Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஹேஷ் டேக் (#) மூலம் உலக பிரபலமான இந்தியர் புகைப்படம்; ஐபோன் விளம்பரத்திற்கு தேர்வு!

 

தனது மனைவியின் புகைப்படத்தை விளையாட்டாக எடுத்து ஹேஷ் டேக் மூலம் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்ட படம் உலக பிரபலம் அடைந்துள்ளது. இந்த புகைப்படம் உலகம் முழுவதும் ஐபோன் விளம்பரத்தில் பயன்படுத்த பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

rsz_shot-on-iphone-6_650x650_51457001616

கடந்த ஆண்டு பெங்களூரை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆசிஷ் பர்மர் தீபாவளியை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். அப்போது பல படங்களை தனது ஐபோன் 6 எஸ் கேமரா மூலம் எடுத்தார். அதில் தனது மனைவியின் புகைப்படத்தை மட்டும் அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் #ShotOniPhone6S என்ற "ஹேஷ் டேக்" மூலம் பதிவேற்றம் செய்தார். இன்று இந்த புகைப்படம் உலக பிரபலம் அடைந்திருக்கின்றது.

rsz_shot-on-iphone-6_650x400_51457001806

விளையாட்டாக எடுத்த புகைப்படம் ஆப்பிள் நிறுவனத்தின் ஷாட் ஆன் ஐபோன் 6 எஸ் பிரச்சாரத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதே பிரச்சாரத்திற்காக உலகம் முழுக்க சுமார் 53 புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே புகைப்படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

vikatan
 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: லியோ ரசிகர் மன்ற போஸ்டர்

 
2_2762072f.jpg
 

1_2762073a.jpg

 

3_2762071a.jpg

 

6_2762068a.jpg

 

7_2762067a.jpg

4_2762070a.jpg

 

5_2762069a.jpg

tamil.thehindu

  • தொடங்கியவர்

தொலைபேசியை கண்டுபிடித்த விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரஹாம்பெல் பிறந்த தின சிறப்பு பகிர்வு

12799281_1083213028404153_73255703097886

இன்றைக்கு உலகின் எந்த மூலையில் உள்ள யாருடன் வேண்டுமானாலும் நொடிப்பொழுதில் பேசுவது இயல்பாகிப்போன ஒரு நிகழ்வு; காரணம் தொலைபேசி.

இதன் தந்தை கிரகாம் பெல் .தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோவில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தார். கொஞ்ச நாட்கள் மட்டுமே பள்ளியில் தங்கிப்படித்தார் .பின் வீட்டிலேயே பாடம் கற்றார் .இவருடைய தந்தை, குரல் உறுப்புப் பயிற்சியிலும், பேச்சுத் திருத்த முறையிலும், செவிடர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் ஒரு வல்லுநராகத் திகழ்ந்தார்.அவரின் வழியொற்றி செவித்திறன் அற்ற மற்றும் பேசும் திறன் இழந்தக்குழந்தைகளுக்கு பாடம் எடுத்து சாதித்தார் .அவர்களில் பலரை பேச வைக்கும் முயற்சியிலும் சாதித்து காட்டினார்.

அப்படி பாடம் சொல்லபோன இடத்தில் மேபல் எனும் பெண்ணிடம் காதல் பூண்டார் .அவரின் அப்பா செய்த நிதியுதவியில் தொலைபேசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டார் .பின் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து ஒரு முனையில் பேசுவதை வேறு முனையில் கேட்க வைக்கும் கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் சாதித்தும் காட்டினார்.பாஸ்டனில் மேல் தளம் மாறும் கீழ்த்தளத்துக்கு இடையே ஒயரின் மூலம் இணைப்பு கொடுத்திருந்தார்கள். வாட்சன் கீழ்த்தளத்தில் இருந்தார். கிரகாம்பெல் மேலிருந்து பேசினார். அப்பொழுது ஒரு பக்கம் கேட்க மட்டுமே முடியும். "மிஸ்டர் வாட்சன்! இங்கே வாருங்கள்..." எனக் குரல் கேட்க உற்சாகமாக மேலே ஓடினார் -அது தான் முதன்முதலில் தொலைபேசியில் ஒலித்த வார்த்தை - அங்கே மேலே போன பொழுது பெல்லின் உடம்பில் அருகிலிருந்த அமிலம் பட்டிருந்தது. "நான் உங்களின் குரலைக்கேட்டேன்!"என சொன்னதும்தான் தாமதம். அமில எரிச்சல் எல்லாம் பறந்து போக இவரை கட்டியணைத்து கொண்டார் பெல்.

எனினும் இவர் பதிவு செய்ய கொஞ்சம் சுணக்கம் காட்டினார் ;இவர் பதிவு செய்ய வேண்டிய கோப்புகள், கருவிகளை விட்டுவிட்டு தொடர்வண்டியில் ஏறும் பொழுது அதை கெஞ்சும் பால்ர்வையோடு அவரின் இதய நாயகி மேபல் கையில் திணித்தார் .வண்டி புறப்பட்டுவிட்டது .அவர் போன அதே நாளில் எலிஷா கிரே எனும் நபரும் வந்து இருந்தார்.பின் எலிஷா விட்டுக்கொடுக்க கிரகாம் பெல்லின் கருவி டெலிபோன் ஆனது.எனினும் அவர் போனில் அழைக்க பயன்படுத்தியது கப்பல்களில் பயன்படுத்தப்படும் அஹோய் எனும் வார்த்தையை தான் ;ஹலோ என மாற்றியது எடிசன் தான்.உலகம் முழுக்க பிறரின் குரலை கேட்டு பதிலளிக்கும் முறைக்கான முதல் விதையை ஊன்றிய கிரகாம் பெல்லின் பிறந்தநாள் இன்று .உற்சாகமாக ஹலோ சொல்லுங்கள் அவருக்கு.

vikatan

  • தொடங்கியவர்

இந்தப் பெண்ணின் துணிச்சலுக்கு சபாஷ்!

  • தொடங்கியவர்

மார்ச் 5: ரஷ்ய கவிஞர் அன்னா அக்மதோவா நினைவு நாள் இன்று.

1912 இல் முதலாவது கவிதை நூலான 'மாலைப்பொழுது' வெளிவந்தது; 1914 இல் 'மணிகள்' என்ற இரண்டாவது தொகுப்பு வெளியானது.
'யுனெஸ்கோ' நிறுவனம், 1989 ஆம் ஆண்டினை 'அக்மதோவா ஆண்டு' எனப் பிரகடனப்படுத்தியது.

இவரது கவிதைகள், தமிழில் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் உயிர்மை பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது.

12801499_686687228100489_437159553389430

  • தொடங்கியவர்

12718121_1084106351648154_26715317781520

  • தொடங்கியவர்

கடந்த 4-ம் தேதி 1,600 பாண்டா சிற்பங்கலை பாங்காக் நகரில் பார்வைக்காக வைத்திருந்தார் ஃபிரான்ஸ் சிற்பக் கலைஞர் Paulo Grangeon. 2008-ஆம் ஆண்டு முதல இவர், இந்த பாண்டா சிற்பங்களைக் கொண்டு ஃபிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி, சுவிச்சர்லாந்து, ஹாங் காங், தைவான் என பல நாடுகளில் கிட்டத்தட்ட 100 கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.
சுற்றுச்சூழல் மற்றும் அழிந்துவரும் விலங்கினங்களை பாதுக்காகவே இந்த ஏற்பாடு என்கிறார்.

12801658_686713141431231_123305081205192

  • தொடங்கியவர்

காதலியை கரம்பிடித்தார் ராபின் உத்தப்பா

March 04, 2016

இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, தனது நீண்டநாள் தோழியான ஷீத்தலை மணந்து கொண்டார். ஷீத்தல் சிறந்த டென்னிஸ் வீராங்கனை. கல்லூரியில் படிக்கும் போது இவருக்கும் உத்தப்பாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

1114

பின்னர் இருவரும் கடந்த 6 வருடங்களாக சிறந்த நண்பர்களாக இருந்த நிலையில், 2013ம் ஆண்டு தனது காதலை உத்தப்பா, ஷீத்தலிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதே திகதியில் தான் யுவாராஜ் சிங்கிற்கும் அவரது காதலி ஹேசல் கீச்சுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிட்டதக்கது.

இந்நிலையில் நேற்று பெங்களூரில் உத்தப்பா- ஷீத்தல் திருமணம் நடந்துள்ளது. கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றியும், இந்து முறைப்படி, தாலி கட்டியும் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது

http://www.onlineuthayan.com/sports/

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

 

ப்ரீத்தி ஜிந்தாவுக்கு, வரும் சம்மரில் டும்டும்டும். வழக்கம்போல அமெரிக்க மாப்பிள்ளைதான். `என் திருமணப் படங்கள் எங்கேயும் வெளியாகாது. திருமணம் முடிந்தவுடன் படங்களை நானே ஏலத்தில் விடப்போகிறேன். அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டு ஏழைக் குழந்தைகளுக்கான கல்விக்கும், முதியோர்களுக்கான உதவிகளும் செய்ய இருக்கிறேன்’ என அறிவித்திருக்கிறார் ப்ரீத்தி!

p84a%281%29.jpg

புலிக்கு புட்டிப் பால் ஊட்டி ஆன்லைனை அலறவிட்டிருக் கிறார் ஏமி ஜாக்சன். புலிக் குட்டியை கட்டி அணைத்தபடி `என் பப்லோ(வீட்டு நாய்)வுடன் விளையாட பார்ட்னர் கிடைத்துவிட்டார்' என ட்விட்டரில் ஏமி போட்டோ போட, `புலியையே பூனையா டீல் பண்ணும் உண்மையான ஆக்‌ஷன் ஸ்டார்' என கமென்ட்ஸால் களைகட்டு கிறது ஏமியின் ட்விட்டர் பக்கம்!

p84c%281%29.jpg

யக்குநர் பால்கி `கி அண்ட் கா' பட புரொமோஷனில் பிஸியாக இருக்க, அவரது மனைவி கெளரி ஷிண்டே, ஷாரூக் கான் படத்தில் பிஸி. `இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் ஸ்ரீதேவியை இயக்கிய கெளரி, அடுத்து இயக்கும் படம் பெண்களின் `ஆட்டோகிராஃப்' வெர்ஷன் என்கிறார்கள். அலியா பட்டும் அவர் காதலிக்கும் மூன்று ஆண்களும் படத்தின் கதை. முதல் காதலாரக நடித்திருப்பவர் ஷாரூக் கான்.

p84b%281%29.jpg

p84d.jpg

``இளைஞர்களிடம் அதிகரித்துவரும் செல்ஃபி மோகம் என்னை அச்சப்படவைக்கிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன். அங்கே அவசரமாக பாத்ரூமுக்குள் நுழைகிறேன் நான்கைந்து இளைஞர்கள் என்னிடம் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். `இங்கேயா?!' எனக் கேட்டேன். `ஆமாம் இங்குதான்' எனக் கொஞ்சமும் தயங்காமல் பதில் சொன்னார்கள். அவர்களை, `எல்லோரும் எங்கே நின்று போட்டோ எடுக்கிறார்களோ... அங்கே செல்லுங்கள்' என விரட்டி விட்டேன். எங்கே, எதைச் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு யார் சொல்லிக்கொடுப்பது'' என ஆதங்கப்படுகிறார் அமிதாப்!

p84e.jpg

`பிரேமம்' படத்தின் தெலுங்கு வெர்ஷன் `மஜ்னு'. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்தான் டோலிவுட்டின் லேட்டஸ்ட் வைரல். நிவின் பாலி கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடிக்க, மலர் டீச்சராக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். தெலுங்கில் மலர் டீச்சர் பெயர் என்ன தெரியுமா? சித்தாரா டீச்சர்!

vikatan

  • தொடங்கியவர்

12779104_686685954767283_623768207636298

மார்ச் 5: ஜெர்மனியைச் சேர்ந்த மார்க்ஸியவாதி ரோசா லக்சம்பெர்க் பிறந்த தினம் இன்று.

போலந்தில் பிறந்த ஒரு செருமானிய மார்க்சியவாதியும் சோசலிச மெய்யியலாளரும், பொருளியலாளரும், ஒரு புரட்சியாளரும் ஆவார்.
செங்கொடி (Die Rote Fahne) என்ற இதழை ஆரம்பித்தவர் இவரே.

  • தொடங்கியவர்

நீங்கள் ஒரு சமரச பேச்சாளராக திகழ சிறந்த 6 வழிகள்!

 

ந்நேரமும், எக்கணமும் நாம் அனைவரும் சமரசத்தை நோக்கியே நகர்கிறோம். தற்போதோ அல்லது எதிர்காலத்திலோ ஏதேனும் ஒரு கணத்தில் நாம் யாருடனாவது சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை வரும். அதற்கு நீங்கள் ஒரு பெண்ணோ, ஆணோ, இளமையானவரோ, முதுமையானவரோ நீங்கள் சரியானவரோ, தவறானவரோ என்பது ஒரு விசயமே இல்லை. ஆனால் நீங்கள் பேசும் வார்த்தை உங்களுடைய கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும். நாம் பேசும் வார்த்தைகள் பல்வேறு கோணங்களில் பல கருத்துக்களை உள்ளடக்கிய நோக்கில் அந்த சமரசத்தீர்வு  இருக்கவேண்டும், அதுதான் நம்முடைய எதிர்கால வளர்ச்சிக்கு தவிர்க்க முடியாத மைல்கல்லாக இருக்கும்.

ஆனால் ஓர் ஆய்வின் அடிப்படையில் தெரிய வந்த உண்மை என்னவென்றால்,  பெண்களுக்கே பல சமயங்களில் இந்த பேச்சுவார்த்தை செயல்பாடு சவாலாக அமைகிறதாம். காரணம் ஒரே மாதிரியான பாலின வகையை உள்ளடக்கிய வளர்ப்பில் இருந்து விலகி இருப்பதே இதற்கு காரணம். அதே சமயம் ஆண்களை பொறுத்தமட்டில் அவர்களின் தலைமை குணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பும், சலுகையும் எளிதில் கிடைப்பதாகவும், வெற்றி பெறுவதாகவும் தன்னுள்ளேயே உறுதி செய்துகொள்கின்றனர்.

 

speaking2.jpg


சில தருணங்களில், சில பணியிடங்களில் வளர்ச்சி மற்றும் மாற்றம் பெற நிறைய காலங்கள் ஆகலாம். ஆனால் அவை பெண்ணால் நடந்ததாக எந்த ஒரு நிரூபணமும் இல்லை. 

மாறாக நீங்கள் ஒரு நிறுவனம் நடத்துகிறீர்கள் என்றால்,  அதில் உள்ள தலைமை பதவி பல பெண்களை கவர முயற்சிக்கிறது என்றால் கீழே இடம்பெற்றுள்ள குறிப்புகள் நீங்கள் உங்கள் நிறுவனத்தை மேம்படுத்த உதவும்.

1. பொதுவான நிலையிலிருந்து மாறுபட்டு கேட்பது

ஒரு வெற்றிகரமான பேச்சுவார்த்தை அமைய, பேச்சுவார்த்தையே முதல் படியாக அமையும். பெண் வேட்பாளர்கள் பொதுவாக தங்களின் சாத்தியமான கோரிக்கைகளை முன்வைக்க தயங்குகிறார்கள். குறிப்பிட்ட சூழ்நிலை மாற்றம் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்பதை பெண்கள் அங்கீகரிக்கவேண்டும். ஏனெனில் மறைமுக எதிர்ப்பின் காரணமாக ஓர் ஒற்றை நடவடிக்கை,  ஒரு முழு நிறுவனத்தின் சமத்துவத்தையும் மாற்றவல்லது.

2. உங்கள் திறன் மற்றும் சக்தியை நினைவில் கொள்ளுங்கள்

ஒரு இரண்டு நிமிட மெனக்கிடல், பேச்சுவார்த்தையில்  உங்களின் செயல்திறனையும் நம்பிக்கையையும் மேம்படுத்துகிறது என நிரூபித்துள்ளார் ஒரு ஹார்வர்டு ஆராய்ச்சியாளர் . உங்களின் விவாதம் துவங்கும் முன் தனித்து சென்று,  நேராக நின்று கைகளை நீட்டி,  இடுப்பிலோ அல்லது சக்தி பெருகும் நிலையிலோ வைத்து நேர்மறை எண்ணம் கொண்ட பாவத்துடன் இருங்கள். அது எண்டோர்பினை ஊக்கப்படுத்தி,  நம்பிக்கையையும் பதற்றமற்ற சூழ்நிலையை வழங்குகிறது. உங்களின் கருத்துக்களை நிறைவேறும் நோக்குடனும்,  நேர்மறை தோற்றத்தையும்,  பார்வையில் ஒர் கனிவையும் கொண்டு, கலாச்சார சூழ்நிலைக்கு ஏற்றார்போல் மற்றவரிடம் பேசுங்கள். நீங்கள் உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்தால் அது கண நேரத்தில் கைகொடுக்கும்.

3. நீங்கள் பணிபுரியும் நிறுவனம் மற்றும் சகஊழியர்களிடம் உங்கள் வெற்றியின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்

பேச்சுவார்த்தை, நிறுவனம் மற்றும் சக ஊழியர்களின் மீது நல்ல  நல்ல தாக்கத்தை  ஏற்படுத்தக்கூடியதாக இருப்பின்,  பெண்களும் ஒப்பந்த நோக்குடன் கலந்துரையாடுபவராக இருக்க வேண்டும் என்றும்,  அதில் சிறந்து விளங்கவேண்டும் என்றும் நினைப்பார்கள்.

speaking1.jpg



4. குழு பரிந்துரை :

அறிவியலாளர்களின் ஆய்வின் அடிப்படையில், பெண்கள் ஒரு பெரிய குழுவில் வாதாடும்போது தங்களை பற்றிய சிறப்பை உணர்கிறார்கள்.  மேலும் அவர்களை பற்றிய வளர்ப்பும் அடையாளமும் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

5. ஒருவரை சார்ந்து நடப்பது:

பெண்கள் எப்போதும் சமூகம் சார்ந்து இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். மேலும் அவ்வாறே வளர்கிறார்கள். இருந்தாலும் கூட அவர்களின் கவனம் தன் சுற்றத்தார் நோக்கி இருக்கையில் சுயநலமற்றவர்களாக இருக்கிறார்கள்.


6.  உறுதியான நோக்கு:

பெண்கள் பல காரணங்களுக்காக தியாகங்கள் செய்கிறார்கள். அதிகப்படியான பொறுப்பு, இழப்பீடு காரணமாக சுறுசுறுப்பை தொடர இயலாமல் போகிறார்கள். போட்டி பேச்சுவார்த்தை, முன்மொழிய, மாற்ற, முன்னெடுக்க, முன்னேற, மேம்படுத்த என ஏதேனும் ஒன்றிற்காக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க நினைத்தால் வாழ்த்துக்கள். எனினும் கவனமாக இருங்கள். புன்னகை, விடாமுயற்சியை மறந்துவிடாதீர்கள்! 

vikatan

  • தொடங்கியவர்

வங்கதேச ரசிகரின் வன்மத்துக்கு இந்திய ரசிகர்கள் வீடியோ மீம்ஸ் பதிலடி!

 

சிய கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. இந்திய அணி வங்க தேச அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையே இந்திய அணியின் கேப்டன் தோனியின் தலையை வங்கதேச பந்துவீச்சாளர் தஷ்கின் அகமது, கையில் வைத்திருப்பது போல, ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

      

தற்போது அந்த புகைப்படத்துக்கு பதிலடி கொடுப்பது போல இந்திய ரசிகர்கள், வீடியோ மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

vikatan

  • தொடங்கியவர்

மீண்டும் வைரலாகும் தாய்லாந்து விளம்பரம்

தாய்லாந்தில் 2011-ம் ஆண்டு வெளியான காப்பீடு விளம்பரம் ஒன்று, மீண்டும் வைரலாகியுள்ளது. வாய் பேச, காது கேளாத தந்தைக்கு பள்ளி செல்லும் மகள் இருக்கிறாள். மகளின் ஆதங்கத்தையும், தந்தையும் ஆத்மார்த்தமான அன்பையும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் நடிகர்கள். இசையும் சேர்ந்துகொள்ள, இறுதியில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

 

 

  • தொடங்கியவர்

''கண்ணதாசன்-வாலி... இரண்டு கவிஞர்களையும் அவர்கள் உச்சத்தில் இருந்த சம காலத்தில் எப்படிச் சமாளித்தீர்கள்?''

''கண்ணதாசன் - வாலி... இந்த ரெண்டு ஜாம்பவான்களுடன் வேலை பார்த்ததை இப்போ நினைச்சுப் பார்த்தாலும் எனக்குப் பிரமிப்பாவும் ஆச்சர்யமாவும் இருக்கு. எனக்கு இசைமட்டும் தான் தெரியும். தமிழ்ல புகுந்து விளையாடும் அவங்களுக்கு ஈடுகொடுக்கிறதுக்காகவே இசையில் கூடுதலா நான் உழைக்க வேண்டிஇருந்தது.

நானும் கண்ணதாசனும் இணைஞ்சு பரபரப்பா வேலை பார்த்துட்டு இருந்த காலகட்டத்துல, வாலியை எனக்கு அறிமுகம் செய்தது என் நண்பன் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன். வாலியோட சரளமான, இனிப்பான தமிழ் எனக்குப் பிடிச்சிருந்தது. 'இதயத்தில் நீ’ங்கிற படத் துல ஒரு பாட்டு எழுதச் சொன்னேன். 'பூ வரையும் பூங்கொடியே... பூமாலை சூட வா...’ங்கிற அந்தப் பாட்டு சூப்பர் ஹிட் ஆச்சு. அடுத்ததா 'கற்பகம்’ படத்துல அவரைப் பாட்டு எழுதவைக்கணும்னு எனக்கு ஆசை. ஆனா, அந்தப் படத்தோட இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ் ணன், கண்ணதாசன் வெறியர். உலகத்துலயே கண்ணதாசன் மட்டும்தான் கவிஞர்னு நினைக்கிறவர். அவர்கிட்ட போய், 'வாலிக்கு உங்க 'கற்பகம்’ படத்துல ஒரு பாட்டு எழுத வாய்ப்பு தரணும்’னேன். மறுத்துட்டார். 'பூ வரையும் பூங்கொடியே...’ பாட்டை அவர்கிட்ட ரெண்டு மூணு தடவை திரும்பத் திரும்பப் போட்டுக் காட்டினேன். ரொம்பப் பிகு பண்ணிக்கிட்டுதான்... சரின்னார். வாலி எழுதின 'அத்தை மடி மெத்தையடி...’ங்கிற பல்லவியைக் கேட்டுட்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அசந்துபோயிட்டார். அது மட்டும்இல்லாம, அதே படத்தில் 'மன்னவனே அழலாமா...’ங்கிற பாட்டு எழுதவும் வாலிக்கு அவர் வாய்ப்பு கொடுத்தார்.

வாலி அறிமுகமான இந்தச் சமயத்துல, 'விசு நம்மளை விட்டு விலகிப்போயிடுவானோ’ங்கிற ஒரு சந்தேகம் என் மேல கண்ணதாசனுக்கு இருந்தது. எல்லாரையும் சமமாக் கொண்டாடுற என் மனசால நாளடைவில் கவியரசரின் சந்தேகத்தையும் போக்கினேன்.

ரெண்டு கவிஞர்களையும் சமாளிக்க எனக்குக் காலமும் கைகொடுத்தது. எப்படின்னா... எம்.ஜி.ஆருக்கு வாலியும், சிவாஜிக்கு கண்ணதாசனும் நிறையப் பாடல்கள் எழுதும்படியான நேரம் அப்போ அமைஞ்சது. அதுவும்கூட என் வண்டி இவங்க மத்தியில கடகடன்னு ஓடுனதுக்கு ஒரு காரணம்!''

விகடன் மேடையில் எம்.எஸ்.வி. பதில்

12814251_1084467594945363_61717639277061

vikatan

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

 

தலைமுறை சாயல் 

வழக்கம்போல் எதையேனும் மறந்து

அவசரமாக வீடு திரும்புகையிலும்

மனைவியுடனான முன்கோபச் சண்டையின்போதும்

சிரித்துக்கொண்டே சொல்வார் அம்மா

அப்படியே அப்பாவைப்போல் இருக்கிறேனென்று.

சமயங்களில் தாத்தாவைப் பார்ப்பது,

வயதாகிவிட்ட அப்பாவைப் பார்ப்பதுபோல இருக்கிறது.

நாளை முதல் பள்ளி செல்லவிருக்கும்

என் சிறுவயது மகனைக் காணும்போதெல்லாம் குழந்தையாகிவிட்ட அப்பாவையும் தாத்தாவையும்

ஒருசேரக் காண்பதுபோலிருக்கிறது.

இப்படி போலிருக்கிறது என்பதில்தான்

எல்லாமும் இருக்கிறதுபோல.

 - தர்மராஜ் பெரியசாமி

ஜொலிக்கும் புன்னகை

தொங்கும் நிழலை இழுத்து

வழியும் வெயிலைத் துடைத்து

சுங்கச்சாவடிப் பேருந்துகளைத்

துரத்திக் கூவி விற்கிறாள்

பாலித்தீன் பையில் நட்டமாய் நிற்கும்

நறுக்கிய வெள்ளரிக்காய்களை.

காசை நீட்டியவனுக்கு

காரப்பொடி தடவுவதற்குள்

பேருந்து நகர்ந்தது.

மீண்டும் துரத்தியோடினாள்

பேருந்து ஜன்னலை.

காசை நீட்டியவனுக்கு

வெள்ளரிக்காய் சுவைத்தது.

வெள்ளரிக்காரிக்கும்

புன்னகை ஜொலித்தது.

 - பச்சோந்தி

கேள்வி

யாதும் ஊரே

யாவரும் கேளிர்

எப்படி வந்தது சேரி

 - வாலிதாசன்

சிறுமியும்... குழந்தையும்...

ஆடு மேய்க்கும் சிறுமி

தடவிப்பார்க்கிறாள்

கம்பளிப் போர்வையை.

 

விளக்கு ஒளிர்ந்ததும்

அமைதியானது

அழுத குழந்தை.

டே.துளசிராஜா

p77a.jpg

அங்குசம்

அங்குசத்தைக் கண்டாலே கொஞ்சம்

பயம்தான் அந்த யானைக்கு.

மெல்லிய மடல்களை அதன் கூர்மை

பதம்பார்த்த வடுக்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

சுயமறியா யானையின் தூக்கத்தில்

இப்போதெல்லாம் கானகக் கனவுகள்.

பாகன் அருகிலில்லா சமயம்

தரையில் கிடந்த அங்குசத்தை

அச்சத்தோடே தடவிப்பார்த்தது.

அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில்

அதைவைத்தே விளையாடவும் செய்கிறது

பாகன் அறியாவண்ணம்.

தும்பிக்கையில் இலகுவாகப் பிடித்து

காற்றில் சுழற்றிப்பார்க்கிறது.

இப்போது அங்குசம் கையாளக்

கற்றுக்கொண்டுவிட்டது யானை

இனி பாவம்தான்

சின்னக் காதுகளுடைய அந்தப் பாகன்.

 - சுந்தர் தர்ஷன்

vikatan

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மார்ச் 06
 

article_1425616289-MuhammedAli225.jpg1946: பிரெஞ்சு யூனியனின்  இந்தோசைனா சம்மேளனத்தில் ஒரு சுயாதீனமாக வியட்நாம் இருப்பதை அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தில் பிரான்ஸுடன் ஹோ சி மின் கையெழுத்திட்டார்.

1953: சோவியத் யூனியனில்  ஜோசப் ஸ்டாலினுக்குப் பின்னர் ஜோர்ஜி மக்ஸிமிலியானோவிக் பிரதமரானார்.

1964: அமெரிக்காவின் இஸ்லாமிய தேசியம் எனும் அமைப்பு குத்துச்சண்டை சம்பியன் கஸியஸ் கிளேவுக்கு முஹமட் அலி என்ற பெயரை உத்தியோக பூர்வாமக வழங்கியது.

1964: கிறீஸில் இரண்டாம் கொன்ஸ்டைன் மன்னரானார்.

1967: சோவியத் யூனியனின் முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் மகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார்.

1975: ஈரான், ஈராக் நாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அல்ஜியர்ஸ் உடன்படிக்கை கெயெழுத்திடப்பட்டது.

1987: பிரித்தானிய கப்பலொன்று குடை சாய்ந்ததால் 193 பேர் பலி.

2007: இந்தோனேசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 70பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒரே புகைப்படம் உலகம் முழுக்க பாப்புலர்: இந்திய பெண்ணின் தெய்வீக அழகில் மயங்கிய ஆப்பிள்!

 

தீபாவளி பண்டிகையின்போது யதார்த்தமாக தீப ஒளியுடன் எடுக்கப்பட்ட இந்திய பெண்ணின் புகைப்படத்தை  ஆப்பிள் நிறுவனம் தனது  குளோபல் விளம்பரங்களில்  பயன்படுத்த தேர்வு செய்துள்ளது.

apple.jpg

பெங்களூருவை சேர்ந்தவர் ஆஷிஷ். இவரது மனைவி ரைனா நானயா. கடந்த தீபாவளி பண்டிகையின்போது ஆஷிஷ் தனது மனைவி ரைனா சிகப்பு வர்ண புடவையில் கையில் தீபத்துடன் இருப்பது போல தனது ஐ போன் 6ல் புகைப்படங்களை எடுத்தார். அந்த புகைப்படம் மிக அழகாகவும் ரைனாவை தெய்வீக கலையுடன்  ஒரு தேவதை போல காட்டியது.

iphone.jpg

ஆஷிஷ், பின்னர் அந்த புகைப்படத்தை ஐபோன் 6ல் எடுக்கப்பட்டதாக  #ShotOniPhone6S என ஹேஸ்டேக் உருவாக்கி இணையதளங்களில் வெளியிட்டார். இதனை பார்த்த ஆப்பிள் நிறுவனம் அந்த புகைப்படத்தை தனது விளம்பர நோக்கத்துக்காக தேர்வு செய்திருக்கிறது.  இந்த போட்டியில் உலகம் முழுக்க இருந்து மிகச்சிறந்த புகைப்பட கலைஞர்கள் 41 பேர் 53 புகைப்படங்களையும் அனுப்பி இருந்தனர். ஆனால் ரைனாவின் புகைப்படம் தேர்வாகியிருப்பதாக டைம் மேகசின் தெரிவித்துள்ளது.

kkk%20.jpg

தற்போது ரைனாவின் புகைப்படங்களை பயன்படுத்தி ஆப்பிள் நிறுவனம் விளம்பரங்களை வெளியிட ஆரம்பித்து விட்டது. இதனைத் தொடர்ந்து ரைனாவுக்கும் அவரது கணவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஏராளமானோர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் விரும்புகின்றனர்.

இது குறித்து ஆஷிஷ் தெரிவிக்கையில், ''தீபாவளிப் பண்டிகையின் போது ரைனா எனது தாயாருக்கு தீபங்களை ஏற்ற உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த நான், கையில் தட்டு நிறைய தீபங்ளுடன் ரைனா வந்து கொண்டிருந்ததை பார்த்தேன். தீப ஒளியில் அவரது முகம் தெய்வீக கலையுடன் பிரகாசித்தது. அதனை அப்படியே எனது ஐபோனில் புகைப்படமாக பதிவு செய்தேன். ஒரு கணவராக காதலுடன் பதிவு செய்த அந்த புகைப்படம் இப்போது உலகையே வென்று விட்டது '' என்றார்.

vikatan

  • தொடங்கியவர்

ஆவியைப் போன்ற' புதிய வகை ஆக்டோபஸ்

இவ்வாறான ஒரு உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது அனேகமாக இதுவே முதல்

 இவ்வாறான ஒரு உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது அனேகமாக இதுவே முதல்

ஒளிபுகும் வடிவிலான தோற்றத்தை கொண்ட ஆக்டோபஸ் ஒன்று ஹவாயில் கடலின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரினம் கிட்டத்தட்ட ஒரு புதிய வகையைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நேக்கர் தீவிலிருந்து கிட்டத்தட்ட 2.5 மைல்கள் தொலைவில் வைத்து, நீரின் அடியில் பயணிக்கும் நீர்மூழ்கி வாகனம் ஒன்று இதனை கண்டுபிடித்துள்ளது.

கரங்கள் இல்லாத ஆக்டோபஸ் கடலின் ஆழத்தில் உள்ளது மிகவும் அரிது என என்.ஓ.ஏ.ஏ எனப்படும் தேசிய கடல் மற்றும் வளிமண்டலவியல் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த உயிரினத்திற்கு கேலிச்சித்திரத்தில் வரும் ஆவியின் பெயரான `கஸ்பர்' என்ற பெயரிடப்பட்டுள்ளது.

BBC

  • தொடங்கியவர்

'நான் எய்ட்ஸ் நோயாளி... நான் ஏன் படிக்கக் கூடாது?' -கேரளாவை உலுக்கிய மாணவி!

 

க்சரா(17). பி.ஏ சைக்காலஜி முதலாமாண்டு மாணவி. சரியாக 13 ஆண்டுகளுக்கு (2003) முன்னால் கேரள மீடியாக்களில் பரபரப்பை கிளப்பினார். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கொட்டியூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி அக்சராவுக்கும், அவரது சகோதரனுக்கும் பள்ளியில் படிக்க அனுமதி கொடுக்க மறுக்கின்றனர் என்பதுதான் அந்தச் செய்தி. காரணம், இருவருமே ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதுதான்.

இருப்பினும், 'தன் இரு குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும்' என்ற வைராக்கியம் குழந்தைகளின் தாய் ரீமாவுக்கு இருந்தது. பள்ளிகளில் அனுமதி கிடைக்க கடுமையாகப் போராடி வென்றார் தாய் ரீமா. சில தொண்டு நிறுவனங்களும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தன. நன்றாகப் படித்து பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றார் அக்சரா.

aids%20600.jpg

இதனையடுத்து கண்ணூரில் உள்ள புகழ்பெற்ற விராஸ் கல்லூரியில் பி.ஏ சைக்காலஜி அட்மிஷன் கிடைக்க, மகிழ்ச்சியோடு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்தவர், இப்போது கல்லூரி விடுதியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பப்பட்டுவிட்டார். 13 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட அதே அவமானத்தை தற்போது சந்தித்திருக்கிறார் அக்சரா. இந்த விவகாரம் கேரள மீடியாக்களில் வெளியாகி பெருத்த பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. தற்போது முதியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொண்டு நிறுவனத்தில் தங்கியிருந்து தினமும் கல்லூரிக்குச் சென்று வருகிறார்.

இதுபற்றிப் பேசும் அக்சரா, "நான் மனதளவில் ரொம்பவே நொறுங்கிப் போய்விட்டேன். இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஜனவரி 26-ம் தேதி கல்லூரி ஆசிரியர்கள் இரண்டு பேர் என் வீட்டிற்கு வந்துள்ளனர். என் அம்மாவிடம், 'கல்லூரி விடுதியில் இருந்து இரண்டு மாணவிகள் நான் இருக்கும் இடத்தில் தங்க முடியாது' எனச் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டனர். அதனால், அக்சராவை விடுதியில் அனுமதிக்க முடியாது' எனக் கூறியுள்ளனர். இத்தனைக்கும் அந்த ரெண்டு பேரில் ஒருவர் என்னுடன் தங்கியிருந்தார். மற்றொரு மாணவி பக்கத்து அறையில் தங்கியிருந்தார். அந்த இரண்டு பேரின் பெற்றோர்தான் என்னை வெளியேற்ற பிரஷர் கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் இருந்து என்னால் கல்லூரிக்குள் தலைகாட்டவே கஷ்டமாக இருக்கிறது. என்னை வெளியேற்றச் சொன்ன மாணவிகளை கல்லூரியில் சந்தித்தபோது, அவர்கள் என்னிடம் நல்லமுறையில்தான் நடந்து கொண்டனர். இரண்டு நாட்கள் அந்த விடுதியில் தங்கியிருந்தேன். அதன்பிறகு அங்கு தங்க முடியாததால், இந்தத் தொண்டு நிறுவனத்திற்கு வந்துவிட்டேன். எனக்கு எனக்கு மற்ற விடுதிகளில் அனுமதி கிடைக்காது எனவும் சொல்லிவிட்டனர்.

என்னுடைய உடல்நிலை எப்படி உள்ளது என்பது எனது கல்லூரி தோழிகளுக்குத் தெரியும் என்பதால் யாரும் என்னிடம் பாரபட்சம் காட்டவில்லை. நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து கல்லூரிக்குச் செல்லவே நான்கு மணி நேரம் ஆகிறது. தினசரி வகுப்புகளை அட்டெண்ட் செய்வதும் மிகக் கடினம். அடுத்த மாதம் இரண்டாவது செமஸ்டருக்கான தேர்வுகள் நடக்க இருக்கிறது. இருக்கும் ஒரே தீர்வு, கல்லூரியில் இருந்து நான் வெளியேறுவதுதான்" என தன்னுடைய வேதனையை மீடியாக்களிடம் பகிர்ந்து கொண்டார் அக்சரா.

அக்சராவின் பேட்டி கேரள அரசில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. மாவட்ட கலெக்டர் பாலகிரண் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதனால், அதிர்ந்து போன கல்லூரி முதல்வர் ஜுனித், ' அக்சராவை கல்லூரியை விட்டு விலகுமாறு நாங்கள் யாரும் சொல்லவில்லை. சில மாணவிகளின் பெற்றோர் நிலைமையை தவறாகப் புரிந்து கொண்டனர். அக்சரா எங்கள் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படிப்பைத் தொடரலாம். அதிலும், அவரது தாயாரையும் அக்சராவையும் தத்தெடுத்துக் கொள்ள கல்லூரி நிர்வாகம் தயாராக இருக்கிறது' என விளக்கம் கொடுத்தார்.

'இப்போது மகிழ்ச்சியா?' என அக்சராவிடம் கேட்டபோது, " என் தாயாரை தத்தெடுப்பதை நாங்கள் விரும்பவில்லை. அவரும் அதை விரும்ப மாட்டார். என்னுடைய படிப்பை நான் தொடர வேண்டும். அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தேவையில்லை" எனத் தீர்க்கமாக பதிலளித்தார்.

அக்சராவின் கண்களில் தெரியும் உறுதி, கேரளா அரசை ரொம்பவே அசைத்துவிட்டது. வாழ்த்துக்கள் அக்சரா!

vikatan

  • தொடங்கியவர்

ஐயோ அய்யய்யோ.............பேய்..:grin:

  • தொடங்கியவர்

கோபத்தை வெல்ல ரமணர் சொன்ன வழி!

12802785_1084488268276629_16507321514592

ரமண மகரிஷியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட இளைஞன் ஒருவன் ஒரு நாள் அவரிடம் வந்து, தன்னை ஒருவர் அடிக்கடி திட்டுவதாகவும், அதனால் தனக்குக் கோபம் வருவதாகவும், இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் கேட்டான். ரமணர் அதற்கு, ‘‘நீயும் அவனோடு சேர்ந்து உன்னையே திட்டிக் கொள்!’’ என்றார். வாலிபன் திகைத்தான்.

அதற்கு பகவான் அவனைப் பார்த்து, ‘‘உன்னைத் திட்டுபவன் உன் உடம்பைப் பார்த்துத்தானே திட்டுகிறான். கோப தாபங்களுக்கு இடமான இந்த உடலை விட நமக்குப் பெரிய விரோதிகள் யார் இருக்கிறார்கள்?! ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்றால் அவர் நம்மைத் தட்டி எழுப்புகிறார், உஷார்படுத்துகிறார் என்று அர்த்தம். அப்போது நாமும் அவருடன் சேர்ந்து கொண்டு இந்த உடம்பைத் திட்டித் தீர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு திட்டியவரை நாம் திருப்பித் திட்டுவதால் என்ன பயன்?

நம்மைத் திட்டுபவர்கள் நமது நண்பர்களே. திட்டுபவர்களின் மத்தியில் நாம் இருப்பது நல்லது. அப்படி இல்லாமல் நம்மைப் புகழ்பவர்கள் மத்தியில் இருந்தால், நாம் ஏமாந்துதான் போக வேண்டும்!’’ என்று கோபத்தை வெல்லும் வழியை அவனுக்குக் கூறினார் பகவான் ரமணர்.

  • தொடங்கியவர்

2001-ல் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டபோது நியூயார்க் ரயில்நிலையமும் முற்றிலுமாக சேதமடைந்தது. எனவே அதே இடத்தில் புதிய ரயில் நிலையம் கட்டத் தொடங்கினார்கள். 14 ஆண்டுகளுக்கு பின் ரெடியாகி இருக்கும் அந்த ஸ்டேஷந்தான் உலகின் காஸ்ட்லியான ரயில்வே ஸ்டேஷன். இதைக் கட்ட ஆன மொத்த செலவு 3.8 பில்லியன் டாலர்கள்.

12828979_686745731427972_646167407920749

12321596_686745708094641_672900953078504

People walk through the Oculus concourse of the World Trade Center transportation hub after nearly 12 years of construction.

 

  • தொடங்கியவர்

12804647_979168825494222_571610175823241

12799304_979168918827546_926570554993232

12795562_979169085494196_157644756981029

12790982_979169205494184_556633205187688

புழுக்கொடியல் காயவிடப்பட்டிருக்கும் காட்சி

இதன் அழகுக்கு இணை ஏது!!

  • தொடங்கியவர்


'' பிச்சைகாரன் '' பட சிரிக்க சிந்திக்க வைக்கும் காணொளி ..

  • தொடங்கியவர்

யோகாவில் அசத்தும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.