Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜித கூறியிருப்பது தர்மசங்கட நிலையை ஏற்படுத்தும்: சங்கரி

Featured Replies

 
ராஜித கூறியிருப்பது தர்மசங்கட நிலையை ஏற்படுத்தும்: சங்கரி
 

article_1445670536-ssd.jpgஇலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகள் இல்லையென சுகாதார அமைச்சர் ராஜித சோனரத்ன கூறியிருப்பது சிறைக் கைதிகள் மத்தியில் மீண்டுமொரு சங்கடமான நிலைமையை ஏற்படுத்திவிடும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆனந்தசங்கரி வெள்ளிக்கிழமை (23) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லையென்று தெரிவித்தமை விரைவில் மீண்டுமொரு சங்கடமான நிலைமையை சிறைக்கைதிகள் மத்தியில் ஏற்படுத்திவிடும் என்ற ஐயம் எனக்கு எழுக்கிறது. கைதிகள் குற்றம் செய்தது அல்லது இல்லை என்பது எமது பிரச்சனை இல்லை.

அவர்கள் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்தமையால் அவர்கள் செய்த குற்றம் எதுவாக இருந்தாலும் அனுபவித்த தண்டனை அதிகமாகையால் போதுமானதாகும். அந்த அடிப்படையில்தான் அவர்களின் விடுதலையைக்கோரி இத்தனை போராட்டங்கள் நடந்தது மட்டுமல்ல இறுதியில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலையிட்டு உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.

ராஜித சேனாரத்தன விடுத்துள்ள அறிக்கை மீண்டும் பிரச்சினையை உயிர்பெறச் செய்யும் என்பது எதுவித சந்தேகமும் இல்லை. முன்னர் தடுப்புக்காவலில் இருந்தவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் தெரிவாகியிருக்கிறார்கள்.

இதே நடைமுறையை அரசு கையாள தவறுமாயின் பல சிரமத்தின் மத்தியில் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசுக்கு நிச்சயமாக பெரும் சங்கடத்தை உருவாக்கும். இதனை கவனத்தில் கொண்டு, அரசு, அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். இதனை, நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் குறிப்பாக சிறுபான்மை இன பிரதிநிதிகளை வேண்டுகின்றோம்.

யுத்தத்தை நிறுத்த எதுவித நடவடிக்கைகளை எடுக்காமல் இளைஞர்களுக்கு உற்சாகமளித்து குற்றங்கள் புரிந்திருந்தால் அவ்வாறே அவர்களை செய்ய வைத்துவிட்டு, யுத்த குற்றங்களுக்காக அவர்களை விசாரிக்கும்படி பிடிவாதமாக இருப்பது கூட்டமைப்பின் சில உறுப்பினர்களின் தவறான நடவடிக்கையாகும்.

இதனை தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டித்து வந்திருப்பது மட்டுமல்ல இன்றும் அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளது. காரணம் புலிகளில், ஒரு பகுதியினர் பலாத்காரமாக இணைக்கப்பட்டவர் ஆவார்கள். அவர்கள் நினைத்த எதையும் செய்யவும் முடியாது, பெரும் பகுதியினர் கருவிகளாகவே பாவிக்கப்பட்;டார்கள்.

ஆனால், இராணுவத்தினருடைய நிலைப்பாடு பெருமளவில் வித்தியாசமானதாகும். இந்த வேறுபாட்டை எடுத்துக்கூற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஏன் முடியவில்லை. அண்மையில் பெண் போராளி தமிழினியின் இறுதிக் கிரிகையைகளில் நான் கலந்துகொண்டபோது துக்கம் தாங்க முடியவில்லை. ஏனென்றால் அப்பெண் பல திறமைகளை கொண்டிருந்தவர். யுத்தம் நிறைவடைந்த பின்பும் கூட வாய்ப்பு கிட்டியிருந்தால் கல்வித்துறையில் பல முன்னேற்றத்தையும் கண்டிருக்கக்கூடும். இவர் போன்ற ஆயிரக்கணக்கான போராளிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காப்பாற்றத் தவறிவிட்டது.

2009 ஆம் ஆண்டு புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன்  கூட்டமைப்பின் தலைமையை உடன் டில்லி வருமாறு அழைப்பு விட்டிருந்தார். நிச்சயமாக இவர்களை அவர் விருந்துக்கு அழைக்கவில்லை. மாறாக யுத்தத்தை நிறுத்தி பொது மக்களையும், போராளிகளையும் காப்பாற்ற வழிவகை பற்றி கலந்துரையாடவே என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால் அவருடைய அழைப்பை நிராகரித்து, இந்திய அரசுக்கு சம்பந்தமில்லாத, 'யுத்தத்தை முதல் நிறுத்துங்கள்' என்று மக்களையும் போராளிகளையும் காப்பாற்ற தேடிவந்த வாய்ப்பை இழந்தனர்.

நாற்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இல்லாது போனால் கூட்;டமைப்பு கூறுவது போல ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் உயிரை காப்பாற்றியிருக்கலாம். இந்த இழப்புக்கள், அழிவுகள் எல்லாவற்றையும் மூடி மறைத்துவிட்டு மீண்டும் போர் முரசு கொட்ட ஆரம்பித்து விட்டார்கள். மீண்டுமொரு போர் நிகழ்ந்தால் வெல்ல முடியுமா? உயிரிழப்புக்களை சொத்திழப்புக்களை தவிர்க்க முடியுமா? அல்லது அவர்களுடைய பதவிகளையாவது, காப்பாற்ற முடியுமா? எதுவும் முடியாது.

இன்னுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் 'சனல் 4 வை பரணகம ஏற்றிருப்பதால் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்' என கூறியிருக்கின்றார். இந்த உறுப்பினர் தான் போரில் அதிக மக்களை கொன்றவர்கள் புலிகள் என வாய்கூசாமல் கூறியவர். இந்த ஒரு வார்த்தை போதும் இந்த பிரச்சனையில் கூட்டமைப்பை அவமானப்படுத்தி தலைகுனிய வைக்க.

வேலையற்றவர்கள்தான் புலி இயக்கத்தில் சேர்ந்தவர்கள் என்று கூறியதும் இந்த பெரியவர்தான். ஆனால் இவருக்கு பெரும் பாராட்டுக்கள் கிடைக்கின்றன. கூட்டமைப்புக்கு எக்கட்டத்திலும் நான் கூறும் ஆலோசனைகள் ஒவ்வாமையாக இருப்பின் என்னைத்தவிர ஏனைய தமிழின தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டாக நடவடிக்கை எடுக்கலாம்.

இதுவரை என்னுடன் முரண்பட்ட கருத்துக்களில் எப்பொழுதும் நான் கூறியதே சரியாகவும் அவர்கள் எடுத்த முடிவுகள் அத்தனையும் காற்றோடு பறந்துவிட்டன. தயவு செய்து கூட்டமைப்பின் தலைமை இது போன்றவர்களை மௌனம் சாதிக்க வைத்து கூட்டுச்சேர்ந்து செயற்பட்டால் பல விடயங்களுக்கு நல்ல தீர்வு காணமுடியும்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

- See more at: http://www.tamilmirror.lk/157373/ர-ஜ-த-க-ற-ய-ர-ப-பத-தர-மசங-கட-ந-ல-ய-ஏற-பட-த-த-ம-சங-கர-#sthash.dm41j4FO.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.