Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லை தாண்டும் இந்தியப் படகுகளுக்கு 15 கோடி ரூபா வரை அபராதம்

Featured Replies

10343_content_fishermen.jpg

இலங்கையின் கடற்பரப்புக்குள் ஊடுருவும் இந்திய மீன்பிடிப் படகுகளுக்கு 15 கோடி ரூபா வரையிலான கடுமையான அபராதத்துடன் கூடிய தண்டனையை அமுல்படுத்தும் திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படவிருப்பதாக மீன்பிடித் துறை பணிப்பாளர் நாயகம் எம்.சி.எல்.பெர்னாண்டோ தெரிவித்திருக்கிறார்.  மீன்பிடித் துறை சட்டமூலத்தில் இந்த உத்தேச திருத்தங்கள் விரைவில் அமுல்படுத்தப்படவிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் பெர்னாண்டோ, தற்போது நடைமுறையிலுள்ள ஊடுருவலுக்கு எதிரான சட்டங்கள் போதியளவுக்கு வலுவானவை அல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.

கடந்த வாரம் உள்ளூர்  மீனவர்கள் மீது கடுமையான அபராதங்களை அமுல்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. மற்றொரு நாட்டின் தேசிய சட்டப் பரிமாணங்களை மீறுவோர் மற்றும் அனுமதிப் பத்திரமின்றி ஆழ்கடலில் மீன்பிடித்  தொழில் ஈடுபடுவோருக்கு எதிராக இந்த அபராதம் விதிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. படகின் தன்மையைக் கொண்டு 10 இலட்சம் ரூபாவிலிருந்து 15 கோடி ரூபா வரை அபராதத்தை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இதேவேளை இலங்கையின் கடப்பரப்புக்குள் ஊடுருவும் வெளிநாட்டுப் படகுகளுக்கு இதேபோன்ற அபராதங்களை அமுல்படுத்த புதிய சட்டமூலத்தை தயாரிப்பதற்கு தனியான குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது என்று மீன்பிடித் துறை பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

இதேவேளை இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக ஊடுருவும் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு பரிந்துரைகளை முன்வைப்பதற்கான ஆலோசனைக் குழுவொன்றை அரசாங்கம் நியமித்திருக்கிறது. இந்தியாவுடன் புதிய பேச்சுகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் இப்பரிந்துரைகளை முன்வைக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழுவில் கடற்படை, கரையோரக் காவல்படை, வெளிவிவகார அமைச்சு, மீன்பிடித் துறை அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். மீன்பிடித் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாண மீனவர்கள் சங்கத் தலைவர்கள், கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கரையோரக் காவல்படை, அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, தமிழகத்திற்கு விரைவில்  சென்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான எதிர்பார்ப்பை அமைச்சர் அமரவீர கொண்டிருக்கிறார். கடந்த சனிக்கிழமை தமிழக மீனவர்கள் இராமேஸ்வரத்தில் காலவரையறையற்ற போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இலங்கைச் சிறையிலுள்ள 87 மீனவர்கள் மற்றும் அவர்களின் 39 படகுகளை விடுவிக்க வலியுறுத்தி  மீனவர்கள் காலவரையறையற்ற போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.  

http://www.thinakkural.lk/article.php?local/nznvd1tmns9978feaa5178df30299taeae4eacbdb7db7e491efe7d95dwmmd#sthash.OcNxK3M2.dpuf

 

எல்லை தாண்டினால் ரூ.15 கோடி அபராதம்: அதிகாரி பேச்சை பெரிதாக எடுக்க வேண்டாம் என்கிறார் இலங்கை அமைச்சர்!

 

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தால் ரூ.15 கோடி அபராதம் விதிக்கப்படும் என்ற அதிகாரி பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று சென்னை வந்துள்ள இலங்கை அமைச்சர் ரபி ஹக்கிம் தெரிவித்து உள்ளார்.

8.jpg

இலங்கை அமைச்சர் ரபி ஹக்கிம் இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இலங்கை–இந்தியா அரசு இடையே நல்ல சுமூகமான உறவு உள்ளது. தொடர்ந்து அது நல்ல முறையில் நீடிக்க வேண்டும் என்று இருநாட்டு அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் இருநாட்டு மீனவர்களின் பிரச்சினை சுமுகமான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் நல்ல தீர்வு ஏற்படும்.

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கையில் மீன்பிடித்தால் அவர்களை கைது செய்வதோடு ரூ.15 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கை அதிகாரி பேசியதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த விவகாரத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் இலங்கை அரசு பார்த்துக் கொள்ளும்.

இலங்கை போர் குறித்து நடக்கும் உள்நாட்டு விசாரணையில் போர்குற்றம் நடந்திருப்பதாக விசாரணைக்குழு அறிக்கை சமர்பித்துள்ளது. இதில் இலங்கை அரசு உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ளும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. போர்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்களை மீண்டும் தமிழர்களுக்கே திருப்பி தர சிறிசேனா அரசு உறுதியாக உள்ளது. தற்போது ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள அந்த இடங்கள் பகிர்ந்து அளிக்கப்படும். நீண்ட இடைவெளிக்கு பிறகு இலங்கையில் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவர் ஆகி உள்ளார். இது ஆரோக்கியமான அரசியல். அவருடன் கலந்து பேசி பறிக்கப்பட்ட இடங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும்" என்றார்.

http://www.vikatan.com/news/article.php?aid=54221

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.