தை ராமஸ்வாமி சாஸ்திரி கர்னாடக இசைக் கலைஞர். புல்லாங்குழல், கிதார், மிருதங்கம், வயலின் உள்ளிட்ட பல இசைக் கருவிகளை வாசிக்கும் திறன் படைத்தவர். அவரிடம் பாட்டு கற்றார்.

# சண்முகநாதபுரம் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். பின்னர், தந்தை நடத்திய ‘சண்முக வித்யாசாலை’ என்ற சமஸ்கிருத பாடசாலையில் படித்தார். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக் கலைஞர்கள். சகோதரிகள் பாட, இவரது அண்ணன் மிருதங்கம் வாசிப்பார். இப்படி பல ஊர்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

# ஒருமுறை இவர்களது கச்சேரிக்கு வயலின் கலைஞர் வரவில்லை. காரணம் கேட்டதற்கு, ‘‘ஏன் உங்கள் வீட்டு கடைசிப் பையனை வயலின் வித்வான் ஆக்கிவிட வேண்டியதுதானே!’’ என்றார் நக்கலாக. அதையே சவாலாக எடுத்துக்கொண்ட தந்தை 8 வயதே ஆன மகனுக்கு வயலின் கற்றுத் தந்தார்.

# சிரத்தையுடன் கற்றுக்கொண்டவர் 12-வது வயதில் முதல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று தந்தைக்கு பெருமை சேர்த்தார். அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு பக்க வாத்தியம் வாசித்ததுதான் இவரது அரங்கேற்றமாக கருதப்படுகிறது.

# ஆரம்பத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து கச்சேரிகளில் பங்கேற்றார். 1976 முதல், வயலின் இசையையே பிரதானமாகக் கொண்டு கச்சேரி செய்தார்.

# திருவையாறு தியாகப்பிரம்ம மகோத்சவ சபை செயலராக 28 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவராகவும் இருந்தார். ராக ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை நிறுவி, இசையால் நோய்களை குணப்படுத்துவது குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.

# பிரபல தவில் வித்வான் வலையப்பட்டி சுப்பிரமணியத்துடன் இணைந்து 3000-க்கும் மேற்பட்ட கச்சேரிகளை வெற்றிகரமாக நடத்தினார். தோடி ராகம் வாசிப்பதில் நிகரற்றவர். தமிழ் பக்தி இசைக்குப் பெரும் தொண்டாற்றியவர்.

# 1969-ல் ‘வா ராஜா வா’ என்ற திரைப்படத்துக்கு முதன்முதலாக இசையமைத்தார். ‘தெய்வம்’, ‘அகத்தியர்’, ‘திருவருள்’ உட்பட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘திருமலை தென்குமரி’ படத்துக்கு இசையமைத்ததற்காக தமிழக அரசின் விருதைப் பெற்றார். இசைப் பேரறிஞர், சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாசிகாமணி, கலைமாமணி, பத்ம உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

# வயலின் இசைக்கருவியில் பல புதுமைகளை செய்தார். இவரது வயலின் பேசும், பாடும்! கர்னாடக இசை, மெல்லிசை, திரைப்பட இசையோடு பறவைகள், மிருகங்களின் ஒலிகள், இயற்கையின் சப்தங்களையும் வயலினில் பிரதிபலித்தார்.

# கர்னாடக இசை பற்றி தெரியாதவர்கள்கூட அதை ரசிக்கும் வகையில் இனிமையாக, எளிமையாக வயலின் இசையை வழங்கியவர். ‘வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர்’ என்று போற்றப்பட்டார். 61 ஆண்டுகள் தன் இசையால் மக்களை மெய்மறக்கவைத்து, ‘வயலின் சக்கரவர்த்தி’ என்று போற்றப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன் 73-வது வயதில் (2008) மறைந்தார்.

tamil.thehindu.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கதை மற்றும் காமிக்ஸ் புத்தகங்களை படித்து முடித்ததும் குப்பையில் போடாமல் தன் திறமையால் இப்படி கப், சாசர்ஸ், கின்னம், தட்டு என மற்றி 'வாவ்' என்று சொல்லவைக்கிறார் ஸ்வீடனைச் சேர்ந்த செசிலியா லெவி.

12803072_685287464907132_958768325367884

12795484_685287458240466_346971582075649

12809612_685287454907133_135223987935408

10370450_685287494907129_982949508637336

12798844_685287488240463_197187961305771

12799158_685287501573795_658792896629221

vikatan

  • தொடங்கியவர்

12823501_994595237255837_753251580187320

பிரபல ஹொலிவூட் நடிகர், ஜேம்ஸ்பொண்ட் திரைப்பட புகழ் டனியல் க்றேய்க்கின் பிறந்தநாள்.
Happy Birthday Daniel Craig

  • தொடங்கியவர்

ஊக்குபின்களை வைத்து உலக சாதனை செய்த கல்லூரி மாணவிகள்!

 

நாம் யாராக இருந்தாலும் நம் வாழ்வில் சாகும் முன் எதாவது ஒரு சாதனை செய்து பெருமை அடைய வேண்டும் என்பது எண்ணமாக இருக்கும். ஆனால், அந்த சாதனை செய்வதற்கான முயற்சி செய்ய மாட்டோம். அதுமட்டுமல்லாமல் எவ்வாறு முயற்சி செய்து சாதனை செய்வது என்பதும் நமக்கு தெரியாது. ஆனால், விடாமுயற்சியும் உழைப்பும் இருந்தால் எந்த ஒரு சிறிய விஷயத்தையும் வைத்து சாதனை செய்யலாம். இதற்கு உதாரணம் தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள்.

bin01.jpg

இந்த கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் பயிலும் மாணவிகள் 171 பேர் இணைந்து ஒரு மாத காலத்தில் 65,000 ஊக்குபின்களை (Safety Pin) சேகரித்து பந்து வடிவில் வடிவமைத்து உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்பு இந்த ஊக்குபின் சேகரிப்பில் 49,000 ஊக்குபின்களை சேகரித்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை இந்த மாணவிகள் முறியடித்துள்ளனர்.

bin02.jpg

இதுகுறித்து அவர்களின் ஒருங்கிணைப்பாளரான ஆசிரியை  மனோசித்ரா கூறுகையில், ''கல்லூரியில் படிக்கும் பெரும்பாலான மாணவிகள் அனைவரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பணம் வாங்காமல் எப்படி தாங்களே சொந்தமாக சாதனை முயற்சி செய்யலாம் என்று சிந்தித்த போது வந்தது தான் இந்த சிந்தனை. ஊக்குபின்னை அனைத்து பெண்களும் பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் இதை எளிதில் சேகரித்து விடலாம் என்று மாணவிகள் கூறினார்கள். தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடத்து விட்டார்கள்.

bin03.jpg

இந்த ஊக்கு பந்தை (Safety Pin Ball) உருவாக்கிய பிறகு லிம்கா சாதனைக்கும், இந்தியா புக் ஆப் அவார்ட்ஸ் விருதுக்கும், கின்னஸ் விருதுக்கும் விண்ணப்பித்திருந்தாேம். தற்போது லிம்கா சாதனைக்கும், இந்தியா புக் ஆப் அவார்ட்ஸ் விருதுக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் எங்களுடைய மாணவிகளின் உழைப்பும் கல்லூரி முதல்வரின் ஒத்துழைப்பும் தான்'' என்றார் மகிழச்சி பொங்க...

எந்த ஒரு சிறிய விஷயத்தையும்  வைத்து சாதனை செய்ய முயற்சிக்கலாம். அதற்கான முயற்சியை எடுத்து நீங்களும் சாதனையாளர் ஆகலாம். இதற்கு இவர்கள் தான் உதாரணம். சாதனை செய்த மாணவிகளுக்கு வாழ்த்து கூறிவிட்டு விடைபெற்றோம்.

vikatan

  • தொடங்கியவர்

12783812_994598680588826_627891245099659

இங்கிலாந்து கிரிக்கெட் முன்னாள் தலைவரும் சிறந்த துடுப்பாட்ட வீரருமாக விளங்கிய அன்ட்ரூ ஸ்ட்ரோஸ்சின் பிறந்தநாள்.
இப்போது இவர் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் இயக்குநராகக் கடமையாற்றுகிறார்.
Happy Birthday Andrew Strauss

  • தொடங்கியவர்

ஏகாந்த இனிமைக்கு இந்தக் குடில்கள் ! (படத்தொகுப்பு)

தனிமையில் இனிமை காண வேண்டுமா ? அழைக்கின்றன இது போன்ற அழகிய குடில்கள் ! (உலகின் பல பகுதிகளில் காணப்படும் கேபின்களின் படத் தொகுப்பு)
 
2gtvvxg.png
 
a3z8nl.png
 
34nkykl.png
 
2w3z1xu.png
 
5upa0w.png
 
33otf8k.png

25sbfr9.png

148pt6p.png

20k3ymx.png

14v3dwn.png

 

BBC

 

  • தொடங்கியவர்
வேனிலிருந்து வீதியில் வீழ்ந்த 2 வயது சிறுவன்; கவனிக்காமல் பயணத்தை தொடர்ந்த சாரதியான தாத்தா;
 

வேன் ஒன்றிலிருந்த 2 வயதான சிறுவன் வேனின் பின் கதவுக்கு ஊடாக வீதியில் வீழ்ந்ததை அறியாமல் சிறுவனின் தாத்தாவான சாரதி, பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த சம்பவம் சீனாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

 

15284baby.jpg

 

ஜியாங்சு மாகாணத்தின் சுஸோஹு நகரில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மேற்படி சிறுவன் ஆச்சரியகரமாக உயிர் தப்பியுள்ளான். 

 

இச் சிறுவன் வேனிலிருந்து வீழ்ந்த பின் தனியாக ஓடிச் செல்லும் காட்சி பின்னால் வந்த வாகனமொன்றின் டேஷ்கெம் கெமராவில் பதிவாகியுள்ளது. 

 

போக்கு வரத்து நிறைந்த வீதியில் வீழ்ந்த இச்சிறுவன், சுதாகரித்துக் கொண்டு எழுந்தான். அதன்பின் அவ்வேன் சென்ற திசையை நோக்கி சிறுவன் ஓட ஆரம்பித்தான். எனினும், அப்போதும் மேற்படி வேன் நிறுத்தப்படவில்லை. 

 

பின்னர் மற்றொரு வாகன சாரதி மேற்படி வேனை துரத்திச் சென்று அதன் சாரதியிடம் விடயத்தைக் கூறினார். பின்னர் அச்சாரதி திரும்பிவந்து, பெண் ஒருவரிடமிருந்து சிறுவனை பெற்றுக்கொண்டார்.

 

15284baby3.jpg

 

இச்சாரதி யாங் டெஃபு எனவும் அவர் மேற்படி சிறுவனின் தாத்தா எனவும் இனங்காணப்பட்டுள்ளார். 

 

இச்சம்பவம் தொடர்பாக அவர் கூறுகையில், “நான் சமிக்ஞை விளக்குக்காக காத்திருந்தேன். பின்னர் என்னை ஒரு காரின் சாரதி துரத்திவந்து ஹோர்ன் எழுப்பிக் கொண்டிருந்தார். எனது வேனிலிருந்து குழந்தையொன்று விழுந்ததாக அவர் கூறினார்.  

 

அதன்பின் நான் வாகனத்தை நிறுத்திவிட்டு, எனது பேரனை தேடி திரும்பிச் சென்றேன்” என்றார். 

 

இவ்வானம் சில தினங்களுக்குமுன் பின்புறம் அடிபட்டதால் பின்புறக்கதவு தொய்வாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.  

 

வேனிலிருந்து சிறுவன் வீழ்ந்தபோது பதிவாகிய வீடியோவை கீழே காணலாம். 

 

 

.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12792088_685583534877525_488589643489268

மார்ச் 2: இந்தியாவின் நைட்டிங்கேல் என்றழைக்கப்படும் கவிஞர், விடுதலைப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு பிறந்த நாள் இன்று.

இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.