Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதைப்பொருள் பாவனை சுயநலமிக்க அரசியல் வாதிகளால் திணிக்கப்படுகின்றது

Featured Replies

போதைப்பொருள் பாவனை சுயநலமிக்க அரசியல் வாதிகளால் திணிக்கப்படுகின்றது
போதைப்பொருள் பாவனை சுயநலமிக்க அரசியல் வாதிகளால் திணிக்கப்படுகின்றது

வடக்கு- கிழக்கின் கலாசார சீர்கேட்டை ஏற்படுத்தும் நோக்குடன் போதைப்பொருள் பாவனை சுயநலம்மிக்க அரசியல்வாதிகளால் திணிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுப்பாவனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் அவற்றுக்கான அனுமதியை வழங்கும் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இவற்றை முன்னின்று செய்பவர்களாக ஒரு பிரபலமான முஸ்லிம் அமைச்சர் மற்றும் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த ஒரு சில அதிகாரிகளும் காணப்படுவதாக அறிகின்றேன். இவ்வாறு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். 

யாழ். இந்து ஆரம்பப் பாடசா லையின் நூற்றாண்டு நிறைவு விழாவின் நிறைவு நாள் நிகழ்வுகள் நேற்று கோலாகலமாக நடைபெற்றன. பழைய மாணவர்கள், பெற்றோர்களுக்காகநடத்தப் பட்ட இந்த நிறைவுநாள் நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர்மேலும் தெரிவித்துள்ளதாவது,

எல்லாப் பாடசாலைகளும் முன்னுதாரணமாக திகழ்வதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என அனைவரும் செயலாற்ற வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்தப் பாடசாலையில் செயற்குழு உறுப்பினராக இருந்தேன். ஆனால் பின்னாளில் ஏற்பட்ட பல காரணங்களால் அந்த நிலையில் இருந்து விலக வேண்டிய சுழ்நிலைகள் ஏற்பட்டன. அப்போதைய பாடசாலை சமூகத்தின் சூழ்நிலை அந்த நிலைலமயில் இருந்தது.

இன்று வடக்கு-கிழக்கின் கலாசார சீர்கேட்டை ஏற்படுத்தும் நோக்குடன் போதைப் பொருள் பாவனை சுயநலம்மிக்க அரசியல்வாதிகளால் திணிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுப்பாவனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் அவற்றுக்கான அனுமதியை வழங்கும் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இவற்றை முன்னின்று செய்பவர்களாக ஒரு பிரபலமான முஸ்லிம் அமைச்சர் மற்றும் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த ஒரு சில அதிகாரிகளும் காணப்படுவதாக அறிகின்றேன்.

 இவர்கள் தம்முடைய பெயர்களை வெளியிடாமல் வேறு பெயர்களைப் பயன்படுத்தி வருவதை அறிகின்றோம். இவ்வாறான நடவடிக்கைகளால் பாடசாலைகள் மற்றும் கோயில்களை அண்டிய பிரதேசங்களில் மதுபானசலைகள் உருவாகியுள்ளன. இவற்றுக்கு எதிரான நடவடிக் கைகள் மிக விரைவில் மேற்கொள்ளப்படும். நாடாளுமன்றத்திலும் இது தொடர்பில் பேசியுள்ளேன். பெரிய பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்காக பலர் தமது வதிவிட முகவரியைக்கூட மாற்றியுள்ளனர். இதனால், தொலைதூரப்பிரயாணம் மேற்கொண்டு மாணவர்கள் பாடசாலைகளுக்கு வரும் போது, துஷ்பிரயோகம் ஏற்படுவ தற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன. இவை தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்விக்கோட்ட அதிகாரி கள் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும். இவைமேலும் கண்டுகொள்ளப்படாத நிலை காணப்பட்டால்துஸ்பிரயோகங்கள் வடக்கில் அதிகரித்தே செல்லும். இவற்றை விரைவாக கட்டுப்படுத்தல் வேண்டும். அதிகதிறமை கொண்ட பருவம் குழந்தைப் பருவம். இதனை உரிய முறையில் பயன்படுத்தி அவர்களின் வாழ்வை வளமாக்க வேண்டியது சூழவுள்ள சமூகத்தின் கடமையாகும். மாணவர்கள் மருத்துவராக, பொறியியலாளராக, வழக்கறிஞ ராகவரவேண்டும் என்றநிலையே பாரம்பரியமாக காணப்பட்டது. ஆனால் இன்று பல மாணவர்கள் விஞ்ஞானத்துறையை தேர்வு செய்கின்றனர். அதற்கான வரப் பிரசாதம் இன்றைய பல்கலைக் கழகங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அடுத்த நாடாளுமன்ற அமர்வில் வெளியிடப்பட இருக்கும் வரவு செலவுத்திட்டத்தின் மூலமாக பல புள்ளிவிவரங்கள் பெறப்படும். அவை நல்லதாகவும் மோசமானதாகவும் கூட அமையலாம். எனினும் இந்த வரவு-செலவுத் திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில் கல்விக்காக 6 வீதம் ஒதுக்கியுள்ளோம். 

வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான பிரச்சினைத் தீர்வுகளை அரசு சார்ந்தும் என்னுடைய தனிப்பட்ட பார்வையுடாகவும் மேற்கொள்ளவுள்ளேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குறிப்பிட்டார். மேலும், இந்த நிகழ்வில் பிரதம விருந்தினரின் பாரியார், செஞ் சொற்செல்வர் ஆறு.திருமுருகன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

http://onlineuthayan.com/news/2072

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.