Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வெடித்துச் சிதறும் நட்சத்திரம்

 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பாறைகளை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி நிற்கவைப்பதில் கில்லாடி மைக்கேல் கிராப். கொலராடோவைச் சேர்ந்த மைக்கேல், புவி ஈர்ப்பு சக்தியை மிஞ்சி கற்களை அடுக்கிவைத்து அனைவரிடமும் சபாஷ் என்று பாராட்டு பெறுகிறார். இவரை 'Gravity Glue' என்றும் அழைக்கிறார்கள்.

10152638_695553843880494_715819094337464

1240483_695553837213828_1492725220563434

1935089_695553847213827_2636567442282384

1604415_695553883880490_7664455154351051

12321357_695553890547156_361285309387025

1929443_695553893880489_1359303139662955

12439280_695553943880484_178672973135104

12670547_695553980547147_167446499923155

1915941_695553990547146_2158049497098141

1935517_695554060547139_3923952767402096

vikatan

  • தொடங்கியவர்

President Barack Obama Dances The Tango in Argentina (3-23-16)

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12888628_1009321135783247_36928697974867

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட நட்சத்திரம் டீன் ஜோன்ஸின் பிறந்தநாள்
Happy Birthday Dean Jones

  • தொடங்கியவர்

கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது........

10307226_1120412441326568_64360756403143

அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது. அதில் எழுதியிருந்தது..

1. கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

*
2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் மேல போகப்போக அதிகமாகிக் கொண்டே போகும்.

*
3. ஒரு தளத்தில் இருந்து மேலே சென்று விட்டால் மறுபடியும் கீழே வர முடியாது.. அப்படியே வெளியே தான் போக வேண்டும்.....
*
இது தான் அந்த விதிமுறைகள்....
*
*
இதையெல்லாம் படித்து பார்த்து விட்டு, ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்..
*
"கணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே, என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்தார்...
*
முதல் தளம் அறிக்கை பலகையில்,
*
>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்
*
"வேலை உள்ளவர்கள்".
"கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்".
*
இது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...
*
*
இரண்டாம் தளம் அறிக்கை பலகையில்,
*
>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
*
"வேலை உள்ளவர்கள்".
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
மேலும்
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
*
இதுவும் என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...
*
*
மூன்றாம் தளம் அறிக்கை பலகையில்.
*
>>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<<
*
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
மற்றும்
"வசீகரமானவர்கள்"
*
அந்த இளம்பெண் "வசீகரமானவர்கள்" என்பதை பார்த்ததும், "ஆஹா.. மூன்றாவது தளத்திலேயே இவ்வளவு தகுதிகள் இருந்தால், மேலே போகப்போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ"என்று நினைத்துக்கொண்டு மேலே செல்ல முடிவெடுத்தார்....
*
*
நாலாவது தளம் அறிக்கை பலகையில்,
*
>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
*
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
"வசீகரமானவர்கள்"
மற்றும் "வீட்டு வேலைகளில் மனைவிக்கு
உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்"
*
இதை விட வேறு என்ன வேண்டும்.. நல்ல குடும்பம் அமைக்கலாமே...?
*
கடவுளே... மேல என்ன இருக்கு என்று தெரிந்தே ஆகணும்.
அப்படி என்று முடிவு செய்து விட்டு, அடுத்த தளத்திற்கு சென்றார்...
*
*
ஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்,
*
>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
*
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
"வசீகரமானவர்கள்"
"வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்"
மற்றும்
"மிகவும் "ரொமாண்டிக்" ஆனவர்கள்"
*
*
அவ்வளவு தான்.. அந்த பெண்ணால் தாங்க முடியவில்லை..
*
சரி இங்கேயே யாரையாவது தேர்வு செய்யலாம் என்று நினைத்தாலும் இன்னொரு தளம் பாக்கி இருக்கின்றதே..
அங்கே என்ன எப்படிப்பட்ட கணவர்கள் இருப்பார்கள் என்பதை பார்க்காமல் எப்படி முடிவு செய்வது....???
*
சரி மேலே சென்று பார்த்து விடலாமே என்று முடிவு செய்து விட்டு ஆறாவது தளத்திற்கு செல்கிறார்....
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ஆறாவது தளம் அறிக்கை பலகையில்,
*
""இந்த தளத்தில் கணவர்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது..
*
"எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி"...!
*
"பார்த்து கவனமாக கீழே படிகளில் இறங்கவும்".
என்று எழுதியிருந்தது...
*

  • தொடங்கியவர்

பாகுபலியை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் பிரமாண்ட சீரியல்!

 
 

சீரியல் பார்ப்பதில், நம்மூர் பெண்கள் மட்டும்தான் புலிகளா? உலகமே அப்படித்தான்! அதிலும், ஹாலிவுட் தரத்திற்கு சீரியல்களை உருவாக்குவதில் அமெரிக்கா கில்லி. அமெரிக்கர்களின் சீரியல் மோகத்திற்கு ''கேம் ஆஃப் த்ரோன்ஸ் - Game of Thrones (சிம்மாசனத்திற்கான விளையாட்டு)'' எனும் சீரியல் சிறந்த உதாரணம். ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கு ஜி.ஓ.டி (Games Of Thrones - GOT) என்கிற செல்லப் பெயரும் இருக்கிறது.

சீரியல் தீம் :

இந்த சீரியல்  அழுகாச்சி சீரியல் அல்ல என்பது தான் நமக்கும், அவர்களுக்குமான பெரிய வித்தியாசம். ஒரு சாம்ராஜ்யத்தை பிடிக்க நடக்கும் அரசியல் விளையாட்டுகள் மற்றும் போராட்டம் போன்றவை தாம் இந்த சீரியலின் கதைக்களம். நடந்த வரலாற்றைச் சீரியல் ஆக்கியிருக்கிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். இது ஒரு கற்பனைக் கதை! இந்த சீரியல் தொடர்கள் 'எ கேம் ஆஃப் த்ரோன்ஸ்', 'எ க்ளாஷ் ஆஃப் கிங்ஸ்', 'எ ஸ்டோர்ம் ஆஃப் ஸ்வார்ட்ஸ்' போன்ற நாவல்களை அடிப்படையாகக் கொண்டும் எடுக்கப்படுகிறது. டிரெய்லர் லிங்க் : https://www.youtube.com/watch?v=CuH3tJPiP-U

maxresdefault.jpg

சீசனாக சீறிப்பாயும் ஜீ.ஓ.டி :

ஏப்ரல், 2011-ல் ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்த சீரியல்கள், சீசன் 1, 2, 3, 4, 5 என்று இதுவரை ஐந்து சீசன்கள் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி சக்கை போடு போட்டிருக்கிறது. (ஒரு சீசனுக்கு 10 எபிசோட்கள் மட்டுமே, ஒரு எபிசோட் 50 - 65 நிமிடங்கள் வரை இருக்கிறது). அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 25, 2016 அன்று இந்த சீரியலின் 6ஆவது சீசன் ஒளிபரப்பப்பட இருக்கிறது. இதன் டிரைலரை மட்டுமே 2.5 கோடி பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள்

இயக்குநர்கள் :

இந்த சீரியலை எடுத்தவர்கள் ஒருவரோ, இருவரோ, மூவரோ அல்ல 14 இயக்குநர்கள் இருக்கிறார்கள். இதில் குறிப்பாக அலெக்ஸ் க்ரேவ்ஸ், டேவிட் நட்டர், அலென் டெய்லர் போன்றவர்கள் இதுவரை ஒவ்வொருவரும் 6 எபிசோட்களை இயக்கி முன்னிலை வகிக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து டேனியல் மினாஹன் 5 எபிசோட்களை இயக்கி இருக்கிறார். மிசெல்லி மெக்லாரன், மார் மைலார்ட், ஜெரிமி பொடெஸ்வா, அலிக் சகரோவ் மற்றும் மிக்வில் சபோச்நிக் ஆகியவர்கள் 4 எபிசோட்களை இயக்கி இருக்கிறார்கள். பிரைன் கிரிக் 3 எபிசோட்களை இயக்கி இருக்கிறார். நீல் மார்ஷல் 2 எபிசோட்களை இயக்கி இருக்கிறார். ஜாக் பென்டர், டேவிட் பெட்ரகா, டேனியல் சக்ஹீம், மைக்கெல் ஸ்லோவிஸ் ஆகியவர்கள் 1 எபிசோடையும் இயக்கி இருக்கிறார்கள். ஒரே எபிசோடில் இரண்டுக்கும் மேற்பட்ட இயக்குநர்களும் சேர்ந்து இயக்கி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் :

இயக்குநர்கள் தான் இவ்வளவு பேர் என்றால், இதில் நடிப்பவர்களின் பட்டியலும் கல்யாண விருந்துக்கு வாங்க வேண்டிய மளிகை சாமான் லிஸ்டை விட பெரிதாக இருக்கிறது. பீட்டர் டிங்க்லேஜ், லெனா ஹெடே, எமிலியா க்ளார்க், கிட் ஹாரிங்டன், ஷோஃபி டர்னர், மைசி வில்லியம்ஸ் போன்ற முன்னணி நடிகர்கள் இதில் முக்கிய வேடங்களை ஏற்று நடித்து வருகின்றனர். சுருக்கமாகச் சொன்னால் அந்த ஊர் மகாபாரதம் தான். அவ்வளவு கதாபாத்திரங்கள். போர்க் காட்சிகளை எல்லாம் படமாக்க வேண்டும் என்றால் எத்தனை பேர் வேண்டும் என்பதை பாகுபலி படத்தின் போர்க்காட்சிகளை நினைவு கூர்ந்தால் தெரியும். கஷ்டம் என்ன என்பது புரியும். அவைகளையும் இயக்குநர்கள் அருமையாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

உலகின் காஸ்ட்லியான சீரியல் :

எப்படி, இப்படி ஒரு தெறி ஹிட் என்று பார்த்தால், அதன் பட்ஜெட்டில் இருக்கிறது முதல் சர்ப்ரைஸ். சுமாராக ஒரு மணிநேரத்திற்கு (ஒரு எபிசோடிற்கு) 6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 39 கோடி ரூபாய்) செலவழித்து தயாரிக்கப்படுகிறது கேம் ஆஃப் த்ரோன்ஸ் உலகில் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்படும் சீரியல்களில் ஃப்ரண்ட்ஸஸென்னும் சீரியல் ஒரு எபிசோடிற்கு - 10 மில்லியன் டாலர் செலவழித்து தயாரித்தது. அதே போல் ரோம் சீரியலின் ஒரு எபிசோடிற்கு - 9 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது நம் கேம் ஆஃப் த்ரோன்ஸ். மேற்கூறிய இரண்டு தொடர்களும் முடிந்துவிட்டன. ஆக மொத்தத்தில், தற்போதைக்கு உலகில் அதிகப் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் டிவி சீரியல்களில் இது தான் நம்பர் 1.

ஒளிபரப்பு :

இந்த சீரியல் முதலில் அமெரிக்காவில் ஒளிபரப்பாகி சில வாரங்களுக்கு பின் தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, கனடா போன்ற நாடுகளில் ஒளிபரப்பப்படுகிறது. குறிப்பாக சீனாவில் ஏகப்பட்ட சென்சார் வெட்டுகள் நடந்த பின் தான் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

newegoLARGEt14011066897681.jpg

நேரடி பார்வையாளர்கள் 69 லட்சம் :

கேம் ஆஃப் த்ரோன்ஸின் சீசன் 5-ன் ஒவ்வொரு எபிசோடையும் சராசரியாக 69 லட்சம் பேர் தொலைக்காட்சி மூலமாக பார்த்திருக்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் ஒளிபரப்பப்பட இருக்கும் சீசன் 6 ஐ இன்னும் அதிகமான ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று கேம் ஆஃப் த்ரோன்ஸ் குழு கணித்திருக்கிறது.

டிவிடியில் சீரியல் :

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசன்கள் முழுமையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிய பின், டிவிடிக்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன முதல் சீசன் டிவிடிக்கள் மற்றும் கட்டணம் செலுத்தி டவுன்லோட் செய்வதிலும் முத்திரை பதித்திருக்கிறது.

முதல் சீசனின் டிவிடி ஒரு வார காலத்தில் 3,50,000 பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. இது ஹெச்பிஓ வெளியிட்ட சீரியல்களில் நிகழ்த்தப்பட்ட பெரிய சாதனை என்று பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளியது.

இதுவரை கேம் ஆஃப் த்ரோன்ஸில் எடுக்கப்பட்ட சீசன் 5 வரையான அனைத்து எபிசோட்களையும் டிவிடியிலும் ப்ளூரே பார்மெட்டில் கட்டணம் செலுத்தி டவுன்லோட் செய்யும் விதத்தில் வெளியிட்டிருக்கிறது ஜி.ஓ.டி குழு. நம்மூரில் சீரியலை பார்ப்பதற்கு டிவிடி இருக்கிறது என்றால் வீட்டில் இருக்கும் இளசுகள் பிரச்னை இல்லாமல் டிவி பார்க்கலாம். அதையும் மீறி வீட்டில் இருக்கும் சீரியல் பிரியர்கள் கேட்டால் டிவிடி வரும் பாத்துக்கலாம் என்று சமாளித்துவிடலாம்.

ஆன்லைனில் சீரியல் விலை :

'கேம் ஆஃப் த்ரோன்ஸி'ன் ஒரு எபிசோடை சப்ஸ்கிரைப் செய்து பார்க்க அமெரிக்காவில் 15 - 25 டாலர், இங்கிலாந்தில் சுமாராக 26 பவுன்ட் ஸ்டர்லிங், ஆஸ்திரேலியாவில் 52 ஆஸ்திரேலிய டாலர் செலவழிக்க வேண்டுமாம். மேற்கூறிய பணத்தை எல்லாம் இந்திய பணத்தில் மதிப்பிட்டு பாருங்கள்!...அதிர்ந்து...! போவீர்கள்.

பைரஸி பிரச்னை :

வழக்கம் போல டொரன்ட் இந்த சீரியலுக்கும் வில்லனாகத் தான் இருக்கிறது. டொரன்டில் அதிகம் டவுன்லோடு செய்யப்படும் டிவி சீரியல்களில் கேம் ஆஃப் த்ரோன்ஸுக்குதான் முதல் இடம். அதில், ஒரு எபிசோட் மட்டும் 42,80,000 முறை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்! குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் கேம் ஆஃப் த்ரோன்ஸின் பைரசி காப்பிகள் அதிகமாக இருக்கிறதாம். 2015-ல் அதிகம் திருடப்பட்ட தொலைகாட்சித் தொடராக 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. அதோடு இதுவரை ஹெச்.பி.ஓ நிறுவனம் தயாரித்த டிவி சீரியல்களிலேயே அதிக பார்வையாளர்களை ஈர்த்த சீரியலாக தன் முத்திரையை பதித்திருக்கிறது 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்!'.

game-of-thrones-season-5-finale-emilia-c

விருதுகள் பட்டியல் :

ஃபிரைம் டைம் எம்மி' விருதுகளின் ''சிறந்த தொலைக்காட்சி சீரியல்" விருது உட்பட பல்வேறு பிரிவுகளில் 26 ஃபிரைம் டைம் எம்மி விருதுகளை வென்றிருக்கிறது. சீரியல்களுக்கு வழங்கப்படும் பிற விருதுகளில் இதுவரை 190-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறது 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரியல். இந்த 190 விருதுகளில் கோல்டன் குளோப் விருதுகள், ஹூகோ அவார்ட் ஃபார் பெஸ்ட் டிராமாட்டிக் பிரசன்டேஷன், பீபாடி அவார்ட் போன்றவையும் அடக்கம்.

எக்கச்சக்க 'ஏ'டாகூட காட்சிகள் :

இந்த சீரியலில் ஆபாசக் காட்சிகள் கொஞ்சம் அதிகம் தான். எனவே குடும்ப சமேதமாக உட்கார்ந்து இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டே பார்க்க முடியாது.

மக்கள் மதிப்பெண் :

இந்த டிவி சீரியலுக்கு ஐ.எம்.டி.பி 9.5/10 மதிப்பெண்களை வழங்கி இருக்கிறது. அதே போல் டிவி.காம் 9/10 மதிப்பெண்களையும், ராட்டன் டொமேட்டோஸ் 94% மதிப்பையும் வழங்கி இருக்கிறது.

இந்தியாவில்...?

இந்தியாவில் ஹெச்.பி.ஓ சேனலில் ஒளிபரப்பானது. அதுவும் முழுமையான சென்சார்களுக்கு உட்படுத்தப்பட்டு ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலோட ஒரு எபிசோட் காசு இருந்தா நம்ம ஊர்க்காரர்கள் திரைப்படமே எடுத்துவிடுவார்கள்.... 

vikatan

  • தொடங்கியவர்

சூப்பர்ல!

 

ண்ணியில போற கப்பலைப் பார்த்து இருப்பீங்க. ஆனா, வீடுகளைப் பார்த்து இருக்கீங்களா? (சென்னை வெள்ளம் வேற பாஸ்!). துபாய்ல தண்ணியில மிதக்கிற வீடுகள் கட்டி இருக்காங்களாம்.

p126a.jpg

வீட்டின் முதல் தளம், இரண்டாம் தளம் மட்டும்தான் தண்ணிக்கு மேலே. குளியலறை, படுக்கை இரண்டுமே தண்ணீருக்கு அடியிலாம். அதாவது நாம் தூங்கும்போது, கண்விழித்துப் பார்த்தால் மீன், சுறா எல்லாம் தெரியும். சமையலறை முதல் தளத்திலும் மினி பார், மினி சாப்பாட்டு அறை எல்லாமே இரண்டாம் தளமாம். பார்க்க ஒரு பெரிய சைஸ் படகு மாதிரித் தெரிந்தாலும் இது வீடுதான் என சூடம் ஏற்றி சத்தியம் செய்கிறார்கள் இதன் நிறுவனர்கள். கடந்த அக்டோபர் மாதம் இதை விற்க ஆரம்பித்தார்கள். இதுவரை பல வீடுகள் விற்றுள்ளதாம் பாஸ். விலை 9 கோடிதானாம்.

p126b.jpg

p126c.jpg

நம் ஊர்ல மழை பேஞ்சா, நம்ம வீடும் தண்ணிக்குள்ளதான்னு, உங்க மைண்ட் வாய்ஸ் புரியுது, புரியுது!

vikatan

 

  • தொடங்கியவர்

12799282_1098790006846455_83420196398378

 
 
வண்ணங்களின் திருவிழா ஹோலி
 


இந்­தியா முழு­வதும் தீபா­வளி பண்­டி­கைக்கு அடுத்­த­தாக வெகு விம­ரி­சை­யா­கவும்  துடி­து­டிப்­பா­கவும் கொண்­டா­டப்­படும் திரு­விழா 'ஹோலி' ஆகும். 'ஹோலி' என்­பது வர்­ணங்­களின் விழா என்று அர்த்­த­மாகும். இவ்­வி­ழாவின் மகிழ்ச்­சிக்கு எல்­லையே இல்லை. இந்த விழாவை கண்டு களிக்கும் பாக்­கியம் இந்தக் கட்­டு­ரை­யா­ள­னுக்கு டெல்­லியில் நேற்று கிடைத்­தது.

 

15736Holi-india.jpg


இந்­தி­யாவின் எண்­தி­சை­க­ளிலும் கொண்­டா­டப்­படும் இவ் விழா எத்­த­கைய கேளிக்­கையும் கூத்­தாட்­டமும் மிக்­கது என்­பதை டெல்லி வீதி­களில் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.


சிறுவர் முதல் முதி­யோர்­வரை, ஆண், பெண் வித்­தி­யா­ச­மின்றி, உள்­நாட்­டவர் மற்றும் வெளி­நாட்­டவர் என்ற பேத­மின்றி அன்பின் அடை­யா­ள­மாக ஒருவர் மீது ஒருவர் வர்ணம் பூசி அன்பை பகிர்­வது இவ் விழாவின் மகத்­து­வ­மாகும்.


இவ் விழா சில வேளை­களில் உக்­கிரம் அடைந்து மோதல்­களைத் தூண்­டி­வி­டு­வதும் உண்டாம். இதன் கார­ண­மாக பெரும்­பா­லான வெளி­நாட்­ட­வர்கள், சுற்­றுலா பய­ணிகள் வெளியில் நட­மா­டு­வதைத் தவிர்த்து வரு­கின்­றனர். ஆனால் வெளி­நாட்டு இள­வட்­டங்கள் இவ்­வி­ழாவில் தாங்­களும் ஓர் அங்­க­மாக மூழ்­கி­வி­டு­கின்­றனர்.


இவ் விழா வசந்த காலத்தை வர­வேற்கும் அதே­வேளை, அன்பு மற்றும் நம்­பிக்­கையைக் குறிப்­ப­தாக டெல்லி மக்கள் தெரி­வித்­தனர்.

 

15736Holi-india4.jpg


'ஹோலி' திரு­விழா இந்­தி­யாவின் பண்­டைய திரு­வி­ழா­வாகும். ஆரம்ப காலத்தில் இவ்­விழா ஹொலிக்கா என்­ற­ழைக்­கப்­பட்­டதாம்.


இவ் விழா ஆரிய வம்­சத்­த­வர்­களால் குறிப்­பாக இந்­தி­யாவின் கிழக்கு பகு­தி­யி­லேயே பெரு­வா­ரி­யாக கொண்­டா­டப்­பட்­ட­தா­கவும் வர­லாற்று நூல்கள் தெரி­விப்­ப­தாக டில்லி ஹோட்டல் ஒன்றின் முகா­மை­யாளர் தெரி­வித்தார்.


அத்­துடன் இவ்­விழா கிறிஸ்­து­வுக்கு பல நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்னர் கொண்­டா­டப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஆரம்ப காலத்தில் திரு­ம­ண­மான பெண்கள், அன்­புக்­கா­கவும் குடும்­பத்தின் நல்­வாழ்­வுக்­கா­கவும் அர்­ப்பணித்த விழா­வாக அமைந்­த­துடன் பூரணை நில­வுக்கு மறு­தினம் இவ் விழா கொண்­டா­டப்­பட்­டு­வந்­தது. எனினும் கால­வட்­டத்தில் இவ்­வி­ழாவின் அர்த்தம் மாறுப்­பட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

 

15736Holi-india3.jpg


இவ்­விழா வசந்த மகோற்­ச­வம், காமன் விழா என்ற பெயர்­க­ளாலும் கொண்­டா­டப்­பட்டு வரு­கின்­றது. தமிழ் நாட்டில் காமன் பண்­டிகை விழா­வாக இது கொண்­டா­டப்­ப­டு­கின்­றது.


இவ்­விழா ராதா மற்றும் கிருஷ்ணன் ஆகி­யோரின் வாழ்க்­கை­யுடன் மிக நெருக்­க­மா­னது. கிருஷ்ணா கரிய நிறம் உடை­யவர். அவ­ரது அன்­பிற்­கு­ரிய ராதாவோ அழகில் அதி­ச­ய­மா­னவர். இதன் கார­ண­மாக கிருஷ்ணா பொறா­மையால் குன்­றிப்போய் குறும்­புத்­த­ன­மாக ராதாவின் முகத்தில் வர்­ணத்தை பூசி­னாராம். இந்தப் பண்­டைய வர­லாற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டே 'ஹோலி' திரு­வி­ழா­வின்­போது காத­லர்கள் தங்­க­ளது காதலைப் பகிரும் வகையில் ஒருவர் மீது ஒருவர் வர்ணத்தைப் பூசி மகிழ்ந்து கொண்­டா­டு­கின்­ற­னராம்.

 

15736Holi-india2.jpg

 

ஒருவர் மற்­றை­ய­வர்­மீது வர்ணம் பூசு­வதில் ஒவ்­வொ­ரு­வரும் முந்திக் கொள்ள முயற்­சிக்­கின்­றனர். இது ஒரு வர்ணம் பூசும் போரா­கவும் மாறி­வி­டு­கின்­றது. ஒருவர் மீது ஒருவர் வர்ண குழை­வுகள் பூசும் அதே­வேளை குவ­லை­களில் நீர் நிரப்பி அதில் வர்­ணத்தைக் கரைத்து தங்கள் நேசத்­திற்­கு­ரி­ய­வர்கள் மீது ஊற்­று­வ­தையும் வீதி­களில் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.


ஹோலி விழா­வின்­போது ஆல­யங்கள் அலங்­க­ரிக்­கப்­பட்டு ராதாவின் உரு­வத்­திற்கு முன்­பாக 'ஹோலி' கீதங்கள் பாடப்­பட்­ட­தையும் கேட்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது.


இவ் விழா­வின்­போது பொது போக்­கு­வ­ரத்து முற்­றாக ஸ்தம்­பித்­தி­ருந்­த­துடன் பிற்பகல் 2.00 மணிவரை விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பின்னரே வாகனப் போக்குவரத்து சிறய அளவில் இடம்பெற ஆரம்பித்தது. அதன் பின்னரே ஹோட்டல்களில் முடங்கிக்கிடந்த வெளிநாட்டவர்கள் நடமாட ஆரம்பித்தனர்.


'ஹோலி' பண்டிகை விழா இந்தியாவில் மாத்திரமன்றி பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளிலும் இந்துக்கள் செறிந்து வாழும் நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

 

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யாழ். மாதகல் கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய புதிய வகை மீன்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

11095218_1099253486800107_89943454270903

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் புனித வெள்ளி தினத்தை அனுசரிக்கின்றனர்

  • தொடங்கியவர்

12141024_1010367315678629_38075655595698

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹரூன் ரஷிட்டின் பிறந்தநாள்
 

  • தொடங்கியவர்

மார்ச் 25: பாகிஸ்தான் உலக கோப்பையை வென்ற தினம்.. (1992)

 
 

உலகக்கோப்பையில் ஆசிய அணிகளின் ஆதிக்கத்தை கபில் தேவ் துவங்கி வைத்தார் என்றால் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர் இம்ரான் கான். 92 ஆம் வருடம் உலககோப்பையை பாகிஸ்தான் அணி வென்றதே எதோ ஒரு தேவதைக்கதை போல மாயங்களும்,அதிர்ஷ்டங்களும்,அற்புதமான சுவாரசியங்களும் நிரம்பியது.

இம்ரான் கான் தான் அணியின் தலைவர். அம்மாவுக்கு கேன்சர் வந்து இறந்து போயிருக்க அவரைப்போல துன்பப்படும் எண்ணற்ற பிரஜைகளுக்கு உதவும் மருத்துவமனையை கட்டிக்கொண்டு இருந்தார் அதற்கு பணம் தேவைப்பட்டது. நாற்பது வயதில் அணியின் கேப்டனாக அந்த ஆசையோடு பொறுப்பேற்றுக்கொண்டார். வேகப்புயல் வக்கார் யூனிஸ் போட்டிக்கு சில வாரங்களுக்கு முன் எலும்பு முறிவால் விலகி இருந்தார். பேட்டிங் நம்பிக்கை சயீத் அன்வரும் உலகக்கோப்பையில் ஆட வரவில்லை. ஜாவித் மியான்தத் மற்றும் இம்ரான் இருவருக்கும் காயங்கள் உலகக்கோப்பை முடிகிற வரை கூடவே ஒட்டிக்கொண்டு தொல்லை கொடுத்தன.

imrankhan%281%29.jpg

அணியை ஸ்ட்ரிக்ட்டான தலைமைஆசிரியர் போலத்தான் நடத்தினார் இம்ரான். சரியாக ஆடாவிட்டால் தனியாக கதவை சாற்றிவிட்டு டோஸ் விட்டு உசுப்பேற்றுவார். ஆனால்,முதல் ஐந்து போட்டியில் நடந்தது என்னவோ வேறு ! மேற்கிந்திய தீவுகளிடம் பத்து விக்கெட்டில் தோல்வி,பரமவைரி இந்தியாவிடம் 43 ரன்களில் தோல்வி,தென் ஆப்ரிக்காவிடம் இருபது ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தார்கள். ஒரு போட்டியை தத்தி தத்தி டை செய்தார்கள். இன்னொரு போட்டியில் வெறும் 74 ரன்களில் சுருண்டு இருந்தார்கள். எதோ மழை வந்து புண்ணியம் கட்டிக்கொண்டது. அடுத்த ஐந்து போட்டிகளில் ஜெயித்தால் மட்டுமே அரையிறுதி என்கிற நிலை !

இம்ரான் கான் அணியினரை அழைத்தார் ,"நாம் ஒரு ஓரத்துக்கு தள்ளப்பட்ட புலிகள் போலத்தான் இப்பொழுது உணரவேண்டும். புலிகள் ஒதுங்குவது ஒழித்துகட்டத்தான் ! இறங்கி அடிப்போம் ! வெற்றி நமதே !" என்று கர்ஜித்தார். எண்பதுகளில் கிரிக்கெட் பாணியில் அணியின் ஆட்டத்தை அமைத்துக்கொண்டார்கள். முதல் நாற்பது ஓவர்களில் பெரிதாக விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு மெதுவாக ஆடுவார்கள், இறுதி பத்து ஓவரில் துவம்சம் செய்து வெல்வார்கள். இப்படி ஆடியே அரையிறுதியை தொட்டது அணி !

அதுவரைக்கும் அணியில் சொதப்பிக்கொண்டு இருந்த இன்சமாமை தூக்கி விட வேண்டும் என்று எல்லாரும் முணுமுணுத்துக்கொண்டு இருந்தார்கள். அவர் கண்கள் கலங்கி இம்ரான் அறைக்குள் வந்தார் ,"எந்த போட்டியிலும் நான் ஒழுங்காக ஆடவே இல்லை ! அப்படியே ஊருக்கு கிளம்பறேன். வேற நல்ல ப்ளேயரை போட்டுக்குங்க கேப்டன் !"

இம்ரான் சுருக்கம் விழுந்த முகம் விரிய இன்சமாமை பார்த்து இப்படி உறுதியாக சொன்னார் ,"உன்னை முல்தானில் இருந்து கூப்பிட்டு வந்தது நீ ஆடி ஜெயிக்க வைப்பேன்னு தான் ! நடுவில எல்லாம் அனுப்ப முடியாது. நீ அரையிறுதியில் ஆடுறே ! நாம உன்னால ஜெயிக்கிறோம் ! போ ரெடியாகு !". கேப்டன் பேசிவிட்டால் எதிர்த்து பேச முடியாது ! கூடாது.

நியூசிலாந்து அணியுடனான அந்த போட்டியில் பாகிஸ்தான் பவுலிங் செய்தது. 262 ரன்கள் அடிக்கப்பட்டு இருந்தது. அதை சேஸ் செய்ய பாகிஸ்தான் களம் புகுந்த பொழுது இந்த அணி தேறாது என்று முடிவு செய்து எதிரணியின் க்ரோவ் காயம் படாமல் இறுதிப்போட்டியில் ஆட  அறையில் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டார். அது பெரிய தவறாக முடிந்தது என்பது இறுதி பத்து ஓவரில் தான் புரிந்தது. முதல் நாற்பது ஓவரில் 140 /4 என்றே ஸ்கோர் சிரித்துகொண்டு நின்றது. இறுதிப்போட்டியில் நாம் தான் என்று நியூசிலாந்து அணி குதூகலித்து கொண்டிருந்தது. இன்சமாம் இல்லை என்று அடித்து ஆடி நிரூபித்தார். முப்பத்தி ஏழு பந்துகளில் அறுபது ரன்கள் அடித்து அணியை இறுதிபோட்டிக்கு கூட்டிக்கொண்டு போனார் அந்த அதுவரை சொதப்பல் மன்னர் !

அதுவரை சிங்கம் போல ஆடிக்கொண்டு இருந்த இங்கிலாந்து அணி இருதிப்போட்டிக்குள்  சர்ச்சைக்குரிய மழையால் பாதித்த அரையிறுதி போட்டியின் உதவியோடு வந்திருந்தது. பாகிஸ்தான் இந்த முறை முதலில் பேட் செய்தது. ரமலான் மாதத்தின் பதினெட்டாவது நாள் அன்று. 87,182 பேர் நிரம்பியிருந்த எம்.சி.ஜி. மைதானத்தில் போட்டி துவங்கியது. முந்தைய அதே பாணி   நாற்பது ஓவரில் வெறும் 150 ரன்கள் மட்டுமே அடித்தார்கள். இன்சமாம் மற்றும் வாசிம் அகரம் இறுதி பத்து ஓவர்களில் கிட்டத்தட்ட  நூறு ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை  249 க்கு உயர்த்தினார்கள். இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் சுலபமாக சரிந்து விழுந்தது. லாம்ப் மற்றும் பேர்ப்ராதர் எனும் இரண்டு பேர் மட்டும் தண்ணிக்காட்டிக்கொண்டு இருந்தார்கள்.

இம்ரான் கான் முப்பத்தி ஐந்தாவது ஓவரில் வாசிம் அக்ரமை மீண்டும் அழைத்தார். "எனக்கு வேண்டியது வெற்றி மட்டுமே !" என்று சொல்லித்தான் பந்து தரப்பட்டு இருந்தது. எதோ மாயாஜாலம் போல அந்த இரண்டு பந்துகளில் அற்புதம் புரிந்தார் அக்ரம். இரண்டு இன்ஸ்விங்கர்கள் இரண்டு விக்கெட்கள். அவ்வளவு தான்,கொஞ்ச நேரத்தில் வாலையும் மடக்கி கோப்பையை பாகிஸ்தானின் நாற்பது வயது புலி இம்ரான் தூக்கிய பொழுது தேசமே கொண்டாட்டத்தில் மூழ்கிப்போனது. கேன்சர் மருத்துவமனை கட்ட பணம் திரட்டிய திருப்தியோடு அணியில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார் அவர். ஏனோ எல்லாரின் கண்களும் கலங்கியிருந்தன. அந்த நம்ப முடியாத வெற்றிப்பயணத்தின் இறுதிக்கணம் நடந்த தினம் மார்ச் 25

vikatan

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

பிறந்தது கேரளா. இப்போ தெலுங்கு, தமிழ், இந்தி என பிஸியாக இருக்கிறார் அதா ஷர்மா. தெலுங்கில் `ஷணம்' தெறி ஹிட். இவரை தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் சிம்பு. `இது நம்ம ஆளு’ படத்தில் டி.ஆர் பாடியிருக்கும் `மாமன் வெயிட்டிங்’ பாட்டுக்கு செம டான்ஸ் ஆடுகிறார் அதா. இந்தியில் `பர்ஃபி' இயக்குநர் அனுராக் பாசு இயக்கும் `ஜக்கா ஜசூஸ்' படத்திலும் பின்னுது பொண்ணு!

p20a.jpg

ஷூட்டிங்குக்காக ஐஸ்லாந்தில் மைனஸ் டிகிரி குளிரில் பனிப்பாறைகளின் மீது ஏறி, ரிஸ்க் எடுத்த அமைராவின் சாதனையை கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார் ஜாக்கி சான். `குங்ஃபூ யோகா'  என்னும் ஜாக்கி சான் படத்தில் அமைரா தஸ்தூர், சோனு சூட் எனப் பல இந்திய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். `இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிப்பீங்கனு எதிர்பார்க்கல. வெல்டன்’ என ஜாக்கியின் பாராட்டை ஸ்டேட்டஸாகத் தட்டி லைக்ஸ் அள்ளிக்கொண்டிருக்கிறார் அமைரா!

p20b.jpg

பிரபல எழுத்தாளர் கமலா சுரய்யா என்கிற மாதவிக்குட்டியின் வாழ்க்கை இப்போது திரைப்படமாகிறது. படத்தில் மாதவிக்குட்டியாக நடிக்க இருப்பது வித்யா பாலன். முக்கியக் கதாபாத்திரத்தில் ப்ரித்விராஜ் நடிக்கிறார். ஜே.சி.டேனியல் வாழ்க்கையைப் படமாக்கிய கமல்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார்!

p20c.jpg

`தட்டத்தின் மறயத்து' மெகா ஹிட்டுக்குப் பிறகு வினித் ஸ்ரீனிவாசன் - நிவின் பாலி இணைந்திருக்கும் படம் `ஜேகப்பின்டே ஸ்வர்க்கராஜ்யம்'. இந்தக் காலத்து இளைஞர் களுக்கும் அவர்கள் பெற்றோர் களுக்கும் இடையிலான உறவை அலசும் எமோஷனல் என்டர்டெயினர். படம் சம்மர் ரிலீஸ்!

p20d.jpg

முதல் நாள் ஷூட்டையே டீஸராக்கி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது தனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனனின் `என்னை நோக்கிப் பாயும் தோட்டா'. படத்தில் செம ஸ்டைலிஷ் கேங்ஸ்ட்ராக நடிக்கிறார் தனுஷ். `ஒரு பக்க கதை' படத்தில் நடித்திருக்கும் மேகா ஆகாஷ்தான் தனுஷுக்கு ஜோடி.  லேடி ஆண்டாள் பள்ளி, கிறிஸ்டியன் காலேஜில் படித்த பக்கா சென்னைப் பொண்ணு மேகா!

இயக்குநர் சத்யஜித் ரேவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றான `பதேர் பாஞ்சாலி’ படத்தின் கதை புத்தகம் ஆகிறது. அந்தப் படத்துக்காக ரே எழுதிய முதல் டிராஃப்ட் அப்படியே புத்தகமாக இருப்பதுதான் ஸ்பெஷல். `பதேர் பாஞ்சாலி’ படத்தின் விமர்சனங்களும் புத்தகத்தில் உண்டு.

vikatan

  • தொடங்கியவர்


பணம் எண்ணுவதில் ஒவ்வொரு நாட்டு மக்களிடமும் உள்ள வித்தியாசம்...
கடைசியாக வரும் நாட்டில் எப்படி என்னுராங்கன்னு பாருங்க
செம காமெடி கலக்கல் வீடியோ..

  • தொடங்கியவர்

பிரேசிலின் பிரபல கால்பந்து வீரர் பீலின் வாழ்க்கை வரலாறு படமாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பீலே படத்தின் டிரெய்லர்

  • தொடங்கியவர்

என்ன பிழைப்புடா இது!

 

ன்ன வேலைடா இதுனு உங்களுக்கு எப்பவாவது தோன்றி இருக்கிறதா? எப்பவுமே அப்படித்தான் தோணுதுன்னா, வேற வழியில்லை பாஸ். உலகத்துல நோகாம நோம்பி கும்பிடுதல்னு சில வேலைகள் இருக்கு. அப்படி இருக்கிற ஜாலி வேலைகள்...

p94b.jpg

red-dot%286%29.jpg கரடியை சந்தோஷமா வெச்சுக்கணும். இதுதான் பாஸ் வேலை. நிஜக்கரடிதான் ப்ரோ. ஆனா பெரிய கரடி இல்லை. குட்டி பாண்டா கரடிகள். சீனாவின் பாண்டா பாதுகாப்பு மையத்தில்தான் இந்த வேலை. குட்டிக் கரடிகளை சந்தோஷமா வெச்சுக்கணும். கரடிக்கு ஆயாவா இருக்கணும்கூட சொல்லலாம். சம்பளம் சுமார் 15 லட்சம்தானாம். மேற்படி ஊக்கத்தொகை வேற தர்றாங்களாம்!

p94d.jpg

red-dot%286%29.jpg இங்கிலாந்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் 27 வயதான ராய்சின் மேடிகனுக்கு கட்டிலில் படுத்துத் தூங்கி அதன் தரம் பற்றிச் சொல்வதுதான் வேலையாம். காலை பத்து மணி முதல், மாலை ஆறு மணி வரை நிறுவனத்தின் ஷோரூம்களில் இருக்கும் கட்டில்களில் படுப்பதுதான் வேலையாம். அப்புறம் என்னன்னு கேட்கறீங்களா? 1000 யூரோ சம்பளமாம் இந்த வேலைக்கு!

p94a%281%29.jpg

red-dot%286%29.jpg அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் வித்தியாசமான ஒரு வேலையை அறிவித்து இருந்தது. சுமார் 25,000 பேர் விண்ணப்பித்து இருந்த வேலையில், இறுதியாக ஐவானிக்கி என்பவர் தேர்வு செய்யப்பட்டார். நாசா தரும் கட்டிலில் 70 நாட்கள் தொடர்ச்சியாக படுத்துத் தூங்க வேண்டும். அந்த அறையைவிட்டு வெளியே செல்ல முடியாது. இதற்கு ஐவானிக்குக்கு பேசப்பட்ட சம்பளம் 10 லட்சம் ரூபாய்தான்!

red-dot%286%29.jpg சுவற்றில் பெயின்ட் அடித்ததும் என்றாவது அது காயும்வரை உட்கார்ந்து பார்த்து இருப்போமா? அப்படிப் பார்ப்பதும் ஒரு வேலையாம். ஆனால் இங்கு இல்லை, இங்கிலாந்தில். பெயின்ட் காய்ந்ததும் அது விழுகுதா இல்லை அப்படியே ஒட்டியிருக்குதான்னு வேற டெஸ்ட் பண்ணிச் சொல்லணுமாம். இதற்கு வெளியில் சொல்ல முடியாத அளவு சம்பளமாம்!

p94c.jpg

red-dot%286%29.jpg காமிக்ஸ் புத்தகத்தில் எல்லாம் கடற்கன்னி பற்றி படித்து இருப்போம். அமெரிக்காவுல சுமார் 1,000 பேர் கடற்கன்னியாக வேலை பார்க்கிறார்களாம். 22 கிலோ எடையிலான மீன் வாலை மாட்டிக்கொண்டு தண்ணியில் மிதக்கணும். இதான் பாஸ் வேலை. ஆரம்பத்தில் ஒருமணி நேரத்துக்கு 1,800 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர்கள், இப்போது ஹாலிவுட் பிரபலங்களான ஜெஸ்ஸிகா அல்பா, ஜஸ்இன் டிம்பர்லேக்  போன்றவர்களின் வீட்டு விழாக்களில் பல லட்சம் ரூபாய்க்கு மிதக்கிறார்களாம்.

red-dot%286%29.jpg இதே மாதிரி சாக்லேட் சுவை நல்லா இருக்கான்னு சொல்ற வேலை, காண்டம் நல்லா வேலை செய்யுதானு சொல்ற வேலைன்னு பலதரப்பட்ட வேலை இருக்காம் பாஸ்!

vikatan

  • தொடங்கியவர்

14257_1148874318486674_38226997493508067

  • தொடங்கியவர்

அ'சால்ட்' ஓவியங்கள்!

 

ஹோட்டலில் நாம் ஆர்டர் செய்தது வரும் வரை என்ன செய்வோம்? காத்திருப்போம்... ஆனால் ராப் ஃபிர்ரெல்ஸ் ஆக இருந்தால் ஓவியம் வரையலாம்! ஆம். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த  இவர்  வரைய பேப்பர், பென்சிலைத் தேடுவது இல்லை. டேபிள் சால்ட் இருந்தால் போதும், கிடுகிடுவென வரைந்து அசத்திவிடுகிறார்.

p51b.jpg

p51a.jpg

p51c.jpg

பிரஷ் மற்றும் கார்டு மட்டுமே வைத்துக் கொண்டு ஓவியத்தை உருவாக்கி, அதை உடனே போட்டோ எடுத்துவிடுகிறார். இப்படி வரைந்த ‘சால்ட் ஆர்ட்’களை உடனடியாக  இன்ஸ்டாகிராமில் (Instagram) அப்-லோடு செய்து லைக்ஸ் அள்ளுகிறார்.

-

vikatan

  • தொடங்கியவர்

12916290_1011201172261910_46606946855962

 
 
நம்ம செல்லத்துக்கு இன்று பிறந்தநாள்.

பயங்கர வில்லன், கலக்கல் நகைச்சுவையாளர், உருக வைக்கும் குணச்சித்திர நடிகர், பாசம் காட்டி அசர வைக்கும் 'செல்ல' பாத்திரங்கள் ஏற்கும் நடிகர் பிரகாஷ் ராஜின் பிறந்த தினம்

Happy Birthday Prakash Raj
  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

dot12.jpgஹீரோ இல்லாமல், ஹீரோயின் மட்டுமே நடித்து 100 கோடி ரூபாய் வசூல்செய்த முதல் படமாக சாதனை படைத்திருக்கிறது `நீர்ஜா’. சோனம் கபூர் நடித்த இந்தப் படம், இந்தியாவில் மட்டும் 73 கோடி ரூபாய் வசூல் செய்திருக்க, உலகம் முழுவதும் 100 கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. இப்போது சோனம் கபூரின் சம்பளமும் சிலபல கோடிகளைத் தாண்டிவிட்டதாம்! செஞ்சுரி கபூர்!

p67a.jpg

dot12.jpg  அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழரான ஸ்ரீஸ்ரீனிவாசன் நியமிக்கப்படுவார் என எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, மெரிக் கார்லேண்டை டிக் அடித்தார் பராக் ஒபாமா. வரும் நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதால், `புதிய நீதிபதியை நியமிக்கும் அதிகாரத்தை புதிய ஜனாதிபதிக்கு விட்டுத்தர வேண்டும்’ எனக் கொடிபிடிக்க ஆரம்பித்திருக்கிறது எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி. லிஸ்ட்டில் ஸ்ரீஸ்ரீனிவாசன் பெயர் முதல் இடத்தில் இருந்தாலும், `கார்லேண்ட் மிகவும் நேர்மையானவர், பண்பானவர். பரிந்துரையில் உள்ள மற்ற நீதிபதிகளைவிட கார்லேண்ட் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். எனவே, அவரைத் தேர்வு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ எனச் சொல்லியிருக்கிறார் ஒபாமா. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

dot12.jpg  உலகின் காஸ்ட்லி நகரங்கள் பட்டியலில்  தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் இடத்தை தக்கவைத்திருக்கிறது சிங்கப்பூர். இரண்டாவது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரமும், மூன்றாவது இடத்தை ஹாங்காங் நகரமும் நான்காவது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவும் பிடித்திருக்கின்றன. காஸ்ட்லி நகரங்களில் பல முறை முதல் இடத்தைப் பிடித்துள்ள ஜப்பான் தலைநகர் டோக்கியோ, இந்த முறை டாப் டென்னில்கூட இல்லை. இதே போல் உலகிலேயே செலவு குறைவான நகரமாக ஸாம்பியாத் தலைநகர் லுசாகா முதல் இடத்தில் இருக்க, இந்தியாவின் பெங்களுரூவுக்கு இரண்டாவது இடம் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் காஸ்ட்லி நகரமாகக் கருதப்படும் மும்பை, செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தப் பட்டியலில் சென்னை 6-வது இடத்தையும், இந்தியத் தலைநகர் டெல்லி 8-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன. காஸ்ட்லி சென்னை!

dot12.jpg  `ஃபேஸ்புக் லைக்ஸால் என்ன பிரயோஜனம்?’ என யாரும் இனிமேல் கேட்க முடியாது. `ஃபேஸ்புக்கில் குறைந்தது 25 ஆயிரம் ஃபாலோயர்ஸ் அல்லது லைக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே 2017 உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஸீட் கொடுக்கப்படும்’ எனச் சொல்லியிருக்கிறார் பா.ஜ.க தலைவர் அமித் ஷா. `ஃபேஸ்புக் மட்டும் அல்லாமல் ட்விட்டர் உள்ளிட்ட மற்ற சமூக வலைதளங்களிலும் அதிகமான ஃபாலோயர்ஸ் இருக்க வேண்டும். சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருக்க வேண்டும்’ எனச் சொல்லியிருக்கிறது பா.ஜ.க. இதனால் லைக்ஸ் வாங்குவதில் உ.பி காவிஸ் செம பிஸி! ஒரு லைக்குக்கு எவ்ளோ பாஸ்?

dot12.jpg  30 வருடங்களாக விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றியிருந்த `இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர்’ என்ற இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறார் ஹரிகிருஷ்ணா. ரஷ்யாவில் நடந்துவரும் `கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி’யில் ஆனந்த், ரஷ்யாவின் இளம் வீரர் செர்ஜியிடம் நான்காவது சுற்றில் தோல்வியடைய, புள்ளிகள் பட்டியலில் பின்தங்கினார். இதனால் புதிய ரேங்க் பட்டியலின்படி, இந்தியாவின் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹரி. செக் மேட்!

p67b.jpg

dot12.jpg  மில்லினியல்ஸின் டாப் சோஷியல் மீடியாவான இன்ஸ்டா கிராமில் அதிக ஃபாலோயர்ஸுடன் முதல் இடம் பிடித்திருக்கிறார் செலீனா கோமஸ். அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான கோமஸ், ஏழு கோடி ஃபாலோயர்ஸுடன் முதல் இடத்தில் இருக்கிறார். `செக்ஸி செல்ஃபிக்களால் முதல் இடம் பிடித்துக்கொண்டிருந்த மற்ற நடிகைகளைவிட க்யூட் போட்டோஸால் முதல் இடம் பிடித்திருக் கிறேன்’ என்கிறார் செலீனா. சிறு வயது போட்டோவுக்கு மட்டும் 30 லட்சம் லைக்ஸ் குவிந்ததும் செலீனாவின் சாதனைகளில் ஒன்று.  ஒரு போட்டோவுக்கு 30 லட்சம் லைக்ஸா, அம்மாடியோவ்!

p67c.jpg

p67d.jpg

dot12.jpg கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக லைம்லைட்டில் இருந்து ஒதுங்கி யிருந்ததற்கான காரணத்தைக்  கூறியிருக்கிறார், பாடகர் யோ யோ ஹனி சிங். `நான் போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டுவருகிறேன் எனப் பலரும் சொல்கிறார்கள். ஆனால், நான் ‘பைபோலார் டிஸ்ஆர்டர்’ எனும் மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தேன். என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன். பல மாதங்களாக வீட்டைவிட்டு எங்குமே செல்ல வில்லை. எத்தனையோ மேடைகளைப் பார்த்த எனக்கு, நான்கு பேரை சந்திக்கக்கூட தைரியம் இல்லாத அளவுக்குப் பாதிப்பு இருந்தது. நான் மீண்டுவர என்னுடைய அம்மாதான் காரணம். என்னை உருவாக்கிய ரசிகர்களுக்கு, நான் இதைச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு நன்றி சொல்ல இதுதான் சரியான தருணம்’ என தம்ஸ்அப் காட்டுகிறார் யோ யோ. வாங்க சிங், வந்து பாடுங்க சிங்!

p67e.jpg

p67f.jpg

dot12.jpg  விக்னேஷ் சிவன் மனதில் மட்டும் அல்ல, மொபைலிலும் `நயன்’தான் இருக்கிறார். `நானும் ரெளடிதான்’ ஹிட் பட இயக்குநர் என்பதைவிட, `நயன்தாராவின் பாய் ஃப்ரெண்டாம்ப்பா!’ என்பதுதான் விக்னேஷ் சிவனுக்கான அடையாளம். அடுத்த படத்திலும், நயனுக்கே `ஸ்டார்ட்... கேமரா... ஆக்‌ஷன்...’ சொல்லப்போகிறார் விக்னேஷ். கூடவே த்ரிஷாவையும் புக் பண்ணியிருக்கிறார் விக்னேஷ். ஆனால், `த்ரிஷாவும் எனக்கே... நயனும் எனக்கே...’ என டூயட் பாடப்போவது விஜய்சேதுபதி. நீங்க ஒரு ரொமான்ட்டிக் ரெளடி பாஸ்!

p67g.jpg

dot12.jpg  பவன் கல்யாண் நடிக்கும், ‘சர்தார் கப்பார் சிங்’ படம்தான் டாக் ஆஃப் தி டோலிவுட். முதன்முறையாக காஜல் அகர்வாலுடன் டூயட் பாடியிருக்கிறார் பவன். பவனின் சூப்பர் ஹிட்டான `கப்பார் சிங்’ படத்தின் இரண்டாம் பாகம்தான் இது. கடந்த வாரம் வெளியான படத்தின் டீஸர் ஆல்டைம்  ஹிட் அடிக்க, ஏக எதிர்பார்ப்பில் இருக்கிறது பவன் கல்யாண் ஃபேன்ஸ் கிளப். அப்ப, ‘ஒஸ்தி பார்ட்-2’ வருமா?

p67h.jpg

dot12.jpg  படங்களின் ப்ரிவ்யூ ஷோ பார்த்துவிட்டு, அழுதபடியே வெளியே வந்து, படத்தைப் புகழும் அமீர் கானின் ஸ்டைல் பாலிவுட்டின் செம ஜாலி கிச்சுகிச்சு. கடந்த வருடமே இப்படி அமீர் அழுத போட்டோக் களை எல்லாம் வைத்து நெட்டிசன்ஸ் கலாய்க்க, இப்போது மீண்டும் `கபூர் அண்ட் சன்ஸ்' படத்தைப் பார்த்துவிட்டு கண்கலங்கி யிருக்கிறார் அமீர். `நான் எமோஷனலான படங்கள் பார்க்கும்போது அழுது விடுவேன்' என அமீர் சொல்ல, `அதுசரி. வெளியே வரும் போதாவது கண்ணை துடைச் சுட்டு வாங்க’ என மீண்டும் மீம்ஸ் முளைக்க ஆரம்பித் திருக்கிறது. கொஞ்சம் சிரிங்க பாஸ்!

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இருக்கும் இடத்திலிருந்து இலங்கைத் தெருக்களில் இறங்கி நடக்க ஆசையா? இதோ Google Street View வீடியோ

  • தொடங்கியவர்

12525237_1011203098928384_22368650203411

 
அழகன், ரோஜா போன்ற அற்புதத் திரைப்படங்களின் அழகான கதாநாயகி.
மீண்டும் இப்போது திரைத்துறைக்கு வந்துள்ள நடிகை மதுபாலாவின் பிறந்தநாள்
  • தொடங்கியவர்

பாறையைத் திருமணம் செய்து கொண்ட விநோதப் பெண்

 


 

பாறையைத் திருமணம் செய்து கொண்ட விநோதப் பெண்

பாறையொன்றின் மீது ஏற்பட்ட அதீத ஈர்ப்பால் அதனை ஒரு பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் பிரபலமான கலைஞர் டிராசி எமினுக்கு (51) பாறைகள் என்றால் மிகவும் பிரியம்.
ஹொங்கொங்கில் ஒரு கண்காட்சியில் உள்ள பண்டைய கால பாறைகளைப் பார்த்த பிறகுதான் இவருக்கு பாறைகளின் மீது அதீத காதல் ஏற்பட்டுள்ளது.

இதனால், தனிமையில் வாழ்ந்து வந்த அவர் தற்போது ஒரு பாறையை திருமணம் செய்துள்ளதாக, உலகுக்கு அறிவித்துள்ளார்.

“நான் தனியாக இல்லை. ஒரு பாறையை திருமணம் செய்துகொண்டு அதனுடன் தான் வாழ்ந்து வருகிறேன். அந்த பாறை மிகவும் அழகானது. அந்த பாறை என்னுடனேயே எப்போதும் இருக்கும். மேலும் எனக்காக அது காத்திருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

12898419_1011213855593975_70541686752686

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளரும் முன்னாள் தலைவருமான ப்ரோஸ்பர் உத்செயாவின் பிறந்தநாள்.
Happy Birthday Prosper Utseya

  • தொடங்கியவர்

12891102_1011204288928265_42873425783128

பிரபலஹொலிவூட் நடிகை கைரா நைட்லியின் பிறந்தநாள்.
Happy Birthday Keira Knightley

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.