Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

கனடா கடோத்கஜா!

 

p44a.jpg

ரைச்சுற்றி வேடிக்கைப் பார்ப்பது பலருக்குப் பொழுதுபோக்காக இருக்கும். கனடாவின் டொரன்டோ மாகாணத்தில் வசிக்கும் பீட்டர் செர்வென்சிக்கோ ஊர் ஊராகப் போய் விதவிதமான உணவு வகைகளை வெளுத்துக்கட்டுவதுதான் முழுநேர வேலையே. இன்னும் ஒரு படி மேலே போய் உணவுகளை அசுர வேகத்தில் சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார். இரண்டு தோசைகளை எக்ஸ்ட்ராவாக சாப்பிட்டாலே ‘தீனிப்பண்டாரம்’ எனப் பெயர் வைக்கும் நம் ஊர்க்காரர்கள் இவருக்கு ‘உலக மகா தீனிப்பண்டாரம்’ என்றுதான் பெயர் வைக்க வேண்டும்.

‘ஃப்யூரியஸ் பீட்’ (Furious Pete) என்னும் யூ டியூப் பக்கத்தை வலம் வந்தால், பீட்டர் பல நாட்டு உணவுகளை வெளுத்துக்கட்டும் வீடியோக்களைப் பார்க்கலாம். 116 கிலோ எடையுள்ள இந்த மனிதர் சாப்பிடுவது கொஞ்சநஞ்சம் அல்ல. டைனிங் டேபிள் சைஸில் இருக்கும் பீட்சாவை தனி ஒருவராக விளாசித்தள்ளுகிறார். ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு 12 பர்கர்களை லபக் லபக்கென உள்ளே தள்ளிவிட்டுத் தண்ணீரைக் குடிக்கிறார்.

நான்கு லிட்டர் கோக்கில் மென்ட்டாஸ் மிட்டாயையும் போட்டு மடக் மடக்கெனக் குடித்துவிட்டு கூலாக சிரிக்கிறார். பார்த்தாலே தொண்டை எரியும் கொடூரக்காரமான சில்லி சாஸ் பாட்டிலைக் குடித்துவிட்டு காரம் தாங்க முடியாமல் துடித்து ஐஸ்கிரீமை அள்ளி அப்பும் நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கின்றன.

கடந்த ஆண்டிலிருந்து இதுவரை 90-க்கும் அதிகமான சாப்பிடும் போட்டிகளில் கலந்துகொண்டு அவற்றில் ஆறு கின்னஸ் சாதனைகளையும் நிகழ்த்தியிருக்கிறார். முக்கால் லிட்டர் ஆலிவ் ஆயிலை 60 வினாடிகளில் குடித்ததும், 17 வாழைப்பழங்களை இரண்டு நிமிடத்தில் முழுங்கியதும் இவற்றில் அடங்கும்.

 p44b.jpg

எப்போது ஆரம்பித்தது இந்த விபரீத விளையாட்டு? டீன் ஏஜில் ‘அனோரெக்ஸியா’ எனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு கடும் உடற்பயிற்சியால் மீண்டு வந்திருக்கிறார் பீட்டர். 2014-ம் ஆண்டில் கேன்சரால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையால் குணமடைந்தார். மீண்டும் கடந்த ஆன்டில் கேன்சர் தாக்கி திரும்பவும் மீண்டு வந்திருக்கிறார். சராசரி மனிதர்களைவிட மிக மெதுவான செரிமானத் திறனுடைய பீட்டர் அதை ஈடுகட்ட அதிக அளவிலான உணவை உட்கொண்டு அதிக உடற்பயிற்சிகளையும் செய்துவருகிறார். தனது செரிமானக் குறைபாட்டையே சாதனைகளாக்கினால் என்ன என யோசித்தவருக்கு பளிச்சென உதித்த ஐடியாதான் மேற்காணும் கின்னஸ் ரெக்கார்டு முயற்சிகள்.

‘எந்த நேரமும் சாப்பிட்டுக்கிட்டே இருக்கிறதெல்லாம் வாழ்க்கையா பாஸ்?’ என்கிறீர்களா. ஆமாம், இவரது வாழ்க்கையும் ‘தி ஸ்டோரி ஆஃப் ஃப்யூரியஸ் பீட்’ எனும் பெயரில் டாக்குமென்ட்ரி படமாகியிருக்கிறது. அதிலும் இந்த மனுஷன் நாடு நாடாகப்போய் விதவிதமாய் அள்ளி அமுக்கி நம்மை வெறுப்பேற்றியிருக்கிறார்.

மெதுவா தின்னுய்யா... விக்கிக்கப்போகுது!

பீட்டர் சாப்பிடுவதைப் பார்த்து நீங்களும் கண் கலங்க... https://www.youtube.com/channel/UCspJ-h5Mw9_zeEhJDzMpkkA லிங்க் போங்க!

vikatan

 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

13307291_1216593058352897_91081289409255

கருணாநிதி முகமது அலியுடன் எடுத்த புகைப்படம்!

  • தொடங்கியவர்

13391442_1056259437756083_89024371816442

தமிழ் சினிமாவின் முத்தழகு
பிரியாமணி இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். தேசிய விருது பெற்ற நடிகை

  • தொடங்கியவர்

நான்கு வருட குப்பையை ஒரு ஜாடிக்குள் அடக்கிய லாரன்! #WhereIsMyGreenWorld

loren6001.jpg

ப்ரூக்லினை சேர்ந்த 25 வயது தொழிலதிபர் லாரன் சிங்கர். லாரன் சிங் இப்போது அங்கு சிலாகித்து பேசப்படும் நபராகியிருக்கிறார். அப்படி என்ன சாதனை செய்துவிட்டார் என்கிறீர்களா...நான்கு வருடங்களாக, தன்னிடம் சேர்ந்த குப்பைகளை ஒரு ஜாடிக்குள் அடைத்து விட்டார். எப்படி ஒருவருக்கு 4 வருடத்தில் இவ்வளவு குறைவாக குப்பை சேர்ந்தது?

“நான் ஒரு முறை கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்து, என் பாத்ரூமை திறந்தபோது அங்கு பிளாஸ்டிக்கினால் ஆன பொருட்களே நிறைந்துகிடந்தன. வீட்டை ஆராய்ந்ததில் மற்ற பொருட்களில் பெரும்பாலும் பிளாஸ்டிக் குப்பைகளே கிடந்தன. அப்போதுதான் 'ஏன் என் வீடு பிளாஸ்டிக் இல்லாத வீடாக இருக்கக்கூடாது' என்று தோன்றியது.

மக்கள் எல்லோரும் “நோ பிளாஸ்டிக்” சபதம் எடுத்து ப்ரூக்லினில் தோற்றுப்போய்கொண்டிருந்தார்கள். நான் இதை சவாலாக எடுத்துக்கொண்டேன். அப்போது என் டூத்பேஸ்ட் தீர்ந்தசமயம். முதலில் என் முயற்சியை அதிலிருந்துதான் துவங்கினேன். நானே கூகுள் பார்த்து டூத்பேஸ்ட் தயாரித்தேன். அத்துடன் பேஸ்ட் டியூப் குப்பை சேர்வது நின்று போனது.

loren400.jpg

அடுத்து டிடர்ஜன்ட் பவுடர் தயாரித்தேன். அந்த பாக்கெட் குப்பையும் நின்று போனது. சோப், பர்ஃபியூம் என அடுத்தடுத்து அனைத்தையும் நானாக தயாரிக்க ஆரம்பித்தேன். சில மாதங்களில் இப்படியே ஒவ்வொன்றாய் தயாரித்து வீட்டில் துளி பிளாஸ்டிக் இல்லாமல் மாற்றினேன். சேர்ந்த சிறு சிறு பிளாஸ்டிக் குப்பைகளை வெளியே கொட்டாமல் ஒரு ஜாடிக்குள் அடைக்க ஆரம்பித்தேன். நான்கு வருடங்கள் கழித்தே ஜாடி நிரம்பியது” என்கிறார் பெருமையாக லாரன். இப்போது லாரனின் வீடு 'பிளாஸ்டிக் ஃப்ரீ வீடு'.

படிப்பு முடித்ததும் நியூயார்க் மாகாணம் சுற்றுச்சூழல் துறையில் லாரனுக்கு வேலை கிடைத்தது. சிறிதுகாலம் அங்கு வேலை செய்துவிட்டு இப்போது இயற்கையாக, பிளாஸ்டிக் கலக்காமல், “தி சிம்ப்ளி கோ” என்னும் டிடர்ஜென்ட் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்துகிறார். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் கூறுகிறார். மேலும் இதன் மூலம் மக்களிடையே “நோ பிளாஸ்டிக்” விழிப்பு உணர்வு பெரிதும் சென்றடைந்துள்ளதாக பூரிக்கிறார்.

teacupgirl6001.jpg

பிளாஸ்டிக்கை தவிர்த்த வெற்றிகரமான மனிதரான லாரன் நம் வீட்டை 'பிளாஸ்டிக் ப்ரீ' யாக மாற்ற மூன்று எளிய வழிகளை சொல்லுகிறார்.

1. ரெகுலராக என்னவெல்லாம் நீங்கள் குப்பையில் போடுகிறீர்கள் என்று உங்கள் குப்பைத்
தொட்டியை ஆராய தொடங்குங்கள்.

2. சிம்பிளாக உள்ளவற்றை, அதேசமயம் பெரிதும் குப்பை சேரும் பொருட்களை மாற்றுங்கள். உதாரணத்திற்கு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை நீக்கிவிட்டு உலோக பாட்டில்களை வைக்கலாம்.

3.  பிறகு உங்களுக்கு தேவையான பொருட்களை, நீங்களே உருவாக்குங்கள். இதை நீங்கள் சமைப்பது போன்று நினைத்துக் கொள்ளுங்கள். கடினமாக இருக்காது.

plasticthings6001.jpg

http://www.trashisfortossers.com/ என்னும் தனது வலைப்பக்கத்தில் இது குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தியும் வருகிறார் லாரன். மேலும் எந்த பொருட்களையெல்லாம் எப்படி பிளாஸ்டிக் ஃப்ரீயாக மாற்றலாம் என்று டிப்ஸும் கொடுக்கிறார் லாரன்!

என்ன மக்களே....லாரன் சொன்னவற்றை பின்பற்றத்துவங்கிவிட்டீர்களா...

vikatan

  • தொடங்கியவர்

உலகின் 7 ஆபத்தான விளையாட்டுகள் இவை...!

விளையாட்டு என்பது விளையாட்டான விஷயமா என்றால், இல்லை என்றே சொல்லவேண்டும். தேக ஆரோக்கியம் பேணுவது, அனுதினமும் கடினப் பயிற்சி, கடும் போட்டிகளைச் சமாளிக்கும் பக்குவம், விடாமுயற்சி, இலக்கை நோக்கிய பயணங்கள், உழைப்பு என பல அம்சங்களைக்  கொண்டது அது என்று அனைவருக்கும் தெரியும். உலகில் இன்னும் சில விளையாட்டுகள் உள்ளன. கரணம் தப்பினால் மரணத்தை பரிசாக அளிக்கும் மிக அபாயகரமான விளையாட்டுகள் அவை.

இந்த விளையாட்டுகளில் முறையான பயிற்சி, அதற்கு அனுமதி போன்ற பல கட்ட சோதனைகளுக்குப் பிறகே வீரர்கள்  விளையாட அனுமதிக்கப்படுகின்றார்கள். அப்படி உயிராபத்து விளைவிக்கக் காத்திருக்கும் சில டேஞ்சரஸ் விளையாட்டுகள் குறித்த பதிவு இங்கே....


1)-குதிக்கும் விளையாட்டு - Base jumping
  
இன்றைய உலகில் அதி ஆபத்து நிறைந்த விளையாட்டில் முதல் இடம் பிடித்துள்ளது. இந்த விளையாட்டு விளையாடும் வீரர்கள் ஏதாவது உயரமான கட்டடங்களை கண்டால் போதும், பரவசம் அடைந்து விடுவார்கள். உயரமான கட்டடத்தின் உச்சிக்கு சென்று உலகைக் காண நாம் ஆசைப்படுவோம்.  ஆனால் இந்த வீரர்கள் உலகின் அதி உயர கட்டடங்களில் இருந்து குதிக்க ஆசைப்படுவார்கள். கட்டடங்கள், ஆன்டெனாக்கள், பாலங்கள், தரை விளிம்புகள் என நான்கு வகை உயரமான இடங்களிலிருந்து ஹெல்மெட் மற்றும் காற்றுப்பை பாதுகாப்போடு குதிக்கிறார்கள். இந்த நான்கு இடங்களை சுருக்கியே ‘பேஸ் ஜம்பிங்’ (BASE - buildings, antennas, spans (bridges) and earth (cliffs)) என பெயர் வந்தது. உயரமான இடத்தில் இருந்து குதிக்கும்போது பலர் தவறாக விழுந்தும், காற்றுப்பை பழுதாகியும், முறைதவறி குதித்ததாலும் பரிதாபமாக உயிரைவிட்டிருக்கிறார்கள். 'பேஸ் ஜம்பிங் எனப்படுவது ஸ்கை டைவிங்கைவிட ஆபத்து நிறைந்த சாகச விளையாட்டு' என்று நார்வே நாட்டு ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. வயதும், பயிற்சியும் இந்த விளையாட்டிற்கு மிக முக்கியம்.


 
2) ஹெலி பனிச்சறுக்கு-  Heli skiing

பல திரைப்படங்களில் பனிமலையில் கையில் இரண்டு குச்சிகளை வைத்து சறுக்கிக்கொண்டே வரும் காட்சிகளை பார்த்து இருப்பீர்கள். காட்சிகளில் பரவசமூட்டும் அந்த விளையாட்டு மிக ஆபத்துடையது. அந்த விளையாட்டுக்கு பெயர் ஹெலி பனிச்சறுக்கு. உலக அளவில் கனடாவிலும், அதற்கு அடுத்து காஷ்மீரிலும்தான் இந்த விளையாட்டு பனிக்காலத்தில் விளையாடப்படுகிறது.  பனி மலையின் உச்சிக்கு ஹெலிகாப்டரில் சென்று அங்கிருந்து, மலையின் உச்சியில் இருந்து உபகரணங்களை பயன்படுத்தி சறுக்கி கொண்டே அடித்தளத்துக்கு வருவதுதான் இந்த விளையாட்டு. சறுக்கிக் கொண்டு வரும் வீரர்களுக்கு பின்னால் ஹெலிகாப்டரில்  கண்காணித்து கொண்டே வருவார்கள். இந்த விளையாட்டில் கொஞ்சம் தடுமாறினாலும், பல ஆயிரம் மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழும் அபாயம் உள்ளது. இந்த விளையாட்டும் பல உயிர்களை சத்தம் இல்லாமல் காவு வாங்கியுள்ளது.


  
3)ஸ்கூபா டைவிங் - Scuba diving

இன்றைய இளைய தலைமுறையிடையே அதிக பரவசத்தை ஏற்படுத்தும் விளையாட்டாக இது பார்க்கப்பட்டாலும், இந்த விளையாட்டும் ஆபத்து அதிகம்தான் என்கின்றனர். இயந்திர உதவியால் மூச்சு வாங்குவதில் பல்வேறு சிக்கல்களும், கடலுக்கு அடியில் மாறுபடும் அழுத்தம், குதிக்கும்போது, முதுகுத்தண்டில் பிரச்னைகள் என்று பல சிக்கல்கள் உள்ளன. அதீத அழுத்தம் காரணமாக மூச்சுத் திணறலும், பலருக்கு மூளையிலும்கூட பாதிப்பு ஏற்படுகிறது. இந்த விளையாட்டிற்கு லைசென்ஸ் கட்டாயம். முறையான பயிற்சியாளர் இல்லாமல் இந்த விளையாட்டில் ஈடுபடக் கூடாது என்று பல கட்டுப்பாடுகள்  உள்ளன.
 
4) குகைக்குள் குதிப்பது- Cave diving
        
கடலுக்கு அடியிலோ அல்லது குகைகள் அதிகம் உள்ள இடங்களிலோ இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. நீருக்கு அடியில், குகைகள் போன்ற பகுதிகளில் குதித்து விளையாடும் விளையாட்டு இது. இந்தியாவில் தற்போது வடகிழக்கு மாநிலங்களில் இது விளையாடப்படுகிறது. சிறு தவறு நடந்தாலும் இந்த விளையாட்டில் உயிருக்கு ஆபத்து நிகழ்ந்துவிடும் என்பதால் இந்த விளையாட்டை அதிகம் பிரபலப்படுத்தாமல் உள்ளார்கள். ஆனால் இளைஞர்கள் அதிக அளவில் இந்த விளையாட்டில் ஈர்க்கப்படுகிறார்கள்.

 

5) காளை ஏற்றம்- Bull riding
    
'காளை ஏற்றம்' என்ற இந்த விளையாட்டு,  ஐரோப்பாவில் சில நாடுகளில் விளையாடப்படுகிறது. பெரிய எருது ஒன்றில் விளையாட்டு வீரர் ஏறி அமர்ந்து கொண்டு, அந்த காளையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து காளையில் அமர்ந்திருக்க வேண்டும். காளையின் மீது இருந்து விழுந்தால் உயிருக்கே ஆபத்து என்ற நிலையில், சில நாடுகளில் இந்த விளையாட்டை இளைஞர்கள் வீரதீர விளையாட்டாக விளையாடி வருகின்றனர். இந்த விளையாட்டிற்கு சில நாடுகள் தடையும் விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

6) பெரு அலைச் சறுக்கு - Big wave surfing

அலைச் சறுக்கு விளையாட்டு மீது அதீத ஆர்வம் இன்றைய இளைஞர்களுக்கு உண்டு என்றாலும், அதன் ஆபத்தை பெரும்பாலானவர்கள் அறியாமல் இருக்கின்றனர். துடுப்பு மற்றும் சிறு படகுகளைக் கொண்டு அதிதீவிர அலைகளில் மீது சறுக்கி விளையாடும் இந்த விளையாட்டில் பல நேரங்களில், நீரில் மூழ்கி உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.

7) மலைஏற்றம்-  Mountain Climbing

பார்ப்பவர்களையும் அச்சமுறச் செய்யும் விளையாட்டு மலையேற்றம். ஒழுங்கற்ற, செங்குத்தான பாறைகளில் கிளிப்களை போட்டு ஏறுவது அசாத்திய திறமை என்றாலும், பல மலைகளில் நீர்க்கசிவின் காரணமாக பிடியில்லாத நிலை,  திடீரென ஏற்படும் மண் அல்லது பனிச்சரிவு, ஒழுங்கற்ற காலநிலை என்று பலகூறுகளும் மலையேற்ற வீரர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகத் திகழும். தசைப்பிடிப்பு ஏற்பட்டு தவறி விழுவது, தலைச்சுற்றல் போன்ற திடீர் உடல் உபாதைகளாலும் பலர் மரணத்தைத் தழுவி உள்ளனர். பயிற்சியும், கட்டுக்கோப்பான உடல் போன்ற பல முன்தகுதிகள் இருந்தாலும், திடீர் மரணங்கள் இந்த விளையாட்டில்தான் அதிகமாக உள்ளன. 

இந்த விளையாட்டுகள் மட்டும் இல்லாமல் நீர்வீழ்ச்சி சறுக்கு, ஸ்டிரிட் லீக், பி.எம்.எக்ஸ் என்று சொல்லப்படும் தடை தாண்டும் சைக்கிள் பந்தயம் போன்றவையும் இந்த பட்டியலில் உள்ளன.

எனவே  இனி 'விளையாட்டுக்கு என்று' சொல்லும்போது, சற்று யோசித்து சொல்லுங்கள்.. 

vikatan

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூன் 05
 
 

article_1433479591-kuwait-jul05.JPG1849: டென்மார்க் அரசிலமைப்பின்படி முடிக்குரிய இராஜ்ஜியமாகியது.

1917: அமெரிக்காவில் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு ஆரம்பமாகியது.

1942: 2 ஆம் உலக யுத்தத்தில் பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா மீது அமெரி;க்கா யுத்தப் பிரகடனம் செய்தது.

1944: பிரித்தானிய குண்டு வீச்சு விமானங்கள் நோர்மன்டி கரையோரத்தில் ஜேர்மன் நிலைகள் மீது சுமார் 5000 தொன் எடையுள்ள குண்டுகளை வீசின.

1967: எகிப்து, ஜோர்டான், சிரியா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. 6 நாள் யுத்தம் ஆரம்பம்.

1959: முதலாவது சிங்கப்பூர் அரசாங்கம் பதவியேற்றறது.

1968: படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடியின் இளைய சகோதரரும்  ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ரொபர்ட் எவ். கென்னடி துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தார். மறுநாள் அவர் உயிரிழந்தார்.

1975: 6 நாள் யுத்தத்தின் பின் சுயஸ் கால்வாய் முதல் தடவையாக திறக்கப்பட்டது.

1979: இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி அரசுடைமை ஆக்கப்பட்டது.

1995: போஸ்-ஐன்ஸ்டீன் செறிபொருள் முதன் முதலில்  உருவாக்கப்பட்டது.

2000: உகண்டா மற்றும் ருவண்டா இராணுவத்துக்கிடையில் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தொடர்ந்து 6 நாட்களாக இடம்பெற்ற போரில், கிசாங்கனியின் நகரமொன்று அழிக்கப்பட்டது.

2005: வரலாற்றில் முதல் தடவையாக, குவைட் மாநகரசபைக்கு இரு பெண்கள் நியமிக்கப்பட்டனர். பாத்திமா அல்-சபா மற்றும் பவ்ஸியா அல்-பார் ஆகிய இருவருமே அவ்விரு பெண்களாவர்.

2006: செர்பியா மற்றும் மாண்டினீக்ரோ குடியரசிலிருந்து செர்பியா சுதந்திர பிரகடனத்தை அறிவித்தது.

2013: பாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரீப்பை மூன்றாவது முறையாக அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கிரிக்கெட்டில் ஜெயலலிதா யார் ரசிகை தெரியுமா...? - தலைவர்களுக்கு பிடித்த விளையாட்டுகள்!

ரசியல் விளையாட்டில் ஈடுபடும் தலைவர்களில் பலர், நிஜத்திலும் விளையாட்டு வீரர்களாக இருந்தவர்கள் என்றால் நம்ப முடிகிறதா?. ஆம்! மேடைகளில்  முழக்கமிடும் தமிழக அரசியல் தலைவர்களில் பலர், விளையாட்டு மைதானத்தில் ஜொலி்த்தவர்கள்தான்.

தமிழகத்தின் இன்றைய அரசியல் தலைவர்களின் விளையாட்டு ரிப்போர்ட் இது....

ஜெயலலிதா

தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவிற்கு நடனம் கைவந்த கலை என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் அவர் இறகுப் பந்து விளையாட்டிலும் கலக்கியவர் என்று தெரியுமா?. " பள்ளி காலங்களில் இறகுப் பந்து விளையாட்டும், டேபிள் டென்னிஸ் விளையாட்டும் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டுகள். நான் பள்ளி நாட்களில் இந்த விளையாட்டுகளைதான் விரும்பி விளையாடுவேன்" என்று  ஜெயலலிதாவே ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். பள்ளி படிப்பு முடிந்த பிறகு கிரிக்கெட் மீது அவருக்கு அதீத விருப்பம் இருந்ததாம். 'பட்டோடியின் தீவிர ரசிகை நான்' என்று அவரே ஒருமுறை சொல்லியுள்ளார்.

கருணாநிதி

விளையாட்டு பருவத்திலேயே அரசியலுக்கு வந்தவர். தமிழக 'அரசியல் சதுரங்க' விளையாட்டில் கைதேர்ந்தவர். இவர் இளம் வயதில் அரிதாக விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இவர் டேபிள் டென்னிஸ் விளையாடுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானபோதுதான் விளையாட்டின் மீது அவருக்கு உள்ள ஈடுபாடு தெரியவந்தது.

stalin31.jpg 

ஸ்டாலின்

அறுபது வயதை கடந்தவர். இன்னும் தன்னை இளைஞராக முன்னிறுத்துபவர். அதற்கு தன்னுடைய உடற் பயிற்சியும் விளையாட்டும்தான் காரணம் என்கின்றார். கிரிக்கெட் மீது தீவிர காதல் கொண்டவர். துணை முதல்வராக இருந்தபோது, அமைச்சர்களுடன் இவரது தலைமையிலான அணிக்கும், தென் ஆஸ்திரேலியா அணிக்கும் இடையே நடைபெற்ற நட்பு போட்டியில் இவர் அணி வெற்றி பெற்றது. அதே போல் இன்றும் இவர் இறகுப் பந்து விளையாட்டை தினமும் விளையாடி வருகிறார்.

vijiakan.jpg 

விஜயகாந்த்

" தூக்கி அடிப்பேன்” என்று சொல்லும்போதே அவர் விளையாட்டு வீரர் என்று தெரியவேண்டாமா?. விஜயகாந்த் பள்ளி காலத்திலேயே கால்பந்து விளையாட்டு வீரர். இன்று வரை கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம் உடைவர். இன்றும் கால்பந்தை கண்டால் உதைக்க ஆரம்பித்துவிடுவார். பந்தை மட்டுமா..!


vaiko1.jpg

வைகோ

தான் மட்டும் விளையாட்டு வீரராக இல்லாமல், தனது கட்சித் தொண்டர்களையும் விளையாடச் சொல்லி ஊக்கபடுத்துபவர். கல்லூரியின் விளையாட்டு அணியில் முக்கிய இடம் வகித்தவர். அறுபதை கடந்த பிறகும் தனது ஊரில் நடைபெற்ற கைப்பந்து விளையாட்டுப் போட்டியில், இளைஞர்களுடன் இவரும் களத்தில் இறங்கி வெற்றியும் கண்டவர். 'நான் இன்னும் கைப்பந்து விளையாட்டு வீரர் ' என்று உற்சாகமாக சொல்பவர்.


anbumani1.jpg

அன்புமணி ராமதாஸ்

ஹைடெக் பிரசாரத்தை கடந்த தேர்தலில் புகுத்திய இவர், ஹைடெக் விளையாட்டிலும் கலக்குபவர். ஸ்கூபா டைவிங் பிரியர். பள்ளிகாலத்தில் இருந்தே விளையாட்டுக்காக பல்வேறு பரிசுகளைப் பெற்றவர். மூன்று விளையாட்டுகளின் அணியில் இடம் பிடித்தவர். கால்பந்து விளையாட்டு, பிடித்த விளையாட்டு. கபடியும் ஆடிப் பார்த்தவர். நாள்தோறும் மாலையில் இறகுப்பந்து விளையாட்டுக் களத்தில் இவரை  பார்க்கலாம்.

seeman1jpg.jpg

சீமான்

விளையாட்டிலும் இவருக்கு தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுகள்தான் பிடித்தவை. சிலம்பம் சுற்றுவது இவருக்கு மிகவும் பிடித்த விஷயம். விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும் என்று இவரிடம் கேட்டால், “ நம்ம மண்ணோட விளையாட்டு, கபடி.. அதை நடத்துங்க” என்று கபடி விளையாட்டுக்கு முக்கியதுவம் கொடுப்பவர். பள்ளி காலத்திலேயே  கபடி களத்தில் கலக்கியவர். மாவட்ட அளவிலான அணியிலும் இடம்பெற்று இருந்தார். ஓய்வு நேரத்தில சிலம்பம் அவருடைய சாய்ஸ்.

vikatan

  • தொடங்கியவர்

13335528_1150199358372186_68475206774828

ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினம் இன்று..

 

***இயற்கையின் கேள்விகள்***

மானுடா...மானுடா...
நான் இயற்கை
கேட்கிறேன்...
பதில் கூறடா...

காற்றை
கலங்கடிக்க
கரிய புகை சேர்க்கிறாய்...
எதை நீ சுவாசிக்கிறாயோ??

மண்ணும்
வளம் இழக்க
விஷம் இட்டு கொள்கிறாய்..
எதை நீ உட்கொள்கிறாயோ??

நீரின்
சுவை மாற
கழிவுகளை கலக்கிறாய்...
எதை நீ குடிக்கிறாயோ??

பூமி பந்தை
ஓட்டை போட்டு
நச்சு கிருமிகளுக்கு வழி விட்டாயே...
உன் வீட்டில் ஓட்டை இல்லை
என்பதனால் தானோ??

வெப்பம் வெப்பம்
என்று கூறிக்கொண்டே
மரங்களை வெட்டி தள்ளினாயே....
ஏ.சி வாங்க பணம்
இல்லையென்று தானோ??

மானுடா...மானுடா...
நான் இயற்கை
சொல்கிறேன்...
இனியாவது
கொஞ்சம் மாறுடா....!!


-- முத்துகுமார் மாணிக்கம்

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
தொலைபேசியை பார்த்தவாறு குனிந்து நடப்பவர்களுக்காக சிட்னியில் தரை மட்டத்திலேயே வீதிச் சமிக்ஞைகள்
 

வீதி­களில் பாத­சா­ரிகள் சிலர் தமது செல்­போன்­களை பார்த்­துக்­கொண்டே நடப்­பதால், போக்­கு­வ­ரத்து சமிக்ஞை விளக்­கு­களை அவ­தா­னிக்கத் தவ­று­கின்­றனர். இதனால் விபத்­து­களும் ஏற்­ப­டு­கின்­றன. 

 

1708537.jpg

 

இத்­த­கைய விபத்­துக்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக, தரை மட்­டத்­தி­லேயே சமிக்ஞை விளக்­கு­களைப் பொருத்­து­வ­தற்கு அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி நகர அதி­கா­ரிகள் தீர்­ம­னித்­துள்­ளனர். 

 

ஸ்மார்ட் போன்­களை பார்ப்­ப­தற்­காக கீழே குணிந்­து­கொண்டு செல்­பர்­களின் கண்­க­ளுக்கு தரை­யி­லுள்ள சமிக்ஞை விளக்­கு­க­ளா­வது தென்­படும் என்­பது அதி­கா­ரி­களின் நம்­பிக்கை. 

 

பரீட்­சார்த்த ரீதியில் இத்­திட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வற்­காக 2,50,000 அவுஸ்­தி­ரே­லிய டொலர்­களை நியூ சௌத் வேல்ஸ் மாநில அர­சாங்கம் செல­விட்­டுள்­ளது.

 

1708536.jpg

 

இவ்­வ­ருடம் வீதி விப­த­து­களால் ஏற்­பட்ட மர­ணங்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்த நிலையில் இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

 

 நியூ சௌத் வேல்ஸ் மாநி­லத்தின் வீதி பாது­காப்பு மத்­திய நிலை­யத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் பேர்னார்ட் கார்லோன் இது தொடர்­பாக விடுத்த அறிக்­கை­யொன்றில், “வீதி விபத்­து­களில் பாத­சா­ரிகள் குறைந்­த­ள­வி­லேயே பாது­காக்­கப்­ப­டு­கின்­றனர்.

 

இதனால் அவர்கள் காய­ம­டை­வ­தற்கு அல்­லது கொல்­லப்­ப­டு­வ­தற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

 

இதனால்தான் அவர்களை பாதுகாப்பதற்கு ஏற்ற வீதி பாதுகாப்பு முறைகளை அமுல்படுத்த வேண்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p106a.jpg

twitter.com/arattaigirl: நாலு நாள் நம்ப வீட்ல சொந்தக்காரங்க வந்து தங்கிட்டு, கிளம்பிப் போறப்பதான்... சுதந்திர இந்தியாவோட சந்தோஷம் எப்படி இருந்திருக்கும்னு புரியுது!

twitter.com:/teakkadai: கடன் கேட்கப் போன வீட்டு காமெடி சேனல்ல வடக்குப்பட்டி ராமசாமி காமெடி ஓடுறது எல்லாம், எனக்குன்னே உருவான டிசைன்போல!

twitter.com/udaya_Jisnu: டெய்லி 300 ரூவா வாங்கினா கூலி, மாசம் 9,000 ரூவா வாங்கினா சம்பளம்!

twitter.com/altaappu: ஒரு ஈ என்னையே சுத்திச் சுத்திவந்துச்சு, ‘என்னோட பழைய காதலியா இருக்குமோ?’னு மனைவியிடம் சொன்னேன். மிதிச்சே கொன்னுட்டா!

twitter.com/gowtwits: நெட் தமிழன் கல்லறையில் எழுதிய வாசகம்... `தயவுசெய்து இங்கே WiFi-ஐ ஆன் செய்துவிடாதீர்கள்,  இவன் எழுந்து ட்வீட் போட ஆரம்பித்துவிடுவான்'!

twitter.com/iamVariable: `கடைக்குப் போயிட்டு வா’னு சொன்னாக்கூட, பேசாமப் போவோம். `சும்மாதானே இருக்க, கடைக்குப் போயிட்டு வா’னு சொல்லும்போதுதான் எரிச்சல் வரும்!

twitter.com/Ramya_muralii: சமையல் ஒரு ஆர்ட்தான். சில நேரங்களில் நம்ம அறியாம மாடர்ன் ஆர்ட் உருவாகிடுது #தட் சோறு வெச்சுட்டேன். ஆனா, பேரு வெக்கல மொமன்ட்!

twitter.com/vandavaalam:  டிக்கெட் புக் பண்ணாம, ஊருக்கு பஸ் ஏறிய கடைசித் தலைமுறை நாம்!

twitter.com/indirajithguru: என் அம்மாவுக்கு என்னைவிட நன்றாகப் பொய் சொல்லவரும் என்பதே, எனக்கு பெண் பார்க்கப் போகும்போதுதான் தெரியும்!

p106b.jpg

twitter.com/minimeens: பக்கத்துல ஒருத்தர் சுகர் மாத்திரை வாங்கறாரு. பாக்கி அஞ்சு ரூபாய்க்கு சாக்லேட் குடுக்கிறான்!

twitter.com/nithya_shre:  ஸ்டாலின் - ஜெயா ரெண்டு பேரும் பேசுறதைப் பார்த்தா, இந்த முறை ஜெயிலுக்குப் போகும்போது ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கிடுவார்போல # :)

twitter.com/indirajithguru:  காசு எனக் குனிந்து எடுக்கவும் முடியவில்லை; சோடா டப்பி எனக் கடக்கவும் முடியவில்லை!

twitter.com/expertsathya:  நாம வந்தவுடனே, மொபைலைக் கீழே வெச்சிட்டு நம்மைப் பார்க்கிற ஒருத்தரையாவது சம்பாதிக்கணும்!

twitter.commekalapugazh: மழையை ரசிக்க மழை மட்டும் போதாது, மனநிலையும் தேவை!

twitter.com/ranjusizz:  பஸ்ஸுல போகும்போது, நமக்கு வாட்ஸ்அப்ல மெசேஜ் வந்தா, என்ன மெசேஜ்னு எட்டிப்பார்க்கும் அளவு அக்கறைகொண்ட இளைய சமுதாயத்தில்தான் நாம வாழவேண்டியிருக்கு!

p106c.jpg

twitter.com/Piramachari: பயணிகள் பட்டியல்ல ‘ப்ரியா' என்ற பேருக்கு நேராக ‘வயது:52’னு போட்டிருக்கு. `ப்ரியா’ங்கிற பேருக்கு இப்படி வயசாகும்னு  நினச்சுக்கூட பார்க்கலை!

twitter.com/mekalapugazh: 'சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் `ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கலாம்' என நினைப்பதே, சிறு வயதின் ஆகப்பெரிய மூடநம்பிக்கை!

Whatsapp: எதுக்குங்க மார்க் ஷீட் எல்லாம் பார்க்கணும்? ரொம்ப நல்லா படிச்சா... 499; நல்லா படிச்சா... 498; சுமாரா படிச்சா... 495. தட்ஸ் ஆல்!

facebook.com/venkatesh.arumugam1: இப்போது எல்லாம் நண்பர்கள் நெருக்கமாக இருப்பது செல்ஃபி எடுக்கும்போதுதான்!

facebook.com/venkatesh.arumugam1

குடும்ப அட்டை புகைப்படம் - `யார் நீ’, வாக்காளர் அட்டை புகைப்படம் - `நான் அவன் இல்லை’, ஆதார் அட்டை புகைப்படம் - `இவன் வேற மாதிரி’!

p106d.jpg

facebook.com/karthekarna:

`குடிக்கிறது சாராயம், அப்புறம் எதுக்கு பெருமையா பிளாஸ்டிக் கப்பை கழுவுறாங்க?’னு கேக்கறவங்களுக்காக- அது கப்பைக் கழுவுவதற்காக அல்ல, ஓட்டை எதுவும் இருக்கிறதா என அறிந்துகொள்ள செய்யப்படும் சோதனை!

facebook.com/mani.pmp.5

E.M.I - நின்று கொல்லும்

facebook.com/iam.suriyaraj

‘செத்துடலாம்போல இருக்கு’ங்கிற வார்த்தைகளைவிட, ‘வாழணும்போல இருக்கு’ங்கிற வார்த்தைகளின் பின்னால்தான் சோகம் அதிகம்!

  • தொடங்கியவர்

உலகின் மூத்த பட்டதாரி 96 வயதில் பட்டம் பெற்று ஜப்பான் முதியவர் சாதனை

 
 
ஷகெமி ஹிராடா
ஷகெமி ஹிராடா

ஜப்பானைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 96 வயதில், பல்கலைக் கழக பட்டம் பெற்று கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

ஜப்பானின் ஹிரோஷிமா பகுதியில் தகாமட்சு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷகெமி ஹிராடா (96). 2-ம் உலகப் போரின் போது ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், 2005-ம் ஆண்டில் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பீங்கான் மற்றும் மண்பாண்டக் கலை, வடிவமைப்புப் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தார்.

தொடர்ந்து, 11 ஆண்டுகள் படித்துவந்த ஹிராடா, அண்மையில் தேர்ச்சி பெற்றார். பெரும்பாலும், வீட்டில் இருந்தபடியே பயிற்சி மேற்கொண்ட இவர், மிக சொற்பமான நாட்களே கல்லூரிக்குச் சென்றார். எனினும், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை அண்மையில் அவருக்கு பல்கலைக்கழகம் வழங்கியது.

இதைத்தொடர்ந்து, உலகிலேயே மிக மூத்த பட்டதாரி என்ற பெருமையுடன், கின்னஸ் உலக சாதனை பட்டியலில் ஹிராடா இடம்பெற்றுள்ளார். அதற்கான சான்றிதழ் நேற்று அவரிடம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய ஹிராடா, ‘‘100 ஆண்டுகள் வரை வாழவேண்டும் என்பதே எனது அடுத்த லட்சியம். ஆரோக்கியத்துடன் இருந்தால், மீண்டும் கல்லூரிக்குச் சென்று படிப்பேன். சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்யவில்லை. இந்த வயதில், புதிதாக விஷயங்களை கற்றுக்கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

வ.அ.ராசரத்தினம்

 
rasa_2882556f.jpg
 

இலங்கையை சேர்ந்த சிறுகதை எழுத்தாளரும், நாவலாசிரியரும், சிறந்த ஆசிரியருமான வ.அ.ராசரத்தினம் (V.A.Rasarathinam) பிறந்த தினம் இன்று (ஜூன் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இலங்கையின் திரிகோணமலை அடுத்த மூதூரில் (1925) பிறந்தார். கத்தோலிக்கப் பாடசாலை, மூதூர் புனித அந்தோணியார் பாடசாலையில் பயின்றார். மட்டக்களப்பில் ஆசிரியர் பயிற்சி பெற்று, ஆசிரியராகப் பணியாற்றினார். ‘இலக்கியம் படிப்பதற்கான கருவியே ஆசிரியர் தொழில்’ என்பார்.

* புதுமைப்பித்தன் எழுத்துகளால் கவரப் பட்டார். அதன் தாக்கம் இவரது ஆரம்பகால படைப்புகளில் காணப்பட்டது. வல்லிக்கண்ணன், சிதம்பர ரகுநாதன், கு.அழகிரிசாமி ஆகியோரது படைப்புகளையும் தேடித் தேடிப் படித்தார்.

* முதன்முதலாக ‘மழையால் இழந்த காதல்’ என்ற சிறுகதை எழுதினார். தொடர்ந்து ‘தோணி’ என்ற சிறுகதை எழுதினார். இவை இலக்கிய உலகில் பரவலான வரவேற்பையும் கவனிப்பையும் பெற்றன. துறைக்காரன், தீர்த்தக்கரை, கொழுகொம்பு, கிரௌஞ்சப் பறவைகள் உட்பட பல நாவல்களை எழுதியுள்ளார்.

* ‘கோயில் மணி ஓசை’, ‘பங்கம்’, ‘அறுவடை’, ‘தோழருக்குத் தெரி யாதது’ உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்தன. ‘தினக் குரல் ஞாயிறு’ இதழில் ‘பொச்சங்கள்’ என்ற தலைப்பில் நெடுந் தொடர் எழுதினார். ஆசிரியப் பணியின் அனுபவங்கள் அடிப்படை யிலும் பல கதைகள் எழுதியுள்ளார். ‘வீரகேசரி’ இதழில் தொடர்கதை கள் எழுதினார். நூற்றுக்கணக்கான கதைகளை எழுதியுள்ளார்.

* தனது இலக்கியப் பயணத்தை விவரித்து ‘இலக்கிய நினைவுகள்’ என்ற சுயசரிதை நூல் எழுதினார். மூதூர் அந்தோணியார் கோயிலின் பூர்வீக வரலாறு குறித்த கட்டுரை நூலையும் எழுதினார். கவிதை எழுதும் ஆற்றலும் கொண்டிருந்தார். தனது பல படைப்புகளை தன் பதிப்பகம் மூலமே வெளியிட்டார்.

* இவரது படைப்புகளில் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம், எதார்த்த நோக்கம், முற்போக்கு சிந்தனை, மனிதநேயம், நம்பிக்கை மனோபாவம் இழையோடும். இவரது பல கதைகள் அற்புதமான வாழ்வியல் சித்திரங்களாகப் போற்றப்படுகின்றன. புதுமையான, அழகான, நயமான உவமைகளைக் கையாளக்கூடியவர்.

* மனைவி இவரது இலக்கியப் பணிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். அவருடன் சேர்ந்து வீட்டிலேயே ஒரு பதிப்பகத்தை நடத்தி வந்தார். மனைவி இவரது அந்தரங்க செயலாளர் போலவே செயல்பட்டார். மனைவியின் மரணம் இவரிடம் ஏற்படுத்திய வேதனையின் வெளிப்பாடுதான் ‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது’ என்ற நெடுங்கதை.

* போரில் இவரது வீடும், சேகரித்து வைத்திருந்த ஏராளமான நூல்களும் தீக்கிரையாகின. வீடு இழந்து, அதில் உருவாக்கிய அச்சகத்தையும் இழந்து, இடம்பெயர்ந்து, வாழும் நிலையும் ஏற்பட்டது. ஒரு தாக்குதலில் தனது மகள், மருமகனை இழந்தார். வாழ்வில் இவர் அனுபவித்த சோகங்கள், இழப்புகளும் இவரது பல படைப்புகளின் அடிநாதமாக விளங்கின.

* சுருக்கமாக ‘வ.அ.’ என அழைக்கப்பட்ட இவர், ஈழநாயகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்பது போன்ற புனைப்பெயர்களில் எழுதினார். பழகுவதற்கு எளிமையானவர். நேர்மை, உண்மை, மனிதாபிமானம் மிக்க படைப்பாளி. எளிமையாக, சரளமான மொழியில் பேசுவார்.

* சாகித்ய மண்டலப் பரிசையும் கலாபூஷண் விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். 1940-களில் தொடங்கிய இவரது எழுத்துப் பயணம் இறுதிவரை தொடர்ந்தது. அவர் மறைந்த ஆண்டு, நாள் குறித்த சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

tamil.thehindu

  • தொடங்கியவர்

குத்துச்சண்டை மன்னர் முகமது அலி உதிர்த்த 10 உத்வேக முத்துகள்!

 
 
இளம் வயதில் முகமது அலி
இளம் வயதில் முகமது அலி

குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னர், இரு முறை ஹெவி வெய்ட் சாம்பியன், நாக்அவுட் நாயகன் முகமது அலி இன்று (சனிக்கிழமை) காலமானார். அவரின் புகழ்பெற்ற பத்து உத்வேகக் கூற்றுகளின் தொகுப்பு.

இது வெறும் வேலைதான். புற்கள் வளர்கின்றன, பறவைகள் பறக்கின்றன, அலைகள் மணலைக் குவிக்கின்றன, நான் குத்துசண்டை ஆடுகிறேன்!

*

நான் உடற்பயிற்சி செய்யும்போது எண்ணுவதில்லை. வலிக்க ஆரம்பிக்கும்போதுதான் எண்ண ஆரம்பிக்கிறேன். ஏனென்றால் அப்போதுதான் உண்மையான பயிற்சி ஆரம்பிக்கிறது.

*

என்னை வெல்வது போல கனவு காண்கிறீர்களா? ஒன்று செய்யுங்கள். உடனே எழுந்து மன்னிப்பு கேட்டுவிடுங்கள்.

*

வீரர்கள் உடற்பயிற்சி கூடங்களில் மட்டும் உருவாவதில்லை. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அவர்களுக்கு திறமையும் முக்கியம்; மனோதிடமும் முக்கியம். ஆனால் திறமையைவிட மனோதிடம்தான் அதிமுக்கியம்.

*

பட்டாம்பூச்சியைப் போல மிதந்திடுங்கள்; தேனீயைப் போல கொட்டிடுங்கள்!

*

"என் இடது கை பார்கின்சன் சிண்ட்ரோமால் நடுங்குகிறது; வலது கை பயத்தால் நடுங்குகிறது. இதற்கு நடுவே நான் ஜோதியை ஏற்றி விட்டேன் !"- அட்லாண்டா ஒலிம்பிக் ஜோதியை ஏற்றியபோது.

*

முடியாது என்பது சிறிய மனிதர்கள் வாழ்க்கையை எளிதாக வாழக் கண்டுபிடித்து உதிர்த்த வெறும் வார்த்தை. முடியாது என்பது இயல்பு அல்ல, கருத்து. முடியாது என்பது தற்காலிகமானது.

*

நாட்களை நீ எண்ணாதே.. நாட்கள் எண்ணிக்கொள்ளட்டும். உன்னிடம் வந்து சேர்!.

*

நான் ஆகச்சிறந்தவன்; நான் அப்படித்தான் என்று எனக்குத் தெரியவரும் முன்பே இதைக்கூறியிருக்கிறேன்.

*

விருப்பம் திறமையைக் காட்டிலும் வலிமையானது.

*

ரசிகர்கள் என்னை விரும்புவதைப் போல எல்லா மக்களும் எல்லோரையும் விரும்பவேண்டும். அதுவே சிறந்த உலகத்தை உருவாக்கும்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

http://4.bp.blogspot.com/_LuCsMlqNo2M/TAgT7vxb6vI/AAAAAAAAIp0/IRlwv9sScJo/s400/sivakumaran_001.jpg

தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரனின்  நினைவுதினம் இன்றாகும்.

பொன்.சிவகுமாரன் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். பொன்.சிவகுமாரான் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்தார். இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார். 1950ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் திகதி பிறந்த இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரின் முன்னாள் மாணவராவார். அவர் 1974ம் ஆண்டு ஜூன்மாதம் 5ம்திகதி பொலீசாரின் சுற்றிவளைப்பின்போது அவர்களிடம் அகப்படாமல் அவர் தன்னுயிரை தியாகம் செய்தாரென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சைக்கிள் தாத்தா!

 

p40a.jpg

ஸ்திரேலியாவில் டூவாம்பா நகரத்தில் வசிப்பவர் ஜேம்ஸ் மேக் டொனால்ட். இவர் ஒரு சைக்கிள் பிரியர்.  சைக்கிள் தாத்தா என்ற பெயரில்தான் அங்கே பிரபலம். நூற்றுக்கணக்கான சைக்கிள்களை சேகரித்து வைத்திருக்கிறார். அவற்றை வீடு முழுவதும் அலங்காரப் பொருட்களாக அடுக்கித் தன் வீட்டையே சைக்கிள் வீடாக மாற்றியிருக்கிறார். ஹால், கிச்சன், பெட்ரூம், பாத்ரூம் வரை எல்லா இடத்திலும் சைக்கிள்கள் மட்டுமே காட்சியளிக்கின்றன.

p40b.jpg

p40d.jpg

ஒரு நாளைக்கு ஒரு சைக்கிள் என எடுத்துக்கொண்டு ஏரியா முழுக்க ஜாலி ரவுண்ட் வருகிறார். சில ஹாலிவுட் படங்களிலும் இவருடைய சைக்கிள்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். தற்போது இவருடைய வீடு சைக்கிள் அருங்காட்சியமாக மாறி இருக்கிறது. டூவாம்பா நகருக்கு தினந்தோறும் வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த சைக்கிள் அருங்காட்சியகத்தை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கிறார்கள்.

p40c.jpg

p40e.jpg

‘தி ஸ்போக்ஸ் மேன்’ என்ற பெயரில் இவரைப்பற்றி ஆவணப் படம் வந்திருக்கிறது. ‘என்னுடைய வாழ்க்கையில் பாதிநாட்கள் அரியவகை சைக்கிள்களை சேகரிப்பதிலேயே செலவிட்டிருக்கிறேன். இன்னும் தொடர்ந்து சேகரிப்பேன்’ என்று தெம்பாகச் சொல்கிறார் தாத்தா. 1890-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சைக்கிள்களில் இருந்து லேட்டஸ்ட் மாடல் வரை எல்லா கலெக்‌ஷனும் வைத்திருக்கிறார். யாராவது விருப்பப்பட்டு இவற்றை வாங்க விரும்பினால் விலைக்குக் கொடுக்கவும் செய்கிறார். சைக்கிள் வாங்கிய செலவை விட அதைப் பராமரிக்க அதிகச் செலவு செய்துவிட்டாராம். ‘சைக்கிள் எவ்வளவு பழசா இருந்தாலும் என்னுடைய கைபட்டால் பளபளன்னு மின்னும்’ என்கிறார் இந்த சைக்கிள் தாத்தா!

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்

ws_2879858f.jpg

wss_2879859a.jpg

wsss_2879870a.jpg

wssss_2879872a.jpg

wa_2879873a.jpg

waa_2879875a.jpg

 

wass_2879877a.jpg

 

wasss_2879879a.jpg

tamil.thehindu.

  • தொடங்கியவர்

அமிர்த மழை...
 

article_1465186347-rain.jpgவானத்திலிருந்து விழும் அமிர்தம் மழை. இதுவே உலகத்தைக் குளிரூட்டிக் குளிக்க வைத்துக் களிப்பூட்டும் உயிரூட்டி.

மழையில் மாந்தர் நனைவது என்பது, இறைவனே நேரில் நின்று அருள் மழை சொரிவது தான். மழையும் வெயிலும் உலகத்தில் புது உயிர்களைப் பிறப்பிக்கின்றன. வாழ்கின்ற சகல உயிர்களையும் வளப்படுத்துகின்றது.

மழை எழிலானது, கோபம் கொண்டால் வலிமை கொடுமை. எனினும், இயற்கையை ஏற்க மனிதர் தயாராகவில்லை.

சாமானிய மனிதனின் கோபமே பார்க்கச் சகிக்காது. பாவங்களின் தொகுப்பாக தண்டனைகளை இயற்கை வழங்கும்போது, கொதிப்படைந்து வெறுத்துப்போகின்றான்.

மழையை, அது தரும் குளிரை வெயிலின் உஷ்ணத்தை இரசிக்கப் பழகுங்கள் மானுடர்களே.

பனிப்பாறைகள் சூழ்ந்த பிரதேசங்களிலும் உஷ்ணத்தின் உச்சத்தில் உள்ள பாலைவனத்தில் வாழும் மக்களே மகிழ்வுடன் வாழும்போது இந்த வளம் பொருந்திய நாட்டில் என்ன குறை வந்துவிட்டது?

இரசனையற்றவர்களுக்குச் சொர்க்கமும் நரகம் தான்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூன் 06
 
 

article_1433657945-16-tamilconference-301644: சீனாவில் மிங் வம்ச ஆட்சி முடிந்து குய்ங் வம்ச ஆட்சி ஆரம்பமாகியது. இது 1912 வரை தொடர்ந்தது.

1674: மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவாஜி மன்னராக முடிசூட்டப்பட்டார்.bomby.jpg

1752: மொஸ்கோ நகரில் ஏற்பட்ட பாரிய தீயினால் 18000 வீடுகள் உட்பட பெரும் எண்ணிக்கையான கட்டிடங்கள் அழிந்தன.

1808: நெப்போலியன் போனபார்ட்டின் சகோதரரர் ஜோஸப் போனபார்ட் ஸ்பெய்ன் மன்னராக முடிசூடினார்.

1859: அவுஸ்திரேலியாவில் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து பிரிந்து குயின்ஸ்லாந்து மாநிலம் ஸ்தாபிக்கப்பட்டது.

1882: பம்பாய் நகரில் வீசிய சூறாவளியினால் சுமார் 100,000 பேர் பலி.

1944: 2 ஆம் உலக யுத்தத்தில், ஜேர்மனிக்கு எதிராக நேச நாடுகளைச் சேர்ந்த சுமார் 155,000 துருப்புகள் பிரான்ஸின் நோர்மண்டி கடற்கரையில் தரையிறங்கின.

1981: இந்தியாவில் ரயிலொன்று பாலத்திலிருந்து விலகி, பக்மதி நதியில் விழுந்ததால் 300 இற்கும் அதிகமானோர் பலி.

1993: மொங்கோலியாவில் முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.

2004: இந்தியாவின் செம்மொழியாக தமிழ்மொழி அறிவிக்கப்பட்டது.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13315523_1151207221604733_78151352335350

ஜூன் 6: தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் இன்று

செம்மொழியான தமிழ்மொழியாம்!!
‪#‎தமிழ்வாழ்க‬ ‪#‎செம்மொழியானதமிழ்மொழி‬

ஆன்ட்ராய்ட் அப்பத்தாவும்
டாக்கிங் டாமுக்கு தமிழ் சொல்லி கொடுக்கும்!
ஹாலிவுட் பட நாயகனும்
அழகு தமிழில் காதல் சொல்வான்!

பீட்டர் ஆங்கிலம் மாறி
இனி ஆங்கில பீட்டரும் தமிழ் பேசுவான்!
அமெரிக்காவில் அண்ணாச்சிக்கடைகள்
தமிழில் பொருள் விற்கும்!

ஃபேஸ்புக் பக்கங்களில்
ஸ்மைலிகள் மகிழ்ச்சியாகும்!
ட்விட்டர் பக்கங்களில்
ரீட்விட் மறு கீச்சாகும்!

ட்விட்டரின் முப்பாட்டன் திருக்குறள் என்பார்!
ஹாரிபாட்டர் தாத்தா விக்ரமாதித்தன் என்பார்!
டிகாப்ரியோவும் செந்தமிழ் பேசுவார்!

247 எழுத்தில் உலகம்
இயங்கும் 24 * 7 நாளும்
தமிழின்றி அமையாத
நிலை உருவாகும்!!

இந்தியாவில் துவங்கி இங்கிலாந்து வரை
உலகம் முழுவதும் இனி உரக்க சொல்லுவோம்!
தமிழ்மொழியும் செம்மொழியாம்!!

vikatan

  • தொடங்கியவர்

  13350247_1057479910967369_35970330039130

நடிகை பாவனாவின் பிறந்தநாள் இன்று...
Happy Birthday Bhavana

  • தொடங்கியவர்

இடது கைகாரர்களுக்கு இவ்வளவு பிளஸ்ஸா...?

left1.jpg

ந்தியாவின் நடசத்திர கிரிக்கெட் வீரர்களான கங்குலி, யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை உற்று கவனித்திருப்பவர்கள் ஒரு விஷயத்தைப் பார்த்திருக்கக் கூடும். இவர்கள் இருவருமே இடதுகை ஆட்டக்காரர்கள் என்பதுதான் இவர்களுக்கான ஸ்பெஷாலிட்டி. இவர்களைப் போலவே இடது கையை சாதனை கையாக மாற்றியிருக்கும் சாதனையாளர்கள் பலர். இத்தனை சாதனையாளர்கள் இருந்தும் நம் சமூகத்தின் பார்வையில் இடது கைப்பழக்கம் என்பது அருவருப்பாகவே பார்க்கப்படுகிறது.

" என் பையனுக்கு சாப்பிடுறது தொடங்கி எழுதறது வரைக்கும் எல்லாத்துக்குமே இடதுகைப் பழக்கம்தான். இவ்வளவு ஏன் வீட்டுக்கு வரவங்களுக்கு டாடா சொல்றதுக்கும் அதே கையைதான் தூக்கறான். பார்க்கறவங்க கேக்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியல. சாப்பிடுறதையாவது மாத்துனு என் அப்பா, அம்மா தொடர்ந்து சொல்லிட்டே இருக்காங்க" என்றவர்களின் குழப்பங்களுக்கு பதில் அளிக்கிறார் கரூரைச் சேர்ந்த மனநல மருத்துவர் செந்தில் வேலன்.

''இடது கைப் பழக்கம் தவறு என நினைப்பவர்களிடம் ஒரு கேள்வி கேட்க நினைக்கிறேன். இடது கால் இல்லாமல் வெறும் வலது காலை வைத்து நடக்க முடியுமா? உங்கள் உடலில் வலது பாகம் மட்டும் இருந்தால் போதுமா? அப்படியிருக்க இடது கைப் பழக்கத்தை மட்டும் ஏன் அருவருப்பாக பார்க்கிறீர்கள்?

ஏன் இந்த இடதுகைப் பழக்கம்?

மூளையின் இடது, வலது பாகங்கள்தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம். இடது பக்க மூளை உடலின் வலது பாகத்தையும், வலது பக்க மூளை உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்தும். இதன்படி பார்த்தால் நம்மில் பெரும்பாலனவர்களுக்கு இடது பக்க மூளை அதிக செயல்பாட்டில் இருப்பதால்தான் வலது கை பழக்கம் ஏற்படுகிறது. ஆனால் மிகச் சிலருக்கு இடது பக்க மூளையைக் காட்டிலும் வலதுப்பக்க மூளையின் செயல்பாடு சற்று அதிகமாக இருப்பதன் விளைவுதான் இடது கை பழக்கம். அதன் காரணமாக அதன் காரணமாக இடது கை பழக்கம் ஏற்படுகிறது.

இடது கை பழக்கமுள்ள குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

பெற்றோர்களுக்கு..

* சிறு வயதில் பேச்சு வருவதில் சற்று தாமதம் ஆகலாம். அதற்காக பயம் வேண்டாம். பேச்சிற்கான கட்டுப்பாடு மையம் இருக்கும் மூளையின் இடது அரைக்கோளத்தின் செயல்பாடு, இவர்களில் சற்று குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.

* சாப்பிடுவது, எழுதுவது, கைகுலுக்குவது என எந்த விஷயத்தையும் இடதிலிருந்து வலது கை பழக்கத்திற்கு மாற்ற வேண்டாம். நீங்கள் மாற்ற முயற்சித்தாலும் அவர்கள் இயல்பாக பந்தை உதைக்க கூட இடது காலையும், பந்தை எடுக்க இடது கையையும்தான் உபயோகிப்பார்கள்.

* இடது கையால் சாப்பாட்டை எடுத்து சாப்பிடுகிறார்களா..? கவலையை விடுங்கள். வளார்ந்ததும் அவர்களாக சாப்பிடுவதை வலது கைக்கு மாற்றி கொள்வார்கள். அதற்காக மற்றவர்கள் முன் மட்டம் தட்டுவது, அருவருப்பாக பார்ப்பது எல்லாம் வேண்டவே வேண்டாம்.

left2.jpg



ஆசிரியர்களுக்கு...

* இடது பழக்கம் உள்ள பிள்ளைகள் மற்ற பிள்ளைகளுடன் உட்கார்ந்து எழுதுவதில் இடிப்பது போன்ற சிரமம் ஏற்படும். எனவே அவர்களை பெஞ்சின் கார்னரில் அமர வைத்தால் எழுந்து போவதற்கும், எழுதுவதற்கும் எளிதாக இருக்கும்.

* வரைவதில் ஆரம்பத்தில் சிக்கல் ஏற்படும். எனவே சிறு வட்டம் வரைந்து, அதில் ஓவியங்களை வரைய பழக்கப்படுத்துங்கள்.

* பள்ளிகளில் ''லெஃப்ட்" என பட்டப்பெயர் வைத்து மன ரீதியாக கிண்டல் அடிப்பதை நிறுத்துங்கள். சக மாணவர்களுக்கு இதுவும் நார்மலான விஷயமே என்பதை புரிய வையுங்கள்.

இடது கை பழக்கத்தால் என்ன பிளஸ்?

வலது பக்க அரைக்கோளத்தின் அதிக செயல்பாடு என்னவெல்லாம் செய்கிறது என்று பாருங்களேன்..

* நீண்ட நாட்களுக்கு முன்னால் பார்த்த எந்த ஓர் இடத்தையும், நபரையும் சட்டென நினைவுக்குக் கொண்டு வரும் சக்தி, வலது கை பழக்கம் உள்ளவர்களை விட இவர்களுக்கு ஜாஸ்தி.

* இசை, ஓவியம் போன்ற கலைகளில் அதீத ஆர்வத்துடன் இருப்பார்கள்.

* கண்ணால் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு பொருளை எங்கே வைத்தால் சரியாக இருக்கும், இரண்டு பொருட்களுக்கும் இடைப்பட்ட தூரம் எவ்வளவு என எளிதாக சொல்லி விடுவார்கள். சாலையில் செல்லும்போது கூட இரண்டு வண்டிகளுக்கு இடைப்பட்ட இடைவெளி எவ்வளவு, அதில் வண்டியை நுழைக்க முடியுமா என்பதை துல்லியமாக கணக்கிடும் பார்வை திறனும் அதிகம் உண்டு.

* வரைபடங்கள் தொடர்பான அறிவும் நிறையவே இருக்கும்.

* நம்மையெல்லாம் ஒரு மனித முகத்தை வரைய சொன்னால் தலை, கண், மூக்கு என வரைவோம். ஆனால் இடது கை பழக்கமுள்ளவர்கள் ஒரு கிறுக்கலை வரைந்து அதையே முகமாக விவரிக்கும் கற்பனை திறனுக்கு சொந்தக்காரர்கள்.

* அதிகப்படியான கற்பனை சக்தி இருக்கும்.

குழந்தைகள் பயன்படுத்தும் கை எதுவாக இருந்தால் என்ன, அவர்களின் மீது நம்பிக்கையை வைத்து திறமைகளை மட்டும் ஊக்குவியுங்கள். உங்கள் குழந்தைகளும் ஜொலிப்பார்கள்" என்று சொல்லி முடித்தார் மருத்துவர் செந்தில்வேலன்.

vikatan

  • தொடங்கியவர்

கடல் நுரை

  • தொடங்கியவர்

சொல்வனம்

படம்: அருண் டைட்டன்

 

p58a.jpg

கண்ணீர் இரவு... 

கரும்பு ஆலைக்கோ

நூல் மில்லுக்கோ

கனரக வாகனத்துக்கோ

மளிகைக் கடைக்கோ

பல்பொருள் அங்காடிக்கோ

விடியற்காலையில் சென்று

நிலவு பார்க்க வீடு திரும்பி

அரைகுறையாக உண்டு

அலுப்பில் உறங்குபவனை

பாதியில் எழுப்பி

உனக்கு இன்னும்

எத்தனை நாள் விடுமுறை என்றோ

எப்போது பள்ளி திறக்கும் என்றோ

கேட்டுவிடாதீர்கள்

விடுமுறை வெறுப்பினாலான

அவன் கண்ணீரில்

இரவு உறைந்துவிடும்.

 - மு.மகுடீசுவரன் 

தலைமுறைத் தூது...

தழைத்துயர்ந்த புன்னை மரத்தின்

நிழல் சாய்ந்துகிடக்கும் முதலாம் மாடியில்

பால்கனி கசிந்துமணக்கும் அந்தியில்

தாமிர நிற மயிர் காற்றில் படர

புன்னையென்றால் என்னவென்றறியா

தலைமுறைத் தலைவி

கயல்விழிகள் கண்ணீரில் நீந்தக் காத்திருக்கிறாள்.

எம்.ஜி.ஆர் நகர் முனையில்

பென்சில் ஃபிட் கால்களைக் கவ்வ

தேங்காய்க் குடுமி தாடிசெய்து

எஃப் இசட்டில் உறுமிக்கொண்டிருக்கிறான் தலைவன்.

தூது செல்லும் காந்த அலைகளே

தொழில்நுட்பக் கோளாறெதுவும் அண்டவிடாமல்

அவனிடம் சேர்த்துவிடுங்கள்

'டாடி மம்மி வீட்டில் இல்லை’ என்ற

வாட்ஸ்அப் செய்தியை. 

- சச்சின்

குர்குர்ரே...

மருத நிலத்துக் கிழவர்கள்

பேசிச் சிரித்திருந்த திண்ணைகள் இடிக்கப்பட்டு அங்கு நாய்கள் ஜாக்கிரதை பலகைகள்.

 

வளையல்கள் மோதி  

கிணிர் ஒலியோடு மோவாய் அருகே

நீட்டப்பட்ட வெண்கலச் சொம்புகளுக்குப் பதிலாக டி.வி ரிமோட்கள் விருந்தினர்களுக்கு.

 

கவண்கல் எறிந்து கில்லி தாண்டி

வீதிகளில் மகிழ்ந்திருந்த குழந்தைகள்

டோரா சொல்ல அதை

மூன்றுக்கு ஆறு இன்ச் திரையில் தேடும்

லேஸ் குர்குர்ரே தத்துப்பிள்ளைகள்.

 

தினவேறிய தோள்களோடு

காளைகளை அடக்கிய

சேர சோழ பாண்டிய வாரிசுகள்

குவார்ட்டர் பாட்டில் மூடியைத்

திறக்க விரல்கள்

நடுநடுங்கிக்கொண்டிருக்கின்றனர்.

 

இருக்க இடம் கேட்ட கம்பெனிக்காரன்

நம் வீட்டு அறைகளில் கால்களை ஆட்டி

படுத்திருக்கிறான். 

 - எம்.ஸ்டாலின் சரவணன்

vikatan

  • தொடங்கியவர்

 

13412177_1057776820937678_60363736401100

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரும் உலகின் உயரமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான முஹமட் இர்பானின் பிறந்தநாள்.
Happy Birthday Mohammed Irfan.
  • தொடங்கியவர்

இது செம காப்பி!

 

நாம பரீட்சை எழுதும்போது பக்கத்தில் இருக்கிறவனைப் பார்த்து, பத்து மார்க் விடையை காப்பி அடிச்சாலே, டீச்சர்கள் குனியவெச்சு கும்மு கும்முனு கும்மி எடுப்பாங்க. ஆனால், இந்த சீனாக்காரப் பசங்க எதையெல்லாம் காப்பி அடிச்சுருக்காய்ங்கனு இங்கே பாருங்க.

p14a.jpg

ஆப்பிள் போனுக்கு டூப்ளிகேட் பண்ணா பரவாயில்லை, ஆப்பிள் ஸ்டோருக்கே டூப்ளிகேட் பண்ணிருக்காய்ங்க!

p14g.jpg

ஸ்டார் பக்ஸ் கேள்விப்பட்டிருப்பீங்க, பக்ஸ் ஸ்டார் கேள்விப்பட்டிருக்கீங்களா?

p14c.jpg

ஈஃபில் டவரையும் விட்டு வைக்கலை இவிய்ங்க!

p14d.jpg

லேண்ட் ரோவர் மாதிரி லேண்ட் விண்ட்!

p14e.jpg

இது ஒபாமா ஃபிரைட் சிக்கன் டோய்!

p14f.jpg

கோகோ கோலா பிரௌன் கலர்டா!

p14i.jpg

ஹாரிபாட்டரையும் சீனாவுக்கு நாடு கடத்திட்டாய்ங்க!

p14h.jpg

ஒரு சிட்னி ஒபேரா ஹவுஸ் காப்பி பார்சேல்!

p14j.jpg

இது சீனாவின் வெள்ளை மாளிகை!

p14l.jpg

அடிச்சான் பாரு ரோல்ஸ் ராய்ஸ்க்கே விபூதி!

p14k.jpg

ஊ ஊ வூ மார்ட்!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.