Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

1935883_1013976178651076_547218217284621

நடிகை அனன்யாவின் பிறந்தநாள்
Happy Birthday Ananyaa

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

1 கோடிக்கு நாய்க் குட்டிகள் வாங்கிய தொழிலதிபர்!

பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஒரு கோடி ரூபாய்க்கு நாய் குட்டி வாங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சதீஷ் கடபோம் என்ற அந்த தொழிலதிபர் சீனாவின் பீஜீங்கில் கொரியன் தோசா மஸ்தீப் என்ற‌ அபூர்வ இனத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி நாய்க் குட்டிகளை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

விமானம் மூலம் பெங்களூருவுக்கு கொண்டுவரப்பட்ட அந்த நாய்க் குட்டிகளை ரோல்ஸ் ராய்ஸ் காரில் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவர் சிகிச்சை அளித்தார். இதையடுத்து தொழிலதிபரின் பிரம்மாண்டமான வீட்டில் அந்த நாய்க் குட்டிகள் விளையாடி மகிழ்கின்றன.
  • தொடங்கியவர்
 
தமன்னாவின் ரொமான்ஸ் பிடிக்கும்:சமந்தா
 
 

article_1459227223-2.jpg

தமன்னா-சமந்தா ஆகிய இருவருமே தமிழ், தெலுங்கு திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்து வருகின்றனர். அவர்களுக்கிடையே தொழில் போட்டி இருப்பது போன்று அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. 

இதுகுறித்து சமந்தா கூறுகையில், 'சினிமாவில் என்னைப்போன்று எத்தனையோ நடிகைகள் நடித்து வருகின்றனர். நான் யாரையும் எனக்கு போட்டியாக நினைப்பதே இல்லை. இன்னொருவரின் திரைப்படத்தை நான் அபகரிக்க வேண்டும் என்றும் நினைத்ததே இல்லை. என்னைத்தேடி வரும் திரைப்படங்களில் மட்டுமே நடிக்கிறேன்.

இப்போதைய நடிகைகளில் என்னை அதிகமாக கவர்ந்த ஒரே நடிகை தமன்னா மட்டுமே. காரணம், அவர் கடுமையாக வேலை செய்வார். டெடிகேஷன் உள்ள நடிகை. நடிப்பு என்று வந்து விட்டால் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஆஜராகி விடுவார். 

இரவு பகல் என படப்பிடிப்பு நடந்தாலும் சளைக்காமல் நடிக்கக்கூடியவர். இதற்கெல்லாம் மேலாக ஹிந்தி பெண்ணான அவர் தமிழ், தெலுங்கு சரளமாக பேசுகிறார். அது பாராட்ட வேண்டிய விடயம்' அவர் செய்யும் ரொமான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்' என்று தமன்னாவைப்பற்றி அடுக்கிக்கொண்டே போகின்றதர் சமந்தா.

/www.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒரு பெண்ணை அறைய சொன்னால் இந்திய சிறுவர்கள் என்ன செய்வார்கள்?- சோதனை வீடியோ

  • தொடங்கியவர்
1981 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரொனால்ட் றீகன் சுடப்­பட்டார்
 

வரலாற்றில் இன்று

மார்ச் - 30

 

6951981-ronald.jpg1492 : ஸ்பெயினில் இருந்து அனைத்து யூதர்­களும் ரோமன் கத்­தோ­லிக்­க­ராக மாற வேண்டும். அல்­லது அனை­வரும் வெளி­யேற்­றப்­ப­டு­வார்கள் என்ற உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

 

1814 : பிரெஞ்சு மன்னன் நெப்­போ­லி­ய­னுக்கு எதி­ரான போரில் கூட்டுப் படைகள் பாரிஸ் நகரை அடைந்­தன.

 

1822 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் புளோ­ரிடா மாநிலம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1842 : சத்­தி­ர­ சி­கிச்­சை­களில் முதன்­மு­த­லாக மயக்க மருந்து அமெ­ரிக்க மருத்­துவர் குரோஃபோர்ட் லோங் என்­ப­வ­ரினால் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1858 : அழி இறப்­ப­ருடன் கூடிய எழு­து­கோ­லுக்­கான காப்­பு­ரிமம் ஹைமன் லிப்மன் என்­ப­வ­ரினால் பெறப்­பட்­டது.

 

1867 : அலாஸ்கா பிராந்­தியம் 7.2 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருக்கு, (சதுர கிலோ­மீற்­ற­ருக்கு  4.19 டொலர்), ரஷ்­யாவின் மன்னன் இரண்டாம் அலெக்­சாண்­ட­ரி­ட­மி­ருந்து ஐக்­கிய அமெ­ரிக்­காவின் அரசு செய­லாளர் வில்­லியம் செவார்ட் கொள்­வ­னவு செய்தார்.

 

695alaska.jpg1945 : இரண்டாம் உலகப் போரில் சோவியத் படைகள் ஆஸ்­தி­ரி­யா­வினுள் நுழைந்து வியன்னா நகரைக் கைப்­பற்­றின.

 

1949 : ஐஸ்­லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்­த­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து ரெய்க்­ஜாவிக் நகரில் கல­வரம் இடம்­பெற்­றது.

 

1965 : வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெ­ரிக்கத் தூத­ர­கத்­துக்கு முன்னால்  குண்­டொன்று வெடித்­ததில் 22 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1981 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி றொனால்ட் றேகன் வொஷிங்­டனில் வைத்து ஜோன் ஹிங்­கிளி என்­ப­வனால் மார்பில் சுடப்­பட்டு காய­ம­டைந்தார்.

 

2006 : பிரிட்­டனில் பயங்­க­ர­வாத தடைச் சட்டம் அமு­லுக்கு வந்­தது.

 

2009 : பாகிஸ்­தானின் லாகூர் நகரில் பொலிஸ் நிலையமொன்றில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்கு தலின் போது 8 தீவிரவாதிகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர், 95 பேர் காயமடைந்தனர்.

www.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

செல்ஃபி வித் ஷிவா: கோலியின் போட்டோவுக்கு 20 லட்சம் லைக்ஸ்

 

இந்திய அணியின் துணைக்கேப்டன் விராட் கோலி ஃபேஸ்புக்கில் பதிவிட்ட போட்டோவுக்கு 20 லட்சம் லைக்குகள் 10 மணிநேரத்தில் குவிந்துள்ளது. கோலி இந்திய அணியின் கேப்டன் தோனியின் குழந்தையோடு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

12670353_1014182618668841_71745276093415

Virat Kohli
vor 16 Stunden

With Baby Dhoni
She is too cute and adorable!

 


இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் தோனியின் குழந்தை  ஷிவாவின் போட்டோக்களில் அதிக லைக் இந்த போட்டோவுக்கு தான். தோனி தனது ஃப்ரோஃபைல் போட்டோவாக ஷிவாவின் படத்தை தான் வைத்துள்ளார். அதற்கு 11 லட்சம் லைக்குகள் வந்துள்ளன. கோலி நேற்று அனுஷ்கா ஷர்மாவுக்கு ஆதரவாக செய்த பதிவுக்கு கூட 5 லட்சம் லைக்குகள் தான் வந்தது. ஆனால் கோலி ''பேபி தோனி க்யூட்'' என பதிவு செய்த போட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அவசரப்பட்ட நடுவர்களை அசரவைத்த போட்டியாளர்...!

 

 "காட் டேலண்ட்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஸ்விட்சர்லாந்தில் பிரபலம். இதில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர், ஓவியம் ஒன்றை வரையத் தொடங்கினார். சில நொடிகளில், அவருடைய ஓவியம் மிகவும் குழந்தைத்தனமாகத் தெரியவர, நடுவர்கள் ஒருவர் பின் ஒருவராக "ரிஜெக்டட்" பட்டனை அழுத்தினர்.

நான்கு நடுவர்களும் ரிஜெக்டட் பட்டனை அழுத்திய பிறகும் மிக வேகமாக ஓவியத்தை வரைந்து முடித்து, அதனை தலைகீழாக்கி, அதன் மீது சாக் பொடியினைத் தூவினார் போட்டியாளர். அவ்வளவுதான், அதுவரை மிகவும் வேடிக்கையான ஒரு ஓவியமாக இருந்த அந்த ஓவியம் திடீரென, ஒரு ஆணின் முகத்தை கொண்ட மிக அழகான ஓவியமாக மாறியது.

ஆச்சர்யத்தால் வாயடைத்துப்போனார்கள் நடுவர்கள். தங்களின் தவறை உணர்ந்த அவர்கள், அந்த போட்டியாளரை கட்டித் தழுவி தங்களின் வருத்தத்தினை தெரிவித்தனர்.

vikatan

  • தொடங்கியவர்

அதிரடி வீரர் கெயிலுக்கு அமிதாப் விருந்து வைத்த ரகசியம் இதுதான்!

 

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை தனது வீட்டிற்கு அழைத்து இரவு விருந்து அளித்து அசத்தியுள்ளார் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன்.
 

GaylemeetsAmitabh.jpg

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் உலகக்கோப்பை அரையிறுதி போட்டி,  மும்பையில் நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக மேற்கிந்திய அணி மும்பையில் முகாமிட்டுள்ளது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன்னுடைய ரசிகரான கிறிஸ் கெய்லை தனது வீட்டுக்கு அழைத்து இரவு விருந்து அளித்துள்ளார். இது குறித்து குறித்து கெய்ல் தனது இன்ஸ்டகிராமில்,  "என்னை வீட்டிற்கு அழைத்ததற்கும், உபசரிப்பு வழங்கியதற்கும் நன்றி. பாஸ், (அமிதாப்பச்சன்) அரையிறுதியில் நான் சதம் அடிக்க வேண்டும் என்றும், அதேசமயம் இந்தியா வெற்றி பெற வேண்டும் எனவும் விரும்புகிறார். ஆனால் என்னுடைய சதத்தை விட இந்தியாவிற்கு எதிராக வெற்றி பெறுவதையே நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

vikatan

  • தொடங்கியவர்
 
 

வரலாற்றில் இன்று

மார்ச் - 31

 

696varalaru1.jpg1492 : ஸ்பெயினில் இருந்து அனைத்து 150,000 யூதர்­களும் ரோமன் கத்­தோ­லிக்­க­ராக மாற வேண்டும் அல்­லது அனை­வரும் வெளி­யேற்­றப்ப­டுவர் என இச­பெல்லா மகா­ராணி உத்­த­ர­விட்டார்.

 

1866 : சிலியின் வல்­ப­ரைசோ துறை­முகம் ஸ்பானிய கடற்­ப­டையின் குண்டுத் தாக்­கு­த­லுக்­குள்­ளா­னது.

 

1889 : பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக திறக்­கப்­பட்­டது.

 

1909 : பொஸ்­னியா - ஹேர்­செ­கோ­வினா மீதான ஆஸ்­தி­ரி­யாவின் கட்­டுப்­பாட்டை சேர்­பியா ஏற்றுக் கொண்­டது.

 

1917 : ஐக்­கிய அமெ­ரிக்கா டேனிஷ் மேற்­கிந்­தியத் தீவு­களை டென்­மார்க்­கிடம் இருந்து 25 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்குக் கொள்­வ­னவு செய்து அமெ­ரிக்க கன்னித் தீவுகள் (வேர்ஜின் ஐலன்ட்ஸ்) எனப் பெயர் மாற்­றி­யது.

 

1918 : அஸர்­பை­ஜ­னாவில் ஆர்­மே­னிய புரட்சிப் படை­யி­னரால் சுமார் 12,000 முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டனர்.

 

1918 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் பக­லொளி சேமிப்பு நேரம் முதல் தட­வை­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1931 : நிக்­க­ர­கு­வாவின் தலை­ந­க­ர­மான மனா­கு­வாவில் இடம்­பெற்ற பூகம்­பத்­தினால் 2,000 பேர் வரையில் கொல்­லப்­பட்­டனர்.

 

1942 : இரண்டாம் உலகப் போர்: ஜப்­பா­னி­யர்கள் கிறிஸ்மஸ் தீவை பிரித்­தா­னி­யா­விடம் இருந்து கைப்­பற்­றினர்.

 

1951 :  யூனிவாக் 1 என்ற முத­லா­வது ஐக்­கிய அமெ­ரிக்­காவின் வர்த்­தகக் கணினி அந்­நாட்டு மக்கள் தொகைக் கணக்­கெ­டுப்பு நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்­டது.

 

1959 : திபெத்தின் 14ஆவது தலாய் லாமா டென்சின் கியாட்ஸோ, எல்­லையைக் கடந்து இந்­தி­யா­வினுள் நுழைந்து அர­சியல் தஞ்சம் கோரினார்.

 

1966 : சோவி­யத்தின் லூனா 10 விண்­கலம் சந்­தி­ரனை நோக்கி ஏவப்­பட்­டது. இதுவே சந்­தி­ரனின் சுற்­று­வட்­டத்தை வலம் வந்த முத­லா­வது விண்­க­ல­மாகும்.

 

1970 : 12 ஆண்­டுகள் விண்­வெ­ளியில் இருந்து விட்டு எக்ஸ்­பு­ளோரர் 1 புவியின் வளி­மண்­ட­லத்துள் வந்­தது.

 

1979 : கடைசி பிரித்­தா­னியப் படை­யினர் மோல்ட்­டாவை விட்டு வில­கினர். மோல்ட்டா சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது.

 

1986 : மெக்­ஸி­கோவில் இடம்­பெற்ற விமான விபத்தல் 167 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1990 : இந்­திய அமைதிப் படை இலங்­கை­யி­லி­ருந்து  வெளி­யே­றி­யது.

 

1991 : சோவியத் யூனி­ய­னி­லி­ருந்து பிரி­வ­தற்கு ஆத­ர­வாக ஜோர்­ஜி­யாவின்  99 சத­வீ­த­மான வாக்­கா­ளர்கள் வாக்களித்தனர். 

 

1995 : அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகிகளில் ஒருவரான செலீனா பேரெஸ், தனது ஊழியரான பெண் ஒருவரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

 

2007 : முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது.

-metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பறவை நோக்குதல்!

 

நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் என்பது 24 மணி நேரங்கள். தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற எல்லா நேரமும் வேலையின் பொருட்டு நாம் பரபரத்துக் கொண்டே இருக்கிறோம். “ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம் பத்தவே மாட்டேங்கிதே” என்று நாம் ஒரு முறையாவது வாய்விட்டு சொல்லியிருப்போம். தங்கள் வேலையை பார்க்கவே நேரமில்லாதவர்கள், ஹாபி பற்றியெல்லாம் யோசிக்கக்கூட மாட்டார்கள்!

bird1.jpg

“ஹாபி” என்பது நம் வழக்கமான வேலை நேரம் தவிர்த்து ஓய்வு நேரத்தில் மனமகிழ்ச்சிக்காக ஒருவித புத்துணர்ச்சிக்காக செய்யப்படும் ஒரு செயல். 

“உங்க ஹாபி என்ன?” என்று கேட்டு முடிப்பதற்குள் “டி.வி” என்றும் மொபைல் நோண்டுவது என்றும் பதில் வருகிறது. ஒன்றிரண்டு பேர் புத்தகம் வாசிப்பது, அஞ்சல் தலை, பழைய நாணயங்கள் சேகரிப்பு போன்றவை தங்கள் ஹாபி என்று கூறுகின்றனர். பெரும்பாலனவர்களின் “ஹாபி” இதற்குள்ளே அடங்கிவிடுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பாட்டு, நடனம், கராத்தே, யோகா என எல்லா வகுப்புகளுக்கும் கலந்துகட்டி அனுப்பி வைக்கின்றனர். குழந்தைகள் இதில் எதை முழுமையாக உள்வாங்குவார்கள்?

bird2.jpg

இந்த உலகில் நாம் மட்டும் வாழவில்லை. நம்மைத் தவிர எத்தனை உயிர்கள் நம் அருகிலேயே வாழ்கின்றன, நாம் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன என்று ஒரு நிமிடம் யோசித்து பார்ப்போம். பறவைகள்...பறவைகள் இல்லாத ஒரு உலகை நம்மால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. நாமோ அவற்றை சர்வசாதாரணமாக கடந்துகொண்டிருக்கிறோம். பறவைகளுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட மனிதரான சலிம் அலியை கொண்ட நாடு இது. நாமோ பறவைகள் குறித்த சிறு பிரக்ஞைகூட இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

பறவை நோக்குதலும் கூட ஒரு ஹாபி தான். மிகமிக எளிமையான ஹாபியும் கூட. ஒரு விஷயத்தை ஜஸ்ட் பார்ப்பதற்கும், அதையே கவனிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒரு விஷயத்தை எப்போது நாம் வெறுமென பார்ப்பதிலிருந்து கவனிக்க ஆரம்பிக்கிறோமோ அப்போது புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறோம்.

bird3.jpg

புத்தக வாசிப்பு, ஸ்டாம்ப் கலெக்டிங் போன்ற வழக்கமான ஹாபிகளில் இருந்து பறவை நோக்குதல் முற்றிலும் வேறுபட்டது. பறவை நோக்குதலில் நாம் பறவையை மட்டும் பார்ப்பதில்லை, அதில் ஈடுபடுவதால் இயற்கையை சிறிதளவேனும் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.

பறவை நோக்குதல் பற்றிய அட்டகாசமான ஒரு அறிமுக கையேட்டினை ஈ-புக்-ஆக வெளியிட்டிருக்கிறார் “கொழந்த” சரவண கணேஷ்.

கொழந்த டாட் காம் (kolandha.com) என்ற பெயரில் ப்ளாக் எழுதிவரும் சரவண கணேஷுக்கு ஃபோட்டோகிராபி தான் ஹாபி. அதுவே பறவைகளை புகைப்படம் எடுக்க ஆரம்பித்ததில் தடம் மாறி பறவை நோக்குதலில் ஈர்ப்பு ஏற்பட்டு இன்று பறவை நோக்குதலில் தான் கற்றுக்கொண்ட விஷயங்களையும் அதன் அடிப்படைகளையும் மிக எளிமையாக குழந்தைகளுக்கும் புரியும்படியாக ஈ-புக் ஆக வெளியிடும் அளவு பறவைகளின் காதலனாகி இருக்கிறார்.

இந்த ஈ-புக்கை இலவசமாக டௌன்லோட் செய்துகொள்ளும் விதமாகவும் தன் ப்ளாக்-இல் பதிவேற்றி இருக்கிறார். புத்தகத்திற்கு “கா ஸ்கொயர்” (காகா) என்று பெயரிட்டுள்ளார்.

bird4.jpg

“கா ஸ்கொயரில் பறவை நோக்குதல் பற்றிய சில அடிப்படையான விஷயங்களை என் அனுபவத்தில் இருந்து சொல்லியிருக்கிறேன். பறவை நோக்குதல் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது” என்று கூறும் சரவண கணேஷ் “தனிப்பட்ட ஆர்வம், பொழுதுபோக்கு என்பதையெல்லாம் தாண்டி பறவைகள், விலங்குகள், காடுகள் என்று சூழலியல் பற்றிய பரந்துபட்ட பார்வையையும், அக்கறையும் தீவிரப்படுத்த வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். படிப்பவர்களிடம் சூழலியல் சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்த முயல்வதே இந்த புத்தகத்தின் நோக்கம்” என்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விடுமுறை நாட்களில் பறவைகள் அதிகம் வரும் இடங்களுக்கு அழைத்து சென்று பறவைகள் பற்றியும் சூழலியல் பற்றியும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று முடிக்கிறார் கொழந்த கணேஷ்!

கா ஸ்கொயர் PDF வடிவில்: https://docs.google.com/uc?id=0Bwum8gbunJGsYk1KZlNCUk8wZVk&export=download

சரவண கணேஷின் பறவைகள் புகைப்படங்கள்: https://www.facebook.com/saravanaganesh18/media_set?set=a.4740234280511.1073741829.1734567300&type=3

vikatan

  • தொடங்கியவர்

12719232_1016003198448374_63089967024035

கண்ணழகியாக பலரைக் கவர்ந்திழுக்கும் நடிகை ஜனனி ஐயரின் பிறந்தநாள்

 

  • தொடங்கியவர்

டோனி விளையாடுவதை நேரில் பார்க்க வரும் மகள்!

டோனி விளையாடுவதை நேரில் பார்க்க வரும் மகள்!

மும்பையில் இன்று நடைபெறும் டி20 உலகக் கிண்ண தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவுடன் மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இந்த போட்டி மீது பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டிகளை தவிர பெரும்பாலும் இந்திய அணி வீரர்களின் குடும்பத்தினர் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண வருவது இல்லை. ஒருவேளை இந்திய அணி தோற்றுவிட்டால் தாங்கள் குறிவைக்கப்படலாம் என்ற பயம் தான் இதற்கு காரணம்.

இந்நிலையில் இந்திய அணியின் தலைவர் டோனியின் மனைவியும் அவரது மகளும் (ஷியா) இன்று போட்டியை நேரில் காண மும்பை வரவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஷியா கிரிக்கெட் விளையாட்டை ஓரளவு புரிந்துக்கொள்ள ஆரம்பித்திருப்பதாகவும், டோனிக்கும் இது உந்துசக்தியாக இருக்கும் என்றும் ஷியாவின் மாமா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே டோனியின் சொந்த நகரமான ராஞ்சியில் உள்ள ரசிகர்கள் இந்தியாவின் வெற்றியை கொண்டாட தயாராகி விட்டார்கள்.
  • தொடங்கியவர்

மார்ச் 31, 1889: ஈபில் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட தினம் இன்று!

1482783_1105687699490019_359885613832603

 

அளவில்லாத தன்ன நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டான கஸ்டவ் ஈபில். இளம் வயதில் மிகவும் சுமாரான மாணவராக இருந்த மனிதருக்கு பொறியியல் சீட் கிடைக்கவில்லை .ஆர்ட்ஸ் பக்கம் கரை ஒதுங்கினார் .பாலிடெக்னிக் பக்கம் நுழையலாம் என்றால் அதற்கு தகுதியில்லை என்று ஆசிரியர்கள் சொல்லிவிட்டார்கள் .ரொம்பவும் கடினப்பட்டு தொழிற்பயிற்சி பெற்று வெளியே வந்தார் ;பாலம் ஒன்றை கட்டுவதில் கலக்கி எடுத்தார் .உலக வணிக பொருட்காட்சியில் கண்ணைக்கவர ஒரு கோபுரத்தை உருவாக்க வேண்டும் என சிலர் திட்டம் போட்டு கொடுத்தார்கள் .அதற்கான உரிமையை இவர் பெற்று மாற்றங்கள் செய்தார் ;இவர் சொதப்பி விடுவார் என சொன்னார்கள் .அரசாங்கம் கேட்ட ஆறரை லட்சத்தில் கால்வாசியை தான் கொடுத்தது முதலைப்போட்டு கட்டி பின் இருபது வருடம் அதை கஷ்டப்பட்டு மக்களிடம் இருந்து வசூலித்தார்

இன்னொரு கூட்டம் "கலை அழகு மிகுந்த பாரிசில் கருப்பு அசிங்கமாக அது இருக்க வேண்டுமா" என குரல் எழுப்பினார்கள் ."அது பிரெஞ்சு புரட்சிக்கு நன்றி தெரிவிப்பதாக இருக்கும் .இப்பொழுது வருகிற நூற்றாண்டை குறிக்கும் ; பிரமிட் எகிப்துக்கு போல நமக்கு இது அமையும் "என்றார் இந்த அளவுக்கு நவீன வசதிகள் இல்லாத சூழலில் 300 வேலையாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தி வேலையை முடித்தார்கள் .கட்டுமானத்தின் பொழுது ஒரே ஒரு நபர் தான் இறந்து போனார். ஈபில் பெயராலே அக்கோபுரம் எழுந்தது.

அமெரிக்க விடுதலை பெற்று நூறு வருடம் ஆனதன் பொருட்டு ஒரு சிலையை பரிசளிக்க பிரெஞ்சு மக்கள் முடிவு செய்தார்கள். நிதி திரட்டுவது தான் சிக்கலாக இருந்தது. அமெரிக்காவில் பல்வேறு நாடகங்கள் மூலமும், புலிட்சர் பரிசு உருவாக காரணமான ஜான் புலிட்சர் தன் பத்திரிக்கையில் விளம்பரபடுத்தி நிதி சேர்த்தார் ஈபிள் கோபுரத்தை வடிவமைத்த நம் குஸ்தாவ் ஈபில் சிலையை வடிவமைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார் ; பீடம் அமெரிக்காவில் வடிவமைக்கபட்டது; சிலை கப்பலின் மூலம் அமேரிக்கா வந்து சேர்ந்தது. முழுவதுமாக அல்ல ; பாகம் பாகமாக கொண்டுவரப்பட்டு பின் இணைக்கப்பட்டது. பொறியியல் படிக்க லாயக்கில்லாதவர் என குறிக்கப்பட்ட ஈபில் கைவண்ணத்தில் சுதந்திர தேவி சிலை மற்றும் ஈபில் கோபுரங்கள் எழுந்து நிற்பது சுவையான முரண்.

vikatan

  • தொடங்கியவர்

புகழ்பெற்ற ஓவியர் வான் கோவின் வாழ்வைச் சொல்லும் திரைப்படம் ஒன்று அவரது ஓவியங்களை வைத்தை உருவாக்கியிருக்கிறது. லவிங் வின்சென்ட் என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்காக 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

12916786_1015987405116620_79442333551846

உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படும், தென் ஆபிரிக்க டெஸ்ட் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், அண்மைக்காலத்தில் சாதனைகளை நிலைநாட்டி வருபவருமான ஹாஷிம் அம்லாவின் பிறந்தநாள்.
Happy Birthday Hashim Amla

  • தொடங்கியவர்

கெயிலைக் கேலி செய்யும் இந்தியா !!- மீண்டும் ஆரம்பித்துள்ள மௌக்கா

  • தொடங்கியவர்

 

கொரில்லாக் குட்டியும் மனித அம்மாவும்: ஒரு உண்மைக்கதை

குழந்தை சேஷ்டைகள் தெரியும்; கொரில்லாக்குட்டியின் சேஷ்டைகள் தெரியுமா?

சொந்த அம்மாவுக்கு பேறுகாலத்தில் திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த கொரில்லாக்குட்டி ஒன்று மனித அம்மாவிடம் பாசமாய் வளர்கிறது.

பொதுமக்களின் வாக்கெடுப்பு மூலம் அஃபியா என்று இந்த குட்டிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. கானா மொழியில் வெள்ளிக்கிழமை குழந்தை என்று பொருள்.

சென்றமாதம் (பிப்ரவரி 2016) ஒரு வெள்ளிக்கிழமையன்று தான் இவரது தாய் பேறுகாலத்தில் உடல் நலமில்லாமல் போக அபூர்வமான சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது அஃபியா.

இதன் தாய்க்கு உடல்நிலை சரியாகும்வரை இங்கிலாந்தின் பிரிஸ்டல் மிருகக்காட்சி சாலை பணியாளர்கள் தான் இதை பராமரிக்கவேண்டும். அந்த பணியை செய்கிறார் இரண்டு குழந்தைகளின் தயான லிண்ட்ஸி பக். பிரிஸ்டல் மிருகக்காட்சி சாலையின் பாலூட்டி பராமரிப்பாளர் இவர்.

பகலில் மட்டுமல்ல, இரவில்கூட இதை வீட்டுக்கு எடுத்துச் சென்று அழும்போதெல்லாம் பால் புகட்ட வேண்டும்.

அஃபியாவும் தானும் வீட்டின் கீழ்தளத்தில் தனியாக உறங்குவதாகவும் தன் கணவரும் இரண்டு மனிதக் குழந்தைகளும் முதல் தளத்தில் தனியாக தூங்குவதாகவும் பிபிசியிடம் தெரிவித்தார் லிண்ட்சி.

"மாலையில் போய் படுக்கையைத் தயார் செய்தபடியே தொலைக்காட்சியை பார்ப்பேன், டீ போடுவேன்... இதற்கு மத்தியில் குறிப்பிட்ட இடைவேளையில் இதற்கு பால் புகட்டுவேன். கிடைக்கும் நேரத்தில் குட்டித்தூக்கம் போடுவேன். கைக்குழந்தை இருந்தால் எப்படி தூக்கம் போகுமோ அப்படித்தான் இதுவும். ஒருவகையில் இது என் மூன்றாவது குழந்தை மாதிரி தான்," என்றார் லிண்ட்சி.

அஃபியாவை அதன் கொரில்லா குடும்பத்தோடு சேர்க்க வேண்டும் என்பதே மிருககாட்சி சாலை பராமரிப்பாளர்களின் பிரதான நோக்கம். ஆனால் அதற்கு சில மாதங்கள் பிடிக்கலாம்.

ஒருவேளை அஃபியாவின் சொந்த அம்மா இதை வளர்க்க விரும்பாவிட்டால் அதன் சித்தி ரொமினா இதனிடம் அன்புகாட்டுவதால் அது இந்த குட்டியை வளர்க்க முயலலாம்.

ஆனால் இப்போதைக்கு மனித அம்மாவான லிண்ட்சியின் மடியே குட்டி கொரில்லா அஃபியாவுக்கு தாய்மடியாய் இருந்து தாலாட்ட வைக்கிறது.

BBC

  • தொடங்கியவர்

மார்ச் 31: இயற்பியலின் பிதாமகர் நியூட்டன் நினைவு தினம் இன்று - சிறப்பு பகிர்வு

 

நியூட்டனை இயற்பியலின் பிதாமகர்களில் ஒருவர் என்று தான் இவரை சொல்ல வேண்டிருக்கிறது . பள்ளிக்காலத்தில் மக்குப்பையனாக அம்மாவின் அன்புக்கு ஏங்கிக்கொண்டு இருந்த இவர் இவ்வளவு பெரிய மேதையாக உருவெடுப்பார் என்றால் அப்பொழுது யாரும் நம்பி இருக்க மாட்டார்கள் தான் ..

மண்டையின் மீது ஆப்பிள் விழுந்தது ;புவி ஈர்ப்பு விசை கண்டுபிடிப்பு நிகழ்ந்தது .அது பூமி சூரியனை சூற்றி வருகிறது என்பதை சந்தேகமின்றி நிரூபித்தது .இவர் எழுதிய Philosophiæ Naturalis Principia Mathematica நூல் தான் மெக்கானிக்ஸ் துறையின் வேதமானது . சூரிய ஒளியில் எழு வண்ணங்கள் உள்ளன என நிரூபிக்கவும் செய்தார் .பயன்படுத்த தகுந்த தொலைநோக்கியையும்
நியூட்டன் வடிவமைத்தார் .

newton_1.jpg

ஹாலி தன்னுடைய வானியல் சார்ந்த குழப்பங்களுக்கான விடையை தேடிக்கொண்டு இருந்த பொழுது அதை நியூட்டன் ஏற்கனவே கண்டுவிட்டதை கண்டு பூரித்தார். அதை வெளியே கூட வெளியிடாமல் தன்னுடைய வேலையில் மூழ்கி இருந்தார் நியூட்டன். ஒரே சமயத்தில் தனித்தனியாக கால்குலஸ் எனும் அற்புதத்தை லிப்னிட்ஸ் மற்றும் நியூட்டன் கண்டார்கள். யார் அதை கண்டுபிடித்தது என்று சண்டை வேறு போட்டுக்கொண்டார்கள். நியூட்டன் பிறருக்கு அதை சொல்லித்தரவோ, எளிமையாக்கவோ மறுக்க லிப்னிட்ஸ் அதை அன்போடு செய்தார்.

உலகின் பெருமைக்கு உரிய ட்ரினிட்டி கல்லூரியின் மிக முக்கிய பொறுப்பில் இருந்த பொழுது அரசர் முதலிய யாருடைய பரிந்துரைக்கும் அடிபணிந்து பட்டம் வழங்க உறுதியாக மறுத்தார். அரசாங்க கஜானாவின் பொறுப்பாளராக இருந்து கள்ளப்பணம் புழக்கத்தில் ஈடுபட்டுவர்களை தூக்கு மேடைக்கு அனுப்பிய கறாரான இன்னொரு முகமும் அவருக்கு இருந்தது.

இறுதி வரை நியூட்டன் திருமணமே செய்து கொள்ளவில்லை . அவருக்கு உடலுறவு கொள்வதற்கான பயமான எரோடோபோபியா இருந்ததாக சொல்வார்கள் .தன்னை அறிவெனும் கடலின் ஓரத்தில் கிளிஞ்சல் பொறுக்கும் சிறுவனாகவே சொல்லிக்கொண்டார் அவர் . அவர் கூச்ச சுபாவம் கொண்டவாரகவே இருந்தார். தன்னை ரஷ்ய மன்னர் சந்திக்க விரும்பிய பொழுது ஹாலியை தான் அதற்கு அனுப்பி வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினராக அவரை நியமித்த பொழுது ஒரே ஒரு முறை தான் அவர் பேசினார் ; அது என்ன தெரியுமா ? "ஒரே புழுக்கமாக இருக்கிறது. ஜன்னலைத் திறக்க சொல்லுங்கள் ப்ளீஸ் !"

அலெக்சாண்டர் போப்பின் கவிதை தாங்கிய கல்லறையின் மீது தான் நியூட்டன் மீளாத்துயில் கொண்டிருக்கிறார்

இயற்கை மற்றும் இயற்கையின் ரகசியங்கள் இருளில் மூழ்கி இருந்தன கடவுள் நியூட்டனை அனுப்பினார்
உலகத்தின் ரகசியங்கள் மீது ஒளி பாய்ந்தன !

vikatan

  • தொடங்கியவர்

பறக்கத் தயாராகிறது உலகின் மிகப்பெரிய விமானம்!

 

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹைப்ரிட் ஏர் வெஹிகல்ஸ் எனும் நிறுவனம், தனது தயாரிப்பான 'ஏர்லேண்டர் 10' விமானத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 85 அடி உயரமும் கொண்ட ஏர்லேண்டர் 10, உலகின் மிகப்பெரிய விமானமாகக் கருதப்படுகிறது. விமானம், ஹெலிகாப்டர் மற்றும் காற்றை விட குறைவான எடை கொண்ட வான்களம் என மூன்றையும் கலந்து செய்த கலவையாக இது உள்ளதால், இதனை "ஹைப்ரிட்  வெஹிக்கல்" என்கின்றனர்.

ராணுவ உபகரணங்களை மிகவும் தொலைவான பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்கும், கண்காணிப்புக்கும், ஆடம்பர  பயணங்களுக்கும் ஏற்ற விமானமான ஏர்லாண்டர் 10, அதிகபட்சமாக  20,000 அடிகள் உயரத்திற்கு பறக்கவல்லது. போயிங் 747 விமானத்தைக் காட்டிலும், அறுபது அடிகள் நீளமாக இருந்தாலும், வேகத்தில் ஏர்லேண்டரால், அதன் அருகில் கூட நெருங்க முடியாது. ஒரு மணி நேரத்திற்கு 148 கி.மீ வேகத்தில்தான் ஏர்லேண்டரால் பறக்கமுடியும்.

flioght100.jpg

மிகக் குறைவான உயரத்தில் பறப்பதால் ஜன்னல்கள் திறந்த நிலையில் கூட இருக்கலாம் எனவும், வேடிக்கை பார்த்தபடியே பயணம் செய்வதற்கு ஏர்லேண்டர் மிகவும் ஏற்ற விமானம் எனவும் ஹைப்ரிட் ஏர் வெஹிகல்ஸ் நிறுவனத்தின்  தலைமை பொறுப்பில் உள்ள க்ரிஸ் டேனியல்ஸ் கூறியுள்ளார்.       

ஹீலியம் எனப்படும் வாயுவைக் கொண்டு இயங்கும் இந்த விமானம், வானில் ஒரே இடத்தில்,  மூன்று வாரங்கள் வரை தங்கக்கூடியது. இது, புல்லட் கொண்டு தாக்கப்பட்டாலும், அதை தாங்கிக் கொள்ளும். சத்தமின்றி, மாசுபடுத்தாமல் பறக்கும் இவ்வகை விமானங்கள்தான் எதிர்கால பயணங்களுக்கு ஏற்றவையாகக் கருதப்படுகின்றன. 35.6 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஏர்லேண்டர், இன்னும் சில மாதங்களில் இங்கிலாந்தில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இந்த வாரம்

  • தொடங்கியவர்
2004 : ஜிமெயில் சேவை பொதுமக்கள் பாவனைக்கு வந்தது
 

வரலாற்றில் இன்று...

ஏப்ரல் - 01

 

697varalaru-gmail.jpg1793 : ஜப்பானில் உன்சென் எரிமலை வெடித்ததையடுத்து ஏற்பட்ட பூகம்பத்தினால் 53,000 பேர் கொல்லப்பட்டனர்.

 

1867 : சிங்கப்பூர், பிரித்தானிய குடியேற்ற நாடாகியது.

 

1873 : அட்லாண்டிக் என்ற பிரித்தானியாவின் நீராவிக் கப்பல் கனடாவில் நோவா ஸ்கோஷேயில் மூழ்கியதில் 547 கொல்லப்பட்டனர்.

 

1924 : அடோல்ஃப் ஹிட்லர் ஐந்தாண்டு சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் அவர் 9 மாதங்களில் விடுதலையானார்.

 

1937 : யேமனின் ஏடென் பிரித்தானிய குடியேற்றப் பிராந்தியமாகியது.

 

1939 : ஸ்பானிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

 

1945 : இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் படைகள் ஜப்பானின் ஒக்கினவா தீவுகளில் இறங்கினர்.

 

1946 : அலூஷன் தீவுகளில் நிகழ்ந்த 7.8 அளவு பூகம்பம் காரணமாக ஹவாய் தீவுகளில் ஆழிப்பேரலை ஏற்பட்டு 157 பேர் கொல்லப்பட்டனர்.

 

1946 : மலாய் கூட்டமைப்பு உருவானது.

 

1949 : சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீனத் தேசியக் கட்சியுடன் பெய்ஜிங்கில் நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தன.

 

1957 : இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

1976 : அப்பிள் கணினி நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸ், ஸ்டீவ் வொஸ்னியாக் மற்றும் ரொனால்ட் வெய்ன் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டது.

 

1979 : ஈரான், 98 சதவீத மக்கள் ஆதரவுடன் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது.

 

1981 : சோவியத் ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

 

1997 : ஹேல்-பொப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது.

 

2001 : யூகொஸ்லாவியாவின் முன்னாள் ஜனாதிபதி சுலோபோடன் மிலோசெவிச் போர்க்குற்றங்களுக்காக  சரணடைந்தார்.

 

2001 : நெதர்லாந்து, ஒருபாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது.

 

2004 : கூகுள் நிறுவனம், 1000 மெகாபைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது.

 

2006 : ஈரான் மேற்கில் லோரிஸ் டான் மாகாணத்தில் இடம்பெற்ற பூகம்பத்தினால் 66 பேர் கொல்லப்பட்டனர்.

 

2011 : ஆப்கானிஸ்தானில் புனித குர் ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பாரிய வன்முறைகள் ஏற்பட்டன.

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஏப்ரல் ஃபூல்... 'முட்டாள்கள்'... அதி முக்கியமானவர்கள்!

'முட்டு ஆள்'... இது 'முட்டாள்'

12928200_1106904866034969_99795495114008

 

'இன்று முட்டாள்கள் தினம்... ஏமாந்துவிடாதீர்கள்...' என்று எங்கு திரும்பினாலும், ஒரே பேச்சாக இருக்கிறது. இந்த தினத்துக்கு பின்னால் இருப்பது ஒரு வரலாறு. அதேபோல... ஒரு கொடுமையும் இதில் அடங்கியிருக்கிறது.

முதலில் வரலாறு... ஐரோப்பிய நாடுகளில், 16ஆம் நூற்றாண்டு வரையில், ஏப்ரல்- 1 அன்றுதான் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்தது. அதன் பிறகு, போப் ஆண்டவரின் ஆணைப்படி, கிரிகேரியன் காலண்டர் அடிப்படையில், ஜனவரி 1 என்று மாற்றப்பட்டது. ஆனால், ஐரோப்பாவில் பல பிரதேசங்களில் இது உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏப்ரல் 1 அன்றே புத்தாண்டைக் கொண்டாடி வந்தனர். ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடியவர்கள், ஏப்ரல் 1 அன்று புத்தாண்டு கொண்டாடுபவர்களைப் பார்த்து, 'அடே ஃபூல்ஸ்... மூன்று மாதத்துக்கு முன்பாகவே புத்தாண்டு கொண்டாடிவிட்டோமே...' என்று கிண்டலடித்தார்களாம். அதிலிருந்துதான்... 'ஏப்ரல் ஃபூல்' என்பது ஒரு வரலாறு.

இதைத் தவிர, வேறு சில கதைகளும் இதற்கு கூறப்படுகின்றன. 16ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த தினம் கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சரி... இந்த ஏப்ரல் ஃபூல் கொடுமைக்கு வருவோம். ஃபூல் என்கிற ஆங்கில வார்த்தைக்கு, 'முட்டாள்' என்கிற வார்த்தையை மொழிபெயர்ப்பாகப் பயன்படுத்தியது முதல் கொடுமை. உண்மையில், 'முட்டாள்' என்பவர்கள், கொடுக்கப்பட்ட வேலையை செவ்வனே செய்பவர்கள். தங்களின் கவனம் வேறு எங்கும் திசை திரும்பிவிடாமல், கொடுத்த வேலையில் மட்டுமே நிலைக்கச் செய்திருப்பவர்கள்.

அதாவது, ஊர்களில் தேரோட்டம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தத் தேரை ஆங்காங்கே நிறுத்துவதற்கு முட்டு (பிரேக்) கொடுப்பார்கள். அத்தகைய முட்டு கொடுக்கும் வேலையைச் செய்பவர்கள், 'முட்டு ஆள்'. இது 'முட்டாள்' என்று மருவி, பிற்காலத்தில், மூடர்கள் என்று பொருள் கொள்ளும் வகையில், புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. அற்புதமான முட்டுக் கொடுக்கும் பணியைச் செய்யும் அந்த வேலைக்காரர்களையே கேவலப்படுத்துவதாகவும் மாறிவிட்டது.

'ஒரு வேலையைச் சொன்னால், அதை மட்டுமே செய்து கொண்டிருக்காதே, அக்கம்பக்கமிருக்கும் விஷயங்களையும் கவனி, அதையும் சேர்த்தே செய்து முடி' என்று வலியுறுத்துவதற்காக, 'முட்டு ஆள்' மாதிரி வேலை பார்க்காதே என்று சொல்லப்பட்டது... அப்படியே நிலைத்துவிட்டது.

பிற வேலைகளுக்கு வேண்டுமானால், 'முட்டு ஆள் மாதிரி வேலை பார்க்காதே' என்பது பொருத்தமாகக்கூட இருக்கலாம். ஆனால், தேருக்கு முட்டுக் கொடுப்பவர், தன் கவனத்தை வேறு எங்காவது சிதறவிட்டால்... அது பல நூறு உயிர்களை பலி கொண்டுவிடும். அதனால்தான், முட்டு ஆட்கள், அதில் மட்டுமே கவனத்தைச் செலுத்துவார்கள். வேறு எங்குமே கவனத்தை சிதறவிட மாட்டார்கள்.

இது தேரோட்ட காலம்தான். திருவாரூர் தேர் போன்ற பெரும் தேர்களுக்கு பிரேக் வந்துவிட்டது. ஆனாலும்கூட முட்டுக் கொடுப்பதும் தொடர்கிறது. இதேபோல பெரும்பாலான ஊர்களின் தேர்களுக்கு முட்டுதான் கொடுக்கப்படுகிறது. அங்கேயெல்லாம் ஒரு தடவை எட்டிப் பாருங்கள்... முட்டுக் கொடுக்கும் வேலை செய்பவர்கள் எத்தகையச் சூழலில் செய்கிறார்கள் என்பதை நேரடியாகவே தெரிந்து கொள்ளலாம். அவர்கள் படும் அவதியையும் புரிந்து கொள்ளலாம்.

'முட்டு ஆள்' விஷயம் இப்படி இங்கே மாறிப்போய்,
ஆங்கிலேயேர்களின் வருகைக்குப் பின்னால், 'ஏப்ரல் ஃபூல்' என்பதும் இங்கே இறக்குமதியாகி... 'முட்டாள்கள் தினம்' என்று இன்று வரையிலும் கேவலப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இது எங்கோ... நான் கேள்விப்பட்ட விஷயம். ஆனால், மிகமிகப் பொருத்தமாக இருப்பதால்... இந்த ஏப்ரல்- 1 அன்று பகிர்ந்து கொள்கிறேன்.

 

vikatan

  • தொடங்கியவர்

12719433_1017125205002840_49225163211050

இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும், மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக விளங்கியவருமான டேவிட் கவரின் பிறந்தநாள்

Happy Birthday David Gower

  • தொடங்கியவர்

உங்கள் அப்ரைஸலை இப்படியும் எதிர்கொள்ளலாம்: தோனி சொல்லி தந்த பாடம்!

ன்னும் இரண்டு மாதங்களில் நிறுவன பணியாளர்கள் அனைவரையுமே மதிப்பீடு எனப்படும் அப்ரைஸல் என்ற ஒரு விஷயம் சுற்ற ஆரம்பித்துவிடும்.

அப்ரைஸலில் நம் ஒரு வருட செயல்பாடு,  நிறுவனத்தில் எந்த அளவுக்கு நமது பங்களிப்பை அளித்துள்ளோம் என்பது உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்து நமக்கு ஊதிய உயர்வு எவ்வளவு? நமது பணியை மேலும் தொடருவோமா என்பது வரை அனைத்தையுமே இந்த அப்ரைஸல்தான் முடிவு செய்யும்.

இந்நிலையில் நேற்று உலகக் கோப்பை போட்டியில் தோற்ற பின்னர், தோனி  பேட்டி அளித்தபோது சொன்ன பதில்கள்,  ஒரு சிறந்த பணியாளர் எப்படி தனது அப்ரைஸலை எதிர் கொள்வது என்பதை விளக்கும் விதமாக இருந்தது.

appraisal1.jpg


பாசிட்டிவ் விஷயத்தை மையப்படுத்துங்கள்!

உங்கள் அப்ரைஸலில் முதல் கேள்வியே நீங்கள் இந்த வருடத்தில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறீர்களா? என்பதாகதான் இருக்கும். அதற்கு உங்களுடைய பாசிட்டிவ் விஷயங்களோடு ஆரம்பிக்க துவங்குங்கள். உங்களது ப்ளஸ் எதுவோ அதனை கூறுங்கள். அது உங்களை 1% கூட குறை கூற முடியாத அளவுக்கு இருக்க வேண்டும். அதையேதான் தோனியும் செய்தார். 'நான் நன்றாக ரன்களை ஓடி குவிக்கிறேனா?' என நிருபரிடம் கேட்டார். அதற்கு வழியே இல்லாமல் அவர்,  'ரியலி ஃபாஸ்ட்'  என்று பதிலளித்தார். இப்படிதான் முதல் கேள்விக்கான பதிலே உங்களை முழுமையாக நிரூபிக்க வேண்டும்.

தலைமை பண்பை நிரூபிக்க தவறாதீர்கள்!

நிறுவனத்தின் வளர்ச்சியில் உங்கள் அணியின் பங்களிப்பை பதிவு செய்யுங்கள், சிறப்பான நபர்களை மையப்படுத்துங்கள். கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் தனியாக செய்த சாதனை மற்றும் உங்கள் அணியை நீங்கள் வழிநடத்திய விதம், அதில் உங்களுடைய பங்கு ஆகியவற்றை மேற்கோள் காட்டுங்கள். கோலியின் ஆட்டத்தை புக‌ழ்ந்தாலும் ஒட்டுமொத்த அணியாக இந்தியா சிறப்பாக செயல்பட்டதை தோனி சரியாக பதிவு செய்தார். அதனால்தான் அவரால் 2007 முதல் தொடர்ந்து கேப்டனாக இருக்க முடிகிறது.

appraisal.jpg

மைனஸ்களை கெத்தாக சொல்லுங்கள்!

மைனஸ் இல்லாத மனிதரே கிடையாது. ஆனாலும் அதனை எப்படி சொல்கிறோம் என்பதுதான் விஷயம். மைனஸ்களை கூட அசாதாரணமாக டீல் செய்யுங்கள். தோல்வி பெரியது என்றாலும், அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அதனை மறுக்காதீர்கள். அதிலிருந்து கற்ற பாடங்களை தெரியப்படுத்துங்கள். அலுவலகத்தில் அந்த தவறு இனிமேல் நடக்கவே கூடாது என்பதற்கு தீர்வை கூறுங்கள். அதனைதான் அலுவலகமும் விரும்பும். தோனியும் இதனைதான் செய்துள்ளார். அரையிறுதி தோல்வி பெரிது என்றாலும், அதனை தோனி "இது இன்னொரு ஆட்டம்தான். நோ பால்கள் தவிர பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர். இருந்தாலும் இன்றைய பிட்ச் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. இது மாதிரியான போட்டிகளில் ஒரு ஓவர் ஆட்டத்தை மாற்றிவிடும் அதனை சமாளிக்க பந்துவீச்சாளர்கள் கற்றுக்கொள்வார்கள்" என்று கெத்தான பதிலை தந்தார்.

dhonimedia1.jpg

மிஸ்டர் கூலாக இருங்கள்!

உங்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கும் போதும், மோசமாக இருக்கும் போதும் உங்களை நோக்கி நிறைய விமர்சனங்கள் எழும். அதிலும் நீங்கள் குறுகிய காலத்தில் வெற்றி பெற்றாலோ அல்லது தோற்றாலோ கட்டாயம் விமர்சனங்கள் எழும். அதனை கூலாக எதிர் கொள்ளுங்கள். தோனியிடம்,  'நீங்கள் ஓய்வு பெறலாமே? ' என்ற கேள்விக்கும்,  " நான் நல்லா ஓடுறேனா? அடுத்த உலகக் கோப்பைல ஆடுவேனா? " என்று  கேள்வி கேட்டு நிருபரின் வாயிலிருந்தே பதிலை அளித்துள்ளார்.

தோனியை மேலாண்மை தத்துவங்களுடனும், அவரை தலைமை பண்புக்கு உதாரணமாகவும் கூறும் நேரத்தில்,  மீண்டும் ஒருமுறை தோனி தன்னை சிறந்த தலைவன் என்றும்,  அலுவலகத்தில் ஒரு விஷயத்தை எப்படி எதிர்கொள்வது என்பதையும் உணர்த்தியிருக்கிறார்.

vikatan

  • தொடங்கியவர்

ஏப்ரல் 1: முட்டாள்கள் தினம் - ஜாலி பகிர்வு...

 
 

எப்படி ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினம் என்று ஆக்கினார்கள் என்பதைப்பற்றி தெளிவான குறிப்புகள் இல்லை. கிரிகோரியன் காலண்டருக்கு மாறாமல் ஏப்ரல் ஒன்றை புத்தாண்டாக கொண்டாடிய பிரெஞ்சு காரர்களை கிண்டல் செய்ய அந்த விழா உண்டானது என்று சொன்னாலும் அதற்கு ஆதாரங்கள் உறுதியாக  இல்லை. மக்களை எப்படியெல்லாம் உலகம் முழுக்க அன்றைய தினம் ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதைப்பற்றிய பதிவு இது. கவனமாக படியுங்கள் :

april.jpg

joker1.jpgஸ்வீடன் நாட்டில் ஐம்பதுகளின் ஆரம்பத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி ரொம்பவும் சீரியஸாக தொலைகாட்சி முன்னர் தோன்றிய தொகுப்பாளர் எல்லா கருப்பு வெள்ளை தொலைக்காட்சிகளையும் நைலான் உறையொன்றை பொருத்தி நீக்குவதன் மூலம் வண்ணத்தொலைக்காட்சியாக மாற்றிவிடலாம் என்று அறிவிக்க பற்றிக்கொண்டது ஸ்வீடன். அப்புறம் ஜாலியாக ஸாரி சொன்னார்கள் !

joker1.jpgஏப்ரல் 1, 1998 அன்று உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலையை வால்ட் டிஸ்னியின் நிறுவனத்திடம் விற்று விட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று அக்கல்வி நிறுவன தளம் தெரிவித்தது. பல்கலை இடிக்கப்பட்டு வெவ்வேறு பகுதிகளுக்கு அதன் கிளைகள் ஏற்படுத்தப்படும் என்று அது அறிவித்த பொழுது அதிர்ந்து போனார்கள். அப்புறம் அக்கல்விக்கூட மாணவர்கள் தளத்தை ஹாக் செய்த விஷயம் புரிந்து தலையில் அடித்துக்கொண்டார்கள்.

joker1.jpgஏப்ரல்  1, 1976 அன்று பிபிசியின் ரேடியோ வானவியல்  அறிவிப்பாளர் சனி மற்றும் ப்ளூட்டோவுக்கு இடையே ஏற்படும் இணைப்பால் புவியின் புவி ஈர்ப்பு விசை குறையும் என்றும்  9:47 a.m க்கும் சரியாக குதித்தால் மக்கள் மிதக்கலாம் என்று அறிவித்து அதை அப்படியே செய்து விழுந்தார்கள் பலபேர் !

joker1.jpgஅதே பிபிசி 1957 இல் நூடுல்ஸ் போன்ற உணவான ஸ்பாகாட்டி ஸ்விட்சர்லாந்து நாட்டில் மரத்தில் விளைவதாக அறிவிக்க அந்த மரத்தின் விதைகள் எங்களுக்கு கிடைக்குமா என்று போன் கால்கள் ஓயாமல் வந்து சேர்ந்தன

joker1.jpg1980 இல் பிக் பென் கடிகாரத்தை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்போவதாக அடுத்த அறிவிப்பை வெளியிட்டார்கள். பெரிய கூத்து ஜப்பானிய பிபிசி அந்த கடிகாரத்தின் பாகங்களை முதலில் அழைக்கும் நாலு பேருக்கு விற்பதாக சொல்ல அட்லாண்டிக் கடலின் நடுவில் இருந்து ஒரு நேயர் அழைத்து அசடு வழிந்தார் !

joker1.jpgஆறு வருடங்களுக்கு முன்னர் அண்டார்டிகாவில் பென்குயின்கள் பறக்கின்றன பாஸ் என்று இன்னொரு போலி வீடியோவோடு வந்தது பிபிசி. அதையும் நம்பினார்கள் மக்கள் !

joker1.jpgபொலிடிகன் எனும் கோபன்ஹெகன் நகர செய்தித்தாள் டேனிஷ் அரசு நாய்கள் எல்லாவற்றுக்கும் வெள்ளை பெய்ன்ட் அடித்து இரவில் அவற்றின் மீது வாகனங்கள் மோதாமல் தடுக்க சட்டம் கொண்டு வந்திருப்பதை சொல்ல பல் நாய்கள்
பாவம் வெள்ளை பூச்சுக்கு மாறின !

joker1.jpgஐரீஷ் டைம்ஸ் 1995 இல் டிஸ்னி நிறுவனம் லெனினின் பாதுகாக்கப்பட்ட உடலை வாங்கி தன்னுடைய பொழுது போக்கு மையத்தில் வைக்க இருப்பதாகவும் அதன் பின்புறத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் குரல் கசியும் என்று வதந்தியை கசிய விட்டது !

joker1.jpgThe China Youth Daily பத்திரிக்கை சீனாவில் முனைவர் ஆய்வில் ஈடுபடுவர்கள் ஒரு பிள்ளை மட்டுமே என்கிற சட்டத்தில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம் என்று கிளப்பிவிட்டு அதை சில செய்தி நிறுவனங்கள் உலகம் ழுக்க கொண்டு போய் சேர்த்தன.

joker1.jpgமுதல் உலகப்போரின்  April 1, 1915 அன்று ஜெர்மனி வீரர்கள் நிறைந்த ஒரு இடத்துக்குள் பிரெஞ்சு விமானம் குண்டு ஒன்றை வீசிவிட்டு சென்றது. வெகுநேரம் வெடிக்காமலே இருக்கவே,அருகில் போய் அதை பார்த்தால் கால்பந்தை சியிருக்கிறார்கள் ! அதில் "ஏப்ரல் ஃபூல் !" என்று எழுதி வேறு ஒட்டியிருந்தார்கள் !

joker1.jpgபர்கர் கிங் எனும் அமெரிக்க நிறுவனம் இடது கைப்பழக்கம் உள்ள மூன்றரை கோடி அமெரிக்கர்கள் உன்ன இடக்கை வோப்பர் எனும் உணவுப்பண்டத்தை கொண்டு வந்திருப்பதாக சொல்ல வலக்கை பழக்கம் உள்ளவர்கள் சண்டைக்கு வந்துவிடவே அதுவே புரூடா என்று புரிய வைத்தார்கள்.

joker1.jpgகூகுள் ஏப்ரல் தினத்தில் குறிப்பிட்ட தயாரிப்பை வெளியிடுவதாக சொல்லி ஏமாற்றிக்கொண்டு இருந்தது. ஏப்ரல் 1, 2004 இல் மின்னஞ்சல் சேவையை துவங்குவதாக சொல்ல எல்லாரும் ஏமாற்றப்போகிறார்கள் என்று அலர்ட் ஆகியிருந்தார்கள். ஜிமெயிலை மெய்யாலுமே உருவாக்கி ஷாக் தந்தது கூகுள் ! இப்படியும் ஏமாற்றலாம் பாஸ் !

joker1.jpgலண்டன் டைம்ஸ் இதழ் 1992  இல் பெல்ஜியத்தின் ஒரு பாதியை நெதர்லாந்தும் இன்னொரு பாதியை பிரான்சும் பிரித்துக்கொள்ளும் என்று அறிவிக்க அதை பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி உண்மை என்று நம்பி டிவி ஷோவில் வாதிக்க கிளம்பி விட்டார். அப்புறம் அஸ்கு,புஸ்கு சொன்னார்கள் அவருக்கு!

joker1.jpgஇந்தியாவின் ப்ளிப்கார்ட் நிறுவனம் பணத்தை டெலிவரி செய்யும் சேவையை ஆரம்பிப்பதாக கிளப்பி விட்டார்கள்.

joker1.jpgலேஸ் சிப்ஸ் நிறுவனம் செய்தித்தாளில் வெளிச்சத்தால் இயங்கும்  டிவி பார்க்கலாம் என்றொரு விளம்பரம் தர அதை உண்மையென்று செய்தித்தாளை ஆட்டிப்பார்த்து ஏமாந்து போனார்கள் எண்ணற்ற வாசகர்கள் !

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.