Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்: அரசின் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? - நாடாளுமன்றில் சுமந்திரன் கேள்வி

Featured Replies

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்: அரசின் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? - நாடாளுமன்றில் சுமந்திரன் கேள்வி

"தமிழ் அரசியல் கைதிகள் நவம்பர் 7 ஆம் திகதிக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரசால் உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளன. எனினும், உறுதியளித்தபடி வெளிப்படையான நடவடிக்கைகள் இன்னும் இடம்பெறவில்லை. எனவே, அரசின் உறுதிமொழி நிறைவேற்றப்படுமா?" - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.எ. சுமந்திரன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், தமிழர்கள் என்பதாலா தமிழ் அரசியல் கைதிகளுக்கு பாகுபாடு காட்டப்படுகின்றது என்றும் கேள்வி எழுப்பிய அவர், ஊழல் மோசடிக்கு எதிரான நடவடிக்கை உட்பட வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், இந்த அரசு ஒருவருடத்துக்கு நீடிக்குமா என்பது சந்தேகமே என்றும் அவர் முன்னெச்சரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஊழல் மோசடிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அவன்கார்ட் விவகாரம் பற்றியும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்கவால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு கூறினார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

"தமிழ் அரசியல் கைதிகள் நீண்டநாட்களாக விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஏழு வருடங்களுக்கு மேல் இவ்வாறு தடுத்துவைக்க முடியாது. எனவே, இங்கு அரசியல் காரணம் இருக்கின்றது. இந்நிலையில், இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லையென்று அமைச்சர்கள் துள்ளியெழுந்து கூறுகின்றனர். அவன்கார்ட் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு பிணை வழங்கப்படுகின்றது. ஏனைய குற்றவாளிகளுக்கும் பிணை கிடைக்கின்றது. எனினும், நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்படுவதில்லை. இது ஏன்? தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு அணுகுமுறையும் மற்றையவர்களுக்கு வேறு அணுமுறையும் பின்பற்றப்படுவது ஏன்? தமிழர்கள் என்பதாலா அவர்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? தமது விடுதலையை வலியுறுத்தில் தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்நிலையில், விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரச தரப்பில் இருந்து உறுதியளிக்கப்பட்டது. விடுதலை நடவடிக்கை ஒக்ரோபர் 31ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகும் என்றும், நவம்பர் 7 ஆம் திகதிக்குள் விடுதலை இடம்பெறும் என்றும் வாக்குறுதியளிக்கப்பட்டது. இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ளன. எனினும், வெளிப்படையான நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. எனவே, அரசின் உறுதிமொழி நிறைவேற்றப்படுமா? இதேவேளை, நாம் மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினோம். அதேபோல்,ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கும் குரல் கொடுத்தோம். இந்நிலையில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை உட்பட அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த அரசு இன்னும் ஒரு வருடத்துக்கு நீடிக்குமா என்பது சந்தேகமே.

இதேவேளை, புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கங்களுள் ஒரு தொகைய ஜனாதிபதித் தேர்தலின்போது கிளிநொச்சிக்கு வந்து மஹிந்த ராஜபக்‌ஷ வழங்கினார். போர் முடிவடைந்து ஜந்து ஆண்டுகள் கடந்த நிலையிலேயே தங்கத்தை அவர் வழங்கினார். ஏன் இத்தனை ஆண்டுகள் எடுத்தன? வைபவங்களுக்கு அணிவதற்காக அவரின் மனைவிக்கு வழங்கினாரா? ஒரு தொகை தங்கமே வழங்கப்பட்டுள்ளன. மிகுதி தங்கத்துக்கு என்ன நடந்தது?" - என்று கேள்வி எழுப்பினார் சுமந்திரன்.

http://malarum.com/article/tam/2015/11/04/12419/தமிழ்-அரசியல்-கைதிகள்-விடுதலை-விவகாரம்-அரசின்-வாக்குறுதி-நிறைவேற்றப்படுமா-நாடாளுமன்றில்-சுமந்திரன்-கேள்வி.html#sthash.ghLuf0Bi.dpuf

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராளுமன்றத்திலை எழும்பி நிண்டு கேள்வி கேக்கிறது இருக்கட்டும்.

நீங்கள் எல்லாரும் கூடிப்பேசித்தானே மைத்திரியை கதிரையிலை ஏத்தினனீங்கள்????

இதுக்குப்பிறகும் கேள்வி கெக்கரிக்காய் எண்டு கொண்டு......:mellow:


சுத்திச்சுத்தி சுப்பர்ரை கொல்லையுக்கை நிக்கிறதே எங்கடை அரிசியல்வாத்திகளுக்கு வேலையாய்ப்போச்சுது :cool:

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியை.... ஜென்ரில் மேன் என்றும், 2016´க்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவோம் என்றும் நீங்கள்தான்   சொன்னீர்கள். 
அதை நம்பி, சனம் உங்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தது.
2016 வர இன்னும், 2 மாதங்களே... உள்ளது. நீங்கள் கொடுத்த வாக்குறுதியையும்.... காப்பாத்துற வழியை பாருங்கப்பு. :)

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.