Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபல்யப்படுத்த சர்வதேச கிரிக்கெட் முன்னை நாள் நட்சத்திரங்கள் பங்குபற்றும் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி

Featured Replies

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபல்யப்படுத்த சர்வதேச கிரிக்கெட் முன்னை நாள் நட்சத்திரங்கள் பங்குபற்றும் Cricket All Stars கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாளை இரவு 9.30க்கு -

அணிகளின் விபரங்கள்

 

 
Sooriyan FMs Foto.
large_all-star1.jpglarge_alls10.jpg
large_alls8.jpglarge_alls11.jpg
large_alls5.jpglarge_alls7.jpg
  • தொடங்கியவர்
நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்சில் பெல் அடிக்க வருமாறு சச்சின், வார்னேவுக்கு அழைப்பு

06-1446791780-sachin824-600.jpg

l நியூயார்க்: நியூயார்க் பங்குச் சந்தையில், அன்றைய நாளின் வர்த்தகத்தின் தொடக்கமாக பெல் அடிக்கும் வழக்கம் உள்ளது. அதை சிறப்பு விருந்தினர்களை வைத்துச் செய்வார்கள். இந்த நிலைில் பெல் அடிக்க வருமாறு தற்போது கிரிக்கெட் பிரபலங்களான சச்சின் டெண்டுல்கர், ஷான் வார்னேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை (அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை காலை) பங்குச் சந்தையில் வர்த்தகத் தொடக்கமாக பெல் அடிக்க ஷான் வார்னேவும், சச்சினும் வரவுள்ளனர். இதுவரை கிரிக்கெட் பிரபலங்கள் யாரும் பெல் அடிக்க அழைக்கப்பட்டதில்லை. முதல் முறையா்க அந்தப் பெருமையை சச்சினும், வார்னேவும் பெற்றுள்ளனர்.

ஆல் ஸ்டார் கிரிக்கெட் சச்சினும்., வார்னேவும் இணைந்து ஆல் ஸ்டார் கிரிக்கெட் லீக்கை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் வீரர்களைக் கொண்ட இந்த லீக் சார்பில் 3 டுவென்டி 20 போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
 
முதல் போட்டி நாளை இதில் முதல் போட்டி நாளை நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. இரு அணிகள் சார்பிலும் விளையாடும் வீரர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
 
பங்குச் சந்தை கெளரவம் இந்த நிலையில் நியூயார்க் பங்குச் சந்தையில் பெல் அடித்து வர்த்தகத்தைத் தொடங்கி வைக்க சச்சின், வார்னே அழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை கிரிக்கெட் வீரர்கள் யாரும் இந்தப் பெருமையைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
பங்குச் சந்தையில் உரை அதன் பின்னர் சச்சினும், வார்னேவும், ஆல் ஸ்டார் கிரிக்கெட் தொடர் குறித்து விரிவாக விளக்கி்ப் பேசவுள்ளனர். பங்குச் சந்தை உறுப்பினர்களிடையே உரையாற்றவுள்ளனர்.
 
காலை 9.30 மணிக்கு நியூயார்க் நேரப்படி காலை 9. 30 மணிக்கு பெல் அடிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதன் பின்னர் பங்குச் சந்தையின் வர்த்தகம் தொடங்கும்.
 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/a-first-cricketers-tendulkar-warne-ring-opening-bell-at-new-239352.htm

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கட்டாவது அமெரிக்காவில் பிரபல்யமாவதாவது....! அவர்கள் ஒன்டரை மணித்தியால சாதாரண கால்பந்து விளையாட்டையே ஒரு விளையாட்டாய் நினைக்கிறேல்ல.

முகத்துக்கு கிறில்பூட்டி முஷ்டியால் மோதுற "ருக்பி" ,கூடைப் பந்து , கொஞ்சம் டென்னிஸ் அதுவும் சரீனாவும் ,வீனஸும் பறந்து பறந்து அடிக்கிறதால,இத்யாதி, இத்யாதிதான் விலைபோகும்...! :)

  • தொடங்கியவர்

12193785_1057175480968359_56789394625355

12191544_1057175850968322_18393176070406

12191889_1057176060968301_91842752561639

 

  • தொடங்கியவர்

மீண்டும் களத்தில் சச்சின், ஷேவாக், கங்குலி: அனல் தெறிக்கும் ஆல்ஸ்டார்ஸ் கிரிக்கெட்!

 

ச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட்டின் கடவுள் என புகழ்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். ஆனால் அவர் கடவுள் அல்ல. கிரிக்கெட் விளையாட்டை உலகம் முழுவதும் பிரபலபடுத்த அனுப்பப்பட்ட கடவுளின் தூதுவர். இந்தியாவில் அலைஅலையாய் மக்கள் கிரிக்கெட் காண ஆரம்பித்ததற்கு காரணம் சச்சின். சச்சின் டெண்டுல்கரின் வருகைக்கு பிறகுதான் கிரிக்கெட் இந்தியாவில் அதிவேகமாக பிரபலமடைந்தது. "சச்சின் மாதிரி விளையாடணும்" என வேண்டி விரும்பி கிரிக்கெட் கற்றுக் கொண்டவர்களில் பலர் இப்போது இந்திய அணியில் இருக்கிறார்கள்.

2.jpg

24 ஆண்டுகள் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடிய சச்சின், தற்போது உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டை பிரபலபடுத்த களமிறங்கிவிட்டார். அதன் முதற்கட்டமாக  உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளரான வார்னேவுடன் இணைந்து 'கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ்' என்ற அமைப்பை தோற்றுவித்திருக்கிறார். இந்த அமைப்பில் ஓய்வு பெற்ற உலகின் தலை சிறந்த வீரர்கள் உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இந்த அமைப்பு சார்பில் விளையாடுவார்கள், இந்த ஆண்டு அமெரிக்காவிலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அரபு நாடுகள் மற்றும் கனடாவிலும் இந்த தொடர் நடக்கவுள்ளன.

அமெரிக்காவில் இன்று (நவம்பர் 7) முதல் இந்தத் தொடர் ஆரம்பிக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு ஆரம்பிக்கும் போட்டி, டி.வி.யிலும் ஒளிபரப்பப்படுகிறது.

அணிகள்:

சச்சின் பிளாஸ்டர்ஸ்:

சச்சின் டெண்டுல்கர் , ஷேவாக், வி.வி,எஸ்.லட்சுமண், பிரையன் லாரா, கங்குலி, ஜெயவர்த்தனே, ஹூப்பர், மொயின் கான், முரளிதரன், ஸ்வான், அம்புரோஸ், பொல்லாக், மெக்ராத், குளுஸ்னர், அக்தர்.

வார்னே வாரியர்ஸ்:

ஷேன் வார்னே, மேத்யூ ஹைடன், மைக்கேல் வாகன், ரிக்கி பாண்டிங், ஜாண்டி ரோட்ஸ், காலீஸ், சைமண்ட்ஸ், சங்கக்கரா, சக்லைன் முஷ்டாக், வெட்டோரி, வால்ஷ், வாசிம் அகரம், ஆலன் டொனால்ட், அஜித் அகர்கர்.

எப்படி வந்தது ஐடியா?

பல நாடுகளிலும் கிரிக்கெட் விளையாடுபவர்கள் நிறையவே இருக்கிறார்கள். ஆனால், கிரிக்கெட் பிரபலமாகாததால் அவர்களின் திறமை வெளிப்படுவதே இல்லை. கடந்த நாற்பது ஆண்டுகளாக நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்சம் 10-16 அணிகள் வரை மட்டுமே பங்கேற்கின்றன. நிறைய அணிகளை இணைக்க வேண்டும் என ஐ.சி.சி.க்கு வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தவர் சச்சின். அதே சமயம் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு இன்றும் பெரிய மவுசு இருப்பது சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிகிறது  என்பதால் ஓய்வு பெற்ற வீரர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணமும் சச்சினுக்கு இருந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் வார்னேவுக்கு, "ஓய்வு பெற்ற வீரர்களை வைத்து உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள செய்து, கிரிக்கெட்டை மற்ற நாடுகளில் வளர்த்தெடுக்கலாமே" என எண்ணம் தோன்ற, உடனே சச்சினை தொடர்பு கொண்டிருக்கிறார். சச்சினும் 'எஸ்' சொல்ல,  உடனடியாக செயல்முறை வடிவம் கொடுக்க குழு அமைத்து ஐ.சி.சி. ஆதரவும் கோரப்பட,  ஐ.சி.சி. சம்மத்தித்து விட்டது.

முதல்கட்டமாக பத்தாயிரத்துக்கும் அதிகமான கிரிக்கெட் வீரர்களும், பெண்கள் கிரிக்கெட்டும் உள்ள அமெரிக்காவில் இந்த தொடரை ஆரம்பித்தால் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் கவன ஈர்ப்பு ஏற்படும் என்பதால் அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவில் அனுமதி உள்ளிட்ட விஷயங்களை தான் பார்த்துக்கொள்வதாக ஷேன் வார்னே சொல்ல, வீரர்கள் ஒன்றிணைப்பை ஏற்படுத்தும் பொறுப்புக்கு சச்சின் முன்வந்தார். தடதடவென பேஸ்பால் மைதானங்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு  புக் செய்யப்பட்டன. சச்சின் டெண்டுல்கர் மெயில் மூலமும், தொலைபேசி மூலமும், நேரடியாகவும் தொடர்பு கொண்டு பேசி  ஒவ்வொரு வீரர்களாக அணியில் சேர்த்துள்ளார்.

1.jpg

இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள ஜாம்பவான் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர். இந்த தொடரில் விளையாடுவதற்காகவே, அணியில் இடம் கிடைக்காத நிலையில் ஷேவாக் ஓய்வு அறிவித்துவிட்டு அணியில் இணைந்தார். ஆரம்பத்தில் சச்சின் தலைமையிலும், வார்னே தலைமையிலும் பெயருக்கு ஒரு அணி அறிவிக்கப்பட்டது. அதில் கங்குலி, ஷேவாக் எல்லாம் சச்சின் பக்கம்தான்.

இந்நிலையில் கங்குலி ஒரு பேட்டியில் விளையாட்டாக,  'எனக்கு சச்சின் ஓபனிங் பேட்ஸ்மேனாக இடம் கொடுக்க வில்லையெனில் அடுத்த பிளைட்டிலேயே கொல்கத்தாவுக்கு திரும்பிவிடுவேன்' என கூற, சச்சின்-கங்குலிக்கு சண்டை என சோஷியல் மீடியா பதற, சச்சின் டெண்டுல்கர் நகைச்சுவையாக,  'உங்கள் அப்ளிகேஷன் பரிசீலிக்கப்பட்டு கொண்டிருக்கிறது'   என ட்வீட் தட்டி,  சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சோயிப் அக்தரோ "சச்சின் டெண்டுல்கர் கண்டிப்பாக எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவருக்கு எதிராக பலமுறை பந்து வீசிவிட்டேன். இந்தியர்களும் அவருக்கு எதிராக நான் பந்துவீச வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால், எனக்கு சச்சினுடன் இணைந்து விளையாட வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. எனவே, தயவு செய்து சச்சின் அவரது டீமில் என்னை சேர்த்துக்கொள்ள வேண்டும்" என பேட்டியளித்தார்.

அணியில் வீரர்கள் சேர்ப்பதில் குழப்பம் ஏற்படவே, அமெரிக்காவில் உள்ள டைம் ஸ்கொயரில் அணி தேர்வு செய்ய புது முடிவு எடுக்கப்பட்டது. ஒரு கோப்பைக்குள் இரண்டு சீட்டுகள் போடப்படும், அதில் கேப்டன்கள் சச்சின், வார்னே ஆகியோரில் யாரவது ஒருவர் ஒரு சீட்டை தேர்வு செய்ய வேண்டும். யார் சீட் எடுக்கிறார்களோ அவர்களது அணியில்தான் சீட்டில் உள்ள வீரர் விளையாட வேண்டும். மீதமிருக்கும் சீட்டில் இருப்பவர் மற்றொரு அணியில் விளையாட வேண்டும்.

நவம்பர் 5-ம் தேதி அணி தேர்வு செய்யப்பட்டது. அணி எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது என்பது இணையதளத்தில் நேரலையாகவே ஒளிபரப்பப்பட்டது. ஷேவாக் மற்றும் ஹைடன் பெயர்கள் சீட்டில் எழுதி போடப்பட்டது. வார்னே சீட்டை எடுக்க ஹைடன் பெயர் இருந்தது. ஷேவாக், சச்சின் அணிக்கு வந்தார். சச்சின் அணியில் ஷேவாக் என்றதுமே அரங்கம்  கைதட்டுகளால் அதிர்ந்தது. அதன் பின்னர் வாகன், வி.வி.எஸ்.லக்ஷ்மன், ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா, ஜாண்டி ரோட்ஸ், கங்குலி ஆகியோருக்கான தேர்வுகளில் சச்சின் அணிக்கே அதிர்ஷ்டவசமாக லட்சுமண், லாரா, கங்குலி தேர்வாயினர்.

இந்திய வீரர்கள் எல்லாரும் சச்சின் பக்கமே செல்ல, வார்னே கோப்பையை கவிழ்த்து நாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை, அதிர்ஷ்டம்தான் என நகைச்சுவையாக கூறினார். 26 வீரர்களில் 13 பேர் அணி பிரிக்கப்பட்டனர். கடைசியாக ஷோயிப் அக்தர் எந்த அணிக்கு செல்வது என டாஸ் போடப்பட, அக்தர் விரும்பியபடியே அவருக்கு சச்சின் அணியில் இடம் கிடைத்தது.

சரிசமம் வாய்ந்த ஜாம்பவான் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த டி-20 தொடர், அதிரடி ஆக்ஷன் தொடராக கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம விருந்து படைக்கும் என்பதில் சந்தேகமில்லை!

http://www.vikatan.com/news/article.php?aid=54781

  • தொடங்கியவர்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஷேன் வோர்ன் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளார்.

 

  • தொடங்கியவர்

12190866_1057614160924491_91782792825049

12193487_1057614284257812_51447797030052

12193543_1057614274257813_94961076976436

12227588_1057614710924436_19336267936619

12189778_1057618740924033_78951447455891

  • தொடங்கியவர்

12189163_1057619807590593_35281904023706

12195934_1057620840923823_23939814651800

10408855_1057621710923736_71774682064113

1508975_1057623284256912_882932727724212

  • தொடங்கியவர்

12191516_1057633327589241_82530966203604

12193622_1057633554255885_63041358658075

  • தொடங்கியவர்

12184039_1120371141315314_52583478062867

11056889_1120370717982023_22021488284728

12193316_1057642334255007_75175506259557

  • தொடங்கியவர்

12195989_939627209419307_848640526296444

சேவாகின் அதிரடி அரைசதம் வீண்: வார்ன் வாரியர்ஸ் அணி அபார வெற்றி

 
கிரிக்கெட் ஆல்ஸ்டார்ஸ் டி20 போட்டியில் சேவாக், சச்சின். | படம்: ஏ.எஃப்.பி.
கிரிக்கெட் ஆல்ஸ்டார்ஸ் டி20 போட்டியில் சேவாக், சச்சின். | படம்: ஏ.எஃப்.பி.

நியூயார்க்கில் நடைபெற்ற கிரிக்கெட் ஆல்ஸ்டார்ஸ் முதல் டி20 போட்டியில் ஷேன் வார்ன் தலைமையிலான வாரியர்ஸ் அணி சச்சின் தலைமை பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய வார்ன் வாரியர்ஸ் 17.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பலத்த ஆரவாரங்களுக்கு இடையே சேவாக்-சச்சின் ஜோடி களமிறங்கியது. சேவாக் மட்டையிலிருந்து பவுண்டரிகள் பறக்க இருவரும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்காக 48 பந்துகளில் 85 ரன்கள் விளாசித் தள்ளினர். சச்சின் டெண்டுல்கர் 27 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து ஷேன் வார்ன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை மிட் ஆஃபில் ஒரு வாங்கு வாங்க நினைத்தார் ஆனால் பந்து சரியாகச் சிக்கவில்லை. ஆனால் ஜாக் காலிஸ் எம்பிப் பிடித்த கேட்ச் அவரது உடல்தகுதியை இன்றும் நிரூபித்தது. ஸ்டன்னிங் கேட்ச் என்பார்களே அந்த வகையாறாவைச் சேர்ந்தது அது. சச்சின் ஆட்டமிழந்தார். சிரித்த படியே பெவிலியன் சென்றார்.

சேவாக் 22 பந்துகளில் 3 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 55 ரன்கள் விளாசினார். சச்சின் அவுட் ஆனவுடனேயே இவரும் வெட்டோரி பந்தில் பவுல்டு ஆனார். வாசிம் அக்ரம் தான் இன்னமும் ஒரு ஆள்தான் என்பதை நிரூபித்தார். 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்தார்.

சச்சினுக்குப் பிறகு லஷ்மண் (8), லாரா (1) ஆகியோரையும் வார்ன் வீழ்த்தி 4 ஓவர்களில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று இதிலும் தன்னை நிரூபித்தார்.

பிறகு ஜெயவர்தனே 18 ரன்களையும், கார்ல் ஹூப்பர், ஷான் போலக் இருவரும் 11 ரன்களை எடுக்க 8 ஓவர்கள் 85/0 என்பதிலிருந்து 20 ஓவர்களில் 140/8 என்று ஆனது. டேனியல் வெட்டோரி மிகச் சிக்கனமாக வீசி 4 ஓவர்களில் 13 ரன்களுக்கு சேவாக் விக்கெட்டைக் கைப்பற்றினார். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய வார்ன் வாரியர்ஸ் ஹெய்டன் (4), காலிஸ் (13) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். அதுவும் முத்தையா முரளிதரன் பாயிண்டில் ஓடிச் சென்று பந்தை எடுத்து விக்கெட் கீப்பர் முனைக்கு அடிக்க காலிஸ் ரன் அவுட் ஆனார். அருமையான த்ரோ அது. ஹெய்டனுக்கு நன்றாக வேகமாக ஒரு லெக் திசை பவுன்சரை ஷோயப் அக்தர் வீச ஹெய்டன் ஹூக் ஆட முயன்று எட்ஜ் செய்து மொயின் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆனால் அதன் பிறகு சங்கக்காரா (41 ரன், 29 பந்து 2 பவுண்டரி 3 சிக்சர்), பாண்டிங் (48 ரன், 38 பந்து 3 பவுண்டரி 3 சிக்சர்) ஆகியோர் 17.2 ஓவர்களில் வெற்றியை உறுதி செய்தனர். முரளி 4 ஓவர்களில் 18 ரன்கள் 1 விக்கெட், ஷோயப் அக்தர் 4 ஓவர்கள் 26 ரன்கள் 2 விக்கெட். ஆம்புரோஸ் 3 ஓவர்கள் 36 ரன்கள் விக்கெட் இல்லை.

ஆட்ட நாயகனாக ஷேன் வார்ன் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/சேவாகின்-அதிரடி-அரைசதம்-வீண்-வார்ன்-வாரியர்ஸ்-அணி-அபார-வெற்றி/article7858057.ece

  • தொடங்கியவர்
2வது போட்டியிலும் சச்சின் அணி தோல்வி: ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரை வென்றது வார்னே டீம்
 

 வாஷிங்டன்: கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் தொடரின் 2வது போட்டியிலும் வார்னே வாரியர்ஸ் அணியிடம் சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி தோல்வியடைந்ததால் இந்த தொடரை இழந்தது.

Warnes Warriors beat Sachins Blasters by 57 runs

ஓய்வு பெற்ற முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும், 3 டி20 போட்டிகள் கொண்ட, கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் தொடர் அமெரிக்காவில் 3 நகரங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.  சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான சச்சின் பிளாஸ்டர்ஸ் அணியும், வார்னே தலைமையிலான வார்னே வாரியர்ஸ் அணியும் மோதுவதாக முடிவெடுக்கப்பட்டது.

நியூயார்க்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில், வார்னே வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, ஹூஸ்டன் நகரில் இன்று 2வது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த வார்னே அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்களை குவித்தது. குமார் சங்ககாரா அதிகபட்சமாக 70 (30 பந்துகள்) ரன்களும், கல்லீஸ் 45, ரிக்கி பாண்டிங் 41 ரன்களும் குவித்தனர். சச்சின் அணி தரப்பில் க்ளூசினர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெக்ராத், ஸ்வான், சேவாக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

Warnes Warriors beat Sachins Blasters by 57 runs

இதையடுத்து பேட் செய்த சச்சின் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே 57 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதுடன், தொடரையும் இழந்தது. சச்சின் அணியில் ஷான் பொல்லாக் அதிகபட்சமாக 55 ரன்கள் (22 பந்துகள்) விளாசினார்.

அடுத்தபடியாக சச்சின் 33 ரன்கள் எடுத்து பாக். ஸ்பின்னர், சக்லைன் முஷ்தாக் பந்தில் பௌல்ட் ஆனார். சேவாக் 16 ரன்களும், கங்குலி 12 ரன்களும், லாரா 19 ரன்களும் எடுத்தனர். இத்தொடரின் கடைசி போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டோட்கர் ஸ்டேடியத்தில் வரும் 15ம் தேதி , ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

12247146_1006121169450545_61638316781699

  • தொடங்கியவர்

12219595_941303462585015_523958072595405

12195772_941303455918349_712597333105995

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கிரிக்கெட் ஆல்ஸ்டார்ஸ்: சச்சின் பிளாஸ்டர்ஸை வீழ்த்தி வார்ன் அணி தொடரை வென்றது

 

 
  • வார்ன் வாரியர்ஸ் அணியின் ஆட்ட நாயகன் சங்கக்காரா 30 பந்துகளில் 70 ரன்கள் விளாசல். படம்: ஏ.எஃப்.பி/கெட்டி
    வார்ன் வாரியர்ஸ் அணியின் ஆட்ட நாயகன் சங்கக்காரா 30 பந்துகளில் 70 ரன்கள் விளாசல். படம்: ஏ.எஃப்.பி/கெட்டி
  • சச்சின் டெண்டுல்கர் டிரைவ் ஆடும் காட்சி. | படம்: ஏ.எப்.பி. / கெட்டி.
    சச்சின் டெண்டுல்கர் டிரைவ் ஆடும் காட்சி. | படம்: ஏ.எப்.பி. / கெட்டி.

ஹூஸ்டனில் நடைபெற்ற கிரிக்கெட் ஆல்ஸ்டார்ஸ் 2-வது டி 20 போட்டியில் 20 ஓவர்களில் 262 ரன்கள் குவித்த வார்ன் வாரியர்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி வார்ன் வாரியர்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தது. சச்சின் அணியில் மெக்ரா, அக்தர், போலாக், கிரேன் ஸ்வான், லான்ஸ் குளூஸ்னர், முரளிதரன், சேவாக், டெண்டுல்கர், கங்குலி, லாரா, ஜெயவர்தனே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

முதலில் களமிறங்கிய வார்ன் வாரியர்ஸ் அணியில் மைக்கேல் வான், மேத்யூ ஹெய்டன் தொடக்கத்தில் களமிறங்கினர். கடந்த ஆட்டத்தை விட இந்த ஆட்டம் இன்னும் ஜாலியாக ஆடப்பட்டதால் வார்ன் வாரியர்ஸ் அணி மொத்தம் 21 சிக்சர்களையும், 22 பவுண்டரிகளையும் அடிக்க 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் குவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது இதன் மூலம் தொடரை வார்ன் வாரியர்ஸ் வென்றது. சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி 18 சிக்சர்களையும், 10 பவுண்டரிகளையும் அடித்தனர். மொத்தம் இந்த ஆட்டத்தில் 39 சிக்சர்கள் 32 பவுண்டரி விளாசப்பட்டது.

வார்ன் வாரியர்ஸ் அணியில் மைக்கேல் வான் (30), ஹெய்டன் (32) இணைந்து 34 பந்துகளில் 51 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஏற்கெனவே மெக்ரா தன் பந்தில் வானுக்கு ஒரு கேட்சை தவற விட கடைசியில் வான், கிரேம் ஸ்வான் பந்தில் எல்.பி.ஆனார். ஷோயப் அக்தர் பந்து வீச்சும் விளாசப்பட்டது.

மேத்யூ ஹெய்டன் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 32 ரன்கள் எடுத்து மெக்ராவின் பந்தை கட் செய்ய முயன்று பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார்.

காலிஸ், சங்கக்காரா ஜோடி அதிரடி ஆட்டத்தில் இறங்கியது. 7 ஓவர்களில் 91 ரன்கள் விளாச்ப்பட்டது. காலிஸ் 23 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 45 ரன்கள் எடுத்து சேவாக் பந்தில் முரளியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சேவாக் ஒரு ஓவரில் 19 ரன்களை விட்டுக் கொடுத்தார். சங்கக்காரா 30 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 70 ரன்கள் விளாசி, குளூஸ்னர் பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கி அடித்து அக்தரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரிக்கி பாண்டிங் களமிறங்கி தன் பங்குக்கு 16 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 41 ரன்கள் எடுத்தார். இவரும் குளூஸ்னரிடம் விக்கெட் கீப்பர் ஜெயவர்தனேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி 7 ஓவர்களில் 108 ரன்கள் நொறுக்கப்பட்டதில் சைமண்ட்ஸ் 6 பந்தில் 19 ரன்களையும், ஜாண்டி ரோட்ஸ் 8 பந்துகளில் 18 ரன்களையும் அடித்தனர். ஸ்கோர் 262/5.

சேவாக் 2 சிக்சர்களுடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் அகார்கர் பந்தில் பவுல்டு ஆனார். ஏறக்குறைய மெக்ரா, ஹெய்டனை வீழ்த்தியதன் வலது கை மறு ஒலிபரப்பே இந்த அவுட், வெளியே சென்ற பந்தை கட் செய்ய முயன்று பிளேய்ட் ஆன் ஆனார் சேவாக்.

சச்சின் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 33 ரன்கள் விளாசி, சக்லைன் முஷ்டாக் வீசிய தூஸ்ரா எதிர் திசையில் திரும்பாமல் நேராகவே செல்ல ஒதுங்கிக் கொண்டு ஆட முயன்ற சச்சின் மட்டையில் பட்டு பவுல்டு ஆனது. முன்னதாக கங்குலி ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியை அடுத்தடுத்து அடித்து ஆரவாரம் காட்டினார் கடைசியில் சில பந்துகள் சிக்காமல் காற்று வர 12 பந்துகளில் 12 ரன்களில் காலிஸ் பந்தில் வெளியேறினார்.

ஜெயவர்தனே (5), லாரா (19), குளூஸ்னர் (21) ஆகியோர் ஆகியோர் இன்னிங்ஸை தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியாமல் சைமண்ட்ஸ், சக்லைனிடம் ஆட்டமிழக்க 16-வது ஓவரில் 130/6 என்று ஆனது சச்சின் பிளாஸ்டர்ஸ். கடைசியில் ஷான் போலக்கின் பேட்டிங் உண்மையில் ரசிகர்களின் ஆரவாடத்தைக் கூட்டிய இன்னிங்ஸ் ஆகும். 1 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 22 பந்துகளில் 55 ரன்களை விளாசினார் போலக். ஸ்வா 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். முரளிதரன் கடைசி பந்தை சைமண்ட்ஸை சிக்ஸ் அடித்து நிறைவு செய்தார். சச்சின் அணி 205/8 என்று முடிந்தது. தொடரை வார்ன் அணி வென்றது. ஆட்ட நாயகனாக சங்கக்காரா தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த போட்டியில் வாசிம் அக்ரம் சிக்கனம் காட்டினர். ஆனால் இம்முறை 4 ஓவர்களில் 48 ரன்களை விட்டுக் கொடுத்தார். சக்லைன் முஷ்டாக் அபாரமாக வீசி 3 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சைமண்ட்ஸ் அதிகபட்சமாக 4 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article7868933.ece

  • தொடங்கியவர்
Sachin's Blasters 219/5 (20/20 ov)
Warne's Warriors 224/6 (19.5/20 ov)
Warne's Warriors won by 4 wickets (with 1 ball remaining)
Eingebetteter Bild-Link
It's all over!! Thanks to all the fans who came out to support us in NY, Houston & LA - we'll be back...
 

Eingebetteter Bild-Link

Congrats to the man of the series @KumarSanga2 !!! #cricketallstars

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12241200_1007486122647383_73576362319536

  • தொடங்கியவர்
ஆல் ஸ்டார்ஸ் இருபது 20 கிரிக்கெட் தொடர் பிளாஸ்டர்ஸை வெள்ளையடிப்பு செய்த வொரியர்ஸ்
2015-11-16 11:24:30

ஐக்­கிய அமெ­ரிக்­காவில் நடை­பெற்ற ஆல் ஸ்டார்ஸ் இருபது 20 கிரிக்கெட் தொடரில் சச்சின் பிளாஸ் டர்ஸ் அணியை 3 க்கு 0 என்ற விகி­தத்தில் வோர்ன் வொரியர்ஸ் அணி வெள்­ளை­ய­டிப்பு செய்­தது.

 

1327445.jpg

 

லொஸ் ஏஞ்­சலிஸ், டொஜர் விளை­யாட்­ட­ரங்கில் (இலங்கை நேரப்­படி நேற்­றுக்­காலை) நடை­பெற்ற 3 ஆவது  போட்­டியில் ஒரு பந்து மீத­மி­ருக்க 4 விக்­கெட்­களால் வோர்ன் வொரியர்ஸ் அணி வெற்­றி­பெற்று தொடரை முழு­மை­யாகக் கைப்­பற்­றி­யது.

 

சச்சின் டெண்­டுல்கர், சௌரவ் கங்­குலி ஆகியோர் அரைச் சதங்­களைக் குவித்­த­போ­திலும் குமார் சங்­கக்­கார, ரிக்கி பொன்டிங், ஜெக் கலிஸ் ஆகி­யோரின் துடுப்­பாட்­டங்கள் வொரி யர்ஸ் அணியின் வெற்­றியை சுல­பப்­படுத்­தின.

 

கணி­ச­மான ஓட்­டங்கள் குவிக்­கப்­பட்ட இப் போட்­டியில் பந்­து­வீச்சில் டெனியல் வெட்­டோ­ரியும் கிரேன் ஸ்வோன் சிறப்­பாக செயல்­பட்­டி­ருந்­தனர்.

 

மூன்று போட்­டிகள் கொண்ட இத் தொடரில் துடுப்பாட்டத்திலும் (153 ஓட்­டங்கள்) விக்­கட்­காப்­பிலும் (ஒரு பிடி, 2 ஸ்டம்ப்கள்) பிர­கா­சித்த இலங்­கையின் குமார் சங்­கக்­கார தொடர் நாயகன் விருதை வென்­றெ­டுத்தார்.

 

எண்­ணிக்கை சுருக்கம்

சச்சின் ப்ளாஸ்டர்ஸ் 20 ஓவர்­களில் 219 க்கு 5 விக். (சச்சின் டெண்­டுல்கர் 56, சௌரவ் கங்­குலி 50, மஹேல ஜய­வர்­தன 41, டெனியல் வெட்­டோரி 33 க்கு 3 விக்.)

 

வோர்ன் வொரியர்ஸ் 19.5 ஓவர்­களில் 224 க்கு 6 விக். (ஜெக் கலிஸ் 47, ரிக்கி பொன்டிங் 43, குமார் சங்­கக்­கார 42, அண்ட்றூ சிமண்ட்ஸ் 31, க்ரேம் ஸ்வோன் 21 க்கு 2 விக்.)
ஆட்டநாயகனாக ஜெக் கலிஸும் தொடர்நாயகனாக குமார் சங்கக்காரவும் தெரிவாகினர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=13274#sthash.ZgWuQWZW.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.