Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

13411795_1057776107604416_83408585410113

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மைக் கட்டிங்கின் பிறந்தநாள்.
Happy Birthday Mike Gatting

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
1975 : முதலாவது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பம்
 

வரலாற்றில் இன்று....

ஜுன் - 07

 

1099 : முத­லா­வது சிலுவைப் போரில் ஜெரூஸலம் மீதான முற்­றுகை ஆரம்­ப­மா­கி­யது.

 

1494 :  புதி­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்ட உல­கத்தை (வட அமெ­ரிக்கா, தென் அமெ­ரிக்கா) இரு நாடு­க­ளுக்கும் இடையில் பிரித்­து ­கொள்­வது தொடர்­பாக ஸ்பெய்­னுக்கும் போர்த்­துக்­க­லுக்கும் இடையில் ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

 

741119783.jpg1654 : பிரான்ஸில் 16ஆம் லூயி மன்­ன­னுக்கு முடி­சூ­டப்­பட்­டது.

 

1692 : ஜமைக்­காவின் போர்ட் ரோயல் நகரம் பாரிய பூகம்­பத்­தினால் 3 நிமி­டங்­களில் அழிந்­தது. 1600 பேர் பலி­யா­கினர். சுமார் 3000 பேர் படு­கா­ய­ம­டைந்­தனர்.

 

1832 : ஐரிஸ் குடி­யேற்­ற­வா­சிகள் மூலம் கன­டாவில் கொலரா நோய் பர­வி­யது. இதனால் சுமார் 6000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1862 : அடிமை வர்த்­த­கத்தை ஒழிப்­ப­தற்கு அம­ரிக்­காவும் பிரிட்­டனும் இணங்­கின.

 

1863 : மெக்­ஸிகோ தலை­ந­க­ரான மெக்­ஸிகோ சிற்றி பிரெஞ்சுப் படை­க­ளினால் கைப்­பற்­றப்­பட்­டது.

 

1905 : சுவீ­ட­னுடன் இணைந்த ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரி­வ­தற்கு நோர்வே நாடா­ளு­மன்றம் அங்­கீ­கா­ர­ம­ளித்­தது.

 

1940 : 2ஆம் உலக யுத்­தத்­தின்­போது நேர்வே மன்னர் 7 ஆம் ஹக்­கோனும் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் ஒலாவும் நாட்­டை­விட்டு வெளி­யேறி லண்­டனில் வசிக்க ஆரம்­பித்­தனர்.

 

1975 : ஆண்­க­ளுக்­கான முத­லா­வது உல­கக்­கிண்ண கிரிக்கெட் சுற்­றுப்­போட்டி இங்­கி­லாந்தில் ஆரம்­ப­மா­கி­யது. முதல் போட்­டியில் இந்­தி­யாவை இங்­கி­லாந்து 202 ஓட்­டங்­களால் வென்­றது.

 

1977 : பிரித்­தா­னிய அரசி இரண்டாம் எலி­ஸ­பெத்தின் பொன்­விழா கொண்­டாட்­டத்தின் முக்­கிய நிகழ்வு நடை­பெற்­றன. இந்­நி­கழ்­வு­களை தொலைக்­காட்­சியில் சுமார் 50 கோடி பேர் பார்­வை­யிட்­டனர்.

 

1989 : சூரினாம் எயார்வேஸ் விமா­ன­மொன்று சூரி­னாமில் விபத்­துக்­குள்­ளா­னதால் 176 பேர் பார்­வை­யிட்­டனர்.

 

1995 : போயிங் 777 பய­ணிகள் விமானம் முதல் தட­வை­யாக சேவைக்கு வந்­தது.

 

2000 : இஸ்­ரே­லுக்கும் லெப­னா­னுக்கும் இடை­யி­லான எல்­லை­களை ஐ.நா. வரை­யறை செய்­தது.

 

2006 : ஈராக்கில் அல் கைதா தலை­வ­ரான அபு முசாப் அல் ஸார்­காவி, அமெ­ரிக்க விமா­னப்­ப­டை­யி­னரின் தாக்­கு­தலில் பலி­யானார்.

 

2007 : கொழும்பு விடு­தி­களில் தங்­கி­யி­ருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 300 இற்கும் அதிகமான தமிழர்கள் வலுக் கட்டாயமாக பொலிஸாரால் வெளியேற்றப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வெள்ளத்தில் பிடிக்கப்பட்ட மீன்
 

பிரான்ஸில் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் மழையினால் பாரிஸ் உட்பட பல நகரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

 

17148478474-01-02_05062016_R25_CMY.jpg

 

பாரிஸ் நகரில் பெருக்கெடுத்து ஓடிய சென் நதிக் கரையில் தான் பிடித்த பாரிய மீன் ஒன்றுடன் இளைஞர் ஒருவர் காணப்படுகிறார்.    

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13392095_1058224217559605_35646869346063

நியூசீலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷேன் பொண்டின் பிறந்தநாள்.
Happy Birthday Shane Bond

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

 

p33a.jpg

கெஸ்ட் தாத்தா!

``வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க..!'' - தோழியிடம் போனில் சொன்னாள் சரோ, கிராமத்திலிருந்து வந்திருந்த தன் தாத்தாவைப் பற்றி!

 - பாப்பனப்பட்டு வ.முருகன்


p33b.jpg

இறைவனிடம்...

எந்த வேண்டுதலுமின்றி அமர்ந்திருந்தான்... கோயில் வாசலில் பிச்சைக்காரன்!

- பெ.பாண்டியன்


p33c.jpg

துருவங்கள் சேரலாம்!

ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒரே மேடையில், அருகருகே அமர்ந்து, சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தனர்... பள்ளிக் குழந்தைகள் மாறுவேடப் போட்டியில்.

- தி.செந்தில்குமார்


p33d.jpg

கடல் தண்ணி!

``குழம்புல உப்பே இல்லடா. கொஞ்சம் தண்ணி எடுத்து ஊத்து'' என்றான் கட்டுமரத்தில் இருந்த மீனவன்.

 - அஜித்


p33e.jpg

சீக்ரெட்... சீக்ரெட்!

 ``...........................................................................................!'' என்று, அவன் ரகசியம் சொல்ல, திடுக்கிட்டாள், நண்பனின் மனைவி!

- கி.ரவிக்குமார்


p33f.jpg

ஐ லைக் இட்!

காதலனின் கல்யாண ஆல்பத்துக்கு லைக்ஸிட்டாள் காதலி!

 - பெ.பாண்டியன்


p33g.jpg

`நோட்' தி பாயின்ட்

`ஏன் நோட்டாவுக்கு ஓட்டு போட்டீங்க?'' என நிருபர் கேட்க, முத்து கோபமாகச் சொன்னான்... ``ஒரு பயலும் ஒரு பைசா தரலை'' என்று.

- வீ.விஷ்ணு குமார்


p33k.jpg

அட்மிஷன்... ஓபன்

வேலை கேட்டு வந்த ஆசிரியர்களிடம் தாளாளர் கேட்டார், ``உங்களால நம்ம ஸ்கூலுக்கு எத்தனை ஸ்டூடன்ட்ஸ் பிடிச்சுத்தர முடியும்?''

- பெ.பாண்டியன்


p33m.jpg

பொறியாளன்

பொறியியல் பட்டதாரி மகனுக்கு, இன்ஜினீயர்களிடம் வேலை கேட்டு அலைந்தாள் சித்தாள் அம்மா!

- பெ.பாண்டியன்


p33n.jpg

மொக்கை படம்

``ஏங்க... நீங்க நடிச்ச படத்தை டி.வி-யில போடுறாங்க'' என்று மனைவி சொன்னதும், ``அது ஒரு மொக்கை படம். சேனலை மாத்து'' என்றார் நடிகர்.

- அபிசேக் மியாவ்.

vikatan

  • தொடங்கியவர்

MAN vs WILD நாயகன் பியர் கிரில்ஸ் பிறந்த தினம்!

டிஸ்கவரி சானலில் வெளியான மேன் வெர்ஸஸ் வொயில்டு தொலைக்காட்சி தொடரை அனைவரும் பார்த்து வியந்து இருப்போம். இந்த தொடரில் மூலம் நாயகனாக வலம் வந்த பியர் கிரில்ஸ் பிறந்த தினம் இன்று

13407030_1151855004873288_38902739951801

 

  • தொடங்கியவர்

வெறி பேபி!

 

p16.jpg

சாதிவெறி, இனவெறி, மதவெறி, மொழிவெறி மட்டும் இல்லை பாஸ். தமிழர்களுக்கு வேற என்னெல்லாம் வெறி இருக்குனு பார்ப்போமா?

அன்னவெறி: சோறுதான் பாஸ். பசிக்குதோ இல்லையோ, டான்னு மணியடிச்சா சோறு சாப்பிட்டே ஆகணும். என்னதான் ப்ரெட், சாண்ட்விச், பீட்சா, பர்கர்னு புதுப்புது ஐட்டங்கள் வந்தாலும் சோத்தைக் குழம்புல குழைச்சு அள்ளி அமுக்கிக்கிறதுல தமிழன் தனிரகம்டா!

p16a.jpg

காதல் வெறி: இப்போவெல்லாம் ஒண்ணாப்பு படிக்கிறப்பவே ஹார்மோன் வேலை செய்ய ஆரம்பிச்சிடுது. டீனேஜ் வந்ததும் படிக்கிறோமோ இல்லையோ யாரையாச்சும் ஒன்சைடாவது லவ் பண்ணியே ஆகணும். இல்லைனா சாமிக்குத்தம் ஆகிடும். லவ் பண்ணி சிக்கிச் சீரழிஞ்சு அப்பாகிட்ட அடிவாங்கி, இல்லைனா பொண்ணோட அப்பன், தாய்மாமன்கிட்ட வாய்லயே மிதி வாங்கி... அந்தப் பொண்ணே நேர்ல வந்து, ‘என்னை மறந்து நிம்மதியா வாழ விடுங்கண்ணா’னு சொன்னாதான் இந்த வெறி அடங்கும்!

p16b.jpg

கலைவெறி: பேப்பர்ல எதையாச்சும் வரையறது, கொஞ்சம் வளர்ந்தபிறகு நிலவே, மானே, அடிப் பெண்ணேனு கவிதை எழுதிக் கொல்லுறதுனு இங்கே பூராப்பயலுகளும் கலைவெறி பிடிச்சவய்ங்கதான். என்ன ஒண்ணு...இப்போ பரிணாம வளர்ச்சி அடைஞ்சு ‘மாடசாமி போட்டோகிராஃபி’னு எதையாச்சும் போட்டோ பிடிச்சு  வாட்டர் மார்க் பண்ற அளவுக்கு சாஃப்ட்டா மாறிப்போயிடுச்சு. சமயங்கள்ல கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமிகளுக்கு டஃப் கொடுக்க கருவேலங்காட்டுக்குள்ள குறும்படம்னு எதையாச்சும் எடுத்து யூ டியூப்ல அப்லோட் பண்ணுற அளவுக்கு வளர்ந்துருக்கு!

p16c.jpg

விமர்சன வெறி: படம் பார்க்கிறாங்களோ இல்லையோ, இன்றைய தேதிக்கு ஃபேஸ்புக்ல படத்தோட விமர்சனம் எழுதலைனா உடம்பு பூரா தோல் தடிச்சு அலர்ஜி வர்ற அளவுக்கு எல்லோருமே விமர்சகர்களா மாறிப்போயிட்டாங்க. உச்சபட்சமா மோஷன் போஸ்டருக்கெல்லாம் விமர்சனம் பண்ணுறாங்கப்பா. போறபோக்குல மோஷன் போறதுக்கும்கூட விமர்சனம் பண்ணுவாய்ங்கே போல!

p16d.jpg

தல, தளபதி வெறி: இந்த வகை வெறிதான் இன்னிக்கு புற்றுநோயா சோஷியல் மீடியாவில் ஆரம்பிச்சு சோழவந்தான் வரைக்கும் ஊரையே அழிச்சிக்கிட்டுக் கிடக்கு. பெத்த அப்பா, அம்மாவைக் கெட்டவார்த்தையில திட்டினாகூட பொறுத்துக்குவாங்க. ஆனா தங்களோட தலயவோ, தளபதியவோ தப்பா சொல்லிட்டாப் பொங்கிடுவாங்க. தலக்கும் தளபதிக்குமேகூட தெரியாத சினிமா பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் தொகையைக்கூட இந்த வகை வெறி கணிச்சுக் கொடுக்கும்னா பார்த்துக்கோங்க பாஸ்!

p16e.jpg

லைக்ஸ் வெறி: இந்த வெறி இல்லாத இந்தியனே இல்லைனு சொல்லலாம். எதையாவது கிறுக்கி வெச்சுட்டு ஃபேஸ்புக்ல தேவுடு காக்குறதுதான் இப்போ எல்லோரோட பொழப்பா போச்சு. ஒருவேளை லைக்ஸ் அதிகமா வந்துச்சுனு வைங்க. அம்புட்டுதான். புக் எழுதணும்னு தோணும். கைக்காசைப் போட்டு எழுதி அது சரியா போகலைனா, சாருவையோ ஜெயமோகனையோ கழுவி ஊத்தி எழுத்தாளரா ஃபார்ம் ஆக வேண்டி இருக்கும். பேசாம அக்கவுன்ட்டை க்ளோஸ் பண்ணிட்டு கம்முனு இருந்துட்டா, முதலுக்கு மோசமில்லை!

p16f.jpg

செல்ஃபி வெறி: ஆண்களைவிட பெண்களுக்கு இந்த வெறி அதிகமா இருக்கிறதா நம்பத்தகாத சர்வே சொல்லுது. முகத்தைக் கோணலா வெச்சுக்கிறது, தொப்பையை எக்கி மறைச்சுக்கிறது, யோ யோ  காட்டுறது, வி காட்டுறதுனு எல்லாமே தாறுமாறு தக்காளிச்சோறுதான். ஆனா மக்களே ஒண்ணை மட்டும் புரிஞ்சுக்கோங்க. அதிகமா செல்ஃபி எடுத்தவனும் அதிகமா குல்ஃபி தின்னவனும் ராத்திரி தூங்கினதா சரித்திரமே இல்லை! (எதையாச்சும் சொல்லி வைப்போம்.)

குறியீடு வெறி: பார்க்கிற எல்லா விஷயத்திலேயும் குறியீடு கண்டுபிடிச்சு சொல்வாங்க. இப்பல்லாம் படத்தோட டீஸர் பார்த்தே, டைரக்டருக்கே தெரியாத குறியீடு எல்லாத்தையும் கண்டுபிடிக்கிறாங்க. இதே ரேஞ்சுக்குப் போனா, ‘இட்லியும் தோசையும் கண்டுபிடிச்ச தமிழன் ஏன் அதை வட்டமா உருவாக்கினான்னா வாழ்க்கை ஒரு வட்டம்னு காட்டத்தான்’னு சொல்வாங்க!

கடைசியா, ‘டைம்பாஸ் வெறி’னு ஒண்ணு இருக்கு. வாராவாரம் அந்த புக்கைப் படிக்காட்டா, கையில் அரிப்பு வந்திடும். ஸோ மறக்காம வாங்கிப் படிச்சு ஆரோக்யமா வாழ்ந்துக்கோங்க மக்கா!

vikatan

  • தொடங்கியவர்
உல்லாசப் பயணத்துறை அபிவிருத்திக்காக கடலில் மூழ்கடிக்கப்பட்ட பாரிய விமானம்
 

துருக்­கிய அதி­கா­ரிகள் 177 அடி நீள­மான விமா­ன­மொன்றை துருக்­கிக்கும் கிறி­ஸுக்கும் இடை­யி­லான ஏஜியன் கடலில் கடந்த சனிக்­கி­ழமை மூழ்­க­டித்­தனர்.

 

171439676turkish-plane-%282%29_06062016_

 

அப்­பி­ராந்­தி­யத்தில் டைவிங் (சுழி­யோடல்) சுற்­று­லாத்­து­றையை ஊக்­கு­விப்­ப­தற்­காக இந்த பழைய விமானம் மூழ்­க­டிக்­கப்­பட்­டது. 

 

எயார்பஸ் ஏ- 300 ரகத்தைச் சேர்ந்த விமா­ன­மொன்றே இவ்­வாறு மூழ்­க­டிக்­கப்­பட்­டது. 54 மீற்றர் (177அடி) நீள­மான இவ்­வி­மா­னத்தின் இறக்­கை­களின் முனை­க­ளுக்கு இடை­யி­லான தூரம் 44 மீற்­றர்கள் (144 அடி) ஆகும். 

 

171434aeaturkish-plane-%281%29_06062016_

 

இந்த விமானம் ஒரு செயற்கை பவ­ளப்­பா­றை­யாக மாறும் என அதி­கா­ரிகள் நம்­பு­கின்­றனர்.

 

இந்த போயிங் ஏ300 ரக விமா­னமே செயற்கை பளவப் பாறை­யாக பயன்­ப­டுத்­து­வ­தற்­காக இது­வரை மூழ்­க­டிக்­கப்­பட்ட மிகப் பெரிய விமானம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.

 

171437814turkish-plane-%283%29_06062016_

 

துருக்கியின் அய்தின் மாகா­ணத்தைச் சேர்ந்த மேயர் ஒஸ்லெம் சேர்­சி­யோக்லு இது தொடர்­பாக கூறு­கையில், “இந்த விமானம் மூழ்­க­டிக்­கப்­பட்­ட­மைக்கு இரு நோக்­கங்கள் உள்­ளன.

 

முத­லா­வது நோக்­க­மா­னது ஒரு வருட காலத்­துக்குள் சுழி­யோட விரும்பும் உல்­லாசப் பய­ணி­களைக் கவரும் நக­ர­மாக குஸ­தாசி நகரை மாற்றுவதாகும். இரண்டாவது நோக்கம். இது கடலிலுள்ள உயிரினங்களைப் பாதுகாப்பதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆப்பிளின் 40 ஆண்டு!

 
apple_2879953f.jpg
 

முதல் ஆப்பிள் கணினி வெளியானது, ஸ்டீவ் ஜோப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தை விட்டுச் சென்றது, பின்பு திரும்பி வந்தது, ஐமேக்கின் வெளியீடு, மேக்புக் ஏர், ஐபாட், ஐபோன் வெளியீடு என்று வளமான ஒரு வரலாற்றைக் கொண்டது ஆப்பிள். அதன் 40 ஆண்டுகள் வரலாறு ஒளிப்படங்கள் வழியே இங்கே…

# 1976 இதுதான் முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஆப்பிள் கணினி, இதற்கு ஆப்பிள்-I என்று பெயர். இதிலிருந்துதான் ஆப்பிள் நிறுவனத்தின் பயணம் தொடங்குகிறது.

இதை வடிவமைத்து உருவாக்கியவர் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் வோஸ்னியக். வோஸ்னியக்கின் நண்பர் ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தக் கணினியை எப்படி விற்பது என்று யோசித்ததன் விளைவாக ஆப்பிள் நிறுவனம் பிறந்தது.

# 1984 ‘எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய’ (portable) கணினி என்று 1984-ல் பெயர்வாங்கிய கணினி இது. இதன் பெயர் ஆப்பிள் IIc. இதற்கு மின்கலம் ஏதும் கிடையாது. மின்சார இணைப்பு கொடுத்து இயக்க வேண்டிய கணினி அது.

# 1991 ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கணினி இது. இதன் பெயர் பவர்புக் 100 (வலது பக்கம் இருப்பது). ஆப்பிளுக்காக இதை வடிவமைத்து, உற்பத்தி செய்தது சோனி நிறுவனம். அப்போது அதன் விலை 2,500 அமெரிக்க டாலர்கள்.

அளவை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதற்காக இடது பக்கம் 13 அங்குல மேக்புக் ப்ரோ மடிக்கணினி கூடவே வைக்கப்பட்டிருக்கிறது.

# 1998 ஐபோனின் வருகைக்கு முன்பு ஐமேக் கணினிதான் ஆப்பிள் நிறுவனத்தை எங்கெங்கும் பிரபலப்படுத்தியது. ஜோனி ஐவும் ஸ்டீவ் ஜாப்ஸும் சேர்ந்து உருவாக்கிய படைப்பு இது. இணைய தொடர்புக்கான 56கே.பி. மோடத்துடன் கூடிய கணினி இது.

# 2001 ஆப்பிள் நிறுவனத்தின் முகத்தையே மாற்றியமைத்த தயாரிப்பான ஐபாட் இந்த ஆண்டில்தான் பிறந்தது. 5ஜிபியையும் சிறிய எல்.சி.டி திரையையும் கொண்டிருந்த ஐபாட் ஒன்றும் புரட்சிகரமான தயாரிப்பு இல்லைதான்.

ஆனால், மிகவும் சிறியதாகவும் அதிக அளவில் சந்தைப்படுத்தப்பட்டதும், சந்தையில் முதலிடத்தில் இருந்ததுமான தயாரிப்பு இது.

# 2007 ஐபாடின் வெற்றிக்குப் பிறகு வந்த ஐபோன் ஆப்பிளைப் புது யுகம் நோக்கித் தள்ளியது. 4ஜிபி நினைவகம், 3.5 அங்குல தொடுதிரை, 620எம்.எச்.இசட் சாம்சங் புராசசர் போன்றவை இதன் சிறப்பம்சங்கள். ஐஃபோனை உருவாக்குவதற்கு 2.5 ஆண்டுகள் ஆயின. இணையத்துக்கும் கைபேசிக்கும் முடிச்சுப் போட்ட தற்போதைய யுகத்தின் கைபேசி இது.

# 2008 ஆப்பிளின் லேப்டாப்புகளில் பல ஆண்டுகள் கழித்துச் செய்யப்பட்ட பெரிய மாற்றம், ‘மேக்புக் ஏர்’. முதல் ‘மேக்புக் ஏர்’ லேப்டாப்பில் மெதுவான, சிறிய ஹார்ட் டிரைவ், மெதுவான புராசசர், சற்றே குறைந்த ஆயுளைக் கொண்ட பேட்டரி போன்ற பாதகமான அம்சங்கள் இருந்தாலும் மெல்லிய, எடை குறைந்த மடிக்கணினிகளின் யுகத்துக்கு இதுதான் முன்னுரை எழுதியது.

# 2015 ஐபேடுக்குப் பிறகும், ஸ்டீவ் ஜாப்ஸின் மரணத்துக்குப் பிறகும் ஆப்பிள் வெளியிட்ட புதிய தயாரிப்பு ஆப்பிள் கடிகாரம். சாம்சங், எல்.ஜி, சோனி போன்ற போட்டியாளர்களை முந்திக்கொண்டு சந்தையில் பிரபலமான திறன்கடிகாரமாக இது விளங்குகிறது.

# 2016 பவர்பிசி புராசசர் களைத் தூக்கியெறிந்து விட்டு, இன்னும் வேகமாகச் செயல்படக்கூடியதும், அதிகத் திறன் வாய்ந்ததுமான x86 சிப்புகளை இண்டெல் நிறுவனத்திடமிருந்து ஆப்பிள் பெற்றுக் கொண்டு தனது கணினிகளில் பயன்படுத்த ஆரம்பித்தது இந்த ஆண்டிலிருந்துதான். ஐபுக், பவர்புக், பவர் மேக்கின் காலமெல்லாம் முடிந்து மேக்புக், மேக்புக் ப்ரோ, மேக் ப்ரோ போன்றவற்றின் யுகம் பிறந்தது. ஆப்பிள் கணினிகளுக்கு இன்னும் அடிப்படையாக இருப்பது இவைதான்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு 1 - என்ன சொல்கிறது நமது தேசிய

கீதம்?

 
tagore_2812495f.jpg
 

குழந்தைகளே வணக்கம். ஒவ்வொரு திங்கள்கிழமை அன்றும் காலையில் பள்ளி தொடங்கும் வேளையின் என்ன செய்வீர்கள்? பள்ளியில் தேசியக் கொடி ஏற்றுவார்கள். நீங்கள் எல்லாம் ஒன்றுகூடி தேசிய கீதம் பாடுவீர்கள். அந்த தேசிய கீதத்துக்கு அர்த்தம் என்ன என்று தெரியுமா? நம் தேசிய கீதத்துக்கு ஒரு வரலாறு இருப்பது போல, வெளிநாட்டு தேசிய கீதங்களுக்கும் வரலாறு இருக்குமல்லவா? அவற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? இனி, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாட்டின் தேசியக் கீதங்களின் வரலாறு ஒலிக்கும். இந்த வாரம் நம் நாட்டு தேசிய கீதம்.

 

எத்தனை ஆண்டுகள்...?

50...? 60...? 70...? 80..?

நூறு ஆண்டுகள்....?

இல்லைஇல்லை, 104 ஆண்டுகள், இன்னும் சில மாதங்கள்.

சரி, சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போமா?

நாள்: 1911, டிசம்பர் 27.

இடம்: கல்கத்தா.

இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு.

 

பிஷண் நாராயண் தார் (தலைவர்), பூபேந்திர நாத் போஸ், அம்பிகா சரண் மஜும்தார் உள்ளிட்ட தலைவர்களின் முன்னிலையில், சரளாதேவி சோத்ராணி பாடுகிறார். குறித்து வைத்துக் கொள்கிறீர்களா?

இதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின், இந்தப் பாடல், மிக உயரிய இடத்தை அடைய இருக்கிறது.

பல நூறு கோடி மக்கள் இப்பாடலைத் தம்முடைய உயிருக்கு உயிராக இசைக்கப் போகிறார்கள்.

அது என்ன பாடல்? இதோ அந்தப் பாடல்?

'ஜன கன மன...'

sarala_2812496a.jpg

# காங்கிரஸ் மாநாட்டுக்குச் சில நாட்கள் கழித்து, 1912-ம் ஆண்டு ஜனவரியில், தாகூர் ஆசிரியராக இருந்த, பிரம்ம சமாஜம் இயக்கத்தின் 'தத்துவ போதினி' பத்திரிகையில் இப்பாடல் வெளிவந்தது.

# இது நடந்து ஏழு ஆண்டுகள் கழித்து, 1919-ம் ஆண்டு பிப்ரவரியில், ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் 'தியோசாபிகல் சங்கம்' நடத்திய கூட்டத்தில், தாகூர், தானே இப்பாடலைப் பாடுகிறார்.

# இதன் பிறகு, வங்க மொழியில் தாம் இயற்றிய பாடலை, ரவீந்திரநாத் தாகூரே ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கிறார். தனது உறவுக்காரப் பெண்மணி மார்கரெட் துணையுடன், பாடலுக்கு மேற்கத்திய இசை வடிவம் தருகிறார்.

# 1947-ம் ஆண்டு. அமெரிக்காவின் நியூயார்க் நகரம். ஐ.நா. சபையின் பொதுச்சபை கூடுகிறது.

# இந்தியக் குழுவினர், தமது தேசிய கீதத்தைப் பாடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

# அனைவரும் சேர்ந்து பாடுகிறார்கள் - 'ஜன கன மன...'

# “மிகவும் வித்தியாசமான கம்பீரமான இசை வடிவத்தை கைதட்டி வரவேற்றனர் பிற நாட்டு அங்கத்தினர்”. இந்த நிகழ்வை இவ்வாறு பதிவு செய்கிறார் பண்டிதர் ஜவஹர்லால் நேரு.

# 1950-ம் ஆண்டு. ஜனவரி 24. அரசியல் சாசன நிர்ணயக் குழுக் கூட்டம். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கையெழுத்து இடுவதற்காகக் கூடி இருக்கிறது. அன்றைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், 'ஜன கன மன' பாடலை, இந்தியாவின் தேசிய கீதமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.

# கூட்டத்தில் நிறைவாக, அவையின் துணை நாயகராக இருந்த அனந்தசயனம் ஐயங்கார் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், அனைவரையும் தேசிய கீதம் பாடும்படி கேட்டுக் கொள்கிறார்.

# இந்தியாவின் பன்முகத் தன்மையை வலியுறுத்தும் இப்பாடல் ஐந்து பத்திகள் கொண்டது.

# பாடலை இசைக்க ஆகும் நேரம் - 52 வினாடிகள்.

 

என்ன சொல்கிறது நமது தேசிய கீதம்?

“இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே

எல்லார் மனங்களிலும் ஆட்சி செய்கின்றாய்.

நின் திருப்பெயர் பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், திராவிடம், ஒரிசா, வங்காளத்தை

உள்ளக் கிளர்ச்சி கொள்ளச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய இமயமலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது.

யமுனை, கங்கை இன்னொலியில் ஒன்றுகிறது. இந்தியக் கடல் அலைகளால் வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை போற்றுகின்றன. நின் புகழை பரப்புகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே! நினக்கு

வெற்றி! வெற்றி! வெற்றி!”

 

(பாடல்கள் இசைக்கும்)

tamil.thehindu

  • தொடங்கியவர்

 

13323351_1257831597569267_47624184830744

 
 
#OnThisDay 1975 - The inaugural Cricket World Cup began in England. 41 years later, we have some truly amazing memories! Which is your favourite edition of cricket's most popular tournament?
 
13350261_1257922167560210_69788171685976
  • தொடங்கியவர்

வீட்டிலேயே ஃபிட்டாகலாம்!

ஈஸி வொர்க்அவுட்ஸ்

 

p69a.jpg

‘உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். தினசரி வாழ்வில் சரியான அளவில் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தால், உடலின் எனர்ஜி அளவு அதிகரிக்கும். இது மனதின் ஆரோக்கியத்தையும் காக்கும். ஆனால், நாம் செய்கிற மிகப்பெரிய தவறு, உடற்பயிற்சிக்கு முன்பு போதுமான முன் தயாரிப்புப் பயிற்சிகளை செய்வது இல்லை. இதனால், தசைகள் பாதிக்கப்படுவதற்கானp70a.jpg வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

நம் உடலில் 600-க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன. இந்தத் தசைகள்தான் நம்முடைய இயக்கத்துக்கு உதவியாக இருக்கின்றன. நடக்க, விளையாட, எந்த ஒரு செயலையும் செய்ய, தசைகளின் இயக்கம் தேவை. தசைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான், நம்மால் இயங்கவும், வலிமையானவர்களாக இருக்கவும் முடியும். வலிமையான தசைகள் நம் உடல் ஃபிட்டாக இருக்கவும் காரணமாக இருக்கின்றன.

``உடற்பயிற்சிக்கு முன்புதான் ஸ்ட்ரெச்சிங் செய்ய வேண்டும் என்று இல்லை. உடற்பயிற்சி செய்யாதவர்கள்கூட ஸ்ட்ரெச்சிங் பயிற்சி செய்யலாம். நம் உடலே சமயத்தில் சில ஸ்டிரெச்சிங்கைக் கேட்கும். அதைச் சோம்பல் முறித்தல் மூலம் நிறைவேற்றுவது அப்படித்தான்!

உடல் உழைப்பு குறைந்துவிட்டதால், 60 வயதில் வரக்கூடிய உடல்நலப் பிரச்னைகள் எல்லாம், 30 வயதிலேயே வர ஆரம்பித்துவிடுகின்றன. தினமும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது அவசியம். ஜிம்முக்குச் சென்று கடினமான உடற்பயிற்சிகள் செய்துதான் உடலை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டும் என்பது இல்லை. வீட்டிலேயே தினமும் எளிய உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் உடலை ஃபிட்டாக வைத்திருக்கலாம்” என்கிறார் பிசியோதெரப்பிஸ்ட் நவீன்.

p71a.jpg

ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

நெக் ஸ்ட்ரெச் (Neck Stretch)

தரையில் நேராக நின்றுகொண்டு, இடது கையை இடுப்புக்கும் முதுகுக்கும் இடையில் வைக்க வேண்டும். வலது கையைத் தலைக்கு மேல்வைத்து, தலையை முடிந்தவரை கீழ் நோக்கி அழுத்த வேண்டும். பழைய நிலைக்குத் திரும்பி, வலது கையால் தலையை இடது புறம் சாய்க்க வேண்டும். பின் இரு கைவிரல்களையும் கோத்து, கட்டை விரல்களைத் தாடையில் வைத்து, தலையை மேல் நோக்கித் தூக்க வேண்டும். பிறகு, இடது கையால் தலையை இடது புறம் சாய்க்க வேண்டும். பின் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும்.

p72a.jpg

பலன்கள்: கழுத்தில் உள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சி. கழுத்துத் தசைகள் தளர்வடைவதால், வலி இல்லாமல் இருக்கும். நெகிழ்ச்சித்தன்மை நன்றாக இருக்கும்.

ட்ராபிஸியஸ் மசில் ஸ்ட்ரெச் (Trapezius Muscle Stretch)

கால்களைச் சற்று அகட்டி நேராக நிற்க வேண்டும். கை விரல்களைக் கோத்து, பின்புறமாகத் திருப்பி, தலைக்கு மேல் தூக்க வேண்டும். அதே நேரத்தில்,  முன் பாதங்களிலும் கால் விரல்களிலும் நிற்க வேண்டும். 

p74a.jpg

பலன்கள்: உடலில் உள்ள அனைத்துத் தசைகளும் தளர்வடையும். கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலுக்கு பேலன்ஸ் கிடைக்கும். தோள்பட்டை மற்றும் மேல் முதுகில் உள்ள தசைகள் விரிவடையும்.

ஷோல்டர் ஸ்ட்ரெச் (Shoulder Stretch)

கால்களைச் சற்று அகட்டி நேராக நிற்க வேண்டும். இடது கையை வலது கை பக்கம் நேராக நீட்ட வேண்டும். பிறகு, வலது கையால் இடது கையின் மூட்டைப் பற்றிக்கொள்ள வேண்டும். இதே போன்று வலது புறமும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி ஐந்து முறை செய்யலாம்.

p75a.jpg

பலன்கள்: தோள்பட்டைத் தசைகள் வலுவாகும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். தோள்களுக்கு நல்ல வடிவம் கிடைக்கும். தோள்பட்டை வலிகள் குறையும்.

பைசெப் ஸ்ட்ரெச் (Bicep Stretch)

தரையில் நேராக நின்றுகொண்டு இயன்ற வரை இரு கைகளையும் பின்புறம் நீட்ட வேண்டும். கழுத்து மற்றும் தண்டுவடம் நேராக இருக்க வேண்டும்.

p76a.jpg

பலன்கள்: கை, தோள்பட்டைத் தசைகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும். தசை சோர்வு நீங்கும்.

ட்ரைசெப்ஸ் ஸ்ட்ரெச் (Triceps Stretch)

நேராக நிற்க வேண்டும். வலது கையைத் தலைக்கு மேல் உயர்த்தி, பின்புறமாக மடக்கி, உள்ளங்கை தோள்பட்டையின் மேல் இருக்க வேண்டும். இடது கையால் வலது மூட்டைப் பற்றி மெள்ள வலதுபுறம் இழுக்க வேண்டும். இதே போன்று வலதுபுறமும் செய்ய வேண்டும். இப்படி ஐந்து முறை செய்ய வேண்டும்.

p77a.jpg

பலன்கள்: தோள்பட்டை, மார்பு, முதுகு என மேல் உடலில் உள்ள தசைகள் விரிவடையும். மூட்டு இயக்கம் நன்றாக இருக்கும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

ஃபோர்ஆர்ம் ஸ்ட்ரெச் (Forearm Stretch)

தரையில் நேராக நின்றுகொண்டு, வலது கை விரல்கள் தரையைப் பார்த்து இருக்கும்படி நேராக நீட்ட வேண்டும். பிறகு, இடது உள்ளங்கையால் வலது உள்ளங்கையைப் பின் நோக்கி அழுத்த வேண்டும். பிறகு, உள்ளங்கை மேற்புறம் இருக்குமாறு வைத்து, பின் நோக்கி இழுக்க வேண்டும். இன்னொரு கைக்கும் இதேபோல செய்ய வேண்டும். இதனை, 10 முறை செய்யலாம்.

p78a.jpgp79a1.jpg

பலன்கள்: முன் கை தசைகள், மணிக்கட்டுகள் தளர்வடையும்; கைகள் வலுப்பெறும்.

நீ டு செஸ்ட் ஸ்ட்ரெச் (Knee to Chest Stretch)

தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். வலது காலை மடக்கி, மார்புக்கு நேராகக் கொண்டுவர வேண்டும். இரு கைகளாலும் வலது கால் மூட்டைப் பற்றிக்கொள்ள வேண்டும். இடது கால் மடங்காமல் நேராக நீட்டி இருக்கட்டும். பிறகு, மடக்கிய காலை நீட்டவும். இதே போன்று மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி ஐந்து முறை செய்ய வேண்டும்.

p80a1.jpg

பலன்கள்: இதனால், ஹேம்ஸ்ட்ரிங், குளூட்ஸ், பின் முதுகுத் தசைகள் தளர்வடையும். மூட்டுகளை மடக்கி, நீட்ட எளிதாக இருக்கும்.

குளூட்ஸ் அண்டு ஹிப் ஸ்ட்ரெச் (Glutes and Hip Stretch)

தரையில் மல்லாந்து படுத்து, காலை மடித்து பாதங்களைத் தரையில் பதிக்க வேண்டும். இப்போது, வலது காலை உயர்த்தி, மூட்டைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி, அதன் கணுக்கால் வலது கால் மூட்டின் மேல் பதியும்படி வைக்க வேண்டும்.  இப்போது, வலது கால் மூட்டை மார்பு நோக்கிக் கொண்டுவந்து, ஒரு சில விநாடிகள் வைத்திருக்க வேண்டும். பிறகு, பழையநிலைக்குத் திரும்பி, இன்னொரு காலுக்கும் இதைச் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி ஐந்து முறை செய்ய வேண்டும்.

p82a1.jpg

பலன்கள்: குளூட்ஸ் தசை, இடுப்பு மற்றும் வயிற்றுத் தசைகளை வலுவாக்கும். இடுப்புக்கு நல்ல நெகிழ்ச்சித்தன்மை கிடைக்கும்.

ஹிப் ட்விஸ்ட் (Hip twist)

தரையில் மல்லாந்து படுத்து, இரு கால்களையும் மடக்கி, பாதங்களைத் தரையில் ஊன்ற வேண்டும். இடது கையை உடலுக்குப் பக்கவாட்டில் நேராக நீட்டவும். வலது கையை மடித்து, இடது தோள்பட்டையின் மேல் வைக்க வேண்டும். இப்போது, இரு கால்களையும் மடக்கியபடி, வலதுபுறம் முடிந்தவரை சாய்ந்து, தரையைத் தொட முயற்சித்து, பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோன்று இடது பக்கமும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இதேபோன்று ஐந்து முறை செய்ய வேண்டும்.

p84a1.jpg

பலன்கள்: வயிற்றின் மையப் பகுதியில் உள்ள ரெக்டஸ் அப்டாமினிஸ் (Rectus abdominis), ஆப்ளிக்ஸ் மற்றும் வயிற்றின் பக்கவாட்டில் உள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சி. உள்தொடை, ட்ரைசெப், ட்ரான்ஸ்வெர்சஸ் மற்றும் தோள்பட்டைத் தசைகள் வலுவாகும்.

கோப்ரா ஸ்ட்ரெச் (Cobra Stretch)

தரையில் குப்புறப் படுக்க வேண்டும். இப்போது, இரு கைகளையும் தரையில் ஊன்றி, மேல் உடலை உயர்த்தவும். தலை மேலே பார்த்தபடி இருக்கட்டும். சுவாசம் சீராக இருக்க வேண்டும். பின், பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி ஐந்து முறை செய்ய வேண்டும்.

p86a1.jpg

பலன்கள்: வயிறு, மார்பு, தோள்பட்டையில் உள்ள தசைகள் விரிவடையும். பின்முதுகில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கும். கை மற்றும் தண்டுவடத்தை பலப்படுத்தும்.  உடலுக்கு நல்ல நெகிழ்ச்சித்தன்மையைக் கொடுக்கும்.

ஹேம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச் (Hamstring Stretch)

தரையில் மல்லாந்து படுத்து, வலது காலை 90 டிகிரியில் இருக்குமாறு உயர்த்த வேண்டும். இப்போது, இரு கை விரல்களாலும் வலது தொடையின் பின்புறத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு பழையநிலைக்குத் திரும்பி, இடது காலுக்கும் இப்படிச் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி ஐந்து முறை செய்ய வேண்டும்.

p88a.jpg

பலன்கள்: உடலுக்கு நல்ல நெகிழ்ச்சித்தன்மையைக் கொடுக்கும். உடல் அமைப்பை மேம்படுத்தும். கால் மற்றும் கைத்தசைகள் பலம் பெறும்.

ப்ரேயர் ஸ்ட்ரெச் (Prayer Stretch)

தரையில், மண்டியிட்டு பின்னங்கால் மீது அமர வேண்டும். கைகளைத் தொடை மேல் வைக்க வேண்டும். இப்போது, கைகளை மேலே உயர்த்தி, அப்படியே முன்புறம் குனிந்து, நெற்றி மற்றும் உள்ளங்கையைத் தரையில் பதிக்க வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு, மெதுவாக நிமிர்ந்து பழையநிலைக்கு வர வேண்டும். இதை ஐந்து முறை செய்ய வேண்டும்.

p90a.jpg

பலன்கள்: வயிற்றுக்கு நல்ல பயிற்சி. செரிமானப் பிரச்னையைச் சரிசெய்யும். வயிற்றுப் பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இடுப்புவலி, வயிற்றுவலி சரியாகும். சீரற்ற மாதவிலக்கு சரியாகும்.

பட்டர்ஃபிளை ஸ்ட்ரெச் (Butterfly Stretch)

தரையில் அமர்ந்து, இரு பாதங்களையும் ஒன்றுசேர்க்க வேண்டும். பாதங்களை உடலுக்கு எவ்வளவு அருகில் வைக்க முடியுமோ, அவ்வளவு நெருக்கமாக வைக்க வேண்டும். பாதங்களைக் கைகளால் பிடித்துக்கொள்ள வேண்டும். இப்போது, பாதங்களைப் பிரிக்காமல், கால்களை பட்டாம்பூச்சியின் இறக்கைகள்போல மெதுவாக, மேலும் கீழும் அசைக்க வேண்டும். இந்தப் பயிற்சியை இரண்டு நிமிடங்கள் வரை செய்யலாம்.

p92a.jpg

பலன்கள்: தொடைகள், வயிறு, தொடைகள் சேருமிடம், மூட்டு, இடுப்பு வலுப்பெறும். மலக்குடல் பகுதி சிறப்பாக வேலைசெய்யும். உடல் சோர்வை நீக்கும். இந்தப் பகுதித் தசைகளை உடற்பயிற்சிக்குத் தயாராக்கும்.

குளூட்ஸ் ஸ்ட்ரெச் (Glutes Stretch)

தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். வலது கையை உடலுக்குப் பக்கவாட்டில் வெளியே நேராக நீட்ட வேண்டும். வலது காலின் பாதத்தைத் தூக்கி, இடது கால் மூட்டுக்கு அருகே வெளிப்புறம் வைக்க வேண்டும். இடது கையைக் கொண்டு வலது மூட்டை, இடதுபுறமாகச் சாய்க்க வேண்டும். பின் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல இன்னொரு பகுதிக்கும் செய்ய வேண்டும். இது ஒரு செட். மூன்று முறை இப்படிச் செய்ய வேண்டும்.

p94a.jpg

பலன்கள்: உடலுக்கு நல்ல வடிவம் கிடைக்கும். பின்புறம் உள்ள தசைகள் குறையும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். தசைகள் தளர்வடையும்.

ஹேம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச் வித் ரோப் (Hamstring Stretch with Rope)

தரையில் மல்லாந்து படுத்து, வலது காலில் ஸ்ட்ரெச் பேண்டை பொருத்தி, இரு கைகளாலும் அதன் நுனியைப் பற்றிக்கொள்ள வேண்டும். இப்போது, ஸ்ட்ரெச் பேண்டை இழுத்து, வலது காலை 90 டிகிரிக்கு உயர்த்தி இறக்க வேண்டும். இப்படி, இரண்டு காலுக்கும் முறையே 10 - 15 முறை செய்யலாம்.

p96a.jpg

பலன்கள்: கால் தசைகளில் உள்ள இறுக்கத்தைத் தளர்த்தும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இடுப்புவலி குறையும். கைகளுக்கு நல்ல பயிற்சி. பைசெப்ஸ், தோள்பட்டை வலுவாகும்.

ப்ரோன் லெக் ரைஸ் (Prone Leg Raise)

தரையில் குப்புறப் படுத்து, இரண்டு கைகளையும் மடக்கி, தாடையின் கீழ் வைக்க வேண்டும். முதுகு நேராக இருக்க வேண்டும். இடது காலைப் பின்னோக்கி தூக்கி, இறக்க வேண்டும். அதேபோன்று வலது காலைத் தூக்கி, இறக்க வேண்டும். பின் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும்.

p98a.jpg

பலன்கள்: குளூட்ஸ், ஹேம்ஸ்ட்ரிங், இன்னர் தை, பின்புறத் தசைகள், இடுப்பு, பைசெப்ஸ் பிமொரிஸ், குளூட்ஸ் மேக்சிமஸ் தசைகளுக்கு நல்ல பயிற்சி.

ஹை நீ ஸ்கிப்ஸ் (High knee skips)

நேராக நிற்க வேண்டும். நின்ற இடத்திலேயே கைகளை வேகமாக அசைத்தபடி ஓட வேண்டும். இப்படி 10 முதல் 20 முறை செய்ய வேண்டும்.

p100a.jpg

பலன்கள்: தொடை, பின்புறம் உள்ளிட்ட கீழ் உடல் தசைகளைப் பயிற்சிக்கு தயார் செய்யும்.

ஸ்குவாட் த்ரஸ்ட்ஸ் (Squat thrusts)

தரையில் குப்புறப்படுக்க வேண்டும். கைகளை ஊன்றி, மேல் உடலை உயர்த்த வேண்டும். கால் விரல்கள் மற்றும் கையில் உடலைத் தாங்கியபடி இருக்க வேண்டும். இப்போது, குதித்து கால்களை கைக்கு அருகே கொண்டு வந்து உட்கார்ந்த நிலைக்கு வர வேண்டும். இதை ஐந்து முதல் ஆறு முறை வரை செய்யலாம்.

p102a.jpg

பலன்கள்: நெஞ்சு, இடுப்பு, வயிறு மற்றும் கீழ் உடல் தசைகளைத் தளர்வுபெறச் செய்து, பலப்படுத்துகிறது.

பர்பீஸ் (Burpees)

ஸ்வாட் டிரஸ்ட் செய்வதுபோன்ற நிலையில் இருக்க வேண்டும். இப்போது, குதித்து, முட்டியை மடக்காமல் இரு கைகள், கால்களில் உட்காருவது போன்ற நிலைக்கு வர வேண்டும். சில விநாடிகளில் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இதை ஐந்து முதல் 10 முறை செய்யலாம்.

P104A.jpg

பலன்கள்: இது முழு உடலுக்கான பயிற்சி. இதன்மூலம் ஒரே நேரத்தில் அதிகத் தசைகளை செயல்படுத்தி, அதிக கலோரிகளை எரிக்க முடியும்.

ஹேம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச் (Hamstring Stretch)

முதலில் நேராக நிற்க வேண்டும். ஒரு காலை மட்டும் முன்புறமாகக் கொண்டுசென்று குதிகாலை தரையில் பதிக்க வேண்டும். மேல் உடலை வளைத்து முன்வைத்த காலின் பாதத்தில் கோக்க வேண்டும். பின்னர் பழையநிலைக்குத் திரும்பி, மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும்.

p106a1.jpg

பலன்கள்: பின்புறத் தசைகள், உள் தொடை, ஹேம்ஸ்ட்ரிங், கோட்ரிசெப்ஸ், இடுப்பு தசைகள் அனைத்துக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும். உடலுக்கு நல்ல பேலன்ஸ் கிடைக்கும். உடல் உறுதியாகும். மூட்டுகளுக்கு நல்ல அசைவு இருக்கும்.

நீ லிஃப்ட் லுஞ்சஸ் (Knee lift lunge)

நேராக நிற்க வேண்டும். இப்போது ஒரு காலை முன்புறமாக முட்டியை மடக்கிவைக்க வேண்டும். மற்றொரு காலை முடிந்தவரை பின்னால் நகர்த்தி வைக்க வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்துவிட்டு, அடுத்த காலுக்கு இப்படிச் செய்ய வேண்டும்.

p108a1.jpg

பலன்கள்: கீழ் உடல் மற்றும் இடுப்புக்கான நல்ல பயிற்சி. ஹேம்ஸ்ட்ரிங், குளுட்ஸ், கோட்ரிசெப்ஸ் தசைகள் வலுவடையும். உடலுக்கு நல்ல அமைப்பும் பேலன்ஸும் கிடைக்கும். இது கார்டியோ வாஸ்குலர் பயிற்சி என்பதால், உடல் முழுவதும் தூண்டப்படும்.

இன்னர் தை மொபிலைசேஷன் (Inner thigh mobilization)

தரையில் முட்டிபோட்டு, மேல் உடலை வளைத்து தரையில் ஊன்ற வேண்டும். இப்போது, ஒரு காலை மட்டும் பக்கவாட்டில் நேராக நீட்டி இயல்புநிலைக்குத் திரும்ப வேண்டும். பின்னர், மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும். இதை 10 முதல் 20 முறை செய்யலாம்.

p110a1.jpg

பலன்கள்: உள், வெளி தொடைத் தசைகளை தளர்வுறச் செய்யும்.

ஓவர் ஹெட் பெண்ட் (Overhead bend)

கால்களை அகட்டி நேராக நிற்க வேண்டும். இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி, வலது புறம் சாய்ந்து பாதத்தைத் தொட முயற்சிக்க வேண்டும். இடது கை தலைக்கு அருகிலேயே இருக்கட்டும். பின்னர் இயல்புநிலைக்குத் திரும்பி, அடுத்த கைக்குச் செய்ய வேண்டும். தொடக்கத்தில் 5 முதல் 10 முறை செய்யலாம். நன்கு பயிற்சி பெற்றவர்கள் 25 முறை செய்யலாம்.

p112a1.jpg

பலன்கள்: வயிற்றுத் தசை, தோள்பட்டை, கீழ் முதுகு, பக்கவாட்டு முதுகு, டிரைசெப்ஸ் தசைகளை பயிற்சிக்குத் தயாராக்குகிறது. முதுகுத்தண்டின் வளைந்துகொடுக்கும் தன்மையை அதிகரிக்கிறது. உடலின் கட்டமைப்பை சரியாக இருக்கச் செய்கிறது. முதுகுவலி வருவதைத் தடுக்கிறது.

ஆர்ம் சர்க்கிள்ஸ் (Arm circles)

கைகளை பக்கவாட்டில் நேர்கோட்டில் நீட்டியபடி நேராக நிற்க வேண்டும். கால்கள் சற்று அகட்டி இருக்கட்டும். இப்போது, நீச்சல் அடிப்பதுபோல கைகளைச் சுழற்ற வேண்டும்.

p1.jpg

பலன்கள்: தோள்பட்டை, ட்ரைசெப்ஸ், பைசெப்ஸ், முதுகுத் தசைகளுக்கு நல்ல பயிற்சி. இதனால் தோள்பட்டையில் இருந்து கை விரல்கள் வரை ரத்த ஓட்டம் சீராக இருக்கும். கைகளில் உள்ள அதிகப்படியான தசைகளைக் குறைத்து கைக்கு நல்ல அமைப்பைத் தரும்.

ஃபார்வர்டு பெண்ட்ஸ் (Forward bends)

நேராக நிற்க வேண்டும். இப்போது, கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி, உடலை வளைத்து, பாதத்துக்கு அருகே கொண்டுவர வேண்டும். பின்னர், பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இதை, ஐந்து முதல் 10 முறை வரை செய்யலாம்.

p116a.jpg

பலன்கள்: இடுப்பு, ஹேம்ஸ்ட்ரிங் மற்றும் காஃப் தசைகள் தளர்வடையும். தொடை மற்றும் மூட்டுகள் வலுவடையும். முதுகுத் தண்டுவடம் உறுதியாகும், நல்ல வளைவுத்தன்மை கிடைக்கும். மனஅழுத்தம், சோர்வு போன்றவற்றைப் போக்கும். வயிற்றில் உள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சி. சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரலைத் தூண்டி நன்கு வேலை செய்யவைக்கும்.

டோ ரீச் (Toe reach)

தரையில் கால்களை நீட்டியபடி உட்கார வேண்டும். கைகளைப் பக்கவாட்டில் ஊன்றியபடி, மேல் உடல் நேராக இருக்கட்டும்.  இப்போது, உடலை முன்புறமாக வளைத்தபடி, கைகளை அப்படியே முன்புறம் கொண்டுசென்று பாதத்தைப் பற்ற வேண்டும். பின்னர் இயல்புநிலைக்குத் திரும்ப வேண்டும். ஐந்து முதல் 10 முறை செய்ய வேண்டும்.

p118a.jpg

பலன்கள்: உடலுக்கு நல்ல வளைவுத்தன்மை கிடைக்கும். தோள்பட்டை, முதுகு, கால் தசைகளை தளர்வடையச்செய்யும். ரெக்டஸ் அப்டாமினிஸ், ஹேம்ஸ்ட்ரிங் தசைகளுக்கு நல்ல பயிற்சி. வயிற்றுத் தசைகள் இறுகும். குறிப்பாக முதுகுத்தண்டுவடம் மற்றும் கால்கள் வலுப்பெறும்.

ஐடி பேண்ட் ஸ்ட்ரெச் (IT Band Stretch)

கால்களைப் பின்னியபடி நேராக நிற்க வேண்டும்.  கைகளைத் தலைக்குமேல் உயர்த்தி, உடலை வளைத்து பாதங்களுக்கு முன்புறம் தரையைத் தொட வேண்டும். பின்னர், உடலை உயர்த்தாமல் இடுப்பை வளைத்து, பக்கவாட்டில் தொட வேண்டும்.

p120a.jpg

பலன்கள்: தொடை, இடுப்பு, பாதம், பின்புறத் தசைகள், முதுகு என அனைத்துத் தசைகளுக்குமான பயிற்சி. இந்தப் பயிற்சியைச் செய்வதால், மூட்டுகளுக்கு நல்ல இயக்கம் இருக்கும்.

மிட் பேக் டர்ன்ஸ் (Mid back turns)

கால்களைச் சற்று அகட்டி நேராக நிற்க வேண்டும். இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு, உடலை வலது, இடதுபுறம் வளைக்க வேண்டும்.

p122a.jpg

பலன்கள்: முதுகுத்தண்டுவடம் உறுதியாகும். வெளி மற்றும் உள் ஆப்ளிக்ஸ், பின்புறத் தசைகளுக்கு நல்ல பயிற்சி. இடுப்புப் பகுதியில் உள்ள தசைகள் குறையும்.

சிங்கிள் லெக் ஹிப் ரொட்டேஷன் (Single leg hip rotation)

கைகளை நேராக நீட்டியபடி நேராக நிற்க வேண்டும். இப்போது, ஒரு காலை மட்டும் உயர்த்தி, வலது, இடது புறம் உடலைத் திருப்ப வேண்டும். பின்னர், மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும்.

p124a.jpg

பலன்கள்: இடுப்பு, பின்புறம், பின்னங்கால் தசைகளுக்கு நல்ல பயிற்சி. பாதம், இடுப்புப் பகுதியில் உள்ள தசைகள் தூண்டப்படும். வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு கரைந்து, தசை உறுதியாகும்.

இதுவும் ஸ்ட்ரெச்சிங்தான்!

p126a.jpg

ஸ்ட்ரெச்சிங் என்பதை மிகக் கடினமான பயிற்சியாக நினைக்க வேண்டாம். தொடக்கத்தில், சிறிது தூரத்துக்கு நடைப்பயிற்சி செய்வதோ, அல்லது ஜாகிங் செய்வதோகூட நல்ல ஸ்ட்ரெச்சிங்காக இருக்கும். எடுத்த எடுப்பில் மிக வேகமாகச் செயல்படக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

ஜாகிங்: நின்ற இடத்திலோ அல்லது மைதானத்திலோ கால்களை நன்கு உயர்த்தி, கைகளை அசைத்து, ஒரு நிமிடத்துக்கு ஓடினாலே போதும். இது உடல் முழுவதும் உள்ள தசைகளை தயார்செய்யும்.

ஜம்ப்பிங் ஜாக்

கால்களைச் சேர்த்து நேராக நிற்க வேண்டும். கைகளைப் பக்கவாட்டில் வைத்துக்கொள்ளவும். இப்போது, குதித்தபடி கால்களைச் சற்று அகட்டி, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி, பின் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். ஒரு நிமிடம் இப்படிச் செய்ய வேண்டும்.

p128a.jpg

பலன்கள்: இந்தப் பயிற்சியின்போது, உடல் முழுவதும் செயல்படும். மூச்சு சீராகும்.

ஸ்ட்ரெச்சிங் ஏன் அவசியம்?

தசைகளைத் தயார்ப்படுத்துவதற்கு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அவசியம். `தினமும் 30 முதல் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்’ என்று பரிந்துரைக்கிறோம். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டுமல்ல... உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கும்கூட இந்தப் பயிற்சிகள் தசைகளை உறுதிப்படுத்தும். இதற்கு என்று தனியாக நேரம்கூட ஒதுக்கத் தேவை இல்லை. டி.வி பார்க்கும் நேரத்தில்கூட இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம். குறைந்த நேரப் பயிற்சியே மிகப்பெரிய பலன்களைக் கொடுக்கும்.

ஸ்ட்ரெச்சிங் பலன்கள்...

தசைகளில் ஏற்படக்கூடிய அழுத்தத்தைக் குறைக்கிறது.

மூட்டு, இணைப்புப் பகுதிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தசைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை அதிகரிக்கிறது.

தசைகளின் வளைந்துகொடுக்கும் தன்மையைக் (flexibility) காக்கிறது.

உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் பாய்கிறது.

உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது.

எல்லா வயதினரும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்யலாம். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு ஸ்ட்ரெச்சிங் பயிற்சி செய்வதன் மூலம், தசைகளில் ஏற்படக்கூடிய காயங்களைத் தவிர்க்க முடியும்.

பயிற்சிக்குப் பிறகு செய்யக்கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சி, தசைகளில் ஏற்பட்ட பாதிப்பை மிக விரைவாகச் சரிசெய்ய உதவும். தசை வலியைக் குறைக்கும்.

இயற்கையாகவே நாம் ஸ்ட்ரெச்சிங் பயிற்சியை செய்துகொண்டுதான் இருக்கிறோம். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும்போது, நம்மை அறியாமலேயே உடலை வளைத்து (சோம்பல் முறிப்பது) ஸ்டிரெச்சிங் செய்கிறோம்.

தூங்கி எழுந்திருக்கும்போது சோம்பல் முறிப்பது உண்டு. இது உடலைத் தயார்ப்படுத்தும் ஒரு வகையான ஸ்ட்ரெச்சிங்தான். ஆனால், போதுமான தூக்கமின்றி, அலாரம் அடித்து எழும்போது சோம்பல் முறிப்பது எல்லாம் தடைபட்டுப் போய்விடுகிறது.

எல்லோருக்குமே மன அழுத்தம் இருக்கிறது. தொடர் மன அழுத்தம் தசைகளிலும் பிரதிபலிக்கிறது. ஸ்ட்ரெச்சிங் உள்ளிட்ட அனைத்து வகையான உடற்பயிற்சியும் மனஅழுத்தத்தைப் போக்குகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது.

கவனிக்க வேண்டியவை:

p138a.jpg

எந்த ஒரு பயிற்சியையும் உடற்பயிற்சி ஆலோசகரிடம் கேட்டு, அதன்படி செய்வது நல்லது.

சிலர் தொடைக்கு, கைக்கு மட்டும் பயிற்சி செய்வார்கள். இது தவறு. இப்படிச் செய்வது சீரற்ற தோற்றத்தைத் தரும். எனவே, அனைத்துத் தசைகளுக்கும் பயிற்சி செய்வது அவசியம்.

பயிற்சி செய்வதற்கு முன்னர் சாப்பிடாமலும் இருக்கக் கூடாது; வயிறு முட்ட சாப்பிட்டும் இருக்கக் கூடாது.

எந்த நேரத்திலும் பயிற்சி செய்யலாம். காலை மற்றும் மாலை நேரத்தில் பயிற்சி செய்வது நல்லது.

உடற்பயிற்சி அதிகம் செய்பவர்கள், அதிக அளவில் புரதச்சத்துள்ள உணவை எடுத்துக்கொள்ளலாம்.

பயிற்சி செய்யும்போது தாகம் ஏற்பட்டால், தாராளமாகத் தண்ணீர் அருந்தலாம்.

பொதுவாக, இந்தப் பயிற்சியை ஆரோக்கியமான நபர்கள் யார் வேண்டுமானலும் செய்யலாம்.

கர்ப்பிணிகள், மகப்பேறுக்குப் பின்னர், முதியவர்கள், உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையிலேயே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

புதிதாகப் பயிற்சி செய்வோருக்கு, தொடக்கத்தில் சிறிது உடல்வலி ஏற்படலாம்.

தொடர்ந்து செய்துவந்தால், தசைகள் தளர்ந்து, டோன் ஆகும்.

வொர்க் அவுட்ஸ் டவுட்ஸ்

p134a.jpg

உடற்பயிற்சிக்கு முன் எந்த மாதிரியான உணவை உட்கொள்ளலாம்?

உடற்பயிற்சிக்கு முன் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டின் நிறைந்த உணவைச் சாப்பிடுவது சிறந்தது. உடற்பயிற்சி முடிந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு புரதச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். நிறையப் பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவில் இருப்பது நல்லது.
கைகளுக்கு அமைப்பைத் தரக்கூடிய நல்ல பயிற்சி எது?

கைகளை உறுதியாகவும் அழகாகவும் வைத்திருக்க டம்பெல் மற்றும் பேண்ட் கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சிகள் சிறந்தவை. குறைவான எடைகொண்டு பலமுறை தொடர்ந்து செய்யும்போது, தசைகள் பெரிதாக ஆகாமல், இறுக்கமான தோற்றம் கிடைக்கும். அதேபோல் ரெசிஸ்டன்ஸ் பேண்ட், பயன்படுத்த எளிமையானது. அதனைக்கொண்டு எளிமையான உடற்பயிற்சிகள் செய்யலாம்.

எளிதில் செய்யக்கூடிய 30 நிமிட உடற்பயிற்சிகள் என்னென்ன?

10 நிமிடங்கள் கார்டியோ செய்யலாம், மீதம் உள்ள 20 நிமிடங்கள், ஜம்ப் ரோப், ஜம்பிங் ஜாக்ஸ், ஜம்பிங் ஸ்குவாட், பர்பீஸ், புஷ்அப்ஸ், சிட் அப்ஸ் போன்றவற்றைச் செய்யலாம். இவை அனைத்தும் கீழ் உடலை வலுவாக்கும்.

- பி.கமலா

படங்கள்: பா.காளிமுத்து

மாடல்கள்: ஸ்வேதா, தமீம்


டயட் டிப்ஸ்!

ஃபாஸ்ட் ஃபுட், ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகள், இனிப்புகள், மாவுப் பொருட்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள் அதிகமாக உண்பதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டில் செய்யப்பட்ட உணவையே சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறியோ, பசி இல்லாமலோ சாப்பிடுவது தவறு.

வயதானவர்களுக்கான உடற்பயிற்சி டிப்ஸ்:

உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன்னர் உடலின் வளைவுத்தன்மை, காயம், பலவீனம் குறித்துப் பயிற்சியாளரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். உடற்பயிற்சிகள் செய்வதைவிட, நீச்சல் பயிற்சி செய்யலாம். மூட்டுகளுக்கு இயக்கம் குறைவான பயிற்சிகள் செய்வது சிறந்தது.

காலை மற்றும் மாலை செய்யும் உடற்பயிற்சியால் உடல் எடை குறையுமா?

காலை நேரம் உடலும் மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும் என்பதால், காலை உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. அதேபோல், நாள் முழுவதும் நாம் சாப்பிட்ட உணவு, நம் உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுத்திருக்கும். அதனால், மாலை உடற்பயிற்சி செய்து, கலோரிகளைக் கரைப்பதும் நல்லதே.

ஆர்த்ரைட்டிஸ், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய்கள் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா?

உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் பாதுகாப்பானதே. இந்த நோய்கள் அனைத்தும் உடற்பயிற்சியினால் கட்டுக்குள் இருக்கும். மருத்துவரிடமும் பயிற்சியாளரிடமும் ஆலோசனை பெற்றுச் செய்வது நல்லது.

உடற்பயிற்சிக்கு ஏற்ற காலணி எது?

நம் கால்களுக்கு ஏற்றவாறு அணிய வேண்டும். ஃப்ளாட்டாக இருக்கிறதா, ஃபிளக்ஸிபிளா இருக்கிறதா, சறுக்கிவிடாமல் இருக்குமா என்பதைச் சோதித்து வாங்க வேண்டும். அதிக எடை உள்ளதைத் தவிர்க்க வேண்டும்.

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று

ஜுன் - 08

 

1405 : இங்­கிலாந்தின் யோர்க் பிராந்­திய ஆயர் ரிச்சார்ட் ஸ்க்ரோப், நோர்ஃபோக் இரண்டாம் நிலை மன்னர் தொமஸ் மோபிறே ஆகியோர் மன்னர் இங்கிலாந்தின் நான்காம் ஹென்­றியின் ஆணையின் பேரில் தூக்­கி­லி­டப்­பட்­டனர்.

 

742fishermen-varalaru.jpg1783 : ஐஸ்­லாந்தில் லாக்கி எரி­மலை வெடிக்க ஆரம்­பித்து 8 மாதங்­க­ளாக குழம்பை கக்­கி­யது. இதன் விளை­வாக  9,000 பேர் பலி­யா­னதுடன் 7 வரு­ட­கால பஞ்சம் ஆரம்­பித்­தது.

 

1887 : ஹேர்மன் ஹொலரித் துளை­யிடும் அட்டை கொண்ட கணிப்­பா­னுக்­கான காப்­பு­ரிமம் பெற்றார்.

 

1929 : ஐக்­கிய இராச்­சி­யத்தில் முதற் தட­வை­யாக தொழிற் கட்சி ஆட்சி அமைத்­தது.

 

1941 : இரண்டாம் உலகப் போரில் சிரியா மற்றும் லெபனான் மீது நேச நாடுகள்  தாக்­கு­தலை ஆரம்­பித்­தன.

 

1942 : இரண்டாம் உலகப் போரில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி, நியூ­காசில் நக­ரங்கள் மீது ஜப்­பா­னிய நீர்­மூழ்கிக் கப்­பல்கள்  குண்­டுத்­தாக்­கு­தலை நடத்­தின.

 

1972 : வியட்நாம் யுத்தத்­தின்­போது நேபாம் குண்­டுத்­ தாக்­கு­த­லினால் பாதிக்­கப்­பட்ட நிலையில் 9 வயது சிறுமி பான் தி கிம் புக் வீதியில் ஓடி­வரும் பிர­சித்தி பெற்ற புகைப்­ப­டத்தை ஏ.பி.செய்­திச்­சேவை படப்­பி­டிப்­பாளர் நிக் உட் பிடித்தார்.

 

1953 : அமெ­ரிக்கத் தலை­நகர் வொஷிங்டன் டி.சியி­லுள்ள உண­வ­கங்கள் கறுப்­பி­னத்­த­வர்­க­ளுக்கு உணவு  பரி­மா­று­வ­தற்கு மறுக்க முடி­யா­தென அமெ­ரிக்க உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

 

7422014--Karachi-airport-AFPP-lane.jpg1984 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்தில் ஓரி­னச்­சேர்க்கை சட்­ட­பூர்­வ­மாக அனு­ம­திக்­கப்­பட்­டது.

 

1992 : முத­லா­வது உலக சமுத்­திர நாள்  கொண்­டா­டப்­பட்­டது.

 

2007 : அட்­லாண்டிஸ் விண்­வெளி ஓடம் 7 பேருடன் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்கு ஏவப்­பட்­டது.

 

 2007 : அவுஸ்­தி­ரே­லி­யாவில் நியூ சௌத் வேல்ஸ் மாநி­லத்தில் இடம்­பெற்ற பெரும் காற்று மற்றும் வெள்­ளத்­தினால் 9 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2009 : வட­கொ­ரி­யா­வுக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக நுழைந்த குற்­றச்­சாட்டில் அமெ­ரிக்க ஊட­க­வி­ய­லா­ளர்கள் இரு­வ­ருக்கு 12 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

 

2013 : இலங்கைக் கடற்­ப­ரப்பில் புயல் கார­ண­மாக சுமார் 40 மீன­வர்கள் உயிரிழந்தனர்.

 

2014 : பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 தீவிரவாதிகள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜூன் 8: உலக பெருங்கடல் தினம்

13346543_1152541168138005_12498567844451

 

** கடலையும் காதல் செய்வோம்!! **

உலகை வளைத்து
உள்ளே நாட்டை துளைத்து
நுரைத்து பொங்கும் நாலு பெருங்கடல்!!

பவளப்பாறைகள் அதை
உண்ணும் மீன்கள்
மீன் பிடிக்கும் மீனவன் என
ஒரு சங்கிலி தொடருக்கு ஆதாராம்!!

கட்டுமரம் முதல் கப்பல் வரை
கட்டிக் காத்திடும்
கடல்ராஜா இந்த பெருங்கடல்கள்!!

நீலத்திமிங்கலம் நீந்தி பழகிடும்
பென்குவின்களும் நடந்து சென்றிடும்
டிஸ்கவரி காட்டாத இன்னும் பல
உயிரினங்களை உள்ளே வைத்து
ஆச்சர்யம் காட்டும் ஆழி பெருங்கடல்!!

தண்ணீர் கொண்டு நாட்டை பிரிக்கும்
எல்லை என்றனர் சிலர்!!
ஆனால்
தண்ணீர் கொண்டு நாட்டை இணைக்கும்
பாலம் என்றனர் பலர்!!

கடலின் அழகை ரசிக்க நினைத்தால்
மகிழ்ச்சி பொங்கிடும்!!
மாசுபடுத்தி அழிக்க நினைத்தால்
ஆழி பேரலை ஊரை அழித்துடும்!!

கடற்கரையில்
காதல் செய்யும் நாம்
கொஞ்சம் கடலையும்
காதல் செய்வோம்!!

vikatan

  • தொடங்கியவர்

13416797_1058753917506635_34059173409249

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரும், தலைவருமான டெரெக் அண்டர்வூட்டின் பிறந்தநாள்.
Happy Birthday Derek Underwood

  • தொடங்கியவர்
மரடோனா, மெஸி, ரொனால்டோவை விட மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரர் முஹம்மது அலி' : டுவிட்டரை கலக்கிய இந்திய யுவதி
 

17154muhammad-ali-boxing.jpg

 

அமெ­ரிக்க குத்­துச்­சண்டை ஜாம்­பவான் முஹம்­மது அலி கடந்த சனிக்­கி­ழமை கால­மான நிலையில், அவ­ருக்கு குத்­துச்­சண்டை அபி­மா­னிகள் முதல் உலக நாடு­களின் தலை­வர்கள் வரை பலரும் அவரின் மறைவு தொடர்பில் இரங்கல் தெரி­வித்­தனர்.  

 

17154ali-1.jpg


இந்­நி­லையில், இந்­தி­யாவைச் சேர்ந்த யுவதி ஒருவர், முஹம்­மது அலியைப் பற்றி சரி­யாக அறிந்­து­கொள்­ளா­ம­லேயே அவரின் மறைவு தொடர்பில் டுவிட்­டரில் வெளி­யிட்ட செய்தி பெரும் நகைப்­புக்­கி­ட­மா­கி­யது.  


அனா­தித்தா பட்டேல் எனும் இந்த யுவதி, முஹம்­மது அலியை கால்­பந்­தாட்ட வீரர் என எண்­ணி­விட்டார். இதனால், பிர­பல கால்­பந்­தாட்ட வீரர்­க­ளான டிய­யோக மர­டோனா, லயனல் மெஸி, கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ ஆகி­யோ­ரை­விட அனைத்து காலங்­க­ளி­னதும் மிகச் சிறந்த கால்­பந்­தாட்ட வீரர் முஹம்­மது அலி என டுவிட்­டரில் குறிப்­பிட்­டி­ருந்தார்.   

 

17154ali2.jpg


இந்த டுவிட் குறித்­து பலரும் கிண்­ட­ல­டிக்கத் தொடங்­கினர். அதை­ய­டுத்து தான் பிரேஸில் கால்­பந்­தாட்ட ஜாம்­பவான் பேலேவை எண்ணி அந்த பதிவை தர­வேற்­றி­ய­தாக அவர் ஒப்­புக்­கொண்டார். அதே­வேளை தான் கிரிக்­கெட்டை மாத்­தி­ரமே பார்ப்­ப­தா­கவும் டெண்­டுல்­கரை விட கோஹ்லி சிறந்­தவர் எனவும் டுவிட்­டரில் பின்னர் தெரி­வித்தார் அனா­தித்தா.   


எவ்­வா­றெ­னினும், இது தொடர்­பான செய்தி பல்வேறு ஊடகங்களிலும் வெளியானதன் மூலம் ஒரு பிரபலமாகிவிட்டார் அனாதித்தா பட்டேல். 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கண்டுபிடிச்சது பேச்சுலர்ஸ்!

 

p88a.jpg

பெருசா யோசிச்சு சிறுசா மாத்துறனா, டெக்னாலஜி. போறபோக்குல எதையாவது செஞ்சு புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடிக்கிறது ‘பேச்சுலர்ஸ் ரூம்’ டெக்லானஜி. நம்மையும் அறியாம, நம்ம பசங்க பண்ணின சில அடடே கண்டுபிடிப்புகளைக் கவனிச்சிருக்கீங்களா?

red-dot3.jpg செல்போனுக்கு சார்ஜ் போட ஸ்டாண்ட் இருக்கு. பேச்சுலர் ரூம்ல அது எதுக்கு? பிளக் பாயிண்டுக்குப் பக்கத்துல பயன்படுத்தாத சட்டையைத் தொங்கவிட்டு, சட்டை பாக்கெட்டுல சார்ஜ் போடுவாங்க. இல்லையா, ‘அம்மா குடிநீர்’ பாட்டிலை போஸ்ட்மார்ட்டம் பண்ணி, சுவரோட சேர்த்து ஆணி அடிச்சா, ஸ்டாண்ட் ரெடி!

red-dot3.jpg அலமாரி வாங்குறதுக்குப் பல ஆயிரம். அதனால, அட்டைப்பெட்டியை ரெண்டாக்கி, அடிப்பகுதியை ஜட்டி பனியனுக்கு ஒதுக்குவாங்க. பெரிசா ஒதுக்குன தொகுதி, சட்டை பேன்ட்டுக்கு. பேச்சுலர் பசங்களைப் பொறுத்தவரை, இது அலமாரி இல்லை பாஸ். பீரோ!

red-dot3.jpg பாதியா நறுக்கின தண்ணி பாட்டிலோட அடிபாகத்தை சார்ஜ் போடுற ஸ்டாண்ட் ஆக்கியாச்சு. மிச்சம் இருக்கிற முன்பாகத்தை மூடியை வெச்சு மூடிட்டுக் கவிழ்த்துப்போட்டா போதும். எப்பேர்பட்ட சிங்கமா இருந்தாலும், அறைக்குள்ள ‘ஆஸ்’ஸைத் தட்டி அசிங்கப்படுத்தாம, அதுல தட்டணும். ஏன்னா, இதுதான் பேச்சுலர்ஸ் ரூமின் நிரந்த ஆஸ்ட்ரே!

red-dot3.jpg விதம்விதமான சமையல் குறிப்பு புத்தகங்களுக்கு டிமாண்ட் இருக்கலாம். ஆனா, மோர்க் குழம்புல உருளைக்கிழங்கு போடுறது. கோழிக்குழம்பு பொடியை ரசத்துல தெளிக்கிறது எனப் படிக்காத மேதையா பல சமையல் பரிசோதனைகளைப் பண்றது யாரு, நம்ம பயகதேன். தவிர, கிண்ணத்துல குழம்பு வைக்கிறதும், குழம்புச் சட்டியில் பால் காய்ச்சுறதுமாய் அனைத்துப் ‘பாத்திர’ங்களையும் அனைத்துக்கும் பயன்படுத்தும் பழக்கம் இங்கே இருந்துதான் வருது.

red-dot3.jpg சொம்புக்குள்ள சுடுதண்ணியை ஊற்றி, சட்டையில் நாலு இழுப்பு இழுத்தா எப்பேர்பட்ட கசங்கலும் காணாமப் போகும். அதுக்கு ஏன் ஆயிரத்துச் சொச்சம் ரூபாய் கொடுத்து அயர்ன் பாக்ஸ் வாங்கித் தொலைக்கணும்னு இந்தச் சமுதாயத்துக்கு சமத்தா சொல்லிக்கொடுத்தது இவங்கதான். அதே சட்டையை துவைச்சுக் காயப்போடுறதுக்கு மொட்டைமாடியில் கொத்தா தொங்குற கேபிள் டி.வி வொயரைப் பயன்படுத்தலாம்னு கண்டுபிடிச்சதும், அந்தப் பழக்கத்தைத் தமிழகம் முழுக்கப் பரப்புனதும் இவனுகளேதான்.

p88b.jpg

red-dot3.jpg வீட்டை சுத்தப்படுத்துறதுக்கு என்ன பண்ணுவீங்க? மாங்கு மாங்குனு கூட்டித் தள்ளுவீங்க. வேலைக்கு ஆள்வெச்சு துடைச்சுக்கிட்டு இருப்பீங்க. ஏன், கான்ட்ராக்டுக்கு ஆள் பிடிச்சு சுத்தப்படுத்துறவங்ககூட இருக்காங்க. ஆனா, வீச்சு புரோட்டா வீசுற மாதிரி பெட்ஷீட்டை ஒரு வீசு வீசி எடுத்தோம்னா, குப்பையெல்லாம் தெறிச்சு ஓடும்னு கண்டுபிடிச்சது பேச்சுலர்ஸ் மட்டும்தான்.

red-dot3.jpg வெயிலுக்கு வெந்து சாகுறவங்க, ஈஎம்ஐ கட்டியாவது ஏசி வாங்கணும்னு பேசிக்கிறாங்க. ‘விலையில்லா மின்விசிறியில் ஈரத்துண்டைப் போர்த்தி வெச்சா போதும். ரூம் முழுக்க ஏசி ‘சுத்தி சுத்தி’ வேலை பார்க்கும்’னு கண்டுபிடிச்சதும் திருவாளர். பேச்சுலர்ஸ்தான்.

red-dot3.jpg இது மட்டுமா? சோப்பைக் கரைக்காம துணி துவைக்கும் தந்திரங்கள், தீர்ந்துபோன டூத்பேஸ்ட்டுகளை நான்கு நாளைக்குப் பயன்படுத்துவது எப்படி?, சப்பாத்திக்கட்டை இல்லாத சமயத்தில் சப்பாத்தி உருட்டும் யுக்திகள்னு பேச்சுலர்ஸ் லைஃப்ல ஏகப்பட்ட கண்டுபிடிப்புகள் இருக்கு பாஸ்!

  • தொடங்கியவர்

13391679_1058743194174374_37275815677436

ஹிந்தியின் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் பிறந்த நாள் இன்று.
தமிழ்த்திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
Happy Birthday Shilpa Shetty Kundra

  • தொடங்கியவர்
உலகின் மிகச் சிறிய கோழி முட்டை; 1.55 சென்ரி மீற்றர் நீளம்
 

பிரிட்­ட­னி­லுள்ள கோழி­யொன்று ஈன்ற முட்டை உலகின் மிகச் சிறிய முட்­டை­யாக பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.

 

17177_e1.jpg

 

இங்­கி­லாந்தின் சபோக் பிராந்­தி­யத்­தி­லுள்ள சென் எட்மன்ஸ் நக­ரி­லுள்ள கோழியே இந்த முட்­டையை ஈன்­றுள்­ளது.


இம்­ முட்­டையின் நீளம் 1.55 சென்­ரி­மீற்றர் மாத்­தி­ரமே. 22 வய­தான ஜோர்­ஜியா எனும் யுவ­தியே இந்த மிகச்­சி­றிய முட்­டையை கண்­டெ­டுத்­துள்ளார். இவர்  சுமார் 20 கோழி­களை வள­ர்த்து வரு­கிறார்.


17177egg.jpg

 

அண்­மையில் இக் ­கோ­ழி­களின் முட்­டை­களை சேக­ரித்துக் கொண்­டி­ருந்­த­போது இந்த முட்­டையை தான் கண்­டெ­டுத்­தாக அவர் தெரி­வித்­துள்ளார். ஆரம்­பத்தில் இது என்ன பொருள் என சரி­யாகத் தெரி­யாத நிலையில், அதை வெளிச்­சத்தில் பிடித்துப் பார்த்­த­போதே அது உண்­மை­யான கோழி முட்டை என்­பது தெரியவந்­த­தா­கவும் ஜோர்­ஜியா கூறி­யுள்ளார்.

 

17177_-.jpgஇது­வரை 1.8 சென்­ரி­மீற்றர் நீள­மான முட்­டை­யொன்றே உலகின் மிகச்­சி­றிய முட்டை எனும் சாத­னைக்­கு­ரி­ய­தாக இருந்­தது.


2011 ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஒருவர் தனது பண்­ணை­யி­லுள்ள கோழி­யொன்று 2.1 சென்­ரி­மீற்றர் நீள­மான முட்­டை­யொன்றை இட்­ட­தாகக் கூறினார்.

 

அப்­போது அது உலகின் மிகச் சிறிய கோழி முட்­டை­யாக கரு­தப்­பட்­டது.


 2014 ஆம் ஆண்டு இங்­கி­லாந்தின் சொமர்செட் பிராந்­தி­யத்தில் கோழி­யொன்று 2 சென்­ரி­மீற்றர் நீள­மான முட்­டையை இட்­ட­து.

 

கடந்த வருடம் பிரிட்­டனின் வேல்­ஸி­லுள்ள கார்­மேர்­தென்­ஷயர் எனும் பிராந்­தி­யத்தில் 12 வய­தான ஷெனோன் எனும் சிறுவன் கண்­டெ­டுத்த முட்டை 1.8 சென்­ரி­மீற்றர் நீள­மா­ன­தாக இருந்தது. அது உலகின் மிகச்சிறிய முட்டையாக பதிய சாதனை படைத்தது.

 

தற்போது அச் சாதனையை ஜோர்ஜியாவின் கோழி ஈன்ற முட்டை முறியடித் துள்ளது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு 2 - அவசரத்தில் கிடைத்த தேசிய கீதம்!

 

 
 
pakistan_flag_2821180f.jpg
 

இந்தியாவிலிருந்து பிரிந்துசென்ற பாகிஸ்தான் நாட்டு தேசிய கீத வரலாற்றை இந்த வாரம் பார்ப்போமா?

‘பாகிஸ்தான் எப்போது விடுதலை பெற்றது?

‘நம்ம நாடு, 1947 ஆகஸ்ட் 15.

அதுக்கு முந்திய நாள் அவங்களுக்கு.

அதாவது, 1947 ஆகஸ்ட் 14.'

ரொம்ப சரி. ஆனால், ஒரு செய்தி தெரியுமா...? சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே, நமக்கு தேசிய கீதம் கிடைத்துவிட்டது. ஆனால், பாகிஸ்தானுக்கு அப்படி இல்லை.

சுதந்திரத்துக்குப் பிறகு, ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் கழித்துதான் அவர்களுக்கு தேசிய கீதம் கிடைத்தது.

பரிசு அறிவித்து, பல பாடல்களை ஆராய்ந்து பார்த்து, தேடித் தேடித் தேடித் தேர்ந்தெடுக்கப்பட்டது - பாகிஸ்தானின் தேசிய கீதம்.

யார் தருவார்?

1948-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாகிஸ்தான் அரசு ஒரு விளம்பரம் வெளியிட்டது.

‘நம் நாட்டுக்கான தேசிய கீதம் எழுதி அனுப்புங்கள்.

சிறந்த படைப்புக்குச் சன்மானம் உண்டு'.

1948 டிசம்பரில், ‘தேசிய கீத கமிட்டி' அமைக்கப்பட்டது. சிறந்த பாடல், அதற்கான சிறந்த இசைக் கோர்வையைத் தேர்ந்து எடுப்பது, தகவல் செயலர் ஷேக் முகமது இக்ரம் தலைமையிலான தேர்வுக் கமிட்டியின் பணி என அறிவிக்கப்பட்டது. பல பாடல்கள் பரிசீலிக்கப்பட்டன. எதிலும் முழுத் திருப்தி இல்லை.

சீக்கிரம்...சீக்கிரம்...

கமிட்டியின் அப்போதைய தலைவர் ஃபஸ்லூர் ரஹ்மான், பல கவிஞர்கள், இசை அமைப்பாளர்களைத் தொடர்புகொண்டு, பாடல், இசை வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஊஹூம்.... எதுவும் சரியாக இல்லை.

கமிட்டியில் உறுப்பினராக இருந்த அஹமது சாக்லா அமைத்திருந்த இசைக் கோவை நன்றாக இருந்தது. கமிட்டியும் அதை ஏற்றுக்கொண்டது.

முதலில் இசை

ஈரானின் ஷா வருகையின் போது, சொற்கள் இல்லாமல், இசையாக மட்டும் 1950-ம் ஆண்டு மார்ச் முதல் நாளன்று, முதல் முறையாக, பாகிஸ்தானியக் கடற்படை இசைக் குழுவால் அந்நாட்டு கீதம் முழக்கப்பட்டது.

என்ன பாட்டு பாட...?

1950-ம் ஆண்டு ஜனவரியில் சுதந்திர பாகிஸ்தானுக்கு வந்த முதல் வெளிநாட்டு முக்கியஸ்தர் என்ற பெருமையைப் பெற்றார் அன்றைய இந்தோனேஷிய அதிபர் சுகர்னோ. ஆனால், அப்போது இசைக்கப்படுவதற்கு பாகிஸ்தானுக்கு என்று தேசிய கீதம் இல்லை!

தொடர்ந்து அதே ஆண்டு, ஈரான் நாட்டு ஷா பாகிஸ்தானுக்கு வந்தார். தேசிய கீதம் அவசரமாகத் தேவை என அறிவிக்கப்பட்டது.

ppl_2821179a.jpg

கிடைத்தது கீதம்!

இதன் பிறகு இந்த இசைக் கோவையை, தேர்வுக் கமிட்டி, பல கவிஞர்களுக்கும் அனுப்பி வைத்தது. அதற்குப் பொருத்தமாகப் பாடல் எழுதித் தரும்படி கேட்டுக் கொண்டது. கடைசியாக, ஹஃபீஸ் ஜலந்தரி இயற்றிய பாடலை கமிட்டி ஏற்றுக்கொண்டது.

1954-ம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று பாகிஸ்தான் வானொலி, முதன் முறையாக இதனை ஒலிபரப்பியது.

மூன்று நாட்கள் கழித்து 1954-ம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று பாகிஸ்தானிய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், இந்தப் பாடலை தேசிய கீதமாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மூன்று பத்திகள் கொண்ட இந்தக் கீதம்.

இசைக்க ஆகும் நேரம் - 80 வினாடிகள்.

சரி..., ஏழு ஆண்டு தேடலுக்குப் பின் தேர்வான தேசிய கீதம் என்னதான் சொல்கிறது?

அஹமது சாக்லா இசை அமைத்து ஹஃபீஸ் ஜலந்தரி இயற்றிய பாகிஸ்தானின் தேசிய கீதம் இப்படி ஒலிக்கும்:

“பாக் சர் ஜமீன் ஷாத் பாத்

கிஷ்வரே ஹசீன் ஷாத் பாத்

துநிசானே அஸ்மி ஆலி ஷான்

அர்ஸே பாகிஸ்தான்

மர்கஸே யகீன் ஷாத் பாத்.

பாக் சர் ஜமீன் கா நிஜாம்

குவ்வதே அகுவ்வதே அவாம்

கௌம் முல்க் சல்தனத்

பாயிந்தா தபிந்தா பாத்!

ஷாத் பாத் மஞ்சிலே முராத்!

பெர்ச்சமே சிதாரா ஓ ஹிலால்

ரஹ்பரே தரக்கி ஓ கமால்

தர்ஜுமானே மாஸி, ஷான் இஹால்,

ஜானே இஸ்டிக்பா

சாயா ஏ குதா ஏ ஸூல் ஜலால்”.

இனி, இப்பாடலின் பொருளைப் பார்ப்போமா...?

தமிழாக்கம்:

இந்தத் தூய நிலம்

என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்.

இந்த அழகான நிலம்

என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்.

மனத் திண்மையின் சின்னம் நீ,

ஓ! பாகிஸ்தான்!

தளர்வுறா உறுதியின் மையம்

என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்.

சாமானியர்களின் சகோதரத்துவ வலிமையே

இந்தத் தூய நிலத்தின் நடைமுறை.

இந்த தேசம் இந்த நாடு இந்த ராஜ்யம்

என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்.

இதயத்தோடு இணைந்த நம் இலக்கு

ஆசீர்வதிக்கப்படட்டும்.

பிறை நட்சத்திரக் கொடி -

வளர்ச்சிக்கும் முழுமைக்கும் வழிகாட்டி;

கடந்த காலப் பிரதிபலிப்பு;

நிகழ் காலப் பெருமிதம்;

எதிர் கால வாழ்க்கை.

எல்லாம் வல்ல இறைவனின் நிழல்!

(தேசிய கீதங்கள் ஒலிக்கும்)

tamil.thehindu.

  • தொடங்கியவர்
சுய­மாக ஹெலி­கொப்டர் தயா­ரித்த சீன இளைஞர்
 

17178_h2.jpgசீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது சுய முயற்­சி­யினால் ஹெலி­கொப்டர் ஒன்றை தயா­ரித்­துள்ளார்.


ஸீ பாவோகாங் எனும் இந்த இளைஞர் சீன வட பிராந்­தி­யத்­தி­லள்ள ஹேபேய் மாகா­ணத்தைச் சேர்ந்தவர்.

 

இளம் வய­தி­லி­ருந்தே, வானில் பறக்க வேண்டும் என விருப்பம் கொண்­டி­ருந்­தவர் ஸீ பாவோகாங்.

 

ஆனால், 18 ஆவது வயதில் அவர் கத­வுகள், ஜன்­னல்கள் விற்­பனை செய்யும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட ஆரம்­பித்தார். சொந்­த­மாக கடை­யொன்றை அவர் நடத்தி வந்தார்.


எனினும், பறக்க வேண்­டு­மென்ற தனது சிறு­வ­யது இலட்­சி­யத்தை அவர் கைவிட்டு விட­வில்லை. பின்னர் தனது வர்த்­தக நட­வ­டிக்­கையை கைவிட்டு, வான்­க­லங்கள் குறித்த ஆராய்ச்­சியில் ஈடு­பட ஆரம்­பித்தார்.

 

இதன் மூலம் பெற்ற அறி­வினால் சுய­மா­கவே சிறிய விமானமொ ன்றை அவர் நிர்­மா­ணிக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டார். இந்த ஹெலி­கொப்­ட­ருக்­கான அனைத்துப் பாகங்­க­ளையும் அவர் சுய­மாக வடி­வ­மைத்து தயா­ரித்தார்.


17178_h1.jpg

 

2009 ஆம் ஆண்டு அவர் அவ்­ வி­மா­னத்தின் மூலம் பறக்க முயற்­சித்தார். எனினும், அம் ­மு­யற்சி தோல்­வியில் முடிந்­தது. வான் கலங்­களை செலுத்தும் அனு­பவம் இன்­மையும் இதற்கு முக்­கிய கார­ண­மா­கி­யது.

 

ஆனாலும் ஸீ பாவோகாங் துவண்டு விட­வில்லை. மீண்டும் மீண்டும் பல வான் கலங்­களை அவர் தயா­ரித்துப் பார்த்தார். இறு­தி­யாக  தான் தயா­ரித்த ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம் அவர் வெற்­றி­க­ர­மாக வானில் பறந்தார்.

 

17178_h3.jpg

 

இது அவரின் 8 ஆவது வான் கல­மாகும். இந்த ஹெலிகொப்­டரில் மணித்­தி­யா­லத்­துக்கு 200 கிலோ­மீற்றர் வேகத்தில் பய­ணிக்க முடியும். ஒரு தடவையில் அதிகபட்சமாக 400 கிலோமீற்றர் தூரம் செல்லலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
நல்ல நட்பில், புதியது பழையது என்ற பேதம் காட்டலாகாது
 
 

article_1465271281-AssociationEntrepriseபுதிதாக ஒருவரைச் சந்தித்து அவருடன் நட்புப்பூண்டுவிட்டால், பழைய நல்ல நண்பர்களைக் கழற்றிவிடுபவர்கள் பலர் உள்ளனர்.

நல்ல நட்புக்கு, புதியது பழையது என்ற பேதம் காட்டலாகாது. ஆனால், பழைய நண்பர்கள், எங்களை நன்கு புரிந்திருப்பார்கள். அவர்களைத் திடீரெனக் கண்டும் காணாமலும் போவது முறையல்ல.

புதிதான தோழன் நல்லவனாக இருந்தாலும், முன்னர் தங்களுடன் கொண்ட நல்ல நட்புக்கு என்ன அர்த்தமுண்டு? இதுகூட சுயநலம், அல்லது உள்நோக்கமுடைய செயல் எனக்கருத இடமுண்டு.

காரண, காரியத்துடன் மட்டுமே புதிய உறவுகளைத் தேடுவது அநாகரிகமானது. மேலும், சின்ன வயதுத் தோழர்களைக் கூட முழுமையாக மறந்து விட்ட நபர்கள், இறுதிக் காலத்தில், அதனால் ஏற்பட்ட வலியை உணர்ந்தே தீருவர்.

புதிய சந்திப்பினால், அல்லது பழைய நட்பினால் உருவான இறுக்கத்தைத் தளர்த்த விடவேண்டாம்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13347012_10154681874019578_4360487679410

  • தொடங்கியவர்

வரலாற்றல் இன்று...

ஜுன் - 09

 

68 : ரோம மன்னன் நீரோ தற்­கொலை செய்து கொண்டான். இதன் மூலம் ஜூலியோ குளோ­டிய பரம்­பரை ஆட்சி முடி­வ­டைந்­தது.

 

1873 : 16 தினங்­க­ளுக்கு முன்னர் திறந்து வைக்­கப்­பட்ட லண்டன் அலெக்­சாந்­திரா அரண்­மனை தீயினால் அழிந்­தது.

 

744varalaru.jpg1885 : சீனா, பிரான்ஸ் நாடு­க­ளுக்­கி­டை­யி­லான யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வரும் வித­மாக தியன்ட்சின் உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. இதன்­மூலம் தற்­போ­தைய வியட்­நாமின் பெரும்­ப­கு­தியை பிரான்­ஸுக்கு வழங்க வேண்­டிய நிலைக்கு சீனா தள்­ளப்­பட்­டது.

 

1923 : பல்­கே­ரி­யாவில் புரட்சி மூலம் இரா­ணுவம் ஆட்­சியைக் கைப்­பற்­றி­யது.

 

1928 : அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யி­லான பசுபிக் சமுத்­தி­ரப் ­ப­கு­தியை சார்ல்ஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித் முதற்­த­ட­வை­யாக  விமா­னத்தில் கடந்தார்.

 

1934 : வோல்ட் டிஸ்­னியின் டொனால்ட் டக் கார்ட்டூன் கதை வெளி­வந்­தது.

 

1944 : பிரான்ஸில் 99 பொது­மக்­களை ஜேர்­ம­னியப் படைகள் தூக்­கி­லிட்டுக் கொன்­றன.

 

1944 : இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்­றியம் கிழக்கு கரே­லி­யா­வினுள் ஊடு­ரு­வி­யது.

 

1946 : தாய்­லாந்தில் மன்னர் ஆனந்த மஹிதோல் தனது படுக்­கை­ய­றையில் மர்­ம­மான துப்­பாக்கிச் சூட்­டினால் இறந்தார். பின்னர் அதுல்­யாதே தாய்­லாந்தின் மன்­ன­ராக முடி சூடினார். இவரே தற்­போது உலகில் மிக நீண்­ட­கா­ல­மாக ஆட்­சி­யி­லுள்ள மன்னர் ஆவார்.

 

1948 : சர்­வ­தேச சுவ­டிகள் பேரவை யுனெஸ்கோ அமைப்பின் ஆத­ர­வுடன் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1965 : தென் வியட்­நாமின் பிர­தமர் பான் ஹுய் குவாத் ராஜி­னாமா செய்தார்.

 

1967 : 6 நாள் யுத்­தத்­தின்­போது கோலான் குன்­று­களை சிரி­யா­வி­ட­மி­ருந்து இஸ்ரேல் கைப்­பற்­றி­யது.

 

1972 : அமெ­ரிக்­காவின் தென்டகோட்டா மாநி­லத்தில் கடும் மழை­யினால் அணைக்­கட்டு ஒன்று உடைந்­ததால் 238 பேர் உயி­ரி­ழந்­தனர். 

 

1974 : சோவியத் யூனியன், போர்த்­துக்கல் நாடு­க­ளுக்­கி­டையில் இராஜ­தந்­திர உற­வுகள் ஸ்தாபிக்­கப்­பட்­டன. 

 

2009 : பாகிஸ்­தானின் பெஷாவர் நகரில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்­பினால் 17 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்.

 

2010 : ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகரில் திருமண வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் 40 பேர் உயிரிழந்தனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தொடருந்தின் தந்தை என்று சொல்லப்படும் நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் மற்றும் கட்டுமானப் பொறியாளர் ஜோர்ஜ்
ஸ்டீபென்சன் அவர்களின் பிறந்த தினம்.


நீராவி வண்டிகளின் போக்குவரத்திற்கு உலகின் முதல் பொது தொடர்வண்டிப் பாதைக்கான தண்டவாளங்களை அமைத்தவர் இவரே.

13419169_1059466410768719_98026715537485

13428391_730846463684565_643396661438629

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.