Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

12189020_1057609917591582_10160796326392

இலங்கை அணிக்கு மீண்டும் ஒரு வெற்றி..
டக்வேர்த் லூயிஸ் முறை மூலம் 19 ஓட்டங்களால் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேசப் போட்டியை வென்று, தொடரை 3-0 எனக் கைப்பற்றியது.

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12182421_1717395014958365_52134405544044

  • தொடங்கியவர்

இலங்கை - மேற்கிந்தியத்தீவு : முதலாவது இருபதுக்கு - 20 போட்டி இன்று

 
 
 

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு - 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

Jason-Holder_2.jpg
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் 2 இருபதுக்கு - 20 போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகளைக்கொண்ட ஒருநாள்  தொடரையும் இலங்கை அணி 3-0 எனக் கைப்பற்றி வெள்ளையடிப்பு செய்துள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் முதலாவது போட்டி இன்று பல்லேகலயில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவிருந்த  2 ஆவது இருபதுக்கு - 20 போட்டி, மாதுலுவாவே சோபிததேரரின் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினத்தை தேசிய துக்கதினமாக  அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதால் 11 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/articles/2015/11/09/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81

  • தொடங்கியவர்

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டி சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

கண்டி பல்லேகல மைதானத்தில் இந்தப் போட்டி இடம்பெறுகிறது.

இதேவேளை எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறவிருந்த இருபது கிரிக்கட் போட்டி எதிர்வரும் 11ம் திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதியும் சமூக நிதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவாவே சோபித்த தேரரின் மறைவையொட்டி அன்றைய தினம் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே அன்றைய தினம் இடம்பெறவிருந்த போட்டி அதற்கு முன்னைய நாள் 11ம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
100/1  11.2 ஓவர்களில்
 
  • தொடங்கியவர்

12183954_1121482794537482_32597785152481

ஸ்ரீலங்கா  20 ஓவர்களில்  215/3

எங்கயப்பா உந்த Chris Gayle

  • தொடங்கியவர்
18 minutes ago, ஜீவன் சிவா said:

எங்கயப்பா உந்த Chris Gayle

அவர் இன்னும் 2 மாதத்திற்க்கு ஓய்வு.

West Indies batsman Chris Gayle has said that he will be out of action for "two to three months" to address his long-standing back problem with surgery.

Just now, நவீனன் said:

அவர் இன்னும் 2 மாதத்திற்க்கு ஓய்வு.

West Indies batsman Chris Gayle has said that he will be out of action for "two to three months" to address his long-standing back problem with surgery.

நன்றி நவீனன்

  • தொடங்கியவர்

12208322_1058454787507095_17478699723867

86/4 - 8.1 ஓவர் 
கவுந்தமாதிரித்தான்.

  • தொடங்கியவர்

12187921_1005089646220364_16475024955535

  • தொடங்கியவர்

டி20: அதிரடி பேட்டிங்கில் 215 ரன் குவித்து மே.இ.தீவுகளை வீழ்த்திய இலங்கை

இலங்கை அணியில் அதிகபட்ச ஸ்கோரான 56 ரன்கள் எடுத்து அபாரத் தொடக்கம் கொடுத்த தில்ஷன். | படம்: ஏ.எஃப்.பி.
இலங்கை அணியில் அதிகபட்ச ஸ்கோரான 56 ரன்கள் எடுத்து அபாரத் தொடக்கம் கொடுத்த தில்ஷன். | படம்: ஏ.எஃப்.பி.

பல்லெகெலே விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் மே.இ.தீவுகளை இலங்கை அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்களை விளாசியது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் ஓரளவுக்கு அச்சுறுத்தினாலும் ஒரு பந்து மீதமிருக்கையில் 185 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி அடைந்தது.

டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் டேரன் சாமி தப்பும் தவறுமாக முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்தார். தில்ஷன், குஷால் பெரேரா இணைந்து 58 பந்துகளில் 91 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். குசால் மிட் ஆஃப் தலைக்கு மேல் பவுண்டரியுடன் தொடங்க தில்ஷன் தன் பங்குக்கு 2 பவுண்டரிகளுடன் தொடங்கினார். சிறிது நேரம் கழித்து இருவரும் சில நல்ல பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டத் தொடங்கினார்கள். குசால் ஸ்வீப் ஆட, தில்ஷன் தனது ‘தில் ஸ்கூப்’ ஷாட்களை ஆடத் தொடங்கினார்கள்.

4-வது ஓவர் முடிவில் 46 ரன்கள் வந்திருந்தது. ஹோல்டரின் 6-வது ஓவரில் தில்ஷன் கை ஓங்க 17 ரன்கள் நொறுக்கப்பட்டது. பவர் பிளே முடிந்தபோது ஸ்கோர் 65. சுனில் நரைன் மட்டுமே மே.இ.தீவுகளில் சிக்கனமாக வீசி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மற்ற பவுலர்கள் அனைவரும் ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுத்தனர். டிவைன் பிராவோ 4 ஓவர்களில் 53 ரன்கள் விளாசப்பட்டார். இலங்கைக்காக டி20 கிரிக்கெட்டில் முதலில் 1,500 ரன்களைக் குவித்து தில்ஷன் சாதனை நிகழ்த்தினார். 10-வது ஓவரில் 28 பந்துகளில் தில்ஷன் அரைசதம் கண்டார்.

அதன் பிறகு கெய்ரன் பொலார்ட், தில்ஷன், குசல் பெரேரா (40) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். ஆனாலும் ஜெயசூரியா மற்றும் சந்திமால் அவர்கள் விட்ட இடத்திலிருந்து தொடங்கினர். சந்திமால் 3 கவர் டிரைவ் பவுண்டரிகளை விளாசினார். 16-வது ஓவரில் ஜெயசூரியா மூடுக்கு வர பொலார்டை 2 பவுண்டரி ஒரு சிக்சர் அடிக்க அந்த ஓவரில் 23 ரன்கள் வந்தது. ஷேஹன் ஜெயசூரியா 22 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 36 ரன்களில் சுனில் நரைன் பந்தில் அவர்களிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

16.2 ஓவர்களில் 155/3 என்று இருந்தது இலங்கை, அப்போது அஞ்சேலோ மேத்யூஸ் களமிறங்கினார். நரைனை சந்திமால் ஒரு ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி அடித்தார்.

மேத்யூஸ் 13 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சர்கள் என்று 37 ரன்களை விளாசித் தள்ளினார், கடைசி 22 பந்துகளில் 60 ரன்கள் விளாசப்பட்டது. சந்திமால் 19 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 40 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

மே.இ.தீவுகள் களமிறங்கிய போது 2-வது பந்தில் லஷித் மலிங்கா தனது கால் பெயர்க்கும் யார்க்கர் பந்தில் ஜான்சன் சார்லஸ் ஸ்டம்பை பெயர்த்தார். சாமுயெல்ஸ் 10 ரன்களில் வெளியேறினார். ஆனால் ஆந்த்ரே பிளெட்சர், ஆந்த்ரே ரசல் சேர்ந்தனர். குறிப்பாக பிளெட்சர் லெக் திசையில் விளாசித்தள்ளினார். அறிமுக வீரர் துஷ்மந்த சமீரா வீசிய 6-வது ஓவரில் 19ரன்கள் குவிக்கப்பட்டது. பிறகு சேனநாயகே ஓவரில் 16 ரன்கள் நொறுக்கப்பட்டது.

ஸ்கோர் 7.3 ஓவர்களில் 77 ஆக உயர்ந்தது சுமார் 3 ஓவர்களில் 48 ரன்களை இருவரும் அடித்து நொறுக்கினர். அப்போது ரஸல் 16 ரன்களில் வெளியேறினார். 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 57 பந்துகளில் சமீரா பந்தில் பவுல்டு ஆனார். பிராவோ, பொலார்ட் ஜோடி இணைந்து அடுத்த 27 பந்துகளில் 51 ரன்கள் சேர்க்க 13-வது ஓவரில் 137 ரன்கள் என்று அச்சுறுத்தியது மே.இ.தீவுகள், ஆனால் பிராவோ 24 ரன்களிலும், பொலார்ட் 26 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற, சாமி, ஹோல்டரை சேன நாயகே மலிவான ஸ்கோருக்கு பெவிலியன் அனுப்ப, பேட்டிங்கிலும் நரைன் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். ஆனால் கடைசி 2 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வெறும் 17 ரன்களையே எடுத்த மே.இ.தீவுகள் 19.5 ஓவர்களில் 185 ரன்களுக்குச் சுருண்டது.

மலிங்கா 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, சேனநாயக 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், சிரிவதனா 41 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சேனநாயக ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-215-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article7864710.ece

  • தொடங்கியவர்

2வதும் இறுதியுமான T20 சர்வதேசப் போட்டி.
மேற்கிந்தியத் தீவுகள் 162/6
நடப்பு T20 உலக சம்பியன்களும், தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள அணியுமான இலங்கைக்கு இலக்கு 163.

இன்னொரு வெற்றி கிட்டுமா?
இலங்கை இந்தத் தொடரில் எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

12065850_941091539272874_867344894977595

12227715_941091599272868_862635861110002

  • தொடங்கியவர்

மேற்கிந்திய தீவுகள் அணிகள் 23 ஓட்டங்களால் வெற்றி.

http://p.imgci.com/db/PICTURES/CMS/226600/226681.3.jpg

  • தொடங்கியவர்

2வதும் இறுதியுமான T20 சர்வதேசப் போட்டி
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 23 ஓட்டங்களால் வெற்றி.

163 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடிய இலங்கை அணி 139 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.
டில்ஷான் 52.
ட்வெயின் ப்ராவோ 4 விக்கெட்டுகள்
பொல்லார்ட் 3 விக்கெட்டுகள்
தொடர் சமநிலை

போட்டியின் சிறப்பாட்டக்காரர் - ப்ராவோ
தொடர் நாயகன் - டில்ஷான்.

12208597_941129685935726_858100870086693

  • தொடங்கியவர்

ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்புகிறது மேற்கிந்தியா : ஒருநாள், டெஸ்ட் தொடர் இலங்கை வசம்

 

இலங்கை அணிக்கெதிரான  இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு -20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 23 ஓட்டங்களால் ஆறுதல் வெற்றிபெற்று, இருபதுக்கு - 20 தொடரை 1-1 என சமநிலைப் படுத்தியுள்ளது.

226681.jpg
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் 2 இருபதுக்கு - 20 போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியது.

இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகளைக்கொண்ட ஒருநாள்  தொடரையும் இலங்கை அணி 3-0 எனக் கைப்பற்றி வெள்ளையடிப்பு செய்துள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் பல்லேகலயில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் 30 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.

அந்தவகையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தித்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில்  6 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப்பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பிளட்சர் 23 ஓட்டங்களையும் சார்ள்ஸ் 34 ஓட்டங்களையும் ராம்தின் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் மலிங்க மற்றும் சிறிவர்தன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 163 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரியத் தொடங்க 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று 23 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டில்ஷான் 52 ஓட்டங்களையும் செஹான் ஜயசூரிய 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். ஏனைய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர்.

பந்து வீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக பிராவோ 4 விக்கெட்டுகளையும் ராம்போல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டனர்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிராவோ தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தொடர் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

http://www.virakesari.lk/articles/2015/11/11/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.