Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமல் வீரவன்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை

Featured Replies

விமல் வீரவன்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை
விமல் வீரவன்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்ற அவர் பழைய கடவுச்சீட்டை எடுத்து சென்றுள்ளார்.

அந்தக் கடவுச்சீட்டு காணாமல் போயுள்ளதாக ஏற்கனவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதனால், விமான நிலைய அதிகாரிகளால் அவருக்கு உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் புதிய கடவுச்சீட்டை எடுத்துவருமாறு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததுள்ளனர்.

பின்னர் வீட்டுக்கு சென்று புதிய கடவுச்சீட்டை எடுத்து வந்த அவரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

இத்தாலிக்கு புறப்பட்டு செல்வதற்காக விமல் வீரவன்ச இன்று காலை விமான நிலையத்திற்கு சென்ற வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் பழைய கடவுச்சீட்டு தொலைந்து போனதாக போலியான முறைப்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

http://onlineuthayan.com/news/1702

 

 

 

 விமல் வீரவன்ச வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள பிரதமர் உதவி

 



முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.பிரதமரின் தலையீட்டு காரணமாக விமல் வீரவன்ச வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டதாக அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.


விமல் வீரவன்ச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்திருந்தார்.நீதிமன்றம் தடை விதிக்காமல் இருந்தால் அரசாங்கம் விமல் வீரவன்ச சார்பில் தலையீடு செய்ய முடியும் என பிரதமர் கூறியுள்ளார். இதன்படி, விமல் வீரவன்ச தனது பயணத்தை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படக்கூடிய சாத்தியம்

ஜே.என்.பி.யின் தலைவரும் முன்னாள் வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சருமான விமல் வீரவன்சவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


விமல் வீரவன்ச கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இன்றைய தினம் அதிகாலை 3.00 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இத்தாலிக்கு செல்ல விமல் வீரவன்ச முயற்சித்தபோது குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், விமல் வீரவன்சவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.


கடவுச்சீட்டு ஒன்று காணாமல் போனதாகத் தெரிவித்து அண்மையில் விமல் வீரவன்ச புதிய கடவுச்சீட்டு ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளார்.


எனினும், இன்றைய தினம் வெளிநாட்டுக்கு பயணம் செய்வதற்காக குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் காணாமல் போனதாக தெரிவித்த கடவுச்சீட்டை சமர்ப்பித்துள்ளார்.


இத்தாலிக்கு செல்வதற்காக வீசாவும் இந்தக் கடவுச்சீட்டில் குத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


பழைய கடவுச்சீட்டு காணாமல் போனதாக தெரிவித்த காரணத்தினால் அந்தக் கடவுச் சீட்டை ரத்து செய்து, புதிய கடவுச்சீட்டை குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் விமல் வீரவன்சவிற்கு வழங்கியிருந்தனர்.


இந்த நிலையில் குறித்த பழைய கடவுச்சீட்டை பயன்படுத்தியமை கடவுச்சீட்டு மோசடியாக கருதப்படும் என பெயர் குறிப்பிட விரும்பாத குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்டமை நிரூபணமானால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


இதேவேளை, தமது பழைய கடவுச்சீட்டு கிடைத்து விட்டதாக விமல் வீரவன்ச கொழும்பின் புறநகர்ப் பகுதி காவல் நிலையமொன்றில் இன்று காலை முறைப்பாடு செய்துள்ளார்.


எனினும், ஏற்கனவே பழைய கடவுச்சீட்டில் இத்தாலி செல்வதற்கா வீசா முத்திரை குத்தப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


விமல் வீரவன்ச தடுத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறித்து நாடாளுமன்றிலும் இன்றைய தினம் பேசப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125188/language/ta-IN/article.aspx

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.