Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்ற விவகாரம்: உண்மையும் நம்பிக்கையும் அவசியம்! ஒரே குரலில் இலங்கைத் தமிழ் நாளிதழ்கள்

Featured Replies

போர்க்குற்ற விவகாரம்: உண்மையும் நம்பிக்கையும் அவசியம்! ஒரே குரலில் இலங்கைத் தமிழ் நாளிதழ்கள்

போர்க்குற்ற விவகாரம்: உண்மையும் நம்பிக்கையும் அவசியம்! ஒரே குரலில் இலங்கைத் தமிழ் நாளிதழ்கள்:

 

 
இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்ற விவகாரத்தில் உண்மையும் நம்பிக்கையும் அவசியம் என்பதை இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்கள் தமது ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளன. 
 
குளோபல் தமிழ் குழுமத்தின் உலக தமிழ் வானொலியான GTBC.FMஇன் பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற இன்றைய நாளிதழ்களின் ஆசிரியர் தலையங்கம் குறித்த பார்வையை இங்கு தருகிறோம். 
 
இன்றைய தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர் தலையகங்கள் யாவும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட மாக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை குறித்து தமது குரலை பதிவு செய்துள்ளன.
 
பரணகமவின் அறிக்கை பழுதாகுமோ?
 
தமிழர் தாயகத்திலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் பழுதாகிப்போகுமோ பரணகமவின் அறிக்கை என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. 
 
போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சாட்சியங்களை பதிவு செய்த தருணத்தில் பரணகம நெஞ்சுவலிக்கு ஆளாகியது அவருக்கு சாட்சியங்கள் எத்தகைய தாக்கத்தை உருவாக்கியது என்பதை நிருபிப்பதாக குறிப்பிடுகிறது வலம்புரி நாளிதழின் ஆசிரியர் தலையங்கம். 
 
இதேவேளை சாட்சியங்களை கேட்ட பரணகம இனம் மதம், மொழி கடந்து தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நிச்சயம்  நினைத்திருப்பார் என்றும் கூறும் வலம்புரி நாளிதழ் நீதியாக நடந்த பரணகமவுக்கு தமிழ் மக்கள் நன்றிக்குரியவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. 
 
ஆனாலும் பரணகம அறிக்கை பேரினவாதிகளுக்கு உடன்பாடாக இராது என்பதனால் பரணகமவின் அறிக்கையும் விரைவில் பழுதாகிப்போய்விடுமோ என்ற கேள்வியை வலம்புரி நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் எழுப்புகிறது. 
 
உண்மைதான் ஆற்றுப்படுத்தும்
 
ஆற்றுப்படுத்தக்கூடிய உண்மை அவசியம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது தமிழர் தாயகத்திலிருந்து வெளிவரும் யாழ் தினக்குரல் நாளிதழின் இன்றைய ஆசிரியர் தலையங்கம். 
 
பரணகமவின் அறிக்கையில் இலங்கை இறுதி யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்களில் நம்பகத் தன்மை இருப்பதையும் சனல் 4 ஆதாரங்களில் உண்மை தன்மை இருப்பதையும் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதை தினக்குரல் நாளிதழ் கோடிட்டுள்ளது.
 
இன அழிப்புக்கான ஆதாரம் இல்லை என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க தீர்மானத்தின் அடிப்படையில் சர்வதேச நீதிப்பொறிமுறையை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் தினக்குரல் நாழிதழ் நினைவுபடுத்தியுள்ளது.
யுத்தம் முடிந்து 6 வருடங்கள் ஆகியும் தமது அன்புக்குரியவர்களின் கதி குறித்து அறியாமல் ஏங்குபவர்கள் மற்றும் உறவுகளை இழந்து துன்புறுவோரை உண்மையை அறிந்துகொள்ள வைப்பதே இப்போதைய அவசிய தேவை என்கிறது தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் தலையங்கம். 
 
அத்துடன் வழி நடத்தப்படும் உண்மைகளாக இருக்காதிருப்பதே தார்மீக நெறியானதாக அமையும் என்பதையும் தினக்குரல் நாளிதழின் அசிரியர் தலையங்கம் வலியுறுத்தியுள்ளது. 
 
நம்பிக்கை விசாரணை வேண்டும்
 
நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் விசாரணைகள் அமைய வேண்டும் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது சிறிலங்காவின் தலைநகரிலிருந்து வெளிவரும் வீரசேகரி நாளிதழின் இன்றைய ஆசிரியர் தலையங்கம். 
 
பரணகம ஆணைக்குழு படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதையும் அதைக் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் பரிந்துரைப்பது வரவேற்கத் தக்க செயல்பாடு என்று குறிப்பிடுகிறது வீரகேசரி நாளிதழின் ஆசிரியர் தலையங்கம். 
 
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையில் விசேட கலப்பு நீதிமன்றம் வலியுறுத்தப்பட்ட நிலையில் பரணகம ஆணைக் குழு அறிக்கையில் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள் தேவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந் நாளிதழ் சுட்டிக்காட்டுகிறது. 
 
எனவே அரசாங்கத்திற்கு அத்தகைய விசாரணையை ஆரம்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் இனியாவது பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் விசாரணைகளை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது. 
 
இன உறவு முளைத்தெழ வாய்ப்புண்டா?
 
இலங்கையில் இன உறவு முளைத்தெழ வாய்ப்புண்டா என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கிறது தமிழர் தாயகத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழின் இன்றைய ஆசிரியர் தலையங்கம். 
 
காலத்திற்கு காலம், கால மாற்றங்கள், அரசியல் மாற்றங்கள், ஆட்சி மாற்றங்கள், நாடுகளின் தலைமைத்துவ மாற்றங்கள் நிகழ்வது புதுமையானதல்ல என்று குறிப்பிடுகிறது உதயன் நாளிதழ். 
 
இதேவேளை இலங்கையில் போரை நிறுத்தவும் தமிழ் மக்களை பாதுகாக்கவும் ஐ.நாவோ வேறு தேசங்களோ உண்மை மனதுடன் செயற்படவில்லை என்றும் சாய்ந்தால் சாயும் பாணியிலான அவர்களின் செயற்பாடு காலக்கரிக்கோடு என்றும் விபரித்துள்ளது உதயன் நாளிதழ். 
 
நீயா நானா என்ற ஏட்டிக்குப் போட்டியான மமதைப்போக்குகளும் இலங்கையின் இன உறவு தேய்ந்து எரிந்து சாம்பராக எண்ணெய் ஊற்றியதாக  தெரிவிக்கும் உதயன் நாளிதழ் அந்த நிலை இல்லாது போகாத என்பதே இலங்கைத் தமிழ் மக்களின் ஏக்கம் என்றும் குறிப்பிடுகிறது. 
 

தமிழ் மக்களும் இந்நாட்டு மக்களே என்பதை அரச பீடமேறும் தெற்கு அரசியல் தலைவர்கள் எனப்படுபவர்கள் எப்போது உணரப்போகிறார்கள் என்றும் அவர்களது மக்களுக்கு எப்போது விடிவு பிறக்கும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளது இன்றைய உதயன் நாளிதழின் ஆசிரியர் தலையங்கம்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125154/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.