Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றங்களுக்கு மஹிந்தவும், கோத்தாவுமே பொறுப்பு! - தான் நாட்டில் இருக்கவில்லை என்கிறார் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றங்களுக்கு மஹிந்தவும், கோத்தாவுமே பொறுப்பு! - தான் நாட்டில் இருக்கவில்லை என்கிறார் பொன்சேகா 
[Thursday 2015-11-05 07:00]

போரை நெறியாள்கை செய்தமை, உத்திகளை வகுத்தமை ஆகியவற்றுக்கான பொறுப்பை நான் ஏற்கின்ற போதும், போரின்போது எவரேனும் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டிருந்தால் - குற்றங்களை இழைத்திருந்தால் அதற்கு மஹிந்த ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவுமே பொறுப்பேற்க வேண்டும். அவர்களை யாரும் தண்டிக்க முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

போரை நெறியாள்கை செய்தமை, உத்திகளை வகுத்தமை ஆகியவற்றுக்கான பொறுப்பை நான் ஏற்கின்ற போதும், போரின்போது எவரேனும் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டிருந்தால் - குற்றங்களை இழைத்திருந்தால் அதற்கு மஹிந்த ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவுமே பொறுப்பேற்க வேண்டும். அவர்களை யாரும் தண்டிக்க முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
போரை நெறியாள்கை செய்தமை, உத்திகளை வகுத்தமை ஆகியவற்றுக்கான பொறுப்பை நான் ஏற்கின்ற போதும், போரின்போது எவரேனும் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டிருந்தால் - குற்றங்களை இழைத்திருந்தால் அதற்கு மஹிந்த ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவுமே பொறுப்பேற்க வேண்டும். அவர்களை யாரும் தண்டிக்க முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


வெள்ளைக்கொடிச் சம்பவம் போன்ற குற்றச்சாட்டுக்கள் தான் இறுதிப் போரின் இறுதி ஆறு நாட்கள் காலப்பகுதியில் வெளிநாட்டில் இருந்த போதே சுமத்தப்பட்டுள்ளன. இதற்கு நான் பொறுப்பேற்கப் போவதில்லைஎன்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிப் போர் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில், அது தொடர்பாக இலங்கை அரசு நடத்தவுள்ள உள்ளக விசாரணையை வரவேற்றுள்ள பொன்சேகா, இந்த விசாரணையில் நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களும், ஆலோசகர்களும் நியமிக்கப்படுவதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொன்சேகா கருத்து வெளியிடுகையில், இந்தக் குற்றங்களைப் புரிந்த மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் சிறையில் இருக்க வேண்டியவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதில் பெரும் அவசரத்தில் இருந்தார் எனக் குறிப்பிட்ட பொன்சேகா, 2008ம் ஆண்டு ஜனவரி முதல் அவர் பொறுமையிழந்தவராகக் காணப்பட்டார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்ட போருக்கு மஹிந்த ராஜபக்ச தயாராக இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள பொன்சேகா, போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற அழுத்தத்தை மஹிந்த தன் மீது பிரயோகித்த போதும் தான் உரிய முறையில் போரை முன்னெடுத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

போரின் போது தனிப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்குமாயின் அதாவது இரண்டு இலட்சம் பேரைக்கொண்ட பெரும் இராணுவப் படையணியில் 7,8 பேர் எதையேனும் இழைத்திருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்கமாட்டேன். அவர்களே அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும். அவர்களை யாரும் தண்டிக்க முடியும். அது இராணுவத்தின் பிரச்சினையல்ல. நாம் அவர்களைப் பற்றிக் கவலை கொள்ள முடியாது. யாரேனும் மனித உரிமைகளை மீறிச்செயற்பட்டிருந்தால் நான் இராணுவத்தினருக்கு வழங்கிய உத்தரவுகளுக்கு எதிராக குற்றங்களை இழைத்திருந்தால் அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும்.

நான் யுத்தத்தின் கடைசி ஆறு நாட்களும் வெளிநாட்டில் இருந்தேன். இதன்போதே வெள்ளைக் கொடி சம்பவம் போன்ற குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டிருப்பதை பகுங்கு குழி என்று கூறமுடியாது. மாறாக அதுவொரு நிலக் கீழ் மாளிகை. விடுதலைப் புலிகளின் சிறிய விமானத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு நிலத்தின் கீழ் நான்கடுக்கு கட்டிடம் அவசியமில்லை. நான் இராணுவத் தலைமையகத்திலேயே இருந்தேன். அது ஜனாதிபதி மாளிகையில் இருந்து 200 மீற்றர் தொலைவிலேயே இருந்தது.

போர்க் காலத்தில் மூன்று அறைகளைக் கொண்ட கட்டிடத்திலேயே நான் இருந்தேன். நான் எனது படுக்கை அறைக்கு மேலாக ஒரு கொங்கீரிட்டை மாத்திரமே அமைத்துக் கொண்டேன். அதற்கு எனக்கு 50 ஆயிரம் ரூபா மாத்திரமே செலவாகியிருந்தது. ஏனெனில், இராணுவத்தினர் என்ற படியால் 50 ஆயிரமே செலவாகியிருந்தது.

விடுதலைப் புலிகளின் அந்தக் குட்டி விமானங்கள் குறித்து பெரிதும் அச்சம் கொண்டவர்களாக மஹிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும் இருந்திருப்பார்களேயானால் அதற்கான நான்கு அடுக்கு கட்டிடத்தை நிலத்தின் கீழ் கட்டியிருப்பார்களேயானால் அவர்கள் தலைவர்கள் என்று அழைக்கப்படுவதற்கு அருகதையற்றவர்கள். மாறாக அவர்கள் முதற்தரக் கோழைகளாகவே நோக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=144063&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் திட்டம் போட்டுத்தான் இவர் வெளியேறினார். அதேபோல மகிந்தவும் நாட்டில் இருக்கவில்லை. கோத்தபாயவும் வெளியே போயிருக்க வாய்ப்பு உள்ளது.

அந்த இறுதி நாட்களில் பாதுகாப்புத்துறைக்கு பொறுப்பாக இருந்தது மைத்திரி. அவர் இப்போது நல்லெண்ணத் தூதுவராக அமெரிக்காவின் செல்லப்பிள்ளை. போர்க்குற்ற விவகாரத்தை முன்னெடுத்துச் செல்வது ஐக்கிய அமெரிக்கா.. இப்போது விளங்குதா சிங்களவனின் சமன்பாடு?!

(இந்த மைத்திரிக்குத்தான் சம்பந்தன் ஐயாவும், சுமந்திரனும் ஆதரவு அளித்தார்கள் என்பது உபரித் தகவல். tw_blush: )

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள்  ஒன்றும் தெரியாமல் மைத்திரிக்கு ஆதரவு வழங்கவில்லை. எல்லாம் தெரிந்துதான் செய்தார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.