Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லை தாண்டினால் ரூ.15கோடி அபராதம் :இலங்கையின் அறிவிப்பு இந்தியாவை சீண்டும் செயல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை தாண்டினால் ரூ.15கோடி அபராதம் :இலங்கையின் அறிவிப்பு இந்தியாவை சீண்டும் செயல்

27-Oct-2015 09:22 am
எல்லை தாண்டினால் ரூ.15கோடி அபராதம் :இலங்கையின் அறிவிப்பு இந்தியாவை சீண்டும் செயல்
இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்து ரூ.15 கோடி வரை அபராதம் விதிக்க முடிவு செய்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. இதற்காக இலங்கை மீன்பிடி சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த முடிவு அதன் ஆணவப் போக்கையே காட்டுவதாக பா.ம.க நிறுவுனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கை படையினரால் சுட்டுக் கொல்லப்படுவது, கொடூரமாக தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதுவரை 800க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையா கியிருக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்பதற் காகவே இந்திய - இலங்கை கூட்டு ஆணையம் அமைக்கப்பட்டு இரு தரப்பு சிக்கல்கள் குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

டில்லியில் கடந்த 22.01.2013 அன்று அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த ஆணையத் தின் கூட்டத்தில் “எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது எத்தகைய சூழலிலும் பலப்பிரயோகம் செய்யக்கூடாது. மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தப்படும் போக்கு தொடர வேண்டும்” என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 18.01.2015 அன்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர டில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசிய போது, இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விஷயத்தில் மனிதநேய அணுகுமுறை தொடர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதுமட்டுமன்றி, இச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து இருநாட்டு மீனவர் அமைப்புகளும் பேச்சு நடத்தி முடிவு செய்வார்கள் என்று தீர் மானிக்கப்பட்டது. அவ்வாறு இருக்கும் போது எந்த அடிப்படையில் எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ. 15 கோடி வரை அபராதம் விதிக்கும் முடிவுக்கு, இலங்கை அரசு வந்தது? அதற்கான தேவை என்ன? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

உலக அளவில் கடைபிடிக்கப்படும் மரபுகளின்படி தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதாக கூறுவதே அபத்தம். குறுகிய கடல் எல்லை கொண்ட பகுதிகளில் ஒரு நாட்டு மீனவர்கள் இன்னொரு நாட்டின் எல்லைக்குச் சென்று மீன்பிடிப்பது அடிப்படை உரிமையாக அங்கீகரிக் கப்பட்டிருக்கிறது.

அதேபோல் நாடுகளின் கடல் எல்லை தெளிவாக வரை யறுக்கப்படுவதற்கு முன்பாகவே காலம் காலமாக மீன் பிடித்துவரும் மீனவர்களின் உரிமையை புதிதாக வரையறுக்கப்படும் எல்லைகளாக பறிக்க முடியாது. இதை பன்னாட்டு நீதிமன்றங்கள் பலமுறை உறுதி செய்திருக்கின்றன.

இத்தகைய சூழலில், தமிழக மீனவர்களுக்கு கோடிக் கணக்கில் அபராதம் விதிக்கப்போவதாக இலங்கை அரசு கூறுவது இந்தியாவை சீண்டிப் பார்க்கும் செயலாகும். மீனவர்கள் பிரச்சினையில் இந்தியாவை இலங்கை சீண்டுவது இது முதல் முறையல்ல.

இலங்கை அரசின் புதிய முடிவு சட்டமாக்கப்பட்டால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பறிக்கப்படும். அதுமட்டுமின்றி, இலங்கை அரசின் மிரட்டல் போக்கை இனியும் அனு மதிக்கக்கூடாது. தமிழக மீனவர்கள், இலங்கைப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், தாக்கப்பட்ட போதும் அது குறித்து இராமேஸ்வரம் பகுதி காவல் நிலையங்களில் மீனவர்கள் புகார் செய்துள்ளனர்.

அவற்றின் அடிப்படையில் அடையாளம் தெரியாத, இலங்கைப்படையினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட கடற்படை வீரர்களையும், அவர்களின் தளபதிகளை யும் கைது செய்து ஒப்படைக்கும்படி இண்டர்போல் (யினிஹிரிஞிஜிலிழி) மூலம் இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இம்மாதம் 31 ஆம் திகதி தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசவுள்ளார். அப்போது தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்கவும், இலங்கை அரசை அடக்கவும் நடவடிக்கை எடுக்கும் படி மத்திய அரசை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.http://onlineuthayan.com/news/1904

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எந்த விதமான சீண்டலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!

இந்தியா என்பது தென் கிழக்காசியாவின் குழப்படி காரன்!

சிங்களவன், தமிழனை விடவும் நன்றாகவே இந்தியாவை எடை போட்டு வைத்திருக்கிறான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.